Followers

Saturday, March 28, 2015

கனடாவில் இஸ்லாமியரின் மனித நேய பணி!கனடாவில் உள்ள மிஸ்ஸிகா வில் உள்ள சய்யிதா கதீஜா சென்டர் பல வருடங்களாக மனித நேய பணிகளை செய்து வருகிறது. சென்ற பிப்ரவரி 21 ந் தேதி மிகப் பெரிய கூட்டம் ஒன்றைக் கூட்டியது இந்த தன்னார்வ அமைப்பு. இளவரசி மார்கரெட் புற்று நோய் மருத்துவ மனை மற்றும் எடோபிகோக் மருத்துவமனை இந்த இரண்டுக்குமான நன்கொடை வசூலிப்புக்காக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இனம் மொழி நாடு பார்க்காது முஸ்லிம்கள் மனித நேயப் பணியை ஆற்றிட வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது. கடுமையான பனிப் பொழிவையும் பொருட்படுத்தாது அந்த அரங்கம் அனைத்தையும் மக்கள் வெள்ளம் ஆட் கொண்டிருந்தது. சென்ற வருடம் கதீஜா சென்டர் இஸ்லாமியரிடமிருந்து வசூலித்த தொகையானது ஒரு மில்லியன் டாலராகும். இமாம் டாக்டர் ஹமீது அவர்களால் 2005 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு பல சமூகங்களோடு கலந்து பல நலத் திட்ட பணிகளை செயல்படுத்த தொடங்கி இன்று மிக உயரத்தை எட்டியுள்ளது.

தொழுவது, நோன்பு வைப்பது மட்டும் ஒரு முஸ்லிமின் கடமையல்ல. இன மதம் பார்காமல் தேவையுடைய மக்களை தேடிச் சென்று உதவி செய்வதும் இஸ்லாமிய கடமைகளில் ஒன்று என்பதை கதீஜா சென்டர் நிரூபித்து வருகிறது. இது போன்று நாமும் மனித நேய பணிகளை அதிகமதிகம் செய்ய உறுதி பூணுவோம்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
12-03-2015


Friday, March 27, 2015

பாவத்தின் சம்பளம்!- உண்மை நிகழ்வு!

பாவத்தின் சம்பளம்!-உண்மை நிகழ்வு!

எனது கம்பெனியில் கேரள மலப்புரத்தைச் சேர்ந்த முஹம்மது .... என்ற நபர் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். ஆடம்பர பிரியன். நாலு பேர் தன்னை மெச்ச வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக் கூடியவன். இஸ்லாமிய பற்று அந்த அளவு இல்லாதவன்.

ஒருமுறை எனது ஓனரிடம் புதுப்பிப்பதற்காக பாஸ்போர்ட்டைக் கேட்டான். அவனிடம் அவனது பாஸ்போர்ட்டைக் கொடுத்தார் எனது ஓனர். இந்த சம்பவத்தை பலரும் மறந்து விட்டோம். இதையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அந்த மலையாளி 60000 ரியால்(கிட்டத்தட்ட 8 லட்ச ரூபாய்) கம்பெனி பணத்தில் கையாடல் செய்து விட்டு மறுநாளே கேரளாவும் சென்று விட்டான்.

வியாழன் இரவு டிக்கெட் புக் பண்ணியதால் வெள்ளிக்கிழமை விடுமுறை. எனவே யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அவன் கேரளா சென்று அவனது வீட்டில் சேரும் போதுதான் எங்களுக்கே விபரம் தெரிகிறது. சும்மா சொல்லப்படாது. திறமைசாலிதான். :-)

எனது ஓனரால் இதை நம்பவே முடியவில்லை. 'எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்! இப்படி நம்பிக்கை மோசம் செய்து விட்டானே! அவசரம் என்று என்னிடம் கேட்டிருந்தால் நானே கடனாக கொடுத்திருப்பேனே' என்று ஆதங்கப்பட்டார். பிறகு என்னிடம் 'மும்பையில் எனது ஏஜண்டுகள் மூலமாக அவனது காலையோ கையையோ இங்கிருந்து கொண்டே என்னால் எடுக்க முடியும். இறைவன் குர்ஆனில் 'தீமையின் கூலி அது போன்ற தீமையே! சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி இறைவனிடத்தில் உள்ளது'-(குர்ஆன் 42:40) என்று கூறுகிறான். எனவே அவனது மனைவிக்காகவும், அவனது குழந்தைகளுக்காகவும் அவனை அதுபோல் செய்யாமல் விடுகிறேன். மறுமையில் எனக்கு அந்த பணம் கிடைத்து விடும்' என்று கூறியவுடன் நானும் சற்று இந்தியன் என்ற முறையில் வெட்கப் பட்டேன்.

குர்ஆனும், முஹமது நபியின் வாழ்வும் இந்த அரபுகளை எந்த அளவு மாற்றியிருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். அவரிடம் 'நீங்கள் செய்வதுதான் சரி' என்று கூறி அவரை சமாதானப் படுத்தினோம்.

இந்த நேரத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்பு ஜனாதிபதி உமர் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு எனக்கு ஞாபகம் வந்தது. அதை பகிர்ந்து கொள்கிறேன்.

முகமது நபிக்குப் பிறகு இரண்டாவது கலீபாவாக பொறுப்பேற்ற உமரைப் பற்றி நாம் அறிவோம். அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அன்றைய அரபியர்களின் மூட பழக்கத்தின் படி தன் குழந்தையை கொன்று விடுவது என்று உமர் முடிவு செய்கிறார். அதன்படி அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு ஆளரவமற்ற இடத்துக்கு வருகிறார். பிறகு அங்கு தன் குழந்தையை உயிரோடு புதைப்பதற்காக குழியைத் தோண்டுகிறார். அப்பொழுது அவரது தாடியில் மண் ஒட்டிக் கொள்கிறது. இதைப் பார்த்த அந்த குழந்தை தன் கையால் அந்த மண்ணைத் தட்டி விடுகிறாள். குழி வெட்டி முடிந்தவுடன் அந்த குழந்தையை குழியில் இறக்குகிறார் உமர். அப்பொழுது அந்த சிறுமி 'நீங்களும் வரவில்லையா?' என்று அப்பாவியாக கேட்டது. மனதைக் கல்லாக்கிக் கொண்ட உமர் மண்ணைத் தள்ளி அந்தக் குழந்தையை உயிரோடு சமாதியாக்குகிறார். எந்த அளவு அன்றைய சமூகம் கல் நெஞ்சம் படைத்ததாக இருந்திருந்தால் இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றியிருக்கும்.

பல வருடங்கள் கழித்து முகமது நபியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு உமர் இஸ்லாத்தை ஏற்கிறார். ஒரு நாள் முகமது நபியிடம் தன் பெண் குழந்தையை தன் கையாலேயே கொன்றதை நினைவு கூர்ந்து தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். அவரைத் தேற்றிய முகமது நபி அறியாமைக் காலத்து பாவங்களை இறைவன் மன்னித்து விடுவதாக வாக்களித்துள்ளான் என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார்.

பின்னால் முகமது நபி, அபுபக்கருக்குப் பிறகு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று திறம்பட ஆட்சியும் செய்கிறார் உமர். இவரது வரலாறைப் படித்த காந்தியடிகள் 'சுதந்திர இந்தியாவின் ஆட்சி முறை கலீபா உமருடைய ஆட்சியைப் போல் இருக்க வேண்டும்' என்று சொல்லும் அளவுக்கு சிறந்திருந்தது.

சரி. இனி பதிவுக்கு வருவோம். பணத்தை மோசடி செய்த அந்த மலையாளி சென்று கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகின்றது. தவறான வழியில் வந்த பணம் தவறாகவே ஆடம்பரமாக செலவு செய்து அனைத்தையும் இழக்கிறான். சில மாதங்களுக்கு முன்பு அவனது உறவினர் மூலமாக அவன் மிகவும் கஷ்டப்படுவதாகவும் அவனுக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், ஆபரேஷன் செய்தால் பிழைப்பது கஷ்டம் என்றும், அந்த அளவு பணம் வசதியும் இல்லை என்றும் கேள்விப்பட்டோம். சில கேரள நண்பர்கள் மூலமாக செய்தியை உறுதி செய்து கொண்டோம். கம்பெனியில் உள்ளவர்களும் ஒரு சில மலையாளிகளும் சேர்ந்து பணம் வசூல் செய்து அவனது விலாசத்துக்கு அனுப்பி வைத்தோம்.

சில நாட்களுக்கு முன்பு அவனின் தற்போதய நிலையை எனது ஓனரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். பொறுமையாக கேட்டவர் 'தவறான வழியில் வந்த பணத்தினால் என்ன சுகத்தை அவன் அடைந்து விட்டான். இந்த உலகம் இந்த உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் மண்ணினால் ஆனது. மக்கி மண்ணோடு மண்ணாகக் கூடியவை. இதன் அழகில் அவன் மயங்கியதால் கௌரமான வேலையும் போய் மறுமையிலும் எனக்கு கடன்காரனாகவும் ஆகி விட்டான். பணம் இழந்த நான் பல மடங்கு முன்பைவிட சிறப்பாகவே இருக்கிறேன். அவனது அக்கவுண்ட் நம்பரை வாங்கவும். அவனது மருத்துவ செலவுக்கு நான் பணம் அனுப்புகிறேன்' என்று சொன்னவுடன் இந்த அரபியை நினைத்து நெகிழ்ந்து விட்டேன். எப்படிப்பட்ட கல் நெஞ்சக்காரர்களாக இருந்த இவர்களின் மனதை இஸ்லாம் எந்த அளவு பண்படுத்தியிருக்கிறது என்று நினைத்துப் பார்கிறேன்.

மறுமை என்ற ஒரு வாழ்வை அந்த அரபி நம்பாமல் இருந்திருந்தால் அந்த மலையாளி உயிரோடு இருந்திருக்க முடியாது. எனது ஓனரின் பணம் அவனது வைத்திய செலவுக்கு பயன்படுகிறது என்ற செய்தியே அவனை சிறந்த மனிதனாக மாற்றும். செய்த தவறை எண்ணி வருந்தி எனது ஓனரிடம் மன்னிப்பும் கேட்டால் ஒருக்கால் இறைவன் அவனை மன்னிக்கலாம். சென்ற ஆண்டு சிகிச்சை பலனளிக்காமல் அந்த மலையாளி இறந்து விட்டார். சேர்த்த பணமெல்லாம் வைத்தியத்துக்கே சென்று விட்டதால் குழந்தைகளை வளர்க்க அவரது மனைவியிடம் பொருளாதார வசதி இல்லை. தற்போது அந்த குழந்தைகள் இஸ்லாமியர்கள் நடத்தும் அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது நண்பர் சொன்னார்.

இவருடைய வாழ்வு நமக்கெல்லாம் ஒரு பாடமாக அமையட்டும்.

-------------------------------------------------------------------------------

இன்னா செய்தாரே ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.-குறள்

'உங்கள் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் சோதனையே! இறைவனிடமே மகத்தான கூலி இருக்கிறது.'-குர்ஆன் 64:15

'தீமையின் கூலி அது போன்ற தீமையே! சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி இறைவனிடத்தில் உள்ளது'-(குர்ஆன் 42:40)

'விபசாரி விபசாரம் புரியும்போது இறைவிசுவாசியாக இருந்து கொண்டு விபசாரம் புரிவதில்லை. ஒருவன் மது அருந்தும்போது இறை விசுவாசியாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் பிறரது பொருளை திருடும்போது இறை விசுவாசியாக இருந்து கொண்டு திருடுவதில்லை.'-முகமது நபி

அறிவிப்பவர் : அபு ஹூரைரா ஆதாரம் புகாரி 2475

Friday, March 20, 2015

புரோட்டீன்களும் பரிணாமவியலின் அறியாமையும்!

நம உடலில் உள்ள அல்புமீன் என்பது நீரில் கரையும் தன்மை உடைய எந்தவொரு புரதப் பொருளையும் குறிக்கும். இவை அடர்ந்த உப்புக்கரைசலிலும் ஓரளவிற்குக் கரையும் தன்மை கொண்டவை.. நமது உடலில் உள்ள கொழுப்பு, கொலஸ்ட்ரால், ஹார்மோன்கள், சர்க்கரை போன்ற அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இந்த புரோட்டீன்கள் மிகவும் உதவுகிறது. நமது உடலின் ரத்தக் குழாய்கள் மூலமாக பயணித்து லிவரிலிருந்து சத்துக்களை பிரித்து கொடுத்து எந்த பொருளுக்கு எத்தனை சதவீதம் தேவை என்பதை தீர்மானித்து தனது வேலையை கச்சிதமாக செய்கிறது. இதில் எந்த தவறும் ஏற்படாமல் எந்த குழப்பமும் இல்லாமல் தனது வேலையை செய்வதை பார்த்து உயிரியல் வல்லுனர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.


(கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள புரதம்)

நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் இந்த புரோட்டீன்கள் சிறந்த சேவையாற்றுகிறது. ஒரு கட்டிடத்திற்கு செங்கல் எவ்வளவு அவசியமோ அதுபோல் நமது உடலுக்கு அல்புமீன் புரோட்டீன்களின் பங்கு மிக அவசியமாகிறது. சிறு நீரகத்தை எடுத்துக் கொண்டால் அங்கு இந்த புரோட்டீன் எந்த நேரமும் தங்குவதில்லை. எப்பொழுதெல்லாம் சிறு நீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் உடன் ஓடி வந்து பிரச்னையை தீர்த்து வைத்து சீராக செய்ல்பட வைப்பதில் இதன் பங்கு முக்கியமானது. இந்த புரோட்டீன்கள் செடிகொடிகளின் விதைகளிலேயும் உள்ளன. ஒரு கோழி முட்டையின் வெள்ளைக் கருவிலும் உள்ளது அல்புமின் என்ற புரதம் . இதன் பலனை உணர்ந்த பலர் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதைப் பார்ததிருக்கிறோம். இந்த புரதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இதன் செயலைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். நாம் கேட்பது இந்த புரோட்டீனுக்கு இத்தகைய அறிவை கொடுத்து அதனை வேலை வாங்குவது யார்?

ஒரு உயிரி மற்றொரு உயிராக பரிணாமம் அடைந்தால் முக்கியமாக இந்த புரோட்டீனின் அளவும் கூடவோ அல்லது குறைவாகவோ பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். இது பற்றி பரிணாமவியலார் எந்த தகவலும் அளிக்கவில்லை. இது பற்றி டார்வின் அறிந்திருக்கவுமில்லை.

மற்றொரு அதிசயத்தையும் பார்ப்போம். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இரைப் பைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள சுரப்பிகளால் நாம் சாப்பிடும் பிரியாணி, மாட்டு கறி, என்று எதையெல்லாம் உள்ளே தள்ளுகிறோமோ அத்தனையையும் கரைத்து உடலுக்கு சக்தியாகவும் தேவையற்றவைகளை மலமாகவும் கொல்லைப் புறம் அனுப்பி விடுகிறது. இவை அனைத்து வேலைகளும் நாம் சாப்பிடும் உணவை விட மிருதுவான இரைப் பையில் நடக்கிறது. கடினமான உணவுகளையே கரைத்து விடும் இரைப் பை பழுதாகாமல் இருப்பதற்கான சூட்சுமம் என்ன? ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியையும் கரைத்து விடும் இந்த இடம் இரைப் பையையும் கரைத்து விட வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏன் நிகழ்வதில்லை?ஏனென்றால் அந்த இரைப்பையின் சுவர்களில் ம்யூகோஸா என்ற பெயருடைய வழவழப்பான பூச்சு பூசப்பட்டுள்ளது. சாராயம் இதன் எதிரி. நம் குடிமகன்கள் அளவுக்கு மீறி சாராயத்தை உள்ளே தள்ளுவதால் இந்த ம்யூகோஸா என்ற பொருள் கரைந்து வெளியேறி ம்யூகோஸாவின் அளவு குறைந்து விடுகிறது. இதன் பிறகுதான் குடிகாரர்களுக்கு வயிற்றெரிச்சல் ஆரம்பமாகிறது. பல உயிரினத்திற்கும் இந்த பொருளின் அளவு மாறுபட வேண்டும். ஏனெனில் யானையின் செரிமானத்துக்கும் சிங்கத்தின் செரிமானத்துக்கும் குரங்கின் செரிமானத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ம்யூகோஸா என்ற பொருளின் அளவு உயிரினத்தின் செரிமாணத்துக்கு ஏற்ப மாறுபட்டால்தான் அந்த உயிரால் உயிர்வாழ முடியும். பரிணாமம் இஙகிருந்து தொடங்க வேண்டும். இதற்கு எந்த ஆய்வாவது செய்து சமர்ப்பித்துள்ளார்களா என்றால் எதுவும் இல்லை. இந்த இரைப்பையின் உள்ளே ம்யூகோஷா என்ற பொருளை அளந்து அமைத்தவன் யார்? அறிவியல் அறிஞர்களால் இன்று வரை இதற்கான காரணத்தை பெற முடியவில்லை.

அல்புமீனைப் பற்றியும், ம்யூகோஸாவைப் பற்றியும் டார்வின் தனது பரிணாம கொள்கையில் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. பரிணாமம் நடை பெற முதலில் டிஎன்ஏ, குரோமசோம்கள், புரோட்டீன்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். இந்த புரோட்டீன்களின் அவசியத்துக்கு காரணத்தை கண்டு பிடிக்காமல் வெளித்தோற்றத்தை வைத்து குரங்கிலிருந்து மனிதன் வந்ததையும் மானிலிருந்து ஒட்டகம் வந்ததையும் தனது கற்பனைத் திறனால் பலரை நம்ப வைத்து விட்டார் டார்வின்.

http://en.wikipedia.org/wiki/Gastric_mucosa
http://www.buzzle.com/articles/albumin-in-urine.html
http://www.albumin.org/
http://en.wikipedia.org/wiki/Albumin

Thursday, March 19, 2015

பெண் சாமியார் சாத்வி பிராச்சியின் மத வெறி பேச்சு!உபியின் லக்னோவில் உள்ள பெஹ்ராயிச் நகரில் விஹெச் பியின் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சாத்வி பிராச்சி என்ற இந்து மத துறவி பேசியதாவது...

''பாரத் மாதா கீ ஜே' 'வந்தே மாதரம்' என்று சொல்லாதவர்கள், மாடு அறுப்பவர்கள், போன்றோர் இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமையில்லை.

காந்தியின் அஹிம்சை போராட்டத்தால் இந்த நாட்டுக்கு சதந்திரம் கிடைத்து விடவில்லை. வீர சவர்க்கார் போன்ற வீர்ர்களின் முயற்சியால்தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற வேண்டும். இரண்டுக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு அரசு உதவிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.' என்று பேசியுள்ளார்.

மதவெறியை தூண்டும் இந்த சாமியாரின் பேச்சால் மேலும் சர்ச்சை வெடித்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள எவரும் இது போன்ற தீவிரவாத பேச்சுக்களை வெறுப்பர். இது தொடர்ந்தால் நாட்டின் முன்னேற்றம் வரலாறு காணாத அளவில் சரியும். அது பற்றி இவர்களுக்கு கவலையில்லை. இவர்களுக்கு தேவை வர்ணாசிரம தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்: பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்: பசு வதை தடை சட்டம் அமுலாக்கப்பட வேண்டும்: இதற்காக எத்தனை உயிர்களையும் கொல்வோம் என்று இந்த இந்துத்வா படை கிளம்பியுள்ளது.

இன்னும் என்னவெல்லாம் கூத்துக்கள் அரங்கேறப் போகின்றன. பொறுத்திருந்து பார்போம்.

தகவல் உதவி
ஜீநியூஸ்
18-03-2015

http://zeenews.india.com/news/india/vhp-leader-sadhvi-prachi-stokes-fresh-controversy-says-mahatma-gandhi-was-a-british-agent_1563396.html

Wednesday, March 18, 2015

அமெரிக்காவின் டொமினிக் எஸ்லே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

'பல விஷயங்கள் எனது வாழ்வில் நடந்து விட்டன. எனது 22 வருட கால வாழ்வை வீணாக இழந்து விட்டேன். இன்று சொர்க்கத்துக்கு செல்லும் வழியை அறிந்து கொண்டேன்.. அல்லாஹூ அக்பர்'

-டொமினிக் எஸ்லே தனது ட்விட்டர் தளத்தில்....

"Many things happened in my life, and I've been lost for 22 yrs. Today I've found my guidance to paradise. #AllahuAkbar"

https://twitter.com/DominiqueEasley/status/576475323182678017

அமெரிக்காவின் பிரபல விளையாட்டு வீரர் டொமினிக் எஸ்லே சென்ற வாரம் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். வழக்கமாக இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பலர் தங்களின் கருத்துக்களையும், ஆதரவையும், வசவுகளையும் சரமாரியாக கொடுத்து வருகின்றனர். எதைப் பற்றியும் கவலைபடாமல் டொமினிக் தனது வாழ்வியலை இஸ்லாமாக ஆக்கிக் கொண்டார். அவரது வாழ்வு சிறப்பாக அமைய நாமும் நமது பிரார்தனையை இறைவனிடத்தில் வைப்போம்.

'வானம் பிளந்து சிவந்த மலரைப் போன்று ஆகி விடும் போது"'வானம் பிளந்து எண்ணையில் தோய்த்த சிவந்த மலரைப் போன்று ஆகிவிடும் போது'
-குர்ஆன் 55:37


நமது பூமிக்கு அருகிலுள்ள அன்ட்ரோமிடா என்ற கேலக்ஸியிலிருந்து நாஸாவால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. வெடித்த நட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி ஆய்வு நிலையமாகிய ‘நாஸா (NASA)’ புகைப்படமெடுத்து வெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம் சொல்வதைப் போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன. இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதி இது போன்ற ஒரு அரிய நிகழ்வு நடந்திருக்கலாம் என்பது நாஸா விஞ்ஞானிகளின் கணிப்பு.

குர்ஆன் சூரா அர்ரஹ்மானில் தனது வல்லமை ஒவ்வொன்றையும் கூறி 'உங்களின் இறைவனின் அருட் கொடைகளில் எதனை பொய்யெனக் கருதுகிறீர்கள்?' என்று பலமுறை நம்மைப் பார்த்து இறைவன் கேட்கின்றான். அது போன்று ஒரு இடத்தில்

'வானம் பிளந்து எண்ணையில் தோய்த்த சிவந்த மலரைப் போன்று ஆகிவிடும் போது'
-குர்ஆன் 55:37


என்று இறைவன் கூறுகிறான். உலக முடிவு நாளில் பூமி மற்றும் அனைத்து கோள்களையும் கேலக்சிகளையும் அழித்து விடுவதாக இந்த வசனத்தின் தொடர்ச்சியாக இறைவன் கூறுகிறான். உலகம் அழிய வேண்டுமானால் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த கோள்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோத வேண்டும். அவ்வாறு ஒன்றோடொன்று மோதும் போது அந்த நிகழ்வானது எவ்வாறு இருக்கும் என்பதையே இந்த வசனம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தண்ணீர் நிறைந்த பெரிய குளம் ஒன்றில் மிகப் பெரிய பாறாங்கல்லைப் போட்டால் அந்த தண்ணீரானது பூ விரிவதைப் போன்ற தோற்றத்தில் மேலெழும்புவதைப் பார்க்கலாம். அதே போன்ற நிலைதான் இரண்டு கோள்கள் மோதும் போதும் நிகழ்கிறது. அந்த காட்சியையே இறைவனும் இங்கு எடுத்துக் காட்டுகிறான். ஆச்சரியமாக நமது காலத்தில் இரண்டு நட்சத்திரங்கள் மோதிய அந்த நிகழ்வை அமெரிக்காவின் நாசா படமாக எடுத்து வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இது போன்ற படங்களை நாசா வெளியிட்டிருந்தாலும் சமீபத்தில் வெளியிட்ட படமானது குர்ஆனின் வசனத்தோடு மிகச் சரியாக பொருந்துவதை பார்த்து வியக்கிறோம்.

விஞ்ஞானிகள் எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின் அதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும்.

இது போன்று சிறிய சிறிய வசனங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பயன் படுத்தப்பட்டுள்ளதை பார்த்து நாம் ஆச்சரியப்படுகிறோம். நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தை அல்லாது மனிதர்களின் வார்த்தை அல்ல என்பதற்கு இது போன்ற வசனங்கள் நமக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.

அது பற்றிய செய்தியை ஆங்கிலத்தில் பார்ப்போம்.

A massive explosion in our nearest galaxy may have been caused by two stars colliding.

A sudden burst of gamma-rays in the Andromeda Galaxy was detected by a Nasa satellite on Wednesday morning.

There are various different types of gamma-ray emissions, and it is unclear whether it was specifically a gamma ray burst (GRB).

If it was, it may have been caused by the collision of two neutron stars.

It would be significant given that Andromeda is 2.5 million light years away – the previous nearest GRB took place 2.6 billion light years away.

By observing how the light fades over the next 24-48 hours, astronomers should be able to tell what type of gamma-ray emission it was.

Nasa's Swift Burst Alert telescope watches the skies for gamma-ray bursts and sends their locations back to stations on the ground.

It observes around 90 gamma ray events every year, but usually from much further away.

http://news.sky.com/story/1270466/massive-explosion-in-earths-nearest-galaxy

-------------------------------------------------------------------


'இறை மறுப்பாளர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக பல பாகங்களில் இருந்தும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம்'

-குர்ஆன் 41:53

மனிதன் படைக்கப்பட்டதில் உள்ள மூலப் பொருள் எது?

//ஏனுங்க இஸ்லாமிஸ் இங்கிட்டு கிளம்பி வாங்க.....
ஒரு சந்தேகம் கேட்கனும்.....
அல்லா ஆதம்- ஏவாளை எப்படி படைச்சார்.....
கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன்..//

-Ram nivas

'சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு மனிதனைப் படைத்தோம்'

-குர்ஆன் 15:26

ஒரு வழியாக எல்லா தமிழர்களையும் இஸ்லாமியராக மாற்றி விடுவது என்ற ஒரு முடிவோடு இருப்பது போல தெரிகிறது. ஏற்கெனவே எண்ணிக்கை மூன்றாகி விட்டது. இந்த பதிவுக்கு பிறகு இன்னும் எத்தனை பேரோ இறைவனே அறிவான்... :-)

மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அவரிலிருந்தே அவரின் துணையை படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலுந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறுங்கள்.

ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் ஜான் நம்ஸ்லே வெளியிட்ட 'தி எலமெண்ட்ஸ்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 ல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.

எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:

1. ஆக்சிஜன் - 43 கிலோ கிராம்
2. கார்பன் - 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் - 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் - 1 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் - 780 கிராம்
7. பொட்டாஷியம் - 140 கிராம்
8. சோடியம் - 100 கிராம்
9. குளோர்ன் - 95 கிராம்
10. மக்னீசியம் - 19 கிராம்
11. இரும்பு - 4.2 கிராம்
12. ஃப்ளூரின் - 2.6 கிராம்
13. துத்தநாகம் - 2.3 கிராம்
14. சிலிக்கன் - 1 கிராம்
15. ருபீடியம் -0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் - 0.32 கிராம்
17. ப்ரோமின் - 0.26 கிராம்
18. ஈயம் - 0.12 கிராம்
19. தாமிரம் - 72 மில்லி கிராம்
20. அலுமினியம் - 60 மில்லி கிராம்
21. காட்மியம் - 50 மில்லி கிராம்
22. செரியம் - 40 மில்லி கிராம்
23. பேரியம் - 22 மில்லி கிராம்
24. அயோடின் -20 மில்லி கிராம்
25. தகரம் - 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் -20 மில்லி கிராம்
27. போரான் - 18 மில்லி கிராம்
28. நிக்கல் - 15 மில்லி கிராம்
29. செனியம் - 15 மில்லி கிராம்
30. குரோமியம் - 14 மில்லி கிராம்
31. மக்னீஷியம் - 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் - 7 மில்லி கிராம்
33. லித்தியம் - 7 மில்லி கிராம்
34. செஸியம் - 6 மில்லி கிராம்
35. பாதரசம் - 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் - 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் - 5 மில்லி கிராம்
38. கோபால்ட் - 3 மில்லி கிராம்
39. ஆண்டிமணி - 2 மில்லி கிராம்
40. வெள்ளி - 2 மில்லி கிராம்
41. நியோபியம் - 1.5 மில்லி கிராம்
42. ஸிர்க்கோனியம் - 1 மில்லி கிராம்
43. லத்தானியம் - 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் - 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் - 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் - 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் - 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் - 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் - 0.4 மில்லி கிராம்
50. தங்கம் - 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் - 0.2 மில்லி கிராம்
52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்
53. வாளடியம் - 0.11 மில்லி கிராம்
54. தோரியம் - 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் - 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் - 50 மில்லி கிராம்
57. பெல்யம் - 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் - 20 மில்லி கிராம்

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களின் கலவையே மனிதன் என்கிறது அறிவியல் . ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்த கலவையே தண்ணீர் என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமியில் கிடைக்கும் அனைத்து தனிமங்களின் கூட்டுக் கலவையே மனிதன் என்பது அறிவியலும் நிரூபித்துள்ளது. குர்ஆனும் மெய்ப்பிக்கிறது.

http://web2.airmail.net/uthman/elements_of_body.html

மனிதன் களி மண்ணிலிருந்துதான் படைக்கப்பட்டான் என்பதற்கு அறிவியல் ஆதாரத்தை சமர்ப்பித்து விட்டேன். குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்தான் என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்களை சமர்ப்பீர்களா? ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.மனிதரில் மாணிக்கம் - கியாஸூத்தீன் பாஸூ கான்மனிதரில் மாணிக்கம் - கியாஸூத்தீன் பாஸூ கான்

இஸ்லாம் 'ஜகாத்' என்ற ஒரு கடமையை இஸ்லாமியருக்கு கட்டாய கடமையாக்கியிருக்கிறது. செல்வந்தர்கள் தங்களிடம் உள்ள நகை, விளை நிலங்கள், வாடகை வீடுகள், வாகனங்கள் போன்ற அனைத்தையும் கணக்கிட்டு அதனை ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து விடுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது. தொழுகையை எங்கெல்லாம் குர்ஆன் குறிப்பிடுகிறதோ அங்கெல்லாம் ஜகாத்தையும் கொடுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடுவதன் மூலம் இதன் முக்கியத்துவத்தை அறியலாம்.

நபிகள் நாயகம் காலத்தில் 'பைத்துல் மால்' என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அனைத்து ஜகாத்துகளையும் வசூலிக்க ஆட்களையே சம்பளத்துக்கு நியமித்திருந்தனர். அன்றைய அரபு சமூகத்தின் வறுமையை இந்த திட்டமானது முற்றிலும் ஒழித்துக் காட்டியது.

'பைத்துல் மால்' என்ற இந்த அமைப்பை தனி ஒரு மனிதனாக ஆரம்பித்து இன்று பல லட்சக்கணக்கான ஏழை இஸ்லாமிய மாணவ மாணவிகள் பலன் பெற காரணமாக உள்ளார் கியாஸூதீன் பாஸூ கான்! கட்டுமான துறையில் உள்ள இவர் இஸ்லாமியர்களின் ஜகாத் பணத்தை வசூலித்து கல்விப் பணிக்கு செலவிட திட்டமிட்டார். 25 வருடங்களுக்கு முன்னால் தனது சொந்தங்களிடமிருந்து ஜகாத் தொகைகளை வசூலித்தார். இது பற்றி அவர் கூறுவதாவது....

'ஜகாத் பணத்தை தனி மனிதனாக செலவிடுவதை விட அதனை பொதுவானதாக்கி அனைவரையும் பங்கு பெற வைக்க முயற்சித்தேன். ஆரம்பத்தில் பலர் இதனை விரும்பவில்லை. சிறிது காலத்துக்கு பிறகு எனது முயற்சிக்கு பல இடங்களிலிருந்தும் ஆதரவு பெருகியது. எனது சொந்தங்கள் நீங்கலாக மற்ற ஆட்களும் பணத்தை தர முன் வந்தனர். ஒரு சிலர் தங்களின் நன்கொடைகளையும் தர ஆரம்பித்தனர். 1992 ல் ஆரம்பித்த இந்த ட்ரஸ்டுக்கு 11 லட்சங்களே மூலதனமாக இருந்தது. பிறகு சொந்தங்கள் நண்பர்கள் மூலமாக பணம் குவியத் தொடங்கியது. Hyderabat Zakat And Charitable Trust (HZCT) என்ற இந்த ட்ரஸ்ட் ஆனது சில மாதங்களிலேயே வருடத்துக்கு 12 கோடி ரூபாயை கையாளும் அமைப்பாக பரிணமித்தது. நாங்கள் ஆரம்பத்தில் பள்ளிகளை ஆலமரத்தடியிலும், பள்ளி வாசல்களின் உபயோகப்படுத்தப் படாத இடங்களையும் தேர்ந்தெடுத்து அங்கு நடத்த ஆரம்பித்தோம். வசதி குறைந்த நடுத்தர வர்க்கத்து குழந்தைகள் மிகவும் ஏழைகள் இதனால் கல்விச் சாலையை நெருங்க முடிந்தது.

நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற படிப்புகளை படிப்பது கனவாக இருந்த போது எங்கள் ட்ரஸ்ட் அவர்களை தேடி கண்டு பிடித்து அவர்களின் வாழ்வை ஒளிமயமாக்கியது. நன்றாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு வருட உதவித் தொகையாக 25000 ரூபாய் இந்த ட்ரஸ்ட் மூலம் விநியோகித்தோம். இதன் மூலம் 45000 மாணவர்கள் ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநில மாணவ மாணவியர் பெரும் பலனடைந்தனர். 23 வருட காலங்களில் எங்கள் ட்ரஸ்டின் மூலம் 100 கோடி ரூபாய் கல்வி உதவி தொகையாக ஏழை மாணவர்களுக்கு அளித்துள்ளோம்.

இது மட்டுமல்ல நல்ல ரேங்கில் வரக் கூடிய மாணவ மாணவிகளை பொருக்கி எடுத்து 'நாளைய தலைவர்கள்' என்ற திட்டத்தின் கீழ் அவர்களை சிவில் சர்வீஸ் பரீட்சைகள் எழுத இலவச பயிற்சியும் கொடுத்து வருகிறோம். வெற்றிலை பாக்கு கடை வைத்துள்ள தொழிலாளியின் மகன் ஷேக் இம்ரான், வாட்ச் கடை வைத்து பிழைப்பு நடத்தும் தொழிலாளியின் மகன் தவ்ஃபீக், விவசாய குடும்பத்திலிருந்து வந்துள்ள வண்ணூர் வள்ளி போன்ற ஏழைகளையும் பெரும் படிப்புகளின் வாசலை மிதிக்க வைத்துள்ளோம். 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே திறமையானவர்களாக பார்த்து பொருக்கி எடுத்து விடுகிறோம். மேல் படிப்புக்காக அவர்களை முதல் வருடத்திலிருந்தே தயார் படுத்துகிறோம். முன்பெல்லாம் இஸ்லாமியர்கள் கல்வியில் ஆர்வம் இல்லாமல் அரசு வேலைகளில் போதிய விருப்பம் இல்லாமல் இருந்தனர். தற்போது நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. கூலி வேலை செய்து பென்ஷன் பெற்று வரும் ஒரு ஏழைத்தாய் தனது குழந்தையை கல்லூரி வரை அனுப்ப பாடுபடுகிறாள். இது வரவேற்கத்தக்க மாற்றம். ஒரு மாணவனுக்கு கல்லூரி படிப்பு இருந்து விட்டால் அவன் சமூகத்தில் எங்கும் சென்று தனது முத்திரையை பதித்து விட முடியும்.

பலரும் என்னிடம் கேட்கின்றனர் 'வருமானத்தை அதிகம் விரும்பாத இந்த துறையை கட்டிக் கொண்டு எத்தனை காலம் ஓட்டுவீர்கள்' என்று. ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்து இதை விட அதிக லாபம் எங்களால் ஈட்ட முடியும். ஆனால் ஏழைகளை தூக்கி விடும் இந்த கல்விப் பணியில் எங்களுக்கு மிகுந்த மன நிறைவு ஏற்படுகிறது. லாபம் இங்கு கிடைக்கா விட்டாலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இதை விட அதிகமான வெகுமதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே உண்டு' என்று முடித்தார்.

இவரை போன்ற செல்வந்தர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து விட்டால் அந்த சமூகம் எப்படிப்பட்ட சமூகமாக மாறியிருக்கும் என்று நினைத்துப் பார்தேன். நம் தமிழக கிராமங்களும் இது போன்ற கல்விப் புரட்சியை நோக்கி பயனிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோமாக!

இஸ்லாமிய கிராமங்களில் ஊருக்கு இரண்டு அரபி மதரஸாக்கள் உலக கல்வியை புறந்தள்ளி அந்த மாணவர்களை 10க்கும் 20க்கும் ஃபாத்திஹா ஓதும் மட முல்லாக்களாக மாற்றும் போக்கை ஒதுக்கி மார்க்க கல்வியோடு இணைந்த உலகக் கல்வியை கொடுக்க முனைவோமாக! சிஎம்என் சலீம், பிஜே போன்றவர்களின் ஆலோசனையில் அமைந்த கல்வித் திட்டத்தை நமது மாணவ மாணவிகளுக்கு கொடுக்க முயல்வோமாக!

'நபியே! எதை இறைவழியில் செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக'
-(குர்ஆன் - 2:219)
Tuesday, March 17, 2015

தேனீக்களைப் பற்றி குர்ஆன் கூறுவது என்ன?"உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68)

“பின், நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் காட்டித் தரும் எளிதான வழிகளில் உன் கூட்டுக்குள் ஒடுங்கிச் செல்” என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு பிணி தீர்க்க வல்ல சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)


தேனை பூக்களிலிருந்து எடுத்து வருவது வேலைக்கார தேனீக்கள். இவை அனைத்தும் பெண் இனம். ஆண் இன தேனீக்கள் தேனை உற்பத்தி செய்வதில்லை. இந்த குர்ஆனின் வசனத்தில் வரும் அனைத்து வாக்கியங்களும் பெண்பாலை நோக்கியே பேசப்படுகிறது. அரபு இலக்கணத்தில் 'சாப்பிடு' என்ற வார்த்தையை ஆண் பாலுக்கு 'குல்' என்றும் பெண் பாலுக்கு 'குலி' என்றும் சொல்லப்படும். இங்கு குர்ஆன் 'குலி' என்ற பெண்பால் தேனீயை நோக்கியே பேசுகிறது.

அதே போல் 'அவற்றின் வயிறுகளிலிருந்து' என்ற வார்த்தையை அரபியில் 'புதுனிஹா' என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. 'புதுனிஹூம்' என்று வந்தால் அது ஆண் பாலைக் குறிக்கும். அவ்வாறு ஆண் பால் தேனீயை நோக்கி சொல்லியிருந்தால் இந்த குர்ஆன் வசனம் எதிரிகளால் பொய்யாக்கப்பட்டிருக்கும். தேனை சேகரிப்பது பெண் பாலான வேலைக்கார தேனீக்கள் தான் என்ற உண்மை மிகச் சிறந்த நுண்ணோக்கியின் துணை கொண்டு சில காலம் முன்புதான் அறிவியல் உலகால் கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டது. ஆனால் இந்த உண்மையை மிக சர்வ சாதாரணமாக குர்ஆன் சொல்லிச் செல்வதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

-----------------------------------------

வேலைக்காரத் தேனீயின் உடலில் தேனை செரிப்பதற்கான வயிறும் தேனை சேகரிப்பதற்கான பையும் தனித்தனியே அமைந்திருக்கின்றன. சேகரிப்பதற்கான பை ராணித்தேனீயின் உடலிலோ, ஆண் தேனீயின் உடலிலோ இல்லை. மலர்களிலிருந்தும் கனிகளிலிருந்தும் சேகரிக்கப்படும் அமுதம் (நெக்டர்) அந்தப்பையில் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது, இதையே அடைகளில் சேமிக்கிறது. இந்த திரவத்தில் அடைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது, இதன் பெருமளவு நீர்மம் குறைக்கப்பட்டு இறுகிய பின்பே தேனாகிறது.

சமீப காலம் வரை தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி தனது கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்றுதான் எண்ணியிருந்தோம். கனிகளிலும், மலர்களிலும் உள்ள குளுக்கோஸை தேனீக்கள் விழுங்கி பல வேதி மாற்றங்கள் நிகழ்ந்து அதன் பிறகு அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து வெளியாகும் திரவம் தான் தேன் என்று தற்காலஅறிவியல் கூறுகிறது. நுணணோக்கிகள் இல்லாத அன்றைய காலத்தில் இவ்வாறு ஒரு உண்மையை குர்ஆனால் எவ்வாறு கூற முடிந்தது என்று சிந்திக்க சொல்கிறது இறை மறை.

தேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துல்லியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம். இவற்றை எல்லாம் நாம் சிந்திக்க வேண்டும் என்றுதான் குர்ஆனில் இறைவன் இதற்கென ஒரு அத்தியாயத்தையே இறக்கியுள்ளான்.

http://www.islamicity.com/science/quranandscience/animals/generatedfiles/THEHONEYBEE.htm

----------------------------------------------அதே போல் உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்க தேனீக்களின் தேனில் உங்களுக்கு நிவாரணம் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்ல இறை வேதத்தால் மட்டுமே முடியும். தேன்களின் பயன் பாட்டை மருத்துவர்களின் வாயிலாக அறிவோம்.

சைனாவில் 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேனீ வளர்ப்பு சம்பந்தமாக ஒரு மிகப் பெரிய கருத்தரங்கு ஒரு வாரம் நடைபெற்றது. இதில் பேசிய அமெரிக்க ஆய்வாளர்கள் தேனீயிடமிருந்து கிடைக்கும் ராயல் ஜெல்லி, மகரந்தம், தேனீக்களின் பிசின் போன்ற அனைத்துமே மனிதனின் பல நோய்களை குணமாக்கக் கூடியது என்று பேசினர்.

ரொமேனியன் மருத்துவர் தனது பேச்சில் 'நான் 2094 நோயாளிகளுக்கு தேனை முக்கியமாக மருந்தாக உபயோகித்தேன். அதில் 2002 பேர் பூரண குணமடைந்தனர்' என்றார்.

போலந்து மருத்துவர்கள் தங்களது பேச்சில் கூறியதாவது 'தேனீக்களின் மூலம் மூல நோய், தோல் பிரச்னைகள், பெண்களுக்கான பல நோய்கள் போன்றவற்றை தேனை முக்கிய மருந்தாக பயன்படுத்தி குணப்படுத்தியுள்ளோம்.' என்றனர்.

நம் நாட்டு சித்த மருத்துவத்திலும் தேன் முக்கிய இடம் பிடித்துள்ளதை நாம் அறிவோம்.

(Huriet News Paper, 19, october 1993)

தற்போது புதிய கண்டுபிடிப்புகளில் தேனின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிவியல் உலகம் கூறுவதாவது:

Nowadays, apiculture and bee products has become a new branch of research in countries advanced in science. Other benefits of honey may be described as below:

Easily digested: Because the sugar molecules in the honey can convert into other types of sugar (fructose to glucose), the honey is easily digested by the most sensitive stomachs despite its high acid concentration. It also helps kidneys and intestines to function better.

Has a low calorie level: Another quality of the honey is that, when it is compared with the same amount of sugar, it gives 40% less calories to the body. Although it gives great energy to the body, it does not add on weight.

Rapidly fuses into blood: When accompanied by mild water, honey fuses into the bloodstream in 7 minutes. The free sugar molecules in it make the brain function easier...

Supports blood formation: Honey provides an important part of the energy needed by the body for blood formation. In addition, it helps cleaning the blood. It has some positive effects in regulating the blood circulation and facilitating it. Also, it functions as an important protection against capillary problems and arteriosclerosis.

Does not accommodate bacteria: This bacteria killing property of the honey is named as the "inhibition effect". The experiments conducted on honey resolve that, its bacteria killing property increases twice when diluted with water. It is very interesting to note that the newborns in the bee colony are nourished with diluted honey by the bees responsible of their supervision - as if they know this feature of the honey.

Royal Jelly: Royal jelly is a substance produced by worker bees inside the beehive. Inside this nutritious substance, there exist sugar, proteins, fats and many vitamins. It is used in problems which occur as a result of tissue deficiency or body frailty.

It is obvious that honey, which is produced in much higher amounts than the requirement of the bees, is made for the benefit of man. And it is also obvious that bees cannot perform such an unbelievable task "on their own"...

-----------------------------------------------------------------------------

In the honey bee colonies where each of the many bees is assigned a specific task, the only exception is the male honey bee. The males do not contribute to the defence of the hive or its cleaning, to gathering food, or making of the honeycomb and honey. The only function of the male bees in the hive is to inseminate the queen bee.106 Apart from reproductive organs, the males possess almost none of the features possessed by the other bees and it is therefore impossible for them to do anything but fertilise the queen.

The worker bees carry the entire load of the colony. Although they are females like the queen, their ovaries have no maturity. This renders them sterile. They have several duties: cleaning the hive, maintaining the larvae and the young, feeding the queen bee and the males, producing honey, constructing the honeycomb and repairing it, ventilating the hive and safeguarding it, gathering supplies like nectar, pollen, water and resin, and storing these in the hive.

In Arabic, there are two different usages of verbs. By means of the usage, it is possible to determine whether the subject is a female or a male. As a matter of fact, the verbs (italic words) used for the honey bee in the verses are used in the format of the verb for females. Through this, the Qur'an indicates that the honey bees that work in the making of the honey are females.107

We should not forget that it is impossible for this fact to have been known about the honey bees in the time of the Prophet Muhammad (saas). Yet, Allah has pointed at this fact and shown us yet another miracle of the Qur'an.

-Harun Yahya

பொய்யன் ஐஎஸ்ஐஎஸ் பக்தாதியின் அடுத்த பல்டி!

ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு அமெரிக்காவின் கைக்கூலி என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஐஎஸ்ஐஎஸின் தலைவன் பக்தாதி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளான். அது என்ன அறிக்கை?

'நபிகள் நாயகம் எனது கனவில் தோன்றி 'மசூல் நகரத்திலிருந்து வெளியேறி விடு' என்று சொன்னார். எனவே போராளிகள் தாக்குதலை கைவிட்டு மசூல் நகரத்திலிருந்து வெளியேறவும்' என்ற அறிக்கையே அது.

இவனைப் பொறுத்த வரையில் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் என்ன கட்டளையிடுகிறார்களோ அதனை செயல்படுத்தக் கூடியவன். தற்போது ஆயுத வியாபாரம் முடிந்து விட்டது. பெட்ரோல் வளங்களையும் கொள்ளையடித்தாகி விட்டது. இனி ஐஎஸ்ஐஎஸ் அவசியமில்லை என்ற முடீவுக்கு அவர்கள் வந்ததாலேயே திடீரென்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பார்வையில் நபிகள் நாயகத்தை யாரெல்லாம் நேரில் கண்டார்களோ அவர்கள் தான் கனவிலும் காண முடியும். நபிகள் நாயகத்தின் காலத்திய ஆட்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. நபிகள் நாயகம் எந்த தோற்றத்தில் இருப்பார்கள் என்ற அறிவும் இவனுக்கு கிடையாது. ஆக திட்டமிட்டு பொய் சொல்கிறான். இஸ்லாத்தை நன்கு விளங்கியிவர்கள் இவனது காமெடியை கேட்டு சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். பொய்களை அதிக நாட்கள் மூடி வைக்க முடியாது என்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் ஒரு சிறந்த உதாரணம். அதன் தலைவன் பக்தாதியும் ஒரு நல்ல உதாரணம்.

--------------------------------------------------

Mosul- Head of ISIS Abu-Baker Al-Baghdadi has claimed that he dreamt of Prophet Mohammed (pbuh) who asked him to evacuate Mosul, Al-Sharq.com reported yesterday.

He claimed that the Prophet asked him to leave the province with all of his men without fighting.

Local Iraqi sources in Mosul reported that ISIS militias would withdraw from the city upon receiving orders from their leader Al-Baghdadi.

The Kurdish Democratic Party's electronic site reported that "Baghdadi ordered his fighters to withdraw from the city following a dream that he met Prophet Mohammed (pbuh), who ordered him to leave Mosul."

No date was given for the departure.

Courtesy Middle East Moniter

http://nation.com.pk/international/16-Mar-2015/prophet-muhammad-ordered-me-to-leave-mosul-al-baghdadi

எந்த சமய நெறி மனிதனுக்கு ஏற்றது? - ரகு ரகு நந்தன் ஐயர்திரு ரகு நந்தன் ஐயர்!

//அதை விடுங்க உங்க இவ்வளவு கேள்விக்கு பதில் சொல்லியாச்சு நான் கேட்ட கேள்விக்கு பதில்?! சைவம் விட்டொழிச்சாச்சுனு வைங்க உங்க கூற்றுபடி எந்த சமய நெறி மனிதற்கு ஏற்றது?//

-Ragu Nandhan Iyer

விடை மிக எளிது நண்பரே!

யாருக்கும் பிரச்னையில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு தீர்வு உண்டு என்றால் அது இஸ்லாம் தான்.

திராவிடர் கழகம் சொல்வது போல் அனைத்து பார்பனர்களையும் ஒதுக்கி விட முடியாது. தலித்கள் இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் இந்து மதத்திலிருந்து ஒரு தீர்வை அவர்களால் பெற முடியாது.

தேவர், நாடார், வன்னியர், செட்டியார் என்று மற்ற சாதிகளையும் துறக்க இன்று உள்ள ஒரே வழி அனைவரும் இஸ்லாத்தில் ஐக்கியமாவதுதான்.

இஸ்லாம் தமிழகத்துக்கு புதிய மார்க்கம் அல்ல. நமது முன்னோர்கள் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றுதான் வாழ்ந்துள்ளார்கள். இஸ்லாத்தின் அடிநாதமே இந்த கொள்கைதான்.

கிறித்தவமும் பவுத்தமும் இருந்தாலும் அங்கும் சாதிகள் ஊடுருவி அந்த மதங்களையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே மாற்றி விட்டது வர்ணாசிரம தர்மம். எனவே அங்கும் உங்களுக்கு ஒரு தீர்வை பெற முடியாது.

இஸ்லாத்தில் உள்ள சில தீவிரவாத குழுக்களை நீங்கள் காட்டி அதனை குறை கூறலாம். 90 சதமான தீவிரவாத குழுக்களை உருவாக்கியதே அமெரிக்காவும், ஐரோப்பாவும், இஸ்ரேலும். ஏனெனில் அந்த நாடுகளில் இஸ்லாம் வேகமாக பரவுவதால் தங்களின் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று நினைக்கிறார்கள். எனவே குண்டு வெடிப்புகளை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்தி உலகம் முழுவதிலும் ஒரு தவறான பிம்பத்தை உண்டாக்க நினைக்கிறார்கள். பெரும்பாலும் அரபுலகில் நடக்கும் வன்முறைகள் பெட்ரோலை கொள்ளையடிக்க நடத்தப்படுபவை.

நம் நாட்டில் உங்களோடு அண்ணன் தம்பிகளாக பழகும் தமிழக முஸ்லிம்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் இந்துக்களின் மீதோ கிறித்தவர்களின் மீதோ ஏதேனும் வன்மத்தைப் பார்த்துள்ளீர்களா? குர்ஆன் அவர்களை மிகவும் பண்பட்ட அனைத்து மதத்தினரையும் அனுசரித்து போகக் கூடிய மக்களாக மாற்றியிருக்கிறது.

தமிழக முஸ்லிம்களில் பார்பனரைப் பார்கலாம்: நாடாரைப் பார்கலாம்: தேவரைப் பார்கலாம்: தலித்தைப் பார்கலாம்: இவர்கள் அனவைரும் இந்து மதத்தின் ஏதாவது ஒரு சாதியிலிருந்து வந்திருந்தாலும் இன்று இவர்கள் முஸ்லிம்கள். அவர்களிடம் பழைய சாதியின் அடையாளங்கள் எதையாவது உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

எனவே மதங்களை வெறுத்த பெரியாரையும் கவர்ந்த இந்த மண்ணுக்கேற்ற மார்கமான இஸ்லாத்தில் நுழைந்து சாதி வெறிகளை ஒழிக்க அன்போடு அழைக்கிறேன்.

Monday, March 16, 2015

No bargaining on Islamic rules: KSARIYADH — The Council of Ministers on Monday reemphasized that the fundamentals of Islam being followed by about 1.5 billion Muslims around the world are not subject to any bargaining.

The weekly session of the Cabinet, chaired by Custodian of the Two Holy Mosques King Salman at Al-Yamamah Palace here, also underscored that the Islamic Shariah guarantees fair equality between men and women and it allows no discrimination against women.

The Cabinet made the remarks in the backdrop of the recent statement by the Swedish foreign minister offending the Kingdom and its Shariah-based judicial system.

In a statement to the Saudi Press Agency following the session, Minister of Culture and Information Adel Al-Turaifi said the Cabinet reiterated its condemnation of the Swedish minister’s statement.

It said the statement showed the Swedish minister’s ignorance about the remarkable progress achieved by the Kingdom on all fronts, especially the excellent position being enjoyed by women in various fields, including education, science, health, economy and commerce.

“Guaranteeing the independence of judicial authority is the core principle with regard to protecting and strengthening human rights.

The Kingdom’s judicial system, based on Shariah, guarantees total justice to all. Everybody is equal before the law,” the Cabinet said.

Similarly, the freedom of expression has also been guaranteed to all within the framework of Shariah, the Cabinet said, asserting that incorrect allegations should not be raised against personal rights issues of individuals out of judicial context.

Refuting allegations of discrimination between the rights of men and women, the Cabinet reiterated that the Kingdom’s Basic Law of Governance is based on Shariah.

Its Article 8 clearly stipulates that governance would be on the basis of justice and equality. “Saudi women, while maintaining their Islamic and Arab identity, have made concrete achievements in various fields.

“They hold key posts in both the government and private sectors. They actively participate in the Shoura Council, where their representation is higher than women’s representation in parliaments in other countries.”

The Cabinet also emphasized that harming the judicial system as well as the social and cultural patterns simply because of their difference with the pattern prevailing in other countries is contrary to the principles of the international community that call for respecting religions as well as social and cultural diversity.

The Cabinet also noted that Islamic principles cannot be misused to serve domestic political purposes in contravention to the diplomatic norms and cordial relations among nations.

The Kingdom hopes that it should not be forced into reviewing its ties with Sweden.

சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!


//இந்தியர்கள் சூரியனை முதன்மையாக வைத்து வணங்குபவர்கள்.
அரேபியர்கள் சூரியனிடம் ஒளியை பெறும் சந்திரனை முதன்மையாக வணங்குபவர்கள்.//

//இந்து தமிழில் சந்திரன்.
அரபியில் அல்-இலா.//

-சென்னி மலை!

சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!

ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் இறைவன் இதைப் படைத்துள்ளான்.அறிகிற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

-குர்ஆன் 10:5

என்ன அழகிய ஒரு இறைவனின் வார்த்தை!. 'லியா அன்' என்ற அரபிச் சொல்லை அரபு இலக்கணத்தின் படி மொழி பெயர்த்தால் 'வெளிச்சம்' என்றும் பன்மையில் 'வெளிச்சங்கள்' என்றும் இரண்டையுமே ஒரே வார்த்தையில் அரபு அகராதி குறிப்பதை பார்க்கலாம்.

அரபு மொழியில் நல்ல பாண்டித்தியம் உள்ளவர்களிடம் நாம் இதைப்பற்றிய தெளிவை அடையலாம். இணையத்திலும் கூகுளில் தேடினால் ஒருமையும் பன்மையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடப்படுவதை நாம் அறிய முடியும்.

சூரியனின் சாதாரண வெந்நிற ஒளி மாறுபட்ட அதிர்வெண்களையும் மாறுபட்ட நிறங்களையும் கொண்ட ஒளிகளின் கலவை என நியூட்டன் தனது சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் செலுத்தி ஒளிப் பிரிகையை செய்து காட்டினார். அவற்றை மாறுபட்ட நிறங்களை உடைய ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த மாறுபட்ட வர்ணங்களை உடைய ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் அதன் துணைக் கருவிகளும் இணைந்த கருவியையே நாம் 'நிறமாலை' (spectrascope) நோக்கி என்கிறோம்.

இங்கு சூரியன் பல ஒளிகளை உமிழ்ந்து ஒரு ஒளியாக நமது கண்ணுக்கு தெரிகிறது. சூரியனை நாம் சாதாரணமாக பார்த்தால் அதில் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய ஒரே வெளிச்சத்தை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஏழு வெளிச்சங்களை சுருக்கி நம் கண்ணுக்கு ஒரு வெளிச்சமாக தருகிறது. எனவே 'லியாஅன்' என்ற இந்த வார்த்தை பிரயோகம் ஒருமைக்கும் பொருந்தி வருகிறது. ஏழு வண்ணங்களின் கூட்டுக்கும் பொருந்தி வருகிறது.

குர்ஆனில் பயன்படுத்தப் பட்டிருக்கும் 'அஸ்ஸ்ம்ஸ லியாஅன்' என்ற அரபி வார்த்தையை அரபு மொழியும், ஒளிப்பிரிகையையும் நன்கு அறிந்த ஒருவர் ஆழ்ந்து சிந்தித்தாரானால் இது இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார். ஏனெனில் 'நூர்' என்ற வார்த்தையும் 'லியாஅன்' என்ற வார்த்தையும் மேலோட்டமாக பார்க்கும் போது ஒரே பொருளையே தரும். சந்திரனுக்கு போட்ட 'நூர்' என்ற வார்த்தையை சூரியனுக்கு குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் பொருளே மாறி விடும்.

ஆனால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சூரியனுக்கு எந்த வார்த்தையை பயன் படுத்த வேண்டும். சந்திரனுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நிதானித்து வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கிறது. இயற்பியலை ஓரளவு அறிந்த எந்த மனிதரும் இந்த வார்த்தை பிரயோகத்தை பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது. எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி இப்படி ஒரு வார்த்தையை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

காலை தொழுகைக்கு தனது பிள்ளைகளை எழுப்பும் சவுதி தகப்பன்


'ஃபைசல்.... யா ஃபைசல்... தொழுகைக்கு எழுந்திரு. யா... முஹம்மத்! காலை(பஜர்) தொழுகைக்கு எழுந்திரு'

தனது இரண்டு மகன்களும் அசந்து தூங்குவதை பார்த்து சிறுவர்களை எழுப்புகிறார் அவர்களின் தந்தை. இரவு வெகு நேரம் இணையத்தில் செலவழித்ததால் அசதியில் அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. தந்தையை சட்டை செய்யாமல் திரும்பவும் தூங்குகின்றனர். சிறிது நேரம் கழித்து தந்தை திரும்பி வந்து பார்த்தால் பிள்ளைகள் எழும்பாமல் தூங்குகின்றனர்.

'அப்போ.... தொழுகைக்கு எழுந்திருக்க மாட்டீர்கள்.. அப்படித்தானே... இரு இரு இப்போ வருகிறேன்'

கோபத்தோடு உள்ளே சென்று கையில் சிறிது நீரை எடுத்து வந்து அவர்கள் முகத்தில் தெளிக்கிறார். பாதி தூக்கம் கலைந்த நிலையில் அவர்கள் திரும்பவும் தூங்குகின்றனர்.

'யா... ஃபைசல்.... யா முஹம்மத்.... தொழுகை தொடங்கப் போகிறது? கூட்டுத் தொழுகைக்கு வரவில்லையா? ம்...ம்... எழுந்திருங்கள்.'

ம்ம்ஹூம். அவர்கள் எழுந்திருப்பது போல் தெரியவில்லை....

'பாபா (அப்பா)! எனக்கு தூக்கமாக வருகிறது.... உடலும் அசதியாக உள்ளது'

'அப்போ இதற்கும் எழுந்திருக்க மாட்டீங்க.... இரு இரு சரியான சாதனத்தை எடுத்து வருகிறேன்'

உள்ளே வேகமாக சென்றவர் ஒரு எலக்ட்ரானிக் கருவி ஒன்றை எடுத்து வருகிறார். அது போட்ட சத்தத்தை கேட்டவுடன் பேயை பார்த்தது போல் அலறி அடித்துக் கொண்டு அந்த இருவரும் ஓடுகிறார்கள். இவர்களுக்கு ஏற்ற சரியான தந்தைதான் இவர். :-)

சவுதியில் கடுமையான குளிர் காலங்களில் கூட சிறுவர்கள் காலை தொழுகைக்கு அதிகாலை 4 மணிக்கு பள்ளியில் வரிசையில் நிற்பதை நான் ஆச்சரியத்தோடு பார்பேன். சிறு வயது முதலே அவர்களை காலையில் எழும்புவதற்கு தயாராக்குகிறார்கள். இப்படிப்பட்ட தலைவர்களை பெற்ற குடும்பங்களில் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

ஆனால் நாமோ பிள்ளை கேட்டால் 60000 க்கு டூ வீலர் வாங்கிக் கொடுக்கிறோம். 20000 ல் புதிய செல் போன் வாங்கிக் கொடுக்கிறோம். ஆனால் தொழுகைக்கு மட்டும் அவர்களை எழுப்புவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். இந்த தந்தையைப் பொல் ஒவ்வொரு இஸ்லாமிய வீட்டுத் தலைமையும் மாற வேண்டும். இஸ்லாமியரின் வெற்றி இந்த தொழுகையில் தான் உள்ளது.

“நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.”
23;1.2

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.
23:9


Sunday, March 15, 2015

இஸ்லாமிய பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணியலாம் - ஜெர்மனி!இஸ்லாமிய பெண்கள் ஆசிரிய பணிக்கு வரும் போது தலையில் முக்காடு அணிந்து வர முன்பு ஜெர்மனியில் தடை இருந்தது. இந்த தடையானது 2003 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது. ஜெர்மனியின் சுறுஹியில் உள்ள நீதி மன்றம் இதற்கான தடையை விதித்திருந்தது. விதிக்கப்பட்ட தடையை அந்த நீதிமன்றமே தற்போது விலக்கிக் கொண்டுள்ளது. ஜெர்மனிய முஸ்லிம்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி தலையில் முக்காடு இட்டு பள்ளிக்கு வரலாம் பாடங்களும் நடத்தலாம்.

எதிர்க் கட்சியினர் வழக்கம் போல் 'ஜெர்மன் இஸ்லாத்தை நோக்கி செல்கிறதா' என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டை ஆள்பவர் ஒரு பெண்மணி என்பதால் பெண்மைக்கு கண்ணியம் கொடுக்க நினைக்கிறார். சார்ளி ஹெப்டோ துப்பாக்கிச் சூட்டில் முழு உலகமும் இஸ்லாத்துக்கு எதிராக நின்றபோது 'இஸ்லாம் ஜெர்மனியின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மார்க்கம்' என்று லட்சக்கணக்கான மக்களுக்கு முன்பு ஜெர்மன் அதிபர் கூறியதை நாம் மறந்து விடவில்லை. இதனால் யூதர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தையும் நாம் அறிவோம். சிறந்த நாடு: சிறந்த தலைவர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்

முன்பு ஷ்யாம் தற்போது 'ஆசாத்' - விடுதலை பெற்றவன்!ஒரு மாதத்துக்கு முன்பு இவரது பெயர் ஷியாம் சிங். தற்போது இவரது பெயர் 'ஆசாத்'. அருமையான பெயரை தேர்ந்தெடுத்துள்ளார். ஆசாத் என்ற பெயரை தமிழ் படுத்தினால் 'விடுதலை' என்ற பொருளைக் கொடுக்கும். சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை பெற்றதால் 'ஆசாத்' என்ற பெயர் மிகப் பொருத்தமாக உள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ளது மீரட் மாவட்டம். பக்பாத் என்ற இடத்துக்கு அருகில் உள்ள கோவிலில் ஷியாம் சிங் கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்கவில்லை. இந்த கோவிலானது யாதவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அனுமதி மறுத்தால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வேன் என்று வாதிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் இவரையும் இவரது குடும்பத்தவரையும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக சொல்லி வழக்கு பதிவு செய்துள்ளது.

கோவிலின் பூசாரி ஷியாமுக்கு வழிபட உரிமை தர முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் வெறுப்புற்ற அவர் இஸ்லாத்தை தற்போது தழுவியுள்ளார். இவரைத் தொடர்ந்து 100க்கு மேற்பட்டவர்கள் இஸ்லாத்தை தழுவ தயாராகி வருகின்றனர். கிராமத்தில் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் ஊரை காலி செய்து விட்டு நேபாளுக்கோ அல்லது பாதுகாப்பான ஊர்களுக்கோ சென்று விடலாமா என்ற யோசனையில் உள்ளார்.

தன்னை கோவிலில் வழிபட அனுமதிக்காததை எதிர்த்து பிரதமர், கலெக்டர், தாசில்தார் என்று வரிசையாக மனுக்களை அனுப்பியுள்ளார். இந்துத்வா ஆட்சியில் தலித்களுக்கு நியாயம் கிடைக்குமா? எனவே இவருக்கு எந்த ஒரு பதிலும் அரசிடமிருந்து இதுவரை வரவில்லை.

ஆனால் ஆர்எஸ்எஸிலிருந்து சிலர் வந்து 'இஸ்லாத்துக்கு மாறி விட வேண்டாம். நிலைமை சரியாகும்' என்கிறார்களாம். கலவரம் செய்ய, வீடு கொளுத்த, கொலை செய்ய பிறகு ஆர்எஸ்எஸூக்கு ஆள் கிடைக்காமல் போய் விடுமே. எனவே ஓடி வந்து இஸ்லாத்துக்கு மாறி விடாதீர்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

'நான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்கிறேன். ஆனால் இந்து கோவிலுக்குள் அனுமதி மறுத்தால் பிறகு எனக்கு இந்து மதத்தில் என்ன வேலை? வேறு மதத்துக்கு மாறுவதாக சொன்னாலும் 'நாங்கள் சரி செய்கிறோம். அவசரப்பட வேண்டாம்' என்கின்றனர். எத்தனை காலத்துக்கு எங்களை இவ்வாறு ஏமாற்றப் போகிறீர்கள்?' என்று காட்டமாக கேட்கிறார் ஷ்யாம் சிங்.

தகவல் உதவி

தி ஹிந்து ஆங்கில நாளிதழ்
14-03-2015

http://www.thehindu.com/news/national/other-states/denied-temple-access-dalit-converts-to-islam/article6991578.ece#comments

Saturday, March 14, 2015

உலக படைப்பு - அழிவு பற்றி குர்ஆனின் சில சூத்திரங்கள்!

உலக படைப்பு அழிவு பற்றி குர்ஆனின் சில சூத்திரங்கள்!

மனிதன் அன்று முதல் இன்று வரை இந்த உலகத்தைப் பற்றியும் அது எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றியும் சிந்தித்த வண்ணமே உள்ளான். இதற்கே இன்னும் விடை காண முடியாத போது இந்த உலகம் எப்பொழுது அழியும் என்பதை பற்றி சிந்திக்காத நபர்களே இல்லை எனலாம்.

"முன்னர் இருந்த காலங்கள் வரையறை செய்யப்படாதது எனும் கருத்தில் பெருவெடிப்பின் காலத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என ஒருவர் கூறலாம். காலத்தின் இந்த தொடக்கம் என்பது முன்னர் இருந்து வந்ததிலிருந்து மாறுபட்டதாகும் என்பது அழுத்தம் செலுத்த வேண்டிய கருத்தாகும்"
-A BRIEF HISTORY OF TIME( PAGE 9)

அறிவியல் அறிஞர் ஹாக்கிங் சொல்ல வருவது பெருவெடிப்புக்கு முன் வரையறுக்கப்பட்ட காலம் என்பது எதுவும் இருக்கவில்லை என்றும் இந்த அர்த்தத்தில் பெரு வெடிப்பு என்பதே காலத்தின் தொடக்கம் என்பதை தனது ஆய்வின் மூலம் விளக்குகிறார். குர்ஆனில் உலகம் படைக்கப்பட்டதைப் பற்றியும் உலக முடிவு நாள் பற்றியும் சில வசனங்கள் வருகிறது. பேரண்டம் படைக்கப்பட்டக் காலத்தில் ஒரு நாள் என்பது என்னவென்றோ அல்லது அதன் கால அளவு என்ன என்பதோ அறிவியல் பார்வையில் நம்மால் ஒரு தெளிவை அடைய முடியாது.

"வானங்களிலும் பூமியிலும் மறைவானவை இறைவனுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்"
-குர்ஆன் 16:77


பேரண்டத்தின் அழிவைப் பற்றியே மேற்கண்ட வசனம் நம்மிடம் பேசுகிறது. இதில் பேரண்டம் எப்போது அழிக்கப்படும் என்ற செய்தியை இறைவன் அறிவிக்கிறான். கண் சிமிட்டும் நேரத்தை விட குறைவான நேரத்தில் இந்த உலகம் அழிக்கப்பட்டு விடும் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த வசனம் இறங்கி 1433 வருடங்களாகி விட்டது. அந்த நேரம் இன்னும் வந்தபாடில்லை. ஏன் வரவில்லை?

காலம் சார்பற்றது. அது சுயம் பூரணமானது என்ற தப்பெண்ணத்தில் உலகம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை நம்பியிருந்ததால் காலம் எப்போதும் எங்கும் ஒரே நிலையானது. எனவே அதில் மனிதனுக்கும் இறைவனுக்கும் வேற்றுமை இல்லை என்றும், எனவே மனிதனுக்கு கண் இமைக்கும் நேரம் எவ்வளவோ அவ்வளவே இறைவனிடத்திலும் இருக்க முடியும் என எண்ணினர்.

உலக முடிவு நாளின் நிலைமையைப் பற்றி குர்ஆன் கூறும் போது:

'சூரியன் சுருட்டப்படும்போது! நட்சத்திரங்கள் உதிரும் போது: மலைகள் பெயர்க்கப்படும் போது: கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது: விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது'
-குர்ஆன் 81:1-5

வானம் பிளந்து விடும் போது: நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது: கடல்கள் கொதிக்க வைக்கப்படும்போது.
-குர்ஆன் 82:1-3


மேற் கண்ட வசனங்களை நாம் மேலோட்டமாக பார்த்தாலே இவை அனைத்தும் கண் சிமிட்டும் நேரத்துக்குள் நடந்து முடிய சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருவோம். எனவே இறைவன் கூறக் கூடிய கால அளவு என்பது நம்மிடம் உள்ள கால அளவு படி இல்லாமல் இறைவன் புறத்தில் உள்ள காலஅளவின்படியே ஆகும் என்ற முடிவுக்கு வரலாம்.

பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவையும் இறைவன் கூறியுள்ளான். ஆனால் அந்த கால அளவு பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கணக்கின்படியாகும். அக்காலத்தில் மனிதப் படைப்பே இருந்திருக்கவில்லை. பேரண்டத்தில் கால நிர்ணயம் செய்யக் கூடிய அளவு கோல் எதுவும் இருக்கவும் இல்லை. எனவே நமது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள கணக்கு நமது கணக்கின்படி அல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

மேற்கண்ட பதிலைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு கண் சிமிட்டும் நேரத்திற்கு தோராயமாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கவனிப்போம். கண் சிமிட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு விநாடியில் இரண்டு மூன்று முறை நம்மால் இமைகளை சிமிட்ட முடியும். ஆயினும் குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்து விடும் எனக் கூறுவதில் திருப்தி கொள்ளாமல் அதை விடக் குறைவான நேரத்தில் உலக அழிவு வரக் கூடும் எனக் கூறுகிறது. இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட்(milli second) கணக்கில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கமானது இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.

குர்ஆன் சொல்லும் கால அளவை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று மற்றவர்கள் கேட்கலாம். இந்த விளக்கமானது குர்ஆன் இறை வேதம்தான் என்று நம்புபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் மேலும் சில கணித வடிவமைப்புகளை பார்வையிடுவோம்.

பேரண்டத்தின் அழிவு எப்போது என்பது பற்றித் திருமறை வசனங்களிலிருந்து அது கூறிய கால அளவு ஏறத்தாழ 0.2 வினாடி என்று நாம் அனுமானித்தோம். ஆனாலும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1433 வருடங்களாகியும் இப்பேரண்டமானது அழிவுறத் தொடங்கவில்லை. எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி இவ்வுலகின் தற்போதய 1433 (ஹிஜ்ரி) வருடங்களை விட மிகுதியானதாகும் என ஐயமறத் தெரிகிறது. இந்த விளக்கத்திலிருந்து நமக்கு கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1433 வருடங்களை விட அதிகம் என்பதாகும்.

இன்னும் விளக்கமாக சொல்லப் போனால்...

0.2 வினாடி > 1433 வருடங்கள்

இந்த இடத்தில் குர்ஆனின் கணக்கின்படி பேரண்டத்தின் 2 வினாடி என்பது உலகியலின் கணக்கின்படி 1433 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை 1433 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1433 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். ஆனால் இப்பேரண்டம் எப்பொழுது துல்லியமாக அழியும் என்ற ரகசியத்தை நம்மை படைத்த இறைவனே அறிவான். இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1433 வருடங்களுக்கு மேல் என்றே கூற முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1433 வருடங்கள் என்ற எண் நிரந்தரமானதன்று. அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1434, 1435 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

குர்ஆன் இந்த பேரண்டத்தைப் படைக்க ஆறு நாட்கள் ஆனதாக கூறுகிறது. இந்த ஆறு நாட்கள் என்பதை நாம் முன்பு குர்ஆனிலிருந்து பெற்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி நம் உலகியல் கணக்குக்கு ஒரு தோராயமான மதிப்பை பெற முயற்ச்சிப்போம்.

மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் : 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள்:
=0.2*24=4.8=5

=0.2 வினாடி * வினாடி (sec) * நிமிடம் (min) * மணி(time)

=5 * 60 * 60 * 24

=43200 * 6 = 2259000 (ஆறு நாட்களுக்காக விடையை ஆறால் பெருக்கியிருக்கிறோம்)

=1433=0.2 வினாடி ( அதாவது பேரண்டத்தின் 0.2 வினாடியின் கால அளவு என்பது 1433 உலகியல் வருடங்களுக்கு மேல் என்ற எண்ணுக்கு நிகரானது என்பதை நினைவில் கொள்வோம்)

=1433 * 2259000 (இறைவன் புறத்தில் உள்ள ஆறு நாட்களின் மொத்தமுள்ள 0.2 வினாடிகளின் கால அளவுக்கு நிகரான நம் கணக்கில் உள்ள உலகியல் வருடங்கள்

=3237147000

உலகம் படைக்கப்பட்டதின் வருடங்களை உலகியல் கணக்கில் குர்ஆனின் சூத்திரத்தை வைத்து தற்போது கண்டு பிடித்து விட்டோம். இந்த பேரண்டம் உருவாக்கப்பட்டு 320 கோடி வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதனை மிக தெளிவாக கண்டு கொண்டோம்.

இப்பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாயிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லே ஷேப்லி கூறுகிறார்.

பேரண்டம் உருவாவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

குர்ஆன் கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறியல் அறிஞர்களால் கண்டு பிடித்த அறிவியல் உண்மைகளோடு ஏறத்தாழ ஒத்து வருவதை கண்டு நாம் ஆச்சரியமடைகிறோம். அந்த அறிவியல் அறிஞர்களும் தோராயமாகத்தான் காலத்தை கணித்தனர். குர்ஆனோ இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலத்தை துல்லியமாக 1433 வருடங்களுக்கு முன்பே மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். எழுதப் படிக்க தெரியாக ஒரு மனிதர் இந்த குர்ஆனை தனது சொந்த கற்பனையில் இயற்றியிருக்க முடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

----------------------------------------------------------

பூமி சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அந்த நாள் முதலாக பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்றும் நாம் அறிகிறோம். பூமியின் மிக்க முதுமையான பாறை மூலகத்தின் கதிரியக்கத் தேய்வை ஆராயும் போது, (Radioactive Decay of Elemets) புவியின் வயது 3.8 பில்லியன் என்று விஞ்ஞானிகள் கணிக்கிட்டிருக்கிறார்கள். மேலும் பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலகக் கதிரியக்கத் தேய்வை ஆய்ந்த போது, சூரிய குடும்பத்தில் பூமியின் வயது 4.6 பில்லியன் என்று இப்போது தெளிவாக முடிவு செய்யப் பட்டிருக்கிறது.பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் வயதைக் கணக்கிடப் பல்வேறு முறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். புதிய நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயும் விஞ்ஞானிகள் இன்னும் உறுதியாக அதன் வயதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. 2003 பிப்ரவரியில் ஏவிய “வில்கின்ஸன் பல்கோண நுண்ணலை நோக்கி விண்ணுளவி” [Wilkinson Microwave Anisotropy Probe (WMAP)] அனுப்புவதற்கு முன்பு பிரபஞ்ச உப்புதலை அளக்கும் “ஹப்பிள் நிலையிலக்கம்” (Hubble Constant) பயன்படுத்தப்பட்டுப் பலரது தர்க்கத்துக்கு உட்பட்டது. விண்மீன்கள் பூமியை விட்டு விலகிச் செல்லும் வேக வீதத்தை அறிந்து கொண்டு ஹப்பிள் நிலையிலக்கம் நிர்ணயமாகும். அதாவது காலாக்ஸி தொடர்ந்து மறையும் வேகத்தை அதன் தூரத்தால் வகுத்தால் வருவது ஹப்பிள் நிலையிலக்கம். அந்த நிலையிலக்கின் தலைகீழ் எண்ணிக்கை [Reciprocal of the Hubble Constant] பிரபஞ்சத்தின் வயதைக் காண உதவும். அவ்விதம் கண்டுபிடித்ததில் பிரபஞ்சத்தின் வயது 10-16 பில்லியன் ஆண்டுகள் என்று அறிய வந்தது. இம்முறையில் ஒரு விஞ்ஞானி பல்வேறு அனுமானங்களைக் கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால், அம்முறை உறுதியுடன் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.அடுத்த முறை பூதளத்தின் மிகப் புராதனப் பாறைகளில் உள்ள மூலகங்களின் கதிரியக்கத் தேய்வைக் (Radioactive Decay of Elements in Oldest Rocks) கணக்கிட்டு பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் கணிக்கப் பட்டது. பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் மூலக கதிரியக்கத் தேய்வைக் கணக்கிட்டுப் பூகோளத்தின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.

அதே திடப்பொருள் விதிகளைப் பயன்படுத்தி காலாக்ஸி அல்லது புராதன விண்மீன்களில் எழும் வாயுக்களின் கதிரியக்கத் தேய்வுகளை ஆராய்ந்தனர். அவ்விதம் கணக்கிட்டதில் பிரபஞ்சத்தின் வயது 12-15 [plus or minus 3 to 4 billion] பில்லியன் ஆண்டுகள் என்று தீர்மானிக்கப்பட்டது ! ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் [Brightness versus Temperature] பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டுப் பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிட்டார்கள். ஈரோப்பியன் விண்வெளிப் பேரவை அனுப்பிய ஹிப்பார்கஸ் துணைக்கோள் (Hipparcos Satellite) விண்மீன் தூரத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்விதம் கணக்கிட்டதில் மிகப் புராதன விண்மீனின் வயது சுமார் 12 பில்லியன் ஆண்டுகள் என்று அறியப்பட்டது.

டாக்டர் கார்ல் போப்பர், ஆஸ்டிரியன் பிரிட்டீஷ் வேதாந்தி, பேராசிரியர் (Dr. Karl Popper)
“பிரபஞ்சத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாத பிரச்சனை என்ன வென்றால், அதை நாம் அறிந்து கொள்ள இயலும் என்னும் திறன்பாடு.”
டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)
-சி.ஜெயபாரதன்

---------------------------------------------------------------
கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.

Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.

ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத ‘சூப்பர் ஸ்டார்’ தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.

இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.

இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.

அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.

இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

-இணையதள பத்திரிக்கையில் வெளியான செய்தி

மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள

1. Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)
2. Universe By Roger Freedman & William Kaufmann III (2002)
3. National Geographic Encyclopedia of Space By Linda Glover.
4. The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)
5. Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)
6. திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்:
7. A Brief History Of Time.
8. ஜெயபாரதன் அறிவியல் கட்டுரைகள்நீங்கள் அறியாத வாகனங்களையும் படைக்க இருக்கிறான்!நீங்கள் அறியாத வாகனங்களையும் படைக்க இருக்கிறான்!

சென்னி மலை!

//அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன. குரான் 42:33

இந்த நவின காலத்தில் 150கிலோ மீட்டர் வேகத்தில் எதிர் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் அளவுக்கு போர்க்கப்பல்களும், ரேசர் கப்பல்களும் (RACER BOAT) கண்டுபிடிக்கப்பட்டூவிட்டன.

முகமது வாழ்ந்த காலத்தில் இருந்த பாய்மர கப்பல்களுக்கு வேண்டுமேயானால் மேலே சொல்லப்பட்ட வசனம் செட்டாகலாம். ஆனால் நம் காலத்துக்கு செட்டாகாது.//

குர்ஆனை நீங்கள் முழுவதுமாக படித்திருந்தால் இந்த சந்தேகம் வந்திருக்காது. நுனிப் புல் மேய்ந்தால் இது போன்ற சந்தேகங்கள் வருவது இயல்பே.

இறைவன் குர்ஆனிலே மற்றொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள்.

"இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்" (அல் குர்ஆன் 16:8)

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் நபி அவர்களின் காலத்தில் இருந்த குதிரைகள், கோவேறு கழுதைககள் மற்றும் கழுதைகளை வாகனங்களாக படைத்திருப்பதாக் கூறியதோடு இன்னும் நீங்கள் அறியாத வாகனங்களைப் படைத்திருப்பதாக கூறுகிறான். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் இன்று நாம் பயன் படுத்திக் கொண்டிருக்கும் கார், விமானம் போன்ற வாகனங்களை மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய பிற வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளான் என்பதாகும்.

அன்றைய மக்கள் பாய் மரக் கப்பலில் தான் கடலில் பயணம் செய்தனர். மோட்டார் படகுகளையோ நவீன கப்பல்களையோ அவர்கள் அறிந்திருக்க வில்லை. அவர்களின் அன்றைய வாகனம் எதுவோ அதனை வைத்துதான் அறிவுரை கூற முடியும். மற்ற சில வசனங்களில் 'நீங்கள் அறியாத வாகனங்களையும் நாம் படைப்போம்' என்று கூறுவதிலிருந்து குர்ஆன் கூறுவது அன்றைய பாய்மரக் கப்பல்களையே! குர்ஆனின் ஒரு பகுதியை மட்டும் வாசித்து விட்டு மற்ற பகுதியை விடுபவன் இஸ்லாமியனாக இருக்க மாட்டான்.

எனவே நாங்கள் தெளிவோடுதான் இருக்கிறோம். எங்களைப் பற்றி கவலைபடுவதை விடுத்து 'கோவில் நுழைவு போராட்டம்” எப்போது நடத்தப் போகிறீர்கள்? உங்கள் வாரிசுகளாவது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கோவிலுக்குள் பிரவேசிக்கட்டும். அதற்கு ஆவண செய்ய முயலுங்கள்..

குர்ஆனை அரபியில் ஓதி அசத்திய ஸ்வர்ண லஹரி!ஆந்திர பிரதேசம் விஜய வாடாவில் ஒரு இஸ்லாமிய தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் கே.ஸ்வர்ண லஹரி. அந்த பள்ளியில் குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது. அதில் தானும் கலந்து கொள்வதாக ஆசிரியைகளிடம் சொன்னாள் ஸ்வர்ண லஹரி. மகிழ்ந்த ஆசிரியைகள் இந்த மாணவிக்கு குர்ஆனை ஓத பயிற்சி கொடுத்தனர். ஆச்சரியமாக 200 மாணவிகள் கலந்து கொண்ட அந்த போட்டியில் பலரையும் பின்னுக்கு தள்ளி விட்டு பரிசை தட்டிச் சென்றார் ஸ்வர்ண லஹரி. இவர் குர்ஆனை ஓதும் அழகைப் பார்த்து முஸ்லிம்களே ஆச்சரியப்பட்டனர்.

பரிசு வென்ற ஸ்வர்ண லஹரி கூறுகிறார் 'நான் கோவிலுக்கும் செல்கிறேன். குர்ஆனை தொடர்ந்து ஓதி வருகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அதன் பொருள் உணர்ந்து படிக்க தொடங்கி விடுவேன். என்னை இந்த அளவு ஊக்கப்படுத்திய எனது தந்தைக்கும் எனது ஆசிரியைகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்கிறார்.

ஸ்வர்ண லஹரியின் தந்தை துர்கா பிரசாத் கூறுகிறார்:

'பலரும் எனது மகளை பாராட்டி மகிழும் போதுதான் எனது மகள் எவ்வளவு அழகிய பணியை செய்துள்ளாள் என்பது விளங்குகிறது. அவளது திறமையைக் கண்டு மொத்த ஆடிட்டோரியமும் நானும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனோம். இதற்கு முன்னால் நான் குர்ஆனைப் பார்த்ததில்லை. எனது மகள் எனக்கு குர்ஆனை அறிமுகப்படுத்தினாள். அவளது ஆர்வத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. மாறாக உற்சாகப்படுத்தினேன். எனது நம்பிக்கையானது தனிப்பட்ட ஒன்று. உலக முடிவு நாளில் அனைத்து மதங்களும் ஒரே கோட்டில் சந்திக்கும்' என்கிறார்.

மகளும் தந்தையும் அனைத்து செல்வங்களும் பெற்று சிரமமின்றி நேர் வழியில் தங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ள நாமும் பிரார்த்திப்போம்.

மொழி பெயர்ப்பு:
சுவனப்பிரியன்

தகவல் உதவி:
-டெக்கான் க்ரோனிகல்
-தருண் குமார்.

Friday, March 13, 2015

துல்கர்னைன் - அசந்து போகும் அறிவியல் உலகம்!//குரான் ,சூரியன் பூமியைவிட சிறியதாகவும் ,அழுக்கு நீர் அல்லது சகதியில் மறைகிறதென்று கூறுகிறது.இதற்கு ஆதாரம்,குர்’ஆன் (18:86)
“அவன் சூரியனை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, அது அழுக்கு நீரில் மறைவதை கண்டான்.
நாங்கள் கூறினோம் ‘ஓ,டுல் அல்-கர்னைன்,இவர்களை தண்டிக்க அல்லது பாதுகாப்பதற்கு உங்களுக்கு முழு அதிகாரமிருக்கிறது.’.
“. சூரியனாவது அழுக்கு நீரில் மறைவதாவது,நல்ல வேடிக்கை.....
‪எங்கூருல‬ நிலாவை வச்சு கவிதை எழுதுற கவிஞர்களையே மிஞ்சிட்டீங்களேப்பா...// - Ram Nivas

நீங்கள் கிண்டலாக கேட்டிருந்தாலும் அதிலும் மிகப் பெரிய அறிவியல் உண்மை மறைந்துள்ளது. உங்களுக்கு இல்லா விட்டாலும் மற்றவர்களுக்கு விளங்க வைக்க தனி பதிவாகவே அதனை தருகிறேன். இனி பதிவுக்குள் நுழைவோம்.

'முஹம்மதே!' துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்' என்று கூறுவீராக!. அவருக்கு பூமியில் ஆட்சி செய்ய நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் பயணம் சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் மறைவதைக் கண்டார். அங்கே அவர் சமுதாயத்தைக் கண்டார்.'
-குர்ஆன் 18:83-86


தரைவழிப் பயணமும் கடல்வழிப் பயணமும் செய்து உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாற்றை நாம் இந்த பதிவில் பார்ப்போமா!

முகமது நபியின் காலத்திலிருந்து ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு 'துல்கர்னைன்' என்ற அரசர் ஒரு நாட்டில் சிறப்பான ஆட்சி செய்து வந்தார். இந்த அரசரைப் பற்றி அரேபிய மக்களும் நிறைய அறிந்து வைத்திருந்தனர். இவரைப் பற்றிய மேலும் விபரங்கள் அறிய முகமது நபியிடம் அந்த அரபிகள் பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். அந்த அரபிகளின் கேள்விகளுக்கு பதிலாகத்தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.

துல்கர்னைன் என்பது இந்த அரசருக்குரிய பட்ட பெயராகும். இச்சொல்லுக்கு 'இரு கொம்புகளின் உடைமையாளர்' என்பது பொருளாகும். இது தவிர இவரது நாடு மொழி மக்கள் பற்றிய வேறு விபரங்கள் காணக்கிடைக்கவில்லை. சிலர் இவரே 'மாவீரர் அலெக்சாண்டர்' என்றும் வேறு சிலர் இவர் ஒரு பழங்கால பாரசீக அரசர் என்றும் பல மாதிரியாக சொல்கின்றனர். இனி விஷயத்துக்கு வருவோம்.

இறைவனின் கட்டளைப்படி உலகின் சில பகுதிகளை நிர்வகிக்கும் பொருட்டு துல்கர்னைன் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் ஒரு கட்டத்தில் குர்ஆன் கூறுவது போல் 'சூரியன் மறையும் இடத்தை அடைந்தார்'. இந்த வார்த்தை பிரயோகத்தில் அழகிய அறிவியல் உண்மை புதைந்துள்ளது. இந்த வார்த்தை பிரயோகத்திலிருந்து துல்கர்னைன் தனது பயணத்தை மேற்கு திசையிலிருந்து ஆரம்பித்துள்ளார் என்று அறிய வருகிறோம்.

அடுத்து 'சூரியன் நீர் நிலையில் மறைவதைக் கண்டார்' என்பதிலிருந்து அவரது பயணம் ஒரு கடற்கரையில் முடிவடைந்தது என்று தெரிய வருகிறது. ஏனெனில் சூரியன் தண்ணீரில் மறைவது போன்ற காட்சி கடற்கரையில் நின்று பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அனுபவமாகும் என்பதும் நமக்கு தெரிந்ததே!

அக்கடற்கரையை ஒட்டி ஒரு நகரம் இருந்ததாகவும் அம்மக்களிடம் நீதியை நிலை நாட்டுவதற்காகவும் சில உத்தரவுகளை இட்டதாகவும் நாம் குர்ஆனில் பார்க்க கிடைக்கிறது. துல்கர்னைன் இந்த நீண்ட பயணத்தில் கடற்கரையில் அமைந்துள்ள நகரத்தை அடைந்தார் என்பதிலிருந்து அதுவரை அவர் செய்த பயணம் தரை வழிப் பயணமே என்றும் அறிய முடிகிறது.

மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்!

தன்னுடைய நீண்ட பயணத்தில் கடற்கரையை அடைந்த துல்கர்னைன் திசை மாறாமல் மேலும் பயணம் செய்ய வேண்டுமானால் அவர் அதற்கு மேல் கடல் வழிப் பயணமே செய்திருக்க வேண்டும்.

'பின்னர் ஒரு வழியில் சென்றார்' -குர்ஆன் 18:89

இந்த வசனத்தில் துல்கர்னைன் அவர்கள் தனது பயணத்தை மேலும் தொடர்ந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.

'முடிவில் சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார். ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை'
-குர்ஆன் 18:90

என்ன வியப்பு! மேற்கு திசையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த துல்கர்னைன் 'முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தார்' இது எப்படி சாத்தியமாகும்? நாம் வாழும் இந்த பூமி தட்டையாக இருந்திருந்தால் இந்த பூமியில் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் கிழக்கு திசையை அடைய முடியுமா? ஆனால் இந்த பூமியின் மீது மேற்குத் திசையில் சென்று கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைந்ததாக குர்ஆன் சொல்வதிலிருந்து பூமியின் வடிவம் தட்டையானது இல்லை என்றும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு.

பூமி உருண்டையானது. இரவு பகல் மாறி மாறி வருவதற்கு இதன் சுழற்சி மிக அவசியம் என்பதை துல்கர்னைன் வரலாற்றின் நாம் அறிந்து கொண்டோம். இது போன்ற அறிவியலே அசந்து போகும் உண்மைகளை மிக சர்வ சாதாரணமாக குர்ஆன் சொல்லிச் செல்கிறது. இது இறை வேதம் என்பதால்தான் இது சாத்தியமாகிறது.பாலைவனம் சோலைவனமானது: சோலை வனம் பாலைவனமானது!

The National Water Company’s (NWC) ஜெத்தாவில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. குடி தண்ணீர் சேகரிக்கும் கொள்கலன் உலகிலேயெ மிகப் பெரிதானதாக ஜெத்தா NWC தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை கின்னஸ் புத்தகமும் உலக சாதனையாக வெளியிட்டுள்ளது. 2.064 மில்லியன் க்யூபிக் மீட்டரில் இந்த கொள்கலன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் 1.8 மில்லியன் க்யூபிக் மீட்டரே கின்னஸ் சாதனையாக இருந்தது.

ஒரு சிலிண்டரின் கொள்ளளவு 188 க்யூபிக் மீட்டராகும். இதற்கான செலவு 740 மில்லியன் சவுதி ரியால். கடல் நீரை குடி நீராக்கி இன்று வரை தனது நாட்டு மக்களுக்கு குடி நீர் பிரச்னையே இல்லாது பார்த்துக் கொண்டுள்ளது சவுதி அரசாங்கம்.

மன்ஃபுகா என்ற இடத்தில் அஸ்திவாரம் தோண்டும் போது நம் நாட்டைப் போல் பூமியிலிருந்து தண்ணீர் பீரிட்டு வர ஆரம்பித்தது. பல சக்தி வாய்ந்த மோட்டார்களை வைத்து தண்ணீரை ஒரு வருடத்துக்கு மேலாக இறைத்தனர். அதன் பிறகு அந்த இடம் வற்றி தற்போது கட்டிடம் அந்த இடத்தில் மேலெழும்பியிருக்கிறது. பாலைவன தேசத்தில் இவ்வாறு பூமிக்கு அடியில் பெருந் தொகையான நீர் வளம் உள்ளது ஆச்சரியமாக இருந்தது எனக்கு. வீதிகள் தோறும் அழகிய மரங்களை நட்டு அந்த இடங்களை பசுமை பூத்துக் குலுங்கும் இடங்களாக மாற்றி வருகின்றனர். பாலை வனத்தை சோலை வனமாக மாற்றிக் காட்டியுள்ளனர்.

நான் பிறந்த மண்ணான தமிழகத்தையும் ஒரு தரம் திரும்பிப் பார்க்கிறேன். முன்பு இருந்த மரங்களெல்லாம் வெட்டப்பட்டு அந்த இடங்கள் மொட்டையாக காட்சி அளிக்கின்றன. குளங்கள் தூர்த்து விட்டு அங்கும் கட்டிடங்களை கட்டி வருகிறோம். வயல் வெளிகள் எல்லாம் இன்று மனைகளாக காட்சி தருகின்றன. மரங்களை வெட்டியதால் இன்று மழையும் பொய்த்து போனது. முன்பு எனது கிராமத்தில் ஐந்து குளங்கள் இருந்தது. தற்போது மூன்றைத்தான் பார்க்கிறேன். அந்த மூன்றும் கூட பள்ளி வாசலின் உள்ளே இருப்பதனால் தப்பித்தது.

நமது முன்னோர்கள் மேலிருந்து வரும் மழை நீரை தேக்கி வைக்கும் கொள்கலன்களாகத்தான் குளங்களையும் கிணறுகளையும் பார்த்தார்கள். இதனால் நிலத்தடி நீர் என்றுமே வற்றாது நீராதாரத்தை நமக்கு வழங்கிக் கொண்டிருந்தது. முன்பு எங்கள் கிராமத்தில் 20 அடியில் நீர் வரும். இப்போதோ 70, 80, 100 அடிகள் என்று போர் போட்டு நீர் இறைக்கிறார்கள். இருந்தும் கோடை காலங்களில் எவ்வளவு கீழே போனாலும் நீர் வருவதில்லை. வடிகால்களான குளங்களை எல்லாம் தூற்றி அங்கும் கட்டிடங்களை எழுப்பியதால் மழை நீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரக் கேட்டையும் உண்டாக்குகிறது. பெருவாரியான மழை நீர் யாருக்கும் பயன் படாமல் கடலில் போய் கலக்கிறது.

இவற்றை எல்லாம் நீண்ட கால திட்டம் போட்டு செயல்படுத்த வேண்டிய அரசோ சாராயத்தை சொந்த தொழிலாக நடத்தி மக்களை குடிகாரர்களாக மாற்றி வைத்துள்ளது. 10 வயது 12 வயது சிறுவர்களும் குடித்து விட்டு சீருடையோடு சரிந்து கிடக்கின்றனர். நிலைமை இப்படியே சென்று கொண்டிருந்தால் சோலைவனம் பாலைவனமாக மாற அதிக நாள் பிடிக்காது. இனியாவது அரசுகளும் நம் நாட்டு மக்களும் விழித்துக் கொள்வார்களா?

சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிராமம்!(இந்த இடத்தில் தான் தோல்வியுற்ற அனைத்து சமணர்களும் ஒவ்வொருவராக கழுவிலேற்றிக் கொல்லப்பட்டனர்)

//இது என்னங்க புதுசா கீது யாரவது அண்ணணுக்கு மட்டுமே தெரிஞ்ச வரலாற கொஞ்சம் இந்த பச்சமண்ணுக்கு எடுத்து சொல்ரிங்களா//
-Suriya Prakssh shanmugam!

சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிராமம்!

மதுரை மஹால் அருகில் செயின் மேரீஸ் பள்ளியின் பின் புறம் சிந்தாமணி ரோடு செல்கிறது அதன் வழியாக பயணம் செய்தால் நெடுங்குளம் செல்லும் வழியில் ஆறு கிலோ மீட்டருக்கு முன்பாக வலது புறம் ஒரு கிளை ரோடு பிரிகிறது, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாம நத்தம் கிராமம் உள்ளது.

சாம நத்தம் கழுவேற்றம் செய்யும் முன் சமணர்களுக்கும் , சைவ சமயத்தை சார்ந்த திருஞான சம்பந்தருக்கும் அனல் வாதம் , மற்றும் புனல் வாதம் நடந்தது. அதில் சமணர்கள் தோற்கின்றனர். தோற்ற சமணர்களை சைவர்கள் கழுவில் ஏற்றி கொன்றனர். இந்த வரலாறு மக்களுக்கு சொல்லப்படாமல் வஞ்சகமாக மறைக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் அய்யனார் கோவில் இருக்கிறதே , அதன் மேற்கே உள்ள திடல் தான் சமணர் கழுவேற்றப்பட்டு , பின் எரித்த புதைக்கப்பட்ட இடம் . முன்பு இந்த இடம் ஒரே சாம்பல் திட்டுகளாக குன்று போல் காட்சியளிக்குமாம். தற்போது ஓரளவு சமப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஆய்வு செய்து கட்டுரையாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மதுரை சரவணன் மேலும் சொல்கிறார்.....

எங்களை கற்பூரசொக்கு என்ற என்பது வயது பெரியவரிடம் அழைத்துச் சென்றார். கிராமம் அதற்கே உரிய அழகுடன் சிறியதாக இருந்தது. மேல் மட்ட சாதிக் காரர்கள் ஒருபுறமும் , கீழ் தட்டு மக்கள் ஒருபுறமும் இருந்தனர். இதில் கீழ்தட்டு மக்களுக்கான குடியிருப்புக்கள் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.இந்த குடியிருப்புகளுக்கு மேற்கே தான் சமணர்களை கழுவேற்றம் செய்து, எரித்ததாக அந்த பெரியவர் சொல்கிறார். அவர் சிறுவனாக இருக்கும் போது இந்த சாம்பலை நெற்றியில் பூசி , பள்ளிக்கு செல்வாராம் அது மூன்று நாள்களுக்கு அழியாதாம் என வரலாற்றை தமக்கு தெரிந்த மாட்டில் சொன்னார்.

மேலக்கால் அதாவது கொடிமங்கலம் பகுதியில் இருந்து சாமநத்தம் வரை கழுவேற்றம் நடந்தது , சாமணர்கள் இங்கு தான் எரிக்கப்பட்டு சாம்பல் பரவி கிடந்ததால் இந்த ஊர் “சாம்பல் நத்தம்” என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சம்பந்தர் கோவிலுக்கு இரண்டு ஏக்கர் நிலம் பாண்டியன் காலத்தில் வழங்கப்பட்டது. அது இப்போதும் கிராமத்து சபையால் பாராமரிக்கப்படுகிறது. இந்த நிலம் இன்று குத்தகைக்கு விடப்பட்டு , அதன் வருமானத்தின் மூலம் கோவில் பூஜை நடக்கிறது என்கிறார்.

பெரிய புராணம் இந்த சமண கழுவேற்றம் பற்றி நிறைய பேசுகிறது. அது பற்றி தனி பதிவாக படங்களோடு ஆதாரங்களோடு பதிகிறேன்.

தகவல் உதவிக்கு நன்றி

மதுரை சரவணன்

நெல்லையில் 10 மாதத்தில் சாதி வெறியால் 25 பேர் பலி!தாமிரவருணியின் பாசன பூமியான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள், ஜாதிய மோதல் களால் ரத்தக் கறை தோய்ந்திருக் கின்றன.

கடந்த 10 மாதங்களில் சுமார் 100 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதும், அதில் 25 பேர் வரை ஜாதி வெறிக்குப் பலியாகி இருப் பதும் தென்பாண்டி சீமைக்கு தலைக் குனிவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் எங்கு கொலை நிகழ்ந்தாலும் அதில் ஈடுபட்டவர்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவரும் இருக்கிறார் என்ற அவப்பெயர் பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழக காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலின்படி 16,502 ரவுடிகள் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. அதில், முதலிடம் சென்னைக்கு (3,175 ரவுடிகள்), 2-வது இடம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு. திருநெல்வேலி மாநகரில் மட்டும் 334 ரவுடிகளும், புறநகர் பகுதிகளில் 1,214 ரவுடிகளும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் 90 கொலைகள், 2008-ல் 89, 2009-ல் 95, 2010-ல் 83, 2011-ல் 97, 2012-ல் 93, 2013-ல் 98 கொலைகள் நடைபெற்றதாக காவல் துறை தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கூலிப் படையினராலும், 25 சதவீத கொலைகள் ஜாதிய மோதல் பின்னணியிலும் நிகழ்ந்தவை.

கடந்த 10 மாதங்களில் திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 100 கொலைகள் நடைபெற்றுள்ளன. சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, முறைகேடான உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 70 சதவீத கொலைகள் நடை பெற்றுள்ளன. மீதமுள்ளவை இந்த மாவட்டங்களில் புரையோடி யிருக்கும் ஜாதி மோதலின் வெளிப்பாடுகள். அந்த வகையில் 2 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் தொடர் கொலைகள் அரங்கேறி வருகின்றன.

தயங்கும் போலீஸார்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை குறிவைக்கும் சமூகவிரோத கும்பல், அவர்களை கூலிப்படையாக பயன்படுத்துகிறது. அந்த கூலிப் படையினரை ஏவும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய போலீஸார் தயங்குவதாலேயே பிரச்சினை முடிவுறாமல் தொடர்கிறது. ஜாதி மோதல்களை முளையிலேயே கிள்ளி எறியும் அளவுக்கு இந்த மாவட்டங்களில் உளவுப் பிரிவு போலீஸார் செயல்படவில்லை.

`ஜாதி மோதல்களை தூண்டி விடும் அளவுக்கு முக்கிய ஜாதிகளை சேர்ந்த சாதாரண போலீஸார் முதல் உயர் அதிகாரிகள் வரை செயல்படுவதும் பிரச்சினைக்கு தூபம்போடுவதாக இருக்கிறது’ என்று இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே தெற்கு கரந்தானேரியில் ஆயுதங்களை தாங்கிய கும்பலால் இரு அப்பாவிகள் கொலை செய்யப் பட்டனர். அந்தக் கொலை யாளிகளுக்கு முக்கிய ஜாதி தலைவர் ஒருவர் அடைக்கலம் கொடுத்திருந்தார். இதனால், கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். கடைசியில் அந்த ஜாதி தலைவரிடம் போலீஸார் கெஞ்சி- கூத்தாடி ஒரு சிலரை ஒப்படைக்க கேட்டுக் கொண்டதாக போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

`குற்றவாளிகளையும், அதற்கு தூண்டுகோலாக இருப்பவர் களையும், அவர்களுக்கு அடைக்கலம் தருவோரையும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு போலீஸாருக்கு இருக்கிறது.

ஆனால், அதிலிருந்து அவர்கள் விலகிச் சென்றுவிட்டதால் ஜாதி மோதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன’ என்றார் ஓய்வு பெற்ற அந்த போலீஸ் அதிகாரி.

ஜாதிய பின்னணி போலீஸார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவின் உறுப்பினருமான ஆர்.கிருஷ்ணன் கூறும்போது, ‘திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் துறை அதிகாரிகள் நியமனத்தில் குறிப்பிட்ட பெரிய ஜாதிகளை சேர்ந்தவர்களை நியமிக்கக் கூடாது. நேர்மையான இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்களை நியமிக்க வேண்டும்’ என்றார் அவர்.

‘குண்டர் சட்டத்தை அதிகளவில் பிரயோகம் செய்வதன்மூலம் போலீஸார் தங்கள் தரப்பு இயலாமையை மறைக்கிறார்கள். சந்தேகப்படும் வகையில் கைது செய்யப்படுவோர் முழுநேர குற்றவாளிகளாக மாறுவது போலீஸாரின் நடவடிக்கை களால்தான். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயுத வன்முறையாளர்கள் குறித்த கணக்கெடுப்பும், குற்றவாளிகளின் ஜாதி சார்ந்த கணக்கெடுப்பும், இளங்குற்றவாளிகள் குறித்த ஆய்வும் அவசியம். அதன் தொடர்ச்சியாக ரவுடிகள் ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


நன்றி:
தமிழ் இந்து நாளிதழ்
12-03-2015

மற்ற நாடுகளில் இல்லாத சாதி வெறி நமது நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு குரூரமாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம். ஒரே மதமான இந்து மதத்தில் இத்தனை வன்மம் ஏன்? நமது நாட்டை ஆண்ட நமது முன்னால் அரசர்களும் ஒரு வகையில் இதற்கு காரணமாகிறார்கள்.

உதாரணத்துக்கு தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னன் ராஜராஜனைச் சொல்லலாம். காஷ்மீரம் ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளிலில் இருந்தெல்லாம் பார்பனர்களை அழைத்து வந்து அவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தினான். 'ராஜ குரு' என்ற புது பதவியை அவர்களுக்காக உருவாக்கினான். இன்று மோடி அரசாங்கம் நில அபகரிப்பு திட்டம் கொண்டு வரத் துடிக்கிறதே அதற்கு மூல காரணம் ராஜ ராஜனின் ஆட்சி என்றால் மிகையாகாது..

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான்.

இவ்வாறாக படிப்படியாக நிலத்தை இழந்த உழைக்கும் மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் நில உடமையாளர்கள் ஆதிக்க சாதியினராகவும் மாற்றப்பட்டனர். அதற்கு தோதாக தமிழனுக்கு சம்பந்தமே இல்லாத மனுஸ்ருமிதி மக்களின் மனதில் ஏற்றப்பட்டது. அது இன்று வாழையடி வாழையடி ஜீன்கள் மூலம் பரம்பரையாக கடத்தப்படுகிறது. எனவே தான் படித்து பட்டம் பெற்ற அரசு உத்தியோகத்தில் வேலை பார்க்கும் இந்துக்களில் பலர் தங்களின் சாதி வெறியை கொஞ்சம் கூட குறைத்துக் கொள்வதில்லை. அதற்காக வெட்கப்படுவதும் இல்லை.

Thursday, March 12, 2015

வங்கி அதிகாரி சென்னையில் காதலியைக் கொன்றார்!ஆணும் பெண்ணும் கூடிய வரை படிப்பு, வேலை போன்ற இடங்களில் தனித் தனியாக செயல்படுங்கள். மேலும் காதல் என்ற பெயரால் திருமணத்துக்கு முன்பே ஆணும் பெண்ணும் வெளியே சுற்றாதீர்கள் என்று நாம் சொன்னால் நம்மை பிற்போக்கு வாதிகள் என்கிறார்கள். கீழே வரும் செய்தியை படித்து விட்டு யார் பிற்போக்குவாதிகள் என்ற முடிவுக்கு வருவோம்.

வங்கி அதிகாரி சென்னையில் காதலியைக் கொன்றார்

தினேஷும் அருணாவும் காதலித்து வந்தனர். தினேஷ் நேற்று முன்தினம் மாலை அருணாவுக்கு போன் செய்து, தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஸ்கூட்டரில் அருணா அங்கு சென்றுள்ளார். தினேஷின் வீட்டில் இருவரும் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்துள்ளனர். இரவில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் மோதலும் நடந்திருக்கிறது. வீட்டில் இருந்த கண்ணாடி பூந்தொட்டியை எடுத்து அருணாவின் தலையில் தினேஷ் அடித்திருக்கிறார். தொட்டியின் உடைந்த கண்ணாடித் துண்டாலும் அவரைத் தாக்கியுள்ளார். சிறிது நேரத்தில் அருணா இறந்துவிட்டார்.

காதல் எப்போது விபரீதம் ஆகிறது?

இருவர் இடையிலான காதல் உணர்வு எப்போது விபரீதமாகிறது? இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கம் மனோதத்துவ நிபுணர் சந்திரலேகா கூறியது:

‘இம்பல்ஸ் கன்ட்ரோல்’

காதலர்கள் இருவரில் ஒருவருக்கு சந்தேக எண்ணம் இருந்தாலோ, இருவரில் ஒருவர் ஏமாற்ற முயற்சி செய்தாலோ பிரச்சினை உருவாகிறது. இந்த சூழ்நிலையில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ‘இம்பல்ஸ் கன்ட்ரோல்’ கோளாறு ஏற்படுகிறது. அப்போது, கையில் கிடைக்கும் பொருளைக் கொண்டு மற்றவர்களைத் தாக்குவார்கள். வெளிநாடுகளில் துப்பாக்கி எளிதாக கிடைப்பதால், துப்பாக்கிச் சூடு நடக்கும். இங்கு கத்தி, சுத்தியல், அரிவாள்மனையால் தாக்குகின்றனர்.

பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது:

தனிமை சந்திப்பு ஆபத்து

ஆண் நண்பர்களை பெண்கள் பொது இடங்களில் சந்தித்துப் பேசுவதால் பெரிய பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. தனிமையில் சந்திக்கும்போதுதான் கொலை, பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. ஆண்களை தனிமையில் சந்திக்காமல் தவிர்த்தாலே 99 சதவீத பிரச்சினைகள் ஏற்படாது. தனிமையில் சந்தித்து, பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானால் முதலில் அந்த இடத்தில் இருந்து பெண்கள் வெளியேற வேண்டும். உடல் பலத்தில் ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை ஏற்பட்டால் முடிந்தவரை சத்தம் போட்டு மற்றவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். சத்தம் போடத் தயங்கக் கூடாது. இக்கட்டான சூழலில் எதிராளி மீது வீசிவிட்டுத் தப்பிக்க, பெண்கள் எப்போதும் ‘பெப்பர் ஸ்பிரே’ தயாராக வைத்திருப்பது கூடுதல் பாதுகாப்பாகும்.

நன்றி தமிழ் இந்து நாளிதழ்
11-03-2015

இஸ்லாம் பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கிறது என்று கூப்பாடு போடுபவர்கள் இந்த சம்பவத்துக்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்? அந்த பெண்ணும் கொலையுண்டாள். கொலை செய்த இளைஞனின் வாழ்வும் போனது. இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. தினமும் நாட்டில் எங்காவது ஒரு மூலையில் கொலை கற்பழிப்பு நடந்து கொண்டுதான் உள்ளது. பாதிப்படைவது அதிகமாக பெண்களே! இதனால்தான் இஸ்லாம் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வேலைக்கு சென்றாலும், படிக்க சென்றாலும் கூடிய வரை அந்நிய ஆடவர்களோடு தனித்திருப்பதை தவிர்த்துக் கொள் என்று கட்டளையிடுகிறது. இது அந்த பெண்களின் பாதுகாப்பைக் கருதியே!
----------------------------------------------------

"உரிய துணை (மஹ்ரம்) இன்றி ஒரு பெண், ஒரு பகல் ஓரிரவுக்குக் கூடுதலாகப் பயணிக்க வேண்டாம்" என்று நபி அவர்கள் வரையறை செய்திருக்கிறார்கள் (திர்மிதீ 1089, புகாரி 1088, முஸ்லிம் 2608)

"(மஹ்ரமல்லாத) ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் அவர்களோடு மூன்றாமவனாகச் சேர்ந்து கொள்வான்"

திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1086, 1087

பாம்புக்கு பால் வார்த்த புதிய தலைமுறை

பாம்புக்கு பால் வார்த்த புதிய தலைமுறை

இந்துத்வாவுக்கு என்றுமே ஆதரவாக செயல்படும் புதிய தலைமுறை தொலைக் காட்சி இன்று அதன் பலனை அனுபவிக்கிறது. பிஜேபியின் அதரவுடன் பச்சை முத்து தேர்தலில் நிற்க ஆரம்பித்ததிலிருந்து புதிய தலைமுறை தனது நிலையை காவிக்கு சாதமாக மாற்றிக் கொண்டுள்ளது நாம் அறியலாம். தற்போது இந்து மதத்தின் தாலி சம்பந்தமாக விவாதத்தை வைத்ததுதான் இந்த தாக்குதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

'இந்து இளைஞர் சேனா' இந்த குண்டு வெடிப்பை நடத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் வேணு கோபால், ஜெயம் பாண்டியன், சரவணன், மகாதேவன், முரளி, ராஜா என்று அறியப்படுகிறது. இதில் ஜெயம் பாண்டியன் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


https://www.youtube.com/watch?v=AwmFAeO0dr0