Followers

Wednesday, October 30, 2013

பலி ஆடுகள் தயாராகி விட்டனவா? மோடி கார்ட்டூன்.'செகரட்டரி.... இன்று எனது வேலைகள் என்ன?'

'பாட்னாவில் மிகப் பெரிய பொதுக் கூட்டத்தில் இன்று பேசுகிறீர்கள்.'

'ஏற்பாடெல்லாம் சரியாக செல்கிறதா?'

'எல்லாம் கனக் கச்சிதமாக நமது கட்சியின் முன்னால் ராணுவத்தினர் செய்து வருகிறார்கள் சார்?'

'என்னென்ன ஏற்பாடுகள்?'

'நீங்கள் மேடை ஏறுவதற்கு அரை மணி நேரம் முன்பாக கூட்டத்தில் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும்'

'நம்ம ஆளுங்களும் பாதிப்படைவாங்களே செகரட்டரி?'

'குறைந்த சக்தியுள்ள குண்டுகள்தான் வெடிக்கப் போகிறது சார். பயப்படாதீங்க'

'இதனால் நமக்கு என்னய்யா லாபம்?'

'முஸாஃபர் நகரில் நாம் செய்த கலவரத்தால் சில இஸ்லாமிய இளைஞர்களை ஐஎஸஐ தொடர்பு கொண்டதாக ராகுல் பேசினாரே! அது மக்களிடம் நமக்கு எதிரான கருத்தை கொள்ளச் செய்திருக்கிறது. அதனை இந்த குண்டு வெடிப்புகள் சரி செய்யும்.'

'அடடே...ஆமாம். முஸ்லிம்களை மேலும் அந்நியப்படுத்த இது உதவும். அதோடு எனது எதிரியான நிதிஷ்குமாரையும் கையாலாக முதலமைச்சர் என்ற பெயரையும் எடுக்க வைக்கலாம்... பலே... பலே... பலி ஆடுகள் தயாராயிடுச்சா...'

'அதற்கு ஐந்து முஸ்லிம்களை ஏற்கெனவே தயார் செய்து விட்டோம். நம் மீது எந்த சந்தேகமும் வராத அளவுக்கு முன்னால் ராணுவத்தினர் தீயாக வேலை செய்கின்றனர்.'

'ரொம்ப சந்தோஷம். எப்பாடு பட்டாவது இந்த முறை நான் பிரதமராகி விட வேண்டும். அதை கவனத்தில் கொண்டு இன்னும் என்னவெல்லாம் இந்த நாட்டு மக்களுக்கு என்னால் செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன். பாரத் மாதாகீ ஜே.... ஜெய் ஹிந்த்....'

--------------------------------------------------------------


Tuesday, October 29, 2013

எவரெஸ்ட் சிகரத்தை கடந்த சவுதி பெண்மணி!எவரெஸ்ட் சிகரத்தை கடந்த முதல் சவுதி பெண்மணி ரஹா மொஹர்ரக்! இவரது சாதனையை பாராட்டி பாராட்டு விழா ஒன்று ரியாத்தில் சென்ற சனிக்கிழமை நடந்தது. சவுதி விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் சல்மான் சைதான் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து ரஹா மொஹர்ரக்கின் சாதனையை வெகுவாக பாராட்டியும் பேசினார்.

ரஹா மொஹர்ரக் இது பற்றி கூறும்போது 'எனது நாட்டுக்காக இந்த சாதனையை செய்து முடிக்க எனது குடும்பம் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. எனது விடா முயற்சியும் எனமேல் எனக்கிருந்த நம்பிக்கையும் இறைவனின் கிருபையும் இத்தகைய சாதனையை எவ்வித சிரமமுமின்றி முடிக்க இலகுவானது. தான்சானியாவில் இருக்கும் கிளிமாஞ்சாரோ சிகரத்தையும் நான் கடந்துள்ளேன். ரஷ்யாவில் இருக்கும் 5642 மீட்டர் உயரமுடைய எல்பர்ஸ் சிகரத்தையும் 2012ல் கடந்தேன். அன்டார்டிகாவில் இருக்கும் வின்சன் மலையையும் 2013ல் கடந்துள்ளேன்.'

'சவுதி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உலகின் பார்வைக்கு எனது சாதனை சிறந்த பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது எனது சொந்த முயற்சியில் உண்டானது. இதனால் வேறுபலன் எதனையும் அடையவில்லை. சவுதி பெண்களைப் பற்றி உலகம் வைத்துள்ள தவறான எண்ணங்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினேன். இந்த சாதனையானது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது' என்கிறார் ரஹா முஹர்ரக்.

பெண்கள் படிப்பதையோ, விளையாடுவதையோ, வேலைக்கு செல்வதையோ இஸ்லாமும் தடுக்கவில்லை. சவுதி அரசும் தடுக்கவில்லை. ஆண்களோடு ஒட்டி உறவாடி அதனால் பெண்மைக்கு இழுக்கு வருவதை தடுப்பதற்காகவே சில கட்டுப்பாடுகளை இஸ்லாம் வகுக்கிறது. அதுவும் பெண்களின் நன்மையை நாடியே.... அளவுக்கு அதிகமாக ஆண்களையும் பெண்களையும் கலக்க விட்டதாலேயே பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை தினம் நமது செய்தித் தாள்களில் பார்த்து வருகிறோம்.

இஸ்லாமிய ஆட்சியில் பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற பலரின் விமரிசனங்களுக்கு தனது செய்கையால் அழகிய பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சகோதரியை நாமும் வரவேற்போம்.

தகவல் உதவி:

அரப் ந்யூஸ்

Monday, October 28, 2013

இந்தியன் முஜாஹிதீனை தற்போது இயக்குவது யார்?

AHMEDABAD: The state's intelligence bureau (IB) has alerted the Gujarat Police of possibility of low-intensity blasts during the coming byelections in the state and they are most likely to take place during chief minister Narendra Modi's rallies.

http://timesofindia.indiatimes.com/india/Low-intensity-blasts-may-target-Narendra-Modis-rallies-Gujarat-intelligence-bureau/articleshow/20163056.cms?intenttarget=no

குறைந்த சக்தியுள்ள குண்டுகள் நரேந்திர மோடி பேசக்கூடிய கூட்டங்களில் வெடிக்க வாய்ப்புண்டு என்று குஜராத் ஐபி குஜராத் அரசுக்கு சில நாட்களுக்கு முன்பே தெரியப்படுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. இது எப்படி சாத்தியம்? இந்த உண்மைகளை தெரிந்த அந்த அதிகாரி யார்? எப்படி இவ்வளவு துல்லியமாக அந்த செய்தியை குஜராத் அரசுக்கு சொல்ல முடிந்தது?

இந்தியன் முஜாஹிதீனின் தலைவன் என்ற பெயரில் யாசின் பட்கல் என்ற ஒருவனை சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனரே! அந்த நபரின் நிலை என்ன? அவன் தான் உண்மையான தலைவன் என்றால் இது வரை நடந்த குண்டு வெடிப்புகளுக்கான ஆதாரங்கள் கிடைத்து விட்டதா? இவரோடு தெடர்புடைய இவருடைய கூட்டாளிகள் யார்? யார்? இந்தியா முழுக்க குண்டு வெடிப்பு நடத்த மிகப் பெரிய நெட்வொர்க் தேவை. யாரெல்லாம் இதில் உடந்தை. இந்தியன் முஜாஹிதீனின் தலைவன் சிறையில் இருக்கும் போது நேற்று நடந்த பாட்னா குண்டு வெடிப்பை டெல்லி சிறையில் இருந்தே தனது ஆட்கள் மூலம் செயல்படுத்தினானா யாசின் பட்கல்?

இந்த முறை கைது செய்யப் பட்டவர்கள் என்ன வாக்கு மூலம் கொடுத்தார்கள் என்பது நமக்கு தெரியாது. முகத்தையும் மூடி யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் தூக்கிலும் ஏற்றி விடுவார்கள். குண்டு வைப்பவன் வழக்கம் போல் தனது வேலையை தொடர்ந்து கொண்டே இருப்பான். இதுவே நமது நாட்டின் வழமையாகி விட்டது.

மோடிக்கும் நிதிஷ்குமாருக்கும் கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதல் நடப்பது அனைவருக்கும் தெரியும். இருவருமே வளர்ச்சியை முன்னிறுத்தி தங்களை பிரதம வேட்பாளராக முன்னிறுத்தும் போக்கு கொண்டவர்கள். பாஜகவுக்கும், நிதிஷ்குமாருக்கும் கூட்டணி முறிவு பற்றி ஏற்பட்ட பிறகுதான் பீஹாரின் புத்தகயாவில் குண்டுவெடித்தது. இக்குண்டு ‘Made in Gujarat’ என ஐக்கிய ஜனதாதளம் கூறிய கருத்து பாஜகவை கோபப்படுத்தியது.

இப்போது ‘சக்தி குறைந்த’ குண்டு வெடித்ததாக வெளியிடப்படும் செய்திகள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ‘நான் கொல்லப்படலாம்’ என்று ராகுல் காந்தி கூறிய கருத்து தேசமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மோடியின் விளம்பர யுக்திகளை தவிடுபொடியாக்கிய தருணத்தில் இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதை கவனிக்க வேண்டும். ‘2014 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி...’ காவி பயங்கரவாதிகளால் திட்டமிடப்படும் பல்வேறு சதிகளில் இதுவும் ஒன்றா? என்ற கேள்வியைப் புறக்கணித்துவிட முடியாது. எது எப்படியாயினும் அப்பாவி மக்களை பயங்கரவாதத்தின் மூலம் அரசியல் ஆதாயங்களுக்காக கொல்வதை, அச்சுறுத்துவதை ஜனநாயக சக்திகள் திரண்டு எழுந்து தடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு சாதி, மதம், மொழி, இனம் இல்லை. ஆனால் இப்போது ‘அரசியல் + அதிகாரம்’ என்ற ஆசை வந்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

---------------------------------------------------------

இந்திய உளவுத்துறையால் கைது செய்ததாக கூறப்படும் யாஸீன் பட்கல் என்ற நபர் உண்மையில் யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதுக்குறித்து வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறியதாவது; ‘யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்திபாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர் தாம் யாஸீன் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.’ என குறிப்பிட்டார்.

அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

10-வது வகுப்பு கூட வெற்றிப் பெறாத முஹம்மது அஹ்மத் சித்திபாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று உளவுத்துறையும், ஊடகங்களும் கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

-http://newindia.tv/tn/india/141-crime/1800-2013-08-31-03-09-02

------------------------------------------------------------

நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

"Whenever a bomb blast occurs or such incident takes place, within an hour or so many TV channels start showing that an email or sms has come from the Indian Mujahideen, JeM or Harkatuljihad-e-Islam, or some Muslim name, claiming responsibility.

"An email or sms can be sent by any mischievous person. But when your start screening this on TV and next day in print. The certain message you (media) are sending is that all Muslims are terrorists and they having nothing to do except to throw bombs....You are demonising the entire Muslim community and promoting communalism", Katju said.

"Is this the responsible behaviour of the media? I think it is totally irresponsible behaviour which is promoting communalism in the country. This is very bad. I have raised voice against this, but they said I am suppressing the media", Katju said.

http://www.indianexpress.com/news/media-demonising-muslim-community-markandey-katju/1098926/

-------------------------------------------------------------

நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலனடைந்தது யார்? இதோ விடை கிடைத்து விட்டது.

பாட்னா தொடர் குண்டுவெடிப்பை மேற்கோள்காட்டி, நாடு தழுவிய அளவில் பாஜக பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல்வேறு மாநிலத் தலைநகரங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள அக்கட்சி, பல்வேறு மாநில அரசுகள் பாதுகாப்பு விஷயத்தில் வேண்டுமென்றே அலட்சியமாக இருக்கிறது என்றும், தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் மென்மையானப் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் மக்களுக்குச் சொல்ல முடிவு செய்துள்ளது.

இதற்காக, அனைத்து முக்கிய நகரங்களிலும் பாஜக தலைவர்கள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, பாட்னாவில் மோடி கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்து விளக்கம் அளிக்கவுள்ளது.

பாட்னா, ஹைதராபாத், ராய்ப்பூர், சண்டிகர், சம்பா, பெங்களூர், போபால், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், லக்னோ, கோல்கத்தா, புவனேசுவரம், அகமதாபாத் மற்றும் குவகாத்தி ஆகிய நகரங்களில் இது தொடர்பாக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

-தி ஹிந்து தினசரி


Sunday, October 27, 2013

பாட்னா குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார்?இந்த அயோக்கியர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தங்கள் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க எனது இந்திய சகோதரன் வீணாக ரத்தம் சிந்துகிறான். இந்த நிலை என்று மாறும்? நடந்த குண்டு வெடிப்புகளை வன்மையாக அனைவரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும்.

குண்டு வெடிப்பை நடத்தியது யாராக இருக்கும் என்று சில அநுமானங்களை கனி என்ற சகோதரர் பதிவிட்டிருந்தார். அதனை அப்படியே தருகிறேன்.

பாயின்ட் நம்பர் 1-குண்டு வெடிப்பில் உயிரிழந்தது எந்த ஒரு முக்கிய பிரமுகரும் இல்லை,எல்லாம் கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த அப்பாவிகள்தான்.

பாயின்ட் நம்பர் 2-மாநாடு நடந்த மைதானத்தில் குண்டு வைக்க முடிந்தவனுக்கு,மாநாட்டு மேடையில் குண்டு வைக்க ரொம்ப நேரம் ஆகாது..ஆனா குண்டுகள் வெடித்தது எல்லாம் அப்பாவி பொதுமக்கள் இருந்த பகுதியில்தான்.இவ்வளவு பெரிய கொடூர சம்பவம் நடந்தும்கூட,எந்த ஒரு அச்சமோ பயமோ இல்லாமல் அத்தனை தலைவர்களும் அசால்ட்டா மேடையேறி பேசிட்டு போயிருக்கிறாங்க.

பாயின்ட் நமபர் 3-ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள்,நூறுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள்,காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு வேண்டிய முதலுதவிகளை செய்யவோ,அல்லது இவ்வளவு பெரிய துக்க நிகழ்வு நடந்துவிட்டதே என்று எண்ணி மாநாட்டை கேன்சல் செய்யவோ இல்லை,மாறாக மாநாட்டை நடத்துவதிலேயே குறியாய் இருந்திருக்கிறார்கள்.

பாயின்ட் நம்பர் 4-இந்தியா முழுதும் சுற்று பயணம் செய்தும்,எந்த ஒரு மாநிலத்திலும் நடக்காத அசம்பாவிதம்,மோடியின் மிக பெரிய தலைவலியாக மாறியிருக்கும் நிதிஷ்குமார் ஆட்சி செய்யும் மாநிலத்தில் மட்டும் நடக்கிறதென்றால்,இது கண்டிப்பாய் யோசிக்க வேண்டிய விசயம்தான்.நிதிஸ்குமார் மேல் பழி போடுவதற்கு இவர்களே இதை செய்திருக்க வாய்ப்புக்கள் அதிகம்.

பாயின்ட் நம்பர் 5-திருச்சியில் நடந்த பொது கூட்டத்தில்,எல்லையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்திய மோடி,இந்த மாநாடு நடப்பதற்கு சில மணிநேரம் முன்பு கொல்லப்பட்ட ஐந்து உயிர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேச வில்லை.

மேலே சொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம்,ஒரு வேளை இது இவர்களாலே செய்யபட்டிருக்கலாம் என்ற யூகத்திற்கு வலு சேர்க்கும் காரணங்கல்தானே தவிர,இவர்கள்தான் இதை செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு அல்ல.இதை பற்றி உண்மை வெளிவரும்வரை இவன்தான் இதை செய்தான் என்று சொல்லுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ,அதே மாதிரிதான் இவன் இதை செய்யவில்லை என்று சொல்லுவதும்,பார்போம்.

-s.p.kani
https://www.facebook.com/pakkir.kani.9/posts/653041668061735

குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரத்தில் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பிஜேபியிடமிருந்து வருகிறது. மோடியும் நிதிஷ்குமாரை பலவாறு விமரிசிக்கிறார். மோடியை முன்பு பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று அவமானப்படுத்தியதையும் இன்று வரை பிஜேபி யோடு உறவு வைத்துக் கொள்ள எந்த சமிக்ஞையும் நிதிஷிடமிருந்து வராததும் மோடி எந்த அளவு நிதிஷிடம் கோபமாக உள்ளார் என்பதைக் காட்டுகிறது.

ல்லலு பிரசாத் தற்போது சிறையில் உள்ளார். குழப்பத்தை உண்டு பண்ண அவரது ஆட்களின் வேலையாகவும் இருக்கலாம். இந்த வகையிலும் விசாரணை முடுக்கி விட வேண்டும்.

இவை எல்லாம் யூகங்கள் தான். வெளி நாட்டு சதிகளோ அல்லது வேறு ஏதும் தீவிரவாத குழுக்களோ கூட செய்திருக்கலாம். இது போன்று அப்பாவி மக்கள் இறப்பதை தடுக்க அரசு உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்து தூக்கில் ஏற்ற வேண்டும். அதை அரசு செய்யுமா?

ஒரு முஸ்லிமோ அல்லது இஸ்லாமிய தீவிரவாத அமைப்போ இந்த காரியத்தை செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களின் இலக்கு மோடிதான். அப்பாவி பொது மக்கள் அல்ல. இந்த குண்டு வெடிப்புகளால் பிஜேபியின் செல்வாக்கு உயரும். எனவே எந்த முஸ்லிமும் இந்த காரியத்தை செய்ய துணிய மாட்டான். ஆனால் பிஜேபி சில பெயர் தாங்கி முஸ்லிம்களை கூலிக்கு அமர்த்தி இந்த காரியத்தை செய்யவும் வாய்ப்புள்ளது.

வழக்கம் போல் 'இந்தியன் முஜாஹிதீன்' வேலை என்று சில முஸ்லிம்களை கைது செய்து வழக்கை திசை திருப்பும் வேலையும் நடக்கலாம். அதைத்தான் பிஜேபியும் எதிர்பார்த்து காயை நகர்த்துகிறது. எந்த அப்பாவி முஸ்லிம் இந்த முறை பலிகடா ஆகப் போகிறானோ பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, October 26, 2013

பலதார மணத்துக்கு சவுதி பெண்கள் ஆதரவு!ஒரு ஆண் வசதியும் உடல் ஆரோக்கியமும் இருக்கும் பட்சத்தில் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் முடிக்கலாம் என்று இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதியை உலக முஸ்லிம்களில் 90 சதவீதமான பேர் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் ஒரு மனைவியையும் அதற்கு பிறக்கும் குழந்தைகளையும் படிக்க வைத்து ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் அனேக முஸ்லிம்களுக்கு. எனவே இஸ்லாம் அனுமதித்தாலும் இந்த வாய்ப்பை பலரும் பயன் படுத்துவதில்லை.

சவுதியில் கூட மிக சொற்பமான நபர்களே பலதாரமணம் புரிபவர்களாக உள்ளனர். உலகம் முழுவதுமே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடே மிகைத்துள்ளதால் அது சவுதியிலும் பிரதிபலிக்கிறது. மேலும் குழந்தைகள் பெரியவர்களாக ஆனவுடன் தந்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் திருமணத்தை வெறுக்கின்றனர். முதல் மனைவியும் அனுமதிப்பதில்லை. நம் நாட்டிலும் இஸ்லாமியர்கள் இந்த பலதார மணத்தை சற்று தூரமாக்கியே வைத்துள்ளனர். இது பரவலாக உலகம் முழுவதும் உள்ளது.

ஆனால் சவுதியில் அதிசயமாக கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சில கல்லூரிப் பெண்கள் பலதாரமணத்தை ஆதரித்து அறிக்கை விட்டுள்ளனர். ட்விட்டர் குழுமத்தில் இந்த செய்தி சுற்றுக்கு விடப்பட்டதால் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த கருத்துகளுக்கு சவுதி பெண்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.

'இந்த நாட்டில் திருமணம் ஆகாமல் தேங்கி கிடக்கும் பல லட்சம் முதிர் கன்னிகளின் விடிவு பலதார மணத்திலேயே உள்ளது.' என்று பெண்கள் தரப்பிலிருந்தே கோரிக்கை வந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலதார மணத்தால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்: அவர்களின் உரிமை மறுக்கப்படுகின்றனது: என்ற வாதம் பெண்ணிய வாதிகளால் வைக்கப்படுகிறது. ஆனால் திருமணம் ஆகாமல் வீட்டிலே முடங்கிக் கிடக்கும் அந்த முதிர் கன்னிகளுக்கு என்ன பதிலை அவர்கள் வைத்துள்ளார்கள்?

மெக்காவில் மட்டும் 396248 முதிர் கன்னிகள் உள்ளதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன. அதே போல் ரியாத் மற்றும் தம்மாம் ஏரியாக்களில் மட்டும் 327427 முதிர் கன்னிகள் இருப்பதாக அரசு கூறுகிறது. பெண்ணியம் பேசுபவர்கள் இந்த முதிர் கன்னிகளுக்கு என்ன பதிலைத் தரப் போகிறார்கள்?

சுலதான் அல் சுபயீ சவுதி நாட்டவர்: பலதார மணம் குடும்பத்தில் பல சிக்கல்களை கொண்டு வருகிறது. எனவே நான் ஒரு மனைவியுடனேயே வாழ்க்கையை ஓட்டுகிறேன்.

இகோயிங் சவுதி நாட்டவர்: முதல் மனைவியையும் பின்னால் கட்டக் கூடிய மனைவிகளையும் சமமாகவும் நீதமாகவும் நடத்தத் தெரிந்தவர்களே பலதார மணத்தின் பக்கம் செல்ல வேண்டும். இஸ்லாம் இதனையும் விரும்புகிறது.

சாமியா சவுதி பெண்மணி: பலதார மணம் வேறொரு சிக்கலையும் கொண்டு வரும். ஒவ்வொரு மனைவிக்கும் எட்டு குழந்தைகள் என்றால் ஒரு ஆணுக்கு 32 குழந்தைகள் ஆகி விடும். இந்த அதீத மக்கள் பெருக்கமானது மேலும் பல சிக்கல்களை கொண்டு வரும் என்கிறார்.

பெண்கள் அதிகமாக மஹர் கேட்பதும் வாழ்வாதார செலவுகள் அதிகரித்து விட்டதும் சவுதி இளைஞர்கள் திருமணம் முடிக்க தடையாக இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே அரசு சவுதி இளைஞர்ளுக்கு திருமண உதவி திட்டங்களை இன்னும் அதிகமாக்கி அந்த முதிர் கன்னிகளின் வாழ்வில் வசந்தம் வீசச் செய்வார்களாக!

தகவல் உதவி:

சவுதி கெஜட்


எனது நண்பர் ஒருவருக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் குழந்தை பாக்கியம் கிடையாது. குறை பெண்ணிடத்தில் உள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. நான் அவரிடம் 'இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிப்பதால் உங்கள் மனைவியின் சம்மதத்தோடு ஏன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது?' என்று வினவினேன். 'இஸ்லாம் அனுமதித்தாலும் எனது மனம் இடம் கொடுக்கவில்லை. எனது மனைவிக்கு செய்யும் துரோகமாக அதைப் பார்க்கிறேன்.தமிழ் முஸ்லிம்களாகிய நாம் இந்த பழக்கத்தை கடைபிடிப்பதில்லை' என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாகி விட்டேன்.

அந்த காலத்திலிருந்தே உலக மதங்கள் அனைத்தும் பலதார மணத்தை ஆதரித்தே வந்துள்ளன என்பதற்கு பின் வரும் ஆதாரங்கள் சாட்சிகளாக உள்ளன.

1. மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாகச் சொல்லப்படுகிறது. (இராஜாக்கள் 11:3).

2. மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. (சாமுவேல் 5:13).


3. பல்வேறு மனைவிகளுக்குப் பிறந்த மகன்களுக்கிடையே சொத்துக்களை எவ்வாறு வினியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7).

4. மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்கு மட்டுமே தடையுள்ளது. (லேவியராகமம் 18:8).

5. அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என 'தல்முதிக் (Talmudic) பரிந்துரைக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதார மணப் பழக்கத்தைப் பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ரேலுக்கு வந்துக் குடியேறும் வரை, தொடர்ந்து பலதார மணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ரேலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே பிற்பாடு அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும், சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதார மணத்திற்கு அனுமதி நடைமுறையில் இருக்கவே செய்கிறது.

6.'குழந்தையற்ற விதவை, மரணித்த கணவனின் சகோதரனை - அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட - அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மணக்க வேண்டுமெனக் கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10) (விதவையின் துன்பநிலைகள் என்ற பகுதி காண்க).

7.ஒரு பார்பனர் நான்கு மனைவியரை மணக்கலாம் (விஷ்ணுஸ்மிருதி 24:1)

8.கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது.

9.அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரௌபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது.

10.ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட (கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார்.

11.முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.

இந்த பதிவை எழுதியதால் எல்லோரும் பலதார மணம் செய்து கொள்ளுங்கள் என்று நான் சொல்ல வருவதாக யாரும் நினைக்க வேண்டாம். இறைவனின் கட்டளையானது எந்த காலத்திலும் ஏதோ ஒரு வகையில் மனித குலத்துக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும் என்ற கருத்தையே சொல்ல வந்தேன்.

Friday, October 25, 2013

இஸ்லாமிய இளைஞர்கள் ஐஎஸஐ தொடர்பு? ராகுல் காந்தி

இஸ்லாமிய இளைஞர்கள் ஐஎஸஐ தொடர்பு? ராகுல் காந்திஉபியின் லக்னோ வில் ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது பேசியதாவது:

நான் கலவரம் பாதித்த முஜாஃபர் நகருக்கு சென்று அங்குள்ள ஹிந்துக்களை சந்தித்தேன். அங்குள்ள முஸ்லிம்களை சந்தித்தேன்.பெண்களிடம் கேட்டேன். குழந்தைகளிடம் கேட்டேன். 'பையா...உங்களுக்குள் என்ன பிரச்னை? ஏன் இத்தனை கலவரங்கள்?' என்று கேட்டேன். இரு தரப்பிலும் எனக்கு கிடைத்த பதில் 'எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அண்ணன் தம்பிகளாகத்தான் பழகி வருகிறோம். சிறு பிரச்னையும் வலிந்து பெரிதாக்கப்படுகிறது வெளியிலிருந்து வந்த ஒரு சிலர் தான் பிரச்னைகளை பெரிதாக்கி இந்த அளவு கொண்டு வந்து விட்டுள்ளனர்' என்று கூறுகின்றனர். இந்த பிரச்னையில் இந்து முஸ்லிம்களுக்குள் பிரிவினையை உண்டு பண்ணி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய பிஜேபி முயல்கிறது. இது சாதாரண அரசியல் முயற்சி என்று அவர்கள் நினைக்கின்றனர். இந்து முஸ்லிம் பிரிவினையில்தான் உங்களின் அரசியல் வாழ்வு பிரகாசிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

ஆனால் இதனால் விளைந்த பலன் என்ன? இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சீனியர் ஆபிஸர் எனது அறைக்கு வந்தார். 'என்ன விஷயம்?' என்று கேட்டேன். அதற்கு அந்த போலீஸ் ஆபிசர் 'ராகுல்ஜி...நான் என்ன சொல்வது? முஜாஃபர் நகரில் தனது தாயை இழந்த, தனது சகோதரனை இழந்த, தனது தந்தையை இழந்த 10க்கு மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்களிடம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தொடர்பு கொண்டு பேசியது தெரிய வருகிறது. இந்தியாவுக்கு எதிராக அவர்களை பயன்படுத்த முயற்சிக்கிறது' என்று கூறினார். பிஜேபி செய்த அரசியல் நிகழ்வுகள் நமது நாட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை எந்த அளவு ஆபத்தான வழிக்கு கொண்டு செல்கிறது என்பதை பார்த்தீர்களா? இதற்கு என்ன பதிலை பிஜேபி வைத்துள்ளது? அந்த இளைஞர்கள் தவறான வழிக்கு சென்றால் அதற்கு யார் காரணம்?

நான் அந்த இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். பாகிஸ்தானின் சதி வலையில் வீழ்ந்து விடாதீர்கள். உங்களுக்குரிய நியாயம் கண்டிப்பாக இந்த நாட்டில் கிடைக்கும்.' என்று கூறிக் கொள்கிறேன்.

இது தான் ராகுல் காந்தி பேசிய பேச்சின் தமிழாக்கம். ஆனால் இதனை ஏதோ இஸ்லாமிய இளைஞர்களுக்கு எதிரான பேச்சாக பிஜேபியின் தலைவர்களும், சில உபி மௌலவிகளும் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அந்த இளைஞர்களை பாகிஸ்தான் நெருங்க யார் காரணம்? பிஜேபி அல்லவா? அந்த கலவரத்துக்கு தூபம் இடாமல் முஸ்லிம்களை கொல்லாமல் இருந்திருந்தால் அந்த இளைஞர்களிடம் பேசுவதற்கு பாகிஸ்தானுக்குத்தான் தைரியம் வந்திருக்குமா?

நமது நாடு செழிப்புற, இந்துவும் முஸ்லிமும் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால் முதலில் இந்துத்வாவை இந்த நாட்டை விட்டு முற்றிலுமாக துடைக்க வேண்டும். அதன் சாரம் தான் ராகுலின் பேச்சு. தற்போது மிகச் சிறந்த பேச்சாளராக வளர்ந்து விட்டார். மோடிக்கு சரியான போட்டியாக வருங்காலத்தில் பரிணமிப்பார். மோடி தனது தவறுகளுக்கு தண்டனை பெற ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். ஒரு சில குறைகள் காங்கிரஸிடம் இருந்தாலும் பாசிச சக்திகளிடமிருந்து நமது நாட்டை காக்க, வர்ணாசிரம சட்டம் நமது நாட்டை ஆளாமல் காக்க தற்போது உள்ள ஒரே வழி ராகுலை பிரதமராக்குவதுதான். ஏனெனில் ஊழல் பிஜேபி வந்தாலும் நடக்கத்தான் போகிறது. ஊழலை விட மிகப் பெரும் ஆபத்து பன்முகம் கொண்ட நமது நாட்டுக்கு மோடி போன்ற கயவர்கள் அதிகாரத்துக்கு வராமல் தடுப்பதே...நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் அதனைத்தான் செய்வார்கள்.

Thursday, October 24, 2013

மலாலா யூசுஃபின் பிரத்யேக பேட்டி!

இந்திய மீடியாவுக்கு முதன் முதலாக மலாலா யூசுஃப் பேட்டியளித்துள்ளார். என்டிடிவி யின் பர்கா தத் அவரை பிரத்யேக பேட்டி கண்டுள்ளார்.

'முதலில் எனது உயிரை காப்பாற்றி நலமாக்கிய அந்த இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். நான் எனது பள்ளியிலிருந்து வெளியேறிய போது இரண்டு நபர்கள் வந்து 'இதில் யார் மலாலா யூசுஃப்?' எனக் கேட்டனர். என்னை அடையாளம் கண்டு கொண்டு என்னை நோக்கி சுட்டனர். நான் தான் மலாலா என்று அவர்களுக்கு பதில் கூறக் கூட எனக்கு அவர்கள் அவகாசம் தரவில்லை. மூன்று தோட்டாக்கள் பாய்ந்தன. ஒன்று என் மீதும் மற்ற இரண்டும் எனது தோழிகள் மீதும் பாய்ந்தன. எனது இரண்டு தோழிகளும் இதனால் பாதிக்கப்பட்டனர். உடன் மயக்கமாகி விட்டேன். என்னை சுற்றி கூட்டம் சூழ்வதை உணர முடிந்தது. எனது தந்தையை அந்த கூட்டத்தில் தேடினேன். அதற்குள் எனது நினைவு என்னை விட்டு சென்று விட்டது.'

"அதன் பிறகு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு எனது சுய நினைவு சென்று கோமா நிலைக்கு சென்று விட்டேன். அந்த நேரத்தில் நடந்த சில நிகழ்வுகள் லேசாக எனது நினைவில் இன்றும் இருந்து வருகிறது. மருத்துவ மனையிலிருந்து சீக்கிரமாக வீட்டுக்கு சென்று விடலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் எனது உடல் நிலையோ அந்த வீட்டுக்கு திரும்பும் சூழலில் இல்லை. அதன்பிறகு என்னை சிகிச்சைக்காக இங்கிலாந்து கொண்டு சென்றனர். அன்றிலிருந்து எனது வாழ்க்கை முற்றிலும் மாறி விட்டது. இன்று மீடியாக்களில் பேசப்படுபவளாக மாற்றப்பட்டுள்ளேன்."

பர்காதத்: தாலிபான்களை கண்டு பயப்படுகிறீர்களா?

மலாலா யூசுஃப்: மனித உருவில் நடமாடும் சில சாத்தான்களை கண்டு பயப்படுகிறேன். தாலிபான்களை அல்ல.

------------------------------------------------------------

பெண்கள் கல்வி கற்பதையோ, அவர்கள் வேலைக்கு செல்வதையோ இஸ்லாம் ஒரு காலும் தடை செய்யவில்லை. அவர்களின் கற்புக்கு பாதகம் வராமல் அவர்களின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று தான் இஸ்லாம் கட்டளையிடுகிறது. இதனை நன்கு மலாலா யூசுஃப் போன்றவர்கள் உணர்ந்து கொண்டு இஸ்லாம் காட்டித் தரும் வழியில் தங்களின் முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய சமூகம் இவரை எந்த வகையிலாவது இஸ்லாமிய நடைமுறைகளிலிருந்து வெளியாக்க திட்டமிடுவர். அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் சமயோஜிதமாக நடந்து கொள்வார் என்று நம்புவோமாக...

மேலும் பெண்களின் முன்னேற்றத்துக்கோ, அவர்களின் படிப்பு, வேலைகளுக்கோ தாலிபான்கள் என்றுமே எதிரிகள் அல்ல என்று தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் தனது பெருநாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களின் பெயரை சமூகத்தில் கெடுக்க அமெரிக்கா பல நாச வேலைகளை செய்து விட்டு பழியை தாலிபான்களாகிய எங்கள் மீது போட்டு விடுகிறது. மீடியாக்கள் எங்கள் வசம் இல்லாததால் இந்த உண்மைகள் வெளியில் வருவதில்லை என்று முல்லா உமர் விடுத்துள்ள செய்தியையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தாலிபான்கள் பல விஷயங்களில் இஸ்லாத்துக்கு மாற்றமாக நடக்கின்றனர் என்பதையும் நான் மறுக்கவில்லை. அதற்கான கண்டனங்களையும் நாம் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானைப் பொறுத்த வரையில் அதன் கட்டுப்பாடு முழுவதும் அமெரிக்க படைகள் வசம் உள்ளது. அமெரிக்கா தாலிபான்கள் மேல் பொது மக்களின் வெறுப்பு ஏற்படுவதற்காகக் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டு பழியை தாலிபான்கள் மேல் போட வாய்ப்புள்ளது. தாலிபான்கள் இந்த செயலை செய்திருந்தால் அதனை வன்மையாக கண்டிப்போம். ஆனால் உண்மை குற்றவாளி யார் என்பது இறைவனுக்கே தெரியும். எனவே தான் மலாலா நேரிடையாக தாலிபான்களை குற்றம் சுமத்தாமல் பொதுவாக குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகினாலே அங்கு அமைதி திரும்ப வாய்ப்புள்ளது. அங்கு அமைதி திரும்பி அந்த மக்கள் சுதந்திரமான ஒரு அரசை பெற்று தங்களின் வாழ்வை அமைதியுடன் கொண்டு செல்ல அந்த ஏக இறைவனிடம் பிரார்த்திப்போமாக....

தமிழன் என்று சொல்லடா! தலை குனிந்து நில்லடா!தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு 350 கோடியாக நிர்ணயம். 'காந்தி' மண்டபத்தில் கூட்டம் நடத்தி அதிகாரிகள் அறிவுரை!
- செய்தி

காந்தி மண்டபத்தில் இலக்கு நிர்ணயித்திருககிறார்களாம். இந்த நாடு எங்கு போய்க் கொண்டிருக்கிறது?

Wednesday, October 23, 2013

முன்னால் இஸ்லாமிய எதிரி: இன்று நண்பன்!அர்னார்ட் வேன் டோர்ன் - ஐரோப்பாவின் டச்சு சமூகத்தை சேர்ந்த இந்த சினிமா டைரக்டரை பலரும் அறிந்திருப்பர். 'ஃபித்னா' என்ற பெயரில் நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் முகமாக ஒரு சினிமாவை தயாரித்து பலரது விமர்சனத்துக்கும் ஆளானார். தான் செய்த பெரும் தவறை உணர்ந்து தற்போது திருந்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு ஹஜ் செய்ய சவுதி வந்திருந்தார்.

'நான் முன்பு செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசியல் கட்சி ஒன்றை துவங்க இருக்கிறேன். அது நெதர்லாந்துக்கு மட்டுமல்லாது முழு ஐரோப்பாவுக்கும் பயனுள்ள கட்சியாக இருக்கும். இந்த கட்சியின் முக்கிய கொள்கை இஸ்லாத்தை பாதுகாப்பதாகவும் முஸ்லிம்களை அரவணைத்து செல்லக் கூடியதாகவும் இருக்கும். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் ஒன்றிணைத்து இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் எதிர் கொள்ளும் பிரச்னைகளை களைய நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்.

நான் போன வருடம்தான் இஸ்லாத்தை தழுவினேன். பிப்ரவரியில் உம்ராவுக்காக சவுதி வந்தேன். தற்போது இந்த வருடம் ஹஜ்ஜையும் முடித்துள்ளேன். முன்பு அந்த திரைப்படத்தை எடுத்த போது எனக்கு இஸ்லாத்தைப் பற்றிய ஒரு பொய்யான தோற்றத்தையே காட்டினர். ஊடகங்களும் அதைத்தான் செய்தன. அவ்வாறு ஒரு படம் எடுத்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். கிரீட் வெல்டர்ஸ் என்ற அரசியல் கட்சியின் ஆலோசனையின் பேரிலேயே அந்த படத்தை எடுத்தேன். அதில் உள்ள விபரங்களை கொடுத்தது இந்த அரசியல் கட்சிதான்.

நான் முன்பு செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக 'மனித குலத்தின் முன் மாதிரி முகமது நபி' என்ற படத்தை எடுக்கும் திட்டம் தற்போது உள்ளது. இதற்கு கனடா முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவுத்துள்ளன. அவர்களின் ஒத்துழைப்போடு எனது அடுத்த படம் வெளி வரும். முகமது நபியின் வாழ்க்கையில் நடந்த சில வரலாறுகளை குறும்படங்களாக எடுக்கும் திட்டமும் உள்ளது. இது ஐரோப்பாவில் உள்ள ஐந்து மொழிகளில் வெளியாகும். மதினா நகரத்தின் சரித்திரத்தை விவரிக்கும் 'மதினா' என்ற திரைப்படம் எடுக்கும் திட்டமும் உள்ளது.

ஒரு இடத்தில் நான் ஆச்சரியப்பட்டு போனேன். பாதுகாப்புக்காக நின்ற ஒரு ஊழியர் வயதின் தள்ளாமையால் சிரமப்பட்ட ஒரு மூதாட்டியை தனது தோளில் சுமந்து கொண்டு ஜமராத் பாலத்தில் சாத்தானுக்கு கல் எறிவதற்கு உதவி செய்த காட்சி என்னை பிரமிப்புக்குள்ளாக்கியது. அந்த மூதாட்டி யார்? எந்த நாடு? என்றெல்லாம் அந்த சகோதரர் பார்க்கவில்லை. இது போன்று மனதை நெகிழச் செய்த பல நிகழ்வுகள். இவற்றை எல்லாம் புத்தகமாக தொகுத்து வெளியிட உள்ளேன்.

முன்பு செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கோரினேன். தற்போது எனது வாழ்வு முற்றிலுமாக மாறி விட்டது. எனது தாயகத்துக்கு சென்று எனது மனைவிக்கும் எனது மூன்று குழந்தைகளுக்கும் இஸ்லாத்தை எத்தி வைப்பேன். முன்பே அவர்கள் குர்ஆனை படித்து வருகிறார்கள். அவர்களின் மனத்திலும் மாற்றத்தை இறைவன் ஏற்படுத்துவான் என்று நம்புகிறேன்' என்று உணர்வுபூர்வமான பேட்டியை சவுதி கெஜட்டுக்கு அளித்தார் இந்த சினிமா டைரக்டர்.

இஸ்லாத்தை ஒழிப்பதை தங்களது முழு நேர வேலையாக செய்து வரும் நம் ஊர் இந்துத்வாவாதிகளும் ஒரு நாள் உண்மையை உணர்ந்து இவரைப் போல் செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்னிப்பை கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த நாளுக்காக நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி

சவுதி கெஜட்Tuesday, October 22, 2013

ஹஜ்ஜூக்காக பசுக்களை விற்ற மூதாட்டி!'கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹஜ்ஜூக்கு வர முயற்சி செய்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜூக்கு செல்வதற்கான பணம் என்னிடம் முழுமையடையாமல் போகும். உடன் எனது ஹஜ்ஜூ செய்ய வேண்டும் என்ற ஆவலை அடக்கிக் கொள்வேன். ஆனால் இந்த வருடம் இறைவன் எனது ஆவலை பூர்த்தி செய்துள்ளான். இந்த வருடமும் போதிய பணம் சேரவில்லை. முடிவில் எங்களது வீட்டில் இருந்த இரண்டு பசுக்களை விற்று ஹஜ்ஜூக்கான பணத்தை பூர்த்தியாக்கினேன்' என்று ஆவலோடு சொல்கிறார் 80 வயதைக் கடந்த ஜைனப். இவர் நமது நாடான இந்தியாவிலிருந்து ஹஜ்ஜூ செய்ய வந்தவர்.

'இரண்டு பசுக்கள் போனதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் எனது 25 வருட கனவு இன்று பூர்த்தியானது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உலக முஸ்லிம்கள் அனைவரோடும் 'எல்லோரும் ஒரு தாய் மக்கள்' என்ற உணர்வோடு நான் செய்த இந்த ஹஜ்ஜை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவு சந்தோஷத்தோடு உள்ளேன். மெக்கா நகரம் என்னை பிரமிப்புக்குள்ளாக்கியது. எனக்கு மிகுந்த திருப்தியையும் மன நிம்மதியையும் தந்தது இந்த அழகிய ஊர். எனக்கு அனுமதி கிடைத்தால் இறக்கும் வரை இந்த ஊரிலேயே தங்கி விடலாம் என்று கூட எண்ணுகிறேன். இன்று எனது குடும்பத்தை காண எனது நாட்டுக்கு செல்கிறேன். என் வாழ்நாளில் இந்த ஊரையும் இங்கு நான் பெற்ற படிப்பினைகளையும் மறக்க இயலாது. இந்த வாய்ப்புகளை அளித்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.' என்கிறார் ஜைனப்.

ஹஜ்ஜூக்கு பல லட்சங்களை செலவு செய்து வருபவர்களின் சந்தோஷ பகிர்வுகளை வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவு ஒவ்வொரு வருடமும் பல நாட்டவர்களின் அனுபவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். அதே சமயம் தனது வாழ்வாதாரமாண பசுக்களை விற்று விட்டு ஹஜ் செய்யுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் பூரணமாகி எந்த கடன்களும இல்லாத செல்வந்தர்களையே வாழ்நாளில் ஒரு முறை ஹஜ் செய்யுமாறு பணிக்கிறது இஸ்லாம். இந்த மூதாட்டி மெக்காவையும மதினாவையும் பார்க்க வேண்டும்: தனது வாழ்நாளில் காஃபாவிலும் தொழுது விட வேண்டும் என்ற அதீத ஆசையினால் இன்று ஹஜ்ஜை நிறைவு செய்துள்ளார். இவரது ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொள்வானாக!

ஆனால் முழுமையான வசதிகள் இருந்தும் உடல் ஆரோக்கியம் இருந்தும் இப்படி ஒரு கடமை இருப்பதை அலட்சியப்படுத்திக் கொண்டு நம்மில் பல செல்வந்தர்கள் தங்கள் காலங்களை வீணிலே கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு அனுபவம், உலக முஸ்லிம்களோடு பழகும் பாக்கியம் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் கிடைக்காது. ஒரு முறை ஹஜ் செய்து விட்டால் அவரது வாழ்வே முற்றிலுமாக மாறி விடுவதை நான் கண் கூடாக பார்த்துள்ளேன். எனவே வசதி படைத்த செல்வந்தர்கள் தங்களுக்கு உள்ள கடமையை உணர்ந்து வரும் காலங்களிலாவது ஹஜ்ஜூ செய்வதற்கு உறுதி மொழி எடுப்பார்களாக!

தகவல உதவி:

சவுதி கெஜட்.

சாமியார் ஷோபனிடம் அடிபணிந்த மோடி!காங்கிரஸ் எதைச் செய்தாலும் அதனை கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பதையே தொழிலாகக் கொண்ட மோடி சமீபத்தில் சென்னை வந்த போது சாமியாரின் கனவை ஆதாரமாக வைத்து தங்கத்தை தேடும் மத்திய அரசை கிண்டலடிததிருந்தார். நம்ம சாமியாரும் லேசு பட்டவர் அல்ல. பிஜேபியின் அனைத்து நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிப்பவர் போல் தெரிகிறது. மோடியின் கிண்டலுக்கு அவரது பாணியிலேயே சாமியார் கொடுத்த பதிலடியைப் பார்ப்போம்.

''தங்கப் புதையலை தேடும் பணியையும், அதற்கான நடவடிக்கையை எடுத்த என்னையும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இந்தியாவை, 'சூப்பர் பவர்' நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, நான், முயற்சிக்கிறேன். இதில், அரசியல் பின்னணி இல்லை,'' என, சாமியார் ஷோபன் சர்க்கார் கூறி உள்ளார்.

இது தொடர்பாக, சாமியார் ஷோபன் சர்க்கார், மோடிக்கு எழுதியுள்ள கடிதம்:

புதையல் வேட்டையை அவமதிக்கும் வகையில், நரேந்திர மோடி பேசியுள்ளார். இதன் மூலம், புதையலை தோண்டுவதற்காக நடவடிக்கையை மேற்கொண்ட என்னையும், அவர் அவமதித்துள்ளார்.

சுவிஸ் வங்கிகளில், கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறும் நரேந்திர மோடி, மத்தியில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தபோது, அந்த பணத்தை மீட்பதற்கான நடவடிக்கையை எடுக்காதது ஏன்? நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்காகவும், அதை மக்களிடம் அதிக அளவில் விளம்பரம் செய்வதற்காகவும், பல கோடி ரூபாயை, பா.ஜ., செலவிடுகிறது. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இது, கறுப்பு பணமா, வௌளை பணமா என்பதை, மோடி விளக்க வேண்டும். அரசு துறைகளில், கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டும் என, சாம் பிட்ராடோ கூறினார். ஆனால், பா.ஜ.,வும், அப்போதைய தலைவர் வாஜ்பாயும், அதை கடுமையாக எதிர்த்தனர். அது தவறு என, இப்போது, பா.ஜ., ஏற்றுக் கொள்கிறதா?

புதையலை தேடும் பணியில், எந்த அரசியல் பின்னணியும் இல்லை. இந்தியாவை, பொருளாதார ரீதியாக, சூப்பர் பவர் நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, புதையல் தேடும் பணிக்கான நடவடிக்கையை எடுத்தேன். நரேந்திர மோடிக்கு, அவரின் வாழ்க்கையில், ஏதாவது பிரச்னை இருந்தால், அதை தீர்ப்பதற்காக, என் ஆசிரமத்துக்கு அவர் வரலாம். இவ்வாறு, அந்த கடிதத்தில் ஷோபன் சர்க்கார் தெரிவித்து உள்ளார்.

இதனை சற்றும் மோடி எதிர்பார்க்கவில்லை. விட்டால் பிஜேபியின் அனைத்து ரகசியங்களையும் போட்டு உடைத்து விடுவாரோ என்ற பயம் மோடிக்கு வரவே உடன் சாமியாரிடம் சரணடைந்த கூத்தை இன்றைய செய்தியில் பாருங்கள்.

புதுடில்லி: உ.பி.,யில் தங்கப்புதையல் குறித்த கனவு தகவலை தெரிவித்த ஷோபன் சாமியார் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உ.பி., மாநிலம் உன்னாவ் பகுதியில் உள்ள தாண்டியா கெராவில் உள்ள கோட்டையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாக மன்னர் தனது கனவில் வந்து தெரிவித்ததாக ஷோபன் சாமியார் கூறினார். இதனையடுத்து இந்திய தொல்லியல் துறை தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனை சென்னையில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ஷோபன் சாமியார் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் ஷோபன் சாமியார் மற்றும் அவரது ஆதரவாளர்களை சமாாதனப்படுத்தும் விதமாக மோடி தனது டுவீட்டர் இணையதளத்தில் புகழ்ந்துள்ளார். அதில், ஷோபன் சர்க்காரை நம்பும் லட்சக்கணக்கானோர் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் மீது நான் மிகவும் மதிப்பு வைத்துள்ளேன்" என கூறியுள்ளார்.

தத்து பித்தென்று உளறி சாமியாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு உடன் வெட்கமில்லாமல் சரணடைந்த இந்த மோடிதான் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறாராம். சாமியாரை இன்னும் கொஞ்சம் பேச விட்டிருந்தால் குஜராத் கலவரங்களைப் பற்றியும் அங்கு மோடி இதுவரை செய்த ஊழல்கள் பற்றியும் ஒரு பிடி பிடித்திருப்பார். நல்ல வேளை மன்னிப்பின் மூலம் பெரும் ஆபத்திலிருந்து தப்பித்தார் மோடி! :-)


Monday, October 21, 2013

பிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பலின் பின்னணி?

தமிழகத்திற்குள் அத்து மீறி ஊடுருவிய பயங்கர அமெரிக்க ஆயுதக் கப்பல்!

சென்ற வாரம் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று இந்தியாவிற்குள் அத்து மீறி..!? உள்ளே நுழைந்தது. அது தமிழகத்தின் முக்கியத் துறைப் பகுதியாகிய தூத்துக்குடி அருகே தமிழக பாதுகாப்புப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டு கப்பலில் இருந்த 35 ஊழியர்களில் 33 பேர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். கப்பல் பராமரிப்பு பணிக்காக அதன் கேப்டன் மற்றும் தலைமை பொறியாளர் சிறையில் அடைக்கப் படவில்லை.

ஆனால் அவர்கள் இருவரும் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கப்பல் கேப்டன் மீண்டும் சிறைக்குள் தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது அமெரிக்காவின் சாதாரண கப்பல் அல்ல உலகில் பேரழிவை நிகழ்த்தி வரும் ஆயுதக் கப்பலாகும். தெரியாமல் இந்தியாவிற்குள் நுழைந்தால் உலகில் தன்னை "பெரிய அண்ணனாக " காட்டிக் கொள்ளும் அமெரிக்க ராணுவம் உடனே தலையிட்டு சரி செய்து விடுமே.

மாட்டிக் கொண்டால் உடனே தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தையும் இலங்கையையும் நடுங்கச் செய்த எல் டி டி யினரின் சிறப்பம்சம். எல் டி டி யினர் தற்கொலை செய்து கொள்வதற்கு சயனைடை பயன்படுத்தினர்.அதனை நாக்கில் தடவினாலே உடனே மரணம் தான். செத்துவிட்டால் எந்த கொம்பனாலும் பிணத்திடம் விசாரணை செய்ய இயலாது.அவன் எத்தனை பேரை கொன்றிருந்தாலும் செத்தவன் மேல் வழக்குப் பதிவு செய்ய மாட்டார்கள். எனவே கழுத்தில் சயனைடு குப்பியுடன் தான் அவர்களது பணியே ஆரம்பிக்கும்.

கேப்டனும், சீப் என்ஜீனியரும் எதற்கு தற்கொலை செய்து கொள்ள முயல வேண்டும்? அமெரிக்க ஆயுதம் தாங்கிய கப்பல் இந்தியாவிற்குள் ஊடுருவியதை பரபரப்பு செய்தியாகவோ அல்லது குறைந்த பட்சம் முக்கிய செய்தியாகக் கூட நடுநிலை நாளேடுகள் என்று பீற்றிக் கொள்ளும் ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மிக சாதாரண செய்தியாக வெளியிடுகிறது.

இதுவே உண்மையிலேயே தவறுதலாக இலங்கை, பாகிஸ்தான், அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கப்பல் நுழைந்து இருந்தால் நடுநிலை நாளேடுகள் என்று பொய் சொல்லும் கோயபல்ஸ் ஊடகங்களின் செய்திகள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.தூத்துக்குடி பகுதியில் பரவலாக மக்களுக்கு தெரிந்து விட்டதால் தான் இந்த செய்தியை கூட வெளியிட்டுள்ளது. இதுவே மற்ற மாநிலமாக இருந்திருந்தால் இந்த தகவலைக் கூட வெளியிட்டு இருக்காது. பொய் தேச பக்தி நாடகமாடும் ஊடகங்கள். மாதக் கடைசிகளில் அமெரிக்க தூதரகத்தில் அது போடும் எலும்புத் துண்டுகளுக்காக காத்துக் கிடக்கும் பயங்கரவாத ஊடகங்களின் செய்திகளை இனி நம்பலாமா..?

அமெரிக்க ஆயுதக் கப்பலில் எந்தவிதமான ஆயுதங்கள் இருந்தன? யாரை அழிக்க கொண்டு வரப்பட்டன? அதற்கு இந்தியாவில் பயங்கரவாத ஏஜெண்ட் யார்? தேர்தலை எதிர்பார்த்து எப்படி மக்களை ஏமாற்றலாம் என்ற சிந்தனையில் அரசியல்வாதிகளின் மற்றும் ,பயங்கரவாத ஊடகங்களின் கவனங்கள் இருப்பதால், உளவுத்துறை தான் நாட்டின் நலன் கருதி உண்மையை கண்டு பிடித்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும்; உளவுத் துறையாவது செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி: அன்பு செல்வன்

Sunday, October 20, 2013

போலீஸ் ஃபக்ருதீன் கைது பற்றி கருணாநிதி!கேள்வி :- இந்து இயக்கங்களின் தலைவர் களையெல்லாம் கொலை செய்தது, அண்மையில் பிடிக்கப்பட்ட போலீஸ் பக்ருதீன் குழுவினரா?

கலைஞர் :-ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்பது புரிகிறது. கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் பா.ஜ.க. வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், குறிப்பாக இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ், தென்காசியில் குமாரபாண்டியன், டாக்டர் அரவிந்த் ரெட்டி போன்றவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இந்தக் கொலை களில் காவல் துறையினர் எந்தவொரு நடவடிக்கையும்எடுக்கவில்லை என்று பரவலாகப் பேசப்பட்டது.காவல் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் முதல் அமைச்சரோஅப்போது கொடநாட்டில் இருந்தார். எனவே போலீஸ் டி.ஜி.பி. ஒரு நீண்ட அறிக்கையினை 27-7-2013 அன்றுவிடுத்தார். அதில் """"23-10-2012 அன்று வேலூரில் பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலாளர், மருத்துவர்அரவிந்த ரெட்டி என்பவர் பணப் பரிமாற்றப் பிரச்சினை காரணமாக கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில்,வேலூரைச் சேர்ந்த வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், எம்.எல்.ஏ. ராஜா, பிச்சைப்பெருமாள் மற்றும்தரணிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது"" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது தீவிரவாதிகள் சிலரைக் கைது செய்த பிறகு, "போலீசார் நடத்திய விசாரணையில், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புப் பிரமுகர்கள் பரமக்குடி முருகன், வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன், மதுரையில் சுரேஷ், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகிய ஐந்து பேரைக் கொலை செய்ததை போலீஸ் பக்ருதீன் ஒப்புக் கொண்டார்"" என்று செய்தி தெரிவித்திருக்கிறார்கள்.

டாக்டர் அரவிந்த் ரெட்டியைக் கொலை செய்தது, தற்போது கூறுகிற போலீஸ் பக்ருதீனா?அல்லது ஏற்கனவே 27-7-2013 அன்று டி.ஜி.பி. அறிக்கையில் சில பேர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது என்றும் அறிக்கை விடுத்தாரே; அவர்களா? எது உண்மை? அப்படியென்றால் அவர்கள் மீது போடப்பட்டது ஊரை ஏமாற்றுவதற்காக போடப்பட்ட பொய் வழக்கா?

வேலூர் மாவட்டப் போலீசார் இந்த வழக்கை விரைந்து முடித்து, நல்ல பெயர் எடுப்பதற்காக, ரவுடி வசூர் ராஜா உட்பட ஆறு பேரைப் பலிகடா ஆக்கி விட்டதாகவும், அவரை நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து டாக்டர் அரவிந்த் ரெட்டியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்து, வழக்கை முடித்து விட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதிலே எது உண்மை?

இதுபோலவே, ராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடியில் முருகன் என்பவர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தார். 19-3-2013இல் அவர் கொலை செய்யப்பட்டார். சொத்து விற்பது தொடர்பான தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, ராஜா முகமது, மனோகரன், சாகுல் ஹமீது, ரபீக் ராஜா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, பின்னர் அவர்கள் பிணையில் உள்ளார்கள். இந்த நிலையில் இந்த முருகனைக் கொலை செய்ததும், போலீஸ் பக்ருதீன் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று சொல்லப்படுகிறது. இதில் உண்மையான குற்றவாளிகள் யார்? ராஜா முகமது தரப்பினர் பலிகடா ஆக்கப்பட்டவர்களா?

என்னுடைய இந்தச் சந்தேகத்தை உறுதி செய் திடும் வகையில், 16-10-2013 தேதிய """"தி இந்து"" (தமிழ்) நாளிதழில் ஒரு முழுப் பக்கத்திற்கு """"போலீஸ் வழக்குகளும்.... பொலபொலத்துப் போகும் தீர்ப்புகளும்..."" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அதன் தொடக்கமே, "போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் இவர்களை வளைத்துப் பிடித்துப் பாராட்டு வாங்கியிருக்கும் காவல் துறை, வேலூர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடி பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் கொலை வழக்குகளில் பொய்யான குற்றவாளிகளைக் கணக்குக் காட்டிய குற்றத்துக்கு என்ன பரிகாரம் தேடப்போகிறது எனத் தெரியவில்லை"" என்று எழுதியிருக்கின்றது.

போலீஸ் பக்ருதீன் கைது பற்றியும் சந்தேகம் உள்ளது. இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர், அப்துல் ரஹிம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், போலீஸ் பக்ருதீன் கைதில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிமுறைகள், பக்ருதீனைக் கைது செய்தபோது பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தபோது, அட்வகேட் ஜெனரல், 4ஆம் தேதி இரவு சென்னை பெரியமேட்டில் பக்ருதீன் கைது செய்யப்பட்டார் என்றும், சட்டப்படியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ரவீந்திரன் ஆகியோர் திருவல்லிக்கேணியில் பக்ருதீனைக் கண்டு பிடித்தார்கள் என்றும், அவனைப் பின் தொடர்ந்த போலீசார், பெரியமேடு பகுதியில் அவனைப் பிடிக்க முயன்றனர் என்றும், இன்ஸ்பெக்டர் லட்சுமணனைத் தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது பெரியமேடு இன்ஸ்பெக்டர் வீரகுமார் பக்ருதீனைப் பிடித்தார் என்றும் செய்தி வந்தது. 4 அதனால்தான் முதலமைச்சர் முதலில் ஒரு சிலருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசும், பதவி உயர்வும் அளித்தபோது, வீரகுமாரைப் போன்றவர் களுக்கு இவைகள் வழங்கப்படவில்லையே என்று நான் கேட்டிருந்தேன். அதன்பிறகு சுமார் 250 பேர் களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மொத்தமாக பதவி உயர்வு கொடுப்பதில் கூட எனக்கு உடன்பாடு இல்லை. பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி அடுத்து நமக்குப் பதவி உயர்வு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுக்கு இடைஞ்சலாக திடீரென்று சிலருக்குப் பதவி உயர்வு அரசே அளிக்கின்ற காரணத்தால், பதவி உயர்வுக்காக பல ஆண்டுக ளாகக் காத்திருந்தவர்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு சிலர் அதற்குள் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வுபெற்றுவிடவும் கூடும். அதைத்தான் நான் """"சிலர் பெறுவதோ லாபம்; பலர் தருவதோ சாபம்"" என்று எழுதியிருந்தேன். ஆனால் அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு முறையும் இவ்வாறு பதவி உயர்வு அளிப்பதாக முடிவு செய்து, பலரை வருத்தமடையச் செய்கிறது. திறமையாகப் பணியாற்றுவோருக்கு உடனடியாக ரொக்கப் பரிசாக அளிப்பதுதான் சரியான முறை.அதையும் ஒட்டுமொத்த மாக ஆய்வு செய்து, அதன் பிறகு அறிவிக்க வேண்டுமே தவிர, அவசரக் கோலத்தில் இன்று 20 பேருக்குப் பரிசளிப்பு, நாளைக்கு 250 பேருக்கு அறிவிப்பு என்பது சரியான முறையாகாது.

இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் கூட, போலீஸ் பக்ருதீன், சாகுல் அமீது என்பவர் மூலம் தமிழகம் மற்றும் ஆந்திரப் போலீசாரைத் தொடர்பு கொண்டு, தான் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்ததாகவும், அந்தத் தகவல் தமிழக உளவுப் பிரிவு போலீசுக்குத் தெரியவந்தது என்றும், அப்போது போலீஸ் பக்ருதீன் போலீஸ் நிலையத்துக்கோ, அதிகாரிகளின் அறைகளுக்கோ வந்து சரணடைய வேண்டாம், பெரியமேட்டுக்கு வரச் சொல்லுங்கள், நாங்கள் கைது செய்கிறோம் என்று கூறினார்கள் என்றும், அவ்வாறே பெரியமேட்டுக்கு வந்த போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. போலீஸ் பக்ருதீன் தானாகச் சரணடைந்தாரா? அல்லது போலீசார் சண்டை போட்டுப் பிடித்தார்களா? எது உண்மை?

ஏனென்றால் 18-10-2013 அன்று பக்ருதீனை வேலூரில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோதும், விசாரணை முடிந்து வெளியே அழைத்துச் சென்ற போதும், பத்திரிகையாளர்களைப் பார்த்து ஓங்கிய குரலில், "இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போலீசார் பொய் வழக்குப் போட்டுள்ளனர். நான் எந்தக் கொலைகளையும் செய்யவில்லை. என் முகத்தில் உள்ள துணியை எடுக்க வேண்டும்"" என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் போலீசார், பக்ருதீன் பத்திரிகையாளர்களிடம் பேசி விடாதபடி, மறைத்து அழைத்துச் சென்றனர் என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. எனவே யார்தான் உண்மையான குற்றவாளிகள்? தமிழக அரசுதான் கூற வேண்டும்.

https://www.facebook.com/Kalaignar89/posts/674359789242896
'தி மெஸ்ஸேஜ்' - திரைப்படம் எனது பார்வையில்...தமிழில் முதலாம் பாகம் அறிமுகம்....தமிழில் இரண்டாம் பாகம் அறிமுகம்....
20 வருடங்களுக்கு முன்பு நான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த போது இந்த படத்தை ஆங்கிலத்தில் பார்த்துள்ளேன். ஆனால் நமது தாய் மொழியில் பார்க்கும் போது கிடைக்கும் விளக்கங்களுக்கு இணையே கிடையாது என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி. அழகிய காட்சிகள். சிறந்த வசனங்கள். முக்கிய நிகழ்வுகளை பொறுக்கி எடுத்து படத்தில் இணைத்திருப்பது இந்த படத்தை மேலும் மெருகூட்டுகிறது. படத்தின் கதாநாயகனை காட்டாமலேயே கதையை எடுத்துச் செல்லும் பாங்கு இயக்குனரின் திறமையை வெளிக்காட்டுகிறது. நம் ஊர் அமீர், சமுத்திர கனி போன்ற இயக்குனர்கள் இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை கலப்படம் இல்லாமல் உலகுக்கு தர முயற்சிக்கலாம்.

அன்றைய அரபு உலகம் எப்படி இருந்தது என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொள்கிறோம். ஏறக்குறைய தற்போதய நமது தமிழகத்தை ஒத்திருந்தது அன்றைய அரபுலகம். இன்றும் தமிழகத்தில் பார்பனர்கள் அதிகம் வாழும் அக்ரஹாரங்களுக்குள் தலித்கள் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது. வியாபாரங்களும் செய்து விட முடியாது. சாதி இந்துக்கள் வாழும் கிராமங்களில் தலித்களுக்கு தனி டம்ளர் முறை, சிரட்டை முறை இன்றும் மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் நிலவுவதை பார்க்கிறோம். தலித்கள் தான் சம்பாதித்து தனது உழைப்பால் காலுக்கு செருப்பை வாங்கி அதை போட்டுக் கொண்டு நடக்க சில கிராமங்களில் இன்றும் தடை போடப்படுவதைப் பார்க்கிறோம். ஒரே இந்து மதத்தில் உள்ள வன்னிய பெண்ணும், தலித் ஆணும் திருமணம செய்து கொள்ள தடுக்கப்படுகவதைப் பார்க்கிறோம். இதற்காக வெட்டுக் குத்துகளும் நடப்பதை தினமும் பார்க்கிறோம். பார்பனர், தேவர், செட்டியார், வன்னியர், தலித் என்று இந்த காலத்திலும் தரம் பிரிக்கப்படுவதை பார்க்கிறோம். சாதிக் கட்சிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெருகி வருவதையும் பார்க்கிறோம்.

படித்து விட்டால் இந்த வன் கொடுமைகள் குறைந்து விடும் என்று நம்பி தலித்களை கலெக்டராகவும், டாக்டராகவும், பொறியாளர்களாகவும், ஆக்கி அழகு பார்த்தோம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மத்திய அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் ஒரு மேல் சாதி காரரின் சிலைக்கு மாலை அணிவித்த அடுத்த நிமிடம் பார்ப்பனர்களால் அந்த சிலைக்கு தண்ணீர் ஊற்றி தீட்டு கழிக்கப்பட்டதை பார்த்தோம். கலெக்டராகவும், மருத்துவராகவும் தலித்கள் இருந்தாலும் முதலில் அவரின் சாதியைத்தான் நோட்டமிடுகின்றனர் பெரும்பாலான இந்துக்கள். சத்துணவுக் கூடத்தில் கூட தலித்கள் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று வீம்பு பேசி தினமும் சமைத்த உணவுகள் குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் கொடுமை உலகிலேயே நம் நாட்டில்தான் நடந்து வருகிறது. சாதி வெறி, குல வெறி அந்த அளவு நமது மக்களை பாடாய் படுத்துகிறது.

இதே நிலைதான் அன்றைய மக்காவிலும். இதை விட அதிக சாதி வெறி பிடித்தவர்களாக அன்றைய அரபுகள் இருந்தனர். பிலால் கருப்பு அடிமை என்பதற்காக எந்த அளவு கொடுமைபடுத்தப்பட்டார் என்பதை மிக அழகாக இந்த படத்தில் காட்டியுள்ளனர். திருடவில்லை: பொய் பேசவில்லை: யாரையும் அடிக்கவில்லை: ஏக இறைவனை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக அந்த மாபாவிகள் சுடு மணலில் வெற்று உடம்பில் பாராங்கல்லை தூக்கி வைக்கிறார்கள் என்றால் எந்த அளவு இஸ்லாத்தின் மீது வன்மம் இருக்கும். அதே நிலைதான் குஜராத்திலும் பார்தோம். முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை தீயில் இட்டு பொசுக்கியதும் நம் நாட்டு இந்துத்வா வாதிகள் தான். இவ்வளவு வன்மத்தை இவர்கள் மனதிலே இருத்த காரணம் ஏக இறைவனை இவர்கள் வணங்குகிறார்கள் என்ற ஒரு காரணம் தான்.

இந்த படததின் டிவிடிக்களை நாம் வாங்கி நமது இந்து, கிறித்துவ நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம். இதனால் இஸ்லாத்தின் மேல் உள்ள வெறுப்பு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.

----------------------------------------------------------------


'தி மெஸ்ஸேஜ்' உருது மொழியில்......----------------------------------------------------------------

'தி மெஸ்ஸேஜ்' ஆங்கிலத்தில்....

----------------------------------------------------------------

படத்தின் டிவிடிக்களை பெற்றுக் கொள்ள

Mass communication
95668 40261
95000 04961

---------------------------------------------------------------

இந்து பத்திரிக்கையில் வெளியான இந்த படத்தைப் பற்றிய செய்தியையும் பார்ப்போம்....இன்றைய உலகம் இஸ்லாத்துக்கும் அமெரிக்காவின் தலைமையிலான மற்ற நாடுகளுக்கும் இடையே எல்லாத் தங்களிலும் வெளிப்படையான மோதலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லா நாடுகளுமே ஏதோ ஒரு வகையில் இந்த முரண்பாட்டின் தாக்கத்தை உணர்ந்துகொண்டிருக்கின்றன. இஸ்லாமும் பிற மார்க்கங்களும் ஒத்திசைந்து வாழவே முடியாது என்ற அளவுக்கு வலுவான கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தனிநபர்களின் பார்வைக்காக திரையிடப்பட்ட தி மேசஜ் என்ற ஆங்கிலத் திரைப்படம் இஸ்லாத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கிறது.

1976ஆம் ஆண்டு ஹாலிவுட்டைச் சேர்ந்த முஸ்தபா அக்காடால் உருவாக்கப்பட்ட இப்படம், தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. பண உதவியும் கிடைக்கவில்லை. ஆகவே லிபியாவின் அதிபராக இருந்த மும்மர் கடாபி மற்றும் வேறு சில இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் லிபியா, லெபனான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய நிலைமைக்கு அக்காட் தள்ளப்பட்டார். எல்லா சிரமங்களையும் மீறி எடுக்கப்பட்ட இந்தப் படம் தன் நோக்கத்தைச் செவ்வனே பூர்த்தி செய்துள்ளது என்பதை அதனுடைய ஆங்கில மூலமும் அதன் தமிழாக்கமும் தெளிவாக உணர்த்துகின்றன.


Saturday, October 19, 2013

இந்தியாவின் முதலாம் இசுலாமிய வங்கி!

சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்;

இந்தியாவின் முதலாம் இசுலாமிய வங்கி வெற்றி பாதையில் முன்னேறுகிறது!

இந்திய இசுலாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வட்டி இல்லாத இசுலாமிய வங்கி சேவைகளுக்கான வங்கி ஒன்றிற்க்கு மத்திய அரசும்,இந்திய ரிசர்வ் வங்கியும் அணுமதி அளித்ததனை தொடர்ந்து கேரள அரசின் ஆதரவோடு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் வட்டி இல்லா வங்கியான ‘சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிடட்’ (சி.எப்.எஸ்.எல்) இசுலாமிய மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றதுடன்.வளைகுடா நாடுகளிலும் மிகுந்த வரவேற்ப்பினை பெற்று வருகிறது. இவ்வங்கியில் முதலீடுகள் செய்வதற்க்கு அரபு நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘ஷரியத்’ சட்டங்கள் கூறும் பொருளாதார தத்துவஙகளை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்தியன் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் ‘சேரமான் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடட்’ உடன் வர்த்தக உறவு கொள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் உள்ள சில வங்கிகளும்,தன காரிய அமைப்புகளும்,தனியார் முதலீட்டாளர்களும் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

‘சி.எப்.எஸ்.எல்’ -ன் நிர்வாக இயக்குனர் டாக்டர்.பி.முஹம்மத் அலி(கல்பாஃர்) அவர்களின் தலைமையில் துபாய் நகரில் ‘சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிடட்’ இன் முதலீட்டாளருக்கு வங்கி குறித்து அறிமுகப்படுத்தும் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

அரபு நாடுகளில்,வியாபாரம் மற்றும் விற்பனை துறைகளில் ஈடுபடும் வளைகுடா வாழ் இந்தியர்கள் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு வங்கியில் முதலீடு செய்வதற்க்கும் வர்த்தக உறவுவுகள் வைத்துக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். இந்தியர்கள் மட்டும் அல்லாது பெருமளவு அரபு வியாபாரிகளும் சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டடில் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளவும் வங்கியின் பங்குகளில் முதலீட்டாளர்களாக சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமிரகம் மட்டும் அல்லாது மற்ற இதர வளைகுடா நாடுகளிலும் வங்கியை அறிமுகப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட இருக்கிறது.ஒமான் அரசுடன் தொடர்புடைய சில நிறுவனங்கள் வட்டி இல்லாத ரீதியில் செயலாற்றும் சேரமான் பினான்சியல் சர்விசஸ் உடன் வர்த்தக உறவில் இணைவதற்க்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறது.வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவினான முதலீடுகள் பெறுவதற்கான திட்டம் மிக பெரும் வெற்றி திட்டமாக மாறி இருக்கிறது என்று வங்கியின் தலைமை நிர்வாகி டாக்டர்.முஹம்மது அலி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தியாவில்,தமிழ் நாடு,மற்றும் வட இந்திய மாநிலங்களில் இருந்தும் வங்கிகளில் முதலீடுகள் செய்வதற்க்கு சில அமைப்புகள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் வளர்ந்து வரும் வேளையில் வரும் டிசம்பர் மாதத்தில் வங்கியின் முதல் ‘செயல் திட்டம் ‘ செயலாற்ற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பதினைந்திற்க்கும் மேற்பட்ட மிக பெரும் செயல் திட்டங்கள் ‘சி.எப்.எஸ்.எல்’ இடம் இருப்பதாக டாக்டர்.பி.முஹம்மது அலி தெரிவிக்கிறார்.

2009 ஆம் ஆண்டு அச்சுதானந்தன் அரசு அறிமுகப்படுத்திய ‘அல் பரக்கா பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்’ என்ற நிறுவனமே தற்போது பெயரை மாற்றி ‘சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்’ஆக செயல் பட்டு வருகிறது. இதர பொதுவுடமை வங்கிகளுடன் இணைந்து செயல்பட மத்திய ரிசர்வ் வங்கி அணுமதியும் அளித்து இருக்கிறது.

ஆயிரம் கோடி ரூபாய்கள் தொடக்க மூலதன முதலீடாக கொண்டு செயல்படும் வங்கியில் ஆக மொத்தம் 11 சதவிகிதம் கேரள மாநில தொழில் வளர்சி நிறுவனத்தின் பங்காகவும்,
பாக்கி உள்ள தொகைகளை தனியார் முதலீட்டாளர்களிடமிருந்தும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்தும் சேகரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.இவ்வாறு பெறப்படும் தொகைகள் கேரள மாநில தொழில் வளர்ச்சி திட்டங்களிலும், மாநிலத்தின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் திட்டங்களிலும்,வக்பு நிலங்களை மேம்படுத்தும் திட்டங்களிலும்,சிறு தொழில் திட்டங்களிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு அதனில் இருந்து கிடைக்கும் லாப/நஷ்ட கணக்குகளை அணுசரித்து முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும்.

இத்தகைய திட்டங்களுக்கு பணம் கொடுப்பதோடு மட்டும் அல்லாது திட்டங்களை நல்ல முறையில் கொண்டு செல்ல முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார ஆலோசனைகளை வழங்கவும் திட்டமிட்டு இருப்பதாக வங்கியின் நிர்வாக இயக்குனர் ஏ.பி.எம். ஹனீஷ் ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.
’ஷரியத்’ தடை செய்திருக்கும் தொழில் துறை திட்டங்களிலோ அல்லது விற்பனை கூடங்களிலேயோ ‘சி.எப்.எஸ்.எல் ‘ பணத்தினை முதலீடு செய்யாது என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

வட்டி லாபத்தை ஷரியத்திற்கு எதிராக கருதுவதால் இந்திய இசுலாமியர்கள் பொதுவுடமை வங்கிகளிலும்,பொது துறை நிறுவனங்களிலும் பெருமளவிளான முதலீடுகளை செய்ய தயங்குகிறார்கள் அல்லது அத்தைகைய நிறுவனங்களில் முதலீடுகளை செய்ய ஆர்வமும் காட்டுவதில்லை.அவ்வாறு விட்டு நிற்கும் இசுலாமிய முதலீட்டாளர்களை கவரும் விதத்தில் கேரள அரசின் துனையோடு தொடங்கப்பட்ட சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்-ற்க்கு இந்திய இசுலாமியர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதோடு வங்கியினை வெற்றி பாதையில் கொண்டு செல்வார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது.இவ்வாறு கிடைக்கும் பணத்தினை நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் வளர்ச்சி திட்டங்களுக்கும் செலவிட திட்டமிட்டு இருப்பதாகவும் வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு; http://www.cheraman.com/

Friday, October 18, 2013

டெல்லிக்கு ராஜான்னாலும்.....குலாம் நபி ஆசாத்!ஆம்....டெல்லிக்கு ராஜான்னாலும்....மத்திய மந்திரி சபையில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தாலும் இறைவனின் முன்னால் அவரும் ஒரு சாதாரண மனிதனே.... இந்த வருட ஹஜ் புனித பயணத்திற்கு தலைமை ஏற்று மெக்காவுக்கு வருகை புரிந்த மத்திய மந்திரியைத்தான் மேலே நாம் பார்க்கிறோம். அவரோடு சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் ஹமீத் அலியும் தனது ஹஜ் பயணத்துக்காக மெக்கா வந்திருந்தார்.

இருவரும் அதிக வயதுடைய ஹாஜிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த வருட ஹஜ்ஜின் அதிக வயதுடைய இஸ்மாயில் (வயது 107) அவர்களை இருவரும் சந்தித்தனர். இவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலிருந்து ஹஜ் பயணத்திற்காக வந்திருந்தார். அதே போல் பெண்களில் அதிக வயதுடைய ஹவ்வாபீவி ஷேக்கையும் (வயது 105) இருவரும் மரியாதை நிமித்தம் சந்தித்தனர். இந்த பெண்மணி இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து வருகை புரிந்திருந்தார்.

இந்திய ஹாஜிகளுக்காக சவுதி அரசு செய்து தந்திருக்கும் வசதிகளை குலாம் நபி ஆசாத் பாராட்டினார். ஹாஜிகளுககான இருப்பிட வசதி மிக தூய்மையாக பராமரிக்கப்படுவதாகவும் முன்பு 12 நபருக்கு ஒரு கழிவறை கட்டப்பட்டிருந்தது. தற்போது ஆறு பேருக்கு ஒரு கழி வறை வீதம் மேம்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் மத்திய அமைச்சர் அரப் நியூஸூக்கு பேட்டி அளித்தார்.

மத்திய மந்திரி உம்முல் குரா என்ற இடத்துக்கு வருகை தந்து காஷ்மீர், குஜராத் ஹாஜிகளை சந்தித்து நலம் விசாரித்தார். 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவ மனையையும் பார்வையிட்டார். அஜீஸியா என்ற இடத்துக்கு வந்து அங்குள்ள தமிழக மற்றும் கேரள ஹாஜிகளை நலம் விசாரித்தார். அங்கு 30 படுக்கைகளுடன் கூடிய மருத்துவ மனையையும் பார்வையிட்டு அவை சுகாதாரமாக பேணப்படுவதையும் பார்வையிட்டார்.

ஹஜ்ஜூக்கு வருகை புரிந்துள்ள பல பெண்கள் தங்கள் அறைகளில் சமையலில் ஈடுபடுவதை அதிகமாக பார்க்க முடிவதாகவும், இதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தூதரக அதிகாரிகள் ஹாஜிகளை அறிவுறித்தினர். ஏனெனில் இதனால் ஹாஜிகள் வணக்கங்களில் ஈடுபடும் நேரம் குறைவாவதை சுட்டிக் காட்டினர். வரும் குழுக்கள் சிறந்த உணவுகளை தயாரித்து கொடுத்தாலும் சிலர் தங்கள் கைகளால் சமைத்து சாப்பிடுவதையே விரும்புகின்றனர். எனவே அடுத்த வருடங்களில் பொது சமையல் அறை ஒவ்வொரு குரூப்புக்கும் அமைத்துக் கொடுக்க முயற்சிக்கப்படும் என்றும் தூதரக அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர்.

'ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு வசதிகளை சவுதி அரசு மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கு முன் நான் வந்ததற்கும் தற்போது உள்ள சூழ்நிலைக்கும் மிகுந்த வித்தியாசத்தை உணர்கிறேன். இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அனைத்து அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்கிறார் குலாம் நபி ஆசாத்.

தகவல் உதவி அரப் நியூஸ்.

ஓரினச் சேர்க்கையில் ஆறாம் வகுப்பு மாணவன் கொலை!

எவ்வளவு சிறந்த கல்வி நிறுவனங்கள் நமது அக்கம் பக்கத்தில் இருந்தாலும் குழந்தைகளை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைப்பதை ஒரு பேஷனாக இன்று ஆக்கி விட்டோம். ஆனால் உறவினர்களின் அரவணைப்பு இல்லாத அந்த ஹாஸ்டல் வாழ்க்கையில் என்னவெல்லாம் தவறுகள் நடந்து விடுகிறது என்பதை நாம் சிந்திப்பதில்லை. கண்டிப்பாக குழந்தைகள் வெளியூர்களில் தான் தங்கி படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அந்த கல்லூரிக்கு பக்கத்திலோ அல்லது பள்ளிக்கு பக்கத்திலோ ஒரு வீட்டை வாடகை பிடித்து குழந்தையின் தாயாரும் தகப்பனாரும் குழந்தையோடு தங்கி விடுவதே நல்லது. எந்த நிலையில் இரவு நேரத்தில் மாணவன் வீட்டுக்கு வந்து விடும் சூழலை உண்டாக்க வேண்டும்.

ஓரளவு விபரம் தெரிந்தவுடன் தனியாக ஹாஸ்டலில் தங்க வைப்பதில் தப்பில்லை. இரண்டும் கெட்டான் வயதில் நல்லது எது தீயது எது என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் இல்லாத வயதில் நாம் குழந்தைகளை தனியே விடுவது சரிதானா என்பதை சிந்திக்க கடமைபட்டுள்ளோம். ஏனெனில் பல தவறுகளின் பிறப்பிடமாக இன்று ஹாஸ்டல்கள் மாறி விட்டன. நமது குழந்தைகளை நேர் வழிப் படுத்துவது நமது கையில் தான் இருக்கிறது. எனது பள்ளி தோழன் ஒருவன் பிளஸ் டூ வரையில் மிக நேர்மையானவனாக இருந்தான். அதன் பிறகு திருச்சியில் கல்லூரி ஹாஸ்டலில் தங்க ஆரம்பித்த இரண்டு மாதத்தில் மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதும், பெண்கள் தொடர்புமாக அவனது வாழ்வே மாறி விட்டது. இன்று வரை அதிலிருந்து அவனால மீள முடியவில்லை. நான் ஏன் இந்த அளவு பீடிகை போட்டு எழுதுகிறேன் என்பதற்கு நேற்று நமது தமிழ் தினசரியில் வந்த செய்தியே ஒரு உதாரணம். அதனை அப்படியே தருகிறேன் படித்துப் பாருங்கள்.

-----------------------------------------------

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தகாத உறவை வெளியில் சொல்லி விடுவான் என்று, ஆறாம் வகுப்பு மாணவனை, "செப்டிக் டேங்க்' ல் தள்ளி கொலை செய்த 10 ம் வகுப்பு மாணவனை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

பழநி சவுடம்மன் கோயில் தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் ஹரிபிரசாத்,11. இவர், திண்டுக்கல் ம.மு.கோவிலூர் சி.எஸ்.எம்.ஏ., மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி ஆறாம் வகுப்பு படித்துவந்தார். அக்., 7 முதல் மாணவனை காணவில்லை. நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் உள்ள "செப்டிக்டேங்க்' ல் மாணவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அக்., 7 ல் படிப்பு நேரம் துவங்கிய போது, ஹரிபிரசாத் மட்டும் வரவில்லை. 10 ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மற்றொரு மாணவன் மட்டும் தாமதமாக வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஜென்னிங்ஸ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சக்திவேல், ஜெரோம் ஆகியோர் முன்னிலையில் மாணவனிடம் விசாரித்தார்.

இன்ஸ்பெக்டர் கூறியதாவது: 10 ம் வகுப்பு மாணவன், ஹரிபிரசாத்தை ஓரினசேர்க்கைக்கு அழைத்துள்ளான். இதை விடுதி காப்பாளரிடம் தெரிவிப்பதாக ஹரிபிரசாத் கூறியுள்ளான். இதில் ஆத்திரமடைந்த 10 ம் வகுப்பு மாணவன், ஹரிபிரசாத்தை கொல்ல திட்டமிட்டுள்ளான்.

முன்னதாகவே "செப்டிக் டேங்க்' மூடியை திறந்து வைத்து விட்டு, அந்த வழியே ஹரிபிரசாத்தை அழைத்து சென்றவன், உள்ளே தள்ளிவிட்டுள்ளான். ஹரிபிரசாத் தப்பித்து மேலே வர சுவற்றை பிடித்துள்ளான். கையை, காலால் மிதித்து உள்ளே தள்ளிவிட்டு "செப்டிக் டேங்க்' கை மூடிவிட்டு சென்றுள்ளான், என்றார்.
கோர்ட்டில் ஆஜர்: 10 ம் வகுப்பு மாணவனை போலீசார், திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் உள்ள இளம்சிறார்கள் கோர்ட் தலைவர் வேதகிரி முன்பு ஆஜர்படுத்தினர். மாணவனை சீர்திருத்தப்பள்ளியில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

தாயிடம் கெஞ்சிய மகன்:

மாணவன் ஹரிபிரசாத்தும், 10 ம் வகுப்பு மாணவனும் முதல் முறையாக விடுதியில் சேர்ந்துள்ளனர். 10 ம் வகுப்பு மாணவன் இரண்டு முறை பெயிலாகி இங்கு சேர்த்துள்ளான். கடந்த முறை பார்க்கவந்தபோது, ஹரிபிரசாத், தனக்கு விடுதி பிடிக்கவில்லை என்றும், விடுதியில் நல்லவர்கள் இல்லை என்றும் தாயிடம் கெஞ்சியுள்ளான். சமாதானப்படுத்திவிட்டு அவரது தாய் சென்றுள்ளார்.

தமிழ் தினசரி
17-10-2013

---------------------------------------------------------------------

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது பாவம், மாபெரும் தவறு என்ற மத ரீதியான பார்வைக்கு அழுத்தம் சேர்ப்பது போல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவ உலகமும் ஓரினச் சேர்க்கை தவறானது என்று சொன்னதுடன் இது ஒரு நோய் என்றும் சொல்லத் துவங்கியது. உதாரணமாக 'கிராஃப்ட் எபிங்' என்னும் செக்ஸூவாலஜிஸ்ட் 1886-ல் மருத்துவ பாட நூல் ஒன்றை எழுதினார். இதில் 'ஓரினச் சேர்க்கை என்பது பிறவிக் கோளாறு (ஜீன் குறைபாடு) என்றும் இத்தகைய புணர்ச்சியில் ஈடுபடுவது நரம்புத் தளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் எழுதியிருந்தார். அப்போது இவரது கருத்தை ஒட்டி மருத்துவ உலகம் ஓரினச் சேர்க்கையை ஒரு மன நோயாகவே கருதியது.

டாக்டர் நாராயண ரெட்டி
ஜீனியர் விகடன்
26-03-2006

-------------------------------------------------------------------

குர்ஆன் எச்சரிக்கும் ஓரினச் சேர்க்கை:

'உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கின்றீர்களா? இல்லை. நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கின்றீர்கள்.' என்றும் கூறினார்.

'லூத்தே! நீர் விலகிக் கொள்ளா விட்டால் வெளியேற்றப் படுவோரில் நீரும் ஒருவர்!'என்று அவர்கள் கூறினார்கள்.

'உங்கள் செயலை நான் வெறுப்பவனே!' என்று அவர் கூறினார்.

'என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக என்றும் கூறினார்.

26 : 165,166,167,168,169 - குர்ஆன்.

தன் சமுதாயத்து மக்களிடம் ஓரினச் சேர்க்கையான இந்த பெரும் பாவத்தை விட்டுவிடும்படி பிரச்சாரம் செய்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. 'இந்த பிரச்சாரத்தை விட வில்லை என்றால் உம்மை ஊரை விட்டு வெளியாக்குவோம்' என்றும் அந்த மக்கள் கூறினர்.

'உங்கள் விஷயத்தில் எனக்கு சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?'என்று அவர் கூறினார்.

'லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்.அந்த மக்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக் கெடு வைகறைப் பொழுது.வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'என்றனர்.

11 : 80,81 - குர்ஆன்.

லோத்தின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அந்த ஊரை அழிப்பதற்காக இரண்டு வானவரை அனுப்பினான்.

'அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல மழை பொழிந்து அவ்வூரின் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் நீங்கள் சென்று வரும் நிலையான சாலையில்தான் உள்ளது. '15 : 74,75,76 - குர்ஆன்

இறைவனின் கோபத்திற்க்குள்ளான அந்த ஊர் இன்றும் ஜோர்டானில் சபிக்கப் பட்டதற்கான அடையாளங்களோடு செத்த கடல் என்று சொல்லப் படும் (Dead Sea) யை ஒட்டி அமைந்திருப்பதைக் காணலாம். இந்த கடல் பிரசேத்தை அரபியில் 'பஹ்ரல் மௌத்' என்று சொல்வார்கள்

Thursday, October 17, 2013

ஹஜ்ஜூக்கு வந்த அமெரிக்க புதிய முஸ்லிம்கள்!ஹஜ்ஜூக்கு வந்த அமெரிக்க புதிய முஸ்லிம்கள்!

அமெரிக்காவிலிருந்து இந்த வருட ஹஜ்ஜூக்காக வந்துள்ள ஜமீல் வாகர் தனது கருத்தாக 'முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களை அன்போடு அணுகி இஸ்லாத்தின் மேல் உள்ள தவறான கருத்துக்களை களைய முற்பட வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்துள்ளார். நியூயார்க் சிடியில் வசிக்கும் இவர் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் பிஸினஸூம் பார்த்து வருகிறார்.

இந்த வருடம் அமெரிக்காவிலிருந்தும் கனடாவிலிருந்தும் 2000 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் வருகை புரிந்துள்ளனர். மற்ற நாடுகளிலிருந்து வந்த ஹாஜிகள் மொத்தம் 1.6 மில்லியன்கள் ஆகும். இதில் அதிகமான ஹாஜிகள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். மினாவில் ஒரு அமெரிக்க ஹாஜிகள் குரூப் 'ஹஜ்ஜூக்குப் பிறகு நமது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்' என்று புதிய முஸ்லிம்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தது. புதிய முஸ்லிம்கள் இந்த சொற்பொழிவுகளை மிக ஆர்வத்தோடு கேட்டு குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருந்தனர்.

'என்னைக் கேட்டால் மாற்று மதத்தவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய ஒரு பயம் இருக்கிறது. இது ஒரு வன்முறை மார்க்கம் என்ற தோற்றம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுவதே நம்முன் உள்ள தலையாய பணி. 35 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொழுவதற்கு பள்ளிகளை தேடி வெகு தூரம் செல்ல வேண்டும். ஆனால் தற்போது அமெரிக்காவில் திரும்பிய இடமெல்லாம் மசூதிகளாக இருக்கின்றன. மசூதிகளில் கூட்டமும் நிரம்பி வழிகிறது. நிரம்பி வழியும் அந்த கூட்டமும் இளைஞர்களாக இருப்பது மேலும் ஆச்சரியப்பட வைக்கிறது' என்கிறார் ஜமீல்.

'எனது மகன் ஷான் அல்பேனி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறான். இன்று வரை ஹலால் உணவங்களையே தேடி செல்கிறான். அவனது மாற்று மத நண்பர்களும் இவனை பின் பற்றி ஹலால் உணவகங்களையே அதிகம் நாடுகின்றனர். முஸ்லிம்களாகிய நம்மை விட சில நல்ல பழக்கங்களை மாற்று மதத்தவர்களும் கொண்டுள்ளதை இங்கு நாம் மறுக்க முடியாது. அவர்களது நம்பிக்கைகளை கேலி செய்வது: கிண்டல் செய்வது: அவர்கள் மனம் புண்படும்படி வார்த்தைகளை வீசுவது என்ற பல செயல்களை நாம் குறைத்துக் கொண்டு அவர்களை அன்போடு அணுக வேண்டும். அவர்களுக்கும் நமக்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை குறைக்க முயற்சிக்க வேண்டும். இது போனற நல்ல செயல்கள் அவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இன்முகத்தோடு அணுக வழி வகுக்கும். இதனால் குறைந்த பட்சம் இஸ்லாத்தைப பற்றிய தவறான பிம்பம் விலக வாய்ப்புள்ளது' என்கிறார் ஜமீல் வாகர்.

'2000 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் அமெரிக்காவிலிருந்தும் கனடாவிலிருந்தும் வருகை புரிந்துள்ளோம். ஹஜ் எங்களுக்கு சிறந்த வழி காட்டிகளின் உதவியால் மிக சிறப்பாகவும் சிரமமில்லாமலும் முடிந்தது. நான் முதல் வகுப்பு பயணம் என்பதால் 14 ஆயிரம் டாலர் கட்டி வந்துள்ளேன். இரண்டாம் வகுப்பு பயணக் கட்டணமாக 10000 டாலர் பணம் கட்டியும் பலர் வந்துள்ளனர். எங்களின் இந்த பயணம் மிக சிறப்பாக அமைய உறு துணை புரிந்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.' என்கிறார் ஜமீல் வகார்.

தகவல உதவி

அரப் நியூஸ்


Wednesday, October 16, 2013

பீஜே - ஹஜ் பெருநாள் உரை (பாகம் 1)

பி.ஜைனுல் ஆபிதீன் உரையாற்றிய ஹஜ் பெருநாள் முழு உரை வீடியோ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை எக்மோரில் உள்ள இம்பீரியல் சிராஜ் மஹாலில் இன்று 16/10/2013 புதன் கிழமை நபிவழியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மனித உயிர்களுக்கு மதிப்பளிப்போம்! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...

ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்களையே கொன்று இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் போலிகளின் முகத்திரையை கிழிக்கும் பெருநாள் உரை.


மனித உயிர்களுக்கு மதிப்பளிப்போம் – பீஜே by abdulnaseerkw

Monday, October 14, 2013

நிற வெறி! மொழி வெறி! இன வெறி! கடந்த ஒற்றுமை!உலகில் வேறு எங்கும் இப்படி ஒரு புரட்சியை நாம் பார்திருக்கிறோமா? வெள்ளையனும், கருப்பனும், அமெரிக்கனும், ஆப்ரிக்கனும், இந்தியனும், பாகிஸ்தானியும் நிற வெறி, குல வெறி, பிறந்த மண் வெறி அனைத்தையும் தூர வைத்து விட்டு உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். நமக்குள் பேதங்கள் இல்லை. என்று உறுதி பூண்டு இறைவனை நினைவு கூற இதோ இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட உலக மக்கள் ஒன்று கூடி விட்டார்கள்.

ஒரே சீருடை: அதிலும் வெள்ளை சீருடை: அணிந்து மன்னனிலிருந்து பாமரன் வரை தோளோடு தோள் சேர்த்து 'லப்பைக் அல்லாஹூம்ம லப்பைக்: லப்பைக் லா ஷரீக லக்க லப்பைக்' 'வந்து விட்டேன்! இறைவா! உன்னிடமே வந்து விட்டேன்! உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்து விட்டேன். நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.' என்ற விண் முட்டும் கோஷத்தோடு மினா பள்ளியில் ஹாஜிகள் அமர்ந்திருக்கும் காட்சியே நாம் பார்ப்பது.

அனைவருக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

இந்த நன்னாளில் உலகம் முழுவதும், அதிலும் குறிப்பாக நமது நாட்டிலும் அமைதி தவழ்ந்து அனைத்து மக்களும் சாதி இன பேதமின்றி ஒற்றுமையாக வாழ அந்த ஏக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

புதிய தலைமுறை - பிஜேயின் நேற்றைய முழு பேட்டி!

ஃபோலீஸ் ஃபக்ருதீன், பன்னா இஸ்மாயில் போன்றவர்களின் கைது பற்றியும் இதற்கெல்லாம் தீர்வு என்ன என்பதைப் பற்றியும் மிக அழகாகவும் ஆணித்தரமாகவும் பிஜே அளித்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்.


பீ.ஜே பேட்டி - அக்னிப்பரீட்சை FULL VIDEO (13.10... by pjtamilnadu

தீவிரவாதம் பற்றிய இஸ்லாமிய பார்வையையும் சிறிது பார்ப்போம்.தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்-குர்ஆன் 9:32)


பொதுமக்கள் மத்தியிலே குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் பல அப்பாவி உயிர்களைப் பறிப்பது என்பது மனிதாபிமானம் அறவே இல்லாத செய்ல்களாகும். இந்த மாதிரியான செயல்களைச் செய்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏனென்றால் இஸ்லாம் இத்தகைய செயல்களை கடுமையாக எதிர்பதோடல்லாமல் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கைச் செய்கிறது. இவ்வித எச்சரிக்கைகளை மீறி செய்பவர் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது.


நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்-குர்ஆன் 4:29-30)


இஸ்லாத்திற்கும் தற்கொலை குண்டு வெடிப்பிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை! தற்கொலை செய்வதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது: -


அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்-குர்ஆன் 2:195)

ஆனால் உண்மையான விசயம் என்னவென்றால் இஸ்லாத்தின் எதிரிகளே இத்தகைய செயல்களைச் செய்துவிட்டு அதை முஸ்லிம்களின் மீது போடுகின்றனர். (உதாரணம்: <சமீபத்தில் தென்காசியில் கைதானவர்கள் மற்றும் <மஹாராஸ்திரா மாநிலத்தில் கைதானவர்கள் ). இதற்கு காரணம் சகோதர பாசத்துடன் பழகி வரும் இந்து முஸ்லிம்களுக்கிடையே பகைமையை உண்டு பண்ணி அதன் மூலம் இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு இந்துக்களின் வாக்குகளைச் சேகரிக்கும் மிக கீழ்தரமான அரசியல் நடத்துபவர்களே இவ்வாறு செய்கின்றனர். ------------------------------------------------------ இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இந்துத்வாவாதிகள் எத்தகைய மன நிலையில் உள்ளனர் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.

Saturday, October 12, 2013

மாயா கோட்னானி அவர்களுக்கு மனம் திறந்த ஒரு மடல்!!மாயா கோட்னானி அவர்களுக்கு!

நீங்கள் மருத்துவ துறையில் டாக்டரேட் பட்டம் வாங்கிய ஒரு மருத்துவர் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எவ்வாறு உங்களால் குழந்தைகளையும், பெண்களையும் வெட்டி அதில் ருசி கண்ட கூட்டத்துக்கு கட்டளை இட முடிந்தது? உயிருக்கு மன்றாடிய குழந்தைகள், தாயின் முன்னால் தந்தையின் முன்னால் கற்பழிக்கப்பட்ட இளம் பெண்கள், முதியவர்கள் கொல்லப்பட்டது என்று இத்தனை அநியாயங்கள் அரங்கேற்றப்படும் போது அதை ஊக்குவித்தோமே என்று உங்கள் மனம் உங்களை கேள்விகள் கேட்கவில்லையா? அந்த இரவுக்குப் பிறகு உங்களால் நிம்மதியாக தூங்க முடிந்ததா? இந்த சம்பவத்துக்குப் பிறகு உங்களின் பிறந்த நாளை நீங்கள் என்றாவது கொண்டாடியது உண்டா?

இந்த கொலைகளுக்குப் பிறகு உங்களால் புன்முறுவல் பூக்க முடிந்ததா? இன்றும் கூட சிகப்பு ரத்தக் கறைகளை ரசிக்கக் கூடிய பெண்ணாகத்தான் இருக்கிறீர்களா? இந்த சம்பவத்துக்குப் பிறகு குழந்தைகளை உங்களால் கொஞ்ச முடிகிறதா? உங்களின் இந்த வெறி பிடித்த குணத்தைப் பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா? இதற்காக என்றாவது வருந்தியது உண்டா?

அன்பிற்குரிய மாயா கோட்னானி!

நீங்கள் ஒரு பெண், ஒரு தாய், ஒரு சகோதரி, ஒரு பாட்டி என்ற இடங்களைத் தாண்டி நீங்கள் ஒரு மனிதப் பிறவி என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்களிடம் உள்ள அந்த மனிதாபிமானம் எங்கு சென்றது? யாரோ கொடுத்த உத்தரவுகளை அப்பாவிகளான இந்த முஸ்லிம்களின் மீது வெறி கொண்டு செலுத்துகிறோமே! இது தவறில்லையா என்று உங்கள் அடி மனது சொல்லவில்லையா? ஒரு சமூகத்தை நீங்கள் வெறுப்பது என்ற காரணம் கொண்டு அந்த சமூகத்தை ஒட்டு மொத்தமாக அழிக்க முற்படுவது என்ன வகையான தர்மம்? இதைத்தான் இந்து தர்மம் உங்களுக்கு போதித்ததா? ஆட்சியாளர்களே உங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும் உங்களின் மனசாட்சி இந்த காரியங்களை செய்ய எப்படி ஒத்துக் கொண்டது? இந்த கொலைகளை செய்து இந்துக்களின் ஓட்டுக்களைப் பெற்று எதை சாதிக்கப் போகிறீர்கள்? இந்த நாட்டுக்கோ உங்கள் மதத்துக்கோ இதனால் நன்மை விளைந்து விடும் என்று நினைக்கிறீர்களா?

தற்போது சிறையில் உங்கள் மனம் படும் பாட்டை நாங்கள் அறிவோம். இனி வரும் காலங்களிலாவது செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்னிப்பை கேளுங்கள். பாதிக்கப்பட்ட, சுற்றத்தாரை இழந்து தவிக்கும் தற்போது இன்றும் அகதி முகாம்களில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி முஸ்லிம்களிடம் உங்களின் மன்னிப்பை கொண்டு செல்லுங்கள். உங்களை இந்த நிலைக்கு தூண்டிய அந்த ஆட்சியாளர்களை சட்டத்தின் முன் கொண்டு வாருங்கள். உங்களுக்கு கிடைத்த இதே தண்டனை அந்த கயவர்களுக்கும் கிடைப்பதற்கு ஆவண செய்யுங்கள். இது போன்ற செயல்களால் உங்களின் பாவக் கறைகள் சற்று குறைய வாய்ப்புள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கண்ணீருக்கு அதை மன்னிக்கும் உரிமை அந்த மக்களுக்கே உண்டு என்பதையும் மறந்து விடாதீர்கள்.

இறைவன் உங்களை நேர்வழிப்படுத்துவாராக...

இப்படிக்கு

மதசார்பற்ற இந்திய நலன் நாடும் ஒரு குடிமகன்!

பி.ஜே தீவிரவாதியா? அவரே பதில் சொல்கின்றார்.இலங்கை நவமணி வார இதழுக்கு பீஜேயின் பேட்டி இலங்கையில் இருந்து வெளிவரும் நவமணி வார இதழ் தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும் அதன் இலங்கைக் கிளையாக உள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும், முஸ்லிம்களின் நிலை குறித்தும் பீஜே அவர்களை பேட்டி கண்டு விரிவாக வெளியிட்டுள்ளது. அதனை நன்றியுடன் இங்கே அப்படியே வெளியிடுகிறோம்.பி.ஜே தீவிரவாதியா? அவரே பதில் சொல்கின்றார்.

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பி.ஜே பிரபல தென்னிந்திய மார்க்க அறிஞரும், தமிழுலகறிந்த பேச்சாளரும், எழுத்தாளரும், குர்ஆனை சரளமாக தமிழ் மொழியில் பெயர்த்தவருமாவார். இஸ்லாத்தின் தூய செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கும் தனது பயணத்தில் ஆயிரக்கணக்கான உரைகளை இவர் ஆற்றியுள்ளார். கிறிஸ்தவர்கள் மற்றும் வேறு பல இயக்கத்தவர்களுடன் குர்ஆனும் நபியவர்களின் வாழ்க்கை வழிகாட்டலும் தான் மறுமை வெற்றிக்கு வழி செய்துதரும் என்பதை பல விவாதங்கள் மூலமாக இவர் நிரூபித்திருக்கின்றார்.

”இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய மாற்று மத அன்பர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக இவர் நடத்தும் நிகழ்ச்சி தமிழுலகில் பிரபலமானதாகும். இவர் நூற்றுக்கணக்காண நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவருடைய உரைகள், விவாதங்கள், கேள்வி-பதில் நிகழ்ச்சி மற்றும் கட்டுரைகளை www.onlinepj.com என்ற இவருடைய இணையதளத்தில் பார்க்கலாம்.

கேள்வி - உங்களைப் பற்றியும், உங்களது அமைப்பு பற்றியும் கூறுவீர்களா? உங்களது நோக்கமென்ன? அதன் செயற்பாடுகள் எவ்வாறு இடம் பெறுகின்றன?

பதில் - திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியையும் முஸ்லிம்கள் முறையாகவும், முழுமையாகவும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை ஏற்று பிரச்சாரம் செய்யும் பல்லாயிரம் மக்களில் நானும் ஒருவன்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற எங்கள் அமைப்பு நான்கு செயற்திட்டங்களை வகுத்து அதைச் செயல்படுத்தி வரும் இயக்கமாகும்.

01. முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளையும், வணிகம், திருமணம் மற்றும் வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளிலும் திருக்குர்ஆன் காட்டும் வழியிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியிலும் நடக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் சமுதாயத்தில் நுழைந்துவிட்ட எல்லா சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் மத்தியில் பிரசாரம் செய்வது முதல் திட்டம்.

02. பிற மத மக்களுக்கு இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் எழும் சந்தேகங்களுக்குத் தெளிவை ஏற்படுத்தி கசப்புணர்வை நீக்குவது இரண்டாவது திட்டம். பிறசமய மக்கள் மத்தியில்
கேள்வி-பதில் நிகழ்ச்சி வழியாகவும், பொதுக்கூட்டங்கள் வழியாகவும், துண்டுப் பிரசுரங்கள் வழியாகவும் பிரசாரம் செய்து அனைத்து மதத்தவரும் இணக்கமாக வாழ உழைக்கிறோம்.

அனைத்து மதத்தவருக்கும் பயன்படும் வகையில் இரத்ததானம், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, சுனாமி போன்ற அனர்த்தங்களின் போது சாதி, மத பேதம் பாராமல் பாதிக்ப்பட்டவர்களுக்கு உதவுவது எல்லாம் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

03. கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய முஸ்லிம்களை முன்னேற்றுவதற்காக ஸகாத் நிதியைத் திரட்டி உதவுதல், கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலம் கல்வி கற்க ஆர்வமூட்டுதல், தொழில் தொடங்குவதற்கு வழிகாட்டுதல், ஆதரவற்ற சிறுவர்களுக்காகவும், முதியோர்களுக்காகவும், தனித்தனியாக சகல வசதிகளுடன் இலவசமாக ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்துதல்.

04. முஸ்லிம்களுக்கு இந்திய அரசின் மூலமோ அல்லது மற்றவர்கள் மூலமோ பாதிப்பு ஏற்படும்போது அவர்கள் வன்முறையில் இறங்காமல் சட்டத்தை மீறாமல் அறவழிப் போராட்டம் மூலமும், நீதிமன்ற நடவடிக்கை மூலமும், பிரசாரம் மூலமும் நியாயம் கிடைக்கப் பாடுபடுதல்.

கேள்வி - இலங்கையில் செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் பற்றிக் கூறுவீர்களா?

பதில் - இந்தியாவுக்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் வாழும் எல்லா நாடுகளிலும் எங்கள் அமைப்புக்கு கிளைகளும் வலுவான அடித்தளமும் உள்ளது. அந்த வகையில் இலங்கையிலும் உள்ளது.
மற்ற நாடுகளில் செயல்படும் இயக்கத்தின் கொள்கைகளும், எங்கள் கொள்கையும் ஒன்றுதான்.
நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப செயற்திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை காரணமாக சில செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள சட்டப்படிதான் நடக்க முடியும்.
இது போல் சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருக்கலாம்.

கேள்வி - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்கு துணை போகின்றதா?

பதில் - 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏகத்துவக் கொள்கையில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இவ்வளவு நீண்ட காலகட்டத்தில் பல்வேறு ஆட்சிகள் தமிழகத்திலும், இ்ந்தியாவிலும் மாறியுள்ளன. எந்த ஆட்சியிலும் எங்கள் அமைப்பின் மீதோ அதன் தலைவர்கள் மீதோ ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. தீவிரவாதம், வன்முறைக்கு எதிராக நாங்கள் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறோம்.
மேலே நான் எடுத்துச் சொன்ன நான்காவது திட்டமே வன்முறை வழியில் மக்கள் செல்லக் கூடாது என்பதற்காகத்தான்.

கேள்வி - இலங்கையிலுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்குத் துணை போவதாக முத்திரை குத்தப்படுகிறதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் - இலங்கையிலுள்ள எங்கள் ஜமாஅத் ஒருகாலத்திலும் தீவிரவாதத்தில் இறங்காது.
அப்படி இறங்கும் அமைப்பு எங்களின் கிளை அமைப்பாக இருக்க முடியாது. இப்படி யாரேனும் குற்றம் சுமத்தினால் எங்கள் இலங்கை நிர்வாகிகளின் பேச்சு அல்லது நடவடிக்கையை ஆதாரமாக் காட்டி அதை நிரூபிக்க வேண்டும். இப்படி எங்களுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களுடன் அது குறித்து பகிரங்க விவாதம் செய்ய ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல் விட்டது. எங்களை தீவிரவாதிகள் என்று சொன்னவர்கள் இன்றுவரை அந்த அறைகூவலை ஏற்கவில்லை.
இதுவே இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்ற பொய் என்பதை நிரூபித்துக் கொண்டு உள்ளது.

கேள்வி - பொதுபல சேனா, சிங்கல ராகவ போன்ற இனவாத அமைப்புகளின் அண்மைக்கால செயற்பாடுகளால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி உங்களின் கருத்து என்ன?

பதில் - கண்டிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் உள்ளன. கடந்த காலங்களில் இது போன்ற பிரச்சாரம் காரணமாகத்தான் ஈழப் பிரிவினை வாதமும் ஈடுகொடுக்க முடியாத வன்முறைகளும் நடந்தன. இது போல் கடந்த காலங்களில் பேரினவாதிகள் பேசியதை ஆதாரமாகக் காட்டித்தான் விடுதலைப் புலிகள் தமிழர்களை வென்றெடுக்க முடிந்தது. இந்த வரலாற்றில் இருந்து இவர்கள் பாடம் படிக்கவில்லை என்பதை நாம் உணர்கிறோம்.

விடுதலைப் புலிகள் கடும் எதிர்ப்பை இலங்கை அரசு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடித்ததற்கும் முஸ்லிம்கள் அரசின் நிலைபாட்டை ஆதரித்தது முக்கியக் காரணம்.

முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டு இருந்தால் இன்றும் கூட புலிகளைத் தோற்கடிக்க முடியாது. இதற்கு இப்படி நன்றி செலுத்துவது போல் தெரிகிறது. மேலும் சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இலங்கை அரசு தப்பித்துக் கொள்வதற்கும் முஸ்லிம்கள் தான் பயன்பட்டனர்.

முஸ்லிம்கள் இலங்கையில் நல்ல நிலையில் உள்ளனர் என்று பிரச்சாரம் செய்துதான் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை அரசால் பெற முடிந்தது. சக முஸ்லிம் நாடுகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அது இலங்கைக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மேற்கண்ட அமைப்பினர் உணர வேண்டும். இலங்கை அரசு இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

கேள்வி - எல்.டி.டி.ஈ அமைப்பிற்கு எதிராக அதன் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் குறித்து நீங்கள் விமர்சித்திருந்தீர்கள். இதற்கான காரணங்கள் ஏதுமுண்டா?

பதில் - சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்கக் கூடாது என்பது எங்களின் அடிப்படைக் கொள்கையாக உள்ளதாலும், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்களுக்குள் நுழைந்து பலநூறு முஸ்லிம்களை, புலிகள் சுட்டுக் கொன்றதாலும் இன்னும் பல நியாயமற்ற நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் இறங்கியதாலும் நாங்கள் விடுதலைப் புலிககைளை ஆரம்பம் முதல் எதிர்த்தோம்.

எங்கள் ஆதரவைக்கோரி விடுதலைப் புலிகளின் சார்பில் சிவாஜிலிங்கம் என்ற இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரைப்பட இயக்குனர் அமீர் என்பவருடன் வந்து எம்மைச் சந்தித்தார். அவரிடமே அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து புலிகளை, கடுகளவும் நம்பிக்கையுள்ள முஸ்லிம்கூட ஆதரிக்க மாட்டான் என்று சொல்லி அனுப்பினோம்.

ஒஸ்லோ மாநாட்டில் முஸ்லிம்களை ஒரு தரப்பாக சேர்க்கக் கூட ஒப்புக்கொள்ளாமல் கிழக்கு மகாணத்தையும் தங்கள் கைவசத்தில் வைத்து கொள்ள நினைத்த புலிகளின் முஸ்லிம் விரோதப் போக்கையும் நாம் அவரிடம் தெளிவாக விளக்கினோம்.

கேள்வி - எல்.டி.டி.இ ன் மோசமான யுகத்திற்கு முடிவுகட்டப்பட்டவை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் - இப்போது நாடு அமைதியாக உள்ளது. புலிகளின் ஆதிக்கமிருந்த கால கட்டத்தில் நான் இலங்கைக்கு பல தடவை வந்துள்ளேன். கொழும்பிலிருந்து கல்முனைக்குப் போய்ச் சேர்வதற்குள் பத்துக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் பயணிகளை இறக்கிவிட்டு சோதிப்பார்கள். காலையில் புறப்பட்டால் இறவில்தான் போய்ச்சேர முடியும். அந்த நிலை இப்போது இல்லை. நாங்கள் கொலன்னாவ என்ற இடத்தில் தங்கியிருந்து காலையில் விமானத்தில் சென்னை செல்லக் காத்திருந்தோம்.

எங்கள் பயணத்துக்கு சிலமணி நேரங்களுக்கு முன்னால் கொழும்பு விமான நிலையத்தைப் புலிகள் தாக்கினார்கள். நாங்கள் ஒரு மணிநேரம் முன்னதாகப் புறப்பட்டிருந்தால் கொல்லப்பட்டவர்களில் எங்கள் பெயரும் இடம் பெற்று இருக்கக்கூடும். இது போன்ற நிலை இப்போது இல்லை.
ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டிய சிங்கள இயக்கங்கள் இந்த அமைதியை நீடிக்க விடமாட்டார்களோ
என்று அச்சமாக உள்ளது.

கேள்வி - நீங்கள் தீவிரவாதியா?

பதில் - நான் மேலே கூறியவற்றில் இதற்குப் பதில் உண்டு.

கேள்வி - தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே ஆட்சி தொடர்பாக ஏதாவது கூறுவீர்களா?

பதில் - இலங்கையிலுள்ள அரசியல் நிலவரங்கள் எங்களுக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால் இலங்கைக்கு வெளியே வாழும் எல்லா முஸ்லிம்களும் பேரினவாத வெறியர்கள் விஷயத்தில் மென்மையாக அல்லது மறைமுக ஆதரவாக ராஜபக்ஷே இருக்கிறார் என்ற எண்ணம் பதிந்து வருகிறது. இதை அவர்தான் தனது நடவடிக்கை மூலம் மாற்ற வேண்டும்.

கேள்வி - ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு எழுந்தபோது இலங்கைக்கு ஆதரவாக உங்கள் குரல் வந்தது ஏன்?

பதில் - புலிகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதால் அதைச்செய்த இலங்கை அரசைக் கண்டிக்கக் கூடாது என்பதால் ஆதரவாக் குரல்கொடுத்தோம். ஆனால், பள்ளிவாசல்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் அதிகரித்தால் இந்த நிலை நிச்சயமாக மாறிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.

கேள்வி - பௌத்த இனவாதிகளுக்கு ஏதாவது கூற விரும்புகிரீர்களா?

பதில் - பெரும்பான்மை மக்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டி அதிகாரம் செலுத்தவும், சொகுசாக வாழவும் இதேபோல் பேரிணவாதத்தைக் கையில் எடுக்கிறார்கள். ஆனால் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படும் போது நம்மில் ஒருவன் செத்தாலும் எதிரிகளில் ஆயிரம் பேரை அழிக்கவேண்டும் என்ற மனநிலைக்கு உள்ளாகிறான். இதே போல் உருவாகாத வரை தான் பெரும்பான்மை வாதத்தால் பயன் அடைய முடியும்.

கொடுமை எல்லை மீறிப் போனால் சாகத் துணிந்தவர்களை அது மீண்டும் உருவாக்கிவிடும்.
இதனால் பெரும்பான்மை சமுதாயம் பயந்து வாழும் நிலை ஏற்பட்டுவிடும். இதற்கு வரலாற்றில் அநேக ஆதாரங்கள் உள்ளன. விடுதலைப் புலிகளை விட வேறு என்ன ஆதாரம் தேவை?
அனைத்து மக்களும் சகோதரர்களாக சம உரிமை பெற்றவர்களாக வாழ்வதற்கு பாடுபடுங்கள் என்பதுதான் இவர்களுக்குச் சொல்லும் செய்தி.

கேள்வி - இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு கூறுகளாக பிரிந்திருக்கின்றார்களே. இது பற்றி...?

பதில் - இலங்கை மட்டும் அல்ல. உலகம் முழுவதும் இந்த நிலை உள்ளது. மார்க்கம் அடிப்படையிலான பிளவுகளும் உள்ளன. அரசியல் ரீதியான பிளவுகளும் உள்ளன. மார்க்க அடிப்படையிலான பிளவுகள் பற்றித்தான் நாம் அதிகம் கவலைப்பட வேண்டும். மனது வைத்தால் இதில் அதிகமான பிளவுகளைக் குறைத்துவிட முடியும். அனைத்து பிரிவினரும் திருக்குர்ஆனை ஏற்றுக் கொண்டுள்ளனர். நபிகள் நாயகத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிடுவோம் என்ற மனநிலைக்கு முஸ்லிம்கள் வந்துவிட்டால் இரண்டு மூன்று பேச்சுவார்த்தைகளில் ஏராளமான வேறுபாடுகளைக் குறைத்து விடலாம்.

புரிந்து கொள்வதில் ஏற்பட்ட மிகச் சில வேறுபாடுகள் மட்டுமே மிஞ்சும். யார் பதவியைப் பிடிப்பது என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரிவுகளையும் கூட நாம் மனது வைத்தால் குறைத்துவிடலாம். இயக்கங்களை நடத்தும் தலைவர்கள் தங்களின் ஆதாயத்திற்காகவே இயக்கம் நடத்துவதால் தங்கள் இயக்கத்தைக் கலைக்க மாட்டார்கள்.

ஆனால் மக்களுக்கு இவர்களைப் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மக்கள் நினைத்தால் அதிகமான இயக்கங்களை ஒழித்துவிடலாம். எல்லா இயக்கங்களிலும் கேடுகளும் நல்லவைகளும் இருக்கும். முற்றுமுழுதான நல்ல இயக்கம் எதுவும் கிடையாது. முழுமையான கெட்ட இயக்கமும் கிடையாது. எனவே இருக்கும் இயக்கங்களில் குறைவாக தவறு செய்யும் இயக்கம் எது என்றும், அதிகமான நன்மை செய்யும் இயக்கம் எது என்றும் திறந்த மனதுடன் ஆய்வு செய்து உள்ளதில் நல்லதை மட்டும் ஆதரித்து மற்றவைகளை அறவே ஒதுக்கினால் பெரியளவில் இயக்கங்களின் எண்ணிக்கை இருக்காது.

இருக்கும் இயக்கங்களில் ஓரளவு நல்ல இயக்கம் தவிர, வேறு இயக்கங்களை ஆதரிப்பதில்லை.
நிதி அளிப்பதில்லை. அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை. என்று முடிவு செய்தால் லெட்டர் இயக்கங்கள் காணாமல் போய்விடும். எவன் எதை ஆரம்பித்தாலும் அதை ஆதரிக்கவும், உதவவும் நாலு பேர் இருப்பதால்தான் இயக்கங்கள் பெருகுகின்றன.

கேள்வி - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏனைய அமைப்புகளுடன் முரண்படுகின்றதாம். இக்குற்றச்சாட்டு நியாயமானதா?

பதில் - ஒவ்வொரு அமைப்பும் மற்ற அமைப்போடு பல விடயங்களில் முரண்பட்டுத்தான் இருக்கின்றன. முரண்பட்டாலும் எங்கள் நிலை சரி உங்கள் நிலை தவறு என்று சொல்ல மாட்டார்கள்.
எங்கள் இயக்கத்தின் தவறுகளை நீங்கள் பேசாதீர்கள். உங்கள் இயக்கத்தின் தவறுகளை நாங்கள் பேசமாட்டோம் என்று எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது ஆனால், குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம். வேறு எதுவும் மார்க்கம் இல்லை என்பது எங்கள் கொள்கை. இந்தக் கொள்கையில் நாங்கள் இருப்பதால் மற்றவை தவறு என்று நாம் பிரசாரம் செய்யும் அவசியம் ஏற்படுகிறது.

இதனால் இக்கொள்கையை ஏற்காதவர்கள் எங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். நாங்களும் அவர்களுடன் ஒத்துப்போக மாட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் இதுதான் நடந்தது. யூதர்களும், நசாராக்களும் கொள்கை அடிப்படையில் அதிக வேறுபாடு உள்ள மக்கத்துக் காஃபிர்களுடன் இணக்கமாக இருக்க முடியாது.

கொள்கையில் நெருக்கமாக உள்ள முஸ்லிம்களுடன் தான் இணக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கத்துக் காஃபிகளுடன் அவர்கள் இணைந்து கொண்டனர்.

நபியவர்கள் அனைவருடைய தவறுகளையும் தாட்சண்யமில்லாமல் போட்டு உடைக்கிறார்கள் என்பதே இதற்குக் காரணமாக இருந்தது. இதன் காரணமாகத்தான் எல்லா இயக்கங்களும் மற்ற இயக்கங்களில் இருந்து வேறுபட்டாலும், எழுதப்படாத இந்த ஒப்பந்தம் காரணமாக சேர்கிறார்கள். குறிப்பாக எங்களை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு விடுகிறார்கள்.

கேள்வி - இலங்கையில் அண்மையில் நிறைவுற்ற மகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் உறுப்புரிமை குறைந்துள்ளதை பற்றி?

பதில் - இதுபற்றி முழுமையாக விபரம் என்னிடம் இல்லை. ஆனால் முஸ்லிம் இயக்கங்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டன என்பது மட்டுமே தெரிகிறது. அவர்கள்தான் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கேள்வி - இலங்கையில் தமிழ் தலைவர்கள் ஒன்றுபட்டு உரிமைகளுக்குப் போராடும் போது முஸ்லிம் தலைவர்கள் பிரிந்திரக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் - முஸ்லிமல்லாத தமிழர்களுக்கு வாழ்வா, சாவா என்ற பிரச்சினை என்பதால் அந்த நெருக்கடி அவர்களை ஒன்று சேர்த்து விட்டது. சாதாரண நிலை வந்ததும் ஒற்றுமை சிதறிவிடும்.
ஒரு ஊரில் கலவரம் நடந்தால் அந்த நேரத்தில் மட்டும் எல்லோரும் கருத்து வேறுபாட்டை மறந்து சேர்ந்து கொள்வதில் ஆச்சரியம் இல்லை. முஸ்லிம்களுக்கும் வாழ்வா, சாவா என்ற அளவிற்கு நிலைமை ஏற்பட்டால் அந்த நெருக்கடியே அவர்களை ஒன்றுபடுத்திவிடும்.

சாதாரண நேரங்களில் ஒரு பார்வையும், நெருக்கடியான நேரத்தில் வேறுபார்வையும் இருப்பது மனிதர்களின் இயல்புதான். எனவே முஸ்லிமல்லாத தமிழர்கள் ஒன்றுபட்டதை முஸ்லிம்களுடன் ஒப்பிட முடியாது.Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/navamani/
Copyright © www.onlinepj.com

Friday, October 11, 2013

பலி ஆடுகளா போலீஸ் ஃபக்ருதீனும், பிலால் மாலிக்கும்!
வேலூரில் கொல்லப்பட்ட அரவிந்த ரெட்டியை கொன்றதாக சொல்லி வஜுர் ராஜா- வை பிடித்தார்கள் சிறையில் அடைத்தார்கள். இப்போது போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர்கள் செய்ததாக போலிஸ் சொல்கிறது.! முன்பு குற்றவாளிகளாக போலிசாரால் சொல்லப்பட்ட வசூர் ராஜா இப்போது குற்றவாளியா? நிரபராதியா?

வேலூர் மத்திய சிறையில் இருந்தபடி, ரவுடி வசூர் ராஜா, ரெட்டியை கொலை செய்ததாக, அப்போதைய வேலூர் எஸ்.பி., ஈஸ்வரன் கூறினார். அதன் பின், வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த தங்கராஜ், பிச்சை பெருமாள், தோட்டப்பாளையத்தை சேர்ந்த சத்யா, உதயா என்ற உதயகுமார், அரியூரை சேர்ந்த ராஜா மற்றும் திட்டம் போட்ட வசூர் ராஜா என, ஆறு பேரை நவம்பர், 22ம் தேதி கைது செய்தனர். ராஜாவை கடலூர் சிறையிலும், மற்றவர்களை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில், 'அரவிந்த் ரெட்டியை கொலை செய்தது, நாங்கள் தான்' என, பயங்கர வாதி, 'போலீஸ்' பக்ரூதீன் வாக்கு மூலம் அளித்திருப்பது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் தெற்கு போலீசார் இந்த வழக்கை விரைந்து முடித்து, நல்ல பெயர் எடுப்பதற்காக, ரவுடி வசூர் ராஜா உள்ளிட்ட, ஆறு பேரை பலி கடா ஆக்கி விட்டதாகவும், அவரை, நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து, ரெட்டியை கொலை செய்ததாக ஒப்பு கொள்ள வைத்து, வழக்கை முடித்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், ரெட்டி கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்ட மிட்டுள்ளனர். இதை அறிந்த வேலூர் தெற்கு போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர். பக்ருதீன் கூறியது உண்மை என நிரூபிக்கப்பட்டால், வசூர் ராஜாவை கொலையாளி என, அப்போது அடையாளம் காட்டிய அப்போதைய எஸ்.பி., ஈஸ்வரன், வேலூர் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் அண்ணா துரை ஆகியோர் மீது, துறை ரீதியான விசாரணை நடத்தி, தவறு உறுதியானால், தண்டிக்க வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


இது இன்றைய தினமலரின் செய்தி:

"இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல, 100 புத்தக வெடிகுண்டுகளை, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், தயாரித்து, மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல், அவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது."

-தின மலர்

துப்பாக்கி குண்டுகளை மறைத்து வைக்க வேறு இடங்களே கிடையாதா? என்ன ஒரு கற்பனை...

இனி வருங் காலங்களில் தின மலரில் போலீஸ் பக்ருதீன் சொன்னதாக இப்படியும் செய்திகள் வரலாம்.:-)

செப்டம்பர் 11 அமெரிக்க தாக்குதலை நடத்தியதும் நாங்கள் தான்:

காந்தியை கொன்று கோட்சேவின் மேல் பழியைப் பொட்டதும் நாங்கள் தான்:

மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புகளை நாங்களே நிகழ்த்தி சாது பிரக்யாசிங்கை மாட்டி விட்டோம்:

--------------------------------------------------------------

வேலூரில் 23.10.2012 அன்று பா.ஜக. மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி, பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொல்லப்பட்டார். இது தொடர்பாக வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், ராஜா, பிச்சைப்பெருமாள், தரணிகுமார் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியில் கடந்த 19.3.2013 அன்று நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காய் கடை முருகன், நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராஜா முகம்மது, மனோகரன், ரபீக் ராஜா, சாகுல் அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

- தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜம் 26-07-2013 அன்று வெளியிட்ட அறிக்கை

---------------------------------------------------------------

இதை எல்லாம் இப்படி திட்டமிட்டு இந்துத்வாவினர் செய்வதற்கு பின்னணி என்ன? ஏன்? என்பதற்கு ஒரு இந்துத்வா வாதி தின மலரில் எழுதியுள்ள கமெண்டை பாருங்கள்.


rishi - varanasi,இந்தியா
09-அக்-201302:04:39

பிஜேபி வாக்கு இந்த முறை நிச்சயம் பெருகும். காரணம் விஸ்வரூபம், வெள்ளையப்பான் கொலை , ரமேஷ் கொலை , பொரிக்கி தீவிரவாதிகளின் வாக்குமூலம் , அனைத்து கட்சிகளின் மௌனம் இவை அனைத்தும் பிஜேபி வளர்சிக்கு உதவும் பிஜேபி அழிக்க வாள் ஏந்தினார்கள? இனிதான் பிஜேபி வளரபோகிறது .

-------------------------------------------------------------

பக்ருதீன் அலி அகமது என்ற போலீஸ் பக்ருதீன் சின்ன வயதில் தீவிர ரஜினி ரசிகர். ரஜினி படம் பார்ப்பதற்காக இரும்புப் பட்டறையில் வேலைபார்த்துச் சம்பாதித்த ஒரு ரூபாய், ரெண்டு ரூபாயை வைத்துக் கொண்டு டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பார். சிந்தாமணி தியேட்டரில், பாயும் புலி படம் ஓடியபோது ஆண்கள் டிக்கெட் விலை அதிகம் (90 பைசா, ரூ.1.10 பைசா). ஆனால் பெண்கள் டிக்கெட் 30 பைசா, 60 பைசாதான். இதனால், பெண்கள் டிக்கெட்டை 30 பைசாவுக்கு வாங்கிவிட்டு, மீதிக்காசுக்கு முட்டை போண்டா சாப்பிடலாம் என்று கணக்கு போடுவார்.

அதற்காக பெண்களிடம் டிக்கெட் எடுத்துத்தரச் சொல்லி கெஞ்சுவார். சில முறை பெண்கள் காசை வாங்கிவிட்டு, டிக்கெட் எடுத்துக் கொடுக்க மறந்துவிடுவார்கள். அவர்கள் வருவார்கள் வருவார்கள் என்று வாசலிலேயே ஏமாற்றத்தோடு காத்திருப்பார். இப்படி பலமுறை நடந்திருக்கிறது. அதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும்தான். பிறகு, அவர் வயதொத்த பையன்களிடம் சேர்ந்து பாதை மாறிவிட்டார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/article5217764.ece?homepage=true

ஆக..கூத்தாடிகளை தனது வழிகாட்டியாக கொண்ட பக்ருதீன் இந்துத்வாவாதிகளை போட்டுத் தள்ள வேண்டிய அவசியம் என்ன? இவனுக்கும் இஸ்லாத்துக்கும் என்ன தொடர்பு?

------------------------------------------------------------

போலீஸ் காவலில் இருக்கும் பக்ருதீன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் முதலில் முரண்டு பிடித்துள்ளார். உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், அவர் தோளில் கை வைத்தபடி, “உன் காதல் மனைவி உன்னை உதறித்தள்ளிய பிறகு தான், இப்படி மூர்க்கத்தனமாக மாறிட்டியா?” என்று கேட்டிருக்கிறார். அடுத்த நொடியே பக்ருதீனின் கண்கள் கலங்கிவிட்டன. தன் காதல் மனைவி பற்றி அந்த அதிகாரியிடம் புலம்பியதோடு, அதுவரை மறைத்த தகவல்களையும் போலீஸில் கொட்டியிருக்கிறார்.

கல் நெஞ்சையும் கரைத்த காதல் கதையை அறிய மதுரையில் நாம் விசாரணையை துவக்கினோம். “அடிக்கடி அடிதடியில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று திரும்பியபோது, பக்ருதீனுக்கு ஏரியாவுக்குள் ஹீரோ இமேஜ் உருவானது. அப்போது மும்தாஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணைக் காதலித்தார். வயதில் பாதிதான் இருக்கும் அந்த பெண்ணும் விரும்பியிருக்கிறார்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article5217677.ece?homepage=true

-------------------------------------------------------------

எங்களை இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்பவர்களுக்கு, எங்களை இஸ்லாமியர்களே ஒதுக்கித் தான் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியுமா? இன்று எங்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி வீதியில் வீராவேசமாகப் பேசுபவர்கள், என் குடும்பத்தினர் சித்ரவதை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள்? ...

நானும் 1993ல் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போய்விட்டேன். இதனால் சேர்க்கை சரியில்லாமல் வம்பு, தும்பில் சிக்கி அவனை அடிக்கடி போலீஸார் பிடித்தனர். 18 வயதுக்குள் 5 வழக்குகள் பதிவாகிவிட்டது.

1995ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அவனை சம்பந்தமே இல்லாமல் கைது செய்தனர். அன்று முதல் அவனைத் தீவிரவாதி என போலீஸார் கூற தொடங்கினர். இதில் உண்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்ற முஸ்தபாதான் என்று தெரியவந்தது. இந்த வழக்கில் பக்ருதீன் உள்ளிட்டவர்களை பொய்யாக கைது செய்ததற்காக வெடிமருந்து வாங்கிய உதவி ஆய்வாளரை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

கடந்த 1998ல், மதுரை மதிச்சியத்தில் பரமசிவம் என்பவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றான். அங்குதான் தப்பான வழிக்கு போக காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 2001ல் ஜாமீனில் வந்தவன், திருமங்கலம் கோர்ட்டில் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையிட்டு, இமாம் அலியை மீட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டு, எங்கள் நிம்மதிக்கு உலை வைத்தான். அந்த வழக்கில் 7 ஆண்டு சிறையில் இருந்தான்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/article5210258.ece

திருந்தி வாழ நினைத்த பக்ருதீனை நமது காவல் துறையும் விடவில்லை.

காவல் துறை மனது வைத்தால் யாரையும் கொலைகாரனாக மாற்ற முடியும்: உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைத்து விட முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். இனி என்னவெல்லாம் பொய்கள் சபை ஏறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.