Followers

Thursday, January 15, 2009

கேள்வி கேட்க மறந்த மக்கள்! - எஸ்.ஏ.ஆர். கிலானி

கேள்வி கேட்க மறந்த மக்கள்
எஸ்.ஏ.ஆர். கிலானி

‘மதவாதம், பாசிசம் மற்றும் ஜனநாயகம்-மிகையும், உண்மையும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தலைமை ஏற்க, நவம்பர் 6, 2008 அன்று காலை சரியாக 11.30 மணிக்கு நான் தில்லி பல்கலைக் கழகத்தின் கலைத் துறையை வந்து சேர்ந்தேன். நான் என் இருப்பிடத்தில் அமர்ந்த போது, இன்னும் சில நிமிடங்களில் என் மீது ஒரு வெட்கங்கெட்ட பாசிசத் தாக்குதல் நடைபெறப் போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. நான் அமர்ந்த உடனேயே ஒரு மாணவர் என்னிடம் பேச முற்படுவது போல் என் அருகே நெருங்கினார். ஆனால் பேசுவதற்குப் பதில், என் முகத்தில் அவர் காறி உமிழ்ந்தார். அடுத்த நொடியே வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

பார்வையாளர்களிடையேயும் வெளியிலும் விரவியிருந்த விசுவ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கூச்சலிடவும்-நாற்காலி, மேசைகள், ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கவும் தொடங்கினர். பெரும் எண்ணிக்கையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்ததைப் பற்றிய எந்த பாதிப்புமின்றி அவர்கள் என்னை மட்டுமல்ல; ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையுமே பழிக்கத் தொடங்கினர். ஒரு நொடி நான் அதிர்ந்து போனேன். ஆனால் என் மீது உமிழ்ந்த மனிதர் முழக்கங்கள் எழுப்பத் தொடங்கியவுடன் -அவர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கலாச்சாரத்தில் உள்ளவர் என்பதை உணர்ந்தேன். இவர்கள்தான் உஜ்ஜயினியில் பேராசிரியர் சபர்வாலை கொலை செய்தவர்கள். அண்மையில் ஒரிசாவிலும் கர்நாடகத்திலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்.

இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாக சொல்லிக் கொள்பவர்களின் பாசிசம் இதுதான். வன்முறைதான் இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என்ற தவறான செய்தியை இவர்கள் உலகுக்கு அளிக்கிறார்கள். டிசம்பர் 2001இல் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து, 2005 இல் நான் விடுதலை செய்யப்பட்ட பிறகும் கூட, இந்த பாசிசத்தை நான் சந்தித்து வருகிறேன்.

உண்மையில் நான் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்பட்ட பிறகான வாழ்க்கை எனக்கு மட்டுமல்ல; எனது குடும்பத்தினருக்கும் மிகக் கடினமாகவே இருக்கிறது. நான் குறி வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறேன். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். 2005 இல் என்னைக் கொல்ல முயற்சி நடந்தது. 6 குண்டுகள் என்னை துளைத்தன. மருத்துவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஆனாலும் அதிசயமாக நான் பிழைத்துக் கொண்டேன். ஓராண்டு கழித்து, என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அதன் பிறகும் பல முயற்சிகள் என் மீது நடந்தன. என்னைச் சுற்றி ஆபத்து இருப்பதை அறிவேன்.

இறுதியாக உயர் நீதிமன்றமும், பின்னர் உச்ச நீதிமன்றமும் என் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யென என்னை விடுவித்தன. சொல்லப் போனால், உயர் நீதிமன்றமும், காவல் துறையும் எனக்கு எதிராக பொய்யான
சாட்சியங்களை உருவாக்கியதையும், போலி ஆவணங்கள் தயாரித்ததையும் கண்டுபிடித்துச் சொன்னது. ஆனால்
தற்போது மக்கள் மனதில் ஆழப்பதிந்திருப்பது, ஊடகங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்த பிம்பமே. இது, மற்றவர்களுக்கும் பொருந்தும். அய்தராபாத்தில் உள்ள ஒரு நீதிமன்றம், சென்ற வாரம் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் கைதான ஒரு முஸ்லிம் இளைஞனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஊடகங்கள் இதை வெளியிட எந்த அக்கறையும் காட்டவில்லை. 2003இல் நடைபெற்ற ஒரு பேருந்து குண்டு வெடிப்பு வழக்கில், கைது செய்யப்பட்ட அனைவரையும் மும்பையில் உள்ள நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் ஒருவரும் இந்த செய்தியை வெளியிடவில்லை.

நான் உளவு நிறுவனங்களை மிக நெருக்கமாக கவனித்திருக்கிறேன். அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, நான் ஓர் அரசு அலுவலகத்திலோ அல்லது ஒரு ஜனநாயக நாட்டிலோ இருப்பதாக உணர்ந்ததே இல்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் இருப்பது போன்ற உணர்வையே அது ஏற்படுத்தியது. இந்த நிறுவனங்கள் எல்லாம் முற்றிலும் மதமயமாகிப்
போயிருக்கின்றன. வேதனையான செய்தி என்னவெனில், ஊடகங்களில் திட்டமிட்டு சொருகப்பட்ட செய்திகள் நிறைய வெளிவருகின்றன. இந்த உளவு நிறுவனங்கள் பல ஊடகவியலாளர்கள் மூலம் சில கதைகளைப் பரப்புகிறார்கள். அவர்களும் அதை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்திய நாட்டின் மக்கள் தங்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்க மறந்து விட்டார்கள். நான் தொடர்ந்து மக்களிடம் கேட்கிறேன். "2001 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தைத் தாக்கியவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?' யாருக்கும் தெரியாது. யாரும் கேட்கவும் இல்லை. அதனால் இது, இந்த நொடி இது மிக மோசமாகத் தோன்றுகிறது. பாரபட்சமான, முன்தீர்மானத்துடன் கூடிய சட்டத்திட்டங்கள், ஜனநாயகத்திற்கான இடத்தை சுருக்கிக் கொண்டே வருகின்றன. ஜனநாயகத்திற்கான இடத்தை உறுதி செய்வதன் மூலம் நமது வருங்காலத் தலைமுறையினர் பயன் பெறுவதற்காக, நாம் துன்பங்களை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

‘தெகல்கா' 22.11.2008

Wednesday, January 14, 2009

இஸ்லாம் போராளிகள் மதமா ? ப. சிதம்பரம்

இஸ்லாம் போராளிகள் மதமா ? ப. சிதம்பரம்

கிறிஸ்துவப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் வாய்ப்பு எனக்கு இளமையில் கிட்டியது முதலில் ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரீகள் நடத்திய கான்வென்ட் அடுத்து பிராடஸ்டண்ட் மிஷன்
நடத்திய உயர்நிலைப்பள்ளி எல்லா வகுப்புகளிலும் இந்து சமயத்தைச் சார்ந்த மாணவர்களே
(கான்வென்டில் மாணவிகளும்) மிக அதிகமாக இருந்தார்கள். சில கிறிஸ்தவர்கள்.அபூர்வமாக
சில முஸ்லிம்கள்.ஆனால்,ஒரு முக்கியமான விஷயம்: இந்து,கிறிஸ்துவர்,இஸ்லாமியர் என்று
பொதுவாகத் தெரிந்தாலும் மதத்தின் அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் எந்த வேறுபாடும்
கிடையாது. பல நேரங்களில் ஒரு மாணவனின் பெயரைக் கொண்டுதான் அவனுடைய மதம்
தெரிந்தது. நடை,உடை,உணவுப் பழக்கவழக்கங்களில் எந்த வேறுபாடும் தெரியவில்லை.
எல்லோரும் காமிக்ஸ் படித்தார்கள். எல்லோரும் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தார்கள்.
நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில் மதம் ஒரு முக்கிய குறியீடாகக் கருதப்
படவில்லை. ஒவ்வொரு மாணவனும் பைபிள் அல்லது அறநெறி பாடத்தை படிக்க வேண்டும்
என்பது பள்ளியின் விதி. மிகப் பெரும்பான்மையான மாணவர்கள் (அவர்களில் பெரும்பாலோர்
இந்துக்கள்)அவர்களுடைய பெற்றோரின் சம்மதத்துடன் பைபிள் பாடத்தையே விரும்பித்
தேர்ந்தெடுத்தார்கள். அநேகமாக எல்லா முஸ்லிம் மாணவர்களும் பைபிள் வகுப்பிலேயே
சேர்ந்தார்கள்.யாரும் யாரையும் கட்டாயமாகவோ அல்லது நைச்சியமாகப் பேசியோ மதமாற்றம்
செய்ய முற்படவில்லை.
ஒவ்வொரு வகுப்பிலும் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மாணவர்
தலைவர்.ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு மாணவர் தலைவர் என்று மாணவர்களே தேர்ந்
தெடுக்கவேண்டும். ஆறாவது வகுப்பில் (அப்பொழுது முதல் பாரம் என்று அழைத்தார்கள்)
நாங்கள் தேர்ந்தெடுத்த மாணவர் தலைவரின் பெயர் ஏ.கே.மூசா. பள்ளியோ கிறிஸ்துவர்கள்
நடத்தும் பள்ளி. பல ஆசிரியர்கள் கிறிஸ்துவர்களே. பெரும்பான்மையான மாணவர்களோ
இந்துக்கள். ஆனால்,எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓர் இஸ்லாமியர்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏழாம்,எட்டாம்,ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளிலும் எங்கள்
வகுப்புத் தலைவராக அதே ஏ.கே.மூசா என்ற மாணவரையே தேர்ந்தெடுத்தோம். ஏ.கே.மூசா
எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். ஆனால்,சராசரி மாணவர். சராசரி உயரம். சராசரி கவர்ச்சி. ஆங்கிலம் தெரிந்த போதும் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றக் கூடிய ஆற்றல் கிடையாது.
பதினோராம் வகுப்புக்கு வந்தோம். அதுவே பள்ளியில் இறுதி வகுப்பு. ஆண்டு முடிவில் எஸ்.எஸ் எல்.சி.தேர்வு எழுத வேண்டும்.பதினோராம் வகுப்பின் மாணவர் தலைவரே பள்ளியின் மாணவர் தலைவர் ஆவார்.பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

அப்பொழுது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈடும் இணையுமில்லாத திரு.குருவில்லா ஜேக்கப்
அவர்கள். பள்ளி மாணவர் தலைவர் உயரமாக,கம்பீரமாக,கவர்ச்சியாக நன்றாகப் பேசக்கூடியவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருடைய விருப்பத்திற்கேற்ப பதினோராம் வகுப்பு மற்றும் பள்ளியின் மாணவர் தலைவராக நாங்கள் ஒரு கவர்ச்சிகரமான மாணவரைத் தேர்ந்து எடுத்தோம். அவருடைய பெயர் ஹாரூன் முஹம்மது.
பள்ளி வாழ்க்கை முடிந்த பிறகு ஏ.கே.மூசாவுடன் தொடர்பு அறுந்து விட்டது. அவர் எங்கே,
எப்படி,என்ன செய்து கொண்டிருந்தார்,செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
ஹாரூண் முகம்மது ஆஸ்திரேலியா நாட்டில் குடியேறி குடியுரிமையும் பெற்றார். 1998ஆம்
ஆண்டு அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நான் ஆஸ்திரேலியாவில் சந்தித்தேன்.
கான்வென்டில் படிக்கும்போது மல்லிகா என்றொரு மாணவி இருந்தார் பெயர் மல்லிகா
என்றாலும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். மிக அழகான,மிக புத்திசாலியான
பெண்.வகுப்பில் அந்தப் பெண்ணுடன் தான் முதலிடத்திற்குப் போட்டி.
இஸ்லாமியச் சட்டம்,மதம்,வாழ்க்கைமுறை ஆகியவற்றுடன் சட்டக்கல்லுரியில் படிக்கும்
போது தான் அறிமுகம் ஏற்பட்டது. இந்து சட்டங்கள் என்றொரு பாடம் இருந்தது. அதைப்
போலவே இஸ்லாமிய வாழ்க்கை முறை பற்றி பல மாயைத்தோற்றங்கள் இருந்தன.
இந்து சமுதாயத்தின் மத்தியில் அறியாமையே இருந்தது.இஸ்லாமிய சட்டங்களை படித்த
பிறகு தான் அந்த அறியாமை விலகியது.
இஸ்லாம் ஓர் உயர்ந்த வாழ்க்கை முறை என்பதை யாரும் மறுக்க இயலாது.இந்து திருமணச்
சட்டங்கள்,இந்து வாரிசுரிமைச் சட்டங்கள் ஆகியவற்றிலிருந்து இஸ்லாமியச் சட்டங்கள் வேறு
படுகின்றன என்பது உண்மையே. ஆனால்,இந்த வேறுபாடுகளின் காரணமாக மட்டுமே இந்து
சட்டங்கள் தரம் உயர்ந்தவை என்றோ,இஸ்லாமியச் சட்டங்கள் தரம் குறைந்தவை என்றோ
முடிவுக்கு வர முடியாது.
இந்து சட்டங்களை இறைவனே அருளினார் என்று வேதங்களும் உபநிஷத்துக்களும் குறிப்பிடு
வதைப்போல இஸ்லாமியச் சட்டங்களை இறைவன் தம்முடைய தூதர் முகம்மது நபி மூலம்
அருளினான் என்று இஸ்லாமியர் நம்புகிறார்கள்.
இஸ்லாமிய வாழ்க்கை முறையிலும் இஸ்லாமியச் சட்டங்களிலும் பல அம்சங்கள் என்னைக்
கவர்ந்துள்ளன.
மனித உரிமைகளைப் பற்றி இஸ்லாமிய பிரகடனம் என்றொரு பிரகடனத்தை 1981 ஆம்
ஆண்டில் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மதத்தில் கட்டாயம் கிடையாது என்பது
முக்கியமான கொள்கை.முஸ்லிம் நாடுகளில் வாழ்கின்ற சிறுபான்மை சமயத்தினர் அவர்
களுடைய மதம் வகுத்துள்ள சட்ட விதிகளைப் பின் பற்றி வாழ உரிமை உண்டு என்று
பிரகடனம் அறிவிக்கிறது. ஒருவருடைய மத நம்பிக்கையில் அவரை யாரும் கட்டாயப்
படுத்தவோ,கட்டுப்படுத்தவோ கூடாது என்பது திருக்குர் ஆனின் அடிப்படைக் கொள்கை.

பெண்களுக்கும் சொத்துரிமை இல்லாத காலத்தில் தோன்றியது இஸ்லாம். பெண்கள்
தங்கள் பெயரில் தனிப்பட்ட முறையில் சொத்து வைத்துக்கொள்ளும் உரிமையை
இஸ்லாம் அறிவிக்கிறது.
அண்ணல் நபிகள் நாயகம் ஒரு மாமனிதர். அவரைக் குறித்து,சண்டையும் சச்சரவும்
நிறைந்த குலம் கோத்திரங்களையும்,நாடோடிகளையும் தமது தனி முயற்சியால்
இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த பலம் பொருந்திய
சமுகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ என்று வரலாற்று ஆசிரியர்
தாமஸ் கார்லைஸ் வியந்து எழுதினார்.

தம்முடைய யங் இந்தியா பத்திரிகைகளில் முகம்மது நபியின் உயர் பண்புகளைக் குறித்து
மகாத்மா காந்தி எழுதியதைப் பாருங்கள்.

இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஒர் இடத்தைப் பெற்றுத் தந்தது
வாள் பலமல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின்
மாறாத எளிமை,தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு,எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த தன்மை,தம் தோழர்கள் மீது அவர்
கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு,அவரது அஞ்சாமை,இறைவன் மீதும் தமது பிரசாரப் பணியிலும்
அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள்.
இஸ்லாம் ஒரு போராளிகளின் மதம் என்றொரு தோற்றம் இருக்கிறது.வாள் பலம் கொண்டே
இஸ்லாம் பரவியது என்றும் வாள் பலத்தைக் கொண்டு இஸ்லாமியர் மற்றவர்களை அச்சுறுத்து
கிறார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இஸ்லாமிய இயக்கம் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகே முன்னேறியது என்பதைக் கவனத்தில்
கொள்ள வேண்டும். அண்ணல் நபிகள் நாயகம் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டதை நபித்துவம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது.நபிகள் நாயகத்தின் பணியை இஸ்லாம் அழைப்புப் பணி என குறிப்பிடுகிறது. இந்த அழைப்புப் பணியை இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.முதல் காலகட்டம் மக்கா நகரில் நடந்த சகாப்தம்.இது 13 ஆண்டுகள் நீடித்தது.இரண்டாவது கால கட்டம் மதனீ சகாப்தம்.இது 10 ஆண்டுகள் நீடித்தது.

மக்கீ சகாப்தத்தில் நபிகள் நாயகத்தின் மீதும் அவருடைய அழைப்புப் பணியின் மீதும்
சொல்லொணாத கொடுமைகளும்,அக்கிரமங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.அன்றைய அதிகார
வர்க்கத்தினர் நபிகள் நாயகத்தை பைத்தியக்காரர் என்று பழித்தார்கள். அவருடைய பேச்சைக் கேட்க
யாரும் போகக் கூடாது என்று தடை விதித்தார்கள்.முஸ்லிம்களைக் கண்ட போது அவர்களைத்
திட்டினார்கள்.வசை பாடினார்கள். ஆயினும் இஸ்லாமிய அழைப்பின்பால் மக்கள் கவனம் திரும்பி
ஏராளமானவர்கள் திரண்டார்கள். தன்னுடைய இறுதி ஆயுதமாக வன்முறையை அதிகார வர்க்கம்
ஏவி விட்டது.முஸ்லிம்கள் மீது இழைக்கப்பட்ட துன்பங்கள் அவர்களால் தாங்க முடியாத அளவிற்குச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த பிறகு,மக்கா நகரிலிருந்து வெளியேறுவது என்று
நபிகள் நாயகம் முடிவெடுத்தார்.மக்கீ சகாப்தம் ஒரு பெரும் போராட்ட காலமாக இருந்தது.பிறகு
தொடங்கியதே மதனீ சகாப்தம்.

தம்மையும் தம்முடைய மதத்தையும் தற்காத்துக் கொள்ளவே முஸ்லிம்கள் போராட்டக் குணத்தை
வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.

அரசியல் மற்றும் காழ்ப்பு உணர்வுகளின் காரணமாகவே இஸ்லாத்திற்கு எதிராக அவதூறு பிரச்சாரம்
நடந்தது என்பதே உண்மை. பேராசிரியர் பெவான் என்னும் வரலாற்று நூலாசிரியர்,முகம்மதைப்
பற்றியும் இஸ்லாம் பற்றியும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்டவையெல்லாம்
இலக்கிய விந்தைகளாகிவிட்டன என்று குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் ஏகத்துவம்,மறுமை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்துகிறது. ஒரே இறைவன் என்பது
மூலக்கோட்பாடு.அவனை ஒத்ததோ,விஞ்சியதோ ஏதுமில்லை.அவன் அதிபதி. அவனிடம் எந்த
குற்றமும்,குறையும் காண முடியாது.அவன் உடல்களை உருவாக்கியவன். ஆன்மாவை
உண்டாக்கியவன்.அவனே இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி. இதுவே ஏகத்துவம்.
உங்களுள் மறைந்திருப்பவையும்,இந்த உலகில் உங்களிடமிருந்து மறைக்கப்பட்டவையும் மறு
உலகில் உங்கள் முன் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்பது மூலக்கோட்பாடு. இதுவே மறுமை.
இந்த அடிப்படைக் கோட்பாடுகளில் என்ன குற்றத்தைக் காண முடியும்?

எல்லா மதங்களிலும் அடிப்படைக் கோட்பாடுகளைச் சிதைப்பவர்கள் இருக்கிறார்கள்.காலப்
போக்கில் பல மூட நம்பிக்கைகளும் மலிந்து விடுகின்றன. மதம் என்பது ஒரு போர் வாளாக
மாறிவிடுகிறது.

இந்து சமயத்திலும்,கிறிஸ்துவ சமயத்திலும்,யூத சமயத்திலும் தீவிரவாதிகள் இருப்பதைப்போல்
இஸ்லாத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இந்த தீவிரவாதிகளினால்தான் மதங்களிடையே
பகை வளர்கிறது.இந்தத் தீவிரவாதிகளின் சொல்லையும் செயலையும் கொண்டு ஒரு மதத்தை
மதிப்பிடக்கூடாது.

திருக்குர் ஆனைப் படிப்பதற்கும்,நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதற்கும்
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.திருக்குர் ஆன் ஓதப்பட்ட காலம் கி.பி.610.
ஓர் எழுத்துக் கூட மாறாமல் எந்த இடைச் செருகல்களுக்கும் உள்ளாகாமல் ஒரு நூல் உள்ளது
என்றால் அது திருக்குர் ஆன் மட்டுமே என்று சர் வில்லியம் மூர் குறிப்பிடுகிறார்.
திருக்குர் ஆனை ஏற்று நபிகள் நாயகத்தை இறைத்தூதராகப் போற்றும் இஸ்லாமிய சமுதாயத்தினர்
மற்ற மதங்களைச் சார்ந்தவர்களின் சகோதரர்கள் என்ற உணர்வு பரவ வேண்டும் என்று விழைகிறேன்.

( குடவாசல் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட அருள் வசந்தம் எனும் மலரிலிருந்து )

Monday, January 12, 2009

இசைப்புயலுக்கு மற்றொரு அங்கீகாரம்!
இசைப்புயலுக்கு மற்றொரு அங்கீகாரம்!

தகப்பனாரின் இழப்பினால் சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்று பல சோதனைகளையும் கடந்து வீறு நடை போடுகிறார் ரஹ்மான். கடின உழைப்புக்கு மற்றொரு பெயர் ரஹ்மான் என்று சொல்லலாம். அவரின் உழைப்பை ஹாலிவுட் அங்கீகரித்துள்ளது. ஆம். ஹாலிவுட்டின் மிக உயர்ந்த விருதான 'கோல்டன் குளோப்' விருது ரஹ்மானுக்கு கிடைத்திருக்கிறது. வழக்கம் போல் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே!' என்று கூறியுள்ளார். 'இது இந்திய நாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்' என்றும் கூறியுள்ளார்.

இன்று தொலைக்காட்சியில் சஹாரா சேனலில் இது பற்றிய அறிவிப்பு வந்தவுடன்தான் எனக்கும் இது விபரம் தெரிய வந்தது. இவ்வளவு புகழ் அடைந்தாலும் தலைக்கனம் கொஞ்சம் கூட இல்லாமல் மிக எளிமையாக இருப்பதுதான் இவரின் வெற்றிக்கு அடிப்படையே! ராஜா இது விஷயத்தில் ரஹ்மானிடம் கொஞ்சம் பாடம் எடுக்க வேண்டும்.

'ஏழுஸ்வரங்களுக்குள்' 'பொன்மாலைப் பொழுது' 'என்ன சொல்லப் போகிறாய்' என்று பலரின் இசைகளையும் அவ்வப்போது கேட்பதுண்டு. இஸ்லாம் தடுத்ததினால் இசையை தவிர்ந்து கொள்ள எவ்வளவோ முயன்றாலும் அவ்வப்போது என்னையும் அறியாமல் இசை என்னை ஆட்கொண்டு விடுகிறது.
----------------------------------------

தினமலரும் ஹிந்துவும் ரஹ்மான் சம்பந்தமாக கொடுத்த செய்திகள் கீழே!

நியூயார்க்: பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஹாலிவுட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் "கோல்டன் குளோப்' விருது கிடைத்துள்ளது. இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் ரகுமான் பெற்றுள்ளார்.பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், "ஸ்லம்டாக் மில்லினர்'என்ற ஹாலிவுட் படத்திற்கு இசை அமைத்திருந்தார். ஹாலிவுட் இயக்குனர் டானி பாயல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

குரோர்பதி நிகழ்ச்சி : படிப்பறிவற்ற ஒரு ஏழைச் சிறுவன், குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோடீஸ்வரனாவதைப் பற்றிய கதை அம்சம் கொண்டதாக இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.இந்த படத்திற்கு இசை அமைத்ததற்காக, ஹாலிவுட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் "கோல்டன் குளோப்' விருது ரகுமானுக்கு கிடைத்துள்ளது. கலிபோர்னியாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையும் ரகுமானுக்கு கிடைத்துள்ளது. இதைத் தவிர, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதைக்கான விருதுகள் உள்ளிட்ட நான்கு விருதுகள் "ஸ்லம்டாக் மில்லினர்' படத்திற்கு கிடைத்துள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்சில் நடந்த விழாவில், இந்த விருதுகள் வழங்கப்பட்டன. "கோல்டன் குளோப்' விருது பெற்றது குறித்து ரகுமான் கூறுகையில்,"என்னால் நம்பவே முடியவில்லை. இந்த விருது எனக்கு கிடைக்காது என நினைத்தேன். ஆனால், கிடைத்து விட்டது. என்னை இதுபோன்ற பெருமைக்கு ஆளாக்கிய கடவுளுக்கு நன்றி. இயக்குனர் டானி பாயல், சென்னை மற்றும் மும்பையில் உள்ள என் இசைக்குழுவினர், கோடிக்கணக்கான இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' என்றார்.ஸ்டார் பாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் இந்த படத்தை விரைவில் இந்தியாவில் வெளியிட உள்ளது.

அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஜய் சிங் மும்பையில் கூறுகையில்,"ரகுமானுக்கு விருது கிடைத்துள்ளது, இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம். ரகுமான் என்னிடம் கூறுகையில், இந்த விருது இந்தியாவுக்கு கிடைத்துள்ள பரிசு என்று கூறினார். இதன்மூலம் சர்வதேச திரைப்பட அரங்கில், இந்தியாவுக்கு பெருமை கிடைத்துள்ளது' என்றார்.
-Dinamalar

NEW DELHI: The underdog ‘Slumdog Millionaire’ has ended as the top dog at the Golden Globe awards with the film winning all the four awards it was nominated for. Popular composer A.R. Rahman became the first Indian to get the Golden Globe for the Best Original Score. Director Danny Boyle’s film, that relates the tale of an orphan from Mumbai winning a game show, also won the Golden Globe for the Best Director, Best Drama and the Best Adapted Screenplay.

“I am so happy to have won this award not because I needed it but because [I] have fulfilled a wish of all the music lovers in India to bring home a Golden Globe,” Mr. Rahman said. “I want to thank the Almighty for making this possible and am grateful for all the love and prayers from all my fans, friends and family. It is a score which blurs the line between songs and a score. That is one of the reasons for it becoming very addictive for the viewers.”

Actor Anil Kapoor, who has won acclaim for his portrayal of Prem, a quiz show host in the film, said the awards were completely unexpected.

“The awards for the film have come as a huge surprise. But with Rahman there is no surprise. He is known for original work.”

Popular actor Irrfan Khan, who plays a police inspector in the film, said, “I have been a fan of Rahman all through. I have never heard a better bhajan than ‘Tumre bin …’ He has out-done himself here. He deserves much more.”

Commenting on Rahman’s great success, seasoned poet-lyricist Gulzar who has penned one of the songs for ‘Slumdog Millionaire,’ said, “It means so much for all of us, and for Indian music. Rahman has brought film music to the global stage.” Veteran filmmaker Mahesh Bhatt felt there was something predestined about Rahman’s success. “A man with such talent had to make his presence felt in the global arena. He had the appetite to go beyond the matrix of Tamil and Hindi cinema. He delivered when the opportunity presented itself. The world will take Indian film music more seriously now.”

Interestingly, actor-director Mahesh Manjrekar, who plays gangster Javed in the film, auditioned for the small role. “Danny [Boyle] was like a baby on the set, always excited to know something more. It is this innocence which reflects in the film and is sweeping the world off its feet.” Mahesh agrees it is ironical that the subject was not taken up by an Indian production house. “I wanted to do it but by then the rights were sold.”

Audience appreciation
Fellow actor Madhur Mittal, who plays Salim in the film, said, “We are all proud of the awards it has got but the audiences’ appreciation that had come our way means much more. We also got the People’s Choice Award in Toronto. As for Rahman, I had worked with him earlier in ‘One Two ka Four.’ Here his music score is in sync with the film. It is one of his best works.”

The film is based on Indian author-diplomat Vikas Swarup’s book ‘Q and A.’
The success at the Golden Globe has upped the expectations. “We might just be one shot away from the Oscars now,” said actor Irrfan Khan.

-The Hindu

Wednesday, January 07, 2009

பாலஸ்தீனம் தொடரும் துயரம்!
பாலஸ்தீனம் தொடரும் துயரம்!

பாலஸ்தீனத்தில் தினம் தினம் செத்து மடியும் பொது மக்களையும் சின்னஞ் சிறார்களையும் காணும் போது மனம் கனக்கிறது. அமெரிக்காவுக்கு பயந்து வெறும் பிரார்த்தனையோடு நிறுத்திக் கொள்ளும் அரபு நாடுகளைக் கண்டால் எரிச்சலே மேலோங்குகிறது. பாலஸ்தீனியர்கள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஓரணியில் சேராதவரை இவர்களின் வெற்றி வெறும் கானல் நீர்தான்.

இந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று மசூதியில் உரையாற்றிய இமாம்(தலைவர்) இஸ்ரேலின் அக்கிரமங்களை பட்டியலிட்டுக் கொண்டே வந்தவர் அதிகம் உணர்ச்சிவசப் பட்டதால் மயங்கி விழுந்து விட்டார். அந்த அளவு உணர்வுகளை வெளியிட்டது அங்கு வந்த சவுதிகளையே சிறிது நேரம் உணர்ச்சிவசப் பட வைத்து விட்டது. பாலஸ்தீனியர்களுக்காக பலரும் அள்ளி வழங்கினர். இந்த அரசால் கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் தர்ம சங்கடத்தில் உள்ளது வேதனையிலும் வேதனை.

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை ஒவ்வொரு நாட்டிலும் நடந்தே வந்திருக்கிறது.

சத்தியம் வெல்லும். அது வரை இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

---------------------------------

சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்கள்

சவுதி அரேபியாவில் தம்மாம் மற்றும் அல் கோபர் பகுதிகளில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தம்மாம் சென்ட்ரல் மருத்துவமனையில் சனிக்கிழமை முதல் வியாழ்கிழமை வரை காலை 7.30 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும், அல் கோபர் கிங் பஹத் மருத்துவமனையில் காலை எட்டு மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இம்முகாமில் சேகரிக்கப்படும் ரத்தம் இஸ்ரேலிய தாக்குதலில் பாதிக்கப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. உங்களது ரத்தம் பாலஸ்தீன உயிரைக் காப்பதற்குப் பயன்பட இம்முகாமில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுபோன்ற ரத்ததான முகாம்கள் வளைகுடாவின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

GAZA CITY: Israeli tanks opened fire yesterday on a school in the Gaza Strip where civilians had taken shelter, killing 43 of them and wounding dozens. Al-Fakhora School in Jabaliya was the third targeted by the Israeli military yesterday. Missile attacks on two other schools killed five more refugees.

On the 11th day of their war on Gaza, Israeli forces entered densely populated cities where Hamas fighters battled them street-by-street. Ezzedin Al-Qassam Brigades, the armed wing of Hamas, said its fighters attacked seven Israeli tanks in Al-Shijiaya, east of Gaza City, and killed 10 soldiers. Israel said it lost five soldiers, four of them in friendly fire. Four Hamas fighters were killed.
Israel’s attack on schools designated as shelters by the UN for civilians fleeing war, raised alarm among humanitarian and rights groups. A senior UN official in Gaza said 350 people had been sheltering at Al-Fakhora School and the United Nations regularly gave the Israeli Army exact geographical coordinates of its facilities to try to keep them safe from attack.

Asked by reporters about the deaths, Israeli Foreign Minister Tzipi Livni said she was “not familiar” with the incident. An Israeli Army spokeswoman said she was looking into information on the incident.

Medics in Gaza said the Israeli offensive has killed at least 660 Palestinians, including 215 children since the offensive began Dec. 27. Another 2,950 people have been wounded.

The Red Cross said that an ambulance post was hit during what it called the most terrifying night of violence yet in Gaza, while the UN reported half-a-dozen Palestinian medical workers dead amid a worsening humanitarian crisis. Israel’s Physicians for Human Rights (PHR) group said that medical teams rescuing the wounded in Gaza were being attacked by Israeli forces. “Testimonies reveal that the army is attacking medical teams that travel to rescue the wounded, including ambulances, doctors and medics in medical uniform,” PHR said in a statement, saying it had reports of 10 such cases.

The group said it had received a phone call from Gaza’s Al-Awda Hospital saying medics were unable to head out to evacuate people wounded in strikes. “We cannot get the ambulances out because we are being fired at.”

Another caller, from the Red Crescent in Gaza, said: “We can’t get ambulances out because as soon as they leave they are fired at from Apaches (assault helicopters).”
Three mobile clinics run by a Danish charitable organization were destroyed by the Israeli Army, an official said in Copenhagen. The Folkekirkens Noedhjaelp (DanChurchAid) clinics were bombarded Monday night despite being clearly marked, said the organization’s secretary-general, Henrik Stubkjaer, in a statement.
Stubkjaer said he was “deeply shocked” by the Israeli military action, which “is aiming directly at humanitarian targets and making all humanitarian work impossible.”
The UN Human Rights Council is expected to convene Friday in Geneva for a special session on the situation in Gaza, a European diplomat said. He said a formal request for the session would be put forward by representatives of the Non-Aligned Movement, the Organization of the Islamic Conference and African and Arab countries.
Under a draft resolution, the council would condemn the Israeli military assault on Gaza and demand that the country halt targeting civilians.

French President Nicolas Sarkozy headed back to Egypt yesterday for more talks with his Egyptian counterpart saying he saw a “glimmer of hope” in achieving a cease-fire in the Gaza Strip.
“Time is against us, we must find a solution and that is why I am heading back to Sharm El-Sheikh,” Sarkozy said after visiting French troops serving with the UN force in southern Lebanon.
“If each party waits for the other to make a move there will be tragedies, tragedies and more tragedies,” he warned, referring to Israeli strikes on the three UN-run schools.

A Hamas delegation was in Cairo to discuss an Egyptian-proposed cease-fire. The talks with the Palestinian delegation, headed by Emad Al-Alami and Mohammed Nasr from Hamas’ Syria-based political leadership, represent the first such contact since fighting began.

— With input from agencies - Arab News

Sunday, January 04, 2009

புது வருடமும் மூடப்பழக்கங்களும்!
புது வருடமும் மூடப்பழக்கங்களும்!

ஆங்கில புத்தாண்டு வந்து சென்றும் விட்டது. ஏசு நாதர் எதற்காக அவதரித்தார்? எதனை போதித்தார் என்று சிந்திக்கக் கூட மறந்த நம்மவர்கள் அந்த நாளில் குடியும் கும்மாளமுமாக பொழுதை கழித்து புத்தாண்டை அனுப்பியும் விட்டார்கள். உலகம் முழுவதும் ஏறத்தாழ இதே நிலைதான்.

தற்போது இஸ்லாமியர்களின் புத்தாண்டான முஹர்ரம் மாதம் பிறந்து நான்கைந்து நாட்களாகிறது. புத்தாண்டின் முஹர்ரம் முதல் தேதியை முஸ்லிம்கள் யாரும் விமரிசையாக கொண்டாடுவதில்லை. முஹமது நபி கொண்டாட சொல்லி கட்டளையும் இடவில்லை.

ஆனால் முஹர்ரம் 10 ஆம் நாள் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஆசூரா தினம் என்றும் முஹமது நபியின் பேரர் ஹீசைன் கொல்லப்பட்ட தினத்தில் நாங்கள் துக்கம் அனுஷ்டிக்கிறோம் என்ற பெயரில் விழா எடுப்பதையும் பார்க்கிறோம். இது போன்று உடலை வறுத்திக் கொண்டு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் இஸ்லாத்துக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. ஆனால் இஸ்லாத்தின் பெயரால்தான் இது போன்ற நிகழ்ச்சிகள் உலகெங்கும் அரங்கேற்றப்படுகிறது.

ஒருவர் இறந்தால் என்றால் அவருக்காக மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்க இஸ்லாம் கட்டளை இடுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு வழமைக்கு திரும்பி விட வேண்டும். ஆனால் இவர்களோ வருடா வருடம் உடலை கிழித்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட தங்கள் வருத்தத்தை தெரிவிக்கும் பழக்கத்தை எங்கிருந்து எடுத்தார்கள்? எத்தனையோ அறிவு சார்ந்த இஸ்லாமிய நிகழ்ச்சிகள் உலகெங்கும் வருடா வருடம் நடந்து கொண்டிருக்க பிபிசி யும் சிஎன்என்னும் இந்த நிகழ்ச்சியை மட்டும் பெரிதாக்கி காட்டுவதிலிருந்தே இந்த நிகழ்ச்சியின் போலித்தனம் தெரிய வரும். இஸ்லாம் என்றால் முஹர்ரம் பண்டிகைதான் என்று உலக மக்கள் நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதற்கு இவ்வளவு முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள்.

அடுத்து இதே முஹர்ரம் 10 ஆம் நாள் மற்றொரு நல்ல காரியமும் நடந்தேறியுள்ளது. இறைத்தூதர் மோசே (மூஸா) கொடுங்கோல் அரசன் பாரோ (பிர்அவுன்) விடமிருந்து கடல் பிளந்து காப்பாற்றப்பட்ட நாளும் இதே முஹர்ரம் 10 ஆம் நாள்தான். “Ten Commands” படம் பார்த்தவர்கள் இந்த வரலாறை நன்கு விளங்க முடியும்.

முஹர்ரம் 9, 10 ஆகிய இந்த இரண்டு நாட்களில் மோசேயை இறைவன் காப்பாற்றியதற்கு நன்றி கூறும் விதமாக நோன்பு வைக்க சொல்லி முகமது நபி கட்டளை இட்டுள்ளார். இது ஒன்று தான் முஹர்ரம் மாதத்தைப் பற்றிய இஸ்லாம் வைக்கும் வழிபாடு. எனவே இஸ்லாமிய நண்பர்கள் அறியாமைக்கால மூடப்பழக்கமான பஞ்சா எடுப்பது, மாரில் அடித்துக் கொள்வது, தீ மிதிப்பது, உடலைக் கீறிக் கொள்வது போன்ற பழக்கங்களை விட்டொழித்து முஹர்ரம் 9,10 களில் நோன்பிருந்து அந்த ஏக இறைவனை நினைவு கூறுவோமாக!