Followers

Wednesday, June 26, 2019

லீனா மர்யம் - தான் இஸ்லாத்துக்குள் எவ்வாறு வந்தேன்

ஜெர்மானிய பெண்ணான லீனா மர்யம் தான் இஸ்லாத்துக்குள் எவ்வாறு வந்தேன் என்பதை விவரிக்கிறார்.


உலகில் யூதர்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா!

உலகில் யூதர்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா!

இங்கே அவர்களின் பெயர் பார்ப்பனர்கள்.
பார்ப்பனர்கள் இந்நியாவில் செய்த முதல் வேலை பௌத்தத்தை இல்லாமல் ஆக்கியது...
சமணத்தை ஒழித்து அனைவரையும் சைவ சமயத்துக்குள் கட்டாயமாக மதம் மாற்றியது.


நெல்சன் மண்டேலாவின் பேரன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்!

நெல்சன் மண்டேலாவின் பேரன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்!
ஆப்ரிக்காவின் காந்தி என்று அழைக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்டேலா (வயது 42) இறை மார்க்கமான இஸ்லாத்துக்குள் பிரவேசித்துள்ளார். ராபியா கிளார்கே என்ற இஸ்லாமிய பெண்ணையும் மணமுடிக்கிறார்.
மவேஜோ(Mvezo) என்ற இனக் குழுவுக்கு தலைவராகவும் மண்டேலா உள்ளார். இவரது தாத்தா நெல்சன் மண்டேலாவுக்குப் பிறகு தலைவர் பொருப்பு வாரிசு அடிப்படையில் இவருக்கு வந்தது. இந்த இனக் குழுவில் முஸ்லிம்கள் யாரும் இல்லை. 'தலைவர் எந்த மார்க்கத்தை பின் பற்றுகிறார் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களின் விசுவாசமான தலைவராக எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்' என்கின்றனர் அம்மக்கள்.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
தகவல் உதவி
morocco world news
-----------------------------------
குர்ஆன் சூரத்துந் நஸ்ர் – 110
1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போது –
2. இன்னும் மனிதர்களை – அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக அவர்கள் பிரவேசிக்கக் கூடியவர்களாக (நபியே!) நீர் கண்டால் –
3. அப்போது உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நினைவு கூறுவீராக! அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன் மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்கிறவனாக இருக்கிறான்.


எல்லா இந்தியர்களுக்கும் சொரணை வருவது போன்ற கேள்விகள்

இந்த நாட்டில் பாசிசத்தின் 7 அறிகுறிகள் குறித்து மக்களவையில் மேற்கு வாங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்பி " மஹுவா மொய்ட்ரே " ஆற்றிய உற்சாகமான , ஆக்ரோஷமான , மிகவும் சீரியஸான முதல் உரை. !!
முதல் முறையாக எம்பி ஆக தேர்தெடுக்க பட்டவரின் முதல் பாராளுமன்ற பேச்சு
எத்தனை அர்த்தமுள்ள கேள்விகள்
எல்லா இந்தியர்களுக்கும் சொரணை வருவது போன்ற கேள்விகள்
----------------------
எங்களின் இந்திய நாட்டை மதவெறியர்கள் நாடாக மாற்றுவதற்கு இவர்கள் யார் ?
எங்களின் இந்திய நாட்டை இருண்ட காலத்தை நோக்கி பின்னோக்கி இழுத்து செல்ல ஒரு ஆட்சி தேவையா ?
பல ஆயிரம் வருடங்களாக இந்திய மண்ணிலே வாழும் இந்தியர்களை தாங்கள் இந்தியர்கள் தான் என்று நிரூபிக்க ஒரு துண்டு சீட்டை காட்டி தான் நாங்கள் இந்தியர்கள் என்று நிரூபிக்க வேண்டுமா ?
மத்திய மந்திரிகளாக உள்ளவர்கள் பலர் தான் பட்டதாரிகள் தான் என்று நிருபிக்க இன்று வரை ஒரு ஒரிஜினல் சர்டிபிகேட்டை காட்ட முடியாதவர்கள் , எந்த கல்லூரியில் இருந்து படித்து பட்டம் பெற்றார்கள் என்று நிரூபிக்க முடியாதவர் இந்தியர்களை பார்த்து நீங்கள் அனைவரும் இந்தியர்கள் தான் என்று நிரூபியுங்கள் என்று கேட்கிறார்கள் ?
இந்திய நாட்டையும் மதத்தையும் ஒன்றாக கலந்து எங்கள் நாட்டை மத வெறியர்கள் நாடாக மாற்றுவதை நாங்கள் வேடிக்கை பார்க வேண்டுமா ?
ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால் தான் அது தேச பக்தியின் அடையாள சுலோகமா ?
இந்தியர்களின் தேச பக்தியை நிரூபிக்க அப்படி ஏதாவது குறிப்பிட்ட சுலோக வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று எந்த சட்ட புத்தகத்தில் குறிப்பிட பட்டுள்ளது ??
இந்தியர்களுக்கு சொரணை வருவது போன்று பல அர்த்தமுள்ள கேள்விகள் இந்த ஒரு எம்பி புதியதாக வந்த எம்பி கேட்கிறார்
ஐந்து வருடங்கள் ஆத்தாவின் அடிமைகள் எம்பி யாக இருந்தார்கள் ஒரு முறையாவது ஒரு எம்பி யாவது பாராளுமன்றத்தில் இப்படி குரலை உயர்த்தி பேசி இருப்பார்களா ?
Thanks to
- Basheer Ahmed...
Must watch: A spirited maiden speech by Mahua Moitre on 7 signs of fascism in this country. !!
.. உய்வில்லை... செய்நன்றி கொன்ற மகர்க்கு!


.. உய்வில்லை... செய்நன்றி கொன்ற மகர்க்கு!

அரபு நாட்டில் வாழும் இந்து மத சகோதரனின் பதிவு!

உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது.

இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ்.

நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்.

அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca, mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன. ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே.

என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றியின் திருப்பு முனைக்கும் அரபு நாடுகள் தான் காரணம். நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்தான்.

இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா.. நம் பொருளாதாரத்தின் ஆணிவேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே.

துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே.

அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே.

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள்.

பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.

நன்றி!
*ரவி சங்கர். 
இந்து - தமிழன்!

-வெற்றி மாறன்


Tuesday, June 25, 2019

தப்ரேஜ் அன்சாரியின் இறுதி ஊர்வலம்.

காவி பயங்கரவாதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட தப்ரேஜ் அன்சாரியின் இறுதி ஊர்வலம்.
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இத்தனை பெரிய கூட்டம் காவிகளை திருப்பி அடிக்க முற்பட எவ்வளவு நேரமாகும். மோடியும் அமீத்ஷாவும் எதிர்பார்ப்பதும் அதைத்தான். ஆனால் இந்திய நாட்டின் நலனில் அக்கறையுள்ள முஸ்லிம்கள் பொறுமை காக்கிறார்கள். சட்டம் தன் கடமையை செய்யும் என்று காத்திருக்கிறார்கள். இவ்வளவு களேபரங்கள் நடந்தும் அமைதி காக்கிறார்களே முஸ்லிம்கள். இவர்கள்தான் இந்த தேசத்தின் உண்மையான பக்தர்கள்.
கோழைகளே! இந்துத்வாவாதிகளே! 10 பேர் சேர்ந்து கொண்டு ஒரு அப்பாவியை அடிப்பது அல்ல வீரம். ஒத்தைக்கு ஒத்தையாக ஒரு முஸ்லிமிடம் நின்று உனது வீரத்தைக் காட்டிப் பார். அப்போது தெரியும் யார் உண்மையான ஆண் மகன் என்று?


'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச் சொல்லி நாட்டை படு குழியில் தள்ளிக் கொண்டிருக்கும் இந்துத்வா வெறியர்கள்.

ஜப்பானில் இஸ்லாமிய பெண்களுக்காக புது உடை அறிமுகம்.

ஜப்பானில் இஸ்லாமிய பெண்களுக்காக புது உடை அறிமுகம்.
தற்போது ஜப்பானில் கணிசமாக இஸ்லாமியர் வாழ்ந்து வருகின்றனர். ஜப்பானின் பாரம்பரிய உடையான கிமோனாஸூடன் இஸ்லாமிய பெண்கள் அணியும் துப்பட்டா, புர்ஹா வையும் இணைத்து புதிய டிசைன் அலங்காரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது யுமேயாகட்டா என்ற நிறுவனம். விலையும் 500 யென்னிலிருந்து 300 யென்னாக குறைக்கப்பட்டுள்ளது.
தன்னிறைவு பெற்ற நாடுகள் தங்கள் நாடு மேலும் முன்னேற்றமடைய இஸ்லாத்தையும் அரவணைத்து செல்கின்றன. கனடா, நியூஸிலாந்தை உதாரணங்களாக சொல்லலாம். ஆனால் வறுமையிலும் ஊழலிலும் தள்ளாடிக் கொண்டிருக்கும் நமது நாடு இந்துத்வாவாதிகளால் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு சிலரை 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச் சொல்லி கொன்று விடுவதன் மூலம் இஸ்லாத்தை துடைத்து விடலாம் என்று மோடி வகையறாக்கள் கனவு காண்கிறார்கள். இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் ஒரு இஸ்லாமியனைக் கூட இவர்களால் வர்ணாசிரமத்தில் தள்ள முடியாது. மாறாக இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி செல்லும். இன்று வாய் மூடி மவுனிகளாக வேடிக்கை பார்க்கும் பெரும்பான்மை இந்து சமூகம்தான் இதில் அதிகம் பாதிக்கப்படும். இதனை வருங்காலம் உணர்த்தும்.
ஆஜம்கானின் மிக அழகிய பேச்சு!

ஆஜம்கானின் மிக அழகிய பேச்சு!
'இந்த நாடு எல்லோரக்குமானது. இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காதவர் எப்படி இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்க முடியும்? நாங்கள் யாரையும் கலிமா சொல்லுங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லை! நாங்கள் யாரையும் குர்ஆனின் வசனங்களை ஓதுங்கள் என்று கட்டாயப்படுத்தவில்லை. பிறகு ஏன் எங்களிடம் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் போடச் சொல்கிறீர்கள்? உங்களின் சித்தாந்தத்தை எங்கள் மீது ஏன் திணிக்க முயல்கிறீர்கள்?
ஒரு காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக போரிட்டு வெள்ளையர்களை விரட்டினோம். ஒரே ஊரில், ஒரே தெருக்களில் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வந்தோம். அந்த ஒற்றுமை இன்று எங்கே? இந்த நாட்டு விடுதலை இந்துக்களின் முஸ்லிம்களின் ரத்தத்தினால் பெறப்பட்டது. அந்த தியாகங்களை வீணாக்கி வடாதீர்கள். உருது மொழி முஸ்லிம்களுக்கு மட்டுமானதன்று. அது இந்துஸ்தானத்தில் பிறந்த மொழி.
ஆட்சியில் மீண்டும் அமர்ந்திருக்கும் பிஜேபி மற்றும் மோடி அவர்களுக்கு மிகப் பெரிய பொருப்பு காத்திருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுங்கள்.'


Monday, June 24, 2019

கி.பி. 320 முதல் 600 வரை: அண்ணாவின் ஆரிய மாயை

கி.பி. 320 முதல் 600 வரை:
”இக்காலத்தில் மத்திய இந்தியாவில், யசோதர்ம தேவன் என்ற பிராமணர் பிரக்யாதியாய் அரசாண்டார். இவரைக் கலியுக அவதாரமென்று அழைத்தனர். ஜெயினர்கள் (சமணர்) அவரை வெறுத்தனர். இஸ்லாம் ஆட்சி பரவிய பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான், இந்தக் கலியுக அவதாரக் கொள்கை உண்டாகியிருக்கிறது. நர்மதை, கிருஷ்ணா ஆகிய இரு நதிகளுக்குமிடையே ஆண்ட வகாடா வம்சத்தைச் சேர்ந்த ஹரிஷேணாவின் மந்திரிகள், மலபார் பிராமணர்களாய் இருந்தனர். இந்த நூற்றாண்டில் கூட வட நாட்டின் கோட்பாடு, பழக்க வழக்கங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கஞ் செலுத்தவில்லை. பல நூற்றாண்டாக மூன்றாம் சங்கம் பாண்டிய மன்னர்களால் நடைபெற்றது. இவற்றினால் தமிழர் வாழ்க்கை கி.மு. 5000 முதல் கி.பி. 400 வரை யாதொரு மாறுதலும் இன்றி ஒரே படித்தரமாக அமைந்திருந்தது.
இந்நிலையில் இன்றுள்ள இந்து மகாசபைக்கு என்ன இலட்சியம் இருக்கிறது, இந்து ஆட்சியை ஏற்படுத்த? இந்துஸ்தானம் இந்துக்களுக்கே என்று கூற முடியுமானால் ஏற்படுத்தட்டும்!
சரி! செய்யட்டுமே அதனை! இந்துஸ்தான் இந்துக்களுக்கு ஏற்பட இந்து மகாசபை வேலை செய்ய வேண்டும். வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை? இந்துஸ்தானத்திலே இரதகஜதுரக பதாதிகளை புண்ய தீர்த்தப் புரோஷணத்தை, பூவையர் பாடலை, ஆடலை, அம்பு விடுவதைச் செய்வதை விட்டு, இங்கு என்ன வேலை என்று கேட்கிறோம்?
”இந்து” என்றால் யார்? இந்துஸ்தானம் என்பது எது? திராவிடர் யார்? திராவிட நாடு என்பது எது? என்ற பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் எந்த வீரரும், வீராங்கனையும் வேறு எங்கும் போக வேண்டாம். நல்ல படிப்பகத்துக்குப் போகட்டும்; அகராதியைப் பார்க்கட்டும்; இலக்கியங்களைக் காணட்டும்; உண்மை விளங்கும்.
நேரம் கிடைக்காது என்பர். உண்மை! சுருக்கித் தொகுத்து நாமே தருகிறோம். படித்து உணரட்டும்.
• இராமேஸ் சந்திர தத் எழுதிய “புராண இந்தியா”
• இராமேஸ் சந்திர முசும்தார் எழுதிய ”பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்.”
• சுவாமி விவேகானந்தர், ”இராமாயணம்’ என்னும் தலைப்பில் பேசிய பேச்சு.
• 1922 -ல் கேம்பிரிட்ஜ் பிரசுரித்த, ”பழைய இந்தியாவின் சரித்திரம்.”
• இராதா குமுத முகர்ஜி எழுதிய “இந்து நாகரிகம், ரிக்கு வேதம்.”
• ஜேம்ஸ் மர்ரே எழுதிய “அகராதி”
• பண்டர்கார் கட்டுரைகள்.
• டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய ”தென் இந்தியாவும், இந்தியக் கலையும்.”
• P.T. சீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”
• ஜெகதீச சந்தர்டட் எழுதிய ”இந்தியா – அன்றும் இன்றும்”
• A.C. தாஸ் எழுதிய “வேதகாலம்”
• C.S. சீனிவாசாச்சாரியார் எழுதிய ‘இந்திய சரித்திரம்’, ”இந்து இந்தியா.”
• H.G. வெல்ஸ் எழுதிய “உலக சரித்திரம்”
• சகலகலா பொக்கிஷம் என்னும் “நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா.”
• C.G. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு”
• ஹென்றி பெரிஜ் 1965-ல் எழுதிய விரிவான “இந்திய சரித்திரம்”
• இ.பி. ஹாவெல் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி”
• G.H. இராபின்சன் எழுதிய “இந்தியா”
• நாகேந்திரநாத் கோஷ் எழுதிய “ஆரியரின் இலக்கியமும் கலையும்”
• வின்சென்ட் ஏ ஸ்மித் எழுதிய ”ஆக்ஸ்போர்ட் இந்திய சரித்திரம்’
• ‘இம்பீரியல் இந்தியன் கெஜட்”
• சர். வில்லியம் வில்சன் ஹண்டர் எழுதிய ”இந்திய மக்களின் சரித்திரம்”
• இராகோசின் எழுதிய “வேதகால இந்தியா”
– இவ்வளவு ஆராய்ச்சியாளர்களிடமும் ‘தப்பி’ பிறகு நம்மிடம் வரட்டும், வீர சவர்க்காரும், வீர வரதரும், வயது முதிர்ந்த (ஆனால் விவேக முதிர்ச்சிக்கு நாம் உறுதி கூற முடியாது) திவான்பகதூர் சாஸ்திரியாரும்!
இந்துஸ்தானம் என்ற பகுதி, குஜராத், இராஜஸ்தான் ஐக்கிய மாகாணம் ஆகிய பிரதேசம் கொண்ட இடம்.
சரித பாகங்களை ஒட்டியும் விளக்கவும் அவ்வப்போது வெளியிடப்படும் பூகோளப் படங்களில் இந்துஸ்தானம் என்ற பகுதி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எங்கே போய் அந்தப் படங்களைத் தேடிக் கொண்டிருப்பது? என்று இந்து மகாசபைக்காரர் கவலைப்படுவர். உண்மைதான். அவர்களுக்கு வேலை அதிகம். தேடித் திரிய வேண்டாம். நாமே குறிப்புத் தருகிறோம்.
கான்ஸ்டேபிள் கம்பெனியார் வெளியிட்ட பூகோளப் பாடப் புத்தகத்தில் (Atlas) இந்தியா எனும் பூபாகத்தில் இனவாரி வட்டாரமும், மொழிவாரி வட்டாரமும் பிரித்து வேறு வேறு வர்ணம் தீட்டப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இரு விதமான படங்களிலும், திராவிடம் தனியாக இருக்கக் காணலாம்.
சரித சம்பவங்களில் முக்கியமானவற்றை நோக்கினாலும், இந்தியா எனும் பூபாகத்தில், இடையிடையே ஏற்பட்ட ”வல்லரசு’’களின் எல்லைகளை நோக்கினாலும், எந்த இராஜ்யமும், விந்திய மலைக்கு மேற்புற அளவோடுதான் இருக்கக் காண்பர். நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணியமாக ஓடிக் கொண்டிருந்தது என்பதைச் சரிதம் படிப்போர் அனைவரும் நன்கு அறிவர்.
இத்தகைய தனித் திராவிட நாட்டிலே இந்துக்களுக்கு என்ன வேலை இருக்கிறது? இந்து மதத்தின் பேரால் இம்சை பல செய்தது போதாதா? இன்னமும் இந்துஸ்தானத்துக்கும், பாகிஸ்தானத்துக்கும் தகராறு இருப்பதாக திராவிட நாட்டிலே பேசி, இங்குள்ள மக்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று கேட்கிறோம். ஒரு குடம் கங்கை நீரை அங்குக் கொண்டு வந்து புரோக்ஷணம் செய்வதைவிட இந்து மகா சபையினர் கங்கையிலே நன்றாக முழுகி எழுந்து அங்கே பேசட்டும். இந்துஸ்தானத்தைத் தமதாட்சிக்குட்படுத்திக் கொள்ளட்டும். பாகிஸ்தானத்தாரும் அதைத் தடுக்கவில்லை. நாமும் தடுக்கவில்லை. மேலே பாகிஸ்தான் தெற்கே திராவிட நாடு! இடையே இந்துஸ்தான்! இதுதான் முடிவு.
முன்பு, திவான் பகதூர் K.S. இராமசாமி சாஸ்திரியார் மதுரையில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டு வரவேற்புத் தலைவராக இருந்து ஆற்றிய சொற்பொழிவில், இங்கு இந்து மகாசபையைக் கூட்ட வேண்டி வந்த உட்காரணத்தைக் கக்கிவிட்டார். அதாவது, இந்து – முஸ்லீம் பிரச்சினையைப் பற்றிய பயங்கரமான பீதிகளைக் கிளப்பிவிட்டுத் திராவிடத்தில் உள்ளோரையும் “இந்துக்கள்’ என்று பாத்யதை கொண்டாடித் திராவிடரைத் துணைக்கு அழைப்பது போல் நடித்து, ஆரியத்தை நிலைக்கச் செய்வதுதான் இங்குள்ள இந்து மகா சபையினரின் உண்மையான கருத்து. அது சாஸ்திரியாரின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது.
அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.


டாக்டர் கஃபீல்கான் பீஹார் கள நிலவரத்தை விவரிக்கிறார்.

டாக்டர் கஃபீல்கான் பீஹார் கள நிலவரத்தை விவரிக்கிறார்.
'1500 குழந்தைகளின் உயிரை இது வரை காப்பாற்றியுள்ளோம். நான் ஒருவன் மட்டுமல்ல. என்னோடு 6 பேர் கொண்ட மருத்துவ குழு காலை 8 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கிராமம் கிராமமாக சென்று மருத்துவ உதவி செய்து இந்த குழந்தைகளை காப்பாற்றியுள்ளோம். ஸ்ரீகிருஷ்ணா மருத்துவ கல்லூரியில் இறக்கும் குழந்தைகள், ஆம்புலன்ஸ் வரும் வழியில் இறக்கும் குழந்தைகளில் பல எண்ணிக்கையிலேயே வருவதில்லை.'
இவ்வாறு உண்மைகளை பத்திரிக்கையில் போட்டுடைத்தால் இந்த முறையும் யோகி ஆதித்யநாத்தைப் போல் சிறையில் தள்ள நிதிஷ் குமார் முயற்சிக்கலாம். கஃபீல் கான் மிக கவனமாக இருக்க வேண்டிய நேரமிது.


மூன்று விதவைப் பெண்கள்..!

மூன்று விதவைப் பெண்கள்..!
மூவருமே நம்ம நாட்டில் பிறந்தவர்கள்தாம். மூவரின் முன்னோர்களும் நம்மைப் போன்றே இதே மண்ணின் மைந்தர்கள்தாம். மூவருமே நம்மைப் போன்றே இரத்தமும் சதையும் கொண்டவர்கள்தாம். மூவருமே குடியரசு நாளிலும் சுதந்திர தினத்திலும் கொடியைச் சட்டையில் குத்தி சாக்லேட் சாப்பிட்டு மகிழ்ச்சியோடு திரிந்த பள்ளிப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள்தாம்.
முதலாமவர் தப்ரேசின் மனைவி. இரண்டாமவர் நயீமின் மனைவி. மூன்றாமவர் ஹலீமின் மனைவி.
மூவருமே ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம். மூவரின் கணவன்மார்களும் வெறிபிடித்த கும்பலால் அடித்தே கொல்லப்பட்டார்கள்.
நயிமீன் மனைவிக்கும் ஹலீமின் மனைவிக்கும் நீதி கிடைத்திருக்குமேயானால் இன்று தப்ரேசின் மனைவி தப்ரேசுடன் இருந்திருப்பார்.
இது இந்து-முஸ்லிம் பிரச்னை அல்ல. இது நாட்டையே, பண்பாட்டையே அரித்தழித்துவிடுகின்ற புற்றுநோய்.
Civilisations die from suicide, not by murder - பண்பாடுகள் கொல்லப்படுவதால் மரணிப்பதில்லை; தற்கொலை செய்துகொள்வதால்தான் மாண்டு போகின்றன என்றார் பண்பாட்டு ஆய்வாளர் ஆர்னால்ட் டாய்ன்பீ.
பண்பாடுகளின் தற்கொலைகளுக்குத் தொடக்கப் புள்ளிகளாய் இருப்பது சட்டத்தின் ஆட்சி ஆட்டங்காண்பதும், வன்முறையும்தாம்.
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற நிலைமை வலுப்பெறுவது நம் நாட்டை பலவீனப்படுத்துமே தவிர வல்லரசாய் ஆக்காது என்பதை மறந்துவிடக் கூடாது.
நீதி மறுக்கப்படுகின்ற, நீதி தாமதப்படுத்தப்படுகின்ற அவலம் முடிவு பெறுவது எப்போது?
வாய் திறவாமல் சடலங்களின் எண்ணிக்கையை சரி பார்த்துக் கொண்டிருக்கின்ற கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்போது?
குறிப்பாக இந்து சகோதர, சகோதரிகள் பொங்கி எழுவது எப்போது?
Courtesy : Nadeem Khan
சுப்ரமணிய ஸ்வாமியும் சுதா ரகுநாதன் அவர்களும்

சுப்ரமணிய ஸ்வாமியும் சுதா ரகுநாதன் அவர்களும்
ஒருவர் வேறு சாதி,மதத்தில் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்வதால் மட்டுமே முற்போக்காளர் ஆகி விட முடியாது.மேஜர் ஆன ஆணும் பெண்ணும் வேறு சாதி,மதத்தில் திருமணம் செய்து கொள்ளும் போது பெற்றோருக்கு சூட்டப்படும் புரட்சியாளர் கிரீடம் விந்தையாக இருக்கிறது .
அவர்களுக்கு வேறு வழி இல்லாத நிலையில் ஏற்று கொள்வதை பெரும் முற்போக்காக முன் நிறுத்துவதன் பின்னும் சாதிய பெருமிதம் தான் இருக்கிறது.மாட்டு கறி சாப்பிட வேண்டுமானால் பாகிஸ்தான் போ ,இங்கிருந்தால் கடும் தண்டனைகளில் இருந்து தப்ப முடியாது என்பதை ஆதரிக்கும் யாரும் முற்போக்காளர் ஆக மாட்டார்கள்.
பூதான் இயக்கம் நடத்தியவர் என்றாலும் மாடுகளை உணவாக எடுத்து கொள்வதை என் உயிர் போனாலும் போராடி தடுப்பேன் என்ற ஆச்சரிய வினோபா பாவே பிற்போக்காளர் தான் .
சாதிய பெருமிதத்துக்காக ,கேவலம் மாட்டு கறி உண்ணும் மிலேச்சன் இங்கு ஆள்வதா என்று சாதிக்காக வெள்ளைய அதிகாரியை கொலை செய்த வாஞ்சிநாதன் பிறந்த மாநிலத்தில் பல ஆண்டுகளாக சாதிய பெருமிதம் மிக பெரும்பான்மையான சாதிகளிடம் அடங்கி இருக்க காரணம் திராவிட இயக்கம்.முக்குலத்தோர் ,வன்னியர்,நாடார்,கொங்கு வெள்ளாளர் தவிர்த்து பல நூறு சாதிகள் தங்கள் மகன்,மகளின் காதல் சாதி,மத மறுப்பு திருமணங்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத கூட்டம் தான் .நீறு பூத்து கிடந்த சாதிக்காக எதையும் செய்யும் வாஞ்சிநாதன்கள் பாஜக அரசு பதவிக்கு வந்ததில் இருந்து வீறு கொண்டு எழுந்து வெளிவருகிறார்கள்.
எண்ணிக்கை பலம் இருந்தால் உயர் சாதியினர் என்று அறியப்படும் சாதிகளின் வெறியாட்டம் மேற்கூறிய மூன்று நான்கு சாதிகளை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.அவர்கள் குறிப்பிட்ட மாநிலங்களில்,மாவட்டங்களில் ,ஊர்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பகுதிகளில் நடக்கும் சாதி ஆணவ கொலைகளுக்கு குறைவு கிடையாது

மதரஸா ஆசிரியரை 'ஜெய் ஸ்ரீராம் சொல்' என்று தாக்கிய இந்துத்வாக்கள்!

மதரஸா ஆசிரியரை 'ஜெய் ஸ்ரீராம் சொல்' என்று தாக்கிய இந்துத்வாக்கள்!
கல்கத்தாவில் உள்ள பர்கனாஸ் என்ற ஊரில் வசித்து வருபவர் முஹம்மது ஷாரூக் ஹல்தார். இவர் ஹூக்ளியில் உள்ள மதரஸாவில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். சென்ற வியாழக்கிழமை வழக்கம் போல் லோக்கல் ட்ரெயினில் ஹூக்ளி பயணித்துள்ளார்.
'தாகுரியா என்ற இடம் வந்தபோது மந்திரங்களை உரக்க சொல்லிக் கொண்டு ஒரு கும்பல் ட்ரெயினில் ஏறியது. அங்குள்ள பலரையும் இந்த கும்பல் மிரட்டிக் கொண்டே எனது இருக்கைக்கு வந்து எனது தொப்பியை தட்டி விட்டு எனது தாடியையும் பிடித்து இழுத்தது. பிறகு என்னிடம் 'ஜெய் ஸ்ரீராம் சொல்' என்று மிரட்டியது. நான் சொல்ல மறுத்தேன். உடன் மூர்க்கத்தனமாக என்னை தாக்க ஆரம்பித்தனர். உள்ளூர் வாசிகள் எனக்கு உதவிக்கு வர என்னை ரயிலில் இருந்து தள்ளி விட்டு சென்றது அந்த கும்பல். காவல் துறையிடம் புகார் அளித்துள்ளோம்' என்கிறார் முஹம்மது ஷாரூக்.
தகவல் உதவி
முஸ்லிம் மிர்ரர்
24-06-2019
மொழி பெயர்ப்பு : சுவனப்பிரியன்
அழகிய இந்தியாவை சோமாலியாவாக மாற்றியே தீருவோம் என்று இந்துத்வாக்கள் முடிவு கட்டி விட்டதாகவே தோன்றுகிறது. எந்த மதத்தினருமே நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு இந்துத்வாக்கள் இந்நாட்டை கொண்டு செல்கின்றனர். வழக்கம் போல் பெரும்பான்மை இந்துக்களும் வாய் மூடி வேடிக்கை பார்க்கிறார்கள்.


Sunday, June 23, 2019

தமிழுக்கு அமுதென்று பெயர்..

தமிழுக்கு அமுதென்று பெயர்..


சிங்கள மாணவர்களுக்கு மொழி அசைவுகளோடு முஸ்லிம் ஆசிரியையினால் தமிழ் மொழி கற்பிக்கப்படும் காட்சி.

இப்படியான ஒற்றுமையைத்தான் முஸ்லிம்கள் எப்போதும் விரும்புகின்றனர்.

ஒன்றுபடுவோம்: தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.
திப்பு சுல்தான் அவர்களிம் பத்தாம் தலைமுறைப் பேரர்...என் இடப்புறம் அமர்ந்துள்ளது பக்தியார் அலிஷா. இவர் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த திப்பு சுல்தான் அவர்களிம் பத்தாம் தலைமுறைப் பேரர். நேற்று திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெற்ற முப்பெரு விழாவின் இறுதி அமர்வு.
பக்தியார் அலிஷா தற்போது கொல்கத்தாவில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார். நல்ல ஆங்கிலம் பேசுகிறார். திப்பு சுல்தானின் பேரர் எனச் சொன்னவுடன் மேடையில் பலரும் ஏறி அவருடன் புகைபடம் எடுத்துக்கொள்ளத் தலைப் பட்டனர். கூட்டம் நடத்துபவர்கள் வேண்டிக் கொண்டும் யாரும் படம் எடுப்பதை நிறுத்தவில்லை. அவருக்குக் கூச்சம். கிரீடம்போலத் தலையில் அவருக்கு வைக்கபட்ட முண்டாசைக் கழற்றி மடியில் வைத்துக் கொண்டார்.
சற்று கூட்டம் கலைந்தவுடன் மிக்க கூச்சத்தோடு, "எங்கள் ஊரில் இப்படியெல்லாம் என்னை யாரும் கொண்டாடியது, பாராட்டியது கிடையாது. எனக்கு மிகவும் கூச்சமாக உள்ளது. நான் அந்தப் பாரம்பரியத்தில் வந்தேன் என்பது தவிர இந்த நாட்டுக்கு ஏதும் செய்ததில்லை.." என்றார்.
"அப்படிச் சொல்லாதீர்கள். உங்கள் முப்பாட்டன் எடுத்த போராட்டத்திற்கும் தொடுத்த சமரிற்கும் ஏழேழு தலைமுறைக்கும் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம். தமிழவர்கள் பாரம்பரியத்தைப் போற்றுபவர்கள். ஏனெனில் அவர்களுக்கு ஒரு புகழ்மிக்க பாரம்பரியம் உண்டு. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் "- என்றேன்.
எல்லோரையும் போல அவரும் நான் ஒரு இயற்பியல் பேராசிரியன் என்பதை அறிந்து வியந்தார்.
திப்பு பலவகைகளில் முக்கியமானவர். மிகவும் primitive ஆன ஏவுகணைகளைத் தயாரித்துத் தாக்கினார் என்பார்கள். ஆனால் அதையெல்லாம் விட அவர் அக்காலத்திலேயே பிரிட்டிஷ் காலனியத்திற்கு எதிராக பிரான்ஸ் உடன் இணைந்து ஒரு பன்னாட்டுக் கூட்டணியை உருவாக்க முயன்றது ஒரு வியக்கத்தக்க முயற்சி.
Prof Marx Anthonisamy பதிவு..
திப்புசுல்தான் வழித்தோன்றல்களில் சிலர் கொல்கத்தாவில் ரிக்‌ஷா ஓட்டுப் பிழைக்கிறார்கள் என்பது மேற்படி நிகழ்வில் அறிந்து மனதைப் பிசைந்த செய்தி..
பக்தியார் அவர்களுக்கு விழாவில் ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது மனதை மகிழ்வித்த செய்தி. — Marx Anthonisamy உடன்.


மோடிக்கு சஞ்சீவ் பட் எழுதிய ஆணித்தரமான கடிதம்!

மோடிக்கு சஞ்சீவ் பட் எழுதிய ஆணித்தரமான கடிதம்!
'என்னிடம் தூய்மையான கொள்கை உண்டு: அதிகாரம் இல்லை...
உங்களிடம் அதிகாரம் உண்டு: தூய்மையான கொள்கை இல்லை'
'நீங்கள் என் தலையை கொய்தாலும் உங்களை எதிர்த்து போராடுவேன்
நீங்கள் என் எலும்புகளை நொறுக்கினாலும் உங்களை எதிர்த்து போராடுவேன்.
நீங்கள் என்னை உயிருடன் புதைத்தாலும் உங்களை எதிர்த்து போராடுவேன்
எனக்கு சக்தி உள்ளவரை உங்களை எதிர்த்து போராடுவேன்
எனது கடைசி மூச்சு உள்ளவரை உங்களை எதிர்த்து போராடுவேன்
பொய்களால் நீங்கள் கட்டிய கோட்டை இடிந்து விழும் வரை போராடுவேன்
பொய்யால் நீங்கள் வணங்கும் பிசாசு என் சத்திய தூதருக்கு முன்னால்
மண்டியிடும் வரை உங்களை எதிர்த்து போராடுவேன்.
சத்யமேவ ஜெயதே
சஞ்சீவ் பட்....
-------------------------------------------------
Here is the complete text:
Dear Shri. Modi,
I am glad you chose to write an open letter to the ‘Six crore Gujaratis’. This has not only afforded me a window to your mind but has also given me an opportunity to write to you through the same medium.
My dear brother, it seems you have completely misconstrued the judgement and order passed by the Honourable Supreme Court of India in Criminal Appeal No. 1765 of 2011 arising out of S.L.P. (CRL.) No. 1088 of 2008 viz. Jakia Nasim Ahesan & Anr. Versus State of Gujarat & Ors.
It is very likely that your chosen advisors have once again misled you and have in turn, made you mislead the ‘Six crore Gujaratis’ who look up to you as their elected leader.
Let me as a younger brother-Gujarati, help you decipher the Judgement and Order that has led to unequivocal gloating and jubilatory celebrations among some sections of the political spectrum. It has been stated in your letter that “One thing is apparent from the Supreme Court’s judgment. The unhealthy environment created by the unfounded and false allegations made against me and Government of Gujarat, after 2002 riots, has come to an end”. Let me clarify that even by a long shot, the order of the Honourable Supreme Court has nowhere, even remotely, suggested that the allegations contained in the complaint filed by Mrs. Jakia Jafri were unfounded or false. The truth is that the order of the Honourable Supreme Court is in fact, a very major leap in the direction of delivering justice to the hapless victims of the Gujarat pogrom. As you are well aware, Mrs. Jafri had approached the Honorable Gujarat High Court with a prayer for registering her complaint as an FIR. The said petition was disallowed by the Honourable High Court of Gujarat. Mrs. Jafri, therefore, approached the Honourable Supreme Court of India by way of a Special Leave Petition against the order of the High Court. The Honourable Supreme Court directed the SIT to look into her complaint and subsequently also directed the learned Amicus to examine the evidence collected by the SIT. At the end of this long and arduous exercise the Honourable Supreme Court has not only allowed the Appeal of Mrs. Jafri and directed the SIT to virtually treat the complaint of Mrs. Jafrri as an FIR, but has also directed the SIT to file a report under section 173(2) of the Cr.P.C. Let me clarify for your benefit and for the benefit of your Six crore brothers and sisters of Gujarat, that this report under section 173(2) of the Cr.P.C. is colloquially known as Charge-Sheet or Final Report. The honourable Supreme Court of India has also directed the SIT to place all the evidence collected by it, including the reports of the learned Amicus before the magistrate empowered to take cognizance. I am sure you will appreciate that in order to let the law of the land take its due course, this was the best option available to the Honourable Supreme Court as per the scheme of the Code of Criminal Procedure.
What the Honourable Supreme Court of India has given to Mrs. Jafri is much more than what she had originally prayed for. The order over which some of us are gloating in feigned glee, is in fact, a very cleverly worded order that takes the perpetrators and facilitators of the 2002 carnage a few leaps closer to their day of reckoning. The false bravado comes across as a very smart attempt to mislead the gullible people of Gujarat and instil a false sense of confidence in the political rank and file. Please be assured that we will see a very different picture as the actual import of the order starts settling in and takes judicial effect.
As one of the ‘Six Crore Gujaratis’, I feel deeply pained and cheated when the likes of you, consciously or inadvertently, mislead the people of Gujarat for ulterior motives. The theory propounded and practised to perfection by Paul Joseph Goebbels, one of Adolf Hitler’s closest associate and Reich Minister of Propaganda in Nazi Germany, can definitely work with the majority of the populace for some time.
But all of us know from historical experience that Goebbelsian Propaganda cannot fool all the people for all the time.
I fully endorse your realization that “Hate is never conquered by hate.” Who would know this better than you, who has served this State for the last one decade; and I, who has served in the Indian Police Service for the last 23 years. I had the misfortune of serving with you during those days of 2002 when the dance of hatred was choreographed and perpetrated at different venues in Gujarat. Albeit this is not the appropriate forum for me to discuss and reveal the details of our respective roles, I am sure that both of us will be getting ample opportunities before appropriately empowered fora to disclose our knowledge about the dynamics of hatred in the realpolitik of Gujarat. I hope you and your cronies, within and without the Government, will not hate me more for this.
But let me warn you that genuine heartfelt goodwill is something we cannot demand, buy or extort…we can only strive to deserve it. And it is not going to be an easy task. The land of the Mahatma is slowly but surely coming out of its hypnotic state.
As the most powerful person in Gujarat you may think that you do not need to feel accountable to the perceptions of all sections of the community. But believe me, history has proved time and again, that power without genuine goodwill is a path fraught with dangers…it is also a path of no return.
Samabhava is a condition precedent for Sadbhava. Governance by equity and goodwill should not only be the first article of your faith but should also be the last article of your creed.
The truth is more frequently than not, a little bitter and not very easy to swallow. I hope that you will take this letter in the true spirit in which it is written and you or your agents will not indulge in direct or indirect acts of retribution as is your wont.
In the words of Martin Luther King Jr. – Injustice anywhere is a threat to justice everywhere. The spirit of the hapless victims who have been struggling for justice in Gujarat may occasionally flag but it will not be supressed by any amount of false Goebbelsian propaganda. The struggle for justice is never easy anywhere in the world…it calls for everlasting patience and unfailing perseverance at all times. The spirit of the crusaders for truth and justice in Gujarat is epitomised in this poem by Bhuchung Sonam, an alumnus of M.S. University, Baroda.
I have principle and no power
You have power and no principle
You being you
And I being I
Compromise is out of the question
So let the battle begin…
I have truth and no force
You have force and no truth
You being you
And I being I
Compromise is out of the question
So let the battle begin…
You may club my skull
I will fight
You may crush my bones
I will fight
You may bury me alive
I will fight
With truth running through me
I will fight
With every ounce of my strength
I will fight
With my last dying breath
I will fight…
I will fight till the
Castle that you built with your lies
Comes tumbling down
Till the devil you worshipped with your lies Kneels down before my angel of truth.
May the kind God give you the requisite strength to be equitable and benevolent towards one and all!
Satyamev Jayate!
With best wishes.
Yours sincerely,
(Sanjiv Bhatt)


Saturday, June 22, 2019

அம்ஜத் அலி: இவருக்கு ஆறு பெண் குழந்தைகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரிக்ஷா ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் அம்ஜத் அலி. இவருக்கு ஆறு பெண் குழந்தைகள்: ஒரு ஆண் மகன். மனம் துவண்டு விடாத அம்ஜத் அலி ஆறு பெண் பிள்ளைகளையும் நன்கு படிக்க வைக்கிறார். காலா காலத்தில் பெண்ணுக்கு திருமணம் முடிக்காமல் இப்படி படிப்பு படிப்பு என்று பணத்தை வீணாக்குகிறாயே என்று பலரும் சொல்வதை இவர் பொருட்படுத்தவில்லை.
மூத்த பெண் முஸ்கான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிஸினஸ். மற்றொரு பெண் டோ பல்கலைக்கழகத்தில் ஹெல்த் சையின்ஸ். நான்காவது மகள் டிசிஎஃப் கல்லூரி. 13 வயது மகனும் படித்து வருகிறான்.
'எனது மன உறுதிக்கு தூண்களாக நிற்பது எனது மகள்களே. மகனோ, மகளோ அவர்களை நன்கு படிக்க வைத்து விட்டால் எந்த பேதமும் இல்லை. ஒரு முறை எனது இளைய சகோதரனோடு சொத்து தகறாரில் சிறைக்கு சென்றேன். எனது இளைய மகள் என்னை ஜாமீனில் கொண்டு வந்தார். உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இன்று என் மகள்கள் படிப்பது பெருமையாக உள்ளது. இதற்காக உதவிய தொண்டு நிறுவனங்களுக்கும் எனது நன்றி' என்று முடிக்கிறார் அம்ஜத் அலி.
இரண்டு பெண் குழந்தையை பெற்றாலே மூன்றாவது குழந்தையை வறுமைக்கு பயந்து கொன்று விடும் பலரை பார்க்கிறோம். இவர்களுக்கு மத்தியில் ஆறு பெண் குழந்தைகளையும் போராடி படிக்க வைத்துக் கொண்டிருக்கும் அம்ஜத் அலி ஒரு சிறந்த மனிதராகத் தெரிகிறார். .
மொழி பெயர்ப்பு : சுவனப்பிரியன்
தகவல் உதவி
சமா தொலைக்காட்சி
பாகிஸ்தான்


இறை வார்த்தையை மாற்று மதத்தினரும் ஓதும் போது...

இறை வார்த்தையை மாற்று மதத்தினரும் ஓதும் போது எவ்வளவு அழகாக உள்ளது!
குல்ஹுவல்லாஹு அஹத், அல்லாஹுஸ் ஸமத், லம் யலித் வலம் யூலத், வலம் யகுன் லஹு குஃபுவன் அஹத்
(அல்லாஹ் ஒருவன் என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை)
குர்ஆன்:112ஆவது அத்தியாயம்
நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), “ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?” என்று கேட்டார்கள். “(ஒரே இரவில்) எவ்வாறு குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்?” என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “குல் ஹுவல்லாஹு அஹத் (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ தர்தா (ரலி)
நூல்: முஸ்லிம் 1477


லத்தீன் அமெரிக்க நாடுகளில் இஸ்லாம்

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இஸ்லாம் போதிக்கும் ஓரிறைக் கொள்கை அந்த மக்களை மிகவும் ஈர்க்கிறது. இஸ்லாமிய சட்டங்களை பேணுவதில் மிக ஆர்வமாக உள்ளனர். பலர் குர்ஆனை மனனம் செய்கின்றனர். கத்தோலிக்க மதத்திலிருந்தே அதிகம் பேர் இஸ்லாத்தை ஏற்கின்றனர். புதிய வரவுகளை நாம் அன்போடு அரவணைப்போம்.


மாமிகளின் இந்த யோகா எந்த நிலை ?

மாமிகளின் இந்த யோகா எந்த நிலை என்பதை பாபா ராம்தேவ்தான் விளக்க வேண்டும். 


டெல்லியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்ததால், மதபோதகர் மீது தாக்குதல்


பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அப்துர் ராசிக் வழங்கிய சாட்சியம்.

தமிழ் மொழியில் - Tamil Dubbing
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அப்துர் ராசிக் வழங்கிய சாட்சியம்.
பாகம் - 01 
CTJ உருவாக்கத்தின் பின்னனி என்ன?


Thursday, June 20, 2019

அண்ணாவின் ஆரிய மாயை

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.
ஆரியத்துக்கு முன்பு இந்தியாவின் நிலை என்ன? ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை, இவற்றைப் பண்டைய ஆராய்ச்சி மூலம் சிறிது காலவரையறையுடன், கீழே காட்டப்பட்டிருக்கிறது. இவை சரித்திர ஆசிரியரான தோழர் P.T. சீனிவாச அய்யங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ”இந்திய சரித்திரம்’’ முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.
கி.மு. 5000 வரை இந்தியாவின் நிலை :
”ஆரியம் பரவுவதற்கு முன் இந்தியாவில் நான்கு வருண பேதங்கள் கிடையா. மண விஷயத்தில் ஆரியர்களின் யக்ஞ முறை அனுஷ்டிக்கப்படவில்லை. வட இந்தியாவில் பேசப்பட்ட பாஷைகள் கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்கிருதத்தில் கடன் வாங்கியதானாலும், தென் இந்தியா சமஸ்கிருதத்துக்கு அடிமைப்படவில்லை. இந்தியாவில் ஆரம்ப காலத்தில் பேசி வந்த பாஷை இப்போது கோதாவரி, வங்கம், விசாகப்பட்டினம் முதலிய இடங்களில் வசிக்கும் அதிக கல்வியறிவில்லாத மக்கள் பேசும் பாஷையாக இருந்திருக்க வேண்டும். அதனுடைய நாகரிக உருவந்தான் தமிழ் என்பது.”
இரும்புக்கருவிக் காலம் – கி.மு 5000 முதல் 3000 வரை :
”சமஸ்கிருதம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்து முன்பு தமிழ் பாஷையிலிருந்து இந்த நாட்டின் பண்டைய வாழ்க்கையைச் சித்தரித்து விடலாம். அக்காலத்தில் நால்வகை நில (முல்லை, நெய்தல், மருதம், குறிஞ்சி) மக்களே வாழ்ந்தார்கள். கிறிஸ்து சகாப்தம் ஆரம்பமாவதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன், தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்தான் (திராவிடர்), சால்தியன் (தற்பொழுது ஈராக் எனப்படும் பிரதேசங்கள்) நாகரிகத்துக்கு ஆதிகர்த்தாக்கள் என்று பல பாஷா பண்டிதர்கள் நினைக்கிறார்கள். பிரேதத்தை எரிக்கும் வழக்கம் ஆரியம் பரவியதற்குப் பிறகு ஏற்பட்டது. அம்மக்கள் (ஆரியரல்லாதார்) இமயம் முதல் குமரி வரையிலும், சிந்து (நதி) முதல் பிரம்மபுத்திரா (நதி) வரையிலும் பரவிக் கிடந்தனர்.
ஆரியக் கோட்பாடு, கி.மு. 3000 முதல் 1500 வரை :
”இக்காலத்தில்தான் தெய்வ வழிபாடு புதிய முறையொன்றை அடைந்தது. நெருப்பின் மூலம் கடவுளைத் தொழுதலே அம்முறை. இதை ஒப்புக் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும், ஒப்புக்கொள்ளாதவர்கள் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) என்றும் ஆனார்கள். தேவபாஷையாகிய சாண்டாசா (சமஸ்கிருதம்) பாஷையைத்தான் இந்தோ – ஐரோப்பிய பாஷையெனக் கூறுகிறார்கள்.
இந்த அக்னி வழிபாட்டையும் புதிய பாஷையையும் வடமேற்குக் கணவாய் வழியாய் இந்தியாவிற்கு வந்த அன்னியர்தாம் (ஆரியர்) கொண்டு வந்தனர் என ஐரோப்பியப் பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இவை, பிரயாகை (அலகாபாத்)யில் உண்டாயிற்று என்றுதான் தெரிகிறது.
கி.மு. 3000 முதல் 2000 வரை :
பர்க்கவாஸ், அகஸ்தியர் என்ற இரு ஆரியப் புரோகிதக் குடும்பங்கள்தான், தென்னிந்தியாவுக்கு ஆரியக்கலைகளைக் கொண்டு வந்து பரவச் செய்தன.
”மலையாளத்திலே, பிராமண காலனி (குடியேற்றம்)யும் உண்டாயிற்று. இராமாயண காலத்தில் (கி.மு. 2000) தென் இந்தியா, தஸ்யூக்களின் அல்லது இராஷதர்களின் (திராவிடர்) பலமான கோட்டையாக இருந்தது. அவர்கள் ஆரிய முனிவர்களின் யாகக் கிருத்தியங்களுக்கு விரோதமாக இருந்தார்கள். அந்த இராக்ஷதர்கள் (திராவிட) வட இந்தியரைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களாயில்லை. இக்காலத்தில் தென்னிந்தியாவில் பல ராக்ஷச ராஜ்யங்கள் இருந்தன. இவற்றுள் பெரியது கோதாவரி பள்ளத்தாக்கிலிருந்த ஜனாஸ் தானா என்ற இராஜ்யமாகும். டெக்கான் காடுகளென்னும் தண்டகாரண்யத்தில் (விந்தியமலைக்குத் தெற்கேயும், திருவேங்கட மலைக்கு வடக்கேயுமுள்ள பிராந்தியமாகக் கொள்ளலாம்), ஆரியர்களின் கொள்கைகள் பரவுவதைத் தஸ்யூக்கள் வெறுத்தனர்.
வர்ணாசிரமக் கொள்கையான பிராமணன் க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவை யாகங்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. விந்திய மலைக்கு வடக்கேயுள்ள பகுதியைப் புண்ணிய பூமியாகக் கருதி, அதற்கு ஆரிய ரிஷிகள் ஆரிய வர்த்தனம் என்று பெயரிட்டனர். அவர்களுக்கு விரோதமானவர்களை அந்த ரிஷிகள் தக்ஷண பாதாவுக்குத் (ஆரிய ஆதிக்கமில்லாத தண்டகாருண்யப் பிரதேசங்களுக்கு) துரத்தினர். தென் இந்தியாவிலுள்ள தஸ்யூக்கள் (திராவிடர்), பேர் பெற்ற வியாபாரிகள், அவர்களை ரிஷிகள், பணிக்கர் என்று அழைத்தனர். ஆரியர் வகுத்த நான்கு வருணங்களையும் சேராதவர்கள் தஸ்யூக்கள் எனப்படுவர்.
மகாபாரதக் காலத்திற்குப் பின் கி.மு. 1409 – 750 :
”கி.மு. 1500 -ல், பிராமணர்களின் நான்கு ஆசிரமக் (பிரம்மச்சாரிய, கிரகஸ்த, வானப்பிரஸ்த, சந்யாச நிலை) கொள்கை தலை நீட்டியது. பிராமணர்களுக்கு மட்டுமே பிறப்பு இறப்பு அற்ற மோக்ஷதானம் உண்டு என்ற கொள்கையும் பரவியது. உபநயனம் என்ற சடங்கும், முதல் மூன்று வர்ணத்தாருக்கு மட்டும்தான் என்று ஆயிற்று. பிராமணர்களே புரோகிதராகவும், அரசர்களுக்கு மந்திரிமார்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள்தான் அரசனை அடக்கி ஆதிக்கம் செய்தார்கள்.
“டவுனுக்குத் தென்புறத்திலே ஓர் இடம் உண்டு. அதில்தான் மன்னரின் தர்பார் நடக்கும். அந்தக் கூட்டத்தில் சொக்கட்டான் நடப்பதுண்டு. முதல் மூன்று வருணத்தார் மட்டுந்தான் அங்கு விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
கி.மு. 750 முதல் 320 வரை :
”இக்காலத்தில் மதம் மனித வாழ்வில் முக்கிய ஸ்தானம் பெறுகிறது என நினைத்து, அரசர்கள் புதிய மதங்களையும் உண்டாக்கி அரசாங்க வருமானத்துக்கு வகை தேடினார்கள். சந்நியாசிகள், அதிலும் பிராமண சந்நியாசிகள் மூலமாகத்தான் மோக்ஷம் கிடைக்குமென்ற புதிய கோட்பாடு உண்டானது. அதன் ஆரம்பந்தான் லிங்கம், சாளக்கிராமம் என்ற விக்ரக வணக்கமாகும். க்ஷத்திரியர்கள் சந்நியாசிகள் ஆவதற்கோ , பிராமணராகப் பிறக்காமல் மோட்சமடைவதற்கோ, ஆரிய மதத்தில் இடங்கிடையாது என்பதை உணர்ந்த இக்காலத்தில்தான், க்ஷத்திரியத் துறவு சமயங்களான சமணமும், பௌத்தமும் எழும்பின.
”பெளத்தர்கள் எழுதிய பாலி பாஷையும், சமணர்கள் (ஜெயினர் என்றும் கூறுவது உண்டு) எழுதிய அர்த்த மகதி பாஷையும், சமஸ்கிருத பாஷைக்குப் பரம விரோதிகளாகும். (பாஷையிலுங் கூட ஆரியர் – பௌத்த சமணத்தார்களுக்குப் பகைவர்கள் என்பது கவனிக்கத்தக்கது) புதிதாக எழுந்த பெளத்த – சமண மதங்களால் பிராமணர்களுக்கு மதிப்புக் குறையத் தலைப்பட்டது.
கி.மு. 320 முதல் 230 வரை :
”இந்தியா பூராவும் மெளரிய அரசர்கள் ஆட்சி செலுத்தினாலும், தமிழர் இனம் மட்டும், அந்தச் சக்கரவர்த்திகளின் ஆதிபத்தியத்தில் வரவில்லை. மூவேந்தர்கள் ஆட்சியில் தமிழக வாணிபம், ஆரியமயமாக்கப்பட்ட வட இந்திய ராஜ்யங்களுடனும், மேற்கே பாரசீகம் (பெர்சியா) எகிப்து, அரேபியா, கிரீஸ், தமிழில் யவன நாடு ஆகிய தேசங்களுடனும், கிழக்கே பர்மா (சுவர்ண பூமி என்று கூறுவர்) மலேயா, ஜாவா (சாவகம் என்றும் பெயர்) சுமத்திரா, சீனம், சீபம் (சயாம் என்பார்கள் ஆங்கிலத்தில்) ஆகிய தேசங்களுடனும் நடைபெற்றது.
படிக்க:
 மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !
 ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவோம் – காந்தியின் பேரன் !
”பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் மன்னர்கள் அரண்மனைகளில், பிராமணர்கள் செல்வாக்கடைய ஆரம்பித்தார்கள். பிராமணர்களின் யாக முறைகளில் ஆசை பிறந்தவுடன், அவர்கள் உண்டாக்கிய சந்திர சூரிய வம்சத்தில் தாங்களும் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் வேட்கையும் பிறந்தது சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு. அகஸ்திய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் தமிழ் பாஷையைக் கற்றுக் கொண்டு, தமிழ் பாஷைக்கு ஐந்திர சிஸ்டத்தில் சமஸ்கிருத இலக்கணத்தை உண்டாக்கினார்கள். அரசன் ஆரியக் கோட்பாட்டில் மயங்கினாலும் தமிழ்ப் பொதுமக்கள் ஆரிய மத சமூக வலையில் அகப்பட்டார்களில்லை.
கி.மு. 230 முதல் கி.பி. 300 வரை :
”கி.பி. 150 -ல் பிராகிருத மொழி போய், சமஸ்கிருதம் அரசாங்க பாஷையாகியது வடநாட்டில். இக்காலம், பல்லவர்கள் மாளவ தேசத்தை ஆண்ட சமயம். காஞ்சியை ஆண்ட ஆரியமயமாக்கப்பட்ட பல்லவர்களே கி.பி. 200-க்கு முன் தமிழ்நாட்டில் பிராகிருத மொழியை உத்தியோக பாஷையாக்கினார்கள். வட இந்தியாவில் இருந்த அரசியல் முறையைத் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள். தமிழ் அரசர்களும் ஆரியத்தைப் பின்பற்றி, இராஜ சூய யாகம் முதலியன செய்ய ஆரம்பித்தனர். இராமாயணமும், பாரதமும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. மனுதர்ம சாஸ்திரம் வட இந்தியாவின் கீழ்ப்பகுதியில்தான் எழுதப்பட்டது! (இதனால் இம்மூன்று நூற்களும், அவற்றிற் பிறந்த கிளை நூற்களும், தமிழகத்துக்குப் புறம்பானவை என்பது பெறப்படுகிறது)
-------------------------------------------
ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.


Wednesday, June 19, 2019

வீடுகளில் மழைநீர் சேகரிப்பது எப்படி? | செயல்முறை விளக்கம்


தண்ணீர் பற்றாக்குறை - இந்த முயற்சி எடுக்கலாம்

இப்பொழுது உள்ள தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது நாம் அனைவரும் இந்த முயற்சி எடுக்கலாம் இதோ வீடியோ பதிவு உங்களுக்காக👆🏾 நாம் இதில் மழைநீரை சேகரிக்கலாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத முன்கூட்டி விழிப்புணர்வு பதிவு
பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில்......

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிராமணர் அல்லாதோர் படுத்து புரண்டால் பாவம் தீரும் என்று சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை நம்பி அறியாமையின் உச்சத்தில் மக்கள் புரளுவதைப் பாருங்கள்.
இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் மலிந்துள்ளதால்தான் சுய மரியாதையுடைய மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள். முதலில் இது பொன்ற மூட நம்பிக்கைகளை களைய பாருங்கள் சங்கிகளே... பிறகு இஸ்லாத்தின் பக்கம் நீங்கள் வரலாம்.
ஆதாரத்துடன் வீடியோ.


Monday, June 17, 2019

உண்மையான காவலர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.

மெக்காவில் வழி தவறி காலில் செருப்பின்றி ஒரு மூதாட்டி வெயிலில் தவித்துக் கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்த காவலர் தனது ஷூவை அந்த மூதாட்டிக்கு கொடுத்து அவரது இருப்பிடத்தில் சேர்க்கிறார். உண்மையான காவலர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.


Sunday, June 16, 2019

தூய்மை பணியில் உள்ளவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

தூய்மை பணியில் உள்ளவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

வெயில், மழை, குளிர் என்றும் பாராமல் நகரங்களை தூய்மையாக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை கண்ணியப்படுத்தும் முகமாக சவுதி அரேபியால் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களை அமர வைத்து பெரும் கோடீஸ்வரர்கள் தங்கள் கைகளால் உணவு பரிமாறினர். அன்பளிப்புகளையும் பெருநாள் தினத்தன்று அள்ளி வழங்கினர்.  இஸ்லாத்தின் கட்டளைகள் அந்த அளவு சவுதி மக்களை ஆட்கொண்டுள்ளது.

நமது நாட்டில் இவ்வாறு துப்புறவு தொழில் செய்பவர்களை 'தோட்டிகள்' என்று தனி சாதியாக பிரித்து அவர்களை நம்மோடு நெருங்கக் கூட விடுவதில்லை. அவர்களோடு இந்துக்கள் திருமண உறவுகளையும் வைத்துக் கொள்வதில்லை. இந்த நிலை மாற வேண்டும். சவுதி போன்ற சம நிலை நமது இந்தியாவிலும் ஏற்பட வேண்டும்.


நாத்திகம் மக்களுக்கு மன அமைதியை தருவதில்லை

ரஷ்யாவில் நாளுக்கு நாள் பள்ளி வாசலுக்கு வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அரசு புதிதாக பள்ளிவாசல்கள் கட்ட பல முட்டுக் கட்டைகள் போட்டாலும் பள்ளிவாசல்களின் தேவை அதிகரித்த வண்ணமே உள்ளது.
கம்யூனிஷ ரஷ்யாவில் இஸ்லாம் வளர்வதை கம்யூனிஷ்டுகள் விரும்பவில்லை என்றாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை.
நாத்திகம் மக்களுக்கு மன அமைதியை தருவதில்லை. இறை வணக்கமே மனிதனுக்கு மன நிம்மதியை தரும் என்பதை இந்நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.