Followers

Saturday, March 31, 2018

காசு... பணம்... துட்டு... மணி... மணி...


காசு... பணம்... துட்டு... மணி... மணி...

1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம்.

ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?
  

அப்படியாக  பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.

 "காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1,  TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.
    

இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான  கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள்.

பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.

3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள்.

அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.
 

இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள்.

ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?

4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.

5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம்
( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.


அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?

6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.
பரவும் அபாயத்தை மறக்கிறோம்.

மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான்.

அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள்.

ஆனால் நாம்.....................?

இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும்.

இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம்.

ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.
   

நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.
  

எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.
 

அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்
    

கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.
 

இந்த குறுந்தகவலை
குறைந்த பட்சம்  நம் நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்வோம்.
  

சற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்........!
       
நன்றி.
                
இப்படிக்கு:-        
வங்கி காசாளர்..



இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம்...


இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம்

இஸ்லாம் முட்டாள்கள் தினத்தை எவ்வாறு பார்க்கிறது?

1. ஒருவர் மற்றொருவரைக் கிண்டலடிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர் களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”. அல்குர்ஆன் 49:11

2. ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது.

அளவு நிறுவையில் ஏமாற்றி மோசடி செய்த மத்யன் என்ற ஊர்வாசிகள் அழிக்கப்பட்டதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்குக் கேடு தான். 83:1

ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது, அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர். ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர். 7:91.92 11:94 29:36

நபி(ஸல்)அவர்கள் கடைத்தெருவில் உள்ள ஓர் உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அப்போது அதனுள் தமது கையை நுழைத்தார்கள். அவர்களது கையில் ஈரம் பட்டது. உணவுக்காரரே (கடைக்காரரே) என்ன இது? எனக்கேட்க, “அல்லாஹ்வின் தூதரே மழை பொழிந்து (நனைத்து) விட்டது” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் மக்கள் பார்க்கும் அளவிற்கு அதை நீ மேலே வைத்திருக்க வேண்டாமா? என்று கூறிவிட்டு “எவர் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்”என்று கூறினார்கள். (முஸ்லிம் 295)

நபி(ஸல்)அவர்கள் எங்கள் வீட்டிலிருக்க என்னுடைய தாய் ஒரு நாள் என்னை அழைத்து, “இங்கே வா!நான் உனக்குத் தருகிறேன்”என்றார்கள். உடனே நபியவர்கள் என்ன கொடுக்க அழைத்தீர்? என்று என் தாயைப்பார்த்துக் கேட்க, அதற்கு என் தாய், “பேரீத்தம் பழம் கொடுக்க”என்றார்கள். “நீர் அவருக்கு எதையும் கொடுக்கவில்லையெனில் நீ பொய் கூறி விட்டாய் என்பதாக உன் மீது எழுதப்படும்” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரலி)அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் 4993)

ஒட்டகம், ஆடு போன்ற கால்நடைகளை விற்பனை செய்வதற்காக அதன் பாலை (கறக்காது) தடுத்து நிறுத்தி (அவற்றின் மடியை கனக்கச்செய்து அதிகமாகப் பால் தருவது போன்று) காண்பித்து விடாதீர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி 2148,முஸ்லிம் 3890)

மோசடி செய்பவர் நரகத்தில் இருப்பார்! நம்முடைய கட்டளை யில்லாத ஒரு காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது!” என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி 2142)

3. ஏமாற்றுதலின் மற்றொரு வகை பொய் பேசுவது.

பொய்யைக்குறித்தும் எச்சரிக்கை விடுக்கிறது இஸ்லாம் எண்ணற்ற குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் பொய்யின் விபரீதத்தை விளக்குகிறது.

கேள்விப்பட்டதையெல்லாம் சொல்பவன் அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்”. (முஸ்லிம்)

நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவர்க்கம் செல்ல வழி காட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையையே பேசிக் கொண்டி ருக்கிறான். இறுதியில் அவன் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்.

மேலும் நிச்சயமாகப் பொய் என்பது தீமை செய்ய வழி காட்டுகிறது. தீமை நரகிற்கு வழி காட்டுகிறது. நிச்சயமாக ஒரு மனிதன் பொய் பேசிக் கொண்டிருக்கிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் அவன் மகாப் பொய்யன் என்று எழுதப்பட்டு விடுகிறான். (புகாரி 6094, முஸ்லிம்)

4. ஏமாற்றுவதே கூடாது என்கிறது இஸ்லாம் அதை கண்டிப்புடன் எதிர்க்கிறது. ஏமாற்றுபவன் நிச்சயமாக ஷைத்தானாகத் தான் இருப்பான்!என்று குர்ஆன் கூறுகிறது

குறிப்பிட்ட மரத்திற்கருகில் நெருங்காதீர் என்ற இறைக்கட்டளையை ஆதமிற்கும் ஹவ்வாவிற்கும் மறக்கடிக்கச் செய்து, “அந்த மரத்தின் பக்கம் சென்றால் நீங்கள் வானவர்களாக ஆகி விடுவீர்கள். அப்படி நீங்கள் ஆகக் கூடாது என்பதற்காகத்தான் அல்லாஹ் இவ்வாறு தடை செய்திருக்கிறான் என்று ஆசை வார்த்தை கூறி இருவரையும் ஏமாற்றிவிட்டான். (அல்குர்ஆன7:20,20:120)

நம் பெற்றோரை வஞ்சகமாகப் பேசி ஏமாற்றியது மட்டுமல்லாது நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் அந்த ஷைத்தான் ஏமாற்றி நரகிற்கு கொண்டு செல்ல நினைக்கிறான்

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம், நிச்சயமாக அவனும் அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு, மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கை இல்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.”அல்குர்ஆன் 7:27

ஷைத்தான் அவர்களுடைய (பாவச்) செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை, மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான், இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்த போது அவன் புறங்காட்டிப் பின்சென்று “மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன், நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கிறேன், நிச்சயமாக நான் அல்ல்லாஹ்வு; க்குப் பயப்படுகிறேன்,அல்ல்லாஹ் தண்டனை கொடுப்பதில் டினமானவன்” என்றுகூறினான். அல குர்ஆன் 8:48

5. மக்களின் நலம் நாடவேண்டும் கேலி பேசி மனம் புண்படும்படி நடப்பவன் உண்மை இறைவிசுவாசியாக இருக்கமுடியாது:

பின்வரும் நபிமொழிகள் அதை உறுதிப்படுத்துகிறது

அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்மையை நாடுவதே மார்க்கம்” என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி முஸ்லிம்)

அநீதியிழைக்கப்பட்வனின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அவன் பாவியாக இருந்தாலும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸன்னஃப் அபீ ஷைபா)

பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப்பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். (புகாரி 10)

மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் நபி மொழிகளும் ஒருவர் மற்றவர்களை ஏமாற்றுவதையும், பொய் பேசுவதையும், மோசடி செய்வதையும், பரிகாசம், கேலி, கிண்டல் செய்வதையும் கடுமையாகக் கண்டிக்கின்றவையாக இருக்கின்றன. மேலும் ஏப்ரல் ஒன்றை மையமாக வைத்து நடக்கின்ற ஏமாற்றுச் செயல்கள் அனைத்தும் ஏப்ரல் ஒன்றில் மட்டுமல்ல வாழ் நாள் முழுவதும் தவிர்ந்து கொள்ளப்படவேண்டியவை என்பதையும் அவை அனைத்தும் நமது பகிரங்க விரோதி ஷைத்தானுடைய செயல்கள் எனபதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

ஒரு முஸ்லிம் என்றைக்கும் எப்போதும் மற்றவர்களின் மனது புண்படும் படியாகவோ,அவர்களை ஏமாற்றுபவனாகவோ,பரிகாசம் செய்பவனாகவோ,பொய் பேசுபவனாகவோ இருக்க மாட்டான்.

ஏப்ரல் ஒன்று அன்று நடைபெறுகின்ற ஏமாற்றுக்காரியங்களை முஸ்லிம்கள் தங்களைச் சார்ந்து வாழ்கின்ற மற்ற மாற்றுக் கொள்கை களைச் சார்ந்தவர்களிடத்தில் நல்ல அணுகு முறையோடு எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும், வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கலிலும் மோசடி செய்யாதவனாக, ஏமாற்றாதவனாக, வாய்மையாளனாக, நாணயமானவனாக இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.



CBSE வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்...


CBSE வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்...

CBSE வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் மூன்று ஏபிவிபி மாணவ அமைப்பை சார்ந்தவர்கள் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏபிவிபியின் வட்டார கோஆர்டினேடர் சதீஷ் பாண்டே இதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஏபிவிபி என்ற மாணவர் அமைப்பு அமைப்பானது ஆர்எஸ்எஸின் ஒரு அங்கம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தேசப் பற்று என்று வாய் கிழிய கோஷமிடுவது வெற்று கோஷம் என்பதை இந்துத்வாவாதிகள் தினமும் நிரூபித்து வருகிறார்கள்.... :-)

போலோ பாரத் மாதா கீ ஜே... :-)




கோடைகால தண்ணீர்ப் பந்தல் -TNTJ

தூத்துக்குடி மாவட்டம், #ததஜ கொங்கராயக்குறிச்சி கிளை சார்பாக திறக்கப்பட்ட கோடைகால தண்ணீர்ப் பந்தல் பற்றிய இணைய மற்றும் பத்திரிகை செய்திகள்.
நன்றி: தினகரன், தினமலர், onetamil news





முபாஹலாவை முடக்கி விட புதிய முயற்சி :-)


முபாஹலாவை முடக்கி விட புதிய முயற்சி :-)

முபாஹலாவை முடக்கி அசிங்கங்களை மறக்கடிக்க கையாண்ட அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து 1 ந்தேதி முபாஹலாவில் சந்திப்போம் என்று உறுதியாய் நிற்கிறது மாநில தலைமை.

தங்களிடம் உண்மை இல்லை என்பதை உணர்ந்து கொண்ட எதிர் தரப்பு முபாஹலாவை நிறுத்திவிட பலவாறாக முயல்கின்றனர். அதில் ஒரு வகைதான் இது.

திருச்சியில் முபாஹலா நடத்தினால் திருச்சி நாசமா போய் விடுமாம்.

அல்லாஹ்வின் பண்புகள் பற்றி அறிவே இல்லாததாலும் முபாஹலா என்றால் என்னவென்றே தெரியாததாலும் வரும் புலம்பல் இது. இவர்களிடம் உண்மை இருந்திருந்தால் இது போன்ற புலம்பல்களை வெளியிட மாட்டார்கள்.


35 வருடத்திற்க்கு முன்பு காயல்பட்டிணத்தில் சகோதரர் pj அவர்களுக்கும் கபுர் முட்டிக்கும் இடையில் முபாஹலா நடந்தது.  எதிர் முபாஹலா செய்த கபுர் முட்டிதான் அதள பாதாளத்திற்க்கு சென்றுள்ளார். ஆனால் முபாஹலா நடந்த காயல்பட்டிணம் எந்த குறையும் இல்லாமல் அல்லாஹ்வின் கிருபையுடன்  நல்ல செல்வ செழிப்போடும் இருக்கிறது....

நெல்லிக்குப்பத்தில் 10 ஆண்டுக்கு முன் முபாஹலா நடந்தது.. தவ்ஹீத் ஜமாத்தான் தான் வளர்ந்து நிற்கிறது.. எதிரணி எவனையும் காணல.... ஊரும் நல்லா தான் இருக்கு.....

எனவே திட்டமிட்டபடி முபாஹலாவுக்கு பிஜே தரப்பு திருச்சியில் காத்திருக்கும். இறைவனின் தண்டனை மேல் உண்மையான பயம் இருந்தால் அல்தாஃபி தனது இயலாமை நிலையை விளக்கி மக்கள் மன்றத்துக்கு செய்தி அனுப்பட்டும். தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கும் தகவல் தரட்டும். இதுதான் அல்தாஃபி செய்ய வேண்டியது இப்போது.