Followers

Sunday, March 31, 2013

குரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் - ஒளரங்கஜேப்

முகலாய பேரரசர்களில் ஒருவரான ‘அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீப் ஆலம்கீர்’ என்கிற ஔரங்கசீப் எழுதிய ஒரு கடிதம், உலக சரித்திரத்தில் பிரசித்திப் பெற்ற கடிதமாக நிலைப் பெற்று இருக்கிறது. தனக்கு கல்வி போதித்த ஆசிரியர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதமது. தீவிர சிந்தனைகளை கொண்டதாகவும் யதார்த்த இழையோடியதாகவும் அந்தக் கடிதம் நம் பார்வையை ஈர்க்கிறது. இவ்வளவு பரந்த மனம் கொண்ட தனது குடி மக்களை மதம் கடந்து நேசித்த ஒரு ஒப்பற்ற தலைவரை நமது வரலாறு எந்த அளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவு கேவலப்படுத்தி வைத்துள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் எந்த அளவு கூர்மையாக தனது அறிவை பயன்படுத்தியுள்ளார் என்பதை இந்த கடிதம் நமக்கு மிக அழகாக விளக்குகிறது. கடிதத்தில் தெறிக்கும் அவரது கோபம் யோசிக்கத் தகுந்தது. ஆசிரியரின் திறமையின்மைக் குறித்து, தனது வருத்தத்தை ஔரங்கசீப் விமர்சனக் கோணத்தில் வெளிப்படுத்தி இருப்பது தேர்ந்ததோர் அழகு!

(1658-ஆம் ஆண்டு ஔரங்கசீப் ஹிந்துஸ்தானத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றார். அல்லது முடிசூட்டிக் கொண்டார். ஔரங்கசீபிற்கு இளம் வயதில் ஆசிரியராக இருந்த முல்லா சாஹேப் என்பவருக்கு, ஔரங்கசீப் எழுதிய கடிதம் இது. ஔரங்கசீப் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட பிறகு முல்லா சாஹேப், ‘தனக்கு ஔரங்கசீபின் அரச சபையில் கௌரவ பதவியும், சன் மானமும் தர வேண்டும்’ – என்று கோரியிருந்தார். அதற்குப் பதில்தான் ஔரங்கசீபின் இந்தக் கடிதம்.) – துக்ளக் / 30.04.2008

"கற்றவரே!

நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்தவேண்டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல்கிறேன், நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்திருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது.

ஏனென்றால் நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது?

ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள், போர்ச்சுகீஸிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற்றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எமக்கு ஒரு விபரமும் கூறவில்லை, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்களை எல்லாம் நமக்கு அடங்கிய, மிகச் சிறிய குறுநில மன்னர்கள் என்று கூறினீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டும் என்பதற்காக, உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள். ஆஹா…! வியந்து பாராட்டப்பட வேண்டிய சரித்திர அறிவு!

எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? – உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர் முறைகள் என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜதந்திரங்கள் என்ன? – இவற்றை எல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? உண்மையான சரித்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும், அவர்களது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்திருக்க வேண்டாமா? எவ்விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், அங்கே புரட்சிகள் தோன்றின – அந்த சாம்ராஜியங்கள் அழிந்தன – என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?

உங்களிடமிருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக்கூட அறிந்து கொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் – அவ்வளவு பெரிய இடைவெளி இருந்திருக்கிறது.

ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும்!


காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித் திருந்தால் – மனதை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும் அரிய தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால் – அதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி – துரதிஷ்டத்தினால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினாலும் சரி – இரண்டுக்குமே மயங்காத மனோதைரியத்தை அளிக்கக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் – நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்த பூமி இயங்குகிறது? – என்பதை எல்லாம் நான் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால் – இப்பொழுதும் சொல்கிறேன் – இந்த மாதிரி விஷயங்களையும் தத்துவங்களையும் நீங்கள், எனக்கு கற்றுக் கொடுத்திருந்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப்பேன். அலக்ஸாண்டர், அவனுடைய குரு அரிஸ்டாடிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தானோ, அதைவிட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். அலெக்ஸாண்டர், அரிஸ்டாடிலுக்குச் செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன், நன்றி காட்டியிருப்பேன்.

சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜபரி பாலனத்துக்குத் தேவையான விஷயங்களை எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்யவேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்குக் குடிமக்கள் செய்யவேண்டிய கடமைகள் என்ன என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? என் வாழ்க்கைப் பாதையில் ஒரு கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும், உயிருக்காகவும் கூட, என்னுடைய உடன் பிறந்த சகோதரர்களுடனேயே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதையும் உணரும் அளவுக்கு, நீங்கள் போதித்த கல்வி அமைந்திருக்க வேண்டாமா?

ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு போர்ப் படையை எப்படி நடத்திச் செல்வது – என்பதை எல்லாம் நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா?

பயனுள்ள விஷயங்களை ஏதாவது நான் இப்போது அறிந்து வைத்திருந்தால், அதற்காக நான் மற்ற பலருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன் – நிச்சயமாக உமக்கல்ல!

போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய் சேருங்கள்! நீங்கள் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதை யெல்லாம் எவருமே தெரிந்து கொள்ளவேண்டாம்."
- ஔரங்கசீப்

---------------------------------------------------------------

ஒளரங்கஜேப் அவர்கள் தனது கைகளாலேயே எழுதிய புனித குர்ஆனின் பிரதிகளில் ஒன்றைத்தான் நாம் பார்க்கிறோம்.http://en.wikipedia.org/wiki/File:Aurangzeb_Handwritten_Quran.jpg

---------------------------------------------------------------

ஒளரங்கஜேப்பின் ஆட்சி காலத்தில் நமது நாடு ஆப்கானிஸ்தான் வரை எல்லையாக இருந்தது. அந்த அளவு நமது நாட்டை விரிவாக்கம் செய்து ஒரே குடையின் கீழ் ஆட்சியைக் கொண்டு வந்தார். ஆனால் இன்று நாமோ ஒவ்வொரு பகுதியாக இழந்து வருகிறோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று அனைத்தும் இன்று நம் கையை விட்டு சென்று விட்டது.http://en.wikipedia.org/wiki/Aurangzeb

அகண்ட பாரதத்தை தனது வாழ்நாளில் பல போர்களை சந்தித்து உருவாக்கிய ஒளரங்கஜேப்புக்கு: நமது நாட்டை வெகுவாக நேசித்து கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு மன்னருக்கு நமது பாடநூல்கள் தரும் விளக்கம் இவர் ஒரு மத வெறியர்.

அந்தமான் சிறையில் வெள்ளையர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து 'இனி ஆங்கிலேயர்களை எதிர்த்து எந்த கூட்டமோ கோரிக்கையோ வைக்க மாட்டேன்' என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்கருக்கு நமது பாராளுமன்றத்தில் அவரது புகைப்படத்தை திறந்து மரியாதை செய்கின்றனர். இது தான் நமது பாரதம்.

Saturday, March 30, 2013

முஸ்லிம் சிறுமிகளின் கால்களை கழுவிய போப் பிரான்சிஸ்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வெள்ளியை அனுசரிக்கிறார்கள். இயேசு சிலுவையில் அறையப்படும் முன்பு தனது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்ட நிகழ்ச்சியை நினைவு கூறும் வியாழன் வழிபாடு வாடிகன் நகரத்தில் நேற்று நடைபெற்றது.வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள பீட்டர் தேவாலயத்தில் பாதிரியார்களின் கால்களை கழுவி போப் ஆண்டவர் முத்தமிடுவார். ஆனால், இந்த முறை புதிதாக பொறுப்பேற்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் இதுவரையிலான மரபுகளை தகர்த்தெறிந்தார்.

வழக்கத்திற்கு மாறாக, அவர் ரோம் நகரில் உள்ள கசல்டெல் மர்மோ என்ற சிறார்கள் சீர்திருத்த பள்ளி சிறைக்கு சென்றார். அங்கு 12 இளம் சிறை கைதிகளின் கால்களை கழுவி முத்தமிட்டார். அவர்களில் முஸ்லிம் சிறுமிகளும் அடங்குவர். இதுவரை போப் ஆண்டவர் பெண்களின் கால்களை கழுவி முத்தமிட்டது இல்லை.

இதுகுறித்து அவர் கூறும் போது,

"எனது மனசாட்சிபடி மதகுருவின் கடமையை நான் செய்தேன். நான் உங்களுக்கு சேவை செய்ய இருக்கிறேன்." என்றார்.

இந்த நிகழ்ச்சி வாடிகன் சிட்டி ரேடியோவில் மட்டும் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக மற்ற டெலிவிஷன் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

While popes have for centuries washed the feet of the faithful on the day before Good Friday, never before had a pontiff washed the feet of a woman. That one of the female inmates at the prison in Rome was also a Serbian Muslim was also a break with tradition.

“There is no better way to show his service for the smallest, for the least fortunate,” said Gaetano Greco, a local chaplain.

washed the feet of 12 inmates aged 14 to 21, among them the two women, the second of whom was an Italian Catholic. Mr Greco said he hoped the ritual would be “a positive sign in their lives”.

Catholic traditionalists are likely to be riled by the inclusion of women in the ceremony because of the belief that all of Jesus’ disciples were male.

http://www.telegraph.co.uk/news/religion/the-pope/9960168/Pope-washes-feet-of-young-Muslim-woman-prisoner-in-unprecedented-twist-on-Maundy-Thursday.html

http://www.jaffnamuslim.com/2013/03/2_5808.html

-----------------------------------------------------------

05/03/2013 பாணந்துறை, எழுவில பிரதேசத்தில் உள்ள வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் இன்று முதல் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என அந்த பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் வழமையாக முஸ்லிம் மாணவியர் அணியும் கலாசார உடையினையும் தடை செய்து சிங்கள மாணவியர் அணிவதைப் போன்றே உடையணிந்து வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

நன்றி வீரகேசரி

-----------------------------------------------------------

"தீன் இலாஹி" என்ற தனது புதிய கொள்கையை மக்கள் மீது தினித்த முகலாய மன்னர் அக்பர், தலைப்பாகையை கையில் ஏந்தியவர்களாக தனது காலில் விழுந்து தன்னை வணங்க வேண்டும் என்று அந்த கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஆணைபிறப்பித்தார். அவ்வாறு காலில் விழும் அவர்களுக்கு தனது உருவப்படத்தை பரிசாக அளித்தார். இவ்வாறு ஒரு சர்வாதிகாரியாக விளங்கிய அக்பர் இன்னொரு ஃபிர்அவ்னாக தன்னை கற்பனை செய்து கொண்டார் என்றுதானே விளங்குகிறது.
வாரத்தில் ஒரு முறை ஞாயிற்றுக் கிழமை வணக்கம் செலுத்தினால் போதும் என்றும் போதனை(?) செய்து வந்தார் அந்த அக்பர் பேரரசர்.


மேலும் அக்பர் தனது கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இட்ட கட்டளைகள்:
1. பிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும்.
2. பிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.
3. இறந்தவர்களின் உடலை எரிக்கவோ புதைக்கவோ செய்யலாம்.
4. எரிக்கும் போதோ புதைக்கும் போதோ தலை கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.
5. இறைச்சிக் கடைக்காரர், மீனவர்கள், பறவைகளைப் பிடிப்பவர் ஆகியோரின் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.


இந்த கொள்கையை உடைய முகலாய மன்னர் அக்பர் எவ்வாறு முஸ்லிமாக இருக்க முடியும் என்று வாசகர்களே! சிந்தித்துப்பாருங்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகப்பெரும் செல்வாக்கு மிக்க தன்னிகரற்ற ஆட்சித் தலைவராக திகழ்ந்தார்கள். அந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு நபித்தோழர் தங்களது காலில் விழுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்ட போது அதனை கடுமையாக எதிர்த்து, அது போல் எந்த மனிதருக்கும் காலில் விழக் கூடாது என்று ஆணை பிறபித்தார்கள். தான் வரும் போது அமர்ந்திருக்கும் யாரும் தனது வருகைக்காக எழுந்திருக்கவும் கூடாது என்று சொன்ன ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும்தான். அவர் கொண்டு வந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள எந்த ஒரு முஸ்லிமும் அவன் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் தனது காலில் விழுந்து தன்னை வணங்க வேண்டும் என்று கூற அனுமதியில்லை. அவ்வாறு செய்பவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி நரக வாசிகளில் ஒருவனாகிவிடுவான்.


وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْأِسْلامِ دِيناً فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ (آل عمران)


"இன்னும் இஸ்லாமல்லாத ஒன்றை மார்க்கமாக எவராவது தேடினால், அப்போழுது அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படமாட்டாது, மேலும் மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்" (அல் குர்ஆன்: 3:85)


இஸ்லாமிய மார்க்கமல்லாத ஒரு வழியினை தனது மார்க்கமாக ஆக்கிக் கொண்டவன் இறைவனிடத்தில் ஏற்புடையவன் அல்ல, மறுமையில் மிகப்பெரும் நஷ்டத்திற்குள்ளாவன் என்று குர்ஆன் கூறுகிறது.

நேர்மையாகவும், நீதி தவறாமலும் ஆட்சி செய்து வந்த முகலாய மன்னர் ஒளரங்கசீப் அவர்களையும், மன்னர் திப்பு சுல்தான் அவர்களையும் பற்றி வரலாறு எழுதியவர்கள், அவதூறான செய்திகளையும், இல்லாத பொல்லாத தகவல்களையும் எழுதி வைத்துள்ளார்கள். அவர்கள் தீவிரவாதிகள், இந்துகளுக்கு எதிரானவர்கள் என்ற நச்சு சிந்தனையை இள உள்ளங்களில் ஏற்படுத்தி, அதன் மூலம் இந்து-முஸ்லிம் விரோதம் வளர்ந்து வேரூன்ற வேண்டும் என்று கருதிவருகிறார்கள் சங்பரிவாரங்கள். அவர்களது சூழ்ச்சிகளை அவர்களுக்கே எதிராக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.

இவ்வாறு இந்துகளால் திரித்து எழுதி வைக்கப்பட்ட வரலாறுகளை படித்த இஸ்லாமிய அறிவு ஞானம் சிறிது கூட இல்லாத பல முஸ்லிம்கள், அக்பர் ஒரு சிறந்த முஸ்லிம் என்று கருதிக் கொணடு அவர் கண்ட புதிய மார்க்கமான "தீன் இலாஹி" என்ற வார்த்தையை தங்களது கடிதங்களில், முக்கிய விஷயங்களில் எழுதி வருகிறார்கள். இது இஸ்லாத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இஸ்லாத்தை விட்டே வெளியேற்றும் செயல் என்பதை அறிய வேண்டும். அவ்வாறு செய்து வருபவர்கள் அல்லாஹ்வை அஞ்சி அந்த பழக்கத்தை கை விட்டுவிட்டு, இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.ஆதார நூல்:

Indian Affairs, Hostory Of Akbar, Period of 1526 Year.

Thursday, March 28, 2013

மாணிக்கமா? மாலிக்கா? ஒரே குழப்பம் - பகுதி இரண்டு.

மாணிக்கமா? மாலிக்கா? ஒரே குழப்பம் - பகுதி இரண்டு.

பள்ளி வாசலை தினமும் சுத்தமாக வைத்திருப்பது மாணிக்கத்துக்கு அவ்வளவு சிரமமாக இல்லை. எல்லா வேலைகளும் இரண்டு மணி அல்லது மூன்று மணி நேரத்தில் முடிந்து விடும். வேலை முடிந்து சும்மா இருக்காமல் தினமும் கையோடு கொண்டு வந்த குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை வாசிக்க ஆரம்பித்தான். படிக்க படிக்க அவனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ரமலானும் வந்தது. நோன்பு திறப்பதற்காக சவுதிகள் தங்கள் வீடுகளில் இருந்து பழங்கள் பலகாரங்கள் என்று நிறைய பள்ளிக்கு அனுப்புவார்கள். அரசாங்கமும் 50 பேர் சாப்பிடும் அளவுக்கு பிரியாணியையும் அனுப்பி வைக்கும். அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் வேலையும் தற்போது மாணிக்கத்துக்கு கிடைத்தது. இதற்கு தனியாக 500 ரியால் போனஸாகவும் கிடைத்தது. ஒரு பெரிய தட்டில் சாப்பாடு பழங்கள் வைத்து அதை சுற்றி 4 பேர் அமர்ந்து கொண்டனர். மாணிக்கம் இவ்வாறு சாப்பிட்டு பழக்கம் இல்லை ஆதலால் சிறிய தட்டில் தனக்கு மட்டும் கொஞ்சம் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கினான்.

இதை தூரத்திலிருந்து கவனித்து விட்ட ஒரு சவுதி நாட்டவர் மாணிக்கத்தை அழைத்தார்.

'நீ முஸ்லிம் தானே'

'ஆம்'

'பிறகு ஏன் உனக்கு மட்டும் தனி சாப்பாடு? அது தவறல்லவா? எங்களோடு சேர்ந்து சாப்பிடு! அதுதான் சிறந்தது'

மாணிக்கத்துக்கு ஒன்றும் சொல்ல வழியில்லை. அவர்களோடு ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். தனது சொந்த கிராமத்தில் இவன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதால் கோவில் குருக்கள் பிரசாதத்தைக் கூட சற்று தூரமாக நின்றே கொடுப்பார். கை மேலே பட்டு விடக் கூடாது என்பதிலே மிக கவனமாக இருப்பார்.

கோவிலுக்குள்ளும் மாணிக்கத்துக்கு அனுமதி கிடையாது. அந்த அளவு தீண்டாமை மாணிக்கத்தை கோவிலிருந்து தூரமாக்கி வைத்திருந்தது. இங்கோ மாணிக்கம் கை வைத்த சாப்பாட்டை கோடீஸ்வரனான சவுதி நாட்டவர் அசூசைபடாமல் சாப்பிடுவதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்ன யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? எல்லோரும் ஆதமுடைய மக்களே! சாப்பிடு'

மாணிக்கத்தின் கண்கள் சிறிது கலங்கியது. சாப்பிட்டு முடித்தவுடன் எல்லோரும தொழுகைக்கு தயாரானார்கள். சாப்பிட்ட இடங்களை மாணிககம் சுத்தம் செய்ததால் அவனால் தொழுகையில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே கூட்டு தொழுகை முடிந்ததும் தனது தொழுகையை தனியாக தொழ ஆரம்பித்தான் மாணிக்கம். வீட்டில் நோன்பு திறந்து விட்டு சற்று தாமதமாக வந்தவர்கள் மாணிக்கத்தின் பின்னால் தொழுவதற்கு நின்று கொண்டனர். சவுதி வந்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகி விட்டதால் தொழுவதும் அதன் வசனங்களும் மிக நன்றாக மனனம் ஆகியிருந்தபடியால் எந்த பயமும் இல்லாமல் அனைவருக்கும் தலைவராக நின்று தொழுக வைத்தான் மாணிக்கம். தனக்கு பின்னால் சவுதி, எகிப்து, சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ என்று பல நாட்டவரும் தனது கட்டளைக்கு அடி பணிவதை நினைத்து இனம் புரியாத இன்பத்தில் திளைத்தான் மாணிக்கம். தனியாக தொழும் போது பூமியில் நெற்றியை வைத்து இந்த சிறந்த நிலையை தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி அழ ஆரம்பித்து விட்டான். இது போன்று தொழ வைப்பது பலமுறை நிகழ ஆரம்பித்தது. வேலைக்காக முஸ்லிமாக நடித்த மாணிக்கத்துக்கு தற்போது உண்மையிலேயே இஸ்லாத்தின் மேல் பற்று வர ஆரம்பித்தது.

சவுதி அரசு நடத்தும் அழைப்பு வழி காட்டு மையத்துக்கு வந்து இஸ்லாம் சம்பந்தமான அனைத்து புத்தகங்களையும், சிடிக்களையும் தனது ரூமுக்கு கொண்டு வந்தான். வேலை நேரம் போக மாணிக்கத்தின் தேடல் இஸ்லாமாகவே இருந்தது. சில காலத்திற்கு பிறகு தனது பெற்றோரிடமும் தனது நிலையை மெல்ல மெல்ல விளக்கினான் மாணிக்கம். முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் மாணிக்கத்தின் விளக்கத்துக்குப் பிறகு மௌனமானார்கள்.

'நம்ம புள்ள என்னாங்க இப்படி பண்ணிட்டான்'

'ஆமாம்! காலத்துக்கும் தீண்டத்தகாதவனாகவே தான் நான் வாழ்ந்துட்டேன். எம் புள்ளையாவது கொஞ்சம் கௌரவமா இருக்கட்டும்'

'நம்ம சாதி சனம் எல்லாம் தப்பா பேசாதுங்களா'

'நாம கஷ்டப்பட்டப்போ, அவமானப்பட்டப்போ இந்த சாதி சனம் நமககாக என்ன பண்ணுச்சு. ஒண்ணும் ஆகாது கவலைபடாதே'

'நம்ம பையனுக்கு நம்ம சனத்துல பொண்ணு தர மாட்டாங்களே'

'தர வேணாம். எனக்கு தெரிஞ்ச பாய்க்கு 3 பொண்ணுங்க. அதுல மூத்த பொண்ண நமக்கு தர்ரதா சொல்லியிருக்கார்'

'நெசம்மாவா சொல்றீங்க'

'அட..ஆமா புள்ள...மாணிக்கம் மதம் மாறிட்டான்னு தெரிஞ்சவுடனேயே அவர் கிட்ட அரசல் புரசலா இந்த பேச்சை உட்டு பார்த்தேன். அந்த பாயும் 3 பொண்ணுங்கள வச்சுகிட்டு சிரமப்படுரார். அதான் நான் சொன்னவுடனேயே ஒத்துக்கிட்டார். மாணிக்கத்தையும் நல்லா தெரியும்னு சொனனார்'

'ரொம் சந்தோஷங்க....பொண்ணு கிடைக்குமான்னுதான் பயந்தேன்'

'பையன் வந்ததும் நாமலும் முஸ்லிமா மாறிடுவோம். என்ன சொல்றே'

'நம்ம முனியாண்டி சாமி கோவிச்சுக்க மாட்டாரா'

'அவரு கோவிச்சுக்குவேன் என்று உன் கிட்டே வந்து சொன்னாரா! எல்லாரும் கும்புடுறது ஒரு சாமியைத்தான். நம்மல படைச்சதும் ஒரு சாமிதான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' கிறதுதான் நம்ம நாட்டு வழக்கம். பின்னால மாத்திப்புட்டானுங்க. அதைத்தானே இஸ்லாமும் சொல்லுது. அதனால பேசாம அந்த பாய் கிட்டேயே சொல்லி முஸ்லிமா மாற ஏற்பாடு பண்ணுறேன். மாணிக்கத்துக்கும் இந்த விஷயத்தை போன்ல சொல்லிடு' என்று சொல்லி விட்டு மாணிக்கத்தின் அப்பா தனது வருங்கால சம்பந்தியை பார்க்க கிளம்பினார்.

'சலாம் பாய்'

'என்னப்பா வணக்கம் போய் சலாம் வந்துருச்சு'

'நானும் அஞ்சலையும் என் மகனைப் போல முஸ்லிமா மாறலாம்னு இருக்கோம்'

'அடடே ....ரொம்ப சந்தோஷமான செய்தியாச்சே! இனி உன்னை சம்பந்தியா ஏத்துக்கிறதுல எந்த கஷ்டமும் எனக்கில்லே'

'அப்போ மவுலானா கிட்டே போய் அதுக்கு ஏற்பாடு பண்ணுறீங்களா'

'அதுக்கு ஏம்பா மவுலானா கிட்டே போகணும்? நம்மல படைச்சது ஒரே இறைவன். அதை நம்புறியா'

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' கிறது காலாகாலமா இந்த மண்ணுல பொறந்த பழக்கம் தானே பாய்'

'சரியா சொன்னே. அடுத்து அந்த இறைவன் பல தூதர்களை அனுப்பியிருக்கான். அதுல கடைசியா அனுப்பிய தூதர் முஹமது நபிங்கறத உளமாற நம்புறியா'

'கண்டிப்பா நம்புறேன் பாய்'

'அவ்வளவு தான் நீ இப்போ முஸ்லிம்' என்று முத்துவை கட்டி தழுவினார்.

'பேரை மாத்த வேண்டாங்கலா'

'முத்து என்கிற பேரே அழகாக இருக்கு. அதே பெயரையே வைக்க இஸ்லாத்தில் தடை இல்லை. ஆனால் இந்த பழைய பேர் உனது சாதியை திரும்பவும் மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்தும். எனவே ஒரு அழகான அரபு பேரை நீயே தேர்ந்தெடுத்துக்கோ'

'அப்துல்லா ங்கற பேரு எனக்கு பிடிச்சுருக்கு பாய்'

'ஆஹா...இறைவனுக்கும் மிகவும் பிடித்தமான பெயர். 'இறைவனின் அடிமை' என்று பொருள் வரும். இந்த வார வெள்ளிக்கிழமை பள்ளி வாசலுக்கு உன் மனைவியையும் அழைச்சுகிட்டு வந்துடு. எல்லோர் முன்னிலையிலும் இஸ்லாத்தை ஏற்றதை சொல்லிட்டா தானாக உனது கிராமத்துக்கும் இந்த சேதி போயிடும்'

'நல்லது பாய்! பையன் இன்னும் ஆறு மாசத்துல ஊருக்கு வரான்! அப்போவே கல்யாணத்தை வச்சுகிடலாம்னு'

'தாராளமா! இரு பொண்ணு போட்டோவை தர்றேன். பையனுக்கு அனுப்பி வை' என்று வீட்டின் உள்ளே சென்றார் காதர் பாய்.

பெண்ணின் போட்டோவையும் வாங்கிக் கொண்டு கம்பீரமாக நடந்து சென்றார் முத்து. தனக்கும் தனது மனைவிக்கும் தனது மகனுக்கும் சிறந்த வாழ்வும் கௌரவமான வாழ்வும் கிடைக்கப் போவதை எண்ணி மனம் மகிழ்ந்தவராக வீட்டை நோக்கி சென்றார் முத்து என்கிற அப்துல்லா.

-முற்றும்.

Tuesday, March 26, 2013

மாணிக்கமா! மாலிக்கா! ஒரே குழப்பம்- சிறுகதை.

'ஏங்க....மதம் மாத்தி தவறா போட்டு பாஸ்போர்ட் எடுத்தா பிரச்னையாயிடுதுங்களா?'

'ஒண்ணும் ஆகாது மாணிக்கம். அங்கே உள்ள ஆளுங்க எல்லாம் நம்ம ஆளுங்கதான்...கவலைபடாதே...'

சவுதி போகும் ஆசையில் ஏஜண்ட் குமாரிடம் 50000 ரூபாயை கொடுத்து விட்டு பாஸ்போர்ட் ஃபாரத்தில் கையெழுத்திடும போதுதான் மாணிக்கம் யோசனையில் ஆழ்ந்தான். தற்போது மெக்கா மதினாவுக்குத்தான் ஆள் எடுப்பதாகவும் அங்கு செல்ல முஸ்லிம்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதாலும் ஏஜண்ட் குமார் கொடுத்த ஐடியாதான் முஸ்லிம் பெயரில் பாஸ்போர்ட் எடுக்க சொன்னது. குமார் கொடுத்த தைரியத்தில் எப்படியோ கையெழுத்தும் போட்டு விட்டு பணத்தையும் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் மாணிக்கம்.

வறுமையான குடும்பம். வயதான தாய் தகப்பனை காப்பாற்ற வேண்டும். விவசாயமும் கை கொடுக்கவில்லை. எனவே அரபு நாடு சென்றாவது தனது குடும்பத்தின் வறுமையை போக்கலாம் என்ற நினைப்பில் தற்போது வயலையும் விற்று விட்டான் மாணிக்கம். பத்தாம் வகுப்பு வரை அரசு உதவியோடு எப்படியோ படித்து விட்டான். அதற்கு மேலும் படிக்க குடும்ப சூழல் ஒத்து வரவில்லை.

'ஏம்பா....இருந்த ஒரே வயலையும் வித்துபுட்டீயே...ஏஜண்ட் நம்பிக்கையா சொன்னாருல்ல'

'கவலைபடாதேம்மா....நம்ம சாமி நம்மை கைவிட மாட்டார். இன்னும் ஒரு மாசத்தில வேலை முடிஞ்சுறும் என்று ஏஜண்ட் குமார் சொல்லியிருக்கார்.'

'எப்படியோப்பா...ஏமாந்துடாதே...அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.'

அம்மாவின் அன்பான உபசரிப்பில் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தூங்கச் சென்றான் மாணிக்கம்.

இரண்டு மாதம் சென்று விட்டது. குமாரிடமிருந்து மாணிக்கத்தின் செல்லுக்கு ஒரு குறுஞ் செய்தி வந்தது. 'வேலை முடிந்து விட்டது. மீதி பணம் 10000 தை எடுத்துக் கொண்டு ஆபிஸூக்கு வரவும்' செய்தியை பார்த்ததிலிருந்து மாணிக்கத்துக்கு கையும் ஓடவில்லை..காலும் ஓடவில்லை...'அம்மா..அம்மா'

'என்னப்பா'

'எனக்கு விஷா வந்திருச்சு. அந்த பாக்கி பணம் 10000 தை எடு'

'ரொம்ப சந்தோஷம்பா. இந்தா பணம். அப்பாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிடு'

'நீயே சொல்லிடும்மா. நான் ஏஜண்ட் குமாரை பார்க்க இப்பவே கிளம்புறேன்.'

'நல்லபடியா போய்ட்டு வாப்பா' தாய் அஞ்சலை மாணிக்கத்தை சந்தோஷத்தோடு வழியனுப்பி வைத்தார்.

--------------------------------------------------

'மாணிக்கம்....இன்னையிலேருந்து நீ மாணிக்கம் இல்லே....அப்துல் மாலிக் புரிஞ்சுதா? நமம ஆபீஸூல வேலை செய்யற ரஹீமிடம் உனக்கு முஸ்லிம்களோட பழக்க வழக்கம், வழிபாடு எல்லாம் கத்துக் கொடுக்க சொல்லியிருக்கேன். பார்த்து எல்லாத்தையும் கத்துக்கோ. எல்லாரும் கும்புடுறது ஒரு கடவுளைதான்யா..என்ன'

'சரிண்ணே! நான் எல்லாத்தையும் கத்துக்கிறேன். இந்தாங்க பாக்கி பணம்'

'நீ இன்னும் ஒரு வாரத்துல சவுதி போற....டிக்கெட்டெல்லாம் போட்டாச்சு. தேதி குறிச்சு தர்றேன். பெட்டியோட சரியா ஆபீஸ் வந்து சேரு'

'சரிண்ணே'

'இந்தாப்பா ரஹீம். மாணிக்கத்துக்கு உங்க பழக்கத்தை எல்லாம் கொஞ்சம் சொல்லிக் கொடு'

தலையாட்டிய ரஹீம் மாணிக்கத்தை குறும்போடு பார்த்து புன்னகைத்தார். 'ம்....அப்துல் மாலிக்கா..சரி தொழுகிறது எப்படின்னு முதல்ல சொல்லித் தர்றேன்.' என்று சொல்லிய ரஹீம் எவ்வாறு கை கால்களை சுத்தம் செய்வது எவ்வாறு தொழுவது என்பதை எல்லாம் சுருக்கமாக சொல்லிக் கொடுத்தார். இந்த முறைகளை எல்லாம் பழக்கப்படுத்திக் கொண்ட மாணிக்கம் வீட்டிலும் சென்று செய்து பார்த்தான். மகன் வித்தியாசமாக தொழுவதைப் பார்த்த அஞ்சலை 'ஏலேய்...நீ முஸ்லிமா மாறிட்டீயா' என்று கேட்டார்.

'இல்லேம்மா...உடனே வெளிநாடு போகணும்னா தற்போது முஸ்லிம் விஷா தான் இருக்கு. வேலைக்காகத்தான் முஸ்லிம் பெயரில் பாஸ்போர்ட் எடுத்துருக்கேன். நமக்கு சாமி முனியாண்டி தானேம்மா'

'அதானே பார்த்தேன். உன் அப்பனுக்கு தெரிஞ்சா உன்னைய கொன்னே போட்டுருவாரு'

'அய்யோ இத அப்பா கிட்டே சொல்லிடாதே... நான் எப்போதும் உன் பிள்ளை மாணிக்கம்தான் கவலைப்படாதே'

சவுதி செல்லும் நாளும் வந்தது. மாணிக்கத்தையும் சேர்த்து மொத்தம் 60 பேர் சென்னை விமான நிலையத்தில் குழுமினர். ஏஜண்ட் குமார் எல்லோரிடமும் அவரவர் பாஸ்போர்டை தந்து விட்டு மாணிக்கத்திடம் நெருங்கி ரகசியமாக 'உன் பெயர் அப்துல் மாலிக். மறந்துடாதே. உன் கூட வரும் யாருக்கும் பெயர் மாற்றிய விஷயம் தெரியாது. நீயும் சொல்லிடாதே' என்றார்.

சரி என்று தலையாட்டியவாறு மாணிக்கம் சற்றே பதட்டத்துடன் பாஸ்போர்டை வாங்கி பார்த்தான். இவனது புகைப்படம் ஒட்டப்பட்டு அதன் கீழ் அப்துல் மாலிக் என்ற இவனது பொய்யான கையெழுத்தையும் ஒரு வித அச்சத்தோடு பார்த்துக் கொண்டே வரிசையில் வந்து நின்றான் மாணிக்கம். விமான நிலைய சோதனைகள் எல்லாம் முடிந்து விமானத்தை நோக்கி அனைவரும் புறப்பட்டனர். 'சவுதியா' விமானம் இவர்களின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தது. இது வரை சினிமாவில் மாத்திரமே விமானங்களை பார்த்த மாணிக்கத்துக்கு அதனுள் நுழைந்து அதன் பிரம்மாண்டத்தை பார்த்து சற்றே மலைத்தான். இவ்வளவு பேரையும் தூக்கிக் கொண்டு எப்படி இது பறக்கிறது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே தனது பேக்கை சீட்டுக்கு மேல் வைத்தான்.

சினிமாவில் விமான பணிப் பெண்கள் அரை குறை உடையோடு பயணிகளுக்கு மது பரிமாறுவதைப் பார்த்துள்ளான். ஆனால் இங்கோ விமான பணிப்பெண்கள் முழு உடலையும் மறைத்து தலையிலும் முக்காடு இட்டு வேலை செய்வதை ஆச்சரித்தோடு பார்த்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த நபரோடு சற்று பேச்சு கொடுத்து பார்த்தான்.

'ஏங்க...மது இங்க சப்ளை பண்ணுவாங்களா'

மாணிக்கத்தை அந்த நபர் ஏற இறங்க பார்த்து விட்டு 'சவுதிக்கு புதுசா?' என்று கேட்டார்.

'ஆமாங்க....முதல் முறையா இப்போதான் ஃபிளைட்டும் ஏறியிருக்கேன்'

'மது முற்றிலும் சவுதியில் தடை செய்யப்பட்டது. எனவே பார்த்து கொஞ்சம் கவனமா நடந்துக்கோங்க...ஊருக்கு திரும்பவும் ஒழுங்கா போய்ச் சேரணும்ல...'

'ஆமாம் பாய்..சரியாகவே சொன்னீங்க. சும்மாதான் கேட்டேன்'

விமான பணிப்பெண் பயணிகளின் ஆபத்து கால முதலுதவிகளை தனது செய்கைகளால் காண்பித்துக் கொண்டிருந்தார். திரையில் செய்முறையும் செய்து காட்டப்பட்டது. அடுத்த ஐந்து நிமிடத்தில் விமானம் புறப்படத் தயாரானது.

'அல்லாஹு அக்பர்.....அல்லாஹு அக்பர்....அல்லாஹூ அக்பர்'

மாணிக்கத்துக்கு இந்த சொற்கள் விமானத்தில் ஒலித்தது சற்று ஆச்சரியமாக இருந்தது. பணயத்திலும் இறைவனை நினைவு கூறும் இஸ்லாமியரின் பழக்கத்தை எண்ணி வியந்தபடியே அருகில் இருந்த நண்பரிடம் 'இது எதற்காக சொல்கின்றனர்? இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா?' என்று கேட்டான்.

அந்த நண்பர் தனது மொபைலில் சேமித்து வைத்திருந்த தமிழ் பயண பிரார்த்தனை ஃபைலை தேடி எடுத்தபடியே மாணிக்கத்துக்கு பதிலளித்தார்.

'இது பயண நேர பிரார்த்தனை. ஒவ்வொரு பயணத்திலும் இந்த பிரார்த்தனையை செய்து கொள்ளுமாறு நபிகள் நாயகம் நமக்கு கட்டளையிட்டுள்ளார். அதனைத்தான் சவுதியா நிர்வாகம் செயல்படுத்துகிறது. இதன் அர்த்தம் தமிழில் சொல்கிறேன்.

அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்! (இறைவன் மிகப் பெரியவன்)

அல்லாஹ் மிகப்பெரியவன். இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். யா இறைவா! எங்களின் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு. இதன் தொலைவை எங்களுக்கு குறைத்துவிடு. யா இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். யா இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். (நூல்: முஸ்லிம் 2392.)

'என்ன புரிந்ததா. உங்களுக்கு விளங்கியதா?'

'ஓ...அருமையான பிரார்த்தனை பாய்...விளக்கியதற்கு நன்றி'

இதன் அர்த்தத்தையும் அதில் பொதிந்துள்ள கருத்துக்களையும் ஆழமாக உள் வாங்கிக் கொண்டான் மாணிக்கம். சிறிது நேரத்தில் சாப்பாடும் வந்தது. சாப்பிட்டு முடிந்தவுடன் சிறிது கண்கள் அசதியில் சொருகவே தூங்கிக் போனான் மாணிக்கம். நான்கரை மணி நேர பயணத்திற்குப் பிறகு விமானம் ஜெத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கியது. ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான ஹாஜிகள் வருவதும் போவதுமாக இருப்பதால் அதன் வசதியைக் கருதி மிக விசாலமாக கட்டப்பட்ட விமான நிலையத்தை பிரமிப்போடு பார்த்துக் கொண்டு பாஸ்போர்டை கவுண்டரில் கொடுத்தான் மாணிக்கம். கணிணி மூலமாக சரி பார்த்த பின்னர் திரும்ப மாணிக்கத்திடம் பாஸ்போர்டை கொடுத்தனர். கம்பெனி ஆட்கள் அனைவரும் வரும் வரை அங்கு இருந்த இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். பக்கத்திலேயே பலர் தொழுது கொண்டும் இருந்தனர்.

மாணிக்கத்தோடு வந்தவர்களும் காலைத் தொழுகைக்காக கை கால்களை அலம்பி விட்டு தொழுகைக்கு தயாரானார்கள். மாணிக்கமும் அவர்களோடு சேர்ந்து தொழுது கொண்டான்.

எல்லோரையும் அவரவர் அறைக்கு அழைத்துச் செல்ல கம்பெனி பேரூந்து வந்து அனைவரையும் ஏற்றிச் சென்றது. புதிதாக வந்தவர்கள் ஒரு குரூப்பாகவும் பழையவர்கள் மெக்கா மெதினாவுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். மாணிக்கத்துக்கு ஜெத்தாவிலேயே ஒரு பள்ளி வாசலை சுத்தம் பண்ணும் வேலை கொடுக்கப்பட்டது. தெய்வத் தொண்டாக எண்ணி சந்தோஷமாக அந்த பணியை ஏற்றுக் கொண்டான் மாணிக்கம். பள்ளியின் பின் பக்கம் இவனுக்கு ஒரு தனி அறை ஒதுக்கி தரப்பட்டது.

-தொடரும்

Monday, March 25, 2013

உண்மையின் உரைகல் உதிர்த்த பொய் செய்தி!

உண்மையின் உரை கல் என்ற பெயரில் தினமலர் எவ்வளவு சாமர்த்தியமாக செய்திகளை வெளியிடுகிறது என்பதற்கு நேற்றைய செய்தியே உதாரணம். லியாகத் என்ற பாகிஸ்தான் தீவிரவாதி டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், பெரும் நாசம் விளைவிக்க இருந்தது இந்த கைதால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அடுத்த நாளே அந்த பொய் செய்தி காஷமீர் போலீஸாரால் வெளிக் கொணரப்பட்டது. அந்த செய்தியை இனி பார்ப்போம்.டெல்லி போலீசின் ‘தீவிரவாதி கைது நாடகம்’ அம்பலமானது....!!!

டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நேற்று முன் தினம் நடத்திய ‘தீவிரவாதி கைது’ நாடகம் தோல்வியை தழுவியது. டெல்லி ஹோலி பண்டிகையொட்டியோ அல்லது அதற்கு பிறகோ மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதாக ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் லியாக்கத் ஷாவை கைது செய்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த டெல்லி போலீஸின் போலி நாடகம் ஜம்மு கஷ்மீர் போலீஸ் மூலம் தோல்வியை தழுவியுள்ளது.

தீவிரவாத அமைப்புகளிலிருந்து வெளியேறி போலீஸ் அல்லது ராணுவத்தின் முன்னால் சரணடையும் போராளிகளுக்கு ஊக்கமளிக்கும் கஷ்மீர் அரசின் ’சரண்டர் அண்ட் ரிஹாபிலேஷசன் பாலிசி’ அடிப்படையில் லியாகத் இந்தியாவுக்கு வந்துள்ளார். போராளிகளின் பின்னணி மற்றும் விபரங்களை பரிசோதித்த பிறகே சரணடைய அனுமதி வழங்கப்படும்.இதனடிப்படையில் அதிகாரிகளுக்கு தெரிந்தே லியாகத் டெல்லிக்கு வந்துள்ளார்.

பாகிஸ்தானில் ஹிஸ்ப் போராளியான லியாகத் சரணடைய தயாராக உள்ளார் என்று கூறி அவரது மனைவியும் குப்வாராவைச் சார்ந்தவருமான அமீனா பேகாம் 2011-ஆம் ஆண்டு கஷ்மீர் அரசுக்கு மனு ஒன்றை அளித்திருந்தார். இதனடிப்படையிலேயே லியாகத்திற்கு சரணடைவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.லியாகத்தும் அவரது 2-வது மனைவி அக்தர் நிஸாவும், மகனும் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். சரணடைபவர்களுக்கு இந்தியாவுக்கு வருவதற்கான வழியை நிச்சயித்து அளிப்பது கஷ்மீர் அரசாகும்.

நேபாளம் எல்லையில் இருந்து லியாகத்தை போலீஸ் கைதுச் செய்து கொண்டு சென்றதாக அவரது மனைவி அக்தர்நிஸா கூறுகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வைத்து ஹிஸ்ப் கமாண்டரை கைதுச் செய்ததாகவும், சவுத் டெல்லி வணிக வளாகம், சாந்தினி சவுக் ஆகிய இடங்களில் நடத்தவிருந்த குண்டுவெடிப்பு சதித்திட்டத்தை முறியடித்ததாகவும் டெல்லி போலீசின் ஸ்பெஷல் பிரிவு துணை கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா கூறினார். லியாகத் அளித்த தகவலின் அடிப்படையில் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகில் உள்ள லாட்ஜில் போலீஸ் ரெய்டு நடத்தி ஆயுதங்களை கைப்பற்றினார்களாம்.லியாகத்திற்கு உதவுவதற்காகவே தீவிரவாதிகள் இங்கு தங்கியிருந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது.

இந்நிலையில்தான் கஷ்மீர் போலீஸ் அதிகாரியே, டெல்லி போலீஸின் நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கினார்.இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கஷ்மீர் அரசு தொடர்பு கொண்டது.ரிஹாபிலிஷேசன் பாலிசியின்படி சரணடைய முன்வருபவர்கள் பின்வாங்குவார்கள் என்றும் மீண்டும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரத்தக்களரி உருவாகும் எனவும் கஷ்மீர் அரசு உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.கஷ்மீர் சட்டப்பேரவையிலும் நேற்று இது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

ஒருவேளை, நேபாளில் வைத்து லியாகத்துடன் போலீஸ் கைதுச் செய்த அர்ஷத் மீரை, வரும் தினங்களில் மேலும் ஒரு தீவிரவாதியை கைதுச் செய்துள்ளோம் என்று கூறி மீண்டும் ஒரு நாடகத்தை டெல்லி போலீஸ் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கும்.ஜம்மு கஷ்மீர் போலீஸின் எதிர்பாராத தலையீடு டெல்லி போலீஸின் நாடகத்திற்கு தடை போட்டுள்ளது.

மிகப்பெரிய வெடிப்பொருட்களுடன் தீவிரவாதிகளை எவ்வாறு முன்பும் இதுபோல டெல்லி போலீஸ் கைதுச் செய்துள்ளது என்பதற்கான காட்சியை லியாகத்தின் கைது சம்பவம் தெரிவிக்கிறது.


டெல்லி ஸ்பெஷல் போலீஸ் பிரிவு போலி தீவிரவாத கதைகளை உருவாக்குவது குறித்து நீதிமன்றங்கள் கண்டித்த பிறகும், ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலைச் செய்தபிறகும் ஸ்பெஷல் பிரிவின் போலி என்கவுண்டர் நாடகங்களையும், போலி தீவிரவாத கைது நடவடிக்கைகளையும் தடுக்க இதுவரை மத்திய உள்துறை அமைச்சகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

போலீஸ் கமிஷனர் பெயர் ஸ்ரீவத்ஸவா. இவர் யார்? இவரது சாதி என்ன என்பதும் பெயரிலேயே தெரிகிறது. பொய் சொல்லி இஸ்லாத்தை களங்கப்படுத்த இவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன? பொய் கேசுகளை போட்டு அப்பாவி முஸ்லிம்களை தொல்லை படுத்தாதீர்கள் என்று உயர் நீதி மன்றமே கண்டித்தும் இது போன்ற இந்துத்வா பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட அதிகாரிகளால் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. படிப்பையும், அரசு வேலைகளையும் இந்தியா சுதந்திரம் அடைய முஸ்லிம்களாகிய நாம் உதறித் தள்ளினோம். அதன் பலனை இன்று வரை அனுபவித்து வருகிறோம்.

--------------------------------------------------------

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில் இந்து ஐயங்கார்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் செய்திருந்த அறிவிப்புக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் காலியாக இருக்கும் காவலாளி தொடங்கி உற்சவ மூர்த்தியை சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் வரையிலான ஏழு வகையான வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
தொடர்புடைய விடயங்கள்

மனித உரிமை

அதில், பிரதான ஆலய ஸ்ரீபாதம், உப கோயில் ஸ்ரீபாதம், சன்னதி வாசல், உப கோயில் பரிசாரகர் ஆகிய நான்கு வகையான பணிகளுக்கு இந்து பிராமண ஐயங்கார் ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆலயம் சார்பில் செய்யப்பட்ட இந்த அறிவிப்பு, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், அதை ரத்து செய்யக் கோரியும் “அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம்” சார்பில் அதன் தலைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களின் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர மற்ற ஜாதியினர் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக சிவாச்சாரியார்களுக்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்”, என்று தெரிவித்திருந்தார்.

“ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு வகையான பணியிடங்கள் எவையும் கோவிலின் கருவறைக்குள் செல்லும் பணிகள் அல்ல. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண ஐயங்கார் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசின் மற்றும் ஒரு துறைதான். இந்த வேலைகளுக்கு இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து ஐயங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ரெங்கநாதனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த அன்று, வழக்கறிஞர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலும், மனுவை படித்துப்பார்த்து அதில் இருக்கும் நியாயத்தை பார்த்த மாத்திரத்தில் கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

தகவல் பிபிசி

Saturday, March 23, 2013

அல்காய்தா இயக்கத்தில் அமெரிக்கர்கள்!

"அல்கைதாவும், அமெரிக்காவும் எதிரிகள்" என்று நம்பும் அப்பாவியா நீங்கள்? அமெரிக்க இராணுவத்தின், இரகசியமான துணைப்படை தான் அல்கைதா என்பது, ஏற்கனவே பல தடவைகள் நிரூபிக்கப் பட்ட விடயம். இங்கேயுள்ள படத்தில் இருப்பவர், ஒரு முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர். இப்போது, சிரியா அரசுக்கு எதிராக போராடும் Al Nusrah என்ற அல்கைதாவின் கிளை அமைப்பொன்றில் சேர்ந்து போராடி வருகின்றார். Eric Harroun என்ற 30 வயது இளைஞர், முஸ்லிமாக மதம் மாறி, சிரியாவின் "விடுதலைப் போராட்டத்தில்" பங்கெடுத்து வருகிறார். சிரிய தீவிரவாதக் குழுக்கள் மத்தியில், "அமெரிக்கன்" என்று செல்லமாக அழைக்கப் பட்டவர். ஆனால், இவர் மட்டுமே ஒரேயொரு அமெரிக்கர் அல்ல. இன்று வரையில், எத்தனை அமெரிக்கர்கள் சிரிய அல்கைதாவில் சேர்ந்து போரிடுகிறார்கள் என்ற விபரம் யாருக்கும் தெரியாது. ஆனால், Eric Harroun சிரியாவிலும், அமெரிக்காவிலும் பிரபலமாக அறியப்பட்ட ஒருவர். அதற்கு காரணம், சிரிய படைகளுக்கு எதிரான பல தாக்குதல்களில் பங்குபற்றியிருக்கிறார். சிரிய இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதைக் காட்டும் வீடியோ ஒன்றில், இவர் தலையைக் காட்டுகிறார். அதைத் தவிர, இன்னொரு வீடியோவில், சிரிய அதிபர் ஆசாத்திற்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் விடுக்கின்றார்.சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில், சில தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாகவும், எரிக் ஹரூனும் அவர்களில் ஒருவர் என்று சிரிய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தான் இன்னும் சாகவில்லை என்று, Eric Harroun பேஸ்புக் மூலம் அறிவித்துள்ளார். மேலும், தான் Al Nusrah வில் சேரவில்லை என்றும், (மதச்சார்பற்ற) FSA வில் சேர்ந்திருப்பதாக அறிவித்துள்ளார். ஆயினும், சுதந்திர சிரிய இராணுவம் என்ற FSA, முழுக்க முழுக்க முன்னாள் சிரிய படையினரையும், சிரிய பிரஜைகளையும் கொண்ட படை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த அமெரிக்கர் போன்ற வெளிநாட்டு போராளிகள், பொதுவாக அல்கைதாவின் கிளை அமைப்பான Al Nusrah போன்ற இயக்கங்களில் சேர்வது ஊரறிந்த இரகசியம் ஆகும். அமெரிக்காவுக்கும், அல்கைதாவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறதென்பது இன்றைக்கும் பலருக்குத் தெரியாது. அதனால், ஏதாவது பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

சிரியாவில் போரிட்ட இன்னொரு அமெரிக்கர் பெயரும் ஊடகங்களில் அடிபட்டது. Matthew VanDyke என்ற பெயரை உடைய அந்த அமெரிக்கர், தான் ஒரு "ஊடகவியலாளர்" என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தார். இவர் முன்பு லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போரிட்டவர். அங்கே வேலை முடிந்தவுடன் சிரியா வந்து விட்டார். இவரது புகைப்படமும், சிரிய அரச ஊடகங்களில் பிரசுரிக்கப் பட்டதால் தான், வெளியுலகம் இவரைப் பற்றி அறிந்து கொண்டது. இவர்களைப் போல இன்னும் எத்தனை அமெரிக்கர்கள், அல்கைதா தீவிரவாதிகள் என்ற பெயரில் உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ? அந்த ஒபாமாவுக்கே வெளிச்சம்!

- US Army veteran fighting with al Qaeda http://www.longwarjournal.org/videos/2013/03/us_army_veteran_fighting_with.php

- Message from U.S. Mujahid in Syria to Bashar al-Assad Message from U.S. Mujahid in Syria to Bashar al-Assad and his militia (shabeha)

சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆயுதபாணி இயக்கங்கள், அல்கைதா போன்ற தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் என்பது தெரிந்ததே. அந்த இயக்கங்களுக்கு, அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அயல்நாடான ஜோர்டானில் வைத்து, அல்கைதா போன்ற இயக்கங்களுக்கு, அமெரிக்க படைகள் இராணுவப் பயிற்சி அளிக்கின்றன. சிரியாவில் அரசுக்கு எதிராக போரிடும் இயக்கங்களில், வெளிநாட்டு போராளிகள் பெருமளவில் போரிடுவதாக சிரிய அரசு குற்றஞ்சாட்டி வந்தது. குறிப்பாக, லிபியா, ஈராக், எகிப்தை சேர்ந்த தொண்டர் அணிகள், சிரியாவில் போரிட்டு வருகின்றன. இந்த செய்திகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்தவை தான். ஆனால், அதனை மேற்குலக நாடுகள் மறுத்து வந்தன. தற்போது, மேற்குலக நாடுகளை சேர்ந்த இளைஞர்களும் சிரியாவில் போரிடுவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.பிரிட்டனை சேர்ந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், தற்போது சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதே நேரம், ரஷ்யாவில் இருந்தும் பெருமளவு செச்னிய இளைஞர்கள் சிரியாவுக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் எல்லாம், ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நடந்ததை நினைவுபடுத்துகின்றன. எண்பதுகளில், சோவியத் படைகளினால் பாதுகாக்கப்பட்ட ஆப்கான் சோஷலிச அரசுக்கு எதிராக முஜாஹிதீன் இயக்கங்கள் போராடி வந்தன. அன்றும், அமெரிக்காவும், பிரிட்டனும் அந்த இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சியளித்து வந்தன. அன்றும், பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து தொண்டர் அணிகள், ஆப்கானிஸ்தானில் போரிட்டன. ஆப்கான் போர் முடிந்ததும், வெளிநாட்டு போராளிகள் தமது தாயகங்களுக்கு திரும்பி வந்து, தமது அரசுகளுக்கு எதிரான ஜிகாத் போராட்டங்களை நடத்தினார்கள். இவை எல்லாம் வரலாறு.

இன்று வரலாறு திரும்புகின்றது. அமெரிக்கா அன்று ஆப்கானிஸ்தானில் விட்ட அதே தவறை, இன்று சிரியாவில் விடுகின்றது. இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், சிரியா எல்லையில் இஸ்ரேல் இருக்கின்றது. நாளை, சிரியாவில் ஆசாத் அரசு கவிழ்ந்த பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போகும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், இஸ்ரேலுக்கு எதிராக தமது ஆயுதங்களை திருப்ப மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? ஒருவேளை, சிரியாவை சேர்ந்த போராளிகள் தயங்கினாலும், வெளிநாட்டு ஜிகாதிகள் இஸ்ரேலுக்கு எதிரான போரை நடத்தப் போகின்றார்கள். இஸ்ரேலிய இராணுவத்திற்கு அது தெரியாமல் இல்லை. ஆசாத் அரசு, இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்களை பாவித்தால், சிரியா மீது படையெடுப்பதற்கு இஸ்ரேல் தயாராக இருக்கின்றது. வெகு விரைவில், மூன்றாம் உலகப்போரை எதிர்பாருங்கள்.

"அமெரிக்கா மறைமுகமாக தாலிபானுக்கு உதவி வருகின்றது. காபுல் நகரில் நடந்த குண்டுவெடிப்புகள் கூட அமெரிக்கர்களின் வேலை தான். தாலிபானும், அமெரிக்காவும் ஒன்று சேர்ந்து சதி நாடகம் ஆடுகின்றன!" இதைக் கூறியது யார் தெரியுமா? நம்பினால் நம்புங்கள்! இன்றைய ஆப்கான் அதிபர் கர்சாயின் கூற்றுக்கள் இவை. 2014 ம் ஆண்டுக்குப் பின்னரும், அமெரிக்கப் படைகளை நிறுத்தி வைக்கும் நோக்குடன், இந்த சதித்திட்டம் நிறைவேறுவதாக கர்சாய் குற்றஞ் சாட்டுகின்றார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் Chuck Hagel ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள தருணத்திலேயே, இந்த விமர்சனங்கள் வந்துள்ளன. ஊடகளுக்கான இருதரப்பு கூட்டறிக்கை, "பாதுகாப்பு காரணங்களுக்காக" வெளியிடப் படவில்லை. அண்மைக் காலமாக, கர்சாய்க்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருகின்றது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப் பட்டிருப்பதால் போர் தொடர்ந்து நடப்பதாக விமர்சித்து வருகின்றார். அமெரிக்க/நேட்டோ படைகளின் பொது மக்கள் மீதான தாக்குதல்களையும் கண்டிக்கத் தவறுவதில்லை. எல்லோருக்கும் பட்ட பிறகு தான் ஞானம் பிறக்கிறது.

நன்றி: கலையரசன்

Thursday, March 21, 2013

தனி ஈழமும் தற்போதய அனுமார் சிலைகளும்!

தற்போது இலங்கையில் இந்துக்களை தாக்கியது போக இஸ்லாமியரின் பக்கம் பவுத்த ரவுடிகளின் பார்வை திரும்பியுள்ளது. தற்போது இந்த வேலையை ஆரம்பித்து வைக்க நமது நாட்டு இந்துத்வா வாதிகளின் ஆசியும் ஆதரவும் உள்ளதை பல நிகழ்வுகள் நமக்கு மெய்ப்பிக்கின்றன.

"இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் வாரிசுகள்." - அத்வானி

அத்வானிக்கு சிங்களவர்களின் மேல் எத்தகைய பாசத்தைக் கொண்டுள்ளார் என்பது அவரது அறிக்கையிலேயே தெரிகிறது. இந்துத்வா வாதிகள் என்னதான் வேஷம் போட்டாலும் அவர்கள் நலன் அனைத்தும் மேல் தட்டு மக்களை காப்பாற்றுவதாகத்தான் இருக்கும். சூத்திரர்களைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்பதுதான் இது போன்ற அறிக்கைகள் நமக்கு உண்மையை அப்பட்டமாக உணர்த்துகின்றன.வட இலங்கையில், புத்தர் சிலைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, அனுமார் சிலைகள் கட்டப் படுகின்றன. அதற்கு `விஷ்வ ஹிந்து பரிஷத்´ போன்ற இந்துத்துவா வாதிகள் நிதியளித்து வருகின்றனர். இந்து என்று அழைத்துக் கொள்ளும் தமிழர்களே, இந்துத்துவா வாதிகள் தமிழரின் எதிரிகள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

(படத்தில் உள்ள அனுமார் சிலை, அண்மையில் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்ட யாழ்ப்பாணத்தில், இணுவில் என்ற ஊரில் கட்டப்பட்டது.)

தகவல் உதவி- கலையரசன்.

-------------------------------------------------------------புத்த வெறியா்களிடமிருந்து இலங்கை முஸ்லீம்களை பா... by pjtamilnadu

தனி ஈழம் சாத்தியமா ?

(திமுக மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கு முன் இந்த பதில் உணர்வு பத்திரிக்கையில் வெளியானது என்பதைக் கவனத்தில் கொள்க)

இலங்கைப் பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்கள் எதிர்பார்க்கும் பலன் ஏற்படுமா ?

மசூது, கடையநல்லூர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களின் முதல் கோரிக்கையாக தனிஈழம் என்பதை முன்வைக்கின்றனர். அதாவது இலங்கையின் வடக்கு மாகாணத்தை இலங்கையிலிருந்து பிரித்து அதைத் தமிழர்களின் தனிநாடாக ஆக்கவேண்டும் என்பது முதல்கோரிக்கை.

அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.

இதில் முதலாவது கோரிக்கை எள்முனையளவும் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. எந்தநாடும் தனது நிலப்பரப்பைப் பிரித்து இன்னொரு நாட்டை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ள ஒப்புக் கொள்ளாது.

தனிநாடு கோருவோரின் கடுமையான பதிலடி காரணமாக, ராணுவமும் காவல்துறையும் சோர்வடைந்து இனிமேல் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்ற அளவுக்கு பலவீனம் அடையும்போது மட்டுமே வேறுவழி இல்லாமல் தொலைந்து போகட்டும் என இதற்கு ஒப்புக் கொள்வார்கள்.

அல்லது உலகநாடுகள் அனைத்தும் அல்லது வல்லரசுநாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடும்விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கும் அளவுக்கு ஒருநாடு தனிமைப்படுத்தப்பட்டால் அப்போது வேறுவழியில்லாமலும், எஞ்சிய பகுதியையாவது தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தனிநாடு கோரிக்கையை அந்தநாடு ஏற்றுக்கொள்ளும்.

இலங்கையில் பிரபாகரன் உயிருடன் இருந்து இலங்கை அரசுக்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுத்துவந்த போதும், வடக்குப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இலங்கை ராணுவம் நுழையவிடாமல் தடுத்துக்கொண்டு இருந்தபோதும், வடக்குப் பகுதியைக் கடந்து கொழும்பு நகருக்குள் ஊடுருவி இலங்கைத் தலைவர்கள் மற்றும் இராணுவத் தளங்களைத் தாக்கிய போதும், வேறுநாடாக இருந்தால் தொலைந்து போகட்டும் என்று தனிநாடாக ஆக்கி இருப்பார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகளின் கடுமையான அனைத்து தாக்குதல்களுக்குப் பின்னரும், இலங்கையானது தனிநாடு கோரிக்கையை ஏற்கமறுத்து விட்டது. சில ராணுவவீரர்கள் ராணுவத்தைவிட்டு ஓட்டம்பிடிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தும், அந்தநாடு தனிநாடு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இன்று அங்கு விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளனர். சரணடைந்த புலிகள்கூட பெரும்பாலும் கொன்று குவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் குடும்பத்தில் இருந்த பெண்களும் சிறுவர்களும்கூட அழிக்கப்பட்டுவிட்டனர். தனிநாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஒருவர் கூட இல்லாத அளவுக்கு துடைத்து எறியப்பட்ட பின்னர், தமிழகத்தில் உண்ணாவிரதம் இருப்பது இலங்கை அரசால் கோமாளித்தனமாகத்தான் பார்க்கப்படும். வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை.

விடுதலைப்புலிகளின் கடுமையான போராட்டத்தின்போது இலங்கைக்கு உலகநாடுகள் நெருக்கடி கொடுத்து இருந்தால், தனிஈழம் கிடைத்துவிடும் என்றநிலை ஒருகாலத்தில் இருந்தது. அப்போது இந்தியாவில் இருந்த ஐந்துகோடிக்கும் மேலான தமிழர்கள் மொழிஉணர்வின் காரணமாக ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தனர். அரசியல் கட்சியினர் பெருமளவில் அவர்களுக்கு நிதியுதவி அளித்தனர்.

தமிழக ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகள் தங்கிட இங்கு அடைக்கலம் கொடுத்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுதிரண்டு ஆதரிக்கிறது என்ற நிலைமை காரணமாக, மத்திய அரசும் இலங்கை விவகாரத்தில் தலையிட்டது. அமைதிப்படையை அனுப்பி விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்படாமல் காப்பாற்றியது. இலங்கையின்மீது அத்துமீறிப் பறந்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணவுப்பொட்டலங்கள் போட்டு, இலங்கை அரசுக்கும் கடுமையான எச்சரிக்கையும் விட்டது.

அந்தநிலை நீடித்து இருந்தால், உலகநாடுகளின் ஆதரவுடன் தனிநாடு அமைய இந்திய அரசும் உதவுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் விடுதலைப் புலிகள் தங்களது செயல்களால் நாசமாக்கி விட்டனர்.

இந்தியாவிற்குள்ளேயே தங்களது பயங்கரவாதச் செயல்களை விடுதலைப்புலிகள் அரங்கேற்றினார்கள். முன்னாள் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தியை இந்திய மண்ணில் அதுவும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த தமிழகத்தில் வைத்தே சமாதி கட்டினார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இவர்கள் நடத்திய போர் ஆறாதவடுவாக அதிகாரிகள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் வாய்திறக்க முடியாதநிலை அப்போது தமிழகத்தில் ஏற்பட்டது. ஜெயலலிதா போன்ற சிலதலைவர்கள் விடுதலைப்புலிகளின் செயல்களை துணிவுடன் கண்டித்தனர். விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் ஜெயலலிதாவும் உள்ளார் என்ற உளவுத்துறையின் தகவலால், அவருக்கு இசட்பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மன்னிக்க முடியாத பாதகத்தைச் செய்த புலிகளை ஒழித்துக் கட்ட மத்தியஅரசு முழுவீச்சில் களமிறங்கியது.

ராஜிவ்காந்தியின் மனைவியிடமும், அவரது மகனிடமும் முழுஅதிகாரமும் குவிந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் கணக்கைத் தீர்க்க அவர்கள் நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனவே புலிகளை ஒழித்துக்கட்ட அனைத்து விதமான உதவிகளையும் இலங்கை அரசுக்கு மத்தியஅரசு செய்து கொடுத்ததிலும் ஆச்சரியம் இல்லை.

ஆயுத சப்ளை வழங்கி இந்திய ராணுவத்தின் உதவியுடன் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்தும், தேவையான வியூகங்களை வகுத்துக் கொடுத்தும், புலிகளை முற்றிலுமாக ஒழிக்க எல்லா உதவிகளையும் மத்திய அரசுசெய்து கொடுத்ததால்தான் இலங்கை ராணுவம் புலிகளை வேறோடு அழிக்கமுடிந்தது.

விடுதலைப்புலிகள் தங்களுக்கு பக்கபலமாக இருந்த மாபெரும் நாட்டை தங்களது கொடும் செயலால் எதிரியாக ஆக்கிக் கொண்டு இருக்கா விட்டால், தனிஈழம் இன்னேரம் அமைந்திருக்கலாம்.

அல்லது அதிகாரப் பகிர்வுடன் கூடிய தனிமாகாணம் இந்துத் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். அதைக் கெடுத்து விடுதலைப்புலிகள் நாசமாக்கிக் கொண்டனர்.

மதத்தால் வேறுபட்டாலும், மொழியால் ஒன்றுபட்ட தமிழ்கூறும் முஸ்லிம்களைத் தங்களின் முதல்எதிரியாக இவர்கள் ஆக்கிக் கொண்டதாலும், முஸ்லிம்களை வேறோடு கிள்ளி எறிய அவர்கள் செய்த கொடுமைகளாலும், அவர்களின் பலம் குன்றியது. இந்துத்துவாவிற்கு நிகரான விடுதலைப்புலிகளை விட சிங்களபௌத்த வெறியர்கள் பரவாயில்லை என்ற நிலைமை இதனால் ஏற்பட்டது.

இவர்கள் போராளிகள் அல்ல பிறநாடுகளிலும் புகுந்து வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் (வல்லரசு நாடுகள் உட்பட) எல்லா நாடுகளுக்கும் ராஜிவ் கொலையால் ஏற்பட்டது. பலநாடுகளும் இவர்களைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது.

இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிங்களஅரசு அனைத்து நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு புலிகளை முற்றாக ஒழித்தே கட்டிவிட்டது.

புலிகளின் கொடூரமான ஆட்சிமுறையால் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வந்த வடமாகாணத் தமிழர்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். எப்போது என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழ்ந்த நிலை மாறியுள்ளது. எனவே விடுதலைப் புலிகளின் பாதையில் செல்லக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் உறுதியுடன்உள்ளனர்.

இவர்களின் விருப்பத்திற்கு நேர்மாறாகத்தான் இங்குள்ளவர்கள் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி தங்களைத் தாங்களே ஏமாற்றி வருகிறார்கள்.

இங்கே இந்தக் கோரிக்கை வைப்பதால் அங்குள்ள இலங்கைத் தமிழர்கள்மீது அடக்குமுறை அதிகரிக்கத்தான் செய்யும். சிங்களர்களின் கோபம் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பும்பட்சத்தில் ராஜபக்சேஅரசு அதை வேடிக்கை பார்க்குமே தவிர, தமிழர்களைப் பாதுகாக்காது.

திராவிடநாடு கேட்டு அண்ணாதுரை போராடினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றெல்லாம் வாதங்களை எடுத்து வைத்தார். இந்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அதை அடக்கி விட்டது.

திராவிடநாடு கோரிக்கையை நாங்கள் கைவிடுகிறோம், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியேதான் உள்ளன என்று அண்ணா அந்தர்பல்டி அடித்ததை நாம் மறந்துவிட முடியாது. காரணங்கள் இருந்தாலும் அதைக் கேட்டுப்பெற முடியாத அளவிற்கு அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அது கைவிடப்பட்டது. தனிநாடு கோரிக்கைக்கு இதுதான் முடிவாகும்.

ஆந்திராவை இரு மாநிலங்களாகப் பிரிப்பதற்கே பல உயிர்களைப் பலிகொடுத்து போராட வேண்டியிருக்கிறது. இன்னும் தெலுங்கானா உருவானபாடில்லை.

பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாடுகளையும் வெள்ளையர்களே பிரித்துத் தந்துவிட்டு சென்றதால் பாகிஸ்தான் சாத்தியமானது. அவ்வாறு செய்யாமல் அவர்கள் சென்றிருந்தால் இந்த இருநாடுகளும் ஒரே நாடாகத்தான் இன்றுவரை இருந்திருக்கும்.

பங்களாதேஷ் நாடானது முஜிபுர்ரஹ்மானின் அவாமிலீக் கட்சியின் போராட்டங்களாலும், கடும் பதிலடிகளாலும் மட்டுமே உருவானதல்ல. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இந்திய ராணுவத்தை அனுப்பியதால்தான் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷாக மாறியது.

பாலஸ்தீனம் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று சுதந்திரநாடாக ஐநாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அவர்கள் தங்கள் மண்ணுக்கு வெளியே வேறுநாடுகளில் எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்பதும், முழு இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களிடத்திலிருந்து பிடுங்கப்பட்டது என்பதால் ஏற்பட்ட அனுதாபமும் காரணமாகஇருந்தது.

இது போன்ற எந்தச் சாதகமான அம்சமும் இலங்கையில் இல்லாத போது, இங்கிருந்து தனிநாடு கேட்பதற்கு நிகரான அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.

அடுத்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அபத்தமான ஒன்றே. அமெரிக்கா தீர்மான நகலை வெளியிட்டு, அதன் நகலை வாசித்துப் பார்த்துவிட்டு இப்படியான கோரிக்கையை தமிழீழ ஆதரவாளர்களும் மாணவர்களும் வைக்கவில்லை.

மனிதஉரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் முதல்இடத்தில் உள்ள அமெரிக்காவைப் பற்றி இங்குள்ள அரசியல்கட்சித் தலைவர்களுக்கு எந்த அறிவும் இல்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது.

தனது ஆதாயத்திற்காக உலகநாடுகளை மிரட்டுவதும், காரியம் சாதித்துக் கொள்வதும் அமெரிக்கவிற்கு கைவந்த கலையாகும். தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்று பயம்காட்டி புரோக்கர் சுப்பிரமணியசாமி மூலம் அமெரிக்காவுக்குச் சாதகமாகப் பேசவேண்டியதைப் பேசிமுடிக்கத்தான் அமெரிக்கா இந்த நாடகத்தை நடத்தியது.

இலங்கை அரசுடன் அரசியல் புரோக்கர் மூலம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதால், உப்புசப்பு இல்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து தமிழகப் போராளிகள் அனைவர் மீதும் கரியைப்பூசி விட்டது. ராஜபக்சே அரசு தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தத் தீர்மானம் உள்ளது.

ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக்கி அவரைத் தூக்கில் போடப் போகிறோம் என்ற தமிழகத் தலைவர்களின் கனவு முற்றிலும் கலைந்து விட்டது. இப்போது அனைவரும் அந்தர்பல்டி அடித்து, அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியஅரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றுபுரண்டு பேசுகிறார்கள்.

ஒரு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கூறுவதற்கு முன் அந்தத் தீர்மானத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வுகூட இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

அறிவுஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் கூட இந்த அறிவு இல்லாமல் போய்விட்டது.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஒன்றே தனிஈழத்தைப் பெற்றுத்தரும், ராஜபக்சேயைத் தண்டிக்கும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஊடகங்களில் முகம் காட்டியவர்கள் வெட்கமின்றி பல்டி அடிக்கின்றனர்.

எமது கணிப்பு பிரகாரம், தமிழகமே கொந்தளித்தாலும், மத்திய அரசு இலங்கைக்கும் ராஜபக்சேவுக்கும் எதிராக ஒன்றுமே செய்யாது. ராஜிவ்காந்தி படுகொலைக்கு கணக்கு தீர்ப்பதற்காக எந்த விலையையும் காங்கிரஸ் தமிழகத்தில் கொடுக்கும். ராஜபக்சேவுக்கு வலிக்காத வகையில் தடவிக் கொடுக்கும் மத்திய அரசின் நிலையில் எந்தமாற்றமும் இருக்காது.

Wednesday, March 20, 2013

சவுதியின் தபூக் நகரில் மற்றுமோர் மனிதநேயச்சேவை!...

சவுதியின் தபூக் நகரில் மற்றுமோர் மனிதநேயச்சேவை!...
=======================================
இறைவனின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 01/03/2013 அன்று தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டைச் சேர்ந்த சபேஸன் முத்துசாமி என்ற சகோதரர் அவரது [கபில்] முதலாளியால் கடுமையாக தாக்கப்பட்டு, அவரின் ஒரு காதின் செவில் கிழிக்கப்பட்ட நிலையில் கிளை நிர்வாகிகளை அணுகி :- தான் சவுதி – தபூக் வந்த 3 மாதமாக சம்பளம் தறாமல் தனது முதலாளியால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்ணீர் வழிய சொல்லிக்காட்டினார்.சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் இந்திய தூதரக உதவியுடன் உடனடியாக அவரை தபூக் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடந்தவைகளையெல்லாம் எடுத்துக்கூறி, காவலர்களுடைய உதவியுடன் அவரை மருத்துவமணைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளிக்கப்பட்டார்.

மேலும் தபூக் போலிஸ் அவரது [கபில்] முதலாளியை உடனடியாக பிடித்துவந்து சிறையில் அடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்….!!

மேலும் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் தபூக் போலிஸ் உதவியுடன் அவரை தபூக் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்று, நீதிபதியிடம் இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் ஆதாரத்துடன் எடுத்துக்கூறி, நீதிவழங்கும்படி கோரினார்.

அல்லாஹ்வை அஞ்சிய அந்த நீதிபதி அவருக்கு 3 மாதசம்பளம்- 3000. நஷ்டஈடு- 1500, ஏர்டிக்கட்டுக்கு- 1500. ஆகமொத்தம்SR.6000 பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவேண்டுமென அவரது [கபில்] முதலாளிக்கு உத்தரவிட்டார்.

பிறகு சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் அவரது [கபில்] முதலாளியிடமிருந்து 6000 SR, பாஸ்போர்ட், டிக்கட் அனைத்தையும் பெற்று அவரை கடந்த -15/03/2013 அன்று தாயகம் அனுப்பிவைத்தார்.

அனைத்துப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!...
-----------------------------------------------------------------------------------
“அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லீம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?” [உலகப்பொதுமறை – திருக்குர்ஆன்41:33]

தபூக்கில் நான் இரண்டரை வருடம் வேலை செய்துள்ளேன். அந்த நேரத்தில் சகோதரர் அப்துல் அஜீஸோடு சேர்ந்து பல முறை அழைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளேன். மாற்று மத சகோதரர்களை அன்போடு அவர்களின் குறைகளை கவனிப்பதிலாகட்டும், அவர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதிலாகட்டும் அனைத்திலும் எந்த குறையும் இல்லாமல் சகோ அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமையில் ஒரு குழுவே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதை பார்த்துள்ளேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

மேலும் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக அனைத்து மட்டத்திலும் ஏற்றுக் கொண்டவர்கள் மாற்று மதத்தவர்களோடு சகஜமாக பழக மாட்டார்கள் என்ற வாதம் பலரால் வைக்கப்படுகிறது. அந்த வாதம் தவறு என்பதை இது போன்ற நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.

சபேசன் முத்துசாமி என்பவர் மாற்று மதத்தை சேர்ந்த ஒரு சகோதரர். அவரது முதலாளியான சவுதி நாட்டவரோ ஒரு முஸ்லிம். இங்கு முஸ்லிம் தவறாக நடக்கிறார். இந்துவான முத்துசாமி சரியாக நடக்கிறார். முத்துசாமியின் பக்கம் நியாயம் இருக்கிறது. எனவே இங்கு அனைத்து சகோதரர்களும் நியாயத்தின் பக்கம் நின்று இந்த சகோதரருக்கு நீதி கிடைக்க அரும்பாடு பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் அந்நாட்டு பிரஜை ஒருவரை சம்பள பிரச்னைக்காகவும் அடித்ததற்காகவும் சிறையில் அடைக்க வைப்பது என்பது எவ்வளவு பெரிய ஆபத்தான வேலை என்பதை நாம் அறியாதவர்களல்ல. இருந்தும் இஸ்லாம் நீதியின் பக்கம் முஸ்லிம்கள் நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் முன் பின் தெரியாத முத்துசாமிக்காக நமது சகோதரர்கள் களத்தில் இறங்கி இன்று அந்த நபருக்கு நியாயம் கிடைக்க பாடுபட்டுள்ளனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். எல்லா புகழும் இறைவனுக்கே!

இதுதான் இஸ்லாம்.

Tuesday, March 19, 2013

பரதேசி! -திரை விமரிசனம்

பரதேசி!

சினிமாக்கள் அதிகம் பார்ப்பதில்லை. இரண்டரை மணி நேரத்தை செலவிடும் அளவுக்கு அங்கு விஷயம் இருப்பதில்லை என்பதே சினிமாக்களை துறந்ததற்கு காரணம். தற்போது பலரின் விமரிசனங்களை பார்த்ததால் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாலாவின் பரதேசியை பார்த்தேன். மனம் கனத்தது. வெள்ளையர் ஆட்சியில் சொந்த மண்ணின் மைந்தர்கள் எந்த அளவு வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாக கொண்டு செல்லப் பட்டனர் என்பதை மிக அழகாக தனக்கே உரிய பாணியில் பாலா சொல்லியுள்ளார். தேயிலை தோட்டங்களில் எந்த அளவு கொடுமைகள் நடத்தப்படுகிறது என்பதையும் இந்த படத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

சினிமா என்ற வெகுஜன ஊடகத்தை இது போன்ற மறைக்கப்பட்ட செய்திகளை கொண்டு வருவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது போல் நமது தமிழகத்தில் மறைக்கப்பட்ட எத்தனையோ வரலாறுகள் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கின்றன. இது போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றால்தான் இன்னும் அதிகம் வெளி வரும். காதலை மையப்படுத்தி ஆபாசங்களை கடை விரிப்பதே தற்போதய சினிமாவாக மாறி விட்டது. அதனை பாலா, அமீர், பாலசந்தர், பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் மாற்ற முன் வர வேண்டும்.

படத்தில் அந்த மக்களின் துயர் துடைக்க வந்த டாக்டரும் அவரது மனைவியும் அங்கும் தங்களின் மதமாற்ற வேலைகளை ஆரம்பித்து விடுவதை நகைச்சுவையாக சொல்லியுள்ளார் பாலா. சில ஊர்களில் மிஷினரிகளின் பெண்கள் பல வீடுகளுக்குள்ளும் அத்து மீறி நுழைந்து மத பிரசாரத்தை துவக்கி விடுவதைப் பார்க்கிறோம். ஒரு மனிதன் தனது பூர்வீக மதத்தில் வெறுப்புற்று இஸ்லாத்தையோ கிறித்தவத்தையோ பவுத்தத்தையோ பின் பற்ற முனைவதை குறை காண முடியாது. ஆனால் இங்கோ பால்பவுடரைக் காட்டியும், ரொட்டித் துண்டுகளைக் காட்டியும், பணத்தைக் காட்டியும் மத மாற்றம் நடைபெறுகிறது. இப்படி மதம் மாறுபவர்கள் அந்த மதத்தின் மேல் உண்மையான பற்றோடு இருக்க மாட்டார்கள். இதை விட அதிகமாக வேறு எங்கும் கிடைத்தால் அங்கு சென்று விடுவார்கள். மாற்றம் என்பது அவனது மனத்திலிருந்து உதயமாக வேண்டும். இதை ஏனோ கிறித்தவ மிஷினரிகள் உணருவதில்லை. எனவே தான் பெயரளவில் கிறித்தவர்களாக பலரை நாம் பார்க்க முடிகிறது. பெயர் மாத்திரமே மாறியிருக்கும். ஆனால் சாதி வேற்றுமை, தீண்டாமை, உருவ வழிபாடு என்று அனைத்தும் இன்று கிறித்துவத்திலும் பார்க்க முடிகிறதே அதற்கு காரணம் பணத்தை காட்டி மதத்தை வளர்த்ததுதான். இதனால் கிறிததவத்துக்கு என்ன நன்மை விளைந்து விடப் போகிறதோ தெரியவில்லை.

இங்கு சவுதியில் தமிழ் இந்து சகோதரர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸலாத்தை தழுவுவதாக தனது எஜமானி அம்மாவிடம் சொல்லியுள்ளார். இவர் ஒரு வீட்டு டிரைவர். இதைக் கேட்ட அந்த பெண் 'எதை நினைத்து இஸ்லாத்தை தழுவ விரும்புகிறாய்?' என்று கேட்க 'எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொல்லியுள்ளார். அதற்கு அந்த பெண் 'முதலில் குர்ஆனை உனது தாய் மொழியில் படி. நபி மொழிகளையும் உனது தாய் மொழியில் படித்து உண்மையை தெரிந்து கொள். அதன் பிறகு பிடித்திருந்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்' என்று அந்த பெண் சொல்ல அதை என்னிடமும் அந்த நபர் சொல்லிக் கொண்டிருந்தார். 'உனது முதலாளியம்மா சொல்வது தான் சரி. அவர் சொல்வது போலவே முதலில் குர்ஆனை தெளிவாக படிக்கவும்' என்று அறிவுறுத்தினேன். தற்போது மிகத் தெளிவான சிந்தனைக்கு வந்து தனது குடும்பத்தையும் தமிழகம் சென்று இஸ்லாத்தில் ஐக்கியப்படுத்தியுள்ளார். இனி ஒரு பக்கம் நரேந்திர மோடியும் மறு பக்கம் அத்வானியும் நின்று கொண்டு தாய் மதம் திரும்புகிறாயா? இல்லையா? என்று கத்தியைக் காட்டி மிரட்டினாலும் தாய் மதம் அந்த சகோதரர் திரும்பப் போவதில்லை. அந்த அளவு இஸ்லாத்தோடு ஐக்கியமாகி விட்டார். உதாரணத்துக்கு நமது ஏ.ஆர்.ரஹ்மானையும், பெரியார்தாசனையும் கூட எடுத்துக் கொள்ளலாம். மன மாற்றம் என்பது இவ்வாறு வர வேண்டும். வெறும் பணத்துக்காகவும், பெண்ணுக்காகவும், உத்தியோகத்துக்காகவும் எடுக்கும் மதமாற்றம் விழலுக்கு இறைத்த நீராகவே சென்று விடும்.

அடுத்து வாழ்வில் சிரமப்படும் பலர் இறைவன் ஏன் எனக்கு இவ்வளவு சிரமத்தைக் கொடுக்கிறான் என்று புலம்புவதைப் பார்க்கிறோம். அவர்கள் இந்த படத்தின் கதாபாத்திரங்களை மனதில் கொண்டு இவர்களை விட சிறப்பாகவே இறைவன் எங்களை வைத்திருக்கிறான் என்ற நிம்மதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதே போல் சம்பாத்தியத்தை குடியிலேயே அழித்து வரும் பல குடிமகன்கள் ஆடம்பர செலவு செய்து வரும் சுக போகிகள் தங்களுக்கு கிடைத்த சிறந்த வாழ்வை பாழாக்காமல் இது போன்ற படங்களைப் பார்த்து திருந்த முயற்சிக்க வேண்டும்.

பல முதல்வர்களை உருவாக்கியது இந்த சினிமா. அந்த அளவு அதனோடு ஒன்றிணைந்து பல தமிழர்கள் இருப்பதாலேயே சினிமாவைப் பார்ததாவது திருந்துங்கய்யா என்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது. :-(

Monday, March 18, 2013

மரங்களை வெட்டுங்கள்!


உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )


நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் ,


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கின்றன. ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!

அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.


மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

நன்றி: ஆனந்தராஜ் பி.எஸ்.ஸி

Friday, March 15, 2013

ஆணவம் அகங்காரம் பெருமை கொள்ளும் மனிதர்களுக்கு!

ஆணவம் அகங்காரம் பெருமை கொள்ளும் மனிதர்களுக்கு!

இன்றைய உலகில் தனது பணத்தாலும், பதவியாலும், பெற்ற படிப்பாலும், பிறந்த குடும்பத்தாலும் பெருமையடிக்கும் பலரை நாம் நமது அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம். இது பலரையும் பீடித்திருக்கும் ஒரு வியாதி என்றால் மிகையில்லை.

ஒரு ஏழை தனது மகனின் திருமணத்துக்கு வற்புறுத்தி கூப்பிட்டாலும் அதற்கு செல்லாத சிலர் ஒரு பணக்காரன் அளிக்கும் ஆடம்பர மார்க்கம் அனுமதிக்காத விருந்துகளுக்கு வலிந்து செல்வதை பார்க்கிறோம். அதே போல் தனக்கு நண்பனாக வருபவன் பணக்காரனாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் பலரையும் பார்க்கிறோம்.

இவை எல்லாம் உலக மக்களின் சாதாரண எதிர்பார்ப்புகளாக உள்ளது. இவை எல்லாம் தவறு என்பதை ஏனோ நன்கு விபரம் அறிந்த பலரும் உணருவதில்லை. ஆணவம், அகங்காரம், பெருமையடிப்பது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை இனி பார்ப்போம்.

'நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று நபிகள் நாயகம் கேட்டு விட்டு 'பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு
நூல் புகாரி 4918, 6072,6657

'நீங்கள் அனைவரும் பணிவாக நடங்கள். சிலர் சிலர் மீது வரம்பு மீறக் கூடாது. சிலர் சிலரை விட பெருமையடிக்கக் கூடாது.' என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு
நூல்: முஸ்லிம் 5109

'ஒரு மனிதன் ஒரு கவள உணவை உட்கொண்டு இறைவனைப் புகழும் போதும், ஒரு மிடறு தண்ணீரை அருந்தி விட்டு அதற்காக இறைவனைப் புகழும் போதும் இறைவன் அந்த மனிதன் விஷயத்தில் திருப்திப் படுகிறான்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நபித்தோழர் அனஸ்
நூல் முஸ்லிம் 4915


இது போன்று சிறிய விஷயங்களில் கூட நாம் இறைவனை நினைவு கூறுவதால் நமக்குள் மறைந்திருக்கும் ஆணவமும் அகங்காரமும் சிறிது சிறிதாக விலகும்.. இறைவனைப் புகழ்வதால் இறைவனுடைய தகுதி நம்மால் உயர்ந்து விடப் போவதில்லை. இதன் மூலம் நமது தகுதியை இவ்வுலகிலும் மறு உலகிலும் நாமே உயர்த்திக் கொள்கிறோம்.

மிகச் சிறந்த அறிவாளியாக இருப்பான். பல மொழிகள் பல கலைகள் கற்றிருப்பான். ஆனால் சம்பாததியம் என்று பார்த்தால் சொல்லிக் கொள்ளுமபடியாக இருக்காது. அதே நேரம் எழுதப் படிக்க தெரியாத ஒரு கை நாட்டு பேர் வழி தொட்டதெல்லாம் பொன்னாகும். இங்கு அறிவு அவனுக்கு உதவி புரியவில்லை. இறைவன் யாருக்கு எவ்வளவு என்று நாடுகிறானோ அதுவே கிடைக்கும். இதனால் நாம் முயற்சி செய்வதில் எந்த குறையும் வைக்கக் கூடாது. நாமும் முயற்சி செய்ய வேண்டும். அதற்காக எது கிடைத்தாலும் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று திருப்தியுறும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு முன்னேற்றமும் நம்மால் ஆனது அல்ல. இறைவன் நம் மீது கொண்ட கருணையினாலேயே என்ற பரந்த மனப்பான்மைக்கு வந்து விட்டால் ஆணவம், அகங்காரம், பெருமை என்று அனைத்துமே நம்மை விட்டு அகன்று விடும். அத்தகைய நன் மக்களாக என்னையும் உங்களையும் இறைவன் ஆக்கி அருள் புரிவானாக!

Wednesday, March 13, 2013

ராமன் தேடிய சீதை!

எந்த ஒரு நம்பிக்கையும் ஒரு இனத்தவருக்கு தானாக வந்து விடுவதில்லை. அந்த மக்களின் வேதங்கள், வேதங்களை அறிமுகப்படுத்திய இறை தூதர்கள், வேத விற்பன்னர்கள், ஊர் பெரியவர்கள் என்று பலரின் எண்ணங்களை கிரகித்துக் கொள்ளும் மனித சமூகம் காலப்போக்கில் தனது வாழ்விலும் அதனை செயல்படுத்தி விடுகிறது.

இனி விஷயத்துக்கு வருவோம்.

ராமன் தனது மனைவி சீதைக்கு ஏற்பட்ட பழியை துடைக்க தீயில் இறங்க சொன்னார். இது நாம் அனைவரும் அறிந்த கதை. இது நியாயம் தானா என்று தமிழகம் தோறும் பல பட்டி மன்றங்கள் நடந்து விட்டது. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இவர் கடவுளா? அல்லது ஒரு அரசரின் மகனா என்ற சர்ச்சையும் இருந்து வருகிறது. இது ஒரு கற்பனை காவியம் என்று சொல்வோரும் உண்டு. எப்படியோ இருந்து விட்டு போகட்டும். ஆனால் இந்த ராமன் அன்று தனது மனைவிக்கு போட்ட கட்டளை இன்று வரை நமது மக்களின் வாழ்வில் பிண்ணிப் பிணைந்திருப்பதைப் பார்க்கிறோம்.

தினமலரில் வந்த செய்தியைப் பாருங்கள்.....

ரோஹ்தாஸ்:தற்போதைய நவீன யுகத்திலும், தீயில் இறங்கி, நடத்தையை நிரூபிக்கக் கோரும் பழமைவாதிகள், இந்தியாவில் உள்ளனர் என்பதற்குச் சான்றாக, பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பீகார், ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள, அகோரி என்னும் கிராமத்தில், பழமையான, மத பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான, முல்க் லெட்டூர் ரேடியன் என்பவரது மனைவி, தன் கணவரிடம் தகவல் தெரிவிக்காமல், நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் சகோதரியின் கணவரைப் பார்க்கச் சென்றார். இதை அறிந்த, ரேடியனின் உறவினர்கள், சந்தேகம் அடைந்து, அவர் மனைவியைத் துன்புறுத்தினர். இந்தப் பிரச்னை, ஊர் தலைவரிடம் கொண்டு செல்லப்பட்டது.

அவர்களுடைய வழக்கப்படி, தீயில் இறங்கி நடந்து, உயிருடன் வெளியில் வந்தால் தான், அவர் கற்புள்ளவர் என்றும்; நல்ல நடத்தை உள்ளவர் என்றும் நம்பப்படும். அவ்வாறே, ரேடியனின் மனைவியும், தீயில் இறங்கி நடந்து, தன் நடத்தையை நிரூபிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

உடனே, ஒரு மரத்தை வெட்டி, 3 அடிக்கு நீளத்திற்கு, தீ மூட்டப்பட்டது. அந்தத் தீயில், அப்பெண் இறங்கி நடந்து, தன் நடத்தையை, ஊருக்கு நிரூபித்தார். போலீசுக்கு இதுகுறித்து, எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது அந்தப் பெண், தீப்புண்ணுக்கு, மருந்து இட்டுக் கொண்டிருக்கிறார்.

-dinamalar
13-03-2013


இந்த செய்கைக்காக வருத்தப்படும் தினமலர் ராமன் செய்ததை மட்டும் நியாயப்படுத்துவது ஏன் என்று நாம் கேட்கா விட்டாலும் பதிவைப் படிப்பவர்கள் கேட்பார்கள் இல்லையா? முல்க் லெட்டூருக்கு ஒரு நியாயம்: அயோத்தி ராமனுக்கு ஒரு நியாயமா? என்று கேட்க மாட்டார்களா?

நடுநிலைவாதிகள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

-----------------------------------------------------------------


Flash News ...அமெரிக்கா ஆன்லைன் நேரடி ஒளிபரப்பு


ஞாயிற்று கிழமை (17.3.2013) இரவு 9.30 மணிக்கு பி.ஜே அவர்கள் பதில் அளிக்கும் அமெரிக்கா ஆன்லைன் நிகழ்ச்சி (மின்னஸோட்டா மாகாணம்) நமது வெப் டிவி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்

குவைத் ஆன்லைன் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு


வெள்ளிக்கிழமை (15.3.2013) இரவு 8.30 மணிக்கு பி.ஜே அவர்கள் ”அகங்காரமும் அதன் விபரீதங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றும் குவைத் ஆன்லைன் நிகழ்ச்சி நமது வெப்டிவி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!http://www.onlinepj.com/


Sunday, March 10, 2013

"தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி

"தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி[அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட பின்னணியில் அமெரிக்காவினால் பழி சுமத்தப்பட்ட, தாலிபான்களைச் சந்திக்க புறப்பட்ட நங்கை நல்லாள் பிரிட்டன் நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி தாலிபானால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட பின்லேதன்அவர்களைச் சந்திக்க வேண்டும், அவரைப்பற்றி எழுத வேண்டும் அதன் மூலம் பத்திரிகை உலகில் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டவர் தாலிபானின் கையில் சிக்கி, சிறைப்பட்டார்.

தாலிபான் யுவான் ரிட்லியை கொலை செய்துவிடுவார்கள் என்றே முழு உலகமும் எதிர்பார்த்தது. அவர் கொலை செய்யப்பட வேண்டும், அதன் மூலம் தாலிபான்களை காட்டுமிராண்டிகளாகக் காட்ட வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டம். ஆனால் யுவான் ரிட்லி தாலிபான் பிடியில் இருந்து வெளியேறி மேற்கத்தியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தனது அந்த மகத்தான சாதனையை நூலாகவும் வெளியிட்டார். நாடறிந்த எழுத்தாளர் சகோதரர் மு.குலாம் முஹம்மது அவர்கள்"தாலிபான் பிடியில்" எனும் பெயரில் அதனை தமிழ் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

நீங்கள் இங்கு காண்பது அதிலிருந்து சில பகுதிகளே ஆகும். இந்நூலைப்பற்றிய விபரங்கள் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நூலை ''விஸ்வரூபம்'' எனும் பெயரில் ஆஃப்கானிஸ்தானைப்பற்றி தப்பும் தவறுமாக படமெடுத்திருக்கும் கமலஹாஸனுக்கும் அவரது சகாக்களுக்கும் எவரேனும் அனுப்பி வைத்து அவர்களுக்கு உண்மை எது பொய் எது என்பதை அறிவுறுத்தினால் நல்லது. -adm. nidur.info ]

தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி

தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது

ஆஃகானிஸ்தானியப் பெண்கள் புர்கா அணிந்திருக்கிறார்கள். ஆனால் தங்கள் வீரத்தை வெளிக்காட்டிட வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாக அதனை நழுவ விடமாட்டார்கள். அவர்களின் உறுதி, மனத்திடம் இவை என்னை வெகுவாகக் கவர்ந்தன.

குழி விழுந்த விழிகளைப் பெற்ற பெண்ணொருத்தி என்னிடம், ஒரு கேள்வியைக் கேட்டாள். அது மிகவும் நெருடலாக இருந்தது. அந்தக் கேள்வி, "உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்பதே!

நான் எனக்கு ஒரே ஒரு குழந்தைதான் என்றேன். சிரித்தாள் அவள். "உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?" என ஓர் எதிர் வினாவை வீசினேன். இதற்கு அந்தப்பெண்மணி பொட்டில் அறைந்தாற்போல் பதில் சொன்னாள்.

"அமெரிக்கர்களும், பிரிட்டன் நாட்டைச் சார்ந்தவர்களும் ஒரு குழந்தையைப் பெறும் அளவிற்கே பலமுடையவர்கள் ஆனால் எங்களால் 15 குழந்தைகள் வரை பெற்றிட முடியும். உங்களால் மிகக் குறைந்த அளவு ஆண்களையே இராணுவத்திற்கு அனுப்பிட இயலும். எங்களால் பல ஆண்களை போர்வீரர்களாகத் தந்திட இயலும். ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக ஒரு பெரும் படையையே எங்களால் அனுப்பிட இயலும்."

"எங்கள் குழந்தைகள் துப்பாக்கிகளோடு தான் பிறக்கின்றார்கள். துப்பாக்கிகளோடுதான் வளருகின்றார்கள். துப்பாக்கிகளோடுதான் விளையாடுகிறார்கள். அவர்கள் வீர விளையாட்டுகளைப் போர்க்களங்களிலே காட்டுபவர்கள். அங்கேதான் அவர்கள் தங்கள் மரணத்தையும் சந்திக்கின்றார்கள். போரும், பட்டினியும், போராட்டங்களும் எங்கள் வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதிகள். இப்படி என் பிள்ளைகளை அநியாயத்திற்கெதிரான போரிலே தந்துவிட்டு, தேவையானால் நானும் சென்று போராடுவேன்."

இப்படி அந்தப் பெண் பேசி முடித்ததும், அந்தப் பேச்சை ஆமோதிப்பது போல் சிரித்தாள், கிழவி ஒருத்தி தன் பொக்கை வாய் திறந்து. இந்த பொக்கைவாய் சீமாட்டி நூறு வயது நிரம்பியவள். அவள் பல போர்களைச் அச்ந்தித்து இருக்கிறாளாம். இந்தப் பெண்மணி என்னைப்பார்த்து ஏதோ உரக்கச்சொன்னாள். எல்லோரும் சிரித்தார்கள்.

அவள் என்ன சொன்னாள் என எனது 25 வயது தோழியிடம் கேட்டேன். அவள் அதனை மொழிபெயர்த்துச் சொன்னாள்...

அவள் ஆஃப்கானிஸ்தான் பெண்ணாம். அமெரிக்கர்களை எதிர்த்து போராடுவாளாம். ஆஃப்கானிஸ்தான் மக்களை அதுவும் குறிப்பாக பெண்களை யாரும் அடிமைப் படுத்திட இயலாதாம். இந்த மொழிபெயர்ப்பைக் கேட்டவுடன் நான் அந்தப் பெண்ணைப்பார்த்து பொறாமைப்பட்டேன்.

உண்மையில் அவர்களின் எண்ணங்கள் ஏற்றம் மிக்கவை. அவர்கள் காட்டும் வீரம் வைரம் பாய்ந்தது. விவேகம் நிறைந்தது.

இன்றுவரை ஆஃப்கானிஸ்தானிய பெண்களையோ அவர்களின் உணர்வுகளையோ நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.

அதுபோல் புர்காவை வெறுக்கக் கற்றுக்கொண்டுள்ளோம் அல்லாமல் புர்காவினுள்ளிருக்கும் பெண்மையையும் அதன் பொன்னறிய பண்புகளையும் நாம் புரிந்து கொள்ளவில்லை, என்பதையும் உணர்ந்தேன்.

நான் ஆஃப்காணிஸ்தானுக்குள் வருவதற்கு முன் தாலிபான்களைப் பற்றிப் படித்த நூல்கள் என் நினைவுக்கு வந்தன. "புர்காவிற்குள்" என்ற ஆவணப்படதைப் பார்ப்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், தாலிபான்களைப்பற்றிய தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள், தாலிபான்கள் கொடூரமானவர்கள் அவர்களை உடனேயே அழித்தாக வேண்டும் என்ற முடிவுக்கே வருவார்கள். ஷெய்ரா ஷா என்ற பெண்மணிதான் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார்.

"புர்காவுக்குள்" என்பது ஓர் ஆவணப்படம் என்றே உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் அது உண்மைச் சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணப்படமல்ல, மாறாக கற்பனைக்கதை.

ஆனால் அதனைத்தயாரித்தவர் அதை ஓர் ஆவணப்படம் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனால் பார்ப்பவர்கள் அத்தனையும் உண்மை என நம்பினார்கள். அதனால் தாலிபான்களை வெறுத்தார்கள்.

ஆனால் என் கண் முன்னால் நான் பார்க்கும் தாலிபான்கள் முற்றிலும் மாறுபட்டவ்ர்களாக இருந்தார்கள். என்னுள் ஓர் தணியாத ஆசை, இல்லை வேட்கை தலைதூக்கியது. அது தாலிபான்களைப்பறிய உண்மைகளை உலகுக்குச் சொல்லியாக வேண்டும் என்பதே.

அவர்கள் பண்பாளர்கள். அவர்களின் புத்திசாலித்தனம், பெருந்தன்மை இவற்றிற்கு முன் முட்டாளாக சிறுமைப்பட்டு நின்றேன், நான்.

....எத்துனை கள்ளங்கபடமற்ற உள்ளம் தாலிபான்களுக்கு. இந்த தாலிபான்களையா இதயம் இல்லாதவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள், உலக ஊடகங்களில், நொந்து போனேன்.

ஜெலாலாபாத் முதல் காபூல் வரை உள்ள வனப்பகுதி, வனப்பும், செழிப்பும் நிறைந்து கோலாகலமாக என்னை மகிழ்வித்தன. தாலிபான்களின் பூமிதான் எத்தனை ரம்மியமானது. இயற்கையின் எடுப்பும், எழிலும் அங்கே பள்ளிக் கொண்டிருந்தன. இயற்கை தன்னை அலங்கரித்துக் கொண்டு, காண்பவர்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. மலையும், மடுவுமாக எங்கணும் இயற்கையின் கோலங்கள்.

குண்டு போட்டு புகை மண்டலத்தைக் கிளப்பி, நான் பின்லேடனை பிடித்து விடுவேன் என்ற புஷ்ஷின் பம்மாத்து இங்கே பலிக்காது என்பதை அந்த மலைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே நான் உணர்ந்தேன்.

.... நான் கொலை செய்யப்படவெண்டும் என சி.ஐ.ஏ என்ற அமெரிக்க உளவுத்துறை விரும்பியது.தாலிபான்கள் காட்டுமிராண்டிகள் என உலகிலுள்ள எல்லாப் பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் நம்பிட வேண்டும். அதற்காக பத்திரிகை துறையில் கொடிகட்டிப்பறந்த நான் கொலை செய்யப்பட வேண்டும் என அமெரிக்க உளவுத்துறை விரும்பியது. விரும்பியதோடு நின்றுவிடவில்லை. அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது.

...ஆனால் தாலிபான்கள் தங்களது சீரிய முயற்சியால் உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் என்னைப் பற்றிய உண்மையான தகவல்களைத் திரட்டியதோடு மட்டுமல்ல, அமெரிக்க உளவுத்துறையின் தகிடுதத்தங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள்.

சவால்களும், சோதனைகளும் நிறைந்த அவரது ஆஃப்காணிஸ்தான் பயணத்தைப் பற்றி மேலும்தெரிந்துகொள்ள இந்நூலை வாங்கிப்படியுங்கள். அமெரிக்க கைக்கூலிகளின் பொய்களுக்கு பதிலளியுங்கள்.

நூலைப்பற்றிய விபரங்கள் :

"தாலிபான் பிடியில்"

தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது M.Com., M.A.,JMC.

VERGAL PUBLICATIONS

52/1, Mannady Street,

Konica Color Lab Building,

4th Floor, Room: 7

Mannady, Chennai - 600 001.

Website: www.darultrust.in

Tuesday, March 05, 2013

மதுரையில் அத்வானிக்கு குண்டு வைத்தவர்கள் யார்?

திருச்சி:ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒரு மோசடி வழக்கிற்காக திருச்சியை சேர்ந்த குபேரனை விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆம்! கடந்த மாதம் மும்பையிலிருந்து புதுவையை நோக்கி வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட வெடிக்குண்டு தொடர்பு பற்றியும் அதனோடு தொடர்புடைய நபர்களை பற்றியும் அவன் வெளியிட்ட வாக்குமூலம் தான் அது. உடனே இது பற்றிய தகவலை வெடிக்குண்டு வழக்கை விசாரிக்கும் புதுவை மாநில சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தந்தனர். புதுவை போலீசாரும் இதுபற்றிய தீவிர விசாரணையில் இறங்கினர். புதுவையை சேர்ந்த அந்த நபர்களுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) குபேரனை விசாரிக்க திருவண்ணாமலை ஆரணியை அடுத்த மட்டதாரியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் மட்டாசிமங்கலம் துறையூர் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது. இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். விசாரணையில் ரயிலில் வெடிக்குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளான் சிவசங்கர். அவனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அவன் வீட்டிலிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

‘குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும’ விசாரணையில் கூறி இருக்கிறான் இந்த சிவசங்கர். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா? போன்ற விவரங்களை சேகரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.

இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனை விசாரித்தபோது மதுரையில் பா.ஜ.க அத்வானியின் ரதயாத்திரை வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிக்குண்டுடன் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்தும் இதன் பின்ணணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக மதுரை சம்பவத்தை வைத்து பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி திட்டம் வெளிப்பட்ட நிலையில், அதுபோன்ற இந்த சம்பவமும் காவி பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். மேலும் கைது செய்யப்பட்டவரின் முகவரி இல்லாத அமைப்பு என தலைப்புச் செய்தியாக, விவாத பொருளாக தங்களின் முஸ்லிம் விரோத போக்கை தீர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

Source: புதிய பாதை

http://www.deccanherald.com/content/316055/one-more-held-planting-bomb.html

தகவல் அனுப்பித் தந்த சகோ ஆஷிக்குக்கு நன்றி!