Followers

Monday, November 30, 2015

திரையரங்கில் தேசிய கீதத்துக்கு உண்மையிலேயே அவமானம் ஏற்பட்டதா?கர்நாடக திரையரங்கினுள் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து மரியாதை செய்யாத இஸ்லாமிய தம்பதியினர் அரங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனரர். தியேட்டரில் தேசிய கீதத்தை போடலாமா? அதற்குரிய மரியாதை கிடைக்குமா? என்பதை பற்றியெல்லாம் நம்ம ஆர்எஸ்எஸ் அரை டவுசர்களுக்கு சிந்திக்கும் திறன் முதலில் இல்லை. இஸ்லாத்தை கொச்சைபடுத்த ஏதாவது காரணத்தை தேடி அலைந்து கடைசியில் அவர்களுக்கு கிடைத்த ஒன்றே இந்த நாடகம். ஆர்எஸ்எஸ் அரை டவுசர்களுக்கு தேசப் பற்று என்பதே ஒரு ஏமாற்று வேலை என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தலித்களையும் இஸ்லாமியர்களையும் கிருத்தவர்களையும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து ஆட்சியை பிடிப்பவர்களிடம் தேச பக்தி குடி கொண்டிருக்குமா... கண்டிப்பாக இருக்காது.

சரி.... அது ஒரு பக்கம் இருக்கட்டும். வங்காள மொழியில் உள்ள நமது தேசிய கீதம் அப்படி என்னதான் சொல்கிறது என்ற அர்தத்தையும் பார்போம்.

" Victory to thee, O ruler of the minds of the people,- ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

O Dispenser of India's destiny. - பாரத பாக்ய விதாதா.

Thy name rouses the hearts of Punjab, Sindh, பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா

Gujarat and Maratha,

Of the Dravida, Odisha and Bengal; - திராவிட உத்கல வங்கா.

It echoes in the hills of the Vindhyas and Himalayas, - விந்திய இமாச்சல யமுனா கங்கா

mingles in the music of Yamuna and Ganges and is உச்சல ஜலதி தரங்கா.

chanted by the waves of the Indian Sea. தவ ஷுப நாமே ஜாகே

We get up with your blessed name on our lips தவ ஷுப ஆஷிஷ மாகே,

We pray for your auspicious blessings காஹே தவ ஜெய காதா.

Thou dispenser of India's destiny - ஜன கண மங்கள தாயக ஜெயஹே

Victory, victory, victory to thee." - ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

'மக்கள் மனதில் வீற்றிருக்கும் ஆட்சியாளரே! உமக்கு வெற்றி நிச்சயம்!

இந்திய நாட்டின் விதியை நிர்ணயிப்பவரே!

பஞ்சாப் சிந்து குஜராத் மற்றும் மராட்டிய மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவரே!

உங்கள் மீது வைத்த அன்பானது விந்திய மற்றும் இமய மலைகளின் அடிவாரங்களில் எதிரொலிக்கிறது.

யமுனை மற்றும் கங்கை நதிகளும் இந்திய கடல் அலைகளும் இதனையே முழக்கமிடுகின்றன.

உம்முடைய பெயரை கேட்ட மாத்திரத்திலேயே எங்கள் உதடுகள் உம்மை ஆசீர்வதிக்கின்றன.

இந்தியாவின் விதியை நீங்களே நிர்ணயிப்பவர்..

உங்களுக்கு வெற்றி நிச்சயம்... வெற்றி நிச்சயம்.... வெற்றி நிச்சயம்'


இதுதான் நமது தேசிய கீதத்தின் உண்மையான பொருள். ஆங்கில மொழியாக்கம் முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வின் தளத்திலிருந்து எடுத்தது. அதனை தமிழில் மட்டுமே நான் மொழி பெயர்த்துள்ளேன்.

1. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் ராணி மேரியும் 1911 ஆம் ஆண்டு இந்தியா வருகை தந்த போது அவரை வரவேற்க எழுதப்பட்ட பாடல்தான் நமது தேசிய கீதம்.

2. இந்த பாடலில் நமது நாட்டின் சிறப்பு எதுவும் எடுத்தாளப்படவில்லை.

3. 'பாரத பாக்ய விதாதா' - அன்றைய இந்தியாவின் சட்டங்களை நிர்ணயித்தவர்கள் யார்? பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்.

4. 'அதி நாயக்' என்ற வார்த்தையை கடவுளுக்கும் பயன்படுத்தலாம் நாட்டை ஆள்பவருக்கும் பயன்படுத்தலாம்.

5. இந்த பாடலானது முதன் முதலாக இந்தியாவில் பாடப்பட்டது டிசம்பர் 1911 ஆம் ஆண்டு. கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாம் நாள் முதன் முதலாக இந்த பாடல் பாடப்பட்டது. இந்த மாநாடே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதற்காக கூட்டப்பட்டது. 1905 ஆம் ஆண்ட பெங்காளை தனி மாகாணமாக பிரித்ததற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக பாடப்பட்டதே இந்த பாடல்.

6. பின்னர் 1937 ஆம் ஆண்டு இந்த பாடல் மேலும் பிரபலப்படுத்தப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் தங்களை புகழ்ந்து பாடும் இந்த பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். நம்மை அடக்கி ஆண்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை புகழ்ந்து பாடிய பாடலைத்தான் நமது தேசிய கீதமாக முறுக்கோடு பாடிக் கொண்டிருக்கிறோம்.

7. இந்த பாடல் எழுதப்பட்டபோது சிந்து நம்மோடு இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தானோடு சென்று விட்டது. அந்த சிந்து மாகாணத்தையும் நாம் ஒவ்வொரு முறையும் வாழ்த்துகிறோம். இதுவாவது இந்த அரை டவுசர்களுக்கு தெரியுமா என்ற விபரம் நம்மிடம் இல்லை. :-)பசுவைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்போமா?

'மாடு எங்களின் தெய்வம்: அதை புசிக்கக் கூடாது' என்று சொல்கின்றனர் இந்துத்வாவாதிகள். கன்றுக்காக சுரக்கும் பாலை மட்டும் பசுவிடமிருந்து திருடி நாம் சாப்பிடலாமா? என்று யாராவது கேட்டால் முறைப்பார்கள். இனி அந்த பசுவைப் பற்றியும் அது பற்றி குர்ஆனின் அணுகுமுறையையும் இந்த பதிவில் காண்போம்.

"நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் தக்க படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக தாராளமாகப் புகட்டுகிறோம்."

அல்குர்ஆன் 16:66


இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராய்ச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.....


1) கால்நடைகளின் வயிற்றுப்பகுதி

2) வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்

3) கலப்பற்ற பால்

4) அருந்துபவர்களுக்கு இனிமை

5) தாராளமாக புகட்டுகிறோம்


மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா?

1. கால்நடைகளின் வயிற்றுப் பகுதி

2. வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்

பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும். இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது. ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.

பசுமாடும் அதன் வயிற்றுப் பகுதியும்பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகிய கால்நடைகளுக்கு அதன் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளன: அவைகளாவன

RETICULUM (ரெடிகுழம்)
RUMEN, (ரூமென்)
OMASUM, (ஓமசம்)
ABOMASUM (அபோமசம்)

இங்கு குறிபிடத்தக்க அம்சம் என்னவெனில் மேற்கண்ட கால்நடைகளுக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த 4 அடுக்கு பகுதிகள் பன்றி முதலான மற்ற மிருகங்களுக்கு கிடையாது என்பதே!.

பசுமாடும் அதன் உணவு உட்கொள்ளும் முறையும்:

பசுமாடு புல்வகைகளை உணவாக விழுங்குகிறது. விழுங்கிய உணவு நேரடியாக ரூமென் மற்றும் ரெடிகுழம் பகுதிக்கு சென்று சேமிக்கப்படுகிறது. பிறகு பசுமாட்டிற்கு உண்ட கலைப்பு ஏற்பட்டு அமைதியாக அமர்ந்து விடுகிறது.

சேமிக்கப்பட்ட உணவை ரெடிகுழம் என்ற பகுதி அதன் மற்ற இரு பாகங்களான RUMEN, (ரூமென்) OMASUM, (ஓமசம்) என்ற பகுதிகளுக்குள் தள்ளிவிடுகிறது.அமைதியாக அமர்ந்திருக்கும் பசுமாட்டிற்கு மீண்டும் உணவுப் பசி எடுக்க ஆரம்பிக்கிறது. உடனே புல்வெளியை நாடிச் செல்லாமல் தான் வயிற்றில் சேமித்து வைத்த உணவு மீண்டும் வாய்ப் பகுதிக்கு இழுத்து பசுமாடு அசை போட ஆரம்பிக்கிறது. இந்த இயக்கத்திற்கு ரெடிகுழம் பயன்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக உட்கொண்ட உணவு மீண்டும் பசுமாட்டின் வாய் பகுதிக்கு செலுத்தப்பட்டு நன்றாக மீண்டும் ஒருமுறை அசை போட முடிகிறது.பசுமாடு உட்கொண்ட உணவை சுத்திகரிக்கும் முறை

பசுமாடு மறுசுழற்சி முறையில் அசைபோட்ட உணவை அதன் வயிற்றுப்பகுதியான ரூமென் என்ற அறைக்குள் தள்ளுகிறது. இங்கு பல மில்லியன் மைக்ரோப்ஸ்-கள் அடங்கியுள்ளன. இந்த மைக்ரோப்ஸ்கள் அசைபோட்டு நான்றாக அரைத்த உணவில் செரிமானம் செய்ய முடியாத கடினமான பகுதியை கூட மிக எளிதாக செரிமானம் செய்ய பயன்படுகிறது.பிறகு செரிமானம் ஆன உணவு ஓமசம் என்ற அறைக்கு சென்றடைகிறது. இந்த ஓமசம் பகுதியைப் பற்றி அறிவியல் உலகம் முழுவதுமாக இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை. எனினும் தோராயமாக ஆராய்ந்து பார்த்ததில் உட்கொண்ட உணவை சிறு சிறு துகள்களாக ஒரே சீராக மாற்ற இந்த பகுதி பயன்படுகிறது என்று நம்பப்படுகிறது.செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தில் எவ்வாறு கலக்கிறது!பசுமாட்டின் வயிற்றிலுள்ள இறுதிப் பகுதியான அபோமசம் என்பது மற்ற பிராணிகளின் வயிறுகளை ஒத்து அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஹைட்ரோகுளோரிக் திரவம் ரூமென் பகுதில் செரிமானத்திற்கு பயன்படுகின்ற மைக்ரோப்ஸ்களை அபோமசம் அறைக்குள் நுழையாமல் தடுப்பதற்கும் அவ்வாறு நுழையும்பட்சத்தில் அவைகளை அழிக்கவும் பயன்படுகிறது.மேலும் இந்த அபோமசம் பகுதியில் சேகரிக்கப்பட்ட அசைபோட்ட உணவுகள் சிறுகுடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள மைக்ரோபியல் எனப்படும் செல் கட்டமைப்புகளால் முழுவதுமாக ஜீரணமாக்கப்படுகிறது. புரதச் சத்துக்களான அமினோ ஆசிட் மற்றும் விட்டமின்கள் உருவாக இந்த பகுதியே பயன்படுகிறது. பிறகு முழுவதும் ஜீரணமான உணவு நேரடியாக இரத்தில் கலந்துவிடுகிறது!இரத்தத்திலிருந்து எவ்வாறு பால் உற்பத்தியாகிறது?

பசுமாடுகளின் உடலில் உள்ள செல்கள் இரத்தத்திலிருந்து நீரையும் ஊட்டச் சத்துக்களையும் அகற்றி அகற்றப்பட்ட அந்த நீரையும் ஊட்டச்சத்தையும் பாலாக மாற்றுகிறது. இந்த பால் பசுமாடுகளின் மடிகளின் வாயிலாக வெளியேறுகிறது. அதைத்தான் நாம் இனிமையாக பருகுகிறோம்.மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் இறுதியான மூன்றை பகுதியை பார்ப்போமா?3. கலப்பற்ற பால்

4. அருந்துபவர்களுக்கு இனிமை

5. தாராளமாக புகட்டுகிறோம்

கலப்பற்ற பால்

ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.


பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.


பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.


உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.


அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கலப்பற்ற பால் என்று கூறுவதன் மூலம் அந்த பாலில் எப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை சிந்திக்க வலியுறுத்துகிறான் ஆனால் மனிதன் அந்த பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து விற்கிறான். இஸ்லாம் கலப்படத்தை வன்மையாக கண்டிக்கிறது!

பால் பற்றி கூறும்போது அல்லாஹ் அதை அருந்துபவருக்கு இனிமை என்று வர்ணிக்கிறான் மேற்படி ஆய்வுகளை பார்த்தால் பால் எவருக்குத்தான் கசக்கும்.

தாராளமாக புகட்டுகிறோம்

இங்கு அல்லாஹ் பால் பற்றி குறிப்பிடும் போது இறுதியாக தாராளமாக புகட்டுகிறோம் என்று கூறுகிறான் காரணம் அவன் படைத்த ரப்புல் ஆலமீன் அவன் கூறுவது எப்போதும் பொய் ஆகாது என்று இந்த கருத்தின் மூலம் நாம் அறிய வேண்டும்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு பழமொழி உள்ளது அந்த பழமொழியின் அடிப்படையில் இந்த வார்த்தை உண்மை என்பதை நிருபிக்க இந்தியா நாட்டின் பால் உற்பத்தியை அளவுகோளாக பயன்படுத்தி பார்ப்போமா?

இந்தியாவின் பால் உற்பத்தி

1968 21 மில்லியன் டன்கள்

2001 81 மில்லியன் டன்கள்

மக்கள் தொகை பெருக பெருக பாலின் உற்பத்தியும் பெருகி வருகிறது மாறாக பாலின் உற்பத்தி குறைந்தபாடில்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க நாடு ஆண்டுக்கு சராசரியாக 71 மில்லியன் டன்கள் பால் உற்பத்தியை மேற்கொள்கிறது.பாலின் உற்பத்தியை 1998ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலக நாடுகள் முழுவதையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக 557 மில்லியன் டன்கள் குறைவில்லாமல் பால் உற்பத்தியாகிறது.

சிந்தித்துப்பாருங்கள்

அல்லாஹ்வின் கருணையினால் பால் என்ற இனிமையான பானத்தை நாம் குடிக்கிறோம் ஆனால் இந்த பாலை குடித்துவிட்டு கருணையாளன் அல்லாஹ்வை இணைவைத்து ஒரு சாராரும், அல்லாஹ்வைத் தவிர்த்து பிற வஸ்துக்களை ஒரு சாராரும் வணங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் கோபப்பட்டு பசுமாடுகள் உட்பட பால் கொடுக்கும் கால்நடைகளின் வயிறுகளில் பால் சுரக்காமல் இருக்க கட்டளையிட்டுவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஒருகனம் சிந்தித்தப்பாருங்கள்! ஆனால் ரஹ்மத்துல் ஆலமீன் மக்கள் மீது கருணையுள்ளம் கொண்டவனாக இருக்கிறான் அதனால்தான் மனிதனை விட்டுப்பிடிக்கிறான். அவன் பிடியிலிருந்து தப்பிக்க எவருக்கேனும் வலிமை உள்ளதா?

தகவல் உதவி:

இஸ்லாமிக் பாரடைஸ்

காஃபிர் என்று எங்களை இழிவு படுத்தலாமா?// இந்தியரின் பிணத்திற்கு காஃபீர் என்று எழுதி இந்தியாவில் ஒப்படைத்தது எல்லாம்…//

காஃபிர் என்றால் இழிவான ஏசும் சொல் என்று சிலர் நினைக்கிறார்கள்.இதில் உண்மையில்லை. காஃபிர் என்றால் கிறுக்கன், பைத்தியக்காரன், முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அது ஏசுகின்ற சொல்லாக கருத முடியும்.

காஃபிர் என்ற அரபுப் பதத்தின் பொருள், ”மறுப்போர்’ அல்லது “நிராகரிப்பவர்” அதாவது ஒரு கடவுள் கொள்கையை மறுப்பவர், என்றே பொருள். இஸ்லாம் கூறும் ஓர் இறைக்கொள்கையை மறுப்பதனால், அவர்களை “மறுப்பவர்-காபிர்’ என்று அழைப்பது இழிவு படுத்தவோ, அல்லது இரண்டாம் தரப்பினராக கருதுவதாகவோ நிச்சயமாக இல்லை.

இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால், இஸ்லாத்தை மக்களிடம் போதித்த முகம்மது நபிகளின் தாயார் ஆமினா, தந்தை அப்துல்லாஹ், மற்றும் சிறிய தகப்பனார் அபூ தாலிப் ஆகிய அனைவருமே காஃபிர் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. நபிகள் நாயகத்தின் பெற்றோரை காஃபிர் என்று கூறி இழிவு படுத்துவதாக சொல்லமுடியுமா?

எவராக இருப்பினும் ஓர் இறைக் கொள்கைக்கு மாறுபடுபவர்களை இஸ்லாமிய மறுப்பாளர் அல்லது நிராகரிப்பவர் என்ற பொருளில் காஃபிர் என்று அரபிப் பதத்தில் சொல்லப்படுகிறது.

இஸ்லாமிய அரபுப் பதத்தில் குறை காணும் நண்பர் திரு.பாண்டியன் தனது மதம் தன்னை எவ்வாறு அழைக்கிறது என்பதை அறிவாராக! பிராமணர்கள் தவிர்த்து அனைவருமே சூத்திரர்கள்தான். சூத்திரன் என்பவன் யார்? மனு கூறுகிறார்.

யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்,யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்படுபவன்,பிராமணரிடம் பக்தியாக ஊழியம் செய்பவன்.,விபச்சாரி மகன்,விலைக்கு வாங்கப்பட்டவன்,ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்பவன்.(-மனு.அத்.5. சுலோ.415.)

இந்த நாலு வர்ணம் தவிர்த்து, பிராமனால் படைக்கப்படாத அவர்ணமாக அய்ந்தாவது வருணமாக பஞ்சமர்கள் என்ற பிரிவும் உண்டு. நம்ம மகாத்மா காந்தி பெரிய மனசு பண்ணி இவர்களை கடவுளின் புதல்வர்கள் “ஹரிஜன்” என்று சிறப்பு பெயரிட்டு அழைத்ததும் அறிந்ததே. இவர்களுக்குள் சண்டாளர் என்னும் உட்பிரிவும் உண்டு.

தன்னை கீழ்ச்சாதி, சூத்திரன், பஞ்சமன், சண்டாளன் என்று எப்படி அழைத்தாலும், அடித்தாலும் வலி தாங்கும் திரு.பாண்டியன், “மனிதர்களே! நீங்கள் அனைவரும் ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் பிறந்தவர்கள், பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம், அனைவரும் சகோதரர்களே..” என்று கொள்கை பிரகடனப்படுத்தும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தலாமா?

-ஷாலி

Sunday, November 29, 2015

பாராட்டப்பட வேண்டிய கிராமத்து இளைஞர்கள்!பட உதவி :PARITHI MUTHURASAN

மழைக் காலத்துக்கு முன் சீமைகருவேலமரங்களை அகற்றி ஏரியில் நீர்த்தேக்கத்தை உருவாக்கிய ஜெயம்கொண்டான் அருகில் உள்ள புதுக்குடி கிராமத்து இளைஞர்கள். அரசாங்கத்தை நம்பி இனி பிரயோசனம் இல்லை. மக்கள் வாங்கும் சாராயத்தை நம்பி நடக்கும் ஒரு அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்ளுமா? 'நமக்கு நாமே' என்ற திட்டத்தின்படி நமது வாழ்வாதாரங்களை நாம் தான் இனி கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.

கூத்தாடிகளான அஜீத் மற்றும் விஜய்க்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யும் கிறுக்கு இளைஞர்கள் இவர்களை பார்த்தாவது திருந்துவார்களா?

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 17

இந்த பாடத்தில் நிறங்கள் மற்றும் சில முக்கிய வார்த்தைகளை படித்துக் கொள்வோம்.

أبيض ------ அபியத் ------ வெள்ளை --WHITE

أسود ------ அஸ்வத் --- கருப்பு --- BLACK

بني ------ பொன்னி - மரக் கலர் --- BROWN

برتقالي --- பர்திகாளி (பத்ரகாளி என்று படித்து விட வேண்டாம் :-) ) - ஆரஞ்ச் --- ORANGE

أحمر ----- அஹ்மர் --- சிகப்பு --- RED

أصفر ---- அஸ்ஃபர் ------ மஞ்சள் ---YELLOW

أخضر ---- அஹ்தர் ------- பச்சை ---- GREEN

أزرق ---- அஜ்ரக் ------- ஊதா --- BLUE

زهري ---- ஜஹ்ரி -------- பிங்க் --- PINK

رمادي --- ரமாதி ------- க்ரே (சாம்பல் நிறம்) --- GREY

--------------------------------------------


جميل ----- ஜமீல் --- அழகு -- BEAUTY

طويل ----- தவீல் --- உயரம் ---- TALL

جديد ----- ஜதீத் --- புதிய -- NEW

وسخ ------ வஸஹ் ---- அழுக்கு -- DIRTY

كسول ----- கஸூல் - சோம்பல் --- LAZY

غبي ---- கபி ----- ஊமை --- DUMB

صغير --- ஸகீர் --- சிறிய --- SMALL

غني ---- கனி ----- செல்வம் --- RICH

كبير --- கபீர் --- பெரிய --- BIG

كثير ---- கதீர் --- நிறைய --- LOT

فقير ----- ஃபக்கீர் - ஏழை -- POOR

نظيف ----- நதீஃப் --- சுத்தமான -- CLEAN

لطيف ----- லதீஃப் --- அன்பான --- KIND

بخيل ---- பஹீல் --- கஞ்சத்தனம் -- MIZER

قصير ---- கஸீர் ---- குள்ளமான --- SHORT

قليل ---- கலீல் ----- அளவில் குறைந்த --- LITTLE

قبيح ---- கபீஹ் ----- அசிங்கமான --- UGLY

قديم ---- கதீம் ----- பழைய --- OLD

தீண்டாமை ஆழ்வார் காலத்திலேயே இருந்துள்ளது.“தீண்டத்தகாதவர்கள்” என்ற ஒரு சொல் உருவானதே, மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியா வந்து, வீட்டில் கொல்லைப்புறத்தில் கழிப்பறையை உண்டாக்கிய பின்னர்தான். கழிவை எடுக்கும் தொழிலைச் செய்தவர்கள் “தீண்டத்தகாதவர்கள்” என்று தவறாக ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்." - இப்படி ஒரு கதையை பார்பனர்கள் பலகாலமாக பரப்பி வருகின்றனர். தமிழ் இந்து தளத்தில் திரு அரிசோனனும் இந்த கருத்தை வைத்திருந்தார். இவர் வார்த்தையில் உண்மையிருக்கிறதா என்பதை இந்த பதிவில் சற்று பார்போம்.

தீண்டாமை ஆழ்வார் காலத்திலேயே 10 நூற்றாண்டு முன்பே இருந்ததாக "ஆழ்வார்கள் சரிதம்" சொல்கிறது. நாயன்மார்கள் காலத்திலும் தீண்டாமை இருந்தததாக "பெரிய புராணம்" சொல்லும்.

நம்பாடுவான் – இவர் காலம் முதலாழ்வார்கள் காலத்திற்கும் முன்பு நடந்தது – ஒரு தலித்து (இன்று தலித் என்கிறோம் ஆனால் கதையில் அன்றைய சொல்லாடலாண பறையர் என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது) திருக்குறுங்குடி நம்பி மீது தாளாத பக்தி கொண்டவர். ஆனால் கோயிலுக்குள் மட்டுமின்றி, ஊருக்குள்ளே நுழைய முடியாதபடி அவர் சாதிக்குக் கட்டுப்பாடு. எனவே ஊரடங்கிய பின் எவருக்கும் தெரியாமல் ஊருக்குள் நுழைந்து, கோயில் கொடிமரத்துக்கு முன் நின்று பாசுர மழை பொழிந்துவிட்டு, ஊர் எழுவதற்கு முன் ஓடிவிடுவார். மேலும் கதையை பேராசிரியர் இராமனுஜத்தால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் பார்த்துக் கொள்ளவும். ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி இரவன்று அந்நாடகம் திருக்குடியிலும் திருவரங்கத்திலும் அரங்கேற்றப்படுகிறது. அந்நாடகத்தில் வரும் திருக்குறுங்குடி நம்பி கருடனின் மேலமர்ந்து வரும் காட்சியே மறைந்த வெங்கட் சாமிநாதனின் இறுதிக்கட்டுரையில் போடப்பட்டிருக்கிறது.

திருப்பாணாழ்வார் கதை தெரியும். திருவரங்கனாரின் மேல் காதல். ஆனால் திருவரங்கத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தனர் பாணர் ஜாதியினர். எனவே காவிரி ஆற்றங்கரையிலிருந்தே பாடினார்....

நந்தனார், தில்லைக்குள்ளே நுழைய முடியாத நிலை. தில்லையில் முதன்முறையாக நுழையும்போது நடுங்கினார் என்றே எழுதுகிறார் சேக்கிழார். ஆக, தீண்டாமை அக்காலத்தில் இருந்தது என ஆழ்வார், நாயன்மார் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு ஆரிய படையெடுப்புக்குப் பின்னர்தான் நமது தமிழகத்தில் தீண்டாமை நுழைகிறது. உண்மை இவ்வாறு இருக்க பழியை மொகலாயர்களின் மீதும் ஆங்கிலேயர்களின் மீதும் போடலாமோ! வட மாநிலங்களில் கழிவறை இல்லாத வீடுகளுக்கு பெண்கள் மண மகளாக செல்வதில்லையாம். தற்போதுதான் மாற்றங்கள் சிறிது சிறிதாக வர ஆரம்பித்துள்ளது. அரசு கழிவறை கட்டி கொடுத்தாலும் சிலருக்கு புதருக்கு பின்னால் காற்றோட்டமாக அமருவதுதில் அலாதி பிரியம். இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல.... :-)

'நாங்கள் இஸ்லாம் ஆனவர்கள்'

2000 வது ஆண்டு பிறந்தவுடன் "மில்லியணம் " என்று கொண்டாடினார்கள். நிருபர் ஒருவர் நோபிள் விருது பெற்ற அமார்த்திய சென்னிடம் முதல் ஆயிரமாவது ஆண்டில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன ? என்று கேட்டிருக்கிறார்.

"இந்தியாவிற்கு இஸ்லாம் அறிமுகமானது தான் "என்றார் அவர்

அரேபிய மணல் வெளிகளில் அதற்கு முன்பும் மக்கள் வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு என்று ஒரு சமூக அமைப்பை வைத்திருந்தார்கள். உலக நாடுகள் பலவற்றோடு தொடர்பு கொண்டார்கள். பண்ட ,பண்பாட்டு பரிமாற்றங்கள் நடத்தினார்கள் .தமிழகத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

தமிழகத்தின் கிழக்கு கடற்கரைகளில் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை அப்போதைய அரசர்களின் அனுமதியோடு "கிட்டங்கிகளை" அமைத்து வர்த்தகம் புரிந்தார்கள். வர்த்தகர்கள் முறைவைத்து தங்கள் நாடு சென்று வருவார்கள். அவர்களில் சிலர் இங்கேயே தங்கி பண்டங்களை பாதுகாப்பார்கள்.

நுற்றாண்டுகளாக இவை நடை பெற்றன . கிட்டங்கிகள் இருந்த இடங்கள் குடி இருப்புகளாகி அவர்கள் இந்தமண்ணொடு கலந்து வாழ்ந்தார்கள்.ராமநாத புறத்தில் இருக்கும் "கீழக்கறை " உதாரணம்

அப்போது தான் அரேபிய நாட்டில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. "நபிகள்" நாயகம் அவதரித்து, இனக்குழுக்களிடையே ஒருமையை வளர்க்க புதிய மார்க்கமாக "இஸ்லாம் " (அமைதி )என்ற பாதையை கொடுத்தார்கள். மிகவும் இளமையான இந்த மார்க்கம் தன்னுள் பல முற்போக்கான கொள்கைகளை கொண்டதாக இருந்தது.

அரேபியாவில் எற்பட்ட மாற்றம் அரேபிய வியாபாரிகள் மூலம் இங்கும் பரவியது.

கிட்டங்கிகளீலும் குடி இருப்புகளிலும் வாழ்ந்தவர்களும். தங்களையும் மாற்றிக் கொண்டார்கள்.

"கீழக்கறை" யில் வாழும் முஸ்லீம்கள் இன்றும் தங்களை "இஸ்லாமானவர்கள் " என்றுதான் அழைத்துக் கொள்கிறார்கள் .

அந்த கிழட்டு ஆச்சார்யாவும் , இளைஞர் ராஜ்தாக்கரெயும் இவர்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்கிறார்களே ?

நியாயமா ???

-KASHYAPAN

Served as a Sub-Editor with 'Theekkathir' a leading Tamil Daily, and also a monthly called 'Semmalar' for over thirty five years.

Saturday, November 28, 2015

ஐஎஸ்ஐஎஸ் திருடிய பெட்ரோல் இஸ்ரேலுக்கு செல்வதெப்படி?சிரிய எண்ணெய் கிணறுகளிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்ஸால் திருடப்பட்ட பெட்ரோல் துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு எப்படி யாரால் கடத்தப்படுகிறது என்பதை விளக்கும் அரிய படம். ஒரு லேப்டாப்பையும் இணைய வசதியையும் வைத்திருக்கும் நமக்கு தெரிந்த செய்தி அமெரிக்காவின் நாசாவுக்கு தெரியவில்லையாம்...

நம்புங்கண்ணே நம்புங்க.....

மாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நவம்பர் 26!இந்து மதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தவர்தான் ஹேமந்த் கர்கரே! தனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அராஜகங்களை கண்டு பொறுக்காமல் உண்மையான காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஹேமந்த் கர்கரே! மாலேகான் குண்டு வெடிப்பு, முதல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வரை உண்மை குற்றவாளிகள் யார் என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்தவர். சாது பிரக்யாசிங், பார்பனரான புரோகித், அசீமானந்தா என்று வரிசையாக கைதுகளை தைரியமாக செய்து காட்டியவர்.

'நான் இந்து மதத்தை நேசிப்பவன்: எனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் கொடுமைகளை நான் எப்படி காணாதிருக்க முடியும். இந்துத்வாவாதிகளிடமிருந்து எனக்கு கொலை மிரட்டலும் வருகிறது' என்று பேட்டி கொடுத்த சில நாட்களிலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார்.

நவம்பர் 26 ஆம் தேதி திட்டமிட்டு பாவிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தானிய தீவிரவாதிகள்தான் கொன்றனர் என்று செய்தியை திரித்து வெளியிட்டனர். அஜ்மல் கசாபுக்கும் ஹேமந்த் கர்கரேக்கும் வாய்க்கா வரப்பு சண்டையா என்ன? அவரை மட்டும் குறி பார்த்து சுடுவதற்கு என்ன காரணம்? சுடப்பட்ட அந்த இடத்துக்கு அவரை கூட்டி சென்றது யார்? பாதுகாப்பு கவசம் அணிந்திருந்த நிலையிலும் அவரது உயிர் பிரிந்தது எவ்வாறு என்பது இதுவரை விடை தெரியாத கேள்வி. சில மணி நேரங்களிலேயே அவரது கவச உடையும் மாயமானது: இதை எல்லாம் நன்கு அறிந்திருந்த இவரது மனைவி மோடி கொடுத்த பண முடிப்பையும் வாங்க மறுத்து விட்டார்.

நம் வாழ் நாளிலேயே மிகச் சிறந்த தேச பக்தரை இழந்து விட்டோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் தந்தருள்வானாக!

Friday, November 27, 2015

நான் ஏன் இணையத்துக்குள் நுழைந்தேன்?சில வருடங்களுக்கு முன்பு 10 அல்லது 15 நிமிடம் தின மலரில் முக்கிய செய்திகளை படித்து விட்டு வேறு வேலைகளின் பக்கம் சென்று விடுவேன். அப்போது நேசகுமார் என்ற இந்துத்வவாதி இஸ்லாத்தைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு பதில் சொல்ல அன்று ஒரு சில இஸ்லாமிய பதிவர்களே இருந்தனர். இஸ்லாத்தின் மீதான தாக்குதலுக்கு நாமும் களத்தில் இறங்கினால் என்ன? என்ற எண்ணம் வரவே எனது ஓய்வு நேரத்தை இந்துத்வாவாதிகளுக்கு பதில் கொடுப்பதற்காக மாற்றிக் கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு நேசகுமாரே தனது பக்கத்தில் 'இஸ்லாத்தை குறை காண போய் என்னை சிறுக சிறுக இஸ்லாம் ஆட்கொள்கிறது' என்று தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். அதன் பிறகு அவர் எழுதுவதையும் விட்டு விட்டார். ஒருகால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை.

அதன் பிறகு கால்கரி சிவா, ம்யூஸ், ஜெயராமன், கோவி கண்ணன், டோண்டு ராகவன், என்று ஒரு பட்டாளமே எனக்கு எதிராக கிளம்பியது. தமிழ் மணத்தில் நான் பதிவு போட்டால் மைனஸ் ஓட் குத்த தயாராக காத்திருப்பர். எனது பழைய பதிவுகளை படித்தால் இந்த விபரங்கள் எல்லாம் கிடைக்கும். இது பற்றி நான் அன்று வரைந்த கார்ட்டூனைத்தான் மேலே பார்கிறீர்கள்.

அன்று ஆரம்பித்த பயணம் இன்று வரை தொடர்கிறது. இதுவரை ப்ளாக்கரில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 867753. பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள் 16117. இதுவரை நான் எழுதிய பதிவுகள் 2668. ப்ளாக்கரில் எனது ஃபாலோயர்கள் 387.

சென்ற இரண்டு வருடங்களாகத்தான் எழுதிய பதிவுகளை முகநூலிலும் பதிந்து வருகிறேன். தற்போது முக நூலில் 4900 நண்பர்களை பெற்றுள்ளேன். இலக்கை தொடுவதற்கு இன்னும் 100 தான் பாக்கி. பல பதிவுகள் முக நூலில் 1000 ஷேர்களையும் தாண்டி சென்றுள்ளது. இதனால் மேலும் மேலும் எழுத ஆர்வம் ஏற்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு தமிழகத்தில் அவர்களின் செய்திகள் மாற்றாரையும் அடைய ஊடுக வசதி இல்லாதது பெருங்குறை. அந்த குறையை இணையம் பூர்த்தியாக்குகிறது என்றே சொல்வேன்.

இன்று போல் என்றுமே இணையத்தில் எழுத வாய்ப்பும் வசதிகளும் கிடைத்து பூரண உடல் நலத்துடனும் இருக்க உங்கள் பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! நம்பிக்கை கொண்டவர்களே!! பிரார்த்தனை செய்யுங்கள்; "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட எங்களால் தாங்க முடியாத சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; ஏக இறைவனை மறுக்கும் கூட்டத்தாரின் மீது நாங்கள் வெற்றியடைய எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286).

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - பகுதி 16

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - பகுதி 16

முந்தய பதினைந்து அடிப்படை பாடங்களை படித்தவர்கள் இனி 16 லிருந்து தொடங்கவும். உலகம் முழுக்க அரபி மொழியானது உயிர்க்குறிகள் இல்லாமல்தான் எழுதப்படுகின்றன. குர்ஆனில் மாத்திரம் தான் கஸர, ஃபதஹ குறிகள் இடப்படும். இனி வரும் பாடங்களில் உயிர்க்குறிகள் இல்லாமலேயே எழுதப் பழகுவோம். தமிழில் உச்சரிப்பையும் நான் எழுதியுள்ளதால் படிப்பவர்களுக்கு சிரமம் இருக்காது. இனி வினாச் சொற்கள் சிலவற்றைப் பார்போம்.

أين -------- ஐன? where? எங்கே?

كيف -------- கைஃப்? how? எப்படி?

كم --------- கம்? how many? எத்தனை?

كم - بكم -- கம், பி(B)கம்? how much? எவ்வளவு?

لمن ------- லிமன்? whose? யாருடைய?

لماذا ----- லிமாதா? why? ஏன்?

متى ------- மத when? எப்போது?

ماذا ------ மாதா? what? என்ன?

من -------- மன்? who, whom? யார்? யாருக்கு?

-------------------------------------

أمام --------- இமாம் --- முன்னால் --- in front of

بعد ---------- (B)பஃத் ---- பின்னால், பிறகு --- after

بين ---------- (B)பைன் ---- நடுவில் --- between

تحت ---------- தகத் --- கீழே ---- under, below

فوق ---------- ஃபோக் -- மேலே --- above, over

قبل ---- கப்ல் ----- முன்னால் ----before

قدام --- கித்தாம் ---- முன்பு ---- before

وراء --- வராஅ ------- பின்னால் -- behind

மேலும் சில வார்த்தைகளை அடுத்த பாடங்களில் பார்போம் இறைவன் நாடினால்.....

Thursday, November 26, 2015

அம்பேத்காரை துணைக்கழைக்கிறார் ராஜ்நாத்சிங்!நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அரசியல் சாசன சிறப்பு அமர்வில் பேசிய ராஜ்நாத் சிங், "பல்வேறு இன்னல்களையும், அவமானங்களைச் சந்தித்தபோதும், இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என அம்பேத்கர் ஒருபோதும் சொல்லவில்லை" எனக் கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்து, அண்மையில் சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஆமீர்கானை குறிவைத்து கூறப்பட்டதாக சலசலக்கப்படுகிறது.

ராஜ்நாத் சிங் பேசும்போது, "பி.ஆர்.அம்பேத்கர் பல்வேறு அவமானங்களையும், தடைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால், அவர் தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இந்திய தேசத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு நடுநிலையான பார்வையை கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் தன்னை பிறர் புறக்கணிப்பதாகவும், இழிவுபடுத்தியதாகவும் உணரவில்லை. இக்கட்டான சூழலிலும் கூட நான் இந்தியாவிலேயே இருப்பேன். இந்திய கலாச்சாரம், மதிப்பீடுகளை மனதில் கொண்டு நாட்டை பலப்படுத்துவேன் என உறுதிபட தெரிவித்தார்" என்று கூறினார்.

அண்மையில், டெல்லியில் நடந்த பத்திரிகை ஒன்றின் விருது நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் பேசிய பாலிவுட் நடிகர் ஆமீர்கான், "வீட்டில் எனது மனைவி கிரணிடம் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென இந்தியாவை விட்டு சென்றுவிடலாமா எனக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கண்டு அவர் மிகவும் அஞ்சிவிட்டார். தினசரி நாளிதழ்களை பிரித்து பார்ப்பதற்கு கூட அவர் பயப்படுகிறார். அந்த அளவுக்கு நாட்டில் சகிப்பின்மை வளர்ந்துவிட்டது" என்றார்.

ஏற்கெனவே நாட்டில் சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் அதிகரித்துவிட்டதாக கூறி, எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளை திரும்ப ஒப்படைத்து வரும் நிலையில், ஆமிர்கானின் இந்த வெளிப்படையான பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் ஆமீர்கான் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். இந்நிலையில், மக்களவையில் ராஜ்நாத் சிங் கூறிய கருத்துகள் அமீர்கானை சூசகமாக விமர்சிப்பவை என சலசலக்கப்படுகிறது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
26-11-2015

இந்துத்வாவாதிகளான இவர்கள் நாட்டு மக்களுக்கு சொல்ல வருவதென்ன? தலித்களை கொலை செய்வோம்: முஸ்லிம்களை கொலை செய்வோம்: பசு மாடு புனிதம் என்று சொல்லி நாட்டு மக்களை கூறு போடுவோம். இதை பிடிக்காதவர்களை 'பாகிஸ்தான் போகலாம்' என்று மிரட்டுவோம். ஒப்புக்குக் கூட வன்முறையை பரப்பும் இந்துத்வாவாதிகளை கண்டிக்க மாட்டோம்.

பல இழிவுகளை தாங்கி பல தாக்குதலுக்கும் உள்ளான அம்பேத்கார் எப்படி பணிந்து போனாரோ அதே போல் முஸ்லிம்களும் போக வேண்டும் என்பதை சூசகமாக தெரிவிக்கிறார் ராஜ்நாத் சிங்.

இது முஸ்லிம்களிடம் நடக்காது ராஜ்நாத் சிங் அவர்களே! இரண்டு சதவீதமே இருக்கும் பார்பனர்களுக்கு 80 சதமான இந்துக்கள் அடங்கி போகலாம். அதுதான் தேச பக்தி என்று நீங்களும் கொண்டாடலாம். ஆனால் முஸ்லிம்கள் ஒரு போதும் வர்ணாசிரமத்துக்கு அடி பணிந்து போக மாட்டார்கள். இதனால் நாங்கள் இந்த நாட்டை விட்டு போய் விடுவோம் என்று மட்டும் மனப்பால் குடிக்க வேண்டாம். இந்த நாட்டில் ஒரு இந்துவுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை ஒரு முஸ்லிமுக்கும், ஒரு கிருத்தவனுக்கும், ஒரு சீக்கியனுக்கும் ஒரு தலித்துக்கும் உண்டு என்பதை மற்ந்து விட வேண்டாம்.

இந்திய முஸ்லிம்களின் 99 சதவீதமான பேர் இது வரை தாய் நாட்டு பற்றோடு இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் உங்களின் தீவிரவாத நடவடிக்கைளால் ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள். இதுதான் உங்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் சொல்லிக் கொள்வது.

Wednesday, November 25, 2015

மதரஸாக்களை விமரிசித்த இஸ்லாமிய பெண்மணி மிரட்டப்படுகிறார்!கேரள கோழிக்கோட்டில் ஜர்னலிஸ்டாக பணி புரிந்து வரும் ஏபி ரெஜினா தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்த செய்திகளுக்காக பலராலும் மிரட்டப்படுகிறார்.

அவர் பதிந்த செய்தியின் சுருக்கம்:

'நான் சிறுமியாக மதரஸாக்களில் படித்து வரும் போது மாணவர்களும் மாணவிகளும் ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். இதனை வெளியில் சொல்லாமல் இருக்க மிரட்டவும் பட்டனர்.

இதனை நான் முகநூலில் பகிர்ந்ததற்காக பலராலும் மிரட்டப்படுகிறேன். நான் உண்மையைத்தான் சொன்னேன். இதனை பகிர்ந்ததன் மூலம் தவறிழைக்கும் ஆசிரியர்கள் திருந்த வாய்ப்புள்ளது. இதைப் பகிர்ந்ததற்காக என்னையும் எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் சிலர் அவதூறுகளால் விமரிசிக்கின்றனர். அதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. இறைவன் இட்ட கட்டளைப்படி வாழும் ஒரு முஸ்லிம் பெண்மணி நான். என் உள் மனதில் என்ன உள்ளது என்பதை எனது இறைவன் அறிவான்' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரெஜினா!

தகவல் உதவி
என்டிடிவி
26-11-2015

இந்த பெண்மணி கூறியதில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட மதரஸாக்களின் ஆசிரியர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அந்த ஆசிரியர்களை மதரஸாக்களிலிருந்து நீக்கவும் வேண்டும். மதரஸாக்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.

அதை விடுத்து குற்றம் சுமத்திய பெண்ணை மிரட்டுவதாலோ அவரது முகநூலை முடக்குவதாலோ தவறுக்கு நாமும் துணை போகிறோம் என்பதை ஏனோ இதனை எதிர்ப்பவர்கள் உணரவில்லை.

இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!

அமீர்கானுக்கு ஆதரவும் எதிர்பும் - ட்விட்டர் தளத்தில்இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் பாதுகாப்பின்மை அதிகரித்து விட்டதாக பாலிவுட் நடிகர் ஆமிர்கான் கூறியிருந்தார். ஏற்கெனவே நாட்டில் சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் அதிகரித்துவிட்டதாகக் கூறி, எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளைத் திரும்ப ஒப்படைத்து வரும் நிலையில், ஆமிர்கானின் இந்த வெளிப்படையான பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஆமிர்கானுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பிரபலங்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவுக் குரல்கள்:

மார்க்கண்டேய கட்ஜூ, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

ஆமிர்கானின் கருத்துகள் திரிக்கப்பட்டிருக்கின்றன. அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவதாகக் கூறவில்லை. வளர்ந்து வரும் சகிப்பின்மை குறித்து மற்றவர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்த, அவரின் பார்வையையே வெளிப்படுத்தினார். அப்பேச்சில், குழந்தைகளுக்காக அவரின் மனைவி பயந்ததையும், இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா என்று கேட்டதையும் பகிர்ந்துகொண்டார். மொத்தத்தில் இது எதுவுமில்லாத விஷயத்துக்காக தேவையில்லாமல் மற்றவர்கள் பதற்றப்படுவதாக மட்டுமே உள்ளது.

பரேஷ் ராவல், நடிகர்

ஆமிர்கான் போராட்ட குணம் படைத்தவர். இந்த நாட்டை விட்டு அவர் வெளியேறக் கூடாது. தாய்நாட்டின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்கள், இக்கட்டான சமயங்களில் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். ஆகவே இங்கிருந்தபடியே சகிப்புத்தன்மை வளரப் போராடுங்கள்.

கவிதா கிருஷ்ணன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்க செயலாளர்

பாஜகவைப் பொருத்தவரையில், நீங்கள் இந்தியாவில் வாழ்ந்தாலும், சிலிக்கன்வேலியில் வாழ்ந்தாலும், பாஜகவை ஆதரித்தால் நீங்கள் நாட்டுப்பற்று கொண்டவர். பாஜகவை எதிர்த்தால், தேசிய எதிர்ப்புவாதி. நான் ஆமிர்கானை ஆதரிக்கிறேன்.

சுதீந்தர குல்கர்னி, அரசியல்வாதி மற்றும் கட்டுரையாளர்

ஆமிர்கானுக்கு எதிராக சகிப்பின்மையை நிறுத்துங்கள். அவர் தேசப்பற்றுக் கொண்டவராகத்தான் பேசினார்.

ரகுராம், எம்டிவி

அமீர்கான் மீதான தனிப்பட்ட தாக்குதல்களும், கிண்டல்களும், ஏசல்களும் அவரின் கருத்துக்கு உடன்படாமல் இருப்பதைக் காட்டவில்லை. சகிப்பின்மையைத்தான் காட்டுகிறது.

வினோத் மேத்தா, பத்திரிகையாளர்

லட்சக்கணக்கான இந்தியர்களின் மனக் குரலைத்தான் ஆமிர்கான் எழுப்பியிருக்கிறார். 'உன்னதமான இந்தியா'வின் தூதர், சகிப்பின்மை இந்தியா எனக் கூறியிருக்கிறார். மோடி அரசு என்ன செய்கிறது?

எதிர்ப்புக் குரல்கள்:

முரளிதர் ராவ், பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர்

துரதிர்ஷ்டவசமாக ஆமிர்கான், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்ள முயல்கிறார்.

அனுபம்கெர், நடிகர்

அன்புள்ள ஆமிர்கான், எந்த நாட்டுக்கு செல்லவேண்டும் என்று உங்கள் மனைவியிடம் கேட்டுவிட்டீர்களா? இந்த நாடுதான் உங்களை உருவாக்கி இருக்கிறது என்பதை அவர்களிடம் தெரிவித்துவிட்டீர்களா? பல மோசமான தருணங்களில்கூட இந்த நாட்டில்தான் வாழ்ந்து வந்தீர்கள். அப்போதெல்லாம் வேறு நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

உன்னதமான இந்தியா எப்போது உங்களுக்கு சகிப்பின்மை இந்தியாவாக மாறியது? கடந்த 7- 8 மாதங்களிலா, மற்ற இந்தியர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நாட்டை விட்டு வெளியேறவா அல்லது ஆட்சி மாற்றத்துக்காகக் காத்திருக்கவா?

ராம்கோபால் வர்மா, இயக்குநர்

சகிப்பின்மை குறித்து சில பிரபலங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக கூறப்படும் இதே நாட்டில்தான் அவர்கள் பிரபலமானவர்களாக ஆனார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. அமீர்கான், ஷாரூக், சல்மான் கான் ஆகிய மூன்று முஸ்லீம்களும் ஒரு இந்து நாட்டின் நட்சத்திரங்களாக இருப்பதிலிருந்தே இந்தியா சகிப்புத்தன்மை கொண்டது என்பது தெரிகிறது.

ரவீணா டாண்டன், நடிகை

மோடி பிரதமராக இருப்பதை விரும்பாதவர்கள், இந்த அரசையும் முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக, நாட்டையே அசிங்கப்படுத்துகிறார்கள். இந்த நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்னால், நீங்கள் நாட்டுக்காக என்ன செய்தீர்கள் என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

ஜி.வி.எல். நரசிம்ம ராவ், பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர்

ஆமிர்கான், இந்தியாவில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருக்கிறார்களே, அதுவே சகிப்புத்தன்மையின் உச்சத்தை உங்களுக்கு எடுத்துக் காட்டவில்லையா?

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
26-11-2015

அமீர்கானுக்கு எதிராக கருத்து சொல்லும் அனைவரும் பாஜக எம்பிக்களும், மந்திரிகளும், கவர்னர்களும் 'முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்' என்று சொன்னபோது வாய் மூடி மவுனியாக இருந்ததை கவனிக்க வேண்டும். இப்போது அமீருக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அன்றே எதிர்த்திருந்தால் அமீர்கானுக்கு இத்தகைய பேட்டி கொடுக்க அவசியமே ஏற்பட்டிருக்காது அல்லவா?

சாமீ.... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ......

மலேசியாவில் ரஜினிக்கு தமிழ் குர்ஆன் பரிசளிப்பு!மாற்று கொள்கையுடைய பல பேரை தன் பக்கம் ஈர்த்த இந்த குர்ஆன் மன நிம்மதி தேடி அலையும் ரஜினியையும் ஒரு நாள் ஈர்க்கும்.

ஆறுமுகம் கருப்பசாமி அவர்களின் முகநூலில் சுட்டது!


Tuesday, November 24, 2015

மழையால் பாதிப்படைந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்!மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் இஸ்லாமிய பாய்மார்கள்....

வாழ்த்துக்கள் சொந்தங்களே.... ஊடகங்களும் இந்துத்வாவாதிகளும் என்னதான் நம் மீது வெறுப்பை விதைத்தாலும் சாதி மதம் பாராது உதவுவதில் நாம் என்றுமே முன்னோடிகள் என்பதை உலகுக்கு உரத்து சொல்வோம்.

'நான் செத்து பொழச்சவன்டா!' - மொராக்கோ யுவதி
ஃப்ரான்ஸில் வசித்து வரும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த நபீலா தனது புகைப்படத்தை பெரும்பாலான பத்திரிக்கைகளில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 'பாரிஸ் குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரி' என்ற தலைப்பில் இவரது புகைப்படம் உலகெங்கும் வலம் வந்து கொண்டுள்ளது. இது பற்றி அவர் கூறும் போது...

'எனக்கும் தீவிரவாத கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில நாட்களுக்கு முன் நானும் எனது தோழியும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். அதில் ஒன்றை எனது தோழி பத்திரிக்கையாளருக்கு காசுக்கு விற்றுள்ளார். அந்த பத்திரிக்கையாளர் தானும் காசு பார்க்க எனது பெயரை 'தற்கொலை குண்டுதாரியாக' மாற்றியுள்ளார். உயிரோடு நான் இருக்கும் போது இறந்தது யார்?

நான் சிறுமியாக இருக்கும் போது மொராக்கோவிலிருந்து புலம் பெயர்ந்தது எனது குடும்பம். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த எனது வாழ்வு இப்போது கேள்விக் குறியாகி உள்ளது. பயத்தில் சில நாட்களாக நான் வேலைக்கும் செல்லவில்லை' என்கிறார் நபீலா!

அட விபசார ஊடகங்களா? காசு பண்ணுவதுதான் உங்களின் குறிக்கோள் என்றால் அப்பாவி பெண்ணின் வாழ்வோடு ஏனடா விளையாடுகிறீர்கள்? உலக மீடியாக்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்துக்கு எதிராக திரும்பியுள்ளன. ஆனால் இதையும் கண்டிப்பாக கடந்து செல்லும் இஸ்லாம்.

தகவல் உதவி
என்டிடிவி
24-11-2015

ஏக இறைவனை மறுப்போரே! நீங்கள் தீர்ப்பைத் தேடுவீர்களானால் இதோ தீர்ப்பு உங்களிடம் வந்து விட்டது. நீங்கள் விலகிக் கொண்டீர்களானால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் மீண்டும் போரிட வந்தால் நாமும் வருவோம். உங்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் அது உங்களுக்குச் சிறிதளவும் உதவாது. அல்லாஹ், நம்பிக்கை கொண்டோருடன் இருக்கிறான்.

குர்ஆன்: 8:19

Monday, November 23, 2015

அமீர்கானின் மனைவி இந்தியாவை துறக்க முடிவு!பாலிவுட் நடிகர் அமீர்கானின் இந்து மனைவி கிரன் ராவ் இந்தியாவில் நிலவும் இந்துத்வா மத வெறியை நினைத்து நாட்டை துறக்க முடிவு செய்துள்ளார். இது பற்றி விருது வழங்கும் விழாவில் அமீர்கான் பேசியதாவது:

'தனிப்பட்ட மனிதனாகவும் இந்திய குடிமகனாகவும் நான் தினமும் பத்திரிக்கையில் படிக்கும் நிகழ்வுகள் என்னை நிலைகுலையச் செய்கின்றன. தற்போது நாட்டில் நிலவும் மத சகிப்பின்மையைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். கடந்த 8 அல்லது ஒன்பது மாதமாகத்தான் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. விருதகளை அரசுக்கே திருப்பி கொடுத்தவர்களை நான் பாராட்டுகிறேன்.

பல முறை என் மனைவி என்னிடம் 'நாம் இந்தியாவை விட்டு போய் விடுவோமா?' என்று கேட்கிறார். தனது மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறார். ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளை படிக்கும் கிரன் கலவரப்படுகிறார் நாட்டின் நிலையை நினைத்து. நமது அரசுகளும் நமது நாட்டு மக்களும் முக்கியமான முடிவெடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.'

என்று பொரிந்து தள்ளியுள்ளார்.

மோடிக்களும் அமீத்ஷாக்களும் இனியாவது விழித்துக் கொண்டு நாட்டு நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

இல்லை என்றால் உலக வரலாற்றில் மிக கேவலப்பட்ட பிரதமர் என்ற பெருமையை மோடி சுமக்க வேண்டி வரும்.

தகவல் உதவி
என்டிடிவி
22-11-2015

சாமி சிலையை தொட்டதால் தலித்களுக்கு அடி உதை....உபியின் சித்ராகூட் மாவட்டத்தில் கோவிலின் உள்ளே சென்று சாமி சிலைகளை தொட்டு வணங்கியதற்காக தலித் குடும்பத்தை கடுமையாக தாக்கியுள்ளது இந்துத்வா கூட்டம்.

தர்மலால் குப்பை கூட்டும் தொழிலாளியாவார், அவரது மனைவி ஆஷா தேவி, மகன் ராம்பாலி(15) மற்றும் அவரது உறவினர்கள் சாதி வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியை காட்டி மிரட்டவும் செய்துள்ளனர். சாமி தீட்டாகி விட்டதாம் :-)

காவல் துறையினரும் வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை. கிராம மக்கள் போராட்டத்தை அறிவித்தவுடன் வேண்டா வெறுப்பாக வழக்கு பதிவு செய்துள்ளது காவி கறை படிந்த காவல்துறை.

தலித்களே... இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன,?

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
21-11-2015

முகநூல் நண்பரிடமிருந்து ஒரு அழகிய வேண்டுகோள்!
அஸ்ஸலாமு அலைக்கும்....

பாய் என் பெயர் ஆட்டோ கபீர்.....

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சார்ந்தவன்.....

நீங்கள் டீக்கடை குரூப்பில் முஹாஜிரின் பாயை பற்றி ஒரு பதிவு போட்டீர்கள். அவரை பற்றிய கூடுதல் தகவல் தருகிறேன்.

முஹாஜிரின் சகோவை பற்றி சொல்ல வேண்டுமென்றால்..

தன்னுடைய முகநூல் மூலமாக எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த ஒரு கிறித்தவ சகோதரருக்கு தாவா செய்து... இது பற்றிய தகவல் என்னிடம் தந்து இறுதியில் எங்கள் Tntj தக்கலை கிளையில் அந்த கிறித்தவ சகோதரர் சில மாதங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்.

முஹாஜிரின் பாயால் முகநூல் தாவா மிக பெரிய பலன் கிடைத்தது.

அல்லாஹ் இந்த சகோதருக்கு அருள் புரிய வேண்டும்....

இந்த போட்டோவில் நான் (வெள்ளை பனியன்) எங்கள் மாவட்ட செயலாளர் நிஸார் மற்றும் இஸ்லாத்திற்கு மாறிய சகோதரர் ஸ்டெபி.

இதை நீங்கள் பதிவு செய்தால் மற்ற முகநூல் சகோதரர்களுக்கு தாவாவின் அவசியம் புரியும்.

-----------------------------------------

வஅலைக்கும் சலாம் சகோதரர் ஆட்டோ கபீர்!

நீங்கள் கேட்டுக் கொண்டதன் படி உங்கள் கடிதத்தை வெளியிட்டுள்ளேன். நம் மூலமாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவர் செய்யும் நன்மையான காரியங்கள் அனைத்தும் நமக்கு ராயல்டியாக நன்மைகள் நமது கணக்கில் சேர்ந்து கொண்டேயிருக்கும்.

“அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்து, தானும் நற்செயல்செய்து; "நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன்" என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?”

குர்ஆன் - 41:33

Sunday, November 22, 2015

ஏகத்துவ கொள்கை எப்படி மாற்றி விடுகிறது?"முதல் படம் :- குடி , கூத்து , கும்மாளம்!

இரண்டாவது படம் :- ஏகத்துவமே எனது உயிர் மூச்சு!

அல்ஹம்துலில்லாஹ்!" - முஹாஜிரின் புது மடம்

--------------------------------------

முகநூலில் எனது நண்பர் 'முஹாஜிரின் புது மடம்' தனது பழைய புகைப்படத்தையும் ஏகத்துவ கொள்கைக்கு வந்தவுடன் தான் எவ்வாறு மாறியுள்ளேன் என்பதையும் தனது முகநூல் கணக்கில் பதிவேற்றியுள்ளார். அது உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.

ஒரு இளைஞனை ஏகத்துவ கொள்கை எப்படி மாற்றி விடுகிறது?

நானும் ஆரம்ப காலங்களில் பெரும் சினிமா பைத்தியமாக இருந்துள்ளேன். 'சலங்கை ஒலி' படத்தை படிக்கும் காலங்களில் மூன்று நாள் தொடர்ந்து தியேட்டரில் போய் பார்த்துள்ளேன். இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களில் எனது பெரும்பாலான நேரங்களை வீணில் செலவழித்துள்ளேன். என்னோடு படித்தவர்களுக்கு நன்றாக தெரியும். டெஸ்க்கின் மேலேயே மிருதங்கம் மற்றும் தபேலா மிக அருமையாக வாசித்து பாடலும் பாடுவேன்.

ஏகத்துவ கொள்கையை ஏற்றவுடன் சினிமா மயக்கமும், இசை மயக்கமும் என்னை விட்டு சென்று விட்டது. சினிமா படம் முழுமையான ஒன்றை பார்த்து பல வருடங்களாகிறது. எனது நிலை மட்டுமல்ல... தமிழகத்தின் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் நிலையும் இதுதான்.

நேரான வழியை காட்டித் தந்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

மலேசியா இந்தோனேஷியாவுக்கு ஒபாமா பாராட்டு!'பெரும் பான்மையாக இஸ்லாமியர்களைக் கொண்ட மலேசியாவும் இந்தோனேஷியாவும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு இடம் கொடுக்கவில்லை. இரு நாடுகளையும் நான் பாராட்டுகிறேன்'

இவ்வாறு மலேசியாவில் நடந்து வரும் பொருளாதார மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களையும் பாராட்டி பேசியுள்ளார் ஒபாமா!

அரபு நாடுகளை போல் கருப்பு தங்கமான பெட்ரோல் இந்த இரு நாடுகளிலும் கிடைப்பது ஊர்ஜிதமானால் உடன் ஐஎஸ்ஐஎஸ் கொலைகார கூலிப் படையை அனுப்பி விடுவீர்களே ஒபாமா!

என்னம்மா ஒபாமா! இப்டி பண்றீங்களேம்மா!

Saturday, November 21, 2015

ஐஎஸ்ஐஎஸ் எவ்வாறு உருவானது? விளாடிமிர் புடின் விவரிக்கிறார்!'ஒபாமா அடிக்கடி ஐஎஸ்ஐஎஸ் பற்றி பேசுகிறார். ஓகே... இந்த உலகில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆயுத சப்ளை செய்வது யார்? சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியிருப்பவர்கள் யார்? இது போன்ற ஒரு குழப்பமான நிலையை அந்த நாட்டில் உருவாக்கியவர்கள் யார்? போரிடுபவர்களுக்கு ஆயுத சப்ளை செய்பவர்கள் யார்?

ஆசாத் அரசுக்கு எதிராக போரிடுபவர்கள் உண்மையில் யார் தெரியுமா? அவர்கள் அனைவரும் கூலிப்படையினர். அவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தருபவர்கள் பக்கம் சார்ந்து போரிடும் கூலிப் படையினர் இவர்கள். கைப்பற்றிய இடங்களில் உள்ள எண்ணெய் வயல்களையும் தனதாக்கிக் கொள்கின்றனர் இந்த கூலிப்படையினர். ஈராக், லிபியா, சிரியா என்று எந்த நாடுகளை எடுத்துக் கொண்டாலும் இதுதான் நிலை. பிறகு கைப்பற்றப்பட்ட எண்ணெய் வயல்களிலிருந்து பெட்ரோலும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது.

இவ்வாறு திருட்டுத் தனமாக பெட்ரோலை உலக நாடுகளுக்கு விற்பது யார்? வாங்குவது யார்? என்ற விபரம் அமெரிக்காவுக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? எல்லாம் தெரிந்தே நடைபெறுகிறது. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கும் போது பெயரளவில் மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டு மழை பொழிந்து அந்த மக்களை நாசமாக்குவார்கள். அந்த இடங்களில் உள்ள பொது மக்கள் உயிர் பிழைக்க ஐஎஸ்ஐஎஸ் ல் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுவர். இவை அனைத்தும் அரசியல் சித்து விளையாட்டுக்கள்'

என்று அனைத்து பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் விளாடிமிர் புடின்.

கேரள உள்ளாட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் அமோக வெற்றி!கேரள உள்ளாட்சி மன்ற தேர்தலில் 16 நகர சபைகளை முஸ்லிம் லீக் கைப்பற்றியுள்ளது. பாஜக பாலக்காடு நகரசபையை வென்றுள்ளது. வெற்றி பெற்றவர்களில் 12 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் பெண்களை வீட்டிலேயே பூட்டி வைத்துள்ளது என்று சொல்வோருக்கு இந்த முடிவானது தக்க பதிலை கொடுத்துக் கொண்டுள்ளது!

வாழ்த்துக்கள் சகோதரிகளே!...

தமிழகத்துக்கு உவைசியின் மனிதாபிமான உதவி!AIMIM ன் தலைவர் அசாசுத்தீன் உவைசி தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது பங்காக 9.5 லட்சம் ரூபாயை அர்பணித்துள்ளார்.

வளரட்டும் மனித நேயப் பணி....

உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை.. - சீமான்

உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை.. - சீமான்

யார் தமிழர் யார் தமிழர் இல்லi என்று பிரித்துக்காட்டும் உரிமையை சீமானுக்கு வழங்கியது யார்?

சீமானுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றே நினைக்கிறேன். உருது பேசும் முஸ்லிம்கள் முன்பு பட்டாண் என்ற ஊரில் மதக் கலவரம் வெடித்த போது தமிழகத்தில் வந்து குடியேறியர்கள். எனவேதான் பட்டாணி என்று அவர்களை சொல்வது வழக்கம். மொகலாயர் ஆட்சியில் மேலும் பல உருது முஸ்லிம்கள் தொழில் காரணமாக இடம் பெயர்ந்து தமிழகத்திலேயே தங்கி விட்டனர். பல தலைமுறைகளாக தமிழகத்தில் இருந்து இந்த மண்ணின் மைந்தனாகவே மாறி விட்டவர்களை 'தமிழர்கள் அல்ல' என்று இனம் பிரிப்பது எதற்காக?

இவரது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் மலையாளிதானே... பிரபாகரனின் தாய் தந்தை கேரள மலையாளிகள் என்பது அனைவருக்கும் தெரியுமே? ஒரு மலையாளிக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று சீமான் என்றாவது கேட்டதுண்டா?

முதல்வர் ஜெயலலிதா கர்நாடகாவை சேர்ந்தவர். கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை எப்படி ஆளலாம் என்று சீமான் என்றாவது கேட்டதுண்டா?

வை.கோபால்சாமியின் பூர்வீகமும் தெலுங்கு என்று சொல்கின்றனரே? அவரை பார்த்து இந்த கேள்வியைக் கேட்டாரா சீமான்?

பார்பனர்களின் தாய் மொழி சமஸ்கிரதம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பஞ்சம் பிழைக்க தமிழகத்தில் குடியேறியர்கள். இன்று தமிழையும் நன்றாக படித்து இந்த மண்ணுக்கு உரியவர்கள் ஆகி விட்டனர். பார்பனர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல சீமானுக்கு தைரியம் வருமா?

கருணாநிதி, மற்றும் விஜயகாந்த் முன்னோர்களை எடுத்துப் பார்த்தால் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் என்கின்றனர். கலைஞரையும், விஜயகாந்தையும் தமிழர்கள் இல்லை என்று சொல்ல சீமானுக்கு தைரியம் வருமா?

மொழி என்பது மனிதன் இன்னொரு மனிதனோடு உரையாட உறவாட இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அதனை ஆக்கபூர்வமாக சிந்தித்து தமிழ் மொழியை எவ்வாறு மேலும் சிறப்பாக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். உலக மக்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும்.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பது நமது முன்னோர் வாக்கல்லவா?

மொழிப் பற்று இருக்கலாம்: அதுவே மொழி வெறியாக மாறினால் சீமானைப் போல் உளருவாயன்களாக திரிய வேண்டியதுதான்.

ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா" என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் "தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.

- நூல்: அஹ்மத்

Friday, November 20, 2015

கிளி கூட்டமல்ல... கிலி கொள்ள வைக்கும் ஏகத்துவ கூட்டம்!

//இந்திய தேசியத்திற்கு எதிராக சவுதி தேசியத்தை விதைவைத்து நீர் ஊற்றி முளைக்கச்செய்யும் டி.என்.டி.ஜே கிளிக்கூட்டம் மற்றும் கிளிக்கூட்ட ஓனர் பி.ஜேவுக்கும் எதிரானதாக என்றும் என்றென்றும் தொடரும் எம்முடைய எதிர்ப்பு.....
இதில் மாற்றுக்கருத்தென்பதே இல்லை.....// RAM NIVAS

பார்பனியத்துக்கு ஆப்பு வைக்க வந்தது கிளி கூட்டமல்ல.. ராம்...

அந்த ஏக இறைவனை மட்டுமே வணங்கும் ஏகத்துவ கூட்டம்..

உங்களுக்கு தர்ஹா வணங்கிகளைப் பற்றி பிரச்னை இல்லை!

உங்களுக்கு தப்லீக் ஜமாத்தைப் பற்றியும் பிரச்னையில்லை...

உங்களுக்கு ஷியா கூட்டத்தைப் பற்றியும் பிரச்னையில்லை...

ஹனபி, ஷாஃபி, ஹம்பலி, மாலிகியாலும் பிரச்னையில்லை

தவ்ஹீத் ஜமாத்தினால்தான் உங்களுக்கு பிரச்னையில்லையா?

எனவேதான் சொல்கிறோம் நாங்கள் கிளி கூட்டமல்ல...

உங்களுக்கு கிலி எற்படுத்தியிருக்கும் ஏகத்துவ கூட்டம்....

பட்டி தொட்டி எல்லாம் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற

நிகழ்ச்சி நடத்தி மத மோதல்களை தடுத்தவர் பிஜே அண்ணன்....

உமது தலைவன் ராம் கோபாலய்யரிடம் சொல்லி இதே போல்

ஒரே ஒரு நிகழ்ச்சியையாவது நடத்திவிட முடியுமா உம்மால்...

சவால் விட்டு கேட்கிறேன்... 'இந்து ஓர் இனிய மார்க்கம்' என்ற

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதற்கு எங்களை அழைக்கலாமே...

அங்கு வந்து நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரலாமே...

ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிக்கான செலவுகள் அனைத்தையும்

நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்... முடியுமா உங்களால் ராம்...

முடியவே முடியாது... இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும்...

எங்களைப் போன்ற நிகழ்ச்சி நடத்த உங்களால் முடியாது...

எனவேதான் நான் மீண்டும் சொல்கிறேன்... நாங்கள் கிளி கூட்டமல்ல

உங்கள் பிடறியை பிடித்து கிலி கொள்ள வைக்கும் ஏகத்துவ கூட்டம்

Wednesday, November 18, 2015

திருமண பதிவு சான்றிதழ் இல்லையாதலால் பாஸ்போர்ட் மறுப்பு! - யசோதாபென்The Prime Minister Narendra Modi's estranged wife Jashodaben Modi's application seeking passport has been returned by the regional Passport office in Gujarat saying its "incomplete."

The regional passport officer ZA Khan told The Hindu the application was incomplete and therefore it was not accepted.

"We have not accepted the application because there was no marriage certificate or a joint affidavit with the spouse," Mr. Khan said, adding, "marriage certificate or a joint affidavit is a required document to get the passport."

சட்டபூர்வமாக திருமண சான்றிதழ் சமர்ப்பிக்காததால் யசோதாபென் விண்ணப்பித்திருந்த பாஸ்போர்ட் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மோடி அவர்களே! வருடத்தில் 320 நாட்கள் வெளி நாடுகளில் உள்ளீர்கள். ஒரு முறையாவது உங்களின் மனைவிக்கும் அந்த ஆசை இருக்கும் என்ற எண்ணமாவது வந்துள்ளதா? ஒரு பெண்ணின் வாழ்வை நிர்மூலமாக்கி இன்று வரை அவரை வெளியில் விடாமல் வைத்துள்ளீர்களே! உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா?

ஏற்கெனவே மலையளவு பாவங்களை சுமந்திருக்கிறீர்கள். அதோடு இந்த பாவமும் சேர வேண்டுமா?

தகவல் உதவி
THE HINDU DAILY
08-11-2015http://www.thehindu.com/news/national/no-passport-for-narendra-modis-wife-as-she-has-no-marriage-certificate/article7855384.ece

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஜி20 உட்பட 40 நாடுகள் உதவி - புடின்'ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொருளாதார உதவி 40 நாடுகளிலிருந்து கிடைத்து வருவதை எங்களின் உளவு அமைப்பு கண்டு பிடித்துள்ளது. ஜி20 நாடுகளும் இதில் அடங்கும். வளைகுடா பிராந்தியத்தில் பெட்ரோல் வணிகம் பல காலமாக திருட்டுத்தனமாக நடந்து வருகிறது. இதனை எங்களின் உளவு விமானங்கள் உறுதிபடுத்தியுள்ளன.' என்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.

நாங்க சொன்னா ஒத்துக்க மாட்டீங்க.... இப்போ புடின் சொல்லிட்டாருப்பா... இனிமேலாவது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இஸ்லாமியர்கள் அல்ல என்பதை ஒத்துக் கொள்வீர்களா?

தகவல் உதவி
www.rt.com
16-11-2015

Tuesday, November 17, 2015

அனைத்தும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!அனைத்தும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!

'பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே'
-குர்ஆன் 6:38


ஊர்வன, நீந்துவன, பறப்பன, என்று உலகில் உள்ள எந்த உயிரினங்களும் மனிதர்களைப் போன்று சமுதாயமாகவே கூடி வாழ்வதாக இறைவன் கூறுகிறான். அன்பு, பண்பு, பாசம், கோபம் என்ற உணர்வுகள் அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டுள்ளது. உயிரியல் நிபுணர்கள் இதுவரை 1.75 மில்லியன் உயிரினங்களை கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் தனித் தனி குடும்பங்களாக வாழ்ந்து வருவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் இன்னும் கண்டு பிடிக்காத உயிரின வகைகள் 4.5 மில்லியனாகக் கூட இருக்கலாம் என்பது அறிவியலாரின் கணிப்பு. 3.8 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரினங்களின் படிமங்கள் இன்று நமக்கு கிடைத்துள்ளன. இன்று எவ்வாறு நாம் அந்த உயிரினங்களைப் பார்க்கிறோமோ அதே அமைப்பிலேயே 3.8 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களும் தோன்றுகின்றன. எந்த மாற்றமும் தென்படவில்லை. டார்வினின் பரிணாமக் கொள்கை இங்கும் அடிபட்டுப் போகிறது. பரிணாமம் அடைந்த இடைப்பட்ட படிமங்களை இன்று வரை பரிணாவியலார் எங்கும் சமர்ப்பிக்கவும் இல்லை. அவ்வாறு சமர்ப்பித்த ஒன்றிரண்டு படிமங்களும் பொய்யாக புனையப்பட்டது என்று அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சார்லஸ் லினோஸ் என்ற ஸ்வீடன் நாட்டின் தாவரவியல் வல்லுனர் தனது புத்தகமான 'சிஸ்டமா நேச்சுரா' ‘Systema Naturae’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். (1735) அதில் அவர் கூறுவதாவது 'ஒவ்வொரு உயிரினமும் அதன் உடலமைப்புக்கு தக்கவாறு மிக நேர்த்தியாக இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு உயிர் மற்றொரு உயிராக பரிணமிக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறு பரிணமித்தால் அதன் டிஎன்ஏ யிலிருந்து அவ்வுயிரின் உட்புறங்களில் மிக அதிகமான மாற்றங்கள் நிகழ வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை' என்று கூறி அதற்கான ஆதாரங்களை வரிசையாக பட்டியலிடுகிறார். தாவரங்கள் மண்ணிலிருந்து தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொள்ளும் விதத்தில் அதன் உடலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று மிருகங்களும் மனிதர்களும் பறவைகளும் தங்களின் உணவை தேடிக் கொள்ளும் வகையிலேயே உடலமைப்பை இயற்கை கொடுத்துள்ளது என்கிறார். இவர் இயற்கை என்கிறார். அதனை நாம் கடவுள், இறைவன், அல்லாஹ் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம்.

எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு அறையில் பூனை ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றது. மிக அழகாக இருக்கும். வெளி ஆட்கள் யாரும் வந்தால் குட்டிகள் ஓடி ஒளிந்து கொள்ளும். அவ்வப்போது மீன், கறி துண்டுகள் என்று நான் கொடுப்பது உண்டு. தாய் பூனை அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அந்த குழந்தைகளுக்கு ஊட்டும் அழகே தனி. நான் அருகில் சென்றால் தாய் பூனை 'வந்திருப்பது நமது கூட்டாளிதான். பயமில்லை வெளியே வாருங்கள்' என்று சங்கேத மொழியில் தனது குட்டிகளுக்குக் கூறும். அதனை விளங்கிக் கொண்டு அந்த சிறிய குட்டிகள் ஒவ்வொன்றாக தலையை வெளியில் நீட்டும் அழகே அழகு..... அந்த குட்டிகள் பெரிதானவுடன் அதே தாய் பூனை தன்னோடு அண்ட விடாது விரட்டுவதையும் பார்த்திருக்கிறேன். குட்டிகள் பெரிதாகி விட்டன. இனி நமது உதவி அவைகளுக்கு தேவையில்லை என்பதாலேயே தனது குட்டிகளை தாய் பூனை விரட்டுகிறது. இவை எல்லாம் அனைத்து உயிரினங்களும் மனிதர்களைப் போல ஒரு சமுதாயமாகவே வாழ்ந்து வருகின்றன என்பதை நமக்கு அறிவுறுத்துகின்றன. இவற்றை எல்லாம் சிந்திக்கும் போது இறைவனின் படைப்பாற்றலை நினைத்து அதிசயிக்காமல் ஒருவனால் இருக்க முடியாது.

Monday, November 16, 2015

பாரிஸ் தாக்குதலையடுத்து உடனடியாக பலனடைந்தவர்கள் யார்?

வெள்ளிக் கிழமை பாரிஸில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. மறு நாள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது போர் பிரகடனம் செய்தன பல நாடுகள். அடுத்த சில மணி நேரங்களிலேயே உலக ஆயுத வியாபாரிகளின் ஆயுத விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

பாரிஸ் தாக்குதலால் நேரிடையாக லாபம் அடைந்தது யார் என்பது இப்போது புரிகிறதா?

https://theintercept.com/2015/11/16/stock-prices-of-weapons-manufacturers-soaring-since-paris-attack/

தரமணியில் "தவ்ஹீத் ஜமாத்" உணவு விநியோகம்!
மழை நீரை சேகரிக்கத் தெரியாத நமது கையாலாக அரசின் பொடும் போக்கால் இன்று சென்னை நகரமே மூழ்கியுள்ளது. மக்கள் அவதிக்குள்ளாயிருக்கின்றனர்.

அரசையே எதிர்பார்க்காமல் சாதி மத வித்தியாசம் பார்க்காமல் தரமணியில் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' 700 பேருக்கு உணவு சமைத்து கொடுப்பதையே நாம் இங்கு பார்கிறோம். மற்ற இயக்கங்களும் துரிதமாக செயல்பட்டு மக்களின் சிரமங்களை குறைக்க முயற்சிப்பார்களாக!

ஃப்ரான்ஸ் தாக்குதலின் முக்கிய நபர்கள் யார் ?ஃப்ரான்ஸ் தாக்குதலின் முக்கிய நபர்கள் யார் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது!

இரண்டு நாள் முன்பு நடந்த மிகப் பெரிய ஃப்ரெஞ்ச் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒருவன் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவன். மற்றொருவன் ஃப்ரான்ஸை பிறப்பிடமாகக் கொண்டவன். இவர்களில் பெரும்பாலானோர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் எங்களுக்கு இல்லாத அக்கறை நேற்று இஸ்லாத்தை ஏற்ற இந்த ஐஎஸ்ஐஎஸ் கும்பலுக்கு எங்கிருந்து வந்தது? வெகு சுலபம் இஸ்ரேலிடமிருந்தும், அமெரிக்க ஆயுத வியாபாரிகளிடமிருந்தும் இந்த அக்கறை அவர்களுக்கு ஊட்டப்பட்டது. அதனை திறம்பட செய்து வருகிறார்கள். சதாமையும், கடாபியையும் ஒரு வாரத்தில் துவம்சம் செய்த பன்னாட்டுப் படைகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் கும்பலை ஒடுக்கத் தெரியாதா? எல்லாம் நாடகம்.....

இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுத்துவதற்கென்றே யூதர்கள் இஸ்லாத்தை ஏற்பதாக நடித்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுத்தாகி விட்டது. ஃபிரான்ஸில் அகதிகளின் எண்ணிக்கையையும் ஓரளவு மட்டுப்படுத்தி விடலாம். ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரை வைத்து இது வரை நடந்த கொலைகளில் எல்லாம் ஆதாயம் அடைந்துள்ளது இஸ்ரேல் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். முன்பு பாகிஸ்தான் பெஷாவரில் பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரிகளாக வந்தவர்கள் இதே ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்தவர்களே என்பதையும் மறந்து விடக் கூடாது.

இஸ்லாத்துக்காக பொங்கி எழும் இந்த ஐஎஸ்ஐஎஸ் என்றாவது தனது பார்வையை இஸ்ரேலை நோக்கி திருப்பியுள்ளதா? என்பதையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களை துவம்சம் செய்வதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது இஸ்ரேல் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். இந்த விபரம் ஐஎஸ்ஐஎஸூக்கு தெரியாதா? எல்லாம் தெரியும். தங்கள் சொந்த நாடான இஸ்ரேலின் மீது ஐஎஸ்ஐஎஸ் எப்படி தாக்குதலை நடத்தும்? தாக்குதல் நடத்தினால் பொருளாதார உதவி யாரிடமிருந்து பெறுவது? எனவே இது நீண்ட கால திட்டமிடலில் நடக்கும் சதி.

நபிகள் நாயகம் இறப்புக்கு பின்னும் இதே போல் ஒரு நயவஞ்சக கூட்டம் இஸ்லாமியர்களாக மாறுவதாக நடித்து முஹமது நபியின் பேரனை ஆசை வார்த்தை காட்டி இந்திய வம்சா வழியைச் சார்ந்த ஒரு பெண்ணையும் திருமணம் முடித்து கொடுத்து கடைசியில் அவரை நட்டாற்றில் விட்டனர். அன்று நடந்த சதி செயல் இன்று வரை ஷியா, சன்னி என்று இரு பிரிவாக முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டனர். 'ஹூசைனி பிராமணர்கள்' என்று இன்றும் தங்களை அவர்கள் அழைத்துக் கொள்கின்றனர். சஞ்சய் தத் போன்றவர்கள் அந்த பரம்பரையில் வந்தவர்களே! முஹர்ரம் 10 அன்று இவர்களும் பஞ்சா எடுப்பார்கள்.

ஆனால் இவர்கள் என்னதான் சூழ்ச்சிகள் செய்தாலும் இறை மார்க்கத்தை இறைவன் மேலோங்கவே செய்வான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தகவல் உதவி
அல் அரபியா
16-11-2015

'இறைவனின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். இறைவனை மறுப்போர் வெறுத்தாலும் இறைவன் தனது ஒளியை முழுமையாக்காமல் விட மாட்டான்'
-குர்ஆன் 9:32

Sunday, November 15, 2015

இம்ரான் கானை பாராட்டிப் பேசிய நரேந்திர மோடி!இங்கிலாந்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில் மோடி நேற்றுமுன்தினம் இரவு பேசுகையில், ‘‘ஆல்வாரில் உள்ள இம்ரான் கான் போன்றவர்களால்தான் என் இந்தியா நிலைத்து நிற்கிறது’’ என்று பெருமையாகப் பேசினார். அதன்பின், மோடி குறிப்பிட்ட அந்த இம்ரான் கான் யார் என்று பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் கான் (34). அரசு பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தனியாக இணையதளம் தொடங்கி உள்ளார். அதில் தன்னை, செயலி வடிவமைப்பாளர்(ஆப் டெவலப்பர்) என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். பள்ளி மாணவர்கள் எளிமையாக பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில் புதிய புதிய ‘ஆப்’களை உருவாக்கி வருகிறார்.

கணினி பற்றிய போதிய பயிற்சி எதுவும் இவருக்கு இல்லை. ஆனால், தனது சகோதரரின் பொறியியல் கல்விக்கான புத்தகங்களை நன்கு படித்து அதன் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார். அதன் மூலம் தான் பணிபுரியும் பள்ளிக்காக முதலில் ஒரு ஆப் தயாரித்தார். அதன்பின், பள்ளி மாணவர்களுக்கான புதிய ஆப்களை உருவாக்குவதை பொழுதுபோக்காக செய்து வருகிறார்.

இதுவரை 52 கல்வி ஆப்களை உருவாக்கி உள்ளார் இம்ரான் கான். அவை அனைத்தையும் மாணவர்களுக்கு இலவசமாக அர்ப்பணித்துள்ளார். அவற்றில் மாணவர்களுக்காக இந்தியில் உருவாக்கி உள்ள பொது அறிவியல் ஆப் மிகவும் பிரபலமானது. இந்த ஆப் இதுவரை 5 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 1.8 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். சமஸ்கிருத ஆசிரியராக உள்ள இம்ரான் கானுக்கு பணம் ஒரு முக்கிய பொருட்டே இல்லை.

இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில், ‘‘வாழ்க்கையில் பணம் மட்டுமே எல்லாமாகி விடாது. ஏனெனில் யாருக்காக நான் ஆப்களை உருவாக்கினேனோ அவர்களால் பணம் கொடுத்து அவற்றை வாங்க முடியாது. எனவேதான், இலவசமாக கொடுத்து விட்டேன்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இம்ரான் கானை போன்றவர்களால்தான் இந்தியா இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடியும் தனது உரையில் குறிப்பிட்டதால், ஒரே நாளில் அவர் மிகவும் புகழ்பெற்று விட்டார். எனினும், புகழை எதிர்பார்த்து எல்லாம் இதுவரை அவர் ஆப்களை உருவாக்கவில்லை. மாணவர்களின் நலனுக்காக பிராந்திய மொழிகளில் இன்னும் பல ஆப்களை தொடர்ந்து உருவாக்குவேன் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் இம்ரான் கான்.

இவரது பணியை கவுரவிக்கும் வகையிலும், புதிய ஆப்களை கண்டுபிடிக்கவும் இம்ரான் கானுக்கு இலவச இணையதள இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
16-11-2015

நரேந்திர மோடி அவர்களே!

இம்ரான் கானை பாராட்டிப் பேசியதால் மட்டும் உங்கள் மீது உள்ள களங்கம் சென்று விடாது. 3000 குஜராத் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாலே உங்கள் மீது உள்ள கறை அகலும். அதுவரை நீங்கள் பேசும் எந்த பேச்சுக்களுக்கும் உலக அளவில் மதிப்பிருக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

‘‘ஆல்வாரில் உள்ள இம்ரான் கான் போன்றவர்களால்தான் என் இந்தியா நிலைத்து நிற்கிறது’’ என்று உங்கள் வாயாலேயே உண்மையை வரவழைத்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

'இன்டிபெண்டன்ட்' பத்திரிக்கையின் மோடி சம்பந்தமான கார்டூன்!

'ஒரு சிறு துளி ரத்தம் தான் என் கைகளில் உள்ளது' என்ற பொருள்பட கேமரூனிடம் மோடி சொல்வது போன்ற கார்டூனை இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கை 'இன்டிபெண்டன்ட்' 13 ந்தேதி வெளியிட்டு கலாய்த்துள்ளது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு கேவலத்தை எந்த பிரதமரும் சந்தித்திருக்க மாட்டார்.

இறைவன் சிலரை மட்டம் தட்டி இழிவு படுத்துவான்: இன்னும் சிலரை உயர்ந்த பதவிகளில் அமர்த்தி கேவலப்படுத்துவான். மோடிக்கு இங்கிலாந்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இரவு தூக்கத்துக்கு செல்லும் போதும் இது போன்ற கார்டூன்கள் மற்றும் மக்களின் எதிர்புகள் முன்னுக்கு வந்து மோடியை பயமுறுத்தும். முன்பு செய்த பாவத்திற்கு இன்னும் எத்தனை அவமானங்களை மோடி சுமக்கப் போகிறாரோ பொறுத்திருந்து பார்போம்.

இந்த செய்திகளை எல்லாம் நம் தமிழ் ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்...

உயிரிழந்த ஃப்ரான்ஸ் மக்களுக்கு எமது ஆழ்ந்த ஆனுதாபங்கள்.பாலஸ்தீனை ஆதரித்தும் ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்புக்கு யூத தொடர்பு உள்ளதையும் வெட்ட வெளிச்சமாக்கியது ஃப்ரான்ஸ் நாடு. அந்த நாட்டை இஸ்லாத்துக்கு எதிராக திருப்பி விட மேற்கொண்ட முயற்சியே நேற்றைய ஃப்ரான்ஸ் தாக்குதல். எத்தனையோ சவால்களை சந்தித்து வரும் இஸ்லாம் இதனையும் எதிர்கொள்ளும். இன்ஷா அல்லாஹ்.

உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த ஆனுதாபங்கள்.

இஸ்லாத்தை இந்தியா தடை செய்யுமாயின் உங்கள் நிலை?

//சிம்பிளாக ஒரு கேள்வி....
Nazeer Ahamed

நான் இந்தியன்.......
எனக்கு என் மதநம்பிக்கை பெரியதா?... இந்திய தேசியம் பெரியதா என்ற கேள்வி வந்து ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்படுமாயின்.....
அதாவது இந்தியாவில் மதநம்பிக்கை என்பது தடை செய்யப்படுமாயின்....
நான் என் மத நம்பிக்கைகளை தூர வீசிட்டு இந்திய தேசியத்தைதான் தேர்ந்தெடுப்பேன்.....
நீங்கள் எப்படி?...
உங்கள் மத நம்பிக்கையை துறந்துவிட்டு இந்திய தேசியத்தை தேர்ந்தெடுக்க உங்களால் முடியுமா?....//

-Ram Nivas

முதலில் இந்திய தேசியம் என்றால் என்ன? அது எவ்வாறு இருக்கும்? அதன் அடிப்படை என்ன? யாரெல்லாம் அதில் கோலோச்சுவார்கள் என்பதை முதலில் தெரிந்து கொண்டுதான் இதற்கு விடையளிக்க முடியும்.

இவ்வாறெல்லாம் மத சுதந்திரத்துக்கு தடை போட இந்தியாவில் எந்த சாத்தியதையும் இல்லை. பார்பனர்கள் மட்டுமே இந்துத்வாவுக்கு கொடி பிடிப்பர். மற்ற 80 சதவீதமான பிற்படுத்தப்பட்ட மக்கள் தலித் மக்கள் இந்துத்வாவை ஓட ஓட விரட்டுவதில் முன்னணியில் இருப்பார்கள். சமீபத்தில் பீஹாரில் அதனைத்தான் கண்டோம். அந்த மக்களுக்கு இஸ்லாமியரும், கிருத்தவரும், சீக்கியர்களும் துணை நிற்பர்.

ஒருகால் ராம் நிவாஸ் சொல்வது போல் இந்தியாவில் மதம் மார்க்கம் தடை செய்யப்படுமாயின் அதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வையும் காண்போம்.

முதலில் அரசுக்கு மதம் மற்றும் மார்க்கத்தின் அவசியத்தை வலியுறுத்தி சாத்வீக முறையில் போராட்டங்களை நடத்த வேண்டும். அமைதி முறை சரி வரவில்லை என்றால் அரசுக்கு எதிராக ஆயுதங்களை எடுக்க வேண்டும்.

ஆயுதப் போராட்டம் பண்ணும் அளவுக்கு வசதியும் வாய்ப்புகளும் இல்லை என்றால் நாட்டை துறந்து எந்த நாடு இஸ்லாமிய மார்க்கத்தை கடை பிடிக்க அனுமதிக்கிறதோ அங்கு சென்று விட வேண்டும். இது கடைசி நிலையே...

ஆனால் எனது நாடான இந்தியாவில் இப்படியான ஒரு நிலை ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே இப்படியான ஒரு சிந்தனைக்கு அவசியமும் இல்லை.

ராம் நிவாஸ் வெகு சுலபமாக மதத்தை உதறி விட்டு வரலாம். அதனை இந்து மதமும் அனுமதிக்கும். ஆனால் இஸ்லாம் அதனை அனுமதிக்காது. இஸ்லாமிய மார்க்கமில்லாது ஒரு முஸ்லிம் இந்த உலகில் நிம்மதியாக வாழ்ந்து விடவும் முடியாது. சகல சுதந்திரத்தையும், சகல இன்பங்களையும் இஸ்லாமிய மார்க்கத்தால் அனுபவித்து வரும் நான் எவ்வாறு எனது மார்க்கத்தை கை கழுவ முடியும்?

Saturday, November 14, 2015

சமூகத் தற்கொலை செய்துகொள்கிறோமா நாம்?ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர் கிடைக்காவிட்டால் சென்னையில் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது. கர்நாடகாவின் காவிரி நீர் கிடைக்கவில்லை என்றால் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும். பெரியாறு, பவானி, சிறுவாணி இந்த ஆறுகளின் குரல்வளை எல்லாம் கேரளாவின் கையில் இருக்கிறது. கேரளா அந்தக் குரல்வளையைக் கொஞ்சம் நசுக்கினால் போதும், நமது கொங்கு மண்டலமும் காலி; தென் மாவட்டங்களும் காலி. இப்படி ஒரு மாநிலத்தின் பெரும் பகுதியே தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய நிலை. குழாயடிச் சண்டைப் போடாத குறையாகத்தான் அங்கெல்லாம் தண்ணீரைப் பெற்று வருகிறோம். இதில் நமது கட்சித் தலைவர்கள் செய்யும் அரசியல் இருக்கிறதே... சினிமா நடிகர்களே தோற்றுவிடுவார்கள். சரி, இப்படி தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்கும் அண்டை மாநிலங்களின் மழை அளவைவிட நம் தமிழகத்தின் மழை அளவு அதிகம் என்கிற உண்மை தெரியுமா?

ஒரு புள்ளிவிவரத்தைப் பார்ப்போம். உலக ஆண்டு சராசரி மழையளவு 840 மில்லி மீட்டர். இந்திய ஆண்டு சராசரி மழையளவு 1,170 மி.மீ. கர்நாடகம் 732 மி.மீ. ஆந்திரம் 908 மி.மீ. இப்போது தமிழகத்தின் ஆண்டு சராசரியைப் பார்ப்போம். ஜனவரி முதல் மே மாதம் வரை பொழியும் உபரி மழை 179 மி.மீ. ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்குப் பருவ மழை 307 மி.மீ. அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொழியும் வடகிழக்குப் பருவ மழை 439 மி.மீ. ஆக மொத்தம் 925 மி.மீ. ஆந்திர மாநிலத்தைவிட தமிழகத்தில் 17 மி.மீ மழையளவு அதிகம். கர்நாடகத்தைவிட 193 மி.மீ அதிகம்.

அதேசமயம் கர்நாடகம் கடந்த 1991-ம் ஆண்டில் 11.20 லட்சம் ஏக்கராக இருந்த தனது விவசாய பாசனப் பரப்பை இன்று 21.71 லட்சம் ஏக்கராக வளர்த்தெடுத்துள்ளது. ஆனால், தமிழகமோ 1971-ம் ஆண்டில் 28 லட்சம் ஏக்கராக இருந்த தனது பாசனப் பரப்பை 2014-ல் 21 லட்சம் ஏக்கராக அழித்துக்கொண்டது. அதிகம் மழை பெறும் நமது மாநிலம் 7 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை இழந்துள்ளது. குறைந்த மழை பெறும் கர்நாடகம் 10.51 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தைப் போல 2 ஆயிரம் ஆண்டுகாலப் பாரம்பரிய நீர் கட்டமைப்புகள் எல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், அவை எல்லாம் பிற்காலத்தில் விழித்துக்கொண்டன. சிறப்பாக நீர் மேலாண்மை செய்கின்றன. (ஆந்திராவும் கர்நாடகாவும் செய்துவரும் சிறப்பான நீர் மேலாண்மை மற்றும் பாசனத் திட்டங்கள் குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்)

இன்னொரு உதாரணம்: கோதாவரி, கிருஷ்ணா போன்ற மிகப் பெரிய நதிகள் கொண்ட ஆந்திராவில் இயந்திரங்களைக் கொண்டு ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்திருக்கிறார்கள். பெரியாறு உட்பட 44 ஆறுகள் கரை புரண்டோடும் கேரளாவிலும் அப்படியே. அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்கே ஓடும் பாலாறு, தென்பெண்ணை, வைகை இவை எல்லாம் வானம் பார்த்த சிறிய ஆறுகள்தான். ஆனால், இங்கெல்லாம் அரசாங்கமே ராட்சத இயந்திரங்களின் மூலம் மணல் அள்ளுவதை என்னவென்று சொல்ல? நம் தாய் வயிற்றைக் குத்திக் கிழித்து ரத்தம் குடிக்கிறோம் நாம். கர்நாடகாவும் ஆந்திரமும் முன்னோக்கிச் செல்கின்றன. நாம் மட்டும் அதள பாதாளத்துக்குச் செல்கிறோம். இந்தக் கொடுமையை எங்கேச் சொல்லி முட்டிக்கொள்வது?

எல்லாவற்றுக்கும் காரணம், நாம் இயற்கையை மதிக்கவில்லை. நம்மைத் தவிர வேறு எதையுமே ஓர் உயிராக நாம் பாவிப்பதே இல்லை. மண்ணின் மீது பேராசை; வனத்தின் மீது பேராசை; வன உயிர்களின் மீது பேராசை; மலையின் மீது பேராசை; நீர் நிலைகளின் மீது பேராசை… எல்லாவற்றையும் அசுர வெறிக் கொண்டு அழித்துக்கொண்டிருக்கிறோம். இது இயற்கையின் மீதான அழிவு மட்டுமல்ல; நம் தலையின் மீது நாமே மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறோம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இதன் பெயர் சமூகத் தற்கொலை.

தமிழகத்தில் அரசாங்கத்தின் கணக்குப்படி 39,202 ஏரிகள் இருக்கின்றன. அவற்றில் 100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்டவை 18,789. இவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 100 ஏக்கருக்கும் குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவைத் தவிர, 3,000 கோயில் குளங்கள், 5,000 ஊருணிகள் இருக்கின்றன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 390 டி.எம்.சி. இது சாதாரண அளவு அல்ல; ஒரு டி.எம்.சி. தண்ணீர் என்பது 100 கோடி கனஅடி தண்ணீர். எவ்வளவு பிரமாண்டம்! இது தமிழகத்தின் மொத்த அணைக்கட்டுகளின் நீர் கொள்ளளவான 243 டி.எம்.சியை விட அதிகம். ஏன், காவிரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் 249.60 டி.எம்.சியை விடவும் அதிகம். இப்போது புரிகிறதா நம் முன்னோர்கள் வெட்டிய ஏரிகளின் அருமை!

ஏரிகளை மட்டுமே ஒழுங்காகப் பராமரித்திருந்தாலே நாம் விவசாயத்துக்காக ஆறுகளையும் அணைகளையும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

சுழலியலாளர்கள் ஏரியைப் ‘பூமியின் கண்’ என்று குறிப்பிடுகிறார்கள். நாம் அந்தக் கண்ணில் கழிவுகளைக் கொட்டி குருடாக்கி வருகிறோம். மொத்தம் உள்ள 39,202 ஏரிகளில் இன்று சுமார் 5,000 முதல் 6,000 ஏரிகளை காணவில்லை. கோவையிலும் மதுரையிலும் கடல் போல் விரிந்த ஏரிகள் எல்லாம் சாக்கடையாகத் தேங்கி கொசு உற்பத்தி மையங்களாக துர்நாற்றம் அடிக்கின்றன. மறைந்த கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதி, எஸ்.எஸ்.ஆர் நடித்த ‘ஏரிக்கரை மீது போறவளே பொன்மயிலே...’ பாடல் காட்சி சேலம் பனமரத்துப் பட்டி ஏரியில் படமாக்கப்பட்டபோது, அந்த ஏரி 2,700 ஏக்கர் பரப்பில் விரிந்து கடல்போலத் தண்ணீர் தளும்பியதாம். இப்போது ஒரு வாரமாக சேலத்தில் நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது. ஆனால், பனமரத்துப்பட்டி ஏரியில் சொட்டுத் தண்ணீர் இல்லை. ஏரி முழுவதும் கருவேல முட்செடிகள் நிறைந்து நெஞ்சை குத்திக் கிழிக்கின்றன.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51- ‘ஏ’ ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாக 10 ஷரத்துக்களை வகுத்துள்ளது. அதில் 7-வது ஷரத்து என்ன சொல்கிறது தெரியுமா?

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
15-11-2015

"இஸ்லாம் ஓர் இனிய மார்கம்" - இலங்கையில்...முதன் முதலாக இலங்கையில் அதிகமான சிங்கள மக்கள் கலந்து கொண்ட "இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்ச்சி"

அல்லாஹ்வின் பேருதவியால் இன்று SLTJ கண்டி மாவட்டத்துகுட்பட்ட மாத்தளை மாவட்டம் வரக்காமுறை கிளை சார்பாக வரக்காமுறையில் முதன் முதலாக சிங்கள மொழியில் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்ச்சி•

இலங்கையில் அதிகமான சிங்கள மக்கள் கலந்து கொண்ட இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்ச்சி இதுவே. மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் அலைக்கடலன திரண்ட மக்கள் கூட்டம். அனைத்து சந்தேகங்களுக்கும் சகோ: அப்துர்ராஸிக் அழகிய முறையில் பதிலளித்தார்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கள மதத்தை சார்ந்த சிங்கள மொழியை தனது பாடசாலையில் பாடமாக கற்பிக்கும் சிங்கள மொழி ஆசிரியை “இவரை போல் சிங்கள மொழி சிங்கள மக்களால் கூட பேச முடியாதென்று” பாராட்டு தெரிவித்தார்.

104 சிங்கள மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் 20 சிங்கள மொழிபெயர்ப்பு திருக்குரானும் இலவசமாக வழங்கப்பட்டது. காவலுக்கு வந்த காவல்துறை வந்த நோக்கத்தையே மறந்து சிங்கள புத்தகங்களை வாசிப்பதிலும் நடந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனிப்பதிலுமே இருந்தனர்
மாற்றுக்கொள்கையில் உள்ள மக்களும் நிகழ்ச்சியை பார்வையிட அலைக்கடலன திரண்டு வர இடம் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு மக்கள் திரள்.

அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே !!!!

தகவல் : NM MISHAL DISC
வரக்காமுறை

யாதும் ஊரே யாவரும் கேளிர்!யாதும் ஊரே யாவரும் கேளிர்!

//Anonymous said...

"இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன்." பரவாயில்லையே//

இந்த அனானி சகோதரருக்கு ஒரு முஸ்லிம் தமிழகத்தை நேசிப்பதும், தமிழ் மொழியை நேசிப்பதும், பாரத நாட்டை நேசிப்பதும் ஆச்சரியமாக தெரிகிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அந்த அளவு ஊடகங்கள் நமது மக்களை மூளை சலவை செய்து வைத்துள்ளன.


என்னைப் பொருத்த வரை இனம் மொழி கடந்து அனைத்து மக்களையும் நேசிக்கக் கூடியவன். அவன் ஆரியனோ, திராவிடனோ, அராபியனோ, ஐரோப்பியனோ, ஆப்ரிக்கனோ யாராக இருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவன் ஆதமுடைய மகன். என்னுடைய சகோதரன். அதே போல் இந்த உலகம் அதிலும் இந்த பூமிப் பந்தை உண்டாக்கியது இறைவன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளவன். இதனால் உலக நாடுகள் அனைத்தையுமே நான் நேசிக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா என்று எந்த கண்டத்து நாடுகளையும் நான் விரோதமாக பார்க்கவில்லை. ஏனெனில் அத்தனை கண்டங்களையும் படைத்து பரிபாலிப்பது என்னைப் படைத்த இறைவனே!

அதே போல் உலக மொழிகள் அனைத்தையுமே நான் ஒரே தரத்திலேயே வைத்து பார்க்கிறேன். ஏனெனில் இந்த உலக மொழிகள் அனைத்தையும் மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்காக இறைவனே மனிதனுக்கு அருளினான் என்று குர்ஆன் கூறுவதால் உலக மொழிகள் அனைத்துமே எனது சகோதர மொழிகளே! தேவ மொழிகள் என்று தனித்து பிரிக்கச் சொல்லி இஸ்லாமும் எங்கும் சொல்லவில்லை. எனவே எனக்கு மொழி வெறியும் கிடையாது.

அதே நேரம் நான் பிறந்த மண்ணான இந்திய தேசத்தையும், எனது தாய் மொழியான தமிழையும் மற்ற நாட்டையும் மொழிகளையும் விட சற்றே அதிகமாக நேசிக்கிறேன். காரணம் பிறந்த மண்ணை நேசிப்பதும், தாய் மொழியை நேசிப்பதும் நமது ரத்தத்திலேயே காலகாலமாக ஊறி விட்டதனால் இந்த நேசிப்பு வருகிறது. நான பிறந்து வளர்ந்து ஆளாகி எனக்கென்று ஒரு அடையாளத்தை தருவதனால் நான் பிறந்த மண்ணை நேசிப்பது இயல்பாகவே வந்து விடக் கூடிய ஒன்று.

அதே நேரம் இந்த நேசம், பாசம் மற்ற நாடுகளையும், மொழிகளையும், இனங்களையும் வெறுக்கும் அளவுக்கு சென்று விடக் கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன். இந்த இடத்தில்தான் பலரும் தவறு செய்து விடுகின்றோம். ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் முஸ்லிம் அல்லாதவர்களை ஒதுக்கி வாழ வேண்டும்: அல்லது ஒரு இந்துவாக வாழ வேண்டுமானால் இந்து மதத்தின் மேல் உள்ள நம்பிக்கை இல்லாதவர்களோடு அந்நியனாக பழக வேண்டும் என்று ஒரு மாயை தவறாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளுக்கு எப்படியோ.....பல மத இனங்கள் இணைந்து வாழும் நமது பாரத தேசத்துக்கு இந்த கொள்கையானது மிக ஆபத்தானது.

இஸ்லாம் இந்தியாவுக்கு சொந்தமான மதமல்ல...இந்து மதமே இந்தியாவுக்கு சொந்தமானது என்ற கருத்து பரவலாக விதைக்கப்படுகிறது. சொல்லப் போனால் நமது இந்திய நாட்டுக்கென்று குறிப்பிட்டு சொல்லக் கூடிய எந்த மதமோ மார்க்கமோ இருந்திருக்க வில்லை. வரலாறு பதியப்பட்ட காலம் தொட்டு கடந்த 2000, 3000 வருடங்களாக நமது நாட்டின் வரலாறுகளை தோண்டிப் பார்த்தோமானால் எங்குமே அமைதி நிலவியதாக சரித்திரங்களை பார்க்க முடியவில்லை. யாருக்கெல்லாம் படை பலமும், ஆள் பலமும் இருந்ததோ அவர்கள் அனைவரும் அந்தந்த காலங்களில் நமது நாட்டை ஆண்டிருக்கின்றனர். எனவே ஒரு குழுவோ, ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது ஒரு மார்க்கமோ நமது பாரத நாட்டுக்கு உரிமை கொண்டாட முடியாது.

நமது நாட்டில் பல மார்க்கங்களாக இருந்த பல சாதிகளை ஒன்றாக்கி இன்று இந்து மதம் என்ற பொது மதத்தை காட்டுகின்றனர் சில இந்துத்வாவாதிகள். 'நாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இதை இந்து ராஷ்டிரமாக அறிவிப்போம்' என்று அறிக்கைகளும் விடுகின்றனர். இந்த இந்து மதத்துக்கு பூரண உரிமை கொண்டாடுபவர்கள்..நம் தேசத்திலே இரண்டு அல்லது மூன்று சதவீதமே இருக்கும் பார்ப்பணர்கள். இவர்களில் தீவிர எண்ணம் கொண்ட அத்வானி, மோடி, மோகன் பகவத், போன்ற பலர் இஸ்லாம் இந்த மண்ணுக்கு அந்நியமானது. எனவே இந்த மண்ணின் சொந்த தயாரிப்பான இந்து மதத்தையே நாம் பின்பற்ற வேண்டும் என்று தினமும் எங்காவது ஒரு இடத்தில் சொல்லி வருகின்றனர். இந்து மதம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எந்த அளவு ஒரு இட்டுக்கட்டப்பட்ட வாதம் என்பதும், அத்வானி போன்ற ஆரியர்களின் பூர்வீகம் எந்த நாடு அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதன் வரலாற்று ஆய்வுகளை கீழே தருகிறேன். படித்து தெளிவு பெறுவோம்.

-----------------------------------------------------------------


மாஸ்கோ: ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஜாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற்கத்திய நாகரீகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் அராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம். இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெத்தனி ஹூக்ஸ் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த நகரை கண்டுபிடித்துள்ளனர்.

பிபிசி தொலைக்காட்சியில் 'Tracking The Aryans' என்ற தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரீகம் கிரேக்க நாகரீகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம், இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார். இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் குடியேற்றம் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியவந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பெத்தனியும் அவரது குழுவினரும் இங்கு ஆராய்ச்சிகளில் இறங்கினர். அப்போது கிடைத்த சில தடயங்களின்படி இங்கு ஆரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த பனிப் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியை அவரது குழு மேற்கொண்டு வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரில் கிடைத்த பொருட்களில் மேல் நோக்கு வளைவான அமைப்பு கூடிய 20 வீடுகள், மேக்-அப் சாதனங்கள், பாண்டங்கள், ஸ்வஸ்திக் புதைக்கப்பட்ட குதிரைகள், ரதத்தின் பாகங்கள், சின்னங்கள் (Swastika symbol) ஆகியவை அடங்கும்.

ஆரிய நாகரீகத்தின் அடையாளமான சுவஸ்திக்கை தான் 1930களில் ஹிட்லர் தனது நாஜி அமைப்பின் சின்னமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சிறந்த இனம் இது தான் என்று கூறிக் கொண்டு பிற இனத்தினரை அழிக்கும் வேலையை, யூதர்களை அழிப்பதில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பல ஐரோப்பிய மொழிகளின் மூலமாக ஆரிய மொழி் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நகர கண்டுபிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார். இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை 'விசிட்டிங்' பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://timesofindia.indiatimes.com/world/europe/4000-year-old-Aryan-city-discovered-in-Russia/articleshow/6683681.cms?intenttarget=no

http://www.thehindu.com/news/international/4000yearold-aryan-city-discovered-in-russia/article812961.ece

http://www.dailymail.co.uk/sciencetech/article-1317362/Europe-begins-Cities-built-swastika-painting-Aryans-remote-Russian-plains.html

http://tamil.oneindia.in/art-culture/essays/2010/4-000-year-old-aryan-city-discovere-russia.html

------------------------------------------

இந்த பதிவை படித்தவுடன் அதே அனானி எனக்கு எழுதிய பின்னூட்டம்.

Anonymous said...

குறிப்பிட்ட அந்த பின்னூட்டம் எழுதியதற்கு உண்மையிலேயே வருந்துகிறேன். மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டேன். நண்பர் அவர்கள் தயவுசெய்து என்னை மன்னிக்கவேண்டுகிறேன். அந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிட வேண்டுகிறேன்.....

Friday, November 13, 2015

லண்டனில் மோடிக்கு கடும் எதிர்ப்பு!
ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் மோடியால் தலைக் குனிவு! இனியாவது திருந்துங்கள் இந்துத்வாவாதிகளே!

சாதி வெறியர்களே! எப்போது திருந்தப் போகிறீர்கள்?உழைக்கும் வர்க்கத்தை இப்படி கேவலப் படுத்தலாமா? பொது மக்களில் மற்ற சாதிகள் வரலாம், மற்ற மதங்கள், மார்க்கங்கள் வரலாம். ஆனால் தலித் மட்டும் வந்து விடக் கூடாது இல்லையா? இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை.