Followers

Sunday, May 31, 2020

38 வருடம் துபாயில் பணிபுரிந்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

38 வருடம் துபாயில் பணிபுரிந்து விட்டு வீட்டுக்கு சென்றார். 😥😥😥😭😢😢😢

சொத்தை எழுதி தராததால் அன்பற்ற மனைவி மற்றும் பிள்ளைகளால், முதியவர் வீதிக்கு விரட்டப்பட்ட அவலம்

-------------------------------------------------------------

(மனிதர்களே!) அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண்விளையாட்டும் வேடிக்கையும் அலங் காரமும்தான். அன்றி (அது) உங்களுக்கிடை யில் வீண் பொறாமை யேற்படுத்துவதாகவும், பொருட்களிலும் சந்ததிகளிலும் போட்டி யேற்படுத்துவதாகவும்தான் இருக்கிறது. இதன் நிலையானது: ஒரு மழையின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் உதவியால் முளைத்த பயிர் நன்கு வளர்ந்து விவசாயி களை மகிழ்வித்துக் கொண்டிருந்தது. பின்னர் அது உலர்ந்து மஞ்சள் நிறத்தில் மாறி விடுவதை நீர் காண்கின்றீர். பின்னர் அது சருகுகளாகிவிடுகின்றது. இம்மை வாழ்வும் அவ்வாறுதான். மறுமையிலோ அவர்களில் பலருக்கு கொடிய வேதனையும் சிலருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்பொருத்த மும் கிடைக்கின்றன. ஆகவே, இந்த உலக அற்ப வாழ்வு ஏமாற்றுகின்ற அற்ப இன்பமேயன்றி வேறில்லை. (57:20)

-----------------------------------------

உலகத்தில் நீ அந்நியனைப் போன்று இரு; அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு என்ற நபிமொழி.8
6416. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறிது நேரத்தைச் செலவிடு. உன்னுடைய இறப்புக் குப் பிந்திய நாளுக்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.
புஹாரி Book : 81


சகோ பரந்தாமனின் அருமையான விவாதம்...சகோ பரந்தாமனின் அருமையான விவாதம்.... பார்த்து விட்டு பகிருங்கள்!

மன அமைதியை தருகின்ற இல்லற வாழ்க்கை!

மன அமைதியை தருகின்ற இல்லற வாழ்க்கை!
இறையருளை அதிகம் பெற வேண்டும் என்பதற்காக மூன்று நபர்கள், கூடுதலாக வணக்கம் புரிய முடிவு செய்தனர். அதில் ஒருவர், இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இரண்டாம் நபர், ஒருநாள் விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்றார். மூன்றாவது நபர், நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்; ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்றார்.
இந்தச் செய்தி நபிகள் நாயகம் அவர்களுக்குத் தெரிய வந்தபோது, "அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக.... உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்; அல்லாஹ்வை பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டு விடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன் ஆகவே என் வழி முறையை யார் வெறுப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். (நூல்கள்: புகாரி 5063, முஸ்லி
"நபித் தோழர் உஸ்மான் பின் மழ்ஊன் அவர்கள் துறவறம் மேற்கொள்ளள அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் அவர்கள் அனுமதியளிக்கவில்லை" (அறிவிப்பவர்: ஸஅத்பின் அபீ வாக்காஸ் , நூல்கள்: புகாரி (5074), முஸ்லிம் (2715)


காவல் துறைக்கு இவர்களே இலக்கணம்!

கோவையில் இரு இந்து கோயில்களுக்கு முன்பு பன்றி கறி வீசப்பட்ட தகவல் தெரிந்த அடுத்த நிமிடமே...
சம்பவ இடத்தில் போலீசார்களை இறக்கி,
இந்து அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி,
கறியை அகற்றி கிருமிநாசினி மற்றும் மஞ்சள் போட்டு தூய்மை செய்ய ஏற்பாடு செய்து,
அருகிலுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வுசெய்து,
வீசிய நபர்களின் பைக் நம்பரை கண்டறிந்து,
கலவரம் ஏற்படுத்த முயன்ற ஹரிராம் பிரகாஷ் என்பவனை சிலமணி துளிகளில் பிடித்து,
மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்து,
கோவையில் கலவரத்தை தடுத்து, அமைதியை நிலைநாட்டிய...
கோவை மாநகர ஆணையர் சுமித் சரனுக்கும், துணை ஆணையர் பாலாஜி சரவணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


ஜோதிடம் ஒரு பித்தலாட்டம் என்பது மீண்டும் நிரூபணம்!


ஜோதிடம் ஒரு பித்தலாட்டம் என்பது மீண்டும் நிரூபணம்!

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பது நபிமொழி.

நூல் : அஹ்மத் 9171

-------------------------------------------

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்" என்று கூறிவிட்டு, "இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் 5161

ஒரு தாயின் பெருமிதம்...

ஒரு தாயின் பெருமிதம்...
தனது ஆண் பிள்ளைகள் மூன்று பேரும் கேரளா காவல்துறையில் உயர் பதவி வகிப்பது நினைத்து ஆயிஷா உம்மாவுக்கு உள்ளூர மகிழ்ச்சி..
மலப்புரம் மாவட்டம் அங்காடிப்புறம் அருகில் தொடேங்கல் பகுதியில் முஹம்மது குட்டி ஆயிஷா தம்பதியர் மகன்கள்..
மூத்த மகன் முஹம்மது 1989 ல் காவல்துறை மோட்டார் வாகன பிரிவில் பணியில் சேர்ந்து தற்போது மலப்புரம் ஆயுதபடை முகாம் உதவி ஆய்வாளராக உள்ளார்.
2 வது மகன் நசீர் 1998 ல் பணியில் சேர்ந்து தற்போது மலப்புரம் வாளாஞ்சேரி ஸ்பெஷல் பிரான்ச் உதவி ஆய்வாளராக உள்ளார்.
3 வது மகன் நிசார் 2005 ல் பணியில் சேர்ந்து தற்போது மலப்புரம் கண்ட்ரோல் ரூம் உதவி ஆய்வாளராக உள்ளார்..
கரடு முரடான தோற்றத்தில் காவலர்களை பார்த்து பழகியவர்களுக்கு இவர்கள் முகம் சாந்தமாக கொஞ்சம் வித்தியாசமாக தெரிவர்..
ஊரில் நடக்கும் உறவினர் இல்ல நிகழ்வுகளில் மூவரும் ஒருமித்து கலந்து கொள்ளும் போது பூரித்து போகும் தாய் ஆயிஷாவுக்கு ஒரு ராயல் சல்யூட்..


Saturday, May 30, 2020

குண்டு வெடிப்பில் குறைவாகத்தானே முஸ்லிம்கள் இறந்திருக்கிறார்கள்

'குண்டு வெடிப்பில் குறைவாகத்தானே முஸ்லிம்கள் இறந்திருக்கிறார்கள். இன்னும் அதிகம் எதிர் பார்த்தேன்' என்று தொலைபேசியில் உரையாடி மகிழ்ந்த பிரக்யாசிங் புற்று நோய் பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.
மாலேகான் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி பிரக்யாசிங் தற்போது பாஜகவின் எம்பியாகவும் உள்ளார்.
நன்றாக வாழ்ந்து குடும்பமும் குடித்தனமுமாக அமைதியாக வாழ்வை கழிப்பதிலிருந்து ஆர்எஸ்எஸ் இவளது வாழ்வை மடை மாற்றிவிட்டது. இறப்புக்குப் பின்பும் நரக வேதனையை அனுபவிப்பாள்.
தேச பக்தர்கள் :-(


இவனெல்லாம் நம்மை சீண்டிப் பார்க்கிறான். ரொம்ப வெக்கமா இருக்கு குமாரு!


ஜகாத் நிதியிலிருந்து ரூ 36 லட்சம் செலவில் அவசரகால சிகிச்சை பிரிவுஜகாத் நிதியிலிருந்து ரூ 36 லட்சம் செலவில் அவசரகால சிகிச்சை பிரிவு
மகாராஷ்டிராவில் முஸ்லிம்கள் செய்துள்ள நெகிழ்வூட்டும் செயல்
மும்பையிலிருந்து 380 கிமீ தொலைவிலுள்ள இசால்கராஞ்சி எனும் ஊரில் வசிக்கும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அருகிலுள்ள இந்திராகாந்தி நினைவு மருத்துவமனைக்கு ரூ 36 லட்சம் செலவில் 10 படுக்கை வசதி கொண்ட அவசர சிகிச்சை பிரிவை தானமாக வழங்கியுள்ளார்கள்
ரமலான் மாதத்தில் முஸ்லிம்களிடத்தில் திரட்டப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து இந்த வசதியினை முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது
ரம்ஜான் தினத்தன்று ICU பிரிவை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்து பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே ஆண்டு வருமானத்தில் 2.5% நிதியை தானமாக செய்து ICU வசதியினை செய்துள்ளதன் மூலம் இந்திய நாட்டு மக்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை முஸ்லிம்கள் தந்திருப்பதாக பாராட்டியுள்ளார்.
மேலும் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணத்தை முஸ்லிம்கள் வழங்கியுள்ளதாக கூறினார்
மூன்று லட்சம் மக்கள் தொகையினை உடைய இந்த ஊரில் அவசர சிகிச்சைக்காக தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளதால் அவ்வூரின் மக்கள் தொகையில் வெறும் 15% மக்கள் தொகையை கொண்டுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணைந்து இந்த வசதியை செய்து கொடுத்துள்ளார்கள்
சமஸ்ட் முஸ்லிம் சமாஜ் என்ற இஸ்லாமிய கூட்டமைப்பு செய்துள்ள உதவியை Dr ஜாவித் பக்வன் (அறுவை சிகிச்சை நிபுணர் IGM மருத்துவமனை) அவர்கள் 'இது போன்று நிகழ்வை தாம் வேறெங்கும் கண்டதில்லை' என நெகிழ்ந்துள்ளார்
முதலில் பல கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும் பின்பு ரமலானுடைய பரிசாக இதை விட சிறந்தது இருக்க முடியாது என்று முடிவு செய்து இவ்வுதவியை செய்ததாக சமஸ்ட் முஸ்லிம் அமைப்பின் உறுப்பினர் நதீம் அஹ்மத் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் மகாராஷ்டிர மாநிலத்தில் முஸ்லிம்களின் இந்த சேவை மிகவும் இன்றியமையாததாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம்
நன்றி
டைம்ஸ் ஆஃப் இந்தியா

இஸ்லாமிய பெண் முதன்முறையாக நீதிபதியாக நியமனம்,,,

பிரிட்டனில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் முதன்முறையாக நீதிபதியாக நியமனம்,,,
40 வயதுடைய ராபியா அர்ஷாத்.....
வாழ்த்துக்கள்!


பேத்தியின் அன்பில் திளைத்திருக்கும் இளைய ராஜா!

பேத்தியின் அன்பில் திளைத்திருக்கும் இளைய ராஜா!
இனி இந்த குழந்தையை யாரும் 'என்ன சாதி' என்று கேட்க மாட்டார்கள். தனது தந்தையான யுவனின் இஸ்லாமிய பிரவேசத்தால் இந்த குழந்தைக்கு கிடைத்துள்ள வெகுமதி அது.
ஆயிரம் சட்டங்கள் போட்டும் ஆயிரம் சலுகைகள் கொடுத்தும் ஒழிக்க முடியாத சாதியை இஸ்லாம் வெகு இலகுவாக ஒரு நொடியில் ஒழித்து விடுகிறது.
யுவன் இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும் அவரது தந்தையோடோ அல்லது அவரது அண்ணணோடோ எந்த முறுகலும் இல்லாமல் அவரவர் வழியில் வாழ்ந்து வருகின்றனர்.
அதே போல் ஏ ஆர் ரஹ்மானும் தனது அக்காவின் குடும்ப உறுப்பினர்களோடு இன்நு வரை சகோதர வாஞ்சையோடே வாழ்ந்து வருவதையும் பார்க்கிறோம்.
இஸ்லாம் வன்முறையால் பரவவில்லை: அதன் கொள்கைகளாலேயே பரவுகிறது என்பதற்கு இவை எல்லாம் நம் கண் முன் நிற்கும் சாட்சிகள்.


10 வருடங்களுக்கு முன்பு ரியாத் ரப்வாவில் நிகழ்ந்த நிகழ்வு!

10 வருடங்களுக்கு முன்பு ரியாத் ரப்வாவில் நிகழ்ந்த நிகழ்வு!
இந்த வாரம் வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் எனது ரூமில் ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலை நேரம் முடிந்து சினிமா சாப்பாடு மற்ற கேளிக்கைகள் என்ற ரீதியில் செயல்படும் பெரும்பான்மையோரை மாதம் ஒரு முறை இது போன்று அழைத்து அவர்களுக்கு வாழ்வின் நோக்கத்தை புரிய வைப்போம் என்று முடிவெடுத்தோம். இது போல் முன்பே பல சகோதரர்கள் சிறப்பாக மார்க்க பணி செய்து வருகின்றனர். அந்த வகையில் சகோதரர் இக்பால் அவர்கள் 'தக்வா' அதாவது 'இறை அச்சம்' என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் அழகிய முறையில் சொற்பொழிவு ஆற்றினார். முதலில் தக்வா என்றால் என்ன என்பதை பார்த்து விடுவோம்.
தக்வா எனும் அரபுச் சொல், விகாயா என்ற வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் "தற்காத்தல்" என்று பொருளாகும். இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருளில் தக்வா எனும் சொல், இறைமறை வழக்கில் "இறையச்சம் - பயபக்தி" என்று பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவன் நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். எனவே, பாவச் செயல்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்கிறோம் என்னும் எண்ண உறுதியை ஏற்படுத்துவது "தக்வா"வாகும்.
இந்த தலைப்பில் சகோதரர் ஒரு நபி மொழியையும் மேற் கோளாக காட்டினார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் 'நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!" என்று தமக்குள் கூறினர்.
அவர்களில் ஒருவர் 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். விடியற்காலை நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!
மற்றொருவர், 'இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, 'முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!" என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், 'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!"
என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார்.
ஆதாரம்: புஹாரி: 2272.
Volume :2 Book :37
ஒரு மனிதனுக்கு இறை அச்சம் இருந்தால் அது எந்த அளவு சமூகத்தில் அவனை நேர்மையாளனாக நடக்க வைக்கும் என்பதற்கு மேற்சொன்ன நபிமொழி சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
இந்த கூட்டத்தை சகோதரர் நெல்லிக் குப்பம் அக்பர் அவர்கள் துவக்கி வைத்தார். கூட்டத்தின் முடிவில் அடுத்த அமர்வில் இன்னும் நிறைய சகோதரர்களை அழைத்து வருவது என்றும் மாற்று மத நண்பர்களுக்கும் அழைப்பு விடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மதுரை காதர், விழுப்புரம் அன்வர் போன்ற சகோதரர்களும் வந்திருந்தனர். அடுத்த கூட்டத்தை இன்னும் சிறப்பாக நடத்துவோம் என்ற முடிவில் இறை பிரார்த்தனையோடு கூட்டம் நிறைவுற்றது.


தற்போதைய டிஜிட்டல் இந்தியாவின் எதார்த்த நிலை'எல்லோருக்கும் குளிர்ந்த தண்ணீர் தருகிறோம்... சாப்பாடு தருகிறோம்... இன்சா அல்லாஹ்.... கவலைப்படாதீர்கள்' - இஸ்லாமியர்களின் மகத்தான சேவை....
அநியாயமாக இந்துத்வாக்களினால் கொல்லப்படுகிறார்கள், தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன, இஸ்லாமிய பெண்கள் இந்துத்வாக்களினால் கற்பழிக்கப்படுகிறார்கள், தேச துரோகிகள் என்று பொய்யான குற்றச்சாட்டுக்களை தினமும் வைக்கிறார்கள். மோடியும், அமித்ஸாவும் மறைமுகமாக திட்டமிட்டு கலவரங்களை தூண்டுகிறார்கள். இத்தனையையும் சுமந்து கொண்டு இந்துக்களுக்கு உதவுகிறார்கள். இஸ்லாம் இதைத்தான் அவர்களுக்கு போதிக்கிறது.
முஸ்லிம்கள் தொடர்ந்து செய்யும் இதுபோல் நல்ல மனிதநேய பணிகளை எந்த இந்திய ஊடகமும் வெளி உலகத்திற்கு காண்பிக்காது.
ஏனென்றால்,
முதல் காரணம்: ஏற்கனவே அவைகள் முஸ்லிம்கள் பற்றி பொய்யும் புரட்டும் பேசி, வதந்திகளை நிறைய பரப்பி இருப்பதால் இப்போது வெட்கப்படுகின்றன.
ஆகவே,
எப்படி இதுபோல் உண்மை செய்திகளை வெளிப்படுத்த முடியும்
இரண்டாவது காரணம்: இது நல்ல செய்தி என்பதினால், சம்பந்தப்பட்ட ஊடகத் துறையினருக்கு யாரும் கமிஷன் தரமாட்டார்கள்..
இதுதான் தற்போதைய டிஜிட்டல் இந்தியாவின் எதார்த்த பரிதாப நிலை..🙈😉🤪

Friday, May 29, 2020

மொழி, இனம், நாடு கடந்து பாகுபாடின்றி அனைவரும் ஓர் வரிசையில்....

மொழி, இனம், நாடு கடந்து பாகுபாடின்றி அனைவரும் ஓர் வரிசையில்....
அமெரிக்கன் என்று எழுதப்பட்டுள்ள இடத்தில் நிற்பவர் சகோ யூசுஃப்.
யூஸூஃப் அவர்கள் ரியாத் வந்திருந்த போது கை கொடுத்து பேசி நலம் விசாரித்துள்ளேன். அவரது சொற்பொழிவையும் நேரிடையாக கேட்டுள்ளேன். மிகவும் ஹாஸ்யமாக பேசக் கூடியவர்.


Thursday, May 28, 2020

நேபாளம் இன்று இந்தியாவின் பகை நாடாக மாற என்ன காரணம் ?

நேபாளம் இன்று இந்தியாவின் பகை நாடாக மாற என்ன காரணம் ?
உலகின் ஒரே இந்து நாடாக விளங்கிய நேபாளம் தற்போது மதசார்பற்ற நாடாக மாறி அங்கு சீனாவின் ஆதரவோடு கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
நேபாளம் கம்யூனிஸ்ட் பாதையை தேர்ந்தெடுக்க மிக முக்கியமான காரணம் அங்கு அதற்கு முன் இருந்த பார்ப்பனீய ஆதரவு பெற்ற மன்னர் ஆட்சிதான்.
பிறப்பை கொண்டு ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரம சித்தாந்தம் செய்த அராஜகமே நேபாள நாட்டில் மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்பட்ட காரணமாக இருந்தது.
இதன் காரணமாக நேபாள சிவாலயங்களில் கடந்த 400 ஆண்டுகளாக சிவ ஆச்சாரியார்களாக இருந்த தமிழகத்தின் சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களின் அராஜகம் முடிவுக்கு வந்தது. அவர்கள் இந்தியாவுக்கு அடித்து துரத்தப்பட்டார்கள்.நேபாள கோயில்களில் மதகுருமார்கள் போட்ட ஆட்டமே இன்று நேபாளம் மதச்சார்பற்ற நாடாக மாற காரணமாக அமைந்துவிட்டது.
நேபாள அரசியல் மாற்றம் நேர்வழியில் செல்லத் துவங்கிய அதே காலகட்டத்தில் இந்தியாவில் பாஜகவின் பார்ப்பனீய அரசு மத்தியில் அமைந்து மக்களின் வெறுப்பை தினமும் சம்பாதிக்கும் விதமாக இந்தியாவை இந்து நாடாக மாற்றும் அழிவு வேலையை செய்து வருகிறது.
இது ஒன்று போதாதா சீனா நேபாளத்தை இந்தியாவுக்கு எதிராக திருப்பிவிடுவதற்கு ?
அது தான் தற்போது நேபாளம் எல்லை பிரச்சினையை எழுப்பி சீனாவோடு சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே இலங்கை பிரச்சினையில் தமிழர்கள் "ராவணணின் வாரிசுகள்" என்றும், எனவே பாஜக சிங்களர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்றும் 2002- ல் பாஜகவின் மூத்த தலைவர் L.K. அத்வானி குறிப்பிட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற கிறுக்குத்தனமான கப்சா புராணங்களை நம்பும் ஆட்சியாளர்களின் கேனத்தனமான செயல்களே இன்று இந்தியாவை சுற்றிலும் பகை நாடுகளாக மாற முக்கிய காரணம் ஆகும்.
ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்... "இந்துமதம் ஒற்றை மதமல்ல..! அது பல்வேறு மதங்களை ஒன்றாக இணைத்து வெள்ளையர்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட செயற்கை மதம்" ஆகும்.
இந்தியாவை பொறுத்தவரை இந்துமதம் என்றாலே அது ஆரியர்களின் வைதீக மதத்தை மட்டுமே குறித்து. வைதீகம் வர்ணாசிரம சித்தாந்தத்தை நம்புகிற மதம்.
இந்தியாவில் தோன்றாத மதங்களில் பிராமணீசம் எனப்படும் ஆரியர்களின் வைதீக மதமும் ஒன்று என்பதை இங்குள்ளவர்களே அறிமாமல் இருப்பதால் தான் அறிவை அடகுவைத்து விட்டு சூத்திர சங்கிகளாக பாஜகவுக்கு ஜால்ரா அடித்து வருகின்றனர்.
இந்துத்துவா முதலில் இஸ்லாமிய கிறிஸ்தவர்களை ஒடுக்கும். அதன் பிறகு இந்து என்று தன்னை நம்பிக்கொண்டு இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும். இடைச்சாதிகளை தங்களது பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட அடிமைகளாக வைத்துக்கொள்ளும்.
"இதுதான் RSS இன் நீண்டகால திட்டம்" ஆகும்.
ஒருவேளை RSS இன் இந்த திட்டம் வெற்றி பெற்றாலும் நேபாளம் போன்றே மக்கள் புரட்சி வெடித்து குறுகிய காலத்தில் அதன் ஆட்டம் முடிவுக்கு வரும் என்பதில் ஐயமில்லை!
-ஜெயா தாசன்


Wednesday, May 27, 2020

துப்புறவு பணியாளர்களை சவுதி நாட்டவர் நடத்தும் விதம்!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
துப்புறவு பணியாளர்களை சவுதி நாட்டவர் நடத்தும் விதம்!
அரபு நாடுகளை சுத்தமும் சுகாதாரமுமாக வைத்திருப்பதில் வெளி நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை சாதாரணமாக எண்ணி விட முடியாது. இதை உணர்ந்ததாலோ எண்ணவோ பெருநாள் தினத்தன்று ஒவ்வொரு வருடமும் சவுதிகள் துப்புறவு தொழிலாளர்களை அழைத்து அவர்களை அமர வைத்து கண்ணியப்படுத்துவார்கள். இது அந்த தொழிலாளர்களை மனதளவில் மகிழ்ச்சியை உண்டு பண்ணும். இந்த எண்ணம் அனைத்து மக்களிடத்திலும் வர வேண்டும். தொழிலாளர்களை அலட்சியப்படுத்தக் கூடாது என்ற இஸ்லாத்தின் போதனையை சவுதிகள் மனதில் ஏற்றதாலேயே இது சாத்தியப்படுகிறது.
2557. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப் பணியாளைத் தம்முடன் உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரண்டு வாய்கள் அந்த உணவிலிருந்து கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டார்.
புஹாரி: 2557
இனி நமது நாட்டிலும் நடந்த ஒரு பழைய நிகழ்வைப் பார்போம்.
------------------------------------------------------------
வழிபாடுக்கான வாளியை துப்புறவு பணியாளர் தொட்டதால் கோபமடைந்த சாது, பணியாரை சகட்டு மேனிக்கு தாக்கி கையை உடைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடவுள் வழிபாடுக்காக வைக்கப்பட்டிருந்த வாளியை துப்புறவு பணியாளர் தொட்டதால், அதிர்ச்சி அடைந்த சாமியார் அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மனிதநேய ஆர்வலர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
கும்பமேளா நடைபெறும் இடத்தில் பணியாளர் மத்தாதீன் துப்புறவு பணிகளை மேற்கொண்டு இருந்தார். அப்போது தூசி பரவி, சாது ஒருவர் வைத்திருந்த வாளி மீது விழுந்துள்ளது. அதை கவனித்த சாது தூசி பறப்பது தொடர்பாக பணியாளரை எச்சரித்துள்ளார்..
இடத்தை சுத்தமாக்க வேண்டும் என தொடர்ந்து பணியில் ஈடுபட்ட போது, மத்தாதீன் தவறுதலாக சாது வைத்திருந்த வாளியை தொட்டுவிட்டார். இதனால் கோபமடைந்த அந்த சாமியார் குச்சியால் பணியாளரை கடுமையாக தாக்கிவிட்டார்.
இதனால் வலது கையில் முறிவு ஏற்பட்ட நிலையில் துப்புறவு பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஜுன்ஸி பகுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பணியாளரை தாக்கிய சாது தலைமறைவானார்.
துப்புறவு தொழிலாளி தாக்கப்பட்டது குறித்து பேசிய ஜுன்ஸி நகர காவலர் ஏ.கே. தியாகி, பணியாளர் மத்தாதீயை கடந்த 6 நாட்களுக்கு முன்பு சாமியார் ஒருவர் குச்சியால் தாக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சாது தலைமறைவாகிவிட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான மத்தாதீனிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர் தற்போது சொந்த ஊரான மத்தியப் பிரதேசத்திற்கு சென்றுவிட்டார். தலைமறைவாக உள்ள சாதுவை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என அவர் கூறினார்.
Thursday, May 21, 2020

வறுமையினால் இறந்த நாயின் உடலை தின்று உயிர் வாழும் மனிதன்!

வறுமையினால் இறந்த நாயின் உடலை தின்று உயிர் வாழும் மனிதன்!

பரிதாபப்பட்டு ஒரு சிலர் அவருக்கு உணவு வழங்குகின்றனர்.

நாசகாரர்களின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் நாம் காணப் போகிறோமோ!


பிறருக்கு உதவுவதில்தான் எத்தனை சந்தோஷம் இந்த மக்களுக்கு!

பிறருக்கு உதவுவதில்தான் எத்தனை சந்தோஷம் இந்த மக்களுக்கு!
ஆனால் இவர்களைத்தான் இந்த நாட்டை விட்டு முற்றாக துரத்த வேண்டும் என்று அமித்ஷா பல திட்டங்களை தீட்டுகிறார். இவ்வாறு தன்னலமற்று உதவுபவர்களையும் இந்தியாவிலிருந்து துரத்தி விட்டால் பாதிப்படைந்தவர்களை காப்பாற்றுவது யார் அமித்ஷாவே!


இஸ்லாமியருக்கு எதிராக ஆயுதம் தூக்காதீர்கள்

நீங்கள் யாருக்காக கலவரம் செய்திர்களோ உதவுவதற்கு அவர்கள் வரவில்லை,
யாரை எதிர்த்து கலவரம் செய்திர்களோ அந்த கூட்டமே உதவ வந்திருக்கிறது.
இனியாவது சங்கிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு இஸ்லாமியருக்கு எதிராக ஆயுதம் தூக்காதீர்கள் எனது தேசத்து அப்பாவி சொந்தங்களே.....


புனிதம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸால் மூளை சலவை

புனிதம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸால் மூளை சலவை செய்யப்பட்டு வாழ்வை தொலைத்த இள மங்கைகள்.
இவர்களைப் பார்த்து கோபம் வரவில்லை. பரிதாபமே மிஞ்சுகிறது. 
ஆயுதத்தை கையில் எடுத்தவனுக்கு அதே ஆயுதத்தாலல்தான் முடிவு என்பதை ஏனோ இந்த பேதைப் பெண்கள் உணரவில்லை.


எல்லையோரத்தை அடைந்ததும் அனுமதி மறுக்கப்படுகிறது..

எல்லையோரத்தை அடைந்ததும் அனுமதி மறுக்கப்படுகிறது..
குவைத் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நுழைவாயிலை அடைத்து விட்டனர்..
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக யாருக்கும் குவைத்திற்குள் வர அனுமதி இல்லை..
இந்த புகைப்படத்தில் இருப்பவர் எகிப்து நாட்டை சேர்ந்த கனரக வாகன ஓட்டுனர்..
உள்ளே வர முடியாமல் அங்கேயே எல்லையிலேயே தங்கி விடுகிறார்..
கையில் இருந்த உணவு குறைகிறது தண்ணீர் தட்டுப்பாடு..
முகநூலில் ஒரு நேரலை பதிவு போடுகிறார்..
நான் எகிப்து நாட்டை சேர்ந்தவன் உங்கள் நாட்டிற்குள் வரும் வழியில் கொரோனா காரணமாக எல்லை அடைக்கப்பட்டு விட்டது..
அங்கேயும் போக முடியாமல் இங்கேயும் வர முடியாமல் தவிக்கிறேன் எனக்கு உதவுங்கள் என குவைத் மன்னருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார்..
பதிவு வெளியான சில மணி நேரங்களில் குவைத் பாதுகாப்பு படையினர் எல்லைக்கு விரைந்து சென்று அவரை குவைத்திற்குள் வர அனுமதித்து ஊரடங்கு முடியும் வரை தங்குவதற்கு இடம் உணவு வழங்கி உதவியுள்ளனர்..
என் தேசத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை இங்கே ஒப்பிட்டு வருந்துகிறேன்..


முஸ்லீம் என்று நினைத்து வழக்கறிஞரை....

முஸ்லீம் என்று நினைத்து வழக்கறிஞரை கடுமையாக அடித்ததாக கூறி அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறது மத்திய பிரதேச போலீஸ்..!
///
மத்திய பிரதேசத்தில் வழக்கறிஞராக இருப்பவர் தீபக் புந்துலே. இவர் கடந்த மார்ச் 23ம் தேதி மருந்து வாங்க கடைக்கு சென்ற போது இஸ்லாமியர் என்று நினைத்த போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். பின்னர், அதற்காக இப்போது மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் தீபக் புந்துலே கூறி இருப்பதாவது:
"நான் மார்ச் 23ம் தேதி மத்திய பிரதேசம் பிதுல் பகுதியில் மருந்துப் பொருட்கள் வாங்க மருந்து கடைக்கு சென்றேன். 15 ஆண்டுகளாக நீரிழிவு, மற்றும் ரத்த அழுத்தம் உள்ளது.
அதற்காகவே மருந்துகள் வாங்க சென்றேன். அப்போது நாடுதழுவிய ஊரடங்கு அமலில் இல்லை. எனினும் 144 தடை உத்தரவு இருந்தது. அப்போது என்னை தடுத்து நிறுத்திய போலீசார் கண்மூடித்தனமாக தாக்கினர். எவ்வளவோ எடுத்துக் கூறியும் போலீசார் கேட்கவில்லை.
ஒன்று கூடி என்னை மிருகத்தனமாக தாக்கினர். ஒரு கட்டத்தில் நான் வழக்கறிஞர் என்று சொன்ன பிறகுதான் ஓரளவு அமைதியானார்கள். கடுமையான அடித்ததால் வலி ஏற்பட எனது நண்பர்களை அழைத்தேன்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டேன். தாக்குதல் நடந்த மறுநாளான மார்ச் 24ம் தேதி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு தொடர்ந்தேன். பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தேன் முதல்வருக்கும் கடிதம் எழுதினேன்.
பின்பு போலீசாருக்கு நெருக்கடி அதிகரிக்கவே எனது புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மே 17ம் தேதி என் வீட்டுக்கு வந்த போலீசார்,
"தவறுதலாக நடைபெற்றுவிட்டது.
உங்களை வேண்டுமென்று நாங்கள் அடிக்கவில்லை. நீண்ட தாடி வைத்துக் கொண்டு பார்க்க முஸ்லிம் போல இருந்தீர்கள், அதனால் அடித்தோம். மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றும் புகாரை வாபஸ் பெறுமாறும் கூறினர் என்றார் தீபக் புந்துலே.
///
அப்படின்னா... அடேய் அயோக்கியர்களா....
இந்த நாட்டில் 'முஸ்லீம்கள் என்றால் அடிக்கலாம்' என காவல்துறைக்கு அரசு உத்தவு ஏதும் உள்ளதாடா..?! என்னங்கடா உங்கள் சட்டம் ஒழுங்கு பேணல்..?!
இனி,
அந்த காவலர் மீது புதிய வழக்கு போட்டாக வேண்டும்.
சகோ Mohamed Ashik பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.


Wednesday, May 20, 2020

அடுத்த நம்பிக்கையில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

வெரி குட். அடுத்த நம்பிக்கையில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த முறை அடிப்படையிலேயே கை வைத்துவிட்டார்கள். இந்த செய்தியை புரிந்துக்கொள்ள முதலில் நாம் நம்முடைய ஸ்கூல் காலத்திற்கு சென்று வந்து விடுவோம். உயிரின செல்கள் இரண்டு வகைப்படும். ஒன்று Procaryote, மற்றொன்று Eucaryote.
Eucaryote வகை செல்கள் பல்வேறு மண்டலங்களை தன்னுள்ளே கொண்டவை. ஒவ்வொரு மண்டலமும் தனித்துவமான வேலைகளை செய்து உடல் இயக்கத்திற்கு உதவி செய்கின்றன. மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களில் இவ்வகை செல்கள் காணப்படுகின்றன.
Procaryote வகை செல்கள், மண்டலங்கள் இல்லாத மிக எளிமையான கட்டமைப்பை கொண்டவை. பாக்டீரியா உள்ளிட்ட உயிரினங்களில் இவை காணப்படுகின்றன. பரிணாம புரிதலின்படி, எளிமையான Procaryote செல்களில் இருந்து சிக்கலான வடிவமைப்பை கொண்ட Eucaryote செல்கள் தோன்றியதாக காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. எப்படி மற்ற பரிணாம நம்பிக்கைகளுக்கு ஆதாரம் இல்லையோ அது போல இதற்கும் ஆதாரம் கிடையாது. இருந்தாலும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
சரி நாம விசயத்திற்கு வருவோம். Procaryote செல்கள், மண்டலங்கள் இல்லாத எளிமையான கட்டமைப்பை கொண்டவை என்ற நம்பிக்கையில் தான் தற்போது மண் விழுந்திருக்கிறது. கடந்த சிலபல ஆண்டுகளாக மிக முன்னேறிய தொழில்நுட்பங்களை கொண்டு பாக்டீரியாக்களில் நடத்தப்பட்டு வரும் ஆய்வுகள், Procaryote செல்களிலும் சிக்கலான கட்டமைப்பை கொண்ட பல்வேறு மண்டலங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன.
உதாரணத்திற்கு, Eucaryote செல்களுக்கு ஆற்றலைக் (energy) கொடுக்கும் Mitochondria மண்டலம் இருப்பது போல, Procaryote செல்களுக்கு ஆற்றலை கொடுக்க Anammoxosome மண்டலம் உள்ளது. ஆச்சர்யம் என்னவென்றால், இந்த Procaryote மண்டலங்களில் சில, Eucaryote மண்டலங்களை ஒத்திருந்தாலுல், பல மண்டலங்கள் தனித்துவமாக இருக்கின்றன.
இன்னும் வியப்பு என்னவென்றால், எல்லா வகை பாக்டீரியாக்களிலும் இந்த மண்டலங்கள் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொரு வகைக்கும் வேறுபடுகின்றன. இதெல்லாம் நீண்ட கால நம்பிக்கைகளுக்கு ஷாக் கொடுக்கக்கூடிய கண்டுபிடிப்புகள்.
ஆக, Eucaryote செல்களை போல, Procaryote செல்களும் சிக்கலான வடிவமைப்பை கொண்டவை தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளதால், Procaryote-டிலிருந்து Eucaryote வந்ததாக சொல்லப்பட்டு வந்த கதை கிழிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இப்போது எப்படி விளக்கத்தை மாற்றியிருக்கிறார்கள் என்றால், Procaryote Eucaryote ஆகிய இரண்டும் தனித்தனியே பரிணாமம் அடைந்ததாம். 
நீங்க எதையாவது சொல்லிட்டு போங்க, நம்ம கிட்ட திணிக்காத வரைக்கும் OK...
படங்கள்: Procaryote மண்டலங்களை காட்டும் elecron micrograph & Reconstruction படங்கள்.
படங்களுக்கு நன்றி: Quanta Magazine
செய்திக்கான ஆதாரம்: https://www.quantamagazine.org/bacterial-organelles-revise…/
சகோ Aashiq Ahamed பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.மோடி சர்க்கார் - அச்சே தின் ஆகயாஹே....


அச்சே தின் ஆகயாஹே....


முகமது நபியையே கண்டிக்கும் குர்ஆனிய வசனம்!

கண் இருந்தும் நாம் இறை வேதத்தை ஓதுவதில்லை!
இங்கு கண் பார்வை தெரியாத சிறுவர்கள் இறை வேதமான குர்ஆனை அழகுடன் ஓதுவதை காணுங்கள்.
----------------------------------------
முகமது நபியையே கண்டிக்கும் குர்ஆனிய வசனம்!
'தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர் (முகம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.'
80 : 1, 2 -குர்ஆன்
ஒரு முறை முகமது நபி உயர் குலத்தவரான குரைஷிகளிடம் இஸ்லாமிய போதனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்கள் 'முகம்மதே! நீர் சொல்லும் கொள்கைகள் நன்றாகத்தான் இருக்கிறது. ஒரே இறைவனை ஏற்க்கச் சொல்கிறீர். ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. கருப்பு அடிமைகளோடு எங்களையும் ஒன்றாக உடகார வைத்து போதிக்கிறீரே அது தான் எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. எங்களுக்கு ஒரு நாள் அந்த அடிமைகளுக்கு வேறொரு நாள் என்று பிரித்து உபதேசம் செய்தால் உம்முடைய கோரிக்கையை பரிசீலிக்கிறோம்' என்ற ரீதியில் கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர்.
இதன் மூலம் நம் நாட்டு பிராமணியத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அந்த மக்களிடத்தில் நிற வெறியும் குலப் பெருமையும் நிறைந்திருந்ததை விளங்க முடிகிறது. முகமது நபியும் சிறிது யோசிக்கிறார்கள். முதலில் அவர்கள் கோரிக்கையை ஏற்று இஸ்லாத்துக்குள் வரவழைப்போம். பிறகு நம்முடைய பிரச்சாரத்தால் அவர்களின் நிற வெறியை போக்கி விடலாம் என்று மனதுக்குள் நினைத்தவராக மேற்க் கொண்டு குரைஷிகளிடம் பேச முகமது நபி முற்படுகிறார்.
அந்த நேரத்தில் அந்த சமுதாயத்தில் இழிவாக கருதப்பட்டவரான அப்துல்லா என்பவர் அந்த இடத்துக்கு வருகிறார். இவருக்கு கண் தெரியாது. முகமது நபி சிலருடன் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட இந்த குருடர் 'இறைவனின் தூதரே! அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறுகிறார். இதை முகமது நபி விரும்பவில்லை. அங்கு பிரச்சினையே இது போன்ற இழி குலத்தவர் குறிப்பிட்ட சபைக்கு வரக் கூடாது என்பதே! எனவே முகமது நபி முகத்தை சற்று கடுகடுப்பாக்கிக் கொண்டு அப்துல்லாவுக்கு பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். அப்துல்லாவும் 'இறைவனின் தூதர் ஏதோ சங்கடத்தில் இருக்கிறாரபோல' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார்.
இந்த நேரத்தில் தான் இறைவனிடமிருந்து ஒரு வசனம் இறங்குகிறது.
'தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர் (முகம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது முகம்மதே உமக்கு எப்படி தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.'
'யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகா விட்டால் உம் மீது (குற்றம்) ஏதும் இல்லை. இறைவனை அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார்.'
80 : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 - குர்ஆன்
முகமது நபி கோபம் அடைந்ததோ, முகத்தை சுளித்ததோ கண் தெரியாத இந்த மனிதருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்காது. அவர்கள் முகத்தை சுளித்துக் கொண்டு உயர் குலத்தவரோடு பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.
ஆனால் உடனடியாக இறைவன் புறத்திலிருந்து எச்சரிக்கை வருகிறது.
உம்மை ஆர்வத்தோடு தேடி வருகின்ற இந்த குருடரை உயர் குலத்தவருக்காக விரட்டி அடிக்கிறீரா? என்று இறைவன் முகமது நபியைக் கண்டிக்கிறான்.
குர்ஆன் முழுக்க ஒவ்வொரு வசனத்திலும் 'முகம்மதே! மக்களுக்குக் கூறுவீராக!' என்று அடிக்கடி நேரிடையாகக் குறிப்பிடும் இறைவன், இந்த குறிப்பிட்ட வசனத்தில் மட்டும் ஏதோ ஓர் மூன்றாம் மனிதரிடம் பேசுவது போல் 'இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்' என்ற ரீதியில் வசனம் அமைந்திருப்பதிலிருந்து இறைவனின் கோபம் நமக்கும் விளங்குகிறது.
இப்படி ஒரு சம்பவம் நடந்தது அந்த குருடருக்கே மற்றவர்கள் சொல்லித்தான் தெரிகிறது. இந்த சம்பவம் நமக்கு ஒரு உண்மையை விளக்குகிறது.
குர்ஆனை முகமது நபி தாமே சொந்தமாக உருவாக்கியிருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்கின்ற ஒரு வாசகத்தைத் தமக்கு எதிராக அவர்கள் உருவாக்கியிருக்க முடியாது.
காலா காலத்துக்கும் இந்த வேதத்தைப் படிப்பவர்களெல்லாம் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து இந்த வசனத்தை நீக்கியும் இருக்கலாம். யாருக்கும் தெரியப் போவதில்லை.
குர்ஆன் முகமது நபி உருவாக்கியது அல்ல என்பதாலும் இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதாலும் தான் இதைக் கூட நபிகள் நாயகம் அவர்கள் அந்தக் குருடர் மத்தியிலும் தம்மைப் பெரிதும் மதிக்கின்ற சமுதாயத்தின் மத்தியிலும் 'இறைவனே என்னைக் கண்டித்து விட்டான்' என்று பிரகடனம் செய்கிறார்கள்.
இந்தக் குர்ஆன் இறைவன் அருளியதுதான் என்பதற்கு இந்த சம்பவத்தை சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.அது மட்டுமல்லாமல் முகமது நபியே ஆனாலும் அவர்கள் இறைவன் விருப்பத்திற்கு மாற்றமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லை என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது.
செய்பவர் யார் என்று பார்த்து இறைவன் நீதி வழங்க மாட்டான். செய்யப் படும் காரியத்தைத்தான் அவன் பார்ப்பான் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
ஒரு சாதாரண மனிதராகக் கருதப்பட்ட கண் தெரியாதவருக்காக தனது தூதரையே இறைவன் கண்டிக்கிறான் என்றால் இது எவ்வளவு அற்புதமான ஒரு மார்க்கம்! இது போன்ற ஒரு கடவுள் கொள்கையினால் மனித குலத்திற்கு எவ்வளவு பயன் கிட்டும் என்பதை எல்லாம் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
முகமது நபி கூட இந்த சம்பவத்திற்கு பிறகு அப்துல்லா இப்னு மக்தூம் என்ற அந்தக் குருடரிடத்தில் முன்பிருந்ததை விட அதிக மரியாதையோடு நடந்து கொண்ட வரலாற்றையும் பார்க்கிறோம்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.


லெபனான் நாட்டுசட்டக்கல்லூரி மாணவி சுட்டுக்கொலை

லண்டன் பிளேக்பர்னில், லெபனான் நாட்டுசட்டக்கல்லூரி மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவீதிக்கு வந்து சாதனம் வாங்கவந்த பெண்ணை, மதவெறி பிடித்த வெள்ளை தீவிரவாதி சுட்டுக்கொன்றான். தலையில் ஹிஜாப் அணிந்துவந்ததை கேவலப்படுத்தி சுட்டுள்ளான். மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Muslim woman killed and mainstream media is not reporting this #RIP #AYA
Aya Hachem, a 19-year-old #Muslim woman, was shot in a ‘senseless’ shooting while grocery shopping in #Blackburn, United Kingdom. This is an alleged hate crime committed by a #white man, and media is not reporting this incident as such. Bring justice to Aya, her family, and loved ones. Inna lillahi wa inna ilayhi rajioon.
#muslim #ramadan #ISLAMAPHOB
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே திரும்பச் செல்ல வேண்டியவர்கள் நாம்.
-------------------------------
நபி மொழிகளில் பெண் மக்களின் சிறப்பு:
ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: ஒரு ஏழைப் பெண் இரண்டு பெண் பிள்ளைகளுடன் என்னிடத்தில் வந்தாள். அவர்களுக்கு மூன்று பேரீத்தம் பழத்தை நான் உண்ணக் கொடுத்த போது இரண்டு பிள்ளைகளுக்கும் அத்தாய் ஒவ்வென்றாக கொடுத்தாள். (தாய்) மூன்றாவதை உண்ண தனது வாயின் பால் உயர்திய போது அதனையும் அவ்விரு பிள்ளைகளும் கேட்டார்கள்,அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்து விட்டாள். இது என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. இச்செய்தியை நபிகளாரிடத்தில் நான் சொன்ன போது, நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக ‘அப்பெண்ணுக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது. அப்பெண் பிள்ளைகள் மூலமாக (அத்தாய்) நரகத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள் எனறார்கள்.’
(ஆதாரம் முஸ்லிம்)
நபிகளார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘யார் ஒருவர் இரண்டு அடிமைப் பெண்களை அவர்கள் பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கின்றார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று, தனது இரண்டு விரல்களையும் ஒன்றாக இணைத்துக் காட்டினார்கள’
(அறிவிப்பவர் அனஸ் (ரழி), ஆதார நூல்: முஸ்லிம்).
‘எவரொருவர் தனக்கு இரண்டு பிள்ளைகளிருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவரும் (தந்தையும்) இரு பிள்ளைகளுடனும் அன்பாகப் பழகி பிள்ளைகளும் தந்தையுடன் அன்பாகப் பழகினால் அவ்விரு பெண் பிள்ளைகளும் அவரை சுவர்க்கத்திலே நுழைவித்து விடுவார்கள்’ என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி). ஆதாரம் இப்னு மாஜாஹ்).
‘எவருக்கு மூன்று பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லது இரண்டு பிள்ளைகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர்களுடன் அன்புடன் நடந்தால் அந்த பெண்பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் அம்மனிதரை சுவர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்’.
(அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி (ரழி), (ஆதாரம் திர்மிதீ).