Followers

Wednesday, September 17, 2014

மாணவர்களின் மூடப் பழக்கத்தால் கைகளில் காயம்!பணத்தை திருடியது யார்? கையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த மாணவர்களுக்கு தீக்காயம்!

சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி மும்முடியில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் 12–ம் வகுப்பு வரை சுமார் 65 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த விடுதியில் மொத்தம் 7 அறைகள் உள்ளன. ஒரு அறையில் 7–ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெயபிரகாசின் 110 ரூபாய் அவனது பெட்டியில் இருந்து திடீரென திருட்டு போனதாக தெரிகிறது.

பணம் காணாமல் போனது பற்றி தன்னுடன் அறையில் தங்கியிருந்த சக மாணவர்களிடம் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளான். அதன்பிறகு தன்னுடன் தங்கியிருந்த 12 மாணவர்களையும் கற்பூரத்தை கையில் ஏற்றி சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. அதன்படி முதலில் என்னுடைய பணத்தை நான் எடுக்கவில்லை என்று மாணவர் ஜெயபிரகாஷ் தனது கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்துள்ளான்.

இதையடுத்து அறையில் உடன் தங்கியிருந்த மாணவர்கள் தனசேகர், ராம்கி, கண்ணன், கார்த்தி, பிரகாஷ், ராமமூர்த்தி, பிரபு, கலையரசன் உள்பட 12 மாணவர்களும் அடுத்தடுத்து தங்களது கையில் கற்பூரத்தை ஏற்றி பணத்தை நாங்கள் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்தனர். இதனால் கையில் கற்பூரம் ஏற்றிய 12 மாணவர்களின் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோர்களுக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ., சுபா, ஆத்தூர் உதவி கலெக்டர் ஜெய்ராம், தாசில்தார் தேன்மொழி, கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட அரசு மாணவர் விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி பூவேந்திரன் (பொறுப்பு) தலைமையில் அதிகாரிகளும் தலைவாசல் அரசு விடுதிக்கு சென்று விடுதி காப்பாளர் தங்கமாரியப்பன், சமையலர்கள் செல்வராஜ், அம்பாயிரம், துப்புரவு பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் 12 பேரையும் அதிகாரிகள் உடனடியாக சிகிச்சைக்காக தலைவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி பூவேந்திரன் கூறுகையில், விடுதியில் உள்ள ஒரு அறையில் பணம் திருட்டு போயுள்ளது. இதனால் பணத்தை எடுத்தது யார்? என்று மாணவர்களிடையே கண்டுபிடிக்க கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கையில் கற்பூரம் ஏற்றி தீக்காயம் அடைந்த மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் நேரில் விசாரணை நடத்தினோம். இது தொடர்பான அறிக்கை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

நன்றி: நக்கீரன்
09-09-2014

http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=128491

Monday, September 15, 2014

ஐந்து வேளை நீங்கள் தொழுவதால் என்ன நன்மை?

ஐந்து வேளை நீங்கள் தொழுவதால் என்ன நன்மை?

29-08-2014 அன்று இஸ்லாம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி பதியா அழைப்பு வழி காட்டல் மையம் சார்பாக ரியாத் பத்ஹாவில் நடந்தேறியது.. அந்த விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். இந்து நண்பர்கள் பலரையும் இந்த விழாவுக்கு அழைத்திருந்தனர். விழாவின் முடிவில் இந்து நண்பர்களை இஸ்லாத்தின் மேல் உள்ள உங்களின் விமரிசனங்களை தாராளமாக வைக்கலாம் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த விழாவில் பல மாற்று மத நண்பர்கள் தங்கள் கேள்விகளை வைத்தனர். ராம் கவாஸ்கர், கணேசன், செல்வகுமார், பாலாஜி, சிவா, சேகர், சித்ர வேலு, மருத்துவர் சிவகுமார் என்று பலரும் விழாவுக்கு வருகை தந்து தங்கள் ஐயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஒரு கேள்வியை ராம் கவாஸ்கர் வைத்தார்.

ராம் கவாஸ்கர்: ஐந்து வேளை இஸ்லாத்தில் கட்டாய கடமை என்று சொல்லப்படுவது ஏன்? இதனால் கடவுளுக்கு என்ன நன்மை?

பொறியாளர் ஜக்கரியா: 'இறைவன் குர்ஆனில் ஐந்து வேளை தொழுக சொல்லி கட்டளையிடுகிறான். அதுதான் முக்கிய காரணம். உடற் பயிற்சி, ஆன்மீக பயிற்சி என்று அதற்கு பல விளக்கங்கள் இருந்தாலும் இறைவன் கூறியதால் உலக முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகையை கட்டாயமாக கடை பிடிக்கின்றனர்.' என்று கூறி நேரமின்மை காரணமாக சுருக்கமாக முடித்துக் கொண்டார். ஆனால் நமக்கு நேரம் இருப்பதால் அந்த தொழுகையில் என்னனென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.

பள்ளி வாசலில் தொழச் செல்பவர் தனக்கு முன்னால் யாரும் அமர்ந்திருந்தால் அவரை நகர்த்தி விட்டோ அல்லது அவருக்கு சிரமத்தை தரும் பொருட்டோ அமரக் கூடாது. கூட்டுத் தொழுகையில் நிற்கக் கூடிய ஒருவர் அருகில் உள்ளவரோடு விலகி நிற்கக் கூடாது. அவருடைய தோளும், நமது தோளும் ஒன்றோடு ஒன்று உரசும் வகையில் நிற்க வேண்டும். யாரும் கூச்சப்பட்டுக் கொண்டு விலகி நின்றால் அவரை தனது கையால் இழுத்து தனது அருகில் நிறுத்திக் கொண்டே தொழ வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் கட்டளை. கூட்டுத் தொழுகையில் அவ்வாறு இடைவெளி விட்டு நின்றால் உங்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற நபி மொழியையும் நாம் பார்க்கிறோம்.

நான் தினமும் தொழச் செல்லும் பள்ளிக்கு தெருக்களைக் கூட்டி சுத்தம் செய்யக் கூடிய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்து சகோதரர்கள் இருவர் தொடர்ந்து பள்ளிக்கு வருவர். நம் ஊரில் இவர்களை 'தோட்டி' என்று இளக்காரமாக பார்த்து அதற்கென்று ஒரு சாதியையும் ஏற்படுத்தி வைத்துள்ளோம். இங்கு சவுதியில் அந்த பங்களாதேஷத்தவர் தெருவை கூட்டிக் கொண்டே அவர்களின் மஞ்சள் கலரான சீருடையிலேயே பள்ளிக்கு தொழ வருவர். வெயிலில் எந்த நேரமும் வேலை செய்வதால் அவர்கள் உடையிலிருந்து ஒரு வித வியர்வை வாசனையும் வரும். இதனால் சங்கோஜப்பட்டுக் கொண்டு அந்த பங்களாதேசத்து சகோததரர்கள் பக்கத்தில் நிற்பவர்களிடமிருந்து சற்று இடைவெளி விட்டு நிற்பர்.

இவர்களுக்கு அருகில் பெரும் கோடீஸ்வரர்களும், உலகின் மிக உயர்ந்த ஆடைகளையும் வாசனை திரவியங்களையும் பூசிக் கொண்டு நிற்பவர்களுமான சவுதிகளை நாம் பார்போம். அந்த பங்களாதேசத்தவர் விலகி நிற்பதை கண்டு தங்கள் கைகளால் அவர்கள் சட்டையை பிடித்து இழுத்து தங்கள் அருகில் நிறுத்திக் கொள்வதை நான் தினமும் பார்க்கிறேன். ஒருகால் மனதால் இந்த செய்கையை சவுதிகள் வெறுத்தாலும் தங்கள் தொழுகை வீணாகி விடக் கூடாது. இதனால் இறைவனின் கோபத்திற்கு நாம் ஆளாகி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையால் தனதருகில் இழுத்து நிறுத்திக் கொள்கிறார். தான் ஒரு அரபி: தான் ஒரு கோடீஸ்வரன்: தான் ஒரு சவுதி போன்ற நினைப்பெல்லாம் மசூதிக்கு வெளியேதான். இறைவனின் ஆலயத்துக்குள் வந்து விட்டால் ஆண்டியும் அரசனும் ஒன்றுதான் என்பதை நிலை நிறுத்தவே தொழுகையில் இது போன்ற கட்டளைகள் நபிகள் நாயகத்தால் இடப்படுகின்றது. உலக அளவில் தீண்டாமை இஸ்லாமியரிடத்தில் முழு அளவில் ஒழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே இந்த ஐவேளை தொழுகைதான் என்றால் மிகையாகாது.

அடுத்து வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் ஒரு நாளுக்கு ஐந்து வேளை பள்ளிக்கு தொழுக வந்து அனைத்து மக்களோடும் அன்பாக பேசி சலாம் சொல்லி செல்வதால் மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது. நமது கஷ்டங்களை எல்லாம் இறைவன் முன்னால் தலையை கீழே வைத்து அனைத்து பாரங்களையும் இறக்கி வைத்து விடுகிறோம். இதனால்தான் தமிழகத்திலும், இந்தியாவிலும், ஏன் உலகம் முழுவதிலும் தற்கொலை விகிதத்தில் மற்றவர்களை விட முஸ்லிம்கள் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமே .இந்த தொழுகைதான்.

மேலும் இறைவன் குர்ஆனில் 'உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதால் எந்த பலனும் இல்லை.: மாறாக உங்களின் இறை அச்சமே இறைவனால் பொருந்திக் கொள்ளப்படும்' என்ற பொருள்பட கூறுகிறான். இதன் மூலம் ஒரு மனிதன் தொழுவதால் இறைவனின் அந்தஸ்து உயரப் போவதில்லை. இது போன்ற தேவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நம்மை படைத்த இறைவன். இந்த தொழுகையானது மனிதனுக்குள் மறைந்துள்ள 'தான்' என்ற அகம்பாவத்தை வீழ்த்தி அவனை ஒரு சராசரி மனிதனாக மாற்றுகிறது என்றால் மிகையில்லை. எனவே இந்த தொழுகைகள் மூலம் மனிதன்தான் பலன் அடைகிறான். அதனை இறை கட்டளையாக செய்வதால் அந்த மனிதன் இரு பலன்களை பெறுகிறான். ஒன்று தனது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுகிறான். மற்றொன்று தன்னை சராசரி மனிதனாகவும் மாற்றிக் கொள்கிறான். இதுதான் இந்த தொழுகையின் மூலம் நாம் பெறும் படிப்பினையாகும்.

Saturday, September 13, 2014

குதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்!


குதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்!

மனிதன் பயன்படுததும் விலங்குகளிலேயே குதிரை ஒரு வித்தியாசமான பிராணி என்று சொல்லலாம். அதன் கம்பீரம்: அதற்குள்ள வேகம்: அது நடக்கும் அழகு: என்று சொல்லிக் கொண்டே போகலாம். நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கார்பரேஷன் பள்ளிக்கு குதிரை வண்டியில் போனது உண்டு. தாத்தா தனது வயல் வேலையாகவும் கடை வேலையாகவும் செல்லும் போது என்னையும் ஏற்றிக் கொண்டு செல்வார். குதிரை வண்டியில் போகும் ஆர்வத்தினாலேயே பள்ளிக்கு மட்டம் போடாமல் தொடர்ந்து போய் வந்தேன்.

'டக்..டக்...டக்...' என்ற குளம்போசை தாள லயத்தோடு அந்த குதிரை எங்களை இழுத்துக் கொண்டு ஓடும் அழகே தனி. இது ஐந்து வருடம் தொடர்ந்தது. பிறகு நான் வேறு பள்ளி மாறிய போது எனக்கு சைக்கிள் கிடைத்ததால் குதிரை சவாரி நின்று போனது. எனினும் இன்று கூட குதிரைகளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் வந்து போகும்.

'காசை குதிரை உட்றான்' என்று சொல்வார்கள். அதுபோல் எங்கள் ஊரில் ஆசைக்கு குதிரைகளை வாங்கி அதிலேயே பெரும் தொகைகளை இழந்தவர்களும் உண்டு. அந்த காலத்திலிருந்து இன்று வரை குதிரை தனது செல்வத்துக்கு ஒரு அளவு கோளாக மனிதன் பாவித்து வந்திருக்கிறான்.

---------------------------------------------------

இந்த குதிரையின் ஓட்டத்தை வைத்து குர்ஆன் சில விஷயங்களை சொல்கிறது. அதனையும் பார்ப்போம்.


'மூச்சிறைத்து வேகமாக ஓடுபவற்றின் மீதும்,

தீப் பொறியை பறக்கச் செய்பவற்றின் மீதும்,

அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும்,

அதனால் புழுதியை பரப்பி வருபவை மீதும்,

படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!

மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அவனே இதற்கு சாட்சியாக இருக்கிறான்.

அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.'

-குர்ஆன் 100: 1, 2, 3, 4, 5, 6, 7, 8


இனி இந்த வசனத்தின் சந்த அழகை பார்ப்பதற்கு மூல மொழியான அரபியில் இந்த வசனங்களை பார்போம்.

'வல்லாதியாத்தி லப்ஹன்:

வல் மூரியாத்தி கத்ஹன்:

ஃபல் முகீராத்தி சுப்ஹன்:

பஃதர் நபிஹி நக்அன்:

பவசத் நபிஹி ஜம்அன்:

இன்னல் இன்சான லிரப்பிஹி லகனூத்:

வஇன்னஹூ அலா தாலிக லஸஹீத்:

வஇன்னஹூ லிஹூப்பில் ஹைரி லஸதீத்'


என்ன அழகிய வார்த்தை சீரமைப்பு. சந்தம் எந்த அளவு நெருங்கி வருவதைப் பாருங்கள். பலர் எழுதும் கவிதைகளில் சந்தங்கள் சரியாக அமைந்தால் பொருள் ஏனோ தானோ வென்று இருக்கும். பொருள் அருமையாக இருந்தால் ஏதோ உரை நடையை படிப்பது போல் இருக்கும். இங்கு இரண்டுமே மிக அழகாக பொருந்தி வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இந்த ஒரு இடம் மட்டும் தான் என்று இல்லை. குர்ஆன் முழுக்க இந்த வசன நடை தொடர்ந்து வருவதை பார்த்திருக்கலாம். அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இந்த வார்த்தை கட்டுக்கள் இன்னும் சிறந்த ஈர்ப்பை ஏற்படுத்தும். அதனால் தான் அரபி மொழி நன்கு தெரிந்த அன்றைய அரபு புலவர்கள் குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்டால் கைகளால் காதை பொத்திக் கொள்வார்களாம். அதன் வசன நடையும் அதற்குள் பொதிந்திருக்கும் சிறந்த கருத்துக்களும் தங்களின் சிந்தையை கலைத்து இஸ்லாத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்று விடுமோ என்று அஞ்சுவார்களாம். அந்த அளவு குர்ஆனின் கருத்துக்களில் அன்றைய அரபு புலவர்கள் கலக்கம் அடைந்திருந்தனர்

இனி குர்ஆனின் விளக்கத்தைப் பார்ப்போம்.

மூச்சிறைத்து ஓடும் ஒரு குதிரை எந்த அளவு உண்மையானதோ, கால் குளம்பின் தீப் பொறி பறக்க ஓடும் குதிரை எந்த அளவு உண்மையானதோ, போர்க் காலங்களில் அதிகாலையில் உக்கிரமாக தாக்குதல் நடத்தும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ, அந்த சண்டையில் புழுதியைக் கிளப்பும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ, போரில் படைகளுக்கு நடுவே ஊடுருவிச் செல்லும் குதிரைகள் எந்த அளவு உண்மையானதோ அதே அளவு உண்மையோடு மனிதன் தனது இறைவனுக்கு நன்றி மறந்தவனாக இருக்கிறான். அதற்கு அவனே சாட்சியாகவும் இருக்கிறான். அழிந்து போகும் உலக செல்வத்தை மிகக் கடுமையாக நேசிக்கவும் செய்கிறான் என்கிறான் இறைவன்.

அதாவது அனைத்து சுகங்களையும் இறைவன் தந்திருக்க அதற்கு நன்றி மறந்து நாத்திக கருத்துக்களை சிலர் பரப்பி வருவதை பார்க்கிறோம். சிலர் படைத்த இறைவனை மனம் போன போக்கில் நிந்திப்பதை பார்க்கிறோம். இன்னும் சிலர் மனிதர்களை தெய்வங்கள் என்றும் தெய்வத்தின் அவதாரங்கள் என்றும் நம்பி தங்களின் பொருளையும் கற்பையும் ஒரு சாதாரண மனிதனிடம் இழந்து நிற்பதைப் பார்க்கிறோம். இவற்றிலிருந்தெல்லாம் நாம் விடுபட்டு நம்மை படைத்த இறைவனை அவன் வணங்க சொன்ன வழியில் வணங்க வேண்டும் என்று மானிடர்க்கு இங்கு அறிவுறுத்துகிறான் இறைவன்.

குர்ஆனில் குதிரை சம்பந்தமாக வந்திருக்கும் வேறு சில வசனங்கள்.

'பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம், மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள், ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். இறைவனிடம் அழகிய புகலிடம் உள்ளது.'

-குர்ஆன் 3:14


உலகம் முழுவதும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களும் உலக மக்களால் இன்று வரை கவர்ச்சிக்குரியதாகவே எடுத்துக் கொள்ளப்படுவதை பார்க்கிறோம்.

'குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்'

குர்ஆன் 16:8


அன்றைய அரபுகள் பார்க்காத எத்தனையோ வாகனங்களை இன்று பார்த்து அனுபவித்து வருகிறோம். அன்றைய காலத்தில் இது போன்ற முன்னேற்றம் ஏற்படும் என்று எவருமே சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.


Thursday, September 11, 2014

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!சவுதி வேலை வாய்ப்பில் இந்தியர்கள் முதலிடம்!

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளி நாட்டவர்களில் எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 85 சதவீத வேலை வாய்ப்பினை பகிர்ந்து கொள்கின்றனர் என்று அமெரிக்க அய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி சவுதி கெஜட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் வழக்கம் போல் முதல் இடத்தை நம் இந்தியர்களே பிடித்துள்ளனர். துபாய், பஹ்ரைன், கத்தார், என்று வளைகுடா எங்கு நோக்கினும் இந்திய தலைகளே! :-) எனவே தான் இத்தனை இமாலய ஊழல்களுக்கு மத்தியிலும் நமது இந்திய பொருளாதாரம் தொடர்ந்து ஒரு நிலையான இடத்தைப் பெற்று வருகிறது.

இந்தியர்கள் 1.76 மில்லியன், பாகிஸ்தானிகள் 1.32 மில்லியன், பங்களாதேஷ் 1.31 மில்லியன், பிலிப்பைன்ஸ் 1.03 மில்லியன், இலங்கை 150000 என்று பல நாடுகளையும் பட்டியலிட்டுள்ளது இந்த ஆய்வறிக்கை.

வாழ்க இந்தியா! வளர்க அதன் பொருளாதாரம் வளைகுடா பணத்தால்! ஆனால் பல இந்துத்வாவாதிகளுக்கு இஸ்லாத்தைக் கண்டால் பிடிக்காது. அந்த இஸ்லாமிய நாடுகளில் இருந்து தினம் பெறப்படும் அந்நிய செலாவணியை மட்டும் பிடிக்கும். :-)

என்ன உலகமடா இது?

தகவல் உதவி
சவுதி கெஜட்
09-09-2014

------------------------------------------------------

ரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்!

உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது.

இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ்.


நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்.


அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca, mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன. ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே.


என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றியின் திருப்பு முனைக்கும் அரபு நாடுகள் தான் காரணம். நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்தான்.


இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா.. நம் பொருளாதாரத்தின் ஆணிவேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே.


துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே.


அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே.


உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள்.

பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.

நன்றி: ரவி சங்கர் - இந்து தமிழன்…முகநூல் பக்கத்திலிருந்து…..

இது போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை எனது பாரத பூமியை ரத்த காடாக மாற்றத் துடிக்கும் இந்துத்வாவாதிகளின் எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பில்லை.

Wednesday, September 10, 2014

சிங்கார சென்னையில் சிந்திக்க ஒரு விழா!வரும் 11-09-2014 அன்று சென்னையில் இஸ்லாமிய சொற்பொழிவும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. சவுதி அரேபியாவின் ஷேக் ஆஸிம் அல் ஹக்கீம் அவர்கள் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். நிகழ்ச்சி இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை. அனுமதி இலவசம். விருப்பமுடையவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளவும். மாற்று மத நண்பர்களையும் அழைத்து வரவும். பெண்களுக்கு தனியாக இட வசதி செய்யப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் இடம்:
டி என் ராஜரத்தினம் பிள்ளை முத்தமிழ் பேரவை ஹால்,
அடையாறு பாலம், ஆர் ஏ புரம், டாக்டர் எம்ஜிஆர் - ஜானகி கல்லூரி அருகில்
தொடர்புக்கு - 9941185904

---------------------------------------------

'நேரத்தின் முக்கியத்துவம்' குறித்து ஷேக் அஸீம் அல் ஹக்கீம் முன்பு உரையாற்றியதின் காணொளி கீழே.....


பிரான்சு முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரான முடிவில்....பிரான்சு முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரான முடிவில்....

பிரான்ஸ் நாட்டின் நேஷனல் டேயில் அந்நாட்டு முஸ்லிம்கள் ஈராக்கில் நடக்கும் மனித உரிமை மீறலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்புக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நபிகள் காலத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் சம உரிமையுடனேயே வாழ்ந்துள்ளார்கள். இஸ்லாமும் அதைத்தான் போதிக்கிறது. ஆனால் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு இதற்கு நேர் மாறாக கிறித்தவ சிறுபான்மையினரை கொல்கிறது. அவர்களை நாடு கடத்துகிறது. இதற்கு எதிராக .ஃபிரான்ஸ் மசூதிகளில் இமாம்கள் வெள்ளிக் கிழமைகளில் உரை நிகழ்த்த வேண்டும். இளைஞர்கள் தவறான வழியை தேர்ந்தெடுப்பதிலிருந்து காக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு வரும் வாரங்களிலிருந்து தீவிரவாதத்துக்கு எதிரான பிரசாரத்தை துவங்க இருப்பதாக தலில் அபுபுக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இஸ்லாத்தை ஏற்ற புதிய முஸ்லிம்கள் பலர் சிரியாவிலும் ஈராக்கிலும் போரிட ஃபிரான்ஸிலிருந்து செல்வது அதிகரித்துள்ளதையும் நாம் நோக்க வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பே உலக அளவில் இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த வேண்டம் என்ற நோக்கில் யூதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. தவறான வழி காட்டுதலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது நம் அனைவரின் மீதும் உள்ள பொறுப்பாகும்.

பாலஸ்தீன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது அங்கு சென்று போராடாமல் ஓடி ஒளிந்த கோழைகள்தான் இந்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர். அரபுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தீவிரவாத கும்பல் தங்கள் இயக்கத்துக்கு அரபியில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் வைத்திருப்பதில் இருந்தே யூதர்களின் கைவரிசையை புரிந்து கொள்ளலாம். தவறான வழி காட்டுதலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது நம் அனைவரின் மீதும் உள்ள பொறுப்பாகும்.

தகவல் உதவி
அரப் நியூஸ்
09-09-2014

எனக்குப் புரிகிறது - கவிதைநான் கை கூப்புகிறேன்

அவர் கை கொடுக்கிறார்

…….எனக்குப் புரிகிறதுநடக்கிறேன்

கடக்கும் கண்கள்

கணைகளாகின்றன

…….எனக்குப் புரிகிறதுமருத்துவர்

பதிக்கும் ஸ்டெத்தோடு

பதிகின்றன விரல்கள்

…….எனக்குப் புரிகிறதுகடைக்காரர்

சில்லரை தருகிறார்

சீண்டுகின்றன விரல்கள்

…….எனக்குப் புரிகிறதுஎடிஎம்மில்

எனக்கு முன்னால் நிற்பவர்

வழிவிட்டு வழிகிறார்

…….எனக்குப் புரிகிறதுரயிலில்

இடம்விட்டு எழுகிறார்

இடிப்பதுபோல் நிற்கிறார்

…….எனக்குப் புரிகிறதுநாற்பதைத் தாண்டியவள் நான்

எனக்கே இந்நிலை

உங்களுக்கும் புரியும்

புரியமட்டுமே முடியும்பாம்புகளை விழுங்க

தவளைகளால் முடியாது

சக்தியும்

சகதியுமாய் சமுதாயம்

சகிப்போம்


கவிதை ஆக்கம்
அமீதாம்மாள்

Tuesday, September 09, 2014

உணவு சுழற்சி முறை இருந்தாலே உலகம் இயங்க முடியும்!'வானத்தையும் பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை'
-குர்ஆன் 21:16


விலங்குகளை உணவுக்காக கொல்வது பாவம் என்று ஒரு வாதம் பலராலும் வைக்கப்படுகிறது. இது இந்த உலக நியதிக்கு முற்றிலும் ஒத்து வராத ஒரு தத்துவம். இந்த உலகில் உள்ள பொருள்கள் யாவும் ஏதோ ஒரு காரணத்தினால்தான் இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. மறைமுகமாக ஏதோ ஒரு வகையில் நமக்கு அது உதவிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தாவரங்களும் விலங்குகளும் மனிதனுடன் இணைந்து இயற்கையை நடுநிலை படுத்த காரணமாய் இருக்கின்றது. நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு உதாரணம், மனிதன் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவான், ஆக்சிஜன் இல்லையேல் நம்மால் உயிர் வாழ முடியாது, ஆனால் மரங்களோ கார்பன் டை ஆக்சைடை வாயுவை உட்கொண்டு மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றது, அப்படியல்லாமல் அனைத்து தாவரங்களும் ஆக்சிஜன் தான் வேண்டும் என்றால் நிலைமை என்ன ஆகும்? சூரியனை படைத்து மரங்களையும் படைத்து லட்சக்கணக்கான உயிரினங்களையும் படைத்த இறைவன் எதனையும் வீணுக்காக படைக்கவில்லை என்பதை இதிலிருந்து விளங்குகிறோம்.

'பூமியில் வாழும் உயிரினங்கள் தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!'
-குர்ஆன் 6;38

இந்த வசனத்தின் மூலம் உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் மனிதனைப் போலவே ஒரு சமுதாயமாக வாழ்கின்றன. ஒரு சிறிய வண்ணத்துப்பூச்சிக் கூட தனது இனம் எது? தான் யாரோடு உறவு கொள்ள வேண்டும்? தனது குழந்தை யார்? என்று பகுத்தறிந்து ஒரு சமுதாயமாகவே வாழ்கின்றது.

நிலத்தில் வாழும் உயிரினமாகட்டும்: நீரில் வாழும் உயிரினமாகட்டும்: வானத்தில் பறந்து திரியும் பறவைகளாகட்டும்: அனைத்தும் ஒவ்வொரு சமுதாயமாக வாழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

இப்பூமியை உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீற்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவு சங்கிலி(Food Chain). இதைப்பற்றி நாம் பள்ளி பாடங்களில் படித்திருப்போம், இந்த உணவு சங்கிலி அமைப்பை பார்க்கும் பொழுது அது ஒரு அதிசயமிக்க மனித அறிவை மிஞ்சிய செயலாகவே காணப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள் முதல் பெரிய உயிரினம் வரை ஒரு ஏற்பாட்டுடன் நடைபெறுகின்றது. சிறு பூச்சிகளை தவளை இனம் உண்கிறது, தவளைகளை உண்ணும் பாம்பை கழுகு உட்கொள்கின்றது என அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து சுழற்சிகளை மேற்கொள்கின்றன. இது குறிப்பிட்ட வகையான விலங்குகளின் உணவு சங்கிலி முறை. இதேபோன்ற பல உணவு சங்கிலி அமைப்பு முறைகள் எந்த வித சலனமும் இல்லாமல் தத்தமது வேலையை செய்கின்றன.கடலில் வாழக்கூடிய முட்டை இடும் உயிரினங்களுள் அதிகமான முட்டையிடும் வகை மீனான oceans sunfish அதன் ஒரு இனப் பெருக்க காலத்தில் முப்பது கோடி முட்டைகள் வரை இடும், அதே போன்று ஒரு சிப்பியானது (oyster) அதன் வாழ் நாளில் 20 லட்சம் முட்டைகள் வரை இடும், . அப்படி இருந்தும் கடலை மூடக்கூடிய அளவிற்கு மீன்கள் இல்லையே ஏன்? ஏனெனில் அந்த மீன்களை சாப்பிடுகிற மற்ற மீன்கள் இருக்கின்றன, அந்த வேறொரு இன மீன்கள் இந்த வகை மீன்களை அதன் எண்ணிக்கைக்கு மேல் அதிகமாகி விடாமல் சமநிலையை தக்க வைத்து கொள்கின்றன.

இந்த உணவு சுழற்சியில் ஏதாவது ஒன்று நின்று போனாலே உலகம் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் கோடிக்கணக்கில் ஒரு நாளில் மனிதனால் உணவுக்காக வெட்டப்படுகின்றன. ஜீவகாருண்யம் பேசிக் கொண்டு இவற்றை சாப்பிடாமல் இருந்தால் இந்த இனங்கள் அதிகம் பெருகி சுற்று சூழலுக்கு மிகக் கேடாக முடியும். மேலும் இத்தனை கோடி ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற உயிரினங்கள் மனிதனால் வெட்டப்பட்டாலும் இவற்றின் எண்ணிக்கை எந்த நாட்டிலும் குறைந்ததாக காணோம். அதிகரித்த வண்ணமே இருக்கிறது. மனிதன் சாப்பிடாத புலி, சிங்கம் போன்ற உயிரினங்கள் ஆண்டு தோறும் குறைந்து வருவதையும் பார்க்கிறோம். அதே போல் காட்டில் காட்டெருமை, மான், வரிக் குதிரை போன்ற மிருகங்களை சிங்கம் புலி போன்றவை அடித்து சாப்பிடுவதால்தான் காட்டின் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இல்லை என்றால் இலை தழைகளை சாப்பிடும் இந்த மிருகங்கள் முழு காட்டையும் சாப்பிட்டே அழித்து விடும். அந்த அளவு இனப்பெருக்கமும் அதிகமாக பண்ணும் இந்த உயிரினங்கள்.

இதில் பரிணாமிவயலின் கொள்கைகளும் அடிபட்டுப் போகின்றன. பரிணாமவியல் சொல்வதென்ன? முதலில் ஒரு செல் உயிரிகள் உற்பத்தியாகி கடலிலிருந்து பரிணமித்து நீர் நில உயிரினமாக மாறி பல தரப்பட்ட உருமாற்றம் அடைந்து குரங்கு வரை வந்து அதன் பிறகு பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் இன்றுள்ள மனித இனம் உருவானதாக சொல்கிறது. அறிவியல் முடிவுகளின் விளக்கங்களின் படி இது சாத்தியமே இல்லை. ஒரே நேரத்தில் உலக உயிரினங்கள் அனைத்தும் உண்டாக்கப்பட்டிருந்தால் தான் இன்று வரை உலக உயிரினங்கள் ஜீவித்திருந்திருக்க முடியும். டார்வினின் தத்துவம் இந்த இடத்திலும் சறுக்கி விடுகிறது.

சுப்ரமணியம் சுவாமியின் மொள்ளமாரித்தனம்!ஷோலே ஹிந்தி திரைப்பட காட்சியை வெளியிட்டு அதை இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களாக சித்தரித்து இஸ்ரேலுக்கு எதிராக அல்ஜசீரா பொய்ச் செய்தி பரப்புவதால் அதை மஞ்சள் பத்திரிக்கை என்று சுப்ரமணியம் சுவாமி தனது முக நூலில் பதிந்திருந்தார். பார்பனியம் தனது காலை ஊன்றுவதற்கு எந்த அளவும் கீழிறங்கத் தயங்காது என்பதற்கு இது ஒரு உதாரணம். அந்த பதிவுக்கு பல ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பார்பன அம்பிகள் மாய்ந்து மாய்ந்து போட்டனர். இது அல்ஜஜீரா தொலைக் காட்சியின் கவனத்துக்கு சென்றது. 'எங்களின் லோகோவை பயன் படுத்தி விஷமிகள் வெளியிட்ட புகைப்படம் இது. இதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை' என்று அறிக்கை வெளியிட்டது அல்ஜஜீரா. அதற்கான ஆதாரங்களையும் கொடுத்தது. இதனை சற்றும் எதிர் பார்க்காத சுப்ரமணியம் சுவாமி உடன் தனது பதிவை அழித்து விட்டார். ஆனால் அதற்கு முன்பே அல் ஜஜீரா அந்த பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விட்டது. பொய்களை பரப்புவதையே தொழிலாக கொண்ட சுவாமி போன்ற இந்துத்வாவாதிகள் இந்த நாட்டின் சாபக்கேடுகள்.

Al Jazeera gives reply to Subramanian Swamy’s allegation
September 9, 2014, 11:26 am
Facebook Tweet

Doha: Al Jazeera has come out with a reply to BJP leader Subramanian Swamy’s allegation that the news channel had shown a clip from the famous Hindi movie Sholay as Gaza citizens dying from Israel strikes.

Al Jazeera PR, in a post on their Facebook page, rejected the BJP leader’s allegation, saying that they can only laugh at those kinds of “ridiculous stories about Al Jazeera.”

“We can only laugh at these ridiculous stories about Al Jazeera - like this fake photo of a Bollywood star...They could have at least got our logo right,” they said on their Facebook page.

Dr. Subramanian Swamy on his Facebook page had recently attacked the news channel for its Gaza coverage featuring the famous Bollywood film. “This is the worst case of YELLOW JOURNALISM I have ever seen,” he had said in his post.

http://www.madhyamam.com/en/node/27064

முத்துப் பேட்டையில் ஒரு மனித நேய நிகழ்ச்சி!முத்துப்பேட்டை, ஜூலை 29: முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் கட்சியை சார்தவர்கள் தற்பொழுது நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஒரு வணிக நிகழ்ச்சியாகவும், முஸ்லிம்களை ஏமாற்றும் நிகழ்ச்சியாகவும் நடத்தி வரும் இந்த சூழ்நிலையில், இந்து மதத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் சேர்ந்து இஸ்லாமியர்களுக்காக இப்தார் நிகழ்ச்சி நடத்தியிருப்பது மனித நேயத்தையும், மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் வகையில்இருந்தது .

முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையை சேர்ந்தவர் நடுப்பண்ணை என்கிற ஆத்மநாதன். அதே போல் உப்பூரை சேர்ந்தவர் வீரசேகரன் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக மனித நேயத்தை பறைசாற்றும் வகையில் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு தனது சொந்த செலவில் இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். மூன்றாவது வருடமான இப்தார் நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது .

முன்னதாக தமிழக மனித உரிமை கழகத்தின் மாநிலத்தலைவர் கவிஞர் G. பஷீர் அஹமது அவர்கள் "இஸ்லாமும் மனித நேயமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் இதில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜமாத்தார்களும், இளைஞர்களும், பெரியோர்களும் பாகுபாடின்றி திறந்த மனதுடன் திரளாக வந்து கலந்து கொண்டனர். சரியாக 6:40 மணியளவில் கொய்யா மகாலில் உள்ள முதல் தளத்தில் அமர்ந்திருந்த அனைவரும் நோன்பு திறப்பதற்காக கீழ்த்தளத்தை நோக்கி சென்றனர்.

கீழ்தளத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்காக பேரிதம்பழம் , நோன்பு கஞ்சி, கடல் பாசி, கேசரி, சமூசா, போன்ற உணவுப்பொருட்கள் வரிசையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. நோன்பு திறந்தவுடன் இங்கு மக்ரிப் தொழுகையும் நடைபெற்றது. அதன் பின்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களான ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன் ஆகியோரை அனைவரும் மனமார வாழ்த்தி ஆர தழுவி இருவரையும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்ததாகவும் கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன் ஆகிய இருவரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு கூட்டாக அளித்த பேட்டி பின்வருமாறு:

எங்களுக்கு இந்து நண்பர்களைவிட இஸ்லாமிய நண்பர்கள் தான் அதிகம் என்றும், நான் வசித்து வரும் ஜாம்புவோனோடை பகுதியில் ஒரு சிலர் மத துவேசத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மன வேதனையாக இருக்கிறது என்றும், நாம் அனைவரும் ஓர் தாய் மக்கள் என்றும், அவர் தெரிவித்தார். மேலும் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் அவர்களுக்கு பாலூட்டி வளத்தவர் ஓர் இஸ்லாமிய தாய் ஆய்ஷா பேகம் என்பதை நாங்கள் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். என் அன்பான அழைப்பை ஏற்று அனைத்து இஸ்லாமியர்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.மாற்று மத சகோதர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 500 இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .


நேரடி களத்தொகுப்பு :ஜே:ஷேக் பரீத்ஆயிரம் பொய்களை சொல்லி மத துவேஷத்தை வளர்க்க பார்பனியம் பல வகைகளிலும் முயற்சித்து வந்தாலும் மனித நேயமிக்க இது போன்ற அன்பர்கள் நம் தமிழகத்தில் இருக்கும் வரை அவர்களின் சூழ்ச்சி பலிக்காது. தமிழகத்தில் மனித நேயம் மேலும் வளரும் என்றும் சொல்லிக் கொள்கிறோம்.

தமிழ் நடிகர் அமுதன் இஸ்லாத்தை நோக்கி.......

அமுதன் என்ற இளைஞர். அழகு நிலையம், தெப்பக்குளம் போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர். இன்று குர்ஆனின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். இனி அவர் சொல்வதைக் கேட்போம்.

'எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு. பல கேள்விகளை எனக்கு நானே கேட்டுக் கொண்டிருப்பேன். பல ஆண்டுகளாகவே இஸ்லாத்தின் கொள்கைகளில் ஒரு ஈர்ப்பு எனக்கு உண்டு. இந்த நண்பர் ஒரு நாள் எனது அறையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்டார். நானும் அனுமதித்தேன். அப்போது ஆன்மீகம் சம்பந்தமாக பல கேள்விகளை இவரிடம் கேட்டேன். பொறுமையாக அனைத்துக்கும் பதில் சொன்னார். இந்த கேள்விகள் காலை நான்கு மணி வரை தொடர்ந்தது. அதன் பிறகு சித்த வைத்தியர் டாக்டர் ஷாஜஹானின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் சித்த வைத்தியமும் கற்றேன். அவர் மூலமாகவும் ஆன்மீக சம்பந்தமான பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. நான் சினிமா துறையில் இருப்பது எனது குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. கெட்டுப் பொய் விடுவேன் என்று பயந்தார்கள். எனது சமீப கால நடவடிக்கைகளைப் பார்த்த என் அம்மா 'இஸ்லாத்துக்கு மாறப் போகிறாயா?' என்று கேட்டார். அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார். எனது முடிவில் நான் உறுதியாக இருப்பதாக எனது தாயாரிடம் சொன்னேன். 'இஸ்லாத்தில் நேர்ந்தால் சினிமா துறையில் உன்னால் இருக்க முடியாதே' என்று எனது தாயார் கேட்டார். 'ஆமாம். சினிமா துறையில் தொடர விருப்பமில்லை. வேறு வேலை பார்த்து கொள்வேன்' என்றேன். 'இஸ்லாத்தை ஏற்றால் எங்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்வாயா?' என்று என் அம்மா கேட்டார்.

'நான் ஆன்மீகத்தில் மூழ்கியிருப்பதால் ஒரு இந்துவாக இருந்திருந்தால் சாமியாராகப் போயிருப்பேன். உங்களை எல்லாம் இழந்திருப்பேன். ஆனால் இஸ்லாத்தை ஏற்பதால் சாமியாராக போக வேண்டிய அவசியம் இல்லை. கடைசி வரை உங்களுடனேயே இருப்பேன். இஸ்லாத்தில் அதற்கு எந்தத் தடையும் இல்லை' என்றேன். என் தாயார் மௌனமாகி விட்டார்.

எம்ஏ முடித்து ஜர்னலிஷமும் படித்துள்ளேன். டெக்கான் க்ரோனிக்கல் பத்திரிக்கையில் தற்போது வேலை செய்து வருகிறேன். சினிமா துறையை ஒதுக்கி விட்டேன். அன்பையும் ஆதரவையும் எனது குடும்பமும் எனது நண்பர்களும் வழக்கம் போல் தர அந்த இறைவன் அருள் புரிய வேண்டும். நீங்களும் பிரார்தனை புரியுங்கள்' என்று முடித்துக் கொண்டார்.

பணம், புகழ், இன்பம் என்று அனைத்தும் வெகு சுலபமாக கிடைக்கும் சினிமா துறையை வெறுத்து இன்று நேர் வழியான இஸ்லாத்தை நமது தமிழர்களின் பூர்வீக வழியான ஓரிறைக் கொள்கையை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டிருக்கும் சகோதரர் அமுதனை வாழ்த்தி வரவேற்போம்.

Monday, September 08, 2014

சகோதரி ஸஃபியா நல்லாசிரியர் விருது பெற்றார்!செப்டம்பர் ஐந்தாம் தேதி அன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை ஸஃபியா நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி பிரணப் முகர்ஜியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இவரைப் போன்று சிறந்த சேவைகள் ஆற்றி மேலும் பல சகோதரிகள் இதே போன்று விருதுகளைப் பெற நாமும் வாழ்த்துவோம்.டெல்லியில் உள்ள மலையாள சமூகம் அவருக்கு விருந்து கொடுத்து கௌரவித்தது.

-----------------------------------------------------------------------2012 ஆம் வருடத்தின் நல்லாசிரியர் விருது பெற்ற மேற்கு வங்கத்தைச் சார்ந்த உஸ்மான் அலி2012 ஆம் வருடத்துக்கான நல்லாசிரியர் விருதை பீகாரைச் சேர்ந்த சகொதரி யாஸ்மின் பெறுகிறார்.

விருதை வழங்குபவரும், விருதை பெருபவரும் தங்கள் தங்கள் கலாசாரத்தை இழக்காமல் முகமன் கூறிக் கொள்வதை காண்கிறோம். இதுதான் மதசார்பற்ற இந்தியா!மூன்று வருடமாக கழிவறையில் சிறை வைக்கப்பட்ட பெண்!பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தர்பங்கா மாவட்டத்தில் ராம்பக் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலிருந்தே மாமனாரும் மாமியாரும் கணவரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனிடையே இந்த பெண் கர்ப்பமாகியிருக்கிறார். அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. ஆண் குழந்தை பெறாததால் கோபமடைந்த மாமனாரும் மாமியாரும் மேலும் சித்திரவதை செய்ய ஆரம்பித்தனர். இதன் உச்சக்கட்டமாக அந்த பெண்ணை வீட்டின் ஒதுக்குப் புறத்தில் உள்ள கழிவறையில் சிறை வைத்து விட்டனர். ஒரு நாள் அல்ல. இரண்டு நாள் அல்ல. கடந்த மூன்று வருடங்களாக இந்த கொடுமை நடந்தேறியுள்ளது.

அந்த பெண் பசிக்கிறது என்று கேட்டால் ஏதாவது வெளியிலிருந்து கொடுத்துள்ளார்கள். குழந்தையையும் இவர் கண்ணில் காட்டவில்லை. பெண் வீட்டார் மகளைப் பார்க்க வந்தால் ஏதாவது காரணம் சொல்லி அவர்களை விரட்டி விடுவர். கணவன் பிரபத் குமார் சிங், மாமனார் தீரேந்திர சிங், மாமியார் இந்திரா தேவி என்ற இந்த மூன்று மனித மிருகங்கள் கடந்த மூன்று வருடங்களாக அந்த பெண்ணுக்கு இந்த கொடுமையை செய்து வந்துள்ளது. பெயர்களைப் பார்த்தால் ஆதிக்க சாதி இந்துக்கள் போல் உள்ளது. ஓரளவு படித்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் இவர்கள்.

பொறுமையிழுந்த பெண்ணின் தகப்பனார் முடிவில் காவல் துறையில் புகார் செய்துள்ளார். காவலர்கள் வீட்டை முற்றுகையிட்டு சோதனை செய்தனர். முடிவில் கழிவறையின் உள்ளிருந்து சப்தம் வரவே கழிவறையை திறக்கச் சொல்லி உள்ளே சென்றுள்ளனர். காவலர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. கிழிந்த துணி, எண்ணெய் தேய்க்காத பரட்டைத் தலை, உடலின் மீது துர் நாற்றம் என்ற கொலத்தில் வீட்டின் மருமகள் ஓரத்தில் ஒடுங்கி கிடந்தார். சமூக ஆர்வலர் குமாரி உடன் அந்த பெண்ணை வெளியில் கொண்டு வந்தார். சூரிய ஒளி படாமல் இருந்ததால் அந்த பெண்ணால் யாரையும் சரியாக பார்க்க முடியவில்லை. வெளியில் வந்தவுடன் அந்த பெண் கேட்டது

'எனது குழந்தை எங்கே'

3 வயது குழந்தையைக் கட்டிக் கொண்டு 'ஓ' வென்று அழுதார். அந்த குழந்தையோ எந்த சலனமும் இல்லாமல் தாயையே வெறிக்க பார்த்தது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்த அனைவரும் கண்கலங்கி விட்டனர். இந்த பெண்ணின் தந்தை ஷியாம் சுந்தர் நடந்த கொடுமைகளை எல்லாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கணவனும், மாமனாரும், மாமியாரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தையும் அந்த இள வயது பெண்ணும் நேற்று தனது சொந்த ஊருக்கு தந்தையோடு கிளம்பிச் சென்றனர்.

தகவல் உதவி

http://english.manoramaonline.com/news/nation/woman-locked-up-in-bathroom-for-three-years-for-dowry.html

http://timesofindia.indiatimes.com/india/Shocking-tale-of-brutality-In-Bihar-woman-confined-in-bathroom-for-three-years-for-dowry/articleshow/42045327.cms

http://www.news18.com/news/bihar/dowry-harassment-woman-locked-up-in-bathroom-for-three-years-596847.html

----------------------------------------------------------------


நேற்று விநாயக சதுர்த்தியன்று ஐஸ் ஹவுஸ் பகுதியில் இந்துத்வாவினர் குடித்து விட்டு தாளத்துக்கு ஏற்ப ஆட்டம் பாட்டத்தோடு விநாயகரை கொண்டு சென்றனர். திருநங்கைகளும் ஆபாச நடனம் ஆட வைக்கப்பட்டனர். பணம் கொடுத்து கூட்டி வரப்பட்ட குப்பத்து சூத்திரர்கள் தங்களுக்கு எவ்வாறு வலை விரிக்கப்படுகிறது என்பது கூட விளங்காமல் சாராயத்துக்கும் பிரியாணிக்கும் ஆசைப்பட்டு இஸ்லாத்தை விமரிசித்து ஆட்டம் போட்டு சென்றனர். அக்ரஹார வீடுகளின் மொட்டை மாடிகளில் பார்பனர்கள் ஒரு வித வெற்றிக் களிப்போடு ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் பணம் நன்கொடையாக கொடுப்பதோடு சரி. ஆட்டம் பாட்டம் போலீஸ் வழக்கு எல்லாம் சூத்திரர்கள் தலையிலே! இங்கு அழைப்பது போல் மயிலை பார்த்த சாரதி கோவிலின் வடமிழுப்புக்கு இந்த ஐயர்கள் சூத்திர்களான நம்மை ஏன் அழைப்பதில்லை என்ற கேள்வியை கேட்க விடாமல் உள்ளே இறங்கிய சாராயம் மழுங்கடித்து விட்டது. தாங்கள் கறி வேப்பிலையாக பயன்படுத்தப் படுகிறோம் என்று இவர்கள் உணரும் காலம் இதே தீவிரவாதம் இந்துத்வாவினர் மீது திரும்பும். வளர்த்த கடாவே மார்பில் பாய்வதை அன்று பிஜேபியினரும் ஆர் எஸ் எஸூம், இந்து முண்ணனியும் உணர்வர்.

நான் இவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் கூட்டி வந்து ஆட்டம் போடும் இந்த குடிகார கூட்டத்தால் இந்து மதத்தை வளர்த்து விட முடியுமா?

மேலே பீகாரிலே 3 ஆண்டுகளாக வரதட்சணை கொடுமையால் சிறை வைக்கப்பட்ட இது போன்ற ஆயிரக்கணக்கான சகோதரிகளை உங்களால் மீட்டெடுக்க முடியுமா?

இன்னும் ஆதிக்க சாதி தெருக்களிலே செருப்பை தூக்கி நடக்கிறானே இந்த நாட்டின் மண்ணின் மைந்தன் அவனது நிலையைத்தான் சீராக்க முடியுமா?

எதுவுமே உங்களால் கண்டிப்பாக முடியாது. இந்த வன்முறைக் கும்பலால் வெறுப்புற்று இஸ்லாத்தை நோக்கி இன்னும் கூட்டம் கூட்டமாக வரத்தான் போகிறார்கள். உங்கள் வாழ்நாளிலேயே அதனை பார்ப்பீர்கள்.

ஒரு ஏழை இந்து சகோதரருக்கு முடிந்தவர்கள் உதவுங்களேன்!முத்துப்பேட்டை கொய்யா மஹால் அருகே பெட்டிக்கடை வைத்திருப்பவர் மணி .சமீபத்தில் இவருக்கு சொந்தமான பெட்டிக்கடையை யாரோ சில மர்ம ஆசாமிகள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் .இதனால் கடைக்குள் இருந்த அத்துனை பொருட்களும் தீயில் கருகி நாசமாயின .இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான மணி செய்வதறியாது திகைத்து நிற்கிறார் . பாதிக்கப்பட்ட மணியை பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதலை கூறி வருகின்றனர் .

இந்நிலையில் தீயில் கருகிய பொருட்களை மதிப்பீடு செய்வதற்காக நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் .காம் இணையதளத்தின் சார்பாக கொய்யா மஹால் அருகே இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றோம் .

பின்னர் நம்மிடம் பேசிய மணி ,"நான் மீண்டும் எனது பெட்டி கடையை திறக்க முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கேன் பாய் ,இப்போ என்கிட்டே அறவே பணம் இல்லே பாய் , என்றார்" .உடனே குறுக்கிட்ட நாம் ,"உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை படுகிறது என்றோம்" .

அதற்கு பதிலளித்த அவர் "எனக்கு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் தேவைப்படுது பாய். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் உங்களது இஸ்லாமிய சகோதரர்களிடம் சொல்லி எனக்கு பண உதவி செய்ய சொல்லுங்க பாய்" என்று கண்ணீர் மல்க நம்மிடம் வேண்டுகோள் விடுத்தார் .

மணி என்பவர் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் என்பதாலும் ,அவர் பிறவியில் ஊனமாக இருப்பதாலும் ,இதை எல்லாம் காட்டிலும் மணி ஒரு சிறந்த மதநல்லிணக்க வாதி என்பதாலும் இதனை படிக்கும் எமது இஸ்லாமிய சொந்தங்களே ,நமது தொப்புள் கொடி உறவான ஒரு இந்து சகோதரனுக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்து அவரின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இன்றே உதவி செய்து நாளை மறுமை வெற்றியாளர்களாக தங்களை ஆக்கி கொள்ளுங்கள் என்று அன்போடு வேண்டுகிறோம் .நீங்கள் இன்று செய்யும் உதவி ,நாளை அவரை இஸ்லாத்தின் பால் இணைக்க கூடும் என்றும் தெரிவித்து கொள்கிறோம் .

மணியை நீங்களே நேரடியாக தொடர்பு கொண்டு உதவிகளை செய்யலாம் :

மணி :அலைபேசி -9698548943

சந்திப்பு :ஜே :ஷேக் பரீத்
MA .JOURNALISM AND MASS COMMUNICATION
உறுப்பினர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் ,
சென்னை

சகோதரர் மணியிடம் இன்று அலை பேசியில் பேசினேன். ரொம்பவும் வருத்தப்பட்டார். விநாயக சதுர்த்தி ஊர்வல நாள் அன்றுதான் மண்ணெண்ணையை ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார்கள்.

'உங்களுக்கு யார் மீது சந்தேகம்?' என்று கேட்டேன்.

'உள்ளூர் பாய்கள் யாரும் இந்த செயலை கண்டிப்பாக செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரிடமும் அண்ணனாகவும் தம்பியாகவும் பழகி வருகின்றேன். இதுவரை எங்களுக்குள் எந்த பிரச்னையும் வந்ததில்லை. முஸ்லிம்கள் அதிகம் உள்ள இந்த இடத்தில் ஒரு இந்துவின் கடையை கொளுத்தினால் அதன் மூலம் கலவரத்தை உண்டு பண்ணலாம் என்ற நோக்கில் யாரோ செய்திருப்பதாகத்தான் நினைக்கிறேன். குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல்ல என்னால் முடியவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் நான் அங்கு இல்லை. இருக்கும் பணத்தை வைத்து லாக்கர்களை சரி பண்ணிக் கொண்டிருக்கிறேன். வசதியுள்ளவர்கள் கடனாக கொடுத்தால் நன்றியுடையவனாக இருப்பேன்' என்று கூறுகிறார்.

சேத மதிப்பு இரண்டு லட்சத்துக்கும் மேல் என்கிறார். வசதியுடைய சகோதரர்கள் இந்த மாற்றுத் திறனாளிக்கு உதவி மனித நேயத்தை பேணுவார்களாக! அரசும் இது போன்றவர்களுக்கு உதவ முன் வர வேண்டும். அதிமுக பிரமுகர்களும் இதற்கு முயற்சிப்பார்களாக!

அப்போ எனக்கு வாழ்த்து இல்லையா? :-)"அப்போ எனக்கு வாழ்த்து இல்லையா?""கடவுளை கேவலப்படுத்தும் ஒரு விழாவுக்கு நான் எப்படி வாழ்த்து சொல்ல முடியும்?"

ஜம்மு காஷ்மீர் உருக்குலைந்திருக்கிறது!

ஜம்மு காஷ்மீர் உருக்குலைந்திருக்கிறது!எங்கு திரும்பினாலும் சோகம். இறந்தவர்கள் 200 க்கும் மேல். ராணுவமும் உள்ளூர் காவல் துறையும் தங்களால் முயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். ராஜ்பக், கோக்லி பக், ஜவஹர் நகர், பெமினா போன்ற பல பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மக்களின் துயரம் நீங்க இறைவனிடம் நம்முடைய பிரார்த்தனையை வைப்போமாக!32 nd MEGA BLOOD DONATION - RIYADHஇந்த வருட ஹஜ் பயணத்தில் கலந்து கொள்ளும் உலக மக்களின் அத்தியாவசிய தேவைக்காக இந்த இரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. வாகன வசதியுள்ளவர்கள் தங்கள் நண்பர்களை அழைத்து வாருங்கள். வாகனம் இல்லாதவர்கள் கைபேசியில் அழைத்தால் உங்களைத் தேடி வாகனம் வரும்.

Sunday, September 07, 2014

இந்த படம் இந்துத்வாவாதிகளுக்கு சமர்ப்பணம்!சென்ற வருடம் டெல்லி விஞ்ஞான் பவனில் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது. விருதை ஜனாதிபதி பிரணப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார். பீஹார் மாநிலத்தை சேர்ந்த யாஸ்மின் என்ற இஸ்லாமிய சகோதரியும் 2012 ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். அவ்வாறு விருதை வழங்கும் போது ஜனாதிபதி சம்பிரதாயமாக கையெடுத்து கும்பிடுகிறார். விருதை வாங்கும் சகோதரி யாஸ்மின் இஸ்லாமிய மரபுபடி தனது கைகளை இதயத்தில் வைத்து அவருடைய அன்பை ஏற்றுக் கொள்கிறார். அவரவர் மத பண்பாடுகளை எந்த வெறுப்பும் இல்லாமல் கடைபிடிப்பது நமது பாரதத்தில் தொன்று தொட்டு நிலவி வரும் கலாசாரம். இது தான் மத சார்பற்ற இந்தியா!

ஜனாதிபதியே கையெடுத்து கும்பிடும் போது இவரும் கும்பிட வேண்டியது தானே என்று சில இந்துத்வாவாதியினர் கேட்கலாம். கையெடுத்து கும்பிடும் இந்த பழக்கமானது வெறும் சம்பிரதாயமாக முடிந்து விடுவதில்லை. மனிதனை தெய்வமாக மாற்றக் கூடிய வழமை வருவதற்கு முதல்படியே இந்த கையெடுத்து கும்பிடும் வழக்கம்தான். சுய மரியாதை உடைய ஒரு மனிதன் சக மனிதனை கடவுளாக நினைக்கவே மாட்டான். என்னதான் அவர்கள் மனித புனிதர்களாக இருந்தாலும் கடவுள் நிலையை மனிதன் அடையவே முடியாது.

மனிதப் புனிதர்களாக கருதப்பட்ட சாய்பாபா, நித்தியானந்தா, ஜெயேந்திரர் போன்றவர்களலெல்லாம் பாலியல் குற்றச்சாட்டில் சிக்குண்டு, அதை மறைக்க கொலை வரை கூட சென்றதை நாம் மறந்து விட முடியாது. சாதாரண மனிதர்களாகிய நமக்கு இருக்கும் சுய கட்டுப்பாடு கூட 'மனித தெய்வம்' என்று கூறக் கூடிய இவர்களிடம் இல்லாதது இவர்கள் என்றுமே கடவுளாக முடியாது என்பதை தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்து மத வேதங்களும் பழந் தமிழ் இலக்கியங்களும் இது போல் மனிதனை தெய்வமாக பூஜிக்க சொல்லவில்லை. இவை எல்லாம் பிற்காலத்தில் கலாசார மாற்றத்தினால் ஏற்பட்ட புதிய பழக்கங்கள் ஆகும்.

எனவேதான் நபிகள் நாயகம் தான் சபைக்கு வரும் போது தனக்காக யாரும் எழுந்து நிற்க வேண்டாம் என்று தடை செய்ததைப் பார்க்கிறோம். தனது காலில் யாரும் விழக் கூடாது என்று மனிதனுக்கு சுய மரியாதையை கற்றுத் தந்ததையும் பார்க்கிறோம்.

எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் அவர்கள் 'மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.

நூல் : அஹ்மத் 12093

'அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறெதனையும் நான் பின்பற்றுவதில்லை' என்று முஹம்மதே! கூறுவீராக! 'குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன் 6:50)

'அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று முஹம்மதே! கூறுவீராக!

(திருக்குர்ஆன் 7:188)


குர்ஆனின் இந்த இரு வசனங்களும் நபிகள் நாயகமாக இருந்தாலும் அவர்களும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தான். அவருக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு அவருக்கு வரும் இறை செய்திதான் என்பதை விளங்குகிறோம். எனவே மனிதர்களை மதிப்போம். அதே நேரம் அந்த மனிதர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தாமலும் இருப்போம்.!

தலித்களை கிறித்தவர்களாக்குகின்றனர் - பிஜேபி புகார்!உத்தர பிரதேசம் நொய்டாவில் குலேசரா கிராமத்தில் இந்துக்களை கிறித்தவர்களாக கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாக காவல் துறைக்கு ஒரு புகார் வந்தது. காவல்துறை அதிகாரி பிரிஜேஸ் குமார் சிங் இந்த செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதை கண்டறிய ஒரு குழுவை அனுப்பினார். அந்த கிராமத்துக்கு சென்ற குழுவினர் விசாரணையில் இறங்கினர்.

விசாரணையின் முடிவில் இது பொய்யான தகவல் என்று தெரிய வந்தது. இது பற்றி காவல் துறை அதிகாரி சொன்ன போது 'ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்பதை தெரிந்து கொண்டோம். இந்த புகாரை கொடுத்தது உள்ளூர் பிஜேபியினர். அந்த கிராமத்தில் கிறித்தவ மாதா கோவிலில் நடக்கும் கூட்டுப் பிரார்த்தனையில் ஒரு சில தலித் மக்கள் தாங்களாகவே விரும்பி கலந்து கொண்டுள்ளனர். மற்றபடி அவர்கள் இந்துக்களாகவேதான் உள்ளனர். தனக்கு பிடித்த கடவுளை ஒருவன் வணங்கினால் அவனை இந்தியாவின் சட்டத்தை கொண்டு தண்டிக்க முடியாது. அது அவரவர்களின் விருப்பம்' என்கிறார்.

தகவல் உதவி
இந்தியன் என்ஸ்பிரஸ்
02-9-2014

காவல் துறை அதிகாரி நியாயமாக நடப்பவராக இருந்ததால் அங்கு நடக்க இருந்த மத மோதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டை கலவர பூமியாக மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிஜேபி யினர் செயல்படுவதாகவே எனக்கு தோன்றுகிறது. இந்து மதத்தில் அந்த தலித் மக்களுக்கு உரிய அந்தஸ்தை கொடுத்தால் ஏன் அவர்கள் இஸ்லாத்தை நோக்கியோ கிறித்தவத்தை நோக்கியோ ஓட வேண்டும்? அவர்களை மனிதர்களாக நடத்துங்கள். மத மாற்றம் தானாகவே குறையும். தலித் மக்களை நான் மிருகத்தை விடக் கேவலமாகத்தான் நடத்துவேன். அதற்காக அவன் வேறு மதத்துக்கும் போய் விடக் கூடாது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா?

இந்துத்வாவாதிகளே! என்று நீங்கள் மனிதர்களாக மாறப் போகிறீர்கள்?

மசூதியின் தண்ணீர் இந்துக்களுக்கு இலவச விநியோகம்!குஜராத்தின் அஹமதாபாத் நகரில் தாரியாபூர் என்ற சிற்றூர் உள்ளது. இங்குள்ள மசூதியில் 5:30 மணிக்கு காலை தொழுகைக்காக குழாய்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த குடி தண்ணீரை சுமார் 2000க்கும் மேற்பட்ட இந்துக்கள் தினமும் தங்கள் குடும்பத்துக்காக குடங்களில் எடுத்துச் செல்கின்றனர். இதற்கான செலவுகள் அனைத்தையும் முஸ்லிம்களே ஏற்றுக் கொள்கின்றனர்.

இதே அஹமதாபாத் நகரில் கவுஸர் பீவி என்ற ஒரு இஸ்லாமிய கர்பிணி தாயின் வயிற்றை கிழித்து அதன் உள் இருந்த சிசுவையும் நெருப்பில் இட்டு பொசுக்கினார்களே! இந்திய வரலாறு அதனை என்றுமே மறக்காது. அதே ஊரில் அதற்கு பரிகாரமாக முஸ்லிம்கள் இந்து தாய்மார்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அளித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

இதுதான் இஸ்லாம்.

பங்கஜ் பர்வ் என்ற இந்துத்வவாதி இதற்கு பின்னூட்டம் இடும் போது....

'இது பாகிஸ்தான் மஸ்ஜித் அல்ல. இந்தியர்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மஸ்ஜித். அதில் எங்களுக்கும் பங்குண்டு'

என்று கூறுகிறார். என்னதான் இஸ்லாமியர்கள் நேசக்கரம் நீட்டினாலும் இது போன்ற இந்துத்வாவாதிகளினால் என்றுமே பிரச்னைகளை இந்த சமூகம் சந்தித்துக் கொண்டேதான் இருக்கும். இது போன்ற அற்ப பதர்களை தூரமாக்கி 90 சதவீதமான நல்ல மனம் கொண்ட இந்துக்களை நாம் பகைக்காமல் இந்த நாட்டை சாதி சமய மோதலற்ற நாடாக மாற்ற முயற்சிப்போமாக!இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

-திருக்குறள்

'நமக்குத் தீமை செய்பவர்களை தண்டிக்க அவர் வெட்கப்படும்படியாக நன்மையை செய்துவிடுங்கள்.
'இந்திய மகள் சானியா மிர்ஸா' - ஆம் ஆத்மி புகழாரம்Congratulations, Indian Daughter Sania Mirza won US Open Mixed Doubles !

भारत की बेटी सानिया मिर्ज़ा की इस जीत पर सभी को ढेर सारी बधाइयाँ |

கலப்பு இரட்டையர் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை வென்ற சானியா மிர்ஸாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். (இனிமேலாவது குட்டை பாவாடையை குறைத்து கண்ணியமான உடையை உடுத்த முயற்சிக்கவும் சகோதரி.) :-)

ஆம் ஆத்மி பார்டி தனது இணைய தளத்தில் 'இந்திய மகள் சானியா மிர்ஸா' என்ற அடை மொழியோடு தனது பாராட்டை தெரிவித்துள்ளது. சில மாதங்கள் முன்பு தெலுங்கானா தூதுவராக சானியா மிர்ஸாவை நியமித்ததற்கு போலி தேச பக்தியால் பொங்கி வழிந்த காவிகள் எதிர்ப்பு தெரிவித்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். பாகிஸ்தானியை திருமணம் முடித்ததால் இந்த பெண் பாகிஸ்தானியாக மாறி விட்டார் என்று கோஷம் எழுப்பியதையும் நாம் மறந்து விடவில்லை. ராமாயண கதை நடந்ததாக கூறப்படும் பல சரித்திர இடங்கள் இன்று ஆப்கானிஸ்தானத்தில் உள்ள தாலிபான்களின் கைப்பிடியில் உள்ளது. எனவே இங்குள்ள இந்துத்வாவாதிகளை ஆப்கானிஸ்தானத்துக்கு அனுப்பி விடலாம் என்று யாராவது சொன்னால் அவனை கிறுக்கன் என்றுதான் சொல்லுவோம். அதே வாதத்தைத்தான் இந்துத்வாவாதிகளும் வைக்கின்றனர்.

இந்துத்வாவாதிகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே 'இந்திய மகள் சானியா மிர்ஸா' என்று கூறி பெருமைபடுத்தியுள்ளது ஆம் ஆத்மி பார்ட்டி. இவர் பெற்ற வெற்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. இனி வருங்காலங்களிலும் தான் இந்தியனாகவே இருப்பேன் என்றும் இந்தியாவுக்காகவே விளையாடுவேன் என்றும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தயிர்சாத பார்ட்டிகளுக்காகவே கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டு விட்ட சோம்பேறிகளின் ஆட்டமான கிரிக்கெட்டுக்கு உள்ள முக்கியத்துவத்தை குறைத்து டென்னிஸ், வாலிபால், பேஸ்கட் பால், கால் பந்து, கபடி போன்ற உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசும் மக்களும் முயல வேண்டும். முன்னேறிய நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம், சைனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகள் இந்த கிரிக்கெட்டைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவில்லை.

காவிகளே! நேற்று முளைத்த ஆம் ஆத்மி பார்ட்டியிடமிருந்தாவது எவ்வாறு அரசியல் செய்வது என்று பாடம் எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஆயிரம் முறை நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியா மத சார்பற்ற நாடாகவே மிளிரும். இந்துத்வாவாதிகளான உங்களை அரிசியலில் இருந்து முற்றாக ஓரங்கட்டும் நாளையும் இந்து மக்களே தீர்மானிப்பர். கூடிய விரைவிலேயே அதுவும் நடந்தேறும். அது வரை சற்று பொறுமையாக இருப்பீர்களாக! :-)

Saturday, September 06, 2014

மத்திய பிரதேசத்தில் இஸ்லாத்தை ஏற்ற நான்கு பேர் கைது!

மத்திய பிரதேசம் போபால்: இங்குள்ள சிவபுரி கிராமத்தில் துலாராம் ஜாதவ், மணிராம் ஜாதவ்,கேஷவ், மக்குபாய் ஜாதவ் என்ற பெயர்களுடைய நான்கு தலித்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர். இதில் மணிராம் ஜாதவ் தனது பெயரை அப்துல்லா என்று மாற்றிக் கொண்டுள்ளார். இவர்களின் மனைவிகளும் இஸ்லாத்தை ஏற்க பரிபூரண சம்மதம் தெரிவித்துள்ளனர். தீண்டாமைக் கொடுமை, கூட்டு பாலியல் வன் புணர்வு, கொலை என்று தினமும் தீண்டாமையால் அவதிப்படும் இந்த மக்கள் விடிவு தேடி இஸ்லாத்தை நோக்கி செல்கின்றனர். இது பொறுக்குமா இந்துத்வாவாதிகளுக்கு?

காவல் துறையில் சென்று கட்டாய மத மாற்றம் நடக்கிறது என்று புகார் கொடுத்துள்ளனர். மத்தியிலும் மாநிலத்திலும் காவிகளே ஆட்சி செய்வதால் காவல் துறை அந்த நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதன் பிறகு நீதி மன்றத்தில் நடந்த விசாரணையில் நான்கு பேருமே "நாங்கள் எவராலும் நிர்பந்திக்கப்படவில்லை. எங்களின் சுய சிந்தனையோடு இந்த முடிவை எடுத்துள்ளோம். குர்ஆனின் சட்டங்களை படித்து விளங்கியே இந்த மாற்றத்தை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்" என்று ஆணித்தரமாக சொன்னார்கள். வேறு வழியின்றி இவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது நீதி மன்றம்.

மதம் மாறுதல் சம்பந்தமான கோர்ட் ஆணை 1968ன் படி ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறினால் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து அதன் பிறகே மாற முடியும். இதனை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனைக் கூட அரசால் கொடுக்க முடியுமாம். நேற்று இது சம்பந்தமாக கோர்ட்டில் கையெழுத்திட நால்வரும் வந்த போது விஎச்பி, பஜ்ரங்தள் போன்ற இந்துத்வாவாதியினர் இந்த நால்வருக்கு எதிராக ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பிக் கொண்டு வந்தனர். இஸ்லாத்துக்கு இவர்கள் சென்று விட்டால் அடிமைகள் நமக்கு எங்கிருந்து கிடைப்பார்கள் என்ற ஆற்றாமை இந்துத்வாவாதியினரான உயர்ஜாதி இந்துக்களுக்கு இருந்திருக்கலாம். ஆதிக்க சாதியினர் தலித்களை சமமாக நடத்தவும் மாட்டார்கள்! சமத்துவம் இஸ்லாத்தில் கிடைக்கிறது என்று அங்கு சென்றால் அங்கும் காவல்துறையையும், நீதி மன்றத்தையும் அவர்களிடம் காட்டி பயமுறுத்தினால் அவர்களுக்கு என்னதான் வழி என்றாவது இந்துத்வாவாதிகள் சொல்லட்டுமே!

மத்தியிலும் மாநிலத்திலும் இந்துத்வா ஆட்சி நடக்கிறது. அப்பாவி முஸ்லிம்கள் பலர் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களின் எதிர்காலம் இந்தியாவில் கேள்விக்குறியாக இருக்கிறது. இத்தனை இடர்பாடுகள் இருந்தும் இந்த மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி ஏன் வருகிறார்கள்? தவறு எங்கிருக்கிறது? என்று இனிமேலாவது இந்துத்வாவாதியினர் சிந்திக்க மாட்டார்களா?

சிந்திப்பீர்களா? இனி நீங்கள் சிந்திப்பீர்களா? தலித்களை சமமாக நடத்துவீர்களா?

தகவல் உதவி
என்டிடிவி
04-09-2014

உயிரைப் பணயம் வைத்து பெற்றோரைக் காப்பாற்றிய இளைஞன்!சவுதியின் ரியாத்திலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹஃப்ரல்பாதின் என்ற ஊர். இங்கு சமீபத்தில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. துர்க்கி அல் துவாய்க் என்ற சவுதி இளைஞரைப் பற்றிய செய்தி இது.

இவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இந்த இளைஞரின் பெற்றோர்கள் வசித்து வந்தனர். மின் கசிவின் காரணமாக திடீரென்று பெற்றோர் இருந்த மேல் மாடி அறை தீப்பிடித்துக் கொண்டது. தீ வேகமாக அறை முழுவதும் பரவ ஆரம்பித்தது. கீழே இருந்த துர்க்கி வேகமாக மேல் தளத்துக்குச் சென்று தீப்பிடித்த அறையினுள் நுழைந்தார். தீயின் கோர பிடியில் சிக்கித் தவித்த தனது பெற்றோர் இருவரையும் தூக்கிக் கொண்டு வந்து அறையின் வெளியில் போட்டார். இவ்வளவு முயற்சி செய்தும் தீயின் கோரதாண்டவம் மூவரின் உடலையும் பதம் பார்த்தது. மகனையும் பெற்றோரையும் வேகமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி செய்தனர். தீயின் தாக்கம் அதிகமாக தாக்கியிருந்ததால் இவர்களை ரியாத்துக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். வயதான தாய் தந்தையர் தீயின் காயங்களால் அவதிப்பட்டு சில நாட்களுக்கு முன்பு இருவருமே இறந்து விட்டனர். மகன் காப்பாற்றியதால் ஏதோ கொஞ்ச காலம் இவர்களின் வாழ்வை உலகில் ஓட்ட முடிந்தது.

துர்க்கிக்கும் உடலில் பலத்த தீப்புண் காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடலின் 80 சதவீதமான பாகங்கள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இன்றும் உள்ளார். இவரது இளைய சகோதரர் சுல்தான் செய்தியாளர்களிடம் 'எனது சகோதரன் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. உடலில் 80 சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளது. தாய் தந்தையருக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தீயினுள் புகுந்த எனது சகோதரன் எங்கள் குடும்பத்தின் ஹீரோவாக பார்க்கப்படுகிறான். எனது சகோதரன் பிழைப்பது கஷ்டம் என்கின்றனர் மருத்துவர்கள். இறைவனின் நாட்டம் அவ்வாறு இருக்கும் போது நம்மால் என்ன செய்ய முடியும். எனது சகோதரனுக்காக பிரார்த்தியுங்கள்' என்று கண்ணீர் மல்க கூறினார்.

சாராயம் குடிக்க பணம் தராத தனது தாயை ஒரு மகன் வெட்டிக் கொன்றதை சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையில் படித்தோம். அதே வயதுடைய துர்க்கி தனது பெற்றோரைக் காப்பாற்ற தீயினுள் புகுந்து இன்று தனது உயிரையும் விடும் நிலைக்கு சென்றுள்ளார்.

மனிதர்களில்தான் எத்தனை நிறங்கள்!

குறள் 70:

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.


"ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு" என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

-----------------------------------------------------

அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (ச்சீ...) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் உம்மிடத்திலிருந்து விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப் பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

(அல்-குர்ஆன் 17:23-24)

தகவல் உதவி
சவுதிகெஜட்
06-09-2014

மனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்ற அதிமுக பிரமுகர்!நேற்று ஒரு அதிமுக பிரமுகரின் மகனுக்கு இஸ்லாமிய சகோதரி மணமுடிக்கப் படுவது பற்றிய செய்தி பத்திரிக்கையோடு தமிழக முதல்வரின் படம் போட்டு வலம் வந்தது. நம் சகோதரர்களும் இதைக் கண்டு துடித்து போயினர். இது போன்ற காதல் திருமணங்களை தடுப்பது எப்படி என்று பலரும் பல கருத்துக்களை பகிர்ந்தனர். ராஜ்குமார் & சமீரா பேகம் இருவருக்கும் வரும் 12/09/2014 அன்று காதல் திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ...

இதன் பிறகு கடயநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளையின் சார்பில் உறுப்பினர்கள் ராஜ் குமார் என்ற அந்த சகோதரனை அன்போடு அணுகி இது போன்ற காதல் திருமணங்கள் சமூகத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விளக்கி சொன்னார்கள். இந்து நம்பிக்கையும் இஸ்லாமிய நம்பிக்கையும் ஒருமித்து வாழ்தல் சினிமாவுக்கு சாத்தியப்படலாம். நிஜ வாழ்வில் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும் என்று அழகிய முறையில் எடுத்துக் கூறினார்கள். குர்ஆனின் வழி காட்டுதலையும் நபிகளின் பொன் மொழிகளையும் அன்போடு எடுத்துரைத்தனர். அனைத்தையும் அந்த இளைஞர் பொறுமையாக கேட்டு உள் வாங்கிக் கொண்டார். ராமதாஸைப் போல் இந்த இளைஞர்கள் இஸ்லாமிய மக்களை திரட்டிக் கொண்டு வன்முறையில் இறங்கவில்லை. வெறுப்பை தூரமாக்கி அன்பை தங்கள் கையில் எடுத்தார்கள். அன்பு வென்றது. உள்ளங்களை புரட்டக் கூடிய இறைவன் அந்த இளைஞனின் மனதிலே மாற்றத்தை ஏற்படுத்தினான்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

அந்த அதிமுக பிரமுகரின் மகனின் முடிவில் மாற்றம் ஏற்பட்டு இன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். நேற்று வெளி வந்த அந்த பத்திரிக்கையை தாம் முகநூலில் வெளியிடவில்லை என்றும் அது தனது தந்தையின் வேலை என்றும் வருத்தப்பட்டார். இனி இஸ்லாமிய முறைப்படி இறைவன் நாடினால் இருவருக்கும் திருமணம் நடைபெறும். இந்த இருவரின் நல்வாழ்வுக்காக நாமும் பிரார்த்திப்போம்.முஹம்மதே! நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 28:56


'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மிதீ 3511

'மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 4798

'உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை' என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.

அஸ்ஸாமில் இரு பெண்கள் கற்பழித்து தூக்கில்!

அஸ்ஸாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர். ஒரு பெண் பத்தாம் வகுப்பும் மற்ற பெண் ஒன்பதாம் வகுப்பும் படித்து வந்தனர். நிலாம் பஜார் என்ற இடத்தில் இந்த பள்ளி அமைந்துள்ளது. சென்ற புதன் கிழமையிலிருந்து இந்த இரு பெண்களும் வீட்டுக்கு வரவில்லை. எனவே காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். நேற்று இந்த பெண்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய வண்ணம் கண்டுபிடிக்கப்பட்டனர். இது கற்பழிப்பு கொலையா அல்லது வேறு பிரச்னைகளா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். கிராமத்து மக்கள் 'இவர்களை கற்பழித்து கொன்று விட்டு அதனை மறைக்க தூக்கில் ஏற்றியுள்ளனர்' என்கின்றனர்.

கரீம் கஞ்ச் காவல் துறை அதிகாரி நபின்சிங் செய்தியாளர்களிடம் பேசும் போது 'இரண்டு உடல்களையும் போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பியுள்ளோம். அறிக்கைக்காக காத்திருக்கிறோம்' என்கிறார். வழக்கம் போல் இது காதல் தோல்வி என்று சொல்லி ஆதிக்க சாதி இளைஞர்கள் சுதந்திரமாக வெளியில் உலா வருவர். இது வழக்கமாக நடப்பது தானே! மனமுடைந்த ஒரு பெண்ணால் இவ்வளவு உயரம் மரத்தின் மேல் ஏறி தூக்கில் தொங்க முடியுமா? இதற்கு சாத்தியமா? என்று நம்மால் புரிந்து கொள்ள முடிந்ததை நமது நாட்டு நீதி மன்றங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு தான் இதே போல் உத்தர பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விட்ட கொடுமையை பார்த்தோம். தலித்களின் உயிரானது அவ்வளவு இலகுவாக தெரிகிறது ஆதிக்க சாதி இளைஞர்களுக்கு!

வெட்கப்படுங்கள் ஆட்சியாளர்களே!
வெட்கப்படுங்கள் ஆண் மக்களே!
வெட்கப்படுங்கள் ஆதிக்க சாதியாளர்களே!
வெட்கப்படுங்கள் இந்திய குடிமகன்களே!
வெட்கப்படுங்கள் இந்துத்வவாதிகளே!

தகவல் உதவி:
தி ஹிந்து நாளிதழ், என்டிடிவி
05-09-2014

Friday, September 05, 2014

மனுதர்மத்தை தூக்கிப் பிடிப்போரே! இதைப் படியுங்கள்!மனுதர்மத்தை தூக்கிப் பிடிப்போரே! இதைப் படியுங்கள்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில், பார்ப்பனப் பிடியிலிருந்து வெளியேறி சாணார் (நாடார்) சாதியினருக்கான புதிய வழிபாட்டுமுறையை ஐயா வைகுந்தர் என்பார் உருவாக்கினார். இன்றளவும் அவ்வழிபாட்டினர் குமரியில் வாழ்ந்து வருகிறார்கள். ஐயா வைகுந்தர் வழிபாடு குறித்தும், அக்காலத்தின் சாதியக் கொடுமைகள் குறித்தும் மாநாட்டில் திரு. சுயம்பு (வயது 50) எடுத்துரைத்தார்.

“ஐயா வைகுந்தர் வாழ்ந்த காலத்தில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. அரசன் பதினெட்டு வகைச் சாதிகளாக மக்களைப் பிரித்து வைத்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவற்றில் நாடார் சாதியினரைப் பதினெட்டாம் சாதியாக வைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

அம்மக்கள் கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது. பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது. பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும். சாணார் மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர். இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்.

இவற்றால் வெகுண்ட ஐயா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள். முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள். தங்கத்தில் தாலி கட்டுங்கள். இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள். கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள், வணங்குங்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து மேலாடை அணிந்ததற்காகக் கர்ப்பிணிப் பெண்ணை ஏரில் கட்டி வைத்து அடித்தக் கொன்றனர். சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்.

இவ்வகையில், மன்னரையே எதிர்த்து, மக்களை ஒன்று சேர்த்து மன்னரிட்ட சட்டதிட்டங்களையெல்லாம் மிதித்து மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி ஏற்பட வழிவகுத்துக் கொடுத்தார் ஐயா வைகுந்தர். அவர் மக்களோடு இணைந்து வாழ்ந்தார். மன்னரின் படைகள் அவரைக் கைது செய்ய முற்பட்ட பொழுது, மக்களனைவரும் மன்னரின் படைகளை எதிர்த்து வீரப்போரிட்டனர்.
172 ஆண்டுகளுக்கு முன்பே, கருவறையில் சென்று வழிபடும் நிலையை ஐயா வைகுந்தர் ஏற்படுத்தினார். எங்கள் வீட்டுச் சடங்குகளில் பார்ப்பனர்களை அனுமதியாமல் நாங்களே நடத்திக் கொள்கிறோம். தமிழிலேயே வழிபாடு செய்கிறோம். இன்றளவும் ஐயா வைகுந்தரை மக்கள் தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.”

------------------------------------------------------------------------

மனுதருமக் கொடுங்கோன்மை எங்கே என்போரே – இதோ இங்கே…

“மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…”

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமைகளையும், சாணார் சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும், இன்று தங்களுடைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து ஆதிக்கச் சாதியினராக சாதியக் கொடுமைகளை நிகழ்ந்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்தும் வழக்குரைஞர் இலஜபதிராய் எடுத்துரைத்தார்:

“இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி என்றழைக்கப்பட்ட சமூகப் போராளியின் போராட்டங்கள் குறித்தோ அல்லது நமது சகோதரிகள் மேலாடை (மாராப்பு) அணியக் கூடாத அனுமதிக்கப்படாத அவலங்கள் குறித்தோ அறியாமலிருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொலை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த முத்துக் குட்டி என்பவர், தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமுலாக்கப்பட்டன. இன்றும் நமது சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன.

ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை நீடித்திருந்தால் நல்லதுதான். இன்று குமரி சுற்றுலா மையமாக மாறியிருக்கும்” என்று உயர்சாதி இளைஞனொருவன் வக்கிரமாகக் குறிப்பிடுகின்றான்.

1993-ல் அப்பாபாலு – இங்க்ளே எனும் வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே.ராமசாமி என்பவர் வேதனையோடு குறிப்பிட்டதைப் போல, ‘இன்னும் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக வன்கொடுமைச் சட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த அரசியலமைப்புச் சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’

“பசு புனிதமானதென்றும், இந்துக்கள் பசு மாமிசம் உண்ண மாட்டார்கள்” என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்திலுள்ள 60,000 பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் பசுமாமிசம் உண்பவர்கள்தான். அம்மக்களை இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தந்திரமாகத் தங்கள் பின்னால் அணிதிரட்டி வருகிறார்கள். ஆணாதிக்கக் கொடுங்கோலன் ராமனுக்கு, தன் மனைவி சீதையைச் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்யத் தூண்டிய ராமனுக்குக் கோவில் கட்ட முற்படுகிறார்கள்.

1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான். அத்திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”

நன்றி:
______________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003

சூன்யம் சம்பந்தமாக ஒரு இந்து நண்பரின் மனக் குமுறல்!'தலச்சன் பிள்ளை மண்டை ஓடு, மனித மூத்திரம், மனித வியர்வை, எலுமிச்சைபழம், தேங்காய் என்று எல்லாம் இருந்தும் சூன்யம் பலிக்கவில்லையே! நாளும் நெருங்கிக் கொண்டு இருக்கிறதே! நம்ம சக்தி அவ்வளவுதானா?"

--------------------------------------------------------------------இந்து முஸ்லிம் கிறித்தவர்கள் நாத்திகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடிய ஒரு விஷயம் உண்டென்றால் அது சூன்யம்தான். இதன் மூலம் ஒரு குடும்பத்தையே சின்னா பின்னமாக்கி விடலாம். மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும், நாத்தனார் அண்ணன் மனைவிக்கும் செய்வினை செய்துள்ளதாக கதை கட்டி விடுவர் பலர். இந்த செய்வினையை எடுக்கிறேன் பேர்வழி என்று முழு சொத்தையும் அழித்த குடும்பங்கள் எத்தனையோ! சூன்யம் ஒருவன் தனக்கு செய்திருப்பதாக ஒருவன் நம்பி விட்டால் அது ஒன்றே போதும் அவனது வாழ்வை சீர்குலைக்க.

இந்த கொடிய நோயை எப்படியாவது தமிழகத்தை விட்டு விரட்டி விடலாம் என்று தனது உயிரையே பணயம் வைத்து பிஜே சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கு உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்க வேண்டும். சம்சுதீன் காசிமியிலிருந்து நேற்று புதிதாக முளைத்த அலீம் புகாரி வரை எத்தனை எதிர்ப்புகள்? மதக்கலவரம் உண்டாகி விடும், முட்டாள், அயோக்கியன் என்று வாயில் வந்ததை எல்லாம் அடித்து விட்டு பிஜே க்கு நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருப்பதை சில நாட்களாக பார்க்கிறோம். பிஜே என்ற தனிப்பட்ட மனிதரின் மேல் உள்ள காழ்ப்புணர்வை இப்படியா காட்டுவது? ஊர் பேர் தெரியாதவர்களெல்லாம் பிஜேயை எதிர்த்து சவால் விட்டால் பிரபலாகி விடுவோம் என்று எண்ணி வரிசையாக வருகின்றனர்.

சூன்யம் இருக்கிறதா? நபிகள் நாயகத்துக்கு சூன்யம் வைக்கப்பட்டதா? இறைவன் இதைப் பற்றி குர்ஆனில் என்ன சொல்கிறான் என்பதெல்லாம் தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள். அதற்கு என்றுமே பிஜே தயாராகவே இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க சூன்யம் என்ற பெயரில் பலரது வாழ்வை நாசமாக்கும் இந்த கொடிய நோயை தமிழகத்திலிருந்து விரட்டி விட நம்மால் ஆன ஆதரவையும் நல்குவோம்.

இது போன்ற சூன்ய நம்பிக்கையினால் நிம்மதியைத் தொலைத்த ராகவா என்ற இந்து இளைஞர் மனம் வெதும்பி இந்த காணொளியில் எதிர்ப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்கிறார். இஸ்லாத்தைப் பற்றியோ மற்ற உலக அறிவோ அதிகம் இல்லாத இவருக்கு இருக்கும் தெளிவு கூட 7 வருடம் மதரஸாவில் ஓதிய சம்சுதீன் காசிமிக்கும், அலீம் புகாரிக்கும் இல்லையே என்று நினைக்கும் போது நமக்கும் வருத்தம் ஏற்படுகிறது. இவர்களுக்கும் இறைவன் நேர்வழிக் காட்டுவானாக!

காணொளியைக் கேளுங்கள்.

'அல்காயிதா' வின் மிரட்டல் 'மொஸாத்தின்' வேலை!'அல்காயிதா' வின் மிரட்டல் 'மொஸாத்தின்' வேலை!

இந்தியாவில் தங்களின் கிளைகளை திறக்கப் போவதாக அல்காயிதாவின் தலைவர் ஜவாஹிரி கொடுத்த அறிக்கையை நாம் பத்திரிக்கைகளில் பார்த்தோம். இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருக்கும் போது திடீரென்று இவர் அறிவிக்க காரணம் என்ன? இந்த செய்தி எங்கிருந்து கசியவிடப்பட்டது?

SITE என்ற செய்தி ஸ்தாபனத்திலிருந்து இந்த செய்தி கசிய விடப்பட்டுள்ளது. இந்த செய்தி ஸ்தாபனமானது இஸ்ரேலுடைய மொசாத்தின் அங்கத்தினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மேலும் நெருக்குதல்களைக் கொடுக்கவும் இந்துத்வாவாதிகளுக்கு இந்து மக்களின் ஆதரவை பெற்றுத் தரும் முகமாகவே இந்த செய்தியை மொசாத் கசிய விட்டுள்ளது.

அஸ்ஸாம் காஷ்மீர் குஜராத் போன்ற மாநிலங்களில் ராணுவத்தாலும் ஆட்சியாளர்களாலும் பல கொடுமைகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கலாம். அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பது இந்திய முஸ்லிம்களுக்கு தெரியும். காவல்துறையும், நீதித் துறையும் இந்தியாவில் முற்றாக சிதைந்து விடவில்லை. எனவே அல்ஜவாஹிரி போன்ற அமெரிக்க கைக் கூலிகளின் உதவி எந்த இந்திய முஸ்லிமுக்கும் தேவையில்லை என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

1. சைபல் எட்மண்ட்ஸ் என்ற எஃப்பிஐ அங்கத்தினர் விவரிக்கும் போது அல்ஜவாஹிரி நேடோவில் வேலை செய்த முன்னால் அதிகாரி என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அல்காய்தா என்ற இந்த அமைப்பும் அமெரிக்காவின் சிஐஏ வால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார். வளைகுடாக்களில் கால் ஊன்றவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்துத்வாவாதிகளின் கைகளை பலப்படுத்தவும் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவே அல்காயிதாவை இஸ்ரேலிய மொசாத் உருவாக்கியதாக விவரித்து கூறுகிறார்.2. SITE என்ற இந்த செய்தி ஸ்தாபனமானது ரிடா கட்ஸ் என்ற முன்னால் இஸ்ரேலிய ராணுவ வீரரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தற்போது இந்த யூதன் மொசாத்தில் வேலை செய்து வருகிறார். இந்த செய்தி ஸ்தாபனமானது அல்காய்தாவின் முக்கிய செய்திகளை வெளியிடுவதும் மேலும் அமெரிக்காவுக்கு தோதான செய்திகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் இதன் முக்கிய பணியாகும்.எனவே இந்திய முஸ்லிம்கள் மொஸாத் மற்றும் இந்துத்வாவின் வலையில் வீழ்ந்து விடாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அல் காய்தாவுக்கு ஆள் சேர்க்கிறேன் என்று எவனாவது உங்களை அணுகினால் உடன் காவல் துறை வசம் அவனை ஒப்படைத்து விடுங்கள்.

நமது நாட்டு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள நமக்கு தெம்பும் தைரியமும் இஸ்லாம் நிறையவே கொடுத்துள்ளது. மொஸாத்தின் கூலிப் படைகளின் உதவியை எந்த முஸ்லிமும் ஏற்க மாட்டான். இந்துத்வா ஆட்சி செய்து வரும் இந்த கால கட்டத்தில் முஸ்லிம்கள் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்வார்களாக! எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நாம் பிறந்த இந்த மண்ணான இந்திய பூமிக்கு விசுவாசமாக என்றும் போல் இருந்து வருவோமாக!

ஆதார சுட்டிகள்:

http://www.veteranstoday.com/2011/09/11/cia-funded-israeli-group-tied-to-al-qaeda-in-german-trial/


http://www.washingtonsblog.com/2013/05/report-u-s-government-worked-with-bin-laden-and-his-top-lieutenant-2-months-after-911.html


http://muslimmirror.com/eng/the-al-qaeda-statement-carried-by-site-intel-is-a-fake-says-bharat-bachao-andolan/Thursday, September 04, 2014

புனித மெக்கா பள்ளி இமாம் குருதிக் கொடை!இந்த வருட ஹஜ் புனித கடமைக்கு வரும் லட்சக்கணக்கான ஹாஜிகளின் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக ஐந்து நாள் இரத்த தான முகாம் நடந்தது. இந்த நிகழ்வில் புனித மெக்கா பள்ளியின் இமாம் சுதைஸ் அவர்கள் தனது இரத்தத்தையும் கொடுத்து நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இது போன்ற இரத்ததான முகாம்கள் ரியாத், ஜெத்தா, தம்மாம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டு தேவைக்கு அதிகமாகவே இரத்தம் சேமிக்கப்படுகிறது. இந்த முகாமை வருடாவருடம் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பு வெற்றிகரமாக நடத்தி வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜெத்தா கிளையின் பொருப்பாளர் முஹம்மது முனாஃப் அரப் நியூஸ் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் 'மன்னர் ஃபஹத் மருத்துவமனையோடு சேர்ந்து செப்டம்பர் 5 ந்தேதி இரத்த தான முகாம் நடத்தவுள்ளோம். இரண்டு மணியிலிருந்து ஆறு மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். 200க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் ரத்தத்தை ஹாஜிகளுக்காக தர இருக்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து இந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம். 'ஒரு மனிதனை காப்பாற்றுவது ஒட்டு மொத்த மனித குலத்தையும் காப்பதற்கு சமம்' என்ற குர்ஆன் வசனத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.' என்று கூறினார்.

Mohammed Maunaff, president of Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Jeddah region, said that his organization with the collaboration of King Fahd Hospital in Jeddah will be organizing a blood donation camp on Sept. 5 between 2 p.m. and 6 p.m. at the King Fahd hospital in which more than 200 volunteers are expected to donate blood.

“We have been conducting the blood donation campaign in Jeddah for the last five years with the inspiration of Qur'anic verse that states that saving a life is akin to saving the whole of mankind,” Munaf added.


அவர் மேலும் கூறும் போது 'இது போன்ற முகாம்கள் சவுதி அரேபியாவின் பல நகரங்களிலும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தப்படுகிறது. எங்களின் இந்த முகாமுக்கு அனைவரும் வந்து இரத்ததானம் செய்து நன்மையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்த சலாஹூதீன் என்பவரை 0508326083 என்ற இந்த நம்பருக்கு விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

தகவல் உதவி
அரப் நியூஸ்
04-09-2014

இரண்டு முறை நானும் ரியாத் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்தம் கொடுத்துள்ளேன். ரியாத்தில் நடந்த முகாமுக்கு பல சவுதிகளும், மற்ற நாட்டவர்களும் வந்து ஆர்வமோடு ரத்தம் கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது. தமிழனின் பெருமை சவுதியின் அனைத்து நகரங்களிலும் இன்று எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பலர் பல விதமாக அவதூறுகளை 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' என்ற இந்த அமைப்பின் மீது வீசிக் கொண்டிருந்தாலும் அனைத்தையும் தூரமாக்கி அகில உலக அளவில் தனது நற்பணிகளை தொய்வின்றி இந்த அமைப்பு இறை பொருத்தத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. இறைவனும் இந்த அமைப்புக்கு தனது அருட் கொடைகளை வாரி வழங்கி வருகிறான்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

நாயோடு திருமணம் புரிந்த இந்தியப் பெண்!

மணப்பெண்ணான மங்கள் முண்டா கூறுகிறார் : 'இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கிராமத்து மக்கள் எனக்கு தோஷம் இருப்பதாகவும் ஒரு நாயோடு திருமணம் முடித்து வைக்கப்பட்டால் அந்த தோஷம் கழியும் என்றும் சொல்கிறார்கள். இந்த திருமணத்தால் எனது கணவனின் வாழ்நாளும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். எனக்கேற்ற ராஜ குமாரனை தேடி நானும் காத்திருக்கிறேன்.சிறந்த ராஜகுமாரனை பெற்றுக் கொள்ள இன்று இந்த நாயோடு எனது திருமணம் முடிந்துள்ளது'

பெண்ணின் தகப்பன் அமின் முண்டா: "இது போல் பல திருமணங்கள் எங்கள் கிராமத்தில் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்குப் பிறகு எனது பெண்ணின் வாழ்நாள் மிகவும் பிரகாசமாக இருக்கும்".

பெண்ணின் தாய்: "கடன் வாங்கித்தான் இந்த கல்யாணத்தை நடத்தினோம். எப்படியோ என் மகளின் தோஷம் இந்த நாய் கல்யாணத்தால் கழிந்தால் சரி".

இந்த திருமணத்தை முழு கிராமமும் சேர்ந்து நடத்தி வைத்துள்ளது. உண்மையில் இந்த அழகிய மணப்பெண்ணின் அறியாமையை நினைத்து வருத்தமுற்றேன். ஒரு மனிதன் தனது வாழ்நாளை இப்படித்தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற இறை கட்டளைகளை தூரமாக்கினால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இது போன்ற திருமணங்கள் சிறந்த உதாரணம்.

மோடி ஆட்சி வந்தால் இந்தியாவில் புரட்சி வெடிக்கும் என்று பல இந்துத்வாவாதியினர் கூறி வருகின்றனர். ஒருகால் இந்த புரட்சியைத்தான் கூறுகிறார்களோ?

'அல்குத்ஸ் என்ற' அரபி நாளிதழும் இந்த செய்தியை எடுத்துப் போட்டு 'இந்தியர்களின் திருமணம் பாரீர்' என்று விளம்பரப்படுத்துகிறான். இதை பார்க்கும் இந்தியனான எனக்கு எந்த அளவு வெட்கம் பிடுங்கித் தின்னும் என்று சொல்ல வேண்டியதில்லை. அரபுகள் இதற்கு கொடுத்துள்ள கமெண்டுகளை படித்துப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். எப்படியோ மோடியின் ஆட்சி பல புரட்சிகளை செய்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.


هندية تتزوج كلبا بسبب "حظها" السيئ ...

تزوجت فتاة هندية، تبلغ من العمر 18 عاما، في احتفال ضخم الأربعاء الماضي، كلبا ضالا كجزء من طقوس قبلية تهدف إلى "دفع الشر" عن القرية.

وكانت مانغلي موندا (18 عاما)، من قرية نائية في ولاية جهارخاند بشرق الهند، تزوجت الكلب في حفل نظمه شيوخ القرية، بعد أن قال زعيمهم إن الفتاة "سيئة حظ"، وإن زواجها من شاب سيجلب الدمار لعائلتها وقريتها.

وحضر الكلب، الذي أطلقوا عليه اسم شيرو، إلى الحفل برفقة والد الفتاة، في سيارة مزينة، وعند وصوله، رحب به حضور الحفل بابتهاج كبير، وفقا لصحيفة "ديلي ميل" البريطانية.

وقالت موندا، التي لم تذهب إلى المدرسة قط، إنها ليست سعيدة بزواجها من كلب، ولكنها أصرت على أن هذا الزواج سوف يساعدها على تغيير حظها السيئ.

وأضافت "لقد تزوجت من هذا الكلب لأن شيوخ القرية يعتقدون أن حظي السيئ سينتقل إليه، وبعد ذلك ، سوف يكون للرجل، الذي سأتزوجه حياة طويلة".

-https://www.facebook.com/alqudsnewspaper?fref=nf


தீண்டாமைக் கொடுமை - தலித் மாணவன் கை வெட்டு!விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைக்கடிகாரம் கட்டி சென்றதற்காக அவரை தலித் அல்லாத பிற சமூக மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கி, மணிக்கட்டையும் வெட்டி விட்டனர். இந்த செயலால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. புதன்கிழமை இரவு (03.09.14) இந்த சம்பவம் நடந்துள்ளது.


சம்பந்தப்பட்ட மாணவர் திங்கள்கிழமை (01.09.14) பாடசாலைக்கு சென்றபோது கைக்கடிகாரம் கட்டி சென்றதற்காக சாதி வெறியில் இந்த வெறிச் செயலில் அந்த மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


திருத்தங்கல், திருவள்ளுவர் காலனி பகுதியைச் சேர்ந்த 16 வயதான பரஞ்சோதி ரமேஸ் திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல் நிலைப் பாடசாலையில் பிளஸ் 1 படித்து வருகிறார்.


திங்கள்கிழமை (01.09.14) அன்று பாடசாலைக்கு சென்ற ரமேஸ் கையில் கைக்கடிகாரம் கட்டியுள்ளார். இதைப் பார்த்த பிளஸ் 2 மாணவர்கள் சிலர் ஏன் கைக்கடிகாரம் கட்டி வந்தாய் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் கடிகாரத்தைக் கழற்றி தூக்கி கீழே போட்டு உடைத்துள்ளனர். இதை எதிர்த்து ரமேஸ் அவர்களுடன் சண்டைக்குப் போயுள்ளார். பின்னர் மற்ற மாணவர்கள் விலக்கி விட்டுள்ளனர்.


இந்த நிலையில் நேற்று இரவு (03.09.14) ரமேஸ், திருத்தங்கல் ரயில் நிலையம் அருகே நடந்து போய்க் கொண்டிருந்தபோது 15 மாணவர்கள் சேர்ந்து ரமேஸை தடுத்து நிறுத்தி உள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ரமேஸை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ரமேஸ் நிலை குலைந்தார். இந்த நிலையில் திடீரென கத்தியை எடுத்து ரமேஸின் மணிக்கட்டை வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஸ் அவர்களிடமிருந்து கடுமையாக போராடி தப்பி ஓடி சென்று தனியார் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவரை குடும்பத்தினர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று சேர்த்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சம்பந்தப்பட்ட அரசுப் பாடசாலையில் தீண்டாமைக் கொடுமை, மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் உள்ளதாகவும், இதுதொடர்பாக அடிக்கடி அங்கு மோதல்கள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் செருப்பு போடக் கூடாது, கடிகாரம் கட்டக் கூடாது என்று பல வகையிலும் மற்ற சமூக மாணவர்களால் துண்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.


இதுதொடர்பாக ஏற்படும் மோதல்களை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் தலையிட்டு அமைதிக் கூட்டம் நடத்தி கட்டுப்படுத்தி வருகிறார்களாம். ரமேஸ் தாக்குதல் குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

tamil.oneindia.in/news/tamilnadu/dalit-boy-s-wrists-cut-wearing-watch-school-tamil-nadu-210256.html

ஒரு தலித் மாணவன் அவனது தந்தையின் உழைப்பில் கைக்கடிகாரம் கட்டிக் கொள்வது அவ்வளவு பெரிய பாவங்களா?

ம்.... ம்... இந்துத்வ ஆட்சியில் இன்னும் எதெல்லாம் அரங்கேறப் போகிறதோ!

அமீத்ஷா வோடு கூட்டு சேர்ந்து முஸ்லிம்களை எவ்வாறு ஒழிக்கலாம் என்று யோசிப்பதை விடுத்து இது போன்ற சாதி மோதல்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தால் இந்து மதத்தின் அழிவையாவது தடுக்க முடியும்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

பெண்ணே! நீ என்றுமே ஒரு புதிர்தான்!உனது சகோதரனுக்கும் உனது சகோதரிக்கும்

அள்ளி கொடுக்கும் போதும் உன்னை

ஒன்றும் சொல்வதில்லையே... பெண்ணே!

எனது சகோதரனுக்கும் எனது சகோதரிக்கும்

கிள்ளி கொடுத்த போதும் என்னை

என்றும் தடுக்கிறாயே…. பெண்ணே!

நீ என்றுமே ஒரு புதிர்தான்!

Wednesday, September 03, 2014

விநாயக சதுர்த்தியும் முஹர்ரம் பண்டிகையும்!//முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல், ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும்.//

-ஆதி சேஷன்!

ஆதி சேஷன் அழகிய பதிவை இட்டுள்ளார். மேலே குறிப்பிட்டுள்ள எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஷியாக்கள் குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளில் இருந்தோ ஆதாரம் காட்ட முடியாது. அன்றைய பாரசீகர்கள் நெருப்பு வணங்கிகளாக இருந்தனர். நம் இந்திய கலாச்சாரத்தையும் ஒத்தவர்களாக இருந்தனர். பார்பனர்களின் பல பழக்க வழக்கங்கள் ஈரானியர்களை ஒத்தே இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். தம் மூதாதையரின் பழக்க வழக்கத்தில் பற்று கொண்ட ஈரானிய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பெயரால் ஏற்றிய புதிய பழக்கங்களே ஆதி சேஷன் சுட்டிக்காட்டிய பிரச்னைகள். இந்த பழக்கங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பழைய பாசம் இன்னும் இருப்பதால் தானோ எண்ணவோ சுப்ரமணியம் சுவாமி போன்ற பார்பனர்கள் ஷியாக்களை ஏகத்துக்கும் ஆதரிப்பர். சுவாமி தனது மகளைக் கூட ஒரு ஷியா முஸ்லிமுக்குத்தான் கட்டிக் கொடுத்துள்ளார்.

'இறைவனையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து அந்த இறைவனை வணங்குவது போல் மற்ற தெய்வங்களை வணங்குவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கைக் கொண்டோர் அவர்களை விட இறைவனை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் இறைவனுக்கே என்பதையும் இறைவன் கடுமையாக தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.'
-குர்ஆன் 2 : 165

'இறைவன் அருளியதைப் பின் பற்றுங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின் பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
-குரஆன் 2 : 170

'அவர்களே நேர்வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது?'
-குர்ஆன் 2 : 175

ஏக இறைவனை நோக்கியே திரும்புங்கள்! அவனை அஞ்சுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள். தங்களது மார்க்கத்தைப் பிரிந்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்ப்பித்தோரில் ஆகி விடாதீர்கள். ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
-குர்ஆன் 30 : 31,32

இந்து மதத்தின் பெருமைகளை குலைக்கும் விதமாக விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுவதை பார்க்கிறோம். அதே போல் இஸ்லாத்தில் முஹர்ரம் பண்டிகையில் வழிகளை மறித்து உடலை கீறிக் கொண்டு ஆக்ரோஷமாக வருவதும் இஸ்லாத்தின் பெருமைகளை குலைப்பதாகவே உள்ளது. இறைவனின் வழி காட்டுதல் இல்லாது இறை வணக்கம் இருந்தால் அது மனித குலத்துக்கு எத்தகைய கேட்டை விளைவிக்கும் என்பதற்கு இந்த இரண்டு பண்டிகைகளே சாட்சி.

'குரு உத்ஸவ்' க்கு ஏன் தமிழகத்தில் இத்தனை எதிர்ப்பு?(வட மாநிலங்களில் தலித் பெண்களை கற்பழிப்பதும் அதன் பிறகு அவர்களை தூக்கில் மாட்டி தொங்க விடுவதும் ஆதிக்க சாதிகளுக்குரிய இலக்கணம் என்ற பொது புத்தி அந்த மக்களிடம் வேருன்றி இருப்பதற்கு வட மொழியில் இயற்றப்பட்ட மனு ஸ்ருமிதியே காரணம் எனலாம்)

'குரு உத்ஸவ்' க்கு ஏன் தமிழகத்தில் இத்தனை எதிர்ப்பு?

செப்டம்பர் 5ம் தேதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தினத்தில் “குரு உத்சவ்” கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளிகளுக்கு மத்திய மனித வள ஆற்றல் துறை அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. இந்த சுற்றறிக்கையானது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டும் அல்ல. கல்கத்தாவில் நிலைமை எப்படி என்பதையும் பார்போம்.

கோல்கட்டா: 'குரு உத்சவ்' எனும் ஆசிரியர் தினத்தன்று, பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மோடியின் உரையை கேட்க எந்தவித ஏற்பாடுகளையும் மேற்கு வங்க அரசு இதுவரை செய்யவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மோடியின் உரையை புறக்கணிக்க உள்ளன. இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி கூறுகையில், மோடியின் உரையை கேட்க தேவையான உள்கட்டமைப்புகள் இங்கு இல்லை. ஆசிரியர் தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் மம்தா ஆசிரியர்களை கவுரவிக்க உள்ளார் என கூறினார்.

இந்தியா என்பது தங்களுக்கு என தனியான கலாச்சாரம், மொழி, சமுக அமைப்பு ஆகியவற்றை கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு துணைகண்டம். இந்த துணைகண்டம் ஒரே நாடாக உருவானதற்கு மொகலாயர்களும் ஆங்கிலேயர்கள்தான் முக்கிய காரணம். சுதந்திரத்திற்கு பிறகு வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் எல்லா தேசிய இனங்களும் வாழ்ந்து வருகின்ற இந்தியாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் இந்தியா என்பது இந்தி அல்லது சமஸ்கிருதம் பேசுகின்றவர்களுக்கு மட்டுமே உரியது போல நினைத்து மற்ற தேசிய இனங்கள் அவர்களை சார்ந்து வாழ வேண்டும் அல்லது அவர்களது ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதை மறுப்பவர்கள் தேசிய விரோதிகள் என நினைத்து செயல்படுகிறார்கள். இது பல இனங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நமது இந்தியாவை கூறு போடும் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுக்கின்றனர்.

பல மொழிகளை கற்றுக் கொண்டால் நன்மைதானே? இதில் என்ன பிரச்னை என்று கேட்பவர்களுக்கு சில விளக்கத்தை தர முயற்சிக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆங்கில மொழி, அரபு மொழி, உருது மொழி, கன்னட மொழி, தெலுங்கு மொழி போன்ற பல தரப்பட்ட மொழிகளை கற்றுக் கொடுக்கும் பல கல்வி சாலைகள் சிறப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதனை யாரும் எதிர்க்கவில்லை. அந்த மொழி பேசுபவர்களோடு அண்ணன் தம்பிகளாக தமிழர்கள் பழகியே வருகின்றனர். இந்து மதத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படும் வட மொழியான சமஸ்கிரதத்தை மட்டும் ஏன் தமிழர்கள் வெறுக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன?

ஆங்கில மொழியோ, அரபு மொழியோ அல்லது உருது மொழியோ தமிழனின் வாழ்வோடு சம்பந்தப்படாத ஒன்று. வருமானத்திற்காகவும், வேலைக்காகவும் விரும்பியவர் படித்துக் கொள்ளலாம். விரும்பாதவர் விட்டு விடலாம். ஆனால் வட மொழியின் வரலாறு அப்படியா?

கண்டிப்பாக இல்லை. ஆரிய படையெடுப்பினால் தமிழன் எழுதிய எத்தனையோ லட்சக்கணக்கான ஓலைச் சுவடிகள் பொக்கிஷங்கள் சூறையாடப்பட்டன: பல நெருப்பில் இட்டு கொளுத்தப்பட்டன: மேலும் பல ஆறுகளில் கொட்டி தண்ணீரோடு தமிழனின் கலாசாரத்தையும் விரட்டியது ஆரியம். அதன் காரணமாக கோவில்களில் இருந்த தமிழ் வழிபாடு துடைக்கப்பட்டு சமஸ்கிரத மந்திரங்கள் வலிந்து புகுத்தப்பட்டன.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றும் பரந்த மனப்பான்யோடு வாழ்ந்த தமிழனின் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்பட்டு மனிதர்களை பிளவு படுத்தும் வர்ணாசிரம கோட்பாடுகளை இறக்குமதி செய்தது ஆரியம். தலையில் பிறந்தவன் பார்பான்: காலில் பிறந்தவன் சூத்திரன் என்று போதிக்கப்பட்டு தீண்டாமை வலிந்து புகுத்தப்பட்டது. வெற்றி பெற்ற ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தனை விலங்குகளை விடக் கேவலமாக நடத்தி அதனை சரியென்று மனு தர்மத்தை கொண்டு போதிக்கவும் செய்தனர். எத்தனையோ பெரியார்கள் முயற்சித்தும் இந்த ஆரிய மாயையை ஒழிக்க முடியவில்லை. எல்லோருக்கும் இட ஒதுக்கீடு கிடைத்ததனால் இன்று ஓரளவு பார்பனர் அல்லாதவர்கள் சில முக்கிய பொறுப்புகளில் அரசு வேலைகளில் அமர்த்தப்பட்டனர். இருந்தும் அவர்களையும் இயக்கும் முக்கிய பொறுப்புகளில் பார்பனியம் அமர்ந்து தங்களின் காரியத்தை தயக்கமின்றி நிறைவேற்றி வருகிறது.

அதன் வெளிப்பாடுதான் 'சமஸ்கிரத வாரம்' என்றும் 'குரு உத்ஸவ்' என்றும் அவ்வப்போது தமது அரிப்பைக் காட்டிக் கொண்டு பிறகு குட்டுப்பட்டவுடன் அதற்கு ஏதாவதொரு விளக்கத்தை கொடுத்து சமாளிக்கப் பார்க்கிறது பார்பனியம். எனவேதான் மற்ற மொழிகளை ஆதரிக்கும் தமிழர்கள் சமஸ்கிரதம் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள். இஸ்லாமியனான எனக்கு சமஸ்கிரதம் என்பது இறைவன் படைத்த பல மொழிகளில் ஒன்று என்று கருதி அதனையும் மதிக்கிறேன். ஆனால் இந்த சமஸ்கிரதத்தால் பாதிப்படைந்த கோடிக்கணக்கான திராவிடர்கள் நஞ்சாக இந்த மொழியை வெறுப்பது அவர்களை பொறுத்த வரை நியாயமான ஒன்றே. பாதிப்படைந்தவனுக்குத்தானே அதன் வலி தெரியும்.

எனவே மோடி ஆட்சியானது சரிந்து வரும் பொருளாதாரத்தை சரிகட்ட என்ன முயற்சியோ அதை எடுக்கட்டும். அதை விடுத்து கொலைகாரி சாது பிரக்யாசிங், கொலைகாரன் அசீமானந்தா, போன்றவர்களை பிணையில் விடுவிப்பதும் சமஸ்கிரத வாரம் என்றும் 'குரு உத்ஸவ்' என்றும் இந்துத்வா கொள்கைகளை மறைமுகமாக புகுத்த நினைத்தால் அது இந்து மதத்தை மேலும் பலவீனமாக்கும். தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாத்தில் இணைவது அதிகரிக்கும். நமது இந்திய பொருளாதாரம் சாதி, இன, மொழி சண்டைகளால் மேலும் பலவீனமடையும்.

இந்தியாவை ஆண்ட மிக மோசமானவர்களில் ஒருவராக மோடி குஜராத் கலவரத்தின் மூலம் பெயர் எடுத்துள்ளார். அந்த பெயரை தனது சிறந்த ஆட்சியின் மூலம் மாற்ற மோடி முயற்சிக்கட்டும். அதை விடுத்து இது போன்ற முயற்சிகள் தொடருமானால் வரும் ஐந்தாண்டுகளில் திரும்பவும் காங்கிரஸ் அரியணை ஏறும். பிஜேபி என்ற ஒரு கட்சியே சுத்தமாக துடைத்தெறியப்படும். பிஜேபிக்கு சவக் குழி தோண்டும் இது போன்ற காரியங்களை இனியாவது இவர்கள் செய்யாதிருப்பார்களாக!

-------------------------------------------------

கற்பழிப்புகளில் விரைவில் இந்தியா முதலிடத்தை நோக்கி நகரும் அபாயம் – அதிர்ச்சி தகவல் :

தேசிய குற்ற ஆவண காப்பகம் National Crime Record Archive வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 3,425 பெண்கள் கற்பழிக்கப்பட்டு மத்திய பிரதேசம் முதலிட்டதிலும், 2,049 பெண்கள் கற்பழிக்கப்பட்டு உத்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும், 737 பெண்கள் கற்பழிக்கப்பட்டு தமிழகம் நான்காம் இடத்திலும் உள்ளன.

பெண்கள் தனித்து நடமாடுவதற்கு மிகவும் அச்சத்திற்குள்ளான நகரங்களாக டெல்லியும், பம்பாயும் இருப்பதாக கூறப்படுகிறது. ஏதோ பெரியார் போன்றவர்கள் இந்துத்வாவுக்கு தமிழகத்தில் முடிந்த வரை கடிவாளம் போட்டு வைத்திருந்ததனால் தமிழகம் முதல் இடத்தை பிடிக்காமல் தப்பித்தது.