Followers

Tuesday, May 31, 2011

கார் ஓட்டிச் சென்ற சவூதி பெண் கைதாகி விடுதலை!


தம்மாம், அல்கோபாரில் சவுதி அராம்கோ கம்பெனியில் வேலை பார்த்து வருபவர் மனால் அல் செரீஃப். வயது 32. தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றி வருகிறார். படித்த பெண் என்பதால் பல நாடுகளுக்கும் சென்றவர் துபாய் லைசென்ஸும் வைத்துள்ளார். இவர் செய்த குற்றம் பொது இடத்தில் காரை ஓட்டிச் சென்றது. சவுதி அரேபிய சட்டப்படி பெண்கள் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். இதை மீறியதால் இவர் சிறையிலடைக்கப்பட்டார்.

பின்னர் மன்னர் அப்துல்லாவுக்கு 'நான் நமது நாட்டு சட்டதிட்டத்தின் படி நடப்பேன்.' என்று கடிதம் எழுதியதாலும், மனால் அல் சரீஃபின் வக்கீல் தனது கட்சிகாரருக்காக வாதாடியதாலும் விடுவிக்கப்பட்டார்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது பெண்களை கொடுமை படுத்துவதாக இந்த செய்தி தோன்றும். பெண்கள் தனிமையில் காரோட்டிச் செல்லும்போது உலகம் முழுவதும் பல தவறுகள் நடைபெறுகிறது. நம் நாட்டிலேயே தனியாக செல்லும் பெண்களை வம்புக்கிழுப்பவர்களை பத்திரிக்கைகளில் தினமும் பார்க்கிறோம். இங்கு சவுதியில் மற்ற நாடுகளைப் போல் விபசார விடுதிகள் கிடையாது. எனவே தனியே காரில் செல்லும் பெண்களை கடத்திச் செல்லும் வாய்ப்பு அதிகம் உண்டு. பெண்ணின் அனுமதி இல்லாமல் கற்பழிப்புகளும் நடக்கும். இதை எல்லாம் அனுசரித்தே அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். சவுதி வீடுகளில் 70 சதவீதமான பேர் வீட்டு டிரைவர்களை வைத்துள்ளனர். இந்திய டிரைவர்களுக்குத்தான் மவுசு அதிகம். பெண்கள் கார் ஓட்ட அனுமதித்து விட்டால் அனைத்து வீட்டு டிரைவர்களும் இந்தியா திரும்ப வேண்டியதுதான். ஏனெனில் அவர்களின் தேவை அப்போது இங்கு அவசியம் இல்லை. இது ஏற்கெனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் திணரும் நமது நாட்டுக்கு மற்றொரு சுமையாக வந்து அமையும். லட்சக் கணக்கில் இங்கு சவுதி வீடுகளில் நமது நாட்டவர் டிரைவராக வேலை பார்க்கின்றனர். அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும்.

சவுதி அரசு பெண்களின் முன்னேற்றத்தில் எந்த தடையும் போடவில்லை. ஆண்களை விட பெண்களே கல்லூரிப் படிப்பை முடிப்பதில் முதலிடத்தில் உள்ளனர். அலுவலக வேலைகள் பார்ப்பதிலும், ஆசிரியை தொழிலை பார்ப்பதிலும் ஆர்வத்துடன் உள்ளனர். உலகிலேயே மிகப் பெரும் பெண்கள் பல்கலைக்கழகமும் சவுதி அரசுதான் உண்டாக்கியுள்ளது. அந்த பெண்களின் பாதுகாப்பும், இஸ்லாமிய சட்டத்துக்கு பாதகம் வராமல் இருப்பதும் இங்கு முக்கியத்துவப் படுத்தப் படுகிறது.

உள்துறை இணை மந்திரி அஹ்மத் 'பெண்கள் கார் ஓட்டுவது 1990 ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் தடை செய்யப்பட்டது. இது தவறா சரியா என்று விவாதிப்பது நமது வேலையல்ல. அரசின் சட்டத்தை நாம் மீறுவது தவறாகும்' என்கிறார்.

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.'

-குர்ஆன் 4:32

தகவல் உதவி: அரப் நியுஸ்

Sunday, May 29, 2011

ஒரு மனிதனின் விலை ஒன்பது லட்சம் இலங்கை ரூபாய்!

இலங்கையைச் சேர்ந்த புஷ்பவல்லி செல்லதுரை என்ற பெண் வீட்டு வேலைக்காக சவுதி வந்துள்ளார். வீட்டில் முதலாளியின் மனைவியோடு வாய்த் தகராறு வந்து அது முற்றி போய் அந்த சவுதி பெண் அடிக்க புஷ்பவல்லி இறந்து விடுகிறார். இந்த வழக்கு கோர்ட்டுக்கு சென்றது. சவுதி பெண் புஷ்பவல்லி குடும்பத்துக்கு 40000 ரியால் (சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் இலங்கை மதிப்பு) கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது. ஒரு மனிதன் மற்றொரு நபரை கொலை செய்து விட்டால் கொலையுண்ட நபரின் வருமானம் குடும்ப சூழலை கணக்கிட்டு 'இரத்த பணம்'(பிளட் மணி) கொலை செய்த நபரிடமிருந்து வசூலிக்கப்படும். கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள் மன்னித்து விட்டால் கொலை செய்தவர் தண்டனையிலிருந்தும், இரத்தப் பணம் தருவதிலிருந்தும் விலக்களிக்கப் படுவார்.

இறந்தவரின் சகோதரி சரோஜா 'என் தங்கைக்கு நேர்ந்த கதி வேறு எந்த பெண்ணுக்கும் நேர வேண்டாம். இந்த பணம் அவரது குடும்பத்துக்கு ஓரளவு உதவியாக இருக்கும். அவரது இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்' என்கிறார்.

வீட்டு வேலைக்கு வரும் பெண்களில் பலர் வறுமை காரணமாக சில தவறுகளையும் செய்து விடுகின்றனர். ஒரு வீட்டில் தொடர்ந்து நகை காணாமல் போய் வந்தது. வீட்டு வேலை செய்யும் பங்காளி பெண்ணின் அறையை சோதனையிட்டபோது அனைத்து நகைகளையும் மறைத்து வைத்தது தெரிய வந்தது. அந்த பெண்ணும் அதை ஒத்துக் கொண்டார். போலீஸில் புகார் செய்யாமல் வீட்டினர் கண்டித்து விட்டு விட்டனர்.

இன்னும் சில பெண்கள் மொழி, கலாசாரம், மதம் அனைத்தும் வேறுபட்ட சூழலில் சவுதி வருபவர்கள் மன உளைச்சலுக்கு ஏற்பட்டு வீட்டு பெண்களோடு தகராறு செய்வது. சில நேரம் தற்கொலைக்கு முயற்ச்சிப்பது போன்றவையும் நடக்கிறது.

இன்னும் சில வீடுகளில் ஆண்களால் பாலியல் வக்கிரத்துக்கு வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். சில வீடுகளில் காலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணிவரை தொடர்ந்த வேலையும் இருக்கும். எனவே சவுதி வரும் சகோதரிகள் தங்களின் ஆண் சொந்தங்கள் குறிப்பிட்ட வீட்டில் டிரைவராகவோ வேறு வேலையிலோ இருந்தால் மட்டும் வீட்டு வேலைக்கு வரவும். உங்களுக்கு ஏதும் பிரச்னை என்றால் அவர்கள் மூலமாக போலீஸீக்கோ, கோர்ட்டுக்கோ போக ஏதுவாக இருக்கும். அப்படி ஒரு ஏற்பாடு இல்லாத பட்சத்தில் சொந்த நாட்டிலேயே ஏதாவது வேலை செய்து வருமானத்தைப் பார்க்க வேண்டும். இவர்களைப் போன்ற வறியவர்களுக்கு அரசு உதவிகளையும் செய்து வறுமையை நீக்க ஒத்துழைக்க வேண்டும்.

இன்னொரு வழக்கில் அபஹா என்ற ஊரில் தனது கணவனை கொலை செய்த மனைவிக்கும் தண்டனை அளிக்கப்பட்டது. இரத்த பணமாக 110000 (29300 டாலர்) இறந்தவரின் குடும்பத்துக்கு கொடுக்கப்பட்டது. இறந்தது சவுதி என்பதால் அவரது வருமானத்தை கணக்கிட்டு இந்த தொகையை நிர்ணயம் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

'இறைவன் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்லமாட்டார்கள். விபசாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையை சந்திப்பான்'

-குர்ஆன்: 25:68

18. 'அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகி விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்' இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள்.
Volume :1 Book :2

3475. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(
மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். 'அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், 'அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?' என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்" என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), 'உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்" என்று கூறினார்கள்.
Volume :4 Book :60

3893. உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், விபச்சாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக் கொள்ள மாட்டோம்; (இறைவனிடமே ஒப்படைத்து விடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்தால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்றும் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.
Volume :4 Book :63

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

-குர்ஆன் 5:32

தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.

- குர்ஆன் 4:92

அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!

- குர்ஆன் 5:45

Friday, May 27, 2011

ரேட்கோ மியாடிக் செர்பியாவின் நரேந்திர மோடி!


ரேட்கோ மியாடிக் செர்பியாவின் நரேந்திர மோடி!

பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரேட்கோ மியாடிக் தற்போது பிடிபட்டுள்ளான். 1995 ஆம் வாக்கில் நடந்த போஸ்னிய செர்பிய போரில் 7500க்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று அவர்கள் இருந்த இடம் தெரியாமல் அழித்தவன்தான் ரேட்கோ மியாடிக்.

போரில் முஸ்லிம்களின் நிலங்களை எரித்தும் முஸ்லிம்களை கூட்டமாக கொலை செய்வதிலும் செர்பிய ராணுவத்தினர் ஈடுபட்டனர்.நிராயுதபாணியாக இருந்த மக்கள் மீது அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தினர். இதற்க்கெல்லாம் தலைமை தாங்கினவன்தான் இந்த ரேட்கோ மியாடிக்.

அங்கு நடைபெற்ற கொடூரங்களை ஜெர்மனியின் கிறித்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷஃபீர்கஸ் பின் வருமாறு கூறுகிறார்:

'மூன்று மாதங்கள் ஆன ஒரு குழந்தையின் மூக்கு மற்றும் காதுகள் வெட்டப்பட்டு இருப்பதை நான் கண்டேன்.

வயிறுகள் கிழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களை நான் கண்டேன். அந்த சிசுக்கள் அனைத்தும் சின்னாபின்னப் படுத்தப்பட்டன. தொண்டைகள் கிழித்துக் கொல்லப்பட்ட இளவயது மற்றும் வயதான ஆண்களையும் கண்டேன். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். உலகின் எப்பகுதியிலும் திரைப்படங்களில் கூட இத்தகைய காட்சிகளை நான் கண்டது கிடையாது. நான் கண்ட காட்சிகளை என்னால் எப்போதும் மறக்க முடியாது'

பாவம்... இந்த பத்திரிக்கையாளர் சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் காவிப் போர்வையில் காலிகள் நடத்திய நர வேட்டையை பார்த்திருந்தால் மயங்கியே விழுந்திருப்பார்.

இந்த கொடியவனின மகன் டார்கோ 'என் தந்தை பாரிச வாயு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்கம் கை கால்களை இயக்க முடியாத நிலையில் இருக்கிறார். எனவே அவரை சிறையில் அடைப்பதை தவிர்க்க வேண்டும்' என்ற கொரிக்கையை வைத்துள்ளார். இந்த கொடியவனின் மற்றொரு மகளான அனாவும் தற்கொலை செய்து கொண்டு 1994 ஆம் ஆண்டு இறந்து விட்டார். புதையுண்ட 7000 முஸ்லிம்களின் குடும்பத்தவரின் பிரார்த்தனை வீண் போகாதல்லவா!

இவனை பிடித்துக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் டாலர் பரிசு பணமாக முன்பு அறிவித்திருந்தனர். தற்போது இவன் பிடிபட்டு விட்டதால் அந்த பரிசு பணம் யாருக்க சேரும் என்றும் தெரியவில்லை.

இதே போன்ற குற்றங்களை செய்த நரேந்திர மோடியும் நம்முன் நல்லவராக உலா வந்து கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட குஜராத் முஸ்லிம்களின் பிரார்த்தனை நரேந்திர மோடியை நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தும். ரேட்கோ மியாடிக் சட்டத்தின் பிடியில் சிக்க 15 வருடமானது. நரேந்திர மோடிக்கு இதை விட அதிக நாள் ஆனாலும் ஒரு நாள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்.

"அரசன் அன்று கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்."

'முஸ்லிம்களான உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை இறைவன் முழுமையாக அறிபவன்.'

-குர்ஆன் 3:120

Thursday, May 26, 2011

புணரமைக்கப்படும் எகிப்தின் எரிந்த சர்ச்சுகள்!
சில நாட்களுக்கு முன்பு எகிப்தில் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் கலவரம் நடந்ததை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். என்னோடு பணியிலிருக்கும் எகிப்தியரிடம் 'சர்ச்களை முஸ்லிம்கள் எரிப்பது தவறல்லவா? இது இஸ்லாத்துக்கு எதிரல்லவா?' என்று கேட்டேன். உடன் அவர் 'முஸ்லிம்களும் கிறித்தவர்களும் பல காலமாக சகோதரர்களாக பழகி வருகின்றனர். இந்த காரியங்களை செய்வது மொசாத்தும், சி.ஐ.ஏ யும். ஏனெனில் எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்தால் இஸ்ரேல் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். ஹமாஸூக்கு உதவி எகிப்திலிருந்து தாராளமாக கிடைக்கும். ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்த போது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் அனுசரணையாக நடந்து கொண்டார். அது போன்ற ஆட்சியைத்தான் இஸ்ரேலும் விரும்புகிறது. இஸ்லாமிய ஆட்சி வந்தால் கிறித்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்ற செய்தியை இஸ்ரேல் இதன் மூலம் உலகுக்கு தெரிவிக்க முனைகிறது' என்றார்.

'இதற்கு என்ன ஆதாரம்?' என்றேன். 'தங்கள் மேல் சந்தேகம் வராத அளவுக்கு காரியங்களை கச்சிதமாக முடிப்பவர்கள் இஸ்ரேலியர்கள். அங்குள்ள சகோதர கிறித்தவர்களுக்கும் இது தெரியும். மொசாத்தின் உளவாளிகளாக எங்கள் நாட்டவர்களே பலர் செயல்படுகின்றனர்' என்றார். யூத மூளை எதையும் செய்யத் துணியும் என்று நினைத்துக் கொண்டேன்.

எரிக்கப்பட்ட சில சர்ச்சுகள் தற்போது ஆளும் அரசால் புணரமைக்கப் படுகிறது என்ற செய்தியை இன்றைய அரப் நியூஸில் பார்த்தேன். சர்ச்சை புதிதாக புணரமைப்பதில் அதிகம் ஆர்வத்துடன் முஸ்லிம்களே கலந்து கொண்டனர். செயின்ட் மேரீஸ் சர்ச் ஒரு இஸ்லாமியரால் சரி செய்யப்படுவதைத்தான் மேலே பார்க்கிறீர்கள். 'தி அரப் காண்ட்ராக்டர்ஸ்' என்ற மிகப் பெரும் நிறுவனம் முஸ்லிம்களைக் கொண்டே சர்ச்சை சரி செய்யும் வேலையில் இறங்கியுள்ளது.

தற்போது சர்ச்சில் வேலை செய்து வரும் அப்துல் அஜீஸ் என்ற நபர் கூறும் போது 'சர்ச்சை சிலர் எரித்தார்கள் என்ற செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. சர்ச்சை எரித்தது காட்டுமிராண்டித் தனம்' என்கிறார். ஆளும் ராணுவ அரசு சர்ச்சை எரித்தவர்களில் பலரை கைது செய்துள்ளது. அவர்களிடம் தற்போது விசாரணையும் நடந்து வருகிறது.

தற்போதய ராணுவ அரசு சர்ச்சை புதுப் பொலிவுடன் கொண்டு வர ஒரு மில்லியன் டாலரை செலவிடுகிறது. இது போன்ற செய்கை அங்குள்ள கிறித்தவர்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நான்கு மாடிகளைக் கொண்ட செயின்ட் மேரிஸ் சர்ச் புகழ் வாய்ந்த ஒன்றாகும். எகிப்தின் மக்கள் தொகையில் 10 சதவீதம் கிறித்தவர்கள் உள்ளனர்.

-தகவல் உதவி: அரப் நியூஸ்

896. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள் மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப் பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களுக்கு அதற்கு மறுநாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

3443. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன். இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலராவர். அவர்களின் மார்க்கம் ஒன்றே.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதே நபிமொழி அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வேறொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Volume :4 Book :60

3446. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அளித்து அவளை (தானே) மணமும் முடித்தார் எனில் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும். ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என்னை நம்பினால் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும், ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானார்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பானாயின் அவனுக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :60

7542. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' வேதக்காரர்கள் (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) கூறுங்கள்: அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் யஅகூபின் சந்ததியினருக்கும் அருளப்பட்டதையும் மற்றும் மூஸாவுக்கும், ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவருக்கம், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். (திருக்குர்ஆன் 02:136)182
Volume :7 Book :97

3700. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.

மேலும், கிராமப்புற அரபுகளுக்கும் நன்மையே புரியும்படியும் அவருக்கு நான் உபசேதம் செய்கிறேன். ஏனெனில்,அவர்களே பூர்விக அரபிகளும், இஸ்லாத்தின் அடிப்படையும் ஆவார்கள். அவர்களின் செல்வத்தில் மலிவானவை மட்டுமே எடுக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதரின் பொறுப்பிலும் இருப்பவர்க(ளான முஸ்லிமல்லாதவர்க)ளுக்கு அளிக்கப்படட் உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் (அவர்களின் எதிரிகள் அவர்களைத் தாக்க வரும் போது) அவர்களுக்குப் பின்னாலிருந்து அவர்களுக்காகப் போர் புரிய வேண்டுமெனவும், (காப்பு வரி விதிக்கும் போது) அவர்களின் சக்திக்கேற்பவே தவிர அவர்கள் சிரமத்திற்குள்ளாக்கப்படக் கூடாது என்றும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன்' என்று உமர்(ரலி) கூறினார்….

Volume :4 Book :62

இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
-5:116

Tuesday, May 24, 2011

பன்றி படங்களை சீனாவுக்கே திருப்பி அனுப்பு!


எங்கள் கம்பெனி பெரும்பாலான பொருட்களை சைனாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது. வழக்கமாக மரம் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும் பல கண்டெய்னர்கள் வருவது வழக்கம். இந்த முறை எனது பாஸ் கம்யூட்டர் சாதனங்களும், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் இரண்டு கண்டெய்னர்கள் ஆர்டர் செய்து விட்டு வந்தார். கண்டெய்னரும் வந்தது.

சைனாவிலிருந்து வரக் கூடிய அனைத்து பொருட்களின் விலையை எடுத்து டாலருக்கு மாற்றி பிறகு ரியாலுக்கு மாற்ற வேண்டும். அதிலும் கண்டெய்னர் வாடகை, சைனா சென்ற செலவு, கம்பெனியின் லாபம் 30 சதவீதம் எல்லாம் போட்டு மார்க்கெட் ரேட்டை நிர்ணயிப்பதே எனது வேலை. வழக்கப்படி இந்த வேலைகளை கணிணியில் ஏற்ற நானும் ஓனரும் மாடல்களை பார்வையிட்டோம். சிறுவர்கள் விளங்கிக் கொள்ள படம் பார்த்து கதை சொல்லும் ஒரு போர்டும் அதில் இருந்தது. குதிரை, மாடு, ஆடு, கோழி படங்களுக்கு நடுவே ஒரு பன்றியின் படமும் அதில் இடம் பெற்றிருந்தது.

என் ஓனருக்கு பன்றியின் படத்தைப் பார்த்தவுடன் கோபம் தலைக்கேறியது. 'நான் சொன்னது ஒன்று. அந்த சைனீஷ் அனுப்பியது ஒன்று. இந்த போர்டை விற்பது ஹராம். எனவே இதை சைனாவுக்கே திரும்ப அனுப்பு. அல்லது நமது பெயிண்டரிடம் சொல்லி பன்றியின் இடத்தில் வேறு மிருகத்தைப் போடச் சொல்லவும்' என்றார் என்னிடம்.

நான் பொறுமையாக 'ஹராம் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, இறைவன் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான்' (குர்ஆன் 2:173) என்ற குர்ஆன் வசனத்தை பார்க்கவில்லையா?' என்று என்னிடம் கேட்டார்.

'பன்றியின் இறைச்சி' என்று தான் வருகிறதே யொழிய பன்றியே ஹராம் என்று வரவில்லை. பன்றியைப் பற்றி படிப்பது, பன்றியைப் பற்றி ஆராய்ச்சி செய்வது இவை எல்லாம் இஸ்லாத்தில் தடை இல்லை. காரணம் இல்லாமல் ஒரு படைப்பை இறைவன் ஏன் படைக்க வேண்டும்?' என்று கேட்டேன்.

ஒரு கணம் யோசித்தவர் 'சந்தேகமான விஷயத்தில் நான் குர்ஆனில் வாதிட விரும்பவில்லை.' என்றார. குர்ஆனின் வார்த்தைகளுக்கு இந்த மக்கள் எந்த அளவு மரியாதை வைத்துள்ளார்கள் என்று நினைத்து பல முறை வியந்திருக்கிறேன். இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. இன்னும் ஒரு முடிவு எடுக்கப்படாமல் அனைத்து போர்டுகளும் கொடவுனில் தூங்குகின்றன. என் ஓனரோடு ஒசாமா பின் லாடன், மன்னர் அப்துல்லா, பாலஸ்தீன் பிரச்னை என்று அவ்வப்போது நிறைய வாதிடுவது உண்டு. எனவே இது போன்ற வாதங்கள் இங்கு வழக்கமாக நடப்பது தான்.

பன்றியின் இறைச்சி ஏன் தடுக்கப்பட்டது? என்று கேட்டால் பலர் 'அது மலத்தை தின்கிறது. சாக்கடையில் புரள்கிறது' என்று கூறுவர். ஆனால் கோழி இதே செய்கையை செய்வதை நாம் பார்க்கிறோம். ஆனால் அறுப்பதற்கு முன் வீட்டில் இரண்டு நாட்கள் கட்டிப் போட்டாவது அதை அறுத்து சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் கோழியின் இறைச்சியை இறைவன் தடை செய்யவில்லை. எனவே இது காரணம் அல்ல.

பொதுவாக உணவுகளில் கொழுப்பு சத்து இருந்தால் அது உடலுக்கு கேடு விளைவிக்கிறது. இதய நோயாளிகளுக்கு இது பெரும் பிரச்னையைத் தரும். 100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் மாட்டிறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது. பாதிக்கு பாதி கொழுப்புள்ள பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதால் மனிதனுக்கு பல கேடுகள் வருகிறது. பன்றியின் இறைச்சியில் நாடாப் புழுக்கள் அதிகம் உள்ளன. எத்தனை அதிக சூட்டிலும் இந்த புழுக்கள் சாவதில்லை. இது மனிதனுக்கு மிகக் கெடுதலை உண்டு பண்ணுகிறது. பன்றிக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் என்ற பெயரில் நோய் பரவ பன்றியின் இறைச்சி காரணமாகிறது. இது போன்ற காரணங்கள்தான் பன்றியின் இறைச்சி நமக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்த தற்போது ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. பன்றியின் ரத்தமும் மனிதனின் ரத்தமும் ஓரளவு ஒத்துப் போவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். வருங்காலத்தில் பன்றியின் ரத்ததம் மனிதனுக்கும் செலுத்தப் படலாம். எனவே பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதை நாம் வெறுப்போம். அதற்காக பன்றி என்ற படைப்பையே வெறுப்பதை தவிர்த்துக் கொள்வோம்.

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். 2:173

Sunday, May 22, 2011

கலைஞரின் உருக்கமான முரசொலி கடிதம்!


உடன்பிறப்பே, என்னைப் பற்றியும் - என் குடும்ப வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கை ஆகியவைப் பற்றியும் - நேரம் வரும்போதெல்லாம் பலமுறை உனக்கும், உன் வாயிலாக ஊராருக்கும் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது சொல்லப் போவது அதைப் போன்ற சுய புராணம் அல்ல. சுய புராணத்தைத் தான் நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் அய்ந்து பாகங்கள் எழுதி முடித்திருக் கிறேனே! இப்பொழுது நான் எழுதப் போவதை அடுத்த பாகத்தின் முன்னுரை என்று கருதிக் கொண்டாலும் சரி - அதற்கிடையே எழுந்துள்ள மன ஓலம் என்று எண்ணிக் கொண்டாலும் சரி - இந்தச் சூழலில் இவற்றை நான் ஞாபகப்படுத்தியே தீர வேண்டும்.

நான் உயிரினும் மேலாகக் கருதும் நமது கழகம், பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந் திருக்கும் கால கட்டம் இது. அந்த இழப்புக்கு எது காரணம்? இணைந்த கட்சிகளுக்கு வழங்கப் பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதி களின் கணக்கா? தமிழ்நாட்டிற்கென்றே தனியான ஜபர்தஸ்துகளை - ஜனநாயக விரோதச் செயல்களை - சாட்டைகளாகக் கொண்டு - சர்வாதிகார பாட்டை வகுத்துக் கொண்ட தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சச பூதமா? என்ற கேள்வி களுக்கெல்லாம் நான் போக விரும்ப வில்லை. ஆனால் இந்தியாவிலேயே அல்லது தமிழ் நாட்டிலேயே அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி - ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, இலட்சம் கோடி சம்பாதித்து மூட்டைகளாகக் கட்டி வைத்திருக்கிற குடும்பம், கருணாநிதியின் குடும்பம் என்று தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தவர்கள், மழை விட்டும் தூறல் விடவில்லை என்பதைப் போல - இப்போதும்கூட அந்தப் பிரச் சாரத்தை ஏடுகள் வாயிலாக - ஏனைய ஊடகங்களின் வாயிலாக கூறிக் கொண்டிருக் கிறார்களே, அவற்றை பொய்யுரை என்றும், புனைந்துரை என்றும், புளுகு மாயப் புழுதி மாயம் என்றும், என் தமிழ் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலவற்றைத் தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறக்கவில்லை

நான் பலமுறை கூறியுள்ளபடி செல்வச் செழிப்பான பெரும் தனவந்தர் குடும்பத்தில் நான் பிறந்தவன் அல்லன்! தஞ்சை மாவட்டத்தில் (தற்போது நாகை மாவட்டத்தில்) திருவும் வளமும் கொண்ட திருக்குவளை கிராமத்தில் - சுற்றிலும் சூழ்ந்திருந்த வயல்களில் கிடைத்த பயிரையும், நெல்லையும், அரிசியையும் பயன்படுத்திக் கொண்டு - ஒரு ஓட்டுவில்லை வீட்டில் விவ சாயியாகவும் - இசை மேதைகளில் ஒருவராகவும் இருந்த - முத்துவேல நாதசுரக்காரருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தவன் நான்.
நான் உருண்டும் புரண்டும் தவழ்ந்தும் தள்ளாடி நடந்தும் பின்னர் திருவாரூர் பள்ளியில் பயின்றும் - அங்கு பெற்ற அறிவால் அந்த இளமையிலேயே அண்ணாவையும், பெரியாரையும் முறையே அரசியல் இயக்கத்திற்கும், அறிவு இயக்கத்திற்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டும் - சூடு தணியாத சுயமரியாதை உணர்வோடு பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.

பதினான்கு வயதிலேயே பனகல் அரசரைப் படித்து - படிக்க முடியாது கட்டாய இந்தியை என்று மொழிப் போரில் புகுந்து - அதற்கு அடுத்தடுத்த தொடர் களங்கள் பலவற்றைச் சந்தித்து - அய்ந்து முறை முதல் அமைச்சராகவும் - 12 முறை தமிழகச் சட்டப் பேரவை உறுப் பினராகவும் வெற்றி பெற்று - பொன் விழாக்கள், பவள விழாக்கள் கொண்டாடியும் கூட - இலக்கிய வேந்தர், கலைவேந்தர் என வேந்தர் பட்டங்க ளைப் பெற்றாலுங்கூட - வேண நிலங்களுக்குச் சொந்தக்காரன் என்றோ - வான் தொடும் மாளி கைகளுக்கு உரிமையாளன் என்றோ - அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக் கொள்ள நினைத்ததும் இல்லை; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை. அவற்றைத் தேடிக் கொள்ள திருட்டு வழியை தேடிக் கொண்டவனுமல்ல! அப்படியானால் இத்தனை ஆண்டுக் காலம் கட்சிக்குப் பொருளாளராக - 42 ஆண்டுக் காலம் கட்சிக்குத் தலைவராக - 19 ஆண்டுக் காலம் ஆட்சிக்கு முதல்வராக இருந்த கால கட்டங்களில் எதுவுமே சம்பாதிக்க வில்லையா என்ற கேள்விக்கு நான் தரும் பதில் - ஆம்; சம்பாதித்தேன் - தமிழுக்குத் தொண்டு செய்வோன் - தமிழ் வாழ தலையும் கொடுக்கத் துணிவோன் - என்ற பட்டப் பெயர்களை, புகழுரைகளை நிரம்ப நான் சம் பாதித்தேன்.

நான் ஈட்டிய பொருள்

என் எளிய வாழ்க்கையை நான் நடத்திட பொருளீட்டியதே இல்லையென்று புளுகிடும் துணிவு எனக்கில்லை - பொருளீட்டியது உண்டு - அந்தப் பொருளில் பெரும் பகுதியை வாழ்வின் இருளில் இருந்தோர்க்கு வழங்கியது உண்டு.

நான் முதலில் எழுதி, நானும் நடித்த சாந்தா அல்லது பழனியப்பன் எனும் நாடகத்தை - 1940களில் நூறு ரூபாய்க்கு விற்று - அந்தப் பணத்தை என் குடும்பச் செலவிற்கு மட்டுமல்லா மல், அடுத்த நாடகத்திற்கான முன் செலவு களுக்கும், ஆரூர் நடிகர் கழக அமைப்புக்கும் அளித்தேன். அதைத் தொடர்ந்து கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ராஜகுமாரி படத் திற்கும் - சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த மந்திரி குமாரி, தேவகி போன்ற படங்களுக்கும் நான் வாங்கிய பணம் மாதச் சம்பளமாக இருந்ததால் - அந்த ஊதியத்தை, வருமான வரி போக மிச்சப் பணத்தைத்தான் தந்தார்கள்.
பின்னர் பராசக்தி - மனோகரா - மலைக் கள்ளன் - இருவர் உள்ளம் - மருதநாட்டு இளவரசி - திரும்பிப் பார் - பணம் - நீதிக்குத் தண்டனை - இளைஞன் என்றெல்லாம் தொடர்ந்து தற்போது பொன்னர் - சங்கர் வரையில் 76 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். சில படங்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கிறேன்.

திரு. பிரசாத் அவர்கள் இயக்கத்தில் உருவான தாயில்லா பிள்ளை மற்றும் இருவர் உள்ளம் படங்கள் - நூறு நாள் ஓடினால் மேலும் பத்தாயிரம் ரூபாய் தருவதாக - திரு. பிரசாத் அவர்கள் வாக்களித்து, அவ்வாறே நூறு நாள் அந்தப் படம் ஓடியதற்காக அவர்கள் தந்த பத்தாயிரம் ரூபாயைக் கொண்டு - என்னைப் பெற்றெடுத்த திருக்குவளையில் - முத்துவேலர், அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி கட்டி - அந்நாள் முதல்வர் திரு. பக்தவத்சலம் அவர்களைக் கொண்டு திறப்பு விழா நடத்தினேன். அப்பொழுது நான் எழுத்தாளர் மட்டுமல்ல - சட்டமன்ற உறுப் பினரும் கூட (எதிர்க்கட்சித் துணைத் தலைவராக வும் இருந்தவன்). இதே போல நான் எழுதிய படங்கள் அனைத்திலும் பெற்ற ஊதியத்தில் - திருவாருக்கு அடுத்த காட்டூரில் சிறிதளவு நஞ்செய் நிலம் வாங்கவும் பயன்படுத்திக் கொண்டது போக மிச்சத்தை நலிந்தோருக்கே வழங்கினேன். காட்டூரில் ஆரம்பப் பள்ளிக் கூடக் கட்டிடத்திற்கு அப்போதே நிதியளித்து அந்தக் கிராமப் பகுதியில் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்தேன்.

கட்சிக்குப் பொருளாளராக இருந்தபோது...

கட்சிக்குப் பொருளாளராக இருந்த போது அண்ணா அவர்களின் ஆணைப்படி, தமிழகத்தில் ஊர்தோறும், நகர்தோறும், பட்டிதொட்டி, குக்கிராமம் என - செல்லாத இடமில்லை என்ற அளவிற்குச் சென்று - கழகக் கொடியேற்ற - கழகத்தினர் இல்லத்தில் உணவருந்த - என்பதற்கெல்லாம் கட்டணம் விதித்து - சென்னை விருகம்பாக்கம் கழக மாநாட்டில் அண்ணா அவர்களிடத்தில், மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பொதுவுடைமை வீரர் பி. ராமமூர்த்தி, பார்வர்ட் பிளாக் இயக்கத்தைச் சேர்ந்த பி.கே. மூக்கையா தேவர் ஆகியோர் முன்னிலையில் 11 இலட்சத்தை தேர்தல் நிதியாக அளித்தேன்.

வெள்ள நிவாரண நிதி - புயல் நிவாரண நிதி - கைத்தறியாளர் கண்ணீர் துடைக்க நெசவாளர் நல்வாழ்வுக்காக நிதி - இப்படி எத்தனையோ நிதிகள் வழங்கியும் - வசூலித்து தந்தும் தொண் டாற்றியவன்தான் நான்.

2004-2005ஆம் ஆண்டில் மண்ணின் மைந்தன் திரைப்படத்திற்காக 11 இலட்சம் ரூபாயும், கண்ணம்மா திரைப்படத்திற்காக 10 இலட்சம் ரூபாயும் - கிடைத்ததை - சுனாமி நிவாரணத் தொகையாக - அப்போதிருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தம்பி மு.க. ஸ்டாலின் மூலமாக நேரடியாகக் கொடுக்கச் செய்தேன். 9.7.2008இல் உளியின் ஓசை திரைப்படத்திற்காக எனக்குத் தரப்பட்ட 25 இலட்சம் ரூபாயில் ஏழு இலட்சம் ரூபாய் வருமான வரி போக - மீதத் தொகை 18 இலட்ச ரூபாயை - அன்று கலையுலகைச் சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு உதவி நிதியாக - கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேரடியாக வழங்கினேன். 17.9.2009இல் பெண் சிங்கம் திரைப் படத்திற்காக எனக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தத் தொகையினை அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகையாக வழங்குவேன் என்று அறிவித்ததையொட்டி - அப்படி வழங்கப்பட வேண்டிய தொகை 61 இலட்சம் ரூபாய் என்று கூறிய போது - என்னுடைய சொந்த கையிருப்பு நிதி 11 இலட்சம் ரூபாயையும் சேர்த்து உதவி நிதியாக 29.10.2009 அன்று வழங்கினேன். 27.4.2010 அன்று இளைஞன் திரைப் படத்துக்காக வருமான வரி போக 45 இலட்சம் ரூபாய் எனக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து - பிறகு மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுக்காக அந்தத் தொகை உதவி நிதியாக வழங்கப்பட்டது. பொன்னர் - சங்கர் திரைப்படத்திற்காக 8.9.2009இல் 10 இலட்சம் ரூபாயும் - 6.6.2010இல் 12.5 இலட்சம் ரூபாயும் எனக்கு வழங்கப்பட்டது. இந்தப் படத்திற்காகத் தரப்பட வேண்டிய 25 இலட்சம் ரூபாயில் வரியாக 2.5 இலட்சம் ரூபாய் போக எஞ்சியத் தொகை 22.5 இலட்சம் ரூபாயாகும். இந்தத் தொகையிலிருந்து காவல் துறையிலே விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வழங்கச் செய்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் திரு. தொல். திருமாவளவன் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் நிதியினை முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன். கழகத்தை தோற்றுவித்த தலை வர்கள் - தோன்றா துணைவர்களாக இருந்த தலை வர்கள் - உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் தொண்டர்கள் - ஆகியோருக்கு குடும்ப நிதியாக - நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். அவை இன்றைக்கும் என்னுடைய பெய ரால் அமைந்துள்ள அறக் கட்டளைகளின் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. என்னு டைய ஒவ்வொரு பிறந்த நாள் நிகழ்ச்சி களிலும், மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடை களுக்குப் பதிலாகவும் வழங்கப்பட்ட நிதியினையும் முதல மைச்சர் பொது நிவாரண நிதியிலே சேர்த்திருக் கிறேன். ஈழத் தமிழர் நிவாரணத்திற்காக தமிழக அரசின் சார்பில் நிதி திரட்டப்பட்ட போது என்னுடைய சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருக்கிறேன்.

நலிந்தோருக்கு உதவி

சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்கு தாரராக இருந்த என் மனைவி தயாளு அம்மையார் அதிலிருந்து பிரிந்து வந்த வகையில் கிடைக்கப் பெற்ற 100 கோடி ரூபாயில் எனக்குக் கிடைத்த 10 கோடி ரூபாயில் ஐந்து கோடி ரூபாயினை பங்கீட்டுத் தொகையாக செலுத்தி, தி.மு.கழகத்தின் சார்பில் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை ஒன்றினை கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக தொடங்கப்பட்டது. 11.1.2007 அன்று நடைபெற்ற 30வது புத்தகக் கண்காட்சி விழாவில் நான் பேசும்போது - இந்த 5 கோடி ரூபாயிலிருந்து - தென்னிந்திய புத்தக விற்பனை யாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்து - அவ்வாறே அந்தச் சங்கத்துக்கு அந்தத் தொகை வழங்கப்பட்டது. அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு - அந்தச் சங்கத்தின் சார்பில் - ஆண்டுதோறும் நல்ல புத்தகங்களை, சமுதாய சீர்திருத்த கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள், வெளியிடும் பதிப்பாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து, தலா ஒரு இலட்சம் பொற்கிழி வழங்கிடக் கூறியுள்ளேன். இந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக் கொண்டு - கலைஞர் மு. கருணாநிதி பொற் கிழி அறக்கட்டளை என்ற பெயரில் அறக் கட்டளை ஒன்று பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டு - இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளன. தி.மு. கழகச் சார்புடைய கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்கு நான் கொடுத்ததில் எஞ்சிய நான்கு கோடி ரூபாய்க்கு மாதந்தோறும் கிடைக்கின்ற வட்டித் தொகையிலிருந்து - கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2005 நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை 2337 பேருக்கு மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவித் தொகை தற்போதும் ஒவ்வொரு மாதமும் தரப்பட்டு வருகிறது.

சன் தொலைக்காட்சியிலிருந்து எனக்கென்று கிடைத்த 10 கோடி ரூபாயில் - கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்கு அளித்த 5 கோடி ரூபாய் போக - எஞ்சிய 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப் பட்டுள்ளது. அந்த வைப்பு நிதிக்கு கிடைத்த வட்டித் தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு 26.7.2008 அன்று வழங்கி - அந்தத் தொகையிலிருந்து கல் வெட்டியல், தொன்மை யியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருது வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கி றேன். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது - முதன்முறையாக இந்த விருது - பின்லாந்து நாட்டு தமிழ் அறிஞர் - அஸ்கோ பர்போலா அவர்களுக்கு - பத்து இலட்ச ரூபாய் பொற்கிழியாக - நன்கொடை யுடன் வழங்கப்பட்டது.

மருத்துவமனைக்கு என் வீடு!

இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபால புரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னு டைய வீட்டைக் கூட ஏழையெளியோர்க்குப் பயன் படும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றி அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான முறையான பத்திரப் பதிவுகளும் செய்யப்பட்டுள் ளன.

சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் திருமதி தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி 18.10.2005 அன்று சன் தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் - 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்ட போது - என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத் தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக் காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன். கனிமொழி அதை விரும்பாவிட்டாலுங்கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் இலாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகி விடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை என்று முரசொலியில் கலைஞர் எழுதியுள்ளார்.

-கலைஞரே! நீங்கள் சொல்வது உண்மையா! அல்லது மத்திய புலனாய்வுத் துறை சொல்வது உண்மையா! என்பது விசாரணையில் தெரிய வரும். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் அடுத்த தமிழக முதல்வர் கனிமொழிதான். கவலையை விடுங்கள்.