Followers

Sunday, December 09, 2018

பிராமின் இனத்தை சேர்ந்த சகோதரி மஹாலஷ்மி இஸ்லாத்துக்கு வந்த கதை...


உய்குர் முஸ்லிம்களின் தொடரும் துயரம்.....

உய்குர் முஸ்லிம்களின் தொடரும் துயரம்.....

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று தங்கி விட்ட உய்குர் முஸ்லிமான அய்தின் அன்வர் தரும் செய்திகளே இவை......

'கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பல உய்குர் முஸ்லிம்கள் விசாரணையின்றி சித்தரவதை கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அரபியில் பெயர் வைத்தாலோ இஸ்லாமிய நடைமுறைகளை பின் பற்றினாலோ உங்களை விசாரணையின்றி அழைத்துச் செல்கின்றனர். அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கம்யூனிஷ சித்தாந்தை பின்பற்றவில்லையானால் முடிவில் கொன்று விடுகின்றனர். உடலைக் கூட உறவினர்களிடம் ஒப்படைப்பதில்லை. துர்கிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் இன்று வரை வீடு திரும்பவில்லை.

சித்தரவதைக் கூடம் மிகவும் கொடூரமானது. பாம்புகளை விடுதல், பற்களை பிடுங்குதல், நகங்களை பிடுங்குதல் என்று வெறித்தனமாக தங்கள் சித்தாந்தத்தை அந்த மக்கள் மேல் புகுத்துகிறார்கள். எனது உறவினர் 2017ல் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரை பிணமாகத்தான் வெளிக் கொண்டு வந்துள்ளனர். சிலருக்கு உடல்களும் கிடைப்பதில்லை. மற்றொரு உறவினர் தனது உறவினரை பார்க்க அமெரிக்கா சென்றதை காரணம் காட்டி 15 வருட தண்டனையை கொடுத்துள்ளார்கள்.....' இவ்வாறாக அந்த பெண்மணியின் பேட்டி தொடர்கிறது.

எந்த ஒரு சித்தாந்தமும் வன்முறையாலோ, சித்திரவதையாலோ பரவி விடாது. மக்களின் மனதை அது வெல்ல வேண்டும். இதனை அந்த சீன மூடர்கள் சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள். வன்முறையால் ஒரு சித்தாந்தம் நிறுவப்பட வேண்டுமானால் குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் இன்று இந்துக்களாக மாறியிருக்க வேண்டும். அந்த அளவு மோடியாலும், அமீத்ஷாவாலும் சித்தரவதையை அனுபவித்தவர்கள் முஸ்லிம்கள். உயிரைத்தான் விட்டார்களோயொழிய ஒரு முஸ்லிமும் இதுவரை இந்துவாக மனம் மாறவில்லை. உலகம் முழுக்க இதுதான் நிதர்சனம். வாள் முனையில் எந்த சித்தாந்தமும் வெற்றி பெறாது என்பதனை பாசிச வாதிகள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.


Friday, December 07, 2018

சிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....

சிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும் பல குழந்தைகளை சகோதரர் காலித் தனது அரவணைப்பில் வளர்த்து வருகிறார். அந்த பிஞ்சு குழந்தைகள் அவர் மீது பாசத்தை பொழிகின்றன. இறைவன் சகோதரர் காலிதைப் போன்ற பல தனவந்தர்களை அந்த நாட்டுக்கு தரட்டுமாக!


சுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் சிங்கின் பேட்டி

சுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் சிங்கின் பேட்டி

'எனது தந்தை பசு காவலர்களால் கொல்லப்பட்டு விட்டார். எனது தந்தை எப்போதுமே இந்து, முஸ்லிம், சீக் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவரையுமே ஒரே கண்ணோடு பார்த்தார். இன்று இந்து, முஸ்லிம் என்ற பிரிவினையில் எனது தந்தையை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். எனது தந்தையை இனி யார் மீட்டுத் தருவார்'

இந்த மகனின் கண்ணீருக்கு யோகி ஆதித்யநாத்தின் தேச விரோத கும்பல் என்ன பதிலை வைத்துள்ளது.


Thursday, December 06, 2018

பாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது!

பாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது!
பாலஸ்தீன் ஹெப்ரானில் உள்ள சிமியா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்னும் சில தினங்களில் மாணவர்கள் வருகை தரும் நேரம் பார்த்து இஸ்ரேலிய ராணுவம் இடித்து தரை மட்டமாக்கியுள்ளது. 40000 டாலர் செலவில் கட்டப்பட்ட இப்பள்ளி 7 வகுப்பறைகளை கொண்டது. 50 மாணவர்கள் பாடம் படிக்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது. பாலஸ்தீனர்கள் கல்வியறிவு பெற்று விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளது இஸ்ரேலிய பாசிச அரசு.
தகவல் உதவி
மில்லிகெஜட்
06-12-2018

தாங்கள் மட்டும் அறிவு பெற வேண்டும் மற்றவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்ற பாசிச மனப்பான்மை நம் நாட்டிலும் அரங்கேறுவதைக் காண்கிறோம். நீட் தேர்வு போன்றவற்றை புகுத்தி மற்ற இனத்தவர் மருத்துவம் போன்ற சிறந்த படிப்புகளில் நுழைந்து விடக் கூடாது என்பதில் இங்கும் உள் அடி வேலை நடப்பதை பார்க்கிறோம். பாசிசவாதிகளின் எண்ண ஓட்டம் எப்போதுமே ஒரே திசையிலேயே பயணிக்கும் என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA…

டிசம்பர் 6 போராட்டம்: 

களத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA…!!!


திருப்பதி ஏழுமலையானே புத்தரின் நின்ற கோலம் - ஆய்வு நூல்

திருப்பதி ஏழுமலையானே புத்தரின் நின்ற கோலம் என்று ஆய்வு செய்து மும்பையில் ஆய்வு நூல் வெளி வந்துள்ளது.
“Tirupati Balaji was a Buddhist Shrine” என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜமனாதாஸ் F.R.C.S. என்பவர் எழுதியுள்ளார். இந்நூலைப் பற்றிய குறிப்புரை இதோ: Lord Venkateswara, the presiding deity on the famous Tirumali Hills, popularly known as Balaji of Tirupati, is an important Vaishnava Shrine of South India. The Nature of Lord Venkateswara has always been a matter of dispute for centuries. Some consider Him as Vishnu some as Siva, Some as Sakti, some as Skanda and some as Harihara. In fact it was an old Buddhist shrine, murthi itself being Buddhist; and it was taken over for Brahmanic worship during the general fall of Buddhism. He was a god of tribal Buddhist and was,Vaishnavized by saints and latter sanskritized and brahmanized by pundits to his present form. The weapons on Him are not original but provided at a latter date. How this was brought about, is explained with all historical and archaeological evidences. Cults of Vitthala of pandarpur, Jagannatha of Prui, Ayappa on Sabarimala etc., which were originally Buddhist are discussed and many other Buddhist shrines which were hinduized are described and the history of India in general and South India in particular, from seventh to tenth century, during the period of fall of Buddhism and rise of Brahmanic Tirupati, is traced.”
"வெங்கடாசலபதி கடவுள் இருக்கும் திருப்பதி கோயில் என்பது தென்னகத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவக் கோயிலாகும். வெங்கடாசலபதியின் வடிவம் பல நூற்றாண்டுக் காலமாகப் பிரச்சினைக்-குரியதாகவே இருந்து வந்திருக்கின்றது. சிலர் அந்தக் கடவுளை விஷ்ணு என்றும், வேறு சிலர் சிவா என்றும், சக்தி என்றும், ஸ்கந்தா என்றும், ஹரிஹரன் என்றும் பலவாறாகக் கருதுகிறார்கள். உண்மையிலேயே திருப்பதி கோயில் என்பது துவக்கத்தில் புத்தர் கோயிலாகவே இருந்தது; உள்ளே இருக்கும் மூர்த்தி சிலை என்பது புத்தபிரானே ஆவார்.
புத்த மார்க்கம் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்த போது, அது பார்ப்பனீயத்தால் தங்களுடைய வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றப்பட்டது.
புத்தர் கோயில் வைஷ்ணவ கோயிலாக இப் போதுள்ள தன்மையில் பார்ப்பன மயமாக்கப்பட்டது - அப்பொழுது இருந்த பார்ப்பனப் பண்டிதர்களால்!
தொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு அடிப்படையிலே இந்தக் கருத்தை இந்நூலில் நூலாசிரியர் நிறுவியுள்ளார். பந்தர் பூர், பூரி செகந்நாதம், சபரிமலை அய்யப்பன் இவை யெல்லாமே ஒரு காலத்தில் புத்த விகார்களாக இருந்து பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
7ஆம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை புத்த மார்க்கம் வீழ்ச்சி அடைந்த கால கட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும், சிறப்பாக தென்னிந்தியாவிலும், புத்த விகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளது பற்றி இந்நூல் விவரிக்கிறது."
இதற்கு என்ன பதில்? பாபர் மசூதிக்கு முன் ராமன் கோயில் இருந்தது; அதனால் அங்கு ராமன் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற இந்துத்வாவின் வாதப்படியே வந்தாலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் புத்த விகாரமாக இருந்ததே - அதன்படி ஏழுமலையான் கோயில் புத்த விகாரமாக மாற்றப்படுமா? தயார் தானா?


Monday, December 03, 2018

இவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, வருவார்களா?

பாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பல அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்தனர். அத்வானி வகையறாக்கள் இன்று வாய் திறக்காமல் மவுனமாக உள்ளனர். ஆனால் இவர்களின் பொய்யை நம்பி சென்று பாபர் மசூதியை உடைத்தவரின் இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இதே நிலைதான். இன்று தான் செய்த தவறை எண்ணி கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.
இவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, அத்வானியோ, அமீத்ஸாவோ வருவார்களா?


தன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன்.


//தன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன். இனிமேலும் கொள்ளையடிக்க வந்தவனை வாழ்த்துவதை நிறுத்துங்கள் என வேண்டுகிறேன்.// - Narendran

பிறந்த தாய் நாட்டை நேசிக்காதவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு பேச்சுக்கு மொகலாயர்கள் அந்நியர்கள் என்றால் நம் நாட்டு பிராமணர்கள் யார்? வெள்ளைத் தோலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? சமஸ்கிரதத்துக்கும் நம் நாட்டு தமிழ் மொழிக்கும் என்ன சம்பந்தம்? அனல் வாது புனல் வாது செய்து சமணர்களை கழுவிலேற்றிய கொடூரத்தை செய்தது யார்? இயற்கை வழி முறைகளில் வாழ்ந்த தமிழர்களை மாட்டையும், பன்றியையும், நாயையும், பருந்தையும் கடவுளாக்கி அவனை சூத்திரனாக்கியது யார்? இன்று வரை மண்ணின் மைந்தனை கருவறைக்குள் நுழைய விடாமல் தடுப்பது யார்?


//அவ்ரங்சீப்பினால் திணிக்கப்பட்ட ஜிஸியாவும், கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் காரணமாகவும் மதம்மாறிய ஹிந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இது வரலாறு. மொகலாயர்களே எழுதி வைத்த வரலாறு. நான் எழுதிய வரலாறல்ல.//

உங்கள் வாதப்படி வாள் முனையினால் மாற்றப்பட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இன்று நடப்பதோ மோடி, ஆதித்யநாத் போன்றோரின் பாசிச ஆட்சி. இப்போது இந்துவாக மாறினால் பல சலுகைகளை பெறலாம். ஆனால் ஒரு முஸ்லிமும் இந்துவாக மாறவில்லையே ஏன்? ஏனென்றால் இந்து மதம் என்பது பார்பனிய மதம். பார்பனர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட மதம். இதனாலேயே மக்கள் இந்த காலத்திலும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி அவர்களாகவே வருகின்றனர். இதுதான் உண்மை.

Sunday, December 02, 2018

அலகாபாத் நகரில் ஜனவரி முதல் மார்ச் வரை யாரும் திருமணம் வைபவம் வைக்கக் கூடாது!

அலகாபாத் (பிரயாக்ராஜ்) நகரில் ஜனவரி முதல் மார்ச் வரை யாரும் திருமணம் வைபவம் வைக்கக் கூடாது!
இந்த மூன்று மாதங்களில் அதிக சாமியார்கள் மற்றும் பக்தர்கள் இங்கு வருகை தர இருப்பதால் உங்கள் குடும்பத்தின் திருமணங்களை மூன்று மாதம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆணை பிறப்பித்துள்ளார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத். அனைத்து அரங்க உரிமையாளர்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டுள்ளது.
கும்பமேளா நடப்பதற்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? திருமணம் முடித்து குடும்பம் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்துவந்திருந்தால் யோகிக்கு திருமணத்தின் அருமை புரியும். போதை மருந்துகளை ஏற்றிக் கொண்டு எந்த குடும்ப கவலையும் இல்லாமல் நாடோடிகளாக சுற்றித் திரியும் இவர்களுக்கு திருமணத்தின் அவசியம் விளங்கவா செய்யும்?
தகவல் உதவி
News 18
02-12-2018

Saturday, December 01, 2018

சிவயோகி சிவகுமார் வித்தியாசமாக சொல்கிறார்

சிவயோகி சிவகுமார் கருத்துக்களை கொஞ்சம் வித்தியாசமாக சொல்கிறார். ரசிக்கும் படி உள்ளது.


ஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு....

ஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு....
அப்துல் கஃப்பார் வயது 42. சீனாவின் உய்குர் மாகாணத்தை சேர்ந்தவர். நான்கு குழந்தைகளுக்கு தந்தை. 14.4 மில்லியன் டாலர்கள் இவரது சொத்து மதிப்பு. பல பள்ளி வாசல்களை கட்டியுள்ளார். பல தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பற்று உடையவர். கம்யுனிஷ அரசுக்கு இவரது முன்னேற்றம் பெரும் பிரச்னையாக இருந்தது. எனவே இவரை பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.
சென்ற வருடம் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார் அப்துல் கஃப்பார். அரசு அனுமதித்த குழுவில் செல்லாமல் இவர் தனியாக தனது ஹஜ் பயணத்தை முடித்துள்ளார். இதனை காரணமாக காட்டி கம்யூனிஷ அரசு இவரை கைது செய்துள்ளது. இவர் மட்டுமல்லாது இவரது மனைவி, இவரது பிள்ளைகள் மற்றும் இவரது நண்பர்கள் மொத்தம் 50 பேரையும் கைது செய்துள்ளது சீன அரசு. தற்போது இவருக்கு மரண தண்டனை என்று நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இவரது மனைவி விசாரணைக் காலத்தில் சிறைச் சாலையிலேயே மரணத்தை தழுவியுள்ளார்.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது மரண தண்டனைக்கு உரிய குற்றமா? இவரது சொத்துக்கள் அனைத்தையும் கம்யூனிஷ அரசு பிடுங்கிக் கொண்டது. இது ஒரு பகல் கொள்ளை. இதைப் பற்றி உலக மீடியாக்களோ நமது இந்திய மீடியாக்களோ வாயைத் திறக்கவில்லை.
தங்கள் உயிரையும் இழக்க முஸ்லிம்கள் துணிவார்களேயொழிய சீனா, ரஷ்யாவிலேயே துடைத்தெறியப்பட்ட கம்யூனிஷ சித்தாங்களை தங்கள் வாழ்வியலாக எடுக்க மாட்டார்கள் என்பதை மட்டும் சீன அரசுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
தகவல் உதவி
rfa.org/english/news/


Friday, November 30, 2018

கஜா புயல் - தினமணி செய்தி


இத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....

"நாங்க யாரை எதிரியா நினைச்சோமோ அவங்கதான் காப்பாத்துறாங்க...." - இத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....


Thursday, November 29, 2018

உணவு விநியோகம் - திருத்துறைப்பூண்டி

உணவு விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி, அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 1000 பேர்களுக்கு வெஜ்டெபில் பிரியாணி,முட்டை,ஊருகாய்,தண்ணீர் பாக்கெட் ஆகியவை இன்று 29:11:18 நேரிடையாகச் சென்று வழங்கப்பட்டது.


தி.நகர் கிளை சார்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இரத்ததான முகாம்

இரத்ததான முகாம் நேரலை...
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் (GH)
14 ஆண்டுகளாக பணியாற்றும் சகோதரர் சரவணன் அவர்கள்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) மனிதநேய பணிகளை பற்றி...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்
தென் சென்னை மாவட்டம்
தி.நகர் கிளை சார்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இரத்ததான முகாம்


பிஜேபி பல தேர்தல்களில் வெற்றி பெற்ற வழி முறை....

பிஜேபி பல தேர்தல்களில் வெற்றி பெற்ற வழி முறை....
தனியாக தாமரை சின்னத்தில் பதியப்பட்ட பல வாக்கு எந்திரங்கள் பிடிபட்டுள்ளன. போபாலில் உள்ள ஹோட்டல் ராஜ்மஹால் - சுஜால்பூரில் கையும் களவுமாக பிடி பட்டுள்ளனர். நமக்கு தெரிந்தது இது ஒன்றுதான். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்துத்வாவாதிகள் இன்னும் என்னவெல்லாம் செய்கிறார்களோ....
Please forward to all the groups see what's going how can other than bjp can win in such situations.... 
Journalist did a sting operation at Hotel Raj Mahal in Shujalpur


2,400 நபர்களுக்கு உணவு ஏற்பாடு நடைபெற்று கொண்டிருக்கிறது..


2,400 நபர்களுக்கு உணவு ஏற்பாடு நடைபெற்று கொண்டிருக்கிறது..
மனிதநேயப்பணியில்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருச்சி மாவட்டம்.
பாதையில் கிடக்கும் கிளை ஒன்றை பழக்கப்படுத்திய நாய் ஒன்று அப்புறப்படுத்துகிறது.

பாதையில் கிடக்கும் கிளை ஒன்றை பழக்கப்படுத்திய நாய் ஒன்று அப்புறப்படுத்துகிறது . ஆனால் பகுத்தறிவுடைய மனிதன் வழியில் இடைஞ்சலாக ஏதும் கிடந்தால் கூட அதனை கடந்து செல்வதை பார்க்கிறோம்.
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்
"ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து எறிந்து விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு அவர் செய்த பாவங்களிலிருந்து மன்னிப்பு வழங்கினான்".
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2472


Wednesday, November 28, 2018

சவூதி அரேபியா ஜீஸானில் இறந்த தூத்துக்குடி வாலிபர் ரஞ்சித்...

சவூதி அரேபியா ஜீஸானில் இறந்த தூத்துக்குடி வாலிபர் ரஞ்சித் ராமநாத் உடல் SDPI உதவியால் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது!

தூத்துக்குடி முத்தையா புரத்தை சேர்ந்த வாலிபர் ரஞ்சித் ராமநாத்(வயது 27) சவூதி அரேபியா ஜீஸான் என்னும் ஊரில் தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 18 மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 11.08.2018 அன்று பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்புதல் படிவத்தை இந்திய தூதரகம் வழங்கிய போதும் இறந்தவரின் உடல் ஊர் வருவது தாமதமாகியது.

இது குறித்து இறந்தவரின் உறவினர்கள் தமிழ்நாட்டில் SDPI கட்சியிடம் முறையிட்டு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தனர்; இதனடிப்படையில் SDPI கட்சியின் மாநில பொதுசெயலாளர் செங்கோட்டை நிஜாம் முகைதீன் சவூதி அரேபியாவில் உள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இதுவிசயமாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மாநில தலைமையின் உத்தரவுக்கு இணங்க இந்திய ஃபிரட்டர்னிடி ஃபோரம் நிர்வாகிகளான சகோதரர்கள் பைசல் மற்றும் அஃப்சர் ஹுசைன் ஆகியோர் அல்ஹஸ்ஸா கிளை நிர்வாகி ஜின்னாவை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை விரைவாக ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

உடனடியாக களமிறங்கிய ஜின்னா அவர்கள் இந்திய தூதரகம் மற்றும் சவூதி அரசின் சட்டத்துறை,மருத்துவத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உடலை இந்தியா அனுப்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

SDPI கட்சியின் துரிதமான களப்பணியை அடுத்து இறந்தவரின் உடல் புதன்கிழமை(21.11.2018)அன்று இரவு சவூதி அரேபியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு வியாழன்கிழமை(22.11.2018)காலை சென்னை வந்தடைந்தது.கட்சியின் சென்னை நிர்வாகி ஜாஹிர் ஹுஸைன்(மஞ்சள் கலர் டி ஷர்ட்), உடலை பெற்றுக் கொண்டு இறந்தவரின் தம்பி சுஜீத்திடம் ஒப்படைத்தார்.

இறந்தவரின் உடல் தூத்துக்குடி முத்தையாபுரம் எடுத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் ஏற்பாட்டினையும் செய்து கொடுத்து தூத்துக்குடி SDPI நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்த சகோதரர் ஜாஹிர் ஹுஸைன் மற்றும் அல்ஹஸ்ஸா நிர்வாகி ஜின்னாவுக்கும் மாநில பொதுசெயலாளர் நிஜாம் முகைதீன் பாய்க்கும்,SDPI கட்சிக்கும்,இந்தியன் சோஷியல் ஃபோரத்திற்கும் தங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக இறந்தவரின் தம்பி சுஜீத் கூறினார்.

செய்தி தொகுப்பு: கீழை ஜஹாங்கீர் அரூஸி.


நிலவேம்பு கஷாயம் பொது மக்களுக்கு இலவசமாக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சேலம் மாவட்டம்
மேட்டூர் அணை கிளை சார்பாக
நான்காம் நாள் இன்றும் (29-11-2018) நிலவேம்பு கஷாயம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இன்று வரை 300 பேர் பயன் அடைந்தனர்.கடவுள் அனுமன் ஒரு தலித், காட்டில் வாழும் மனிதர் - ஆதித்யநாத் :-)

கடவுள் அனுமன் ஒரு தலித், காட்டில் வாழும் மனிதர் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ் பெற்றுக்கொண்ட 3 நாட்களுக்குள் அவர் அனுமன் குறித்து பேசிய அவதூறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று ராஜஸ்தானில் உள்ள வலதுசாரி அமைப்பு அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்டம், மாலகேடவாடா நகரில் செவ்வாய்கிழமை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,” அனுமன் காட்டுவாசியாக இருந்தவர், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். பஜ்ரங் பாலி அமைப்பு நாட்டில் உள்ள அனைத்துச் சமூகத்தையும் ஒன்றாக இணைக்கப் பணியாற்றுகிறது.
வடக்கில் இருந்து தெற்காகவும், கிழக்கு முதல் மேற்காகவும் மக்கள் ஒன்று சேரவேண்டும். இதுதான் ராமரின் விருப்பம். இதைத்தான் விரும்பினார். இந்த விருப்பம் நிறைவேறும் வரை ஓய்வு இல்லை. மக்கள் ராம பக்தர்களுக்கு வாக்களிக்க வேண்டும், ராவண பக்தர்களுக்கு அல்ல" என்று பேசினார்.
இதையடுத்து, அனுமரைத் தலித் என்று குறிப்பிட்டதற்காக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, ராஜஸ்தான் சர்வ பிராமண மகாசபை தலைவர் சுரேஷ் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது, “ அரசியல் லாபத்துக்காகக் கடவுளை சாதிப்பாகுபாட்டுள் பாஜக இழுத்துள்ளது. கடவுள் அனுமன் குறித்த முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சு வேதனைக்குள்ளாக்குகிறது. ஏராளமான பக்தர்களின் மனதை ஆதித்யநாத்தின் பேச்சு பாதித்துவிட்டது. அரசியல் ஆதாயத்துக்காகவும், தங்களின் பலத்தை காட்டவும் இவ்வாறு பேசுகிறார். இன்னும் 3 நாட்களுக்குள் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் இரட்டை வேடம் தெரிந்துவிட்டது என்றும் அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், "முதல்வர் ஆதித்யநாத், பாஜக ஆகியோரின் பேச்சு சமூகத்தையும், தனிநபரையும் பிரிப்பதுபோல் இருந்து வந்தது. தற்போது, கடவுளைச் சாதிவாரியாக பிரிக்கிறது " என்று கண்டித்துள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-11-2018ஒரு வேளை சாப்பாட்டுக்காக நீந்தி வந்த சிறுவன்!

ஒரு வேளை சாப்பாட்டுக்காக நீந்தி வந்த சிறுவன்!
இவனைப் போன்று பலர் உணவில்லாமல் அக்கரையில் தவித்து வருகின்றனர். இது போன்று வாகனம் செல்ல முடியாத பல கிராமங்களுக்கு உதவி இன்னும் சென்றடையவில்லை.
உணவுகளை வீணாக்காதீர்: ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு இந்த மக்களுக்கு உங்களின் உதவிக் கரத்தை நீட்டுவீர்......
உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)


ஆஸ்திரேலிய மக்களுக்கும் நபிகள் நாயகம் தேவைப்படுகிறார்!

ஆஸ்திரேலிய மக்களுக்கும் நபிகள் நாயகம் தேவைப்படுகிறார்!
'தண்ணீர் அதிகம் உள்ள நீரோடைகளில் இருந்தாலும் தேவையில்லாமல் நீரை வீணாக்காதீர்கள்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள் என்ற வாசகம் பொறித்த தண்ணீர் பாட்டிலைத்தான் ஆஸ்திரேலியாவில் விநியோகிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.
இந்த தண்ணீரை விநியோகிக்கும் நிறுவனம் மக்களுக்கு சேவை செய்வதோடு ஒரு நபி மொழியையும் ஞாபகப்படுத்துகிறது. அதோடு தண்ணீரின் சிக்கனத்தையும் மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
ஆஸ்திரேலியா போன்ற நவ நாகரிக உலகுக்கும் இன்றைய கால கட்டத்தில் அரபு தேசத்தில் பிறந்த நபிகள் நாயகத்தின் அறிவுரைகள் தேவைப்படுகிறது. உலக மக்களின் தலைவர் என்றால் அது நபிகள் நாயகம் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்பதை இந்த நிகழ்வும் நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)
உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)


நான் விரும்பும் தலைவர்....

நான் விரும்பும் தலைவர்....

புனித ஹரம் ஷரீஃபில் சிறுவனின் அழகிய தமிழ் உரை...


70 வருடங்களுக்குப் பிறகு தனது தங்கைகளை சந்தித்த பயான்த் சிங்!70 வருடங்களுக்குப் பிறகு தனது தங்கைகளை சந்தித்த பயான்த் சிங்!
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பல குடும்பங்கள் பிரிந்தன: பலர் காணாமல் போயினர். அல்லா ரக்கி என்ற இஸ்லாமிய பெண்மணி கலவரத்தில் தனது ஒரே மகனை தொலைத்து விட்டார். தனது இரு மகள்களோடு பாகிஸ்தானில் தங்கி விட்டார். தனது உறவினர்கள் மூலமாக தொலைந்த தனது மகன் சீக்கியனாக இந்தியாவில் வளர்வதை உறுதி செய்து கொண்டார். அதன் பிறகு இரு குடும்பங்களும் கடிதங்கள், தொலைபேசிகள் மூலமாக தொடர்பில் இருந்தனர்.
குரு நானக்கின் 549 வது நினைவு தினம் பாகிஸ்தானில் அவர் பிறந்த இடத்தில் வருடா வருடம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த நிகழ்வில் இரு குடும்பங்களும் சந்திப்பது என்று முடிவானது. நான்கானா சாஹிப் குருத்வாராவில் இரு குடும்பங்களும் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தனர்.
உல்ஃபத் பீவி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தனது சகோதரனை சந்திக்க உதவுமாறு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு பயான்த்சிங்குக்கு பாகிஸ்தான் வருவதற்கு விஷா வழங்கப்பட்டது. இதன்படி கர்தார்பூர் பார்டர் திறக்கப்பட்டு பல சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தான் புறப்பட்டனர். பயான்த் சிங்கும் பயணமானார்.
திட்டமிட்டபடி சென்ற திங்கட் கிழமை பயான்த்சிங் தனது இரு சகோதரிகளையும் எழுபது வருடங்களுக்குப் பிறகு சந்தித்து கண்ணீர் மல்க கட்டித் தழுவினார். பாகிஸ்தான் மீடியாக்களும் இதனை கவர் செய்தன. உடன் பிறந்த தனது இரு சகோதரிகளை 70 வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் அண்ணனின் உணர்வுகளை நாம் வார்த்தைகளால் விவரித்து விட முடியுமா? இந்திய பிரிவினையானது இது போன்ற பல ஆயிரம் சோக வரலாறுகளை இன்று வரை சுமந்த வண்ணம் உள்ளது.
தகவல் உதவி
கேரவன் நியூஸ்
27-11-2018


Tuesday, November 27, 2018

முத்துப்பேட்டை பேட்டை காளியம்மன் கோவில் தெரு .....


#கஜா புயல் நிவாரண உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டை பேட்டை காளியம்மன் கோவில் தெரு ஆதி திராவிடர் தெருவில் வசிக்கும் 92 ஏழை குடும்பங்களுக்கு #TNTJ முத்துப்பேட்டை கிளை3 சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது ..
அல்ஹம்துலில்லாஹ்..
வெற்று கண்டைனரை வைத்து மோடி படம் போட்டு....

தஞ்சை தெற்கு கிழக்கு கடற்கரை சாலையில் மோடியின் பெரிய பேனரோடு ஒரு கண்டைனர் ட்ரக் இங்கு மங்கும் அலைந்து கொண்டிருந்தது. 'கஜா புயல் நிவாரணப் பொருட்கள்' என்றும் அச்சிடப்பட்டிருந்தது. மக்கள் அந்த ட்ரக்கை நிறுத்தி 'பொருட்கள் யாருக்கு?' என்று கேட்டுள்ளனர். அதற்கு ஓட்டுநர் 'இப்போதுதான் பொருட்களை இறக்கி விட்டு வருகிறோம்' என்றார். 'எந்த ஊரில்?' என்று கேட்டால் ஓட்டுநருக்கு பதில் சொல்ல தெரியவில்லை. எங்கிருந்து எடுத்து வந்துள்ளீர்கள்? இதை அனுப்பியது யார்?' என்ற கேள்விக்கும் ஓட்டுநரிடம் பதில் இல்லை....
ஆக.... வெற்று கண்டைனரை வைத்து மோடி படம் போட்டு மக்களுக்கு உதவுவதாக படம் காட்டியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மக்களிடம் மத்தியில் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு துரும்பை போட்டிருந்தாலும் கண்டைனர் நிரம்பியிருக்கும். ஆனால் செய்ய மாட்டார்கள். எத்தனை கோடி பணமிருந்தாலும் உதவக் கூடிய மனம் வர வேண்டுமல்லவா? அதனை இந்துத்வாவாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது.


இந்திய வரைபடம் கிழிப்பட்டுப்போகும் என்று எச்சரிக்கிறேன்.

புதுக்கோட்டை, நவ.27 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், இந்தியாவை ரத்தக் களறி யாக்க விஸ்வ இந்து பரிஷத்தும், சிவசேனாவும் முடி வெடுத்து விட்டன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று அறிவித்து விட்டார்கள். விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா சக்திகள் இந்த உபகண்டத்தினுடைய பன்முகத் தன்மையை சிதைத்து ஆர்.எஸ்.எஸ். தேசமாக ஆக்க முயற்சிப்பதால் ரத்தக் கரைப்படிந்த சிவப்பு கோடுகளால் இந்திய வரைபடம் கிழிப்பட்டுப்போகும் என்று எச்சரிக்கிறேன்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி அல்ல, அவர்கள் நிதின் கட்கரியை பிரதமராக்கப்போவதாக செய்திகள் வந்திருக்கிறது. பாஜக அரசு வரக்கூடாது. வராது. மாநில கட்சிகளும் காங்கிரசும் இணைந்த கூட்ட மைப்பு ஆட்சிக்கு வந்தால் இந்தி யாவின் கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்படும். அதன் மூலம் இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்படும். இவ்வாறு கூறினார்.


அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 4

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 4
Arabic Lesson in Tamil - Part-1 , Lesson-4
வீடியோ வடிவில் அரபி மொழி பயிற்சி பாடங்கள்!!
வழங்குவது இஸ்லாமிய கல்லூரியில் பயிலும் மாணவர்கள்.
அரபு மொழி ஓரளவு தெரிந்தவர்கள் இந்த தொடரை தொடர்ந்து பார்த்தும் எழுதியும் பழகி வாருங்கள். சில நாட்களிலேயே அரபு மொழியில் அறிஞர் ஆகலாம் இறைவன் நாடினால்...
Islamic college TNTJ


அழகிய மார்க்கத்தை சிதைக்கும் அறிவீனர்கள்.

அழகிய மார்க்கத்தை சிதைக்கும் அறிவீனர்கள்.

என்ன ஒரு அழகிய மார்க்கம் நமக்கு கிடைத்த இஸ்லாமிய மார்க்கம். இந்த வீடியோவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அனைவரும் ஏமாற்று பேர்வழிகள். தொப்பியும் கைலியும் கட்டிக் கொண்டு ஒரு சில அரபி வார்த்தைகளை சொல்வதால் அது இஸ்லாமிய மார்க்கமாகாது. குர்ஆனும் நபிகள் நாயகமும் காட்டித் தந்ததுதான் இஸ்லாமிய மார்க்கம்.

இது போன்று ஊருக்கு ஊர் சுற்றித் திரியும் மடையர்களை தூரமாக்குவோம். தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் கொண்டு செல்வோம்.


ராஜகிரி-பண்டாரவாடையைச் சேர்ந்த வணிகர்கள்

தஞ்சை மாவட்டம் ராஜகிரி-பண்டாரவாடையைச் சேர்ந்த வணிகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியபோது.....சங்கிகளுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பெரும் எண்ணிக்கையிலான இந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது ஒரு பிஜேபி தலைவர் இந்த பல்கலைக் கழகத்தின் விடுதியிலிருந்து இந்து மாணவர்களை வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், இந்து மாணவர்களுக்கு ஒரு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார். ஆனால் அங்கு பயிலும் இந்து மாணவ மாணவிகள் 'இது முற்றிலும் பொய்யான தகவல். எங்களை யாரும் வெளியேற்றவில்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்களாக எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இருக்கிறோம். வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று பேட்டியளித்துள்ளனர்.
சங்கிககள் எந்த வகையிலாவது இந்து முஸ்லிம் விரோதத்தை வளர்த்து அதில் அரசியல் ஆதாயம் அடைய துடிக்கின்றனர். இதற்கு நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஒற்றுமையாக இருந்து சங்கிகளுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும்.


Monday, November 26, 2018

ஆக்சிஜன் குறைவு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?

ஆக்சிஜன் குறைவு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?
வளி மண்டலத்தின் தோற்றம் உருவாக்கம் அதன் கால நிலை பற்றி 900 வருடங்களுக்கு முன்பு வரை மனிதனுக்கு போதிய அறிவு இல்லாமலேயே இருந்தது. பாஸ்கல் என்ற அறிவியல் அறிஞர்தான் வளிமண்டலத்தின் பல புதிர்களை அவிழ்த்தார். 1648 ஆம் ஆண்டு பாஸ்கல் தனது அறிவியல் ஆய்வுகளை வெளியிட ஆரம்பித்தார். இவரது ஆய்வானது கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச் செல்ல வளிமண்டலத்தின் காற்றின் அழுத்தமானது குறைந்து கொண்டே வரும் என்று தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார். வளி மண்டல அளவு என்பது எண்ணிக்கையில் வராததும் நம்மால் சென்று விட முடியாத தூரமுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது சூரிய குடும்பம் மட்டும் அல்லாது இது போன்ற எண்ணற்ற கேலக்சிகள் வளி மண்டலத்தில் பயணித்த வண்ணமே உள்ளன. அவற்றை எல்லாம் சென்று அடைந்து விடக் கூடிய கண்டுபிடிப்புகளை மனிதன் இதுவரை உருவாக்கவில்லை. இனி வருங்காலத்தில் சாத்தியப்படலாம்.
ஒரு விண்வெளி வீரன் கடல் மட்டத்திலிருந்து 15000 அடியிலிருந்து 25000 அடி வரை செல்வதாக வைத்துக் கொள்வோம். அவனது இந்த பயணத்தில் சுவாசத்தைப் பொறுத்தவரையில் எந்த சிக்கலுக்கும் உள்ளாக மாட்டான். ஏனெனில் அவனுக்கு தேவையான ஆக்சிஜன் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தாராளமாக கிடைத்து விடுகிறது. ஆனால் அவன் 25000 அடிகளுக்கு மேலே சென்றான் என்றால் வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு குறைபாட்டால் அவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆக்சிஜன் குறைவானாதால் அவனது இதயம் இறுக்கமாக ஆரம்பிக்கிறது. சுவாச அமைப்பு சுத்தமாக சீர்குலைந்து அந்த விண்வெளி வீரனை இறப்பு வரை கொண்டு சென்று விடுகிறது. எனவேதான் விண்வெளி பயணம் மேற் கொள்ளும் வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தங்களுக்கு பின்னால் கட்டிச் செல்கின்றனர்.
இது போன்று வளி மண்டலத்தில் உள்ள அடுக்குகளில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றியும் அங்கு ஆக்சிஜன் குறைவாவதால் மனிதனின் இதயம் சுருங்கி இறப்பு வரை கொண்டு சென்று விடும் என்ற உண்மையையும் கடந்த 500 வருடங்களாகத்தான் அறிந்து வருகிறோம். குறைந்த அழுத்தம், அதிக அழுத்தம் என்ற இரு வேறு நிலைகள் வளிமண்டலத்தில் உள்ளதே விஞ்ஞானிகளுக்கு இதே கால கட்டத்தில்தான் தெரிய வருகிறது. 30000 அடிகளுக்கு மேல் மனிதன் வளி மண்டலத்தில் சென்றால் ஆக்சிஜன் சிலிண்டர்களோடு செல்ல வேண்டும். இல்லை என்றால் இறந்து விடுவான் என்பது தற்போது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்.
இன்றும் கூட பலர் விண்வெளி பயணம் என்பது சுத்த கட்டுக் கதை: நமது பூமி தட்டையானது: உருண்டையானது அல்ல: என்று வாதிடுபவர்களை பார்க்கிறோம். மனிதன் விண்வெளி பயணம் மேற் கொள்வான் என்பதை 1400 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டான். ஆனால் இன்று நமக்கு இது அரிச்சுவடி பாடம். இனி குர்ஆனின வசனத்துக்கு வருவோம்.
'ஒருவனுக்கு நேர்வழி காட்ட இறைவன் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனின் உள்ளத்தைப் போல் இறுக்கமாக்கி விடுகின்றான்.'
-குர்ஆன் 6:125
எவ்வளவு அழகிய அறிவியல் முன்னறிவிப்பை மிக அலட்சியமாக சொல்லிச் செல்கிறது இந்த குர்ஆன் வசனம்! அன்றைய மக்களுக்கு இதயம் இறுக்கமாவதையும், மனிதன் விண்வெளியில் பயணிப்பான் என்பதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. அது எப்படிப்பட்ட அனுபவம் என்பதும் அன்றைய மனிதர்களுக்கு தெரியாது. இன்றும் கூட விண்வெளி வீரர்களைத் தவிர மற்றவர்கள் அந்த அனுபவத்தை அறிய முடியாது. குர்ஆனை வாசிக்கும் இன்று நமக்கு அந்த இதயம் எந்த நிலையை அடையும் என்பதை விண்வெளி வீரர்களின் மூலம் அறிந்து கொள்கிறோம். பிற்கால அறிவியல் வளர்ச்சி பெற்ற நம்மைப் போன்ற மக்கள் இது இறை வேதம்தான் என்ற நம்பிக்கையை பெறுவதற்காகவே இது போன்ற வசனங்களை ஆங்காங்கே இறைவன் நமக்கு தந்திருக்கிறான். இது இறை வேதம்தான் என்பதற்கு இந்த வசனமும் நமக்கு சான்று பகன்று கொண்டிருக்கிறது.