Followers

Monday, September 30, 2013

நண்பர் முனியாண்டிக்கு எனது விளக்கங்கள்!

//முஸ்லிம் நண்பர்களுக்காக எங்கள் மதக் கட்டுப்பாடுகளை நாங்கள் எளிதில் மீறமுடியும்.உங்களில் எத்தனைபேர் இதே போலக் மதக் கட்டுப்பாடுகளை உடைத்து நட்புக் கொள்ளத் தயாராய் இருக்கிறீர்கள் சொல்லுங்கள் ???.//

இஸ்லாம் மார்க்கமானது முழு உலகுக்கும் முழு மனித குலத்துக்கும் சொந்தமானது. எனவே நண்பர் முனியாண்டியோடு நான் நட்பு பாராட்ட வேண்டுமானால் அதற்காக இஸ்லாமிய சட்டங்களை விட அவசியமில்லை. அதே போல் நீங்களும் முஸ்லிம்களுடன் நட்புடன் பழக இந்து மத சடங்குகளை விட அவசியமில்லை. இதற்கு மாறாக எந்த முஸ்லிமும் உங்களிடம் 'இஸ்லாம் இந்துக்களோடு பழக தடை விதிக்கிறது' என்று சொன்னாரேயானால் அதற்கான ஆதாரத்தை கேளுங்கள். இஸ்லாம் மாற்று மதத்தவரோடு நட்புடனேயே பழக கட்டளையிடுகிறது. அதற்கான ஆதாரங்களை வரிசையாக பார்ப்போம்.

முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்குமாறு திருக்குர்ஆன் 9:6 வசனம் கூறுகிறது.

பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லா விட்டாலும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறு திருக்குர்ஆனின் 31:15, 29:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஒரு கிராமவாசி பள்ளிவாசரினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள்'' என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : முஸ்லிம் 6025

அது மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்கள் பலர் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தனர். (ஆதார நூல்: புகாரி 1356)

நபிகள் நாயகமே தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர். (ஆதார நூல்: புகாரி 2916, 2068)

யூதப் பெண்ணின் விருந்தை ஏற்றனர். (ஆதார நூல்: புகாரி 2617)

யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர். (ஆதார நூல்: புகாரி - 2412, 2417)

இவர்களெல்லாம் போர்ப் பிரகடனம் செய்யாது முஸ்லிம்களுடன் சகோதரப் பாசத்துடன் பழகியவர்கள்.
இன்னும் சொல்லப் போனால் நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சகர்கள் கூட, வெளிப்படையாகப் போர்ப் பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர். அதனால் தான் இஸ்லாம் அந்த மக்களை வென்றெடுத்தது.

அதே நேரம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பூண்டோடு அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றும் நரேந்திர மோடி மற்றும் இந்துத்வ சக்திகளை இதே அளவுகோளோடு பார்க்க முடியாது. அவர்களின் சதிகளை, திட்டங்களை முறியடிக்க முஸ்லிம்களும் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்வார்கள். இங்கு சமாதானம் பேசினால் கதைக்காகாது. அந்த எதிர் முயற்சிகளும் இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காவல் துறை, மற்றும் கோர்ட், போராட்டம் என்ற வகையில் அந்த எதிர்ப்புகளை முஸ்லிம்கள் எதிர் கொள்வார்கள். எனவே இரு சாராரையும் பிரித்துப் பார்த்து முஸ்லிம்களோடு இணக்கமாக வாழ பிரியப்படும் முனியாண்டி, மாணிக் வீரமணி, கோவிந்த ராஜ் குமார் போன்ற இந்து நண்பர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள முஸ்லிம்கள் முயற்சிக்க வேண்டும்.

சில முஸ்லிம்கள் எந்த நேரமும் முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு எதையோ சிந்தித்தவர்களாக மாற்று மதத்தவரோடு ஒட்டாமல் வாழ்வார்கள். அது இஸ்லாம் மார்க்கம் காட்டித் தரும் வழி அல்ல.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

(அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி),நூல் : முஸ்லிம் 5056)

எல்லாவற்றிலும் மென்மை தான் அழகு என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். ஏனைய பொருள்கள் என்ன தான் அழகாக இருந்தாலும் மென்மையான பொருள் அவைகளை விட அழகாக மிளிர்வதை உணரலாம். எனவே மென்மையான வாழ்வு முறையை கடைபிடித்து மாற்று மதத்தவரோடு அன்போடு பழகி நமது மார்க்கத்தையும் சிறந்த முறையில் பேணி நமது இந்திய நாட்டுக்கு பெருமை சேர்ப்போமாக....

Sunday, September 29, 2013

அரபு அடிமைகளா தமிழக,இந்திய முஸ்லிம்கள்?பல இந்துத்வா வாதிகள் முஸ்லிம்களை அரேபிய அடிமைகள் என்று சொல்வதை கேட்டு எனக்குள் சிரித்துக் கொள்வேன். இந்த நாட்டுக்கு ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு ஈரான், ரஷ்யா போன்ற பகுதிகளிலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்து இங்கேயே கூடாரமடித்து தங்கி இந்நாட்டு பூர்வ குடிகளை அடிமையாக்கிய பொது புத்தி முஸ்லிம்களையும் பார்த்து பேச வைக்கிறது. இனி விஷயத்துக்கு வருவோம்.

அரபு கலாசாரம் என்பதும் இஸ்லாமிய நடைமுறை என்பதும் பிரித்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று. அரபுகளுக்கென்று உடை, கலாசாரம், என்று தனியே உண்டு. மேலே யுட்யூபில் நீங்கள் பார்க்கும் நடனம் அரபு நாட்டுக்குரியது. அதனை எந்த தமிழக இஸ்லாமியர்களும் தமிழகத்தில் நடத்துவது இல்லை. இஸ்லாமும் அவ்வாறு கட்டளையிடவில்லை.

அரபு நாட்டு ஆண்கள் தங்கள் தலையை துண்டால் மூடிக் கொள்வர். காற்றில் அந்த துண்டு பறக்காமல் இருக்க அதற்கு மேல் ஒரு வளையத்தையும் வைத்துக் கொள்வார்கள். பாலைவன புழுதிக் காற்றுக்கு அவ்வாறு இருப்பது அவசியம். இது அரபு நாட்டு கலாசாரம். இதனை தமிழகத்தில் வாழும் எந்த இஸ்லாமியனும் கடைபிடிப்பதில்லை. குர்ஆனும் அரபுகளை உணவு உடை கலாசாரங்களில் பின் பற்றச் சொல்லி எங்களுக்கு கட்டளையும் இடவில்லை.

அதே போல் அரபுகள் சாப்பிடுவது அதிகம் ரொட்டி. அந்த ரொட்டியைத்தான் நீங்களும் உண்ண வேண்டும் என்று இஸ்லாமும் சொல்லவில்லை. முஸ்லிம்களும் அந்த பழக்கத்தை பின்பற்றுவதில்லை. சோறு சாப்பிட விருப்பமுடையவர்கள் சோறு சாப்பிட்டுக் கொள்ளலாம். ரொட்டியோ நூடுல்ஸோ எதைப் பிரியப்படுகிறார்களோ அதனை சாப்பிட்டுக் கொள்ளலாம்.

அதே போல் இஸ்லாம் மார்க்கத்தை போதிப்பதற்கு முன்பு அன்றைய அரபுலகில் திருமணங்கள் எவ்வாறு நடந்தது என்பதை முகமது நபியின் துணைவியார் அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கும் செய்தியை பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:

முதல் வகை: இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி "மஹ்ர்' (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

இரண்டாம் வகைத் திருமணம்: ஒருவர் தம் மனைவியிடம், "நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக்கொள்வதற்காக) அவருடன் உடலுறவுகொள்ளக் கேட்டுக்கொள்!' என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவுகொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்றவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்ட மாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவுகொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு "நிகாஹுல் இஸ்திப்ளாஉ' (விரும்பிப்பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.

மூன்றாம் வகைத் திருமணம்: பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாகி சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் "நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்து விட்டது'' என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) "இவன் உங்கள் மகன், இன்னாரே!'' என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.

நான்காம் வகைத் திருமணம் : நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவுகொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள். இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே, அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு "அவருடைய மகன்' என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது. சத்திய(மார்க்க)த்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்.

(நூல் : புகாரி 5127)


ஆக திருமணம் என்ற பெயரில் பல மாதிரியாக விபசாரமே நடந்துள்ளது. இது அன்றைய இஸ்லாம் வருவதற்கு முன் உண்டான அரேபிய கலாசாரம். அந்த முறையை தமிழக முஸ்லிம்கள் யாரும் பின்பற்றுவதில்லை. குர்ஆனின் வழிகாட்டுதலின்படியே தங்களின் திருமணத்தை தமிழக முஸ்லிம்களும் உலக முஸ்லிம்களும் கடை பிடித்து வருகிறார்கள்.

மேலே சொன்ன உதாரணங்களிலிருந்து அரபு கலாசாரம என்பதும் இஸ்லாமிய கலாசாரம் என்பதும் ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம். குர்ஆன் இடும் கட்டளைகள் அனைத்தும் உலக மக்கள் அனைவரும் பின்பற்றத்தக்கவையாக இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். நமக்கும், அரபுகளுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ஆப்ரிக்கர்களுக்கும் இன, மொழி, கலாசாரங்களில் பெருத்த வேறுபாடு உண்டு. இந்த அனைத்து கலாசாரங்களையும் உள்ளடக்கி எல்லா மக்களும் எல்லா காலத்திலும் பின் பற்றத் தக்கவையாக குர்ஆனின் கட்டளைகள் இருப்பது இது இறை வேதம் என்பதற்கு மேலும் அத்தாட்சியாக இருக்கிறது.

மேலும் நமது தமிழக சித்தர்களும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று அந்த காலத்திலேயே இஸ்லாமிய கருத்தை சொல்லிச் சென்றிருக்கிறார்கள். பின்னால் படையெடுத்து வந்த ஆரியர்கள் பல தெய்வ வணக்கத்தை வன்முறையால் நமது மக்களின் வழிபாடுகளாக மாற்றி விட்டனர். அது இன்று வரை தொடர்ந்து வந்து தற்போது 'விநாயக சதுர்த்தியில்' வந்து முடிந்துள்ளது. ஆக... இந்த மண்ணின் உரிமையான 'ஓரிறைக் கொள்கை' யை மீட்பதற்காகத்தான் தமிழகத்தில் இஸ்லாம் கால் பதித்தது. இந்த மக்களும் இழந்த தங்களின் மூதாதையர் கொள்கையை இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டனர். எனது முன்னோர்களும் அந்த நல்ல காரியத்தைத்தான் செய்தார்கள். இன்று வரை அந்த நிலை தொடர்கிறது. இனியும் தொடரும்.

கடந்த ஒரு வார காலத்தில் தூய இஸ்லாத்தை தவ்ஹீத் ஜமாத் மூலமாக தாங்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட சகோதர சகோதரிகளை பார்ப்போம்.

-----------------------------------------------

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளையில் கடந்த 20-09-2013 அன்று புஷ்பா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார்……………..------------------------------------------------

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிளையில் கடந்த 20-09-2013 அன்று குமாரசாமி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ரியாஸ் என மாற்றிக் கொண்டார்…………-----------------------------------------------

திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக கடந்த 20-09-2013 அன்று சுமித்ரா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சுமையா என மாற்றிக் கொண்டார்…………----------------------------------------------

காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டையில் கடந்த 20-09-2013 அன்று நிர்மலா காரொளி என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஆயிஷா இஷாரா என மாற்றிக் கொண்டார். மேலும் திருக் குர் ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது..…………-------------------------------------------

இனி இவர்களை சூத்திரன் என்று யாரும் சொல்ல முடியாது. சொல்லவும் நா எழாது. 'தீவிரவாதி' என்று வேண்டுமானால் பொய் கேஸூ போட்டுக் கொள்ளலாம். :-) பெரியார் முயன்றும் சமத்துவத்தை கொண்டு வர முடியாத தமிழகத்தில் இஸ்லாம் இன்று சமத்துவத்தை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இம்முயற்சியை வாழ்த்தி வரவேற்போம்.

முகத்தில் பிறப்பாரும் உண்டோ முட்டாளே !

தோளில் பிறப்பாரும் உண்டோ தொலுமனே !

இடையில் பிறப்பாரும் உண்டோ எருமையே!

காலில் பிறப்பாரும் உண்டோ கழுதையே !

நாண் முகம் என்பான் உளனோ நாயே !

புளுகடா புகன்றவையெல்லாம் போக்கிரியே !

-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!

உதிரம் கொடுத்து உயிர்களைக் காப்போம்!

'ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5:32


சவுதி தலைநகர் ரியாத்தில் இரத்ததான முகாம்.

இடம்: கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி - இரத்த வங்கி, தபாப் ஸ்ட்ரீட், (மெக்கா ரோட் என்ட்ரன்ஸ் எண் 1.

நாள்: 04, அக்டோபர், 2013 வெள்ளி காலை 9 லிருந்து மாலை 5 மணி வரை

தாங்கள் வழங்கும் இரத்தம் இவ்வருட ஹஜ் பயணிகளில் தேவையானோருக்கு பயன்படுத்தப்பட உள்ளது.


வருட வாரியாக இரத்த தான விபரம்

2013 ம் வருடம் 149 நபர்கள்
2012 ம் வருடம் 1214 நபர்கள் (வெளிநாடுகளில் முதலிடம்)
2011 ம் வருடம் 915 நபர்கள் (மண்டலங்களில் முதலிடம்)
2010 ம் வருடம் 715 நபர்கள் (மண்டலங்களில் முதலிடம்)
2009 ம் வருடம் 395 நபர்கள்
2008 ம் வருடம் 331 நபர்கள்
2007 ம் வருடம் 307 நபர்கள்

இதுவரை இரத்த தானம் செய்தவர்கள் 4026 நபர்கள்.

(இறைவா) எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக. (அல்-குர்ஆன் 7:156)

இரத்த தானம் செய்வீர்!

இறையருளைப் பெறுவீர்!!

1. இரத்த தானம் :-
இரத்தானம் (குருதிக்கொடை) என்பது தேவைப்படும் இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்கி சேமித்து வைத்தலாகும். ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 4.5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் உடலில் இருந்து ஒரு நேரத்தில் 400-450 மி.லி. இரத்தம் வரை எடுக்கப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் தானாகவே மீண்டும் உற்பத்தியாகிவிடும். இரத்தம் குறைந்து விட்டதே என்ற தவறான கருத்து தேவையே இல்லை.

2. இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள் :-
1) வயது 18 முதல் 55 வரை. உடல் எடை 50 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
2) எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா, இருதய நோய்கள், காசநோய் போன்ற பெரு வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
3) இரத்த தானம் செய்யும் நான்கு மணி நேரத்திற்குள் நல்ல உணவு உட்கொண்டிருக்க வேண்டும்.
4) முந்தைய நாள் இரவு கண்டிப்பாக நல்ல தூக்கம் முக்கியம்.
5) தங்களுடைய சவூதி அடையாள (IQAMA - இக்காமா) அட்டை அல்லது செராக்ஸ் காப்பி அவசியம்.

3. இரத்த தானம் கேள்வி பதில்கள் :-

1. இரத்த தானம் செய்ய எவ்வளவு நேரமாகும்? குறைந்த பட்சம் 15 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 1/2 மணி நேரம் ஆகலாம்.
2. எத்தனை மாத இடைவெளிகளில் இரத்த தானம் செய்யலாம்? 3 மாத இடைவெளிகளில் இரத்த தானம் செய்யலாம்.
3. இரத்த தானம் செய்யும் முன் சாப்பிடலாமா? ஆம், இரத்த தானம் செய்யும் முன் நான்கு மணி நேரத்திற்குள் அதிகதிகமான திட, திரவ உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
4. இரத்த தானம் செய்த பின் என்ன செய்ய வேண்டும்? திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து வேலைகளையும் செய்யலாம்.
5. இரத்த தானம் செய்யக் கூடிய இரத்தம் யாருக்கு பயன்படும்? சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர், இதய அறுவை சிகிச்சை செய்வோர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை, கடுமையாக தீக்காயம் பட்டவர்கள், பிரசவிக்கும் தாய்மார்கள்.

மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல – நமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!

சமுதாய நலன் கருதி வெளியிடுவோர்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ரியாத் மண்டலம் (TNTJ Riyadh),
சவூதி அரேபியா.

Saturday, September 28, 2013

மோடிக்கு காத்திருக்கும் அடுத்த தலைவலி!

மோடிக்கு காத்திருக்கும் அடுத்த தலைவலி!இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது லால் பகதூர் சாஸ்திரியின் உத்தரவின் பேரில் தரிசாக கிடந்த நிலங்களை ஹரியானா, பஞ்சாப், ஹிமாசல பிரதேசங்களை சேர்ந்த சீக்கியர்களுக்கு தானமாக நமது அரசால் அளிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் இந்திய எல்லையோரத்து மக்கள். தங்கள் சொந்த ஊர்களை துறந்து அரசு அழைத்ததன் பேரில் குஜராத்தை நோக்கி வந்த ஏழைகளை இன்று சிரமததிற்குள்ளாக்க நினைக்கிறார் மோடி. அந்நிலங்களை தங்களின் உழைப்பால் இன்று சிறந்த நிலைக்கு மாற்றியுள்ளனர் இதன் உரிமையாளர்களான சீக்கியர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நிலங்களின் மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது அந்நிலங்களை யாருக்கும் விற்க மோடி அரசு தடை விதித்துள்ளது. பட்டா வழங்கலையும் நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து அந்த விவசாயிகள் மாநில ஹைகோர்டை நாடினர். தீர்ப்பு விவசாயிகளுக்கு சாதகமாக வந்துள்ளது. உடனே மோடிக்கு மூக்கில் வியர்க்க ஆரம்பித்து விட்டது. அந்த தடையை எதிர்த்து தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது மோடியின் அரசு.

ஐம்பது வருடங்கள் கடின உழைப்புக்கு பிறகு அந்த நிலங்களை இன்று சிறந்த நிலைக்கு உயர்த்திய அந்த மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வர மோடி முயற்சிக்கிறார். டாடா, அம்பானிகளோடு ஏதும் பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டாரோ என்னவோ.... இதற்கு முன்பு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களை அபகரித்து கார்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுத்தாகி விட்டது. இனி பாக்கி உள்ள நிலங்களையும் பண முதலைகளுக்கு கொடுத்து விட்டால் 'குஜராத் ஒளிர்கிறது' என்ற பொய்யான கோஷத்தை மேலும் விரிவாக்கலாம்.

எங்கெல்லாம் உழைக்கும் மக்கள் இருக்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் முதல் எதிரி மோடி என்பது இந்த நிகழ்வின் மூலம் மேலும் நிரூபணமாகிறது.

Sikh cultivators settled in Kutch over 50 years ago when the area bordering the Rann and Pakistan was barren. Two years ago, as farmland prices shot up, the State government barred them from either selling, or taking loan or subsidy on their land under the Bombay Tenancy and Agricultural Lands Act, 1958. It also stopped issuing certified copies of land records. The farmers challenged the order in the Gujarat High Court and won. However, the government filed an appeal in the Supreme Court against the order.

The farmers appealed to Mr. Badal, SGPC president A.S. Makkar and the National Commission for Minorities, which urged Gujarat to withdraw the case. On Saturday, Mr. Badal said he would take up the matter with BJP president Rajnath Singh and Mr. Modi. However, Mr. Modi blamed it on the Congress, saying the party had no right to speak about the Sikh community as it was responsible for the massacre of Sikhs in the 1984 riots in Delhi.

http://www.thehindu.com/news/national/other-states/modi-reaches-out-to-badal-on-kutch-sikh-farmers-issue/article4994931.ece

மோடியை ஏன் ஆதரிக்க முடியாது ?மிக அருமையான கட்டுரை.பல ஆதாரம் மற்றும் விளக்கங்களோடு கூடிய கட்டுரை.நன்றி சவுக்கு சங்கர்!

மோடியை ஏன் ஆதரிக்க முடியாது ?

நரேந்திர மோடி. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, திருச்சிக்கு மோடி வருகிறார். மோடி தமிழகம் வருகை தரும் நாள் நெருங்க நெருங்க, தமிழகமெங்கும் ஒரு பரபரப்பு... இளைஞர்கள் இளந்தாமரை மாநாட்டை ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.. மோடி என்ன பேசுவார்.. எப்படிப் பேசுவார் என்று தமிழகமே காத்திருக்கிறது. திருச்சியை இந்தியாவே திரும்பிப் பார்க்க இருக்கிறது.

இப்படியெல்லாம் பிஜேபி மற்றும் சங் பரிவாரங்கள் கொடுக்கும் பில்டப்புக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது

இந்தியாவில் மோடி அலை வீசுகிறது. இன்று தேர்தல் வைத்தால் கூட, 545 சீட்டுகளில் 544 சீட்டுகளை மோடி கவ்விப் பிடிப்பார் என்று பிஜேபியினர் கூறி வருகிறார்கள். மோடி பிரதமரானால், ஓபாமா மோடியின் காலடியில் விழுவார் என்ற அளவுக்கு பேசுகிறார்கள். மோடி ஒரு சர்வரோக நிவாரணி. இந்தியாவை பீடித்திருக்கும் அத்தனை பிணிகளுக்கும் மோடி ஒருவர்தான் தீர்வு என்ற ரீதியில் பேசி வருகிறார்கள். இது உண்மையா ? மோடி இந்தியாவின் சர்வரோக நிவாரணியா ?

இடது சாரிகள் ஆதரித்தாலும் மக்களுக்கு எதிரான டாடா நானோ கார் ஆலையை மேற்கு வங்கத்திலிருந்து விரட்டியடித்தார் மம்தா பானர்ஜி. அங்கிருந்து பெட்டியைத் தூக்கிக் கொண்டு நேராக ரத்தன் டாடா சென்ற இடம் குஜராத். குஜராத்தில் கட்டப்படும் நானோ கார் ஆலைக்காக, 1100 ஏக்கர்கள் நிலம் ஒதுக்கப்பட்டன. மோடியின் ராஜதந்திரம் வென்று விட்டது. குஜராத்தை தொழில் வளர்ச்சியடைந்த முன்னோடி மாநிலமாக்க மோடி விரைந்து நடவடிக்கை எடுக்கிறார் என்று மோடியின் அடிப்பொடிகள் புகழ்ந்தனர். ஆனால், அந்த 1100 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கான முத்திரைத்தாள் கட்டணம் கூட ரத்தன் டாடா நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படாமல் விலக்களிக்கப்பட்டது தெரியுமா ? மோடி அரசில் ஊழலே இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு மிகப்பெரிய முதலாளி. பல கோடி ரூபாய்களுக்கு அதிபதி. அந்த முதலாளியிடம் நிலம் வழங்கி, அதற்கு முத்திரைத் தாள் கட்டணம் கூட வசூலிக்காமல் தொழில் தொடங்கச் சொல்வது ராஜதந்திரமா ? அது மட்டுமல்ல.... ஒரு நிலத்தை விவசாய நிலத்திலிருந்து வேறு பயன்பாட்டுக்காக மாற்றினால், ஒரு சதுர மீட்டருக்கு குஜராத் விதிகளின்படி ரூபாய் 6 செலுத்த வேண்டும். இந்த 6 ரூபாய் செலுத்துவதிலிருந்தும் ரத்தன் டாடா நிறுவனத்துக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது.

link: http://www.indianexpress.com/news/nano-gets-concessions-stamp-duty-exemption/373939/

இது மட்டுமல்ல, ரத்தன் டாட்டாவின் காலடியில் மொத்த குஜராத்தையே அடகு வைத்தவர்தான் மோடி. மேற்கு வங்கத்திலிருந்து ரத்தன் டாட்டாவை மம்தா பானர்ஜி விரட்டியடித்ததும் குஜராத் அரசோடு ஒப்பந்தம் கையெழுத்திட்டார் ரத்தன் டாட்டா. இந்த ஒப்பந்த த்தின் ஒரு பகுதி என்ன தெரியுமா ?மேற்கு வங்கத்திலிருந்து டாட்டா நானோ ஆலையின் இயந்திரங்கள் மற்றும் இதர பாகங்களை குஜராத்தில் உள்ள ஆலைக்கு எடுத்து வர ஆகும் மொத்த செலவான 700 கோடியையும் குஜராத் அரசே ஏற்றுக் கொள்ளும். சரி.. இந்த சலுகையோடு நிறுத்தப்பட்டதா என்றால் இல்லை. நானோ கார் ஆலையை குஜராத்தில் தொடங்குவதற்காக மோடி அரசு அரசு, டாட்டா நிறுவனத்துக்கு 9570 கோடி ரூபாய் கடன் வழங்கும். இந்தக் கடனை டாட்டா நிறுவனம் அடுத்த 20 ஆண்டுகளில் மெள்ள மெள்ள திருப்பிச் செலுத்தினால் போதும். இதற்கான வட்டி எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சி அடையாதீர்கள். புள்ளி ஒரு சதவிகிதம்தான் இதற்கான வட்டி.

இது மட்டும்தான் சலுகையா என்றால், இல்லை. முதல் இரண்டாண்டுகளுக்கு டாட்டா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 1100 ஏக்கருக்கான தவணைத் தொகையை செலுத்த வேண்டியதில்லை. இது தவிரவும், தொழில் வரி, மற்றும் இதர வரிகளுக்கு சலுகை. டாட்டா நானோ கார் தொழிற்சாலை குஜராத்துக்கு வந்தது முதல் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, குஜராத் மக்களின் வரிப்பணம் டாட்டாவுக்கு அள்ளி வழங்கப்படும் அளவு என்ன தெரியுமா ? 30 ஆயிரம் கோடி. 20 ஆண்டுகளில் 50 லட்சம் நானோ கார்களை உற்பத்தி செய்வதாக டாட்டா நிறுவனம் அறிவித்திருந்த்து. ஒரு காரின் விலை ஒரு லட்சம் என்று வைத்துக் கொண்டால், 50 லட்சம் கார்களுக்கு குஜராத் மக்கள், ஒரு காருக்கு 60 ஆயிரம் வீதம் மானியமாக அளிக்கிறார்கள். இன்று சாலையில் ஓடும் ஒவ்வொரு நானோ காரும், குஜராத் மக்களின் வரிப்பணத்தில் கிடைத்த மானியத்தால் ஓடுகிறது. குஜராத் மக்களின் வரிப்பணத்தில் சலுகை பெற்ற ரத்தன் டாட்டாவுக்கு வெறும் லாபம் மட்டுமே.

link: http://www.hindu.com/2008/11/12/stories/2008111261651700.htm

இந்த விபரத்தை மோடி ஆதரவாளர்களிடம் கூறினால், குஜராத்தில் வேலை வாய்ப்பை பெறுக்குவதற்காக மோடி இந்தச் சலுகைகளை அளிக்கிறார் என்று கூறுவார்கள். 30 ஆயிரம் கோடி செலவழித்து வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு பதிலாக, அரசே மேலும் பல பணியிடங்களை உருவாக்கினால், பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாகுமே... !!! ரத்தன் டாட்டா போன்ற பன்னாட்டு முதலாளிக்கு லாபத்தை வழங்கி எதற்காக வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்... ? சரி ஒரு வாதத்துக்காக இதை ஏற்றுக் கொள்ளலாம். உண்மையில், குஜராத்தில் தொடங்கப்பட்ட நானோ கார் ஆலையால் வேலை வாய்ப்பு பெருகியதா ?

குஜராத்தில் அமலில் உள்ள சட்டத்தின் படி ஒரு தொழிற்சாலை தொடங்கப்படுகையில் 85 சதவிகிதமான பணியாளர்கள் உள்ளுரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது தவிரவும் மேலாண்மை மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களில் (Managerial and Supervisorial positions) குறைந்தபட்சம் 60 சதவிகிதம் உள்ளுர் மக்களால் நிரப்பப்பட வேண்டும். இந்த சட்டம், உள்ளுர் வேலைவாய்ப்பை உத்தரவாதப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

ஆனால் டாட்டாவின் நானோ ஆலைக்காக இந்த சட்டத்தையும் தளர்த்தி உத்தரவிட்டுள்ளார் மோடி. அப்படி தளர்த்தி உத்தரவிடப்படுகையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன தெரியுமா ? “டாட்டாவுக்கு வழங்கப்படும் இந்தச் சலுகை சிறப்புச் சலுகை. இந்தச் சலுகை மற்ற தொழிற்சாலைகளுக்கும், தொழில்களுக்கும் பொருந்தாது”.

link: http://www.telegraphindia.com/1090106/jsp/nation/story_10349574.jsp

எப்படி இருக்கிறது மோடியின் ராஜதந்திரம் ?

மோடியின் இந்த செயலுக்கும், ஸ்பெக்ட்ரத்தை சகாய விலையில் முதலைகளுக்கு விற்ற ஆ.ராசாவின் செயலுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ?

குஜராத்தில் தொழில் முதலீடு அதிக அளவில் இருக்கிறது என்றால்... அதில் வியப்படைய என்ன இருக்கிறது ? இப்படி சலுகைகள் வழங்கப்பட்டால் எந்த தொழில் அதிபர் குஜராத்தில் தொழில் தொடங்க விரும்பமாட்டார் ?

வறுமை ஒழிப்பு, சத்துக்குறைவான குழந்தைகள் என்று பல்வேறு அளவீடுகளில் குஜராத் மற்ற மாநிலங்களை விட பின்தங்கியே உள்ளது. முன்னேற்றம் என்ற பெயரில் சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தை முன்னேற்றியதும், கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரு மட்டும் முன்னேறியதும் போலவே, அகமதாபாத் உள்ளிட்ட நகர்ப்புறங்களில் மட்டும் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, ஒட்டு மொத்த குஜராத்தே வளர்ந்து விட்டதாக மாயையை உருவாக்குகிறார் மோடி.

link :http://counterview.org/2013/07/26/gujarats-gharib-kalyan-melas-have-failed-to-be-torch-bearer-for-poverty-reduction-suggest-latest-planning-commission-data/

link: http://www.rediff.com/business/column/modis-myths-about-gujarats-growth-and-other-hype-column/20120711.htm

வறுமையில் உள்ளவர்களை சென்றடையாத வளர்ச்சி என்ன வளர்ச்சி ?

மோடி ஊழலுக்கெதிரானவர் என்று வாதிடுகின்றனர் பிஜேபியினர். பிஜேபி கட்சியைச் சேர்ந்த பாபு போகாரியா என்பவர் சட்டவிரோதமாக குவாரி நடத்தியதற்காக 2006ம் ஆண்டு வழக்கில் சிக்கியவர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருந்தபோதே, அவரை தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட நேர்மையாளர்தான் மோடி.

link: http://articles.timesofindia.indiatimes.com/2013-06-15/india/39992651_1_illegal-mining-case-gujarat-minister-porbandar

ஊழலுக்கு எதிராக போராடும் போராளியாக தன்னைக் காட்டிக் கொண்ட மோடிதான், வலுவில்லாத ஒரு லோக்பால் மசோதாவை குஜராத் மாநிலத்தில் அறிமுகப்படுத்தியவர்.

சிஏஜி அறிக்கை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஏற்பட்ட மொத்த இழப்பீடாக குறிப்பிட்ட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை வைத்து இன்று வரை அரசியல் செய்து கொண்டிருக்க க்கூடிய கட்சி பிஜேபி. இந்த பிஜேபியின் பிரதம வேட்பாளராக, ஊழலுக்கு எதிரான பிதாமகனாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் நரேந்திர மோடியின் அரசு, 16 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டிருப்பதாக 2012ம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்த அறிக்கை குஜராத் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டபோது, எந்த விதமான விவாதமும் நடத்த அனுமதிக்காமல், ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சஸ்பெண்ட் செய்தவர்தான் இந்த மோடி. 2013ம் ஆண்டுக்கான அறிக்கையில், ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி வழங்கி கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Link: http://redbarricade.blogspot.in/2013/04/cag-indicts-modi-govt-for-undue-favours.html

குஜராத் சட்டமன்றத்தில் எவ்விதமான எதிர்ப்பையோ விவாதத்தையோ அனுமதிக்க மறுப்பவர் மோடி. சட்டமன்றத்தில் விவாதத்தில் பங்கெடுப்பதை விட, அரசியல் மேடைகளில் சோனியா குடும்பத்தையும், மன்மோகன் சிங்கையும், பாகிஸ்தானையும், திட்டுவதையே முழு நேர வேலையாக வைத்துள்ளார் மோடி.

இந்த மோடிக்கும், காங்கிரஸ் கட்சியில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் என்ன வேறுபாடு ? காங்கிரஸ் கட்சி அரசியல்வாதிகளுக்கு எந்த விஷயத்திலும் வேறுபாடு இல்லாதவரே இந்த மோடி. சென்னை மொழியில் சுருக்கமாகச் சொன்னால், மோடி ஒரு டுபாக்கூர் பேர்விழி.

இவரது டுபாக்கூர் வேலைகளுக்கான சிறந்த உதாரணம், உத்தராகாண்ட் வெள்ளத்திலிருந்து ஒரே நாளில் 15 ஆயிரம் பேரைக் காப்பற்றினார் என்ற ப்பி.ஆர் ஸ்டன்ட்.

link: http://www.firstpost.com/politics/backtracking-on-modis-rambo-rescue-too-little-too-late-907133.html

அதனால், 10 ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கட்சிக்குப் பதிலாக மோடி ஒரு ஐந்து ஆண்டுகள் ஆண்டால் என்ன ? கருணாநிதி ஐந்து ஆண்டுகள் ஆண்ட பிறகு ஒரு மாற்றத்துக்காகத்தானே ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தோம்... அது போல மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்ன ? ஒரு மாற்றம் அவசியம்தானே... ?

கேள்விகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையாகத்தான் இருக்கின்றன. ஆனால் மோடியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வரும் நாட்களில் அதற்கான காரணங்களை ஆராய்வோம்.

-சவுக்கு

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1878:2013-09-26-02-05-51&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

Thursday, September 26, 2013

மோடியின் திருச்சி விஜயம் ஏதும் பலனைத் தருமா?மோடியின் திருச்சி விஜயம் ஏதும் பலனைத் தருமா?

ஒரு லட்சம் பேர் ஆன் லைனில் முன்பே புக் செய்து விட்டனர் என்ற பில்டப்போடு வழக்கமான பொய்யுரையோடு தொடங்கப்பட்ட மோடியின் கூட்டத்தை ஆன் லைனில் பார்த்தேன். இதில் இந்த பாரத தேசத்தை மதத்தால், சாதியால், மொழியால் பிளவு படுத்திய காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பி விட்டு எனது தலைமையிலான பிஜேபிக்கு ஒட்டளித்து ஆட்சியில் அமர்த்துங்கள் என்று ஏகத்துக்கும் கத்தினார். பயந்தபடியே ராஜாவும் அதனை மெல்லிய குரலில் மொழி பெயர்துக் கொண்டிருந்தார். இந்த நாட்டை மதத்தால், சாதியால், மொழியால் மக்களை பிளவு படுத்தி தற்போது பிரதம மந்திரியாக முன்னிறுத்தப் படும் அளவுக்கு வளர்ந்துள்ளதை அவரே மறுக்க முடியாது. அவரது மனசாட்சியை ஒரு முறை கேட்டுக கொண்டால் நல்லது. கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அத்தனை தவறுகளையும் செய்து பல்லாயிரக்கணக்காண முஸ்லிம்களின் பிணங்களின் மேல நின்று கொண்டு இன்று எதுவுமே தெரியாதது போல் எப்படி இவரால் பேச முடிகிறது?

வழக்கம் போல் மேல் சாதியான சௌராஷ்டிரர்களை புகழவும் மோடி மறக்கவில்லை. சௌகார் பேட்டை தமிழகத்தில் உள்ளதையும் பெருமையாக குறிப்பிடுகிறார். சாதியால் மக்களை எப்படி பிரிக்கிறார் என்பதை பாருங்கள். மற்ற சாதிக்காரர்கள் மதத்துக் காரர்கள் எல்லாம் தமிழக முன்னேற்றத்துக்கு ஏதும் செய்யவில்லையாமா? தலித்களையும் மற்ற பிற்படுத்தப்பட்டவர்களையும் மிகக் கீழாக இன்று வரை நடத்தி வருவது சௌராஷ்டிர இனத்தவரும், பார்ப்பனர்களும் என்பதை நாம் மறுக்க முடியுமா? வர்ணாசிரமத்தை இன்றும் தாங்கிப் பிடிப்பதில் இந்த இரண்டு சாதியும் முன்னணியில் இருப்பதுதான் இவர்களால் தமிழகத்துக்கு கிடைத்த நன்மை.

அடுத்து தமிழகத்தைப் போலவே குஜராத்தும் கடற்கரை மாநிலமாக உள்ளதால் பல சவால்களை சந்திக்க வேண்டியதாக உள்ளது என்றும் கூறினார். பாகிஸ்தானால் பல மீனவர்கள் கைது செய்யப்படுவதாகவும், அவர்களின் படகுகளை பிடுங்கிக் கொள்வதாகவும் குறை பட்டுக் கொண்டார். எப்படி இவர் பாகிஸ்தானைக் காட்டி, முஸ்லிம்களைக் காட்டி இந்துக்களை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறாரோ அதே போல் அங்கும் ஒரு சில கிறுக்கன்கள் தங்களின் அரசியலை வளப்படுத்திக் கொள்ள இந்தியாவை சீண்டிக் கொண்டே இருப்பார்கள். இது அரசியல். மோடி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை மாறி விடப் போவதில்லை. கார்கில் போர் சிறந்த உதாரணம். பல மைல்கள் எல்லை தாண்டி வந்து கூடாரம் அமைக்கும் வரை கை கட்டி பார்த்துக் கொண்டிருந்தது வாஜ்பாய் அரசு. மேலும் மும்பை தாக்குதலுக்கு தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்த மாநிலமும் குஜராத் தான். இவரது அரசு வெளி நாட்டு கூலிப் படையை நமது நாட்டுக்குள் ஊடுருவச் செய்து ஹேமந்த் கர்கரே போன்ற நியாயவான்களை தீர்த்துக் கட்ட பயன்படுத்திக் கொண்டதையும் நாம் மறந்து விட முடியாது. இவர் கொடுத்த பண முடிப்பை ஹேமந்த கர்கரேயின் மனைவி மறுத்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மும்பை தாக்குதலில் பல விடை தெரியாத கேள்விகள் இன்னும் இருக்கின்றன.

அடுத்து குஜராத் ஒளிர்கிறது அதைப் போல் பாரதத்தையும் வளமாக்க எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வழக்கமான பொய்யை கூறவும் இவர் தயங்கவில்லை. குஜராத்தில் வளர்ச்சி அல்ல வீழ்ச்சி என்பதை பலர் ஆதாரங்களோடு விளக்கினாலும் இவர் அதற்கு பதில் சொல்லாமல் வழக்கமான பொய்களை அடுக்கிக் கொண்டே சென்றார்.

இந்தியா டுடேயில் வந்த ஆதாரபூர்வமான செய்தியை கீழே தருகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

The exercise was to categories Indian states under three heads for funding purposes: least developed states, less developed states and relatively developed state. Gujarat is at 12th position from top on the development index. At the bottom is Odisha and the Goa sits on top of the list.

Gujarat falls in the less developed category. With this new categorisation, Finance Minister P. Chidambaram has sought to do away with the special status.

The Raghuram Rajan Committee had made the recommendation that states that score 0.6 and above on the index may be classified as least developed; states that score below 0.6 and above 0.4 may be classified as less developed and the states that score below 0.4 may be classified as relatively developed.

The Committee has proposed a general method for allocating funds from the Centre to the states based on both a state's developmental needs as well as its performance.

As per the list, Odisha, Bihar, MP, Chhattisgarh, Jharkhand, Arunachal Pradesh, Assam, Meghalaya, Uttar Pradesh and Rajasthan come under the least developed category. Under the less developed category come Manipur, West Bengal, Nagaland, Andhra Pradesh, Jammu and Kashmir. Mizoram, Gujarat, Tripura, Karnataka, Sikkim and Himachal Pradesh. In the list of relatively developed states come Haryana, Uttarakhand, Maharashtra, Punjab, Tamil Nadu, Kerala and Goa.

The report has been put in public domain for further fine tuning.


Read more at: http://indiatoday.intoday.in/story/raghuram-rajan-committee-report-demolishes-modis-claims-of-development-in-gujarat/1/311856.html

ஆக வழக்கமான பொய் பிரசாரத்தோடு மோடி கூட்டம் நிறைவடைந்தது. பணம் கொடுத்து பலரை கொண்டு வந்ததாகவும் முக நூலில் பார்த்தேன். டாஸ்மார்க் கடைக்கு சென்று கொடுத்த பணத்துக்கு சாராயத்தையும் அரை பிளேட் பிரியாணியையும் உள்ளே தள்ளி விட்டு பணம் வாங்கியவர்கள் சுகமாக தூங்க சென்று விடுவார்கள். இதை விடுத்து வேறு எந்த மாற்றமும் இந்த கூட்டத்தால் வந்து விடப் போவதில்லை.

முடிவில் மோடி 'பாரத் மாதாகி ஜே' என்றும் 'வந்தே மாதரம்' என்றும் ஆக்ரோஷமாக முட்டியை உயர்த்தி கத்தினார். மக்களிடத்தில் நோ ரெஷ்பான்ஸ. பணம் வாங்கிக் கொண்டு கூட்டத்துக்கு வந்தவர்களாவது சற்று குரலை உயர்த்தி கத்தியிருக்கலாம். மேடையில் இந்திய படத்தோடு ஒரு பெண் தெய்வ படமும் இணைந்திருந்தது. அதுதான் பாரத் மாதாவா... பாரத் மாதா யார் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு வேளை சோனியா காந்தியை சொல்கிறாரோ!

Wednesday, September 25, 2013

மோடி கூட்டத்துக்கு 10,000 'புர்காக்கள்' ஆர்டர்!மோடி கூட்டத்துக்கு 10,000 'புர்கா' ஆர்டர் : பில்லுடன் ஆதாரங்கள் அம்பலம்!

சப்ளை செய்த கடைக்காரர் இது வெறும் 'கொட்டேஷன்' தான் என்கிறார் - திக் விஜய் சிங் ஆதாரங்களோடு உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினத்தவரின் ஓட்டு வேண்டும் என்றால் அந்த மக்கள் மகிழ்ச்சியுறும் வண்ணம் அவர்களின் வறுமையை போக்க ஒரு அரசு முயற்சிக்க வேண்டும். அரசு வேலைகளில் அவர்களின் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் படுத்த வேண்டும். இந்துத்வா வாதிகளால் முஸ்லிம்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து வரும் போது அரணாக நின்று ஒரு மதசார்பற்ற அரசு காப்பாற்ற வேண்டும். இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பொய் வழக்குகள் போட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை ஒரு சிறந்த அரசானது வெளிக் கொணர வேண்டும். இது வரை குஜராத், முஸாஃபர் நகர், மும்பை, ஹைதரபாத் போன்ற நகரங்களில் நடந்த கலவரங்களுக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இதை எல்லாம் ஒரு மதசார்பற்ற அரசு தொடர்ந்து செய்து வருமானால் அந்த கட்சிககு எந்த ஒரு பிரசாரமும் இல்லாமல் பலனடைந்தவர்கள் அனைவரும் ஓட்டளிப்பர். இதில் சந்தேகம் இல்லை.

அதை விடுத்து ஒரு மாநிலத்தின் முதல்வரே தான் மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக கோத்ரா ரயில் விபத்தை இஸ்லாமியர் செய்தனர் என்ற பொய்யுரையை பரப்பி தனது அதிகாரத்தில் வரும் காவல் துறையை ஏவி விட்டு 2500 முஸ்லிம்களை கொன்ற மோடிக்கு எப்படி முஸ்லிம்கள் ஓட்டளிப்பார்கள்?

இஷ்ரத் ஜஹான் என்ற இள வயது மங்கையை போலி என்கவுண்டர் மூலமாக கொன்று இன்று வஞ்சாரா போன்ற அதிகாரிகளே மோடியையும், அமீத் ஷா வையும் நோக்கி தங்களது கைகளை நீட்டுகின்றனரே... இந்த நிலையில் இஸ்லாமியரின் ஓட்டு பிஜேபிக்கு எப்படி கிட்டும்?

இவ்வளவு அநியாயங்களையும் ஆதாரங்களோடு செய்து விட்டு இன்று 10000 புர்காக்களை ஆர்டர் செய்து கூட்டத்தில் இந்துத்வா பெண்களுக்கு புர்காவை மாட்டி விட்டு "எங்களுக்கும் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்" என்ற பொய்யுரை மோடிக்கு தேவையா? முன்பு அமிதாப் பச்சன் மோடியை ஆதரிப்பதாக ஒரு போலி வீடியோ இணையத்தில் விட்டு அங்கும் மோடி மூக்கறுபட்டார். 20000 பேர் கூட அமர முடியாத திருச்சி மாநாட்டுக்கு ஒரு லட்சம் பேர் ஆன்லைனில் பதிந்துள்ளதாக ஒரு பொய்யுரை. இணையத்தில் அதிகம் தேடப்படும் ஒருவர் மோடி என்ற பொய்யுரை: குஜராத் ஒளிர்கிறது என்ற பொய்யுரை:

அப்பப்பா...... எத்தனை பொய்கள்.

இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இத்தனை பொய்யுரைகள் என்றால் பிரதமராகி விட்டால் பொய்களையே தனது ஆசானாக வைத்து ஆட்சி நடத்துவார். இந்திய தேசத்தை படு பாதாளத்துக்கு கொண்டு செல்ல அந்நிய நாட்டு படையெடுப்பு தேவையில்லை. மோடியை பிரதமராக்கினாலேயே நமது நாடு அதள பாதாளத்துக்கு சென்று விடும். நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள தேச பக்தர்கள் மோடியை பாராளுமன்றத்துக்கு அல்ல திஹார் ஜெயிலுக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும்.

----------------------------------------------------

மோடியின் ராஜ்ஜியமான குஜராத்தின் உண்மை நிலை....
Monday, September 23, 2013

இந்துக்களை ஒன்றாக்குவோம்: முஸ்லிம்களை பிரிப்போம்!"இந்துக்களை ஒன்றாக்குவோம்: முஸ்லிம்களை பிரிப்போம்!" ஒரு தொலைக் காட்சி பேட்டியில் சுப்ரமணியம் சுவாமி மிகவும் பகிரங்கமாக இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார். இனி பேட்டியை பார்ப்போம்...

கேள்வி: 'நான் ஒரு ஹிந்து நேஷனலிஸ்ட்' என்று கூறிய மோடியின் வாதத்துக்கு உங்களின் பதில் என்ன?

சுப்ரமணியம் சுவாமி: 'நான் ஒரு ஹிந்து! நான் ஒரு நேஷனலிஸ்ட்! இந்த இரண்டையும் சேர்த்தால் ஹிந்து நேஷலிஸ்ட்! இதில் என்ன தவறு இருக்கிறது? முஸ்லிம்களும் தாங்கள் ஹிந்து கலாசாரத்தை விரும்புகிறவர்களாக இருந்தால் அவர்களும் எங்களின் பார்வையில் 'ஹிந்து நேஷனலிஸ்டுகளே!'

முஸ்லிம்களைப் பற்றி நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஷியா, அஹமதியா, பரேலி என்று பல பிரிவுகள் இன்று எங்களை ஆதரிக்கின்றனர். முஸ்லிம்களுக்குள் பிரிவினை வந்து விட்டது.

கேள்வி: நீங்களும் அதைத்தானே எதிர்பார்க்கிறீர்கள்? அதாவது முஸ்லிம் ஓட்டுக்கள் சிதற வேண்டும். இந்துக்களின் ஓட்டு ஒன்றாக வேண்டும். அதன் பிறகு நீங்களும் மோடிஜியும் அரசு கார்களில் பவனி வர வேண்டும் அப்படித்தானே!

சுப்ரமணியம் சுவாமி: நரேந்திர மோடியைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர் மனதில் என்ன உள்ளது என்பதும் எனக்கு தெரியாது. எனது எண்ணம் 'ஹிந்துக்களை ஒன்றாக்கு! முஸ்லிம்களை பிரித்தாளு' இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

கேள்வி: ஒரு அரசியல்வாதி இப்படி பேசலாமா! இதுதான் அரசியலா?

சுப்ரமணியம் சுவாமி: ஆம் இதுதான் அரசியல்.

கேள்வி: மிக அபாயகரமான வாதத்தை வைக்கிறீர்கள் சுப்ரமணியம் சுவாமிஜி! இது நல்லதல்ல...

சுப்ரமணியம் சுவாமி: எது அபாயகரமானது. நாங்கள் இந்துக்கள். இந்த நாட்டில் 80 சதவீதம் உள்ளோம். முஸ்லிம்கள் இந்த நாட்டில் 14 சதவீதமே உள்ளனர். அவர்களை பிரித்து சுமாராக ஏழு சதவீத மக்களை எங்களோடு இணைப்பது எப்படி அபாயகரமானதாகும்?

கேள்வி: இது போன்ற பிரித்தாளும் சூழ்ச்சிகளை முன்பு மறைமுகமாகத்தான் செய்து வந்தனர். இன்று நீங்கள் கேமராவுக்கு முன்னால் மிக தைரியமாக இந்த கருத்தை எந்த பயமும் இல்லாமல் வைக்கிறீர்கள்.

சுப்ரமணியம் சுவாமி: ஆம். இதில் வருத்தப்படவோ பயப்படவோ என்ன இருக்கிறது?

கேள்வி: உங்களின் கருத்தை பட்டவர்த்தனமாக தெளிவாக்கியமைக்கு நன்றி!

சுப்ரமணியம் சுவாமி: உங்களுக்கும் எனது நன்றி!

தமிழ் பார்ப்பனரான சுப்ரமணியம் சுவாமியின் பகிரங்க பேட்டியை பார்த்தோம். முன்பெல்லாம் இது போன்ற கருத்துக்களை சற்று பயந்து இந்துத்வா வாதிகளுக்குள் பகிர்ந்து கொள்வர். ஆனால் தற்போது மிக பகிரங்கமாக 'இஸ்லாமியர்களை பிரித்தாண்டு ஆட்சியைப் பிடிப்போம்! அதையும் நீங்கள் பாருங்கள்' என்று பகிரங்கமாக பேட்டி எடுப்பவரே பதறும் வண்ணம் தனது கருத்தை வைக்கிறார். பல்கலைக் கழகங்களில் இன்றும் பகுதி நேர பாடம் எடுத்து வரும் ஒரு பேராசிரியரான சுப்ரமணியம் சுவாமியின் கருத்துக்களே இவ்வளவு அபாயகரமாக இருந்தால் இன்னும் படிக்காத பாமர இந்துத்வா வாதி எந்த மன நிலையில் இருப்பார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதை நேரிடையாக பார்த்தோம். கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து அந்த குழந்தையை உருவி தீயில் இட்ட நாசகாரர்கள்தான் இந்த இந்துத்வாவினர்.

இந்துத்வாவுக்கு துணை போகும் இஸ்லாமியர்களை மிக அழகாக சுப்ரமணியம் சுவாமி பட்டியலிடுகிறார்.

ஷியாக்கள் : முகமது நபி காலத்துக்கு பிறகு கலீபா உஸ்மானுடைய ஆட்சியை கவிழ்த்து வளர்ந்து வந்த இஸ்லாத்துக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியவர்கள் இந்த ஷியாக்கள். இன்றும் அவர்கள் இந்துத்வாவுக்கு ஆதரவு தெரிவித்து தங்களின் விசுவாசத்தை காட்டுகின்றனர்.

அஹமதியாக்கள்: முகமது நபிக்கு பிறகும் ஒரு நபி உண்டு என்று வாதிட்டு இஸ்லாமிய கொள்கைகளை குழி தோண்டி புதைக்கும் அஹமதியாக்கள் இந்துத்வாவுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

பரேலிகள்: உபி யில் தரீக்கா, சமாதி வழிபாடு, தனி மனித வழிபாடுகளை நடத்திக் கொண்டு அதை எதிர்க்கும் இஸ்லாமியர்களை தாக்குதல் நடத்தி அராஜகம் செய்து வரும் பரேலிகள் சுப்ரமணியம் சுவாமிக்கு நண்பர்களாம்.

இதன் மூலம் தவ்ஹீத்(ஓரிறைக் கொள்கை) எந்த அளவு இஸ்லாமியருக்கு அவசியம் என்பதை இது போன்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. நமது நாட்டை ரத்த களரியாக்கி அதன் மூலம் மனு தர்மத்தை நிலை நாட்டி விட வேண்டும் என்று மோடியும் ,சுப்ரமணியம் சுவாமி போன்றோரும் ஆலாய் பறக்கின்றனர்.

சுப்ரமணியம் சுவாமி வைக்கும் வாதங்களில் மற்றது 'இந்துக்கள் இந்த நாட்டில் 80 சதவீதம்' என்பது. தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், சீக்கியர்கள் போன்ற பெரும்பான்மை மக்கள் இந்து மதத்துக்குள்ளேயே வர விரும்புவதில்லை. பார்பனர்களையும், மார்வாடிகளையும், சௌராஷ்ட்ரர்களையும் கூட்டினால் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதம் கூட தேற மாட்டார்கள். தற்போதய தேர்தலுக்கு தலித் மற்றும் பிறபடுத்தப்பட்ட மக்களின் வாக்கு இந்துத்வாவுக்கு தேவைப்படுகிறது. எனவே இஸ்லாமியர்களை காட்டி பயமுறுத்தி இந்துக்களை ஒன்றாக்க நினைக்கிறது இந்துத்வா......சாதி ஏற்றத் தாழ்வுகளை களைந்து தீண்டாமையை களைந்து அனைவருக்கும் அர்ச்சகர் உரிமையை கொடுத்து, பெண் கொடுமையை நீக்கினால் இந்து மதம் தானாக வளரும். ஆனால் இதற்கு மாற்றாக இஸ்லாமியர்களின் பிணங்களின் மீது இந்து மதத்தை வளர்க்க நினைக்கிறது இந்துத்வா...

இது நடக்காத காரியம். இந்துக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்களோடு அண்ணன் தம்பிகளாக சகோதர வாஞ்சையோடு இன்றும் பழகி வருகின்றனர். தோழர் மருதையன் நேற்று திருச்சியில் நடத்திய மோடி எதிர்ப்பு கூட்டத்தையும் அதற்கு திரண்ட மக்களையும் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும். அந்த கூட்டத்தின் ஆடியோ ஒளி, ஒலி பரப்பை நீங்களும் கேட்டு தெளிவடைவீர்களாக...


பாகிஸ்தான், கென்ய வன்முறைகளை கண்டிப்போம்!

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்காளின் என்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

நைரோபியில் உள்ள இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வெஸ்ட் கேட்’ என்ற வணிக வளாகத்திற்குள் 10 க்கும் மேற்ப்பட்ட தீவிரவாதிகள் நேற்று முன்தினம் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கென்ய ராணுவத்தினர் விரைந்து சென்று வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் பிணைக் கைதிகளாக இருப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் இந்தியா, அமெரிக்கா, பிரான்சு, கனடா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.

--பத்திரிக்கை செய்தி..

------------------------------------------------

அதே போல் நேற்று பாகிஸ்தானில் ஒரு சர்ச்சில் நடந்த குண்டு வெடிப்பில் ஏராளமான கிறித்தவர்கள் பலியான செய்தி கேட்டு மனது சங்கடப்பட்டது. இந்த செயலை யார் செய்திருந்தாலும் அவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். இஸ்லாமிய பெயரை பயன் படுத்தில் இதனை எவனாவது செய்திருப்பானேயானால் அவனுக்கு முதலில் குர்ஆனின் விளக்கத்தை தண்டனை காலங்களில் கொடுக்க வேண்டும். போர்க் கலங்களில் கூட 'பெண்கள், முதியோர், சிறுவர்கள், மத குருமார்கள் போன்றவர்களை தாக்க வேண்டாம் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது. போர்க்கலங்களில் கூட நீதத்தை கடைபிடிக்க சொல்லும் இது போன்ற வன் செயல்களை ஆதரிக்குமா!

பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்களை வைத்து தாலிபான்களை தேடுகிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொத்து கொத்தாக அமெரிக்கா கொன்று குவித்தது. அதில் பாதிக்கப்பட்ட யாராவது இத்தகைய காரியத்தை செய்திருக்கலாம். ஆனால் இந்த வழி முறை முற்றிலும் தவறு.

ஆப்கானிஸ்தானத்திலும், பாகிஸ்தானிலும் தங்களின் ஒப்பந்தத்தை அதிகரிக்க உள்ளூர் ஆட்களை வைத்து அமெரிக்கா செய்த சூழ்ச்சியாகவும் இருக்கலாம். இதற்கு மொசாத்தும் துணை நின்றிருக்கும். இது போல் பல முறை அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் வன்முறையை ஆரம்பித்து வைத்துள்ளது. யார் செத்தாலும் பரவாயில்லை. அவர்களின் ஒப்பந்தம் காலாவதியாகி விடக் கூடாது. இவ்வாறு வன்முறை நிகழ்ந்தால்தான் 'நாங்கள் இன்னும் 3 வருடம் இருப்பது அவசியமாகிறது' என்று கூறி ஒப்பந்தத்தை அதிகரிக்க முடியும்.

இந்த வன்முறை வெறியாட்டத்தை யார் செய்திருந்தாலும் இறைவன் முன் தண்டனை பெறுவார்கள். அவர்கள் மனித குல விரோதிகள். அவர்கள் முஸ்லிம்களானாலும், இந்துக்கள் ஆனாலும், கிறித்தவர்கள் ஆனாலும் சரியே!

------------------------------------------------------

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதம் கடந்த மனித நேயத்திற்குச் சான்றாக அமைந்த நிகழ்ச்சியைக் காணுங்கள்!

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் 'நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?' என்று கேட்டார்கள். 'அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.

நூல் : திர்மிதி 1866

யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 2617

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். இது யூதருடைய பிரேதம்' என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதுவும் ஓர் உயிர் அல்லவா?' என்று கேட்டனர்.

நூல் : புகாரி 1313

ஒரு முஸ்லிமுக்கும், யூதருக்கும் இடையே இது போல் உரிமையியல் தொடர்பான வழக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தது. அதன் விபரம் வருமாறு:- ஒரு முஸ்லிமுடைய பொருளை அபகரிப்பதற்காக யார் பொய்யாகச் சத்தியம் செய்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் அல்லாஹ்வை சந்திப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள். அப்போது அஷ்அஸ் (ரலி) என்ற நபித்தோழர் 'என் விஷயமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். ஒரு நிலம் தொடர்பாக எனக்கும், ஒரு யூதருக்கும் விவகாரம் இருந்தது. அவர் அதை எனக்குத் தர மறுத்தார். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உன்னிடம் சான்று ஏதும் உள்ளதா?' எனக் கேட்டார்கள். இல்லை' என்று நான் கூறினேன். உடனே யூதரிடம் 'நீ சத்தியம் செய்!' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். உடனே நான் குறுக்கிட்டு 'அல்லாஹ்வின் தூதரே! இவன் சத்தியம் செய்து என் சொத்தை எடுத்துக் கொள்வான் எனக் கூறினேன். அப்போது 3:77 வசனத்தை அல்லாஹ் அருளினான்' என்று அஷ்அஸ் கூறினார்.

நூல் : புகாரி 2357, 2411, 2417, 2516, 2667


குர்ஆன் 3:77.

" யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப் பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைப் (பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு."
இந்த நபி மொழிகள் குர்ஆனிய வசனங்கள் எல்லாம் மாற்று மதத்தவர்களுடன் கனிவுடனும், அன்புடனும் நீதமாகவும் நடந்து கொள்ள கட்டளையிடுகிறது. இவ்வளவு அழகிய மார்க்கத்தை பின் பற்றும் ஒருவன் அப்பாவிகளை கொல்கிறான் என்றால் தவறு இஸ்லாத்தில் இல்லை. அதை விளங்காத அந்த பெயர் தாங்கி முஸ்லிமிடமே உண்டு.

Sunday, September 22, 2013

மோடி பிரதமர் பதவிக்கு தகுதி உடையவரா?

மோடி பிரதமர் பதவிக்கு தகுதி உடையவரா?புதிய கலாச்சாரம் கட்டுரை:

ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.

குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன்போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும்உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து… என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள்மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..

இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இதற்கென்ன சொல்கிறீர்கள்?

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்துஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. ”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.

பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள். கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன…. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்… இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன…. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்….

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடுநிலையாகவும்,அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது….

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்…இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்கமுடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்! கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ… இன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம்இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.

“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான்கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை”என்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை…

குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் முடிந்துவிட்டன.கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

இந்த இனப்படுகொலையின்நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். குஜராத் மாநிலத்தை ஆஹா .ஓஹோ ..என்று வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று உள்ளார் என்ற வெறும் மாய கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவர் ததியானவர் என்று சிலர் கூவிக்கொண்டு திரிகிறார்கள்.ஆனால் உண்மை என்னவெனில் நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமிபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டு உள்ளனர். இவரை போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்! நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா என்பதை மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.

---------------------------------------------------------------

இந்து பத்திரிக்கையில் வந்த கட்டுரை.....

மதத்தின் மீது அரசியலாட்டம்

தன் கைகளில் 55 துறைகளை வைத்துக்கொண்டு, நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் முதல்வர் அகிலேஷ் யாதவ், கொலைகள் நடந்த இரவே மாவட்ட ஆட்சியர் சுரேந்திர சிங், காவல் துறைக் கண்காணிப்பாளர் மஞ்சில் சிங் இருவரையும் தூக்கியடித்தார்; இருவரும் ஜாட்டுகள் என்பதால். அரசின் தவறான ஆட்டமும் சமிக்ஞையும் அங்கே ஆரம்பமானது. அடுத்தடுத்து உருவான வதந்திகள், இரு தரப்பும் கூடிப் பேசிய கூட்டங்கள், அரசியல்வாதிகள் போட்ட தூபங்கள் எல்லாவற்றையும் அரசு வேடிக்கை பார்த்தது.

ஆகஸ்ட் 30 வெள்ளிக்கிழமை தொழுகை முஸ்லிம்கள் கூட்டம் நடத்த வாய்ப்பானது. பதிலுக்கு மறுநாள் முதல் மகா பஞ்சாயத்தை ஜாட்டுகள் கூட்டினர். இரு கூட்டங்களுமே அச்சமும் வெறுப்பும் கவிந்தவை. முஸ்லிம்கள் கூட்டிய கூட்டங்களில் ஆளும் சமாஜவாதி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-கள் பங்கேற்றனர்; ஜாட்டுகள் கூட்டிய கூட்டங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றனர். இரு தரப்பினரின் அச்சத்தையும் வெறுப்பையும் அரசியல்வாதிகள் வெறியாக உருமாற்றினர். செப். 7-ம் தேதி ஜாட்டுகள் மீண்டும் மகா பஞ்சாயத்தைக் கூட்டியபோது ஒரு லட்சம் பேர் திரண்டனர். எல்லோர் கைகளிலும் அரிவாள், ஈட்டி, துப்பாக்கி. கலவரம் வெடித்தது. அடுத்த 36 மணி நேரத்துக்குள் 38 பேர் செத்திருந்தனர். ஆயிரக் கணக்கான மக்கள் அகதிகளாக மாறியிருந்தனர். வழக்கம்போல, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.

முதல் மூன்று கொலைகள் நடந்ததுமே, 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது மாவட்ட நிர்வாகம். பின்னர், எப்படி இவ்வளவும் நடந்தன?

அரசாங்கம் கலவரத்தை எப்படி அரசியலாக்கியது என்பதற்கு - தனியார் தொலைக்காட்சி வெளிக்கொண்டுவந்த - அதிகாரிகளிடம் “கண்டுகொள்ளாதீர்கள்” என்று உத்தரவிட்ட மூத்த அமைச்சர் ஆஸம் கானின் உரையாடல் ஓர் உதாரணம். யாரையும் யாராலும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அரசாங்கத்தால், யார்மீதும் துணிச்சலாக நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை. கடைசியில், ராணுவம் அழைக்கப்பட்டு எல்லாம் முடிந்தபோது, கடந்த 20 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்துக்குப் பெரும் இழப்பை உருவாக்கிய அடையாளமாக மாறியிருந்தது முஸாஃபர் நகர். ஆட்டத்தைத் தொடங்கியது சமாஜவாதி கட்சி; முடித்தது பா.ஜ.க.

நஷ்டமில்லா போட்டி வியாபாரம்

வரும் தேர்தலை பா.ஜ.க. எப்படிக் கையாளும்? கண் முன் உள்ள உதாரணம்... முஸாஃபர் நகர்.

டிசம்பர் 6, 1992-க்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் பெரிய வகுப்புக் கலவரம் ஏதும் இல்லை. அதுவும் கடந்த 8 ஆண்டுகளில், நாடு முழுவதும் நடந்துள்ள வகுப்புக் கலவரங்களில் 965 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 18,000 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் தேசிய சராசரியையொட்டியே உத்தரப் பிரதேசத்தில் வகுப்புக் கலவரங்கள் நடந்துள்ளன. கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்... இந்தச் சம்பவங்களில் சரிபாதி மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் நடந்துள்ளன. கேரளம் நீங்கலாக ஏனைய மூன்றும் பா.ஜ.க. பலமாக உள்ள மாநிலங்கள்.

பரிசோதனைக் களம்

முஸாஃபர் நகர் கலவரம் ஒரு விபத்து அல்ல; அது ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான். பிரதமர் பதவிக்கான நுழைவுத் தேர்வாக அமைந்த குஜராத் தேர்தலில், மோடி வென்றதிலிருந்தே உத்தரப் பிரதேசத்தில் எல்லாக் காய்களும் திட்டமிட்டவாறே நகர்த்தப்படுகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த அலகாபாத் கும்ப மேளாவை நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகளை ஒருங்கிணைக்கும் களமாகப் பயன்படுத்தியது விஸ்வ இந்து பரிஷத். மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழியும் அறிவிப்பை அசோக் சிங்கால் வெளியிடுவார் எனும் தகவல்கள் அலகாபாத்தில் தொடர்ந்து கசிய விடப்பட்டன. தொடர்ச்சியாக, கோவா மாநாட்டில் பா.ஜ.க-வின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டார் மோடி. முதல் இலக்கு... உத்தரப் பிரதேசம். பா.ஜ.க. அங்கே கோமா நிலையில் இருந்தது. கட்சியை அங்கே தூக்கி நிறுத்தாவிட்டால், மோடியின் பிரதமர் கனவு பணால். தன்னுடைய வலதுகரமான அமித் ஷாவை உத்தரப் பிரதேசப் பொறுப்பாளர் ஆக்கினார். அயோத்தி சென்ற அமித் ஷா, “ராமர் கோயில் விரைவில் கட்டப்படும்” என்றபோதே கட்சியின் வியூகம் தெளிவாகிவிட்டது. அடுத்த மாதமே அயோத்தியை நோக்கிப் பேரணிக்கு அழைப்பு விடுத்தது விஸ்வ இந்து பரிஷத்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ். 40 கிளைகளை அமைக்கும் பணியில் இருக்கிறது. இடையிலேயே “உலகின் உயரமான சிலை சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் அமைக்கப்படும்; முழுக்க இரும்பில் அமைக்கப்படும் இந்தச் சிலைக்கு வீடுகள்தோறும் 250 கிராம் இரும்பு பெறுவோம்” என்று அறிவித்தார் மோடி. அன்றைக்கு ராமர்; இன்றைக்கு படேல். அன்றைக்குக் கோயில்; இன்றைக்குச் சிலை. அன்றைக்குச் செங்கல்; இன்றைக்கு இரும்பு. அன்றைக்கு இந்து தேசியம்; இன்றைக்கு ‘இந்திய தேசியம்!’

அந்த முகம் எந்த முகம்?

1998 பொதுத் தேர்தலில், பா.ஜ.க. இரு முகங்களை முன்னிறுத்தியது. மிதமான முகம் வாஜ்பாய்; தீவிரமான முகம் அத்வானி. 2014 தேர்தலில் அது முன்னிறுத்தப்போகும் முகங்கள் எவை என்பதை முஸாஃபர் நகர் சொல்லிவிட்டது.

கலவரத்துக்குப் பின் உத்தரப் பிரதேசத்துக்கு மோடி வருவார் என்ற எதிர்பார்ப்பு மோடியின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் வருகைக்குப் பின் அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது. மோடி வரவில்லை; குறைந்தபட்சம் இந்தக் கலவரத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை.

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5156479.ece

வஞ்சாராவின் தற்போதய நிலைமைக்கு யார் காரணம்?

வஞ்சாராவின் தற்போதய நிலைமைக்கு யார் காரணம்?

குஜராத் போலீஸ் அதிகாரி வஞ்சாரா இன்று மோடிக்கு பெருத்த தலைவலியாக மாறிப் போயுள்ளார். குஜராத் முன்னால் உள்துறை மந்திரி ஹரேன் பாண்டியாவின் கொலையிலும் மோடிக்கு பங்கிருப்பதாக செய்திகள் கசிகின்றது. ஹரேன் பாண்டியாவின் தந்தை 'இறப்பதற்கு சில நாள் முன்பு மோடியின் தரப்பிலிருந்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஹரேன் பாண்டியா சொன்னார்' என்ற வாதத்தையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். கொலை செய்வது என்பது தற்போது மோடிக்கு மிக பிடித்த பணியாகிப் போயுள்ளது. பிணியாகவும் போயுள்ளது. :-)

மோடியும் அமித்ஷா வும் சொன்னதால்தான் நாங்கள் என்கவுண்டர் பண்ணினோம் என்று கூறும் வஞ்சாராவைப் பார்த்து நான் கேட்பது 'அந்த கிறுக்கன் சொன்னான் என்றால் உங்களுக்கு புத்தி எங்கு போனது? முதலமைச்சர் எது சொன்னாலும் செய்து விடுவீர்களா? பதவி உயர்வுக்காகவும், ஒரு சில லட்சங்களுக்காகவும் காக்கி சட்டைக்கு உள்ள மதிப்பை கெடுத்துக் கொண்டு இன்று அவமானப்பட்டு நிற்பதற்கு வெட்கமாக இல்லையா?

தான் மீண்டும் முதல்வராவதற்காக உங்களையும் உங்களைப் போன்ற 20 போலீஸ் அதிகாரிகளையும் பயன்படுத்திக் கொண்ட மோடியே முதல் குற்றவாளி. ஆனால் தற்போது முதல்வராக இருப்பதால் சட்டம் அவரை நெருங்க சற்று தயக்கம் காட்டுகிறது. மோடி குஜராத் முதல்வர் பதவியிருந்து இறக்கப்பட வேண்டும். அதன் பிறகு இருக்கிறது வேடிக்கை. இந்திய வரலாற்றில் மோடியைப் போன்று அவமானப்படக் கூடிய ஒரு அரசியல்வாதியை நாம் பார்க்க முடியாது. அந்த அளவு அவரது இறங்கு முகம் இருக்கும். ஷொராபுதீன் கொலை வழக்கு, அவர் மனைவி கொலை வழக்கு, ஹரேன் பாண்டியா கொலை வழக்கு, இர்ஷத் ஜஹான் கொலை வழக்கு, துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கு, குஜராத்தில் கொல்லப்பட்ட 2500 முஸ்லிம்களின் கொலை வழக்கு என்று தனது ஆயுள் முழுக்க வழக்கு விசாரணையையும், சிறை தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.

இந்த நிலை தனக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக பிரதமர் பதவியை என்ன விலை கொடுத்தாவது அடைய மோடி முயற்சிப்பார். அதற்கான வேலையின் முதல் தொடக்கம்தான் முஸாஃபர் நகர கலவரம். இனி இதனை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல் படுத்த மோடி தயங்க மாட்டார். குஜராத்திலிருந்து முஸ்லிம் பெயர்களில் பல இந்துத்வா காலிகள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக முக நூலில் ஒரு செய்தியைப் பார்த்தேன்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் முஸ்லிம்களாகிய நாம் மற்ற இந்து சகோதரர்களுக்கு உண்மையை விளக்க வேண்டியது தலையாய கடமையாகும். ஊடுருவிய அந்த இந்துத்வ காலிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை பார்ப்போம்.

1. கோவிலில் இரவோடு இரவாக மாட்டுத் தலையை போட்டு விட்டு ஓடி விடுவது.

2. பள்ளி வாசல்களில் இரவோடு இரவாக பன்றி தலைகளை போட்டு விட்டு ஓடி விடுவது.

3. சாமி சிலைகளை உடைத்து விட்டு 'இந்தியன் முஜாஹித்' 'அல் உம்மா' என்று பேப்பரில் கிறுக்கி அந்த இடத்திலேயே போட்டு விட்டு ஓடி விடுவது.

4. இந்து கலலூரி பெண்களை முஸ்லிம் பெயர்களில் சென்று வம்பளப்பது. அதே போல் முஸ்லிம் கல்லூரி பெண்களை இந்து பெயர்களில் சென்று வம்பளப்பது. அதன் மூலம் கலவரத்தை பெருகச் செய்வது.

5. இந்து முண்ணனி, பிஜேபி தலைவர்களின் வீடுகளில் அவர்களே வெடி குண்டுகளை வீசி விட்டு முஸ்லிம்களின் மேல் பழியை போடுவது. சமீப காலத்தில் அவ்வாறு செய்து மாட்டிக் கொண்ட பிஜேபி தொண்டனைப் பார்த்தோம் :-)

இவையெல்லாம் இது வரை இவர்கள் இந்தியா முழுவதும் நடத்திய கலவரங்களின் பின்னணிகள்: அதையே தமிழகத்திலும் செயல்படுத்த எத்தனிப்பார்கள்.

இன்னும் என்னவெல்லாம் திட்டம் வைத்திருக்கிறாரோ அவை எல்லாம் மோடிக்கும் அமித்ஷாவுக்குமே வெளிச்சம்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, மோடியின் செயல்பாடுகளையும், அவர் எவ்வளவு பயங்கரமானவர் என்பதையும் இந்துக்கள் உணர்ந்தே உள்ளனர். இந்துக்களில் உள்ள ஒரு சில பார்ப்பணர்கள்தான் ஊடகத்தின் துணையைக் கொண்டு மோடிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருப்பதாக பாவ்லா காட்டுகிறார்கள். எந்த பிரச்னைகள் ஏற்பட்டாலும் நாம் உடனே காவல் துறையை அணுகி சம்பந்தப்பட்டவர்களை ஒப்படைக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் நாமே அவர்களுக்கு தண்டனை தர முயற்சிக்கக் கூடாது. தனி ஆளாக செய்வதை விட டிஎன்டிஜே, தமுமுக, பாபுலர் ஃபிரண்ட் போன்ற அமைப்புகள் மூலமாக இந்த இந்துத்வ காலிகளை இனம் காண வேண்டும்.

கிராமங்களில் சந்தேகத்திற்கிடமாக புதிய நபர்கள் தென்பட்டால் உடன் விசாரணையில் இறங்கி காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை இரவு நேரங்களில் சிலரை ரோந்துப் பணிகளிலும் ஈடுபடுத்தலாம். எப்படியும் தமிழகத்தில் 20 சீட்டுகளையாவது கூட்டணியோடு பிடித்து விட எத்தனிப்பார்கள். அதற்கு நாம் இடம் தந்து விடாமல், வன்முறையின்றி பிரசாரத்தின் மூலம் இந்துத்வாவின் சீர்கேடுகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்வோம்.கம்யுனிஸ்டுகள் நமக்கு முன்பே அவர்களின் பிரசாரத்தை திருச்சியில் துவககி விட்டார்கள். அந்த நண்பர்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்வோமாக!

http://timesofindia.indiatimes.com/india/DG-Vanzara-sings-about-Haren-Pandya-murder-says-it-was-political-conspiracy-CBI/articleshow/22827281.cms

Saturday, September 21, 2013

பாலகங்காதார திலகர்! சில நினைவுகள்!படிக்கும் காலங்களில் நமது வரலாற்று புத்தகங்களில் தேசத் தலைவர்களுள் ஒருவராக திலகரை வர்ணித்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இவர் உண்மையிலேயே தேசத் தலைவராக பார்க்க வேண்டியவர்தானா! பார்ப்பனர் என்ற ஒரே காரணத்துக்காக இவரை தேசத் தலைவராக மாற்றினார்களா? என்பதை அம்பேத்கார் அவர்களின் நூலின் மூலம் தெரிந்து கொள்வோம். நமது வரலாற்று பாடங்கள் 90 சதவீதமானவை இட்டுக் கட்டியும், பொய்களை அரங்கேற்றியும் அச்சிடப்பட்டுள்ளது. இதை வருடம் தவறாமல் நமது சிறுவர்கள் பாடங்கள் என்று படித்து வருகின்றனர். வருங்காலத்திலாவது இந்துத்வாவாதிகள் பொய்யாக புனைந்த வரலாறுகளை நீக்கி உண்மை வரலாற்று பாடங்களை நமது மாணாக்கர்கள் படிக்க வழி செய்வோமாக...

இனி அம்பேத்காரின் புத்தகத்துக்குள் நுழைவோம்.


1915 – Tilak opposed the Age of Consent Bill, brought in by Shastri, to raise the minimum Age for marriage.

1916 April 28 – Established “Home Rule League” at Belgaon

1916 December – Lukhnow Congress – Recognized Muslim Demands of Separate Electorates for Muslims.

1918 – He opposed, a Bill by Vithalbhai Patel, to legalize the inter-caste marriages. He described such marriages as “hindu-hindu che sankar karak vivah”. He declared the Bill to be against Hindu religion and said that the progeny of such marriages may inherit the property of father only and not of others. A Brahmin looses his brahmin-hood, if he marries a shudra woman, he opined.

1918 – Trip to England to file suit of defamation against Sir Valentine Chirol, who had held Tilak’s writings and work responsible for violence in India and called him “Father of Indian Unrest”. Tilak lost the case in Feb. 1919 and Returned back to Bombay in Nov. 1919

1919 December – Amrutsar Congress

1920 Feb. – March – His meetings were disrupted in Sangali, Pune and Bombay by non-Brahmins because of his speech at Athani saying non-Brahmins had no business to take education or to take part in politics.

http://ambedkar.org/jamanadas/TilakGandhi.htm

சாதி மறுப்பு திருமணம் பெரும்பாவம்

சூத்திரர்கள் கல்விக்கு,அரசியலில் பதவிக்கு வர ஆசைப்பட கூடாது.

சூத்திரர்கள் அவர்கள் சாதி தொழிலை தான் செய்ய வேண்டும்.அரசியலுக்கு வர எந்த உரிமையும் கிடையாது.

குழந்தை திருமணம்,வர்ணாசிரமம் தான் என் மதத்திற்கு ஆணி வேர்.அதை மாற்ற கூடாது.

விதவை திருமணம் பெரும்பாவம்.

வினயாகர் ஊர்வலத்தை வைத்து மக்களுக்கு வெறி ஏற்றுவதை முதலில் துவங்கி வைத்தவர் இதே திலகர்தான்..

அந்த காலத்தில் அதற்க்கு மாற்றாக இவர்களை எதிர்க்க வந்தவர்கள் மிகவும் கெட்டவர்கள்.

இந்த விநாயகர் ஊர்வலம் இன்று வரை நமது தமிழகத்தையும் நிம்மதியில்லாமல் சில காலமாக ஆக்கி வருவதை நாம் அறிவோம்.

'பிளேக்' நோய் வந்து பலர் மரித்த போது ஆங்கில அரசு எலிகளை கொல்ல உத்தரவிட்டது. 'அது எங்கள் கடவுளின் வாகனம்! அதை எப்படி நீங்கள் கொல்லப் போயிற்று?' என்று வீராப்பு பேசி அதற்கும் சிறை தண்டனை பெற்ற மகான்தான் நம்ம பாலகங்காதார திலகர்.

இப்படிப்பட்ட அரிய கருத்துக்களை தன்னுள் சுமந்து அதற்காகவே வாழ்ந்து மடிந்த ஒருவர் நமது தேசத் தலைவராம். அறிந்து கொள்ளுங்கள் தோழர்களே!

Thursday, September 19, 2013

குல்சும் அப்துல்லாஹ் - பாராட்டப்பட வேண்டியவர்.

குல்சும் அப்துல்லாஹ் - பாராட்டப்பட வேண்டியவர்.பெண்கள் விளையாட்டு என்றாலே அது உடை குறைப்பாகத்தான் இருக்கும். அங்கு குழுமும் கூட்டமும் விளையாட்டை பார்க்க வராது. அந்த பெண்களின் அங்கங்களை ஆராய்வதற்கே வரும். ஆண்கள் போட்டிகளை விட பெண்கள் அரை குறை ஆடைகளோடு கலந்து கொள்ளும் போட்டிகளில் நமது ஆண் மக்கள் அரங்கு நிரம்பி வழிவதும் அதற்குத்தான்.35 வயதான குல்சும் அப்துல்லா அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தானிய பெண். கம்யூட்டர் என்ஜினியரிங்கில் பிஎச்டி பண்ணியுள்ளார். சர்வதேச பளு தூக்கும் போட்டியில் பெண்கள் இவ்வாறுதான் அரை குறை ஆடை அணிய வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால் இவர் மேலதிகாரிகளோடு வாதிட்டு 'இஸ்லாமிய உடை, பளு தூக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு எந்த சிரமத்தையும் கொடுப்பதில்லை. நான் இஸ்லாமிய உடைகளோடு மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்வேன்' என்று கூறி முடிவில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிகாரிகள் தற்போது போட்டியின் விதி முறைகளை திருத்தி இஸ்லாமிய உடை அணிந்தும் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று மாற்றியுள்ளனர்.

தற்போது இந்த உடையில் இந்த பெண்ணை நாம் பார்க்கும் போது நம்மையறியாமல் மரியாதை வருகிறது. போராடினால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரலாம் என்பதற்கு இந்த பெண் முன்னுதாரணமாக உள்ளார். வாழ்த்துக்கள் சகோதரி...

இதே போல் ஈரானிய பெண்கள் முழு ஆடையோடு விளையாட வந்ததற்காக ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம். இனி வரும் காலத்தில் இதை முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்து போட்டிகளிலும் பெண்கள் தங்கள் உடலை மறைத்து கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட வேண்டும். இதை ஆரம்பித்து வைத்த அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

பெண்கள் புர்கா அணிந்து வெளியில் வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண முடியாது என்று சொல்பவர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் குல்சும் அப்துல்லா.

காவி ரிப்பன்களும் புன்னகைக்கும் பிள்ளையாரும்!கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப் பொட்டு கழுத்தில் காவி துண்டு.. கண்கள் சிவக்க உடலெல்லாம் வேர்த்து கொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர்களை கடந்த சில ஆண்டுகளாக யானை முகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது.

பிள்ளையாரோடு அமர்ந்திருக்கிற இவர்களுக்கு கடவுள் பக்தியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. சிலர் அந்த ஆட்டோக்களிலேயே புகை பிடிப்பதும், ஒரு கட்டிங் போடுவதுமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஒரு MOB MENTALITY யோடு வெறித்தனமாக இயங்குகிற இளைஞர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கணபதியை கடலில் கரைக்கிற இந்த சடங்கினை தங்களுடைய ஜபர்தஸ்த்தை ஏரியாவில் பலத்தினை காட்டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டு தோறும் நடத்துகிறார்கள். இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்து முண்ணனி மாதிரியான இந்துமத முன்னேற்ற அமைப்புகளின் ஆதரவும் பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. அது போதாதென்று எந்த பகுதியில் பிள்ளையார் உட்காரப் போகிறாரோ அப்பகுதி சில்லரை வியாபாரிகளிடம் உருட்டி மிரட்டியும் வசூல் வேட்டை நடத்துவதில் தவறுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏரியாவில் தங்கள் பலமென்ன என்பதை காட்டுவதற்கு விநாயகர் ஒருகருவியாக இருக்கிறார். விரும்பியோ விரும்பாமலோ அவரும் இந்த காவி நாயகர்களோடு ஒற்றை தந்தத்துடன் பயணிக்கிறார். கடல் வரை பயணித்து கரைந்தும் போகிறார்.

இந்தப்பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு! ஞாயிறன்று காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப்படும் டெம்போ ஆட்டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பொறுக்கி பக்தர்களும் கடற்கரைக்கு பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஏய் ஏய்.. ஆய் ஊய் என்கிற சப்தங்கள் ஒலிக்க அவர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். பிள்ளையார் ஆட்டோவின் மூலையில் அமரவைக்கப்பட்டிருந்தார்.

டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதினைந்து வயது இருக்கலாம். அவள் அந்த டெம்போவை ஒட்டி தன் ஸ்கூட்டியில் முந்தி செல்ல எத்தனிக்கிறாள்… ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் முதலில் விசிலடித்தனர்… பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களை கிள்ளி எரிந்தனர். அதற்கு பிறகு அதில் ஒரு பொறுக்கி பக்தன் தண்ணீர் பாக்கெட்டை எடுத்து அந்தப் பெண்ணின் மேல் பீய்ச்சி அடிக்கத் தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்த பெண்ணை பார்த்து கூறவும் ஆரம்பித்தான்.

அந்தப் பெண் கோபத்தில் ஏதோ பதிலுக்கு ஏதோ திட்ட ஆரம்பிக்க.. ஆட்டோவை அந்த பெண் மேல் ஏற்றுவதைப் போல ஓடித்து ஓட்டுகிறார் ஆட்டோ டிரைவர். உதயம் தியேட்டர் அருகே நூறடி ரோடு திரும்புகிற இடத்தில் அந்த பெண்ணை இடிப்பது போல ஒடிக்க.. ஸ்கூட்டி பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீயணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பஸ் ஸ்டான்ட் அருகே தடுமாறி விழுந்தாள். பெரிய காயமில்லை.. விழுந்ததும் அருகில் பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்து விட்டனர்.

ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்த.. வண்டி அந்த திருப்பத்தில் காத்திருந்த பிள்ளையார் வண்டிகளின் நீண்ட வரிசையில் இணைந்தது.

இவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்ட வரிசையை பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும் கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல்லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர்களைப் பார்க்க ஒரு நீண்ட சண்டைக்காக காத்திருக்கிறவர்களைப் போல இருந்தது. மிகச் சிறிய தூண்டுதலிலும் கொலையோ கற்பழிப்பையோ கூட அரங்கேற்றுகிற ஆக்ரோஷத்துடன் இருந்தனர். காவல்துறை நண்பர்களும் கூட இக்கூட்டத்தினரிடம் அடக்கியே வாசிக்கின்றனர்.

இந்த காவி ரிப்பன் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதோடு இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும் இவர்கள் எல்லோருமே மூக்கு முட்ட குடிப்பவர்களாக சின்ன தூண்டுதலிலும் ஆகப்பெரிய வன்முறையை நிகழ்த்தி விடுகிறவர்களாக இருப்பதும் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வலுப்படுத்துகிறது.

நேற்று சந்தித்த அந்த டெம்போஆட்டோ இளைஞர்களின் முகத்தில் கண்களில் தெரிந்த வன்முறையை, அந்த பெண்ணின் மீது வன்மத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து பகிர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத்திலும் பயமுறுத்தக்கூடியது… சாகும்வரை மறக்கவே முடியாதது.

நன்றி : அதிஷா

http://www.athishaonline.com/2013/09/blog-post_17.html

Wednesday, September 18, 2013

தின மலர், தின மணியில் வராத முக்கிய செய்தி! :-)கோவை :கோவையில் நேற்று இரண்டு காவி தீவிரவாதி இயக்கங்களுக்கிடையே கடுமையான சண்டை அதில் ஒரு தீவிரவாதி இயக்கம் பெட்ரோல் குண்டு வீசி மற்றொரு தீவிரவாதி வீட்டை தாக்கினர்....


8 காவி தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்தனர் அந்த தீவிரவாதிகளிடம் தீவிர விசாரணை செய்து வருகிறது....

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் படம்....

பாவம் இந்த திராவிட இளைஞர்கள்! ஆரியர்களின் சூழ்ச்சியில் வீழ்ந்து இன்று கைதாகியுள்ளனர். இது போன்ற வெடி குண்டு வீச்சுகளுக்கெல்லாம் அவாள் இன்வால்வ் ஆக மாட்டா....இளிச்சவாயன் திராவிடர்கள்தான் இவர்களுக்கு கிடைப்பார்கள். பெரியாரின் போதனைகள் இந்த திராவிட இளைஞர்களுக்கு சரியாக புகட்டப்படாததே இது போன்ற ஈன செயல்களுக்கு காரணம்.

வழக்கமாக அவாள் பத்திரிக்கைகளில் இது போன்ற செய்திகளை பிரசுரிக்க மாட்டா! அதனால் என்னாங்கனும......நாம பேஷா பிரசுரிச்சுட்டா போறது! என்ன சொல்றேள்!

------------------------------------------------------

Tuesday, September 17, 2013

சினிமாவிலிருந்து இஸ்லாத்தை நோக்கி..சினிமாவிலிருந்து இஸ்லாத்தை நோக்கி..

"சசி விஜேந்திர" இது இவரது சினிமாப் பெயர்.

சினிமா மக்கள் மத்தியில் புரையோடிப்போயிருக்கின்ற ஒன்று. பலரும் பிரபல்யமாவதற்கு பயன்படுத்துகின்ற ஒரு முக்கிய ஊடகமே இந்த சினிமா. பணம் செழிக்கும் ஒரு முக்கிய வர்த்தகம் என்றுகூட சொல்லலாம். இப்பாதையில் பயணித்த ஒருவர்தான் இந்த ஷஷி விஜேந்திர. இலங்கையின் கமலஹாசன் என்று அழைக்கப்பட்டவர். முஸ்லிமாக இருந்தாலும் உலகவாழ்க்கையின் சினிமா சுகபோகத்துக்குள் நுழைந்தார். அழகு, நல்ல சாந்தமான குணம். தொடர் வெற்றிகள். தேசிய விருதும் கிடைத்தது. ஆனால், இந்த புகழின் உச்சியில் இருக்கும் போதுதான் சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்னர் தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். கைப்பிடித்தது ஒரு கிறிஸ்தவ பெண். இப்போது ஒரு இஸ்லாமிய பெண். நான்கு மகன்கள். ஒரு பெண் பிள்ளை. மூத்த மகன் ஒரு "ஹாபில்".

மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீடியா இவரைத் தேடிப்பிடித்திருக்கிறது. சுமார் 17 வருடங்கள் கழித்து ஒரு பேட்டி. பேட்டியின் போது சிறு வயதில் பார்த்த அந்த நடிகரா இவர் என்று யோசித்தே விட்டேன். பேட்டியின் போது பேட்டி காண்பவர் இது திரும்பவும் சினிமாவுக்குள் நுழைவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று சொல்கிறார். ஆனால், இஸ்லாமிய வாழ்வை விட்டு வெளியே திரும்பவும் வருவதற்கு விருப்பமில்லை என்கிறார். அவர் நடித்த சில படங்களின் பாடல் காட்சிகளை ஒளிபரப்பி இவற்றைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது என்று கேட்கப்படுகின்றது. அதற்கு அவருடைய பதில் "அக்காலத்தில் தனது பங்களிப்பை (சினிமாவில்) ஒழுங்காக செய்திருக்கின்றேன் என்று சொன்னாலும் நபிவழியை விட்டு விலகி இருந்தேனே என்று மனம் கவலைப்படுகிறது" என்று சொல்கிறார். ஸுப்ஹானல்லாஹ். மேலும், இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தி பல வெற்றிகளை பெற்றுக்கொண்ட இயக்குனர், இவருடன் நடித்த நடிகை மீண்டும் இவர் சினிமா உலகுக்குள் சங்கமிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள். அவை எல்லாவற்றுக்கும் சிரித்த முகத்துடனேயே எனது வாழ்க்கை நபிவழியாகவே இருக்கும், அதற்கு மாற்றமாக நடக்க மாட்டேன் என்று உறுதியாகச் சொல்கிறார்.

இப்போது தப்லீக் ஜமாத்தின் தான் சார்ந்திருக்கும் ஊரின் அமீராக செயல்படுகிறார்.

படிப்பினைகள்:

# முஸ்லிமாக இருந்தும் வாழ்வை ஜாஹிளிய்யத்துக்குள் நடைபயின்ற இவர் திரும்பவும் இஸ்லாமிய வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டார்.

# தொடர் வெற்றிகள், தேசிய விருது என்ற புகழின் உச்சியில் இருக்கின்ற போதே சினிமாவின் சுகபோக வாழ்வில் இருந்து விடுபடுகிறார்.

# திரும்பவும் ஜாஹிளிய்யத்துக்கான அழைப்புக்கள். அறிமுகப்படுத்திய இயக்குனர் மூலம் அழைப்பு. ஆனால், தவறுக்குள் நுழைய விருப்பமில்லை என்று மறுப்பு.

மாஷா அல்லாஹ்..அல்லாஹ் அண்ணாரின் கடந்த கால தவறுகளை மன்னித்து நல்லாடியார்களுள் ஒருவராக பொருந்திக் கொள்வாயாக...

-https://www.facebook.com/muhammad.himas.7?hc_location=stream

Monday, September 16, 2013

முசாஃபர் நகர் கலவரம் ஏன் உருவானது?நமது ஊடகங்கள் கொடுத்த செய்தியின்படி சச்சின், கவுரவ் என்ற இரண்டு ஜாட் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளை ஷாநவாஸ் என்ற முஸ்லிம் இளைஞன் கிண்டல் செய்து வம்பளத்தான். இதை தட்டிக் கேட்கப் போனதுதான் கலவரம் உருவாக காரணம் என்று ஒட்டு மொத்த ஊடகங்களும் சொல்லி வருகின்றன. ஆனால் இந்த காணொளியில் அந்த பெண் ஷாநவாஸ் என்னிடம் எந்த நேரத்திலும் தவறாக நடந்ததில்லை. ஷாநவாஸிடம் இதுவரை ஒரு முறை கூட பேசியது இல்லை என்பதை என்டிடிவி நிருபரிடம் சொல்வதை பாருங்கள்.

ஆக...இவர்களுக்கு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கலவர திட்டத்தை செயல்படுத்த ஒரு பொய்யான காரணத்தை உருவாக்கியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரி வஞ்சாராவின் உலுக்கியெடுக்கும் கடிதம் நாடு முழுக்க உணர்வலைகளை ஏற்படுத்திய நேரம் அதனை திசை திருப்ப இந்துத்வாவினரால் உண்டாக்கப்பட்டதே முசாஃபர் நகர் கலவரம். தற்போது யாரும் வஞ்சாராவின் கடிதத்தைப் பற்றி பேசுவதில்லை. முசாஃபர் நகர் கலவரத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். மோடி எதிர் பார்ப்பதும் இதனைத்தான். மிக கச்சிதமாக திட்டமிட்டு ஒவ்வொரு காரியத்தையும் திறம்பட மோடி நடத்தி வருகிறார். நேற்று வரை பயங்கர எதிர்ப்பு காட்டிய அத்வானியை 'ஜெய்ஸே முகமது அத்வானிக்கு கொலை மிரட்டல்' என்ற ஒற்றை செய்தியில் அத்வானியை சம்மதிக்க வைத்துள்ள திறமை மோடியைத் தவிர வேறு யாருக்கு வரும்? ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் மிரட்டி, பொய் சொல்லி ஏமாற்றி காலம் தள்ள முடியாது! மோடிக்கும் ஒரு நேரம் வரும். வட்டியும் முதலுமாக செய்த பாவங்கள் அனைத்துக்கும் மோடிக்கு இந்த உலகிலேயே இறைவனால் கொடுக்கப்படும் தண்டனையை எதிர் பார்த்திருப்போம்.

'உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை இறைவன் முழுமையாக அறிபவன்'

-குர்ஆன் 3:120

Sunday, September 15, 2013

உலகிலேயே உயரமான சிலையை மோடி நிறுவுகிறாராம்!

உலகிலேயே உயரமான சிலையை மோடி நிறுவுகிறாராம்!

இன்னும் இவர்கள் ஆட்சியில் என்னவெல்லாம் தமாஷாக்கள் நடக்கப் போகிறதோ! ஆர்எஸ்எஸில் வார்த்தெடுக்கப்பட்டு பின்னர் காங்கிரஸில் புகுந்து இந்த நாடு இரண்டாக பிரிவதற்கு காரணமாயிருந்தவர்களில் ஒருவராகிய வல்லபாய் பட்டேலுக்கு குஜராத்தில் உலகிலேயே மிக உயரமான சிலை ஒன்றை நிறுவப் போகிறாராம். அமெரிக்க சுதந்திர தேவி சிலையை விட பிரமாண்டமாக இருக்குமாம். மற்றொரு செய்தி கிட்டத்தட்ட அதன் மதிப்பு Rs 2500, 00 00 ஆக இருக்குமாம.விவசாயியான வல்லபாய் பட்டேலுக்கு மிக உயர சிலை வைப்பதால் குஜராத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இனி குறையும் என எதிர்பார்க்கலாம். பன்னாட்டு கம்பெனிகளுக்கு விவசாய நிலங்களை தாரை வார்த்து கொடுத்து விவசாயிகளை மண்ணின் மைந்தர்களை நிர்கதியாக்கிய மோடி, இதன் மூலம் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றலாம். :-) இனி அந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் குதூகலிப்பர்.

'இந்த சிலையை கட்டி முடிக்க நாட்டு மக்களின் உதவியை நாடுகிறேன். துப்பாக்கியோ வாளோ எனக்கு தேவையில்லை. இந்த நாட்டில் அமைதியை விதைக்கவே விரும்புகிறேன். குஜராத்தில் பிறந்த விவசாயியான பட்டேல் இந்த நாட்டை ஒன்றுபடுத்தியவர். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அறியப்படுபவர். அவரை மறந்து விட்டோம். எனவே அவரது சிலை நிறுவப்பட நாட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வைக்கிறார்.

தான் பிரதம மந்திரியாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது அமைதி வழியை தேர்ந்தெடுத்திருப்பதாக கதை அளக்கிறார். ஆர் எஸ் எஸில் வார்த்தெடுக்கப்பட்ட மோடி அமைதி வழியை தேர்ந்தெடுப்பதை இந்துக்களே நம்ப மாட்டார்கள். மேலும் ராஜாஜி, ஜின்னா, போன்றவர்களோடு ஒன்றிணைந்து இந்த நாட்டை பிரித்ததில் முக்கிய பங்கு வல்லபாய் பட்டேலுக்கு உண்டு. சுதந்திரத்துக்கு பின் ஹைதரபாத் நிஜாம் போன்றவர்களை அடக்கியதில் இவரது பங்கு உள்ளதை மறுப்பதற்கில்லை. சுதந்திர இந்தியாவில் உள் துறை மந்திரியாக யார் இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பர். பாகிஸ்தான் பிரிவினை நடவாமல் தடுத்திருந்தால் உண்மையிலேயே பட்டேல் பாராட்டுக்குரியவர்தான். ஆனால் உண்மை நிகழ்வுகளோ வேறு.

மேலும உபியில் யானை சிலைகளையும் தனது சிலைகளையும் மாநிலம் முழுக்க திறந்து வைத்து வரிப்பணத்தை பாழாக்கிய மாயாவதியின் கதி நமக்கு தெரியும் அந்த வழியிலேயே மோடியும் பயணிக்கிறார். இவர் மூலம்தான் இந்தியா ஒளிரப் போகிறதாம். :-)

செய்தி ஆதாரம்:

http://www.ndtv.com/article/india/narendra-modi-plans-to-build-world-s-tallest-statue-in-gujarat-419012

----------------------------------------------------

வல்லபாய் பட்டேலின் இரும்புக்கரம் பிரிவினைக்குப்பிறகு சிறுபான்மையினராகிப்போன முஸ்லிம்களின் பக்கம் மட்டுமே நீண்டது என்பதை வரலாற்றை நுணுகிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். நாட்டின் ஒற்றுமையை விட, இந்துப் பெரும்பான்மை உடைய ஒரு நாடு தங்களுக்கு வேண்டும் என்பதில்தான் பார்பனர்கள் உறுதிகாட்டினர். அவர்களில் முதலில் நின்றவர்கள் சாவர்கரும், பட்டேலும். வரலாற்றாசிரியர் ஆர்.சி.மஜூம்தார் பட்டேலின் எண்ண ஓட்டம் எப்படி இருந்தது என்பதைக் கூறுகிறார்.

“(கிரிப்ஸ்)அமைச்சரவைக் குழுவின் திட்டம் இதைவிடச் சிறந்தது என்னும் ஆசாத்தின் கருத்தை பட்டேல் மறுத்தார். அவர் கூறினார் - கடந்த ஒன்பது மாத காலமாக இடைக்கால சர்க்காரில் இருந்த அனுபவத்தைக் கொண்டு பார்க்கும்போது, மே 16 அறிக்கை ( அமைச்சரவைக் குழு அறிக்கை) நடைமுறைக்கு வராமல் போனதற்கு எனக்கு வருத்தம் ஏதுமில்லை. அதை நாம் ஏற்றுக் கொண்டிருந்தால், முழு இந்தியாவும் பாகிஸ்தான் வழியில் போயிருக்கும். இப்போது நமக்கு 75 முதல் 80 சதவீதம் வரையிலான பகுதி கிடைக்கிறது. இதை நமது சிந்தனைக்கு ஏற்ப வளர்க்கலாம், வலுவாக்கலாம்”

அப்படியென்ன சிந்தனை அவர்களுக்கு இருந்தது?

வேறென்ன... இன்று பா.ஜ.க.வின் லட்சியமான ‘அகண்ட பாரதம்’, அன்றைய ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் போன்ற இந்துத்துவ அமைப்பினரின் ‘இந்துராஷ்டிரம் அல்லது இந்துஸ்தானம்’ என்பதுதான் பட்டேல் வளர்க்க நினைத்த, வலுவாக்க நினைத்த சிந்தனை. இந்தத் தகுதிகள் தனக்கும் பொருந்தி வருவதால் தான் பட்டேலுக்கு மோடி இரும்பில் சிலை வடிக்கப் போகிறார்.

மோடி கொண்டாடுவதற்குக் காரணமான வல்லபாய் பட்டேலின் சிறப்புத் தகுதிகள், பிறமத வெறுப்போடு நின்றுவிடவில்லை. வர்ணாசிரமத்தின் விளைச்சலான சாதியத்தையும் இரும்புமனிதர் கெட்டியாகக் கடைப் பிடித்திருக்கிறார். இதைப்பற்றிய பதிவு பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 16 இல் இருக்கிறது. அதில் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்.

1942இல் உலகப்போரை முன்னிட்டு, இந்தியர்களின் ஆதரவைப் பெறும் நோக்கோடு, வைசிராய் லின்தோ பிரபு பல்வேறு பகுதியினரின் பிரதிநிதிகளையும் தம்முடைய இருப்பிடத்துக்கு அழைத்துப் பேசினார். இவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் ஷெட்யூல்டு வகுப்புகளைச் சேர்ந்தவர் களும் இருந்தனர். இத்தகைய கீழ்த்தர மானவர்களுக்கு வைசிராய் அழைப்பு விடுத்ததை திரு வல்லபாய் பட்டேலால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதற்குப் பிறகு ஆமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திரு வல்லபாய் பட்டேல் பின்கண்டவாறு கூறினார்.

“வைசியராய் இந்து மகாசபைத் தலைவர்களை அழைத்தார், முஸ்லீக் தலைவர்களை அழைத்தார். அத்தோடு காஞ்சிகள் (எண்ணெய் எடுப்போர்), மோச்சிகள் (செருப்பு செப்பனிடும் செம்மான்கள்) போன்றோரையும் கூட அழைத்தார்”

திரு வல்லபாய் பட்டேல் மனக் காழ்ப்பும், வன்மமும், சுடுசொல்லும் கொண்ட தமது சொற்களால் காஞ்சி களையும், மோச்சிகளையும் மட்டுமே குறிப்பிட்ட போதிலும், இந்த நாட்டின் அடிமட்ட வகுப்புகளிடம், ஆதிக்க வகுப்புகளும், காங்கிரஸ் மேலிடமும் கொண்டுள்ள பொதுவான வெறுப்பை யும், இகழ்ச்சியையுமே அவருடைய உரை குறிக்கிறது என்பதில் அணுவள வும் ஐயமில்லை. (பக்கம் 338-339).

தலித்துகள் தூய்மைப் பணி செய்வதை, இந்த சமூகத்துக்கு மற்றும் கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதி மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும் என்று கீதாஉப தேசம் செய்த மோடி, அடிமட்ட மக்களின்பால் காழ்ப்புணர்ச்சியைக் கக்கிய வல்லபாய் பட்டேலை மானசீக குருவாகக் கொண்டதில் வியப்பில்லைதான்.

மேற்சொன்ன ஒற்றுமைகளை வைத்துப் பார்க்கும்போது, வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைக்கும் மோடியின் கனவுத் திட்டம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், மதச் சிறுபான்மை யினருக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை யாகவே படுகிறது. ஆனால் ஊடகங் களோ, மோடியின் மதவெறி முகத்தை மறைத்து, அவருக்கு ஒளிவட்டம் போடுவதையே தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

Saturday, September 14, 2013

மற்றுமொரு தாஜ்மஹாலை கட்டும் பைத்தியக்காரன்!இறந்து போன தனது மனைவிக்காக பேரரசன் சாஜஹான் பைத்தியக்காரத்தனமாக 20000 பேரை வேலை வாங்கி பல லட்சங்களை செலவழித்து 'தாஜ்மஹால்' என்ற ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பினான். அந்த பணத்தைக் கொண்டு கங்கையையும் காவிரியையும் இணைத்திருந்தால் பாரதம் இன்று வரை வளம் கொழித்திருக்கும். இப்படி ஊதாரித்தனமாக கருவூல பணத்தை எடுக்கலாமா என்று அன்று யாரும் கேள்வி கேட்கவில்லை. அதைப் பார்த்து தற்போது ஒரு முஸ்லிம் தனது மனைவி இறந்ததற்காக தனது சொத்துக்களை எல்லாம் விற்று அதே போன்றதொரு சமாதியை எழுப்புகிறாராம். இந்த பைத்தியத்துக்கு இஸ்லாம் என்றால் என்ன? இறந்த தனது மனைவிக்கு செய்ய வேண்டிய காரியங்களாக இஸ்லாம் சொல்வது என்ன? என்பது கூட தெரியாமல் தனது வாழ்நாளை வீணாக்கியிருக்கிறார்.

இந்தியா போன்று வறியவர்கள் அதிகம் உடைய நாட்டில் செல்வம் உடையவர்கள் சாதி மத வித்தியாசம் பார்க்காமல் உதவ முன் வந்தால் பலரது வாழ்வில் ஒளி ஏற்படும். கல்வி கட்டணம் கட்ட வழியில்லாமல் எத்தனையோ சிறுவர்கள் படிப்பை பாதியில் விடுகின்றனர். ஒரு வேளை சோற்றுக்கு பிச்சை பாத்திரம் ஏந்தும் எத்தனையோ சிறுவர்களை வழி நெடுக பார்க்கிறோம். இருந்தும் செல்வந்தர்கள் இது போன்ற வறட்டு கௌரவத்தில் பணத்தை தாறுமாறாக செலவு செய்து சமூக அவலங்களை தேடிக் கொள்கின்றனர்.

இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை இஸ்லாம் எவ்வாறு பட்டியலிடுகிறது என்பதை இனி பார்ப்போம்.

1 .

அவர்களுக்குப் பின் வந்தோர் "எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 59:10)

இவ்வாறு இறந்தவர்களுக்காக பிழை பொறுக்கத் தேடி பிரார்த்தனை செய்ய இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று விசயங்களை தவிர மற்ற அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகின்றன அவைகள்

1 . நிரந்தர தர்மம்
2 . பயன்தரும் கல்வி
3 . அவனுக்காக துஆ செய்யும் நல்ல குழந்தை
என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுýரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3358)

2 . தர்மம் செய்தல்

ஒரு மனிதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனது தாய் திடீரென இறந்து விட்டார், அவர்கள் அந்நேரத்தில் பேசியிருந்தால் தர்மம் செய்யும்படி சொல்லியிருப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் சார்பாக நான் தர்மம் செய்தால் எனது தாய்க்கு நன்மை கிடைக்குமா? என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! கிடைக்கும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (1388)

3 . இஸலாம் அனுமதியளிக்கும் விஷயத்தில் ஒருவன் நேர்ச்சை வைத்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அதை நிறைவேற்றலாம்

ஸஃது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என தாயார் மீது ஒரு நேர்ச்சை இருந்தது, ஆனால் அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டார். நான் என்ன செய்யலாம்? என்று மார்க்க தீர்ப்பு கேட்டார்கள் அதை நிறைவேற்றும்படி நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி, நூல்: புகாரீ (2761)

4 . மரணித்தவருக்கு ஹஜ் கடமையாகி அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அவருக்காக அதை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார். ஆனால் ஹஜ் செய்வதற்கு முன் இறந்து விட்டார் அவர்கள் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், உனது தாய்க்கு கடனிருந்தால் அதை நீ நிறைவேற்றுவாயா? என்று கேட்டார்கள், அதற்க்கு அப்பெண் ஆம் என்று சொன்னார். அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்படியாயின் அல்லாஹ்விற்க்கு கொடுத்தவாக்கை நிறைவேற்று! கொடுத்த வாக்கை நிறைவேற்ற அல்லாஹ் மிக தகுதியானவன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி, நூல்: புகாரீ1852)

5. நோன்பு கடமையாகி அதை நிறைவேற்ற முடியாமல் அல்லது நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்து விட்டால் அவர்சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும்.

நோன்பு கடமையான நிலையில் ஒருவர் இறந்தால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் அந்த நோன்பை நோற்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (1952)

6 . இறந்தவர் கடனாளியாக இருந்து அவர் எந்த சொத்து இல்லாத ஏழையாக இருந்தால் அவருடைய கடனை அவரின் உறவினர்கள் நிறைவேற்ற வேண்டும்.

இங்கு சவுதியில் பல செல்வந்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பல ஆயிரம் ரியால்கள் செலவு செய்து இறந்தவர்கள் பெயரால் இலவசமாக வழங்குவதை பார்த்துள்ளேன். இது போன்ற செயல்களை பேரூந்து நிறுத்தங்களில் செய்ய முயற்சிக்கலாம்.

நூலகங்களை இறந்தவர்கள் பெயரால் திறக்கலாம்.

ஒரு டிரஸ்டை இறந்தவர் பெயரால் திறந்து அனாதை குழந்தைகளின் படிப்பு செலவுக்கும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கும் செலவழிக்கலாம்.

இஸ்லாம் சொல்லக்கூடிய இந்த அழகிய வழி முறைகளை அந்த பெரியவருக்கு யாராவது எடுத்துச் சொல்லி அவரை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவார்களாக!

Friday, September 13, 2013

இந்துத்வா ஆட்சி கட்டில் ஏறினால் எப்படி இருக்கும்?மோடி பிரதமாராகவே ஆகி விட்டதாக தினமலரில் ஒரு பெரும் மேல் சாதி கூட்டம் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. பாவம்....அவர்களுக்கும் கனவு காண உரிமையிருக்கிறது அல்லவா! பாஜகவுக்கு முடிவுரை எழுத இன்று மோடியை முன்னுறுத்தியுள்ளனர். மோடி பிரதம வேட்பாளராக அறிமுகப்படுத்தப் பட்டதால் ராகுலின் பிரதமர் கனவு வெகு இலகுவாக நிறைவேறப் போகிறது. நிதிஷ் குமார், முலாயம் சிங், லல்லு பிரசாத், கருணாநிதி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, என்று மிகப் பெரும் அரசியல் தலைவர்களின் எண்ணம் மோடியை பிரதமராக்கக் கூடாது என்பதே... மேலும் அத்வானியின் குழி பறிப்பு வேலைகளுக்கும் இனி பஞ்சம் இருக்காது. குஜராத் கலவர கேஸ் இனி ஒவ்வொன்றாக ஆதாரங்களோடு காங்கிரஸ் மக்கள் மத்திக்கு கொண்டு செல்லும். இனி வருங்காலங்களில் பல தமாஷாக்களை பத்திரிக்கைகளில் பார்க்கலாம்.

இந்துத்வா அதிகாரத்துக்கு வந்தால் நிலைமை எப்படி இருக்கும் என்பதற்கு விகடன் தரும் இந்த செய்தியை பாருங்கள்.

விருதுநகர்: பள்ளிக்கு வராமல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்களை தலைமையாசிரியர் கண்டித்த விவகாரத்தில் இந்து முன்னனியினருக்கும், போலீசாக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இந்து முன்னனியினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், பாண்டியன்நகரில் இயங்கி வருகிறது சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் குமார், மாரியப்பன் உள்பட 20 பேர் கடந்த 11 ஆம் தேதி பள்ளிக்கு வராமல், இந்து முன்னனியினர் நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதை அறிந்த பள்ளி தலைமையாசிரியர் நல்லதம்பி, 'ஏன் பள்ளிக்கு வரவில்லை' என்று சொல்லி, இன்று பள்ளிக்கு வந்த 20 மாணவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் இந்து முன்னனி நிர்வாகிகள் ராமதாஸ், ராஜா, அருள்தாஸ் ஆகியோர் பள்ளிக்கு சென்று, 'தலைமையாசிரியர் நல்லதம்பி திராவிடர் கழகத்தை சேர்ந்தவர். அதனால்தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சென்ற மாணவர்களை பள்ளி உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்' என்று சொல்லி தகராறு செய்தனர்.

இதையடுத்து, தகவல் அறிந்த விருதுநகர் கிழக்கு காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர்
சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று இந்து முன்னனியினரை கண்டித்தார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இந்து முன்னனியினர் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சட்டை பிடித்து இழுத்து தாக்கினர். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசார் இந்து முன்னனி நிர்வாகிகள் ராமதாஸ், ராஜா, அருள்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பிறகு கல்வித்துறை அதிகாரிகளின் தலையீட்டின் பேரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற 20 மாணவர்களும் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

செய்தி: எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

http://news.vikatan.com/article.php?module=news&aid=19222

-------------------------------------------------------------------

சமூகத்தை இரு துருவங்களாக்கும் தலைவர் எப்படி பிரதமராக முடியும்? என்று நரேந்திர மோடி குறித்து அத்வானியின் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி விமர்சித்துள்ளார்.

சுதீந்திர குல்கர்னி வியாழக்கிழமை டுவிட்டர் இணையதளத்தில், நரேந்திர மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் ‘அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் இல்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “நாட்டு மக்கள், மத்தியில் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்த மாற்றத்தை யாரால் கொடுக்க முடியும்? சமூகத்தை இரு துருவங்களாக்கும் தலைவரால் அந்த மாற்றத்தைக் கொடுக்க முடியுமா? அவரால் சமூகத்தில் அமைதியையும், சீரான ஆட்சியையும் வழங்க முடியுமா? பாஜகவில் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.” என்று சுதீந்திர குல்கர்னி தெரிவித்துள்ளார்.

---------------------------------------------------------------------

Thursday, September 12, 2013

அல்லாமா இக்பாலின் கவிதை!Sare Jahan Se Acha Hindustan Humara
Hum Bulbulain Hain Iss Ki, Ye Gulistan Humara

The best land in the world is our India;
We are its nightingales; this is our garden.

Gharbat Mein Hon Agar Hum, Rehta Hai Dil Watan Mein
Samjho Waheen Humain Bhi, Dil Ho Jahan Humara

If we are in exile, our heart resides in our homeland.
Understand that we are also where our heart is.

Parbat Woh Sub Se Uncha, Humsaya Asman Ka
Woh Santri Humara, Woh Pasban Humara

That is the highest mountain, the neighbour of the sky;
It is our sentry; it is our watchman.

Godi Mein Khailti Hain Iss Ki Hazaron Nadiyan
Gulshan Hai Jin Ke Dam Se Rashak-e-Jinaan Humara

In its lap play thousands of streams,
And the gardens that flourish because of them are the envy of Paradise.

Ae Aab-e-Rood-e-Ganga! Woh Din Hain Yaad Tujh Ko?
Utra Tere Kinare Jab Karwan Humara

Oh, waters of the river Ganges! Do you remember those days?
Those days when our caravan halted on your bank?

Mazhab Nahin Sikhata Apas Mein Bair Rakhna
Hindi Hain Hum, Watan Hai Hindustan Humara

Religion does not teach us to be enemies with each other:
We are Indians, our homeland is our India.

Yunan-o-Misar-o-Roma Sab Mit Gye Jahan Se
Ab Tak Magar Hai Baqi Naam-o-Nishan Humara

Greece, Egypt and Byzantium have all been erased from the world.
But our fame and banner still remain.

Kuch Baat Hai Ke Hasti Mitti Nahin Humari
Sadiyon Raha Hai Dushman Dour-e-Zaman Humara

It is something to be proud of that our existence is never erased,
Though the passing of time for centuries has always been our enemy.

Iqbal! Koi Mehram Apna Nahin Jahan Mein
Maloom Kya Kisi Ko Dard-e-Nihan Humara

Iqbal! No‐one in this world has ever known your secret.
Does anyone know the pain I feel inside me?

Allama Iqbal

அண்ணே! கவிதையெல்லாம் நல்லாதான் எழுதியிருக்கீங்க.... ஆனால் உண்மையோ வேறு விதமாகவல்லவா இருக்கிறது. மத வெறி கொண்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்துடன் ஒரு கூட்டம் இன்று புறப்பட்டுள்ளது. குஜராத், மும்பை, முஸாஃபர் நகர் என்று அதன் கை நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நாட்டை உண்மையிலேயே நேசிக்கக் கூடிய மக்கள் அனைவரும் மதங்களை கடந்து ஒன்று திரண்டு இந்த காலிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களின் கவிதையும் அதைத்தான் சொல்கிறது.

--------------------------------------------------------விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பை சேர்ந்த சகோதரர்க்கு இஸ்லாத்தை பற்றி தாவா....

திருச்சி மாவட்டம் சார்பாக 02-06-2013 அன்று சிங்காரதோப்பு மர்கசில் அரியமங்கலம் கிளையின் முயற்சியால் விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பை சேர்ந்த திரு பன்னீர் செல்வம் அவர்களுக்கு மேலாண்மை குழு உறுப்பினர் அல்தாபி அவர்கள் இஸ்லாத்தை பற்றி தாவா செய்தார்கள்.அவருக்கு நபிகள் நாயகம் பற்றிய அனைத்து புத்தகங்களும்
அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது