Followers

Tuesday, February 28, 2012

நாசாவில் ஒரு சவுதி யுவதி!

சுற்றுச் சூழல் மற்றும் உயிர் தொழில் நுட்ப பிரிவில் டாக்டரேட் பட்டம் பெற்ற மஜ்தா அப்ராஸ் என்ற சவுதி பெண்மணி நாசாவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் லண்டன் பல்கலைக் கழகத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்.

நாசா வளைகுடா பிராந்தியத்தின் தலைவரான முஹம்மது இபுறாகிம் கூறும்போது 'மஜ்தா அப்ராஸ் வளைகுடா பகுதிகளில் சுற்றுச் சூழலை கண்காணிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு அதில் வெற்றியும் பெற்றதற்காக இப்பதவியில் அமர்த்தப்படுவதாக' கூறினார்.
பதவி ஏற்பு விழாவில் அப்ராஸ் பேசும் போது 'எனது இந்த வெற்றிக்கு காரணமான மன்னர் அப்துல்லாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த வழிகாட்டியை இந்த நாடு பெற்றுள்ளது. பெண்கள் முன்னேற்றத்தில் மன்னர் அதீத அக்கறை காட்டுகிறார். பிரின்ஸ் நூரா பல்கலைக் கழகம் மூலம் இனி சவுதி பெண்கள் சமூகத்தில் சிறந்த இடத்தைப் பெற முடியும். மேலும் அதிகார மையமான சூரா கவுன்ஸிலிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாரத்தை பெண்களுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார் மன்னர். மேலும் எனது இந்த முன்னேற்றத்திற்கு பிரின்ஸ் துர்க்கி பின் நாஸரும் ஒரு காரணம். அவர் கேட்டுக் கொண்டதால்தான் சவுதி சுற்றுச் சூழல் அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு தலைவியாக இருக்கிறேன்.' என்றார்.

மேலும் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தின் உயிரியல் பிரிவில் ஆசிரியராகவும் நுண்ணுயிரியியல், சுற்றுச் சூழல் என்று பல தலைப்புகளில் விரிவுரையும் ஆற்றியுள்ளார். ஜெத்தா பெண்கள் அமைப்பிலும், கேன்ஸர் சம்பந்தமான அல் ஈமான் குரூப்பிலும், எகிப்திய ஆராய்ச்சி சென்டரிலும், சவுதி எய்ட்ஸ் தடுப்பு அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார் மஜ்தா அப்ராஸ்.

நன்றி அரப் நியூஸ்
25-02-2012

எட்டு மணி நேரம் வேலை பார்க்கவே நமக்கு உலகத்து டென்ஷனும் வந்து விடுகிறது. இந்த பெண்மணி இத்தனை வேலைகளையும் சளிப்பில்லாமல் பார்ப்பது ஆச்சரியம்தானே!
முந்தய பதிவில் ஒரு அன்பர் இஸ்லாமிய ஆட்சி வந்தால் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் அமைதி போய் விடும் என்றும் பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்கு நான் சொல்லிக் கொள்வது.

பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, டுனீஷியா போன்ற எந்த நாடுகளும் இஸ்லாமிய ஷரீயாவை பின்பற்றவில்லை. அதன் ஆட்சியாளர்கள் மக்களை சுரண்டுவதிலும், தங்களின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எதையும் செய்யக் கூடியவர்களாகவுமே இருந்தனர். ஆட்சித் தலைமை மார்க்கப் பற்றுடன் இருந்தால் அதன் குடிமக்களும் மன்னனையொட்டி நேர்மையாக நடப்பர். நாட்டு மக்களும் சுபிட்சமாக இருப்பர். சதாமிலிருந்து கடாபியிலிருந்து அனைத்து தலைவர்களும் ஆடம்பர வாழ்விலும் சுகபோகங்களிலும் திளைத்தனர். நேரம் பார்த்து அமெரிக்காவுக்கு எண்ணெய் வயல்கள் மீது மோகம் வர நாட்டின் எதிர்ப்பாளர்களை பயன்படுத்திக் கொண்டு ஆட்சிகளையும் வீழ்த்தியது. ஆனால் அமெரிக்கா நினைத்ததற்கு மாற்றமாக புதிதாக ஆட்சியில் அமர்ந்த அனைத்து நாடுகளிலும் இஸ்லாமிய சட்டங்கள் பின் பற்றப்படுகின்றன. மக்களும் அதனை விரும்புகின்றனர். தங்களுக்கு அமைதியும் சுபிட்சமும் இஸ்லாமிய சட்டங்கள் மூலமாகத்தான் கிடைக்கும் என்று எண்ண ஆரம்பித்துள்ளனர். இனி வரும் காலங்களில் இந்த நாடுகளில் முழுமையான இஸ்லாமிய சட்டத்தால் அமைதி திரும்பும்.

சவுதி அரேபியாவில் கராமா என்ற அமைப்பு அல்வலீது பவுண்டேஷன் மற்றும் இளவரசி அமீரா துணையோடு 90000 டாலர் அன்பளிப்பில் தற்போது இயங்கி வருகிறது. முஸ்லிம் பெண் வழக்கறிஞர்களை உலக தரத்திற்கு உயர்த்துவதே கராமாவின் நோக்கம். உலக அளவில் மனித குலத்தின் கண்ணியம், மத சுதந்திரம், மத உரிமை, இஸ்லாமிய சட்டங்கள் போன்றவற்றில் முஸ்லிம் பெண்கள் சிறந்த இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இவ்வமைப்பு பாடுபடுகிறது. இந்த அமைப்பு வாஷிங்டனிலும் தனது கிளையை துவக்கியுள்ளது.

உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஓரளவு ஷரியத் சட்டத்தின் படி ஆட்சி நடைபெறும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இங்கு பெண்களுக்கு கல்வி கற்பதில், வேலைக்குச் செல்வதில் எந்த விதத்திலும் சவுதி அரசு தடை போடவிலலை. இஸ்லாமும் அதற்கு தடை போடவில்லை. ஆண்களை விட பெண்களே இன்று கல்வி கற்பதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். பெண்களுக்கு கல்வியைக் கொடுப்பதோடு அவர்களின் பாதுகாப்புக்கும் அரசு ஆவண செய்கிறது.

//The king’s latest announcement promised that women could vote in the next municipal elections, scheduled for 2015. Half of the municipal council’s seats are elected, and the other half are appointed by the government. The powers of the councils remain unclear and are not significant, though recent changes ensure that each municipal council can directly work with the local mayor and governor, and not only report to the minister of municipal and rural affairs in Riyadh.

The king also announced that women could become full voting members of the Shura Council, an appointed consultative body that has authority to review laws and question ministers but cannot propose or veto legislation and has no binding powers. In 2006 the Shura Council appointed six women as advisors, a number that has now risen to 12. //-BBC
2015ல் நடக்கவிருக்கும் தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமையையும் பெண்கள் பெற்றுள்ளனர். அதிகார மையமான சூரா கவுன்சிலிலும் அங்கததினர்களாயுள்ளனர் பெண்கள்.

நம் நாட்டில் என்ன செய்கிறோம். பெண் விடுதலை என்ற பெயரில் ஆணும் பெண்ணும் கல்லூரியிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் சேர விட்டதனால் பல இடங்களில் பிரச்னை. விபரம் தெரியாத இந்த கல்லூரி பருவத்தில் காதலில் விழுந்து தங்களின் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்பவர்களே அதிகம்.

வேலை பார்க்கும் இடங்களிலும் பெண்களுக்கு சில ஆண்கள் கொடுக்கும் டார்ச்சர் சொல்லி மாளாது. எனவேதான் இஸ்லாம் படிப்பதாக இருந்தாலும் வேலை பார்ப்பதாக இருந்தாலும் பெண்களையும் ஆண்களையும் தனித்தனியாக்கி விடுங்கள் என்கிறது. இதனால் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ என்ன பிரச்னை வந்து விடப் போகிறது?http://www.blogger.com/img/blank.gif அலுவலக நேரங்களில் பெண்களிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து மாறி தங்களது வேலையில் கவனத்தை செலுத்துவார்கள். கல்லூரிகளிலும் பெண்களின் பின்னால் சுற்றுவதை விட்டு விட்டு இவன் படிப்பில் கவனத்தை செலுத்துவான்.


உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக்கழகமான பிரினஸ் நூரா பல்கலைக் கழகத்தைப் பற்றி நான் முன்பு இட்ட பதிவு.

-------------------------------------------------------------

பெண் விடுதலை என்று கூறி நாம் பெண்களை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம் என்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த செய்தியை பார்ப்போம்.

ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).

இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.

மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.

"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில்மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
-dinamalar 23-02-2012

பேசாமல் அந்த கணவர்கள் சீட்டு குலுக்கிப் போட்டு மனைவியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

------------------------------------------------------------

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வாசலில், மகளை கழுத்தறுத்து கொலைமுயற்சி செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் வானமாதேவி பகுதியை சேர்ந்தவர் ஞானவள்ளி. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் காதல் வயப்பட்டிருந்த நிலையில், இவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்கள் உறவினர் பையனை நிச்சயம் செய்தனர். இதுதொடர்பாக, பெற்றோருக்கும், ஞானவள்ளிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்த ஞானவள்ளியை, அவரது தந்தை கல்லூரி வாசலிலேயே கழுத்தை அறுத்தார். இதில், படுகாயமடைந்த ஞானவள்ளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு நிலவிவருகிறது. சிதம்பரம் போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dinamalar 20-02-2012

Saturday, February 25, 2012

இறைத் தூதருக்கான சில முன்மாதிரிகள்!

எனக்கும் எனக்கு முன்னர் வந்த நபிமார்களுக்கும் இடையிலான உதாரணம் ஒரு கட்டிடத்தைக் கட்டிய மனிதனின் உதாரணத்தை ஒத்ததாகும்.

“அந்த மனிதர் ஒரு வீட்டை அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டினார். ஒரேயொரு கல் வைக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டார். அந்த வீட்டை மக்கள் சுற்றிப் பார்த்து (அதன் அழகையும், நேர்த்தியையும் கண்டு) வியந்தனர். இந்த இடத்தில் உள்ள கல் மட்டும் வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கூறினர். விடுபட்ட அந்த இடத்தை அடைக்கும் கல் நானாவேன். நான் நபிமார்களில் இறுதியானவன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அறிவிப்பவர்: அபூஹுரைரா
ஆதாரம்:புஹாரி-3535, முஸ்லிம்:6103


இந்த நபி மொழியை படிக்கும் நமக்கு பல உண்மைகள் தெரிய வருகிறது. ஒரு கூட்டத்தை தனக்கு பின்னால் அமைத்துக் கொள்ள விரும்புபவர் தன்னையே முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்புவார். ஆனால் இந்த நபி மொழியில் அந்த கட்டடம் மிக நேர்த்தியாக கட்டப்பட்டு விட்டது. ஒரே ஒரு கல் மட்டுமே பாக்கியிருந்தது. அதனை வைத்து அந்த கட்டடத்தை முழுமைபடுத்தி விட்டதாக முகமது நபி இங்கு சொல்கிறார். இஸ்லாம் என்ற கட்டிடம் ஆதாமிலிருந்து ஏசு நாதர் வரை சிறுக சிறுக கட்டப்பட்டு முகமது நபி காலத்தில் ஒரு கல்லை வைத்து பூர்த்தி செய்யப்படுகிறது. இங்கு உலகில் பிறந்த அனைத்து தூதர்களுக்கும் இஸ்லாமிய வெற்றியை பங்கிட்டு விடுகிறார் முகமது நபி.

இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முகமது நபி குர்ஆனை தனது சொந்த முயற்சியால் புனைந்து கூறினார். இது கடவுளின் வார்த்தை அல்ல என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர். அவர்களின் கூற்று உண்மையானால் இப்படி ஒரு வார்த்தையை முகமது நபி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எநத ஒரு சாதாரண மனிதனுமே தனது அறிவை மற்றவருக்கு பங்கிட்டு கொடுக்க விரும்ப மாட்டார். ஒருவருக்கு சிஷ்ய கோடிகள் உருவாவதற்கு அந்த நபரின் அறிவும், அவரின் ஆன்மீக சொற்பொழிவுகளும்தான் முக்கிய காரணம். இங்கு அந்த அறிவும் ஞானமும் உலகில் பிறந்த அனைத்து தூதர்களுக்கும் பங்கிட்டு கொடுக்கப்படுகிறது.

மற்றொரு இடத்தில் இறைத் தூதர் ஏசுநாதரையும், இறைத்தூதர் மோசேயையும் தன்னை விட தாழ்த்த வேண்டாம் என்ற கட்டளையையும் தனது தோழர்களுக்கு பிறப்பிக்கிறார் நபிகள் நாயகம். தனது காலில் யாரும் விழக் கூடாது என்றும் தான் வரும் போது யாரும் மரியாதை நிமித்தம் எழுந்திருக்கக் கூடாது என்றும் தனது தோழர்களுக்கு கட்டளையிடுகிறார். இப்படி ஒரு தலைவரை நம வாழ்நாளில் பார்த்திருக்கிறோமா? என்பதை நாம் சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம்.


பைபிளில் வரும் வேறொரு உவமையைக் கேளுங்கள்.

“வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாகவிட்டு, புற தேசத்திற்குப் போயிருந்தான்.”
“கனிகாலம் சமீபித்த போது, அதன் கனிகளை வாங்கிக் கொண்டு வரும்படி தன் ஊழிக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.”

“தோட்டக்காரர் அந்த ஊழிக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலை செய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.”

“பின்னும் அவன் முந்தியவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான். அவர்களையும் அப்படியே செய்தார்கள்.”

“கடைசியிலே அவன் என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.”

“தோட்டக்காரர் குமாரனைக் கண்ட போது இவன் சுதந்தரவாளி இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டனர்.”

“அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலை செய்தார்கள்.”

“அப்படியிருக்க திராட்சைத் தோட்டத்தின் எஜமான் வரும் போது அந்தத் தோட்டக்காரனை என்ன செய்வான் என்று கேட்டார்.”

“அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறொரு தோட்டக்காரரிடத்தில் திராட்சத் தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.”

“இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?”

“ஆகையால் தேவனுடைய இராச்சியம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.”

“இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொருங்கிப் போவான். இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப் போடும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.” (பைபில் மத்தேயு:21-33-44)


ஈஸா(அலை) அவர்கள் ஒரு உதாரணம் கூறியதாக பைபிள் கூறுகின்றது.

ஒருவர் தனது தோட்டத்தைக் குத்தகைக்கு விடுகின்றார். அதன் கணிகளைப் பெற்று வர தனது அடிமைகளை அனுப்புகிறார், தூதர்கள் அனுப்புகிறார்கள். அந்தத் தோட்டக்காரர்கள் அவர்களைக் கொலை செய்துவிடுகின்றனர். இறுதியில் தனது மகனை அனுப்புகிறார். அவரையும் கொலை செய்துவிடுகின்றனர். அந்த எஜமான் வந்து என்ன செய்வர் என்று கேட்டதும் யூதர்கள் அவர் வந்து தோட்டத்தைச் செய்தவர்களைக் கொன்றுவிட்டு தோட்டத்தை உரிய முறையில் பராமரிக்கும் ஒருவரிடம் ஒப்படைப்பார் என்கின்றனர். இந்த பதிலைப் பெற்ற ஈஸா(அலை) அவர்கள் “இவ்வாறுதான் தேவன் இராஜ்ஜியம் உங்களிடமிருந்து பரிக்கப்பட்டு அதை சரியாகப் பராமரிக்கும் இன்னொரு கூட்டத்தாரிடம் ஒப்படைக்கப் படும்” என்று கூறுகின்றார்.

இப்றாஹீம் நபிக்கு இஸ்மாயீல், இஸ்ஹாக் என இரு புதல்வர்கள் இருந்தார்கள். இஸ்ஹாக் நபியின் சந்ததியில் தான் தூதர்கள் வந்தார்கள். இஸ்ரவேலர்கள் தூதர்களில் பலரைக் கொலை செய்தார்கள். மற்றும் பலரைப் பொய்ப்பித்தனர். ஈஸா நபியின் வருகையுடன் இந்தத் தூதுத்துவம் அவர்களிடமிருந்து பரிக்கப்பட்டு மற்றொரு கூட்டத்தாருக்குக் கொடுக்கப்படும் என்று கூறுவதுடன் அது யாருக்குக் கொடுக்கப்படும் என்றும் கூறுகின்றார்கள்.

தவ்றாத்தில் கூறப்பட்டது போல் ஒதுக்கப்பட்ட கல் என இஸ்மாயீல் நபி பரம்பரை கூறப்படுகின்றது. நபியவர்களும் நான் அந்த விடுபட்ட கல் என்று கூறுவதுடன் தன்னுடன் (நுபுவ்வத்) இறைத் தூதுத்வ கட்டிடம் முழுமை பெறுவதாகக் கூறுகின்றார்கள்.

ஈஸா(அலை) அவர்கள் அந்தக் கல் பற்றிக் கூறும் போது “அந்தக் கல்லின் மீது விழுகிறவன் நொருங்கிப் போவான். அந்தக் கல் எவன் மீது விழுமோ அவன் நசுங்கிப் போவான் என்ற வாசகம் நபியவர்களை யாரும் அழிக்க முடியாது. அவர்களோடு மோதுபவர்களும் தோற்றுப் போவர். அவர் யாருடன் மோதுகின்றாரோ அவர்களும் தோற்றுப் போவர் என்று கூறுகின்றார்கள். இது நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்தேரியது.

முகமது நபியை கொலை செய்ய முயன்ற யூதர்கள் முடிவில் தோல்வியை தழுவியதையும் நாம் வரலாறுகளில் பார்க்கிறோம். முகமது நபி காலத்திலேயே அரபுலகம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்ததையும் சரித்திரங்களில் நாம் பார்க்கிறோம்.

நானே அந்த விடுபட்ட கல் என நபி(ஸல்) அவர்கள் கூறுவதன் மூலம் தனது தூதுத்துவத்தை உண்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் அதே நேரம் தானே இறுதி நபிhttp://www.blogger.com/img/blank.gif, தனக்குப் பின் நபி இல்லை என்ற சத்தியத்தையும் நிலைநாட்டிவிட்டதையும் பார்க்கிறோம்.


தினமணியில் பழ கருப்பையா அவர்கள் இஸ்லாம் பற்றி சொல்லியிருக்கும் ஒரு கட்டுரை. படித்துப் பாருங்கள்.

Thursday, February 23, 2012

ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்

சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஸாலிஹ் நபி.

சவுதி அரேபியாவில் உள்ள மதாயன ஷாலிஹ் என்ற இடத்தில் பெரும்பாறைகளை குடைந்து அவர்கள் வாழ்ந்த குகை வீடுகள் இப்போதும் உள்ளன. மதீனாவிலிருந்து 405 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் மதாயன ஷாலிஹ் உள்ளது. மக்காவிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அல் ஊலா என்ற ஊரிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. அங்குதான் ஹிஜ்ர் பகுதி உள்ளது. இப்போது அதை ‘மதாயின் ஸாலிஹ்’ -(ஸாலிஹ் (அலை) அவர்கள் வசித்த ஊர்) என்று அழைக்கின்றார்கள்.
இந்த மக்கள் பேசிய மொழி அரபி மொழியாகும். இறைவன் அனுப்பிய தூதர்களில் அரபுகளாக அறியப்படுபவர்கள் நான்கு பேர். 1.நபி ஹூத், 2. நபி ஷூஐப், 3.நபி சாலிஹ், 4.நபி முகமது.
காலை தொழுகையை முடித்துக் கொண்டு நானும் மதுரையை சேர்ந்த நைனார் முஹம்மதும், ஒரு கேரள அன்பரும் சேர்ந்து கம்பெனி வண்டியில் கிளம்பினோம். நாங்கள் நினைத்தது தூரம் 300 கிலோமீட்டரே! ஆனால் அந்த இடம் வர கிட்டத்தட்ட 550 கிலோ மீட்டர் ஆகி விட்டது.இந்த இடத்துக்கு செல்பவர்கள் முதலில் அல்ஊலாவில் இருக்கும் அரசு அலுவலகத்தில் சென்று அனுமதி பத்திரம் வாங்க வேண்டும். இது தெரியாமல் நாங்கள் நேரிடையாக சென்று விட்டோம். எங்களை உள்ளே விட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பிறகு நான் அவர்களிடம் 500 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வருகிறேன்: என்று அரை மணி நேரத்துக்கு மேலாக வாதிட்டு அதன் பிறகு அனுமதி வாங்கினோம். அரபி மொழி தெரிந்ததால் அனுமதி பத்திரம் இல்லாமலேலே எங்களுக்கு அனுமதி கிடைத்தது. சிரமத்தை தவிர்க்க இங்கு செல்பவர்கள் முதலில் அல் ஊலா சென்று அனுமதி வாங்கி விட்டு வரவும்.கடும் பலம் வாய்ந்த சமுதாயமாக படைக்கப் பட்டிந்த ஸமூத் கூட்டத்தினர், சிலைகளை வணங்கிக் கொண்டும், ஆடம்பர வாழ்க்கையில் திலைத்துக் கொண்டும், மலைகளைக் குடைந்து, கோட்டைகள் கட்டி வாழ்ந்தும் வந்தார்கள். தோட்டங்களும் நீரூற்றுக்களும் வேளாண்மைகளும் பேரீத்தத் தோட்டங்களும் அங்கு மிகுந்து காணப்பட்டன.

இவர்கள் வீட்டின் வாயில்கள் மிகவும் உயரமாக உள்ளது. அந்த அளவு உயரமான மக்களாக இருந்துள்ளனர். மலைகளையே குடைந்து வீடு அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அத்தகைய வலிமை மிக்க சமூகமாக இவர்கள் வாழ்ந்துள்ளார்கள். போகும் வழியெங்கும் அந்த ஊர் இறைவன் சாபத்திற்குரிய ஊர் என்பதை நினைவுபடுத்தும் முகமாக எங்கும் அழிவின் காட்சிகள் காணக்கிடைக்கும்.நமது நாட்டு கோவில்களை ஒத்து சில இடங்களில் சித்திரங்களும் செதுக்கியுள்ளனர். அழகிய வேலைப்பாடுகள். பல தெய்வ வணக்கம் புரியும் நம் நாட்டு மக்களின் கலாசாரமும் இந்த மக்களிடமும் இருந்ததை இந்த கட்டிடங்கள் இன்றும் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன.
அவர்களிடம் நபியாக அனுப்பப்பட்ட ஸாலிஹ் (அலை) அவர்களின் ஓரிறைக் கொள்கையையும் தூதுத்துவப் பிரச்சாரத்தையும் ஏற்க மறுத்தனர்.

'ஸாலிஹே! இதற்கு முன் எங்களிடம் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர். எங்கள் முன்னோர்கள் எதை வணங்கினோமோ அதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? நீர் எதற்கு எங்களை அழைக்கிறீரோ அதில் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்' என்று அவர்கள் கூறினர்.
-குர்ஆன் 11:62

நீங்கள் இறைத்தூதர் என்பதற்கு ஏதேனும் அத்தாட்சியை கொண்டு வந்தால்தான் உங்களை நபியாக ஏற்போம் என்றனர். இவ்வாறு முறையிடுவது அவர்களுக்கு சோதனையாகவும் தண்டனையாகவும் அமைந்து விடும் என்பதை புரியாத அவர்கள் தம் கோரிக்கையில் பிடிவாதமாகவும் இருந்தனர்.

அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, கண்கூடான அத்தாட்சியாக பெண் ஒட்டகம் ஒன்றை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்பதற்கு இதோ நீங்கள் கேட்ட அத்தாட்சி! இதனை எந்த தொந்தரவும் செய்யாமல் பூமியில் மேய விட்டு விடுங்கள்! அதற்கென தண்ணீர் அருந்தும் நாள் ஒன்றை ஒதுக்கிவிடுங்கள்! இதற்கு தீங்கிழைத்தால் அல்லாஹ்வின் தண்டனையை சந்திக்க நேரிடும் என்று ஸாலிஹ் (அலை) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
அந்த சமுதாயத்தில் மதிப்பும், பலமும் வாய்ந்த, திமிர் பிடித்த ஒருவன் ஸாலிஹ் (அலை) அவர்களின் உபதேசத்தையும், எச்சரிக்கையும் மீறி அந்த அற்புத ஒட்டகத்தை அறுத்து விட்டு, ஸாலிஹே! நீர் உண்மையில் அல்லாஹ்வுடைய தூதராக இருந்தால் நீர் வாக்களித்த தண்டனையை கொண்டு வாரும்! என்றான்.
மூன்று நாட்கள் வரை உங்கள் வீடுகளில் சுகம் அனுபவியுங்கள்! இது பொய்ப்பிக்கப்படாத வாக்காகும் என்றார்கள் ஸாலிஹ் (அலை) அவர்கள். மூன்று நாட்கள் முடிந்தன.

“இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
- அல்குர்அன் 11:61


(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.

அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
-அல்குர்ஆன் 15:80-82


பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
-அல்குர்ஆன் 89:9


ஸமூது கூட்டத்தினர் ஒன்பது வன்முறை கூட்டத்தினர்களாக இருந்து பல தெய்வ வணக்கம் செய்தல், கொள்ளை அடித்தல், அக்கிரம செயல்கள் புரிதல் போன்றவைகளில் பரவலாக ஈடுபட்டனர். அப்பொழுது அல்லாஹ் அதிசயமான உருவத்துடன் ஒரு ஒட்டகத்தை படைத்து அவர்களிடையே நடக்க செய்தான். அவ்வொட்டகத்தை எந்த ஒரு துன்பமும் செய்யாமலிருக்க கட்டளையிட்டான்.

அவர்கள் இறையானைக்கு சவால் விட்டு அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள். அதிகாலை நேரத்தில் அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கியது.
“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).

ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.

அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்.
-அல்குர்ஆன் 11:64-67

------------------------------------------------------------இங்கு காட்டப்படும் மனித எலும்புக் கூடுக்ள் சாலிஹ் நபியின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுடையது என்று சொல்கிறார்கள். இது உண்மையா என்பது ஆதாரபூர்வமாக எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.

ஆனால் பரிணாமவியலாருக்கு இதில் பல கேள்விகள் இருக்கிறது.

பரிணாமத்தின் அடிப்படை நியதியே ஒரு உயிரினம் மாற்றங்களை உள்வாங்கி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே, அந்த மாற்றங்கள் உயிரினத்தின் தக்க வைத்தலுக்கு நன்மை பயக்கும் போது அது தொடரும், அதே போல மாற்றங்கள் தேவை இல்லாத போது அது நீக்கப்படும். அதே போல மாற்றங்களை நிகழ்த்துவதாலும், மாற்றங்களை உள்வாங்குவதாலுமே இனம் விருத்தியடைந்து வருகின்றது எனலாம். பரிணாமத்தை தூக்கிப் பிடிப்போர் வைக்கும் வாதங்களே இது.

நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும். இதற்கு பல மில்லியன் வருடங்கள் ஆனதாக பரிணாமத் தத்துவம் கூறுகிறது. ஒரு இனம் ஒன்றாவது நிலையிலிருந்து நான்காவது நிலையை அடைவதாகக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட இரண்டு நிலைகளை அந்த உயிர் பரிணாமத்தால் அடைந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் பார்க்கும் காணொளியில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் இன்று நாம் எப்படி பார்க்கிறோமோ அதே போன்ற நிலையில்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் பல லட்ச வருடங்களுக்கு முன்பும் இருந்துள்ளன என்பதை விளங்குகிறோம். இதற்கு இடைப்பட்ட இனமான இரண்டாம் நிலையும், மூன்றாம் நிலையும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.

ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.

மேலும் மனிதன் முன்பு நம்மைவிட உயரமாக இருந்ததற்கும் மனிதனின் எலும்புக் கூடு கிடைத்துள்ளது. அந்த எலும்பும் இப்போது நமக்குள்ள அதே அமைப்பில்தான் உள்ளது. பரிணாம மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அளவில் தான் சிறிதாகி இருக்கிறது.

------------------------------------------------------------
நபி (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்கு செல்லும் போது வாகனத்தில் அமர்ந்தபடியே போர்வையால் தம்மை மறைத்துக் கொண்டு அந்த இடங்களை விட்டும் விரைவாகக் கடந்தார்கள்.

ஹிஜ்ர் பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் அருந்தவோ, தண்ணீர் நிரப்பிக் கொள்ளவோ வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள். நாங்கள் நீரை நிரம்பிக் கொண்டோம். அந்த தண்ணீரைக் கொண்டு மாவும் பிசைந்து விட்டோமே! என்று நபித் தோழர்கள் கூறியபோது, தண்ணீரை ஊற்றி விடுங்கள்! மாவையும் வீசி விடுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்கு கிடைத்த தண்டனை போன்று உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்ற அச்ச உணர்வுடனும் அழுதவாறும் நுழையுங்கள் என்று உபதேசித்தார்கள்.
-புகாரி 3377, -3381)


இந்த இடங்களை பார்க்கும் நமக்கு இறைவனின் தண்டனை எப்படி இருக்கும் என்ற எண்ணம் நம் மனதில் வர வேண்டும். நேரம் கிடைப்பவர்கள் இந்த இடங்களை சென்று பார்வையிடவும்.

Tuesday, February 21, 2012

கத்தியின்றி ரத்தமின்றி துறந்தனர் தங்கள் சாதியை!

கத்தியின்றி ரத்தமின்றி துறந்தனர் தங்கள் சாதியை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நேரடி பார்வையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் தங்களின் வாழ்க்கை வழி முறைகளை மாற்றிக் கொண்டோரின் தகவல்கள்:


1.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளையில் இன்று (17-2-2012) சத்தியராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
-------------------------------------------------------------


2.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 10-2-2012 அன்று நடராஜன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுலைமான் என மாற்றிக் கொண்டார்.

----------------------------------------------------------
3.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் சென்ற 01-02-2012 புதன்க்கிழமையன்று தாம்பரத்தை சேர்ந்த சகோதரர் குமார் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார்கள்.
இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

------------------------------------------------------------4.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் கலைவாணி என்ற சகோதரி குடும்பத்துடன் கடந்த 18-1-2012 இஸ்லாத்தை தழுவினார்கள்.
தாம்பரம் லக்ஷ்மிபுரத்தை சேர்ந்த கலைவாணி தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் தூய இஸ்லாத்தை தழுவினார். தன்னுடைய பெயரை ஆயிஷா எனவும், மகள் கோமதியின் பெயரை மர்யம் எனவும், மகன் ஹேம்னாத்துடைய பெயரை இம்ரான் எனவும் மாற்றிக்கொண்டனர்.
மேலும் சகோதரர் இம்ரான் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அவர்களுக்கு விளக்கப்பட்டு கழற்றி எரியப்பட்டது.
திருக்குர்ஆன் தமிழாக்கம், துஆக்கள் மனனம், மாமனிதர் நபிகள் நாயகம், தொழுகை முறை, இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

------------------------------------------------------------


5.
மதுரை மாவட்டம் மீனம்பாள்புரம் கிளையில் கடந்த 14-1-2012 அன்று கண்ணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் கரீம் என மாற்றிக் கொண்டார்.
-------------------------------------------------------------6.
தென் சென்னை மாவட்ம் கே.கே.நகர் கிளையில் 06.01.2012 அன்று “ப்ரீத்தி” என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை “சபானா” என்று மாற்றி கொண்டார்கள்.
இவருக்கு பெண்களுக்கான சட்டங்கள், தொழுகை முறை, ஹிஜாப் அணியும் முறை ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய அடிப்படை கல்வி, துஆகளின் தொகுப்பு ஆகிய நூல்களும் திருக்குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.

-------------------------------------------------------------7.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 20/01/12 அன்று விவேக் என்ற சகோதரர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார். தனது பெயரை வாசிம் என மாற்றிக்கொண்டார்.
------------------------------------------------------------


8.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட மர்கசில் கடந்த 20-1-2012 அன்று சுரேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள் இவருக்கு திருக்குர்ன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------


9.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 21-1-2012 அன்று பூபதி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பிலால் என மாற்றிக் கொண்டார்.

------------------------------------------------------------


10.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 28/01/12 அன்று செந்தில் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சம்சுதீன் என மாற்றிக் கொண்டார். இவருக்கு குர்ஆன் ஹதீஸ் காலண்டர் வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------
11.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆந்திர மாநிலம் பாடேறு கிளையில் கடந்த 30-1-2012 அன்று பிறசமயத்தை சேர்ந்த இருவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.
--------------------------------------------------------------
12.
TNTJ ஜித்தா மண்டலம் “தபூக்” கிளையில் 17/02/2012 அன்று தபூக் [King Khaled Hospital] பணிபுரியும் [அல் மஜ்ஜால்-அல் அரபி] கம்பனியைச் சேர்ந்த-அரியலூர் மாவட்டம் – காரூரைச் சேர்ந்த சகோதரர் முத்து வேல் முருகன் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இப்ராஹீம் என மாற்றிக் கொண்டார்.
TNTJ தபூக் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளக்கி நூல்கள் மற்றும் சீடிக்கள் வழங்கினார்கள்.
--------------------------------------------------------------ஆண்கள் தஃவா சென்டர்
இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அவர்களில் ஆண்களுக்காக சேலத்தில் மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி ஆண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.
பாடத்திட்டங்கள்:
1. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
2. திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
3. துஆ மனனம்
4. தொழுமை முறை
5. நபிகளார் வரலாறு
6. இஸ்லாமிய ஒழுங்குகள்
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
முகவரி:
24/11E, ஆசாத் நகர், சூரமங்கலம்,
சேலம்-636005

-நன்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

இதைப் படிக்கும் நண்பர்களுக்கு:

இந்த பதிவைப் பார்த்து சிலர் கோபப்படலாம். நன்றாக சிந்தித்தீர்கள் என்றால் உங்களின் கோபம் தானாக அகன்று விடும். நாராயண குரு, பெரியார், அம்பேத்கார் என்று எவ்வளவோ பெரிய மனிதர்கள் எல்லாம் முயற்ச்சித்து இந்த சாதிப் பேயை, தீண்டாமைப் பேயை ஒழிக்க முடியவில்லை. படித்து விட்டால் சாதி மறைந்து விடும் என்று நம்பினோம். ஆனால் படித்தவர்களுக்கு மத்தியில்தான் இன்று சாதி வெறி தலைதூக்கி இருக்கிறது. அதற்கு உதாரணமாக இணையத்தில் சாதியால் நடக்கும் சண்டைகளை பார்வையிடலாம். ஆரிய திராவிட பிரச்னை உலக முடிவுநாள் வரை தீராது போல் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கூட பழம் பதிவர் ஒருவர் 'சாதி சமூகத்தில் இருந்தே ஆக வேண்டும்' என்று பதிவிடுகிறார். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம், என்று சாதிக் கொடுமை தொடர்கதையாகவே உள்ளது.

கத்தியின்றி ரத்தம் இன்றி ஒரு தீர்வு இதற்கு உண்டென்றால் அது இஸ்லாம் ஒன்றுதான். எனவே இஸ்லாத்தை ஏற்ற இந்த சகோதரர்களை வாழ்த்துங்கள். எங்களைப் போன்ற சாதிகளற்ற சமூகமாக மாற நீங்களும் அவர்களை வாழ்த்துங்கள். புதிய கொள்கையை அவர்கள் ஒன்றும் பின்பற்றவில்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது மூதாதையரின் மார்க்கத்துக்கு திரும்பியிருக்கின்றனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு நமது முதாதையர் அனைவரும் ஏக இறைவனையே வணங்கி வந்தனர். ஆரியர்களின் படையெடுப்பால் பல தெய்வ வணக்கம் நமக்குள் புகுந்து விட்டது. இந்த சகோதரர்கள் தங்களின் பழைய மார்க்கத்தை புதுப்பித்து இருக்கிறார்கள். அவ்வளவே!

அடுத்து இவ்வளவு சிறந்த சேவை செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தங்களின் சொந்த பகையை மனதில் கொண்டு இந்த இயக்கத்தை கூடிய வரை முடக்க நினைக்கின்றனர். தவ்ஹீத் ஜமாத்தாக இருந்தாலும் தமுமுகவாக இருந்தாலும் முஸ்லிம் லீக்காக இருந்தாலும் பாபுலர் ஃப்ரண்டாக இருந்தாலும் செய்யும் நல்ல காரியங்களுக்கு சமூக ஒற்றுமைக்கு நம்மால் ஆன உதவிகளை செய்வோம். அது செய்ய விருப்பமில்லாதவர்கள் உபத்திரம் செய்யாமலாவது இருப்போம்.

மார்க்கத்தை ஏற்ற இந்த சகோதரர்கள் இனி அவர்களின் பழைய முகாமுக்கும் செல்ல முடியாது. நாமும் சரியாக கவனிக்கா விட்டால் தவறான வழிக்கு சென்று விடுவர். எனவே முஸ்லிம்கள் இவர்களுக்கு தகுந்த வேலை கொடுப்பது, கல்வி கொடுப்பது, நம் உறவினர்களைக் கொண்டு திருமணம் முடித்துக் கொடுப்பது என்று அவர்களை இந்த தலைமுறையிலேயே சாதிகளை முழுவதும் அறுத்த தலைமுறைகளாக மாற்ற வேண்டும். அந்த நிலையை அடைய பரம்பரை முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளும் நம்மவர்களின் பங்குதான் அதிகமிருக்கிறது.

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும்போது, முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.'
-குர்ஆன் 30:110

Saturday, February 18, 2012

'இந்தியர்களிடம் சொல்லி பலனில்லை' - சவுதி முனிசிபாலிடி!

சவுதி தலைநகர் ரியாத்தில் பத்ஹா என்ற சிட்டியை வெளிநாட்டவர் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இது பற்றி முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டு உள்ளேன். விடுமுறை நாட்களில் இங்கு வந்து நேரத்தை கழிப்பது பலருக்கு தொடர்கதை. அவ்வாறு வாராவாரம் வரும் போது ஒரு முக்கியமான சந்திப்பில் அனைவரும் கலந்துரையாடுவது வழக்கம். இதில் தமிழர்கள் சீகோ பில்டிங் என்ற காம்ப்ளக்ஸீக்கு அருகில் ஒன்று கூடுவர். மதியம் 3 மணிக்கு கூடும் கூட்டம் கலைவதற்கு இரவு 11 மணி கூட ஆகும்.
தங்களது குடும்ப கவலைகள் கம்பெனி பிரச்னை என்று பல விஷயங்களும் இங்கு அலசப்படும். இவ்வாறு பேச்சு தொடர்ந்தால் அது 2 மணி 3 மணி நேரம் வரை கூட தொடரும். இடையில் சிறு நீர் கழிக்க என்ன செய்வது?

பக்கத்தில் மசூதி இருக்கிறது. மாற்று மதத்தவரும் பயன்படுத்த வேண்டி கழிவறைக்கான வழியை மசூதியின் மறுபக்கம் வைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 50 க்கு மேற்பட்ட கழிவறைகள் இலவசமாக பயன்படுத்த அரசால் கட்டப்பட்டிருக்கிறது. அனால் நம் உடன் பிறப்புகள் ரத்தத்தின் ரத்தங்கள் அதனை உபயோகப்படுத்த மாட்டார்கள். வேறு என்ன செய்வார்கள்.?

சீகோ பில்டிங்குக்கு எதிர்ப்புறம் மேம்பாலத்துக்குக் கீழ் மிகப் பெரிய காலியான இடம் உண்டு. நம் மக்கள் அந்த இடத்தையே பப்ளிக் டாய்லெட்டாக உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். நான் சில நேரம் அந்த வழியாக போனால் நம் ஊர் பேருந்து நிலையங்கள்தான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவு சிறுநீர் நாற்றம் அந்த ஏரியாவையே அசிங்கப்படுத்தும்.

சவுதி காவல் துறை இவ்வாறு சிறுநீர் கழிப்பவர்களை தடுத்து சில நேரங்களில் விரட்டவும் செய்வார்கள். ஆனால் நம் மக்கள் காவல்துறைக்கு போக்கு காட்டி விட்டு அவர்கள் கொஞ்சம நகர்ந்தவுடன் திரும்பவும் தங்கள் வேலையை ஆரம்பித்து விடுவர்.ரியாத் முனிசிபாலிடியில் இது பற்றி ஆலோசித்தனர். இதற்கு என்ன தீர்வு? போலீசார் எவ்வளவுதான் கடுமையாக நடந்து கொண்டாலும் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியவில்லை. 'இந்தியர்களிடம் சொல்லி ஒரு பயனுமில்லை. இதற்கு நாம் தான் ஒரு முடிவு கட்ட வேண்டும்' என்று கூடி பேசினர். கடைசியில் ஒரு முடிவெடுத்தனர். பாலத்துக்கு கீழ் வெற்று இடங்களை இரும்பு வேலி அமைத்து சிறுநீர் கழிப்போரை தடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அந்த பாலத்தின் இரு மருங்கிலும் படத்தில் உள்ளது போல் இரும்பினால் ஆன வேலியை அமைத்து விட்டனர். தற்போது நமது உடன் பிறப்புகள் மசூதிக்கு அருகில் உள்ள பொது கழிவறையை நோக்கி மிகவும் மன சோர்வுடன் சென்று தங்கள் இயற்கை தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். :-)

தற்போது அந்த இடம் மிகவும் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் உள்ளது. இப்பொழுது கழிவறையை நாடும் இந்த மக்கள் முன்பு ஏன் செல்லவில்லை? என்பது எனக்கு புரியவில்லை. எப்படியோ அந்த இடம் சுகாதாரமானது கண்டு மகிழ்ச்சி!

239. 'ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4

இங்கு இரண்டு கட்டளை சொல்லப்படுகிறது. தேங்கிய தண்ணீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்றும் அது போன்ற அசுத்தமான குட்டைகளில் குளிக்கக் கூடாது என்றும் விளங்குகிறோம். அடுத்து வேறொரு அறிவிப்பில் மேட்டுப் பகுதியில் சென்று சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

6128. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளி வாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரைவிட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை' என்று கூறினார்கள்.
Volume :6 Book :78

6322. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி' என்று கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

_____________________________________________________________


நம் நாட்டு மக்களை நமது மத்திய அமைச்சர் எந்த அளவு புரிந்து வைத்துள்ளார் என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம்.புதுடில்லி: ""பெண்களை பொறுத்தவரை, தங்களுக்கு மொபைல் போன் வேண்டும் என கேட்கின்றனரே தவிர, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கேட்பதில்லை. நம் நாட்டில் பொது சுகாதாரம் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது,'' என, மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்த நிகழ்ச்சி, டில்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: பொது சுகாதாரம் என்பது, நம் நாட்டில் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. தற்போது, நமது வாழ்வியல் அணுகுமுறை மாற்றம் குறித்து அதிகம் பேசுகிறோம். அதே நேரத்தில், மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களை பொறுத்தவரை, தங்களுக்கு மொபைல் போன் வேண்டும் என, கேட்கின்றனரே தவிர, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, யாரும் கேட்பதில்லை. இது போன்ற அணுகுமுறை தான், தற்போது நம்மிடையே உள்ளது.
-தினமலர்
17-02-2012'ஹலோ...சார்....இவ்வளவு சொல்லியும் திரும்பவும் பப்ளிக் டாய்லடடா! திருந்துங்க உடன் பிறப்புக்களே!....' :-)

டிஸ்கி: 'பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்போம்'

Thursday, February 16, 2012

முதல் சர்வதேச கலந்தாய்வு (ஹலால் உணவு)உலகின் முதல் ஹலால் உணவுக்கான சர்வதேச கலந்தாய்வு கடந்த செவ்வாய்க் கிழமை ரியாத் நகரில் இனிதே நிறைவுற்றது. இஸ்லாமிய நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் முஸ்லிம் அல்லாத நாடுகள் இஸ்லாமிய சட்டத்தை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ரியாத் கவர்னர் இளவரசர் சத்தாம் இந்த மாநாட்டை துவக்கி வைத்து கண்காட்சியையும் திறந்து வைத்தார். ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய இந்த கலந்தாய்வு மூன்று நாள் தொடர்ந்து நடந்து செவ்வாய்க்கிழமை நிறைவுற்றது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு சவுதி மன்னர் அப்துல்லாஹ்வின் ஏற்பாட்டில் உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் கீழ் நடைபெற்றது.

உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் தலைவர் முஹம்மது அல் கன்ஹல் தனது அறிக்கையில் முஸ்லிம் நாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகள் இஸ்லாமிய வழி முறையில் அறுக்கப்பட்ட உணவுகளையே அனுப்ப வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

மேலும் அவர் கூறும்போது 'சில நாடுகள் மின்சார அதிர்ச்சியைக் கொடுத்து உயிரினங்களை கொல்கின்றன. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சுகாதாரமான முறையில் அறுக்கப்பட்டு(ஹலால்) அந்த பேக்கிங்களில் உரிய சீல்களும் இடப்பட வேண்டும். இத்தகைய தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தையும் வேர்ல்ட் முஸ்லிம் லீக்குக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கையையும் வைத்தார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த மாநாடு திரும்பவும் கூட்டப்படும். அந்நேரம் இந்த கமிட்டி எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இதனால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் போன்றவை அங்கு அலசப்படும். இந்த கூட்டம் சிறப்பாக நடக்க ஒத்துழைத்த மன்னர் அப்துல்லாவுக்கு இந்த கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கன்ஹல் கூறினார்.

இந்த கலந்தாய்வில் ஏழு முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது சம்பந்தமாக அறிவியல் கட்டுரைகள் 60 இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் ஹலால் வழிமுறை, உணவுகளை பதப்படுத்துவது, உணவுகளை முறைப்படி அறுப்பது, இஸ்லாம் கூறும் ஹலால் உணவுகள் போன்ற அனைத்து அம்சங்களும் விரிவாக அலசப்பட்டன.கெய்ரோ பல்கலைக் கழகத்தின் ஊட்டச் சத்து பிரிவின் தலைவி மஹா எம் ஹாதி பேசும்போது 'சரியாக அறுக்கப்படாத சில உணவு வகைகளால் மார்பக புற்று நோயும் பெருங்குடல் புற்று நோயும் வரும் சாத்தியங்கள் உண்டு' என்றும் எச்சரித்தார்.

“நீங்கள் இறைச்சி சாப்பிடும் போது அதை உங்களுக்கு விற்றவர் அந்த விலங்குக்கு என்ன உணவளித்தார் என்று தெரிந்து கொள்வது நல்லது. நாம் அறுக்கப்படுவதை ஹராமா ஹலாலா என்று பார்ப்பதோடு அதற்கு முன்னால் அதற்கு தீவனமாக என்ன கொடுக்கப்படுகிறது என்பதையும் ஆராய வேண்டும். நமக்கு நம்பிக்கையான பண்ணைகளில் இருந்து உணவு வாங்குவது மேலும் சிறந்தது.” என்கிறார் ஹாதி.

ஐரோப்பிய ஆணைய வர்த்தக கழகத்தைச் சேர்ந்த போலோ லுர்சியானோ 'ஏற்றுமதி நாடுகள், நுகர்வோர், வியாபாரிகள், மார்க்க அறிஞர்கள் போன்ற அனைவரின் கூட்டு முயற்ச்சியே இந்த கோரிக்கைகளை சரியாக கொண்டு செல்ல முடியும்' என்று கூறினார். டாக்டர் ஹனி அல் ஹசாப் கூறும்போது 'முஸ்லிம் அல்லாத நாடுகளில் அங்கு எவ்வாறு விலங்குகள் அறுக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்க கமிட்டி நிறுவப்பட வேண்டும்' என்று கூறினார்.

-அரப் நியூஸ் 17-02-2012

-------------------------------------------------------------

உயிரினங்களை உணவாகக் கொள் ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெறித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளில் பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப் படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்று வதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1) முதலில் உணவுக்காக அறுக்கப் படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன. 2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையை தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.
3) உணர்வு திரும்பியதும். முழுவது மாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.
4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.
5) மறு பாதி எண்ணிக்கை விலங்கு கள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.
6) பரிசோதனையின் போது கொல்லப் பட்ட எல்லா விலங்குகளுக்கும் ஊ.ஊ.ஏ. மற்றும் ஊ.ஈ.ஏ. பதிவு செய்யப்பட்டன. அதாவது ஊ.ஊ.ஏ. மூளையின் நிலையையும், ஊ.ஈ.ஏ. இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.
இப்போது மேற்கண்ட பரிசோத னையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம். இஸ்லாமிய ஹலால் முறை:
1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலி யினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.
2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப் படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.
3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாக வில்லை என்பதை இது காட்டியது.
4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொல்லும் முறை:
1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன. 2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது. 3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.
மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.
எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.

சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.இந்த முறையில் விலங்குகளை கொல்வதை இஸ்லாம் தடுக்கிறது. ஏனெனில் இதன் முலம் ரத்தம் முழுவதும் வெளியேறுவது இங்கு நடைபெறாது. உடலில் தங்கக் கூடிய ரத்தம் சாப்பிடுபவர்களுக்கு சில அலர்ஜிகளை கொடுக்கலாம்.

மேலும் சிலர் கோணிப் பைகளில் கோழியை விட்டு இரண்டு அடி தரையில் வேகமாக அடித்து அதனை கொல்கிறார்கள். தமிழகத்தில் கூட இந்த முறை சில இடங்களில் பின் பற்றப்படுகிறது. இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு முறை. இவையும் சுகாதாரக் கேடு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அடுத்து டெல்லியில் சில ஹோட்டல்களில் பயன்படுத்தும் ஆடு மாடு போன்றவை எவ்வாறு அறுத்து கொண்டு வரப்படுகின்றன என்ற காணொளியை பார்த்தேன். அன்றிலிருந்து நமது நாட்டில் வெளியிடங்களில் மாமிசம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்துக் கொண்டேன். :-)

---------------------------------------------------------------

கொலெஸ்ட்ரோல் என்பது என்ன?

கொலெஸ்ட்ரோல் (Cholestrol) என்பது வெண்மை நிறத்திலான மெழுகு போன்ற, கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் (காட்டாக எஸ்ட்ரோஜென்), பித்த நீர், வைட்டமின் D போன்ற உடலின் பல்வேறு முக்கியச் செயல்பாடுகளில் பங்கு வகிக்கும் புரதச் சத்துகள் மற்றும் திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் உதவிகரமானதாகும்.

கொலெஸ்ட்ரோலை உடல் எங்கிருந்து பெறுகிறது?

கொலெஸ்ட்ரோலை நமது உடல் பொதுவாக இரண்டு விதங்களில் பெறுகிறது.

முதலாவதாக, நமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது. நமது உடலுறுப்புகளுள் ஒன்றான கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.

இரண்டாவதாக நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கொலெஸ்ட்ரோல் உற்பத்தியாகிறது.

பழங்கள் காய்கறிகள், தானியங்கள் பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில் கொலெஸ்ட்ரோல் இல்லை.

பல்வேறு காரணிகள் இரத்தத்தில் கொலெஸ்ட்ரோல் அளவை அதிகப்படுத்துகின்றன :

- அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்
- அதீத உடற்பருமன் (Obesity)
- உடல் இயக்கக் குறைவான பணிகள்
- புகைப் பழக்கம்
- மன அழுத்தங்கள்
- மதுப் பழக்கம்
- சக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்
- கருத்தடை மாத்திரைகள் உட்கொள்தல்
- வயோதிகம்
- பாலியல் காரணங்கள் (பெண்கள் குழந்தை பெறும் பருவத்தில் குறைந்த கொலெஸ்ட்ரோல் அளவினைப் பெற்றிருப்பர்).
- தலைமுறை

டாக்டர். ஜெயந்தி (டயட்டீஷியன்) கூறும் போது, ‘‘சுவைகூட்டவும், மணமூட்டவும் பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. வீட்டில் இயற்கையான பூண்டு, இஞ்சி, மசாலா செய்து சாப்பிடுவதற்கும் வெளியில் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எண்ணெயை 1000சி சூடேற்றிய பிறகு திரும்பவும் அளவுக்கு மீறி சூடேற்றுவதால் அதன் உண்மைத்தன்மை மாறி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மசாலா + கலர் பவுடர்கள் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் குடலை அரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக ரோட்டோர கடைகளில் பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தரமற்ற பிரியாணிகளாலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. பிரியாணிக்கு வெங்காயப் பச்சடியை தயிரோடு கலந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி கிடைக்கிறது.

கத்திரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் பிரியாணியிலுள்ள கொழுப்பை உடலில் சேர்க்காமல் இருக்கும். வேளா வேளைக்கு வரிந்து கட்டிக்கொண்டு உள்ளே தள்ளக்கூடாது.

ஒரு சராசரி மனிதன் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பிரியாணி சாப்பிடலாம். அதுக்குக் கூட சரியான உடற்பயிற்சி தேவை. முன்பெல்லாம் நாற்பது வயதுக்கு மேல் தான் கண் பிரச்சினை, இடுப்பு வலி, மூட்டு வலியெல்லாம் வரும். இப்போது உணவில் கெமிக்கல் இருப்பதால் 20 வயசிலேயே எல்லாப் பிரச்சினையும் வர ஆரம்பித்துவிட்டது.

எண்ணெய், மசாலாக்கள் அதிகரிப்பால் கேன்சர், உணவுக் குழாய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எல்லா கேட்டரிங் சென்டர்களிலும் உணவு தயாரிக்கும் முறைகளை (HACCP) கடைப்பிடிக்க வேண்டும். மக்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு தேவை’’ என்கிறார்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர். எஸ்.கிருஷ்ணாவிடம் பேசினோம்.

‘‘222 ஆஃப் தி முன்சிபல் ஆக்ட்’ படி சாலையோரங்களில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. ஆனால், சாலையோரங்களில் பலர் கடைகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஏழை, எளிய மக்களிடம் வரவேற்பும் பெற்றுள்ளது. அதற்காக சாப்பிடுபவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.

முக்கியமாக சுத்தமில்லாத தண்ணீரால் ஈக்கோலை, டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். 500 எம்.எல். தண்ணீரில் ஆயிரக்கணக்கான கிருமிகள் அடங்கியிருக்கிறது. சில உணவுகளை ஃபிரிஜ்ஜில் வைத்து வெளியே வைக்கும் போது பாக்டீரியா கிருமிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரித்துவிடும்/. இதற்கு ‘Aflotosin’ விஷத்தன்மை என்பார்கள். சிலர் உணவுகளில் மாத்திரைகள் கலப்பது அதிகரித்து விட்டது.

இதனால் தலைவலி, உடம்பு வலி என பல பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தடுக்க ரெயில்வே ஸ்டேஷன் உணவகங்களுக்கு லைசன்ஸ் கொடுப்பது போல் சாலையோர உணவகங்களுக்கும் லைசன்ஸ் கொடுத்து முறைப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவகங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.’’

ம்... சொல்லவேண்டியதை சொல்லியாச்சு!

நன்றி:--KUMUDAM HEALTH

Tuesday, February 14, 2012

தேமதுரத் தமிழான திருமந்திரத்தில் நனைவோமா!

படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே””””””
-திருமூலர்-திருமந்திரம்


படமாடக் கோயில்: கோயிலில் உள்ள கடவுள் சிலை என்று பொருள் .
நடமாடக் கோயில்: அகத்தில் கடவுளைக் கொண்ட மனிதன் என்று பொருள் .

கோயிலில் உள்ள கடவுள் சிலைகளுக்கு
பலவிதமான வாசனை திரவியங்களைக் கொண்டு
பன்னீர் , இளநீர் , பால் , சந்தனம், விபூதி
போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம் .
சாமி சிலைகளை குளிப்பாட்டுகிறோம் .

பலவிதமான அணிகலன்களை அணிவிக்கிறோம்

கோயிலில் இருக்கும் சாமி சிலைக்கு உணவு படைக்கிறோம்

இவற்றையெல்லாம் கோயிலில் உள்ள சாமி சிலைக்கு செய்வதால் என்ன பயன்? இவற்றையெல்லாம் கல்லாக இருக்கும் சிலைக்கு செய்வதால் என்ன பயன்? ஒரு பயனும் இல்லை .
கோயிலில் உள்ள கடவுளுக்கு செய்வது வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழைக்கு சென்று சேர்வதில்லை. அதாவது நடமாடும் மனிதனுக்கு பயன் இல்லை என்கிறார் திருமூலர் .

நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே


உண்ண வழி இல்லாமல் தவிக்கும் ஏழைக்கு உணவு கொடுக்க வேண்டும்.
வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவருக்கு ,பொருளாதார உதவி செய்ய வேண்டும். வறுமையில் வாடும் ஓர் ஏழைக்கு உதவிகள் செய்ய வேண்டும்.
உண்ண உணவு இல்லாதவர்க்கு உணவு கொடுத்தால்;
உடுத்த உடை இல்லாதவர்க்கு உடுத்த உடை கொடுத்தால்;
இருக்க இடம் இல்லாதவர்க்கு இருக்க இடம் கொடுத்தால்;
அதை விட புண்ணியம் வேறு இல்லை. அதை விடுத்து சிலைகளுக்கு
செலவு செய்வதால் என்ன பயன்? என்று கேட்கிறார் திருமூலர். இவ்வளவு அழகாக சிறியவர்களுக்கும் விளங்கும் வண்ணம் இறை வழிபாட்டை போதித்திருக்க இன்று நாம் கடவுள் பெயரால் அழிக்கும் உணவுப் பொருட்கள் எத்தனை எத்தனை!

திரு மந்திரத்தை அருளிய திரு மூலரைப் பற்றி பல கதைகள் உலவுகின்றன. ஆனால் ஆதாரமான நூல்கள் அவரது வரலாறை உறுதியிட்டு கூறவில்லை. இவர் நந்தீசரின் சீடராக அறியப்படுகிறார். திருமந்திரம் கூட நமது தமிழ் மொழிக்கு அருளப்பட்ட வேதமாகக் கூட இருக்கலாம். ஒரு சில வசனங்கள் சிதைந்திருப்பது மனிதக் கரங்கள் புகுந்ததாகவும் இருக்கலாம். இறைவனே அறிவான். இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களை 'மந்திர மாலை' என்று அழைத்தனர். பிற்காலத்தில் அதன் பெயரை 'திரு மந்திரம்' என்று மாற்றி அதனை ஒன்பது பகுதிகளாக பிரித்தனர்.'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் கூறும் மந்திரங்கள் தமிழகம் முழுதும் பிரபல்யம். தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல் முழு உலகுக்கும் அறிவுரை கூறும் நூலாக திரு மந்திரம் உள்ளது. குர்ஆன் பைபிள் வசனங்கள் பலவற்றோடு மிகவும் ஒத்துப் போகிறது.

-----------------------------------------------------------

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே! அதைப் பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.
-குர்ஆன் 2:271


2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள்.
- குர்ஆன் 2:177


நூல்: முஸ்லிம் 5021
நபி அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒரு மனிதரிடம், ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே ஏன்? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம்விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத்தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

இந்த மூன்றையும் நோக்குங்கால் இஸ்லாம் ஏழைகளுக்கு உதவுவதையே இறைவனுக்கு செய்யும் தொண்டாக போதிக்கிறது. இந்துக்களின் பாலாபிஷேகத்தைப் பார்த்த ஒரு சில முஸ்லிம்கள் நமக்கும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் உருவாக்கிக் கொண்டதுதான் கொடி ஏற்றம், சந்தனக் கூடு எடுத்தல். அங்கு தேர்: இங்கு சந்தனக் கூடு: அங்கு பாலாபிஷேகம்: இங்கு சந்தனாபிஷேகம்:

இரண்டு மதங்களுமே இது போன்று சாப்பிடும் பொருட்களை வீணாக்குவதை தடுக்கிறது. இப்படி பொருட்களை வீணாக்குவதை முகமது நபி வன்மையாக கண்டித்திருக்கிறார்.

-----------------------------------------------------------
அடுத்து கிறித்தவ மதத்தையும் பார்ப்போம். அங்கும் ஏழைக்கு செய்யும் ஊழியமே இறைவனுக்கு செய்யும் ஊழியமாக போதிக்கப்படுகிறது.

நூல் : பைபிள்
மத்தேயு : அதிகாரம் 25
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்

.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.

திரு மந்திரத்தின் கருத்தும் திருக்குர்ஆனின் கருத்தும் பைபிளின் கருத்தும் எந்த அளவு ஒத்துப் போகிறது பார்த்தீர்களா!

முன்பு திண்ணையில் ஒரு இந்து நண்பர் 'நம் தமிழ் மொழியில் எவ்வளவோ அறிவுரைகள் கொட்டிக் கிடக்க எங்கோ இருக்கும் அரபு கலாசாரத்தை ஏன் தூக்கிப் பிடிக்கிறீர்கள்?' என்று கேட்டார். நல்ல கேள்வி: எனது முன்னோர்களான திராவிடர்கள் மிகச் சிறந்த கல்வியறிவும் மார்க்க அறிவும் பெற்றிருந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலாசார புரட்சியால் எனது முன்னோர்களின் நூல்கள் மறைக்கப்பட்டன: கொளுத்தப்பட்டன: எஞ்சிய திருக்குறள் திரு மந்திரம் போன்ற ஒன்றிரண்டு நூல்கள் மட்டுமே தற்போது நமது கைக்கு கிடைக்கிறது. திரு மநதிரத்தின் மேலும் அதிகமான பாகங்கள் நமது கைக்கு கிடைக்கவே இல்லை. போலி ஆன்மீகம் புகுந்ததால் எனது முன்னோர்கள் பூர்விகமான இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை தழுவ நேரிட்டது. எனது மூதாதையர்களின் கலாசாரம் இன்று அழியாமல் இருந்திருக்குமானால் அது முழுக்க முழுக்க குர்ஆனை ஒட்டியே இருந்திருக்கும்.இறைவனே அனைத்தும் அறிந்தவன்!

Sunday, February 12, 2012

உயிரைப் பற்றி சில அதிசயத்தக்க செய்திகள்!

'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.'
-குர்ஆன் 17:85


குர்ஆன் கூறும் இந்த வசனம் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. குர்ஆனின் பல வசனங்கள் உலகில் உள்ள அனைத்து படைப்புகளைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறது. விண்வெளி பயணம் மனிதர்கள் ஆகிய நீங்கள் செய்ய முடியும். இன்னும் பல அறிவியல் முன்னேற்றங்களைக் கண்டாலும் உயிரைப் பற்றி உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அடித்து சொல்கிறது குர்ஆன். 'மனிதனே நீ குறைவாகவே அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறாய். உயிரின் சூட்சுமத்தை உன்னால் அறிந்து கொள்ள முடியாது' என்று கூறுகிறது.

உயிரைப் பற்றி சில யூதர்கள் முகமது நபியிடம் கேட்டபோது என்ன நடந்தது என்பதை பின் வரும் புஹாரி ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.

பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை' என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, 'அபுல் காஸிம் அவர்களே! உயிர் என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி அவர்கள் மெளனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகும் வரை பொறுத்திருந்தேன்)) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப்படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

-ஸஹீஹூல் புகாரி 125
Volume :1 Book :3


இந்த நபி மொழியை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். முகமது நபி ஏற்கெனவெ தயார் செய்திருந்து திட்டமிட்டு சொன்ன பதிலும் கிடையாது இது. தனது தோழர்களோடு நடந்து செல்லும் பொது எதேச்சையாக யூதர்கள் எதிரில் தென்பட அவர்கள் முகமது நபியிடம் தங்களது சந்தேகத்தைக் கேட்கின்றனர். யூதர்கள் கேட்ட கேள்விக்கு அவர்களால் சுயமாக பதில் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் மௌனமாகிறார்கள். ஏனெனில் இது போன்ற அறிவு பூர்வமான விஷயங்களை அந்த அரபு மக்கள் அதிகம் விளங்கியிருக்கவில்லை. பிறகு இறைச் செய்தி வருகிறது. அந்த நேரத்தில் முகமது நபிக்குள் ஏற்படும் மாற்றத்தை நபித் தோழர் கவனிக்கிறார். அன்று இறங்கிய இந்த வசனம் இன்று வரை விஞ்ஞானிகளால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை.

பல சினிமாக்களில் இறந்தவுடன் அந்த உடலிலிருந்து ஒரு ஆவி பிரிவது போலவும் பிறகு அந்த ஆவி வேறொரு உடலில் புகுந்து கொண்டு 'லக லக லக லக லக' என்று புரியாத மொழியில் பேசுவதை பார்த்து நம் தமிழன் வாய் பிளந்து உட்கார்ந்திருப்பது எல்லாம் அறிவியலுக்கு சாததியம் இல்லை. அதே போல் பேய் பிசாசு குட்டி சாத்தான் என்று சொல்லி நாகூரிலும், ஏர்வாடியிலும், வேளாங்கண்ணியிலும் மனநோயாளிகள் புரள்வதை அறிவியலும் ஒத்துக் கொள்வதில்லை இஸ்லாமும் ஒத்துக் கொள்வதில்லை.

ஏதோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரவர் கற்பனைக்கு ஒரு வரையறையை உயிருக்கு வைத்திருக்கிறார்கள்.

இனி உலக வழக்கில் உயிரைப் பற்றி நாம் வைத்திருக்கும் இலக்கணத்தை வரிசையாக பார்ப்போம்.

1.உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?


நம் முன்னோர்களான சிவ வாக்கியர் கூட இந்த உயிரின் சூட்சுமத்தை விளங்காமல் அதனையே பாடலாக எழுதி வைத்து சென்றும் விட்டார்.

2. -உயிருக்கு விக்கி பீடியா தரும் தகவல்

உலக மதங்கள் பலவற்றில் உயிர் என்பது, உயிரினம் ஒன்றின் "பொருள் தன்மை" அற்ற பகுதியைக் குறிக்கும். ஆன்மா, ஆவி போன்ற வேறு பல பெயர்களாலும் குறிப்பிடப்படும் இதிலேயே சிந்தனை, ஆளுமை முதலியன அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இறையியலில், பொதுவாக உயிர் ஒரு உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. சில மதங்கள், உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டன என்கின்றன. வேறு சில மதங்களில் உயிர் எவராலும் படைக்கப்படாத நிலையானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இறப்பின் போது உடலை விட்டு நீங்கும் உயிர் இன்னொரு உடல் எடுத்து உலகில் மீண்டும் பிறக்கின்றது என்கின்றன மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட சில மதங்கள். உடல் உயிர்களுக்கான தற்காலிகத் தங்குமிடம் என்றும், இறுதியில் இறைவனைச் சென்றடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்காக உயிர்களுக்கு இறைவன் உடலைக் கொடுக்கிறான் என்பதும் சில மதங்களின் கொள்கை.
உலகிலுள்ள பொருள்களைக் கிடைபொருள், கிளர்பொருள் என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது.

உயிர் உள்ள பொருளை அறிவியல் கிளர்பொருள் Organism என்கிறது.
இது தூண்டினால் துலங்கும் response to stimuli.
இனப்பெருக்கம் செய்யும் reproduce.
வளர்ந்து மறையும் grow and develope.
தனித்துவம் கொள்ளும் Homeostasis.
இதனைத் தமிழர் மால் என்றனர். மால் என்றால் ஆசை. எல்லா உயிருக்கும் ஆசை உண்டு. பிற்காலத்தில் இதனைச் சத்தி என்றனர். சத்துள்ள பொருள் சத்தி. உடலில் சத்து இருந்தால் இயங்கும். இயங்குவது சக்தி.

உயிர் இல்லாமல் சும்மா கிடக்கும் பொருளைக் கிடைபொருள் Inorganism என்கிறோம். இதுதான் மெய். இதனைத் தமிழர் சிவம் என்றனர்.
விலங்கு, செடி, காளான், வைகல் என்பன உயிரின வகைகள். (such as animal, plant, fungus, or micro-organism), virus)

------------------------------------------------------------

3.டாக்டர் ஹமீத்கான் கருவியலைப் பற்றியும் உயிரைப் பற்றியும் கூறும் தகவலைப் பார்ப்போம்.

நாத்திகத்தைத் தகர்க்கும் கருவியல் கண்டுபிடிப்பு:

பேரண்டத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்துள்ளது என்பதை சென்ற நூற்றாண்டு வரை அறிவியல் உலகம் எவ்வாறு அறியாமல் இருந்ததோ அவ்வாறே கரு வளர்ச்சி தொடர்பான அறிவியலிலும் போதிய விபரங்களை அறிவியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக நாத்திக விளக்கத்தில் ஏதோ நியாயம் இருப்பது போன்று மத நம்பிக்கையற்றவரிடம் ஒரு பிரம்மையை நாத்திகத்தால் ஏற்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் சென்ற நூற்றாண்டின் இறுதியில் கருவியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் கருவுற்ற முட்டையானது உயிருள்ளதன்று. அது உயிரற்ற பிண்டம் என்ற உண்மையை வெளிப்படுத்தி நாத்திகச் சித்தாந்தத்தைத் தகர்க்கும் மற்றொரு அறிவியல் உண்மையாக வெளிப்பட்டது.

உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தை பிறந்த கதை பெரும்பாலோர் மறந்திருக்க மாட்டார்கள். ஆயினும் மூன்று வருடம் கழித்து அவளுக்கு ஒரு சகோதரி பிறந்த வரலாறு அதிகமானோர் அறியவில்லை எனத் தோன்றுகிறது. அது ஒரு சுவாரசியமான வரலாறு.

முதல் சோதனைக் குழாய் குழந்தையைப் பெற்றெடுத்த இங்கிலாந்து தேசத்து பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த 'ப்ரவ்ன்' தம்பதியினருக்கு மூன்று வருடங்கள் கழித்து மற்றொரு குழந்தை வேண்டும் என ஆசை பிறக்கவே அவர்கள் முதலில் அணுகிய மருத்துவக் கழகத்தை மீண்டும் அணுகி தங்களது ஆசையைத் தெரிவித்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகள் அவர்களிடம் மீண்டும் விந்தணுவையும் கரு முட்டையையும் எடுக்காமலேயே 'ப்ரவுன்' தம்பதியரின் இரண்டாவது குழந்தையைச் சோதனைக் குழாயில் நட்டு வளர்த்து பிறகு திருமதி ப்ரவுனின் கருவறைக்கு மாற்றி மற்றொரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும்படிச் செய்தார்கள்.

விந்தனுவும் கரு முட்டையும் எடுக்காமல் குழந்தையை உருவாக்க எப்படிச் சாத்தியமாயிற்று? இக்கதையை எடுத்துக் கூறி அதற்கு விளக்கம் தரும் இந்தியரான டாக்டர் ஹமீத்கான் (இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவரும் அமெரிக்காவின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருப்பவர்) ப்ரவுன் தம்பதியினர் முதல் குழந்தைக்காக மருத்துவ உதவி நாடியபோதே அவர்களிடமிருந்து விந்தணு மற்றும் கரு முட்டைகளை எடுத்து அவைகளை இணையச் செய்து கருவுற்ற முட்டைகளாக ஆக்கி வைத்திருந்தவைகளில் சில மிச்சம் இருந்ததாகவும் அவற்றுள் ஒன்றை எடுத்தே இரண்டாவது குழந்தையை உருவாக்கியதாகவும் கூறுகிறார்.

இங்கு இயல்பாக எழும் கேள்வி உலகில் உள்ள எந்த உயிரையாவது இவ்வளவு காலம் இறந்து போகாமல் பதப்படுத்தி வைக்க முடியுமா? என்பதாகும்.

இந்த நிகழ்ச்சி கருவுற்ற முட்டை மக்கள் நினைப்பது போன்று உயிருள்ள பொருள் இல்லை என்றும் அது உயிரற்ற பொருளே என்றும் காட்டுவதாகக் கூறுகிறார் டாக்டர் ஹமீத் கான்.

கருவுற்ற முட்டை உயிரற்றது என்பதை நிரூபிக்கக் கூடிய சோதனை ஒன்றையும் அவர் கூறுகிறார். ஒரு புழுவையும் அப்புழுவின் கருவுற்ற முட்டையையும் தனித் தனியாக வேறு வேறு குழாயில் வைத்து அவைகளை மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் வைத்திருந்து பிறகு சிறிது நேரம் கழித்துப் புழுவை எடுத்துப் பார்த்தால் அப்புழு இறந்து போயிருக்கும். ஆயினும் அதன் கருவுற்ற முட்டையை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்திருந்து அதன் பிறகு அதிலிருந்து உயிருள்ள புழுவை உருவாக்க முடியும் எனக் கூறுகிறார் டாக்டர் ஹமீத்கான்.

டாக்டர் ஹமீத்கான் கூறும் இந்த விளக்கத்திலிருந்து உயிரினங்களைத் தோற்றுவிக்கும் அவைகளின் கருவுற்ற முட்டை உயிரற்ற பிண்டமே என்பதை தெளிவாக விளங்குகிறோம். கருவில் வளரும் குழந்தையின் உயிர் தொடக்கத்திலேயே அதனிடம் இருக்கும் ஒன்றில்லை என்பதும் கருவறையில் அது வளரும்போது மற்றொரு விதத்தில் பெற்றுக் கொள்வதே என்பதும் தெளிவாகும்.

இதை இன்னமும் விளங்கிக் கொள்ளச் சிரமமப்படும் நாத்திக நண்பர்கள் மிகக் குறைந்தபட்சம் ப்ரவுன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தைக்கு உயிர் வந்ததைப் பற்றி மட்டுமாவது சற்று சிந்திக்க வேண்டும்.

உலகிலுள்ள எந்த உயிரினத்தையும் சற்றைக்கெல்லாம் கொன்றுவிடும் மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு எனும் தாழ்ந்த வெப்பநிலையில் மூன்று வருடம் உயிரற்ற பிண்டமாக தங்கியிருந்து அதன் பிறகு தோற்றமெடுக்கத் தொடங்கிய அக் குழந்தைக்கு உயிர் கிடைத்ததா இல்லையா என்பதையும் உயிர் கிடைத்தது என்றால் அந்த உயிர் எப்படி வந்தது என்பதையும் பற்றி மட்டுமாவது காய்தல் உவத்தல் இன்றி சிந்திப்பது மிகவும் நன்று. சிந்திப்பார்களா!

“நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.”
-குர்ஆன் 2:28

அதே போல் விதைகளை நாம் ஆராய்ந்து பார்த்தாலும் அங்கும் நமக்கு ஆச்சரியமே மிஞ்சுகிறது. எத்தனையோ மாதங்கள் விதைகளை பத்திரப் படுத்தி வெளியில் வைக்கிறோம். காய்ந்த அந்த விதை கிட்டத்தட்ட இறந்த நிலைக்கே சென்று விடுகிறது. என்ன ஆச்சரியம் அந்த விதையை பல மாதங்கள் கழித்து மண்ணில் போட்டு சிறிது தண்ணீரையும் விட்டால் அதற்கு உயிர் வந்து பெரும் மரமாகி கிளையாகி காயாகி கனியாகிறதே? இது எவ்வாறு?

10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
-குர்ஆன் 10:31


http://www.ethirkkural.com/2010/08/synthetic-cell.html

இடையில் நம்ம விஞ்ஞானிகள் செயற்கையாக ஒரு உயிரை உண்டாக்கி கடவுளின் தேவை இல்லாமல் ஆக்கி விட்டோம் என்று தமாஷ் பண்ணினார்கள். அது எவ்வளவு பெரிய போலியான வாதம் என்பதை சகோதரர் ஆஷிக் அவரது பதிவில் அழகாக விளக்கியிருக்கிறார்.

-------------------------------------------------------------

இந்துமதத்தின் ரிக்வேதம் ஆத்மா பிரிந்து சென்று தோன்றிய இடமான பரமாத்மாவுடன் இரண்டரக்கலந்துவிடுகிறது என்று கூறுகிறது. அதே சமயம் மறு பிறவியை சில இந்து நண்பர்கள் நம்புகின்றனர். அது அறிவியல்பூர்வமாக சாத்தியமில்லை என்கின்றனர் அறிவியலார். ஆனால் மறுபிறவி என்ற நம்பிக்கையை வைத்து நமது தொலைக்காடசிகள் தற்காலங்களில் நிறைய காசு பார்க்கும் கொடுமையும் நடந்து வருகிறது.


மறுபிறவி பற்றி சுஜாதா (கற்றதும் பெற்றதும்)

“எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. ஆனால், எதற்கும் ஒரு செட் பனியன், அண்டர்வேர் எடுத்துச் செல்லப்போகிறேன்”

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது — உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டா ? இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா ?அது உடலில் எங்கு இருக்கிறது ? சாவை வெல்ல முடியுமா ? நாம் சாசுவதமாக வாழ முடியுமா என்பவை அந்தக் கேள்வியின் பல வடிவங்கள். நாற்பது வயசுக்குப்புறம் பலர் மனத்தை இது குடைகிறது. இதற்கெல்லாம் பதில் தரும் விதத்தில், Immortality பற்றி ஒரு விஸ்தாரமான கட்டுரை சமயம் கிடைக்குபோது நிச்சயம் எழுதுகிறேன். அதைப்பற்றி எனக்கு தெளிவான கருத்துக்கள் உள்ளன. இப்போதைக்கு Edward Young என்பவரின் ‘Night Thoughts on Life , Death and Immortality ‘ என்னும் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள் கொடுக்கிறேன் –

“நீங்கள் சாசுவதமாக வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்? நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா ? உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா ? இதில் என்ன அதிசயம் !”

கேள்வி: மனித வாழ்க்கையில் இன்னமும் புரியாத புதிராகத் தோன்றுவது எது?

சுஜாதாவின் பதில்: மரணத்துக்குப்பின் என்ன என்பதை அறிந்து கொள்ள மரணம் சம்பவிக்க வேண்டியிருக்கிறதே அதுதான்.

கேள்வி: எல்லாவற்றிற்கும் ஒரு Saturation point இருப்பது போல் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உண்டா?

சுஜாதாவின் பதில்:உண்டு. உயிரின் ரகசியமும் மரணத்துக்குப் பின் என்ன என்பதும் தெரியும் போது விஞ்ஞானம் முற்று பெறும்.

சுஜாதா விஞ்ஞானம் முற்று பெறும் என்று சொல்லி சென்று விட்டார்.ஆனால் முற்று பெறாது. உயிரின் உண்மையை அறிய அன்றும் நமது பேரன்களின் காலத்திலும் ஆராய்ச்சிகள் நடைபெறும். கடைசி வரையில் உயிரின் உண்மையை அறியாமலேயே பூமியில் வாழும் மனித குலமும் அழியத் தொடங்கும்.

இந்த தளத்தில் சென்று மேலும் சில விபரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
http://www.quran-m.com/firas/en1/index.php?option=com_content&view=article&id=437:quran-punches-hole-in-atheism-the-dreams&catid=35:universe&Itemid=91

உயிர் என்றால் என்ன? அது கருப்பா சிவப்பா? மூளையின் செயல்பாட்டில் உந்தப்படுவதுதான் உயிரா? அல்லது காதலன் காதலியிடம் 'என் உயிரையே உனக்காக தருகிறேன்' என்று பொய்யுரைக்கும் போது காதலியும் நம்பி விடுகிறாளே அதுதான் உயிரா? ஆத்மா ஒரு உடலை விட்டு பிரிகிறதே அதை உயிர் என்று சொல்லலாமா? உயிர்களின் அடிப்படை அமினோ அமிலமாகும். இது புரதங்களுடன் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் இணையும்போது இயக்கமுள்ள உயிருள்ளதாக மாறுகிறது. இதனை ஒருசெல் உயிரி என்கிறோம். இந்த ஒரு செல் உயிரி புறச்சூழ்நிலையிலிருந்து உணவைப்பெற்று வளர்கின்றன. வளர்ச்சிபெற்ற இந்த ஒரு செல் உயிரி தன்னைத்தானே இரண்டாக பிரித்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகின்றன. ஒரு செல் உயிரி காலப்போக்கில் புறத்தாக்குதல்களால் பல செல் உயிரிகளாக ஊர்வன, பறப்பன, நடப்பன என்று பரிணாமம் அடைந்தன என்று அறிஞர்கள் கூறுகின்றனரே அதுதான் உயிரா? இதயத்தில் லப்டப் லப்டப் லப்டப் என்று சதா வந்து கொண்டிருக்கும் அந்த சப்தம்தான் உயிரா? என்று மனிதன் மூளையை கசக்கி ஒரு முடிவை இனி வரும்காலத்திலும் எடுக்க முடியாது. ஏனெனில் அதை புரிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட வில்லை.

'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.'
-குர்ஆன் 17:85


தகவல் உதவிக்கு நன்றி:

விக்கி பீடியா, ஆன்லைன் பிஜே, விகடன்

Saturday, February 11, 2012

என் மேல் ஏன் இந்த கொலை வெறி!இந்த வாரம் வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் எனது ரூமில் ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது வேலை: வேலை நேரம் முடிந்து சினிமா சாப்பாடு மற்ற கேளிக்கைகள் என்ற ரீதியில் செயல்படும் பெரும்பான்மையோரை மாதம் ஒரு முறை இது போன்று அழைத்து அவர்களுக்கு வாழ்வின் நோக்கத்தை புரிய வைப்போம் என்று முடிவெடுத்தோம். இது போல் முன்பே பல சகோதரர்கள் சிறப்பாக மார்க்க பணி செய்து வருகின்றனர். அந்த வகையில் சகோதரர் இக்பால் அவர்கள் 'தக்வா' அதாவது 'இறை அச்சம்' என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் அழகிய முறையில் சொற்பொழிவு ஆற்றினார். முதலில் தக்வா என்றால் என்ன என்பதை பார்த்து விடுவோம்.

தக்வா எனும் அரபுச் சொல், விகாயா என்ற வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் "தற்காத்தல்" என்று பொருளாகும். இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருளில் தக்வா எனும் சொல், இறைமறை வழக்கில் "இறையச்சம் - பயபக்தி" என்று பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவன் நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். எனவே, பாவச் செயல்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்கிறோம் என்னும் எண்ண உறுதியை ஏற்படுத்துவது "தக்வா"வாகும்.

இந்த தலைப்பில் சகோதரர் ஒரு நபி மொழியையும் மேற் கோளாக காட்டினார்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் 'நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!" என்று தமக்குள் கூறினர்.

அவர்களில் ஒருவர் 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். விடியற்காலை நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!

மற்றொருவர், 'இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, 'முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!" என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.


மூன்றாமவர், 'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!"
என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார்.

ஆதாரம்: புஹாரி: 2272.
Volume :2 Book :37

ஒரு மனிதனுக்கு இறை அச்சம் இருந்தால் அது எந்த அளவு சமூகத்தில் அவனை நேர்மையாளனாக நடக்க வைக்கும் என்பதற்கு மேற்சொன்ன நபிமொழி சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

இந்த கூட்டத்தை சகோதரர் நெல்லிக் குப்பம் அக்பர் அவர்கள் துவக்கி வைத்தார். கூட்டத்தின் முடிவில் அடுத்த அமர்வில் இன்னும் நிறைய சகோதரர்களை அழைத்து வருவது என்றும் மாற்று மத நண்பர்களுக்கும் அழைப்பு விடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மதுரை காதர், விழுப்புரம் அன்வர் போன்ற சகோதரர்களும் வந்திருந்தனர். அடுத்த கூட்டத்தை இன்னும் சிறப்பாக நடத்துவோம் என்ற முடிவில் இறை பிரார்த்தனையோடு கூட்டம் நிறைவுற்றது.

இனி தலைப்புக்கு வருவோம்! எனது ரூமில் கூட்டம் நடந்திருக்க என்னை ஃபோகஸ் செய்யாமல் பின்புறமாக என்னை காண்பித்த போட்டோ கிராபருக்கு என்மேல் கொலைவெறிதானே! :-)

-------------------------------------------------------------

உடன் இந்த பதிவை பார்த்து விட்டு 'ஆஹா...சுவனப்பிரியனுக்கு சவுதி அரசு பணம் தருகிறது.' என்று யாரும் உள் குத்து பதிவு இட வெண்டாம். ஏனெனில் ஒரு பதிவர் எனக்கு சவுதி அரசு பணம் தருவதாகவும் அதனால்தான் சவுதி அரேபியாவை புகழந்து பதிவு எழுதுவதாகவும் பதிவிட்டிருக்கிறார். தற்போது கிறித்தவ மதத்தை அவர் பாணியில் பரப்ப போகிறாராம். நன்றாக பரப்பட்டும். அடுத்து எனது பதிவு மகுடத்தை எட்ட பல போலி ஐடிக்களை உருவாக்கி வைத்திருப்பதாகவும் கதை அளந்திருக்கிறார். பிளாக்கர் ஐடி ஒன்றும் ஜிமெயில் ஐடி ஒன்று இதைத்தவிர வேறு எந்த ஐடியும் எனக்கு கிடையாது. பதிவை விரும்புபவர்கள் விரும்பி அளிக்கும் ஓட்டைப் பார்த்து இப்படி பொதுவில் வயிற்றெறிச்சலை கொட்டியிருக்க வேண்டாம். பொறாமை என்பது என்ன என்பதை அவரது பதிவிலேயே நேரிடையாக காணக்கிடைத்தது. அவர் சந்தோஷப்படுவார் என்பதற்காககத்தான் 'கழிவறை' பதிவு ஒன்றையும் இட்டேன். அதையும் மகுடம் ஏறட்டும் என்று ஆசைப்பட்டது அவர்தான். அதற்கு முதல் ஓட்டையும் அளித்தது அவர்தான். :-)

மேலும் எனது தேவைக்கு எற்ற சம்பளமும் கௌரமான வேலையும் கிடைத்திருக்கும் பொது சவுதி அரசின் பணத்தை எதிர்பார்த்து நான் இல்லை. ஒருக்கால் எனக்கு சவுதி அரசு பண உதவி கொடுத்தால் அதை வாங்கிக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அதை பொதுவிலும் அறிவிப்பேன். ஏனெனில் இப்படி பணம் வாங்குவது இஸ்லாமிய அடிப்படையில் தவறும் இல்லை. இந்திய அரசின் சட்டத்தின்படி தவறாகவும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட பதிவர் சவுதி அரசோடு தொடர்பு கொண்டு பண உதவிக்கு ஏற்பாடு செய்யவும்.

-------------------------------------------------------------

அடுத்து ஐடியா மணியை பற்றி தமிழ் மணத்துக்கு சிலர் புகார் கொடுத்ததாக அவரது பதிவில் குறைபட்டுக் கொண்டார். அவருக்கு எதிரான கருத்துக்களுக்காக பதிவுதான் இட்டேன். தமிழ் மணத்துக்கு புகார் செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

------------------------------------------------------------

அடுத்து சகோ நிரூபனுக்கு ஒரு விளக்கம்!


//ஒரு நூல் இப்படிக் கூறுகிறது எனக் கூறி,
ஒரு நூலை ஆதாரம் காட்டி, சொல்லுவது போல, இந்துக்கள், கிறித்துவர்கள்
தமது மத நூலை ஆதாரப்படுத்தி இஸ்லாமியச் சொந்தங்களுக்கு கருத்துரைகளைச் சொன்னால் ஏற்க முடியுமா?
இதற்குச் சுவனப்பிரியன் என்ன சொல்லவருகின்றார்?//

இந்த கேள்விக்கு சகோ ஆமினா அழகாக பதில் கொடுத்துள்ளார்.

//இந்த பதிவில் மதம் என்ற ஒன்றை முன்னிலைபடுத்துவதே தவறான விஷயம் நிரூ. சுவனப்பிரியன் சொன்னதில் கருத்து திணிப்புன்னா எதை சொல்றீங்க?

என் இஸ்லாம் இப்படி தான் சொல்லுது. நீயும் கட்டாயம் செய் என சொன்னாரா????

ஈழத்தில் இத்தகைய பிரச்சனை நடக்கும் போது ஆபாசத்தை தவிருங்கள் என தானே சொன்னார்? இங்கே இஸ்லாம் எங்கே வந்தது?//

இனி நான் நிரூபனுக்கு அளிக்கும் விளக்கம்!

மேலும் ஆபாசம், இரட்டை அர்த்த ஆபாச எழுத்துக்கள் என்பதை இஸ்லாம் மட்டும் கண்டிக்கவில்லை. இந்து கிறித்தவ மார்க்கங்களும் கண்டிக்கின்றன. கள், விபசாரம்,திருட்டு,பொய், கொலை, போன்ற பெரும் பாவங்கள் அனைத்தையும் அனைத்து மதங்களுமே கண்டிக்கின்றன. எனவே தான் அந்த பதிவில் திருக்குறளையும் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டேன். பைபிள் வசனம் அந்த நேரத்தில் கிடைக்காததால் அதையும் சேர்க்கவில்லை.

ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள்: முருகனையோ பிள்ளையாரையோ வணங்காதீர்கள் என்று உங்களை பார்த்து நான் கட்டாயப் படுததினால்தான் மேற்கண்ட குற்றச் சாட்டை என்மேல் நீங்கள் வைக்க முடியும்.

Wednesday, February 08, 2012

ஆபாசத்தை தவிருங்கள் பதிவர்களே!

போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: மக்களை எந்த வழியில் நல்வழிப்படுத்துவது: : கை கால் இழந்து வாழ்வை தொலைத்திருக்கும் பல இளைஞர்களின் எதிர்காலம் என்ன? வசதியாக வாழ்ந்து வரும் நாம் அதற்காக என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்காமல் நாளொன்றுக்கு ஆபாச பதிவுகளாக 6, 7 என்று எழுதிக் குவிததுக் கொண்டிருக்கும் பதிவர்களே! கொஞ்சமாவது சமூக அக்கறையோடு செயல்படக் கூடாதா?இன்று உச்சகட்டமாக யாழ்ப்பாணத்தில் விபசார விடுதிகளை திறந்தால் நல்லது என்று ஒரு பதிவர் பதிவிடுகிறார். இந்த கொடுமையை என்ன சொல்ல! வேறொரு பதிவரோ தனது பள்ளி கல்லூரிகளில் பெண்களிடம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்று பதிவுகளாக எழுதித் தள்ளுகிறார். இன்று வரை அகதி முகாமகளில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளின் மறு வாழ்வுக்கு என்ன செய்வது? அதற்கு இந்த இணையத்தையும் பதிவுகளையும் தமிழ்மணத்தையும் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற கேள்வி உங்கள் மனதில் எந்நேரமும இருக்க வேண்டாமா?

சோனியா காந்தியை திட்டி பதிவிடுவதாலோ கருணாநிதியை கொச்சைப் படுத்துவதாலோ அல்லது ஜெயலலிதாவை ஏசுவதாலோ எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நெடுமாறனையும் கோபால்சாமியையும் நம்பி இனியும் மோசம் போகாமல் இந்திய மத்திய அரசு தரும் உதவிகளை ஏற்றுக் கொண்டு சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப முன் வாருங்கள். தமிழக அரசியல்வாதிகள் எவரையும் இனியும் நம்ப வேண்டாம். அவர்களுக்கு இதனால் எத்தனை ஓட்டு கிடைக்கும் என்றுதான் கணக்கிடுவர். உங்களின் நிரந்தர வாழ்வுக்கு வழி ஏதும் சொல்ல மாட்டார். இனியும் தமிழகத்தை எதிர்பார்க்காமல் உங்கள் நாட்டை கட்டியெழுப்ப இலங்கையர்களான நீங்கள் முதலில் முன்னுக்கு வர வேண்டும்.நீ என்ன எங்களுக்கு சொல்வது? எங்களை பார்த்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும்! ஆபாச பதிவுகளை தொடர்ந்து வெளியிடத்தான் செய்வோம் என்றால் இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை.

நலம்வேண்டின் நாணுடமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
-குறள் 96:960

ஒருவன் தனக்கு நன்மையை வேண்டுவானாயின் தான் தீய செயல்கள் செய்ய வெட்கிப் பின்வாங்குபவனாய் இருத்தல் வேண்டும். தன் உயர் குடிப் பிறப்பைக் காத்துக் கொள்ள விருமபுவானாயின் பெரியார் எல்லாரிடத்தும் பணிவுடையவனாய் இருத்தல் வேண்டும்.


அடுக்கிய கோடிபெறினும் குடிப் பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
-குறள் 96:954

நல்ல குடியில் பிறந்தவர் பலவாக அடுக்கிய கோடிக்கணக்கான பொன்னைப் பெறுவதாயிருப்பினும் தம் ஒழுக்கம் குன்றுவதற்குக் காரணமான இழி செயல்களைச் செய்ய மாட்டார்.


'நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்: பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்: இறைவனை அஞ்சுங்கள்: இறைவன் கடுமையாகத் தண்டிப்பவன்'
-குர்ஆன் 5:2


-------------------------------------------------------------
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/02/120207_swamy_lankavisit_audio.shtml

சுப்ரமணியம் சுவாமி இலங்கை விஜயத்தின் போது தமிழோசைக்கு அளித்த பேட்டி:


--------------------------------------------------------------

கிழக்கு மாகாணத்தில் வேளாண்மை அறுவடைக்குரிய இந்திய தயாரிப்பான நவீன ரக இயந்திரத்தை செலுத்துவதற்கு பயிற்சி மற்றும் அனுபவம் பெற்ற சாரதிகள் போதியளவு இல்லாத நிலையில் விவசாயிகள் இந்தியாவிலிருந்து சாரதிகளை வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போர் ஓய்ந்த பின்னர் வேளாண்மை அறுவடையில் மனித சக்திக்கு பதிலாக இயந்திரங்களை கூடுதலாக பயன்படுத்தும் நிலைமை கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ளது.

இந்த இயந்திரங்களை செலுத்தக் கூடிய சாரதிகள் உள்ளுரில் இருந்தாலும் அவர்களிடத்தில் பயிற்சியும் தொழில் நுட்ப அனுபவமும் போதியளவு இல்லாத காரணத்தினால் இந்தியாவிலிருந்து சாரதிகளை தாம் வரவழைக்க வேண்டியிருப்பதாக விவசாயிகளும் இயந்திர உரிமையாளர்களும் கூறுகின்றார்கள்.

இந்திய சாரதிகள் ஏஜண்டுகள் ஊடாக அழைத்து வரப்பட்டாலும் சுற்றுலாப் பயண வீசா பெற்றே நாட்டிற்குள் நுழைவதால் சட்ட ரீதியான பிரச்சினைக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சுற்றுலா பயண வீசாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை செய்த 6 பேர் அண்மையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உள்ளூர் சாரதிகளுக்கு முறையான பயிற்சி கொடுப்பதன்மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-பிபிசி பிப்ரவரி 6 2012


--------------------------------------------------------------

தமிழர்களை காவலதுறையில் சேர்க்க அரசு முடிவெடுத்துள்ளதை பிபிசி வெளியிட்டுள்ளது: அதனைப் பார்ப்போம்:விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இலங்கை போலிஸில் இணைய விண்ணப்பிக்கலாம் என்று இலங்கை போலிஸார் கூறியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து தமிழ் பேசும் போலிஸாரை படைக்கு சேர்ப்பதற்கான மேலும் பொதுவான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலிஸ் பணிக்கு முன்னாள் விடுதலலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் விண்ணப்பிக்கலாம் என்று முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஆனால், முன்பு போர் நடந்த பகுதிகளில் ஆட்சேர்ப்புப் பணிகள் நடப்பதாகவும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் எவரும் அந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் போலிஸ் தரப்பு பேச்சாளரான சுப்பிரிண்டண்ட் அஜித் றோகண பிபிசியிடம் தெரிவித்தார்.

அனேகமாக அனைத்து முன்னாள் போராளிகளும், பலவந்தமாகவே விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டு, போருக்கு அனுப்பப்பட்டார்கள் என்று அவர் கூறினார்.
எந்த விதமான குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல், வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாமல் மனந்திருந்தி போலிஸில் பணியாற்ற விரும்பும் எந்தவொரு முன்னாள் போராளியும் போலிஸ் பணியில் இணைவது குறித்து கவனம் செலுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து முன்னாள் போராளிகளும் போலிஸ் படையில் இணைவது அவ்வளவு இலகுவானதல்ல. அவர்கள் விண்ணப்பிக்கும் பதவியின் தரத்துக்கு ஏற்ப சாதாரண, உயர்தர கல்வியை அல்லது பட்டப்படிப்பை அவர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அரசாங்கத்தினால் புனர்வாழ்வு நடவடிக்கை என்று கூறி சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பல முன்னாள் போராளிகள் பள்ளிக்கூட மட்ட சோதனைகளை பூர்த்தி செய்யவிருக்கிறார்கள்.

போரின் இறுதி வேளையில் இவ்வாறு சரணடைந்ததாக கூறப்படும் சுமார் பத்தாயிரம் பேர் தற்போது விடுவிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
இன்னும் ஆயிரம் பேர் முகாமில் இருக்கும் நிலையில் ஏனையவர்கள் வழக்கு விசாரணைகளுக்காக காத்திருக்கிறார்கள்.

மேலும் நூற்றுக்கணக்கான விடுதலைப்புலிகள் சிறைகளில் இருக்கிறார்கள்.
போருக்கான மிகப்பெரிய காரணம் மொழிப்பிரச்சினைதான் என்பதால், பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட போலிஸ் படையில் தமிழர்களையும், தமிழ் தெரிந்த முஸ்லிம்களையும் ஆட்சேர்ப்புச் செய்வது அவசியமாகும் என்றும் போலிஸ் பேச்சாளர் கூறினார்.

பெண்கள் உட்பட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பதவிகளுக்காக 450 தமிழ் பேசுவோர் பயிற்சியை தற்போது ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த வருடத்தில் போர் ஆண்டு நிறைவு அணிவகுப்பில் இருந்து தாம் திடீரென விலக்கப்பட்டதற்காக தமிழ் போலிஸார் சிலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இது ஒரு பாதுகாப்பு பிரச்சினை என்று அவர்கள் கருதுவது போல் தென்படுவதாக ஒருவர் கூறியிருந்தார்.
-பிபிசி
ஜனவரி 30, 2012

அரசு வேலைகளில் இணைந்து சமூகத்தில் கலப்போம்!


தனி ஈழம் அமையும் போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை வேலையற்றறு இருக்கும் இளைஞர்கள் நாட்களை கடத்தாமல் அரசு கொடுக்கும் வேலைகளை பெற்று சமூகத்தில் ஒன்றரக் கலக்க வேண்டும். இதற்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்ய முன் வர வேண்டும்.