Followers

Friday, August 29, 2008

சவுதி அரேபிய சிறுமிகள் படும் துயரம்.

சவுதி அரேபிய சிறுமிகள் படும் துயரம்.

எங்கள் கம்பெனியின் ஷோ ரூம்களுக்கு குடும்பத்தோடு வரும் பல சவுதி நாட்டவரைப் பார்த்திருக்கிறேன். கணவனின் வயது 65 இருக்கும். மனைவியின் வயதோ இருபதும் பதினெட்டுமாக இருக்கும். அந்த பெண் எப்படி சம்மதிக்கிறாள்? குடும்பத்தவர் எப்படி இந்த திருமணத்தை அனுமதிக்கிறார்கள்? என்று என்னுள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வதுண்டு. அரபு நாட்டுப் பெண்களின் அழகைப் பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகும் நிறமும் கொண்ட இந்த பெண்களை 70 வயது கிழவனுக்கு மணமுடித்துக் கொடுத்தால் பார்க்கும் நம்மைப் போன்றவர்களின் மனது என்ன பாடுபடும்? நமக்கே இந்த அளவு வருத்தம் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணின் மனது என்ன பாடுபடும் என்று எனக்குள்ளே கேட்டுக் கொள்வதுண்டு.

இந்த திருமணங்கள் அனைத்தும் பெற்றோர்களின் பணத்தாசையால் ஏற்படுகிறது என்பதுதான் இதன் உச்சகட்ட கொடுமை. முன்பெல்லாம் சவுதிகள் சிக்கனத்தை கடைபிடித்தார்கள். ஆனால் இன்று விரும்புவது ஆடம்பரத்தை. அமெரிக்க கலாச்சார தாக்கத்தினால் வரவுக்கு மீறிய ஆடம்பர செலவுகளுக்கு அடிமையாகி விட்டனர் சவுதிகள். இந்த செலவுகளையும் தான் பெற்ற கடன்களையும் அடைக்க ஏதாவது ஒரு பணக்கார கிழ ஷேக்கிடம் தன் மகளை திருமணம் என்ற பெயரில் விற்று விடுகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றும் அரிதாக நடந்த இந்த கொடுமை தற்போது பரவலாக நடைபெறுவது அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு சவுதி அரசாங்கமும் இது போன்ற திருமணங்களை தற்போது தடை செய்து வருகிறது.

சவுதி பெண்கள் கல்வி அறிவு பெறுவதில் தற்போது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் வேலைக்குச் செல்வதும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலை மேலும் அதிகரிக்குமானால் இது போன்ற பொறுத்தமற்ற திருமணங்கள் குறைய வாய்ப்புண்டு. இது சம்பந்தமாக அரப் நியுஸில் வந்த செய்தியையும் கீழே தருகிறேன்.27 August 2008 –Arab News

THERE have been several cases reported recently of young girls, some as young as seven or eight, being married off by their parents to men in their 50s, 60s or even older. In some instances, parents are literally selling their daughters to older men purely for financial reasons —- to settle debts or to gain a substantial dowry for their own use.

The practice is repugnant. Young girls are being treated as potential sex slaves, commodities to be bought and sold at whim to satisfy the lusts of old men. It has to be stopped. The Grand Mufti has spoken against it and so too has the Saudi Human Rights Commission (HRC). Only this week, the head of the commission, Turki Al-Sudairi, called on the Saudi authorities to put an end to these marriages.

Wednesday, August 27, 2008

'வாஷிங்டன் போஸ்ட்' - முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள் தேவை!

'வாஷிங்டன் போஸ்ட்' - முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள் தேவை!

சமீபத்தில் நண்பர் ஒருவர் மேற்கண்ட செய்தியை மெயிலாக அனுப்பியிருந்தார். செய்தியின் முக்கியத்துவம் அறிந்து அதை தனி பதிவாகவே தருகிறேன். இனி நண்பரின் மெயில்.

"எனக்கு முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்"

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திற்குக் கடந்த மார்ச் 4ம் தேதியன்று (04-03-2008) வருகை தந்திருந்த பிரபல வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஃபிலிப்ஸ் பென்னட் பேசியபோது வெளிப்பட்ட ஆதங்கம் இது.

"இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டுள்ள ஊடகங்களே எனது கூற்றிற்கு அடிப்படைக் காரணம்!" என்கிறார் இவர்.

ஒரு பிரபல மேற்கத்திய செய்தி ஊடகத்தின் தலைமை நிர்வாகியின் இக்கூற்றினைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிந்தித்தால் சில உண்மைகள் புலப்படுகின்றன. இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியில் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதும் உண்மைக்குப் புறம்பான அத்தகைய செய்திகளின் முகமூடிகள் மிகக் குறுகிய காலத்திற்குள் கிழிந்து விடுவதும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் திரிப்பதைத் தொழிலாகக் கொண்ட சில அறிவுஜீவி(!) எழுத்தாளர்களின் ஆக்கிரமிப்புக்களை ஊடகங்களிலிருந்து அகற்றினால் மட்டுமே நடுநிலைப் பத்திரிகை எனும் பெயரினைத் தக்க வைக்க இயலும் என்ற நிலைக்கு மேற்கத்திய ஊடகங்களே தள்ளப்பட்டுள்ளன என்பது வெட்டவெளிச்சமாகிக் கொண்டே வருகிறது. ஊடகங்களின் அவசியம் நவீன உலகில் ஊடகத்துறையின் முக்கியத்துவத்தினையும் அதில் முஸ்லிம்கள் கால்பதிக்க வேண்டியதன் அவசியத்தையும் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் பல்வேறு சமூகநல ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

உலகின் சமாதான சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள இறை மார்க்கம் இஸ்லாமும் அது கூறும் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள முஸ்லிம்களும் உலகிற்கு வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு நேர்மாறாக, உலக சமாதானத்திற்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இன்றைய நிலைக்கு மூலக் காரணம் ஊடகங்களே.
உலகளாவிய அளவிலிருந்து இந்தியச் சூழல் வரை முஸ்லிம்கள் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் நியாயம் அநியாயமாகவும் அரச, பாஸிஸ, பயங்கரவாதச் செயல்கள் நியாயங்களாகவும் திரித்து மக்கள் மனதில் திணிக்கப்பட்டதற்கும் ஊடகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக தென்காசியிலிருந்து மகாராஷ்டிரா நான்டெட் வரை, வெடிகுண்டுகள் நிர்மாணிப்பதிலும் அதனை வெடிக்க வைப்பதிலும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்கபரிவாரங்கள் தான் காரணம் என்பதைக் காவல்துறை மிகத் தெளிவான ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னரும் நாட்டில் நடக்கும் எந்த ஒரு குண்டுவெடிப்பிலும் முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து அரசு இயந்திரங்கள் செயல்படுதவற்கும் நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் சங்கபரிவாரம் போன்ற பாஸிஸ சக்திகள் சுதந்திரமாக உலாவருவதற்கும் அவைகள் செய்யும் அக்கிரமங்கள் திட்டமிட்டு இஸ்லாமிய அமைப்புகள் மீது கட்டிவைக்கப்பட்டுத் தடை செய்யப்படுவதற்கும் காரணம் ஊடகங்களே.

உலகில் வலிமை குறைந்த நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளால் தகர்க்கப்படும் பொழுதும் உலகம் கைகட்டி அதனை நியாயப்படுத்திக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பதற்கும் இவ்வூடகங்களின் பொய் பிரச்சாரங்களே காரணம்.
உலகை ஒரே செய்தியின் மூலம் தலைகீழாக மாற்றிப்போடும் அதி சக்தி வாய்ந்த இந்த ஊடக ஆயுதத்தை, பாஸிஸ, ஏகதிபத்தியச் சக்திகள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டதும் இத்துறையின் சக்தியை முஸ்லிம்கள் சரிவர புரிந்துக் கொள்ளாமல் பாராமுகமாக இருந்ததுமே இவற்றிற்கான மூலக் காரணமாகும்.

காலம் தாழ்ந்தெனினும் துவங்கி சில வருடங்களிலேயே உலக மக்கள் மனதை கொள்ளை கொண்டு விட்ட அல் ஜஸீரா, ப்ரஸ் டிவி போன்ற முஸ்லிம்களின் ஊடக கால்வைப்பு, உலகில் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை மாற்றி அமைத்துள்ளது என்பதற்கான ஆதாரமே இந்தப் பிரபல மேற்கத்திய ஊடகத் தலைமை நிர்வாகியின் கூற்று வெளிப்படுத்துகின்றது. சரி... மேற்கத்திய ஊடகங்களே முன்வந்து முஸ்லிம் செய்தியாளர்கள் அதிகமாகத் தேவைப்படுவதன் அவசியத்தை உணர்ந்துள்ள இச்சூழலில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?சக்தி வாய்ந்த அரசு இயந்திரங்களான இராணுவம், காவல்துறை, நீதிமன்றம், உளவுத்துறை போன்றவற்றில் முஸ்லிம்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது போன்றே ஊடகத்துறையிலும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையை முதலில் மாற்றியமைப்பதற்கான முயற்சிகளைத் துவங்க வேண்டும்.
பிரச்சனைகள் ஏற்படும் வேளைகளில் மட்டும் அதனைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கான வழிமுறையைப் பேணுவதை விட, முழு பிரச்னைகளுக்குமான மூல காரணத்தைக் கண்டறிந்து அதனைச் சீர்செய்வதற்கு முயல்வதே அறிவுடைமையாகும்.

அவ்வகையில் இன்றைய நவீன உலகில், ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மட்டுமின்றி வலிமை குன்றிய, பலவீனர்கள் மீது பிரயோகிக்கப் படும் அநியாயங்களுக்கு மூலக்காரணம் அதி சக்தி வாய்ந்த ஊடகத்துறையில் நியாயவான்களின் எண்ணிக்கைக் கணிசமான அளவில் இல்லாமையே என்ற யதார்த்ததினை மனதில் நிறுத்த வேண்டும்.
இதனைச் சீர் செய்து விட்டால், பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிந்துச் சீர்செய்ததற்கு ஒப்பானதாகும்.

அவ்வகையில், கண்ணெதிரே நடக்கும் அக்கிரமங்களை மக்கள் முன்னிலையில் படம்பிடித்துக் காட்டி மக்களை அநியாயங்களுக்கு எதிராகப் போராடவும் வைப்பதற்கு ஏற்ற வகையில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் முன்வர வேண்டும். எவ்வாறு சமுதாயத்தின் உயர்வுக்குக் கல்வியில் தன்னிறைவு பெறுவது கட்டாயமோ, அதனை விடக் கட்டாயமானது ஊடகத்துறையில் முஸ்லிம்கள் கால்பதிக்க வேண்டியதாகும். சமுதாய, சமூகங்களின் சுமூகமான, சமாதானமான வாழ்விற்கு முஸ்லிம்கள் ஊடகத்துறையில் கால்பதிப்பதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை. பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் மாணவனின் எதிர்கால வாழ்க்கை (?) பிரகாசமாயிருக்க மருத்துவம், IT அல்லது Oil/Gas துறைகளே கதி என்று போதிக்கப்பட்டுவரும் தற்போதையச் சூழல் மாறி , தாம் செய்யும் பணிகளில் நிறைவைப் பெற்றுத் தரும், அசத்தியத்தை வெருண்டோடச் செய்து சத்தியத்தை நிலைநாட்டும் ஆக்கப்பூர்வமான, அத்தியாவசியமான ஊடகத்துறை பணிகளில் இளைய சமுதாயத்தை வார்த்தெடுக்க முன்வர வேண்டும். அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள 3.5 சதவீதம் இடஒதுக்கீடைத் தனியார் துறைகளிலும் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். முக்கியமாக ஊடகங்களில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் இருக்கும் வறட்சியைப் போக்க உடனடியாக வழிவகைக் காணப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

சரி... ஒரு சிறந்த பத்திரிகையாளராக (எழுத்தாளர்) ஆவதற்கு என்ன செய்யவேண்டும்?

இந்தியாவின் சிறந்த பத்திரிகை ஆசிரியர் எனப் பெயர் பெற்ற குஷ்வந்த் சிங் கூறுகிறார்: "ஒரு புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டும் என்று விரும்பினால் , அத்தலைப்பின்கீழ் குறைந்தது 400 வார்த்தைகளைத் தினந்தோறும் எழுதி வாருங்கள். சில மாதங்களில் நீங்கள் விரும்பிய புத்தகம் தயாராகி விடும்"

சரி என்ன எழுதுவது? எப்படி எழுதுவது என்ற தயக்கம் ஏற்படுகிறதா? அதைக் களைவதற்கும் வழி இருக்கிறது. ஒரு சிறிய உதாரணம் மூலம் இதனைப் பார்க்கலாம்.

இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கும் " மது போதை (Alcoholism)" பற்றிய ஒரு சிறிய தேடலை இணையத்தில் பிரபலமான தேடுபொறியான கூகுள் மூலம் தேடுங்கள். மதுவினால் விளையும் தீமைகளையும் அதனைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தையும் அதில் சிக்கியவர்களை மீட்கும் விதம் பற்றிய பயிற்சிகளையும் முழுமையாக அறிந்து கொள்வீர்கள். மது அருந்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஒரு புள்ளி விபரம் தேவையா ? தேடுங்கள் கிடைக்கும். மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடுகள், உண்மைச் சம்பவங்கள், துயர வாக்குமூலங்கள்? தேடுங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இன்றைய நவீன உலகில், துல்லியமான முழு அறிக்கைகளுடன் அமைந்த ஆய்வுக் கட்டுரைகளையும் சிக்கலான பிரச்னைகளுக்குத் தீர்வுகளையும் சொல்வது மிக எளிது. அனைவரும் இந்தியப் பிரச்னைகளுக்கு மூல காரணம் பெருகி வரும் மக்கள் தொகை தான்(!) என்று ஈனஸ்வரத்தில் கூக்குரல் எழுப்புகையில், மக்கள் தொகை மளமளவெனப் பெருகும் இந்தியாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கட்டுரை எழுதுங்கள். மக்கள் தொகை பெருகப்பெருக வளர்ந்து கொண்டிருக்கும் மனித வளமும் நுட்பமும் சர்வதேச உலகில் சரித்திரம் படைத்துவரும் இந்தியாவின் சாதனைகள் பற்றிப் பட்டியலிடுங்கள். இஸ்லாம் ஏன் குடும்பக் கட்டுப் பாட்டினை எதிர்க்கிறது என்பதனைப் பாமரருக்கும் புரியவையுங்கள். குடும்பக் கட்டுப்பாட்டினைக் கையாள ஆரம்பித்ததனால் சீனாவில் இளையவர்கள் குறைந்து முதியவர்கள் பெருகி நாடு அடையும் துன்பங்கள் பற்றியும் எழுதுங்கள். அனைத்தையும் அசைக்க இயலா ஆதாரத்துடனும் உறுதியுடனுடன் எழுதுங்கள்; எழுதிக்கொண்டே இருங்கள். நம்மைச் சுற்றி தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகள் பலப் பல. அவற்றில் நடக்கும் அசத்தியங்கள், அநீதிகள், அக்கிரமங்கள் எத்தனை எத்தனை? அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லும் இஸ்லாமிய வழிமுறைகளைக் காண்பியுங்கள். இளைய தலைமுறையினரைச் சீரழிப்பதில் ஊடங்களின் பங்கு எத்தனை எத்தனை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுங்கள். இளமையில் கர்ப்பம் தரிப்பதையும், கலைப்பதையும் கூட நாகரீகமெனக் காட்டும் சூழல்களைத் தீயிட்டுப் பொசுக்குங்கள். மனிதம் மறந்து மதவெறியினைத் தூண்டும் தீய சக்திகளின் செயல்களை வெட்ட வெளிச்சமாக்குங்கள்.

அவ்வளவு ஏன்? இக்கட்டுரையை வாசிக்கும் பல அன்பர்கள் வார்த்தைகளைக் கோர்த்து எழுதத் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால் சிந்தனை எனும் சக்தி நம் அனைவருக்கும் இருக்கிறதே ! எனவே சிந்தியுங்கள். உங்கள் உலகம் என்பது காலைக் கண்விழிப்பதிலிருந்து இரவு கண் மூடி நித்திரையில் ஆளும் வரைதான். உங்கள் உலகில் சஞ்சரிக்கையில் உங்களைப் பாதித்த விஷயங்களைப் பட்டியலிடுங்கள். இஸ்லாம் இதற்குக் கூறும் தீர்வு என்ன என்பதைக் கலந்து ஆலோசியுங்கள். தேடுங்கள். குறிப்புக்களை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய எழுதுங்கள். கணினி யுகத்தில் வசிக்கிறீர்கள் என்பதை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். சொந்தமாகக் கணனியும் இணைய இணைப்பையும் இயன்றால் வலைப்பதிவையும் துவக்குங்கள். இயன்றவரையில் பத்திரிகைத் துறைக்கு வர இளையவர்களைத் தூண்டுங்கள். இன்றைய உலகம் - இது தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றக் களம். இயன்றவரை நீங்கள் அறிந்த நல்ல விஷயங்களைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதன் துவக்கம் இதுநாள் வரை முஸ்லிம் சமூகம் தம் குடும்பச் சொத்தாக எண்ணி வந்த இஸ்லாமாக இருக்கட்டும். மனிதனைப் படைத்த இறைவன் அளித்த நெறி மனங்களை வெல்ல வல்லவை. "மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு சந்தைப் படுத்தப்படும் பொருட்கள் கூட படுவீழ்ச்சி அடைகின்றன. மிகப் பிரபலமான எதிர்காலத்தைத் தரும் என்று கணிக்கப்படும் துறைகளும் குறைகளைச் சந்திக்கும். ஏனெனில் அவை சரியான முறையில், சரியான விதத்தில், மக்களைச் சென்றடைவதில்லை!" என்பதே வியாபார ரீதியிலான நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கும் சர்வதேச நிபுணர்களின் தத்துவம். இங்குக் கருவாகக் கொண்டிருக்கும் இஸ்லாம்கூட அத்தகைய ஒரு பேசுபொருள்தான். மிகுந்த தரம் கொண்ட ஒரு வாழ்வியல் தத்துவத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களே அந்த உயரிய நெறியை உலகிற்குப் பறை சாற்றுவதில் ஏனோ மிகவும் பின் தங்கியுள்ளனர். இஸ்லாமிய நெறிகளை அழகிய முறையில் பிறருக்கு எடுத்துரைக்க ஆயிரமாயிரம் வழிகள் உள்ளன. அதில் சிறந்ததாகக் கருதப்படுவது அழகிய விவாதத்தினை ஏற்படுத்தி ஐயங்களைக் களைவதேயாகும். இதன் மூலம் இஸ்லாம் பற்றி பிற மதத்தினர் மனதில் பொதிந்துள்ள பாரதூரமான விஷயங்களைப் பேசி விளக்கங்கள் கொடுக்கலாம். ஓர் அப்பாவி அமெரிக்கருக்கோ அல்லது ஐரோப்பியருக்கோ இஸ்லாம் என்றால் "அச்சுறுத்தக் கூடியது" என்றுதான் தொடர்ச்சியாகப் போதிக்கப்படுகிறது என்ற உண்மை நிலை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சத்திய மார்க்கமாம் இஸ்லாம் எளிதில் மனங்களை வெல்லக் கூடியது. சர்ச்சைகள் எழுப்பக்கூடிய தலைப்புகளில்கூட கீழ்க்கண்ட படித்தரங்களில் ஓர் அழகிய விவாதக் களத்தை அமைத்தால் எளிமையானதாக இருக்கும். அதாவது , இஸ்லாம் என்பது,- உணர்வுப் பூர்வமானது (Emotional)- வாழ்வில் நன்னெறியினைப் புகுத்தக்கூடியது (Ethical)- தர்க்க ரீதியிலானது மற்றும் பகுத்தறிவுக்குப் பொருத்தமானது ( Logical) பிரச்னை என்பது மனங்களிலும் இல்லை. நெறிகளிலும் இல்லை. சென்று சேர்வதில் மட்டுமே உள்ளது. ஆகவே, சத்தியங்களையும் நியாயங்களையும் மக்களிடம் சென்று சேர்ப்பதற்கு உதவியாக எழுத ஆரம்பியுங்கள்; எழுதுங்கள், எழுதிக் கொண்டே இருங்கள்.
பேனா முனைகள் , அசத்தியத்திற்கு எதிராக சத்தியத்தை நிலைநாட்ட எழுதிக் கொண்டே இருக்கட்டும்!

புதிய எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

Tuesday, August 26, 2008

ஒரிசா பந்த்தில் பயங்கர வன்முறை

ஒரிசா பந்த்தில் பயங்கர வன்முறை:
2 பேர் எரித்துக் கொலை; பாதிரியாருக்கு பலத்த தீக்காயம்
தேவாலயங்கள் பள்ளிகளுக்கு தீவைப்பு

புவனேஸ்வரம் ஆக. 26-
விசுவ இந்து பரிஷத் தலைவர் கொலையை கண்டித்து ஒரிசாவில் நடைபெற்ற பந்த்தில் வன்முறை வெடித்தது. 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ பாதிரியார் பலத்த தீக்காயம் அடைந்தார். தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளுக்கு தீவைக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு

ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் ஜலஸ்பேட்டாவில் உள்ள ஆசிரமத்துக்குள் கடந்த சனிக்கிழமை இரவு ஆயுதம் தாங்கிய மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இக்கொலையை கண்டித்து விசுவ இந்து பரிஷத் பஜ்ரங்தள் அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பதட்டம் மிகுந்த கந்தமால் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.

பாதிரியார் காயம

இந்நிலையில் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கொலையை கண்டித்து விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நேற்று 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு பா.ஜனதாவும் ஆதரவு தெரிவித்தது. இதையொட்டி ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பர்கார் மாவட்டத்தில் புட்பாலி என்ற இடத்தில் கிறிஸ்தவ அமைப்பு நடத்தி வரும் அனாதை ஆசிரமத்துக்கு ஒரு மர்ம கும்பல் தீவைத்தது.

இதில் அங்கிருந்த ஒரு பெண் தீயில் கருகி பலியானார். ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் பர்காரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த 20 குழந்தைகள் உயிர் தப்பின. பலியான பெண்ணைப் பற்றிய அடையாளம் கண்டறியப்படவில்லை. அனாதை ஆசிரமத்தில் இருந்த மரச்சாமான்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.

கந்தமால் மாவட்டம் ரூபா கிராமத்தில் ஒரு வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த ராசானந்த பிரதான் என்பவர் தீயில் கருகி பலியானார்.

தேவாலயங்களுக்கு தீவைப்பு

இதற்கிடையே சுட்டுக் கொல்லப்பட்ட சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதியின் உடல் ஜலஸ்பேட்டா ஆசிரம பள்ளியில் இருந்து சாகபடாவில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. முன்னதாக அவரது உடலுடன் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் நடந்து சென்றனர். அப்போது அவர்களில் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
வழியில் தென்பட்ட தேவாலயங்களுக்கு தீவைத்தனர். கிறிஸ்தவ பள்ளிகளையும் வீடுகளையும் கடைகளையும் போலீஸ் சோதனை சாவடிகளையும் அடித்து நொறுக்கினர். 12 தேவாலயங்களும் 40 வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறையை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

ஒரிசா ஸ்தம்பித்தது

பந்த்தையொட்டி தலைநகர் புவனேஸ்வரத்தில் விசுவ இந்து பரிஷத் பஜ்ரங்தள் அமைப்பினர் அதிக அளவில் சாலையில் நடமாடினர். கடைகளை வற்புறுத்தி அடைக்க வைத்தனர். முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் பஸ் டாக்சி ஆட்டோக்கள் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சைக்கிளில் கூட யாரையும் செல்ல விடவில்லை.

பல இடங்களில் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் போக்குவரத்தை தடை செய்தனர். கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசு விடுமுறை அளித்திருந்தது. அரசு அலுவலகங்கள் வங்கிகளில் வருகைப்பதிவேடு குறைவாக இருந்தது. கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
இதற்கிடையே விசுவ இந்து பரிஷத் தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக ஒரிசா சட்டசபையில் மாநில அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசு கொடுத்தது. அப்போது ஏற்பட்ட அமளியில் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

சுட்டி: hவவி:ஃஃறறற.னயடைலவாயவொi.உழஅஃயசவiஉடந.யளி?நேறளஐனுஸ்ரீ434412ரூனளைனயவநஸ்ரீ8ஃ26ஃ2008ரூயனஎவஸ்ரீ1
daily thandhi - 26-08-2008

Monday, August 25, 2008

'I have evidence of RSS and VHP making bombs'

Senior Congress leader Digvijay Singh attacks the BJP just like Sushma Swaraj attacked the Congress. 'Investigate the timings of the blasts', he tells NEHA DIXIT

You have made a statement that serial blasts take place in the country only when the BJP is in trouble.

What I have said is that the timing of the bomb blasts is quite uncanny. Why does it always happen when the BJP is in trouble? That needs investigation. I am not charging anyone.

What do you mean when you say the BJP is in trouble?

When the TEHELKA issue was to be discussed in Parliament, the House was adjourned for three days. Then when the expose was to be discussed, the Parliament attack took place. When the Godhra incident took place, Congress was doing exceedingly well in the local body elections and Narendra Modi had won by only 6,000 votes as a chief minister and that too with great difficulty. During the recent Karnataka election, there was a bomb blast in Hubli on the very first day of polling. Similarly, two days before the polling in the second phase in Karnataka elections, there was a bomb blast in Jaipur. It really needs an investigation.

Is your statement a response to Sushma Swaraj's accusation against the Centre?
No, there is no question of that. I have been citing these instances about the blasts for a long time.

But Sushma Swaraj was criticised by the Congress ... Sushma Swaraj alleged that the Congress is involved directly. I have not said that. And does she have any facts?

I have facts of RSS, VHP making bombs.

Do you have evidences to prove that BJP, VHP and RSS is involved in making bombs.

Yes. In fact, in 1992 there was a bomb blast in the VHP office in Madhya Pradesh, where one VHP member died and two were injured while making bombs. Then in 2002, there was a bomb blast in a temple in Mhow. When the police arrested the VHP activists after investigation, they confessed that they were even given training to manufacture bombs. I have a videocassette of that confession. Again, in 2006, in Nanded, there was a bomb blast in the house of a RSS activist where two RSS activists died. After that in March 2008, there were bomb blasts at two places in Tamil Nadu. Then too VHP activists were arrested by the Tamil Nadu police who confessed that they were involved. And how did the Gujarat police suddenly find eighteen bombs planted on trees in Surat?

So are you saying that the BJP is behind the recent serial blasts?

No, I am not saying anything. All that I am saying is that the timing is uncanny. RSS, VHP activists have been caught making bombs, material for preparing bombs have been found at their office and there are three-four clear cases where they have been arrested and a case has been registered. Why isn't anyone looking into this?.

Shouldn't all parties unite against terrorism?

Absolutely, but when you target only Muslims, it's not correct.

Then why is the blame-game still on?

It is on because we have evidence to say that people who talk about nationalism and nationalist feelings should not be involved in making bombs. The BJP believes in divisive politics. They cannot survive without dividing Hindus and Muslims. Each time something happens, they come back to Hindutva

Friday, August 22, 2008

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே! என்ற கிறித்தவ சபைகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்வோம்.

1. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். பைபிளின் பழய மற்றும் புதிய ஏற்பாடுகளைப் படித்துப் புரிந்து கொண்டு அதைப் பார்த்து எழுதுவதென்பது அவர்களுக்கு இயலாத காரியம் ஆகும். தன் தோழர்கள் எவருடையேனும் உதவியை இது விஷயத்தில் அவர்கள் நாடியிருக்கலாம் என்று கூற இயலுமா? இல்லை. ஏனெனில் அவ்வாறிருப்பின் அவர்களில் சிலருக்கேனும் அவ்விஷயம் (அதாவது அவர்கள் காப்பியடிக்கின்றனர் என்பது) தெரிந்திருக்கும். அதன் விளைவாக நபியைக் குறித்த அவர்களது நம்பிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உடலில் ஒரு முள் தைத்துவிடுவதைத் தடுப்பதற்குக் கூட தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்கள் நபித்தோழர்கள் என்பதை அறிக. உண்மை இவ்வாறிருக்க நபியவர்களைக் குறித்து அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டிருப்பின் இந்தளவுக்கு தியாகம் செய்யத் துணிந்த ஒரு சமுகத்தை எங்ஙனம் அவர்களால் உருவாக்க முடிந்தது?

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (அல்குர்ஆன் 29:48)

2. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் பைபிளின் பழய மற்றும் புதிய ஏற்பாடுகள் அரபி மொழியில் பெயர்க்கப்படவில்லை. இஸ்லாம் உலகெங்கிலும் வியாபித்த பிற்காலகட்டத்திலேயே அரபி மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. பைபிளின் பழய ஏற்பாட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஏர்ணஸ்ட் உர்த்வின் என்பவர் பின்வருமாறு கூறுகிறார். "இஸ்லாமின் வளர்ச்சிக்குப் பின்னர் அரபு மொழியும் வளர்ச்சியடைந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் அன்றாட வாழ்க்கையின் மொழியாக அரபு மொழி மாறிவிட்டது. அரபு மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்படுவது அவசியமாகி விட்ட இக்கால கட்டத்தில்தான் பைபிளின் ஏராளமான பதிப்புகள் அரபியில் வெளிவரத் துவங்கின" (Ernst Wurthewin: Text of The Old Testament Page 104)
ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் பழைய ஏற்பாடு அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது என கிடைத்த கையெழுத்துக் குறிப்புகள் தெளிவு படுத்துகின்றன. (Ibid Page 224-225) பெரும்பாலும் இக்காலகட்டத்தில் தான் புதிய ஏற்பாடும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பிரபல ஆய்வாளர் சிட்னி எச் க்ரிஃபின் என்பவர் கூறுகிறார்: "அரபு மொழியில் சுவிசேஷங்களைக் கொண்ட மிகப் புராதனமான கையெழுத்து ஆவணம் சினாய் கையெழுத்துப் பிரதி 72 (Sinai Arabic MS72) ஆகும். ஜெருசலேம் சபையின் பிரார்த்தனை காலண்டரின் கால அட்டடவணைப் படி வரிசைப்படுத்தப்பட்ட நான்கு கானானிய சுவிவேஷங்களும் இதில் அடங்கும். இக்குறிப்பானது ரம்லா என்னுமிடத்தைச் சேர்ந்த ஸ்டீபன் (Stephen of Ramlah) என்பவரால் அரபு வருடம் 284 (கி.பி 897) ல் எழுதப்பட்டது என்று இதன் இறுதியில் அமைந்த குறிப்பு தெளிவாகக் கூறுகிறது. (Sidney H Griffith: The Gospel in Arabic: An Enquiry Into its Appearance In the First Abbasi Century Page 132) அதே புத்தகத்தின் இன்னொரிடத்தில் அன்போஸ்தலர்களின் நடபடிகள்,பவுலின் நிருபங்கள் மற்றும் கத்தோலிக்க நிருபங்களை உள்ளடக்கிய Sinai Arabic MS151 என்ற கையெழுத்து ஆவணம் ஹிஜ்ரி 253 (கி.பி 867) ல் பிஸ்ருப்னு ஸிர்ரி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் காணப்படுகிறது. இதில் சுவிசேஷங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். (Ibid Page 131)

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலகட்டத்திற்குப் பின்னர் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே பைபிள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நிலையில் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியவர்கள் அரபியில் உள்ள பைபிளைப் வேறு யாரிடமிருந்தோ படிக்கக் கேட்டு பின்னர் அதில் உள்ள கதைகளை உள்ளடக்கிய திருக்குர்ஆனை உருவாக்கினார்கள் என்ற வாதம் இங்கே எடுபடாமல் போகின்றது. அரபியில் இல்லாத ஒரு புத்தகத்தை அவர்கள் வாசிக்கக் கேட்டனர் என்பது அறிவீனமன்றோ?

3. இறை தூதர்களைக் குறித்து அவர்களைப் பாவிகளாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் பைபிளின் வரிகள் சித்தரிக்கின்றன. நோவா மது அருந்தி போதையில் புரண்டதாகவும், லோத்து மது அருந்தி சொந்தப் புதல்விகளுடன் சல்லாபித்ததாகவும், யாக்கோபை சதியனாகவும், தாவீதை தந்திரமாக ஏமாற்றக் கூடியவனாகவும், இயேசுவை மதுபானம் விளம்பியவராகவும் பைபிள் சித்தரிக்கின்றது. இத்தகைய குற்றங்கள் யாவும் மக்களை நன்மையின் பால் வழி நடத்தவேண்டிய இறைதூதர்களின் பண்புகளுக்கு உகந்ததல்ல என்பது அனைவரும் அறிந்த விசயமாகும். இதுபோன்ற அபத்தங்களை விட்டு குர்ஆன் பரிசுத்தமாக உள்ளது. இத்தகைய எந்த கற்பனைகளும் குர்ஆன் கூறும் வரலாறுகளில் எள்ளளவும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளிலிருந்து காப்பியடித்தார்கள் என்பது உண்மையாயின் இறைதூதர்கள் மீது பைபிள் இட்டுக் கட்டியுள்ள பாவங்கள் குர்ஆன் வசனங்களிலும் இடம் பெற்றிருக்கும் (அல்லாஹ் மிகப் பரிசுத்மானவன்!) அவ்வாறு எதுவும் அபத்தங்கள் குர்ஆனில் இல்லை என்பது மட்டுமல்ல, திருக்குர்ஆன் கூறும் இறை தூதர்களின் வரலாறுகள் அவர்களை தூயவர்களாகவும் மகான்களாகவும் மிகப்பெரிய தியாகிகளாகவும் படம்பிடித்துக் காட்டுகிறது. இது பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே குர்ஆன் என்ற குற்றச்சாட்டின் முதுகெலும்பை முறிப்பதாக உள்ளது.
4. வரலாற்றைப் பொறுத் வரையில் அதன் அடிப்படைக்கு எவ்வகையிலும் பொருந்தாத பல செய்திகளும் வரலாறு என்ற பெயரில் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. பைபிள் பண்டிதர்களே இதனை அங்கீகரித்துள்ளனர். "பல உறுதியற்ற வரலாற்றுத் தகவல்களும் பைபிளில் உள்ளன" (பார்க்க: பைபிள் வித்ஞான கோஷம் பக்கம் 12) உண்மையில் பைபிளிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காப்பியடித்திருந்தால் அத்தகைய பல உண்மைக்கு முரணான செய்திகள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் குர்ஆன் கூறும் சரித்திரங்களை நிரூபிக்கும் புவியியல் ரீதியான சான்றுகள் கூட இன்று உலகுக்கே வெளிச்சமாக உள்ளன.

5. அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும் நிரூபிக்கப்பட்ட பல விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான பல தகவல்களையும் பைபிள் கொண்டுள்ளது. உதாரணமாக சூரியன் படைக்கப்படும் முன்னரே இரவும் பகலும் உண்டானது என்று ஆதியாகமத்தின் வரிகள் கூறுகின்றன. இன்னும் சூரியன் மற்றும் சந்திரன் சஞ்சரிப்பதால் இரவு பகல் மாற்றம் ஏற்படுகிறது, (யோசுவா 10: 12,13) பூமி விலகிச் செல்லாமால் நாட்டி வைக்கப்படுள்ளது (சங்கீதம் 104:5) முயல் அசைபோடக் கூடிய மிருகம் (உபாகமம் 14:7) போன்ற வரிகள் விஞ்ஞானத்துக்கு முரணான பைபிளின் நிலைபாட்டை தெளிவுபடுத்துகின்றன. இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் இத்தகைய தகவல்கள் தீர்க்கதரிசிகளின் வரலாற்றைக் கூறும் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என்பதாகும். பைபிளைத் தழுவியே குர்ஆன் உருவாக்கப்பட்டது என்ற கூற்று உண்மையாயின் விஞ்ஞான முரணான இத்தகை தகவல்கள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கவேண்டும். இத்தகை தகவல்கள் விஞ்ஞான முரணானவை என்பதைத் தெரிந்து கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதனை நீக்கியிருப்பார்களா என்று கருதவும் இடமில்லை. காரணம் அவர்கள் வாழ்ந்த காலம் இத்தகைய உண்மைகளை ஆராய்ச்சி செய்து அறியக்கூடிய காலகட்டமாக இருக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள எந்தவொரு தகவலும் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்று இதுவரை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. ஒருவேளை நூற்றாண்டுகள் கழிந்து கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்ட காரணத்தால் முரணான தகவல்களை நீக்கியிருப்பார்கள் என்று கூறுவார்களேயானால், குர்ஆன் இறைவசனமல்ல என்பதை நிரூபிக்க ஆதாரம் தேடியவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் வருங்காலத்தை அறியக் கூடியவராக இருந்தார் என்ற நிலைக்கு வந்துவிடுவர். இதனால் அவர்களுக்கு கடவுள்தன்மையை வழங்கி இன்னும் அதிகமான வழிகேட்டில் விழுந்துவிடுவர்.

6. பைபிளில் காணப்படாத இறைத்தூதர்கள் மற்றும் சமூகங்களின் வரலாறுகளும் திருக்குர்ஆனில் காணப்படுகின்றன. உதாரணம்: ஆது மற்றும் ஃதமூது சமூகங்கள், அவர்களுக்கு மத்தியில் அனுப்பப்பட்ட தூதர்கள் ஹ¨து (அலைஹிஸ்ஸலாம்), மற்றும் ஸாலிஹ் (அலைஹிஸ்ஸலாம். இவர்களைக் குறித்த எந்த தகவலும் பைபிளில் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பியடித்தார்கள் என்றிருப்பின் பைபிளில் கூறப்படாத இந்த இரண்டு பெரும் சமூகங்களின் வரலாறுகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்ததாம்?

7. இறைதூதர்களின் வரலாறுகளில் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. இவற்றைப் பற்றிய எந்த தகவலும் பைபிளில் இல்லை. உதாரணமாகப் பின்வரும் சம்பவங்களைக் கூறலாம்.

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களை நிராகரித்த அவர்களின் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல் (அத்தியாயம் 11 வசனங்கள் 42 முதல் 46 வரை) நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நம்றூது மன்னனுடன் நடத்திய விவாதம் (அத்தியாயம் 2: வசனம் 258) அவர்களின் தந்தை ஆஸருடன் நடந்த உரையாடல் (6:74, 19:41-49, 43: 26-27) மரணத்தவர்களை உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் ஆற்றலை விளக்குவதற்கு நான்கு பறவைகளப் பிடித்து பின்னர் அவற்றைத் துண்டுகளாக ஆக்கி அவற்றில் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டுப் பன்னர் அழைத்தால் அவை ஓடி வரும் என்று அல்லாஹ் அவர்களுக்கு விளக்கிக் காட்டியமை (2:260) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டு பின்னர் அல்லாஹ்வின் ஆற்றலால் அற்புதாமக மீட்கப்பட்டது (21: 69,70) போன்ற சம்பவங்களைக் குறித்த எந்தத் தகவலும் பைபிளில் இல்லை.
இன்னும் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிட அதனை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ராயீல் சந்ததிகளிடம் கூறுகையில் அவர்கள் பசுவை அறுக்க மனமின்றி அதன் தன்மைகளைக் குறித்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தது, (2:67-71) கொலைக் குற்றம் நிரூபிக்க அறுக்கப்பட்ட பசுவின் மாமிசத் துண்டைக் கொண்டு கொலை செய்யப்பட்டவனின் சடலத்தின் மீது அடிக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டது (2: 72-73) முதலானவை குறித்த தகவல்களும் பைபிளில் இல்லை.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. தனது குழந்தைப் பருவத்தில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொறுப்பில் புனிதப் பள்ளியில் தங்கியிருந்த மர்யம் (அலை) அவர்களுக்கு அற்புதமாக அல்லாஹ் உணவளித்தமை! (3:37) பிரசவ காலத்தில் மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த தனிப்பட்ட அருட்கொடைகள் (19: 23-26) ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை. பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்? திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. இதோ மர்யமின் வரலாற்றை விவரிக்கும் இடத்தில் திருக்குர்ஆன் கூறியது எத்துணை உண்மை!

(நபியே!) இவை (அனைத்தும்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும் மர்யம் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3: 44)

8. திருக்குர்ஆன் விவரிக்கும் இறைதூதர்களின் வரலாறுகள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டதும் தெளிவான விளக்கங்களை உடையதும் ஆகும். இறைதூதர்களின் வலாற்றை விவரிக்கும் தன்மை பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. மோசே (மூஸா அலைஹிஸ்ஸலாம்) ஸினாய் மலைக்குச் சென்றிருந்த சமயத்தில் இஸ்ரவேலர்கள் வணங்குவதற்காக பொன்னால் ஆன ஒரு காளைக் கன்றை உருவாக்கிக் கொடுத்தது மோசேயின் சகோதரனும் தீர்க்கதரிசியும் ஆன ஆரோன் (ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்) என்று பைபிளின் வரிகள் கூறுகின்றன. திருக்குர்ஆனில் மட்டுமல்ல பைபிள் கூட இறை தூதராக அறிமுகப்படுத்தும் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் சிலைவணக்கத்துக்கு துணைபோனார்கள் என்பது அறிவுக்குப் பொருந்தாததாகும். இதே சம்பவத்தை திருக்குர்ஆன் விவரிக்குமிடத்து காளைக் கன்றை உருவாக்கி இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் சிலைவணக்கத்தைத் தூண்டியவன் இஸ்ரவேல் சமூகத்தில் உள்ள சாமிரி என்ற வழிகேடன் என்றும் அதன் காரணமாக அவன் இறைகோபத்திற்கு ஆளாகி நோயினால் பீடிக்கப்பட்டான் என்று கூறுகிறது (20: 85-97)

முடிவுரை
இதுவரை குறிப்பிடப்பட்ட அனைத்து சம்பவங்களிலிருந்தும் திருக்குர்ஆன் கூறும் வரலாற்று சம்பவங்கள் பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அது முழுக்க முழுக்க இறைவேதம் என்பதும் தெள்ளத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்குமிடங்களில் பைபிளில் காணப்படும் அபத்தங்கள், அறிவுக்குப் பொருந்தாதா விஷயங்கள், முரண்பாடுகள் எதுவும் திருக்குர்ஆனில் இல்லை. திருக்குர்ஆன் கூறும் வரலாறு படிப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதாகவும் இறையச்சத்தையும் சிறந்த படிப்பினையை வழங்குவதாகவும் உள்ளன. இவை அனைத்தும் திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனையல்ல. அல்லாஹ் இறக்கிய உண்மை வேதம் என்பதற்கான சான்றுகளாகும்.
"விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை." (அல்குர்ஆன் : 53: 1-4)

முற்றும

மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

Monday, August 18, 2008

கிழக்கு கடற்கரை சாலையில் விடுதலை சிறுத்தைகள் ரகளை

மாமல்லபுரம் : கல்பாக்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கும் முஸ்லிம்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எஸ்.ஐ.இ உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது; போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஓட்டல் வைத்துள்ளனர்.

நேற்று சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் மற்றும் புதுச்சேரியிலிருந்து விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் சென்னை நோக்கிச் சென்றனர். பகல் 2.30 மணிக்கு புதுப்பட்டினத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஓட்டல்களில் இரண்டு வேன்களில் வந்த அவர்கள்இ சாப்பிடச் சென்றனர். சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தனர். பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் பாஷா(45) என்பவரை கத்தியால் குத்தினர். அதை தடுக்க முயன்ற அவரது மகன் நசீர் மற்றும் ஊழியரையும் தாக்கினர். சத்தம் கேட்டுஇ எதிரே குளிர்பானக் கடையில் பணிபுரியும் புதுப் பட்டினத்தைச் சேர்ந்த ஜெய்லானி (22)இ காஜா(19) ஆகியோர் ஓடி வந்தனர். அவர்களையும் உருட்டுக் கட்டையால் தாக்கினர். தலையில் காயமடைந்த இருவரும் சுருண்டு விழுந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து அப்பகுதி முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் வந்த வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கடைகள் மூடப்பட்டன. ஓட்டலில் தகராறு செய்தவர்கள்இ தப்பித்தால் போதும் என வாகனங்களை விட்டுவிட்டு ஓடினர். அவ்வழியே வாகனங்களில் வந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை நிறுத்திஇ தகவலைத் தெரிவித்தனர்.

அவ்வழியே வந்த அரசு பஸ்கள்இ தனியார் வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். 50க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண் ணாடிகள் நொறுக்கப்பட்டன. மேலும்இ புதுப்பட்டினம் நோக்கி உருட்டுக்கட்டைஇ கத்தி போன்ற ஆயுதங்களுடன் சாலையில் நடந்து சென்றனர். வழியில் தென்படுபவர்களை எல்லாம் தாக்கினர். அதைக் கண்டு மக்கள் தலைதெறிக்க ஓடினர். அதேபோல்இ புதுப்பட்டினம் வரும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரைத் தாக்க முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர்.இதனால்இ அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார்இ புதுச்சேரியிலிருந்து வந்த வாகனங்களை காத்தான்கடை சோதனைச் சாவடியிலிருந்து செய்யூர்இ மதுராந்தகம் வழியே திருப்பிவிட்டனர்.

புதுச்சேரியிலிருந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள்இ காத்தமடை சோதனைச் சாவடி வழியே புதுப் பட்டினம் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்த கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன்இ எஸ்.ஐ.இ ரமேஷ்இ ஏட்டுகள் வேல்முருகன்இ பலராமன்இ மோகன் ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். புதுப்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஓர் அணியாகவும்இ விடுதலைச் சிறுத்தைகள் ஓர் அணியாகவும் திரண்டனர். போர்க்களத்தில் நிற்பது போல் இரு தரப்பினரும் 300 அடி இடைவெளியில் நேருக்கு நேர் நின்றனர். போலீசார்இ இரு தரப்பினருக்கும் நடுவில் நின்றுஇ மோதலைத் தடுக்க முயன்றனர். குறைந்த அளவிலே போலீசார் இருந்ததால் பதட்டம் நீடித்தது. சிறிது நேரத்தில் செங்கல்பட்டு சரக போலீஸ் டி.ஐ.ஜி.இ துரைராஜ்இ காஞ்சிபுரம் எஸ்.பி.இ பெரியய்யாஇ திருவள்ளூர் எஸ்.பி.இ செந்தாமரைக்கண்ணன்இ விழுப்புரம் எஸ்.பி.இ அமல்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் வந்தனர். மோதலுக்குத் தயாராக நின்ற இரு தரப்பினரையும் துப்பாக்கியைக் காட்டியபடி விரட்டி அடித்தனர். சிறிது நேரத்தில் கிழக்கு கடற்கரைச் சாலைஇ போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தப்பியோடிய விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் வாயலூர் சோதனைச்சாவடி அருகே மயிலாடுதுறையிலிருந்து வந்த அரசு விரைவு பஸ் கண்ணாடியை உடைத்தனர். பின் பஸ்சை கொளுத்த முயன்றனர். போலீசார் வந்துவிட்டதால்இ அங்கிருந்தும் தப்பியோடினர். விடுதலைச் சிறுத்தைகள் மாற்று வழியே கல்பாக்கம் டவுன்ஷிப்பிற்குள் சென்று கடைகளை அடித்து நொறுக்கினர். உடனேஇ கிழக்கு கடற்கரைச் சாலையில் குவிந்திருந்த முஸ்லிம்கள் அங்கு ஓடினர். அதற்குள் அந்த கும்பல் தப்பிச் சென்றது. உடனடியாக கல்பாக்கம் டவுன்ஷிப் கேட் மூடப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இச்சம்பவத்தால் நேற்று பகல் 2.30 மணியிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் அனைத்தும் செங்கல்பட்டு வழியே திருப்பிவிடப்பட்டன. இரவு வரை கிழக்கு கடற்கரைச் சாலை வழியே வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உளவுத்துறை அலட்சியம்? : கிழக்கு கடற்கரைச் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் நடத்திய வன்முறைக்கு உளவுத்துறை போலீசாரின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காகஇ வாகனங்களில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியே நேற்று சென்றனர். பெரும்பாலான வாகனங்களில் கத்திஇ கோடரிஇ கற்கள்இ உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்கள் இருந்தன. அரசியல் கட்சி விழாக்களுக்கு அதிக அளவில் தொண்டர்கள் செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால்இ கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் நேற்று ஈடுபடவில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதும்இ அதற்கு தொண்டர்கள் திரள்வதும் உளவுத்துறை போலீசாருக்கு முன்கூட்டியே தெரியாதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். சித்ரா பவுர்ணமியை ஒட்டி இன்னொரு அமைப்பு வழக்கமாக மாமல்லபுரத்தில் நடத்தும் மாநாட்டுப் பாதையிலும் இதேபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடப்பது வழக்கம். இப்படி முன்னுதாரணங்கள் இருந்தும்இ வழிநெடுக உரிய பாதுகாப்பு போட உளவுத்துறை உயரதிகாரிகள் உத்தரவிடாதது ஏன்? எனஇ கடைசி நேரத்தில் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். உள்ளூர் போலீசார்இ சோதனைச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி ஆயுதங்களைப் பறிமுதல் செய்திருந்தால்இ மோதலை தடுத்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்

Saturday, August 16, 2008

மாயாவதி தன் சிலைகளை அகற்றுவாரா?

இறந்தவர்களுக்கு சிலை வைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். உயிரோடு இருக்கும் மாயாவதி தனக்குத் தானே சிலைகளை மாநிலம் முழுவதும் நிறுவி வரும் கொடுமையை என்னவென்று சொல்வது! அம்பேத்கார் சிலைக்கும் தேவர் சிலைக்கும் சிலர் செருப்பு மாலை இட்டதால் எத்தனை அப்பாவி உயிர்களை பறி கொடுத்தோம். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு முதல்வர் இப்படி ஒரு மூடத்தனத்தை செய்வது மடமையல்லவா? இதை பல பேர் சுட்டிக் காட்டியும் எவருக்கும் மதிப்புக் கொடுக்காமல் மேலும் பல சிலைகளை மாநிலம் முழுக்க நிறுவப் போகிறாராம்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முலாயம் சிங் யாதவ் 'மாயாவதி தனக்கு வைத்துள்ள சிலைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 50,60 புல்டோசர்களை வைத்து மாநிலம் முழுவதும் உள்ள மாயாவதியின் அனைத்து சிலைகளையும் ஒரே நேரத்தில் இடித்து தகர்த்து தரைமட்டமாக்குவோம்' என்று அறிவித்துள்ளார். மக்களின் வரிப் பணத்தில் இது போன்ற சிலைகளை நிறுவுவதும் மற்றொரு ஆட்சி வந்து சிலைகளை உடைப்பதும் கேலிக் கூத்தாக இருக்கிறதல்லவா? சாமான்ய மனிதன் உணவுக்கும் உடைக்கும் அன்றாடம் அல்லாடிக் கொண்டிருக்கிறான். இந்த திமிர் பிடித்த அரசியல் வாதிகள் தங்களின் செல்வாக்குக்காக மக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க காரைக்குடியைச் சேர்ந்த சிவலிங்கம், இராமன் என்ற இரு பி.ஜே.பி தொண்டர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலையை உடைத்து கலவர நெருப்பை பற்ற வைத்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தது போல் நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் காவல் துறையினர் சரியான முறையில் புலனாய்வு செய்து பி.ஜே.பி யைச் சேர்ந்த சதிகாரர்கள் இருவரையும் கைது செய்து கலவர நெருப்பை அணைத்து விட்டனர். சதிகாரர்களுக்கு பின்னணியில் பி.ஜே.பி யின் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா இருப்பதாக சொல்லப்படுகிறது.

கருத்தோடு மோதலாம், கொள்கையோடு மோதலாம்! அதை விடுத்து சிலைகளை உடைத்து கலவரம் ஏற்ப்படுத்தி அதில் கட்சியை வளர்ப்பதுதான் நியாயவான்களின் செயலா? இது போன்ற தகிடுதத்தங்கள் வட நாட்டில் வேண்டுமானால் போனியாகலாம். தென்னாட்டு மக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளார்கள் என்று ராஜாக்கள் உணர்ந்து கொண்டால் சரி!

Monday, August 11, 2008

தாரே ஜமீன்பர் - பட விமர்சனம்

நேரம் கிடைக்கும் போது எப்போதாவது திரைப் படம் பார்ப்பதுண்டு. சில மாதம் முன்பு வெளியான அமீர்கானின் தாரே ஜமீன்பர் படம் சமீபத்தில் பார்த்தேன். மன வளர்ச்சி குன்றிய ஒரு மாணவன் எப்படி பாதிக்கப்படுகிறான்? அதற்க்கான காரணம் என்ன என்பதை அமீர்கான் அழகாக விளக்கியுள்ளார்.

தந்தைக்கோ 'இவன் பெரியவனாகி இவனுக்கு நாம் சம்பாதித்து போட வேண்டுமோ?' என்ற கவலை.

தாய்க்கோ 'தன் மூத்த மகனைப் போல் புத்திசாலியாக இளைய மகன் இல்லையே' என்ற கவலை.

தமயனுக்கோ 'தன்னைப் போல் தன் சகோதரன் புத்திசாலியாக இல்லையே' என்ற ஏக்கம்.

ஆசிரியரான அமீர்கானுக்கோ 'இவனுள் புதைந்துள்ள திறமைகளை எப்படி வெளியுலகுக்கு கொண்டு வருவது' என்ற அக்கறை.

இவை அனைத்தையும் ஒன்றாக்கி சிக்கலில்லாமல் ஒரு அழகிய திரைப்படத்தை கொடுத்துள்ளார் அமீர்கான்.

இப்படத்தில் சிறுவனாக வேடமேற்றிருக்கும் பொடியனை ஷாருக்கானோடு ஒப்பிட்டு சகாரா சானலில் ஒரு பேட்டியும் கொடுத்திருந்தார்கள். நம் ஊரில் ஒரு கமலஹாசனைப் போல் பாலிவுட்டில் ஒரு திறமை மிக்க அமீர்கான். இது போன்ற பயனுள்ள படங்கள் இன்னும் அதிகம் எடுத்து ஆஸ்கார் விருதையும் தட்டிச் செல்ல அமீர்கானை வாழ்த்துவோம்

Saturday, August 09, 2008

கிருஸ்ணரின் கோவர்த்தன மலையை இடிக்கும் பி.ஜே.பி அரசு!

சேது சமுத்திர திட்டம் தமிழகத்தை வளர்ச்சி அடையச் செய்யும் ஒரு திட்டம். இந்தத் திட்டத்தை முடக்குவதற்க்காக இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக சொலலி பி.ஜே.பி அரசியல் செய்து வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை பி.ஜே.பி அரசியல் ஆதாயத்திற்க்காக கெடுத்து வருகின்றது என்று சொன்னால் சில பேர் இதை நம்ப மறுத்தனர். இவர்களை நம்பச் செய்யும் வகையில் பி.ஜே.பி இப்போது நடந்து கொண்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கோவர்த்தன மலை என்று ஒரு மலை உள்ளது. இந்த மலையை கிருஷணர் தனது விரலால் தூக்கி நிறுத்தியதாக இந்துக்கள் நம்புகின்றனர். சில புராணங்களிலும் இந்தச் செய்தி பதிவு செய்யபபட்டுள்ளது. இந்துக்களால் மதிக்கப்படும் இந்த மலையைத்தான் பி.ஜே.பி அரசு இப்போது தகர்த்து வருகிறது. இராமர் எப்படி அவதாரமோ அது போன்ற ஒரு அவதாரம்தான் கிருஷணர். இராமர் பாலத்தை காப்பதற்க்காக பி.ஜே.பி போராடுகிறது என்றால் அதே அக்கறையை கோவர்த்தன மலையைக் காப்பதிலும் காட்ட வேண்டும். ஆனால் பி.ஜே.பி அரசு காட்டவில்லை. கனிம வளம் நிறைந்த அந்த மலையை தகர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று ராஷட்ரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பினால் அதற்க்கு பி.ஜே.பி யினர் பதில் சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள். கோவர்த்தன மலையை தகர்த்தால் பி.ஜே.பிக்கு பணம் கிடைக்கும். இராமர் பாலம் பிரச்னையைக் கிளப்பினால் அரசியல் ஆதாயம் கிடைக்கும்.

அதனால்தான் பி.ஜே.பி இதைச் செய்து வருகிறதே தவிர பக்தியோ நல்லெண்ணமோ இதில் பி.ஜே.பி க்கு இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது பாலம் விவகாரத்தை கிளப்பி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தாலும் சரி, எதிலுமே பி.ஜே.பி க்கு சொந்த ஆதாயம் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் பி.ஜே.பி அதில் தலையிடும். இல்லையென்றால் நழுவிக் கொள்ளும். இதை தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலம் பி.ஜே.பி நிரூபித்திருக்கிறது. அதற்க்கு ஒரு சான்றுதான் கோவர்த்தன மலையை இடிக்கும் பி.ஜே.பி அரசின் செயல். இதை எல்லோரும் உணர்ந்தால் நாடு நலம் பெறும்.

நன்றி - உணர்வு

Monday, August 04, 2008

துனீசிய நாட்டவருடன் ஒரு நேர்காணல்!

துனீசிய நாட்டவருடன் ஒரு நேர்காணல்!

ராசிதுல் கனூசி - துனிசியாவின் இஸ்லாமிய இயக்கமான 'ஹர்கத்துந் நஹ்தா' வின் தலைவர் ஆவார். இஸ்லாமிய உலகின் தலை சிறந்த சிந்தனையாளர். அடக்குமுறை ஆட்சியாளர்களால் துனீசியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டவர். தற்போது இலண்டனில் வசித்து வரும் அவர் அண்மையில் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்காக கேரளா வந்திருந்த போது அளித்த நேர்காணல்.

கேள்வி : துனீசியாவில் நீங்கள் எத்தனை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள்? சிறைக்காலத்தில் துன்புறுத்தப்பட்டீர்களா?

ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன். குறிப்பிடத்தக்க அளவிலான கொடுமைகள் எதனையும் அனுபவிக்கவில்லை. ஆனால் பக்கத்தில் இருந்த அறைகளில் எனது சகோதரர்கள் துன்புறுத்தப்படுகின்ற அலறலைக் கேட்டுள்ளேன். எங்களின் இரு ஊழியர்களைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொன்றனர். அதிபர் புர்கீபாவின் காலத்தில் இது நடைபெற்றது. முழுமையான இஸ்லாமிய விரோதியாக இருந்தார் அதிபர் புர்கீபா. புனித ரமளானில் வெளிப்படையாக மது அருந்திவிட்டு, நோன்பு நோற்பது நாட்டின் பொருளாதார பின்னடைவுக்குக் காரணமாகும் எனக் கூறிய தான்தோன்றி அவர். அரபி மொழியையும் ஹிஜாப் முதலான இஸ்லாமிய அடையாளச் சின்னங்கள் அனைத்தையும் தடை செய்த சர்வாதிகாரி.

ஆனாலும் கூட அக்காலத்தில் சிறையில் தொழுவதற்க்கும் வாசிப்பதற்க்கும் சுதந்திரம் இருந்தது. 'இஸ்லாமிய அரசில் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள்' எனும் நூலை நான் சிறையில் இருந்தபோதுதான் எழுதினேன். ஆனால் இன்று சிறையில் அந்த சுதந்திரம் கூட இஸ்லாமிய இயக்கத்தினருக்கு மறுக்கப் பட்டுள்ளது. முப்பதாயிரம் இஸ்லாமிய இயக்கத்தினர் இன்றும் சிறையில் உள்ளனர். அவர்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதும் கொல்லப்பட்டு ஷஹீதாவதும் சாதாரண நிகழ்வுகளாக மாறிப் போயுள்ளன.

கேள்வி: இப்போது உங்கள் மீதான துனீசிய அதிகாரிகளின் அணுகுமுறை எப்படி உள்ளது?

எனக்கு எதிராக உலகம் முழுவதும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதனால்தான் அமெரிக்காவுக்கும் பெரும்பான்மையான அரபு ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல அனுமதி இல்லை.

கேள்வி: பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள உங்களுக்கு அங்கு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா?

பிரிட்டன் சட்ட திட்டங்களுக்கு ஏற்பவே அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது. சியோனிஸ்டுகளும் டெய்லி டெலிகிராஃப் போன்ற நாளிதழ்களும் சில சமயங்களில் எனக்கு எதிராக திரும்புவதுண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் பிரிட்டன் நீதிமன்றத்தை அனுகுவது என்னுடைய வழக்கம். நீதிமன்றம் எனக்கு ஆதரவாக தீர்ப்பளித்து குற்றம் சாட்டியவர்களிடம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

கேள்வி: அண்மையில் காண்டர்பரி ஆர்ச் பிஷப் டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் பிரிட்டனில் இஸ்லாமிய ஷரீஅத்தின் சில சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பிரிட்டன் போன்ற ஒரு நவீன நாட்டிற்க்குத் தேவையான சட்டங்கள் இஸ்லாமிய ஷரீஅத்தில் உள்ளன எனும் எண்ணத்தை ஏற்ப்படுத்த, அதுவும் முஸ்லிம் அல்லாத ஒருவரால் கூட புரிந்து கொள்ள முடியும் என்ற கருத்தைப் பரவலாக்க அவரது அறிக்கை உதவியுள்ளது. இதற்க்காக தேவாலயங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பை அவர் எதிர்க் கொள்ள நேரிட்டது. ஆனாலும் அதனை அவர் திரும்பப் பெறவில்லை. சபையிலிருந்து அவரை வெளியேற்ற தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதிலும் 160 பேரில் 62 பேர் மட்டுமே அதனை ஆதரித்தனர்.

இப்போது கூட சில இஸ்லாமிய சட்டங்களை பிரிட்டன் ஏற்றுக் கொண்டுள்ளது. இஸ்லாமிய வங்கிகளை பிரிட்டன் நடைமுறைப்படுத்தி வருகிறது. வட்டி இல்லா இஸ்லாமியப் பொருளாதார முறையை அந்த நாடு ஏற்றுக் கொண்டுள்ளது என்பதற்க்கான ஆதாரம் தானே இது.

கேள்வி: அண்மைக் காலமாக முஸ்லிம் உலகில் வளர்ந்து வருகின்ற தீவிரவாத - பயங்கரவாத செயல்களைப் பற்றி என்ன கூறுகின்றீர்கள்? பிரிட்டனில் 7-07 தாக்குதல், செப்டம்பர் 11 தாக்குதல் ஆகியன சில உதாரணங்கள். செப்டம்பர் 11 தாக்குதலில் அல்காயிதா இல்லை எனும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பிரிட்டனில் நடைபெற்ற 7-07 தாக்குதல் ஒரு துயரம்தான். அல்காயிதாதான் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நடவடிக்கை மிகவும் முட்டாள்தனமாக இருந்தது. இஸ்லாத்திற்க்கும் முஸ்லிம்களுக்கும் அதன் மூலம் பெரிய இழப்புகள்தான் ஏற்பட்டன.

செப்டம்பர் 11 நிகழ்வும் வேறுபட்டதல்ல. இஸ்லாத்தின் நன்மதிப்பைக் களங்கப்படுத்துவதில் அந்த நிகழ்வு முக்கிய பங்கை வகித்துள்ளது.

கேள்வி: பாலஸ்தீன பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் ஹமாஸின் எதிர்காலம் குறித்து...?

ஹமாஸ் காஸாவைக் கைப்பற்றிய நிகழ்வு பாராட்டத்தக்கது. அவர்கள் முன் வேறு வழிகள் இருக்கவில்லை. நிலை பெறத் தகுதியானவர்கள் அவர்கள். ஃபத்ஹின் கதை முடிந்து விட்டது. அவர்களின் தலைவர் தஹ்லான் அரண்மனையிலும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாஅகதி முகாமிலும் வாழ்கின்றனர். அதுதான் ஹமாஸின் அந்தஸ்து.

உடலில் சில வைரஸ் கிருமிகள் புகுந்தால் உடலை உசுப்பி விடும் என்பதைப் போல இஸ்லாமிய சமூகத்தை உத்வேகம் பெறச் செய்யக் கூடிய வைரஸ்தான் இஸ்ரேல். இஸ்ரேலின் பிறப்பும் அந்த நாடு நடத்திக் கொண்டிருக்கிற அடக்கு முறைகளும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குக் காரணமாய் அமைந்துள்ளன. முஸ்லிம் உலகில் இஸ்லாமிஸ்டுகளையும் மதசார்பற்றவாதிகளையும் ஒருங்கினைத்த விஷயம்தான் பாலஸ்தீன பிரச்னை. இஸ்ரேல் இப்போது மரணப்படுக்கையில் கிடக்கிறது. மேற்குலகத்தால் அதனை அதிக காலம் தாங்கிக் கொண்டிருக்க முடியாது.

கேள்வி: இந்தியாவில் இஸ்லாத்தைக் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும்?

எட்டு நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆண்ட பிறகும் இதர மதங்களைச் சேர்ந்த மக்களிடையே தேவையான விதத்தில் தங்களின் இலட்சியக் கொள்கையை எடுத்துரைக்க இயலாமல் போனது என்னை ஆச்சரியப் படுத்துகிறது. இது குறித்து மஸ்ஊத் ஆலம் நத்வி விளக்கமாக எழுதியதை நான் படித்துள்ளேன். பன்மைச் சமூகத்தில் வாழ்கின்றபோது இதர மதங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்ப்படுத்த முஸ்லிம் சமூகத்தால் இயல வேண்டும்.

கேள்வி: பாசிச சக்திகள் இந்திய முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றபோது பதிலுக்கு பதிலாக அதே போன்று எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அத்தகைய எதிர்த்தாக்குதல்கள் பாதிப்பையே ஏற்படுத்தும். முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால அதை அரசை நிர்பந்தம் செய்து அரசின் மூலமே சாதிக்க முயல வேண்டும். சுயமாகச் செய்யக் கூடாது. இந்தியா போன்ற வலிமையான ஜனநாயக நாட்டில் அந்த ஜனநாயத்தைப் பயன்படுத்தியே நம்மை நாம் தற்க்காத்துக் கொள்ள வேண்டும்.

சந்திப்பு : டாக்டர் அப்துல் சலாம்.