Followers

Wednesday, April 30, 2014

அகோரிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!எங்கும் பிணங்கள் எரியூட்டப்பட்டு வரும் புகை காசியின் பல இடங்களை ஆக்கிரமிக்கிறது. அந்த புகைகளோடு அகோரிகள் அடிக்கும் கஞ்சா புகையும் சேர்ந்து கொள்கிறது. இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு பிறகு எரிந்த மற்றும் எரிந்து கொண்டிருக்கின்ற மனித உடல்களை தின்பதற்காக அகோரிகள் மெல்ல தங்கள் இடத்தை விட்டு வெளியேறுகின்றனர். உடல் முழுக்க சாம்பலை பூசிக் கொண்டு பிறந்த மேனியாக கைகளையும் கால்களையும் வித விதமாக ஆட்டிக் கொண்டு பிணங்களை நெருங்கி அதனை ருசித்து சாப்பிடுகின்றனர். அந்த மனிதக் கறி செரிப்பதற்காக கஞ்சாவையும் உள்ளே தள்ளுகின்றனர். அகோரிகளின் பழக்கத்தால் சுற்று வட்டாரத்தில் பல இளைஞர்கள் இந்த கஞ்சாவுக்கு அடிமையாகி விட்டார்கள். பல பெற்றோர்கள் புகார் செய்த வண்ணம் உள்ளனர். ஆனால் கேட்பதற்கு ஆளில்லை.

இதில் ஒரு அகோரிக்கு குடும்பம் வேறு இருக்கிறதாம். இரண்டு குழந்தைகள் வேறு. பாவம் இவருக்கு வாழ்க்கைப் பட்ட அந்த பெண்மணி. தனது குழந்தைகளை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்க்கிறாரோ! ஆனால் இந்த அகோரியோ நன்றாக கஞ்சா அடித்து விட்டு இசையை ரசித்து விட்டு மனித பிணங்களை தின்று விட்டு காசியின் தெருக்களில் உருள்கிறார்.

நரேந்திர மோடி கொண்டு வரப் போகும் இந்துத்வா ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு காசியின் இந்த நேரடிக் காட்சிகளே சாட்சியாக உள்ளது. காசியை உலக மக்களின் புண்ணியத் தலமாகவும் மாற்றப் போகிறாராம். கடவுளின் அருள் என்றும் 'நானே கடவுள்' என்றும் பித்துக்குளி தனமாக இது போன்ற அகோரிகள் மோடியின் ஆட்சியில் தமிழகத்துக்கும் வந்து இந்து மதத்தை பரப்ப வரலாம்.

எனவே ஆனந்த் சாகர் போன்றவர்களுக்கு இனி மகிழ்ச்சிதான். இளைஞர்களுக்கு அம்மா ஏற்கெனவே அரசு செலவில் மது பான கடைகளை திறந்து சேவை செய்து வருகிறார். இனி இவரது நண்பர் மோடியின் தயவால் கஞ்சா, அபின், மற்றும் நர மாமிசம் தின்னும் பழக்கத்தையும் இந்துத்வ அரசு சிறுக சிறுக புகுத்தி விடும். வாழ்க இந்தியா! வளர்க அதன் புகழ்.

நமது நாட்டில் இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இஸ்லாத்தை நோக்கி இந்து மக்கள் சாரை சாரையாக வருவது ஏன் என்பதன் சூட்சுமம் இப்போதுதான் விளங்குகிறது. உபி அரசு இது போன்ற சட்டத்துக்கு புறம்பாக மனிதர்களின் உடலை தின்னும் பழக்கத்துக்கும், கஞ்சா அடிக்கும் பழக்கத்துக்கும் நிர்வாணமாக சுற்றித் திரியும் பழக்கத்துக்கும் தடையை விதித்து பல இளைஞர்களின் வாழ்வை வளப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

--------------------------------------------------------

நபிகள் நாயகம் அவர்களது வீட்டுக்கு சில நபித் தோழர்கள் வந்து நபிகளாரது வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களின் மனைவியிடம் கேட்டனர் . அதற்கு நபியவர்களின் மனைவியர் கூறிய பதில் திருப்தியளிக்காததால் 'நாங்களும் நபியவர்களும் ஒன்றா? நாமோ பாவிகள். அவர்களோ முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் . எனவே நாம் நபிகளாரை விட அதிகம் வணக்கம் புரிய வேண்டும்' எனமுடிவெடுத்தனர். அவர்களில் ஒருவர் 'நான் இன்று முதல் இரவில் தூங்கவே மாட்டேன். இரவு முழுக்க தொழுது கொண்டிருப்பேன்' என்றும் மற்றவர் 'நான் இனிமேல் காலமெல்லாம் நோன்பு நோற்றுக் கொண்டிருப்பேன்' என்றும் மூன்றாமவர் 'இனி நான் மனைவியிடம் நெருங்கவே மாட்டேன்' என்றும் சத்தியம் செய்து கொண்டனர். இந்தச் செய்தி நபியவர்களின் காதுக்குச் சென்றதும் நபியவர்கள் இம்மூவரையும் அழைத்து "நீங்கள்தானா இவ்வாறெல்லாம் சத்தியம் செய்து கொண்டவர்கள்??. அறிந்து கொள்ளுங்கள் . அல்லாஹ்வின் மீது சத்தியமாக நானே உங்கள் அனைவரை விடவும் அல்லாஹ்வுக்கு மிகப் பயப்படுபவனும் இறை நம்பிக்கை உடையவனுமாவேன். இருப்பினும் நான் இரவில் தொழவும் செய்கின்றேன் தூங்கவும் செய்கின்றேன், சில நாள் பகலில் நோன்பும் நோற்கின்றேன், சில நாள் நோன்பை விட்டு சாப்பிடவும் செய்கின்றேன், பல மனைவியரை மணந்து இன்பம் அனுபவிக்கவும் செய்கின்றேன். எனவே இதுதான் எனது வழிமுறை, எனதுவழிமுறையைப் புறக்கணிப்பவன் என்னைச் சார்ந்தவனல்ல என நபியவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம் புகாரி 4675 முஸ்லிம் 2487)


இதுதான் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை. பணம் சம்பாதிக்கவும் வேண்டும்: மனைவி குழந்தைகளோடும் உற்றார் உறவினரோடும் இன்பமாக காலத்தை கழிக்க வேண்டும்: அதே நேரம் இறைவனை அவன் சொன்ன முறையில் வணங்கவும் வேண்டும். இதனால் சமூகத்துக்கோ, பெற்ற தாய் தந்தையருக்கோ, பிறந்த குழந்தைகளுக்கோ, நாம் வாழும் சமூகத்துக்கோ எந்த பிரச்னையும் இல்லை. இப்படிப்பட்ட அழகிய மார்க்கத்துக்கு சொந்தமான தாய் தந்தையருக்கு பிள்ளையாய் என்னை பிறக்க வைத்த அந்த இறைவனுக்கே எல்லா புகழும்.Tuesday, April 29, 2014

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

கேள்வி - 1

இந்தியா மதச்சார்பற்ற நாடு எனும் போது முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக சிவில் சட்டம் இருப்பது நியாயமா என்று அறிவுஜீவிகளும் வழக்கறிஞர்களும் கேட்பது நியாயமாகத்தானே உள்ளது?

தமிழ்ச் செல்வன், திருச்சி

கேள்வி - 2

அரசியல் சாசனத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வருமாறு சொல்லப்பட்டுள்ளதால், அதை நிறைவேற்றுவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அரசியல் சாசனத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளதா?

சலீம் கான், தாம்பரம்

கேள்வி - 3

முஸ்லிம்களுக்குத் தனி சிவில் சட்டம் கேட்கும் முஸ்லிம்கள் தனி கிரிமினல் சட்டத்தையும் கேட்கத் தயாரா? இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கடுமையாக உள்ளதால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்லாமியக் கிரிமினல் சட்டத்தை முஸ்லிம்கள் கோருவதில்லை என்று எங்கள் பகுதியைச் சேர்ந்த தி.க.வைச் சேர்ந்த பெரியவர் கேட்கிறார். இதற்கு நாம் எவ்வாறு பதில் சொல்வது?

தர்மபுரி டிஎன்டிஜே கிளை

கேள்வி - 4

ஒரு வேளை பாஜக ஆட்சிக்கு வந்து பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் நாம் என்ன செய்வது? அதை எப்படி எதிர்கொள்வது?

அஸ்மா மைந்தன், திருவாரூர்

கேள்வி - 5

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

இப்ராஹீம் கல்லிடைக் குறிச்சி

பதில்

நமது நாட்டில் எல்லா மக்களுக்கும் ஒரே சிவில் சட்டம்தான் உள்ளது. இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

☆சிவில் எனும், உரிமை சம்மந்தப்பட்ட விவகாரங்களில் முஸ்லிம்கள் நீதிமன்றத்தை அணுகினால் அல்லது முஸ்லிமுக்கு எதிராக மற்றவர் நீதிமன்றத்தை அணுகினால் அப்போது இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்கப்படும்.

●●உதாரணமாக ஒரு 15 வயது சிறுவன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதாக வைத்துக் கொள்வோம். ஒருவன் விரும்பும் மதத்தைத் தழுவுவது சிவில் - உரிமை சம்மந்தப்பட்ட விஷயமாகும்.

இது குறித்து யாராவது நீதிமன்றத்தை அணுகினால் இஸ்லாமியச் சட்டப்படி 15 வயதில் ஒருவன் மேஜர் ஆகிறான் என்பதால் அந்தச் சட்டப்படி நீதிமன்றம் தீர்ப்பளிக்காது. பொதுவான சிவில் சட்டப்படி 18 வயதில்தான் மேஜர் ஆக முடியும் என்பதால் சிறுவன் இஸ்லாத்தை ஏற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அத்துடன் அந்தச் சிறுவனை இஸ்லாத்தில் இணைக்க துணை நின்றவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும்.

இஸ்லாத்தில் இதற்கு வேறு சிவில் சட்டம் இருந்தும் அதற்கு மாற்றமான பொது சிவில் சட்டத்தின்படிதான் நமது நாட்டில் தீர்ப்பு அளிக்கப்படும்.

ஒருவர் தனது இடத்தை வாடகைக்கு விடுகிறார். இன்னொருவர் வாடகைக்குப் பெறுகிறார், இது சிவில் பிரச்சனை.

இதற்கு இஸ்லாத்தில் தனிச் சட்டம் உள்ளது. இந்தியாவில் வேறு சட்டம் உள்ளது. வீட்டின் உரிமையாளருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இந்தியச் சட்டப்படி தான் தீர்ப்பு அளிக்கப்படுமே தவிர, இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது.

இரண்டு முஸ்லிம்கள் மத்தியில் இப்பிரச்சனை ஏற்பட்டாலும் இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் பொதுவான சட்டப்படி தான் இதில் தீர்ப்பளிக்கப்படும்.

ஒருவர் ஒரு பொருளை வாங்குகிறார். அல்லது விற்கிறார். இது சிவில் உரிமை சம்மந்தப்பட்ட விஷயம். இஸ்லாத்தில் வியாபாரத்துக்கு என தனியாக சிவில் சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டப்படி தீர்ப்பு அளிக்காமல் இந்திய சட்டப்படிதான் முஸ்லிமுக்கும் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

கடன் வாங்குதல், கொடுத்தல் ஆகியன சிவில் பிரச்சனையாகும். எந்தக் கடனுக்கும் வட்டி இல்லை என்பது இஸ்லாமியச் சிவில் சட்டம். ஆனால் முஸ்லிம்கள் சம்மப்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் வழக்கு, நீதிமன்றத்துக்குப் போனால் இஸ்லாத்துக்கு எதிரான இந்தியச் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்க முடியும். அப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

இப்படி ஆயிரமாயிரம் சிவில் உரிமை சம்மந்தப்பட வழக்குகளில் இந்து முஸ்லிம் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் பொதுவான சட்டம்தான் உள்ளது.

★★ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எல்லா விஷயத்திலும் தனியாகச் சட்டம் உள்ளது போல் சங்பரிவாரக் கும்பல் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றது.

●●►திருமணம், ஆண் செய்யும் விவாக ரத்து, பெண் செய்யும் விவாக ரத்து, இறந்தவரின் சொத்துக்களை அவரது உறவினர்கள் பிரித்துக் கொள்ளுதல், வஃக்பு சொத்துக்களை நிர்வகித்தல் ஆகிய விஷயங்கள் தவிர மற்ற அனைத்திலும் பொதுவான சட்டம்தான் முஸ்லிம்களுக்கும் உள்ளது.

மேற்கண்ட விஷயங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் நடக்கக் கூடியதாகும். இதில் முஸ்லிம்கள் தமது மதச் சட்டப்படி நடந்து கொண்டால், பிற சமுதாய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நாட்டுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் தனது அக்காவின் மகளைத் திருமணம் செய்தால் அது செல்லாது என்று இஸ்லாம் கூறுகிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் நீதி மன்றமும் இப்படித்தான் கூறும்.

இதுபோல் திருமண விஷயத்தில் எல்லா மதத்துக்கும் தனியான சட்டங்கள் உள்ளன.

ஒரு இந்து, உடன் பிறந்த சகோதரியைத் திருமணம் செய்தால் அதை இந்து மதம் திருமணமாக ஏற்காது என்பதால் நீதி மன்றமும் ஏற்காது.

ஒருவர் இறந்துவிட்டால் அவரது சொத்தை அவரது உறவினர்கள் எந்த விகிதாச்சாரத்தில் பிரித்துக் கொள்வது என்பதிலும் மற்ற சமுதாயத்துக்குச் சம்மந்தம் இல்லை. வஃக்பு சொத்தை இஸ்லாம் கூறும் முறைப்படிதான் செலவிட வேண்டும் என்பதிலும் மற்ற மதத்துக்கோ, சமுதாயத்துக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை.

இப்படி இந்துக்களுக்கும் தனியாக சிவில் சட்டம் இந்தியாவில் உள்ளது.

இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவர்களுக்கு வருமான விலக்கு உண்டு. இது முஸ்லிம்களுக்கு இல்லை. உண்மையில் இது அநியாயம். முஸ்லிமுக்கு அதிக வரியும் இந்துக்களுக்கு குறைந்த வரியும் என்ற நிலை இருந்தும் இது போல் இந்துக்களுக்கு மட்டும் சலுகை உள்ளது.

தத்தெடுக்கும் குழந்தை சொந்தப் பிள்ளையாகக் கருதப்படுவான் என்று இந்துக்களுக்கு மட்டும் தனிச்சட்டம் உள்ளது.

நிர்வாணமாகக் காட்சி தருவது சட்டப்படி குற்றம். ஆனாலும் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு அனுமதியிருப்பதால் நிர்வாணச் சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர்.

குருவாள் என்ற பெயரில் கத்தியை எப்போதும் வைத்துக் கொள்ள சீக்கியர்களுக்கு நம் நாட்டுச் சட்டம் அனுமதி வழங்குகிறது. இதை மற்றவர்கள் செய்தால் சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.

இப்படி எல்லா மதத்தவர்களுக்கும் ஐந்தாறு விஷயங்களில் அவரவர் மதப்படி நடக்க அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.

இந்து முறைப்படி எல்லோரும் தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால், வஃக்பு சொத்தை ஆடல் பாடலுக்கும் கோவில் திருவிழாக்களுக்கும் செலவிட வேண்டும் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா? அது நியாயமாகுமா?

இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் சிவில் சட்டங்கள் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளன. ஆனால் கிரிமினல் சட்டங்கள்தான் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றன. அனைவருக்கும் ஒரே மாதிரியான கிரிமினல் சட்டம் வேண்டும் என்று கூறுவதுதான் நியாயமாகும். அதுதான் இந்த நாட்டுக்கு மிக அவசியம்.

■ஒரு மாநிலத்தில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசாங்கமே மதுக் கடைகளை நடத்தும். இதனால் கட்டுக்கோப்பு குலைந்து விடாதா? மதுவைத் தடை செய்த மாநிலத்திலும் பெர்மிட் உள்ளவர்கள் மது குடிக்கத் தடை இல்லை. இது பாரபட்சம் இல்லையா?

நாட்டு மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படவில்லையே இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

■விபச்சாரமும், சூதாட்டமும், நைட் கிளப்புகளும், ஆடை அவிழ்ப்பு நடனங்களும் ஒரு மாநிலத்தில் தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள். தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கூட, நட்சத்திர ஹோட்டல்களில் இவற்றுக்கு அனுமதியும் பிற இடங்களில் தடையும் உள்ளன.

நாட்டு மக்கள் அனைவரும் இப்போது சமமாக நடத்தப்படவில்லையே? இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?

■சைக்கிளில் இருவர் செல்வது, இரு சக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் போன்ற சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள்வரை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான சட்டங்கள்; வித்தியாசமான நடைமுறைகள்.

நாட்டு மக்கள் அனைவரும் இப்போது சமமாக நடத்தப்படவில்லையே? இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?

ஒரே செயலை இருவர் செய்கின்றனர். ஆனால் ஒருவன் செய்தது குற்றம். மற்றவன் செய்தது குற்றம் இல்லை. இப்படி சட்டம் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? ஒரு நாடு என்று சொல்லிக் கொண்டு நாட்டு மக்களைப் பாரபட்சமாக நடத்துவது பற்றி இவர்களுக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லை.

மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பில் வித்தியாசங்கள் உள்ளதா இல்லையா?

■தமிழ்நாட்டுக்காரன் ஒரு கார் வாங்கினால் அவன் அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரி கட்டுகிறான். ஆனால் அருகில் உள்ள பாண்டிச்சேரிக்காரன் அதே காரை வாங்கினால் அவன் பத்தாயிரம்தான் வரி கட்டுகிறான். ஒரே பொருளுக்கு குடிமக்களிடம் பாரபட்சமாக வரி விதிப்பதற்குத்தான் இவர்கள் வெட்கப்பட வேண்டும். இதை மாற்றுவதற்குத்தான் துடிக்க வேண்டும்.

■பெட்ரோல் டீசல் வாங்கும் போது ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமாக வரி போடப்படுகிறதே, இது நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக நடத்தவில்லை என்பதற்கு ஆதாரமாக இல்லையா?

ஒரு மாநிலத்தின் உணவுப் பொருட்களை இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லத் தடை!

நாட்டில் ஓடும் நதிகளின் நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தகராறு!

இவற்றால் எல்லாம் கட்டுக்கோப்பு குலையாதாம். இப்படி வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதாம். நான்கே நான்கு விஷயங்களில் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் கட்டளைப்படி நடந்தால் மட்டும் கட்டுக்கோப்பு குலைந்து விடுமாம். இப்படிக் கூறக் கூடியவர்கள்தான் அறிவுஜீவிகளாம்.

முஸ்லிம்கள் நான்கே நான்கு விஷயங்களில் தமது மார்க்கப்படி நடந்து கொண்டதால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் எத்தனை? இதன் காரணமாகப் பிரிந்து போன மாநிலங்கள் எத்தனை? கூறுவார்களா?

மொகலாய மன்னர்கள் இந்த நாட்டை ஆண்டபோது இந்துக்கள் தமது மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறிப் போகவில்லை. ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதிகள் ஒரு நாடாகத்தான் மாறின. இதுதான் உண்மை.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்டபோதும் முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தம் மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது. இதையும் அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

வெள்ளையர்களும், மொகலாய (முஸ்லிம்) மன்னர்களும் வழங்கிய தனி சிவில் சட்ட உரிமையால் ஒன்றுபட்ட இந்தியா, இவர்கள் கொண்டு வர எண்ணுகின்ற பொது சிவில் சட்டத்தினால் சிதறுண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படும். நாட்டில் குழப்பங்களும் கொந்தளிப்பும் ஏற்படும். இதைத்தான் சில விஷம சக்திகள் விரும்புகின்றன. இதற்காகவே பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுகின்றன.

புத்த மதத்தவர்கள் பெரும் பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. புத்தமத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது. கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.

அறிவுஜீவிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொது சிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுகின்றனர்.

அடுத்து அரசியல் சாசனத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு பாஜக இதை தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளது என்றால் பாஜகவுக்கு சட்ட அறிவு இல்லை என்று தான் பொருள்.

குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்' என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுகிறது.

அரசியல் சாசனத்தில் 44வது பிரிவு இவ்வாறு கூறுவது உண்மை தான். ஆனால் இது எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது? அந்தத் தலைப்பின் நிலை என்ன? என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.

இந்தியாவின் எல்லைகள்

குடியுரிமை

பொதுவானவை

கொள்கை விளக்கம்

அடிப்படைக் கடமைகள்

ஆகிய ஐந்து தலைப்புகள் அரசியல் சாசனத்தில் உள்ளன.

கொள்கை விளக்கம் என்ற தலைப்பின் கீழ் 36முதல் 51முடிய உள்ள பிரிவுகள் கூறப்பட்டுள்ளன.

44வது பிரிவும் இந்தத் தலைப்பின் கீழ் தான் வருகின்றது.

கொள்கை விளக்கம் என்ற இந்தத் தலைப்பு ஏனைய தலைப்புகளிலிருந்து மாறுபட்டது. ஏனைய தலைப்புக்களில் கூறப்பட்டவைகளை அமல் செய்யாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடலாம். அமல் செய்யாதவர்கள் அரசியல் சாசனத்தை அவமதித்தவர்களாகக் கருதப்படலாம். ஆனால் கொள்கை விளக்கம்' என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை அரசு கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. செயல்படுத்துமாறு நீதிமன்றமும் கட்டளை ஏதும் வழங்க முடியாது. இது அரசுக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகள்தான். இது கொள்கை விளக்கம் என்ற தலைப்பிலேயே கூறப்பட்டுள்ளது.

'இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது'

என்று கொள்கை விளக்கத்தின் 37வது பிரிவு கூறுகின்றது.

விருப்பமான மதத்தில் குடிமக்கள் நம்பிக்கை கொள்ளலாம்; ஏற்கலாம்; பின்பற்றலாம்; பிரச்சாரம் செய்யலாம்

என்று 25 (1) பிரிவு உரிமை வழங்கியுள்ளது.

■■எப்படித் திருமணம் செய்யலாம்? யாரைத் திருமணம் செய்யலாம்? என்பன போன்ற விஷயங்களும், விவாகரத்து, பாகப்பிரிவினை போன்ற சட்டங்களும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மார்க்கம் சம்பந்தப்பட்டவை ஆகும். தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகள் எவ்வாறு மார்க்கம் சம்பந்தப்பட்டதாக உள்ளனவோ அவ்வாறே இந்தக் காரியங்களும் மார்க்கம் சம்பந்தப்பட்டவையாகும். இதற்கான கட்டளையும் வழிகாட்டுதல்களும் முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளன.

இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட இந்தக் காரியங்களை இஸ்லாம் கூறக்கூடிய முறையில் நடைமுறைப் படுத்துவதற்குத் தடுக்கப்பட்டால், அவர்களின் மதச் சுதந்திரமும், வழிபாட்டுச் சுதந்திரமும் பறிக்கப்படுகின்றது என்பதே பொருள்.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த உரிமையை, அவசியம் வழங்கியே தீர வேண்டிய இந்த உரிமையை, மறுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. இதற்கு முரணாக அமைந்துள்ள கொள்கை விளக்கத்தைத்தான் விட்டுவிட வேண்டுமே தவிர, அடிப்படை உரிமையை மறுக்க முடியாது.

அரசியல் சாசனத்தில் கூறப்படும் கொள்கை விளக்கம் எனும் தலைப்பில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்தாததால் நாடு சீரழிந்து வருகின்றது. அந்தப் பிரிவுகள் பற்றியெல்லாம் பாஜகவுக்கு அக்கறை இல்லை.

இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள், குழந்தைகள் அனைவருக்கும் 14வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

(அரசியல் சாசனம் 45வது பிரிவு)

14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் பத்து ஆண்டுகளுக்குள் கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது. இன்று வரை கட்டாயக் கல்வி கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் இது கொள்கை விளக்கம் தலைப்பில் உள்ள விஷயங்கள். இதைச் செய்வது கட்டாயம் இல்லை என்று பதில் கூறுகிறார்கள். அதே தலைப்பில் தானே பொதுசிவில் சட்டம் பற்றிய ஆலோசனையும் உள்ளது?

உணவுச் சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும் தேவையானவற்றைத் தமது தலையாய கடமையாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாக, போதையூட்டும் மது வகைகளையும் உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருட்களையும் மருந்துக்காக அன்றி வேறு விதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மது விலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

கொள்கை விளக்கம், 47வது பிரிவு

இன்றுவரை இந்தக் கொள்கை பின்பற்றப்படவில்லை.

மக்களுக்குக் கேடு தரும் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றால் மதுவையும் தடுக்க வேண்டும். நச்சுப்புகை உள்ளதால் பட்டாசுகளையும் தடை செய்ய வேண்டும். ஆனால் நாடு முழுவதும் அரசே மதுபானத்தை விற்பனை செய்கிறது. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பவர்களையும் விற்பவர்களையும் ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டால் இது கொள்கை விளக்கம்தான்; கட்டாயம் இல்லை என்கிறார்கள்.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாது. பெரும்பாலான மக்கள், குறிப்பாகப் பெண்கள் முழுமையாக இதை வரவேற்பார்கள். இதைப் பற்றிப் பேசத் துப்பில்லாத பாஜக பொதுசிவில் சட்டம் பற்றி மட்டும் ஊளையிடுவது ஏன்?

தனது பொருளாதார சக்திக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், கல்வி பெறுவதற்கும், வேலை இல்லாத போதும் வயது முதிர்ந்தோருக்கும் ஊனமுற்றோருக்கும் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோருக்கும் பொது நிதியிலிருந்து உதவி பெறுவதற்கு உற்ற துணை புரிவதற்கேற்ற வழிவகைகள் காணப்பட வேண்டும்.

அரசியல் சாசனம் 41வது பிரிவு

அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்; சக்திக்கு மீறிய வேலையாக அது இருக்கக்கூடாது வேலையில்லாதோருக்கும் முதியோருக்கும், நோயாளிக்கும், பொது நிதியிலிருந்து உதவ வேண்டும் என்றெல்லாம் இந்தப் பிரிவு கூறுகின்றது.

தேவையான, அவசியமான இந்தக் கொள்கைகள் யாவும் இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள தீய விளைவுகளைக் கண்ட பின்பும் இதைச் செய்வோம் என்று சொல்ல பாஜகவுக்கு திராணி இல்லை.

இதுபோல் சொல்லப்பட்ட கொள்கை விளக்கத்தை அடிப்படையை உரிமையைப் பறிக்கும் கொள்கை விளக்கத்தை அமல்படுத்த துடிப்பது முஸ்லிம்களுடன் மோதிப்பார்க்கும் நோக்கம் தவிர வேறு இல்லை.

இஸ்லாமிய சிவில் சட்டம் கோருபவர்கள், இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கோர மறுப்பதேன்? என்ற கேள்விக்கு வருவோம்.

திருமணம் உள்ளிட்ட அந்த ஐந்து விஷயங்கள் முஸ்லிம்கள் தமக்குள் செயல்படுத்தக் கூடியவை. அதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை.

கிரிமினல் சட்டங்கள் ஆட்சியாளர்களால் நடைமுறைப் படுத்தப்படுபவை. சிவில் சட்டங்களிலும் பெரும்பாலானவை ஆட்சியாளர்களால் அமல் படுத்தப்படுபவை. மக்கள் இதைத் தாங்களாகவே அமல்படுத்த முடியாது. மக்கள் தமக்கிடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக் கூடிய, மதம் சம்பந்தப்பட்ட, மிகச் சில விஷயங்களில் மட்டுமே தனியார் சிவில் சட்டம் உள்ளது.

இஸ்லாமிய ஆட்சி முறையில் கூட கிரிமினல் சட்டத்தை ஆட்சியாளர்கள்தாம் அமல்படுத்த முடியும். இந்தச் சாதாரண உண்மை கூட அறிவுஜீவிகளான இவர்களுக்கு விளங்கவில்லை.

கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய கடுமையான தண்டனைகளை உங்களுக்குள் நீங்களே அமல்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு, முஸ்லிம்களை நச்சரித்து வருவது போலவும், அச்சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி முஸ்லிம்கள் தயங்குவது போலவும் இத்தகைய கேள்விகளால் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமியக் கிரிமினல் சட்டங்களை, முஸ்லிம்கள் கிரிமினல் விவகாரங்களில் அமல்படுத்திக் கொள்ள அரசு அனுமதித்தால் முஸ்லிம்கள் அதை மனப்பூர்வமாக ஏற்கத் தயாராக உள்ளனர். இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களால்தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதில் முஸ்லிம்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு என்பதை அறிவுஜீவிகள் உணரட்டும்

ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தை உலகில் எந்த நாடும் குறிப்பிட்ட சமுதாயத்தின் கைகளில் கொடுக்காது. ஒருவன் கொலை செய்து விட்டால் அவனை ஜமாஅத்தில் இழுத்து வந்து தூக்கில் போட்டுக் கொள்ளுங்கள் என்று ஒரு நாடு கூறினால் அந்த ஜமாஅத் மீது அந்த நாட்டுக்கு ஆளுமை இல்லை என்று ஆகிவிடும். இதனால்தான் இந்தக் கிறுக்குத்தனமான சட்ட விரோதமான இக்கோரிக்கையை முஸ்லிம்கள் வைக்கவில்லை.

ஆனால் முஸ்லிம்கள் செய்யும் கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாமிய அடிப்படையில் தீர்ப்பு அளிப்போம் என்று அரசு முடிவு செய்தால், இஸ்லாம் கூறுகின்ற அடிப்படையில் முஸ்லிம்களைக் கொண்ட தனி நீதிமன்றம் அமைத்தால் நாட்டில் உள்ள ஒரு முஸ்லிமும் அதை மறுக்கமாட்டான்.

இந்த்த் தண்டனைகளால் முஸ்லிம்களில் கொலையாளிகளும் திருடர்களும் இல்லாமல் போனால் அல்லது பெருமளவில் குறைந்தால் அது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறோம்.

அறிவுஜீவிகள் என்போர், "இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் சிறுபான்மையினருக்குத் தனி சிவில் சட்டம் உண்டா?" என சிறுபிள்ளைத் தனமான கேள்வி கேட்கின்றனர்.

சவூதி அரேபியா முழுக்க முழுக்க முஸ்லிம்களை மட்டுமே குடிமக்களாகக் கொண்ட நாடு. இங்கு பிற சமய மக்கள் குடிமக்களாக இல்லை. இந்தியாவில் ஏறத்தாழ எட்டு சமயத்தவர்கள் குடிமக்களாகவும், மண்ணின் மைந்தர்களாகவும் வாழ்கின்றனர்.

நாட்டில் குடிமக்களாக உள்ளவர்கள் மத அடிப்படையிலான தனி சிவில் சட்டத்தின்படி வாழ்வதற்கும், பிழைப்புக்காக அயல்நாடு சென்று அந்நாட்டுக் குடிமக்களாக ஆக முடியாதவர்கள் தனி சிவில் சட்டம் கோருவதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டத்தினால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே அதை மாற்ற வேண்டும் என்பது இவர்களின் கடைசி அஸ்திரம்.

பெண்களுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது என்ற கூற்றில் உண்மை இருக்கின்றதா? என்றால் அதுவும் இல்லை.

ஒரு மனைவி இருக்கும்போது இன்னொரு மனைவியைத் திருமணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள்; இது கொடுமை என்கின்றனர்.

இன்னொருத்தியை மணந்து கொள்வது கொடுமை! ஆனால் வைப்பாட்டியாக வைத்துக் கொள்வது கொடுமை இல்லை. என்னே அறிவுஜீவித்தனம் இது!

தொடர்ந்து படிக்க கீழே உள்ள தளத்திற்கு செல்லவும்

http://www.onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/pothu_civil_sattam_sathiyama/

-நன்றி: www.onlinepj.com (ஓர் இஸ்லாமியக் களஞ்சியம்)

Monday, April 28, 2014

கேளிக்கைகளுக்காக கோழி சண்டைகளை ஊக்குவிக்கலாமா?சவுதி அரேபிய மாநிலங்களில் ஒன்றான நஜ்ரானில் அவ்வப்போது நடக்கும் சேவல் சண்டையைத்தான் நாம் மேலே பார்க்கிறோம். இது போன்ற போட்டிகளை நடத்துவது இஸ்லாமிய சட்டங்களுக்கு மாற்றமானது என்ற கருத்தில் சவுதி அரசு தடை செய்துள்ளது. ஆனால் நஜ்ரான் போன்ற எல்லையோர பகுதிகளில் கிராமங்களில் இதுபோன்ற விளையாட்டுக்களை சிலர் சந்தோஷத்துக்காக செய்கின்றனர். இன்னும் சிலர் இதில் மிகப் பெரும் தொகைகளை பந்தய பணமாக கட்டி பணம் பண்ணும் வழியாகவும் மாற்றிக் கொண்டுள்ளனர்.

மெக்சிகோ, உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகளில் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் கோழிகள் மிக அதிக விலையை பெறும். நமது இந்தியாவிலும் மாடுகளை பிடிப்பதிலும், கோழி சண்டைகளை ஊக்குவிப்பதிலும் பெரும்பாலோர் பங்கு பெறுவதை பார்க்க முடிகிறது.

ஒரு உயிரை இவ்வாறு இம்சை படுத்தி அது படும் கஷ்டத்தை நாம் பார்த்து ரசிப்பது என்பது மிக கொடூர எண்ணங்களை நம்முள் உண்டாக்கும். இதற்கு நமது அரசாங்கங்களும் தடை விதிக்க வேண்டும். மற்றவர்கள் எப்படியோ ஆனால் ஒரு முஸ்லிம் மிருகங்களிடத்தில் அன்பு பாராட்ட வேண்டும். அதனை பின் வரும் நபி மொழிகள் நமக்கு விளக்குகின்றன.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி ஒரு பூனைக்குத் துன்பம் தந்த விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் – ‘நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறினான். (புஹாரி:2365, முஸ்லிம்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது. (புஹாரி:3321)

நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். (புஹாரி:2363, முஸ்லிம்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டினாலோ, ஏதாவது ஒன்றை பயிரிட்டாலோ அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை. (புஹாரி:6012, முஸ்லிம்)

ஸஈதுப்னு ஜுபைர் (றழி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் (றழி) அவர்கள், குரைஷி கூட்டத்தைச் சார்ந்த சில வாழிபர்களை கடந்து சென்றார்கள், அவர்கள் ஒரு பறவையை குறியாக வைத்து எறிந்து கொண்டிருந்தனர், தவறும் ஒவ்வொரு அம்புக்காகவும் பறவையின் சொந்தக் காரனுக்கு (சன்மானம்) வைத்தனர். இதனை இப்னு உமரவர்கள் கண்ட போது. ‘யார் இதனை செய்தது?’ ‘இப்படி செய்தவரை அல்லாஹ் சபிப்பானாக, ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், உயிருள்ள ஒன்றை இலக்காக, குறியாக ஏற்படுத்தியவரை சபித்தார்கள்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்:5174)

அடுத்து இவ்வளவு ஜீவகாருண்யம் பேசும் நீங்கள் உயிர்களைக் கொன்று சாப்பிடலாமா? என்று கேட்கலாம். இந்த பூமியை மனிதனுக்காக படைத்த இறைவன், அதில் உள்ள மற்ற உயிரினங்களை மனிதனின் தேவைக்காகவே படைத்ததாக சொல்கிறான்.

உலகில் வாழும் மனிதர்களில் பெரும்பான்மை சமூகம் நாத்திகர்கள் தவிர கடவுள் கொள்கையை இந்த உலகம் தானாக வந்ததல்ல, மனிதனைப் படைத்த சிருஷ்டி இருக்கின்றான் என்ற கொள்கையை ஏற்றவர்களாகத் தான் இருக்கின்றனர். அந்த அடிப்படையில் படைப்பாளன் அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்கும் போதே அவற்றின் இயல்பை வெளிப்படுத்திக் காட்டும் நிலையிலேயே படைத்துள்ளான். ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் பல் வரிசையை எடுத்து நோக்கினால் அதன் இயல்பு தாவரம் உண்ணுவது என்பது விளங்கும். சிங்கம், புலி போன்ற வேட்டைப் பிராணிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் பல் வரிசையில் வேட்டை பல் வெளிப்படையாகத் தென்படும். அதன் மூலம் அவை வேட்டைப் பிராணிகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆனால் மனிதனை எடுத்துக் கொண்டால் அவனும் ஒரு மிருகமாக ஆனால் பேச முடிந்தவனாக இருந்தாலும் அவன் இந்த இரண்டு இயல்புகளுக்கும் உட்பட்டவனாகவே இருக்கின்றான். அவன் மாமிசத்தையும், தாவரத்தையும் உண்ணுபவனாக இருக்கின்றான். படைப்பாளன் அல்லாஹ் அதனை தெளிவுபடுத்தும் நிலையில் அதனது பல் வரிசையை வேட்டைப் பல் கொண்டதாகவும், அரைக்கும் பல் கொண்டதாகவுமே படைத்துள்ளான். எனவே மனிதன் மாமிசம் (ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி) உண்ணுவதை காழ்ப்புணர்ச்சிக்காக விமர்சிப்பது, தாம் ஏற்றிருக்கும் கடவுள் கொள்கைக்கு முரணானதாக இருப்பதுடன், கடவுளையே விமர்சிப்பதாக அமையும். இப்படி நடு நிலையாக அனைவரும் ஏற்ற அடிப்படையில் சிந்தித்தாலும் மனிதன் மாமிசம் சாப்பிடுவது இயற்கையானதே என்று விளங்கும். காய்கறிகளுக்கும் உயிர் உண்டு என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. அதனால் ஜீவகாருண்யம் பேசுபவர்கள் காய்கறிகளை சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டு நியாயம் பேச வேண்டும்.

காட்டுவாசிகளும், ஆதிகால மனிதர்களும் வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டதனாலே வேடர்கள் என்ற ஒரு சமூகமே உருவானது. இன்று இஸ்லாத்தை ‘ஜீவகாரூன்யமற்ற மார்க்கம்’ என்று விமர்சிப்போர் யோசிக்க வேண்டும், காட்டு வாசிகள் வேட்டையாடியது, மாமிசத்தை சாப்பிட்டது, இஸ்லாம் காட்டிக் கொடுத்ததனாலா?! அல்லது மனிதனின் இயல்பு என்பதனாலா?! இஸ்லாத்தை விமர்சிக்கும் இவர்கள் காட்டு வாசிகளை வேடர்களை மனித சமூகமாக நோக்காதவர்களா?! நடு நிலையாக சிந்திப்போர் தெளிவு பெறுவர். தற்போது துருவப் பிரதேசமான ஆர்டிக் பகுதிகளில் எஸ்கிமோக்கள் மாமிசம் சாப்பிடாமல் இருந்தால் இறந்தே விடுவார்கள்.

உணவுக்காக உயிர்களை அறுக்கும் போது கத்தியை நன்கு தீட்டிக் கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அந்த உயிர் அதிக நேரம் இம்சைபடாமல் இருக்க குரல்வளையில் அறுத்து அதன் உயிர் சீக்கிரம் சென்று விடும்படி அமைத்துக் கொள்ள இஸ்லாம் கட்டளையிடுகிறது. எனவே உணவு தேவைகளுக்காக மிருகங்களை அறுப்போம். அதே சமயம் நமது கேளிக்கைகளுக்காக அந்த உயிரினங்களை இம்சைபடுத்துவதை நிறுத்திக் கொள்வோம்.

Sunday, April 27, 2014

56 இஞ்ச் மார்பளவு இந்நாட்டுக்கு தேவையில்லை - பிரியங்கா காந்தி!'இந்த நாட்டை வழி நடத்திச் செல்ல 56 இஞ்ச் அகன்ற மார்பு கொண்டவருக்கு எந்த அவசியமும் ஏற்படப் பொவதில்லை. இந்த நாட்டை வழி நடத்த அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லக் கூடிய பரந்த மனப்பான்மைக் கொண்ட நெஞ்சுரம் மிக்க ஒருவரே இந்நாட்டை ஆளத் தகுதியானவர்'

-பிரியங்கா காந்தி நரேந்திர மோடிக்கு பதில்!

'56 இஞ்ச் மார்பளவு கொண்ட எனக்கு இந்த நாட்டை ஆளும் தகுதி உள்ளது' - நரேந்திர மோடி

மார்பளவு அதிகம் உள்ளவர்தான் இந்த நாட்டை ஆளத் தகுதியானவர் என்றால் தாராசிங் என்றோ பிரதமர் ஆகியிருப்பார். இந்த முறை எப்படியும் பிரதமராகி விடலாம் என்று கனவு கண்ட வந்த மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மூலம் மிகப் பெரிய ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. 150 இடங்கள் வந்தாலே அதிகம் பிஜேபிக்கு. தோல்வி பயத்தில் என்ன பேசுவதென்றே தெரியாமல் உளறிக் கொட்டுகிறார் மோடி.

Friday, April 25, 2014

சினிமாவில் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக இஸ்லாத்தை ஏற்றார்!அர்னார்ட் வேன் தூர்ன் என்ற இந்த பெயரை முஸ்லிம்கள் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது. டச்சு அரசியல்வாதியும், இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினருமான அர்னார்ட் 'பித்னா' என்ற திரைப்படத்தினை உலகமெங்கும் விநியோகம் செய்தவர். இது நடந்தது 2008ல். இந்த படத்தில் பல கற்பனை கதைகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டு இஸ்லாத்தை கொச்சை படுத்தியதால் உலக முஸ்லிம்களால் கடும் கண்டனத்தை சம்பாதித்தது.

அடுத்த ஐந்து வருடத்தில் உலகம் அதே அர்னார்டை ஆச்சரியத்தோடு பார்த்தது. ஆம். செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். குர்ஆனை விளங்கினார். இன்று மிக அழகிய வாழ்வு முறையை பெற்றுக் கொண்டார்.

அதே போல் இன்று மறுபடியும் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் அர்னார்ட். ஆம். அவரது மகன் இஸ்கந்தர் அமீன் டே விரி தனது தந்தையை பின் பற்றி இஸ்லாத்தை ஏற்றுள்ளார். சென்ற ஏப்ரல் 18 ந்தேதி துபாயில் நடந்த சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்கில் 37 நபர்கள் தங்கள் வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டனர். அந்த 37 பேரில் ஒருவர்தான் அர்னார்டின் மகன் இஸ்கந்தர் அமீன்.

'ஏக இறைவன் ஒருவனே! அவனே அல்லாஹ்! அவனது கடைசி இறைத் தூதர் முகமது நபியாகும் என்று உளப் பூர்வமாக உறுதி கூறுகிறேன்' என்று பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் உரத்து கூறினார் இஸ்கந்தர் அமீன். மக்கா பள்ளி இமாம் சுதைஸிடமிருந்து, அர்னார்டும், இஸ்கந்தரும் சந்தோஷத்தோடு குர்ஆனை பெற்றுக் கொள்வதைத்தான் மேலே பார்க்கிறோம்.

'கலீஜ் டைம்ஸ்' என்ற பத்திரிக்கைக்கு பேட்டியளித்த இஸ்கந்தர் கூறுகிறார் : 'எனது தந்தை முன்னெப்போதும் இல்லாததை விட மிக அமைதியாக தென் பட்டார். இந்த மாற்றம் அவர் இஸ்லாத்தை ஏற்றவுடன்தான் நிகழ்ந்தது. எனது தந்தையின் அந்த மாற்றமானது இந்த இஸ்லாத்தில் ஏதோ இருக்கிறது என்ற தேடலை என்னுள் ஏற்படுத்தியது. அந்த தேடல்தான் என்னை இன்று உங்கள் முன் இஸ்லாமியனாக நிற்க வைத்துள்ளது. குர்ஆனின் விளக்கவுரைகளை பல அறிஞர்களின் குறிப்புகளோடு இன்று தீவிரமாக ஆய்வு செய்து வருகிறேன். 22 வயதான எனக்குள் எனது கல்லூரி இஸ்லாமிய சக தோழனும் இஸ்லாத்தை எனக்குள் எத்தி வைத்தான். அந்த நண்பனின் ஊக்கமும் எனது தந்தையின் வாழ்வு முறையும் என்னையும் இந்த இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள தூண்டியது.'

கலீஜ் டைம்ஸிடம் அர்னார்ட் பின் வருமாறு கூறுகிறார்: "நான் முன்பு செய்த தவறுகளை நானே திருத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எனது திறமைகளை பயன்படுத்தி மிகச்சிறந்த உண்மையை பறைசாற்றும் ஒரு இஸ்லாமிய திரைப்படத்தை எடுக்க நினைத்துள்ளேன். பல இளைஞர்களுக்கு இஸ்லாத்தின் உண்மையை விளக்க முயற்சிப்பேன்".

அர்னார்ட் ஒரு இஸ்லாமிய பவுண்டேஷனை தனது நாட்டில் உருவாக்கியுள்ளார். அதற்கு அனைவரும் ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அமைப்பானது ஐரோப்பாவில் இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரங்களை ஆதாரங்களோடு எதிர் கொள்ளும். இதன் உறுப்பினர்கள் இஸ்லாமியர்களையும் இஸ்லாம் அல்லாதவர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக செயல்படுவர். தந்தையின் பயணத்தில் தற்போது மகனும் உதவி புரிய வந்துள்ளார். அவரது தாய் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. இவர்கள் இருவரும் இஸ்லாத்தை ஏற்று விட்டதால் இவர்களின் அமைதியான வாழ்வை பார்த்து கவரப்பட்டு அர்னாடின் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்காக நாமும் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி:

சவுதி கெஜட்
24-04-2014

Thursday, April 24, 2014

அரவிந்த் கெஜ்ரிவால் மகனுடன் ஒரு பேட்டி!அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்ற சமயம் எடுத்த நேர் காணல்.

நிருபர்: அரவிந்த் கெஜ்ரிவால் மகன் கொல்கேத் நம்முடன் உள்ளார். உங்கள் தந்தை டெல்லி முதல் மந்திரி ஆனது பற்றி உங்கள் கருத்து?

கொல்கேத்: எனது தந்தை முதல் மந்திரி ஆனது மகிழ்ச்சியளிக்கிறது. சாமான்ய மக்களின் பிரச்னைகளை எனது தந்தை தீர்ப்பார் என்று நினைக்கிறேன்.

நிருபர்: உங்கள் தந்தை பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று நம்புகிறீர்களா?

கொல்கேத்: தன்னால் எது முடியுமோ அதனைத்தான் எனது தந்தை மக்களிடம் வாக்குறுதியாக கொடுத்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பேன் என்று சொன்னது போகிற போக்கில் தெளித்து விட்டு சென்ற வார்த்தைகள் அல்ல. பல அறிஞர்களைக் கொண்டு ஆய்வுகள் பல செய்து இதனை தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன்தான் வாக்குறுதிகளை எனது தந்தை கொடுத்துள்ளார். தற்போதய அரசின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸின் ஆதரவும் தேவைப்படும். சில நாட்களுக்குப் பிறகு சன்னம் சன்னமாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் எனது தந்தை.

நிருபர்: உங்கள் தந்தை முழு நேர அரசியல்வாதியாகி விட்டதால் குடும்பத்தவர்களோடு செலவிடும் நேரம் குறைந்து விடவில்லையா? இது உங்களுக்கு ஒரு இழப்புதானே?

கொல்கேத்: இந்த நாட்டு நலனுக்காக எனது தந்தை அதிக நேரத்தை செலவிடுவது எனக்கு பெருமையே! பலரும் என்னிடம் 'உனது தந்தை பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்' என்று என்னிடம் கூறும் போது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களோடு தனது நேரத்தை செலவிட எனது தந்தை தயங்கியதில்லை. எனவே எனக்கு இது ஒரு பிரச்னையாகவும் இருக்கவில்லை.

நிருபர்: உங்கள் தந்தைக்கு விஐபி களுக்காக தனி மரியாதை செய்வது பிடித்தமில்லாதது. ஆனால் தற்போது உங்களை எல்லோரும் 'அரவிந்தின் மகன்' என்று பார்ப்பர். பள்ளிகளிலும் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கொல்கேத்: அப்படி எல்லாம் எதுவும் நிகழாது. பழைய நண்பர்கள் அனைவரும் பழைய மாதிரியே தற்போதும் என்னிடம் பழகுகின்றனர். ஒரு சிலர் விளையாட்டுக்காக 'முதல்வரின் மகன்' என்று நகைச்சுவையாக கூறுவர். என்னைப் பொருத்த வரையில் படாடோபம் இல்லாத சாதாரண வாழ்வையே விரும்புகிறேன்.

நிருபர்: குடும்பத்தோடு உங்களின் தந்தை இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்வார். படிப்பு விஷயங்களில் ஆலோசனைகளும் வழங்குவாரா?

கொல்கேத்: படிப்பில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அதனையும் தீர்த்து வைப்பார். ஆலோசனைகளாக அவர் சொல்வது 'எது செய்தாலும் அதில் உண்மை இருக்க வேண்டும். எந்த நிலையிலும் தவறான வழியை தேர்ந்தெடுத்து விடாதே! எந்த மனிதருக்கும் துன்பத்தைக் கொடுக்காதே! வாழ்வில் முன்னேற நன்கு முயற்சி எடு. ஆனால் உண்மை வழியிலிருந்து பிறழ்ந்து விடாதே' என்று அடிக்கடி எனக்கு சொல்லிக் கொண்டிருப்பார்.

நிருபர்: படித்து பெரிய ஆளாக ஆனவுடன் என்னவாக விருப்பம் உங்களுக்கு. உங்கள் தந்தையைப் போல் அரசியலில் நுழைவீர்களா?

கொல்கேத்: எனது அப்பா எனது வருங்காலத்தை தீர்மானிப்பார். இது வரை நான் எதுவும் யோசிக்கவில்லை. பெரியவனானதும் அவசியம் ஏற்பட்டால் அரசியலுக்கும் வருவேன்.

நிருபர்: இவ்வளவு நேரம் எங்களோடு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

கொல்கேத்: உங்களுக்கும் எனது நன்றி!

இந்த சிறு வயதில் என்னவொரு ஆணித்தரமான ஆழமான பதில்கள். தந்தை எவ்வழி மகனும் அவ்வழி. இந்த சிறுவனிடம் எந்த நேரமும் ரத்த வெறியுடன் அலையும் நரேந்திர மோடியையும், அமீத் ஷாவையும், பாபு பஜ்ரங்கியையும் மற்ற இந்துத்வாவினரையும் பாடம் படித்துக் கொள்ள அனுப்ப வேண்டும். இது போன்ற சிறுவர்களே இந்த நாட்டை நிர்மாணிக்கப் போகும் வருங்கால சிற்பிகள்!

Wednesday, April 23, 2014

மோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மைஇந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம் கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன்: மோடி - வளர்ச்சி - குஜராத்.

வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்

இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா?

முதல்முறையாக மக்களவைத் தேர்தலை அதிபர் தேர்தல்போல எதிர்கொள்கிறது இந்தியா. பிரச்சாரத்தில் கட்சிகளின் பெயர்கள் அடிவாங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு மனிதரும் அவர் முன்னிறுத்தும் முழக்கமும்தான் இன்றைய இந்தியாவின், இந்தத் தேர்தலின் பேசுபொருள்: மோடி - குஜராத் - வளர்ச்சி.

நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் மோடிக்குப் பதில் அளிப்பதை மட்டுமே தேர்தல் பணியாகக் கொண்டிருக்க… ஏனைய கட்சிகளோ, மோடியை நோக்கிக் கேள்வி எழுப்புவதையே தேர்தல் பணியாகக் கொண்டிருக்கின்றன. ஆக, வாக்காளர்கள் முன் ஒரேயொரு கேள்விதான் எங்கும் தொக்கிநிற்கிறது: மோடி - குஜராத் - வளர்ச்சி வேண்டுமா; வேண்டாமா?

மக்களிடம் இப்படி ஒரு கேள்வி தொக்கிநிற்கிறது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களிலும் இப்போது இதுதான் முக்கியமான விவாதம் - குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? அது உண்மையாகவே ஒரு நல்ல முன்மாதிரிதானா, இல்லையா? மக்கள் உண்மையாகவே எப்படி இருக்கிறார்கள்? எது குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடியைப் பதவியில் அமர்த்துகிறது?

மோடி செய்ததும் செய்யாததும்

இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்த மாபெரும் கேள்விக்கும் விவாதத்துக்கும் நானும் பதில் தேடினேன். குஜராத் அரசுத் தரப்பினர் சாதனைகளாகச் சொன்ன - அவர்கள் நிறைவேற்றியிருக்கும் பல்வேறு திட்டங்களைப் பார்க்க அலைந்தேன். அந்தத் திட்டங்கள் நன்மை - தீமைகளை அளவிட ஏகப்பட்ட குறிப்புகள், புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். ஏராளமான மக்களிடம் கருத்துகள் கேட்டேன். சரி, உண்மை நிலவரம் என்ன?

குஜராத்தில் மோடி முன்னோடியான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறாரா? நிச்சயமாகக் கொண்டுவந்திருக்கிறார் - எப்படி கேரளத்திலும் தமிழகத்திலும் பிஹாரிலும் சில முன்னோடியான திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவோ அப்படியே குஜராத்திலும் முன்னோடியான சில திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், குஜராத்துக்கு வெளியே அவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. பல விஷயங்களில் துளியும் உண்மை இல்லாமல் மோடி கொண்டாடப்படுகிறார். ஒரு உதாரணம்: குஜராத் மதுவிலக்கு மாநிலமாக இருப்பதற்கு மோடி கொண்டாடப்படுவது. உண்மை என்னவென்றால், குஜராத் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட 1960 முதலே அது மதுவிலக்கு மாநிலம். இதைச் செய்தது காங்கிரஸ் அரசாங்கம். உண்மையில் மோடி ஆட்சியில் மது கள்ளச் சந்தையில் நிறையவே கிடைக்கிறது. இரட்டை விலையில் விற்கிறார்கள். சமீபத்திய உதாரணம், நாட்டில் அதிக அளவில் ரூ.12.57 கோடி மதிப்புடைய மது, தேர்தல் ஆணையத்தால் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது. இப்படி நிறைய அடுக்கலாம். ஆனால், வெற்றிகரமாக அந்த மாயையை நிறுவியிருக்கிறார்கள்.

சரி, இது மாயை என்றால், உள்ளூரில் எடுபடாதே? பின் எப்படி குஜராத்தில் மோடி தொடர்ந்து வெல்கிறார்? குஜராத்திலிருந்து புறப்படும்போது எடுத்த ஒரு புகைப்படம் அந்த உண்மையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

உண்மையின் கதவுகள்

ஊரெல்லாம் சுற்றிவிட்டு, அகமதாபாத் திரும்பியபோதுதான் அதைக் கவனித்தேன். சில வீதிகளின் நுழைவாயில்களில் பெரிய பெரிய இரும்புக் கதவுகளை அமைத்திருந்தார்கள். அந்த வீதிகளின் புழுதி மண் சாலைகள் நாம் வெளியில் கேட்கும் குஜராத்தின் வளர்ச்சி கோஷங்களோடு எந்த வகையிலும் பொருந்தாதவை. மனதில் வித்தியாசமாகப் படவும், ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். அகமதாபாதின் மையத்தை ஒட்டியிருக்கும் அந்தப் பகுதியின் பெயர் சோனி கே சால். மோடியின் தொகுதியான மணிநகருக்கு மிக அருகில் இருக்கும் பகுதி. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. “வீதியின் நுழைவாயிலில் ஏன் இரும்புக் கதவுகளை அமைத்திருக்கிறார்கள்?” என்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த அதிரவைக்கும் பதில் இது: “பழங்கால முறைதான். கலவரம் ஏற்பட்டால் கதவைப் பூட்டிவிட்டுப் பதுங்க.”

அருகருகே இருந்த வீதிகளில் நுழைந்து சென்றபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. பெரும்பாலான வீடுகளில் நிலை, கதவுகள், ஜன்னல்கள் யாவும் இரும்பாலேயே அமைக்கப்பட்டிருந்தன. “ஏன் மரங்களைப் பயன்படுத்துவது இல்லையா?” என்ற என் அடுத்த கேள்விக்குக் கிடைத்த பதில் நிலைகுலையச் செய்தது. “கலவரத்தின்போது தீயை இது கொஞ்சமாவது தாக்குப்பிடிக்கும் இல்லையா? இங்கே கலவரங்களின்போது தீப்பந்தங்கள்தான் வீட்டுக்குள் முதலில் வரும். அப்புறம் என்ன வெட்டினாலும் கூறுபோட்டாலும் சரி… எரித்தால்தான் அவர்களுக்கு வெறி அடங்கும்.”

எனக்கு கோத்ராவும் நரோடா பாட்டியாவும் மாறி மாறி நினைவுக்கு வந்தன. கோத்ராவில் ரயில் பயணிகளைத் துடிக்கத் துடிக்கத் தீ வைத்துதான் அழித்தார்கள். நரோடா பாட்டியாவில் ஒன்பது மாதக் கர்ப்பிணியான கௌஸர் பானுவின் வயிற்றை வாளால் கிழித்து அந்தச் சிசுவை வெளியே எடுத்தவர்கள் தரையில் போட்டு அதை மிதித்தார்கள்; அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அதன் மீது எண்ணெயை ஊற்றி எரித்தார்கள்.

அங்கிருந்து வெளியே வந்தேன். கார் ஓட்டுநர் ஒரு இந்து. “சார்… இந்துக்களுக்கும் பயம் உண்டு சார். முஸ்லிம்கள் சுற்றி அதிகமாக வாழும் இடங்களில் இந்துக்களும் இப்படிப் பாதுகாப்புக்கு வீதி நுழைவாயிலில் இரும்புக் கதவுகள் போட்டுக்கொள்வது உண்டு” என்று சொல்லி ஓர் இடத்தைக் காட்டினார். பின்னர் சொன்னார்: “இந்த பயம்தான் சார் உண்மையில் குஜராத்தை ஆட்சி செய்கிறது. இரு தரப்பையும் வெவ்வேறு வகைகளில்.”

கார் அகலமான ஒரு சாலையில் பாய்ந்து செல்ல ஆரம்பித்தபோது, எனக்கு நடிகை நந்திதா தாஸ் ஒரு பேட்டியில் ‘மோடி - வளர்ச்சி - குஜராத்' தொடர்பான கேள்விக்கு அளித்திருந்த பதில் ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பேட்டியில் நந்திதா தாஸ் இப்படிக் கூறியிருப்பார்: “ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் ஹிட்லர் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. ஜெர்மனியின் மிகச்சிறந்த மருத்துவ மனைகளும் அப்போதுதான் கட்டப்பட்டன. ஆனால், ஹிட்லரை நாம் யாரும் வளர்ச்சிக்காக நினைவுகூர்வதில்லை!”

- சமஸ்
தொடர்புக்கு:samas@kslmedia.in

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/article5939814.ece?homepage=true

Tuesday, April 22, 2014

2014 தேர்தல்: இந்துத்துவாவுக்கு சாவு மணி!

நடைபெற்று கொண்டிருக்கும் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து மோடியை ஒரு "வளர்ச்சி நாயகனாக" சித்தரித்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையால் ஆதங்கத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம் சமூகமும், "மோடி ஒரு கொலைவெறியர்" என்ற கண்ணோட்டத்தில் சமூக ஆர்வலர்களும், "மோடி ஒரு மதவெறியர்" என்ற பார்வையில் மதச்சார்பற்றோரும், "குஜராத் வளர்ச்சி என்பது அப்பட்டமான பொய்" என்று குவியும் ஆவணங்களின் அடிப்படையில் நடுநிலையாளர்களும், பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனர்.

ஒருவேளை மோடி பிரதமர் ஆகிவிட்டால், "குஜராத் போன்றே நாடெங்கும் ஹிந்துத்துவ வெறியர்களால் அதிகார மையத்தின் ஆதரவுடன் இரத்த ஆறு ஓட்டப்படலாம்" என்ற அச்சமே இந்த எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணம். ஆனால் உண்மையில் அவ்வாறானதொரு அச்சம் கொள்வதற்கான நிலைமையில் தற்போதைய இந்திய அரசியல் சூழல் இல்லை என்பது தான் யதார்த்த நிலை. எவ்வளவுதான் பகீரதப் பிரயத்தனம் நடத்தினாலும் பாஜகவால் இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. இனிவரும் காலங்களில் காங்கிரஸாகட்டும்; பாஜகவாகட்டும்; மத்தியில் தனித்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு மிக அரிது. ஒருவேளை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துவிட்டாலும்கூட ஹிந்துத்துவம் தயாராக்கி வைத்திருக்கும் "முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்" ஆகியோரை முதலில் அழித்தொழிக்கும் ஃபாஸிச சித்தாந்தத்தைச் செயல்படுத்துவது இந்நவீன காலத்தில் சாத்தியம் இல்லை. அப்படி ஒருவேளை நடந்தால் இந்தியா முழுக்க இரத்த ஆறு ஓடும். அது இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகள் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும்.

இந்த உண்மை, மோடியை முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ் அறியாத ஒன்றல்ல. எனினும், முன்பு தாம் முன்னிறுத்திய கட்சியின் மூத்த தலைவர் அத்வானி போன்றோரின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, தற்போது மோடியைப் பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ் துடிப்பது ஏன்? இதற்கான பதில் கிடைக்கவேண்டுமெனில், "மோடி என்ற வளர்ச்சி மாயை"யைச் சற்று மறந்து அதையும்தாண்டி சிந்திக்கவேண்டும். அவ்வாறு மக்கள் ஆழமாக சிந்தித்துவிடாமல் இருக்கும் பணியையும் இரத்தக்கறை படிந்த மோடி பிம்பம் கவனித்துக்கொள்கிறது!

குறிப்பாக, மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த தருணத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலிடம் "இனிமேல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. சமூக நலப்பணிகளை மட்டுமே ஆர்.எஸ்.எஸ் மேற்கொள்ளும்" என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து தம்மீதான தடையினை நீக்கிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ், இந்திய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக கொடுத்த வாக்குறுதியினை மிக வெளிப்படையாக மீறி - இதற்காகவே மீண்டும் இந்திய அரசால் தடை செய்யப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகள் இருந்தும் அது குறித்து கவலையே கொள்ளாமல், முதன் முதலாக இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக களமிறங்க வேண்டிய அளவுக்கான கட்டாயம் என்ன நேர்ந்தது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தம் கொள்கைகளை மிக நிதானமாக நீண்டகால திட்டத்தோடே செயல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், தனிப்பெரும்பான்மை பெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லாத இத்தருணத்தில் மோடியைப் பிரதமராக்கியே தீருவது என்று நேரடியாக களமிறங்கியுள்ளதன் நோக்கம் "குஜராத் சாம்ப்பிளை வைத்து நாடு முழுவதும் சோதிப்பதற்கல்ல"!

பின்னர்?

அதையும் தாண்டி, ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுத்து கொண்டு வந்துள்ள, ஹிந்துத்துவா சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்தும் ஒரே நம்பிக்கையான "சங்கத்தைப்" பாதுகாப்பதுதான் இதன் பின்னணி ரகசியம்! இதுவே ஆர்.எஸ்.எஸ்ஸை வரவிருக்கும் ஆபத்திலிருந்து காக்கும்!

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆபத்தா? அதெப்படி?

மோடி சுனாமி(!)யால் நாம் மறக்கடிக்கப்பட்டிருக்கும் சில முக்கிய விசயங்களைப் பார்ப்போம்.

கார்கரே - இப்பெயர் நினைவுள்ளதா?

நினைவுள்ளது எனில், கீழ்கண்ட பெயர்களை வரிசையாக படியுங்கள்.

- ப்ரக்யா சிங் தாக்கூர்

- கர்னல் ப்ரோகித்

- அசிமானந்தா

- சுனில் ஜோஷி

- இந்திரேஷ் குமார்

- மோகன் பகவத்

இதேவரிசையில் இப்பெயர்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு இடையில் நடந்துள்ள சில முக்கிய விசயங்களைப் பார்ப்போம்.

"ஹிந்துத்துவ ராஷ்டிரம்" என்ற ஒற்றைக் கனவுடன் இயங்கும் ஹிந்துத்துவா, அதற்காக தயாராக்கிய திட்ட வரைபடத்தின் முக்கிய மூன்று மூர்த்திகள் - சாது, சங்கம், சர்க்கார்!

சாதுக்களைக் கொண்டு ஹிந்துத்துவ சித்தாந்தங்களை இந்து மக்களிடையே பரப்பி அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையினைச் செய்வதோடு, ஹிந்துத்துவ ராஷ்டிரத்தை அமைப்பதற்கான எல்லாவித உதவிகளையும் செவ்வனே செய்யும் சர்க்கார்களை அந்த மக்களின் துணையுடன் கொண்டுவந்து ஹிந்துத்துவ ராஷ்டிரத்தை அமைப்பதே இவற்றின் நடு நாயகமான சுயம் சேவக் சங்கம்-ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை!

இத்திட்டத்தின்படியே, "சர்க்கார்"கள் அமைக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸால் உருவாக்கப்பட்டது. பாஜக தலைமையில் சர்க்கார்கள் அமைய "ராமரும் பிள்ளையாரும்" நன்றாக பயன்படுத்தப்பட்டனர்.

ராமர் எஃபக்டில் பாபர் மசூதியை இடிக்கப்பதற்குச் "சாதுக்களை"(விஷ்வ ஹிந்து பரிசத்) ஆர்.எஸ்.எஸ் நன்றாக பயன்படுத்தியது. அதன் விளைவாக முதன் முதலாக பாஜக வாஜ்பாய் தலைமையில் மத்தியில் "சர்க்கார்" அமைத்தது.

அக்கால கட்டத்திலும்கூட பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் நாடுமுழுவதும் தலைவிரித்தாடும் என்றொரு பயம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக வாஜ்பாய் மத்தியில் அமைதியாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார் - அப்படியா? - அப்படி நினைத்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒவ்வொரு துறை அமைச்சர்களின் மூலம் அந்தந்தத் துறைகளில் பாஜக என்னென்ன மாற்றங்களைச் செய்தது என்பது எவருக்கும் தெரியாது. தொல்பொருள் ஆய்வு துறையில் (வரலாறு) விளையாடியது, பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தது என "மாட்டிய" சில மட்டும் வெளிப்படையாக தெரிந்த விஷயங்கள்!

வருங்கால "ஹிந்து ராஷ்டிரத்துக்கான" அடித்தளங்கள் இவை. மென்மையானவரான வாஜ்பாய் மூலம் இதனை மட்டுமே ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கவும் செய்தது. சொல்லித் தந்தபடி அதை அவர் செவ்வனே நிறைவேற்றவும் செய்தார். ஆனால் அதே காலகட்டத்தில், "சர்க்கார் தைரியமானதாகவும் சிலவற்றைச் செய்யவேண்டும்" என்பதை குஜராத்தில் மோடி செய்து காட்டி "தைரியமான ஊழியர்" என்ற பெயரைத் தட்டிச் சென்றார்!

இதற்கிடையில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் "சாதுக்களுக்கு" ஆர்.எஸ்.எஸ் மற்றொரு வேலையைக் கொடுத்தது. அது, "முஸ்லிம்கள் பெயரில் குண்டுவெடிப்புகள் நடத்துவது"!

அதுவும் சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ரயில், பஸ், சாலை, கோயில், சர்ச், பள்ளிவாசல் என எங்குக் குண்டு வெடித்தாலும் "அள்ளு அவனை!" என்ற ரீதியில் "உளவுத்துறை மற்றும் ஊடகங்களில்" ஏற்கெனவே ஊடுருவப்பட்டு விட்டிருந்த காவி பயங்கரவாதிகளால் முஸ்லிம் சமூகம், திட்டமிட்டே "தீவிரவாதி"யாக்கப்பட்டுக் கொண்டிருந்தது!

இந்நேரத்தில் வந்து சேர்ந்தார் கார்கரே!

மாலேகானில் சிமி அலுவலகத்தின் எதிரேயும் பள்ளிவாசலிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் ஏற்கெனவே முஸ்லிம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரிக்க மும்பை தீவிரவாத தடுப்புப்படையின் தலைவராக கார்கரே நியமிக்கப்பட்டார்.

அவரின் நேர்மையான விசாரணையில் முதன் முதலாக "குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டவர்கள் முஸ்லிம்கள் அல்ல... சங்பரிவாரே!" எனும் திடுக்கிடும் உண்மைகள் வெளியானது. சிறு புள்ளியில் ஆரம்பித்த அவரின் ஆக்டோபஸ் கர விசாரணை, மாலேகானைத் தாண்டி கோவா, பெங்களூர், ஹைதராபாத் மக்கா மசூதி, சம்ஜௌதா எக்ஸ்ப்ரஸ் ரயில் என நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் அடுக்கடுக்காய் நீண்டது.

அபினவ் பாரத், ஹிந்து ஜாக்ரன் மஞ்ச், பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ் என சங்பரிவார் அமைப்புகள் சர்வசாதாரணமாக நாட்டில் குண்டுவெடிப்புகளை நடத்தியதையும் அவரே கண்டறிந்தார்.

குண்டுவெடிப்புகளுக்காக திட்டமிடும் வேலையை சாதுக்கள் "ப்ரக்யா சிங் தாகூர், தயானந்த் பாண்டே, அசிமானந்தா" போன்றோர் செய்ததும் அவர்களுக்கு ஆர்.டி.எக்ஸ் முதலான வெடிகுண்டுகள் சப்ளை செய்வதிலிருந்து பயிற்சியளிப்பது வரை இந்திய இராணுவத்தில் பணியிலிருந்த கர்னல் புரோகித் செய்ததும் பணியினைச் செய்து முடிக்க ஆர்.எஸ்.எஸ் மெம்பர் சுனில் ஜோஷி தலைமையிலான பெரியதொரு பயங்கரவாதப்படை செயல்பட்டதும், இந்தப் பயங்கரவாதச் செயல்களை நடத்த சாதுக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆர்.எஸ்.எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் மற்றும் அடுத்த தலைவராக வாய்ப்புள்ள இந்திரேஷ் குமாருடன் சாதுக்களைச் சந்திக்க வைக்கும் பெரும்பணியைச் சுனில் ஜோஷி செய்ததும் பின்னர் அசிமானந்தாவின் வாக்குமூலம் வழியாக வெளியான தகவல்கள்!

நேர்மையான அதிகாரியான கார்கரே தைரியத்துடன் சாது ப்ரக்யா சிங் தாகூர் மற்றும் கர்னல் புரோகித் ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்தார். தொடர்ந்து சாது அசிமானந்தா கைது செய்யப்பட்டார். "இந்தியாவின் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இவர்களின் நெட்வொர்க், இஸ்ரேலை மையமாக கொண்டு ஒரு நிழல் ஹிந்துத்துவ சர்க்காரே செயல்பட்டுள்ளது" என்ற அதிர வைக்கும் விஷயங்களை வெளியே கொண்டுவந்தார் கார்கரே.

மாலேகான் குண்டுவெடிப்பு, சாதாரணமாக ஒரு இடத்தில் மட்டும் நடந்த அசம்பாவிதம் அல்ல; அது சர்வதேச தொடர்புகள் வரை நீளக்கூடியது என்பதும் அதன்மூலம் சங்பரிவாரின் "ஹிந்துத்துவ அஜண்டா" முழுவதும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை குற்றப்பத்திரிகையைக் கார்கரே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்த நாட்களில் திடீரென மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார்!

அப்பாடா... ஒழிந்தது பெரியதொரு தலைவலி! என்று பெருமூச்சு விட்டது ஹிந்துத்துவம்.

அதன் பின்னர், அந்தக் குண்டுவெடிப்பு விசாரணைக்குத் தலைமையேற்ற (கர்னல் புரோகித் உடனான தொடர்பு குறித்து ஏற்கெனவே கார்கரேவால் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைக்குள்ளான ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான) கே.பி.ரகுவன்ஷி, பொறுப்பேற்ற அன்றே "மாலேகான் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சக்திகளேதும் இல்லை. அது சாதாரண உள்நாட்டு குழுவின் குண்டுவெடிப்புதான்" என பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து சங்பரிவாருக்கு வர இருந்த மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்தார்.

கர்னல் புரோகித், "இந்திய இராணுவமே வேவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டவர்தான். அவர் குற்றமற்றவர்!" என நற்சான்றிதழ் கொடுத்து இராணுவ நீதிமன்றம் அவரையும் உருவிக்கொண்டது.

மீதி இருந்தது சாது ப்ரக்யா சிங் தாகூர்! அவருக்கென்ன, ஹிந்து ராஷ்டிரா கனவுக்காக உருவாக்கி விடப்பட்ட கோட்சே போன்ற மனித வெடிகுண்டு, தம் சாவைக் குறித்து அது கவலையே கொள்ளாது! உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் ஹிந்துத்துவாவுக்குப் பிரச்சனையே இல்லை!

தடைகள் எல்லாம் நீங்கி அனைத்தும் சுபமாய் முடிந்தது என நினைத்து சங்பரிவாரங்கள் நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கார்கரே தொடங்கி வைத்த விசாரணை சாது அசீமானந்தா ரூபத்தில் அடுத்த பிரச்சனையை உருவாக்கியது. இம்முறை அது, "அசீமானந்தாவின் ஹீரோ மன எண்ணம்" சங்பரிவாரத்துக்குச் சாவு மணி அடிக்கும் வகையில் ஆகிவிட்டதுதான் பரிதாபம்!

முன்னர் கூறியது போன்று, தன் மரணத்தைப் பற்றி கவலை கொள்ளாத மனிதவெடிகுண்டு க்ளோனிங்களை, கோட்சேக்களை ஆர்.எஸ்.எஸ் உற்பத்தி செய்கிறது. அந்த லிஸ்டில் சாது அசிமானந்தாவும் அடக்கம்.

"வேலை" முடிந்தவுடன், கோட்சேவைப் போன்றே தன்னையும் ஆர்.எஸ்.எஸ் கைகழுவி விடும் என்பதை நன்கு உணர்ந்திருந்த சுவாமி அசிமானந்தா, தம் வாழ்நாளையே ஹிந்து ராஷ்டிர கனவுக்காக செலவழித்த தம் ஹீரோயிசத்தை ஆவணப்படுத்த நினைத்தார். தாம் எவ்வாறெல்லாம் ஹிந்து ராஷ்டிர கனவுக்காக பயணப்பட்டேன் என்பதை விரிவாக சக 'சங்பரிவார தொண்டர்'களுக்கும் இனிவர இருக்கிற 'சங்பரிவார தொண்டர்'களுக்கும் தெரிவிக்க விரும்பினார். தம்மை ஹிந்து ராஷ்டிரத்துக்காக அர்ப்பணிப்பு செய்த ஹீரோவாக 'சங்'களின் மனதில் நிலைநிறுத்த எண்ணி, தாம் செய்த குண்டுவெடிப்புகளை எல்லாம் நீதிமன்றத்தில் வாக்குமூலமாக சமர்ப்பித்தார்.

இதில் அசீமானந்தா செய்த முக்கியமான அசட்டுத்தனம், வாக்குமூலத்தை நீதிபதி முன்னிலையில் கொடுத்ததுதான். அதுவும் 48 மணிநேர நீதிமன்ற காவலுக்குப் பின்னர், காவல்துறையின் எவ்வித அச்சுறுத்தலோ மனப்பிறழ்வோ இன்றி சுய விருப்பத்துடன் கொடுப்பதை உறுதி செய்து நீதிமன்றம் வாக்குமூலம் வாங்கிக்கொண்டது. இந்த வாக்குமூலம்தான் இப்போது ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மிகப் பெரிய பிரச்சனை!

"எல்லா குண்டுவெடிப்புகளையும், கலவரங்களையும் நடத்தியது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ஒப்புதல் மற்றும் அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ள இந்திரேஷ் குமாரின் உதவியுடனும்தான்!" என அசிமானந்தா கொடுத்த தெளிவான வாக்குமூலங்கள், இன்று ஆர்.எஸ்.எஸ்ஸை எழுந்திருக்க முடியாத அளவிற்கு அடித்துப் போட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் மோகன் பகவத் ஒருமுறை விசாரிக்கப்பட்டார். ஆனால், அசிமானந்தாவின் பின்னணியிலுள்ள சதிகாரர்கள் குறித்த முறையான விசாரணை அசிமானந்தாவைக் கடந்து இன்னும் நீளவில்லை. அரசியும் உளவுத்துறையிலும் இருக்கும் காவிகளின் உதவியால் இன்று நீளவில்லையேனும் இனிமேலும் நீளவே செய்யாது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸிடம் எந்த உத்தரவாதமும் இல்லை.

மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, "ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் பட்டியல்" என 10 பேர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை முன்னர் வெளியிட்டதை மிரட்டல்கள் மூலம் திரும்பப்பெற வைத்தாலும் அசிமானந்தாவின் வாக்குமூல அடிப்படையில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பயம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உள்ளது. அதிலும் கார்கரே போன்றதொரு துணிச்சலான, நேர்மையான அதிகாரி விசாரணை பொறுப்புக்கு வந்தால் அவ்வளவுதான்! கார்கரே கொல்லப்பட்ட விசயத்திலேயே அமரேஷ் மிஸ்ரா போன்றோர், ஹிந்துத்துவமும் இஸ்ரேலின் மொஸாதும் இணைந்து நடத்திய நரவேட்டை எனவும் கார்கரேயின் மனைவி மறுபக்கம் நாட்டுக்காக உயிரிழந்த தம் கணவரின் கொலையில் நீடிக்கும் மர்மத்தை நேர்மையான விசாரணை மூலம் வெளிகொண்டுவரவேண்டுமெனவும் கிலியை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் இன்னொருவர் புதிதாக வந்தால், அவரை "நீக்க" மற்றொரு மும்பை தாக்குதலுக்குத் திட்டமிடணுமே! புலிவால் பிடித்த கதையாக ஆகிவிடக்கூடாதே!

அசிமானந்தாவுக்கும் மோகன் பகவத் மற்றும் இந்திரேஷ் குமாருக்கும் இடையில் பாலமாக இருந்த, குண்டுவெடிப்புகள் நடத்தியதில் முக்கிய பங்கு வகித்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷியைக் கொன்றாகிவிட்டது. யார், எதற்காக கொன்றார் என்பது தொடர்பான மர்மம் இதுவரை நீடிக்கிறது. ஆனால், மிக முக்கியமான ஆதாரம் ஒன்று அழுத்தம் திருத்தமாக அழிக்கப் பட்டு விட்டது.

முக்கிய நபர் சுனில் ஜோஷியை இல்லாமலாக்கிவிட்டதால், அசிமானந்தாவுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மோகன் பகவத் மற்றும் இந்திரேஷ் குமார் நடத்திய சந்திப்புகளை நிரூபிக்க முடியாது. ஆனாலும், அசிமானந்தா நீதிபதியிடம் சுயவிருப்பதின்படி கொடுத்த வாக்குமூலம்?!

இனி இதனுடன் வேறு சில முக்கிய சம்பவங்களையும் நினைவுக்குக் கொண்டு வருவோம்:

* பாபர் மசூதி இடிப்பு தொடர்பான ஆவணங்கள் இருந்த அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் காணாமல் போயின.

* பாபர் மசூதி இடிப்பு வழக்கு நடந்த நீதிமன்றத்துக்கு அது தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கச் சென்ற அதிகாரி ரயிலிலிருந்து "தவறி" விழுந்து பலியானார். அவர் கொண்டு சென்றிருந்த ஆவணங்கள் "காணாமல்" போயின.

* மும்பை தாக்குதல் நடந்தபோது சம்பவ இடத்துக்குச் செல்லும்முன்னர் தீரர் ஹேமந்த் கார்கரே கவச உடை அணிந்தார். இக்காட்சி தொலைக்காட்சிகளில் நேரலையாகவே காண்பிக்கப்பட்டது. ஆனால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னர் பிரேத பரிசோதனையின் போது, அவர் அணிந்திருந்த கவச உடை மர்மமான முறையில் "காணாமல்" போனது.

* தம்மை யாரும் மிரட்டவில்லை; தமக்கு வழக்கறிஞர் வேண்டாம் எனக் கூறிய அசிமானந்தா, நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதன்பின், அவருக்காக வழக்கில் வாதாட ஆர்.எஸ்.எஸ் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்ட நொடியில் "தாம் மிரட்டப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக" பல்டி அடித்தார்.

* மாலேகான் விசாரணையில் ஈடுபட்டபோது, அத்வானி உட்பட பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸினரால் தேசவிரோதி என குற்றம் சுமத்தப்பட்ட கார்கரே, கொல்லப்பட்டு இறந்தவுடன், "கார்கரே ஒரு மாவீரர்" எனப்புகழ்ந்து அவர் மனைவிக்கு மோடி ஒரு கோடி ரூபாய் இழப்புத் தொகை கொடுக்கச் சென்ற போது முகத்தில் திருப்பியடித்தார் கார்கரேயின் மனைவி - அவ்வேளையில் மோடிக்குத் தேசிய அளவில் பாஜகவில் எந்தப் பொறுப்பும் இல்லை.

மேற்கண்ட பட்டியலுடன், குண்டுவெடிப்புகளின் முக்கிய புள்ளி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷியின் மர்மக்கொலை, கார்கரே படுகொலையில் நீடிக்கும் மர்மம், கர்னல் புரோகிதுக்கு க்ளீன் ஷீட் எல்லாவற்றையும் இணைத்து பார்த்து கொள்ளுங்கள்.

ஆக, ஹிந்து ராஷ்டிரா கனவில் சஞ்சரிக்கும் ஹிந்துத்துவாவின் தாய்ச்சபை ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எப்போதெல்லாம் பிரச்சனைகள் எழுகிறதோ, அது போட்ட திட்டங்களில் எங்கெல்லாம் ஆதாரங்கள் சிக்கலை உண்டாக்குகின்றனவோ அங்கெல்லாம் மர்மக் கொலைகள் நடைபெறுவதும், ஆவணங்கள் காணாமல் போவதும், "எதிர்பாரா" தீவிபத்துகளும் ஏற்படுவதைக் கவனிக்கலாம்.

ஆனால் இப்போது அசீமானந்தா கொடுத்திருக்கும் குடைச்சல், என்ன செய்தாலும் தப்பித்துவிட முடியாதது.

48 மணி நேர நீதிமன்ற காவலுக்குப் பின்னர் காவல்துறையின் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதன் பின்னர் நீதிபதி முன்னிலையில் பெறப்பட்ட அசிமானந்தாவின் வாக்குமூலம் தெளிவாக உள்ளது. இது இன்று இல்லை என்றாலும், நாளை ஆர்.எஸ்.எஸ்ஸின் பல தலைகளை உருட்டப்போவது உறுதி. அது ஹிந்துத்துவத்தின் தலைமையான ஆர்.எஸ்.எஸ்ஸுக்கே உலை வைக்கும்!

அது மட்டுமன்றி, சங்பரிவாரத்துக்காக செயல்பட்ட பலர் இன்று சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். குஜராத் அமைச்சர் மாயா கோட்னானி முதல், பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி, ஐ.ஏ.எஸ் அதிகாரி வன்சாரா, சாது ப்ரக்யா சிங் தாகூர், அசிமானந்தா என பல பெரும் தலைகள் சிறையில் கம்பி எண்ணுகின்றன. மேலும் குஜராத் இனப்படுகொலை தொடர்பாக குஜராத் அரசு மூடி மறைத்த 2000 க்கு மேற்பட்ட வழக்குகளை மறுவிசாரணை செய்யவேண்டுமென்ற கோரிக்கை வலுத்துவருகிறது. டீஸ்தா செதாவல்த் போன்றோர் கொடுக்கும் குடைச்சல்களால் இன்னும் எத்தனை பேர் சிறை செல்லவேண்டிவருமோ என்ற அச்சம் வேறு. இவர்களையெல்லாம் வெளியே கொண்டு வரவில்லையேல் நாளை ஆர்.எஸ்.எஸ்ஸுக்காக அது சொல்லும் கட்டளைகளை நம்பி சிரமேற்கொண்டு நடத்துவதற்குத் தலைவர்கள் மட்டத்திலிருந்து தொண்டர்கள் வரை எல்லோருக்கும் தயக்கம் ஏற்படலாம். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்த்யில் அப்படி ஒருவேளை ஒரு தயக்கம் ஏற்பட துவங்கினால் அதுவும் ஹிந்து ராஷ்டிரக் கனவைத் தரை மட்டமாக்கும்!

ஆக, நாட்டில் எல்லாம் நம் கையில் பாதுகாப்பாகவே உள்ளது; நம் விருப்பம் போல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சட்டத்தாலோ சர்க்காராலோ நம்மை எதுவுமே செய்யமுடியாது என்ற எண்ணத்தை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் ஆழமாக கட்டியெழுப்பவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மீது எழுந்து நிற்கும் அசிமானந்தாவின் வாக்குமூலம் என்ற பெரிய வெடிகுண்டைப் புஸ்வாணமாக்கவும் "ஏதாவது" மாற்றம் செய்தாக வேண்டும்.

அதற்கு?

மத்தியில் "சர்க்கார்" வேண்டும். அதுவும் வாஜ்பாய் போன்ற அல்ல; ஹிந்துத்துவ அஜண்டாவுக்காக "சர்க்கார் இயந்திரங்களை" எதற்கும் அஞ்சாமல் பயன்படுத்த முன்வரும் ஒரு "தைரியமான நபர்" தலைமையிலான சர்க்கார்!

அதற்காக ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்து நேரடியாக களமிறக்கியுள்ளவர்தான் மோடி. கள்ள "சாது"வான மோடி, "சங்கத்துக்காக சர்க்காரை" எப்படி தைரியமாக பயன்படுத்துவது என்பதை ஏற்கெனவே குஜராத் மூலம் சாம்பிள் காட்டி திருப்திபடுத்தியுள்ளார். இந்தச் சரியான, தைரியமான நபர் தலைமையில் மத்தியில் சர்க்கார் கிடைத்தால், அது இப்போது ஆர்.எஸ்.எஸ் எதிர்கொள்ளும் தலைவலியிலிருந்து எளிதாக விடுதலைபெற உதவுவதோடு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மனதிலும் புதிய நம்பிக்கை ஊற்றெடுக்க வைக்கும். அதற்காகவே இத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் நேரடியாக களமிறங்கியுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் இத்தேர்தலில்தான் ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் தம் காவி அரை டவுசர் தொண்டர்களை நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்கியுள்ளது. இன்றைய தம் நிலை வாழ்வா சாவா என்பதற்கு ஒப்பானது என்பது நன்கு புரிந்ததாலேயே, நேரடியான மோதல்கள் எதிலுமே ஈடுபடாமல் மறைமுகமாகவே காரியங்களை நடத்தும் ஆர்.எஸ்.எஸ் இம்முறை, இந்திய அரசுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி நேரடியாக அரசியலில் இறங்கியுள்ளது.

காந்தி படுகொலைக்குப் பின்னர் எதனைத் தம் மீதான தடையினை விலக்குவதற்கான உறுதிமொழியாக கொடுத்ததோ அதனையே ஆர்.எஸ்.எஸ் மீறிவிட்ட நிலையில், அதனைக் காரணம் காட்டி இந்திய அரசு உடனடியாகவே ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்ய முடியும். ஆனால், வெறும் ஓட்டு அரசியல் நடத்தும் கையாலாகாத காங்கிரஸ் அரசு அதனைச் செய்யாது; அதில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் குள்ளநரிகள் செய்யவும் விடாது. இதனை நன்கு தெரிந்தே இம்முறை ஆர்.எஸ்.எஸ் நேரடி அரசியலில் இறங்கியுள்ளது.

இனி தீர்மானிப்போம்!

மோடி தலைமையில் பாஜக "சர்க்கார்" வேண்டுமா?

மோடியின் வருகை "குஜராத் மாதிரி"யைப் பிற மாநிலங்களில் நீட்டிக்க அல்ல; அதையும் தாண்டிய மிக முக்கிய தேவை ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உள்ளது என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். சங்கம் இல்லையேல் மாதிரிகளை நடத்துவது எளிதான காரியமல்ல; தலை இருந்தால் தானே வால் ஆடமுடியும்? தலையைக் காப்பதற்காகவே மோடியை கார்ப்பரேட்டுகளின் உதவியுடன் ஆர்.எஸ்.எஸ் முன்னிலைப் படுத்துகிறது என்பதை உணர்வோம்!

நம் தாய் நாட்டை இந்தத் தேசவிரோதிகளிடமிருந்து காக்க, நாட்டின் இறையாண்மைக்கு எதிரான ஹிந்துத்துவத்தை ஒழிக்க, எவ்வகையிலும் பாஜகவின் கையில் ஆட்சி சென்றுவிடாமல் பார்ப்போம். இத்தேர்தலோடு நாட்டு ஒற்றுமைக்குப் பெரும் சவாலாக நிற்கும் ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி அடிப்போம்!

- அபூ சுமையா

நன்றி: சத்திய மார்க்கம்.காம்


ஒரு சுயம் சேவகரின்(RSS) மன மாற்றம் !

ஒரு சுயம் சேவகரின் மன மாற்றம் !நேற்றைய பொழுது சென்னையில் மதிய தொழுகைக்கு மர்கசிர்க்கு சென்றபோது அங்கே நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான முன்னாள் சுயம் சேவகர் (rss ) முழு நேர ஊழியர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது...... ஒரு வித்தியாசமான சந்திப்பாக rss குறித்த எனது தேடலுக்கு உகந்த அனைத்து பதில்களும் சகோதரர் அவர்களிடம் கிடைத்தது .. நிறைய விஷயங்கள் பேசினோம். அவர் rss சேவகராக இருந்த நிலையில் இருக்கும் போது அவரின் பயணம் ,முஸ்லிம்கள் குறித்தான பார்வை ,இலக்கை நோக்கி பயணப்படுத்தல்,ஆசைகளையும் இச்சைகளையும் அடக்கி ஆளுதல் என பல விடயங்களையும் அறிய முடிந்தது. இதற்கு முன்னர் புத்தகம் மூலமாக மட்டுமே அறிய பட்ட ஒரு குரோதர்களின் செயல் பாட்டை முதல் முறையாக (இதற்க்கு முன்னர் சிலரை சந்தித்திருந்தாலும் அவர்களிடம் விஷயங்கள் எடுக்க முடியவிலை ..அவர்கள் அப்போதும் rss இன் ஊழியர்களாக இருந்தார்கள் ) ஒரு சுயம் சேவகரின் வாயாலே கேட்பதும் பெறுவதும் மாறுபட்ட ஒரு அனுபவமே!

அந்த சகோதரர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் சகோ பிஜே இன் இஸ்லாமிய பிரச்சாரதால் கவரப்பட்டு இஸ்லாத்தின் மீதான தேடலில் தன்னை முழுவதுமாய் மாற்றிக்கொண்டு rss யை விட்டு வெளியேறி தன்னை முஸ்லிமாக மாற்றிக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இன்றளவும் அவர் சந்திக்கும் பிரச்சினைகளை சொல்ல சொல்ல கண்ணீர் மட்டுமே என்னிடம் இருந்து பதிலாக் வந்தது..... அவரின் இஸ்லாம் பற்றிய புரிதல் மாஷா அல்லாஹ்! மிக சிறந்த புரிதலை இறைவன் கொடுத்திருக்கிறான்.. ஒரு சுயம் சேவகராக இருந்த நிலையில் கிடைக்காத ஒரு நிம்மதி மாற்றம தான் ஒரு முஸ்லிமாக மாறியவுடன் மட்டுமே அமைதியையும் வாழ்வின் உண்மையான் அர்த்தத்தையும் தம்மால் முழுமையாக உணரமுடிகிறது என்று கூறிய சகோதரர் பல விடயங்களையும் என்னோடு பகிர்ந்து கொண்டார். நான் அவரிடம் உங்கள் மாற்றத்தை ஒரு ஆவணமாக வெளி கொண்டு வரலாமா என கேட்ட போது இப்போது வேண்டாம். rss மற்றும் உளவுதுரையால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் முக்கியமான் சேவகராக நான் பணி செய்து வந்தேன். எனது மாற்றம் நிச்சயம் அவர்களுக்கு இழப்பே இன்றும் என்னை மிரட்டி கொண்டுதான் இருகிறார்கள். எனவே வெளியே சொல்ல வேண்டாம் என்றும் கூறி விட்டார். நேரம் வரும் போது சொல்கிறேன் அப்போது செய்யுங்கள் என்று கூறி விட்டார். அவர் ஒரு சினிமா கதை ஆசிரியரும் கூட. பிரபல சினிமா இயக்குனரின் உதவியாளர்.

சகோ பிஜே இன் மூலம் கவரப்பட்டு இஸ்லாத்தை தழுவிய சகோதரரர் இன்று சகோ பிஜே குறித்து எழுப்பும் பல கேள்விகளுக்கு என்னாலும் பதில் சொல்ல முடியவில்லை. சில கேள்விகள் ஏனைய முஸ்லிம்கள் அனைவரையும் பார்த்தும் இருந்தது. ஆனால் பதில்தான் இல்லை.

இஸ்லாமியர்களின் பிரிவினை, அரசியல் சந்தர்ப்பவாதம், போலி ஒற்றுமை என பல வேறுபாடுகள் இருந்தும் உண்மையான் ஒரு சகோதரத்துவமே நம்மை ஓர் புள்ளியில் இணைக்கிறது என்கிறார் அந்த சகோதரர்.

தான் rss இல் இருக்கும் நிலையில் தன் தங்கையை யாராவது கிண்டல் செய்தால் கோபம் எளிதில் வராது. ஏனென்றால் முந்தய நாட்களில் நானும் பல பெண்களை சீண்டி உள்ளேன்.. ஆனால் இன்றோ சக முஸ்லிம் சகோதரி பர்தா அணியாமல் வெளியே சென்றால் தனக்கு கோபம் வருகிறது, அவர்களை சந்தித்து பேசி மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது என்கிறார்.

வட்டி வாங்குவது ஹராம், கொலை செய்வது ஹராம், சினிமா ஹராம் என்று சொல்ல கூடிய முஸ்லிம்கள் பிறரை கழுவி குடித்து புறம் பேசுகிறீர்களே இது மட்டும் ஹராம் இல்லையா என்றும் கேட்கிறார்.

தன அக்காவின் மகன் ஒரு முறை rss சாகாவில் சேர சென்ற போது அங்கே போக வேண்டாம் என கூறிய போது தன்னை தீவிரவாதி என்றும் அவன் வெடிகுண்டு வைக்கும் மதத்தில் இணைந்து விட்டான் என்று அவரின் உடன் பிறந்த அக்காவே தன மகனுக்கு சொல்லி கொடுத்திருக்கிறார் என வருத்தமுடன் கூறுகிறார்

எங்களை போன்றவர்கள் இஸ்லாத்தை தேடி உணர்த்து வருகிறோம்.. என்னைப் போன்றவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் போது மட்டும் போட்டி போட்டு இணைத்து கொள்ளும் அனேக முஸ்லிம இயங்கங்கள் நாங்கள் பின் நாட்களில் சந்திக்கும் பிரச்சினை குறித்து கவலை படுவதோ, ஒரு பின் தொடரலோ இல்லாத நிலையில் எதிரிகளின் அச்சுறுத்தல், உளவுத்துறையின் அய்யோக்கிய தனம்.. இதற்கிடையில் வீட்டினரின் கொடுமைகள், பாச போராட்டங்கள் என்று பல சிக்கல்களுக்கு ஆளாகிறோம்... இஸ்லாத்தை ஏற்று கொள்ளும் அனேக பேர் உண்மையான் முஸ்லிமாக கடைசி வரையில் வாழ்ந்து விடுவதில்லை.. அதற்கு காரணம் முஸ்லிமாக மாறியவுடன் இருக்கும் அரவணைப்பு பிற்காலங்களில் அந்த மக்களுக்கு கிடைப்பதில்லை.

இந்நிலையில் ஒரு சில கிருத்துவ இயங்கங்கள் இன்றளவும் தம்மை சந்தித்து கிருத்துவானாகி விடு உன் எல்லா தேவைகளையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று தினம் என்னை சந்தித்து வருகிறார்கள்.
இன்றும் rss இல் இருந்து எனக்கு மிரட்டலும் அதே நேரத்தில் மீண்டும் ஹிந்து வாகி விடு என்றும் கூறி அழைப்பு வருகிறது இருந்தும் இன்று நான் இஸ்லாமியனாகவே உள்ளேன் என்று சொல்கிறார்.

இறுதியாக பிரியும் நிலையில் அவர் என்னிடம் "சகோதரா! நன் எழுதிய ஒரு கவிதை இருக்கிறது அதை வேண்டும் என்றால் வெளி இடுங்கள். எனது பெயரையோ புகை படத்தையோ வெளி இட வேண்டாம்" என்று கூறி விட்டார்... அவரின் பெயர் மற்றும் புகை படம் வெளியிட வர மறுத்தது பயத்தால் அல்ல.. அவர் இந்த மனித சமூகத்திற்கு இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது.. .நீண்ட தூர பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதனால் மட்டுமே வேண்டாம் என்கிறேன் என கூறிய சகோதரரிடம் ஆறுதல் கூறி பிரிந்து வந்தேன். இறைவன் நாடினால் வெகு விரைவில் அவரின் மாற்றத்தை ஒரு புத்தகமாக வெளி இடுவேன் இன்ஷா அல்லாஹ். பிரார்த்தனை செய்யுங்கள் அந்த சகோதரருக்கும் எனக்கும்!


இது அவரின் கவிதை

ஓடி விடுங்கள் !!!

ஓ!இந்துக்களே!
இந்தியாவை ஆள ஒரு நாய்
வாலாட்ட போகிறதாம்
ஜாக்கிரதை
முஸ்லிம் மீது
பழிபோடுவதற்காக
இந்துவான காந்தியை கொன்ற
கோட்சே கூட்டம்
முஸ்லிம்கள் மீது
பழிபோடுவதற்காக
நாளை
உங்களையும்
கொல்ல நேரலாம் !!!

ஓ!கிருஸ்தவர்களே!
ஒரு
கரடி
நாடாள வருகிறதாம்
ஜாக்கிரதை
பாதிரியாரை குடும்பத்தோடு காரில் வைத்து
கொளுத்திய கூட்டத்தால் நாளை
கன்னிமேரிகள் கற்பழிக்கப்படலாம்!!!

ஓ!முஸ்லிம்களே!
ஒரு
ஓநாய்
நாடாள
வருகிறதாம்
ஜாக்கிரதை!
இந்தியாவே
குஜராத்தாகி விடும்
அல்லது
முஸ்லிம் கர்ப்பிணி பெண்களின்
வயிறு கிழிக்கபடலாம் !!!

ஓ!மிருகங்களே!
ஒரு கரடி
காடாள வருகிறதாம்
ஜாக்கிரதை
ஓடிவிடுங்கள் !!!

ஓ இந்தியாவின் பாமரனே!
காந்தியை கொன்றது
கோட்சே கூட்டம்

இந்திராவை கொன்றது
சீக்கியர் கூட்டம்

ராஜிவை கொன்றது
விடுதலை புலிகள்

ஆனால் எந்த ஆதாரமும்
இன்றி இன்றும்
முஸ்லிம்கள் மட்டும்
தீவிராதிகளாம் ......
ஓடி விடுங்கள் ???

-இப்படிக்கு முன்னாள் rss முழு நேர ஊழியன்


என்றும் இறைப்பணியில்

அன்சர் மீரான்
திருவிதாங்கோடு

தமக்கு ஏதெனும் துன்பம் ஏற்படும் போது 'நாங்கள் இறைவனுக்கே உரியவர்கள்: நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்' என்று அவர்கள் கூறுவார்கள்.

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழிப் பெற்றோர்.

குர்ஆன் 2:156,157

Monday, April 21, 2014

"என்ன ஓய் பட்டாபி! கலி முத்திடுத்து!"

'என்ன ஓய்! பட்டாபி! விஷயம் கேள்விப்பட்டேளா?'

'என்ன சொல்ல வர்றேள் மாமா! சொல்லுங்கோ'

'நம்ம இளையராஜாவோட மகன் பிள்ளையாண்டான் யுவன் , நடிகர் ஜெய், நடிகை மம்தா குல்கர்னி என்று ஏகப்பட்ட பேர் முஸல்மானா மாறிண்டு வர்றா. லோகத்துல என்ன நடக்கறதுண்ணு கண்டுக்காம இருந்தா எப்படி?'

'அந்த கருமத்தை டிவிட்டர்ல நானும் பாத்தேன். என்ன பண்றது கலி முத்திடுத்து'

'அப்படி என்ன ஓய் நம்ம வேதங்களான ருக், யஜூர், சாம, அதர்வண வேதத்துல இல்லாத ஆன்மீகம் அந்த குர்ஆன்ல இருக்கு?'

'உரக்க பேசாதேயும்! நம்ம வேதத்துல இருக்கிற முக்கால் வாசி ஸ்லோகங்கள் குர்ஆனிலயும் வர்றது. இது தெரியாம அந்த பிள்ளையாண்டான் குர்ஆனை கையில எடுத்துருக்கான்'

'அப்போ நம்ம வேதங்கள் அனைத்தையும் மலிவு பதிப்பில் தமிழ்படுத்தலாம் என்று சொல்றேளா?'

'சாஸ்திரப்படி அது மகா பாவம்! தமிழ் நீஷ பாஷையோண்ணோ? அதுல எப்படி வேதத்தை படிப்பேள்'

'இப்படியே சாஸ்திரம் சம்பிரதாயம் என்று சொல்லிண்டுருந்தா சூத்ராள் எல்லாம் முஸல்மான் ஆயிட்டா நம்ம பாடு திண்டாட்டமா போயிடும் ஓய்!'

'அதுக்காக பழக்கத்தை மாத்தச் சொல்றேளா? வேதங்களை தமிழில் மொழி பெயர்த்தாலும் இப்போ நம்மவா செஞ்சுண்டுருக்கிற பல வணக்கங்களை விட்டுட்டு ஏக தெய்வ கொள்கைக்கு மாறணும் ஓய்! இத்தனை வருஷம் நாம கும்பிட்ட அந்த விக்ரகங்களை எல்லாம் தூக்கி குளத்துல போடச் சொல்றேளா?'

'வேதத்துல ஏக தெய்வ வணக்கத்தைத்தான் சொல்லியிருக்குங்கறேள். பல தெய்வ வணக்கத்தையும் விடக் கூடாதுங்கறேள். குழப்பமா இருக்கேண்ணா!'

'அது அப்படித்தான். ரொம்பவும் சிந்திக்காதேயும். சில சட்டங்களை வேதத்துல இருந்து மறைக்கறதும் நம்மவா நலனுக்குத்தான். என் வாயை அதிகம் கிளறாதேயும். எனக்கு நேரமாயிடுத்து. சரி நான் வர்றேன்'

Sunday, April 20, 2014

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன் பேட்டிஉலகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 2002, பிப்ரவரி மாதத்தில் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தை நரேந்திர மோடியின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், அகமதாபாதில் துணை ராணுவப் படைகள் நுழைந்தன. அகமதாபாத் நகரின் மேல் கரும் புகை சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுப்பினுடையது. இரு நாட்களாகவே வெவ்வேறு கும்பல்கள் அந்தப் பகுதியையே சூறையாடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தார் குதுப். அன்று காலை அந்த வீடும் கலவரத்துக்கு இலக்கானது. வீட்டைச் சுற்றிலும் தீ சூழ்ந்திருந்த நிலையில் - மரணத்தின் தீ நாக்குகள் - நெருங்கிக் கொண்டிருந்த சூழலில்தான் - அதிர்ஷ்டவசமாக ஒரு ராணுவ வாகனம் அந்தப் பகுதியில் நுழைந்தது. குதுப் மீட்கப்பட்டார். ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிய அர்கோ தத்தாவால் எடுக்கப்பட்ட குதுப்பின் படம் மறுநாள் உலகெங்கும் உள்ள பல முன்னணிப் பத்திரிகைகளிலும் வெளியான பின் அந்தப் படம் குதுப்பை வாழ்நாள் முழுக்கத் துரத்தத் தொடங்கியது. அவர் உயிர் பிழைக்க குஜராத்திலிருந்து மகாராஷ்டிரம் சென்றார்; அங்கிருந்து அவர் வேலையை விட்டு அந்தப் புகைப்படம் துரத்தியது. மேற்கு வங்கம் சென்றார்; அங்கும் துரத்தியது. 10-க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தப் படத்தைப் பற்றித் தெரியவந்த பின்னர், அவரை வேலையை விட்டுத் துரத்தினர். ஒருகட்டத்தில் குதுப்பே இந்தத் துரத்தலுக்கு முடிவுகட்டினார். அவர் மீண்டும் குஜராத் திரும்பினார். அடிப்படையில் ஒரு தையல்காரரான அவர், தன் தையல் இயந்திரத்திடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். சிறிய வீடொன்றை அவர் இப்போது கட்டியிருக்கிறார். அங்கு தாய், மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கும் குதுப்பைச் சந்தித்தேன். இன்னமும் மறையாத பயமும் நிறைய தயக்கமும் உறைந்திருக்கும் குதுப்பிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் நேரடியானவை அல்ல. ஆனால், அவற்றின் பின் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. மனிதத்தின் மனசாட்சியை உலுக்கும் வார்த்தைகள் அவை.

கலவரத்தில் நீங்கள் சிக்கியிருந்த அந்தக் காலகட்டத்தை இன்றைக்கு நினைவுகூர முடியுமா?

நான் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நாட்டுக்கே தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை. ஒரு விஷயம் மட்டும் சொல்வேன். நான் அன்றைக்குச் செத்துவிட்டேன். அப்படியான நிலையில் உயிர் மட்டும் உள்ள ஒரு பிணமாகத்தான் இருந்தேன். கடவுள் அருளால் பிழைத்தேன்.

ஆளும் கட்சியிடமிருந்து உங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா?

நான் இதெல்லாம்பற்றிப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஏதோ இருக்கும் காலத்தைக் கொஞ்சமாவது நிம்மதியுடன் வாழ நாங்கள் நினைக்கிறோம்.

மன்னியுங்கள்... அந்தப் படம் இன்னமும் உங்களைத் துரத்துகிறதா?

இங்கே குதுப் வீடு எது, எங்கிருக்கிறது என்று கேட்டால், யாராவது ஒருவர் வழிகாட்டிவிடுவார். ஒரு சாமானிய வாழ்க்கை வாழ்பவனுக்கு இப்படிப்பட்ட அடையாளம் சுமை. (அருகில் உள்ள மேஜைக்கு அடியில் உள்ள ஒரு பெரிய பையை எடுப்பவர் அதிலிருந்து நான்கு புகைப்படங்களை எடுத்துக் காட்டுகிறார். சமீபத்தில் வெளியான ஒரு இந்திப் படத்தின் ஒரு பாத்திரம், சுவரில் மாட்டியிருக்கும் குதுப் படத்தைத் துப்பாக்கியால் குறிபார்க்கும் படங்கள் அவை. அவற்றைக் காட்டிச் சொல்கிறார்...) இப்படி எவ்வளவோ இடங்களில் தேவையே இல்லாமல் நான் குறிவைக்கப்படுகிறேன்.

கலவரங்களின்போது முற்றிலுமாகத் தீக்கிரையான பகுதிகளில் இதுவும் ஒன்று. இப்போது ஓரளவுக்கு எல்லா வீடுகளுமே புதுப்பித்துக் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அரசாங்கம் உதவியதா?

நாங்கள் இப்போது முன்பைவிட மேம்பட்டிருக்கிறோம் என்றால், முன்பைவிடக் கடுமையாக உழைக்கிறோம் என்பதுதான் அதன் அர்த்தம். எங்கள் வாழ்க்கைக்காக, குழந்தைகளுக்காக, எதிர்காலத்துக்காக மிகக் கடுமையாக உழைக்கிறோம். அது ஒன்றுதான் காரணம்.

மிகக் கடுமையான வன்முறையைப் பார்த்த நீங்கள், அந்த அரசாங்கமும் உங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில், பின் எந்த நம்பிக்கையில் மீண்டும் குஜராத் திரும்பினீர்கள்?

இரண்டு நம்பிக்கைகள். ஒன்று, இந்த குஜராத்தான் எங்கள் பூர்வீக மண். என் தந்தையும் தாத்தாவும் அவர் முன்னோர்களும் பிறந்து வளர்ந்த மண். இத்தனை தலை முறைகளாக எங்களைக் காத்த மண் கைவிட்டுவிடாது என்ற நம்பிக்கை. இன்னொரு நம்பிக்கை, இத்தனை தலைமுறைகளாக இதே இந்து சகோதரர்கள் மத்தியில்தான் நாங்கள் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இனியும் அவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை.

அற்புதமான விஷயம். இந்த நன்னம்பிக்கை துளிர்விட எது காரணமாக அமைந்தது என்று தெரிந்துகொள்ளலாமா?

கலவரத்தின்போது ஏதோ ஒரு தீய சக்தி எல்லோரையும் இயக்கியதேயன்றி, கலவரத்துக்குப் பின் எல்லோரையுமே இந்தக் கலவரம் சங்கடப்பட வைத்தது. இங்கே எங்களுக்கு நிறைய இந்து சகோதரர்கள் உதவினார்கள். அன்றைய காலகட்டத்தில் அவர்கள் செய்த சின்ன உதவிகள்கூட எங்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது. என்னை மீண்டும் குஜராத்துக்கே அழைத்தவர்களில் இந்து நண்பர்களும் உண்டு. இந்தக் காரணங்கள்தான் என் நம்பிக் கைக்கான அடிப்படை.

மோடியைப் பற்றியும் அவருடைய ஆட்சியைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

குஜராத் கலவரங்களுக்குப் பின் மோடி முஸ்லிம்களுக்காக நிறையச் செய்திருப்பதாகவும் அவருக்கு முஸ்லிம்களின் ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது...

எனக்குத் தெரிந்து இங்கு முஸ்லிம்களில் ரியல் எஸ்டேட் காரர்களைப் போன்ற பெருவியாபாரிகள், தரகர்கள் சிலர் தங்கள் பிழைப்புக்காக அவரை ஆதரிப்பது உண்டு. மற்ற வர்கள் யாருடைய நம்பிக்கையையும் அவர் பெறவில்லை.

கலவரத்துக்குப் பின், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கையைப் பெற அவர் ஒன்றுமே செய்யவில்லையா?

உங்களுக்கு அசோக் மோச்சியைத் தெரியும்தானே... குஜராத் கலவரத்தில் என் புகைப்படத்தைப் போலவே, கத்தியுடன் கைகளை உயர்த்தியபடி சத்தமிடும் அவர் படமும் பிரபலம். பின்னாளில் அவர் மனம் மாறினார். முஸ்லிம்களுக்குத் தான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்பு கேட்டார். இன்றைக்கு என் குடும்பத்தில் அவரும் ஒருவர். மோடிஜி அப்படியெல்லாம் ஒரு வார்த்தை வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்றைக்கு இந்தியா முழுவதும் மோடியைப் பற்றியும் அவர் குஜராத்தில் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லப்படும் வளர்ச்சியைப் பற்றியும்தானே பேசுகிறார்கள்...

ஒரேயொரு உதாரணம். சகோதரர் அசோக் மோச்சியையே எடுத்துக் கொள்வோம். அன்றும் அவர் செருப்புதான் தைத்துக்கொண்டிருந்தார், இன்றும் அவர் செருப்புதான் தைத்துக்கொண்டிருக்கிறார். வசதியானவர்கள் மேலும் வசதியாவதை நான் வளர்ச்சியாக நினைக்கவில்லை.

அப்படியென்றால், உங்கள் பார்வையில் எதை வளர்ச்சியாக - ஒரு அரசாங்கம் உருவாக்க வேண்டிய விஷயமாக - கருதுகிறீர்கள்?

காலையில் எழுந்திருக்கிறோம். வேலைக்குப் போகிறோம். கடுமையாக உழைக்கிறோம். மாலையில் வீடு திரும்புகிறோம். இரவாவது குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட முடிய வேண்டும். அவர்களோடு நிம்மதியாகப் பேச முடிய வேண்டும். முக்கியமாக, பயம் இல்லாமல் தூங்க முடிய வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின், வளர்ச்சியின் வெளிப்பாடு. சந்தோஷமான சூழலின் வெளிப்பாடு. ஒரு அரசாங்கம் அதைத்தான் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பேட்டியில் என் கேள்விகள் முடிந்துவிட்டன. இந்தக் கேள்விகளுக்கு அப்பாலும் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

நாம் எல்லோரும் சேர்ந்து வாழத்தான் இறைவன் இவ்வளவு பெரிய உலகத்தைப் படைத்திருக்கிறார். இந்த நாட்டின் விசேஷமும் அதுதான். யாருக்காகவும் எதற்காகவும் நாம் பிரிந்து நிற்கக் கூடாது. இந்த நாட்டைச் சிதைத்துவிடக் கூடாது.

-ஆரத் தழுவி விடைகொடுக்கிறார் குதுப்.

தொடர்புக்கு: samas@kslmedia.in

நன்றி: 'தி ஹிந்து நாளிதழ்'
20-04-2014

ராமன் உண்மையிலேயே வணங்குவதற்கு ஏற்றவன்தானா?

நான் மதிக்கும் ஒரு பதிவர் திடீரென்று ராம பக்தி முற்றிப் போய் ராமர் கோவில் ஏன் கட்டக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ராமருக்கு இன்னும் ஆயிரம் கோவில்களை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் பாபரி மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறும் வடி கட்டிய பொய்யைத்தான் எதிர்க்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் இந்துக்களின் ஓட்டுக்களை கவர்வதற்காக 'பாபர் மசூதி இடத்தில் ராமருக்கு கோவில் கட்டுவோம் ' என்ற ராம பக்தி இந்துத்வாவினருக்கு கரை புரண்டு ஓடும். அதைத்தான் இப்போதும் பார்க்கிறோம். அயோத்தியிலேயே ராமர் பிறந்ததாக 10 க்கும் மேற்பட்ட இடங்களை ராமனை நம்புபவர்கள் கூறுகின்றனர். இதில் யாருடைய பேச்சை ஆதாரமாக எடுப்பது?

ஏன் ராமரை நான் மதிக்கிறேன் என்பதற்கு அந்த பதிவர் கூறும் காரணங்களை இனி பார்ப்போம்.

//இராமன் வாழ்வு சொல்லும் நெறி போல் சிறந்தநெறி உலகில் வேறு இல்லை.

இராமனை போல் வாழ முடியாதவர்கள் தான் இராமனை எதிர்ப்பவர்கள்.

திருக்குறள் காட்டிய அனைத்து நெறிகளிலும்,காட்டாத நல்நெறிகளிலும் வாழ்ந்தவன் இராமன்.

இராமன் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் சின்னம்.

இராமனிடம் இருந்துதான் இந்தியாவின் முழு ஆன்மா பிறக்கிறது.

இந்தியாவின் சுதந்திரத்தில் இராமனின் பங்கு அளப்பறியது,சொல்லி மாளாது .
என்பது படித்த பண்பேறிய தமிழறிஞர்களின் கருத்தாக உள்ளது .//


இந்த பதிவர் சொல்வதுபோல் அவ்வளவு உயர்ந்த தரத்தில் வைத்து பார்க்கப்படுபவனா ராமன்? ராமனை தெரிந்து கொள்ள வால்மீகி ராமாயணத்தைத்தான் நம்மால் பார்க்க முடியும். அந்த ராமன் யார்? அவனது குணாதிசியங்கள் என்ன? என்பதை அம்பேத்கார் ஆய்வு செய்து தனது கருத்துக்களை வைத்துள்ளார். அதனை இனி பார்ப்போம்.

ராமனும், ஏசுவும்: ராமன் கடவுளா? மனிதனா? என்-கிற இந்த சந்தேகம் ராமனுக்கே இருந்திருக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் எழுதுகிறார்: ராமன் கடவுளானது கிருஷ்ணனின் விஷயத்தைவிட அதிகச் செயற்கையானது. தான் கடவுள் என்பதை ராமனே அறிந்திருக்கவில்லை. இயேசுவை கடவுளாக பலர் வழி-பட்டாலும், அவரே ஒரு கடவுளை வழிபட்டிருக்கிறார். அதுபோல் ராமனை பலர் கடவுளாக வழிபட்டாலும், அவன் பல கடவுள்களை வழிபட்டிருக்கிறான். ராமாயணத்தை எடுத்துக்காட்டி டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

மனிதன் கடவாளாக மாற்றப்படும் நிலை: நான் என்னை ஒரு மனிதனாக, தசரதனின் மகன் ராமனாகக் கருது-கிறேன். தெய்வங்களாகிய நீங்கள் நான் யார் என்றும், எங்கிருந்து வந்தேன் என்-றும் கூறுங்கள். ஒரு விபத்தில், தன்னைப் பற்றிய விஷயங்களையே மறந்து போன பழைய தமிழ் சினிமா கதாநாயகன் டாக்டர்-களைப் பார்த்து, நான் யார்? என்று கேட்பதுபோல், கடவுள்களைப் பார்த்து கேட்கிற ராமன்தான் இந்துக்களின் தனிப்பெரும் கடவுள். கிருஷ்ணனைப் போல ராமனும் ஒரு மனிதனாக இருந்து கடவுள் ஆக்கப்-பட்டார்….அவருடைய கடவுள் தன்மையை முழுமையாக்குவதற்காகத்தான் அவர் விஷ்ணுவின் அவதாரம் என்றும், அவரது மனைவி சீதை, விஷ்ணுவின் மனைவியான லட்சுமியின் அவதாரம் என்றும் கூறும் கொள்கை கண்டுபிடிக்கப் பட்டதாகத் தோன்றுகிறது என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.

அம்பேத்கரும், ராமனும்: சீதையை ராமன் நடத்திய விதமும், வாலியை கொன்ற முறையும், ராமன் கடவுளாக அல்ல ஒரு மனிதனாக இருக்கக்கூட லாயக்கற்றவன் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். எனக்கு இலங்கைக்கு செல்வதற்கு உதவி செய்தால், உன்னை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவி செய்கிறேன், என்று சுக்ரீவனோடு ஒப்பந்தம் செய்து கொண்டுதான் வாலியைக் கொன்று இருக்கிறான் ராமன். அதை நிகழ் கால சம்பவங்களோடு பொருத்திச் சொல்ல வேண்டும் என்றால், எனக்காக நீ பாகிஸ்தானோடு போர் இடு. உனக்கு நான் என்ன உ.தவிகள் வேண்டுமானாலும் செய்கிறேன் என்று அமெரிக்கா இந்தியாவை நிர்ப்பந்திப்பதுபோல. நற்பெயரோடே மோசடிகளை செய்வதில், அமெரிக்காவின் தந்திரங்கள், அந்தக் காலத்து ராமனை நினைவு படுத்துகிறது. தனது சுயலாபத்துக்காக தனக்கு எதிரியாக இல்லாதவர்களைக்-கூட கொலை செய்கிற ராமனின் நடத்தை, இந்தக் காலத்து அமெரிக்காவை நினைவுபடுத்துகிறது. தனது சுயலாபத்துக்காக வாலியைக் கொல்வதற்கு என்ன தந்திரத்தை சுக்ரீவன் மூலம் கையாண்டானோ, அதே போன்ற தந்திரத்தைதான் பேரரசன் ராவணனை கொல்வதற்கும் அவனுடைய சகோதரன் விபீஷணன் மூலமாகக் கையாண்டு இருக்கிறான் ராமன், என்று ராமனின் யோக்கியதையை இரண்டாகப் பிளக்கிறார் டாக்டர் அம்பேத்கர். வாலியின் படுகொலைக்காக நிரம்ப கோபமுற்று ராமனை கட்டி வைத்து சவுக்கால் அடிப்பதுபோல் கேள்வி கேட்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

வாலியின் படுகொலை ராமனின் நடத்தையில் படிந்த மாபெரும் களங்கமாகும். ராமனின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாத வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றது மிகக் கடுமையான குற்றமாகும்… நிராயுதபாணியாக இருந்த வாலியை அம்பு ஏவிக் கொன்ற ராமனின் செயல் கோழைத்தனமானதும் பேடித்தனமானதுமாகும். வாலியின் கொலை திட்டமிட்டுச் சதி செய்து நிகழ்த்தப் பட்ட படுகொலையாகும். வாலியையும், ராவணனையும் ராமன் கொன்றதற்கு, தன் மனைவி சீதையின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, அதிலும் தனிப்பட்ட சுயநலமே ராமனிடம் இருந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.

மனித மனம் படைத்த பாமர மனிதன்கூட துயரம் கவ்விய நிலையி-லுள்ள மனைவியிடம், ராமன் சீதை-யிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது…… ராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான்: உன்னைச் சிறைப்பிடித்-தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்துப் பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்-பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ராவண-னைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெரும் தொல்லையை மேற்கொள்ளவில்லை.

ராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்து இருக்க முடியும்? ராமன் அதோடு நிற்கவில்லை; சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்; உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். ராவணன் உன்னை களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. “ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை ராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட ராமனைச் சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. சீதை கருவுற்றிருந்த காலத்தில் அவளை கொண்டு போய் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுகிறான் ராமன். பிறகு பல ஆண்டுகள் கழித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவளை சந்திக்கிற ராமன் அப்போதும், அவளை சந்தேகித்து, தீயில் இறங்கி அவள் நேர்மையை நிரூபிக்கச் சொல்கிறான். அப்படி நிரூபித்த பிறகு, பூமியை இரண்டாகப் பிளந்து அதனுள் இறங்கி விடுகிறாள் சீதை.

இதை டாக்டர் அம்பேத்கர் மிகுந்த கோபத்தோடு இப்படி குறிப்பிடுகிறார். காட்டுமிராண்டித்தனமானவனை விட கேவலமாய் நடந்துகொண்ட ராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக் கொண்டாள். கடவுளான ராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது. ராவணன் பெண் பித்தன், ராமன் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று உயிராக வாழ்ந்தவன் என்று மூணு பொண்டாட்டிக்காரன் கதாகாலட்சேபம் செய்வதுபோல், பல பெண் பித்தர்களும், பக்தர்களும் ராமனுடைய சிறப்பு ஏக பத்தினி விரதன் என்று சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஏகப்பட்ட எடுத்துக்-காட்டுகளோடு, ராமன் ஒரு ஸ்திரீலோலன் என்று நிரூபித்திருக்கிறார்.

அம்பேத்காரின் ராமாயணம்?: ராமன் ஏக பத்தினி விரதன் என்பது ஒரு சிறப்பாகக் கூறப்படு-கின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது. வால்மீகியேகூட தன் ராமாயணத்தில் ராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் ராமன் வைத்திருந்தான். ராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப்பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை ராமன் மத ஆசாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரச-வைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தை கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் களிப்பான். கோமாளி-களுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான். ராமன் அந்தப்புரப் பெண்-களோடு அனுபவித்த களியாட்டங்கள் வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். ராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்-தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான், என வால்மீகி குறிப்பிடுகிறார். அழகிகளின் மத்தியில் ராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்-பெண்களெல்லாம் ராமனை மகிழ்-விக்கப் பெரும் பாடுபட்டனர்.

ராமன் ஏக பத்தினி விரதன் அல்லன்;. ஏகப்பட்ட பத்தினிகள் விரதன் என்று அம்பலப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர். இந்த ராமனின் ராஜ்ஜியம் வர வேண்டும் என்பதுதான் காந்தியின் கனவாக இருந்தது. காந்தியின் கனவு நனவாகி இருந்தால்.. நினைக்கவே கூசுகிறது. உண்மையில் ராம ராஜ்ஜியம் என்பது, காம ராஜ்ஜியம்தான். ராமனை, இப்படி எல்லாம் கொச்சைப்படுத்தலாம். ஆனால் அவன் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினான். நீதி, நேர்மை தவறாமல் ஆண்டான். அவன் ஆட்சியில் எல்லா உயிர்களும் நிறைவாக மகிழ்ச்சியாக வாழ்ந்தன. நீதி தவறாத ராமனின் ஆட்சியைத்தான் ராமராஜ்ஜியம் என்றார், மகாத்மா. அந்த ராமனின் ஆட்சியைத்தான் வலியுறுத்தினார் காந்தி மகான். என்று காந்திய ஆதரவாளர்களான இந்து மிதவாதிகள் விவாதிக்கக் கூடும். இந்த வாதத்தை ஊதித் தள்ளுகிறார் டாக்டர் அம்பேத்கர். காந்தியத்தின் அரை-ஆடையும் அம்பேத்கரின் அறிவுக்கு முன் பறந்துபோய் நிர்வாணமாகிறது.

நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்-களின் பழக்கத்தைக்கூட ராமன் ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை ராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறார். அதுவும் துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் ராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் ராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

பொய்களை அடுக்கும் நாத்திக வேடதாரிகள்: பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது.. அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். மனம் போனபடி, பழித்தான், சபித்தான். குற்றவாளியைப் பிடித்துத் தண்டித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்-தினான்…. நாட்டு மக்களுள் அதாவது ராம ராஜ்ஜியத்தில் யாரோ ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்-களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்-களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று ராமன் திடமாய் நம்பினான்… உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றி வந்தான். அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா? மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத் தவம் செய்பவனா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் ராமன். அதே நொடியில் எங்கே தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம்.

ஒரு மனிதன் எந்த நேரமும் குடி, பல பெண்களுடனான உறவு என்று ஊதாரியாக வாழ்வது மோசமானது. அதுவும் ஒரு மன்னன் அப்படி இருந்தால், அது எவ்வளவு கேவலமானது? ஆனால், சம்பூகனை கொலை செய்த ராமனின் செயலை அவனுடைய ஊதாரித்தனமான பாலியல் லீலை-களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ராமனின் காம லீலைகள் எவ்வளவோ முற்போக்கானவை. படுகொலை செய்து முறையற்ற தீர்ப்பு வழங்கி அநீதிக்கு வழிவகுத்த ராமனை மேலும் ஆட்சி அதிகாரத்தில் தலையிடவிடாமல் பார்த்துக் கொண்டு, அந்தப்புரத்திலேயே வளைத்து வைத்திருந்த அந்த அழகிகளுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். சம்பூகன் என்னும் சூத்திரனை பார்ப்-பானுக்காக, பார்ப்பனியத்தை பாது-காப்பதற்காக கொலை செய்த ராமனின் தோலுரித்த டாக்டர் அம்பேத்கர் சிலையின் கழுத்தை உடைக்கிறார்கள், நன்றிகெட்ட சூத்திரர்கள்.

வே. மதிமாறன் எழுதிய “நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை” நூலில் இருந்து (பக்கம் 52_58)
தகவல்: விடுதலை தமிழ்ச்செல்வன், தருமபுரி.

Saturday, April 19, 2014

பாகிஸ்தானில் கிறித்தவர்களின் 'புனித வெள்ளி'பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் புனித வெள்ளி சிறப்பாக கொண்டாடப்ட்டது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. பைபிளும் வாசிக்கப்பட்டது.

லாஹூரிலும் கிறித்தவர்கள் புனித வெள்ளியை விமரிசையாக கொண்டாடினர். செயின்ட் ஆண்டனி சர்சில் பாதிரிகளும் இளைஞர்களும் தங்களின் மத கடமைகளை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமாக கொண்டாடினர். ரோமர்களுக்கும் ஏசுவுக்கும் நடந்த சம்பாஷணைகளின் முக்கிய பகுதிகளை ஃபாதர் மணி பெருந் திரளான கூட்டத்துக்கு மத்தியில் எடுத்துரைத்தார். மழை வேறு தொடர்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் தேவாலயத்தின் உள்ளிலேயே தங்களின் கடமைகளை நிறைவேற்றினர். தலைமை மத குரு 'நாங்கள் பாகிஸ்தானிகள் என்பதில் பெருமைபடுகிறோம். எங்களின் மத சுதந்திரத்துக்கு பல வகையிலும் உதவிடும் அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

அமைச்சர் சுஜாவுர் ரஹ்மான் தனது அறிக்கையில் 'கிறித்தவர்கள் தங்களின் மத கடமைகளை பூரண சுதந்திரத்தோடு கடைபிடித்து வருகின்றனர். வறுமையில் வாடும் 1320 கிறித்தவர்களுக்கு அரசு மான்யமாக காசோலைகளை அவரவர் பெயருக்கு அனுப்பியுள்ளது. அதே போல் கல்வி, அறிவியல் முன்னேற்றத்திலும் சிறுபான்மையினரின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் நலனுக்காக 17 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம். சிறுபான்மையினர் சுகாதார மேம்பாட்டு திட்டத்துக்காக 7.5 பில்லியன் ரூபாய்களை அரசு ஒதுக்கி செலவழித்து வருகிறது. மொத்த பட்ஜெட்டில் 10.9 சதவீதம் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக செலவழிக்கிறோம். இது மிகப் பெரும் தொகையாகும். லாஹூரில் 300 தேவாலயங்களில் 56 கிறித்தவ குடியிருப்புகளிலும் சேவையாற்ற 6000 கிறித்தவ இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்களின் கடமையை ஆற்றி வருகின்றனர். முக்கியமாக இவர்கள் அந்த இடங்களை தூய்மபைடுத்துவதிலும், மக்களின் கல்வி விழிப்புணர்வில் ஆர்வம் காட்டவும் பணிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறுகிறார்.

இஸ்லாமிய குடியரசாக பிரகடனப்படுத்தியிருக்கும் பாகிஸ்தானில் அரசு அவர்களை அரவணைத்துச் செல்கிறது. ஆனால் மதசார்பற்ற நாடு என்று உலகுக்கு கூறி வரும் நமது இந்திய நிலையை பார்ப்போம்.

இந்த வருட புனித வெள்ளியில் வழக்கமாக அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும். ஆனால் இந்த வருடம் குஜராத்தில் மோடியின் தலைமையிலான அரசு விடுமுறையை திரும்பப் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறித்தவர்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சொல்லியுள்ளனர். அரசின் முடிவை எதிர்த்து மிகப் பெரும் போராட்டம் நடந்தேறியுள்ளது. ஆனால் மோடி எதற்கும் மசியவில்லை. கிறித்தவர்கள் இந்த பிரச்னையை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிடுகின்றனர். இந்த சர்வாதிகாரி 5 சதவீதமே இருக்கும் பார்பனர்களுக்காக மற்ற 95 சதவீத இஸலாம், கிறித்தவ, பவுத்த, இந்து பிற்படுத்தப்பட்ட மக்களை பார்பன கலாசாரத்துக்கு மாற்ற எத்தனிக்கிறார். பலதரப்பட்ட கலாசாரங்களை கொண்ட இந்த நாடு மோடி என்ற சர்வாதிகாரியின் சில முடிவுகளால் அழிவுக்கே இட்டுச் செல்லும். இந்த நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் மோடி போன்ற சர்வாதிகாரிகளை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க முடிந்த வரை முயற்சிக்க வேண்டும்.

இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் 100 மோடியைப் போன்றவர்கள் வந்தாலும் இந்திய இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் பார்பன கலாசாரத்துக்கு மாற்றி விட முடியாது. அவ்வாறு மாற்ற முயற்சித்தால் இந்தியா பல நாடுகளாக சிதறி விடும். அதைத்தான் இந்துத்வாவாதிகளும் விரும்புகிறார்களா?

தகவல் உதவி
அல்அரபியா,
ரெடிஃப்.காம்
19-04-2014

Thursday, April 17, 2014

ஜெயலலிதாவின் காட்டமான மோடி எதிர்ப்பு பேச்சு!தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு பதிலளிக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் நடந்த அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியது:

"மொத்த மக்கள் தொகையில் 16.6 விழுக்காடு மக்கள் குஜராத்திலே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 11.3 விழுக்காடு மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். குழந்தை இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், குஜராத் மாநிலம் 11-ஆவது இடத்தில் இருக்கிறது. இன்னும் சற்று விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தமிழ் நாட்டில் உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 21 குழந்தைகள் மட்டுமே ஒரு வயது அடைவதற்குள் இறக்கின்றன.

ஆனால், குஜராத்தில் 1,000 குழந்தைகளுக்கு 38 குழந்தைகள் இறக்கின்றன. தமிழ்நாட்டில் தாய் இறப்பு விகிதம் 90 என்ற அளவில் இருக்கிறது. ஆனால், குஜராத்தில் 122 என்ற அளவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களில் 14.3 விழுக்காடு தொழிலாளர்கள் பட்டதாரிகள். ஆனால், குஜராத்தில் 10 விழுக்காடு தொழிலாளர்களே பட்டதாரிகளாக உள்ளனர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதிக மக்கள் பயன்பெறும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறான நிலைமை குஜராத்தில் நிலவுகிறது. மாநிலத்தின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. குஜராத் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 2012-2013 ஆம் ஆண்டில் மட்டும் 15,252 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெறப்பட்டு இருக்கிறது. அதே காலகட்டத்தில் குஜராத்தில் 2,676 கோடி ரூபாய் மட்டுமே அந்நிய முதலீடாக பெறப்பட்டு இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள். 15,252 கோடி ரூபாய் எங்கே? வெறும் 2,676 கோடி ரூபாய் எங்கே? மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது, ஆனால் குஜராத் 11-ஆவது இடத்தில் இருக்கிறது.

தமிழ் நாட்டில் உள்ள மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 36,996. ஆனால், குஜராத்தில் வெறும் 22,220 தொழிற்சாலைகள் தான் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 90 ஆயிரம். ஆனால், குஜராத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 50 ஆயிரம் தான். 2011-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 732. ஆனால், குஜராத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 16 தொழில்கள் தான் துவங்கப்பட்டன. உணவு தானிய உற்பத்தியில் 2011-2012 ஆம் ஆண்டு 101.51 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயர் அளவை எட்டி தமிழகம் சாதனை படைத்துள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதும் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. ஆனால், குஜராத் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி வெறும் 88.74 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் தான் உள்ளது.

2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 103 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது போன்று பல துறைகளில் குஜராத்தை விட தமிழ் நாடு தான் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இப்போது நான் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தியாவிலேயே பலருக்கு வியப்பை அளிப்பவையாக இருக்கும். பலருக்கு இன்று தான் கண்களை திறந்து விட்டதைப் போல தோன்றும். இது தான் உண்மை நிலை. இதுவரை எல்லாவற்றிலுமே இந்தியாவிலேயே குஜராத் தான் முதன்மையான மாநிலம் என்ற ஒரு மாய தோற்றம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், அது உண்மை அல்ல. உண்மை நிலை என்னவென்றால் குஜராத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது. ஆனால், தமிழ்நாடு எனது தலைமையில் வெற்றுப் பேச்சிலும் விளம்பர வெளிச்சத்திலும் கவனம் செலுத்தாமல், மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது."

தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவு விலக்கியவுடன் தான் எவ்வளவு பெரிய தவறை சோ ராமசாமியின் தூண்டுதலால் செய்து வருகிறோம் என்பதை உணர்ந்துள்ளார் ஜெயலலிதா! பலமுறை தவறை சுட்டிக் காட்டியும் தன்னை முன்பு திருத்திக் கொள்ளாமல் ஆதரவு விலகியவுடன் இன்று பேசி என்ன பயன்? எப்படியோ இப்போதாவது குஜராத்தின் உண்மை நிலையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ஜெயலலிதா அவர்களுக்கு நன்றிகள்.

மோடி பிரதமரானால் இந்தியா எப்படி உருமாற்றப்படும்!நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அது நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு என்றுதான் கூற வேண்டும். அந்த நூலில் தலித் மக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளைச் செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளைப் புனிதமாகக் கருதுகின்றார்கள். “Experience in spirituality” ஆன்மீக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால்தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலான தொழில்களை இத்தனை காலமாக செய்கின்றார்களே அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார்.

அவர் அந்த நூலில் எழுதுகிறார்:

“I do not believe that they are doing this job just to sustain their livelihood had this been so, they would not have continued with this type of job, generation after generation... at some point of time somebody might have got the enlightenment, that it is their duty to work for the happiness of the entire society and god so. That they have to do this job, bestowed upon them by god so, and that his job of cleaning shared continue as a spiritual activity for centuries. This shared have continued generation after generation. It is impossible to believe that their ancestors did not have choice of adopting any other job or business.”

இதன் பொருள்:

நான் அவர்கள் (தலித்கள்) இந்தப் பணியைத் தங்கள் வயிறுகளை நிரப்புவதற்காகத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நம்பவில்லை. இதற்காகத்தான் அவர்கள் செய்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் இந்த அசிங்கமான தொழிலை இத்தனை தலைமுறையாகச் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இந்த மக்களில் யாருக்கோ, இந்தப் பணியைச் செய்வது மொத்த மனித இனத்திற்கும் செய்திட வேண்டிய பணி என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் கடவுள் அவர்கள் மீது பணித்த இந்தக் கடமையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது கடவுள் அருள் செய்த இந்தக் கடமையைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்.

இந்தத் துப்புரவுப் பணி, ஓர் உள்ளார்ந்த ஆன்மீக நடவடிக்கையாக, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மிகப் பணிதான், தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டிருக்கின்றது. இதல்லாமல் இந்தத் துப்புரவுப் பணிகளைச் செய்பவர்களின் தலைமுறைகளுக்கு வேறு வேலைகளோ, வாணிபங்களோ கிடைக்கவில்லை என நம்ப முடியவில்லை. இதிலிருந்து பெறப்படும் உண்மை மனித மலம் அள்ளுவது, பிணம் தூக்குவது முதலான பணிகள் ஆன்மிகத் தேடலும், நாடலுமாம். அதனால் அவர்கள் அந்தப் பணியைச் செய்திட வேண்டுமாம்.

இந்த நூல் வேறொரு விதத்தில் ஆராய்ந்து கவனிக்கப்பட வேண்டும்.

இந்த நூல், மோடி பேசிய அல்லது நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு. இந்த உரைகள் அவர் முதலமைச்சர் என்ற தோரணையில், அய்.ஏ.எஸ். என்ற மாவட்ட ஆட்சியர் அந்தஸ்திலுள்ள அதிகாரிகளிடம் நிகழ்த்தியது. அப்படியானால் தான் மட்டும் தலித் பெருங்குடி மக்களைப் பற்றி இப்படித் தரக்குறைவான ஒரு பார்வையைக் கொண்டிருக்க வில்லை. மாறாக, அதனை அதிகாரிகள் வட்டத்திலும் பதிய வைத்திருக்கின்றார்.

மோடி, இப்படியொரு கருத்தைத் தனது உயர்மட்ட அதிகாரிகளின் மனதில் பதிய வைத்திருக்கின்றார். திமிரோடு அதை நூலாகவும் வெளியிட்டிருக்கின்றார் என்ற செய்திகள் பரவலாயின. அதனை நவம்பர் 2007இ-ல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடும் வெளியிட்டது. இதனைத் தலித் மக்கள், - குறிப்பாக தமிழக தலித் மக்கள் எதிர்த்தார்கள். உடனேயே மோடிக்கு ஆதரவாக சங் பரிவாரங்கள் களத்தில் குதித்தன. ஆனால், நாடெங்குமுள்ள தலித் மக்கள் கொதித்தார்கள்.

மனித உரிமை ஆர்வலர் சுகாஷ் கட்டேடர், இந்த நூலைத் தடை செய்ய வேண்டும். மோடியைக் கைது செய்து வன்கொடுமைச் சட்டத்தின்படி சட்டத்தின்முன் நிறுத்திட வேண்டும் என்று அகில இந்திய அளவில் குரல் எழுப்பினார். இந்தப் பின்னணியில் இந்த நூல் திரும்பப் பெறப்பட்டது. நூல் ஒருவேளை திரும்பப் பெறப்பட்டிருக்கலாம். ஆனால், அன்று மாவட்ட ஆட்சியர் அளவிலுள்ள அதிகாரிகளின் மனதில் மோடி பதிய வைத்த சிந்தனைப் போக்கை யார் திரும்பப் பெறுவது? மோடியை ஒரு பெரிய ஹீரோவாகக் காட்டிடும் பொறுப்பு ஆப்கோ - என்ற சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மோடியின் உரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட வேண்டும். மோடியை ஒரு சீரிய சிந்தனையாளனாகக் காட்டிட வேண்டும் என்ற பொறுப்பும் ஆப்கோ நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனம் பல கோடிப் பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் இந்தக் கீழ்த்தரமான நூல் வெளியீட்டுப் பணியைச் செய்தது. இந்த மொத்தக் குழப்பத்திலும் பெறப்படும் உண்மை என்னவெனில், மோடி தலித் மக்களை அவர்களின் அந்தக் கீழான தொழிலிலும், நிலையிலுமே வைத்திருப்பார். இன்று குஜராத்தில் நடந்து கொண்டிருப்பவை இதனை உறுதி செய்கின்றன.

குஜராத்தில் டீக்கடை உட்பட அனைத்துப் பொதுத்தலங்களிலும் தலித்களுக்குத் தனிப் பாத்திரமாம். அதற்குப் பெயர் இராம பாத்திரமாம். Ram palia பிக்கா பாய் என்ற இந்த தலித், ஒரு விவசாயப் பண்ணையில் வேலை செய்கின்றார். அந்தப் பண்ணையில் அவருக்கென ஒரு தேனீர்க் குவளை வைக்கப்பட்டிருக்கும். அவருக்கான தேனீர் அந்தக் குவளையில் ஊற்றப்படும். தேனீரைக் குவளையில் ஊற்றுபவர் அந்தக் குவளையைத் தொடுவதுமில்லை. அதேபோல் உணவு வாங்கிடவும் தனி பாத்திரம். அந்தப் பாத்திரத்தையும் தொட்டு அல்லது கையில் வாங்கி யாரும் உணவைத் தருவதில்லை. மாறாக, சற்று தூரத்திலிருந்து உணவை வழங்குவார்கள். இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் தனிப் பாத்திரத்திற்கு குஜராத்தில் ராம் பாத்திரம் என்று பெயர்.

அங்காடிகளில் அவர்கள் காய்கறிகளைத் தொட்டுப் பார்த்து வாங்கிட முடியாது. எட்டத்தில் நின்று சமிக்ஞைகள் செய்திட வேண்டும். தருவதை வாங்கிக் கொண்டு காசை அங்குள்ள கூடையில் போட்டுவிட்டுப் போய்விட வேண்டும். இதுதான் பல தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கின்றது. அன்றைய நாள்களில் அந்த இராம பாத்திரம், களிமண் குவளையாக இருந்தது. இன்றைய நாட்களில் அது ஸ்டீல் சொம்புகளாக மாறி இருக்கின்றன. பல தேனீர்க் கடைகளில் இப்போது டீயைக் குடித்து விட்டுத் தூக்கி வீசப்படும் அளவிலுள்ள பிளாஸ்டிக் குவளைகளிலேயே டீ வழங்கப்படுகின்றது. தலித் மக்கள் பரவிக் கிடக்கும் குஜராத்தின் 22 மாவட்டங்களிலும் இந்தத் தனிக் குவளை முறை பின்பற்றப்படுகின்றது.

நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அது, நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

நன்றி: தமிழ் வெப் துனியா மார்ச் 12,2014
-