Followers

Friday, August 31, 2012

20 மணி நேரம் ஒருவரால் நோன்பிருக்க முடியுமா?

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்தியா போன்ற நாடுகளில் 12 மணி நேரம் பகலும் 12 மணி நேரம் இரவும் மாறி மாறி வருகிறது. எனவே இங்குள்ள முஸ்லிம்கள் வைகறையிலிருந்து தோராயமாக 5.30 to 6 லிருந்து சூரியன் மறையும் நேரமான 6.30 மணி வரை உண்ணாமல் பருகாமல் நோன்பிருக்கின்றனர். இது ஒரு சராசரி மனிதனுக்கு சிரமத்தை கொடுக்காது. வழக்கமாக சாதாரண நாட்களில் உள்ளதைப் போல் மேற் கொண்டு ஐந்து மணி நேரமோ ஆறு மணி நேரமோ பசித்திருப்பது பெரிதாக தெரியாது. அதிலும் குளிர்காலமாக இருந்தால் சவுதியில் உள்ளவர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் நோன்பை முடித்து விடுவர். தற்போது கோடைக் காலம் ஆகையால் சிறிது களைப்பை அனைவருமே உணருகிறோம்.



இதே போல் வட துருவம் தென் துருவம் போன்ற பிரதேசங்களில் பின்லாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகள் வருகின்றன. இங்கு கோடை காலங்களில் இரவு என்பது 2 மணி அல்லது மூன்று மணி நேரம் தான் வரும். இது போன்ற நாட்களில் பகல் பொழுதானது 20 மணி நேரம் இந் நாடுகளில் வரும். தற்போது இஸ்லாம் இது போன்ற நாடுகளில் பரவி வருவதால் தற்போதய முஸ்லிம்களுக்கு அந்த நாட்டு சூரிய உதயத்தின் படி அந்த மக்கள் எவ்வாறு நோன்பு பிடிப்பர்? என்ற கேள்வி நமக்கு எழும். இது ஒரு சிக்கலான பிரச்னைதான்.



இஸ்லாமிக் லீக் ஸ்வீடனின் தலைவரான உமர் முஸ்தஃபா கூறும்போது 'தற்போது 350000 முஸ்லிம்கள் ஸ்வீடனில் வாழ்கின்றனர். தற்போது கோடைகாலத்தில் ரமலான் வருவதால் நீண்ட நேரம் நோன்பு வைக்கும் சிரமத்தில் நாங்கள் இருக்கிறோம். இது பற்றி உலக அறிஞர்கள் பல கருத்துக்ளை முன் வைத்துள்ளனர். இன்னும் விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது' என்றார்.


(தங்களது இஸ்லாமிய நிகழ்வுகளையும் பொழுது போக்குகளையும் நிறைவேற்றும் பின்லாந்து முஸ்லிம்கள்)

மசூத் என்ற இளைஞர் கூறும் போது 'இதில் எனக்கு பிரச்னை ஒன்றும் இல்லை. நீண்ட நேரம் நோன்பிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது" என்கிறார்.



ஆறு வருடங்களுக்கு முன்பு நபிஸா யாஸ்மின் பங்களாதேஷிலிருந்து பின்லாந்துக்கு தனது கணவர் இரண்டு குழந்தைகளோடு இடம் பெயர்ந்தார். இவர் பின்லாந்தில் ஆராய்ச்சி துறையில் பணி புரிந்து வருகிறார். 'பங்களாதேஷில் 12 மணி நேரமே நோன்பிருப்பேன். பின்லாந்து வந்த புதிதில் 20 மணி நேரம் நோன்பிருந்திருக்கிறேன். தற்போது சில அறிஞர்களின் சொல்படி மெக்கா நேரத்தை அனுசரித்து நோன்பு பிடித்து வருகிறேன். ஆனால் இதை இறைவன் ஏற்றுக் கொள்வானா என்று அச்சமாக உள்ளது' என்கிறார் நபிஸா.
எகிப்து அறிஞர்கள் ஒரு நாள் என்பது அதிகபட்சம் 18 மணி நேரம்தான். இதனால் இங்குள்ள முஸ்லிம்கள் மெக்கா அல்லது மதினா நேரத்தையோ அல்லது அருகில் உள்ள முஸ்லிம் நாடுகளின் நேரங்களையோ பின் பற்றினால் தவறில்லை என்கின்றனர்.



சவுதி மார்க்க அறிஞர்களோ ஒருவர் தங்கியிருக்கும் அந்த நாட்டின் நேரத்தையே பின் பற்ற சட்டம் உள்ளதாக அறிவுறுத்துகின்றனர். முகமது நபி காலத்தில் இந்த நாடுகளில் முஸ்லிம்கள் இருந்ததில்லை. எனவே நபி அவர்களிடமிருந்து நேரிடையான செய்தியை நம்மால் பெற முடியாது. மற்ற சட்டங்களின் துணை கொண்டு தான் இதற்கு தீர்வு காண முடியும்.

'உங்களில் நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இறைவன் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான்.'

-குர்ஆன் 2:185


இந்த வசனத்தின் மூலம் மனிதர்களுக்கு எளிதானதையே இறைவன் நாடுகிறான். மனிதனை சிரமப்படுத்த இறைவன் விரும்பவிலலை. ஒருவர் நன்கு திடகாத்திரமாக இருந்து நோன்பு வைத்துக் கொண்டு வேலையும் செய்து விட முடியும் என்று நினைப்பாரானால் அவர் நோன்பு வைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. 20 மணி நேரம் என்னால் நோன்பு வைத்து விட முடியும் என்று அவர் உள் மனது சொன்னால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சிலரின் உடல் நிலை பலஹீனமாக இருக்கும். மருத்துவர் '20 மணி நோன்பு பிடித்தால் உடல் நிலை மோசமாகும்' என்று அறிவுறித்தினால் அப்படிப்பட்டவர் குர்ஆனின் கட்டளைப்படி பகல் குறைவாக வரும் நாட்களில் அந்த நோன்பை வைத்து பூர்த்தி செய்யலாம். அதிலும் சிரமம் இருக்கிறது என்று அவர் எண்ணினால் ஒரு ஏழைக்கு ஒரு நாள் முழுக்க சாப்பாட்டுக்கு என்ன செலவாகுமோ அதனை கொடுத்து அவரது நோன்பிற்கான பரிகாரமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது சில அறிஞர்களின் சொற்படி மெக்கா நேரத்தை அனுசரித்தோ அல்லது பக்கத்து நாடுகளின் நேரத்தை அனுசரித்தோ நோன்பு பிடிக்கலாம். இங்கு இறைவன் மனிதனின் இறை அச்சத்தைத்தான் பார்க்கிறான்..

'வைகறை எனும் வெள்ளைக் கயிறு இரவு எனும் கறுப்புக் கயிற்றிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்மை முழுமைப்படுத்துங்கள். '

-குர்ஆன் 2:187


மேற் கண்ட இந்த வசனம் எந்த நாட்டில் நாம் தங்கியிருக்கிறோமோ அந்த நாட்டின் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் கணக்கில் எடுத்து நமது நோன்பை பூர்த்தியாக்க சொல்கிறது. நம் வசதிக்காக வேறு நாடுகளின் சூரிய அஸ்தமனத்தை கணக்கில் எடுக்கலாமா என்பது ஆராய்ச்சியில் தற்போது உள்ளது. எந்த வணக்கமும் ஒரு மனிதன் சராசரியாக நிறைவேற்றும் முகமாக இருக்க வேண்டும். ஏனெனில் நோன்பையும் வைத்துக் கொண்டு அவன் தனது வயிற்றுக்காகவும் தனது குடும்பத்தின் உறுப்பினர்களுக்காகவும் உழைக்கும் கட்டாயத்தில் இருக்கிறான். இந்த நிலையில் குர்ஆன் கொடுக்கும் சலுகைகளை ஒரு மனிதன் பயன்படுத்திக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.

ஒரு முறை ஒரு நபித் தோழர் மசூதியின் உள்ளே வராமல் வெயிலில் நின்று தொழுது கெண்டிருந்தார். இதை கவனித்து விட்ட நபிகள் நாயகம் 'உள்ளே இடமிருக்க ஏன் அவ்வாறு வெயிலில் நின்று தொழுகிறார்?' என்று கேட்கலானார். உடன் தோழர்கள் 'வெயிலில் நின்று தொழுதால் இறைவனை அதிகம் நெருங்கலாம் என்ற எண்ணத்தில் அவ்வாறு தொழுகிறார்' என்று பதிலளித்தனர். 'அவரை உள்ளே அழைப்பீராக! இறைவன் மனிதனுக்கு இலகுவானதையே விரும்புகிறான்' என்று அந்த மனிதரை கண்டிக்கிறார் நபிகள் நாயகம். இதன் மூலம் உடலை வருத்தி அதிகக் கஷ்டப்பட்டு பிரார்த்தனை செய்ய இஸ்லாம் கட்டளையிட வில்லை.

இது போன்ற சட்டங்களின் மூலம் வட துருவம் தென் துருவம் போன்ற பிரதேசங்களில் வாழும் பலஹீனமானவர் நோன்பை குளிர்காலத்தில் வைத்தோ அதுவும் முடியாதவர் ஒரு ஏழைக்கு உணவளித்தோ தனது கடமையை பூர்த்தி செய்து கொள்ளலாம். உடல் வலிமை உடையவர்கள் 20 மணி நேரம் கூட பசித்திருந்து தங்களின் நோன்பு கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இது சம்பந்தப்பட்டவரின் உடல் நிலையையும் மன வலிவையும் பொறுத்தது...

இறைவனே அறிந்தவன்






Wednesday, August 29, 2012

நெகிழ வைத்த இளைஞர் அம்மார்!

நெகிழ வைத்த இளைஞர் அம்மார்!



அமெரிக்கா, மேட்ஸன், டிசம்பர் 1986

பிறந்தவுடன் பல நோய்த் தாக்கங்களோடு இந்த உலகுக்கு வருகிறார் அம்மார். குழந்தையின் நிலையைக் கண்டு மனம் வருந்திய பெற்றோர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்கின்றனர். இது நடந்தது 1986 ஆம் ஆண்டு. மருத்துவ மனையில் குழந்தையை சேர்த்து விட்டு பரிசோதனையின் முடிவுக்காக பெற்றோர் வெளியில் காத்திருக்கின்றனர்.

டாக்டர்: உங்கள் குழந்தையின் நிலை ரொம்பவும் பரிதாபமாக உள்ளது. எலும்புகள் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத படி ஒட்டியுள்ளன. இந்த நோய் பாதிப்பால் கிட்னி பழுதடைந்துள்ளது. உடலின் அனைத்து எலும்புகளிலும் இந்நோய் பரவியுள்ளது. கண்கள், நாக்கு இந்த இரண்டைத் தவிர மற்ற பகுதிகளை நோய் தாக்கியுள்ளது.

குழந்தையின் தாய்: மருத்துவர் என்ன சொல்கிறார்?

குழந்தையின் தந்தை: ஒன்றுமில்லை. பிறகு சொல்கிறேன். எல்லாம் நல்லபடியாக முடியும்.

டாக்டர்: இதைச் சொல்வதற்கு எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. அதிகமாக போனால் இன்னும் இரண்டு வருடங்களில் உங்கள் குழந்தை இறந்து விடலாம். சாரி.....

குழந்தையின் தந்தை: ஓகே...டாக்டர். நான் வருகிறேன்.

குழந்தையின் தாய்: டாக்டர் என்ன சொன்னார்?

குழந்தையின் தந்தை: கொஞ்சம் வருத்தமான செய்திதான். இறைவன் செய்வது அனைத்தும் நன்மைக்காகவே இருக்கும். சரி வா போகலாம்.

-------------------------------

இனி நோயால் பாதிக்கப்பட்ட அம்மாரே பேச ஆரம்பிக்கிறார்.....

இறைவன் எனக்கு தந்த இந்த வாழ்வை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டுள்ளேன். 26 வருடங்கள் ஓடி விட்டது. ஒரு சராசரி மனிதன் எந்த அளவு சந்தோஷமாக இருப்பானோ அவ்வாறே இன்று வரை நான் இருக்கிறேன். நாம் நம்முடைய சவால்களை எதிர் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். எதையும் நம்மால் செய்ய முடியும் என்ற உறுதி மாத்திரமே நமக்கு தேவை. என்னுடைய ஆரம்ப கால படிப்பு அமெரிக்காவில் கழிந்தது. பனிக் கட்டிகளோடும் புத்தகங்களோடு எனது உறவினர்களோடும் சந்தோஷமாக எனது வாழ்க்கை ஓடியது. எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் வழக்கமாக நான் பள்ளி சென்று வந்தேன். எனது தாத்தா இதற்காக மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டார். இந்த ஏற்பாடுகளெல்லாம் என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

நான் படித்த பள்ளியில் அனைத்து பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி பெற்றேன். 96 சதவீதம் மதிப்பெண்களை எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது கனவுகளை நனவாக்கி வைத்த அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். அதன் பிறகு இரண்டு வருடத்தில் குர்ஆனையும் மனனம் செய்தேன்.

மனிதர்கள் எல்லாரும் ஒன்று போல் இருந்து விடுவதில்லை. எனக்கும் சில அவமானங்கள் நிகழ்ந்தது. அதனை பிரச்னையாக்க விரும்பவில்லை. ஏனெனில் என்னுடைய இலக்கும் இன்னும் மேலே போக வேண்டும் என்பதில் குறியாக இருந்ததால் இது போன்ற மனிதர்களை உதாசீனப்படுத்தி விட்டேன். இன்று அதைவிட சிறந்த கல்லூரிகளில் படித்து தற்போது மேலும் சிறந்த சான்றிதழ்களை பெற்றுள்ளேன்.

இன்னும் சில விசித்திரமான கனவுகள் பல எனக்குள் உண்டு. எனது பழைய கனவுகள் பல இன்று நிறைவேறியுள்ளது. இது போல் மற்ற கனவுகளையும் இறைவனின் உதவியால் நனவாக்கிக் காட்டுவேன். எனக்கு வரும் அனைத்து சவால்களையும் என்னை படைத்தவனின் உதவியால் முறியடித்து வெற்றி பெறுவேன்.

நம் வாழ்க்கையானது சில நேரங்களில் திரைப்படங்களை விட விநோதமாக மாறி விடும். டாக்டர் எனக்கு கொடுத்த நேரமோ இரண்டு வருடங்கள்தான். ஆனால் என்னைப்படைத்த இறைவன் என்னை 26 வருடங்கள் சந்தோஷமாக வாழ வைத்துள்ளான். இனியும் வாழ வைப்பான்.

-----------------------------------------

இந்த இளைஞர் பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறார். இன்று நமது தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தற்கொலை செய்திகளை தினமும் படித்து வருகிறோம். மதிப்பெண் குறைவாக எடுத்து மனமுடைந்து மாணவி தற்கொலை: காதல் தோல்வியில் பெண் தற்கொலை: வயிற்று வலி தாங்க முடியாமல் ஆண் தற்கொலை: அப்பா திட்டியதால் மனமுடைந்து மகன் தற்கொலை: சினிமா கூத்தாடிக்கான பிறந்த நாளில் கையை கீரிக் கொண்ட ரசிகர்: கூத்தாடி நலமாக இருக்க மொட்டை போட்டுக் கொண்ட ரசிகன்::-)

இவை எல்லாம் நாம் நாள் தோறும் படித்து வருகிறோம். தற்கொலை செய்து கொள்ள அனைத்து காரணங்களும் இந்த இளைஞர் அம்மாருக்கு பொருந்தும். ஏனெனில் இவர் சாப்பிடுவதிலிருந்து கழிவறை செல்வதிலிருந்து படுக்கைக்கு செல்வது வரை மற்றவரின் உதவி தேவைப்படுகிறது. ஆனால் இந்த இளைஞர் என்றுமே தனது வாழ்நாளைப் பற்றிய துன்பத்தில் வீழ்ந்தது இல்லை. இவரது பெற்றோரும் 'இறைவன் செய்வது எல்லாம் நன்மைக்கே' என்ற எண்ணத்துக்கு வந்து விடுவதால் அவர்களும் மன நிம்மதியை அடைகிறார்கள்.

அம்மார் என்ற இந்த இளைஞரும் தனது குறைகளையே நிறைவாக்கி இன்று சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார். தனது இந்த நிலைக்காக தன்னை படைத்த இறைவனை நிந்திக்கவில்லை: கோபப்படவில்லை: மாறாக போற்றுகிறார். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிறார். இந்த மன உறுதியை கொடுத்தது எது? இவரது பெற்றோருக்கு இப்படி ஒரு மகன் கிடைத்தும் அவனை உதாசீனப்படுத்தாமல் இந்த அளவு முன்னுக்கு கொண்டு வர வழைத்தது எது?

உறுதியான இறை நம்பிக்கை. இந்த உலகம் மிக அற்பமானது. இந்த உலகில் நாம் பெற்றுக் கொள்ளும் சிரமத்திற்கு சிறந்த வெகுமதிகளை இறைவன் மறு உலகில் தருவான். பொறுமையைக் கொண்டு இறைவனிடம் நமது குறைகளை வைத்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்ததாலேயே இவர்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது. இறை நம்பிக்கையால் ஆன்மீக வாதிகள் பெரும் பல நன்மைகளில் இதுவும் ஒன்று.

'உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்க்கையையும் அமைத்தான்'
-குர்ஆன் 67:2

மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக நிச்சயமாக பூமியில் உள்ளவற்றை அலங்காரமாக நாம் ஆக்கினோம்'
-குர்ஆன் 18:07


ஆம். அம்மாரைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் பிறந்தது முதல் இன்னும் இறக்கும் காலம் வரை மற்ற மனிதர்கள் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும் பெற்றதில்லை. இதற்கு பரிசாக இறப்புக்குப் பிறகு நிரந்தர உலகமான மறுமை வாழ்வில் நம்மை படைத்த இறைவன் அனைத்து சுகங்களையும் அம்மாருக்கு தருவான். இது போன்ற நம்பிக்கை நம் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

-----------------------------------------------

அறிவியல் இன்னும் கடவுளை நிரூபிக்கவில்லையாதலால் என்னால் இறை நம்பிக்கையை பெற முடியவில்லை என்பவர்களுக்கு சகோதரர் ஜெயபாரதன் கொடுத்த விளக்கத்தையும் பார்ப்போம்..

மனிதன் பிறக்கும் போதே அவனது தலையில் “கணினித் தாய்மைப் பீடம் (Computer Mother Board), மூளை இயக்கி (CPU -Central Processing Unit) நினைவுத் தகுதி (Memory Capacity), இயக்க ஏற்பாடு (Operating System Like Windows XP, Vista or Window : 7) என்ன வென்று இயற்கை அல்லது ஊழ் விதி தேர்ந்தெடுத்துப் பதிவாக்கி விடுகிறது என்பது என் கருத்து. பிறந்த பிறகு மனிதன் அவற்றை ஓரளவு மேம்பாடு (Upgrade) செய்து கொள்ள அவனுக்குத் திறமை அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதனால் தனக்குப் பிறவியிலேயே இடப்பட்டுள்ள தாய்மைப் பீடம், மூளை இயக்கி, நினைவுக் களஞ்சியத்தைப் (Mother Board, CPU, Memory Units) பின்னால் அவனாலோ அல்லது எவனாலோ மாற்ற இயலாது ! இயக்க ஏற்பாடு (Operating System) மாறலாம் ! ஆதலால் மனிதன் ஊழ் விதியின் கைப்பிள்ளைதான் ! ஊழ்விதியின் தீராத ஒரு விளையாட்டுப் பிள்ளைதான்.
கடவுளை அதன் படைப்புகளில் ஒன்றான மனிதன் தனது கண்ணால் காண முடியாது.
எப்படி அதை விளக்குவது ?

வயிற்றில் தொப்புள் கொடியுடன் பின்னி வளரும் குட்டி யானை தன் தாயைக் காண முடியாது. வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னே குட்டி தாய் யானையைக் காண்கிறது. ஆதலால் பிரபஞ்சத்தில் அடைபட்டுப் போன மனிதன் இயற்கையின் தொப்புள் கொடி இணைப்பில் வாழ்கிறான்; மாள்கிறான்.

அதுபோல் மனிதன் பிரபஞ்சப் படைப்பாளியைக் காண வேண்டு மென்றால் இயற்கையின் தொப்புள் கொடி அறுத்து பிரபஞ்சத்தை விட்டு வெளியேற வேண்டும்.
கடவுளைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் அதன் படைப்புகள் மூலந்தான் நாம் விளக்க முடியும்.

1. தெரிந்தவற்றை வைத்து தெரியாதவற்றை விளக்குவோம்.
2. தெரியாவற்றை யூகித்து தெரிந்தவற்றை மேம்படுத்து வோம்.

இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

இருவேறு உலகம் என்பவை ஆன்மீக உலகம், உலோகாயுத உலகம். சித்தாந்த ஞான உலகத்தின் இயற்கை விதிகள் வேறு. பௌதீக-ரசாயன உலகத்தின் இயற்கை நியதிகள் வேறு. திரு என்பது உலோகாயுதச் சொத்துக்கள். தெள்ளியர் என்பது ஆன்மீக ஞானிகள்.
உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன வென்று விஞ்ஞானம் இதுவரை விளக்க முடிய வில்லை. உயிர் என்பது எவ்வித இரசாயன மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட தில்லை என்பது என் கருத்து. ஆத்மா ஓர் இயக்க சக்தி. ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது.



ஊர்ந்து செல்லும் இலைப்புழு ஏன், எப்படிப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியாய் மாறிச் செல்கிறது ? வகுத்தான் வகுத்த விதி முறைப்படி நிகழும் ஒரு காட்சி இது. இப்படி செய்வது எது ? இது ஏன் நேர்கிறது ? இதுபோல் முட்டைக்குள் உருவாகும் குஞ்சுக்கு உயிர் எப்படி நுழைகிறது ? சிசு பிறக்கும் போது தாய்க் கருவில் உயிர் அதற்கு எப்படி நுழைகிறது ? மனிதன் இறந்த பிறகு போது உயிர் எங்கே போகிறது ?

300 பேர் அமர்ந்து பறக்கும் ஆயிரக் கணக்கான ஜெட் விமானங்களைப் படைத்த மனிதனால் ஒரு பட்டுப் பூச்சியை, மினிமினியை உண்டாக்க முடியுமா ?

மனிதனால் பூமியின் ஈர்ப்புச் சக்தியைக் காணமுடியுமா ?

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மெய்யானால், ஏனிப்போது அப்படிப் பிறப்ப தில்லை ? நிகழ்வதில்லை ? மனிதக் குரங்கு எப்படி ஆறறிவு படைத்த மனிதப் பிறவியாய் மாறியது ?

நம் கண்முன் ஊர்ந்திடும் இலைப்புழு பறந்திடும் பட்டாம் பூச்சியாய் ஏன், எப்படி மாறுகிறது ?
இந்த வினாக்களுக்கு விடை எவருக்கும் தெரியாமல் இவை இன்னும் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகின்றன.

'அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்: நன்கறிந்தவன்'
-குர்ஆன் 6:103


ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

மறு உலகில் நாம் இறைவனை சந்திக்கவுள்ளோம் என்பதை இறைவன் கூறும் போது:

'இறைவனை அஞ்சுங்கள். அவனைச் சந்திக்க உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.'
-குர்ஆன் 2:223




Tuesday, August 28, 2012

இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல


நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு படைப்பாளிகளால் தவறாகவும் மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப் பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம் வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும் எழுதிவரும் தொடர்கதை. இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய நிலத்தில் இஸ்லாமியர்களும் மற்ற சமய சமூகத்தை சேர்ந்தவர்களும் மிகச்சரியான புரிதல்களுடன் வாழ்ந்து வந்தது பெருவரலாறு. ஆனால் காந்தியைக் கொன்றழித்த இந்திய தேசத்தின் புதல்வர்கள் ஆளவந்தார்களாக மாறிய வரையிலும் அந்தப் பெருவரலாற்றின் அமைதி தொடர்ந்து தான் வந்தது. பொதுச்சூழலில் என்றைக்கு குண்டுவெடிப்புகளும் உலகளாவிய நிகழ்வுகளில் பல செயல்களும் செய்திகளும் முஸ்லிம்களை சம்மந்தப்படுத்தி வரத் தொடங்கினவோ அன்றைக்கு பிடித்தது சனி.

நான் முஸ்லிம்களில் குற்றவாளிகள் இல்லவே இல்லை என கூறவரவில்லை. முஸ்லிம்கள் என்றாலே குற்றவாளிகள், குண்டுவைப்பவர்கள் என்று கற்பிதம் செய்ய முனையும் ஆதிக்கசக்திகளை துதி பாடி எடுக்கப்படும் திரைப்படங்களைச் சாடுவதே என் நோக்கமாகிறது. எந்த இனத்தில் அல்லது எந்த மதத்தில் குற்றவாளிகள் இல்லாமல் இருக்கிறார்கள்..? எந்த இனத்தை சேர்ந்த அல்லது மதத்தைச் சேர்ந்தவர்கள் முழுக்க நல்லவர்கள் என மார் தட்டிக்கொள்ள முடியுமா..? அங்கனமே முஸ்லிம்களையும் அவர்களில் அங்குமிங்கும் இருக்கும் குற்றவாளிகளை குற்றச்செயல் புரிந்தவர்களை நாம் பார்க்க வேண்டும் என்பது தானே நியாயமாக இருக்க முடியும்..?

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியோ இல்லையோ, உலகுக்கே இளைத்தவாயர்கள் முசல்மான்கள்.

அவர்கள் செய்யக்கூடிய கொடுஞ்செயல்கள் என்னென்ன..?

1.அரபி/உருது பேசுகிறார்கள்.
2.தரையில் வீழ்ந்து தொழுகை புரிகிறார்கள்.
3.கூட்டம் கூட்டமாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.
4.புத்தகங்கள் அச்சிடுகிறார்கள்.. படிக்கிறார்கள் பேசுகிறார்கள்.
5.இன்னமும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என நம்பிக்கொண்டு இங்கேயே இருக்கிறார்கள்.

குழந்தைத் தனமாய் இருக்கிறது. இரண்டு தரப்பாரை எப்பொழுதும் பதற்றத்திலேயே வைத்திருப்பதில் பதவிக்குளிர் காய்கிற அரசியல்வாதிகளும், மதவாதிகளும், இந்த இரண்டு தரப்பாரைச் சார்ந்து பிழைப்பு நடத்தும் அடிவருடிகளும் தவிர பொது மக்கள் இன்னமும் எந்த மதமாயினும் சரி, இணக்கமாக, அந்நியோன்னியமாகத் தான் வாழ்கின்றார்கள்..

இனி சினிமாவுக்கு வருவோம். அடிதடிப் படமாயினும் அரசியல் படமாயினும் சரி... ஊறுகாய் முஸ்லிம்கள் தான். முஸ்லிம்கள் குண்டு வைப்பவர்களாகவும், உருது பேசுகிறவர்களாகவும், தொழுகை புரிபவர்களாகவும், வெளிநாட்டுத் தீவிரவாதிகளாகவும், குண்டடிபட்டு அல்லது குத்துப் பட்டு சாகிறவர்களாகவும் தொடர்ந்து பிம்பமாக்கப்படுகிறார்கள். எந்த வித உலகளாவியப் பார்வையோ அல்லது புரிதலோ அன்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என எடுக்கப்படுகின்ற படங்களில் தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம்கள் கொடுமைக்குட்படுத்தப்படுகின்றனர்.

சமீபத்திய வானம்... இதில் ப்ரகாஷ்ராஜ் நல்ல முஸ்லிம். அவர் தம்பி தீவிரவாதி. குண்டு வைப்பவன்.

ரஜினிகாந்தின் சிவாஜியில் ஹவாலா செய்பவர் ஒரு பாய். (சூப்பரு). உன்னைப் போல் ஒருவனில் கமல் செய்தது பெரும் துரோகம். அவரது குருதிப்புனல் படத்தில் அர்ஜூன் முஸ்லிம். கமல் இந்து. ஏன் இந்த நாயகர்கள் முஸ்லிம் வேஷமே ஏற்கக்கூடாதா..? பெரும்பான்மை மதத்தைத்தான் சார்ந்தவனாய் இருக்க வேண்டும் நாயகன் என்று எழுதப்படாத விதியே இருக்கிற கோடம்பாக்கத்தில் அதை மீற கமலால் கூட முடியாது. சேரனின் பொக்கிஷம் வித்தியாசமாய்த் தொடங்கியதே எனப் பார்த்தால்... அய்யய்யோ பத்மப்ரியாவின் அப்பா(முஸ்லிம்கள்)தான் படத்தின் வில்லன். வாக்கு கொடுத்து அதை மீறுகிறவர். ஏன் இந்த வெறிப்பார்வை..? சேரன் அதே படத்தை கதையை மாற்றி யோசிப்பாரா..? அல்லது எடுப்பாரா..? பத்மப்ரியா ஒரு ஹிந்து சேரன் ஒரு முஸ்லிம் என எடுத்தால்... எடுத்தால் என்று தான் சொல்ல முடியும்.. எடுக்க மாட்டார்கள்.

சரி போகட்டும் என்றால் நம்பள்கி நிம்பள்கி என்று கசாப்பு கடைக்காரர்களாகவும் கறி வெட்டுகிறவர்களாகவும் தானே அதற்கு முன்பு வரை சித்தரிக்கப்பட்டார்கள்..? சில விதிவிலக்குகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவை மனக்காயங்கள் மொத்தத்தையும் மறுதலிப்பதற்கோ மறுப்பதற்கோ மறப்பதற்கோ போதாது என்பதே உண்மை.

இஸ்லாமியர்கள் பற்றி எடுத்துச் சொல்வதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கின்றன..? ஒரு முழுமையான சினிமா, முழுக்க இஸ்லாமிய குடும்பமொன்றின், இஸ்லாமிய கிராமமொன்றின், இஸ்லாமிய வாழ்க்கைமுறை ஒன்றைப் பதிவு செய்திருக்கிறதா இது வரை தமிழ் சினிமாவில்..? அப்படி ஒரு படம் எடுத்தால் ஓடாதா..? அல்லது இஸ்லாமியர்கள் வரலாற்றில் கதைகளே இல்லையா? இந்த மண்ணில் காலம் காலமாய் இஸ்லாமியர்கள் என்றாலே கறிவெட்டுபவன், தமிழை தப்பாக பேசுபவன் அல்லது குண்டு வைப்பவன் தானா..?

கட்டிடக்கலையில் இருந்து சாஃப்ட்வேர் துறை வரை தையல் கலையில் இருந்து மருத்துவர் வரை விஞ்ஞானிகளில் இருந்து மாலுமிகள் வரை இஸ்லாமியர்கள் சாதிக்கவில்லையா..? அல்லது சாதிப்பதை வெளிச்சொல்ல தமிழ்சினிமா தயாராக இல்லையா..? இது தான் இப்பொழுது நம் முன் நிற்கும் கேள்வி.

எந்த ஒரு படத்திலும், ஆகா.. ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி இஸ்லாமியர் என கதை சொல்கிறார்களே, பரவாயில்லையே என நினைத்தால் (உதாரணம்:போக்கிரி) உடனே வந்து இறங்குவார் அலிபாய். சர்வதேச குண்டுவைக்கும் டெக்னாலஜிஸ்ட். என்ன கொடுமை இது..?

இவர்கள் எல்லோருமே கதை எழுத மன்னிக்கவும் கதை பண்ண உட்காரும் பொழுதே ஒரு எதிர்மறைப் பாத்திரம் முஸ்லிமாக வந்தாக வேண்டும் என்ற முன் முடிவில் அதை பேலன்ஸ் செய்வதற்காகவே இன்னொரு கதாபாத்திரம் முஸ்லிம்.. அது எதற்கு..? மத ஒற்றுமை பேச, தியாகம் செய்ய.. ஏன் தனியாக ஒரு நல்ல முஸ்லிம் கதாபாத்திரத்தை சிந்திக்கவே முடியாத ஊனமுற்றவர்களாகவே இயங்குகிறீர்கள் இயக்குநர்களே...?

சரி. பொருளாதாரத்தில் கல்வியில் இன்னும் வாழ்நிலைகளில் முன்னேறி இருக்கிற, இந்தியத்திருநாட்டில் எல்லா ஊர்களிலும் பாரபட்சமின்றி பாகுபாடின்றி இடங்களையும் சொத்துக்களையும் வாங்கி இருக்கிற, வாங்குகிற, வாங்கப் போகிற மேல்நிலை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கிறீர்களே.. அதே நேரம் இன்னமும் கடைநிலையில் அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்படுகிற, வாழ்வாதாரத் தேவைக்கு கூட கை ஏந்தும் நிலையில் கல்வி அறிவும் பெறாமல், கூலிகளாகவும் ஏழைகளாகவும் இந்த நாட்டில் பரிதவிக்கிற ஏழை முஸ்லிம்களின் கதையை படமாக்க அல்லது எண்ணிப் பார்க்க கூட நேரமில்லையா தோழர்களே.. அல்லது அப்படி ஏழைகளாக எந்த ஒரு முஸ்லிமும் இல்லை என உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா....?

நமது வீதிகளில் நமது வீடுகளுக்கு இடப்புறமும் வலப்புறமும் வசித்துக் கொண்டு, நம் பிள்ளைகள் படிக்கிற பள்ளிகளில் தம் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நாம் பணம் சேமிக்கும் வங்கிகளில் தம் பணத்தையும் சேமித்துக் கொண்டு, நம்மிடம் தம் பொருளை விற்று, நம் பொருளை தமக்கென வாங்கி, குருதி கொடுத்து குருதி பெற்று எல்லா விதங்களிலும் சிறுபான்மையினராய் எல்லா நேரங்களிலும் அடுத்து என்ன நிகழுமோ என்ற பதற்றத்துடனே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இஸ்லாமியர் இந்த 'மதச்சார்பற்ற' காந்தி தேசத்தில் செய்யும் பிழைதான் என்ன..? இந்த நிலத்திலேயே தொடர்ந்து வாழ்ந்துவருவதைத் தவிரவும்.

சினிமா கட்டாயம் தலையாய கலை என நம்புகிறேன். பத்து படங்கள் போதும் தேசம் அமைதியுற என நிச்சயமாக அடித்துச் சொல்ல விழைகிறேன். அதனால் உங்கள் முன்வைக்கிறேன். என்ன செய்யக் கூடாது என்பதுவும் என்ன செய்ய வேண்டும் என்பதுவும்....

உங்களுக்குத் தெரியாதா இயக்குநர்களே..?

-ஆத்மார்த்தி

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14467:2011-05-08-04-10-28&catid=1:articles&Itemid=264

நன்றி: கீற்று

இது போன்ற நடு நிலைவாதிகள் பெரும்பான்மையாக உள்ள நமது நாடு இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் உலகுக்கு எடுத்துக் காட்டாய் அமையும். ஆத்மார்த்தியை ஆரத் தழுவி அன்பை செலுத்துவேம். சினிமா என்ற ஒரு அருமையான ஊடகத்தை இன்று காலிகள் ஆக்கிரமித்து உள்ளார்கள். அந்த நிலையை மாற்ற அறிவுஜீவிகள் முன் வர வேண்டும். ஈரானும், எகிப்தும் அருமையான கதையம்சம் கொண்ட பல திரைப்படங்களை உலகுக்கு அளித்து வந்துள்ளது. அந்த வரிசையில் தமிழ்ப் படங்களும் வரும் நாளை எதிர்பார்ப்போம்.

//1.அரபி/உருது பேசுகிறார்கள்.//

இஸ்லாம் உலக மொழிகள் அனைத்தையும் ஒரே தரத்திலேயே பார்க்கிறது. ஐந்து வேளை தொழுகை நேரங்களில் மட்டுமே முஸ்லிம்கள் அரபியில் ஓதுவார்கள். அது உலக ஒருமைப்பாட்டிற்காக! உருது பேசக் கூடிய முஸ்லிம்கள் தமிழகத்தில் மிகச் சொற்பமே! பெரும்பான்மை தமிழக முஸ்லிம்கள் வீடுகளிலும் ஆங்கிலம் கலக்காத தூய தமிழையே பேசி வருகின்றனர்.

Sunday, August 26, 2012

ஒன்றுபட்ட இந்தியாவை துண்டாடியது யார்?



//சுவனப் பிரியரே, ஆதாரம் இல்லாமல் நான் எதையும் சொல்வதில்லை என்பதை நீங்கள் இன்னமும் உணராதது என் துரதிருஷ்டமே.//- மலர்மன்னன்!

நான் தேடிப் பார்த்து கிடைக்கவில்லை என்பதாலேயே உங்களிடம் ஆதாரம் கேட்டேன். உங்களிடம் "கொஞ்சம் பொறுமையாக இருந்தால் முழு ஹிந்துஸ்தானமே கைக்கு வந்துவிடும், மக்கள் தொகையைப் பெருக்குவோம் அதுவே போதும்" என்று அபுல்கலாம் பற்றிய செய்திக்கு ஆதாரம் இருந்தால் தருவதில் என்ன சிரமம்? இல்லை தவறுதலாக சொன்னேன் என்று ஒத்துக் கொள்ளுங்கள்.



//ஹிந்துத்துவர்களே ஹிந்துஸ்தானத்தைப் பிரிக்க ஏற்பாடு செய்ததாகக் கொஞ்சமும் தயக்கமின்றி எழுதுகிறீர்களே? பெற்ற தாயைக் கூறு போடுவதா ஹிந்துத்துவம்? உங்கள் புரிதல் இவ்வளவு பாமரத்தனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை!//

ஜின்னா முஸ்லிம் லீக் தொடங்க வும் நாடு பிளவுபடவும் காரணமாக அமைந்தது எதுவென்று நினைக்கிறீர்கள்?

1917ல் ஆர்எஸ்எஸின் வீர சவர்க்கார் விடுத்த பிரகடனம் என்ன? 'இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. ஒன்று இந்து தேசம். இன்னொன்று முஸ்லிம் தேசம். இன்னும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மையினர் என்ற அளவில் அல்லாமல் எந்தவொரு எதிர்காலமும் இல்லை'

)R.N.AGARWAL THE DIALOGUE BETWEEN HINDUS & MUSLIMS

இவ்வாறாக ஜின்னாவுக்கு முன்பே வீர சவர்க்கார் பாகிஸ்தானுக்கு அடித்தளம் இட்டார். இவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட ஜின்னா காங்கிரஸிலிருந்து பிரிந்து முஸ்லிம் லீக்கை ஆரம்பிக்கிறார். அப்பொழுது நடந்த அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம்கள் அனைவரும் காங்கிரஸையே ஆதரித்தனர். அவர்கள் ஜின்னாவை நம்பவில்லை. ஜின்னா தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

DR AYSHA JALAL – THE SOLE SPOKESMAN JINNAH, THE MUSLIM LEAGUE, AND THE DEMAND FOR PAKISTAN

முதன் முதலில் பம்பாயில் ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் முதல்வராக நரிமான் எனபவர் வர வாய்ப்பிருந்தும் அவர் ஃபார்ஸி என்பதால் பி.ஜி.கர் என்பவரை வலுக்கட்டாயமாக திணித்து முதல்வராக்கினர். இதற்கு மறைமுக வேலை செய்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். ஆட்சிக்கு வர உழைத்த ஒருவரை ஓரங்கட்டி விட்டு இந்துத்வா சிந்தனை உடைய பி.ஜி.கர்ரை முதல்வராக்கியது இனப்பற்றால் அல்லவா?

பீகாரில் நடந்த மற்றொரு கவிழ்ப்பு வேலையை பார்ப்போம்: பீகார் காங்கிரஸ் என்றாலே டாக்டர் செய்யித் முஹம்மத் அவர்கள்தான் அனைவரின் ஞாபகத்திலும் வரும். அந்த அளவு காடு மேடு களுக்கெல்லாம் சென்று காங்கிரஸின் வெற்றிக்காக பாடுபட்டவர். காங்கிரஸின் பொதுக் செயலாளராகவும் இருந்தார். எனவே பீகாருக்கு வெளியிலேயும் பிரபலமாக இருந்தார். பீகாரில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க தயாரானது. எல்லோரின் எதிர்பார்ப்பும் டாக்டர் செய்யித் அஹமத் அவர்கள்தான் முதல்வராவார் என்று கணித்தனர். ஆனால் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மாறாக மத்திய அமைச்சரவையில் இருந்த ஸ்ரீகிருஷ்ண சின்ஹாவும், அனுகிரஹா நாராயண சின்ஹாவும் பீகாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு முதல்வராக்க தயார் செய்யப்பட்டனர். இதை முன்னின்று நடத்தியவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். பிறகு ஸ்ரீகிருஷ்ணா முதல்வராக்கப்பட்டு டாக்டர் செய்யித் முஹம்மத் அமைச்சராக்கப்பட்டார். இதனை நேருவிடம் புகாராக சொல்லியும் எந்த பிரயோசனமும் இல்லை. இந்த இரண்டு சம்பவங்களும் முஸ்லிம்ளிடம் பிரசாரம் செய்ய ஜின்னாவுக்கு மிக தோதுவாகப் போனது.

AZAD PAPERS AS INCERTED IN INDIA WINS FREEDOM PAGE 17,18

இதன் பிறகுதான் ஜின்னாவின் பேச்சை சில முஸ்லிம்கள் கேட்க ஆரம்பித்தனர். அதன் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் லீக் அமோக வெற்றி பெறுககிறது. தனக்கு பாதகமான சூழ்நிலைகளையே சாதகமாக மாற்றிக் கொள்ளும் ஜின்னா இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.

கேபினட் மிஷன் பிளான் திட்டம பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். இதன்படி இந்தியாவைப் பிரிக்காமல் சிறுபான்மையினருக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்கிட வேண்டும். அதோடு முஸ்லிம்களின் உரிமைகளுக்கு ஒரு உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவானது. இதற்கு நடுவராக ஒரு வைசிராய் இருப்பார் என்று சொல்லப்பட்டது. இதனை முஸ்லிம் லிக்கும் காங்கிரஸூம் ஒத்துக் கொண்டது. இது நடந்தது 1946. நாடு பிளவுறுவது என்பது அப்போது நிறுத்தப்பட்டது.

ஜின்னா முதற்கொண்டு அனைவரும் ஏற்றுக் கொண்ட இந்த அருமையான திட்டத்தை பம்பாய் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேரு போட்டு உடைத்தார். 'காங்கிரஸ் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. கேபினட் மிஷன் பிளானை ஏற்றுக் கொள்ள முடியாது ' என்று சொன்னது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீண்டும் பிரிவினை கோஷங்கள் தலை தூக்கத் துவங்கின. இதைப் பற்றி அபுல் கலாம் ஆசாத் சொல்லும் போது '1946ல் காங்கிரஸ் தலைமைக்கு ஜவஹர்லால் நேருவை பரிந்துரைத்தது நான் செய்த பெருந் தவறு. மக்கள் விரும்பியதைப் போல் நானே நீடித்திருந்தால் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறே வேறு விதமாக போயிருக்கும்'

AZAD PAPERS AS INCERTED IN INDIA WINS FREEDOM PAGE 164,165,166

----------------------------------

'திரு ஜின்னா அவர்களும் அன்று மாநில சுயாட்சியையே கேட்டார். அதனை ஏற்றுக் கெண்டிருந்தால் பாகிஸ்தானே உருவாகியிருக்காது'
-கருணாநிதி

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா(3-2-1996) பக்கம் 6

----------------------------------

'1937ல் நடந்த தேர்தலுக்கு பின்னரும் கூட ஜின்னா தனி நாடு பற்றி சிந்திக்கவில்லை'

ஹெச்.எம்.சீர்வை(THE AUTHOR OF THE BOOK "PARTITION THE LEGEND AND REALITY ) PAGE 21.

இவ்வாறு பாகிஸ்தான் உருவாக சவர்க்கர், நேரு, பட்டேல், ஜின்னா என்று பலரும் பங்கு வகிக்க இங்குள்ள முஸ்லிம்களை குறை சொல்வது என்ன நியாயம்? அடுத்து ஜின்னா ஒரு ஷியா முஸ்லிம். இஸ்லாமிய நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் மேற்கத்திய கலாசாரத்தை விரும்பும் ஒருவர். இங்குள்ள முஸ்லிம்கள் எவருமே இன்றுவரை இவரை ஒரு தேசத் தலைவராக மதிப்பதில்லை. அபுல்கலாமுக்கு இருந்த மரியாதை ஜின்னாவுக்கு அவர் வாழும் காலத்திலும் முஸ்லிம்களால் கொடுக்கப்படவில்லை. அவர் இறந்தும் அந்த மரியாதையை முஸ்லிம்கள் ஜின்னாவுக்கு கொடுக்கவில்லை.

//ஜின்னாவை பகடைக்காயாக அல்ல, துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியவர்கள் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம்! ஜின்னா ஒன்றும் வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாதவர் அல்ல! சமயத்தை சரியாகப் பயன் படுத்திக்கொண்டவர்! முஸ்லிம்களை மயக்க திடீர் எனத் தலைக்குத் தொப்பியும் உடம்புக்கு ஷேர்வானி பைஜாமாவும் என வேடம் தரித்துக் கொண்டவர்!//

உங்கள் வார்த்தைகளை அப்படியே ஒத்துக் கொள்கிறேன். வெள்ளையர்களின் சூழ்சசியும் சேர்ந்து ஜின்னாவை நன்றாக பலரும் பயன் படுத்திக் கொண்டனர். அவருக்கு இந்திய முஸ்லிம்களை பற்றிய கவலை கிஞ்சிற்றும் இல்லை. ரத்த ஆறு ஓடினாலும் பரவாயில்லை. தான் ஒரு நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியிருந்தது. இதில் நேருவும் ஜின்னாவுக்கு சளைத்தவர் அல்ல. இரண்டு பேரின் குடுமி பிடியால் பல ஆயிரக் கணக்கான மக்கள் ரத்தம் சிந்தியதுதான் மிச்சம்.

//என்னுடைய முதுமையில் இப்படிப் படுத்தலாமா? என்ன தான் காபிரான கிழவனாயினும் உங்களின் பாட்டனே அல்லவா நானும்?//

ஐயோ ......நான் உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை சார். எனது தாத்தாவின் ஸ்தானத்தில் உங்களை வைத்துள்ளேன் ... ..... காஃபிர் என்றால் ஏதோ மரியாதை குறைவான வார்த்தை என்றே பலரும் நினைக்கின்றனர். காஃபிர் என்ற வார்த்தைக்கு 'இறை மறுப்பாளர்' என்ற பொருள் வரும். நீங்கள் இறைவனை ஏற்றுக் கொண்டவர்தானே! மற்றபடி இந்த கேள்விகளை கேட்டது எல்லாம் ஸ்மிதா! அவர் கேட்டு விட்டு பதில் தராது நகர்ந்து கொண்டார். அவர் சார்பில் நீங்கள் பதில் அளித்துக் கொண்டுள்ளீர்கள்.

//ராஜாஜிக்கு ரொம்பத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்! அவர் என்றுமே ஒரு பாப்புலர் தலைவராக இருந்ததில்லை! காங்கிரஸ் அவர் பேச்சைக் கேட்டதே இல்லை!//

காங்கிரஸ் சார்பாக மத்தியிலும் மாநிலத்திலும் பல உயர் பதவிகளை வகித்து சட்டத்தை செயல்படுத்தியரை பாப்புலர் தலைவராக இருந்ததில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தலைவரே நாட்டு பிரிவினையை பேசும் போது நாம் பேசினால் என்ன என்ற தைரியத்தை ஜின்னாவுக்கு கொடுத்தே ராஜாஜியின் நிலைப்பாடுதான் என்பதை எவரும் மறுக்க முடியாது..

டிஸ்கி: அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று மூன்று முதல்வர்களோடும் நெருங்கி பழகி பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு பழகிய பழம் பெரும் பதிவர் மலர் மன்னன் என்பதை அறியத் தருகிறேன். சிறந்த அறிவாளி. ஆனால் இன்றும் இந்துத்வாவை விடாது பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதுதான் இவரிடம் உள்ள பெரும் குறையே!

அடுத்து பதிவர் மாநாடு எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்திருந்ததை நேரலையில் பார்த்தேன். இதற்காக உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது நல சேவையிலும் இந்த பதிவர் உலகம் கால்பதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு வைக்கிறேன்.

Saturday, August 25, 2012

வேப்பிலை, எலுமிச்சம் பழத்தால் ஓடும் அரசு பேருந்து!

ஆலங்குடி: ஆவி பயத்தால் புதுக்கோட்டை அருகே அரசு பஸ்ஸுக்கு வேப்பிலை கட்டி ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து, ஆலங்குடி வழியாக கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, பேராவூரணி வரை, அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், ஆவிகள், பேய்கள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும், திருவரங்குளம் ஆர்.எஸ்.பதி காடு, கொத்தமங்கலம், மேற்பனைகாடு, காவிரியாறு பாலம் வழியாகச் செல்கிறது. இந்த வழியாகச் செல்லும் போது, பஸ் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கிறது.



கடந்த சில நாட்களுக்கு முன், மேற்பனைகாடு காவிரியாறு பாலத்தில் பைக்கில் சென்றவர்கள் மீது இந்த பஸ் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காட்டுப்பகுதியில் செல்லும்போது, இந்த பஸ் அடிக்கடி பழுதாகி நின்றுவிடும். இரவு நேரங்களில் பெரும்பாலும் சில பயணிகளுடன் டிரைவர், கண்டக்டர் மட்டுமே தனியாக வரும் சூழல் உள்ளது. இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் பஸ் பழுதாகி நிற்பதால், இந்த பஸ்சில் பயணிக்க பயணிகள் பயப்படுகின்றனர். மேலும், டிரைவர், கண்டக்டர்களும் இந்த பஸ்சில் பணி செய்ய தயங்குகின்றனர். இந்த பஸ்சில், "ட்யூட்டி' பார்க்க பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் தயங்குவதுடன், தங்களை வேறு பஸ்சுக்கு மாற்றித்தரும்படி கூறுகின்றனர். ஆனால், கோட்ட மேலாளர்கள் எச்சரிக்கையை தொடர்ந்து பயந்து கொண்டே வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், இந்த பஸ் டிரைவர், கண்டக்டர்கள் புதுக்கோட்டையில் உள்ள அம்மன்கோவிலில் அபிஷேகம் செய்தனர். கோவிலில் வைத்து வழிபட்ட எலுமிச்சை பழம், வேப்பிலையை பஸ் முன்னால் கட்டி, பஸ்சை ஓட்டி வருகின்றனர்.


-தினமலர்
25-08-2012

இறந்தவர்களின் ஆவி (உயிர்) மீண்டு வந்து உயிரோடு இருப்பவர்களைப் பிடித்துக் கொள்கிறது அது தான் பேய் என்று சிலர் கருதுகிறார்கள். இதற்கு சாத்தியமே இல்லை என்று இஸ்லாம் அடித்துக் கூறுகிறது.

''அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதைத் தன்னிடத்தில் நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை வாழ்வதற்காக அனுப்பி விடுகிறான்'' (அல்குர்ஆன் 39:42)

''அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ''என் இறைவனே! என்னைத் திரும்ப உலகுக்குத் திருப்பி அனுப்புவாயாக!'' என்று கூறுவான். (அல்குர்ஆன் 23:99)

''நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக'' என்றும் கூறுவான். அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையேயன்றி வேறில்லை; அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.'' (அல்குர்ஆன் 23:100)

மரணித்த பிறகு எந்த உயிரும் இந்த உலகத்திற்கு திரும்பி வராது, அவ்வுயிருக்கும் இவ்வுலகிற்கும் இடையில் திரை இருக்கிறது. அதை உடைத்துக் கொண்டு வரவே முடியாது. எனவே இறந்த மனிதனின் உயிர் உயிருடன் இருப்பவரின் உடலில் சவாரி செய்ய முடியவே முடியாது. எனவே இறந்தவனின் ஒரு ஆவி மற்றவனின் உடலில் ஏறும் என்ற நம்பிக்கை மற்றவர்களுக்கு வரலாம். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு அறவே வரக் கூடாது. ஆனால் நம்மிலும் சிலர் மனநலம் பாதிக்கப்பட்ட பலரை பேய் பிடித்திருப்பதாக நினைத்துக் கொண்டு தர்ஹாக்களில் கட்டிப் போட்டு அவர்களின் நோயை மேலும் அதிகப்படுத்துகிறார்கள். அரசாங்கம் இது போன்று ஏர்வாடி, வேள்ங்கண்ணி, நாகூர் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நோயாளிகளை மீட்டு அவர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும். இதனால் பலரின் வாழ்வை அழிவிலிருந்து மீட்கலாம்.



பேரூந்துக்கு வேப்பிலை கட்டப்பட்டதால் கொஞ்சம் தைரியத்தோடு வண்டியை டிரைவர் ஓட்டுவார். அது ஒன்றுதான் இதில் கிடைத்த நன்மை. இதன் மூலம் காசு பார்க்கும் மந்திரவாதிகளுக்கும் சில நன்மைகள். இங்கு சவுதியில் பேய் ஓட்டுகிறேன் என்று யாராவது காசு பார்க்க ஆரம்பித்தால் அவர் கம்பி எண்ண வேண்டியதுதான். :-)











Thursday, August 23, 2012

ஆப்கன் முல்லா உமரின் பெருநாள் செய்தி!

ஏழு பக்கங்கள் அடங்கிய பெருநாள் செய்தியை ஆப்கன் மக்களுக்காகவும் உலக மக்களுக்காகவும் முல்லா உமர் அனுப்பியுள்ளார். இந்த செய்தி நேடோவின் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி ஏழு அமெரிக்க படையினரை கொன்றதன் மறுநாள் அனுப்பப்பட்டுள்ளது. அதனை பார்ப்போம்!



“ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் அமீரும், தளபதியுமாகிய முல்லா முஹம்மத் உமராகிய நான் இறைவனுக்கு அஞ்சி, அவரின் அடிமையாகிய முகமது நபி அவர்களை நினைவு கூர்ந்து ஆரம்பம் செய்கிறேன். இறைவன் எந்த தேவையும் அற்றவன். நாம் அனைவரும் அவனுக்கு கட்டுப்பட்ட அடிமைகள். எந்த ஒரு சிறு தேவையிலும் அவன் நம்மில் தங்கியுள்ளவன் அல்ல. ஆனால் நாம் அனைத்து தேவைகளிலும் அவனிடமே தங்கியுள்ளோம். அந்த இறைவனை அஞ்சுகிறேன். அவனிடமே எனது அனைத்து காரியங்களையும் ஒப்படைக்கிறேன்.”.

“சாத்தானின் பழிப்புகளில் இருந்து நான் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்”.

“இன்றைய இனிய தினம் நான் ஆப்கானிய முஜாஹித்களுக்கும், தேசத்து மக்களுக்கும், உலகில் நோன்பு நோற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன். நோன்பு உங்களுக்கு சாந்தியளித்தது போல புனித பாக்கியங்களும் உங்களை வந்தடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.”

“இஸ்லாத்தின் எதிரிகளின் சிறைகளில் வாடும் முஜாஹித்களின் விடுதலை நெருங்க இறைவனை பிரார்த்தனை புரிகின்றேன். காயப்பட்ட முஜாஹித்களின் வலிகள் குறைவடைய இறைவன் அருள் புரியவும் வேண்டுகிறேன். நாட்டு விடுதலைக்காக உயிரை இழந்த மக்களுக்கு இறைவன் சொர்க்கத்தை தந்தருள்வானாக! போரில் இறந்த முஜாஹித்களின், காயப்பட்ட முஜாஹித்களின், கைது செய்யப்பட்ட முஜாஹித்களின் இழப்பில் அல்லல்படும் அவர்கள் குடும்பத்திற்கு இந்த ரம்ழான் ஆறுதல் அளித்திருக்கும் என நம்புகிறேன்”.

“நான் ஒரு சில முக்கிய விஷயங்களை என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்”:

1) அமெரிக்காவுக்கு எதிரான எங்களது போர் முன்னிலும் வலிமை பெற்றுள்ளது. உறுதி பெற்றுள்ளது. அது தனது பாதையில் வேகமாக பயணிக்கிறது. இதற்கு வீரமிகு ஆப்கானிய மக்கள் தங்கள் பங்களிப்பை மேலும் நல்க வேண்டும்.

2) ஃபரூக் ஆபரேஷன் பூரண வெற்றியளித்துள்ளது. சில பின்னடைவுகளையும் தந்துள்ளது. எதிரி மூச்சு விட அவகாசம் தராது எமது தாக்குதல்கள் அமைந்திருந்தன. எதிரி இனி நிம்மதியாக இருக்க முடியாது. நடக்க முடியாது. தனது சுவாசத்தை நிம்மதியாக இழுத்து விட முடியாத நிலையில்தான் அமெரிக்கர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அது ஆப்கான் முழுவதும் பரந்துபட்ட நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.

3) முஜாஹித்கள் கர்சாயின் சிவப்பு ஆப்கானிய படையினுள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் பல தாக்குதல்களை நடத்தியுமுள்ளனர். பல சிவப்பு ஆப்கான் கர்சாயின் படையினர் முஜாஹித்களாக மாற்றப்பட்டும் உள்ளனர். இது ஒரு பெரிய வெற்றி.

4) எமது நாட்டில் நடத்திய போரினால் ஆக்கிரமிப்பாளர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களின் வீரர்களே தங்களின் அரசாங்கத்துக்கு எதிராக கலகம் செய்வதை பார்க்கிறோம். அந்தந்த நாடுகளிலும் எதிர்ப்பு வலுத்தே வருகிறது. தங்கள் நாடு தவறான பாதையில் செல்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர். எமது போராட்டம் அமெரிக்க பொருளாதாரம் வரை தாக்கம் செலுத்தியுள்ளது.

5) ஆக்கிரமிப்பாளர்கள் பல அநீதிகளை இழைத்துள்ளனர். இரவில் கைது, இரவில் தேடுதல், குழந்தைகளை துன்புறுத்தல், சித்திரவதை செய்தல், இறந்த உடல்களை அசிங்கப்படுத்தல், பெண்களை வதைத்தல், மானபங்கம் செய்தல் என பற்பல. இத்தனையையும் செய்து விட்டு இவர்கள் உலகுக்கு மனித நேயத்தைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள்.

6) பதுஷ்தானில் இருந்து ஹெல்மண்ட் வரை, ஹேரத்தில் இருந்து நங்ககர் வரை முஜாஹித்களை கண்டு பெண்கள் சந்தோஷமடைகின்றனர். இதன் அர்த்தம் எமது கட்டளைகளை இந்த பிராந்தியங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதாகும். இந்த வெற்றிகள் எதிரிகளை நிலைகுலையச செய்துள்ளது.

7) எதிரிகளின் சதிகளை நம்பி எம்மக்கள் பலர் ஏமாந்து போய் விடுகின்றனர். இதனை நாம் இயன்றளவு தடுத்து வருகின்றோம். மீடியாக்களை தன் பக்கம் வைத்திருக்கும் எதிரிகள் முஜாஹிதின்களைப் பற்றி பல பொய்களை தினமும் பொதுவில் வைக்கின்றனர். ஆனால் மக்கள் உண்மையை தெரிந்தே வைத்துள்ளார்கள்.

8) தங்களின் குள்ளநரித்தனமான செயல்களால் நம் மக்களிலேயே பலரை பகடைக் காய்களாக இது வரை பயன் படுத்தி வந்தனர். முன்பு எவ்வாறு 90 களில் கம்யூனிஸ்ட் படைகளை விரட்டினோமோ அது போன்ற நிலையை இறைவன் ஏற்படுத்துவான். ஹமீத் ஹர்சாய்க்கு அவரின் அதிகாரம் குறைந்து வருவது புரிகிறது. அவர் எத்தனை மாநாடுகளை நடத்தினாலும் அதனால் எம்மை கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை.

9) பலஹீனமான ஒரு அரசிடம் பொறுப்பை கொடுத்து தங்களின் தோல்வியை மறைக்கப் பார்க்கினறனர் அமெரிக்கர்கள். நாம் துணிவு கொண்டுள்ளோம். அமெரிக்கா மட்டுமல்ல வேறு எந்த நாடு வந்தாலும் முகம் கொடுக்கும் ஆற்றலையும் நம்பிக்கையையும் இறைவன் எமக்கு தந்துள்ளான்.

10) இந்த நாட்டை வேறு சில சக்திகளுக்கு விற்கும் நாடகமும் நடந்தேறி வருகிறது. ஆப்கானின் உண்மை விசுவாசிகள் இதனை ஒருக்காலும் அனுமதிக்கமாட்டார்கள். இந்த நாடகத்துக்கு துணை போகும் கர்சாயின் அரசையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த நோன்பில் எமக்கு இன்னோரு மகிழ்ச்சிகரமான செய்தியொன்றுள்ளது. அது, ஆப்கானிய மக்கள் எம்மை, எமது தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலை காபூல் வரை ஏற்பட்டுள்ளது. எமது பல தாக்குதல்களுக்கு காபூல் மக்களின் பேருதவியே பெரும் காரணமாக அமைந்தது.


12) பல பில்லியன் டாலர்கள் காபூல் அரசால் உதவி என்ற பெயரில் சுரண்டப்படுகிறது. இந்த பணங்கள் அனைத்தும் பலரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகின்றன. வெளி நாட்டு உதவி ஆப்கானிய வறிய மக்களை சென்றடைவதில்லை. இவை அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பாக்கெட்டுகளை நிரப்புகின்றன. இது எங்களுக்கு தெரியாமல் இல்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் இதனை உணர வேண்டும்.

14) அமெரிக்கர்களோடு முன்பு பேச்சு வார்த்தை தொடங்கி பிறகு நின்றது. எங்கள் நாட்டின் இறையாண்மையையும் வளங்களையும் விட்டுக் கொடுத்து எந்த சமரசத்துக்கும் அவர்களோடு கை கோர்க்க மாட்டோம் என்றும் கூறிக் கொள்கிறேன்.

16). கல்வியில் எங்களின் மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். இவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பெரும் பொருளாதாரம் ஒதுக்கப்படும். அதேபோல் எங்களின் பெண்களின் முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தப்படும். அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். இவை அனைத்தும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமையப் பெறும்.

19) போரால் அழிந்து போயிருக்கும் ரோடுகள், பாலங்கள், மருத்துவமனைகள், விவசாய நிலங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு இன்னும் சில ஆண்டுகளில் சிறந்த முன்னேற்றத்தை இன்ஷா அல்லாஹ் பெறுவோம்.

21)ஆப்கானிஸ்தான் பக்கத்து நாடுகளோடு சுமூகமான உறவை வைக்கவே விரும்புகிறது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம். எங்கள் நாட்டின் உள் விவகாரங்கள் அவர்கள் தலையிடக் கூடாது. அவர்கள் நாட்டின் உள் விவகாரங்களில் நாங்களும் தலையிட மாடடோம். எங்கள் நாட்டை எந்த நாடும் அதிகாரம் செய்ய இயலாது அதற்கு உலக நாடுகளின் சட்டங்களும் இடம் தராது என்றும் சொல்லிக் கொள்கிறோம்.

22)சில நாட்களுக்கு முன்பு அரபுலகில் நடந்த இஸ்லாமிய புரட்சிகளை எண்ணி சந்தோஷமடைந்தேன். இறைவனின் சட்டங்கள் இந்த நாடுகளில் கொண்டு வரப்பட்டு அந்த மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன். பர்மாவில் நடந்த அக்கிரமங்களுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுத்து அங்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன்.

உலக மக்களே! அமெரிக்கா சொல்லும் பொய்களை நம்பிக் கொண்டிருக்காதீர்கள். மனித உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன என்பதை குவாண்டனாமோ சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நாய்களை விட்டு மனிதர்களை கடிக்க சொல்வதும், சிறுநீர் பெய்து தங்கள் வக்கிரத்தை தீர்த்துக் கொள்ளும் அமெரிக்கர்களை முதலில் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளச் சொல்லுங்கள். பெண்களை கற்பழிப்பதும், இறந்த உடல்களை அவமானப்படுத்துவதும் போன்ற அநாகரிக செயல்களை செய்பவர்கள் அமெரிக்கர்களே! எங்கள் நாட்டை ஆக்கிரமிப்பவர்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அவர்கள் பல இழப்புகளை பெற்றும் அதனை தங்கள் நாட்டுக்கு தெரிவிக்காமல் மறைக்கின்றனர். இவர்கள் எங்களின் கலாசாரத்தை அழிக்கின்றனர். மேற்கத்திய நாகரிகத்தை கொண்டு வர முயற்ச்சிக்கின்றனர். இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

அன்பின் ஆப்கான் தாய் மார்களே!, வீரர்களின் தந்தைகளே!, போராட துடிக்கும் வருங்கால போராளிகளே, குழந்தைகளே. இது உங்கள் மண். இதற்காகவே நாம் போராடுகிறோம். எதிரியை வெளியேற்றி ஷரியாவை ஆட்சியாக மாற்றவே எமது போராட்டம் நடைபெறுகிறது. தோல்விகளை கண்டு அஞ்சாதீர்கள். எமது வெற்றிகளை கண்டால் இறைவனை இறைஞ்சுங்கள். அவனுக்கு வழிப்படுங்கள். அவன்பால் உங்களை ஈடுபடுத்துங்கள். போராட்டத்தை வழி நடத்துவது நான் அல்ல. நம்முடைய இறை நம்பிக்கை. அந்த இறை நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் ஏற்படல் வேண்டும். உங்கள் அனைவரின் சந்தோஷத்திற்காக பிரார்த்திக்கின்றேன். இந்த ஈத் எமக்கு அடுத்த ஈத் வரை அடுக்கடுக்கான வெற்றிகளை தர வேண்டும் என்பது எனது ஆசை. பிரார்திப்போமாக.......

இப்படிக்கு
இறைவனின் அடிமை
Mullah Mohammad Omar Mujahid
The Servant of Islam

Amirul Mukminin Mullah Muhammad Umar, Commander of Mujahid
Khadimul Islam
Ditulis pada: 16 Agustus 2012/ 28 Ramadhan 1433 H
Imarah Islam Afghanistan

இந்த கடிதம் நீளம் கருதி சுருக்கி தரப்பட்டுள்ளது.

முழு செய்தியையும் ஆங்கிலத்தில் படிக்க

http://www.uruknet.de/?p=m90397&hd=&size=1&l=e


The message came a day after a NATO Black Hawk helicopter came down in southern Afghanistan, killing seven American soldiers and four Afghans, the military said, as Taliban fighters claimed responsibility.

In a message to the Afghan people ahead of the Eid al-Fitr festival ending the holy Ramadan fasting month, the one-eyed leader said insurgents should “employ tactics that do not cause harm to life and property of the common countrymen”.

“The instructions given to you for the protection of civilian losses are, on you, a religious obligation to observe,” Mullah Omar said in a seven page statement released late on Thursday and translated into five languages.

“Any violation readily incurs loss in this world and in the world to come. Therefore, I urge you emphatically to be careful about the civilian losses and take this on yourselves as an explicit responsibility,” he said.

Qari Yusuf Ahmadi,a Taliban spokesman, said: "Our mujahideen shot down an ISAF helicopter in Chenarto area of Shah Wali Kot district in Kandahar province at around 11:00am [06:30 GMT]."

http://www.aaj.tv/2012/08/taliban-chief-mullah-omar-sends-eid-message/
http://www.aljazeera.com/news/asia/2012/08/201281765122731439.html
http://tolonews.com/en/afghanistan/7303-mullah-omars-eid-message-read-in-nangarhar-mosques-mp
---------------------------------------------------------
அன்புள்ள முல்லா உமர் அவர்களுக்கு!

சுவனப்பிரியன் எழுதிக் கொள்வது!

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

கடிதம் எல்லாம் நல்லாதான் எழுதுறீங்க உமர் அண்ணே! ஆனால் உங்களிடம் சரியான தொலை தொடர்பு வசதி இல்லாததால் அமெரிக்கா எதை சொல்கிறதோ அதையே உலகமும் நம்புகிறது. தற்போது உங்கள் நாடு பல ஆண்டுகள் போரினால் சின்னா பின்னப்பட்டுள்ளது. வயோதிகர்கள், சிறுவர்கள், பெண்கள் என்று எவருமே இதில் தப்பவில்லை. பல பெண்களை நீங்கள் சுட்டுக் கொல்வதாக அமெரிக்க பத்திரிக்கைகள் உலகுக்கு செய்தியை தருகின்றன. இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஷரிய ஆட்சி நடந்து வரும் சவுதியில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்று சற்று இணையம் மூலம் பார்த்து தெளிவு பெறுங்கள். பெண்கள் முன்னேற்றத்துக்கும், கல்விக்கும் இஸ்லாம் மிக உயரிய இடத்தை தந்துள்ளது. பல ஆப்கன் நண்பர்களை நான் பெற்றுள்ளேன். அவர்கள் எங்கள் நாட்டில் எப்போது அமைதி திரும்பும் என்று என்னிடம் தங்கள் சோகங்களை சொல்லும் போது மனது கனக்கும். எனவே எந்த முடிவாக இருந்தாலும் சீக்கிரமே எடுத்து நீங்களோ அல்லது கர்சாயியோ யாராக இருந்தாலும் மக்கள் அமைதியாக வாழ ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுங்கள்.

உங்கள் பெயரால் இன்று உலகம் முழுக்க இஸ்லாமிய ஆட்சி என்றாலே 'தாலிபானிய ஆட்சியா' என்று கேட்கின்றனர். அந்த அளவு அமெரிக்கா தனது செய்தியால் மக்களை குழப்பி வைத்துள்ளது.

அடுத்து போதைப் பொருள்கள் மூலம் நீங்கள் ஆயுதங்களை பண்டமாற்று செய்து கொள்வதாக செய்திகள் வருகிறது. ஆனால் அமெரிக்க நேட்டோ படையினர் போதைப் பொருள் தொழிலில் கோடிக் கணக்கில் மாதாமாதம் சம்பாதிப்பதாக வேறொரு செய்தி கூறுகிறது. உண்மை நிலையை இறைவனே அறிவான்.

ஒரு உண்மையான முஸ்லிம் போதை பொருள் வியாபாரத்தை தொட மாட்டான்: பெண்களை மதிப்பான்: கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பான்: தனது நாட்டில் வாழும் மற்ற மதத்தவர்களை மதித்து நடப்பான்:

எங்கள் தமிழகத்தில் அரசாங்கமே டாஸ்மார்க் கடையை நடத்தி குடி மக்களை கெடுக்கிறது. குடித்து குடல் புண்ணாகி இறக்கும் எத்தனையோ தமிழ் சகோதரர்களை எண்ணி வருந்துவேன். உங்கள் ஆட்கள் போரில் வெளி நாட்டுக்காரனை எதிர்த்து அதில் இறந்தால் அவருக்கு சொர்க்கமாவது கிடைக்கும். டாஸ்மார்க் சாராயத்தால் இறந்த என் இன சகோதரனுக்கு என்ன கிடைக்கும்? நீங்களே சொல்லுங்கள். இதற்காக பதிவுகள் எழுதி பலரது எதிர்ப்பையும் சந்தித்து வருகிறோம். ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள பதிவர் மாநாடு எந்த சிக்கலும் இல்லாமல் தமிழர்கள் வாழ்வில் முன்னேற பல சீரிய முடிவுகளை எடுக்கும் வகையில் அமைய நானும் பிரார்த்திக்கிறேன். நீங்களும் பிரார்த்தியுங்கள். சில சகோதரர்கள் நம்மை தவறாக எண்ணியிருக்கிறார்கள். அவர்களுக்காகவும் பிரார்த்தியுங்கள்.

மனித நேயத்தோடு நடந்த நமது முன்னால் ஜனாதிபதி உமரின் பெயரை பெற்றிருக்கிறீர்கள். அவர் எவ்வாறு ஆட்சி செய்தார் என்பதை அறியாதவர் அல்ல நீங்கள். அத்தகைய ஒரு ஆட்சியை உங்கள் தலைமையில் உங்கள் நாட்டுக்கு தருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அத்தகைய ஒரு ஆட்சியை வெகு சீக்கிரம் ஆப்கனில் அமைத்து தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நான் எழுதிய இந்த கடிதத்தை உங்கள் உள்ளங்களில் இறைவன் கொண்டு சேர்ப்பானாக என்றும் பிரார்த்திக்கிறேன்.

உங்களுக்கு இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்!

இப்படிக்கு
சுவனப்பிரியன்.

Wednesday, August 22, 2012

குடிகாரன் பேச்சு- ஒரு கலக்கல் அனுபவம்!

20 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. ஒரு முறை திருச்சியை சேர்ந்த குமார் எங்களோடு எப்போதும் ஒன்றாகவே இருப்பான். சவுதி வந்த புதிதில் கடைகளுக்கு ஏதும் வாங்க சென்றால் அங்கு பெப்ஸி, மற்றும் மிராண்டாவோடு பீரும் வைத்திருப்பார்கள். அதைப் பார்த்த எனககு அதிர்ச்சி. நம் ஊரில் கூட மதுவை பொதுவில் விற்பதில்லையே! இது ஒரு முஸ்லிம் நாடு என்று சொல்கிறார்கள். சிறுவர்கள் பெண்கள் எல்லாம் வந்து போகும் இந்த கடையில் இவ்வளவு பப்ளிக்காக விற்கிறார்களே! என்று எனக்கு ஆச்சரியம். சவுதி சட்டத்தை விமரிசித்தால் நமக்கு பிரச்னை என்பதால் யாரிடமும் கேட்காமல் மனதுக்குள் நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

பிறகு எங்களுக்கு பல ஆண்டுகள் முன்பே சவுதி வந்தவரிடம் இது பற்றி கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே 'இந்த பீரை ஹலால் பீர் என்று சொல்வார்கள். இதில் உள்ள போதை நீக்கப்பட்டு உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமே தருமாறு இந்த பானம் தயாரிக்கப்பட்டிருக்கும். நீயும் குடித்து பார். ஒன்றும் பிரச்னை இல்லை' என்று அவரே கடையில் வங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.

பீர் பாட்டிலை கையில் பார்த்தவுடன் எனக்கு மனது திக் திக்கென்று அடித்துக் கொண்டது. ஒருக்கால் போதை வந்து விட்டால் என்ன செய்வது? என்று யோசிக்கலானேன். நண்பரோ 'சும்மா குடிப்பா.. ஒன்னும் ஆகாது' என்று சொல்லவே பீரை குடிக்க ஆரம்பித்தேன். அது லெமன் கலந்த பீர். புது ருசியாக நன்றாகவே இருந்தது. ஆனால் நான் குடித்ததை குமார் கவனிக்கவில்லை.

குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) எப்போதுமே தான் தனது கிராமத்தில் சாராயத்தை மிக அனாயசமாக குடித்ததாகவும் எவ்வளவு குடித்தாலும் ஸ்டடியாக இருப்பேன் என்றும் பெருமை பேசுவான். தங்கள் கிராமத்தில் குடியால் வந்த சண்டைகளையும் அதனால் ஏற்பட்ட பஞ்சாயத்து தீர்ப்புகளையும் பல முறை சொல்லியிருக்கிறான். நாங்களும் அவன் சொல்லும் கதைகளெல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்போம். ஒரு முறை நானும் எனது நண்பன் முபாரக்கும் குமாரை கலாய்க்க முடிவு செய்தோம். இந்த ஹலால் பீரை யாருக்கும் தெரியாமல் கொண்டு வருவது போல் கொண்டு வந்து அனைவரும் அமர்ந்து குடிப்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் பேசியது குமாருக்கு தெரியாது.

புதன் கிழமை இரவு குமாரிடம் 'டேய் குமார்...நாளை விடுமுறை. எனவே ஒரு இடத்தில் ஒரு பார்ட்டியிடம் பீருக்கு ஆர்டர் பண்ணியிருக்கிறோம். இரவில் யாருக்கும் தெரியாமல் குடிக்கலாம். இதை வெளியில் யாரிடமும் சொல்லி விடாதே' என்றோம். அவனும் சந்தோஷமாக தலையாட்டினான்.

வியாழன் இரவும் வந்தது. இரவு சாப்பாடு முடிந்தவுடன் சிலர் சினிமா பார்க்க சென்று விட்டனர். முபாரக் கடைக்கு சென்று நான்கு பீர் பாட்டில்களை வாங்கி வந்தான். நான், குமார், முபாரக், அலி இந்த நான்கு பேரும் அறையை பூட்டிக் கொண்டு மிக்சர் சகிதமாக டேபிளில் அமர்ந்தோம்.

'முபாரக்! இங்க கொண்டு வரும் போது யாரும் பார்க்கல்லியே' - குமார்

'இல்லப்பா! மாட்டினால் அவ்வளவுதான். மறைத்துதான் கொண்டு வந்தேன்'- முபாரக்.

'இனிமேல் வாங்க போனால் துணி பை கையோடு கொண்டு செல்லவும். அப்பொழுதுதான் வெளியில் தெரியாது. பிளாஸ்டிக் பையில் ஒருக்கால் தெரிந்து விடும்'- சுவனப்பிரியன்.

இத்தனை களேபரங்களுக்கு இடையில் ஹலால் பீரை குடிக்க ஆரம்பித்தோம். ஹலால் பீர் என்ற ஒன்று உள்ளதை அறியாத குமார் ஒரிஜினல் மது என்ற நினைப்பில் குடிக்க ஆரம்பித்தான். நாங்கள் எல்லாம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழித்து குமார், 'ரொம்ப நாளைக்கு அப்புறம் குடிப்பதால் போதை கொஞ்சம் லேட்டாத்தான் ஏறுது' என்று சொன்னவுடன் நானும் அலியும் முபாரக்கும் வாய் விட்டு சிரித்து விட்டோம். நாங்கள் சிரித்ததை போதையில் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு அவனும் ஒரு மாதிரியாக போதையோடு சிரித்தான். அதாவது போதை வருவதாக நினைத்துக் கொண்டு சிரித்தான். எங்களால் சிரிப்பை அடக்க முடியாமல் அவன் தலையில் தட்டி 'இது ஹலால பீர்டா...இதில போதையே கிடையாது. உனக்கு எங்கிருந்து வந்தது போதை?' என்று கலாய்க்கவும் பிறகு சுதாரித்துக் கொண்டு 'அதானே...போதையே ஏறலியேன்னு பார்த்தேன்' என்று அப்பாவியாக கேட்டான்.

இந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும். உடல் வலிக்காக மதுவை குடிக்கிறோம் என்று சொல்பவர்கள் ஆல்கஹால் நீக்கப்பட்ட மதுவை குடிக்கலாமே. அது குடலுக்கு குளிர்ச்சியை தரும். ஆல்கஹால் கலந்த மது குடலை அரிக்க ஆரம்பிக்கும்.

ஹலால் பீர் தயாரிக்கும் நிறுவனங்கள், "இந்த பீரில் 0.01% ஆல்கஹால் இருப்பதாக" விளம்பரம் செய்கின்றது. அதுதான் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குழு அனுமதிக்கும் ஆல்கஹால் அளவு. இந்த அளவை மீறி ஒரு பானத்தில் ஆல்ஹகால் அதிகமாக கலக்கப்படுமானால் அது போதை ஏற்றக் கூடியதாக மாறி விடுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்கிறது.

“சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள பயனை விடப்பெரிது.” அல்குர் ஆன்-2:219

மது குடிப்பதால் சில பயனுண்டு என்று அல்குரான் கூறுவதை, இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.அதாவது இதய நோய் மற்றும் மாரடைப்பு (Coronary Heart Diesease) வராமல் தடுப்பதில் சிறிது பங்குண்டு.ஆயினும் இப்படி சிறிது மது குடிப்பவனின் நிலமை,ஒருவன் செங்குத்தாக வழுக்குப்பாறையில் ஏறுவதற்க்குச்சமம்.எந்த நிலையிலும் அவன் சறுக்கி விழலாம் உயிருக்கு ஆபத்து. ஆகவேதான் இதில் பல மடங்கு தீமை உள்ளது என்று அல்லாஹ் தடை செய்கின்றான்.

உலகப்புகழ் பெற்ற மருத்துவ ஆய்வுக்கழகமான அமெரிக்காவின் மாயோ மருத்துவ கழகமும் இதையே கூறுகின்றது.( Mayo Foundation for Medical Education and Research )
“Alcohol may offer some health benefits, Especially for your heart. On the other hand, alcohol may increase your risk of health problems and damage your heart. Certainly, you do not have to drink any alcohol,and if you currently do not drink, and do not start drinking for the possible health benefits. In some cases, its safest to avoid alcohol entirely – the possible benefits do not outweigh the risks. ” ——www.mayoclinic.com/health/alcohol

விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் (வணக்கத்திற்காக) நாட்டப்பட்டுள்ளவைகளான சிலைகளும் குறிபார்க்கும்(சூதாட்ட) அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றிபெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

நபி அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

கள் குடி பற்றித் திருமந்திரம்

உள்உண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தென் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்தறியாரே.

திருக்குறள்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மனுதர்மசாஸ்திரம்

மருந்துக்காவது மதுபானம் அருந்தியவன் அப்பாபத்தைப் போக்க கந்தை வஸ்திரத்தைத் தரித்து, சடை முடியுடன் ஓராண்டு நெய்யை அல்லது பிண்ணாக்கை சாப்பிட்டு இருக்க வேண்டும்.

டிஸ்கி: நம் வீடுகளில் பெண்கள் சமையலுக்காக கசகசா என்ற ஒரு பொருளை சேர்ப்பார்கள். அது மிக வீரியமுள்ள போதைப் பொருளாம். இது தெரியாமல் சில பெண்கள் பார்சல் கட்டிக் கொண்டு சவுதி வந்து விடுவார்கள். விமான நிலையத்தில் இதனை மிகப்பெரும் பிரச்சினையாக்கி விடுவர் அலுவலர்கள். எனவே சவுதி வருபவர்கள் கசகசாவை எக்காரணத்தை முன்னிட்டும் கொண்டு வந்து விட வேண்டாம். யாரும் பார்சல் கொடுத்தாலும் பிரித்து சோதித்து விட்டே வாங்கிக் கொள்ளுங்கள்.

எழுத்தாளர் சுஜாதா துபாய் போகும் போது இந்த பிரச்னையை சந்தித்துள்ளார். அப்பொழுதுதான் அவருக்கே கசகசா போதைப் பொருள் என்பது தெரியுமாம். 'ஸ்ரீரங்கத்து திண்ணைகளில் பல அம்பிகள் கசகசாவை விழுங்கி விட்டு உருண்டு கிடந்தது ஏன் என்பதன் காரணம் இப்போது தான் விளங்குகிறது' என்று ஹாஸ்யமாக அதனை விளக்குவார். :-)

Monday, August 20, 2012

கீழக்கரை குப்பையும் அரிஜனத் தெருக்களின் அவலமும்!



ஓரளவு வசதியான இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட ஊர் கீழக்கரை. வீடுகளெல்லாம் ஓரளவு நேர்த்தியாக கட்டப்பட்டு இருந்தாலும் குப்பைகளை அகற்றும் வழி தெரியாமல் இன்று முழி பிதுங்கி நிற்கிறது அந்த கிராமம். ஓரளவு படித்தவர்களும் நிறைந்த இந்த ஊர் குப்பைகளை அகற்றுவதற்கு அரசை நாடுவதும் அவர்கள் 'நீங்கள் எல்லாம் வசதியானவர்களாச்சே! நீங்களே பார்த்துக் கொள்ளக் கூடாதா' என்று கோரிக்கைகளை அலட்சியப் படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

ஒரு சாதாரண குப்பை விஷயம் மக்கள் மற்றும் அரசின் அலட்சிய போக்கால் இந்த கிராமத்தை பெரும்பாடு படுத்துகிறது. இதனால் இந்த ஊர் மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற பல நோய்கள் மிக இலகுவாக தொற்றிக் கொள்கிறது. நமது அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு நாம் அறியாதது அல்ல. அதிலும் பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள ஊர் என்றால் கேட்கவே வேண்டாம். அரசு உதவிகள் எதுவும் கிடைக்காமல் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செவ்வனே செய்து வருவார்கள். அவ்வாறு இருக்கையில் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் மனது வைத்தால் ஒரு நாளில் தீர்ந்து விடக் கூடிய பிரச்னை இது. ஆனால் ஒரு திருமணத்தை பல லட்சம் செலவு செய்து வீணடிக்கும் சமூகம், ஒரு சுன்னத்(முன் தோல் அகற்றுதல்) தனது பையனுக்கு செய்வதற்காக ஊரை கூட்டி விருந்து வைத்து வீண் பகட்டு காட்டும் சமூகம், தனது மகள் பூப்பெய்வதை பத்திரிக்கை அடித்து அதையும் விருந்தாக்கி மகிழும் சமூகம், இறந்த தாயோ தகப்பனோ வீட்டில் கிடக்க மார்க்கம் தடுத்த விருந்தை ஆக்கி அனைவரையும் அழைக்கும் சமூகம் தனது கிராமத்தின் சுகாதாரப் பிரச்னைக்கு அரசை கைகாட்டி விட்டு ஒதுங்கிக் கொள்வதை நினைத்தால் வேதனைப்படாமல் இருக்க முடியுமா?



எங்கள் ஊரிலும் இது போன்ற பிரச்னை அவ்வப்போது வருவதுண்டு. குடமுருட்டி ஆறு, அரசலாறு போன்ற ஆறுகள் எங்கள் ஊரை சுற்றி ஓடுவதால் அதன் கரைகளில் பள்ளம் தோண்டி குப்பைகளை துப்புறவு தொழிலாளர்கள் கொட்டுவார்கள். அது சில நாட்களில் மக்கி விடும். அதுவரை வேறு கரையோரத்தை நாடுவார்கள். ஆனால் இதைவிட கீழக்கரையில் ஆரம்பிக்க இருக்கும் பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலைகள் போன்று எங்கள் ஊரிலும் ஆரம்பிப்பது நிரந்தர தீர்வாக அமையும். இதை ஒவ்வொரு கிராமத்திலும் அமுல்படுத்த வேண்டும். சில இடங்களில் குப்பைகளைக் கொண்டு மின்சாரமே தயாரிக்கிறார்களாம்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நாளில் ஒரு நடுத்தர பிளாஸ்டிக் வாளி அளவு குப்பைகள சேரும். இதனை எங்கள் ஊரில் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு திண்ணையில் வைத்து விடுவர்.காலையில் வரும் குப்பை வண்டியில் வரும் துப்புறவு தொழிலாளர்கள் ஒரு வாளி விடாமல் குப்பைகளை அள்ளிக் கொண்டு வாளியை வைத்து விட்டு சென்று விடுவர்.

மேலும் எங்கள் கிராமத்தில் அதிகமான வீடுகளில் வீட்டின் பரப்பளவை ஒத்த கொல்லையும் இருக்கும். கொல்லையின் கடைசி பகுதியில் எரு குண்டு என்ற ஒன்று இருக்கும். எங்கள் வீட்டில் பிளாஸ்டிக் கழிவுகளையும் மக்கிப் போகக் கூடிய கழிவுகளையும் எப்போதும் பிரித்தே சேர்ப்போம். இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் திண்ணைக்கு சென்று விடும். அதனை கார்பரேஷன் வண்டி வந்து எடுத்து சென்று விடும். மக்கிப் போகக் கூடிய கழிவுகளை கொல்லையில் உள்ள எரு குண்டில் போட்டு விடுவோம். ஆறு மாதத்துக்கு பிறகு அது நிரம்பியவுடன் அதனை மூடி விட்டு அதற்கு அருகிலேயே ஆட்களை வைத்து வேறொரு எரு குழி தோண்டச் செய்வோம். இதனால் போடப்பட்ட மீன், கோழி, ஆடு போன்றவற்றின் கழிவுகள் மற்ற வகையான குப்பைகள் மக்கிப் போய் சிறந்த உரமாகி விடுகிறது. நமது மண்ணுக்கு பிளாஸ்டிக்கைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சுலபத்தில் மக்கச் செய்து விடும் தன்மை உள்ளது.. சில வீடுகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி பழைய விலைக்கு விற்பவர்களும் உள்ளனர். இதனால் இந்த பிளாஸ்டிக்குகள் இடத்தை அடைக்காமல் மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் அரை மணி நேரம் இது போன்ற சுகாதாரத்துக்கு செலவு செய்தால் வீடும் நன்றாக இருக்கும் நாடும் நன்றாக இருக்கும்.


சில கிராம பஞ்சாயத்துகளில் அந்த நிர்வாகமே பழைய பிளாஸ்டிக்குகளை விலைக்கு எடுத்துக் கொள்வதாக பத்திரிக்கைகளில் படித்தேன். இதுவும் ஒரு சிறந்த வழி. பிளாஸ்டிக் அதிகம் சேகரித்து தரும் வீட்டுக்கு சில பரிசுகளை கூட கிராம நிர்வாகம் அறிவித்தால் பலன் இன்னும் அதிகரிக்கும். இதனால் பலர் மறைமுக வேலையும் பெறுவர். அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்துவதை அரசு தடை செய்ய வேண்டும்.

மற்றுமொரு சுகாதார பிரச்னை:

அதே போல் எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டு குடும்பம் சற்று வறியது. அவர்கள் வீட்டில் கழிவறை கட்டாமல் அவர்கள் கொல்லையில் தங்களது இயற்கை தேவைகளை நிறைவேற்றி வந்தனர். ஒரு முறை பக்கத்து வீட்டு நண்பரை(எனது வயதை ஒத்தவர்) அழைத்து 'ஒரு வீட்டுக்கு கழிவறை மிக அவசியம். உங்கள் வீட்டு பெண்கள் இவ்வாறு திறந்த வெளியில் செல்வது அசிங்கமா இல்லையா? சுகாதாரத்துக்கும் எவ்வளவு கேடு தெரியுமா?' என்று சொன்னேன். 'உண்மைதான். ஆனால் நாங்கள் மண்ணைப் போட்டு மூடி விடுவோம். இருந்தாலும் சரி செய்து விடுகிறேன்' என்று பதில் சொன்னவர் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை.

இரண்டு வாரம் பொறுத்த நான் பிறகு அவரை கூப்பிட்டு, 'நீங்கள் கட்டவில்லை என்றால் நான் எனது செலவில் கட்டி விடுகிறேன். இலவசமாக வைத்துக் கொண்டாலும் சரி. அல்லது கடனாக எடுத்துக் கொண்டாலும் சரி. இன்னும் இரண்டு நாளில் உங்கள் கொல்லையில் நான் வேலையை ஆரம்பிக்கப் போகிறேன்' என்று ஒரு போடு போட்டேன். இதனால் மிரண்டு போன அவர் எங்கெங்கேயோ பணத்தை தோது பண்ணி மறு நாளே கழிவறையை அவரது சொந்த செலவிலேயே கட்டிக் கொண்டார். அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டு 'நான் வேண்டு மென்றால் பணம் தரட்டுமா?' என்று கேட்டேன். 'நன்றி வேண்டாம். என் மனைவி தனது புறத்திலிருந்து பணம் கொண்டு வந்து வேலையை முடிக்க சொன்னார். "எவ்வளவோ வீண் செலவுகள் செய்கிறோம். தற்போது கழிவறையின் அவசியத்தை உணர்ந்து கொண்டேன்'(சுயமரியாதை தமிழன்!) என்றார் :-). அப்பாடி அண்டை வீட்டில் ஒரு சண்டை இல்லாமல் பிரச்னை சுமூகமாக முடிந்தது.

மற்றொரு சோகமான செய்தி. எங்கள் ஊரின் முடிவில் ரயிலடி சமீபமாக அரிஜனங்களின் காலனி உள்ளது. இங்கு அரசாங்கம் தனது செலவில் பொது கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் இந்த மக்கள் தங்கள் தெருக்களிலும் ரெயில்வே தண்டவாள ஓரங்களிலும் தங்கள் இயற்கை தேவைகளை தீர்த்துக் கொள்கின்றனர். அரிஜனத் தெருவை கடந்து சென்றால் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். எங்கள் வீடுகளில் பெண்கள் சிறுவர்களை ஏதாவது வேலை சொல்லும் போது 'ரயிலடி வழியாக போகாதே! அசிங்கமாக இருக்கும். தூரமாக இருந்தாலும் சந்திக்கட்டை(சந்தை) சுற்றிக் கொண்டு போ' என்று கட்டளை இடுவதை சர்வசாதாரணமாக பார்க்கலாம். தற்போது படித்த மக்கள் நிறைய அரிஜன தெருவில் உருவானாலும் நிலைமை இன்றும் அப்படியேத்தான் உள்ளது. இந்த மக்கள் பக்கத்தில் இருக்கும் எங்கள் கிராமத்தை பார்த்தும் ஏன் திருந்த மாட்டேன் என்கிறார்களோ தெரியவில்லை. இவ்வளவுக்கும் எங்கள் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் வீட்டு வேலை செய்பவர்கள் இந்த அரிசன மக்களே. தினமும் எங்களின் வாழ்வை பார்த்தும் அந்த பக்கம் சென்றவுடன் பழைய நிலைக்கு மாறி விடும் விநோதத்தை என்னவென்பது?
________________________________________________________

சுற்றுச் சூழல் பொறியாளர் ரமேஷ் கூறுவதை கேட்போம்:

புதுச்சேரி : பிளாஸ்டிக் குப்பைகள் இவ்வுலகில் மட்கி மறைய குறைந்தபட்சம் 200 ஆண்டுகள் பிடிக்கிறது என சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் பேசினார். தட்டாஞ்சாவடி வேளாண் கருத்தரங்கக் கூடத்தில் வேளாண்துறை மாநில நில நீர் பிரிவு சார்பில் நுண்ணாய்வு நீர் உபயோகம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை வேளாண் இயக்குனர் சத்தியசீலன் துவக்கி வைத்தார். என்.சி.சி., அதிகாரி ஆனந்த், நீர் சேமிப்பு குறித்து பேசினார். விழாவில் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் பேசியதாவது:

உயிரினங்கள் இவ்வுலகில் வாழ தண்ணீர் தான் உயிர்நாடி. அவற்றை அதிக அளவில் பயன்படுத்தினால், நிலத்தடி நீர் மட்டம் படுபாதாளத்திற்கு சென்றுவிடும். ஆகவே தண்ணீரை முறையாக திட்டுமிட்டு பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண் டும். நிலத்தடி நீரை அள வுக்கு அதிகமாக எடுப்பதால், கடல் உட்புகுந்து விடும். குப்பை கூளங்கள், டெங்கு, மலேரியா என 10க்கும் மேற்பட்ட நோய்களுக்கு பிறப்பிடமாக இருக்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகளை குறைந்த வெப்பநிலையில் எரிக்கும் போது அதிலிருந்து டையாக்சின் நச்சு வாயு வெளிவருகிறது. இது தான் உலகிலேயே உயிரை பறிக்கும் மிகக்கொடிய நச்சு வாயுவாகும்.ஒருநாளைக்கு 33 ஆயிரம் லிட்டர் மாசுபட்ட காற்றை சுவாசிக்கிறோம். சாக்கடைகளில் போடப்படும் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுநீரை வழிந்தோடாமல் செய்கின்றன. இதனால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. பிளாஸ்டிக் குப்பைகள் இம்மண்ணில் மட்கி மறைந்து போக, குறைந்தபட்சம் 200 ஆண்டுகள் பிடிக்கிறது. 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இதற்கு பதிலாக, துணிப்பைகளை பயன்படுத்த பொதுமக்கள் பழகிக்கொள்ள வேண்டும். பூமியின் உயிர் துடிப்பை இறுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வேளாண் பொறியியல் துணை இயக்குனர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

--------------------------------------------------------

ஒரு மனிதன் திட்டமிட்டு செயலாற்றினால் எதிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு ரஃபீக் சொல்லும் சில வழிமுறைகளை கடைபிடிப்போம்.








Saturday, August 18, 2012

ஹுசைனி பிராமணர்களும் கர்பலா யுத்தமும்!

ஒற்றுமையாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிய மறைக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலில் யூதர்களுக்கும் பாரசீக நாட்டில்(தற்போதய ஈரான்) இருந்த நெருப்பு வணங்கிகளுக்கும் பிராமணர்களுக்கும் மூலம் ஒன்றே ஆனதால் இவர்களுக்குள் எழுதப்படாத உடன் பாடுகள் பல இருக்கும். தாங்களே உயர்ந்த குலம். தாங்களே இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற எண்ணம் இவர்கள் அனைவரின் உள்ளத்திலும் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த நிலையில்தான் ஜனாதிபதி உமருடைய ஆட்சியில் பாரசிகம் வெற்றிக் கொள்ளப்பட்டது. காலா காலமாக ஆட்சி பதவியில் இருந்த பாரசீகர்கள் தாங்கள் தோல்வியுற்றதை கிரகிக்க முடியாமல் அதற்காக பழி வாங்கும் நேரத்தை எதிர்பார்த்து இருந்தனர்.

எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் மன்னர்கள் முக்கியஸ்தர்களுக்கு தங்களின் பெண்களை திருமணம் பண்ணி கொடுத்து அதன் மூலம் உள் நுழைவது இவர்களின் தந்திரம். அதன்படி முகமது நபியின் பேரனான ஹுசைன் அவர்களுக்கு தங்களின் பெண்ணை மணமுடித்துக் கொடுத்தனர். ஷஹர்பானு என்ற பாரசீக பெண் இமாம் ஹுசைனுக்கு மணமகளாகிறார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ஜெய்னுல்லாபுதீன். சாசனியர்களான இவர்களின் வாரிசு அலி அவர்களின் குடும்பத்தில் தோன்றியதால் அலியையும் அவரது குடும்பத்தவரையும் தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாக வழக்கம் போல் கதை கட்ட ஆரம்பித்தனர். ஷஹர்பானு நம் நாட்டை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மனைவியின் தங்கையாகவும் அறியப்படுகிறார். இந்த ஹூசைனி பிராமணர்கள் குழுவில் இருந்து ரஹீப் என்பவரும் இவரது பல மகன்களும் இந்த போரில் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன..

அப்துல்லா பின் ஸபா என்ற யூதன் முஸ்லிமாக மாறுவதாக நடித்தான். முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணி ஜனாதிபதி உஸ்மானுக்கு எதிராக மக்களை திரட்டினான். அலியை முன்னிலைப்படுத்தி அவருக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து பிரசாரம் செய்தான். ஆனால் இதை அலி அவர்களே கடுமையாக மறுத்திறுக்கிறார்கள். தன் மீது சொல்லப்படும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்று மக்களை எச்சரித்தார். ஆனால் அப்துல்லா பின் ஸபாவின் கருத்தை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். முகமது நபியின் பெயரால் பல பொய்யான ஹதீதுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதில் இவனுக்கும் இவனை பின்பற்றிய கள்ள முஸ்லிம்கள்(யூதர்களுக்கும்) மிகப் பெரிய பங்குண்டு.

ஷியாக்கள் எவ்வாறு உருவானார்கள் எவ்வாறெல்லாம் குரஆன் ஹதீஸ்களை வளைத்து பொருள் கொண்டார்கள் என்ற நீண்ட வரலாறை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/shiyakal_kolkai_varalaru/
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/

ஜனாதிபதி உஸ்மான் எகிப்திலிருந்து வந்த சில யூதர்களால் (முஸ்லிமாக நடித்த) கொல்லப்பட்டு பிறகு அலி ஆட்சிக்கு வருகிறார். அதன் பிறகு முஆவியாவுக்கு ஆட்சி அதிகாரம் செல்கிறது. அதன் பிறகு அவரது மகன் யஜீதிடம் அதிகாரம் செல்கிறது. இங்குதான் யூதர்கள், நெருப்பு வணங்கிகள், நம் நாட்டு ஹுசைனி பிராமணர்கள் போன்றோர் முகமது நபியின் பேரன் ஹுசைனை தூண்டி விட்டு முஆவியாவுக்கு எதிராக படை திரட்ட ஆலோசனை வழங்குகின்றனர். ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக கலகம் செய்தால் எந்த ஆட்சித் தலைவரும் எதிரிகளை ஒடுக்கவே முயற்ச்சிப்பர். அந்த வகையில் இவ்வாறு ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய வேண்டாம் என்று பல நபித் தோழர்களும் தடுக்கின்றனர். ஒரு சில எகிப்தியர்களின் பேச்சை நம்பி கர்பலாவுக்கு வருகிறார் ஹூசைன். ஆனால் போர் துவங்கும் நேரம் எகிப்தியர்களான காரிஜியாக்கள்(முஸ்லிமாக நடித்தவர்கள்) ஹூசைனுக்கு உதவாமல் நயவஞ்சகமாக பின் தங்கி விடுகின்றனர்.

இந்த நாளில் நமது நாட்டில் சந்திரகுப்தர் என்ற அரசரின் ஆட்சி நடைபெற்றதாகவும் அவரிடம் ஹூசைன் அவர்கள் உதவி கேட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. பஞ்சாப், பீஹார், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்றும் சிறு சிறு குழுக்களாக ஹூசைனி பிராமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்பு ஈராக்கின் கூபாவுக்கு பக்கத்தில் கூட்டமாக தங்கியிருந்த இவர்கள் போரில் ஹூசைன் அவர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவை நோக்கி வந்தனர். பிறகு இங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் தற்போதும் கர்பலா தினத்தன்று இமாம் ஹூசைனுக்காக ஷியாக்களோடு சேர்ந்து துக்கம் அனுஷ்டிப்பதை பரவலாக பார்க்கலாம்.

//'I,' she said, 'told my mother about your comments regarding Husaini Brahamans //
and how I introduced myself as one. To that she said, did you tell him that we don't
perform the rituals the Brahmans are obliged to perform. That we don't go to the temples?'

'Should I presume from this,' I asked, 'that you have turned Muslim.'

'No, we are not Muslims,' she exclaimed.

'Then what are you?' I inquired.

'We are Husaini Brahmans,' she said with a certain sense of pride and added,
'Now, I will tell you about a sign each and every Husaini Brahman carries with him/her.

On his/her throat s/he bears a line of cutting, which is indicative of the fact that s/he is the descendant of those Brahmans whose throats were cut in the battle of Karbala.'

Then she told me about the ritual carried out on the birth of every child in her family.

She said, 'Among Brahmans, after child birth, the ritual of Moondan is performed.
In our family this ritual is performed in the name of Imam Husain.'//

இங்கு ஒரு ஹூசைனி பிராமணரின் பேட்டியைத்தான் பார்க்கிறோம். கோவிலுக்கு இவர்கள் செல்ல மாட்டார்களாம். இஸ்லாத்திலும் இவர்கள் இல்லையாம். ஆனால் இஸ்லாத்தை இரு கூறாக பிரித்து இன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுக்கு காரணமாக மாத்திரம் இருப்பார்களாம். உண்மையிலேயே இவர்களின் ராஜதந்திரம் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் இந்த திறமையை ஆக்க சக்திக்கு பயனபடுத்தாமல் அழிவு வேலைகளுக்கும் சாம்ராஜ்ஜியங்களை கீழிறக்கும் வேலைகளுக்கும் பயன் படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். பகவத் கீதையில் இமாம் ஹூசைன் கொல்லப்படுவதை கிருஷ்ணர் சொல்லியிருப்பதாகவும் சில பிராமணர்கள் நம்புகின்றனர். கலங்கி புராணா, மற்றும் அதர்வண வேதங்களிலும் இமாம் ஹூசைன் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக சில பிராமணர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். இந்தி நடிகர்கள் சுனில்தத், சஞ்சய் தத் போன்றோர் ஹூசைனி பிராமணர்கள் பிரிவிலேயே வரக் கூடியவர்கள். ஷியாக்களுக்கு நெருக்கமானவர்கள்.

இதே போல் தமிழகத்திலும் இந்தியாவிலும் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் மொகலாயர்களின் ஆட்சியில் பலர் முஸ்லிம்களாக மாறினர். (மாறுவதாக நடித்துள்ளனர்) இவர்களில் பலர் அரபி மொழிகளில் நல்ல பாண்டித்தியம் பெற்று வர்ணாசிரமக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக பல புத்தகங்களை எழுதினர். அது போன்ற இஸ்லாமிய புத்தகங்களை படித்தால் நமக்கு மனு ஸ்மிருதியை படிப்பது போன்ற உயர்வே ஏற்படும். அந்த அளவு சாதி வெறி ஏற்றப்பட்டுள்ளது. அவற்றை தற்போதுதான் மொழி பெயர்த்து அதன் உண்மை நிலையை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. சமீப காலம் வரை மத்ரஸாக்களில் இது போன்ற புத்தகங்கள் பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது. சில புத்தகங்கள் மிகுந்த ஆபாசமாகவும் இருக்கும். தவ்ஹீத் எழுச்சி தமிழகத்தில் உண்டான பிறகு குர்ஆனுக்கு மாற்றமாக எழுதப்பட்ட அந்த புத்தகங்கள் இன்று குப்பைக் கூடைக்கு சென்று விட்டன. 'துர்ருல் முக்தார்' என்ற புத்தகம் இதற்கு சான்றாக இன்றும் இருந்து வருகிறது.

ஏதோ சில தவறான புரிதல்களால் இன்று ஷியாக்கள் என்றும் சன்னிகள் என்றும் இரு கூறாக சில நயவஞ்சகர்களால் பிரிக்கப்பட்டு விட்டோம். அதை இன்று நாம் விளங்கும் முகமாக பல தகவல்களும் நமக்கு கிடைக்கின்றது. ஆனால் இன்றும் அந்த கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு முஹர்ரம் 10 அன்று என்னுடைய உடலை கீரிக் கொள்வேன் என்று அடம் பிடிப்பது சரிதானா என்று ஷியாக்கள் சிந்திக்க வேண்டும். இது நபி அவர்களின் போதனைக்கும் குர்ஆனின் கட்டளைக்கு நேர் எதிராகவும் உள்ளதை ஷியா சகோதரர்கள் உணர்ந்து நேர் வழியை பெற வேண்டும்..

'கண்டவர் குலை நடுங்கும் சண்டாளன் யஜித் என்போன்...

கொன்றான் இமாம் ஹூசைனை .....குடியரசு சாய்ந்ததம்மா....

குடியரசு சாய்ந்ததம்மா.....'

என்று நம்ம நாகூர் அனீஃபா அண்ணன் கணீரென்ற குரலில் பாடும்போது சின்ன வயதில் நானெல்லாம் அழுதிருக்கிறேன். யார் சண்டாளர்கள் என்பதை இறைவன் முடிவு செய்யட்டும். அது வரை நாம் வாழும் நாட்களில் அமைதியாக வாழ்ந்து ஒற்றுமை எனும் கயிரான குர்ஆனை பிடித்து ஈடேற்றம் பெற முயற்ச்சிப்போம்.



http://www.tamilbrahmins.com/general-discussions/6310-hussaini-brahmins.html
http://www.milligazette.com/Archives/2004/16-31May04-Print-Edition/1605200441.htm
http://www.imamreza.net/eng/imamreza.php?id=6530
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/

-----------------------------------------------------
மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 24



-----------------------------------------------------

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!


Thursday, August 16, 2012

ரக்ஸா சர்மா ஏன் தற்கொலை செய்து கொண்டார்?



ரக்ஷா சர்மா! பேஸ் புக் நட்பால் இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பாலி டெக்னிக்கில் இன்ஜினியரிங் படித்து வந்த இவர் தனது சக மாணவர்கள் பேஸ் புக மூலம் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலையை நாடியுள்ளார். பெண் உரிமை என்பதை என்ன என்று விளங்காமல் இது போன்ற இளம் பெண்கள் பேஸ்புக் மூலமாக நண்பர்களை பெறுவதும் பிறகு தங்களின் கற்பை இழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. நம் தமிழ்நாட்டிலும் இவ்வாறு ஏமாற்றப்பட்ட பல பெண்களின் வாழ்க்கையை யார் திரும்ப கொடுப்பார்? இதுதான் பெண் விடுதலையா? இதற்குதான் இவரது பெற்றோர்கள் வாயையும் வயிற்றையும் கட்டி கல்லூரியில் படிக்க வைக்கிறார்களா? இன்று இவரது கற்பையும் இவரது உயிரையும் பெண்ணியம் பேசக் கூடியவர்களால் திரும்ப தந்து விட முடியுமா? இதுதான் பெண் விடுதலையா?


தேவையற்ற காட்சிகளை சினிமாக்களும் சீரியல்களும் விளக்குவதால் இதனை உண்மை என்று நம்பி தங்கள் எதிர்காலத்தை பாழ்படுத்திக் கொள்கின்றனர். நம் ஆம்பள பசங்களும் இதே தொழிலாக பல கல்லூரி மாணவிகளை வளைப்பது தொடர்கதையாகிறது. தாய் தகப்பனை உதறி விட்டு கள்ள காதலன் மூலமாக ஓடுவது இப்போது பேஷனாகி விட்டது. அவனும் ஒரு மாதமோ இரண்டு மாதமோ அனுபவித்து விட்டு லாட்ஜில் விட்டு விட்டு ஓடியவுடன் 'ஙே' என்று முழித்து கண்ணை கசக்கிக் கொண்டு நிற்பதும் பிறகு இவர்களே விலைமாதர்களாக மாறிப் போவதும் பரிதாபத்திற்குரிய ஒன்று.

பெண் கவிஞர்கள் பலரின் கவிதைகளை இணையத்தில் படித்திருப்போம். இவர்கள் தாங்கள் ஏதோ புரட்சி செய்வதாக எண்ணிக் கொண்டு பெண்ணின் அந்தரங்கங்களை பற்றி எல்லாம் கவிதைகளாக வடித்து பதிவாக்குகிறார்கள். பெயரை குறிப்பிட விரும்பவில்லை. உங்களுக்கே தெரியும் அவர்கள் யாரென்று. படித்த இவர்களுக்கு இது தவறான அணுகுமுறை என்று தெரியாதா? பெரியாரின் புதுமைப்பெண்ணாக தன்னை காட்டிக் கொள்ள இதுதான் வழியா?

------------------------------------------------------------------



இந்த மாணவி கெமிஸ்ட்ரி டெஸ்டில் சில தவறுகள் செய்ததற்காக வகுப்பு ஆசிரியர் லேசாக அடித்திருக்கிறார். மாணவியின் தவறை சுட்டிக் காட்டியும் இருக்கிறார். இதைப் பொறுத்துக் கொள்ளாத மாணவி கழிவறை செல்வதாக கூறி அங்கிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு இதெல்லாம் ஒரு காரணமா? விலை மதிக்க முடியாத இந்த உயிர்கள் அற்ப காரணங்களுக்காக போகத்தான் வேண்டுமா? இந்த குழந்தையை பிரிந்து அழும் அந்த தந்தையை சற்று எண்ணிப் பாருங்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன?

இதற்கு காரணம் பெற்றோர்களே! குழந்தைகளுக்கு வயதுக்கு மீறிய பாட சுமைகளை தினமும் கொடுத்து வருகிறோம். அந்த குழந்தையின் மூளையின் ஏற்கும் திறன் என்ன? அவருக்கு எந்த மாதிரியான கல்வியை கொடுக்க வேண்டும் என்று நாம் சிந்திப்பதே இல்லை.



மேகாலயாவில் எம்பிஏ படித்து வந்த மாணவி ஒருவர் தனது ஹாஸ்டல் அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவை எல்லாம் நமக்கு உணர்ததும் பாடம் என்ன?

'பக்கத்து விட்டுல அவன் சென்டம் எடுத்துட்டான்: எதிர்த்த வீட்டுல அந்த பொண்ணு என்னமா படிக்கிறா? நீயும்தான் இருக்கியே? தடிமாடு...தெண்டச் சோறு....' என்று தினமும் அர்ச்சணை செய்ய தயங்குவதில்லை நமது பெரும்பாலான பெற்றோர்கள். இது அந்த குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. நாம் வாழ்வதற்கு தகுதியில்லாதவனோ என்று அடி மனதில் எண்ணம் பதிந்து விட்டால் பிறகு சிறிய தோல்விகளைக் கூட தாங்க முடியாமல் தற்கொலைகளை நாடுகின்றனர் இளம் சிறார்கள்.

மாணவனுக்கு எதில் ஆர்வம் என்பதை நாம் தீர்மானித்து குறைவாக மார்க் எடுத்தாலும் அவனை ஊக்கப்படுத்துவது போன்று உங்களின் ஆலோசனை இருக்க வேண்டும். 'இந்த பரீட்சையில் குறைவாக மார்க் எடுத்தால் என்ன? அடுத்த முறை எடுத்திட்டாப் போச்சு...கவலைபடாதேடா..' என்று தைரியத்தை நீங்கள் அவனுக்கு கொடுக்க வேண்டும். அதிகாரத்தில் சொல்வதை நீங்கள் அன்பினால் சொல்லிப் பாருங்கள் அதற்கு கிடைக்கும் விடை நமக்கு சாதகமாகவே இருக்கும்.

சில தந்தைமார்கள் வீட்டை ஏதோ சிறைச் சாலைபோல் வைத்திருப்பார்கள். உள்ளே நுழையும் போதே முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு பிள்ளைகளை மிரட்டுவதை பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். இது நமக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று ஏனோ நாம் எண்ணுவதில்லை.

----------------------------------------------------------------

மெயிலில் நண்பர் அனுப்பிய செய்தி தாய்குலங்களின் பாதுகாப்புக்காக!

செல்போனிலோ, வீடியோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவரா நீங்கள்?

உங்களுக்காக இந்த செய்தி:

Please SPEND SOME TIME AND READ THIS AND SHARE ESPECIALLY GIRLS: ''நீங்கள் செல்போனிலோ வீடியோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.

அது எப்படி...?? என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது...?'' என்று யோசிக்கிறீர்களா...?? வெயிட்...!! உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்த போது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்து விட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது.

"செல்போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்..? என்பது தானே உங்கள் டவுட்". அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம். அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார். ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு டெலிட் செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி-குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது. இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ... என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன.

செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர். அந்த புதிருக்கான விடையின் பெயர் "ரெக்கவரி சாஃப்ட்வேர்"(recovery software). மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்று போல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்து தான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

இதுபோன்ற வில்லங்க சம்பவங்களின் பின்னணி என்ன...? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார். ''செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும். அந்த விஷயம் தெரியாமல் தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட்டும் செய்துவிடுகிறார்கள்.

ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்கு தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல "ரெக்கவரி சாஃப்ட்வேர்கள்" இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள்.

இந்த மாதிரியான "ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள்" எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார். இதைத் தவிர்க்க என்ன செய்வது...? முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம்.

ஆனால்... ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள். அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் "வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரிசெய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும்.

ஜாக்கிரதை...!!! ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்... உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன. தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள். உஷாராக இருங்கள்.. இந்த பதிவின் நோக்கமே பெண்களை உஷார் படுத்தத்தான்..

----------------------------------------------------------------

சில நாட்கள் முன்பு ஒரு நண்பர் அனுப்பியிருந்த பின்னூட்டம் இது.. இந்த செய்தி உண்மைதானா? இதுசம்பந்தமான ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கிறது என்பதற்கான சுட்டிகளை பின்னூட்டத்தில் நண்பர்கள் அளித்தால் நலமாக இருக்கும்.

கவர்ச்சியாக உடை அணிந்த பெண்களை காண்பதாலும், அவர்களை நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிப்பதாலும் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மையை பறிக்கும் மொபைல்போன், லேப்டாப், மனஅழுத்தம், சூடு போன்றவற்றின் பட்டியலில் தற்போது கவர்ச்சி உடை கண்ணியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்களின் ஆண்மை குறைபாட்டிற்கான காரணம் குறித்து அமெரிக்காவில் 30 ஆண்டுகாலம் ஆய்வு நடைபெற்றது. அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் கண்டறியப்பட்டது. பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு கொண்டு செல்கிறதாம்.
உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் செக்ஸ் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் கூறியுள்ளார்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடத்தையினால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கும் அதே வேளையில், ஆண்களும் கவர்ச்சி உடை அணிந்த கன்னியர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே ஆண்மையை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Wednesday, August 15, 2012

உலக இஸ்லாமிய கருத்தரங்கு மெக்காவில்!



(உலக முஸ்லிம் தலைவர்கள் ஒரு குடையின் கீழ். இந்த ஒற்றுமை நீடித்தால் அமெரிக்க , இஸ்ரேலிய நயவஞ்சக வேலைகள் நிறுத்தப்படலாம்.)

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிக்கலான இன்றைய உலக சூழ்நிலையில் ஓஐசி எனப்படும் அமைப்பின் சார்பில் 57 முஸ்லிம் நாடுகளின் கருத்தரங்கு நடைபெற்றது. சமீபத்திய பூகம்பம் காரணமாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூட்டத்தில் கலந்து கொள்வது சந்தேகம் என்று சொல்லப்பட்டது. ஆனால் கூட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி ஈரான் அதிபரும் கலந்து கொண்டார்.


(இந்த இரு தலைவர்களும் இறைவனுக்கு முன்னால் ஒன்றானது போல் இஸ்லாமிய இரு பிரிவுகளும் ஒன்றாகும் நாளும் வந்திடாதோ!)

இது இரணடாவது கருத்தரங்கு. இதற்கு முன் கடந்த 2005 ஆம் ஆண்டு இதே மக்கா நகரில் இத்தகைய ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. உலக தலைவர்கள் அல் சஃபா அரண்மனையில் குழுமினர். ஜெத்தா - மெக்கா பாதைகள் தலைவர்களின் பாதுகாப்புக்காக வாகனங்கள் தடுக்கப்பட்டு வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.

ஈரான் அதிபர் அஹமத் நஜாத், சூடான் அதிபர் பஷீர், மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக், லிபியாவின் முஹம்மது யூசுஃப், உகாண்டாவின் முசோனி, பங்களாதேஷின் ஜில்லுர் ரஹ்மான், செனகலின் மேக்கிசால், மொரிதானியாவின் அப்துல அஜீஸ், போன்ற முக்கிய பிரபலங்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

57 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் உலகம் முழுவதிலிருந்தும் வந்திருந்தனர்.


(ஈரான் அதிபர் மதினா நபிகள் நாயகம் பள்ளியில் தொழுது விட்டு நபிகளின் அடக்கத்தலத்தையும் பார்வையிட்டு விட்டு நபிகளுக்கு சலாமையும் எத்தி வைத்தார்.)

ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சாலிஹ் தனது பேட்டியில் 'மன்னர் அப்துல்லா இந்த கூட்டம் சிறப்புற அமைய பல முயற்ச்சிகளை எடுத்துள்ளார். எனது சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வைப் பெற்றேன். இந்த பூமி புனித பூமி. இந்த மக்களும் இந்த அரசும் சிறந்து விளங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்' என்றார்.

அஹ்மத் நஜாத் நேற்று மதினா சென்று பள்ளியில் தொழுது பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். 'உலகம் தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. இஸ்லாமிய எதிரிகள் நமக்குள் பிளவை உண்டு பண்ணி குளிர் காய நினைக்கின்றனர். இதற்கு நாம் துளியும் இடம் கொடுத்து விடக் கூடாது. அந்த வகையில் பல நல்ல முடிவுகளை இந்த கருத்தரங்கு எடுக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

கருத்தரங்கில் சவுதி மன்னர் அப்துல்லாஹ் அவர்கள் செவ்வாய் அன்று பேசிய பேச்சின் முழு வடிவம் ஆங்கிலத்தில்:

In the name of God, most gracious most merciful,

Prayer and peace be upon the Prophet and his family and all his companions,
Dear brothers

God's peace, mercy and blessing be upon you.

From the vicinity of the House of God, the cradle of eternal Islamic message, it gives me a great pleasure to welcome you in your second country, the Kingdom of Saudi Arabia, wishing Allah Almighty in these blessed nights to help us to tackle the affairs of our Islamic nation and probe the reasons of its weakness and differences that it is incurring and which marred its consistency and unity.

Dear Brothers,

The Islamic Ummah is currently living in a state of sedition and disunity that led to bloodshed of its people in this holy month in many parts of our Islamic world, ignoring God's verse that “Persecution is worse than slaughter.”

Dear Brothers,

The ideal solution of all what I have mentioned will not take place except through solidarity, tolerance and moderation and also through standing side by side to face whoever tries to harm our religion and unity.

Thus, we could, by God willing, preserve the history, dignity and pride of our Islamic nation at time where only the superpowers are recognized. If we observed justice, then we could conquer injustice, if we practiced moderation, then we conquer extremism and if we reject dispersion, then we could keep our unity, strength and determination, by God willing.

Dear Brothers,

I appeal to you in the name of Allah Almighty that we assume responsibility as much as possible, to become eligible to shoulder it and to observe right as per God's saying “If ye will help (the cause of) Allah He will help you, and plant your feet firmly.”

Emanating from this, I suggest hereby the establishment of a center for dialogue among Islamic sects to come to common terms, in the city of Riyadh as its headquarters and, upon recommendation by the General Secretariat and the Ministerial Council, its members be selected from within the Islamic summit conference.
Let me appeal to Allah Almighty to help us stick firmly to our religion and keep the unity and dignity of this nation.

God's peace, mercy and blessings be upon you.

------------------------

- The Summit stresses the importance of optimal use of human resources, natural and economic resources available in the Islamic world and using them to promote cooperation between countries and work to implement the action plan to develop this cooperation and to study the possibility of establishing free trade zones between Member States and activate other related activities.

- The Summit welcomes the increase of the volume of trade between Member States of the Organization to achieve the goals set forth in the ten-year program.

It also calls to increase the capital of the Islamic Development Bank to enable it to meet the needs of Member States, and renewed importance of the vital role of the private sector in development.

- The Summit stresses the importance of cooperation in the field of capacity- building and the fight against poverty, unemployment, illiteracy and disease eradication and seeks to mobilize the necessary resources and calls on the Islamic Development Bank to study the establishment of a special fund in the bank and assign the Board of Governors of the Bank to follow up that.

- The Summit calls for supporting and stimulating cooperation among the OIC Member States to achieve agricultural and industrial development and achieve the desired food security.

- It also calls for supporting development in Africa and reaffirms its commitment to achieving the Millennium Development Goals by taking appropriate measures to alleviate poverty in the Member States. It also encourages initiatives of Member States to promote economic cooperation with other Member States and least developed countries and low-income countries of the Organization of Islamic Cooperation.

- The Summit decides adoption of specific procedures and clearly defines steps for the Advancement of Science, Technology and Innovation and Higher Education, including the achievement of self-sufficiency in the areas of the peaceful use of technology under the auspices of the International Energy Agency (IAEA) in order to support sustainable development in the Member States of the Organization of Islamic Cooperation.

- The Summit lauds the Secretary General of the Organization of Islamic Cooperation and his strenuous efforts and highly appreciates the efforts of workers in the OIC General Secretariat for their professionalism and mastery of works and accomplishment of the tasks assigned to them in a record time.

- The Summit affirms that Islam is a religion of moderation and openness which rejects all forms of extremism and immoderation, emphasizing the importance of confronting deviant thoughts by all available means, calling for the development of curricula to enhance Islamic values in the areas of understanding, tolerance, dialogue and pluralism, and extending bridges between the Islamic world to strengthen their unity and solidarity.

- The Summit stresses the condemnation of terrorism in all its forms and manifestations, praising the significant efforts made by the Government of Saudi Arabia in the establishment of International Counter-Terrorism Centre under the umbrella of the United Nations to implement the recommendations of the International Conference on Combating Terrorism held in Riyadh in 2005 which emphasizes the need to distinguish between terrorism and legitimate resistance to foreign occupation, which does not allow killing of innocent civilians.

- The Summit affirms its solidarity and full support for Sudan, Somalia, Afghanistan and Jammu and Kashmir, Iraq, Yemen, Ivory Coast, the Union of Comoros and the Republic of Turkish-Cyprus in addressing the challenges facing these countries. It also condemns the aggression of Armenia against Azerbaijan and calls for the withdrawal of Armenian troops from Azerbaijani territories.

- The Summit condemns the policy of violence exercised by the Government of the Union of Myanmar against Rohingya Muslim Group which are incompatible with human rights principles, values, and international laws, adopting in this regard the recommendations of the Executive Committee meeting at the level of permanent representatives which was held at the Organization of Islamic cooperation on 5 / 8/2012 including the dispatch of a fact-finding mission and the formation of a contact group.

- The Summit hails the donation amounted to $ 50 million by the Custodian of the Two Holy Mosques as humanitarian aid to Rohingya Muslims.

----------------------------------------------------------------------

//ரியாத்:சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்லும் மெக்கா நகரம், சவுதி அரேபியாவில் தான் உள்ளது. எனவே, இந்த நாடு முஸ்லிம்களின் நடைமுறைகளை தவறாமல் கடை பிடிக்கிறது.

குறிப்பாக, பெண்கள் விஷயத்தில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப் படுகிறது. இதன் காரணமாக, இந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்டவோ, தேர்தலில் ஓட்டு போடவோ அனுமதியில்லை.ஆண்களுடன் இணைந்து பெண்கள் பணியாற்ற வாய்ப்பில்லாத காரணத்தால், படித்த பெண்கள் கூட வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். எனவே, இளம் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள சவுதி அரசு, தற்போது பெண்களுக்கான தனி நகரை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த நகரை உருவாக்கும் பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளன. இந்த புதிய நகரில் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

சவுதியில், தற்போது வெளிநாட்டுப் பெண்கள் தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர். புதிய நகரம் உருவாகும் பட்சத்தில், உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் அதிக பங்களிப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.//

இது தினமலரில் நேற்று வந்த செய்தி. இதற்கு வழக்கம் போல் சிலர் சவுதிக்கு எதிரான கருத்தை தெரிவிக்க ஆரம்பித்தனர். இங்கு சவுதியில் பல ஆண்டுகள் பணி புரிந்து வரும் சில இந்து நண்பர்கள் அவர்களுக்கு கொடுத்த பின்னூட்ட பதிலையும் பார்ப்போம்.

Sampath Kumar - jeddah,சவுதி அரேபியா
13-ஆக-201213:58:57

அன்பர்களே நான் சவுதியில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக வசித்து வருகிறேன் ..இங்கே நாடு எல்லா விதத்திலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கு இன்னும் 10 வருடங்களில் உலக நாடுகள் வியக்கும் வகையில் கலாசாலை ..விளையாட்டு ,மருத்துவம் இப்படி எல்லா துறையிலும் சவுதி கவனம் செலுத்தி வருகிறது ..இந்த மண்ணை நம்பி நிறைய இந்திய மக்கள் இருக்கின்றனர் ..இங்கே தனி மனித உரிமை என்றும் பரிக்கபடுவதில்லை ..விலை வாசி இந்தியாவை விட பல மடங்கு குறைவு ..நேரிய முறையில் வாழ்பவனுக்கு சவுதி ஒரு சொர்க்கம்

Kavee - Jeddah,சவுதி அரேபியா
14-ஆக-201214:25:49

நண்பரே பெண் சுதந்திரம் என்றால் என்ன? பெண் சுதந்திரமாக உள்ள நாடுகளில் எல்லாம் பெண்கள் சுபிட்சமாக உள்ளார்களா? பெண் சுதந்திரம் என்கிற பெயரில் அவர்களை அவமதிக்கும் செயல்கள் தானே நடந்து கொண்டு இருக்கிறது? இங்கு அந்த சுதந்திரம் இல்லா விட்டாலும் நிம்மதியாக (ஆண்களை விட) பெண்கள் வாழ்கிறார்களே? எல்லாவகையிலும்.... பெண்கள் போற்றப்பட வேண்டும் அது இங்கு இருக்கிறது. பெண்சுதந்திரம் பெற்ற நாடுகளை விட கொஞ்சம அதிகமாவே பெண்கள் இங்கு சுதந்திரமாக இருக்கிறார்கள். வெளியிலே காட்டிக்கொண்டு அலைவது மட்டும் சுதந்திரம் அல்ல என்பதை உணர்ந்தால் போதும்....

Reply
Rajesh Kannan - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-201213:24:18

வெளி நாடுகளில் வேலை செய்யும் நம் இந்தியர்கள் அதிகம் பேர் இன்னும் தவறான வழிகளில் ( விபசாரம் , மது ) ஈடு படாமல் இருப்பது சவுதியில் தான் . காரணம் இந்த நாட்டின் சட்டம் தான் . அதை புரிந்து கொள்ளுங்கள் முதலில் .


unmaiyalan - bangaluru,இந்தியா
13-ஆக-201208:13:16

கொஞ்சம் மரியாதையுடன் பேசுங்கள் ....சவுதியில் எவ்வளவு இந்தியர்கள் வேலை பார்கின்றனர் என்று தெரியுமா ....? unsed மற்றும் semi sed இந்தியர்களின் புகலிடமே வளைகுடா நாடுகள் தான் .....இதில் மத வேறுபாடு ஏதும் கிடையாது ... அசாமிலும் , மங்களூரிலும் நடந்ததுதான் காட்டுமிராண்டித்தனம் ..............நம்மூரில் பெண் காவல் நிலையம் வைக்க வில்லையா ?.....ரவி சங்கர் முதலில் மனிதனாக நீங்கள் நடங்கள் பின் அடுத்தவர்களை குறை சொல்லலாம்...

இந்த நடுநிலை இந்து நண்பர்களின் பதிலால் இக்பால் செல்வன், கோவிகண்ணன், சார்வாகன் போன்றோர் விரக்தியின் விளிம்புக்கு சென்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.....:-)

--------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 23