Followers

Wednesday, May 31, 2006

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - மூன்று

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - மூன்று

ஒரே இறைவனை வணங்கச் சொல்லும் வேறு சில வசனங்களையும் இந்து மத வேதங்களிலிருந்து பார்ப்போம்.

ரிக் வேதம்

'மா சிதான்யாத்வி சன்ஷதா'

'பரிசுத்தமானவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது'

ரிக் வேதம் 8 : 1: 1

'யா எகா இத்தாமுஸ்துதி'

'தனித்தவனும் ஈடு இணையற்றவனுமான அவன் புகழப் பட்டவன்'

ரிக் வேதம் 6 : 45 : 16

'உங்கள் இறைவன் ஒரே இறைவனே!' என்பதே எனக்கு அறிவிக்கப் படுகிறது. நீங்கள் இதை ஏற்கிறீர்களா?' என்று முகம்மதே கேட்பீராக'

குர்ஆன் 21 : 108

மேற் கண்ட இரண்டு வசனங்களையும் சொன்னது ஒருவன்தான் என்று மேலும் உறுதியாகிறது.இவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் ஒரு இறைவன் தான் என்று இந்து மத வேதங்கள் சொல்லியிருக்க இத்தனை தெய்வங்களை எப்படி உண்டாக்கினர்? இதை மதக் குருக்களும் எப்படி அனுமதித்தனர் என்று நாம் வியந்து போகிறோம்.

ஒருவன் முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் ஒரு கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அது என்ன? 'லா இலாஹா இல்லல்வாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' அதாவது 'இறைவன் இல்லை அல்லாஹ்வைத் தவிர முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்ற இந்த கொள்கையில் உறுதியாக இருப்பது அவசியம். இதில் முதல் கொள்கையான இறைவன் ஒருவனே என்பதை ஹிந்து மத வேதங்களிலிருந்தே முந்தய பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன. அடுத்த கொள்கை முகமது நபியை நம்ப வேண்டும். இவரைப் பற்றி ஹிந்து மத வேதங்கள் என்ன சொல்கிறது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இந்து மதக் கோட்பாடுகளின் படி இறைவன் பல அவதாரங்களை எடுத்து இந்த பூமிக்கு வருவதாக சொல்லப் படுகிறது. எப்பொழுதெல்லாம் பூமியில் குழப்பங்கள் ஏற்படுகிறதோ அந்த நாட்களில் இறைவன் மனித ரூபத்தில் அவதாரம் எடுத்து பூமிக்கு வருவான் என்று போதிக்கப் படுகிறது.

'மனித ரூபத்தில் வருவது இறைவனுக்கு ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இது நடக்கக் கூடியதே' என்று பலரும் வாதிடுகின்றனர். முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள் வேண்டும்: மனிதனுக்கு உள்ள தன்மைகள் வேறு. நம்மைப் படைத்த இறைவனுக்குள்ள தன்மைகள் வேறு.

'அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன் அவனுக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது' - குர்ஆன் 2 :255

'உனது இறைவன் மறதி உடையவனாக இல்லை' - குர்ஆன் 19 :64

'அவனே உணவளிக்கிறான். அவனுக்கு உணவளிக்கப் படுவதில்லை' -குர்ஆன் 6 :14

'நான் மனிதர்களிடத்தில் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை.அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன். உறுதியானவன். ஆற்றல் உடையவன். -குர்அன் 51 : 57,58

'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.ஆட்சியில் அவனுக்கு பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று முகம்மதே கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப் படுத்துவீராக' - குர்ஆன் 17 :111

மேற்கண்ட குர்ஆனின் வசனங்களின் மூலம் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள பல தன்மைகள் மாறுபடுகிறது. தூக்கம்,மறதி,அசதி,துன்பம்,பிறப்பு,இறப்பு போன்ற பலகினங்களுக்கெல்லாம் அப்பாற்ப் பட்டவனே இறைவன். இதைத்தான் அனைத்து மத வேதங்களும் சொல்கிறது. இத்தனை தன்மைகள் மாறி இருக்க இறைவன் மனிதனாக அவதாரம் எடுத்தால் அது இறை சக்திக்கு இழுக்கல்லவா?

எனவே இறைவன் அவ்வப்போது அனுப்பிய இறைத் தூதர்களையே கடவுளின் அவதாரம் என்று மக்கள் விளங்கிக் கொண்டார்கள் என்பது தான் சரியான வாதமாக படுகிறது. இதைத்தான் பல ஹிந்து வேதங்களும் உறுதிப் படுத்துகின்றன. யுக முடிவு நாள் சமீபத்தில் ஒரு தூதர் வருவார் அவர் அரபு நாட்டில் தோன்றுவார். அவர் பெயர் அகமது அல்லது முகமது என்பதாகும் என்றெல்லாம் பல வேதங்களில் சொல்லப் பட்டுள்ளன.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4

இந்த வசனத்தின் மூலம் உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரும் வேதமும் வந்திருக்கிறது என்பதை அறியலாம். தமிழ் மொழியிலும் வேதமும் தூதரும் வந்திருக்க வேண்டும். ஆனால் அது பற்றிய தெளிவான சான்றுகள் நம்மிடம் இல்லை.

'அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் இப்றாகீம் இஸ்மாயில இஸ்ஹாக் யஃகூப் மற்றும் அவர்களின் சந்ததிகளுக்கு அருளப் பட்டதையும் மூஸா ஈஸா(ஏசு) மற்றும் நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம் நாங்கள் அவனுக்கே கட்டுப் பட்டவர்கள்' என்று கூறுவீராக! - குர்ஆன் 3 : 84

மேற்கண்ட வசனத்தின் மூலம் இறைத் தூதர்களுக்கிடையில் 'அவர் உயர்ந்தவர்' 'இவர் தாழ்ந்தவர்' என்ற பாரபட்சம் காட்டக் கூடாது என்று விளங்குகிறது. இனி இந்து மதத்தில் முகமது நபியைப் பற்றி முன்னறிவிப்பு சொல்லப் பட்டிருப்பதை வரிசையாக காண்போம்.

பவிஷ்ய புராணா

வேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.

- பவிஷ்ய புராணா - ப்ரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - சுலோகம் அய்ந்திலிருந்து எட்டு வரை.

மிகத் தெளிவாக முகமது நபி வருகையைப் பற்றி இங்கு சொல்லப் படுகிறது.

'உங்களுக்கு முகமது நபியிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.' - குர்ஆன் 33 :21

இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.

முகமது நபியின் வருகையை இதற்கு முன் உள்ள வேதங்களிலும் சொல்லியிருக்கிறேன் என்று இறைவன் குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.

'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல்இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - குர்ஆன் 2 :146

முகமது நபி மக்காவிலிருந்து விரட்டப் பட்டு மதீனா வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்களிடமிருந்து அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிபது பாலஸ்தீன் பகுதியிலிருந்து மதீனா வந்தனர்.முகமது நபி வரும் போதுஅவர்களை முதலில் ஏற்பவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இங்கே வந்து குடியேறினர். ஆனால் அவர்களின் வாரிசுகளோ முகமது நபி வந்த போது அவர்களை இறைத் தூதர்என்று அறிந்து கொண்டே மறுத்தனர். தமது பதவி செல்வாக்கு போய்விடும் என்று அஞ்சினர். அது தான் இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது.


பவிஸ்ய புராணம்

'இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.

பவிஸ்ய புராணா - பிரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.

அது எப்படி இவ்வளவு துல்லியமாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்ல முடியும் என்ற கேள்வி நமக்கெல்லாம் வரும். அதற்கு இறைவன் குர்ஆனிலேயே பதிலும் அளிக்கிறான்.

'பூமியிலும் வானத்திலும் அணு அளவோ அதை விடச் சிறியதோ அதை விடப் பெரியதோ உனது இறைவனை விட்டும் மறையாது. அவை தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டிருக்கிறது. - குர்ஆன் 10 :61

இந்த வசனத்தின் மூலம் எத்தனை நபி வருவார். எங்கெங்கெல்லாம் வருவார் அவர்களின் சட்டங்கள் என்பன போன்ற விபரங்களை ஏற்கெனவே எழுதி வைக்கப் பட்டுள்ள பதிவேட்டிலிருந்து எடுத்து இறைவன் கொடுத்திருக்கிறான் என்று விளங்க முடிகிறது.

மேலும் பல விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம் இறைவன் நாடினால்!

என்றும் அன்புடன்

சுவனப் பிரியன்.

Friday, May 26, 2006

குகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்!

குகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்!

'முகம்மதே! அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்' என்று நீர் நினைக்கிறீரா?'

குர்ஆன் 18 : 9

இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகை மற்றும் ஏட்டுக்குரியவர்கள், சுவடிக்கு உரியவர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. 'அந்த ஏடு ' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப் பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'அந்த ஏட்டுக்குரியவர்கள்' என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும் அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் 'அந்த ஏடு' என்று முக்கியத்துவப் படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.

'சாவுக் கடல் சாசனச் சுருள்கள்' என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பிபிசி யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அதில் சொல்லப் பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளி பரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. அதன் விபரங்கள்

1947 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக் கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி 'கும்ரான் மலைப் பகுதி' என்று அழைக்கப் படுகிறது. ஆட்டுக் குட்டியை தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப் பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன் படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப் பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.

ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப் பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும் முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.

அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹூசைன், அந்தச் சாசன சுருள்கள் முஸ்லிம்,யூத,கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப் பட்டு அவை ஆராயப் பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள் அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர்.கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை.

இடைப்பட்ட அய்ந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.

1952 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன.பதினைந்தாயிரம்Manuscripts (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.

கடந்த அய்ம்பதாண்டுகளுக்கு மேல் அந்தச் சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப் பட்டு வந்தது.

இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன.இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.

தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை Microfilm (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.

அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.

1990 ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக அய்ஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப் பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்குஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டவர்.

இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணியப் போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.

அவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்கு மூலம் அளிக்கின்றார். இத்தனைக் காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவிக் கொண்டுஅந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய100 Manuscripts (கையெழுத்துப் பிரதி) களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகிறார்.

மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக் காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகிறது.

கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப் படும் மதச் சடங்குகளும் வழிபாடுகளும் ஆரம்ப கிறிஸ்தவர்களிடையே நடை பெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.

இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் 'பவுல்' என்பவரால் பிற் காலத்தில் ஏற்படுத்தப் பட்டவை. மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப் படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலை முறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.

மேற்கண்டவாறு அறிஞர் அய்ஸ்மேன் கூறி வரும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, “It confirms Quran” அது குர்ஆனை உறுதிப் படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப் பட்டு மறு காட்சி காட்டப் படுகிறது.

இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது “It confirms Islam” அது இஸ்லாத்தை உறுதிப் படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப் படுகின்றது.

ஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப் படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை. அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

ஏசு அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.

ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள்தான் புதிய ஏற்பாடு.

பைபிளின் பல இடங்களில் ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை ஏசு பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது. எந்த இறை வேதத்தை கிறித்தவர்கள் மறைத்தார்களோ அதைத்தான் ஏசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.

'குர்ஆனை ஒத்திருக்கிறது' என்பது தான் ஆந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.

'இஞ்சீல்' எனும் வேதத்தைத் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. அந்த ஏடுகளை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப் படுத்துகின்றது.

மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப் படுத்துகின்றது.

-நன்றி திரு பி.ஜெய்னுல்லாபுதீன்.

இந்த ஏடுகள் சம்பந்தமாக மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் எனக்கு அனுப்பித் தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். அமெரிக்காவிலோ அல்லது ஜோர்டானிலோ வசித்து வரும் தமிழ் மக்கள் இது பற்றிய விபரங்களைச் சேகரிக்கலாமே! பிபிசியில் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், அல்லது இந்த ஏடுகள் சம்பந்தமான வெப் சைட்டுகளைத் தெரிந்தவர்கள், அறிஞர் அய்ஸ்மேன் வெளியிட்ட புத்தகத்தைப் படித்தவர்கள் போன்ற அதன் அனைத்து விபரங்களையும் எனக்கு அனுப்பி தந்தால் அனைத்தையும் வெளியிடுகிறேன். இதனால் மற்றவர்களுக்கும் உங்கள் மூலம் பல உண்மைகள் சென்றடையுமே!

Monday, May 15, 2006

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான! - 2

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான! - 2

முந்தைய பதிவில் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் உள்ள சில ஒற்றுமைகளைக் கண்டோம். இது போல் இரண்டு வேதங்களிலும் வரக் கூடிய வேறு சில ஒற்றுமைகளையும் பார்ப்போம்.

இந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :

'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'

-ரிக் வேதம் 1:164:46

'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'

உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.

அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.

-ரிக் வேதம் 2 : 1

இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.

இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'

குர்ஆன் 17 :110

இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். இறைவனின் வல்லமையைக் காட்டக் கூடிய பல பெயர்கள் குர்ஆனில் ஆங்காங்கே வரும். இறைவனின் பண்புகளாக வரக் கூடிய சிலவற்றைப் பட்டியலிடுகிறேன் :

ரப் (அதிபதி) - பஷீர் (பார்ப்பவன்) - ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) - ஹக்கிம் (ஞானமிக்கவன்) - ஹமீது (புகழுக்குரியவன்) - ஹய்யு (உயிருள்ளவன்) - ரவூப் (இரக்கமுடையவன்) - ரஹ்மான் (அருளாளன்) - ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) - சலாம் (நிம்மதி அளிப்பவன்) - அஜீஸ் (மிகைத்தவன்) - அலீம் (அறிந்தவன்) - குத்தூஸ் (தூயவன்) - ஹாக்கிம் (தீர்ப்பு வழங்குபவன்) - மலிக் (அரசன்) - வக்கீல் (பொறுப்பாளன்)

- இது போன்று மொத்தம் 99 பண்புகளை இறைவன் ஆங்காங்கே குர்ஆனில் விவரித்துச் செல்கிறான்.

'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'

குர்ஆன் 7 : 180

இறைவனுக்கு அழகான பெயர்கள் உண்டு என்றும் அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் மேற் கண்ட வசனம் கூறுகிறது. இறைவனின் பெயரை திரித்துக் கூறுவதும் சிதைப்பதும் கடும் குற்றம் எனவும் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் எனவும் இவ் வசனம் கடுமையாக எச்சரிக்கிறது.

இன்று முஸ்லிம்களிடம் கூட சிலர் அறியாமையினால் தியானம் என்ற பெயரில் வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவு நேரங்களில் அமர்ந்து கோரஸாக ஓதி வருவதை பார்க்கிறோம்.அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் ஒன்று 'ஹீ,ஹீ' என்பது. ஹீ என்றால் அரபியில் 'அவன்' என்று அர்த்தம். சாத்தானைக் கூட 'ஹீ' என்று கூறலாம்.

அடுத்து ஒன்று 'ஹக் தூ ஹக்' என்று அரபியும் உருதும் கலந்து புது வார்த்தையை கண்டு பிடித்து திக்ரு என்ற பெயரில் செய்து வருகிறார்கள்.

இன்னொன்று 'அல்லாஹ்' என்ற பெயரில் முதல் எழத்து அ வையும் கடைசி எழுத்து ஹ் ஹையும் இணைத்து 'அஹ்' என்ற புது பெயரை கண்டு பிடித்துள்ளார்கள்.

அடுத்து 'இல்லல்லாஹ்' என்றும் ஓதுகிறார்கள். இதற்கு பொருள் 'அல்லாஹ்வைத் தவிர'. இதற்கும் எந்த பொருளும் இல்லை.

எனவே இறைவனோ, முகமது நபியோ காட்டித் தராத இது போன்ற நவீன வணக்கங்களை செய்வோரைப் பார்த்துதான் மேற் கண்ட வசனத்தில் எச்சரிக்கப் படுகிறது.

ரஜ்னீஷைப் பற்றி நாமெல்லாம் அறிவோம். அமெரிக்காவில் 'ரஜ்னீஷ்புரம்' என்று அமைத்து அமெரிக்க அரசாங்கத்தாலேயே ஒரு கணம் திரும்பிப் பார்க்கப் பட்டவர்.இந்தியாவிலும் புனேயில் உள்ள அவரின் ஆஸ்ரமத்தில் ஓர் வாசகம் எழுதப் பட்டிருக்கும்.

“Osho –Never born, Never died, only visited the planet earth between 11th dec 1931 to 19th jan 1990”

மனிதர்களால் எழுதப் பட்ட தன்னிலை விளக்கங்கள் எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதற்கு மேலே உள்ள வாக்கியங்களை படித்தாலே நமக்கு நன்கு விளங்கும். நம்மைப் போன்ற ஒரு மனிதர். நோய்களுக்கு ஆட்பட்டார்.நம்மைப் போலவே மரணத்தையும் சுவைத்தார்.இருந்தாலும் மனித மனம் அவரை கடவுளாக்க முயற்ச்சிக்கிறது.

எனவே எந்த சமூகத்தவரும் இறைவன் அவர்களுக்கு கொடுத்த வேதத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால ஈருலகிலும் வெற்றியடையலாம். எங்கெல்லாம் மனிதர்கள் தாமாக வழிமுறைகளை அமைத்துக் கொண்டு 'இறைவனை நாங்களும் அடைகிறோம' என்று புதிது புதிதாக மார்க்கங்களை உண்டு பண்ணுகிறார்களோ அவர்கள்ஈருலகிலும் நஷ்டவாளிகளாக ஆகிறார்கள். இறைவன் மிக அறிந்தவன்.