Followers

Friday, March 31, 2023

துருக்கியில் சுரங்கத் தொழிலாளர்கள் இப்தார்

 துருக்கியில் சுரங்கத்

தொழிலாளர்கள் இப்தார்

நேரத்திற்காக காத்திருக்கிறார்கள்!.!

630M மீட்டர் நிலத்தடியின் கீழ்.!


 மாஷா அல்லாஹ் 

இஸ்லாம் எப்போதும் அழகுதான்.!




இந்துவாக சாகமாட்டேன்

 

எழுத்தாளர் பிரேம் விரைவில்  இஸ்லாத்தை ஏற்பதாக அறிவித்திருக்கிறார் ஐயாவிற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

 

ஐயா பிரேம் இஸ்லாத்துக்கு வருவதை எதிர்க்கும் சிலர் நீங்கள் ஏன் இஸ்லாத்திற்கு போக வேண்டும் பௌத்தம் தழுவலாமே என  கேள்விகளை எழுப்புகிறார்கள்.

 

அதற்கு ஐயாவின் #பஞ்ச்_பதில்...

எனது சான்றிதழில் ஹிந்து என இருப்பதை நான்  விரும்பவில்லை.

 

இதைத்தான் பாபா சாஹிப் சொன்னார்....

நான் இந்துவாக பிறந்தது ஒரு விபத்து ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என.

 

பௌத்தம் என்பதும் இந்து மதத்தில் ஒரு கூறு தான் என்பதை எப்பொழுது புரிந்து கொள்ள போகிறார்கள் இந்த மக்கள்...?

 

லட்சம் மக்களை பௌத்த மதத்திற்கு பாபா சாஹிப் அழைத்துச் சென்ற பொழுது அதிராத இந்திய ஒன்றியம் மீனாட்சிபுரத்தில் சில குடும்பங்கள் இஸ்லாத்திற்கு வந்ததால் அதிர்த்தது.

 

ஹிந்து மதத்திற்கு மாற்று எப்போதும் பௌத்தம் இருந்ததும் இல்லை இருக்கப் போவதுமில்லை ஹிந்து சனாதான மதத்திற்கு ஒரே மாற்று இஸ்லாம் தான்.                 As copied




Thursday, March 30, 2023

அம்மா-அப்பாவை உம்ராவுக்கு அனுப்புவேன்

 

அம்மா-அப்பாவை உம்ராவுக்கு அனுப்புவேன்

 

ஐம்பது கிலோ எடையுள்ள பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகளில் பங்கெடுத்துவந்த இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் சரீன் வியட்னாமின் டி டாம் என்ற பெண்ணை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ளார்.

 

பட்டம் வென்ற கையுடன் கிடைத்த பரிசுத்தொகையை வைத்து தனது பெற்றோர் இருவரையும் உம்ராவுக்கு அனுப்புவேன் என செய்தியாளரிடம் கூறினார் அவர். தன்னுடைய பரிசுத்தொகையைக் கொண்டு தன்னுடைய நீண்டநாளைய ஆசையான மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்க வேண்டுமென்றிருந்த ஆவலை பிற்படுத்தி வைத்துள்ளதாக கூறும் நிகாத் சரீன் , நடந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் போட்டியை வென்று தனது இரண்டாவது உலக சாம்பியன் பட்டத்தை பெற்று பெயரை தக்க வைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவருக்கு ஒரு லட்சம் டாலர் பரிசுத் தொகையுடன் ஒரு மஹிந்திரா காரும் பரிசாக கிடைத்துள்ள காரணத்தால் தனக்கிருந்த பென்ஸ் மோகம் இப்போது இல்லை என்றும் கூறிய அவர், இதுபற்றி நாட்டிற்கு திரும்பியவுடன் அம்மா அப்பாவிடம் பேசுவேன் என்றார்.

இதுவரை இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்றிருப்பதோடு அடுத்து தனது ஆசை ஏசியன் கேம்சிலும் ஒலிம்பிக்சிலும் இந்தியாவுக்காக கப் அடிக்க வேண்டும் என்கிறார்.




 

 

 

Nasrath S Rosy  ன் காப்பி பேஸ்ட்