Followers

Sunday, July 31, 2011

ரமலானை வரவேற்போம்!

ரமலானை வரவேற்போம்!

ஆண்டான் - அடிமை, தலையில் பிறந்தோன் – காலில் பிறந்தோன், கருப்பன்- சிவப்பன் என்ற அடிமை விலங்கை உடைத்தெறிந்து ஆதமின் மக்கள் அனைவரும் சமமே என்று முழங்கிய திருமறைக் குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.

பெண் சிசுவை உயிருடன் புதைத்து, பெண் இனத்திற்கு ஆன்மா உண்டா ? என்று ஆய்வுக்குட்படுத்திய பெண்ணடிமைத் தனத்தை உடைத்தெறிந்து ஆணும் - பெண்ணும் ஓரினமே என்று முழங்கிய நீதமிகு குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.

நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்து மனிதனை மனிதனாக வாழச் செய்ய நேர்வழிக் காட்டிய மகத்துவமிக்க குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் நெருங்கி விட்டது.

நிரந்தர மறுமை வாழ்வின் இன்பத்தை மறந்து நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு மறுமை வாழ்வின் இன்பத்தை நிணைவூட்ட நெருங்கி விட்டது ரமளான் மாதம்.

கல் நெஞ்சை கரையச் செய்து இறக்க குணத்தை வளரச் செய்த ஈகை மிகு மாதம் நெருங்கி விட்டது.

பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகள் குவிக்கப்படும் பாக்கியமிக்க மாதம் நெருங்கி விட்டது.

நரக வாயில்கள் பூட்டப்பட்டு சுவன வாயில்கள் திறக்கப்படும் நன்மையின் மாதம் நெருங்கிவிட்டது.

அமல்களின் வாசல்கள் திறக்கப்படும் அருள் மிகு மாதம் நெருங்கி விட்டது.

அருள்மிகு மாதத்தில் அமல்கள் அதிகம் செய்து அளவற்ற அருளாலனின் நிகரற்ற அன்பை அடைந்து கொள்வோம் வாருங்கள்.


சவுதியைப் பொறுத்த வரையில் ரமலானை மிகச் சிறப்பாக வரவேற்பார்கள். வேலை நேரம் 6 மணி நேரமாக குறைக்கப்படும். சில வேலை இடங்களில் இரவு வேலை மாத்திரமே! எங்கள் அலுவலகத்தைப் பொறுத்த வரை இரவு தொழுகை முடிந்தவுடன் 10 மணிக்கு வேலை ஆரம்பித்தால் காலை 4 மணி வரை வேலை தொடரும். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு காலை தொழுகையை முடிப்போம். அதன் பிறகு நீண்ட ஒரு தூக்கம். 11 மணிக்கு எழுந்து குளித்து விட்டு மதிய தொழுகை. சிறிது நேரம் இணையத்தில் காரசார விவாதம். அதன் பிறகு ஒரு சிறிய தூக்கம். பிறகு மாலை நேர தொழுகைக்கு பிறகு நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் என்று ஒரு மாதம் போவதே தெரியாது.

சிலர் பள்ளிக்கு சென்றும் நோன்பு திறப்பார்கள். அங்கும் அரசு செலவிலும் சில தனியார் கம்பெனிகளும் நோன்பு திறக்கும் ஏற்பாடுகளை அனைவருக்கும் இலவசமாக செய்து கொடுப்பார்கள். மொத்தத்தில் ரமலான் வந்து விட்டால் சவுதியில் உள்ளவர்களின் வாழ்க்கை முறையே மாறி விடும்.

நோன்பின் சட்டங்களை அறிய இங்கு செல்லவும்

Friday, July 29, 2011

இஸ்லாமிய கருத்தை வளைக்கும் சம்சுதீன் காசிமி!!இஸ்லாமிய கருத்தை வளைக்கும் சம்சுதீன் காசிமி!!

சென்னையில் மெக்கா பள்ளியின் இமாமாக பணிபுரிந்து வரும் இந்த நபர் தனக்கும் கூட்டம் சேர வேண்டும் என்ற ரீதியில் அவ்வப்போது தடாலடியாக ஏதாவது உளருவது வழக்கம். முன்பு உஸாமா பின்லாடனுக்கு தொழுகை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். சமீப காலமாக இந்தியாவில் உள்ள ஜனநாயக நடைமுறை இஸ்லாத்துக்கு விரோதமானது என்ற ரீதியில் பேச ஆரம்பித்து இருக்கிறார். அதற்காக இவர் எடுத்து வைக்கும் ஆதாரம் என்ன என்பதையும் அது எதற்காக சொல்லப்பட்டது என்பதையும் பார்ப்போம்.

'நான் என் இறைவனிடம் வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் இறைவனுக்கே தவிர வேறு எவருக்கும் இல்லை'
-குர்ஆன் 6:57

'அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே! நீங்களும் உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள். இது குறித்து இறைவன் உங்களுக்கு எந்த சான்றையும் அருளவில்லை. அதிகாரம் இறைவனைத் தவிர எவருக்கும் இல்லை. 'அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது' என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.'
-குர்ஆன் 14:40

ஆட்சி அதிகாரம் சட்டமியற்றும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்ற ரீதியில் மேற்கண்ட வசனத்தின் கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன. ஆனால் ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் மனிதர்களுக்கு உண்டு என்று இந்திய ஜனநாயகம் கூறுகிறது. எனவே ஜனநாயகம் குர்ஆனுக்கு எதிரானது. இறைவனின் அதிகாரத்தைப் பறித்து மனிதர்களுக்கு கொடுப்பதால் மறைமுகமான இணை வைப்பை இது சேரும் என்பது இவரின் வாதம்.

இந்த வாதம் ஏதோ புதிதாக வைக்கப்படுவதாக எண்ண வேண்டாம். ஜனாதிபதி அலி அவர்களின் காலத்திலேயே இப்படி ஒரு வாதம் வைக்கப்பட்டு அது அலி அவர்களாலேயே முறியடிக்கவும் பட்டது. அலியின் மறைவுக்கு பிறகு திரும்பவும் இதே கொள்கையை கொண்டு வந்து குழப்பம் விளைவித்ததால்தான் ஷியா என்ற பிரிவு உருவாக காரணமானது.

இந்த குழப்பங்கள் ஏன் வந்தது என்று சிறிது விளக்கமாக பார்ப்போம். இறைவன் தனக்கென்று சில அதிகாரங்களை வைத்துள்ளான். தான் படைத்த மனிதர்களுக்கு சில அதிகாரங்கள் அந்த இறைவனே கொடுத்திருக்கிறான். மனிதர்களுக்கு மத்தியில் பிரச்னை ஏற்படும் போது மனிதர்களைக் கொண்டு தீர்ப்பு வழங்கிக் கொள்ளுமாறு படைத்த இறைவனே கட்டளையிடுகிறான். இதற்கு ஆதாரமான வசனங்களைப் பார்ப்போம்.

'கணவன் மனைவியருக்கிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான்'
-குர்ஆன் 4:35

தம்பதிகளுக்கு மத்தியில் உலக பிரச்னைகளில் ஏதும் கருத்து வேறுபாடு வந்தால் நடுவர்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குமாறு இறைவன் கட்டளையிடுகிறான். இது இறைவனின் கட்டளைக்கு மாற்றமாகாது.

'அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும் மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான்.'
-குர்ஆன் 4:59

'அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்'
-குர்ஆன் 5:42

'ஒரு சமுதாயத்தின் ஆடு இன்னொரு சமுதாயத்தின் விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும் சுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்'
-குர்ஆன் 21:79

'நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்து சண்டையிடுங்கள். அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள். நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.'
-குர்ஆன் 49:9

மேலே கூறப்பட்ட அனைத்து வசனங்களும் மனிதர்களுக்கிடையே பிரச்னைகள் வந்தால் மனிதர்களைக் கொண்டே நியாயமான தீர்ப்பு வழங்கச் சொல்லி இறைவன் அனுமதியளிக்கிறான். இப்படி தீர்ப்பளிப்பது இறைவனின் கட்டளைக்கு மாற்றமாகாது. மேலும் பல வசனங்கள் மனிதர்களை சிந்திக்க சொல்கிறது. சிந்தனையின் மூலம் மனிதன் நல்லது எது கெட்டது எது என்பதை விளங்க முடியும் என்பதாலேயே மனிதர்களை சிந்தித்து செயல்பட சொல்கிறான்.

இறைவனுக்குரிய அதிகாரம் என்று வரும்போது மறுமை வாழ்வுக்கான நல்ல அமல்களான தொழுகை, நோன்பு, ஏழை வரி, ஹஜ், போன்ற கிரியைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் அடங்குகிறது. இந்த சட்டங்கள் அனைத்தும் குர்ஆனில் பாதுகாக்கப்பட்டும் இருக்கிறது. அந்த சட்டங்களில் சென்று யாரும் கை வைத்தால்தான் நாம் ஆட்சேபணை எழுப்ப முடியும்.

மறுமையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை காட்டவே இறைவன் நபியாக முகமது நபியை அனுப்புகிறான். மறுமைக்கு தொடர்பில்லாத உலக விஷயங்களை செய்து காட்ட அவர்கள் அனுப்பப்படவில்லை. அந்த அறிவும் ஞானமும் அதிகாரமும் இயல்பாகவே மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை ஒரு சம்பவத்தின் மூலம் கூட அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் அவர்கள் மதினா வந்த போது மதினாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரிச்சை மரத்தை பயிரிட்டு தொழில் செய்து வந்த மதினாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் அவர்கள் 'இதைச் செய்யாதிருக்கலாமே' எனக் கூறினார்கள். மதினாவாசிகள் அவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். அந்த வருடம் மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் அவர்கள் 'உங்கள் பேரிச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது'? என்று கேட்டனர். நபிகள் நாயகம் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் அவர்கள் 'உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.
-நூல் முஸ்லிம் 4358

'நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதும் கட்டளையிட்டால் அதைக் கடைபிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் பின் பற்ற வேண்டிய அவசியம் இல்லை'
-நூல் முஸ்லிம் 4357

'நான் எனது கருத்தைக் கூறினேன். அதற்காக என்னை பிடித்து விடாதீர்கள். ஆனால் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைபிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன்.'
-நூல் முஸ்லிம் 4356

மேற்கண்ட நபி மொழியில் இறைவனுக்குரிய அதிகாரம் எது மனிதனுக்குரிய அதிகாரம் எது என்பது தெளிவாக விளங்குகிறது. உலகின் ஜனநாயக நாடுகளில் மறுமைக்கான வழிமுறைகளுக்கு எந்த சட்டமும் இயற்றப்படுவதில்லை. எப்படி தொழுவது என்பதை நமது அரசாங்கம் நமக்கு விளக்குவதில்லை. மனிதர்களுக்கு உள்ள அதிகாரங்களை முறைப்படுத்தவே ஜனநாயக அரசுகள் உலகம் முழுவதும் செயல்படுகிறது. பெரும்பான்மை மக்களின் வசதியை முன்னிட்டு சில மார்க்க முரணான சட்டங்களை ஜனநாயக அரசு இயற்றினால் அது போன்ற இடங்களில் மட்டும் நாம் விலகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு எந்நாட்டுக்கும் ஏற்ற சட்டமாக இஸ்லாம் கட்டளை பிறப்பித்திருக்க இந்த மௌலவி மக்களை குழப்ப நினைக்கிறார்.

இப்பொழுது உதாரணத்திற்கு சம்சுதீன் காசிமி ஒரு இடத்தை வாங்குகிறார். வாங்கியவரிடம் பணத்தைக் கொடுத்து ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டவுடன் சம்சுதீன் காசிமிக்கு அந்த இடம் இஸ்லாமிய சட்டப்படி உரிமையாகி விடும். அதோடு நின்று கொள்வாரா...

உடனே சம்பந்தப்பட்டவரை ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு அழைத்து செல்வார். அங்கு சென்று அந்த இடத்துக்கு தக்க வாறு பத்திரங்ளை வாங்குவார். சாட்சிகளை தயார் பண்ணுவார். ரிஜிஸ்டரும் செய்வார். இவை எல்லாம் ஜனநாயக நாடான நமது நாடு போட்ட சட்டங்கள். இங்கு மட்டும் சம்சுதீன் காசிமி போன்றவர்கள் ஜனநாயக சட்டத்தை அமுல்படுத்த துடிப்பார்கள். இங்குதான் இவர்களின் இரட்டை வேடத்தை நாம் பார்க்க முடியும்.

அதேபோல் இஸ்லாம் தாடி வைக்க சொல்கிறது. ஓ.கே. ஆனால் இவர் தலையில் பெண்களைப் போன்று முக்காடு போட்டுக் கொண்டு அடிக்கடி அதை சரி செய்து கொண்டிருப்பது முகமது நபி சொன்ன வழிமுறையா? இல்லை. அவருக்கு அது அழகாக தோன்றுகிறது. தன்னை ஒரு புரோகிதர் என்று மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்ற மமதையில் சிகப்புத் துண்டை அணிந்து கொள்கிறார். இதை யாரும் குறை சொல்லவில்லை. ஏனெனில் உலக விஷயத்தில் மனிதனுக்கு எது அழகு என்று நினைக்கிறானோ(இஸ்லாமிய சட்டத்துக்கு பங்கம் வராமல்) அந்த உடையை அணிய அனுமதிக்கப்படுகிறது.

இதே போன்றுதான் கல்வியில் இட ஒதுக்கீடு, போலீஸ் அராஜகம், மதக்கலவரம், ஆட்சியாளரின் நிர்வாக குளறுபடிகளைக் கணடித்து சில இயக்கங்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தை நடத்துகின்றன. சில இடங்களில் கோரிக்கைகளில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. இங்கு இஸ்லாமிய சட்டங்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை.

இந்த போராட்டங்களால் இஸ்லாமியர்கள் கல்வி வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவீதத்தைப் பெற்று பலனடைந்திருக்கிறார்கள். அவர்களைப் பாராட்ட வேண்டாம். தூற்றாமலாவது இருக்க வேண்டும் இந்த சம்சுதீன் காசிமி.

அரசாங்கம் கள்ளுக் கடையை நடத்துகிறது. விரும்பியவர்கள் சென்று குடிக்கலாம். என்னையோ அல்லது சம்சுதீன் காசிமியையோ அவசியம் குடித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? முடியாது. ஆனால் பூரண மது விலக்கை கொண்டு வர மற்ற மக்களோடு சேர்ந்து ஜனநாயக முறையில் போராட முயற்ச்சிக்க வேண்டும். ஜனநாயக அரசியலில் உள்ள குறைகளை களைய முயற்ச்சிக்க வேண்டும்.

அடுத்து இவர் பாலஸ்தீன பிரச்னையை நம் நாட்டோடு முடிச்சு போடுகிறார். சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்கி இஸ்ரேலும், அமெரிக்காவும் அராஜகம் பண்ணுவதை போராளிகள் எதிர்க்கின்றனர். அக்கிரமக்கார ஆட்சியில் ஹமாஸ் போன்ற ஒரு அமைப்பு இருந்தால்தான் இஸ்ரேலை ஒரு வழிக்கு கொண்டு வர முடியும். நமது நாடு தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்டு பல சுதந்திரங்களை அனைத்து மக்களும் அனுபவித்து வரும் நாடு. இங்கு ஜனநாயக பாதையில் சில குளறுபடிகள் இருந்தால் அதை சாதிவீகமான போராட்டத்தின் மூலமே சரி கண்டு விட முடியும்.

இந்த ஜனநாயக முறை தவறென்றால் வேறு எந்த வழி முறை என்பதையும் சம்சுதீன் தெளிவுபடுத்த வேண்டும். அபுபக்கர், உமர் காலங்களிலேயே உறுதிமொழி (பைஅத்) நாட்டு மக்கள் ஆட்சியாளரிடம் செய்த வழிமுறையும் உண்டு. இந்த முறையும் தேர்தலில் பின்பற்றப்படும் வழிமுறையை ஒத்தே இருக்கிறது.

எனவே நாலு வீட்டுக்கு போனோமா...நாலு பாத்திஹா ஓதி குடும்பத்தை ஓட்டிணோமா என்ற ரீதியில் காலத் தள்ளும் சம்சுதீன் காசிமி போன்றவர்கள் தேவையில்லாத சமாசாரங்களில் மூக்கை நுழைத்து அவமானப்பட வேண்டாம். மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் இஸ்லாத்தை இத்தனை நாள் மூடி வைத்தது போதும். இனி உங்களைப் போன்ற உலகம் தெரியாத மார்க்க அறிஞர்கள் இஸ்லாத்துக்கு தேவையில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை சரியான திசையில் இஸ்லாம் சென்று கொண்டிருக்கிறது. அதைக் குழப்பவேண்டாம் என்று மட்டும் சம்சுதீன் காசிமிக்கு சொல்லிக் கொள்கிறோம்.

சம்சுதீன் காசிமியின் அரைகுறை பேச்சை கேட்டுக் கொண்டு இஸ்லாத்தை சரியாக விளங்காத சில இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே சம்சுதீன் காசிமி போன்றவர்களின் நாட்டுக்கு எதிரான விஷமக் கருத்துகளை இனியும் பரப்பாமல் தடுக்க வேண்டியது மக்கா மஸ்ஜிதின் நிர்வாகிகளின் பொறுப்பு. அரசும் இவரது பேச்சை கண்காணிக்க வேண்டும்.

Thursday, July 28, 2011

நார்வே வன்முறையும் இந்தியாவின் இந்துத்வாவும்!
நார்வேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மனித குல விரோதியான ஆண்டர்ஸ் பிரிவிக் தனது கொலைகளை இன்றும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவனது தற்போதய விசாரணையில் நமது நாட்டு இந்துத்வா அவனது காட்டுமிராண்டி செயலுக்கு எந்த அளவு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளான்.

இந்துத்வாவாதிகளின் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களோடு இணையம் மூலமாக தொடர்பு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது செயல்களுக்கு ஆதாரமாக இந்தியாவில் நடக்கும் இந்துத்வாவாதிகளின் செயல்களே உந்துதல் என்கிறான்.

'உண்மையின் உரை கல்' என்ற பெயரோடு தினம் பொய்களை அவிழ்த்து விடும் தின மலர் இந்த செய்தியை கண்டு கொள்ளவே இல்லை. யாராவது ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி இந்த செயலை செய்திருந்தால் தினமும் தலைப்பு செய்திகளாக போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்.

ஒரு வகையில் இந்த நார்வே கொலைகாரனின் ஒரு செயலை பாராட்ட வேண்டும். கொலையை செய்தது தான்தான் என்று வெளிப்படையாக அறிவித்ததால் இஸ்லாமியர்களின் பெயர் காப்பாற்றப்பட்டது. நமது நாட்டின் முன்னணி பத்திரிக்கைகளில் ஒன்றான இந்துவில் வந்த கட்டுரையை அப்படியே தருகிறேன். 'நாங்கள்தான் இந்த தேசத்தை காப்பாற்ற பிறந்தவர்கள்' என்று கூக்குரலிடும் இந்துத்வாவின் உண்மை முகத்தை ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Norwegian mass killer Anders Behring Breivik hailed India's Hindu nationalist movement as a key ally in a global struggle to bring down democratic regimes across the world.

‘2080: A European declaration of independence' lays out a road map for a future organisation, the Justiciar Knights, to wage a campaign that will graduate from acts of terrorism to a global war involving weapons of mass destruction — aimed at bringing down what Breivik calls the “cultural Marxist” order.

India figures in a remarkable 102 pages of the sprawling 1,518-page manifesto. Breivik's manifesto says his Justiciar Knights “support the Sanatana Dharma movements and Indian nationalists in general.” In section 3.158 of the manifesto, he explains that Hindu nationalists “are suffering from the same persecution by the Indian cultural Marxists as their European cousins.”

“Appeasing Muslims”

The United Progressive Alliance government, he goes on, “relies on appeasing Muslims and, very sadly, proselytising Christian missionaries who illegally convert low caste Hindus with lies and fear, alongside Communists who want total destruction of the Hindu faith and culture.”

Even though Hindus who are living abroad “get an eagle's view of what's happening in India, Indian Hindu residents don't see it being in the scene.”

Breivik's manifesto applauds Hindu groups who “do not tolerate the current injustice and often riot and attack Muslims when things get out of control,” but says, “this behaviour is nonetheless counterproductive.”

“Instead of attacking the Muslims, they should target the category A and B traitors in India and consolidate military cells and actively seek the overthrow of the cultural Marxist government.”

“It is essential that the European and Indian resistance movements learn from each other and cooperate as much as possible,” he concludes. “Our goals are more or less identical.”

Lists websites

Breivik lists the websites of the Bharatiya Janata Party, the Rashtriya Swayamsevak Sangh, the National Volunteers' Organisation, the Akhil Bharatiya Vidyarthi Parishad and the Vishwa Hindu Parishad as resources for further information.

The manifesto pledges military support “to the nationalists in the Indian civil war and in the deportation of all Muslims from India.” This is part of a larger campaign to “overthrow of all western European multiculturalist governments” and evict “U.S. military personnel on European soil.”

India is one of several countries — including Russia, the Philippines, China and Thailand — where Breivik hopes his successors will fight.

He uses the work of historians K.S. Lal and Shrinandan Vyas to point to the threat posed by Islam to Europe, saying their work has established that millions of Hindus were killed in a genocide during 1000-1525 AD. N.S. Rajaram, another historian, is quoted as saying India's “political class have been so debilitating that they continue to live in a state of constant fear.”

Breivik's manifesto envisages that this future organisation would hand out a “multi-cultural force medal,” which would be awarded for “military cooperation with nationalist Hindu, Buddhist, Jewish and/or atheist forces (non-European) on Hindu, Buddhist or Jewish territory. These efforts must be directed against Jihadi or cultural Marxist forces, personnel or interests.”

The medals would include a “Liberation of India Service Medal,” which would be awarded for “assisting Indian nationalist forces to drive out Islam from Indian territory.

Breivik's Indian-made combat badges, revealed by The Hindu as having been contracted to a workshop in Varanasi, were the first in this series of battle decorations.
His manifesto acknowledges that lives will be lost in the war, and calls for the organisation to “provide and subsidise a standard edition of the Justiciar Knight tombstone” for those who fell in battle.

Since a “European tombstone carver, preferably specialised in traditional tombstone architecture, is likely to charge more than 5000-10000 Euro in order to create the stone,” Breivik suggested that “producers in low-cost countries should be contacted for the task of creating one or multiple stones in the future.”

He acknowledged that this “might sound hypocritical considering the fact that cultural conservatives in general oppose Indian or Chinese membership in [the] WTO and the fact that we generally prefer in-sourcing as many industries as possible. However, conserving our funds is a central part of our struggle.”

Even though Breivik's Knights would fight shoulder to shoulder with Hindu nationalists, his vision for their rights in a post-revolutionary Europe is limited. The manifesto envisages the creation of a “servant class,” made up of non-Muslim individuals from Bangladesh, Pakistan and India.

“During their stay,” the manifesto envisages, “they will work 12 hours a day for the duration of their contracts (6 or 12 months) and are then flown back to their homelands.” “These individuals,” it goes on, “will live in segregated communities in pre-defined areas of each major city.”

Keywords: Norway terror attack, Oslo bombing, Utoya island massacre, Anders Behring Breivik, Hindutva
July, 26,2011-The Hindu Daily

JULY 28, புதுடெல்லி: நார்வேயில் இளைஞர்கள் முகாமில் நுழைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி, 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் (manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.

இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான். நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080: ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.

அதில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களிடம் இருந்து நிறைய முஸ்லிம் விரோத கொள்கைகளை தான் பெற்று கொண்டதாக கூறியுள்ளான். முஸ்லிம்களை இந்தியாவை விட்டு துரத்துவதற்காக ஹிந்துத்துவா நடத்தும் போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவ ரீதியிலான ஆதரவை தெரிவித்துள்ளான்.

இவனது 1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ஒதுக்கியுள்ளான். மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவை எப்படி ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஹிந்துத்துவா செயல்படுகின்றன என்பது பற்றியும் விரிவாக தெரிவித்துள்ளான்.

மேலும் இவன் ஹிந்துதுவாவுக்கு சில ஆலோசனைகளையும் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறான். அதாவது இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு ஹிந்து நாட்டை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை துரத்த வேண்டும் இல்லை மதம் மாற்றவேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளான்.இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான்.

ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் ஹிந்துத்துவா மற்றும் வலதுசாரி கிறிஸ்தவ இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய மதசார்பற்ற சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் கொண்ட ஒரு திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.

இந்த லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவாவாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் குரு கோல்வால்கரின் ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. மேலும் அரசியல் கோமாளி சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ. பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
-http://www.sinthikkavum.net/2011/07/july-76-manifesto.html

Monday, July 25, 2011

நிழல் நிஜமாகிறது - நரேந்திர மோடி!ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஒரு பத்திரிக்கையாளரின் முன்னால் பதிலளிக்க முடியாமல் திணறுவதைத்தான் இந்த காணொளியில் காண்கிறோம். தன்னை ஆட்சியாளனாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் செய்து விட்டு சிறுபான்மை முஸ்லிம்களை திட்டம் போட்டு கொலை செய்த மோடி அரசாங்கம் முடிவில் சாதித்தது என்ன? தான் சார்ந்த இந்து மதத்துக்காவது ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்க முடிந்ததா நரேந்திர மோடியால்.

கேவலம் ஐந்து வருடம் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்ற அற்ப சுகத்துக்காக தன் மக்களையே கொலை கொள்ளை கற்பழிப்புகளில் ஈடுபட வைத்த நரேந்தி மோடி இந்திய ஜனநாயகத்தின் ஒரு கரும்புள்ளி என்றால் மிகையாகாது.

பாஜக வின் ஆதரவால் சட்டத்தின் பிடியில் இன்று தப்பி விட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெறுவது நரேந்திர மோடிக்கு நடந்தே தீரும். இந்திய சட்டங்களில் இருந்து ஒருக்கால் தப்பித்தாலும் நாளை இறைவனின முன்னிலையில் இறந்த அனைத்து மனிதர்களும் உயிர்ப்பிக்கப்பட்டு அவர்களைக் கொண்டு நரேந்திர மோடி பழி தீர்க்கப்படுவதை நாம் அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.

'நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது இறைவன் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்கு கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.'
-குர்ஆன் 4:93


மருத்துவ துறை மாணவனுக்காக முடிந்தால் உதவலாமே!

எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?

இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவமுடியுமா?என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன.கல்விக்கண் திறந்து கொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆக வேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

நன்றி: இந்நேரம்.காம்

இது போன்று திறமையிருந்தும் படிக்க வசதியில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது நமது கடமை. வசதியுடையவர்கள் அந்த மாணவனுக்கு உதவலாம். என்னால் முடிந்த உதவியையும் தருகிறேன். பேங்க் கணக்கு விபரங்களை யாரும் அனுப்பி தந்தால் உதவியாக இருக்கும்.

Sunday, July 24, 2011

தாய்நாட்டுக்காக மறைமுகமாக உதவிடும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்!

சென்னை:வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது கடந்த 7 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகில், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புவோரில் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.உலகில், 190 நாடுகளில், 2கோடியே 70 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பல்வேறு பணிகளில் ஈடுபட்டு, திரட்டும் வருவாயில், குறிப்பிடத்தக்க தொகையை, இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கு அனுப்புகின்றனர்.

இந்தியாவில்கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில்வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக, கேரளாவில் இருந்து பணி வாய்ப்புதேடி அரபு நாடுகளுக்கு செல்கின்றவர்கள், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புகின்றனர்.அதுபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் நாடுகளுக்கு செல்லும் பஞ்சாபியர்களும், அதிகத் தொகையை தாயகத்திற்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு உலகில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் 162 சதவீதம் உயர்ந்துள்ளதாக, உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டுவெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு 2,100கோடி டாலர் அனுப்பி இருந்தனர். இது, சென்ற 2010ம் ஆண்டு 5,500கோடி டாலராக (2 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.

உலகில், இந்தியர்களைப்போல், எந்த ஒரு வெளிநாட்டவரும், தங்கள் தாயகத்திற்கு இந்த அளவிற்கு பணம் அனுப்பியதில்லை.எனவே, வெளிநாடுகளில் வசிக்கும் அயல்நாட்டவர், தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளதாக, உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 8 ஆண்டுகளில் (2009ம் ஆண்டு நீங்கலாக), வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004ம் ஆண்டு, வெளிநாடு வாழ்இந்தியர்கள், இந்தியாவிற்கு அனுப்பிய தொகை, 1,875கோடி டாலராக இருந்தது. இது, 2005ம் ஆண்டு 2,212கோடி டாலராகவும், 2006ம் ஆண்டு 2,833கோடி டாலர் என்ற அளவிலும்அதிகரித்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தி யர்கள், தாயகத்திற்கு 3,721கோடி டாலர் அனுப்பியுள்ளனர். இது, 2008ம் ஆண்டு 4,994கோடி டாலராகவும், 2009ம் ஆண்டு 4,925கோடி டாலர் என்ற அளவிலும்உயர்ந்துள்ளது. 2008 ஆண்டு, உலக பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால், 2009ம் ஆண்டு இந்தியர்கள் அனுப்பிய தொகை சற்றே குறைந்தது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம், அவர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரவளர்ச்சிக்கும் மறைமுகமாக உதவுகிறது.

இந்தியாவில் ரியல் எஸ்டேட், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அயல் நாட்டு இந்தியர்களின் முதலீடு குவிந்து வருகிறது.அதனால், வெளிநாடுகளில் பணியாற்றி விட்டு, இந்தியா திரும்பு வோரின் உடமைகளை பாதுகாக்கவும், ஆதரவளிக்கவும்தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசி யம்.'இத்தகையோருக்கு வழி காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான், 'ரிடர்ன் டுஇந்தியா டாட் காம்' இணைய தளம்' என்கிறார் எனர்கேட்நிறுவன தலைமை செயல்அதிகாரி ரகு ராஜகோபால்.இந்த இணையதளம், அமெரிக்காவில் இருந்து திரும்புவோரின் உடைமைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்துசேர்ப்பது முதல், பணிவாய்ப்பு, குடியிருப்பு உள்ளிட்ட அனைத்துவசதிகள் வரை செய்து தருகிறது.இதனால், இந்தியா திரும்புவோர், எவ்வித சிரமமுன்றி தாயகத் தில் வாழலாம் என்கிறார் ரகு ராஜகோபால்.

வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாய்நாடு திரும்புவதாக கூறப்படுகிறது. அதே சமயம், இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 6 முதல் 8 லட்சம்பேர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.உலகளவில், சீனர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சீனா, ஹாங்காங்,தைவான் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 3கோடியே 50 லட்சம்பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதனால், வெளிநாடு வாழ் அன்னியர் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையில் ஹாங்காங்,தைவான் நாடுகளைசேர்க்கக் கூடாது என்று புள்ளியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அவ்வாறுசேர்த்தால், இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்த்து ஒன்றுபட்ட இந்தியாவாக கணக்கிடவேண்டும். இந்த கணக்கீட்டின் படி, அயல் நாடுகளில் வாழ்வோர் பட்டிய லில், இந்தியா முதலிடத்தை பெறும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவது இடத்தில் சீனாகடந்த 2010ம் ஆண்டு, தாயகத்திற்கு அதிக தொகை அனுப்பியநாட்டவரில் சீனர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.வெளிநாடு வாழ்சீனர்கள், தங்கள் நாட்டிற்கு 5,100கோடி டாலர், அனுப்பி யுள்ளனர்.அடுத்த இடங்களில், மெக்சிகோ (2,260கோடி டாலர்),பிலிப்பைன்ஸ் (2,130கோடி டாலர்), பிரான்ஸ் (1,590 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.

-தின மலர்
24-07-2011
-------------------------------------------------------------------------------------
இவ்வளவு தியாகங்களை செய்து பொருளீட்டி நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வைத்திருக்கும் உள் நாட்டு மக்களை நமது தூதரகங்கள் நடத்தும் விதம் கொடுமையானது. படிப்பறிவில்லாத ஒரு சில இந்தியர்களை நமது தூதரகத்தில் வேலை செய்பவர்கள் ஆட்டி வைக்கும் விதம் நமக்கு எரிச்சலை தருகிறது. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? விபரம் புரியாதவனை அன்போடு சொல்லி விளக்குவதை விட்டு விட்டு 'இன்னும் ஆயிரம் வாட்டி சொல்லனுமா? அறிவு இல்லே? இது கூட நான்தான் சொல்லித் தரணுமா?' என்று அந்த மக்களிடம் இவர்கள் எரிந்து விழுவதை சமீபத்தில் நேரிடையாக பார்த்தேன்.

கூலி வேலைக்கும், ஹெல்பராகவும், ஹவுஸ் மேடாகவும் வரும் பல அன்பர்கள் படித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சட்டங்களை விபரமாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொல்ல பல மொழி தெரிந்தவர்களை ரிஷப்சனில் நிறுத்துவதால் அரசுக்கு என்ன நட்டம் வந்து விடப் போகிறது.

அவனது வாழ்நாள் முழுக்க அவனது ரத்தத்தை வரியாக களவாடும் அரசு அவனது தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமல்லவா? ஏதோ ஓர் குக்கிராமத்திலிருந்து வந்த ஒரு தமிழருக்கு ஹிந்தியும் சரியாக தெரியவில்லை. அரபியும் அந்த அளவு சுத்தம் இல்லை. ஹிந்தி மொழி பேசக் கூடியவர்கள் போடும் சத்தத்தில் இன்னும் கூனி குறுகிப் போய் அவர் பவ்யமாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாக இருந்தது. பிறகு நான் சென்று அவருக்கு என்ன தேவை என்பதை அந்த அதிகாரிக்கு விளக்கும் படி ஆனது. ஹிந்தி மொழி படிக்க வேண்டாம் என்று கூச்சல்போடும் நமது திராவிட குஞ்சுகளை இங்கு நினைத்துப் பார்த்தேன்.

“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா?”

என்ற கலைஞரின் கதை இன்று பலரின் நிஜ வாழ்க்கையாகியிருக்கிறது. வெளிநாடு வந்தவர்களில் 50 சதவீதமானோர் சந்தோஷத்திலும்(ஓரளவு படிப்பு தொழில் திறமையோடு வருபவர்கள்) மற்ற 50 சதவீதமானோர் சிக்கலிலும்(படிப்பும், தொழில்கல்வியும் இல்லாதவர்கள்) வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

போனது போகட்டும். இனி வரும் காலங்களிலாவது படிப்பையும் தொழிற் கல்வியையும் கற்றுக் கொண்டு சிறந்த ஊதியத்தில் வந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் நன் மக்களாக மாற வேண்டும். அதற்கு அரசாங்கம் தன்னால் ஆன முயற்ச்சிகளையும் எடுக்க வேண்டும்.

Sunday, July 17, 2011

விமானப் பயணத்தின் சில நினைவுகள்!விமானப் பயணத்தின் சில நினைவுகள்!

பயணங்களிலேயே கொஞ்சம் காஸ்ட்லியான பயணம் விமானப் பயணமே! அதை விடக் காஸ்ட்லியாக சந்திர மண்டலத்துக்கு செல்ல இப்பொழுதே புக்கிங் நடந்து வருவதாகக் கேள்விப் பட்டேன். நான் பயணித்ததில் அதிகம் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில்தான். டிக்கெட் புல்லாகி விட்டால் அவ்வப்போது ஏர் இந்தியா, ஏர் லங்கா பிளைட்களை நோக்கி ஓடுவதும் உண்டு.

இதில் சவுதியாவில் பயணிக்கும் போது ஒரு நிம்மதி ஏற்படும். விமானம் கிளம்பும் போதே பயண பிரார்த்தனை ஒன்றை ஒவ்வொரு முறையும் ஓதச் செய்வார்கள். விமானப் பயணத்திலும் இஸ்லாத்தைக் கடைபிடிக்கும் சவுதியா நிர்வாகத்தினருக்கு ஒரு சல்யூட்.

நபிகள் நாயகம் அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை “அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர்” எனக் கூறுவார்கள். பின்னர் ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ்லீ அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ்லீ எனக் கூறுவார்கள்.

இதன் பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் - 2392

சவுதியாவில் பிரயாணம் செய்யவே அதிகமான பயணிகள் விரும்புகின்றனர். நேரம் தவறாமை. வேலை நிறுத்த போராட்டம் இல்லாத ஒரு ஒழுங்கு. சிறந்த பணிவிடை. தூய்மை என்று பல காரணங்களால் சவுதியாவுக்கு என்றுமே கிராக்கிதான். 2009 வருடத்தை காட்டிலும் போன வருடம் பயணிகள் அதிகம் சவுதியாவை பயன்படுத்தியிருக்கிறார்கள். 14 சதவீதம் போன வருடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

8712668 பயணிகளை 68753 விமானங்களில் முந்திய வருடம் பயணிக்க வைத்தது சவுதியா. அதே போன வருடம் 9915578 பயணிகளை 73544 விமானங்களில் பயணிக்க வைத்து சாதனை புரிந்துள்ளது சவுதியா. பயணிகளின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்க விமானங்களின் எண்ணிக்கையோ 7 சதம்தான் அதிகரித்துள்ளது. லாபத்தில் கொழிக்கிறது சவுதிஅரேபியன் ஏர்லைன்ஸ்.

இது இவ்வாறு இருக்க நமது நாட்டு ஏர்இந்தியாவின் நிலையையும் சற்று பார்ப்போம். அளவுக்கதிகமான சம்பளம், தேவையற்ற வேலை நிறுத்தம், வேலை செய்பவர்களிடம் அர்ப்பணிப்புத் தன்மை இல்லாதது என்று பல காரணங்களால் இன்று ஏர்இந்தியா மிகவும் அபாயகரமான சூழலுக்கு சென்று கொண்டிருக்கிறது. 'எனது தாய் நாட்டு விமானம்' என்று பெருமையோடு பயணம் செய்ய மனம் விரும்புகிறது. ஆனால் ஏர் இந்தியாவின் சேவைகளில் உள்ள குளறுபடிகளால் பலரும் சவுதியாவையும், ஏர்லங்காவையும்தான் நாடுகிறார்கள். தற்போதய ஏர் இந்தியாவின் நிலையை நேற்றய தினமலரின் செய்தியை பார்ப்போம்.
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனம், 67 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு மற்றும் கடன் சுமையால் தத்தளிக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, 2007ம் ஆண்டிலிருந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில், 20 ஆயிரத்து 320 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம், 67 ஆயிரம் கோடி ரூபாய் நிதியிழப்பு மற்றும் கடன் சுமையால் திண்டாடிக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டுக்குள் இந்நிறுவனம், 20 ஆயிரத்து 415 கோடி ரூபாய் கடனை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை இந்நிறுவனம் சந்திக்க நேரிடும் என, ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைச் சமாளிக்க, பங்குகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி உதவ, மத்திய அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சர்களின் உயர்மட்டக்குழு இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
-தின மலர் 16-07-2011

அரபு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நமது நாட்டு மக்களே அதிகம் பணியில் உள்ளனர். தாய் நாட்டுக்கு வருடம் ஒரு முறையும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் போய் வரும் நம் நாட்டவர் அதிகம். நம் நாட்டவர்கள் மட்டுமே ஏர் இந்தியாவை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்நிறுவனத்தை லாப நோக்கில் செயல்பட வைத்து விடலாம். அல்லது நஷ்டத்தில் இயங்கும் இந்நிறுவனத்தை தனியாருக்கு கொடுத்து விடலாம். ஆறே மாதத்தில் தனியாரிடம் கொடுத்தால் லாபமுள்ள தொழிலாக இதனை மாற்றிக் காட்டுவர்.

ஏர்லைன்ஸில் பணிபுரியும் எனது நண்பர் பிரான்ஸிஸிடம் இது பற்றி பேசினேன். 'தேவையற்ற ஆட்கள். அளவுக்கதிமான சம்பளம், நிர்வாகக் குறைபாடு இவைகளே ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்க காரணம்' என்கிறார். அரசு பேசாமல் தனியாரிடம் ஏர் இந்தியாவை விற்று விடுவதே நலம் என்கிறார்.

சவுதியா அதிகம் லாபம் சம்பாதிக்கும் வழித்தடங்களில் ஒன்று ரியாத்-தம்மாம்-சென்னை. எந்த நேரமும் இந்த வழித்தடத்தில் டிக்கெட் கிடைப்பது அரிதாகவே இருக்கும். எல்லாமே அட்வான்ஸ் புக்கிங். கர்நாடக, கேரள மாநிலத்தவர் அதிகம் பேர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்கின்றார்கள். நமது ஏர் இந்தியா ஏன் இந்த வழித் தடங்களில் விமான சேவைகளை நடத்துவதில்லை? சவுதியாவை பார்த்தாவது பாடம் படித்துக் கொள்ள வேண்டாமா?

மன்மோகன் சிங்குக்கு சோனியாவை தாஜா பண்ணவே நேரம் சரியாக இருக்கிறது. நரேந்திர மோடிக்கு முஸ்லிம்களை எப்படி வம்புக்கிழுத்து ஒரு கலவரத்தை உண்டு பண்ணி இந்து ஓட்டுக்களை தக்க வைப்பது என்ற குறி. ராமருக்கு கோவில் அதுவும் ஒரு பள்ளி இருந்த இடத்தை அபகரித்து கட்டிவிட்டால் இந்தியா முன்னேறி விடும் என்பது அத்வானியின் எண்ணவோட்டம். நிலைமை இப்படி இருக்க... இந்த அரசியல் வாதிகளுக்கு நாட்டைப் பற்றிய கவலை வருமா என்ன?

Saturday, July 16, 2011

வரதட்சணை கொடுமை - ஓர் ஆய்வுவரதட்சணை கொடுமை - ஓர் ஆய்வு

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை:

வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.
-----------------------------------------------------------

திருமணமான 4 மாதத்தில், வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தீயில் கருகி இறந்துள்ளார். கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவொற்றியூர் கலைஞர்நகர் 8வது தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (27). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சியாமளாதேவி (25). இவர்களுக்கு கடந்த ஜனவரி 27ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 25 பவுன் நகை, பைக், வீட்டு உபயோக பொருட்களை சியாமளாவின் பெற்றோர் சீதனமாக கொடுத்தனர்.

இந்நிலையில், ரூ.2 லட்சமும், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றை பெற்றோரிடமிருந்து வாங்கி வருமாறு சியாமளவை கணவர் யுவராஜூம், அவரது குடும்பத்தினரும் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் பெற்றோர் வீட்டுக்கு வந்த சியாமளா, தந்தை செல்வராஜிடம் இதுபற்றி கூறி அழுதுள்ளார். ‘தற்போது பணம் இல்லை. இன்னும் ஓரிரு மாதத்தில் ஏற்பாடு செய்கிறேன்’ என்று மகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார் செல்வராஜ்.

கணவன் வீட்டுக்கு சென்ற சியாமளா, கடந்த 3ம் தேதி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக, யுவராஜ் போலீசாரிடம் கூறினார். இது குறித்து, சியாமளாவின் தந்தை செல்வராஜ் சாத்தாங்காடு போலீசில் கொடுத்த புகாரில், “என் மகளை அவரது கணவர் யுவராஜ், மாமனார் மாரியப்பன், மாமியார் சுசிலா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள். என் மகள் சாவில் மர்மம் உள்ளது” என்று கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, யுவராஜை கைது செய்தனர். அவரது பெற்றோரை தேடுகின்றனர்.--தினமும் படிக்கும் வழக்கமான செய்திகளில் ஒன்று

---------------------------------------------------------

இன்று சமூகத்தில் படித்தவர்கள் முதல் படிக்காத பாமரன் வரை சாதி மத பேதம் இல்லாமல் செய்யும் ஒரு சட்ட விரோத செயல் இந்த வரதட்கணை. எவ்வளவுதான் தவிர்க்க முற்பட்டாலும் இதன் கொடுமையை ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் சந்தித்தே வருகிறோம்.

இந்திய மண்ணில் மட்டுமே இந்த கொடுமை தலைவிரித்தாடுகிறது. சகோ ஆஷிக் தனது பதிவில் கூட மிகவும் அழகாக இந்த பிரச்னையை தொட்டிருக்கிறார். அதே போல் சகோதரி அனலைஸ்டும் சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை புள்ளிவிபரங்களோடு தொகுத்துள்ளார்.

'தங்க கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்...பொருள் தந்து மணம் பேசுவார்.

மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்...உலகை விலை பேசுவார்...

என்ற திரைப்பட பாடலின் வரிகளில் அந்த காலத்தில் பெண்ணுக்கு பொருள் கொடுத்து மணம் முடித்திருப்பதாக கண்ணதாசன் குறிப்பிடுகிறார். எனவே பண்டைய நமது முன்னோர்கள் வழக்கில் வரதட்கணை பெண் வீட்டார் கொடுப்பது என்பது இல்லாதிருந்திருக்கிறது. பிற்காலத்தில் உருவாக்க்பட்ட வழக்கமாகவே இதனை நாம் பார்க்கிறோம்.

இஸ்லாமும் இந்த கொடுமையை வன்மையாக கண்டிக்கிறது. கண்டிப்பதோடு அல்லாமல் எதிர்மறையாக அந்த பெண்ணுக்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் மஹர் (அட்வான்ஸ் ஜீவனாம்சமாக) மாப்பிள்ளை கொடுக்க வேண்டும் என்ற கட்டளையையும் இடுகிறது. என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்க்கும் எகிப்து நாட்டு ஹைதம் என்பவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காரணம் மஹருக்கான தொகை இன்னும் சேரவில்லை. தற்போது அவரது தந்தை,தமக்கை என்று பலரும் 50000ரியால் தலைக்கு ஒவ்வொருவராக கொடுத்து இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளது. இஸ்லாம் இவ்வாறு வழி காட்டியிருக்க மற்ற மதத்தவர்களை பார்த்து முஸ்லிம்களும் பெண்ணிடம் வரதட்சணை கேட்க ஆரம்பித்துள்ளனர்.

இதன் தீமையை விளக்கி இறைவனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற தொடர்ந்த பிரசாரத்தின் காரணமாக இன்று வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்து வருகிறது. 'பெண்ணிடம் வரதட்சணை வாங்கினால் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று முரண்டு பிடித்து கொண்டிருக்கும் பல இளைஞர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

இது போன்ற இளைஞர்களை தூய பிரச்சாரத்தின் மூலமாக நாம் அதிகமதிகம் உருவாக்க வேண்டும். அரபு நாட்டு நடைமுறைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சில விஷயங்களின் அரபுகளின் மேல் நமக்கு கோபம் இருந்தாலும் திருமண விஷயத்தில் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை நாமும் பின் பற்ற முயற்ச்சிக்க் வேண்டும். திருமண விருந்து மாபபிள்ளை செலவுதான். பெண்ணுக்கு உடுத்தும் துணியிலிருந்து, நகை, பெட்ரூம் என்ற சகல செலவுகளையும் மாப்பிள்ளைதான் சுமக்க வேண்டும். பெண்ணை பெற்றவர்களுக்கு எந்த செலவும் இல்லை. இதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. இதுபோன்ற ஒரு நிலை நமது நாட்டிலும் உருவானால்தான் பெண் சிசுக்கள் கொல்லப்டுவது நிற்கும். ஸ்டவ் வெடித்து புது மணமகள் இறப்பது நிற்கும்.

ஒரு இந்து நண்பர் 'நான் இஸ்லாத்தை தழுவ அதிக ஆர்வமுடன் இருக்கிறேன். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இஸ்லாத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுக்க என்னிடம் 30 பவுன் அல்லது 40 பவுன் தேவைப்படும். இருவருக்கும் சேர்த்து 80 பவுனுக்கு நான் எங்கு போவேன். இதே இந்து மதத்தில் 3 பவுன் 4 பவுனில் எனது மகளின் திருமணத்தை நடத்தி விடுவேன். எனவே இரண்டு பெண்களுக்கும் திருமணத்தை முடித்து விட்டு பிறகு நானும் எனது மனைவியும் இஸ்லாத்தில் இணையலாம் என்றிருக்கிறோம்'. என்று சொல்லும் அளவுக்குத்தான் முஸ்லிம்களின் பெரும்பாலோரின் நடவடிக்கை இருக்கிறது. இஸ்லாத்திற்கு மாற்றமான இந்த கொடுமையை வேரோடு பிடுங்கி எறிய அனைவரும் முயற்ச்சிப்போம்.

Wednesday, July 13, 2011

மும்பையை உலுக்கிய மற்றொரு குண்டு வெடிப்பு!
மூன்று இடங்களில் தொடர்ந்து குண்டு வெடிப்பு நிகழ்நததில் 20 க்கு மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த மனித குல எதிரிகளை இனம் கண்டு தூக்கில் ஏற்ற வேண்டும். எனது நாட்டு மக்களின் மீது அதுவும் அப்பாவி மக்கள் மீது கோழைத் தனமாக தாக்குதல் நடத்தியிருக்கும் பேடிகளை மனித ஜெனமம் என்றே கூற இயலாது.

வழக்கம் போல் குறிப்பிட்ட மதத்தையும், குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரையும் முதலில் தெரிவித்து உண்மையான குற்றவாளிகள் தப்பி விடாமல் இந்த முறையாவது உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அது இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ எவனாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் ஏற்ற வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்றங்களை வருங்காலத்தில் தடுக்க முடியும்.

விலை மதிக்க முடியாத தங்களின் உயிர்களை இழந்த அந்த நல்ல உள்ளங்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் முழு மனித சமுதாயத்தையும் கொலைசெய்தவனாவான்...அல்குர் ஆன்:5:32

Describing the serial blasts in Mumbai as a well "coordinated attack by terrorists", Union Home Minister P. Chidambaram on Wednesday appealed to the people to remain calm and maintain peace.
Three blasts in India’s financial capital ripped through crowded places at 6.45 p.m. and occurred within minutes of each other, the Home Minister said after presiding over an emergency meeting of top officials of the ministry. "We infer this was a coordinated attack by terrorists," he told reporters outside North Block. He feared that the death toll in the blasts could go up.
He said the National Security Guard (NSG) hub in Mumbai, set up in the wake of 26/11 terror attack in the city in 2008, has been put on standby. He said the elite force's 'post-blast' team has also been sent to Mumbai.
The Central Forensic Science Laboratory (CFSL) team from Delhi and Hyderabad has been sent to Mumbai, he said. Mr. Chidambaram said that a team of the National Investigation Agency (NIA), led by an IG rank officer, will also leave for Mumbai during the night.
Mr. Chidambaram was directed by Prime Minister Manmohan Singh to do everything necessary after serial blasts rocked Mumbai and keep him updated.
The Prime Minister, who was monitoring the developments related to the three explosions, spoke to the Home Minister as well as Maharashtra Chief Minister Prithviraj Chavan, PMO sources said. While speaking to Mr. Chidambaram, Dr. Singh asked him to do the needful and update him.
The North Block office of the Home Ministry was abuzz with hectic activity as soon as the news of serial blasts in Mumbai trickled in just after 7 p.m. Even as Home Secretary R. K. Singh spoke to the Maharashtra Chief Secretary, Secretary (Internal Security) U. K. Bansal monitored the situation, alerting the machinery and ensuring that NIA, NSG and CFSL teams could leave for Mumbai in time.
Mr. Chidambaram held an emergency meeting which was attended by Mr. Singh, Mr. Bansal and other senior officials of the ministry where the situation in Mumbai was reviewed as well as internal security situation in the country was discussed. It was decided to sound high alert in all States, particularly in cities like Chennai, Hyderabad, Bangalore and Delhi. The Home Ministry was monitoring the situation on a regular basis and putting to use much of crisis-fighting apparatus and practices, like multi-agency centre, put in force after 26/11 Mumbai terror attacks.
Sources in the intelligence set up were inclined to believe that IEDs, used in the blast, appeared to be handiwork of Indian Mujahideen working closely with Lashkar-e-Toiba terrorist outfit. The timing of the serial blast was also significant as it comes barely a fortnight before India and Pakistan engage themselves in yet another round of talks.
-The Hindu

Monday, July 11, 2011

யூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்!

இஸ்ரேலின் உளவுப் பிரிவு மொசாத் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறது. அதற்கு என்னென்ன முயற்ச்சிகளை எடுக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது ஒரு பழைய நிகழ்ச்சி!

1970 வாக்கில் பாலஸ்தீனர்களின் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. இஸ்ரேலியர்கள் தாக்குபிடிக்க முடியுமா என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் நடந்த தாக்குதல் பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவே இஸ்ரேலியர்கள் எண்ணினர். இதை இப்படியே வளர விட்டால் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்ற நோக்கில் பாலஸ்தீனர்களின் முன்னேற்றத்துக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஒரு தடை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்க தொடங்கியது இஸ்ரேலிய அமைச்சரவை.
அப்போதய இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் மொஸாத்தின் தலைவர் ஸிவி ஸமீரை அமைச்சரவை கூட்டத்துக்கு அழைத்திருந்தார். ஜெர்மனியின் தாக்குதலால் அனைவரின் முகத்திலும் ஒரு இறுக்கம் தென்பட்டது. 'பதிலடியாக நாம் என்ன செய்யப் போகிறோம்?' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். 'கடவுளின் கோபம்' என்ற ஒற்றை வரியில் பதிலளித்தார் மொசாத்தின் தலைவர் ஸிவி ஸமீர்.

அது என்ன 'கடவுளின் கோபம்?' என்று பலரும் அவரிடம் கேட்டனர். 'பல லட்சம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களை பாலஸ்தீன போராளிகள் பிடித்துச் சென்றது நமக்கு தலைக்குனிவையும், அவர்களுக்கு மேலும் தைரியத்தையும் உண்டாக்கியுள்ளது. எனவே போராளிகளின் நம்பிக்கையை தகர்க்கும் விதமாக பாலஸ்தீன இயக்க தலைவர்களையும் முக்கிய வீரர்களையும் தீர்த்துக் கட்ட போடப்பட்ட திட்டத்தின் பெயர்தான் 'கடவுளின் கோபம்' என்ற ஆபரேஷன்' என்றார் ஸிவி ஸமீர்.படுகொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலை அனைவரின் பார்வைக்கும் வைத்தார் ஸிவி ஸமீர். ஸிவி ஸமீர் கொடுத்த புகைப் படத்தில் 11 பேர்களை மட்டும் இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அந்த 11 பேரும் ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்கள் 11 பேர் இறக்க காரணமானவர்கள். 11க்கு 11 என்ற ரீதியில் கணக்கு தீர்க்க திட்டம் தயாரானது. ஆனால் அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? எப்படி தீர்த்துக் கட்டப் பொகிறீர்கள்? அதற்கு எத்தனை காலம் தேவைப்படும்? என்றார் பிரதமர் கோல்டா மேயர்.

'அவர்கள் எவ்வளவு காலத்திற்குள் படுகொலை செய்யப்படுவார்கள் என்ற உத்திரவாதத்தை என்னால் தர முடியாது. ஆனால் அவர்கள் கண்டிப்பாக கொல்லப் படுவார்கள்' என்றார் ஸிவி ஸமீர். அவர் சொன்னது போல் இந்த திட்டத்தை செயல்படுத்த மொஸாத்துக்கு 20 வருடங்கள் பிடித்தது.

இவர்களின் திட்டத்தில் முதலில் பழி வாங்கப் பட இருந்தவர் கிறித்தவரான வாதி ஹத்தாத்.

யார் இந்த வாதி ஹத்தாத்?

1927 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனில் ஷஃபாத் என்னும் கிராமத்தில் பிறந்தார். மிகுந்த ஆச்சாரமிக்க கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறித்தவ குடும்பத்தில் பிறந்த வாதி ஹத்தாத் சிறு வயது முதலே மத சடங்குகளில் ஆர்வமுடையவராகவும் ஞாயிறு தோறும் தேவாலயத்துக்கு செல்பவராகவும் இருந்தார். ஷஃபாத் கிராமத்தைப் பொறுத்த வரையில் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தனர். அமைதியான அவர்களின் வாழ்க்கையில் அரக்கர்களாக வந்தனர் இஸ்ரேலியர்கள்.

1948 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு இஸ்ரேலிய போரில் பல பாலஸ்தீன கிராமங்கள் அழிக்கப்பட்டன. அதற்கு ஷஃபாத் கிராமமும் விதிவிலக்கல்ல. ஒரே இரவில் தங்களுடைய வீடுகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். சொந்த வீட்டையும் சொந்த நாட்டையும் விட்டு அகதிகளாக லெபனானில் தஞ்சம் புகந்ததில் ஹத்தாதின் குடும்பமும் ஒன்று.

லெபனானின் தலைநகரிலிருந்த பெய்ரூத் அமெரிக்கன் யுனிவர்சிடியில் பல மருத்துவப் பிரிவில் தேர்ச்சி பெற்று மருத்துவரானார். இது குறித்து பிந்தைய நாட்களில் ஹத்தாத் குறிப்பிடும்போது 'அகதி என்ற பட்டத்துடனே மருத்துவர் என்ற பட்டமும் கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்றே கருதுகிறேன்' என்றார். மருத்துவ படிப்பை முடித்து விட்டு தனது கல்லூரி தோழரான டாக்டர் ஹபாஸூடன் சேர்ந்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒரு கிளினிக் ஆரம்பித்தார். 1956 ஆம் ஆண்டு ஐ.நா வின் பாலஸ்தீனர்களின் புனர்வாழ்வுக்கான அமைப்புடன் இணைந்து அகதிகளுக்கான சேவையில் ஈடுபட்டார். அதே வேளையில் பாலஸ்தீன மீட்புக்காக 'அரபு தேசிய இயக்கம்' என்ற அமைப்பை தனது தோழரோடு சேர்ந்து ஆரம்பித்தார். பின்னாலில் இந்த இயக்கம் popular front for the liberation of palastine (pflp) என்ற பெயராக மாற்றப்பட்டது. 1967 லிருந்து 1977 வரை இவர் தலைமையில் பிஎஃப்எல்பி தொடுத்த தாக்குதல்களில் இஸ்ரேலே அரண்டு போனது. இந்த காலகட்டங்களில் இஸ்ரேலியர்கள் விமானத்தில் பயணிக்கவே பதறினர். ஏனெனில் 1930 க்கு பிறகு விமான கடத்தலை உலகுக்கு அறிமுகப்படுத்தியது யார் எனில் அது வாதி ஹத்தாதாகத்தான் இருக்க முடியும். இவ்வாறு அரண்டு போயிருந்த நேரத்தில்தான் ஜெர்மனியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் ஹத்தாத் முக்கிய காரணகர்த்தா என்ற விபரம் தெரிய வந்ததும் இவரை தீர்த்துக் கட்டுவதன் அவசியத்தை இஸ்ரேல் உணர ஆரம்பித்தது.

ஆபரேஷன் 'கடவுளின் கோபம்' திட்டத்தின் படி வாதி ஹத்தாதின் தற்போதய இருப்பிடத்தை கண்டறிய ஸிவி ஸமீர் உத்தரவிட்டார். வழமையான ரகசிய படுகொலையில் மொசாத் ஒரு நடை முறையைக் கடை பிடிக்கும். அதாவது கொலை செய்யப்பட வேண்டியவர் இஸ்ரேலுக்கு வெளியே இருந்தால் முதலில் அந்நாட்டிலுள்ள தனது கைக் கூலிகளை உஷார் படுத்தும். இதற்காகவே பல நாடுகளிலும் வாடகை உளவாளிகளை மொசாத் வைத்துள்ளது. நம் நாட்டிலும் இதுபோல் பல உளவாளிகளை (இந்துத்வவாதிகளை) மொசாத் நியமித்துள்ளது. இரண்டாவதாக கேஸ் ஆபீஸர் எனப்படும் பிரத்யேக உளவு அதிகாரி நியமிக்கப்படுவார். அவர் கொல்லப்பட வேண்டிய குறிப்பிட்ட நபரைக் குறித்து அனைத்து தகவல்களையும் திரட்டி மொசாத் தலைமைக்கு அனுப்பி விடுவார். மூன்றாவதாக கொலைத் திட்டத்தின் அசல் மாதிரியை இஸ்ரேலில் போலியாக உருவாக்கி பயிற்சி செய்வர். இதன் மூலம் திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் சாதக பாதகங்களை முன் கூட்டியே மதிப்பீடு செய்து திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

நான்காவதாக திட்டத்தை செயல்படுத்துவதற்க்கான தேதி குறிக்கப்பட்டு பிரதமருக்கு தெரிவிக்கப்படும். பிரதமர் தலையாட்டியவுடன் கேசரியா எனப்படும் ரகசிய கொலைக் குழு அனுப்பப்படும். இவர்கள் ஏற்கெனவே பயிற்சி பெற்றிருந்ததால் காரியத்தை கணக்கச்சிதமாக முடித்து விட்டு மாயமாய் மறைந்து விடுவர்.

மொசாத்தின் இந்த வழக்கமான பாணி வாதி ஹத்தாதின் விஷயத்திலும் பயன்படுத்தப்பட்டது. அதன்படி ஹத்தாதின் இருப்பிடம் குறித்து அறிவதற்க்காக பாலஸ்தீன ஆட்காட்டிகளை மொசாத் அணுகியது. இவர்கள் பணத்துக்காகவும் சுகத்துக்காகவும் மொசாத்துக்கு தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களிடமிருந்து கிடைத்த தகவல் அத்தகைய நம்பகமானதாக இல்லை. ஏனெனில் ஹத்தால் தாம் மொசாத்தால் கொல்லப்படுவோம் என்பதை தீர்மானித்து தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார்.

பல கோணங்களில் துப்பறிந்த மொசாத்துக்கு இறுதியாக ஒரு நம்பகமான தகவல் கிடைத்தது. அது பிஎஃப்எல்பி யிலிருந்து ஹத்தாதால் நீக்கப்பட்ட இலிச் ராமிரஸ் சான்செஸ் என்பவன் கொடுத்த நம்பகமான தகவல்தான் ஹத்தாதின் கதையை முடிக்க மொசாத்துக்கு உதவியாக இருந்தது. ஹத்தாத் ஒளிந்திருந்தது ஈராக்கில். அப்போது சதாம் ஹீசைன் மிலிட்டரி கமாண்டர் ஜெனரலாக இருந்தார்.

இலிச் ராமிரஸ் சான்செஸ் கொடுத்த தகவலின்படி ஹத்தாதை கொல்ல ஒரு புது டெக்னிக்கை மொசாத் கையாண்டது. அது என்னவென்றால் ஹத்தாதுக்கு ஒரு பழக்கம் இருந்தது. சிறியவர்கள் சாப்பிடும் சாக்லெட்டுகளை எப்போதும் விரும்பி சாப்பிடுவார். இதை மோப்பம் பிடித்த மொசாத் இவரைக் கொல்வதற்கு அந்த சாக்லெட்டுகளையே பயன்படுத்தியது. 1970 களில் உயர்தர சாக்லேட்டுகள் ஈராக்கில் கிடைப்பது அரிது. இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திய மொசாத் ஹத்தாதின் சமையல்காரனை தனது வலையில் வீழ்த்தியது.

சாக்லெட்டுக்கு பிரசித்திப் பெற்ற பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகளை சமையல்காரன் ஹத்தாதுக்கு கொடுக்க ஆரம்பித்தான். அதில் மிக மிக குறைந்த அளவில் உயிர்க் கொல்லி கிருமி தடவப்பட்டு ஆறு மாத காலம் யாருக்கும் சந்தேகம் வராமல் வழங்கப்பட்டது. அக்கிருமிகள் சிறிது சிறிதாக கல்லீரலைத் தாக்கி லுக்கிமியா நோயை ஏற்படுத்தி ஹத்தாதின் உயிரைக் காவு கொண்டது.

Poison with Sweets
…..Sure, it’s strange to think of a terrorist as a chocoholic, but it was indeed death by chocolate for Wadie Haddad, a medical doctor and onetime leader of the Popular Front for the Liberation of Palestine. A double agent slipped him a batch of poisoned chocolate in 1977, and Haddad went on to suffer a slow, months-long death. Israel’s intelligence agency, Mossad, was pointed to as the source of the poisoning in Aaron J. Klein’s book Striking Back…..
http://www.newsweek.com/2011/05/05/how-to-kill-a-terrorist.html
JERUSALEM (AP) -- Israel's Mossad secret service agency killed a Palestinian wanted for airplane hijackings by feeding him poisoned Belgian chocolate over six months in the late 1970s, according to a new book, the author said Saturday.

The book, "Striking Back," is apparently the first time that details of the killing have come to light and provides a glimpse at how sophisticated Israel is at poisoning.

In his book, author Aaron Klein describes how Israel tracked down Wadia Haddad, an operative of the Popular Front for the Liberation of Palestine, in Baghdad. Haddad had gone into hiding in the Iraqi capital after Israel began killing Palestinian militants around the world, Klein told Israel Radio.

Suspected in multiple hijackings, including the 1976 takeover of an Air France airplane in Entebbe, Uganda, Haddad knew from the Israeli tactics that he could be shot or bombed as he walked the street or picked up a phone.

Haddad was cautious of his every move, avoiding travel outside of Iraq, said Klein, a Time magazine correspondent in Jerusalem. But the 140-kilogram (309-pound) food lover had a weakness: chocolate...

http://www.cnn.com/2006/WORLD/meast/05/06/chocolate.ass...


ஆனால் உலகுக்கு இவர் இயற்கையான மரணத்தை தழுவியதாகத்தான் நம்ப வைக்கப்பட்டது. ஏனெனில் ஈராக்கில் வைத்து கொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேலின் மொசாத் காரணம் என்ற செய்தி வெளியானால் அது இஸ்ரேல் ஈராக் உறவை பாதிக்கும். சுற்றிலும் பல பகைகளை பெற்றிருக்கும் இஸ்ரேல் ஈராக்கையும் அந்த நேரத்தில் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

காலங்கள் உருண்டோடின. 2007 ஆம் ஆண்டு முன்னால் மொசாத் அதிகாரியும் 'டைம்' பத்திரிக்கையின் ஜெருசலம் நிருபருமான ஆரோன் கிளீன் எழுதிய Striking Back என்ற புத்தகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வாதி ஹத்தாதை மொசாத் படுகொலை செய்ய பயன் படுத்திய டெக்னிக்கை வெளிப்படுத்தினார். தாங்கள் நினைத்த ஒரு காரியத்தை நிறைவேற்ற எத்தனை வருடங்கள் ஆனாலும் பொறுமையாக காத்திருந்து திட்டமிட்டு தங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவர் என்பதற்கு ஹத்தாதியின் மரணம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

நமது நாட்டிலும் இந்துத்வவாதிகள் மொசாத்தின் திட்டமிடல் படியே செயல்படுகின்றனர். அத்வானிக்கும் மொசாத்துக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே! மாலேகானிலிருந்து சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வரை இவர்கள் நடத்திய அனைத்துக்கும் மூலம் மொசாத்திலிருந்து பெறப்பட்டவையே!

நமது மும்பை நகரத்தை தாக்கவும் எவ்வளவு கச்சிதமாக பிளான் பண்ணினார்கள். எங்கு பார்த்தாலும் இந்துத்வவாதிகள் கைது செய்யப்பட்ட நேரம். இதே நிலை நீடித்தால் மோடியின் கைகளுக்கும் விலங்கு வரும் என்ற நேரத்தில்தான் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானிய கசாப்புக்கும் அவனது கூட்டத்தாருக்கும் குடும்பத்தை காப்பாற்றுகிறோம் என்ற வாக்குறுதி தரப்பட்டது. போலி முல்லாக்களால் மத வெறியும் ஊட்டப்பட்டது. இந்தியாவுக்குள் நுழைய எத்தனையோ வழிகள் இருக்க மோடியின் குஜராத் கடல் மார்க்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடலில் ரோந்து வருபவர்களுக்கு பணமோ அல்லது ராம பக்தியோ மோடி குரூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம்.

இதை சாக்காக வைத்து ஹேமந்த் கர்கரேயையும் போட்டுத் தள்ளியாகி விட்டது. இந்துத்வாவாதிகள் மேலேயோ அல்லது மொசாத்தின் மேலேயோ துளியும் சந்தேகம் வராமல் காரியம் கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு மாலேகான் முதற்கொண்டு அனைத்து வழக்குகளும் மந்த கதியை அடைந்தது. குற்றவாளிகள் நினைத்த காரியம் எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவேறியது. வழக்கம்போல் பாகிஸ்தானின் ஏதாவது ஒரு தீவிரவாத குரூப்பின் பெயரில் ஈமெயிலோ, ஒரு போன் காலோ போட்டு தங்களின் தேச பக்தியை இந்துத்வாவாதிகள் திறம்பட செயல்படுத்தி விட்டார்கள்.

ஜெய் ஹிந்த்!

Saturday, July 09, 2011

டெர்ரி புரூக்ஸ் - குவாண்டனாமோ - முஸ்தஃபா அப்துல்லாஹ்
அமெரிக்க ராணு வீரரான டெர்ரி ப்ரூக்ஸ் கியூபா நாட்டிற்கு அருகில் கடற்கரைப் பகுதியில் அமைந் துள்ள குவாண்டனமோ சிறையின் காவல் பணிக்கு கடந்த 2003ல் அனுப்பப் படுகிறார். குவாண்டனமோ சிறை பிரபலமடையாத நேரம் அது.

அங்கே அல்காயிதா மற்றும் தாலிபான் போராளிகள் அடைக் கப்பட்டிருந்தனர். அப்போது டெர்ரி ப்ரூக்ஸ் அந்தப் போராளி களின் மார்க்கமான இஸ்லாத் தைத் தழுவுவார் என்று நினைத் துக் கூடப் பார்க்கவில்லை.

பிற்காலத்தில் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறைவாசிகளுடனான பழக்கம் அவரை அந்த வருடமே இஸ்லாத்தை தழுவ வைத்தது.

டெர்ரி ப்ரூக்ஸ் இஸ்லாத்தைத் தழுவிய செய்தி பழசுதான். ஆனால் சமீபத்தில் உலக மீடி யாக்களில் டெர்ரி மீண்டும் தலை காட்டினார். இதற்கு காரணம் அவர் இஸ்லாத்தைத் தழுவிய பின் முதன்முறையாக உம்ரா கிரியையை நிறைவேற்ற சென்றது தான்.
கடந்த வாரம் மெக்காவிற்கு சென்று உம்ரா கிரியையை நிறைவேற்றுவதற்கு முன் புனித நகரமான மதீனாவிற்குச் சென்றுள்ளார் டெர்ரி. அங்கே பத்திரி கையாளர்கள் சிலர் அடையாளம் கண்டு டெர்ரியை சூழ்ந்து கொள்ள "எனது கடந்த காலங்களின் கனவு உம்ரா செய்ய வேண்டும் என்பது'' எனத் தெரிவித் திருக்கிறார்.

குவாண்டனமோவிலிருந்த மொராக்கோ சிறைவாசியான அஹ்மத் அல் ரஷாதிதான், இவர் இஸ்லாத்தைத் தழுவ காரணமாக இருந்திருக்கிறார். டெர்ரி இஸ்லா மியனாக மாறிவிட்ட தகவல் அமெரிக்க இராணுவத் தலை மைக்கு தெரிந்தவுடன் இராணுவத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் டெர்ரி.

"அல் ரஷாதியுடன் பலமுறை விவாதங்கள், வாதப் பிரதி வாதங்களைச் செய்து இறுதியில் 2003 டிசம்பர் மாதம் ஒருநாள் அதி காலை சரியாக 12:49 இஸ்லாத்தைத் தழுவும் அந்த சிறப்புமிகு முடிவை எடுத்ததை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.
என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் அவை. நான் இஸ் லாத்தைத் தழுவிய அந்த நேரத் தில் சிறைவாசிகள் பலர் என் னைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்களது புதிய தோழனாக முஸ்தாஃபா என்று நான் அழைக் கப்பட்டேன். பின் முஸ்தாஃ பாவோடு அப்துல்லாஹ் என்ற பெயரையும் இணைத்து தற் போது முஸ்ஃபா அப்துல்லாஹ் என்று அழைக்கப்படுகிறேன்...'' என்று கூறும் ப்ரூக்ஸ், ""அமெ ரிக்க ராணுவம் என்னை குவாண் டனமோ சிறைக்கு அனுப்ப முடிவு செய்தபோது, அதுவரை சிறைச் சாலையை கண்டிராத எனக்கு அது புது அனுபவமாக - சவாலான பணியாக இருக்கும் என மகிழ்ந்தேன்.

ஆனால் குவாண்டனமோ சிறைக்கு வந்ததும் எனக்கு அதிர்ச் சியாக இருந்தது. அந்த சிறை வளாகத்திற்குள் நுழைந்தபோதே அது கொடூரம் நிறைந்ததாக காட்சியளித்தது. சிறைக் கம்பிக ளுக்கு பின்னால் இருப்பவர்கள் உண்மையிலேயே ஆபத்தானவர் கள்; அதனால்தான் அதி உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

இரவு நேரங்களில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் செல்க ளுக்கு வெளியில் அமர்ந்து அவர் களை கவனிப்பேன், இந்தருணங் களில் எங்களுக்கு இடையில் பரஸ்பர மரியாதை ஏற்பட்டது.
நான் குவாண்டனமோ சிறைக்கு செல்வதற்கு முன்பு வரை நாத்திகனாகவே இருந் தேன். இஸ்லாத்தைத் தழுவிய பின் இம்மார்க்கம் இனிமை யானது என்பதை உணருகிறேன். இஸ்லாம் ஒரு தூய்மையான மார்க்கம். அதுவே முற்றிலும் நேரான வழி என்பதை உணர்ந் தேன்.

நான் இஸ்லாத்தை தழுவும் எண்ணத்தில் இருப்பதை என் னோடு பணியாற்றிய மற்ற ராணுவ வீரர்களிடம் முதலில் மறைத்தேன். ஆயினும் எங்கள் அதிகாரிக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது, அந்த அதி காரியும் மற்ற பாதுகாப்பு காவ லர்களும் என்னை கொடூரமாக நடத்தத் துவங்கினர். அமெரிக்காவை நான் காட்டிக் கொடுப் பதாக குற்றஞ்சுமத்தினார்கள். எனது பணிக்கால ஒப்பந்தம் முடிவதற்கு இரண்டு வருடங்கள் முன்பே ராணுவத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன்...'' என நெகிழ்ச்சியுடன் தனது அனுப வத்தைப் பகிர்ந்து கொள்கிறார் டெர்ரி ப்ரூக்ஸ்.

இஸ்லாத்தை தழுவிய தனது அனுபவங்களைக் குறித்து நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார் டெர்ரி. பணியிலிருந்து விலக்கப்பட்டாலும் குவண்டனமோ சிறைவாசிகளுக்காக தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் இவர் "குவாண்டனமோ சிறையில் உண்மையில் மனிதத் தன்மையற்ற செயல்கள் அரங்கேறுகின்றன. குறைந்தபட்ச மனித உரிமைகளும் மீறப்படுகின்றன'' எனக் கூறுகிறார். இவர் எழுதும் நூலில் வெளி உலகிற்கு தெரியாத குவாண்ட னமோ கொடூரங்கள் இன்னும் வெளிப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

- ஹிதாயா
நன்றி : இரான் புக் நியூஸ் ஏஜென்ஸி

Mecca, May 29 (Dispatches) – When US soldier Terry Brooks was sent to join military guards at the infamous Guantanamo prison that houses Muslim prisons, allegedly belonging to the Taliban and al-Qaeda outfits, he had not thought he would embrace the religion of those prisoners. After a few chats with a Moroccan inmate, he converted to Islam in 2003.

Brooks was seen by local reporters this week praying in the holy city of Medina in Arabia before heading for holy Mecca to perform his first Umrah pilgrimage, which he said had been his dream over the past years.
The local Arabic daily Okaz said it waited for Brooks to finish his prayers and talked to him about his conversion to Islam. He credited “prisoner number 590” named Ahmed ar-Rashedi of Morocco for his “landmark” decision. After converting, he was expelled from the US army.

Brooks told the paper he was sent to Guantanamo long before 2003 and later started to mingle with some prisoners there.

“I still remember that great moment….the time was around 12:49 am in December 2003 when I embraced Islam…at that night, I took this landmark decision after numerous chat sessions with ar-Rashedi,” he said.

“It was a memorable moment in my life…….many prisoners sat around me when I converted and decided to call me Mustafa as their new friend…later I added the name Abdullah so I am now called Mustafa Abdullah.”

Brooks said he had been delighted when the US army decided to send him to Guantanamo as it was an adventure for him since had not seen a prison before.
“When I arrived there, it was a big shock for me… even before I entered the prison buildings, I could see that it was horrible and could suit only cactus and poisonous reptiles….I then asked myself ‘are those people behind the bars really so dangerous that they are worth these costly security measures.”

Brooks said he started to be interested in Islam after his talks to ar-Rashedi and other prisoners about Islam, Palestine, Afghanistan and the Middle East.

“I used to sit just outside their cells at night listening to them…by time, a sort of mutual respect developed between us …I had never believed in God before I went to Guantanamo.…now that I embraced Islam, I can feel the sweetness of religion…Islam is a pure religion and the ultimate right.”

Brooks said he had first concealed his decision to convert to Islam from other US guards at Guantanamo, adding that when the officer learned about it, he and the other soldiers began to treat him cruelly and accused him of betraying the US. Around two years before the end of his contract, he was fired from the US army.
“I am now working on a book about my experience to embrace Islam.…I have just quit my job in the US to devote my time to helping the prisoners in Guantanamo..…what is happening in that prison is really inhuman and violates the minimum principles of human rights,” he said.

Wednesday, July 06, 2011

அரிசோனா(அமெரிக்க) மாநிலத்தின் புழுதிப் புயல்6 July 2011 Last updated at 07:16 GMT Help

A big dust storm descended on the Phoenix area of Arizona on Tuesday, drastically reducing visibility and delaying flights.

The storm was part of the Arizona monsoon season, which typically starts in mid-June and lasts until the end of September.

Tuesday, July 05, 2011

இஸ்லாம் அடிமைகளை நடத்திய விதம்!
'எனக்கு சில அடிமைகள் இருக்கிறார்கள். அவர்கள் பல நேரங்களில் பொய் சொல்கிறார்கள். கொடுத்த வேலையைச் செய்யாமல் ஏமாற்றுகிறார்கள். ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசுகிறார்கள்'

இது புகார் அல்ல. முகமது நபி அவர்களிடம் சந்தேகம் கேட்க வந்த ஒரு நபித் தோழர் கூறிய வார்த்தைகள்.

அடிமைகளுடன் தனக்குள்ள பிரச்னையை அவர் நபியிடம் எடுத்துக் கூறினார். தன்னுடைய அடிமைகளுடன் கடினமாக நடந்து கொள்வதால் அவர் அமைதியின்றி தவித்தார். அவர் முகமது நபியிடம தொடர்ந்தார்:
'அவர்களிடம் கடுமையாகப் பேச வேண்டி இருக்கிறது. சில சமயங்களில் வரம்பு மீறிய வார்த்தையையும் நான் கூறி விடுகின்றேன். கட்டுப் படுத்த முடியாத கோபம் வரும் போது அடிக்கவும் செய்வேன். நான் இப்படி நடந்து கொள்வது சரியா?”

ஒவ்வொருவரின் வாழ்விலும் அன்றாடம் சந்திக்கும் இது போன்ற நிகழ்வுகள் அவரது மனதை பாதித்ததனால் முகமது நபியிடம் விளக்கம் கேட்க வந்திருக்கிறார். இதற்கொரு மாற்றம் வேண்டும் என்று கருதித்தான் அவர் நபியைக் காண வந்தார்.

இறைவனின் தூதர் அந்த தோழருக்கு பின் வருமாறு அறிவுரை கூறினார்கள்:
'நாளை மறுமையில் இறுதித் தீர்ப்பு நாளில் உங்களுக்கும் அடிமைகளுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகள் குறித்து கணக்கெடுக்கப்படும். அடிமைகள் உங்களை ஏமாற்றி மோசடி செய்ததும், பொய் சொன்னதும், உங்களுக்கெதிராக வேலை செய்ததும், தராசின் தட்டில் வைக்கப்படும்.

தாங்கள் அவர்களிடம் நடந்து கொண்டதும், ஏசியதும், பேசியதும், அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்ததும் இன்னொரு தட்டில் வைக்கப்படும். இரண்டும் சமமாக இருந்தால் யாருக்கும் ஒன்றும் இல்லாமல் பிரச்னை சுமூகமாக தீரும்.

நீங்கள் அளித்த தண்டனை அவர்களின் எதிர் செயல்களை விட குறைவாக இருந்தால் அவர்களிடமிருந்து நஷ்ட பரிகாரம் எடுத்து உங்களுக்குத் தரப்படும். தண்டனை அதிகம் என்றால் உங்களிடமிருந்து நஷ்ட பரிகாரம் எடுக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும்.'

அந்த நபித் தோழருக்கு அச்சம் தோன்றி விட்டது. அந்த இடத்தை விட்டகன்ற அவர் அழ ஆரம்பித்து விட்டார். இதைக் கண்ட இறைத் தூதர் அவர்கள் அவரிடம் சென்று கீழ்க் கண்ட இறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

'மீண்டும் உயிர்த்தெழும் நாளில் நீதியின் தராசை நாம் முன்பு வைப்போம். யாரும் ஒரு சிறிது கூட அநீதம் செய்யப்பட மாட்டார்கள். கடுகு போல் ஒரு சிறிய நன்மை செய்திருந்தாலும் அன்று நாம் அதனை வெளியே கொண்டு வருவோம். கணக்கு கேட்பதில் நான் போதுமானவனாகவே இருக்கிறேன்.'
-குர்ஆன் 21:47

இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபித் தோழர் பிரச்னைக்குரிய அடிமைகளை விடுதலை செய்வதே தனக்கும் அவர்களுக்கும் நல்லது என்று எண்ணலானார்.
----------------------------------------------------------------------------------------------------------------------
30. 'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார்.
Volume :1 Book :2

97. மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
"இதை எந்தப் பகரமும் இல்லாமல் உமக்கு நாம் வழங்கி விட்டோம். முன்னர் இதை விடச் சின்னப் பிரச்சினைகளுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டதுண்டு" என்று (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்டு வந்தவரிடம்) ஆமிர் கூறினார்.
Volume :1 Book :3


வேலை ஆட்கள் விஷயத்தில் இஸ்லாம் இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்திருக்க ஒரு சில சவுதிகள் பணிப் பெண்களை நடத்தும் விதம் மிகவும் அருவறுக்கத்தக்கதாக உள்ளது. நம்மிலே கூட பலர் வேலையாட்களை நடத்தும் விதத்தில் நேர்மையாளர்களாக இருப்பதில்லை. ஐந்து வேளை தொழுகிறார்கள். நோன்பு வைக்கிறார்கள். ஆனால் வேலை ஆட்களை சரி சமமாக நடத்துவதில்லை. ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயல்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பாதிப்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை.

இறைவனின் கேள்விகளுக்கு பயந்து நமக்கு கீழுள்ள வேலையாட்களை முடிந்த வரை சமமாக நடத்தும் மன வலிவை இறைவன் உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வானாக!

டிஸ்கி: மேலே உள்ள படம் அன்றைய அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு அடிமைகளை நடத்தியது என்பதை விவரிக்கிறது.

Sunday, July 03, 2011

மனிதனின் மூளையில் மறைந்திருக்கும் ரகசியங்கள்!

'முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?'
-குர்ஆன் 19:67

'உங்களைப் படைத்திருப்பதிலும் ஏனைய உயிரினத்தைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 45:4

'உறுதியாக நம்புவோருக்கு பூமியிலும் உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?'
-குர்ஆன் 51:20,21

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி[1] போன்ற செயற்பாடுகளையும்,[2] விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.
மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.--விக்கி பீடியா
For many years, many scientists thought that the frontal lobe was disproportionately enlarged in humans compared to other primates. They thought that this was an important feature of human evolution and was the primary reason why human cognition is different from that of the other primates. However, this view has been challenged by newer research. Using magnetic resonance imaging to determine the volume of the frontal cortex in humans, all extant ape species and several monkey species, Semendeferi et al. found that the human frontal cortex was not relatively larger than the cortex in the other great apes but was relatively larger than the frontal cortex in the lesser apes and the monkeys.[3]-wiki pedia

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள மூளையின் அளவு வித்தியாசத்தில் மிகப் பெரும் மாறுபாடு உள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டும். இந்த இடத்திலும் பரிணாமவியலின் கோட்பாடு மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடையவில்லை. மனிதப் படைப்பே மற்ற விலங்குகளிலிருந்து வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளது என்பதை விளங்குகிறோம்.

The executive functions of the frontal lobes involve the ability to recognize future consequences resulting from current actions, to choose between good and bad actions (or better and best), override and suppress unacceptable social responses, and determine similarities and differences between things or events. Therefore, it is involved in higher mental functions.
The frontal lobes also play an important part in retaining longer term memories which are not task-based. These are often memories associated with emotions derived from input from the brain's limbic system. The frontal lobe modifies those emotions to generally fit socially acceptable norms.
Psychological tests that measure frontal lobe function include finger tapping, Wisconsin Card Sorting Task, and measures of verbal and figural fluency.-wiki pedia


பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!

'தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?'

'அவர் நேர் வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யயெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?'

'இறைவன் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?'

"அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ள வில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.'

-குர்ஆன் 96 : 9,10,11,12,13,14,15,16

இந்த வசனத்தில் முஸ்லிம்களை எந்த நேரமும் எதிர்த்துக் கொண்டும், அவர்கள் இறைவனை வணங்காமல் தடுத்துக் கொண்டும், பொய் பேசி திரிந்து கொண்டும் இருக்கும் நபர்களைப் பற்றி கூறப்படுகிறது.

குர்ஆன் இங்கு பொய் சொல்பவர்கள், தவறான நடத்தையில் ஈடுபடுபவர்கள் போன்றோரின் முன் நெற்றியைப் பிடிப்போம் என்று கூறுகிறது. பொய் சொல்வதற்கும்,தவறான நடத்தை நடப்பவருக்கும் அந்த நபரின் முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. ?

ஒரு மனிதனின் மூளையின் அமைப்பையும் அதன் முன் பக்கத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.அங்கு நமது தலையின் முன் பகுதியில் பெரு மூளை அமைந்துள்ளதைக் காணலாம். இதைப் பற்றி உயிரியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? Essential of Anatomy & Physiology என்ற புத்தகம் மூளையின் செயல்பாடுகளை விரிவாக விவரிக்கிறது. மனிதன் அதிகம் உணர்ச்சி வசப்படுதல், பொய்,கோபம், முதலான உணர்வு சம்பந்தப் பட்டவைகள் அதிகம் நிகழ்வது மூளையின் முன் பக்கத்தில் இந்த முன் பக்கம் என்பது காதுகளின் ஓரத்துக்கும், தலையின் முன் பக்கத்திற்கும் அதாவது நெற்றியில் அமைந்துள்ள நரம்புகளால் இந்த செயல்கள் செயல் படுத்தப் படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நெற்றிப் பகுதியின் நரம்புகள் மனிதனின் அநேக செயல்களுக்கு காரணமாக அமைகிறது. இந்த இடமே ஒரு மனிதன் பொய் பேசுவதற்கும் உண்மை பேசுவதற்கும் தூண'டுகோலாய் இருக்கிறது.

முகமது நபி மருத்துவம் படித்தவரில்லை. அதைவிட தனது தாய் மொழியையே எழுதவும் படிக்கவும் தெரியாதவர். அவர் வாழ்ந்த சமூகமும் படிப்பறிவில் சிறந்த சமூகமாகவும் இல்லை.

இந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.

Evidence from
1)This is the Truth (video tape)
2)Essential of Anatomy & Physiology, seeley and others, page 211. Also see The Human Nervous System, Noback and others, page 410,411
Figure 12 : Functional regions of the left hemisphere of the cerebral cortex. The prefrontal area is located at the front of the cerebral cortex. (Essentials of Anatomy & Physiology, Seelay and others, page 210.
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் மார்தா லாகர் தலைமையிலான குழுவினர் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. அது கடந்த 1 லட்சம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது. அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப் புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 10 ஆயிரம் ஆண்டுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டு பிடிக்கப் ட்டுள்ளது. அதற்கு தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதை தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.-விக்கிபீடியா

இத்தனை வருடம் பழமையான மண்டை ஓடுகள் கிடைத்தும் தற்போதுள்ள மனிதனின் அமைப்பில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. உயரமாக இருந்த மனிதன் புறத் தோற்றத்தில் ஆறடி ஐந்தடியாக குறைவாக்கப்பட்டிருக்கிறான். இதுவும் அவன் வாழ்ந்த சூழலினால் ஏற்பட்ட மாற்றம். இந்த இடத்திலும் வழக்கம்போல் நம் டார்வின் மாமாவின் பரிணாமம் தோற்றுப் போகிறது.
http://www.blogger.com/img/blank.gif