Followers

Monday, February 29, 2016

மிம்பர் மேடையிலிருந்தே உயிர் விட்ட லெபனானிய இளைஞன்!லெபனானைச் சேர்ந்த 16 வயது இளைஞன் சென்ற 21-02-2016 அன்று வெளிள்க்கிழமை குத்பா பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலிருந்து சரிந்து விழுந்தார். அப்துல் ரஹ்மான் என்ற பெயர் கொண்ட இந்த இளைஞனுக்கு யாருக்கும் கிடைக்காத பாக்கியம் கிடைத்துள்ளது. தனது மகன் சரிந்து விழுவதை தகப்பனாரும் கண்டு கொண்டிருந்தார். இந்த இளைஞனின் பாவங்களை இறைவன் மன்னித்து சொர்க்கத்தில் பிரவேசிக்க செய்வானாக!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - அவனிடமிருந்தே வந்தோம் நாம்: அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள்.


Sunday, February 28, 2016

இந்துக்களுக்கு உதவி செய்து காப்பாற்றிய இஸ்லாமியர்கள்!

கோயிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும் போது! ஏற்ப்பட்ட சாலை விபத்து!
**********************************
திருநெல்வேலி மாவட்டம்!

வீராங்குளத்தில்!

28.02.2016 இன்று இரவு 9.30 மணிக்கு!

நாங்குநேரி TO ஏர்வாடி செல்லும் சாலை! வீராங்குளம் என்ற இடத்தில்! ஒரு வேனும்! லோடு ஆட்டோவும் மோதியது!

திருக்குறுங்குடி மகிலடி ஊரை சார்ந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 25 க்கும் மேற்ப்பட்டவர்கள் ஒரு வேனில் சாத்தூர் கோயிலுக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருக்கும் போது சாலை விபத்து ஏற்ப்பட்டது!

வாகனத்தில் வந்தவர்களில் 4 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது!

தகவல் அறிந்த ஏர்வாடி தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்! மமக மாவட்ட துணை செயலாளர் ஏர்வாடி முகைதீன் அலி அவர்கள் தலைமையில்! உடனடியாக தமுமுகவின் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் காயம்பட்டவர்களை ஏற்றி நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்!

மனிதநேய பணியில்! தமுமுக ஏர்வாடி.
28.02.2016.

Bakrudeen Ali Ahmed

சவுதியில் இமாமாக தொழ வைக்கிறேன் நான்!

கடும் குளிர். இரவுத் தொழுகைக்கு தலைவனாக நின்று தொழ வைக்க ஒலி பெருக்கியை ஆன் செய்ய செல்கிறேன். நண்பர் ஒருவர் மொபைலில் அதனை படமாக எடுத்துக் கொடுத்தார். இது எனது அலுவலகத்துக்கு அருகில் உள்ள சிறிய பள்ளிவாசல்.

எந்த மதரஸாவிலும் சென்று நான் படிக்கவில்லை. சிறிய தவறு ஓதிவதில் நான் செய்தாலும் அது ஒலி வாங்கி மூலமாக அனைவருக்கும் தெரிந்து விடும். இருந்தும் என்னை தலைவனாக நிறுத்துகிறார்கள். என்னை பின் பற்றி எகிப்து, சவுதி, சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை நாட்டவர் தொழுகின்றனர். எனது கட்டளையை ஏற்று நான் குனிந்தால் குனிகிறார்கள். நான் நிமிர்ந்தால் நிமிர்கிறார்கள். மொழி வெறி பிடித்த இந்த அரபுகளிடம் இது எப்படி சாத்தியமானது?

நபிகள் நாயகம் தனது இறுதிப் பேருரையில் இவ்வாறு கூறுகிறார்....

"மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற அபிசீனிய அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் அவரது சொல்லைக் கேட்டு நடங்கள். அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!"

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

மொழி வெறி பிடித்த நிற வெறி பிடித்த அன்றைய அரபு மக்களை இஸ்லாம் தனது அன்பு கட்டளைகளால் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றங்கள்தான் இன்று வரை அரபுகள் கூட தொழுகையில் என்னைப் போன்றவர்களை பின் பற்ற வைக்கிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே!

ஸ்மிருதி சொல்வது அப்பட்டமான பொய்!"என் மகன் தேச விரோதியும் அல்ல; தீவிரவாதியும் அல்ல. அவரைப் பற்றி மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானியும், பண்டாரு தத்தேத்ரயாவும் சொன்னவை அனைத்தும் அப்பட்டமான பொய்" என்று ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, "என் மகன் தேச விரோதியும் அல்ல; தீவிரவாதியும் அல்ல. அவரைப் பற்றி மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானியும், பண்டாரு தத்தேத்ரயாவும் சொன்னவை அனைத்தும் அப்பட்டமான பொய். ஸ்மிருதி இரானி அவரது நடிப்பு முகத்தை துறக்க வேண்டும். என் மகன் ரோஹித்தின் மரணத்துக்கு "காரணமான" இரானி, தத்தாத்ரேயா போன்றவர்கள் மீது பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக அழிவை சந்திக்கும்.

மோடி இந்நாட்டின் பிரதமராக நடந்துகொள்ள வேண்டுமே தவிர அரசியல் கட்சிக்காரரைப்போலவோ, சாதிப் பிரதிநிதி போலவோ நடக்கக்கூடாது" என்றார்.

ரோஹித்தின் நண்பர் தொந்தா பிரசாந்த் கூறும்போது, "ரோஹித்தின் தற்கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கலை சினிமா வசன வாக்கியங்களைப் போல் அலங்கரித்துப் பேசியிருக்கிறார் ஸ்மிருதி இரானி" என்றார்,

ரோஹித்தின் சகோதரர் ராஜ சைத்தன்யா கூறும்போது, "ரோஹித் தற்கொலை செய்தி கிடைத்தவுடனேயே நான் அவரது அறைக்குச் சென்றேன். நான் அங்கு சென்றபோது ஏற்கெனவே போலீஸாரும், மருத்துவர்களும் ரோஹித் சடலத்தின் அருகே இருந்தனர்.

ஆனால், நாடாளுமன்றத்தில் பேசிய ஸ்மிருதி இரானி, "ரோஹித் அருகே மருத்துவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது சடலத்தை அரசியல் ஆயுதமாக சிலர் பயன்படுத்தினர்" எனக் கூறியிருக்கிறார். இரானி சொன்னதை பல்கலைக்கழகத்தின் மருத்துவ மைய மருத்துவரே மறுத்துள்ளார்" என்றார்.

'திட்டமிட்டே மறைத்தார்'

டிசம்பர் 18-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ரோஹித் வெமுலா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், பல்கலைக்கழத்தில் தலித் மாணவர்களை அனுமதிக்கும்போதே அவர்களுக்கு 10 மில்லிகிராம் சோடியம் அசைடு வேதிப்பொருளும், ஒருதூக்குக் கயிறும் தந்துவிடுங்கள் எனக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதம் குறித்த விவரத்தை ஸ்மிருதி இரானி திட்டமிட்டே மறைத்துள்ளார் எனக் குற்றம்சாட்டினார் ரோஹித்தின் நண்பர் தொந்தா பிரசாந்த்

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
28-02-2016

செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகிறாரோ?

Saturday, February 27, 2016

டேஷ் பக்தர்களுக்கு இந்த பதிவு சமர்பணம் :-)
ஒவ்வொரு கிராமத்திலும் இருக்க வேண்டிய பலகைதமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்க வேண்டிய எச்சரிக்கை பலகை. இந்த கிராமத்தினரைப் பின் பற்றி நமது கிராமங்களிலும் இதே போன்ற எச்சரிக்கைப் பலகை வைத்து நீராதாரத்தை காப்போமாக!

ஏ ஆர் ரஹ்மானின் 'சன்சைன் ஆர்கெஸ்ட்ரா'இசைத் துறை என்பது முன்பெல்லாம் பார்பனர்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட துறையாக இருந்தது. ஆனால் நீங்கள் மேலே பார்க்கும் அந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் பார்பனர்கள் அல்ல. ஏழை எளிய தாய் தந்தையருக்கு பிறந்த பல சாதிகள் மதங்களை கொண்ட குழந்தைகள் அவர்கள். தையல் கடைகாரர், பிளாட்பாரத்தில் இட்லி டீ விற்பவர், என்று ஒவ்வொருவராக பொறுக்கி எடுத்து 25 சிறுவர்களை ஏ ஆர் ரஹ்மான் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த குழுவுக்கு வெளி நாட்டிலிருந்தெல்லாம் இசைக் கலைஞர்களை அழைத்து வந்து பயிற்சி கொடுக்க வைத்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஆசானாக ஸ்ரீநிவாச மூர்த்தி சார் பணி புரிந்து வருகிறார்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த குழந்தைகள் இசைத் துறையில் உலக அளவில் பேசப்படுவர். நூறு ஏழைக்கு தினமும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று பிச்சை போடுவதை விட ஒரு ஏழையின் வருங்காலத்துக்கு நாம் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் அதுதான் சிறந்த தர்மம். இதனை ரஹ்மான் சரியாக உணர்ந்ததால்தான் இத்தகைய ஒரு ஏற்பாட்டை உருவாக்கியுள்ளார். இஸ்லாம் ஜகாத் என்ற ஏழை வரியை ஏற்படுத்தியதும் ஒரு மனிதன் சுய மரியாதையாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

'நபியே! எதை இறைவழியில் செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக'

(குர்ஆன் - 2:219)

'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது.

(புஹாரி 1426)

'பைத்துல் மால்' எனும் பொது நிதி ஒன்றை ஊர்தோறும் நாம் உருவாக்கி ஜகாத் பணத்தை உரியவரிடமிருந்து திரட்டி ஒரு அமைப்பு முறையாக ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்கு பயன்படும் வகையில், அவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்றவர்களுக்கு ஜகாத் கொடுக்கும் வகையில் வினியோகிப்பதையே இஸ்லாம் விரும்புகிறது. இதனை இஸ்லாமியர்கள் கைவிட்டதன் விளைவே ஏழைகள் பள்ளிவாசலில் பொருளுக்காக காத்திருக்கின்றனர். தற்போது ஊருக்கு ஊர் பைத்துல்மால் உண்டாக்கப்படுகிறது. அதற்கு நாம் நம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

----------------------------

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

'இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119
மனிதனின் மூலம் தண்ணீர் என்பது உண்மைதானா?பெல்ஜியத்தை சேர்ந்த ஜான் பாப்டிஸ்டா வேன் ஹெல்மண்ட் என்ற வேதியியல் நிபுணருக்கு தாவரங்களின் வளர்ச்சியைப் பற்றி ஒரு பெரும் சந்தேகம் வந்தது. இது எவ்வாறு வளர்கிறது என்பதை சோதிக்க எண்ணினார். எனவே வில்லோ மரம் ஒன்றினை ஒரு பெரிய தொட்டியில் மண்ணை நிரப்பி வளர்க்க ஆரம்பித்தார். தொட்டியில் இட்ட மண்ணின் அளவை குறித்துக் கொண்டார். அதே போல் மரத்தின் நிறையையும் குறித்துக் கொண்டார். மரமும் நன்றாக வளர்ந்தது. ஐந்து வருடங்களுக்கு பிறகு தொட்டியிலிருந்து மரத்தை வெளியில் எடுத்து அதன் நிறையை கணக்கிட்டார். மரத்தின் அளவு 164 பவுண்டாக இருந்தது. அதன் பிறகு மண்ணின் நிறையை அளக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மண்ணின் நிறையில் மிக சிறிய மாற்றமே உண்டானது. மரத்தின் நிறை கூடினால் மண்ணின் நிறை குறைய வேண்டும். அதுதான் இயற்கை என்று ஹெல்மண்ட் நம்பியிருந்தார். ஏனெனில் இந்த மரம் வளர்வதற்கு ஆதாரமாக மண்தானே இருக்கிறது என்பது அவரது எண்ணம். ஆனால் இந்த மரம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் அவர் தினமும் ஊற்றிய தண்ணீர் என்பதை பிறகு தான் விளங்கிக் கொண்டார்.அதன் பிறகு பின்னால் வந்த அறிவியல் அறிஞர்கள் தண்ணீரோடு ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளியும் ஒரு தாவரம் வளர அவசியம் என்பதை கண்டு பிடித்தனர். ஆக உயிரினங்கள் அனைத்தும் தங்கள் உடலில் உண்டாக்கப்பட்டுள்ள உடலமைப்பினால் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கின்றன. அது இயலாத பட்சத்தில் அந்த உயிரினத்திற்கு இறப்பு நிச்சயம் என்பதை நாம் அறிவோம். இந்த தண்ணீரிலிருந்துதான் உயிரினங்கள் தங்கள் உடம்புக்கு தேவையான சத்துக்களை கிரகித்துக் கொள்கின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து குடிக்கும் அனைத்து பானங்களின் மூலமும் தண்ணீராகவே இருக்கிறது. உயிரியல் பாடங்களை நாம் எடுத்துக் கொண்டாலும் உயிரினங்களுக்கு 80 சதவீதம் நீர் அவசியம் என்று கூறுகிறது. அதே போல் என்சைக்ளோபீடியாவும் உயிரினங்களின் உயிர் வாழ தண்ணீர் 50 சதவீத்திலிருந்து 85 சதவீதம் வரை அவசியம் என்கிறது. தாவரங்களின் ஒளிச் சேர்க்கை நடைபெற அடிப்படை பொருட்களாக கார்பன் டை ஆக்சைடு, நீர், பச்சையம், மற்றும் சூரிய ஒளி அவசியமாகிறது. இங்கும் நீரின் தேவை மிக அவசியமாகிறது. இந்த உண்மைகள் எல்லாம் அறிவியல் அறிஞர்களால் 17 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் கண்டுபிடிக்கப்படுகிறது.


சாதாரண மண்ணை எடுத்துக் கொள்வோம். வெறும் மணலாக இருக்கும் போது அந்த மண்ணுக்கு உயிர் வருவது இல்லை. அந்த மண்ணோடு தண்ணீரும் கலந்து சேறும் சகதியுமாக மாறியவுடன்தான் புல் பூண்டுகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. எனவே இந்த இடத்திலும் தண்ணீரின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். இன்னும் விளக்கமாக சொல்லப் போனால் நீர் இல்லாத மண்ணானது உயிர் இல்லாத உடலைப் போன்றது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் மணலில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. மக்கிய தாவரங்கள் கலந்த மண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது. பயிர்கள் அதிகம் விளையக் கூடிய களிமண்ணில் எந்த அளவு தண்ணீர் உள்ளது என்பதை விபரமாக விளக்குகிறது.

(The table and figures were originally published by the Institute of Agriculture and Natural Resources at the University of Nebraska - Lincoln.)

டார்வினின் பரிணாம வளர்ச்சி விதி உயிரினங்கள் அனைத்தும் நீரிலிருந்தான் தோன்றின என்கிறது. அதாவது ஒரு செல் உயிரிகள் தண்ணீரிலிருந்தே தோன்றி பிறகு கால்கள் முளைத்து கரைக்கு வந்ததாக சொல்வார். அந்த ஒரு செல் உயிரி உண்டானது தண்ணீரிலிருந்தே என்பது டார்வினின் தத்துவமாகும். ஆனால் அதன் பிறகுதான் குழம்பி விடுகிறார். பலரையும் குழப்பி விடுகிறார். :-)

நமது மூளை 80% நீரால் ஆனது. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும். 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும். நமது மொத்த உடல் எடையில் 12% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நமது உடலின் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் நீர் சார்ந்த பொருட்களே ஆதிக்கம் செலுத்துகிறது.

ஒவ்வொரு உயிரினத்தையும் இறைவன் நீரால் படைத்தான்..
குர்ஆன் 24:45

'உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?'
குர்ஆன் 21:30

'அவனே தண்ணீரால் மனிதனை படைத்தான்'
குர்ஆன் 25:54

மேற்கண்ட வசனங்கள் மனிதன் மற்றும் உயிருள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் மூலமாக தண்ணீர் உள்ளது என்பதை விவரிக்கிறது. இது இன்று நமக்கு ஒரு சாதாரண கண்டுபிடிப்பாக இருக்கும். ஆனால் குர்ஆன் இறங்கிய அன்றைய அறியாமை காலத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் நாட்டைப் போல் நில வளம் பொருந்திய நாடு அல்ல அன்றைய சவுதி. எங்கு நோக்கினாலும் பாலைவனம்தான். ஏதோ ஒரு சில இடங்களில் அத்தி பூத்தாற்போல ஒரு சில பேரித்தம் மரங்கள் சோகமாக நின்று கொண்டிருக்கும். இது தான் அன்றைய அரேபியாவின் நிலை. அந்த சமூகமும் படிப்பறிவில்லாத சமூகம். இந்த நிலையில் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு நாட்டுப் புற அரபி இவ்வாறு வசனங்களை சொல்லியிருக்க முடியும் என்பதை நம் அறிவு ஏற்கிறதா?

இல்லை: இது உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை என்ற முடிவுக்கே நாம் வருவோம்.

உயிர் வாழ மண்ணும் தண்ணீரும் எந்த அளவு அவசியம் என்று பார்த்தோம். மண்ணை மனைகளாக்காமல் பயிர் விளையும் பூமியாக்கி நீர் வளத்தையும் நில வளத்தையும் மாசு படாமல் காப்போம். பின்னால் ஏற்படக் கூடிய சிரமங்களை தவிர்ப்போம். தமிழக கிராமங்களில் உள்ள செல்வந்தர்கள் ஆங்காங்கே குளங்களை வெட்டி மழை நீரை சேகரித்து மக்களுக்கு சேவை செய்வோம். அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டம் வகுத்தால்தான் வருங்கால சந்ததிகள் நிம்மதியாக காலத்தை ஓட்ட முடியும்..

தன் பெயரை அப்துல் ராஷிக் என்று மாற்றிக்கொண்டார் ..இன்று ( 27/02/2016) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளையில் வைத்து சகோதரர் அமுல் சுதாகர் அவர்கள் தன் பெற்றோர்கள் சம்மதத்தோடு தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தன் பெயரை அப்துல் ராஷிக் என்று மாற்றிக்கொண்டார் ..

அல்ஹம்துலில்லாஹ்... எல்லா புகழும் இறைவனுக்கே!

இவருடைய வேண்டுகோள் "என் குடும்பத்தார்களும் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள பிரார்த்தனை செய்யுங்கள்" ..

மாற்று மதத்தினருக்கான உதவிகள் இன்றும் தொடர்கிறது!

நான்கு பேரை கொன்ற அமெரிக்க இளைஞன்!வாஷிங்டன் பெல்ஃபெர் நகரில் நேற்று ஒரு துப்பாக்கி ஏந்திய இளைஞன் கண்மூடித்தனமாக சுட்டதில் நான்கு பேர் மரணித்துள்ளனர். முடிவில் அந்த இளைஞன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளான்.

தகவல் உதவி
NDTV
27-02-2016

Thursday, February 25, 2016

மண் சோறு சாப்பிடுவது மேலும் வியாதிகளை அதிகரிக்கும்

டெங்கு, காலரா என்று மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு மண் சோறு சாப்பிடுவது மேலும் வியாதிகளை அதிகரிக்கும் என்று உங்கள் மக்களுக்கு அறிவுறுத்தக் கூடாதா? @சென்னி மலை @dr anbu raj

இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்ட சொந்தங்கள்.

துபாயில் புதிதாக தங்களை இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்ட சொந்தங்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

யுவன் சங்கர் ராஜா மனம் திறக்கிறார்.What made you convert to Islam?

My father is a staunch Hindu and is so superstitious that even if a glass breaks, he will call a pandit. Both my parents were ritualistic, but right from childhood, I used to always have a thought that beyond all this there is a supernatural power who is running the whole world. How can God be in any form? That search was always there in me. What triggered my conversion was my mom's sudden passing away. I had come to Mumbai for some work. When I returned to Chennai, my mom was coughing badly and me and my sister rushed her to the hospital. I was driving the car. We reached the hospital and I was sitting next to her holding her hand and the next second her hand fell and she had died. I was crying but wondered where her soul went within seconds as she was alive just a few seconds back. I was in search of the answers and I should say that I got a direct calling from Allah. It was a spiritual experience. My friend had just been to Mecca and he said to me, 'You seem to be really low. You have to move on.' He gave me the musalla (the prayer mat) and said, 'This one mat I used in Mecca and it has touched Mecca so if you are feeling really heavy, just sit on it.' I kept the mat in one corner of my room and forgot all about it. A few months later I was speaking to one of my cousins about my mother and I started feeling really heavy. I entered my room and coincidentally saw the mat which all this while I had missed even though it was kept in the same corner. I sat on it for the first time just started crying saying, 'Ya Allah please forgive my sins.' That was 2012. I started reading the Quran and the translations and it connected with me really fast. I started practising Islam and learnt how to pray and by January 2014, felt sure about converting. Since I am known as Yuvan Shankar Raja in films, I have still not changed my name officially in my passport and other records, but maybe later, I might do that too. My father was the last one I told in my house to. I told him, 'I have started reading the Quran and it gives me a lot of peace.' He said to me, 'Yuvan, I am not comfortable with you becoming Islamic.' My brother and his wife were very supportive. It's odd but in some way I used to get that spiritual feeling that it was my mom, who held my hand, and said, 'Yuvan, you are alone. I want you to stand here under the tree called Islam.'

http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Yuvan-Shankar-Raja-I-converted-to-Islam-in-a-way-because-of-my-mother/articleshow/40119919.cms

Wednesday, February 24, 2016

நமக்கு வாய்த்த அடிமைகள்......

மனிதரில் இத்தனை நிறங்களா?
இதுதாங்க சவுதி அரேபியா.

அத் தம்மாம் (தஹ்ரான்) மாநகரில் உள்ள KFPM பல்கலைக்கழகத்தில் உள்ள அங்கன்வாடி இல் தொழுகைக்காக அடைக்கப்படும் சமயங்களில் அங்கு வேலைபார்க்கும் Cashier நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பலகையை வைத்து விட்டு தொழுகைக்கு சென்று விடுவார் அங்கு உள்ளவர்கள் தேவையான பொருட்களை எடுத்துக்கொன்டு அதற்கு உரிய சரியான காசை வைத்துவிட்டு செல்வது வழக்கம்.

Shaik Uthuman

இஸ்லாம் இதைத்தான் உலக மக்களுக்கு போதிக்கிறது....

மன்னர் சல்மான் ஜாகிர் நாயக்குக்கு விருதளித்தார்!

சவுதி அரேபியாவின் உயரிய விருதை டாக்டர் ஜாகிர் நாயக்குக்கு மன்னர் சல்மான் அளித்து கௌரவித்தார். கும்பிடு இல்லை: முதுகு வளை...

Posted by Nazeer Ahamed on Wednesday, February 24, 2016

சவுதி அரேபியாவின் உயரிய விருதை டாக்டர் ஜாகிர் நாயக்குக்கு மன்னர் சல்மான் அளித்து கௌரவித்தார். கும்பிடு இல்லை: முதுகு வளைந்து பவ்யமாக வாங்கவில்லை: காலில் விழுந்து மரியாதை செய்யவில்லை: மன்னரே ஆனாலும் அவரும் சாதாரண மனிதரே என்பதை உணர்த்தும் காணொளி.

இதே நேரம் நம் நாட்டு அரசியல் வாதிகளிடம் விருது பெறுபவர்கள் பண்ணும் கூத்துக்களை தினமும் பார்த்து வருகிறோம். மேலே பறக்கும் ஹெலிகாப்படருக்கும் வணக்கம் செய்யும் தமிழர்களை பார்த்தவர்கள் நாம்:. smile emoticon

தொடரும் இஸ்லாமியரின் மனித நேயப்பணி!

Tuesday, February 23, 2016

அஃப்ஸல் குருவை அநியாயமாக தேச விரோதியாக காட்டும் இந்துத்வா!

யார் இந்த அஃப்ஸல்?

'1990-ல் அப்ஸல் 'ஜே.கே.எல.எஃப்' என்ற இயக்கத்தால் கஷ்மீரில் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் போல் கவரப்பட்டார். பாகிஸ்தானுக்கும் ஒரு முறை சென்றார். இயக்கத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளால் மனம் உடைந்து டெல்லி சென்றார். டெல்லியில் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட முடிவு செய்தார்.அவர் எப்போதும் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.அதற்கு முன் அவர் எம்.பி;பி;எஸ் (மருத்துவப் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்தார். என் கணவர் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்திட விரும்பினார். அதனால் நமது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவருடைய சான்றிதழ்களைத் தர மறுத்து விட்டனர். சான்றிதழ்களை தந்திட வேண்டும் என்றால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்திட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினர். இதனால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்தார். அதன் பின்னர் அஃப்ஸலுக்கு ஒரு சான்றிதழைத் தந்தார்கள். அதில் 'அவர் ஒரு சரணடைந்தவர்' எனக் குறிப்பிட்டிருந்தார்கள். சரணடைந்த ஒருவராக கஷ்மீரில் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிக்கலான ஒன்று. ஆனாலும் அவர் தன் குடும்பத்தோடு கஷ்மீரிலேயே வாழ்ந்திடுவது என முடிவு செய்தார்.'

'1997-ல் அவர் ஒரு சிறு வியாபாரத்தைத் தொடங்கினார். அது மருத்துவம் - மருந்து ஆகியவை தொடர்பான வியாபாரம். மருத்துவ கருவிகளை வாங்கி விற்பதும் இதில் அடங்கும். அடுத்த வருடம் நாங்கள் திருமணம் முடித்துக் கொண்டோம். அப்போது அவருக்கு வயது 28. எனது வயது 18.'

'நாங்கள் கஷ்மீரில் வாழ்ந்த காலங்கள் வரை இந்திய பாதுகாப்புப் படையினர் எங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கின்றதோ அவர்களைப் பற்றிய தகவல்களைத் தந்திட வேண்டும். அவர்களை உளவு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என அழுத்தங்களும் அல்லல்களும் தந்து கொண்டே இருந்தார்கள். '22 ரைஃபிள்ஸ்' என்ற ராணுவப் பிரிவைச் சார்ந்த மேஜர் இராம் மோகன் ராய் என்பவர் அஃப்ஸலை சித்திரவதை செய்தார். அவருடைய மரம ஸ்தானத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்தார். அஃப்ஸலை அவமானப் படுத்தினார். கேவலமான சொற்களைக் கொட்டி வைதார்.'

'சில நாட்கள் கழித்து சிறப்புக் காவல் படையினர் அவரைத் தங்களுடைய ஹம்ஹமா முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த முகாமில் வைத்து டி.எஸ்.பி.டாரிந்தர் சிங், டி.எஸ்.பி. வினாய் குப்தா ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்கள். இந்த ஒரு லட்சம்ரூபாயை கொடுக்கும் அளவிற்கு நாங்கள் வசதியானவர்கள் அல்ல. அதனால் நாங்கள் எங்களிடமிருந்தவை அனைத்தையும் விற்றுவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம்.என்னுடைய திருமணத்தில் கிடைத்த சிறிய தங்க நகையையும் விற்பனை செய்ய வேண்டியதாயிற்று. இத்தனையையும் அஃப்ஸலை இந்தச் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றிட இழக்க வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸலை குளிர்ந்த நீரில் நிறுத்தி வைத்தார்கள். பெட்ரோலை அவருடைய மலத் துவாரத்தில் ஊற்றினார்கள்.ஒரு அதிகாரி சாந்தி ஷிங் என்பவர் அஃப்ஸலை கடுங்குளிரில் தலை கீழாக தொங்க விட்டார். மணிக்கணக்கில் தொங்க விட்டார். அவருடைய மறைவிடத்தில் மீண்டும் மின் அதிர்ச்சியைப் பாய்ச்சினர். இந்த சித்திரவதை ரணங்களிலிருந்து வெளியே வந்திட அவர் பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸல் ஏதேனும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். அதனால்தான் அவரை இப்படி சித்திரவதை செய்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். இப்படிச் சித்திரவதை செய்யப் பட்டது அவரிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கத்தான் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் கஷ்மீரில் இருக்கும் சூழலை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். கஷ்மீரில் வாழும்; ஒவ்வொருவருக்கும் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். அவர் அங்கு நடப்பவற்றில் பங்கு பெறுகிறாரோ இல்லையோ அங்கு என்ன நடக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மக்கள் அனைவரையும் தகவல் சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம் அண்ணனுக்கு எதிராக தம்பியையும், கணவனுக்கு எதிராக மனைவியையும், பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோரையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அஃப்ஸல் தன் குடும்பத்தோடு அமைதியாக வாழவே விரும்பினார். ஆனால் எஸஃ.டி.எஃப் என்ற சிறப்புக் காவல் அதற்கு அனுமதிக்கவில்லை.'

'இது போன்ற குரூரமான சூழ்நிலையிலிருந்து அஃப்ஸல் தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பினார். அவர் தக் வீட்டை விட்டு வெளியேறினார்.தன் குடும்பத்தையும் தொடர்ந்தார் டெல்லி வந்தார்.டெல்லியில் வந்து வயிறு பிழைக்க விரும்பினார். அங்கே தன்னுடைய வாழ்க்கையைச் சீர் செய்திட முயற்சி செய்தார். வாழ்க்கை ஓரளவுக்கு நிலை பெற்றதும் என்னையும் எங்களது நான்கு வயது மகனையும் டெல்லிக்கு அழைத்து வாழ வைப்பதாக முடிவு செய்தார்.எல்லாக் குடும்பங்களையும் போல நாங்கள் ஒன்றாய் வாழ்ந்திட விரும்பினோம். ஆனால் மீண்டும் சிறப்புக் காவல் படையினர் என் கணவரை டெல்லியிலும் துரத்த ஆரம்பித்தனர். அத்தோடு எங்களுடைய எல்லாக் கனவுகளும் தகர்ந்து தவிடு பொடியாயின.

'சிறப்புக் காவல் படையினர் என் கணவரிடம் முஹம்மத் என்பவரை கஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கணவர் இந்த முஹம்மத் என்பவரையும், தாரிக் என்பவரையும் சிறப்புக் காவல் படையின் கஷ்மீர் முகாமில் வைத்தே சந்தித்தார். இவர்களைப் பற்றி என்னுடைய கணவருக்கு எதுவும் தெரியாது. அதே போல் ஏன் இப்படியொரு பணியைச் (கஷ்மீர் சிறப்புக் காவல் படையின் முகாமிலிருந்து இவர்களை டெல்லிக்கு அழைத்து வரும் பணியை) செய்யச் சொல்கிறார்கள் என்பதும் என் கணவருக்குத் தெரியாது. '

'இவற்றை எல்லாம் என் கணவர் நீதி மன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார். ஆனால் நீதி மன்றமோ பாதியை எடுத்துக் கொண்டது. மீதியை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டது. என்னுடைய கணவர் முஹம்மதை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பதை எடுத்துக் கொண்டது. ஆனால் முஹம்மதை சிறப்புக் காவல் படைதான் தன் முகாமிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி பணித்தது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.'

'கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதைக் கேடக மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார்.'

'உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார். என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது. வேறு வழியின்றி என் கணவர் எஸ்.ஏ.ஆர் ஜீலானியைக் காப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட வழக்கறிஞர் குழுவுக்கு கடிதம் எழுதினார். இந்தக் குழு 'சுசில்குமார்' என்ற வழக்கறிஞரை வைத்தது. ஆனால் இவரால் உச்ச நீதிமன்றம் சாட்சியங்களுக்குள் செல்ல முடியாது. அதனால் என் கணவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.'

'என் கணவரைத் தூக்கில் போட்டு விடக் கூடாது என்றும் அவருடைய வழக்கை நியாயமாக நீதியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.தன்னுடைய தரப்பு வாதத்தைச் சொல்லிட வாய்ப்பளிக்கப்படாத ஒருவரை நீங்கள் (உச்சநீதி மன்றம்) தூக்கிலிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சம்பவம் நடந்தவுடன் காவல் துறையினர் என் கணவரை ஊடகங்களின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் தந்திட கட்டயப் படுத்தினார்கள். இது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே நடைபெற்றது.

'காவல் துறையினர் அவரை அவமானப் படுத்தினார்கள். அடித்தார்கள். சித்திரவதை செய்தார்கள்.அவருடைய வாயில் மூத்திரத்தைப் பெய்தார்கள்.'

'இவற்றை எல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கமாகவெ இருக்கின்றது. ஆனால் சூழ்நிலைகள் என்னைக் கட்டாயப் படுத்தியதால்தான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று. இவற்றை எல்லாம் எழுத்தில் வடிப்பதற்கு மிகையான தைரியம் தேவைப்பட்டது. இப்பொது ஆறு வயதாகி விட்ட என் மகனின் தந்தையைக் காப்பாற்றிடுவதற்காக நான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று.'

'என்னுடைய கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச நீதி மன்றம் பேசுமா? என் சார்பில் நீங்கள் பேசுவீர்களா?நான் என் கணவருக்காகவும் என் மகனின் தந்தைக்காகவும் வாதாடுகிறேன் என்பது உண்மைதான். அதே நேரத்தில் கஷ்மீரில் வாடும் என்னைப் போன்ற பெண்களுக்காகவும் வாதாடுகின்றேன்.'

இந்த மொத்த விவகாரத்திலும் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்பது புலப்படும். இதனால்தான் விருப்பு வெறுப்பற்ற ஒரு விசாரணை நாடாளுமன்றத் தாக்குதலில் மேற் கொள்ளப் பட வேண்டும் என ஜன நாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம் கேட்கிறது.

-நாடாளுமன்ற தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக அப்ஸல் என்ற கஷ்மீரி கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தலைமை நீதிபதி திங்காரா அவர்களாலும், பின்னர் உச்ச நீதி மன்றத்தாலும் தண்டிக்கப் பட்டவர். இந்த தண்டனையைப் பற்றி அஃப்ஸலின் மனைவி தபஸ்ஸூம் தான் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தமிழாக்கத்தைத்தான் நாம் மேலே பார்த்தது.

Source : Annexe 18 of : December, 13,
Terror Over Democracy By Nirmalangshu Mukherji:
A Wifes Appeal for justice :
Published by Promilla & co, New Delhi.

அஃப்ஸல் நம் பாராளுமன்றத்தை தாக்க திட்டம் தீட்டியிருந்தால் உண்மையிலேயே தூக்கு தண்டனை கொடுக்க தகுதியானவர்தான். ஆனால் இங்கு அன்றைய பி.ஜே.பி அரசும், இந்துத்துவ வாதிகளும், நீதிபதிகளும் திட்டமிட்டு ஏற்கெனவே அவர்களின் கஸ்டடியில் இருந்தவர்களை வைத்து நடத்திய நாடகமாகத்தான் மேற் சொன்ன மனுவின் மூலம் தெரிய வருகிறது. இந்த மனுவில் உள்ள விபரங்கள் உண்மையாகும் பட்ஷத்தில் உண்மைக் குற்றவாளிகளை மக்கள் முன் கொண்டு வந்து உச்ச பட்ச தண்டனையை கொடுக்க வேண்டும்.

எஸ்.ஏ.ஆர். ஜீலானி!

தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவர்களில் நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதி செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜீலானி என்பவரும் உண்டு. இவர் டெல்லிப் பல்கலைக் கழகத்தில் அரபித் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஜீலானி அவர்களை டெல்லி உயர்நீதி மன்றம் வழக்கிலிருந்தே விடுதலை செய்தது. அவரை விடுதலை செய்திடும் போது இந்த வழக்கில் சமர்ப்பிக்கப் பட்ட சாட்சியங்கள் எத்துணை பொய்யானவை போலியானவை என்பதைத் தெளிவுபடுத்தியது.

ஜீலானியின் மீது பதினெட்டு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக கீழ் நீதிமன்றம் கூறிற்று. அதனால் மரண தண்டனையும் வழங்கிற்று. அந்த பதினெட்டு சாட்சியங்களும் போலியானவை என உயர் நீதி மன்றம் கூறிற்று. அத்தனை சாட்சியங்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தது உயர் நீதி மன்றம்.

அதே போல் அஃப்சல் என்பவரைப் பற்றிய காவல் துறையின் கூற்றுக்கள் முழுமையாக உடைந்து தகர்ந்து துகள் துகள்களாகப் போய்விட்டன.

'செல் போன்களைத்தான்' மிக முக்கியமான சாட்சியமாக அரசு தரப்பு காட்டுகிறது. அதற்கும் ஆதாரமாக குற்றம் சுமத்தப் பட்டவர்களின் வாக்கு மூலங்களையே காட்டுகின்றது. இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் கொடுமையும் குரூரமும் நிறைந்த சித்திரவதைகளுக்குப் பின் வாங்கப் பட்டவை. ஆகவே இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் யதார்த்தமானவை அல்ல. அவை உருவாக்கப் பட்டவை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் உண்மைகள் வெளிவர தவறி விட்டன.

அதே போல் 'சுயமான சாட்சியங்கள்' எனக் காவல் துறை கொண்டு வந்து நிறுத்திய சாட்சியங்களும் வாங்கப் பட்ட சாட்சியங்கள்.

குற்றவாளிகளிடம் வாக்கு மூலங்கள் என வாங்கப் பட்டவை 'பொடா' என்ற பாசிச பயங்கர வாதச் சட்டத்தின் கீழ் வாங்கப் பட்டவை. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த வாக்கு மூலங்கள் காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கப் பட்டவை அல்ல. அவை பார தூரமான சித்திரவதைகளின் கீழ் வழங்கப் பட்டவை என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இந்த வாக்கு மூலங்கள் - அதாவது காவல் துறையினர் முன் வழங்கப் பட்ட இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் பின்னர் நீதிபதிகளின் முன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (criminal procedure code) பிரிவு முன்னூற்றுப் பதின் மூன்றின் கீழ் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களுக்கு முற்றிலும் மாறானவை.

இப்படி நீதிபதிகளின் முன் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களில் (அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்கு மூலங்களில்)பல வழக்கின் போக்கையே மாற்றுபவை. இதில் முஹம்மது அஃப்ஸல் என்பவர் வழங்கிய வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது.

அந்த வாக்கு மூலம் நம்பத் தகுந்தது. இதனால் நீதி மன்றங்கள் இதில் சில பகுதிகளை நம்பின. இந்த வாக்கு மூலம் இந்த வழக்கில் மறைத்து வைக்கப் பட்ட பல முக்கிய பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாக்கு மூலத்தை இதர வாக்கு மூலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்திடும் போது இந்த சதியில் பாதுகாப்பு முகவர்களின் (security agencies) பங்கு முண்டோ என்ற கசப்பான சர்ச்சையும் கிளம்பியிருக்கின்றது.

முஹம்மது அஃப்ஸலுக்கு அவருடைய வரலாற்றையும் வாதத்தையும் முழுமையாக சொல்லிட எந்த வாய்ப்பும் வழங்கப்பட வில்லை. இதோடு முஹம்மது அஃப்ஸல் என்பவரின் தரப்பை நீதிமன்றத்தில் யாரும் சமர்ப்பிக்வில்லை.

இதனால் முழு வழக்கிலும் காவல் துறையினரின் கூற்று நிரூபிக்கப் படாமலேயே நின்றது. பெரிய திரிபுகளும் கற்பனைக் கதைகளும் இயற்கையான நீதி மறுக்கப் பட்ட நிலையிலுமே (Against National Justice) வழக்கு முடிந்தது.

-நிர்மலாங்ஷூ முகர்ஜி
ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் குழு
Terror Over Democracy

Kashmir

கஷ்மீரில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்று நிர்வாணமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அந்தப் படங்களைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம்.இப்படி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்ட இளம் பெண்கள் நாற்பத்தி மூன்று பேர் மீட்கப் பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படை அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் இவர்கள் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமான பாணியில் எட்டாம் வகுப்பு பெண் குழந்தை ஒன்றை கடத்திச் சென்றதில் தான் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. இதில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த பதிமூன்று பேர் உடந்தை.

காவல் துறை இதனை சரிவர புலன் விசாரணை செய்யாது என்பதால் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத் துறையும் இதனைச் சரிவர புலனாய்வுச் செய்திட வில்லை என கஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி நீதி மன்றத்திலேயே வருத்தப் பட்டுள்ளார்.

-Indian Express. Pune.
29-04-2006

'ஜம்மு கஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை அடிக்கடி இஸ்லாமியர்கள் அங்கு வாழும் இந்துக்கள் மீது நடத்தும் போர் என்றே காட்டுகின்றார்கள். இது மீடியாக்களின் வழியாக பெரிதுபடுத்தப் படுகிறது. இந்த ஊடகங்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் கொலை செய்யப்படும் முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை அதிகமாக வெளியிடுவதில்லை. கொல்லப் பட்டவர்களில் எண்பது சதவீதம் முஸ்லிம்களே என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப் படுகிறது.'

-The Hindu
2-5-2006

கடந்த பதினாறு வருடங்களுக்குள் எட்டாயிரம் பேர் வரை காணாமற் போய் விட்டார்கள். இவர்களில் அதிகமானோர் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டவர்கள். அந்த இளைஞர்கள் எங்கு அடைத்து வைக்கப் பட்டுள்ளார்கள் என்ற ஒரு விபரமும் பெற்றோர்களுக்கு இதுவரை தெரியப் படுத்தப் படவில்லை.

ஸாஹிருத்தீன் என்ற பத்திரிக்கையாளர் தனது 'அவர்கள் காற்றில் கரைந்து போனார்களா?' என்ற நூலில் காணாமற்போன நான்காயிரம் பேர்களின் பட்டியலைத் தருகிறார்.

ஐநூறு பேருக்கும் அதிகமாக கஷ்மீரில் இளைஞர்கள் காணாமல் போனதை உயர் நீதி மன்றமே ஒப்புக் கொண்டிருக்கிறது.

காணாமற்போனோரின் பெற்றோர்கள் அமைப்பும், மனித உரிமைகள் அமைப்பும் எட்டாயிரம் பேர் என்று கணக்கு சொல்கிறது.

இவை எல்லாம் கஷ்மீர் மக்கள் கடைபிடித்து வரும் இஸ்லாமிய கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைத்து அவர்களிடையே கலாச்சார பேரழிவை ஏற்படுத்தும் முயற்சி என்று தான் கஷ்மீர் மக்கள் நினைக்கின்றனர். அடக்கு முறையால் மக்களை தற்காலிமாக வெல்லலாம். ஆனால் அவர்களின் மனங்களை வெல்ல நம் அரசு முயல வேண்டும். நம் நாட்டு அறிவு ஜீவிகளும், அரசும் இதற்கான முயற்ச்சியில் உடன் இறங்க வேண்டும்.
Posted by சுவனப் பிரியன் at 3:16 PM

35 சீக்கியர்களை கொன்று குவித்த மாபாவிகள் யார் தெரியுமா?

பில் கிளிண்டன் வருகையின் பொது முப்பந்தைந்து சீக்கியர்கள் காஷ்மீர் சத்தீசிங் புராவில் கொல்லப் பட்டார்கள். அதைச் செய்தவர்கள் என ஐந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதுபழியைப் போட்டார்கள். அவர்களை கொலை செய்து வழக்கை முடித்துக் கொண்டார்கள்.

முன்னால் அமெரிக்க உள்துறைச் செயலாளர் மெடலின் ஆல்பிரைட் 'தி மைட்டி அண்ட் ஆல் மைட்டி' என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு பில் கிளிண்டன் முன்னுரை எழுதியுள்ளார். கிளிண்டன் இந்தியா வந்த வேளையில் தான் இந்தப் படுகொலைகள் நடந்தன. இந்தப் படுகொலைகளை நடத்தியது ஹிந்துத்துவ வாதிகள் என்று பில் கிளிண்டன் அந்த நூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இந்தப் படுகொலைகளைச் செய்தது கஷ்மீர் தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி வழக்கம் போல் ஐந்து கஷ்மீரிகளை இராணுவம் சுட்டுக் கொன்றது.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து ஆம்னஸ்டி இண்டர் நேஷனல், பஞ்சாபி மனித உரிமைகள் அமைப்பு, அரச ஒடுக்குமுறைக்கான இயக்கம் (The movement against state repression) ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வெளியிட்ட அறிக்கையின் விவரங்களைச் சுட்டிக் காட்டித்தான் பில் கிளின்டன் இவ்வாறு கூறியுள்ளார்.

சீக்கியர்களை படுகொலை செய்தவர்கள் ராணுவச் சீருடை அணிந்திருந்தனர். சீக்கியர்களைச் சூழ்ந்து அவர்கள் சீக்கியர்கள் தானா என்று பரிசோதித்து உறுதிப்படுத்திய பின் குருத்வாராவின் சுவரைப் பார்க்குமாறு திருப்பி நிறுத்தி கொலைகாரர்கள் அந்த அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றார்கள். படுகொலைகளை நிகழ்த்தி விட்டு திரும்பிப் போகும் போது ஹிந்துத்துவ கோஷங்களை எழுப்பினார்கள் அந்தக் கொலைகாரர்கள்.

சீக்கிய பெருங்குடி மக்கள் அன்று அமைதி காத்தார்கள். அதனால் முஸ்லிம்களைத் தாக்கிடவில்லை. (ஒரு வேளை அவர்களுக்கு இவை எல்லாம் தெரிந்திருக்கலாம்.)

அப்போது முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி எஸ்.ஆர். பாண்டியன் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஓர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் பாண்டியனுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டனர். இதனால் நீதிபதி பாண்டியன் தன பொறுப்பை சரி வர நிறை வேற்ற இயலாது என்று கூறி இராஜினாமா செய்து விட்டார். பின்னர் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையின் கைகளுக்குச் சென்றது. அவர்கள் இது எதிர் தாக்குதல் அல்ல மாறாக பட்டவர்த்தனமான படுகொலை என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

கொல்லப் பட்ட அந்த ஐந்து முஸ்லிம்களும் நமது ராணுவச் சிறையில் பல மாதங்கள் இருந்தவர்கள். அந்த முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்து விட்டு எதிர் தாக்குதல் என்ற எண்கவுண்டரில் கொன்றதாக அறிவித்து விட்டார்கள்.

மத்திய புலனாய்வுத் துறை ஒரு லெப்டினென்ட் கலோனல்,இரண்டு மேஜர்கள், ஒரு சுபேதார் போன்றவர்கள் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதே போல் கஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சோறு பதம்.

Source: India today. May 9. 2006, “The Mighty And Almighty” –Medlin Albret

Monday, February 22, 2016

ஏகத்துவ வாதிகள் தமிழகத்தில் பட்ட துன்பங்கள்!

ஏகத்துவம் பற்றி 30 வருடங்களுக்கு முன்....

என்னைப் போன்றவர்கள் ஏகத்துவத்தை ஏற்க வைக்க இறைவன் காரணமாக்கி வைத்த பிஜே யின் 30 வருடத்துக்கு முந்தய பேச்சு!

Posted by Nazeer Ahamed on Sunday, February 21, 2016

என்னைப் போன்றவர்கள் ஏகத்துவத்தை ஏற்க வைக்க இறைவன் காரணமாக்கி வைத்த பிஜே யின் 30 வருடத்துக்கு முந்தய பேச்சு!

Saturday, February 20, 2016

ஆந்திர மாநிலம் நகரியில் குருதிக் கொடை!இறைவனின் மாபெரும் கிருபையினால் ஆந்திர மாநிலம் நகரியில் 20-02-2016 ஆம் தேதியில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அகில இந்திய தவ்ஹீத் ஜமாத் இந்த நிகழ்வை நடத்தியது. மொத்தம் 78 பேர் குருதிக் கொடை கொடுத்தனர். தவ்ஹீத் ஜமாத் தற்போது அகில இந்திய அளவில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. ஏகத்துவ பிரசாரமும் மனித நேயப் பணிகளும் எவ்வித தொய்வுமின்றி சிறப்புற நடைபெற இறைவனிடம் நாமும் பிரார்த்திப்போம்.

எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்...."

( #அல்குர்ஆன் : 5:32)


Friday, February 19, 2016

முன்னால் கத்தோலிக்க பாதிரியார் இன்று முஸ்லிமாக!முன்னால் கத்தோலிக்க பாதிரியார் இன்று முஸ்லிமாக!

முன்பு பாதிரியாராக பணி செய்து வந்தவர் குர்ஆனின் ஆளுமையால் இஸ்லாத்தை ஏற்று இத்ரிஸ் என்ற பெயரில் அழைப்புப் பணியில் ஈடுபட்டார். பல ஆயிரக்கணக்கான மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்து வந்தார். நேற்று நோய்வாய்பட்டு இறந்துள்ளார். பலரின் நேர் வழிக்கு காரணமான சகோதரர் இத்ரிஸின் பாவங்களை இறைவன் மன்னித்து அவரை சொர்க்கத்தில் புகச் செய்வானாக!

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே நாம் வந்தோம்: அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் நாம்!

Wednesday, February 17, 2016

சவுதிக்கான இத்தாலிய தூதர் இஸ்லாத்தை ஏற்றார்!சவுதிக்கான இத்தாலிய தூதர் இஸ்லாத்தை ஏற்றார்!

சவுதி அரேபியாவுக்கான இத்தாலிய தூதர் டோர்காட்டோ கார்டெல்லி இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு பத்ஹா தாவா சென்டருக்கும் வருகை புரிந்து பலரையும் கட்டித் தழுவி தனது வருகையை பகிர்ந்து கொண்டார். இறைவன் இவரை தொடர்ந்து நேர் வழியில் செலுத்துவானாக! இது பழைய செய்திதான் என்றாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள இதனை பதிவிடுகிறேன்.

தன் உயிரை துறந்து இருவரை காப்பாற்றிய இஸ்லாமிய வீர மங்கை!துருக்கியை தாயகமாக கொண்ட ஜெர்மன் பிரஜை தகாஸி அலா பரக்கா. சில மாதங்களுக்கு முன் ப்ராங்க் பர்ட்டில் உள்ள உணவு விடுதிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இரு பெண்களின் கூக்குரல் சப்தம் கேட்டுள்ளது. குடி போதையில் இருந்த இரண்டு செர்பிய இளைஞர்கள் அந்த இரண்டு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தனர். அந்த வழியில் பலரும் தங்களுக்கென்ன என்று அந்த பெண்களை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் சென்று கொண்டிருந்தனர்.

துருக்கி பெண்ணான பரக்காவும் அந்த வழியே சென்றுள்ளார். அந்த இளைஞர்களை நோக்கி கூக்குரலிட்டு அந்த பெண்களை விடச் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த செர்பிய இளைஞர்களோ அந்த பெண்களை விடுவதாக இல்லை. இதனால் கோபமுற்ற பரக்கா அவர்களின் அருகில் சென்று அந்த பெண்களை இழுத்துள்ளார். இதனால் கோபமுற்ற அந்த இளைஞர்கள் பரக்காவை தாக்க ஆரம்பித்தனர். பிடித்து கீழே தள்ளி விட்டனர். கனமான பொருள் கொண்டு அவரை தாக்கியுள்ளனர். வெறி கொண்ட இரண்டு ஆண்களுக்கு முன்னால் போராட முடியாமல் நிலை குலைந்து கீழே விழுந்தார் பரக்கா. அடி பலமாக இருக்கவே சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.

செர்பிய இளைஞர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த செய்தி ஜெர்மானிய ஊடகங்கள் மூலமாக விரைவாக பரவியது. இதன் பலனாய் அவரது இறுதிச் சடங்கில் பல ஆயிரக்கணக்கான ஜெர்மானிய மக்கள் கலந்து கொண்டு தங்கள் சகோதரிக்கு கடைசி அஞ்சலியை செலுத்தினர். இவருக்கு 'ஜெர்மனியின் வீர மங்கை' என்ற விருது வழங்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் கையெழுத்து வேட்டை நடத்தி ஜெர்மன் அதிபர் ஆஞ்சலோ மார்க்கருக்கு அனுப்பி வைத்தனர். ஜெர்மன் அதிபரும் அந்த பெண்ணின் தீர செயலை பாராட்டினார்.

ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் சில தீவிரவாத நாய்கள் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும், முகமூடி அணிந்து கொண்டு செய்து அதனை 'அல்லாஹூ அக்பர்' என்ற பெயரில் அரங்கேற்றி வருவதையும் தினம் பார்கிறோம். அதனை எல்லாம் பத்தி பத்தியாக எழுதும் ஊடகங்கள் இது போன்ற செய்திகளை இருட்டடிப்பு செய்து விடும். 'ஜிஹாத்' என்ற சொல்லை சரியாக விளங்கியதால்தான் பரக்கா தனக்கு சம்பந்தமில்லாத இரு பெண்களை காப்பாற்ற போய் தனது உயிரை இழந்திருக்கிறார். 'ஜிஹாத்' என்ற சொல்லுக்கு அநியாயத்துக்கு எதிராக போரிடுதல் என்று இஸ்லாம் கூறுகிறது. இதற்கு பெயர்தான் ஜிஹாத். இதல்லாது ஐஎஸ்ஐஎஸ் அல்லது போகோ ஹராம், இந்தியன் முஜாஹிதீன் போன்ற மிருகங்கள் நடத்தும் கொலைகள் அல்ல ஜிஹாத். அதனை இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை. இஸ்லாமிய பெயரில் இயங்கும் இந்த தீவிரவாத குழுக்கள் அனைத்தும் அமெரிக்க யூதர்களால் அரங்கேற்றப்படுபவை. சில நாட்களுக்கு முன்பு 'தாலிபான்கள் தீவிரவாதிகள் அல்ல' என்று இதே அமெரிக்கா அவர்களுக்கு நல்லெண்ண சர்டிபிகேட் வழங்கியதையும் ஞாபகப் படுத்திக் கொள்வோம். இந்த உண்மைகள் காலப் போக்கில் வெளி வரும். அது வரை பொறுப்போம்.

இறந்த சகோதரி பரக்காவின் மறு உலக வாழ்வு சிறப்புற அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திப்போம்.

தகவல் உதவி
MORALNEWS24.COM

http://www.moralnews24.com/en/?p=496

Sunday, February 14, 2016

வாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்வாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்

'இந்த மார்க்கத்தில் எவ்வித வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்'
குர்ஆன் 2:256

இந்த வசனம் இறங்கிய வரலாற்றை சற்று பார்போம்.

நபிகள் நாயகம் காலத்துக்கு முன்பு மதினாவில் ஒரு பழக்கம் இருந்தது. குழந்தைக்கு ஏதாவது நோய் வந்து விட்டால் அன்றைய சிலை வணங்கிகள் 'எனது குழந்தைக்கு நோய் குணமாகி விட்டால் அந்த குழந்தையை யூதனாக்கி விடுகிறேன்' என்று நேர்ச்சை செய்து கொள்வார்கள். குழந்தைக்கு குணமாகி விட்டால் அந்த குழந்தைகளை யூதர்களிடம் கொடுத்து விடுவார்கள் அன்றைய மக்கா மதினாவாசிகள். கோவிலுக்கு நேர்ந்து விடுவது என்று நம் பக்கம் சொல்வதில்லையா அது போல். இவ்வாறு பல குழந்தைகள் யூதர்களாக வளர்ந்து வந்தனர். இந்த நேரத்தில் மதினாவில் இஸ்லாம் வளர ஆரம்பிக்கிறது. மதினாவில் இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் உயருகின்றனர். ஒரு கட்டத்தில் மதினாவிலிருந்த யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவ்வாறு அவர்கள் வெளியேறும் போது யூதர்களாக மத மாற்றம் செய்யப்பட்ட சில சிறுவர்களும் அவர்களோடு செல்ல நேரிட்டது. அந்த சிறுவர்களின் தாய் தந்தையரோ இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். 'அறியாமைக் காலத்தில் நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்கள் குழந்தைகளை யூதர்களாக வளர்க்க முன்பு அனுமதித்தோம். அது தவறு என்று உணர்ந்துள்ளோம். எனவே எங்கள் குழந்தைகளை நாங்கள் கட்டாயப் படுத்தி இஸ்லாத்தில் இணைத்து விடுகிறோம்' என்று மதினா முஸ்லிம்களில் சிலர் நபி அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். அப்போதுதான் இந்த வசனம் இறங்குகிறது.

'இந்த மார்க்கத்தில் எவ்வித வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.
-குர்ஆன் 2:256

இந்த சம்பவம் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அறிவிக்க அபூதாவூத் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் 2307 ஆவது ஹதீதாக பதியப்பட்டுள்ளது. இது ஆதாரபூர்வமான நபி மொழியாகும். சொந்த பிள்ளைகளின் மீதே தாய் தகப்பன் தங்களின் கருத்துக்களை திணிக்க குர்ஆன் அனுமதிக்காதபோது அன்னியர்களை மார்க்கத்தை ஏற்க வாளை தூக்க சொல்லியிருக்குமா? எனவே குர்ஆனின் அடிப்படையில் கட்டாய மத மாற்றம் செய்வதற்கு வாளை எடுப்பது இஸ்லாமிய நடைமுறை கிடையாது என்பதை விளங்கிக் கொண்டோம்.

இங்கு இன்னொன்றையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். மதினா யூதர்களின் தாயகம் அல்ல. அவர்களின் வேதத்தில் 'ஒரு இறைத் தூதர் பின்னால் வருவார். சொந்த மக்களால் அவர் விரட்டப்படுவார். விரட்டப்பட்ட அவரும் அவரது நண்பர்களும் மதினாவில் தஞ்சமடைவர்' என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு அந்த இறைத் தூதர் வரும் போது முதல் ஆளாக நாம் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவர்களின் முன்னோர் மதினாவில் குடியேறினர். அந்த யூதர்களின் வாரிசுகளே மதினாவை துறந்து வெளியேறினர் என்பதை மேலதிக தகவலாக தெரிந்து கொள்வோம்.

இனி இது பற்றி இந்து மத துறவி சுவாமி விவேகானந்தர் கூறுவதையும் கேட்போம்.

“ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் முஸ்லிம்களின் படையெடுப்பு ஒரு விடுதலையாக அமைந்தது. ஆதலால்தான் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாக மாறினர். இதனை சாதித்தது வாள் என்பதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வாளாலும் நெருப்பினாலுமே இவை சாதிக்கப்பட்டது என்று கூறுவது மதி கேட்டின் உச்ச நிலையாகும்” என்று கூறினார்.
-விவேகானந்தர், இஸ்லாமும் இந்தியாவும், ஞானய்யா, அலைகள் வெளியீட்டகம், பக்கம் 124.

Posted by சுவனப் பிரியன் at 12:19 PM
Labels: ‪#‎அரசியல்‬, ‪#‎இந்தியா‬, ‪#‎இந்து‬, ‪#‎இந்துத்வா‬, ‪#‎இஸ்லாம்‬

Saturday, February 13, 2016

கண்ணீரை வரவழைக்கும் வரலாற்று நிகழ்வுகள்!

டி ராஜேந்தர் பாணியில் ஒரு பதிவு! :-)அரசுக்கு தினமும் கொடுத்தேன் துட்டு!

அதனால் எனக்கு தினமும் வீட்டில் திட்டு!

கல்லீரலும் மண்ணீரலும் இன்று கெட்டு

நாளும் சரிந்து கிடக்கிறேன் தறி கெட்டு

உண்மையில் எனக்கு இருப்பது வட்டு(பைத்தியம்)

Wednesday, February 10, 2016

மொழி தெரியாத நாடுகளில் பலரும் படும் சிரமம் :-)

அரபி: இகாம ஃபீ.... (தொழுகைக்கான அழைப்பு கொடுத்தாகி விட்டதா?)'பெங்காளி: ..........அரபி : நண்பரே இகாமத் கொடுத்தாகி வி...

Posted by Nazeer Ahamed on Wednesday, February 10, 2016

அரபி: இகாம ஃபீ.... (தொழுகைக்கான அழைப்பு கொடுத்தாகி விட்டதா?)'

பெங்காளி: ..........

அரபி : நண்பரே இகாமத் கொடுத்தாகி விட்டதா?

பெங்காளி: ............

பதில் சொல்லாமல் பெங்காளி வேகமாக ஓடுகிறான். இகாம என்பதற்கு அரபியில் இரு பொருள் உண்டு. எழுத்துக்கள் சிறிய மாற்றங்களுடன் வரும். ஒன்றுக்கு 'தொழுகைக்கான அழைப்பொலி'. மற்றொன்றுக்கு 'நடை பாஸ்' என்று சொல்வார்கள் அல்லவா அந்த அர்த்தமும் வரும்.

அந்த அரபி அந்த பெங்காளியிடம் 'தொழுகைக்கான அழைப்பு கொடுத்தாகி விட்டதா?' என்று கேட்டார். ஆனால் அந்த பெங்காளியோ உன்னிடம் 'நடை பாஸ்' இருக்கிறதா? என்று கேட்பதாக தவறாக விளங்கிக் கொண்டு அவர் மஃப்டியில் உள்ள போலீஸோ என்று தவறாக விளங்கிக் கொண்டு பயந்து போய் தலை தெறிக்க ஓடுகிறான். :-) .

மொழி தெரியாத நாடுகளில் பலரும் படும் கஷ்டங்கள் இதுபோல்தான் இருக்கும்.Tuesday, February 09, 2016

சிறுவனின் கண் பார்வை போயுள்ளது!

தயவு செய்து செல் போன் பேசும் போது சார்ஜில் போட்டுக் கொண்டு பேசாதீர்கள். இன்று இந்த சிறுவனின் கண் பார்வை போயுள்ளது. செல் போனில் பேசுவதை விட நமது உயிர் முக்கியம் அல்லவா?

Posted by Nazeer Ahamed on Tuesday, February 9, 2016

தயவு செய்து செல் போன் பேசும் போது சார்ஜில் போட்டுக் கொண்டு பேசாதீர்கள். இன்று இந்த சிறுவனின் கண் பார்வை போயுள்ளது. செல் போனில் பேசுவதை விட நமது உயிர் முக்கியம் அல்லவா?

கொருக்குப் பேட்டையில் பயங்கர தீ விபத்துசென்னை கொருக்குப் பேட்டையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு சாதி மதம் பார்க்காமல் தவ்ஹீத் ஜமாத் இளைஞர்கள் களப்பணியில் இறங்கி சேவை செய்து வருகின்றனர்.

சமஸ் மற்றும் ஜெயமோகன் வகையறாக்கள் இவர்களைத்தான் தீவிரவாதிகள் என்கின்றனர். தமிழகத்துக்கு இவர்களால் ஆபத்து என்றும் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

நாங்களும் உதவ மாட்டோம்: உதவி செய்பவர்களையும் கொச்சைப்படுத்துவோம் என்று திரியும் இந்த இந்துத்வாவாதிகள் கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா?

சே....... என்ன மனிதர்கள் இவர்கள்?

Monday, February 08, 2016

கனி பாபா போல் உழைக்கக் கற்றுக் கொள்வோம்!

”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் க...

Posted by Nazeer Ahamed on Monday, February 8, 2016

”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
புகாரி: 1470, 1471.

நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2071.

”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும்உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2072, 2073.

தவறு செய்தவர் திருந்தப் பார்க்கணும்!

தவறு செய்தவர் திருந்தப் பார்க்கணும்!'முன்பு அறியாமல் தட்டு, தாயத்து, மந்திரம், பில்லி, சூன்யம் என்று மக்களை ஏமாற்றி வய...

Posted by Nazeer Ahamed on Monday, February 8, 2016

Sunday, February 07, 2016

கல்வியின் பெயரால் தொடரும் சாதிய வன்மங்கள்!ஹைதராபாத் பல்கலைக்கழக அறிவியல் புலத்தில் பி.எச்டி. ஆய்வு மேற்கொண்டு வந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை, அனைவரிடமும் பெரும் சர்ச்சைகளையும் கேள்விகளையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியாக மாணவ/மாணவிகளின் ‘தன் மரணங்கள்’ நாடெங்கும் அதிர்வலைகளை எழுப்பியபடி இருக்கின்றன. அதிலும் கல்விக்கூடங்களில், உயர் கல்விக் கூடங்களில் நிகழும் மரணங்கள், அதன் பின்னிருக்கும் சாதியின் கோர முகங்களை வெளிப்படுத்தியபடியே இருக்கின்றன.

தலித் என்பதாலேயே தொடர்ச்சியாக இழிவுகளைச் சந்தித்துக்கொண்டேயிருக்கும் நிலை அவர்களைத் தொட்டுத் தொடர்ந்தபடி இருக்கிறது. கிராமப்புறங்களில் ஊர் என்றும் சேரி என்றும் ஊரே இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும் காலத்தில் இந்த வேறுபாடு தொடங்கிவிடுகிறது.

நகரங்களில் வெளிப்படையாகத் தெரியாத சாதி, கிராமப்புறங்களில், சிறு நகரங்களின் பள்ளிகளில், மாணவர்களின் கைகளில் வண்ணமயமான பட்டைகளாக (Bands) வெளிப்படத் தொடங்கிவிட்டது. சாதிக்கேற்ற நிறம், அந்த நிறத்துக்கேற்றவாறு நடத்தப்படும் நிலை எனச் சாதியம், வெவ்வேறு வடிவம் எடுத்துத் தலைவிரித்தாடுகிறது. பொருளாதார ரீதியாக தலித் மக்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்காதவரையிலும் எத்தகைய சீர்திருத்தங்களில் ஈடுபட்டாலும் அது தலித்துகளை மட்டுமல்லாமல், ஒடுக்கப்படும் அனைத்துச் சாதி மக்களையும் அழிவுப் பாதையை நோக்கியே அழைத்துச் செல்லும் என்பதற்கான அத்தாட்சியே இவை அனைத்தும்.

நாகரிக சமூகம் என்று சொல்லிக்கொள்ளவே முடியாத அளவுக்கு அவை வேரூன்றிக் கிடப்பது அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதிலும் தலித் பெண்ணாக இருந்தால், அடிமைக்கும் அடிமையாக நடத்தப்படும் நிலை. கல்லூரி வளாகத்துக்குள் பிற இடைநிலைச் சாதி மாணவ, மாணவிகளால் தலித் மாணவிகள் நடத்தப்படும் விதம் ஒருபுறம் என்றால், கல்வி நிறுவனமே அதற்குச் சற்றும் குறையாமல் பாரபட்சத்தை வாரி வழங்குகிறது.

பொதுவாக, கல்வி வளாகங்களுக்குள் காணப்படும் தீண்டாமை மிக நுட்பமானது. அடிப்படை வசதியின்மை, சுகாதாரமான குடிநீர், தங்கும் விடுதிகளில் பாரபட்சம் எனப் பிரச்சினைகள் அனைத்து மாணவர்களையும் தாக்கினாலும் அதனுள்ளும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் அடுத்த உள் அடுக்குகளில் ஒடுக்குமுறைகளைச் சந்திக்கின்றனர். இதனைக் கொடூரமான தாக்குதல் என்றே சொல்லலாம். எல்லோருக்கும் ஒரு அடி என்றால், தலித்தாகப் பிறந்ததால் அவர்கள் கூடுதலாக இரண்டு அடிகளைப் பெற்றே தீர வேண்டும். இது மிகவும் நுட்பமான வன்முறை.

உதாரணமாக, பொதுத் தேர்வுகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் பிறப்பு குறித்து விடைத்தாள்களைத் திருத்துபவர்கள் அறிய வாய்ப்பில்லை என்பதால் அதிக மதிப்பெண் பெறும் தலித் மாணவர்கள் அதே பாடத்துக்காக பிராக்டிகல் தேர்வில் ஈடுபடும்போது ஒப்பீட்ட அளவில் மிகக் குறைந்த மதிப்பெண்கள்தான் பெறுவார்கள். ஏனென்றால், அந்தத் தேர்வுகள் கல்வி நிறுவன வளாகத்தில், அறியப்பட்ட ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெறும். அந்த மாணவர்களின் சாதி குறித்து ஆசிரியர்களுக்குத் தெரியும் என்பதால் மதிப்பெண்கள் வழங்கும்போது அவர்களின் கை இயல்பாகவே உள்ளிழுத்துக்கொள்கிறது.

இந்த நுண் அரசியல் கிராமத்தின் தொடக்கப் பள்ளிகள் முதல், நாட்டின் மதிப்பு மிக்க உயர் கல்வி வளாகங்கள்வரை தொடர்வது வேதனை. திறன்கள் நிரூபிக்கப்படும் தேர்வுகளிலேயே இப்படி ஒதுக்கப்படுகிறார்கள் என்றால் வகுப்பறைகளில், விடுதிகளில் ஆசிரியர் – சக மாணவர் உறவுகளில், அன்றாடச் சந்திப்புகளில், உரையாடல்களில், பாடங்களுக்கு விளக்கம் அளிப்பதில், விளையாட்டு மைதானங்களில், கண் பார்வையில், கை தொடுகையில் எப்படியெப்படியெல்லாம் பாரபட்சமாக நடத்தப்படுவார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல.

நவீன தீண்டாமையின் வெளிப்பாடுகள்

பல தோழிகளிடமும் அவர்களின் பள்ளிக் காலத்து நினைவுகளைப் பற்றி பேசும்போது, தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டது மிகுந்த கசப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாகவே இருந்தது.

முதல் தலைமுறையாகக் கல்லூரியில் சேர்ந்து படித்த தோழி, தற்போது அரசு அலுவலராக இருப்பவர். அவர் தன் கடந்த கால பள்ளி அனுபவங்களையும் கல்லூரியில் அவர் நடத்தப்பட்ட விதம் பற்றியும் விவரித்தபோது அந்த வலியும் வேதனையும் நமக்குள்ளும் கடத்தப்பட்டதை உணர முடிந்தது. இத்தனைக்கும் அவர் இட ஒதுக்கீட்டில் மட்டுமல்லாமல், மதிப்பெண் அடிப்படையிலும் நல்ல தேர்ச்சியைப் பெற்றவர். பெண்ணாகப் பிறந்ததால் முதல் தவணை பாரபட்சம். தவிர, தலித் சமூகத்தில் பிறந்ததால் இன்னொரு மடங்கு கூடுதலாகப் பாரபட்சம்.

ஓரளவு சட்டப் பாதுகாப்பு இருப்பதால் நேரடியாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாது. இரட்டைக் குவளை முறை சாத்தியமில்லை என்பதைத் தவிர ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு விடுதி வளாகத்திலும் ஒரு சேரியை எப்படியாவது உருவாக்கிவிடுகிறார்கள். ஒரு கேலிப் பார்வையும் ஏளனப் புன்னகையும்கூடப் போதும், ஒரு தலித் பெண் உள்ளுக்குள் சுருங்கிப்போக.

ஆயிரம் தலைமுறை அறிவொளி

சேரியிலோ காலனியிலோ பிறந்து, முதல்தலைமுறையாகக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கும் ஒரு அப்பாவிப் பெண்ணின் மருண்ட பார்வையையும் எதைக் கண்டும் அச்சத்துடன் ஒதுங்கியே போகும் அவளது நிலையையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தனக்குப் பிறகு ஆயிரம் தலைமுறைகளுக்கு அறிவொளி ஏற்படுத்தப் போகிறவள். அவளை ஒரே பார்வையில் பொசுக்கிவிட்டால், பின் அவள் எப்படி எழுந்து நிற்க முடியும்? இந்த நடைமுறையைத்தான் இட ஒதுக்கீட்டின் மீதான கடும் வெறுப்பாக வெளிப்படுத்துகிறது முன்னேறிய சமூகம்.

முடிந்தால் முகத்துக்கு நேராகவே பேசுவது. இல்லையென்றால் சாடைமாடையாகக் குத்திக் கிழிப்பது. இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் சண்டைக்காரி என்ற பட்டத்தோடு முத்திரை குத்தப்படுவதுடன் ஓரங்கட்டப்படும் நிலையையும் எதிர்கொள்ள வேண்டும்.

உணவு, உடை, பழக்கவழக்கம் என அனைத்திலும் பண்பாட்டு ரீதியான தீண்டாமைச் சாட்டை அவள் மீது சொடுக்கப்பட்டுக்கொண்டேயிருந்தால் அவளுக்குள் ஆளுமைப் பண்பு எப்படி உருவாகும்? எது நடந்தாலும் கலங்காமல் எதிர்த்துப் போராடக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியவர்கள் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கச் செய்தால் அவர்கள் சிந்தனை பாழுங்கிணற்றையும், உத்தரத்தையும், ரயில் தண்டவாளங்களையும் நோக்கித்தானே பாய்கிறது? இதனைத் தற்கொலை என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? உண்மையில் இது சமூகக் கொலை அல்லவா! ஆண், பெண் என இரு பாலாருக்கும் இது பொருந்தும். இதைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் என்ன? ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுகின்றனவா? மாநிலங்கள் மாறினாலும் நாடு முழுக்க அவலம் மாறுகிறதா? அரசுகளே துணை போகும் நிலையை நோக்கி முன்னேறியிருப்பதுதான் கண்ட பலன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-02-2016

Saturday, February 06, 2016

தமிழ் இந்து ஏட்டுக்கு என்ன நேர்ந்தது?

இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்னபெயர்? என்ற தலைப்பில் இந்து ஏடு ஒரு நீண்ட கட்டுரையை 4-2-2016 தேதியிட்ட இதழில் வெளியிட்டுள்ளது. சமஸ் என்பவர் எழுதிய இக்கட்டுரையை வாசிக்கும் அறிவுடைய மக்கள் இந்து ஏட்டுக்கு என்ன நேர்ந்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள். அந்த அளவுக்கு பொய்களும் முரண்பாடுகளும் கற்பனைகளும் கொண்ட அபத்தக் களஞ்சியமாக அக்கட்டுரை அமைந்துள்ளது.


அபத்தம்

அல்லாஹ்வை ஒருவனைத் தவிர யாரையும் எதையும் வணங்கக் கூடாது என்று கூறி மற்ற கொள்கைகளை வஹ்ஹாபிகள் மறுக்கிறார்கள் என்ற கட்டுரையின் சாரமே அர்த்தமற்றதாக உள்ளது.அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்பது எப்படி ஒரு கொள்கையாக உள்ளதோ அது போல் எதையும் வணங்கலாம் என்பது இதற்கு எதிரான மற்றொரு கொள்கை. கட்டுரையாளர் இந்த எதிர் கொள்கையில் தான் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை விதைக்கிறார்.

அதாவது ஒற்றைக் கொள்கை கூடாது எல்லாக் கொள்கைகளுக்கும் இடம் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு எதையும் வணங்கலாம் என்ற ஒற்றைச் சிந்தனைக்கு வக்காலத்து வாங்கி தனக்குத்தானே முரண்படுகிறார். இது பற்றி அவர் எதையும் எழுதாமல் இருந்தால் தான் இந்த வாதம் செய்ய அவருக்கு அருகதை இருக்க முடியும். இரு முரண்பட்ட கொள்கையில் தனக்கு விருப்பமான ஒரு கொள்கை தான் நல்லது என்று கூறி இந்து ஏட்டின் தரத்தை பாதாளத்தில் தள்ளுகிறார்.


அபத்தம் 2
திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்புமாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம்கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கைதோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத்தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்றபெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதுஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லைதோழர். ஒரே இறைவன், ஒரேவழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க் தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள்அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கைவைக்கிறீர்கள். நாளைக்குஅரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம்வைக்கும்?” அவர் என்னைஒரு மாதிரியாகப் பார்த்தார்.
என்று கட்டுரையாளர் வாதம் வைக்கிறார். தவ்ஹீத் ஜமாஅத் நாட்டில் உள்ள தர்காக்களை எல்லாம் இடித்துத் தள்ளிவிட்டது போலவும் அடுத்து அதிகாரம் கிடைக்கும் போது கோவில்கள் சர்ச்சுகள் எல்லாம் இடிக்கப்படும் எனவும் நஞ்சை விதைக்கிறார். தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையை அதன் நிர்வாகிகளின் பேச்சு மற்றும் எழுத்திலிருந்து புரிந்து கொள்ளாமல் தவ்ஹீத் ஜமாஅத்தின் புரசைவாக்கம் எதிரிகளிடம் கேட்டு அப்படியே வாந்தி எடுத்துள்ளார்.
இஸ்லாமிய நம்பிக்கைப்படி தர்கா கட்டக்கூடாது; நபிகள் நாயகம் அவர்கள் அதற்குத் தடை போட்டுள்ளார்கள். இதை அறியாமல் தர்காக்களை கட்டியவர்களும் அதன் உரிமையாளர்களும் இதனை தவறு என்று உணர்ந்து அவர்களே அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று தான் தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறது. எந்த ஊரிலும் தர்காவை தவ்ஹீத் ஜமாஅத் இடிக்கவில்லை. இடிக்கப்பட வேண்டும் என்று நபிகள் சொன்னதை நீங்கள் வணங்கலாமா என்று கொள்கைப் பிரச்சாரத்தை தான் முடுக்கி விட்டிருக்கிறது.


அபத்தம் 3
காந்தி சொன்னார், “நான் ஒருஇந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம்என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாதஎதிர்ப்புக்கான இலக்கணம் இல்லையா? இது கட்டுரையாளரின் கேள்வி.

இதில் கடுகளவாவது லாஜிக் உண்டா? அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான லாயிலாஹ இல்லல்லாஹு என்பதன் பொருள். இதை ஏற்றால் தான் ஒருவர் முஸ்லிம். அப்படி அனைத்து தெய்வங்களையும் மறுத்து விட்டு முஸ்லிமாக இருக்கும் போது இன்னொரு மதத்தவராக எப்படி இருக்க முடியும்? இருப்பதாகச் சொன்னால் அவர் பொய் சொல்கிறார்.
ஒருவர் திமுகவாக இருக்கும் போதே அவர் அதிமுகவாகவும் இருக்கிறார். காங்கிரசாகவும் இருக்கிறார். பீஜேபியாகவும் இருக்கிறார் என்று கூறுவது எவ்வளவு மடமையோ அதைவிட மடமையாக இந்த வாதம் அமைந்துள்ளது.
இந்துவாக இருப்பவர் இந்துவாக மட்டும் இருந்து கொண்டு மற்ற மதத்தவருக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். முஸ்லிமாக இருப்பவர் முஸ்லிமாக இருந்து கொண்டு மற்ற மதத்தவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். இதுதான் நல்லிணக்கத்துக்குத் தேவை.
நான் திமுக தான் ; அதிமுக தான்; காங்கிரஸ்தான், கம்யூனிஸ்டுதான் பீஜேபிதான் என்று கூறுவது ஏமாற்ற உதவுமேயன்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. இந்த அடிப்படை அறிவு கூட கட்டுரையாளருக்கு இல்லை.


அபத்தம் 4
சென்னை வெள்ள நாட்களில்‘தி இந்து’வில் வெளியான ஒருபடம் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. நண்பரும்பத்திரிகையாளருமானமுஹம்மது அமீன், “காஷ்மீர்வரை இந்தப் படம்போயிருக்கிறது. எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்!” என்று கூறினார். வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக் கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள்சுத்தப்படுத்திய படம் தான் காஷ்மீரிலும் டெல்லியிலும்அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம். அவரிடம் சொன்னேன். “உண்மையில், தேசிய அளவில் ஏனையமுஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள்தான் மதநல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில்கூடவழிகாட்ட முடியும். அதற்கானகலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது!”
என்று அடுத்த அபத்தத்தை எடுத்து வைக்கிறார்.

வெள்ளத்தால் மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த போது அவர்களை மீட்பதும் தேவையான உதவிகள் செய்வதும் தான் முக்கியம். அதை தவ்ஹீத் ஜமாஅத் தான் முன்னணியில் நின்று செயல்படுத்தியது. அந்த நேரத்தில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி பணியாற்றாமல் விளம்பரத்துக்காக கோவிலைச் சிலர் சுத்தம் செய்தனர். அந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலை இதுவா? அங்குள்ள மக்கள் தமது கோவிலைச் சுத்தம் செய்து கொள்ள மாட்டார்களா?
ரோம் தீப்பற்றி எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் கருத வேண்டிய ஒரு செயலை மகத்தான நல்லிணக்கமாக கட்டுரையாளர் சித்தரிக்கிறார்.
தவ்ஹீத் ஜமாஅத் செய்ததில் ஒரு சதவிகிதம் கூட நிவாரணப்பணி செய்யாத தர்கா வழிபாட்டுக்காரர்களை நல்லிணக்க நாயகர்கள் என்கிறார்.


அபத்தம் 5
அடுத்து வஹ்ஹாபிச அச்சுறுத்தல் என்கிறார்.
தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் வஹாபிசத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சவூதி உள்ளிட்ட எந்த வெளிநாட்டில் இருந்தும் எந்த உதவியும் பெறக் கூடாது என்று விதியை ஏற்படுத்தியுள்ள ஜமாஅத் தவ்ஹீத் ஜமாஅத்.
வஹ்ஹாபிகள் என்று இந்து ஏடு குறிப்பிடும் சவூதியின் பல கொள்கைகளை தவ்ஹீத் ஜமாஅத் எதிர்க்கிறது. எவனெல்லாம் தர்கா கூடாது என்கிறானோ அவனெல்லாம் வஹ்ஹாபி என்ற அளவுக்குத் தான் இவரது ஞானம் உள்ளது.
வஹ்ஹாபிகளாக இல்லாத ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத், உள்ளிட்ட பல இயக்கங்கள் வஹ்ஹாபிகளாக இல்லாமல் தர்கா வழிபாட்டை எதிர்ப்பவர்கள் தான்.
தர்கா வழிபாட்டை எதிர்ப்பது நபிகள் நாயகம் எதிர்த்தார்கள் என்பதற்காகவே தவிர முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் எதிர்த்தார் என்பதற்காக அல்ல.
அடுத்து வஹ்ஹாபிகள் மற்ற கொள்கை உடையவர்களை அழித்தொழிப்பார்கள் என்று கட்டுரையாளர் சித்தரிப்பதும் அறியாமையின் வெளிப்பாடு தான்.
சவூதியில் ஷியாக்கள் உள்ளனர். அவர்களுக்கு பள்ளிவாசல்கள் இன்றும் உள்ளன. அதை சவூதி அரசு அழித்து ஒழிக்கவில்லை. சவூதியைச் சேராத வெளிநாட்டில் இருந்து பிழைக்க வந்தவர்கள் இந்துக்களானாலும் முஸ்லிம்களானாலும் அவர்கள் வழிபாட்டுத் தளம் அமைக்க அனுமதி இல்லை. சவூதி குடிமகனாக இல்லாத தவ்ஹீத் ஜமாஅத்தினர் சவூதியில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதி கேட்டால் அனுமதிக்கப்படாது. ஏன் வெளிநாட்டவர்கள் சொந்தமாக தொழில் துவங்குவது கூட அங்கே எளிதான காரியமல்ல. இந்த அடிப்படை விளங்காமல் கட்டுரையாளர் நுனிப்புல் மேய்ந்துள்ளார்.
சமஸ் ஆதரிக்கும் சமாதி வழிபாட்டுக்காரர்களான ஈரான் ஷியா பிரிவினர் ஈரானில் வஹ்ஹாபிசத்தை, தப்லீக் ஜமாஅத்தை அனுமதிப்பதில்லை என்பது கட்டுரையாளருக்குத் தெரியவில்லை.
தொன்மையான கலைப்படைப்புக்களை அழித்தார்கள் என்று சொல்லும் சமஸ் ஈரானில் தகர்க்கப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?
ஒசாமாவும் முல்லா உமரும் சவூதியின் வஹ்ஹாபிசத்தை எதிர்ப்பவர்கள் என்பது சமசுக்குத் தெரியாமல் போனது எப்படி?
மக்காவின் புனிதப் பள்ளிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்திய ஈரான் ஷியாக்கள் சமாதி வழிபாடு செய்வோர் என்பதைக் கட்டுரையாளர் கண்டு கொள்ளாத அது ஏன்?
சவூதியில் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதாக குறைபட்டுக் கொள்கிறார் கட்டுரையாளர்.
கட்டுப்பாடு தணிக்கை என்றெல்லாம் உளறுகிறார். இதுவெல்லாம் அரசின் நடவடிக்கையாகும். இதைவிட ஆயிரம் மடங்கு சீனாவில் கட்டுப்பாடு உள்ளது. முஸ்லிம்கள் நோன்பு வைக்கத் தடை! தாடி வைக்கத் தடை! இன்னும் பல தடைகள் உலக நாடுகளில் இருப்பது கூட இவருக்குத் தெரியவில்லை.
கட்டுரையாளருக்கு அறிவு நாணயம் இருந்தால் சவூதியில் உடல் உறுப்புக்கள் வெட்டப்பட்ட மூன்றரை லட்சம் பேர் என்பதற்கும் நாற்பதாயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறியதற்கான ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும். நாம் எதை எழுதினாலும் எவன் கேள்வி கேட்கப் போகிறான் என்று வாயில் வந்ததை உளறக் கூடாது.
சிரியாவில் தர்கா வழிபாடு நடத்தும் அதிபர் பஷீரால் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஏமனில் ஈரானின் ஆயுத உதவி பெற்று ஷியா தீவிரவாதிகள் செய்த படுகொலைகள் எவ்வளவு? இதுவெல்லாம் தெரியாத ஒருவர் இது குறித்து கட்டுரை எழுதத் துணியலாமா?
தற்போது 47 பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள் என்று குறிப்பிடுகிறார். அதற்கான காரணம் கூட இவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் பொது இடங்களில் குண்டு வைத்தவர்கள் என்ற உண்மையை அப்படியே அமுக்கி விட்டார்.
அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் அல்ல.
இவர் சொல்வது போல் சவூதியின் கொள்கை அதுவாக இருந்தால் அதற்கும் தவ்ஹீத் ஜமாஅதுக்கும் என்ன சம்மந்தம்? அதற்கு என்ன ஆதாரம் என்று காட்ட வேண்டாமா?.


அபத்தம் 6
வஹாபியிஸம் எந்த நாட்டில்நுழைந்தாலும் அதுபொதுவெளியில்முன்வைக்கும் இருமுழக்கங்கள் – ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம். மூன்றாவதுமுழக்கம் அந்தரங்கமானது – ஒரே அரசு!
ஒரே கடவுள்; ஒரே கலாச்சாரம் என்பது இஸ்லாத்தின் கொள்கை தான். லாயிலாஹ இல்லல்லாஹு என்பதன் அர்த்தம் கூட இவருக்குத் தெரியவில்லை. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்பது இதன் பொருள். இது தான் இஸ்லாத்தின் கொள்கையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ள கொள்கையை வஹ்ஹாபிக் கொள்கை என்று சொல்லும் அளவுக்கு அறிவில்லாமல் எழுதுகிறார்.
மூன்றாவது முழக்கம் ஒரே அரசு என்கிறார். இதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும். இது முற்றிலும் கட்டுக்கதையாகும்.
அப்படி இருந்தாலும் எக்காலத்திலும் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று செயல்படும் தவ்ஹீத் ஜமாஅத் பற்றி இவர் இப்படி எழுதியதற்கு அதிக நெஞ்சழுத்தம் வேண்டும்.


அபத்தம் 7
இஸ்லாத்தில் அடிப்படையில் மதம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஒப்பந்தம். அது ஆன்மிகமயமானது. அதில் கட்டாயத்துக்கோ பலப்பிரயோகத்துக்கோ இடமேஇல்லை. ஏனைய சமூகங்களுடனான உறவையும் சகிப்புத்தன்மையையும் தன்வாழ்நாள் நெடுகிலும் போதித்திருக்கிறார் முஹம்மது நபி. வஹாபியிஸமோ, எதுஒன்றையும் குறுகிய மதக்கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் இப்பார்வையைப் பரப்புவதையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்கிறது வரலாறு.
என்று சாத்தான் வேதம் ஓதுவது போல் எழுதுகிறார்.
தவ்ஹீத் ஜமாஅத் எப்படி ஒரே இறைவன் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளதோ அதே அளவு உறுதியை பிற மதமக்களிடம் நல்லிணக்கம் பேணவும் கடைப்பிடிக்கிறது.
அதனால் தான் சமஸ் ஆதரிக்கும் சமாதி வழிபாட்டுக்காரர்கள் நிவாரணப் பணிகள் எதுவும் செய்யவில்லை. சமாதி வழிபாட்டை எதிர்ப்பவர்கள் மட்டுமே களத்தில் நின்றார்கள்.


அபத்தம் 8
காவிரிப் படுகையில் பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் பூஜையறையில் மூன்று படங்களைப் பார்க்க முடியும். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் படம், வேளாங்கண்ணி மாதாதேவாலயப் படம், நாகூர் தர்கா படம். சமீபத்தில்உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒரு நாளில், நாடக ஆசிரியர் பென்னேஸ்வரன் விசாரித்தார். “வைத்தியம் ஒருபக்கம் நடக்கட்டும். மூணுஇடம் சொல்றேன். அவசியம் போய்ட்டு வாங்க. திருவொற்றியூர் பட்டினத்தார்சமாதி, திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி, அண்ணா சாலை ஹஸ்ரத்சையத் மூசா ஷா தர்கா.” பென்னேஸ்வரன் ஒருபிராமணர். டெல்லியில் வசிப்பவர். இந்திய மக்களிடம் கருத்தாக்கம் வழியாக அல்ல; வாழ்வியலின் ஒரு பகுதியாக ஊடுருவியிருக்கிறது மதச்சார்பின்மை.
தமிழகத்தில் பல கோயில்கள்- மசூதிகளில் இந்துக்கள் முஸ்லிம்களுக்குத் திருநாட்களில் முதல்மரியாதை முறை உண்டு. பெரும்பாலான தர்காக்களில் சந்தனக்கூடு திருவீதியுலா நிகழ்வில் இந்துக்களும்பங்குதாரர்கள். தர்காக்கள்வழிபாட்டுக்குரியஇடங்களோ, இல்லையோ; வெவ்வேறு சமூகங்களைஇயல்பாக ஒன்று சேர்க்கும்இடங்கள். அந்த வகையில், தர்காக்கள் மீதான தாக்குதல் மதச்சார்பின்மை மீதானதாக்குதல்; சகிப்புத்தன்மை மீதான தாக்குதல்.
இதுதான் இவரது விஷமத்தின் உச்ச கட்டம். முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் கொள்கையை விட்டு விட்டு பல தெய்வ வணக்கம் செய்ய வேண்டுமாம். கோவிலுக்குப் போய் கும்பிடவேண்டுமாம்.
முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர் எஸ் எஸ் கொள்கையைப் புகுத்துகிறார்.
சாதாரண அடிப்படை அறிவு கூட இவருக்கு இல்லை என்பதற்கு இந்த வாதமே போதும்.
உலகில் பல மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தின் கொள்கைக்கு முரணாக இன்னொரு மதத்தின் கொள்கைகள் உள்ளன. கொள்கையில் மட்டுமின்றி சட்ட திட்டங்களிலும் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன. இவ்வாறு முரண்பாடுகள் இருப்பதால் தான் இத்தனை மதங்கள் காணப்படுகின்றன. முரண்பாடுகள் இல்லாவிட்டால் ஒரே ஒரு மதம் தான் உலகில் இருக்கும். இந்த அடிப்படையை இவர் புரிந்து கொள்ளவில்லை.
மதங்களுக்கிடையே முரண்பாடுகள் இருப்பதை நாம் மறுக்க முடியாத போது முரண்பட்ட இரண்டும் எனக்குச் சம்மதமே என்று கூறுவது பொருளற்றது என்பதையும் இவர் விளங்கிக் கொள்ளவில்லை.
கடவுள் ஒரே ஒருவன் தான் என்பது ஒரு மதத்தின் கொள்கை.
பல்வேறு பணிகளைச் செய்வதற்குப் பல்வேறு கடவுளர்கள் உள்ளனர் என்பது இன்னொரு மதத்தின் கொள்கை.
இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒரு கொள்கையைத் தான் ஒருவர் நம்ப முடியும். முதல் கொள்கையை நம்பும் போது இரண்டாவது கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டாவது கொள்கையை நம்பும் போது முதல் கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இரண்டும் எனக்குச் சம்மதம் தான் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
கடவுளுக்கு மனைவியர் உண்டு. மக்கள் உண்டு. கடவுளுக்குத் தூக்கம் உண்டு, கடவுளுக்கு அறியாமை உண்டு என்று ஒரு மதம் கூறுகிறது.
இவற்றில் எதுவுமே கடவுளுக்கு இருக்கக் கூடாது. இவை கடவுள் தன்மைக்கு எதிரான பலவீனங்கள் என இன்னொரு மதம் கூறுகிறது.
முரண்பட்ட இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் ஒருவர் நம்ப முடியுமே தவிர இரண்டையும் நம்ப முடியாது.
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே புரோகிதர் வேண்டும் என்று ஒரு மதம் கூறுவதை நம்பினால் புரோகிதர் கூடாது என்று இன்னொரு மதம் கூறுவதை நம்ப முடியாது.
இந்துவாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உண்மையாகவே நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் நம்பவில்லை. நம்ப முடியாது; நம்பக் கூடாது என்பது தான் பொருள்.
முஸ்லிமாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பவில்லை, நம்ப முடியாது நம்பக் கூடாது என்பது அதன் பொருள்.
மதங்கள் மனிதனிடமிருந்து எளிதில் பிரிக்க முடியாத படி ஆழமாக வேரூன்றியுள்ளன. கட்சிகள், சங்கங்கள். இயங்கங்கள் போன்றவை அந்த அளவுக்கு மனிதனிடம் வேரூன்றவில்லை.
மதங்களை விட குறைவாகவே மனிதர்களை ஈர்க்கும் வகையில் கட்சிகள் உள்ளன. அந்தக் கட்சிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.
கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிப்பவர் அதே நேரத்தில் காங்கிரசிலோ, திமுக, அதிமுக கட்சிகளிலோ அங்கம் வகிக்க முடியாது. எல்லாக் கொள்கைகளும் எனக்குச் சம்மதமே என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அவர் எந்தக் கொள்கையுமில்லாத சந்தர்ப்பவாதியாகவே கருதப்படுவார்.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகிப்பவர் புதிய தமிழகத்தில் அங்கம் வகிக்க முடியாது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் கவனிக்கப்படும் கட்சிகளின் நிலையே இதுவென்றால் மனிதனது அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பினணந்திருக்கும் மதங்களில் முரண்பட்ட இரண்டை எப்படி ஒரு நேரத்தில் நம்ப முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உளப்பூர்வமாக இல்லாமல் வாயளவில் மட்டுமே பேசப்படும் சித்தாந்தமாக எம்மதமும் சம்மதம் சித்தாந்தம் அமைந்திருப்பதால் இந்தச் சித்தாந்தத்தினால் எந்த நன்மையும் விளையவில்லை. இந்தப் போலிச் சித்தாந்தம் மதங்களிடையே நல்லிணக்கத்தை எற்படுத்த முடியவில்லை.
இஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியைச் சொல்கிறது. போலித்தனமில்லாத வழியைக் கூறுகிறது.
”எனக்கு என் மார்க்கம் தான் பெரிது. உன் மார்க்கத்தை நீ பெரிதாக மதிப்பதில் நான் குறுக்கிட மாட்டேன்” என்பது இஸ்லாத்தின் நிலை
”உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (109:6)
அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும். அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத்தின் படி நடப்பதைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது என்ற இந்தக் கோட்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. போலித்தனமும் இல்லை. நடைமுறையிலும் இது முழு அளவுக்குச் சாத்தியமாகும்.
இந்த நிலையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் போது மத நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்து மதத்தில் சைவ உணவு உட்கொள்ளக் கூடிய பிரிவைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிமுக்கு நண்பராக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். முஸ்லிம் நண்பர் தனது பெருநாள் பண்டிகையைக் கொண்டாடும் போது மாமிச உணவைச் சமைத்து வைத்து நண்பரை அழைத்தால் அவர் அவ்விருந்தை உண்ண மாட்டார். இந்து நண்பர் எதை விரும்ப மாட்டாரோ அந்த உணவை இந்து நண்பருக்குக் கொடுக்காமல் அவர் விரும்புகிற உணவை வழங்குவது தான் அவரையும் அவரது மதத்தையும் மதிப்பதாக ஆகும்.
இந்து நண்பர் முஸ்லிம் நண்பரின் அசைவ உணவை மறுப்பதால் அவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணக் கூடாது.
வழிபாட்டு முறையிலும் இது போன்ற பரந்த மனப்பான்மை ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மதத்தினருக்கும் வழிபாட்டில் வேறுபாடுகள் உள்ளன. அவரவர் தத்தம் மதத்தின்படி வழிபாடு நடத்திக் கொள்வதை மற்றவர்கள் அங்கீகரிப்பது தான் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும். ஒருவரது வழிபாட்டை மற்றவர் மீது திணித்தால் நல்லிணக்கத்திற்கு பதிலாக துவேஷம் தான் வளரும்.
ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கை. இந்தக் கொள்கையில் உறுதியுடன் முஸ்லிம்கள் இருந்தால் அதைக் குறை கூறுவது நியாயமாகாது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர் கருணாநிதியின் படத்தை வீட்டில் மாட்டியிருப்பார். அவரது அண்ணா தி.மு.க நண்பர் ஜெயலலிதாவின் படத்தையும் மாட்டுமாறு கூறினால் அவர் ஏற்க மாட்டார். இவ்வாறு கூறுவது சரி தான் என்று யாரும் ஏற்க மாட்டோம். அநாகரீகம் என்போம்.
கடவுள் நம்பிக்கை இதை விட வலிமையானதாகும். எனவே ஒருவரது கடவுளை மற்றவரும் ஏற்க வேண்டும் என்று கருதுவது ஏற்க முடியாததாகும்.
இந்துக்களின் வழிபாட்டு முறையில் முஸ்லிம்களோ, முஸ்லிம்களின் வழிபாட்டு முறையில் இந்துக்களோ குறுக்கிடாமல் இருப்பதும், தமது நம்பிக்கையை மற்றவர்கள் மீது கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் தான் மத நல்லிணக்கத்திற்கு வழிகோலும்.
அபத்தம் 8
இந்துத்துவ அமைப்புகள் பலநீண்ட காலமாக இந்துக்கள் மத்தியில் தர்கா வழிபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றன. இன்றைக்கு இஸ்லாமியத்துவ அமைப்புகளும் முஸ்லிம்களிடம் அதேகாரியத்தில் இறங்கியிருக்கின்றன என்றால், நமக்கு உணர்த்தப்படும் செய்திஎன்ன?
என்று கூறி தன்னுடைய அறியாமையை மீண்டும் நிரூபிக்கிறார். இந்துக்கள் தர்கா வழிபாட்டை எதிர்க்கவில்லை. தர்காவுக்கு அதிகமாக போகின்றவர்கள் இந்துக்கள் தான். இதுதான் இந்து மதக் கொள்கைக்கு நெருக்கமாக உள்ளதால் தர்காவை இந்துக்கள் எதிர்த்ததில்லை. இதுவும் கட்டுரையாளருக்குத் தெரியவில்லை.


அபத்தம் 9
பிளவுகள் குடும்பத்தில்தொடங்குகின்றன
தவ்ஹீத் ஜமாஅத் கொள்கை காரணமாக குடும்பத்தில் பிளவுகள் ஏற்படுகின்றன என்று பாமரத்தனமாக வாதம் வைக்கிறார்.
வரதட்சனை வாங்காதே என்று மகன் கூறுகிறான். பெற்றோர் வாங்கச் சொல்கிறார்கள். குடும்பத்தில் பிளவு ஏற்படக் கூடாது என்பதற்காக வரதட்சனை வாங்க வேண்டும் என்கிறாரா?
மகன் திருடுகிறான். மோசடி செய்கிறான். இதைக் கண்டு தந்தை வேண்டாம் என்கிறார். இதனால் குடும்பத்தில் சண்டை. எனவே மகனை அவன் போக்கில் விட்டு விட வேண்டும் என்கிறாரா?
மருமகள் சரி இல்லை என்று விவாகரத்து செய்ய தாயார் சொல்கிறார். இதைக் கேட்காவிட்டால் குடும்ப உறவு முறிந்து விடும். எனவே மனைவியை உடனே விவாகரத்து செய்து விட வேண்டும் என்கிறார் போலும்
உலகில் எந்த சீர்திருத்தவாதியாக இருந்தாலும் அவரது கருத்தை ஏற்பவர்கள் எதிர்ப்பவர்கள் என்று இரு அணிகளாக மக்கள் பிரிவார்கள். ஆனால் இவரது வாதப்படி சாக்ரடீஸ் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள் செய்தது தவறாகிவிடும். உலகில் எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பத்ற்கு நிகரான அயோக்கியததனம் எதுவும் இருக்க முடியாது.


அபத்தம் 10
அடுத்து ஆதம் தீன் என்பவர் எழுதியதாக ஒரு கதையை எழுதுகிறார். இக்கதை இவருக்கே எதிராக உள்ளது. பெற்றொருக்கு எதிராக ஆதம் தீன் மாறினார் என்று அதை பாராட்டுகிறார். அதற்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் என்ன சம்மந்தம்? பக்கத்தை நிரப்ப எழுதிய கதையாகவே இது அமைந்துள்ளது.


அபத்தம் 11
புனிதம் எனும் கொடுஞ்சொல்!
உலகிலேயே முதல் முறையாக ஐஎஸ் அமைப்புக்கு எதிராக1,050 இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டாக ஃபத்வா பிறப்பித்து ஐநா சபை பொதுச்செயலாளருக்கு அனுப்பிய முன்னுதாரணம், இந்திய முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெளிப்பட்ட வரலாற்றுப் பின்புலம் உண்டு. வஹாபியிஸத்தின் வயது அதிகபட்சம் மூன்று நூற்றாண்டுகள். இந்திய இஸ்லாம் குறைந்தபட்சம் வஹாபியிஸத்தைக் காட்டிலும் ஆயிரம் ஆண்டுகள் மூத்தது, பழமையானது. நம்மைப்பார்த்துதான் சர்வதேசமுஸ்லிம் சமூகம் நெகிழ்வான பன்மைத்துவத்தைக் கற்கவேண்டும்.
இதிலும் முரண்பாடுகள். தீவிரவாதத்துக்கு எதிராக பத்வா கொடுத்த அறிஞர்கள் என்று இவர் குறிப்பிட்டுள்ளாரே இதுவே அவரது ஒட்டு மொத்த கட்டுரையின் கருத்தையும் குப்பைக் கூடைக்கு அனுப்பி விடுகிறது.
ஆம் இந்த அறிஞர்களில் அதிமகானவர்கள் சவூதியைச் சேர்ந்த வஹ்ஹாபி அறிஞர்கள் தான். இதில் இருந்து வஹ்ஹாபிகள் குறித்து இவர் வாதிட்ட அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.


அபத்தம் 12
இயற்கையின் அடிப்படை பன்மைத்துவம். வரலாற்றில் மனிதத்துக்கு எதிரான மிகக்கொடிய வன்முறைகள் அனைத்தும் புனிதம் எனும் தூய்மைவாத சொல்லின் பெயராலேயே நடந்திருக்கின்றன. இந்துமதத்தின் தூய்மைவாதப் புனிதம் தான் தம்முடைய சொந்த சகோதரர்கள் கோடிக்கணக்கானோர் மீது கொடுமையான பாகுபாட்டையும் உச்சபட்சமாகத் தீண்டாமையையும் திணித்தது.
இதிலும் அவரது அறிவுத் திறன் ? பளிச்சிடுகிறது.

இரு கம்யூனிஸ்டுகள் அடித்துக் கொண்டது புனிதம் என்பதாலா? அமெரிக்கா அரபு நாடுகளில் நுழைந்து கொள்ளை அடிப்பது புனிதம் என்பதற்காகவா?
ஒரே மொழி பேசக் கூடியவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.
ஒரே ஊரைச் சேர்ந்தவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.
ஒரே குடும்பத்தவரிடையேயும் சண்டைகள் நடக்கின்றன. ஒரு தாய்க்குப் பிறந்த இரண்டு சகோதரர்களுக்கிடையே சண்டைகள் நடக்கின்றன.
ஒரு மொழி பேசக்கூடிய மக்களிடையே சண்டைகள் நடக்க அம்மொழி எப்படி காரணமாக இல்லையோ, ஒரு மாநிலத்தவரிடையே எற்படும் சண்டைகளுக்கு அம்மாநிலம் எப்படிக் காரணமாக இல்லையோ, ஒரு குடும்பத்தவரிடையே ஏற்படும் சண்டைகளுக்கு அக்குடும்பம் எப்படிக் காரணமாக இல்லையோ அது போல் தான் ஒரு மதத்தவரிடையே நடக்கும் சண்டைகளுக்கும் அம்மதம் காரணம் இல்லை.
இரத்தம் சிந்த பல காரணங்கள் உள்ளன. ஒரு விஷயத்தைப் புனிதமாக கருதும் மக்களிடையே கூட இரத்தம் சிந்தும் நிலை உள்ளது. அதை அறியாமல் நுணிப்புல் மேய்ந்துள்ளார்.


அபத்தம் 13
அன்றைக்குக் கோயில்களில் உட்கார்ந்து கொண்டு தூய்மைவாதப் புனிதத்தைப் போதித்தவர்களுக்குத்தெரியாது, தம் போதனைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு சக சகோதரர்களை இழிவானசேரிகளில் புறக்கணிப்பிலும்அவமானத்திலும் தள்ளி, மனிதத்தை வதைத்து நசுக்கும் என்பது. ஒற்றைக்கலாச்சார புதிய மசூதிகளில் இன்றைக்குப் தூய்மைவாதப் புனிதத்தைப் போதிப்பவர்களும் அதற்கு இணையான பெரும் தவறை இழைக்கிறார்கள். கோயில்களின் ‘புனிதபோதனை’ வரலாற்றுக்கொடுமை என்றால், ஒற்றைக்கலாச்சார புதிய மசூதிகளின்‘புனித போதனை’ வரலாற்றுத் துரோகம். வெறுமை உணர்ச்சியிலும் கொந்தளிப்புச் சூழலிலும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படும் ஒருசமூகம் அத்தனை சீக்கிரம் எழமுடியாத வெறுப்புப் பள்ளத்தில்தள்ளப்படும். பெரும்பான்மை அடிப்படைவாதம் இந்தத் தருணத்துக்காகத்தான் வெறியோடு காத்திருக்கிறது.

இங்கு தான் மேற்படியான் தான் ஒரு சங்பரிவார ஏஜண்ட் என்று காட்டிவிடுகிறார்.
தலித் மக்களை ஒடுக்கியவர்களுக்கு அதன் விளைவு தெரியாதாம். அது போல் ஒரு கடவுள் கொள்கையின் விபரீதம் பிறகு தெரியவருமாம்.
பார்ப்பணர்கள் என்ன விளைவு ஏற்படும் என்று அறிந்துதான் வர்ணாசிரமத்தை உண்டாக்கினார்கள். வன்முறை மூலம் மனுதர்மத்தை நிலை நாட்டி கொடுமைப்படுத்தினார்கள். இப்போது என்ன விளைவை நாம் காண்கிறோமோ அதைவிட அதிகமான விளைவுகள் அன்றே ஏற்பட்டன. அவ்வாறு ஏற்படுவதற்காகத் தான் அவர்களும் புனிதக் கோட்பாட்டை உருவாக்கினார்கள்.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அறிவுப்பூர்வமாக வாதங்களை வைத்து இதுதான் சரி என்று வாதிடுகிறது.
இக்கொள்கையைச் சொன்னதற்காக தர்கா வழிபாடு செய்வோரின் வன்முறைகளுக்கு கூட அதே வழியில் பதிலடி கொடுக்கவில்லை. அவர்களை அறிவால் வென்றெடுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலையும் பார்ப்பனர்க்ளின் மனுதர்மத்தையும் சமமாக ஆக்கும் அளவுக்கு சிந்தனையை இழந்து நிற்கிறார்,


அபத்தம் 13
இந்தியாவில் சிறுபான்மைஅடிப்படைவாதிகள் தங்களை அறியாமல் செய்யும் மாபெரும்பிழை பெரும்பான்மை அடிப்படைவாதிகளுக்கான நியாயத்தை உருவாக்குவது. தம் சொந்த மக்களுக்கு இதைவிடவும் ஒருகொடுமையை அவர்கள் இழைக்க வேண்டியதில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றையதார்மிகக் கடமை!
பூனைக் குட்டி வெளியே வந்து விட்டதா? வஹ்ஹாபிசத்தை எதிர்த்து அதற்கு எதிரான கொள்கை மட்டும் தான் நிலை நிற்க வேண்டுமாம். அந்த ஒற்றைக் கொள்கை தான் அவசியமாம்/
சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
ஒருபக்கம் வஹ்ஹாபிசம் மற்ற கொள்கைகளை சகிக்காது என்கிறார். மறுபக்கம் வஹ்ஹாபிசத்தை நாம் சகிக்க கூடாது என்கிறார்.
இந்து ஏட்டை இந்த நபரை விட யாரும் பாதாளத்தில் தள்ள முடியாது,

கட்டுரையாளர். சகோ: “பி.ஜைனுல் ஆபிதீன்”அவர்கள்.

நாளை என்பது இல்லாது போனால்?

நாளை என்பது இல்லாது போனால்?------------------------------------------------------'அஸ்ஸலாமு அலைக்கும் பாய்..''வஅலைக...

Posted by Nazeer Ahamed on Saturday, February 6, 2016


நாளை என்பது இல்லாது போனால்?
------------------------------------------------------
'அஸ்ஸலாமு அலைக்கும் பாய்..'

'வஅலைக்கும் சலாம். சௌக்கியமா?'

'ஆம... நல்லாயிருக்கேன் பாய்...'

'எங்கே போயிட்டு வர்றே...'

'அப்படியே நண்பர்களோடு டைம் பாஸூக்காக வெளியில் சுற்றி விட்டு வருகிறேன்'

'ஓ... கவனமா பாத்து ஓட்டு'

'அல்லாஹூ அக்பர்' 'அல்லாஹூ அக்பர்' பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கான அழைப்பொலி கேட்கிறது....

'பாங்கு சொல்லப்படுகிறதே... வா தொழுது விட்டு போகலாம்'

'இல்ல பாய்... நீங்க போங்க. நாளைக்கு கண்டிப்பா தொழுகைக்கு உங்களோடு வருகிறேன்.'

'என்னப்பா இது.... நான் எப்போ தொழுக கூப்பிட்டாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தப்பிச்சுக்கிறே... இறைவனை வணங்கத்தானே கூப்பிடுகிறேன். நாளை வருகிறேன்... நாளை வருகிறேன் என்கிறாயே.. நாளை என்பது நமக்கு இல்லாமல் போனால்?'

'சாரி பாய்.... முக்கியமான வேலை... இப்போ நீங்க போங்க... நாளைக்கு கண்டிப்பாக தொழுக வந்து விடுகிறேன். மா சலாமா'

என்று சொல்லிக் கொண்டே இரு சக்கர வாகனத்தை வேகமாக அழுத்தினான் அந்த இளைஞன். 10 நிமிடம் கழித்து எதிரே வேகமாக ஒரு மகிழூந்து நேராக வந்து அந்த இளைஞனின் இரு சக்கர வாகனத்தில் மோதுகிறது. அந்தோ பரிதாபம் அந்த இடத்திலேயே முளை சிதறி அந்த இளைஞன் இறக்கிறான்.

வேலை, நண்பர்கள், ஜாலியான ட்ரிப் என்று நேரத்தை செலவழித்து விட்டு இறைவனை வணங்க நாளை நாளை என்று நாட்களை கடத்தினான் அந்த இளைஞன். இன்று அந்த இளைஞனுக்கு நாளை என்பதே இல்லாது போய் விட்டது.

'படைத்த இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் நாம்' இதனை மறக்காது தொழுகையில் நாம் அலட்சியமாக இல்லாதிருப்போமாக!

---------------------------------------------

'இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 116

'நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859

Thursday, February 04, 2016

தர்ஹாவில் நடக்கும் கூத்துக்கள்!

தர்ஹாவில் நடக்கும் அத்தனை கூத்துக்களும் பார்பனியர்களிடமிருந்து கடன் வாங்கிய பழக்கங்கள். பவுத்தம், சமணம், கிருத்தவம், ஏகத...

Posted by Nazeer Ahamed on Wednesday, February 3, 2016

தர்ஹாவில் நடக்கும் அத்தனை கூத்துக்களும் பார்பனியர்களிடமிருந்து கடன் வாங்கிய பழக்கங்கள். பவுத்தம், சமணம், கிருத்தவம், ஏகத்துவம் அனைத்தையும் இந்து மதத்துக்குள் அடக்கி வைத்துள்ள பார்பனியம் இஸ்லாத்தையும் அந்த கூட்டுக்குள் கொண்டு வர கண்டு பிடித்த வழியே இந்த தர்ஹா கலாசாரம். ஷியாக்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டு அப்படியே நமது ஊர்களிலும் இந்த அநாச்சாரங்களை புகுத்தி விட்டனர். இந்து மதத்துக்கும் இங்கு நடக்கும் கூத்துக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இதுவரை தவறிழைத்து விட்டோம். இனி மேலாவது இறைவன் வெறுக்கும் இத்தகைய மாபாதக செயல்களை நம் இஸ்லாமியர்கள் செய்யாதிருப்பார்களாக! நமது உறவினர்கள், நண்பர்களிடம் இதன் தீமையை எடுத்துக் கூறி நரக நெருப்பிலிருந்து அந்த மக்களை காப்போமாக!