Followers

Saturday, April 30, 2011

இஸ்லாமிய ஆட்சியை விரும்பும் எகிப்திய மக்கள்!


CAIRO: A majority of Egyptians believe laws in their country should observe the teachings of Islam’s holy book, the Qur’an, according to the results of an opinion poll by a US-based research center.

The results also show that Egyptians, who have shifted toward religious conservatism over the past 40 or so years, are open to the inclusion of religious parties in future governments. Only a minority, however, sympathize with fundamentalist religious parties, according to the results.

Overall, the results of the poll paint a picture of Egyptians as a people who prefer religious moderation over extremism and prize democratic values even if they come at the risk of some political instability.

The poll results were released late Monday and come five months ahead of legislative elections, the first since the February ouster of longtime authoritarian leader Hosni Mubarak.

Islamic parties are expected to make a significant showing in the crucial vote, with 50 percent of people saying it was “very important” for religious parties to be part of a future government and as much 37 percent have a “very favorable” view of the Muslim Brotherhood, the country’s largest and best organized Islamic group.

Another 62 percent of Egyptians believe laws in their country should strictly follow the teachings of the Qur’an, though 27 percent thought it was enough that the laws reflect Islam’s general values and principles.

The poll, based on interviews with 1,000 Egyptians, was conducted by the Pew Research Center between March 24 and April 7. Its margin of error was plus or minus 4 percent.

Its results gauge the mood in Egypt at a time when the country’s future is wide open after an end to 29 years of rule by Mubarak — a period defined for many by political suppression, corruption and wide socio-economic disparities.

Mubarak’s departure in the face of a popular, 18-day uprising will now give Egyptians unprecedented freedom to choose their future government as well as give new opportunities to political and social forces that have long been kept under wraps.

Islamic groups long suppressed under Mubarak are now free to operate publicly and plan to contest the September vote.

In a result that doesn’t bode well for the country’s lingering sectarian issues, the poll showed that only 36 percent of those questioned believe it is “very important” for Christians and other minorities to freely practice their religions, suggesting the influence of these militant groups, who have incited hatred of the country’s 10 percent Christian minority.

Post-Mubarak Egypt also suffers from a security vacuum that has led to a dramatic surge in crime. Economic problems are also deepening and the country has had to borrow from the International Monetary Fund and the World Bank to balance its books since the political upheavals of the past three months have disrupted productivity, scared away tourists and hit exports.

The poll results also showed that more than half of all Egyptians would like to see the 1979 peace agreement with Israel annulled, highlighting the deep unpopularity of the treaty, which is central to US policy in the region and was scrupulously adhered to by Mubarak.

More than anything else, however, the youth-led pro-democracy movement, which reworked the political environment, dramatically improved people’s attitudes. The polls show a major rise in optimism and changing of national priorities.

In 2007, Egyptian were evenly split over which was more important, a strong leader or democracy, but in the recent poll, 64 percent rated democracy higher.

Of those whose names have been put forward as possible candidates for the presidential elections late this year, former Arab League head Amr Moussa was the most popular, with 89 percent giving him a very or somewhat favorable rating.

Former presidential candidate Ayman Nour trailed with a 70 percent rating while Nobel Prize Laureate and reform leader Mohamed ElBaradei only had 57 percent rating.

The United States, Egypt’s strongest foreign backer since the mid-1970s, continued to garner low approval ratings, with only 20 percent of Egyptians seeing it in a positive light, up from 17 percent in 2010.

-Thanks Arab News daily.

மேற்கத்திய கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து குர்ஆனின் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் எகிப்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு ஷரியத் சட்டமே தேவை என்று சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சவூதி அரேபியாவைப்போல் மூடப்பழக்கங்களை களைந்து குர்ஆன் கூறக்கூடிய தூய்மையான ஆட்சியைத் தர இறைவனிடம் இறைஞ்சுவோம். கிறித்தவர்களும் யூதர்களும் முகமது நபி, அபுபக்கர், உமர் ஆட்சிகாலங்களில் எப்படி சுதந்திரமாக இருந்தார்களோ அது போன்ற ஒரு வாழ்க்கையை பெரும்பான்மை முஸ்லிம்கள் கொடுக்கவும் இந்நேரத்தில் பிரார்த்திப்போம்.

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும்போது,

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்பு தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

-குர்ஆன் 110:1,2,3

Friday, April 29, 2011

மன்னர் பஹதின் இறப்பும்-இங்கிலாந்து இளவரசரின் திருமணமும்!


உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் உலக முஸ்லிம்களால் மரியாதையோடு பார்க்கப்பட்ட சவூதி முன்னால் மன்னர் பஹத் உடைய சமாதியைத்தான் நாம் பார்க்கிறோம். இந்த மன்னர் குடும்பத்துக்கு இருக்கும் செல்வத்தில் இந்த சமாதியை பல கோடிகள் செலவு செய்து பலரும் காணும் இடமாக ஆக்கியிருக்கலாம். அதுதான் மனித இயல்பு. ஆனால் இஸ்லாம் இது போன்ற ஆடம்பர செலவுகளையும் தேவையற்ற தனி மனித துதிபாடுதலை வெறுப்பதாலும் மன்னரை மிகவும் சாதாரணமாக எந்தவொரு மேடையும் அமைக்காமல் சமாதியை அமைத்துள்ளது சவூதி அரசு. மக்களுக்கு பயந்து இது போன்ற செய்கையை செய்யவில்லை இந்த அரசு. ஏனெனில் நமது ஜனநாயக நாட்டைப் போல் இங்குள்ளவர்கள் ஆட்சியாளர்களை தட்டிக் கேட்க முடியாது. ஆனால் இறைவனுக்கு பயந்தவர்களாக இந்த ஆட்சியாளர்கள் இருப்பதால் இது போன்ற எளிமை இங்கு பின்பற்றப்பட்டது.

இறந்தவர்களுக்காக உடலை முன்னால் வைத்து மசூதியில் அனைவரும் அவருக்காக பிரார்த்திதது ஒரு தொழுகை நடத்துவது வழக்கம். மன்னர் பஹதுடைய உடலை பள்ளிக்கு கொண்ட வந்தபோது இந்நாட்டு சாதாரண குடிமகனின் இறந்த உடலும் பள்ளிக்கு வருகிறது. உடனே இரண்டு உடல்களையும் அருகருகே வைத்து கூட்டாக அனைவரும் தொழுகை நடத்தினர். ஆண்டான் அடிமை என்ற பேதமில்லாமல் இருவருக்கும் ஒன்றாக தொழுகை நடத்தி இருவரையும் எந்த வித்தியாசமும் இல்லாமல் மண்ணில் புதைத்தனர் ஆட்சியாளர்கள்.

இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் நேரலையில் பார்த்து வந்த ஒரு கிறித்தவ பாதிரியார் இந்த நாளில் இப்படி ஒரு நிகழ்ச்சியா என்று வியந்து இஸ்லாத்தை தழுவிய செய்தியும் அன்றே வந்தது. ஆங்கிலத்தில் வந்த செய்தியை அப்படியே தருகிறேன்.

The funeral of King Fahd, which was conducted in a simple manner in Riyadh earlier this month, has encouraged a well-known Christian priest in Italy to embrace Islam, press reports said.

The priest, who watched the late king's funeral on satellite television, was impressed by the lack of pomp and pageantry in the royal funeral, Al-Riyadh Arabic daily reported without mentioning his name.

King Fahd was buried in Al-Oud graveyard the next day of his death after a solemn funeral ceremony attended by world leaders.

Islamic preacher Dr. Abdullah Al-Malik said the simple funeral of the king had a dramatic effect on the priest's mind, which led him to Islam. "Although he had read several Islamic books before, they didn't have the same impact."

This is the second high-profile reversion to Islam by an Italian involving Saudi Arabia. Four years ago, Italian Ambassador to Riyadh Torquato Cardilli embraced Islam.

"The priest watched the funeral of King Fahd and another person on television and did not find any difference," Malik said. "There was only a single funeral prayer for the two and both were buried in similar graves. This great example of equality influenced the priest and prompted him to embrace Islam," Malik said.

Muslim preachers in Italy had given the priest Islamic books and cassettes in the past 15 years, but what moved him was the simplicity of the royal funeral.

"I had read several Islamic books and heard many Islamic cassettes over the past years, they never moved me. But the simple royal funeral shook me and changed my mind," Malik quoted the priest as saying.

He said he believed the king's funeral would change the mind of many others. He urged Muslim media to focus on stories related to Islam's tolerance and equality in order to attract more people to the religion.

"I will work the rest of my life for the propagation of Islam," the 62-year-old former priest said.

Badr Al-Olayan, director of the Islamic Education Foundation in Jeddah, said the priest's reversion to Islam was "very good news." He narrated the story of another Italian who came to IEF office to embrace Islam after being impressed by the large and orderly congregation of Muslims at the Grand Mosque in Makkah to perform prayers.

"How can you assemble such a large number of people by just making a call. It's impossible. Only God can do that," he quoted the Italian as saying.

Olayan urged Muslims to do more in order to take the message of Islam to other people.

Ambassador Cardilli, 60, embraced Islam on Nov. 15, 2001. "I am fully convinced of the truth of Islam through my regular reading of God's final revelation, the Holy Qur'an," Cardilli was quoted as saying at the time.

இதே நேரம் நமது நாட்டையும் சற்று ஒப்பிட்டு பார்ப்போம். ஜனாநாயக நாடு என்கிறோம். உங்களுக்கு உழைக்க எங்களுக்கு ஓட்டளியுங்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்தவுடன் எத்தனை ஆடம்பரங்கள். வளர்ப்பு மகன் திருமணத்தை ஜெயலலிதா எவ்வளவு ஆடம்பரமாக நடத்தியதை பலரும் பார்த்தோம். சசிகலா நகைகளாலேயே தன்னை அலங்கரித்து கொண்டு வந்ததையும் பார்த்தோம். மெரினா பீச் முழுக்க சமாதிகளின் அணிவகுப்பு. செருப்பை வெளியிலேயே கழட்டி வைத்து விட்டு அண்ணாவையும் எம்ஜிஆரையும் பய பக்தியோடு பலரும் வணங்குவதை நான் பார்த்தேன். இன்னும் ஒருவருக்கும் அங்கு இடம் இப்போதே ரிசர்வ் செய்து வைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அடுத்த தலைமுறையில் இவர்களும் தெய்வங்களாக்கப் படலாம்.

சவுதி ஆட்சியாளர்களிடத்தில் ஒரு சில குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் நம் நாட்டைப் போன்று இவ்வளவு கேவலமாக ஆட்சியாளர்களின் நடவடிக்கை எங்கும் இருந்ததில்லை.

அடுத்து எகிப்து, லிபியா, டுனீசியா வைப்போல் சவுதியிலும் ஏன் புரட்சி வெடிக்கவில்லை என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. ஏற்கெனவே ஆட்சி செய்து வருபவர் எந்த குறையும் இல்லாமல் ஆட்சி செய்து வரும்போது என்ன காரணத்துக்காக மாற்றம் வர வேண்டும்? இங்கு மக்கள் அமைதியாக தனது வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். உயிருக்கு உத்தரவாதம் இருக்கிறது. வெளிநாட்டவர் அடியாட்களின் தொல்லை இல்லாமல் சுதந்திரமாக வியாபாரம் செய்ய முடிகிறது.

அடுத்து இங்கு ஜனநாயகம் இல்லையே என்ற கேள்வியையும் வைக்கிறார்கள். இத்தனை காலம் ஜனநாயக ஆட்சியினால் என்ன சாதனையை இந்தியர்களாகிய நாம் சாமான்ய மக்களுக்கு செய்து விட்டோம்? எந்த முறையில் ஆட்சி அமைந்தாலும் அது மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும். இதுதான் இங்கு நாம் கவனிக்க வேண்டியது.

அடுத்து இன்று இங்கிலாந்து இளவரசரின் திருமணத்தை நேரலையில் சிறிது நேரம் பார்த்தேன். என்ன ஆடம்பரம். எத்தணை கோடிகள் வீண். அதுவும் தற்போது இங்கிலாந்து ஜனநாயகத்து மாறி எத்தனையோ வருடங்களாகி விட்டது. இன்றும் இந்த குடும்பத்துக்கு அரசு பணம் கோடிக்கணக்கில் கொட்டப்படுகிறது. பொருளாதாரளத்திலும் சொல்லிக் கொள்ளும் படியாக தற்போதய அரசு இல்லை. நிதிப் பற்றாக் குறையினால் கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்து வந்த ஸ்காலர்ஷிப்பை தடாலடியாக நிறுத்தும் நிர்பந்தத்தில்தான் இன்றைய அரசு இருக்கிறது. படிப்பை விட இளவரசரின் திருமணம்தான் இவர்களுக்கு முக்கியமாகி விட்டது.

ஆட்சியில் இல்லாத இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு பணம் விரயமாக்கப்படுவதையும், அதே தற்போது ஆட்சியில் இருக்கும் மன்னர் குடும்பம் பஹதுடைய இறப்பை கைக் கொண்ட விதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.


'உண்ணுங்கள்: பருகுங்கள்: வீண் விரயம் செய்யாதீர்கள்: விண் விரயம் செய்வோரை அவன் விரும்பமாட்டான்'
-குர்ஆன் 7:31

'இறைவன் உங்களை நிர்வாகிகளாக்கியுள்ள சொத்துக்களை அதன் உரிமையாளரான விபரம் அறியாதோரிடம் கொடுக்காதீர்கள்! அதில் அவர்களுக்கு உணவளியுங்கள்: உடையும் வழங்குங்கள்! அவர்களிடம் அழகான சொல்லைக் கூறுங்கள்'
-குர்ஆன் 4:5

டிஸ்கி: ரஜினிகாந்த் என்ற நடிகர் மூச்சுத் திணறலால் அவசரபிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்தியில் பார்த்தேன். கைகளை பிளேடுகளால் கீறிக் கொள்வது, தீக்குளிப்பது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது, தற்கொலையில் இறங்குவது போன்ற கேணத்தனமான செயல்களில் அவரின் ரசிக குஞ்சாமணிகள் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் தமிழன் எதற்கெடுத்தாலும் உடன் உணர்ச்சிவசப்படக் கூடிய சுபாவம் உள்ளவன். அவர் நலம் பெற்று வர வாழ்த்துவோம்.

Wednesday, April 27, 2011

ஜாதிகள் இல்லையடி பாப்பா!

டி.என்.பாளையம்:தீண்டாமை கொடுமையால் அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் பரிதாபமான நிலை, சத்தி அருகேயுள்ள கிராம குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள்.இப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கல்வியை துவங்க வேண்டுமானால், 4.5 கி.மீ., தொலைவிலுள்ள நஞ்சப்பக்கவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.ஏன் இந்த கொடுமை; அருகில் ஏதும் பள்ளிகள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.காலனிக்கு அருகிலேயே 1.5 கி.மீ., தொலைவில் குண்டி பொம்மனூரில் யூனியன் நடுநிலைப் பள்ளி உள்ளது. ஆனால், அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை சேர்க்க, ஜாதிக் கொடுமை குறுக்கே நிற்கிறது.

குண்டிபொம்மனூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள், தங்கள் ஊரில் உள்ள யூனியன் பள்ளியில், குட்டை மேட்டூர் காலனியை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இவர்களது எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், குட்டை மேட்டூர் காலனி மக்கள், வேறு வழியின்றி நஞ்சப்பக்கவுண்டன் புதூர் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். குழந்தைகளும் தினமும் ஒன்பது கி.மீ., பாத யாத்திரை செல்கின்றனர்.இப்பள்ளிக்கு செல்ல பிஞ்சு குழந்தைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதை விட, எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடப்பதுதான் பெரும் சோதனை.

அந்தளவுக்கு குண்டி பொம்மனூரில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 70 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 64 பேர் ஒரு சமூகத்தையும், ஆறு பேர் மற்றொரு சமூகத்தையும் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவரும் பல ஆண்டுகளாக பயின்றதில்லை என்பது இப்பள்ளியின் வரலாறு.

இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "குழந்தைகளை சேர்ப்பதில் நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. இங்கு நிலவும் எதிர்ப்பால், குட்டைமேட்டூர் காலனி மக்கள் இங்கு குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்திக் கொண்டனர்' என்றனர்.தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வெளிப்படையாக கூறவும், குட்டைமேட்டூர் காலனி மக்கள் தயங்குகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 32 மாணவர்கள் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து, நான்கரை கி.மீ., நடந்து, நஞ்சப்பகவுண்டன் புதூர் பள்ளிக்கு செல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.ஜாதிய ஒடுக்கு முறை பள்ளி செல்லும் மாணவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

-நன்றி: தினமலர்

ஜாதிகள் இல்லையடி பாப்பா!

குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்!

-பாரதியார்

'மனிதர்களே! உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். உங்களில் இறைவனை அதிகம் அஞ்சுவோரே இறைவனிடம் அதிகம் சிறந்தவர்'

-குர்ஆன் 49:13

மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்ற தாழ்வுகளை மண் கவ்வ வைத்த வசனம் இது. எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் இறைவனை உளப்பூர்வமாக அஞ்சுபவனே இறை நெருக்கத்திற்கு பாத்திரமாகிறான். நான் நெற்றியில் பிறந்ததனால் நான் மட்டுமே உயர்ந்தவன். என் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் படிக்கக் கூடாது என்று எவராவது சொல்வாறாகில் அவரது இறை பக்தியை அவரது மூஞ்சியிலேயே எறிந்து விடுகிறான் இறைவன்.

ஹஜ்ஜூக்கு செல்பவர்கள் ஒன்பதாம் நாள் அரஃபா என்ற இடத்தில் தங்க வேண்டும். இது ஒரு முக்கிய கடமை. ஆனால் அந்த காலத்தில் உயர்ந்த குலத்தவராக கருதப்பட்ட குரைஷி(நம்மூர் பிராமணர்கள் போல) குலத்தினர் மற்ற மக்களோடு தங்காமல் 'முஜ்தலிபா: என்ற இடத்தில் தங்கினார்கள். 'முஜ்தலிபா' என்பது கஃபா ஆலயத்தின் எல்லைக்கு உள்ளேயும், 'அரபாத்' என்ற இடம் கஃபா ஆலயத்தின் எல்லைக்கு வெளியேயும் அமைந்திருந்தது.

உயர்ந்த குலத்தவரான குரைஷிகள் தாங்கள் மட்டும் புனித எல்லையில் தங்கிவிட்டு மற்றவர்களை அங்கே தங்குவதை தடுத்து வந்தனர். 'அரபாத்' என்ற இடம் ஊருக்கு வெளியே நம்மூர் சேரிகளைப் போல் ஒதுக்கப்பட்டவர்களுக்கான இடமாக அன்று அவர்களால் கருதப்பட்டது. முகமது நபி தனது பிரசாரத்தை ஆரம்பிக்கும் முன் பல ஆண்டுகளாக இந்த பழக்கமே தொடர்ந்து வந்தது.

இந்த கொடிய வழக்கத்தை மாற்ற நினைத்த இறைவன் உயர் குலத்தைச் சார்ந்த முகமது நபியையும், இஸ்லாத்தை ஏற்றிருந்த மற்ற உயர் குலத்தவர்களையும் 'அரஃபாத்' திடலில் அவசியம் தங்க வேண்டும் என்ற கட்டளையிடுகிறான்.

'அவன் உங்களுக்கு காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள். இதற்கு முன் வழி தவறி இருந்தீர்கள்.'

'பின்னர் மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள். இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள். இறைவன் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையவன்:'

-குர்ஆன் 2:198,199

அன்றைய கால கட்டத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அதாவது தீண்டத்தகாதவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உலக மக்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்ற சட்டம் இந்த வசனம் இறங்கியவுடன் அமுலாக்கப்பட்டது. எத்தனையோ காலம் வீம்பிலே தீண்டாமையை கடைபிடித்த அந்த அரபுகள் இந்த ஒரு வசனத்தின் மூலம் தங்களின் பாரம்பரிய கொள்கைளை விட நேர்ந்தது. அது இன்று வரை தொடர்கிறது.

வன் கொடுமை சட்டங்கள் எத்தனை நாம் போட்டும் என்ன பயன்? அந்த உயர்குலத்து மக்களின் எண்ணத்திலே மாற்றம் ஏற்படாத வரை இந்த சட்டம் 'ஏட்டுச் சுரைக்காய்தான்'. உயர் குலத்து மக்களிடம் அந்த எண்ணம் இனியும் வரப் போவதில்லை. ஏனெனில் இந்து மத சட்டத்திலேயே இது தவறு இல்லை என்று இருக்கும் போது எவர்தான் தங்களை தாழ்த்திக் கொள்ள விரும்புவார்.

தீண்டாமைக்கு எதிர் கருத்து உடையவர்கள் கண்டபடி திட்டி பதிவுகளை போட்டு தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்ளலாம். அந்த வசதி இல்லாதவர்கள் ரோட்டில் கும்பலாக நின்று 'தீண்டாமை ஒழிக' என்று கோஷம் போடலாம். தீண்டாமை குறித்து வேறு எந்தவொரு மாற்றமும் நம்நாட்டில் வந்து விடப் போவதில்லை.

Tuesday, April 26, 2011

ஸ்பெக்ட்ரம் - சுடுகாடு - சவப்பெட்டி - பேர்பர்ஸ்

இவை எல்லாம் என்ன? தி.மு.க - அதிமுக - பாரதீய ஜனதா - காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஊழல் பட்டியல்கள். இந்த கட்சிகள் அனைத்தும் தங்களது கொள்கைகளில் நேரெதிராக இருந்தாலும் ஊழல் செய்வதில் ஒருவருக்கு மற்றொருவர் சற்றும் சளைத்தவர்கள் அல்ல எனபது ஒவ்வொரு நாளும் செய்திகளின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. ஏன் இப்படி நடக்கிறது? இவர்கள் அனைவரும் பத்தரைமாற்று தங்கங்கள் என்றல்லவா இத்தனை நாளும் காவடி தூக்கினோம்? இவர்களை இதய தெய்வம் என்று பூஜித்து வந்த தனது தொண்டர்களை ஏமாற்ற எப்படி மனது வந்தது? என்ன காரணம்? என்பதை சற்று இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு பார்ப்போம்.

ஆட்சியாளர்களுக்குரிய தகுதி

முகமது நபிக்கு பிறகு ஆட்சியாளராக பதவி ஏற்ற ஜனாதிபதி அபுபக்கர் தனது மக்களிடம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

'மனிதர்களே! உங்கள் தலைவனாக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். நான் உங்கள் எல்லோரையும் விடவும் சிறந்தவன் என்று நான் எண்ணவில்லை. நான் சத்தியம் தவறாது நடந்தால் நீங்கள் எனக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் பிழை செய்தால் நீங்கள் என்னைத் திருத்த வேண்டும். உங்கள் விவகாரங்களில் நான் இறைவனின் கட்டளைப்படி நடந்து கொள்ளும் போது நீங்கள் எனக்கு கட்டுப்பட வேண்டும். இறைவனின் தூதர் சென்ற வழியில்தான் நானும் செல்வேன். நான் நேர்மையை கைக் கொண்டு ஒழுகினால் நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் கோணல் வழி சென்றால் என்னை நேர்வழிப்படுத்துங்கள்.'

--ஹூகூகல் இன்ஷான், பக்கம் 160

இப்படிப்பட்ட ஒரு சிறந்த ஆட்சியாளரை உருவாக்கிய முகமது நபியை இங்கு நாம் நினைவு கூறுகிறோம். நம் நாட்டு தற்போதய ஆட்சியாளர்களையும் இங்கு ஒப்பிட்டு பார்க்கிறோம்.

அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி உமரைப் பற்றி பார்ப்போம்:

உமருடைய ஆட்சி காலத்தில் பஹ்ரைனின் ஆளுநராக அபுஹூரைராக நியமிக்கப்டுகிறார். ஆட்சியில் அமர்ந்த சில காலங்களிலேயே மிகப் பெரிய செல்வந்தராக ஆகி விட்டார் அபுஹூரைரா. இந்த விஷயம் ஜனாதிபதி உமரின் கவனத்துக்கு வருகிறது. அபுஹூரைராவை வரவழைத்து விசாரிக்கிறார் உமர்.

ஜனாதிபதி உமர்: உம்மை பஹ்ரைனுக்கு அதிகாரியாக நியமித்தபோது உமது காலில் அணிய செருப்பும் இருக்கவில்லை.

இப்பொழுது நீர் 1600 தீனார் கொடுத்து ஒரு குதிரை வாங்கியுள்ளதாய் அறிகிறேன்.

அபுஹூரைரா: ஆம். எங்களுக்கு ஒன்றல்ல. பல குதிரைகள் உண்டு. நமக்கு ஏராளமான சன்மானங்கள் கிடைக்கின்றன.

ஜனாதிபதி உமர்: உமக்கு உணவுக்கும் ஏனைய தேவைகளுக்கும் போதிய பணத்தை அரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொள்ள நாம் ஏற்பாடு செய்திருந்தோமே!

அபுஹூரைரா: அப்படியானால் எனக்குக் கிடைத்த சன்மானங்களை எல்லாம் உம்மிடம் ஒப்படைக்கவா சொல்கிறீர். அது முடியாது.

ஜனாதிபதி உமர்: முடியாது. இறைவன் மீது ஆணையாக உமது முதுகை உரிப்பேன். (எழுந்து தம் கையிலிருந்த சாட்டையால் அபுஹூரைராவின் முதுகில் அடித்து) எங்கே அந்த பணம்?

அபு ஹூரைரா: நான் அவற்றை எல்லாம் தர்மம் செய்யப் போகிறேன்.

ஜனாதிபதி உமர்: நீர் சம்பாதித்து நேர்மையான முறையில் பொருள் திரட்டி அவற்றை உமது இஷ்டம் போல் தர்மம் செய்யலாம். நீர் வசூலித்த பணம் அரசுக்கு சேர வேண்டிய பணம்.

என்று கடுமையாக கூறி அவரது சம்பளத்தை கணக்கிட்டு உபரியாக உள்ள சொத்துக்களை எல்லாம் அரசு கஜானாவில் சேர்க்கிறார் உமர். பின்னால் தனக்கு ஏற்பட்ட சிறிய சஞசலத்தை உணர்ந்த அபு ஹூரைரா உமரின் நியாயமான வாதங்களை ஏற்றுக் கொள்கிறார்.

அடுத்து எகிப்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த அம்ருப்னுல் ஆஸ் என்பவரும் உமரின் விசாரணையிலிருந்து தப்பவில்லை. ஒரு முறை எகிப்து ஆளுனருக்கு ஜனாதிபதி உமர் கடிதம் ஒன்று எழுதுகிறார்.

'உமக்கு அளவுக்கதிகம் பொருட்களும் கால்நடைகளும் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். நீர் அங்கு பதவியேற்கச் சென்றபோது அப்படி ஒன்றும் இருக்கவில்லையே!'

இதற்கு அம்ருப்னுல் ஆஸ் அனுப்பிய பதில்:

'இது விவசாயமும் வர்த்தகமும் மலிந்த செல்வம் கொழிக்கும் நாடு. தேவையை விடக் கூடுதலாக வருவாய் நமக்குக் கிடைக்கிறது'

அந்த கடிதத்துக்கு ஜனாதிபதி உமர் எழுதிய பதில் கடிதம்:

'பல தீய அதிகாரிகளின் செயல்களிலிருந்து நான் நிறைய அனுபவம் பெற்றுள்ளேன். உமது பதிலும் ஏதோ பயந்தவன் எழுதியது போல் தெரிகிறது. நான் உம் மீது சந்தேகம் கொள்கிறேன். உமது சொத்துக்களைப் பரிசீலனை செய்ய முஹம்மது பின் மஸ்லமாவை அனுப்புகிறேன். அவர் கேட்கும் சகல விபரங்களையும் நீர் கொடுக்க வேண்டும்.'

ஜனாதிபதியின் உத்தரவுக்கு கீழ்படிந்த எகிப்து ஆளுநர் அந்த அதிகாரியிடம் தமது சொத்து விபரங்களை எல்லாம் ஒப்படைக்கிறார்.

-ஹூகூகல் இன்ஷான், பக்கம்46

ஒரு நாட்டின் ஆளுநராக இருப்பவர்களும் ஜனாதிபதியின் கட்டளைக்கு அடி பணிய வைத்தது உளப்பூர்வமான இறை பக்தி. அது இரு தரப்பும் இருந்ததால்தான் ஊழலற்ற ஆட்சியை அவர்களால் கொடுக்க முடிந்தது. இறப்புக்கு பிறகு ஒரு வாழ்வு இருக்கிறது. அங்கு நாம் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் இவர்களை நீதியின் பக்கம் நிற்க வைத்தது.

அடுத்து ஒரு சம்பவம்

ஜனாதிபதி நோய்வாய்பட்டபோது ஜனாதிபதி உமருக்குப் பிறகு யார் வருவது என்ற பிரச்னை வருகிறது. அரச சபையில் சில பேர்களை தேர்வு செய்து ஜனாதிபதி உமரிடம் கொடுக்கின்றனர். அந்த பட்டியலில் உமருடைய மகனின் பெயரும் இருந்தது. அந்த பட்டியலில் இருந்தவர்களில் தலைமைத்துவத்துக்கு மிகவும் ஏற்றவராக உமரின் மகன் இருந்தார். இருந்தும் தனது மகன் என்ற ஒரே காரணத்துக்காக அவரை அந்த பட்டியலிலிருந்து நீக்கி மற்றவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க உமர் பணிக்கிறார்.எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை! இந்த எண்ணம் எத்தனை ஆட்சியாளர்களிடத்தில் இருக்கும்? இன்று வாரிசுகள் புகாத அரசியல்வாதிகளை பார்க்க முடிகிறதா? இன்று நமது நாட்டின் அத்தனை ஊழல்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பவர்கள் அரசியல்வாதிகளின் வாரிசுகளே!

முன்பு ஜெயலலிதாவின் மீது கோர்ட்டு தண்டனை கொடுத்த போது தமிழகம் எத்தனை பிரச்னைகளை ஏற்கொண்டது. இன்னும் இரண்டொரு நாட்களில் வேறு யாரும் கைதானால் என்னென்ன ரகளைகள் நிறைவேறுமோ தெரியவில்லை.

எனது நாட்டை சுயநலமிகளிடமிருந்து இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

Sunday, April 24, 2011

சாய்பாபா இறந்து விட்டார்!


புட்டபர்த்தியில் சாய்பாபா இன்று இறந்த செய்தி கேள்வியுற்றேன். அவரை மனிதனாக நினைத்தவர்களுக்கு இது எல்லோருக்கும் ஏற்படக் கூடிய மரணம். அவரை தெய்வமாகவும், தெய்வத்தின் அவதாரமாகவும் நினைத்தவர்களுக்கு அவரின் இறப்பு நம்ப முடியாத செய்தி. எப்படி ஒரு இறைவன் இறக்க முடியும்? எப்படி ஒரு இறைவன் நோய்வாய் பட முடியும்? எப்படி ஒரு இறைவன் வாயில் இருந்து லிங்கம் வரவழைக்கிறேன் என்று பக்தர்களை ஏமாற்ற முடியும்? என்றெல்லாம் நாம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் இது போன்ற ஆன்மீக வாதிகளின் சுய ரூபம் வெளியே தெரிய வரும்.

இதற்கெல்லாம் மூல காரணம் இறைவனைப் பற்றிய அறிவு நமக்கு சரிவர புகட்டப் படாததே! இறைவனுக்குரிய இலக்கணம் என்ன? என்பதை நாம் சரி வர புரிந்து கொண்டால் இது போன்ற போலி ஆன்மீகத்திலிருந்து விடுபடலாம். ஒரு ஆறுதலான செய்தி இவரது பணத்தைக் கொண்டு எண்ணற்ற ஏழை மக்கள் இன்றும் பயனடைகிறார்கள் என்பது.

சாய்பாபாவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கும், அவரது சிஷ்யர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமலரில் வந்த செய்தி:

புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஸித்தியடைந்தார் . இவருக்கு வயது 85 . பாபாவின் உடலை இன்று மாலை 6 மணியிலிருந்து குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வரும் புதன்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறும்.

கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.

பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு : வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யபப்டும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கிறது அனந்தபூர் மாவட்டம் முழுவதும் இந்நாளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. என மாநில அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சாய்பாபாவின் சரித்திரம்: சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.

ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும், இது ஒரு அதிசய நிகழ்வு என்றும் ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

சாய்பாபா குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் திறமயாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் சாய்பாபா இருக்கும் போது, தேள் ஒன்று இவரை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் இவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவின உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்தவர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கல்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. சீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். சீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர். இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டு 1950ல் நிறைவடைந்தது.1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்துவமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர்களாக தொடர்ந்தனர்.

சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.

இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், நானி பல்கிவாலா, டி.என்.சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.

1993 ஜூன் 6ல் சாய்பாபாவை கொல்ல நடந்த முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தியுள்ளன.

சமூகத்தொண்டு: ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.

பொன் மொழிகள்

* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.

* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.

* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.

பாபாவின் சேவைகள்...

* பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக விருத்தாஸ்ரமம் என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

* பாபா குறித்த நூல்கள், சிடிக்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகின்றன.

* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.

* ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

தலைவர்கள் இரங்கல்: சத்ய சாய்பாபா மறைவிற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய , மாநில அமைச்சர்கள் , அ.தி.மு.க.., பொதுசெயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில்; சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர் சாய்பாபா. இதன் மூலம் தமிழக மக்களின் இதயத்தில் சாய்பாபா இடம் பிடித்து விட்டார் என்று கூறியுள்ளார். ‌ஜெ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சாய்பாபாவின் இழப்பு மனித குலத்திற்கு பேரிழப்பாகும் என கூறியுள்ளார். தமிழக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் பாபாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டு சென்றார்.

ஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்த புறப்பட்டு சென்றனர்.

வழிகாட்டுதலாக இருந்த சாய்பாபா அத்வானி ; தெய்வீகத்தன்மையும், போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின்மனதில் வாழ்ந்தவர் என பிரதமர் மன்மோகன்சிங் புகழாராம் சூட்டியுள்ளார். பாபா மறைவு நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பாபாவின் இழப்பு குறித்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; சாய்பாபாவை நான் பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது. இந்தியா முன்னேற்றம் கண்டிட உழைத்த தலைவர்களில் இவரும் ஒருவர். இவரது மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பு இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

-நன்றி: தினமலர்