Followers

Wednesday, June 13, 2012

நாட்டுக்காக இரண்டு நிமிடங்கள் ஒதுக்குவோமா...?

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம்செய்யும் தவறுகளில் ஒன்று....

விலைவாசி உயர்வுக்கு அரசு மட்டுமா காரணம்?

விலைவாசி உயர்வுக்கு நாமும் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்.....

ஒரு வருடத்திற்கு முன் 1 US$ = ரூ 39.
இன்று 1 US $ = ரூ 53.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா.... ???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!! !

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்புசெலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10...அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-

வாங்கவும்:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-

INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

--------------------------

BATHING SOAP:-

வாங்கவும்:-

USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-

INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

--------------------------

TOOTH PASTE:-

வாங்கவும்:-

USE NEEM, BABOOL, PROMISE,VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

--------------------------

TOOTH BRUSH:-

வாங்கவும்:-

USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

--------------------------

SHAVING CREAM:-

வாங்கவும்:-

USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-

INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

-------------------------

BLADE:-

வாங்கவும்:-

USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

------------------------
TALCUM POWDER:-

வாங்கவும்:-

USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-

INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

------------------------

MILK POWDER:-

வாங்கவும்:-

USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

------------------------

SHAMPOO:-

வாங்கவும்:-

USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF HALO, ALL CLEAR,NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

-------------------------

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-

USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-

INSTEAD OF VODAFONE.

------------------------

Food Items:-

வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma, Biriyani

தவிர்க்கவும்:-

INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

(மேலே உள்ள தகவல்கள் usetamil தளத்திலிருந்து எடுத்தது. வேறு தயாரிப்புகள் ஏதும் விடுபட்டிருந்தாலோ அல்லது உள் நாட்டு தயாரிப்புகள் லிஸ்டில் ஏதும் தவறிருந்தாலோ சுட்டிக் காட்டுங்கள். திருத்தி விடுகிறேன்.)

-------------------------------------------


இப்படி நம் நாட்டுப் பொருட்களை மட்டும் வாங்கினால் அது மற்ற நாடுகளை பாதிக்காதா? என்ற கேள்வி எழும். அதை அந்த நாட்டு அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் பார்த்துக் கொள்வர். நாம் நமது நாட்டை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றி விட்டு பிறகு மற்ற நாடுகளைப் பற்றி யோசிப்போம். அதுவரை முடிந்த வரை நம் நாட்டு பொருட்களை வாங்கவே விருப்பப்படுவோம்.

ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் கழித்து தாயகம் செல்லும் போது 100 கிலோ அல்லது 150 கிலோ என்று பொருட்களை சிலர் சுமந்து செல்வதை பார்க்க ஆச்சரியமாக இருக்கும். இந்திய ரூபாய்க்கு கணக்கு பண்ணிப் பார்த்தால் இவர்கள் இங்கு வாங்கிய பொருட்கள் அனைத்தும் அநியாய விலையாக இருக்கும். இருந்தும் வெளி நாட்டு பொருட்களின் மீதுள்ள மோகம் நம்மை பாடாய் படுத்துகிறது.




சில இலங்கை சகோதரர்கள் பருப்பு, எண்ணெய், மசாலா சாமான்கள், என்று கார்கோவில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை பொருட்களை அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். நான் ஆச்சரியப்பட்டுக் கேட்டால் 'இதை விட டபுள் விலை கொடுத்துதான் நாங்கள் இலங்கையில் வாங்க வேண்டும்.' என்பர். தற்போது நிலைமை ஓரளவு சீராகி இருப்பதாக சொல்கின்றனர். இது போன்ற நெருக்கடிகள் இந்தியர்களான நமக்கு இல்லை என்றாலும் ஊர் செல்லும் போது மூட்டை கட்டும் பழக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. ஒரு மாதம் முன்பே இதற்காக திட்டமிட்டு வாங்கி சேர்ப்பதென்ன! அந்த பெட்டியை அழகாக கட்டுவதற்காக ஸ்பெஷலிஸ்டுகளை தேடுவதென்ன! தராசை கொண்டு வந்து தினம் தினம் நிறுத்துப் பார்ப்பதென்ன! என்று படு தமாஷாக இருக்கும். இதை எல்லம் கூடிய வரை குறைத்துக் கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும் இரண்டு மூன்று செட் பேண்ட்களும் சட்டைகளும் தைத்து எடுத்து வந்து விடுவேன். வீட்டில் டிவியிலிருந்து செல் போன்கள் வரை அநேக பொருட்கள் இந்திய பொருட்களாகவே இருக்கும். முடியாத பட்சத்துக்கு வேண்டுமானால் வேறு வழியில்லாமல் வெளி நாட்டு பொருட்கள் வாங்கும் நிர்பந்தம் ஏற்படும்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இனி அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை.

எனவே கூடியவரை அந்நிய பொருட்களை தவிர்த்துக் கொள்வோம்: இந்திய பொருட்களை வாங்க முயற்சிப்போம். வீழ்ந்து கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நம்மால் ஆன இந்த சிறிய முயற்சியை செயல்படுத்த துணிவோம்.



30 comments:

வவ்வால் said...

சு.பி,

நல்லக்கருத்து. இதில் 50% சதம் நான் வாங்கிக்கொண்டு இருக்கிறேன். பெரும்பாலும் அப்படி வாங்கவே முயற்சிப்பேன்,ஆனால் சில பொருட்கள் கிடைப்பதில்லை.

உதாரணமாக வெளியில் செல்லும் போது மினரல் வாட்டர் தேவைப்படுகிறது, உள்ளூர் தண்ணீர் மிக மட்டமாக இருக்கிறது. அதுவும் சர்வதேச விலைக்கே விற்கிறார்கள். பிஸ்லெரி கிடைக்கும் இடங்களில் வாங்குவேன். அது இந்திய தயார்ப்பே.

கோலா பானத்தில் பவன்டோ வாங்குவேன், அதுவும் சரியாக கிடைப்பதில்லை.

மேலும் இந்திய தயாரிப்புகளிலும் அந்நிய முதலீடு இருக்கே.

முன்னர் எல்லாம்,பேருந்து,ஆட்டோ பின்னர் எல்லாம்"be indian buy indian" எழுதுவாங்க அது கூட குறைந்து போச்சு இப்போ.

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//உதாரணமாக வெளியில் செல்லும் போது மினரல் வாட்டர் தேவைப்படுகிறது, உள்ளூர் தண்ணீர் மிக மட்டமாக இருக்கிறது. அதுவும் சர்வதேச விலைக்கே விற்கிறார்கள். பிஸ்லெரி கிடைக்கும் இடங்களில் வாங்குவேன். அது இந்திய தயார்ப்பே.//

இது போன்ற நிர்பந்தமான நேரங்களில்தான் நானும் அந்நிய பொருட்களை வாங்குவது.

//மேலும் இந்திய தயாரிப்புகளிலும் அந்நிய முதலீடு இருக்கே.//

அவற்றையும் தவிர்த்து முற்றிலுமாக இந்திய தயாரிப்புகளையே வாங்க முயற்ச்சிக்க வேண்டும். அந்நிய முதலீட்டில் நம் நாட்டு மக்களின் வேலை வாய்ப்பும் கிடைப்பதால் அது ஒரு வகையில் நன்மையே. குறிப்பிட்ட சதம் நமது அரசுக்கும் செல்கிறது.

//முன்னர் எல்லாம்,பேருந்து,ஆட்டோ பின்னர் எல்லாம்"be indian buy indian" எழுதுவாங்க அது கூட குறைந்து போச்சு இப்போ.//

ஆம் இப்போதெல்லாம் அந்த வாசகத்தையே காண முடிவதில்லை. யாரும் கடை பிடிக்காததால் அவர்களுக்கே அலுத்து விட்டது போலும். :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

மொதலாளி எந்த ஊரிலிருந்தாலும் முதலாளிதான். தொழிலாளி எந்த ஊரிலிருந்தாலும் தொழிலாளிதான். இதே மாதிரி வேற்று நாட்டினர் இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்கத் தொடங்கினால் என்ன செய்வது. இது போன்ற போலி நாட்டுப் பற்றில் எனக்கு உடன்பாடில்லை. டெண்டுல்கரின் புகைப்படத்தைப் பகிர்ந்து நாட்டுப்பற்றைக் காட்டிக் கொண்டு, அதே நேரம் ஐபில் கிரிக்கெட் சாதனைகளையும் பகிர்ந்து கொள்ளும் மொக்கைகள்தான் இது போன்ற கதைக்குதவாத போலி தேசபக்திக் கதைகளையும் ஃபேஸ்புக்கில் உலவவிடுகின்றனர். இது எப்படியிருக்கிறதென்றால் பில் கேட்சை எதிர்ப்போம் அம்பானியை ஆதரிப்போம் என்பது போல் இருக்கிறது. நம் நாட்டு மக்கள் வாழ வேண்டுமானால் நம் நாட்டுப் பண்ககாரகளை முதலில் எதிர்க்க வேண்டும். ஒரு சூப்பர் மார்க்கேட்டை அம்பானி திறந்தால் ஆயிரம் சிறு வணிகர்களின் பிழைப்பில் மண்ணைப் போடுகிறார் என்று பொருள். இதெல்லாம் 1947 உடன் முடிந்த கதை. எந்த நாட்டிலிருந்து வருகிறது என்பது எனக்கு முக்கியமில்லை உயிர் வாழத் தேவையா என்பதே முக்கியமானது. மக்களின் உயிர் ஆதரமான நீரை உறிஞ்சி அதை புட்டியில் அடைத்து அதைக் காசாக்குபவன் இந்தியனென்றால் என்ன அமெரிக்கனென்றால் என்ன. எல்லோரும் எதிர்க்கப்பட வேண்டியவர்களே! இன்றைய உலகமய உலகில் எல்லா நாடுகளுமே சந்தைதான் யாருமே எங்கும் கடை வைக்கலாம். மேற்படி உங்கள் நாட்டுப் பற்றிற்கு வந்தனம்

suvanappiriyan said...

சகோ அனானி!

//நம் நாட்டு மக்கள் வாழ வேண்டுமானால் நம் நாட்டுப் பண்ககாரகளை முதலில் எதிர்க்க வேண்டும். ஒரு சூப்பர் மார்க்கேட்டை அம்பானி திறந்தால் ஆயிரம் சிறு வணிகர்களின் பிழைப்பில் மண்ணைப் போடுகிறார் என்று பொருள். //

ஒரு சமூகத்தில் வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டும் என்றால் ஏழை பணக்காரன் என்ற இரு பிரிவு இருந்தாலே சாத்தியப்படும். பணக்காரர்களை நாம் ஒழிப்பதற்கு பதில் அவர்களின் பொருளாதாரத்தை ஓரிடத்திலேயே முடக்காமல் பரவலாக்கி பல வேலை வாய்ப்புகளை உருவாக்க அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான பிரசாரத்தை முடுக்கி விட வேண்டும்.

//மக்களின் உயிர் ஆதரமான நீரை உறிஞ்சி அதை புட்டியில் அடைத்து அதைக் காசாக்குபவன் இந்தியனென்றால் என்ன அமெரிக்கனென்றால் என்ன. //

அதற்குத்தான் இயற்கையான பழ ரசங்களையும் இளநீர் போன்ற இயற்கை பானங்களை விரும்ப வேண்டும் என்று சொல்கிறோம்.

அந்நிய முதலீட்டையும் எதிர்க்க வேண்டாம். உள் நாட்டு பொருட்களை வாங்குவதிலும் பின்னடைய வேண்டாம். இதன் மூலம் யாரையும் எதிர்ப்பதாகவும் கொள்ள முடியாது.

Unknown said...

நல்ல பதிவு நண்பரே!

வெளி நாட்டில் வாழும் உங்களை போல் பல பேர் இப்படி சிந்தித்தாலும் நம் நாட்டிலே வாழும் பல பேர் அன்னிய பொருள் மோகத்திலே வாழ்கின்றனர். அவர்களில் ஒரு சிலருக்காவது இந்த இடுகை நல்ல வெளிச்சத்தை தரும் என்று நம்புகிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி!

அதிரை சித்திக் said...

சுவன பிரியன் ..நீங்கள் இப்போது

சமுதாய பிரியன் ..நீங்கள் தேசிய பிரியன்

இந்தியா பிரியன் ..நீங்க சொன்ன செய்தியை

IPL கிரிகெட் போட்டி ஒளிபரப்பும் சமயம் விளம்பரம்

செய்தால் கொஞ்சம் தாக்கம் இருக்கும்

அதிரை சித்திக் said...

சுவன பிரியன் ..நீங்கள் இப்போது

சமுதாய பிரியன் ..நீங்கள் தேசிய பிரியன்

இந்தியா பிரியன் ..நீங்க சொன்ன செய்தியை

IPL கிரிகெட் போட்டி ஒளிபரப்பும் சமயம் விளம்பரம்

செய்தால் கொஞ்சம் தாக்கம் இருக்கும்

அதிரை சித்திக் said...

சுவன பிரியன் ..நீங்கள் இப்போது

சமுதாய பிரியன் ..நீங்கள் தேசிய பிரியன்

இந்தியா பிரியன் ..நீங்க சொன்ன செய்தியை

IPL கிரிகெட் போட்டி ஒளிபரப்பும் சமயம் விளம்பரம்

செய்தால் கொஞ்சம் தாக்கம் இருக்கும்

அதிரை சித்திக் said...

சுவன பிரியன் ..நீங்கள் இப்போது

சமுதாய பிரியன் ..நீங்கள் தேசிய பிரியன்

இந்தியா பிரியன் ..நீங்க சொன்ன செய்தியை

IPL கிரிகெட் போட்டி ஒளிபரப்பும் சமயம் விளம்பரம்

செய்தால் கொஞ்சம் தாக்கம் இருக்கும்

அதிரை சித்திக் said...

சுவன பிரியன் ..நீங்கள் இப்போது

சமுதாய பிரியன் ..நீங்கள் தேசிய பிரியன்

இந்தியா பிரியன் ..நீங்க சொன்ன செய்தியை

IPL கிரிகெட் போட்டி ஒளிபரப்பும் சமயம் விளம்பரம்

செய்தால் கொஞ்சம் தாக்கம் இருக்கும்

அதிரை சித்திக் said...

சுவன பிரியன் ..நீங்கள் இப்போது

சமுதாய பிரியன் ..நீங்கள் தேசிய பிரியன்

இந்தியா பிரியன் ..நீங்க சொன்ன செய்தியை

IPL கிரிகெட் போட்டி ஒளிபரப்பும் சமயம் விளம்பரம்

செய்தால் கொஞ்சம் தாக்கம் இருக்கும்

அதிரை சித்திக் said...

சுவன பிரியன் ..நீங்கள் இப்போது

சமுதாய பிரியன் ..நீங்கள் தேசிய பிரியன்

இந்தியா பிரியன் ..நீங்க சொன்ன செய்தியை

IPL கிரிகெட் போட்டி ஒளிபரப்பும் சமயம் விளம்பரம்

செய்தால் கொஞ்சம் தாக்கம் இருக்கும்

suvanappiriyan said...

சகோ கரிகாலன்!

//வெளி நாட்டில் வாழும் உங்களை போல் பல பேர் இப்படி சிந்தித்தாலும் நம் நாட்டிலே வாழும் பல பேர் அன்னிய பொருள் மோகத்திலே வாழ்கின்றனர். அவர்களில் ஒரு சிலருக்காவது இந்த இடுகை நல்ல வெளிச்சத்தை தரும் என்று நம்புகிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ அதிரை சித்திக்!

//சுவன பிரியன் ..நீங்கள் இப்போது

சமுதாய பிரியன் ..நீங்கள் தேசிய பிரியன்

இந்தியா பிரியன் ..நீங்க சொன்ன செய்தியை

IPL கிரிகெட் போட்டி ஒளிபரப்பும் சமயம் விளம்பரம்

செய்தால் கொஞ்சம் தாக்கம் இருக்கும்//

பதிவை படித்த 10 அல்லது 15 பேர் மனம் மாறினாலே இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றிதானே! நாம் நினைப்பதை பகிர்ந்து விடுகிறோம். எடுப்பதும் எடுக்காததும் அவரவர் அறிவுக்கு உட்பட்டது.

அதென்ன விஷேமாக ஒரே பின்னூட்டத்தை ஏழு முறை அனுப்பியுள்ளீர்கள்.!

தொடர்ந்து பின்னூட்டம் அளித்து ஊக்கமளித்து வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

padhivu nandru
surendrn

Anonymous said...

நீங்கள் சொன்ன இவ்விடயத்தை பேஸ்புக்கிலும் பலர் பகிர்ந்திருந்தனர் ... என்னால் அனைத்தையும் இந்தியப் பொருட்களை வாங்க முடியாது .. முடிந்த அளவுக்கு இந்தியப் பொருட்களை இங்கு வாங்குகின்றோம் ..

இந்தியாவில் உள்ளோர் சுதேசி கொள்கைகளை மீண்டும் கொண்டு வருவது நாட்டுக்கு நல்லது ... !!!

UNMAIKAL said...

முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்! 1.

தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது.

முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை.

அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும்.

அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை.

ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.

இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:

அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்

கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும்.

ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன?

3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?

இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும்.

முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும்.

இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.

SOURCE: TNTJ
Continued………

UNMAIKAL said...

முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்! 2.

தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை.

இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது.

இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது.

இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.

இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது.

நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை.

மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு,

மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.

எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும்.

வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SOURCE: TNTJ

கோவி.கண்ணன் said...

:) நல்லப் பதிவு.

வெளிநாட்டு கூகுளின் சேவையைப் பயன்படுத்தி தான் இதைச் சொல்ல வேண்டி இருக்கே என்று சொல்பவர்களுக்கு உங்கள் பதில் ?

***

வெளிநாட்டுப் பணம் தவிர்த்து வேற எதுவும் வேண்டாம், வெளிநாட்டு மாப்பிள்ளைகள் உட்படன்னு கோஷம் வருமா ?

suvanappiriyan said...

சகோ இக்பால் செல்வன்!

//என்னால் அனைத்தையும் இந்தியப் பொருட்களை வாங்க முடியாது .. முடிந்த அளவுக்கு இந்தியப் பொருட்களை இங்கு வாங்குகின்றோம் ..

இந்தியாவில் உள்ளோர் சுதேசி கொள்கைகளை மீண்டும் கொண்டு வருவது நாட்டுக்கு நல்லது ... !!!//

என்னாலும் முழுமையாக சுதேசி கொள்கையை கடைபிடிக்க முடியவில்லை. நம்மால் முடிந்தவரை உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியரான பிங்கி ஓர் ஆண்; வல்லுறவு குற்றச்சாட்டில் கைது

http://tamil.dailymirror.lk/ஏனையவை/pirapalankal/42833-2012-06-14-16-30-57.html


நித்தியானந்தாவின் ஆசிரம அறையொன்றில் அடைத்து வைத்திருந்த 50 சிறுவர்கள் மீட்பு

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/42816------50---.html

- வள்ளுவன்

suvanappiriyan said...

திரு கோவிக் கண்ணன்!

//வெளிநாட்டு கூகுளின் சேவையைப் பயன்படுத்தி தான் இதைச் சொல்ல வேண்டி இருக்கே என்று சொல்பவர்களுக்கு உங்கள் பதில் ?//

நம்மிடம் ஒரு வசதி இல்லாதபோது வெளி நாட்டு உதவியைப் பெறுவதில் யாரும் குறை காண மாட்டார். நம்மிடம் அதே விலையில் அதே தரத்தில் ஒரு பொருள் கிடைக்கும் போது அந்நிய மோகத்தில் வெளி நாட்டு பொருட்களை தவிர்த்து சுதேசி பொருட்களை வாங்க முயற்சிக்கலாம் அல்லவா?

//வெளிநாட்டுப் பணம் தவிர்த்து வேற எதுவும் வேண்டாம், வெளிநாட்டு மாப்பிள்ளைகள் உட்படன்னு கோஷம் வருமா ?//

இப்படி ஒரு கோஷம் தமிழக முஸ்லிம்களிடம் தற்போது வர ஆரம்பித்துள்ளது. எனது சொந்தத்தில் ஒரு பையனுக்கு பெண் பார்க்க போன போது வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பெண்ணை தர மாட்டோம் என்று பல பெண் வீட்டார்கள் சொன்னதை பார்த்து ஆச்சரியப் பட்டேன். அப்படியே வெளி நாட்டில் இருந்தாலும் பெண்ணை உடன் அழைத்து சென்று விட வேண்டும் என்ற கண்டிஷனையும் வைக்கின்றனர்.

இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் அந்நிய நாட்டில் சென்று பணிபுரிய எவரும் விரும்ப மாட்டார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு சுரேந்திரன்!

//padhivu nandru
surendrn//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்!1-2.//

வருகைக்கும் கருத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

சிறந்த பதிவு!

//விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு,//

100 ஆண்டுக்கு முன்பு அல்ல. அதற்கு முன்பே 1400 வருடங்களுக்கு முன்பே முகமது நபி சொன்ன விருந்தோம்பலை பட்டியலிடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

”அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடியவர் தனது விருந்தினருக்குரிய கடமையைச் செய்து அவரைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி(ஸல்) கூறிய போது ”அவருக்குரிய கடமை யாது?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”ஒரு பகல் ஒரு இரவு” என்று விளக்கம் தந்துவிட்டு விருந்து (அதிகபட்சம்) மூன்று நாட்களாகும். அதன் பின்னர் அளிக்கப்படுவது தர்மமாகும் எனவும் கூறினார்கள்.
- அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்


விருந்து மூன்று நாட்களாகும். ஒருவரது உரிமை ஒரு பகல் ஒரு இரவாகும். அதன் பின்னர் செலவு செய்பவை தர்மமாகும். விருந்துக்குச் செல்பவர், விருந்தளிப்பவருக்கு சிரமமளிக்கும் அளவுக்குத் தங்குவது விரும்பத்தக்கது அல்ல.
-அபூஹுரைரா(ரலி) : திர்மிதீ


அழையாத விருந்து
நபி (ஸல்) அவர்களையும் மற்றும் நால்வரையும் ஒரு மனிதர் விருந்துக்கு அழைத்தார். அவர்களுடன் இன்னொரு மனிதரும் பின்தொடர்ந்து வந்தார். வீட்டு வாசலை நபி (ஸல்) அடைந்ததும் விருந்துக்கு அழைத்தவரிடம், “இவர் எங்களைத் தொடர்ந்து வந்துவிட்டார். நீர் விரும்பினால் இவருக்கு அனுமதியளிக்கலாம். நீர் வரும்பாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதியளிக்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

செல்லவந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகக் கெட்டதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரலி) : புகாரி)

அருணா செல்வம் said...

”என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்....”

இந்த வரிகளுக்கு ஏத்த அருமையான பதிவுங்க கவனப்பிரியன்.

suvanappiriyan said...

திரு அருணா செல்வம்!

//”என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்....”

இந்த வரிகளுக்கு ஏத்த அருமையான பதிவுங்க கவனப்பிரியன். //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

syedabthayar721 said...

நல்ல பதிவு சகோதரர் சுவனப்பிரியன். நானும் முயற்சிக்கிறேன்.

செய்யது
துபாய்

.RAHMANFAYED said...

சிந்திக்க வைத்த பதிவு இன்ஷா அல்லா இனிமேல் நான் இதை பின்பற்ற விரும்பிகிறேன்... assalam alikum brother., இந்த பதிவை எனது வலை பதிவில் போட விருப்பம்

suvanappiriyan said...

salam bro faed rahman!

//சிந்திக்க வைத்த பதிவு இன்ஷா அல்லா இனிமேல் நான் இதை பின்பற்ற விரும்பிகிறேன்... assalam alikum brother., இந்த பதிவை எனது வலை பதிவில் போட விருப்பம் //

தாராளமாக போட்டுக் கொள்ளுங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!