Followers

Monday, August 31, 2015

அண்ணே ரொம்ப அழகா உண்மையை சொல்றாப்ல..... :-)

இந்திய பொருளாதாரம் தற்போது யோகாவில் :-)இந்திய பொருளாதாரம் சரிந்து விட்டது என்று இனிமேல் யாரும் சொல்லாதீர்கள்! இந்திய பொருளாதாரம் தற்போது யோகாவில் திளைத்திருக்கிறது. கூடிய விரைவிலேயே யோகா, சமஸ்கிரத வாரம், ராம ஜென்ம பூமி, போன்ற முன்னேற்ற திட்டங்களால் விரைவில் நிமிர்ந்து விடும்.

ஸ்பெயின் விழாவில் யூத கலைஞன் பங்கு கொள்ள தடை!
மெட்ரிட்: ஸ்பெயினில் நடந்து கொண்டிருக்கும் கலாசார விழாவில் யூத அமெரிக்கரான பிரபல கலைஞர் மதிஸ்யாஹூவின் நிகழ்ச்சியும் ஏற்பாடாகியிருந்தது. பாலஸ்தீனத்தில் மண்ணின் மைந்தனுக்கு எதிராக இஸ்ரேல் செய்து வரும் காட்டு தர்பாரை எதிர்த்து பெரும் போராட்டம் மெட்ரிட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு யூதர் கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று பாலஸ்தீன ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை வலுவானதாக இருக்கவே வேறு வழியின்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மதிஸ்யாஹூவின் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி ரத்துக்கு யூதர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உலகமெங்கும் இஸ்ரேலின் அடாவடித்தனத்தினால் யூதர்கள் அவமானப்படுவது தொடர்கதையாகி வருகிறது. உலக முடிவு நாள் வரை இஸ்ரேலியர்கள் திருந்தப் போவதில்லை. அவர்கள் வழி வந்த நம் நாட்டு இந்துத்வாவாதிகளும் திருந்தப் போவதில்லை.

தகவல் உதவி
சவுதி கெஜட்
19-08-2015

Saturday, August 29, 2015

ராமகோபாலனுக்கு வந்த மிரட்டல் கடிதம்!
இராம கோபாலனுக்கு வந்த மிரட்டல் கடிதம் இது தான். இதில் என்ன ஒரு விஷேசம் என்றால் இந்த கடிதத்தை எழுதி அதன் மூலம் பதட்டத்தை உருவாக்க நினைத்த ராம கோபாலனுக்கு நினைத்த காரியம் கை கூடவில்லை.

10 வயது இஸ்லாமிய சிறுவனை கூப்பிட்டு 'அல்லாஹ்வுக்கு குழந்தைகள் இருக்கா?' என்று கேட்டால் 'இல்லை... தவறான தகவல்' என்று அழகாக சொல்லி விடுவான். ஆனால் ராம கோபாலன் ஏற்பாடு செய்த நபருக்கு இந்த உண்மை தெரியாமல் 'இப்படிக்கு அல்லாவின் பிள்ளைகள்' என்று போட்டு வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். மேலும் கடிதம் தொடங்கும் போது 786 என்று போடும் பழக்கம் பெரும்பாலான இஸ்லாமியர்களிடம் 20, 25 வருடங்களுக்கு முன்பு இருந்தது. ஏகத்துவ சிந்தனை அதிகம் வந்தவுடன் 786 என்று போடும் வழக்கத்தையும் விட்டு விட்டனர். அடுத்து இஸ்லாமியர்கள் இறைவனை 'அல்லாஹ்' என்றுதான் அழைப்பார்கள். ஆனால் இங்கு இரண்டு இடத்திலும் 'அல்லா' என்று மொட்டையாக வருகிறது. இதை எல்லாம் விளங்கிக் கொள்ளாமல் அரை குறையை விட்டு எழுத வைத்து ராம கோபாலன் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் எந்த வகையிலாவது அண்ணன் தம்பிகளாக பழகி வரும் இந்து மற்றும் இஸ்லாமியர்களை பிரிக்க பல திட்டங்களை தீட்டுகிறார். எல்லாமே மண்ணைக் கவ்வுகிறது. இந்து மதத்தின் மேல் உண்மையிலேயே பற்றும் பாசமும் இருந்தால் விழுப்புரத்திற்கு சென்று வன்னியர்களையும் தலித்களையும் சேர்த்து வைக்க பாடுபட்டிருக்க வேண்டும். அந்த இடத்தை எட்டியாவது பார்த்தாரா?

இஸ்லாமியர்களை இந்துக்களாக மதம் மாற்றவும் பல திட்டங்களை தீட்டுகிறார். அவ்வாறு மதம் மாறினால் அவர்களை பார்பன சாதியில் சேர்த்துக் கொள்ள இராம கோபாலன் தயாரா? சங்கராச்சாரிகள் அனுமதிதான் கொடுப்பார்களா? மனுநீதிதான் அதற்கு அனுமதி கொடுக்குமா? பார்பன மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள்? இது கணிணி யுகம். நீங்கள் எந்த சதித் திட்டம் திட்டினாலும் அடுத்த நிமிடமே இணையம் மூலம் முழு உலகுக்கும் தெரிய ஆரம்பித்து விடும்.

எனவே இனியாவது இஸ்லாத்தை அழிக்க நினைக்காமல் இந்து மதத்தில் புரையோடிப் போயுள்ள சாதி வேற்றுமைகளை களைய பாடுபடுங்கள். உங்கள் வயதுக்கேற்ற வேலைகளில் ஈடுபடுங்கள் என்றும் அன்பாக சொல்லி வைக்கிறோம்.

குருதியை விற்றுப் பிழைக்கும் இந்துத்வா அரசு!மோடியின் குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் அரசு இரத்த வங்கி தனியாருக்கு விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

1. 2011 லிருந்து 2014 வரை 10 அரசு இரத்த வங்கிகள் 52000 லிட்டர் இரத்தத்தை 6.17 கோடிக்கு தனியாருக்கு விற்றுள்ளது. தேசிய இரத்த சேமிப்பு மையமோ இவ்வாறு தனியாருக்கு விற்பதை சட்ட விரோதமாக்கியுள்ளது. ஆனால் இந்துத்வா அரசுக்கு சட்டமெல்லாம் கால் தூசுக்கு சமமல்லவா?

2. தலசீமியா, ஹீமோபிலியா நோய் தாக்கிய நோயாளிகளிடமிருந்தும் உயிர் பிரியும் தருவாயிலுள்ள அவசர கேஸ்களிடமிருந்தும் இரத்தத்திற்காக எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று அரசு ஆணை உள்ளது. ஆனால் 2011 லிருந்து 2014 வரை 5747 யூனிட் ரத்தத்தை விற்று 19.61 லட்சம் பணமாக பெறப்பட்டுள்ளது. கணக்கில் வந்ததுதான் இது. கணக்கில் வராதது இன்னும் எத்தனை லட்சங்களோ!

3. 32 இரத்த வங்கிகளில் நடந்த சோதனையில் 7 ரத்த வங்கிகள் ஹெச்ஐவி நோயாளிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

4. 82 கோடிக்கு 3.14 லட்சம் யூனிட் ரத்தத்தை அநியாய விலைக்கு விற்று காசாக்கியுள்ளனர்.

5. குஜராத்தில் உள்ள 136 இரத்த வங்கிகளில் பெரும்பாலானாவை அடிப்படை வசதிகளே இல்லாமல் உள்ளன. 73000 யூனிட் ரத்தமானது எவருக்கும் பயனளிக்காமல் வீணாக்கப்பட்டுள்ளது.

6. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை இரத்த வங்கிகளின் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பல ரத்த வங்கிகள் உரிமம் இல்லாமலேயே இந்துத்வாவாதிகளின் ஆசியோடு நடந்து வருகின்றன.

மோடியின் தலைமையில் உள்ள இந்துத்வா ஆட்சி சாமான்யனுக்காக உழைக்கவில்லை. அம்பானி, அதானி போன்ற பண முதலைகள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்குத்தான் இந்துத்வா அரசு மறைமுகமாக வேலை செய்கிறது. நில கையகப்படுத்தும் சட்டத்திலிருந்து கேஸ் மான்யத்தை விட்டுத் தர வேண்டும் என்று மோடியே கேட்பது வரை இவர்கள் பண முதலைகளுக்காகவே உழைக்கிறார்கள்.

அப்பாவி இந்துவோ மோடியினால் தனக்கு வளமான எதிர்காலம் வந்து விட்டது என்ற தவறான பிம்பத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். பல் முகம் கொண்ட நமது பாரத தேசத்தில் இந்துத்வாவின் செல்வாக்கு என்று சரிகிறதோ அன்று தான் நமது நாடு முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும். அதற்கான அறிகுறிகள் தற்போது தெரிய ஆரம்பித்துள்ளன.

தகவல் உதவி
தி லாஜிகல் இந்தியன்.காம்
26-08-2015


http://thelogicalindian.com/editors-pick/blood-banks-in-gujarat-sold-blood-to-pharma-companies-for-crores-says-cag-report/

http://www.saiindia.gov.in/english/home/Our_Products/Audit_Report/Government_Wise/state_audit/recent_reports/Gujarat/2015/Report_6/Report_6.html

Friday, August 28, 2015

குஜராத்: வினை விதைத்தவன் வினை அறுப்பான்!ஒரு மாநிலமே முடங்கியிருக்கிறது. தலைநகர் அகமதாபாத் கலவர நகரமாகியிருக்கிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டும் அகமதாபாத்தில் மட்டும் 50 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று 140 வாகனங்கள் தீக்கிரையாகியிருக்கின்றன. இதுவரை 9 உயிர்கள் கலவரங்களில் பறிபோயிருக்கின்றன. மேசானா, ராஜ்கோட், சூரத் என சௌராஷ்டிரம் வரை வன்முறைத் தீ தொடர்ந்து பரவுகிறது. கடி நகரில் சுகாதார அமைச்சர் நிதின் படேலின் வீடு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. மேசானாவில் உள்துறை இணையமைச்சர் ரஜனிகாந்த் படேல், மோர்பியில் வேளாண் இணையமைச்சர் ஜெயந்தி கவாடியா, சமூகநீதித் துறை அமைச்சர் ரமண்லால் வோராவின் அலுவலகம் ஆகியவை எரித்தழிக்கப்பட்டிருக்கின்றன. மோர்பியில் மத்திய வேளாண் இணையமைச்சர் மோகன் கவுன்டரியாவின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வடோதராவில், பலிதானாவில் என்று ஆளும் பாஜகவின் பிரதிநிதிகளே அடிபடும் கதைகள் ஒவ்வொன்றாய் வந்துகொண்டேயிருக்கின்றன. முதல்வரும் பிரதமரும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல், விரைவு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை என மத்தியப் படைகளின் பல பிரிவுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன.

ஹ்ருதிக் படேல் என்ற இந்த 22 வயது இளைஞனுக்கு இத்தகைய ஆற்றல் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது. இதற்கான விடை மேலே உள்ள புகைப்படம் சொல்லும். படேல், குஜ்ஜர், ஜாட் என்ற முற்படுத்தப்பட்ட மக்களை தூண்டிவிட்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும் உரிமைகளை பறிக்க இந்துத்வாவினர் முயலுகின்றனர். பள்ளனும் பரையனும் படித்து பட்டம் பெற்று விட்டால் வர்ணாசிரமத்தை கட்டிக் காப்பது எப்படி? பார்பனர்கள் மீண்டும் சகல அதிகாரங்களோடு வலம் வருவதற்கு என்ன வழி? அதற்கான முன்னோட்டம்தான் இந்த வன்முறை போராட்டம். ஆர்எஸ்எஸ் எவ்வளவு சூசகமாக தனது நச்சுக் கருத்தை விதைக்கிறது என்பதையும் பாருங்கள்.

இடஒதுக்கீடு குறித்த தங்களது நிலைப்பாட்டை முன்வைத்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலாலர் சுரேந்திரா ஜெயின் அளித்த பேட்டியில், "இடஒதுக்கீடு பிரச்சினையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஒரு நிலையான கொள்கையைக் கொண்டுள்ளது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட கால கோரிக்கை.

ஆக... இந்த வன்முறை போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டு இதன் மூலம் சாதிவாரியான இட ஒதுக்கீட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். பார்பனர்களை மீண்டும் உயரிய பதவிகளில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பதே இந்துத்வாவின் மறைமுக அஜண்டா. அதன் ஆரம்பமே இந்த குஜராத் கலவரம்.

மஹர் கொடுத்து நபி வழியில் திருமணம் !

TNTJ இராஜகிரி கிளையில் கடந்த 09/08/15அன்று APM நகர் 2வது தெரு A.கமால்பாட்சா அவர்களின் குமாரர் k.முஜிபுர்ரஹ்மான் மணாளருக்கு கோபாலபுரம் S.தோட்டம் நிஜார் அலி குமாரத்தி N.ஆயிஷா சிபானா மணாளிக்கு கிளை நிர்வாகிகள் ஜமாஅத்தார்கள் முன்னிலையில் மாவட்ட தாஃயி சகோ முஹம்மது யாசின் (காஜி)தலைமையில் நபிவழி திருமணம் நடைப்பெற்றது. மணமகன் மணமகளுக்கு மஹராக 44 கிராம் தங்க ஆபரண நகையும் வலிமா விருந்தும் கொடுக்கப்பட்டது.

இவ்வாறான திருமணங்களை நாம் இனம் மொழி கடந்து ஊக்கப்படுத்த வேண்டும். பெண்ணிடம் வரதட்சணை கேட்கவில்லை. தஞ்சை மாவட்டத்தில் முன்பெல்லாம் சர்வ சாதாரணமாக 50 பவுன், 60 பவுன் என்று பெண் வீட்டாரிடம் வெட்கமில்லாமல் கேட்பார்கள். இரண்டு மூன்று பெண்களை இவ்வாறு கட்டி கொடுத்து விட்டு சொந்த வீட்டையும் இழந்த எத்தனையோ தகப்பன்மார்களை நான் பார்த்துள்ளேன். ஏகத்துவ சிந்தனை மக்கள் மனதில் வந்தவுடன் இன்று இளைஞர்கள் தாங்களாகவே முன் வந்து வரதட்சணை வாங்காமல் மணமுடிக்கிறார்கள்.

இந்த மணமகன் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்கவில்லை. திருமண விருந்தும் மாப்பிள்ளையே கொடுக்கிறார். 44 கிராம் தங்கத்தையும் பெண்ணுக்கு மஹராக கொடுக்கிறார். பெண் வீட்டாருக்கு எந்த பொருளாதார சுமையும் இல்லை. இதுதான் நபிகள் நாயகம் காட்டித் தந்த திருமண முறை. இந்த காலத்தில் பல லட்ச ரூபாய்களை இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று உதறித் தள்ளுகிறார் என்றால் இறை அச்சம்தான் காரணம்.

ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இதை ஒரு பாவமாகவே கருதுவதில்லை. பெண்ணிடம் வரதட்சணை கேட்பதும், திருமண விருந்தை பெண் வீட்டார் தலையில் கட்டுவதும், ரூம் ஜோடனை என்ற பெயரில் மாப்பிள்ளையும் பெண்ணும் படுத்துறங்குவதற்கு கட்டில் பீரோ என்று லட்சக் கணக்கில் பெண்ணிடம் வாங்குவதும் இன்றும் தொடர்கிறது. பள்ளிவாசல் தோறும் 'எனக்கு பெண் பிள்ளை இருக்கிறது. ஏதாவது தாருங்கள்' என்று வெட்கத்தை விட்டு கேட்கும் எத்தனையோ தகப்பன்களை பார்த்துள்ளோம்.

இஸ்லாமிய இளைஞர்களே! இந்த இளைஞனைப் போன்று வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிப்பேன் என்று சபதம் ஏற்றுக் கொள்ளுங்கள். இறைவனுக்காக இந்த வரதட்சணையை ஒதுக்கித் தள்ளினால் உங்களுக்கு இறைவன் இதை விட மேலான பொருளாதார வளத்தை கொடுப்பான். அரபு நாடுகளில் உள்ளது போல் மஹராக இரண்டு லட்சம், மூன்று லட்சம், ஐந்து லட்சம் என்று உங்கள் தகுதிக்குத் தக்கவாறு மஹர் கொடுக்க முன் வாருங்கள். ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பித்து வைத்தால் அது பலராலும் தொடரப்பட்டால் உலக முடிவு நாள் வரை அந்த நன்மை உங்களை வந்து சேர்ந்து கொண்டிருக்கும்.

திருமணம் முடித்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வரதட்சணை வாங்காமல் மஹர் கொடுத்து பெண் எடுப்பேன் என்ற உறுதியை எடுப்பார்களாக!

குவான்டோனோமோ சிறைக் கொடுமை ஒரு அதிகாரியை மாற்றியது!டெர்ரி ஹோல்ட் ப்ரோக் முன்பு கியுபாவின் குவாண்டோனோமோ சிறையில் அதிகாரியாக பணி புரிந்துள்ளார். அங்குள்ள கைதிகள் அனைவரும் அமெரிக்க அரசால் பொய் வழக்கு போட்டு கொண்டு வரப்பட்டவர்கள். பெரும்பான்மை கைதிகள் அனைவரும் இஸ்லாமியர்களே! அமெரிக்கா அத்து மீறி நுழைந்த நாடுகளான ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டு மக்கள் சுதந்திர வேட்கையால் சிறிய போராட்டம் நடத்தினாலும் அவர்களை கைது செய்து குவாண்டானோமோ கொண்டு வந்து விடுவார்கள். பெரும்பாலானவர்கள் அப்பாவிகள். இஸ்ரேலியர் மற்றும் அமெரிக்கர்களின் கூட்டு சதியினால் இங்கு கொண்டு வரப்பட்டவர்கள்.

சிறையில் அடைபட்டுள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஐந்து வேளை தொழக் கூடியவர்கள். இந்த கைதிகள் தொழும் அழகையும் இவர்களின் பேசும் பண்பையும் கண்டு நெகிழ்ந்து போன அதிகாரி டெர்ரிக்கு இஸ்லாத்தின் மேல் இனம் புரியாத ஈர்ப்பு வந்துள்ளது. இந்த அதிகாரி குர்ஆனை படிக்கிறார். இஸ்லாமிய சட்டங்களை ஆய்வு செய்கிறார். முடிவில் இறை மார்க்கமான இஸ்லாத்தை 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுக் கொள்கிறார். அது முதல் அங்கு அடைப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமியர்களை விடுவிக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை விரும்பாத சக ஊழியர்கள் இவரை கொலை செய்ய பலமுறை முயன்றார்களாம்.

'குவாண்டனோமாவில் அடைபட்டுள்ள இஸ்லாமியர்கள் மிகவும் துரதிஷ்டவாசிகள். நிம்மதியாக தொழ அனுமதிப்பதில்லை. இசையை தொடர்ந்து கேட்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிக குளிரூட்டப்பட்ட அறைகளில் பல மணி அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இதை எல்லாம் நேரில் கண்டு தூக்கம் வராமல் பல முறை சிரமப்பட்டேன். இதனால் போதை மருந்தும் உட் கொண்டேன். மன நிம்மதி இழந்து தவித்தேன். இன்று இஸ்லாத்தை ஏற்றவுடன் எனது அனைத்து தீய பழக்கங்களும் என்னை விட்டு அகன்று விட்டது. குவாண்டனோமாவில் அடைபட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதே எனது லட்சியம். என்னால் முடிந்த வரை இதற்காக முயற்சிப்பேன்.

குர்ஆன் உலகிலேயே மிகவும் இலகுவாக எவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு இறை வேதமாகும். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதனை மிக இலகுவாக சொல்லிச் செல்கிறது குர்ஆன். இந்த அதிசயம் நம் கண் முன்னே நடந்து வருகிறது' என்று நெகிழ்வோடு தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் டெர்ரி ஹோல்ட் ப்ரூக். தற்போது சிகரெட், மது, மங்கை, போதை வஸ்துகள் என்று அனைத்தையும் விட்டு தூரமாகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா குவாண்டானோமோ சிறையை மூடி விடுவதாக தனது தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். நம் நாட்டு அரசியல் வாதியின் வாக்குறுதி போல் இன்று வரை அது நிறைவேறாமல் உள்ளது. டெர்ரி ஹோல்ட் ப்ரூக் குவான்டானோமோ சிறை வாசிகளுக்காக தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நன்கொடைகளும் வசூலித்து அவர்களின் விடுதலைக்காக பாடுபட்டு வருகிறார். சிறை வாசிகள் சீக்கிரம் விடுதலையாக நாமும் பிரார்த்திப்போம்.தகவல் உதவி
நியூயார்க் டெய்லி நியூஸ்

http://www.nydailynews.com/news/national/gitmo-guard-converts-islam-demands-release-detainees-article-1.1357918

Thursday, August 27, 2015

தொழுகையை நேரம் தவறாமல் தொழ பழகுவோம்!

கடமையான ஐந்து நேர தொழுகை என்பது நமக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஐந்து நிமிடங்களை ஒதுக்கி நம்மால் தொழுது விட முடியும். ஆனால் நம்மில் பலர் இந்த ஐந்து நேர தொழுகைகளில் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். எதற்கும் உதவாத சினிமாவுக்கு 3 மணி நேரத்தை ஒதுக்க நமக்கு நேரமிருக்கிறது. ஆனால் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்த நமக்கு ஒரு நாளையில் அரை மணி நேரத்தை ஒதுக்க முடியவில்லை.

சவுதி அரேபியன் ஏர் லைன்ஸின் விமானியின் பொறுப்பும், ஐரோப்பிய வீதிகளில் அந்த மக்களையே ஆச்சரியப்பட வைத்திருக்கும் அந்த இஸ்லாமியரின் பொறுப்பும் நமக்கு எப்போது வரப் போகிறது நண்பர்களே!

கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணான பேச்சு, செயல் ஆகியவற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

அல் குர்ஆன் 23:1,2.3

மேலும் அவர்கள் தம் தொழுகைகளைக் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.

அல் குர்ஆன் 23:9

Wednesday, August 26, 2015

பெல்ஜிய இள மங்கையையும் கவர்ந்த இஸ்லாம்!பெல்ஜிய பெண்ணான வெரோனிக் கூல் எல்லோரையும் போல கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் பயிலும் ஒரு சில இஸ்லாமிய மாணவிகளோடு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் செய்து வரும் பழக்கங்கள் இவருக்கு வித்தியாசமாக படவே இஸ்லாத்தை அறிவதில் ஆர்வம் கொண்டார். இஸ்லாமிய தோழிகள் மூலமாக அவருக்கு குர்ஆன் மொழி பெயர்ப்பு கிடைத்தது. குர்ஆனை ஆழ்ந்து படித்தார். பிரஸ்ஸல்ஸில் உள்ள இஸ்லாமிக் சென்டருக்கு அடிக்கடி போய் வந்தார். இஸ்லாம் இந்த இள நங்கையை ஆட் கொண்டது. கலிமா மொழிந்து ஏக இறைவனை ஏற்று இஸ்லாமிய பெண்ணாக மாறினார். தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் இஸ்லாத்தை எத்தி வைத்தார். அவர்களும் ஏற்றுக் கொண்டனர். பிரஸ்ஸல்ஸில் உள்ள இஸ்லாமிக் சென்டருக்கு இது வரை கிட்டத்தட்ட ஆயிரம் பேரை அழைத்து வந்து இஸ்லாமியர்களாக மாற்றியுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் பெல்ஜிய படித்த பெண்மணிகள்.

பெல்ஜியத்தில் ஏறத்தாழ 450000 முஸ்லிம்கள் உள்ளனர். மொராக்கோ மற்றும் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்களாக உள்ளனர். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் பெல்ஜியத்தில் பல ஆண்டுகளாக தங்கியுள்ளனர்.

பிரஸ்ஸல்ஸில் மட்டும் கிட்டத்தட்ட 77 பள்ளிவாசல்கள் உள்ளன. பெல்ஜியம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் ஏக இறைவனை வணங்க ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாத்திகமும் கம்யூனிஷமும் தங்கள் வாழ்வில் நிம்மதியை தரவில்லை என்பதால் இன்று இந்த மக்கள் தங்கள் பார்வையை இஸ்லாத்தின் பக்கம் திருப்பியுள்ளனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
ஆன் இஸ்லாம். நெட்

http://www.onislam.net/english/news/europe/474897-belgian-woman-helps-1000-reverts-to-islam.html

Tuesday, August 25, 2015

தேச விடுதலையில் குஞ்சாலி மரைக்கார்கள்!

நமது நாட்டின் விடுதலைப் போரில் தங்களின் சதவீதத்துக்கு அதிகமாகவே தங்களின் இன்னுயிரை இழந்தவர்கள் முஸ்லிம்கள். வெள்ளையனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவனெல்லாம் இன்று சுதந்திர போராட்ட தியாகிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். நமது வரலாற்று புத்தகங்களில் படிக்காத தேசத்துக்காக தங்கள் உயிரைக் கொடுத்த குஞ்சாலி மரைக்கார்களைப் பற்றி இந்த பதிவில் பார்போம்.

கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வணிகம் செய்ய இந்தியாவிற்குள் நுழைந்த வெள்ளையர்கள் உற்பத்திப் பொருட்களை விற்கும் சந்தைக் கூடாரமாக இந்தியாவை மாற்றி கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். நாட்டுப் பற்றுடைய மக்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். வாஸ்கோடகாமா 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கள்ளிக் கோட்டையில் வந்து இறங்கியது முதல் இந்தியாவின் அடிமை வரலாறு ஆரம்பமாகின்றது.

கள்ளிக் கோட்டை கடற்கரையில் போர்த்துக்கீசியர் நங்கூரம் பாய்ச்சிய மறுகணமே அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த ஸாமுத்ரி ராஜாவின் படையிலிருந்து முஸ்லிம் வீரர்கள் ஆர்ப்பரித்து கிளம்பினார்கள். நான்கு மரைக்கார்கள் ஸாமுத்ரி ராஜாவின் கப்பற் படையில் முக்கிய வீரர்களாக விளங்கினார்கள். குட்டி அஹமது அலி, குட்டி போக்கர் அலி, பாத்து மரைக்கார், முஹம்மதலி ஆகியோரே அந்த நால்வர். குஞ்சாலி மரைக்கார்கள் என்பது இவர்களின் குடும்ப பெயர். குஞ்சாலி மரைக்கார்கள் கடல் போரில் புதிய புதிய வழிமுறைகளைக் கண்டு பிடித்தார்கள். ஆங்கிலேயருக்கு எதிராக மிகக் கடுமையாக போராடினார்கள்.

இவ்வாறு தொடர்ந்து நடந்த யுத்தத்தில் 1537 ஆம் ஆண்டு சதியின் மூலம் இவர்களில் ஒருவருடைய தலையை கோவாவில் வைத்து வெட்டி அதனை எடுத்து வந்து கண்ணணூர் கடற்கரையில் சூலத்தில் மாட்டி வைத்தார்கள். ஏனையோரை கைது செய்து கோவாவில் சிறையில் அடைத்து தூக்கில் ஏற்றினர்.

குஞ்சாலி மரைக்கார்களின் நினைவாக அவர்களின் சொந்த ஊரான கோழிக்கோடு மாவட்டம் இரிங்கல் என்னுமிடத்தில் நினைவுத் தூண் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இரிங்கல்லில் குஞ்ஞாலி மரைக்காயர்களின் பாரம்பரிய வீடு நினைவு மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. அருங்காட்சியகமும் அங்கே இருக்கிறது. அதன் வளாகத்தில்தான் இந்த நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது. நினைவுத்தூண் எழுப்பும் பணியை இந்திய கப்பற் படையே கவனித்துக் கொண்டது.

இந்திய கப்பற்படையினர் சார்பில் எழுப்பப்பட்டுள்ள இந்த நினைவுத்தூணை முன்னால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கடந்த 2006 ஆமட் ஆண்டு மே 17ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதில் அவர் ஆற்றிய உரையில்...

'இந்திய கப்பற் படை வரலாற்றில் ஒளி விளக்குகளாக போராடிய குஞ்சாலி மரைக்கார்கள் நாட்டுப் பற்றின் முன்மாதிரிகள். இந்திய கப்பற் படை குஞ்ஞாலி மரைக்கார்களுக்கு நினைவுத் தூண் எழுப்பியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்து 16 ஆம் நூற்றாண்டில் கப்பற் படைகள் இறக்கி போராடிய தீரர்கள் இந்த குஞ்ஞாலி மரைக்கார்கள்'

என்று புகழாரம் சூட்டினார்.

அரசு அனுமதி இல்லாமல் ஹஜ் செய்வோர் கவனத்திற்கு!சவுதியில் வேலை செய்து வருவோர் குறைந்த செலவுதானே என்பதால் ஒவ்வொருவரும் நான்கு முறை ஐந்து முறை ஹஜ் செய்கிறார்கள். இதை பெருமையாக வெளியில் சொல்லவும் செய்கிறார்கள். ஐந்து வருடத்துக்கு ஒரு முறைதான் அரசு அனுமதிக்கும் என்பதால் ஆர்வமிகுதியால் சிலர் அரசு அனுமதியின்றி ஹஜ் பயணத்தை மேற்கொள்கின்றனர். கடன் இல்லாமல் வசதியுடையவர்களுக்கே ஹஜ் கடமையாகும். அதை விடுத்து அரசுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக குறைந்த பணத்தைக் கொடுத்து கள்ளத்தனமாக வண்டிகளில் ஏறி ஹஜ் பயணம் செய்வது மிகப் பெரிய குற்றமாகும். இதற்கு உதவி செய்பவர்களுக்கும் ரூம் அமைத்து கூடாரம் அடித்துக் கொடுப்பவர்களுக்கும் சவுதி அரசு 100000 ரியால் அபராதமும் இரண்டு வருட் சிறை தண்டனையையும் கொடுக்கிறது. இந்த வருடம் இதனை கடுமையாக அமுல்படுத்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு கள்ளத்தனமாக ஹஜ்ஜூக்கு வருபவர்கள் பலருக்கு சிரமத்தை கொடுக்கிறோம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். வெளிநாட்டு ஹஜ் பயணிகள் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பல நாள் சிரமப்பட்டு வருகின்றனர். சவுதி அரசு பல நாடுகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையையே ஒதுக்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கே இந்த ஏற்பாடு. கழிவறைக்கு பிரச்னையாகும், குடி தண்ணீருக்கு பிரச்னையாகும், கஃபாவை வலம் வரும் போதும் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவே இந்த ஏற்பாடு. ஒரே நேரத்தில் 20 லட்சம் பேர் கூடும் போது எத்தகைய அசௌகரியங்கள் ஏற்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதில் மேற்கொண்டும் கள்ளத் தனமாக லட்சக் கணக்கில் மக்கள் கூடினால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

எனவே இறைவனும் விரும்பாத சவுதி அரசும் கண்டிப்புடன் கூறியுள்ள கள்ளத் தனமான ஹஜ் பயணத்தை இனியாவது தவிர்போம். தகுதிக்கு மீறி இறைவன் எவரையும் சிரமப்படுத்துவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது அரசு அனுமதியோடு ஹஜ் செய்வோம். அதுவரை பொறுத்திருப்போம்.

தகவல் உதவி
சவுதிகெஜட்
25-08-2015

Monday, August 24, 2015

கஃபாவின் விரிவாக்கப் பணிகள் முடியும் தருவாயில்!கஃபாவின் விரிவாக்கப் பணிகள் கிட்டத் தட்ட முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. ஹாஜிகள் கஃபாவை வலம் வர நான்கு தளங்கள் தற்போது கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் கிட்டத் தட்ட 114000 ஹாஜிகள் கஃபாவை வலம் வர முடியும். 76000 ஸ்கொயர் ஃபீட்டில் இந்த விரிவாக்கப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து விரிவாக்கப்பணிகளும் ஹாஜிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஹஜ் கிரியைகள் முடிந்தவுடன் அக்டோபர் 14 முதல் வழக்கம் போல் விரிவாக்கப் பணிகள் தொடரும் என்று இதற்கான பொறுப்பு அதிகாரி சுல்தான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.....

தகவல் உதவி
சவுதி கெஜட்
22-08-2015

மோடி புராணம் புஸ்வானமாகிப் போனதே! பங்கு சந்தை சரிவு!கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் திங்களன்று 1,700 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியூட்டியுள்ளது.

இந்தச் சரிவினால் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.7 லட்சம் கோடிகளை இழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.எஸ்.இ. பங்குக் குறியீடு 1,700 புள்ளிகள் சரிவடைந்து 25,681 புள்ளிகளாகவும் தேசியப் பங்குச் சந்தை குறியீடு நிப்டி 436 புள்ளிகள் சரிந்து 7,863-ஆகவும் உள்ளன.

லிஸ்டட் பங்குகளின் ஒட்டு மொத்த மதிப்பைக் கொண்டு கணக்கிடப்படும் முதலீட்டாளர்கள் தொகை ரூ.7 லட்சம் கோடி சரிவு கண்டுள்ளது.

10 மிகப்பெரிய நிறுவனங்களின் நஷ்டம் மட்டும், சந்தை மூலதனம் என்ற அளவில், ரூ.2 லட்சம் கோடிக்கு அருகில் உள்ளது.

கடந்த ஏழரை ஆண்டுகளின் மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவாகும் இது. மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டுச் சரிவு வரலாற்றில் 3-வது மிகப்பெரிய சரிவாகும் இது. கடந்த ஜனவரி 21, 2008-ல் சென்செக்ஸ் 2062 புள்ளிகள் சரிவு கண்டது, அதன் பிறகு தற்போது பெரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.

ரியல்டி, மின்சாரம், கச்சா மற்றும் எரிவாயு, வங்கிகள் குறியீடு, ஆட்டோ, உலோகம், மூலதனப் பொருட்கள், மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் பங்குகள் பெருமளவு விற்கப்பட்டதால் இந்த சரிவு ஏற்பட்டது.

சரிவு குறித்து மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறும் போது, "மற்ற நாட்டுப் பொருளாதாரங்களை ஒப்பிடும் போது நாம் சிறந்த நிலையிலேயே உள்ளோம், பரந்துபட்ட பொருளாதார காரணிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று சந்தைகளுக்கு உறுதி அளிக்கிறேன். நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 380 பில்லியன் டாலர்களாக உள்ளது” என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
24-08-2015

இன்னும் சில நாட்கள் இவர்களை ஆள விட்டால் சோமாலியா நிலைமைக்கு நம் நாட்டைக் கொண்டு வந்து விடுவார்கள்.

இறைவா! இந்த நாசகாரர்களிடம் இருந்து எனது தாய் நாட்டை மீட்பாயாக! பதிலாக சிறந்த ஆட்சியாளர்களை தந்தருள்வாயாக!

இந்துக்கள் வேறு! இந்துத்வா வேறு! வேறுபாட்டை உணர்வோம்!
இந்து மக்களில் பெரும்பான்மை மக்கள் நடுநிலையோடு சிந்திப்பவர்களே! அதற்கு இந்த பதிவும் ஒரு உதாரணம். எனவே இந்துக்களையும் வெறி பிடித்த இந்துத்வாக்களையும் நாம் என்றுமே பிரித்தே பார்க்க வேண்டும். இதனை எனது இஸ்லாமிய சொந்தக்களுக்கு அன்போடு சொல்லிக் கொள்கிறேன்.

Sunday, August 23, 2015

சூல் கொண்ட மேகங்கள் திரளும் அதிசயம் - குர்ஆனின் அறிவியல்அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும் பின்னர் அதனை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர். வானத்திலிருந்து அங்குள்ள பனி மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான்.

அல்குர்ஆன் 24:43


பஞ்சுகளைப் போல திட்டு திட்டாக தனித் தனியாக மிதந்து சென்று கொண்டிருக்கும் மேகத் திரள்களை நாம் வானில் பார்த்திருப்போம். அந்த மேகத் திரள்களை எல்லாம் காற்றானது தள்ளிக் கொண்டு சென்று அவற்றை ஒன்றாக்குகிறது. இவ்வாறு ஒன்றிணைந்த மேகங்கள் செங்குத்தாக விண்ணை நோக்கி எழுகின்றன. இந்த மேகங்களின் மத்திய தொகுதி ஓர் இழுவை சக்தியாக செயல்பட ஆரம்பித்து தன் இரு பக்க வாட்டிலும் உள்ள குட்டி மேகங்களை அரவணைத்து விண்ணை நோக்கி செங்குத்தாக இழுத்துச் செல்கிறது. விண்ணில் உள்ள குளிர்ந்த பகுதியை நோக்கி இவை விரைகின்றன. அவ்வாறு மேலெழும்பும் போது குளிரினால் நீரானது சிந்தி விடாமல் இருக்க பக்க வாட்டு மேகங்கள் துணை புரிகின்றன.

இவ்வாறு விண்வெளியின் குளிர் பகுதியின் உச்சி நிலைக்குச் செல்லச் செல்ல மேகத்தின் வயிற்றில் ஆலங்கட்டிகள், நீர் திவளைகள் சூல் கொண்டு மேகத் தொகுப்பின் எடை கூடுகின்றது. அந்தரத்தில் கன்னங்கருத்த கனமான மேக மலை உருவாகின்றது. இவை கிட்டத்தட்ட 25000 முதல் 30000 அடி வரை வளர்ந்து பெரும் மேகக் கூட்டத்தை உருவாக்குகின்றது.

தனது எல்லைக்குள் இவ்வாறு ஆலங்கட்டிகள் மேக தொகுப்பாக கனமான ஒரு மலையாக மேலே ஏறுவதை அனுமதிக்காத நம் பூமியின் புவியீர்ப்பு விசை அம் மலையை கீழ் நோக்கி இழுக்கின்றது. இழுக்கப்பட்ட அம் மலைகள் குளிர்விக்கப்பட்டு நமது பூமியின் மீது மழை நீராக பொழிகின்றது. இவ்வாறு ஒன்று திரட்டப்பட்ட மேகக் கூட்டத்திற்கு விஞ்ஞானிகள் ஒன்று திரண்ட கார் முகில் மேகம் (CUMULONIMBUS CLOUD) என்ற பெயரிட்டு அழைக்கின்றனர்.

குர்ஆன் பட்டியலிடும் முறையும் தற்கால விஞ்ஞானிகள் மழை உருவாக்கத்துக்கான பட்டியலும் ஒத்திருப்பது நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. ஒரு இடத்தில் மழை பொழிய அங்கு என்னவெல்லாம் நமக்கு தெரியாத மறைமுக ஏற்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை எண்ணி ஆச்சரியப்படுகிறோம். இறைவன் நம் மீது பொழிந்த கருணைக்கு காலம் பூராவும் நின்று வணங்கினாலும் அது ஈடாகாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்வோமாக!

ரியாத் நகரில் பிஜே அவர்களின் ஆன்லைன் விளக்கவுரை!
வரும் வெள்ளிக் கிழமை பத்தா (28-08-2015) ரமத் ஹோட்டலில் இன்ஷா அல்லாஹ் நடைபெறவிருக்கும் ஆன் லைன் நிகழ்ச்சியில் விருப்பமுள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவும்.

Saturday, August 22, 2015

மனதை கலங்க வைத்த புகைப்படம்!இஸ்ரேலும் வல்லரசுகளும் சேர்ந்து செய்த சதியில் இன்று சிரியாவெங்கும் பற்றி எரிகிறது. வளைகுடாவில் ஆயுதத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கியது சிரியா. இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்தது. யூதர்கள் சதி வலை பிண்ணி இன்று சிரிய குடும்பங்களை சின்னா பின்னமாக்கி விட்டனர்.

தந்தையை பிரிந்து அழும் குழந்தை. இது போல் ஆயிரமாயிரம் சோகக் கதைகள். இங்கு சிரமத்தை ஏற்றுக் கொண்டாலும் நிரந்தர உலகமான மறுமையில் நிம்மதியாக இருப்பர். சகோதரர்களின் நல் வாழ்வுக்காக பிராரத்திப்போம் சகோதரர்களே!

இந்த வருட ஹஜ்ஜில் ஒட்டகம் அறுப்பது தடை செய்யப்படுகிறது!'மெர்ஸ்' நோய் குறிப்பாக ஒட்டகத்தின் மூலம் மனிதனுக்கு பரவுவதால் அந்த நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக இந்த வருடம் ஒட்டகம் ஹஜ் கிரியைகளில் அறுப்பதை சவுதி அரசு தடை செய்துள்ளது. அது தவிர்த்து ஆடு:, மாடு, போன்றவற்றை அறுத்து ஏழைகளுக்கு உணவாக அளிக்கலாம். மெர்ஸ் நோயின் தாக்கம் குறைந்தவுடன் வழக்கமாக ஒட்டகமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ஹஜ் கிரியைகளுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது. இள வயது ஒட்டகத்திலிருந்து இந்த நோய் மனிதனுக்கு உடன் தொற்றிக் கொள்கிறது. கடந்த இரண்டு தினங்களில் இரண்டு பேர் இந்நோயால் இறந்துள்ளனர். 15 பேருக்கு இந்நோய் தாக்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்திலிருந்து ஹஜ்ஜூக்கு வருபவர்கள் முறையாக தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு உடன் வரும் மருத்துவர்களளின் அறிவுரைப்படி நடந்து கொள்ள அறிவுறுத்தப்டுகிறார்கள்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
22-08-2015

Friday, August 21, 2015

சஞ்சீவ் பட் மகன் சாந்தனுவின் உணர்வுபூர்வமான கடிதம்!

எனது மகன் சாந்தனு பட் நான் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்து வருந்தி கிங்ஸ் க்ராஸ் ஸ்டேஷன் - லண்டனிலிருந்து எழுதியுள்ள கடிதம் இது. இப்படி ஒரு சிறந்த மகனைப் பெற்றதற்காக நானும் எனது மனைவி ஸ்வேதாவும் பெருமைப் படுகிறோம்.

இனி எனது மகனின் கடிதத்தைப் படியுங்கள்:

'இந்திய சுதந்திர தினம் தனது பொலிவை இழந்து நிற்கிறது. ஒரு திறமைமிக்க காவல் துறை அதிகாரியை எனது நாடு இழந்துள்ளது. எனது மதிப்பிற்குரிய தந்தையே! இந்திய நாட்டின் மிகச் சிறந்த குடி மகனாக என்னை வளர்த்து ஆளாக்கியதற்கு நன்றி தந்தையே! யாருக்கும் வளைந்து கொடுக்காமல் ஒரு காவல் துறை உயர் அதிகாரி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தியள்ளீர்கள்.

இந்த நெடிய போராட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக நின்ற மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை நினைத்து உண்மையிலேயே பெருமை படுகிறேன் தந்தையே! இன்று வரை மிகப் பெரும் அபாயகரமான சூழ்ச்சி சதிகாரர்களால் பின்னப்பட்டும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள். ஆனால் அநீதிக்கு எதிரான உங்களின் இந்த போராட்டம் இதோடு முடிந்து விட்டதாக யாரும் நினைத்து விட வேண்டாம். இனி தான் உண்மையான போராட்டமே தொடங்குகிறது.

அழுக்கு படிந்த அபாயகரமான ஒரு கும்பலுக்கு மத்தியில் 14 வருடங்கள் பயமின்றி போராடியுள்ளீர்கள். 27 வருட பணியையும் பூர்த்தியாக்கியுள்ளீர்கள். நமது நாட்டை தேசப் பற்றுடைய ஒரு நேர்மையான அரசு ஆளும்போது மீண்டும் உங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். அதுவரை பொறுத்திருப்போம் தந்தையே!

நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உங்களின் பின்னால் நிற்கிறோம் தந்தையே! உங்களின் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்திற்கும் எங்களின் பூரண ஆதரவு உங்களுக்கு உண்டு. இந்த அரசு நமது குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக பின்னடைவைக் கொடுத்துள்ளது. அந்த அரசுக்கு சொல்லுங்கள் 'எத்தனை சிரமங்களைக் கொடுத்தாலும் எனது உறுதி மட்டும் குறையாது' என்று. தீமைக்கு எதிரான உங்களின் இந்த போராட்டம் முன்னை விட அதிக வீரியம் பெறும் என்ற செய்தியையும் சொல்லுங்கள்.

கடைசியாக தந்தையே!

ஒரு சமூகத்தின் மீது வெறுப்பையே மூலதனமாகக் கொண்டு செயல்படும் ஒரு அரசுக்கு கீழ் செயல்பட வேண்டிய ஒரு இக்கட்டான சூழலிருந்து இன்று விடுபட்டுள்ளீர்கள். என்னைப் பொறுத்த வரையில் இதனை வரவேற்கிறேன் எனது தந்தையே! இனி தொடங்கப் போகும் உங்களின் புதிய வாழ்க்கை மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தரக் கூடியதாக இருக்கும். உங்களின் எந்த முடிவுக்கும் குடும்ப உறுப்பினர்களான நாங்கள் உங்களின் பின்னால் நிற்போம் என்று உறுதி கூறுகிறோம்.

எனது அன்பையும் மரியாதையையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் தந்தையே!

இப்படிக்கு
சாந்தனு பட்.

ஆஹா... இந்த சிறிய வயதில் இத்தனை உறுதியா? அராஜக அரசுக்கு எதிராக இந்த சிறிய வயதிலும் எதனையும் எதிர் கொள்வதில் இத்தனை துணிச்சலா? இப்படிப்பட்ட வீர மகன்களை பெற்றதற்காக எனது தாய் நாட்டை எண்ணி பெருமைப்படுகிறேன். போலி நாட்டுப் பற்றை பேசித் திரியும் இந்துத்வாவாதிகளுக்கு சாந்தனு பட்டின் இந்த கடிதம் சமர்ப்பணம்.

இனியாவது நாட்டுப் பற்று என்ன என்பதை இந்த சிறுவனிடமிருந்து பாடம் படித்துக் கொள்ளுங்கள் இந்துத்வாவாதிகளே!


ஆங்கிலத்தில் தகவல் உதவி
இந்தியாசம்வாத்.காம்
தமிழில் மொழி பெயர்ப்பு சுவனப்பிரியன்
20-08-2015


This govt might try to unsettle us now, says sacked cop’s son, message goes viral
[This govt might try to unsettle us now, says sacked cop’s son, message goes viral]
20 August 12:27 2015


New Delhi: Sacked Gujarat IPS officer Sanjiv Bhatt has shared his son’s message on his facebook wall after being sacked on Wednesday. The message has gone viral gone social media. Bhatt’s removal from services has generated sharp reactions from his admirers as well as detractors. While the set of admirers hailed him as a brave and courageous man who stood up against a powerful political system, his critics termed this as good riddance

Here is what Bhatt wrote on his facebook wall:

-My son, Shantanu, was at King's Cross Station, London, when he learnt about my being removed from service. He sent me this message from the station. Shweta and I are to proud to have a loving son like him.

“On this sad day, when the Republic of India loses one of its brightest, most intelligent, upright and courageous officer. I would like to salute you dad, I would like to salute you and thank you, as your son and as an educated, aware and responsible citizen of this wonderful country, for doing what was right without even thinking once what effects it might have on you and your career as an Indian Police Service Officer.

I would like to thank you for standing up for the people whose screams for help and protests fell on deaf ears! I would like to tell you today, how proud of you I am for fighting an uphill battle against a well equipped and dangerously subverted system with all your might and vigour, but let me remind you that the battle is not over yet!

It has just gotten dirtier and more dangerous, but you still stand where you stood 14 years ago in 2002 and with the same courage and fearlessness that you had when you entered the Indian Police Service 27 years ago, ready to take on even the most pernicious government which presides over the Republic of India at the moment.

We as a family have always stood behind you, supporting you and we will continue you to do so, the reprobate people running this government might try even harder to unsettle us a family now, But let me tell them that we are a family bound by undying love, trust and respect for each other, vain yet consistent attempts to break you and break us will only make us stronger and unflinching in our support towards you and the cause you are fighting for!

And lastly, I would like to congratulate you for getting freedom from the shackles of this rancorous government which tries to break and antagonise anyone who tries to speak up against them, or tries to stand up for what is right! In this new chapter of your life, I would wish you all the very best for pursuing whatever makes you happy and satisfies you and we as a family will always be behind you, supporting every decision you take!

Lots of love and respect,

Shantanu Bhatt

(An extremely proud and loving son)

http://indiasamvad.co.in/6083/showstory/This-govt-might-try-to-unsettle-us-now-says-sacked-cop’s-son-message-goes-viral

Thursday, August 20, 2015

ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்!ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூசாது பொய்யுரைத்தனர். 2002 இனப்படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். “”இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார்.

இன்று அவர் இறுதியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் ..

சஞ்சீவ் பட் அவர்களே! இன்று நீங்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் இறைவனின் முன்னால் உங்களுக்கு உண்மையை உரத்துச் சொன்னதற்காக சிறந்த இடம் உண்டு. இந்த உலகில் ஆட்சி அதிகாரத்தோடு இறுமாப்போடு வாழ்ந்தவர்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போனார்கள். உங்களை பழி வாங்கியவர்களுக்கும் ஒரு நாள் வரும். அவர்களுக்கு மிகப் பெரிய இழிவை இறைவன் ஏற்படுத்துவான்.

இந்த நேர்மையான அதிகாரிக்கு தகுந்த வேலை கிடைக்க நாம் பிரார்த்திப்போம்.

எனது தொழுகையில் உங்களுக்காக தினமும் பிரார்த்திக்கிறேன் சஞ்சீவ் பட் அவர்களே!. நண்பர்களே! நீங்களும் இந்த நேர்மையான அதிகாரிக்காக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தியுங்கள்.

அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் தரும் மின்னல் - குர்ஆனின் அறிவியல்'அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக மின்னலை அவனே உங்களுக்குக் காட்டுகிறான்'

-குர்ஆன் 13:12


ஒரு முறை மின்னல் வெட்டி மறையும் போது 300000 டிகிரி வெப்பத்தை உமிழ்கிறது. சிலரது உயிரே இதனால் போய் விடுகிறது. மின்னல் தாக்கி இறப்பு என்ற செய்தியை நாம் அவ்வப்போது படித்து வருகிறோம். மனிதர்களுக்கு ஒரு வித அச்சத்தை இந்த மின்னல் தருகிறது.

அச்சம் என்ற வார்த்தையோடு எதிர்பார்ப்பு என்ற வார்த்தையையும் இறைவன் சேர்த்து சொல்கிறான். மின்னல் யாரை எதிர் பார்த்து காத்திருக்க வேண்டும்? அது பற்றி சற்று விரிவாக பார்போம்.

வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவீதமும் ஆக்சிஜன் 21 சதவீதமும் கார்பன் டை ஆக்சைடு 0.033 சதவீதமும் ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன. காற்றிலுள்ள 78 சதவீத நைட்ரஜனும் 21 சதவீத ஆக்சிஜனும் ஒன்றாகக் கலந்து நைட்ரேட்டுகளை உருவாக்குகின்றன. இந்த நைட்ரேட்டுகள் நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது. வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கெனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன. இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை அதிர்வுகளால் உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் கலந்து ஆறாக ஓடச் செய்கிறது.

மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் நைட்ரேட் கலக்கிறது. நைட்ரேட்டோடு கால்சியம் சேர்ந்து 'கால்சியம் நைட்ரேட்' உருவாகிறது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றது. இவற்றை நேரிடையாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது அவற்றை சாப்பிடும் ஆடு மாடுகளின் இறைச்சியை சாப்பிடுவதன் மூலமோ நைட்ரஜனை தன் உடலில் சேர்த்துக் கொள்கிறான்.

மனிதனின் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மிருகங்களின் உடலில் உள்ள நைட்ரஜன்களும் மண்ணிலேயே சேர்ந்து விடுகின்றனது. பின்னர் அது காற்றிலும் கலந்து விடுகின்றது. இதனைத்தான் நாம் 'நைட்ரஜன் சுழற்சி' என்கிறோம்.

நைட்ரஜன் ஆக்சிஜன் என்ற என்ற பின்னல்களுக்கிடையே மின்னலைப் பாய்ச்சி மின்னலின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குகிறான் இறைவன். மின்னலுக்கு எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை ஏன் இறைவன் உபயோகித்தான் என்ற உண்மை நமக்கு விளங்குகிறதல்லவா? இவ்வளவு கருணையை நம் மீது பொழிந்து நம்மை ரட்சிக்கும் இரட்சகனான அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த நாம் மறக்கலாமா?

Wednesday, August 19, 2015

தாய்லாந்த் ஹாஜிகளின் முதல் குரூப் மதினா வருகை!18-08-2015 அன்று 1500 பேர் கொண்ட முதல் தாய்லாந்த் ஹாஜிகள் குரூப் மதினா விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த வருடம் தாய்லாந்திலிருந்து மட்டும் 10400 பேர் ஹஜ் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்துள்ளனர். தாய்லாந்த் எம்பாஸியின் மூத்த அதிகாரி தானிஸ் நா சொங்க்லா விமான நிலையம் வந்து தனது நாட்டு ஹாஜிகளை வரவேற்று உபசரித்தார்.

'தாய்லாந்து அரசு ஹாஜிகளின் புனித பயணத்தை மிக முக்கிய நிகழ்வாகக் கருதுகிறது. ஹாஜிகளின் முதல் குரூப்பை வரவேற்கும் வாய்ப்பு பெற்றதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.ஹாஜிகளின் பயணத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் தங்கள் கடமைகளை செய்ய ஒத்துழைத்து வரும் சவுதி அரசுக்கு தாய்லாந்து அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார் நா சொங்க்லா.

தகவல் உதவி
சவுதி கெஜட்
19-08-2015

ஈரோட்டில் மது விலக்குக்காக மாரியம்மனிடம் மனு!மது விலக்குக்காக ஜெயலலிதா அம்மா, சசிகலா அம்மா என்று வரிசையாக கோரிக்கை வைத்தும் எவரும் சாதகமான பதில் தரவில்லை. முடிவில் இந்துத்வாவாதிகள் பெரிய மாரியம்மனிடம் மது விலக்குக்காக கோரிக்கை மனுவை வைத்துள்ளார்கள். மாரியம்மனாவது இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கிறாரா என்று பார்போம்.

Tuesday, August 18, 2015

தெலுங்கானாவில் ஒரு மனித நேய பணி!

மலரட்டும் மனித நேயம்!

மாறட்டும் மானிட கோபம்!

இந்துத்வா என்ற நச்சு பாம்பு வருகிறது!

இந்தியாவெங்கும படமெடுத்து ஆடுகிறது!

படமெடுத்து ஆடும் பாம்புக்கு பாடம் புகட்ட

இந்துக்களை நம்மின் சகோதரர்களாக்குவோம்!

மனித நேயத்தை காப்போம்! நமது

தாய் நாட்டையும் காத்திடுவோம்!

விண்கற்களை சாம்பலாக்குவது யார்? குர்ஆனின் அறிவியல்'அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா? இரு தடவை பர்வையைச் செலுத்துவீராக! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மை பார்வை திரும்ப அடையும்'

அல்குர்ஆன் 67:3,4

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.

அல் குர்ஆன் 21:32


இந்த இரண்டு வசனங்களையும் நாம் சிந்தித்தால் மனிதர்கள் இந்த பூமியில் வாழ இறைவன் எத்தகைய பாதுகாப்பு ஏற்காடுகளை ஏற்படுத்தியுள்ளான் என்பது நமக்கு விளங்கும். நமது பூமியைச் சுற்றியுள்ள பரப்பை வளி மண்டலம் என்று கூறுகிறோம்.

வளிமண்டலம் ஐந்து அடுக்குகளால் சூழப்பட்டுள்ளன.

1.கீழ் அடுக்கு - புவியின் மேற்பரப்பிலிருந்து 16 கிலோ மீட்டர் உயரம் வரை.

2. படுகை அடுக்கு - 16 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் உயரம் வரை

3. நடு அடுக்கு - 50 கிலோ மீட்டரிலிருந்து 80 கிலோ மீட்டர் வரை.

4. வெப்ப அடுக்கு - 80 கிலோ மீட்டரிலிருந்து 1600 கிலோ மீட்டர் வரை.

5 - வெளி அடுக்கு: 1600 கிலோ மீட்டர் முதல் 10000 கிலோ மீட்டர் வரை

இந்த ஐந்து அடுக்குகளே நம்மை பல ஆபத்துகளிலிருந்து தடுத்துக் கொண்டிருக்கின்றன. சூரிய ஒளியாகட்டும், பெரும் கற்களாகட்டும் இவை எல்லாம் நமது பூமியை ஒரு நொடியில் நிர்மூலமாக்கி விடும் சக்தி பெற்றவை.

'வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்.'

-அல்குர்ஆன் 67:17


வானத்திலிருந்து மழை பொழிவதைப் பார்த்திருப்போம். ஆனால் கற்களே மழையாக பொழிய வாய்ப்புள்ளதா? செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே ஆயிரக்கணக்கான விண் கற்கள் சுழன்று வருகின்றன. இவற்றில் சில புவியின் ஈர்ப்பு சக்தியால் கவரப்பட்டு மணிக்கு 43200 கிமீ முதல் 57600 கிமீ வரையிலான அசுர வேகத்துடன் பூமியை நோக்கிப் பாய்ந்து வருகின்றன. இவை நேராக பூமியை அடையுமானால் இந்தப் பூமி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விடும். இந்த பூமியில் வசித்து வரும் நாமெல்லாம் சிதறுண்டு போவோம். ஏனெனில் மேலிருந்து வரக் கூடிய கற்களில் சில 96000 சதுர மீட்டருக்கும் அதிகமான குறுக்களவு கொண்டவை. இந்த பிரம்மாண்டமான கற்கள் பூமியை நேராக அடைந்து விடாமல் ஆகாய அடுக்குகள் நம்மை ஆபத்திலிருந்து பாதுகாக்கின்றன. மேலிருந்து வரும் கற்களை வெப்பமடைய வைக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கி நமது பூமியின் மீது விழ வைக்கின்றன. பூமியின் மீது இவ்வாறு விழும் சாம்பலின் எடை கூட நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கற்களை நம் மீது வீழ்ந்து விடாமல் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.எல்லா புகழும் இவைனுக்கே!

Monday, August 17, 2015

சங்கராபுரம் தலித் வீடுகளின் கோரக் காட்சி!தலித் மக்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான்: வீட்டை கொளுத்திய வன்னியர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தான். இரண்டு சாதிகளின் கடவுளும் ஒருவன்தான். ஆனால் அந்த கடவுளுக்கு மரியாதை செய்ய ஒரு தரப்பு மறுக்கப்பட்டு காலகாலமாக உதாசீனப்படுத்தப்படுகிறது. எரிக்கப்பட்ட அந்த வீடுகளில் ஏதாவது மிஞ்சியிருக்கிறதா என்று பாருங்கள்.

கூலி வேலை செய்து பிழைத்து வரும் அந்த தலித் இனி தனது வீட்டை நிர்மாணிக்க எத்தனை வருடம் உழைக்க வேண்டும்? வீட்டை கொளுத்தியதில் தாய்மார்களும் குழந்தைகளும் கூட பங்கெடுத்தார்களாம். சாதியின் கொடூரம் பெண்களையும் குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. பாதுகாப்புக்கு வந்த காவல் துறையையும் இந்த கும்பல் தாக்கியிருக்கிறது. உழைத்து வாழ்ந்தாலும் வாழ அனுமதிக்காத சமூகத்தின் மீது அவனது கோபப் பார்வை திரும்பினால் அதன் பின் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது.

சாதியை வைத்து அரசியல் நடத்தும் அனைத்து தலைவர்களையும் சமூகத்தில் இருந்து மக்கள் ஒதுக்கினாலேயே இது போன்ற கொடூரங்களை குறைக்க முடியும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை கணக்கில் வைத்து தன் மக்களை வேறெங்கும் சென்று விடாமல் காக்கும் ஒரு உக்தியாகவே இதனை பார்க்கிறேன்.

டம் டம் விமான நிலையம் அருகில் நடந்தது என்ன?கொல்கத்தா: டம்டம் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பாஜக தலைவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தா விமானநிலையம் அருகே உள்ள பாஜக தலைவர் வீட்டில் சுதந்திர தின விழாவைச் சீர்குலைக்க ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ரகசியமாக வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக பயங்கர சப்தத்துடன் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் அங்கு வெடிகுண்டுகள் ரகசியமாக தயாரிக்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளர் மாணிக்தாஸ் பைத்யாவும் அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டனர். பைத்யா கடந்த இரண்டு முறையாக நகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த ஹஜ் யாத்திரிகர்கள் மீது இந்தக் குண்டு வெடிப்பை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஹஜ்ஜுக்கு புறப்படவிருந்த ஹஜ் யாத்திரிகர்கள் கூடியிருந்த இடத்திற்கு மிக அருகில் இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பாக பாஜக தலைவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

"இந்தத் குண்டு வெடிப்பு குறித்தோ, வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பாக பாஜக தலைவர் கைது செய்யப்பட்டது தொடர்பாகவோ எந்தவொரு முன்னணி ஊடகமும் செய்தி வெளியிடாததும் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வுப் பிரிவு இக்குண்டுவெடிப்பு குறித்து சிறு அளவில்கூட கண்டுகொள்ளாததும் தமக்கு மிகுந்த ஆச்சர்யம் அளிக்கிறது" என மேற்கு வங்க காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் அதிர்ச்சியுடன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, காவல்துறையினர் நடத்திய சோதனையில் 22 மூட்டை வெடிமருந்து பொருட்கள், 500 கிலோ சல்பர் மற்றும் 600 கிலோ அம்மோனியம் நைட்ரேட் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டம் டம் விமான நிலையம் அருகில் நடந்தது என்ன?

----------------------------------------------------------------

Police also said that both the youths were criminals in Habra-Ashokenagar area and the duo had rented the Baiddya's house barely a couple of weeks back. "The duo was involved in several antisocial activities in Habra-Ashokenagar area including extortion. Several criminal cases were pending against the duo. They used to operate a gang who terrorize the local people and traders. We came to know that they were making the bombs to supply in Ashokenagar area while one of it's accidentally exploded," said Niraj Kr Singh, the police commissioner of Barrackpore City police.

Police also suspect that the house owner, Baiddya and his two his two sons who are associated with building materials supplying business had the information about the duo's criminal record and the activities like binding bombs in their room. "Though the house owner initially claimed that they knew nothing about the criminal activities in which their tenants were involved, we found several inconsistencies in their statements after which they were arrested. In an initial interrogation, another injured in the blast already admitted to the blast while making bombs," Singh also added.

Police said they are also investigating whether the duo had a long-time link with the house owner and his sons. "They will be further interrogated in this connection. An investigation is on," an investigating officer said.

According to a local sources, the house owner, Baiddya was known as an active BJP activist in the locality. "He also contested as a BJP candidate in civic election twice," a local said.


தகவல் உதவி
Times of India
17-08-2015
இந்நேரம்.காம்
18-08-2015

தலித் பாதிக்கப்பட்டால் இந்துத்வாவாதிகள் மவுனம் காப்பதேன்!வீடு கொளுத்தப்பட்டு பாத்திரம் பண்டங்கள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டு அடுத்த வேளை சோற்றுக்கே திண்டாடும் இந்த இளைஞன் நம் தமிழகத்தை சேர்ந்தவர்தான். விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரத்தை சேர்ந்தவர். சாதி என்ற வெறியால் எழுந்த கோர தாண்டவமே இது.

நரேந்திர மோடி, அமீத் ஷா, ராமா கோபாலன், அர்ஜூன் சம்பத், தமிழிசை சவுந்தர்ராஜன், பொன் ராதா கிருஷ்ணன், ஹெச். ராஜா போன்ற இந்து மத காவலர்களெல்லாம் எங்கு போய் ஒளிந்து கொண்டார்கள். பூணூல் அறுத்ததற்கு வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள் இன்று மண்ணின் மைந்தன் வாழ்வாதாரம் இன்றி அழுது புலம்புகிறான். அவனது கண்ணீரை துடைக்க மாட்டீர்களா? ஓ.... அவன் தலித் சமூகத்தை சேர்ந்தவனோ? அவனுக்காகவெல்லாம் நீங்கள் குரல் கொடுக்க மாட்டீர்களோ?

இஸ்லாமியர்களை ஒழிப்பதற்கு பல இடங்களில் இந்துத்வாவாதிகள் பயன்படுத்திக் கொள்வது தலித் மக்களைத்தான். இன்று அந்த தலித் பாதிக்கப்படும் போது இந்துத்வாவாதிகள் யாரும் வாய் திறப்பதில்லை. இனியாவது உங்களின் சகோதரன் இஸ்லாமியன் என்பதை தலித் சகோதரர்கள் புரிந்து கொண்டு முஸ்லிம்களை தங்கள் சகோதரர்களாக பாவிப்பார்களாக! இந்துத்வாவாதிகளின் சதி வலையில் வீழாதிருப்பார்களாக!

Sunday, August 16, 2015

மாட்டுக் கறி ஏற்றுமதி அமோகமாக நடக்க....

மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி நமது நாடான இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க விவசாய அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டு இந்துத்வாவாதிகளின் முகமூடியை கிழித்து போட்டுள்ளது. 2015 ம் வருடம் 2.4 மில்லியன் மாட்டிறைச்சியை நமது நாடு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதே ஆண்டில் பிரேசில் 2 மில்லியனும் ஆஸ்திரேலியா 1.5 மில்லியனும் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. இந்த மூன்று நாடுகள் மட்டும் 58.7 சதவீதம் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அங்கம் வகிக்கின்றன. பசுவை தெய்வமாக வணங்கும் பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட நமது நாடு தனது பங்காக மட்டும் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 23.5 சதவீதம் செய்து பெருமை தேடிக் கொள்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 20.8 சதவீதம் மட்டுமே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது.

தகவல் உதவி
the hindu daily
10-08-2015

இந்திய அரசின் இரு வேறு முகங்கள்!- தெஹல்காஇந்திய அரசின் இரு வேறு முகங்களை டெஹல்கா மிக அழகாக அம்பலப்படுத்துகிறது. மும்பை கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பால்தாக்கரே மற்றும் அவரது பரிவாரங்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் முன் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு எந்த தண்டனையும் தரப்படவில்லை. முக்கிய குற்றவாளியான பால் தாக்கரே அரசு மரியாதையோடு காங்கிரஸ் அரசால் அடக்கம் செய்யப்படுகிறார். ஒரு பேட்டை ரவுடிக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

அதே நேரம் பின்னர் நடந்த மும்பை குண்டு வெடிப்புகளுக்கு பாகிஸ்தான் எவ்வாறெல்லாம் உதவியது என்பதை அரசு தரப்பு சாட்சியாக மாறி சரணடைந்த யாகூப் மேமனுக்கு நள்ளிரவில் கூடி தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறது நமது அரசு. 'கூட்டு மனசாட்சியின்படி எந்த ஆதாரமும் இல்லாமல் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறது நமது அரசு. இந்திய அரசின் இரு வேறு முகங்கள் மிக அப்பட்டமாக வெளியே தெரிகிறது.

-மேத்யூ சாமுவேல் எழுதியுள்ள முழு கட்டுரையையும் படித்து பாருங்கள். நமது மத்திய அரசின் காவி முகம் அப்பட்டமாக தெரியும்.One example of this anti-minority orientation of the Indian State are the double standards applied to Yakub and the other accused in the Bombay blasts case, on the one hand, and the late Bal Thackeray and his Shiv Sainiks who were indicted by the Justice BN Srikrishna Commission for orchestrating the anti-Muslim violence that preceded the bombings, on the other. Yakub’s hanging juxtaposed with the State funeral by the erstwhile Congress-led UPA government for the Shiv Sena supremo is a powerful emblem of this discriminatory and prejudiced understanding that seriously impairs India’s fight against terror.

If terrorism were to be defined as a belief system that legitimises the use of all possible means to terrorise people in order to further a political cause, how are the anti-Muslim massacres — for instance, the Bombay riots — any less “terroristic” than the bomb blasts carried out by underground Islamic groups? Or for that matter the 1984 anti-Sikh riots?

Was Yakub, the man who helped the Indian investigating agencies in a big way to establish Pakistan’s connection with the perpetrators of the Bombay bombings, a terrorist? Was Afzal Guru, who was hanged to satisfy our “collective conscience” that was outraged by the 2001 attack on Parliament, a terrorist? No investigating agency could establish it beyond any doubt, yet that did not deter the Indian State from hanging them. Our rulers declared that justice was done and asked us to celebrate. And those who refused to revel in these cold-blooded murders were branded as “anti-nationals”. Why are our attitudes towards coldblooded murder by the State considered to be the benchmark of our patriotism?

தகவல் உதவி

டெஹல்கா
ஆகஸ்ட் 2015
மேத்யூ சாமுவேல்

http://www.tehelka.com/2015/08/who-is-the-biggest-terrorist-of-them-all/

பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வந்து விட்டதாம்! - மோடி"மாநிலங்களின் ஒத்துழைப்பால் எல்லா பள்ளிகளிலும் கழிப்பறை அமைக்கும் திட்டம் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவேறியுள்ளது." என்று வழக்கமான பல பொய் தகவல்களோடு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை நேற்று டெல்லி செங்கோட்டையில் நடைபெற்றது. மோடியின் பின்னால் கம்பீரமாக இஸ்லாமிய கட்டட கலை மற்றும் மொகலாயர்களின் நினைவுச் சின்னங்களும் உலகுக்கு இந்தியாவில் முஸ்லிம்களின் பங்களிப்பை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை முற்றாக ஒழிப்பதையே சங் பரிவாரங்கள் தங்கள் கொள்கைகளாக கொண்டுள்ளன. ஆனால் சுதந்திர தின உரையிலும் இஸ்லாத்தை அவர்களால் புறந் தள்ள முடியவில்லை.

எனது நாடு இன மொழி மத சாதி மோதல்கள் அற்ற சிறந்த தேசமாக மிளிர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

Saturday, August 15, 2015

தொழுகையில் காட்டும் அசட்டையை அகற்றுவோம்!
இறைவன் குர்ஆனில் பல இடங்களில் தொழுகையை வலியுறுத்துகிறான். மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத்தான் என்றும் இறைவன் கூறுகிறான். ஆனால் அந்த தொழுகையில் நாம் பெரும்பாலும் அலட்சியமாகவே இருக்கிறோம். நாம் இறைவனை தொழுவதனால் இறைவனின் மதிப்பு ஒன்றும் கூடி விடப் போவதில்லை. மாறாக அதனால் நாம் தான் அதிக நன்மைகளை பெறுகிறோம். மறுமையில் இறைவனை சந்திக்கும் போது தொழுகையாளிகளுக்கு அவன் தரும் கண்ணியத்தையும் காணப் போகிறோம். உலகிலேயே பல பாவ காரியங்களிலிருந்து தொழுகை நம்மை தடுக்கிறது. தொழுவதனால் மன அமைதி கிடைக்கிறது. ஐந்து வேளை முறையாக தொழுபவர்கள் தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவுக்கு என்றுமே வர மாட்டார். மேலும் இந்த தொழுகையானது பல நிலைகளில் நமது உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது. அதன் பலன்களைத்தான் நாம் மேலே பார்கிறோம்.

ஒரு நாளில் நமக்கு கிடைக்கும் 24 மணி நேரத்தில் அரை மணி நேரத்தை இந்த தொழுகைகளுக்காக நம்மால் ஒதுக்க முடியாதா? தொழாதவர்கள் இனியாவது ஐவேளை தொழுகைக்கு முயற்சிப்போமாக!


இப்னு உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:, ” இஸ்லாம் ஐந்து அம்சங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது 2. தொழுகையை நிலைநாட்டுவது 3. ரமளானில் நோன்பு நோற்பது. 4. ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர்) இறையில்லமான) கஃபாவில் ஹஜ் செய்தல்’

(புஹாரி: 4514, முஸ்லிம்)

இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை மனிதரை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கும்.

குர்ஆன்(29:45)

அபூ ஹுரைரா(றழி) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று ஓடிக் கொண்டு இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புஹாரி: 528, முஸ்லிம்)

போலி கணக்கெடுப்பு அதிகாரிகளாக நடித்த பிஜேபியினர்!பெங்களூரு: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கணக்கெடுப்பு அதிகாரிகள் போன்று நடித்து அவர்களது வாக்காளர் அட்டைகளை பறித்துச் செல்ல முயன்ற பா.ஜ.க.வின் மகளிர் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
கணக்கெடுப்பு அதிகாரிகளாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பா.ஜ.க.வின் மகளிர் பிரிவைச் சேர்ந்த ஐந்து பெண்கள், நேற்று புதன் கிழமை (12.08.2015) மாலை வேளையில் முஸ்லிம் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளாக குறிவைத்துச் சென்று அவர்களுடைய வாக்காளர் அட்டைகளைச் சோதனை செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம், உங்களுடைய வாக்காளர் அட்டைகள் இனிமேல் செல்லாது எனக் கூறி அவற்றைப் பறித்துச் செல்ல முயன்றுள்ளனர்.
.

தற்போது எந்த ஒரு கணக்கெடுப்பும் நடக்கவில்லை என்பதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அப்பெண்களுடைய நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் அவர்களை கையும் களவுமாக பிடித்து, கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கான அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்லிக் கேட்ட போது, அவர்கள் போலிகள் என்பது தெரிய வந்துள்ளது. அப்போது, அப்பெண்கள், தாங்கள் பா.ஜ.க.வின் மகளிர் பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும் போலியான நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டதாகவும் ஒப்புக் கொண்டனர்.
.

இதற்கிடையை, அப்பகுதியில் நூற்றுக் கணக்கானோர் கூடியதால் பரபரப்பு நிலவியது. காவல்துறைக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அப்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
.

சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினர் வசிக்கும் பகுதிகளில் இது போன்ற திருட்டுத் தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பாஜகவினர் மீதும் சங்கப் பரிவார அமைப்புகள் மீதும் நீண்ட நாளாக குற்றச்சாட்டு இருந்து வரும் வேளையில், கணக்கெடுப்பு அதிகாரிகளைப் போன்று போலி வேடமிட்ட பா.ஜ.க.வின் மகளிர் பிரிவினர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மைப்படுத்தியுள்ளது.

தகவல் உதவி
இந்நேரம் டாட் காம்
13-08-2015
.
http://www.inneram.com/news/india/3445-fake-census-officials-in-muslim-areas.html
.

Thursday, August 13, 2015

கூகுளின் சுந்தர் பிச்சை பிராமிண் ஐயங்காராம்!கூகுளின் CEO வாக ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று நாமெல்லாம் பெருமைபட்டுக் கொள்கிறோம். ஆனால் நாராயணன் நல்லப்பா என்ற பார்பனர் வேறு விதமாக சிந்திக்கிறார். அவரது பக்கத்தில் இது பற்றி எவ்வாறு பெருமைபட்டுக் கொள்கிறார் என்று பாருங்கள்.

'வாழ்த்துக்கள் மிஸ்டர் சுந்தர் பிச்சை! மற்றுமொரு தமிழ் பிராமிண் ஐயங்கார் மிக உயரிய இடத்தை எட்டியுள்ளார்...... வீரமணிக்கும், கருணாநிதிக்கும் வயிறு எரியுதா? வயிறு எரிந்தால் கூகுள் அலுவலகம் சென்று போராடவும்' என்று கிண்டலடித்துள்ளார்.

பார்பனர்களாகிய உங்களைப் போன்றவர்கள் இந்து மதத்தின் மற்ற சாதியினரையும் சரி சமமாக நடத்தி வந்திருந்தால் உங்களுக்கு எதிராக பெரியாரும், வீரமணியும், கருணாநிதியும் எந்த காலத்திலும் எதிராக பேசியிருக்க மாட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் இன்று நீங்கள் உங்களின் வர்ணாசிரம சித்தாந்தை வேறு வழியின்றி குறைத்துக் கொண்டுள்ளீர்கள். சிறிது இடம் கிடைத்தாலும் பழைய படி பார்பனன் சூத்திரன் என்ற பேச்சை ஆரம்பித்து விடுவீர்கள்.

பார்பனர்கள் என்றுமே தமிழர்களோடு ஒட்ட மாட்டார்கள் என்பதற்கு நாராயணன் நல்லப்பாவின் பதிவு ஒரு சான்று. என்னதான் மொழி, நாடு என்று பேசினாலும் ஆரிய குழுமத்தில் இருந்து கொள்வதற்கே அவர்கள் பெருமைபடுவார்கள். இது இன்று நேற்றல்ல..... பல ஆயிரம் வருடங்களாக இந்த ஆரிய பித்து அவர்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது. இது மாற்ற முடியாத ஒன்று என்பதை இது போன்ற பதிவுகள் நமக்கு நிரூபிக்கின்றன.

கூகுளின் உயரத்தை எட்டி பிடித்த நீங்கள் எந்த இனமாக இருந்தாலும் தமிழன் என்ற முறையில் உங்களை நானும் வாழ்த்துகிறேன் மிஸ்டர் சுந்தர் பிச்சை!

வாழ்த்துக்கள்!

Wednesday, August 12, 2015

நேர்மையாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் மெஹ்மூத்!'எனது தங்கை கடைவீதிக்கு ஆட்டோ ரிக்ஷாவில் சென்று விட்டு திரும்பும் போது விலையுயர்ந்த ஐ போனை தவற விட்டு விட்டாள். எங்களுக்கோ மிகவும் வருத்தம். என்ன ஆச்சரியம் சில மணி நேரத்தில் அந்த ஆட்டோ ரிக்ஷாவின் உரிமையாளர் எங்களின் விலாசம் தேடிக் கண்டு பிடித்து அந்த ஐ போனை எங்களிடம் ஒப்படைத்தார். பணத்துக்கு அடிமையாகாதவர்கள் இன்னும் நம்மோடு இருந்து கொண்டுதான் உள்ளார்கள். இவரின் நேர்மையைக் கண்டு நான் நெகிழ்ந்து விட்டேன். அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் மெஹ்மூத். உடன் அவரை போட்டோ எடுத்துக் கொண்டேன். தற்போது முக நூலிலும் பகிர்ந்துள்ளேன். நீங்களும் இதனை ஷேர் செய்து மெஹ்மூதின் நேர்மையை மற்றவர்களும் அறிந்து கொள்ள உதவிடுங்கள்.

- முகேஷ் மெஹ்தா

https://www.facebook.com/photo.php?fbid=10152994285901603&set=a.10152994285946603.1073741825.528996602&type=1&theater

My sister left her bag in a rickshaw while coming back from mqlqd Infiniti mall... Mr mehboob driver returned it along with new iPhone ...good humans still exist...please spread his name and photo to others... I was touched by his honesty

-Mukesh Mehta

Tuesday, August 11, 2015

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்!

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்!மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி நமது நாடான இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க விவசாய அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டு இந்துத்வாவாதிகளின் முகமூடியை கிழித்து போட்டுள்ளது. 2015 ம் வருடம் 2.4 மில்லியன் மாட்டிறைச்சியை நமது நாடு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதே ஆண்டில் பிரேசில் 2 மில்லியனும் ஆஸ்திரேலியா 1.5 மில்லியனும் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. இந்த மூன்று நாடுகள் மட்டும் 58.7 சதவீதம் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அங்கம் வகிக்கின்றன. பசுவை தெய்வமாக வணங்கும் பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட நமது நாடு தனது பங்காக மட்டும் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 23.5 சதவீதம் செய்து பெருமை தேடிக் கொள்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 20.8 சதவீதம் மட்டுமே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது.

Centre for Monitoring Indian Economy (CMIE) யின் அறிக்கை சொல்வதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து மாடு ஏற்றுமதி செய்யும் கம்பெனிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 14 சதவீதம் அதிகரித்து வருவதாக சொல்கிறது. இப்படி மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்பவர்கள் பெரும்பாலும் இந்துக்களே. 'அல் கபீர்' என்று அரபு பெயரை கம்பெனிக்கு வைத்துக் கொண்டு மார்வாடிகள் கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டுகிறார்கள். அவர்களை நோக்கி மோடியின் சட்டம் என்றுமே பாயாது. வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்வதற்காகவே உள் நாட்டில் மத நம்பிக்கையை காரணம் காட்டி தடை போடப்பட்டது. பிஜேபிக்கு தேவையான கப்பத்தை ஒழுங்காக கட்டி விட்டால் கும்பிடும் தெய்வத்தையே விலை பேச இவர்கள் தயங்க மாட்டார்கள்.

ஆனால் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று ஒரு தலித் மாட்டை அறுத்து சாப்பிட்டால் 'எனது கோமாதாவை எவ்வாறு அறுக்கலாம்' என்று அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவர் இந்துத்வாவாதியினர். இவர்களுக்கு உண்மையிலேயே மாட்டின் மீது கரிசனம் இருந்தால் மோடி அரசை அல்லவா இது விஷயத்தில் உலுக்கி எடுக்க வேண்டும்? மத்தியில் சகல சக்தியோடு அமர்ந்துள்ள பிஜேபி அரசை அல்லவா இவர்கள் கண்டிக்க வேண்டும்? செய்தார்களா?

உண்மையில் இந்துத்வாவாதியினருக்கு கோமாதா பாசம் என்பது நாடகமே! இதனை வைத்து இஸ்லாமியரையும், கிருத்துவர்களையும், தலித்களையும் வம்புக்கு இழுக்க ஒரு பகடைக்காயாக கோமாதாவை பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில் பற்றுக் கொண்ட உண்மையான விசுவாசிகள் மோடி அமீத்ஷா போன்றவர்களின் இரட்டை நிலையை சீர்தூக்கி பார்க்க வேண்டும். இந்துத்வாவினரின் ஆட்சியில் இந்து மதம் பின்னோக்கி செல்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதனை வரும் காலம் உண்மைப்படுத்தும்.


தகவல் உதவி
the hindu daily
10-08-2015

Monday, August 10, 2015

டாக்டர் ருவேதா சலாம் முதல் பெண் ஐபிஎஸ் காஷ்மீரிலிருந்து!காஷ்மீர் பள்ளத்தாக்கின் குப்வாரா என்ற குக்கிராமத்தில் பிறந்து பல போராட்டங்களுக்குப் பிறகு காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் ஆபீஸராக பொறுப்பேற்றுள்ளார் டாக்டர் ருவேதா சலாம்! ருவேதா சலாம் ஒரு மருத்துவரும் கூட. ஸ்ரீநகர் மெடிக்கல் காலேஜில் மருத்துவ படிப்பு படித்து மருத்துவராகவும் உள்ளார். 2013 ல் யுபிஎஸ்எஸி தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்வு பெற்றார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் தரப் பட்டியலில் 878 ஆவது இடத்தில் உள்ளார் டாக்டர் ருவேதா சலாம்.

Assistant Commissioner of Police (ACP) ஆக நமது சென்னையில் பொறுப்பேற்றுள்ளார் ருவேதா சலாம். இது பற்றி அவர் கூறும்போது 'இள வயதில் ஏசிபியாக பணியாற்றுவது என்பது மிகவும் சிக்கலான வேலை. சென்னை வாழ் மக்கள் காவல்துறைக்கு மிகவும் மதிப்பளிக்கக் கூடியவர்கள். அவ்வாறான இடத்தில் நான் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது' என்கிறார்.

இந்த சகோதரியைப் போல் பல துறைகளிலும் நமது பெண்கள் பரிணமிக்க ஊக்கமளிப்போம்.