Followers

Thursday, April 30, 2020

ஸபூரா ஜர்கர் - வயது 27

ஸபூரா ஜர்கர் - வயது 27
இரண்டு மாத கர்ப்பிணி. சிஏஏ போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ஜாமிஆ மில்லியா மாணவியான இவரை டெல்லி காவல் துறை கைது செய்துள்ளது. பல குற்ற வழக்குகளை ஜோடித்து இவரை சிறையில் தள்ளியுள்ளது. தனது கணவரிடமும் பேச அனுமதிக்கவில்லை.
கொரோனா தொற்று ஏழை மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக தனது தோழிகளோடு சேர்ந்து சமூக சேவை ஆற்றி வந்தவர் இவர். தற்போது இவருக்கு பல மன உளைச்சல்களை டெல்லி காவல் தறை கொடுத்து வருகிறது. போர்க் காலங்களில் கூட கர்ப்பிணிகளை கைது செய்வது உலக மரபல்ல. ஆனால் பாசிச மோடி அரசு இதைப் பற்றி எல்லாமா கவலைப்பட போகிறது.
இந்த கொடூர பாசிச ஆட்சியாளர்களை இறைவன் அழித்தொழிப்பானாக!இஸ்லாமியர்களை இழிவு படுத்த ஓடோடி வந்த ஊடகம் இன்று ஊமையானது ஏன்?

Vishvamithiran Athiyan
இஸ்லாமியர்களை இழிவு படுத்த ஓடோடி வந்த ஊடகம் இன்று ஊமையானது ஏன்?
இன்று மதுரை மாநகர் முழுவதும் சீல் வைத்து முடக்கப்பட்டுள்ளது அது ஏன்?
மதுரை போலீஸ் ஸ்டேஷன் மூடி இருக்கிறார்கள் அது ஏன்?
நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று திரண்டுக் கொண்டுள்ளார்கள் அது ஏன்?
மீனாட்சி அம்மன் கருவறைக்குள் சென்று துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கிறார்கள்
அது ஏன்?
இவ்வளவும் வெளிநாடு போய் வந்த தனக்கு கொரோனா இருப்பதை மறைத்த அந்த கோவில் பட்டரால். அதை பற்றி முதன் முதலில் செய்தி வெளிட்ட நியூஸ் 18, தன் பக்கத்தில் இருந்து அந்த செய்தியை நீக்கி உள்ளது.
ஏன் இதைப்பற்றி யாரும் பேச கூடாது என்று எங்கிருந்து அழுத்தம் வந்தது?
அப்படியே ஒரு மாதம் பின்னோக்கி போய் பாருங்கள். தப்லிக் ஜமாத்தை வைத்து திரும்பின பக்கமெல்லாம் மீடியாக்களும் சமூக வலைதளங்களும் எப்படி ஊளையிட்டார்கள்.
செய்திகளை வெளியிடுவதில் என்ன மதம் வேண்டி கிடக்கிறது ஹைகோர்ட்டுகளா?
போகுமிடமெல்லாம் முஸ்லீம்கள் எப்படி அவருவருப்புடன் பார்க்கப்பட்டார்கள்?
இப்போது எங்கே போனது அந்த ஊளைகள்?
"இங்கே இஸ்லாமியர்கள் என்ன உங்கள் அரிப்புக்கு நேர்ந்து விட்டவர்களா? தேவைப்படும் போது எடுத்து சொறிந்து கொள்ள?"
எல்லாவற்றையும் அவரவர் நம்பும் கடவுள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.
நியாயம் இல்லாத இடத்தில் நீ ஒன்று நினைக்க வேறோன்று தான் நடக்கும்.
மனிதனை மீறிய செயல் ஒன்று உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

என்னமோ நடக்குது.... மர்மமா இருக்குது... :-(


குஜராத் அகமதாபாத்தில் 75 வயதான மந்தாகினி

குஜராத் அகமதாபாத்தில் 75 வயதான மந்தாகினி என்ற பெண் இறந்து விட்டார். அவருக்கு உறவினர்கள் யாருமே இல்லாத நிலையில் முஸ்லிம்கள் அவரது உடலுக்கு இறுதி சடங்கை மேற்கொண்டனர்..!
ஹகீம் யாஸிர், ஆரிஃப் ஷேக் என்ற தன்னார்வலர்கள் தலைமையில் இறந்த அந்த பெண்ணுக்கு உரிய மரியாதையை செய்து இந்து முறைப்படி அடக்கம் பண்ண உதவினர்.
முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடவும், கொலைகள் செய்யவும் 'இந்துக்களே வாருங்கள்' என்று கூப்பாடு போடும் இந்துத்வ வெறியர்கள் தற்போது எங்கே?
அவர்கள் வர மாட்டார்கள். நல்லது செய்ய ஆர்எஸ்எஸ் அவர்களை பழக்கவில்லை.
குறள்: 314
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்
தமக்குத் தீங்கு செய்தாரைத் தண்டிக்கும் முறையாவது தீமை செய்தவர் வெட்கப்படும் அளவுக்கு நன்மையைச் செய்வதுடன் அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும்.


தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து..

தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து..

கொங்கு முதலாளிகளுக்கு கடன் மூட்டை, குஜராத்தி மார்வாடிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி.

”...வாருங்கள் தமிழகத்து இந்துக்களே!!
மார்வாடிகளை வாழவைப்போம், முஸ்லீம் தமிழர்களை விரட்டுவோம், பிற தமிழன்  தலையிலே மிளகாய் அரைப்போம்..பாரத் மாதாக்கீ ஜே!!!” என பாஜக-இந்துத்துவ அமைப்புகள் அழைக்கின்றன. நீங்கள் தயாரா..

வட இந்தியா மார்வாடி-பனியா முதலாளிகளுக்கு ரூ68,000 கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன வங்கிகள். இன்று வெளியான அர்.டி.ஐ செய்தி அம்பலப்படுத்துகிறது. கடந்த வாரம் கோவையின் கொடீசியா எனும் சிறு-குறு தொழில் வர்த்தகக் கழகம் இந்தியா முழுவதுமுள்ள  சிறு-குறு தொழில்களுக்கான கடனில்/ வரியில்/வட்டியில் சலுகை கேட்டிருந்தனர். நடுத்தர குடும்பத்தினர் ஈ.எம்.ஐ/ வங்கிக்கடன்/கல்விக்கடன்/வீட்டுக்கடன் கட்ட கால அவகாசம் கேட்டிருந்தனர். ஏழைகள் தமது தொழில்களுக்கான உதவியை கேட்டிருந்தனர். ஆனால் இதுவரை பாஜக இந்துத்துவ மோடி அரசு இதற்கு பதில் சொல்லவில்லை.  ஆனால் சத்தமில்லாமல் மார்வாடி-பனியா குஜராத்தி முதலாளிகளுக்கு கடனை தள்ளுபடியே செய்திருக்கின்றன என ரிசர்வ் வங்கியின் ஆர்.டி.ஐ செய்தி சொல்லுகிறது.

‘இந்துக்களே ஒன்று திரள்’ என கொம்பு சீவும் கொங்குப் பகுதி பாஜக/ஆர்.எஸ்.எஸ்/இந்துமுன்னனிக்கு பணமும், பொருளும் கொடுத்து உதவும் தமிழகத்தின் முதலாளிகள் என்ன செய்யப்போகிறார்கள்? ஜி.எஸ்.டி கட்டி, வருமான வரி கட்டி, கடன் கட்டி, கடனுக்கான வட்டிகட்டி தொழில் நசிவடைந்து இருந்தாலும், ‘நான் இந்து’ என நெஞ்சு நிமிர்த்தி நின்று இனிமேலும் நட்டப்படப் போகிறார்களா? அல்லது புத்திசாலித்தனமாக தமிழர் அரசியலில் இணைந்து உரிமையை மீட்கப் போகிறார்களா?

உங்களைக் காப்பாற்ற பொன்னாரோ, சிபி.ராதாகிருஸ்னனோ, வானதி மேடமோ, குருமூர்த்தி/சேகர்/நாராயணன் வகையறாக்கள் வரப்போகிறார்களா? வாய்ப்பே இல்லை நண்பர்களே. இதை அம்பலமாக்கி எதிர்த்து மே17 இயக்கமும், பெரியாரிய-தமிழ்த்தேசிய இயக்கங்களும் பேசி வருகின்றன. 

ரிசர்வ் வங்கியின் தகவல்உயர் அதிகாரி அபெய்குமார் இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். இதில் 68,607 கோடி ரூபாயை செப்டம்பர் 2019லேயே தள்ளுபடி செய்துவிட்டதான தகவல் வெளியிட்டிருக்கிறார். இது பற்றி 2020இல் பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் கேட்டதற்கு நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல மறுத்திருக்கிறார். இதை ஒரு ஆர்.டி.ஐ மூலம் விசரித்ததில் உண்மை அம்பலமாகி இருக்கிறது. விவரத்தை பார்ப்போமே.

பல ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றிய முகுல் சோக்சியின் (தற்போது இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாட்டில் இருக்கிறார்) கீதாஞ்சலி நிறுவனத்திற்கு 5, 492 கோடியும், 

அவரது பிற நிறுவனமான கிலி, நட்சத்திராவிற்கு ரூ1109 கோடி, 

சந்தீப் ஜுன்ஜிுன்வாலா, சஞ்சய்  ஜுன்ஜிுன்வாலாவின் ரேய் அக்ரோவிற்கு ரூ4314 கோடி(இவர்கள் தேடப்படும் குற்றவாளிகள்),

ஜத்தின் மேத்தாவிற்கு 4,076 கோடி ரூபாய் (இவர் சிபிஐயால் விசாரிக்கப்படுகிறவர்),

ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் கோத்தாரி குடும்பத்திற்கு 2850 கோடி ரூபாய்,

பாபா ராம் தேவ், பால்கிருஸ்சனின் ருச்சி சோயாவிற்கு 2212 கோடி ரூபாய்,

குவாலியரின் ஜீம் டெவலப்பர்ஸ்  2012 கோடி ரூபாய்,

அகமதாபாத்தின் ஹரிஷ் மேத்தாவின் வைர வியாபார நிறுவனத்திற்கான 1962 கோடி ரூபாய்

இதுமட்டுமல்லாமல் விஜய் மல்லாயாவிற்கு 1943 கோடி ரூபாய்

என பட்டியல் நீளமானது. இதில் அதிகமாக வைர வியாபாரிகள். பெரும்பாலோனொர் தேடப்படும் குற்றவாளிகள்

தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகள், பாஜக, ஆர்,எஸ்.எஸ். இந்து முன்னனிக்கு ஆதரவளிக்கும் தமிழர்களே என்ன செய்யப் போவதாக திட்டம் வைத்திருக்கிறீர்கள்?.

சிந்திக்காவிடில் தமிழர்களாகிய  நாம் சிதைக்கப்படுவோம். விழித்தெழுவீர்களா!


(இந்தத் தகவலை  சிறு-குறு தொழிலில் ஈடுபட்டிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், பிற மக்களுக்கும் பகிர்ந்து/அனுப்பி இந்துத்துவ அரசியலை அம்பலப்படுத்த உதவுங்கள்)

கூட்டுக் களவாணிகள்.....


எதற்காக அழுகிறாய் டிரம்பே ! ? .

எதற்காக அழுகிறாய் டிரம்பே ! ? .
அமெரிக்க சரித்திர வரலாற்றிலேயே முதல் முறையாக , டிரம்ப் அறிவிக்கிறார் . அமெரிக்காவின் 50 மாநிலங்கள் அனைத்தும் கொரோனாவால் கடுமையாக பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்திருக்கிறார் . 24 மணிநேரத்திற்குள் 5 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள் . அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார பேரழிவு ஏற்பட்டிருக்கிறது .
பாலஸ்தீன் சிறுவனின் கேள்வி...
" டிரம்பே ! உன்னை நிலை குலையவைத்தது எது ! ? எதற்காக அழுகிறாய் ? இந்த உலகிலேயே மிகப்பெரிய பலசாலி அல்லவா நீ ? கடுமையான பலம்வாய்ந்த அமெரிக்காவின் அனைத்து இராணுவ படைகளையும் நீங்கள் ஆட்டிப்படைக்கக் கூடிய சக்தி வாய்ந்தவரல்லவா ! ?
மக்களை பசியாலும் , பட்டினியாலும் நிர்மூலமாக்கி , கொன்று குவித்து கும்மாளமிட்டு மகிழ்ந்தாயே ! யாருடைய கண்ணாலும் பார்க்கமுடியாத கொரோணாவுக்காகவா அழுகிறாய் ! ?
இதற்கு முன் உனது இதயம் இளகியதே இல்லையா ! ?
உனது கையால் எத்தனையோ குழந்தைகள் கொல்லப்பட்டு , பசியுடன் எரிக்கப்பட்டு , மூழ்கடிக்கப்பட்டு அனாதையாக்கப்பட்டார்களே அப்போது அழுதாயா ? .
பாலஸ்தீன பூமியிலே கேவலமான கொடூரமான அநியாயமான முறையில் அரங்கேற்றினாயே ! அதை நீ கண்டும் காணவில்லைதானே ! ? .
டிரம்பே நீ அழு . அழு டிரம்பே ! ஒரே ஒரு முறையாவது உணர்ந்து பார் ! அனைத்தையும் அடக்கி ஆளக்கூடியவனை ! . கண்ணியமான ஏக இறைவனுக்கு முன்னால் பலவீனத்திலும் , இயலாமையிலும் அவனுக்கு முன்னால் நின்று நினைத்துப்பார் . எங்களுக்கும் உனக்கும் உரிய இந்த படிப்பினையை நினைத்துப் பார். .
அந்த அல்லாஹ் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் . . அந்த அல்லாஹ் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்"


நன்றிகள் சகோதரி.....

நன்றிகள் சகோதரி.....

உங்களைப் போன்ற நடுநிலையாளர்கள் அதிகம் இந்து மதத்தில் உள்ளவரை பாசிசவாதிகளின் எண்ணம் நிறைவேறாது. இந்தியாவும் தனது பெருமையை வருங்காலத்திலாவது பறை சாற்றும்.


Wednesday, April 29, 2020

மக்களின் துயர் துடைப்பதற்காகக் களம் இறங்கிவிட்டது

நான்கே நான்கு மணி நேர அவகாசத்தில் நாற்பது நாள் லாக் டவுனை அரசு அறிவித்த நிமிடத்திலேயே மக்களின் துயர் துடைப்பதற்காகக் களம் இறங்கிவிட்டது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்.
நாடு முழுவதும் ஜமாஅத்தின் ஊழியர்கள் ஒரு பக்கம் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்களை வழங்கினார்கள். மறுபக்கம் வீடின்றி, வருமானத்துக்கு வழியின்றி, வேலையின்றி நடுத்தெருவில் நின்ற பாட்டாளிகளை தேடித் தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து பசி ஆற்றினார்கள்.
முகக் கவசம் கூட இல்லாமல் நாட்டுக்காக உழைத்து வந்த துப்புரவுப் பணியாளர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு முகக் கவசங்களைக் கொடுத்தார்கள்.

இவ்வாறாக சின்னச் சின்ன உதவிகளாய்த் தொடங்கிய இந்த துயர் துடைப்புப் பணி இன்று பஞ்சாப் முதல் தமிழகம் வரை, குஜராத் முதல் அஸ்ஸாம் வரை நாடெங்கும் முழு வீரியத்துடன் நடந்து வருகின்றது.
இது வரை மூன்று இலட்சத்துக்கும் அதிகமான (3,02,705) மளிகைப் பெட்டகங்கள் தரப்பட்டிருக்கின்றன. 18,785 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
6,604 பேருக்கு சானிட்டைசர்கள் தரப்பட்டுள்ளன. சற்றொப்ப மூன்று இலட்சம் பேருக்கு (2,99,439) உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 51,286 பேருக்கு முகக் கவசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
16,840 பேருக்கு வேறு வகையான உதவிகள் தரப்பட்டுள்ளன.
இவ்வாறாக ஏப்ரல் 20 வரை 23 கோடி ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பணிகள் சிறக்கவும், நலிவுற்ற, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட, ஆதரவற்ற மக்களின் துயர் நீங்கவும் அல்லாஹ் அருள் செய்வானாக.
எந்த விதமான பிரதிபலனும் எதிர்பாராமல் உயிரைப் பணயம் வைத்து அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்ற ஜமாஅத் ஊழியர்களின் சேவைகளை கருணை மிக்க இறைவன் ஏற்றுக் கொள்வானாக!
இந்த அறப்பணிகளில் பங்கேற்க விரும்புகின்ற நல்லுள்ளங்கள் இணைப்பில் இருக்கின்ற விவரங்களைக் கவனத்தில் கொள்ளவும்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே...!


Tuesday, April 28, 2020

கொரோனா பாதிப்பு இந்தியாவுக்கு சாதகமாகுமா?கொரோனா பாதிப்பு இந்தியாவுக்கு சாதகமாகுமா?
கொரோனா பாதிப்பால் சீனாவிலிருந்து 56 பெரு நிறுவனங்கள் அந்நாட்டை கை கழுவி மற்ற நாடுகளில் கடை விரித்துள்ளன. நமது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சீனாவிலிருந்து புலம் பெயரும் கம்பெனிகள் இந்தியாவை தேர்ந்தெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் வெளியேறிய நிறுவனங்களில் 3 மட்டுமே இந்தியாவை நோக்கி வந்தன. 26 நிறுவனங்கள் வியட்நாமை நோக்கி சென்று விட்டன. 11 பன்னாட்டு நிறுவனங்கள் தாய்வானில் கடை விரித்துள்ளது. மற்றும் உள்ள 8 கம்பெனிகள் தாய்லாந்தை நோக்கி ஓடுகின்றன.
ஏன் நமது இந்தியாவை தேர்ந்தெடுக்கவில்லை? உழைக்கும் மக்கள் மிக சொற்ப தொகைக்கு கிடைக்கும் இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்கள் கை கழுவ காரணம் என்ன?
அழகிய இந்தியாவை இன்று மோடியும் அமித்ஷாவும் சின்னாபின்னப்படுத்தி விட்டார்கள். மாட்டுக் கறி விவகாரத்தில் எத்தனை கொலைகள்? முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் அமித்ஷாவின் அடியாட்களால் துவம்சம் செய்யப்பட்டதை சமீபத்தில் டெல்லியில் கண்டோம். அனைத்து தூதரகங்களும் டெல்லியில்தான் உள்ளன. அனைத்து தூதர்களும் தங்கள் நாட்டுக்கு தற்போதய இந்திய நிலையை பட்டியலிட்டுக் கொடுத்திருப்பார்கள். பல கோடிகளை கொட்டி தொழில் தொடங்குபவன் நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பான். ராமர் கோவில், பொது சிவில் சட்டம், குடியுரிமை பறிப்பு என்று தினமும் மற்றவர் குடிகளை கெடுத்து அதில் இன்பமடையும் அமித்ஷா போன்ற உள்துறை மந்திரிகளை கொண்ட ஒரு நாட்டில் முதலீடு செய்ய அவன் என்ன கிருக்கனா? எவனும் இனி வரப் போவதில்லை. மொத்த தங்கத்தையும் விற்று தீர்த்தாகி விட்டது. இனி வெளிநாடுகள் கடன் தரப் போவதில்லை. கொரோனா வேறு இன்னும் ஆறு மாதத்துக்கு இந்தியாவை நிமிர விடாது. பசி, பட்டினி என்று காலம் தள்ளப் போகும் ஒரு நாட்டை எந்த முதலாளியும் தேர்ந்தெடுக்க மாட்டான். மோடியும் அமித்ஷாவும் அதிகாரத்தில் இருக்கும் காலமெல்லாம் இந்தியாவுக்கு எந்த விமோசமும் இல்லை. வருங்கால இந்தியா மிக பயங்கரமானதாக நமக்கு இருக்கப் போவதென்னவோ உண்மைதான்.
ஆனால் இறைவன் நினைத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். அந்த நம்பிக்கையில்தான் நமது வாழ்வும் ஓடுகிறது.
ஆக்கம்
சுவனப்பிரியன்


இந்தியாவில் கொரோனா அதி வேகமாக பரவுவதற்கான உண்மையான காரணம்

இந்தியாவில் கொரோனா அதி வேகமாக பரவுவதற்கான உண்மையான காரணம் எதுவென்று இப்போது புரிகிறதா?


தினம் ஓர் இறை வசனம் பொருளுடன் விளங்கிக் கொள்வோம்

தினம் ஓர் இறை வசனம் பொருளுடன் விளங்கிக் கொள்வோம்

- தமிழ் மொழியாகத்துடன் வீடியோ வடிவில் .

அத்தஹ்ர் - காலம் (76)

வசனம் 01 முதல் 31 வரை

மொத்த வசனங்கள் : 31


பிளாஸ்மா சிகிச்சைக்கு தானம் பெற....

பிளாஸ்மா சிகிச்சைக்கு தானம் பெற எல்லோரையும் உட்படுத்த முடியாது. அவர்கள் உடல் 30 நாட்களுக்கு மேல் கொரானா கிருமியை உடலில் தாங்கி அதை அந்த உடல் அழித்து இருக்க வேண்டும். அதோடு அவர் குடி பழக்கம் புகை பழக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பிளாஸ்மா தானம் செய்ய முடியும்.
அப்படி எடுக்கப்பட்ட பிளாஸ்மாவை கொரானாவால் பாதிப்படைந்து சிக்கலான நிலையில், உயிருக்கு ஆபத்தாக இருக்கும் ஒரு நோயாளிக்கு செலுத்தினால் அவர் ஒரு மூன்று நாளைக்குள் குணமடைந்து விடுவார். அவரை அபாய கட்டத்திற்கு போகாமல் தடுத்தும் விட முடியும். இது கோரானாவை விரைவாக நம் நாட்டை விட்டு அழிக்க ஏதுவாகும்!
தப்லீக்காரர்களில் 100% பேருக்கு மது பழக்கம் இராது. புகை பழக்கம் 99% பேருக்கு இருக்காது. அவர்கள் உடலும் ஒத்துழைக்கும். இதற்கு எப்படி பார்த்தாலும் தப்லீக் ஜாமாத்தினர் உடன்படுவார்கள்! இன்று அவர்களில் டெல்லியில் 300 பேர் முன் வந்து பதிவு செய்தும் இருக்கிறார்கள். நால்வருக்கு சிகிச்சையும் அங்கே செய்யப்பட்டு விட்டது!
டெல்லியை கேரளா தமிழ் நாடு மகாராஷ்டிரா என்று நிறைய மாநிலங்கள் இந்த சிகிச்சையை துவங்க இருக்கின்றன! ஒரு கூட்டத்தை அவர்கள் அறியாமல் செய்து அதனால் ஏற்பட்ட பிரச்சினையை வாய்க்கு வந்த படி எல்லாம் பேசிய அனைவருக்கும் இதில் நிறைய பதில்கள் இருக்கிறது. அதை காலம் போக போக புரிய வைக்கும்! தமிழ் நாட்டிலும் பலர் தயார்!
ஒரு மனிதரை கொலை செய்பவர் முழு மனித சமூகத்தையும் கொலை செய்ததை போலாவார். அதே போல ஒரு சமூகத்தை பாதுகாத்தவர் மொத்த மனித சமூகத்தையும் பாதுகாத்ததை போலாவார். நம் கண்ணியமும் உயர்வும் இறைவன் தருவது. பிறருக்கு அநியாயம் செய்யாமல் அவனுக்காக வாழ்வோருக்கு உயர்வும் கண்ணியமும் நிச்சயமாக கிடைக்கும்!
SPREADING LOVE WILL DESTROY THE HATE.


💚

Monday, April 27, 2020

மாணவர்களின் சிந்திக்கத் தூண்டும் கலந்துரையாடல்.

கரோனாவை விட மனிதன் பயப்பட  வேண்டியது எதற்கு?

மாணவர்களின் சிந்திக்கத் தூண்டும் கலந்துரையாடல்.


கண் பார்வை இழந்த சகோதரர் குர்ஆன் ஓதும் அழகு.

கண் பார்வை இழந்த சகோதரர் குர்ஆன் ஓதும் அழகு.

இவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் என்பது மேலும் சிறப்பு!


கொரோனா தொற்றால் இறந்த மருத்துவருக்கு மரியாதை!

கொரோனா தொற்றால் இறந்த மருத்துவருக்கு மரியாதை!
பிரிட்டனில் சமீபத்தில் கரோனா தொற்றால் காலமான டாக்டர் சாதிக் அல்ஹவுஷின் உடல் அவர் பணி செய்த NHS அறக்கட்டளையின் விஸ்டன் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அளிக்கப்பட்ட மரியாதை....
அவருடன் பணியாற்றும் டாக்டர் ரவிந்திரா குடேனா என்ற இந்திய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சில மணி நேரத்தில் ஒரு கோடிக்கு நிகரான நிதி திரட்டி இறந்தவர் குடும்பத்திற்களித்தார். சாதிக் குடும்பத்தின் பராமரிப்பிற்கான பொறுப்பும் ஏற்றுள்ளார்.


புனேயில் உள்ள பள்ளிவாசல் கொரோனா வார்டாக மாற்றம்!

புனேயில் உள்ள பள்ளிவாசல் கொரோனா வார்டாக மாற்றம்!
தாங்களாகவே முன் வந்து தங்களின் பள்ளியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள முன் வந்த முஸ்லிம்கள்.
இங்கு அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானவர்கள் இந்து மக்களாகவே இருப்பர்.
இந்த தாராள மனம் கொண்ட இஸ்லாமியர்களைத்தான் சங்கிகள் 'தேசத் துரோகிகள்' என்கிறார்கள்.நம் நாட்டிலும் காண மனம் ஏங்குகிறது.

சமத்துவ இஸ்லாம்
துப்புரவு தொழிலாளர்களுடன் சாலையோரத்தில் அமர்ந்து நோன்பு திறக்கும் சவூதி அரேபிய காவல்துறை உயரதிகாரிகள். இந்நிகழ்வுகளை சவுதி எங்கும் சர்வ சாதாரணமாக காணலாம்.
இது போன்ற சமத்துவ நிலையை நம் நாட்டிலும் காண மனம் ஏங்குகிறது.


கனடா நாட்டு பிரதமரின் செய்தி!கனடா நாட்டு பிரதமரின் செய்தி!
'அஸ்ஸலாமு அலைக்கும்! அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்! உலக முஸ்லிம்களுக்கு புனித மாதமான ரமலான் வந்து விட்டது. இந்த வருடம் சற்று சிரமத்துடனேயே இந்த புனித மாதத்தை வரவேற்கிறோம். கனடிய முஸ்லிம்கள் கனடாவின் முன்னேற்றத்தில் அளப்பரிய பங்கெடுக்கின்றனர். இந்த ரமலானில் அதிகம் வெளியில் சுற்றித் திரிந்து நோயை வரவழைத்துக் கொள்ளாமல் தொழுகை நோன்பு திறப்பு போன்ற காரியங்களை உங்கள் வீடுகளிலேயே முடித்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை சாதனங்கள் வாங்க மார்க்கெட்டுக்கு வாருங்கள். வீட்டில் இருந்தாலும் இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் ரமலான் வாழத்துக்கள்.'
சகலருக்கும் பொதுவான ஒரு பிரதமர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்கிறார் கனடிய பிரதமர். நம் நாட்டிலும் ரத்த கறை படிந்த ஒரு பிரதமர் அமர்ந்துள்ளார். இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். 


மன்கிபாத் மூலம் வாயாலேயே வடை சுடும்

மன்கிபாத் மூலம் வாயாலேயே வடை சுடும் நமது அரசியல்வாதிகள் கவனிப்பார்களாக!
குவைத் உள்துறை அமைச்சர் அனஸ் அல் சாலே அவர்கள் நேற்று மாலை (26/04/2020) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவல்துறை அதிகாரிகளுடன் இஃப்தார் நோன்பு திறந்தார் எனவும்,
பின்னர் அங்கு இருந்த காவல்துறை அதிகாரிகளுடன் குவைத் உள்துறை அமைச்சர் மஹ்ரிப் தொழுகை மேற்க்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ....
இந்த நிகழ்வு 4th Ring சாலை பகுதியில் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...தமிழ்நாட்டின் மொத்த கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை

தமிழ்நாட்டின் மொத்த கொரானா நோயாளிகளின் எண்ணிக்கையை விட குஜராத்தின் அகமதாபாத் நகரத்தின் நோயாளிகளின் எண்ணிக்கை சரிபாதி அதிகம். கொரானா நோயின் தலைமை பீடமாக அகமதாபாத்தும், சூரத்தும் திகழ்கிறது. ஆனால் எந்த வெகுசன ஊடகங்களிலும் இதைப்பற்றி விவாதம் நடைபெறவில்லை.
இம்மாத இறுதிக்குள் அகமதாபாத் நகரில் மட்டும் 9 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுவர் என்பது மாநகராட்சியின் கணிப்பு. இதெல்லாம் ஆங்கில பத்திரிக்கைகளில் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த சங்கிப் பத்திரிக்கைகள் இதைப்பற்றி வாயே திறக்காது,
குஜராத்தில் கொரோனாவைப் பரப்பிய சிங்கிள் சோர்ஸ் ஒன்றே ஒன்றுதான். அது ட்ரம்ப் நிகழ்ச்சி. ட்ரம்ப் நிகழ்ச்சிக்கு சில்லறையை சிதறவிட்ட பார்ப்பன பனியா கூட்டத்தின் சுவர்க்கபூமி அகமதாபாத்தும், சூரத்தும். இன்று இவ்விரண்டு நகரங்களே இந்தியாவின் ரெட்ஸ்பாட், அகமதாபாத் நகரம் மட்டும் அரசு ஆவணப்படி 2000ஐ தாண்டி விட்டது. சூரத் 500ஐ தாண்டிச் சென்றுகொண்டு இருக்கிறது,
குஜராத்தில் தான் பரிசோதனை விகிதாச்சாரம் மிக குறைவு, இறப்பு விகிதங்களும் மிக அதிகம். இதுவரை 33,316 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் இதில் பாசிடிவ் ஆனது 3,100ஐ தொட்டு விட்டது (கிட்டத்தட்ட 10%) ,இறப்பு 136ஐ தாண்டிவிட்டது,
குஜராத் மாநிலத்தின் அனைத்து விகிதாச்சாரங்களும் இத்தாலியை பிரதிபலிப்பது போலவே சென்று கொண்டிருக்குறது. இன்று மட்டும் 256 பேருக்கு பாசிடிவ் ஆகலாம் மற்றும் ஆறு பேர் மரணிக்கலாம் என அரசின் ஆன்லைன் பக்கமே சொல்கிறது,
கோயம்புத்தூரில் ஜக்கி நிகழ்ச்சிக்கு சென்றுவந்த குஜராத்திய மார்வாடிகள் இங்கிருந்து கொண்டே பல நாட்கள் நோயை மறைத்து ஊர் சுற்றினர் இறுதியில் ஒருவரின் மரணத்தில்தான் உண்மை வெளிவந்தது. அகமதாபாத் சூரத் போன்ற நகரங்கள் பார்பபன பனியாக்களின் அதிகாரம் உச்சத்தில் இருக்கக்கூடிய இடங்கள். அங்கு வேலை செய்யும் மக்கள் ஊழியர்களுக்கு இவர்கள் எந்தளவு கட்டுப்பாடுவார்கள் என்பதனை நான் சொல்லத்தேவையில்லை. ஒருமுறை அங்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும் ,
கொங்குத் தமிழர்கள் எதற்கும் பிழைக்க வந்த குஜராத்திய பனியா கூட்டங்களை விட்டும் சற்று தூரமாக இருப்பது நலம், நோய்க்கு மதமும் தெரியாது, பணமும் தெரியாது. வந்துவிட்டால் வைத்தியம் பார்த்துத்தான் ஆக வேண்டும்,
இஸ்லாமிய மாநாட்டிலும் வரும், ஜக்கி நிகழ்ச்சியிலும் வரும், அரசியல் நிகழ்வான மோடி கூட்டத்திலும் வரும். தொற்று நோய்க்கு மதம் கற்பித்த முட்டாள்களின் கூடாரத்தில் இன்னும் என்னவெல்லாம் பார்த்துத் தொலைக்க வேண்டுமோ?
முதலில் உங்க குஜராத் முதலாளிகளுக்கு என்ன ஏதுன்னு பாருங்க சங்கிகளா, தமிழ்நாட்டை நாங்க பாத்துக்கறோம்.
- Senthil Prakash Selvaraj

குண்டூர் டவுன் பகுதியில் கொரோனா

குண்டூர் டவுன் பகுதியில் கொரோனா தடுப்புப் பணியில் கரீமுல்லா என்ற காவல்துறையைச் சேர்ந்த அன்பர் ஈடுபட்டிருந்தார். தொழுகைக்கான நேரம் வரவே தொழுகை விரிப்பை விரித்து தொழ ஆரம்பித்து விட்டார்.
இது போன்ற நிகழ்வுகளை சவுதியில் பலமுறை பார்த்துள்ளேன். தற்போது இந்திய நகரங்களிலும் இது போன்ற நிகழ்வுகளை காண முடிகிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!


Monday, April 06, 2020

ஜெர்மனியில் பெர்லின் பள்ளி வாசலில்

ஜெர்மனியில் பெர்லின் பள்ளி வாசலில் முதன் முதலாக பாங்கோசை வெளியில் பலரும் கேட்கும்படி சொல்லப்பட்டது. இந்நிகழ்வைக் கண்ட பல முஸ்லிம்கள் தங்களின் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

பலர் தங்களின் கை பேசியில் இதனை பதிவு செய்து கொண்டனர்.

கொரோனா தாக்கத்துக்குப் பிறகு பல ஐரோப்பிய நாடுகளில் "அதான்" (பாங்கொலி) பகிரங்கமாக சொல்லப்படுகிறது. இது வரவேற்கத்தக்க நிகழ்வு.

அல்லாஹ் அக்பர்.


ஒரு நீக்ரோ இறை வேதத்தை ஓதும் அழகு!

ஒரு நீக்ரோ இறை வேதத்தை ஓதும் அழகு!
இறை வேதமான குர்ஆனை அதன் அரத்தத்தை உணர்ந்து ஓதும் ஒரு இஸ்லாமியர். எவ்வளவு பிரியத்துடனும் ஆத்மார்த்த சிந்தனையுடனும் இறை வேதத்தை இவர் ஓதுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். நீக்ரோக்களை மனிதனாகவே வெள்ளையினத்தவர் மதிக்காமல் ஒதுக்கி வைத்தபோதுதான் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவினர். இன்று வரை தழுவி வருகின்றனர்.
நமது நாட்டில் இவ்வாறு ஒரு கருப்பினத்தவர் வேதத்தை ஓதினால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்கள். அதனை நடைமுறையும்படுத்தினார்கள்.
இதனால்தான் வெறுப்புற்று இந்தியாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தனர். சமணர்கள், பவுத்தர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தற்கான காரணம் வர்ணாசிரம வெறிக்கு பயந்துதான். தங்கள் மதத்தில் உள்ள குறைகளை களையாமல் மோடியும் அமித்ஷாவும் என்னதான் குட்டிக் கரணம் போட்டாலும் 'கர் வாபஷி' நடைபெறப் போவதில்லை. முஸ்லிம்களும் தங்கள் வழிபாட்டு உரிமைகளை விட்டுத் தரப் போவதில்லை.
இனி வருங்காலம் இந்திய முஸ்லிம்களுக்கு மிக சோதனையான காலமாக இருக்கலாம். இறைவன் அதில் ஒரு சில நன்மைகளையும் வைத்திருக்கலாம். பிர்அவுன், நம்ரூத், அபூலஹப் போன்ற கொடுங்கோலர்களையே பார்த்த சமூகம் இஸ்லாமிய சமூகம். எனவே இஸ்லாமியர் தங்களின் மார்க்கத்தை என்றுமே விட்டுத் தர மாட்டார்கள் என்பதை சங்கிகள் நினைவில் வைத்திருக்கட்டும். ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் ஒரு சில சிறு வெற்றிகள் சங்கிகளுக்கு கிடைக்கலாம். ஆனால் இவர்கள் என்றுமே முஸ்லிம்களை முழுதாக வெற்றி காண முடியாது. இதனை வருங்கால இந்தியா நமக்கு உணர்த்தும்.
ஆக்கம்
சுவனப்பிரியன்


ஏன் தப்லீக் ஜமாத் டெல்லி கூட்டம் தலைப்புச் செய்தியானது?

ஏன் தப்லீக் ஜமாத் டெல்லி கூட்டம் தலைப்புச் செய்தியானது
நியாயவான்கள் அனைவரும் நீண்ட கட்டுரை என்று தவிர்த்துவிடாமல் திறந்த மனதோடு வாசித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்..
தப்லீக் மீது சங்பரிவார்களுக்கு ஆத்திரம் ஏன்?
வரலாற்றுப் பார்வையுடன் உண்மைகள்...
மூன்றாம் உலக மகாயுத்தமாக கருதப்படும் கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சிக்க நம் இந்தியத் திருநாட்டில் மட்டும் அரசின் மெத்தனத்தால் ஏற்பட்ட இழப்புகளை மறைக்க சங்பரிவாரங்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கொரோனாவை இஸ்லாம் ஆக்கி பழியை முஸ்லிம்கள் மீது திணித்து வருகின்றனர்.
அதற்கு இரையாக்கப்பட்டது தான் தப்லீக் ஜமாத்.
"மத தீவிரவாதத்தின் நாற்றங்கால் ஆகவும், உலகின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு தொடர்புடையதாகவும் தப்லீக் ஜமாத் செயல்பட்டு வந்திருக்கிறது" என தினமணி நாளிதழில் அதன் ஆசிரியர் கே. வைத்தியநாதன் எழுதும் அளவுக்கும், காட்சி ஊடகங்களில் வன்மத்தை வளர்த்து விடும் வகையிலும் விமர்சனங்கள் ஊடக தர்மத்தின் 'எல்லை தாண்டிய பயங்கரவாதமாக' போய்க் கொண்டிருக்கிறது என்றால், மத்திய மாநில அரசுகளும் இதை ஒத்து ஊதி பரப்புரை செய்வது வேதனைக்குரியது.
சங்கப்பரிவார்களுக்கு தப்லீக் மீது ஏன் இவ்வளவு ஆத்திரம்?
இந்திய அரசியல் வரலாற்றை நன்கு தெரிந்தவர்கள் அறிந்த விஷயம் அது.
நினைவிருக்கிறதா?
மே 26 2014 இந்தியாவின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதும் முதன் முதலில் சொன்னது, "ஆயிரம் வருடங்களுக்கு பிறகு ஆட்சியதிகாரத்தை மீட்டெடுத்து உள்ளோம்" என்ற வார்த்தைகளைத்தான். இதன் அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை.
கிமு 300 சந்திரகுப்த மௌரியர் காலம் தொட்டு, கிபி 1192 பிரிதிவிராஜ், முகம்மது கோரியால் வீழ்த்தப்படும் வரை ஆட்சியின் மதமாக வருணாசிரமத்தை கூறும் சனாதனமே இருந்து வந்தது. அது மீண்டு வந்த அர்த்தத்தில்தான் மோடி அப்படி கூறினார். அதை நிலைநாட்டவே திட்டமிடுகிறார் செயல்படுகிறார்.
பிரிதிவிராஜின் வீழ்ச்சிக்குப் பிறகு 1857 வரை முஸ்லிம்களின் ஆட்சி பின்னர் 1947 வரை பிரிட்டிஷ்ஷாரின் ஆட்சி. ஆனால் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி அக்பர் ஆண்டு கொண்டிருந்த 1600 டிசம்பர் 31 லேயே இந்தியாவில் கால் பதித்து விட்டது
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் கிபி 1875 ஆம் ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதியால் ஆரிய சமாஜம் தொடங்கப்பட்டது. குஜராத்தின் வைதிக பிராமணரான இவர் சனாதன தர்மத்தை வலியுறுத்தும் வேதத்திற்கு திரும்பு என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார்.
கிறிஸ்தவ மதத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கானோரை இந்து மதத்தில் இணைக்க ஆரிய சமாஜம் முழுமூச்சுடன் செயல்பட்டது. பஞ்சாப் (அன்றைய ஐக்கிய மாகாணம், இன்றைய உத்தர பிரதேசம்) ஆகிய பகுதிகளில் ஆரிய சமாஜம் வேகமாக வளர்ந்தது.
1920இல் சுத்தி இயக்கத்தை தோற்றுவித்த சுவாமி சிரத்தானந்தா, இந்து சங்க தன் இயக்கத்தை துவக்கிய பண்டித மதன் மோகன் மாளவியா 1922இல் இந்து மகா சபையை உருவாக்கி ய பரமானந்தர் வினாயக் தாமோதர் சாவர்க்கர் 1925இல் ராஷ்டிரிய சுயம் சேவக்சன் என்ற ஆர்எஸ்எஸ் தொடங்கிய கேசவ பலிராம் ஹெட்கேவர் போன்ற அனைவருமே ஆரிய சமாஜத்தை சேர்ந்தவர்கள் தான்.
அந்தக் காலங்களில் இவர்கள் தான் காங்கிரசை வழிநடத்தினார். இந்திய பிரிவினைக்கான அடிப்படை காரணத்தை இப்போது நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
சுவாமி சிரத்தானந்தா என்ற லாலா முன்சிராம் 1920இல் சுத்தி இயக்கத்தை தோற்றுவித்ததும், 'கர்வாப்ஸி - தாய்மதம் திரும்புதல்' என்ற பெயரில் முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 1921இல் இது உச்ச கட்டத்தை அடைந்தது.
டெல்லியின் தெற்கே பஞ்சாபின் இம்பாலா மாவட்டமும், உத்தரப் பிரதேசத்தின் மதுரா உள்ளிட்ட பகுதிகளும் அடங்கிய மேவாத் எனப்படும் பகுதியில் இந்த மதமாற்றம் பெருமளவில் இருந்தது. இந்து மதத்திற்கு மாறாத முஸ்லிம்களும் இஸ்லாத்தின் அடிப்படையை அறியாமல் இந்துப் பண்டிகைகளை கொண்டாடுவதும் இந்துக்களின் விசேஷ நாட்களை தங்களின் விசேஷ நாட்களாக ஆக்கிக் கொண்டதும், சுபகாரியங்களுக்கு கூட இந்து புரோகிதர்களை நாடியதும், இந்து தெய்வங்களை தங்கள் குல தெய்வங்களாக வழிபடுவதும் ஆக இருந்தார்கள். அவர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் மூடநம்பிக்கையும் போதை பழக்கங்களும் குடிகொண்டிருந்தன.
ஆஹா முஸ்லிம்களிடமிருந்து இஸ்லாத்தின் உயிரோட்டம் அழிந்து கொண்டிருக்கிறது என ஆனந்தப்பட்டு சங்பரிவார்கள் இந்த கர்வாப்சி வளர்ந்து இந்தியா முழுவதும் வியாபித்து இந்தியா ஒரே நாடு ஒரே மதம் ஆகிவிடும் என கனவு கண்டனர்.
அந்தக் கனவை தகர்த்தவர் மௌலானா இலியாஸ் (ரஹ்) அவர்கள் ஆவர். இவர் உருவாக்கிய தப்லீக் ஜமாஅத் தான் மதம் மாற்றப்பட்ட முஸ்லிம்களை இஸ்லாத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தது. அந்த நினைவில் தான் சங்பரிவார் இன்று தப்லீக்கை குறிவைக்கிறது.
கிபி 1885 ல் பிறந்த மௌலானா அவர்கள் 1918இல் ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்று தமது தந்தை மற்றும் சகோதரரால் நடத்தப்பட்ட மதரஸாவின் நிர்வாகியாகவும் பேராசிரியராகவும் தங்கியிருந்து பணி செய்தார்கள். அப்போதெல்லாம் நிஜாமுதீன் பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. மனிதர்களின் நடமாட்டமும் அபூர்வம். அப்படிப்பட்ட இடத்தில்தான் மதரஸா வருமானமின்றி நடைபெற்றது.
இன்று ஹஜ்ரத் நிஜாமுதீன் டெல்லியின் அடையாளங்களில் ஒன்று. ஹஜ்ரத் நிஜாமுதீன் ஒலியுல்லாஹ் தர்காவின் மறுபுறம் இந்த மதரஸாவும் பள்ளிவாசலும் அமைந்துள்ளன. இங்குதான் தப்லீக்கின் தலைமைப்பீடம் அமைந்துள்ளது. சங்க பரிவாரத்தின் கண்களை உறுத்தும் அளவிற்கு பரந்த கட்டிடம் விரிந்த பணிகள் தன்னார்வ தொண்டர்கள்.
மதம் மாற்றப்பட்ட மேவாத் பகுதிகள் என்பது டெல்லியின் தென்பகுதி. பஞ்சாப் மாநிலத்தின் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த இம்பாலா மாவட்டம். இந்திய பகுதிகளாக இருந்த அல்வர் பரத்பூர் இன்றைய உத்தர பிரதேசத்தின் மதுராவின் பகுதிகள் என பரந்து விரிந்த பகுதி. அங்கு மேவ் என்ற சமுதாயம் வாழ்ந்ததால் இப்பகுதிகள் மேவாத் என்று அழைக்கப்பட்டன.
இந்த மேவாத் பகுதிகளில் மதம் மாறுவதை தடுக்கவும் இஸ்லாத்தை அங்கு நிலைபெறச் செய்யவும் மதம் மாற்றி அழைத்துச் செல்லப்பட்டவர்களை மீண்டும் இஸ்லாத்திற்கு கொண்டுவரவும் பலராலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவை படிப்படியாக குறைந்து முயற்சிகள் பலனின்றி நின்று போயின.
மௌலானா இல்யாஸ் ரஹ் அவர்கள் 1924 களில் மக்தப் மதரஸா மூலம் மார்க்கத்தை நிலைநாட்ட முயன்றும் எதிர்பார்த்த ஒத்துழைப்பும் பயனும் கிடைக்கவில்லை. எத்தகைய பிரதிபலனையும் எதிர்பாராமல் நம் சொந்த செலவில் செய்யும் பணிகளுக்கு அல்லாஹ்விடம் மட்டுமே கூலி உண்டு என்று நம்பக்கூடிய தன்னார்வலர்களின் உழைப்பு கிடைத்தால் மட்டுமே சாதிக்க முடியும் என அவர்கள் நம்பினார்கள்.
1926 அக்டோபர் 20 இல் புனித ஹஜ் பயணம் முடித்து திரும்பிய அவர்கள் தப்லீக்கின் இரு தூண்களில் ஒன்றான கஸ்த் அமலை தொடங்கினார்கள். பள்ளிவாசலில் தங்கி இருந்து மூன்று பேருக்கு குறையாமல் சென்று அந்தப் பகுதியில் முஸ்லிம்களை சந்தித்து இஸ்லாமிய மார்க்க கடமைகளை நளினமாக சொல்லும் இந்த செயலை தொடர்ந்து, நாளடைவில் பள்ளிவாசல்களில் தொழுகைக்குப்பின் செய்யப்படும் தஃலீம் என்ற பிரச்சாரமும் விரிவடைய ஜமாஅத்துகள் தயாராகி ஊர்கள் தோறும் தப்லீக் பணிகள் நடைபெற்றன.
இந்தப் பணிகளை திட்டமிடவும் விரிவுபடுத்தவும் இஜ்திமாக்கல் என்ற மாநாடுகள் நடைபெற்றன. முதலாவது இஜ்திமா 1941 நவம்பர் 28 29 30 ஆகிய மூன்று நாட்கள் இம்பாலா பகுதியின் குட்காவுன் மாவட்டம் நூஹ் ஊரில் நடைபெற்றது. அந்த காலத்திலேயே 25,000 பேர் கலந்து கொண்டனர்.
இன்று தப்லீக்கின் சேவை உலகம் முழுவதும் விரிவடைந்து பல நாடுகளில் இது இஜ்திமா மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் வங்க தேசத்தில் நடைபெறும் இஜ்திமாவில் 20 லட்சத்திற்கும் மேல் முஸ்லிம்கள் கூடுகிறார்கள். புனித ஹஜ்ஜூக்குப்பின் மக்கள் அதிகம் கூடுவது இந்நிகழ்வில் தான் என வர்ணிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் கோத்ராவில் நடைபெறும் இஜ்திமாவில் 10 லட்சம் பேர் வரை கூடுவதாக சொல்லப்படுகிறது. இதை தடுக்கவே கோத்ரா ரயில் எரிப்பும் 2002 குஜராத் கலவரமும் என்று கூட கூறப்பட்டது.
போஸ்டர் நோட்டீஸ் பத்திரிகை தொலைக்காட்சி என எந்த விளம்பரமும் இல்லாமல் பல லட்சம் மக்களை ஒரு இடத்தில் ஒன்று திரட்டுவதும், எத்தனை லட்சம் மக்கள் கூடினாலும் அந்த மூன்று நாள் மாநாடுகளில் எத்தகைய பாதுகாப்பும் தேவைப்படாமல் எந்த பிரச்சனையுமின்றி ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் மாநாடுகள் நடத்தவும் உலகில் தப்லீக் ஜமாஅத்தால் மட்டுமே முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
3 நாள், 40 நாள், 4 மாதம் என அவரவருக்கு ஏற்ற வகையில் சொந்த செலவில் ஜமாஅத்தாக பயணம் மேற்கொண்டு பள்ளிவாசல்களில் தங்கி சுயமாக சமைத்து சாப்பிட்டு எளிமையாகவும், பொறுமைசாலிகலாகவும் நடந்துகொள்ளும் தப்லீக் ஜமாஅத்தார்
1. அல்லாஹ்வையும், நபிகள் நாயக தூதையும் நம்புதல்
2. தொழுகையை மேற்கொள்ளல்
3. மார்க்க அறிவு பெறுதல், இறை தியானம் செய்தல்
4. சகோதரர்களிடம் மரியாதையாக நடத்தல்
5. உளத்தூய்மை
6. நேரத்தில் ஒரு பகுதியை ஜமாஅத்துடன் சேர்ந்து மார்க்கப் பணி செய்தல்
என்ற 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படக்கூடியவர்கள் தப்லீக் ஜமாஅத்தினர்.
"முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாத்தை எத்திவைப்பதில்லை, முஸ்லிம்களுக்கு எதிரான செயல் திட்டங்களில் அரசை எதிர்த்துப் போராடுவதில்லை, எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என அடங்கி போய்விடுகிறார்கள், போராட்ட குணமோ, எதிர்வினை ஆற்றுதலோ இல்லை, எவ்வளவு பெரிய மாநாட்டிலும் இஸ்லாமிய மார்க்கத்தை தாண்டி வேறு விவகாரங்களை பேசுவதோ வெளிப்படுத்துவதோ இல்லை" என்று தப்லீக் ஜமாத்தை பற்றி முஸ்லிம்களில் பலர் வெளிப்படையாக விமர்சிப்பது வழக்கம்.
அப்படிப்பட்ட தப்லீக் ஜமாஅத்தை உயிர் பறிக்க போராடும் கொரோனா ஜிகாதிகள், தீவிரவாதத்தின் நாற்றங்கால், பயங்கரவாதத் தாக்குதல்களை செய்பவர்கள் என்றெல்லாம் விமர்சிப்பவர்கள் அடிப்படை அறிவற்றவர்கள் அல்லது இஸ்லாமிய ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்க முடியும்.
தப்லீக் ஜமாஅத் பணிகள் முன்கூட்டியே திட்டமிட படுபவை. அந்த அடிப்படையில் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிய அப்பாவிகள் பலர் தான் பிப்ரவரி டெல்லி கலவரத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளால் உயிர்பலி ஆக்கப்பட்டவர்கள் என்பது மறைக்கப்பட்ட செய்தி.
மார்ச் 22, 2020 பிரதமரால் அவசரமாக அறிவிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு மார்ச் 23 முதல் 31 வரை வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்து டெல்லி முதல்வர் அறிவித்த திடீர் அறிவிப்பு என்ற குளறுபடிகள் அனைத்தையும் நிலைகுலையச் செய்தன.
தப்லீக் தலைமையகத்தில் தங்கியிருந்த மற்றும் அன்று வந்திறங்கிய ஆயிரக்கணக்கானோர் வெளியேற முடியாத நிலை - எங்கள் சொந்த செலவில் வாகனத்தில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அனுமதியுங்கள் என்ற வேண்டுகோள் மத்திய மற்றும் டெல்லி அரசுகளால் கண்டுகொள்ளப்படாத நிலை அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியது.
டெல்லி தப்லீக் தலைமையகத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கான சேவை மாதம் மார்ச் என்பதால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை விஷயத்தில் தப்லீக் தலைமையகம் கவனக்குறைவாக இருந்துள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு கொடிய வைரஸ் வேகமாக பரவுகிறது என்றால் அதை தடுப்பதற்கான முன்முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் செய்யவில்லை. அதை என்ன சொல்லுவது?
மக்கள் ஒன்று கூடலை தடை செய்யாதது, வெளிநாட்டு பயணிகள் வருகையை தடுக்க தவறியது யார் குற்றம்?
சீனாவின் வூகான் நகரில் மர்ம நோயால் 2019 டிசம்பர் 10 அன்று ஒருவர் பாதிக்கப்பட்டு, அது இருபதே நாட்களில் பலருக்கு பரவி 2020 ஜனவரி 7ல் அது கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது என கண்டுபிடித்து என்கோவிட் - 2019 என பெயரிடப்பட்டு சீனா அறிவித்தது.
2020 ஜனவரி 30 அன்றே அது வூகானில் இருந்து திரும்பிய மாணவரால் இந்தியாவிற்கு காலடி எடுத்து வைத்து அப்போதே உலகில் 1000 பேருக்கு மேல் பரவியதால் சர்வதேச எமர்ஜென்சியாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.
ஜனவரி 31-க்குள் அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து எனபரவி பின்னர் பிரான்ஸ், இத்தாலி எனப் பல நாடுகளுக்கும் பரவியது. இதற்கு சிகிச்சை இல்லை என உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளில் எச்சரித்தது.
இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில் இந்தியாவை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் தாஜ்மகாலை பார்க்க ஆசைப்பட்ட டிரம்ப் மனைவிக்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப்பை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி தடபுடல் ஏற்பாடுகள் செய்து குஜராத்தில் பிப்ரவரி 24 ல் லட்சக்கணக்கானவர்களை திரட்டி நிகழ்ச்சியை நடத்த அதே சமயத்தில் பாஜகவினர் டெல்லியை கலவர பூமியாக்க கொரோனாவை யாரும் கண்டுகொள்ளவில்லை.
மார்ச் 22 இல் ஒருநாள் மக்கள் ஊரடங்கு, மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை தேசிய ஊரடங்கு என மோடி அறிவித்த அதே நாட்களில், மத்திய பிரதேச அமைச்சரவை கவிழ்ப்பு, புதிய அரசு பதவியேற்பு, ராமர் கோவில் அடிக்கல் நாட்டல் என்றெல்லாம் நிகழ்ச்சிகள் நடந்து செய்திகள் வெளிவந்து அதனால் டெல்லியில் இருந்தவர்களும் அலட்சியமாக இருந்து விட்டனர்.
ஆக மத்திய பாஜக அரசின் அலட்சியமே கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என்பதை மறைக்க தப்லீக் ஜமாத் மீது மட்டும் பழி கூறப்படுகிறது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று கொரோனா வைரஸால் 122 பேர் பாதிக்கப்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் கூட டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்கள் இல்லை. ஊடகங்கள் இவைகளை இருட்டடிப்பு செய்து ஒருதலைப்பட்சமாக செய்தி பரப்புவது எந்த வகையில் நியாயம்.
- காயல் மகபூப் -
இங்கு பிரசுரிக்கப்படடிருக்கும் தப்லீக் இஜ்திமா புகைப்படங்கள் 2015 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்றவை. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இவ்வாறு உலகமெங்கும் நமது இந்திய தலைமையை பறை சாற்றிக் கொண்டுள்ள அமைப்புதான் இந்த தப்லீக் ஜமாத். தினமும் இதன் வளர்ச்சி அதிகமாவதால் சங்கிகள் ரொம்பவே அப்செட் ஆனார்கள். தப்லீக் ஜமாத்தின் வளர்ச்சியை தடுக்க இவர்கள் தற்போது எடுத்துள்ள ஆயுதம் 'கொரோனா'. வழக்கம் போல் இதிலும் அவர்களுக்கு தோல்வியே காத்திருக்கிறது.

ஒரு கோவிலின் பக்தருக்குக் கொரானா

மார்ச் ஆறாம் தேதி லண்டனில் உள்ள ஹரே கிருஷ்ணா கோவில்களில் ஒரு கோவிலின் பக்தருக்குக் கொரானா தொற்று இருப்பது உறுதியானது.தொற்று பரவுவதற்கு எதிரான மருத்துவ ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மார்ச் பன்னிரண்டாம் தேதி இன்னொரு கோவிலைச் சார்ந்த பக்தர் ஒருவர் மரண நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அதில் பலருக்கு நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.ஐந்து பக்தர்கள் மரணமடைந்துள்ளனர்.
அரசு மூடச் சொல்லி அறிவிப்பதற்கு முன்பே மூடி விட்டோம் என்று ISKON நிர்வாகம் அரசு எடுத்த முடிவுகளின் தேதியை வைத்து தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொடுத்திருக்கிறது.அங்கு யாரும் ISKON கோவில்களுக்குச் செல்லும் பக்தர்களை நம்ம ஊரில் இந்துத்துவர்கள், அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் வன்மத்தோடு சுட்டிக் காட்டுவதைப் போல வெறுப்புணர்வைக் கொட்டவில்லை.அவர்கள் தான் காரணம் என்ற பிரச்சாரத்தைத் துவங்கவில்லை.

Sunday, April 05, 2020

வயிற்றுப் பசிக்கு என்ன செய்வது என்று யோசித்திருக்கலாம்!

விளக்கு பிடித்த அந்த ஒன்பது நிமிடம் இந்த ஏழைகளின் வயிற்றுப் பசிக்கு என்ன செய்வது என்று யோசித்திருக்கலாம்!
இது தான் இஸ்லாம்.....

இது தான் இஸ்லாம்.....

மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணத்தை ஊரடங்கால் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவாக்கி.... அதில் இன்பம் காணும் இஸ்லாமிய குடும்பம்.

இது தான் இஸ்லாம்.....


வழக்கம் போல் இங்கும் சங்கிகள் தோல்வியடைவர்.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தினக் கூலிகள் தங்களின் நிலையை வீடியோவாக எடுத்து பரவ விட்டனர்.
இதனைப் பார்த்த காயல்பட்டின முஸ்லிம்கள் அந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். வேறு யாரும் உதவ முன் வரவிலலையாம்.
கொரோனாவிலும் மதத்தை கலந்து இஸ்லாமியர்களை பழி வாங்க சங் பரிவாரம் ஒரு புறம் திட்டம் தீட்டிக் கொண்டுள்ளது.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் இஸ்லாமிய சமூகம் சாதி மத வித்தியாசம் பார்க்காமல் உதவிக் கொண்டு உள்ளது.
இது தான் இஸ்லாம். வழக்கம் போல் இங்கும் சங்கிகள் தோல்வியடைவர்.


சதித்திட்ட வலை.....

வாட்ஸ்அப்பில் வந்த செய்தி....
மிக முக்கியமான சதித்திட்ட வலை.
தோழர் இளங்கதிர் தன்னுடைய புலன் சேகரிப்பின் மூலம் பாசிச அமைப்பை சேர்ந்த சிலரிடம் சேகரித்தவற்றை தொகுத்து தந்திருக்கிறோம்.
பாசிசவாதிகளின் முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களை கருவறுக்கும் செயல் பற்றி நாம் செய்தி சேகரித்ததை அவர்கள் வாக்குமூலம் போல இங்கு தருகிறோம்.
"எங்கள் அதிகாரத்தை பிடிக்கும் திட்டங்களுக்கு சாதகமாக இருப்பதே முஸ்லிம்கள்தான்.
முஸ்லிம்கள் இந்த நாட்டின் எதிரிகள் என்று வந்தால்தான், எங்களுக்கு இந்துக்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
இந்தியாவில் மற்ற பகுதிகளில் ஓரளவு இதில் வெற்றியடைந்தாலும், தமிழகம் ஒரு சவாலாகவே உள்ளது.
எப்படியாவது இவர்களுக்கு எதிராக மக்களை, அரசாங்கத்தை, முக்கியமாக காவல்துறையை முடுக்கி விட வேண்டும் என்பதே எங்கள் கனவு.
தமிழ்நாட்டில் அதை செய்வது பெரும்பாடாக இருந்தது. சாகின்பாக்குகள் வந்தபோது போது அது ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால் விரைவில் சுதாரித்துக்கொண்ட முஸ்லிம்கள் சாகின்பாகுகளை கட்டுப்பாடோடு நடத்த தொடங்கிவிட்டார்கள்.
அதைத்தொடர்ந்து கொரானா வைரஸ் இன்னொரு வாய்ப்பாக வந்தபோது சாகினபாகுகளை வைத்துதான் இவற்றை பரப்புகிறார்கள் என கிளப்பி விட திட்டமிட்டோம். ஆனால் இதிலேயும் கடைசி தருணத்தில் சுதாரித்து விட்ட முஸ்லிம்கள் அவற்றை கலைத்து விட்டனர்.
அப்போது வந்ததுதான் தப்லிக் ஜமாத் வாய்ப்பு. முஸ்லிம்களில் இவர்கள் ஒரு விந்தையான ஒரு பிரிவு. இவர்கள் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருப்பவர்கள்.
இப்படி ஒரு முட்டாள் குரூப் இருந்தது பெரிய வரப்பிரசாதமானது.
இவர்களில் சிலருக்கு கொரோனா பற்றியிருப்பதும், இவர்கள் உலகத்தில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது பற்றி அறியாமல் ஆட்டுமந்தைகள் போல மார்ச் நடுவில் மாநாடு நடத்தியது பற்றி தெரியவரவும், உடனடியாக நாங்கள் செயலில் இறங்கினோம்.
எங்களுக்கு நேர்த்தியான ஊடக பிரச்சார கட்டமைப்பு உண்டு. அதுபோக முஸ்லிம்களுக்கு எதிரான விஷயத்தில், முஸ்லிம்கள் அவர்களே எங்கள் பிரச்சாரத்தை எடுத்துக்கொடுக்கும் வகையில் நடப்பார்கள், என்ற இரண்டாவது பெரிய பலமும் உண்டு.
முதலில் தப்லிக் நபர்கள் கொத்து கொத்தாக தீவிரவாதிகள் போல பொறுப்பில்லாமல் திரியும் வீடியோக்களை எடுத்து எங்களுக்கு இருக்கும் எல்லா வாட்சப் மற்றும் பேஸ்புக் குருப்புகளில் பரப்பினோம்.
ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தோம்.
அது வைரல் ஆனது.
வைரல் ஆகும் விஷயங்களை தொலைக்காட்சிகள் கவனிக்கும். அடுத்து தொலைக்காட்சிகளில் விவாதங்கள் தொடங்கினோம். அதில் கட்சி சார்பில்லாத மாலன், கோலாகல ஸ்ரீனி போன்றவர்களை அனுப்பி தப்லிக் சதித்திட்டம் என எடுத்துக்காட்டினோம்.
இது நன்கு பற்றவும், வெகுஜன பத்திரிகைகளில் குருமூர்த்திக்களை வைத்து தப்லிக் எப்படிப்பட்ட தீய நிறுவனம் என்பதை இஸ்ரேலிய எழுத்தாளர்களின் மேற்கோளை காண்பித்து எழுத வைத்தோம்.
இதில் என்ன திரில் என்றால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக காண்பிக்கும் திமுகவின் தொலைக்காட்சியான சன் டிவியின் தலைப்பு செய்தி சுமார் ஐந்து நிமிடம் தப்லிக் எப்படி உலகத்தில் மற்ற பாகத்தில் இருந்து கொரோனாவை இந்தியாவிற்கு பரப்பி விட்டது என படத்தோடு இரண்டு நாட்கள் காண்பிக்கும் அளவு செய்தோம்.
இதற்கு அடுத்த கட்டம்தான் சுவாரசியமானது.
முஸ்லிம்களை அவர்களை வைத்தே பாதிப்பை உருவாக்குவது.
எங்களின் மிக பெரிய பலமே முஸ்லிம்களின் குருட்டு நம்பிக்கையும், சடுதியில் உணர்ச்சிவசப்படுதலும்தான்.
நாங்களே முஸ்லீம் மதத்தை படித்தவர்களை வைத்திருக்கிறோம். அவர்கள் உதவியோடு போலி செய்திகளை உருவாக்குவோம்.
கொரோனவால் சீன அதிபர் மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார் என்று பரப்புவோம். இதை போல எதையாவது எழுதி இறுதியில் சுபானல்லாஹ் என்று போட்டுவிடுவோம்.
இது எதற்கு என்றால் எங்களுக்கு இவர்களை தூண்டிவிட வேண்டும்போது இது பயன்படும். உதாரணமாக முஸ்லீம் மதகுருமார்கள் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை மசூதி செல்ல தேவை இல்லை என்று சொன்னார்கள். அப்போது அதில் சிலரை இதற்கு எதிராக தூண்டிவிட இதை பயன்படுத்தினோம்.
சீன அதிபரே மன்னிப்பு கேட்க மசூதிக்கு சென்றார், நங்கள் ஏன் செல்லக்கூடாது என்று பரப்பினோம்.
மெக்காவில் தொழுகையில் அழுதுபுலம்பினார்கள் என பரப்பினோம்.
துருக்கியில் அதிபர் மசூதிகளை எப்போதும் முடமாட்டார் என்று சொன்னதாக பரப்பினோம். தொழுக விடாமல் யூதர்கள் செய்யும் சதி என பரப்பினோம்.
எங்களிடையே உள்ள முஸ்லீம் மத அறிவு உள்ளவர்களை வைத்து வெள்ளிக்கிழமை தொழுகை பற்றி பல உணர்ச்சிகளை தூண்டி வாக்குவாதத்தில் ஈடுபட வைத்தோம்.
இதனால்தான் பல இடங்களில் இவர்கள் தடையை மீறி தொழுக சென்றார்கள். அதன்முலம் வெகுஜன கசப்பையும் காவல்துறையின் வெறுப்பையும் இவர்களே தேடிக்கொள்வார்கள்.
முஸ்லிம்களும் அவர்களின் வாட்ஸாப் பயனும் எங்களுக்கு நன்கு தெரியும். ஒரு தகவல்- நாங்கள் பல ஆயிரக்கணக்கான வாட்ஸாப் குரூப்புகள் வைத்துள்ளோம் முஸ்லீம் குரூப்புகள் உண்டு. இந்து குரூப்புகள் உண்டு. இந்து குருப்புகளில் இந்து மதம் சார்ந்த ஒரு விஷயம் போடப்பட்டால், ஒரு பத்திலிருந்து இருபது சதம் மட்டும் மற்றவர்க்கு பார்வர்ட் செய்வார்கள். முஸ்லீம் குருப்புகளில் முஸ்லீம் மதம் பற்றி போட்டால், ஐம்பது சதத்திற்கும் அதிகமானோர் பார்வர்ட் செய்வார்கள்.
எதாவது போட்டோஷாப் செய்து சுபானல்லாஹ் மாஸல்லாஹ் என்று போட்டாலே போதும்.
தப்லிக் நபர்கள செய்யும் ஒவ்வொரு தப்பையும் இந்த வாட்சப் குருப்புகளில் போடுகிறோம். முஸ்லிம்களே அதை எல்லோருக்கும் பார்வர்ட் செய்துவிடுகிறார்கள்.
உதாரணத்திற்கு வீட்டிற்கு கேள்வி கேட்க வரும் அரசு அதிகாரியை, ஒரு தப்லிக் நபர் ஒருமையில் ஏசி முதல்வர், பிரதமரையும் விளாசுவதை பதிவேற்றினோம். ஒரே நாளில் இவர்களே அதை வைரல் ஆக்கி விட்டார்கள்.
தப்லிக் நபர்களின் குரூப்பாக பரோட்டா சாப்பிட்டு கிண்டலடிக்கும் குவாரன்டின் கூத்துக்களும் உதவுகின்றன.
கொரோனாவே இல்லாமல் முஸ்லிம்களை மட்டும் அடைத்து வைக்கிறார்கள் என பரப்பினோம்.
அதுபோல 'முஸ்லிம்களே, உங்களை மட்டும் இந்த அரசு கொரோனா பாதித்தவர்களை போல சித்தரிக்கிறது' என பரப்பி விட்டோம். இதை நம்பி கோபமடைந்து இந்தூரில் முஸ்லிம்கள் அரசு அதிகாரிகளை கல்லெறிந்து எங்கள் திட்டத்தை நிறைவேற்றினார்கள்.
பாஜக அரசுக்கு எதிராக வந்த அல்லாவின் தண்டனைதான் கொரோனா என பரப்புனோம். அதை நம்பி முஸ்லீம் இளைஞர்கள் டிக்டக் வீடியோ போட்டார்கள். சிலர் பொதுஇடத்தில் இருமலாம் வாங்க என்று பதிவிட்டார்கள்.
சீனாதான் மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை குலைக்க இந்த வைரஸை உருவாக்கியது முஸ்லிம்கள் சீனர்களின் கைப்பாவை என்று எழுதினோம் அதை முஸ்லிம்களே சரமாரியாக பார்வேர்ட் செய்தார்கள்.
ஆக மொத்தம் இது நன்றாக வேலை செய்கிறது. முஸ்லிம்களின் செயல்களை வைத்தே நாங்கள் லாபம் பார்த்துவிடுவோம்.
இரண்டு விஷயங்கள் நாங்கள நினைத்தது போல இன்னும் போகவில்லை.
ஒன்று- தமிழ் தேசியவாதிகள். இவர்கள் முஸ்லிம்கள்தான் பரப்புகிறார்கள் என்பதை நம்பவில்லை. பார்வர்ட் செய்திகளை, பத்திரிகை செய்திகளை நம்பாமல் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.
அதே போல தமிழக அரசு முஸ்லிம்களின் மேல் எரிச்சல் அடைந்து உபி அரசு போல கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என நினைத்தோம். ஆனால் நிதானமாக செல்கிறார்கள்.மத வியூகத்தை தடுக்கிறார்கள். இருந்தாலும் நாங்கள் தொடருவோம்.
இப்போதும் கூட சுகாதார செயலர் பீலா, முஸ்லிம்களுக்கு எதிரானவர் என பரப்ப ஆரம்பித்திருக்கிறோம்."
இதற்கு அப்புறம் இவர்கள் சொல்லும் செய்திதான் பகீர் என்கிறது.
"அரசு நடவடிக்கை எடுக்காவிட்டாலும், எங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று பல திட்டங்கள் உள்ளன. உதாரணத்திற்கு எதோ ஒரு காவல் அதிகாரி முஸ்லிம்களை சந்தித்ததாகவும், அப்போது அவர்களை இழிவாக பேசியதோடு, முகமது நபியை கேவலப்படுத்தியது போல ஒரு போலி செய்தியை முஸ்லிம்கள் மத்தியில் போட்டுவிட்டால் போதும். பார்வர்ட் மேல் பார்வர்ட் செய்து குரூப்பாக கிளம்பி வெடிக்கும்."
தோழர்களே, முஸ்லிம்கள் இந்த சதித்திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக வாட்சப் பற்றி சொல்லப்படும் விஷயங்களை அவர்களுக்கு விளக்குங்கள். அவர்கள் கையில் கிடைக்கும் எல்லா மெஸேஜையும் பார்வேர்ட் பண்ணாமல் இருந்தாலே பாதி திட்டங்கள் முறியடிக்கப்படலாம்.