Followers

Monday, July 31, 2017

முஸ்லிம்கள் Vs அப்துல்கலாம் - சகோதரர் வெ.மதிமாறன்.

முஸ்லிம்கள் Vs அப்துல்கலாம் - சகோதரர் வெ.மதிமாறன்.


இந்திய முஸ்லிம்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் அப்துல்கலாம்.

ஒரு முஸ்லிம் உண்மையான இந்தியனாக இருக்க வேண்டுமென்றால் பகவத்கீதையைக் கொண்டாட வேண்டும். இந்து சாமியார்களை வழிபடவேண்டும். வேதங்களைப் போற்ற வேண்டும்.

நான் சைவம்என்று சொல்வதின் மூலமாக மாட்டுக்கறி சாப்பிடுகிற முஸ்லிம் அல்லஎன்பதை மறைமுகமாக வெளிபடுத்தி பசுப் புனிதம்என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

அப்துல்கலாமை பார்த்தவது இங்கிருக்கும் முஸ்லிம்கள் திருந்துங்கள்என்று இந்து அமைப்புகள் இனி அறிவுரை சொல்லும், எச்சரிக்கும் பிறகு மிரட்டும்.

அப்துல்கலாமை எந்த அளவிற்குக் கொண்டாடுகிறார்களோ அந்த அளவிற்கு இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது….

விழித்துக் கொள்ளுங்கள் இஸ்லாமியர்களே, ‘முற்போக்காளர்களே
ஒரு பேராபத்து இந்திய முஸ்லிம்களை அன்போடு அழைக்கிறது..
வரும் தேர்தலில் கலாமும் இந்து அமைப்புகளும் காட்டுவார்கள் தங்கள் பேரன்பை.

காத்திருக்கிறது கருணையோடு கல்லறைகள். அப்துல்கலாம் அழைக்கிறார்.
கனவின் ரகசியம்

*
முஸ்லிம்களை விடுங்கள், அப்துல்கலாம் வாழ்ந்த ராமேஸ்வரம் பகுதியில் அவர் குடும்பத்தைப் போலவே ஒரே வர்க்க நிலையில் வாழ்ந்த இந்துமீனவர், தாழ்த்தப்பட்டவர் கடவுள்களைப் பொருட்டாக மதிக்காமல்;

சாமியார்களில் கூட மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாமியார்களை அலட்சியப்படுத்தி;

பார்ப்பன-பணக்கார கடவுள்கள், சாமியார்களின் பக்தராக அடையாளப்படுத்திக்கொண்டதில் இருக்கிறது கலாம் கண்ட கனவின் ரகசியம்

அதே ரகசியத்தில் தான் இருக்கிறது, இந்து அமைப்புகள் தேசபக்தியின் மறுபெயர் கலாம்என்பதின் சூட்சம்.

கலாமின் ஆத்மா பரமாத்மா.

ஜெயேந்திரனுக்கு மாற்று பங்காரு கிடையாது. ஆனால், ஜெயேந்திரனை வணங்குகிற பார்ப்பனர்கள் பங்காருவை வேடிக்கை பார்க்கிற ஒரு கங்காருவாகக் கூட மதிப்பதில்லை.

இந்து சாமியார்களின் காலடியில் வீழ்ந்து வணங்கிய மரியாதைக்குரிய அப்துல் கலாம் அவர்கள் பங்காருவை பத்து பைசாவிற்குக்கூட மதித்ததில்லை.

பங்காரு அடிகள்இந்து இல்லையா? சாமியார் இல்லையா? ஏன் கலாமுக்கு பங்காரு ஒரு இந்து கணக்காகவே தெரியாம போச்சு.

நான் மதத்தை, கடவுளை, வழிபாட்டு முறையை ஆதரிக்கிறவன் இல்லை; அதை விமர்சிக்கிறவனும் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறவனும் கூட.

ஆனால், அப்துல்கலாம் குரானை தீவிரமாக நம்பிய இஸ்லாமியராக வாழ்ந்திருந்தாலே அவருடைய வாழ்க்கை முற்போக்கானதாக இருந்திருக்கும்.

சகோதரர் வெ.மதிமாறன்.



ஜுனைதின் பெற்றோரை பினராயி விஜயன் சந்தித்தார்



#ஹரியானாவில் ஓடும் ரயிலில் மதவெறி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சகோதரன் ஜுனைதின் பெற்றோரை டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து ஆறுதல் கூறினார்..


குழந்தை கடத்தலில் பாஜக எம்பிக்கு தொடர்பு!


மக்களவையில் மல்லிகார்ஜூனா பிஜேபியை நோக்கி சாடல்!



மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) கும்பல் வன்முறை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "குஜராத், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் என பாஜக எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் கும்பல் வன்முறையும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலும் அதிகமாக உள்ளது. இந்த தேசம் சகோதரத்துவத்துக்கு பெயர் பெற்றது. காந்தியைப் பற்றி நாம் பேசுகிறோம் ஆனால் அவரிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டோம்? பிரதமர் மோடியோ புத்தரைப் பற்றியும் குருநானக் பற்றியும் உரையாற்றுகிறார். ஆனால், இங்கு சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் கும்பல் வன்முறையில் ஈடுபட்ட எத்தனை பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறமுடியுமா? இந்த சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி அவையில் விளக்கமளிக்க வேண்டும். விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளையும் பசு பாதுகாவலர்களையும் இந்த அரசு மறைமுகமாக ஆதரிக்கிறது.
ஒரு சம்பவத்தில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் அப்பாவிகளாகவே கருதப்பட வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் விவகாரத்தில் மட்டும் உண்மை தலைகீழாக இருக்கிறது. நிரூபிக்கப்படும்வரை அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர்.
இந்த தேசம் இந்துஸ்தானாகவே இருக்கட்டும், அதை வன்முறை சம்பவங்களால் லின்சிஸ்தானாக்க வேண்டாம். (குறிப்பு: ஆங்கிலத்தில் lynch என்ற வார்த்தைக்கு தமிழில் விசாரணையின்றி நடைபெறும் கொலை என்று பொருள்)" .
நாட்டு மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதையும் யாரிடம் நேசமாக இருக்க வேண்டும் என்பதையும் அரசாங்கம் தீர்மானிக்க முடியாது" என்றார்.

அப்துல்கலாம் நமஹா.

அப்துல் கலாம் கையில் இருக்கும் வீணையும், அவர் அருகில் இருக்கும் பகவத் கீதையும் இந்திய இஸ்லாமிய மக்களுக்கு ஒரு செய்தியை இனி வரலாற்றில் சொல்லிக் கொண்டே இருக்கும், இந்தியாவில் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதை. அப்துல் கலாமின் கண்டுபிடிப்புகள் என்னாவாய் வேண்டும் என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அது முக்கியமில்லை. அவர் எப்படி வாழ்ந்தார் என்பதுதான் மிக முக்கியம். மோடி அப்துல் கலாமைப் பாராட்டுகின்றார், அவருக்கு மணிமண்டபம் திறந்திருக்கின்றார். இது ஒரு வரலாற்றுத் தருணம். அப்துல் கலாமைப் போல நீங்கள் இந்தியாவில் வாழ்ந்தால் மோடி உங்களுக்குச் சிலை வைப்பார். நீங்கள் இந்தியாவின் எந்த ஊரில் பிறந்திருந்தாலும் அந்த ஊரில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில் கூட விடப்படும். உங்களுக்கு நிச்சயம் தெரியாது, உங்கள் ஊருக்கு ராமனும் சீதையும் வந்து தங்கிப்போன வரலாறு. அதை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தன்னுடைய வாழ்க்கையால் வாழ்ந்து காட்டிவிட்டுப் போய் இருக்கின்றார் அப்துல்கலாம் அவர்கள். அதை அச்சாரம் பிசகாமல் பார்த்து, படித்து, புரிந்து நடந்து கொள்ள வேண்டியது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் கடமை. வேண்டும் என்றால் இதை முஸ்லிம்கள் தங்களின் ஐந்து கடமையுடன் ஆறாவது கடமையாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம். வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஸ்ரீ ராம், அப்துல்கலாம் நமஹா.
- செ.கார்கி

செ.கார்கி அவர்களுக்கு இந்திய முஸ்லிம்கள் ஒன்றை சொல்லிக் கொள்வார்கள். இந்திய முஸ்லிம்கள் தங்களின் உயிர் உடமைகளை விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் தங்களின் இறை நம்பிக்கையை ஒருக்காலும் தர மாட்டார்கள். அப்துல் கலாம் தனது பதவி பட்டத்துக்காக இறை நம்பிக்கையை விட்டுத் தரலாம். அது அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகமும் 1000 மோடிக்கள் வந்தாலும் 2000 அமீத்ஷாக்கள் உருவானாலும் இறை நம்பிக்கையை மாத்திரம் அசைத்து விட முடியாது. இதனை வருங்கால இந்திய வரலாறு உணர்த்தும்.


Sunday, July 30, 2017

ஹெச் ராஜாவுக்கு சரியான செருப்படி பதில்!

ஹெச் ராஜாவுக்கு சரியான செருப்படி பதில்!

'ஹெச் ராஜாவே... விவசாயிகளான எங்களை தீவிரவாதி என்று சொன்னீயாமே... இனி இந்த வார்த்தையை உபயோகித்தால் தீவிரவாதம் எப்படி இருக்கும் என்று உனக்கு காண்பிப்போம். உனக்கு மீத்தேன் வேணும்ணா பிஜேபிகாரன் நிலத்துல போட்டுக்கோ... அல்லது பொன் ராதா வீட்டு நிலத்துல போட்டுக்கோ... நாங்கதான் இளிச்சவாயர்களா... தமிழக அரசை ஆட்டி வைப்பது போல் விவசாயிகளான எங்களை ஆட்டி வைக்கலாம் என்று பிஜேபி கனவு காண வேண்டாம்.... அது எந்த காலத்திலும் நடக்காது'



ராஜேஸை கொன்றது ஆர்எஸ்எஸ் காரர்களாம்!

ராஜேஸை கொன்றது ஆர்எஸ்எஸ் காரர்களாம்!

கேரளா RSS பயங்கரவாதி ராஜேஷ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட RSS அமைப்பின் விஷ்னு என்பவன் CPM நிர்வாகி அசோகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகும்.

அதேபோல் மணிக்குட்டன் என்பவனும் RSS பயங்கரவாத அமைப்பின் நிர்வாக பொறுப்பில் உள்ளவன்.. CPM இடைக்குழு உறுப்பினர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இவன் குற்றவாளியாகும்.. தொடர் குற்றங்களில் ஈடுபடுபவன்.

மணிக்குட்டனுக்கும், ராஜேஷுக்கும் முன்விரோதம் இருந்து, அது தொடர்பான வழக்கு ஒன்றும் பதியப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க தனிப்பட்ட விரோதம் காரணமாகவும், BJP, RSS அமைப்பின் நிர்வாக பூசல்களும், கேரள அரசை கலைக்க வேண்டும் என திட்டமிட்டு இச்செயலில் பாஜக இறங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்துத்வாவாதிகளின் ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் தனிப்பட்ட காரணங்களே அதிகம் உள்ளன. ஆனால் இந்த கொலைகளை மதக் கலவரமாக்கி அதில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பாஜக. தற்போது கேரளாவில் முழு பந்தை அறிவித்துள்ளது. சொந்த பகையில் கொலையுண்டவனுக்கு எதற்காக பந்த்?




வியாபம் ஊழலில் மற்றொரு இளைஞர் தற்கொலை!

வியாபம் ஊழலில் மற்றொரு இளைஞர் தற்கொலை!

மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலில் மற்றொரு தற்கொலை நடந்துள்ளது. பிரவீன் யாதவ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கை கூறுகிறது. பிரவீன் யாதவ் நன்றாக படிக்கக் கூடியவர். அரசு கொடுத்த நெருக்கடியினால் மனஉளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். யாரை காப்பாற்ற இந்த இளைஞரின் உயிர் எடுக்கப்பட்டதோ தெரியவில்லை. இதுவரை 50 க்கு மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அல்லது பொது இடங்களில் இறந்த உடலை மீட்டுள்ளார்கள். மத்திய பிரதேச பாஜக அரசு தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது. மோடியும் மவுனம் சாதிக்கிறார். 

இறந்த மற்றவர்களின் பட்டியலையும் கீழே பாருங்கள்.


1. Akshay Singh —  Singh, a journalist with TV channel Aaj Tak, was investigating the Vyapam Scam in Madhya Pradesh when he died mysteriously. His death occurred on Saturday after interviewer parents of Namrata Damor, the girl who had been found dead near railway tracks after her name figured in the infamous scam.  Reports suggest that after the interview, Singh waited to get some papers photocopied when he suddenly started frothing at the mouth. He was rushed to the hospital but doctors failed to revive him. According to the statement released by The India Today Group where he was employed, the cause of his sudden demise is not yet clear.
2. Arun Sharma — Sharma was the dean of Netaji Subhas Chandra Bose Medical College in Jabalpur, Madhya Pradesh. He was suspected of having links to some accused in the Vyapam scam, was found dead under mysterious circumstances at a hotel in south-west Delhi's Dwarka on 6 July. The body of Sharma was found in his room at the hotel. Police said when the door was not opened after repeated knocks, the staff entered the room using a duplicate key and found his body. According to the police, a bottle of alcohol, almost empty, was found in the room. Sharma had also vomited and there were signs of heavy drinking.
3. Sanjay Kumar Yadav - Yadav was a police constable in Madhya Pradesh who was supposed to appear as one of the witness in the Vyapam case. He died over two months ago however his death came to light only in July after he failed to appear in court to testify. According to state government sources, Yadav died due to hepatitis and there was nothing mysterious about the way he died, reports NDTV.
4. Narendra Singh Tomar – This death was what brought the Vyapam scam back in the limelight in June 2015 after another accused in the high-profile MPPEB scam died under mysterious circumstances in an Indore jail. The 29-year-old veterinarian complained of chest pain at night and was rushed to Maharaja Yashwant Rao Hospital where he was declared brought dead.
5. Dr Rajendra Arya – The 40-year old died within 24 hours of Tomar’s death at Birla Hospital in Gwalior. He had been on bail for one year, had gone to Kota and was returning when his condition turned critical.
6. Amit Sagar - A student of Mhow Veterinary College, he was found dead under suspicious circumstances in Sheopur district. The incident occurred on 18 February, but his death came to light only on Monday, a day after the deaths of Tomar and Arya in quick succession. Sagar is said to have died of drowning and his body was found floating in a pond, according to a report by India Today.
7. Shailesh Yadav – He was the son of MP Governor Ram Naresh Yadav and was one of the accused in the Vyapam scam. He was found dead at his residence, the Governor’s bungalow in Lucknow in March 2015. According to an Indian Express report, the 50-year old’s family members claimed that he was was diabetic and died of brain haemorrhage. They did not share the exact time of his death, maintaining that they came to know about it around 6 am when he did not get up. However, a Times of India report mentions that he died due to poisoning. But the post-mortem report says that cause of death could not be ascertained.
8. Vijay Singh – Another accused, Singh was found dead under mysterious circumstances at a lodge in Chhattisgarh's Kanker district in April 2015. He was a resident of Rewa in Madhya Pradesh and posted as pharmacist at Shajapur District Jail. Singh had been under suspension after the Special Task Force (STF) arrested him in three cases related the MPPEB scam. but was later cleared in one case. He had been released on bail in February this year. Singh's brother had demanded a probe into the mysterious death. "Vijay Singh's body was found at a local lodge in Kanker on 28 April. No poisonous substance was found inside the room," his brother Abhay Singh, a government school teacher, had told PTI.
9. Namrata Damor – Damor was a student of MGM Medical college, Indore, was found near railway tracks at Kayta village in Ujjain on 7 January, 2012, a week after she was reported mysteriously missing from the college hostel, according to a Times of India report. She was in the list of suspects who cleared PMT-2010 using unfair means.
10. Dr DK Sakalley – He was the dean of Netaji Subhashchandra Bose Medical College of Jabalpur and died in July 2014, succumbing to burns during a 30-day medical leave to avoid pressure from students who were sacked for their alleged role in MPPEB scam, says another report by The Times of India.
11. Ramendra Singh Bhadoria – The 30-year old was found hanging at his home in Gwalior a few days after an FIR was registered in January 2015. His family members claimed he was being mentally tortured by those involved in the MPPEB scam to keep quiet. His mother also committed suicide by consuming acid a week later, as per a Times of India report.
12. Praveen Yadav: Named as an accused in the case in 2012, 27-year-old Yadav hanged himself at his house on 26 June, 2017 at Maharajpur near Morena town, police said. "Praveen took this extreme step as he had been grilled in the case many times. He was distressed because of it," said Ramkumar Yadav, a relative, speaking to reporters.
Praveen had gained admission to the MBBS course at Gwalior's Gajra Raje Government Medical College after clearing Pre-Medical-Test (PMT) conducted by the MPPEB, popularly known by its Hindi acronym 'Vyapam', in 2008-09. When the scam came to light, the special task force (STF) which was probing the case then named him as an accused. "He was regularly attending hearings of Vyapam-related case before the Jabalpur bench of the high court. The CBI had summoned him for questioning. He was in much distress and also jobless," said Rajkumar Yadav. Praveen was the only son of his parents, he said.
Other scam accused declared dead in the SIT report among others as per The Times of Indiaare –
12. Anuj Pandey
13. Vikram Singh
14. Arvind Shakya
15. Kuldeep Maravi
16. Anantram Tagore
17. Ashutosh Tiwari
18. Gyan Singh (Bhind)
19. Pramod Sharma (Bhind)
20. Vikas Pandey (Allahabad)
21. Vikas Thakur (Barwani)
22. Shyamveer Singh Yadav
23. Aditya Chaudhary
24. Deepak Jain (Shivpuri)
25. Gyan Singh (Gwalior)
26. Brijesh Rajput (Barwani)
27. Narendra Rajput (Jhansi)
28. Anand Singh Yadav (Fatehpur)
29. Anirudh Uikey (Mandla)
30. Lalit Kumar Pashupatinath Jaiswal
31. Ragvendra Singh (Singrauli)
32. Anand Singh (Barwani)
33. Manish Kumar Samadia (Jhansi)
34. Dinesh Jatav
35. Gyan Singh (Sagar)



ஆர்எஸ்எஸ் உறுப்பினரை கொல்ல முயற்சித்த ஆர்எஸ்எஸ்!

ஆர்எஸ்எஸ் உறுப்பினரை கொல்ல முயற்சித்த ஆர்எஸ்எஸ்!

திருவனந்தபுரம் கர்குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு(25). பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் உறுப்பினராக உள்ளார். தேச பக்தி என்ற போர்வையில் பல நாசகார செயல்களை செய்ய ஆர்எஸ்எஸ் இவரை பயன்படுத்திக் கொண்டது. ரமலான் மாதத்தில் மாடுகளை ஏற்றி வந்த வாகனத்தை மறித்து பிரச்னை செய்தார். கிறித்தவர்களின் சர்ச்சுக்கு சென்று அங்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்தினார். ஒரு முறை ஆர்எஸ்எஸ் கொடிகளை இவர்களே எரித்து விட்டு அதனை சிபிஐம் செய்ததாக பொய் கூறி கலவரம் செய்தனர். இது விஷ்ணுவுக்கு பிடிக்கவில்லை. ஆர்எஸ்எஸின் பல செயல்கள் தேச விரோதங்களாகவே இருந்தது. இது பற்றி பல முறை தலைவர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார். 

எதிர்த்து கேள்வி கேட்டால் ஆர்எஸ்எஸூக்கு பிடிக்காதல்லவா! எனவே அவரை தனி அறையில் அடைத்து சாப்பாடு கொடுக்காமல் கொடுமைபடுத்தியுள்ளனர். இவரை தூங்கவும் விடவில்லை. தங்கள் வேலைகளை முடிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். பலமாக அடித்துள்ளனர். பல முயற்சிகளுக்குப் பிறகு இவர்களின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ளார் விஷ்ணு. ஆர்எஸ்எஸ் ஆட்களால் தான் எந்த நேரமும் கொல்லப்படலாம் என்ற பீதியுடனேயே உள்ளார் விஷ்ணு.


கொலைகார கூட்டமான இந்த ஆர்எஸ்எஸ் என்று நம் நாட்டிலிருந்து விரட்டப்படுகிறதோ அன்று தான் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருப்பர். இந்தியாவும் முன்னேறும்.




Saturday, July 29, 2017

சுதந்திர தினத்தை முன்னிட்டு விளக்கக் கூட்டம்!


பாலஸ்தீன வீர மங்கையின் கர்ஜனையை பாருங்கள்!

பாலஸ்தீன வீர மங்கையின் கர்ஜனையை பாருங்கள்!

மஸ்ஜிதுல் அக்ஸாவில் மெடல் டிடெக்டர் சோதனையை இஸ்ரேலிய அரசு தற்போது நடைமுறைபடுத்தியுள்ளது. இந்நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலிய வீரர்களை நோக்கி சிறிதும் பயமில்லாமல் பொரிந்து தள்ளுகிறார். வீடியோவை பாருங்கள்.

'எந்த சோதனையும் இல்லாமல் நான் எங்கள் பள்ளிவாசலில் நுழைவேன். இது எங்களின் புனித பள்ளி அக்ஸா. மக்கா மதினா பள்ளிகளுக்கு நாங்கள் சென்றால் எங்களை யாரும் இவ்வாறு சோதனையிடுவதில்லை. மெக்க, மதினாவைப் போல் இந்த பள்ளியும் முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒன்று. நபிகள் நாயகம் மெஹ்ராஜ் பயணம் மேற்கொண்டது இங்கிருந்துதான். நபிகள் நாயத்தை தலைவராகக் கொண்ட எங்கள் சமுதாயம் இறைவனைத் தவிர எவருக்கும் அடிபணியாது. எங்களை இந்த பள்ளியில் நுழைய வேண்டாம் என்று தடுக்க நீ யார்? எங்கள் மண்ணை அநியாயமாக ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள் நீங்கள். இது தற்காலிக ஆக்கிரமிப்பே.... இந்த ஆக்கிரமிப்பை இறைவனின் துணை கொண்டு ஒருநாள் அப்புறப்படுத்துவோம்.'







இறைவா! உனது படைப்பில்தான் எத்தனை விநோதங்கள்!

இறைவா! உனது படைப்பில்தான் எத்தனை விநோதங்கள்!

உலகில் உள்ள படைப்புகளை கூர்ந்து நோக்குங்கள். ஒவ்வொன்றும் எவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எத்தனை கோடி உயிரினம் இருந்தாலும் ஒன்றையொன்று வித்தியாசப்படுத்தி வேறுபடுத்திக் கொள்கிறது


அல்லாஹ் தன்னை அல் பாரி’ – தொடங்குபவன், படைப்பவன் என்று குர்ஆனில் மூன்று முறை குறிப்பிட்டுள்ளான். சூரத்துல் ஹஷர் இறுதி வசனத்தில் அல் காலிக்’, ‘அல் பாரி’ (படைப்பாளன், உண்டாக்குபவன்) மற்றும் அல் முஸவ்விர்ஒழுங்குபடுத்துபவன், உரு கொடுப்பவன் என்ற ஒன்றுக்கொன்று கருத்தில் தொடர்புடைய மூன்று பெயர்களுமே உள்ளன. இவை அல்லாஹ்வின் தன்மையான படைப்பாளன் என்ற முறையில் அவன் நிலைகளைக் குறிப்பிடுகின்றன. அவனைத் தவிர, பிரபஞ்சத்தில் உள்ள மற்றவை அனைத்தும் படைப்புகள்.

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 21



எண்கள் சம்பந்தமாக மேலும் சில தகவல்களைப் பார்போம்.....

نُص --- நுஸ் --- அரை --- 1/2 --- half

ثُلث --- துல்த் ---- முக்கால் ---- 1/3 -- third

رُبع --- ருபா ---- கால் --- 1/4 --- quarter

خُمس --- ஹூம்ஸ் --- ஐந்தில் ஒன்று --- 1/5

سُدس --- ஸூதுஸ் --- ஆறில் ஒன்று --- 1/6

سُبع --- ஸூபா ---- ஏழில் ஒன்று --- 1/7

ثُمن --- துமன் --- எட்டில் ஒன்று --- 1/8

تُسع --- துஸா --- ஒன்பதில் ஒன்று --- 1/9

عُشر --- வுஸ்ர் --- பத்தில் ஒன்று --- 1/10

-------------------------------------

இடையிடையே சிறிது இலக்கணத்தையும் பார்த்துக் கொள்வோம்.

الفعل الماضي -- AL FALUL MAADHEE - அல் ஃபஃலுல் மாதி --- இறந்த காலம்

ஒரு செயல் நடந்து முடிந்து விட்டால் அதனை 'இறந்த காலம்' என்று சொல்கிறோம்.

அதே நேரம் தன்மை, முன்னிலை, படர்க்கையில் ஒரு செயல் இறந்த காலத்தில் நடந்தால் அது எவ்வாறு மாறுபடும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்போம்.

سافرتُ ---- ஸாஃபர்து --- நான் பயணித்தேன்

'நான் பயணித்தேன்' என்ற வார்த்தையானது 'தன்மை' யில் வரும். செயலை செய்தவரே சொல்வதால் இது 'தன்மை' என்பது நமக்கு தெரியும்.

நமக்கு முன்னால் உள்ள ஒருவரை பார்த்து சொன்னால் அதனை 'முன்னிலை' என்கிறோம். இதே வார்த்தையை 'முன்னிலையில்' பயன்படுத்தும் போது அரபியில் அந்த வார்த்தை எவ்வாறு மாறுகிறது என்று பாருங்கள்.

سافرتَ --- ஸாஃபர்த --- நீ பயணம் செய்தாய் (ஆண்பால்)

வார்த்தையின் கடைசி எழுத்தான ت என்ற எழுத்தின் குறி மாறியுள்ளதை கவனியுங்கள். 'து' 'த' வாக மாறியுள்ளது....

-----------------

அதே வார்த்தையை ஒரு பெண்ணைப் பார்த்துக் கூறுகிறோம். அப்போது அந்த வார்த்தையில் ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள்.

سافرتِ --- ஸாஃபர்தி --- நீ பயணம் செய்தாய் (பெண்பால்)

ت என்ற எழுத்தானது تِ யாக மாறியுள்ளதை கவனியுங்கள்.

---------------

பலபேர் பயணித்தால் கடைசி எழுத்து 'தும்' என்று மாறும்.

سافرتم --- ஸாஃபர்தும் --- நீங்கள் பயணம் செய்தீர்கள்.

--------------

தன்மையில் பல பேர் பயணித்தால் அங்கு வார்த்தையானது எவ்வாறு மாறும் என்பதை கவனியுங்கள்...

سافرنا --- ஸாஃபர்னா ---- நாங்கள் பயணித்தோம்.

-------------

முன்னிலை ஆண்பாலில் அதே வார்த்தையானது எவ்வாறு மாறுகிறது பாருங்கள்.

سافرَ --- ஸாஃப்ர --- அவன் பயணித்தான்

முன்னிலை பெண்பாலில் அதே வார்த்தையானது எவ்வாறு மாறுகிறது பாருங்கள்.

سافرت --- ஸாஃபர்த் ---- அவள் பயணித்தாள்

முன்னிலை பன்மையில் அதே வார்த்தையானது எவ்வாறு மாறுகிறது பாருங்கள்.

سافروا ---- ஸாஃப்ரூ --- அவர்கள் பயணித்தார்கள்.

இது வரை நாம் இறந்த காலத்தில் தனமை முன்னிலை படர்க்கை போன்ற இடங்களில் வார்த்தையானது எவ்வாறு மாறுபடுகிறது என்பதை பார்தோம்.

என்ன ..... ஒரே குழப்பமாக இருக்கிறதா? :-)

இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என்ற இந்த மூன்று காலங்களையும் சற்று சிரமம் எடுத்து படித்துக் கொண்டால் அரபு மொழியை மிக இலகுவாக கையாளலாம். குர்ஆனும் மிக இலகுவாக நமக்கு மொழி பெயர்பு இல்லாமலேயே புரியும்.

ஒரு முறைக்கு இரு முறை எழுதி வாருங்கள். எந்த ஒரு பாடமும் புரிந்து கொண்டு படித்தால் வாழ்நாள் முழுக்க மறக்காமல் இருக்கும்.

இறைவன் நாடினால் அடுத்த பாடங்களில் மேலும் சில இலக்கணங்களை பார்போம்.