Followers

Sunday, July 05, 2020

யுவன் சங்கர் ராஜாவின் மாற்றமும் ஒரு அன்பரின் எதிர் வினையும்!

யுவன் சங்கர் ராஜாவின் மாற்றமும் ஒரு அன்பரின் எதிர் வினையும்!
யுவனின் மாற்றத்தைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு ஒரு இந்து நண்பர் எனக்கு பின்னூட்டம் இட்டிருந்தார். பதில் நீண்டு விட்டதால் அதனை தனி பதிவாக இட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.
//தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்து, தமிழ் கலாச்சாரத்தின் மூலம் செம்மையடைந்து இன்று அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுவது என்பது இவனை போன்ற துரோகி, பரதேசி, அயோகியம், முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.....//
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'
'யாதும் ஊரே யாவரும் கேளீர்'
இதன் அடிப்படையில்தானே இஸ்லாமே கட்டப்பட்டுள்ளது. இந்த பழமொழிகள் 2000 வருடங்களாக நமது தாயகத்தில் உலவி வருகின்றன. ஆனால் இதனை பின்பற்றும் தமிழ் இந்துக்கள் எத்தனை பேர்?
இதன்படி உங்கள் வாழ்க்கையை அமைத்திருந்தால் யுவனின் இந்த மாற்றம் நடந்தே இருக்காது. தமிழர்களாகிய நீங்கள் உங்கள் வேர்களை மறந்தீர்கள். யுவன் அந்த ஆணி வேரினை தேடி தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
அவர் இஸ்லாத்தை ஏற்ற ஒரு காரணத்திற்காக இவ்வாறு அவரை திட்டுவதுதான் உங்கள் மதத்தின் கொள்கையா? இன்றும் கூட சிரட்டையில் டீ தரும் தேநீர் கடைகளை மதுரையில் பார்க்கவில்லையா? இன்னும் கூட சில கிராமங்களில் செருப்பை கையில் பிடித்து பரிதாபமாக செல்லும் தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்ததில்லையா? சாதி மாறி காதலித்த குற்றத்திற்காக இளவரசனை இந்த இள வயதில் கொன்றது இந்த தமிழ் கலாசாரம் இல்லையா? சாமி கும்பிடக் கூட சாதி பார்த்து அனுமதிக்கும் கேவலம் இன்றும் நடைமுறையில் உள்ளதை மறுக்கப் போகிறீர்களா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு யுவனின் மன மாற்றத்தை குறை காண வந்து விட்டீர்?
//நாம் பிறப்பில் இருந்தே எம் அடையாளங்களை அழிக்க முடியாது .. அழிக்க முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ..//
இந்த வெற்று மிரட்டல்கள் கதைக்கு ஆகாது நண்பரே! இதனால் மேலும் அழிவுப் பாதைக்குத்தான் உங்களை இட்டுச் செல்கிறீர்கள். யுவன் ஏன் இந்த மாற்றத்தை அடைய வேண்டும்? அதற்கான நிர்பந்தம் என்ன என்பதை சிந்தித்து பாருங்கள்.
//. புலம் பெயர்ந்தாலும் இடம் பெயர்ந்தாலும் .. எங்க குழந்தைகள் இங்கு பிறந்தாலும் அன்னிய மொழி மட்டுமே பேசக்கற்ருக்கொண்டாலும் ...அடையாளம் மாருமா??குணமும் + முகமும் +நிறமும் +முடியும் காட்டிக்கொடுக்கும். அதேபோல் பிறப்பில் இருந்தே தமிழர்கள் நாங்கள் எங்கமொழி தமிழ் எங்க கடவுள்...!!!//
இதை இஸ்லாமும் மறுக்கவில்லையே! தாய் மொழிக்கு உரிய அந்தஸ்தை கொடுக்கச் சொல்கிறது இஸ்லாம். இளையராஜா இந்துவாக இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை யுவன் செய்ய வேண்டும்: அவரை கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இந்த உலகில் தோன்றிய மூல மொழிகள் அனைத்தையும் மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்தது இறைவனே! இதனை குர்ஆனில் அழகாக எடுத்துக்காட்டுகிறான் இறைவன். தொன்மையான மொழியான தமிழ் இறைவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு மொழி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் உங்கள் மதத்தில்தான் சமஸ்கிரதம் தேவ மொழி என்றும், தமிழ் நீச மொழி என்றும் அவமானப்படுத்தப்படுகிறது. அந்த பஞ்சாயத்துதான் இன்னும் சிதம்பரம் கோவிலில் தீர்க்கப்படாமல் இருக்கிறது. தமிழ் ஆர்வலரான நீங்கள் அதற்கு முயற்சிக்கலாமே! அப்படி தமிழை நீச மொழி என்று அவமானப் படுத்துபவர்களைத்தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்.
//இஸ்லாம் என்பது நம்மை அண்டி பிழைக்க வந்த, பிறகு நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மையே ஆண்ட, மறைமுகமாக ஆண்டு கொண்டிருக்கும் அரபியர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் ஒரு முறை தான் இஸ்லாம் என்ற மதம்..//
தவறான புரிதல் தோழரே! உலக மொழிகள் அனைத்திற்கும் தூதர்களை அனுப்பி இறை வேதத்தையும் கொடுத்துள்ளதாக குர்ஆன் கூறுகிறது. அதன்படி நமது தாய் மொழியான தமிழ் மொழிக்கும் வேதமும் தூதரும் வந்துள்ளனர்.
//இந்த மதத்திற்கு ஒரு பலமான வரலாறோ, இலக்கியமோ, கலாச்சாரமோ,கல்வி அறிவோ, பண்பாடோ, வளமையோ கிடையாது....//
இலக்கியம் என்று நீங்கள் தமிழில் காட்டும் எந்த ஒன்றும் நமது அறிவை விரிவுபடுத்துவதாக இல்லை. அதிக இலக்கியங்கள் சிலை வழிபாட்டையும், பெண் அடிமையையும், வர்ணாசிரம கோட்பாடுகளையும் தாங்கி நிற்கிறது. இந்த கணிணி யுகத்திலும் தீண்டாமை இந்த அளவு நமது தமிழகத்தில் வேரூன்றியிருக்க மூல காரணமே நீங்கள் குறிப்பிடும் தமிழ் இலக்கியங்கள்தான்.
கலை என்ற பெயரில் பெண்களை கோவில்களில் ஆட விட்டு ரசித்தீர்கள். ஆட்டம் முடிந்தவுடன் அந்த பெண்களை அந்தப்புரத்துக்கு கொண்டு சென்று அனுபவித்தீர்கள். முடிவில் அந்த பெண்களை 'தேவரடியார்கள்' என்ற பெயரையும் சூட்டினீர்கள். கடைசியில் அந்த பெண்கள் வாழ்வை இழந்து விலை மாதுகளாக மாற்றப்பட்ட கொடுமை தெரியுமா உங்களுக்கு? அவர்களையும் ஒரு சாதியாக பாவித்து இன்று வரை அந்த குடும்பத்து வாரிசுகள் கூனி குறுகி நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? தஞ்சையில் ராஜ ராஜ சோழனுக்கு வைப்புகளாக இருந்தவர்களின் ஒரு தெருவே இன்றும் சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இன்றும் நேபாளில் இவ்வாறு கோவிலுக்கு தேவரடியாராக நேர்ந்து விட்டு பெண்களை போகப் பொருளாக்கும் கூத்து நடந்து வருகிறது. இந்த பெருமையைத்தான் தமிழனின் கலாசாரம் என்று சொல்கிறீர்களா?
//மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பாடகர் கோடி சொத்து ஆனால் ,, தன் இனத்த்தின் நிறத்தை அவமானமாகக்கருதி வெருத்து வெள்லைத்தோலுக்கு ஆசைப்பட்டு கடைசியில் .. தோல்புற்ருநோயால் அவதிப்பட்டு வேதனையை மறக்க போதைக்கு அடிமையாகி .. மாண்டு போனார் ..//
ஆனால் மைக்கேல் ஜாக்ஸனின் அண்ணன் ஜெராமைக் ஜாக்ஸன் 'அப்துல் அஜீஸ்' ஆக முஸ்லிமாக மாறி அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது வாழ்க்கை இன்றும் சந்தோஷமாகவே சென்று கொண்டுள்ளது. இதை கடைசி காலத்தில் உணர்ந்து மைக்கேல் ஜாக்ஸனும் இஸ்லாத்தை தழுவினார். ஆனால் அதற்குள் அவரது உடல் இறப்பை எட்டியது. தவறு மைக்கேல் ஜாக்ஸனிடம் தான்.
முகமது நபி ஒரு அரேபியர். அதிலும் இங்கு பார்பனர்களைப் போல அங்கு குரைஷிகள் உயர்ந்த குலம். அந்த குலத்தில் வந்த முகமது நபி 'குலப் பெருமையை எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன். அரபியன் அரபி அல்லாதவனை விட சிறந்தவன் இல்லை. ஒரு கருப்பு அடிமை உங்களுக்கு தலைவராக்கப்பட்டாலும் அவரை பின்பற்றி செல்வதுதான் உண்மை முஸ்லிமுக்கு அழகு' என்று சொன்ன அந்த வார்த்தை இன்றும் உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறதே! கருப்புத் தோலுக்கும் வெள்ளைத் தோளுக்கும் இஸ்லாத்தில் இடமில்லை. தூய இறை பக்தி ஒன்றுதான் இறைவனிடம் உங்களை நெருக்கமாக்கும் என்று சொல்லி அதனை நடைமுறைபடுத்திக் காட்டியும் வருகிறது இஸ்லாம்.
//எம்மதமும் நல்வழியைத்தானே போதிக்கிது அப்புறம் சைவத்தில் இல்லாது இஷ்லாத்தில் என்ன இருக்கிது?? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்யலாம் .//
இஸ்லாத்துக்கும் சைவத்துக்கும் என்ன வித்தியாசம் என்பதை மேலே பட்டியலிட்டுள்ளேன். அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்து உங்கள் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவிகள். கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவிகள். ராமனின் தந்தை தசரதனுக்கு 60000 மனைவிகள் இருந்ததாக ராமாயணம் சொல்கிறது. நமது முன்னால் முதலமைச்சர் எம் ஜி ஆர் பலதார மணம் செய்தவர். அதே போல் தற்போது வாழ்ந்து வரும் கலைஞர் பல திருமணம் செய்து அனைத்து மனைவிகளோடும் சந்தோஷமாகவே வாழ்ந்து வருகிறார். எனவே பலதார மணம் செய்ய இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்கு இந்து மதத்திலேயே இருந்திருக்கலாம். தான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன் என்பதை யுவனே தனது பேட்டியில் கூறியுள்ளார். நானும் அதனை பதிவாக்கியுள்ளேன். படித்து தெளிவு பெறுங்கள்.
//இஸ்லாத்தில் சொல்லப்படும் அணைத்தும் அரேபியர்களை குறித்ததுதான், இதில் இந்தியாவையோ குறிப்பாக தமிழகத்தையோ, இந்திய முஸ்லிம்களை பற்றியோ அல்லது தமிழக முஸ்லிம்களை பற்றியோ எங்கும் ஒரு சிறு குறிப்பும் கிடையாது.//
'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையைப் பிரித்துக் காட்டும்'
-குர்ஆன் 2:185
இங்கு மனிதர்கள் என்று உலக மக்களைப் பார்த்து குர்ஆன் பேசுகிறது. இது போன்று அனேக இடங்களில் 'மனிதர்களே!' என்று இந்த மனித குலத்தில் உள்ள தமிழர்களாகிய நம்மையும் பார்த்துதான் பேசுகிறது. எனவே தான் தமிழனாகிய யுவனின் மனதை இந்த குர்ஆன் மாற்றியது. கடவுள் மறுப்பை வாழ்நாள் முழுக்க சொன்ன தந்தை பெரியாரும் 'இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த வழி' என்றார். நாத்திகனின் மனதையும் புரட்டிப் போடும் சக்தி இந்த குர்ஆனுக்கு உண்டு.
பார்பனியத்தை நமது நாட்டிலிருந்து விரட்ட பெரியார் எவ்வளவு முயன்றும் தோல்வியையே கண்டார். அவரது தம்பிகளும் கடைசியில் பார்பனியத்தின் கால்களிலேயே வீழ்ந்து விட்டனர். சுய மரியாதையை கொடுத்து உலக அரங்கில் தமிழனை தலை நிமிரச் செய்யும் ஆற்றல் இஸ்லாத்துக்கு உண்டு. அதனை சரியாக தேர்வு செய்த முஹம்மது ஹாலிக் யுவனை வாழ்த்தா விட்டாலும் தூற்றாமலாவது இருப்போம்.
Aashiq Ahamed, Nisar Marakkayar மற்றும் 3 பேர்

''விடுதலை செய்யப்பட்ட 17000 கைதிகளில் நானும் இருந்திருக்க கூடாதா”

விடுதலை செய்யப்பட்ட 17000 கைதிகளில் நானும் இருந்திருக்க கூடாதா” - #டாக்டர்கஃபீல்கான் உருக்கம்

“நான் எதற்காக தண்டிக்கப் படுகிறேன் என்று தெரியவில்லை. என்னுடைய குழந்தைகள், மனைவி, தாய், சகோதரர்கள், சகோதரி ஆகியோரை எப்போது சந்திப்பேன் என்று தெரியவில்லை. என்னுடைய சகோதர மருத்துவர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ்-ற்கு எதிராக போராடி ஒரு மருத்துவனாக என்னுடைய கடமையை எப்போது நிறைவேற்றுவேன் என்று தெரியவில்லை.”

ஐந்து மாதங்களுக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் சமீபத்தில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் இவை.

தற்போது அவர் மதுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றில் அரசாங்கத்தை விமர்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ஜனவரி 29 2020 இல் சிறையில் அடைக்கப்பட்டார். பிப்ரவரி 10 அன்று அலிகர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கிய போதும் பிப்ரவரி 13 அன்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை மீண்டும் கைதுசெய்தது உத்தர பிரதேச அரசு.

ஆகஸ்ட் 10, 2017 அன்று உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரத்திலுள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக அறுபது குழந்தைகள் அநியாயமாக மரணித்தனர். அப்போது தன்னுடைய சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏனைய குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார் கஃபீல்கான். ஆனால் அவர் மீதே குற்றம் சுமத்தி அவரை பணியிலிருந்து நீக்கியது உத்தர பிரதேச அரசு. ஆனால் அரசாங்கம் நியமித்த விசாரணைக் கமிட்டி அவர்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை என்று கூறி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அறிக்கை சமர்ப்பித்தது. அன்றிலிருந்து கஃபீல் கானை குறிவைக்கும் போக்கை உத்தர பிரதேச அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மார்ச் 19 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய மருத்துவர் கஃபீல் கான், கொரோனா வைரசுக்கு எதிராக தன்னுடைய மருத்துவ சேவைகளை பயன்படுத்த தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

இருபது வருடங்கள் மருத்துவத் துறையில் அனுபவம் கொண்ட இவர் கோரக்பூர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் 103 மருத்துவ முகாம்களை நடத்தியது அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இப்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு சிறையில் உள்ள சிறைவாசிகளை ஜாமீன் அல்லது பரோலில் விடுவிக்க மார்ச் 23 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 17, 963 கைதிகளை பரோலில் விடுவித்ததாக உத்தர பிரதேச அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அதில் கஃபீல் கான் இடம் பெறவில்லை.

534 கைதிகளுக்காக கட்டப்பட்ட இந்த சிறை வளாகத்தில் தற்போது 1600 நபர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு முதல் ஆறு கழிவறைகள் மட்டும் உள்ளதாகவும் தனது கடிதத்தில் கஃபில் கான் குறிப்பிட்டுள்ளார்.

சிறைவாசிகள் நெருக்கமாக இருப்பதால் சமூக இடைவேளைக்கான வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். துர்நாற்றம், கொசுக்களின் தொல்லை குறித்து அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளார். புத்தகத்தை வாசிப்பதற்கு தான் ஆர்வம் கொண்டிருந்தாலும் அதில் தன்னால் கவனத்தைக் குவிக்க இயலவில்லை என்பதை வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

Vidiyal on July 5, 2020

படித்ததில் நெகிழ்ந்தது! சமுத்திரகனி .இயக்குனர்

கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் வசித்துவருகிறார்கள். இந்த மாவட்டத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்குச் சென்று பணிபுரிகின்றனர்.

வளைகுடா, பணம் கொழிக்கும் பூமி. கேரள மாநிலத்தின் 'கால்பந்து தலைநகரம்' என்றும் மலப்புரத்தைச் சொல்வார்கள். மலப்புரம் மாவட்டத்தில் எங்கு நோக்கினாலும் மசூதிகள் காணப்படும்.

மலப்புரம் அருகே உள்ள புன்னதாலா என்கிற கிராமத்தில் மசூதிகளுக்கு மத்தியில் சிறிய இந்து கோயில் ஒன்று இருந்தது. 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில், நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலிக்கிறார் விஷ்ணு பகவான்.

புன்னதாலா கிராமத்தில் வசிக்கும் இந்து மக்களுக்கு, இந்தக் கோயில்தான் ஒரே வழிபாட்டுத்தலம். கோயிலோ இடிந்து தகர்ந்துபோய் கிடந்தது. அதைச் சீரமைத்துக் கட்டவேண்டும் என்பது புன்னதாலா வாழ் இந்து மக்களின் ஆசை. அவர்களிடத்திலோ, நிதி இல்லை. நிதி திரட்ட முயன்றும் முடியாமல்போனதால், கோயில் சீரமைப்புப் பணி பல ஆண்டுகளாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்து மக்களின் ஆசையையும் இயலாமையையும் அறிந்த புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், உதவிக்கு ஓடி வந்தனர்.

'உங்கள் கோயிலை நாங்கள் கட்டித்தருகிறோம்' எனக் கூறி நிதி வசூலிக்கத் தொடங்கினர். சுமார் 20 லட்சம் ரூபாய் திரண்டது. புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், இந்து கோயிலைச் சீரமைக்க நிதியை அள்ளி வழங்கினர்.

இந்துக்கள் கண்களிலோ ஆனந்தக்கண்ணீர்!
திரண்ட நிதியை கோயில் கமிட்டியிடம் அளித்து, நரசிம்மமூர்த்தி ஆலயத்தைக் கட்டுமாறு இஸ்லாமியர்கள் கேட்டுக்கொண்டனர். கோயில் முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டது. நிதி திரட்டிக் கொடுத்ததோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக இஸ்லாமிய மக்கள் ஒதுங்கிவிடவில்லை. கோயிலின் சீரமைப்புப் பணிகளிலும் உடல் உழைப்பை நல்கினர்.

நெகிழ்ந்துபோன புன்னதாலா இந்து மக்கள், நன்றிக்கடனாக இஸ்லாமிய மக்களுக்கு கைம்மாறு செய்ய முடிவுசெய்திருந்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ரம்ஜான் நோன்பும் வந்தது. புன்னதாலா வாழ் இந்து மக்கள், இஸ்லாமிய மக்களுக்கு கோயில் வளாகத்தில் இஃப்தார் விருந்து வழங்க முடிவுசெய்து, அழைப்புவிடுத்தனர்.

அத்தனை இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, கோயில் கமிட்டி சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டது.

நரசிம்மமூர்த்தி ஆலய வளாகத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு விருந்து வழங்கப்பட்டது. இதில், 400 இஸ்லாமிய மக்களும் உள்ளூர் கிராம மக்களும் மகிழ்வுடன் பங்கேற்றனர். பரிமாறப்பட்ட சைவ உணவை இஸ்லாமிய மக்கள் ருசித்தனர்.

கோயில் செயலாளர் மோகனன் கூறுகையில்,

''எங்கள் கிராமத்தில் இந்து-இஸ்லாமிய மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்துவருகிறோம். நல்லது கெட்டது எதுவென்றாலும் இஸ்லாமிய மக்களுடன் கலந்து பேசி முடிவுசெய்வோம். இந்தக் கோயிலைக் கட்ட, சுமார் 20 லட்சம் ரூபாய் இஸ்லாமிய மக்கள் தந்தனர். யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அது அவர்களின் உரிமை. எல்லாவற்றையும் தாண்டி 'மனிதம்' என்ற ஒற்றை வரியில் நாங்கள் இணைந்து நிற்கிறோம்'' என்றார்.

மனிதநேயத்தை மிஞ்சியது எதுவுமேயில்லை

இறைவன் படைத்த உயிரை பலிகொடுத்து எந்த கடவுளையும் திருப்தி படுத்த முடியாது

மனித பிறவி மேன்மையானது அதை அனைவcfரும் போற்றுவோம்

.......படித்ததில் நெகிழ்ந்தது!      சமுத்திரகனி .இயக்குனர்

என்னை வியக்க வைத்த சவுதிகளின் திருமணம்! - இது ஒரு மீள் பதிவு

என்னை வியக்க வைத்த சவுதிகளின் திருமணம்!

எனது பாஸின் மூத்த மகளுக்கு சென்ற வியாழக்கிழமை திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன் 'திருமணத்துக்கு அவசியம் நீ வர வேண்டும்' என்று அழைத்தார். நான் இதுவரை சவுதி நாட்டவர் திருமணங்களுக்கு சென்றதில்லையாதலால் கௌரவமாக...

'இல்லை... எல்லோரும் சவுதிகளாக இருப்பார்கள். எனக்கு கூச்சமாக இருக்கும். திருமணம் நல்ல முறையில் முடிய நான் பிரார்த்திக்கிறேன்' என்றேன்.

'உனக்கு கம்பெனி கொடுக்க நம் கம்பெனியிலிருந்து இரண்டு பேர் வருகின்றனர். மேலும் சில எகிப்து நாட்டவரும் வருகின்றனர். எனவே மறக்காமல் திருமணத்துக்கு வரவும்' என்று சொல்லவே போகலாம் என்று தீர்மானித்தேன்.

அலுவலகத்தில் நான் மட்டுமே வேலையில் இருப்பதால் வேறு துறைகளில் வேலை செய்யும் மற்ற இரண்டு ஹைதரபாத்திகளும் வர சம்மதித்தனர். மூவருமாக சேர்ந்து திருமண மண்டபம் நோக்கி வாகனத்தில் சென்றோம். அழைப்பிதழிலேயே திருமண மண்டபம் செல்வதற்கான வரை படம் இருந்ததால் அதன் உதவி கொண்டு சரியாக மண்டபத்தை சென்றடைந்து விட்டோம்.

இரவு நேரம் ஆகையால் சரியான குளிர். அதற்கு தக்கவாறு குளிர் சட்டைகளையும் கொண்டு வந்திருந்தோம். அதனை வாகனத்திலேயே வைத்து விட்டு மண்டபத்தை நோக்கி நடந்தோம். மண்டப வாயிலிலேயே எனது ஓனரும் அவரது அண்ணனும் நின்றிருந்தனர். எங்களை கண்டவுடன் அருகில் வந்து கை கொடுத்து தங்கள் கன்னத்தை எங்கள் கன்னத்தோடு இணைத்து முத்தம் கொடுத்தனர். இது சவுதிகள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் முறை.

உள்ளே மிகப் பெரிய ஹால். அரச சபைகளிலே நாம் படங்களில் பார்ப்போமே அத்தகைய இருக்கைகள். எனது ஓனர் அமரும் இருக்கைக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி எங்களை உட்கார சொன்னார். நாங்களும் உட்கார்ந்தோம். சிறிது நேரத்தில் சீருடை அணிந்த பணியாள் தேயிலை, காப்பி போன்ற மூன்று வகையான தேநீர்களை எங்களிடம் கொண்டு வந்து 'எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார். அவரவர்கு விரும்பியதை எடுத்துக் கொண்டோம். அந்த குளிருக்கு பால கலக்காத அந்த தேயிலையும் காப்பியும் சுகமாக இருந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் உறவினர்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. வந்தவர்கள் அனைவரும் எனது ஓனரிடம் கை கொடுத்து முத்தமும் கொடுத்து விட்டு எங்கள் மூவரிடமும் வர ஆரம்பித்தனர். எங்களுக்கும் கை கொடுத்து விட்டு அதே போன்று கன்னத்தோடு கன்னம் வைத்து முத்த மழை பொழிய ஆரம்பித்தனர். இது எங்கள் மூவருக்கும் புதிய அனுபவம் என்பதால் மெல்ல ஹைதரபாத்தியிடம் 'கொஞ்சம் தள்ளி உள்ளே சென்று உட்காருவோமே!' என்றேன். அவனும் சரி என்று சொல்லவே அங்கிருந்து அகன்று சற்று உள்ளே சென்று உட்கார்ந்து கொணடோம்.

அரை மணி நேரத்திற்கு பிறகு மாப்பிள்ளை வந்தார். பெண் அதே மண்டபத்தில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண்களோடு அமர்ந்திருந்தார். மாப்பிள்ளை என்று விஷேசமாக எந்த உடைகளோ மாலைகளோ இல்லாததால் சாதாரணமாகவே வந்தார். 'நிக்காஹ்' முன்பே முடிந்து விட்டது. எல்லோரும் சென்று மாப்பிள்ளையிடம் கை கொடுத்தனர். நாங்களும் கை கொடுத்தோம். அதன் பிறகு மாப்பிள்ளையிடம் அவரது நண்பர்கள் கிண்டலும் கேலியுமாக அரை மணி நேரம் சென்றது. சில சவுதிகள் இந்த இடங்களில் இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்வர். எனது ஓனர் அதிக இறை பக்தி உடையவர் என்பதால் ஆடம்பர கேளிக்கைகளை தவிர்த்து விட்டார். இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இந்த மண்டபத்துக்கு வாடகை கொடுப்பதும், இங்கு வருபவர்களுக்கு சாப்பாடு கொடுக்கும் செலவுகள் அனைத்தும் மணமகனையே சாரும். அதே போல் மணமகளுக்கு லட்சக்கணக்கில் மஹர் தொகையும் மணமகனே கொடுக்க வேண்டும். நகை, பெட்ரூம் செட் என்று அந்த செலவுகளையும் மேலும் அன்று மணமகளுக்கான உடைகளையும் மணமகனே தயார் செய்ய வேண்டும். ஆனால் நம் நாட்டில் எல்லாமே தலை கீழ். அனைத்தையும் பெண்ணின் தகப்பனின் தலையில் கட்டி விடுவர். முஸ்லிம்களும் பெண்ணின் தகப்பன் தலையில் கட்டுவது நம் நாட்டில் வழக்கம். ஆனால் அது இஸ்லாத்துக்கு முரணானது என்பதை ஏனோ பலரும் உணருவதில்லை.

இடையில் ஒரு பெரிய கண்ணாடி கிளாஸில் அருமையான பழ ரசங்கள் மூன்று வகையானவைகளை கொண்டு வந்து எடுத்துக் கொள்ளச் சொல்லினர். நாங்களும் ஆளுக்கு ஒரு கிளாஸ் பழ ரசங்களை எடுத்துக் கொண்டோம். இன்னொரு அரை மணி நேரம் கழித்து அருகில் உள்ள சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இங்கும் மிகப் பெரிய ஹால்.

ஆறு பேர் அமரக் கூடிய மிகப் பெரிய டைனிங் டேபிள். அவ்வாறு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட டேபிள்கள் போடப்பட்டிருந்தன. உணவு வகைகளும் முன்பே தயாராக டேபிள்களில் வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் மூவரும் சென்று ஒரு டேபிளில் உட்கார்ந்தோம். இரண்டு எகிப்து நாட்டவரும் ஒரு பாலஸ்தீனியும் எங்களோடு ஜோடி சேர்ந்து கொண்டனர். மிகப் பெரிய தாம்பூலத்தில் சவுதி பிரியாணி (மந்தி கப்ஸா) வைக்கப்பட்டு அதன் மேல் ஆட்டுக் கறியும் வைக்கப்பட்டருந்தது. பெப்ஸி, செவன் அப், சலாட், ஹூமூஸ்(சிரிய நாட்டு உணவு) என்று சிறிய பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்தது. எது விருப்பமோ அதை சாப்பிடும் வகையில் அமைத்திருந்தனர். மதறாஸ், ஹைதராபாத், எகிப்து, பாலஸ்தீன் போன்ற வேறு வேறு கலாசாரத்திற்கு சொந்தக்காரர்கள் ஒரே த்ட்டில் அமர்ந்து சாப்பிட்டோம். எனது கை பட்ட உணவை பாலஸ்தீனி எடுப்பதும், எகிப்து நாட்டவன் கை பட்ட உணவை ஹைதராபாத்தி எடுத்து சாப்பிடுவதும் சவுதியில்தான் பார்க்க முடியும்.

அந்த ஹாலிலேயே ஒரு ஓரத்தில் மிகப் பெரிய டேபிளில் 15 வகையான இனிப்புகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் அங்கு சென்று சிறிய தட்டில் நமக்கு வேண்டிய இனிப்புகளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. நானும் நண்பர்களும் வேண்டிய மட்டும் இனிப்புகளை தட்டில் எடுத்துக் கொண்டு, சில பழங்களையும் எடுத்துக் கொண்டு திரும்பவும் எங்களின் டேபிளுக்கு வந்தோம். அடுத்த ரவுண்டு ஆம்பம். இதற்கு மேல் வயிற்றிலும் இடமில்லை. செவனப்பை கடைசியாக குடித்து விட்டு எங்களின் உணவை முடித்துக் கொண்டு வெளி ஹாலுக்கு வந்தோம். உண்ட களைப்பு எங்கள் கண்களை சொருக ஆரம்பிக்கவே வெளியில் நின்ற ஓனரிடம் கை கொடுத்து விட்டு எங்கள் வாகனத்தை நோக்கி நடையை கட்டினோம்.

முதன் முதலாக கலந்து கொண்ட இந்த சவுதி வீட்டு திருமணம் எனக்கு புதிய அனுபவமாகவே இருந்தது.


இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவது தான்

இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவது தான்

கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பொதுமக்கள் வரவேற்பு...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

வேலூர் மாவட்டம்
பனந்தோப்பு கிளைகள் சார்பில்

இன்று கிளைக்கு உட்பட்ட பகுதியில்

கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதில் SO அதிகாரி மற்றும் கார்பொரேஷன் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்

இதில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் MASK இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது.

ஆதிகமான மக்கள் ஆர்வமாக கபசுர குடிநீரை வாங்கி குடித்து சென்றனார்

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் பயனடைந்தனர் மற்றும் 100 MASK இலவசமாக வழங்கப்பட்டது

என்றும் மார்க்க மற்றும்
சமுதாய பணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
வேலூர் மாவட்டம்
பனந்தோப்பு கிளை 


பெரும்பாலும் காவலர்களும் நல்லுள்ளங்களே..!!

பெரும்பாலும் காவலர்களும் நல்லுள்ளங்களே..!!
100 % நல்லவர்கள் மட்டும் பணியுரியும் எந்த துறையுமே உலகில் இல்லை. எல்லா துறையிலும் தீயவர்கள் சில பேர் இருந்தாலும், நல்லவர்களே அதிகம் இருப்பார்கள். அதே போன்று தான் நம் காவல்துறையும்..
இந்த காவலர் பெயர் சையது அபுதாஹீர். 23 வயது இளம் காவலரான இவர் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக பதட்டத்துடன் வருபவரை நிறுத்தி விசாரிக்கிறார்.
அதற்கு அந்த நபர் திருச்சி அருகே சிற்றூரில் உள்ள தனது ஏழை கர்ப்பிணி மனைவியை மிகுந்த சிரமத்திற்கிடையில் 7 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும், தாயும் சேயும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் மருத்துவர் சிகிச்சைக்கு இரத்தம் கேட்டு அதற்காக தான் அலைவதாகவும் காவலரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்ட காவலர் தானும் அதே வகை இரத்தப்பிரிவு என சொல்லி இரத்தத்தை தானமளிக்கிறார்.
அறுவை சிகிச்சை முடிந்து தாயும் சேயும் நலம் பெறுகிறார்கள். விஷயமறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த காவலரின் சேவையை பாராட்டி ரூ 1,000/- சன்மானம் அளிக்கிறார். மேலும் இதுபற்றி விவரம் அறியும் தமிழக காவல்துறை இயக்குநரும் அவரின் சேவையைப் பாராட்டி ரூ 10,000/- சன்மானம் அளிக்கிறார்.
அந்த ரூ 11,000/- சன்மானத் தொகையை காவலர் முழுவதுமாக ஏழை கர்ப்பிணி பெண்ணின் மருத்துவ செலவிற்கு அளித்து விட்டு எப்போதும் போல் தன் கடமையில் ஈடுபட்டுள்ளார் இந்த காவலர்.
உதவிக்கு பதவி அதிகாரம் முக்கியமல்ல ! மனம் தான் வேண்டும் !!
குறிப்பு : இது சில வாரங்களுக்கு முன்புள்ள செய்தி, இருப்பினும் களங்கம் சுமத்தப்படும் காவல்துறையின் மத்தியில் இவர்களை போன்ற நல்உள்ளங்களும் பணி செய்கின்றனர், என்று உணர்த்தவே இப்பதிவு.


Saturday, July 04, 2020

நமது நாட்டின் பல ஊர்கள் பிராமணர்களுக்கு மாற்றப்பட்டது எப்படி?

நமது நாட்டின் பல ஊர்கள் பிராமணர்களுக்கு மாற்றப்பட்டது எப்படி?

ஒன்றல்ல இரண்டல்ல பல ஆயிரம் ஏக்கர்களை தானமாக கொடுத்துள்ளான் ராஜ ராஜ சோழன். காணொளியை பாருங்கள்.


இரண்டு வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்கள்!

இரண்டு வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்கள்!

உத்தரப்பிரதேசத்தில் திக்ரு கிராமத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே யாராக இருக்கும் என்று தேடிப் பார்த்தேன்.
அவர் மீது 60 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
2001-இல் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து சந்தோஷ் சுக்லா என்கிற அமைச்சரை சுட்டுக் கொண்டிருக்கிறார் இந்த விகாஸ் துபே. பாஜகவின் ராஜ்நாத் சிங்கின் அமைச்சராக இருந்தவர் தான் சந்தோஷ் சுக்லா.
இன்னும் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகளும் அவர் மீது இருக்கின்றன.
துபே என்பதற்கு இரண்டு வேதங்களைக் கரைத்துக் குடித்தவர் என்று பொருள். உத்தரபிரதேசத்தில் உயர் ரக பிராமணர்கள் தாம் இந்த துபேக்கள்.
தட்ஸ் ஆல்.


அங்கு போயும் இதே வேலைதானா? இவர்கள் திருந்துவது எப்போது?


ஐயோ பாவம்... பார்பனருக்கு வாழ்நாள் அடிமையாகிப்போன அன்பு ராஜூக்கு... :-)

Thursday, July 02, 2020

மங்கோலியர்களிடமிருந்து இந்தியாவைக் காத்த அலாவுதீன் கில்ஜி

#மங்கோலியர்களிடமிருந்து_இந்தியாவைக்_காத்த
#அலாவுதீன்_கில்ஜி

‘பத்மாவத்’ என்ற படம் 2018ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தில் அலாவுதீன் கில்ஜியை மிகப் பயங்கரமான வில்லனாகக் காட்டியிருப்பார்கள். அவரது முகத் தோற்றமும் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் மிருகத்தனமாக இருக்கும்.

இப்படித்தான் முஸ்லிம் மன்னர்களை ‘மாஸ் மீடியா’ எனப்படும் சினிமா முதல் அனைத்து ஊடகங்களிலும் காட்டி, சாதாரண பொதுமக்களின் புத்தியில் அவர்களைப் பயங்கர வில்லன்களாகப் பதிய வைக்கிறார்கள்.

அலாவுதீன் கில்ஜி மதவெறியர், ஹிந்து மக்களை ஒடுக்கியவர், ஹிந்துக்கள் மீது ஜிஸ்யா வரி விதித்தவர் - இப்படி பல குற்றச்சாட்டுகள் அவர் மேல் உள்ளன. அவையெல்லாம் உண்மையா, இல்லையா என்பதைப் பின்னர் பார்ப்போம்.

ஒட்டுமொத்த உலகையும் தங்கள் காலுக்குக் கீழே போட்டு மிதித்திடக் கிளம்பினார்கள் மங்கோலியர்கள். அன்றைய காலக்கட்டத்தில் உலகிலேயே அதிகப் பலமுள்ள படையைக் கொண்டிருந்த மங்கோலியர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்தபொழுது அலாவுதீன் கில்ஜியும் அவர்தம் படையினரும் மிகத் தீரமாகப் போராடி மங்கோலியர்களைத் தோற்கடித்தனர்.

இப்படி ஒருமுறை இருமுறையல்ல, ஆறு முறை மங்கோலியர்களைத் தோற்கடித்தார் அலாவுதீன் கில்ஜி!

இரண்டு படைகள் போரில் மோதின, அதில் அலாவுதீன் கில்ஜியின் படை வென்றது என்று சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். அன்றைய காலக்கட்டத்தில் மங்கோலியப் படையை வெல்வது என்பது எண்ணிப்பார்த்திட இயலாத ஒன்று.

மங்கோலியர்கள் பாரசீகம், பக்தாத், ரஷ்யா, சீனா, ஈராக், சிரியா, ஐரோப்பா என்று பல பகுதிகளை வெற்றிகொண்டபொழுது என்னென்ன அழிச்சாட்டியம் புரிந்தார்கள் என்பது வரலாற்றில் நன்கு பதியப்பட்டிருக்கிறது.

அவர்கள் மற்ற படையினர் போன்று வெறுமனே மக்களைக் கொன்றுவிட்டு செல்பவர்களல்லர். மக்கள் அனைவரையும் கொல்வார்கள். அது எத்தனை இலட்சமாக இருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை. நகரங்களின் உட்கட்டமைப்புகளைத் தகர்த்துவிடுவார்கள். அந்த மண்ணின் சொந்தக் கலாச்சாரத்தை அழித்துவிடுவார்கள். இலக்கியங்களைத் தடம் தெரியாமல் எரித்துவிடுவார்கள். மத வழிபாட்டுத்தலங்களைத் தரைமட்டமாக்கிவிடுவார்கள்.

முழங்கால் வரை பக்தாதில் இரத்த ஆறு ஓடியது. இலட்சக்கணக்காக நூல்களை டைக்ரிஸ் நதியில் கொட்டி அழித்தார்கள் மங்கோலியர்கள். டைக்ரிஸ் நதி நூல்களின் கறுப்பு மையும் மனிதர்களின் சிவப்பு இரத்தமும் கலந்து கறுஞ்சிவப்பாக ஓடியது என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வரலாற்றாசிரியர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்றால் மங்கோலியர்கள் தாங்கள் ஆக்கிரமித்த நகரங்களை வெறும் குப்பைமேடுகளாக மாற்றிவிட்டுப் போய்விடுவார்கள். குறைந்தது அடுத்த 100 வருடங்களுக்கு அந்நகரங்களைத் தலைதூக்கவே முடியாத அளவுக்கு ஆக்கிவிடுவார்கள்.

இப்பேற்பட்ட கொடும் படையினரை எதிர்த்துத்தான் அலாவுதீன் கில்ஜி மிகத் தீரத்துடன் போராடினார். அவரது வீரமும் போர்த் தந்திரமும் படையினர் மேல் அவர் வைத்திருந்த கட்டுப்பாடும் மிக்க ஒழுங்கும் நேர்த்தியும் கொண்ட படையும் அவர் தேர்ந்தெடுத்து அனுப்பிய மிகச் சிறந்த படைத்தளபதிகளும்தான் வெற்றிக்கான காரணிகள்.

ஆக, அலாவுதீன் கில்ஜி வெறும் இந்தியாவை மட்டும் மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்றிடவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தின் ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தையும் மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்றினார். ஹிந்துக்கள், முஸ்லிம்கள், புத்தர்கள், ஜைனர்கள் என்று இந்தியாவில் வாழ்ந்த அத்தனை மக்களையும்தான் மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்றினார்.

எப்படிக் காப்பாற்றினார் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இன் ஷா அல்லாஹ் வரும்…

#MSAH_வரலாற்றுத்_துளிகள்


'காவல் துறை உங்கள் நண்பன்' - துபாய் சார்ஜா

துபாய் சார்ஜா நகரில் ஆறு வயது சிறுமி வீட்டில் இருக்கும் மொபைலை எடுத்து விளையாட்டுத்தனமாக 3 பட்டனை அழுத்தி போன் செய்வதுபோல் காதில் வைத்துள்ளார் ஆனால் குழந்தை சுமையா அழுத்திய நம்பர் துபாய் போலீஸ் கண்ட்ரோலுக்கு சென்றுவிட அவர்கள் போனை அட்டெண்ட் செய்து யார் என்று கேட்டால் ஒரு குழந்தையின் குரல் உடனே நிலைமையை புரிந்து அன்போடு உனது பெயர் என்ன என்று கேட்டதும் சுமையா என்று சொல்ல உனக்கு என்ன வேண்டும் என்றதும் எனக்கு இப்பவே பக்ரீத் பெருநாள் கிப்ட் வேண்டும் என சொல்லி இருக்கிறாள் சுமையா. அவர்கள் சிரித்துக் கொண்டே போனை கட் செய்து அந்த மொபைல் நம்பர் உள்ள வீட்டை கண்டுபிடித்து பெருநாள் அன்பளிப்புகளுடன் சென்றுள்ளனர்.
வீட்டுக்கு போலீஸ் வந்ததும் சுமையாவின் பெற்றோர் குழப்பமான மனதோடு போலீசை பார்க்க அவர்கள் பயப்பட வேண்டாம் நாங்கள் சுமையாவை பார்க்க வந்துள்ளோம் என்று கூறி கை நிறைய அன்பளிப்புகளை அள்ளிக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
'காவல் துறை உங்கள் நண்பன்' என்பது பெயரளவில் இல்லாது செயலிலும் இருக்க வேண்டும்


Wednesday, July 01, 2020

ரஷ்யா & இஸ்லாம்.......

ரஷ்யா & இஸ்லாம்.......
பிரபல சர்வே நிறுவனமான Pew Research center, சென்ற வருடம் ரஷ்ய மக்களிடம் இஸ்லாம் குறித்த ஆய்வொன்றை நடத்தியது. அதில், 76% ரஷ்யர்கள் இஸ்லாம் மீது நன்மதிப்பை கொண்டிருப்பதாக தெரிவித்தனர். மக்கள் மட்டும் அல்ல, ரஷ்ய அரசியல்வாதிகளும் கூட இஸ்லாமை தங்கள் பாரம்பரியத்தின் பிரிக்கமுடியா சக்தி என்றும், தங்கள் நாட்டை கட்டமைத்ததில் கணிசமான பங்கு இம்மார்க்கத்திற்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனாலேயே ரஷ்ய அரசியலமைப்பு இஸ்லாமிற்கு கவுரவமான இடத்தை கொடுத்திருக்கிறது.
ரஷ்யாவின் இன்றைய முஸ்லிம் மக்கட்தொகை 17% ஆகும் (சுமார் 2.5 கோடி). இதுவே 2050 - ஆம் ஆண்டு வாக்கில் முப்பது சதவிதத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் மட்டும், முஸ்லிம்களின் மக்கட்தொகை சுமார் பத்து லட்சமாகும். முஸ்லிம்கள் இல்லையென்றால் மாஸ்கோவின் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது என இந்நகரத்தின் மேயர் ஒருமுறை குறிப்பிட்டது இங்கே கவனிக்கத்தக்கது.
ரஷ்யாவின் முஸ்லிம் பெரும்பான்மை குடியரசுகள் ஏழு ஆகும். செசன்யா, டகெஸ்டான், டாடரஸ்தான் ஆகியவை இதில் அடங்கும். வெளியுறவு மற்றும் ராணுவம் தவிர்த்து மற்ற அனைத்தையும் இவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். ரஷ்யா குறித்த உரையாடல் என்றால் அதில் செசன்யா இல்லாமல் இருக்காது. சோவியத் உடைந்த போது தங்களையும் தனி நாடாக அறிவித்துக்கொண்டார்கள் செசன்னியர்கள். பின்னர் ரஷ்யாவுடன் இரு போர்கள். முடிவில் தங்களுடன் செசன்யாவை மறுபடியும் இணைத்துக்கொண்டது ரஷ்யா. இன்று, ரஷ்ய அரசின் பாசிட்டிவ் அணுகுமுறைகளால், செசன்யாவில் பிரிவினைவாதம் குறைந்து அமைதி நிலவுகிறது.
சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய கல்வி/ஆன்மீக நிறுவனங்கள் ரஷ்யாவில் இயங்குகின்றன. இவற்றிற்கு மானியமும் வழங்குகிறது ரஷ்ய அரசு. டாடர் இன முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் டாடரஸ்தான் குடியரசின் தலைநகரான கசன் தான் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இரண்டாவது பெரிய ரஷ்ய நகரமாகும் (மாஸ்கோவிற்கு முதல் இடம்). இந்நகரில் அமைந்திருக்கும் Qolsarif பள்ளிவாசல், ஐரோப்பாவின் மிகப்பெரும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும் (படம் 1)
இரு பெருநாள் தினத்துடன், மற்றொரு தினத்தையும் தேசிய விடுமுறையாக அறிவித்திருக்கிறது டாடரஸ்தான் அரசு. அது என்னவென்றால், இவர்களின் மூதாதையர் இஸ்லாமை தழுவிய நாள் தான் அது. 922 - ஆம் ஆண்டு, மே 21-ல் டாடர் இன மக்கள், பாக்தாத்-திலிருந்து வந்த முஸ்லிம் மக்களின் பிரச்சாரத்தால் இஸ்லாமை தழுவினராம். ஆகவே அந்நாளை தேசிய விடுமுறையாக கொண்டாடுகிறது இந்த குடியரசு. டாடர் இன மக்களில் ஐவரில் ஒருவர் இஸ்லாமிய மார்க்க அறிஞராக இருக்கிறார். டகெஸ்டான் குடியரசில் பல்வேறு இஸ்லாமிய பல்கலைக்கழகங்களும், மதரசாக்களும் செயல்படுகின்றன.
ரஷ்யாவின் Norilsk நகரில் அமைந்துள்ள நார்ட் கமால் மசூதி தான் (படம் 2), உலகின் வடக்கோடியில் அமைந்துள்ள பள்ளிவாசலாகும். இதனை டாடர் இன மக்கள் நிர்வகிக்கின்றனர். எட்டாயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ள ரஷ்யாவில் இருந்து, வருடந்தோரும் சுமார் 20,000 முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கையை 28,000-மாக உயர்த்த வேண்டும் என தொடர்ந்து சவுதி மன்னரை வலியுறுத்தி வருகின்றனர் ரஷ்யர்கள்.
யாரும் எதிர்பாரா வண்ணம், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பில் (OIC) சேர விருப்பம் தெரிவித்தது ரஷ்யா. தற்பொழுது OIC-யில் பார்வையாளர் அந்தஸ்த்தில் இருக்கிறது. சோவியத் ரஷ்யாவிலும், அதற்கு பின்பான ரஷ்யாவிலும் நாம் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உண்டு. மக்கள் மனதில் ஆழமாக குடியேறிய ஒரு கொள்கையை அடக்குமுறையால் எல்லாம் வென்றுவிட முடியாது. என்றாவது ஒருநாள் அது உங்களை நிச்சயம் மிகைத்துவிடும். அப்பொழுது, அரவணைத்து செல்வது மட்டுமே உண்மையான வெற்றி என்ற நிதர்சனம் புரியவரும்.
படம் 3: செசன்ய தலைநகர் க்ராஸ்னி-யில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி.
இப்பதிவுக்கான ஆதார ஊடகங்கள்:
Pew Research, BBC, TRT World, The Times, NewsWeek, Russian Population census & Wikipedia
படங்களுக்கு நன்றி:
Wikipedia & TRT World.
சகோ @Aashiq Ahamed ன் பதிவிலிருந்து....
Tuesday, June 30, 2020

சட்டம் யாருக்காக? எப்படி எல்லாம் வளைகிறது பாருங்கள்!

சட்டம் யாருக்காக? எப்படி எல்லாம் வளைகிறது பாருங்கள்!
இந்தநிலையில் அவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் கோயிலில் ஒன்றாக பணிசெய்த தீட்சிதர்கள் உள்ளிட்ட அனைவரையும் தனிமைபடுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், நகராட்சி ஆணையளார் சுரேந்தர்ஷா உள்ளிட்ட நகராட்சி கரோனா தடுத்து பணி ஊழியர்கள் தொற்று பாதிக்கப்பட்ட தீட்சிதர்களின் தொடர்பில் இருந்த தீட்சிதர்களின் வீட்டு சுவற்றில் கரோனா குறித்து துண்டு பிரசுரத்தை ஒட்டினார்கள்.
இதற்கு தீட்சிதர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து சில வீடுகளில் ஒட்டப்பட்ட #துண்டுபிரசுரத்தை #கிழித்தனர். பின்னர் அனைவரும் கீழசன்னத்தில் சமூக இடைவெளியுடன் ஒன்றுகூடி துண்டு பிரசுரம் ஒட்டியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எங்க வீட்டில் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா, ஏன் இந்த பிரசுரத்தை ஒட்டினீர்கள். உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என சத்தம் போட்டனர்.
இதனையறிந்த காவல்துறை ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவல்துறையினர் இது வழக்கமான நடவடிக்கைதான் என்று சமாதனம் செய்தனர். ஆனால் தீட்சிதர்கள் இதனை ஏற்காமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அனைவரும் ஒன்று திரண்டு கூட்டமாக நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் தீட்சிதர்கள் எங்க வீடுகளில் துண்டுபிரசுரம் ஒட்டிய அதிகாரிகள் எப்படி ஒட்டினார்களோ அதேபோல் துண்டுபிரசுரத்தை மீடியாவை அழைத்து வந்து கிழிக்கவேண்டும். இல்லையென்றால் இந்த இடத்தைவிட்டு செல்லமாட்டோம் என்று கூட்டமாக 3 மணி நேரம் இருந்தனர்.
இதில் சில தீட்சிதர்கள் ஒட்டிய பிரசுரத்தை கிழிக்கவில்லையென்றால், சிதம்பரத்தில் உள்ள அனைத்து தீட்சிதர்களின் குடும்பத்திலுள்ள ரேசன் கார்டு, ஆதர்காடு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் சிதம்பரம் சார் ஆட்சியரிடம் ஒப்படைக்க போகிறோம் என காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதனைதொடர்ந்து சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்டவர்கள் அவர்களிடம் இனிமேல் நோட்டீஸ் ஒட்டமாட்டார்கள். இந்த பிரச்சனையை இதனுடன் விட்டுவிடுங்கள் என கேட்டுகொண்டதின் பேரில் தீட்சிதர்கள் கலைந்து சென்றனர். இதனால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.இந்நேரம் இது மத பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கும்

Dr.அஸ்தானா IPS, கேரளாவின் முன்னால் காவல் துறை தலைவர் (DGP), சிறந்த போலீஸ் அதிகாரி. அவர் இன்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
பெங்களூருவில் IPS அதிகாரியின் மனைவி (கொரோனா உறுதி செய்யப்பட்டவர்) பக்கத்து வீட்டு பெண்மணி மீது எச்சில் துப்பியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த இந்த செய்தியை பதிவிட்டு, நல்ல வேலை எச்சில் துப்பியது தப்லீக் இல்லை, இதுவே ஒரு தப்லீக் இப்படி செய்து இருந்தால் இந்நேரம் இது மத பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார் Dr.அஸ்தானா IPS

Monday, June 29, 2020

பூரி ஜகந்நாதர் ஆலய தேரோட்டத்தில்....

பூரி ஜகந்நாதர் ஆலய தேரோட்டத்தில் எந்த கொரோனா கட்டுப்பாடும் கடைபிடிக்கவில்லை.
இது பற்றி எந்த ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.
இவர்களில் எத்தனை பேருக்கு நோய் தொற்று தொற்றியுள்ளதோ?
எத்தனை பேருக்கு அதனை பரப்பினார்களோ!