Followers

Thursday, April 30, 2015

'ஆண் குழந்தைக்கான லேகியம்' விற்றுக் கொண்டிருக்கும் பாபா ராம்தேவ்!ஆயுர்வேத மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 'புத்ரஜீவக் பீஜ்' (ஆண் குழந்தையை தரும் லேகியம்) பாபா ராம் தேவ் ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்டு தற்போது மார்க்கெட்டில் விநியோகிக்கப்படுகிறது. பாபா ராம் தேவ் ஹரியானா மாநிலத்தின் விளம்பர தூதுவராகவும் பிஜேபி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதியாக்கப்படுகிறது. பிறந்த பெண் குழந்தைகள் வறுமைக்கு பயந்து கழுத்து நெரித்து கொல்லப்படுகின்றன. இந்த நிலையில் அரசின் தூதுவர் ஒருவரே ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள லேகியம் விற்பது பலரின் விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பெண் குழந்தைகளை காக்க வேண்டும் என்று ஒரு பக்கம் மோடி பிரசாரம் செய்து கொண்டிருக்க மறுபுறம் ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்ள லேகியம் விற்பது எந்த வகை நியாயம். பெண் குழந்தை பெற்றுக் கொள்வது பாவம் என்பது பாபா ராம் தேவின் எண்ணமா? அறிவியல் ரீதியாகவும் இது மக்களை ஏமாற்றும் புரட்டு வேலை. பாராளுமன்றத்தில் ஜனதா தள் மூத்த தலைவர் தியாகி தான் ஒரு மருந்து கடையில் இந்த லேகியம் வாங்கியதாக அனைவருக்கும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் அந்த மருந்து பாக்கெட்டை சுகாதார மந்திரி நத்தாவிடம் அளித்தார். காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பேசும் போது 'ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண் குழந்தைகள் கொடுமை படுத்தப்படும் சூழலில் அதனை தடுக்க வேண்டிய அரசு அதற்கு எதிர் மறையாக செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது' என்றார். இந்த மூடப்பழக்கத்தை உடன் நிறுத்த வேண்டும் என்று பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

ஹரியானாவில் இந்த மருந்தை வாங்க பலரும் போட்டியிடுகின்றனர். மருந்து கிடைப்பதும் அரிதாக இருக்கிறது. பாபா ராம் தேவ் மக்களின் மூடப் பழக்கத்தை பயன் படுத்தி அருமையாக கல்லா கட்டுகிறார். :-)

சாமியார்களின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் கோமாளித் தனங்கள் நிறைவேறப் போகிறதோ பொறுத்திருந்து பார்போம்.

தகவல் உதவி
ஜீ நியூஸ்
30-04-2015

http://www.financialexpress.com/article/industry/companies/controversy-hits-ramdev-drug-promising-birth-of-male-child-hits-modis-beti-bachao-campaign/68323/

http://zeenews.india.com/news/india/uproar-in-rajya-sabha-over-baba-ramdevs-infertility-medicine-divya-putrajeevak-seed_1587536.html

நேபாள துயர் துடைப்பில் ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த்!நமது இந்தியாவின் பக்கத்து நாடான நேபாளத்தில் வரலாறு காணாத பேரழிவு பூகம்பத்தால் ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் தயர் துடைப்பில் அரும் பணியாற்றி வரும் ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் தனது பங்காக போர்வைகள், உணவுப் பொருட்கள், தண்ணீர், டென்ட் அமைத்துக் கொடுத்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளை ஏற்கெனவே செய்து வருகிறது. இழப்பு மிக அதிகம் என்பதால் மீட்பு பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழையையும் பொருட்படுத்தாது பெரும் சேவை செய்து வருகின்றன. ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் பொது மக்களிடமிருந்து நன்கொடைகளை எதிர்பார்க்கிறது. வசதி படைத்தவர்கள் சிரமத்தில் ஆழ்ந்துள்ள நமது அண்டை நாட்டு சகோதரர்களின் தயர் துடைக்க தங்களால் இயன்ற உதவிகளை கீழே வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும். இறைவனுக்கு பயந்து முறையாக அதனை நாங்கள் விநியோகம் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்.

Regards,
Nusrat Ali
Secretary General
Jamaat-e-Islami Hind

Cheque or Draft should be in favour of:
MARKAZ RELIEF FUND
JAMAAT-E-ISLAMI HIND
A/c No. 1447308475
Central Bank of India
Sukhdev Vihar, New Delhi-110025
Branch Code-02953
IFS Code- CBIN0282953

Cheque or Draft should be sent to the following address:
Secretary General
JAMAAT-E-ISLAMI HIND
D-321, Dawat Nagar, Abul Fazl Enclave,
Jamia Nagar, Okhla, New Delhi-110025
Cont. No. 09818996951 / 08826732590

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 60 : 8

Wednesday, April 29, 2015

அதிர்ச்சியால் முடி நரைத்து விடும் - குர்ஆனின் அறிவியல்'ஏக இறைவனை நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?'

'அதில் வானம் வெடித்து விடும். அவனது வாக்குறுதி செய்து முடிக்கப்படும்'

-குர்ஆன் 73:17


சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தால் அந்த மக்கள் எந்த அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகினர் என்பதை தொலைக் காட்சிகளில் பார்தோம். அன்று ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியினால் பல ஆயிரக்கணக்கான கர்பிணிகளின் குழந்தைகள் குறையுடையதாக பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு மனிதனுக்கு ஏற்படும் அதிர்ச்சியானது அவனது உடலளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். சாதாரண பூகம்பத்திற்கே இந்த நிலை என்றால் வானம் வெடித்து சிதறும் போது,கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதி சின்னா பின்னமாகும் போது மனிதனின் நிலையை சொல்லவும் வேண்டுமோ? அது போன்ற ஒரு சூழல் எற்படும் போது சிறு குழந்தைகளின் தலை முடியும் நரைத்து விடும் என்கிறது இந்த வசனம். உலக முடிவு நாளுக்கும் தலைமுடி நரைப்பதற்கும் என்ன சம்பந்தம்?

1982ல் மலேசியன் ஏர்லைன்ஸில் விமானியாக பணியாற்றிய எரிக் மூடியின் (ERIC MOODY) ஆனுபவத்தை பார்போம். அவர் பயணிக்கும் போது விமானத்தின் நான்கு என்ஜின்களும் அடுத்தடுத்து பழுதடைந்து விட்டன. இனி இறப்புதான் என்ற முடிவுக்கு வந்தார். மிகப் பெரும் மன அழுத்தத்துக்கு அன்று ஆளானார். அதிர்ஷ்டவசமாக ஜகார்த்தாவில் அந்த விமானத்தை இறக்கி அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார். இந்த சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களிலேயே எரிக் மூடியின் தலைமுடியானது நரைக்கத் தொடங்கியது. விமானத்தில் அன்று விபத்து ஏற்படும் போது மன அழுத்தம் கொண்டாரல்லவா? அதுதான் நரைக்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறினர். மன அழுத்தத்துக்கும் தலைமுடி நரைக்கும் மிகுந்த ஒற்றுமை உள்ளதை இந்த சம்பவமும் மெய்ப்பிக்கிறது. இதனை பிபிசியும் வெளியிட்டுள்ளது.

வேதியலில் நோபல் பரிசு வென்ற ராபர்ட் லெப்ஃகோவிட்ஸ் (ROBERT LEFKOWITZ) தலைமையில் ஒரு குழு ஆய்வில் ஈடுபட்டது. அந்த ஆய்வின் முடிவில் மனிதர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி, மன அழுத்தம் போன்றவைகளால் உடலின் டிஎன்ஏக்களில் மாற்றம் ஏற்பட்டு அந்த மனிதனின் தலைமுடி நரைக்கத் தொடங்குவதாக கண்டு பிடித்தனர். முடி நரைத்தலானது ஒரு சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்ட ஓரிரு நாட்களிலேயே ஏற்படத் தொடங்கி விடும் என்றும் ஆய்வைறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கையானது 'நேசர்' அறிவியல் இதழில் ஆகஸ்ட் 21, 2011 ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. மனிதன் முதிர்ச்சியடைந்தால் இயற்கையாக முடி நரைக்கத் தொடங்கி விடும். நாம் இங்கு இள நரையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆய்வறிக்கையானது சமீபத்தில்தான் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் குர்ஆனோ மனிதனுக்கு உலக முடிவு நாளில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து மன அழுத்தத்தால் அதீத பயத்தால் சிறு குழந்தைகளின் தலை முடியும் நரைத்து விடும் என்ற அருமையான அறிவியலை சொல்லிச் செல்கிறது. நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைதான் இது என்பதற்கு இந்த வசனமும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

மனிதனுக்குள் ஏற்படும் மன அழுத்தமானது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல அழுத்தங்களைக் கொடுத்து அதனால் தலைமுடி இளமையிலேயே நிறம் மாறக் காரணமாகி விடுகிறது என்று பார்தோம். இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் வாழ்க்கையானது எல்லோருக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் பெருமபாலான மனிதர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். ஒரு சிலருக்கு இந்த அழுத்தம் அதிகமாகவே தற்கொலைகளையும் நாடுகின்றனர். இவற்றிலிருந்தெல்லாம் விடுபட மனிதனுக்கு உள்ள ஒரே வழி இறை தியானம்தான். இந்து, இஸ்லாம், கிறித்தவம் என்ற முப்பெரும் மதங்களை எடுத்துக் கொண்டால் அதில் இஸ்லாமியர்களே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் அதிக சதவீதமாக இருப்பர். பெரும்பாலானவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழக் மூடியவர்களாகவும் இருப்பர். இஸ்லாமியர்களில் நாத்திகர்கள் மிகக் குறைந்த சதவீதத்திலேயே இருப்பர். ஒரு நாளைக்கு ஐந்து நேரம் சென்று தனது கவலைகளை எல்லாம் தன்னை படைத்த இறைவனிடம் முறையிட்டு விடுகின்றனர் முஸ்லிம்கள். இதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் வெகுவாக குறைகிறது. எனவே தான் பத்திரிக்கைகளில் தற்கொலைகள் செய்து கொள்பவர்களில் இஸ்லாமியர்களின் பெயர்கள் வருவதில்லை. அதற்கு காரணம் அவர்களின் இறை பக்தியே என்றால் மிகையாகாது.

The paper was published in the Aug. 21 online issue of Nature.

In the study, mice were infused with an adrenaline-like compound that works through a receptor called the beta adrenergic receptor that Lefkowitz has studied for many years. The scientists found that this model of chronic stress triggered certain biological pathways that ultimately resulted in accumulation of DNA damage.

"This could give us a plausible explanation of how chronic stress may lead to a variety of human conditions and disorders, which range from merely cosmetic, like graying hair, to life-threatening disorders like malignancies," Lefkowitz said.

http://www.sciencedaily.com/releases/2011/08/110821141135.htm

http://www.bbc.com/future/story/20121016-can-stress-turn-your-hair-grey

'ஏடு சுமக்கும் கழுதைகள்''ஏடு சுமக்கும் கழுதைகள்'


தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச்சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச்சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக்கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்குஅல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

(அல்குர்ஆன் 62 : 5)


தவ்ராத் என்கின்ற வேதத்தைப் பெற்று அவ்வேதக் கருத்துக்களை நடைமுறையில் முறையாக பின்பற்றாத யூத சமுதாயத்தை அல்லாஹ் பொதி சுமக்கின்ற கழுதைக்கு உதாரணமாகக் கூறுகின்றான். கழுதையின் முதுகில் அழுக்கு மூட்டைகளை ஏற்றிவைத்தாலும் அது அழுக்கு மூட்டை என்பதை சிந்திக்காமல் கழுதை சுமந்து செல்லும். அது போல் அறிவு நிறைந்த புத்தகங்களை ஏற்றினாலும் அது அழுக்கு மூட்டையைப் போல் சுமந்துதான் செல்லுமே தவிர அதிலுள்ள கருத்துக்கள் ஆழமிக்கவை என்பதை கழுதை அறியாது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?என்றொரு பழமொழி கூட கூறுவார்கள். தான் முதுகில் சுமக்கும் பொருளின் மதிப்பை அறியாத மிருகம்தான் கழுதை. அது போன்றுதான் தவ்ராத் வேதத்தைப் பெற்று அதனை வாயளவில் மட்டும் படித்து விட்டு செயலளவில் பின்பற்றாமல் அதிலுள்ள கருத்துக்களை மாற்றியும் மறைத்தும் வந்த யூத சமுதாயத்தை அல்லாஹ் ஏடுகளின் மதிப்பை உணராமல் வெறும் பொதி மூட்டையாகச் சுமக்கும் கழுதைக்கு ஒப்பாகக் கூறுகிறான்.

இன்று நம்மில் பலர் குர்ஆனை நன்கு படித்திருப்பார்கள். நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளையும் நன்கு உள் வாங்கியிருப்பார்கள். ஆனால் மத்ஹப் என்ற மாயையில் வீழ்ந்து கிடப்பார்கள். இறந்தவர்களின் சமாதியில் தங்களின் தலையை சாய்ப்பார்கள். அப்படி செய்தால் என்ன தவறு என்றும் கேட்பார்கள். குர்ஆனின் ஒரு பகுதியை சொல்லி விட்டு மறு பகுதியை மறைத்து விடுவர். இவர்களைப் பார்த்தே இறைவன் குர்ஆனிலே 'ஏடு சுமக்கும் கழுதைகள்' என்கிறான்.

நேபாளத்தில் புறக்கணிக்கப்படும் தலித் குடியிருப்புகள்!வரலாறு காணாத பேரழிவு நேபாளத்தில் நிகழ்ந்துள்ளது. இடிபாடுகளில் இன்னும் மக்களின் உடல்கள் கிடப்பதாக சொல்கின்றனர். இறந்தவர்கள் 5000 பேர் என்று அரசு சொன்னாலும் உண்மையான இழப்பு இதை விட மூன்று மடங்கு இருக்கும் என்கின்றனர் நோக்கர்கள். நேபாள மக்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

நேபாள மக்களின் உதவிக்காக நமது இந்திய அரசு பல உதவிகளை வழங்கி வருகிறது. உணவாகவும் மருந்தாகவும் பல கோடிகளை நமது அரசு வாரி வழங்கி வருகிறது. வழங்கப்படும் இந்த உதவிகள் முறையாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. நகூல் ரோகா என்ற தலித் கூறுகிறார் 'எங்கள் அரசாங்கத்துக்கு மோடி அரசு பல கோடி உதவிகளை வழங்கியுள்ளதாக கேள்விபடுகிறோம். ஆனால் தலித் குடியிருப்புகளுக்கு இந்த உதவிகள் வந்தடைவதில்லை' என்கிறார்.

ஹரி பகதூர் ரோகா என்பவர் சக்கிலிய சாதியை சேர்ந்தவர். அவர் கூறுகிறார் 'எங்கள் குடியிருப்புகளுக்கு உணவோ, டென்டுகளோ இதுவரை வந்தடையவில்லை. நகரத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதில்தான் பலரும் அதிக கவனம் செலுத்துகின்றனர். எங்களின் வீடுகள் பூகம்பத்தால் பழுதடைந்து ஆட்டம் கண்டுள்ளது. உள்ளே செல்வதற்கு அச்சப்பட்டுக் கொண்டு குளிரிலும் மழையிலும் குழந்தைகளோடு வீதிகளில் வசித்து வருகிறோம். பல நாடுகளிலிருந்து வரும் உதவிகள் எங்கு செல்கின்றன என்பது புதிராக உள்ளது. தினக் கூலியாக எனக்கு முன்னூறு கிடைக்கும். எங்கள் கிராமத்தில் ஆடு கோழிகளை வளர்த்து வருமானம் பார்த்து வந்தோம். தற்போது அனைத்தும் அழிந்துள்ளது. அரசியல்வாதிகள் ஏதும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களிடமிருந்து விடுபட்டுள்ளது' என்கிறார் பரிதாபமாக.

உதவி செய்வதில் கூட மனு தர்மத்தை கடைபிடிக்க வேண்டுமா நேபாள அரசு? நம் நாட்டு உதவிகள் கூட இந்த அடித்தட்டு மக்களை சென்றடையவில்லை. இந்தியாவாக இருந்தாலும் நேபாளமாக இருந்தாலும் இன ஒதுக்கல் என்பது உதவி செய்வதில் கூட காட்டப்படுகிறது என்பது வருந்தத்தக்க விஷயம். மோடி அரசு இதனை கருத்தில் கொண்டு உழைக்கும் மக்களுக்கு உடன் உதவிகள் கிடைக்க நேபாள அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும். அல்லது நெரிடையாக நம் நாட்டு அதிகாரிகளை கொண்டு உதவிகள் விநியோகிக்கப்பட வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
29-04-2015

http://indianexpress.com/article/world/neighbours/dalit-village-wonders-if-modi-govts-help-will-ever-reach-us/

நோய் தடுப்பு வாரம் ஏப்ரல் 24 முதல் 30 வரைவரும் ஏப்ரல் 24 முதல் 30 வரை நோய் தடுப்பு வாரம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஒரு சதவீதமே உலகெங்கும் தற்பொது உள்ளது. இதே போன்ற விழிப்புணர்வு மற்ற நோய்களையும் சென்றடைய வேண்டும். வசதி குறைவான எத்தனையோ குடும்பங்களில் நோய் வாய்பட்ட எத்தனையோ வயோதிகர்களையும் இளைஞர்களையும் பார்கிறோம். அவர்களுக்கெல்லாம் நம்மால் ஆன் உதவிகளை செய்ய முயலுவோம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

இந்தியாவில் இஸ்லாம் புகுந்த சுருக்கமான வரலாறு இதுதான்.!

இந்தியாவில் இஸ்லாம் புகுந்த சுருக்கமான வரலாறு இதுதான்.!

சென்னி மலை!

//" கீதை சொன்னவன் - இடையன்
கண்ணன் ,
"நேரடியாககேட்டவர்கள் - சத்ரிய அர்ச்சுனன்,
தேரோட்டி சஞ்சயன்,"
"தேரோட்டி சொல்ல கேட்டவன் சத்ரிய திருதராஷ்டிரன், "
"இவற்றை எல்லாம் எழுதி வைத்தவர்
மீனவ பெண்ணிற்கு பிறந்த வியாசர்"//

எல்லாம் சரிதான். இதை எல்லாம் கேட்டு தெளிந்து இந்து மதத்துக்குள் வந்தவர்களை “நான் தலையில் பிறந்தேன். நீ காலில் பிறந்தாய்: காலம் முழுக்க எனக்கு சேவகம் செய்வதே உனது பிறவிப் பலன்” என்று சென்னி மலையை கோவிலில் இருந்து வெளியாக்கி விட்டு உள்ளே மணி ஆட்ட நமது பார்பனர்கள் சமர்த்தாக உட்கார்ந்து கொண்டனர்.

இதைக் கண்டு வெகுண்டெழுந்துதான் எனது முன்னோர்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர். எதையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட சென்னி மலை, ராம் நிவாஸ் போன்றோர்களின் பெற்றோர் இந்து மதத்திலேயே தங்கி விட்டனர்.

இந்தியாவில் இஸ்லாம் புகுந்த வரலாறு இதுதான்.!

Tuesday, April 28, 2015

'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' இனி அவ்வளவுதானா?

சகோ முஹம்மத் ஆஷிக்!

//இப்பல்லாம் த்த்ஜவை விட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டு இருக்காங்க. அவர்களின் பேச்சும் ஒழுக்கமும் பண்பும் அகபாவமும் மரியாதைக்கெட்டத்தனமும் எல்லாம் தெரிஞ்ச ஈகோத்தனமும் மக்களை வெறுக்க வைத்து விட்டன. நானும் த்த்ஜவ விட்டு விலகி தள்ளிப்போனவன் தான். நான் கொஞ்சம் சீக்கிரம்... மத்தவங்க கொஞ்சம் லேட்டு அவ்வ்ளோதான்....

இப்ப உள்ளமாதிரியே தப்பு தப்பா பத்வா தந்துட்டு இருந்தா கடைசியா த்க்லீது செய்யிறவங்க மட்டும் தா ன் ததஜவில் மீதி இருப்பாஙக. குர் ஆன் ஹதீசை சிந்திக்கிறவ்ங்க எல்லாரும் வெளியேறிடுவாங்க//


மீண்டும் தவறான புரிதல். தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறிய பாக்கராகட்டும், தமுமுகவிலேயெ தங்கி விட்ட ஜவாஹிருல்லாவாகட்டும் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் இந்த ஜமாத்தை விட்டு விலகிச் சென்றாலும் விலகியவர்கள் தவ்ஹீத் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். பாக்கர் அண்ணன் என்றாவது தர்ஹாவில் சென்று தலை முட்டியதை பார்த்திருக்கிறீர்களா? அல்லது அண்ணன் ஜவாஹிருல்லா ஏகத்துவ கொள்கைக்கு எதிராக என்றாவது பேசியாவது பார்த்திருக்கிறீர்களா? எனவே தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் இயங்காமல் வேறு பெயர்களில் இயங்கினாலும் அது தாய்க் கழகதத்துக்கு பெருமைதானே!

லட்சக் கணக்கான மக்கள் அங்கம் வகிக்கும் தவ்ஹீத் ஜமாத்தில் சில முறுகல்கள் வருவது இயற்கை. பிஜே அண்ணன் ஓரு முக்கியஸ்தரின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் உள்ளனர். :-) சிலருக்கு அரசியல் ஆசை வந்தது. அதனால் தமுமுக என்று பிரிந்து சென்று தங்களின் பணியை செய்து கொண்டுள்ளனர். அங்கும் 50 சதவீதத்துக்கு மேல் தவ்ஹித் வாதிகளே! நிர்வாகத்தில் சில முறுகல்கள் வரலாம். உலக ஆதாயம் கருதி சிலர் தவ்ஹீத் ஜமாத்தை நோக்கி வரலாம். அந்த ஆதாயம் கிடைக்காதவர்கள் சில நாட்களில் விலகியும் செல்லலாம். எனக்கு மரியாதை தரவில்லை என்ற அற்ப காரணங்கள் கூட இந்த ஜமாத்தை விட காரணமாக இருக்கலாம். எத்தனை ஆயிரம் பேர் இவ்வாறு விலகிச் சென்றாலும் தவ்ஹீத் கொள்கையிலிருந்து சிறிதும் பிறழ மாட்டார்கள். எனவே தவ்ஹீத் நாளுக்கு நாள் வளர்கிறதே யொழிய தேயவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து தவ்ஹீத் சகோதரர்கள் கோபமாகவும் வரம்பு மீறியும், தரம் தாழ்ந்தும் விமரிசிப்பதாக குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். தவ்ஹீத்வாதிகள் ஒன்றும் மலக்குகள் அல்ல. அவர்களும் மனிதர்களே. அவ்வாறு எழுதுபவர்களின் பதிவுகளுக்கு சென்று நானும் அறிவுரை வழங்கியுள்ளேன். அவர்களும் திருத்திக் கொண்டுள்ளார்கள்.

குர்ஆனையும் நபி மொழிகளையும் நாம் வாழ்வியலாக கொண்டுள்ளோம். தியாகங்களோடு வாழ்ந்து வரும் நம்மை ஊர் விலக்கம் செய்கிறார்கள்: பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை: இறந்த உடலை அடக்க அனுமதி தருவதில்லை என்ற ஆதங்கத்தினால் சிலரிடமிருந்து கண்ணிய குறைவான வார்த்தைகள் வந்து விடுகின்றன. போகப் போக அவையும் சரியாகும் இன்ஷா அல்லாஹ். தமிழகத்தில் உள்ள அனைத்து சுன்னத் ஜமாத் பள்ளிகளிலும் 'யாரும் எந்த முறையிலும் தொழுது கொள்ளலாம்' என்ற ஒரு சிறு அறிவிப்பை மட்டும் அறிவித்து விட்டால் 90 சதவீதமான ஐந்து வேளை தொழுகையாளிகள் தவ்ஹீத் ஜமாத்துக்கு வந்து விடுவர். ஊர் ஜமாத்துக்கு பயந்து கொண்டே பெரும்பாலான மக்கள் தவ்ஹீத் கொள்கையை மனதுக்குள் வைத்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் சில ஆண்டுகளில் அவர்களும் தங்களை வெளிக்காட்டிக் கொள்வர்.

தர்ஹா வணக்கம், தட்டு தாயத்து, மூரீது, பேய் ஓட்டுதல், மந்திரம், சூன்யம், வரதட்சணை என்று அனைத்து மூடப்பழக்கங்களையும் எவ்வாறு கடந்த 25 வருடங்களாக தவ்ஹீத் ஜமாத் பாடுபட்டு ஒழித்துக் கட்டியதோ அதே வீரியத்தோடு வரும்காலத்திலும் பணியாற்றும் இன்ஷா அல்லாஹ்.

எனவே ஒரு சிலர் விலகுவதை வைத்து அல்லது நீங்கள் இந்த ஜமாத்தை விட்டு விலகுவதை வைத்து தவ்ஹீத் ஜமாத்துக்கு ஏதோ மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டதாக எண்ணி குதூகலிக்க வேண்டாம். ஏக இறைவனையும், நபிகள் நாயகத்தின் உண்மையான சொற்களையும் பரப்புவதையே தனது வேலையாக கொண்டிருக்கும் இந்த தவ்ஹீத் ஜமாத்தை காப்பாற்றும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்வான். அது பற்றிய கவலை உங்களுக்கு தேவையில்லை சகோ.

Monday, April 27, 2015

ரத்ததானம் - நெகிழ வைத்த நிகழ்வு(தங்களின் ரத்தத்தை யாரோ ஒருவருக்கு தானமாக கொடுக்க வரிசையில் நிற்கும் தவ்ஹித் சகோதரர்கள். துபாயில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் லதீஃபா மருத்துவ மனையில் நடத்திய ரத்த தான முகாமையே நாம் படத்தில் பார்கிறோம்.)

நேற்று மாலை நேர தொழுகைக்கு தவ்ஹீத் பள்ளிக்கு தொழச் சென்றிருந்தபோது ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அறுவை சிகிச்கைக்காக இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. அந்த குடும்பத்தினர் ராஜகிரி தவ்ஹீத் ஜமாத் கிளையை அணுகினர். உடன் தவ்ஹீத் சகோதரர்கள் இரண்டு பேர் சென்று ரத்தம் கொடுத்துள்ளனர். ரத்தம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் 1200 ரூபாய் அன்பளிப்பாக ரத்த வங்கியில் அளிப்பார்களாம். அந்த பணத்தை வாங்காது 'அந்த ஏழை குடும்பத்துக்கே அந்த பணத்தை சேர்ப்பித்து விடுங்கள்' என்று அந்த இரு தவ்ஹீத் சகோதரர்களும் சொல்லி விட்டு வந்துள்ளனர்.

யாரோ ஒருவருக்காக தனது ரத்தத்தையும் கொடுத்து அதற்காக அளித்த அன்பளிப்பையும் அந்த ஏழை குடும்பத்துக்கே கொடுத்த அந்த தவ்ஹீத் இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இது போன்ற மனித நேயப் பணி தமிழகமெங்கும் சத்தமில்லாமல் ஏதோ ஒரு மூளையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதே வேளை தவ்ஹீத் ஜமாத்தின் மேல் காழ்ப்புணர்ச்சியால் தினமும் ஏதாவது ஒரு அவதூறுகளும் பரப்பப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டக் கொண்டிருக்காமல் சமூகத்தில் சத்தமில்லாத மறுமலர்ச்சி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர். அந்த சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக ஏகத்தவ வாதிகள் உள்ளனர். இந்த சிறிய அமைப்பு பல ஆண்டுகளாக தமிழகத்தில் ரத்த தானம் கொடுப்பதில் முன்னணியில் இருந்து வருகிறது. சத்தமில்லாத ஆர்பாட்டமில்லாத புரட்சி.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு!எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு :

- புதிய நிர்வாகிகள் தேர்வு!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 16வது பொதுக்குழு ஈரோட்டிலுள்ள பிளாட்டினம் மஹாலில் 26.04.15 ஞாயிறு நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தவ்ஹீத் ஜமாஅத்தின் பைலாவின் படி மாநில மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தியது. மேலாண்மைக்குழு நியமனம் செய்யும் தேர்தல் அதிகாரி ஒருவர் தேர்தலை நடத்துவார் என்ற பைலா விதியின் படி மாநில மேலாண்மைக்குழு நிர்வாகம் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை தேர்தல் அதிகாரியாக நியமித்தது.

அந்த அடிப்படையில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக முன்னின்று புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தினார்.
அதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் :

மாநிலத் தலைவர் : ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி
மாநிலப் பொதுச் செயலாளர் : முஹம்மது யூசுப்
மாநிலப் பொருளாளர் : கலீல் ரசூல்
மாநிலத் துணைத் தலைவர் : எம்.ஐ.சுலைமான்
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்: தவ்ஃபீக்
மாநிலச் செயலாளர்கள் :
எம்.எஸ்.சுலைமான்
சிராஜுதீன்
ஆவடி இப்ராஹீம்
திருவாரூர் அப்துர்ரஹ்மான்
மயிலை அப்துர்ரஹீம்
இ.முஹம்மது
நெல்லை சையது அலி
நெல்லை யூசுப் அலி
சேப்பாக்கம் அப்துல்லாஹ்
இ.ஃபாரூக்

இந்த புதிய நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கின்றோம். தாவா பணிகளை வீரியமாக கொண்டு செல்ல வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
ஷம்சுல்லுஹா ரஹ்மானி
மாநில மேலாண்மைக்குழு தலைவர்

'ஹனபி' அடக்கத் தளம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?நேற்று சகோ அப்பாஸ் அவர்களின் தாயாரின் இறந்த உடலை அடக்க மறுத்த இராஜகிரியின் பெரிய பள்ளியின் அடக்கஸ்தலம் இதுதான். அதன் முகப்பையே நீங்கள் காண்கிறீர்கள். அந்த முகப்பில் பள்ளி நிர்வாகத்தினர் எழுதியிருக்கும் வாசகத்தை கவனியுங்கள். மிகப் பெரிய எழுத்தில் 'ஹனபி' என்று எழுதியுள்ளார்கள்.

இது நபி காட்டித் தந்த வழியா? இஸ்லாத்தில் சாதியை புகுத்துவது முறையாகுமா? நபிகள் நாயகம் இஸ்லாத்தை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தி பல நூறு வருடங்களுக்கு பிறகு சில சட்டங்களுக்கு விளக்கவுரை எழுதியவர் இமாம் அபு ஹனீபா. இவரின் மார்க்க அறிவை நாம் கொஞ்சம் கூட குறைத்து மதிப்பிடவில்லை. அந்த காலத்தில் அவர்களுக்கு கிடைத்த மார்க்க அறிவை பயன்படுத்தி சில மார்க்க சட்டங்களை வகுத்து தந்துள்ளார்கள். இன்றைய கணிணி யுகத்தில் ஷாஃபி, ஹம்பலி, மாலிகி, மற்றும் அனைத்து நபித் தோழர்களின் வாக்கு மூலங்களும் நமக்கு நொடியில் கிடைத்து விடுகின்றன. இவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பல இமாம்கள் தங்களின் புரிதலில் அறியாமல் சில தவறுகளை செய்துள்ளனர். இவ்வாறு தவறுகள் நேர்ந்தால் நீங்கள் நபிகளின் வாக்கையே பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று வாக்கு மூலங்களும் கொடுத்து சென்றுள்ளார்கள்.

ஆனால் ஹனபி இமாமைப் பின்பற்றுபவர்களும் ஷாபி இமாமைப் பின்பற்றுபவர்களும் மத்ஹப் வெறியால் இந்த தவறுகளை ஒத்துக் கொள்வதில்லை. நபி மொழிக்கு மாற்றமாக நடக்கவும் துணிந்து விட்டனர்.

'முஸ்லிம்களின் அடக்கத் தளம்' அல்லது 'இஸ்லாமியரின் அடக்கத் தளம்' என்றுதான் அங்கு எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மார்க்கத்தை விளங்காத பள்ளி நிர்வாகிகள் 'ஹனபி' என்று கொட்டை எழுத்தில் எழுதி தங்களின் சாதி வெறியை தீர்த்துக் கொண்டுள்ளனர். இன்று தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகளை காட்டமாக விமரிசித்து வரும் முஹம்மது ஆஷிக் போன்றவர்கள் பள்ளி நிர்வாகிகளின் இந்த மார்க்க விரோத போக்கைப் பற்றி எந்த விமரிசனங்களையும் வைப்பதில்லை. ஊர் ஜமாத்தார்கள் யாரும் இது பற்றி பள்ளி நிர்வாகிகளிடம் விளக்கமும் கேட்டதில்லை. நபிகள் நாயகத்தின் காலத்திலிருந்து ஹனபி இமாம் காலம் வரை வாழ்ந்த முஸ்லிம்களை எந்த லிஸ்டில் சேர்க்கப் போகிறார்கள் இந்த பள்ளி நிர்வாகிகள்? குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளிலிருந்தோ ஏதேனும் ஆதாரங்களைத் தர முடியுமா? நாளை மறுமையில் இறைவன் 'பள்ளியை நிர்வகிககும் மகத்தான பணியை உன்னிடம் தந்திருந்தேனே! அங்கு ஹனபி இமாமை எந்த ஆதாரத்தில் புகுத்தினாய்?' என்று கேட்டால் என்ன பதிலை இவர்கள் வைத்துள்ளார்கள்? பதில் தருவார்களா?

பள்ளி நிர்வாகம் ஏவக்துவவாதிகளின் கைக்கு மாறுமா?

பள்ளி நிர்வாகம் ஏவக்துவவாதிகளின் கைக்கு மாறுமா?

சகோ முஹம்மது ஆஷிக்!

//அவங்களே இந்தாங்கன்னு ததஜ கையில் தந்தாலும்... வேணாம்... எங்களுக்கு சண்டை போடவும் விவாதிக்கவும் மல்லுக்கட்டவும் ஆளில்லாம போயிடும்..ன்னு சொல்லி ததஜ வாங்கிக்காது.//

நாங்க அப்படில்லாம் சொல்ல மாட்டோம்.... தயவு செய்து நிர்வாகிகளிடம் பேசி அனைத்து பள்ளிகளையும் தவ்ஹீத் ஜமாத் வசம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யவும். புண்ணியமாக போகும் :-) நன்மைகளும் சேரும்.

எங்க நிர்வாகத்தில் சுன்னத் ஜமாத் பள்ளிகள் வந்தால் அன்று மதினா மக்கா பள்ளிகளில் எவ்வாறு நபிகள் நாயகம் நிர்வாகத்தையே பள்ளியில் வைத்து நடத்தினார்களோ அத்தகைய நிலைக்கு பள்ளியை மாற்றுவோம். பள்ளிக்கு அருகிலேயே சமாதிகளை கட்டி வைத்துக் கொண்டு தொழுத மறு நிமிடம் தர்ஹாவில் சென்று பிரார்த்திக்கும் பழக்கம் முதலில் ஒழிக்கப்படும். அனைவரின் ஒப்புதலின் பேரில் அந்த தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்படும்.

இன்று தவ்ஹீத் பள்ளிகளில் கல்லூரி மாணவர்களை அதிகம் காண்கிறேன். மஹரிபிலிருந்து இஷா வரை அந்த இளைஞர்கள் குர்ஆனும் கையுமாக அமர்ந்திருப்பதும் சந்தேகங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதும் எனக்கு அன்றைய சஹாபாக்களை நினைவுபடுத்தியது. விடுமுறை நாட்களில் பெரும்பாலும் அந்த கல்லூரி மாணவர்கள் ஏகத்துவ பள்ளிகளிலேயே தங்கள் ஓய்வு நேரத்தை கழிக்கின்றனர். இலவச குடி நீர் வைப்பது, சாராயத்துக்கு எதிராக போர்டுகள் வைப்பது, அஸரிலிருந்து மஹ்ரிப் வரை பள்ளி வளாகங்களிலேயே கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது என்று ஏகத்துவவாதிகளாக மாறிய இளைஞர்களை பார்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

ஆனால் இன்று சுன்னத் ஜமாத் பள்ளி வாசல்களின் பெரும்பாலான நிர்வாகம் ஐந்து வேளை தொழுகாத பெரும் பணக்காரர்களின் கைகளில் உள்ளது. ஏகத்துவ வாதிகளின் கைகளில் நிர்வாகம் வந்தால் இந்த நிலை மாறி ஐந்து வேளை தொழக் கூடிய வட்டி வாங்காத, விபசாரம் புரியாத, சாராயம் அருந்தாத, பள்ளி வாசல் சொத்தை ஆட்டய போடாத திறமைமிக்கவர்கள் பள்ளியின் நிர்வாகிகளாக வருவர். ஏனெனில் இன்று பெரும்பாலான சுன்னத் ஜமாத் பள்ளி நிர்வாகிகளிடம் இஸ்லாமிய நடவடிக்கைகள் முற்றிலுமாக அழிந்துள்ளது. சில சுன்னத் ஜமாத் பள்ளி வளாகங்களில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சாராயம் அருந்தும் கொடுமையும் நடந்து வருகிறது.

இவை எல்லாம் மாறி நபிகள் நாயகம் காலத்திய சூழல் பள்ளிகளில் காண விரும்பினால் ஹனபி, ஷாபி, ஹம்பலி, மாலிக்கி என்று சாதி சங்கங்களைப் போன்று பள்ளி பெயர்கள் இல்லாமல் தவ்ஹீதை பறை சாற்றும் பள்ளிகளாக மாற ஒரே வழி பள்ளியின் நிர்வாகம் ஏகத்துவ வாதிகளின் கைகளுக்கு மாறுவதே ஆகும்.

முன்பு ஊருக்கு இரண்டு ஏகத்துவ வாதிகள் இருந்தனர். தற்போது ஊரில் சரிபாதி ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் உள்ளனர். இன்னும் ஒரு இருபது ஆண்டுகளில் 90 சதவீதமாக ஏகத்துவவாதிகள் மாறியவுடன் மத்ஹப் (சாதி) பெயர்களால் இயங்கும் அனைத்து பள்ளிகளும் ஏகத்துவ பள்ளிகளாக மாறும் இன்ஷா அல்லாஹ்.

தமிழகத்தைப் பொருத்த வரை அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

Sunday, April 26, 2015

மேகாலயாவில் அமீத்ஷாவுக்கு மாட்டுக் கறியோடு வரவேற்பு!பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர சங் பரிவாரங்களின் இந்துத்துவ பாசிச தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதில் தமிழகம் தனித்து இல்லை என்பதற்கு சான்று பகர்கிறது மேகாலயா மாநிலத்தில் நடந்திருக்கும் போராட்டம்.

பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித் ஷா வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மேகாலயா மாநிலத்திற்கு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சென்றார். அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைநீயூவ்ட்ரெப் தேசிய விடுதலை இயக்கம் – Hynniewtrep National Liberation Council (HNLC) 12 மணிநேர பந்த்-க்கு அழைப்பு விடுத்தது. நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்கள் மீது நிகழ்த்தப்பட்டு வருகின்ற தாக்குதல்களை கண்டித்து இந்த பந்த் நடத்தப்பட்டது.

HNLC, த்மா யூ ரங்க்லி-ஜுகி (TUR) என்ற அமைப்பு, மற்றும் காசி தேசிய ஒன்றியம் ஆகிய அமைப்புகள் மாட்டுக்கறி விருந்தை பா.ஜ.க.வின் மாநில தலைமையகத்திற்கு முன்பாக நடத்தியது.

“இது வெறுமனே மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் மட்டும் அல்ல; சங் பரிவார அமைப்புகள் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துவதை கண்டிக்கும் ஆர்ப்பாட்டம்” என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலா ரிங்காட் தெரிவித்தார். மேலும், பா.ஜ.க கட்சியினரை “வெறுப்பின் தூதர்கள்” என்று அழைக்கும் ஏஞ்சலா, “கர் வாபஸி, நில கையகப்படுத்தல் சட்டம், மேக் இன் இந்தியா திட்டம் போன்ற நம்மை அடிமைப்படுத்தும் வெறுப்பு பிரச்சாரம் அனைத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம்” என்கிறார். இந்தப் போராட்டத்தை உரிமைக்கான விருந்து (Feast for Right) அவர் அழைக்கிறார்.

வெவ்வேறு பின்னணி கொண்ட பல்வேறு தரப்பு மக்கள் இந்த போராட்டத்துக்கு அணிதிரண்டனர். மேலும், பந்த் அழைப்பை மதித்து பள்ளிகள், அலுவலகங்கள், வங்கிகள், கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் அனைத்தும் அமித்ஷா வருகை புரிந்த அன்று மூடப்பட்டிருந்தன.

அமித்ஷாவின் நிகழ்ச்சி நடந்த அரங்கத்திற்கு முன் செல்ல போலீஸ் அனுமதி மறுத்ததால், ஷில்லாங்கில் கவர்னர் மாளிகை மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைமையகம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தனது உரையில் காங்கிரஸ் கட்சியை மட்டும் குறை கூறிவிட்டு தப்பிச் சென்றுள்ளார், அமித்ஷா.

மாநில பா.ஜ.க தலைவர் க்லுர் சிங் லிங்டோ மாட்டுக்கறி உண்பதை ஆதரித்து ஊடகங்களுக்கு பேட்டி வழங்கியிருந்தார். அது தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தமிழிசை சவுந்தரராஜன் வடிக்கும் முதலைக் கண்ணீரை போன்றது.

எட்டு வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதாக மேற்கொண்டிருக்கும் பயணத்தில் மூன்றில் மட்டும் தான் தனது சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார் அமித்ஷா. மற்ற மாநிலங்களில் அமித்ஷா சந்திக்கப் போகும் எதிர்ப்பின் தன்மை பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

A 'beef party' and a bandh greeted BJP president Amit Shah who visited the Meghalaya on Wednesday as part of his north-east tour seeking to strengthen party base and urging workers to make public the alleged corruption by ruling Congress party in Meghalaya.

While the beef party was organised by the Thma U Rangli Juki (TUR), a pressure group, the bandh was imposed by the proscribed militant group, the Hynniewtrep National Liberation Council.

Leaders of the TUR and the Hynniewtrep National People's Front (HNPF), Khasi National Union (KNU) organised the beef party near the party's office in the city as the BJP president arrived to address party workers and to hold meeting with regional political parties.


Security personnel were seen having a tough time trying to stop the members of the NGOs who attempted to take out a protest march to the state's Conventional Hall, where Shah was convening a party meeting.

தகவல் உதவி
இந்தியா டுடே
வினவு தளம்

பிஜேபி ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மாட்டுக் கறி சாப்பிடாதவர்களும் தற்போது சாப்பிட ஆரம்பித்துள்ளனர். மோடி பதவி ஏற்றவுடன் ஏற்பட்ட மாற்றங்களுல் தலையாய மாற்றம் இது. இது போன்ற தடைகளை நிறைய போட்டு மாட்டுக் கறி விற்பனையை பிஜேபியினர் மேலும் அதிகப்படுத்துவார்களாக!!

http://indiatoday.intoday.in/story/amit-shah-welcomed-with-a-beef-party-in-meghalaya/1/431640.html

http://www.vinavu.com/2015/04/24/amit-shah-welcomed-with-a-beef-party-in-meghalaya/

Saturday, April 25, 2015

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி புனித மெக்காவில்!அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மெக்காவுக்கு வருகை புரிந்தார். மெக்காவில் உள்ள நஸீம் ஏரியாவில் நடந்து வரும் நபிகள் நாயகத்தின் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக மெக்கா வந்திருந்தார் சாரா உமர். இது பற்றி அவர் பேட்டியளிக்கும் போது...

"இஸ்லாம் அன்பையும் கருணையையும் போதிக்கிறது. ஆனால் இதற்கு மாற்றமாக ஒரு சிலர் இஸ்லாம் என்றாலே வன்முறை மார்க்கம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். சவுதி அரேபிய அரசு இஸ்லாத்தின் உன்னதமான கொள்கைகளை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்காவையும் மதினாவையும் விரிவுபடுத்தும் மிகப் பெரும் பணியை செய்து வரும் சவுதி அரசை பாராட்டுகிறேன். இந்த கண்காட்சியில் கலந்து கொண்டதற்காக மிகவும் மகிழ்கிறேன். இதே போன்ற கண்காட்சிகளை மற்ற நாடுகளுக்கும் சவுதி அரசு விரிவுபடுத்தி இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிம்பத்தை களைய முயலவேண்டும். இந்த கண்காட்சியில் பங்கு பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன்" என்றார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டார் சாரா உமர். இவரது மகன் சயீத் ஒபாமாவோடு இந்த பயணத்தை மேற்கொண்டார். பேரன் மூஸா ஒபாமாவும் சேர்ந்து வந்திருந்தார். அனைவரும் புனித உம்ரா பயணத்தையும் மேற்கொண்டனர்.

இவர்களைப் போன்றே பராக் ஒபாமாவும் தூய இஸ்லாத்தை விளங்கிக் கொள்வாராக! உலகில் அமைதியை நிலை நாட்ட தன்னால் ஆன முயற்சிகளை எடுப்பாராக!

தகவல் உதவி
அரப் நியூஸ்
22-04-2015

நபி வழியில் உடலை அடக்கம் செய்ய மறுத்த நிர்வாகம்!

24-04-2015 அன்று இரவு தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் உள்ள செக்கடித் தெருவில் சகோதரர் அப்பாஸ் அவர்களின் தாயார் மும்தாஜ் அம்மாள் அவர்கள் சுகவீனம் காரணமாக இறந்து விட்டார். மறுநாள் காலையில் உடலை அடக்கம் செய்ய வேண்டும். இறந்தவர் உயிரோடு இருக்கும் போது 'தன்னை நபி வழியில் அடக்கம் செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார். சகோதரர் அப்பாஸ் ஓரிறைக் கொள்கையை (ஏகத்துவம்) ஏற்றுக் கொண்டிருப்பதால் தனது தாயாருக்கு தானே தொழ வைப்பதாக சொல்லியுள்ளார். இதனை ராஜகிரி பெரிய பள்ளி நிர்வாகிகள் ஒத்துக் கொள்ளவில்லை. பள்ளியின் இமாம் தொழ வைத்தால்தான் மையவாடி (கபுர்ஸ்தான்) யில் அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்பது பள்ளி நிர்வாகிகளின் வாதம்.

தகடு, தாயத்து, மவுலூது, கபுர் வணக்கம், ஃபாத்திஹாக்கள் என்று இணை வைப்பிலும் மூடப்பழக்கத்திலும் மூழ்கி திளைத்துக் கொண்டு அதனை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை பின்பற்றி நான் எப்படி தொழுவது? என்பது சகோ அப்பாஸின் வாதம். எனது தாயாருக்கு கடைசி மரியாதையான பிரார்த்தனை தொழுகையை என்னை தொழ வைக்க அனுமதியுங்கள் என்று அப்பாஸ் அலி பிடிவாதமாக இருக்க பள்ளி நிர்வாகிகளும் அனுமதி தர மாட்டோம் என்று சொல்ல விஷயம் காவல் துறை வரை சென்று விட்டது. பிறகென்ன... ராஜகிரி கடைத் தெரு முழுக்க காவல்துறையினர்தான். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு வந்தனர். பிறகு காவல் துறை ஆய்வாளர், அரசு அதிகாரிகள் முன்னிலையில் பள்ளி அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இரண்டு பக்கத்திலும் ஐந்து ஐந்து பேராக அமர்ந்து காரசாரமான பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதற்கிடையில் நேரமாகிக் கொண்டே செல்வதால் சகோ அப்பாஸ் அவர்களின் வீட்டில் எல்லோரும் குழுமி தொழுகை நடத்த தயாரானோம். இறந்து போன தனது தாயார் யாருக்கும் கடன் பாக்கி வைத்திருந்தால் அதற்கு தான் பொறுப்பேற்பதாக சகோ அப்பாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு தனது தாயாருக்காக பிரார்த்தனை தொழுகையை சகோதரர் அப்பாஸ் அவர்களே நடத்தினார். அதிக எண்ணிக்கையில் மக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் இறந்த உடலை எடுத்துக் கொண்டு அடக்கம் செய்ய மையவாடியை நோக்கி பயணித்தோம். மையவாடிக்கருகில் உடலை கொண்டு வந்தவுடன் 'பேச்சு வார்த்தை முடியவில்லை. அதற்குள் உடலை ஏன் கொண்டு வந்தீர்கள்' என்று காவல் துறை ஆட்சேபணை தெரிவிக்கவே அனைவரும் உடலை எடுத்துக் கொண்டு ராஜகிரி மெயின் ரோட்டுக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 10 நிமிடத்துக்கு போக்குவரத்து தடைபட்டது. உடன் காவல் துறையினர் குறுக்கிட்டு 'உடலை அடக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். தயவு செய்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டதற்கினங்க உடலை ஓரமாக வைத்து போக்குவத்துக்கு வழி விட்டனர்.

இதன்பின் ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு 'மூன்று மாதத்துக்குள் அடக்கத் தளம் உங்களுக்கு தனியாக ஒதுக்கித் தருகிறோம்' என்ற உத்தரவாதத்தின் பேரில் உடலை அடக்க பள்ளி நிர்வாகம் அனுமதி தந்தது. அடக்கத்தளத்தின் பூட்டும் திறக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் குழி வெட்டி முடிக்கப்பட்டு சகோ அப்பாஸ் விரும்பியபடி நபி வழியில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நின்ற அனைவரும் அவரின் தாயாருக்காக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களாக களைந்து சென்றோம்.

பள்ளி நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகள்...

வட்டி வாங்கி வாழ்வை ஓட்டுபவன், விபசாரம் செய்பவன், பள்ளி வாசல் சொத்தை திருடி தின்பவன், பங்காளிக்கு துரோகம் செய்பவன், சாராயம் குடிப்பவன் என்று இவர்களை அடக்கம் பண்ணுவதற்கு உங்கள் நிர்வாகம் எந்த தடையும் விதிப்பதில்லை. ஆனால் நபி அவர்களும் குர்ஆனும் காட்டித் தந்த வழியில் ஒருவன் வாழ முயற்சித்தால் அவர்களுக்கு உங்களால் முடிந்த தொல்லைகளை தருகிறீர்கள். தாயை இழந்து ஏற்கெனவே சோகத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கையாளனை மேலும் மன உளைச்சலைக் கொடுத்து சந்தோஷப்படுகிறீர்கள். இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். ஒரு நரம்பை இறைவன் பிடித்து இழுத்தான் என்றால் உங்கள் கதி அதோ கதி தான். இறைவனின் கோபம் மிகக் கடுமையானது. சிறிதாவது மார்க்கத்தை விளங்க முயற்சி செய்யுங்கள். இறைவன் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக!

Friday, April 24, 2015

தூக்கில் தொங்கிய பெரியவர் - நேரடி அனுபவம்இன்று மாலை 5 மணி இருக்கும். சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன். குடமுருட்டி ஆற்றங்கரையோரம் சிலர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். என்ன விஷயம் என்று விசாரித்தேன். 'ஒரு பெரியவர் தூக்கில் தொங்குகிறார்' என்று சொல்லி விட்டு ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்தார். அவரின் ஆர்வம் எனக்கும் தொற்றிக் கொள்ளவே நானும் அவரை பின் தொடர்ந்து சென்றேன்.

தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை கிராமத்தை ஒட்டி குடமுருட்டி ஆறு ஓடுகிறது. அதன் அருகில் மரங்களும் செடிகளும் அடர்ந்து காணப்பட்டன. அந்த புதர்களுக்கிடையில் ஒரு மரத்தின் கிளையில் தனது துண்டால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். ஒருவர் தூக்கில் தொங்குவதை முதன் முதலாக அப்போது தான் நேரிடையாக பார்க்கிறேன். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் பந்து அந்த புதர்களுக்குள் சென்று விடவே அதனை எடுக்க சென்ற போதுதான் ஒருவர் தூக்கில் தொங்குவதை பார்த்துள்ளனர். அதன் பிறகுதான் செய்தி வெளியே தெரிந்துள்ளது. சிறிது நேரத்தில் இரண்டு கான்ஸ்டபிள்களும், கிராம அதிகாரிகளும் வந்தனர். தூக்கில் மாட்டிக் கொண்டு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம்தான் ஆகி இருக்கும் என்று பேசிக் கொண்டனர். தூக்கில் தொங்கிய அவரை போலீஸார் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

'யோவ்... யாராவது மேலே ஏறி கயிற்றை வெட்டி விடுங்கய்யா' போலீஸின் சற்று மிரட்டலான குரல்....

பலரும் பயத்தில் பின் வாங்கினர். ஒருவர் தணிச்சலாக மரத்தில் ஏறி மரத்தில் இறுகிய துண்டை வெட்டி விடவே பிணம் 'பொத்தென்று' கீழே விழுந்தது. மூன்று பேர் பிணத்தை புதரிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வந்து போட்டனர். இந்து சமுதாயத்தை சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி என்று பலரும் அடையாளம் கண்டனர். ஆனால் அவரது பெயரோ ஊரோ இன்னதென்று தெரியவில்லை. எனது செல்லிலிருந்து ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தூக்கிச் சென்றது. கூட்டமும் களைய ஆரம்பித்தது. வயது ஏறத்தாழ 70 இருக்கும். இந்த வயதில் என்ன மன அழுத்தமோ என்ன கவலையோ அந்த பெரியவருக்கு! தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'இறைவனுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

இறைவன் கொடுத்த இந்த சிறந்த உயிரை நாமாக போக்கிக் கொள்ள நமக்கு உரிமையில்லை. எந்த சிக்கல் வந்தாலும் அதனை இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு மனதை லேசாக்குவோம். மனச்சிதைவிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

Thursday, April 23, 2015

ஆப்கானிஸ்தானில் மதத்தின் பெயரால் பெண் கொடுமை!ஆப்கானிஸ்தான் ஏற்கெனவே சோவியத் ரஷ்யாவாலும், அமெரிக்கர்களாலும் சிக்கி நிம்மதியிழந்து தவிக்கிறது. இது போதாதென்று இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக விளங்காத பல முல்லாக்கள் வேறு அந்த மக்களை கொடுமைபடுத்தி வருகின்றனர். அந்நாட்டு மக்களின் இஸ்லாமிய நம்பிக்கையை சில முல்லாக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தொடர்ந்த போர் காரணமாக பெரும்பாலான மக்களிடம் படிப்பறிவும் இல்லை. இஸ்லாமிய மார்க்க அறிவும் இல்லை. மந்திரம், தாயத்து போன்ற மூடப் பழக்கங்களில் அந்த மக்கள் மூழ்கி திளைக்கின்றனர். இதனைக் கண்டிக்க வேண்டிய மார்க்க அறிஞர்களோ மூடப்பழக்கங்களை மேலும் வளர்கின்றனர்.

சென்ற மாதம் 27 வயதே நிரம்பிய ஃபக்ருந்தா என்ற இளம் பெண்ணின் மேல் அபாண்டமாக பழியை சுமத்தினார் தாயத்துகளை விற்று பிழைப்பு நடத்தும் ஒரு மத வியாபாரி. இவரின் பேச்சை நம்பிய அந்த கிராமத்து மக்கள் அந்த பெண்ணை அடித்தே கொன்று விட்டனர். இது ஆப்கானிஸ்தான் முழுக்க சமூக ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குர்ஆனை விளங்காத மார்க்க அறிஞர்களின் ஃபத்வாக்களால் ஆப்கானிஸ்தானில் பல பெண்களின் வாழ்வு கேள்விக் குறியாகி உள்ளது.

முகத்தை முழுவதுமாக மூட வேண்டும்: கல்லூரிக்கு செல்லக் கூடாது: ஆண்களோடு பேசக் கூடாது என்று சகட்டு மேனிக்கு ஃபத்வாக்களை வாரி வழங்குவதில் இந்த முல்லாக்கள் கில்லாடிகள். இதற்கு குர்ஆனின் ஆதாரத்தையோ, நபிகளின் கட்டளைகளையோ சமர்ப்பிப்பதில்லை. இவர்களின் அடாவடிகளை தட்டிக் கேட்டால் இஸ்லாமிய நிந்தனையாகி விடுமோ என்ற அச்சத்தில் பலர் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.

'தாடியும் பெரிய தலைப்பாகையும் கட்டியவர்கள் எல்லாம் மார்க்க அறிஞர்களாகி விட முடியாது. குர்ஆனை சரியான முறையில் விளங்கியவர்களே மார்க்க அறிஞர்களாக முடியும். இதனை பொது மக்கள் நன்கு உணர வேண்டும்' என்று ஆப்கானின் மத விவகாரங்களுக்கான துணை மந்திரி தையுல் ஹக் ஆபித் மக்களுக்கு அறிவுருத்தி உள்ளார். படத்தில் அமர்ந்துள்ள கள்ள முல்லா ஜூம்மா கான் தனனை நாடி வரும் பக்தர்களுக்கு சகட்டு மேனிக்கு தட்டு தாயத்துகளை எழுதிக் கொடுத்த வண்ணம் உள்ளார். சிலருக்கு வெள்ளை பச்சை துணிகளில் அரபியில் எதையோ எழுதி ஊதி விட்டு தலையில் கட்டி விடுகிறார். மார்க்க அறிவு இல்லாத அந்த மக்களும் இதனை உண்மை என்று நம்பி தங்களின் பொருளாதாரத்தை இழக்கின்றனர்.

இதே போன்ற நிலைதான் முன்பு தமிழகத்திலும் இருந்தது. கடந்த 25 ஆணடுகளாக தொடர்ந்த பிரசாரத்தின் காரணமாக இன்று ஓரளவு மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது எனது வீட்டிலேயே தட்டு தாயத்துகள் எல்லாம் பிரபலம். நாகூர் தர்ஹாவுக்கும் வருடம் ஒருமுறை பெண்கள் சென்று வந்து விடுவர். இன்று அந்த நிலை எனது தீவிர முயற்சியால் 90 சதவீதம் மாற்றப்பட்டு விட்டது. இதே போன்று ஒட்டு மொத்த தமிழக இஸ்லாமிய குடும்பங்களில் சத்தமில்லாத ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. மார்க்க அறிஞர்கள் எதைச் சொன்னாலும் அதற்கு குர்ஆனின் ஆதாரத்தை கேட்கும் மக்களாக தமிழக முஸ்லிம்கள் மாறி உள்ளனர். இதே போன்ற ஒரு எழுச்சி ஆப்கானிஸ்தானத்தில் ஏற்படாத வரை அந்த நாட்டுக்கு எந்த அரசியல் கட்சிகளாலும், அல்லது எந்த அண்டை நாடுகளாலும் விமோசனம் ஏற்பட வாய்பில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
23-04-2015

இறை தேடல் அவசியமில்லாத ஒன்றா?

திரு மோகன்!

//இஸ்லாமியர் எல்லோருக்கும் ஒரே பெயர் வைக்கவேண்டியது தானே ?எதற்கு இத்தனைப் பெயர்கள் !எல்லோரும் ஒரே உணவை உண்ணவேண்டியது தானே !எல்லோரும் ஒரே முகம் இல்லை உடையணிவில்லை ஒரே நோயும் இல்லை ! மதத்தை மாற்றியதோடு வியாதிகளையும் ஒரே மாதிரி மாற்றிக்கொள்ளலாமே ? பேதம் தேவைப்படுகிறதல்லவா ?//

பெயர்கள் வெறு வேறாக இருப்பதும் மனிதர்களின் நிறம், முகம் போன்றவை வேறு வேறாக இருப்பதும் நாம் ஒருவரையொருவர் அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவே! ஒரே முக சாடையில் உள்ள இரு கதாநாயகர்கள் நம் சினிமாக்களில் எத்தனை ஆள் மாறாட்டம் செய்கின்றனர். நிஜத்திலும் அவ்வாறு நடப்பதை நாம் அறியாதவரல்ல. எனவே இந்த வித்தியாசங்கள் இந்த பூமிக்கு அவசியமாகிறது.

ஆனால் நம்மை படைத்த இறைவன் ஒருவனைப் பற்றிய சிந்தனையை இதோடு போட்டு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. நமக்கு இறைவன் கொடுத்த அறிவை உபயோகப்படுத்தி அவன் நமக்களித்த இறை வேதங்களை ஆய்வுகள் செய்து நம்மைப் படைத்த இறைவன் யார் என்ற ஆய்வில் இறங்க வேண்டும். ஒரு சட்டை வாங்குவதற்கு எத்தனை கடை ஏறி இறங்குகிறோம். ஒரு நகை வாங்க 10 கடைகளாவது ஏறி இறங்குவோம். அற்ப பொருட்களுக்கே இவ்வளவு நேரம் செலவழிக்கும் நாம் நமக்கு அழகிய உடலை வழங்கி சிறந்த உறவினர்களை வழங்கி கௌரவமான வேலையையும் தந்து பொருளாதாரத்தில் நம்மை சிறப்பிக்க வைத்துள்ள அந்த இறைவனை தேடி அவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா?

நேரமில்லை என்றும் சொல்ல முடியாது. சராசரியாக ஒரு மனிதன் வேலை பார்க்கும் நேரம் 8 மணிகளே. மற்ற 16 மணி நேரங்களில் நம்மை படைத்த இறைவனை தேட தினம் ஒரு மணி நேரம் நம்மால் செலவழிக்க முடியாதா? சிந்தித்து பாருங்கள் வழி பிறக்கும்.

//சூழ்ச்சி இராமகோபாலன் =பெரும் சூழ்ச்சி அல்லாஹ
ஆகவே இதனபடி இந்துகள் சின்ன சூழ்ச்சிகாரர்கள் !இஸ்லாமியர்கள் பெரும் சூழ்ச்சிகாரர்கள் என்பது நிறுபனமாகின்றது !//

இறைவனுக்கு ராம கோபாலன் என்ன? அனைத்து இந்துத்வாவாதிகளும் ஒன்று திரண்டாலும் ஒரு நிமிடத்தில் அவர்களை அழித்து விடும் சக்தி கொண்டவனே! அதே நேரம் நீங்கள் கூறும் விதி என்ற ஒன்றை இறைவன் நமக்கு ஏற்படுத்தியுள்ளான். அவன் வகுத்தளித்த விதியின் படி காரியங்கள் நடப்பதால் இறைவன் அவர்களை விட்டு வைத்துள்ளான்.

அதே நேரம் தன்னுடைய அடியார்கள் தன்னிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனையை ஏற்று எழுதிய விதியை தானே மாற்றி அமைப்பதாகவும் கூறுகிறான். சூழ்ச்சி என்பது மறைமுகமாக ஒருவனை தாக்குவது. அவன் அறியாமல் அவனை வீழ்த்தும் கோழைத்தனம். அவன் எடுத்த அந்த அஸ்திரத்தையே இறைவனும் எடுப்பதாக இங்கு கூறுகிறான். இதனால் அந்த இறைவனுக்கு அதற்கு மேல் சக்தியில்லை என்ற முடிவுக்கும் நாம் வந்து விடக் கூடாது.

Saturday, April 18, 2015

சானியா மிர்ஸாவுக்கு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு!டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் முதல் டென்னிஸ் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ள சானியா மிர்ஸாவை ஏ ஆர் ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

அன்பு நண்பர்களே!

பெண்களுக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டுள்ளோம். அதே நேரம் இந்திய கிராமங்களிலும் நகரங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு ஏதும் செய்ய இயலாதவர்களாக அதற்கு சாட்சியாகவும் நின்று கொண்டுள்ளோம்.

ஆனால் இந்திய மகளான சானியா மிர்ஷா இந்த தடைகளை உடைத்து இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார். நம்முடைய குறிக்கோள் சிறந்ததாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதனை இவரது சாதனை மெய்ப்படுத்துகிறது. இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

இந்தியாவின் எனது சகோதரி சானியா மிர்ஸா என்னவொரு சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார்! இவரது சாதனையை கண்டு பரவசத்தில் ஆழ்ந்துள்ளேன். இவரது இந்த சிறந்த சாதனையை நாமும் கொண்டாடுவோம்.

- ஏ. ஆர். ரஹ்மான்

ஜமாலியின் புகாரை வாங்க மறுத்த கமிஷனர் ஜார்ஜ்!

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ள பச்சை நிற டூம் அன்னை ஆயிஷா அதனை வீடாக பயன்படுத்தியபோது இருக்கவில்லை. இது போன்று தனது அடக்கத்தலத்துக்கு மேல் கட்டடம் கட்டச் சொல்லி இறைத் தூதரும் சொல்லவில்லை. அதற்கு எதிராகத்தான் சொல்லியுள்ளார்கள். அவ்வாறு கட்டுபவர்களை நபிகள் நாயகம் சபித்துள்ளார்கள். முதன் முதலாக சுல்தான் கலாவூன் சாலிஹி என்ற ஆட்சியாளர் ஹிஜ்ரி 678ல் மரியாதை நிமித்தமாக மரத்தால் ஆன ஒரு டூமை நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தின் மேல் கட்டுகிறார். அதன் பிறகு சிமெண்டால் கட்டப்பட்டு வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு பிறகு ஹிஜ்ரி 1253ல் துருக்கி உதுமானிய சுல்தான் அப்துல் அல் ஹமீத் அந்த டூமின் மேல் பச்சை வர்ணத்தை பூசுகிறார். அதுவே இன்று வரை தொடர்கிறது. தற்போதய ஆட்சியாளர்களிடம் சவுதி அரேபியாவை ஒப்படைக்கும் போது 'தாங்கள் செய்வித்த மாற்றங்களை இடிக்க வேண்டாம் அப்படியே விட்டு வைத்திருங்கள்' என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். தராவீஹ் மெக்காவில் இருபது ரக்ஆத்துகள் தொழ வைக்கப்படுவதும் இதனை பின் பற்றியே. அந்த ஒப்பந்தத்தை மீற முடியாமல்தான் சவுதி அரசு அந்த பச்சை நிற டூமை தகர்க்காமல் விட்டு வைத்துள்ளார்கள். காவலர்களையும் அங்கு நிறுத்தி வணங்க முற்படுபவர்களை தடுத்து நிறுத்தி பள்ளிக்கு தொழ அனுப்புவார்கள். எனவே மதினாவில் உள்ள அந்த டூமுக்கு எந்த புனிதத்துவமும் இல்லை என்பதை இதிலிருந்து விளங்குகிறோம். இதை சுட்டிக் காட்டித்தான் டிஎன்டிஜே யின் தலைவர் சையது இப்றாஹிம் 'இஸ்லாமிய சட்டங்களின் படி அந்த டூம் இடிக்கப்பட வேண்டும்' என்று கூறியது. இதனை இவர் இன்று புதிதாக சொல்லவில்லை. பல அறிஞர்கள் இதற்கு முன்பே மதினாவில் உள்ள டூமை இடிக்க வேண்டும் என்ற மார்க்க கட்டளையைக் கொடுத்துள்ளனர்.

தர்ஹாக்களை வைத்தே பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் மார்க்க கோமாளி ஜமாலி கமிஷனர் ஜார்ஜிடம் சென்று சையது இப்றாஹிமை கைது செய்ய புகார் அளித்தாராம். ஆனால் அதற்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். வெளி நாட்டில் உள்ள ஒரு கட்டிடத்தை பற்றிய விமரிசனங்களுக்கெல்லாம் இங்குள்ள காவல்துறை எதன் அடிப்படையில் கைது செய்யும் என்ற அடிப்படை அறிவு கூட ஏழு வருடம் மதராஸாவில் ஓதிய இந்த மார்க்க கோமாளிக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. :-) இது போன்ற இரண்டாந்தர ஆலிம்களிடம் மார்க்க அறிவும் இல்லை. உலக அறிவும் இல்லை. ஜமாலி போன்றவர்கள் மார்க்கத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் என்பது தெரிந்தும் இவருக்குப் பின்னாலும் இன்னும் ஒரு சிலர் இருந்து வருவது மேலும் ஆச்சரியத்தை தருகிறது.

சையது இப்றாஹிம் சில நேரம் வார்த்தைகளை சற்று கடுமையாக பிரயோகிப்பதை நானும் ஆதரிக்கவில்லை. அதனை பல பதிவுகளில் சுட்டிக் காட்டியும் இருக்கிறேன். ஆனால் அதனை காரணமாக வைத்து அவர் சொல்லும் எல்லாவற்றிலும் குறை கண்டு அதனை பதிவுகளாக்கி சிலர் மகிழ்கின்றனர். ஒருவர் தனது பின்னூட்டத்தில் 'உணர்வு அலுவலகத்தில் பத்திரிக்கை பண்டல் போட்டுக் கொண்டிருந்தவர் சையது இப்றாஹிம்' என்று கிண்டலடிக்கிறார். பத்திரிக்கை பண்டல் போட்டுக் கொண்டிருந்தவர் மார்க்கம் சொல்லக் கூடாதா? இது போன்ற சாமான்யர்களையும் மார்க்க மேதைகளாக மாற்றியது குர்ஆனின் எளிய நடை என்றால் மிகையாகாது. எனவே விமரிசனம் வையுங்கள். அது ஆக்கபூர்வமாக இருக்கட்டும்.

வீண் அபாண்டங்களையும் பழிச் சொற்களையும் சுமத்தி தவ்ஹீத் ஜமாத் பிரசாரகர்களுக்கு மேலும் நன்மையை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஏனோ அவர்கள் அறிவதில்லை. :-) தவறிலும் ஒரு நன்மை என்று இதனை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

Friday, April 17, 2015

நபிகள் நாயகத்தின் சில அறிவுரைகள்!

நபிகள் நாயகத்தின் சில அறிவுரைகள்!

'இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் ' 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய பயணம் இறைவனும் அவனது தூதரும் சொன்ன கட்டளையின்படி அமையுமோ அவரின் பயணத்தை அவ்வாறே இறைவன் கருதுவான். மேலும் எவருடைய பயணம் உலகத்தை குறிக்கோளாக கொண்டிருக்குமோ அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் நோக்கமாக இருக்குமோ அவர் நினைத்ததற்க்கேற்பவே அவரது பயணம் அமைந்து விடுகிறது.'

அறிவிப்பவர் உமர் கத்தாப்

ஆதாரம் புஹாரி 54

இந்த நபி மொழியிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

1. நாம் செய்யும் எந்த காரியத்திற்கும் இறைவனின் பொறுத்தம் இருக்கிறதா என்று தேர்ந்தெடுத்து செய்தால் அதற்குரிய கூலியை இறைவன் தந்து விடுகிறான். அது வணக்கமாகவும் கருதப்படுகிறது.

2. எண்ணங்களின் பிறப்பிட்ம் உள்ளமாகும். அந்த உள்ளத்தை தூய்மையாக்கி செய்யும் காரியத்தை இறைவன் விரும்புகிறான். அதற்கான கூலியையும் இந்த உலகிலும் மறு உலகிலும் தருகிறான்.


இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் : 'மென்மை எதில் இருந்தாலும் அந்த காரியத்தை அந்த மென்மை அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும்'

-அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா
ஆதாரம்: முஸ்லிம் 2594

பதிவு எழுதுதல், அழைப்புப்பணி, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளை நேர்வழிப்படுத்துதல் என்று எந்த காரியத்திலும் மென்மையான முறையையே நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த நபி மொழி நமக்கு கற்றுத் தருகிறது. குறிப்பாக அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு மென்மையும் பொறுமையும் அவசியமாகும். சொல்லவரும் விஷயத்தை சற்று கடுமையாக சொன்னோம் என்றால் கேட்பவர் கூட அலட்சியம் செய்து சென்று விடுவர். தற்போது இணையத்தில் ஒரு இயக்கத்தவர் மற்ற இயக்கத்தவரைப் பற்றி அவதூறு பெசுவதும் நரகல் நடையில் ஏசிக் கொள்வதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. மேற்கண்ட நபி மொழிகளை பார்த்து தங்களை அந்த நபர்கள் திருத்திக் கொள்வார்களாக!

புரோட்டா பிரியர்களுக்கு சில பகீர் தகவல்கள்!சிலருக்கு பரோட்டா சாப்பிட்டால்தான் தூக்கமே வரும். அந்த அளவுக்கு பரோட்டாவுக்கு அடிமையானவர்கள் பலர் நம்மில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான். இதையே பல ஊர்களில் பலவிதமாகச் செய்கிறார்கள். மதுரை பக்கம் போனால் சும்மா மெத்மெத்தென்று அடித்த மாவில் செய்த சுவையான பரோட்டா கிடைக்கும். விருதுநகர் பக்கம் சென்றால் எண்ணெயில் சுட்ட பொறித்த பரோட்டா கிடைக்கும். அப்படியே செங்கோட்டை பார்டர் கடைக்குச் சென்றால் கோழிக்குழம்புடன் அள்ளி அள்ளி விழுங்கத் தோன்றும் சுவையான பரோட்டா கிடைக்கும். இப்படி ஒவ்வொரு பரோட்டா பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.

பரோட்டாவுக்கு பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது பரோட்டா வரலாறு அல்ல. அதை செய்யப் பயன்படும் மைதாவுக்கான வரலாறு. மைதா என்றொரு பொருள் ஆங்கிலேயர்களால்தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரையில் இந்தியாவில் கோதுமை பயன்பாடுதான். அதில்தான் ரொட்டி சுடுவது, சப்பாத்தி சுடுவது எல்லாம். தனிக்காட்டு ராஜாவாக இந்தியாவில் கோதுமை கோலோச்சிக் கொண்டிருந்தபோது அதற்கு ஆப்பு வைத்தது இரண்டாம் உலகப்போர். போர் வீரர்களுக்கு பெருமளவில் கோதுமை தேவைப்பட்டது. இதனால் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கோதுமைக்கு மாற்றுப் பொருளை கண்டறியும் முயற்சி தீவிரமானது. அப்போது அறிமுகமானதுதான் மைதா. அதாவது மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவுடன் சில ரசாயனங்களையும் சேர்மானங்களையும் சேர்த்து தயாரிப்பதுதான் மைதா. இந்த மைதா மிக எளிதாக உருட்டவும் மாவு பிசையவும் வந்தது. கோதுமையைக் காட்டிலும் விலை குறைவாக இருந்தது. இதனால் மக்களிடம் எளிதில் மைதா புகழ் பெறத் தொடங்கியது. குறிப்பாக ஏழை மக்களின் உணவுப் பொருளாக மைதா பிரபலமானது. அதுவே படிப்படியாக வளர்ச்சி பெற்று நாகரீக உணவு பொருளாகியது.

இதுதான் மைதா அரக்கனின் வரலாறு. மைதாவின் மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு மாவு என்பது சற்று பழுப்பு நிறம் கொண்டது. இதை வெளுக்க வைத்து வெண்மையாக மாற்றுவதற்காக அதில் பென்சாயில், பெராக்சைடு கலக்கப்படுகிறது. சாதாரணமாக சொன்னால் ரசாயனம். இதை இன்னும் மேலும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தலைமுடிக்கு அடிக்கும் டையில் உள்ள ரசாயனம் என்று கூறினால் நன்கு விளங்கும். இந்த ரசாயனத்தால் சில அரிப்பு ஒவ்வாமை ஏற்படுகிறது. தலைமுடிக்கு இந்த நிலைமை என்றால் உடலில் சென்றால் சொல்ல வேண்டியதே இல்லை. மெல்லக் கொல்லும் விஷமாக பல பாதிப்புகளை இது செய்து வருகிறது. நீரிழிவு என சொல்லப்படும் டயாப்டீஸ் நோய்க்கு அடிக்கல் நாட்டும் விழாவாக மைதா ஆகிவிடும்.

‘அலாக்ஸான்’ எனும் ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. வெண்மை என்றால் சாதாரண வெண்மையா என்ன? மைதாவின் வெண்மையை ஊரே போற்ற வேண்டும் என்பதற்காக அதில் செயற்கை வண்ணப்பொடியும் கலக்கப்படுகிறது. பரோட்டாவுக்கு சுவை சேர்க்க வேண்டாமா? இதற்காக உணவு எண்ணெய்கள், சுவை கூட்டிகள் எனப்படும் டேஸ்ட் மேக்கர்ஸ், மைதா நீண்ட நாட்கள் பூஞ்சை பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்க தேவையான ரசாயனங்கள் (பிரசர் வேடீவ்ஸ்) அஜினோ மோட்டோ, இனிப்பு பொருட்களில் சாக்ரின் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கடைகளில் விற்கப்படுகின்ற பரோட்டா மாவாகப் பிசைந்து சில மணி நேரங்கள் எண்ணெயில் ஊற வைக்கப்படுகிறது. அது எந்தவகையான எண்ணெய் என்பது மாஸ்டருக்கு மட்டுமே தெரியும். பின்னர் அதை எடுத்து உருண்டைகளை சுற்றி தட்டும்போதும் எண்ணெய் ஊற்றப்படுகிறது. அவ்வாறு எண்ணெயில் குளிப்பாட்டிய பரோட்டாவை எடுத்து சுடும்போது ஊற்றப்படும் எண்ணெய்க்கு அளவே இல்லை. இதில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் மட்ட ரகமான நெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுக்கப்படும் பரோட்டாவை சாப்பிட்டால் ஏற்படுகின்ற தீங்கான விளைவுகளை சொல்லவே அச்சமாக உள்ளது. இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் உட்புறம் படியும் கொழுப்பாக மாறி ஹார்ட் அட்டாக் ஏற்பட வழிவகுத்து விடுகிறது. ஹார்ட் அட்டாக், கிட்னி பெயிலியர், டயாபடீஸ் என்று விதவிதமான நோய்களை வரவழைக்கும் மைதாவில் எவ்வித பயனும் இல்லை என்பதால்தான் ஐரோப்பிய யூனியனும், கனடாவும் இதற்கு தடை விதித்துள்ளது.

இந்த பரோட்டாவுக்கு சைட் டிஸ் என்ன தெரியுமா? கோழி குருமா, சிக்கன் 65! முன்பெல்லாம் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழி கறி சமைத்து உண்பார்கள். அதில் நல்ல சத்தும் இருந்தது. இப்போது பிராய்லர் சிக்கன் வந்துவிட்டது. பிராய்லர் கோழியை உணவாக உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக சென்னை மருத்துவ ஆய்வுக் குழு ஒன்றின் குடல் நோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டதுதான் பிராய்லர் கோழிகள். அதற்குள் எடை கூட்டி வளர்க்க பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள், மனிதர்களுக்கு புற்றுநோயை ஊக்குவிக்கும் தன்மை வாய்ந்தவை. கோழிகளுக்கு செலுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் ரசாயனங்கள், கோழியின் கறியிலும், கல்லீரலிலும், சிறுநீரகங்களிலும் தேங்கி விடுகின்றன. சிக்கன் 65 தயாரிக்கப் பயன்படும் சிவப்பு நிற கலர் பவுடர் புற்று நோயினை ஏற்படுத்தும். வேதியப் பொருள்களும் இதய நோய்க்கு வித்திடுகின்றன. இத்தகைய அபாயகரமான நோய்களை ஏற்படுத்தும் பரோட்டாவையும், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 ஆகியவற்றினை சாப்பிட்டு நோயினை விலைக்கு வாங்க வேண்டுமா?

நன்றி : நர்கிஸ் – மார்ச் 2015

Thursday, April 16, 2015

சமஸ்கிரதம் படிப்பதால் தலித்களுக்கு என்ன நன்மை?

//சம்ஸ்கிருத வல்லுனர்கள் தலித் சமுதாயத்துக்கு அவர்கள் இருப்பிடம் சென்று போதித்தால் மொழி வளரும். அண்ணல் அம்பேத்கரை பின்பற்றும் தலித்துகள் இன்றும் அறியாமையின் காரணத்தாலோ அல்லது இந்த தேசத்தின் எதிரிகள் கட்டமைத்திருக்கிற பொய்ப் பிரச்சாரத்தாலோ மயங்கி சமஸ்கிருதம் என்ற பொக்கிஷத்தை புறக்கணித்து வருகின்றனர். இதில் நஷ்டம் சமஸ்கிருத மொழிக்கல்ல.// - ம. வெங்கடேசன்


தலித் சமுகத்தை சார்ந்தவர்கள் சமஸ்க்ருதம் கற்றுக்கொள்வதால் என்ன பயன் அவர்களுக்கு. ஒரு தலித் சமுகத்தை சேர்ந்தவர் நன்றாக சமற்க்ருதம் பேசுகிறார், வடமொழி மந்திரங்களை நன்கு உச்சரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு தாழ்த்தப்பட்டவர் என்கிற கரை நீங்கி ,கருவறை வரை சென்று இறைவனின் திருமேனியை தொட்டு பூஜிக்கும் அர்ச்சகர் ஆகும் பணி கிடைத்து விடுமா? தலித் என்கிற சமுக இழிவு நீங்கி விடுமா கூறுங்கள்!!!!! நன்றாக வடமொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை பார்த்து ” ஆஹா!! இந்த ஆதி திராவிட இளைஞன் ஆதி சங்கரரை காட்டிலும் அற்புதமாக சமற்க்ருத மொழியை பேசுகிறானே என்று புளங்காகிதம் அடைந்து எந்த பிராமணனாவது அல்லது மேல் சாதி இந்துவாவது தன் வீட்டு பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுக்க முன்வருவானா? இப்படி எதற்குமே பயனில்லை என்றால் பின்பு எதற்க்காக ம.வெங்கடேசன் அம்பேத்கரின் பெயரால் இங்கு வந்து சமஸ்க்ருதத்தை “Marketing” செய்ய வேண்டும்?.ஆகவே,அம்பேத்கர் கூறிவிட்டார் என்பதற்காக அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதற்க்கு திரு.ம. வெங்கடேசன் அவர்கள் திறந்த மனதோடு நேர்மையாக பதில் அளித்தால் மிக உத்தமமாக இருக்கும்.

-தாயுமானவன்

தாயுமானவன் நியாயமான கேள்விகளைக் கேட்டுள்ளார். சமஸ்கிரத ஆர்வலர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வெண்டும்.

Wednesday, April 15, 2015

மகள் டாக்டர்- மகன் விமானி- தந்தையோ ஆட்டோ டிரைவர்!மது ராதா என்ற பெண்மணி தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

'நான் ஆட்டோவில் ஏறினால் அந்த டிரைவர்களிடம் அதிகம் பேசுவதில்லை. சில நாட்களுக்கு முன் எனது தாயாரோடு கரூரில் ஒரு ஆட்டோவில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டோவில் அவரது பிள்ளைகள் ஒருவர் மருத்துவராகவும் மற்றவர் விமானியாக வேலை செய்து வருவதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது எனக்கும் எனது தாயாருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதனை படித்த எனது தாயார் அந்த ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தார்.

எனது தாயார்: உங்களின் மகள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவராக பணிபுரிவதாக எழுதியுள்ளீர்களே? அவர் எங்கு படித்தார்?

ஆட்டோ டிரைவர்: எனது மகள் அரசு பள்ளியில் எங்களது கிராமத்தில் படித்தாள். அனால் கடுமையாக உழைத்தாள். சென்ற மாதம் ஒரு மருத்துவரை திருமணமும் செய்து கொண்டுள்ளார். என்னுடைய மற்றொரு மகன் விமானியாக லண்டனில் வேலை செய்து வருகிறார். அவரும் திருமணம் முடித்து தனது குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

எனது தாயார்: தவறாக எண்ண வேண்டாம்! உங்களின் குழந்தைகள் நல்ல நிலையில் இருக்கும் போது இன்னும் ஏன் ஆட்டோ ஓட்டி வருகிறீர்கள்?

ஆட்டோ டிரைவர்: இந்த வேலைதான் எனது பிள்ளைகளுக்கு இவ்வளவு சிறந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. எந்த காலத்திலும் இந்த தொழிலை நான் மறக்க மாட்டேன். தற்போது எனது பொருளாதார நிலை சிறப்பாக உள்ளது. தற்பொது ஆட்டோ ஓட்டுதலை எனது ஹாபியாக செய்து வருகிறேன். வறியர்கள், வயதானவர்கள் போன்றோருக்கு உதவும் வகையில் எனது தொழிலை செய்து வருகிறேன். இதில் எனக்கு பூரண திருப்தி கிடைக்கிறது.

ஆட்டோ டிரைவரின் இந்த பதிலைக் கேட்டு நான் ஆச்சரியமடைந்து போனேன். வருங்காலத்தில் எனது பொருளாதார நிலை உயர்ந்தாலும் எனது பழைய வேலையையும் அங்கு பணியாற்றியவர்களையும் எக்காலத்திலும் மறக்கக் கூடாது என்ற படிப்பினையையும் பெற்றுக் கொண்டேன்."

-மது ராதா

தமிழில் மொழி பெயர்த்தது
சுவனப்பிரியன்

Tuesday, April 14, 2015

நக்ஸல்பாரி தலைவர் டி என் ஜோய் இஸ்லாத்தை தழுவினார்!நக்ஸல் இயக்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான டி என் ஜோய் தூய இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். சென்ற திங்கட்கிழமை முக நூல் மூலமாக தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

'எனது தந்தையார் எனக்கிட்ட பெயர் ஜோய். இன்று இஸ்லாத்தை ஏற்றவுடன் நான் வைத்துக் கொண்ட பெயர் நஜ்மல் பாபு. பாபரி மசூதி இடிப்புக்குப் பின் இந்து மதத்தில் இந்துத்வாவின் கை ஓங்கி வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ்கின்றனர். நான் எந்த இஸ்லாமிய இயக்கத்திலும் சேரப் போவதில்லை. தனித்தே இயங்குவேன்' என்று கூறுகிறார்

1970 லிருந்து நக்ஸல் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் ஜோய் எமர்ஜென்ஸி நேரத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். தீவிரவாத பாதையிலிருந்து விலகி அன்பையும் பண்பையும் போதிக்கும் தூய இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட ஜோய் என்ற அஜ்மலை இரு கரம் நீட்டி அரவணைப்போம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
14-04-2015

Monday, April 13, 2015

தமிழரின் வருடப் பிறப்பு சித்திரை மாதமா அல்லது தை மாதமா?தைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.

இத்தனைக்கும் சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்துவந்த தொன்றல்ல. பண்டைத் தமிழகத்திலே இருந்த பண்பாடுமல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மை இறுகப் பற்றிக்கொண்ட எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் போலவே ஏற்பட்டுவிட்ட ஒரு பழக்கம் இது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள். அவர்கள் அறிவியல் முதிர்ச்சியால் அகிலத்திற்கே வழிகாட்டியவர்கள் விண்ணையும் மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை ஆக்கியவர்கள் வானிலைக்கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்தான் கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும் காய்க்கின்றன என்றும் கண்டுபிடித்தவர்கள்.

அதனால்தான் களனி விளைந்து கதிரைப் பறித்ததும் தமது புத்தாண்டுப் பிறப்பன்றே முதன் முதலில் அந்தக் கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள். புதுப்பானையில் பொங்கலிட்டுப் படைத்து வணங்கினார்கள். சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு முந்தியிருந்தே இந்தப் புத்தாண்டும்ää பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டு வந்தமையை அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறில் பொங்கல் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது.

சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்

என்று புறநானூற்றில் 168 ஆவதாக இடம்பெறுகின்ற பாடலிலே கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் புதிர் உண்ணுகின்ற செய்தியைப் பதிவுசெய்துள்ளார். புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலிலே புத்தரிசியையிட்டு சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து ஆக்கிய பொங்கலைப் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை அழகாகச் சொல்கின்றார் புலவர்.

அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணியானவன் என்கின்றார் வள்ளுவர். எனவேää கதிரவனுக்கு நன்றிசெலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதை உணர்ந்து தான் பண்டைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கத்திலேயே அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சித்திரைப் புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு அல்ல. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புதுவருடப்பிறப்பு அல்ல. அது இந்துக்களின் புதுவருடப்பிறப்பு என்று சொல்லப்படுகின்றது. சிங்களவர்களுக்கும் சித்திரையில்தான் புதுவருடம் பிறக்கிறதாம். இலங்கை நாட்காட்டிகளில் ஏப்பிரல் 14 ஆம் திகதி இந்துää சிங்கள புதுவருடப்பிறப்பு என்றுதான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களின் புதுவருடப்பிறப்பு என்று குறிப்பிடப்படுவதில்லை. அவ்வாறு எங்காவது குறிப்பிடப்பட்டிருந்தால் அது தவறாகும்.

சித்திரைப் புத்தாண்டுதான் வருடப்பிறப்பு என்பதற்கு இந்து மதத்தவர்களிடையே நிலவுகின்ற புராணக்கதையையும் நாம் இங்கு நினைவுகூருதல் பொருத்தமாகும்.

புராண காலத்தில் நாரதமுனிவருக்குக் காம இச்சை ஏற்பட்டதாம். அந்த இச்சை தாங்கொணாதபடி அதிகமாகவே அதைத் தீர்த்துக்கொள்வதற்காக அவர் கிரு~;ணரோடு உறவுவைத்துக்கொண்டாராம். அதன் மூலம் அறுபது ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாராம். பிரபவமுதல் அட்சய ஈறாக பெயர் சூட்டப்பட்ட அந்த அறுபது குழந்தைகளின் பெயர்களால்தான் ஆண்டுகளின் தொடக்கம் கொண்டாடப்படுகிறதாம். அபிதான சிந்தாமணி என்ற நூலில் இந்தக்கதை சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய கேவலமான புராணக்கதையினைப் பின்னணியாக வைத்துத்தான் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றோமாம். இந்தக்கதை அறிவியலுக்குப் பொருந்துமா? தமிழ் மரபுக்கு உகந்ததா? தமிழ்ப் பண்புக்குள் அமைந்ததா? நமது குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா?

உண்மை என்னவென்றால் இந்த 60 ஆண்டுப்பெயர்கள் சாலிவாகனன் என்னும் வடநாட்டு அரசனின் பெயரால் ஏற்படுத்தப்பட்டவை. தமிழ்மக்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இருந்ததில்லை. மேலும் 60 வருடங்கள் முடிந்ததும் அதாவது அட்சய வருடம் முடிந்ததும் மீண்டும் பிரபவ வருடம் வரும். மீண்டும் 60 வருடங்கள் கழிந்ததும் அட்சய வருடம் வரும். இப்படியே சுற்றிக் கொண்டிருப்பதால் சித்திரைப் புத்தாண்டு முறையால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை வரலாற்று ரீதியாகக் கணக்கிட முடியாது. குறித்துரைக்க இயலாது.

உதாரணமாக பிரபவ வருடத்தில் உலகத்தில் வரலாற்றுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தால் அல்லது ஒரு பெரியார் பிறந்ததாகச் சொன்னால் எந்தப் பிரபவ வருடத்தில் அது நடந்ததென்று எப்படிக் கணக்கிட்டு வைக்கமுடியும்? அறுபது வருடங்களுக்கொருதடவை பிரபவ வருடம் வரும் அல்லவா?

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்போரலையைப்பற்றி இன்னும் நூற்றி ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சொல்லும்பொழுது ஆழிப்பேரலை தாரண வருடத்தில் மார்கழி மாதத்தி;ல் தாக்கியது என்றுசொன்னால் எந்தத் தாரண வருடத்தில் என்று தெரியவருமா? எத்தனை வருடங்களுக்கு முன்னர் அந்த அனர்த்தம் நடந்தது என்று கணக்கிட முடியுமா? ஏனென்றால் இன்றிலிருந்து நூற்றைம்பது வருடங்களுக்குப்பிறகு இரண்டு மூன்று தாரண வருடங்கள் வந்துவிடும் அல்லவா?

இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சித்திரையில் பிறப்பதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்றால் அதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள அறுபது வருடங்களின் பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லையே! ஏன் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

ஆனால் சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாகப் பின்பற்றிவந்துள்ளனரென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்ந்துள்ளனர். தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதப் பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்கள் என்பதுடன்ää தொல்காப்பியர் காலத்திலேயே அவை வழக்கத்திலிருந்தன என்று கூறுகின்றார் மொழியறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். யேசு கிறீஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கி.மு என்றும் கி.பி. என்றும் உலக வரலாறு வரையறுக்கப்பட்டு வருகின்றது. அதேபோலப் புத்தரின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு புத்த சமயத்தினர் புத்த ஆண்டு என்று கணித்துப் பின்பற்றுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தாண்டு வழக்கத்தை இடையிலே கைவிட்டுவிட்டு எதையெதையோவெல்லாம் தமிழர்கள் பின்பற்றுவது எவ்வளவு துர்ப்பாக்கியமானது.

தைமுதல்நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல அதுவே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளுமாகும். அதனால்தான் தமிழ்ப் புத்தாண்டுபற்றிய உண்மைநிலையைத் அறிவுபூர்வமாகவும்ஆராய்ச்சியின் அடிப்படையிலும் தமிழ்மக்களுக்கு உணர்த்துவதற்காக 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ் அறிஞர்கள் செந்தமிழ்ப் புலவர்கள் கூடி ஆராய்ந்திருக்கிறார்கள். தமிழ்க்கடல் நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்களது தலைமையிலே அந்த ஆராய்ச்சி நடைபெற்றிருக்கின்றது.

மாபெரும் தமிழறிஞர்களும் கல்விமான்களுமான தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியம்பிள்ளை சைவப்பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை நாவலர் சோமசுந்தர பாரதியார் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அந்த அறிஞர் குழவிலே இருந்திருக்கிறார்கள்.

அத்தனை அறிஞர் பெருமக்களும் ஒன்றாகக்கூடி தமிழ்ப் புத்தாண்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். முடிவுகண்டிருக்கிறார்கள். 500 இற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் அந்த முடிவிற்குத் தமது ஏற்பிசைவை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களது முடிவின்படி இயேசுகிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் திருவள்ளுவர் என்றும் அவரது பெயரில் தொடர்ஆண்டுக் கணக்கீட்டைப் பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அந்த முடிவுகளின்படி திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாள் ஆகும். கிழமை நாட்கள் ஏழு. அவைஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் வியாழன் வெள்ளி காரி என்பனவாகும். புதனும் சனியும் தமிழ்ப்பெயர்கள் அல்லவென்பதால் அவற்றுக்கான பண்டைய தமிழ்ப்பெயர்களான அறிவன் காரி என்பன முறையே வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கில ஆண்டுடன் 31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதுவே தமிழ் ஆண்டுக் கணக்கு.

அறிஞர்களது தீர்மானத்தை அன்றைய தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. அதன்படி திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு நாட்குறிப்பிலும் பின்னர் 1972 இலிருந்து தமிழக அரசின் அதிகாரபூர்வமான இதழிலும் 1981 இலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2009 இல் தமிழக அரசு தைப்பிறப்பையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் சித்திரைமாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு இல்லை என்றும் சட்டபூர்வமாக ஆணை பிறப்பித்தது. தமிழ் மக்களின் புத்தாண்டு விடயத்திற்குச் சட்டரீதியான அந்தஸ்துக் கொடுக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.

ஆனால் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரின் அரசியல் முதிர்ச்சியற்ற நிலைமையும் நாகரிகமற்ற தன்மையும் தமிழ்ப் புத்தாண்டு விடயத்தையும் அரசியல் சாக்கடைக்குள் தள்ளிவிட்டிருப்பது தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும். தைப்பிறப்பைத் தமிழ்ப் புத்தாண்டென அரசாணை பிறப்பித்தது கலைஞர் கருணாநிதி அவர்களின் தி.மு.க. அரசு என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கப் பிறகு ஆட்சிக்கு வந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் அந்த அரசாணையை மாற்றி சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என தீர்மானம் போடும் முடிவுக்கு வந்திருக்கிறார். தைப்பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என்பது கலைஞர் கருணாநிதியின் தீர்மானம் அல்ல. கலைஞர் பிறப்பதற்கு முன்னரே 1921 ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் சார்பாகத் தமிழ்ப் புலவர்களாலும்அறிஞர்களாலும் எடுக்கப்பட்ட முடிவு அது. இதனை நன்கறிந்த தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் செல்வி ஜெயலலிதா அவர்களின் கட்சியிலும் இருக்கிறார்கள். என்ன செய்வது எடுத்துச்சொல்லும் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்!
யாரும் அறிவுரை சொல்லப் பயப்படுகின்ற நிலைமையைத் தமிழ் தலைமைகள் பேணிவந்தமையும் மாற்றுக் கருத்துக்களைச் சொன்னவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டமையும்தான் தமிழ் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணமானவை என்பதுதானே வரலாறு. அந்த நிலை இன்னும்தான் நீடிக்கிறது.

தைமாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடினால் கிரக மாற்றங்களில் குளறுபடி ஏற்படுமாம் பஞ்சாங்கக் கணிப்புத் தவறாகிவிடுமாம் என்றெல்லாம் சிலர் மக்களைக் குழப்புகின்றார்கள். இது என்ன பேதைமை! சித்திரையை அடிப்படையாக வைத்துத்தான் கிரக சஞ்சாரங்கள் நடைபெறுகின்றன என்றால் அவை அப்படியே நடக்கட்டும். அவற்றுக்கு அமைவாக எழுதப்பட்ட பஞ்சாங்கங்கள் அப்படியே இருக்கட்டும். சித்திரை மாதக் கிரக நிலையைத் தைமாதத்திற்கு நகர்த்தும்படி யாரும் கூறவில்லை. பஞ்சாங்கங்களைத் திருத்தும்படி யாரும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் சித்திரை மாதம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் அல்ல. தைமாதமே தமிழ்ப்பத்தாண்டின்முதல் மாதம் என்றும்ää தைமுதல் திகதியே தமிழ்ப் புத்தாண்டின் முதல்திகதி என்றும் கொண்டாடுவோம். அவ்வாறு நாம் கொண்டாடுவதால் கிரகமாற்றங்களில் கோளாறு ஏற்படும் என்பதும் பஞ்சாங்கம் பொய்த்துவிடும் என்பதும் இந்துத்துவத் திமிர்பிடித்த மூடநம்பிக்கைகள். மடத்தனமான விதண்டா வாதங்கள். மக்களைக் குழப்பும் முயற்சிகள்.

தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
பத்தன்று, நூறன்று பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்

என்று தைத்திங்கள் திருநாளை, தமிழினத்தின் திருநாளாக, தமிழ் வருடத்தின் முதல்நாளாக, தமிழ்ப பண்பாட்டின் பெருநாளாக போற்றிப் பாடுகின்றார் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அம்மொழியே பொன் மொழியாகட்டும். அனைத்துலகத் தமிழர்களுக்கும் ஒரே வழியாகட்டும்.

எனவே தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டெனக்கொண்டாடும் நமது பண்டைய வழக்கத்தினை உலகத் தமிழ்மக்கள் அனைவரும் வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.


பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கடந்து விட்ட வருடத்தின் கடைசிநாள்.
வீட்டிலுள்ள வேண்டத்தகாத பொருட்களையெல்லாம் வீசி எறியும் நாள்.
வீட்டிலும், வீட்டைச்சுற்றவரவும், காணிகளிலும் உள்ள அழுக்குக்களை,
குப்பை கூழங்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தீயிட்டுக்கொழுத்தி
துப்பரவுசெய்யும் நாள்.

புலரும் பொழுதில், மலரும் பொங்கல்பண்டிகையை, புத்தாண்டுப் பிறப்பை வரவேற்க வீடுகள்தோறும் விடியவிடிய மகிந்திருக்கும் நாள்.
வீட்டுச்சுவர்களுக்கு வெள்ளையடிப்பதும், வர்ணச்சாயம் தீட்டுவதுமாக
அன்றைய நாள் முழுவதும் ஊரே மகிழ்ச்சியில் அமர்க்களப்படும்.
அந்த நாளைப் போகி நாள் என்று சொல்வார்கள்.
கடந்த வருடத்தைப் போக்குதல், க~;டங்களைப் போக்குதல்,
உறவினர்களுக்கிடையே இருந்த உரசல்களைப் போக்குதல்,
அகத்திலும் புறத்திலும் உள்ள அழுக்குக்களைப் போக்குதல் என்றெல்லாம் பொருளமைந்ததுதான் போகி நாள், போகிப் பண்டிகை!

திருமணமாகித் தனிக்குடும்பம் நடாத்தும் தங்கள் பெண்களுக்கும், சகோதரிகளுக்கும் பெற்றோரும், சகோதரர்களும் சீர்வரிசை செய்வதும் அன்றைய நாளில்தான்.

நெல்லு, அரிசி, குரக்கன், சோளம் முதலிய தானியங்கள் முக்கனிகள், இனிப்புப் பலகாரங்கள், புத்தாடைகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றையெல்லாம் இல்லறம் நடத்தும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுத்து மகிழ்வார்கள். இல்லத்தையும், சுற்றுப்பறத்தையும் எல்லோருமாகச் சேர்ந்து துப்பரவுசெய்து, புதுப்பொலிவு ஊட்டுவார்கள். அது பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள். புத்தாண்டுக்கு முதல்நாள். கடக்கும் வருடத்தின் கடைசிநாள். அதுதான் போகிநாள்!

தைத் திங்கள் முதல்நாளே தமிழர் நமது புதுவருடப் பெருநாள். தங்கத் தமிழினத்தின் தைப்பொங்கல் திருநாள். எனவே, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளே நமது புத்தாண்டு என்பதை, எங்கும் பறைசாற்ற வேண்டும். எப்போதும் அதனைப் பின்பற்ற வேண்டும். தப்பாமல் நம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும். வாசலில் கோலமிட்டு, மாவிலையிலும், மஞ்சள் குருத்தோலையிலும் தோரணங்கட்டி, புத்தரிசி கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, தலைவாழையிலையில் பொங்கலும்,பழங்களும், கரும்பும் படைத்து, கதிரவனை நோக்கிக் கைகூப்பித்தொழுது நன்றிதெரிவிக்கும் நந்நாளே பொங்கல் திருநாள்.

காலையில் வழிபாடு. பகலில் உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடல். உணவு பரிமாறல். உண்டு களைப்பாறல். மாலையில் களியாடல். கலைகள் அரங்கேறல். ஊரே திரண்டு ஒன்றாய் மகிழ்ந்து கொண்டாடல். இதுதான் தமிழரின் தாயகங்களின் தைத்திருநாள். அது வருடத்தில் ஒருநாள். புத்தாண்டின் முதல் நாள். தமிழருக்கு அது பெருநாள். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நமது தாயகங்களிலே நாம் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்களை நினைவுகூரவேண்டும்.

வாழுகின்ற இடத்தால் வேறுபட்டாலும், வணங்குகின்ற மதத்தால் வேறுபட்டாலும், சார்ந்துள்ள அரசியல் கருத்தால் வேறுபட்டாலும், தனிப்பட்ட குணத்தால் வெறுபட்டாலும் தமிழர் என்ற இனத்தால் ஒன்றுபடுவோம். தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். தைமுதல்நாளே புத்தாண்டு என்று உறுதி பூணுவோம். எங்கு வாழ்ந்தாலும் அந்த வழக்கத்தைப் பேணுவோம்.

தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். கல்வியைத் தொடங்கும் பிள்ளைகளுக்கு வழிபிறக்கும். புதுவகுப்பிற்குச் செல்லும் மாணவர்க்கு வழிபிறக்கும். பல்கலைக்கழகம் செல்லும் இளையோர்க்கு வழிபிறக்கும். திருமணத்திற்குக் காத்து நிற்கும் காதலர்க்கு வழிபிறக்கும்ää பிள்ளைப் பாக்கியத்திற்குக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு வழிபிறக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகின்ற பெற்றோருக்கு வழிபிறக்கும். இவ்வாறு சிறியோர்க்கும், பெரியோர்க்கும் எல்லோர்க்கும் தைபிறந்துவிட்டால் வழிபிறக்கும்.


பிற்குறிப்பு:

2001 ஆம் ஆண்டு தைமாதம் 6 ஆம் திகதி மலேசியாவிலே “தைமுதல்நாளே தமிழ் ஆண்டுத் தொடக்கம்” என்று பரப்புரைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய தமிழ்க் கலாசாரக் கழகத்தின் பொங்கல் விழாவில் எனது தலைமையில் எழுநூற்றுக்கும் அதிகமான பங்களிப்பாளர்களின் முன்னிலையில், “தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு” என்று உறுதிமொழி பிரகடனப்படுத்தப்பட்டது.

-சு.சிறீகந்தராசா

http://www.tamilmurasuaustralia.com/2015/01/blog-post_8.html

வளைகுடாவில் இலவசமாக உணவு வழங்கும் உணவகம்!வளைகுடா நாடுகளில் ஒன்று கத்தார். வெளி நாட்டு தொழிலாளர்களை அதிகம் தன்னகத்தே கொண்டது கத்தார். கூலித் தொழிலாளிகளாக நேபாள், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து லட்சக் கணக்கான மக்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் சிக்கனம் கருதி புரோட்டா, ரொட்டி பொன்றவற்றை வெறும் டீயிலோ அல்லது தண்ணீரிலோ நனைத்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவர். பல வளைகுடா நாடுகளில் இதனைப் பார்க்கலாம்.

டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட சுஹைப் மற்றும் சாதாப் சகோதரர்கள் 'ஜெய்கா ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் தோஹாவில் உணவகம் நடத்தி வருகின்றனர். இது பற்றி சுஹைப் கூறும் போது 'வசதியற்றோருக்கு உணவு இலவசமாக வழங்கப்படும்' என்ற அறிவிப்பு பலகையை பார்த்தவுடன் என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. பல தொழிலாளர்கள் ரொட்டியை தண்ணீரில் நனைத்து சாப்பிடுவதைப் பார்த்துள்ளேன். எனது இளைய சகோதரன் முயற்சியால் இந்த திட்டத்தை தொடங்கினோம். ஆரம்ப நாட்களில் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் வந்தனர். சுய மரியாதை காரணமாக இருக்கலாம். அல்லது உணவகத்தில் ஏறி 'இலவசமாக கொடுங்கள்' என்று கேட்க வெட்கப்பட்டிருக்கலாம். எனவே தற்போது உணவகத்துக்கு வெளியே குளிர்சாதன பெட்டியில் பாக்கெட்டுகளாக உணவுப் பொட்டலங்களை வைக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் உணவகத்துக்குள் ஏறாமலேயே தங்களின் உணவு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அமைத்துள்ளோம்' என்கிறார்.

சில உணவகங்களில் கொள்ளை லாபம் அடித்து காசு பார்க்கும் இந்த நாளில் வறியவர்களின் தேவையறிந்து இலவசமாக உணவு வழங்கி வரும் இந்த சகோதரர்களை நாமும் வாழ்த்துவோம். உலகமனைத்திலும் உள்ள செல்வந்தர்கள் இது போன்ற நிலையை எடுத்தால் பட்டினி சாவுகள் நடக்குமா?

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ''இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்கர் அவர்கள் 'நான்' என்றார்கள். ''இன்றைய தினம் உங்களில் இறந்த சவத்தை (ஜனாஸாவை)ப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?'' என்று கேட்டார்கள். அபூபக்கர் 'நான்' என்றார்கள். ''இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?'' என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் அவர்கள் 'நான்' என்றார்கள். ''இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?'' என்று கேட்க, அதற்கும் அபூபக்கர் அவர்கள் 'நான்' என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ''எந்த மனிதர் இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தோரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா , நூல்: முஸ்லிம் (1865)

தகவல் உதவி
சவுதி கெஜட்
13-04-2015

உபியில் நாகப் பாம்புடன் இளைஞருக்கு திருமணம்!உத்தரப்பிரதேசத்தில் நாகப் பாம்புடன் இளைஞருக்கு நடக்கவிருந்த வினோத திருமணம் போலீஸார் தலையிட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டது.

உ.பி.யின் மத்தியப் பகுதியில் உள்ள பூல்பூர் நகரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் பத்வாபூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலில் கடந்த வாரம் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியி ருந்தனர். மனிதனாக மாறியுள்ள இச்சாதாரி பாம்பு என்று தன்னை கூறிக்கொண்ட 27 வயது சந்தீப் பட்டேலுக்கு அங்கு திருமணம் நடைபெற இருந்தது.

இது வழக்கமான திருமணமாக இல்லாமல், மணப்பெண்ணாக நாகப்பாம்பு இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. பண்டிதர் ஒருவரும் அருகில் அமர்ந்து வேத மந்திரம் ஓத, பாம்புக்கு இளைஞன் தாலி கட்டும் நேரத்தில் வில்லன் போல் அங்கு போலீஸார் புகுந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி யுள்ளனர்.

இது குறித்து பூல்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சீவ்குமார் மிஸ்ரா ‘தி இந்து’விடம் கூறும் போது, “இந்த வினோத திருமணம் குறித்து ஒருநாள் முன்னதாக அறிந்து, சந்தீப் வீட்டுக்குச் சென்று விசாரித்தோம். அப்போது அவரது குடும்பத்தினர், கிராமத்தின் அமைதி கெடும் வகையில் எதையும் செய்ய மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். ஆனால் அந்த உறுதி மீறப்பட்டதால் தந்தை மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

பத்வாபூரில் வசிக்கும் தயா சங்கர் என்ற விவசாயியின் மகனான சந்தீப், சூரத்தில் பணியாற்றி வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த பிப்ரவரி 17- தேதி சொந்த ஊர் திரும்பினார். இங்கு வந்ததில் இருந்தே தான் மனிதனாக மாறியுள்ள இச்சாதாரி பாம்பு என்று கூறி வந்துள்ளார். இதனால் கிராம மக்கள் அவரை இச்சாதாரி என்றே அழைத்து வந்துள்ளனர். இதனிடையே சந்தீப் அங்குள்ள சிவன் கோயிலில் தான் ஒரு பெண் நாகத்தை சந்தித்ததாகவும், அது முற்பிறவியில் தனக்கு ஜோடியாக இருந்ததை நினைவூட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் அதே பெண் நாகத்தை அந்த சிவன் கோயிலில் ஏப்ரல் 5-ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த திருமணத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்கி கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி யுள்ளனர். கூட்டத்தில் சில பெண்கள் சாமியாடவும் செய்து பக்தி பரவசப்படுத்தியுள்ளனர். இக்கூட்டத்தை கலைக்க சுற்றி யுள்ள காவல் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீ ஸார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தில் பலர் சந்தீப்புக்கு ஆதரவாக போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களை சமாளித்து சந்தீப் மற்றும் அவரது தந்தையை கைது செய்ய போலீஸாருக்கு மதியம் 3 மணி வரை ஆகியுள்ளது.

சூரத் மருத்துவமனையில் சந்தீப் சிகிச்சை பெற்ற மருத்துவக் குறிப்புகளை போலீஸார் ஆராய்ந்த போது, அவர் மனநலம் பாதிக்கப் பட்டு இருந்தது தெரியவந்தது.

பாம்புகள் தொடர்பான மூட நம்பிக்கைகள் உ.பி.க்கு புதிதல்ல. அலிகருக்கு அருகில் உள்ள பிசாவா என்ற கிராமத்தில் கடந்த 1995-ம் ஆண்டு டிராக்டர் ஓட்டிச் சென்ற விவசாயி ஒருவர் வழியில் 2 பாம்புகளை கொன்றுவிட்டார். அப்போது ஊருக்குள் பாம்பு குற்றம் நிகழ்ந்துவிட்டதாகவும் பாம்புகள் படை எடுத்து வந்து ஊரையே பழி வாங்கும் என்றும் பீதி கிளம்பியது.

சில தினங்களில் கிராமத்தில் தானியப் பயிர்களின் இலைகளில் பாம்பு போல் வளைந்த கோடுகள் உருவானது. “இறந்த பாம்புகளின் ஆவிதான் இப்படி பயிரில் கோடு போடுகின்றன. அடுத்து பாம்புகள் படையெடுத்து வந்து ஊரையே அழித்துவிடும். இதற்கு நாகபூஜை செய்து பரிகாரம் தேட வேண்டும்” என்று மக்கள் புரளி கிளப்பினர். ஆங்காங்கே பலர் நாக பூஜைகள் செய்யத் தொடங்கினர்.

இந்தப் பிரச்சினையில் தலையிட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை, “அந்தப் பகுதியில் பயிர்களின் இலைகள் மீது பரவியுள்ளது ஒரு வகை வைரஸ்” என்று கூறியது. மேலும் ஆய்வில் ஈடுபட்டு சில மாதங்களில் அதற்கான மருந்தையும் கண்டுபிடித்தது. அதன் பிறகே அடங்கியது பாம்பு பீதி.

இது நடந்த 2 மாதங்களில் ஆக்ரா - அலிகர் இடையில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்புடன் ஒரு பெண்ணுக்கு காதல் உண்டாகி விட்டதாக ஒரு செய்தி கிளம்பியது. அந்தப் பாம்பு அடிக்கடி வந்து அந்தப் பெண்ணை அன்பாக கொத்திவிட்டுச் செல்வதாகவும், ஆனால் விஷம் கக்குவதில்லை எனவும் மக்கள் பேசினர். பிறகு சில நாட்கள் கழித்து அது விஷமில்லாத பாம்பு எனவும் அந்தப் பெண், தான் பிரபலம் அடைவதற்காக கிளப்பிய புரளி இதுவென்றும் குட்டு வெளிப்பட்டது. இதுபோல் இன்னும் பல கதைகள் உ.பி.யில் நிலவுகின்றன.

திருமண முயற்சிக்கு முன் சடங்குகளில் ஈடுபட்ட சந்தீப் பட்டேல் மற்றும் அவரது உறவினர்கள். அடுத்த படம்: வேடிக்கை பார்க்கும் கிராம மக்கள்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
13-04-2015

ஒரு மதமாகட்டும், அல்லது ஒரு மார்க்கமாகட்டும், அதன் சட்டதிட்டங்கள் இன்னதுதான் என்று வரையறுக்கப்படாவிட்டால் அந்த சமூகம் இது போன்ற மூடப் பழக்கங்களில் வீழ்ந்து தங்களின் அறிவை இழந்து விடுவார்கள் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

Sunday, April 12, 2015

மாட்டிறைச்சி தடையால் வன விலங்குகளுக்கும் உணவு தட்டுப்பாடு!
மாட்டிறைச்சித் தடையால் பொருளாதார இழப்பும் வேலைவாய்ப்புப் பாதிப்பும் ஏற்படும் என்று லண்டன் கார்டியன் இதழ் கூறுகிறது.

மகாராட்டிர மாநிலத்தில் பசுக்களை புனிதம் என்று அறிவிப்பு மாட்டி றைச்சிக்குத் தடை விதிக் கப்பட்டுள்ளதானது முசுலீம்கள், கிறித்தவர்கள் மற்றும் ஏராளமான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு மாட்டிறைச்சித் தடையின்மூலமாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நித்தின் தரோட் என்பவர் உரிய நேரங்களில் மழைப் பொழிவு இன்மையால் ஏற்பட்ட வருவாய் இழப்பால், தன்னிடம் உள்ள மாடுகளை விற்பனை செய்து கிடைக்கும் பணம், தன் சகோதரியின் திருமணத்தை நடத்த உதவியாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால், மோடியின் இந்து தேசியவாதக் கட்சியான பா.ஜ.க. ஆளும் இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான மகாராட்டிர மாநிலத்தில் பசு மாடு மற்றும் எருது, காளைகளைக் கொல்வதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளதன் காரணமாக மாடுகளை உரிய விலை கொடுத்து வாங்கு பவர்களை அவர் தேடுவதற்கு போராட வேண்டி யுள்ளது.

வேதனையுடன் தரோட் கூறும்போது, இப்போதைக்கு நான் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார். மும்பையிலிருந்து 370 மைல்கள் தொலைவில் உள்ள அகோலாவில் உள்ள அவர் குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் வயதானவர்களாக 5 பேர் உள்ளனர். அவர் வருவாயை மட்டுமே குடும்பம் நம்பியுள்ளது.

மோடியின் பாஜக, இந்துக்களால் வழிபடக் கூடியது, பசுவைப் பாதுகாப்பது என்று கூறிவருவதால், மகாராட்டிர மாநிலத்தில் இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களிடம் உள்ள விலங்குகளை விற்பனை செய்ய முடியாதவகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை மேலும் மற்ற மாநிலங்களிலும் பரவிவிடும்.

விலங்குகளும் பட்டினி

மும்பை தேசியப் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் ஆகிய விலங்குகளின் வழமையான உணவான மாட்டிறைச்சி வழங்கப்படாமல், கோழி, ஆட்டிறைச்சி உணவாக வழங்கப்படுகிறது.

இறைச்சிக்கூடங்கள் இதுபோன்ற பாஜகவின் அறிவிப்பை எதிர்த்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடையடைப்பு செய்தன.
இந்தியாவில் இரண்டாமிடத்தில் உள்ள மாநிலத்தில் பசுவைக் கொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும மாநிலங் களான ஜார்கண்ட் மற்றும் அரியானா மாட்டிறைச்சி வணிகத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

முசுலீம்கள், கிறித் தவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோர் குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான இறைச்சியாக உண்கிறார்கள். இதனாலேயே பாகுபாடுகளை உருவாக்கும் வகையில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்துள்ளது பாஜக அரசு. தேசிய அளவில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளில் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.

மாட்டிறைச்சி வணிகம் மற்றும மாட்டிறைச்சி சார்ந்த தோல் பொருள்கள் உள்ளிட்ட தொழில் களில் ஈடுபட்டுள்ள முசுலீம்கள் பல்லாயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகளை இழக்கும்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த வணிகத்தில் உள்ள தலைவர்கள் மிகுந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

மகாராட்டிரத்தில் பாராமதிப் பகுதியில் கால்நடைகளை விற் பனை செய்து வருபவரான ஆசிப் குரேஷி என்பவர் கூறுகையில், என்னுடைய தொழில் முற்றிலும் அழிந்து விட்டது. விவசாயிகள் தங்களிடமுள்ள கால் நடைகளை குறைந்த விலைக்கு தருவதற்கு முன்வந்துவிட்டார்கள். ஆனால், வெட்டுவது சட்டவிரோதம் என்று ஆனபிறகு என்னால் அந்தக் கால்நடைகளை வாங்கமுடியவில்லை என்று கூறினார்.
ஆளும் பாஜக அரசின் மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக முழு வேலை நிறுத்தப் போராட்டத்தை இறைச்சிக்கடைக்காரர்கள் செய்தார்கள். தடை இல்லாத எருமை மாடுகளையும் வெட்டாமல் போராடி வந்தனர். இந்துக்களில் பசுவை புனிதம் என்பவர்கள் எருமையைப் புனிதம் என்று கூறுவதில்லை.

பாஜக ஆளும் பிற மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடையைக் கட்டாயப்படுத்தவில்லை. பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் தடையைக் கொண்டுவருவதற்கு மறுத்த அம்மாநில முதல்வர் 40 விழுக்காட்டினர் உணவாக சாப்பிடுவதை, சிறுபான்மையர் உரிமையை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்து தேசியவாதக் குழுக்கள் பாஜகவுடன் இணைந்து அதிக அளவில் கால் நடைகளுக்கான முகாம்களை அமைத்து, விவசாயிகள் நீண்ட காலத்துக்கு பராமரிக்க முடியாத பசுவையும், மற்ற வீட்டு விலங்குகளையும் பராமரிக்கவும் வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

300 மில்லியன் கால்நடைகள்

இந்தியாவில் சுமார் 300 மில்லியன் கால் நடைகள், வயதான உணவுக்கு மட்டுமே பயன் படக்கூடிய பசுக்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களின் வீதிகளில் திரிய விடப்படுகின்றன. அப்படி தெருவில் விடப் படும் மாடுகளின் எண்ணிக்கை மகாராட்டிர மாநிலத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் ஆகும். மாட்டிறைச்சி வணிகத்தைப் பொறுத்தவரை விவசாயிகள் அந்த மாடுகளை விற்க முடியாமல் அப்படியே தெருவில் திரியும்வகையில் பராமரிக்காமல் கைவிட்டு விடுகின்றனர்.

தகவல் உதவி
Theguardian
23-03-2015


http://www.theguardian.com/world/2015/mar/23/india-beef-ban-jobs-economy-maharashtra-cows

Saturday, April 11, 2015

'கடவுளையும் அரசையும் நம்பாதே' - விவசாயிகளுக்கு நிதின் கட்கரே அறிவுரை
மஹாராஷ்ட்ராவில் யூனியன் மினிஸ்டர் நிதின்கட்கரி ஒரு விழாவில் பேசும் போது 'விவசாயிகள் கடவுளையும் அரசையும் நம்பிக் கொண்டிருப்பதை கை விட்டு விட்டு தங்களின் சொந்த அறிவை பயன்படுத்தி அறிவியல் கண்டு பிடிப்புகளையும் உபயோகித்து வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும்' என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த கருத்தை ஒரு நாத்திகர் சொல்லியிருந்தால் நாம் ஆச்சரியப்படப் பொவதில்லை. ராமனின் பெயரை உபயோகப்படுத்தி இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிளவுபடுத்தி அதன் மூலம் ஆட்சியைப் பிடித்த பிஜேபியின் முக்கிய தலைவர் பேசுவது யாரை ஏமாற்ற? ஆக... இவர்களிடம் இறை பக்தி என்பது சிறிது கூட கிடையாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ராம பக்தி, இந்து மத பக்தி என்பதெல்லாம் ஓட்டுக்காக இவர்கள் போடும் பகல் வேஷம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

மஹாராஷ்ட்ராவின் விதர்பா நகரில் மோடி பதவியேற்றதற்கு பிறகு 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறுமையினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணத்தை கண்டு பிடித்து அதை தீர்க்க வேண்டிய இடத்தில் உள்ள நிதின் கட்காரி 'அரசையும் நம்பாதே.. கடவுளையும் நம்பாதே' என்று சொல்வது மனிதத் தன்மையற்ற பேச்சு அல்லவா? அரசை நம்ப வேண்டாம் என்றால் இவர்கள் யாருக்காக ஆட்சி செய்கிறார்கள். அம்பானிக்கும், அதானிக்கும் சேவகம் செய்யவா ஏழை விவசாயி இவர்களை தேர்ந்தெடுத்தான். ஏழை விவசாயியின் நிலத்தை கையகப்படுத்தி அதனை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் விற்று காசு பார்க்கவே மோடி அரசு முயல்கிறது.

'மக்கள் புரட்சி' என்று கேள்வி பட்டுள்ளோம். அதனை மோடியின் ஆட்சியிலேயே கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது.

இந்த நாட்டையும் மக்களையும் இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
11-04-2015

MAHARASHTRA: Advising farmers to stop relying on God or government, Union Minister Nitin Gadkari said they need take charge of their own lives to improve the lot.

-http://www.newindianexpress.com/nation/Dont-Rely-on-God-or-Government-Gadkari-Tells-Farmers/2015/04/11/article2758177.ece

Friday, April 10, 2015

கி. விரமணி அவர்களின் நியூஸ் 7 தொலைக்காட்சியின் நேர் காணல்!

கேள்வி: பகுத்தறிவாதியான தாங்கள் உயிரைக் கொன்று புசிக்கும் பசு வதைக்கு ஆதரவளிக்கும் முகமாக 'பீஃப் பிரியாணி' போடுகிறீர்களாமே? இது சரியா?

கி.வீரமணி: நீங்கள் தினமும் சாப்பிடும் தயிர் எதிலிருந்து உற்பத்தியாகிது? கன்றுக்கு சுரக்கும் பாலை நீங்கள் புசிப்பது பாவமில்லையா? அது பசு வதை இல்லையா? மரம் செடி கொடிகளுக்கும் உயிர் இருக்கிறதே! அதை கொன்று தின்பது பாவமில்லையா?

கேள்வி: ஒரு சிலர் உங்களுக்கு கொலை மிரட்டலும் விடுகிறார்கள். சிலர் உங்களின் உருவத்தை பாடை கட்டி தூக்கி சென்றுள்ளார்களே? அது பற்றி...

கி.வீரமணி: கொலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படக் கூடிய ஆட்கள் நாங்களல்ல. என்னை சில பார்பனர்கள் பாடையாக தூக்கிச் சென்றுள்ளனர். ஒரு வகையில் இதில் நான் வெற்றி பெற்றுள்ளேன். ஏனெனில் தங்கள் வீட்டு பிணத்தையே வேறு சாதி ஆட்களை விட்டு தூக்கக் கூடியவர்கள் பார்பனர்கள். அப்படிப்பட்டவர்கள் சூத்தினனான எனது பாடையை தூக்கிச் சென்றதன் மூலம் நான் தானே வெற்றி பெற்றுள்ளேன்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேற்று நடந்த நேர் காணல் நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் பேட்டியின் ஒரு பகுதியே இது.

கேள்வி: ஏப்ரல் 15 அன்று தாலி அறுக்கும் போராட்டம் வேறு நடத்தப் போகிறிர்களாமே! இது பிரச்னையை உண்டு பண்ணாதா?

கி.வீரமணி: யாரையும் வற்புறுத்தி தாலியை அறுப்பதல்ல இதன் நோக்கம். விருப்பமில்லாதவர்கள் தங்களின் தாலியை கழற்றி விடுவார்கள். ஒரு தொலைக்காட்சி இதனை புனிதமாக்கி ஒளிபரப்பியது. அது தவறான வாதம் என்று மக்களுக்கு விளக்குவதற்காகவே இந்த நிகழ்வை நடத்துகிறோம்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேற்று நடந்த நேர் காணல் நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் பேட்டியின் ஒரு பகுதியே இது.

https://www.youtube.com/watch?v=lD61vukbrE0

இந்துக்கள் மத்தியில் உள்ள தாலி பழக்கமானது முன்பு இஸ்லாமியரிடத்திலும் தொற்றிக் கொண்டிருந்தது. தாலி என்பதற்கு பதிலாக கருப்பு மணிகளை கோர்த்து 'கருக மணி' என்ற பெயரில் திருமணத்தன்று அணிந்து கொள்வார்கள். மாப்பிள்ளை கூட இதனை கட்ட மாட்டார். உறவினர்களே இந்த கருக மணியை கட்டி விடுவர். இந்த பழக்கத்துக்கும் குர்ஆனின் கட்டளைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. இது இஸ்லாம் சொல்லாத பழக்கம் என்பதால் திருமணமான ஒரு வாரத்தில் எனது மனைவியை கருக மணியை கழட்டி விட சொன்னேன். அதில் ஏதோ புனிதம் இருப்பதாக நினைத்துக் கொண்டு எனது மனைவி கழட்ட மறுத்தார். நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது மெல்ல சென்று கத்தரிக்கோலால் கருக மணியை துண்டித்து விட்டேன். :-) எனது மாமியார் வீட்டில் இது அன்று பெரும் பிரச்னையாக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு நிலைமை சீரானது.

ஆக... வீரமணிக்கு முன்பாக அன்றே நாங்கள் 'தாலி அறுப்பு' நிகழ்வை நடத்திக் காட்டியவர்களாக்கும் :-)


Thursday, April 09, 2015

மூக்கின் மேல் அடையாளம் - வியக்க வைக்கும் குர்ஆன்'அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் 'முன்னோர்களின் கட்டுக் கதைகள்' எனக் கூறுகிறான்.

'அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்'

-குர்ஆன் 68:15,16


நாளை மறுமையில் ஏக இறைவனை மறுத்தோரை அனைத்து மக்களின் முன்னாலும் தனியாக அடையாளப்படுத்த அவர்களின் மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்கிறான் இறைவன்.

மனிதனுக்கு அடையாளமிட எத்தனையோ இடங்கள் இருக்க இறைவன் மூக்கை பிரதானமாக ஏன் சொல்ல வேண்டும்?

மனிதனைத் தனியாக வேறுபடுத்திக் காட்ட முக்கிய அடையாளங்கள் உள்ளன. ஒன்று ரேகைகள். இது பற்றி நமக்கும் தெரியும். இதை அனைவராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆயினும் ஆய்வு செய்து எந்த மனிதனின் ரேகை என்பதைக் கண்டு கொள்ளலாம். ஒருவரின் ரேகை போல் இன்னொருவரின் ரேகை இருக்காது. இன்னொன்று கண்கள். மற்றது காதுகள். இவற்றிலிருந்தெல்லாம் ஓரளவு மனிதனை பிரித்து அடையாளப்படுத்தலாம்.

அனைவரும் தெரிந்து கொள்ளும் மற்றொரு அடையாளம் மூக்கு. எவ்வளவு நெருக்கமான மனிதராக இருந்தாலும் மூக்கை மறைத்துக் கொண்டால் துல்லியமாக இன்னார் தான் என்று அடையாளம் காண முடியாது. ஒரு மனிதனின் மூக்கானது தோராயமாக 10000 மணம் மற்றும் நாற்றங்களை வகைப்படுத்தும் விதமாக மிக உயர்ந்த தொழில் நுட்பத்தில் படைக்கப்பட்டுள்ளது.

கைரேகை மூலம் ஒருவரைக் கண்டுபிடிப்பதைவிட கண்களைக் கொண்டு அடையாளப்படுத்துவதை விட மூக்கைப் பல கோணங்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் எந்த மனிதரையும் துல்லியமாகக் கண்டறியும் போட்டோ பேஸ் என்ற தொழில் நுட்பம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பத் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் டாக்டர் ஆட்ரியன் ஈவின்ஸ் பல ஆய்வுகளை செய்து ஒரு மனிதனை அடையாளப்படுத்த மூக்கு எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது என்ற அய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். ஒரு மனிதனின் முழு முகத்தை ஸ்கேன் செய்து உண்மையை கண்டறிவதை விட 3டி தொழில் நுட்பத்தின் மூலம் மூக்கை மட்டுமே பிரதானமாக ஸ்கேன் செய்து மிக விரைவில் ஒரு மனிதனை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதிலிருந்து 'மூக்கின் மேல் அடையாளமிடுவோம்" என்ற சொல் எவ்வளவு பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இது இறை வேதம் தான் என்பதற்கு இந்த வசனமும் ஒரு சான்றாக நமக்கு அமைந்துள்ளது.

தகவல் உதவி
news.bbc.co.uk/2/hi/science/nature
02-03-2010

http://news.bbc.co.uk/2/hi/science/nature/8543292.stm

Scientists are developing ways to identify people by physical features, like intricate patterns in the eyes. But some of these techniques require the person to step close and stand still—which criminals may not do willingly. That's one reason why engineer Adrian Evans, of the University of Bath in England, turned to the nose.

Evans:
Noses are very hard to cover up without drawing suspicion to yourself. So they're actually quite easy to capture with non-cooperative subjects.

He and his colleague Adrian Moorhouse analyzed 3-D images of 40 people. By measuring just three specific aspects of a nose, they were able to narrow down the possible matches much faster than a full face-recognition scan. The trade-off is that it's harder to make a one-to-one match. So the system may be best used to quickly flag suspects for further scrutiny. I'm Bob Hirshon for AAAS, the Science Society.


http://sciencenetlinks.com/science-news/science-updates/nose-biometrics/

http://news.bbc.co.uk/2/hi/science/nature/8543292.stm

Wednesday, April 08, 2015

மாலையிட்டவுடன் தீட்டு கழித்த வர்ணாசிரம கொடுமை!பீஹார் மாநிலத்தில் சுதந்திர போராட்ட வீரராக கருதப்படும் ராம் மனோஹர் லோகியாவுக்கு சிலை ஒன்று உள்ளது. சென்ற வாரம் மரியாதை நிமித்தமாக அந்த சிலைக்கு ஜிதன்ராம் மனிஹி மாலையிட்டார். இவர் பீஹாரை 9 மாதங்கள் முதல் மந்திரியாக இருந்து ஆட்சி செய்தவர். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் மாலையிட்டு சென்றவுடன் சிலை தீட்டு பட்டு விட்டதாகக் கூறி உயர் சாதி இளைஞர்கள் நான்கு பேர் அந்த சிலையை தண்ணீர் ஊற்றி முழுவதுமாக கழுவி தீட்டைக் கழித்துள்ளனர். ஜிதன்ராம் போட்ட மாலையையும் கழற்றி புதிதாக வேறொரு மாலையை அந்த சிலைக்கு போட்டுள்ளனர் சாதி வெறியர்கள்.

மாலையிட்ட ஜிதன்ராம் சாதாரணமான ஆள் அல்ல. பீஹாரை முதல் மந்திரியாக இருந்து 9 மாதங்கள் ஆட்சி செய்தவர். இவர் முதல்வராக இருந்தபோதே ஒரு கோவிலுக்குள் நுழைந்து இறைவனை வழிபட்டார் என்பதற்காக அன்றே அந்த கோவிலை தண்ணீர் ஊற்றி கழுவி தீட்டைக் கழித்தனர். அப்போதும் அது பெரும் பிரச்னையாக்கப்பட்டது. அதே இன ஒதுக்கல் சென்ற வாரம் மீண்டும் பல மக்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளது. மற்ற மூவரை காவல்துறை தேடி வருகிறது.

இதற்கு முன்பு ஜெகஜீவன்ராம் ராணுவ மந்திரியாக இருந்த போதும் இதே போல் உயர் சாதி இந்துவுக்கு மாலையிட்டதற்காக சிலையை கழுவி தீட்டு கழித்தனர் உயர் சாதி இந்துக்கள். இத்தனை வருடம் சென்றும் அதே சாதி வெறி மீண்டும் அரங்கேற்றப்பட்டள்ளது. படித்து விட்டால் சாதி மறைந்து விடும் என்ற வாதம் முன்பு வைக்கப்பட்டது. படித்தவர்கள் மத்தியில்தான் இந்த சாதி வெறி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 'நீ முதல் மந்திரியாக இருந்திருக்கலாம், மத்தியில் ராணுவ மந்திரியாகவும் இருந்திருக்கலாம். எவ்வளவு உயர் பதவியைப் பெற்றாலும் எனது பார்வையில் நீ தலித். நீ தீண்டத்தகாதவன்' என்று சொல்கிறது மேற்படி சம்பவம்.

'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பவர்களுக்கு சென்ற வாரம் நிகழ்ந்த இந்த சம்பவம் சிறந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

தகவல் உதவி
ndtv
outlookindia
06-04-2015http://www.ndtv.com/india-news/lohia-statue-washed-after-being-garlanded-by-ex-chief-minister-jitan-ram-manjhi-752700
http://www.outlookindia.com/news/article/Lohias-Statue-Cleaned-After-Manjhi-Garlands-It-Four-Booked/889903