Followers

Wednesday, August 30, 2017

பிற மதத்தினரை கவர்ந்த தவ்ஹீத் ஜமாஅத்

பிற மதத்தினரை கவர்ந்த தவ்ஹீத் ஜமாஅத்....

TNTJ முதியோர் இல்லத்திற்காக உபகரணங்கள் வழங்கிய மாற்று மத சகோதரர்கள்....

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் நெசப்பாக்கம் பகுதியை சார்ந்த சகோ.ஷங்கர். ஷங்கர் மற்றும்  அவர்களின் சகோதரி மேலும்  அவரின் மாமி ஆகியோர் குடும்பத்தில் ஆலோசனை செய்து முதியோர்களுக்கு பயன்படும் வகையில் புகைபடத்தில் காணும் சாதனங்களை சுமார் 20,000/-  க்கும் அதிகமான மதிப்பிலான உபகரணங்களை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை அழைத்து வழங்கியுள்ளார்கள்.

அவர்கள் சொன்ன வார்த்தை “தவ்ஹீத் ஜமாத் தின் முதியோர் இல்ல விளம்பரத்தை பார்த்தேன்.... தமிழகத்தில் உள்ள பல இயக்கங்களில் தவ்ஹீத் ஜமாத் வசம் கொடுத்தால் தான் அது 100% சரியான வகையில் பயன்படும் என தாங்கள்  நம்புவதாகவும்” தெரிவித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...

இது போன்று மாற்று மத சகோதரர்களையும் செயல்பாடுகளால் ஈர்க்கும் வண்ணம் நம்முடைய செயல்கள் மேலும் வீரியம் பெற அல்லாஹ் உதவி செய்வானாக ....


சகோதரர் ஷங்கர் மற்றும் அன்னாரின் குடும்பத்தார் நேர்வழியில்  நடந்து ஏக இறைவனின் அருள் பெற து ஆ செய்யவும்....Tuesday, August 29, 2017

"மும்பையில் கனமழை வெள்ளம்: -TNTJ

"மும்பையில் கனமழை வெள்ளம்: களப்பணியில் தவ்ஹீத் ஜமாஅத், தாராவி கிளை"

மும்பையில் தற்போது கனமழை கொட்டி வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இதனால் ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கியிருப்பதால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது! சாலைகளில் மரங்கள் விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பையில் பல இடங்களுக்கு தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில்....

ஆல்இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மும்பை மண்டலம் தாராவி கிளை சகோதரர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளை உணர்ந்து உடனடியாக களத்தில் இறங்கினர்

இன்று நீண்ட நேரம் மழை இடைவிடாது பெய்ததால் மாஹீம் ரயில்வே நிலைத்தில் வெளியே பயணத்தில் இருந்த மக்கள் வீடு திரும்ப முடியாத சூழல், அனைத்து கடைகளும் உணவு விடுதிகளும் அடைந்திருந்தது இதனால் பல மணி நேரம் குழந்தைகளும் முதியோர்களும் உட்பட மக்கள் அதிகமானோர் பட்னியில் இருந்தனர்.

தவ்ஹீத் ஜமாஅத் தாராவி கிளை சகோதரர்கள் ஏற்பாட்டில்  அனைத்து உடனடியாக உணவு பொட்டலங்களை தயார் செய்து பல கிலோமீட்டர் பயணம் செய்து வெள்ளத்தால் சிக்கிகொண்ட மாஹிம் நிலையத்தில் சிக்கி கொண்ட  மக்களுக்கு தண்ணீர், பிஸ்கட், உணவு போன்றவைகளை முதற்கட்டமாக வழங்கி பொதுமக்களின் பசியை தீர்த்தனர்.

இதில் பாதுகாப்பு நின்ற காவலர்களுக்கு கூட உணவு இல்லாமல் துன்பபட்டனர். அவர்களுக்கும் தாராவி கிளை தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் உணவு வழங்கியதும் மிக பெரிய தெம்புடன் நம் சகோதரர்களை கட்டி தழுவி நன்றியை தெரிவித்தனர்.

புகழும் நன்றியும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்

மனிதரிடம் காட்டும் இரக்கமும் அன்பும் ஏக இறைவனுக்கு மிக பிடித்தமானது என்று இஸ்லாத்தின் அடிப்படையான மனிதநேயத்தை மராட்டிய மண்ணில் மழைவெள்ளத்தால் மக்கள் இந்த உணவு ஊட்டுதல் மூலம் புரிந்திருப்பார்கள்.

ஏனெனில்...

"இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்" :-  நபி நாயகம் (ஸல்)

மேலும் கனமழை தொடராமலும் பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தனை செய்யுங்கள்

இஸ்லாம் என்பது அரேபிய கலாசாரமா?

இஸ்லாம் என்பது அரேபிய கலாசாரமா?

சில இந்துத்வாவாதிகள் இஸ்லாமிய மார்க்கம் என்பது அரேபிய கலாசாரத்துக்காக உருவாக்கப்பட்டது என்ற வாதத்தை வைக்கின்றனர். ஆனால் இங்கு கொரிய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் முடிப்பதற்காக ஆயத்தமாவதை பார்க்கிறீர்கள். அரேபியர்களுக்கும் கொரியர்களுக்கும் எந்த வகையிலாவது ஒற்றுமை உண்டா? நிறம், குணம், சாப்பிடும் வழக்கம், உடை உடுத்தும் முறை என்று எதை எடுத்தாலும் மாற்றத்தைக் காணலாம்.

ஆனால் இந்த மக்களின் வாயிலிருந்து 'இறைவன் ஒருவனே! இறைவன் ஒருவனே! அந்த இறைவனுக்கு நிகராக யாருமில்லை' என்ற முழக்கத்தோடு இதோ கிளம்பி விட்டனர் மக்காவை நோக்கி.... இந்த இஸ்லாமிய மார்க்கமானது அரnபியர்களுக்கு மட்டும் வந்ததல்ல... அகில உலகுக்கும் வந்தது. இதனையே இந்நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.

அரஃபா நாளில் நோன்பு

ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைப்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.
1976 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல் : முஸ்லிம்


Monday, August 28, 2017

மரண அறிவிப்பு.....மரண அறிவிப்பு.....

அய்யம்பேட்டை முன்னால் ஜமாத் தலைவரும் எனது தாயாரின் உடன் பிறந்த தங்கையின் கணவருமாகிய நான் 'சிச்சா' என்று அன்போடு அழைத்து வந்த ORJ முஹம்மது பஷீர் அவர்கள் இன்று காலை 4 மணியளவில் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்... "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"


அன்னாரின் மறுமை வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு நண்பர்களையும் சொந்தங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, August 27, 2017

'பசு குண்டர்களால்' தாக்கப்பட்ட 70 வயது முதியவர்!

'பசு குண்டர்களால்' தாக்கப்பட்ட 70 வயது முதியவர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி ஏரியாவில் வசித்து வருபவர் லால் ஹூசைன். வயது 70. இவரை மாட்டுக் கறி வைத்திருந்தார் என்று கூறி அடித்து அவரை இறப்பின் விளிம்புக்கே கொன்று சென்றுள்ளது இந்துத்வா காட்டுமிராண்டி கும்பல். இறந்த மனித உடலை தின்று வாழும் இந்த நாய்களுக்கு மனித உயிரின் மதிப்பு தெரியுமா? அவரது வயதுக்காவது இந்த நாய்கள் மதிப்பு கொடுத்திருக்கலாம்.

தகவல் உதவி
மில்லி கெஜட்
28-08-2017இவர்கள்தான் தேச பக்தர்காளா? பிஜேபி ரவுடிகள்

இது பாகிஸ்தான் ராணுவத்தை எல்லையில் விரட்டும் படமோ, இந்திய ராணுவத்தை காஷ்மீரில் விரட்டும் படமோ அல்ல பாஜகவின் ஆசியும் ஆதரவும் பெற்ற தேரா சச்சா செளதா அமைப்பினர் இந்திய ராணுவ வீரர்களுக்கு பூச்செண்டு கொடுக்க முயன்ற போது எடுத்த படம்.


குஜராத்தில் வைரஸ் காய்ச்சலால் 320 பேர் மரணம்.

குஜராத்தில் வைரஸ் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 320 ஐ தாண்டியுள்ளது. குஜராத் மாடலில் இந்தியா என்று மோடி சொன்னார். :-)


Saturday, August 26, 2017

புனித நாட்களில் அதிகமதிகம் இறைவனை புகழ்வோம்!

"அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?" என்று வினவ, "ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட; ஆனால், தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு, இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி.

இரு பெருநாட்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும்.


பெருநாள் தொழும் திடலுக்கு நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச்செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.


அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)

துல் ஹஜ் ஆரம்பத்திலிருந்து 10ம் நாள் வரை அதிகமதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம். வீணான பேச்சுகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம். தக்பீர் முழங்கி இறைவனை பெருமைபடுத்துவோம்.


தாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்தது என்று சொன்னது பொய்!

தாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்தது என்று சொன்னது பொய்!

ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

ஆக்ராவில், 'தேஜோ மஹாலய' என்ற சிவன் கோவில் இருந்தது. இந்த கோவிலைத் தான், மொகலாய மன்னர் ஷாஜகான், கல்லறையாக மாற்றி, தாஜ் மஹால் கட்டினார்.அங்கு, சிவன் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள், அடையாளங்கள் இப்போதும் உள்ளன. அதனால், தாஜ் மஹாலுக்குள், ஹிந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மத்திய கலாசாரத்துறை அமைச்சகம், ' தாஜ்மஹாலில், சிவன் கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை,' என, லோக்சபாவில், 2015ல் தெரிவித்தது. இந்நிலையில், ஆக்ரா நீதிமன்றத்தில், தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு:

தாஜ்மஹால், இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது என்றாலும், அங்கு, மதம் தொடர்பான எந்த நிகழ்ச்சியும், எப்போதும் நடந்ததில்லை. வரலாற்று ஆய்வின்படியும், ஆவணங்கள் ஆய்வின்படியும், யமுனை நதிக்கரையில், சிவன் கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

சிவன் கோவில் தான், தாஜ்மஹாலாக மாற்றி கட்டப்பட்டுள்ளதாக, மனுதாரர்கள், எந்த ஆதாரமும் இல்லாமல் மனு தாக்கல் செய்துள்ளனர். அதனால், அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

27-08-2017


Friday, August 25, 2017

போலி ஆன்மீகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும்.ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டம், கருசார் மோதியா கிராமத்தில் ஜாட் சீக்கிய குடும்பத்தில் 1967 ஆகஸ்டில் குர்மீத் ராம் ரஹீம் சிங் பிறந்தார். 7-வது வயதிலேயே தேரா சச்சா அமைப்பில் இணைந்தார். 23-வது வயதில் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். 'நான் தெய்வ பிறவி' என்று கூறி பலரை தனது ஆன்மீக வலைக்குள் வீழ்த்தினார். இவரது ஆசிரமத்தில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 400 இளைஞர்களுக்கு இவரது ஆசிரமத்தில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பாலியல் விவகாரத்தில் இவருக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதால்  பஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்கள் இன்று பற்றி எரிகின்றது. ஒரு குற்றவாளியோடு மோடி சமமாக நின்று போஸ் கொடுக்கிறார். பிஜேபி அமைச்சர்கள் இவரது காலில் விழுகின்றனர். இந்துத்வாவின் முழு ஆசியோடு நேற்று வரை வலம் வந்துள்ளார். இவரது கைதுக்காக இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ தாண்டியுள்ளது. பல கோடி அரசு சொத்துக்கள் நாசம்.


போலி ஆன்மீகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும். இந்து மதத்திலும், சீக்கிய மதத்திலும் ஆன்மீகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் உள்ளது. எனவேதான் மன அமைதி தேடி இத்தனை கோடி பேர் போலி சாமியார்களின் பிடியில் வீழ்கிறார்கள்.

விநாயகர் சிலை வைப்பதில் இரு தரப்பினரிடையே கலவரம்!

விநாயகர் சிலை வைப்பதில் இரு தரப்பினரிடையே கலவரம்!

காஞ்சிபுரம்: கல்பாக்கம் அருகே நத்தம்நல்லூரில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 9 வீடுகள் மற்றும் 10 இருசக்கரவாகனங்கள் சேதமடைந்தன. மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் உதவி

தினமலர்
26-08-2017

உண்மையான பக்தி இருந்திருந்தால் இத்தனை சேதங்களை பக்தர்கள் ஏற்படுத்த மாட்டார்கள். எல்லாம் பணம் வசூலுக்காக நடத்தப்படுவதால் பக்தி பகல் வேஷமாகிறது.Wednesday, August 23, 2017

ஏழு வருடம் ஓதிய ஆலிமின் வேலை!

மதரஸாவில் ஏழு வருடம் ஓதிய ஆலிமின் வேலைதான் இது. மதரஸாக்களின் கல்வித் திட்டத்தை முற்றாக மாற்ற வேண்டிய கட்டாய சூழலில் இஸ்லாமிய சமூகம் தற்போது உள்ளது.


Saturday, August 19, 2017

கேரள மலப்புரத்தில் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்!


கேரள மலப்புரத்தில் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்!

மத்திய அமைச்சரும், பா..,வைச் சேர்ந்தவருமான, ஹன்ஸ்ராஜ் அஹிர், தெலுங்கானா தலைநகர், ஐதராபாத்தில் நேற்றுகூறியதாவது:கேரளாவில், முதல்வர்பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, மலப்புரம் மாவட்டம், மத மாற்ற மையமாக திகழ்கிறது. ஒரு மாதத்தில், 1,000 பேர், மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.சமீபத்தில், மலப்புரம் சென்றேன்; அப்போது, மாவட்ட உயரதிகாரி, தலைமை செயலர் ஆகியோருடன், மத மாற்ற விவகாரம் பற்றி பேசினேன். மலப்புரத்தில் நடக்கும் மத மாற்றம் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, கேரள அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.

தினமலர்
20-08-2017


அமீத்ஷாவின் உருட்டல் மிரட்டல், மோடியின் உறுமல், ஆர்எஸ்எஸ் குண்டர்களின் வெட்டு குத்து இத்தனையையும் மீறி 1000 பேர் மதம் மாறியிருக்கிறார்கள் என்றால் இந்து மதத்தில் 'சிஸ்டம் சரியில்லை' என்று பொருள். பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரையும் கீழாக நடத்துவதும் பார்பனர்களை ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் போலவும் பில்டப் கொடுத்தால் சுய மரியாதை உள்ளவன் எப்படி இந்து மதத்தில் தொடர்வான்? 'நோய் முதல் நாடி' என்று வள்ளுவர் சொல்வது போல் உண்மை காரணம் என்ன என்று ஆராய்ந்து அதனை தீர்க்க முயல வேண்டும். அதை விடுத்து மோடியும் அமீத்ஷாவும் மாநில அரசுகளை உருட்டி மிரட்டுவதால் ஒரு பலனும் விளையப் பொவதில்லை. மாறாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வரவே செய்வார்கள்.