Followers

Wednesday, January 30, 2019

இஸ்லாத்தை ஏற்றால் உன்னை சுட்டு விடுவேன் என்று என் தந்தை கூறினார்.'


இந்துத்வா கொள்கையில் ஊறிய எவருமே காந்தியை மதிக்க மாட்டார்கள்.

எல்லோரும் காந்தி படத்துக்கு வணக்கம் சொல்லும் போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மட்டும் வணக்கம் தெரிவிக்காமல் ஓரமாக ஒதுங்கி நிற்பதை கவனியுங்கள்.
இந்துத்வா கொள்கையில் ஊறிய எவருமே காந்தியை மதிக்க மாட்டார்கள். காரணம் காந்தி இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் பொதுவானவராக வாழ்ந்து மறைந்தவர். கோல்வாக்கர், நரேந்திர மோடி, அமீதஷா போன்று முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற பாசிச சிந்தனை கொஞ்சமும் இல்லாதவர் காந்திஜி. எனவே கிரிஜா வைத்திய நாதன் ஒதுங்கி நிற்பது நமக்கு ஆச்சரியத்தை தரவில்லை. எந்த கட்சியில், எந்த இயக்கத்தில் இருந்தாலும் பார்பனியம் என்பது எப்போதும் ஒரே கோட்டிலேயே பயணிக்கும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.


இவர்கள் தேச பக்தர்களா? அல்லது தேச விரோதிகளா? ..

உத்திரபிரதேசம்அலிகாரில் இந்து மகாசபையின் தேசியசெயலாளர் பூஜா சுக்கன்பாண்டே  காந்தியின் உருவபடத்தை துப்பாக்கியால் சுட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளார். தேச விரோத இந்துத்வா கும்பல் 'மஹாத்மா கோட்சே' என்று கூச்சலிடுகிறது. காந்தியின் உருவப்படத்துக்கு உள்ளே சிகப்பு சாயங்களை கலந்து துப்பாக்கியால் சுட்டு அவர் உடலிலிருந்து குருதி வழிவதை பார்த்து குதூகலிக்கிறது இந்த நாசகார கூட்டம்.
இவர்கள் தேச பக்தர்களா? அல்லது தேச விரோதிகளா? ..


Monday, January 28, 2019

பாலஸ்தீன சிறுமியின் ஆக்ரோஷமான பேச்சு...

பாலஸ்தீன சிறுமியின் ஆக்ரோஷமான பேச்சு...
"இஸ்ரேலிய யூதர்களே! குறித்து வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் பலஸ்தீனம் அடைந்தே தீர்வோம். இது அல்லாஹ்வின் மீது ஆணை...."


இந்துக்களின் தவறான எண்ணங்களை போக்கும் முஸ்லிம்கள்!

இந்துக்களின் தவறான எண்ணங்களை போக்கும் முஸ்லிம்கள்!
குஜராத் அஹமதாபாத் நகரில் உள்ள சோனி நி சவுல் சாலையில் அமைந்துள்ளது உமர் பின் கத்தாப் பள்ளிவாசல். இதன் நிர்வாகிகள் அக்கம் பக்கத்தில் உள்ள இந்து சகோதர சகோதரிகளை பள்ளிக்கு அன்போடு அழைக்கின்றனர். அவர்களோடு அன்பாக பேசி அவர்களின் சந்தேகங்களைக் கேட்கின்றனர்.
தொழுகை ஏன்? நோன்பு ஏன்? இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? போன்ற பல கேள்விகளுக்கு அவர்களுக்கு பொறுமையாக பதிலளிக்கின்றனர். பாசிச வாதிகளால் இந்து மக்களின் மனத்தில் இஸ்லாமியர்களைப் பற்றி நச்சு கருத்துக்களை விதைத்து வைத்துள்ளனர். இது போன்ற கலந்துரையாடல்கள் குறைந்தபட்சம் வெறுப்புணர்வை நீக்க உதவியாக இருக்கும். மற்ற பள்ளிவாசல்களிலும் இது போன்ற ஏற்பாடுகளை நமது நிர்வாகிகள் செய்வார்களாக!
தகவல் உதவி
கோக்னெட். காம்
28-01-2019

இந்துக்களாகிய நாங்கள் அரணாக நின்று இஸ்லாமியர்களை காப்போம்..!

மனித குல வழி காட்டி திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த...

மாற்று மத சகோதரர் அய்யாவழி பாலமுருகன் அவர்கள்..!

வடக்கில் இஸ்லாமியர்களை துன்புறுத்துவது போல தமிழகத்தில் இஸ்லாமியர்களை துன்புறுத்தலாம் என்று நினைத்தால் இந்துக்களாகிய நாங்கள் அரணாக நின்று இஸ்லாமியர்களை காப்போம்..!


ராமன் கிருஷ்ணனை காப்பாற்றும் இஸ்லாமியர்.....

ராமன் கிருஷ்ணனை காப்பாற்றும் இஸ்லாமியர்..... மனிதநேயம் வாழ்க...


திருக்குர்ஆன் மாநில மாநாட்டில்....

திருக்குர்ஆன் மாநில மாநாட்டில்
ஒரே குடும்பத்தை சார்ந்ந 8 நபர்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே....


Friday, January 25, 2019

டைரக்டர் பிரியதர்சன் மீது மாட்டுசாணத்தை ஊற்றினர் ஆர்எஸ்எஸ் குண்டர்கள்.

டைரக்டர் பிரியதர்சன் மீது மாட்டுசாணத்தை ஊற்றினர் ஆர்எஸ்எஸ் குண்டர்கள்.
2006 ஆம் ஆண்டு இந்திய தேசிய விருது பெற்றவர் டைரக்டர் பிரியதர்ஸன். பல வெற்றிப் படங்களை எடுத்தவர். சில நாட்களுக்கு முன்பு ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில் என்ன தவறு என்று முகநூலில் ஒரு பதிவு இட்டிருந்தார். இதனால் கோபமடைந்த ஆர்எஸ்எஸ் குண்டர்கள் திருச்சூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரை தாக்கி அவரது தலையில் மாட்டு சாணத்தை ஊற்றியுள்ளனர். காதில் அடிபட்ட டைரக்டரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கேரளாவில் இது போன்ற மடத்தனமான வன்முறைகளை அனுமதிக்க முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
ராமராஜ்யம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் இதன் மூலம் உலகுக்கு சொல்கின்றனர்.
தகவல் உதவி
News 18
25-01-2019


Thursday, January 24, 2019

தையல்காரரின் மகன் இன்று CA வில் இந்திய அளவில் முதலிடம்!

தையல்காரரின் மகன் இன்று CA வில் இந்திய அளவில் முதலிடம்!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சாதாப் ஹூசைன் ஒரு சாதாரண தையல்காரரின் மகன். எந்த பின்புலமும் இல்லாத எளிமையான குடும்பம். நான்கு சகோதரிகளோடு வறுமையில் சென்று கொண்டுள்ள குடும்பம். இருந்தும் ஒரு நாளுக்கு 13லிருந்து 14 மணி நேரம் கடுமையாக உழைத்தார். இன்று Charted Accountanat Of India (ICAI) வில் அகில இந்திய அளவில் 800 க்கு 597 அதாவது 74.63 சதவீத தேர்வு பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
'ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒரு முறை 30-40 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்வேன். மூன்று கிலோ மீட்டர் தினமும் நடை பயிற்சி மேற்கொள்வேன். இது எனக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். கடுமையாக உழைத்தேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது' என்கிறார்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
24-01-2019
அரசையும் சமூகத்தையும் சதா குறை கூறிக் கொண்டில்லாமல் கடுமையாக முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதை உணர்த்துகிறார் சாதாப் ஹூசைன். வாழ்த்துக்கள்.....


Wednesday, January 23, 2019

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மற்றுமொரு நிகழ்வு!

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மற்றுமொரு நிகழ்வு!
குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்து தொழிலாளி ஆதிமுத்து, கேரள முஸ்லிம்களின் உதவியால் திரட்டப்பட்ட ரூ.30 லட்சத்தின் மூலம், ஆயுள் தண்டனைக் கைதியாக மாறியுள்ளார். இந்த மத நல்லிணக்க சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, பனக்காட்டைச் சேர்ந்த முனவர் அலி ஷிகாப்தங்கல் உள்ளிட்ட முஸ்லிம் நண்பர்கள், பணத்தைத் திரட்டி ஆதிமுத்துவின் குடும்பத்தினரிடம் அளித்துள்ளனர்.
தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த அர்ஜுனன் ஆதிமுத்துவும் (45), கேரளாவின் மலப்புரம் அருகே உள்ள ஹரிஞ்சாபாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஜீதும் குவைத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றினர். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அப்துல் வாஜீதை 2013-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி கொலை செய்ததாக அர்ஜுனன் ஆதிமுத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு குவைத் அரசு மரண தண்டனை அளித்தது.
குவைத் நாட்டு சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால், கொலை செய்தவர் விடுதலை செய்யப்படுவார். இதுகுறித்து தெரிந்ததும், அர்ஜுனன் ஆதிமுத்துவின் மனைவி மாலதி, தனது 14 வயது மகள் பூஜாவுடன் கேரளா சென்றார்.
மாலதி, தன் குடும்பம் ஏழ்மையில் இருப்பதையும், பெண் பிள்ளை இருப்பதையும் சுட்டிக்காட்டி, தன் கணவருக்கு மன்னிப்பு வழங்கி குடும்பத்தை வாழ வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கேரள நிர்வாகி காதர் மொகைதீனுக்கு தெரிய வந்தது. அவர் உயிர் இழந்த அப்துல் வாஜீத்தின் குடும்பத்திற்கு தெரியப்படுத்தவே, மன்னிப்பு வழங்க சம்மதித்தனர். அதேநேரத்தில் அப்துல் வாஜீத்தின் மரணத்தினால் அவர் குடும்பமும் வாழ்வாதாரம் இழந்துள்ளது. வாஜீத்தின் மனைவி, தன் மகள்களுடன் வாடகை வீட்டில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரப்பட்டது.
சொந்த பந்தங்களை நாடியும், வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்தும் கூட ரூ.5 லட்சத்துக்கு மேல் அர்ஜுனன் மனைவி மாலதியால் புரட்ட முடியவில்லை. பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர் பானக்காடு ஹைதர் அலி ஷிகாப்தங்கலின் உதவியை நாடினார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்த முனவர் அலி ஷிகாப்தங்கல் பணம் திரட்டும் முயற்சியை முன்னெடுத்தார்.
நண்பர்கள், அறக்கட்டளைகளின் உதவியோடு 25 லட்ச ரூபாய் திரட்டப்பட்டது. மாலதி தன்னிடமிருந்த 5 லட்ச ரூபாயோடு சேர்த்து, ரூ.30 லட்சத்தை அப்துல் வாஜீத்தின் குடும்பத்துக்குக் கொடுத்தார். வாஜீத் குடும்பத்தின் சார்பில் அர்ஜுனன் ஆதிமுத்துவை மன்னிப்பதற்கான கடிதம் கொடுக்கப்பட்டது.
அக்கடிதம் இந்தியத் தூதரகத்தின் வழியாக, குவைத் நாட்டிற்குச் சென்றது. அதன் அடிப்படையில் அர்ஜுனன் ஆதிமுத்துவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய முனவரலி, ''இறைவனுக்கு நன்றி. எங்களுடைய சிறு முயற்சியின் மூலம் ஒரு மனித உயிர் இறப்பில் இருந்து காக்கப்பட்டிருக்கிறது. மனிதத்தைக் குறித்து மகிழ வேண்டிய தருணம் இது.
சொல்லப்போனால் நாங்கள் இரண்டு குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஏழ்மையானவர்கள். அவர்களின் பார்வையில் இருந்து பார்த்தால், பணம் கேட்டது தவறில்லை'' என்றார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
24-01-2018
படத்தில் உள்ளது அர்ஜூனனுக்காக பணம் திரட்டிய முனவ்வர் அலி.


Tuesday, January 22, 2019

இஸ்லாம் தற்கொலையை எதிர்க்கிறது.

"இஸ்லாம் தற்கொலையை எதிர்க்கிறது.
பிள்ளைகள் கேட்கிறார்கள் என்பதற்காக விலை உயர்ந்த பைக்கை வாங்கி கொடுத்து அவர்கள் தறிகெட்டு வேகமாக ஓட்டி விபத்தில் இறந்து போகிறார்கள்.
இது தற்கொலைக்கு தூண்டிய குற்றம் என இறைவன் உங்களை விசாரிக்க மாட்டானா?"
பாலாஜி சரவணன் ITS
கோவை டெபுடி கமிஷனர்
கோவை இஸ்லாமிய பள்ளி ஆண்டுவிழாவில் கேட்ட கேள்வி
SN.சிக்கந்தர்


Monday, January 21, 2019

போலீஸ் பிடித்த பயத்தில் தன் உயிரை விட்ட அப்துல் ரஷீத்!

போலீஸ் பிடித்த பயத்தில் தன் உயிரை விட்ட அப்துல் ரஷீத்!
சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள பத்ஹா நெஸ்டோவுக்கு கீழ் தளத்தில் வாட்ச் கடை வைத்திருந்தவர் அப்துல் ரஷீத். மலப்புரம் வண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்.
தற்போது சவுதி முழுக்க அந்நாட்டு மக்களையே பணியில் அமர்த்த வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் வாட்ச் கடைகளும் வருகிறது. எனவே கைக்கடிகார கடைகளில் வெளி நாட்டவர் வேலை செய்யக் கூடாது. இது தெரிந்தும் வேறு வழியில்லாமல் வேலை செய்து வந்துள்ளார். நேற்று (20-01-2018)மதியம் இரண்டு மணி அளவில் காவல் துறை ரெய்டு வந்துள்ளது. ரெய்டில் ரஷீது மாட்டிக் கொண்டார். போலீஸ் வண்டியிலும் ஏற்றப்பட்டார். இது அவருக்கு புது அனுபவம் என்பதால் மன உளைச்சலால் மாரடைப்பு வந்துள்ளது. அதற்குள் அவரது ஸ்பான்ஸர் வந்து விடவே சமரசம் பேசி ரஷீதை இறக்கி விட்டுள்ளனர். திரும்பவும் நெஞ்சு வலிக்கிறது என்று சொல்லவே அவரது ஸ்பான்ஸர் அவரை மருத்துவ மனை அழைத்து சென்றுள்ளார். மருத்துவ மனை சென்ற சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. காவல் துறையினரின் வண்டியில் முதன் முதலாக ஏறியதால் பயத்தில் அவருக்கு மாரடைப்பு வந்துள்ளதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். தற்போது சுமைஸி மருத்துவ மனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பச் செல்ல வேண்டியவர்கள் நாம்)
വണ്ടൂർ പഴയ ചന്തകുന്ന്
താമസിക്കുന്ന തട്ടാരക്കാടൻ അസിസാ ക്കാന്റെ മകൻ റഷീദ് എന്ന
മാനു റിയാദിൽ വെച്ച് ഹൃദയാഘാതം മൂലം മരണപ്പെട്ടു.


Sunday, January 20, 2019

அமெரிக்க விமான நிலையத்துக்கு முகமது அலி பெயர் சூட்டப்பட்டது!

அமெரிக்க விமான நிலையத்துக்கு முகமது அலி பெயர் சூட்டப்பட்டது!
அமெரிக்காவின் லூஸ்வில்லி விமான நிலையம் முஹம்மது அலி விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகளின் ஓட்டெடுப்புக்குப் பின் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. கென்டகி நகருக்கு அருகில் இவ்விமான நிலையமானது உள்ளது.
விமானப்பயணம் என்றாலே குத்துச் சண்டை வீரர் முகமது அலிக்கு ஒரு வித அலர்ஜி. இதை விளையாட்டாக பல பேட்டிகளிலும் கூறியுள்ளார். அவர் பெயராலேயே விமான நிலையம் வரப் போவதை அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார். வாழ்நாள் முழுக்க கருப்பின மக்களின் விடுதலைக்காக உழைத்த இஸ்லாமிய மார்க்கத்தை அமெரிக்காவெங்கும் கொண்டு சென்ற மாவீரன் முகமது அலிக்கு சிறந்த கண்ணியம் செய்யப்பட்டுள்ளது.
தகவல் உதவி
வாஷிங்டன் போஸ்ட்
17-01-2018


Saturday, January 19, 2019

அந்தக் கரங்களில் என்ன இருக்கிறது?

இந்தப் படம் பேராசிரியை ஒருவரால் முகநூல் பதிவில் பகிரப்பட்டிருந்தது.
மேலதிக விபரங்கள் அறிவதற்காக இணையத்தில் தேடியபோது மெய்சிலிர்த்தது.
அந்தக் கரங்களில் என்ன இருக்கிறது?அப்படி ஏன் அந்தக் கரங்களைப் பார்க்கிறார்கள்?அந்தக் கரங்கள் அவர்களிடம் ஏதும் பேசுகிறதா? கேளுங்கள்....
2012ல் ஆப்கானிஸ்தானின் காந்தகார் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டிருந்தார் தளபதி அப்துல் ரஹீம். அப்போது, குண்டு வெடித்ததில் தனது இரு கைகளையும் இழந்துவிட்டார். உடனடியாக அமெரிக்க மருத்துவக்குழு அவருக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளித்தது. இருப்பினும் தனக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் கைகள் பொருத்தப்பட வேண்டும் என்று பல நாட்டு மருத்துவமனைகளை அணுகியும் பயனில்லை.இந்நிலையில் இந்தியாவில் கேரளாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அறிகிறார்.
ஆறேழு மாதங்களுக்கு முன் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பொருத்தமான கைகளுக்குக் காத்திருக்கும் வேளையில், விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஜோஸப் என்பவரின் கைகளைப் பொருத்த ஆலோசிக்கப்படுகிறது.
ஜோஸப் குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு ஆபரேஷனுக்கு ஆயத்தமாகிறது மருத்துவக் குழு.பேராசிரியரும் உறுப்பு மாற்று சிகிச்சையின் நிபுணருமான டாக்டர். சுப்ரமணியம், இருபது மருத்துவர்கள் மற்றும் எட்டு மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட மருத்துவக் குழுவினருடன் செயல் முறைகளைத் தொடங்குகிறார். ஏறத்தாழ பதினைந்து மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்படுகிறது.
தற்போது குணமடைந்து, தமது அன்றாடப் பணிகளை தமது(!) கைகளின் மூலமே செய்துவரும் அப்துல் ரஹீமை, மேலும் சில மாதங்கள் தங்கியிருந்து பிசியோதெரபி பயிற்சி எடுக்கப் பரிந்துரைத்திருக்கிறார் மருத்துவர்.
தமக்கு கைகளை வழங்கிய ஜோஸப் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பின்போது எடுத்த படம் தான் இது.
ஜோஸப்பின் மனைவியும் மகளும் அந்தக் கைகளை கண்ணீரோடும் அன்போடும் பார்க்கும் பார்வையை விவரிக்க உலகில் மொழியேதும் உண்டோ?
கைகளை இழந்த ஒரு இஸ்லாமியனுக்கு, ஒரு கிறிஸ்தவனின் கைகளை எடுத்து ஒரு `இந்துவின் கைகளால் பொருத்தப்பட்டுள்ளது.
மதங்கள் தூக்கி எறியப்பட்டு, மனிதம் ஒட்டப்பட்டுள்ளது.மனிதம் மறந்து மதம்பிடித்துத் திரியும் மனங்கள் மடிந்து போகட்டும்,மண்ணில் மனித நேயம் தழைக்கட்டும்!
- ரபீக்
இந்த ஆக்கத்தை அனுப்பித் தந்த நண்பருக்கு நன்றி....


5 கிலோ மீட்டர் தனது தாயாரை சுமந்து சென்ற சரோஜ்!

5 கிலோ மீட்டர் தனது தாயாரை சுமந்து சென்ற சரோஜ்!
ஒரிஸ்ஸாவின் கர்பாபகல் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜ்(வயது 17). இவரது தாயார் இறந்து விட்டார். ஆனால் உடலை எடுத்துச் செல்ல அக்கம் பக்கத்தவர் யாரும் உதவ முன் வரவில்லை. காரணம் இவர் ஒரு கீழ் சாதி இந்து. என்ன கொடுமை!
தனது தாயாரின் உடலை தனது சைக்கிளில் வைத்து 5 கிலோ மீட்டர் தூரமிருக்கும் காட்டுக்குள் சென்று எரியூட்டியிருக்கிறார் சரோஜ். நாம் வாழ்வது நாகரிக சமூகத்தில்தானா என்ற ஐயம் ஏற்படுகிறது.
தகவல் உதவி
இந்தியா டுடே
17-01-2019


Friday, January 18, 2019

கும்பமேளாவினால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு!

கும்பமேளாவினால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு!
உபியின் கான்பூர் தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கிட்டத்தட்ட 250 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. உபியை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு கும்பமேளாவுக்காக 3 மாதத்துக்கு அனைத்து தொழிற்சாலைகளையும் மூடச் சொல்லி ஆணை பிறப்பித்துள்ளது. தினக் கூலிகள், தோல் பதனிடுவோர் என இரண்டு லட்சம் பேர் இதனால் வேலையிழந்து உள்ளனர்.
பெரும் முதலாளிகளோ '3 மாதம் வரை எங்களால் பொருத்திருக்க முடியாது. எங்கள் ஆர்டர்களை பாகிஸ்தான், பங்களாதேஷூக்கு திருப்பி விடுகிறோம்' என்று கூறுகின்றனர். இதனால் இரு நாடுகளும் பலனடையப் போகின்றன.
சிறு தொழில் அமைப்பின் தலைவரான ஹஃபீஸூர் ரஹ்மான் கூறுகிறார் 'இது முதல் முறையாக நடைபெறுகிறது. மூன்று மாதம் என்பது மிக அதிகம். முன்பெல்லாம் குளியல் நடைபெறும் 3 நாட்களுக்கு மட்டும் தொழிற்சாலைகளை மூடுவோம். அதனால் பெரும் பாதிப்பும் எங்களுக்கு இல்லை. மூன்று மாத தடையால் ஏற்கெனவே வாங்கிய ஆர்டர்களை இப்போது திருப்பி கொடுத்துள்ளோம். எங்களுக்கு வந்த ஆர்டர்கள் எல்லாம் தற்போது பாகிஸ்தானுக்கும், பங்களாதேஷூக்கும் சென்று விட்டது. லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்கின்றனர். வருடத்துக்கு 7000 கோடிக்கு மேல் தொழில் நடந்து நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியையும் தந்து கொண்டுள்ளன இத் தொழிற்சாலைகள். இன்று அனைத்தும் கேள்விக் குறியாகியுள்ளது.' என்கிறார்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
19-01-2019
யோகி ஆதித்யநாத் போன்ற சாமியார்களுக்கு உழைப்பின் மகத்துவம் விளங்க வாய்ப்பில்லை. வழக்கமாக கும்பமேளா நாட்களில் 3 நாட்கள் மட்டுமே தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும். மூன்று மாதம் மூடப்படுவதால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கின்றனர். நமது நாட்டுக்கு கிடைத்த அந்நிய செலாவணி இன்று பாகிஸ்தானுக்கு சென்று விட்டது.
"போலோ பாரத் மாதா கீ ஜே'


Thursday, January 17, 2019

பிஜேபி துணை தலைவர் ஆயுதக் குவியலுக்காக சிறையிலடைப்பு!

பிஜேபி துணை தலைவர் ஆயுதக் குவியலுக்காக சிறையிலடைப்பு!
தனன்ஜெய் குல்கர்னி (வயது 49) மும்பையின் டாம்பிவ்லியின் (Dombivli) பிஜேபியின் துணை தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான கடையிலிருந்து 170 பயங்கர ஆயுதங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை கிட்டத் தட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ளதாகும். இவ்வாறு மறைமுகமாக பல ஆண்டுகளாக ஆயுதங்களை விற்று வந்துள்ளார். பெரும்பாலானவை பஞ்சாப், ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்டவை.
திலக் நகரில் உள்ள இவரது கடையிலிருந்து குவியல் குவியலாக ஆயுதங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிகழ்வு மஹாராஷ்ட்ர அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் தேச பக்தர்களா? அல்லது தேச விரோதிகளா?
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
17-01-2018
Wednesday, January 16, 2019

12 பெண்கள் சவுதி அரேபியா ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்!12 பெண்கள் சவுதி அரேபியா ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்!
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா, பிலிப்பைன், பிரிட்டன் என்று பல நாட்டைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர். இவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலானோர் நாத்திக சிந்தனையிலேயே இருந்துள்ளனர். இந்த பெண்களும் பெற்றோர்களை பின்பற்றி நாத்திக சிந்தனையிலேயே இருந்துள்ளனர். பணி நிமித்தமாக சவுதி அரேபியா வந்த இவர்களுக்கு இஸ்லாமிய வாழ்வு முறை மிகவும் பிடித்து விட்டது. அகாடமியின் முயற்சியால் இந்த பெண்களுக்கு சில மாதங்களாக குர்ஆனின் போதனைகளும் நபிகளாரின் வாழ்வு முறையும் போதிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த நிகழ்வில் 12 பேரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
படத்தில் இருப்பது எட்டு சகோதரிகள். மற்ற நான்கு சகோதரிகள் புகைப்படத்தில் இல்லை. இவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினாலும் இஸ்லாமிய மார்க்கத்தில் நிலைத்திருக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
14-01-2019


என்று தணியும் இந்த சாதி வெறி!என்று தணியும் இந்த சாதி வெறி!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளது பஸேதி பஞ்சாயத். இங்கு அரசு வேலை ஒன்று நடந்து வந்தது. இங்கு நடக்கும் வேலைகளை கண்காணிப்பதற்காக தோல்பூர் மாவட்ட ஆட்சியர் நேகா கிரி வந்திருந்தார்.
அங்கு ஒரு விசித்திரமான காட்சி அரங்கேறி இருந்தது. உடம்பு முடியாத ஒரு பெண் தனது சிறு குழந்தையோடு கற்களை சுமந்து கடுமையான வேலைகளை செய்து கொண்டிருந்தார். அருகிலேயே ஒரு திடகாத்திரமான ஆண் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்தார். இது ஆட்சியருக்கு வித்தியாசமாக பட்டது. பலஹீனமான பெண் செய்ய வேண்டிய வேலையை ஆணும், ஆண் செய்ய வேண்டிய வேலையை பெண்ணும் செய்வதை பார்த்து அங்குள்ளவர்களிடம் விசாரித்தார். அதற்கு அந்த மக்கள்...
'அந்த பெண் வால்மீகி சாதியை சேர்ந்தவர். நாங்கள் எல்லாம் மேல் சாதி இந்துக்கள். அந்த பெண்ணின் கையால் நாங்கள் யாரும் தண்ணீர் அருந்த மாட்டோம். எனவே தான் அந்த பெண்ணுக்கு கல் சுமக்கும் வேலை கொடுக்கப்பட்டது.' என்றனர். ஆட்சியருக்கு மிகுந்த கோபம் வந்தது. அந்த பெண்ணிடமிருந்து சட்டியை வாங்கி தானும் கல் சுமந்தார். அதன் பிறகு அந்த பெண்ணை அழைத்து அவர் கையால் தண்ணீர் தரச் சொல்லி நீர் அருந்தினார். அங்குள்ள தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து அந்த பெண்ணின் கையால் தண்ணீர் அருந்த செய்தார். வேறு வழியின்றி அந்த மக்கள் ஆட்சியருக்கு கட்டுப் பட்டு தண்ணீர் அருந்தினர். அதிகாரத்தினால் தீண்டாமை அகன்றது. ஆனால் மக்கள் மனத்தில் உள்ள தீண்டாமையை அகற்றுவது யார்?
தகவல் உதவி
ந்யூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
16-01-2018

இதில் வேறு நேற்று உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்துக்கு மாறுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த காலத்திலும் மனிதனை மனிதனாக மதிக்கவில்லை என்றால் எங்கு சமத்துவம் கிடைக்கிறதோ அங்குதானெ செல்வர். இதனை ராஜ்நாத் சிங் உணர்ந்து தீண்டாமையை அகற்ற முதலில் பாடுபடட்டும்.


Tuesday, January 15, 2019

மும்பையில் மூன்று இஸ்லாமியர் தாக்குதலுக்கு உள்ளாயினர்!

மும்பையில் மூன்று இஸ்லாமியர் தாக்குதலுக்கு உள்ளாயினர்!
மும்பை லோனோவால் பகுதியில் குதிரை ஏற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குஜராத்தின் வதேதராவைச் சேர்ந்த ஆஷிம் மேமன்(32), சுஃபியான் மேமன்(30), அஹமது மேமன்(28) என்ற இந்த மூவரும் குதிரை சவாரி செய்துள்ளனர். சவாரி முடிந்தவுடன் பேசிய தொகைக்கு அதிகமான தொகையை குதிரை ஓட்டி கேட்டுள்ளார். 'இது அநியாயம்.... நாங்கள் பேசிய தொகையைத்தான் தருவோம்' என்றுள்ளனர் அந்த இஸ்லாமிய குடும்பத்தினர். உடனே தனது சக குதிரை ஓட்டிகளை அழைத்து அந்த குடும்ப உறுப்பினர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளனர். தாக்கி விட்டு ஓடி விட்டனர். கடுமையான காயமடைந்த மூவரும் தற்போது தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. வழக்கு மட்டுமே பதியப்பட்டுள்ளது.
மோடி, அமீத்ஷா போன்ற இந்துத்வாக்கள் விதைத்த இஸ்லாமிய வெறுப்பு சாமான்ய மக்களையும் பாதிக்கிறது. இது ஒரு வளரும் நாட்டுக்கு அழகல்ல...
தகவல் உதவி
கேரவன் டெய்லி
15-01-2018


முஸ்லிம்கள் 'பொங்கல் பண்டிகை' யை கொண்டாடுவதில்லையே ஏன்?

முஸ்லிம்கள் இனத்தால் திராவிடர்களாக இருந்து தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் 'பொங்கல் பண்டிகை' யை கொண்டாடுவதில்லையே ஏன்?
முதலாவது நாள் போகிப் பண்டிகை எனப்படுகிறது. இந்நாளில் மழையைத் தந்து அதன் மூலம் வளம்மிகு அறுவடைக்கு உதவிய முகில்களின் தெய்வமான இந்திரனுக்கு நன்றி கூறப்படுகிறது.இரண்டாம் நாளான தைப்பொங்கல் நாளில் சூரியனுக்கு பொங்கலிட்டு படைக்கப்படுகிறது. கானும் பண்டிகை அல்லது மாட்டுப் பொங்கல் எனப்படும் மூன்றாம் நாளில் உழுவதற்கு உதவிய மாட்டுக்கும் பாலை வழங்கும் பசுவுக்கும் பொங்கலிட்டு நன்றி கூறுவார்கள்.
தமிழகத்தில் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு சொந்த வயல் இருக்கும். தாராளமாக பொங்கலை கொண்டாடலாம்தான். ஆனால் இந்த பண்டிகையானது வழக்கமாக பிராமணர்களால் ஒரு இந்து பண்டிகையாக மாற்றப்பட்டு விட்டது. பண்டைய தமிழர்கள் உருவமற்ற இயற்கை தெய்வத்தினையே வணங்கி வந்தனர். சூரியனை வணங்குதலும், காளை மாடுகளை பசு மாடுகளை வணங்குவதும் நெருப்பை வணங்குவதும் ஆரிய கலாசாரம். இதற்கு பல ஆதாரங்கள் வரலாற்றில் உண்டு. குர்ஆனிலும் ஆதாரங்கள் உண்டு. ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளிலிருந்து படையெடுத்த ஆரியர்கள் திராவிடர்களை வென்று தங்கள் கலாசாரத்தையும் புகுத்தி விட்டனர்.
சூரியனை வணங்காத, மாடுகளை வணங்காத, நெருப்பை வணங்காத பொங்கல் பண்டிகையாக தமிழ் பேசும் இந்துக்கள் மாற்றினால் அந்த பண்டிகைகளில் இஸ்லாமியரும் கலந்து கொள்வர். தங்கள் வீடுகளிலும் பொங்கலை தாராளமாக கொண்டாடுவர். இனம் சார்ந்த பண்டிகைகளுக்கு, கலாசார நிகழ்வுகளுக்கு இஸ்லாம் தடையில்லை. இங்கு சவுதியில் கூட அரேபிய கலாசாரத்தை யொட்டி கழுகு பந்தயம், பெரும் வாள்களோடு நடனமாடுதல், ஒட்டக பந்தயம், புழுதிப் புயலிலிருந்து பாதுகாக்க தலையின் மேல் துணி அது பறக்காமலிருக்க மேலே ஒரு வட்டு என்று அரபுகளிடத்தில் பார்த்திருக்கலாம். அது அரபு மொழி பேசுபவர்களின் கலாசார உரிமை. அதில் இஸ்லாம் தலையிடாது. இவை எல்லாம் உலக முஸ்லிம்களிடத்தில் காண முடியாது. அது போல் ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் இனம் சார்ந்த பண்டிகையாக பொங்கலை மாற்றுங்கள். நானும் எனது இஸ்லாமிய தோழர்களும் தாராளமாக உங்களோடு சேர்ந்து பொங்கலை கொண்டாடுவோம்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.


Monday, January 14, 2019

ராம் ஜெத்மலானி...

ராம் ஜெத்மலானி...
இந்திய அரசியலில் பிரபலமான பெயர். இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றவர். மத்திய சட்ட அமைச்சராகவும் பணியாற்றியவர். பல ஊழல் வழக்குகளை திறம்பட கையாண்டவர். இனி இவரது எண்ணங்களை பார்போம்.
'ஒரு வக்கீலாக இருந்து பல மதங்களின் மார்க்கங்களின் நூல்களை படித்துள்ளேன். இஸ்லாத்தின் தூதுவரான நபிகள் நாயகம் மிகச் சிறந்த தூதுவர் என்ற முடிவுக்கு வந்தேன். இதை பல இடங்களில் கூறியுள்ளேன். நபிகள் நாயகம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை தங்கள் வாழ்வில் முஸ்லிம்கள் கடை பிடித்தால் உலகிலேயே மிகச் சிறந்த நாகரிகத்துக்கு சொந்தக்காரர்களாக இஸ்லாமியர்கள் மாறி விடுவர். நான் இந்துவாக இருந்தாலும் இஸ்லாத்தின் பல சட்டங்களை இன்றும் பின்பற்றி வருகிறேன்.'
'நபியே! உம் இறைவனின் பாதையில் மக்களை விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன்வழியை விட்டுத் தவறியவர்களையும் அவன் வழியைச் சார்ந்து நேர்வழிப் பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'
16 : 125 - குர்ஆன்


பாலஸ்தீன மங்கையின் அசாத்திய துணிச்சல்.....

பாலஸ்தீன மங்கையின் அசாத்திய துணிச்சல்.....
உலகிலேயே மிக கொடூர குணம் படைத்த இஸ்ரேலிய ராணுவ வீரனை உதைத்து அவனது கன்னத்திலும் அறைந்த இந்த பாலஸ்தீனிய பெண் போராடும் மக்களுக்கு ஒரு அடையாளமாக தெரிகிறார். உலகமெங்கும் இந்த பெண் தற்போது பிரபலமாகியுள்ளார்.
'நீ யாரடா எனது மண்ணில் வந்து அதிகாரம் பண்ண..... வந்தேறி நாயே....' என்று கேட்பது போல் உள்ளது அந்த பெண்ணின் உதையும் அறையும்....


இட ஒதுக்கீடு பற்றிய சிறந்த விவாதம்.... பாருங்கள்....


Sunday, January 13, 2019

'நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக எங்கள் அரசு தான் ஊழல் இல்லாதது'

'நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக எங்கள் அரசு தான் ஊழல் இல்லாதது' 
- மோடி


ஐ ஏ எஸ் பதவியை ராஜினாமா செய்த காஷ்மீரத்து இளைஞன்.

அதீத தேசப் பற்று' என்று கூறி இஸ்லாமிய மக்களை இரண்டாம்தர குடி மக்களாக நடத்துகின்றனர். மத்திய அரசும் இதற்கு துணை போகிறது'
காஷ்மீர் மக்களின் துயரத்தை உலகுக்கு காட்ட தனது ஐ ஏ எஸ் பதவியை ராஜினாமா செய்த காஷ்மீரத்து இளைஞன்.


துபாய் மன்னரின் எளிமை....

துபாய் மன்னரின் எளிமை....
கோடிகளில் புரளும் துபாய் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் மன்னர் எவ்வளவு எளிமையாக நடந்து கொள்கிறார்! மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நம் நாட்டு மந்திரிகளிடம் கூட இந்த எளிமையை எதிர் பார்க்க முடியாது. இஸ்லாம் இவருக்கு எடுத்த பாடத்தினால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.


சித்தீக் சராய்....

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு அருகிலிருக்கும் சித்திக் சராயின் வரலாறு புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.
அப்போது (1906 ஆம் ஆண்டு) சென்ட்ரல் ரயில்வே நிலையம் அருகே இராமசாமி முதலியார் லாட்ஜ் என்ற தங்குமிடம் மட்டுமே இருந்தது. சென்ட்ரல் ரயில்வே நிலையம் வந்து வடமாநிலங்களுக்கு செல்ல விரும்புவோர் இந்த லாட்ஜில் தான் தங்குவது வழக்கம் ஆனால் இதில் தங்க முஸ்லீம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இங்கு "முஸ்லீம்களுக்கு அனுமதி இல்லை" என்ற அறிவிப்பு பலகை அங்கு தொங்க விடப்பட்டிருந்தது. ஆம்பூரைச் சார்ந்த தொழிலதிபர் சித்தீக் ஹீஸைன் வியபார விஷயமாக பம்பாய் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தபோது இந்த லாட்ஜில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது அவரது மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது.
பயணம் முடிந்து ஊர் திரும்பிய அவர், தனது மகன் நவாப் அப்துல் ஹக்கீமை அழைத்து, இது பற்றி எடுத்து கூறி வருங்காலத்தில் உனக்கு பணவசதி ஏற்பட்டால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே லாட்ஜ் ஒன்றைக் கட்ட ஏற்பாடு செய் என்று கூறினார். தகப்பனார் இறந்த பல ஆண்டுகளுக்கு பிறகு நவாப் அப்துல் ஹக்கீம் சாகிப் தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஒரு இடத்தை விலைக்கு வாங்கி அங்கு ஒரு லாட்ஜைக் கட்டினார் (1926 ஆம் ஆண்டு). இதுவே சித்தீக் சராய் என்று அழைக்கப்படும் லாட்ஜாகும். இந்த விடுதி ( லாட்ஜ்) கட்டப்பட்ட பிறகு முஸ்லிம் பயணிகளின் இன்னல் தீர்ந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சற்று தள்ளி எதிர்புறம் பூந்தமல்லி ஹைரோட்டில் இந்த "சராய் " இப்போதும் செயல்பட்டு வருகிறது.
கட்டுரை : சேயன் இப்ராகிம்


Saturday, January 12, 2019

மாற்று மத சகோதரனின் பார்வையில்....

குவைத்தில் வீட்டு டிரைவராக பணி புரியும் மாற்று மத சகோதரனின் பார்வையில் இஸ்லாத்தின் மதிப்பீடு..!!


Wednesday, January 09, 2019

உலக வெப்பமயமாதலை ஓரளவு குறைக்கும் பொருட்டு

இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு என்ன என்றால் 'புவி வெப்பமயமாதல்' என்று உடன் சொல்லி விடலாம். அந்த அளவு இன்று உலகை இந்த பிரச்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சவுதியில் உள்ள தபூக்கில் நான் ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். சில நேரங்களில் குழாய்களில் தண்ணீர் ஐஸாக உறைந்து தொங்கிக் கொண்டிருக்கும். அந்த அளவு குளிர். அதிலும் இந்த வருடம் இன்னும் அதிகம். ரோடுகள் எல்லாம் ஐஸ்களால் சூழப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப் பொழிவு. பிலிப்பைனை தாக்கிய புயல். அதில் 6000 க்கும் மேலான மக்கள் பலி என்று சமீப காலங்களில் நடக்கும் பேரழிவுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இந்த பேரழிவுகளுக்கு நாமும் ஒரு காரணம். வாகனங்களும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கார்பன் இந்த உலகை தூசுக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டதால் எனது பையன்களுக்கு டூ வீலர் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் நான் அதிகம் பயணிப்பது சைக்கிளில்தான். 'என் காலேஜ் ஃப்ரண்டஸ்லாம் கிண்டல் பண்றானுங்க. இனி சைக்கிளில் போகாதீங்க... நம்மகிட்டதான் டூ வீலர் இருக்கே' என்று என் மகன் சொல்வதை பார்த்து சிரிப்பேன். அவனது நண்பர்களுக்காக நான் டூ வீலரில் போக வேண்டுமாம். நான் லீவில் ஊர் சென்ற போது சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அந்த ஊரிலேயே தொழில் செய்து வரும் ஒருவர் 'நீ சைக்கிளில் போவதும்: நான் டூ வீலரில் போவதும் சில நேரங்களில் எனக்கே வெட்கமாக இருக்கிறதுப்பா...' என்று சொன்னதை இன்றும் நினைத்தாலும் சிரிப்பு வரும். உடற் பயிற்சி செய்வதற்கு சைக்கிளைப் போன்ற சிறந்த ஒரு சாதனம் வேறு இல்லை என்று சொல்லலாம். விபத்துகளும் இதனால் குறையும். செலவும் மிச்சம். உடலுக்கும் ஆரோக்கியம். புவி வெப்பமயமாதலை ஓரளவு நம்மாலும் குறைக்க முடியும். நமது நாட்டு பணம் அநியாயாத்துக்கு பெட்ரோலுக்காக வெளி நாடு செல்வதையும் ஓரளவு இது குறைக்கும். எனவே இப்படி பல பயன்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் லோக்கலுக்கு அதிகம் சைக்கிளையே பயன் படுத்துவோமாக! :-)

இங்கிலாந்தில் உள்ள மேட் MADE (Muslim Agency for Development Education) என்ற என்ற அமைப்பு உலக வெப்பமயமாதலை ஓரளவு குறைக்கும் பொருட்டு பல சேவைகளை செய்து வருகிறது. பள்ளி வாசல்களை எல்லாம் பசுமைக் குடில்களாக தற்போது இவர்கள் மாற்றி வருகின்றனர். பள்ளி வாசல்கள் எங்கும் தற்போது பசுமை பூத்துக் குலுங்குகிறது. உலகில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் நமக்கு இறைவனின் வல்லமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனையும் இதனையே நமக்கு சொல்கிறது. 

"ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்'' என்று இறைவனின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 2320


ஆஹா...என்ன அழகிய ஒரு அறிவுரை. தொழுது கொள், ஹஜ் செய், ஜகாத் கொடு என்பது மட்டும் இஸ்லாம் அல்ல. ஒரு மரத்தை நட்டு அதனால் உயிரினங்கள் பயனுற்றால் அதற்கும் நன்மை எழுதப்படுகிறது என்ற நபிகளின் வார்த்தையை அந்த இளைஞர்கள் செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். தொழுவதற்காக கை கால்களை அலம்பி சுத்தம் செய்து கொள்ளும் போது கூட தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள் என்ற அறிவுரையையும் நபிகள் நாயகம் நமக்கு போதித்து இருக்கிறார்.

சுற்றுச் சூழலோடு அமைந்த பள்ளி வாசல்கள் என்றால் என்ன?

மான்செஸ்டரில் உள்ள நஜ்மி பள்ளி வாசல் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த பள்ளி கட்டுமானமானது ஏற்கெனவே உபயோகப்படுத்தப்ட்ட மரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. இந்த பள்ளி வாசலின் மின்சாரத் தேவைகள் அனைத்தும் சூரிய சக்தியால் அமைக்கப்பட்டது. மேற் கூரைகள் கண்ணாடிகளால் வேயப்பட்டுள்ளது. ஒளி தேவைப்படும் போது சூரியனின் ஒளியையே பயன்படுத்தக் கூடிய வகையில் கட்டியுள்ளார்கள். பள்ளி வாசலை சுற்றி பசுமை நிறைந்த மரங்களை வளர்க்கின்றனர்.

இந்த அமைப்பின் உப தலைவர் கூறும் போது: 'ஒரு வணக்கத்தலம் இயற்கையோடு கூடியதாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த சூழல் இருந்தாலே இறைவனை வணங்குவதற்கு நமக்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அமைப்பதற்கு நமக்கு அதிக பொருளாதார செலவும் கிடையாது. சிங்கப்பூரில் 2012ல் இதே போன்ற ஒரு பள்ளியை நிர்மாணித்தோம். கத்தாரிலும் இதே போன்ற பள்ளிகளை அமைக்க திட்டமிருக்கிறது. தண்ணீரை மறு சுழற்சி செய்து பள்ளியை சுற்றியுள்ள தோட்டங்களுக்கு திருப்பி விடுவது. பள்ளியை சுற்றி மரங்கள் செடி கொடிகளை வளர்ப்பது. வெள்ளிக் கிழமைகளில் சொற்பொழிவுகளில் சுற்று சூழலை மாசுபடாமல் எவ்வாறு பராமரிப்பது என்பதையும் மக்களுக்கு புரிய வைப்பது. பள்ளிக்கு தொழ வருபவர்கள் கூடிய வரை நடந்தோ, சைக்கிளிலோ, அல்லது டூ வீலரோ வர அறிவுறுத்துவது. ஒரு நபருக்காக ஒரு நான்கு சக்கர வாகனத்தை உபயோகிப்பதை முடிந்த வரை தவிர்த்துக் கொள்வது. இது போன்ற பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதற்கு மக்களிடம் அதிக ஆதரவும் இருக்கிறது" 

"இந்த உலகை மாசுபடாமல் காக்கும் பொருப்பு மற்றவர்களை விட முஸ்லிம்களுக்கு அதிகம் உண்டு. அதனை இறைவனின் இல்லமாகிய பள்ளி வாசல்களிலிருந்து தொடங்குதல் மிக பொருத்தம் இல்லையா?' என்று கேட்கிறார் இந்த அமைப்பின் தலைவர் முராத்.


Creative ideas that can be easily implemented in almost any mosque are:

Use touch sensitive taps in all sinks; they turn on when touched and automatically turn off after a few seconds, reducing water wastage.

Provide recycling bins in the mosque. This makes it easier for community members to recycle glass, cardboard and paper, plastics, and aluminum by separating and collecting recyclables in the home and dropping them off at the neighborhood mosque.

Install solar panels that capture the sun’s energy and convert sunlight into electrical energy.

Put up colorful and informative posters that foster environmental awareness.

Encourage the imam, or leader of the mosque, to dedicate a Friday sermon to the importance of preserving the environment.

Provide bike racks in the parking space of the mosque to encourage worshipers to come to the mosque whenever possible by bike rather than car.

Plant a community garden. Transporting food across the world can be very harmful for the environment and costly. The community can grow fresh, local produce which they can share among themselves or donate to families in need.

Use environmentally friendly cleaning products and bio-degradable plates and cups during community events.


இடஒதுக்கீடு பெறப்போகும் பார்ப்பனர் ஆதிக்கம்!

இடஒதுக்கீடு பெறப்போகும் பார்ப்பனர் ஆதிக்கம்!

SC, ST மற்றும் OBC அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் பிராமிணர்கள் ஆக்ரமித்த இடங்களைக் காண்க.

1- ஜனாதிபதி செயலகத்தின்
மொத்த இடுகைகள் 49.
'இவர்களில் 39 பிராமணர்கள்.
SC' ST- 4. ஓ.பி.சி.-06

2- துணை ஜனாதிபதி செயலகத்தின்
பதவிகள். 7
7 பதவியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள்.
எஸ்சி -எஸ்டி -00. ஓ.பி.சி. -00

3. கேபினட் செயலாளர் பதவிகள் 20.
பிராமணர்கள். 17
SC' . ST- 01 . ஓ.பி.சி.-002

4- பிரதமரின் அலுவலகத்தில்
மொத்தம் 35 பதவிகள் .
பிராமணர்கள். 31
SC' . ST-02. OBC - 02

5. விவசாயத் திணைக்களத்தின்
மொத்த இடுகைகள் - 274.
பிராமணர்கள். 259
SC' . ST-05. ஓ.பி.சி.-10

6. மொத்த அமைச்சகத்தின்
பாதுகாப்பு அமைச்சகம் 1379.
பிராமணர்கள். 1300
SC' ST- 48. ஓ.பி.சி. -31

7- சமூக நல & சுகாதார அமைச்சகத்தின்
மொத்த இடுகைகள் 209.
பிராமணர்கள். 132
SC' ST- 17. ஓ.பி.சி. -60

8 - நிதி அமைச்சகத்தின்
மொத்த இடுகைகள் 1008.
பிராமணர்கள். 942
SC' ST- 20. ஓ.பி.சி.-46

9 - பிளானட் அமைச்சகத்தில்
மொத்தம் 409 பதவிகள்.
பிராமணர்கள். 327
SC' ST-19. ஓ.பி.சி.-63

10- தொழில் அமைச்சகத்தின்
மொத்த இடுகைகள் 74.
பிராமணர்கள். 59
SC. SI- 4. ஓ.பி.சி. -9

11- கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 121. பிராமணர்கள். 99
SC- SI. 00 ஓ.பி.சி. -22

12 - கவர்னர் மற்றும் லெப்டினன்ட்
கவர்னர் ஒட்டுமொத்தம் - 27
பிராமணர்கள். 25
-SC- SI. 00. ஓ.பி.சி. -2

13- தூதுவர்கள் வெளிநாட்டில்
வாழ்ந்து வருகின்றனர் 140.
பிராமணர்கள். 140
SC' ST-00. ஓ.பி.சி.-00

14- மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் 108.
பிராமணர்கள். 100
SC' . ST -03. OBC- 05

15 - மத்திய பொதுச் செயலாளர்
பதவிகள் 26.
பிராமணர்கள். 18
SC' . ST- 01. ஓ.பி.சி.-7

16- உயர் நீதிமன்ற நீதிபதி 330.
பிராமணர்கள். 306
SC'. ST- 04. ஓ.பி.சி. -20

17 - உச்ச நீதிமன்ற நீதிபதி 26.
பிராமணர்கள். 23
SC'. ST-01: ஓ.பி.சி.-02

18- மொத்த ஐஏஎஸ் அதிகாரி 3600.
பிராமணர்கள். 2750
-300 essiest. 350 ஓ.பி.சி..

. நாட்டின் மக்கள் தொகையில்
3% க்கும் குறைவான பிராமணர்கள்
எவ்வாறு 90% பதவிகளைகளைப் பெற்றனர்?
கடவுள் மதத்தின் பெயரிலா ?
மூட நம்பிக்கையின் பெயரிலா ?
அல்லது அது நம்முடைய காரியமா ?
அதை யோசியிங்கள் ...

3 விழுக்காடு பெரிதா 97 விழுக்காடு பெரிதா

ஆண்டாண்டு காலமாக 3விழுக்காடே பெரிதாக எங்கள் வாழ்க்கை நடைமுறை.

சகோதரர்களே, இதை முடிந்த அளவுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். பிராமணர்களின் நிறத்தை விளக்குங்கள். அரசியலமைப்பு ஒதுக்கீட்டை பாதுகாக்கவும்.

இவை எல்லாவற்றிற்கும் படிப்பு அடிப்படைதான்.
ஆனால் பதவிகள் அனைத்தும் நியமனப்பதவிகள் என்பதை மறுக்க முடியுமா? யார் யாரை நியமித்திருப்பார்கள் என்பதை தங்கள் யூகத்திற்கே விட்டாயிற்று.அந்த படிப்பு என்கிற ஏகபோக உரிமையும் பிறரை படிக்கவிடாமல்
சாதி அடிப்படையை காட்டி மறுத்ததால் கிடைத்தது.

மறுக்க முடியுமா?

(டெல்லியினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம், 'யங் இந்தியா' எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் கிடைக்கிறது இத்தகவல் )

Devi Kamal பதிவு Sivakumar Nagarajan வழியாக

அம்பேத்கர் ஏன் இஸ்லாத்தை ஏற்கவில்லை? காரணம் என்ன?


Tuesday, January 08, 2019

இஸ்லாமிய பெண்களும் ரத்த தானம்

'இஸ்லாமிய பெண்களும் ரத்த தானம் கொடுக்க முன் வருவதை பார்க்க சந்தோஷமாக உள்ளது' - காவல் துறையினரின் பேட்டி....


இனி சேலம் இன்னொரு சௌகார்பேட்டை

வாட்ஸ்அப்பில் நண்பர் அனுப்பிய செய்தி.....

இனி சேலம் இன்னொரு சௌகார்பேட்டை 

 எட்டுவழிச் சாலை வருவது யாருக்காக?!

 சேலத்திற்கு ரோகிணி கலெக்டராக அமர்த்தப்பட்டு அவரது விளம்பரத்திற்கு செலவு செய்வது  யார்?!

 சேலம் உட்பட சென்னை முதல் கோவை வரை வடமாவட்டங்களில் மகாவீரர் ஜெயந்தி அன்று கறிக்கடைகளை திறக்கவிடாமல் தகராறு செய்து கடைசியில் கலெக்டர்கள் மூலம் தடை விதித்து லோக்கல் சட்டமாகவே கொண்டுவந்து யார்?!

 புதுச்சேரி முதல்வரையே வரவைத்து சாதாரண ஆள்போல தேரை இழுக்கவைத்தது யார்?!

 பெரிதாக எதையுமே சாதிக்காத சேலம் பியூஸ் மானூஸ் எப்படி திடீரென்று பிரபலமானார்?!

 இசுலாமியர் நாய்க்கறி போடுவதாக கொளுத்திப் போட்டது யார்?!

 விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்...

சேலம் எருமாபாளையம் அருகில் 1995-ஆம் ஆண்டு சில ஜெயின் மதத்தை சார்ந்தவர்கள் (அதாவது பனியா சமூகம்) குஜராத் ராஜஸ்தான் பகுதிகளில் இருந்து வந்து குடியேறினார்கள்.

 மிகச் சிறுபான்மையாக இருந்த இவர்கள் வெறும் 20 ஆண்டுகளில் சேலத்தை கைப்பற்றி தமது கைக்குள் கொண்டுவந்து விட்டார்கள்.

நம்ப முடியவில்லையா?!
ஆனால் இதுதான் உண்மை.

 ஒரு பக்கம் மார்வாடிகளும் ஒரு பக்கம் ஜெயின்களும் மெல்ல மெல்ல குடியேறி சத்தமேயில்லாமல் படு சாமர்த்தியமாக எருமாபாளையம் தொடங்கி பழைப்பேருந்து நிலையம், செவ்வாய்பேட்டை, அரசிபாளையம், நான்கு ரோடு, சங்கர் நகர், காந்தி ரோடு என ஒரு வட்டமான பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான கடைகளையும் வீடுகளையும் வாங்கி குவித்துவிட்டார்கள்.

 அதுதான் இன்று சேலத்தின் இதயம்.
 அந்த இதயத்தில் பனியாக்கள் குத்தவைத்து உட்கார்ந்து விட்டனர்.
 இப்பகுதி முழுவதும் மார்வாடியும் ஜெயினும் பெரும் ஆதிக்க சக்தியாக மாறியதன் விளைவாக சங்கர் நகர் பகுதிகளில் நான்கு தெருவின் பெயரையே அரசு கெஜட்டில் "ஜெயின் தெரு" என்று மாற்றிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 ஏன் சேலத்தைக் குறிவைத்துள்ளனர்?!

 இங்குதான் தமிழகத்தின் முக்கியமான கனிம வளம் குவிந்துள்ளது.
 (பார்க்க படம்: Mineral map of Tamil Nadu)

 சேலத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள கனிமங்களைக் கொள்ளையடிக்க பனியா கம்பெனிகள் பல ஆண்டுகளாக காய்நகர்த்தி வருகின்றன.

 அதன் விளைவு சேலம் எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் உருக்காலை தனியார் மயமாக்கும் முயற்சி போன்றன.

 இவர்களுக்கு ஒத்தாசையாக நடந்ததே மேற்படி குடியேற்றம் மற்றும் ஆதிக்க மாற்றம்.

 இதை எப்படி செய்கிறார்கள்?!

 பொதுவாக வடயிந்திய வணிக சமூகமான பனியாவில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.
மார்வாடி மற்றும் ஜெயின்.
 அம்பானி, அதானி, மிட்டல், வேதாந்தா, ஜிண்டால் என கார்ப்பரேட் பணமுதலைகள் பனியா சமூகமே.
 இவர்கள்தான் மத்திய அரசை இயக்குவது.

 இதில் மார்வாடிகள் இந்து மதத்தையும் ஜெயின் மக்கள் மகாவீரரின் போதனைகளையும் பின்பற்றினாலும் இரண்டு தரப்பும் பாஜகவை ஆதரிப்பவர்கள்.

 காரணம் அவர்களின் வியாபாரத்திற்கு  காங்கிரசை விட பாதுகாப்பாக பாஜக ஆட்சி இருக்கிறது என்பதால்.

 இயல்பில் ஜெயினும் மார்வாடியும் ஒன்றிப்போவது இல்லை.
அவர் வீதியில் இவர் வசிப்பது இல்லை, இவர் வீதியில் அவர் வசிப்பது இல்லை.

 இவர்கள் இரண்டு பேருமே முதலாளி சமூகம் என்பதால் இவர்கள் இந்தி பேசிக்கொண்டு வருகின்ற பீகாரிகளை தொழிலாளிகளாக அடிமாட்டு கூலிக்கு பயன்படுத்துகிறார்கள்.
 (பொதுவாகவே கஞ்சத்தனம் உள்ளவர்கள்.
 சொத்து சேர்த்துக்கொண்டே போவார்கள்.
 ஆனால் அனுபவிக்க மாட்டார்கள்)

 இம்மூன்று பேருக்குள்ளும் எதில் முரண்கள் இருந்தாலும் வியாபாரம், அரசியல், நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருக்கின்றனர்.

 உதாரணமாக ஒரு வீடு விற்பனைக்கு வந்தால் நான்கு குடும்பம் ஒன்று சேர்ந்து அதனை வாங்கி நான்கு அடுக்குமாடி வீடு கட்டி குடிவருகிறார்கள்.

 அருகிலேயே ஒரு கொட்டகை போட்டு பீகாரிகளை குடியமர்த்தி வைக்கிறார்கள்.

 இதன் விளைவாக நிலம் நீர் மின்சாரம் என்ற அனைத்தையும் சுரண்டுகிறார்கள்.

 குறிப்பாக இவர்கள் கட்டும் வீடுகள் காலியாகவே கிடந்தாலும் வாடகைக்கு கூட தமிழர்களைத் தங்க வைப்பது இல்லை.

 இதன் உச்சபட்ச கொடுமையாக எருமாபாளையத்தில் ஒரு ஏரியையே வளைத்து ஒரு பிரமாண்டமான ஜெயின் கோயிலை கட்டிவிட்டார்கள்
 (சேலத்தின் பிரபலமான சமூக சேவகரென நாம் கொண்டாடுகின்ற பியூஸ் மானுஸ் இந்த கோயில் கட்டப்பட்டதற்கு முக்கிய காரணம்).

 அதில் தமிழர்கள் நுழையத் தடை என்பது கூடுதல் செய்தி.
 அங்கு மட்டும் அல்ல, அவர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் ஒரு ஜெயின் கோயில் கட்டி முடித்துவிட்டார்கள்.

 தமிழர்களை அண்டவிடக் கூடாது என்பதில் மட்டும் இவர்கள் அனைவருமே தெளிவாக இருக்கிறார்கள்.

 ஒரு தெருவில் வரிசையாக வீடுகளை வாங்கி அதன் பொதுவழியில் தடுப்பு போட்டு அதைத் தனி தீவுபோல ஆக்கிக் கொள்கின்றனர்.

 உள்ளே நடப்பது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான புகையிலை மற்றும் பாக்கு உற்பத்தி.

 இவற்றிற்கு தடை விதித்ததே இவர்கள்.
 முதலில் போதைப் பொருட்களை மக்களுக்குப் பழக்கப்படுத்தி அவர்கள் அடிமையான பிறகு தடை விதித்து பத்து மடங்கு விலைக்கு விற்பார்கள்.

 இதன் மூலமே இவர்கள் பெருமளவில் பொருள் ஈட்டுகின்றனர்.

 இது தவிர வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வெளிப்பார்வைக்கு நகைக்கடை அல்லது அடகுக்கடை நடத்துவதும் இவர்கள் பல தலைமுறைகளாக செய்துவரும் உத்தி
 (அயன் படத்தில் கூட காட்டியிருப்பர்).

 இவர்களிடம் பணம் விளையாடுவது இந்த மாதிரியான சட்டவிரோத தொழில்களைக் காலங்காலமாக கச்சிதமாக செய்துவருவதால்தான்.

 இவர்கள் தமது பண பலத்தால் சேலத்தில் முக்கிய விற்பனைப் பொருட்களான கட்டுமானப் பொருட்கள், தங்கம், வெள்ளி, துணி, பான்பாராக், புகையிலை, எலக்ட்ரானிக், கைவினைப் பொருட்கள், செருப்பு உட்பட அனைத்தையும் கைப்பற்றிவிட்டனர்.
 இப்போது சேலத்தில் ஊசி முதல் பங்களா வரை உற்பத்தி முதல் விற்பனை வரை மார்வாடியோ ஜெயினோ தான் செய்கிறார்கள்.

 அது சார்ந்த வேலைகளுக்கு பீகார் சார்கண்ட் உத்திரபிரதேச பகுதிகளை சார்ந்த 15 வயதிற்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தை தொழிலார்களை கொண்டு வந்து சேலம் முழுவதும் நிரப்பிவிட்டார்கள்.

 குடிவரும் அனைவருக்கும் பத்து நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டையும் மூன்று மாதங்களுக்குள் ரேசன் கார்டும் தேடி வருகின்றன.

  இந்த பனியா ஆக்டோபஸின் மூளை சென்னை செளக்கார்பேட்டை யில் உள்ளது.
 அங்கு ஏற்கனவே இவர்களுக்கு ஆள், பத்திரிக்கை, பணம், சங்கம், பதவி, சரக்குப் போக்குவரத்து என அனைத்துக்கும் ஏற்பாடு உள்ளது.

 இந்த ஆக்டோபஸ் சென்னை முதல் கோவை வரை தன் கால்களைப் பரப்பியுள்ளது.
 இதன் அடுத்த குறி மதுரை ஆகும்.
 தற்போது மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி அனைத்து வீதிகளிலும் முக்கால்வாசி ஜெயின் - மார்வாடிகளுக்கு சொந்தம்.

 மதுரையின் இரண்டு வார்டுகள் பீகாரிகள் குடியேறி வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்காளர்களாக ஐந்தே ஆண்டுகளில் ஆகிவிட்டனர்.

 தமிழகம் முழுக்க இவர்களுக்கு போட்டி தெலுங்கர் மட்டுமே.
தெலுங்கர் வியாபாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இப்பொழுது தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள இவர்களும் இந்துத்துவ அமைப்புகளில் சேர தொடங்கிவிட்டார்கள்.

 முதலில் குடியேற்றம்,
பிறகு கள்ளக் கடத்தல்,
பிறகு நில ஆக்கிரமிப்பு,
பிறகு சந்தை கைப்பற்றல்,
பிறகு அந்நிலத்தை தக்க வைக்கவும் தமது மக்களை ஒருங்கிணைக்கவும் ஜெயின் கோயில்,
கோயில் மூலம் கூட்டுநிதி,

அந்த நிதி மூலம் இனம் மொழி என்கிற வரையறையில் வராத தேசிய அல்லது மதவாத அரசியல் மற்றும் விளம்பரம்,
இதன் மூலம் வரும் பிரச்சனைகளைச் சமாளிக்க பனியா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கண்கானி வேலை பார்த்து அதிகாரத்தை பெறுவது,
 குடியேறி வாக்குவங்கி அளிப்பது, தேர்தல் பணி செய்வது, நிதி அளிப்பது, கார்ப்பரேட் ஆதரவு என மத்திய அரசை  ஆட்டிப்படைக்கும் ஒரு வலிமையான அரசியலை மார்வாடியும் ஜெயினும் இந்தியா முழுவதும் கட்டவிட்டனர்.
தமிழகத்தில் கட்டத் தொடங்கி பாதி வெற்றிபெற்று விட்டனர்.

 இவர்கள் அதிகாரத்தின் நீட்சித்தான் இப்பொழுது புதிதாக தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், ஜெயின் ஊர்வலம் ஆகியன நடத்தப்படுகிறது.

 இவர்களின் முதல் இலக்கு சாதாரண மக்கள் அல்ல;
 ஒவ்வொரு நகரத்திலும் இருக்கின்ற உள்ளூர் வியாபாரிகள்தான்.

 இந்த வியாபாரிகளையும் சந்தையையும் கைப்பற்றிவிட்டால் நிலத்தையும் அரசியலையும் கைப்பற்ற முடியுமென திட்டமிடுகிறார்கள்.

 இத்தகைய சூழலில் மொழி இனம் நிலம் என்று பேசுகின்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் உருவானால் மார்வாடி மற்றும் ஜெயின் வியாபாரமும் அவர்களின் குடியேற்றமும் சிக்கலுக்கு உள்ளாகும் என்பதால்தான் நாம் தமிழர், தமிழ்தேசியப் பேரியக்கம் போன்ற தமிழ்தேசிய அரசியலை நசுக்க பார்க்கிறார்கள்.
 பாரிசாலன் இரண்டு மாதம் உள்ளே இருந்தது இவர்கள் கைங்கர்யம்தான்.

 இன்றைய சூழலில் தமது முதல் எதிரி நாம் தமிழர் கட்சிதான் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

 தமிழ்நாட்டின் இளைஞர்கள் இந்த புரிதல்களுக்கு வந்துவிடாமல் தடுக்கவே இந்து முன்னணியை வளர்த்து விடுவது
ரஜினியை அரசியலுக்குள் இழுத்துவிடுவது
இன்டர்நெட்டில் வெட்டித்தனமான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது என காய்நகர்த்துகின்றனர்.

 இன்னும் பத்தே ஆண்டுகளில் தமிழகத்திலும் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற சூழல் வரும்.

உறவுகளே நம்புங்கள்...

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு இருக்கிறோம்...

#பகிர்வு

Monday, January 07, 2019

கீழக்கரை பாயாக மாறிவிட்ட இளையராஜாவின் மகன் யுவன்

இந்த கூட்டத்தில்👆🏿 இருக்கும் ஒருவரை அம்புக் குறி இடாமல் இருந்தால் தெரிந்திருக்குமா உங்களுக்கு ?
கீழக்கரை பாயாக மாறிவிட்ட இளையராஜாவின் மகன் யுவன் YOUNGER BOY. எப்படி கைலி தொப்பியோடு ஜம்முன்னு இருக்கிறார்.
மேலத்தெரு பள்ளி.வாசலில் ஜூம்மா முடித்து நம்ம பாய்....
இளையராஜாவின் சாதி இனி யுவனோடு வராது.
இனி இவர் இறைநம்பிக்கையாளன் என அர்த்தம் தரும் முஸ்லிம் .
இனி இவருக்கு மதம் இல்லை சாதி இல்லை.
உலக அளவில் இனி எல்லா மொழி பேசும் இறை நம்பிக்கையாளருக்கும் சகோதரர் [பாய் BHAI_]
இவர் .
மாற்றங்கள் மாற்ற முடியாதது.
ஆனால் இஸ்லாம் மட்டுமே என்றும் மாற்றமே இல்லாதது .
இறைவன் ஒருவனுக்கு முன்பு அரசனும் ஆண்டியும் சமமே.
பெரியாரால், அம்பேத்காரால், காந்தியால், காமராஜரால் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை இன்று யுவன் ஒரு நொடிப் பொழுதில் மாற்றிக் காட்டியுள்ளார்.
இவரது தந்தை என்னதான் உயரத்துக்கு சென்றாலும், கோவில் திருப்பணிகள் செய்தாலும், இந்து மத இறை பாடல்களை இயற்றினாலும் அவாள்களுக்கு இளையராஜா தீண்டத்தகாதவர்தான். சங்கராச்சாரியார் விருது வழங்கும் நிகழ்விலேயே பார்த்தோம்.


Sunday, January 06, 2019

சீன உய்குர் முஸ்லிம்களின் பரிதாப நிலை!

சீன உய்குர் முஸ்லிம்களின் பரிதாப நிலை!
சீன அதிகாரி உய்குர் முஸ்லிமை காட்டுமிராண்டி தனமாக அடிக்கும் காட்சி. இத்தனை அடி வாங்கிக் கொண்டும் அந்த சகோதரர் "அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்" என்று கூறுகிறார். அது அந்த அதிகாரியை மேலும் கோபப்படுத்துகிறது. இன்னும் கொடிய மிருகமாக மாறுகிறான் அந்த சீன அதிகாரி .
அந்த இஸ்லாமிய சகோதரர் செய்த குற்றம் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றதுதான். குர்ஆனை தனது வழிகாட்டுதலாக கொண்டதுதான். அதிகாரத்தின் மூலமாகவோ, அடித்து உதைப்பதாலோ அந்த மக்களின் மனத்திலிருந்து இஸ்லாத்தை எடுத்து விடலாம் என்று பகல் கனவு காணுகின்றனர் சீன ஆட்சியாளர்கள். இந்த மூடர் கூட்டம் வெகு விரைவிலேயே தங்களின் தவறை உணருவார்கள். தைவான் சீனர்களின் கையை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. உய்குர் மக்களுக்கும் கூடிய விரைவிலேயே நல்லாட்சி மலர வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!