Followers

Wednesday, November 30, 2011

இந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்

வேதம் புனிதமடைந்தது!


ஆலப்புழா: ஆசார்ய நரேந்திர பூஷன் அவர்களது சீடரும், இந்து ஆன்மீக சாதகருமான சிவானந்த சர்மா அவர்கள், கர்நாடகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சிருங்கேரி மடத்தின் ஆசிரமத்தில் இணைந்துள்ளார். அங்கு அவர் தனது வேத, வேதாந்தக் கல்வியைத் தொடர்வார்; துறவு நெறியில் செல்வார்.

பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவானந்த சர்மா அவர்கள், திரு. பி.ஆர்.குஞ்சன் மற்றும் திருமதி தங்கம்மா தம்பதியரின் இளைய மகன் ஆவார். சிறு வயது முதலே ஆன்மிக நாட்டம் கொண்டிருந்த அவர், ஆசார்ய நரேந்திர பூஷன் அவர்களின் வழிகாட்டுதலில் வேத சாஸ்திரங்களையும் இந்து ஞான நூல்களையும் பயின்று வந்தார்.
இதுவரை பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினரை மடத்தின் பாடசாலைகளிலும், ஆசிரமத்திலும் பயில சிருங்கேரி மடம் அனுமதித்ததில்லை. அத்தகைய இறுக்கமான பழமைவாத நிலைப்பாட்டைத் துறந்து, உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில் ஞானத் தேடலை அங்கீகரிக்கும் விதத்தில் அந்த சம்பிரதாய மடத்தின் இச்செயல்பாடு அமைந்துள்ளது. இதற்காக சிருங்கேரி மடத்திற்கு தமிழ்ஹிந்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதனுடன் நின்று விடாமல், மேன்மேலும் இச்செயல்பாடு வளர வேண்டும். பெருக வேண்டும். ஒரு பாரம்பரிய மடத்தின் இந்தச் செயல்பாடு மற்ற மடங்களுக்கும் முன்னுதாரணமாக ஆக வேண்டும்.

- -தமிழ் ஹிந்து

இந்த பதிவு தமிழ் ஹிந்துவில் வெளியிடப்பட்டதற்கு செந்தில் என்ற ஒரு பிராமணர் எந்த அளவு கோபப்படுகிறார் என்பதை அவரது பின்னூட்டத்தில் பார்க்கலாம்.

இந்த கட்டுரையை எழுதறதுக்கு கொஞ்சமாவது யோசித்தீர்களா?

1. ஸ்ரீங்கேரி என்பது, சன்னியாசிகள் மடம்.. ஒருவர் சன்னியாசி ஆகிவிட்டால், அவர்களுக்கு ஜாதி பேதம் கிடையாது.. ஆச்சார்யர் நரேந்திர பூஷன் என்பவர், சன்னியாசம் வாங்கிய பொழுதே, அவர் பறையர் என்ற அடையாளத்தை இழந்து விட்டார்.. அவர் சன்னியாசம் வாங்கியதால்தான் அவரை சிரிங்கேரிக்குள் அனுமதிக்கிறார்கள்.. பறையராக இருப்பதால் அல்ல.. பறையர்களுக்கு மட்டும் அல்ல.. எல்லா ஜாதிக்கும் அதே கட்டுப்பாடுதான்.. சொல்லப் போனால், பறையர்களுக்கு கூட, சிருங்கேரி குரு பார்த்து மனது வைத்தால், உள்ளே விடலாம்.. ஆனால் தர்மத்தை விட்டு மேற்கத்திய கலாச்சாரத்தை கடைபிடிக்கும் துபாஷி பிராமணர்களை அந்த பக்கமே அண்ட விடக்கூடாது, என்பதுதான் சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.. ஆனால் இன்று இருக்கும் நிலையைல் பாருங்கள். .இந்த துபாஷி பிராமணர்கள் சிருங்கேரி மடத்துக்கே ரூல்ஸ் போடுகிறார்கள்..
2. சிரிங்கேரி மடத்தை பற்றி எவ்வளவு கீழ்த்தரமான எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை உங்கள் கட்டுரையை திரும்பி பாருங்கள்..
/** இதுவரை பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினரை மடத்தின் பாடசாலைகளிலும், ஆசிரமத்திலும் பயில சிருங்கேரி மடம் அனுமதித்ததில்லை. அத்தகைய இறுக்கமான பழமைவாத நிலைப்பாட்டைத் துறந்து, உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில் ஞானத் தேடலை அங்கீகரிக்கும் விதத்தில் அந்த சம்பிரதாய மடத்தின் இச்செயல்பாடு அமைந்துள்ளது.
**/
நீங்கள் உருவாக்கிய செயற்கையான இல்லாத ஒரு பொந்து நெறியை சிருங்கேரி மடம் ஆட்படவில்லை என்பதால், அந்த மடம் பழமைவாதமாகிவிட்டது.. இது ஒரு சிந்தா ரீதியான, சித்தாந்த ரீதியான ஒரு வன்முறை ..

2. கலியுகத்திற்கு ஸ்மிருதி எழுதிய பராசரர் உங்களை பொருத்த வரையில் ஒரு முட்டாள்.. ஆதிக்க சக்தி.. பறையர்களை அடக்கி ஆள்வதற்கே, அவரருடைய ஸ்மிருதியில், பிராமணர்கள் மட்டும் வேதம் கற்க வேண்டு என்று எழுதியிருக்கிறார்.. ஆகவே, அவருடைய அடக்குமுறையிலிருந்து, பறையர்களை காக்க, உங்கள் இந்துதுவம் உதித்திருக்கிறது.. அப்படித்தானே உங்கள் நினைப்பு… இல்லையென்றால், இப்படி வேதத்தை ஒரு கேவலப்படுத்தும் தலைப்பை இந்த கட்டுரைக்கு கொடுத்து இருக்க மாட்டீர்கள்..

3. வேதம் கற்பது என்றால் கிறித்துவர்கள் பைபிள் படிப்பது போல எண்ணிக்கொள்வதை நிறுத்துங்கள்.. பைபிளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.. அது போல, வேதத்தையும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதுதான் உங்கள் சித்தாந்தமும் நிலைப்படும்.. இது ஒரு ரியாக்ஷனரி வேலை என்பதை அறிவீர்களா?

4. வேதத்தை யார் படிக்கலாம்.. படிக்க கூடாது என்பது சாஸ்திரத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.. அதை மாற்ற நீங்கள் யார்.. உங்களுக்கு என்ன தகுதி.. அதை முதலில் சொல்லுங்கள்.. காலம் காலமாக பிராமனர்கள் தான் முறியாக வேதத்தை பயின்று பாதுகாத்து வந்துள்ளார்கள்.. அவர்களுக்கே சாஸ்திரத்தை மாற்றும் உரிமை இல்லதபொழுது, இங்கே இருக்கும் துபாஷி பிராமணர்களுக்கும் மற்ற இந்துதுவவாதிகளுக்கும் எப்படி உரிமை வந்தது..

இங்கு இந்த நவீன காலத்திலும் வேதங்களை பிராமணர்களைத் தவிர வேறு யாரும் படிக்கக் கூடாது என்று இந்த அளவு தைரியமாக ஒருவர் வாதிடுவதற்கு மூல காரணமே இந்து மத வேதங்களும், ஸ்மிருதிகளு;ம், காவியங்களுமாகும். எவ்வாறு இது போன்ற கருத்துகள் வேதங்களில் வந்திருக்க முடியும் என்பதற்கு நான் முன்பு இட்ட ஒரு பதிவை மீள் பதிவாக்கி தருகிறேன்.
இனி என்து பழைய பதிவு.
இந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்

இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி கியான்' என்றும் கூறுவர். இந்த வேதங்கள் சமஸ்கிரத மொழியில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். வேதம் இறக்கியருளப்பட்டக் காலத்தில் எழுத்துப் பயிற்சி இல்லாததால் ஆசிரியர்கள் வேதங்களை வாய் வழியாக ஓதி வந்தனர். அவ்வாறு தலைமுறை தலைமுறையாகச் சென்ற பல நூற்றாண்டுகளாக வாய் மொழியாகவே ஓதப் பட்டு வந்த வேதங்களை இன்று வரை கற்கப் பட்டும் கற்பிக்கப் பட்டும் ஓதப் பட்டும் வருகின்றன. சென்ற ஒரு நூற்றாண்டுக் காலத்திற்க்குள்ளாகத் தான் வேதங்களை எழுதுவது, அச்சிடுவது, மொழி பெயர்ப்பது என்னும் பழக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

எழுத்து முறை உலகிலேயே முதன் முதலாக பினீசியர் என்னும் கிழக்கு மத்திய தரைப் பிரதேச மக்களால் கண்டு பிடிக்கப் பட்டது என்பதை நாம் அறிவோம். பினீசியாவிலிருந்து மெசப்பட்டோமியா வழியாகவும் பாரசீகம் வழியாகவும் வந்து இப்புதுமை இந்தியாவை அடைந்திருக்க வேண்டும். ஆதியில் இந்தியாவில் பழக்கத்திற்கு வந்த எழுத்து முறை 'பிராமி' எனப்படும். இவ்வெழுத்துக்களிலேயே அசோகரது கல் வெட்டுக்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

இந்துக்களின் வேதங்கள் கி.மு. 1500 க்கும் கி.மு. ஆயிரத்துக்கும் இடைப் பட்ட காலத்தில் இயற்றப் பட்டதாக இருக்கலாம். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வியாஸர் அவற்றை தொகுத்தும் வகுத்தும் ரிக், யசூர், சாம, அதர்வம் என்று பாகு படுத்தி பதிப்பித்து இருக்கலாம் என்று இந்து மதப் பெரியார்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கான சான்றுகள் எதையும் கூறவில்லை.

வேதம் அருளப்பட்ட காலம் எழுத்துப் பயிற்சி என்பது இல்லாத காலமாதலால் வேதம் அருளப் படும்போது அது எழுதி வைக்க சாத்தியமில்லை.

காலம் காலமாக வேத மொழியாக (வாய் மொழியாக) இருந்த கிரந்தங்கள் பின்பு பிரகிருத மொழிக்கு மாற்றப் பட்டது. (பாகத அல்லது பிராகிருத மொழி என்பது பாமர மொழியாகும்) பின்பு பிராகிருத மொழியிலிருந்து சமஸ்கிரதத்திற்கு மாற்றப் பட்டது. (சமஸ்கிரதம் என்றால் செப்பனிடப் பட்ட மொழி - அறிஞர்கள் மொழி) இவ்வாறு காலம் காலமாக வாய் மொழியாக இருந்து பின்பு மொழி பெயர்ப்புக்கு உட்பட்டு வந்ததால் அதில் இடைச் சொருகல் ஏற்படவும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

நூஹ் (நோவா) நபிக்கு அருளப்பட்ட வேதம் அப்படியே இப்போது இருக்குமானால் அது மொழி மாற்றத்தைத் தவிர மற்றெல்லா வகையிலும் அது திருக் குர்ஆனுக்கு ஒத்ததாகவே இருக்கும்.

இறைவன் குர்ஆனில் பல இடங்களில் தூதர்களைக் குறிப்பிடும் போது நோவா, அப்ரஹாம், மோஸே, தாவீது, ஏசு, முகமது என்று அனைத்து இறைத் தூதர்களையும் சிலாகித்துக் கூறுகிறான்.

முகமது நபிக்கு குர்ஆனையும், ஏசு நாதருக்கு இன்ஜீலையும், தாவூத் நபிக்கு ஜபூரையும், இப்றாகீம் நபிக்கு சில ஆகமங்களையும் வழங்கியதாகக் கூறுகிறான். ஆனால் நோவாவுக்கு கொடுக்கப் பட்ட வேதம் பற்றி நேரிடையாக எதுவும் குறிப்பிடவில்லை.

இனங்களைக் குறிப்பிடும் போது யூதர்கள்,கிறித்தவர்கள், ஸாபியீன்கள், முஸ்லிம்கள் என்று பிரித்தறிவிக்கிறான். அதில் ஸாபியீன்களுக்கு வேதம் அருளப்பட்டதாகவும் கூறுகிறான்.

குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிய இப்னு கஸீர் தன்னுடைய விளக்கத்தில் ஸாபியீன்கள் என்பவர்கள் நூஹ் நபியுடைய இனத்தவர்களே என்று கூறுகிறார்.

ஸாபியீன்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை வணங்குபவர்களாகவும் கிரக பலன், சோதிடம், இவற்றில் நம்பிக்கையுடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் வானவர்களை (தேவர்களை) வணங்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று மார்க்க அறிஞர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். இந்த வணக்க வழி பாட்டு முறைகள் அனைத்தும் அப்படியே அமையப் பெற்ற இனத்தவர் இந்துக்களே என்று தெளிவாக அறிகிறோம். ஆகவே குர்ஆன் கூறும் ஸாபியீன்கள் என்பவர் இந்துக்களே என்று தெளிவாக விளங்க முடிகிறது.

இந்த ஸாபியீன்களுக்கு அனுப்பப் பட்ட தூதர் அதாவது இந்து சமூகத்திற்கு அனுப்பப் பட்ட தூதர் நூஹ் (நோவா) நபி அவர்களே!

குர்ஆன் தவ்ராத்தையும், இன்ஜீலையும், ஜபூரையும், இப்றாஹீமின் ஆகமங்களையும் தவிர்த்து முதல் வேதம் (ஸீஹீஃபில் உலா), முன்னோர்களின் வேதம் (ஜீபூருல் அவ்வலீன்) என்ற பெயர்களையும் குறிப்பிடுகிறது. முதல் வேதம், முன்னோர்களின் வேதம் என்றால் குர்ஆன், இன்ஜீல், ஸபூர், தவ்ராத், இப்றாகீமின் ஆகமங்களுக்கு முந்தியதாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த வேதங்கள் அருளப்பட்ட தூதர்களுக்கு முந்தைய தூதர் நோவா தான். நோவா (நூஹ்) நபியின் சமுதாயம் தான் ஸாபியின்கள். ஸாபியீன்கள் தான் இக்காலத்தில் இந்துக்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்துக்கள் தங்களிடையே உள்ள வேதங்களை 'ஆதிகிரந்தம்' என்றும் ' ஆதி கியான்' என்றும் கூறுகின்றனர். 'ஸீஹீபில் உலா' 'ஜீபூருல் அவ்வல்' என்னும் பெயர்களுக்கு இணையான சமஸ்கிரத சொல் 'ஆதி கிரந்', 'ஆதி கியான்' ஆகும். இதன் மூலம் குர்ஆன் கூறும் முன்னோர்களின் வேதம் என்பது 'ஆதி கிரந்தம்', 'ஆதிகியான்' என்பது தெளிவாகிறது.

இந்த பெயர் மாற்றம் தவிர்க்க முடியாதது ஆகும். குர்ஆன் கிறித்தவர்களை நசாராக்கள் என்று அழைக்கிறது. கிறித்தவர்கள் எவரும் தங்களை நசாராக்கள் என்று கூறிக் கொள்வதில்லை. அது போல் கிறித்தவர்களின் வேதத்தை குர்ஆன் 'இன்ஜீல்' என்ற கூறுகிறது. கிறித்தவர்களோ அதனை பைபிள் என்கின்றனர். குர்ஆன் தாவூதுக்கு அருளிய வேதத்தை 'ஜபூர்' என்று அழைக்கிறது. யூதர்களும், கிறித்தவர்களும் அதை 'சங்கீதம்'என்று தான் அழைக்கிறார்கள். எனவெ இந்த பெயர் மாற்றம் என்பது காலத்துக்கு தக்கவாறு மாறுகிறது என்பது தவிர்க்க முடியாதது.

நோவா அவர்களுக்கு அருளப்பட்ட இவ்விரு வேதங்களில் ஒன்று ஜலப் பிரளயத்துக்கு முன்பும், மற்றொன்று ஜலப் பிரளயத்துக்கு பின்பும் அருளப் பட்டதாய் இருக்கலாம். இறைவனே நன்கறிந்தவன்.

'நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.'
26 : 196 - குர்ஆன்

சங்கீதத்தையும், தோராவையும், சுவிஷேஷங்களையும் தவிர்த்து முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

உலகிலேயே பழமையான வேதங்கள் இந்துக்களிடமுள்ளது. ஓரளவுக்கு மூல மொழியில் உள்ள வேதங்களும் இந்துக்களுடையதே! நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது என்று குர்ஆன் கூறியதை மெய்ப்பிக்கும் படியாக இந்துக்களிடமுள்ள கிரந்தங்களிலும் குர்ஆனுக்கு ஒத்த கருத்துடைய சில வசனங்களையும், குர்ஆனுக்கு இணையான நடையழகையும் முன்பு கண்டோம்.

'நபியே! இன்னும் உமக்கு முன்னர் வஹீ மூலம் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.'
16 : 43,44 - குர்ஆன்
என்று இறைவன் குரஆனில் கூறுகிறான்.

தொன்மையான காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கியிருக்கிறேன்
8 : 6 : 11 - ரிக் வேதம்

இதிலிருந்து குர்ஆன் 'குறிப்பிடும் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும்' கொண்டு தொகுக்கப் பட்ட பாடல்களையே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் என்று விளங்கிக் கொள்ளும் படியாக ரிக் வேதத்தின் சுலோகம் அமைந்துள்ளது.

இறைவன் நோவா அவர்களுக்கு அருளிய வேதங்களான ஆதி கிரந்தம், ஆதி கியான் போன்றவை தொன்மையான காலம் தொட்டு வாய் மொழியாக, மரபுச் செய்தியாக இருந்தது. அவைகளே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதம் என்று பகுத்து தொகுக்கப் பட்டிருக்கிறது என்று விளங்க முடிகிறது.

வேதங்கள் தவிர்த்து புராணங்கள், உபநிஷத்துக்கள், ஆரண்யங்கள், ஸ்மிருதிகள் எல்லாம் இந்துக்களின் புனித நூல்களாக உள்ளன. குர்ஆனுக்கு விளக்க உரையாக முகமது நபியின் 'நபி மொழிகள்' எவ்வாறு அமைந்திருக்கிறதோ அது போல ஆதி கிரந்தங்களுக்கு ரிஷிகளால் எழுதப் பட்ட வியாக்யானங்களாக இந்த புராணங்களும் உபநிஷத்துகளும், எழுதப் பட்டிருக்க வேண்டும். அல்லது நோவாவுக்குப் பிறகு வந்த இறைத் தூதர்களின் விளக்கங்களின் தொகுப்பாகக் கூட இருக்கலாம்.

'இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேவுடைய வேதங்களிலும் உள்ளது.'
87 : 18,19 –குர்ஆன்

இந்து என்னும் பெயரானது இடைக் காலத்தில் இடப்பட்ட பெயராகும் என்று சுவாமி விவேகானந்தரும், நேருவும், சங்கராச்சாரியாரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். ஆதியிலே அது சனாதன தர்மம் என்றும் ஷஷ்வத் தர்மம் ஸ்வ தர்மம் என்றும் அழைக்கப் பட்டுவந்தது.

சனாதன என்னும் சமஸ்கிரத சொல்லின் பொருள் நிலையானது, தொடர்ச்சியானது, தொன்மையானது என்பதாகும்.ஷஷ்வத் என்பதற்கு வானையும் பூமியையும் உயர்ந்த எண்ணங்களோடு ஒன்றினைக்கும் நேர்வழி என்று பொருளாகும்.இந்த சனாதனத்தையும் ஷஷ்வத்தையும் ஒன்றினைத்தால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும்.

இறைவன் குர்ஆனிலே இஸ்லாத்தை 'தீனுல் கய்யும' என்று குறிப்பிடுகிறான். 'தீனுல் கய்யும்' என்ற அரபி வார்த்தையைத் தமிழ்ப் படுத்தினால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும். இதன் மூலம் இரண்டு மதத்தின் பெயர்களும் ஒரே விளக்கத்தைக் கொடுக்கின்றன என்று நம்மால் அறிய முடிகிறது.

ஸ்வதர்மம் என்று பகவத் கீதை (18: 45: 47) குறிப்பிடுகிறது.

ஸ்வப்ஹவ நியாக் கர்மம் - 'மார்க்கம் இயற்கையானது. பெற்றோர்களது அல்ல' என்பது இதன் பொருள்.

இதையே தான் 'தீனுல் ஃபித்ரத்' என்று 'இயற்கையான முறையிலான மார்க்கம்' என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

இதிலிருந்து சனாதன தர்மம், ஷஷ்வத் தர்மம், ஸ்வதர்மம், என்பதெல்லாம் சமஸ்கிரத மொழியிலமைந்த இஸ்லாத்தின் மறு பெயர்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது.

“Ekam Evadvitiyam”
“He is only one without a second.”
(Chandogya Upanishad 6:2:1)

“He who knows Me as the unborn, as the beginning-less, as the Supreme Lord of all the Worlds.”
(Bhagvad Gita 10:3)
and “Of (check – or For Him?) Him there is neither parents nor Lord.”
(Shwetashvatara Upanishad 6:9)

A similar message is given in Shwetashvatara Upanishad & Yajurveda:
“Na Tasya pratima asti”
“There is no likeness of Him.”
(Shwetashvatara Upanishad 4:19 & Yajurveda 32:3)


இறைவனே மிக அறிந்தவன்.


என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Sunday, November 27, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா? பு(து)த்தகம்
தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர்
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

மறுமணம் செய்யும் உரிமை
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2:234)

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)

விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (திருக்குர்ஆன் 2:236)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (திருக்குர்ஆன் 2:241)

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:6, 7)

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (திருக்குர்ஆன் 2:233)


பிரியும் உரிமை
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:128)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)


ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.
உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (திருக்குர்ஆன் 3:195)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:124)

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (திருக்குர்ஆன் 16:97)

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 40:40)

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 57:12)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (திருக்குர்ஆன் 33:35)

இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?

ஆசிரியர் பி.ஜெய்னுல்லாபுதீன்.

Friday, November 25, 2011

ரம்மி சூதாட்டமல்ல! அது அறிவை வளர்க்கும் விளையாட்டு!

சென்னை : "ரம்மி" சூதாட்டம் அல்ல என்று சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை தி.நகரில் இயங்கி வரும் மகாலெட்சுமி கலாச்சார மையத்தில், ரம்மி விளையாடியதாக 59 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்க‌ளை விடுதலை செய்யக் கோரி அந்த மையம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், ரம்மி சூதாட்டமல்ல என்றும், அது அறிவை வளர்க்கும் விளையாட்டு என்று தீர்ப்பு அளித்துள்ளார். அதேபோல், ரம்மி விளையாட்டின் போது பந்தயம் கட்டி விளையாடுவது சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பத்திரிக்கைச் செய்தி
25-11-2011

பம்பாய் முதலான பெரு நகரங்களில் பெண்களை விலைமாதர்களாககி அதற்கு சட்ட அதிகாரமும் கொடுத்தாகி விட்டது. அடுத்து அரசாங்கமே சாராய கடைகளை நடத்தி சாமான்ய குடிமக்களை நிரந்தர குடி(போதை) மக்களாக மாற்றியாகி விட்டது. சூதாட்டம் ஒன்று தான் பாக்கியாக இருந்தது. இன்று அதனையும் சட்டபூர்வமாக்கி நமது நாடு சகல சௌபாக்கியங்களையும் பெற்ற ஒரு வல்லரசாக மாறி விட்டதை நினத்து ஒவ்வொரு இந்தியனும் பூரிப்படைய வேண்டும்.


நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு என்ன குழந்தை பிறக்கும் என்பது தொடர்பாக ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது. இதில் மும்பை தாதாக்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் வீரர்கள் மீதுதான் இதுவரை கோடிக்கணக்கில் சூதாட்டம் நடந்தது. இம்முறை சற்று வித்தியாசமாக சூதாட்டம் நடக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு பதிலாக இதில் சிக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராய். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு 11.11.11 தேதியில் (இன்று) தான் குழந்தை பிறக்கும் என்று பலர் கூறி உள்ளனர். ஆனால் சிலர் இதில் மாறுபடுகின்றனர்.
குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதிதான் குழந்தை பிறக்கும் என்று கூறி வருகின்றனர். எந்த நாளில் குழந்தை பிறக்கும் என்பதை வைத்து மும்பை தாதாக்கள் சூதாட்டம் நடத்துகின்றனர். இதுதவிர ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்ற பந்தயமும் சூடுபிடித்துள்ளது. இதை மையமாக வைத்து ரூ.150 கோடிக்கு உலகம் முழுவதும் சூதாட்டம் நடக்கிறதாம். மும்பை தாதாக்கள்தான் இதில் அதிகம் ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு சிலர் ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் தொடர்பு கொண்டு, ‘ஐஸ்வர்யாவுக்கு எப்போது, என்ன குழந்தை பிறக்கும் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களிடம் பேசுவதை டாக்டர்கள் தவிர்த்து வருகின்றனர். ‘ஐஸ்வர்யாவை மையமாக வைத்து கோடிக்கணக்கில் சூதாட்டம் நடப்பது பற்றி தகவல் வந்துள்ளது. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறோம் என்று மும்பை போலீசார் கூறி உள்ளனர்.
-இணைய செய்தி

ஒரு மனிதனுக்கு சிந்தனை சுதந்திரம் அளவுக்கதிகமாக கொடுத்தால் எங்கு போய் விடும் என்பதற்கு மேற்கண்ட செய்தியே ஒரு சிறந்த உதாரணம்.

ஐஸ்வர்யராய்க்கு எந்த குழந்தை எப்பொழுது பிறக்கும் எனபதைப் பற்றிய கவலை அபிசேக் பச்சனுக்கும் அமிதாப் பச்சனுக்கும் இருந்தால் அதை வரவேற்கலாம். அவர்கள் குடும்பததில் சற்றும் சம்பந்தமில்லாத நம் இந்திய ரசிக சிகாமணிகள் பல கோடி ரூபாய் பணம் வைத்து சூதாடும் கூத்தை என்ன சொல்வது?

கிரிக்கெட் போன்ற ஆட்டங்களை வைத்து கோடிக் கணக்கில் சூதாடப்படுகிறது. இனி இதற்கும் அனுமதி அளிக்கப்படலாம். சோம்பேறித் தனத்தை உருவாக்கும் இந்த விளையாட்டுக்கு தேவையற்ற பில்டப்புகள். நமது குடிமகனும் அனைத்து பிரச்னைகளையும் மறந்து ஐந்து நாள், ஒரு நாள் மேட்சுகளையும் சச்சின் சதம் அடித்து விட்டால் பிறவிப் பயனை அடைந்து விட்டதாகவும் நினைத்து சந்தோஷப் பட்டுக் கொள்ளலாம். சைனாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு தடை என்று கேள்விப்பட்டேன். நமது நாட்டுக்கும் அந்த தடை அவசியம். அதற்கு பதில் கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுகளை அரசு அதிகம் ஊக்குவிக்கலாம்.

‘நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், பலி பீடங்களும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.’

குர்ஆன் 5:90

'சிறுமை பல செய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.'
-குறள்: சூது, 4

பல்வேறு இழிவு தரும் துன்பங்களைச் செய்து உள்ள பெருமையையும் கெடுக்கும் சூதாட்டத்தைப் போல கொடிய வறுமையைத் தரக் கூடியது வேறொன்றுமில்லை.

Sunday, November 20, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? -பு(து)த்தக அறிமுகம்

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் எந்தக் கொள்கையையும், கோட்பாட்டையும் குறை காண முடியவில்லை. அவர்கள் ஏற்றிப் போற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் விட இஸ்லாம் சிறந்து விளங்குவதால் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க முடியவில்லை. இஸ்லாத்தை விமர்சித்து அதன் வளர்ச்சியைத் தடுத்திட இரண்டே இரண்டு விமர்சனங்களைத் தான் அவர்கள் செய்து வருகின்றனர்.

1. இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது.
2. இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது.

இந்த இரண்டுமே பொய்யான விமர்சனங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

அத போல் தீவிரவாதம் என்ற பிரச்சாரத்துக்குப் பின் தான் உலகம் இஸ்லாத்தின் பால் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

உலகில் இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகளைத் தான் முன் வைக்கின்றனர்.

• ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதிக்கிறது.
• மனைவியைப் பிடிக்காவிட்டால் சர்வ சாதாரணமக விவகரத்துச் செய்ய இஸ்லாம் ஆண்களூக்கு உரிமை வழங்கியுள்ளது
• விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதையும் இஸ்லாம் மறுக்கிறது.
• பெண்களை ஹிஜாப் எனும் ஆடையால் போர்த்தி அவர்களின் சஉதந்திரத்தைப் பறிக்கிறது.
• வாரிரிசுரிமைசச் சட்டத்தில் ஆன்களூக்கு இரு மடங்கும் பெண்களூக்கு ஒரு மடங்கும் என பாரபட்சம் காட்டுகிறது.
• இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்ட்சிக்குச் சமமானது என்று பாரபட்சம் காட்டுகிறது.
• கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குற்ப்பிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைப்பது
• பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தைலப் பறிக்கிறது.
• முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை
• முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.
• என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் பெண்கள் தொடர்பாக எடுத்து வைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள்அனைத்துக்கும் முழுமையாகவும், எந்த எதிர்க் கேள்வியும் கேட்க முடியாத வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.

முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்

முஸ்லிமாலாதவரக்ளுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூல்

அறிமுகம்
இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? என்ற இந்த நூலில் பெண்கள் குறித்து எழுப்பப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இது தவிர நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மட்டும் மற்றவர்களை விட அதிகமான பெண்களை மணந்தது ஏன் என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்படுகிறது. இதற்கான விளக்கத்தை 'நபிகள் நாயகம்(ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்?' என்ற தலைப்பில் தனி நூலாக வெளியிட்டுள்ளோம்.

ஜிஸ்யா, முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராகப் போர் செய்தல், கஃபாவை வணங்குதல், திசையை வணங்குதல், சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் போன்ற மற்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் விடையாக 'குற்றச்சாட்டுக்களும் பதில்களும்' என்ற தலைப்பில் தனி நூலை வெளியிட்டுள்ளோம்.

தத்துவ ரீதியாக இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையாக 'அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்' எனும் நூலில் விளக்கம் அளித்துள்ளோம். இந்த நான்கு நூல்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் பெறலாம்.

பதிப்புரை
நல்லவை எங்கே கிடைத்தாலும் அதைத் தேடிப் பெற்றுக் கொள்பவர்களாகவே பெரும்பாலான மனிதர்கள் உள்ளனர்.

குறிப்பாக ஆன்மீகத்தின் பால் மனிதர்களின் தேடுதல் மிகவும் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு தேடியலையும் மக்களுக்கு நல்ல ஆன்மீக வழி தென்படுமானால் தயக்கமில்லாமல் அவ்வழியில் செல்ல அவர்கள் தயாராகவே உள்ளனர்.

அமைதியைத் தேடியலையும் மக்களின் பார்வையில் இஸ்லாம் சிறந்த வாழ்க்கை நெறியாகத் தென்படுகிறது. அதன் கொள்கைகள் அறிவுப்பூர்வமாக உள்ளன. அதன் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்திட எளிதாக உள்ளன.

இதன் காரணமாக அவர்களை இஸ்லாம் ஈர்த்தாலும் இஸ்லாத்தின் சில கொள்கைகளும், கோட்பாடுகளும் தவறானவை; காலத்துக்கு ஒவ்வாதவை என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை உரிய விதத்தில் தெளிவுபடுத்தினால் அவர்களை இஸ்லாம் முழுமையாக ஈர்க்கும்.

முஸ்லிமல்லாத மக்களின் இந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் தமிழில் தகுதியான நூல் இல்லை என்ற குறையை நீக்கும் வகையில் இந்த நூலை வெளியிடுவதில் மனநிறைவு அடைகிறோம்.

இஸ்லாத்தில் பெண்கள் நிலை குறித்துத் தான் அவர்களுக்கு அதிகப்படியான சந்தேகங்கள் உள்ளன.

அந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் 'இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?' என்ற இந்த நூல் ஏழாவது பதிப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
முந்தைய பதிப்புகளை விட மேலதிகமான விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்களை நீக்க இந்த நூல் பயன்பட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

இவன்,
நபீலா பதிப்பகம்

முன்னுரை

இன்றைய உலகில் பல்வேறு மதங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும், மதவாதிகளும் தங்கள் மதமே சிறந்தது' என்று அறிவித்துக் கொள்கின்றனர். தங்கள் மதத்தைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.

எனினும் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகையில் சிறந்து விளங்குவதை சிந்தனையாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித் தரும் மதமாக இல்லாமல் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் கவனிக்கிறது!

அதில் தலையிடுகிறது!

தக்க தீர்வையும் சொல்கிறது!

அன்றிலிருந்து இன்று வரை மனிதக் கரங்களால் மாசு படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது!

என்றெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி நற்சான்று வழங்குபவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில சட்டங்களைப் பற்றி அதிருப்தி அடைகிறார்கள்.

இத்தகையவர்களின் ஐயங்களைத் தர்க்க ரீதியாகவும், அவர்களின் அறிவு ஏற்றுக் கொள்ளும் வகையிலும் நீக்குகின்ற கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

ஏனெனில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கமன்று. முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கமாகும்.

எனவே, இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விடையளிக்கும் வகையில் இந்நூலைத் தயாரித்துள்ளேன்.

ஏனைய குற்றச் சாட்டுக்களுக்கான விளக்கங்கள் மற்ற இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

பெண்கள் குறித்து இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் இந்த பாகத்தை வாசிப்பவர்கள் விடை காணலாம்.

மூன்று பாகங்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் உரிய விளக்கத்தைப் பெறலாம்.

முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்கள் விலக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே இந்நூலை எழுதியுள்ளேன். அந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
P.ஜைனுல் ஆபிதீன்

Friday, November 18, 2011

பிஜேபியே புறம் தள்ளுகிறது நரேந்திர மோடியை!தற்போது மீடியாவெங்கும் அடுத்த பிரதமர் நரேந்திர மோடிதான் என்ற பிரசாரம் மறைமுகமாக இந்துத்வாவினரால் திணிக்கப்படுகிறது. குஜராத் ஒளிர்கிறது. மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற பொய் செய்திகளை மீடியாக்கள் தினம் தினம் தந்து வருகிறது. இப்படி ஒரு பொய்யான பில்டப்பை மோடிக்கு கொடுத்து எப்படியாவது பிரதமராக்கிவிட பலர் பகல்கனவு காணுகின்றனர். ஆனால் பிஜேபிக்கு உள்ளேயே நரேந்திர மோடியை எந்த அளவு விரும்பத்தகாத சக்தியாக பார்க்கின்றனர் என்பதற்கு நேற்றைய செய்தி ஒரு சிறந்த உதாரணம்.

Bharatiya Janata Party president Nitin Gadkari has told party leaders that there may be no need for Gujarat Chief Minister Narendra Modi to campaign in the high-stake Assembly elections due next year in Uttar Pradesh, BJP sources told The Hindu.
-The Hindu News Paper
18-11-2011

'உத்தர பிரதேச மாநிலத்துக்கு அடுத்த வருடம் நடக்கும் சட்டமன்ற தேர்தலின் பிரசாரத்துக்கு நரேந்திர மோடி வர வேண்டிய அவசியம் இல்லை' என்று பிஜேபி தலைவர் நிதின் கட்காரி திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அவருக்கு தெரியும். ஏற்கெனவே ராமர் கோவிலை கட்டாமல் காலம் தாழ்த்தி வருவதால் இந்துக்களின் ஓட்டு சிதறிக் கிடக்கிறது. இதில் சகுனியைப் போல் நரபலி மோடியை கொண்ட வந்து பிரசாரத்தில் பயன்படுத்தினால் நடு நிலையாளர்களின் கொஞ்சநஞ்ச ஓட்டும் கையை விட்டுப் போய்விடும். எனவே தயவு செய்வு மோடி பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

இவர்களின் கூட்டணியில் இருக்கும் நிதிஸ்குமாரோ 'பீகாருக்குள் நரேந்திர மோடியின் வாசமே வேண்டாம்' என்று புறந்தள்ளி விட்டார். அப்படி ஒரு நிலை எடுத்ததால்தான் இன்று அவர் பீகாரின் முதல்வராக வீற்றிருக்கிறார்.

20 சதம் கூட வர வாய்ப்பில்லாத இவர்களுக்குள் 'யார் பிரதமர்' என்ற குஸ்தி மோடிக்கும் அத்வானிக்கும் இப்போதே தொடங்கி விட்டது.

இனி ராம பக்தி பிஜேபியில் கரை புரண்டு ஓடும். பாபர் மசூதி இருநத இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று அனைவரும் துண்டை போட்டு தாண்டுவார்கள். மேல்சாதி பத்திரிக்கைகள் அதற்கு தூபம் போடும். இந்தியாவை ஒளிர வைக்க மோடி வருகிறார் என்று நெஞ்சறிந்து மேல்சாதி பத்திரிக்கைகள் கட்டுரை வரையும்.

இந்துவில் வந்த ஒரு வாசகரின் உள்ளக் குமுறல்.

As mentioned by Justice Katju, media has bigger role to play in the society. Modi, Prime Ministerial candidate? I am worried of more blood. We need peace, no more blood.
from: Wish to be unidentified.
Posted on: Nov 18, 2011 at 12:59 IST

சரி...உண்மையிலேயே மோடியால் குஜராத் ஒளிர்கிறதா அல்லது தேய்கிறதா என்பதை 'புதிய ஜனயாகத்தில் ' வந்த கட்டுரையைப் பார்த்து தெரிந்து கொள்வோம்.

…..1990 களில் சிறு விவசாயிகளே பெரும் பண்ணையாளர்களிடம் இருக்கும் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயத்தில் ஈடுபட்டனர். ஆனால், 2000ஆவது ஆண்டுக்கு பிறகு நவீன பண்ணையாளர்கள், சிறு விவசாயிகளிடம் இருக்கும் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, பெரும் பண்ணை ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சிறு விவசாயிகள் படிப்படியாக விவசாயத்திலிருந்தே விரட்டப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டு வருகின்றனர். நவீன உழுபடைக் கருவிகள் மூலம் பண்ணை விவசாயம் மேற்கொள்ளப்படுவதால், கூலி விவசாயிகளுக்கும் வேலை கிடைப்பதில்லை. மேலும் ஒப்பந்த விவசாயத்தின் ஓரினப் பயிர் சாகுபடியால், மண் வளம் இழப்பும் பாசன வசதிகள் சூறையாடப்படுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பும் தீவிரமாகி வருகின்றன……
……..மேலும், உயிர்ம எரிபொருள் விவசாயத்திற்கு என்கிற பெயரில் , ரிராயல் எனர்ஜி, டாட்டாலையன்ஸ், எஸ்ஸார், அரவிந்த் மில்ஸ், அவினி சீட்ஸ் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் குஜராத்தில் உள்ள தரிசு நிலங்களைக் கையகப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளன. இம்மாநிலத்தின் கணிசமான தரிசு நிலங்கள் கட்ச், சௌராஷ்டிரம் மற்றும் வடக்குப் பகுதியில் உள்ளன. அங்கு வாழும் மக்கள் இந்நிலங்களை கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாகத் தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் குஜராத்தின் மக்கள் தொகையில் 5 முதல் 8 சதமாக உள்ளனர்; சுமார் 25 முதல் 40 இலட்சம் குடும்பங்கள் இந்நிலங்களைச் சார்ந்து வாழ்கின்றன. இவர்களின் வாழ்வாதாரமாக உள்ள மேய்ச்சல் நிலத்தின் அனுபோக உரிமை பறிக்கப்பட்டு வருவதால், இப்பகுதிவாழ் மக்கள் கால்நடைகளை விற்றுவிட்டு நகர்புறங்களில் நாடோடிகளாக வேலை தேடி அலைகின்றனர்.

……குஜராத்தின் ஒட்டுமொத்த பருத்தி விவசாயத்தில் 54 சதம் பி.டி. பருத்தி விதை (மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி) கொண்டு பயிரிடப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் பி.டி. பருத்தி விதையை விற்பனை செய்கின்றன. இருப்பினும், இந்நிறுவனங்கள் அனைத்தும் பி.டி. பருத்தி விதைக்குக் காப்புரிமை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களாகும். மான்சான்டோதான் விலையைத் தீர்மானிக்கிறது. இதனால் பருத்தி விவசாயிகளுக்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இலாபமில்லை; காய் புழு நோயையோ கட்டுப்படுத்தவும் முடியவில்லை…..

…..இவை தவிர, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழில் வளர்ச்சி மையங்கள் என்ற பெயரில் வெளிப்படையாக நிலப்பறிப்பிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. நிர்மா லிமிடெட் என்ற சிமெண்ட் நிறுவனத்திற்கு பாவ்நகர் மாவட்டத்தில் சுமார் 3500 ஹெக்டர் வளமிக்க விவசாய நிலத்தைப் பறித்தெடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் சுமார் 50,000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, டாடா நானோ கார் உற்பத்தி உதிரிப் பாக உற்பத்திக்காக ஏழு கிராமங்களில் சுமார் 8000 ஏக்கர் நிலம் பறிக்கப்படவுள்ளது….

…..பாரம்பரிய விவசாயத்தை அழிப்பது, உலகமயமாக்கலுக்கு ஏற்ப விவசாயத்தை ஏற்றுமதிக்கானதாக மாற்றுவது, ஏழை நடுத்தர விவசாயிகளை நிலமற்ற கூலிகளாகச் சிதறடிப்பது, பன்னாட்டு ஏகபோக விவசாயக் கம்பெனிகளின் தரகுப் பெருமுதலாளிகளின் வரம்பற்ற ஆதிக்கத்தை நிறுவுவது, இதற்காகப் பெயரளவில் இருந்துவந்த தடைகளை நீக்குவது என்பதுதான் மோடி அரசு செய்துவரும் ‘முன்னுதாரணமிக்க சாதனைகள்’…..

- புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

அடுத்து பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்து மதம் தழைத்து விடும். இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் ஒடுக்கப்படுவார்கள் என்ற நினைப்பில் சிலர் இருக்கலாம். இந்து மதத்தில் சீர்திருத்தத்தை செய்யாத வரை அந்த மதம் தழைக்க வழியில்லை. மாறாக மோடி, அத்வானி போன்றோரின் துணையால் சிலரின் (குஜராத்தைப் போல்) ரத்தத்தைக் குடிக்கலாம். வேறு ஒன்றும் ஆகப் போவதில்லை.

Tuesday, November 15, 2011

அமெரிக்கா....அமெரிக்கா...அமெரிக்கா...

ஒரு காலத்தில் அமெரிக்கா செல்வதும் அங்கு சென்று படிப்பதும் ஆங்கிலத்தை சரளமாக பேசுவதும் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. இன்றும் கூட சிலருக்கு அந்த எண்ணம் இருந்து வருகிறது. அந்தே பரிதாபம். சீட்டுக்கட்டுக்களால் கட்டப்பட்ட ஒரு மாதிரி கட்டிடம் எப்படி பொல பொலவென்று உதிருமோ அதுபோன்று உதிரத் தொடங்கியிருக்கிறது அமெரிக்கா!

உலகத்தை ஆளப்பிறந்தவர்கள் நாங்கள். நாங்கள் வைத்ததுதான் சட்டம். எங்கள் பேச்சை கேட்காதவர்களின் ஆட்சியை சூழ்ச்சிகள் செய்து அகற்றி விடுவோம் என்று இறுமாந்திருந்த அமெரிக்கா தற்போது 'வால்ட் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்' என்ற கோஷத்தோடு அந்த மக்கள் வெகுண்டெழுந்ததை சற்றும் எதிர்பார்த்திருக்காது.

போராட்டக் குழுவினர் 'வால்ட் ஸ்ட்ரீட்டை' ஏன் தேர்ந்தெடுத்தனர்? நியூயார்க் ஸடாக் எக்சேஞச், நாஸ்டாக் உள்பட பல நிதி நிறுவனங்களின் பண முதலைகளின் தலைமையகங்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள 'வால்ட் ஸ்ட்ரீட்டில்' அமைந்துள்ளதே போராட்டக்காரர்கள் இந்த தெருவைக் குறி வைக்க காரணம்.

அமெரிக்க பொருளாதாரம் சரியத் தொடங்கியது எவ்வாறு?

இதற்கெல்லாம் மூல காரணம் நடிகர் ரொனால்ட் ரீகன் குடியரசு தலைவராக இருந்தபோது வங்கிகளின் கட்டுப்பாட்டை தளர விட்டார். உற்பத்தி துறையில் முதலீடு குறைக்கப்பட்டது. வங்கிகள் வீடுகளைக் கட்டிக் கொள்ள தாராள கடன் வசதிகளை செய்து கொடுத்தது. உற்பத்தி துறையில் முதலீடு குறைந்ததால் புதிய தொழில்களின் வேகம் மந்தமானது.

1970 லிருந்து நிதி மூலதனத்தின் ஆதிக்கம் வளரத் தொடங்கி இன்று அது மொத்த அரசாங்கத்தையும் இரண்டு அரசியல் கட்சிகளையும் (ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி) என்று முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.


ஆடம்பரமாக வளர்ந்து பழக்கப்பட்ட அமெரிக்கர்கள் வங்கியின் தாராள போக்கை பயன்படுத்திக் கொண்டு பலரும் லோன் வாங்க ஆரம்பித்தனர். வாடிக்கையாளர் பணத்தை திரும்ப செலுத்தும் தகுதியுடையவரா என்றெல்லாம் அப்போது வங்கிகளால் பார்க்கப்படவில்லை. லோன் மேளாக்களை மக்களிடம் வங்கிகள் நேரிடையாக கொண்டு செல்லாமல் நிதி நிறுவனங்கள், காப்பீட்டுக் கம்பெனிகள் போன்றோரை தங்களின் ஏஜண்டுகளாக நியமித்தது. இடையில் புகுந்த இந்த கம்பெனிகளும் லாபம் ஈட்ட வேண்டுமல்லவா? எனவே வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தின.

வங்கிகளின் தவணையை அடைக்க முடியாது வீடுகளை இழந்த லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீதிக்கு வந்தனர். மனிதனின் பேராசையால் தகுதியில்லாதவர்களெல்லாம் ஆடம்பர பங்களாக்களுக்கு ஆசைப்பட்டதன் விளைவே இது போன்ற ஒரு நிலை. ஆனால் ஏஜண்டுகளாக செயல்பட்ட இடைத் தரகர்கள் கொள்ளை லாபம் அடைந்தனர். இதனால் செல்வந்தர்களுக்கும், வறியவர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமானது. வட்டித் தொழிலையே மூலதனமாகக் கொண்ட யூதர்களின் அநியாய வட்டியும் பல அமெரிக்கர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்திருக்கிறது.


வீடிழந்தவர்கள், வேலையிழந்தவர்கள், மருத்தவ செலவுக்கு காசில்லாதவர்கள், மேல்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவர்கள் அனைவரும் இன்று போராட்டக் களத்தில்.

லாபம் அடைந்த பண முதலைகள் போராட்டக்காரர்களை வசைபாட தொடங்கியுள்ளனர். 'இந்த இயக்கத்திற்கென்று தலைமை ஒன்றும் இல்லை. இவர்கள் தங்களின் கோரிக்கை என்ன என்றும் தெளிவாக்கவில்லை. இவர்கள் குழப்பவாதிகள்: அராஜகவாதிகள்' என்று குய்யோ முறையோ என்று நிதி மூலதனத்தின் ஆதரவாளர்கள் குதிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அரபுலகில் நடந்த போராட்டமானது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரானது. ஆனால் அமெரிக்காவில் நடக்கும் போராட்டமோ நிதி மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக நடப்பது. அரபுலகில் சர்வாதிகாரி நீக்கப்பட்டவுடன் போராட்டம் ஓரளவு ஓய்ந்து விட்டது. ஆனால் அமெரிக்க மக்களின் போராட்டமோ ஆட்சி அமைப்பையே மாற்றக் கூடியதாகவும் பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்காகவும் நடத்தப்படுகிறது. ஈராக்கிலும் பல லட்சக்கணக்கான படை வீரர்கள் அமெரிக்கா திரும்பி விட்டனர். ஆப்கானிஸ்தானத்தில் படை வாபஸ் தொடங்க ஆரம்பித்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட இந்த படை வீரர்களும் இனி போராட்டத்தில் குதிக்கலாம்.

போராட்டக்காரர்களின் சிலரின் வாக்கு மூலத்தை இனி நாம் பார்ப்போம்.
I FEEL THESE THINGS ARE A HUMAN RIGHT
-A home
-Health Care
-High-Quality Education
None of which should ever put me in debt
I AM THE 99%
.I am a 47 year old single parent of 5 kids ranging in age from 11 to 30. My children are owed 37,000.00 in child support and the state of MD doesn’t care. I have health insurance because I have health issues but cannot afford it for my 2 youngest children.
I cannot pay my mortgage and owe the electric company over 6000.00. I have many medical bills for my children because I take them to the ER when they need to see a doctor.
I can’t afford to feed everyone so I pretend I’m not hungry so the kids can eat.
I AM THE 99 % and it makes me sad that my children will always be too.
I’m 31 years old. I have a master’s degree from a leading university and over $58,000 in student loan debt. For years I worked as an adjunct college instructor with no health insurance. I became ill and now have thousands in medical debt. Luckily I’ve found a job with health insurance, but I still live paycheck to paycheck and occasionally forgo food to get by.
I am the 99 percent! OccupyWallStreet.org

I am a 28 year old black and white lesbian college student about to move in with my bestfriend, her 3 kids and husband for the next 2 months. I also have a few couches to crash on. I have a job I passionately hate for a company that stands for everything wrong with America. I have no savings and have been eating mostly pasta for 2 years. I’ve filed a bankruptcy, been on unemployment, cried myself to sleep, survived an abusive relationship, lost friends and family to addictions and death, fight daily with depressionand am fortunate enough to have AMAZING friends and family to get me through the worst of times.
I am technically homeless, I AM A SURVIVOR, I am not a victim, I am not a statistic or a minority, I AM, WE ARE the 99%
~ “and we are very VERY pissed off!” occupywallst.org
I’m 26, with a steady job and minimal debt. Every month I try to balance paying down my debt and putting money in savings, knowing that one medical emergency or my car breaking down would put me back at square one. Every day I think about how lucky I am to have a job and any savings at all.
If I want to go any further in my chosen job field, I need a Master’s degree, which I can’t get without taking out loans. The thought of doing that terrifies me.
So many of my friends are struggling with more debt than I am, or can’t find jobs despite looking diligently, or are stuck in jobs they hate but can’t afford to quit.
We were told that going to college was the way to ensure we had bright futures. That taking out loans would be worth it. That if we worked hard and did our part, it would pay off.
We did our part—what now?
We are the 99%.
.I have $100,000 (and rising) in student loan debt.
Growing up, my father had to work 3 jobs to make ends meet. Recently, he was laid off from one of those jobs.
I am the 99%
occupywallst.org
I am 21 years old, and had to leave my job + put school on hold indefinitely because my 54 year old mother had a stroke. We are drowning in medical bills; we can’t even afford a real nurse. My father was due to retire in January 2012, but we might not be able to afford it.
We are better off than many, but still 99%.
occupywallst.org
I am a struggling college student. I have less money in my bank account than my bills will be this month. I have medical issues I cannot afford to address. I sometimes have to choose between food and bills. I cannot find a job, even waiting tables.
And I know I am not alone. I know that there are people in my situation, or worse.
And I will not stand for it.
No longer will the 1% control.
No longer will the 1% manipulate.
No longer will the 1% influence.

I am the 99%. You are the 99%.
And we are not alone.

நாட்டின் பொருளாதாரக் கொள்கையை மாற்றி தனது மக்களுக்கு நல்லது செய்ய பராக் ஒபாமா முற்பட வெண்டும். அதை விடுத்து யூதர்களும் பணமுதலைகளும் சொல்வதைக கேட்டு வேற்று நாட்டு மக்களின் ரத்தத்தை உறிஞ்ச நினைத்தால் தனது நாட்டு மக்களாலேயே ஒபாமாவும் அவரது ஆட்சியாளர்களும் தண்டிக்கப்டுவார்கள். இதுதான் நாம் வரலாறு நெடுக் பார்த்து வருவது.

Sunday, November 13, 2011

வஞ்சப் புகழ்ச்சி என்பது இதுதானோ!- தினமலரின் குசும்பு!
அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என நினைக்கும் போது! ஆச்சரியமாகவும் இருக்கிறது, இன்னும் அதற்கு எதிர்வினை நடக்கவில்லையே என்று.கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த அழகுப் பெண் சவுமியா, 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.

கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி. ஆளைப் பிடித்தவர்கள், மளமளவென வழக்கை விசாரித்து, அவருக்கு மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விட்டனர்.இதுவல்ல செய்தி. இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்ட பிறகும், இன்னும் ஒரு தமிழினத் தலைவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை; ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை; மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது தான் செய்தி. காரணம், அவர்கள் தலையிட்டு, இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள், இந்தப் பிரச்னையில் உள்ளன.இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள!
ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! மனித உரிமை மரித்து விட்டதா இந்தத் தாய்த் தமிழ்நாட்டில்? அல்லது இனமானச் சிங்கங்கள், இருட்டில் ஓடி ஒளிந்துகொண்டுவிட்டதாக, அவர்களுக்கு இறுமாப்பா?மாற்றுத் திறனாளி மட்டுமில்லை; கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, ஆதிக்க சக்திகள் எல்லாம் ஒன்று கூடி, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன!
இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா அல்லது தமிழினத் தலைவர்கள் வாளாவிருந்துவிடுவர் என நினைத்து விட்டார்களா?

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். அருமைத் தமிழர் கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே, என் அருமை மக்களே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?

அப்பாவித் தமிழன் கோவிந்தசாமிக்கு இவ்வளவு சாதக அம்சங்கள் இருந்தும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், அடுத்த தமிழ்ப் பெருந்தலைவராக உருவெடுக்க உள்ள வேல்முருகன் என, ஒருத்தர் கூட குரல் கொடுக்காதது ஏன்?


ஒரு வேளை முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும் 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ !

-தினமலர் 14-11-2011

கிண்டலாக எழுதிய ஒரு இடுகையை சீரியஸாக எடுத்துக் கொண்டு சில வாசகர்கள் 'கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கி தினமலர் தனது தரத்தை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று பின்னுட்டத்தில் பொங்கி இருக்கிறார்கள்.

Friday, November 11, 2011

நைஜீரிய படுகொலைகளும நமது நாட்டு இந்து மதமும்!
நைஜீரியாவில் தினம் தினம் நடந்து வரும் படுகொலைகள் நம்மை வேதனைப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் நைஜீரியாவில் நமது நாட்டின் இந்து மத பிரிவுகளைப் போல் சிறு சிறு குழுக்களாக இருந்துளளனர். ஒவ்வொரு குழுக்களும் நம் நாட்டைப்போல ஒரு சாதியாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு சாதிக்கும் நம் நாட்டின் வழக்கைப் போல் ஒரு கடவுள் ஏற்படுத்தப் பட்டது. வைதீகம், வேதாந்தம், சமணம், பௌத்தம் என்று எப்படி பல வாறாக இறைக் கொள்கை பிரிக்கப்பட்டதோ அதே போன்ற நிலைதான் நைஜீரியாவிலும். அவரவர் தங்களின் சாதிகளின் அடிப்படையில் தங்களின் வணக்கங்களை செலுத்தி வந்தனர். இதில் சமணம், பவுத்தம் என்று நம் நாடடில் எப்படி ஒரே மதத்துக்குள்ளேயே குழி தோண்டுதல் நடந்ததோ அது போன்ற பழங்குடி இன மோதல்களுக்கு நைஜீரியாவும் சளைக்கவில்லை. பல சாதிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் அழிக்கும் வேலை நன்றாகவே நடந்து வந்தது.

இப்படி மக்கள் பலவாறாக பிரிந்து அழிவின் உச்சத்தில் இருந்த போதுதான் அங்கு இஸ்லாமிய பிரசாரகர்கள் நுழைகின்றனர். இஸ்லாம் அந்த மக்களை 50 சதவீதம் ஆட்கொள்கிறது. ஆனால் அங்கும் ஒரு சில உயர் சாதிகள் நம் நாட்டைப் போலவே இஸ்லாத்தை ஏற்க மறுக்கின்றன. புதிதாக அவர்கள் நாட்டில் புகுந்த இஸ்லாமிய கொள்கையை விரட்ட முற்படுகின்றனர். வழக்கம்போல் தோல்வியே ஏற்படுகிறது. இஸ்லாத்தை முற்றிலுமாக நைஜீரியாவில் துடைக்க பழங்குடி இன மக்களால் முடியவில்லை. அன்று முதல் சமீப காலம் வரை நைஜீரிய பழங்குடியினருக்கும் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கும் சிறு சிறு மோதல்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

1960 வாக்கில் நைஜீரியா பல சோதனைகள் போரட்டங்களுக்குப் பிறகு சுதந்திரம் அடைகிறது. பெரும்பான்மையினராக இஸ்லாமியர்கள் இருந்ததால் ஆட்சி அதிகாரமும் முஸ்லிம்கள் வசம் வருகிறது. இதை விரும்பாத கிறித்தவ, பழங்குடி குழுக்கள் அவ்வப்போது சுதந்திர நைஜீரிய ஆட்சியாளர்களுக்கு இன்று வரை தொல்லை கொடுத்து வருகின்றனர்.
அதன்பின் நம் நாட்டைப் போலவே காலனி ஆதிக்கம் நைஜீரியாவிலும் ஏற்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள் நைஜீரியாவை தங்களது ஆளமைக்கு கீழ் கொண்டு வருகின்றனர். அதன் பின் பிரிட்டிசாரின் வருகையும் நடக்கிறது. இவர்கள் வந்தவுடன் இஸ்லாமாகாத பழங்குடி மக்களை கிறித்துவர்களாக மாற்றுகின்றனர். எஞ்சிய மிகச் சிலர் இன்றும் பழங்குடியினராகவே வாழ்ந்து வருகின்றனர்.

1960 வாக்கில் நைஜீரியா பல சோதனைகள் போரட்டங்களுக்குப் பிறகு சுதந்திரம் அடைகிறது. பெரும்பான்மையினராக இஸ்லாமியர்கள் இருந்ததால் ஆட்சி அதிகாரமும் முஸ்லிம்கள் வசம் வருகிறது. இதை விரும்பாத கிறித்தவ, பழங்குடி குழுக்கள் அவ்வப்போது சுதந்திர நைஜீரிய ஆட்சியாளர்களுக்கு இன்று வரை தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இடையில் சில நாட்கள் சண்டையில்லாமல் இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் பழங்குடியினருடன் சமாதானமாக சென்று சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தனர். ஆப்ரிக்காவில் பட்டினி சாவு இல்லாத ஒரு நாடாக செல்வ செழிப்பிலும் சிறந்து விளங்கியது. அள்ள அள்ள குறையாத கனிம வளங்களும் நைஜீரியாவை மேலும் செல்வ நாடாக மாற்றியது.

நம்ம பெரியண்ணன் அமெரிக்காவுக்கு ஒரு நாடு செல்வ செழிப்பில் சிறந்து விளங்குவதை கண்டால் பொறுக்குமா? வழக்கம் போல் ஐரோப்பியர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு அந்நாட்டு கிறித்தவர்களுக்கு ஆயுதங்களையும் கொடுத்து இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட தூண்டுகிறது. கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களை பிரித்து தனி நாடாக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. அங்குள்ள கனிம வளங்களை பங்கு போடுவதே பெரியண்ணனின் திட்டம். இதை எதிர்க்கும் இஸ்லாமிய அரசுக்கும் ஆதரிக்கும் கிறித்தவ மற்றும் பழங்குடி இன மக்களுக்கும் இடையிலான போராட்டமே தற்போது நடந்து வருவது.

வரலாறு இப்படி இருக்க நமது எழுத்தாளர் ஜெய மோகன் அந்த நாட்டு நிகழ்வை நம் நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

//இந்தியாவில் என்ன வேற்றுமை? இந்தியாவை கிறித்தவ மயமாக்கும் காலனியாதிக்க முயற்சிகளை இந்துமதம் அனுமதிக்காமல் எதிர்த்து நின்றது. இஸ்லாமின் ஆதிக்கத்தை வென்றதுபோலவே கிறித்தவ ஊடுருவலையும் அது வென்றது. அதற்கான காரணம் என்ன? மிக எளிய விடைதான் ஏற்கனவே இந்து,சமண,பௌத்த மதங்களால் இந்தியாவின் சிறுவழிபாட்டுமரபுகள் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டுவிட்டிருந்தன. ஆகவே அவை நைஜீரியா போல தனித்தனி வழிபாட்டுக்குழுக்களாக தேங்கி இருக்கவில்லை. ஒன்றுடன் ஒன்று உரையாடி வளர்ந்து ஒருங்கிணைந்த சக்தியாக, வலுவான தத்துவ – வழிபாட்டு அடிபப்டையுடன் விளங்கின. ஆகவேதான் நைஜீரிய பழங்குடி மதங்களுக்கு நிகழ்ந்தது இந்துமதப்பிரிவுகளுக்கு நிகழவில்லை.//
-எழுத்தாளர் ஜெய மோகன்

அதாவது எழுத்தாளர் ஜெயமோகன் சொல்ல வருவது நமது நாட்டில் சாதிகள் மிகவும் ஆழமாக வேரூன்றி ஒவ்வொரு சாதியினரும் தங்கள் தெய்வங்களையும் வேதங்களையும் காப்பியங்களையும் ஒருங்கிணைத்ததால்தான் அதாவது இந்து மதம் என்ற ஒரு குடையின் கீழ் வந்ததால்தான் இஸ்லாமிய கிறித்தவ படையெடுப்புகள் இந்து மதத்தை அழிக்க முடியவில்லை என்கிறார். இது எந்த அளவு ஒத்துக் கொள்ளக் கூடிய கருத்து என்று எனக்கு விளங்கவில்லை.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சாதிகள் நிலைத்திருக்க வேண்டும் என்றும் மனிதர்கள் பல வருணங்களாக பிரிந்தே இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரா? அடுத்து எந்த காலத்தில் இந்து மத சாதிப் பிரிவுகளுக்குள் ஒற்றுமை இருந்தது? அப்படி இந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் மொகலாயர்கள் இந்த நாட்டை 1000 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்க முடியுமா?

அதன் பிறகு வந்த கிறித்தவர்கள் இந்த நாட்டை 300 வருட காலம் ஆட்சி செய்திருக்கத்தான் முடியுமா? மொகலாயர்களுக்கு முன்னால் வாழ்ந்த நமது பூர்வீக ஆட்சியாளர்கள் ஒழுங்காக மக்களை வைத்திருந்தால் அந்நியர்களின் ஆட்சி இத்தனை வருடம் தாக்குபிடித்திருக்க முடியுமா? சேர சோழ பாண்டியர்கள் அதிகாரத்துக்கு போட்ட சண்டைகளும் அதனால் மக்கள் பட்ட துன்பங்களுமே அந்நியர்களை இத்தனை வருட காலம் ஆட்சி செய்ய வைத்தது.

அடுத்து உலகிலேயே இஸ்லாமியர்களின் மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்க போகிறது நமது இந்தியா. பாகிஸ்தான் இந்தியாவோடு சேர்ந்திருந்தால் அந்த இலக்கை என்றோ அடைந்திருக்கலாம். இவ்வளவு மதமாற்றங்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க இந்தியாவில் இஸ்லாம் வெற்றி பெற முடியவில்லை என்று எதை வைத்து சொல்கிறார்?

இவ்வளவு தகவல் தொடர்பு சாதனங்களை பெற்ற நாம் காஸ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை நம் நாட்டை கட்டுக்குள் வைத்திருப்பதற்கே போதும் போதும் என்றாகி விடுகிறது. அந்த காலத்தில் அதுவும் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில் ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்த மொகலாயர்கள் இந்த நாட்டை அதுவும் பாகிஸ்தான் பங்களாதேசையும் சேர்த்து 1000 ஆண்டுகள் ஆட்சி செய்வது என்பது சாத்தியப்படுமா?

அடுத்து சாதிகளுக்குள ஒரு ஒற்றுமை இருந்தது என்கிறார் ஜெயமோகன். சமணர்களை வன்முறையால் ஒழித்தது தானே இன்றைய இந்து மதம்? அதே போல் பவுத்தத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாக மாற்றியமைத்ததல்லவா நமது நாட்டு இந்து மதம். இனி குறு நில மன்னர்களுக்குள் சண்டை எந்த அளவு உக்கிரமாக இருந்தது என்பதையும் இனி பார்ப்போம்.

"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம் 76: 12)

என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன.

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,

"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,

"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புறம் 6)

என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.

சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,

"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"

என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.

பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.

பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.

நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).

வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)

கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.

மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).

இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது.

இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.

ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.

முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).

நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.

இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான்.

சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272).

வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).

முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).

இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன்.
http://thatstamil.oneindia.in/art-culture/visai/mar05/siva.html

பண்டைய தமிழகத்தின் நிலை இவ்வாறு இருக்க இங்கு ஏதோ பாலாறும் தேனாறும் ஓடி மக்கள் சாதி வேறுபாடுகளை மறந்து சுபிட்சமாக வாழ்ந்ததால்தான் அந்நிய கலாசார படையெடுப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டன என்று எதை வைத்து ஜெயமோகன் எழுதுகிறார்?

நான் மதிக்கும் ஒரு சிறந்த எழுத்தாளரிடமிருந்து இத்தகைய கருத்தை எதிர்பார்க்கவில்லை.

Wednesday, November 09, 2011

அத்வானியின் குண்டுவெடிப்பு நாடகமும் 39 பெண்களை மணந்த அய்ஸ்வாலும்!அய்ஸ்வால் : மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள்.
முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர்.
நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைசி திருமணம் செய்து கொண்டார். ஒட்டு மொத்த குடும்பத்தினரும், ஒரே சமையல் அறையில் சமைத்து, ஒன்றாக சாப்பிடுகின்றனர்.
காலை உணவுக்கு 50 கிலோ அரிசியும், இரவு உணவுக்கு 35 முதல் 50 கிலோ தானியத்தையும் சமைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு நாளும் 25 கிலோ உருளைக்கிழங்கு, 15 கிலோ பருப்பு மற்றும் ஏராளமான அளவில் காய்கறிகள் இவர்களின் வீட்டிற்கு தேவைப்படுகின்றன. மாமிசம் சமைத்தால், ஒரு நாளைக்கு 45 கிலோ மாமிசம் சமைக்கின்றனர்.
வீட்டு வேலைகளில் யார், யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை முதல் மனைவி தீர்மானிக்கிறார். வீட்டில் உள்ள ஆண்களை மற்ற வேலைகளுக்கு அனுப்புகிறார் சையோனா. வீடு கட்டுமானப் பணி மற்றும் தோட்ட வேலைகள் போன்றவற்றுக்கும் ஆட்களை அனுப்புகிறார்.

-தினமலர்
9-11-2011

------------------------------------------------------------------

அத்வானி கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீனை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பாஜக-வின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை வந்தார். அவர் அங்கிருந்து யாத்திரை செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு ஒன்று காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் கடந்த 1ம் தேதி அப்துல் ரகுமான் மற்றும் இஸ்மத் என்ற இரண்டு இளைஞர்களைக் கைது செய்தனர். இநக்ச் சதி செயலுக்கு இமாம் அலி கூட்டாளியாக கருதப்படும் போலீஸ் பக்ருத்தீன் என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்பட்டது. ஆனால் காவல்துறையினரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், சென்னை மண்ணடியைச் சேர்ந்த எம்.அப்துல்லா என்பவர் சென்னசுயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு(ஹேபியஸ் கார்பஸ்) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

"நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் 2003ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (வயது 35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த வழக்கு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன்.

இந்த நிலையில், கடந்த 2ம் தேதி சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது அவர்களின் அலுவலகத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொலை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளருமான ஜெ.அப்துல் ரஹீமும், தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்குத் தந்தி அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவுமில்லை. இதுவரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுமில்லை.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது. எனவே சட்ட விரோத காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை வெளியில்விட அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்."

என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்
இந்நேரம்.காம்
http://www.inneram.com/2011110920067/police-palnning-for-fake-encounter-in-advani-case

------------------------------------------------------------

குஜராத் மாநிலம் சர்தார்புரா பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு கலவரத்தில் 33 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2002-ல் கோத்ராவில் ரயில் எரி்ப்பு சம்பவத்தை அடுத்து நடந்த கலவரத்தில், சர்தார்புரா பகுதியில் 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள். அதுதொடர்பாக நடந்த விசாரணை முடிவடைந்து, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில், 42 பேரை விடுவித்த நீதிமன்றம், 31 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 31 பேர் மீது, கொலை, கொலை முயற்சி மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிற விதிகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது அவர்கள் மீதான கிரிமினல் சதித்திட்டக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.

பின்னணி என்ன?

கடந்த 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி, கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தில், 59 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. சர்தார்புராவில் நடந்த கலவரத்தில், சிறுபான்மை சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது. உயிருக்கு பயந்து, அப்பகுதி மக்கள் இப்ராஹிம் ஷேக் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த நேரத்தில், கலவரக் கும்பல் அந்த வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. அதில், 22 பெணஅகள் உள்பட 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

இந்த வழக்கில், கடந்த 2009-ம் ஆண்டு, குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, 73 பேருக்கும் எதிராக விசாரணை துவங்கியது. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கோத்ரா ரயில் எரி்ப்பு சம்பவத்தை அடுத்து, சில உள்ளூர் தலைவர்கள் அந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகவும் விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியது.

கலவரத்துக்கு முன்பு, குற்றவாளிகள் ஆயுதங்களை விநியோகித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தாங்கள் இந்த வழக்கில் தவறாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், வெளியில் இருந்து வந்த நபர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் உள்பட 112 பேர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.

-பிபிசி தமிழ்ச் சேவை
9-11-2011

Monday, November 07, 2011

வேலாயுதம்:-ஏழாம் அறிவு: சினி கூத்து!

வேலாயுதம்:-ஏழாம் அறிவு: சினி கூத்து!

பக்ரீத் விடுமுறை வந்து விட்டது. தமிழ் சினிமா பார்த்து அதிக நாட்கள் ஆகிறதே என்று 'ஏழாம் அறிவும்' 'வேலாயுதம்' படமும் ப்ளாசில் நண்பர் கொடுக்க இரண்டையும் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த கூத்தாடிகள் பலன் பெறும் வகையில் தியேட்டரில் சென்றோ அல்லது காசு கொடுத்து சிடிக்களை வாங்கியோ படம் பார்ப்பதில்லை. என் போன்றவர்களின் முயற்ச்சியினால் இன்று தியேட்டர்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாறி வருகிறது மகிழ்ச்சிக்குரிய மாற்றம்.

சரி... இனி விமர்சனத்தக்கு வருவோம்

ஏழாம் அறிவு:
ஓரளவு ஆங்கிலப் படங்களை யொத்த கதைக் கரு. போதி தர்மர் என்ற தமிழர் சீனா சென்று அங்குள்ள மக்களை தான் கற்ற கலைகளினால் அவர்களை கவர்ந்து அவர்கள் வழிபடும் தெய்வங்களில் ஒன்றாகிறார். இதுதான் கதைக்கரு.

இதில் நம்ம முருகதாஸ் அண்ணன் கொஞ்சம் மசாலாவையும் கலந்து தனது கற்பனையால் செதுக்கி தமிழர்களை தட்டி எழுப்ப முயற்ச்சித்திருக்கிறர்ர். திரைப்படத்தைப் பார்த்து எவருக்கும் உணர்வுகள் பீரிடப் போவதில்லை. அதிலும் கற்பனை கலந்த ஒருவரின் வரலாறு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. சொல்லப் போனால் போதி தர்மர் பின் பற்றியது பவுத்த மதம் என்று அறிகிறோம். அந்த பவுத்த மதத்தின் சுவடையே இல்லாமல் ஆக்கியது நம் தமிழ் முன்னோர்கள் செய்த பல தவறுகளில் ஒன்று. இந்து மதம் தழைக்காமல் பவுத்தமே நிலைபெற்றிருந்தால் தீண்டாமை என்ற அரக்கன் தமிழகத்தை இந்த அளவு சுவீகரித்திருக்க மாட்டான். எனவே போதி தர்மரை பின் பற்றி இந்து மதத்துக்கு மாறிய தமிழர்கள் அனைவரும் பவுத்த மதத்துக்கே திரும்ப வர வழைக்க முருகதாஸ் அண்ணன் முயற்ச்சிப்பாரா?

இனி படத்தில் உள்ள சில குறைகள்.

ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் போது கூட கவர்ச்சியான டூயட்களும் நடனங்களும் தேவையா? அதிலும் சினிமாவில் பெண்களின் இழி நிலையை அறிந்த உலக நாயகன் என்று தன்னைக் கூறிக் கொள்பவர் தனது மகளை இந்த அளவு கீழிறங்க அனுமதிக்கலாமா? 'நீ மட்டும் சிமரனுடனும், கவுதமியுடனும் இன்னும் பலரோடும் கலைச் சேவை செய்யும் போது நான் மட்டும் அடுப்பங்கரையில் சமையல் செய்வதா?' என்று அம்மணி சண்டைக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தரையில் கிடக்கும் இலை சருகுகளை எல்லாம் ஒன்றாக்கி எதிரியின் மேல் வீசுவதும், அடுத்து எதிரிகள் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதும் அதற்கு ஹிப்னாடிஸத்தைத் துணைக்கழைப்பதும் காமெடியின் உச்சக் கட்டம்.

அடுத்து டிஎன்ஏயின் மூலம் பல தலைமுறைக்கு முன்னால் உள்ள மூதாதயரின் எண்ணங்களையும் ஆற்றல்களையும் தற்போது உள்ள மனிதனுக்கு கடத்துவது என்பதும் டுபாக்கூர். ஏனெனில் ஒரு மனிதனுக்கு இரண்டு உள்ளங்களை இறைவன் படைக்கவில்லை. இது எப்படி இருக்கிறது என்றால் நாகூர் தர்ஹாவிலும், வேளாங்கண்ணியிலும், மாரியாத்தா கோவிலும இறந்து போனவரின் ஆவி இன்னொருவர் உடம்பில் ஏறி விட்டது என்று புரோகிதர்கள் பேய் ஓட்டும் டுபாக்கூர் நாடகம் நடக்கும். அது எந்த அளவு உண்மையில்லையோ அதே அளவுதான் நம்ம சூர்யா அண்ணன் உடம்பிலும் போதி தர்மரின் செயல்கள் புகுந்து விட்டதாக திரைக்கதை அமைத்திருப்பது. டிஎன்ஏவின் மூலம் பரம்பரையை அறிந்து கொள்ளலாம். செயல்களை தூண்டுதல் என்பது நடைமுறை சாத்தியமா எனபதை உயிரியல் படித்தவர்கள்தான் விளக்க வேண்டும். அட...நம்ம ரஜினிகாந்த் ஒரு ஹெலிகாப்டரை கயிற்றை சுழற்றி அதன் ஓட்டத்தையே நிறுத்தும் போது இது தமிழகத்தில் சாத்தியப்படாதா என்று நீங்கள் கேட்டால் நான் ஜூட்....:-)

இனி படத்தில் நிறைவாக....

காதல், அப்பா அம்மா எதிர்ப்பு, வில்லனோடு சண்டை என்றே பல யுகங்களாக பார்த்து வரும் நம் தமிழனுக்கு கஜினி, ஏழாம் அறிவு என்று கொஞ்சம் வித்தியாசமான கதைகளை கொண்டு வரும் ஏ.ஆர்.முருகதாஸை பாராட்டவே வேண்டும்.

-----------------------------------------------

அடுத்து வேலாயுதத்துக்கு வருவோம்....

இந்த படத்தின் மூலம் இஸ்லாமியர்களை இந்த நாட்டுக்கு அந்நியர்களாகவும் விசுவாசமற்றவர்களாகவும் காட்டவே டைரக்டர் முயற்ச்சித்து இருக்கிறார். இந்த கூத்தாடிகளுக்கு எவன் தாலி அறுந்தாலும் பரவாயில்லை அவர்களின் கல்லா நிரம்ப வேண்டும். இதற்கு முன் அர்ஜூன் என்ற கூத்தாடியும், விஜயகாந்த் என்ற (குடி) கூத்தாடியும் தங்களால் இயன்ற அளவு முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் நாட்டுக்கு விசுவாசமற்றவர்களாகவும் காட்டி தங்கள் இந்துத்வா அரிப்பை தீர்த்துக் கொண்டனர். அந்த இடத்திற்கு தற்போது விஜய் என்ற கூத்தாடி வந்திருக்கிறார். தனது அம்மாவுக்கு பெரியம்மா(ஜெயலலிதா) இசைக் கல்லூரியில் ஒரு போஸ்டை கொடுத்தவுடன் தம்பிக்கு முதலமைச்சர் கனவு வேறு வந்து தொலைக்கிறது. யார் கண்டது? தமிழகத்தில் எதுவும் நடக்கலாம்.

கொஞ்சம் தாடி, தோளில் ஒரு துண்டு, சில அரபு வார்த்தைகள் இதைப் பேசி இந்த நாட்டுக்கு எதிரானவர்களாக முஸ்லிம்களை காட்டுவது: இடையே அந்த வில்லன் அடிக்கடி 'அல்லா' என்று உச்சரிப்பது என்று இந்துத்வா வேலைகளை இந்த கூத்தாடிகள் சிறப்பாகவே செய்கின்றனர். இஸ்லாத்துக்கு ஆதரவாக ஒரு சில வசனங்களை பேசி நடுநிலை என்று வேறு காடட முயற்ச்சிப்பது போன்ற கூத்துகளும் உண்டு.

நான் கேட்பது! பாகிஸ்தான் ராணுவம் நம் தமிழகத்தில் குண்டுகளை போட்டால் என் குடும்பமும் எனது பிள்ளைகளும் இறக்க மாட்டார்களா? முஸ்லிம்களை தவிர்த்து அவனால் குண்டுகளைப் போட முடியுமா? முடியாது. அடுத்து தான் பிறந்த நாட்டை நேசிப்பது என்பது எவனும் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. அது அவர்களின் ரத்தத்திலேயே ஊறியது. எனது கம்பெனியில் சில நேரங்களில் காஸ்மீருக்கு ஆதரவாகவும், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் சில பாகிஸ்தானிகள் பேசும் போது இந்தியர்களாகிய நாங்கள் ஒருமித்த குரலில் அவர்களை எதிர்ப்பதும் அவர்களின் சண்டையிடுவதும் எங்களுக்குத்தான் தெரியும்! இதை எல்லாம் சொல்லி எங்களை நாங்களே நிரூபித்துக் கொள்ளக் கூடிய அவசியம் அதுவும் இந்த கூத்தாடிகளிடம் எங்களுக்கு ஏற்பட போவதில்லை.

அடுத்து பாகிஸ்தானுக்கு உளவு வேலைகளைப் பார்ப்பதற்கு அவன் முஸ்லிம்களை தேர்ந்தெடுக்க மாட்டான். இந்துக்களை தேர்ந்தெடுத்தால்தான் இந்திய அரசுக்கு சந்தேகம் வராது என்பதால் அவன் தேர்ந்தெடுப்பது அதிகம் இந்துக்களைத்தான். முன்பு பாகிஸ்தான் உளவாளிகளாக பிடிபட்டவர்கள் யார் என்பதும் நமக்குத் தெரியும்.

அடுத்து மாலேகான் குண்டு வெடிப்பிலிருந்து அஜ்மீர் ஹைதரபாத் வரை முன்பு குண்டு வெடித்தவுடன் முஸ்லிம்களை கைது செய்தனர். பிறகு கைது செய்யப்பட்டது அனைவரும் இந்துத்வாவாதிகளே! தற்போது ஆதாரத்தோடு ஹேமந்த் கர்கரே பிடித்து கொடுத்த அத்தனை குற்றவாளிகளும் ஜாமீனில் வெளிவருகிறார்கள். நாடு உருப்பட்டு விடும்.

சில நாட்களுக்கு முன்பு கூட அத்வானியின் ரத யாத்திரை பிசுகிசுத்துப் போனதை கண்ட இந்துத்வா ஒரு சில முஸ்லிம்களின் துணையுடன் பைப் பாமை நம் தமிழகத்திலேயே வைக்கின்றனர். சரியாக வைத்தவர்களே போலீஸுக்கும் தகவல் கொடுத்து வழக்கம்போல் தர்பூசணி பழம் விறபவன்  போன்ற சிறந்த கிரிமினல்களை பிடித்து வைத்துள்ளனர். 'முஸ்லிம் தீவிரவாதிகள் பயங்கர வெடி குண்டுகளுடன் அத்வானியை கொல்ல சதி' என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரவலாக வந்து விட்டது. குண்டு வைப்பை கண்டித்து பாஜகவும் போராட்டம் நடத்த போகிறதாம். பிசுபிசுத்த அத்வானியின் ரத யாத்திரை இந்த செய்தியால் சிறிது சூடு பிடித்தது. ஆக இந்துத்வா வாதிகள் நினைத்தது நடந்து விட்டது. பிடி பட்டவர்கள் 'யார் வைக்க சொல்லி பணம் கொடுத்தது?' என்ற உண்மையை சொன்னாலும் பிறகு அது செய்தியாகவே வராது. அந்த அளவு ஆளும் வர்க்கத்தில் அவாள்களுக்கு சக்தி இருக்கிறது. இந்த இந்துத்வா கூத்தாடிகளும், இந்துத்வா பத்திரிக்கையினரும் என்னதான் திட்டம் போட்டு இஸ்லாமியர்களின் பெயர்களை களங்கப்படுத்த நினைத்தாலும் நடுநிலை வகிக்கும் இந்து மக்கள் இஸ்லாமியர்களோடு அதே சகோதர பாசத்துடனேயே பழகுகின்றனர். ஏனெனில் தன்னோடு அண்ணன் தம்பியாக பழகும் நம் நாட்டு இஸ்லாமியர்கள் கூத்தாடிகள் சொல்லும் இஸ்லாமியர்கள் அல்ல என்ற தீர்க்கமான முடிவில் இருப்பதால்தான் இது சாத்தியப்படுகிறது. அத்தகைய நல்லுள்ளம் படைத்த அந்த இந்து சகோதரர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இத்தகைய நல்லுள்ளம் கொண்ட நடுநிலை இந்து சகோதரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை இந்துத்வாவின் தில்லு முல்லுகள் தமிழகத்தில் எடுபடாது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.

மற்றபடி சரியான மசாலா கதையை சிறிது பாகிஸ்தான் சாயம் பூசி கல்லா கட்ட நினைத்துள்ளது இந்த கூத்தாடிகள் கூட்டம். விசேசமாக ஒன்றுமில்லை......

Saturday, November 05, 2011

படிப்பறிவு வந்து விட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமாமே! - நமபுங்கள்சென்னை, நவ. 4-தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமக்குத் தொடர்ந்து அவமரியாதை செய்யப்படுகிறது என்று குமுறுகிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன்.

செய்தியாளர்களிடம் நீதியரசர் கர்ணன் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது எஸ்.சி. எஸ்.டி ஆணையத்தில் புகார் செய்துள்ளது உண்மைதான். எனது புகார் மீது நடத்தப்படும் விசாரணையின்போது எல்லா உண்மைகளையும் தெரிவிப்பேன். உயர் நீதிமன்றத்தின் மாண்பை காக்க வேண்டியது நமது கடமை.

சக நீதிபதிகள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் என்ன?

குறிப்பிட்ட சகோதர நீதிபதிகள் மற்றும் சகோதரி நீதிபதியும் நான் தலித் என்ற காரணத்தால் அவமானப்படுத்துகிறார்கள் என்று புகார் செய்திருக்கிறேன். அதன் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

உங்களை அவமானப்படுத்திய நீதிபதிகள் யார், யார்?

விசாரணையில் அதை தெரிவிப்பேன். அதுவரை இந்த புகார் தொடர்பாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

உங்களை எப்போதிருந்து அவமானப்படுத்தினார்கள்?

2009 ஏப்ரல் 30ஆம் தேதியிலிருந்து இந்த கொடுமை நடக்கிறது.

ஏன் இதுவரை வெளியில் சொல்லவில்லை?

நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடக் கூடாது என்று பொறுத்துக் கொண்டிருந்தேன்.
சுயமரியாதை உள்ளவன் நான்!

மற்ற தலித் நீதிபதிகளுக்கும் இப்படி நடந்ததா?

நான் சுயமரியாதை உள்ளவன். அதை கடைப் பிடிப்பவன். மற்றவர்கள் பற்றி எதுவும் கூற முடியாது.

தலைமை நீதிபதியிடம் புகார் செய்தீர்களா?

அதற்கான அவசியம் இல்லை. தலித் சமு தாயத்தை சேர்ந்தவர்களுக்காகத்தான் எஸ்.சி.எஸ்.டி ஆணையம் உள்ளது. தலித் மீதான கொடுமைகளை தடுக்கவும், கட்டுப் படுத்தவும் இந்த கமிஷனுக்கு அதிகாரம் உண்டு. தலித் அல்லாதவர்கள்தான் நீதிமன் றத்தை அணுகமுடியும். வைகை, விஜயன் போன்ற வழக்குரைஞர்கள் நான் தலைமை நீதிபதியை சந்திக்காமல் ஆணையத்திற்கு சென்றுள்ளார் என்று கூறியுள்ளனர். புகார் கொடுப்பதற்கான இடத்தைதான் அணுகியிருக்கிறேன். தலைமை நீதிபதியை சந்தித்து புகார் கொடுப்பது தேவையற்றது.

நீதிபதிகள் பெயரை சொல்லுங்கள்!

விசாரணையின் போதுதான் சொல்வேன். புகாரில் கூட நீதிபதிகளின் பெயரைக் குறிப்பிட வில்லை.

எப்போதெல்லாம் உங்களை அவமானப் படுத்தினார்கள்?

தேனீர் விருந்து, டின்னர், மற்றும் நீதிபதிகள் கூட்டத்தின் போது இந்த அவமானங்கள் நடந்தன. எல்லா நீதிபதிகளும் என்று கூற முடியாது. குறிப்பிட்ட நீதிபதிகள் தான் இந்த செயலில் ஈடுபட்டனர்.

உங்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற போகிறார்கள் என்று தெரிந்ததால்தான் இப்படி குற்றச்சாட்டு கூறுவதாக பேசுகிறார்களே?

என்னை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை. நீதிமன்றத்தில் நான் பிறப்பித்த உத்தரவுகள் அடுத்த கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி என்ற பெயரை பெற்றவன் நான்.

வேறு வழக்கு பிரிவுக்கு (போர்ட் போலியோ) மாற்றம் செய்ததால் ஏற்பட்ட சிக்கலா?

அப்படி இல்லை. வேறு பிரிவுக்கு மாற்றுவது என்பது வாடிக்கையான ஒன்று.

அரசியல் பின்னணி உண்டா?
இந்தப் பிரச்சினையில் அரசியல் சம்பந்தம் உள்ளதா?

அரசியல் இல்லை.

வழக்குரைஞர் பின்னணி இருக்கிறதா?

நீதிபதிகள் சிலர் தூண்டிவிட்டதால் வழக்குரைஞர்களின் பின்னணி இருக்கலாம். எல்லாவற்றையும் விசாரணையின்போது தெரிவிப்பேன்.

எந்த மாதிரி அவமானம் உங்களுக்கு நேர்ந்தது?

ஒரு நீதிபதி தனது ஷூ காலால் தட்டினார். நாற்காலியில் எனது பெயர் எழுதப்பட்ட துண்டுச்சீட்டை கிழித்து அதை ஒரு நீதிபதி காலால் நசுக்க 2 நீதிபதிகள் பார்த்து ரசித்தனர். இந்த சம்பவம் குடியரசுதின நிகழ்ச்சியில் நடந்தது.

மற்ற தலித் நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள்?

தலித் நீதிபதிகள் சுய மரியாதையை கடைப் பிடிப்பதில் தோல்வியடைந்துள்ளனர். எனக்கு நேர்ந்த தொல்லை குறித்து மற்ற தலித் நீதிபதிகள் கேட்கவில்லை; நானும் சொல்லவில்லை. நீதித்துறையில் இது ஒரு கரும்புள்ளி. சுதந்திரத்துக்கு பிறகு இது
போன்று நடப்பது இதுவே முதல்முறை.

உங்கள் மீது வீடியோ ஆதாரத்துடன் குற்றச் சாட்டு கூறப்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறதே?

என் மீது குற்றச் சாட்டுகள் இருந்தால் வெளிப்படையான விசாரணைக்கு நான் தயார். எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமைக்கும் தலைமை நீதிபதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சகோதரி நீதிபதி என்று சொல்லியிருக்கிறீர்கள். பெண் நீதிபதியும் அவமானப்படுத் தினாரா?

பதில் கூற முடியாது.

உங்களுக்கு ஆதரவு தெரிவித்து சில வழக்குரைஞர்கள் சந்தித்ததாக பேச்சு எழுந்துள்ளதே?

எந்த ஆதரவும் தேவையில்லை. சட்ட ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நான் தயாராக உள்ளேன்.

இப்படி இதற்கு முன் நீதிபதிகள் பாதிக்கப் பட்டுள்ளார்களா?

நீதிபதிகள் வி.கனகராஜ், ஜெயபால், அசோக்குமார், பி.டி.தினகரன் ஆகியோர் என்னை மாதிரி சுயமரியாதை உள்ளவர்கள். அதனால் தான் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். என்னை பொறுத்தவரை சக நீதிபதிகள் குறுகிய மனப்பான்மையுடன் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடன், குறிப்பாக தலித் நீதிபதிகள் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள்.

இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார். அவர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தலைமை நீதிபதியிடம் கருத்து கேட்க சென்றபோது அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

-விடுதலை, 5-11-2011

இந்த செய்தியை படித்தவுடன் நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. சட்டத்தை வகுக்கும் அதிகாரத்தில் உரிய இடத்திலேயே தீண்டாமை இவ்வாறு கடைபிடிக்கப்பட்டால் சாமான்யனின் நிலை எந்த அளவில் இருக்கும். முன்பு ஒரு வாதம் வைக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் படிப்பறிவு பெற்று விட்டால் பிராமணர்களை போல் தலித்துகளும் சம அந்தஸ்தை பெற்று விடலாம் என்ற வாதம் முன்பு வைக்கப்பட்டது. உடனே நமது ஆட்சியாளர்கள் தலித்துகளுக்கு என்று இட ஒதுக்கீட்டை அதிகரித்தனர். பஞ்சாயத்துகளில் இட ஒதுக்கீடு பெற்ற பாப்பார பட்டி, கீரிப்பட்டி நிகழ்வுகள் முடிவில் யாருக்கு சாதகமாக இருந்தது என்பதை நாம் அறிவோம். மாவட்ட ஆட்சியரிலிருந்து கடை நிலை ஊழியர் வரை இந்த தீண்டாமை கடை பிடிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் மூல காரணம் யார்? எது?

நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்ட மலர் மன்னன் என்ற பதிவர் திண்ணையிலும், தமிழ் ஹிந்துவிலும் மனுவை ஆதரித்தும் மனு தர்மம் திரும்பவும் கடை பிடிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். இந்த மனுஸ்ருமிதி என்ன கூறுகிறது என்பதையும் சற்று பார்ப்போம்.

'பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும் எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்' - மனு த.சா.ஆ .1 சு., 100 என்றும் 'சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்' (மனு த.சா.அ. 8.சு 270) என்றும் 'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

பிராமணர் நாள் தோறும் பிச்சைக்காக ஊருக்குள் புகுந்து சுற்றி வர வேண்டும் - மனு த.சா.அ. 6 சு 43)

'சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும் ஓமம் பண்ணிய மிச்சத்தையும் கூட கொடுக்கலாகாது' - மனு ( த.சா.அ 4 சு. 80)

'பயிர்த் தொழில் நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்த தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்டதாகும்' மனு (த.சா.அ.10 சு 84)

'பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய சொன்னால் குற்றமில்லை' (மனு த.சா.அ.8 சு-112)

'ஒரு பிராமணன் தன்னைப் புலால் உண்ண வேண்டும் என்று பிறர் கேட்டுக் கொள்ளும் போதும் விதிப்படி சீரார்த்தத்தில் வரிக்கப்பட்ட போதும் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம்'

'அஜீகர்த்தர் என்னும் முனிவர் நூறு பசுக்களை வாங்கிக் கொன்று வேள்வி செய்து தமது பசியைத் தீர்த்துக் கொண்டார். அப்படிச் செய்தும் அவருக்குப் பாவம் நேரிடவில்லை' - மனு (த.சா.அ. 10 சு 105)

உண்ணத்தக்க உயிர்களை நாள்தோறும் கொன்று உண்டாலும் பாவத்தை பிராமணன் அடைய மாட்டான். பிராமணனாலேயே உண்ணத்தக்கவையும் கொல்லத்தக்கவையும் படைக்கப்பட்டிருக்கின்றன- மனு (த.சா.அ.5.சு- 30)

'பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக. ஆனால் பிராமணன் சூத்திரனின் பொருளை கொள்ளையிடலாம்' (மனு த.சா.அ.9.248)

பிராமணன் எத்தகைய குற்றங்கள் செய்தாலும் அவனைத் தூக்குப் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அவன் தலையை மட்டும் மொட்டை அடிக்க வேண்டும். அதுவே அவனுக்குத் தூக்குத் தண்டனைக்கு ஒப்பாகும். மற்ற வருணத்தார்க்கு கொலையே தண்டனை' மனு (த.சா.அ.379)

கொடிய குற்றம் செய்தாலும் பிராமணனைக் கொல்லாமலும், மற்ற எத்தகைய துன்பத்திற்கும் ஆளாக்காமலும் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்து அயலூருக்க அனுப்ப வேண்டும். (மனு த.சா.அ.சு 380)

அரசனானவன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனைக் கொல்ல நினைக்கக் கூடாது'
மனு (த.சா.க.8.சு.380)

நான் எழுதியது ஒரு சில சாம்பிளகளே! இன்னும் பல நூறு வசனங்கள் அள்ள அள்ள குறையாமல் வருகிறது. நான் கேட்பது இப்படி ஒரு கேடு கெட்ட சட்டத்தை நாடு முழுக்க தடை செய்யாமல் நாட்டு மக்களில் ஒரு சாரார் பயபக்தியோடு தினமும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேத பாட சாலைகளில் குழந்தைகளுக்கு சொல்லியும் கொடுக்கப்படுகிறது. இப்படி சிறு வயதிலிருந்தே கடவுளின் பெயரால் சிறுக சிறுக தீண்டாமை மனதிலே விதைக்கப்படுகிறது. எனவே தான் ஒரு சாரார் எவ்வளவு படித்திருந்தாலும் தீண்டாமையை ஆதரிக்க காரணமே! மலர் மன்னன் போன்ற எல்லாம் அறிந்த ஒரு பதிவரே இதற்கு வக்காலத்து வாங்கினால் தீண்டாமையை இன்னும் எத்தனை யுகமானாலும் மாற்றவே முடியாது. அந்த மக்கள் இஸ்லாத்தையும் கிறித்தவத்தையும் நோக்கி செல்வதையும் தடுக்க முடியாது.

குறள் 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

விளக்கம்
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)

டிஸ்கி: நண்பர் சவுக்கின் பதிவில் நீதிபதி கர்ணனைப் பற்றி சில தகவல்கள் வந்துள்ளன. அவர் ஒரு கேஸ் விஷயமாக சம்பந்தப்பட்ட பார்டடிகளிடம் வழக்கை சாதகமாக முடிக்க லஞ்சம் வாங்கியதாகவும் இது தெரிந்த தலைமை நீதிபதிகள் அவரை கண்டித்து விடுப்பில் செல்ல விட்டதாகவும் படித்தேன். தான் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்போது 'தீண்டாமை' என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதாகவும் செய்திகள் சொல்கிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர் நீதிபதி கர்ணனே!

ஆனால் படித்த மக்களி;டத்திலும் தீண்டாமை இன்றும் அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

Tuesday, November 01, 2011

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்


இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்

By BADEA ABU AL-NAJA | ARAB NEWS
Published: Nov 1, 2011 01:54 Updated: Nov 1, 2011 01:56

MAKKAH: Custodian of the Two Holy Mosques King Abdullah urged Islamic scholars and preachers on Monday to reach out to non-Muslim communities and said the message of Islam came addressing the whole humanity, not a particular community.
“We have to open up to other communities because the message of Islam does not address a particular community excluding others. In fact, it is a message for the whole humanity,” the king said in his opening speech at the 12th Makkah conference.
The king’s speech was read out by Makkah Gov. Prince Khaled Al-Faisal. The three-day conference is organized by the Muslim World League.

King Abdullah emphasized the duty of Muslims to spread the message of Islam all over the world. “Despite the material progress achieved by man, he is still suffering from a lack of spirituality,” he said while emphasizing the importance of dawa work.
In his keynote speech, King Abdullah said Islam is a comprehensive religion of peace and mercy. “The message of Islam explains how man and woman on this earth should live, with all its details.”

The king continued: “Islam alone presents a complete way of life based on divine values and presents a balanced approach toward life. It can save them from the present dilemma while protecting their material achievements.”

King Abdullah called for reforms in dawa work, keeping pace with modern developments. “We have to carry on dawa work with the intent of spreading our religion among other nations in the right form, highlighting its moderate teachings,” he said.

He said preachers should be able to address modern issues in the light of Islamic teachings and make use of modern information technology.

King Abdullah emphasized the fact that Muslims should change their lifestyle and behavior in accordance with the teachings of Islam to remove the existing poor impression about them from the minds of other communities.

“Setting a good example is the best way to defend Islam and encourage others to embrace our religion,” the king said while noting the Kingdom’s efforts in the service of Islam and Muslims all over the world.

Saudi Arabia builds mosques, Islamic centers, institutes and schools in different parts of the world. It also finances a number of Islamic research chairs in leading international universities.

King Abdullah took the initiative to promote dialogue between followers of different faiths and cultures and establish an international counterterrorism center in New York. “There is a single entity derived from the Qur’an and Sunnah. Islam cannot be classified as political and nonpolitical or extremist and moderate.”

King Abdullah commended the efforts being made by MWL to introduce Islam and confront the smear campaigns against Islam and Muslims.

Sheikh Abdul Aziz Al-Asheikh, grand mufti, Abdullah Al-Turki, secretary-general of MWL, and Yousuf Salama, imam and khateeb of Al-Aqsa Mosque, also addressed the opening session. “Islamic preaching is a duty imposed on Muslims by the Shariah,” said Al-Turki.

The grand mufti denounced the move by enemies to tarnish the image of Islam. “Islamic preachers are not terrorists. If any individual has made any mistake it should not be generalized,” he said and stressed the need to do dawa with wisdom.

சவுதி மன்னர் குர்ஆனும் நபிமொழியும் என்ன சொல்கிறதோ அதனையே வழிமொழிகிறார். ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே இஸ்லாத்தை போதித்துக் கொண்டிருக்காமல் அனைத்து மக்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். இஸ்லாத்தின் மேல் மாற்றார்கள் செலுத்திய எதிர்ப்புகளை அன்போடு எடுத்து சொல்லி உண்மையை விளங்க வைக்க வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும்.


'மனிதர்களே! இத்தூதர்(முஹம்மத்) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள். அது உங்களுக்கு சிறந்தது'
-குர்ஆன் 4:170

-----------------------------------------------------

kindly translate to தமிழ். – கண்ணன்

நண்பர் கண்ணனின் வேண்டு கோளுக்கினங்க மன்னர் அப்துல்லாவின் செய்தியின் தமிழாக்கத்தின் சுருக்கம்:

'முஸ்லிம் வேல்ட் லீக்' என்ற அமைப்பின் சார்பில் மூன்று நாட்கள் மெக்காவில் நடைபெற்ற கூட்டத்தில் மன்னர் அப்துல்லா உலக மக்களுக்கு விடுத்த செய்தி:

'இஸ்லாம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கோ ஒரு குறிப்பிட்ட மொழியினருக்கோ உரியதன்று. இது முழு உலக மனித குலத்துக்கும் சொந்தமானது. இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற அழகிய வழிமுறையை நமக்கு கற்றுக் கொடுக்கிறது இஸ்லாம். வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை எவ்வாறு சரி செய்து கொள்வது என்பதற்கும் இங்கு வழி இருக்கிறது. தற்போது உலக மக்கள் அனுபவிக்கும் குழப்பமான பல நிலைகளுக்கு தீர்வை இஸ்லாம் வழங்குகிறது.

முஸ்லிம்கள் நாம் நம்முடைய அழைப்புப் பணியை புதிய அணுகு முறையில் கொண்டு செல்ல வேண்டும். கணிணி யுகத்துக்கு தக்கவாறு நமது அழைப்புப் பணியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் இன்றைய முன்னேறிய உலகுக்கு தக்கவாறு இஸ்லாம் வழங்கும் தீர்வுகளை மாற்றாருக்கு தெளிவாக்க வேண்டும். அறிவியல் முன்னேற்றத்தில் தற்போது புழக்கத்தில் இருக்கும் தகவல் தொடர்பு சாதனங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களைப் பற்றிய தவறான அபிப்ராயம் மாற்றார் மத்தியில் உள்ளது. எனவே முஸ்லிம்கள் குர்ஆன் ஹதீஸ் சொன்னபடி தங்களது வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிமகளாகிய நாம் சிறந்த உதாரணமாக இருந்தால்தான் மாற்றார் இஸ்லாத்தை நேசிக்க வழி வகுக்கும்.

சவதி அரேபியா உலகம் முழுவதும் இஸ்லாமிய கலாசார மையங்களை நிறுவி வருகிறது. பல நாடுகளில் பள்ளிவாசல்களையும் கட்டி வருகிறது. மார்க்கத்தை போதிக்க பல கல்விச் சாலைகளையும் நிர்வகித்து வருகிறது. இதை உலக முஸ்லிம்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.'