Followers

Monday, June 30, 2014

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

'இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119


இந்த ஒரு நபி மொழியை நாம் சரியாக விளங்கிக் கொண்டால் பல பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களில் 80 சதமான பேர் உண்மையான இஸ்லாம் என்ன என்பதை விளங்காமல் பல பிரச்னைகளை தங்களுக்கும் தம்மைச் சார்ந்த சமூகத்துக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் அவர்கள் 'இவை எல்லாம் எங்களை சொர்க்கத்துக்கு கொண்டு சென்று விட்டு விடும்' என்று வேறு சொல்கிறார்கள்..

மேலே உள்ள நபி மொழியில் சில நல்லறங்களை நான் செய்யாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்விக்கு, மனிதர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பதிலை நாம் பார்க்கிறோம். ஷியாக்களுக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் பகை: இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகை: கிறித்தவர்களுக்கும், பவுத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை: தவ்ஹீத் வாதிகளுக்கும் தர்ஹா வணங்கிகளுக்கும் பகை: என்று எங்கு நோக்கினாலும் பிரச்னைகளே!

முஸ்லிம்களை அழித்து அதன் மூலம் தாங்கள் மோட்சம் அடைந்து விடலாம் என்பது பெரும் பாலான இந்துத்வாவாதிகளின் நம்பிக்கை. இதற்கு அவர்களின் வேதங்களே தடையாக இருப்பதை ஏனோ இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை: முதலில் சக மனிதனை நிம்மதியாக வாழ வைத்தால்தான் நீ இறைவனை நெருங்க முடியும் என்று உலக மதங்கள் அனைத்துமே கூறுகிறது. ஆனால் மனித மனம் இதனை சிந்திப்பதில்லை. தலைவர்கள், இயக்கங்கள், குழுக்கள் என்ற பெயரில் அவரவர்க்கு தோதான வசனங்களை பிடித்துக் கொண்டு தினமும் ரத்தத்தை சிந்திக் கொண்டிருக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே! இவர்கள் நல்லது செய்யா விட்டாலும் சும்மா இருந்தாலே போதும்: பல பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும். அதாவது உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாமில்லையா?

சக மனிதர்களை அன்போடும் பாசத்தோடும் நோக்குங்கள்: இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ யாராக இருந்தாலும் அவனும் ஆதமின் மகனே! அந்த பாசம் வந்து விட்டால் முறுகல் விலகும்: அன்பு பெருகும்: மனிதம் தழைக்கும்:

Sunday, June 29, 2014

நீர் ஆதாரங்களை பல நாடுகளில் பெருக்கி வரும் யுஏஇ!யுனைடெட் அரப் எமிரேட்ஸ் அரசானது உலகம் முழுவதிலுமுள்ள ஐந்து மில்லியன் மக்களுக்கு ஏற்படும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முன் வந்துள்ளது. இந்த முயற்சியானது சென்ற சனிக்கிழமை தொடங்கப்பட்டு இது வரை 9.1 மில்லியன் டாலர் அன்பளிப்பாக சேர்ந்துள்ளது. ஜூலை 17க்கு முன்பாக தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு பல முக்கிய கம்பெனிகளை யுஏஇ அரசானது கேட்டுக் கொண்டுள்ளது.

யுனைடெட் அரப் எமிரேட்ஸின் செம்பிறை சங்கமானது இது வரை 10 நாடுகளில் போர்வெல்களை அமைத்து அந்த மக்களின் குடிநீர் பிரச்னையை போக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், நைஜர், சோமாலியா, கானா, சூடான், இந்தோனேஷியா, ஈராக் போன்ற நாடுகள் இதனால் பெரும் பயனை பெற்றுள்ளன.

யுனைடெட் அரப் எமிரேட்ஸ் அரசானது 2003 லிருந்து 2013 வரையிலான கால கட்டத்தில் 1.014 மில்லியன் திர்ஹம்களை செலவழித்து 61 நாடுகளின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்த்து வைத்துள்ளது. இந்த நீர் சம்பந்தமான துறையானது துபாய் அரசர் ஷேக் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இது பற்றி அவர் கூறும் போது 'யுஏஇ ஆனது நன்கொடைகளை வழங்குவதிலும், மனிதாபிமான உதவிகளை தருவதிலும் உலகின் முதல் தர நாடாக உள்ளது' என்கிறார். உலக மீடியாக்கள் ஷேக் ரஷீத் அல் மக்தூமின் மனிதாபிமான உதவிகளை பெரிதும் பாராட்டுகின்றன.

இஸ்லாம் என்பது தொழுகை, நோன்பு என்பதோடு குறுகி விடுவதில்லை. இது போன்ற மனிதாபிமான செயல்பாடுகளை செல்வந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் மனமுவந்து செயல்படுத்த முன் வர வேண்டும். செல்வம் ஓரிடத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பதல்ல இஸ்லாம். எனவே தான் ஏழை வரியான ஜகாத்தை இஸ்லாம் கட்டாய கடமைகளில் ஒன்றாக்கியது. இதே போன்று மற்ற ஆட்சியாளர்களும் தங்களின் பொறுப்புணர்ந்து ஏழை நாடுகளுக்கு உதவ முன் வருவார்களாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
29-06-2014

பசு வதை பற்றி சில கருத்துக்கள்!

திரு தாயுமானவன்!

//ஒன்றை மட்டும் கூறுகிறேன். என்னதான் கூப்பாடு போட்டாலும் இந்து மதம் கோ மாமிசத்திற்கு எதிரானது என்று கூறுவது சகிக்கவொன்னாத வரலாற்று மோசடி. வேத காலத்தில் பசு மாமிசம் உண்டதர்க்கான ஆதாரம் வேதத்தில் தொடங்கி ஆயுர்வேத மருத்துவம் முதல் மனு தர்மம் வரை நிறையவே இருக்கின்றது. நிலைமை இப்படி இருக்கும் போது பசு மாட்டின் இறைச்சியை தடை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் முதல் இங்கிருக்கும் ராமகோபாலன் வரை கூப்பாடு போட்டு புனித பசுக்களாக தங்களை காட்டி கொள்வது தான் வரலாற்று நகை முரண்..//

ஒரு இந்துவாக இருந்து கொண்டு மிக அருமையான வாதத்தை வைத்துள்ளீர்கள். இதையே நான் சொன்னால் 'நீ எப்படி சொல்லப் போயிற்று' என்று சாரங்க் சண்டைக்கு வருவார்.

உலகில் ஆயிரக்கணக்கான உயிர்கள் உள்ளன. எல்லா உயிர்களையும் சமமாக பாவிப்பவர் அனைத்து உயிர்களையும் மாமிசத்துக்காக வெட்டுவதை எதிர்ப்பார். அது என்ன பசு மாமிசத்துக்கு மாத்திரம் ஒரு எதிர்ப்பு? நீங்கள் சொல்வது போல் வேத காலம் தொட்டு பசு வேள்விக்காக கொல்லப்பட்டுள்ளது. அதெல்லாம் தவறு என்று ஃபத்வா கொடுக்கப் போகிறீர்களா?

மேலும் மனிதன் உணவுக்காக அறுக்கும் விலங்குகள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவையே. உலகம் முழுக்க பெரும்பாலான மக்கள் இதனையே விரும்பி சாப்பிடுகின்றனர். இவற்றின் எண்ணிக்கை எங்காவது குறைந்துள்ளதாக நீங்கள் படித்திருக்கிறீர்களா? மேலும் மேலும் இவற்றின் எண்ணிக்கை பெருகிக் கொண்டுதானே இருக்கிறது. உணவுக்காக அறுக்கப்படாத சிங்கம், புலி போன்றவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இது விநோதமாக இல்லையா? தினமும் கோடிக்கணக்கான ஆடுகளும், மாடுகளும், கோழிகளும் உணவுக்காக வெட்டப்படுகிறது. இவை எல்லாம் ஒரே நாளில் நின்று போனால் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து சுற்றுப்புற சூழலை கெடுக்கவும் செய்யும். ஆஸ்திரேலியாவில் கங்காருகள் அதிகரித்து சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை விளைவித்ததால் பெரும் எண்ணிக்கையிலான கங்காருகளை அந்த அரசாங்கம் சுட்டுக் கொன்றது.

எனவே உங்களுக்கு பசு மாடானது தெய்வம் என்றால் உங்கள் அளவில் அதனை புனிதப்படுத்திக் கொள்ளுங்கள். கோசோலைகளை அமைத்து கிழட்டுப் பசுக்களை பராமரியுங்கள். அதை விடுத்து பசு மாமிசம் சாப்பிடுபவர்களை வன்முறையைக் கொண்டு தடுக்க நினைப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

Sunday, June 15, 2014

இன்று தந்தையர் தினமாம்! சொல்கிறார்கள்.....
நபியே! உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் கட்டளையிட்டிருப்பதுடன் தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை நிந்தனையாகச் "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி மிக்க மரியாதையாகவும் அன்பாகவுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது மிக்க அன்பாக என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக!

(அல்குர்அன் 17:23,24)

தாய் தந்தைக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம்... (அல்குர்அன் 29:8)

தமது தாய் தந்தைக்கு நன்றி செய்வதுபற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து கர்ப்பத்தில் அவனைச் சுமந்தாள்...

(அல்குர்அன் 31:14)

----------------------------------------------------------------

அபூ பக்கர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"உங்களுக்கு பாவங்களிலெல்லாம் மிகப்பெரிய பாவத்தை அறிவிக்கட்டுமா'' என நபி (ஸல்) அவர்கள் மூன்றுமுறை கேட்டார்கள்.

நாங்கள் "அறிவித்துத் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினோம்.

நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்கு நோவினை செய்தல்'' என்று கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

----------------------------------------------------------------

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது எது? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதாகும்’ என்று கூறினார்கள். இதற்குப் பிறகு எந்தச் செயல் இறைவனுக்கு விருப்பமானது? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ‘பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்வதாகும்’ என்று கூறினார்கள். இதற்குப் பிறகு (எது?) என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் ‘இறை பாதையில் உழைப்பது’ என்று கூறினார்கள்.

(நூல் : புகாரி, முஸ்லிம்)


‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு?’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள்.

(நூல்: முஸ்லிம்)

Saturday, June 14, 2014

அமீரகத்தின் முதல் பெண் பைலட் மரியம் ஹஸன் மன்சூரிஅமீரகத்தின் முதல் பெண் பைலட் என்ற பெருமையை மரியம் ஹஸன் மன்சூரி பெற்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதன் முதலாக ஒரு பெண் விமான படையில் அங்கம் வகிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 35 வயதான மன்சூரி 2007ல் முதன் முதலாக விமானப் படையில் நுழைந்து படிப்படியாக முன்னேறி தற்போது ஒரு சிறந்த விமானியாக தேர்வு பெற்றுள்ளார். அமீரகத்தின் சிறந்த விருதான 'முஹம்மது பின் ரஷீத்' விருதையும் மன்னரிடமிருந்து பெற்றுள்ளார். சகோதரி பல வெற்றிகள் பெற்று நாட்டுக்கு சேவையாற்ற நாமும் வாழ்த்துவோம். அதோடு நமது குடும்பத்து பெண்களையும் இஸ்லாம் சொல்லும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சிறந்த கல்வியைக் கொடுத்து வீட்டுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றும் சிறந்த சமூக சேவகிகளாக மாற்றிக் காட்டுவோம்.

தகவல் உதவி
அல்அரபியா
12-06-2014

பிரேசில் - அவரவர் கவலை அவரவர்க்கு!It is not just the hotels and tour operators, who are going to benefit the most from the 2014 FIFA Football World Cup. According to some estimates there are at least 10 lakh prostitutes in Brazil and they are also hoping to earn a lot during the World Cup. - IBN live

பிரேசில் நாட்டில் தற்போது உலக கால்பந்தாட்ட போட்டி நடைபெறுவதை நாம் அறிவோம். இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து விபசாரிகள் அங்கு குழுமியுள்ளார்களாம். மொத்தமாக 10 லட்சம் விபசாரிகள் தயாராக உள்ளனராம். போட்டியை பார்வையிட வருபவர்களுக்கு விருந்தளிக்கும் முகமாக அரசே இந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது. வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த தங்கள் ரேட்டையும் பாதியாக குறைத்துள்ளார்களாம் இந்த விபசாரிகள். இது அந்த விபசாரிகளின் கவலை.

உலக கால்பந்தாட்ட வீரர்களையும் அதனை காண வரும் உலக விஐபிக்களையும் எந்த வகையிலாவது குஷிப் படுத்த வேண்டும் என்று மதுவையும் மாதுக்களையும் வழக்கத்தை விட அதிகமாகவே சப்ளை செய்துள்ளது பிரேசிலிய அரசு. இது பிரேசில் அரசின் கவலை.

கால்பந்தாட்டத்துக்கும் விபசாரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று ஒரு சமூக ஆர்வலரும் குரல் எழுப்பவில்லை. பெண் உரிமை பேசும் பெண்களெல்லாம் தற்போது எங்கு ஒளிந்து கொண்டார்களோ தெரியவில்லை. இது நம்முடைய கவலை.

அதே நேரம் அதே பிரேசிலில் இன்னொரு கூட்டம் மக்களை உண்மையின் பால் அழைப்பதில் ஈடுபட்டுள்ளதையும் பார்க்கிறோம். அதையும் அந்த மக்கள் ஆர்வமோடு வாங்கி தங்களின் இறை தேடலை புதுப்பித்துக் கொள்கின்றனர். விபசாரம் கொடி கட்டி பறக்கும் இந்த தேசத்தில் அந்த மக்களை எப்படியாவது நல்வழிப் படுத்தி விட அல்லும் பகலும் உழைக்கும் இந்த சகோதரர்களுக்கு இறைவன் மேலும் கண்ணியத்தை தந்தருள்வானாக! இந்த காணொளியிலேயே ஒரு சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதையும் பார்க்கிறோம். எப்பாடு பட்டாவது இந்த மக்களை நரக நெருப்பிலிருந்து மீட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சகோதரர்களின் பயணம் அமைந்துள்ளது. இது இவர்களின் கவலை.

ஆக மொத்தத்தில் ஒவ்வொருவருக்கும் சமூகத்தையொட்டிய கவலை அவரவர் கோணத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

உலக சாதனை படைத்த மாணவர் முகமது சுஹைல்மிகக்குறைந்த வயதில் எம்.சி.ஏ. படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பிஹெச்.டி. படிப்பில் சேர்ந்துள்ளார்.

முகமது சுஹைல் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து தனது 17-வது வயதிலேயே எம்.சி.ஏ. (மாஸ்டர்ஸ் இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்) படித்து 78.5 சதவீத மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்புமிக்க எம்.சி.டி.எஸ். மற்றும் எம்.சி.பி.டி. ஆகிய சான்றிதழ் தேர்வுகளிலும் வெற்றிபெற்று உலகிலேயே மிக இளம் வயதில் இத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவரை தங்கள் நிறுவனத்தில் பணியில் சேர்த்துக்கொள்ள உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால் சுஹைல் எந்த நிறுவனத்திலும் பணியில் சேராமல் சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பிஹெச்.டி. என்ற ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்துள்ளார்.

இவருக்கு இலவச உணவு, தங்கும் வசதி ஆகியவற்றுடன் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.

தகவல் உதவி

ஹிந்து தமிழ் நாளிதழ்
14-06-2014

Friday, June 13, 2014

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

கம்பெனி வேலையாக ஒரு வாரம் தபூக் மாநகருக்கு வரும் ஞாயிறன்று செல்கிறேன். அதற்காக டிக்கெட் முன் பதிவு செய்ய ரியாத் பேரூந்து நிலையத்துக்கு சென்று வரிசையில் காத்திருந்தேன். அப்போது எனக்கு பின்னால் ஒரு இந்தியர் திரு திரு என்று ஒரு பயம் கலந்த தொனியில் நின்று கொண்டிருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து கொண்டு நான் கேட்டேன்...

'எந்த ஊரு?'

'ஆந்திரா... கர்நூல்' அந்த இந்து நண்பருக்கு உருதுவும் சரியாக வரவில்லை. தட்டுத் தடுமாறி பேசினார். தனது கையில் உள்ள ஒரு துண்டு சீட்டை என்னிடம் நீட்டினார். அதில் ஹஃப்ரல்பாதின் என்ற ஊர் பெயரும் - மற்றும் டெலிபோன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது. புதிதாக சவுதி வருகிறார். விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வந்து விட்டார். இங்கு ரியாத்திலிருந்து அவர் வேலை செய்யும் இடமான ஹஃப்ரல் பாதின் 250 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ளது. அங்கு பஸ் பிடித்து இவர் செல்ல வேண்டும்.

எனது முறை வரவே நான் டிக்கெட் எடுத்து விட்டு அவரது பாஸ்போர்டை கொடுத்து 'ஹஃரல் பாதினுக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்' என்று கவுண்டரில் உள்ளவரிடம் கேட்டேன். அவர் பெயரை பதிவு செய்து விட்டு '110 ரியால்' என்று என்னிடம் கேட்டார். நான் அந்த இந்து நண்பரிடம் '110 ரியால் பஸ் டிக்கெட்டுக்கான ரியாலை கொடுங்கள்' என்றேன். அவர் தனது கையில் இருந்து முழு பணத்தையும் என்னிடம் தந்தார். எண்ணிப் பார்த்தால் வெறும் 35 ரியால்தான் இருந்தது. 'என்ன இது? மீதி பணம் எங்கே?' என்றேன். தான் விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வர 50 ரியால் கொடுத்ததாகவும் கொஞ்சம் இந்திய ரூபாய் இருப்பதாகவும் வேறு பணம் இல்லை என்றும் பரிதாபமாக சொன்னார். டிக்கெட் கவுண்டரில் உள்ள சவுதி நாட்டவரோ பணம் இல்லை என்றவுடன் சற்று கோபத்துடன் அடுத்த ஆளை கூப்பிட்டார்.

எனது தகுதிக்கு 10 ரியால் கொடுத்து மற்றவர்களிடமும் வசூல் பண்ணி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அழைத்துக் கொண்டு நகர ஆரம்பித்தேன். எங்கள் வரிசையில் நின்ற இரண்டு சவுதி நாட்டவர் இதனை கவனித்து விட்டு என்னிடம் 'என்ன பிரச்னை?' என்று கேட்டனர். நான் முழு விபரத்தையும் சொன்னேன். உடனே அந்த இருவரும் தங்கள் பையிலிருந்து 50 ரியாலையும் மற்றவர் 50 ரியாலையும் என்னிடம் கொடுத்து 'போதுமா' என்றனர். தற்போது 135 ரியால் சேர்ந்து விட்டது. நான் போதும்' என்றேன். அதே நபர் மேற்கொண்டு 20 ரியாலை அந்த இந்து நண்பரின் கையில் கொடுத்து 'வழியில் சாப்பிட வைத்துக் கொள்' என்று கொடுத்தார். அந்த இந்து நண்பருக்கு முகத்தில் ஏக மகிழ்ச்சி. அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொன்னேன். அந்த இந்து நண்பரையும் நன்றி சொல்ல சொன்னேன். அவரும் அந்த சவுதிகளின் கைகளை பிடித்து நன்றி கூறினார். இது ஒரு சிறிய உதவிதான். ஆனால் மொழி தெரியாமல், சாப்பிடாமல் ஒரு அந்நிய தேசத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் இந்த நூறு ரியால் என்பது வள்ளுவர் சொல்வது போல் 'ஞாலத்தின் மாணப் பெரிது' அல்லவா?

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


-திருக்குறள்

விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

நான் அவர் ஒரு இந்தியர் என்ற காரணத்தினால் உதவ போனேன். ஆனால் அந்த இரண்டு சவுதிகளும் யாரென்றே தெரியாத அந்த இந்து நண்பருக்கு உதவிய மனிதத் தன்மையை நினைத்து நெகிழ்வுற்றேன். இது போல் சவுதியில் ஆங்காங்கு பல நிகழ்வுகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுக்கவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது இந்திய நாட்டில் இந்துத்வாவாதிகளால் தினமும் எங்காவது ஒரு மூலையில் இஸ்லாமியர்கள் கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த இந்துத்வாவாதிகள் செய்யும் அந்த கொடூரங்கள் என்னை இந்த இந்து நண்பருக்கு உதவி செய்ய தடுத்து விடவில்லை. அந்த இரண்டு சவுதிகளும் டிக்கெட்டுக்கு பணத்தையும் கொடுத்து சாப்பாட்டு செலவுக்கு மேற்கொண்டும் பணத்தை கொடுத்த அந்த மனித நேயத்தை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு பால்தாக்கரேயையும், சிவாஜியையும் தரக்குறைவாக விமரிசித்ததாக கூறி அதனை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி பரப்பி கலவரத்தை காவிகள் மும்பையில் அரங்கேற்றினர். சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு கணிணி வல்லுனர் காவிகளால் அடித்தே கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள கிராமங்களில் இந்துக்களை யாரும் தாக்கி விடாமல் முஸ்லிம்கள் காவல் காத்தார்களாம். இதனை நெகிழ்வாக ஒரு இந்து நண்பரே பேட்டியாக கொடுத்துள்ளார். இதனைத்தான் குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது.

திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கு அறிந்தவன்'
-குர்ஆன் 5:8

மற்றுமொரு வன்புணர்வு - பெண் தூக்கிலிடப்பட்டாள்!

மற்றுமொரு வன்புணர்வு - பெண் தூக்கிலிடப்பட்டாள்!
சில நாட்களுக்கு முன்பு தான் இரண்டு பெண்களை உபி மாநிலம் பதுவான் மாவட்டத்தில் வன்புணர்வு செய்யப்பட்டு அந்த பெண்களை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டனர். அதே மாவட்டத்தில் இதே போன்ற சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. 45 வயது மதிக்கத்தக்க இந்த பெண் சென்ற செவ்வாய்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். ராணிப்பூர் என்ற கிராமத்தில் ஒரு மரத்தில் இவரது துப்பட்டாவையே தூக்கு கயிறாக மாற்றி கொடியவர்கள் அந்த பெண்ணை தூக்கில் ஏற்றியுள்ளனர். இந்த பெண்ணும் தலித் சமூகத்தை சேர்ந்தவரே!

ராணிப்பூர் போலீஸ் அதிகாரி சுனில் குமார் சிங் சொல்லும் போது 'இந்த பெண்ணையும் கற்பழித்து அதன் பிறகு இறந்தவுடன் மரத்தின் மேல் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம். விஜய், ராஜூ, ஓங்கார், ராம் ஸ்வர்ப், நயீம் என்ற நான்கு பேரை கைது செய்துள்ளோம். ' என்கிறார்.

இந்த கொலையில் சாராய வியாபாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை செல்கிறது. ஹாமிர்பூர் என்ற கிராமத்தில் இதே போல் தனது கணவனின் விடுதலைக்காக காவல் நிலையம் சென்ற பெண் அந்த காவல் நிலையத்தின் காவல் அதிகாரியால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த அளவு துணிச்சலாக கற்பழிப்புகளும் கொலைகளும் சர்வ சாதாரணமாக நடப்பது இந்தியர்களாகிய நமக்கு மிகப்பெரும் அவமானமாகும். சட்டம் இன்னும் கடுமையாக்கி தலித் கிராமங்களுக்கு தக்க பாதுகாப்பை தர வேண்டியது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரை அரபு நாட்டு பாணியில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டால் அடுத்த நாளே இந்த குற்றங்கள் காணாமல் போய் விடும். அது வரை குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை தைரியமாக அரங்கேற்றியே வருவர்.

ஒரே மதத்தை சார்ந்த தலித்களை இது போன்று கொடுமைபடுத்தினால் தங்களின் பாதுகாப்புக்காக சிலர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இங்கும் இந்துத்வா வந்து இஸ்லாத்துக்கு மாறாதே என்று சில இடங்களில் அடாவடி செய்கின்றனர். பிறகு அவர்கள் என்னதான் செய்வது என்பதை இந்துத்வாவாதிகள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
11-06-2014

Thursday, June 12, 2014

பாராளுமன்றத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை!ஐந்து நிமிடப் பேச்சு அது. ஆனால் ஆணித்தரமான, அழகான, நிறைவான பேச்சு.

மோடிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டியவர் ‘நான் உங்களுடைய வெற்றியை Pyrrhic victory ஆகத்தான் கருதுகின்றேன்’ என்று சொன்னதுதான் சரியான பஞ்ச். மோடியின் வெற்றியை இதனை விட நச்சென்று விமர்சிக்க முடியாது.

‘ஏன் குஜராத் 2002 படுகொலைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று ராம்விலாஸ் பாஸ்வான் சொன்னதற்கு அவர் அளித்த பதில் அழுத்தமானது. கனமானது. உவைசி சொன்னார்: ‘இந்த நாட்டின் வரலாற்றில் நாட்டின் அடிப்படைகளை ஆட்டங்காணச் செய்கின்ற அளவுக்கு நான்கு கொடூரங்கள் நடந்திருக்கின்றன. முதலாவதாக தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படுகொலை. இரண்டாவதாக, 1984-இல் தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலைகள். மூன்றாவதாக, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட கொடுமை. நான்காவதாக குஜராத்தில் 2002-இல் நடந்த முஸ்லிம் படுகொலைகள்.’

இவ்வாறு சொன்ன அதே மூச்சில் ‘எவரிடம் மனித நேயம் இருக்கின்றதோ அவர் இந்தக் கொடுமைகளை மறக்க மாட்டார். நினைவில் வைத்திருப்பார். எவரிடம் மனிதம் இருக்கின்றதோ அவர் இந்தக் கொடுமையாளிகளை மன்னிக்கவே மாட்டார்.’ என்று சொன்னதைக் கேட்டு அவையே சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்றுவிட்டது.

Inclusive growth குறித்து பேசுகின்ற நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பன்முகத் தன்மையும் பல்வேறு இனங்களையும் மதங்களையும் மொழிகளையும் பண்பாடுகளையும் சேர்ந்து வாழ்கின்ற பன்மைச் சமூகத்தன்மையும்தான் இந்த நாட்டின் அடையாளமாக, பாரம்பர்யமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது இந்த அவையில் பிரதிபலித்துள்ளதா? யோசியுங்கள். முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை 21 ஆக சுருங்கிப் போனதேன்? சிந்தியுங்கள்.

முஸ்லிம்களை equal partnersகளாக ஆக்கிக் கொள்வோம் என்று சொல்கின்றீர்கள். சமமான பங்குதாரர்களாய் முஸ்லிம்களை எப்படி ஆக்கப் போகின்றீர்கள்? உங்களுடைய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சரே முஸ்லிம்களை சிறுபான்மையினர் எனச் சொல்லக் கூடாது என்று கூறியிருக்கின்றார். நான் கேட்கின்றேன். முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகத்தினர் இல்லை யெனில் 80 ஆயிரம் பேரைக் கொண்ட பார்சிகளுக்காகத்தான் சிறுபான்மை துறை அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது என்று நான் நம்ப வேண்டுமா? அரசியல் அமைப்புச் சட்டத்தின் 29க்கும் 30க்கும் இது நேர் மாறானதாக இல்லையா?

மே 16 அன்றுதான் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் வந்தது. குஜராத் அரசும் உள்துறை அமைச்சரும் சரியாகச் செயல்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. அந்த அரசின் அப்போதைய உள்துறை அமைச்சர்தான் இப்போது இந்த நாட்டின் பிரதமராகவும் இருக்கின்றார்.
தம்முடைய கையாலாகாததனத்திற்காக குஜராத் அரசு மன்னிப்பு கேட்குமா? ஏழு ஆண்டுகள், பன்னிரு ஆண்டுகள் என சிறையில் தொலைத்த அப்பாவிகளுக்கு அவர்களின் இழந்த ஆண்டுகளை மீட்டுக் கொடுப்பது யார்?

Zero tolerance to communalism என்று இந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐயா, நான் இங்கு இஹ்ஸான் ஜஃப்ரியின் மகனாக வந்திருக்கின்றேன்.
நான் இங்கு இஷ்ரத் ஜஹானின் அண்ணனாக நிற்கின்றேன்.
நான் இங்கு முஹ்சின் சாதிக்கின் சித்தப்பாவாக வந்துள்ளேன். நான் இங்கு குஜராத் இனப் படுகொலையின்போது உயிரைப் பறிகொடுத்த அபலைகளின் சார்பாக நிற்கின்றேன்.

அந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா?

தமிழ்படுத்தியது

- டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

இணைப்பு கீழே தரப்படுகின்றது.

http://www.youtube.com/watch?v=8n8V0cXerMc

தமிழில் தொழாதவர்க்கு நரகமா? - ஐயாரப்பன்!

ஹானஸ்ட் மேன்!

//“அல்லாவே மிகபெரியவன் தொழுகை நோக்கி விரைந்து வாருங்கள். அல்லாவை தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. முகமது (ஸல்) அவர்கள் அல்லாவின் தூதர் என்று சான்று பகர்கிறேன்” என்று சொன்னால் தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு புரியாதோ? முஸ்லிம்கள் தமிழ் ஆர்வலர்கள் இல்லையா? அல்லது நீங்கள் தமிழர்களே இல்லையா?//

இஸ்லாமிய மார்க்கமானது உலகலாவிய மதம். ஒரு அமெரிக்கனோ, ஒரு ஆப்ரிக்கனோ இஸ்லாத்தை ஏற்றவர்கள் தமிழகத்துக்கு வந்தால் அங்கிருந்து ஒலி பெருக்கியில் 'அல்லாஹ் அக்பர்' என்ற சப்தம் வந்தால் உடனே அந்த பள்ளியை நோக்கி யாரும் சொல்லாமலேயே தொழுகைக்கு வந்து விடுவர். எந்த மொழியை பேசுபவராக இருந்தாலும் அவர் உலகில் நடக்கும் இஸ்லாமிய தொழுகைகளில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் தனது வணக்கத்தை செய்து விட முடியும். இந்த உலக ஒற்றுமைக்காகத்தான் பள்ளிகளில் அரபி அழைப்பும் தொழுகையும் நடத்தப்படுகிறது. அரபி மொழி தேவ மொழி என்று குர்ஆனும் சொல்லவில்லை. உலக மூல மொழிகள் அனைத்தையும் படைத்தவன் இறைவனே என்கிறது குர்ஆன். எனவே மொழிகளுக்குள் ஏற்றத் தாழ்வு கற்பிப்பதும் இஸ்லாமிய அடிப்படையில் தவறு.

தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் சவுதியின் தலைநகர் ரியாத்தில் மிக பிரமாண்டமான பள்ளிவாசலில் தலைவராக நின்று தொழுகை நடத்தியுள்ளேன். என்னை பின் பற்றி ஆப்ரிக்கனும், ஐரோப்பியனும், பாகிஸ்தான், பங்களாதேஷ், என்று உலக நாடுகள் அனைத்திலுமிருந்தும் வந்தவர்கள் எனது கட்டளைக்கு பணிந்து நான் குனிந்தால் அவர்களும் குனிகிறார்கள்: எனது சிரத்தை இறைவனுக்காக தரையில் வைத்தால் என்னைப் பின்பற்றி அவர்களும் தங்கள் தலைகளை வைக்கிறார்கள். யாரும் யாருக்கும் இங்கு சொல்லிக் கொடுப்பதும் இல்லை. ஒரு தமிழனைப் பின் பற்றி ஒரு ஐரோப்பியன் தொழுவதா? என்று அவர்கள் நினைக்கவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் சம அளவில் பாவிப்பதால்தான் இது போன்ற அழகிய சம்பவங்கள் நடக்கின்றது.

------------------------------------------------------------

திரு ஐயாரப்பன்!

//நம் தாய்மொழி தமிழில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பது என்பது சோற்றிலே உப்பிட்டு உண்ணுபவர்கள் மட்டுமே செய்வார்கள்.//

அப்படி பார்த்தால் தமிழகத்தில் 90 சதவீதமான நபர்கள் உப்பு போடாமல்தான் சாப்பிட வேண்டி வரும். :-) ஏனெனில் குறிப்பிட்ட சில கோவில்களை தவிர மற்ற அனைத்து கோவில்களிலும் சமஸ்கிரதம்தான் ஆட்சி செய்கிறது. சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட இன்று வரை அனுமதி மறுக்கப்படுவதை நீங்களும் படித்திருப்பீர்கள். அங்கு இதே வாதத்தை உங்களால் ஏன் வைக்க முடியவில்லை? இந்து மதமானது இந்தியர்கள் மட்டுமே பின்பற்றக் கூடிய ஒரு மதம். எனவே தமிழில் பாடுவதால் எந்த சிக்கலும் வரப் போவதில்லை. இருந்தாலும் உங்களால் அந்த முயற்சியை செய்ய முடியாது. இதுதான் யதார்த்தம்.

//வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டை கொள்ளை அடிக்க வந்துவிட்டு, இங்கேயே தங்கி விட்டவர்கள். கடவுளை வணங்க தன் தாய் மொழியை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு இறைவன் அருள் நிச்சயம் கிடைக்காது. ஆபிரகாமியர்கள் பாணியில் சொல்வதென்றால், இத்தகைய வஞ்சகர்களுக்கு மீளா முழு நரகம் மட்டுமே கிடைக்கும்..//

இங்குள்ள முஸ்லிம்களை வெளி நாட்டு இறக்குமதி என்று சொன்னால் உங்கள் அருகில் இருக்கும் இந்து நண்பர்களே முதலில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நமது தொப்புள் கொடி உறவு என்று தான் சொல்வார்கள்.

அடுத்து கூட்டு இறை வழிபாடு முடிந்து பிரார்த்தனை என்ற ஒரு சடங்கு அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கிறது. அதாவது தனது தேவைகளை இறைவனிடம் இரைந்து கேட்பது. இந்த இடத்தில் அவரவர் சொந்த மொழியிலேயேதான் கேட்பார்கள். தொழுகையின் கடைசி இருப்பில் அமர்ந்திருக்கும் போது இறைவனிடம் தனது தேவைகளை தனது தாய் மொழியில்தான் கேட்கின்றனர். ஏனெனில் இறைவனுக்கு தமிழ் மொழியும் தெரியும்: உலக மொழிகள் அனைத்தும் தெரியும்.

மேலும் மெக்காவில் கஃபாவை வலம் வரும் போது உலக மக்கள் தங்கள் தாய்மொழியில் தங்களின் தேவைகளை இறைவனிடம் மிக சத்தமாக கோரஸாக சொல்லிக் கொண்டு செல்வதை நாம் பார்க்கலாம். அரபியில் பிரார்த்தனை செய்து கொண்டுதான் வலம் வர வேண்டும் என்று எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. எனவே நீங்கள் சொல்வது போல் எவருக்கும் மீளா நரகம் கிடைக்க வாய்ப்பே இல்லை. சொர்க்கத்தையும் நரகத்தையும் தருவது நம்மை படைத்த இறைவன் கையில்தான் உள்ளது. நம் கையில் இல்லை நண்பரே!

தாய் மொழிப் பற்று என்பதற்கும், தாய்மொழி வெறி என்பதற்கும் சிறிய வித்தியாசம் உண்டு. அதனை விளங்காதனால் பல குழப்பங்களை நீங்கள் சந்திக்கிறீர்கள். கூடிய விரைவிலேயே தெளிவடைவீர்கள்!

Wednesday, June 11, 2014

இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் அவர்களை காத்த முஸ்லிம்கள்!கடந்த வாரம் புனேயில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லிம் இளைஞர் முஃஸின் ஷேக் 30 க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பலால் அடித்தே படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் இன்னும் 2 முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீக்கீரையாக்கப்பட்டது. காலையில் தொடங்கிய இந்த வன்முறை மறுநாள் நள்ளிரவு வரை தொடர்ந்தது.
தற்போது அந்த கலவரத்தை ஆராய்ந்த குழு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது, அதில் சம்பவம் நடந்த மே 31 மற்றும் ஜூன் 1 ம் தேதிகளில் குறிப்பிட்ட சில பேக்கரி மற்றும் முடி திருத்தும் கடைகள் சரியாக கலவரம் நடக்கும் நேரத்தில் மூடி இருந்தது, அவர்களுக்கு எப்படி தெரியும் அது மட்டுமல்லாது மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் அந்த கடைகளின் பெயர்கள் உள்ளன, அதன் உரிமையாளர்கள் முஸ்லிம்கள் இல்லை.

ஆனால் தாக்குதலுக்கு உள்ளான அனைத்து கடைகளும் உருது மொழியில் எழுதப்பட்ட முஸ்லிம்கள் கடைகளாகும், ஆகவே, முன் கூட்டியே இந்துக்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து தாக்கியதாக, திட்டமிட்ட செயலாகவே உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sources:-

http://timesofindia.indiatimes.com/india/Violence-that-killed-Pune-techie-planned/articleshow/36268460.cms

-----------------------------------------------------------------

புனே: புனே தொழில்நுட்ப பணியாளர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஹடாப்சர் பகுதியில் உள்ள சைய்யது நகரில் குடியிருக்கும் இந்துக்களின் வீடுகள் எதுவும் தாக்கப் படாத வண்ணம் அங்குள்ள முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் புனே தொழில்நுட்ப பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார். பலியான மொசின் மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரேயையும், மராட்டிய மன்னர் சிவாஜியையும் தரக்குறைவாக விமர்சித்து 'பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை சம்பவத்தின் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமூகவலைதளமான பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டதற்காக வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டது புனே நகரில் பதட்டத்தை உண்டாக்கியது.

அதன் தொடர்ச்சியாக சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை, பேஸ்புக் இணையதளத்தில் யாரோ, மோசமாக சித்தரித்துள்ளதாக பரவிய தகவலால் பல இடங்களில், தலித் அமைப்பினர் வன்முறையில் இறங்கி, பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். இந்நிலையில் புனேயில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது. ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பண்டிட் டாலரே என்ற 60 வயது முதியவர் கூறுகையில், ‘அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். யாரும் மற்றவர்களைப் பார்த்து பயப்படக் கூடிய சூழல் இங்கில்லை' எனத் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லீம் வாலிபர் மொசைன் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார்.

கலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார். அதேபோல், அப்பகுதி மக்கள் தீபாவளி, ஹோலி, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் முதலிய பண்டிகைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடி வருவதே தங்களது ஒற்றுமைக்கு சாட்சி என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/muslims-safeguard-hindus-hadapsar-post-the-pune-muslim-techie-murder-203133.html

இன்னா செய்தாரே ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

Tuesday, June 10, 2014

'வணக்கம்' - 'சலாம்' எது சிறந்த வழிமுறை?

'வணக்கம்' - 'சலாம்' எது சிறந்த வழிமுறை?

//தமிழ் நாட்டில் வாழும் உண்மையான தமிழன் யாராயினும் வணக்கம் என்று தான் சொல்லுவான். சலாம் என்று சொல்பவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.// - கதிரவன்!

தமிழ் அகராதியில் 'வணக்கம்' என்ற சொல்லுக்கு சிறப்பித்தல், கீழ்படிதல் என்ற இரண்டு பொருள்கள் உள்ளன. சிறப்பித்தல் என்ற பொருளில் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் 'வணக்கம்' என்று கூறினால் அதனை இஸ்லாம் தடை செய்யவில்லை. கீழ் படிதல் அதாவது அந்த மனிதனையே வணங்குதல் என்ற பொருளில் ஒருவருக்கொருவர் 'வணக்கம்' என்று சொல்லிக் கொள்வதை இஸ்லாம் தடுக்கிறது. இறைவனுக்கு நிகராக தன்னைப் பொன்று மல ஜலத்தை சுமந்து கொண்டு வாழும் ஒரு மனிதனை வணங்கும் பொருளில் 'வணக்கம்' என்று சொல்லுவதை எந்தவொரு சுய மரியாதை உடையவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மனிதன் தெய்வமாக்கப்படுவதின் முதல் படியே மனிதனுக்கு மனிதன் 'வணக்கம்' என்று சொல்லி அவர்களை நோக்கி கைகளால் கும்பிடும் இந்த பழக்கமே! இத்தனை கடவுள்கள் நமது மண்ணில் உண்டாக காரணமும் இந்த பழக்கம்தான்.

நம் முன்னால் வாழ்ந்து மறைந்த பசும் பொன் முத்துராமலிங்க தேவர் இன்று பல மக்களால் தெய்வமாக போற்றப்படுகிறார். கடவுளே இல்லை என்ற பெரியாருக்கு மாலை மரியாதைகள் நடக்க ஆரம்பித்து விட்டன. இன்னும் சூடம் கொளுத்தாததுதான் பாக்கி. மூடப்பழக்கங்களை எதிர்த்த அவருக்கே இந்த நிலை.அறிவியல் வளர்ச்சி முதிர்ந்த இந்த காலத்திலேயே நிலைமை இப்படி என்றால் 2000 வருடங்களுக்கு முன்னால் உள்ள நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். நம் நாட்டில் உள்ள தெய்வங்களை ஆராய்ந்து நதி மூலம், ரிஷி மூலம் பார்க்க ஆரம்பித்தால் முடிவில் அந்த தெய்வங்கள் அந்த ஊரின் பணம் படைத்தவராகவோ, ஆன்மீக தலைவராகவோ இருந்திருப்பார். இதனைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. தான் வரும் போது தனக்காக யாரும் எழுந்திருக்கக் கூடாது என்று முகமது நபி தனது தோழர்களிடம் கட்டளை யிட்டதும் இதற்காகத்தான். தனது காலில் யாரும் விழக் கூடாது என்று தடுத்ததும் இதற்காகத்தான். தனது உருவத்தையும் வரையக் கூடாது என்று என்று தடுத்ததும் இதற்காகத்தான்.

ஆனால் இதற்கு மாற்றமாக முஸ்லிம்கள் சொல்லும் 'சலாம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'அமைதி' என்பதாகும். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் விரும்புவது அமைதியான வாழ்க்கையையே! 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னால் 'உங்கள் மீது அமைதி உண்டாகட்டுமாக' என்றும் அதற்கு பதிலாக 'வஅலைக்கும் சலாம்' எனும் போது 'அந்த அமைதி உங்களுக்கும் உண்டாகட்டுமாக' என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்ளும் அழகிய முறையல்லவா இது. மொழி, இனம், நாடு கடந்து எந்த மனிதனும் எந்த மனிதனுக்கும் எந்த நிலையிலும் சொல்லக் கூடிய மிக அழகிய வார்த்தை இது. இதனை அரபியில் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. தமிழ் ஆர்வலர்கள் இதனை தமிழிலேயே சொல்லலாம். இதற்கு இஸ்லாம் தடை ஒன்றும் விதிக்கவில்லை.

Monday, June 09, 2014

வத்திகானில் குர்ஆன் வாசிக்கப்படப் போகும் அதிசயம்!(போப் ஃபிரான்ஸிஸ், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் - 25-05-2014 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்)

உலக வரலாற்றில் முதன் முறையாக கிறித்தவர்களின் புனித இடமான வத்திகானில் புனித குர்ஆன் வரும் ஞாயிறன்று வாசிக்கப்பட உள்ளது. இஸ்லாமியர்களின் தொழுகையும் அன்றைய தினம் வத்திகானில் நடைபெறும். பாலஸ்தீன மக்களுக்கும், கிறித்தவ மக்களுக்கும் யூத மக்களுக்கும் அமைதி உண்டாக்கும் முயற்சியாக இதனை போப் முன்னெடுத்துள்ளார். போப் ஃபிரான்ஸிஸ் பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸூக்கும், இஸ்ரேலிய பிரதமர் ஷிமான் ஃபெரோஸூக்கும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பானது சென்ற வாரம் போப் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்த போது கொடுக்கப்பட்டது.

அப்பாஸ், ஃபெரேஸ், ஃபிரான்ஸிஸ் என்ற மும்மதத்தவர்களும் பங்கு பெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு வருங்காலத்தில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அமைதியை கொண்டு வர ஏதுவாக இருக்கும். இந்த கூட்டு பிரார்த்தனையில் எந்த அரசியலும் இல்லை என்பதையும் போப்பின் செய்தியாளர் இஸ்ரேலிய பத்திரிக்கைக்கு தெரியப்படுத்தினார்.

இந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்வானது உலக மக்களுக்கு நேரிடையாக ஒளி பரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாகாலமாக போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்டுள்ள அந்த பாலஸ்தீன மக்களுக்கு இதன் மூலமாவது ஒரு விடிவு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

தகவல் உதவி
அல் அரபியா தினசரி
08-06-2014

Sunday, June 08, 2014

ஆளூர் ஷாநவாஸின் ரியாத் கருத்தரங்கத்தின் சில துளிகள்!சென்ற வெள்ளிக்கிழமை இரவு ஆளூர் ஷாநவாஸ் பேச்சைக் கேட்க சென்றிருந்தேன். அவரது பேச்சுக்கு முன்னால் திருமாவளவன் காணொளி மூலம் தமிழகத்திலிருந்தும் பேசினார். சிறந்த பேச்சு. தற்போதய அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ற பேச்சு. ஷாநவாஸின் பேச்சில் நமக்கு ஒரு தனி சேனல், மற்றும் பத்திரிக்கை அவசியம் தானா என்ற ரீதியில் அமைந்த சில கருத்துக்களை பகிர்ந்தார். அந்த கருத்துக்களை ஒட்டி நானும் சில கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஷாநவாஸ் தனது பேச்சில் 'அதிமுக எம்பி மைத்ரேயனை நமக்கு தெரியும். அவர் அடிப்படையில் ஒரு இந்துத்வாவாதி. முன்பு பிஜேபியில்தான் இருந்தார். அவர் பிஜேபியை விட்டு அதிமுகவில் ஐக்கியமாகிய போது பிஜேபியினர் அவரை தூற்றவில்லை. அதிமுகவில் அமர்ந்து கொண்டு இந்துத்வ பணிகளை செய்து கொண்டிருப்பார் என்று அவர்களே அனுப்பி வைத்துள்ளனர். அதிமுக என்பது ஜெயலலிதாவின் விரல் அசைவில் நடக்கும் ஒரு கட்சி. பல தலைகள் அரசியல் மாற்றங்களினால் அவ்வப்போது மந்திரி பதவி, கட்சிப் பதவிகளிலிருந்து தூக்கி எறியப்பட்டாலும் மைத்ரேயனின் நிலையானது கடந்த 10 வருட காலமாக எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் இருப்பதை கவனியுங்கள். இந்துத்வாவினருக்கு அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பது முக்கியமல்ல. அவர் நமக்காக அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் சிந்திக்கின்றனர். ஆனால் முஸ்லிம்களாகிய நாமோ ஒருவர் ஒரு இயக்கத்தில் முறுகல் வந்து மற்றொரு இயக்கத்தில் ஐக்கியமானால் அவரை ஃபேஸ் புக் முதற் கொண்டு கலாய்த்து ஒரு வழி பண்ணி விடுவோம். இதுதான் நமக்கும் இந்துத்வாவினருக்கும் உள்ள வேற்றுமை.

அதே போல் தினமலர் பத்திரிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நாடார் அதன் நிறுவனர். ஆனால் தற்போது அதன் ஆசிரியர் ஒரு பீஹார் பார்பனர். சென்ற தேர்தலில் கிட்டத்தட்ட பிஜேபியின் ஊது குழலாகவே தினத்தந்தி மாறியிருந்ததை நாம் கவனித்திருப்போம். பட்டி தொட்டி எல்லாம் சலூன் கடை வரை ஆக்கிரமித்துள்ள பத்திரிக்கை தினத்தந்தி. அங்கு சென்று ஒரு பார்பனரை லாகமாக உள்ளே புகுத்துகிறது இந்துத்வா. தந்தி டிவியாகட்டும், தந்தி பத்திரிக்கையாகட்டும் இன்று பிஜேபியின் புகழ் பாடும் ஒரு ஊடகமாக அது மாற்றப்பட்டு விட்டது.

இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என்று நாம் ஒதுங்குவதுதான் பிரச்னையே. திறமையிருந்தால் எங்கும் நம்முடைய முத்திரையை பதிக்கலாம். அந்த திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியை நாம் எடுப்பதே இல்லை. விகடனில் ஒரு காலத்தில் மதனின் கார்ட்டூன்தான் பிரபலமாக இருக்கும். இன்று அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளவர் ஹாசிஃப்கான் என்ற இஸ்லாமிய இளைஞர். அவரால் எப்படி பார்பனர் நிறைந்த சபையில் உள்ளே புக முடிந்தது. தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இன்று அவரைத் தேடி வாய்ப்புகள் வருகிறது. விகடன் நடத்தும் மாணவர் பயிற்சி பட்டரையில் எத்தனை இஸ்லாமியர்கள் சேர்கின்றனர்? உங்களை அவர்கள் ஒதுக்கவில்லையே? என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். வளைகுடாவில் 15 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால் 'எப்போ சார் வருவீங்க..' என்று பல சேனல்களிலிருந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. இது போன்ற வாய்ப்புகள் எல்லாம் நம்மை தேடி வராது. நாம் தான் முயற்சிக்க வேண்டும்.

அடுத்து முஸ்லிம்கள் தனியாக பத்திரிக்கை தொடங்குவது? தொடங்கி அதனை யார் படிப்பது? படிக்கும் திறனை முதலில் நாம் வளர்த்துக் கொண்டல்லவா தினப்பத்திரிக்கை தொடங்குவதைப் பற்றி யோசிக்க வேண்டும்? நாம் எழுதும் செய்தியானது இந்து மக்களையும் கிறித்துவ மக்களையும் சென்றடைய வேண்டும். அதில்தான் நம்முடைய வெற்றி இருக்கிறது'

என்று மிகவும் சுவாரஸ்யமாக பல்வேறு தலைப்புகளை தொட்டு பேசினார். அவர் சொன்னதில் பத்திரிக்கை ஆரம்பிப்பது பற்றிய கருத்தானது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்று. முன்பு தினமணியில் ஒரு ஓரத்தில் முதல் பக்கத்தில் தினமும் ஒரு குர்ஆன் வசனம் வரும். அதனை படித்து விட்டு பல இந்து நண்பர்கள் 'எனக்கு ஒரு தமிழ் குர்ஆன் குடுடா' என்று நான் படிக்கும் காலங்களில் என்னிடம் கேட்டுள்ளனர். இது போல் பொதுவான பத்திரிக்கைதான் தற்போது நமக்கு அவசியமாகிறது. மணிச்சுடர் தினமும் வந்து கொண்டுதானிருக்கிறது. எத்தனை பேர் அதனை படிக்கிறோம். நாமே படிப்பதில்லை எனும் போது அதனை இந்துக்கள் எப்படி வாங்குவார்கள்? எனவே தினமலர், தினமணி, இந்து போன்ற ஒரு பொது ஊடகம்தான் நமக்கு இப்போதய தேவை. கேரளாவில் மாத்யமம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மலையாளிகளில் பத்திரிக்கை படிக்காதவர்களை பார்ப்பது வெகு அரிது. அதனால்தான் அவர்களால் அன்று முதல் அரசியலில் மிக சிறந்த இடத்தைப் பெற முடிகிறது. அரசியல் வாதிகளும் சுரண்ட முடிவதில்லை. ஒரு ஊழலில் தலைவர் மாட்டினால் அவரை உண்டு இல்லை என்று கிழித்து விடுவார்கள் மலையாளிகள். ஆனால் நாமோ 2ஜி ஆகட்டும், சொத்து குவிப்பு வழக்காகட்டும் எது செய்தாலும் அவர்களுக்கு 200 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டளித்து விடுகிறோம். :-)

இன்றைய தேவை இந்துக்களையும், கிறித்தவர்களையும் சென்றடையக் கூடிய வகையில் ஒரு பொது ஊடகம் தேவை. அதனை ஒரு இந்து செல்வந்தர், ஒரு கிருத்தவ செல்வந்தர், ஒரு இஸ்லாமிய செல்வந்தர் என்று மும்மதங்களும் சேர்ந்து ஒரு ஊடகத்தை ஆரம்பிக்கலாம். அல்லது தினமலர், தினமணி, இந்து போன்ற பத்திரிக்கைளின் ஒரு பக்கத்தை நாம் பணம் கொடுத்து நமக்கான செய்திகளை வெளியிடச் செய்யலாம். தனிப்பத்திரிக்கை தொடங்கும் வரை இந்த அமைப்பில் செயல்படலாம். உண்மையை தயங்காமல் எடுத்துச் சொன்னால் கண்டிப்பாக வாங்க ஆட்கள் இருக்கின்றனர். முயற்சிதான் நம்மிடம் இல்லை. வருங்காலம் மிகவும் அபாயகரமாக இருக்கும். இப்பொழுதே ஒரு சிறந்த ஊடகத்தை கட்டியெழுப்ப ஆர்வம் கொள்வோம். 'வெட்டுவேன், குத்துவேன்' என்று முக நூலில் ஸ்டேடஸ் இடும் காகித புலிகளாக இல்லாமல் சட்டத்தின் துணையால் எதிரிகளை வெருண்டோடச் செய்யும் உண்மை புலிகளாக வலம் வருவோம்.

முக்காடு சம்பந்தமான வசனத்துக்கு ஒரு சிறிய விளக்கம்!

முக்காடு சம்பந்தமான வசனத்துக்கு ஒரு சிறிய விளக்கம்!

//முக்காடு போடாத பெண்களை ஒழுக்கங்கெட்டவர்களாகவும் இழிவாகவும் 'சில இஸ்லாமியர்'கள் மூர்க்கமாக பேசுவதற்கு காரணமாக இந்த அல்குர்ஆன்: (33 : 59) வாக்கியங்கள் உள்ளன.

"நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” - 33:59

- தமிழச்சி
08/06/2014//


நமது இந்தியாவில் பல பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக நடந்த வன்புணர்வு என்பது பெண்களின் உடையினால் வந்தது. ஏனெனில் ஆண் ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்திலேயே தனது சுற்று சூழலை மறந்து அந்த பெண்ணை ஒரு முறை பார்ப்பதை நாம் கவனித்திருப்போம். ஒரு சிலர் அந்த பெண்ணின் அங்கங்களை ஒன்று விடாமல் நோட்டம் விடுவதையும் பார்த்திருப்போம். இயற்கையிலேயே ஆண்கள் இவ்வாறுதான் படைக்கப்பட்டுள்ளனர். எனவே தான் எல்லா விளம்பரங்களிலும் பெண்களை கவர்ச்சியாக போஸ் கொடுக்க விட்டு ஆண்களை அழைக்கின்றனர். அதே ஆணை கவர்ச்சியான உடையோடு எந்த விளம்பரத்திலும் அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை. காரணம் பெண்கள் இது போன்ற கவர்ச்சிகளை அதிகமாக ஆண்களிடம் எதிர்பார்ப்பதில்லை..

நமது நாட்டு உடை மிகவும் கவர்ச்சியானது. பெண்கள் சட்டை என்று போடுவார்கள். முன் பக்கம் பாதி மார்பு தெரியும் வரையில் அந்த சட்டை இருக்கும். முதுகு பக்கம் பாதிக்கு மேல் தெரிவது போல் சட்டைகளை தைப்பார்கள். அடுத்த கவர்ச்சியான இடமான தொப்புள் பக்கத்திலும் ஒரு இடைவெளி விடப்பட்டிருக்கும். எங்கெல்லாம் ஆண்களின் கண் மேயுமோ அந்த இடங்களாக பார்த்து திறந்து வைத்து கற்பழிப்பு நடைபெற வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் பெண்கள் என்று வந்து விட்டால் அந்த ஆண் ஒரு சராசரி ஆணாக மாறி விடுகிறான். 'நடமாடும் தெய்வம்' என்று இன்று கூட வணங்கப்படும் காஞ்சி ஜெயேந்திரர் பெண் சபலத்தால் கொலை வரை சென்று சிறையிலும் இருந்து விட்டு வந்ததை நாம் அறிவோம். முற்றும் துறந்த முனிவர் ஏன் சபலப்பட வேண்டும். அவரது ஆன்மீகம் எங்கு சென்றது. அதே போல் கிறித்தவ பாதிரியார்கள் பெண்களிடம் சில்மிசம் செய்ததாக செய்தி வராத நாளே இல்லை. இதிலிருந்து தெரிவது என்ன? சந்நியாசியாக துறவறம் பூண்டு இந்த காலத்தில் ஒருவனால் வாழ்வது என்பது மிகக் கடினம். எனவே தான் இஸ்லாம் சந்நியாசத்துக்கு தடை விதித்தது. ஆண்கள் இவ்வாறு சபல புத்தியுடன் இருப்பதால் பாதிப்படைவது அதிகம் பெண்களே!

ஒரு பெண் இஸ்லாம் கூறும் உடை இலக்கணத்தோடு வெளியேறினால் அவள் பாதுகாப்படைகிறாள். நமது இந்தியாவிலும் எத்தனையோ கற்பழிப்புகள் நடந்துள்ளன. முக்காடு அணிந்த ஒரு இஸ்லாமிய பெண் கற்பழிப்பு செய்யப்பட்டதாக நாம் படித்திருக்கிறோமா? காரணம் அந்த முக்காட்டில் அந்த பெண்ணை அவன் பார்க்கும் போது ஒரு மரியாதை தானாக வந்து விடுகிறது. எனவே அவன் தனது தவறான பார்வையிலிருந்து விலகிக் கொள்கிறான். மதக் கலவரத்தில் சில இஸ்லாமிய பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டுள்ளனர். அது மதத்தின் பெயரால் அந்த காவிக் கும்பலுக்கு வெறி ஏற்றப்பட்டதால் ஏற்பட்ட நிகழ்வுகள். சபல புத்தியில் ஏற்பட்ட கற்பழிப்புகள் அல்ல அவைகள். இஸ்லாமியர்களுக்கு எந்த வகையிலாவது நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற குரோத மனப்பான்மையில் செய்யப்பட்டவை அவை.

எனவே இந்த ஹிஜாப் ஆனது பெண்களுக்கு பாதுகாப்பைத் தருகிறது. அவள் ஒழுக்கமானவள் என்று ஆண்கள் தீர்மானிக்க இந்த உடை மிக முக்கிய பங்காற்றுகிறது. மற்றபடி கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ, உலகம் முழுவதும் பயணிக்கவோ இந்த ஹிஜாப் எந்த விதத்திலும் ஒரு பெண்ணுக்கு இடைஞ்சலை தருவதில்லை. சவுதியில் இதே ஹிஜாபோடு பல பெரும் பொறுப்புகளில் பெண்கள் பணியாற்றுவதை நாம் அறிவோம். மேலும் இந்த குர்ஆன் வசனமானது முஸ்லிமான பெண்களை நோக்கியே சொல்லப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்காத பெண்களை இந்த சட்டம் கட்டுப்படுத்தவில்லை. சில காலம் முன்பு இஸ்லாத்தை தழுவிய நடிகை மோனிகா 'தான் இஸ்லாத்தை ஏற்க முதல்படி இந்த ஹிஜாப்தான். அது கொடுத்த சந்தோஷமும் நிம்மதியும் தான் என்னை குர்ஆனை ஆராய வைத்து இன்று இஸ்லாத்தை தழுவ வைத்தது' என்று கூறியதை நாமும் கேட்டுள்ளோம்.

Saturday, June 07, 2014

க்ருஷ்ணகுமாருக்கு வன்முறை பற்றிய சில வரலாறுகள்!(சிதம்பரம் கோவிலில் சமணர்கள் கழுவிலேற்றி கொல்லப்பட்டதை விவரிக்கும் சிற்பங்கள்)

திரு க்ருஷ்ணகுமார்!

//மாற்றுக்கொள்கைகளைக் கொண்டவர் என்பதற்காக சொந்த மதத்தைச் சார்ந்தவரின் ரத்தத்தை மிக அதிக அளவில் குடிக்கும் மதம் இஸ்லாம் என்றால் மிகையாகாது.//

வாழ் நாளில் எதைவேண்டுமானாலும் மறைத்துவிடலாம், மறந்தும் விடலாம். ஆனால், உண்மைகளையும் சரித்திரத்தையும் ஒருபோதும் எவராலும் மறைக்கவும், மறக்கவும் முடியாது. உலகத்தின் எந்த மூலைக்கு ஓடினாலும் உங்களின் சரித்திரம் உங்களை விடாமல் துரத்தி துரத்தி பிடிக்கும். என்றாவது ஒரு நாள் கட்டாயம் அகப்பட்டுக்கொள்வீர்கள். இஸ்லாம் வன்முறையில் வளர்ந்ததா? அல்லது வன்முறையைப் பயன் படுத்தி சமணத்தையும் பவுத்தத்தையும் அழித்து சைவ வைணவ மதமாக வளர்ந்து இன்று இந்து மதமாக பரிணமித்துள்ளதா? எது உண்மை என்பதை இந்த பதிவு உங்களுக்கு மிக அழகாக விவரிக்கும்.. இனி பதிவுக்குள் செல்வோம்.

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

-----------------------------------------

திருநாவுக்கரசர்!

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.
-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,
Chennai, Page 27-29
-Mysore Archaeological Report, 1909-10, Page 112

-------------------------------------------

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,

இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.

-------------------------------------------

பெரிய புராணம் தரும் செய்தி!

'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

------------------------------------------


திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'
-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144

--------------------------------------------

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.

--------------------------------------------

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,
1937, Page 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'
பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'
மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.

திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.
-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.
இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.
-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.
-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'
-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.
-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.

'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'
'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'
-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52

செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.
-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.

-----------------------------------------

திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.

'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'

-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.

-----------------------------------------------

குலசேகர நல்லூர் சிவன் கோவில!

இராமநாதபுரத்திலிருந்து வட மேற்கேயும், நல்லூர் திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கேயும் உள்ள குல சேகர நல்லூரில் சிவன் கோவில் இருக்கிறது.

குலசேகர பாண்டியன் இந்தக் கிராமத்திலிருந்த சமணர்களைத் துரத்தி விட்டு சமணக் கொவிலை சைவக் கோவிலாக மாற்றினான்.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பத்தி ஏழு

பஸ்தீபுரம்!

கொள்ளேகால் தாலுகாவில் பஸ்தீபுரத்தில் இருந்த சமணக் கோவிலை இடித்து அந்தக் கற்களைக் கொண்டு சிவன் சமுத்திரம் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு பாலம் கட்டினார்கள்.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று அறுபத்தி ஆறு.

விசயமங்கலம்!

ஈரோடு தாலுகாவில் விசய மங்கலத்துக்கருகில் அரசண்ணாமலை என்ற குன்றில் சமணக் கோவில் இருந்தது. இப்போது அக் கோவில் சிவன் கோவிலாக மாற்றப் பட்டிருக்கிறது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று அறுபத்தேழு

கும்பகோணம் விநாயகர் ஆலயம்!

கும்பகோணம் நாகேசுவரசாமி திருமஞ்சன வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் கோவில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோவில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோவிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் நாற்பத்தி ஐந்து.

காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கே பல்லவபுரம் என்ற பல்லாவரத்திற்கு அருகில் 'கணிகிலுப்பை' என்ற ஊரில் புத்தர் கோவிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். அத்தோடு அங்கிருந்த புத்த உருவங்களையும் ஏரிக் கரையில் கொண்டு போய்ப் போட்டு விட்டார்கள்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்,பக்கம் நாற்பத்தி ஐந்து.

---------------------------------------------

காஞ்சிபுரம்!

காஞ்சிபுரத்தில் முக்கியமானவைகளாகக் கருதப்படும் எல்லாவற்றிலும் காமாட்சி அம்மையார் கோயில்ஒன்றாகும்.

'காமாட்சி அம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன.'
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் ஐம்பத்து ஐந்து.

'ஸ்ரீ ஆச்சாரியாள் பௌத்தமத நிரஸனம் செய்து வேத மதத்தை நிலை நாட்டிக் காஞ்சியில் ஷண்மத ஸ்தாபனம் செய்தபோது 'சத்தி' மதத் தலைமை ஸ்தாபனமாகப் பிரதிஷ்டை செய்ததே இந்தக் காமாட்சி அம்மன் கோவில் ஆகும்.'
-எம்.கே.ஸ்ரீநிவாசன்,காஞ்சிக் கோவில்கள், காஞ்சிபுரம், பக்கம் முப்பத்தது ஐந்து.

காஞ்சிபுரத்திலுள்ள 'புத்தர் கோவில் தெரு' இப்போது 'காமாட்ஷி அம்மன் சந்நிதித் தெரு' என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
-சோமலெ,செங்கற்பட்டு மாவட்டம்,சென்னை, 1963, பக்கம் நூற்று முப்பத்தொன்பது.
1:35 AM

படிக்க படிக்க ஒவ்வொரு உண்மையாக வெளிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றை தோண்டிப் பார்த்தோமானால் நமது முன்னோர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும், ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோவில் கட்டிக் கொள்வதுமாக அநியாயங்கள் தடையின்றி அரங்கேறியுள்ளது. இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருப்பதுதான் விந்தை.

இவ்வளவு ரத்தக் கறைகளை சுமந்து கொண்டு க்ருஷ்ணகுமார் போன்றவர்களால் இஸ்லாம் வாளால் பரவியது என்று எப்படி சொல்ல மனம் வருகிறது. ஏனெனில் எங்கள் இந்து மதம் மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்தது. வன்முறையை நாங்கள் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. என்று பல பதிவுகளில் கூறி வருகிறார். இதற்கு தர்க்க ரீதியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தும் நரேந்திர மோடி!

'நான் ஹீரா என்ற ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அந்த மக்கள் காலில் விழுந்து சிரம் பணிவதைப் பார்த்தேன். காலில் விழுந்து மரியாதை செய்வதற்கு நம்முடைய நபி மிகப் பொருத்தமானவர்களாயிற்றே என்று எனக்குள் கூறிக் கொண்டேன். முகமது நபி அவர்களிடம் வந்து 'ஹீரா ஊர் மக்கள் தங்கள் தலைவருக்கு காலில் விழுந்து மரியாதை செய்வதைக் கண்டேன். இறைவனின் தூதரே! இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்' என்றேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'நான் இறந்த பிறகு எனது சமாதியில் இதே போன்ற வணக்கத்தைச் செலுத்துவாயோ?' என்று கேட்டனர். மாட்டேன் என்று நான் கூறினேன். பின்னர் முகமது நபி அவர்கள் 'மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் பழக்கத்தை செய்யாதீர்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்த அனுமதி இருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு சிரம் தாழ்த்த சொல்லியிருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவர்களுக்கு அதிகம் கடன்பட்டிருக்கிறார்கள்.'

-அறிவிப்பவர் கைஸ் பின் சாத், நூல் அபுதாவுத்: 1828.

'படைக்கப்பட்டவற்றிற்க்கு சிரம் தாழ்த்தி வணங்காதீர்கள். படைத்தவனை மாத்திரமே சிரம தாழ்த்தி வணங்க நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.'-முகமது நபி, அரபி 45.


ஒருமுறை முகமது நபி அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல்படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்தபோது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். 'விடுங்கள்' என்று கூறி அந்தத் துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்' என்றும் கூறினார்கள்.

ஆதாரம்: தப்ரானி.

தனக்கு யாரும் விசேஷமாக மரியாதை செய்து விடக் கூடாது என்பதிலும், தனது இறப்புக்குப் பின் யாரும் தன்னை கடவுளாக்கி விடக் கூடாது என்பதிலும் முகமது நபி எந்த அளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.

இறைவனையே சிரம் தாழ்த்தி வணங்குங்கள்.

-குர்ஆன்: 53: 62


இனி இன்றைய தினமலரில் வந்துள்ள ஒரு செய்தியையும் பார்ப்போம்.

லோக்சபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பங்கேற்ற, பா.ஜ., பார்லிமென்ட் கட்சிக் கூட்டம், பார்லி., மைய மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:என்னை சந்திக்கும், புதிய எம்.பி.,க்கள் பலர், என் காலைத் தொட்டு வணங்குகின்றனர். இனி, எம்.பி.,க்கள் யாரும் என் காலிலோ, இதர பா.ஜ., தலைவர்களின் காலிலோ விழக் கூடாது. 'காக்கா' பிடிக்கும், முகஸ்துதி பாடும் வேலைகளில் ஈடுபடக் கூடாது.எம்.பி.,க்கள் எல்லாம் கடுமையாக பணியாற்ற வேண்டும். அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். லோக்சபா நடவடிக்கைகளில் சிறப்பாக பங்கேற்று, சிறந்த பார்லிமென்ட்வாதி என, பெயர் எடுக்க வேண்டும்.அத்துடன், அவரவர் தொகுதிகளில், சிறப்பாக மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்; மெத்தனமாக இருக்கக் கூடாது. கீழ்மட்ட அளவில் உள்ள மக்களை அடிக்கடி சந்தித்து, அவர்கள் உடனான தொடர்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தலில், பா.ஜ.க, பெருவெற்றி பெற, மக்களின் அமோக ஆதரவே காரணம். அந்த ஆதரவை, எந்த வகையிலும் இழந்து விடக்கூடாது.பா.ஜ.க, இப்போது எதிர்க்கட்சி அல்ல; ஆளும் கட்சி. அதனால், அரசின் திட்டங்களை, கீழ்மட்ட அளவில் உள்ள மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு, எம்.பி.,க்களுக்கு உள்ளது.

இவ்வாறு நரேந்திர மோடி கூறியதாக தின மலர் செய்தி வெளியிட்டுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு. தன்னைப் போன்ற ஒரு மனிதனின் காலில் தலையை கொண்டு வைப்பது என்பது ஒரு மனிதனின் சுயமரியாதைக்கு பேரிழப்பு. நரேந்திர மோடியின் மற்ற செயல்களில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் ஒருவர் செய்யும் நல்ல காரியத்தை நாம் பாராட்டியே தீர வேண்டும். அந்த வகையில் மோடியின் செயலை நான் பாராட்டுகிறேன். அப்படியே உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதாவுக்கும் இதே ஆலோசனையை வழங்கினால் நல்லது. ஏனெனில் சில வாரங்களுக்கு முன் ஜெயலலிதா பறந்த ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடு போட்டுக் கொண்டு நின்றனர் நமது அமைச்சர்கள். அந்த அளவு சுய மரியாதை இழந்து நிற்கின்றனர் தமிழக அமைச்சர்கள். நரேந்திர மோடி அவர்களே! நீங்கள் ஆலோசனை வழங்குவீர்களா?..... வழங்குவீர்களா?.....தமிழர்களின் மானத்தைக் காப்பாற்றுவீர்களா?... காப்பாற்றுவீர்களா?

Friday, June 06, 2014

ஒளரங்கஜேப்பை ஏன் எல்லோரும் எதிர்த்தார்கள்?

ஒளரங்கஜேப்பை ஏன் எல்லோரும் எதிர்த்தார்கள்?நமது வரலாற்றுப் பாடநூல்களில் ஒளரங்கஜேப்பைப் பற்றி மிகக் கொடுமையான அரசன் என்ற பிம்பத்தை கொடுத்திருப்பார்கள். சிறு வயதில் ஒளரங்கஜேப்பை நானும் வெறுத்துள்ளேன். அந்த அளவு நமது வரலாறுகள் இந்த மன்னரைப் பற்றி அவதூறுகளை அள்ளி வீசியுள்ளன. ஆனால் உண்மை வரலாறோ அதற்கு நேர் மாற்றமாக உள்ளது. நமது நாட்டையும், நமது நாட்டு மக்களையும் இன மத பேதம் பாராமல் நேசித்தவர் ஒளரங்கஜேப். நமது நாட்டை ஐம்பது ஆண்டு காலம் ஆண்டு அகண்ட பாரதத்தை உருவாக்கி விட்டு போனவர் ஒளரங்கஜேப்! அவரது வரலாறுகளில் இருந்து சிலவற்றை பார்ப்போம்.

சீக்கியர்கள் தங்கள் மத நடவடிக்கைகள் தவிர அரசியலில் தீவிரம் காட்டிப் பேரரசருக்கு எதிராக ஆலோசனைகளும் ஆயுதங்களும் தந்து கிளர்ச்சிக்கு உதவிக்குக் காரணமான குருதேஜ பஹ்தூர் கொல்லப்பட்டார், எனவே சீக்கியர்கள் எதிரி.

மூடப்பழக்க வழக்கங்களைத் தடுக்கும்பொருட்டு ஜோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் தயாரித்தல், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் தீண்டாமை போன்றவைகளுக்குத் தடை விதித்ததார். எனவே ராஜபுத்திரர்கள் எதிரி.

காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பொது மக்களுக்கும் சமூகத்திற்கும் தொல்லை கொடுத்த ‘சத்நாமிகள் ‘ என்ற கூட்டத்தாரை அழித்ததால் அந்த இனம் பாதுஷாவுக்கு பரம்பரை எதிரி.

மராட்டியர்களின் நாயகனாகக் கருதப்பட்ட சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்ததார். அவர் தந்திரமாகத் தப்பிச்சென்று அவுரங்கசீப்புக்கு எதிராக மராட்டிய மக்களிடம் பிரச்சாரம் செய்த காரணத்தினால் மராட்டியர்கள் எதிரி.

ஷியா முஸ்லிம்கள் தங்கள் உடல் முழுவதும் அலகுகள் குத்திக்கொண்டும் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் மொஹரம் பண்டிகையைக் கொண்டாடினர். அந்த பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் ஷியா முஸ்லிம்கள் அவுரங்கசீப்புக்கு எதிரி.

(முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் – கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்)

-----------------------------------------------------------------------------------------------------------------------
பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!

‘நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.’

இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.
பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.

---------------------------------------------------------------------------------------------------------
‘சதி’யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) என்ற சடங்கால் உயிருடன் எரிக்க முயன்றனர். ஆட்சித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். ‘உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339

--------------------------------------------------------------------------------------------------------

எனது தேசத்து ஏழைகளுக்கு……

ஒரு சமயம் புனித மக்கா நகரத்தின் ஷெரீப் பொருள் உதவி வேண்டி தனது தூதரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பியபோது அவரக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு ‘எனது தேசமான இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்க்க் கூடாதா? என்று கேட்டு விட்டு ‘இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்’ என்றும் அந்தத் தூதரிடம் பதில் தந்தவர் ஒளரங்கஜேப்’
டி.என். ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்.
Page 80, 81.

போகோ ஹராமும் நமது நாட்டு இந்துத்வாவாதிகளும்!நைஜீரியாவில் சமீப காலமாக 'போகோ ஹராம்' என்ற ஒரு தீவிரவாத அமைப்பு பல கிறித்தவ சிறுமிகளை கடத்திக் கொண்டு சென்றுள்ளது. அவர்களை விலைக்கு விற்போம் என்று அதன் தலைவன் அறிவிக்கிறான். இடைக்கு இடையே வெறி வந்தவனாக 'அல்லாஹு அக்பர்' என்று வேறு கத்துகிறான். அட கிறுக்கனே! இதுதான் இஸ்லாமா? இஸ்லாம் இதைத்தான் உனக்கு போதித்ததா?

நபிகள் நாயகத்தின் இறக்கும் காலங்களில் அவரின் கவச உடை ஒரு யூதரிடம் அடமானமாக இருந்தது. நபித் தோழர் ஒருவர் 'பக்கத்து வீட்டு மாற்றுமத நண்பருக்கு இன்று சாப்பாடு கொடுத்து விட்டாயா?' என்று தினமும் தனது மனைவியிடம் கேட்பாராம். ஏனெனில் அவ்வாறு செய்யச் சொல்லி நபிகள் நாயகத்தின் கட்டளை இருக்கிறது. உக்கிரமமாக நடக்கும் போரில் கூட பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், மத குருமார்கள் போன்றவர்களை கொல்லக் கூடாது என்று குர்ஆன் தடை விதித்திருக்கிறது. நபிகள் நாயகத்தின் வாழ்நாள் முழுக்க மாற்று மதத்தவர்களிடம் மிக அன்பாகவே நடந்துள்ளனர். நபிகளையும் அவரது தோழர்களையும் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்தினால் கொல்ல வரும் போது தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போரை நபிகளார் தனது தோழர்களுக்கு கடமையாக்கினார். அதுவும் தற்காப்புக்காகவே!

ஆனால் இங்கு அப்பாவி சிறுமிகள் கடத்திச் செல்லப்படுகிறார்கள். அவர்களை கொல்வோம் என்றும் மத மாற்றம் செய்வோம் என்றும் சந்தையில் விற்று விடுவோம் என்றும் பகிரங்கமாக தொலைக்காட்சியில் அறிவிக்கின்றனர். கடைசியில் 'அல்லாஹூ அக்பர்' என்று தட்டுத் தடுமாறி சொல்லி முடிக்கின்றனர். அரபு வார்த்தைகள் கூட சரளமாக வரவில்லை.

சவுதி அரேபிய தலைமை முஃப்தி சொல்கிறார் 'போகோ ஹராம் என்ற அமைப்புக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை. இஸ்லாத்தை விட்டு என்றோ அவர்கள் வெளியாகி விட்டனர். அவர்களின் செயல்களை இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டாம். முஸ்லிம்கள் இவர்களிடம் இருந்து விலகியிருங்கள்' என்று அறிக்கை விட்டுள்ளார்.

மேற்கத்திய உலகம் இன்று மிகப் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கட்டுக் கடங்காமல் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இது மிகப் பெரும் பிரச்னைகளை உண்டு பண்ணுகிறது. இஸ்ரேலும் இதனால் மிகவும் ஆடிப் போயுள்ளது. இது போன்ற இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்க அவர்களுக்கு உள்ள ஒரே வழி இஸ்லாத்தின் மேல் அந்த மக்களுக்கு வெறுப்பை உண்டாக்க வேண்டும். குர்ஆனை வைத்தும் நபிகளை வைத்தும் அந்த வெறுப்பை உண்டாக்க முடியாது. அதற்கு தக்க பதிலை முஸ்லிம்கள் கொடுத்து விடுவார்கள் என்று தெரியும். எனவே தான் மொஸாத்தின் துணை கொண்டு உலகம் முழுவதும் இஸ்லாமிய போர்வையில் தீவிரவாதத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

தாலிபான் - போகோ ஹராம் - இந்தியன் முஜாஹிதீன் - லஸ்கர் இ தொய்பா - அல் கைதா என்று உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய தீவிரவாத கும்பல்களையும் நன்கு ஆராய்ந்து பாருங்கள். அவர்கள் ஏதோ ஒரு வகையில் அமெரிக்காவிடமோ, இஸ்ரேலின் மொசாத்திடமோ மறைமுகமான தொடர்பு வைத்திருப்பதை அறியலாம். இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு இந்திய உளவுத் துறையால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை அமைப்பு என்று முன்னால் உச்ச மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியதை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். தாலிபான்களை ஆரம்பத்தில் உருவாக்கி உசாமா பின் லேடனை ஹீரோவாக்கியதும் அமெரிக்கா என்பதும் நம் அனைவருக்கும் தெரியும்.

இஸ்ரேலோடு ராஜீய தொடர்புகளை நமது நாடு சென்ற வாஜ்பாயி காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பிறகுதான் இந்தியாவில் இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதம் தலை தூக்கியதை நாமும் அறிவோம். அவர்கள் முதலில் வறுமையில் உழலும் இஸ்லாமிய இளைஞர்களை தேர்ந்தெடுப்பர். கள்ள முல்லாக்களைக் கொண்டு ஜிஹாதுக்கு தவறான அர்த்தங்களை கற்பித்து அந்த இளைஞர்களை மூளை சலவை செய்து தற்கொலை குண்டுதாரியாக மாற்றுவர். ஒரு பாகிஸ்தானிய நண்பன் தங்கள் நாட்டில் இது போன்று நடந்து பிறகு ராணுவத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறினான். மாலேகான் குண்டு வெடிப்பாகட்டும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பாகமட்டும், மெக்கா மசூதி குண்டு வெடிப்பாகட்டும் அனைத்தையும் கச்சிதமாக அவர்கள் நிறைவேற்றி பழியை முஸ்லிம்கள் மேல் போட்டனர். ஆனால் ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரி மூலமாக அவர்களின் சதி அனைத்தும் வெளி உலகுக்கு தெரிய வந்தது.

ஹேமந்த் கர்கரே மட்டும் அன்று இந்த உண்மைகளை கண்டு பிடிக்காமல் விட்டிருந்தால் இன்று நமது பாரத தேசம் ஒரு ஈராக்காகவோ, ஒரு லிபியாவாகவோ, அல்லது ஒரு நைஜீரியாவாகவோ என்றோ மாறி அழிவை சந்தித்துக் கொண்டிருந்திருக்கும். அதிலிருந்து இறைவன் காப்பாற்றினான். அதே போன்ற செயல்பாடுகள் தான் ஈராக், லிபியா, நைஜீரியா போன்ற நாடுகளில் மொசாத், அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளின் துணை கொண்டு நடத்தப்படுகிறது.

இந்தியாவில் மொசாத், மற்றும் இந்துத்வாவாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டது போல் போகோ ஹராமுக்கு பின்னால் யார் உள்ளனர் என்பதும் பின்னாளில் தெரிய வரும். தற்போதும் அதே பாணியை பின் பற்றி அமைதி பூங்காவாம் தமிழகத்தை ரண களமாக்க இந்துத்வாவாதிகள் தயாராகி வருகின்றனர். அதன் முதல் முயற்சியாகத்தான் ஆங்காங்கே முஸ்லிம்களை வெட்டுவதும், பள்ளிவாசலுக்குள் புகுந்து தகராறு வளர்ப்பதும் சில நாட்களாக தொடர்கதையாகி வருகிறது. நம்மைச் சுற்றியுள்ள இந்து நண்பர்களில் 80 சதவீதமான நபர்கள் மிகவும் நல்லவர்கள். இந்துத்வாவின் சூழ்ச்சிகளுக்கெல்லாம் அடி பணியாதவர்கள். 20 சதமான இந்துத்வாவாதிகளுக்காக நாம் 80 சதமான நபர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. எந்த முயற்சி நடந்தாலும் சட்டத்தை நாம் கையில் எடுக்காமல் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்துத்வாவாதிகள் செய்யும் அனைத்து காரியங்களையும் இணையம், மற்றும் பத்திரிக்கை வாயிலாகவும், தனி நபர்களை சந்தித்தும் அன்போடு விளக்க வேண்டும். இது போன்ற நமது முயற்சியால் அவர்களின் சூழ்ச்சிகளை மிக இலகுவாக நம்மால் முறியடிக்க முடியும். அதை விடுத்து 'வெட்டு, குத்து' என்று பதிவுகளை உசுப்பேற்றும் வகையில் அமைத்தால் அதனால் பாதிப்படைவது முஸ்லிம்கள் தான். ஏனெனில் அரசு உத்தியோகங்களில் இந்துத்வாவாதிகளின் ஆளுமை அதிகமாக உள்ளது. நாம் உணர்ச்சிவசப்பட்டு அவர்களை தாக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டமே! எனவே அதற்கு நாம் பலியாகிவிடக் கூடாது. ஒரு கட்டத்துக்கு மேல் எல்லை மீறி சென்றால் அப்போது யாரும் சொல்லாமலேயே இறைவன் நம்மை ஒன்று படுத்துவான்: நமது எதிரிகளை எப்படி கையாள்வது என்ற அறிவையும் நமக்கு தருவான். அது வரை நாம் அவரப்படாமல் சட்டத்தின் துணை கொண்டு அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்க முயற்சிப்போம்.

"ஏக இறைவனை மறுப்போரும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்"

குர்ஆன் 8:30

Thursday, June 05, 2014

ஆணும் பெண்ணும் சமமல்ல - ஹிந்து பத்திரிக்கை

"அல்லாஹ் இஸ்லாமிய பெண்ணுக்கு கொடுக்காத சமத்துவத்தை 'மக்கள் சட்டங்கள்' ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு கொடுத்திருக்கிறது என்றால் தூக்கி எறிப்பட வேண்டிய சட்டம் எது?"

- தமிழச்சி
05/06/2014//

‘(நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். ஆண்களில் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். பெண்கள் இருவர் ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.’

அல்-குர்ஆன்(2:184)


இந்த வசனத்தைப் பற்றித்தான் தமிழச்சி இங்கு குறிப்பிடுகிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு ஆணாதிக்க மனோபாவமாகவே தெரியும். சாட்சிகள் என்று வரும் போது மட்டும் தான் இரண்டு பெண்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான். ஏனெனில் பெண்கள் சற்று பலஹீனமாக படைக்கப்பட்டுள்ளனர். உடற்கூறு ரீதியாக அவர்கள் ஆண்களோடு போட்டியிட முடியாது. தற்போதய ஆராய்ச்சியானது சிந்தனை சக்தி, ஞாபக சக்தி, ஆளுமைத் திறன் அனைத்திலுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளதாக இன்றைய அறிவியல் கூறுகிறது. ஹிந்து பத்திரிக்கையில் முன்பு வந்த கட்டுரையின் தமிழாக்கத்தை தருகிறேன் படித்து தமிழச்சி போன்றவர்கள் தெளிவு பெறுவார்களாக!ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது எனக் கூறுகிறார், அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி..

சென்னையில் எம்.வி.அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் 'பாலினத்தின் பாத்திரம் (Role of sexes)" என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார். அதில் உரையாற்றும் போது ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கினறனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

உடல் கட்டமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன. மூளையின் அளவிலும், மூளையின் உட் பொருட்களான செர்ப்ரோஸ்பினல் ஃபுளூயிட்டின் (serebrospinal fluid) அளவு மற்றும் வெள்ளை பருப் பொருள் (white matter), சாம்பல் பருப் பொருட்களின் அளவு (gray matter) வரை ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன.

இந்த உடல் கட்டமைப்பு ரீதியான வேறுபாடு பிறப்பிலேயே தோன்றுகின்றது. ஆனால் இந்த வேறுபாடு மனிதன் வளர வளர மாறுபடுகின்றதா? அல்லது அதே நிலையில் நீடிக்கிறதா?

இது வரை இந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் மனிதனின் வளர்ச்சிக்கும் வயதுக்கும் ஏற்ப மூளைகளில் மாறுபாடுகள் தோன்றுகின்றன என்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது வெளி வரத் தொடங்கியுள்ளன என்று கூறுகிறார் பேராசியர் காஃபி.

9 வயதில் மூளையின் வெளிப் பகுதியை மூடி இருக்கும் கோர்டெக்ஸ் (cortex) எனும் பொருள் பெண் மூளையை விட ஆண் மூளையில் பெரிதாக இருக்கின்றது. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 19 வயதில் இந்த வேறுபாடுகள் மாற்றம் அடைகின்றன.

இந்த வேறுபாடுகள் ஆண் பெண் என்ற பாலினத்தைப் பொருத்து மாறுபடுகின்றது. ஆண் மூளை 'முன் மடலின் (frontal lobe) ' தடிமன் பெண் மூளையை விட வெகுவாக குறைகிறது. ஆனால் மூளையின் பின் பக்கப் பகுதி (posterior region) இதற்கு நேர் மாற்றமாக உள்ளது. அதாவது பெண் மூளையின் பின் பக்க பகுதியின்(posterior region) தடிமன் ஆண் மூளையை விட வேகமாகக் குறைகின்றது.சில வருடங்கள் தொடர்ந்து மூளையைப் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்ததில் அது ஒரே மாதிரி இருப்பதில்லை, மூளையில் மேலே குறிப்பிட்ட பகுதிகள் வயதுக்கு ஏற்ப மாற்றம் அடைகின்றன என காஃபி விளக்குகின்றார்.

30 வயதுக்கு மேல் மனிதனுக்கு வயது கூட கூட மூளையின் கட்டமைப்பு சுருங்குகின்றது.

நரம்பியல் மற்றும் உளவியலோடு பாலினத்துக்குத் தொடர்பு இருக்கின்றது என்றால் அப்பொழுது கண்டிப்பாக மூளையிலும் வேறுபாடு இருக்கும் என்று குறிப்பிட்டார் பேராசிரியர் காஃபி.

மொழி செயல்பாடுகள் –language function

காட்சி இடம் சார் செயல்பாடுகள்- visual –spatial function

சமூக அறிவாற்றல் திறன்- social cognition skills

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் முறை- empathy

உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துதல்-emotion and perception

தேடுதல் மற்றும் பரபப்பு- seeking and sensation

இவ்வாறு அனைத்து செயல்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.

ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும் பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வேறு வேறாக உள்ளது.

இந்த உடற் கூறு ரீதியான வேறுபாடு ஆண் பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம். சமூகத்தில் ஆண்கள் தேடக் கூடியவர்களாகவும் (hunter) அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தைகளை சுமக்கக் கூடியவர்களாகவும் குடும்பத்தை வீட்டை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் என பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்.

இருந்தாலும் இந்த வேறுபாடுகள் நம்மை வகைப்படுத்தி வரையறுக்கின்றதா? ஆம். இந்த உடற்கூறு ரீதியான வேறுபாடுகள் நம்மை ஆண் பெண் என மட்டும் தான் வேறுபடுத்துகின்றது. தனிப்பட்ட மனிதன் அவனுடைய சிறப்பான மாறுபட்ட திறமைகளை வைத்து வேறுபடலாம். அது எப்படி இருந்தாலும் உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த ஆண் பெண் உடல் ரீதியான வேறுபாடுகளில் நாம் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறி முடிக்கின்றார் அமெரிக்கப் பேராசியர் காஃபி.

Why boys will be boys and girls will be girls, has an explanation in their brains, Prof. Coffey adds. Structurally, and functionally, there are differences between the brains of men and women, as a collective. Right from brain volume, to cerebrospinal fluid volume, white matter and gray matter, there are differences between the male and the female brain.

http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/article2464138.ece?css=print

இது 'தி ஹிந்து' பத்திரிக்கையில் செப்டம்பர் 18 - 2011 அன்று 6 ஆவது பக்கத்தில் வந்த கட்டுரை:

---------------------------------------------------------------------------------

மனித படைப்பில் எல்லோரும் சமமே! ஆனால் உடற்கூறு வேறுபாட்டினடிப்படையில் சில தகுதிகள் ஆண்களுக்கு சிறப்பாக உண்டு. சில தகுதிகள் பெண்களுக்கு சிறப்பாக உண்டு. தாய்மை என்று ஒன்று மட்டுமே போதும் பெண்களின் சிறப்பை கூறுவதற்கு. இது பற்றி குர்ஆன் கூறும் வசனங்களையும் பார்ப்போம்.

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.

-குர்ஆன் 4:32

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
-குர்ஆன் 4:34

குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.(4:7)

ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:124ஆணை விட பெண் உடற்கூறு அளவில் பலஹீனமாக படைக்கப்பட்டுள்ளாள். எனவேதான் படைத்த இறைவன் பெண்களின் ஞாபக சக்தியில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் மற்றொரு பெண் அவளுக்கு உண்மையை விளக்க முடியும் என்ற ரீதியில் சாட்சிகளாக இரு பெண்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறான். இன்றைய அறிவியலும் அதனையே மெய்ப்பிக்கிறது.

Wednesday, June 04, 2014

இந்தியர்கள் என்று சொல்ல நாம் வெட்கப்பட வேண்டும்!குழந்தைகளை பிரிந்த அந்த தாயின் ஒப்பாரி ஓசை

காமுகர்களே உங்கள் காதில் விழவில்லையா?

தலித் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா?

உனது இந்து மதத்தின் ஒரு பிரிவல்லவா அந்த பெண்கள்?

தொட்டால் தீட்டு என்கிறாய்: இங்கு தொடாமல்தான் அந்த காரியத்தை செய்தாயா?

பெண்ணின் தந்தை அந்த காமுகர்களின் பெயரை சொல்லியும்

காவல் துறை கண்டும் காணாமல் இன்று வரை உள்ளது:

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அவலங்கள்:

மோடி தலைமை ஏற்று விட்டால் இந்த நாடே புனிதமாகி விடும்

என்று ஓலமிட்ட அந்த இந்துத்வாவாதிகள் இன்று எங்கே!

இந்து மதத்தை புணருத்தானம் செய்யப் போகிறோம்

என்று புலம்பித் திரிந்தவர்கள் இன்று எங்கே?

டெல்லியில் ஒரு மேல்சாதி பெண் கற்பழித்து கொல்லப்பட்டபோது

டெல்லியையும் நமது நாட்டையும் உலுக்கிய அந்த வீரர்கள் இன்று எங்கே?

அம்பேத்கார் இது போன்ற கொடுமைகளைப் பற்றி பேசும் போது சொல்வார்:

"இந்துக்கள் பொதுவாக மிகவும் மென்மையான சாதுவான மக்கள். முஸ்லீம்களிடம் தென்படும் உக்கிரம், மூர்க்கத்தனம் இவற்றில் எந்தக் குணமும் இந்துக்களிடம் காணப்படுவதில்லை. அப்படியிருக்கும் போது இவ்வளவு மென்மையான மக்கள் கூச்சநாச்சமின்றி அகச் சான்றின் உறுத்தலின்றி தீண்டப்படாத மக்களின் குடியிறுப்புகள் மீது தீ வைப்பதிலும், கொள்ளையடிப்பதிலும் ஈடுபடுகிறார்கள் என்றால் அதற்கு ஓர் ஆழமான காரணம் இருக்க வேண்டும். இந்துக்கள் இவ்விதம் விபரீதமான முறையில் மனிதாபிமானமற்ற முறையில் நெஞ்சுரமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு பின்னணி இருக்க வேண்டும். அந்தப் பின்னணி என்ன? ஆதிக்க சாதியின் ஆளுமை தான் அதன் பின்னணி."

ஆம் நான் உயர்ந்தவன்: நீ சூத்திரன்: நீ தாழ்ந்தவன்: காலாகாலத்துக்கும் எனக்கு நீ அடங்கி ஒடுங்கியே நடக்க வேண்டும்: இல்லை என்றால் அடக்கி ஒடுக்கப்படுவாய் என்று சொல்லாமல் சொல்கிறது இது போன்ற சம்பவங்கள்.
ஹானஸ்ட் மேனுக்கு சில விளக்கங்கள்!

ஹானஸ்ட் மேனுக்கு சில விளக்கங்கள்!

//(1) கஅபா வை 7 முறை (அது என்ன 7 முறை கணக்கு) counterclock wise ல் சுற்றிவரும்போது BLACK STONE ஐ முத்தமிடவேண்டும். (எனது கேள்விகள்:– அ) கல்லை இங்கே எதற்கு முத்தமிடவேண்டும்? ஆ) அந்த கல்லை முத்தமிடும் போது அதில் புண்ணு பிடித்த வாய்கள் எத்தனையோ இருக்குமே. இது சுகாதாரமான செயலா?)//

அந்த கல்லுக்குப் பெயர் 'ஹஜ்ரல் அஸ்வத்' அதனைத் தமிழ் படுத்தினால் 'கருப்புக் கல்' என்று வரும். அது சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த கல். இறப்புக்கு பிறகு சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பதற்கு சாட்சியாக அந்த கருப்புக் கல் இருப்பதால் அதனை தொட்டு முத்தமிடுங்கள் என்று முகமது நபி கட்டளையிட்டுள்ளார். கவனிக்கவும் அதனை வணங்கச் சொல்லவில்லை.

//இஸ்லாமில் மியூசிக் ஹராம் என்கிறது. ஆனால் எத்தனை முஸ்லிம்கள் அந்த மியூசிக் மீது sick ஆக இருக்கிறார்கள் என்பது தெரியுமா உமக்கு?//

இஸ்லாமிய அறிஞர்களிடையே இரு கருத்துகள் உள்ளது. சில நேரங்களில் முகமது நபியே இசையோடு கூடிய பாடலை அங்கீகரித்துள்ளார். சில நேரங்களில் தடுத்துள்ளார். பெருநாள் போன்ற விஷேஷமான நாட்களில் இசையோடு கூடிய பாடல்களை முகமது நபி அங்கீகரித்துள்ளார். அந்த இசையானது நம்மை மிகைத்து விடாமல் இருக்க வேண்டும்.

//3) Devil என்று கருதப்படும் 3 pillars மீது 7 pebbles களை எறிகிறார்கள். (அது என்ன 7 கணக்கு?) அது சரி நாங்கள் கற்சிலைகளை கடவுள் என்றால் தப்பு என்று கூறும் நீர் 3 பில்லர்களை சாத்தான் என்று கருதி அவற்றை கல்லெறிவது புத்திசாலிதனமான செயலோ?//

ஆப்ரஹாம் இறை கட்டளையை செயல்படுத்த முனையும் போது அந்த மூன்று இடங்களிலும் சாத்தான் நின்று கொண்டு அவரை இறை கட்டளைக்கு அடிபணி வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இதனால் கொபமுற்ற ஆப்ரஹாம் கற்களைக் கொண்டு 'ஷைத்தானே தூரப் போ' என்று விரட்டினார். அதன்படி அந்த ஷைத்தானும் வெருண்டோடினான். அதே போன்று நம்மிடம் உள்ள சாத்தானிய எண்ணங்களை தூரமாக்க நபி ஆப்ரஹாம் கையாண்ட வழி முறைப்படி கற்களால் எறிந்து அந்த சம்பவத்தையும் நினைவு கூறுகிறோம்.

//4) ஓணானை கண்டால் உங்களுக்கு பிடிக்காது அதை கண்டால் கல்லால் அடித்து கொல்லுகிறீர்கள் (ஏன்?) . அதே போல பன்றி கறி ஹராம் என்று சொல்கிறீர்கள். சரி. இவை இரண்டையும் உங்கள் அல்லாதனே படைத்தார்? அவற்றை படிக்காமல் நிறுத்தி வைக்கவேண்டியதுதானே?//

ஓணாணைக் கண்டால் பிடிக்காது என்று எந்த இஸ்லாமியன் சொன்னது? பன்றியின் மாமிசம் செரிமானத்துக்கு மனித உடலுக்கு சிரமத்தைக் கொடுக்கும். அதன் உடம்பில் உள்ள புழுக்கள் எவ்வளவு சூடாக்கியாலும் அழிவதில்லை. இதெல்லாம் காரணமாக இருக்கலாம். எத்தனையோ மிருகங்கள் இருக்க பன்றிகளால் மட்டும் ஏன் பல நாடுகளில் நோய் பரவுகிறது?

//புடம் போட்ட தங்கமாக மாறாமால் துணி போடாத அங்கமாக சினிமாவில் அலைந்து கொண்டிருக்க காரணம் என்ன? கூறமுடியுமா? அவர்கள் குரான் படிக்கவில்லையா? அல்லது படித்தும் அவை புடிக்கவில்லையா?//

படித்தும் அதனை அவர்கள் விளங்கவில்லை. அதுதான் காரணம்.

//வெண்ணை, தேன், பால், தயிர், நீர் இவைதானே ஓடும் என்று அந்த நூலில் சொல்லபட்டிருக்கிறது? அதில் என்ன தப்பு கண்டுவிட்டீர்?//

அது மட்டுமல்ல: குர்ஆன் குறிப்பிடும் நரக வேதனையை இந்து மதமும் குறிப்பிடுகிறது. அதையும் கீழே தருகிறேன்.
யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
4 : 5 : 5 - ரிக் வேதம்
நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.

- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

//8) எல்லாம் வல்ல இறைவன் அல்லா. கருணை மிக்கவன், நியாயம் அறிந்தவன் என்று சொல்கிறீர்கள். ஓகே முந்தாநாள் கர்நாடகாவில் உள்ள குல்பர்காவில் உள்ள Khuwaja Bande Nawaz தர்காவிற்கு போன 15 முஸ்லிம் பக்தர்கள் (60 வயது பாஷா முதல் 8 வயது சமீர் வரை) சாலை விபத்தில் இறந்து போனார்கள் (அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்). எனது கேள்வி என்னவென்றால் தர்காவிற்கு போனவர்களை (ஒட்டுமொத்தமாக 15 பேரை) காப்பாற்ற அந்த கருணை உள்ளங்கொண்ட அல்லாவால் முடியவில்லையா?//

'நீங்கள் படைத்த இறைவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது' - குர்ஆன் 6:151

இந்த இறை கட்டளையை அந்த முஸ்லிம்கள் மீறியது அவர்கள் செய்த தவறுதானே! அவர்களின் பாவங்களை இறைவன் மன்னிப்பானாக! ஆழ்ந்த அனுதாபங்கள்.

//ஒருவேளை பாம்பேவில் பலான பகுதிக்கு “ஆட்களை” ஏற்றி இறக்கி பிசினஸ் செய்வாரோ?//

மனித மனம் எதை அதிகம் நாடுகிறதோ அதனையே மற்றவருக்கும் இணைத்துப் பார்க்கும் சபல புத்தி பலரிடம் உள்ளது. வேறொன்றும் சொல்வதற்கில்லை.

பெயரில் மட்டும் ஹானஸ்ட் இருந்தால் போதுமா? அது எழுத்தில் வர வேண்டாமா?


Tuesday, June 03, 2014

நண்பர் பாலாவின் சந்தேகங்களுக்கு விளக்கம்!

நண்பர் பாலா!

//ஆனால் என் சந்தேகம் என்னவென்றால் இன்று விஞ்ஞானம் வளர்ந்து நவீன கருவிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இத்தனை கோள்களைப்பற்றியும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே சித்தர்களும் வானவியல் சாஸ்த்திர நிபுணர்களும் கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் அதன் தன்மைகளையும் சொல்லியிருக்கிறார்களே.. அது எப்படி சாத்தியமானது..
இன்று தான் விண்கலம் அனுப்பி செவ்வாய் செம்மண் நிறம் கொண்டது என்கிறார்கள். ஆனால் அன்றே அந்த கோளுக்கு செவ்வாய் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்..
அந்த திறமை எல்லாம் எந்த அடிப்படையில் சாத்தியமானது என்பதை நாத்திகம் பேசும் தோழர்கள் மட்டுமல்ல விபரமறிந்தவர்களும் விளக்கலாம்..
தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.//

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழிலேயே அனுப்பினோம்'

-குர்ஆன் 14:4


இந்த வசனத்தின் படி உலக மூல மொழிகள் நமது தமிழ் மொழி உட்பட அனைத்து மொழிகளுக்கும் இறைத் தூதர் வந்துள்ளார். இறை வேதமும் வந்துள்ளது என்பதை அறிகிறோம். திருக்குறள் கூட நமது மொழிக்கு வந்த வேதமாக இருக்கலாம். ஆனால் மனிதர்கள் காலப் போக்கில் அந்த வேதத்தில் தங்கள் கருத்துக்களையும் கலந்து விடுவதால் அது நாளடைவில் மதிப்பிழந்து போகிறது.

முகமது நபிக்கு சில நூறு ஆண்டுகள் முன்பு வந்த ஏசுவை கிறித்தவர்கள் கடவுளாக்கியதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஏசுவை கடவுளாக வணங்குவதற்கு எந்த ஆதாரத்தையும் கிறித்தவர்களால் சமர்ப்பிக்க முடியாது. முகமது நபியை போன்று ஒரு மனிதராக வாழ்ந்த இறைத் தூதரே ஏசு. பைபிளின் பல கருத்துக்களும் அதைத்தான் உறுதி செய்கிறது. அதே போல் வருடா வருடம் திருத்தப்பட்ட பதிப்பு என்று பைபிளை நமது தமிழகத்திலேயே வெளியிடுவதை பார்க்கிறோம். மேலும் இந்து மத வேதங்களான ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் கருத்துக்கள் 70 சதவீதமானவை குர்ஆனோடு ஒத்துப் போவதை நாம் ஆச்சரியத்தோடு பார்க்கிறோம்.

இனி குர்ஆனுக்கு வருவோம். 23 வருடங்களாக முகமது நபி சிறு சிறு அத்தியாயங்களாக அருளப்பட்ட குர்ஆனானது கோள்களைப் பற்றியும், சூரியன் நகர்வதைப் பற்றியும், குழந்தை பிறப்பு பற்றியும், பல அரிய தகவல்களை இன்றைய அறிவியலோடு எந்த வகையிலும் மோதாமல் நமக்கு சொல்கிறது.

குர்ஆனைப் பொன்று இதே தனித்துவத்தோடுதான் பைபிளும், தோராவும், ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களும் முற்காலத்தில் இருந்திருக்க வேண்டும். அன்றைய மக்களை நல்வழிப்படுத்த வந்த இறைத் தூதர்கள் மூலமாக பல அறிவியல் விபரங்களை இறைவன் கூறியிருக்கக் கூடும். குர்ஆனும் அதை உறுதிப்படுத்துகிறது. அந்த அறிவியல் விபரங்களை நமது சித்தர்களும் யோகிகளும் இறை வேதத்திலிருந்து கற்று அதனை நமக்கு தந்துள்ளார்கள். எனவே தான் ஆரியபட்டர், சித்தர்களின் பல அரிய கணிப்புகள் இன்றைய அறிவியலுக்கு முரணாகாமல் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக அந்த அரிய சுவடிகள், இறை வேதங்கள் பல காலத்தால் அழிந்து விட்டன: மற்றும் சிலரால் வேண்டுமென்றே கொளுத்தப்பட்டன.

'அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதனை மாற்றி விட்டனர்'
-குர்ஆன் 2:75

'அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும் ஏடுகளையும் ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்'
-குர்ஆன் 35:25


மேற்கண்ட வசனங்களின் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் இறை வேதமும் இறைத் தூதர்களும் வந்துள்ளரென அறிய முடிகிறது. அதில் உள்ள அறிவியல் கருத்துக்களைத்தான் நமது சித்தர்கள் நமக்கு தந்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் காலப் போக்கில் அந்த வேதங்களில் மனிதக் கரங்கள் புகுந்ததால் அதன் உண்மைத் தன்மையை சிறுக சிறுக இழக்க ஆரம்பித்தது. மாசுபடாமல் நம்மிடம் எஞ்சியிருப்பது தற்போது குர்ஆன் மட்டுமே!


கழிப்பறைகள் இல்லாததே கற்பழிப்புக்கு காரணம்!

'வீட்டில் கழிவறையோடு கட்டுவது மொகலாயர்களின் வழக்கம். பாரத தேசத்தில் வீட்டோடு கழிவறைகளை கட்டுவது நமது கலசாரமன்று' என்று தங்கமணி ஒருமுறை என்னோடு விவாதித்தார். அதாவது மொகலாயர்கள் திறந்த வெளி கழிப்பிடங்களை குறைத்து வசிக்கும் இடங்களில் சுகாதாரமாக கழிவறைகளை கட்டியது பிற்போக்கு தனமாம். சிறுமிகளும், பெண்களும் கூச்சப்பட்டுக் கொண்டு திறந்த வெளி கழிப்பிடங்களுக்கு மறைவான இடத்தை தேடுகின்றனர். இது சில கயவர்களுக்கு வசதியாக போய் விடுகிறது.

அதாவது சுகாதாரத்தை பேணவும் தெரியாது மொகலாயர்கள் அந்த சுகாதாரத்தை அறிமுகப்படுத்தினால் அதனையும் குறை காணுவது என்னவொரு மன நிலையோ தெரியவில்லை. இது சம்பந்தமாக தமிழ் இந்து நாளிதழில் வந்த செய்தியை தருகிறேன். படித்துப் பாருங்கள்.

----------------------------------------------------------------------

உ.பி.யின் பதாயூவில் நிகழ்ந்த பலாத்கார சம்பவத்துக்கு அங்கு கழிப்பறைகள் இல்லாததே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த கிராமம் முழுவதும் கழிப்பறைகள் கட்டித்தர, சமூக நல அமைப்பான சுலப் இன்டர்நேஷனல் முன்வந்துள்ளது.

பதாயூவின் கட்ரா சஹாதத்கன்ச் கிராமத்தில் கடந்த மே 27-ம் தேதி 14 மற்றும் 15 வயதான, இரு சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு அவர்கள் வீட்டில் கழிப்பறைகள் இல்லாததே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் அந்த கிராம மக்கள் கூறுகையில், “உ.பி.யில் மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறைகள் கிடையாது. குறிப்பாக தலித் மக்களின் வீடுகளில் அறவே கிடையாது. இதனால் காலைக்கடன்களை பல பெண்கள் இரவில் கழிக்கவேண்டி உள்ளது. இதற்காக, அவர்கள் தேடிச் செல்லும் இருட்டு மற்றும் ஒதுக்குப்புறங்கள் அவர்களின் பலி களமாகிவிடுகிறது” என்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் பொதுக் கழிவறைகள் கட்டி சமூகப்பணி செய்துவரும் சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு, கட்ரா கிராமத்தில் உள்ள சுமார் 100 வீடுகளில் கழிப்பறைகள் கட்டித்தர முன்வந்துள்ளது.

இது குறித்து அதன் நிறுவனர் பிந்தேஷ்வர் பாதக் கூறுகையில், “காலைக்கடன்களுக்கு பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டியிருப்பது மிகவும் கொடுமையானது. இதை அரசுகள் தங்கள் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். “முதலில் கழிப்பறை, பிறகுதான் கோயில்” என பிரதமர் மோடி குரல் கொடுத்ததன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இதற்காக அரசுடன் இணைந்து நாங்கள் முன்மாதிரியாக கட்ரா கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள் கட்டித்தர தயாராக இருக்கிறோம்” என்றார்.

கழிப்பிடம் செல்லும் பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாவது நாட்டில் இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த ஏப்ரலில் ஹரியாணாவின் பகானா கிராமத்தில் 4 இளம்பெண்கள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து மணமாகி அருகிலுள்ள பிகா பலோத் கிராமத்துக்கு மாமியார் வீடு சென்ற புதுமணப் பெண், அங்கு கழிப்பறை இல்லாததால் தம்மால் வாழ முடியாது எனவும், அதை கட்டினால் திரும்பி வருவதாகவும் கூறி தாய் வீடு வந்து விட்டார்.

பாராட்டு விழா

இந்தச் செய்தியை பார்த்து அங்கு சுலப் இன்டர்நேஷனல் கழிப்பறை கட்டித் தந்தது. அந்தப் பெண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழாவும் நடந்தது.

2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி, நாட்டில் 53 சதவீத மக்களின் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை.

இது இந்திய கிராமங்களில் 62.9 சதவீதம் எனவும், வட மாநிலங்களான பிஹார், ஜார்க்கண்ட், உ.பி., ராஜஸ்தான் ஆகியவற்றில் 78 சதவீதம் எனவும் வெளியானது.

கழிப்பறைகள் எண்ணிக்கை, உ.பி.யில் 2014 வரை 2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் :

உ.பி.யின் பரெய்லி மாவட்டத்தில் 22 வயது இளம் பெண் ஒருவர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, ‘ஆசிட்’டை குடிக்கச் செய்து, பின் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார்.

முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இப்பெண்ணின் உடல் அயித்புரா என்ற கிராமத்தின் வயல்வெளியில் இருந்து கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதுபற்றி போலீஸார் கூறுகையில், “அப்பெண் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கழுந்து நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் வயிற்றில் ஆசிட் காணப்பட்டது. கொல்லப்படுவதற்கு முன் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கச் செய்திருக்கலாம். கொலைக்குப் பின் ஆசிட் மற்றும் பெட்ரோல் மூலம் முகம் சிதைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
03-06-2014

Monday, June 02, 2014

உபியில் மற்றொரு பெண் கற்பழிக்கப்பட்டு வாயில் ஆசிட் ஊற்றி கொலை!(உபி முதல்வர் அலுவலகம் முன் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்)

உபியில் மற்றொரு பெண் கற்பழிக்கப்பட்டு வாயில் ஆசிட் ஊற்றி கொலை!

உத்தர பிரதேசம் பரேலி மாவட்டத்தில் பஹேரி என்ற இடத்தில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டாக கற்பழிக்கப்பட்டுள்ளார். கற்பழித்த அந்த கொடியவர்கள் அந்த பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக ஆசிட்டை ஊற்றியிருக்கிறார்கள். அவரது முகத்திலும் அடையாளம் தெரியாதிருக்க ஆசிட்டை வீசியுள்ளனர். இன்று கிடைத்த பிரேத பரிசோதனையில் அந்த பெண் கற்பழிக்கப் பட்டிருப்பதும், ஆசிட் அவர் வாயில் ஊற்றப்பட்டிருப்பதும் நிரூபணமாகியுள்ளது. வலுக்கட்டாயமாக ஆசிட் அந்த பெண் வாயில் ஊற்றப்பட்டிருப்பதாக போலீஸ் அறிக்கையும் கூறுகிறது. இறந்த இந்த பெண்ணின் முகம் ஆசிட்டாலும் பெட்ரோலாலும் முழுவதுமாக சிதைந்துள்ளது. இதை செய்தவர்கள் மனிதர்கள்தானா? ஒரு மிருகம் கூட தனது இனத்தை இவ்வாறு இம்சிக்காதே! எப்படி இந்த கொடூரர்களுக்கு இவ்வளவு தைரியம் வருகிறது?

போலீஸ் அதிகாரி ரவீந்திர கௌர் தனது பேட்டியில் 'இந்த பெண் உத்தரகாண்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நினைக்கிறோம். ஒரு போலீஸ் டீம் அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளது' என்கிறார்.

டெபுடி சூப்ரண்டன்ட் பஹேரி காலு சிங் கூறும் போது 'விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள்' என்கிறார்.

இனி கைது பண்ணி என்ன செய்ய? போன உயிரை இந்த பாவிகளால் திருப்பிக் கொடுக்க முடியுமா? குஜராத்தில் கௌசர்பீவியின் வயிற்றைக் கிழித்து அந்த குழந்தையையும் தீயில் வீசிய புண்ணிய நாடு நம் பாரத நாடு. அதன் தொடர்ச்சியாக சில நாள் முன்பு இரண்டு தலித் பெண்கள் கற்பழித்து தூக்கில் ஏற்றினர். அந்த சூடு அடங்குவதற்குள் இதோ இன்று மற்றொரு செய்தி. மத்திய அரசு மாநில அரசை நோக்கி 'வன் கொடுமை சட்டத்தை பிரயோகித்து குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை?' என்று கேட்டுள்ளது. இளம் பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடாக நமது பாரதம் மாறிக் கொண்டுள்ளது.

தகவல் உதவி
டெக்கான் க்ரோனிக்கல்
02-06-2014http://www.deccanchronicle.com/140602/nation-current-affairs/article/uttar-pradesh-woman-allegedly-gang-raped-forced-drink-acid-and

Sunday, June 01, 2014

தமிழகத்தில் அடிமை முறை இருந்ததா?அடிமை முறை என்பது தமிழர்களுக்கு சொந்தமான ஒன்றல்ல. அதனை அறிமுகப்படுத்தியது மொகலாய மன்னர்தான். இஸ்லாம் தான் இதற்கு வழிகாட்டி என்று முன்பு தங்கமணி என்னோடு வாதம் செய்தார். ஆனால் அவரது வாதம் தவறானது என்பதற்காகவும் முகமது நபி இஸ்லாத்தை அரேபிய மக்களிடம் போதிப்பதற்கு முன்பே தமிழகத்தில் அடிமை முறை இருந்துள்ளது என்பதை விளக்குவதற்காகவும் சில ஆதராரங்களை இந்த பதிவில் பதிகிறேன்.

"சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள்."

- http://ta.wikipedia.org/wiki/சோழர்காலச்_சமுதாயம்

“விக்ரம் நூற்றாண்டு 1288 (கி.பி. 1231) வைகாசி 15-ம் நாள் வியாழக்கிழமை. இன்று இங்கே (ஸ்ரீ அன்ஹில் பாட்டனில்) கடவுளுக் கொப்பான ஸ்ரீ பீம தேவரின் வெற்றி ராஜ்ஜியத்தில் அடிமைப் பெண் விற்பனைப் பத்திரம் இவ்வாறு எழுதப்படுகிறது.
“ராணா ஸ்ரீ பிரதாப் சிங்கால் கொண்டு வரப்பட்ட சிவப்பு நிறமான பதினாறு வயது நிரம்பிய ‘பனுதி’ என்னும் பெயருடைய அடிமைப் பெண், தலைமேல் புல்லை வைத்து, நகரத்தின் பஞ்சாயத்தார் அறியும்படி நாற்சந்தில் வைத்து விற்கப்பட்டாள். அவளை விலைக்கு வாங்கிய ஆஸ்தர் அடிமைப் பணியைச் செய்விப்பதற்காக ஸ்ரீ பிரதாப் சிங்குக்கு ஐந்நூற்றி நாலு பணங்கள் தந்து, நகர வாசிகளான நாலு வர்ண மக்களுக்கும் தெரியும்படி ‘பனுதி’ அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

“இதன் பின்னர் அவ்வடிமைப் பெண் மனது வைத்துச் செய்ய வேண்டிய வேலைகளாவன: அவளை விலைக்கு வாங்கிக் கொண்டவரின் வீட்டைக் கூட்டுவது, பெருக்குவது, தானியங்களைக் குத்துவது, மாவரைப்பது, சுள்ளி பொறுக்கி வருவது, தண்ணீர் காய்ச்சுவது, அசுத்தங்களைத் தூர எறிவது, ஆடு, மாடுகளைப் பால் கறப்பது, தயிர் கடைவது, வயலுக்கு மோர் கொண்டு செல்வது, பருத்திக் காட்டில் வேலை செய்வது, நூல் நூற்பது, விவசாய வேலைகள், வீட்டு வேலைகள் முதலியன. இவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கும் அடிமைப் பெண்ணுக்கு வீட்டுச் சொந்தக்காரர் (எஜமான்) நாட்டையும், காலத்தையும் பொருத்தும், அவருடைய சொத்தின் அளவுப்படியும் உணவு, உடை வழங்க வேண்டும். அவள் எஜமானின் வீட்டு வேலைகளைச் செய்யும் போது அவளுடைய தந்தையோ, சகோதரனோ, கணவனோ வந்து வேலைகளுக்குத் தடங்கல் ஏற்பட்டால், எஜமான் அவ்வடிமைப் பெண்ணை ஈவிரக்க மின்றிக் கட்டி வைத்து அடித்து விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வேலைகளையும் செய்யும்படி செய்யலாம். பிறகு எஜமான் அவளுடைய தலைமுடியைப் பிடித்திழுத்து, காலால் உதைத்தும், தடியால் அடித்தும் அவள் இறந்துவிட்டால், எஜமான் குற்றவாளியல்ல; அவள் தன் தலையெழுத்தின் படி செத்தாள் என்பதை நான்கு வர்ண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தீட்டிலிருந்து புனிதர்களாக்கிக் கொள்வதற்காக எஜமான் தனது மனைவி, மக்களுடன் கங்கை நதியில் மூழ்கி எழுந்தாலே போதுமானது. அந்த அடிமைப் பெண் குளம், குட்டையில் விழுந்தோ, விஷம் கலந்த உணவு சாப்பிட்டோ இறந்து விட்டால், அவளுடைய எஜமான் குற்றவாளியல்ல; அவள் தனது விதியின்படி செத்தாள் என்பதை ஊர் பஞ்சாயத்துக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

எஜமான் தன் குடும்பத்தாருடன் கங்கை நீராட வேண்டும். இதில் எழுதப் பட்ட கடமைகளை ஆற்றுவதற்கு நகரக்காவலர்களும், நகர வாசிகளும் சாட்சிகளாவர். இந்த விஷயமான ராணா பிரதாப்சிங்கும், நான்கு காவலர்களும் தமது கையால் எழுதியிருக்கின்றனர். இந்த விற்பனைப் பத்திரத்தை இரு தரப்பாரும் கேட்டதன் பேரில் ஜயதா பாரதியால் எழுதப்பட்டது.”
மேற்கண்ட விற்பனைப் பத்திரத்தில் அடிமை வழக்கத்தின் எவ்வளவு மோசமான உருவத்தைக் கண்டோம்! ஆனால், கரபாத்ரி சுவாமிஜி இதை எவ்வளவு அழகாக சித்திரிக்கிறார், பாருங்களேன்;

“அடிமை முறை யுகத்தில்கூட அடிமை வேலை செய்ய இயலாமல் ஆகி விட்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பையும் எஜமானரே ஏற்றுக் கொண்டார்.”

“உண்மையில் இவ்வடிமைகள் பெயரளவுக்குத் தான் அடிமைகளே தவிர, அவர்கள் எஜமானரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். அதனால் தான் எஜமானர் அடிமைகளின் உணவு, உடை வசதியைக் கவனித்த பிறகே, தன் குடும்பத்தின் உணவு, உடை வசதியைக் கவனித்தார்.”

பழங்கால அடிமை முறை மீண்டும் திரும்பி வரப்போவதில்லை. இதை, கரபாத்ரியின் ‘ரிதம்பரா பிரக்ஞை’யும் அறியும் இருந்தாலும் முக்காலங்களையும் ‘அறிந்த’ ரிஷிகளின் சாஸ்திரங்களை ஆதரிப்பது அவருடைய ‘கடமை’யாதலால், அடிமை வழக்கத்தையும் ஆதரிக்கிறார் பாவம்!////

http://www.keetru.com/anaruna/aug07/ilavenil_2.php -

------------------------------------------------------------

ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய "தமிழகத்தில் அடிமை முறை" என்ற நூலிலிருந்து:

சங்க காலத்தில் அடிமை முறை என்ற பகுதியில் மருத நிலப்பகுதியில் அடிமைகள் இருந்ததைக் குறிப்பிடுகிறார் “சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வந்த மருத நிலப்பகுதிகளிலும் அடிமை முறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறை பிடித்துக்கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரி பூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதனைக் கூறும் பொழுது “கொண்டி மகளிர்” என்று இவர்களைப் ‘பட்டினப் பாலை’ ஆசிரியர் குறிப்பிடுகிறார். (22)

பல்லவர்கள் காலத்தில் வேளாண் பெருக்கம் காரணமாக அடிமை முறை விரிவடைந்தது. இப்பொழுது உள்ள முறையில் “ஆள்” என்று அடிமைகள் குறிப்பிடப்பட்டனர். இந்தச் சொல்லைச் சுந்தரர் பல இடங்களில் பயன்படுத்தியதைச் சுட்டிக் காட்டுகிறார். “கூழாள்” என்ற சொல் பெரியாழ்வார் பாடலில் இடம் பெறுகிறது. இது பற்றிப் பெரிய வாச்சான் பிள்ளை தமது திருப்பல்லாண்டு வியாக்கியானத்தில் ‘கூழாள்’ என்ற சொல்லிற்கு “சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை” என்று விளக்கம் எழுதியுள்ளார் (பக். 29) அடிமைத் தொழில் இழிவாக இக்காலகட்டத்தில் கருதப்பட்டதைப் பல சமய இலக்கியச் சான்றுகள் கொண்டு விளக்கியுள்ளார்.

சோழர் காலத்தில் அடிமை முறை இன்னும் விரிவாக்கம் பெற்றது. அடிமைகள் குறித்த பல கல்வெட்டுச் சான்றுகள் சோழர் காலத்தில் கிடைக்கின்றன. போர் அடிமைகள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தனர். (34) வீட்டடிமைகள் என்ற வழக்கமும் இருந்தது. சுந்தரர் கதை இதற்குச் சிறந்த உதாரணம் (35) இவற்றை விரிவாகக் கூறிவிட்டுப் பின்வரும் முடிவுகளை ஆ. சிவசுப்பிரமணியம் முன் வைக்கிறார்.

(1). அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது, (2). அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை, (3). அடிமையாவோர் அடிமையாளருக்கு ஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு. இதற்கு ஆளோலை என்று பெயர், (4). ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும், (5). தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு, (6). அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றத்தில் முறையிடலாம், (7). தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையை ஊரவை உறுதிப்படுத்தும் (36) சோழர் காலத்தில் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் அடிமைகள் இருந்தனர். இவற்றிற்கு அடிமைகளைத் தானமாகக் கொடுத்தனர்.

அடிமைகள் வேளாண்மையிலும், அது சார்ந்த தொழில்களிலும் இடம் பெற்றிருந்தனர். “உவச்சர் பறை கொட்டும் பணியினைச் செய்தனர். அடிமைகளுக்கு முத்திரையிடப்பட்டது. (சைவத்தில் உள்ள தீக்கையும், வைணவத்தில் உள்ள சமாச் சரணமும் இந்த வகையைச் சார்ந்தவை) அடிமைகளுக்குக் கடும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன. (பக். 40).

இதன் நீட்சியாக மராட்டியர்கள் கால அடிமை முறையைக் காட்டுகிறார். இந்த அதிகாரத்தில் அடிமைகள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றியும் கூறுகிறார். இதற்கு முழு உதாரணமாக ‘ஒடைப்பிலே போடு’ என்ற சொல்லாக்கத்திற்கு ஒரு உதாரணம் காட்டுகிறார்.

“எப்பொழுதாவது ஒரு குளத்தில் அல்லது ஆற்றில் கரை உடைந்துவிட்டால் அதற்கு தெய்வத்தின் அல்லது பிசாசின் கோபமே காரணம் எனக் கருதி, அவற்றின் கோபத்தைத் தணிக்க ஓர் அடிமையை அந்த உடைப்பில் தள்ளி, அவர் மேல் மண்ணைப் போட்டு மூடி அவரைப் பலி கொடுத்து விடுவார்கள்..... இந்தப் பயங்கரமான பழக்கம் அவ்வளவு பரவலாக இருந்ததன் விளைவாக அது ஒரு பொதுவான பழமொழிக்கே வழிவகுத்தது! இவன் என்னத்துக்கு ஆவான்! ஒடைப்பிலே போட்டு மண்ணைச் சுமக்கவா?” என்று கூறுவர். அதாவது இவன் உடைப்பில் உயிருடன் போட்டுப் புதைப்பதற்கன்றி வேறெதற்கும் லாயக்கில்லை என்பதாகும்” (58/59).

தமிழகத்தில் அடிமை முறை:

அடிமை முறையின் ஒரு அருவருக்கத்தக்க அம்சம் தேவரடியார்கள் முறை. இது பிற்காலச் சோழர் காலத்தில் வளர்ந்ததென்று இவர்களுக்குச் சுயத்தன்மை உண்டு என்றாலும், இவர்களைக் கோயில்களுக்குத் தானமாக அளித்தனர். போரில் பிடித்த பெண்களைத் தேவரடியார்களாகத் தானமளிப்பது பெண்களை விலைக்கு வாங்கித் தானமாக அளித்தது இந்த இரு கூறுகளில் இதில் காணலாம். இவர்கள் தவறு செய்தால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் (61) ‘பொட்டுக்கட்டுதல்’ என்ற நிகழ்ச்சி வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் இருந்தது.

“பாலியல், பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொது மகளாக மாற்றும் புனிதச் சடங்கே பொட்டுக் கட்டுதல். சமய முத்திரையின் வாயிலாக வரை முறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது” (67) (இன்றைக்கும் கூட பெருமாள் கோயில்களில் பெருமாள் “தேவடியாக் குடிக்குச்” சென்று வருவது ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது).

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குடும்பத்துடன் அடிமையாக்கப்பட்ட கொத்தடிமைகள், பண்ணையடிமைகள், படியாள் என்ற முறையும், தஞ்சைப் பண்ணையாள் முறை என்பதும் வழக்கத்தில் இருந்தது. இந்தப் பண்ணையாள் முறையை ஒழிப்பதற்கு மணலி சி. கந்தசாமி தலைமையிலான போராட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார் (82)

“முழங்கால் வரை இருந்த சேலையை / கணுக்கால் வரை கழுத்து விட்டதாரு / மணலி கந்தசாமி என்று கூறு” (82) இவர்கள் தவிர ஆங்கில ஆட்சியில் மலைத்தோட்ட அடிமைகளும் உருவாயினர்.

இந்த நூலில் அவர் மிகக் கவனமாக அடிமைமுறை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால் இங்கு நிலவியது அடிமைச் சமுதாயம் அல்ல. அடிமை முறை மட்டுமே இருந்தது. இது மேற்கத்திய முறையில் இருந்து மாறுபட்டு இருந்தது. சமூக அமைப்பு புராதன இனக்குழு மக்கள் அமைப்பு, அடிமைச் சமுதாயம், நிலஉடைமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமூகம் என்றபடி மூளை வளர்ச்சி நம்மிடையே நேர்கோட்டுப் பாதையில் இடம் பெறவில்லை. ஆசிய உற்பத்தி முறை என்று மார்க்ஸ் அழைத்ததற்கு ஏற்ப இங்கு அவற்றில் ஒருவகைத் திணை மயக்கம் ஏற்பட்டு இருந்தது. இவற்றை கா. சிவத்தம்பி சமச்சீரற்ற வளர்ச்சி என்று அழைக்கிறார். சங்ககாலத்தில் ஐவகை நிலங்களில் அடிமைகள் மருத நிலத்தில் மட்டுமே இருந்தனர். சமுதாயமாக அல்ல ஏனென்றால் அடிமைகள் சமுதாயமாக இயங்குவதற்குரிய உபரி உற்பத்தி தமிழகத்தில் இல்லை. ஆனால் சோழர் காலத்தில் அடிமைகளின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. இது பற்றி ஆசிரியர் கூறுகிறார்:

“நில உடைமைச் சமூக அமைப்பு சோழர் காலத்தில் நன்கு வேர்விட்டுத் தழைத்திருந்தது. அடிப்படை உற்பத்திச் சாதனமான நிலத்தின் மீது பிராமணர்களும் வேளாளர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்களுடன் கோயிலும் இணைந்து கொண்டது” (பக். 87) இங்குக் கோயில் என்பது தனி சக்தியாகக் காண்பதை விட பிராமணிய வேளாண் சமூகத்தின் ஒரு அடக்குமுறைச் சாதனமே என்றும், அது அந்த அமைப்பின் பிரதிபலிப்பு என்றும் காண்பது நல்லது. இதன் பின்னர் உருவாகும் கருத்தியலை ஆசிரியர் சரியாகவே விளக்குகிறார்.

“தமிழகத்தில் தோன்றிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அடிமைகளை உருவாக்க, பிராமணியம் அடிமைகளைத் தீண்டத் தகாதவர்களாக மெல்ல மெல்ல மாற்றியது எனலாம்” (பக். 8) இதன் விளைவாக “ஐரோப்பிய அடிமைகள் கொடூரமாக நடத்தப்பட்டாலும் தீண்டத் தகாதவர்களாக அவர்கள் நடத்தப்படவில்லை. “இந்திய அடிமை முறையானது ஐரோப்பிய அடிமைமுறையை விட மோசமாக இருந்தது (பக். 87). ஐரோப்பிய அடிமைகள் அறிவுசார்ந்த துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தியாவில் அறிவு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஐரோப்பிய அடிமைகளை விட அதிக சுதந்திரம் உள்ளவர்கள் போல இந்திய அடிமைகள் தென்பட்டாலும், உண்மையில் ஐரோப்பிய அடிமைகளைவிட அதிகமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர். அடிமைகளின் பணியை மேற்பார்வையிட “ஊரில் உள்ள ‘சபா’ என்ற பிராமணரின் ஊராட்சி மன்றமும் ‘ஊர்’ என்ற ஏனையோரின் ஊராட்சி மன்றமும் ஏற்றுக் கொண்டிருந்தன” (பக் 95).

மேற்கண்ட ஆதாரங்கள் தமிழகத்தில் அடிமை முறை இருந்ததை பறை சாற்றுகின்றது. பிற் காலத்தில் மொகலாயர்கள் காலத்திலும் வெள்ளையர்கள் காலத்திலும் இந்த முறை படிப்படியாக குறைக்கப்பட்டு சுதந்திர இந்தியாவில் சட்டத்தின் மூலம் முற்றாக ஒழிக்கப்பட்டது. பிரிட்டிஷார் மதத்தின் பெயரால் விளைந்த அடிமை முறையை ஒழித்தாலும், நிர்வாகத்தை மேம்படுத்த அதே அடிமை முறையை பயன்படுத்தி மக்களை மலேசியா சிலோன் அந்தமான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததையும் நாம் மறந்து விட முடியாது. 'தேவரடியார்கள்' என்று பொட்டு கட்டி விடும் வழக்கம் மறைமுகமாக இன்னும் நடந்து கொண்டதான் இருக்கிறது. நேபாளத்தில் இது சட்டபூர்வமாக இன்றும் நடந்து வருகிறது. காரணம் அது ஒரு இந்து நாடு. தற்போது நரேந்திரமோடி தலைமையில் இந்துத்வா ஆட்சியை பிடித்துள்ளதால் ஒழிந்து போன அந்த முறை திரும்பவும் புதுப்பிக்கப்படலாம். அவ்வாறு சட்டமாக்கப்பட்டால் அதனை ஒட்டு மொத்த இந்தியர்களும் எதிர்க்க வேண்டும்.