Followers

Thursday, July 30, 2009

வானங்கள் அடுக்குகளால் படைக்கப்பட்டுள்ளதா?


//சுவனபிரியன்,
நல்ல பதிவு. ஆனால் சில சந்தேகங்கள் ,

குரானில் பூமிக்கு மேல் ஏழு சுவர்கங்கள் இருப்பதாகவும் , (குரான் 2:29; 37:6-7; 67:3; 71:15)
அதில் சூரியனும் சந்திரனும் பூமிக்கு மிக அருகில் உள்ள சுவர்க்கத்தில் இருப்பதாகவும் (37:6-7; 67:5; 78:12-13) சொல்லி இருப்பது உண்மையா?

இதனை இப்போது உள்ள milky way galaxy மூலம் விளக்குவீர்களா?//
-Gokul

வானங்கள் அடுக்குகளால் படைக்கப்பட்டுள்ளதா?

'ஏழு வானங்களை இறைவன் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா?'
-குர்ஆன் 71:15

'அவனே பூமியில் உள்ள அனைத்தையும் மனிதர்களாகிய உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தைப் படைக்க நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.'
-குர்ஆன் 2: 29

'முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.'
-குர்ஆன் 37:6

நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் குர்ஆனின் வசனங்களில் சிலவற்றை மேலே பார்க்கிறீர்கள். வானங்களை ஏழு அடுக்குகளாக படைத்துள்ளதாக குர்ஆன் கூறுகிறது. ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவும் வானத்தின் அமைப்பையோ அது எத்தனை அடுக்குகளாக்கப்பட்டுள்ளது என்பதையோ துல்லியமாக இதுவரை சொல்லவில்லை. இனி வருங்காலத்தில் வான் ஆராய்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வசனங்கள் உண்மைப்படுத்தப் படலாம். முன்னால் வாழ்ந்த வானியல் அறிஞர்கள் அனைவரும் வானம் ஒன்றுதான் என்ற நம்பிக்கையிலேயே இருந்தனர். பெரு வெடிப்பு சித்தாந்தத்துக்கு பிறகுதான் வானங்கள் ஒன்றுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு தற்கால விஞ்ஞானிகள் வந்துள்ளனர். இப்போதய அறிவியலாளர்களின் கருத்து பேரண்டங்களின் எண்ணிக்கை ஒருகால் எண்ணிலடங்காததாக இருக்கலாம் அல்லது எண்ணிலடங்காத குட்டி குட்டி பேரண்டங்களைக் கொண்ட ஒரு எல்லையற்ற மகாப் பேரண்டமாகவும் இருக்கலாம்.
(ஆதாரம்: எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம் - பக்கம் 129-130)

எனவே ஒரே வானம் மட்டுமே இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்ற கருத்து அறிவியல் உலகில் பரவத் தொடங்கி இருக்கிறது. நம் காலத்திற்கு பிறகோ அல்லது நம் காலத்திலோ பல வானங்களையும் அறிவியலார் நிச்சயமாக கண்டு பிடிப்பர்.

ஆகாயங்களின் எண்ணிக்கை எவ்வளவு என அறிவியலால் தீர்மானிக்க முடியவில்லை என்றாலும் நாம் வசிக்கும் இப்பேரண்டம் அடுக்குகளால் உருவானதே என்பதை அறிவியல் ஆய்வுகள் கண்டு பிடித்துள்ளன.

அறிவியல் அறிஞர் சர் வில்லியம் ஹெர்ஷல் பல வருடங்கள் இடை விடாது முயற்சி செய்து ஆகாயத்தில் 688 அடுக்குகள் உள்ளதாக கண்டுபிடித்தார்.

1924-ல் எட்வின் ஹப்பிள் என்பவர் தாம் பேரண்டம் என்பது காலக்சிகள் எனும் நட்சத்திர மண்டலங்களின் ஏராளமான தொகுதிகளால் உருவானதே எனக் கண்டுபிடித்தவராவார். காலக்சிகள் என்பதை சுருக்கமாக நட்சத்திரக் கூட்டங்கள், நட்சத்திர மேகங்கள், நெபுலாக்கள், ஒற்றை நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்கள், பன்மை நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள், நியூட்ரான் நட்சத்திரங்கள், கருங்குழிகள், மற்றும் நட்சத்திரக் குடும்பங்கள் உள்ளிட்ட மாபெரும் ஒரு அண்டத் தொகுதியாகக் குறிப்பிடலாம். பேரண்டத்தில் இவைகளின் எண்ணிக்கை நூறு கோடி என்றும் ஒவ்வொன்றிலும் பதினாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாகவும் அறிவியலார் ஷேப்லி கணக்கிட்டுள்ளார். ஆனால் நவீன கணக்கீட்டின்படி கேலக்சியின் எண்ணிக்கையும் அவை ஒவ்வொன்றிலும் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் சில பதினாயிரம் கோடிகளாகும்.
(ஆதாரம்: எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம். பக்கம் 38:39)

நமது அறிவியல் திறமை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டு வருவதால் இதை விட அதிகமான காலக்சிகள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய விபரங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப் படலாம். எப்படி பார்த்தாலும் நாம் வசிக்கும் பேரண்டம் காலக்சிகளின் அடுக்குகளால் உருவாக்கப்பட்டிருப்பதால் ஏனைய ஆறு பேரண்டங்களும் அடுக்குகளின் தொகுதிகளாக இருந்து விட்டால் அது எவ்வித அறிவியல் முரண்பாடும் இல்லாததே என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

தகவல் உதவி: 'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.'

Tuesday, July 28, 2009

சூரியன் நகர்வது உண்மையா?'இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் வானவெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் 21:33


ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் ஓடுகிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல... அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

அறிஞர் ஹெர்ஷலின் கண்டுபிடிப்பு!
அறிஞர் ஹெர்ஷவின் கண்டுபிடிப்பைப் பற்றி அறிவியல் அறிஞர் டூயிக் பின்வருமாறு விளக்குகிறார்.

'ஏனைய நட்சத்திரங்களைப் போன்று சூரியனும் விண்ணில் நகர்கிறது. நட்சத்திரத் தொகுதி ஒன்றில் பிரகாசமான வேகா எனும் நட்சத்திரத்திற்கு உள்ள ஓர் இடத்தை வில்லியம் ஹெர்ஷல் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள நட்சத்திரங்களில் அவைகளுக்கு இடையில் உள்ள தூரம் கூடிக் கொண்டே வருவதைக் கவனித்தார். அதே நேரத்தில் அந்த திசைக்கு நேர் எதிர் திசையில் இருந்த நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று நெருங்கி வந்து காட்சி அளிப்பதையும் கவனித்தார்.
இது உள்ளபடியே பூமி உட்பட கோள்கள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு சூரியன் நகர்வதனால் ஏற்படும் தோற்றமே இந்த நிகழ்ச்சிக்கு காரணமாகும் என அவர் விளங்கிக் கொண்டார்.

இதை தெளிவாக விளங்குவதற்கு ஹெர்ஷல் ஒரு உதாரணத்தையும் கொடுக்கிறார். ஒரு காட்டிற்குள் மரங்களெல்லாம் ஏறத்தாழ சம தூரத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்வதாக கற்பனை செய்வோம். அவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது இடையிடையே நீங்கள் நடக்கும் திசைக்கு நேராகவும் அல்லது அதற்கு நேர் எதிர் திசையிலும் பார்வையைச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு முன்னால் இருக்கும் மரங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதாகவும் உங்களுக்குப் பின்னால் உள்ள மரங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வருவதாகவும் உணர்வீர்கள். இந்த தோற்றம் முற்றிலும் உங்களுடைய சுய நகர்வின் காரணமேயாகும். இதே நிலை சூரியன் நகரும் போதும் ஏற்படுகிறது. சூரியன் எந்த திசையை நோக்கி நகர்கிறதோ அந்தத் திசையில் அடர்த்தியாகத் தெரிந்த நட்சந்திரங்கள் இடைவெளி விட்டுத் தெரிகிறது. இதே போல் இதற்கு எதிர் திசையில் நட்சத்திரங்கள் மேலும் அடர்த்தியாகத் தெரிவதும் சூரியனின் சுயமான நகர்வின் காரணமேயாகும்.
-அஸ்ட்ரானமி ஃபார் எவ்ரிமேன், பக்கம் 297-98

இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க எத்தனை ஆய்வுகள் எத்தனை அறிஞர்கள் இரவு பகல் பாடுபட வேண்டியிருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய ஆய்வுகளையும் மிகச் சாதாரணமாக சொல்லிச் செல்லும் குர்ஆனின் வார்த்தைகள் வெறும் மனிதனின் வார்த்தை என்று எண்ண முடியுமா?

'சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.'
-குர்ஆன் 13:2

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

'தக்க காரணத்துடனேயே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வரை ஓடும்.'
-குர்ஆன் 39:5

Saturday, July 25, 2009

ஸ்ருதி ஹாஸனுக்கு என்ன நேர்ந்தது?நேற்று தற்செயலாக சஹாரா சேனலில்(ஹிந்தி) நடந்த கலந்துரையாடலை கவனித்தேன். அங்கு நமது நடிகர் கமலஹாஸன் மகளின் சினி அரங்கேற்றத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்த படத்தில் ஸ்ருதிஹாஸன் ஆடிய சில பாடல் காட்சிகளை போட்டு காட்டினார்கள். அம்மணி முதல் படத்திலேயே தன்னால் எந்த அளவு உடைகளை குறைக்க முடியுமோ அந்த அளவு குறைத்து இந்திய மக்களுக்கு கலைச் சேவை :-) செய்திருக்கிறார்.

என் சிறு வயதில் சலங்கை ஒலி, கைதியின் டைரி, வாழ்வே மாயம், ஏக் துஜே கேலியே போன்ற படங்களை எல்லாம் திரை அரங்குகளில் பல முறை பார்த்தவன். சமூகத்தில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்த வேண்டும், மூடப்பழக்கங்களை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதை எல்லாம் தனது படத்தின் மூலம் தைரியமாக சொல்லக் கூடியவர் கமலஹாஸன். மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் ஓரளவு பொது அறிவு நிரம்பப் பெற்றவர். தனது ரசிகர் மன்றங்களை பொது சேவையில் ஈடுபடுத்தி பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கக் கூடியவர் நம் கமலஹாஸன். இப்படிப் பட்ட பின்புலம் உள்ள ஒரு பிரபலத்தின் மகள் சில்க் சுமிதா ரேஞ்சுக்கும் கீழிறங்கி அமீர்கானின் அண்ணன் மகனோடு (ஹீரோவின் பெயர் மறந்து விட்டது) குத்தாட்டம் போடுவதை பார்க்க சகிக்கவில்லை.

கமலஹாஸனிடம் கோடிகள் கொட்டிக் கிடக்கிறது. புகழுக்கும் குறைவில்லை. இப்படிப்பட்ட பின்புலத்தில் உள்ள ஸ்ருதிஹாஸன் எதற்காக இப்படி ஒரு துறையை தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒளிப்பதிவு, டைரக்சன், இசை என்று திறமையை வெளிக்காட்டும் துறைகளை தேர்ந்தெடுத்திருந்தால் கமலின் பெயரும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

எது எப்படியோ! கலந்துரையாடலின் முடிவில் "முதல் படத்திலேயே கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைஃப் போன்ற நடிகைகளை எல்லாம் ஆடை அவிழ்ப்பில் பின்னுக்கு தள்ளி விட்டார் ஸ்ருதி ஹாஸன்" என்று சொன்னபோது கமலஹாஸனை நினைத்து பரிதாபப் பட்டேன்.

Monday, July 13, 2009

வானமும் பூமியும் எவ்வாறு நிலை கொண்டுள்ளது?நாம் வசிக்கும் இந்த பூமியும் வானமும் எவ்வாறு கீழே விழாமல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? நம் முன்னோர்களில் சிலர் இந்த பூமியையும் வானத்தையும் நிலவையும் பற்றி என்ன சொல்லி வைத்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

ஒரு புராணம் நமது பூமியை மூன்று திமிங்கிலங்கள் ஒன்றினைந்து சுமந்து கொண்டிருக்கிறது என்கிறது. மற்றொரு புராணம் ஒரு மீனின் வாலில் பூமி நிலைபடுத்தப்பட்டுள்ளது என்கிறது. வேறு சில புராணங்கள் பன்றியின் மூக்கின் மீது இந்த பூமி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறது. மேலும் சில கதைகளில் ஒரு காளையின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் பூமி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது.

பல அரிய கருத்துக்களை கூறிய வள்ளுவரோ 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று நமது பாட்டிகளின் கதையை ஒட்டி கூறுவதைப் பார்க்கிறோம். அவர் பார்வையில் சந்திர கிரகணம் ஏற்படுவது பாம்பு விழுங்குவதால் ஏற்படுகிறது என்றும் பாம்பு அந்த சந்திரனை கக்குவதால் சந்திர கிரகணம் விலகுகிறது என்ற ரீதியில் சொல்வதைப் பார்க்கிறோம். இது நம் முன்னோர்கள் வானம், பூமி, சந்திரன் பற்றி எந்த அளவு விளங்கியிருந்தார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

சரி. குர்ஆன் இந்த நிகழ்வுகள் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் பார்ப்போம்.

'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி வானங்களை இறைவனே உயர்த்தினான்.....நீங்கள் உறுதியாக நம்புவதற்க்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.'
-குர்ஆன் 13:2

'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி இறைவனே வானங்களைப் படைத்தான். உங்களை சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.'
-குர்ஆன்: 31:10


ஆகாயத்தின் கட்டுமானத்தில் எந்த திசையில் எவ்வளவு தூரம் நீங்கள் சென்று பார்த்தாலும் கண்களுக்கு தெரியக் கூடிய எந்த ஒரு தூணையும் நீங்கள் காண இயலாது. ஈர்ப்பு விசையைக் கொண்டே ஒவ்வொரு கோள்களும் பிணையப்பட்டு அந்தரத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் காண இயலாது. நம் கையில் உள்ள ஆப்பிள் தவறினால் நேராக பூமியை நோக்கி செல்கிறது. ஆப்பிள் பூமியை நோக்கி செல்கிறது என்பதை விட பூமியின் ஈர்ப்பு விசையானது ஆப்பிளை இழுக்கிறது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் பார்க்க முடிவதில்லை. இதைத்தான் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற அழகிய வார்த்தையைக் கொண்டு குர்ஆன் நமக்கு விளக்குகிறது.

அறிஞர் அரிஸ்டாட்டில் பூமியை மையமாக வைத்தே அனைத்து கோள்களும் சுழல்கின்றன என்று கூறி வந்தார். அன்றைய கிருத்தவ சபைகளும் அரிஸ்டாட்டிலின் கருத்தையே உண்மை என்று வாதிட்டது. இதன் பிறகு போலந்து நாட்டின் அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ் வானியலைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இந்த அறிஞர் கிறித்தவ சபையிலும் பணியாற்றி வந்தார். முடிவில் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் சுழலுகின்றன என்ற 'சூரிய மைய கோட்பாட்டை' உருவாக்கினார். கிறித்தவ சபைக்கு மாற்றாக இந்த கருத்து இருந்ததால் தான் கண்ட உண்மையை தனது நெருங்கிய நண்பர்களிடமே கோபர் நிக்கஸ் சொல்லி வந்தார். பிறகு தனது அறுபதாவது வயதில் ரோமில் 'சூரிய மையக் கோட்பாட்டை வலியுறுத்தி' உரை நிகழ்த்தினார். சும்மா இருக்குமா கிறித்தவ சபை! 'மத நிந்தனை' என்று குற்றம் சாட்டி அவர் கருத்து தவறு என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்து அவரை மன்னிப்பும் கேட்க வைத்தது கிறித்தவ சபை. இருந்தும் தனது எழுபதாவது வயதில் இறப்பதற்கு முன் சூரியனை மையமாக வைத்தே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை புத்தமாக வெளியிட்டு மறைந்தார் அந்த மேதை.

அறிஞர் நியூட்டனும் கிரக சஞ்சாரங்களை விளக்கி 'பேரண்டம் தாமாகவே காரணமின்றி நிலை பெற்றிருக்கவில்லை. அதனை நிலை நிறுத்தும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு பிணைப்பு உண்டு. அந்த பிணைப்பே பேரண்டம் மொத்தமும் பரவி நிற்க்கும் ஈர்ப்பாற்றலாகும்.' என்று கூறுகிறார்.

இதனையே குர்ஆன் கூறும் போது பின் வருமாறு விளக்குகிறது.

'வானங்களும் பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மை உடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.'
-குர்ஆன்: 35:41


இன்று இந்த உண்மைகளை எல்லாம் எல்.கே.ஜி படிக்கும் நம் குழந்தைகளுக்குக் கூட தெரிந்திருக்கும். ஆனால் இந்த குர்ஆன் இறங்கிய காலம் 1400 வருடங்களுக்கு முன்பு என்பதையும் அந்த மக்கள் வானியலைப் பற்றிய போதிய அறிவு இல்லாதவர்களாகவும் இருந்ததையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

Friday, July 10, 2009

தற்கொலைகளின் சதவீதம் நாடு வாரியாக!இந்தியா---------10.65
குவைத்-----------1.95
பிலிப்பைன்ஸ்-----2.10
தாய்லாந்த்--------7.90
சிங்கப்பூர்-------10.05
ரொமானியா-----12.75
அயர்லாந்த்------9.75
அமெரிக்கா------11.05
போர்ச்சுக்கல்----11.20
மால்டோவா-----17.25
சிலி------------10.46
கனடா---------11.65
நியுசிலாந்த்-----12.00
இஸ்ரேல்--------6.25
ஸ்விட்சர்லாந்த்--17.50
ஆஸ்திரேலியா--10.90
சவுத் கொரியா--23.75
பெல்ஜியம்-----21.30
பிரான்ஸ்-------18.30
ஜப்பான்-------24.20
ரஷ்யா---------36.15

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் 'கால் அப்' என்ற அமைப்பு தற்கொலைகளின் விகிதாச்சாரத்தை நாடுவாரியாக கணக்கெடுத்து வெளியிட்டுள்ளது. தற்கொலைகளின் விகிதாச்சாரம் மத நம்பிக்கை உள்ளவர்களை விட மத நம்பிக்கை அற்றவர்களிடத்தில் அதிகரித்துள்ளது என்றும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது. இந்த நாடுகளில் உள்ள மக்கள் கிறித்தவத்தை பின்பற்றினாலும் 90 சதவீத மக்கள் மத நம்பிக்கை அற்றவர்களாகவே உள்ளனர். நமது இந்தியாவிலும் தற்கொலைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளதைப் பார்க்கிறோம். பி.சயினாத் என்பவர் ஹிந்து நாளேட்டில் 'சென்ற பத்தாண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 30000' என்கிறார்.

என் பள்ளி தோழன் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டான். 10 ஆம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்த அவன் படிக்க நினைத்தது மருத்துவம. அவனது தகப்பனார் அவனை சேர்த்ததோ பொறியியல் கல்லூரியில். தற்கொலைக்கு இதுதான் காரணம்.

அடுத்து இலங்கை தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரையும் எடுத்துக் கொள்ளலாம். இலங்கைத் தமிழருக்காக தமிழ் மண்ணில் போராட்டம் நடத்தி இருக்கலாம். அல்லது கள்ள தோணியில் சென்று இலங்கை ராணுவத்தை எதிர்த்து போரிட்டு இறந்திருக்கலாம். அதை விடுத்து தனது குடும்பத்தை கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்காமல் தனது உயிரை மாய்த்து கொண்டதால் எதை சாதித்து விட்டார் முத்துக்குமார்? சில தலைவர்களை சிறையில் தள்ளியதைக் கூட பொறுக்க முடியாமல் தீக்குளித்து சாகும் நமது கழக கண்மணிகளையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.

இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? மன நிம்மதி இழப்பதுதான் முதற்காரணம். ஒரு மனிதனுக்கு துன்பம் ஏற்படும் போது தனக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எங்கு இறக்கி வைப்பது என்ற தடுமாற்றத்தில் விளைவதுதான் அநேக தற் கொலைகள். எந்த மனிதன் இறை நம்பிக்கையில் சற்றும் தளராமல் தனது வாழ்க்கையை செலுத்துகிறானோ அவன் எந்த நிலையிலும் தற்கொலைகளை நாட மாட்டான். பல முஸ்லிம் நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கெல்லாம் தற்கொலைகளின் விகிதாச்சாரம் மிக மிக குறைவாகவே இருப்பதை பார்க்கிறோம். இதற்க்கெல்லாம் காரணம் அந்த மக்களின் வாழ்க்கையே இஸ்லாமாக இருப்பதுதான்.

இறந்தவர்களுக்காக மற்றவர்கள் பிரார்த்தனை செய்யும் விதமாக ஒரு தொழுகை முஸ்லிம்களிடத்தில் உண்டு. இந்த தொழுகையைக் கூட தற்கொலை செய்து கொண்டவருக்காக தொழக் கூடாது என்று முகமது நபி முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறார்.

'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.'
-குர்ஆன்: 13:28

'உங்களையே கொன்று விடாதீர்கள். இறைவன் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.'
-குர்ஆன்: 4:29


'யார் ஒரு கூரான ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டே இருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் விஷத்தை கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டே இருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் தள்ளப்பட்டு மேலிருந்து கீழே என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்.' என்று முகமது நபி சொல்லக் கேட்டவர் அபுஹூரைரா.

நூல்: முஸ்லிம் 157

என்றெல்லாம் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுவதாலும், முஸ்லிம்கள் தங்களின் மன அழுத்தத்தை ஒரு நாளைக்கு ஐந்து வேளை இறைவன் முன்னால் இறக்கி வைத்து விடுவதாலும் முஸ்லிம்களிடத்தில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. இந்துக்களில் கூட மதப்பற்று உடையவர்கள் தற்கொலைகளை நாடுவது இல்லை என்பதையும் பார்க்கிறோம்.

Monday, July 06, 2009

1,500 எருமை மாடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன்!மணப்பாறை : மணப்பாறை அருகேயுள்ள மட்டப்பாறைப்பட்டியில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, 20 கி.மீ., தொலைவில் மட்டப்பாறைப்பட்டி உள்ளது. இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர்.

அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி செல்வது வழக்கம். பக்தர்கள் தாங்கள் எண்ணியது நிறைவேறி விட்டால், எருமை கிடா பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்வர். ஏழு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை சுற்றுப்புற 54 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு நடந்த திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. அதற்கு ரெட்கிராஸ் அமைப்பு மற்றும் மிருகவதை தடுப்பு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியதால், அப்போதிருந்த அ.தி.மு.க., ஆட்சியில் கோவில்களில் உயிர்பலி கொடுக்க தடை விதித்து கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டது. உயிர்பலி தடைசட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின் சில மாதங்களில் கோவில்களில் உயிர்பலி தடைசட்டத்தை அரசு வாபஸ் பெற்றது.

இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஒரு வாரமாக திருவிழா நடந்து வருகிறது. மட்டப்பாறைப்பட்டி ஊரார் செல்வம், தவளவீரன்பட்டி முக்கியஸ்தர் ராமசாமி, சீரங்கன், வேலுச்சாமி, அணியாப்பூர் செல்வம் மற்றும் 54 ஊர்களைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழாவையொட்டி, பத்ரகாளியம்மனுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிடும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று பகல் 2 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு எருமை கிடா பலியிடும் பூஜை நடந்தது. வீரப்பூர் ஜமீன்தார் சவுந்திரபாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அரிவாள் பூஜை நடந்தது. பகல் 2.45 மணிக்கு ஜமீன்தார் சவுந்திரபாண்டியனின் எருமைகிடா முதலில் பலியிட, தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திக்கடனாக செலுத்திய எருமை கிடாக்கள் பட்டியிலிருந்து ஒவ்வொன்றாக அழைத்து வரப்பட்டது. வழியில் நின்ற வாலிபர்கள் தங்களிடமிருந்த உருட்டுக் கட்டையால் எருமை கிடாக்களை தாக்கினர்.

பின்னர் எருமைகிடாக்கள் பலியிடத்துக்கு கொண்டு வரப்பட்டு பலியிடப்பட்டன. கோவில் முன் தோண்டப்பட்ட குழியில் பலியிடப்பட்ட எருமைகிடாக்கள் போடப்பட்டன. வேண்டுதல் உள்ள பக்தர்கள், எருமைகிடாக்களின் தலையிலிருந்து வடியும் ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டு கோவிலை சுற்றிவந்து குழிக்குள் எருமைகிடாக்களின் தலையை போட்டனர். பக்தர்கள் உப்பு வாங்கி சென்று குழியில் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு வரை தொடர்ந்து ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

நன்றி:
-தின மலர்

நேர்த்திக் கடனுக்காக உயிர்ப்பலி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்ட எருமைகளை யாருக்கும் பயன்படாமல் குழியில் போட்டு புதைத்ததுதான் மனதுக்கு நெருடலாக இருந்தது. இந்த இறைச்சியை பதப்படுத்தி தேவையுள்ள வறியவர்களுக்கு கொடுத்திருந்தால் வறியவர்களின் வாழ்த்து கிடைத்திருக்குமே! இதற்கு இந்து மதத்தில் தடையிருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் விளக்கம் தரவும்.

இதே போன்று முஸ்லிம்களிடத்திலும் ஹஜ் பெருநாளன்று கோடிக்கணக்கான ஆடுகளும் மாடுகளும் ஒட்டகங்களும் உலகம் முழுவதும் அறுக்கப்படுகின்றன. சவூதி அரேபியாவில் ஹஜ் பெருநாளன்று வெட்டப்படும் அனைத்து உயிர்களையும் பதப்படுத்திஆப்கானிஸ்தான், ஆப்ரிக்கா நாடுகள், இந்தோனேஷியா போன்ற வறிய நாடுகளுக்கு சவூதி அரசாங்கம் அனுப்பி வைக்கிறது. இது போன்ற ஒரு வழி முறையை நமது அரசாங்கமோ அல்லது இந்து மக்களோ ஏன் முயற்சி செய்யக் கூடாது.

முஸ்லிம்களை எப்படி வம்புக்கிழுக்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கும் ஆர்.எஸ்.ஸோ அல்லது பி.ஜே.பியோ இதற்கும் சிறிது நேரத்தை ஒதுக்கினால் அந்த உயிர்கள் உரிய வறியவரைச் சென்றடையுமல்லவா?

'பலி கொடுக்கப்பட்ட உயிர்களின் மாமிசங்களோ அவற்றின் ரத்தங்களோ இறைவனை சென்றடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள இறை அச்சமே இறைவனை சென்றடையும்.'

-குர்ஆன் 22:37

Thursday, July 02, 2009

'புவி ஈர்ப்பு விசை' பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?'இறைவன் வானத்தை உயர்த்தினான்: தராசை நிலை நாட்டினான்: தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்க்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்: எடையைக் குறைத்து விடாதீர்கள்'
-குர்ஆன் 55:7-9


'அவன் வானத்தை உயர்த்தினான்' என்ற வாசகம் 'பெரு வெடிப்பு' கொள்கையை மெய்ப்பிக்கிறது. விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள்? வானம் பூமி நட்சத்திரங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்து மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வானம் மேலே உயர்த்தப்பட்டது என்று கூறுகின்றனர். அதையேதான் குர்ஆனும் கூறுகிறது. இது பற்றி நான் முன்பே ஒரு பதிவு இட்டுள்ளதால் அதற்கு அடுத்து வரும் 'தராசை நிலை நாட்டினான்' என்ற வசனத்தின் விளக்கத்தை சற்று விரிவாகப் பார்ப்போம்.

உதாரணத்திற்கு 600 கிராம் உள்ள இரும்பு துண்டை நாம் வாழும் பூமியில் தராசில் வைத்து நிறுத்தோம் என்றால் 600 கிராமைக் காட்டும். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. அதே சமயம் அதே தராசில் அதே 600 கிராம் இரும்புத் துண்டை நீங்கள் நிலவில் வைத்து நிறுத்தீர்கள் என்றால் அதன் எடை வெறும் நூறு கிராமைத்தான் காட்டும். இதற்கு காரணம் நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட ஆறு மடங்கு குறைவாகும்.

இதிலிருந்து நாம் விளங்குவது பூமியில் ஒரு பொருளை எடை போடும் போது அப் பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையையே நாம் எடையாக காண்கிறோம் என்பது தெளிவாகிறது.

அந்த கால அரபிகளுக்கு புவி ஈர்ப்பு விசையைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் 'வானம் உயர்த்தப்பட்டு தராசு நிறுவப்பட்டது' என்று எளிமையான மொழி நடையில் மிகப் பெரும் அறிவியலை குர்ஆன் மனிதர்களுக்குப் போதிக்கிறது. இந்த வாக்கியத்தை இன்றைய அறிவியல் யுகத்தில் படிக்க வேண்டுமாயின் 'வானத்தை உயர்த்தினான்: புவி ஈர்ப்பு விசையால் நிலை நாட்டினான்' என்று படித்தால் இன்னும் அறிவியலோடு நெருங்கி வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.