Followers

Sunday, April 29, 2012

இந்திய + இத்தாலிய இரும்பு மனுஷி!!

இந்திய + இத்தாலிய இரும்பு மனுஷி!!

உண்மையில் நாம் பாராட்டத்தான் வேண்டும். எத்தனை இழப்புகள்! எத்தனை சோகங்கள்! அத்தனையையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் வீறு கொண்டு எழுந்து இன்று வரை பலருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் சோனியா அம்மையாரை என்ன பாராட்டினாலும் தகும். பொதுவாக அரசியல்வாதிகளையே எனக்கு பிடிக்காது. ஆனால் இந்த இத்தாலிய பெண்மணியின் அறிவும் சமயோஜிதமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது..
இத்தாலியில் உள்ள லூசியானாவில் பிறந்தார். 'எட்விகி அண்டோணியா அல்பினா மையினோ' (யப்பா... எவ்வளவு கஷ்டம் உச்சரிப்பில் :-)) என்பது இவரது இயற் பெயர். 1946 ல் பிறந்தார். ராஜீவ் காந்தியை மணந்ததற்கு பிறகு தனது பெயரை 'சோனியா காந்தியாக' மாற்றிக் கொண்டார்.

மேல் நாட்டு மருமகளாக வந்து இன்று உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக எல்லோராலும் பார்க்கப்படுகிறார். இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கு மிக்க நபராக 2004ல் போர்பஸ் பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டார். உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் மூன்றாவது இடம் வகிக்கிறார். 'டைம்' பத்திரிக்கை இவரை 2007,2008 ஆண்டுகளில் 100 அதிக செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது. எவ்வளவு சக்தி இருந்தாலும் நம் அம்மையார் ஜெயலலிதா போல் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடாமல் வெகு எளிமையாக எந்நேரமும் புன் சிரிப்போடு வலம் வருவது எல்லலோராலும் செயல்படுத்த முடியாத ஒன்று.
தனது கணவன் இறந்த சோகம்: சில ஆண்டுகளுக்கு முன்னால் மாமியார் சுடப்பட்டு இறந்த சோகம். அதற்கும் முன்னால் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த சோகம்: என்று அடுக்கடுக்காக வந்த சோகங்களை எல்லாம் புறந் தள்ளி அதனையே தனது முன்னேற்றத்துக்கு படிக்கற்க்களாக்கி இன்று புகழின் உச்சியில் இருக்கிறார் சோனியா! பிரதமர் பதவி சில காரணங்களால் கிடைக்காமல் போனாலும் அந்த எண்ணத்தையே தூரமாக்கி அந்த பிரதமரையே ஆட்டி வைக்கும் பொறுப்பை சுமந்து இன்று வரை எந்த குறையும் இல்லாமல் செய்து வருகிறார்..


(இத்தாலியில் சோனியா காந்தி அவர்கள் பிறந்த வீடு)

இவருடைய இடத்தில் நம்ம ஜெயலலிதா அம்மாவை உட்கார வைத்திருந்தால் மன்மோகன் சிங்கின் கதி என்ன ஆகியிருக்கும் என்பதையும் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். ஜெயலலிதாவுக்கு இருந்த பவரால் வாஜ்பாயை எப்படி எல்லாம் ஆட்டி வைத்தார் என்பதை நாம் கண்கூடாக பார்த்தோம்.

தனது கணவனை கொன்றவர்களை இன்னார்தான் என்று தெளிவாக தெரிந்தும் தனக்கு அதீத பவர் இருந்தும் அதனை உபயோகிக்காமல் அவர்களை பழி வாங்காமல் பொறுமை காத்தாரே அதை எண்ணியும் நான் வியந்ததுண்டு. தான் பொறுமையாக இருந்ததோடு அல்லாமல் தனது குழந்தைகளையும் அதே பொறுமைசாலிகளாக வளர்த்திய விதமும் அருமை. சிறைச் சாலையில் உள்ள நளினியை சந்தித்து 'என் அப்பாவை ஏன் கொன்றீர்கள்?' என்று வருத்தத்தோடு கேட்டாரே அந்த நேரம் மிக உயர்ந்து விட்டார் பிரியங்கா காந்தி. இவ்வளவு பக்குவமாக தனது குழந்தைகளை வளர்த்த திருமதி சோனியா காந்தியை இங்கு நாம் நினைத்துப் பார்க்கிறோம்.
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படத்தான் இந்தியா முதலில் முடிவெடுத்தது. ஆனால் தமிழகத்தின் ஒட்டு மொத்த எம்பிக்களும் கடைசி போர்க்களக் காட்சிகளை காணொளியாக போட்டுக் காண்பித்ததும் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பல இடங்களில் சுடப்பட்டு இறந்து கிடந்த காட்சியும் சோனியா காந்தியின் மனதை ரொம்பவுமே உலுக்கி விட்டது. இதன் பிறகு தான் மன்மோகன் சிங்குக்கு போன் போட்டு இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முயற்ச்சித்தார் என்று நெருங்கிய காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. ராஜபக்ஷே நேரிடையாக கேட்டு கொண்டும் அதற்கு செவி சாய்க்காமல் அதற்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் நிலை பாட்டினை எடுத்தது பலராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. இதனால் பெரும் மாற்றம் வந்து விடாது என்றாலும் இலங்கை அரசாங்கத்தை மிரட்ட இது ஒரு வாய்ப்பாக அனைவருக்கும் அமைந்தது.
The Congress president heard out her partymen. It seems she was particularly chilled by the photo of Prabhakaran's young son, shot in the chest, but looking like he was peacefully sleeping.

Sonia assured the Tamil Nadu MPs that she would take action. Soon enough, she had told the PM that India could not be seen to be voting in favour of the Rajapaksa government.

The truth is that this time, the India-Sri Lanka relationship has turned on the death of a child. The irony is that he is Prabhakaran's son- "Times of India " reports. 30-march-2012

எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களின் புனர் வாழ்வுக்காக பல திட்டங்களை சோனியா காந்தி செயல்படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக இலங்கையில் சுஷ்மா ஸ்வராஜ் பேசும் போது
“உண்மையாக கூறுவதாயின் எல்லோருக்கும் அரசாங்கமே வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதும் தவறான வாதமாகும். அவ்வாறு நோக்கும் போது தொழிற் பயிற்சி வழங்கும் மையங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் நாம் பல்வேறு தொழில்சார் பயிற்சிகளில் தேர்ச்சிபெற்றுள்ளோம். அதன் மூலம் கிடைத்த நிபுணத்துவத்தையே நாம் இன்று இலங்கைக்கு வழங்கியுள்ளோம்.
ஏற்கனவே இது தொடர்பான பயிற்சிகளை நாம் இலங்கை போதனாசிரியர்களுக்கு அளித்துள்ளமையினால் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்நவீன உபகரணங்களை கையாளவும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவும் முடியுமாகவிருக்கும். இதனை இங்குள்ள மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான பிணைப்பை இது மேலும் பலப்படுத்துமெனவும் நான் நம்புகின்றேன்.

இந்தியா இலங்கையில் 52 திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இவற்றுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது. இந்த ஒத்துழைப்பு காரணமாக இத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி வருகிறது. போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொழில்துறை என பல வகையான திட்டங்களும் இவற்றில் அடங்குகின்றன.
நட்புறவுமிக்க நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கு இந்தியா உட்கட்டமைப்பு வசதிகள் விடயத்தில் உதவிகளை வழங்கியுள்ளது. இதேநேரம் இலங்கை புதிய உதவிகளுக்கான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. இவையனைத்தையும் இயலுமான சகலவழிகளிலும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டும்” என்றார். இந்தியா ஏற்கெனவே பல குடியிருப்புகளை கட்டி அதில் தமிழர்களை குடியமர்த்தியுள்ளது.

நம்ம தாத்தா கலைஞர் இப்பொழுதுதான் தனி ஈழம் பற்றி பேச ஆரம்பித்துள்ளார். தேர்தல் நெருங்குகிறதல்லவா அதுதான் முக்கிய காரணம். ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் நம்புவதை விடுத்து இலங்கைத் தமிழர்கள் சோனியா காந்தியை நம்பலாம். வாக்கு கொடுத்தாலும் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். நெடுமாறன், வைகோ, சீமான் போன்ற காமெடி பீசுகளை எல்லாம் தூரமாக்கி விட்டு சோனியா காந்தியிடம் நட்புறவை வளர்த்தால் நிரந்தர தீர்வாக இலங்கை தமிழர்களுக்கு அமையும்.

'புலம் பெயர்ந்த தமிழ் ஈழம்' 'தனி ஈழம்' என்பதெல்லாம் கேட்க நன்றாக இருக்கும். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சில ஓட்டுக்களை இந்த கோசங்கள் பெற்றுத் தரும். ஒன்று பட்ட இலங்கையில் மத்திய அரசின் சோனியா காந்தியின் தலையீட்டில் அமையும் ஒரு தீர்வுதான் நிரந்தர தீர்வாக அமையும். காலம் கடத்தாமல் இலங்கைத் தமிழர்கள் சோனியாவை சந்தித்து நிரந்தர தீர்வுக்கு முயற்ச்சிக்கலாம்.

சில லட்சத்துக்கு அதிபதிகளானவர்களின் வாரிசுகள் எல்லாம் தனது வயதொத்த இளைஞர்களோடு பார்களில் வலம் வரும் போது ராகுல் காந்தியோ தலித்களின் குடிசையில் படுத்து கூழ் கஞ்சியை சாப்பிடுவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். இவை எல்லாம் அரசியல் ஸ்டண்ட் என்று ஒதுக்கி விடவும் முடியாது. ஏனெனில் இவை எல்லாம் செய்து காண்பிக்காமலேயே இன்று வரை ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது காங்கிரஸ். 40 வயதுக்கு மேலாகியும் இன்று வரை தனது திருமணத்தைப் பற்றியே எண்ணாமல் நாட்டின் இளைஞர்களின் முன்னேற்றத்தில் அதீத கவனம் செலுத்தி வரும் ராகுல் அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஒரு ரோல் மாடல் என்றால் மிகையாகாது.

நம் ஊரிலும் பதவியில் இருந்தபோது வளர்ப்பு மகனுக்காக நம்ம 'அம்மா' :-) நடத்திய திருமணமும் நகைகளோடு கொலு பொம்மைபோல் போஸ் கொடுத்த இரண்டு பேரையும் நினைத்து பார்க்கிறேன். அங்கு டெல்லியில் கதர் துணிகளோடும் எந்த நகைகளும் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் பிரியங்கா காந்தியையும் நினைத்து பார்க்கிறேன்.


சோனியா காந்தி தனது பிள்ளைகளை பிற காங்கிரஸ் எம்.பிகளுக்கு எளிமையான பழக்க வழக்கங்கள் மேற்கொள்ள வலியுறுத்தினார், அதற்கு முன்னுதாரணமாக அவர் 2009 செப்டம்பர் மாதம் 14 ஆம்நாள் புதுடெல்லியில் இருந்து மும்பைக்கு சிக்கன வகுப்பில் விமானப்பயணம் செய்தார். அதனால் அவர் ரூ 10,000 மிச்சப்படுத்தினார். எம்பிக்களின் ஊதியத்திலிருந்து (ஒரு எம்.பியின் மாத ஊதியம் ரூ 16000)20% இந்தியாவில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டோர்களுக்கென நிதியளிக்க வலியுறுத்தினார். இது போன்ற செயல்களெல்லாம் அவரது எளிமையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

கருணாநிதியிடம் 'ஃபாதர்...ஃபாதர்' என்று அன்பொழுக பழகினாலும் கனிமொழி விஷயத்திலும் ராஜா விஷயத்திலும் தான் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக கூறிய அந்த நேர்மையையும் இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அத்வானி, நரேந்திர மோடி, வாஜ்பாய், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களோடு ஒப்பிடும் போது மிக உயர்ந்த இடத்தில் உயர்ந்து நினைக்கிறார் சோனியா காந்தி. அவரது சேவையால் நம் நாடு மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்து வல்லரசாக மாற வாழ்த்துவோம்.

டிஸ்கி: இந்த பதிவை அமைச்சர்கள் சிதம்பரமோ, வாசனோ பார்த்து விட்டு சோனியா அம்மையாரிடம் சொல்லி எம்பி சீட்டோ, எம்எல்ஏ சீட்டோ சுவனப்பிரியனுக்கு வாங்கி கொடுத்தால் புண்ணியமாக போகும். பின்னே...நானும் கோடிகளில் புரண்டு பணம் பண்ண வேண்டாமா? எத்தனை காலத்துக்குத்துததான் ஒரு கம்பெனியில் மாத சம்பளத்துக்கு பொட்டி(கணிணி) தட்டிக் கொண்டு இருப்பது? :-)

Saturday, April 28, 2012

மதுரை ஆதீனமாக சுவாமி நித்தியானந்தா!

மதுரை ஆதீனமாக சுவாமி நித்தியானந்தா!

பெங்களூரு: திருஞானசம்பந்தர் தோற்றுவித்த, 1,500 ஆண்டு பழமை வாய்ந்த மதுரை ஆதீனத்தின், 293வது குரு மகா சன்னிதானமாக, சாமியார் நித்யானந்தா முடிசூட்டப்பட்டார். இதை, நடிகை ரஞ்சிதா முதல் வரிசையிலிருந்து பார்த்து ரசித்தார். பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஆரவாரம் செய்தனர்.

292வது மதுரை ஆதீனமாக, சீர்காழியின் அருணகிரிநாதர் ஞானதேசிக பரமஹம்சர் 1975ல் நியமிக்கப்பட்டார். தற்போது 293வது மதுரை ஆதீனமாக, நித்யானந்தாவுக்கு குரு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதி நித்யானந்தா ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில், தற்போதைய மதுரை ஆதீனம், நித்யானந்தாவிடம் செங்கோல் கொடுத்து, மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு என்று அறிவித்து, வெள்ளை பேப்பரில் கையெழுத்திட்டு கொடுத்தார். இருவரும் தங்கக் கிரீடத்துடன் காட்சியளித்தனர். பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். நடிகை ரஞ்சிதா, புன்னகைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார்.மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேசியதாவது: மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் என்று, சிவபெருமான் கனவில் கூறினார். நித்யானந்தா நட்பு கிடைத்தது. பிடதியில் நடக்கும் வழிபாடுகள் பிடித்தன. ஆசிரம பூஜையில் இளம் பெண்கள் உட்பட பலர் நடனமாடி ஆண்டவனை வழிபடுவது, என்னைக் கவர்ந்தது. நானும் ஆடினேன். மனிதன் எப்போதும் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும்.

பல கோடிக்கு சொத்து: மதுரை ஆதீனத்துக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இதை பாதுகாத்து, ஆதீனத்தை வளர்க்க, நித்யானந்தாவை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை. அவர் புனிதமானவர். பணத்தால் எதையும் பெற்று விடலாம்; பக்குவப் பட்ட மனிதனை வாங்க முடியாது. மதுரை ஆதீனத்தை சர்வதேச மையமாக அவர் மாற்றுவார். விரைவில் அவருக்கு பட்டமளிப்பு விழா நடக்கும். கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வயதில்லை: நித்யானந்தா கூறியதாவது: தற்போதைய மதுரை ஆதீனத்தின் பதவிக் காலம் கூட என் வயதில்லை. நான் பிறந்தது, 1978ம் ஆண்டு தான். மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான பல கட்டடங்களை, அவர் தான் உருவாக்கினார். மதுரை ஆதீனம், அகில உலக ஆன்மிக இயக்கமாக தரம் உயர்த்தப்படும். முதல் கட்டமாக, 1 கோடி ரூபாய் வழங்குகிறேன். ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களை புனரமைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும். ஜூன் 5ம் தேதி, மதுரையில் நடக்கவுள்ள குரு பூஜையில் சன்னிதானத்திற்கு தங்க சிம்மாசனம், தங்க கிரீடம், தங்க செங்கோல் வழங்கப்படும், மதுரை ஆதீனத்தில், 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். விரைவில் மருத்துவக் கல்லூரி துவக்கப்படும். மதுரை ஆதீனத்தை வளர்ப்பதற்கு தடை வந்தால் தகர்ப்பேன் என்றார்.
-தின மலர்
27-04-2012

ஒரு நல்ல மனிதரை ஆதீனமாக நியமிக்க சிவ பெருமானே கனவில் வந்து சொன்னதன் பேரில் இன்று புயலென புறப்பட்டு மதுரை ஆதீனமாக பொறுப்பேற்ற சுவாமி நித்யானந்தா அவர்களை தமிழர்கள் என்ற முறையில் வரவேற்போம். கூடுதலாக கலைச் சேவை செய்து வரும் ரஞ்சிதாவும் பக்க பலமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் இனி ஆன்மீகம் தழைத்தோங்கும். எத்தனை பெரியார்கள் வந்தாலும் தமிழகத்தில் ஆன்மீகத்தின் வாயிலை அடைக்க முடியாது என்பதற்கு உதாரணமாக சுவாமி நித்தயானந்தா திகழ்கிறார்.

சார்வாகன், இப்னு ஷகீர், நரேன், கோவி கண்ணன், தருமி, தங்கமணி, ராவணன், போன்ற இந்து மத ஆர்வலர்கள் இனி கவலைப் பட வேண்டாம். இஸ்லாத்துக்கும் கிறித்தவத்துக்கும் மதம் மாறிய அனைத்து இந்துக்களையும் சுவாமி நித்யானந்தா அவர்கள் தனது சொற்பொழிவால் தாய் மதத்துக்கே திரும்ப அழைத்து வந்து விடுவார். ரஞ்சிதா பாயிண்டுகளை எடுத்துக் கொடுக்க கூடவே இருப்பதால் இனி ஒரு கவலையும்பட தேவையில்லை. 'சொர்க்கத்து கன்னிகள்', 'கில்மான்கள்' என்றெல்லாம் இணைய இஸ்லாமிஸ்டுகளை தருமி போன்றவர்கள் இனி வம்புக்கு இழுக்கத் தேவையில்லை. அந்த காரியத்தையும் சுவாமி நித்தயானந்தா அவர்களே பார்த்துக் கொள்வார்.

இனி உலகம் முழுவதும் நித்யானந்தா தனது கிளைகளை பரப்பி இஸ்லாத்தின் வளர்ச்சியை ஓரளவு தடுத்து விடுவார். புராதன மதத்தின் பெருமை இனி உலகமெங்கும் பரவும். தமிழனின் பெருமை இனி தரணி எங்கும் பரவும்.'தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!' என்று தமிழர்கள் தங்கள் காலர்களை இனி தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

Friday, April 27, 2012

சிவ சங்கரன் யஹ்யாவாக மாறிய அற்புத நிகழ்வு!

சிவ சங்கரன் யஹ்யாவாக மாறிய அற்புத நிகழ்வு!

ஒரு மனிதனுக்கு எந்த நேரத்தில் எப்பொழுது மாற்றம் வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இறைவன் நாடி விட்டால் அது எந்த நெரமும் நடந்து விடும் என்பதற்கு சகோதரர் சிவ சங்கரன் ஒரு எடுத்துக் காட்டாக உள்ளார். இஸ்லாம் முதன் முதலாக கரீம் என்ற பள்ளி வகுப்புத் தோழன் மூலம் அறிமுகமாகிறது. கறீம் தான் மத்ரஸாவில் கற்ற பல பாடங்களை சிவ சங்கரனுக்கும் சொல்லிக் கொடுத்துள்ளார். அன்று ஆரம்பித்த தேடல் இன்று சவுதி அரேபியா வந்து யஹ்யாவாக பரிணமித்து அவரை இஸ்லாத்தை ஏற்க வைத்தள்ளது.

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவரது மனைவி சிவ சங்கரனை கடுமையாக எதிர்த்துள்ளார். குழந்தைகளோடு சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுமுள்ளார். ஆனால் இறைவனின் கிருபையால் அந்த சகோதரியும் குர்ஆனை படித்து விளங்கி குழந்தைகளோடு இன்று இஸ்லாத்தில் ஐக்கியமாகி உள்ளார்.

இவர் இஸ்லாத்தை ஏற்பதை அறிந்து கொண்ட சில இந்துத்வ நண்பர்கள் இவரை மிரட்டியும் உள்ளனர். இவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். ஏக இறைவனுக்கு முன்னால் அந்த இந்துத்வ நண்பர்களின் மிரட்டல் எந்த சலனத்தையும் இவர் உள்ளத்தில் ஏற்படுத்தவில்லை. இஸ்லாத்தை ஏற்று உறுதி மொழியையும் மொழிந்தார். ஏக இறைவனை மட்டுமே இனி வணங்குவார். முகமது நபி சொன்னதன்படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்.
யஹ்யாவாக மாறி விட்டதால் இனி கேரள மாநிலத்தில் யாரும் இவரது சாதியை நோட்டம் விட மாட்டார்கள். 'நீ உயர்ந்த சாதி: நான் தாழ்ந்த சாதி' என்ற பட்டி மன்றங்களுக்கெல்லாம் அவரது வாழ்வில் அவசியம் இருக்காது. உலக முஸ்லிம்களின் தோழராக இனி பார்க்கப்படுவார். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற வார்த்தைகளை வெறும் உதட்டளவில் சொல்லாமல் இனி உளளத்தளவில் சொல்லலாம்.

இஸ்லாமிய உலகில் புதிதாக பூத்திருக்கும் சிவசங்கரன் என்ற யஹ்யாவை ஆரத் தழுவி அரவணைப்போம்.

'அழகிய செய்தியை இறைவனே அருளினான். அவை திரும்ப திரும்பக் கூறப்பட்டதாகவும் ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளன. இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும் உள்ளங்களும் இறைவனை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே இறைவனின் நேர்வழி'
-குர்ஆன் 39:23


சிவசங்கரன் இதற்கு முன் செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு புதிய மனிதராக இஸ்லாமியராக உலகில் பிரவேசிக்கிறார். குர்ஆன் சொன்னதன் படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அந்த இறைவன் வாக்களித்த சொர்க்க வாழ்வை ஏற்படுத்திக் கொள்வார். அதற்காக நாமும் பிரார்த்திப்போம்.

By JEDDAH: P.K. ABDUL GHAFOUR
Published: Apr 26, 2012 22:25 Updated: Apr 26, 2012 22:25

When Shivashan-karan, a young Hindu farmer from the south Indian state of Kerala embraced Islam, he had to face a lot of troubles and tribulations. Many forces from within his family and outside had tried to discourage him from accepting Islam as his new way of life.

But he stood steadfast in the new religion, which he embraced after studying the Holy Qur'an and reading Islamic books. Ever since he became a Muslim, he has been trying to bring his family members and close friends to the fold of Islam by explaining to them the important features of the divine religion.

Speaking to Arab News, he explained the circumstances that prompted him to embrace Islam. It began when he was a primary school student when his classmate Kareem used to tell him what he had learned from the madrassa (Islamic school), including the fundamentals of Islam, the concept of Paradise and Hell.

He was also aware of the importance of life after death. As a teenager he used to work for daily wages with other laborers. At that time he had seen the injustice being committed to those workers by their employers. "This strengthened my belief in the day of judgment because it is essential to punish corrupt employers for doing injustice to their poor workers," he pointed out. When he was 32 another incident took place that strengthened his faith in God. A Muslim friend of him was practicing black magic in the neighborhood and he was against it. Fearing that Shivashankaran's challenge would affect his business, the magician warned him that a big catastrophe would befall on him within 90 days. "I was really afraid and prayed to God in the darkness of that night, raising my hands, to protect me from that man's evil designs and punish him for his black magic. God heard my prayer as his magic did not affect me and was inflicted by the deadly disease of cancer. He was a strong man with a stout body and within 90 days he became a lean person. I never expected God would answer my prayer that quickly. He looked like a Satan and even his children were afraid of approaching him and he had tried to commit suicide twice before his death."
After having strengthened his faith in God and the Hereafter, it was easy for Shivashankaran to understand the Qur'an when a Muslim friend gave him the holy book to read. Soon after becoming a Muslim, Yahya (his new name) started propagating the faith among his family members, starting from wife, sisters and daughters. His wife and a sister have already declared their Shahada, pronouncing there is no god, except Allah and Muhammad is His Prophet, in addition to four friends. When his family saw him reading so many books on Islam, they were suspicious about his plan. When he told his wife and children about his plan to accept Islam as his new religion they threatened they would commit suicide. "By the grace of God I was able to overcome those difficult situations."

Some family members with the support of local Hindu leaders threatened either to kill him or break his bones. "But God gave me the strength to face those threats, and I have been praying for my brothers and sisters to accept Islam to save themselves from the Hell."

Yahya also explained how he changed the lifestyle of a Muslim gangster. "He was a drunkard and a powerful man. Everybody in the town feared him. When he heard me talking to another Hindu friend about Islam, he was amused to know what we were discussing. He also asked me to tell him more about Islam because he was not aware of its teachings. He offered me every support."
When some Muslim friends asked him to declare Shahada in the beginning, Shivashankaran was a bit hesitant. He was thinking about the consequences and the tremor it would create in his house and family. Consequently, he read all available Hindu scriptures including Bhagavad Geeta and Mahabharat with the hope it would take him to the Paradise without embracing Islam. "I could not find anything in those scriptures that would save me in the day of judgment," he said. However, it helped him talk to Hindu leaders with confidence when they tried to discourage him from becoming a Muslim. An avid reader of Islamic books, Yahya called upon his Muslim brethren to learn more about their religion by studying the Qur'an and Sunnah and set a good example to others through their lives.

-Arab News 26-04-2012

Wednesday, April 25, 2012

குளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா?

குளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா?
கேள்வி: மாற்று மதத்தவர் ஒருவர் - அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும்! -எஸ். ராஜா முஹம்மது, காயல்பட்டணம்

விளக்கம்: இறைவன் உயிரினங்களில் ஏற்கனவே படைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான மரபணுக்களில் ஒன்றை எடுத்து அதை வளர்த்துக் காட்டுவது தான் குளோனிங். இது படைத்தல் ஆகாது.
 
 


மண்ணிலிருந்தோ
, உலோகத்திலிருந்தோ ஒரு உயிரணுவையோ, அல்லது மரபணுவையோ படைக்கச் சொல்லுங்கள்! எறும்பின் மரபணுவைக் கூட மனிதனால் படைக்க முடியாது

நான் உங்களிடம் தருகின்ற விதையை தண்ணீர் ஊற்றி வளர்த்தால் நீங்கள் படைத்தவராக மாட்டீர்கள். இறைவன் படைத்து வைத்துள்ளவற்றை மனிதன் கண்டுபிடிக்கிறானே தவிர படைக்கவில்லை.


உயிரணுவும்-மரபணுவும் இல்லாத களி மண்ணிலிருந்து அவற்றை அல்லாஹ் எப்படி உருவாக்கினானோ அப்படி உருவாக்கும் போது தான் மனிதன் கடவுள் வேலையைச் செய்தான் எனக் கூற முடியும். ஒருக்காலும் இது மனிதனால் ஆகாது.

எனவே குளோனிங் மூலம் படைக்கப்பட்டவர்களும் இறைவனால் தான் படைக்கப்படுகின்றன்ர் என்பதால் அவர்களும் இறைவனை வணங்கியாக வேண்டும்
 
 

  கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா?
கேள்வி: மனித வளர்ச்சியில் கருவறையின் காலம் சராசரி பத்து மாதங்கள். குர்ஆனில் 2:233-வது வசனம் பால்குடியின் காலம் 2 வருடம் எனக் கூறுகிறது. இவை இரண்டும் சேர்ந்தால் மொத்த மாதங்கள் முப்பத்து நான்கு ஆகிறது. இப்படியிருக்க, அல்குர்ஆனின் 46:15-வது வசனத்தில் கருவறை மற்றும் பால்குடியின் கால அளவு 30 மாதங்கள் எனக் கூறுகிறது. இரண்டும் முரண்படுகிறதே! என்ற என்னுடைய மற்றும் என் தோழருடைய கேள்விக்கு விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். - எம்.ஏ. பக்கீர் முஹம்மது, தென்காசி.


பதில்: 2:233-வது வசனத்தில் மட்டுமின்றி 31:14 வது வசனத்திலும் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.


ஆனால், 46:15-வது வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.


அதில், பாலூட்டும் காலங்கள் என்று இறைவன் கூறிய இரண்டு வருடங்களை (24 மாதங்களை) கழித்தால் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று ஆகிறது. ஒரு குழந்தையின் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று எந்தக் காலத்திலும் எவரும் கூறியதில்லை. ஏறத்தாழ பத்து மாதங்கள் என்று இன்றைய சமுதாயம் விளங்கி வைத்துள்ளது போலவே திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்து மக்களும் விளங்கி வைத்திருந்தனர்.


கர்ப்ப காலம் பத்து மாதம் என்று அனைத்து மனிதர்களும் விளங்கி வைத்திருக்கும் போது, 'கர்ப்ப காலம் ஆறு மாதம்' என்று குர்ஆன் கூறுகிறது என்றால் வேண்டுமென்றே தான் அவ்வாறு கூறுகிறது. இந்த இடத்தில் அவ்வாறு குறிப்பிடுவது தான் பொருத்தமானதாகும்.


இறைவன் வேண்டுமென்றே அனைவரும் தெரிந்து வைத்துள்ள நிலைக்கு எதிராகக் கூறுகிறான் என்றால் இதற்கு ஆழமான பொருள் இருக்கும் என்று சிந்தித்து, கரு வளர்ச்சியை ஆராயும் போது இவ்வசனம் இறை வார்த்தை என்பதை தனக்குத் தானே நிரூபிக்கும் அதிசயத்தைக் காண்கிறோம்.

 
மனிதனுக்கு என்று தனியான வித்தியாசமான வடிவம் உள்ளது. மற்ற விலங்கினங்களுக்கு என்று தனியான வடிவம் இருக்கிறது. மனிதன் கருவில் விந்துத் துளியாகச் செலுத்தப்படுகிறான். பின்னர் கருவறையின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு வளர்கிறான். அதன் பின்னர் சதைக் கட்டியாக ஆகின்றான். இந்தக் காலக்கட்டங்களில் மனிதன் தனக்கே உரிய வடிவத்தை எடுப்பதில்லை. தாயின் கருவறையில் இருக்கும் ஆடு எவ்வாறு ஒரு இறைச்சித் துண்டு போல் கிடக்குமோ அது போலவே மனிதனும் இருக்கிறான். கைகளோ, கால்களோ எதுவுமே தோன்றியிருக்காது.


கருவறையில் இந்த நிலையை அடைந்த இறைச்சித் துண்டைப் பார்த்து இது மனிதனுக்குரியது. இது இன்ன பிராணிக்குரியது என்றெல்லாம் கூட கூற முடியாது. ஆய்வும், சோதனைகளும் நடத்திப் பார்த்தாலும் அதில் மனிதனுக்குரிய அம்சம் ஏதும் இருக்காது.


இந்த நிலையைக் கடந்த பின் தான் மனிதனிடம் உள்ள செல்கள் உரிய இடங்களுக்குச் செல்கின்றன. அதன் பின்னர்தான் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய தன்மைகளுடனும் உறுப்புகளுடனும் அது வளரத் துவங்குகிறது.
 

மனிதனுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடனும், மனித உருவத்திலும் கருவில் வளரும் மாதங்கள் மொத்தம் ஆறு தான். அதற்கு முந்திய கால கட்டத்தில் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய எந்தத்தன்மையும் அடையாளமும் இல்லாத இறைச்சித்துண்டு தான் கருவில் இருந்தது.
நீங்கள் சுட்டிக் காட்டிய வசனத்தில் கருவளர்ச்சி என்று கூறாமல் மனிதன் - இன்ஸான் - என்ற சொல்லை இறைவன் பயன்படுத்தி விட்டு 'இன்ஸானை (மனிதனை) அவள் சுமப்பது ஆறு மாதம்' என்று அற்புதமாக கூறுகிறான்.


பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (திருக்குர்ஆன் 23:14)


பின்னர் மற்றொரு படைப்பாக அதை நாம் ஆக்கினோம் என்பது எவ்வளவு அற்புதமான சொல்! இந்த நிலையை அடையும் வரை கருவில் எல்லாப் படைப்பும் ஒன்று தான். அதன் பின்னர் ஆடு ஆடாகவும், மாடு மாடாகவும் மனிதன் மனிதனாகவும் வேறுபடும் நிலை உருவாகிறது. எனவே அதை மற்றொரு படைப்பு என்று இறைவன் கூறுகிறான். இதையே தான் மனிதனை தாய் ஆறு மாதம் சுமந்தாள் என்ற வசனமும் கூறுகிறது.


இந்த மாபெரும் உண்மை படைத்த இறைவனுக்குச் சாதாரண விஷயம் என்பதால் தான் மக்கள் விளங்கி வைத்திருந்ததற்கு மாற்றமாக வேண்டுமென்றே மனிதனைத் தாய் சுமந்தது ஆறு மாதம் என்கிறான். கருவின் வளர்ச்சி காலம் எனக் கூறவில்லை. எனவே எந்த முரண்பாடும் இல்லை.
 
- -நன்றி பி.ஜெய்னுல்லாபுதீன்.


Monday, April 23, 2012

இந்து மத ஆர்வலர்கள் சீர் திருத்தம் செய்வார்களா?


------------------------------------------------'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காக தயாராகும் போது உங்கள் முகங்களையும் மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும் கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்.உங்கள் தலைகளை ஈரக் கைகளால் தடவிக் கொள்ளுங்கள். குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் குளித்து தூய்மையாகிக் கொள்ளுங்கள். நீங்கள் நோயாளியாகவோ பயணியாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது உடலுறவின் மூலம் பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப் படுத்தவும் தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.'

-குர்ஆன் 5:6


இந்த வசனத்திலிருந்து இறைவனை வணங்குவதற்கு தூய்மை அவசியம் என்பதை உணருகிறோம். இந்து மத வேதங்களிலும் இறைவனை நெருங்க உடல் தூய்மையும் உளத் தூய்மையும் அவசியம் என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் அதற்கு மாற்றமாக நமது தமிழ் சகோதரர்கள் இறைவனை வணங்குகிறோம் என்ற பெயரில் திருச்சிக்கு பக்கத்தில் எச்சில் இலைகளில் புரள்வதை பார்க்கிறோம். இறைவன் இந்த செயலை விரும்புவானா? இப்படி பிரார்த்தனை செய்யச் சொல்லி இந்து மத வேதங்கள் கட்டளை ஏதும் இட்டுள்ளதா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும்.

'வணக்கம் என்ற பெயரில் உங்களுக்கு சிரமத்தை நான் கொடுக்க விரும்பவில்லை' என்று இறைவன் கூறியிருக்க இப்படி தன்னைத் தானே வருத்திக் கொள்வதை இறைவன் விரும்புவானா?  எத்தனை பெரியார்கள் வந்து என்னென்ன சீர்திருத்தங்கள் செய்தாலும் மனிதன் திரும்பவும் பழைய வழிக்கே சென்று விடுவதை வருத்தத்தோடு பார்க்கிறோம்.

நமது இந்து மத சகோதரர்களுக்கு சிறந்த வழி காட்டியும் சிறந்த மார்க்க கட்டளையும் அமையாதது துரதிர்ஷ்டவசமானது. சிறந்த பழமைக்கு சொந்தக்காரர்கள். இறைத் தூதர் நோவாவை பின் பற்றி வந்தவர்கள் என்று கூட சில ஆய்வுகள் கூறுகிறது. இவ்வளவு பழமை வாய்ந்த இந்து மதம் தனது சட்டத்தையும் தனது வேதங்களையும் தொலைத்து விட்டு அல்லது வேண்டும் என்றே மறைத்து விட்டு இன்று பரிதாபமான நிலையில் நிற்கிறது. இந்து மத ஆர்வலர்கள் இது போன்ற மூடப் பழக்கங்களை ஒழிக்க பிரசாரத்தை மேற் கொள்ள வேண்டும். செய்வார்களா? 

Saturday, April 21, 2012

நபிகள் நாயகத்தின் சில அறிவுரைகள்!


நபிகள் நாயகத்தின் சில அறிவுரைகள்!


'இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் ' 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய பயணம் இறைவனும் அவனது தூதரும் சொன்ன கட்டளையின்படி அமையுமோ அவரின் பயணத்தை அவ்வாறே இறைவன் கருதுவான். மேலும் எவருடைய பயணம் உலகத்தை குறிக்கோளாக கொண்டிருக்குமோ அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் நோக்கமாக இருக்குமோ அவர் நினைத்ததற்க்கேற்பவே அவரது பயணம் அமைந்து விடுகிறது.'

அறிவிப்பவர் உமர் கத்தாப்

ஆதாரம் புஹாரி 54   

இந்த நபி மொழியிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

1. நாம் செய்யும் எந்த காரியத்திற்கும் இறைவனின் பொறுத்தம் இருக்கிறதா என்று தேர்ந்தெடுத்து செய்தால் அதற்குரிய கூலியை இறைவன் தந்து விடுகிறான். அது வணக்கமாகவும் கருதப்படுகிறது.

2. எண்ணங்களின் பிறப்பிட்ம் உள்ளமாகும். அந்த உள்ளத்தை தூய்மையாக்கி செய்யும் காரியத்தை இறைவன் விரும்புகிறான். அதற்கான கூலியையும் இந்த உலகிலும் மறு உலகிலும் தருகிறான்.


இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் : 'மென்மை எதில் இருந்தாலும் அந்த காரியத்தை அந்த மென்மை அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும்'

-அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா
ஆதாரம்: முஸ்லிம் 2594

பதிவு எழுதுதல், அழைப்புப்பணி, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளை நேர்வழிப்படுத்துதல் என்று எந்த காரியத்திலும் மென்மையான முறையையே நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த நபி மொழி நமக்கு கற்றுத் தருகிறது. குறிப்பாக அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு மென்மையும் பொறுமையும் அவசியமாகும். சொல்லவரும் விஷயத்தை சற்று கடுமையாக சொன்னோம் என்றால் கேட்பவர் கூட அலட்சியம் செய்து சென்று விடுவர்.

Tuesday, April 17, 2012

'வஹாபிகள்' செய்து வரும் மனித நேய பணி!

ரியாத் மண்டலத்தின் 18 ஆவது மாபெரும் இரத்த தான முகாம், நேற்று 13.04.2012 வெள்ளியன்று கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை இரத்த வங்கியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய இம்முகாம், மாலை 5 மணி வரை நடைபெற்றதுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது என்பதை அறிந்ததும் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். சிரியா, யெமன், பாகிஸ்தான், இலங்கை, சூடான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டது இம்முகாமுக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டது, TNTJ வின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பறை சாற்றுவதாக அமைந்தது.சுமார் 275 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இம்முகாமில் 230 பேர் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது. ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர்களுள் ஒருவரான சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் மற்றும் அப்துர்ரஹ்மான் நவ்லக் ஆகியோரின் ஏற்பாட்டிலும், மண்டல தலைமை நிர்வாகிகளின் மேற்பார்வையிலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் மற்றும் தஃவா அணிச் செயலாளர் சகோ. ஹாஜா ஆகியோர் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணியாற்றினர். மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. ஹாஜா அலாவுதீன் மேற்பார்வையில், மண்டல - கிளை நிர்வாகிகள் தமது வாகனங்கள் மூலம் கொடையாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கொடையாளிகளை அழைத்து வருவது, அவர்களை ஒழுங்குபடுத்துவது, அவர்களுக்கு இரத்ததானத்திற்கான அடிப்படை தகவல்களை தெரிவிப்பது என அனைத்து பணிகளும் செவ்வனே செய்யப்படிருந்தன.

மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் வடிவமைத்திருந்த இரத்த தான முகாம்களுக்கான மென்பொருள் (Software) கொடையாளிகளிடையே வரவேற்பினைப் பெற்றது. கொடையாளிகள் அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவூதி நாட்டைச் சேர்ந்த இரத்த வங்கி மேற்பார்வையாளர் சகோ. அப்துல் மஜீத் TNTJ வுக்கு நன்றி கூறினார்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு “தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள்” புத்தககம் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது.

2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது போன்று, 2012 ஆண்டிலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை வகிப்பது குறிப்பிடத் தக்கது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

--நன்றி riyadhtntj.net

நானும் இந்த முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தேன். காலை 8 மணியிலிருந்து தூக்கத்தை மறந்து தோழர்கள் சுறுசுறுப்பாக கார்களில் மக்களை அழைத்துக் கொண்டிருந்தனர். எந்த சுய நலமும் பார்க்காது உடல் உழைப்பை அளித்த நமது தோழர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.தமிழ் இணைய தளங்களில் 'வஹாபிகள் தமிழகத்தில் அதிகரித்து விட்டனர். இதனால் மத ந்லலிணக்கத்துக்கு பெரும் அச்சுறுத்தல்' என்ற வாதம் வைக்கப்படுகிறது. மாற்று மத நண்பர்களையும் இன் முகத்தோடு அழைத்து இந்த மனித நேய பணியை செய்தவர்கள் தௌஹீது சகோதரர்கள். அதாவது தருமி, சார்வாகன், கோவிகண்ணன் போன்றோர் பார்வையில் வஹாபிகள். தன்னலம் பாராது உழைத்து வரும் இவர்களை தவ்ஹீதுவாதிகள் என்றோ வஹாபிகள் என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். தங்களது பணியில் எந்த தொய்வும் இல்லாது திறம்பட காரியங்களை ஹிந்து நண்பர்களுக்கும் ஆற்றி வருவார்கள்.

Sunday, April 15, 2012

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
-குறள்: 972

பிறப்பினால் உலக மக்கள் அனைவரும் ஒருவரே ஆவர். அவர்கள் செய்யும் தொழில்கள் வேறுபட்டிருந்தாலும் அதனால் அவர்களுக்குத் தனித்த சிறப்புகள் ஏதுமில்லை. ஒருவன் செய்யும் தொழிலை வைத்து அவனை பிராமணனாகவோ, செட்டியாராகவோ, தேவராகவோ, படையாச்சியாகவோ, பரையனாகவோ, பள்ளனாகவோ பாரக்கலாகாது. மரம்,செடி,விலங்குகள் என்ற அனைத்து உயிர்களும் உலகில் பிறக்கும் போது ஒத்த தன்மையுடனேயே பிறக்கின்றன. இதில் சாதி வேற்றுமை பார்த்து மனிதர்களிடையே பகைமை பாராட்டலாகாது என்கிறார் வள்ளுவர். வள்ளுவர் காலத்திலேயே பிராமணன் சூத்திரன் என்ற சாதி வேறுபாடு தலை விரித்தாடியிருக்கிறது. அதைக் கண்டிக்கும் முகமாகவே வள்ளுவர் தனது குறளில் தமிழர்களுக்கு போதனை செய்கிறார்.

இதே கருத்தையே தொடர்ச்சியாக அடுத்த குறளில்...

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
-குறள் 973

நான் உயர்ந்த சாதி என்று கூறி பெருமை பேசுபவர் மேலான பண்பு இல்லை என்றால் உயர்ந்தோராக மாட்டார். தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கப்பட்டவன் சமூகத்தில் இழிவாக பார்க்கப்பட்டாலும் சிறந்த பண்புகளை கொண்ட அவன் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுவான் என்ற பொருளில் சொல்கிறார் வள்ளுவர். இங்கு பிறப்பினால் எந்த பெருமையும் ஒருவனுக்கு வந்து விடாது. அவன் செய்யும் சிறந்த செயல்களினால்தான் அவனுக்கு பெருமை இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

“மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”வேதம் படிதத பார்ப்பணர்கள் அதனை மறந்தாலும் பெரும் குற்றம் வந்து விடாது: ஆனால் அவனது ஒழுக்கம் கெட்டால் சமூகத்தால் இழிந்தவனாகப் பார்கக்ப்படுவான் என்கிறார் வள்ளுவர். அன்றே இந்த மேல் சாதியினர் எந்த அளவு கோலோச்சியிருந்தனர் என்பதும் சாதி வெறி எந்த அளவு உச்சத்தை எட்டியிருந்தது என்பதும் நன்கு தெளிவாகிறது.

2000 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் திண்ணியமும் பாப்பாரப்பட்டியும் கீரிப்பட்டியும் நமது பெருமைகளை கூறிக் கொண்டிருக்கின்றன. வள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலை வடிப்பது கொண்டும், அவருக்கு ஒரு விழா எடுத்து அவர் பெருமையை பேசுவதோடு நமது கடமை முடிந்தது என்று நினைத்து விடுகிறோம்.

திருக்குறளை திருவள்ளுவர் எழுதவில்லை அதை எழுதியது அகத்தியர் என்று புதிய செய்தியாக ஒரு பதிவை படித்தேன். கலைஞர் எழுப்பிய மிகப் பெரிய வள்ளுவர் சிலை இனி அவ்வளவுதானா? இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் சிலைக்காக கொட்டிய கோடிக்கணக்கான மக்கள் பணம் விழலுக்கு இறைத்த நீர்தானா? நாம் எந்த லட்சணத்தில் வரலாறுகளை பாதுகாத்து வருகிறோம் என்பதற்கு இவை எல்லாம் சில சான்றுகள்.

வள்ளுவரின் இந்த குறளையொட்டி வள்ளலார் தரும் பாடலையும் இனி பார்ப்போம்.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்!அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட
என்சிந்தை மிகவிழைந்த தாலோ

என்ன அழகாக மனித நேயத்தை வள்ளலார் தனது அருட்பாவில் பாடலாக தருகிறார் பாருங்கள். ‘எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்’ - 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலக மக்கள் அனைவரிடத்திலும் சகோதர பாசத்தோடு பழகுபவனிடமே உண்மையான இறை பக்தி இருக்கும் என்பது இப்பாடல்கள் மூலம் உணர்த்தப்படுகிறது.

நமது முண்டாசு கவி பாரதியும் தனது பங்குக்கு...

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே.....

என்று வாழ்த்தி விட்டு சென்று விட்டான். அந்த வாழ்த்துக்கள் அனைத்தும் இன்றும் ஏட்டளவிலேயே இருக்கின்றது. எந்த முன்னேற்றத்தையும் இது நாள் வரை கண்டபாடில்லை. உலக நாடுகள் வேறு எங்கும் இந்த அளவு தீண்டாமைக்கு எதிராக பாடல்கள் புனைந்ததும் இல்லை. இந்த அளவு இன்று வரை நம்மைப்போல் தீண்டாமையை தூக்கிப் பிடிக்கும் நாடுகளும் உலகில் எங்கும் இல்லை.

மனிதர்களில் பேதங்கள் பார்க்கலாகாது என்பதற்கு குர்ஆன் தரும் வசனத்தையும் இங்கு பார்ப்போம்.

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'
-குர்ஆன் 4;1


மேலே உள்ள இந்த வசனம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவர்களே! நாம் அனைவரும் 'ஒரு தாய் மக்களே' என்ற அரை கூவலை மனித சமுதாயத்தின் முன் வைக்கிறது குர்ஆன். 'நான் நெற்றியில் பிறந்தேன்: எனவே நான் மட்டும்தான் மந்திரம் சொல்ல வேண்டும். மற்றவர்கள் அந்த மந்திரத்தை சொன்னால் நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டும்' என்றெல்லாம் இன்றும் நாம் சொல்லி வருவதும் அதை சட்டமாக இன்னும் வைத்திருப்பதும் தவறு என்கிறது குர்ஆன். அதே போல் தொடையில் பிறந்தவன் கீழானவன் என்றும் அவன் சூத்திரன் என்றும் இழிவாக பேசப்படுவதையும் அதை இன்றும் சிலர் போற்றப்படுவதையும் தவறு என்று இந்த குர்ஆன் வசனம் சுட்டிக் காட்டுகின்றது. நானும், தருமியும், சார்வாகனும், நரேனும், ஆஷிக்கும், சிராஜூம், கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராகுல் காந்தியும் ஒரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்ற முடிவுக்கு வந்து விட்டால் எங்கிருந்து வரும் உயர்வு தாழ்வு? எங்கிருந்து வரும் பேதம்?

---------------------------------------------


பரம்பு மலை பாரி மன்னன் முல்லைக் கொடிக்கு தனது தேரையே தானமாக கொடுத்ததை படித்திருப்போம். இந்த சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது ஒரு அறிவுடைய செயலா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு முல்லைக் கொடிக்காக தனது தேரையே அங்கு விட்டால் அது போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஆகாதா? மன்னன் தேரை இடம் பெயர்க்க எவருக்கும் தைரியமும் அந்த காலத்தில் இருந்திருக்காது. அந்த கொடியையே வேறு இடத்தில் படர விட்டாலும் அது தனது போக்கில் படர்ந்து சென்று விடும். இதிலெல்லாம் கவனம் செலுத்திய பாரி மன்னன் மக்களுக்கிடையே உள்ள சாதி வேற்றுமையை தீர்க்க குறைந்த பட்சமாவது முயற்ச்சித்திருக்கலாம்.

சாதிவாரி கணக்கெடுப்பை ஆரம்பிக்க போவதாக அரசு அறிவிப்பு வந்துள்ளது. இனி தாரை தப்பட்டையோடு சாதி சங்கங்கள் எல்லாம் வெளிக் கிளம்பும். ஏற்கெனவே முன்னேறிய சாதிகள் மேலும் முன்னேறிச் செல்லும். எத்தனை ஒதுக்கீடுகள் வந்தாலும் நீதிபதியாகவே சென்று ஒரு தாழத்தப்பட்டவன் உட்கார்ந்தாலும் உயர் சாதியினர் பார்வையில் அவன் தாழ்ததப்பட்டவனாகவே கருதப்படுகிறான். ஆரியத்தின் தாக்கம் அந்த அளவு சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது.

வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்நாடு!

----------------------------------------------


கிருமாம்பாக்கம் :புதுச்சேரியில், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்து, ஒரே இடத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம், நோணாங்குப்பம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.நோணாங்குப்பம் புதுக்காலனி, 2வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் லிங்குசாமி,28, டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கண்ணகி,20, என்பவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு, இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்ததால், மனமுடைந்த காதலர்கள், நேற்று முன்தினம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த காதல் ஜோடிகளின் நண்பர்கள், உறவினர்கள், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும்படி, இரு வீட்டாரிடமும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, கண்ணகியின் உடல் லிங்குசாமியின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின், இருவரின் <சடலங்களையும் ஒன்றாக ஊர்வலமாக எடுத்துச் சென்று, நோணாங்குப்பம் இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.இவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, மேற்கொள்ளப்பட்ட திருமணச் சடங்கு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களை, மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

தின மலர்-15-04-2012

ஒரு சமூகத்துக்கு இன்னதுதான் சட்ட திட்டங்கள் என்று இல்லாமல் போனால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தவிர்க்க இயலாது.

Friday, April 13, 2012

வானம் பிளந்து மலரைப் போன்று மாறும்!“வானம் பிளந்து எண்ணையை ஒத்த மலரைப் போன்று சிவந்ததாக ஆகிவிடும் போது” -ஸூரா ரஹ்மான்
-குர்ஆன் 55:37

வானம் பிளந்து போகும் அதாவது வானத்து கட்டுமானப் பொருட்கள் வெடித்துப் பிளந்து விடும். அப்போது அதன் தோற்றம் பூ போன்றிருக்கும். அந்த பூவும் எண்ணையை தடவி விட்டது போன்றிருக்கும் எனக் கூறுகிறது இந்த வசனம். இந்த நிகழ்வு எவ்வாறு அமையும் என்பது இறைவனே அறிந்த விஷயமாகும்.எனினும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் எமது வான்வெளியை இறைவனே ஆக்கி வைத்துள்ளான். அதாவது இப்போதும் நட்சத்திரங்கள் தமது வாழ்வின் மேற்குறிப்பிட்ட நிலையின் போது வெடித்துச் சிதறுகின்றன. அப்படி வெடித்த நட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி ஆய்வு நிலையமாகிய ‘நாஸா (NASA)’ புகைப்படமெடுத்து வெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம் சொல்வதைப் போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன.

விஞ்ஞானிகள் எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின் அதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும்.இது போன்று சிறிய சிறிய வசனங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பயன் படுத்தப்பட்டுள்ளதை பார்த்து நாம் ஆச்சரியப்படுகிறோம். நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தை அல்லாது மனிதர்களின் வார்த்தை அல்ல என்பதற்கு இது போன்ற வசனங்கள் நமக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.

Wednesday, April 11, 2012

'மைனஸ் ஓட்டு குத்த ஓட்றாங்களாம்!'----------------------------------------------'யாரும் என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு சிக்கலை உண்டாக்காதீங்க...எனக்கு இருக்கிற பிரச்னையில பேசாம பொருப்பை தம்பி ராகுலிடம் கொடுத்து விட்டு அரசியலிலிருந்தே ஓய்வு பெறலாம் என்றிருக்கிறேன். இப்போ சந்தோஷந்தானே!'

Monday, April 09, 2012

படைப்புக் கொள்கையைப் பற்றி சில ஆய்வுகள்!

//பெரு வெடிப்பு கொள்கை, குரானில் சொல்லப்பட்ட படைப்பு கொள்கையில் இருந்து எப்படி ஓத்து போகின்றது என்பதை பற்றி விரிவாக எளிமையாக பதிவு எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.//- சகோ நரேன்!'வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்'
-குர்ஆன் 40:57

'படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்'
-குர்ஆன் 79:27


வானங்களையும் கோள்களையும் உள்ளடக்கிய இம் மாபெரும் பேரண்டத்தை இறைவன் 'ஆகு' என்ற ஒரு வார்த்தையில் உண்டாக்கினான் என்பதை குர்ஆனின் துணை கொண்டு முன்பு பார்த்தோம். அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் ஆராய்ச்சியின் வழியாக அறிவியல் பூர்வமாகவும் குர்ஆனின் வார்த்தை உண்மையானது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். அதன் பிறகு படைப்புக் கொள்கைக்கு வருவோம்.இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்த எனக்கு மனிதர்களாகிய உங்களை படைப்பது எனக்கு வெகு சுலபமே என்று மனிதர்களைப் பார்த்து இறைவன் குர்ஆனில் கூறுகிறான். பேரண்டத்தைப் படைக்க இறைவனின் ஆற்றல் அவசியம் என்பது போல் மனிதனைப் படைப்பதற்கும் இறைவனின் ஆற்றல் இங்கு அவசியமாகிறது. (ஒரு செல் உயிரி பரிணாமம் அடைந்து குரங்கு வரை வந்து பிறகு மனிதனானது என்ற வாதம் நாத்திகத்தை கொண்டு செல்ல டார்வினால் வைக்கப்பட்டது. ஆனால் இன்றைய கால கட்டம் வரை அறிஞர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. உலக முடிவு நாள் வரையில் அவர்களால் நிரூபிக்கவும் முடியாது.)

'பூமியில் உங்களை அதிகாரத்துடன் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வாழ்க்கைக்குரிய வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தியுள்ளோம். இருப்பினும் நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்'
-குர்ஆன் 7:10

'நீங்கள் எவைகளை எல்லாம் இறைவனுக்கு இணை கற்ப்பித்தீர்களோ அவைகள் சிறந்தவையா? அல்லது பூமியை வசிப்பிடமாக்கி அவற்றிற்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்ட கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.'
-குர்ஆன் 27:61


மேற்கண்ட இரண்டு வசனங்களின் மூலம் இந்த பூமியை மனிதர்களுக்காக பிரத்யேகமாக இறைவன் உண்டாக்கியுள்ளான் என்பதை அறிகிறோம். இந்த பூமியானது தானாகவே மனிதர்களுக்கு எற்றவாறு மாற வில்லை என்பதும் இறைவன் அத்தகைய ஏற்பாட்டை கொண்டு வந்தான் என்பதையும் விளங்குகிறோம். பிரபஞ்சத்தின் வேறு எந்த கோள்களிலும் மனிதன் வாழ முடியாது என்பதையும் இதிலிருந்து விளங்குகிறோம்.பெரு வெடிப்பிலிருந்து படிப்படியாக உருவாகி வரும் ஒரு நட்சத்திரக் குடும்பத்திலுள்ள ஒரு கோள் நம் போன்ற உயிரினங்கள் வாழும் வாழ்விடமாக மாற்றுதல் என்பது இறைவனின் ஆற்றலுக்கு மிக எளிதானது. இதையே நாம் அறிவியல் பார்வையில் பார்க்க வேண்டுமானால் மிக மிக மிக கடினமான காரியமாகும்.

இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு கோளுமே மனிதன் வாழ தகுதியுடையதாக இல்லை பூமியைத் தவிர. பூமியைப் படைத்த இறைவன் அதை மனிதனுக்காக பிரத்யேகமாக படைத்ததாகவும் கூறுகிறான். இந்த பூமியை மனிதனுக்காக படைக்கவில்லை என்றால் மற்ற உயிரினங்களைப் போலவே எந்த சட்ட திட்டங்களும் இல்லாமல் சாதாரணமாக இருந்திருப்பான். ஆடு மாடுகளைப் போல் எப்படி வேண்டுமானாலும் மனிதனும் இருந்து கொள்ளலாம். நன்மை தீமைகளை பிரித்தறியும் கடமையும் அவனக்கு இருந்திருக்காது. இத்தனை வசதி வாய்ப்புகளை நமக்காக ஏற்படுத்திய இறைவன் அவன் சொல்படி நாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இந்த எதிர்பார்ப்பும் நியாயமான ஒன்றே!

பூமியைப் போன்ற ஒரு கோள் அல்லது துணைக்கோள் உயிரின வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் அது பிரதானமாக கீழ்காணும் ஆறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவியலார் ஷெப்லி அவர்கள் கூறுகின்றார். அது என்னவென்று பார்ப்போம்:

1. அந்தக்கோள் நட்சத்திரங்களிலிருந்து சரியான தூரத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும்.

2. அந்தக் கோள் சரியான வெப்ப நிலையை பெற்றிருக்கும் பொருட்டு அதன் சுற்றுப் பாதை (Orbit) அதற்க்கேற்ற விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

3. அந்தக் கோளுக்கு விஷம் கலவாத ஒரு வளி மண்டலம் (Atmosphere) இருக்க வேண்டும்.

4. அந்தக் கோளிற்கு நஞ்சு கலவாத நீர் ஊற்றுகள் (Sources) இருக்க வேண்டும்.

5. காற்றும் நீரும் உயிரினங்களுக்குத் தகுதி வாய்ந்த இரசாயனக் கலவையாக (Chemical Composition) இருக்க வேண்டும்.

6. அந்தக் கோள் காற்று மண்டலத்தை நிலை நிறுத்தும் அளவிற்குப் பெரிதாகவும் இருக்க வேண்டும்.

ஆதாரம்: OF STARS AND MEN, PAGE 66-67.

மேற்கண்ட சிறப்பம்சங்கள் உயிரின வாழ்க்கைக்குப் பொதுவாக தேவைப்படும் அம்சங்களாகவே ஷேப்லி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது ஆய்வு குறிப்பாக மனித வாழ்க்கையின் தேவைகளை குறித்ததாக இருப்பதால் மேற்கண்ட அம்சங்களோடு மேலும் சில சிறப்பம்சங்களையும் மனிதன் வாழுகின்ற கோள் அல்லது துணைக் கோள் பெற்றிருக்க வேண்டும். அவற்றையும் பார்ப்போம்:

7. அந்தக் கோள் மனிதனின் உணவிற்க்கும் ஏனைய உபயோகங்களுக்கும் ஏற்ற தாவரம் மற்றும் விலங்கினங்களின் உற்பத்தியைப் பெற்றிருக்க வேண்டும்.

8. விவசாயம் செய்வதற்கேற்ற பருவ காலங்களை அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.

9. இரவு பகல் மாறி வருவதற்க்கேற்ப அக்கோள் சீரான அச்சின் சுழற்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும்.

10. மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் ஏற்ற விதத்திலான புவியீர்ப்பு விசையை அக்கோள் பெற்றிருக்க வேண்டும்.

இங்கு நாம் இந்த இடத்தில் நமது அறிவைக் கொண்டு சற்று சிந்திக்க வேண்டும். கோடிக்கணக்கான விண் மீன்கள் கோளகள் குறுங்கோள்களையுடைய இந்த பேரண்டத்தில் பூமியில் இத்தகைய வசதி வாய்ப்புகள் உருவானது எவ்வாறு? தானாகவே அசெம்பிள் பண்ணிக் கொண்டதா? அதை நமது அறிவு ஏற்கிறதா?

மனிதனின் உடலமைப்பு நீரில் வாழ உகந்ததாக இல்லை. ஆனால் கடலில் வாழும் மீன்களே செல்ல முடியாத ஆழத்துக்கு சில உபகரணங்களின் துணையால் மனிதன் சென்று விடுகின்றான். தனக்கு இறக்கை இல்லாவிட்டாலும் பறவைகளே போக முடியாத தூரத்துக்கு வானத்தின் மேல் பறந்து காட்டுகிறான். காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை ஒரு கூண்டுக்குள் அடைத்து தான் சொல்வதை எல்லாம் கேட்கும்படி பழக்கி விடுகிறான். இந்த ஆற்றல் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கல்வித் திறனால் வந்தது. இல்லை என்றால் விலங்குகளைப் போலவே மரங்களிலும் குகைகளிலும் தனது வாழ்க்கையை இன்றும் கழித்து வந்திருப்பான் மனிதன். சிங்கம் புலி ஆடு மாடு போன்றவை தங்களது அறிவை மெருகேற்றி இன்று தங்களுக்கென்று ஒரு குடிலை அமைத்துக் கொள்வதில்லை. மனிதர்கள் அமைத்துக் கொடுத்தால் அதில் வந்து அமர்ந்து கொள்ளும். இல்லை என்றால் மரத்து நிழல்களிலோ காடுகளிலோ தங்களது இருப்பிடத்தை அமைத்து கொள்ளும்.இவ்வளவு அறிவையும் ஆளும் திறனையும் மனிதனுக்கு அள்ளித் தந்த இறைவன் அந்த மனிதன் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அடுத்து இன்றைய அறிவியல் உலகம் மனிதனின் தோற்றத்திற்கோ அவனுடைய காலக்சியின் தோற்றத்திற்க்கோ இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என சொல்லி வருகிறது. இப்பேரண்டம் இருப்பதால்தான் மனிதனின் சிந்தனை விரிவடைந்து மேலும் மேலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நாள் தோறும் வெளியிட்டு வருகிறான். மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இப்பேரண்டம் அவசியம் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. பிற்காலத்தில் இன்னும் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படும்போது இப்பேரண்டத்தின் முக்கியத்துவத்தை மனித குலம உணர்ந்து கொள்ளும். அதுவரை நாமும் பொறுப்போம்.

Friday, April 06, 2012

இலங்கை பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?

சுவனப்பிரியன் தனது பக்கத்து நாடான இலங்கையைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலும் மூழ்கியிருந்தார்.. பழைய காட்சிகள் எல்லாம் லைவ்வாக வருகிறது.

காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை கோழைத்தனமாக சுட்ட விடுதலைப்புலிகள்: யாழ்ப்பாணத்தில் கோடீஸ்வரர்களாக இருந்த முஸ்லிம்களை கை செலவுக்கு கொஞ்ச பணத்தைக் கொடுத்து விரட்டிய விடுதலைப்புலிகள்: பத்மனாபா முதற்கொண்டு பல எதிர் கருத்து உடையவர்களை போட்டு தள்ளிய விடுதலைப் புலிகள்: மிதவாத தலைவரான அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்றவர்கள்: தன்னை தலைவனாக ஏற்காத தமிழர்களை போட்டு தள்ளிய பிரபாகரன்: வன்னி காட்டில் தனது மக்களையே கேடயமாக பாவித்த பிரபாகரன்:: தமிழ் இளைஞர்களை வலுக்கட்டாயமாக புலிகள் இயக்கத்தில் சேர்த்து அவர்களின் எதிர் காலத்தை சூன்யமாக்கியது: அடுத்த பிரதமராக விருந்த ராஜீவ் காந்தியை தமிழ் மண்ணிலேயே போட்டு தள்ளியது:

என்று காட்சிகள் அடுத்தடுத்து வருகின்றன.

சுவனப்பிரியன் மேலும் சிந்தனையில் ஆழ்கிறார். இவ்வளவு கொடுமையை செய்தவர்களை அன்றைய பெரும்பான்மையான இந்து தமிழர்கள் ஏன் பிரபாகரனிடம் நியாயம் கேட்கவில்லை. ஒரே மொழியை பேசக் கூடிய முஸ்லிம்கள் நமது சொந்தங்கள் அல்லவா! முஸ்லிம்களை கொன்றது அநியாயம் என்று அன்றே இந்த மக்கள் பிரபாகரனை பிடித்து உலுக்கியிருந்தால் ஒரு நிதானத்துக்கு வந்திருப்பார் அல்லவா! 'இழப்பு முஸ்லிம்களுக்குத்தானே! நமக்கு என்ன வந்தது?' என்று கண்டு கொள்ளாமல் இருந்தது தமிழ் இந்துக்களின் தவறல்லவா!

மேலும் காட்சிகள் ஓடுகிறது......

விடுதலைப்புலிகளோடு இந்தியாவும் பேசிப் பார்க்கிறது. அப்பாவி பொது மக்கள் இறக்கக் கூடாது என்பதற்காக ஒரு சமரசத் தீர்வுக்கு இந்தியா பலமுறை அழைக்கிறது. வழக்கம் போல் எதற்கும் பிரபாகரன் தலை சாய்க்கவில்லை. தேர்தலும் கூடாது: தனி ஈழத்துக்கு ராஜாவாக தான் மகுடம் சூட்ட வேண்டும். அதை இந்தியாவும் இலங்கையும் உலக நாடுகளும் ஆதரிக்க வேண்டும். இதில் உறுதியாக இருக்கவே முடிவில் விடுதலைப்புலிகளை ஒடுக்கி தமிழர்களை சுதந்திரப் பறவைகளாக்க இந்தியா முடிவெடுத்தது. ஆயுதங்களை இலங்கைக்கு கொடுத்தது. போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றது. முதலிலேயே பிரபாகரன் சரண் அடைந்திருந்தால் பல அப்பாவி பொது மக்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அவரோ தனது மக்களையே கேடயமாக பயன் படுத்தினார். தப்பி ஓடியவர்களை சுட்டுக் கொன்றார். முடிவில் இலங்கை ராணுவம் முழு போரை பிரகடனப்படுத்தியது.அனைத்தையும் யோசித்த சுவனப்பிரியன் என்ன செய்வது என்று குழம்புகிறார். முன்பு முஸ்லிம்களை கொன்றொழித்த பல விடுதலைப்புலிகள் முகாம்களில் உள்ளனர். அவர்களை இப்பொழுது தண்டிப்பதால் போன முஸ்லிம்களின் உயிர் திரும்பப் போவதில்லை. அவர்கள் தனது தலைவன் பிரபாகரனின் கட்டளையை செயல்படுத்தியவர்கள்.

அதே போல் போரில் விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தியதால் அப்பாவி பொது மக்களும் இறக்க நேரிட்டது. இலங்கை ராணுவம் சில இடங்களில் அத்து மீறியும் செயல்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தை தற்போது தண்டிப்பதால் போன தமிழர்களின் உயிர் திரும்ப வரப் போவதில்லை.

எனவே சுவனப்பிரியன் முடிவில் கூட்டி கழித்து ஒரு முடிவுக்கு வருகிறார். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். என்ற முடிவுக்கு வந்தவராக பொது மக்களைப் பார்த்து பேச ஆரம்பிக்கிறார்.

'தமிழ் மக்களே! இந்து, முஸ்லிம், கிறித்தவ மார்க்கங்களை வாழ்வியலாகக் கொண்டவர்களே! 30 ஆண்டு காலம் கஷ்டப் பட்டு விட்டீர்கள். இனி மேலாவது உங்களின் வாழ்வில் வசந்தம் ஒளிர வேண்டும். இது வரை உங்களின் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக இருந்த விடுதலைப்புலிகள் தற்போது அகதி முகாம்களில் உள்ளனர். படிப்பையும், தொழிற் கல்வியையும் கற்றுக் கொண்டு சமூகத்தில் இனி இரண்டறக் கலந்து விடுவார்கள். அவர்களையும் நீங்கள் அரவணைத்துக் கொள்ளுங்கள்.

மொழிப் பற்று இருக்கலாம். அது வெறியாக மாறக்கூடாது. சிங்கள மொழியை கற்றுக் கொள்வதால் அந்நாட்டு சமூகத்தில் ஒன்றர உங்களால் கலக்க முடியும். இதற்காக நம்முடைய தனித் தன்மையை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இனத்துக்கு தமிழையும், மார்க்கத்துக்கு அரபியையும், தொழிலுக்கு சிங்களத்தையும் கற்றுக் கொண்டு உள்ள பல தமிழ் முஸ்லிம்களை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். 'ஹிந்தியை புறக்கணிப்போம்' என்று பீலா விட்டுக் கொண்டிருந்த கருணாநிதியின் பேரப் பிள்ளைகள் எல்லாம் இன்று ஹிந்தி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பான்மையான சிங்களவர்களை எதிரிகளாக பாவிக்காமல் சகோதரர்களாக பழகுங்கள். தனி ஈழம் என்பது கருணாநிதி, கோபால்சாமி, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் அரசியல் பண்ண வேண்டுமானால் சாத்தியப்படும். பூகோள ரீதியாக செயல்படுத்த முடியாத ஒன்று. இனியும் காலத்தைக் கடத்தாமல் பவுத்தம், இஸ்லாம், கிறித்தவம், இந்து போன்ற நான்கு மதங்களையும் இணைத்து இலங்கையை கட்டியெழுப்ப வாருங்கள். 'நாடு கடந்த தமிழ் ஈழம்' என்ற தமாஷூக்கெல்லாம் உங்கள் பணத்தை கொடுத்து தீவிரவாதத்தை திரும்பவும் வளர்க்காதீர்கள். நியாயமான உங்களின் எந்த கோரிக்கையையும் இந்திய அரசிடம் வையுங்கள். பல குடியிருப்புகளை தற்போது இந்திய அரசு கட்டி வருகிறது. மேலும் உதவ தயாராக இருக்கிறது. தமிழக மக்களும் உங்களுக்கு உதவ தயாராகவே உள்ளனர்.

போர் முடிந்து மூன்று வருடமாகியும் எந்த முன்னேற்றமும் இல்லையே என்ற கேள்வியும் வருகிறது. சண்டை முடிவுக்கு வந்ததால் இன்று உயிருக்கு உத்தரவாதமாவது இருக்கிறது. உலக நாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை அரசு உள்ளதால் இனி தமிழர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையும். அது ஒன்றுபட்ட இலங்கையிலேயே சாத்தியமாகும். புலிகள் பதுக்கி வைத்த கண்ணி வெடிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அது முடிந்தவுடன் அனைவரையும் அவர்களின் சொந்த கிராமத்திலேயே தங்க வைக்கப்படுவர். இந்திய அரசு அங்கு நடக்கும் முன்னேற்றங்களை கூர்ந்து கவனித்து வருகிறது.

மேலும் தமிழ் இந்துக்களில் யாழ்ப்பாணத்தவர் மலையகத்தவரை மதிப்பதில்லையாம். பல சாதிப்பிரிவினைகள் இந்துக்கள் மத்தியில் இன்றும் இருந்து வருவதாக பல பதிவுகளில் படித்தேன். எவ்வளவு உயர்ந்த சாதியாக இருந்தாலும் 6 அடி மண் தான் அல்லது எலக்ட்ரிக் சுடுகாடுதான். இதை உணர்ந்து தீண்டாமையை ஒதுக்கி 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் முன்னோர்களின் பாதையை பின்பற்றி புதிய இலங்கையை உருவாக்குவோம் வாருங்கள்.' என்று பேசிக் கொண்டே வந்தவர் 'தடால்' என்ற சத்தத்தோடு கீழே விழுந்தார். ஆம்...இதுவரை தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருந்த சுவனப்பிரியன் விழித்தெழுந்து முகம் கழுவ சென்றார்.

-------------------------------------------------------------

அரசு வேலைகளில் இணைந்து சமூகத்தில் கலப்போம்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இலங்கை பொலிஸில் இணைய விண்ணப்பிக்கலாம் என்று இலங்கை பொலிஸார் கூறியுள்ளனர்.
2009 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து தமிழ் பேசும் பொலிஸாரை படைக்கு சேர்ப்பதற்கான மேலும் பொதுவான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் பணிக்கு முன்னாள் விடுதலலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் விண்ணப்பிக்கலாம் என்று முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஆனால், முன்பு போர் நடந்த பகுதிகளில் ஆட்சேர்ப்புப் பணிகள் நடப்பதாகவும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் எவரும் அந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான சுப்பிரிண்டண்ட் அஜித் றோகண பிபிசியிடம் தெரிவித்தார்.
அனேகமாக அனைத்து முன்னாள் போராளிகளும், பலவந்தமாகவே விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டு, போருக்கு அனுப்பப்பட்டார்கள் என்று அவர் கூறினார்.
எந்த விதமான குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல், வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாமல் மனந்திருந்தி பொலிஸில் பணியாற்ற விரும்பும் எந்தவொரு முன்னாள் போராளியும் பொலிஸ் பணியில் இணைவது குறித்து கவனம் செலுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
அனைத்து முன்னாள் போராளிகளும் பொலிஸ் படையில் இணைவது அவ்வளவு இலகுவானதல்ல. அவர்கள் விண்ணப்பிக்கும் பதவியின் தரத்துக்கு ஏற்ப கபொத சாதாரண, உயர்தர கல்வியை அல்லது பட்டப்படிப்பை அவர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அரசாங்கத்தினால் புனர்வாழ்வு நடவடிக்கை என்று கூறி சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பல முன்னாள் போராளிகள் பள்ளிக்கூட மட்ட சோதனைகளை பூர்த்தி செய்யவிருக்கிறார்கள்.
போரின் இறுதி வேளையில் இவ்வாறு சரணடைந்ததாக கூறப்படும் சுமார் பத்தாயிரம் பேர் தற்போது விடுவிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
இன்னும் ஆயிரம் பேர் முகாமில் இருக்கும் நிலையில் ஏனையவர்கள் வழக்கு விசாரணைகளுக்காக காத்திருக்கிறார்கள்.
மேலும் நூற்றுக்கணக்கான விடுதலைப்புலிகள் சிறைகளில் இருக்கிறார்கள்.
போருக்கான மிகப்பெரிய காரணம் மொழிப்பிரச்சினைதான் என்பதால், பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பொலிஸ் படையில் தமிழர்களையும், தமிழ் தெரிந்த முஸ்லிம்களையும் ஆட்சேர்ப்புச் செய்வது அவசியமாகும் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
பெண்கள் உட்பட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பதவிகளுக்காக 450 தமிழ் பேசுவோர் பயிற்சியை தற்போது ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த வருடத்தில் போர் ஆண்டு நிறைவு அணிவகுப்பில் இருந்து தாம் திடீரென விலக்கப்பட்டதற்காக தமிழ் பொலிஸார் சிலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இது ஒரு பாதுகாப்பு பிரச்சினை என்று அவர்கள் கருதுவது போல் தென்படுவதாக ஒருவர் கூறியிருந்தார்.
-பிபிசி
ஜனவரி 30, 2012

தனி ஈழம் அமையும் போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை வேலையற்றறு இருக்கும் இளைஞர்கள் நாட்களை கடத்தாமல் அரசு கொடுக்கும் வேலைகளை பெற்று சமூகத்தில் ஒன்றரக் கலக்க வேண்டும்.

--------------------------------------------------------


A group of Sri Lankan citizens who said they were Tamil businessmen protested in front of the Indian High Commission in Colombo demanding that India support Sri Lanka at the United Nations Human Rights Council session in Geneva.

The protest was held before Prime Minister Manmohan Singh made clear India's “inclination” on the U.S.-sponsored resolution against Sri Lanka at the Council.
The businessmen reminded the Indian High Commission of the riots targeting Tamils in Colombo and wanted India to refrain from taking any course of action that might hurt Tamils in Sri Lanka. A few of them later met Deputy High Commissioner P. Kumaran and handed over a four-page memorandum detailing the past (when they were repressed by the LTTE), the present (the government is working to implement the recommendations of a commission that went into the cause of the Tamil struggle), and the future (what would happen if India did not support Sri Lanka at the UNHRC).

The memorandum, which reflected the government line on most points, said the businessmen had “suffered untold hardships for nearly 30 years due to the LTTE. All major industries, the agriculture, fisheries and services in the north and east Sri Lanka were adversely affected, and many were forced to liquidate their businesses as it was not viable for them to continue in the theatre of conflict”. Also, “LTTE levied heavy taxes…to finance their misplaced ideology”.

The memorandum went on to describe the steps taken by the government to bring about normalcy in the war-ravaged Northern Province, and also put on record the fears of the Tamil business community.

Stand welcomed
The Tamil National Alliance has welcomed India's stand on the U.S.-sponsored resolution.
It also thanked the political parties in Tamil Nadu for bringing pressure on the government. But many prominent individuals and civil society leaders here have criticised the Indian stand.

Elsewhere in the city, hundreds of Buddhist monks and leaders from other religions participated in an Adishtana Pooja and Satyagraha to defeat anti-Sri Lankan forces and conspiracies. A similar Buddhist prayer was held on Saturday too, to bless the government.
-R. K. Radhakrishnan
The Hindu

One comment:

the LTTE tried to control part of our mother land. they couldn’t do it. now they are trying to get us in trouble by saying we committed war crimes. all the LTTE supporters including channel 4 and jayalalitha are doing all they can to gain a separate country for Tamils. our army did not commit war crimes. the LTTE did. they killed un-armed people by hundreds. they set up bombs everywhere including temples and killed people. they recruited kids aged 12 for the war. They introduced suicide bombing.

Tamil people came running to army controlled area at the last stage of war coz the LTTE used their own as a human shield.

ex-LTTE people are being given jobs by the SL gov.

if USA and others are so worried about human rights, why didn’t they speak up when ltte killed people?

and when they kill Osama its ok when we kill prabha, its a crime? Jealous much?

hello? wake up. they both are terrorists.

channel 4 type of false videos mean nothing. just watch youtube videos about ltte bomb blasts if you want to know the real thing

what would USA do if a group of people wanted part of their country and that group killed people in hope of getting a separate country? They would fight right? That’s what we did too.

We love normal Tamil people, Tamil food, the saris and the Tamil movies too. We love living in the same country in peace with them. It’s the terrorists that we destroyed.

So don’t be fooled by the terrorists. Open your eyes and see the truth. please…

During the war time, we were always afraid we didn’t know when a bomb would blast killing people. when we went out in the morning we were not sure if we would be able to return home alive.

Now we live in a peaceful country and we are happy. For gods sake, I share my lunch with a Tamil friend so stop trying to portray us as monsters. we are very friendly and innocent people. We are Buddhists. we don’t hurt other people.
from: eesha
Posted on: Mar 20, 2012 at 10:01 IST

-------------------------------------------------------------

டிஸ்கி: இந்த பதிவு எமதர்மனை வைத்து கற்பனையாக எழுதப்பட்ட ஒரு இலங்கைப் பதிவரின் பதிவுக்கு எதிர்பதிவு. அவருக்கு பின்னூட்டமாகத்தான் எழுதினேன். பதில் நீளமாகி விட்டதால் தனி பதிவாகவே கொடுத்துள்ளேன்.

Wednesday, April 04, 2012

'குன்பயகூன்' - அறிவியல் - ஏ.ஆர்.ரஹ்மான்!

6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.

2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.

19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.

كُن فَيَكُونُ குன்பயகூன் என்ற இந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்துகிறான். இறைவன் 'ஆகு' என்று சொன்னால் உடன் ஆகி விடும். இங்கு தனது வல்லமையை மனிதர்களுக்கு இறைவன் விளக்குகிறான். இன்றைய அறிவியல் இந்த வசனத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்று பார்ப்போம்.

சிங்குலாரிட்டி என்பது என்ன?

'வினோதத் தன்மை' (SINGULARITY) என்பது நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளும் தோற்கடிக்கப் படும் அல்லது பயன்படாத நிலையை அடையும் இடமே 'சிங்குலாரிட்டி' (வினோதத் தன்மை) ஆகும். பெரு வெடிப்பு எந்த மயிரிழை நேரத்தில் திடீரென நடைபெற்றதோ அந்தக் கணத்திற்குப் பின்னால் நிகழ்ந்த யாவும் நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு உட்பட்டவையாகும். ஆனால் அந்த கணத்திற்கு முன்னால் நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளால் இயலவில்லை. தற்போது பேரண்டம் இயக்கப்படுகின்ற விதிகளையே நாம் அறிவோம். ஆனால் இந்த விதிகள் யாவும் பெரு வெடிப்புக்கு முன்னால் செயலற்றுப் போகிறது. மேலும் பெரு வெடிப்புக்கு முன் அது எப்படி நடைபெற்றிருப்பினும் அவற்றுக்கும் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே 'பெரு வெடிப்பு வினோதம்' (BIG BANG SINGULARITY) ஆகும்.

-'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்'(A BRIEF HISTORY OF TIME) பக்கம் 9

-அறிவியல் அறிஞர் ஹாக்கிங்.

இந்த இடத்தில் அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் கூற்றை சற்று சிந்தித்துப் பார்ப்போம். இந்த உலகின் காலம் தொடங்குவதே பெரு வெடிப்பில் இருந்துதான். பெரு வெடிப்பு என்று நிகழ்ந்ததோ அன்றிலிருந்துதான் காலம் தொடங்குகிறது. இதன் பொருள் பெரு வெடிப்புக்கு முன் காலம் இல்லை என்பது தெளிவாகிறது. பெரு வெடிப்புக்கு முன் அதை துல்லியமாக நிகழ்த்திக்காட்டியது யார்? என்ற கேள்வி இங்கு இயல்பாக நமக்குள் எழும்.

முன்பு 'பேரண்டம் என்றும் நிலையானது: மாற்றமில்லாதது: ஆதியோ அந்தமோ இல்லாதது: அது என்றென்றும் நிலைத்திருப்பது: அதற்கு ஒரு படைப்பாளன் தேவையில்லை:' என்றுதான் பல அறிஞர்களும் சொல்லி வந்தனர். 'மாறா நிலைக் கோட்பாடு' என்பதோடு இந்த கருத்து ஏறத்தாழ ஒத்து வரும். நாத்திகத்திற்கும் இந்த கருத்து வலு சேர்க்கும் விதமாக இருந்ததால் பலரும் இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அறிஞர் அரிஸ்டாட்டிலும் இந்தக் கருத்தை ஆதரித்தார்.

ஆனால் அறிஞர் ஐசக் நியூட்டன்(1672-1727) பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த பேரண்டம் இறைவன் என்ற ஒருவனின் துணையில்லாமல் உண்டாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். 'பிரின்ஸிப்பியர்' (Matthematical Principles Of Natural Philosophy) என்ற புகழ் பெற்ற நூலில் நியூட்டன் இந்த தகவலைத் தெரிவிக்கிறார். ஆனால் இந்த பேரண்டம் எவ்வாறு உருவானது? எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு அவரால் விடை காண முடியவில்லை.இப்பேரண்டத்தின் வரலாற்றில் 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு கால கட்டம் இருந்துள்ளதாக அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு முன் அங்கு ஒரே ஒரு அணு 'ஒரு முழு முதல் அணு' இருந்ததாகவும் ஏதோ ஒரு காரணத்தால் வினாடியின் பல்லாயிரக்கணக்கான பகுதியில் ஒரு துளி நேரத்தில் அந்த அணு வெடித்துச் சிதறியதாகவும் கூறுகிறார்கள். அம்மாபெரும் வெடிப்பின்போது அந்த அணுவிலிருந்து கணக்கிட முடியாத பிரம்மாண்டமான ஆற்றல் வெளி வந்தது. பிறகு மெதுவாகப் படிப்படியாக அந்த ஆற்றலில் இருந்து விண்ணகப் பொருட்கள் யாவும் உருவாகின என லிமாயிட்டர் கருதுகிறார்.பெரு வெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் எனும கன ஹைட்ரஜன் வாயுவின் மையக் கரு உருவாகி இருக்க வேண்டும் என்றும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக் கரு உருவாகி இருக்கலாம். அவைகளிலிருந்து 'லிதியம்' மற்றும் 'பெரில்லியம்' போன்றவற்றின் தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும். என்று அறிஞர் ஹாக்கிங் மேற்கண்ட புத்தகம் பக்கம் 124ல் கூறுகிறார்.

மேற்கண்ட தகவல்கள் பேரண்டம் அதன் துவக்க கட்டத்தில் விண்ணகப் பொருட்களாகிய காலக்சிகள், நடசத்திரங்கள், கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் கற்கள் போன்ற எந்த பொருட்களுமே இல்லாத ஒரு சூன்ய நிலையிலேயே இருந்துள்ளதாக நாம் அறிகிறோம். பெரு வெடிப்புக்கு முன் மேற் கூறிய பொருட்கள் யாவும் முன்னரே தயாராக இருந்திருக்கவில்லை என்பதையும் இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இன்னொரு கேள்வியும் எழுகிறது. பெரு வெடிப்புக்கு முன் சூன்யமான அண்ட வெளியில் ஒன்றுமே இல்லை எனில் வெடித்த பொருள் எது என்பதாகும். இதற்கு ஹாக்கிங் 'பெரு வெடிப்பு நிகழ்ந்த போது இப்பேரண்டத்தின் பரிணாமம் பூஜ்யமாகும். அதன் வெப்பம் எல்லையற்றதுமாகும்' என்கிறார்.

-A Brief History of Time பக்கம் 123


பூஜ்யத்திலிருந்து அதாவது சூன்யத்திலிருந்து இம்மாபெரும் பேரண்டத்தை படைத்தது உருவாக்கியது யார்?

'விண்ணகத்தை நாம் வல்லமையைக் கொண்டு படைத்தோம்'
-குர்ஆன் 51:47

ஆம் இன்றைய அறிவியல் பெரு வெடிப்புக்கு முன்னால் திடீரென்று புறப்பட்ட ஒரு ஆற்றலின் மூலமே பெரு வெடிப்பு சாத்தியமானது என்பதை குர்ஆனும் மெய்ப்பிப்பதைப் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய உண்மையை வெகு சாதாரணமாக குர்ஆன் சொல்லிச் செல்வதை எண்ணி வியக்கிறோம். ஆற்றலின் வரைவிலக்கணம் கூட தெரியாத அன்றைய அரபுலகில் பிறந்த முகமது நபிக்கு இந்த உண்மைகள் எவ்வாறு தெரிய வந்தது?

-----------------------------------------------------------


குர்ஆனின் இந்த அருமையான வசனங்கள் இவ்வளவு அழகிய அறிவியல் விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்க நமது சூஃபி பிரியர்களில் சிலர் இதனை கவிதையாக வடிக்க அதை நம் ஏ.ஆர்.ரஹ்மானும் அருமையான பாடலாக கொடுத்துள்ளார். இசையும் பாடலும் சேரும்பொது அங்கு சிந்தனை அகன்று விடுவதைப் பார்க்கிறோம். 'குன்பயகூன்' என்ற வார்த்தையை இறைவன் ஏன் பயன்படுத்தினான்? அதன் அறிவியல் உண்மை என்ன என்பதெல்லாம் ரஹ்மானின் இசையோடு கூடிய பாடலில் நமமால் உணர முடியாது. ரஹ்மானின் இசையும் அப்பாடலின் ராகமும் தான் நம் மனதில் நிற்கும்.

//ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //

இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.

குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.'உங்களின் இடத்திலே வந்து எனது தலையை வைக்கிறேன்' என்று மற்றொரு பாடலில் ரஹ்மான் பாடுகிறார். இறைவனைத் தவிர வேறு எவருக்கும் நமது தலையை கீழே வைக்கலாகாது என்பதை என்று ரஹ்மான் உணருவாரோ தெரியவில்லை.
============================================================


பதிவர் மலர் மன்னனைப் பற்றி பலரும் அறிந்திருப்போம். தமிழ் ஹிந்து மற்றும் திண்ணை வாசகர்களுக்கு அவர் நல்ல பரிச்சயம். இந்துத்வாவை தனது நரம்புகளிலெல்லாம் ஓட விட்டுக் கொண்டிருப்பவர். வர்ணாசிரமக் கொள்கையை இன்றும் ஆதரிப்பவர். இப்படிப்பட்டவர் முன்பு திண்ணையில் எழுதிய ஒரு வரியைப் படிப்போம்.

//‘கிருத்துவத்திலும் இசுலாத்திலும் ஆன்மிகம் என்பதே கிடையாது. அதாவது அம்மதங்கள் வெறும் வெத்துவேட்டுகள் என்றும் அம்மதங்களில் சேர்ந்தோர் நல்லவராகமாட்டார்கள்//

இது போன்ற ரீதியில்தான் அவரது பல கருத்துகளும் பின்னூட்டங்களும் இருக்கும். தற்போது இஸ்லாமியரிடத்தில் தவ்ஹீது பிரசாரம் அதிகமானதால் தர்ஹா வணக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. மூடப்பழக்க வழக்கங்கள் எல்லாம் ஒழிய ஆரம்பித்துள்ளன. இந்து மதத்துக்கு பெருத்த அச்சுறத்தலாக உள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம். மற்ற அனைத்தையும் இந்துத்வாக்குள் அடக்கி விட்டனர். மற்ற மதங்களைப்போல் இஸ்லாத்தையும் பத்தோடு பதினொன்றாக ஆக்க தர்ஹா வணக்கத்தை ஊக்கப்படுத்த தற்போது இந்துத்வா அதிக ஆர்வம் காட்டுகிறது. அதன் ஒரு வெளிப்பாடாக சமீபத்தில் மலர் மன்னன் வெளியிட்ட ஒரு பதிவின் ஒரு பக்கத்தைப் பார்ப்போம்.

//முகமதியம் ஸூஃபிகளை அங்கீகரிப்பதில்லை என்பதோடு அவர்களைச் சித்ரவதை செய்து கொல்லவும் செய்யும். எனது அனல் ஹக் கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே எழுதுகிறேன். ஸூஃபிகளைப் போற்றி வணங்கியது ஹிந்து சமூகம். ஹிந்துஸ்தானத்திற்கு வந்த பாதிப்பாலேயே முகமதியத்தைப் பரப்ப வந்த கரீப் நவாஸ் என்று பின்னர் அழைக்கப்பட்ட குவாஜா மொய்னுதீன் சிஸ்தி கூட ஒரு ஸூஃபி ஆகிவிட்டார். ஹிந்துக்கள் அவரைத் தம்மவராக வரித்துக் கொண்டனர். ராஜஸ்தான் அஜ்மீரில் உள்ள அவரது அடக்கத்தலம் சென்று வணங்கியுள்ளேன். ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துப் பாடிய ஜாவேத் அக்தர் எழுதிய க்வாஜா மேரே க்வாஜா என்ற பாடலை நான் கேட்டு உருகாத நாளே இல்லை.

ஸூஃபிகளை வணங்குதல் நமது சம்பிரதாயம். அவர்களை இழித்துப் பேசுவதும் கொடுமைப்படுத்துவதும் அடிப்படை வாத வஹாபிய முகமதியர் வழக்கம். ஸூஃபிகளும் சித்தர்களே. ஆனால் முகமதிய சட்டதிட்டங்கள் உள்ள இடங்களில் ஸூஃபிகளுக்கு இடமோ மரியாதையோ இல்லை.//

இந்துத்வாவாதி மலர் மன்னன் தர்ஹாவுக்காகவும் சூஃபி களுக்காகவும் எந்த அளவு வக்காலத்து வாங்குகிறார் பாருங்கள். அதாவது தர்ஹா வணக்கத்தை பிரபல்யப்படுத்தி குர்ஆனின் சட்டங்களை புறந்தள்ள வேண்டும் என்பதே இவர்களின் தற்போதய முக்கிய பணி. ஏனெனில் அந்த அளவு இஸ்லாமியரிடத்தில் தற்காலங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது இந்துத்வாவாதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. வர்ணாசிரமக் கொள்கை நொறுங்கி விழுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதைத் தடுத்து நிறுத்த தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். ஆனால் முடிவில் அவர்கள் அடையப் போவது தோல்வியே!

Monday, April 02, 2012

செல் போனும் கணிணியும் முக்கியந்தான்! அதற்காக இப்படியா! :-)நாட்டு மக்களில் அதிகமானோர் கழிவறை கட்டிக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் அவர்களுக்கு செல்போன் அவசியமாகி விடுகிறது.

-மத்திய அமைச்சர்

-------------------------------------------------'நானும் உன் அப்பாவும் உனக்கு ஒரு தண்டனை கொடுக்கலாம் என்றிருக்கிறோம்!'

'ஏம்மா?'

'கணிணியே கதி என்று கிடக்காமல் இனி தினமும் ஒரு மணி நேரம் வெளியில் போய் விளையாட வேண்டும். புரிஞ்சுதா!'

'!!!!!!!!!'