Followers

Saturday, August 30, 2014

லூஸி - அமெரிக்க பெண்மணியின் உணர்வுபூர்வமான மனமாற்றம்!லூஸி என்ற இந்த அமெரிக்க பெண்மணி இஸ்லாத்தை ஏற்கிறார். உறுதி மொழி எடுக்கும் போது தன்னையறியாமல் அழுகிறார். இறை வேதத்துக்கும் அதன் உண்மைத் தன்மைக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வாறு அவர்கள் முதன் முதலாக உறுதி மொழி எடுக்கும் போது உடலில் இனம் புரியாத ஒரு உலுக்கல் எடுக்கிறதாக சொல்கின்றனர். இதனை பலரும் சொல்லக் கேட்டுள்ளேன். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து விட்டதனால் அந்த உணர்வை என்னால் உணர முடியாது. ஆனால் அந்த பெண்ணின் உணர்வை என்னால் உணர முடிகிறது.

உறுதி மொழியை ஒவ்வொரு படியாக சொல்லிக் கொடுக்கும் சகோதரர் யூசுபை நான் ரியாத்தில் வைத்து சந்தித்துள்ளேன். ஹாஸ்யமாக பேசக் கூடியவர். கை குலுக்கி 15 நிமிடங்கள் இவரிடம் பேசிக் கொண்டும் இருந்தோம். எதையுமே ஹாஸ்யமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர். எந்த நேரமும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். ஒரு அழைப்பாளனுக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்பு இது. இவர் அமெரிக்க தேவாலயத்தில் ஃபாதராக பணிபுரிந்தவர். குர்ஆனை விளங்கி சில ஆண்டுகளுக்கு முன்புதான் இஸ்லாத்தை ஏற்றார். இன்று இவர் மூலம் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Friday, August 29, 2014

நமது தேசிய கீதத்தின் பொருளை தெரிந்து கொள்வோமா!ஜன கன மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

இந்தியத் திரு நாடே! இந்திய மக்களின் வாழ்வுக்குக் காரணமான
நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்
மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்,

வங்காளத்தையும், இன்பத்தால் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது;
யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது;

இந்தியக் கடலலைகளால் போற்றப்படுகிறது:.
அவை உனது பெருமையை போற்றுகின்றன: நின் புகழைப் பரப்புகின்றன.
இந்தியர்களின் வாழ்வுக்குக் காரணமான என் தாய் நாடே...
உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

தகவல் உதவி: விக்கி பீடியா

நமது தேசிய கீதத்தை கென்யர்கள் பாடினால் எப்படி இருக்கும்? :-)


பாவம் இந்த அரசியல் பிள்ளையார்!பாவம் அந்த பிள்ளையார்!
------------------------------------------

மிகச் சரியாக நினைவில் இருக்கிறது. இதேப்போன்ற ஒரு விநாயகர் சதுர்த்தியின் மழை நாளில் தான் அந்த சம்பவம் நடந்தது.

பத்தாண்டுகள் இருக்கும். அப்போது `மும்பை தமிழ் டைம்ஸ்’ நாளிதழில் உதவி ஆசிரியராக பணியிலிருந்தேன். அன்றைய பணி முடிந்து நானும் அலுவலக சகாக்கள் இருவரும் தாதர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தோம். நேரம் இரவு மணி பத்தரை இருக்கும். லைட்டாக மழை தூறிக் கொண்டிருந்து.

தாதர் ரயில் நிலையத்தில் எல்லா நாளும் கூட்டம் அள்ளும். அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் அழகான குட்டி பிள்ளையார் சிலைகளை தங்கள் பகுதிக்கு ரயில் கொண்டு செல்ல காத்திருந்தனர்.

சில நிமிடத்தில் சர்ச்கேட் டூ போரிவலி ரயில் வந்தது. சிலைகளை வைத்திருந்த குரூப் ஒன்று முண்டியடித்து ஏறியது. அவர்களுக்குப் பின்னாடியே என் சகாக்கள் இருவரும் ஏறிவிட்டிருந்தனர்.

நான் மட்டும் கூட்டம் உள்ளே போகட்டும். வாசல் ஓரம் நின்றுக் கொள்ளலாம் என்று வாசலை ஒட்டி இருந்த சிறு கைப்பிடியை பிடித்துக் கொண்டு ரயிலில் ஒரு காலும் பிளாட்ஃபார்மில் ஒரு காலும்வைத்தபடி நின்று கொண்டிருந்தேன்.

ரயில் கிளம்புவதற்கான `பூம்ம்ம்ம்ம்ம்..’ அலாரம் ஒலித்தது. மெதுவாக ரயில் நகர ப்ளாட்ஃபார்மிலிருந்த எனது காலை எடுத்து ரயில் வைக்க முயன்றபோதுதான் அந்த சம்பவம் நடந்தது.

மெலிந்த உடலும், பரட்டை தலையும், தாடியும், அழுக்கு உடையுமாக இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் ரயிலின் உள்ளிருந்த கூட்டத்தை பிளந்தபடி மிதித்து தூக்கிவீசப்பட்டார்.

ஒரு கணம் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஓடும் ரயிலில் இருந்து ஒருவர் மிதித்து வீசப்பட்டது நிஜம்.

விழுந்த நபர் கூட்டத்துக்கு நடுவே அப்படியே சுருண்டு கிடந்தார்.

யார் அந்த நபர்.. உள்ளே என்ன நடந்தது எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் யாரோ ஒருவரை ஓடும் ரயிலிருந்து மிதித்து தள்ளியிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

கோபத்துடன், "அரே க்யூம் அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்கா..” (ஏன் இப்படி அடிச்சு வீசுறீங்க.. அந்த ஆள் செத்துப்போவான்” ) என்று சத்தம் கொடுத்தேன்.

அவ்வளவுதான்.. அடுத்த நொடி,

`` ஆய்லா.. கோன் ஆய்ரே த்தோ.. “ (..த்தா.. யார்ல அது..)
என்று உள்ளிருந்து தடித்த குரல் ஒன்று வந்தது.

குரல் மிதித்து தள்ளியவனுடையதுதான். 40 வயது இருக்கும். மராட்டியர்களுக்கான பாரம்பரிய வெள்ளை உடையுடன் ஆள் வேறு பார்க்க கொஞ்சம் `பல்க்காக’ இருந்தான்.

கூடவே அவனுக்கு ஆதரவாக இருக்கையில் உட்கார்ந்திருந்த குஜராத்தி, மார்வாடிகள் வேறு குரல் எழுப்பினார்கள். அவர்கள் எப்போதுமே அப்படிதான்.. சண்டைபோட மாட்டார்கள்.. வெட்ட மாட்டார்கள்.. குத்தமாட்டார்கள். ஆனால் மத கலவரத்தை பின்னிலிருந்து நன்கு ஊதி பெருசாக்குவார்கள்.

கேள்வி எழுப்பியது நான் தான் என்பதை பார்த்துவிட்டான் அந்த தடியன்.. பதுங்கவும் முடியாது. எதிர்த்து நின்றால் அடுத்து ரயில் நிலையத்தில் மிதித்து தள்ளப்படப்போவது நானாகக்கூட இருக்கலாம். வேறு வழியில்லை.. இந்த இடத்தில் பம்ம வேண்டும் என்று என் ஏழாம் அறிவு எச்சரித்தது.

இந்த ரகளை நடந்து கொண்டிருக்கும்போது என்னுடன் வந்த சகாக்கள் இருவரும் கூட்டத்துக்கு நடுவில் குனிந்து தலையை மறைத்து எஸ்ஸாகியிருக்க கூடும்.

கொழுப்பெடுத்துப்போய் கேள்வி கேட்ட குற்றத்திற்காக நான் அடிவாங்கலாம். கூட வந்த பாவத்திற்காக அவர்கள் அடி வாங்க முடியாதில்லையா..

என்னை நோக்கி முன்னேறி நகர்ந்து வந்த அந்த நபரை நோக்கி,

`` பாய்.. அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்ஹாதோ க்யா கரேகா தும்..” என்றேன் குரலை தாழ்த்தியபடி..

(அண்ணே.. இப்படி மிதிச்சு தள்ளுறீங்களே.. அவன் செத்துப்போனா என்ன பண்ணுவீங்க..)

அந்த தடியன் அதற்கு பதில் சொல்லாமல் முறைத்தபடி, `

` தூ கோன் ஆய்ரே..” என்றான். ( நீ யார்ரா..)

அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும். ஒரு மதபோதை ஏறியவனின் கண்களை நீங்கள் நேருக்கு நேராக சந்தித்திருக்கிறீர்களா.. நான் பார்த்தேன்.. அவன் கண்களில் அத்தனை வெறி.

அந்த முரடன் மராட்டியன் என்பது தெரிந்ததால்,

`` மீ... பிரஸ்ச்சா மானூஷ்..” என்று மராட்டியில் பதிலளிக்க ஆரம்பித்தேன்.

பிரஸ் என்றதும் அவன் மூர்க்கம் லைட்டாக குறைந்தது. ஆனால் குரலின் கடுமையை குறைக்காமல், '' பிரஸ் மஞ்சே காய்பன் போல்னார் காய்.. குட்சா பிரஸ்?” ( பிரஸ்னா என்ன வேணும்னாலும் சொல்வியா .. எந்த பத்திரிகை?) என்று அடுத்த கேள்வியை கேட்டான்.

அப்போதுதான் என் `மீடியா புத்தி’ கூடுதலாக வேலை பார்க்க ஆரம்பித்தது. சும்மாவே வட இந்தியர்களுக்கு தமிழர்கள் மீது ஒரு எரிச்சல் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் இழிவு படுத்துவார்கள்.

அதனால் தமிழ் டைம்ஸ் என்று தமிழ் பத்திரிகை பெயரை சொல்லாமல், எங்கள் குழுமத்திலிருந்து வெளிவரும் மராட்டி பத்திரிகையானா `மும்பை சவ்ஃப்பர்’ என்ற பெயரை குறிப்பிட்டேன்.

மராட்டியர்கள் அதிகம் படிக்கும் பத்திரிகை அது. அவனும் அதன் வாசகனாக இருந்திருக்க கூடும் என நினைக்கிறேன். கொஞ்சம் கூலாகிவிட்டான்.

`` அரே.. அப்லா சவ்ஃப்பர்ச்சா மானூஷ் ஆய்..
கசா.. அசா போல்தே துமீ..

தோ பாஹல் அப்லா கண்பத்திலா
டச் கேலே.. மாய்த்தே காய்..

தெஜா சாட்டி மீ மார்லே..” என்று சொல்லிவிட்டு இருக்கையை நோக்கி நகர்ந்து சென்றுவிட்டான்.

நடந்த விசயம் இதுதான்..

அந்த பிச்சைக்காரர் இருக்கையில் படுத்து கொண்டு வந்திருக்கிறார். இவர்கள் உள்ளே நுழைந்த வேகத்தில் அவரை தட்டி எழுப்பியிருக்கிறார்கள். அப்போது பதறி எழுந்ததில் அந்த பிச்சைக்காரரின் கை தடியன் கையில் வைத்திருந்த பிள்ளையார் சிலை மீது பட்டுவிட்டது.

பிள்ளையார் சிலையை தொட்டுவிட்டான் என்ற ஒற்றை காரணத்திற்காகதான் அந்த பிச்சைக்காரர் மிதித்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறார்..

சிலையை ஒரு பிச்சைக்காரன் தொட்டுவிட்டான் என்ற அல்ப காரணத்திற்காக ஓடும் ரயிலில் இருந்து ஒருவரை மிதித்து தள்ள மனம் வர முடியுமா என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. என்ன செய்வது என்று தெரியவில்லை.

ரயில் வேகமெடுக்க ஆரம்பித்திருந்தது.. அமைதியாக வாசல் ஓரம் நகர்ந்து வெளியே எட்டிப்பார்த்தேன்..

ரயிலிலிருந்து மிதித்து தள்ளப்பட்டு ப்ளாட்ஃபார்மில் பரிதாபமாக விழுந்து கிடைந்த பிள்ளையாரை சிலர் கைதூக்கி எழுப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா
29-8-14

-------------------------------------------------------

விநாயகர்

வங்கியின் முன்னால்
செல்வ விநாயகர்

நீதிமன்ற வளாகத்தில்
நீதி தரும் விநாயகர்

மருத்துவ மனையில்
வினை தீர்க்கும் விநாயகர்

வழியோரங்களில்
வழிவிடும் பிள்ளையார்

குளத்தங்கரையில்
அரச மரத்துப் பிள்ளையார்

அவரவர் இடத்தில்
அகலாமல் இருந்தனர்

நேற்று
ஆயுதப் படை சூழ
ஊர்வலமாக வந்து
கடலிலே கரைந்தார்
அரசியல் பிள்ளையார்!

கவிதை ஆக்கம்: சத்தியமா நானில்லை :-)

அன்று யாரோ! ஆனால் இன்று அப்துல் குத்தூஸ்!எல்லாப்புகழும் இறைவனுக்கே!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் எழுச்சியை சாலையில் கண்டேன்:

ஆம்! இவர் பெயர் அப்துல் குத்தூஸ். தொண்டியை பிறப்பிடமாக கொண்டவர், அந்தநாளில் பி.யு.சி (P.U.C) படித்தவர். ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவியவர். இன்று நிலக் கடலை வண்டி இழுத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். இவரை தற்செயலாக தொண்டி அருகேயுள்ள உப்பூர் என்ற கிராமத்தில் சந்தித்தேன்.

அந்த நாளில், அதாவது இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் பல சிறந்த தலைவர்களின் வரலாற்று நூல்களைப் படிப்பது இவரது அன்றாட வழக்கம். அப்படி படித்துக் கொண்டிருக்கும் போது தான் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், இஸ்லாமிய வணக்க வழிமுறைகளும் இவர் கைகளுக்கு கிடைத்தன. அல்லாஹ் மிகப் பெரியவன், அவன் தான் உள்ளத்தை நொடிப் பொழுதில் திருப்புபவனாச்சே! திருப்பி விட்டான் இவர் உள்ளத்தை. தழுவினார் இஸ்லாத்தை, வணங்கினார் அல்லாஹ்வை, வாழ்கிறார் இஸ்லாமிய அடிப்படையில். அல்ஹம்து லில்லாஹ்.(எல்லாப்புகழும் இறைவனுக்கே!)

அவர் சொன்ன மற்றொரு சிறப்பு தகவல் என்னவென்றால்! "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குரான், ஹதீஸ் அடிப்படையில் பதில் சொல்லுவது என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த உதவியாக உள்ளது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கும், படிக்காத பாமரனுக்கும் விளங்கும் வகையில் பி.ஜைனுல் ஆபிதீனின் பதில் சொல்லும் விதம், அந்த மக்களுக்கு எளிதில் புரியும் விதமாக இருப்பதோடு, அந்த சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் பால் வருவதற்கு வகை செய்வதாகவும் அமைந்துள்ளது: எனக்கும் ஒரு வாய்ப்பையும் தந்தது" என்று தன் மனதில் உள்ளதை சொல்லுகிறார்.

இன்று தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தின் பணிகள் உலகளாவிய அளவில் இருப்பதை நாம் பெருமிதத் தோடு சொன்னாலும், மேலதிகமாக இவர்களைப் போல் பட்டி தொட்டி எல்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் சென்று அடைந்தது கொண்டுதான் இருக்கிறது என்பதை நினைக்கும் போது! அல்ஹம்து லில்லாஹ்(எல்லாப்புகழும் இறைவனுக்கே)! அல்லாஹ் மிகப் பெரியவன்.

இருப்பினும் நாம் மறுமையின் பலன் கருதி, இன்னும் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை அனைத்து மக்களிடமும் சென்றடைய பாடுபடுவோம். இதன் கூலி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கிடைக்கும்.

S.L.நசீருதீன் - நன்றி புகைப்படம் தினத்தந்தி : 30.12.2009: இராமநாதபுரம் மாவட்ட செய்திகள் பக்கம் 13

இந்த அளவு பிஜேயின் பேச்சும் எழுத்தும் சாமானய மக்களை சென்றடைந்து கொண்டிருக்க தமிழகத்தில் இதனால் பாதிப்படைந்த பலரும் ஒன்று கூடி இவரை எதிர்ப்பதையே முழு நேர பணியாகக் கொண்டிருக்கின்றனர். நேற்று ஒரு பெண்மணி 'ஈஸ்வரும் அல்லாவும் ஒன்று என்று வாழ்ந்து வரும் எங்களை பிஜே பிரிக்க பார்க்கிறார்' என்று அபாண்டமாக பழி சுமத்தி அவரை அசிங்கமாக திட்டுவதையும் பார்த்து மனம் வேதனைபட்டது. பாதிக்கப்பட்ட புரோகிதர்களெல்லாம் ஒன்று கூடி கூலிக்கு ஆட்களை அழைத்து வந்திருப்பதையும் பார்க்க முடிந்தது. அந்த அம்மணிக்கு தலையில் முக்காட்டை போட்டு விடுவதற்கு கூட ஒரு பெண்மணி தேவைப்படுகிறார். தவ்ஹீத் ஜமாத்தின் அளப்பெரும் பணியினால்தான் இந்துத்வாவாதிகள் தங்களின் செயல்பாடுகளை தமிழகத்தில் சுருக்கிக் கொண்டுள்ளார்கள்: தீவிரவாதம் மட்டுப்படுத்தவும் பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பல இந்துக்களின் கசப்பான எண்ணங்களை மாற்றியமைத்ததை கண் கூடாக கண்டோம். ரத்த தானத்தில் தமிழகத்திலேயே பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து மனித நேய சேவையை செய்து வருகிறோம். தீவிரவாத எதிர்ப்புக்கு எதிராக இன்று தினமும் பிரசாரம் செய்து வருகிறோம். நமது ஒற்றுமையால் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியரை தாக்கிய ஒரு போலீஸ் அதிகாரியை கண்ணியமாக எடுத்துரைத்து இட மாற்றம் செய்ய வைத்துள்ளோம். இந்த ஜமாத்துக்கு அரசும் எந்த அளவு மரியாதை கொடுக்கிறது என்பதை இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. காசுக்கு அடிபணியாத கூட்டம் இந்த தவ்ஹீத் ஜமாத் என்பதை முதல்வர் ஜெயலலிதாவும் நன்றாக உணர்ந்துள்ளார். 7 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட பேரியக்கம் என்று அவர் வாயாலேயே சொல்வது என்பது அவ்வளவு லேசுபட்ட காரியம் அல்ல.

இது போன்ற எதிர்ப்புகள் தவ்ஹீத் ஜமாத் மேலும் வலுவூன்ற துணையாகத்தான் இருக்குமே யொழிய பாதிப்பை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இவர்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டு நம்மை தரம் தாழ்த்தி கொள்ளாமல் ஆக்கபூர்வ பணிகளில் நம் சகோதரர்கள் ஈடுபடுவார்களாக. தமிழகத்தில் பிரபலமாக பிஜேயை திட்டினால் போதும் என்ற மனப்போக்கு பலரிடம் உள்ளது. அதற்கு நாமும் களம் அமைத்துக் கொடுக்க வேண்டாம்.

கண்ணை மூடிக் கொண்டு இவரைப் பின்பற்ற சொல்லி நான் கோரிக்கை வைக்கவில்லை. மனிதன் என்ற முறையில் இவரிடமும் தவறுகள் வரலாம். அதனை கண்ணியமாக சுட்டிக் காட்டுங்கள். பல முறை திருத்திக் கொண்டுள்ளார். இதுதான் ஆக்கபூர்வமான வேலை. உண்மையான முஸ்லிம் அதைத்தான் செய்வான். அதை விடுத்து அவருடைய ஒளி நாடாக்களை அங்கும் இங்கும் ஒட்டி வெட்டி பொய்களை பரப்புவது அவர் சொல்லாததை சொன்னதாக பரப்புவது நயவஞ்சகர்களின் வேலை. அதனை நாம் செய்ய வேண்டாம். இறைவனுக்கு பயந்து கொள்வோம்.

இன்று சவுதி அறிஞர்கள் மத்தியிலும் பிஜேயின் பல கருத்துகள் விவாதப் பொருளாக மாறி வருவதைப் பார்க்கிறோம். ஒரு தமிழனின் ஆக்கங்கள் மதினா பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன். இவரின் பல புத்தகங்கள் உலகின் பல மொழிகளில் சவுதி அரசினால் மொழி பெயர்க்கப்பட்டு பல நாடுகளுக்கும் இலவசமாக அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளது. நாத்திகத்தின் பக்கம் சென்று கொண்டிருந்த என்னை அழைப்பு பணி செய்யும் ஊழியனாக மாற்றியது பிஜேயின் எழுத்துக்களும், பேச்சும் என்றால் மிகையாகாது. இவரின் தவ்ஹீத் பணி எந்த தொய்வுமின்றி மேலும் பல சிகரங்களைத் தொட இறைவனிடம் பிரார்த்திப்போம்.

Thursday, August 28, 2014

ஹஜ் பயணிகளின் முதல் குரூப் மதினாவை வந்தடைந்தது!ஹஜ் பயணிகளின் முதல் குரூப் மதினாவை வந்தடைந்தது!

ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டுக்கான ஹாஜிகளின் முதல் க்ரூப் மதினாவை வந்தடைந்தது. இந்த முதல் க்ரூப்பில் 235000 (இரண்டு லட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) பேர் நலமுடன் வந்திறங்கினர். இவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் பங்களாதேஷத்தைச் சார்ந்த ஹாஜிகளாவர். இந்த ஹாஜிகளை சவுதி அரசு அதிகாரிகளும், இந்திய தூதரக அதிகாரிகளும் இன்முகத்தோடு வரவேற்று உபதேசித்தனர்.

கல்கத்தா, நியூ டெல்லி, லக்னோ, ஸ்ரீநகர், மேங்களூர், டாக்கா போன்ற நகரங்களிலிருந்து ஏர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் விமானங்கள் விமானங்கள் தொடர்ந்து ஹாஜிகளை இறக்கிக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு கிடைக்கும் அன்பான உபசரிப்பு எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது என்று ஹாஜிகள் சந்தோஷத்தோடு செய்தியாளர்களிடம் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

'ஹஜ் வெல்ஃபேர் பாஃர்ம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அனைவருக்கும் தண்ணீர், பேரித்தம் பழங்களை கொடுத்து உபசரித்தனர். அவர்களின் தேவைகளை வலிய சென்று கேட்டு பூர்த்தி செய்து கொடுத்தனர். மூன்று வேளை உணவுகளும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. சுங்க நுழைவு பரிசோதனையும் இந்த முறை மிக சுலபமாக முடிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதில் அவர்களைப் பற்றிய முழு விபரமும் மற்றும் அவர்கள் தங்கியுள்ள விடுதியின் விலாசமும் அரபியிலும் ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டிருக்கும். வழி தவறி விடுபவர்களை தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் அடையாளம் கண்டு உரிய இடத்தில் சேர்ப்பிப்பதற்கு இந்த அடையாள அட்டை மிக உதவிகரமாக இருக்கும்.

சவுதி ஏர்லைன்ஸூம், ஏர் இந்தியாவும் இந்த வருடம் 360 விமானங்களை ஹஜ்ஜூக்காக உபயோகப்படுத்துகிறது. மொத்தம் 100020 ஹாஜிக்கள் அரசு அனுமதியோடு அழைத்து வரப்படுகின்றனர். மேலும் 36000 ஹாஜிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் அதிக பணம் கட்டி அழைத்து வரப்படுகின்றனர்.

ஹஜ் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் முஹம்மத் மர்கலானி, மற்றும் மேஜர் ஜெனரல் முஹம்மது அப்துல்லா பராவி சவுதிக்கான இந்திய தூதர் போன்ற முக்கியஸ்தர்கள் ஹாஜிகளை விமான நிலையத்தில் வரவேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ஹாஜிகள் அனைவருக்கும் முஸல்லா (தொழுவதற்கான பாய்) மற்றும் சில அன்பளிப்பு பொருள்களும் வழங்கப்பட்டன.

தகவல் உதவி
சவுதி கெஜட்
28-08-2014

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும்
'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றும்
ஒருமித்து சொல்ல உலகெங்கிலிருந்தும்
புறப்பட்டு விட்டது எங்கள் புரட்சிப்படை!

ஓசையற்ற கல்லை நீர் உடைத்து உருக்கள் செய்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீருஞ் சாற்றுறீர்
வாசலில் பதித்த கல் மழுங்கவே மிதிக்கிறீர்
ஈசனுக்கு உகந்த கல் இரண்டு கல்லுமல்லவே

நட்டு வைத்த தேவரும் நடாது வைத்த தேவரும்
சுட்டு வைத்த தேவரும் சுடாது வைத்த தேவரும்
இட்டு வைத்த இடத்தை விட்டு எழுந்திராத தேவரை
வட்டமிட்டு மாந்தர்கள் வணங்குமாறு எங்கனே!

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திர மேதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையிலே
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

இஸ்லாத்தின் கட்டளைகளை இனிதாக கூறிய
சிவ வாக்கியரின் சத்தியமான வார்த்தைகளை
சிலாகித்துக் கூறுவதற்கென்றே இந்த வருடமும்
புறப்பட்டு விட்டது எங்கள் புரட்சிப் படை!

மாற்று மதத்தவர்களுக்கான நிகழ்ச்சி - ரியாத்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!

இறைவன் நாடினால்.... எதிர் வரும் 29/8/2014 அன்று இரவு 7 மணிக்கு மேல் பத்தாஹ் ரமாத் ஹோட்டலில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களுக்குத் தெரிந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களை உடன் அழைத்து, தாங்களும் வந்து கலந்து சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

"பார்பனியம் எப்போது இளையராஜாவை ஒதுக்கியது"?

//பார்பனியம் எப்போது இளையராஜாவை ஒதுக்கியது?//

நான் யுவன் சங்கர் ராஜா சம்பந்தமாக வெளியிட்ட கவிதைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாக்கரிலும் முகநூலிலும் 'பார்பனியம் இளையராஜாவை எங்கு ஒதுக்கியது?' என்று பலரும் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக இந்த பதிவு அமைகிறது.2009 யில் தனது 75-வது பிறந்த நாள் விழாவில் காஞ்சி ஜெயேந்திரர். நால்வருக்கு விருது வழங்கினார் அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ண மூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் போன்ற மூவருக்கும் சேர்த்து இந்த விருதுகள் வழங்கப்பட்டது..

இதில் என்ன இருக்கிறது? விருது தானே! இது எல்லோருக்கும் வழங்குவதுதானே என்றால்! அது தப்பில்லை, அது பொதுவான விசயம். ஆனால் இதில் பேசப்படவேண்டிய விசயம் என்னவென்றால் காஞ்சி ஜெயேந்திரர் தீட்டு பட்டு விடும் என்பதற்காக தான் தொடாமலேயே தனது உதவியாளர் கையால் அந்த விருதை வழங்கி இருக்கிறார் என்பது தான் முக்கியமான விசயம்.

மற்ற மூவரும் மேல் சாதிக்காரர்கள். ஆனால் இளையராஜா தாழ்ந்த சாதியை சேர்ந்தவர். மூன்று பேருக்கு மட்டும் தொட்டு விருது வழங்கி விட்டு இளையராஜாவை ஒதுக்கினால் அது பெரும் பிரச்னையாகி விடும் என்று யோசித்தார் ஜெயேந்திரர். உடனே தனது உதவியாளரை அழைத்து அவர் கையாலேயே நால்வருக்கும் பொதுவாக விருதை வழங்க வைத்து விட்டார். விருதும் வழங்கியாகி விட்டது. ஆச்சாரமும் காப்பாற்றப்பட்டு விட்டது. வெளி உலகின் ஏசுதலுக்கும் முற்றுப் புள்ளியும் வைத்தாகி விட்டது.

சம்பந்தப்பட்ட இளையராஜா பெருந்தன்மையோடு இந்த அவமானத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம். இது விருது கொடுத்தவர்களுக்கு அசிங்கம் இல்லையா? தொட்டால் தீட்டு என்ற ஜாதி அடிப்படையில் பாகு பாடு பார்த்து இந்த விருது வழங்கி இருக்கிறார் இந்த பார்பனர். இவ்வளவுக்கும் இளையராஜா இந்து மதத்தில் பெரிய ஆன்மீக வாதியாக அறியப்படுபவர். தமிழகம் மற்றும் உலக அளவில் பிரபலமாக பார்க்கப்படுபவர். இந்த அளவு உயரத்திற்கு சென்றவர் இவ்வளவு தூரம் அசிங்கப்பட்டு இந்த விருதை வாங்கத்தான் வேண்டுமா?

எவ்வளவு இழிவாக நடத்தினாலும் இவர்களுக்கு இந்த விருதுதான் பெரிதாக தெரிகிறது. இவர்களின் தன் மானம் காக்கப் படவேண்டாமா? 'ஜனனி...ஜனனி' பாடலை கேட்டு உருகாத இந்துக்கள் எவரும் இல்லையே! இளையராஜாவின் சங்கீதம் ஜாதி பார்ப்பது இல்லையே! ஆனால் இந்த காஞ்சி மடாதிபதி இங்கிதமாக ஜாதி பார்க்கிறாரே!

இவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றபோது இந்த பார்ப்பன வர்க்கம் இவர்களை பிரித்து, ஜாதி கற்பித்து காட்டுகிறதே? இன்னும் இதற்குள் இருக்கத்தான் வேண்டுமா? சிந்திக்க மாட்டார்களா? விருது, விழா, பட்டம், பதக்கம் என்றால் யார் கொடுத்தாலும் வாங்கி விடுவதா?

யுவன் சங்கர் ராஜா தன்மான சிங்கம். எனவே தான் தனது தொழிலில் பின்னடைவு ஏற்படும்: பலராலும் ஏசப்படுவோம் என்றெல்லாம் முன்பே தெரிந்தும் துணிந்து தான் 'இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்' என்று பகிரங்கமாக அறிவித்தார். உங்களின் துணிச்சலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் யுவன்! இறைவன் உங்களை மேலும் மேலும் இந்த குர்ஆனின் சுவையை உணர்வுபூர்வமாக அறிய வாய்ப்பை நல்குவானாக! நீங்கள் உணர்ந்த அந்த சுவை கூடிய விரைவிலேயே உங்கள் தந்தையையும் உணர வைக்கும். அதற்காக நாமும் பிரார்த்திப்போமாக!

சிலந்தி, குளவியால் டார்வினசத்துக்கு மற்றுமொரு பின்னடைவு!


படத்தில் இருப்பது 97 லிருந்து 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சிலந்தி யும் குளவியும். சிலந்தி அதனுடைய வலையில் தவறி விழுந்த குளவியை சாப்பிட போகையில் அப்படியே குளவியும் சிலந்தியும் நின்று விட்டன! ஏன்? இதை ஒரேகான் பல் கலைக் கழக அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் பர்மா ஆய்வின் போது இவற்றை கண்டு ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அவ்வாறு ஆராயும் போது நூறு மில்லியன் வருடங்களுக்கு முன்பு தனது வலையில் விழுந்த குளவியை சிலந்தி தாக்கப் போகுமுன் இரண்டுமே மரப் பிசினால் மூடப் பட்டு விட்டன என்று தெரிந்து கொண்டுள்ளார்கள்.'இந்த இளம் சிலந்தி குளவியை சாப்பிடுவதற்குள் மரப் பிசினால் இழுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பல மில்லியன் வருடங்கள் ஆகியும் அதன் உருவ அமைப்புகளில் எந்த மாற்றமும் தென் படாதது எனககு ஆச்சரியத்தையே உண்டாக்குகிறது.' என்கிறார் ஜார்ஜ் பைனர். இவர் ஒரேகான் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் பணி புரிந்த உலக பிரசித்திப் பெற்ற பூச்சியியல் நிபுணராவார்.

.

இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த இரு உயிரினமும் இன்று நாம் பார்க்கும் அதே அளவில் அதே எண்ணிக்கையுடைய கால்கள் மற்றும் பல உறுப்புகளோடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்டார்வினின் பல தியரிகளை குப்பை கூடைக்கு அனுப்ப நேரம் நெருங்கி விட்டதையே காட்டுகிறது. இனிமேல் யாரும் குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் என்ற விட்டலாச்சாரியா(டார்வினின்) சொம்பை தூக்கிக் கொண்டு பரிணாமப் பாடம் நடத்த வேண்டாம். ஆமாம. சொல்லிபுட்டேன்.


This picture shows a nearly intact fossil of Fuxianhuia protensa. The inset shows the fossilized brain in the head of another specimen. The brain structures are visible as dark outlines. Credit: Specimen photo: Xiaoya Ma; inset: Nicholas Strausfeld Complex brains evolved much earlier than previously thought, as evidenced by a 520-million year old fossilized arthropod with remarkably well-preserved brain structures. Representing the earliest specimen to show a brain, the fossil provides a "missing link" that sheds light on the evolutionary history of arthropods, the taxonomic group that comprises crustaceans, arachnids and insects.

Read more at: http://phys.org/news/2012-10-complex-brains-evolved-earlier-previously.html#jCp

சுமார் 520 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சியினத்தில் சிக்கலான மூளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய உயிரினங்களில் இருப்பது போன்றே உள்ளது. ஆக, உயிரினங்கள் முதன் முதலாக தோன்றிய காலக்கட்டத்திலேயே மூளை அமைப்பு சிக்கலாக இருப்பது பரிணாமவாதிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அக அமைப்பிலோ புற அமைப்பிலோ எந்த மாற்றங்களையும் கொள்ளாது பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு எப்படி உயிரினங்கள் இருந்ததோ அதே அமைப்பிலேயே இன்றும் அவை காணப்படுகின்றன. பரிணாமம் உண்மையிலேயே நடந்திருந்தால் பரிணாமம் அடைந்த இடைப்பட்ட உயிரினங்களின் படிமங்கள் லட்சக் கணக்கில் நமக்கு கிடைத்திருக்க வேண்டும். அது போன்ற இடைப்பட்ட உயிரினங்களின் படிமங்களை இவர்கள் சமர்ப்பிக்காத வரை பாடப் புத்தகங்களில் உள்ள பரிணாமம் சம்பந்தமான பகுதிகளை நீக்க அரசு உத்தர விட வேண்டும். உலக அளவில் இந்த நகைச்சுவை இன்று வரை அறிவு ஜீவிகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்வோரால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பரிணாமவியலை நிரூபிக்கிறேன் என்று உலகில் பல நாடுகளில் பல விஞ்ஞானிகள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கே தெரியும் தங்களின் ஆராய்ச்சியின் முடிவு என்ன எனபது. இருந்தாலும் வேலை போய் விடுமே என்று இன்று வரை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு செலவழிக்கும் பணத்தை செல்வந்த நாடுகள் வறிய நாடுகளின் முன்னேற்றத்துக்கு திருப்பி விட்டு புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம் .:-)

http://phys.org/news/2012-10-complex-brains-evolved-earlier-previously.html

http://www.24dunia.com/english-news/shownews/0/Ancient-Spider-Attack-On-Wasp-Trapped-In-Amber/15384148.html

http://gizmodo.com/5950032/holy-crap-heres-a-100+million+year+old-spider-eating-a-wasp
http://dvice.com/archives/2012/10/spider-attacks.php

http://oregonstate.edu/ua/ncs/archives/2012/oct/fossil-ancient-spider-attack-only-one-its-type-ever-discovered

பரிணாமவியலில் ஓரளவு பல பதிவுகளை எழுதிய சகோ ஆஷிக் பூச்சியினங்களைப் பற்றி முன்பு எழுதிய அழகிய ஒரு இடுகையை பாருங்கள். மேலும் பல விளக்கங்கள் கிடைக்கும்.

Wednesday, August 27, 2014

மருத்துவர்கள் எல்லோருமே நல்லவர்கள்தானா?-----------------------------------------------------------

மருத்துவர்கள் எல்லோருமே நல்லவர்கள்தானா?

விஜய் டிவி கோபிநாத்தின் நீயா நானாவில் மருத்துவ துறை சம்பந்தமாக விவாதம் வந்தவுடன் இணையத்திலும் அதன் தாக்கம் நிறைய எதிரொலிக்கிறது. எனக்கும் ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அதனையும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது இரண்டாவது மகன் 8 மாதம் வயிற்றில் இருந்த சமயம். எங்கள் ஊரில் உள்ள ஒரு இஸ்லாமிய மருத்துவ பெண்மணியிடம் எனது மனைவி காட்டி வந்தார். முதல் மகனும் இந்த மருத்துவரிடமே பிறந்தான். இரண்டாவது மகனுக்கு முதல் மாதத்திலிருந்தே எங்கள் ஊர் மருத்துவரே வைத்தியம் பார்த்து வந்தார். 8 மாதம் ஆனவுடன் வயிற்றில் ஏதோ வலி வருவது போல் தெரிந்திருக்கிறது. இதனை மருத்துவரிடம் எனது மனைவியும் எனது தாயாரும் சொல்லியிருக்கிறார்கள். 'இங்கு வசதிகள் இல்லை. தஞ்சாவூரில் வேண்டுமானால் சென்று ஸ்கேன் போட்டு பாருங்கள்' என்று சொல்ல ஒரு வாரம் கழித்து தஞ்சைக்கு சென்றுள்ளார்கள். அங்கு பிரசவத்துக்கு பெயர் பெற்ற ஒரு பிரபலமான பெண் வைத்தியரிடம் காண்பிக்க சென்றுள்ளனர். எனது சின்னம்மா முதற்கொண்டு எனது சொந்தங்கள் பலருக்கும் இவர்தான் பிள்ளை பேறு பார்த்திருக்கிறார். எனது குடும்பத்துக்கு மிகவும் பரிச்சயமான மருத்துவர் இவர். எனது மனைவிக்கு ஸ்கேன் போட்டு பார்த்திருக்கிறார். உடன் அவசரமாக 'குழந்தை ஆபத்தான கட்டத்தில் உள்ளது. உடன் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்க வேண்டும்' என்று சொல்லி விட்டார். எனது தாயாருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்னோடு அலைபேசியில் நடந்த விபரங்களை சொன்னார். நானும்'மருத்துவருக்கு தெரியும். எனவே அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்' என்று சொன்னேன்.

மறுநாளே எனது மனைவிக்கு ஆபரேஷன் மூலம் எனது இரண்டாவது மகன் பிறந்தான். தாயும் சேயும் ஒரு வாரம் கழித்து தஞ்சையிலிருந்து வீட்டுக்கு திரும்பினர். அதன் பிறகு 'காய்ச்சல், சளி போன்ற பிள்ளையின் சிறு சிறு தொந்தரவுகளுக்கு தஞ்சை செல்ல வேண்டாம். நமது கிராமத்தில் உள்ள மருத்துவரிடமே காட்டுவோம்' என்று சொல்லி ஒரு வாரம் கழித்து எங்கள் ஊரில் உள்ள பெண் டாக்டரிடம் எனது மனைவி குழந்தையை காட்ட அழைத்து சென்றுள்ளார். டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் அமர்ந்திருக்கிறார். எனது மனைவி வரிசையில் அமர்ந்திருப்பதை ஜன்னல் வழியாக பார்த்த மருத்துவர் தனது செவிலிய பெண்ணிடம் 'அவருக்கு நான் பார்க்க மாட்டேன். தஞ்சாவூரிலேயே சென்று காட்டிக் கொள்ளச் சொல்' என்று சொல்லியனுப்பியுள்ளார். எனது மனைவிக்கோ பயங்கர ஆத்திரம். அதோடு வேறு மருத்துவரிடம் காட்ட ஆரம்பித்தார்.

மருத்துவர் இவ்வாறு திருப்பி அனுப்பிய விபரம் எனக்குத் தெரிந்தவுடன் எனக்கும் கோபம் உச்சத்துக்கு சென்றது. நேராக அந்த நிமிடமே அந்த மருத்துவரின் மருத்துவ மனைக்கு சென்றேன்.

'என்ன டாக்டர்? எப்படி இருக்கீங்க'

'நல்லாயிருக்கேன். நீங்க சௌரியமா? உட்காருங்க! என்ன உடம்புக்கு?'

'நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க செய்தது நியாயமா?'

'என்ன சொல்றீங்க..... புரியல'

'என் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மாட்டேன் என்று என் மனைவியை திருப்பி அனுப்பினீர்களாமே'

'ஆமாம்!'

'ஒரு மருத்துவர் செய்யக் கூடிய காரியமா இது?'

'உங்கள் மனைவியும் உங்கள் தாயாரும் செய்தது மட்டும் சரியா? கடந்த எட்டு மாதமாக நான் உங்கள் மனைவியின் உடம்பை கவனித்து வருகிறேன். ஒன்பதாவது மாதம் திடீரென்று தஞ்சாவூரில் சென்று குழந்தை பெற்றுக் கொண்டால் எனக்கு கோபம் வராதா?'

'இதுதான் காரணமா?'

'ஆம். இவ்வளவு பெரிய மருத்துவ மனையை கட்டிப் போட்டு இத்தனை செவிலியர்களுக்கு சம்பளம் கொடுத்து இந்த கிராமத்தில் வைத்துள்ள எனக்கு நீங்கள்தானே ஆதரவு தர வேண்டும்?'

'நீங்கள் சொல்லித்தானே அவர்கள் தஞ்சாவூர் சென்றார்கள்?'

'நான் சொன்னது ஸ்கேன் போட்டு பார்க்க மட்டுமே! பிரசவம் பார்த்துக் கொள்ள அல்ல'

'உங்களைப் பொன்ற மருத்துவர்தானே அவரும். இப்பொழுது குழந்தையை எடுக்கவில்லை என்றால் தாயுக்கும் சேயுக்கும் ஆபத்து என்று சொல்லும் போது அவர்கள் என்ன செய்வார்கள்'

'அந்த மருத்துவர் பணம் பண்ணுவதற்காக பொய் சொல்லியிருக்கிறார். குழந்தை நல்லமுறையில்தான் இருந்தது. ஸ்கேன் பார்க்க வேறு இடங்களுக்கு சென்றிருக்க வேண்டியதுதானே'

'அந்த மருத்துவரைப் போலவே நீங்களும் பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்துப் பேசுகிறீர்கள். இது நல்லதல்ல'

பேச்சு முற்றுவதைப் பார்த்தவுடன் நோயாளிகளும் மற்றவர்களும் என்னை சமாதானப்படுத்தி வெளியில் கொண்டு வந்தனர். ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுத்தால் 15000, 20000, 30000 என்று ஆட்களின் வசதி வாய்ப்பை வைத்து கறந்து விடுவர். அது நஷ்டமாகி விட்டதே என்ற ஆதங்கம்தான் இந்த பெண்மணிக்கு. மருத்துவர்களின் மேல் இருந்த ஒரு நல்ல அபிப்ராயம் இறங்கத் தொடங்கியது அன்றுதான். அந்த தஞ்சை பெண் மருத்துவராகட்டும், எங்கள் கிராமத்தில் உள்ள இந்த பெண் மருத்துவராகட்டும் இந்த இருவருக்குமே பணத்தின் மீதுதான் குறி. மிகச் சிறந்த நல்ல மருத்துவர்கள் ஏழைகளுக்கு பணம் வாங்காமலேயே மருத்துவம் பார்க்கும் எத்தனையோ பேரையும் நான் பார்த்துள்ளேன். இப்படியும் சில மருத்துவர்கள் நம்மோடு இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவர்களும் மனிதர்கள்தானே! மனிதனுக்கு உள்ள ஆசா பாசங்கள், பலஹீனங்கள் எல்லாம் அமையப் பெற்ற சாதாரண மனிதர்கள் தானே இவர்களும் என்று மனதை தேற்றிக் கொண்டேன். ஆனால் உண்மையான மருத்துவன் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனித நேயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 50 லட்சம் 60 லட்சம் என்று எம்பிபிஎஸ் சீட்டுக்கு அரசாங்கமே ஏலம் போடும் போது இவர்களை நொந்து கொண்டும் பிரயோஜனமில்லை. தவறு அரசாங்கத்திடமிருக்கிறது. இந்த நிலை இனியாவது மாற ஆட்சியாளர்கள் முயற்சிப்பார்களாக!

தாழ்த்தப்பட்டவர்கள் உருவாக மொகலாயர்களே காரணமாம்!//சுருங்கச் சொல்வதானால், இஸ்லாமிய ஆட்சியானது காடுகளுக்குள் ஒளிந்து வாழ்ந்த பல இந்துக்களை அவர்களின் சொந்த சாதியிலிருந்து விலகி இருக்கக் காரணமாகியதுடன், அவர்கள் ஒரு வேறொரு புதிய சாதியினரான, தாழ்த்தப்பட்ட ஒரு சாதியினராக ஆக்கியது. இஸ்லாமிய ஆட்சியினால் இறுகிய சாதி அமைப்பிற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.//

இந்துத்வா தளத்தில் வந்த ஒரு கட்டுரை. அடப்பாவிகளா! பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இல்லையா? இன்று நமது நாட்டில் சாதி வெறி ஓரளவு மட்டுப்படுத்தப் பட்டுள்ளதே 1000 ஆண்டு கால மொகலாயர் ஆட்சி என்பதை சரித்திரம் சொல்லுமே!

இந்த நாட்டில் சாதி எவ்வாறு வேரூன்றியது என்பதை இனி பார்போம்.

யஜூர் வேதம் பிறப்பினடிப்படையில் என்ன கூறுகிறது? .......

அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது?
ஃப்ராஹ் மணோஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய க்ருத:1 ஊருததஸ்மா யத்வைஸ்ய பத்யாம் சூத்ரோ அஜாயத் - 11.
பிரம்மனின் முகத்திலிருந்து பிராம ணன் பிறந்தான்; தோள்களினின்றும் சத்திரியன் பிறந்தான்; துடைகளினின்றும் வைசியன் பிறந்தான்; பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான் என்பது இதன் பொருள்.

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.
1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்
3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்
4) விபச்சாரி மகன்
5) விலைக்கு வாங்கப்பட்டவன்
6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)

மனுதர்மம் அத்தியாயம் ஒன்று சுலோகம் 87
அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார்.

பிறப்பினடிப்படையில் மனிதனை பிரித்ததில் வேதம் ஸ்ருதி ஸ்ருமிதி,இதிகாசம் புராணம்,வரலாறு,நிகழ்கால நடைமுறை என அனைத்திலும் இருக்கும் போது இந்துமதத்தில் இல்லை என்பதும் இதற்கு மொகலாய மன்னர்களே காரணம் என்பதும் ஏமாற்று வேலை அல்லவா?

சூத்திரன் என்ற இனத்தை இந்த அளவு கேவலப்படுத்தினால் அவனை சமூகம் எந்த அளவில் வைத்திருக்கும் என்பது நாம் சொல்ல வேண்டியதில்லை. மொகலாயர்களின் ஆட்சியோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தது. ஆனால் தாழ்த்தப்பட்ட இனம் உருவாகி 3000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவ்வளவு துணிச்சலாக பொய் கூறுவதற்கும் அதனை ஒரு பொது தளத்தில் பிரசுரிப்பதற்கும் கொஞ்சம் கூட வெட்கப்படாதவர்கள் இந்த இந்துத்வாவினர்.

இனி தலித்கள் உருவாக மற்றொரு காரணத்தையும் பார்ப்போம்.....

தலித்களின் மூலமதமாகவும் பௌத்தம் இருந்தது. தலித்களின் தாழ்வு நிலைக்கு காரணம் பௌத்தம் சமயம்தான் (அதாவது பெளத்ததை பின்பற்றியதால் தலித்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள் ). அதே பௌத்தம் சமயம்தான் தலித் விடுதலைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் உறுதுணையாகவும் வழியாகவும் இருக்கவேண்டியுள்ளது. இந்திய பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்கிறார் அதனை தன் தமிழ் புலமை மூலம் விளக்குகிறார். இந்திய என்ற சொல் 'இந்திரம்' என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது. ஆரியர் வாருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது அந்த தேசியத்தை பௌத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம்,அறக்கருதொற்றுமை மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அன்னியரான வெளியாரின் ஊடுருவால். படையெடுப்பால் கால்ப்போக்கில் அது மந்திர அல்லது மாயத்தன்மையென திரிக்கப்பட்டது என்று பண்டிதர் விளக்குகிறார். சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்கள் நசித்துதிரித்துவிட்டார்கள். பிறப்பால் ஏற்ப்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நடைபோடும் ஓர் அரசியல் கருத்தியலை உருவாக்கும் ஒரு தேசியத்தை கட்டமைக்க முயற்சிகிறார்.


சாதியின் தோற்றம்

சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள் வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின்மானிடவியல் கோட்பாடுகள்[1] என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்த பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாக கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
1. மரபுக் கோட்பாடு (traditional theory)
2. தொழிற் கோட்பாடு (occupational theory)
3. சமயக் கோட்பாடு (religious theory)
4. அரசியற் கோட்பாடு (political theory)
5. இனக் கோட்பாடு (racial theory)
6. படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)

மரபுக் கோட்பாடு

சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும். ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது என குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.

தொழிற் கோட்பாடு

சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக ‘தூய்மை’ ‘தீட்டு’ வரையறை செய்யப்பட்டன.

பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.

சமயக் கோட்பாடு

சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையை தோற்றுவித்தது.

அரசியற் கோட்பாடு

உயர் சாதியினர் தமது சலுகைகளை தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துகொண்ட அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு.
இனக் கோட்பாடு

ஆரியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. “குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாக திகழ்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டை காட்டத் தொடங்கினர்.”[2]

இந்திய சாதி அமைப்பு

இந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்படிப்படையில் மாற்றாம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன.

தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்புமுறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன.
வடமொழியில் உள்ள மனு ஸ்ம்ரிதி ( மனுநீதி சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருபதாகத் தெரியவில்லை.

http://tamilanmanian.wordpress.com/2013/10/22/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D


முகநூலில் புதுசா ஒரு request வந்தது.!புதுசா ஒரு request வந்தது.

நானும் கன்பார்ம் பண்ணியதும் ,

நன்றினு ஒரு mgs inbox. கு வந்தது...

உடனே அடுத்த mgs உம் வந்தது நீங்க பாய் ஆனு

நானும் s னு அனுப்பினேன் ...

உடனே அப்டினா பிரியாணி எங்கனு ....கேட்குது…….

டேய் அந்த பாய் அ சொல்லுலடா .... நான் பையன்னு சொன்னேன் ..

கொல்ராங்களே!

-படித்ததில் பிடித்தது :-)

--------------------------------------------------------------

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்

- (அல்குர்ஆன் 4:38)

வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.

-(அல்குர்ஆன் 6:141)

உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

-(அல்குர்ஆன்7:31)


'வறுமையை நினைத்தா அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக வருங்காலத்தில் இந்த உலகத்துச் செல்வம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை நல்வழியை விட்டும் ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். ... .... என்று நபி அவர்கள் கூறியதாக அபுதர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்:இப்னுமாஜா)


Tuesday, August 26, 2014

இந்து சகோதரருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய அமைப்பு!துபாய்: இந்து சகோதரருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய அமைப்பு

துபாயில் இறந்து போன தமிழகத்தைச் சேர்ந்த ஜெயராமனின் உடலுக்கு இஸ்லாமிய அமைப்பான ஈமான் அமைப்பின் முயற்சியில் 16.04.2014 புதன்கிழமை துபாய் ஜெபல் அலி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. துபாயில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இறந்து எவ்வித தகவலும் இன்றி துபாய் மருத்துவமனை பிணவறையில் ஜெயராமன் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் ஈமான் அமைப்பு கடலூர் மாவட்டத்திலுள்ள ஜெயராமன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடலை துபாயிலேயே இந்து மத சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு நடத்த ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோருக்கு அனுமதிக் கடிதம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து 16.04.2014 புதன்கிழமை காலை துபாய் ஜெபல் அலி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இறுதிச் சடங்கில் ஈமான் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின், முஹம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறைந்த ஜெயராமனின் ஊரைச் சேர்ந்த இளவரசன் இந்து மத சம்பிரதாயங்களை நிறைவேற்றினார். அவரிடம் துபாய் காவல் துறையினர் ஜெயராமன் இறந்தபோது வைத்திருந்த பணம், கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

"எங்கே இருந்தாலும் மாற்று மதத்தினரை மதிப்பவன் தான் உண்மையான முஸ்லிம்".நன்றி: tamil.oneindia.in

நபிகள் நாயகம் ஒரு சபையில் அமர்ந்திருந்த போது ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அதைக் கண்ட நபிகள் நாயகம் அவர்கள் எழுந்து நின்றார்கள். உடனிருந்த தோழர்கள் இது யூதரின் பிரேதம் என்று சுட்டிக் காட்டினார்கள். அதைக் கண்டு கொள்ளாத நபிகள் நாயகம் அவர்கள் "அந்த பிரேதமும் ஆதமுடைய சந்ததி அல்லவா? உங்களை ஒரு பிரேதம் கடந்து சென்றால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள்" என்று கூறினார்கள்.

(ஆதாரம் புகாரி 1228)

நபிகள் நாயகம் அவர்களைக் கொலை செய்திட சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் முயன்ற போது அவர்களும் அவர்களின் நெருங்கிய தோழரான அபூபக்கரும் ஊரைவிட்டு இரகசியமாக வெறியேறினார்கள். மதினாவுக்கு செல்லும் வழியைக் காட்டுவதற்காக முஸ்லிம் அல்லாத ஒருவரை நம்பி அவரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்கள். (ஆதாரம் புகாரி 2103)

இது போன்று பல சம்பவங்கள் நபிகளின் வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. மாற்று மதத்தவர்களை மதித்தே தனது வாழ்நாள் பூராவும் வாழ்ந்துள்ளார்கள். அன்பை விதைத்தார்கள்: சிறந்த அறுவடையை பெற்றார்கள்! அவர் வழியில் வந்த நாமும் அன்பையே விதைப்போம்! அனந்த சாகர், தருமி, அனந்தன் கிருஷ்ணன், சாரங்க் போன்ற நண்பர்களுக்கும் இன் முகத்துடனேயே பதில் கொடுப்போம். இன்றில்லா விட்டாலும் என்றாவது உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.


ரியாத்தில் நேரடி ஆய்வில் இறங்கிய மன்னரின் மகன்!

ஆப்ரிக்காவின் எரித்திரியா மற்றும் சோமாலியா நாடுகளிலிருந்து கள்ளத்தனமாக சவுதிக்குள் புகுந்த நபர்கள் நிறைய உள்ளனர். இவர்கள் நாட்டின் வறுமையை கருத்தில் கொண்டு சவுதி அரசும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு வைத்திருந்தது. ஆனால் நாளாக நாளாக இவர்களின் சட்ட விரோத செயல்கள் அதிகரிக்கத் தொடங்கின. வழிப்பறி, போதை மருந்து, விபசாரம் என்று எந்த பயமும் இல்லாமல் சுதந்திரமாக செய்ய ஆரம்பித்தனர். தட்டிக் கேட்கும் காவலர்களையும் சவுதி நாட்டவரையும் கூட்டாக சேர்ந்து தாக்கவும் செய்வர்.

எனது இரு சக்கர வாகனத்தையே இரண்டு ஆப்ரிக்கர்கள் இரவு பத்து மணி வாக்கில் என்னிடமிருந்து பறித்து சென்ற சம்பவம் போன வருடம் நடந்தது. நான் வேகமாக பத்தாவிலிருந்து எனது இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தேன். ஆள் அரவம் இல்லாத பகுதியில் என் பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனம். எனக்கு விபரம் புரியாமல் திரும்பி பார்த்தேன். இரண்டு ஆப்ரிக்கர்கள். என்னிடம் 'வண்டியை நிறுத்து' என்று சொல்ல பல தமிழ்படங்கள் பார்த்த ஞாபகம் வரவே வண்டியை மேலும் வேகப்படுத்தினேன். அவர்களும் என் பின்னாலேயே வந்தனர். என்னை அவர்கள் தள்ள நான் அவர்களிடமிருந்து தப்பிக்க வழி பார்க்க இந்த விளையாட்டு ஐந்து நிமிடம் நீடித்தது. முடிவில் பின்னால் அமர்ந்திருந்தவன் தனது காலால் எனது வண்டியை வேகமாக உதைத்தான். பிறகென்ன வண்டி சறுக்கியதால் நானும் கீழே விழுந்தேன். முழங்காலில் பயங்கரமான அடி. பேண்ட் பாதி கிழிந்து விட்டது. சுதாரித்துக் கொண்டு எழுந்தேன். விஜயகாந்த் போல் சண்டை போடலாமா என்று ஒரு நினைவு வந்தது :-). ஆனால் அவர்கள் கையில் கத்தியும், பெரிய சுத்திலும் இருந்தது. பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்.

'உனக்கு என்ன வேணும்?'

'இந்த இரு சக்கர வாகனம் வேணும்'

'இது ஹராம் இல்லையா'

'அதிகம் பேசாதே' என்று கத்தியை காட்டினான்.

வேறு வழியில்லாமல் வண்டியிலிருந்து எனது பொருள்களை எடுத்துக் கொண்டு வண்டியை அவர்களிடம் கொடுத்தேன். வேறு வழியில்லை. எனது பாஸிடம் விபரங்களை சொன்னேன். 'அவர்களிடம் சண்டையிடாமல் வண்டியை கொடுத்தது நல்லது. வண்டி போனால் வாங்கிக் கொள்ளலாம். உனக்கு எதாவது ஆகியிருந்தால்! இறைவன் காப்பாற்றிக் கொண்டான்' என்று தாயுள்ளத்தோடு பேசினார். அந்த வண்டியும் எங்கள் கம்பெனியினுடையது. 'இரு சக்கர வாகனத்தில் இனி செல்லாதே' என்று சொல்லி நான்கு சக்கர வாகனத்தையே தற்போது பாஸ் கொடுத்துள்ளார். ஒரு கெட்டதில் நல்லது. :-)

இதனை நான் இங்கு குறிப்பிட காரணம் ஆப்ரிக்கர்கள் அந்த அளவு மோசமானவர்கள் என்பதை சொல்வதற்கே!

இரண்டு நாட்களுக்கு முன்பு ரியாத்தில் உள்ள மன்ஃபுஹா என்ற இடத்தில் சோதனை நடத்தியது அரசு. அதிகாலை நான்கு மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. இந்த முறை மன்னரின் மகன் துர்கி பின் அப்துல் அஜீஸ் அவர்களே நேரிடையாக சோதனையில் ஈடுபட்டார். குறுகிய சந்துகளில் அவர் புகுந்து ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த பலரை பிடித்துக் காவலர் வசம் ஒப்படைத்தார்.சிங்கம் ஒன்று புறப்பட்டதே.......பூட்டிய வீடுகளை தட்டி அங்கு சோதனையிடுகிறார்.ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த ஒரு ஆப்ரிக்கனை காவல் துறை பிடிக்கிறது.பூட்டப்பட்ட வீடுகள் காவல்துறையினரால் உடைக்கப்படுகின்றன.ஒரு வீட்டில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் கள்ளத்தனமாக எந்த ஆவணங்களுமின்றி தங்கியிருந்தனர். அவர்களையும் பிடித்தனர். (இந்தியர்களைப் போல் இருக்கிறது)முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பல பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.சோதனைகள் முழுவதும் முடிந்தவுடன் களைப்பு தீர தண்ணீர் அருந்துகிறார் இளவரசர் துர்கிபின் அப்துல் அஜீஸ்.

ஒரு ஆட்சித் தலைவரின் மகனுக்குரிய இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் அப்துல் அஜீஸ். இதனை இவருக்கு கற்றுக் கொடுத்தது இஸ்லாம் என்றால் மிகையாகாது. என்ன ஒரு எளிமை. என்ன ஒரு கம்பீரம். தனது நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக தூக்கத்தை தொலைத்து அதிகாலை நான்கு மணிக்கு காவல்துறையோடு வந்த இளவரசர் துர்கி பின் அப்துல் அஜிஸ் பாராட்டப்பட வேண்டியர். நம் நாட்டு அரசியல்வாதிகள் இவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்.

தகவல் உதவி:
அரப் நியூஸ்
22-08-2014

'லவ் ஜிஹாத்' உண்மையில் நடக்கிறதா?இந்துத்வாவாதிகள் தற்போது ஒரு புதிய குற்றச்சாட்டை வைக்கின்றனர். அதாவது இஸ்லாமியர்கள் வேலை வெட்டிக்கெல்லாம் போகாமல் இந்துப் பெண்களையாக பார்த்து காதலித்து அவர்களை முஸ்லிம்களாக மாற்றுகிறார்களாம். இந்துக்களின் ஓட்டுக்களை ஒன்று சேர்க்க பிஜேபி கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று. இது எந்த அளவு உண்மை என்று பிஜேபி ஆதரவு ஊடகமான என்டிடிவி உத்தர பிரதேசத்திற்கு சென்று நேரடியான கள ஆய்வை மேற்கொண்டது. அதன்படி அறிக்கை கூறுவதாவது:

மீரட்டில் நடந்த கூட்டுக் கற்பழிப்பில் 'லவ் ஜிஹாத்' என்று மத சாயம் பூசி முஸ்லிம்க்கு எதிராக இந்துக்களை திரட்டும் பணியை பலரும் செய்து வந்தனர். இதன் உண்மை நிலையை அறிய எங்கள் குழு மீரட், புலந்த் சாஹர், காஸியாபாத், கவுதம்பத் நகர், ஹபூர், ஸஹாரான்பூர், முஸாஃபர்நகர் என்று பல இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டோம். மீரட் நகரில் மட்டும் 37 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 7 வழக்குகளில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். பாக்கி உள்ள 30 வழக்குகள் இந்துக்களே சம்பந்தப்பட்டுள்ளனர்.

அனைத்து நகரங்களிலும் மொத்தம் 334 வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. காவல் துறை அறிக்கை சொல்வதாவது.....

1. இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களிடம் பிரச்னை செய்ததாக உள்ள வழக்குகள் மொத்தம் 25

2. இந்து ஆண்கள் முஸ்லிம் பெண்களிடம் பிரச்னை செய்ததாக உள்ள வழக்குகள் மொத்தம் 23

3. இஸ்லாமிய ஆண்கள் இஸ்லாமிய பெண்களிடம் பிரச்னை செய்ததாக உள்ள வழக்குகள் 96

4. இந்து ஆண்கள் இந்து பெண்களிடம் பிரச்னை செய்ததாக உள்ள வழக்குகள் 190

இவை அனைத்தும் காவல் துறையினர் வழக்கு பதிந்த வகையில் எடுக்கப்பட்ட சர்வேயாகும். இந்த அறிக்கையின் மூலம் தெரிய வருவது இஸ்லாமியர் யாரும் 'லவ் ஜிஹாத்' என்ற பெயரில் எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை என்பதே. ஒன்றிரண்டு சம்பவங்கள் படிக்கும் இடங்களில் ஆங்காங்கே இரு சமூகத்திலும் நடந்து வருகிறது.

ஆனால் வன்புணர்வு என்பது ஆதிக்கசாதியான யாதவர்கள் தாழ்ந்த சாதியான தலித்களை கொடுமைபடுத்துவது பரவலாக நடைபெற்று வருகிறது. தாங்கள் உயர்ந்த சாதி என்ற ஆதிக்க மனப்பான்மை கூட இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே இந்து இளைஞர்களுக்கு போதிய ஆன்மீக பயிற்சி கொடுத்து இது போன்ற வன்புணர்வு கொடுமைகளை செய்யாதிருக்க இந்துத்வா அமைப்புகள் முயற்சி எடுக்க வேண்டும்.

அதை விடுத்து தேவையில்லாமல் முஸ்லிம்களை இழுத்து அவர்கள் மேல் பொய் கேசுகளை போடுவதால் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியாது. கடைசியில் வெறுத்து போய் அந்த தலித் மக்களே தாங்களாகவே இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்வையும் உங்களால் தடுக்க முடியாது.

எனவே பிஜேபியினர் உளுத்துப் போன இந்துத்வா கொள்கையை தூரமாக்கி நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ என்ன வழி என்று யோசிப்பார்களாக!

சாதியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் 70 கோடி இந்துக்களின் மறு வாழ்வுக்கு உரிய திட்டங்களைத் தீட்டுவார்களாக!

நடந்து முடிந்த இடைத் தேர்தலின் முடிவுகள் காங்கிரஸூக்கு சாதகமாக உள்ளது. இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பிஜேபியினர் அனைத்து மக்களின் நலனுக்காக பாடுபட முயற்சிக்க வேண்டும்.
தகவல் உதவி: என்டிடிவி

http://www.ndtv.com/article/india/how-crime-data-contradicts-communal-spin-to-up-rape-cases-581843?site=classic

Monday, August 25, 2014

மது கொள்கையில் கேரளாவை பின்பற்றுமா தமிழகம்!"நபியே! மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு அவற்றில் சில பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.”

(அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -

நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: -

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள்.

(ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

கோடிகளைக் கொட்டி கோபுரம் அமைத்த இளையராஜா!கோடிகளை கொட்டி கோபுரத்தை அமைத்தார் என் தந்தை!

கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம்!

திருவாசகம் அமைத்து தெய்வப்பணி செய்தார் என் தந்தை!

திருவாசகமே படைத்தாலும் நீ தீண்டத்தகாதவன் என்றது பார்பனியம்!

இஸ்லாத்தை நான் ஏற்க எதிர்ப்பு சொன்ன என் தந்தையே!

சூத்திரன்! பார்பனன்! என்ற பேதமெல்லாம் இங்கில்லையே!

வாருங்கள்! உங்களையும் நமது குடும்பத்தையும் கூட்டி

கோடான கோடி மக்கள் ஐந்து வேளை குழுமி நிற்கும்

கஃபாவில் முதல் ஆளாக உங்களை உட்கார வைக்கிறேன்.!

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' எனும் திருமந்திரத்தை

உரக்கச் சொல்லுங்கள்! ஒதுக்குபவர் யாருமில்லை அங்கே!

நிமிர்ந்து சொல்லுங்கள்! "இறைவனைக் கண்டேன் அங்கே!"

-கவிதை ஆக்கம்: சுவனப்பிரியன்

மைக்கேல் ப்ரௌன் உடல் இன்று அடக்கம்!மைக்கேல் ப்ரௌன் உடல் இன்று அடக்கம்!

அமெரிக்காவில் இன்றும் நிறவெறி தலைவிரித்தாடுகிறது என்பதை இளைஞன் மைக்கேல் ப்ரவுனின் இறப்பு நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த கொள்ளையிடல் சம்பவத்தில் அந்த பக்கம் சென்ற மைக்கேலை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். நீதி விசாரணை கேட்டு அமெரிக்கா முழுவதும் மேலும் உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இன்று நடைபெறக் கூடிய பிரார்த்தனையில் 5000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா வெள்ளை மாளிகையிலிருந்து மூன்று உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார். உடல் அடக்கத்திற்குப் பிறகு பெரும் கலவரம் நிகழுமோ என்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். பள்ளி கல்லூரிகள் கடந்த 10 நாட்களாக பாதுகாப்பு காரணங்களுக்காக அடைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் திறக்கப்படலாம். மைக்கேலின் தந்தை 'வன்முறை இல்லாமல் அமைதியாக நமது இரங்கலை தெரிவிப்போம்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகையே ஆளப்பிறந்தவர்கள் நாங்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவில் இன்றும் நிறவெறியை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. வெட்கித் தலைகுனிய வேண்டும் இவர்கள்.மிசூரி மாநிலத்தில் இளைஞனின் துப்பாக்கிச் சூட்டிற்காக எதிர்ப்பு தெரிவித்த ஆதரவாளர்களைக் கலைக்கும் போலீஸார்.. இந்த எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது. பலர் கைது செய்யப்பட்டுக் கொண்டுள்ளனர்.

ஜேம்ஸ் ஃபாலி கொலையில் பல மர்மங்கள்!'ஐசிஐஎஸ் அமைப்புக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நம்புங்க மக்களே... நம்புங்க' -ஒபாமா

-------------------------------------------------------------

நான் முன்பே எழுதியது போல் ஐசிஐஎஸ் அமைப்பானது அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பு என்பதற்கு ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன. சகோதரர் கலையரசனும் இதே கோணத்தில் எழுதியுள்ளார்.....

2012 நவம்பர் மாதம் ஜேம்ஸ் ஃபாலி கடத்தப் பட்டு காணாமல்போயுள்ளார். அப்போது, சிரிய அரச படைகளே அவரைக் கடத்திச் சென்றதாக, வட அமெரிக்க ஊடகங்கள் சில அறிவித்தன. அப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருந்தது. ஜேம்ஸ் ஃபாலி, இதே ISIS பயங்கரவாத நண்பர்கள் கொடுத்த தகவல்களைத் தான், செய்திகளாக சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஜேம்ஸ் ஃபாலி என்ற அமெரிக்க ஊடகவியலாளரின் கொலை, உண்மையிலேயே நடந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால், அதைக் கொண்டு உலக மக்கள் முழுவதையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்துவதற்கு, ஊடகங்கள் அயராது பாடுபட்டன. என்ன இருந்தாலும், அமெரிக்க இரத்தம் விலை மதிப்பற்றது அல்லவா?

ஒரு ISIS ஜிகாதிப் போராளி, அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி (James Foley) இன் தலையை வெட்டிக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் காட்சிகளை படமாக்கிய ISIS, வழமை போல அந்த வீடியோவையும் யூடியூப்பில் போட்டதாக கூறப் படுகின்றது. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு. Google நிறுவனத்திற்கு சொந்தமான Youtube, அந்த வீடியோவை உடனே அழித்து விட்டது.

இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது. Twitter நிறுவனம், அந்த வீடியோவை அல்லது தலை வெட்டும் காட்சிகளை பகிர்ந்து கொள்வோரின் டிவிட்டர் கணக்கு இடைநிறுத்தப் படும் என்று அறிவித்தது. ஏற்கனவே பகிர்ந்து கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு டிவிட்டர் பக்கம் வர விடாமல் தண்டிக்கப் பட்டார்கள்.

இந்தத் தகவலை டிவிட்டரே நேரடியாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. ஏற்கனவே, ISIS சிரியாவில் பலரது தலைகளை துண்டித்து, அவற்றை பகிரங்கமாக இணையத்தில் வெளியிட்டது. அவை டிவிட்டரில் பல தடவைகள் பகிர்ந்து கொள்ளப் பட்ட போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

ஜேம்ஸ் ஃபாலி கொலைக் காட்சிகளை காட்டும், அமெரிக்க அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்ட புகைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டன. அதைத் தான் தற்போது எல்லா ஊடகங்களும், சமூக வலையமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. மேலும் ISIS ஏற்கனவே பல நூற்றுக் கணக்கானோரின் தலைகளை வெட்டிய பொழுது கவனிக்காத ஊடகங்கள், ஒரு அமெரிக்கரின் கொலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தன.

அமெரிக்கா தானே வளர்த்து விட்ட இசிஸ் எனும் பூதத்துடன் போரிட்டு அடக்கப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிகின்றது. இது வரை காலமும், அமெரிக்க விமானங்கள் போட்ட குண்டுகள் இசிஸ் அமைப்பை நிலைகுலைய வைக்கவில்லை. யாருமற்ற பாலைவனத்தில் குண்டு போட்டால் என்ன பிரயோசனம்? எந்த நாட்டின் ஆதரவும் இல்லாத இந்த தீவிரவாதிகளை ஒடுக்குவது அமெரிக்காவுக்கு பெரிய வேலையே அல்ல. ஆனாலும் அவர்கள் காரியம் முடியும் வரை செய்ய மாட்டார்கள். :-)

முன்பு தாலிபான்களை வளர விட்டு ரஷ்யாவுக்கு நெருக்கடியை கொடுத்தனர். பிறகு வேலை முடிந்தவுடன் தாலிபான்களை அழிக்கிறோம் என்று சொல்லி ஆப்கனை ஆக்கிரமித்தனர். அதே போல் சிரியாவுக்கும், ஈரானுக்கும், ரஷ்யாவுக்கும் நெருக்கடி கொடுக்க ஐசிஐஎஸ் என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு ஆதரவும் கொடுத்தனர். அவர்களின் வேலை முடிந்தவுடன் 'தீவிரவாதிகளை அழிக்கிறோம்' என்ற பெயரில் ஈராக்கிலும், சிரியாவிலும் தங்கள் கடையை பரப்பி ஆயுத வியாபாரத்தை ஜோராக நடத்த ஆரம்பிப்பர். இதன் கடைசி கட்டம் தான் ஐசிஐஎஸை ஒழிக்க போகிறோம் என்று அமெரிக்கா களம் இறங்கியிருக்கிறது.

நமது நாட்டிலும் நமது உளவுத்துறை 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற கற்பனை அமைப்பை உருவாக்கி அனைத்து தீவிரவாத செயல்களையும் ஊக்குவித்து பழியை அந்த அமைப்பின் மேலும் அப்பாவி இஸ்லாமியர்கள் மேலும் போட்டு வந்ததை நாமெல்லாம் அறிவோம். அரசு மட்டத்தில் இஸ்ரேலின் மொசாத் பல உதவிகளை நமது ராணுவத்துக்கு செய்து வருவதும் நாம் அறிவோம். அதே ஃபார்முலாதான் ஈராக்கிலும், சிரியாவிலும் செயல்படுத்தப்படுகிறது.

உசாமா பின் லாடனை வேலை முடிந்தவுடன் எவ்வாறு கொன்றார்களோ அதே போல் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பக்தாதிக்கும் அந்த நிலைமையே வரலாம். அமெரிக்க, யூத அரசியல் பகடைக் காயில் அடுத்த விட்டில் பூச்சி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பென்றால் மிகையாகாது.

ஐசிஐஎஸ்ஸை அமெரிக்கா வளர்த்து விட்டதால் இஸ்லாத்தின் பெயரையும் களங்கப்படுத்தி அமெரிக்காவில் இஸ்லாம் பரவுவதை இதன் மூலம் தடுக்க முடியும். ஈராக்கிலும், சிரியாவிலும் தனது ராணுவத்தை நிலை நிறுத்தி பல ஆண்டு காலம் அந்நாட்டு செல்வங்களை கொள்ளையடிக்கவும் முடியும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

Sunday, August 24, 2014

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

//இதில் அபூஹுரைராவுக்கு வஹீ வந்ததா முகமதுவுக்கு வந்ததா

பைபிளை காப்பி அடித்தது குரான் என்று சொன்னால் சொல்வார்கள், ஒரே கடவுள் "தந்த வேதம் அதனால அப்படி தான் இருக்கும் " என்று. மேலும் முகமது எழுத படிக்க தெரியாதவரு அவரு எப்படி காப்பி அடிப்பாரு என்பார்கள். ஆனால் இது குரான் இல்லை முகமதுவின் வார்த்தைகளான ஹதீஸ். பைபிளில் உள்ள. வசனங்களை கொஞ்சம் வார்த்தைகளை மாற்றிப்போட்டு அப்படியே சொல்கிறார் முகமது.//

"திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே!" என்று பலரும் இணையத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்வோம்.

1. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். பைபிளின் பழய மற்றும் புதிய ஏற்பாடுகளைப் படித்துப் புரிந்து கொண்டு அதைப் பார்த்து எழுதுவதென்பது அவர்களுக்கு இயலாத காரியம் ஆகும். தன் தோழர்கள் எவருடையேனும் உதவியை இது விஷயத்தில் அவர்கள் நாடியிருக்கலாம் என்று கூற இயலுமா? இல்லை. ஏனெனில் அவ்வாறிருப்பின் அவர்களில் சிலருக்கேனும் அவ்விஷயம் (அதாவது அவர்கள் காப்பியடிக்கின்றனர் என்பது) தெரிந்திருக்கும். அதன் விளைவாக நபியைக் குறித்த அவர்களது நம்பிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உடலில் ஒரு முள் தைத்துவிடுவதைத் தடுப்பதற்குக் கூட தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்கள் நபித்தோழர்கள் என்பதை அறிக. உண்மை இவ்வாறிருக்க நபியவர்களைக் குறித்து அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டிருப்பின் இந்தளவுக்கு தியாகம் செய்யத் துணிந்த ஒரு சமுகத்தை எங்ஙனம் அவர்களால் உருவாக்க முடிந்தது?

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (அல்குர்ஆன் 29:48)

2. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் பைபிளின் பழய மற்றும் புதிய ஏற்பாடுகள் அரபி மொழியில் பெயர்க்கப்படவில்லை. இஸ்லாம் உலகெங்கிலும் வியாபித்த பிற்காலகட்டத்திலேயே அரபி மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. பைபிளின் பழய ஏற்பாட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஏர்ணஸ்ட் உர்த்வின் என்பவர் பின்வருமாறு கூறுகிறார். "இஸ்லாமின் வளர்ச்சிக்குப் பின்னர் அரபு மொழியும் வளர்ச்சியடைந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் அன்றாட வாழ்க்கையின் மொழியாக அரபு மொழி மாறிவிட்டது. அரபு மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்படுவது அவசியமாகி விட்ட இக்கால கட்டத்தில்தான் பைபிளின் ஏராளமான பதிப்புகள் அரபியில் வெளிவரத் துவங்கின" (Ernst Wurthewin: Text of The Old Testament Page 104)
ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் பழைய ஏற்பாடு அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது என கிடைத்த கையெழுத்துக் குறிப்புகள் தெளிவு படுத்துகின்றன. (Ibid Page 224-225) பெரும்பாலும் இக்காலகட்டத்தில் தான் புதிய ஏற்பாடும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பிரபல ஆய்வாளர் சிட்னி எச் க்ரிஃபின் என்பவர் கூறுகிறார்: "அரபு மொழியில் சுவிசேஷங்களைக் கொண்ட மிகப் புராதனமான கையெழுத்து ஆவணம் சினாய் கையெழுத்துப் பிரதி 72 (Sinai Arabic MS72) ஆகும். ஜெருசலேம் சபையின் பிரார்த்தனை காலண்டரின் கால அட்டடவணைப் படி வரிசைப்படுத்தப்பட்ட நான்கு கானானிய சுவிவேஷங்களும் இதில் அடங்கும். இக்குறிப்பானது ரம்லா என்னுமிடத்தைச் சேர்ந்த ஸ்டீபன் (Stephen of Ramlah) என்பவரால் அரபு வருடம் 284 (கி.பி 897) ல் எழுதப்பட்டது என்று இதன் இறுதியில் அமைந்த குறிப்பு தெளிவாகக் கூறுகிறது. (Sidney H Griffith: The Gospel in Arabic: An Enquiry Into its Appearance In the First Abbasi Century Page 132) அதே புத்தகத்தின் இன்னொரிடத்தில் அன்போஸ்தலர்களின் நடபடிகள்,பவுலின் நிருபங்கள் மற்றும் கத்தோலிக்க நிருபங்களை உள்ளடக்கிய Sinai Arabic MS151 என்ற கையெழுத்து ஆவணம் ஹிஜ்ரி 253 (கி.பி 867) ல் பிஸ்ருப்னு ஸிர்ரி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் காணப்படுகிறது. இதில் சுவிசேஷங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். (Ibid Page 131)

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலகட்டத்திற்குப் பின்னர் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே பைபிள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நிலையில் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியவர்கள் அரபியில் உள்ள பைபிளைப் வேறு யாரிடமிருந்தோ படிக்கக் கேட்டு பின்னர் அதில் உள்ள கதைகளை உள்ளடக்கிய திருக்குர்ஆனை உருவாக்கினார்கள் என்ற வாதம் இங்கே எடுபடாமல் போகின்றது. அரபியில் இல்லாத ஒரு புத்தகத்தை அவர்கள் வாசிக்கக் கேட்டனர் என்பது அறிவீனமன்றோ?

3. இறை தூதர்களைக் குறித்து அவர்களைப் பாவிகளாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் பைபிளின் வரிகள் சித்தரிக்கின்றன. நோவா மது அருந்தி போதையில் புரண்டதாகவும், லோத்து மது அருந்தி சொந்தப் புதல்விகளுடன் சல்லாபித்ததாகவும், யாக்கோபை சதியனாகவும், தாவீதை தந்திரமாக ஏமாற்றக் கூடியவனாகவும், இயேசுவை மதுபானம் விளம்பியவராகவும் பைபிள் சித்தரிக்கின்றது. இத்தகைய குற்றங்கள் யாவும் மக்களை நன்மையின் பால் வழி நடத்தவேண்டிய இறைதூதர்களின் பண்புகளுக்கு உகந்ததல்ல என்பது அனைவரும் அறிந்த விசயமாகும். இதுபோன்ற அபத்தங்களை விட்டு குர்ஆன் பரிசுத்தமாக உள்ளது. இத்தகைய எந்த கற்பனைகளும் குர்ஆன் கூறும் வரலாறுகளில் எள்ளளவும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளிலிருந்து காப்பியடித்தார்கள் என்பது உண்மையாயின் இறைதூதர்கள் மீது பைபிள் இட்டுக் கட்டியுள்ள பாவங்கள் குர்ஆன் வசனங்களிலும் இடம் பெற்றிருக்கும் (அல்லாஹ் மிகப் பரிசுத்மானவன்!) அவ்வாறு எதுவும் அபத்தங்கள் குர்ஆனில் இல்லை என்பது மட்டுமல்ல, திருக்குர்ஆன் கூறும் இறை தூதர்களின் வரலாறுகள் அவர்களை தூயவர்களாகவும் மகான்களாகவும் மிகப்பெரிய தியாகிகளாகவும் படம்பிடித்துக் காட்டுகிறது. இது பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே குர்ஆன் என்ற குற்றச்சாட்டின் முதுகெலும்பை முறிப்பதாக உள்ளது.

4. வரலாற்றைப் பொறுத்த வரையில் அதன் அடிப்படைக்கு எவ்வகையிலும் பொருந்தாத பல செய்திகளும் வரலாறு என்ற பெயரில் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. பைபிள் பண்டிதர்களே இதனை அங்கீகரித்துள்ளனர். "பல உறுதியற்ற வரலாற்றுத் தகவல்களும் பைபிளில் உள்ளன" (பார்க்க: பைபிள் வித்ஞான கோஷம் பக்கம் 12) உண்மையில் பைபிளிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காப்பியடித்திருந்தால் அத்தகைய பல உண்மைக்கு முரணான செய்திகள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் குர்ஆன் கூறும் சரித்திரங்களை நிரூபிக்கும் புவியியல் ரீதியான சான்றுகள் கூட இன்று உலகுக்கே வெளிச்சமாக உள்ளன.

5. அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும் நிரூபிக்கப்பட்ட பல விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான பல தகவல்களையும் பைபிள் கொண்டுள்ளது. உதாரணமாக சூரியன் படைக்கப்படும் முன்னரே இரவும் பகலும் உண்டானது என்று ஆதியாகமத்தின் வரிகள் கூறுகின்றன. இன்னும் சூரியன் மற்றும் சந்திரன் சஞ்சரிப்பதால் இரவு பகல் மாற்றம் ஏற்படுகிறது, (யோசுவா 10: 12,13) பூமி விலகிச் செல்லாமால் நாட்டி வைக்கப்படுள்ளது (சங்கீதம் 104:5) முயல் அசைபோடக் கூடிய மிருகம் (உபாகமம் 14:7) போன்ற வரிகள் விஞ்ஞானத்துக்கு முரணான பைபிளின் நிலைபாட்டை தெளிவுபடுத்துகின்றன. இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் இத்தகைய தகவல்கள் தீர்க்கதரிசிகளின் வரலாற்றைக் கூறும் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என்பதாகும். பைபிளைத் தழுவியே குர்ஆன் உருவாக்கப்பட்டது என்ற கூற்று உண்மையாயின் விஞ்ஞான முரணான இத்தகை தகவல்கள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கவேண்டும். இத்தகை தகவல்கள் விஞ்ஞான முரணானவை என்பதைத் தெரிந்து கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதனை நீக்கியிருப்பார்களா என்று கருதவும் இடமில்லை. காரணம் அவர்கள் வாழ்ந்த காலம் இத்தகைய உண்மைகளை ஆராய்ச்சி செய்து அறியக்கூடிய காலகட்டமாக இருக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள எந்தவொரு தகவலும் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்று இதுவரை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. ஒருவேளை நூற்றாண்டுகள் கழிந்து கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்ட காரணத்தால் முரணான தகவல்களை நீக்கியிருப்பார்கள் என்று கூறுவார்களேயானால், குர்ஆன் இறைவசனமல்ல என்பதை நிரூபிக்க ஆதாரம் தேடியவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் வருங்காலத்தை அறியக் கூடியவராக இருந்தார் என்ற நிலைக்கு வந்துவிடுவர். இதனால் அவர்களுக்கு கடவுள்தன்மையை வழங்கி இன்னும் அதிகமான வழிகேட்டில் விழுந்துவிடுவர்.

6. பைபிளில் காணப்படாத இறைத்தூதர்கள் மற்றும் சமூகங்களின் வரலாறுகளும் திருக்குர்ஆனில் காணப்படுகின்றன. உதாரணம்: ஆது மற்றும் ஃதமூது சமூகங்கள், அவர்களுக்கு மத்தியில் அனுப்பப்பட்ட தூதர்கள் ஹ¨து (அலைஹிஸ்ஸலாம்), மற்றும் ஸாலிஹ் (அலைஹிஸ்ஸலாம். இவர்களைக் குறித்த எந்த தகவலும் பைபிளில் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பியடித்தார்கள் என்றிருப்பின் பைபிளில் கூறப்படாத இந்த இரண்டு பெரும் சமூகங்களின் வரலாறுகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்ததாம்?

7. இறைதூதர்களின் வரலாறுகளில் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. இவற்றைப் பற்றிய எந்த தகவலும் பைபிளில் இல்லை. உதாரணமாகப் பின்வரும் சம்பவங்களைக் கூறலாம்.

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களை நிராகரித்த அவர்களின் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல் (அத்தியாயம் 11 வசனங்கள் 42 முதல் 46 வரை) நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நம்றூது மன்னனுடன் நடத்திய விவாதம் (அத்தியாயம் 2: வசனம் 258) அவர்களின் தந்தை ஆஸருடன் நடந்த உரையாடல் (6:74, 19:41-49, 43: 26-27) மரணத்தவர்களை உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் ஆற்றலை விளக்குவதற்கு நான்கு பறவைகளப் பிடித்து பின்னர் அவற்றைத் துண்டுகளாக ஆக்கி அவற்றில் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டுப் பன்னர் அழைத்தால் அவை ஓடி வரும் என்று அல்லாஹ் அவர்களுக்கு விளக்கிக் காட்டியமை (2:260) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டு பின்னர் அல்லாஹ்வின் ஆற்றலால் அற்புதமாக மீட்கப்பட்டது (21: 69,70) போன்ற சம்பவங்களைக் குறித்த எந்தத் தகவலும் பைபிளில் இல்லை.
இன்னும் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிட அதனை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ராயீல் சந்ததிகளிடம் கூறுகையில் அவர்கள் பசுவை அறுக்க மனமின்றி அதன் தன்மைகளைக் குறித்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தது, (2:67-71) கொலைக் குற்றம் நிரூபிக்க அறுக்கப்பட்ட பசுவின் மாமிசத் துண்டைக் கொண்டு கொலை செய்யப்பட்டவனின் சடலத்தின் மீது அடிக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டது (2: 72-73) முதலானவை குறித்த தகவல்களும் பைபிளில் இல்லை.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. தனது குழந்தைப் பருவத்தில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொறுப்பில் புனிதப் பள்ளியில் தங்கியிருந்த மர்யம் (அலை) அவர்களுக்கு அற்புதமாக அல்லாஹ் உணவளித்தமை! (3:37) பிரசவ காலத்தில் மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த தனிப்பட்ட அருட்கொடைகள் (19: 23-26) ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை. பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்? திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. இதோ மர்யமின் வரலாற்றை விவரிக்கும் இடத்தில் திருக்குர்ஆன் கூறியது எத்துணை உண்மை!

(நபியே!) இவை (அனைத்தும்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும் மர்யம் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3: 44)

8. திருக்குர்ஆன் விவரிக்கும் இறைதூதர்களின் வரலாறுகள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டதும் தெளிவான விளக்கங்களை உடையதும் ஆகும். இறைதூதர்களின் வலாற்றை விவரிக்கும் தன்மை பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. மோசே (மூஸா அலைஹிஸ்ஸலாம்) ஸினாய் மலைக்குச் சென்றிருந்த சமயத்தில் இஸ்ரவேலர்கள் வணங்குவதற்காக பொன்னால் ஆன ஒரு காளைக் கன்றை உருவாக்கிக் கொடுத்தது மோசேயின் சகோதரனும் தீர்க்கதரிசியும் ஆன ஆரோன் (ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்) என்று பைபிளின் வரிகள் கூறுகின்றன. திருக்குர்ஆனில் மட்டுமல்ல பைபிள் கூட இறை தூதராக அறிமுகப்படுத்தும் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் சிலைவணக்கத்துக்கு துணைபோனார்கள் என்பது அறிவுக்குப் பொருந்தாததாகும். இதே சம்பவத்தை திருக்குர்ஆன் விவரிக்குமிடத்து காளைக் கன்றை உருவாக்கி இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் சிலைவணக்கத்தைத் தூண்டியவன் இஸ்ரவேல் சமூகத்தில் உள்ள சாமிரி என்ற வழிகேடன் என்றும் அதன் காரணமாக அவன் இறைகோபத்திற்கு ஆளாகி நோயினால் பீடிக்கப்பட்டான் என்று கூறுகிறது (20: 85-97)

முடிவுரை

இதுவரை குறிப்பிடப்பட்ட அனைத்து சம்பவங்களிலிருந்தும் திருக்குர்ஆன் கூறும் வரலாற்று சம்பவங்கள் பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அது முழுக்க முழுக்க இறைவேதம் என்பதும் தெள்ளத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்குமிடங்களில் பைபிளில் காணப்படும் அபத்தங்கள், அறிவுக்குப் பொருந்தாதா விஷயங்கள், முரண்பாடுகள் எதுவும் திருக்குர்ஆனில் இல்லை. திருக்குர்ஆன் கூறும் வரலாறு படிப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதாகவும் இறையச்சத்தையும் சிறந்த படிப்பினையை வழங்குவதாகவும் உள்ளன. இவை அனைத்தும் திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனையல்ல. அல்லாஹ் இறக்கிய உண்மை வேதம் என்பதற்கான சான்றுகளாகும்.
"விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை." (அல்குர்ஆன் : 53: 1-4)


மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

செத்தும் கொடை கொடுத்தாரா சீதக்காதி!

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வரலாறு!

//படையெடுப்புகளுக்கு முன்பாகவே தமிழகம் வந்த இஸ்லாம் தமிழ்ப் பண்பாட்டோடு பிரிக்க முடியாதபடி நெருக்கமாகக் கலந்துவிட்டது. தமிழ் இலக்கிய மரபை அடியொற்றித் தமிழ் முஸ்லிம் புலவர்கள் ஏராளமாக காப்பியங் களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்திருக்கின்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்சந்தமாலை என்ற செய்யுள் தமிழக முஸ்லிம்களின் தொன்மையைக் காட்டக்கூடியதாக இருக்கிறது.//
--தமிழ் இந்து நாளிதழ்
24-08-2014

பல கற்பனைக் கதைகளை இவ்வாறு தமிழில் புனைந்த முஸ்லிம்கள் இஸ்லாமியர்களின் இறை வேதமான குர்ஆனை தமிழில் மொழி பெயர்ப்போம். நபிகள் நாயகத்தின் வாழ்வை மொழி பெயர்ப்போம் என்று ஏனோ தோணவில்லை. மார்க்க அறிஞர்களும் இதற்கான முயற்சியில் இறங்கவில்லை. கடந்த நூறு வருடங்களுக்கு முன்புதான் குர்ஆனின் மொழி பெயர்ப்பை அப்துல் ஹமீது (ஏகேஏ அப்துல் சமதின் தகப்பனார்) அவர்கள் முதன் முதலாக வெளியிட்டார். அதற்கும் மார்க்க அறிஞர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.

இவ்வாறு இறைவன் என்ன மனிதர்களிடம் பேசுகிறான் என்று விளங்காமலேயே 1300 வருடங்களாக இஸ்லாமியர்கள் இந்த தமிழகத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். குர்ஆனை மொழி பெயர்க்காமல் தங்கள் கற்பனையை விரித்து பல கட்டுக் கதைகளை இஸ்லாமிய சரித்திமாக வடிக்க ஆரம்பித்தனர். 'விறகு வெட்டியார் கிஸா' 'பப்பரத்தியார் அம்மாணை' 'சீறாப் புராணம்' என்று கற்பனை கலந்த பல காவியங்களை படைக்க ஆரம்பித்தனர். எனது பாட்டி ராகமிட்டு பல பாடல்ளை தமிழில் பாடுவார். கேட்க மிக ரம்மியமாக இருக்கும். சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இது போல் உண்மையை தெளிவாக விளங்காமலேயே பல கோடி முஸ்லிம்கள் இந்த உலகை விட்டு சென்று விட்டனர்.

//காய்ந்து சிவந்தது சூரியகாந்தி கலவியிலே தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்டொலைவில் பன்னூல் ஆய்ந்து சிவந்தது பாவாணார் நெஞ்சமனுதினமும் ஈந்து சிவந்தது மால் சீதக்காதியிரு கரமே. சீதக்ககாதி இறந்தது தாளாமல் அவரது சமாதிக்குப் போய் படிக்காசுப் புலவர், புலவர்கள் வாயில் மண் அள்ளிப் போட்டு, ‘இப்படிப் போய்விட்டீரே யார் இனி ஆதரிப்பார்கள்' என அழுது அரற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில் சமாதி வெடித்துக் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்துக்கொள்ளும்படி சீதக்காதியின் கரம் வெளிப்பட்டதாம்.
அந்த அதிசயம்தான் புலவர்களின் கற்பனையினால் ‘செத்தும் கொடுத்த சீதக்காதியே' என்ற பேச்சு வழக்காகி, வள்ளல் தன்மையோடு தொடர்புடைய பெயராக சீதக்காதியின் நினைவை நம்மிடம் நீட்டி வைத்திருக்கிறது. //
-தமிழ் இந்து நாளிதழ்
24-08-2014


சீதக்காதி பல வறியவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால் அவரது சமாதி வெடித்து விரல் வெளிபட்டது என்பதை கற்பனையே! அன்றைய புலவர்கள் அளவுக்கு மீறி புகழ்வது வாடிக்கை. 'கவிதைக்கு பொய் அழகு' இல்லையா? இறந்தவர்கள் மறுபடி இந்த உலகத்துக்கு வருவது சாத்தியமில்லை என்கிறது குர்ஆன். அறிவியலும் இறந்தவர்கள் திரும்ப வெளி உலகுக்கு வருவதை ஒத்துக் கொள்வதில்லை.

மேலும் தமிழக முஸ்லிம்களின் வீடுகளில்தான் தற்போது தமிழ் வாழ்கிறது. படித்த முஸ்லிம்கள் கூட ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பு உணர்வால் இன்று வரை ஆங்கிலம் கலக்காத தமிழையே பேசி வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் வரவால் தமிழகத்தில் தீண்டாமை ஒரு கட்டுக்குள் வந்தது என்பதை மறுக்க முடியாது. 'நாம் இவ்வாறு தீண்டாமையை தொடர்ந்தால் அனைத்து மக்களும் இஸ்லாத்தின் பக்கம் சென்று விடுவார்கள்' என்ற பயத்தினால் பல ஆதிக்க சாதியினர் தங்களின் தீண்டாமை உணர்வை ஓரளவு குறைத்துக் கொண்டனர் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் தமிழகத்தை தொட்டதால் தமிழர்கள் அடைந்த மறுமலர்ச்சி இது.

//அஸ்லாமு அலைக்கும், இன்சா அல்லா, அல்லாவு அக்பர், கைரத் கியா? பஹுத் சுக்ரியா. சலாம் போலோ """"" ஆகியவைகள் எல்லாம் தமிழ் வார்த்தைகள் என்றால் நிச்சயம் முஸ்லிம்கள்தான் உண்மையான தமிழர்கள். சந்தேகமே இல்லை. (முஸ்லிமில் வரும் "ஸ்" என்பது வடமொழி எழுத்து இல்லை என்று சொன்னாலும் ஒத்துகொள்ள வேண்டியதுதான்.// -Ananamalai, tamilhindu

உருது மொழியை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள் வட நாட்டிலிருந்து கலவரத்தால் இங்கு குடியேறியர்கள். அவர்கள் வீட்டுக்குள் உருது மொழியை பயன் படுத்துவார்கள். நான் சொல்ல வருவது தமிழ் முஸ்லிம்களைப் பற்றி. அடுத்து 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதற்கு 'உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக' என்று வாழ்த்த அதை ஏற்பவரும் 'அப்படியே உங்களுக்கும் ஆகட்டுமாக!' என்று சொல்வது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. இதனை விரும்பியவர்கள் தமிழிலும் சொல்லிக் கொள்ளலாம். தமிழில் அப்படி ஒரு வழக்கம் முன்பு இல்லாததால் அரபியில் அதனை சொல்கிறோம். ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வது தவறில்லையே!

//எனது இஸ்லாமிய நண்பர்கள் எனது பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்வார்கள். என்னுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள். யேன், வுறங்கி கூட இருக்கிறார்கள். ஆனால் எனது ஹிந்து நண்பர்கள் , என் சாதியை பார்த்து, பக்கத்தில் கூட அமர்ந்து பிரயாணம் செய்ய மாட்டார்கள்//.- gupendran, tamil maran tamil hindu comment

இதுதான் இஸ்லாம்.


எத்தகைய சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்!ஒரு புறம் தின்றது செரிக்க பெப்ஸியை தள்ளுகிறோம்!

மறு புறம் பசியை போக்க தண்ணீரை குடிக்கிறோம்!

இந்த இருவரும் கூட மனித இனம் என்கிறோம்!

எத்தகைய சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்!

Saturday, August 23, 2014

நெகிழ வைத்த நிகழ்வு - சவுதி சிறையில் ஒரு இளைஞர்சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் மலஸ் சிறைச் சாலையை இங்குள்ள பலரும் அறிவர். அந்த சிறைச் சாலையில் சவுதி இளைஞர் ஒருவர் கடந்த மூன்று வருடங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். அவர் செய்த குற்றம் என்ன?

'எனது மனைவியின் தோழி அவரது கணவனால் விவாகரத்து செய்யப்பட்டு குழந்தைகளோடு வறுமையில் உழன்று வந்தார். நானும் எனது மனைவியும் அந்த விதவையின் மேல் இரக்கப்பட்டு வங்கியிலிருந்து தொழில் தொடங்க 50000 ரியால் லோன் எடுத்து கொடுத்தோம். இந்த லோனுக்காக நான் ஜாமீன் போட்டுள்ளேன். ஆனால் அந்த பெண்ணோ வெறும் 10000 ரியால் மட்டுமே திருப்பி செலுத்தி விட்டு மீதி பணத்தை தராமல் காலம் கடத்தினார். குறிப்பிட்ட காலக்கெடு முடிந்ததால் வங்கி அதிகாரிகள் நீதி மன்றத்தில் புகார் கொடுத்தனர் இதன் விளைவாக இன்று நான் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளேன்.'

'இந்த சிறை வாழ்வுக்காக நான் வருத்தப்படவில்லை. அந்த விதவை சிறை தண்டனையை அனுபவித்தால் அவரது குழந்தையும் பாதிக்கப்படும். பெண்ணாக அவருக்கு இதனை எதிர் கொள்வது மிகுந்த சவாலான ஒன்று. எனவே அவருக்கு பதில் நான் தண்டனையை அனுபவிப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன். இதற்காக நான் வருத்தப்படவில்லை. எனது குடும்பம் இறைவனின் பாதுகாப்பில் நலமுடனேயே இருக்கும். என்னைப் போல் மற்றும் சிலரும் இதே சிறையில் வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்தாததால் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.' என்கிறார் அந்த சவுதி இளைஞர்.

தனது குழந்தை தனது மனைவி தனது பெற்றோரையே பலர் இன்று நடுத்தெருவில் அலைய விட்டு விடுவதை சர்வ சாதாரணமாக பார்க்கிறோம். ஒரு தாய் தனது குழந்தையோடு சிரமப்படக் கூடாது என்று எண்ணி தன்னை வருத்திக் கொள்ளும் இந்த மனிதர் என் பார்வையில் உயர்ந்து நிற்கிறார். நம் நாட்டைப்போல இங்கும் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க பல குறுக்கு வழிகள் உள்ளன. இருந்தும் தன்னால் ஏற்பட்ட இந்த இழப்புக்காக சிறை தண்டனையை விரும்பி ஏற்றுள்ளார். இறைவன் இவரைப் பொன்ற பரந்த உள்ளத்தை நம் அனைவருக்கும் தந்து சிரமப்படுபவர்களுக்கு உதவும் எண்ணத்தை ஏற்படுத்துவானாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
23-08-2014

குறள் 615:

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

--------------------------------------------------------

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ''ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை'' என்று கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் (4661)

ஹூருல்ஈன்களைப் பற்றி தருமிக்கு சில விளக்கங்கள்!

திரு தருமி!

//சுவனம் பற்றிச் சொன்னால் சு.பி.க்கு பிரச்சனை தான். இல்லீங்களா..?//

திருப்பி ....திருப்பி ..... எத்தனை முறை சார்? ஒரு பிரச்னையும் நமக்கு இல்லை. இது பற்றி நாம் சில ஆண்டுகள் முன்பு விவாதித்திருக்கிறோம். தக்க பதிலும் கொடுத்தாகி விட்டது. இருந்தாலும். புதிதாக படிக்கும் வாசகர்களைக் கருத்தில் கொண்டு காப்பி பேஸ்ட் செய்து :-) பதில் தருகிறேன்.

“செல்லுங்கள், சுவனத்தில்! நீங்களும் உங்கள் மனைவியரும்! அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்! என்று அவர்களிடம் சொல்லப்படும்” (43 : 70)

இந்த வசனத்தின்படி இங்குள்ள குடும்பங்கள் இஸ்லாமிய முறையில் வாழ்ந்து மரணித்தால் அந்த குடும்பங்கள் அனைத்தும் சொர்க்கத்திலும் தொடருவார்கள் என்பதை விளங்குகிறோம். ஹூர்இல் ஈன்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் மனிதர்களையொத்தவர்களா? என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. அனைத்தையும் விவரித்துக் கொண்டிருந்தால் குர்ஆன் பல வால்யூம்கள் ஆகிவிடும்.

அடுத்து ஹூருல்ஈன்களைப் பற்றி உங்களின் கேள்விக்கு வருவோம்……

'சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்' என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண் துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

அப்படியானால் நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள் இல்லையா? என்ற கேள்வி எழும்.

இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் ஓர் இலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கையில் ஒருமையாகக் கூறும் போது மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிச் சொல்லமைப்பு உள்ளது. தமிழில் அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும்.

படர்க்கை பன்மையில் ஆண் களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக அவர்கள்' எனக் கூறுகிறோம்.

அரபு மொழியில் படர்க்கை பன்மையிலும் ஆண்களுக்கும் பெண் களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது. அது போல் முன்னிலையில் பேசும் போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நீ' நீங்கள்' என்று கூறுகிறோம். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது.

ஆனால் அரபு மொழியில் முன்னிலையாகப் பேசுவதற்கு இரு பாலருக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.

தமிழ் மொழியில் தொழுங்கள் என்று கூறினால் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலரையும் நோக்கிப் பேசுகிறது என்று புரிந்து கொள்வோம்.

ஆனால் அரபி மொழியில் இப்படி இரு பாலரையும் குறிக்க தனிச் சொல்லமைப்பு இல்லை.

ஸல்லூ' என்று அரபு மொழியில் கூறினால் தொழுங்கள்' என்று பொதுவாகப் பொருள் செய்ய முடியாது. ஆண்களை நோக்கித் தொழச் சொல்லும் போது மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.

பெண்களை நோக்கி தொழுங்கள்' என்று கூறுவதாக இருந்தால் ஸல்லீன' எனக் கூற வேண்டும்.

அரபு மொழியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகக் கட்டளை இடுவதாக இருந்தால் 'ஆண்களே தொழுங்கள்! பெண்களே தொழுங்கள்' என்பது போல் இரு தடவை கூற வேண்டும்.

திருக்குர்ஆனில் உள்ள அனைத் துமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்பதால் அனைத்துக் கட்டளைகளையும் இப்படி இரண்டிரண்டு தடவை கூற வேண்டும்

இரண்டு தடவை கூறினால் தற்போது உள்ள குர்ஆன் போல் இரு மடங்காக ஆகி விடும். மேலும் அரபு அல்லாத மொழியில் மாற்றம் செய்யும் போது இந்த நடை வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

சுருக்கமாகவும் இருக்க வேண்டும்; எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழியில் இருந்து அன்னியப் பட்டு விடாமலும் இருக்க வேண்டும்; ஆண்களையும் பெண்களையும் உள்ள டக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருக்குர்ஆன் ஒரு மாற்று வழியைத் தேர்வு செய்துள்ளது.

அதாவது அனைத்துக் கட்டளை களையும், அறிவுரைகளையும் ஆண் களைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டு, ஆண்களுக்குச் சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன' என்று ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் கூறுவது தான் அந்த வழிமுறை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே பெண்கள் இது பற்றி நபியவர்களிடம் கேட்டனர். 'ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?' என்று உம்மு ஸலமா (ரலி) கேட்ட போது, திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது. (நூல்: அஹ்மத் 25363)

இவ்வசனத்தில் (33:35) ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள் உண்டு எனக் கூறப் படுகிறது. அதாவது ஆண்களுக்குக் கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.

4:124 வசனத்தில் நல்லறம் செய்த ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.


இதே போன்ற கருத்தில் திருக் குர்ஆனின் 3:195, 4:124, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன. ஆண்களும், பெண்களும் இறைவ னுக்கு அஞ்சி நல்லறங்கள் செய்திருக்கும் போது, ஆண்களுக்கு மட்டும் கூடுதல் பரிசுகள் வழங்குவது அநீதியாகும்.

மறுமையில் பரிசு வழங்கும் போது அனைவரும் அதில் திருப்தி அடைவார்கள்' என்று அல்லாஹ் கூறுகின்றான். அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

(பார்க்க: திருக்குர்ஆன் 5:119; 9:100; 22:59; 58:22; 88:9; 98:8)

எனவே அல்லாஹ், ஆண்களுக்கு மட்டும் துணைவிகளைக் கொடுத்து விட்டு, பெண்களுக்குத் துணை இல்லாமல் விட மாட்டான்.

இவ்வுலகில் ஒரு பெண்ணுக்கு யார் கணவராக இருந்தாரோ அவரே சொர்க்கத்தில் கணவராக அமைவார் என்பது கட்டாயமில்லை.
கணவன் கெட்டவனாகவும், மனைவி நல்லவளாகவும் இருக்கும் போது என்ன நிலை? இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு இரு கணவர்களும் நல்லவர்களாக இருந்தால் அவள் யாரு டன் சேர்க்கப்படுவாள்? என்றெல்லாம் பல கேள்விகளும் இக்கூற்றினால் எழும்.

'இங்கிருந்த துணையை விடச் சிறந்த துணையைக் கொடு' என்று இறந்தவருக்காகப் பிரார்த்திக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர் (நூற்கள்: முஸ்லிம் 1525, அஹ்மது 25417). ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமின்றி இந்தப் பிரார்த்தனை செய்வது நபி வழியாகும்.

இங்கிருப்பதை விடச் சிறந்த துணை மறுமையில் ஆண்களுக்கும், பெண் களுக்கும் உண்டு என்பதை இதிலிருந்து அறியலாம். எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண் களையும் குறிக்கும் என்று மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் கொண்டு அறிந்து கொள்கிறோம்.

அது போல் தான் சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்தும் ஆண் பாலாகக் கூறப்பட்டுள்ளது. அதுவும் பெண்பாலுக்கும் பொருந்தும் என்று அதே வசனங்களைச் சான்றாகக் கொண்டு முடிவு செய்வதே ஏற்புடையதும், இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33)

சுவர்க்கத்தில் ஆண்கள் விரும்புவது ஹூருல் ஈன்களை. பெண்களைப் பொறுத்த வரையில் அதற்குச் சமமான சிறந்தவைகள் அவர்களுக்கு கிடைக்கும். நுண்ணறிவாளனான அல்லாஹ் அவனுடைய அளவிட முடியாத மதி நுட்பத்தைக் கொண்டு ஆண்களுக்கு ஹூருல் ஈன்கள் கிடைப்பது போன்ற அளவிற்கு பெண்களுக்கு என்ன கிடைக்கும் என வெளிப்படையாக குறிப்பிடவில்லை. இது அல்லாஹ் மிகவும் கண்ணியமானவன் என்பதையும் நாணமுறுபவன் என்பதையும் குறிக்கின்றது. மேலும் எதைக் குறித்து பெண்களே மிகவும் நாணமுறுபவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் இருக்கின்றார்களோ அதையே எப்படி அல்லாஹ் வெளிப்படையாகக் கூறி அதை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள் எனக் கூறுவான்? எனவே அல்லாஹ் தன்னுடைய திருமறையில் பின்வரும் வசனத்தில் மறைமுகமாகக் கூறியிருக்கிறான்.

உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது (அல்குர்ஆன் 41:31)

அல்லாஹ்வின் நல்லடியார்களான பெண்கள் ஹூருல் ஈன்களை விட உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பார்கள்: -

ஹூருல் ஈன்கள் எவ்வளவு தான் அழகிலும் குணத்திலும் அவர்களின் படைப்பிலும் சிறப்பு மிக்கவர்களாயினும் இவ்வுலகில் நல்லறம் புரிந்த பெண்கள் சுவர்க்கத்தில் ஹூருல் ஈன்களை விட அந்தஸ்த்தில் உயர்ந்தவர்களாகவும் அழகில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். ஏனென்றால் ஹூருல் ஈன்கள் இறைவனின் நல்லடியார்களை மகிழ்விப்பதற்காக சுவர்கத்தில் படைக்கப் பட்டவர்களாவார்கள். அவர்கள் இவ்வுலகில் நல்லறங்கள் புரிந்த நல்லடியார்களுக்கு கட்டுப்பட்டவர்களாக சுவனத்தில் இருப்பார்கள். ஆனால் இறைவனின் நல்லடியார்களான பெண்களோ தாங்கள் செய்த நற்செயல்களின் விளைவாக சுவனம் சென்றவர்கள். எனவே இவர்களுக்கும் ஹூருல் ஈன்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது.

தகவல் உதவி: பி.ஜெய்னுல்லாபுதீன்

அப்புறம் என்ன சார்? சந்தேகம் தீர்ந்ததா? ஏசுவையும், முகமது நபியையும், ஏக இறைவனின் இனி ஒத்துக் கொள்ளலாம் இல்லையா? வழக்கம் போல் எஸ்கேப் ஆகி விடுவீர்கள். தெரிந்ததுதானே! :-)


220408 குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் இலவச விநியோகம்!மன்னர் பஹத் காம்லக்ஸிலிருந்து இறை வேதமான குர்ஆனின் மொழி பெயர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு இலவசமாக சவுதியிலும் மற்றும் உலகின் பல பாகங்களுக்கும் அனுப்பப்பட்டன. இந்த வருடம் ரமலானில் மாத்திரம் 220408 காப்பிகள் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டது ஹிஜ்ரி 1405 ல். இந்த முப்பது வருடங்களில் இது வரை இந்த அமைப்பானது மொத்தம் 275017360 காப்பிகளை உலகம் முழுக்க அனுப்பியுள்ளது. இதோடு அல்லாமல் ஆதாரபூர்வமான ஹதீது கிரந்தங்கள் புகாரி, முஸ்லிம், அபூதாவுது போன்ற நபியவர்களின் சொற்களும் செயல்களும் புத்தகங்களாக்கப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டு பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.தகவல் உதவி:
அல்ரியாத்.காம்
23-08-2014

இது போன்ற சிறந்த செயல்களை சவுதி அரசு செய்யும் போது நாம் பாராட்ட வேண்டும். இறைவன் இந்த ஆட்சியாளர்களுக்கு குர்ஆனின் கட்டளைகளின்படி சவுதி அரேபியாவை கொண்டு செல்ல அதுவும் உலக முடிவு நாள் வரை இப்பணி தொடர நாமும் பிரார்த்திப்போம்.

Friday, August 22, 2014

நரேந்திர மோடிக்கு மற்றுமொரு மகுடம் சூட்டப்படுகிறது!பானாஜி: மது குடிப்பது கோவா மாநில கலாச்சாரம் அதற்காக நாங்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என கோவா மாநில பா.ஜ. மூத்த தலைவர் பேசியுள்ளார்.

கேரள அரசின் அதிரடி முடிவு : கேரளாவில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் பல ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. குஜராத் வழியை பின்பற்றி கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பை முதல்வர் உம்மன் சாண்டி வெளியிட்டார். இந்த அறிவிப்பு கேரள பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து கேரளா வழியை கோவா மாநிலமும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுகுடிப்பது எங்கள் கலாச்சாரம் : இந்நிலையில் கோவா மாநிலத்தில் பா.ஜ. தலைமையிலான முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆட்சி நடக்கிறது. இம்மாநில பா.ஜ. துணைத்தலைவர் வில்பர்ட் மெஸ்கூயிட்டாவிடம் கேரள அரசின்முடிவு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்து பேசுகையில், மது குடிப்பது எங்கள் மாநிலத்தின் கலாச்சாரம் எங்கள் மாநிலத்தில் திருமணம் மற்றும் இதர விஷேச நிகழ்ச்சிகள் எது நடந்தாலும், அதை கொண்டாட மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.இற்காக நாஙகள் கேரளா அரசு அறிவித்தது போன்ற பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கு அவசியமும் இருக்காது . இவ்வாறு அவர் பேசினார்.

பூரணமதுவிலக்கை அமல்படுத்திய மாநிலங்கள்
மிசோரமில் - 1995
குஜராத் - 1960
மணிப்பூர் -1999
நாகாலாந்து -1990
அரியானா -1995-1998
ஆந்திரா - 1957-69

தினமலர்
23-08-2014

மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: -

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: -

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.

மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்: -

மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)

கன்னட எழுத்தாளர் அனந்த மூர்த்தி காலமானார்!கன்னட எழுத்தாளர் அனந்த மூர்த்தி காலமானார்!

கன்னட எழுத்தாளர் அனந்த மூர்த்தி உடல் நிலை சரியில்லாமல் கடந்த நான்கு நாட்களாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவசர சிகிச்கை அளித்தும் பலனில்லாமல் இன்று வெள்ளிக் கிழமை காலமானார். இவருக்கு வயது 81. டிசம்பர் 21, 1932 ல் திருஹல்லி தாலுகா சிமோகா மாவட்டத்தில் பிறந்தார். 'சமஸ்காரா' என்ற இவரது நாவல் மிகப் பிரபலமாகி திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கன்னட இலக்கியத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றியவர். எழுத்துலகின் உயரிய விருதாகக் கருதப்படும், "ஞானபீடம்' விருது பெற்றவர்.

பெங்களூரில், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது, "பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமரானால், நான் இந்தியாவில் வசிக்க மாட்டேன்' என்று கூறியிருந்தார். இதை அறிந்த, பா.ஜ.,வினர் கடும் கோபம் அடைந்தனர். "கர்நாடக சட்டசபைத் தேர்தல்களின் போது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் இவர், மோடியைப் பற்றி பேச அருகதை இல்லை. விரும்பினால் அவர், இந்தியாவை விட்டு வெளியேறிக் கொள்ளலாம்' என்றனர்.

மேலும், பா.ஜ., பிரமுகர்கள் பலர், எழுத்தாளருக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தனர். இதை அறிந்த அனந்தமூர்த்தி மேலும் கொதிப்படைந்தார். அவர் அன்று கூறியதாவது:

“பா.ஜ.,வுக்கு என்னைக் கண்டால் எப்போதுமே பிடிக்காது. ஏனெனில், நான், ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளை வெளிப்படையாக எதிர்ப்பவன். ஹிந்துயிசம் பற்றி சரியாக அறியாத அவர்கள், அவர்களின் ஹிந்துயிசத்தை பரப்பி வருகின்றனர். என்னிடம் அந்த கருத்தை விற்க முடியாததால், கோபம் கொண்டுள்ளனர்.

ஆட்சியில் இல்லாத போதே, இவ்வாறு செயல்படுபவர்கள், மோடி பிரதமராகி விட்டால், எப்படி செயல்படுவர் என யோசிக்கவே முடியவில்லை. பிரதமர் பதவி என்பது, மிக உயர்ந்த பதவி. அதற்கென சில தகுதிகள் உள்ளன. நேரு, போன்றோர் வகித்த பதவி அது. அதை வகிக்க, மோடிக்கு தகுதியில்லை. பிரதமர் என்பவர், எல்லாராலும் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும்; பயத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கக் கூடாது. மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மக்கள் விரோத அரசு அல்ல; ஆனால், ஊழல் அரசு. இந்த அரசு, பதவியிலிருந்து வெளியேற வேண்டும். அதற்காக, மோடி போன்றவர்கள், அந்த பொறுப்புக்கு வரக் கூடாது”. இவ்வாறு, எழுத்தாளர், அனந்தமூர்த்தி கூறினார்.

ஆனால் அனந்த மூர்த்தியின் எண்ணம் நிறைவேறவில்லை. ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்வா இயக்கத்தினர் இந்து மதத்துக்கும், இந்திய நாட்டுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் எத்தகைய கேட்டை விளைவிக்கக் கூடியவர்கள் என்ற உண்மை பல கோடி இந்திய மக்களுக்கு சொல்லப்படாமல் விடப்பட்டுள்ளது. இன்னும் ஐந்து வருடம் கழித்து அனந்த மூர்த்தியின் வார்த்தை எத்தனை சத்தியமானது என்பதை வோட்டளித்த இந்திய மக்கள் உணர்வர். அது வரை நாமும் பொறுப்போம்.

இவரைப் போன்ற நல்லவர்கள் மறைந்தாலும் கோடான கோடி இந்தியர்களின் மனதில் பசுமையான நினைவுகளால் வாழ்ந்து கொண்டே இருப்பர்.

அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை-அமெரிக்க ஆய்வு

அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை-அமெரிக்க ஆய்வு

எனது தாத்தாவுக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. முடிந்த வரை பள்ளியில் சென்று தொழுது வருவதை நான் பார்த்துள்ளேன். சில வருடங்களுக்கு முன் மதிய தொழுகை தொழுது விட்டு அவர் வீடு செல்வதற்கு பதில் எங்கள வீட்டு பக்கம் வர ஆரம்பித்துள்ளார். எனது நண்பன் இவர் ஞாபக மறதியில் தெரு மாறி செல்கிறார் என்பதால் 'என்ன தாத்தா? தெரு மாறி செல்கிறீர்கள்? உங்கள் வீடு அடுத்த தெரு' என்றவுடன் தாத்தா சுதாரித்துக் கொண்டு 'ஹி...ஹி...எனக்கு தெரியும் தம்பி. என் மக வீட்டுக்கு போறேன். வேறொன்றுமில்லை' என்று சிறிது தூரம் நடந்து பிறகு வந்த வழியே திரும்பி சென்றிருக்கிறார். என் நண்பன் என்னிடம் 'உன் தாத்தாவுக்கு குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை என்ற கதை தான். எப்படியாவது சமாளித்து தான் கண்டிஷனில் இருப்பதாக காட்டிக் கொள்வார்' என்றான் சிரித்துக் கொண்டே........(அமெரிக்க சர்ச் ஒன்றில் தொழுகைக்கான அழகிய அழைப்பொலி)

இதை நான் சொல்லக் காரணம் இறை பக்தியில் தினமும் தொழுகையை தவறாது பள்ளியில் சென்று ஐந்து நேரமும் நிறைவேறறுபவர்கள் எவருக்கும் சிரமம் கொடுக்காமல் தங்களது 90 வயதிற்கு பிறகும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதை பார்த்து வருகிறேன் என்பதை தெரிவிப்பதற்காகவே. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் எனது தாத்தாவுக்கு கண் பார்வை மங்கத் தொடங்கியுள்ளது. இதே போல் இந்துக்களிலும் காலையிலும் மாலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று வருபவர்கள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதை பார்த்து வந்துள்ளேன்.

இதை எல்லாம் நான் இங்கு குறிப்பிட காரணம் ஐவேளை தொழுகையை நேரம் தவறாமல் நிறைவேற்றும் முஸ்லிம்களிடம் அல்ஜிமர்ஸ் எனும் நோய் 50 சதவீதம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக அமெரிக்க - இஸ்ரேலிய விஞ்ஞானிகள் புதிதாக கண்டு பிடித்துள்ளனர். அப்பாவி உலக மக்களை அழிப்பதில் முன்னணியில் இருக்கும் இந்த இரு நாடுகளும் இது போன்று ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் பலரும் பயனடைவர். :-) அல்ஜிமர்ஸ் எனும் இந்த நோய் மனிதனுக்குள் ஏற்படும் ஞாபக மறதியைப் பற்றியது. தொழுகாத மக்களை விட நேரம் குறிப்பிட்டு சரியாக மசூதியை அடைந்து விடும் மக்களுக்கு இந்த நோய் வருவது தடுக்கப்படுகிறது.

டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார். இவரது ஆராய்ச்சியின் முடிவை துருக்கியில் நடந்த சர்வதேச ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. துருக்கி, ஈரான், ஈராக், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரபு நாடுகள், இந்தியா, போன்ற நாடுகள் இதில் கலந்து கொண்டன.

65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

'யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் நிலை நாட்டுகிறாரோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம். '
-குர்ஆன் 7:170

ஆம். மன நிம்மதி, நோயிலிருந்து மீட்டல், பல வேலைகளையும் குறித்த நேரத்தில் செய்வதற்கான உந்துதல், சிறந்த உடற்பயிற்சி இவை எல்லாவற்றையும் விட இறப்புக்கு பிறகு இறைவன் தரக் கூடிய சொர்க்க வாழ்க்கை என்று ஐந்து வேளை தொழக் கூடியவரின் நன்மையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இக்பால் செல்வன், சார்வகனிலிருந்து தருமி வரை எப்படியாவது முஸ்லிம்களை நாத்திகத்தின் பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபடுகின்றனர். ஆனால் இறைவன் அவர்கள் நம்பும் அறிவியலின் மூலமாகவே பல உண்மைகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டுள்ளான்.

எனவே ஐவேளை தொழும் பழக்கம் இல்லாத மக்கள் இன்றிலிருந்து ஐந்து வேளையும் மசூதியில் சென்று தொழும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்களாக! இதன் மூலம் செய்யும் தவறுகளிலிருந்தும் நோய்களிலிருந்தும், இறைவனின் கோபத்திலிருந்தும் தங்களை காத்துக் கொள்வார்களாக.....

http://www.haaretz.com/news/national/israeli-u-s-study-praying-regularly-could-reduce-risk-of-alzheimer-s.premium-1.453668

http://israel21c.org/health/israeli-research-shows-gardening-reading-and-praying-can-help-stave-off-alzheimers-disease

http://dinaex.blogspot.in/2012/08/50.html

http://thebeautyofislam.tumblr.com/post/28542915951

http://25.media.tumblr.com/tumblr_m64tffH12e1ruvx75o1_500.gif

Study shows females who prayed regularly had 50 percent less chance of having mild dementia or Alzheimer’s.

Praying regularly can reduce the risk of developing Alzheimer’s disease and milder memory problems by 50 percent, according to a joint Israeli-American study funded by the U.S. National Institutes of Health.

The study was aimed at identifying factors that increase the risk of developing Alzheimer’s. Researchers examined several aspects of the subjects’ lives, including what they did in their spare time during their 20s and 30s. It turns out females who prayed regularly had 50 percent less chance of having mild dementia or Alzheimer’s.
Lead researcher Prof. Rivka Inzelberg said they couldn’t determine the connection between praying and Alzheimer’s amongst men because 90 percent of their male subjects prayed daily. “But among the women, only 60 percent of the women prayed five times a day, as per Islamic custom, but 40 percent didn’t pray regularly, so we were able to compare the data,” Inzelberg explained.

The study did not characterize the connection between prayer and memory, but Inzelberg noted, “Prayer is a custom in which thought is invested, and the intellectual activity involved in prayer, beyond the content of the prayers, may constitute a protective factor against Alzheimer’s.”

The findings, presented at a Tel Aviv conference last month, also showed that 50 percent more women suffer memory problems than men and that formal schooling reduced the risk of Alzheimer’s and memory impairments.

Other risk factors that were identified were high blood pressure, diabetes, excess fats in the blood and heart problems.

In addition, researchers said those who gardened in their youths also had a reduced risk of dementia, though they hadn’t calculated the exact degree of influence.
This is not the first study suggesting a link between religion and health. In 2005 researchers concluded that adopting a spiritual or religious lifestyle slows down the progress of Alzheimer’s. An earlier study showed that more people succumbed to heart problems and cancer in secular kibbutzim than in religious ones.

The Israeli group Assia found that the morbidity and mortality rates among infants was much lower in religious communities than in secular ones. And researchers who conducted another joint Israeli-American study postulated that the mortality rate was lower for Arab dialysis patients than Jewish patients as a result of spiritual and community support.

http://thebeautyofislam.tumblr.com/post/28542915951