Followers

Wednesday, December 20, 2006

வேறு கிரகங்களில் மனிதன் வாழ முடியுமா?

'பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10

இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.-------------------------------------------------------------------------

'எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரோ?''கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரோ?''இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்'

அடடா! என்ன அருமையான சிந்தனை!(உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு கூட நீங்க எழுதுனது தானோ!)சரி. வைரமுத்து சார்!அதை இயற்கை என்று சொல்வது தவறுங்க.அது தான் நம்மை படைத்த இறைவன்.'இதை எண்ணி எண்ணி இறைவனை வியக்கிறேன்'என்று சிறிது மாற்றம் செய்து பாருங்கள். அழகாக பொருந்திப் போகும. ஏ.ஆர். ரஹ்மானும் மிகுந்த சந்தோஷமடைவார்.

posted by சுவனப்பிரியன் @ 3:38 AM

9 Comments:
At 6:07 AM, Thekkikattan said...
ப்ரியன், நீங்கள் விசயங்களை அறிவு சார்ந்து பகிர்ந்துகொள்வதில் ஆர்வமுடன் இருப்பதாக இருந்தால் இங்கு நிறைய விசயங்கள் பரிமாறிக்கொள்லாம். ஆனால், தீர்க்கமான ஒரு மனதுடன் வைக்கும் எவைக்கும் பதிலளிப்பது ஆழ்ந்து வடித்த மடலை எழுதி முடித்தவுடன் குப்பைக் கூடையில் கசக்கி போட்டுவிடுதற்க்கு சமம்தான் உங்களுக்கு அளிக்கும் பதில்களும் என தோன்றச் செய்கிறது.முதலில் பரிணாமம் ஒத்த கொள்கையில் மதத்தின் பால் சார்ந்த எண்ண ஒட்டதில் எண்ண குளர்பாடுகள் இருக்கிறது என்பதற்க்கு தீர்வு கண்டால். அயல் கிரகங்களில் ஜீவராசிகள் இருக்கின்றனவா...இந்த பிரபஞ்சத்தில் எத்தனை பால் வீதிகள் உள்ளன, அவற்றில் எத்தனை சூரியன்கள் இருக்கின்றன, அச் சூரியன்களை சுற்றி எத்தனை கிரகங்கள் உள்ளன, எந்த கோணத்தில், எவ்வளவு தட்ப வெப்ப சூழ்நிலையை கிரகித்துக் கொண்டு என்ற கேள்விகளுக்கு பதில்களை பெறுவதற்க்கு முன்பு.என்னை பொறுத்த வரையில், நம்மை போன்ற பூமிக் கிரகங்கள் அனேகம் இப்பிரபஞ்சத்தில் இருக்க வாய்ப்புண்டு என்பதே. நாம் மட்டும் ஒன்றும் அபூர்வம்மல்ல...இப்பிரபஞ்சத்தில் என்பதே...!

At 7:21 AM, சுவனப்பிரியன் said...
திரு தெக்கிட்டான்!மாற்றுக் கருத்துக்கள் எது இருந்தாலும் அது யார் சொன்னாலும் மதிப்பளிப்பவன் நான். அதை ஆராய்ந்து அதில் உள்ள உண்மைகளை எடுத்துக் கொள்பவன். முன்னோர்கள் சொன்னதை கண்ணை மூடிக் கொண்டு பின் பற்றாமல் நம் அறிவுக்கு எட்டியதைத் தான் நம்மால் எடத்துக் கொள்ள முடியும். அதைத் தான் நானும் செய்து வருகிறேன்.

At 3:42 AM, srinidhi said...
Anyway plans are afoot to establish human colonies in moon.sowhat we do then.Humans can live inmoon.Humans have lived in space stations which are not part of earth.Scientists and technologistsdo not go by Koran and that is whythe west is forging ahead in science while the arab world iskilling itself in sectarian violence.

At 7:50 AM, சுவனப்பிரியன் said...
நிலவுக்கு சென்று தங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், அது நிரந்தரமல்லவே! பூமியிலிருந்து கொண்டு போன ஆக்சிஜன்,தண்ணீர்,உணவு முதலியவை தீர்ந்த பின் பூமியிலிருந்து தான் அவைகள் திரும்பவும் அனுப்பப் பட வேண்டும். எனவே குர்ஆன் சொல்வது போல் நிரந்தர தங்குமிடம் பூமியே!அடுத்து மனிதனை சிந்திக்கச் சொல்கிறது குர்ஆன். அதன்படி அய்ரோப்பியர்கள் சிந்தித்தார்கள். கஷ்டப் பட்டார்கள். அதன் பலனை அனுபவிக்கிறார்கள். முஸ்லிம்களிடம் குர்ஆன் இருந்தும் அதன் அருமை தெரியாமல், சிந்திக்காததனால் பின் தங்கி இருக்கிறார்கள். மேலும் அய்ரோப்பியர்கள் எந்த அளவு உலகுக்கு நன்மை செய்திருக்கிறார்களோ, ஒழுங்கான வழிகாட்டுதல்இல்லாததனால் அதே அளவு தீமைகனையும் நமக்கு வாரி வழங்கியிருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

At 10:37 AM, Sivabalan said...
Mr.சுவனப்பிரியன்,I am an atheist.My opinion is, take whatever is good from " the Quran (குர்ஆன்), the Bible, the Bhagavat Gita" to lead a peaceful life. All things, which we see, are man made except the nature.

At 10:42 AM, vrtttp said...
It's possible to establish human colonies in moon and we don't need supply oxygen from earth because moon has ice so oxygen can be extracted. It is also possible to have earth like planets elsewhere in the universe. Also, if you assume that 1% of all the stars have planets and 1 % of those stars have earth-like planets and 1% of those planets have life forms or earth-like atmosphere. you would get thousands of solar systems (i read it in discover magazine). So i think it is possible to have find life or live in another planets. The biggest problem we face is that we dont have any unity. Every country on earth should come together to form a huge alliance. Otherwise it would be hard for us to go these different worlds

At 10:07 AM, சுவனப்பிரியன் said...
திரு விஆர்டிடிபி!விஞ்ஞானிகள் சிந்திக்கட்டும்! அதை இஸ்லாம் வரவேற்கிறது. எந்த ஒரு செலவும் இல்லாமல் தண்ணீரும் காற்றும் இன்ன பிற வசதிகளும் பூமியில் இருக்க, யார்தான் இத்தனை ஏற்பாடுகளை செய்து கொண்டு நிரந்தரமாக நிலவில் தங்கியிருக்க முடியும்? கோடீஸ்வரர்களுக்கு வேண்டுமானால் சாத்தியப் படலாம்.அதுவும் பரிசீலனையில் தான் இருக்கிறது.நடுத்தர வர்க்கமான நானும் நீங்களும் சென்று நிரந்தரமாக தங்க முடியுமா?

At 10:08 AM, சுவனப்பிரியன் said...
திரு சிவ பாலன்!உண்மைதான்! அவரவர் மதத்தில் உள்ள நல்லவைகளை எடுத்து மற்ற மத்தவர்களையும் அரவணைத்து சென்றால் ஒரு குழப்பமும் இல்லையே! இதை அரசியல் வாதிகளும், அனைத்து மத தீவிரவாதிகளும் உணர வேண்டும். உணர்வார்களா?

At 1:09 AM, நல்லடியார் said...
சுவனப்பிரியன் மீண்டும் ஒரு அருமையான பதிவு கொடுத்துள்ளீர்கள். மேலும் பின்னூட்டமிட்ட சிலர் உங்களின் வாதமாகிய //எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.// என்பதை புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். இதில்லுள்ள தர்க்க நியாயத்தை உணராமல் "பரிணாமம்" பற்றி திசை திருப்புவது ஏன் என்பது சம்பந்தப் பட்டவர்களுக்கே வெளிச்சம்.

//Scientists and technologists do not go by Koran// The commenter must agree that some scientist witnessed quran for their discoveries/inventions. Pls. Google for proof.

Monday, December 18, 2006

விதியை நம்பியதால் கிடைக்கும் பயன்களை

பி. செந்தில் குமார்
? நான் எனது இஸ்லாமிய நண்பரிடத்தில் இஸ்லாத்தைப்பற்றி விவாதிப்பது உண்டு. எனது இந்த கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. எனவே உங்களிடம் கேட்கின்றேன். எதுவும் கடவுள் விருப்பப்படி நடக்கிறது என்றால் மத மோதல்களும், மற்ற தவறுகளும் கடவுளின் விருப்பப்படி தானே நடக்கிறது. நான் கடவுளை மறுத்து வாழ்வதும் கடவுளின் விருப்பப்படி தானே. ஆக அவரின் விருப்பப்படி நடக்கும் தவறுகளுக்கு அவரே தண்டனை தருவது எவ்விதத்தில் நியாயம்? - 34

! எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று இஸ்லாம் கூறுவதை அடிப்படையாக வைத்து இவ்வாறு கேள்வி கேட்கப்படுகிறது. விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள் வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின்படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏது மில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், கடவுள் என்பவன் பல வீனனாக, கையாலாகாதவனாகக் கருதப் படும் நிலை இதனால் ஏற்படும். ''நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்'' என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது. நாளைய தினம் நீங்கள் சென்னை வர விருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது. நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும். நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத்தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது. அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது. அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது. இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன. இதனால் தான்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத் 6381)
இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டதிட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப்பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது. அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது. அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம். அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களின் நம்பிக்கை போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை. ''எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே'' என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லா விட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது. எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்பியதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது. அதே நேரத்தில் விதியை நம்பியதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப்பார்த்தால் அதற் காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும். ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கை கூட வில்லை என்று வைத்துக் கொள்வோம். விதியை நம்புகின்றவன் ''நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?'' எனக் கூறி மறுநாளே சகஜ நிலைக்கு வந்து விடுவான். அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம். இவ்வளவு பாடுபட்டும் கைகூட வில்லையே என்று புலம்பியே மன நோயாளியாவான். அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் அவன் சகஜ நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.

''உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காக வும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ் வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். '' (திருக்குர்ஆன் 57:23)
விதியை நம்பியதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். நமக்கு செல்வங்களையும், வசதி களையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும். விதியை நம்புவதன் மூலம் இந்த மன நோயிலிருந்து விடுபடலாம். ''இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத் துள்ளனவே தவிர நம்மால் அல்ல'' என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும். அது போல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தி யடைந்து விடுவோம். இந்த மன நோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும். ''நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான்'' என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் சகஜ நிலையை அடைவான். இவ்விரு நன்மைகளும் விதியை நம்பியதால் மனித குலத்துக்கு ஏற்படு வதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். சிலர் எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று காரணம் காட்டி வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். ''நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லவர்களாக ஆவோம்'' என்று நமது விதியில் இருந்தால் நமது முயற்சி இல்லாமலேயே ஈடுபட்டு விடுவோம். நாம் நல்லவர்களாக மாட்டோம் என்று நமது விதியில் எழுதப்பட்டிருந்தால் நாம் முயற்சி செய்வதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். விதியை நம்பச் சொல்கின்ற இறைவன் தான் முயற்சிகள் மேற் கொள்ளுமாறும் நமக்குக் கட்டளையிடுகிறான் என்பதை மறந்து விடுகின்றனர். மேலும் அவர் உண்மையிலேயே விதியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே வணக்க வழிபாடுகள் செய்யாமல் இருக்கிறார் என்றால் எல்லா விஷயத்திலும் அவர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதில் மட்டும் 'விதி' இருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. இவ்வுலகில் ஒருவனுக்கு ஏற்படும் செல்வம், வறுமை போன்றவையும் பட்டம் பதவிகள் போன்றவையும் விதியின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன என்று தான் இஸ்லாம் கூறுகின்றது. இறைவணக்கத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு விதியின் மீது பழியைப் போடுபவர் இந்த விஷயத்திலும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமல்லவா? தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக் காதது முரண்பாடாகவும் உள்ளது. எனவே, விதியைப் பற்றி சர்ச்சை களைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக் கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்பியதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.

Thanks Mr P.Jainullabudeen

Sunday, December 17, 2006

Monday, December 11, 2006

குறட்டை பிரச்னையும் அதை தவிர்க்க சில வழிமுறைகளும்

மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கின்றார் என்றால் 20 வருடங்கள் தூக்கத்தில் கழிகிறது. இந்த தூக்கத்திற்காகவே இரவினை உண்டாக்கியதாக அல்லாஹ் தன் திருமறையில் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான்:

இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும், பகலையும் உண்டாக்கினான்; (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்-குர்ஆன் 28: 73)

மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 78: 9)

மேற்கூறிய அல்-குர்ஆனிய வசனங்களில் தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கியிருக்கிறான் அல்லாஹ். ஆனால் அந்த தூக்கத்தில் மனிதர்கள் தன்னை அறியாமலேயே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான் குறட்டை. குறட்டை பிரச்சினையால் இரவு, பகல் என்று பாராமல் எந்த நேரத்தில் தூங்கினாலும் பக்கத்தில் படுத்திருப்பவர்(கள்) பாடு படுதிண்டாட்டம்தான். ஆக, குறட்டை பிரச்னைப்பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம்.

பொதுவாகக் குறட்டை வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. இது தவறு, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் குறட்டை வரும். அதாவது, சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தைத்தான் குறட்டை என்கிறோம்.குரல்வளை சுருங்கும் போது வெளியேறும் மூச்சுக் காற்றின் இயல்பான அளவு குறைந்த சத்தத்தை உண்டாக்குகிறது. தொண்டையின் சுவர்களில் இருக்கும் அண்ணங்களிலிருந்தும் சப்தம் உற்பத்தியாகும். குழந்தைகளிடமும் குறட்டைப் பிரச்னை உண்டு, இதற்கு முக்கியக் காரணம் அடிநாய்டுகள் தான். குழந்தைகளது தொண்டையின் மேல் பகுதியில் அடிநாய்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். இதனால் குறட்டை வரும். இரண்டு டான்சில்களும் சந்திக்கும் இடத்திலிருந்தும் குறட்டைச் சப்தம் வர வாய்ப்பு உண்டு.அதிக உடல் எடை குறட்டைக்கு முக்கியக் காரணம், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்துவிடும். முறையான உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் இந்த குறட்டைப் பிரச்னையால் பாதிக்கப்படுவதுண்டு.

குறட்டையில் மூன்று வகை உண்டு. முதலாவது மூளையின் மத்தியப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உண்டாவது, இரண்டாவது அப்ஸ்ட்ரக்டிவ் டைப், இது கொஞ்சம் கடுமையானது. இந்த வகையில் இயல்பான மூச்சிவிடுவதில் சிரமம் ஏற்படும், மூன்றாவது வகை மிகிஸ்ட் டைப், இது முதலிரண்டு வகையின் கூட்டணி Positive airway pressure காரணமாகவும் குறட்டை வரும்.பாலிஸோம்னோகிராபி என்ற டெஸ்ட்டுகள் மூலம் குறட்டை மூச்சுக் குழாயில் காற்று உட்புகும் தன்மை கால்களின் இயக்கம் அல்லது அசைவு உடலின் இயங்கு நிலை, நாடித்துடிப்பு, ஆக்ஸிஜன் சமச்சீரான நிலை உள்ளிட்டவற்றை கண்காணித்து தெரிந்துக் கொள்ள முடியும்.முன்பெல்லாம் குறட்டைக்குச் சிகிச்சை கிடையாது, ஆனால் இப்போது நிறைய யுருலோ டயாலிட்டோபேரிங்கோ பிளாஸ்டி இது ஏதோ பிளாஸ்டிக் சர்ஜரியோ என்று எண்ணி விடாதீர்கள். தொண்டையில் செய்யப்படும் ஆபரேஷன்தான் இது. தவிர ரேடியோ ஃப்ரிக்குவின்சி முறை (Radio Frequency Method) எனப்படும் நவீன சிகிச்சையும் வந்திருக்கிறது. இம்முறைகளின் மூலம் குறட்டையை பெருமளவு கட்டுப்படுத்திவிட முடியும். இவை இரண்டுமே ஆபரேஷன் செய்து குறட்டையை குறைக்கும் முயற்சிதான். நல்ல தேர்ந்த டாக்டரிடம் மட்டுமே இந்த ஆபரேஷனைச் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு பாதிப்புகள் உண்டாகும் ஆபத்து உண்டு.

மேலும் குறட்டையை தவிர்க்க உடல் பருமனாகாமல் தவிர்த்து விடுவது அவசியம். அதுபோல் நாள்பட்ட அலர்ஜி இருப்பவர்கள் உடனடியாகச் சிகிச்சை எடுப்பது நல்லது. கழுத்து தொண்டையின் மேல் பகுதியில் கொழுப்புச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறையான மூச்சுப் பயிற்சி எடுப்பதாலும் குறட்டையை தவிர்க்க முடியும். அது மட்டுமில்லாமல் மது அருந்தும் பழக்கம் இருக்கவே கூடாது, போதை மாத்திரைகள் மற்றும் மயக்கம் தரும் மருந்துக்கள் உட்கொள்ளவே கூடாது.

Thanks to Abu Salma B.E-M.B.A

Anbudan
Suvanappiriyan

Monday, December 04, 2006

குர்ஆன் இறை வேதம் என்பது உண்மையா?

குர்ஆன் இறை வேதம் என்பது உண்மையா?

குர்ஆன் வாதத்தையும் விவாதத்தையும் ஊக்கமூட்டுகிறது:

குர்ஆனைப் பற்றி எவரும் சந்தேகம் கொண்டு விளக்கங்கள் கேட்டாலோ அல்லது விவாதத்துக்கு அழைத்தாலோ அது போன்ற சூழ்நிலைகளை குர்ஆன் ஊக்கப்படுத்துகிறது.

பல முஸ்லிம்களின் நம்பிக்கையானது குர்ஆன் வாதத்தையோ விவாதத்தையோ ஊக்கமூட்டுவதில்லை என்பது. இதனால் இவர்கள் இஸ்லாத்தை அல்லது குர்ஆனைப் பற்றி உள்ள எல்லா விதப் பேச்சுக்களில் அல்லது உரையாடல்களிலிருந்து விலகுகிறார்கள். உண்மையிலேயே குர்ஆன் வாதத்தையும் விவாதத்தையும் ஊக்கமூட்டுகிறது.

'நபியே! உம் இறைவனின் பாதையில் மக்களை விவெகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன்வழியை விட்டுத் தவறியவர்களையும் அவன் வழியைச் சார்ந்து நேர்வழிப் பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'
16 : 125 - குர்ஆன்

பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை.(FALSIFICATION TEST)

விஞ்ஞான குழுவில் வித்தியாசமான ஒரு அணுகுமுறை உள்ளது. பொதுவாக ஒருவர் விஞஞானத்தாலோ அல்லது எந்த ஒரு கலையிலோ புதிதாக ஒரு கருத்து அல்லது தத்துவத்தை கண்டுபிடித்து அமைத்தால் அத் தத்துவம் உண்மை அல்ல என்று நிரூபிக்கும் முகமாக ஒரு சோதனை முறையும் அந்த நபர் அமைத்துக் காட்ட வேண்டும். இல்லையெனில் இன்றைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 'உன்னிடம் நேரத்தை வீணாக்க எங்களால் இயலாது' என்று அவர்கள் கூறி விடுவார்கள். இந்த சோதனை முயற்ச்சிக்கு ஆங்கிலத்தில் “FALSIFICATION TEST” அல்லது தமிழில் 'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனால் தான் இந்த இருபதாம் நூற்றாண்டு துவங்கும் காலத்தில் 'ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்' என்ற விஞ்ஞானி ஒரு புதிய தத்துவக் கோட்பாட்டைக் கண்டு பிடித்து அறிவித்தார். அதாவது 'இந்த பிரபஞ்சமானது தூசியால்தான் அமைக்கப்பட்டுள்ளது'. இந்த தத்துவத்தை உண்மையல்ல என நிரூபிக்க அவர் மூன்று வித சோதனை முறைகளை செய்து காட்டி தன் வாதத்தை நிரூபித்தார். விஞ்ஞானிகளும் அதன் பிறகு ஐன்ஸ்டீனின் தத்துவத்தை ஒத்துக் கொண்டனர்.

இதே போல் குர்ஆனும் பல்வேறு 'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' களை வழங்குகிறது. இதில் சில சோதனைகள் முந்திய காலத்திற்கு மடடும். மேலும் சில சோதனைகள் கால வரம்பில்லாமல் எல்லாக் காலத்திற்கும் தகுதியுடையதாக இருக்கின்றன. 'உண்மையிலேயே இந்த நூல் இறை வெளிப்பாடு அல்ல எனில் இதை பொய் என்று நிரூபிக்க நீங்கள் இது போல் உருவாக்குங்கள்' என குர்ஆன் சொல்கிறது.

நாம் இது போல் ஒரு ஈடு இணையற்ற 'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' யை எந்த மத வேதங்களிலும் கண்டதில்லை. இது போன்ற ஒரு சோதனை மற்ற மதத்தின் வேதங்களில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒருவர் தம் நம்பிக்கையை முன்னிலைப் படுத்தும் போதெல்லாம் தம நம்பிக்கையை தவறென்று நிரூபிக்க எதிர் நபருக்கு ஒரு வாய்ப்பும் அளிக்க வேண்டும். குர்ஆன் தவறென்று நிரூபிக்க இது போல் பலவேறு வாய்ப்புகளை குர்ஆனே அளிக்கின்றது.

1. அபூலஹபைப் பற்றிய குர்ஆனின் தீர்க்கதரிசனம்:

முகமது நபி அவர்களுக்கு அபூலஹப் என்ற பெயருடன் ஒரு சிறிய தந்தை இருந்தார். 'அபூலஹப்' என்ற பெயரின் அர்த்தமானது 'நெருப்பின் தந்தை'என்ற பொருளில் வரும். ஏனெனில் இவருக்கு நெருப்பைப் போல் சீரியெழுகின்ற கோபமுண்டாகும். இவர் இஸ்லாத்தின் மற்றும் முகமது நபியின் கடும் எதிரியாகவும் இருந்தார். எப்பொழுதாவது முகமது நபி அவர்கள் ஒரு புதியவருடன் பேசுவதை பார்த்து விட்டால் அவர்களைப் பின் தொடர்ந்து காத்து நின்று அவர்கள் விடை பெற்றபின் அந்தப் புதியவரிடம் சென்று 'முகமது நபி தங்களிடம் என்ன சொன்னார்?' என்று கேட்டபின் 'அவர் பகல் என்று சொன்னாரா? அப்படியானால் அது இரவுதான். அவர் கருப்பு என்று சொன்னாரா? அப்படியானால் அது வெள்ளைதான்' என்று முகமது நபியின் கருத்துக்கு நேர்மாறாகக் கூறுவார்.
எப்படி நமது இணையத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இஸ்லாத்தை தாக்குவதையே தங்கள் முழு நேர வேலையாக கொண்டுள்ளார்களோ அதைப் போல

'அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும் அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.'
111-1-5 குர்ஆன்


குர்ஆனில் சூரா அல்-லஹப் என்ற பெயருடன் ஒரு அத்தியாயம் இருக்கின்றது. இந்த அத்தியாயத்தில் இறைவன் 'அபூலஹபும் அவன் மனைவியும் நரக நெருப்பின் அழிவுக்கு ஆளாகுவார்களென்ற முன்னறிவிப்பைக் கூறியிருக்கின்றான். இந்த முன்னறிவிப்பு கூறுவதெல்லாம் அபூலஹபும் அவன் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால் இவர்கள் நரக நெருப்பில் நுழைவார்கள் என்று மறைமுகமாகக் கூறுகின்றது. அபூலஹப் இறப்பதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த வசனம் குர்ஆனில் இறைவனால் அருளப்பட்டது. அபூலஹபின் பல நண்பர்கள் இந்தப் பத்து வருட காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்கள் ஆனார்கள். அபூலஹபிறகு குர்ஆன் பொய்யான வேதம் என்று நிரூபிக்க பத்துஆண்டுகள் மிக எளிதான வாய்ப்பாக இருந்தது. இஸ்லாத்தின் எதிரியும் அறிவிலியுமான அபூலஹபிறகு குர்ஆன் ஒரு பொய் வேதம் அது ஒரு மனித தயாரிப்பென்று நிரூபிக்க மிக ஆர்வம் இருந்தது. அபூலஹப் 'நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்' என்று மட்டும் கூறியிருந்தாலே குர்ஆன் பொய் என்று நிரூபிக்கப் பட்டிருக்கும். இவன் வழக்கம் போல் ஒரு பொய் சொல்லியிருந்தாலே போதுமானது. இவன் உண்மையான முஸ்லிமைப் போல் நடந்து கொள்ள வேண்டியதுமில்லை. இவன் ஒப்புக்காகவே 'நான் ஒரு முஸ்லிம்' என்று கூறியிருந்தாலே முழு குர்ஆனும் பொய்யாக்கப் பட்டிருக்கும்.

இந்த நிகழ்ச்சியானது முகமது நபி அவர்கள் அபூலஹபைப் பார்த்து 'என் சிறிய தந்தையே!நீங்கள் என் மேல் வெறுப்பு கொள்கிறீர்களா? என் தூதுவத்தை அழிக்க விரும்புகிறீர்களா? அப்படி என்றால் நான் ஒரு முஸ்லிம் என்று கூறும்.என் தூதுத்துவம் அழிந்து விடும். வாரும். விரைவாக கூறும்' என்று சொல்லி சவால் விட்டது போல் இருக்கின்றது. சிந்தித்துப் பாருங்கள். அபூலஹபிற்கு இதைப் பற்றி சிந்திப்பதற்கு பத்து ஆண்டு காலமிருந்தும் அவனால் இதைச் சொல்ல முடியவில்லை. வாதமுறையோடு சிந்திக்கக் கூடிய எந்த ஒருமனிதரும் தன்னால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் இது போல் ஒரு கோரிக்கை அல்லது சவாலை குறிப்பிட்டிருக்க மாட்டார். இது இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக இருக்கிறது.

2. முஸ்லிம்களுக்கு யூதர்களைவிட கிறித்தவர்களே நெருக்கமானவர்கள்:

'நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும் இணை கற்ப்பிப்போரையும் முகம்மதே நீர் காண்பீர். 'நாங்கள் கிறித்தவர்கள்' எனக் கூறியோர் நம்பிக்கைக் கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர். அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும் அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்'
5 : 82 - குர்ஆன்

இந்த வசனத்தின்படி நாம் உலகில் இன்றும் கூட இணை வைப்பவர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு பரம எதிரிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். நம் இந்தியாவில் குஜராத் மோடி, பால் தாக்கரே, தமிழ்நாட்டு ராம கோபாலன், மேலும் யூதர்களின் கைப்பாவையான அமெரிக்கா, யூதர்களைத் தன்னகத்தே கொண்ட இஸ்ரேல் என்று குர்ஆன் சொன்ன 'இஸ்லாமிய எதிரிகள்' என்ற முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். யூத சமுதாயமானது கிறித்தவர்களைவிட ஒரு போதும் முஸ்லிம்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டார்கள். குர்ஆன் தவறென்று நிரூபிக்க இன்று யூதர்களுக்கு மிக நல்ல வாய்ப்பிருக்கிறது. இவர்கள் ஒன்றாகக் கூடி உலகம் முழுவதும் கிறித்தவர்களை விட இவர்கள் முஸ்லிம்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள் என்ற முடிவை எடுத்துக் கொண்டு அதனை செயல்படுத்தி முஸ்லிம்களைப் பார்த்து 'உலகத்தில் மிக நெருங்கிய நண்பர்கள் யார்? யூதர்களா? கிறித்தவர்களா? என்று கேட்க வேண்டும். இன்று வரை யூதர்களால் இதனைச் செய்ய இயலவில்லை.

அல்லது நம் நாட்டில் ஆர்.எஸ்.எஸ், இந்து முண்ணனி போன்ற தீவிரவாத இந்து இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 'இனி மேல் நாங்கள் முஸ்லிம்களோடு சகோதரத்துவத்தோடு நடந்து கொள்வோம்' என்று தீர்மானம் போட்டு நடந்து காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். இதன் மூலமும் குர்ஆனைப் பொய் என்று நிரூபிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் உலக முடிவு நாள் வரையில் அவர்கள் முஸ்லிம்களோடு ஒத்து வரவே மாட்டார்கள். அதே சமயம் இணை வைத்தலை விட்டு விட்ட பகுத்தறிவாதிகள் பெரியார் முதல் இன்றைய கி.வீரமணி வரை முஸ்லிம்களோடு அன்போடு பழகுவதைப் பார்க்கிறோம். இங்கு தமிழ் மணத்தில் கூட பகுத்தறிவு கொள்கை உடைய வலைப்பதிவர்கள் கருத்து வேற்றுமை இருந்தாலும் முஸ்லிம்களோடு அன்போடு பழகுவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

சிலை வணக்கம் ஒன்றையே பிரதானமாகக் கொண்ட பிராமணர்களே முஸ்லிம்களை எதிர்ப்பதில் முன்னிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். பிராமணர்களைத் தவிர மற்ற இனமான திராவிட இனத்தவர், முஸ்லிம்களோடு சகோதர வாஞ்சையோடு பழகுவதையும் பார்க்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இந்து முஸ்லிம் கலவரத்தின் சூத்திரதாரி யார் என்று பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்ஸோ, இந்துமுண்ணனியோ, சிவசேனாவோத்தான் இருக்கும். இநத இயக்கங்களின் செயல் வீரர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சியாக இருக்கிறது.

3. இது போன்ற ஒரு அத்தியயாயத்தை உருவாக்குங்கள்:

உலகத்திலுள்ள அனைத்து அரபி மொழி இலக்கியங்களில் மிக உயர்ந்தது குர்ஆன்தான் என்று முஸ்லிம்களும் அன்னிய மதக் காரர்களும் பாராட்டுகிறார்கள். இதன் கருத்து செழிப்பானது. உயர்தரமானது, உயர் நோக்கமுள்ளது. இஸ்லாத்தின் எதிரிகள் முகமது நபி அவர்களின் மீது குர்ஆனைப் போலியாகத் தயாரித்தார் என்ற பழியைச் சுமத்தியவுடன் குர்ஆன் இவர்களை எதிர்த்துரையாடி இவர்களுக்கு'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' (Falsification Test) ஒன்றை அளித்தது.

'இந்தக் குர்ஆனைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!' என்று நபியே கூறுவீராக.
17 : 88 - குர்ஆன்

'அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.'
52 :34 - குர்ஆன்

'இவர் இதை இட்டுக் கட்டி கூறுகிறார்' என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக் கட்டி பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்! இறைவனையன்றி உங்களுக்கு இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறுவீராக!
11 : 13 - குர்ஆன்

இந்த எளிதான சவாலைக் கூட இதுவரை உலகில் யாராலும் முறியடிக்க முடியவில்லை. முகமது நபி அவர்கள் குர்ஆனை போலியாகத் தயாரித்தார்கள் என்று சொல்ல எத்தகைய அடிப்படையும் அவர்களிடத்தில் இல்லை.

'உங்களால் இதனைச் செய்யவே முடியாது. நீங்கள் செய்யா விட்டால் நரக நெருப்புக்கு அஞ்சுங்கள். கெட்ட மனிதர்களும் கற்களுமே அதன் எரி பொருட்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.'
2 : 24 - குர்ஆன்

இது போன்ற சவாலை எதிர்த்து எவராலும் வெற்றி பெற இயலவில்லை. அரேபிய நாட்டிலுள்ள பெரும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் இந்த சவாலை வெற்றிக் கொள்ள மிகவும் கடினமாக முயற்ச்சித்தார்கள். ஆனால் அவர்கள் மிகவும் பரிதாபமான முறையில் தோல்வியடைந்தார்கள். குர்ஆனுக்குப் போட்டியாக தயாரிக்கப்பட்ட கவிதைகள் இன்றைக்கு வரலாற்றுப் புத்தகங்களில் பாதுகாக்கப் பட்டுள்ளன. இதை இப்பொழுது நாம் படித்துப் பார்த்தால் நம்மையறியாமலேயே சிரித்து விடுவோம். அந்த தகுதியில்தான் இன்று அவை இருக்கின்றன.

-மும்பைபிர்லா மதுஸ்ரீ ஆடிட்டோரியத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் “Is The Quran Gods Words?” எனும் தலைப்பில் ஆற்றிய உரையைத் தழவி எழுதப் பட்டது.

இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

வாதத்தில் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் முறையா?

வாதத்தில் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் முறையா?

//என்னை மட்டம் தட்ட ஒரு இறைவனடி சேர்ந்த முது பெரும் தமிழ் ஞானியை, மாபெரும் முருக பக்தரை தவறுதலாக மேற்கோள் காட்டியுள்ளீர்கள். மறைந்த அம்மாமனிதரை தூற்றுவதற்கு சமமாகும் செய்கை இது.//
-Neelagandan

கிருபானந்த வாரியாரை எந்த அளவு மதிக்கிறேன் என்பது என் உள்ளத்துக்குத் தெரியும். அவருடைய பல கதாகாலட்சேபங்களை படிக்கும் காலங்களில் நிறையவே கேட்டிருக்கிறேன். அவருடைய நகைச்சுவை மிகவும் பிரசித்திப் பெற்றது.

ஒருமுறை கிருபானந்த வாரியார் கதாகாலட்சேபத்தில் சைவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு பையனிடம் 'முருகனின் தந்தை யார?' என்று கேட்டார். பையன் திருவிளையாடல் என்ற சினிமா படத்தைப் பார்த்தவன். அதனால் சிவனாக வேடமிட்ட நம் நடிகர் திலகத்தை நினைவில் வைத்துக்கொண்டு 'சிவாஜி' என்று சொன்னான். கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
உடனே வாரியார் சுவாமிகள் சமயோஜிதமாக 'காந்தி என்று சொல்வதை விட மரியாதையாக காந்திஜி என்று வட நாட்டார் சொல்வர். அப்பழக்கத்தால்தான் இவன் 'சிவா' என்று சொன்னால் மரியாதையில்லாமல் போகும் என்று நினைத்து 'சிவாஜி' என்று சொன்னான்' என்று ஒரே போடாக போட்டார். இது போன்ற திறமைகள் எல்லாம் ஒரு சிலருக்குத்தான் வரும்.

//அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர். -கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.//
-Suvanappiriyan

"இந்த வாதில் தோற்றால் தோற்றவர் என்ன செய்வது?" என குலச்சிறையார் கேட்டார். கோபமும் பொறாமையும் கொண்ட சமணர்கள், "வாதில் நாங்கள் அழிவோமாயின் எம்மை இந்த மன்னவன் கழுவினில் ஏற்றட்டும்." என்று கூறினார்கள். ...நீதில் வழுவாத மன்னன் மந்திரியாரை நோக்கி "வாதில் தோற்ற சமணர்கள் முன்னம் ஞானசம்பந்தர் அடியார் குழாத்துடன் தங்கியிருந்த திருமடத்திற்கு தீ வைத்தார்கள். ஆதலின் இவர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவில் ஏற்றி அரசநீதியை நிலை நிறுத்துக" என்றான்."
-கிருபானந்த வாரியார்

இரண்டு பேரும் சொல்வது ஒரே கருத்தைத்தான். சமணர்கள் வாதத்தில் தோற்றால் கழுவிலேற்றவும் என்ற ஒப்பந்தத்தை தவிர்த்து முதல் செய்தி வருகிறது. இதில் கருத்துச் சிதைவு ஏதும் ஏற்படவில்லையே!

அடுத்து நான் இஸ்லாமியன் என்பதால் இஸ்லாத்தை உயர்த்திப் பேசுவேன். அரவிந்தன் பிராமணர் என்பதால் இந்து மதத்தை உயர்த்திப் பேசுவார். இது மனிதனின் இயற்கை. எனக்கு இஸ்லாத்தில் அதிக விபரம் இல்லாமல் வாதத்தில் நான் தோற்கலாம். இதே போன்ற நிலைமை அரவிந்தனுக்கும் ஏற்படலாம். இந்த ஒரு விவாதத்தை வைத்து இஸ்லாத்தையும் இந்து மதத்தையும் எப்படி எடை போட முடியும்? இதே அளவு கோலை சமணர்களுக்கும் சைவர்களுக்கும் வைத்துப்பாருங்கள்.

ஒரு வாதத்தில் சரியான விபரம் இல்லாமல் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் மனிதாபிமானமா? அவர்களே ஒத்துக் கொண்டிருந்தாலும் இதை செயல்படுத்திய மன்னன் நேர்மையாளன் என்று எப்படி சொல்ல முடியும்? அடுத்துஒரு இடத்தில் வாதம் செய்தால் குறைந்தபட்சம் ஐந்திலிருந்து பத்து பேர் வரை அமர்ந்து வாதம் செய்ய முடியும். வாதப்படி சமணர்கள் தோற்றால் தோற்ற சமணர்களை தண்டிப்பதை விடுத்து எட்டாயிரம் சமணர்களை ஒரே நேரத்தில் கழுவிலேற்றுவது எந்த வகை நியாயம்.

சில இடங்களில் யானைகளை விட்டு சமணர்களை மிதித்து கொன்ற வரலாறும் நாம் பார்க்கக் கிடைக்கிறது. அவர்களின் நிலங்களும்,வீடுகளும் அநியாயமாக பறிக்கப்பட்டு மாற்றார்க்கு கொடுக்கப் பட்டதும் நடந்துள்ளது. இவற்றை எல்லாம் எந்த வகையில் நியாயப்படுத்தப் போகிறீர்கள்.?

//சுவன பிரியன் ஒரு RSS கைகூலியாக இருக்கலாம். இஸ்லாமிய தோழர்கள் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.//
-சாமுவேல் ஞானதாசன்

//ஐயா, சுவனப்ரியனை நான் நன்கு அறிவேன். அவர் அக்மார்க் இஸ்லாமியர்.இஸ்லாமை முழு மூச்சுடன் நம்புபவர். அவர் மேல் இந்த மாதிரி அபாண்டங்கள் வேண்டாம்//
-கால்கரி சிவா

என் சார்பாக உண்மையை விளக்கியமைக்கு நன்றி கால்கரி சிவா!

பதிவைப் படிப்பவர்களுக்கு உண்மை நன்றாக தெரியும் என்பதால் வழக்கமான இந்த சாமுவேல் (இதுவே போலி பெயர்)பொய்களுக்கு பதில் சொல்ல எந்த அவசியமும் இல்லை.

//குமாரில பட்டர் எனும் இந்துமுனிவர் பவுத்தர்களிடம் தோற்று இதுபோன்று முன்பு நெருப்பில் அணுஅணுவாக தம்மை எரித்துக்கொண்ட சம்பவம் பற்றி ஆதிசங்கரர் வரலாறு கூறுகிறது. அக்காலத்தில் இது சர்வ சாதாரண நிகழ்வு. பாண்டிய மன்னனோ,சம்பந்தரோ இதை கட்டளை பிறப்பித்து செய்யவில்லை.//
-ஜோக் பார்ட்டி!

ஆக ஒரு மதத்தவரை மற்ற மதத்தவர் போட்டுத் தள்ளுவதும், கழுவிலேற்றுவதும் சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்.நன்றி!

இதற்கு 'இந்து ஜிஹாத்' என்று பெயர் வைத்துக் கொள்வோமா! :-)

//("எண்ணாயிரம்(என்ற ஊரை சேர்ந்த) சமணர்கள் கழுவேறினர்" என்பதை அரைகுரையாக புரிந்துகொண்டு "எட்டாயிரம் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டனர்" என பின்வந்த வரலாற்று ஆசிரியர்கள் (மார்க்சிஸ்ட் முட்டாள்கள்) வியாக்கியானம் செய்து வரலாற்றில் ஏற்றி அதை நாம் இன்று வரை நம்பி வந்திருக்கிறோம்.//
-ஜோக் பார்ட்டி!

இதற்கு கம்யூனிஸ்டுகள் தான்பதில் சொல்லவேண்டும். கிருபானந்த வாரியாருக்கும் கம்யூனிஸ்டுகள்தான் சொல்லிக் கொடுத்தார்களாமா?

உதயேந்திரப் பட்டயம்!

வைணவ சமயத்தைத் தழுவியிருந்த பல்லவ மன்னன் தம் முன்னோர் சமணருக்கு விட்டிருந்த நிலத்தைக் கவர்ந்து மறையவர்க்கு உரிமையாக்கினான்.
'இரண்டாம் நந்திவர்மன் தரும சாத்திர முறைப்படி நடவாத மக்களை அழித்து இந்த நிலத்தைக் கைப்பற்றி வரியிலியாக பிராமணர்க்கு அளித்தான்.'
-உதயேந்திரப் பட்டயம்.

'இந்தநிலத்திற்கு உரியவர் சமணர்: அவர்களை அழித்து இந்நிலத்தைப் பிறர்க்கு கொடுத்தது என்பது பல்லவ மன்னனின் வரலாற்றில் ஒரு களங்கத்தை உண்டு பண்ணி விட்டது. எனினும் இச்செயல் அக்கால நிலையை ஒட்டியதாகும்.' என்று உதயேந்திப்பட்டயம் குறித்து தாமஸ் போக்ஸ் எனும் அறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.
-Indian Antiquary, volume 8,Page 281
-மேற்கோள் மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு,சென்னை 1956, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'எனினும் இச்செயல் அக்கால நிலையை ஒட்டியதாகும்' என்ற வாசகத்திலிருந்து அதிகாரவர்க்கம் அனைத்தும் திட்டம் போட்டு ஒரு மிகப் பெரும் இனத்தையே அழித்திருக்கிறதுஎன்பது தெளிவாகிறது.. இது போன்ற செய்தி அந்தகால மக்களுக்கு சர்வ சாதாரணமாக தோன்றியிருக்கிறது. இன்று சமணர் என்று சொல்லிக் கொள்ள தமிழகத்தில் ஒருவரும் இல்லாதது சைவர்களின் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

//இம்மன்றில் ஏதோ சைவசமயப் பெரியோர் சூழ்ச்சி செய்து அப்பாவியான பண்டைச் சமண பௌத்தச் சமயவாதியரை அழித்தொழித்து விட்டதாகவும், 'அவர் கடவுள் தாழ்ந்தோன்; என்கடவுள் உயர்ந்தோன்' என்று மிஷனரிமார்பாணியில் தத்தம் கருத்தினைப் பரப்பிப் பின் பெருவாரியினர் விருப்பமின்றி அவரை மீண்டும் வலிய 'மதம்' மாற்றி விட்டதாகவும் போன்ற தொனியில் அவ்வப்போது சில மடல்களைக் காண்கிறேன்.//
-Jawa Kumar

மேலே உள்ள கொடுமைகளெல்லாம் நம் நாட்டில் நடக்கவில்லையாம். ஜாவா குமாரின் கூற்றுப்படி அனைத்து சமணரும், பௌத்தரும் தாங்களாகவே விரும்பி சைவர்களாக மாறினர் என்ற கூற்றை உண்மையாக்க முயல்கிறார். இந்தக் கூற்றுக்களைபிராமணர்களைத் தவிர வேறு யாரும் நம்பப் போவதில்லை என்பதை அவருக்கு யாராவது விளக்குங்களேன்.

//அன்று சைவர்களை சமணர்கள் விரட்டினார்கள் என்றாலும், சமணர்களை சைவர் கள் விரட்டினார்கள் என்றாலும் அது இந்துக்கள் பிரச்சனை.//
-ஜெஹோவா!

இதே கேள்விகளை முஸ்லிம்களும் உங்களைப் பார்த்து கேட்கலாங்கலாண்ணா!இஸ்லாத்துக்கு எதிராக ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் அதைப் பெரிதாக்கி மகிழ்வது உயர்ஜாதி இந்துக்கள்தானே! இதை மறுக்கமுடியுமா?இத்தனை அநியாயங்களை அரங்கேற்றிவிட்டு எதைக்கொண்டு இஸ்லாத்தை நீங்களெல்லாம் விமரிசிக்கிறீர்கள்?