Followers

Saturday, April 30, 2016

ஆண் குழந்தைக்கான லேகியம்' விற்றுக் கொண்டிருக்கும் பாபா ராம்தேவ்!
ஆண் குழந்தைக்கான லேகியம்' விற்றுக் கொண்டிருக்கும் பாபா ராம்தேவ்!

(இது ஒரு மீள் பதிவு!)

ஆயுர்வேத மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 'புத்ரஜீவக் பீஜ்' (ஆண் குழந்தையை தரும் லேகியம்) பாபா ராம் தேவ் ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்டு தற்போது மார்க்கெட்டில் விநியோகிக்கப்படுகிறது. பாபா ராம் தேவ் ஹரியானா மாநிலத்தின் விளம்பர தூதுவராகவும் பிஜேபி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதியாக்கப்படுகிறது. பிறந்த பெண் குழந்தைகள் வறுமைக்கு பயந்து கழுத்து நெரித்து கொல்லப்படுகின்றன. இந்த நிலையில் அரசின் தூதுவர் ஒருவரே ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள லேகியம் விற்பது பலரின் விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பெண் குழந்தைகளை காக்க வேண்டும் என்று ஒரு பக்கம் மோடி பிரசாரம் செய்து கொண்டிருக்க மறுபுறம் ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்ள லேகியம் விற்பது எந்த வகை நியாயம். பெண் குழந்தை பெற்றுக் கொள்வது பாவம் என்பது பாபா ராம் தேவின் எண்ணமா? அறிவியல் ரீதியாகவும் இது மக்களை ஏமாற்றும் புரட்டு வேலை. பாராளுமன்றத்தில் ஜனதா தள் மூத்த தலைவர் தியாகி தான் ஒரு மருந்து கடையில் இந்த லேகியம் வாங்கியதாக அனைவருக்கும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் அந்த மருந்து பாக்கெட்டை சுகாதார மந்திரி நத்தாவிடம் அளித்தார். காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பேசும் போது 'ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண் குழந்தைகள் கொடுமை படுத்தப்படும் சூழலில் அதனை தடுக்க வேண்டிய அரசு அதற்கு எதிர் மறையாக செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது' என்றார். இந்த மூடப்பழக்கத்தை உடன் நிறுத்த வேண்டும் என்று பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

ஹரியானாவில் இந்த மருந்தை வாங்க பலரும் போட்டியிடுகின்றனர். மருந்து கிடைப்பதும் அரிதாக இருக்கிறது. பாபா ராம் தேவ் மக்களின் மூடப் பழக்கத்தை பயன் படுத்தி அருமையாக கல்லா கட்டுகிறார். smile emoticon

சாமியார்களின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் கோமாளித் தனங்கள் நிறைவேறப் போகிறதோ பொறுத்திருந்து பார்போம்.

தகவல் உதவி
ஜீ நியூஸ்
30-04-2015

50000 தொழிலாளர்களை தூக்கும் பின்லாடன் நிறுவனம்!50000 தொழிலாளர்களை தூக்கும் பின்லாடன் நிறுவனம்!

இன்றைய சவுதி கெஜட்டின் செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பொருளாதார மந்த நிலை காரணமாக உற்பத்தி பாதிப்பினால் கிட்டத்தட்ட 50000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நான்கு மாத சம்பளம் வேறு பலருக்கு பாக்கியிருக்கிறது. இதில் பாதிக்கப்படுவது அதிகம் இந்தியர்களே! அடி மட்ட தொழிலாளர்களிலிருந்து உயர் தர டெக்னீஷியன் வரை பணி புரிவது அதிகம் இந்தியர்களே! அதற்குள் நிலைமை சீரடைந்தால் இவர்கள் தப்புவார்கள். இல்லை என்றால் இந்தியாவை நோக்கி போக வேண்டியதுதான்.

இதனால் இந்திய பொருளாதாரமும் மிகப் பெரிய சிக்கலில் மாட்டும் அபாயம் உள்ளது. நம் நாட்டு அரசியல் கொள்ளையர்கள் கோடி கோடியாக கொள்ளையடித்தாலும் பொருளாதாரம் சரிந்து விடாமல் இருக்க முக்கிய காரணமே அந்நிய செலாவணியாக நாம் மாதா மாதம் அனுப்பும் சம்பள பணங்களே! பின் லாடன் போன்ற பெரிய கம்பெனிகளுக்கே இந்த நிலை என்றால் மற்ற கம்பெனிகளைப் பற்றி சொல்ல வேண்டாம்.

எனவே வளைகுடாவை நம்பியிருக்கும் குடும்பங்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு ஊரில் ஏதாவது தொழில் தொடங்க பணத்தை இப்போதே சேகரிக்க தொடங்குங்கள். எந்த நிலைமையையும் எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்க, இஸ்ரேலிய பிணந் தின்னி கழுகுகளால் மொத்த வளைகுடா நாடுகளும் அச்சத்தில் உள்ளன. இறைவன்தான் இந்த நிலையை சீராக்கி சகஜ நிலைக்கு வளைகுடா பொருளாதாரத்தை கொண்டு வர வேண்டும்.


http://saudigazette.com.sa/saudi-arabia/50000-binladin-workers-issued-exit-visas/

உடலுக்கும் நமது நாட்டுக்கும் வாதம் ஆகாது!உடலுக்கும் நமது நாட்டுக்கும் வாதம் வந்து விடாமல் இருக்க முன் எச்சரிக்கையாக இருந்து கொள்வோம்!

Friday, April 29, 2016

அதிர்ச்சியால் முடி நரைத்து விடும் - குர்ஆனின் அறிவியல்

அதிர்ச்சியால் முடி நரைத்து விடும் - குர்ஆனின் அறிவியல்

'ஏக இறைவனை நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?'

'அதில் வானம் வெடித்து விடும். அவனது வாக்குறுதி செய்து முடிக்கப்படும்'

-குர்ஆன் 73:17

சில ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தால் அந்த மக்கள் எந்த அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகினர் என்பதை தொலைக் காட்சிகளில் பார்தோம். அன்று ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியினால் பல ஆயிரக்கணக்கான கர்பிணிகளின் குழந்தைகள் குறையுடையதாக பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு மனிதனுக்கு ஏற்படும் அதிர்ச்சியானது அவனது உடலளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். சாதாரண பூகம்பத்திற்கே இந்த நிலை என்றால் வானம் வெடித்து சிதறும் போது,கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதி சின்னா பின்னமாகும் போது மனிதனின் நிலையை சொல்லவும் வேண்டுமோ? அது போன்ற ஒரு சூழல் எற்படும் போது சிறு குழந்தைகளின் தலை முடியும் நரைத்து விடும் என்கிறது இந்த வசனம். உலக முடிவு நாளுக்கும் தலைமுடி நரைப்பதற்கும் என்ன சம்பந்தம்?

1982ல் மலேசியன் ஏர்லைன்ஸில் விமானியாக பணியாற்றிய எரிக் மூடியின் (ERIC MOODY) அனுபவத்தை பார்போம். அவர் பயணிக்கும் போது விமானத்தின் நான்கு என்ஜின்களும் அடுத்தடுத்து பழுதடைந்து விட்டன. இனி இறப்புதான் என்ற முடிவுக்கு வந்தார். மிகப் பெரும் மன அழுத்தத்துக்கு அன்று ஆளானார். அதிர்ஷ்டவசமாக ஜகார்த்தாவில் அந்த விமானத்தை இறக்கி அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார். இந்த சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களிலேயே எரிக் மூடியின் தலைமுடியானது நரைக்கத் தொடங்கியது. விமானத்தில் அன்று விபத்து ஏற்படும் போது மன அழுத்தம் கொண்டாரல்லவா? அதுதான் நரைக்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறினர். மன அழுத்தத்துக்கும் தலைமுடி நரைக்கும் மிகுந்த ஒற்றுமை உள்ளதை இந்த சம்பவமும் மெய்ப்பிக்கிறது. இதனை பிபிசியும் வெளியிட்டுள்ளது.

வேதியலில் நோபல் பரிசு வென்ற ராபர்ட் லெப்ஃகோவிட்ஸ் (ROBERT LEFKOWITZ) தலைமையில் ஒரு குழு ஆய்வில் ஈடுபட்டது. அந்த ஆய்வின் முடிவில் மனிதர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி, மன அழுத்தம் போன்றவைகளால் உடலின் டிஎன்ஏக்களில் மாற்றம் ஏற்பட்டு அந்த மனிதனின் தலைமுடி நரைக்கத் தொடங்குவதாக கண்டு பிடித்தனர். முடி நரைத்தலானது ஒரு சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்ட ஓரிரு நாட்களிலேயே ஏற்படத் தொடங்கி விடும் என்றும் ஆய்வைறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கையானது 'நேசர்' அறிவியல் இதழில் ஆகஸ்ட் 21, 2011 ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. மனிதன் முதிர்ச்சியடைந்தால் இயற்கையாக முடி நரைக்கத் தொடங்கி விடும். நாம் இங்கு இள நரையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆய்வறிக்கையானது சமீபத்தில்தான் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் குர்ஆனோ மனிதனுக்கு உலக முடிவு நாளில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து மன அழுத்தத்தால் அதீத பயத்தால் சிறு குழந்தைகளின் தலை முடியும் நரைத்து விடும் என்ற அருமையான அறிவியலை சொல்லிச் செல்கிறது. நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைதான் இது என்பதற்கு இந்த வசனமும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

மனிதனுக்குள் ஏற்படும் மன அழுத்தமானது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல அழுத்தங்களைக் கொடுத்து அதனால் தலைமுடி இளமையிலேயே நிறம் மாறக் காரணமாகி விடுகிறது என்று பார்தோம். இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் வாழ்க்கையானது எல்லோருக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் பெருமபாலான மனிதர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். ஒரு சிலருக்கு இந்த அழுத்தம் அதிகமாகவே தற்கொலைகளையும் நாடுகின்றனர். இவற்றிலிருந்தெல்லாம் விடுபட மனிதனுக்கு உள்ள ஒரே வழி இறை தியானம்தான். இந்து, இஸ்லாம், கிறித்தவம் என்ற முப்பெரும் மதங்களை எடுத்துக் கொண்டால் அதில் இஸ்லாமியர்களே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் அதிக சதவீதமாக இருப்பர். பெரும்பாலானவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழக் மூடியவர்களாகவும் இருப்பர். இஸ்லாமியர்களில் நாத்திகர்கள் மிகக் குறைந்த சதவீதத்திலேயே இருப்பர். ஒரு நாளைக்கு ஐந்து நேரம் சென்று தனது கவலைகளை எல்லாம் தன்னை படைத்த இறைவனிடம் முறையிட்டு விடுகின்றனர் முஸ்லிம்கள். இதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் வெகுவாக குறைகிறது. எனவே தான் பத்திரிக்கைகளில் தற்கொலைகள் செய்து கொள்பவர்களில் இஸ்லாமியர்களின் பெயர்கள் வருவதில்லை. அதற்கு காரணம் அவர்களின் இறை பக்தியே என்றால் மிகையாகாது.

The paper was published in the Aug. 21 online issue of Nature.

In the study, mice were infused with an adrenaline-like compound that works through a receptor called the beta adrenergic receptor that Lefkowitz has studied for many years. The scientists found that this model of chronic stress triggered certain biological pathways that ultimately resulted in accumulation of DNA damage.

"This could give us a plausible explanation of how chronic stress may lead to a variety of human conditions and disorders, which range from merely cosmetic, like graying hair, to life-threatening disorders like malignancies," Lefkowitz said.

Thursday, April 28, 2016

முதியோர் இல்லத்தில் திருமண விருந்தை நடத்திய மணமக்கள்!

25-04-2015 அன்று பிலால் உசேன் என்ற சகோதரருக்கு திருமணம் நடைபெற்றது. வலங்கைமான் தில்லையாம்பூரில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு சென்று சுமார் 120 பேர்களுடன் தங்களின் வலிமா என்ற திருமண விருந்தை தம்பதி சகிதமாக பகிர்ந்து கொண்டனர். மாப்பிள்ளை வீட்டார் செலவில் இந்த விருந்து நடைபெற்றது.

பெரும் பணக்காரர்களை மட்டுமே அழைத்து படாடோபமாக பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்கி நடக்கும் விருந்துகளை விட தேவையுடையோரை தேடிச் சென்று உணவு வழங்கும் இந்த செயல் உண்மையில் பாராட்டத்தக்கது. இஸ்லாம் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.

நபி அவர்களின் காலத்துத் திருமண விருந்து மணமகன் வழங்கியதாகவே நடைமுறையில் இருந்துள்ளது. நபித் தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் திருமணம் முடித்தபோது ''ஓர் ஆட்டையாவது அறுத்து மண விருந்து அளியுங்கள்'' என்று நபி அவர்கள் கூறியதாக (புகாரி 5029, முஸ்லிம் 2790) ஆதாரப்பூர்வ அறிவிப்புகளில் காண்கிறோம்.

ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மண விருந்து கெட்ட உணவாகும். அழைப்பை ஏற்று விருந்துக்குச் செல்லாதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.

(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 5177, முஸ்லிம் 2816)

Wednesday, April 27, 2016

ரத்ததானம் - நெகிழ வைத்த நிகழ்வுரத்ததானம் - நெகிழ வைத்த நிகழ்வு (இது ஒரு மீள் பதிவு)

(தங்களின் ரத்தத்தை யாரோ ஒருவருக்கு தானமாக கொடுக்க வரிசையில் நிற்கும் தவ்ஹித் சகோதரர்கள். துபாயில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் லதீஃபா மருத்துவ மனையில் நடத்திய ரத்த தான முகாமையே நாம் படத்தில் பார்கிறோம்.)

நேற்று மாலை நேர தொழுகைக்கு தவ்ஹீத் பள்ளிக்கு தொழச் சென்றிருந்தபோது ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அறுவை சிகிச்கைக்காக இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. அந்த குடும்பத்தினர் ராஜகிரி தவ்ஹீத் ஜமாத் கிளையை அணுகினர். உடன் தவ்ஹீத் சகோதரர்கள் இரண்டு பேர் சென்று ரத்தம் கொடுத்துள்ளனர். ரத்தம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் 1200 ரூபாய் அன்பளிப்பாக ரத்த வங்கியில் அளிப்பார்களாம். அந்த பணத்தை வாங்காது 'அந்த ஏழை குடும்பத்துக்கே அந்த பணத்தை சேர்ப்பித்து விடுங்கள்' என்று அந்த இரு தவ்ஹீத் சகோதரர்களும் சொல்லி விட்டு வந்துள்ளனர்.

யாரோ ஒருவருக்காக தனது ரத்தத்தையும் கொடுத்து அதற்காக அளித்த அன்பளிப்பையும் அந்த ஏழை குடும்பத்துக்கே கொடுத்த அந்த தவ்ஹீத் இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இது போன்ற மனித நேயப் பணி தமிழகமெங்கும் சத்தமில்லாமல் ஏதோ ஒரு மூளையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதே வேளை தவ்ஹீத் ஜமாத்தின் மேல் காழ்ப்புணர்ச்சியால் தினமும் ஏதாவது ஒரு அவதூறுகளும் பரப்பப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டக் கொண்டிருக்காமல் சமூகத்தில் சத்தமில்லாத மறுமலர்ச்சி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர். அந்த சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக ஏகத்தவ வாதிகள் உள்ளனர். இந்த சிறிய அமைப்பு பல ஆண்டுகளாக தமிழகத்தில் ரத்த தானம் கொடுப்பதில் முன்னணியில் இருந்து வருகிறது. சத்தமில்லாத ஆர்பாட்டமில்லாத புரட்சி.

எல்லா புகழும் இறைவனுக்கே!

ஆஸ்திரேலியாவில் நீதிபதியாக பதவியேற்ற இலங்கை பெண்!

இலங்கை கல்ஹின்ன பாடசாலை வீதியைச் சேர்ந்த மசூத் - சாஹிரா தம்பதிகளின் புதல்வியான உர்ஃபா மசூத் ஆஸ்திரேலியாவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 2003 ஆம் ஆண்டிலிருந்து வக்கீலாக பணி புரிந்து வந்தார். தற்போது விக்டோரியாவின் நீதிபதியாக பணியில் அமர்ந்துள்ளார். ஒரு தமிழ்ப் பெண் நீதிபதியாக அமர்ந்துள்ளது நம் அனைவருக்கும் பெருமையே!

பெண்கள் முன்னேற்றத்திற்கு ஹிஜாப் ஒரு தடையே அல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் உர்ஃபா.

வாழ்த்துக்கள் சகோதரி....

உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக் கழகம்!

உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக் கழகம்!

எங்கிருக்கிறது தெரியுமா? சவுதி அரேபியாவில். பெண்களுக்கென்றே பல மைல்கள் சுற்றளவில் 'நூரா பல்கலைக் கழகம்' கம்பீரமாக ரியாத்தில் நின்று கொண்டுள்ளது. பல்கலைக் கழகத்தின் உள்ளே மெட்ரோ ரயில் சேவையும் உண்டு. இதிலிருந்து எவ்வளவு தூரம் அதன் சுற்றளவு இருக்கும் என்று நினைத்துக் கொள்ளலாம்.

உயர்தரமான கல்வி. அதே நேரம் இஸ்லாமிய சட்டங்களுக்குட்பட்டு அந்த முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது அரசு.

ஆடை குறைப்பு இல்லை. ஈவ் டீஸிங் இல்லை: ஆண்களும் பெண்களும் காதல் என்ற போர்வையில் கூடிக் குலாவுவது இல்லை.

படிப்பு, படிப்பு, படிப்பு... அது ஒன்றுதான் இங்கே....

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள்.....நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

இந்த பெண்ணிடம் செல்வம் குவிந்திருக்கிறது. கல்வியும் இருக்கிறது. ஆனால் அந்த கல்வியானது இந்த பெண்ணின் மனதை பக்குவப்படுத்தவில்லை. தான் ஒரு வசதியான குடும்பத்துப் பெண் என்ற மேட்டிமைத்தனம் தெரிகிறது. அதனை இவ்வளவு பப்ளிக்காக பொதுவில் போட்டு உடைத்திருக்க வேண்டாம்.

அன்பளிப்புகளை தருபவரின் பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளாது இவ்வாறு பதிவிடுவது பெற்ற கல்வியின் பயனை இந்த அம்மணி பெறவில்லை என்ற முடிவுக்கே நாம் வருவோம்.

உலகில் ஒரு வேளை சாப்பாடு கூட கிடைக்காமல் கூழை சாப்பிட்டு காலம் தள்ளும் ஜீவன்களும் உண்டு. அவர்களையும் சற்று நினைத்துப் பாருங்கள்.

Tuesday, April 26, 2016

அடிக்கிற வெய்யிலுக்கு ரொம்ப டென்ஷனாயிருப்பீங்க....

அடிக்கிற வெய்யிலுக்கு ரொம்ப டென்ஷனாயிருப்பீங்க.... அதான் கொஞ்சம் சிரித்து டென்ஷனை குறைக்கலாமே என்று....

இந்திய தொழிலாளிக்கு கிடைத்த அங்கீகாரம்!இந்திய தொழிலாளிக்கு கிடைத்த அங்கீகாரம்!

நமது இந்திய நாட்டில் உழைக்கும் மக்களை தலித்கள் என்று அவர்களை கீழ் சாதியாக்கி மிருகத்தை விட கேவலமாக பல இடங்களில் நடத்தப் படுகிறார்கள். இது நாம் தினமும் பத்திரிக்கைகளில் படிக்கும் செய்திகள்.

ஆனால் இங்கு சவுதியை பாருங்கள். வீட்டில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியை தனது குடும்ப உறுப்பினராக பாவித்து அவருக்கு பிறந்த நாள் கொண்டாடி அவரை கட்டி அணைத்து மகிழ்கிறது ஒட்டு மொத்த குடும்பமும். அந்த தொழிலாளி இவர்களின் அன்பைப் பார்த்து அனந்த கண்ணீர் வடிக்கிறார்.

இதுதான் இஸ்லாம்....

-------------------------------------------------------
மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன் என்று அல்லாஹ் கூறுகின்றான் ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன், இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அதன் பணத்தை சாப்பிட்டவன். மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கி விட்டு கூலி கொடுக்காமல் இருந்தவன். என நபி அவர்கள் கூறினார்கள்.
நூல்:புகாரி 2270

Monday, April 25, 2016

மாலேகான் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர் விடுதலை!

2006 மாலேகான் குண்டு வெடிப்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் மும்பை வழக்கு மன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சல்மான் ஃபார்ஸி, சபீர் அஙமது, நூருல் ஹூதா, ரைஸ் அஹமது, முஹம்மது அலி, ஆஷிஃப் கான், ஜாவித் ஷேக், ஃபரூக் அன்ஸாரி, அஃப்ரார் அஹமது, இந்த ஒன்பது பேரும் கடந்த பத்து ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாக சிறையில் காலம் தள்ளினர். இவர்கள் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போதிய நிரூபணம் ஆகாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஷபீர் அஹமது ஏற்கெனவே இறந்து விட்டார். சிறையில் பத்து வருடங்களை விசாரணைக் கைதிகளாகவே கழித்துள்ளனர். நாற்பதுக்கும் மேல் இறந்ததும் இஸ்லாமியர்கள். அதைக் காரணமாக வைத்து கைது செய்ததும் இஸ்லாமியர்கள். இந்த கொடுமை உலகில் வேறு எங்குமே நடந்திருக்காது.

இழந்த அந்த பத்து வருடங்களை மோடிக்களும் அமீத்ஷாக்களும் திருப்பி தந்து விடுவார்களா? இந்துத்வாவாதிகளே! உண்மை உலகில் எங்கு சென்றாலும் உங்களை துரத்தி பழி வாங்கும். மறந்து விடாதீர்கள்.

டாக்டர் ஃபரூக் கூறுகிறார் 'எங்களது பத்து வருட வாழ்க்கை வீணாகி விட்டது. பழியை இத்தனை காலம் சுமந்திருந்தோம். எங்களின் குடும்பமும் பழியை சுமந்தது' என்று வருத்தமுடன் கூறுகிறார்.

ஹேமந்த் கர்கரே என்ற நியாயவான் இந்த வழக்கை விசாரித்து உண்மை குற்றவாளிகளான சாது பிரக்யா சிங், ஜெனரல் புரோகித், அசீமானந்தா போன்றோரை உள்ளே தள்ளியதால் இவர்கள் இன்று வெளியாக முடிந்தது. இல்லை என்றால் இவர்களின் கதை உலகுக்கு தெரியாமல் சிறையிலேயே முடிக்கப்பட்டிருக்கும். உண்மையை உலகுக்கு சொன்னதால் ஹேமந்த் கர்கரேயின் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டு வந்தது இந்துத்வா

இறைவா! குண்டு வெடிப்பை நடத்தி மக்களை கொன்று விட்டு இன்று ஆட்சியிலும் அமர்ந்திருக்கும் அநியாயக் காரர்களை இந்த உலகிலும் மறு உலகிலும் தண்டிப்பாயாக! அந்த தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் படி செய்வாயாக!

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
25-04-2016

http://indianexpress.com/article/india/india-news-india/malegaon-blast-case-mumbai-court-discharges-all-eight-accused/

சாதிகள் இருக்குதடி பாப்பா - யாழ்ப்பாணம்ஒரு இலங்கைத் தமிழரின் மனக் குமுறலை இந்த பதிவில் படிப்போம்......

சாதிய ஒடுக்குமுறை என்ற சமூக அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கும் யாழ்ப்பாண சமூகம் தொடர்பான எனது நேரடி அனுபவம் வெறும் உதாரணம் மட்டுமே......

கடந்தவாரம் எனது உறவினர் ஒருவர் திருமணம் செய்துகொண்டார். யாழ்ப்பாணத்தின் மத்தியதரவர்க்கத்தைச் சார்ந்த அவர் பஞ்சமர்கள் என்று குறிப்பிடப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆண் பெண் இருவருமே துறை சார் வல்லுனர்கள்.

பலவடங்களாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட அந்த இருவரின் திருமண வைபவத்தில் பலர் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

திருமண வைபவத்தின் போதே பெண் வீட்டாரின் சாதி தொடர்பான விபரங்கள் கசிய ஆரம்பிக்க அங்கிருந்து, இந்த நூற்றாண்டின் புதிய தொழில் நுட்பம் செயற்பட ஆரம்பித்தது. தொலைபேசி அழைப்புக்கள் சாதியைப் பற்றிப் பேச ஆரம்பித்தன. வைபர், வட்சப் போன்றன விழித்துக்கொண்டன.

திருமண வைபவத்தை விட்டு வெளியேறாவிட்டால் இனிமேல் பணம் அனுப்ப மாட்டேன் என புலம்பெயர் ‘உணர்வாளர்’ ஒருவர் முழங்கிய சம்பவம் பின்னர் காற்றோடு வெளியானது.

இவை அனைத்தையும் கேள்வியுற்ற போது, கொழும்பின் கொங்கிர்ரிட் பொந்து போன்ற அடுக்கு மாடியொன்றில் குடியிருக்கும் எனது அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

திருமண செய்துகொண்ட உறவினரோடு பல வருடங்களாக எனக்குத் தொடர்பிருந்ததில்லை. எப்படியாவது அவர்களைச் சென்று பார்த்தாக வேண்டும் என்று எனது அம்மாவிற்கு உறுதியாகக் கூறினேன். திருமணம் செய்துகொண்ட எனது உறவினர் எனக்குக் அன்றைய நாளின் கதாநாயகன் போன்று எனது உணர்வுகளுக்குள் புகுந்துகொண்டார்.

அன்று மாலை எனது மற்றொரு புலம்பெயர்ந்த உறவினரிடமிருந்து அம்மாவிற்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்த போது நான் வெளியே போயிருந்தேன். மாலை மீண்டும் வீட்டிற்கு வந்த போது திருமணம் செய்துகொண்டவரையும் குறிப்பாகப் பெண்வீட்டுக்காரரையும் சென்று சந்தித்தால் தங்களோடு எல்லோருமே உறவுகளைத் துண்டித்துக்கொள்வார்கள் என்று அம்மா கண்ணீரோடு கூறினார். அதுவும் கனடாவிலிருந்து பிரித்தானியா ஈறாக யாழ்ப்பாணம் வரை எல்லோருமே உறவைத் துண்டித்துக்கொள்வார்களாம்.

இதன் பிறகு பல சம்பவங்கள் சாதிய முரண்பாட்டையும் ஆதிக்க சாதிகளின் கருத்தியலையும் சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்திலும் நிலை நிறுத்துவதைக் காணக்கூடியதாக இருந்தது.

80 களில் ஆரம்பித்து தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்த சாதீய ஒடுக்குமுறை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்ர்புக்களும், தலைமையுமற்ற சமூகம் மீண்டும் தன்னை மீளமைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது; அங்கு ஆதிக்க சாதிகள் தமது அதிகாரத்தை மீளமைத்துக்கொள்ள யாழ்ப்பாணம் அவமானத்தின் குறியீடாகக் காட்சிதருகின்றது.

நான்கு தசாப்த்த அழிவுகளும், தியாகங்களும் அருவருப்பான ஆதிக்கசாதிக் கருத்தியலின் கீழ் அழுக்காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சமூகத்தின் அடித்தளத்திலிருந்து ஆரம்பிக்கும் இவ்வாறான ஒடுக்குமுறைகளை மூடிமறைப்பதற்குத் தமிழ்த் தேசியம் பிரதான கருவியாகப் பயன்படுகிறது.

குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பிற்போக்குவாத தமிழ்த் தேசியம் சாதீய ஒடுக்குமுறையை வலுப்படுத்த உறுதுணையக அமைகின்றது. சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை தமிழினவாதமாக மாற்றியதன் மறுபக்கத்தில் சாதீய ஒடுக்குமுறை ஆழப்படுவதையும் காணலாம். இன்றைய தமிழ்ச் சமூகத்தில் எங்காவது ஒரு மூலையிலிருந்து ஜனநாயக முற்போக்கு சக்திகளின் மீள் எழுச்சி பெறாவிட்டால் எதிர்காலம் நீண்டகால இருளுக்குள் தள்ளப்படும்.

---------------------------------------------

இலங்கை தமிழருக்காக தமிழகத்தில் கம்பு சுத்திக் கொண்டிருக்கும் சீமான் இந்த சாதி வெறியை எப்படி ஒழிக்கப் போகிறார்?

http://inioru.com/jaffna-becomes-notion-of-shame/

போலீஸையும் பொது மக்களையும் தாக்கிய சாதுக்கள்!போலீஸையும் பொது மக்களையும் தாக்கிய சாதுக்கள்!

மத்திய பிரதேசம் உஜ்ஜயினில் சிம்ஹஸ்தா கும்பமேளா நடந்து வருகிறது. இங்கு வந்த கும்பலில் சாதுக்களின் பொருட்களை யாரோ களவாடி விட்டார்கள். கூட்டத்தில் இது சகஜம். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சில சாதுக்கள் பிரச்னை பண்ணியுள்ளனர். இதனை காவல் துறையினர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் கொதிப்படைந்த சாதுக்கள் பொது மக்கள், போலீஸார், பத்திரிக்கையாளர் என்று சராமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளனர். இந்துத்வா ஆட்சியில் இருக்கும் இந்த மாநிலத்தில் எங்களை யார் கேட்க முடியும் என்ற தைரியம் இந்த சாமியார்களுக்கு வந்திருக்கலாம். ஏப்ரல் 22 லிருந்து மே 21 வரை கும்பமேளா தொடர்ச்சியாக நடைபெறுமாம். ஒரு மாதத்தில் உஜ்ஜயினியை இந்த சாதுக்கள் நாறடித்து விடுவார்கள்.

குடும்பம், மனைவி, குழந்தை பந்த பாசம் என்று ஏதாவது இவர்களுக்கு இருக்க வேண்டும். உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணமாவது இவர்களுக்கு இருக்க வேண்டும். இப்படி மனிதர்களின் ஆசா பாசங்களை சுத்தமாக துறந்தால் மிருகத்தை போல்தான் காலப் போக்கில் மனிதன் மாறுவான். காசியில் உள்ள அகோரிகளிடமும், உஜ்ஜயினியிலுள்ள சாதுக்களிடமும் இதைத்தான் பார்க்கிறோம்.
------------------------------------------------------------------------
உஸ்மான் பின் மழ்ஊன் அவர்கள் துறவறம் மேற்கொள்ள விரும்பி அனுமதி கேட்டபோது நபி அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு மட்டும் நபி அவர்கள் அனுமதியüத்திருந்தால் ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: புகாரி 5073

எனவே ஒரு முஸ்லிம் எந்த நிலையை அடைந்தாலும் கல்யாணம் வேண்டாம் என்கிற முடிவுக்கு ஒருக்காலும் வரவே கூடாது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் வரை தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக நோன்பு வைத்துக் கொள்ள வேண்டும். நோன்பைத் தவிர்த்து, துறவறம், ஆண்மை நீக்கம் என்று வேறு எந்த வழிகளையும் தேடக்கூடாது.

மேலும் துறவறம் என்பது தவறானது என்பதைப் பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்தாலே புரிந்து கொள்ளலாம். துறவறம் என்றால் கடவுளுக்காக நமது ஆசைகள் அனைத்தையும் துறந்துவிட்டு, கடவுளை நெருங்குவது என்று சொல்லுகிறார்கள். ஆனால் இப்படிச் சொல்பவர்களின் துறவு போலித்தனமாகவும் இரட்டை வேடமாகவும் இருக்கிறது. சிலர் மனைவி, மக்களைத் துறக்கிறார்கள். இன்னும் சிலர் ஆடையைக் கூட துறந்து தன்னை நிர்வாணப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் எந்தத் துறவியும் இதுவரை சாப்பாட்டைத் துறக்கவே இல்லை. சாப்பிடுவதும் மனிதனின் ஆசையில் உள்ளது தானே.

இன்னும் சொல்லப் போனால், மனைவி, மக்கள், ஆடை எதுவும் தேவையில்லை என்று சொல்லி துறவறக் கோலம் பூணுபவர்கள், தங்களது முழு ஆசையையும் சாப்பாட்டின் மீது வைத்து திருவோட்டைத் தூக்கிக் கொண்டு போகின்ற காட்சியைப் பார்க்கிறோம். ஆனால், சாப்பாடும் தேவை, எல்லாம் தேவை என்று மக்களோடு மக்களாக இருந்து, துறவறம் கூடாது என்று சொல்லும் நாம், சாப்பாட்டிற்காக எந்தத் திருவோட்டையும் எடுத்துக் கொண்டு பிச்சை எடுக்கவில்லை. எனவே ஆசையைத் துறப்பது என்பது போலித் தனமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Sunday, April 24, 2016

விமானத்தில் வைத்து கன்ஹையா குமார் மீது தாக்குதல்

ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவர் கன்ஹையா குமார் மீது விமானத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஏப்ரல் 24)ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மும்பையில் இருந்து புனே செல்லும் விமானத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் இச்சம்பவம் நடைபெற்றதாக கன்ஹையாவின் நண்பர் நிஷாந்த் தெரிவித்துள்ளார். செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த ஒரு நபர் திடீரென்று வந்து கன்ஹையாவின் கழுத்தை பிடித்து நெரித்ததாக அவர் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த விமானி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அனைவரையும் விமானத்தை விட்டும் இறங்குமாறு கூறினர்.

தாக்குதல் நடத்திய நபர் தற்போது மும்பை காவல்துறையின் கஸ்டடியில் உள்ளார். அவருடன் மற்ற நபர்கள் வந்திருந்த போதும் அவர்கள் விமானத்தை விட்டும் இறக்கி விடப்படவில்லை என்றும் நிஷாந்த் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய நபரின் பெயர் மனாஸ் தேகா என்றும் அவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் என்றும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து கன்ஹையா குமார் தனது டிவிட்டர் பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற மிரட்டல்களால் தாங்கள் துவண்டு விட மாட்டோம் என்றும் புனேயில் இன்றைய நிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடக்கும் என்றும் தெரிவித்தார்.

நன்றி புதிய விடியல்

குஜராத்தில் பள்ளி வாசலில் குவியும் இந்து பெண்கள்!குஜராத்தில் பள்ளி வாசலில் குவியும் இந்து பெண்கள்!

குஜராத் அஹமதாபாத்தில் உள்ளது தாரியாபூர் கிராமம். பல நாட்களாக கார்பரேஷன் தண்ணீர் திறந்து விடவில்லை. கிராம மக்கள் பெரிதும் சிரமபட்டனர். அங்குள்ள ஜூம்ஆ பள்ளியில் தண்ணீர் போர்வெல் மூலமாக எடுக்கப்பட்டு பயன் படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தண்ணீருக்கு அல்லாடுவதைக் கண்ட பள்ளி நிர்வாகம் பொது மக்கள் தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியது. அந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்களே! அனைவருக்கும் அழைப்பு விடுத்து பள்ளியில் அறிவிப்பு பலகையும் வைத்தனர்.

பள்ளிவாசலின் ட்ரஸ்டி அஜீஸ் காந்தி கூறுகிறார் 'போர்வெல் மூலமாக பள்ளிவாசல் தேவைகளுக்காக தண்ணீர் எடுக்கிறோம். பல இந்து குடும்பங்கள் தண்ணீருக்காக அங்கும் இங்கும் அலைவதை பார்த்தோம்.. அந்த மக்களுக்கு உதவ தொழுகையில்லாத நேரங்களில் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தோம். ஒரு நாளுக்கு 2000 பேருக்கு மேல் வந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர். பள்ளியின் உள்ளே வந்து நீர் பிடிக்க நாங்களும் உதவிகளும் செய்கிறோம்.' என்கிறார்.

மற்றொரு நிர்வாகி ரஃபீக் நாக்ரி கூறுகிறார் 'தண்ணீர் எங்களிடம் அதிகம் உள்ளது. அதனை தேவையுடையோருக்கு தருகிறோம். மனிதனுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவையாகும் என்கிறது இஸ்லாம். அதனைத்தான் செய்கிறோம்' என்கிறார்.

மீனா என்ற இந்து பெண் கூறுகிறார் 'எனது குடும்பத்தில் நான்கு பேர். தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டோம். முஸ்லிம்கள் எங்களுக்கு தண்ணீர் தடையின்றி தந்தனர். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை' என்கிறார்.

பன்முகம் கொண்ட இந்திய மக்களின் மனோபாவம் இதுதான்.

இஸ்லாமிய கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து அதன் சிசுவையும் தீயில் பொசுக்கி 3000 முஸ்லிம்கள் கொல்லப்பட காரணமாயிருந்த நரேந்திர மோடியும் , அமீத்ஷாவும் வெட்கித் தலை குனியுங்கள். எவ்வளவுதான் வலி இருந்தாலும் சிரமம் என்று இந்துக்கள் கூறும்போது ஓடி வருவது முஸ்லிம்கள்தான். அதனைத்தான் இஸ்லாமும் போதிக்கிறது.

Saturday, April 23, 2016

பாட்னாவில் தலித் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம்!பாட்னாவில் தலித் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம்!

இந்த பிஞ்சு குழந்தைகள் செய்த தவறு சிறு ரொட்டித் துண்டுகளை பசிக்காக திருடியது. அதிலும் இவர்கள் தலித்கள். விடுவார்களா ஆதிக்க சாதியினர். சராமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். வலியால் அந்த குழந்தைகள் துடித்தன. அந்த குழந்தைகளே தவறு செய்திருந்தாலும் காவல் துறை வசம் அல்லவா ஒப்படைக்க வேண்டும்? அந்த மக்களே தண்டனையை எப்படி கொடுக்கலாம்?

விஜய் மல்லையா போன்ற மேல் சாதியனர் நமது வரிப் பணத்தை பேங்கில் இருந்து ஸ்வாகா செய்து உல்லாசமாக பெண்களோடு உலாவரலாம். மோடி அரசே அவனை வழி அனுப்பி வைக்கும்.

ஆனால் பசிக்காக ரொட்டியை திருடிய சிறுமிகளை உயிர் போக அடிப்பீர்கள்.

நல்லா இருக்குதய்யா நியாயம்!

https://www.facebook.com/narayan.rishikesh?pnref=story


இன்று தஞ்சை குடந்தை சாலையில் நடந்த கோர விபத்து!

இன்று தஞ்சை குடந்தை சாலையில் நடந்த கோர விபத்து!

இன்று காலை(23-04-2016) 5:50 க்கு தஞ்சை மாவட்டம் இராஜகிரி மகிழம்பு தைக்கால் அருகில் நடந்த சம்பவம். தஞ்சாவூர் to கும்பகோணம் செல்லும் சாலை. அதாவது மகிழம்பூ தைக்கால் அருகே மைசூரிலிருந்து சாராய சரக்கு ஏற்றி வந்த லாரி அதிவேகமாக சென்று அதன் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பெரிய மரத்தின் மீது மோதியதால் தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் உட்பட 3 பேர் தீயில் எரிந்து நாசம்.

சாராயம் குடிப்பவர்களை மட்டும் எரிப்பதில்லை. அதனை கொண்டு செல்பவர்களையும் தற்போது எரிக்க ஆரம்பித்துள்ளது.

ஷேவியர் எஸ் ஜான் என்ற மாற்று மத சகோதரனின் ஆதங்கம்!

Xavier S John

NEWS 7 சேனலில் அண்ணன் பீஜே அவர்களின் பேட்டியை பார்த்தேன்...அதைப்பற்றி கருத்து சொல்லி உங்கள் நேரத்தை வீணடிப்பதை விட ஆக்கப்பூர்வமாக ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்...

இஸ்லாமியர்களாகிய நீங்கள் உங்களுக்குள் பல பிரிவாகவும் கருத்து முரண்பாடு கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள்... உங்களுக்குள் ஒற்றுமை இல்லை.பிரிட்டானியர்கள் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்று சேர விடாமல் பிரித்தாலும் சூழ்ச்சியை செய்தது போல இன்றைய அரசியல் வாதிகள் உங்களை ஒன்று சேர விடாமல் அதே பிரித்தாலும் சூழ்ச்சியை கடைபிடிக்கிறார்கள்.இதை நீங்கள் சிந்திப்பதில்லை.

நாங்கள் சிறுபான்மையினர் எங்களால் என்ன செய்ய முடியுமென்று நீங்கள் நினைத்தால் உங்களை விட முட்டாள்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை.

ஓட்டுரிமை உள்ளவர்களில் எழுபது சதவிகிதம் பேர் எந்த கட்சியையும் சாராத பொதுமக்கள்..வேறு வழி இல்லாமல் எதாவது ஒரு கட்சிக்கு ஓட்டு போடுகிறோம்...மீதியிருக்கும் முப்பது சதவிகிதம் மட்டுமே எல்லா கட்சிகளையும் சார்ந்தவர்கள்,இதில் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குடையின் கீழ் வந்தால் அந்த முப்பது சதவிகிதத்தில் நீங்கள்தான் பெரும்பான்மையினர்... பொது மக்களாகிய எங்களின் ஆதரவும் உங்களுக்குத்தான் இருக்கும்...

ஒரு உதாரணம் சொல்கிறேன்.

இரயில் பயணத்தில் எங்கள் வீட்டு பெண்களை தனியாக அனுப்பக்கூடிய ஒரு சூழல் வரும்போது கம்பார்ட்மெண்டில் எங்கள் சாதிகாரனோ எங்க மதத்துக்காரனோ இருந்தால் எங்கள் வீட்டு பெண்கள் போய் சேரும் வரை எங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் இருப்போம்.அதே ஒரு தாடி வைத்து குல்லா அணிந்த ஒரு இஸ்லாமியர் அங்கே இருந்தால் பயமின்றி எங்கள் வேலைகளைச் செய்வோம்.ஏனென்றால் மறை ஓதும் சாயிபு அந்நிய பெண்களை சகோதரிகளாக நினைப்பதும் பெண்களுக்கு ஒரு அநீதி ஏற்படுவதை பார்த்தால் தன் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார் என்பதை நாங்கள் அறிவோம்.

இருநூறுக்கும் மேற்பட்ட துண்டுகளாக சிதறிக்கிடந்த தேசத்தை ஒன்று சேர்த்து இந்தியா என்று பெயர்வைத்ததும் இஸ்லாமிய மன்னர்கள்தான் என்பதையும் நாங்கள் அறிவோம்...இன்றளவும் வழக்கத்தில் இருக்ககூடிய வார்த்தைகள் பஞ்சாயத், வக்கீல், வாய்தா இதுபோல இன்னும் பல, இஸ்லாமிய மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட அரபி,உருது வார்த்தைகள் என்பதையும் நாங்கள் அறிவோம். சுதந்திரப்போராட்டதில் உங்களின் பெரும் பங்கு என்ன என்பதும் அது திட்டமிட்டு மறைக்கப்பட்டதும் நாங்கள் அறிவோம்...

வ உ சி ஓட்டிய கப்பலை வாங்க தனது சொத்துக்களையே கொடுத்தவர் பர்மா வைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் என்பதையும் நாங்கள் அறிவோம்.

பொதுவாக முஸ்லிம்கள் என்றால் உணர்சிவசப்படக்கூடியவர்கள்,தீவிரவாதிகள் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்..

வெள்ளையர்கள் நமது நாட்டை அடிமைபடுத்தியிருந்த போதும் இவர்களுக்கு இதே உணர்வும் தீவிர எண்ணமும் இருந்திருக்கும் என்பதை எப்படி சிந்திக்காமல் இருந்தீர்கள்,போதாததற்கு பாக்கிஸ்தானும் அப்போது இந்தியாவாக இருந்தது.

சென்னை வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் உங்களின் செயல்பாடுகளையும்,SDPI என்ற இஸ்லாமிய அமைப்பின் அடுத்த மாநிலத்தின் வெடி விபத்தில் எந்த அரசியல் ஆதாயமும் இல்லை என்றபோதிலும் செய்த செயல்பாடுகளையும் நாங்கள் பாராமுகமாக இல்லை.

ஆதலால் முஸ்லிம்களாகிய நீங்கள் உங்களுடைய கருத்து வேறுபாடுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு எல்லோரும் ஒரு குடையின் கீழ் வாருங்கள்,

எங்கள் வீட்டு பெண்களையே உங்களை நம்பி அனுப்பும்போது இந்த நாட்டை ஆள உங்களுக்கு தருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை... பொது மக்களாகிய எங்களின் ஓட்டு உங்களுக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.

நாகையில் மீண்டும் அரங்கேற்றம் சாதியக் கொலை!நாகையில் மீண்டும் அரங்கேற்றம் சாதியக் கொலை!

சாதி மாறி காதலித்ததுதான் இந்த இரு கொலைகளுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவர்களை கொலை செய்து தூக்கில் ஏற்றியுள்ளார்கள்.

மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதது என்பதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ! சாதி வெறிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகிறதோ?

அவர்கள் பாரத மாதாவை கொலை செய்திருக்கிறார்கள்.அவர்கள் பாரத மாதாவை கொலை செய்திருக்கிறார்கள்.

-------------------------------------------

முன்பு தேசத் தந்தை மஹாத்மா காந்தியை கொன்றார்கள்...

பிறகு இந்திய குடிமகன் அக்லாக்கை மாட்டுக் கறி என்ற பொய்யைக் கூறி கொன்றார்கள்.

இன்று ஒரு வாயில்லா ஜீவனான 'சக்திமான்' என்ற குதிரையையும் கொன்றுள்ளார்கள்.

இத்தனையையும் செய்த இந்த இந்துத்வாவாதிகள்தான் சகிப்புத் தன்மை உடையவர்கள் என்றும் தேச பக்தர்கள் என்றும் பலரால் கொண்டாடப்படுகின்றனர்.

Friday, April 22, 2016

திரு.ஜைனுலாபுதீன் பங்குபெற்ற கேள்வி நேரம் தொகுப்பு.

இன்று ( 22-04-16 ) வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மூத்த தலைவர் திரு.ஜைனுலாபுதீன் பங்குபெற்ற
கேள்வி நேரம் தொகுப்பு.பிஜேபி எம்எல்ஏ ஊனமாக்கிய குதிரை இறந்து விட்டது!

பிஜேபி எம்எல்ஏ ஊனமாக்கிய குதிரை இறந்து விட்டது!

உத்திரக்காண்டில் முதல்வருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளின் குதிரைகளின் கால்களை உடைத்து கோரத் தாண்டம் ஆடியுள்ளனர். பிஜேபி எம்எல்ஏ கணேஷ் ஜோஷி காவல் துறைக்கு சொந்தமான குதிரையின் கால்களை லத்தியால் அடிக்கிறார். அந்த குதிரை சுருண்டு கீழே விழுகிறது. பசு மட்டும் தான் மிருகமா? குதிரை மிருகம் இல்லையா? அந்த குதிரைக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டு நம் முன் பரிதாபமாக நிற்கிறது.

உயர்தர மருத்துவர்கள் வந்து மருத்துவம் பார்த்தாலும் பலனில்லாமல் சில நாட்கள் முன்பு அந்த குதிரை இறந்து விட்டது. இறந்த அந்த குதிரை அரசு மரியாதையோடு :-) அடக்கம் செய்யப்பட்டது.எனது தாய் நாட்டை மத வெறியால் ஊனமாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று இந்த குதிரையையும் ஊனமாக்கி இறப்பு வரை கொண்டு சென்றுள்ளனர். கண்டிப்பாக இந்த பாவங்களுக்கெல்லாம் வட்டியும் முதலுமாக இந்துத்வாவினர் பலனை அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Thursday, April 21, 2016

சவூதி அரசு மோடிக்கு கொடுத்த விருதை எப்படி பார்க்கிறீர்கள் ?நியூஸ் 7 கேள்வி நேரம்

அனல் பறந்த கேள்விகள்;

ஆணித்தரமான பதில்கள்!

இன்ஷா அல்லாஹ்

வெள்ளி 22.04.16 இரவு 9மணிக்கு...

✔பீஜே அவர்களின் தெளிவான பதில்கள்:

✔பாரத் மாதா கி ஜே ஏன் சொல்லக் கூடாது?

✔சவூதி அரசு மோடிக்கு கொடுத்த விருதை எப்படி பார்க்கிறீர்கள். அதை ஆதரிக்கிறீர்களா?

✔ஷிர்க் ஒழிப்பு மாநாடு சமூக ஒற்றுமைக்கு எதிரானதா?

✔ஷிர்க் ஒழிப்பு மாநாடு லகும் தீனுக்கும் வலிய தீன் என்பதற்கு எதிராக இருக்கிறதே?

✔டி.என்.டி.ஜே.வை மற்றவர்கள் வித்தியாசமாக பார்ப்பது போல் தெரிகிறதே! அது ஏன்?

✔மதம் சார்ந்த பிரச்சனைக்கு முஸ்லிம்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

✔டி.என்.டி.ஜே ஆதரவு அரசியல் கட்சிகளுக்கு இல்லையென்றால் நோட்டா அல்லது தேர்தல் புறக்கணிப்பு என்று எடுத்துக் கொள்ளலாமா?

✔அரசியல் கட்சிகளில் குறைந்த தீமை, அதிக தீமை எது? அடையாளம் காட்டும் பொறுப்பு டி.என்.டி.ஜே.விற்கு இருக்கிறதே?

✔ஒரே மாதிரியான முடிவை முஸ்லிம்கள் எடுப்பார்கள் என்றால் முஸ்லிம் தலைவர்கள் பிரிந்து இருப்பது ஏன்?

✔தி.மு.க. மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிக்கு ஒதுக்கியிருப்பது அந்தக் கட்சியின் பலம் அதிகரித்து விட்டதா?

✔பா.ஜ.க.வில் நல்ல வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் டி.என்.டி.ஜே. ஆதரிக்குமா?

✔ஆதரவு முடிவுக்கு பி.ஜே.பி. கட்சியைதான் பார்க்க வேண்டும் என்றால் - அ.தி.மு.க. தி.மு.க. மாறிமாறி பி.ஜே.பி.யை ஆதரித்துள்ளதே – அவர்களுக்கு இது பொருந்தாதா?

✔மமக எஸ்.டி.பி.ஐ. பி.ஜே.பி.யை ஆதரிக்கவில்லையே நீங்கள் ஏன் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை?

✔ஓட்டுக்காகவும், நோட்டுக்காகவும்தான் முஸ்லிம் கட்சிகள் அரசியல் நிலை எடுக்கிறார்களா?

✔மக்கள் நலக் கூட்டணியை டி.என்.டி.ஜே. ஆதரிக்காதது ஏன்?

✔முஸ்லிம் வாக்குகளை ஏன் ஓரணியில் திரட்டவில்லை?

✔பி.ஜே.பி.யால் பல ஜாதி மக்களை ஒன்று படுத்தமுடிகிறது என்றால் ஜாதியில்லாத முஸ்லிம்களை ஏன் ஒன்றுபடுத்தமுடியவில்லை?

✔முஸ்லிம் லீக் கட்சி கொள்கையில் சமரசம் செய்து கொள்வதால் முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற முடியவில்லை என்பதா?

பாருங்கள்! பார்க்கத்தூண்டுங்கள்!!

Wednesday, April 20, 2016

பாத்திரத்தில் ஊதி குடிப்பதை நபிகள் நாயகம் ஏன் தடுத்தார்கள்?குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் ஊதி குடிப்பதையும் நபிகள் நாயகம் அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத், இப்னுமாஜா

“குடிப்பவர் தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்” என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.

‘உங்களில் ஒருவர் எதை அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்’
அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி), ஆதாரம்: புகாரி

நபிகள் நாயகம் ஏன் இவ்வாறு கூறினார்கள்? இதனை அறிவியல் பூர்வமாக சற்று இந்த பதிவில் பார்ப்போம்...

நமது சூடான உணவு பொருட்களை ஊதி சாப்பிடும் போது, நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது... அது சூடான உணவு பொருள்களின் மீது படும் போது கார்பன் டை ஆக்சைடு + சூடான உணவு என இரண்டும் ஒன்றினைந்து கலக்கிறது..

இது கார்பன் மோனாக்சைடாக வினை புரிய தொடங்குகிறது... இந்த கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மை கொண்ட ஒரு வாயு...

மேலும் இது ஒரு மெதுவான உயிரை பறிக்க முற்படும் ஒரு விஷமாகும்... இது இதயம் மற்றும் நுரையீரல் மற்றும் உடல் உள் உறுப்புகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.... இது அறிவியல் ரீதியான தற்போதைய கண்டுபிடிப்பு

சிவசேனா தலைவர் சுஷில் இஸ்லாத்தை ஏற்றார்!சிவசேனா தலைவர் சுஷில் இஸ்லாத்தை ஏற்றார்!

உத்தர பிரதேசம் முஸா.பர் நகரில் சிவ சேனாவின் முக்கிய தலைவராக இருந்தவர் சுஷில் குமார் ஜெயின். இந்துத்வாவாதிகளின் தொடர் அட்டூழியத்தினால் வெறுப்புற்று இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்தார். உண்மை விளங்கியது. சென்ற ஏபரல் 19 ந்தேதி தனது மனமாற்றத்தினை மீடியாக்களுக்கு தெரிவித்தார்.

'எனது பெயரை அப்துல் சமது என்று மாற்றிக் கொண்டேன். இந்த மன மாற்றத்துக்கு எந்த நெருக்குதலும் காரணம் இல்லை. நானாக விரும்பி எடுத்த முடிவு இது.' என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

தகவல் உதவி

ஜீ நியூஸ்
20-04-2016

எங்கெல்லாம் இந்துத்வாவாதிகளின் அராஜகங்கள் அதிகம் அரங்கேறுகிறதோ அங்கெல்லாம் இஸ்லாம் வேகமாக பரவும். குஜராத்திலும் முஸாஃபர் நகரிலும் இதனைத்தான் பார்க்கிறோம்.அமீர்கான் இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார்!

அமீர்கான் இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார்!

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனை கேள்விப்பட்டு நடிகர் அமீர்கான் தால், கோரகென் என்ற இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார். அக்கிராமங்களின் தண்ணீர் தேவைகளையும் அடிப்படை தேவைகளையும் தனது சொந்த செலவில் நிறைவேற்றிக் கொடுக்கிறார். இதற்கு முன் 2001 குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட கட்ச் கிராமத்தையும் தத்தெடுத்தவர் அமீர்கான். இந்த நாட்டு மக்களின் சுக துக்கங்களில் யாரெல்லாம் பங்கெடுக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான தேச பக்தி உடையவர்கள்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
19-04-2016

---------------------------------------------

இது ஒரு புறம் இருக்க வறுமை பகுதிகளை பார்வையிட வந்த கடலை மிட்டாய் ஊழல் புகார் பிரபலம் பாஜகவின் மத்திய அமைச்சர் பங்கஜ் முண்டே அங்கு நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்த மக்களுக்கு வழி சொல்லாமல் மோடியைப் போல் செல்ஃபி எடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல் மராட்டியர்களின் இன வெறியை தூண்டி அதன் மூலம் பணம் பண்ணும் ராஜ் தாக்கரேயோ அல்லது உத்தவ் தாக்கரேயோ அந்த மக்களின் வாழ்வுக்கு எந்த உதவிகளையும் செய்யவில்லை.

இப்போது சொல்லுங்கள் யார் தேச பக்தர்? யார் தேச விரோதி?

Monday, April 18, 2016

ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபியோடு ஒரு நேர் காணல்....கேள்வி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் எப்போது துவங்கப்பட்டது,எதற்காக துவங்கப்பட்டது?

பதில்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற இந்த அமைப்பைப் பொறுத்த வரையிலும், இது 1980களின் துவக்கத்தில் கொள்கை ரீதியாக துவங்கப்பட்டது. அதற்குப் பிறகு அது பல்வேறு பரிணாமங்கள் அடைந்து பலதரப்பட்ட பெயர்களில் இயங்கியிருக்கிறது. அப்படியே கடந்து கடந்து கடந்து கடைசியாக 2003ல்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயரில் நாங்கள் பணி செய்ய ஆரம்பித்திருக்கிறோம். அதற்கு முன்பு பல பெயர்களில் இயங்கியிருக்கிறோம். இது 1980 களின் துவக்கத்தில் இதே கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக துவக்கப்பட்டது. இதனுடைய நிறுவனர் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சார்ந்த பி.ஜெயினுலாபுதீன். அவருடைய பதவிக்காலம் முடிந்ததற்குப் பிறகு நாங்கள் இந்த நிர்வாகத்தை பொறுப்பேற்று நடத்தி வருகிறோம்.

இதனுடைய துவக்க நோக்கம் என்னவென்று கேட்டால், ஆரம்பத்தில் தூய இசுலாத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது. இசுலாம் என்றால் என்ன?. அது முழுக்க இன்று மாற்று வடிவம் பெற்றிருக்கிறது. மக்கள் மத்தியில் முஸ்லீம்களே முஸ்லீம்களாக இல்லை. குர்ஆன் என்ன என்பதை முஸ்லீம்களே படிக்கவில்லை. நபிகள் நாயகத்தினுடைய போதனைகளை முஸ்லீம்களே விளங்கிக்கொள்ளவில்லை. எதையெல்லாம் இசுலாம் செய்யக்கூடாது என்று சொன்னதோ, அதை எல்லாவற்றையும் இசுலாத்தின் பெயராலேயே செய்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இசுலாத்தில் இறைவன் ஒருவன், அவனுக்கு இணை துணை எதுவும் இல்லை என்பது இசுலாத்தினுடைய முக்கியமான ஒரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டில் யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் முஸ்லீம்களே கிடையாது என்று குர்ஆன் திட்டவட்டமாக அறிவிக்கிறது. ஆனால் முஸ்லீம் என்று சொல்லிக்கொள்பவர்களே அந்தக் கோட்பாட்டில் தப்பு செய்கிறார்கள். இசுலாத்தின் தீர்ப்பின்படி சொல்வதாக இருந்தால் அவர்கள் முஸ்லீம்களே இல்லை என்றுதான் சொல்லப்படவேண்டும். அந்த அளவுக்குரிய வேலைகளை செய்துவிட்டு முஸ்லீம்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான இசுலாத்தைப் புரிய வைக்க வேண்டும்.

முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் இசுலாம் தப்பாகத்தான் போய் சேர்ந்திருக்கிறது. இசுலாம் என்பது ஒரு தப்பான மார்க்கம், அது ஒரு சகிப்புத்தன்மையற்ற மார்க்கம் என்பது மாதிரியான கருத்துதான் பரவலாக சென்று சேர்ந்திருப்பதனால், தூய்மையான உண்மையான இசுலாத்தினுடைய வடிவத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது, அதை நடைமுறைப்படுத்துவது போன்றவைதான் இயக்கத்தினுடைய பிரதானமான கொள்கை.

தூய்மையான இசுலாம் என்பது வெறுமனே பள்ளிவாசலைக் கட்டுவதும், அங்கு சென்று இறைவனுக்கு வழிபாடு செய்வதும் மட்டுமே இல்லை. அது அல்லாமல் உலகத்தில் மனிதர்களுக்கு என்னென்னவெல்லாம் செய்யவேண்டும், எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று எல்லாவற்றையும் இசுலாம் கற்றுத் தருகிறது. இசுலாத்தில் பொருளாதாரம் குறித்த அறிவுரைகள் இருக்கிறது,வழிகாட்டுதல் இருக்கிறது, ஒரு கணவன் மனைவியினுடைய வாழ்க்கை, இல்லறம், விவாகரத்து போன்ற அனைத்து செய்திகளும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தை வளர்ப்புப் பற்றி பேசப்பட்டிருக்கிறது, சொத்துக்களை பங்கிடக்கூடிய முறை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல் நிர்வாகத்தை எடுத்துச் செல்லவேண்டிய விதம் கற்றுத்தரப்பட்டிருக்கிறது, நண்பர்களோடு எவ்வாறு பழக வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல் அதிலே கற்றுத்தரப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள் முதிய வயதினராக இருந்தால் அவர்களிடத்தில் எப்படியெல்லாம் பணிவோடும், பண்போடும், கனிவோடும் நடக்க வேண்டும் என்று அதுகுறித்த வழிகாட்டுதல் சொல்லப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் சொல்வதாக இருந்தால் ஒரு மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் ஒருவகையில் எங்களது இயக்கத்தினுடைய நோக்கம், இலட்சியம் என்று சொல்வதற்கு விரிவான பொருள் சொல்வதாக இருந்தால் மனிதனை மனிதனாக வாழவைப்பது, மனிதனுக்குத் தேவையான எல்லா காரியங்களையும் செய்து கொடுப்பது அதுதான் எங்களது இயக்கத்தினுடைய பணியாக இருக்கிறது. அந்த வகையில் நிறைய பணிகளை நாங்கள் செய்கிறோம்.

உதாரணமாக குர்ஆனில் ஒரு செய்தி இருக்கிறது, இந்த மார்க்கத்தை பொய்ப்படுத்தியவன் யார் தெரியமா? என்று இறைவனே கேட்பதாக குர்ஆனில் ஒரு கேள்வி வருகிறது. கேள்வியை கேட்டுவிட்டு அதற்கு இறைவனே பதிலும் சொல்கிறான். என்ன பதில் சொல்கிறான் என்றால், அனாதைகளை யார் விரட்டுகிறாரோ, ஏழை எளியவர்களுக்கு யார் உணவு அளிக்க வில்லையோ அவர் இந்த மார்க்கத்தை பொய்ப்படுத்தியவர். விமர்சனத்திற்காக சொல்லவில்லை, புரிந்துகொள்வதற்காக சொல்கிறேன், ஒரு மதத்தை பொய்யாக்கியவர் என்றால் மதத்தினுடைய அடிப்படை கோட்பாடுகளாக இருக்கிற கடவுளைப் பொய்ப்படுத்துதல், அதனுடைய அடிப்படை வழிபாடுகளைப் பொய்ப்படுத்துதலைத்தான் அந்த மதத்தை மறுத்தவன் என்று சொல்வார்கள்.

ஆனால் இசுலாம் என்ன சொல்கிறது என்றால் அனாதைகள் பராமரிக்க வேண்டிய இடத்தில் அனாதைக் குழந்தைகள் இருக்கிறார்கள், நீ அவர்களை வீட்டிற்குள் வரக்கூடாது, உனக்கு ஆதரவு தரக்கூடாது என்று விரட்டியடித்தால் நீ இந்த மார்க்கத்தைப் பொய்ப்படுத்திவிட்டாய். பசியோடு ஒரு ஏழை இருக்கிறார், அவருக்கு உணவு கொடுப்பதற்கு உங்களுக்கு வசதி இருந்தால் உணவு கொடுக்க வேண்டும். உணவு கொடுப்பதற்கு வசதி இல்லையென்றாலும்கூட யாரிடத்தில் அந்த வசதி இருக்கிறதோ அவரை கொடுக்கச் சொல்ல வேண்டும். அந்த வேலையைக்கூட செய்யாவிட்டால் அப்பொழுதும் நீ மறுத்துவிட்டால் இந்த மார்க்கத்தைப் பொய்ப்படுத்திவிட்டாய் என்கிறது இசுலாம்.

இதையெல்லாம் மையமாக வைத்து அனாதை இல்லங்கள் நடத்துகிறோம், முதியோர் இல்லங்கள் நடத்துகிறோம். பேரிடர் நிகழ்வுகள் ஏற்படும்பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்கு களமிறங்கி வேலை செய்கிறோம். முதலுதவி வண்டி(Ambulance) வசதிகளை எற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்துகொண்டிருக்கிறோம். இரத்ததான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். இன்றைக்கு தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் கடந்த பத்தாண்டுகளாக ஏராளமான அமைப்புகள் இரத்த தானங்கள் செய்கின்றன. ஐம்பது ஆண்டுகள் வரலாறு கொண்ட கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் இருக்கின்றன, அவர்களும் செய்கிறார்கள். ஆனாலும் இதில் சிறுபான்மையினர் முஸ்லீம்கள், அந்த சிறுபான்மையினரில் ஒரு சிறிய அமைப்பாகத்தான் நாங்கள் இருக்கிறோம். அப்படிப்பட்ட எங்களுடைய அமைப்பு கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்திலே இரத்த தானத்தில், முதலிடத்தில் நாங்கள் இருக்கிறோம். பத்தாண்டுகளாக தமிழக அரசின் விருதை வாங்கிக் கொண்டிருக்கிறோம், நாங்கள்தான் முதலிடத்தில் இருக்கிறோம். இந்த அளவிற்கு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். இது முஸ்லீம்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து சமூக மக்களுக்கும் இந்த மாதிரியான பணிகளை நாங்கள் விரிவாக செய்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி: பரவலாக சமூகத்தில் வேறு என்ன சமூக சேவைகள் செய்துகொண்டிருக்கிறீர்கள்?

பதில்: எங்களுக்கு ஏறத்தாழ ஆயிரம் கிளைகள் தமிழகம் முழுவதும் இருக்கிறது. தமிழகத்தைத் தாண்டி பல்வேறு நாடுகளிலும் எங்களுக்கு கிளைகள் இருக்கிறது, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளான சௌதி அரேபியா, குவைத், பக்ரேன், கத்தார், அமொரிக்காவிலும் எங்கள் அமைப்பின் கிளை இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் எங்களது கிளை இருக்கிறது, கடந்த வாரம்தான் லண்டனில் எங்களது கிளை துவக்கப்பட்டிருக்கிறது. இதேமாதிரி பல இடங்களிலும், பல நாடுகளிலும் எங்களுக்கான கிளைகள் இருக்கிறது. இங்கே தலைமையிலிருந்து என்னவெல்லாம் வேலைகள் செய்கிறோமோ அனைத்தும் அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுகிறது. இங்கிருந்து நடப்பது மாதிரியான வேலைகளை கோவையில் இருக்கிற ஒரு கிளையில் செய்வார்கள் மற்றும் எல்லாப் பகுதிகளிலும் செய்துகொண்டே இருக்கிறார்கள்.

சமூகப் பணிகளை விரிவாக சொல்வதாக இருந்தால் நான் சொன்ன பணிகள்தான். இரத்ததானம் என்று எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அது முக்கியமான உயிர் காக்கிற சமூகப்பணி. அதில் தீவிரமாக செய்துகொண்டிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளோடு சேர்ந்து இரத்ததான முகாம்கள் நடத்துகிறோம். எங்களுடைய அமைப்பில் அவசர இரத்ததான வேலைகளுக்கென்று தனியாக ஒரு பொறுப்பாளர், ஒரு செயலாளரை நியமித்து அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் இந்த மாதரியான வேலைகளை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். கல்விப்பணி செய்வது,ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவிகளைக் கொடுப்பது,வழிகாட்டுவது, எந்த கல்வி படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்பது மாதிரியான வேலைகளை செய்வது இவையனைத்தையும் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

கேள்வி: சமூக சேவை என்பது குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கு மட்டுமா அல்லது அனைவருக்கும் செய்கிறீர்களா?

பதில்: சமூகப் பணிகள் என்பது குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கு மட்டுமானது இல்லை. பொருளாதார ரீதியாக எங்களது மார்க்கத்தில் ஜக்காத் என்ற கடமை சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன ஜக்காத் என்று கேட்டால், செல்வந்தர் அவருடைய செல்வத்தில் இரண்டரை சதவிகிதத்தை மார்க்கத்துக்காக கொடுத்துவிட வேண்டும். அதை ஏழை, எளிய மக்கள், கடன் பட்டவர்கள், திக்கற்று நிற்பவர்கள் போன்ற மக்களுக்கு பணத்தை செலவு செய்யவேண்டும். செல்வந்தரராக இருப்பவர் தன்னுடைய செல்வத்தில் இரண்டரை சதவிகிதத்தை கணக்கு பார்த்து கொடுத்துவிட வேண்டும் என்று இருக்கிறது. அந்தப் பணத்தை எங்களுடைய மக்கள் எங்களிடம் தருவார்கள். நாங்கள் தகுதியுடைய மக்களைப் பார்த்து கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வோம். பொருளாதார ரீதியான உதவி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு, மருத்துவ உதவி, அறுவை சிகிச்சை என்று அனைத்துக்கும் வருவார்கள் அனைவருக்கும் செய்கிறோம். அனைத்து சமூக மக்களும் வருகிறார்கள், எல்லோருக்கும் எங்களுடைய பொருளாதார உதவி சென்றுகொண்டிருக்கிறது.

தற்பொழுது வெள்ள நிவாரணத்திற்காக நாங்கள் செயல்பட்டோம். அந்த வெள்ள நிவாரணத்திற்காக பயன்படுத்திய தொகை ஏறத்தாழ 33 கோடி ரூபாய். எங்களது அதிகாரப்பூர்வமான உணர்வு இதழில் அது சம்பந்தமான செய்திகள், கணக்கு வழக்குகள் எல்லாம் வந்திருக்கிறது. 33 கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம். அதில் பணமாகவே சுமார் 9 கோடி ரூபாய் கொண்டுபோய் கொடுத்திருக்கிறோம். சகட்டு மேனிக்கு நீ வைத்துக்கொள், நீ வைத்துக்கொள் என்று கொடுக்காமல் முறைப்படி பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை மாவட்டம் கிளை வழியாக 100 சதவிகிதம் துல்லியமாக பார்த்து பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து உதவிகளை செய்தோம். எந்த அளவிற்கு என்று கேட்டால், சென்னையில் நீங்கள் எடுத்துக்கொண்டால் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த உதவித்தொகை ஐந்தாயிரம் ரூபாய். நாங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை, திருவள்ளுர், காஞ்சி பகுதிகளில் கொடுத்த தொகையின் அளவு பத்தாயிரம் ரூபாய்.

அரசாங்கம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தது, நாங்கள் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தோம். அரசாங்கம் சொல்வார்கள் நாங்கள் நிறைய நபர்களுக்கு கொடுத்தோமே என்று, அவர்கள் பாதிக்கப்படாதவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்தார்கள். தேர்தல் எல்லாம் வருகிறது, பல நோக்கங்கள் எல்லாம் இருக்கும். சில நேரங்களில் கணக்கெடுப்பதற்குக்கூட அவர்களுக்கு சிரமம் இருக்கும். தனியாக பிரித்து எடுக்க முடியவில்லை. ஒரு தெருவில் பத்து பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள், 5 பேர் பாதிக்கப்படாமல் இருப்பார்கள் என்பதை துல்லியமாக எடுப்பது கடினம். ஆனால் எங்களுக்கு தெருவுக்கு தெரு மக்கள் இருக்கிற காரணத்தினால் துல்லியமாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் கொடுப்போம் என்று பத்தாயிரம் ரூபாய் உதவி செய்தோம். இதிலும் எந்த மதவேறுபாடும் இல்லை. வெள்ளம் என்ன முஸ்லீம்களை மட்டுமா அடித்தது, அனைத்து சமுகத்திற்கும் செய்திருக்கிறோம்.

கேள்வி: பண உதவி தவிர்த்து வேறு என்னென்ன உதவிகளை மக்களுக்கு செய்தீர்கள், அங்கு நடந்த நிகழ்வுகளில் மறக்கமுடியாத அனுபவம்?

பதில்: நிவாரணப்பணி ஆரம்பித்த துவக்க நாள் முதற்கொண்டு கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு நடந்த நிகழ்வுகள், பணிகள் அனைத்துமே என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவம்தான். அனைத்து நிகழ்வுகளுமே பசுமையாக எங்களது கண்களில் நிற்கிறது. ஆரம்ப நாளில் காவல்துறை அதிகாரிகள் களத்திற்கு வரவில்லை, பணியாற்றவில்லை, இராணுவம்கூட வந்து சேரவில்லை. முதல்நாள் இரவு மழை பெய்திருக்கிறது, மறுநாள் காலையில் எங்களுடைய தொண்டர்களோடு களத்தில் நிற்கிறோம். அன்றைக்கு களத்தில் சென்று வேலை செய்யும் நேரத்தில் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக அடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. உள்ளே போனவர்கள் மீண்டு வருவார்களா என்ற கேள்விக்குறி உடைய நேரத்தில் நாங்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முனையில் நிற்கிறோம். உள்ளே இருந்து சத்தம் கேட்கிறது, காப்பாற்றுங்கள் என்பது மாதிரி. ஏதாவது உதவி செய்யவேண்டுமே என்பதற்காகவேண்டி நாங்கள் பெரிய பெரிய கயிறுகளை எடுத்துக்கொண்டு எங்களால் முடிந்த அளவிற்கு தொண்டர்களை நிற்கவைத்து தூரத்தில் கட்டி ஒவ்வொருவரையாக இழுத்துக் கொண்டு வந்தோம். முதல் நாள் கயிறைக் கட்டி இழுக்கிறோம்.

காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் போகாதீர்கள், உங்களுக்கே அது இடைஞ்சலாகப்போய்விடும், மறுபடியும் உங்களைக் காப்பாற்ற நாங்கள் வரும்படி இருக்கும் என்று எங்களை அனுமதிக்கவில்லை. அவர்களுடைய கண்ணை மறைத்துவிட்டு, பின் வழியாகச் சென்று காப்பாற்றுகிற வேலைகளில் ஈடுபட்டோம். அன்றைக்கு ஒரு நாள் முடிந்துவிட்டது, அப்பொழுதுதான் எங்களுக்குத் தெரிந்தது, படகுகள் இல்லாமல் இங்கு வேலைசெய்ய முடியாது என்று. உடனே படகுக்காக அரசாங்கத்தை அணுகினோம், அதிகாரிகள், மந்திரிகளை சந்திக்கிறோம். எங்களுக்கு எந்த பதிலும் இல்லை, எங்கிருந்தும் படகு கிடைக்கவில்லை. நேரடியாக நாங்களே வண்டி எடுத்துக்கொண்டு மீனவர்களிடம் சென்று வாடகை பேசி வண்டியில் எடுத்துக்கொண்டு தண்ணீர் உள்ள இடங்களில் படகுகளை இறக்கிவிட்டோம். படகு போதுமான அளவிற்கு இல்லை. ஒட்டுமொத்தமாகவே எங்களுக்கு ஐந்து படகுகள்தான் கிடைத்தது.

படகு போதவில்லை என்றவுடனே அடுத்து இன்னும் தேவையிருக்கிறதே, இன்னும் செய்தாகவேண்டும் என்பதற்காக பேருந்தினுடைய இரப்பர்குழாய், லாரியின் குழாய் என்று இரப்பர் குழாய்களையெல்லாம் விலைக்கு வாங்கினோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரப்பர் குழாயை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு நபரை வைத்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பிவைத்தோம். குழாய்களும் போதவில்லை. குழந்தைகள் குளிப்பதற்காகப் பயன்படுத்துவார்களே அந்த மாதிரி காற்றடைத்த டப்களை வாங்கி இறக்கிவிட்டு அதில்போய் முடிந்தஅளவிற்கு கொண்டு வாருங்கள் என்று செய்தோம். அதுவும் எங்களுக்கு போதவில்லை. பெரிய பெரிய தண்ணீர் தொட்டியை(sintex) இறக்கி இரண்டாக அறுத்து, இரண்டாகப்பிரித்து, இரண்டு படகாக பயன்படுத்தி, இரண்டு பேரை அனுப்பி அழைத்துவாருங்கள் என்று செய்தோம். மண்ணெண்ணெய் டின் இரண்டை ஒன்றாக வைத்து கட்டி அதற்கு மேல் மட்டையை வைத்து அதில் ஒரு துடுப்பைப் போட்டு செல்லுங்கள் என்றோம். இது மாதிரி என்னென்ன வழிகளிலெல்லாம் மீட்பு பணி செய்ய முடியுமோ அது எல்லாவற்றையும் நாங்கள் செயல்படுத்தினோம். இது ஒரு வகையான பணி.

இரண்டு நாட்களுக்குப் பிறகு பசி என்றார்கள். உணவு தயாரிக்கிற வேலைகளில் ஈடுபட்டோம். சென்னையில் இருக்கிற அனைத்து இடங்களிலும், 150 க்கும் மேற்பட்ட அனைத்து கிளைகளிலும் உணவு தயாரிக்கப்பட்டது. 20 நாட்கள் வரையிலும் முழுமையாக அந்தந்த பகுதிகளில் 2000 பேர்களுக்கு, 3000 பேர்களுக்கு, 5000 பேர்களுக்கு என்று உணவுளை தயாரித்துக் கொடுத்துக்கொண்டே இருந்தோம். உணவு கொடுக்கப்போகிற நேரத்தில் பால் இல்லை என்றார்கள். பாலுக்கு தட்டுப்பாடு வந்தது, பால் விலையையும் வியாபாரிகள் அதிகரித்துவிட்டார்கள். அரை லிட்டர் 100 ரூபாய், 150 ரூபாய்க்கெல்லாம் விற்றார்கள். நாங்கள் வெளியூர்களிலிருந்து பால் பவுடரை வரவழைத்து மக்களுக்கு விநியோகம் செய்தோம். கொசுவர்த்தி கேட்டார்கள், கொசுவர்த்தியை இறக்குமதி பண்ணினோம். மெழுகுவர்த்தி கேட்டார்கள் மெழுகுவர்த்தியை விநியோகம் செய்தோம். அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது என்று நாங்கள் உணர்ந்தோமோ அல்லது அவர்கள் கேட்டார்களோ அவை எல்லா வேலைகளையும் நாங்கள் செய்துகொடுத்தோம். அதில் மறக்கமுடியாத நிறைய நிகழ்வுகள், அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தது.
செட்டித் தோட்டம் என்கிற பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டிருந்தோம், குப்பை அள்ளுகிற பணிகளை நாங்கள் செய்தோம். அப்பணியை செய்யும் பொழுது ஒரு பெரிய டிபன் பாக்ஸ் ஒன்று இருந்தது. அந்த பாக்ஸில் பத்து பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் இருந்தது. யாரோ அந்த வெள்ளத்தில் தவறவிட்டது. கடைசியில் விசாரித்ததில் ஒரு வயதான பாட்டியின் மகளுக்கு சொந்தமான பணம் இது. மகள் திருமணமாகிப் போய்விட்டார். திருமணமான அவருடைய கணவர் வீட்டில் நகையை வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று தன் தாய் வீட்டில் கொண்டு வந்து வைத்திருக்கிறார். வெள்ளத்தில் போய்விட்டது. எங்கே சென்றது என்று தெரியவில்லை, வீடே சோகத்தில் இருந்தது, ஊரே சோகத்தில் இருந்தது அந்தப் பெண்ணிற்கு என்னாகப்போகிறதோ தெரியவில்லை, கணவன் என்ன சொல்வானோ தெரியவில்லையே என்று. அது எங்கள் கையில் கிடைத்தது, அதைக் கொண்டு சென்று நேராகக் கொண்டுபோய் கொடுத்தோம். அது அவர்களுக்கு பெரிய நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
🌹👍💐👍🌷👍🌻👍🌺👍🌹

விஜயலஷ்மி என்ற பிராமண பெண் இன்று இஸ்லாத்தில்....

விஜயலஷ்மி என்ற பிராமண பெண் இன்று இஸ்லாத்தில்....
--------------------------------------------------------------------------
'ஐந்து வேளையும் பள்ளியிலிருந்து வரும் பாங்கின் ஓசையில் ஏதோ ஓர் ஈர்ப்பு எனக்கு இருக்கும். அதனால் எனது கல்லூரி தோழிகளிடம் குர்ஆன் மொழி பெயர்ப்பு கேட்டேன். 'நீ எல்லாம் அதை தொடக் கூடாது' என்று எனக்கு அவர்கள் தரவில்லை. நம்மை ஒதுக்கும் அந்த குர்ஆனின் குறைகளை காண வேண்டும் என்ற வெறியில் தினத்தந்தியில் தினமும் வரும் சிறு சிறு குர்ஆன் வசனங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். ஆச்சரியமாக அந்த பழக்கம் குர்ஆனின் மேல் எனக்குள் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. வின் டிவியில் இஸ்லாம் சம்பந்தமாக வரும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்தேன். பல மாற்றங்கள் என்னுள் எழுந்தது.

அன்றிலிருந்து குர்ஆனை ஆய்வு செய்தேன். எனது மாற்றங்களை உணர்ந்த எனது பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். தினத் தந்தி வாங்குவது நிறுத்தப்பட்டது. கேபிள் டிவி கனெக்ஷன் தடுக்கப்பட்டது. இது என்னை மேலும் இஸ்லாத்தின்பால் கொண்டு சென்றது. இதனால் ஆத்திரமுற்று என்னை அடித்தனர். சுவற்றில் என் தலையை மோதினர். அந்த நேரத்தில் என் உயிர் போயிருக்கக் கூடாதா என்று ஏங்கினேன்.'
ஆஹா... என்ன ஒரு உறுதி... அந்த காலத்திய சுமையா அவர்களின் உறுதியை இந்த பெண்ணிடமும் பார்க்கிறேன். இறைவன் இந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுத்து ஈருலக வெற்றியையும் தந்தருள்வானாக!

பீஹாரில் இந்துத்வா காவிகளின் அட்டூழியம்!

பீஹாரில் இந்துத்வா காவிகளின் அட்டூழியம்!
------------------------------------------------------------
முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் மற்று கடைகளை இந்துத்வாவாதிகள் வெறி கொண்டு தாக்கி வருவதை பாருங்கள். நேர்மையற்ற வழிகாட்டுதலையும் தலைவனையும் கொண்ட ஒரு கூட்டம் இப்படித்தான் வெறி கொண்டு அலையும். .

இதனால் இந்த காவிகள் வெற்றி பெற்று விடுவார்களா? கண்டிப்பாக தோல்வியைத்தான் தழுவுவார்கள். பாபர் மசூதியை இடித்தவர் அதற்கு பிராயச்சித்தமாக 1000 பள்ளிகளை இந்தியா வெங்கும் திறந்து வைத்துள்ளார். அதுபோல் காலம் பல உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தும்.

மலேசியாவின் மலாக்கா மாகாணத்தில் டாக்டர் ஜாகிர் நாயக்மலேசியாவின் மலாக்கா மாகாணத்தில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் கருத்தரங்கம் நடைபெற்றது. ஹிண்ட்ராஃப் என்ற இந்துத்வா அமைப்பு இந்த கூட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மலேசிய அமைச்சர் ஒருவரும் ஜாகிர் நாயக்கை கடுமையாக விமரிசித்து பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக கூட்டம் நிறைவேறியது.

முடிவில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. பல கேள்விகள் மாற்று மதத்தவர்களால் கேட்கப்பட்டன. சென்கிராம் தர்மா என்ற 24 வயது இந்து இளைஞர் ஒரு கேள்வியைக் கேட்டார். இவர் ஒரு பல்கலைக் கழக மாணவர். இவரது கேள்விக்கு ஜாகிர் நாயக் மிகச் சிறப்பான பதிலை தந்தார். பதிலை பெற்றுக் கொண்ட அந்த மாணவர் உடன் அரங்கிலேயே இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Saturday, April 16, 2016

கொடிக்கால் செல்லப்பாவைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோஹன்!இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சாகித்ய அக்காதமி சார்பில் ஒர் இலக்கியக்கூட்டம் நாகர்கோயிலில் நடந்தது. அதில் நான் பார்வையாளனாக கலந்துகொண்டேன். பேச்சாளர்கள் பேசி முடித்ததும் கேள்விநேரம். ஒரு முஸ்லீம்பெரியவர் எழுந்து மிக நீளமான கேள்வியைக் கேட்டார். நான் அன்றைய மனநிலையில் எவரையும் புண்படுத்துபவன் [இன்று சிலரை மட்டும்.] எழுந்து துடுக்காக ‘ஐயா நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்க வரவில்லை. உங்கள் பெயரைப்போட்டிருந்தால் வந்திருக்கவும் மாட்டோம். அறிவிக்கப்பட்டவர்கள் பேசட்டும்’ என்றேன்.

அவர் ‘மன்னிக்கவேண்டும் மன்னிக்கவேண்டும்’ என்று அமர்ந்துகொண்டார். அப்படி அவர் அமர்ந்தது எனக்கு சற்று அதிர்ச்சி அளித்தது. அவ்வாறு மிகையாகப் பேசுபவர்கள் வாதிடத்தான் செய்வார்கள் என்பது என் எண்ணம். அவரது பெயர் கொடிக்கால் அப்துல்லா என்று அறிந்துகொண்டேன். அன்றுமாலை சுந்தர ராமசாமியைச் சந்திக்கச்சென்றேன். அவர் என்னிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. நான் நெடுநேரம் கழித்து அவரது மனநிலைக்குக் காரணம் கேட்டேன். ‘கொடிக்காலை என்னவென்று நினைத்தீர்கள்? அவர் இந்த நகரத்தின் ஆத்மா. அவரை அவமதிப்பது என்னை அவமதிப்பது போல’ என்றார். நான் குன்றிப்போனேன். பின்னர் கொடிக்கால் அவர்களிடம் அதற்காக மன்னிப்பு கோரினேன். அவர் சிரித்தபடி என்னைத்தழுவிக்கொண்டு ‘என்ன இப்படி மன்னிப்பெல்லாம் கேட்கிறீர்கள்? சின்ன வயதில் ராமசாமியும் இதேமாதிரித்தானே இருந்தார்?” என்றார்

சமீபத்தில் கொடிக்கால் அவர்களின் கன்யாகுமரி இல்லத்தில் நானும் கிருஷ்ணனும் ஒருநாள் முழுக்கத் தங்கி அவரது வாழ்க்கையனுபவங்களைக் கேட்டுக்கொண்டிருந்தோம். கொடிக்கால் செல்லப்பா என்று அறியப்பட்ட இடதுசாரிச் செயல்பாட்டாளர் எப்படி கொடிக்கால் அப்துல்லா ஆனார் என்பதற்குப்பின் ஒரு பெரிய வரலாறு இருந்தது. குமரிமாவட்டத்தில் கொடிக்கால் என்ற ஊரில் எளிய தலித் குடியில் பிறந்து மிக இளமையிலேயே அனாதையாக ஆகி படிப்போ செல்வமோ இல்லாதிருந்த கொடிக்கால் செல்லப்பா தனக்கென பணமும் அதிகாரமும் சேர்க்க நினைக்கவில்லை. தன்னைச்சூழ்ந்திருந்த மக்களின் நலனுக்காக வாழ்க்கையை அளித்தார். இடதுசாரி இயக்கங்களின் தீவிரப்பணியாளராக ஆனார். சுதந்திரப்போரிலும் அதன்பின் குமரிமாவட்டத்தை தமிழகத்துடன் சேர்ப்பதற்கான தமிழகமீட்புப் போராட்டத்திலும் ஈடுபட்டார். மீண்டும் மீண்டும் சிறைசென்றார். அவரது கல்வி முழுக்க அவர் சிறையில் இருந்து கற்றுக்கொண்டது. ஐந்தாம் வகுப்பு படித்த கொடிக்கால் பல பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார். பல மாநாடுகளில் கருத்துரை ஆற்றியிருக்கிறார். இரண்டு கல்லூரிகளை நிறுவி நடத்திவருகிறார்
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தான் சார்ந்த சமூகத்திற்கு இந்திய ஜனநாயகமும் இடதுசாரி இயக்கங்களும் எதையும் செய்யவில்லை என்ற உணர்வை அடைந்தார். இஸ்லாம் மீது ஈடுபாடு ஏற்பட்டது. இளமையிலேயே அவருக்கு ஆன்மீக தேட்டம் இருந்தது. போத்தங்கோடு ஆசிரமத்தில் சின்னாட்கள் இருந்திருக்கிறார். இஸ்லாம் அவருடைய உள்ளத்திற்கு உகந்த மதமாக இருந்தது. அல்லாவின் குரலை எங்கோ தன்னுள் கேட்டார். அவரது மதமாற்றம் குமரிமாவட்டத்தில் அன்று ஓர் அலையை கிளப்பியது. ஆனால் கொடிக்கால் அன்றும் இன்றும் குமரிமாவட்டத்தின் பண்பாட்டில், அதன் ஆன்மீகத்தில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தி

எனக்கு கொடிக்கால் சுந்தர ராமசாமியின் வடிவமாகவே எப்போதும் தெரிகிறார். சில மனிதர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு மேலெழுந்து ஒரு சமூகத்திற்கே தந்தையாகிறார்கள். அத்தகைய மூதாதையரால் வழிநடத்தபடும் சமூகமே வாழும். குமரிமாவட்டத்தின் மூதாதையர் வரிசையில் இன்றிருக்கும் மாமனிதர் கொடிக்கால். இன்று அவரது பிறந்தநாள். நாகர்கோயிலில் நிகழும் விழாவுக்கு என் வாழ்த்துக்கள். இத்தருணத்தில் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கிக்கொள்கிறேன்.

கொடிக்கால்- ஹிந்து கட்டுரை

-ஜெயமோஹன் (எழுத்தாளர்)

http://www.jeyamohan.in/75408#.VxMhLNR961u

சமஸ்கிரதம் படிப்பதால் தலித்களுக்கு என்ன நன்மை?

சமஸ்கிரதம் படிப்பதால் தலித்களுக்கு என்ன நன்மை?

//சம்ஸ்கிருத வல்லுனர்கள் தலித் சமுதாயத்துக்கு அவர்கள் இருப்பிடம் சென்று போதித்தால் மொழி வளரும். அண்ணல் அம்பேத்கரை பின்பற்றும் தலித்துகள் இன்றும் அறியாமையின் காரணத்தாலோ அல்லது இந்த தேசத்தின் எதிரிகள் கட்டமைத்திருக்கிற பொய்ப் பிரச்சாரத்தாலோ மயங்கி சமஸ்கிருதம் என்ற பொக்கிஷத்தை புறக்கணித்து வருகின்றனர். இதில் நஷ்டம் சமஸ்கிருத மொழிக்கல்ல.// - ம. வெங்கடேசன்

தலித் சமுகத்தை சார்ந்தவர்கள் சமஸ்க்ருதம் கற்றுக்கொள்வதால் என்ன பயன் அவர்களுக்கு. ஒரு தலித் சமுகத்தை சேர்ந்தவர் நன்றாக சமற்க்ருதம் பேசுகிறார், வடமொழி மந்திரங்களை நன்கு உச்சரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு தாழ்த்தப்பட்டவர் என்கிற கரை நீங்கி ,கருவறை வரை சென்று இறைவனின் திருமேனியை தொட்டு பூஜிக்கும் அர்ச்சகர் ஆகும் பணி கிடைத்து விடுமா? தலித் என்கிற சமுக இழிவு நீங்கி விடுமா கூறுங்கள்!!!!! நன்றாக வடமொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை பார்த்து ” ஆஹா!! இந்த ஆதி திராவிட இளைஞன் ஆதி சங்கரரை காட்டிலும் அற்புதமாக சமற்க்ருத மொழியை பேசுகிறானே என்று புளங்காகிதம் அடைந்து எந்த பிராமணனாவது அல்லது மேல் சாதி இந்துவாவது தன் வீட்டு பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க முன்வருவானா? இப்படி எதற்குமே பயனில்லை என்றால் பின்பு எதற்க்காக ம.வெங்கடேசன் அம்பேத்கரின் பெயரால் இங்கு வந்து சமஸ்க்ருதத்தை “Marketing” செய்ய வேண்டும்?. ஆகவே,அம்பேத்கர் கூறிவிட்டார் என்பதற்காக அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதற்க்கு திரு.ம. வெங்கடேசன் அவர்கள் திறந்த மனதோடு நேர்மையாக பதில் அளித்தால் மிக உத்தமமாக இருக்கும்.

-தாயுமானவன்

தாயுமானவன் நியாயமான கேள்விகளைக் கேட்டுள்ளார். சமஸ்கிரத ஆர்வலர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வெண்டும்.

Friday, April 15, 2016

தேர்வில் பிட் அடிக்கும் இவர்களை அல்லவா தடுக்க வேண்டும்?தேர்வில் பிட் அடிக்கும் இவர்களை அல்லவா தடுக்க வேண்டும்?

சில நாட்களுக்கு முன் சிபிஎஸ்ஸி தேர்வெழுத மத்திய அரசு ஆடை கட்டுப்பாடு என்ற போர்வையில் ஹிஜாபுக்கு தடை விதித்ததை பார்த்தோம். ஆனால் அந்த மாணவிகள் மத்திய அரசின் காவி சிந்தனைக்கு அடி பணியாமல் கடைசி வரை சிறை சென்று தங்கள் கோரிக்கையில் வெற்றி பெற்றனர். சிறிது சிறிதாக இஸ்லாமிய அடையாளங்களை இந்தியாவிலிருந்து துடைத்து விடலாம் என்று மோடியும் அமீத்ஷாவும் கனவு காண்கின்றனர். ஆயிரம் மோடிக்கள் வந்தாலும் எனது தாய் நாடான இந்தியா அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானதாகவே என்றும் இருக்கும் என்று சொல்லி வைக்கிறோம்.

இது ஒரு புறம் இருக்க எனது முந்தய பதிவில் ஒரு இந்துத்வாவாதி ஹிஜாப் அணிந்தால் ஈஸியாக மறைத்து பிட் அடிக்கலாம். எனவேதான் மத்திய அரசு ஆடைக்கு தடை விதிக்கிறது என்ற அருமையான காரணத்தை கண்டு பிடித்து பின்னூட்டமாக எழுதியிருந்தார். இங்கு சில படங்களை பதிவிட்டுள்ளேன். ஒரு இந்து பெண் ஹிஜாப் இல்லாமலேயே பிட் அடிப்பதை பாருங்கள். அடுத்து பீஹாரில் தேர்வு அறைக்கு பிட் எப்படியெல்லாம் பப்ளிக்காக பாஸாவதை பாருங்கள். உண்மையில் பிட் அடிப்பதை தடுப்பதுதான் மோடி அரசுக்கு நோக்கம் என்றால் இதனை முதலில் தடுக்கட்டும்.

அடுத்து சம்பளம் வாங்கிக் கொண்டு பரீட்சை ஹாலுக்கு எக்ஸாமினராக வருபவர்களின் வேலையே இது போன்று பிட் அடிப்பவர்களை கண்காணிப்பதுதான். அவர்கள் தங்கள் வேலையை ஒழுங்காக செய்தால் எவரும் பிட் அடிக்க முடியாது.

மேலும் அரை குறை குட்டை பாவாடையோடு வயது வந்த பெண்களும் ஆபாசமாக உடை அணிந்து வருவதை மோடி முதலில் தடுக்கட்டும். கற்பழிப்புகள் அப்போதுதான் குறையும்.

அடுத்து அகோரிகள் என்ற பெயரில் அம்மணமாக பெண்கள் மத்தியில் சுற்றித் திரியும் சாமியார்களுக்கு மோடி அரசு கடிவாளம் போடட்டும். செத்த பிணங்களை தின்றும், கஞ்சா அடித்தும் சுற்றுப் புற சூழலை மாசு படுத்தும் அகோரிகளை முதலில் திருத்தட்டும்.
அரசு டாக்டரை தாக்கிய வழக்கில் பாஜக எம்.பி.க்கு 3 ஆண்டு சிறைஅரசு டாக்டரை தாக்கிய வழக்கில் குஜராத் மாநில பாஜக எம்.பி. உட்பட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதி பாஜக மகளிரணி தலைவி மது ஜோஷி. அவரது மகன் ரவி. கடந்த 2013 ஜனவரியில் ஒரு கும்பலால் ரவி தாக்கப்பட்டார். உடனடியாக அவர் அம்ரேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பணியில் இருந்த டாக்டர் தான்ஜி தாபி, ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அந்த நோயாளியை விட்டுவிட்டு ரவிக்கு சிகிச்சை அளிக்கும்படி மது ஜோஷியும் அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தினர். ஆனால் டாக்டர் தாபி சம்மதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அம்ரேலி தொகுதி பாஜக எம்.பி. நரேன் கச்சாடியா மருத்துவமனைக்கு சென்று டாக்டர் தான்ஜி தாபியை தாக்கினார்.

இதுதொடர்பாக அம்ரேலி போலீஸார் விசாரித்து நரேன் கச்சாடியா எம்.பி, மது ஜோஷி, ரவி ஜோஷி, ரமேஷ், கிரித் வம்ஜா ஆகிய 5 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை அம்ரேலி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிபதி பி.ஆர். பட் விசாரித்து நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதன்படி பாஜக எம்.பி. நரேன் கச்சாடியா உட்பட 5 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

எனினும், மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக சிறை தண்டனை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்படும். அந்த வகையில் நரேன் கச்சாடியா எம்.பி.யும் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
15-04-2016

மோடி கட்சியின் எம்பி அல்லவா? ரவுடியிசம் பண்ணுவதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.

'போலோ பாரத் மாதா கீ ஜே' :-)

சவுதியில் கடந்த சில தினங்களாக ஐஸ் மழை!

பாலைவனப் பிரதேசமான சவுதி அரேபியால் கடந்த சில தினங்களாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. பாலைவனம் சோலைவனமாக மாறியதால் இந்த மாற்றங்கள். இனிமேலாவது நம் நாட்டில் மரங்களை வளர்ப்போம். விளை நிலங்களை மனைகளாக்காது இருப்போம்.

சவுதி அரேபியாவின் மக்கள் தொகைக்கு இந்த மழையானது மிக அதிகம். ஆனால் நம் நாட்டு மக்கள் தொகைக்கு பாதி அளவு கூட பெய்வதில்லை. பெய்கின்ற அந்த மழை நீரையும் சேமித்து வைக்காது வீணாக கடலில் கலக்க வைக்கிறோம்.

சவுதி அரேபியாவில் கழிவறை நீரை வடி கட்டி உரமாகவும், அதிலிருந்து கிடைக்கும் நீரை விவசாய நிலங்களுக்கும் பாய்ச்சுகிறார்கள். கழிவறை தண்ணீரையும் வீணாக்குவதில்லை. அதில் கிடைக்கும் மனித மலங்களையும் உரமாக்கி விடுகிறார்கள். செல்வந்த நாட்டுக்கு இருக்கக் கூடிய இந்த சிக்கன நடவடிக்கை வறிய நாடான நம் நாட்டுக்கு இருப்பதில்லை.

இது போன்று நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தக் கூடிய ஆட்சியாளர்களை நம் நாடு பெறுவது எப்போது? இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மரங்களை நடுவோம்: நீராதாரத்தை கணக்கின்றி பெறுவோம்.


Thursday, April 14, 2016

கேரளாவில் மத்திய மருத்துவ தேர்வுக் குழு அராஜகம்!

மத்திய பிஜேபி அரசு மருத்துவ மற்றும் CBSE நுழைவுத் தேர்வுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எந்த வகையிலாவது தொல்லை கொடுத்து இஸ்லாமியர் மேல் படிப்புக்கு சென்று விடக் கூடாது என்பதுதான் மோடி அரசின் மறைமுக திட்டம். ஆனால் உயிரே போனாலும் ஹிஜாபை கழட்ட மாட்டோம் என்று போராடினர் கேரள மாணவிகள். காவல் துறை கைது செய்தது விசாரணைக்கு உட்படுத்தியது. அந்த மாணவிகள் என்ன ஒரு உத்வேகத்தோடு ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்கின்றனர் என்று பாருங்கள்.
சபாஷ் கேரள மாணவிகளே! உங்களைப் போன்ற படித்த பெண்களும் ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்துள்ளீர்கள். இது போன்ற எதிர்ப்பு இருக்கும் காலமெல்லாம் அமீத்ஷா மற்றும் மோடி வகையறாக்களின் திட்டம் நமது நாட்டில் நிறைவேறப் போவதில்லை!

திருப்பூரில் சிறுவர்களை வளர்த்தெடுக்கும் இந்துத்வா!நண்பன் பிரபா திருச்சியிலிருந்து சென்னைக்குக் காலை வந்ததும் வழக்கம்போல் அறைக்குத்தான் வந்திருந்தான் இன்று. வந்தவன் கடந்த ஒரு மாதகாலமாக child protection task force உடன் இனைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் அதில் வளரும் குழந்தைகள் பற்றிய ஆய்விற்காக அமைக்கப்பட்ட குழுவோடு வேலைச் செய்த தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தான்.

அப்போது திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேலான காப்பகங்கள் “இந்து சேவா” அமைப்புகள் மற்றும் “RSS” யின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குவதாகச் சொல்லி அவற்றில் மாணவர்களுக்கான விளையாட்டுகள் என்ற பெயரில் எதையெல்லாம் கற்றுத் தருகிறார்கள் பார். நீதான் விளையாட்டுகள் பற்றிப் பேசினால் பேசிக் கொண்டேயிருப்பாயே. அதனால் இந்தக் காணொளியைப் பாரு என்று மூன்று காணொளியைக் காண்பித்தான். அவற்றைப் பார்த்துவிட்டு சற்று ஆட்டம் கண்டுதான் போயிருகிறேன்.

அவர்களுக்குக் கற்பிக்கப்படும் விளையாட்டுகளின் பெயர்கள், சக்கரவீயுகம், விஷ்ணு சக்கரம், துதிக்கை விளையாட்டு என்று மூன்று விளையாட்டுகளுக்கான வீடியோ இருந்தது. அதில் சக்கர வீயுகம் விளையாட்டு மாணவர்களை வட்ட வடிவில் நிறுத்தி உள்ளே சில மாணவர்களை நிறுத்தி வைத்திருகின்றனர். வெளியே ஒரு சிறுவன் நிற்கிறான். இப்படியொரு அமைப்பு உருவான பின்பு அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து “பார்த் மாத்தாகி ஜே” என்று கோசம் போட்டு விளையாட்டைத் துவக்குகின்றனர். வெளியே நிற்கும் மாணவன் வட்ட வடிவ சக்கர வியுகத்தினுள் பிளவு ஏற்படுத்தி உள்புகுந்து உள்ளே நிற்பவர்களைத் தொட்டு விட்டு மீண்டும் வெளியேற வேண்டும் இதுதான் விளையாட்டு. உள்ளே புகும் போது “ஜெய் காளி” என்று கத்திக் கொண்டு உள்ளே சென்று வரவேண்டும்.

அதே போல் விஷ்ணு சக்கர விளையாட்டு ஒருவன் தனித்து நிக்கிறான் அவனை ஓரிடத்திற்குக் கார்னர் செய்து வட்டமாக நிற்பவர்கள் இணைந்து சுற்றிக்கொண்டே சென்று அவனை வீழ்த்த வேண்டுமாம். இந்த விளையாட்டுத் துவங்கும் போதும் “பாரத் மாத்தாகி ஜே” என்று சொல்ல வேண்டுமாம்.

இறுதியாகத் துதிக்கை விளையாட்டு அதில் இரு குழுக்களாகப் பிரிந்து விளையாட வைக்கின்றனர். ஒருகுழுவின் பெயர் இந்தியா மற்றொரு குழுவின் பெயர் பாகிஸ்தான். இந்தியக் குழுவில் இருக்கும் அனைவரும் “பாரத் மாத்தாகி ஜே” என்று சொல்லிக் கொண்டு கைகளைத் துதிக்கைகள் போல் சற்று மடக்கிக் கொண்டு தாக்க ஆரம்பிகின்றனர். இதில் எப்பாடு பட்டேனும் இந்தியக் குழு வெற்றி பெற வேண்டும். இந்த ஒன்றுதான் நிபந்தனை.

மேலும் இதுபோன்ற விளையாட்டுகளை மாணவிகள் விளையாட அனுமதியில்லையாம். அவர்களுக்கு விளையாட்டுகள் என்ற ஒன்றே இல்லையென்றும் வேறு சொல்கிறான் நண்பன். மாணவிகள் காப்பக வேலைகளில் மட்டும் ஈடுபடுத்தப்படுவதாகவும், அங்கு இருக்கும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்றோர்களால் கைவிடப் பட்டவர்களாகவும், ஒற்றைப் பெற்றோர் உள்ள வறுமை நிலையிலிருப்பவர்களின் குழந்தைகளாக இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று சொல்கிறான்.

இவற்றையெல்லாம் பார்த்தப் பிறகும் கேட்ட பிறகும் சிறி்து கோபம் வந்தாலும், அடிப்படைவாதிகள் எங்கிருந்து தனது பயிற்சியைத் துவங்குகின்றனர், இதுபோன்ற குழந்தைகளையும் மாணவர்களையும் தங்களது கர சேவகர்களாக மாற்றிக் கொண்டிருப்பதும் தெளிவாகவும் எளிதிலும் புரிந்து கொள்ளமுடிகிறது. இதில் இன்னொரு பெருந்துயரம் என்னவென்றால் விளையாட்டுகள் மட்டுமில்லை ஒவ்வொரு நிகழ்வின் போது அவர்களை “பாரத் மாத கீ ஜே” அப்படியென்று முழங்க வேண்டுமாம். இன்று பாபா ராம்தேவ் போன்றவர்கள் இதையேதான் முன்வைத்து ” பாரத் மாத கீ ஜே” சொல்லாதவர்கள் தலையை வெட்டியெறிய வேண்டுமெனப் பேசிவருகின்றனர். இதுபோன்ற காப்பகங்களினால் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னாவார்கள் என்று நினைத்தால் தலைதான் சுற்றுகிறது.

பொதுவாக விளையாட்டுகள் சமத்துவத்திற்கும், உடல்வலுவிற்கும், மனோ திடத்திற்கும் தான் விளையாடப் பட வேண்டும். ஆனால் இதுபோன்ற அமைப்புகள் விளையாட்டுகளிலே மதத்தையும் வெறுப்புணர்வையும் தூண்டி விட்டுக் கொண்டிருகின்றனர் என்பதும். அதைவிட நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டிய காலக் கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

முகப்புப் படம்: ஆர் எஸ் எஸ் பயிற்சியில் வாளேந்தும் சிறுவர்கள்

சகோதரர் இனியன் தட்ஸ் தமிழில் பதிந்த பதிவு இது

http://thetimestamil.com/2016/04/05/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

Wednesday, April 13, 2016

துருக்கி ராணுவம் இரவு நேர தொழுகையில் லயித்திருக்கும் போது!ராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக இறை நம்பிக்கை, இறைவனின் பயம் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மிக முக்கியமான பொருப்பில் இருப்பவர்கள். வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள். அரபு நாடுகளில் ராணுவத்தினர் சீருடையோடு ஒவ்வொரு பள்ளியிலும் தொழுவதை நாம் காணலாம். ராணுவ அணி வகுப்பு நடக்கும் போதும் தொழுகை நேரத்தில் அனைவரும் தொழுகைக்கு வந்து விடுவர்.

ஆனால் நம் நாட்டில் இது நடைமுறைபடுத்தப் படுவதில்லை. இறை பக்தி கொஞ்சமும் இல்லாததால் நமது ராணுவத்தினர் வரம்பு மீறுகின்றனர். இரவு பன்னிரண்டு மனி, ஒரு மணி என்று காஷ்மீரில் நமது ராணுவம் இளம் பெண்களை அழைத்துச் செல்வதும் இரண்டு நாட்கள் அனுபவித்து விட்டு பிறகு வீட்டில் எறிந்து விட்டு செல்வதும் தொடர்கதையாகிறது. எதிர்த்து கேள்வி கேட்டால் 'நீ பாகிஸ்தானின் கைக் கூலி' என்று சொல்லி என்கவுண்டரில் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். இரண்டு நாட்கள் முன்பு கூட நடந்துள்ளது.

நமது ராணுவத்தில் பெரும்பாலும் இந்து மக்களே உள்ளனர். அந்த மக்களுக்கு இறை பக்தியை ஊட்ட வேண்டும். இறை பக்தி என்று நான் சொல்வது அமீத்ஷாவும், நரேந்திர மோடியும், பாபா ராம்தேவும் சொல்லும் இறை பக்தி அல்ல. அது பக்தி என்ற பெயரில் நடத்தப்படும் பகல் வேஷம். நான் சொல்ல வரும் பக்தி கிருபானந்த வாரியாரும், குன்றக்குடி அடிகளாரும் போதித்த இந்து மத பக்தி. நமது ராணுவத்தினருக்கு முறையாக கவுன்சிலிங் கொடுத்து முறையான இறை பக்தியையும் ஊட்டினால் ராணுவத்தின் மேல் உள்ள களங்கம் துடைக்கப்படும். இந்து, முஸ்லிம், கிருத்தவ போதனைகள் முறையாக நமது ராணுவத்துக்கு போதிக்கப் பட்டால் உலகிலேயே சிறந்த ராணுவமாக நமது ராணுவம் மிளிரும். மோடி தலைமையிலான இந்த ஆட்சியில் அது சாத்தியமில்லை. அடுத்து அமரக் கூடிய ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழரின் வருடப் பிறப்பு சித்திரை மாதமா அல்லது தை மாதமா?தமிழரின் வருடப் பிறப்பு சித்திரை மாதமா அல்லது தை மாதமா?

தைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.

இத்தனைக்கும் சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்துவந்த தொன்றல்ல. பண்டைத் தமிழகத்திலே இருந்த பண்பாடுமல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மை இறுகப் பற்றிக்கொண்ட எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் போலவே ஏற்பட்டுவிட்ட ஒரு பழக்கம் இது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள். அவர்கள் அறிவியல் முதிர்ச்சியால் அகிலத்திற்கே வழிகாட்டியவர்கள் விண்ணையும் மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை ஆக்கியவர்கள் வானிலைக்கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்தான் கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும் காய்க்கின்றன என்றும் கண்டுபிடித்தவர்கள்.

அதனால்தான் களனி விளைந்து கதிரைப் பறித்ததும் தமது புத்தாண்டுப் பிறப்பன்றே முதன் முதலில் அந்தக் கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள். புதுப்பானையில் பொங்கலிட்டுப் படைத்து வணங்கினார்கள். சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு முந்தியிருந்தே இந்தப் புத்தாண்டும்ää பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டு வந்தமையை அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறில் பொங்கல் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது.

சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்

என்று புறநானூற்றில் 168 ஆவதாக இடம்பெறுகின்ற பாடலிலே கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் புதிர் உண்ணுகின்ற செய்தியைப் பதிவுசெய்துள்ளார். புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலிலே புத்தரிசியையிட்டு சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து ஆக்கிய பொங்கலைப் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை அழகாகச் சொல்கின்றார் புலவர்.

அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணியானவன் என்கின்றார் வள்ளுவர். எனவேää கதிரவனுக்கு நன்றிசெலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதை உணர்ந்து தான் பண்டைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கத்திலேயே அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சித்திரைப் புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு அல்ல. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புதுவருடப்பிறப்பு அல்ல. அது இந்துக்களின் புதுவருடப்பிறப்பு என்று சொல்லப்படுகின்றது. சிங்களவர்களுக்கும் சித்திரையில்தான் புதுவருடம் பிறக்கிறதாம். இலங்கை நாட்காட்டிகளில் ஏப்பிரல் 14 ஆம் திகதி இந்துää சிங்கள புதுவருடப்பிறப்பு என்றுதான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களின் புதுவருடப்பிறப்பு என்று குறிப்பிடப்படுவதில்லை. அவ்வாறு எங்காவது குறிப்பிடப்பட்டிருந்தால் அது தவறாகும்.

சித்திரைப் புத்தாண்டுதான் வருடப்பிறப்பு என்பதற்கு இந்து மதத்தவர்களிடையே நிலவுகின்ற புராணக்கதையையும் நாம் இங்கு நினைவுகூருதல் பொருத்தமாகும்.

புராண காலத்தில் நாரதமுனிவருக்குக் காம இச்சை ஏற்பட்டதாம். அந்த இச்சை தாங்கொணாதபடி அதிகமாகவே அதைத் தீர்த்துக்கொள்வதற்காக அவர் கிருஷ்ணரோடு உறவுவைத்துக்கொண்டாராம். அதன் மூலம் அறுபது ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாராம். பிரபவமுதல் அட்சய ஈறாக பெயர் சூட்டப்பட்ட அந்த அறுபது குழந்தைகளின் பெயர்களால்தான் ஆண்டுகளின் தொடக்கம் கொண்டாடப்படுகிறதாம். அபிதான சிந்தாமணி என்ற நூலில் இந்தக்கதை சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய கேவலமான புராணக்கதையினைப் பின்னணியாக வைத்துத்தான் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றோமாம். இந்தக்கதை அறிவியலுக்குப் பொருந்துமா? தமிழ் மரபுக்கு உகந்ததா? தமிழ்ப் பண்புக்குள் அமைந்ததா? நமது குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா?

உண்மை என்னவென்றால் இந்த 60 ஆண்டுப்பெயர்கள் சாலிவாகனன் என்னும் வடநாட்டு அரசனின் பெயரால் ஏற்படுத்தப்பட்டவை. தமிழ்மக்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இருந்ததில்லை. மேலும் 60 வருடங்கள் முடிந்ததும் அதாவது அட்சய வருடம் முடிந்ததும் மீண்டும் பிரபவ வருடம் வரும். மீண்டும் 60 வருடங்கள் கழிந்ததும் அட்சய வருடம் வரும். இப்படியே சுற்றிக் கொண்டிருப்பதால் சித்திரைப் புத்தாண்டு முறையால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை வரலாற்று ரீதியாகக் கணக்கிட முடியாது. குறித்துரைக்க இயலாது.

உதாரணமாக பிரபவ வருடத்தில் உலகத்தில் வரலாற்றுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தால் அல்லது ஒரு பெரியார் பிறந்ததாகச் சொன்னால் எந்தப் பிரபவ வருடத்தில் அது நடந்ததென்று எப்படிக் கணக்கிட்டு வைக்கமுடியும்? அறுபது வருடங்களுக்கொருதடவை பிரபவ வருடம் வரும் அல்லவா?

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்போரலையைப்பற்றி இன்னும் நூற்றி ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சொல்லும்பொழுது ஆழிப்பேரலை தாரண வருடத்தில் மார்கழி மாதத்தி;ல் தாக்கியது என்றுசொன்னால் எந்தத் தாரண வருடத்தில் என்று தெரியவருமா? எத்தனை வருடங்களுக்கு முன்னர் அந்த அனர்த்தம் நடந்தது என்று கணக்கிட முடியுமா? ஏனென்றால் இன்றிலிருந்து நூற்றைம்பது வருடங்களுக்குப்பிறகு இரண்டு மூன்று தாரண வருடங்கள் வந்துவிடும் அல்லவா?

இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சித்திரையில் பிறப்பதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்றால் அதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள அறுபது வருடங்களின் பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லையே! ஏன் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

ஆனால் சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாகப் பின்பற்றிவந்துள்ளனரென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்ந்துள்ளனர். தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதப் பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்கள் என்பதுடன்ää தொல்காப்பியர் காலத்திலேயே அவை வழக்கத்திலிருந்தன என்று கூறுகின்றார் மொழியறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். யேசு கிறீஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கி.மு என்றும் கி.பி. என்றும் உலக வரலாறு வரையறுக்கப்பட்டு வருகின்றது. அதேபோலப் புத்தரின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு புத்த சமயத்தினர் புத்த ஆண்டு என்று கணித்துப் பின்பற்றுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தாண்டு வழக்கத்தை இடையிலே கைவிட்டுவிட்டு எதையெதையோவெல்லாம் தமிழர்கள் பின்பற்றுவது எவ்வளவு துர்ப்பாக்கியமானது.

தைமுதல்நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல அதுவே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளுமாகும். அதனால்தான் தமிழ்ப் புத்தாண்டுபற்றிய உண்மைநிலையைத் அறிவுபூர்வமாகவும்ஆராய்ச்சியின் அடிப்படையிலும் தமிழ்மக்களுக்கு உணர்த்துவதற்காக 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ் அறிஞர்கள் செந்தமிழ்ப் புலவர்கள் கூடி ஆராய்ந்திருக்கிறார்கள். தமிழ்க்கடல் நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்களது தலைமையிலே அந்த ஆராய்ச்சி நடைபெற்றிருக்கின்றது.

மாபெரும் தமிழறிஞர்களும் கல்விமான்களுமான தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியம்பிள்ளை சைவப்பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை நாவலர் சோமசுந்தர பாரதியார் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அந்த அறிஞர் குழவிலே இருந்திருக்கிறார்கள்.

அத்தனை அறிஞர் பெருமக்களும் ஒன்றாகக்கூடி தமிழ்ப் புத்தாண்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். முடிவுகண்டிருக்கிறார்கள். 500 இற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் அந்த முடிவிற்குத் தமது ஏற்பிசைவை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களது முடிவின்படி இயேசுகிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் திருவள்ளுவர் என்றும் அவரது பெயரில் தொடர்ஆண்டுக் கணக்கீட்டைப் பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அந்த முடிவுகளின்படி திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாள் ஆகும். கிழமை நாட்கள் ஏழு. அவைஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் வியாழன் வெள்ளி காரி என்பனவாகும். புதனும் சனியும் தமிழ்ப்பெயர்கள் அல்லவென்பதால் அவற்றுக்கான பண்டைய தமிழ்ப்பெயர்களான அறிவன் காரி என்பன முறையே வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கில ஆண்டுடன் 31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதுவே தமிழ் ஆண்டுக் கணக்கு.

அறிஞர்களது தீர்மானத்தை அன்றைய தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. அதன்படி திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு நாட்குறிப்பிலும் பின்னர் 1972 இலிருந்து தமிழக அரசின் அதிகாரபூர்வமான இதழிலும் 1981 இலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2009 இல் தமிழக அரசு தைப்பிறப்பையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் சித்திரைமாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு இல்லை என்றும் சட்டபூர்வமாக ஆணை பிறப்பித்தது. தமிழ் மக்களின் புத்தாண்டு விடயத்திற்குச் சட்டரீதியான அந்தஸ்துக் கொடுக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.

ஆனால் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரின் அரசியல் முதிர்ச்சியற்ற நிலைமையும் நாகரிகமற்ற தன்மையும் தமிழ்ப் புத்தாண்டு விடயத்தையும் அரசியல் சாக்கடைக்குள் தள்ளிவிட்டிருப்பது தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும். தைப்பிறப்பைத் தமிழ்ப் புத்தாண்டென அரசாணை பிறப்பித்தது கலைஞர் கருணாநிதி அவர்களின் தி.மு.க. அரசு என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கப் பிறகு ஆட்சிக்கு வந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் அந்த அரசாணையை மாற்றி சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என தீர்மானம் போடும் முடிவுக்கு வந்திருக்கிறார். தைப்பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என்பது கலைஞர் கருணாநிதியின் தீர்மானம் அல்ல. கலைஞர் பிறப்பதற்கு முன்னரே 1921 ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் சார்பாகத் தமிழ்ப் புலவர்களாலும்அறிஞர்களாலும் எடுக்கப்பட்ட முடிவு அது. இதனை நன்கறிந்த தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் செல்வி ஜெயலலிதா அவர்களின் கட்சியிலும் இருக்கிறார்கள். என்ன செய்வது எடுத்துச்சொல்லும் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்!
யாரும் அறிவுரை சொல்லப் பயப்படுகின்ற நிலைமையைத் தமிழ் தலைமைகள் பேணிவந்தமையும் மாற்றுக் கருத்துக்களைச் சொன்னவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டமையும்தான் தமிழ் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணமானவை என்பதுதானே வரலாறு. அந்த நிலை இன்னும்தான் நீடிக்கிறது.

தைமாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடினால் கிரக மாற்றங்களில் குளறுபடி ஏற்படுமாம் பஞ்சாங்கக் கணிப்புத் தவறாகிவிடுமாம் என்றெல்லாம் சிலர் மக்களைக் குழப்புகின்றார்கள். இது என்ன பேதைமை! சித்திரையை அடிப்படையாக வைத்துத்தான் கிரக சஞ்சாரங்கள் நடைபெறுகின்றன என்றால் அவை அப்படியே நடக்கட்டும். அவற்றுக்கு அமைவாக எழுதப்பட்ட பஞ்சாங்கங்கள் அப்படியே இருக்கட்டும். சித்திரை மாதக் கிரக நிலையைத் தைமாதத்திற்கு நகர்த்தும்படி யாரும் கூறவில்லை. பஞ்சாங்கங்களைத் திருத்தும்படி யாரும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் சித்திரை மாதம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் அல்ல. தைமாதமே தமிழ்ப்பத்தாண்டின்முதல் மாதம் என்றும்ää தைமுதல் திகதியே தமிழ்ப் புத்தாண்டின் முதல்திகதி என்றும் கொண்டாடுவோம். அவ்வாறு நாம் கொண்டாடுவதால் கிரகமாற்றங்களில் கோளாறு ஏற்படும் என்பதும் பஞ்சாங்கம் பொய்த்துவிடும் என்பதும் இந்துத்துவத் திமிர்பிடித்த மூடநம்பிக்கைகள். மடத்தனமான விதண்டா வாதங்கள். மக்களைக் குழப்பும் முயற்சிகள்.

தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
பத்தன்று, நூறன்று பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்

என்று தைத்திங்கள் திருநாளை, தமிழினத்தின் திருநாளாக, தமிழ் வருடத்தின் முதல்நாளாக, தமிழ்ப பண்பாட்டின் பெருநாளாக போற்றிப் பாடுகின்றார் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அம்மொழியே பொன் மொழியாகட்டும். அனைத்துலகத் தமிழர்களுக்கும் ஒரே வழியாகட்டும்.

எனவே தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டெனக்கொண்டாடும் நமது பண்டைய வழக்கத்தினை உலகத் தமிழ்மக்கள் அனைவரும் வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கடந்து விட்ட வருடத்தின் கடைசிநாள்.
வீட்டிலுள்ள வேண்டத்தகாத பொருட்களையெல்லாம் வீசி எறியும் நாள்.
வீட்டிலும், வீட்டைச்சுற்றவரவும், காணிகளிலும் உள்ள அழுக்குக்களை,
குப்பை கூழங்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தீயிட்டுக்கொழுத்தி
துப்பரவுசெய்யும் நாள்.

புலரும் பொழுதில், மலரும் பொங்கல்பண்டிகையை, புத்தாண்டுப் பிறப்பை வரவேற்க வீடுகள்தோறும் விடியவிடிய மகிந்திருக்கும் நாள்.
வீட்டுச்சுவர்களுக்கு வெள்ளையடிப்பதும், வர்ணச்சாயம் தீட்டுவதுமாக
அன்றைய நாள் முழுவதும் ஊரே மகிழ்ச்சியில் அமர்க்களப்படும்.
அந்த நாளைப் போகி நாள் என்று சொல்வார்கள்.
கடந்த வருடத்தைப் போக்குதல், க~;டங்களைப் போக்குதல்,
உறவினர்களுக்கிடையே இருந்த உரசல்களைப் போக்குதல்,
அகத்திலும் புறத்திலும் உள்ள அழுக்குக்களைப் போக்குதல் என்றெல்லாம் பொருளமைந்ததுதான் போகி நாள், போகிப் பண்டிகை!

திருமணமாகித் தனிக்குடும்பம் நடாத்தும் தங்கள் பெண்களுக்கும், சகோதரிகளுக்கும் பெற்றோரும், சகோதரர்களும் சீர்வரிசை செய்வதும் அன்றைய நாளில்தான்.

நெல்லு, அரிசி, குரக்கன், சோளம் முதலிய தானியங்கள் முக்கனிகள், இனிப்புப் பலகாரங்கள், புத்தாடைகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றையெல்லாம் இல்லறம் நடத்தும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுத்து மகிழ்வார்கள். இல்லத்தையும், சுற்றுப்பறத்தையும் எல்லோருமாகச் சேர்ந்து துப்பரவுசெய்து, புதுப்பொலிவு ஊட்டுவார்கள். அது பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள். புத்தாண்டுக்கு முதல்நாள். கடக்கும் வருடத்தின் கடைசிநாள். அதுதான் போகிநாள்!

தைத் திங்கள் முதல்நாளே தமிழர் நமது புதுவருடப் பெருநாள். தங்கத் தமிழினத்தின் தைப்பொங்கல் திருநாள். எனவே, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளே நமது புத்தாண்டு என்பதை, எங்கும் பறைசாற்ற வேண்டும். எப்போதும் அதனைப் பின்பற்ற வேண்டும். தப்பாமல் நம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும். வாசலில் கோலமிட்டு, மாவிலையிலும், மஞ்சள் குருத்தோலையிலும் தோரணங்கட்டி, புத்தரிசி கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, தலைவாழையிலையில் பொங்கலும்,பழங்களும், கரும்பும் படைத்து, கதிரவனை நோக்கிக் கைகூப்பித்தொழுது நன்றிதெரிவிக்கும் நந்நாளே பொங்கல் திருநாள்.

காலையில் வழிபாடு. பகலில் உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடல். உணவு பரிமாறல். உண்டு களைப்பாறல். மாலையில் களியாடல். கலைகள் அரங்கேறல். ஊரே திரண்டு ஒன்றாய் மகிழ்ந்து கொண்டாடல். இதுதான் தமிழரின் தாயகங்களின் தைத்திருநாள். அது வருடத்தில் ஒருநாள். புத்தாண்டின் முதல் நாள். தமிழருக்கு அது பெருநாள். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நமது தாயகங்களிலே நாம் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்களை நினைவுகூரவேண்டும்.

வாழுகின்ற இடத்தால் வேறுபட்டாலும், வணங்குகின்ற மதத்தால் வேறுபட்டாலும், சார்ந்துள்ள அரசியல் கருத்தால் வேறுபட்டாலும், தனிப்பட்ட குணத்தால் வெறுபட்டாலும் தமிழர் என்ற இனத்தால் ஒன்றுபடுவோம். தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். தைமுதல்நாளே புத்தாண்டு என்று உறுதி பூணுவோம். எங்கு வாழ்ந்தாலும் அந்த வழக்கத்தைப் பேணுவோம்.

தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். கல்வியைத் தொடங்கும் பிள்ளைகளுக்கு வழிபிறக்கும். புதுவகுப்பிற்குச் செல்லும் மாணவர்க்கு வழிபிறக்கும். பல்கலைக்கழகம் செல்லும் இளையோர்க்கு வழிபிறக்கும். திருமணத்திற்குக் காத்து நிற்கும் காதலர்க்கு வழிபிறக்கும்ää பிள்ளைப் பாக்கியத்திற்குக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு வழிபிறக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகின்ற பெற்றோருக்கு வழிபிறக்கும். இவ்வாறு சிறியோர்க்கும், பெரியோர்க்கும் எல்லோர்க்கும் தைபிறந்துவிட்டால் வழிபிறக்கும்.

பிற்குறிப்பு:

2001 ஆம் ஆண்டு தைமாதம் 6 ஆம் திகதி மலேசியாவிலே “தைமுதல்நாளே தமிழ் ஆண்டுத் தொடக்கம்” என்று பரப்புரைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய தமிழ்க் கலாசாரக் கழகத்தின் பொங்கல் விழாவில் எனது தலைமையில் எழுநூற்றுக்கும் அதிகமான பங்களிப்பாளர்களின் முன்னிலையில், “தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு” என்று உறுதிமொழி பிரகடனப்படுத்தப்பட்டது.

-சு.சிறீகந்தராசா