Followers

Friday, December 30, 2011

சசிகலாவின் ஹோமமும் சவுதி அரேபியாவின் தண்டனையும்!

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் சசிகலா கோஷ்டியினர் சனிப் பெயர்ச்சியன்று ஹோமம் நடத்திய விவகாரம் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு, ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார்.
ஜெ.,வுக்கு நல்லதா? ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா சார்பில் செய்யப்பட்ட ஹோமம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்லதா, கெட்டதா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து உளவுத்துறையினர் விசாரித்தபோது, 10 லட்ச ரூபாய் செலவில் ஹோமம் செய்யப்பட்டதும், பட்டர்களுடன் சேர்ந்து டி.வி.மகாதேவன், "சத்ரு சம்ஹார நாசனம்... நாசையா... நாசையா' என்று எதிரிகளை அழிக்கும் மந்திரங்களை வாய்விட்டு கூறியதாகவும் தெரியவந்துள்ளது. ஹோமத்தை ஏற்பாடு செய்த சுந்தர்பட்டரோ, "ஹோமம் நடந்தது தெரியாது' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதால், ஸ்ரீரங்கத்தில் நடந்தது சுதர்சன ஹோமம் தானா என, உளவுத்துறையினர் குழம்பி போயுள்ளனர்.

-தினமலர் செய்தி

ஒரு நாட்டின் முதலமைச்சரின் முன்னாள் நெருங்கிய தோழி தனது வீழ்ச்சிக்கு காரணமானவர்களை ஹோமம் வளர்த்து பழி தீர்க்கிறார். கண்டிப்பாக அவரது ஹோமத்தில் நரேந்திர மோடியின் பெயரும் நம் ஊர் சோ ராமசாமியின் பெயரும் வந்திருக்கும். :-) ஹோமத்தினால் இனி என்ன நடக்குமோ என்று முடியில்லாத தனது தலையை கவலையோடு தடவிக் கொண்டிருப்பார் சோ.
இது போன்ற மூடப் பழக்கங்களை பத்திரிக்கைகள் கண்டிக்க வேண்டாமா? பில்லி சூன்யத்தில் அதீத நம்பிக்கை உடைய ஒருவர்தான் இத்தனை காலம் முதல்வரின் உடன்பிறவா சகோதரியாக இருந்துள்ளார். ஒரு வகையில் இவர் போயஸ் தோட்டத்தை விட்டு போனது நல்லதுதான். ஆனால் அதற்கு மாற்றாக அவரது இடததுக்கு சோ ராமசாமியின் மகன் வந்துள்ளதாக செய்தி வருகிறது. தலைவலி போய் திருகு வலி வந்த கதைதான். நம் முதல்வருக்கு சொந்தமாக சிந்திக்க தெரியாதா? ஆலோசனை வழங்க யாராவது ஒருவர் இருந்தேதான் ஆக வேண்டுமா? 'நாசையா...நாசையா' என்று கூறி ஹோமம் வளர்த்தால் எதிரிகள் அழிந்து விடுவார்களாம். அதுவும் ஸ்ரீரங்கம் கோவிலில் வைத்து நடத்தப்படுகிறது.இந்த காலத்திலும் இதிலெல்லாம எப்படி நம்பிக்கை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஹோமத்தினால் ஒருவருக்கு தீங்கு வரவழைக்க முடியும் என்றால் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு செய்திருக்க மாட்டாரா? அல்லது ஜெயலலிதாதான் கருணாநிதிக்கு செய்திருக்க முடியாதா? தமிழகத்தில் எத்தனை குடும்பங்கள் மாந்திரீக நம்பிக்கையால் நிரந்தரமாக பிரிந்துள்ளது என்பதை பட்டியலே இட முடியும். சாதி, இன, மத வேறுபாடு இல்லாமல் அதிகமான குடும்பங்கள் மாந்திரீக நம்பிக்கையினால் சீரழிந்து வருகின்றன. இதை சட்டம் போட்டு கடுமையாக தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்க்கலாமா?

இஸ்லாம் இதனை வன்மையாக கண்டிக்கிறது.

'நம்பிக்கைக் கொண்டோரே! மது, சூதாட்டம், பலிலீடங்கள், குறி கேட்பதற்கான அம்புகள் ஆகியவை அருவருப்பானதும் ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவீர்கள்'
-குர்ஆன் 5:90

சவுதி அரேபியாவில் இத்தகைய ஏமாற்று பேர்வழிகளை மிகக் கடுமையாக தண்டிக்கின்றனர். இங்கு ஜோசியம் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பேயோட்டுவது, பில்லி சூன்யம் வைப்பது என்ற அனைத்து மூட நம்பிக்கைகளையும் பரப்புவோரை சவுதி அரசு மிகக் கடுமையாக தண்டிக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நம் ஊர் மாலை மலர் செய்தியாக வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் வடக்கு ஜாவ்ப் மாகாணத்தை சேர்ந்த பெண் அமீனாபிந்த் அப்துல்கலாம் நாசர். இவர் பில்லிசூனியம் மற்றும் மாந்திரீகம் செய்து வந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சவுதிஅரேபியாவில் மாந்திரீகத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அமீனா மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட அமீனாவின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நேற்று அவர் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

-மாலை மலர்
13-12-2011
இந்த குற்றத்துக்கு மரண தண்டனையா? இது அநியாயம் என்று ஒரு சிலர் நினைக்கலாம். இது போன்ற குறி சொல்பவர்களாலும், பில்லி சூன்யம் வைப்பவர்களாலும் பிரிந்த குடும்பங்களையும் அதனால் எழுந்த சண்டைகளையும் ஒப்பிடும் போது இந்த இழப்பு நமக்கு பெரிதல்ல.

இது போன்ற ஒரு சட்டத்தை நம் நாட்டில் இயற்றினால் மறு நாளே தர்ஹாக்களில் வயிறு வளர்க்கும் போலி முல்லாக்களும், பிரேமானந்தா முதல் நித்தியானநதா வரை ஆசிரமங்களை மூடி விட்டு வேறு தொழில் பார்க்க சென்று விடுவர். பல குடும்பங்களின் வாழ்வும் சிறக்கும்.

இது போன்ற போலி ஆன்மீகம் எங்கும் வியாபித்திருப்பதற்கு மூல காரணமே இறைவனைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே! ஒரே இறைவன் என்று சொல்லும் முஸ்லிம்களில் பலர் தர்ஹாக்களில் சென்று காணிக்கை செலுத்தி நேரத்தையும் காலததையும் வீணாக்குகிறார்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் முன்னோர்களின் வழக்கு ஒழிந்து நம் நாட்டில் ஊருக்கு ஒரு கடவுள். கிருத்தவத்திலும் ஏக இறைவனை விடுத்து முககடவுள் கொள்கை.

வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்? -
என்று நமது முன்னோர்கள் இலக்கியத்தில் எழுதி வைத்துள்ளனர். அவன் நம் கிட்டே வருவதற்கு பதில் நாம் அவனைத் தேடி பயணிக்க வேண்டும். அதுதான் முறையும் கூட....

கோளில் பொறியில் குணமிலவே என்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
-குறள் 1:9

இறைவனின் திருவடிகளை வணங்காத தலைகள் பயனற்றவை. மனித உடலில் தலையே யாவற்றிலும் சிறந்த உறுப்பு. இந்த சிறப்பு வாய்ந்த தலைப் பகுதியை வேறு எவருக்காகவும் தாழ்த்தக் கூடாது என்பது இக்குறள் மூலம் வள்ளுவர் சொல்ல வரும் கருத்தாகும்.

ஆனால் இதற்கு நேர்மாற்றமாக கருணாநிதி காலிலும் ஜெயலலிதா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து தொலைக்கும் உடன் பிறபபுகளை பார்த்தால் வள்ளுவர் மனம் எவ்வளவு சிரமப்படும்.

-------------------------------------------------------------------

தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் பேசியதாவது: இன்றைய நவீன அறிவியலுக்கு, ஐரோப்பாவில், 1600ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராயல் சொசைட்டி தான் அடிப்படை. முந்தைய நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்டு, கோபர் நிகோஸ், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள், சூரியன் மற்றும் கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்து அறிவித்தனர்.
அறிவியல் பல்வேறு காலக்கட்டங்களை கடந்து, காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை தானே சரி செய்து கொண்டு வளர்ந்து வந்துள்ளது. பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் நம்பிக்கைகள், சிந்தனைகளே அறிவியல். இவை, உண்மைகளின் அடிப்படையில் சொல்லப்படுபவை.
அறிவியலில் கூட ஒரு காலக்கட்டத்தில் சரி என கருதப்படும் விஷயம்; மற்றொரு காலத்தில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. பல அறிவியல் முடிவுகள், நம்பிக்கைகள் தவறானவை என, அறிவியல் பரிசோதனைகள் மூலம் மறுக்கப்பட்டுள்ளது. லிமஸ் பாலிங் என்ற விஞ்ஞானி, வைட்டமின் சி அதிக அளவு எடுத்துக் கொண்டால், உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்; புற்றுநோயை குணப்படுத்தும் என நம்பினார். ஆனால், வைட்டமின் சி புற்றுநோயை குணப்படுத்தாது என, பின்னர் நிரூபிக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற பல அறிவியல் முடிவுகள் பின்னாளில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியை நிர்ணயிக்க கூடியவை அல்ல. நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்ததால் தான், மனிதனின் சராசரி ஆயுள் காலம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவத்திலும் அறிவியல் பூர்வமான விஷயங்களை மட்டுமே நம்ப வேண்டும். ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை நம்பக் கூடாது.
சுற்றியிருக்கும் உலகத்தை நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்காமல் அறிவியல் பூர்வமாக பார்க்க வேண்டும். பலமுறை பரிசோதிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளால் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத நம்பிக்கையின் அடிப்படையிலான மருத்துவ முறைகளை ஏற்றுக் கொள்ள கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
-30-12-2011

--------------------------------------------------------------------------------


'தானே' புயலால் அவதியுற்று பல இன்னல்களுக்கு உள்ளாகியிருப்போரின் சிரமம் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பவும் அனைவருக்கும் பிறக்கப் போகும் புததாண்டு சீரும் சிறப்புமாக அமையவும் அந்த ஏக இறையை பிரார்த்திக்கிறேன்.


Thursday, December 29, 2011

தூங்கியது நீ மட்டுமல்ல....

தூங்கியது நீ மட்டுமல்ல....

நமது எதிர்கால இந்தியாவும்தான்.

முடங்கியது நீ மட்டுமல்ல....

இளைஞர்களின் எதிர்கால கனவும்தான்.

வாங்கியது லஞ்சமுமல்ல....

ஏழைகளின் வியர்வை துளிகள்தான்.

Tuesday, December 27, 2011

திருப்பூரில் நடந்த பிஜேபியின் கூட்டம் பற்றி....

சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் பிஜேபியின் இளைஞர் அணி சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். சிறப்புப பேச்சாளர்களாக ஜடாயுவைவும, அரவிந்தன் நீலகண்டனையும் அழைததிருந்தனர். ஜடாயு தமிழ்இந்து இணைய தளத்தை நடத்தி வருபவர். இவரது இயற்பெயர் சங்கர நாராயணன். மற்றொருவரான நீலகண்டன் இணையத்தில் பல கட்டுரைகளை எழுதி வருபவர். இணைய தொடர்பு உடையவர்களுக்கு இந்த இருவருமே ஓரளவு பரிச்சயப்பட்டவர்கள்.

பாஜகவின் இளைஞர அணி நடத்திய இந்த கருத்தரங்கில் நிறைய இந்து மத வேதங்களையும் புராணங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று கருத்தரஙகை இணையத்தில் பார்வையிட்டேன். பேசிய இருவருமே இந்து மத பெருமையை கூறுவதை விடுத்து இஸ்லாம், கிறித்தவம், கம்யூனிஸம் என்றும் அதனால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பாதகம் வரப்போவதாகவும் பட்டியலிட ஆரம்பித்தனர்.

கிறித்தவர்கள் மாவோயிஸ்டுகளோடு சேர்ந்து கொண்டும் இஸ்லாமியர்கள் கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கொண்டும் இந்த நாட்டை பிரிக்க முயல்கின்றனர் என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைக்க ஆரம்பித்தனர். இதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. குர்ஆனும் அறிவியலும் பல இடங்களில் மோதுகின்றன என்ற சில விபரங்களை அரவிந்தன் பட்டியலிட்டார். ஆனால் அதற்கெல்லாம் முன்பே பதில் கொடுத்தாகி விட்டபடியால் மற்ற கேள்விகளுக்கு போவோம்.

அடுத்து பேச வந்த ஜடாயு 'இந்து மதத்தில் சாதிகள் இருக்கின்றது. அதனால் எந்த பிரச்னையும் இல்லை. விஸ்வகர்மா என்ற சாதியைச் சேர்ந்தவர்கள்தான் சிலைகளை செய்து தருகின்றனர். அவர்கள் இந்த சிலை செய்யும் தொழிலை விட்டு விட்டால் நமக்கு சிலை யார் செய்து கொடுப்பர்?' என்ற அருமையான வாதத்தை வைத்தார். அதாவது சக்கிலியன் சக்கிலியனாகவே இருக்க வேண்டும். தோட்டி தோட்டியாகவே இருக்க வேண்டும். அதாவது ராஜாஜி சொன்ன குலக் கல்வித் திட்டம். இநத சாதி முறைகளை அப்படியே தொடர்ந்து கொண்டு நாம் இந்துத்வாவில் ஐக்கியமாக வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார் ஜடாயு.

அவரைப் பார்த்து நாம் கேட்பது விஸ்வகர்மா சாதியினர் வேறு வேலைக்கு சென்று விட்டால் வழிபடுவதற்கு சிலை கிடைக்காது. சரி... அது போல் கோவிலில் மந்திரம் சொல்லி அர்ச்சகராக இருப்பதுதான் பிராமணர்களின் தொழில். ஆனால் ஜடாயு முதற்கொண்டு 95 சதமான பிராமணர்கள் இறைத் தொண்டு செய்வதில்லை. எந்த கோவிலும் சென்று மணியாட்ட செல்வதில்லை. எல்லோரும் நன்றாக படித்து அரசு உத்தியோகங்களிலும் அமெரிக்கா பிரிட்டன வளைகுடா என்று பறந்து சென்று வளமான வாழ்க்கையை வாழ்கின்றனர். இப்படி எல்லோரும் வெளி வேலைக்கு சென்று விட்டால் கோவிலில் அர்ச்சகராக வேலை செய்வது யார்? என்ற கேள்வியை கூட்டத்தில் யாரும் ஜடாயுவைப் பார்த்து கேட்கவில்லை. நாம் கேட்கிறோம் ஜடாயுவிடம். இதற்கு பதில் என்ன?

அடுத்து 'இன்று இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வஹாபியிசத்தால் பெரும் கேடு வருகிறது. முன்பெல்லாம் இஸ்லாமிய பெண்கள் இந்த அளவு புர்காவை விரும்ப மாட்டார்கள். கடந்த இருபது வருடமாக தமிழகம் எங்கும் பெண்கள் கருப்பு புர்காவிலே வலம் வருகிறார்கள். நமது நாட்டு பாரம்பரியத்தை ஒட்டிய சூஃபியிசத்தை எதிர்க்கின்றனர். காலம்காலமாக தர்ஹாவை வணங்கி வரும் இஸ்லாமியர்களை வஹாபிய கூட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள்' என்று ஜடாயு பொரிந்து தள்ளினார்.

இங்குதான் இவர்களின் தந்திரத்தை நாம் பார்க்க வேண்டும். அதாவது ஏக இறைவன், நாகூர் தர்ஹா, ஏர்வாடி, ஐயப்ப சாமி, முருகன், பிள்ளையார் என்று பல தெய்வ வணக்கத்துக்கு முஸ்லிம்கள் வந்து விட்டால் இவர்களுக்கு பிரச்னை இல்லை. ஏனெனில் சீக்கியம், பவுத்தம், கிறித்தவம் போன்ற மதங்களை இந்து மதத்தின் உட்பிரிவாக ஆக்கியது போல் இஸ்லாத்தையும் கொண்டு வரச் சொல்லுகின்றனர். இதற்கு இடையூறாக இருப்பது வஹாபிகள். இதுதான் ஜடாயுவைப் போன்றவர்களின் எரிச்சலுக்கு காரணம்.

இன்று வஹாபியிசம்(ஏகஇறைக் கொள்கை) தமிழகத்தில் பரவியதால் கிடைத்த நன்மைகளை இங்கு பார்க்க வேண்டும். முன்பெல்லாம் பாபரி மசூதி இடிப்பு தினத்தில பல இடங்களில் வன்முறை வெடிக்கும். முஸ்லிம்களும் பஸ்ஸை கல்லெறிந்து தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். தவ்ஹீத் ஜமாத் என்ற ஒரு வஹாபிய (ஏக இறைவனை மட்டுமே வணங்குபவர்கள்) அமைப்பு உருவாக்கப்பட்டவுடன் அந்த அமைப்பின் சார்பில் அதே இளைஞன் போராட்டத்துக்கு வருகிறான். அரசு மீது தனக்குள்ள வெறுப்பை யாருக்கும் பாதகம் வராமல் சாத்வீகமான முறையில் வெளிப்படுத்துகிறான். அவனது கோபம் போராட்டத்தினால் சற்று மட்டுப்படுத்தப்படுகிறது. கலவியறிவு அற்ற சமூகமாக இருந்தவர்களை இன்று படிப்பின் அருமையை உணர்த்தியிருக்கின்றனர். அரசிடம் போராடி தனி இட ஒதுக்கீடு கேட்டு அதில வெற்றியும் பெற்றுள்ளனர். புரோகிதத்தை ஒழித்து எல்லோரும் அறிஞர்களாக மாற முயற்ச்சி எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதற்கு பணம் சவுதி அரசு தருவதில்லை. அப்படி வாங்கினாலும் குற்றமில்லை. ஆனால் அனைத்து செலவுகளும் மக்களிடம் வசூலித்தே செய்யப்படுகிறது. ஒருவன குர்ஆனையும் முகமது நபியையும் உளப்பூர்வமாக நெருங்க ஆரம்பித்து விட்டால் தனது நாட்டை நேசிப்பான். தனது நாட்டு மக்களை நேசிப்பான், முழு உலக மக்களையும் நேசிக்க ஆரம்பித்து விடுவான். ஏனெனில் உலக மக்களின் மூல பிதா ஒருவரே. அவரே ஆதம் என்று குர்ஆன் அறைகூவல் விடுக்கிறது.

இப்பொழுது சொல்லுங்கள். வஹாபியம் வளர்ந்ததனால் இந்தியாவுக்கு நன்மையா? தீமையா?

அடுத்து ஆரிய திராவிட பாகுபாடு பற்றி ஜடாயு பேசும் போது ஆரிய இனம் திராவிட இனம் என்பதே கட்டுக்கதை என்றும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்த்தார். இது பற்றி பல ஆக்கங்கள் பலர் எழதினாலும் கலையகம் என்ற இணைய தளத்தில் பல புதிய செய்திகளை தருகின்றனர். நேரம் கிடைப்பவர்கள் படித்துப் பார்க்கவும்.

//இன்று ஈழத்தமிழரின் பூர்வீகமான வாழிடங்களில் சிங்களமயமாக்கல் நடைபெறுகின்றது. இதே போன்றதொரு கலாச்சார மேலாதிக்கம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய இலங்கையிலும் இடம்பெற்றது. அது ஆரிய மயமாக்கும் நடைமுறையாக ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில், சிங்கள மன்னர்கள் மட்டுமல்லாது, தமிழ் மன்னர்களும் தம்மை ஆரியர்கள் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப் பட்டனர். யாழ்ப்பாண இராஜ்யத்தை சிங்கை ஆரியன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். இவன் பெயரிலேயே "சிங்கமும், ஆரியனும்" இருப்பது கவனிக்கத் தக்கது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பெயரில் ஒரு அரச பரம்பரையினர், நீண்ட காலமாக வட இலங்கை ஆட்சியாளராக இருந்துள்ளனர். இவர்கள் கண்டி ராஜ்யத்துடன் சிறந்த ராஜதந்திர உறவுகளை பேணி வந்துள்ளனர். ஆரியச் சக்கரவர்த்திகள், இராமநாதபுரத்தை சேர்ந்த தமிழ்ப் பிராமணர்கள் என்றும், பாண்டிய மன்னனின் தளபதிகளாக ஈழத்திற்கு அனுப்பப் பட்டவர்கள் என்றும், ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது. (Aryacakravarti dynasty - http://en.wikipedia.org/wiki/Aryacakravarti_dynasty)//
-http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_26.html

கடைசியாக கேள்வி நேரமும் வந்தது. ஒரு அன்பர் ஜடாயுவிடம் 'ஒவ்வொரு சாதியினரும் வேறு வேறு கடவுளை வணங்குகின்றனர். சுடலைமாடன்சாமியை ஒரு சாதியினரும், சிவனை ஒரு சாதியினரும் பிள்ளையாரை ஒரு சாதியினரும் வணங்குகின்றனர். எப்படி இவர்கள் அனைவரும் ஒரு இயக்கத்தில் இணைவது?' என்று கேட்டார். அருமையான கேள்வி.

இதற்கு பதிலளித்த ஜடாயு 'பல சாதிகளும் பல தெய்வங்களை வணங்கினாலும் அவை அனைத்துமே ஒரு தெய்வத்திலிருந்து பிரிந்தவைகளே! எனவே பிரச்னையில்லை' என்றார். அதாவது தனக்கு கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதற்காக இங்கு ஏக தெய்வத்தை கொண்டு வருகிறார். ஆக பல தெய்வ வணக்கம் தவறு என்று தெரிந்து கொண்டே தனது சாதியின் மேலாண்மையை காப்பாற்றிக் கொள்ள ஏக தெய்வ மார்க்கமான இஸ்லாத்தை எதிர்க்கிறார். இப்படி பல குளறுபடிகளுக்கு மத்தியில் கருத்தரங்கு நிறைவுற்றது.

பெருமபான்மையான இந்து மக்களின் நலனுக்காக என்ற போர்வையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் கூட்டமோ ஒரு ஆயிரத்தைக் கூட தாண்டவில்லை. அந்த அளவு இந்து மக்கள் இந்துத்வாவின் உண்மை முகத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.

நீலகண்டனும், ஜடாயுவும் சிறந்த அறிஞர்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால் அஸ்திவாரம் பலமாக இல்லாமல் அடுக்கு மாடி கட்டிடம் கட்ட நினைத்ததுதான் இவர்கள் செய்த தவறு. சாதிகளை ஒழிக்காமல், பல தெய்வ வணக்கத்தை ஒழிக்காமல் இந்துக்களுக்குள் ஒற்றுமையை எக்காலத்திலும் உங்களால் கொண்டு வர முடியாது. சாதிகளை ஒழிக்க ஆரம்பித்தால் இந்து மதமும் இந்து மத வேதங்களும் காணாமல் போய் விடும். நமது முன்னோர்கள் வழிபட்ட 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கைக்கு திரும்பவும் பயணிக்க வேண்டி வரும். அப்படி பயணித்தால் மேட்டுக்குடியான உங்களைப் போன்றவர்களின் பிடி தளரும். இதற்கு நீங்களோ உங்களின் இந்துத்வாவின் தலைவர்களோ உடன் படபோவதில்லை. எனவே இந்த ஆரிய திராவிட பிரச்னை என்பது ஒரு தொடர்கதை........

மேலும் பெரியார் வாழ்ந்த இந்த மண்ணில் சாதி இருந்துதான் ஆக வேண்டும் என்று இந்த நூற்றாண்டிலும் சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது ஜடாயுவிடமும் அரவிந்தனிடமும் அதிகமாகவே உள்ளது.Sunday, December 25, 2011

மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்!

'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'
-குர்ஆன் 103:1,2,3

காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இறைவன் 'காலத்தின் மீது சத்தியமாக' என்று இந்த வசனத்தை ஆரம்பிக்கிறான். அன்றைய அரபுகள் தவறான காரியங்களைச் செய்யக் கூட சத்தியம் இட்டு சொல்வார்கள். அவர்களின் இந்த தவறை சுட்டிக்காட்டும் முகமாகவும் இறைவன் 'காலத்தின் மீது சத்தியமாக!' என்று ஆரம்பிக்கிறான். தொழுகையும் நேரம் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் தொழுகையை முடிக்க வேண்டும் என்பது நமக்கு இடப்பட்ட கட்டளை. ஒருவன் காலத்தை சரிவர உபயோகப்படுத்தினால் அவன்தான் வெற்றி பெறுகிறான் என்ற படிப்பினையும் இங்கு வருகிறது.

by suvanappiriyan

காலத்தின் முக்கியத்துவத்தை உலகின் பல நாடுகளும் சிறப்பித்தே கூறியுள்ளதை அதன் பழமொழிகளிலிருந்தே அறியலாம்.

“காலமும் கடலலையும் எவருக்காகவும் காத்திராது” என்பது காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஆங்கில பழமொழி.

“ஓரங்குலத் தங்கம் கொடுத்தாலும் ஓரங்குலக் காலத்தை விலைக்கு வாங்க முடியாது” என்பது சீனப்பழமொழி.

“காலம் கண் போன்றது ! கடமை பொன் போன்றது” என்பது நம் தமிழகப் பழமொழி.

நமது வள்ளுவரும் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல குறள்களை நமக்கு தந்துள்ளார்.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது

என்றும்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.
காலமறிதல்: அதிகாரம் 48

வெற்றி வாகை சூடக் கருதும் அரசன் அதற்குச் சாதகமான காலத்திற்க்காக காத்திருந்து இடம் அறிந்து செயல்பட்டால் வெற்றி பெற முடியும். விழிப்புடன் செய்தால் கைகூடாதனவும் கைகூடும் என்பது கருத்து.

இனி மேலே கூறிய குர்ஆன் வசனம் இறங்கிய காரணத்தைப் பார்ப்போம்:

அபுபக்கர் அவர்களின் பழைய தோழரான கல்தா இப்னு உஸைத் என்பவர் ஒரு நாள் அபுபக்கரிடம் சற்று கிண்டலாக 'நண்பரே! முன்னர் உமது திறமையாலும் உழைப்பாலும் வாணிபத்தில் பெரும் பொருளீட்டி வந்தீர். தற்போது பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்படுகிறீர். முன்னோர்களின் தெய்வமான லாத், உஜ்ஜா போன்ற தெய்வங்களையும் தற்போது வணங்குவதை விட்டு விட்டீர். மூதாதையர் மார்க்கத்தை உதறி தள்ளி இஸ்லாத்தில் இணைந்து விட்டீர். இதனால் நமது தெய்வங்களின் அன்பையும், சொந்தங்களின் ஆதரவையும் இழந்து பெரும் நஷ்டத்தில் அல்லவா உள்ளீர்?' என்று கேட்டார்.

கல்தாவின் கிண்டலான சொற்களைக் கேட்ட அபுபக்கர் அவர்கள் 'சத்தியத்தை ஏற்று நற்செயலாற்றுவோர் ஒருபோதும் நஷ்டமடைய மாட்டார்' என சட்டென பதிலளித்தார்கள். இந்த உரையாடலின் பின்னணியை வைத்தே இந்த வசனம் அருளப்பட்டதாக பத்ஹூல் அஜீஸ் என்ற நபிமொழி விளக்கவுரை நூல் கூறுகிறது.

குர்ஆனின் மிகச்சிறிய அத்தியாயமான இந்த வசனங்கள் மனிதன் வெற்றிபெறும் இலக்கை துல்லியமாக காட்டுகிறது. ஏக இறை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையை போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர மற்ற அனைவரும் நஷ்டவாளிகளே! என்பது இந்த வசனத்தின் சுருக்கமான விளக்கம்.

இரண்டு நபித்தோழர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'அல் அஸர்' என்ற இந்த அத்தியாயத்தை ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்திக் கொள்ளாமல பிரியமாட்டார்களாம். அந்த அளவு இந்த அத்தியாயத்தை நபித் தோழர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதனால்தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றிப் பெற்றார்கள்.

ஏக இறை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து உண்மையை போதித்து பொறுமையையும் போதிக்கும் மக்களாக உங்களையும் என்னையும் இறைவன் ஆக்கி அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக இப்பதிவை முடிக்கிறேன்.

நெகிழ வைக்கும் சில சம்பவங்கள்!

யூதர்களையும் கிறித்தவர்களையும் இஸ்லாமிய ஆட்சி வந்ததற்கு பிறகு முஸ்லிம்களால் கொடுமைபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது. இதை நாம் கீழே வரும் நபிமொழியைக் கொண்டு சரி பார்ப்போம்.

(6819. :புகாரி) இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்து விட்டிருந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுடைய வேதத்தில் (இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், 'எங்கள் (மத) அறிஞர்கள், (விபசாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங் கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்யவேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்' என்றார்கள்.

(அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத அறிஞரான) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'தவ்ராத்தைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். அவ்வாறே 'தவ்ராத்' கொண்டு வரப்பட்டபோது, யூதர்களில் ஒருவர் (அதில் பதிவாயிருந்த) கல்லெறி தண்டனை ('ரஜ்கி') பற்றிய வசனத்தின் மீது தம் கையை வைத்(து அந்த வசனத்தை 'யாருக்கும் தெரியாதபடி மறைத்)தார். மேலும், அதற்கு முன் பின்னிருந்த வசனங்களை வாசித்துக் காட்டலானார்.

அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'உன் கையை எடு!' என்றார்கள். அவர் தம் கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரின் கைக்குக் கீழே இருந்தது. எனவே, (அவர்கள் இருவருக்கும் தவ்ராத் வேதத்தில் உள்ளபடி) கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அவர்கள் இருவருக்கம் 'பலாத்' எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. (அவர்களின் மீது கல் விழுந்தபோது) அந்த யூதர் அவளின் மீது (கல்படாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக் கொண்டதை பார்த்தேன்.

Volume :7 Book :86

இந்த நபிமொழியில் நாம் பெறும் செய்தி அன்றைய யூதர்கள் அவர்கள் குற்றம் செய்தால் அவர்களின் வேதத்தின் கட்டளைப்படியே தண்டிக்கப்பட்டனர். இஸ்லாமியருக்கு எப்படி குர்ஆனின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே போல் யூத கிறித்தவர்களுக்கும் அவர்களின் வேத வசனத்தின்படியே தண்டனை வழங்கப்பட்டதையும் நாம் அறிகிறோம்.

அடுத்து ஒரு சம்பவம்

(6917. :புகாரி)அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், 'முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள்.

(அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா? என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா? என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள்.
Volume :7 Book :87

இங்கு முகமது நபி தன்னை மற்ற தூதர்களை விட உயர்த்தி பேச வேண்டாம் என்று தடுப்பதை பார்க்கிறோம். முகமது நபி குர்ஆனை தனது சொந்த கற்பனையில் உருவாக்கியிருந்தால் இப்படி ஒரு வார்த்தை வந்திருக்காது. ஏனெனில் எந்த மனிதனும் ஒரு மதததையோ ஸ்தாபனத்தையோ உருவாக்குவது தனது சீடர்கள் தனக்கு சேவகம் செய்ய வேண்டும். தனக்கு காணிக்கையாக பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுவர். சாய்பாபா முதற்கொண்டு ரவிசங்கர் வரை இந்த நிலைதான்.

ஆனால் இங்கு நிலைமையை தலைகீழாக பார்க்கிறோம். ஒரு முஸ்லிம் முகமது நபியை உயர்த்தி பேசி ஒரு யூதரை அடித்து விடுகிறார். அந்த யூதரும் முகமது நபியிடம் முறையிட்டால் நீதி கிடைக்கும் என்று நம்பி முறையிடுகிரார். முகமது நபியும் தன்னை புகழ்ந்த முஸ்லிமை கண்டித்து மோசேயை விட என்னை அதிகம் புகழாதீர்கள் என்று அந்த முஸ்லிமுக்கு அறிவுறுத்துகிறார்.

இதுதான் இஸ்லாம்!

'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை(முகமது நபியை) அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.'
-குர்ஆன் 2:146

Friday, December 23, 2011

ஆட்டத்தை நிறுத்தினால் என்ன குடியா மூழ்கிவிடும்?'ஃப்ளாஸ் மோப்' என்று கூறி ஆட்டமாம் பாட்டாம்

அதுவும் கல்கத்தாவிலாம்!

இவர்கள் போடும் ஆட்டத்தில் வீழ்வது

இந்த இளைஞர்கள் மட்டும் அல்ல

நம் நாட்டு கலாச்சாரமும்தான்! அதோடு

பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளமும்தான்!

ஒருவாரம் முன்புதான் இங்கு கள்ளசாராயத்தால் வீழ்ந்த

உயிர்கள் இருநூறுக்கு மேல்!

இரு வாரம் முன்பு மருத்துவமனையின் அலட்சியத்தால் வீழ்ந்த

உயிர்கள் நூற்றுக்கு மேல்!

அந்த மக்களை இழந்த சொந்தங்களின் வாழ்வோ விடிகிறது

தினமும் கண்ணீரில்!

அந்த மக்களின் சொந்தங்களைப் பார்த்து நாலு ஆறுதல்

வார்த்தைகள் கூட கூற வேண்டாம்!

அந்த மக்களின் இழப்புக்கு நஷ்ட ஈடு கேட்டு அரசிடம்

போராடக் கூட வேண்டாம்!

இது போன்ற கூத்துக்களை சற்றைக்காவது நிறுத்தினால் என்ன?

குடியா மூழ்கி விடும்!

Wednesday, December 21, 2011

வெள்ளை மாளிகை முன்பு தொழும் ஒரு முஸ்லிம்!
ஒரு மனிதன் தனது இறை கடமையை செய்வதற்கு எந்த அளவு எதிர்ப்பு வருகிறது என்பதை பாருங்கள். உலகிலேயே நாகரிகமானவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கர்கள் தொழும் ஒரு அடியானிடம் நடந்து கொள்ளும் முறை இதுதானா?

'தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையோ, அல்லது இறையச்சத்தை ஏவுவதையோ அவன் பொய்யனெக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?

அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?'

-குர்ஆன் 96:9,10,11,12,13,14.


1400 ஆண்டுகளுக்கு முன்பு இறங்கிய இந்த வசனம் இன்று அமெரிக்காவில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு அருமையாக பொருந்துகிறது என்பதை எண்ணி வியந்து போகிறேன். இந்த முஸ்லிம் குடித்து விட்டு தரையில் உருளவில்லை. அல்லது எந்த பெண்ணிடமும் தவறாக நடக்கவில்லை. எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை.

தொழ வேண்டிய நேரம் வந்தவுடன் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஒரு ஓரமாக தனது இறைவனை பிரார்த்திப்பதுதான் இவர்களை இந்த அளவு எரிச்சல்படுத்துகிறது. இது போன்று கேலியும் கிண்டலும் அடிக்கும் கூட்டத்தைப் பார்த்து இறைவன் மேலும் கூறுகிறான்.....

'தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை அவர்கள் கேலியாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்'
-குர்ஆன் 5:58

இத்தனை தூரம் காட்டு கத்தல்கள் வந்தாலும் அதைப் பற்றி எந்த ஒரு கவலையும் படாமல தனது உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் இவரின் நெஞ்சுரத்தை எண்ணி வியக்கிறோம்.

'நம்பிக்கைக் கொண்டோர் வெற்றிப் பெற்று விட்டனர். அவர்கள் தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணர்களைப் புறக்கணிப்பார்கள்'
-குர்ஆன் 23:1,2,3


ஆம்...அந்த முஸ்லிம் வெற்றி பெற்று விட்டார். பணிவுடன் தொழுகவும் செய்கிறார். கரடியாகக் கத்தும் அந்த வீணர்களைப் புறக்கணித்தும் விட்டார்.

Monday, December 19, 2011

எச்சில் இலையில் புரளும் ஏழாம் அறிவு!
'மடே ஸனானா' என்ற ஒரு ஆன்மீக நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் டும்குர் மாவட்டம் குக்கே சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அது என்ன 'மடே ஸ்னானா'?

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மேல் உருண்டு அவ்வெச்சில்கள் தமமேல் படும்போது சுப்ரமணிய சுவாமியின் அனுக்கிரகம் கிடைக்கும் என்றும் இதன் மூலம் தோல் வியாதிகளும் மற்ற சிரமங்களும் தங்களை விட்டு அகலும் என்றும் வேற்றுசாதிக்காரர்கள் நம்புகின்றனர். இதைத்தான் இந்த காணொளி நமக்கு விளக்குகிறது. இது பற்றி பிரபல இந்து நாளிதழ் தனது பத்திரிக்கையில் இதைப்பற்றிய செய்தியை 01-12-2011 அன்று வெளியிட்டதால் இது வெளி உலகுக்கும் இன்று தெரிய வந்துள்ளது.

இந்துவில் வந்த செய்தியை இங்கும் இங்கும் சென்று பார்ததுக் கொள்ளுங்கள். தினமலரில் இது பற்றிய செய்தியை நான் பார்க்கவில்லை.

தோல் வியாதி வந்தால் தோல் மருத்தவரிடம் சென்று வைத்தியம் பார்ப்பது ஆறறிவு உள்ள மனிதனுக்கு உகந்தது. முஸ்லிம்களிலும் சிலர் வயிற்று வலிக்கு நாகூர் தர்ஹாவில் சென்று படுத்து கொள்வது போல் இவர்கள் தோல் வியாதிக்கு எச்சில் இலைகளில் உருளுகின்றனர். இரு மதத்தவரும் செய்யும் இந்த மூட பழக்கத்துக்கு வேத நூல்களிலிருந்து எந்த ஆதாரத்தையும் காட்ட மாட்டார்கள்.

எச்சில் இலையில் புரளும் இந்த பழக்கத்தை விடச் சொல்லி சில தலித் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இந்த பழக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் சில நபர்கள் எதிர்ப்பவர்களை எவ்வளவு மூர்க்கமாக தாக்குகிறார்கள் என்பதை பாருங்கள். இதில் ஒரு விசேஷம அடிப்பதும் அடி வாங்குவதும் இங்கு தலிததுகளே! இந்த நிலையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. படிப்பறிவு இல்லாத இந்த மக்களின் மனதில் பக்தியின் பெயரால் போதையை ஏற்றி தான் என்ன செய்கிறோம் என்பதை சிந்திக்கக் கூடவிடாது செய்கிறார்கள் சில அதி மேதாவிகள்.

இது போல் உடுப்பி மாவட்டத்தில் ஒரு ஊரில் பிராமணப் பெண்களின் 'கழிவுத் துணிகளை' தலித்துகள் சேகரித்து துவைத்துக் கொடுக்கும் பழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது.
தயவு செய்து இதையும் யாரும் காணொளியில் ஏற்றிவிட வேண்டாம். :-)

மக்கள் அனைவரும் படித்து விட்டால் சாதி பாகுபாடும் தீண்டாமையும் ஓடி விடும் என்று நாம் எண்ணி இருந்தோம். ஆனால் படித்தவர்கள் மத்தியில்தான் சாதிப் பாகுபாடு அதிகம் காணப்படுகிறது. இதற்கு உதாரணமாக திருமணத்துக்கு வரன் தேடும் பகுதியில் எந்த அளவு படித்தவர்கள் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதை அறியலாம்.

இதை எல்லாம் சட்டம் போட்டு ஒரு அரசு தடுக்க வேண்டும். ஆனால் ஆளும் பாரதீய ஜனதாவின் உள்துறை அமைச்சர் ''இது போன்ற நிகழ்ச்சிகள் நமது பண்பாட்டை காக்கின்றன என்றும் இந்த நிகழ்ச்சியை சட்டம் மூலம் தடுத்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்றும்” திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மேலும் ஹிந்துவில் கல்வி அமைச்சரின் பொன்மொழிகளை பாருங்கள்.
Minister for Higher Education V.S. Acharya said on Saturday that it was not possible to ban the ritual of “made snana” followed in Kukke Subrahmanya as a large number of people believed in it.
He was speaking at the valedictory of the one-day “Tulunadu Daivaradhakara Sammelan” titled “Kodiyadi” at Alevoor near here.

Dr. Acharya said that some groups and politicians were demanding a ban on “Made Snana”. “They are speaking as if we have started the ritual of “Made Snana”. But it had been prevalent for a long time,” he said.
He said the seer of Sode Math Sri Vadiraja (1480-1600) had in his work “Tirtha Prabhanda” made a reference to “Made Snana” at Subrahmanya.

-The Hindu 18-12-2011

இன்னும் இவர்கள் கையில் முழு இந்தியாவையும் கொடுத்தால்.....


வேண்டாம்....நாங்கள் இந்துக்கள் எங்களுக்குள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்வோம். முஸ்லிமான நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்று பின்னூட்டம் காரமாக வரும். நமக்கேன் வமபு......

'அவர்கள் அவனது அடியார்களில் சிலரை அவனில் ஒரு பகுதியாக ஆக்குகின்றனர். மனிதன் தெளிவான நன்றி கெட்டவன்.'
-குர்ஆன் 43:15

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?
ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்
வாசலில் பதித்த கல்லை மழுங்கவும் மிதிக்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.
ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே..
- சிவ வாக்கிய சுவாமிகள்)

Saturday, December 17, 2011

கும்பகோணததில் ஆரிய திராவிடம்....

ஒரு வேலையாக கும்பகோணம் சென்று செல்வம் தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வந்த வேலை சீக்கிரமே முடிந்தது. சரி ஊருக்கு செல்லலாம் என்று பஸ் ஏற வந்தால் 'நித்யஸ்ரீ பாடுகிறார்' என்ற ஒரு போர்டை பார்த்தேன். உள்ளே கச்சேரியும் ஆரம்பமாகி இருந்தது. 'கண்ணோடு காண்பதெல்லாம்....' 'சௌக்கியமா?...' பாடல்களை எல்லாம் கேட்டதால் நாமும் சென்று கேட்போமே என்று அரங்கத்தினுள் சென்றேன். இலவசம் என்று நினைத்தேன். ஆனால் 100 ரூபாய் டிக்கெட்டை என்னிடம் கட்டி விட்டார்கள். வேறு வழி இல்லாமல் உள்ளே சென்று உட்கார்ந்தேன்.நித்யஸ்ரீ தெலுங்கு கீர்த்தனைகள் சிலவற்றை மிகவும் சுவாரஸ்யமாக பாடிக் கொண்டிருந்தார். அந்த அரங்கத்தில் இருந்த அனைவருமே ரொம்பவும் ரகித்து பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர். 'தலையை ஆட்டும் புரியாத கூட்டம்...' என்ற வைரமுத்துவின் வரிகள்தான் எனக்கு ஞாபகம் வந்தது. அங்கு அமர்ந்திருந்த ரசிக கூட்டததை ஒரு தரம் நோட்டம் விட்டேன். எங்கும் மடிசார் மாமிகள் குடும்ப சகிதம் வந்திருந்தனர். அரஙகு நிரம்பி இருந்தது. அந்த கூட்டத்தில் நான் ஒருவன் மட்டுமே முஸ்லிம் என்று நினைக்கிறேன். போய் விடலாமா என்று எழுந்தபோது 100 ரூபாய் ஞாபகம் வரவே இரண்டு மூன்று பாடல்களை கேட்டு விட்டு செல்வோம் என்று திரும்பவும் உட்கார்ந்து விட்டேன். பிராமண குடும்பங்களை தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்பதையும் பிறகு தெரிந்து கொண்டேன்.

அங்கு நான் அமர்ந்திருந்த சூழல் என்னை அது தமிழகம் என்றே நினைக்கச் சொல்லவில்லை. அந்த அளவு உடை நிறம் பேச்சு ஜாடை என்று அனைத்திலுமே வேறுபட்ட கோணத்தையே பார்த்தேன். அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சிலரை பார்ப்பதற்கும் ஒட்டு மொத்தமாக சில ஆயிரம் பேர்களை ஓரிடத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

ஏன் இத்தனை காலம் ஆகியும் ஆரிய திராவிட பிரச்னை ஓயவில்லை என்பதை அங்கு கண்டு கொண்டேன். ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து தமிழகம் வந்து 2000 வருடங்களுக்கு மேலாகியும் உள்ளூர் மக்களோடு திருமண உறவு வைத்துக் கொள்ளாததனால் ஒரே மதத்தைப் பின் பற்றும் இவர்களிடையே இன்று வரை பிளவு இருந்தே வருகிறது. அன்னிய மதம் என்று இவர்களால் சொல்லப்படும் இஸ்லாமியர்கள் இந்த திராவிடர்களோடு பெண் கொடுத்து பெண் எடுத்து இந்த மண்ணின் மைந்தர்களாக மாறி விட்டனர். இந்த தமிழகம் இஸ்லாத்தையும் தனது மார்க்கமாக சுவீகரித்துக் கொண்டது. இன்று வரை யாரும் இஸ்லாமியர்களைப் பார்த்து'நீ அந்நிய தேசத்துக் காரன்' என்று சொன்னதில்லை. இநதுத்வாவாதிகள் கூட 'முஸ்லிம்களை தாய் மதம் திரும்ப வைக்க வேண்டும்' என்ற கோரிக்கையைத்தான் வைக்கிறார்கள். இவர்களும் முஸ்லிம்களை அந்நியர்கள் என்று பார்ப்பதில்லை.

ஆனால் ஆரியர்களை 3000 வருடங்கள் கடந்த பின்பும் ஒரே மதத்தைப் பின்பற்றியும், ஒரே மொழியையும் பேசும் திராவிடர்கள் இன்றும் இவர்களை அந்நியப் படுத்தியே பேசுகின்றனர். இதற்கு ஆரியர்கள் தங்களை மேன்மக்களாக கருதியதும், திராவிடர்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியதும் காரணமாக இருக்கலாம்.

என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை செயயும் எகிப்தியரை சில நேரங்களில் நோட்டம் விடுவது உண்டு. தாங்களே சிறந்த அறிவாளி என்றும் மிகச் சிறந்த நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் என்றும் அவ்வப்போது சொல்லிக் கொள்வான். இவர்கள் இஸரவேலர்களின் வழிவந்தவர்கள்.

'இஸராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும் உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைபடுத்தியிருந்ததையும் எணணிப் பாருங்கள்.'
-குர்ஆன் 2:47

இஸ்ரவேலர்களுக்கு வழங்கிய ஆட்சி, அதிகாரம், பொருள் வசதி போன்ற சிறப்புகளையே இறைவன் இங்கு குறிப்பிடுகிறான். ஆனால் இவர்களோ பிறப்பிலேயே தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று பின்னாளில் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள. இந்த எண்ணம் இன்றைய நம் நாட்டு பிராமணர்களிடமும் இருந்து வருவதை இன்றும் நாம் காணலாம். எகிப்தியர்களின் நடை உடை பாவனை அனைத்தும் நம் நாட்டு பிராமணர்களை ஒத்தே இருக்கும். யூதர்களின் ஒரு பிரிவே ஆரியர்கள் என்றும் அதில் ஒரு பிரிவே நம் நாட்டு பிராமணர்கள என்றும் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இன்று வரை இந்துத்வாவாதிகள் இஸ்ரேலோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதையும் நான் இங்கு பார்க்கலாம்.

ஆரியர்களின் வருகைக்கு முன்பு நமது தமிழகத்தில் ஏக இறைவனையே வணங்கி வந்திருக்கின்றனர். சில கிராமங்களில் 'ஒப்பிலியப்பன்' என்று இறைவனை அழைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ஒப்புவமை இல்லாதவன் இறைவன் என்ற சொல்லே ஒப்பிலியப்பனாக மருவியுள்ளது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் மந்திரமும் ஏக இறைவனை பறைசாற்றுகிறது. சிவன் என்பதும் ஓரிறையே குறிப்பதாகவும் ஆரியர் வருகைக்கு பிறகே சிவனுக்கு உருவமும் சிவலிங்கமும் உண்டானதாக படிக்கிறோம். உருவம், அருவம், அருவுருவம் என்று நம் முன்னோர்கள் இறைவனை பலவாறாக உருவகப்படுத்தியிருந்திருக்கின்றனர்.

அடுத்து நெருப்பை கடவுளாக வணங்கும் பழக்கமும் தமிழர்களாகிய நமது முன்னோர்களிடம் இல்லை. ரிக் வேதத்தில் 'அக்னி' என்ற கடவுள் பல இடங்களில் கூறப்படுகிறது. இப்படி நெருப்பை வணங்குபவர்கள் ஈரானிலும், ஆர்மீனியாவிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் இருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன. ஆரியர்களின் பூர்வீகம் இந்த நாடுகளாக இருந்திருக்கலாம்.
ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கஜகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற் கத்திய நாகரிகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய கால கட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம். பி. பி. சி. தொலைக்காட்சியில் தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரிகம் கிரேக்க நாகரிகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம். இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார். இந்த நகர கண்டு பிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார். இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை ‘விசிட்டிங்’ பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பிராமண குடும்பத்தோடு எனக்கு சின்ன வயதிலிருந்தே தொடர்பு உண்டு. எனது தாத்தாவின் நண்பர் ஓய்வு பெற்ற பிராமண ஆசிரியர். எனக்கு டியுசன் எடுக்க அந்த ஆசிரியர் ஒத்துக் கொண்டார். தினமும் 5 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை அந்த ஆசிரியரின் வீட்டில்தான் எனக்கு பாடம். இது கிட்ட்ததட்ட நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு படிக்கும் வரை தொடர்ந்தது. அந்த ஆசிரியரின் மனைவிக்கு மூன்று பெண் குழந்தைகள். ஆண் குழந்தை கிடையாது. எனவே என்னிடம் அவர் மிகவும் பாசமாக நடந்து கொள்வார். வீட்டில் செய்யும் பலகாரங்கள் எல்லாம் எனக்கும் வந்து விடும். எனது தாத்தா கொடுக்கும் டியூஷன் பீஸை ஓசியில் பலகாரங்கள் தின்றே சரி கட்டியிருப்பேன் என்று நினைக்கிறேன்.

நவராத்திரி அன்று அவர்கள் வீட்டில் கொலு வைப்பார்கள். என் வயதையொத்த எனது ஆசிரியரின் இளைய மகளும் நானும் சேர்ந்து கொலு பொம்மைகளை எல்லாம் துடைத்து அழகாக அடுக்கி வைப்போம். கொலுவுக்கு வரும் அவரது உறவினர்கள் என்னிடம் 'அம்பி உன் பேர் என்னப்பா?' என்று கேட்பர். இஸ்லாமிய பெயரை கேட்டவுடன் முகத்தை சுளித்துக் கொண்டு போன ஒரு சில மாமிகளும் உண்டு. கொலுவில் உள்ள ஒரு பொம்மை அழகாக தோன்றவே ஒன்றை ஆசிரியரிடம் கேட்டேன். அவரும் தந்தார். எனது வீட்டிற்கு சென்று எனது தாயாரிடம் பெருமையாக அதைக் காண்பித்தேன். உடன் எனது தாயின் முகம் சிவந்தது. 'இது போன்ற பொம்மைகளை எல்லாம் நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களிடமே திரும்ப கொடுத்து விடு' என்று கண்டிப்புடன் கூறி விட்டார். அந்த வயதில் 'ஏன் இவ்வளவு கோபப்பட்டார்' என்ற விபரம் எனக்கு அப்போது விளங்கவில்லை.

சரி..இனி அரங்குக்கு வருவோம். புரியாத பாஷையில் பாடிக் கொண்டிருக்கிறாரே என்று எழும்ப எத்தணித்தபோது தமிழ் பாடல்களை பாடத் துவங்கினார் நித்யஸ்ரீ. திரும்பவும் உட்கார்ந்தேன். சில பாடல்களை கேட்டு விட்டு நேரமானதால் அரங்கை விட்டு திரும்பவும் தமிழ் நாட்டுக்குள் நுழைந்தேன். :-)
Wednesday, December 14, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? -பு(து)த்தகம்இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள்

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் திருமணம் செய்த போது முதல் மனைவிகள் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களின் கதவைத் தட்டியுள்ளனர். நீதி மன்றங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரைத் தண்டிக்க மறுத்து விட்டதையும் நாம் காண முடிகின்றது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன. ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை. எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. (பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு ஆஒத 1965 நஈ 1566)

சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது. (பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திர கோஷ் AIR 1971 sc 1153)

ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம். (லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848)

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105) இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன.
பலதார மணத்தைத் தடுப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்

ஆண்களில் அதிகமானோர் ஒரு மனைவியுடனேயே காலம் முழுவதும் வாழ்பவர்களாக உள்ளனர் என்றாலும் கனிசமான ஆண்கள் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து இரண்டாம் திருமணம், மூன்றாம் திருமணம் செய்கின்றனர். மற்றும் சிலர் வைப்பாட்டி வைத்துக் கொண்டு முதல் மனைவிக்குத் துரோகம் செய்பவர்களாக உள்ளனர். வேறு சிலர் அவ்வப்போது விபச்சாரிகளிடமும், அறிமுகமான பெண்களிடமும் தகாத உறவு வைப்பவர்களாக உள்ளனர்.

இவர்களைத் தடுத்து நிறுத்த எந்தச் சட்டமும் இல்லை. இத்தகையோரால் ஏற்படும் மோசமான பாதிப்புகளையும், தீய விளைவுகளையும் அறிந்தால் தவறான வழியில் செல்லும் நிலையில் உள்ளவர்களுக்குப் பலதார மணத்தை அனுமதிப்பதைக் குறை கூற மாட்டார்கள்.
மலேசிய இந்து மக்கள் போர்க்கொடி
இதனால் ஏற்படும் தீய விளைவுகளை மலேசிய இந்து இயக்கங்களின் தீர்மானத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணக்கக் கூடாது என்ற சட்டம் நமது நாட்டைப் போலவே மலேசியாவிலும் உள்ளது.
அங்கே முஸ்லிமல்லாதவர்கள் தமக்கும் பலதார அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருமணம் ஆகாமல் பல பெண்கள் கர்ப்பமடைவதாகவும், அவர்கள் கைவிடப்படுவதாகவும், தகப்பனில்லாத குழந்தைகள் தாறுமாறாக அதிகரித்து விட்டதாகவும் கருதும் மலேசிய நாட்டு இந்துக்கள் இதைத் தவிர்க்க ஒரே வழி பலதார மணம் மட்டுமே என்ற உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர்.

மனைவிக்குச் செய்யும் துரோகம் என்ற அடிப்படையில் பலதார மணத்துக்குத் தடை போடப்பட்டாலும் எதைத் துரோகம் என்று கருதுகிறார்களோ அதைத் தடுக்க முடியவில்லை.

மலேசியாவில் உள்ள பி.பி..பி கட்சி தனது இளைஞர் அணி மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் பி.பி.பியின் இளைஞர் அணித் தலைவர் முருகையா பின்வருமாறு பிரகடனம் செய்தார்.

'சமுதாயத்தில் திருமணம் புரிந்த பல ஆடவர்கள் மற்ற பெண்களுடன் வைத்துக் கொள்ளும் உறவின் மூலம் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குரியதாக இருக்கிறது. இந்தப் பெண்களின் பிரச்சினைகள், சிக்கல்களைக் கருதி முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இருதார அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும்' என்பது தான் அவரது முழக்கம்.

இவரது கருத்துக்கு மலேசியாவில் உள்ள சில பெண்கள் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

ஆனாலும் இந்த எதிர்ப்புகளால் முருகையா தனது கருத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

'நான் சொன்ன கருத்தும் ஒரு வகையில் பெண்ணுரிமை சம்மந்தப்பட்டது தான். எனது கருத்தை இந்த மகளிர் பிரிவுகள் தவறாக அர்த்தம் கொண்டு விட்டன. எனது கருத்துக்கு இவர்கள் தெரிவிக்கும் ஆட்சேபமானது இரண்டாவது மனைவிகள் பலரின் உரிமைகளை இவர்களே மறுதலிக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது. பி.பி.பி இளைஞர் உச்ச மன்றத்தில் எல்லோரும் கூடிப் பேசியே இந்தக் கருத்தை நான் வலியுறுத்தினேன். இது எனது சொந்தக் கருத்து மட்டுமல்ல. இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ளுங்கள் என்று யாரையும் நாங்கள் ஊக்குவிக்கவில்லை. இருதார அனுமதியை அரசாங்கம் தந்தால் அது முஸ்லிமல்லாதாரிடையே நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் என்பதே எனது வாதம். தன்னால் பாதிக்கப்பட்ட இரண்டாவது பெண்ணுக்கும் ஒரு ஆண் பொறுப்புள்ளவனாக இருக்கச் செய்யும்' என்று தனது கருத்தை முருகையா ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.

பினாங்கு மாநில பி.பி.பி மகளிர் அணித் தலைவர் எலிசபெத் ஸ்டெனிஸ் லாவ்ஸ் என்பவர் முக்கியமானவர்.

மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு இருதார அனுமதியை வழங்கலாம். என் கணவரே இன்னொரு மனைவியை மணக்க நானே அனுமதிப்பேன். இருவரையும் வைத்துக் காப்பாற்றுவதாக உறுதியளித்தால் நானே என் கணவருக்கு அனுமதியளிப்பேன் இது ஒன்றும் பாவம் அல்ல. என் கருத்தைப் பல பெண்கள் ஆமோதிப்பார்கள்.

ஒரு கணவர் இரண்டாவது பெண்ணுடன் வைக்கும் தொடர்பின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்தே பி.பி.பி இளைஞரணி தனது கருத்தை வலியுறுத்தியது. அதனை நானும் ஆதரிக்கிறேன்.

இந்தக் குழந்தைகள் தகப்பன் இல்லாக் குழந்தைகள் என்று அநியாயமாக முத்திரை குத்தப்படுகின்றனர்.

இருதார விஷயத்தில் பெண்கள் கனவுலகில் ஒளிந்து கொண்டிருக்கும் போக்கைக் கைவிட்டு வெளியே வர வேண்டும். நடைமுறை உலகுக்கு அவர்கள் திரும்ப வேண்டும்.என்றெல்லாம் இவர் தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

தகப்பனில்லாத இளைஞர்கள் அதிகளவில் உருவாகியுள்ளதால் இளைஞர்களிடையே இந்தக் கருத்து வேகமாகப் பரவி வருகிறது.

மலேசியாவில் முஸ்லிமல்லாத சமுதாயத்தின் நிலையைப் பற்றி தேசியப் பதிவு இலாகா பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் திருமணம் ஆகாமல் பெண்கள், குழந்தைகள் பெறும் சம்பவங்கள் கவலைக்குரிய கட்டத்தை அடைந்துள்ளது. இவர்களில் அதிகமானோர் கல்லூரிப் பெண்கள். 17 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதில் அதிகமாக இருக்கிறார்கள் என்று தேசிய பதிவு இலாகா இயக்குனர் டத்தோ அஜிகான் கூறுகிறார். ஆதாரம்: 5-1-2002 தேதியிட்ட மலேசியா நண்பன் நாளிதழ்.

இரண்டாம் தாரமாகவாவது மணந்து கொண்டு சட்டப்பூர்வ உரிமை தந்தால் மட்டுமே முஸ்லிம் பெண்கள் தங்களை ஆண்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

முஸ்லிமல்லாத பெண்களோ ஆசை வார்த்தை காட்டப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். குழந்தை பெற்ற பின் நிராதரவாக விடப்படுகின்றனர்.

இவர்களின் எண்ணிக்கை எல்லை கடந்து விட்ட நிலையில் தான் மலேசிய இந்து இளைஞர்கள் மத்தியில் முருகையாவின் கருத்துக்கு அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபரங்களிலிருந்து பலதாரமணம் என்பது அனைத்து சமுதாயத்திலும் தவிர்க்க முடியாததாகவே உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

பலதார மணத்தை அனுமதிப்பதற்கான காரணங்கள் பலதார மணத்தை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியவில்லை. அப்படியே தடுத்தாலும் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் தடுக்க முடியவில்லை என்பதால் மட்டும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை. மாறாக பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்திருப்பதற்கு இன்னும் பல காரணங்களும், நியாயங்களும் உள்ளன.


-பி.ஜெய்னுல்லாபுதீன்.

Monday, December 12, 2011

முல்லை பெரியாறு அணை சமபந்தமாக!பலருக்கும் தெரிந்த ஒரு நிகழ்வுதான். இங்கு தேர்தலை முன்னிருத்தியே கேரளா இந்த பிரச்னையை கையிலெடுத்திருப்பதாக பலர் சொல்வதில் உண்மை இலலாமல் இல்லை. அணையின் பலம் குறித்து பெரும் சர்ச்சை செய்யப்படுகிறது. ஆனால் இந்த காணொளியில் அணையின் பலம் சிறப்பாகவே உள்ளது. இங்கு இரண்டு மாநில மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டுள்ளதால் மிகவும் கவனமாக இந்த பிரச்னையை முடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் குட்டையை குழப்பாமல் இரு மாநில மக்களுக்கும் பாதகம் இல்லாமல் இந்த பிரச்னையை முடிக்க வேண்டும்.

மலையாளிகள் தங்கள் நலனுக்காக எப்படி எல்லாம் காயை நகர்த்துகிறார்கள் என்பதை இந்த காமெடி நன்றாக உணர்த்துகிறது.

குர்ஆனில் கற்பனையை கலந்த சூஃபி பீர்அப்பா!

குர்ஆனில் கற்பனையை கலந்த சூஃபி பீர்அப்பா!அரபுமூலம்- குரானின் சூரத்துல் இக்லாஸ்
குல்ஹுவல்லாஹ் அஹது அல்லஹுஸ் ஸமது
லம் யலிது வலம் யூலது
வலம் ய்க்குன்லஹ் குபுவன் அஹது

-குர்ஆன் 112:1,2,3,4

இதன் நேரடி தமிழ் பெயர்ப்பு

இறைவன் ஒருவன் எனக் கூறுவீராக.
இறைவன் தேவையற்றவன்
யாரையும் அவன் பெறவுமில்லை
யாருக்கும் அவன் பிறக்கவும் இல்லை.
அவனுக்கு நிகராக யாருமில்லை.

இந்த மொழி பெயர்ப்பை புரிந்து கொள்வதில் எவருக்கும் எந்த சிரமும் இருக்காது. இறைவன் ஒருவன்தான் இருக்க முடியும் என்பதை இவ்வளவு ரத்தின சுருக்கமாக எந்த மனிதனாலும் சொல்ல முடியாத அழகிய வார்ததைகளை போட்டு இறைவன் மனிதர்களுக்கு உபதேசிக்கிறான்.

மாற்று மதத்தை சேர்ந்த ஒருவர் கூட இந்த வசனத்தை எவரது உதவியுமின்றி இலகுவாக புரிந்து கொள்ள முடியும். இதை விட சிரமமான மொழியில் உயர்ந்த நடையில் கற்றவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய வகையில் இறைவனால் கொடுக்க முடியும். ஆனால் அதனால் என்ன பயன்? பாமர மக்களுக்கு விளங்காது போய் விடும். அதன் விளக்கத்தை நாடி புரோகிதர்களிடம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த புரோகிதரும் தனது கற்பனையை கலந்து கண் காது மூக்கெல்லாம் வைத்து இறைவன் சொல்லாததை எல்லாம் அந்த பாமரனின தலையில் ஏற்றி விடுவார். இந்து மதங்களில் அதுதான் நடந்து வருகிறது.

'நீங்கள் விளங்குவதற்காக இவ்வாறு இறைவன் தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.'
-குர்ஆன் 2:242

இங்கு இறைவன் சாமான்யனும் விளங்கிக் கொள்வதற்காக தனது வசனங்களை தெளிவுபடுத்துவதாக சொல்கிறான். ஒரு சில வசனங்களை வரலாறு தெரிந்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அது போன்ற வசனங்களை முகமது நபியின் விளக்கவுரையை படித்து நாம் தெளிவு பெறலாம். ஒரு சில இடங்களில் மாத்திரமே இவ்வாறு சற்று சிரமமான வசனங்கள் வரும். பெரும்பான்மையான வசனங்கள் பலரும் புரிந்து கொள்ளும் வகையிலேயே இறைவன் இலகுவாக தநதிருக்கிறான்.

இனி ஹெச்.ஜி ரசூல் போன்ற சூஃபி இசத்தை ஆதரிக்கக் கூடிய பீர் அப்பா என்ற புலவரின் விஷயத்துக்கு வருவோம். பீர்அப்பா என்ற புலவரைப் பொறுத்தவரையில் நல்ல தமிழ் அறிஞர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்து மத வேதங்களை எல்லாம் நன்றாக தெரிந்து வைத்துள்ளார். புலவர்களை பொறுத்த வரையில் எதை எழுதினாலும் அதில் சில கற்பனைகளை கலந்து விடுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம். எனவே தான் 'கவிதைக்கு பொய் அழகு' என்று கவிஞர்களும் பாடுகின்றனர்.

இனி நான் மேலே சுட்டிய குர்ஆனின் 112 ஆவது அத்தியாயத்தை பீர் அப்பா எவ்வாறு மொழி பெயர்க்கிறார் என்று பார்ப்போம்.

தந்தையிலி தாரமிலி தானவனும் நீயே
தன்மை கொடெவர்க்குமொரு தாபரமும் நீயே..
மைந்தரிலி அன்னையிலி மன்னவனும் நீயே
மண்ணிலடியார்க் கிரணம் வழங்குவது நீயே..
….
தன்னையன்றி தனக்கு நிகர் தானிலியும் நீயே
தண்மை கொடெனக்கு உணவு தருபவனும் நீயே….
…..
அல்லா ஒருவனென்றும் அஹமதவன் தூதரென்றும்
சொல்லால் உவந்து தொழுதிரந்தால்…

இதைப் படிக்கும் ஒரு பாமரன் அதில் உள்ள சந்த நயத்தையும் வார்த்தைகளின் ஆளுமையையும் பார்த்து பிரமிப்பான். ஆனால் இறைவன் என்ன சொல்ல வருகிறான். இந்த வசனத்தால் நமக்கு என்ன நன்மை என்பதை எவரும் கருத்தில் கொள்ள மாட்டார். மற்றொரு சூ.பி ஆதரவாளரான ஏ.ஆர்,ரஹ்மானிடம் கொடுத்தால் அருமையாக மெட்டு போட்டு பாடலை பிரபல்யம் ஆக்கி விடுவார். இதுதான் நடக்கும்.

“இறைவன் ஒருவன் எனக் கூறுவீராக.” எனற மொழி பெயர்ப்புக்கும் ‘’தந்தையிலி தாரமிலி தானவனும் நீயே’’ என்ற புலவரின் பாட்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பாருங்கள். அவர் வரிக்கு வரி மொழி பெயர்க்காமல் முதல் வசனத்தை இரண்டாம் வசனமாகவும் இரண்டாம் வசனத்தை முதலிலும் போட்டு தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு மொழி பெயர்க்கிறார். நல்ல வேளையாக குர்ஆனின் அரபி மூலத்தை இன்று வரை மொழி பெயர்ப்புகளில் சேர்த்தே எழுதுவதால் குழப்பத்திலிருந்து தப்பித்தோம். மூல மொழியை கைவிட்டதால் இன்று இந்து மத வேதங்களும் கிறித்தவ வேதங்களும் எந்த அளவு அதன் உண்மையை இழந்து நிற்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

புலவருக்கு மொழி ஆற்றல் இருக்கிறது என்றால் அதை வேறு ஏதாவது அரபி இலக்கியத்தை மொழி பெயர்த்து தனது திறமையை காட்டியிருக்கலாம். அதை விடுத்து குர்ஆனில் கை வைப்பதை உலகில் உள்ள எந்த முஸ்லிமும் ஒத்துக் கொள்ள மாட்டான். அவர் காலத்தில் ஏதோ அவரை அறியாமலேயே இந்த தவறை செய்து விட்டதாக வைத்துக் கொளவோம். 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி பெயர்ப்புகள் வரவில்லை. எனவே அந்த காலத்துக்கு ஓ.கே. ஆனால் இன்று இணைய வசதி மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்புகள் என்று மிகவும் எளிமைபடுத்தப்பட்டு நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு அதெல்லாம் வேண்டாம். பீர்அப்பா கவிதை நடையில் எழுதிய 'ஞானப் புகழ்ச்சி' ஒன்றே போதும் என்று அடம் பிடிக்கும் ஹெச்.ஜி.ரசூல் போன்றவர்களை என்ன செய்வது? இறைவனிடம் பிரார்த்திக்கத்தான் முடியும்.

மேலும் ஹெச்.ஜி.ரசூல் சொல்கிறார்...

//பீர்முகமது அப்பா எழுதிய பாடல்களின் எண்ணிக்கை பதினெண்ணாயிரம். இன்று நமக்கு கைவசம் கிடைக்கும் பாடல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஏழாயிரத்தை எட்டும்.வெண்பா,விருத்தம் என பல்வகை பாவடிவில் ஏறத்தாழ நாற்பத்தி எட்டாயிரத்துக்கும் (48000) மேற்பட்ட வரிகளில் பீர்முகமது அப்பா ஞானக் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள்.//

சூரத்துல் இக்லாஸ் (உளத் தூய்மை) என்ற 112 வது அத்தியாயத்திலேயே இத்தனை குளறுபடிகளை இந்த கவிஞர் செய்து வைத்திருக்கிறார். இன்னும் மற்ற பாடல்களை எல்லாம் படித்தால் இன்னும் என்னென்ன கூத்துகள் அரங்கேறியிருக்குமோ இறைவனே அறிவான்.

சரி.. இஸ்லாத்தில் கவிதை இயற்றுவது தடை செய்யப்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அந்த கவிதைகள் குர்ஆனோடு கலக்காமலும் மிகைப்படுத்தல் இல்லாமலும் பொய் கலக்காமலும் இருக்க வேண்டும். அன்றைய அரபுகள் கவிதை இயற்றுவதில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். முகமது நபி காலத்திலேயே அவரது தோழர்கள் கவிதைகளை பாடியிருக்கிறார்கள். புகாரியில் வரக் கூடிய ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் சிலவற்றை பார்ப்போம்.

1009. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கீழே இறங்குவதற்குள் ஒவ்வொரு கூரையிலிருந்தும் தண்ணீர் வழிந்தோடியது.
'இவர் வெண்மை நிறத்தவர். இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்' என்ற அபூ தாலிபின் கவிதையை அப்பொழுது நான் நினைத்துக் கொள்வேன்.
Volume :1 Book :15

1155. ஹைஸம் இப்னு அபீ ஸினான் அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) தம் உரையின்போது நபி(ஸல்) அவர்கள் பற்றி அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) இயற்றிய பின்வரும் கவிதையை எடுத்துக் கூறினார்கள்.
'எங்களிடம் இறைத்தூதர் இருக்கிறார்கள். ஃபஜ்ரு நேரம் வந்ததும் அவனுடைய வேதத்தை அவர்கள் ஓதுகிறார்கள். நாங்கள் வழிகேட்டில் இருந்த பின் எங்களுக்கு அவர்கள் நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நடந்தேறும் என்று எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன. இணை வைப்பவர்கள் படுக்கையில் அழுந்திக் கிடக்கும்போது அவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
Volume :1 Book :19

3926. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிலால்(ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, 'என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அபூ பக்ர் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர்கள் பின் வரும் கவிதையைக் கூறுவார்கள்:
காலை
வாழ்த்துக் கூறப்பெற்ற
நிலையில்
ஒவ்வொரு மனிதனும்
தம் குடும்பத்தாரோடு
காலைப் பொழுதை அடைகிறான்....
(ஆனால்,)
மரணம் - அவன் செருப்பு வாரை விட
மிக அருகில் இருக்கிறது
(என்பது -
அவனுக்குத் தெரிவதில்லை)

பிலால்(ரலி) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக்குரல் எழுப்பி,
'இத்கிர்' (நறுமணப்) புல்லும்
'ஜலீல்' (கூரைப்) புல்லும்
என்னைச் சூழ்ந்திருக்க..
(மக்காவின்) பள்ளத்தாக்கில்
ஓர் இராப் பொழுதையேனும்
நான் கழிப்பேனா?...
'மஜின்னா' எனும்
(மக்காவின் இனிப்புச்சுனை) நீரை
ஒரு நாள் ஒரு பொழுதாவது
நான் பருகுவேனா...?
(மக்கா நகரின்)
ஷாமா, தஃபீல் மலைகள்
(இனி எப்போதாவது)
எனக்குத் தென்படுமா?...
என்ற கவிதையைக் கூறுவார்கள்.

உடனே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்களின் நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதை விட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! மேலும் இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்கு! எங்களுடைய (அளவைகளான) 'ஸாவு', 'முத்து' முதலியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ அருள் வளத்தை வழங்கு! இங்குள்ள காய்ச்சலை இடம் பெயரச் செய்து அதை 'ஜுஹ்ஃபா' என்னுமிடத்தில் (குடி) அமர்த்திவிடு" என்று பிரார்த்திதார்கள்.
Volume :4 Book :63

Saturday, December 10, 2011

சரி கம பா பாகிஸ்தானின் அமானத் அலி!சரி கம பா பாகிஸ்தானின் அமானத் அலி!

நமது ஜீ டிவி நடத்தும் சரி கம பா நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பார்ப்பதுண்டு. அந்த வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த அமானத் அலியின் பாடலை விரும்பி கேட்பேன். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு முறை பேட்டியில் ஒரு பாடகனின் பாடல் அவனது உள் மனத்திலிருந்து வெளி வர வேண்டும் என்று சொல்வார். அது போல் இவர் எந்த பாடலை எடுத்துக் கொண்டாலும் அந்த பாடலிலேயே லயித்து பாடுவது இவரது ஸ்பெசாலிடி.

ஒருவனின் பிரிவை இந்த பாடல் விவரிக்கிறது. தாய், தந்தை, உற்றார் உறவினரை பிரியும் ஒருவன் தனது தனிமையில் அந்த சோகத்தை எப்படி வெளிக்காட்டுவான் என்பதை இந்த பாடல் நமக்கு தெளிவாககுகிறது.

இந்திய வெறுப்பிலேயே வளர்க்கப்பட்ட பல பாகிஸ்தானிகளை இது போன்ற சில நிகழ்ச்சிகள் நம் நாட்டின் மீது நட்பை வளர்க்க உதவலாம். பொதுவில் மனிதன் ஒரு சமூக விலங்கு. பெரும்பான்மையோர் எதைச் செய்கிறார்களோ அதன்படியே தனது வாழ்வை அமைத்துக் கொள்ள நினைப்பவன். பாகிஸ்தானில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அங்குள்ள பிரச்னைகளை மூடி வைக்க இந்தியா பயன்படுகிறது. இந்தியா நம்மை தாக்க வருகிறது. வந்து விட்டது என்று ஒரு செய்தியை பரப்பி விட்டால் அவனது நினைவில் எந்த நேரமும் இந்தியாதான் இருக்குமேயொழிய விலைவாசி ஏற்றமோ, வேலையில்லா திண்டாட்டமோ அவனை பெரிதாக பாதிக்காது. இதை நன்றாகவே புரிந்து கொண்ட அங்குள்ள அரசியல்வாதிகள் காய்களை நன்றாகவே நகர்த்துகின்றனர்.

போதாக் குறைக்கு அமெரிக்காவின் சிஐஏ வும் அநியாயத்துக்கு பாகிஸ்தானை படுகுழியில் தள்ளப் பார்க்கிறது. இந்தியாவையும் சீனாவையும் மிரட்டி வைக்க பாகிஸ்தானை பகடைக்காயாக பயன்படுத்துகிறது அமெரிக்கா. ஆனால் அந்த உறவில் தற்போது உசாமா பின் லேடனால் பின்னடைவது ஏற்பட்டுள்ளது சற்று நிம்மதியை தருகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரியாமல் இருந்திருந்தால் இரு நாட்டுக்குமே நல்லதாக இருந்திருக்கும். ஒரு சில சுயநலமிகளால் இந்த வரலாற்று தவறு நடந்து முடிந்து விட்டது. இன்று வரை பலருக்கு ஆறா வடுவையும் ஏற்படுத்தி விட்டது.

நான் இதை எல்லாம் எழுத காரணம் இயற்கையில் பாகிஸதானிய மக்கள் இந்தியாவோடு நட்புடன் இருக்கவே விரும்புகின்றனர் என்பதை எடுத்துக் காட்டவே. இங்கு சவுதியில் உள்ள பாகிஸ்தானிய இளைஞர்கள் பலரிடம் வலுவில் சென்று அரசியல் பேசுவது உண்டு. முதலில் இந்தியாவின் மீது மிகவும் காட்டமாக உள்ள அவர்களை சில வரலாற்று நிகழ்வுகளை எடுத்துச் சொன்னவுடன் அவர்களின் சுருதி குறைவதை பார்ததிருக்கிறேன். அங்குள்ள அரசியல்வாதிகளால் இந்திய எதிர்ப்பு இவர்கள் மண்டையில் நன்றாகவே ஏற்றப்பட்டிருக்கிறது.

ஒரு பாகிஸ்தானி என்னிடம் 'உங்களிடம்தான் பெரும் நில பரப்பு உள்ளதே! காஸ்மீரை எங்களுக்கு விட்டுக் கொடுத்தால்தான் என்ன?' என்று கேட்டான். அவனிடம் 'ஏற்கெனவே பிரித்து கொடுத்த மாகாணங்களை இதுவரை ஐந்து வருடம் ஒழுங்காக ஒரு தலைவர் ஆட்சி செய்துள்ளாரா? எப்போதும் ராணுவ ஆட்சிதானே! அப்படியே காஸ்மீரை தனிநாடாக பிரித்தாளும் பிரிப்போமே தவிர கையாலாகாத உங்களிடம் தர மாட்டோம்' என்றவுடன் பதில் தர முடியாது இடத்தை காலி செய்து விடுவான்.


சரி.. இனி அமானத் அலி விஷயத்துக்கு வருவோம். சரிகமபாவில் முதல் இடத்தை அமானத் அலிதான் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில் இவரது குரல்வளம் அந்த அளவு அனைத்து பாடல்களிலும் பிரதிபலித்தது. ஆனால் பாகிஸ்தானிய எதிர்ப்பு நம் மக்கள் மத்தியிலும் வேரூன்றி இருந்ததால் கல்கத்தாவை சேர்ந்த நம் நாட்டு பாடகரை அனைவரும் தேர்ந்தெடுத்தனர். பததிரிக்கைகளில் எல்லாம் ஏதோ இந்தியா பாகிஸ்தான் சண்டை நடப்பது போல் பிரபல்யப்படுத்தப் பட்டு அமானத் அலி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். கடைசி நாளன்று வெளிநாட்டு ஓட்டுகள் தடை செய்யப்பட்டன. இதனால் பாகிஸ்தானிலிருந்து கிடைக்க வேண்டிய அமானத் அலி ஆதரவாளர்கள் ஓட்டுகள் கிடைக்காமல் போனது.

முதல் இடம்தான் அமானத் அலிக்கு கிடைக்கவில்லையே தவிர சினிமாவில் பாட சில சந்தர்ப்பங்கள் கிடைத்தது. ஒரு எதிரி நாட்டு பாடகருக்கு தளம் அமைத்து கொடுத்து உலக அளவில் பிரபல்யப்படுத்தியதே நாம் செய்த பெரிய உபகாரம் அல்லவா! சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியானாலும் இநத பாடலின் ஈர்ப்புக்காக இந்த பதிவு.

Thursday, December 08, 2011

சீனாவில் வீழ்ந்தது கம்யூனிஷம்!சீனாவில் வீழ்ந்தது கம்யூனிஷம்!

கம்யூனிஷ ஆட்சியாளர்களால் இது நாள் வரை மத உரிமைகள் மறுக்கப்பட்ட பல சீனர்கள் வேலை நிமித்தமாக சவூதி வந்துள்ளனர். அதிலும் ஜெத்தா-மெககா-மெதீனா மெட்ரோ ரயில் திட்ட காண்ட்ராக்டும் தற்போது சைனாவுக்கே கிடைத்துள்ளது. 5000க்கும் மேற்பட்ட டெக்னீசியன்களும் தொழிலாளர்களும தற்போது சவுதி வந்துள்ளனர்.

கடவுள் என்றால் யார்? இறை தியானம் எப்படி இருக்கும்? மன அமைதியை இறை தியானத்தில் பெறுவது எப்படி என்றெல்லாம் தெரியாமலேயே வெறும் கார்ல் மாக்ஸை மட்டுமே படித்த இந்த இளைஞர்கள் இன்று இறை மார்க்கத்தால் கவரப்பட்டு அதிகமதிகம் இஸ்லாத்தை ஏற்கின்றனர்.

கம்யூனிஷ அரசு கார்ல் மாக்ஸையும், லெனினையும், யும் தான் வேதமாகவும் தூதர்களாகவும் இதுநாள் வரை காட்டி வந்தது. சவுதியின் சட்டதிட்டங்களும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபாரங்களையே நிறுத்தும் இந்நாட்டின் சட்டத்தை ஆச்சரியமுடன் பார்க்கின்றனர். எனது அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் 'அழைப்பு வழி காட்டல் மையத்தில் (ஜாலியாத்) தினமும் சீனர்களை பார்க்கிறேன். அரபி கற்றுக் கொள்ள ஆர்வப்படுவதையும், தொழுகைக்கு அழைப்பு விடுத்தவுடன் அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு பள்ளியை நோக்கி பறந்து வருவதையும் தினமும் பார்த்து வருகிறேன். இவர்களின் உடல் அமைப்புக்கு தாடி சரியாக வளருவதில்லை. ஒரு அன்பருக்கு இரண்டே முடிகள் வளர்ந்துள்ளது. அதை கையால் லாவகமாக வருடிக் கொண்டு என்னோடு பேசும் அழகை என்னவென்பது?

சில மாதங்களுக்கு முன்பு 50 சீனர்கள் மொத்தமாக இஸ்லாத்தை தங்களின் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே! அதைததான் மேலே உள்ள காணொளியில் பார்க்கிறீர்கள். அனைவரும் இளைஞர்கள். படித்தவர்கள். நல்ல சமபளத்தில் உள்ளவர்கள். எனவே ஏதோ பணம் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் இவர்கள் மாறவில்லை. எந்த மத நம்பிக்கையும் இல்லாமல் வெற்றிடமாக இருந்த மூளை இஸ்லாமிய நடவடிக்கைகளை பார்த்தவுடன் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் உடன் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது. சீனர்களின் பழக்கங்களுக்கும் இஸ்லாத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இனி இவர்கள் தங்களின் உணவு முறைகளை எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும். எதைப்பற்றியும் கவலைபடாமல் ஏக இறைவனை தங்களின் இறைவனாக ஏற்ற இவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

நமது நாடடில் இந்து மதத்தின் ஆதி மக்களை தொடவும், வேதம் படிப்பிக்கவும், கோவிலுக்குள் நுழைவிப்பதற்கும் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதே போன்றுதான் 1400 வருடங்களுக்கு முன்பு மெக்காவிலும் மதினாவிலும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது. தங்கள் மொழியே உயர்ந்த மொழி. மற்றவர்களின் மொழிகள் ஊமை மொழிகள் என்று ஏளனம் பேசி வந்தனர். பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவார்களாம். சிலர் பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டால் சமூகத்துக்குள் வர வெடகப்பட்டுக் கொண்டு சமூகத்திலிருந்து சில வாரங்களுக்கு தலைமறைவாகி விடுவாரகளாம. குலத்தின் பெயராலும் கோத்திரத்தின் பெயராலும் பல ஆண்டுகள் வரை சண்டையிடுவார்களாம். இப்படிப்பட்ட மூர்க்கக் குணத்துக்கு சொந்தமான சவுதிகளை இஸ்லாம் எந்த அளவு பண்படுத்தியிருக்கிறது என்பதைத்தான் காணொளியில் நாம் பார்க்கிறோம். மொழியிலும் நிறத்திலும் தோற்றத்திலும் முற்றிலும் மாறுபட்ட சீனர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவுடன் ஆரத தழுவி நெற்றிக்கு மேல் அன்பினால் முத்தமிடும் இந்த பக்குவத்தை அந்த அரபுகளுக்கு கொடுத்தது எது? இஸ்லாம் அல்லவா?

ஒரு சீனர் இஸ்லாத்தை ஏற்றால் அவர் மூலம் நூற்றுக்கணக்கான பேர் இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஜெத்தாவில் கூட 600 சீனர்கள் இஸ்லாத்தை ஏற்றதாகவும் இந்த புதியவர்கள் மற்ற 5000 பேரை பிரசாரத்தின் மூலம் கொண்டு வந்துவிட முயற்ச்சிப்பதாகவும் அரம்கோ செய்தியும் தெரிவிக்கிறது. இதே நிலை தொடருமானால் இன்னும் 10 அல்லது 12 வருடங்களில் சீனாவில் இஸ்லாம் கம்யூனிஸத்தை வீழ்த்தி விடும்.

'இறைவனின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். இறைவனை மறுப்போர் வெறுத்தாலும் இறைவன் தனது ஒளியை முழுமையாக்காமல் விட மாட்டான்'
-குர்ஆன் 9:32from aljazeera:

Riyadh, September 27: Over 600 Chinese nationals working on the Haramain Rail project have embraced Islam in a recent ceremony in Makkah.They are workers of the Chinese Railway Company, which won the multibillion contract for implementing the 450km rail road linking the holy cities of Makkah and Madinah via Jeddah and Rabigh.

Dr. Abdul Aziz Al Khudhairi, undersecretary at the Makkah Governorate, said that this year’s celebration of the Kingdom’s National Day coincides with a number of auspicious and historic occasions.

These included launching of the prestigious international research university – King Abdullah University for Science & Technology (KAUST), celebration of Eid Al Fitr and a recent ceremony of Chinese workers pronouncing their Shahada.

Dr. Abdul Aziz, who witnessed the event, described it as a “direct response to critics of the government for contracting Chinese company.”

Among the converts, there are 70 workers who are engaged in the construction of Makkah monorail project, which links the holy city with the holy sites of Mina, Muzdalifa and Arafat.

“Their conversion took place 24 hours after getting books introducing Islam in Chinese language at their worksite at Arafat, which is outside the Haram area,” he said adding that the credit goes to the Office of the Call and Guidance for Expatriates in Makkah.

Efforts are underway to spread the message of Islam among some 5,000 Chinese nationals working on the Haramain train,” he said adding that the major problem for the Call and Guidance Office is the lack of enough books on Islam in Chinese language.

It is noteworthy that the first phase of Haramain Rail consisting of 70km has well been started a few months ago. This represents expropriation of land, filling works, construction of bridges and tracks. The project is expected to be operational in 2012.-Agencies

சீன முஸ்லிம்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கும் அடுத்து இங்கும் செல்லுங்கள்.

Wednesday, December 07, 2011

சினிமா நடிகையின் மன மாற்றம்!
ஒரு மனிதனின் மனத்தில் நேர் வழி வருவது எந்த நேரம் என்று யாருக்கும் தெரியாது. பிலிப்பைனில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா தற்போது ஹதிஜாவாக தனது பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமிய சங்கமத்தில் ஐக்கியமாகி உள்ளார். கோடிக்கணக்கான வருமானம் பேரும் புகழும் இவரைத் தேடி வரும்பொழுது அனைததையும் உதறி விட்டு மறுமை வாழ்வே நிரந்தரம் என்ற முடிவுக்கு வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் ஹஜ் கடமையை முடிப்பதற்காக ஜெததா வந்த அவரை சகோதரர்கள் பேடடி எடுத்தனர். தனது பழைய வாழவில் செய்த தவறுகள் எல்லாம் புனித ஹஜ்ஜின் மூலம் துடைத்தெறியப்படடிருப்பதாகவும், இனி வரும் காலங்களில் உண்மையான முஸ்லிமாக வாழ முயற்ச்சிப்பேன் என்றும் ஆனந்த கண்ணீரோடு அந்த பெண் சொல்லும் அழகை பாருங்கள்.

சிலர் சொல்வது போல் ஒரு கையில் கத்தியும் மறு கையில் குர்ஆனையும் வைத்துக் கொண்டு எதை முடிவு செய்கிறாய் என்று யாரும் இவரை வற்புறுத்தவில்லை. தனக்கு இந்த முடிவால் எதிர்ப்புகளும் பண இழப்பும் ஏற்படும் என்று நன்றாகத் தெரிந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார். பிலிப்பைன் இஸ்லாமிய நாடு கிடையாது. கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. எந்த நிலையில் இருந்து பார்த்தாலும் குர்ஆனை விளங்கி முகமது நபியின் போதனைகளை விளங்கியே இவர் தனது மார்க்கத்தை தேர்நதெடுத்தள்ளதை அறியலாம்.

'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனததில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.'

குர்ஆன் 13:28


By DONNA CORPIN & RIMA AL-MUKHTAR | LIFE.STYLE@ARABNEWS.COM
Published: Dec 7, 2011 01:49 Updated: Dec 7, 2011 01:49

Queenie Padilla shares her rebirth after performing Haj in Makkah
By all accounts, a young Filipino singer-actress dubbed "the future leading lady" was on her way to stardom before she had a spiritual rebirth.

Queenie Padilla was starring in primetime TV shows and would sing and dance in production numbers on popular variety shows in the Philippines. She was the other half of a romantic pairing ("love team" in local showbiz parlance) meant to set hearts aflutter. At 20, she was living her dream — or so she thought.

"It was a deceiving dream," Queenie told Arab News as she sat wearing an abaya and a veil on her head. Devoid of makeup, her face is just as angelic and even more beautiful than when she was all dolled up for guest appearances and shows.
The Saudi media had recently picked up on the story of the Filipino celebrity who went to Makkah and came back with Islam reignited in her. After performing Haj for the first time, she declared to all and sundry that show business was now behind her. The YouTube video in which she tearfully shares her life-changing Haj experience was going somewhat viral; it was garnering likes and getting shared and re-shared among Muslims, and not just in the Kingdom. "Inspiring" was the consensus.
What triggered a 180-degree turn for the young lady who was dead-set on pursuing a showbiz career a mere four years ago? How did the decision come about? And, how did she break it to her fans?

Queenie said she had been so worried what the producers, directors, managers, and especially, her fans would think. Everyone had expectations of her and she was feeling the pressure. She had to ask herself: “Am I going to live my life disobeying Allah or am I going to make the final decision in living my life as a good Muslim and really practice Islam the right way? There was a struggle but I had to make a choice. So I made that choice. I quit.”

Queenie calls herself a revert to Islam because it was only eight months ago that she embraced her faith wholeheartedly after visiting her mother in Australia, where she grew up nominally Muslim with her two sisters and their youngest brother.
Her father Robin, who comes from a big showbiz clan, famously married Queenie's mother in Muslim rites inside prison as he was serving a 21-year sentence for illegal possession of firearms in the early 90s. He was pardoned by the then president, and he left jail in 1998 no less famous than when he entered it. He remains one of the Philippines' most bankable action movie and TV stars to date.
The busy life of a celebrity didn't leave much time for Robin to educate his family about Islam as much as he would want, but Queenie credits him nonetheless, because if it weren't for him they would not be Muslim.

“When I went to the Philippines, my father told me to wear a hijab and pray. But I didn't know why I was praying. I was ignorant about Islam and about being Muslim. At that time I hadn't yet tasted the sweetness of faith. I think that's why I was misguided.”

Their mother started practicing Islam herself just two months before Queenie did, and she let her eldest daughter know her desire for her children to become good, practicing Muslims. Queenie says that when she first saw her mother after the latter rediscovered Islam, she was pleasantly “shocked.”

“I saw this glow in her that I've never seen growing up as a child. Everything that came out from her mouth was all about Islam and Allah. And she was reading the Qur'an constantly and listening to lectures and she wore the hijab. I asked her if she was afraid of wearing the hijab in this society. She said she wasn't because she has piety, and that's all that matters."

Over dinner, they would have conversations about the Hereafter and whether or not they obeyed Allah with their deeds and actions.

“It got me thinking,” she said. “I started evaluating and asking myself if I was really happy with my job, and I realized that there was something missing in my life. There was emptiness inside. I wanted to feel what my mother was feeling because she was so happy and content — and peaceful. I told her, ‘Oh please, I want to learn more about Islam.”

And she did. As she learned more about Islam, she knew she had found what would fill the void she was feeling: renewed religious fervor.

“It was an amazing feeling. I think it was a calling from Allah. The more I learned about Islam, the more it became my passion. And every day, when I gained more and more knowledge, the missing parts of myself began to grow. The emptiness is gradually going away too,” she added.

Queenie went to the Kingdom solely as a pilgrim and not an actress, although she met the Filipino community just the same. She visited the International Philippine School in Jeddah and other Saudi private schools where the students' reception was uniformly warm.

Her most unforgettable experience in her brief two weeks here, however, took place in a hospital where she visited a 30-year-old Filipino woman with a rare form of cancer. Queenie prayed for the patient who dreamed of going to the Kaaba. Shortly after, the woman reverted to Islam and declared her formula of faith in Islam, making Queenie “the happiest person alive.”

“The patient awakened me in a way; she reminded me that sickness or death could hit us anytime. Every day as Muslims, we should prepare,” Queenie said.

Queenie’s parents, now married to different people, are very happy over her decision to fully practice her religion. Her next mission is to share more about Islam with her sister Kylie, who is an up-and-coming star in her own right back home. Queenie also plans to major in business, and at the same time, take up Islamic studies.
These days, Queenie speaks with a conviction not previously seen in some of her TV interviews, in which she appeared reserved and even a little nervous. She has transformed into a lady who conveys the message of Islam to people with courage and confidence, even if she admits her knowledge is still limited.

Queenie — or Khadija, the Muslim name she recently adopted — is sure to lose fans once she leaves the glare of klieg lights completely, but she looks to have gained new ones in her journey of proclaiming her faith.

-அரப் நியூஸ்
07-12-2011

Tuesday, December 06, 2011

பிச்சைப் பாத்திரம் ஏந்துபவர்கள்!
தஞ்சாவூர்: தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தற்போது இவர்கள் தஞ்சை ஆற்றுப்பாலம் ஜூம்மா மசூதியில், சில வாரங்களாக தங்கி பிச்சை எடுத்து வருகின்றனர். காந்திஜி சாலையில் உள்ள இரட்டை மஸ்தான் தர்கா அருகில் இரவு நேரங்களில் தங்கி வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி, கீழவாசலைச் சேர்ந்த மன்சூர் என்பவர், தொழுகைக்கு வந்துள்ளார். அவர் மொபைல் போன் தொலைந்ததும் போலீசில் புகார் செய்தார். உடனே, பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் மன்சூர் சேர்ந்து, சந்தேகத்தின் பேரில் மசூதி வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை சோதனையிட்டனர். அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமது பையை எடுத்து சோதனையிட்ட போது, அவரது பையிலிருந்து கத்தை, கத்தையாக லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். எஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அப்துல் சமது கூறியதாவது: கடந்த 2003ல், சென்னை தாம்பரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்திருந்தேன். அதேபோல், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பணத்தை பிரித்து டெபாசிட் செய்து வைத்திருந்தேன். பிச்சை எடுப்பது எளிதாக இருந்தாலும், இரவில் தங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆகையால், வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுத்து, தஞ்சையில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் வந்தேன். ஒரு மாதமாக இடம் தேடியும், சரியான இடம் அமையவில்லை என்பதால், கையிலேயே பணத்தை வைத்து அலைந்து வருகிறேன். இவ்வாறு அப்துல் சமது கூறினார். மேலும், அவர் வைத்திருந்த, 6 லட்சத்து, 23 ஆயிரத்து, 930 ரூபாய்க்கு உரிய வங்கி ரசீதுகளை போலீசாரிடம் காட்டியதும், அவரை, "பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி வியப்புடன் அனுப்பி வைத்தனர்.

-தினமலர்: செய்தி
06-12-2011

இந்த செய்தியை பார்த்தவுடன் உழைக்கும் பலருக்கும் இனி பிச்சை எடுத்து சாப்பிடலாம் என்ற எண்ணம் வரும். பொதுவாக பல மதங்களும் ஏழைகளுக்கு உதவுவதை வலியுறத்துகின்றன. அதிலும் குறிப்பாக இஸ்லாத்தில் சற்று அதிகமாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது. நோன்பு தொழுகை போன்ற வணக்கங்களை உடல் நலை சரியில்லாது யாராவது விட்டால் அதற்கு பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க சொல்லி இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே போல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட சில காரியங்களை சிலர் செய்து விட்டால் அதற்கு பரிகாரமாக 30 ஏழைகளுக்கு உணவளி: 40 ஏழைகளுக்கு உணவளி என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.


சில நேரங்களில் சாப்பாடு கொடுக்க ஏழைகளை தேடிச் செல்வோரும் உண்டு. வயது முதிர்ச்சி, கை கால்களில் ஊனம், சொந்தங்கள் கை விட்டு விடுதல் போன்ற காரணங்களால் பிச்சை எடுக்க தொடங்கி விடுகின்றனர். இவர்களைப் பற்றி பிரச்னையில்லை.

ஆனால் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள நபர்களும் இதை ஒரு தொழிலாக நடத்த ஆரம்பித்து விடுகின்றனர். தங்களின் இயலாமையை எடுத்துச் சொல்வதற்காக பல பொய்களையும் இவர்கள் சொல்லத் தயங்குவதில்லை. இதனால் உண்மையாக பிச்சை எடுக்கும் தகுதியுடையவர்களுக்கு சிரமத்தையும் கொடுக்கிறார்கள்.

நாம் பிச்சை போடும்போது ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் என்று 1000 2000 என்று மாற்றி வைத்துக் கொண்டு வரிசையாக பொட்டுக் கொண்டு செல்கிறோம்.

இப்படி செய்வதால் நாம் பிச்சைக்காரர்களை இன்னும் ஊக்குவிக்கிறோம். 100 பேருக்கு சில்லறைகளாக கொடுக்கும் பணத்தை ஒருவரை தேர்ந்தடுத்து கொடுத்தால் அவர் பிச்சை தொழிலை விடுவதற்கு வாய்ப்பாக அமையும். ஒரு தள்ளு வண்டியோ, ஒரு பிளாட்பார கடையோ அமைத்து கொடுத்து 'இனி பிச்சை எடுப்பதை நான் பார்த்தால் நான் கொடுத்த பணத்தை திரும்ப தந்துவிட வேண்டும்' என்ற உறுதி மொழியோடு தர வேண்டும். இப்படி செய்வதற்கு எல்லோரும் முன் வந்தால் வெகு சீக்கிரத்தில் பிச்சைக்காரர்களை ஒழித்து விடலாம்.

மனிதனுக்கு சுயமரியாதை அவசியம். சுயமரியாதையை விற்று இப்படி தகுதியில்லாதவர்கள் பிச்சை எடுப்பவர்களை இஸ்லாமும் தடுக்கிறது. பிச்சை எடுத்தல் சம்பந்தமாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதனை பின் வரும் நபிமொழிகளில் பார்ப்போம்.


"ஒரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எச்செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனுடைய நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான்." (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்) (புஹாரி-1479)

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள், மிம்பர் (வெள்ளிக்கிழமை ஜும்மா அன்று சொற்பொழிவு மேடை) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியதும்” என்றும் கூறினார்கள். (புஹாரி-1429)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "என் உயிர் யாருடைய கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி (கட்டி) அதைத்தம் முதுகில் சுமந்து (விற்று)சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச்சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்." (புஹாரி-1470)

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நான், நபி(ஸல்) அவர்களிடம் (பொருளுதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, "ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது" எனக் கூறினார்கள்.

நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.

அபுபக்கர்(ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர்(ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), ‘முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப்பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!’ எனக் கூறினார். ஹகீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார். (புஹாரி-1472)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "தேவைக்கு அதிகமாக மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச்சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்…" (புஹாரி-1474)

Sunday, December 04, 2011

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஒரு வேண்டுகோள்!ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள்

நீங்களில்லாமல் மிகவும் வெறுமையாக உள்ளது; இங்கு வந்து இந்த வெறுமையை நிரப்புங்கள்.

என்னை வண்ணங்களால் நிரப்புபவரே (வாழ்க்கையை வண்ணமயமாக ஆக்கும் அல்லாவே)

எதையும் படைக்கவேண்டும் என்று அல்லாஹ் நினைத்தால், 'உருவாகு' என்று அவர் ஆணையிட்டமாத்திரத்தில், அது உருவாகிறது ('உருவாகிவிட்டேன்' என்று பதிலும் அளிக்கிறது).

எங்குமே எதுவுமே இல்லாத அந்தத் தருணத்திலும், அவர் இருந்தார்; அவர் மட்டுமே எங்குமே இருக்கிறார்

என்னுள் எவர் இருக்கிறாரோ, அவரே உன்னுள்ளும் இருக்கிறார்

இறைவனே அத்தனை தொடக்கங்களுக்கும் ஒரே பிறப்பிடம்.

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

ஒவ்வொரு விடியலிலும் எதனை எனதுடல் அணிந்திருக்கிறதோ, அந்த வாழ்வின் பொறியான எனதுயிர், புகையிலிருந்து வெளிவரும் கரியைப் போல இருண்டதாயிருந்தாலும், உங்களிடமிருந்து பெருகும் புத்துயிரின் ஒரு துளிக்காகவே அது உயிர்வாழ்ந்திருக்கிறது எனது இறைவனே . . .

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே மெய்ப்பொருள்;

அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், நபிக்கு உரித்தாகட்டும்;

என்னை என்னிடமிருந்தே காப்பாற்றி விடுதலையளித்தால், அது உங்களது பெருந்தன்மையன்றி வேறில்லை எனது இறைவனே;

என்னை இப்பொழுது நானே அறியவேண்டும்; தயைகூர்ந்து எனக்கு விடுதலையளியுங்கள்

எனது இருண்ட செயல்களோடும், வெறுமையான ஆன்மாவோடும் நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை

என்னுள் நீங்களே வாழ்கிறீர்கள்; என்னை எங்கே அழைத்துவந்திருக்கிறீர்கள்?
உங்களிலும் நானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; உங்களைத் தொடர்கிறேன்; நான் உங்களது வெறும் நிழல்தானே தவிர வேறில்லை;
நீங்களே என்னை உருவாக்கினீர்கள்; இந்த உலகில் வாழ நான் தகுதியற்றவனாக இருந்தும், என்னை அரவணைத்தீர்கள்; நீங்களே முறை தவறாதவர்; நடுநிலையாளர்; நீங்களே மெய்ப்பொருள்.

நீங்கள் உத்தரவிட்டதும், எதுவுமே உடனடியாக உருவாவதைப்போல், என் வாழ்வுக்கும் ஒரு குறிக்கோளையும், ஒரு இலக்கையும் உத்தரவிட்டு அருளுங்கள்.

-நன்றி: மொழியாக்கம் ராஜேஸ்இந்த பாடலை கேட்டு விட்டு சகோதரர் ராஜேஸ் அவர்கள் பின்வருமாறு தனது பதிவில குறிப்பிடுகிறார்.
//நான் உணர்ச்சிவசமெல்லாம் படவில்லை. ஆழ்ந்து யோசித்துத்தான் சொல்கிறேன். ஏற்கெனவே, ரஹ்மானின் பிற சூஃபி பாடல்களைக் கேட்கும்போதே ('பியா ஹாஜி அலி', 'கரீப் நவாஸ்', 'அர்ஸியான்'), இஸ்லாத்தின் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தேன். இப்போது, வெகு சீக்கிரமாகவே இஸ்லாத்துக்கு மதம் மாறிவிடுவேனோ என்று தோன்றுகிறது. இந்த அளவு இறைவன் என்ற ஆளுமையிடம் தன்னை முழுமையாக ஒப்புவிக்கக்கூடிய அளவு அமைந்த உருக்கமான, கேட்டதும் ஒருவித அமைதியளிக்கக்கூடிய பாடல்களை, எனக்குத் தெரிந்து வேறெந்த மதத்திலும் கேட்டதில்லை.//- -ராஜேஸ்“ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”


3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”

3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.

19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.


குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.

//ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //

இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.

இந்த பாடல் இறைவனைத்தான் குறிக்கிறது என்றால் அதை ஒரு தர்ஹாவில் அமர்ந்து பாட வேண்டியதில்லை. அடுத்து இறைவனை நெருங்குவதற்கு இது போன்ற பாடல்களை பாடச் சொல்லி முகமது நபி நமக்கு கற்றுத் தரவில்லை. முகமது நபியின் அடக்கத்தலத்தில் இது போன்ற பாடல்கள் பாடப்படுவதில்லை.

பிராரத்தனை வணக்கம் அனைத்துமே இறைவன் ஒருவனுக்குத்தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை. இதற்கு மாற்றமாக நீங்கள் எந்த முறையைக் கொண்டு வந்தாலும் அது இறைவனால் நிராகரிக்கப்பட்டு அதற்கு தண்டனையும் கொடுக்கப்படுவதாக குர்ஆன கூறுகிறது.

எனவே சகோ ராஜேஸ் உணரச்சிவசப்பட்டு ரஹ்மானின் பாடலைக் கேட்டு இஸ்லாத்துக்கு வர வேண்டாம். பாடல் சலிப்பு தட்டி விட்டால் இஸ்லாமும உங்களுக்கு சலிப்பாக தோன்றும். எனவே குர்ஆனின் தமிழ் அல்லது ஆங்கில மொழி பெயர்ப்புகளை வரிக்கு வரி தொடர்ந்து படித்து வாருங்கள். இது இறைவனின் வேதம்தான் என்ற முடிவுக்கு வந்தவுடன் பிறகு இஸ்லாத்துக்கு வருவதைப் பற்றியதான முடிவை எடுங்கள்.

உஙகளுக்கு மனம் அமைதியுற குர்ஆனின் வாசிப்பை ராகத்தோடு இசைக் கருவி இல்லாமல் கேட்டு வாருங்கள். உங்களின் உள்ளம் உண்மையாகவே ஈர்க்கப்படுவதை உணருவீர்கள். கீழே உள்ள காணொளியை ஒரு முறை பாருங்கள்.


ரஹ்மானின ராக்ஸ்டார் படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும கேட்டவுடன் ஒருவரின் மன நிலை எப்படி இருந்தது என்பதை ஒரு அன்பர் பின்னூடடத்தில் கூறியிருக்கிறார். அதையும் பாருங்கள்.
//While listening to this song, I feel like a aghori smoking ganja
Awesome music by ARR//

அதாவது காசியில் அகோரிகள் எவ்வாறு கஞ்சா அடித்து ஒரு வித மயக்க நிலையில இருப்பார்களோ அந்த நிலையில் தானும் இருப்பதாக இவர் கூறுகிறார். இசையை ஒரு அளவுக்கு மீறி நெசிக்க ஆரம்பித்தால் இதுதான் நிலை.

முஸ்லிம்களில் கூட பக்கீர்கள் என்ற ஒரு கூடடம் உழைக்காது இது போன்ற பாடல்களை பாடி பிச்சை எடுத்துக் கொண்டு திரிவதை பரவலாக பார்க்கலாம். இதை முற்றிலுமாக இஸ்லாம் தடுக்கிறது. நபியாகவும் ஆட்சித் தலைவராகவும் இருந்த முகமது நபி தனது வருமானத்திற்கு ஒரு ஆட்டுப் பண்ணையை சொந்தமாக வைததிருந்தார். வியாபாரமும் செய்தார். இவர்களைப் போல் புரோகிதத்தை வளர்க்கவில்லை.

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஒரு வேண்டுகோள்!

ரஹ்மான் சார்! தர்ஹா வணக்கத்தில் மூழ்கியிருந்த மக்களை குர்ஆனின் பக்கம் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வருகிறோம். இசையை சினிமாவோடு நிறுத்திக் கொள்ளுங்கள. நீங்கள் நன்மை என்று நினைத்து ஒழிந்து போன சூஃபி பாடல்களையும் தர்ஹா வணக்கங்களையும் மறு பிரவேசம் பண்ண வைத்து விடாதீர்கள். நீங்கள் ஹஜ்ஜூக்கு பலமுறை வந்திருக்கிறீர்கள். இங்கு ஒரு தர்ஹாவையாவது பார்த்ததுண்டா? முகமது நபி அடக்கததலத்தில் ஏதேனும் வணக்கங்கள் நடைபெறுவதை பார்த்திருக்கிறீர்களா? இல்லையே! எனவே குர்ஆனை மேலும் ஆழ்ந்து படியுங்கள. உண்மையான இஸ்லாத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். அதுதான் உங்களின் இரு உலக வாழ்க்கையையும் செம்மைப்படுத்தும்.

'தனக்கு இணை கற்ப்பிக்கப்படுவதை இறைவன் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான.'
-குர்ஆன் 4:48

டிஸ்கி: முஹர்ரம் 9,10 நோன்பு வைப்பது முகமது நபி வலியுறுத்திய ஒரு வணக்கம். எனவே வசதியிருப்பவர்கள் நோன்பை வைக்கவும். மறந்து விடாமல் இருக்கவே இப்படி ஒரு ஞாபகமூடடல்

Thursday, December 01, 2011

கருவியலைப் பற்றி குர்ஆன்!

//1400 ஆண்டுகளாக எல்லாவிதக் கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டோம் என்பது அதில் மிக முக்கியமான ஒன்று. இதனாலேயே கேட்ட கேள்விகளுக்கு நாம் கொடுத்துள்ள பதில் முழுமையானதா, சரியானதா என்று அவர்கள் எப்போதும் சிந்திப்பதில்லை. அடுத்த பக்கத்தில் வரும் விவாதத்தில் உண்மையிருக்கிறதா என்ற கேள்விகள் அவர்களுக்கு வருவதேயில்லை. கண்ணாடி முன் நின்று பதில் சொல்லும் பாணியைத்தான் பார்க்க முடிகிறது.//

ஏதோ நீங்கள்தான் அறிவாளி போலவும் மற்றவர்களெல்லாம் மூளை சலவை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிக் கொள்வது சற்று மிகைப்படுததல். அது ஒருபுறம் இருக்க கருவியலில் பல ஆராய்ச்சிகள் செய்த டாக்டர் கெய்த் மூர் என்ன சொல்கிறார் என்பதை இந்த மூன்று காணொளிகளிலும் பார்த்துக் கொள்ளுங்கள். கருவியலைப் பற்றி நீங்களோ நானோ விவாதிப்பதை விட டாக்டர் கெய்த் மூர் விவாதிப்பதுதான் சரியாக இருக்கும்.

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் துளியாக ஆக்கினோம். பின்னர் அந்தத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

- 23 : 12,13,14 - குர்ஆன்


புரபஸர் எமிரெடஸ் கெய்த் மூரின் கருத்துக்களை படிப்பதற்கு முன் இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

டாக்டர் கெய்த் மூர் உலக அளவில் புகழ் பெற்ற உயிரியல் துறை அறிஞர் ஆவார்.இவர் உயிரியலில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய புத்தகங்களில் "The Developing Human" என்ற புத்தகம் அமெரிக்க அரசால் சிறந்த புத்தகமாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் கெய்த் மூர் Anotomy and cell Biology துறைகளில் பேராசிரியராக டொராண்டோ பல்கலைக் கழகம் கனடாவில் பணியாற்றுகிறார். இக்கல்லூரியில் Anotomy துறையில் எட்டு வருடங்களாக தலைமைப் பதவியுலும் இருந்து வருகிறார். இனி அவர் தரும் விளக்கங்களை ஆங்கிலத்திலேயே பார்ப்போம்.

In the Holy Quran God speaks about the stages of Mans embryonic development:

“We created man from an extract of clay. Then we made him as a drop in a place of settlement, firmly fixed. Then we made the drop in to an alaqah (leech,suspended thing,and blood clot) then we made the alaqah in to a mudghah (chewed – like substance)…… “ - Quran 23 : 12,13 ,14

literally, the Arabic word alaqah has three meanings : 1) leech 2)suspended thing 3)blood clot.
1) In comparing a leech to an embryo in the alaqah stage, we find similarity between the two as we can see in figure 1. also the embryo at this stage obtains nourishment from the blood of the mother, similar to the leech ,which feeds on the blood of others.

Figure 1 : Drawing illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (leech drawing from Human development as Described in the Quran and sunnah. Moore and others page 37, modified from integrated principles of zoology, Hickman and others.Embbroyo drawing from The developing Human, Moore and persaud,page 73)

2)The second meaning of the word alaqah is “suspended thing.” This is what we can see in figures 2 and 3 the suspension of the embryo, during the alaqah stage, in the womb of the mother.

Figure 2 : We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. ( The developing Human, Moore and persaud, 5th edition page 66

3) The third meaning of the word alaqah is “blood clot.” We find that the external appearance of the embryo and its sacs during the alaqah stage is similar to that of a blood clot. This is due to presence of relatively large amounts of blood present in the embryo during the stage.(see figure 4). Also during the stage, the blood in the embryo does not circulate until the end of the third week. Thus the embryo at this stage is like a clot of blood.

Figure 3 : In this photomicrograph, we can see the suspension of an embryo (marked b) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother. The actual size of the embryo is about 0.6 mm. (The developing Human,Moore,3rd edition page 66,from Histology, Leeson and Leeson.)

Figure 4 : Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage. The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The developing Human, Moore 5th edition, page 65.)

ஆக 'அலக்' எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.

அடுத்த நிலையான 'முத்கா' என்ற நிலையை குர்ஆன் விளக்குகிறது. 'முத்கா' என்றால் நாம் ஒரு சூயிங்கம்மை வாயில் போட்டு நன்றாக மென்றவுடன் வரும் நிலை இருக்கிறதல்லவா அந்த நிலைதான் 'முத்கா' என்று அரபியில் சொல்லப்படும்.ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் “chewed like substance” என்று சொல்லலாம். இதைப்பற்றி திரு கெய்த் மூர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

The next stage mentioned in the verse is the Mudghah stage. The Arabic word mudghah means “chewed like substance.” If one were to take a piece of gum and chew it in his mouth and then compare it with an embryo at the mudghah stage, we would conclude that the embryo at the mudghah stage acquires the appearance of a chewed like substance. This is because of the somites at the back of the embryo that “somewhat resemble teethmarks in a chewed substance.” (see figures 5 and 6)

Figure 5 : photograph of an embryo at the mudghah stage (28 days old). The embryo at this stage acquires the appearance of a chewed-like substance, because the at the back of the embryo somewhat resemble teeth marks in a chewed substance. The actual size of the embryo is 4 mm. (The developing Human Moore and persaud, 5th edition, page 82, from professor hideo nishimura, Kyoto university, Kyoto,Japan)

Figure 6 : When comparing the appearance of an embryo at the mudghah stage with a piece of gum that has been chewed , we find similarity between the two.
a) Drawing of an embryo at the mudghah stage. We can see here the somites at the back of the embryo that look like teeth marks. (The developing Human, Moore and persaud,5th edition, page 79)
b) Photograph of a piece of gum that has been chewed


How could Mohammad have possibly known all this 1400 years ago, when scientists have only recently discovered this using advanced equipment and powerful microscopes which did not exist at that time? Hamm and Leeuwenhoek were the first scientists to observe human sperm cells (spermatozoa) using an improved microscope in 1677 (more than 1000 years after Mohammad. They mistakenly thought that the sperm cell contained a miniature preformed human being that grew when it was deposited in the female genital tract.

1981 ஆம் வருடம் புரபஸர் கெய்த் மூர் சவூதி அரேபியா தம்மாம் நகரில் நடந்த ஏழாவது மருத்துவ கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தார்.அப்பொழுது அவர் தமது அறிக்கையை பின் வருமாறு சமர்ப்பித்தார் : 'எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது குர்ஆனின் மேற் சொன்ன வரிகள். மனிதனின் கருவில் நிகழும் அடுத்தடுத்த நிலைகளை குர்ஆன் மிகவும் துல்லியமாக பட்டியலிடுகிறது.அரிஸ்டாட்டில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி நன்கு ஆராய்ந்தார்.ஆனால் அதன் பிறகு தொடர்ந்து வரும் நிலைகளின் மாற்றங்களை அறியும் வாய்ப்பும் வசதியும் அரிஸ்டாட்டிலுக்கு அன்று கிடைக்கவில்லை. அவர் கோழி முட்டையின் கரு வளர்ச்சியின் அடிப்படையைத்தான் விளக்கி விட்டுப் போனார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை கருவியலைப் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு அறிவியல் வரவில்லை. தற்போதுதான் கருவியல் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான சாதனங்களும் வாய்ப்புகளும் தற்போதுதான் இலகுவாக கிடைக்கின்றன.

மருத்துவம் படிக்காத, எந்த நுண்ணோக்கி வசதியும் இல்லாத, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தில் தோன்றிய ஒரு தனி நபரான முகமது நபி இப்படி ஒரு உண்மையை சொல்லவே முடியாது. குர்ஆன் கண்டிப்பாக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.' என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

இக் கட்டுரையில் வரும் அனைத்து விபரங்களுக்கும் உதவிய புத்தகங்கள் :

1) “The Developing Human” – Moor and Persaud, 5th edition, page8,65,9
2) “Human Development as described in the Quran and Sunnah” – Moor and others page no 36,37,38
3) The reference for this saying is “This is the Truth” (Video Tape) . For copy of this video tape please contact one of the organizations listed .
A) Islamic Foundation Of America
p.o. box – 3415, Merrifield,VA 22116,USA,
Tel : (703) 914-4982, Fax – (703) 914-4984
Mail – ifam@erols.com

B)Bader Islamic Association of Toronto
474 Roncesvalles Avenue, Toronto, Ontario M6R 2N5, Canada
Email : islam@badercenter.com

c) Al- Muntada Al-Islami Centre
7 Bridges Place, Parsons Green, London , SW6 4HW, UK
Mail : muntada@almuntada-alislami.org
mail@jimas.org

“ உலகத்திலுள்ள பெரும் மத கிரந்தங்களில் குர் ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தை தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும், பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றியமைப்பதிலும், அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது . நவீன பண்பாட்டை உருவாக்குகிறது. அது முதலில் அரேபிய பாலைவனத்தில் சிதறிக்கிடந்த மக்களை இலட்சியத்தை பேணும் குழுவாக ஒன்றினைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாய் மாற்றியது. ஐரோப்பிய மக்களும் கிழக்கத்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய , அரசியல் அமைப்புக்களை அது தோற்றுவித்துள்ளது. ”

G. மார்கோலத்-[G. Margoliouth: Introduction to J.M. Rodwell's 'The Koran', New York: Everyman's Library, 1977, p. VII.]

“ நான் மேலே கூறிவந்த (அவரது நூலில்) விபரங்கள் முஹம்மத் குர் ஆணைப் புனைந்தார் என்று கூறுவதை அடிப்படை யற்றது என தெளிவாக காட்டுகிறன. கல்வி அறிவில்லாத ஒருவர் திடீரென சிறந்த இலக்கிய நயம் வாய்ந்த ஒரு கிரந்தத்தின் இன்றைக்கும் அரபி இலக்கியத்தில் இணையற்று விளங்கும் ஒரு கிரந்தத்தின் ஆசிரியராய் ஆக முடியுமா? அது மட்டுமல்ல அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத இன்றைய விஞ்சான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புகளின் எதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படித்துல்லியமாக தெரிவிக்க முடிந்தது? ”

Dr.மாரிஸ் புகைல்[Dr. Maurice Bucaille - author of "The Bible, the Quran and Science" 1978, p. 125]

“ அதனுடைய வலிமையை இலக்கிய நயம் மற்றும் முன் கூட்டியே வைத்த சில துலாக் கோள்களைக் கொண்டு பார்க்கக் கூடாது. மாறாக, அன்று அவருடன் வாழ்ந்த மக்கள் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது, அந்நாட்டு மக்களிடையே அது எத்தகைய மாற்றங்களை உருவாக்கியது என்பதைக்கொண்டே அதன் வலிமையை நாம் கணிக்க வேண்டும். கருத்துகளில் முற்றிலும் மாறுபட்ட பரஸ்பர பகைமை கொண்ட மக்களின் உள்ளங்களை அது தொட்டு அவர்களின் உணர்ச்சிகளை மாற்றி, ஓர் இணக்கமான சமூகமாக பிணைத்தது என்பது வரலாற்று உண்மையாகும். இந்த உண்மையே அது அளவற்ற இலக்கிய நயம் கொண்ட வேதம் என்பதை தெளிவாக்குகிறது. பண்பாடற்ற மக்களை மிகவும் நாகரிகம் வாய்ந்த சமுகமாக மாற்றி வரலாற்றின் வெற்றிச் சிகரத்திற்கு அவர்களை இட்டுச்சென்றிருப்பதிலிருந்தே அந்த வேதத்தின் மகிமையை நாம் உணரலாம். ”

Dr.ஸ்டெயின் காஸ்[Dr. Steingass, quoted in Hughes' Dictionary of Islam, p. 528]

“ குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனை யாகும் அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்து துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. ”

சேர் வில்லியம் மூர்-[Sir. William Muir: 'The Life of Mohammed', London 1903, Ch. The Coran p.VII.]

-நன்றி விக்கி பீடியா