Followers

Friday, July 31, 2015

பெண்கள் இனி இப்படி இருந்தாலே அவர்களுக்கு எதிர்காலம்!

பாலியல் கொடுமை, வரதட்சணை கொடுமை, ஆசிட் வீச்சு, மத வெறியர்களின் கொடுமை என்று இன்று பல தரப்பிலும் பெண்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக நமது இந்தியாவில் பெண் கொடுமை என்பது கருவில் அழிப்பதிலிருந்து தொடங்குகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட பெண்கள் இனி இது போன்று ஆயுத பயிற்சி பெறுவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும். ஐந்து இடங்களில் பொதுவில் ஈவ் டீசிங் செய்பவர்களை விலாசி தள்ளினால் அடுத்த முறை கை வைக்க எவனும் தயங்குவான்.

வாழ்த்துக்கள் சகோதரிகளே!

பைத்தியங்கள் பல ரகம்: அதில் இவர்கள் ஒரு ரகம்! :-)


Wednesday, July 29, 2015

யாகூப் மேமனை விடுவிப்பதே கலாமுக்கு செலுத்தும் அஞ்சலி!யாகூப் மேமன் கருணை மனுவை மறு பரிசீலனை செய்து அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் எனக் கோரி மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவின் முழு விவரம்:

வணக்கம்!

இந்த தேசமே, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் இத்தருணத்தில், மரண தண்டனையை வெகுவாக எதிர்த்த அவருக்கு செலுத்தும் மரியாதையாக, யாகூப் மேமன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

அப்துல் கலாம், ஒரு மாதத்துக்கு முன்னதாக பேசியபோதுகூட, மரண தண்டனையை தான் எதிர்ப்பதாக கூறியிருந்தார். சட்ட ஆணையத்துக்கு அவர் தனது கருத்தை தெளிவாக தெரிவித்திருந்தார். எனவே, யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதே கலாமுக்கு செலுத்தும் ஆகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

1997-ல், அப்போதைய குடியரசுத் தலைவர் ஷங்கர் தயாள் சர்மா, மஹாஸ்வேதா தேவி போன்ற சான்றோர்கள் பலர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஆந்திராவைச் சேர்ந்த இருவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தார். அதுவும், அவர்களுக்கு தூக்கு விதிக்கப்பட இருந்த முந்தைய நாளில் கருணை செய்தார். இதன் மூலம், அரசியல் சாசன சட்டப் பிரிவு 73-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தை அவர் முழுமையாக பயன்படுத்தி முன் உதாரணம் செய்திருந்தார்.

யாகூப் மேமன் இந்திய நீதித்துறைக்கு தலைவணங்கி சரணடைந்தார். இந்திய உளவுத்துறையின் மரியாதைக்குரிய அதிகாரி ஒருவர் யாகூப் மேமன் விசாரணைக்கு எப்படியெல்லாம் ஒத்துழைத்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பலரும், யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது நியாயமாகாது என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

இத்தகைய எதிர்ப்பு அதுவும் இப்பேர்பட்ட நபர்களிடம் இருந்தே வருவது மிகவும் அரிதானது. எனவே யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். யாகூப் மேமனை இந்தியா அழைத்து வந்தபோது அவரிடம் ரகசியமாக என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டதோ அதை மீறுவது ஆகாது.

யாகூப் மேமனை தூக்கிலிட்டால், இந்தியா அமைப்புகளின் நேர்மை நெறி மீது மீளாச் சந்தேகம் ஏற்படும் சூழல் உருவாகும்.

மேதகு குடியரசுத் தலைவரே, ஏற்கெனவே தங்களிடம் 300-க்கும் மேற்பட்ட, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என பல்துறை சார்ந்த அறிஞர்கள் யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் "இந்திய குடியரசின் தலைவர், அரசியல் சாசனம் அவருக்கும் அளிக்கும் தனியுரிமையால் வழிநடத்தப்படுகிறார். அதே வேளையில் மனசாட்சி கூறும் நன்னெறிகள் அதில் தலையிடுவது என்பதும் அவருக்கு சாத்தியமே" குறிப்பிட்டதை நான் இப்போது நினைவு கூர்கிறேன்.

15 நாட்களுக்கு முன்னர்தான் சட்ட ஆணையம், தூக்கு தண்டனை தேவையா என்பது குறித்து ஒரு நாள் முழுவதும் ஆலோசனை மேற்கொண்டது. அந்த கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவு எட்டப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் யாகூப் மேமன் போன்ற கருணைக்காக காத்திருக்கும் பலரது கோரிக்கைக்கும் பின்னால் இருக்கும் நியாயம், சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியானால் புரியவரும்.

இக்கடிதத்தை அவசரம் கருதி, பொதுநலன் கருதி இப்போது நான் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

எனது கோரிக்கை மனுவை நீங்கள் பரிசீலனை செய்வீர்கள் என நான் ஆழமாக நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

கோபாலகிருஷ்ண காந்தி

Tuesday, July 28, 2015

முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவு!அப்துல் கலாம் ஆரம்பக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை பயின்றது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான். அன்றைய காலகட்டத்தை நினைவுகூர்கிறார்கள் அந்தப் பள்ளிகளின் இன்றைய தலைமை ஆசிரியர்கள்.

ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது மண்டபம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி எண் 1. ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தை ஒட்டியிருக்கும் இப்பள்ளிதான் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த கலாமுக்கு, அகர முதல எழுத்தை கற்றுத் தந்தது.

அன்று தொடக்கப் பள்ளியாக ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கிய இப்பள்ளியில், கலாமை ஒன்றாவது பாரத்தில் சேர்த்தார் அவரது தந்தை ஜயினுலாபுதீன். 1941 முதல் 1946-ம் ஆண்டு வரை கலாம் பயின்ற இப்பள்ளியில்தான் அவரது தந்தையின் நண்பரும், ராமேசுவரம் கோயில் தலைமை குருக்களுமான பக்ஷி லட்சுமண சாஸ்திரியின் மகன் ராமநாத சாஸ்திரியும் படித்தார். கலாமின் மற்ற இரு நண்பர்கள் அரவிந்தன், சிவப்பிரகாசன்.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை பி.ராஜலட்சுமி கூறியதா வது: தான் விஞ்ஞானியாக உருவாக அடித்தளம் அமைத்தது இந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர்தான் என்று கலாம் அடிக்கடி குறிப்பிடுவார். தன் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட, கலாமை தன் வீட்டு சமையற்கட்டுக்கே அழைத்துச் சென்று உணவு பரிமாறியவர் அவர். இது குறித்தும், பெரிய நகரங்களில் உள்ள மெத்தப்படித்தவர்களுக்கு சமமாக நீ உயர வேண்டும் கலாம் என்று அவர் வாழ்த்தியது பற்றியும் தன்னுடைய அக்னிச் சிறகுகள் நூலில் எழுதியுள்ளார் கலாம் என்றார்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கலாம் படித்த ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரத்தில் ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது. இப்பள்ளியில் கலாம் படித்த வகுப்பறை இப்போதும் உள்ளது. அங்கு பிளஸ் 2 கணிதம், உயிரியல் பாடப்பிரிவு செயல்படுகிறது. அவரது சேர்க்கை விவரம் உள்ள பதிவேடு பொன்போல பாதுகாக்கப்படுகிறது.

இது குறித்து தலைமை ஆசிரியர் டி.பால்மாறன் கூறியதாவது:

இப்பள்ளியில் 13.6.1946-ல் கலாம் சேர்ந்துள்ளார். ராமேசுவரத்தில் இருந்து 58 கி.மீ. தொலைவில் இப்பள்ளி உள்ளதால், இங்குள்ள விடுதியில் தங்கித்தான் அவர் படித்தார். அவர் குடியரசுத் தலை வரான பிறகு எங்கள் பள்ளி மாண வர்கள் 60 பேர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றிருந்தோம். அவர்கள் தடுக்கப்பட்ட செய்தியை அறிந்த கலாம், ‘அவர்கள் என் குழந்தைகள் அவர்களே உள்ளே விடுங்கள்’ என்று சொன்னார். அச்சம்பவம் என் கண்ணில் இப்போதும் நிழலாடுகிறது. அவரைப் போன்று குழந்தைகளை நேசித்த ஒரு தலைவர் இனி பிறப்பது சந்தேகம் என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-07-2015

ஒரு முஸ்லிம் தனது தாய் தாய் நாட்டுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் தனது வாழ்நாளை அமைத்துக் கொண்டவர் பெரியவர் அப்துல் கலாம்.

அதே நேரம் சற்று கூடுதலாக போய் சாமியார்களின் கால்களில் விழுவதும், அவர்களின் கீழ் பவ்யமாக அமர்ந்திருப்பதும், போன்ற செயல்களை தவிர்த்திருக்கலாம். தனது இஸ்லாமிய கடமைகளான தொழுகை போன்ற விஷயங்களை எப்படி பொதுவில் வைக்காமல் தவிர்த்துக் கொண்டாரோ அதே போல் சாமியார்களை சென்று சந்திப்பதையும் தவிர்த்துக் கொண்டிருக்கலாம். சுப்ரீம் கோர்ட்டே கண்டித்த குஜராத் படுகொலைகளை கண்டித்து ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாம். அந்த மக்களை சென்று சந்தித்து ஆறுதலும் கூறியிருக்கலாம். இதை எல்லாம் செய்தால் இந்துத்வாவாதிகள் தன்னை ஒன்றும் இல்லாமில்லாமல் ஆக்கி விடுவார்கள் என்று பயந்தாரோ என்னவோ?

அப்துல் கலாம் அவர்கள் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து அவரது நற்செயல்களால் கிடைக்கும் நன்மைகளை வைத்து இறைவன் அவரை சுவனத்தில் புகச் செய்வானாக!
சவுதி அரேபியா நலமுடன் வந்து சேர்ந்தேன்!

அஸ்ஸலாமு அலைக்கும்!

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக!

தாய் தமிழகத்தில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களை கழித்த பின் இறைவன் அருளால் நலமுடன் சவுதி அரேபியா வந்து சேர்ந்தேன். தொடர்ந்த வேலை காரணமாக முகநூல் பக்கம் வர இயலவில்லை. இனி வேலையை அனுசரித்து அவ்வப்போது இணையத்தின் பக்கம் வருவேன் இறைவன் நாடினால்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Sunday, July 26, 2015

முகமது நபி புரோகிதரா? அவரை வழிபடலாமா?

சல்லு புல்லு!

//If god requires a middleman I don’t want that god..//
திரு.மகாகவி! மிகச்சரியாக சொன்னார்.ஆம்! கடவுளை வணங்க இடைத்தரகர்,புரோகிதர்கள் தேவையில்லை.

ஆ அப்படியா? முகம்மது middleman இல்லையா? ஓ நேரடியா அவரேதான் கடவுளா? அட!//


முகமது நபி புரோகிதரும் அல்ல. அவர் கடவுளாகவும் பார்க்கப்படவில்லை. உங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லை என்பது தெளிவாகிறது.

குர்ஆனில் இறைவன் பல இடங்களில் முகமது நபியைப் பார்த்து 'எவரையும் உம்மால் நேர் வழியில் செலுத்தி விட முடியாது: மாறாக நான் யாரை தேர்ந்தெடுக்கிறோனோ அவர்களே நேர் வழி பெற முடியும்' என்கிறான்.

மற்றுமோர் இடத்தில் 'உமது வேலை எனது தூதுத்தவத்தை எடுத்துச் சொல்வது மட்டுமே!' என்கிறான் இறைவன். முகமது நபி தமக்குள்ள அதிகாரம் எந்த அளவு என்பதையும் விளங்கியே வைத்திருந்தனர். காலில் விழுவது, நபி என்ற பெயரில் தனக்கு தனி பரிவட்டம் கட்டுவது என்ற அனைத்தையும் தனது காலத்திலேயே நபிகள் நாயகம் அவர்கள் தடுத்துள்ளார்கள்.

தனது சமாதியில் யாரும் பிரார்த்தனை புரிய வேண்டாம்: அதனை விழா நடக்கும் இடமாகவும் அக்கி விட வேண்டாம் என்றும் தனது தோழர்களிடம் சொல்லி விட்டு மறைந்தார்.

எனவே குர்ஆனையும் நபியின் வாழ்க்ககை முறையையும் நடுநிலையோடு படித்துப் பாருங்கள்: சரியான முடிவுக்கு வருவீர்கள்.Friday, July 24, 2015

பள்ளி செல்ல மனம் இல்லையோ? படைத்தவன் நினைவில்லையோ!
நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவாலும் இறைவனிடமிருந்து இறங்கிய உண்மையினாலும் அந்த இறைவனை பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா? அதற்கு முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டோரைப் போல் அவர்கள் ஆகாமல் இருப்பதற்கும் நேரம் வரவில்லையா? காலம் நீண்டு விட்டதால் அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.

குர்ஆன் 57:16

Tuesday, July 21, 2015

இரண்டு படத்துக்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா?

ATM ல் கிடைத்த 26 லட்சத்தை ஒப்படைத்த அப்துல் லத்தீஃப்!ஹைதராபாத் SR நகரில் வசித்து வரும் மாணவர் அப்துல் லத்தீப். கல்லூரியில் பயின்று வரும் இவர், நேற்று காலை தனது முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ATM மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். ATM கார்டை சொருகி கடவுச்சொல்லையும் அழுத்தி, அவருக்கு தேவையான ரூ 200 அழுத்தியுள்ளார்.

ஆனால் இயந்திரம் திடீரென திறந்துகொண்டு ரூ 26 லட்சம் சடசடவென வெளியே வந்துள்ளது. அந்த ATM மில் கேமராவும் இல்லை, செக்கியூரிட்டியும் இல்லை. 200 ரூபாய் எடுக்க சென்ற மாணவன் அப்துல் லத்தீபுக்கு 26 லட்சத்தை கண்டும் தன்னுடைய முஸ்லிம் நண்பனை அங்கேயே நிற்க வைத்துவிட்டு அருகிலிருந்த SR நகர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக வந்த காவல்துறை அதிகாரிகள் வங்கி நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அனைவரும் அங்கு வந்து பார்த்த போது 26 லட்சமும் அங்கேயே இருந்துள்ளது. அனைவரும் ஒரு நொடியின் அதிர்ச்சியடைந்து மாணவன் அப்துல் லத்தீபை கட்டியணைத்தனர். ATM இயந்திரம் சரி செய்யப்பட்டது. நெஞ்சை நெகிழ செய்த உணர்ச்சிமிகு இந்த சம்பவத்திற்கு ஆளான மாணவன் அப்துல் லத்தீபை அனைவரும் வெகுவாக பாராட்டினர். போலீஸ் கமிஷனர் மகேந்திர ரெட்டி அந்த மாணவனைப் பாராட்டி பணமுடிப்பும் கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளார்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
21-09-2014

இந்த செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் வழக்கம் போல் மறைத்து விடும். குர்ஆன் காட்டிய வழியில் நடைபோடும் இந்த லத்தீஃப்தான் உண்மையான முஸ்லிம். வேலையில்லா பட்டதாரியான இவருக்கு பணத்தின் தேவை எவ்வளவு என்பது நமக்கும் தெரியும். ஆனால் தன்னைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டுள்ளான். மறுமையில் இதற்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்ற பயத்தினாலேயே இந்த காரியத்தை செய்துள்ளார் லத்தீஃப்.

இது போன்ற கல்லூரி மாணவர்களை அதிகமதிகம் இறைவன் உருவாக்குவானாக! நாமும் முயற்சிப்போமாக!

The Hyderabad police on Saturday felicitated a youth who found the cash box of an ATM with Rs 24 lakh unlocked and called the police. Sheikh Latif Ali had gone to withdraw Rs 200 from a State Bank of Hyderabad ATM on Friday night when he found the cash box open with no guard around. He called the police who found Rs 24 lakh in the unlocked ATM machine. It was later learnt that there was no CCTV camera. Ali, 22, completed his B.Tech (Electrical) this year and lives in a men’s hostel in Sanjeev Reddy Nagar. On Friday, he went to the ATM at State Bank of Hyderabad’s main branch in S R Nagar with two of his friends. “There was no guard outside and I did not find anything unusual. I inserted the card to withdraw Rs 200. As the machine dispensed the cash, a small door on the side of the machine fell open and currency notes fell out. I was dumbstruck as my account has not more than Rs 500. I asked my friends waiting outside to look for the security guard but they found no one,” Ali said. Ali said he tried to call a toll free number written on the notice board but it was for SBH life insurance. “Then I remembered ‘dial 100’ slogan and called police. A police team reached within 7 minutes,” he said. Detective Inspector N Shankar said that it was gross negligence on the part of the bank staff who forgot to lock the machine properly. “These boys, all of them looking for jobs, went to withdraw Rs 200 but found so much cash. There was no security guard and the ATM does not have a CCTV camera. They could have done anything they wanted. Instead, they decided to inform the police,’’ Shankar said. Police Commissioner M Mahendar Reddy felicitated Ali and gave him a certificate and cash reward on Saturday.http://indianexpress.com/article/india/india-others/jobless-youth-finds-unlocked-atm-with-rs-24-lakh-calls-cops/#sthash.hJW3Eb1w.dpuf

நியூஸ்லாந்தில் ஈகைத் திருநாள் தொழுகை!

Monday, July 20, 2015

இறந்த உடலை அடக்கம் செய்ய மறுத்த பள்ளி நிர்வாகம்!

பண்டாரவாடை TNTJ கிளை துணை செயலாளர் சாகுல் ஹமீது அவர்களின் மனைவி நர்கீஸ் பானு அவர்கள் 19/07/15 காலை 10 மணியளவில் காலமாகிவிட்டார்கள். பல காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்கள். இறைவனின் அழைப்பு வரவே அவனிடத்திலேயே சேர்ந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

வழக்கம் போல் இறந்த உடலை அடக்கம் செய்ய பண்டாரவாடை பெரிய பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. இதே பண்டாரவாடை மர்கஸில் சில ஆண்டுகளுக்கு முன்பு 'முதியோர் இல்லம்' நடத்தி வந்தோம். அதில் தங்கியிருந்த மூதாட்டி வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். அதற்கும் இந்த பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. வெளியூர்காரர்களுக்கு அனுமதி தர மாட்டார்களாம். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட அந்த மூதாட்டியை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள சுன்னத் ஜமாத்பள்ளிக்கு சென்று அடக்கி விட்டு வந்தோம். அந்த ஊர் பள்ளி நிர்வாகி 'அடக்க மறுத்தார்களா? நான் அந்த பாவத்தை சுமக்க மாட்டேன். உடன் அடக்கம் செய்யுங்கள்' என்று அனுமதி கொடுத்தார். தமிழகத்தில் எந்த கிராமங்களிலும் இது போன்று இறந்த உடலை அடக்கம் செய்ய தவ்ஹீத் ஜமாத்தை காரணம் காட்டி மறுக்கும் ஊர்கள் கிடையாது. ஆனால் விசேஷமாக ராஜகிரி, பண்டாரவாடை பள்ளி நிர்வாகிகள் அனுமதி மறுப்பதையே வழக்கமாக்கி கொண்டுள்ளார்கள். இறைவன் இவர்களுக்கு நேர் வழி காட்டுவானாக!

இதற்குள் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் வெளியூர்களில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினர். விஷயத்தை கேள்விப்பட்டவுடன் வெளியூர் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குழும ஆரம்பித்தனர். காவல் துறை அதிகாரிகள், சப் கலெக்டர் போன்றோர் அடக்க இடம் கொடுங்கள் என்று எவ்வளவோ அமைதியாக கேட்டுப் பார்த்தனர். எதற்கும் நிர்வாகம் மசியவில்லை. சுன்னத் ஜமாத் முறைப்படித்தான் அடக்கம் செய்வோம். எங்கள் இமாம்தான் தொழ வைப்பார். சுன்னத் ஜமாத் முறைப்படி அடக்கம் செய்கிறேன் என்று எழுதி கொடுக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர். சரியான வெயில் வேறு. இறந்த உடல் வைக்கப்பட்டிருக்கும் ஷாகுல் வீட்டருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது தஞ்சையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் என்னிடம் 'பாய்.... 6 நோன்பு வைத்திருக்கிறோம். நோன்பு கஞ்சியும், சாப்பாடும் கொண்டு வந்துள்ளோம். நோன்பு திறக்க ஒரு இடம் தயார் செய்து கொடுக்க முடியுமா?' என்று கேட்டனர்.

நேரமோ மணி 6:30. உடன் நான் “எனது வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. நம் வீட்டிலேயே நோன்பு திறக்கலாம் வாருங்கள்” என்று அழைத்து சென்றேன். விஷயத்தை எனது தாயாரிடம் சொன்னேன். 'நோன்பு வைத்துக் கொண்டு போராட்டத்துக்கு வந்துள்ளார்களா' என்று ஆச்சரியப்பட்டுப் போய் வேக வேகமாக ஜூஸ் கரைக்க ஆரம்பித்தார். கேக் பணியார வகைகள், பேரித்தம் பழம், நோன்பு கஞ்சி, சூடாக்கப்பட்ட பிரியாணி என்று திருப்தியாக நோன்பை நோற்றனர். எனது தாயார் 'பார்த்தால் கல்லூரி மாணவர்கள் போல தெரிகிறது. இந்த வயதில் இவ்வளவு ஈடுபாடா?' என்று ஆச்சரியத்தோடு கேட்டார். மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு அந்த தஞ்சை சகோதரர்களோடு பண்டாரவாடை பெரிய பள்ளியை நோக்கி சென்றோம்.

இரவு 10 மணி வரை நிலைமை சரியாகவில்லை. முடிவில் கலெக்டர் 'இவர்கள் ஒத்து வரவில்லை. உங்கள் பள்ளியின் பின் பக்கம் உடலை அடக்கம் செய்து கொள்ளுங்கள். அதற்கான ஆணையை நாளை எழுத்து பூர்வமாக தரச் சொல்கிறேன்' என்று சொன்னார். மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி நபி வழிப்படி தொழுகை தவ்ஹீத் பள்ளியின் வெளியில் வைத்து நடத்தப்பட்டு 5000 க்கும் அதிகமான கொள்கை சகோதரர்களின் பிரார்த்தனையோடு தொழுது முடித்தோம். பிறகு அங்குள்ள இளைஞர்களில் ஐந்து பேர் சென்று குழி வெட்ட ஆரம்பித்தனர். இதற்குள் வெளியுர் சகோதரர்களுக்கு தண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகள், டீ, காபி என்று சகோதரர்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். உடலை அடக்கம் பண்ணி விட்டு நான் வீட்டுக்கு வரும் போது இரவு இரண்டு மணி. பசியும் இல்லை. சாப்பிடாமலேயே படுத்து விட்டேன்.

தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் தவ்ஹீத் பள்ளியின் கொல்லையிலேயே அடக்கம் செய்ததை நிர்வாகம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தற்போது அந்த வீட்டை அன்பளிப்பாக கொடுத்த ஒரு பாகஸ்தரை அணுகி பிரச்னை பண்ணுகிறார்கள். "அங்கு அடக்கிய உடலை தோண்டி எடுப்போம். எடுத்து வேறு இடத்தில் அடக்கம் பண்ணுவோம்' என்கிறார்களாம்.

மக்காவிலிருந்து தொல்லை தாங்காமல் தனது தோழர்களோடு மதினா சென்றனர் நபிகள் நாயகம். ஆனால் எதிரிகள் அங்கும் படை திரட்டிக் கொண்டு பெருமானாரை கொல்ல வந்தனர். ஏனோ இங்கு எனக்கு அந்த சம்பவம் ஞாபகம் வருகிறது.

அரபியன் அரபி அல்லாதவன் கருப்பன் வெள்ளையன் என்ற பேதமேது இங்கே!இஸ்லாத்தை விளங்காத ஒரு சில முஸ்லிம்கள் பல பிரிவுகளை இஸ்லாத்தில் உண்டாக்கி விட்டனர். ஷாஃபி, ஹனபி என்ற சாதிகளையும் இஸ்லாத்தில் உருவாக்கி விட்டனர். ஆனால் குர்ஆனிலோ அல்லது நபி மொழிகளிலோ இந்த சாதிப் பிரிவுக்கு எந்த இடமும் இல்லை. இறைவனின் முன்னால் அனைவரும் சமம் என்றே குர்ஆன் கூறுகிறது. அதனை செயலிலும் காட்டுவதை உலகில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் காணலாம்.

இஸ்லாம் வருவதற்கு முன்பு அரபு மொழியே உலகில் உயர்ந்த மொழி என்ற எண்ணம் அந்த அரபுகளிடம் இருந்தது. மற்ற மொழிகள் பேசுபவர்களை ஊமையர்கள் என்று அழைத்தனர் அன்றைய அரபுகள். நபிகள் நாயகம் வந்தவுடன் சாதி வெறி, மொழி வெறி, இன வெறி என்ற அனைத்தையும் தனது காலடியில் போட்டு மிதிப்பதாக பிரகடனப்படுத்தினர்.

அன்று முதல் ஒழிந்தது சாதி வெறி: இன வெறி: மொழி வெறி. அந்த காட்சிகளையே மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த பெருநாள் தொழுகையில் காண்கிறோம்.

இத்தாலியில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை!நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் இத்தாலியையும் இஸ்லாம் ஈர்க்காமல் விடவில்லை. இத்தாலியில் நடந்த பிரம்மாண்டமான ஈத் பெருநாள் தொழுகை.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Sunday, July 19, 2015

திரு மூலர் கூறும் ஓரிறைக் கொள்கை!

திரு மூலர் கூறும் ஓரிறைக் கொள்கை!

1. கடவுள் வாழ்த்து. ( 1 - 50 )

0001: சிவன் ஒருவனே சத்தியோடு இரண்டாய், பிரம்ம, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாகி ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து, நான்கு வேதங்களாகி உண்மை விளங்கச் செய்து, ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய், ஆறு ஆதாரங்களிலும் விரிந்து, அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் பொருந்தி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து அட்டமூர்த்தமாய் விளங்குகின்றான்.

0002: இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூய்மையானவனும் நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனும், தெற்குத் திசைக்குரிய இயமனைஉதைத்தவனுமாகிய இறைவனைப் புகழ்ந்து பாடி நான் உரைக்கின்றேன்.

0003: உயிர்களோடு உடனாய் நின்றவனும், அழிவில்லாத தேவர்கள் “ஆடையில்லாதவன்" என்று பகரும் தலைவனும், பக்கத்திலுள்ள தேவர்களாலும் கூட அறியமுடியாத மேலோனும் ஆகிய இறைவனை நான் அணுகி இருந்து அநுதினமும் வழிபாடு செய்வேன்.

0004: அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருளானவனும் ஆகாய மண்டலத்துக்கு வித்துப் போன்றவனும், அடைக்கலமான இடத்தில் என்னைச் செல்ல விட்டவனும் ஆகிய இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி மாறுபாடுடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.

0005: சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை. அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பிலும் எவரும் இல்லை. அவன் அண்டத்தைக் கடந்து நின்ற போது பொன் போன்று பிரகாசிப்பான். சிவன் செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத் தாமரையில் விளங்குபவனாவான்.

0006: சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை. சிவனல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.

0007: பொன் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவனும், பழமையாகவே சமமாக வைத்து எண்ணப்படும் பிரமனாதி மூவருக்கும் பழமையானவனும், தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைமகனும் ஆகிய இறைவனை யாரேனும் "அப்பனே" என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான்.

0008: தாழ்ந்த சடையுடைய சிவன் தீயைக் காட்டிலும் வெம்மையானவன்; நீரைக் காட்டிலும் குளிர்ச்சியானவன்; குழந்தையினும் நல்லவன்; பக்கத்தில் இருப்பவன்; அவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான். இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.

0009: பொன்னால் செய்யப்பெற்ற அழகான சடை என்று கூறுமாறு அவன் பின்புறம் விளங்க இருப்பவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். உயிர்கட்கெல்லாம் தலைவனாகிய அந்த சிவன் என்னால் வணங்கத்தக்கவன். அப்பெருமானால் வணங்கத் தக்கவர் வேறு எவரும் இல்லை.

0010: சிவனாகிய தானே இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டு ஆகாய வடிவினனாகவும் உள்ளான். சிவனே சுடுகின்ற அக்கினியாகவும் உள்ளான். சிவனே அருள் பொழியும் சத்தியுமாய் இருக்கிறான். சிவனே விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் உள்ளான். சிவனே எல்லாப் பொருளிலும் வியாபகமாய் உள்ளான்.

0011: தூரத்திலும் பக்கத்திலும் எமக்கு முன்னோனாகிய இறைவனது பெருமையை எண்ணினால் "ஒத்ததாகச் சொல்லக் கூடிய பெரிய தெய்வம் பிறிதொன்றில்லை." முயற்சியும் முயற்சியின் பயனும் மழையும் மழை பொழிகின்ற மேகமும் அந்த இறைவனே ஆகும். அவன் பெயர் நந்தி.

0012: ஒப்பற்ற அன்போடு அழியாதிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய "சிவனே அழியாதிருக்கும் அருள் புரிபவன்" என்பதை விண்ணவரும் மண்ணவரும் அறியாதிருக்கின்றனரே! என்ன அறியாமை!.

0013: கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்ற சிவனை பிரமன், விஷ்ணு முதலான தேவர்களும் எண்ணத்தில் அகப்படுத்தி நினைப்பதில்லை. மண்ணுலகோரோ சிவனைக் கடந்து சென்று அறிய முடியவில்லை.

0014: சிவன் சுவாதிட்டான மலரிலுள்ள பிரமனையும், மணிப்பூரகத்திலுள்ள விஷ்ணுவையும், அநாகதச் சக்கரத்திலுள்ள ருத்திரனையும் கடந்து சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் நின்று எங்கும் கண்காணித்துக் கொண்டுள்ளான்.

0015: சிவன் உலகினைப் படைப்பவனாயும், உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும் அழிப்பவனாயும், குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும், திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான்.

0016: அமரர்களும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தியுள்ளமையால் அழகு நிறைந்த ஒளியோடு கூடிய நெற்றியையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனாகிய சிவனது குணத்தைப் பாராட்டி நாடமாட்டார்கள்.

0017: தூல உடம்பும் சூக்கும உடம்பும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில் தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் அல்லது நாத வழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை.

0025: பிறவாதவனும் அழிவில்லாதவனும் யாவற்றையும் ஒடுக்குபவனும் பேரருளுடையவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை நல்குபவனும் ஆகிய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு அடையலாம்.

0026: ஆன்மாக்களை என்றும் தொடர்ந்து நிற்கும் சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் எங்கும் வியாபித்துள்ளவனும் விசாலமான உலகம் முழுவதும் கடந்து நின்றவனும் சகஸ்ரதள கமலத்தின் மேல் உடனாய் இருந்தவனும் ஆகிய சிவனது திருவடிப்பேறு கிட்டும்.


மேலே உள்ள திருமந்திர விளக்கத்தில் சிவபெருமானைத் ஒப்பாக உலகில் ஒருகடவுளும் இல்லை என்று திருமூலர் நெத்தியடி அடிக்கிறார். இந்துமத மற்ற கடவுள்களான பிரம்மன்,விஷ்ணு,உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை என்கிறார். இதுதான் திரு மூலர் காட்டும் ஓர் இறை சைவ சமயம்.

Saturday, July 18, 2015

நோயாளிகளை நலம் விசாரிக்கும் அழகிய பண்பு!நோயாளிகளை நலம் விசாரிக்கும் அழகிய பண்பு!

'நோயாளிகளின் நண்பர்கள் குழு' என்ற அமைப்பு மருத்துவ மனைக்கு விஜயம் புரிந்தது. துப்புறவு தொழிலாளர்கள் பலர் வாகன விபத்தில் சிக்குண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்தித்து 20 மேற்பட்ட விலையுயர்ந்த மொபைல் போன்களையும் வேறு சில பொருட்களையும் அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தனர் இந்த அமைப்பினர்..

இந்த வேலை செய்பவர்களை நம் நாட்டில் 'தோட்டிகள்' என்று இழிவாக பார்த்து அவர்களை கீழ் சாதியாக ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் இந்த அரபுகள் உழைப்பதில் எந்த இழிவும் இல்லை என்பதை உணர்ந்து அந்த மக்களை பெருநாள் தினத்தன்று மருத்துவ மனைக்கே சென்று நலம் விசாரித்த பண்பு பாராட்டத் தக்கது.

தகவல் உதவி
சவுதி கெஜட்
18-07-2015

பெருநாள் தினத்தன்று மாலை நேரங்களில் பெரும்பாலான சவுதிகள் குடும்பம் சகிதமாக நோய் வாய் பட்டவர்களை நலம் விசாரிக்க சென்று விடுவர். இதனை நான் நேரிலேயெ பார்த்துள்ளேன். இந்த பழக்கத்தை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும்.

நபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில்

”ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன். நீ நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். மனிதன், எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? எனது இன்ன அடியான் நோயுற்றான். நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அந்த இடத்தில் என்னை பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

”ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

”ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை” என்று கூறுவான். அம்மனிதன் ”எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ”எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

நூல் ஆதாரம்:(ஸஹீஹ் முஸ்லிம்)

கம்யூனிஷ ரஷ்யாவில் வெகு விமரிசையாக பெருநாள் தொழுகை!வெள்ளிக் கிழமை ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த ஈகை பெருநாள் தொழுகை.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
சவுதி கெஜட்
18-07-2015

Friday, July 17, 2015

பெருநாள் தொழுகை நல்லபடியாக முடிந்தது!தவ்ஹீத் ஜமாத் பள்ளிக்கு செல்லாதீர்கள்: அந்த ஜமாத்தில் உங்கள் வீட்டு இளைஞர்களை சேர விடாதீர்கள்: தவ்ஹீத் ஜமாத் அல்ல அது தறுதலை ஜமாத்: பெண்கள் பள்ளிக்கு செல்வது ஹனபி மத்ஹபின் படி தவறு என்றெல்லாம் பள்ளி வாசல் மேடைகளை பயன் படுத்தி கொச்சை படுத்தி வந்தார் ராஜகிரி கீழப்பள்ளி இமாம் ஷாகுல் ஹமீது.

இந்த இமாமின் தரங்கெட்ட வார்த்தைகளை காலடியில் போட்டு மிதித்த ராஜகிரி வாழ் இஸ்லாமியர்கள் காலை ஏழு மணியிலிருந்தே சாரை சாரையாக தவ்ஹீத் பள்ளியை நோக்கி வர ஆரம்பித்தனர். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குடும்பம் சகிதமாக வந்து குவிய ஆரம்பித்தனர். பண்டாரவாடை கிளை தனியாக பிரித்து கொடுக்கப்பட்டும் திறந்த வெளி முழுவதும் மக்கள் வெள்ளம். கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறதேயொழிய குறைந்த பாடில்லை.

நபிகள் நாயகம் 12 தக்பீர்களுடன் திறந்த வெளியில் குடும்பத்தோடு தொழுதுள்ளார்கள். பெண்களில் மாதவிடாயை அடைந்தவர்களும் பள்ளியில் தொழாமல் அமர்ந்திருக்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இதற்கு மாற்றமாக 6 தக்பீர்களுடன் பெண்களையும் அனுமதிக்காமல் தொழுகையை நடத்துகின்றனர் சுன்னத் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்கள். நபி வழியை யார் பேணுகிறார்கள் என்பதை படிப்பவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்.

எத்தனை பொய்ப் பிரசாரங்கள் செய்தாலும் மக்கள் ஏகத்துவத்தின் பால் குவிந்த வண்ணமே உள்ளனர். சுன்னத் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களிடம் உள்ள குறைகளை களைய முற்பட வேண்டும். அதை விடுத்து தவ்ஹீத் ஜமாத்தை எந்த வகையிலாவது அழித்து விடலாம் என்று நினைப்பார்களேயானால் இறைவனால் மேலும் சிறுமை படுத்தப்படுவார்கள்.

இந்த நல்ல நாளில் நோய் நொடியற்ற வாழ்வை கொடுத்து செல்வ வளத்தையும் கொடுத்து ஏகத்துவத்தின் பால் அனைத்து மக்களும் வர வல்ல இறைவன் கிருபை புரிவானாக என்று பிரார்த்திப்போமாக!

நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

அடுத்த அமெரிக்க அதிபர் நாந்தேன்! :-)

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!

இன்று வளைகுடா நாடுகளிலும் மற்ற இடங்களிலும் ஈகை திருநாள் கொண்டாடிய நண்பர்களுக்கும் நாளை பெருநாள் கொண்டாட இருக்கிற நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஃபித்ர் தொகையாக 100 ரூபாயை நிர்ணயித்திருக்கின்றனர். தகுதியுடையவர்கள் 'ஸதகதுல் ஃபித்ர்' எனும் பெருநாள் தர்மத்தை அளித்து நோன்பில் செய்த ஒரு சில பாவங்களுக்கு பரிகாரத்தைத் தேடிக் கொள்வார்களாக!

---------------------------------------------------

நபி அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி “தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி

நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா

நபி காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு “சாவு” ஃபித்ரா கொடுத்துக்கொண்டிருந்தோம் என நபித்தோழர் அபூசயீத் அல்-குத்ரி(ரலி) கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மது, இப்னு மாஜ்ஜா போன்ற ஹதீஸ் நூற்களில் காணப்படுகிறது.

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:93


Thursday, July 16, 2015

பெருநாளுக்கு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பங்களாதேஷிகள்!


ஒரு மில்லியன் மக்கள் கஃபாவில் தொழுகையில் ஈடுபட்டனர்


ஏறத்தாழ ஒரு மில்லியன் உலக முஸ்லிம்கள் இறை இல்லமான கஃபாவிலும், மதினா ஹரமிலும் தங்களின் இறைக் கட்டளையான இரவுத் தொழுகையை நிறைவேற்றிய போது எடுத்த படம்.

சத்தமில்லாத புரட்சி!

ஆர்ப்பாட்டமில்லாத இறை வழிபாடு!........

உலக மீடியாக்கள் மறைத்தாலும் அதையும் மீறி வெளி வரும் செய்திகள்.....

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
சவுதிகெஜட்
16-07-2015

Wednesday, July 15, 2015

கண் பார்வையற்றவர்கள் கூட்டாக செய்த உம்ரா புனித பயணம்!World Assembly of Muslim Youth (WAMY) 'வாமி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஜெத்தாவிலிருந்து 22 கண் பார்வையற்றவர்கள் புனித உம்ரா பயணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த அமைப்பின் டைரக்டர் முஹம்மத் அல் ஜஹ்ரானி கூறும் போது 'இவ்வாறான நிகழ்ச்சிகள் வருடம் முழுக்க நடத்த திட்டமிட்டுள்ளோம். இது போன்ற நிகழ்வுகள் குறையுடைய மக்களின் மனதில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. பலரிடமிருந்து நிறைய கோரிக்கைகளும் வந்துள்ளது. வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக செய்ய திட்டமிட்டுள்ளோம்.' என்று கூறினார்.

இறைவன் இந்த குறையுடைய மக்களின் உம்ரா பயணத்தை ஏற்றுக் கொண்டு அதற்குரிய கூலியைத் தருவானாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
09-07-2015

திருக்குறளின் கடவுள் வாழ்த்து இஸ்லாத்தை நோக்கி செல்கிறதே!

நீங்கள் திருவள்ளுவரை இந்து என்று சொல்கிறீர்கள். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இசுலாமும் கிருத்துவமும் தமிழ்நாட்டில் நுழையவில்லை. உண்மைதான். ஆனால், இவ்விரு மதத்தவரும் கிருத்துவ மதக்கொள்கைகள் காணப்படுவதாகச் சொல்லலாம். அல்லது ஓரிறைக் கொள்கையைக் காட்டலாம்.

அதே சமயம், நீங்கள் வள்ளுவரை இந்துவாக்க முனைவது அவரைச் சமணர்கள் தங்கள் ஆச்சாரியராகக் கொண்டு வழிபடுவது பொய் என்று சொல்லத்தான். வள்ளுவர் கொந்தகொந்த சமணாச்சாரியாராக வழிபடப்ப‌டுகிறார் தமிழ்நாட்டில் என்பது உண்மை என்று நன்கு உங்களுக்குத் தெரியும். சமணர்கள் கூற்றுப்படி அவர் யாத்த நூல்களுள் ஒன்றேயொன்றுதான் தமிழ்நூல் – அது திருக்குறள். மற்றவை வடமொழி சமண சமய நூல்கள் என்றும் அந்நூல்கள் பெயரகளையும் குறிப்பிடுகிறார்கள் சமணர்கள்.

சமண வாதத்தை எதிர்க்க வைக்கப்பட்டதே வள்ளுவர் ஓர் இந்து என்ற இந்துத்வா பிரச்சாரமாகும். இசுலாமியருக்கும் கிருத்துவருக்கும் எதிராக அன்று. உங்கள் பிரச்சாரம் இங்கே அதுதான். ஆதி பகவன் என்பதற்கு ஆதி பராசக்தி + சிவன் என்று விளக்கம் நீங்கள் கொடுக்கலாம. உஙகளாசை. சமணர்கள் ஏற்கவில்லை. மற்றவரகள் அச்சொல் அனைத்தையும் கடந்த உள் (கடவுள்) எனபதையே குறிக்கிறதென்கிறார்கள். ஆதி என்பது தொடக்கம். தொடக்கத்திலிருந்து வந்தது என்றுதான் பொருள் படும். ஆதி என்றால் ஆதிபராசக்தி என்று சொல்ல ஆதிக்குப்பின் ஒரு சொல் பராசக்தி என்று குறிக்க வேண்டும். ஆதி என்பது அட்ஜக்டிவ் – பண்புப்பெயர். நவுன் கிடையாது. பகவன் என்பது நவுன் – பெயர்ச்சொல். அதாவது காமன் நவுன். பொதுப் பெயர். எக்கடவுளையுமே குறிக்கும். ஈஸ்வர், இறைவன், கடவுள் என்பன போல.

நன்னெறி பற்றியெல்லாம் பேசாதீர்கள். அஃதெல்லோருக்குமே தெரியும். நன்னெறி என்று போனால் மருத்துவர் ஜாண்சன் சொன்னதைத்தான் ஏற்க வேண்டும். இந்த சச்சரவெல்லாம் ஏன்? கடவுள் வாழ்த்து கடவுளைப்பற்றி; எக்கடவுள் என்று அவர் சொல்லவில்லை என்று மருத்துவர் முடித்துவிட, நீங்களோ, அது சிவ பார்வதியைக்குறிக்குமென்று வள்ளுவரை இந்து என்று மீண்டும் நிலைநாட்டுகிறீர்கள். நன்னெறி என்று விட்டீர்களா? வீண்வாதம் உங்களிடமிருந்தும் வருகிறது. ஓரிறைக்கொள்கையை வள்ளுவர் கொள்கை என்று முடித்துவிட தயக்கமேன்?
ஓரிறைக்கொள்கை இந்து சமயத்துக்குப் புதியன்று. ஓகே. அதே சமயம், அக்கொள்கையுடனே ஷாலி சொன்ன முப்பது முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் ஒன்றையே பலவற்றையோ தொழலாமென்றும் இந்துமதம் சொல்கிறது. அப்படியே மக்களும் செய்கிறார்கள். நீங்கள் அண்ணாமலையாரையும் முருகனையும் வெங்கடாஜலபதியையும் தொழுகிறீர்கள். வைணவர்கள் உங்கள் சிவ பாரவதி, முருகன் எனறு தொழவதில்லை. ஆக, என்ன புலனாகிறது இதில்? இந்துமதத்தில் ஓரிறைக்கொள்கை உண்டு; அதே சமயம், இன்னொரு கொள்கையாக பலகடவுளர் வணக்கமும் இருக்கிறது. இல்லையா?

இசுலாமில் அப்படி இல்லவே இல்லை.

//இறைவன் ஒருவனே; அவன் நாமம் அல்லா. அவனைத்தவிர இறையேதும் இல்லை//. God is Only One. His name is Allah. There is no God but Allah//

இதைத்தான் அவர்கள் நித்தம்நித்தம் ஓதுகிறார்கள். தொழுகைக்கு அழைப்பாகவும் விடுக்கிறார்கள். அதாவது அவர்கள் கொள்கை ஒன்றே.
எனவே ஓரிறைக்கொள்கையென்றால் இசுலாமே. ஒருவர் ஓரிறைக்கொள்கையைப்பற்றி சிலாகித்து எழுதுகிறரென்றால், இன்று அவரைக் கண்டிப்பாக இசுலாமியர் எனலாம். வள்ளுவர் காலத்தில் அக்கொள்கையைக் கொண்டு வாழ்பவர் எனலாம். வள்ளுவர் அப்படி வருவார். இல்லையா?

-BS

Tuesday, July 14, 2015

எங்கள் ஊரில் இன்று 27 ஆம் கிழமையாம்!

எங்கள் ஊரில் இன்று 27 ஆம் கிழமையாம்!

எங்கள் ஊரில் இன்று எங்கு பார்த்தாலும் யாரை பார்த்தாலும் புது சட்டை: புது கைலி: வாசனை திரவியங்களை அள்ளி பூசிக் கொண்டு பலரும் உலா வருகின்றனர். 'கட்,.......கட்.........கட்' என்ற கொத்து புரோட்டா போடும் சப்தம் வேறு காதைப் பிளக்கிறது.. பள்ளிகள் தோறும் 'ஹூ.... ஹூ.... ஹூ' என்று பல ராகங்களில் திக்ருகள் வேறு நடைபெறுகிறது.. கடை வீதிகள் தோறும் திருவிழாக்களைப் போல் காட்சியளிப்புகள்: சிறுவர்களும் இளைஞர்களும் இரு சக்கர வாகனங்களில் 'தட... தட...' என ஒலி எழுப்பிக் கொண்டு வேக வேகமாக செல்கின்றனர். எங்கு செல்கின்றீர்கள் என்று பலரிடமும் கேட்டேன்.... ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. உங்களுக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்..... :-)

ஆடி ஓடி களைத்து இரண்டு மணிக்கு பள்ளியில் தரும் பிரியாணி பொட்டலத்தை சாப்பிட்டு விட்டு களைப்பு தீர பெரும்பாலானவர் உறங்கி விடுவர். சிறு வயதில் நானும் இது போல் உறங்கியிருக்கிறேன். :-) இறைவன் கடமையாக்கிய ஃபஜர் தொழுகைக்கு பள்ளி வாசலில் எவரையும் காணோம்...... கொஞ்சம் கண்டு பிடித்து ஃபஜர் தொழுகைக்கு பள்ளிக்கு கூட்டி வருகிறீர்களா?

பள்ளி வாசல்களில் கருவறை என்று ஒன்று உள்ளதா?

பள்ளி வாசல்களில் கருவறை என்று ஒன்று உள்ளதா?

சுன்னத்(?) ஜமாஅத் பள்ளியின் கருவறையில் நின்று ..அம்பேத்கர் சினிமா பெரியார் பற்றி பேசியதை வரவேற்ற மக்கள் என ஆளூரார் சிலாகித்து பதிவிட்டுள்ளார் ..

இதில் ஆச்சரியம் அடைய என்ன உள்ளது ?

அசரத்மார்கள் அடிக்கும் கப்சாக்கள் கதைகளைவிட சினிமா அம்பேத்கர் பெரியார் இந்த கதைகள் அவர்களை ஈர்த்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை ..

மத்ஹப்களை பின்பற்றாதீர்கள் அல்லாஹ் வஹி மூலம் அருளிய குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மட்டுமே பின்பற்றுங்கள் என்றும் தர்கா தரீக்கா என்று வழிகேட்டில் வீழ்ந்து விடாதீர்கள் என தூய்மையான இஸ்லாத்தை எடுத்துச்சொல்லிப்பாருங்களேன் ? வரவேற்பு எப்படி இருக்கும் ?

நீங்கள் அப்படி எடுத்துச்சொல்லப்போவதும் இல்லை ..

அவர்கள் உங்களை எதிர்க்கப்போவதும் இல்லை ..

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ..

- Abdul Wahab

Monday, July 13, 2015

ரமலான் உணவு தயாரித்து கொடுக்கும் புத்த துறவிகள்!
பர்மா, சிலோன் என்று எங்கு திரும்பினாலும் ரத்த வாடையோடு அலையும் புத்த துறவிகள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் பங்களாதேஷின் டாக்காவில் ரமலான் நோன்பு திறக்க உணவு தயாரித்து கொடுக்கிறார்கள். இவர்களை போன்று மற்ற புத்த தறவிகளுக்கும் மனமாற்றத்தை இறைவன் தந்து அந்த நாடுகளில் அமைதி தவழச் செய்வானாக!


தகவல் உதவி
சவுதி கெஜட்
08-07-2015

விம்பிள்டன் டென்னிஸ் கோப்பையை வென்றார் சானியா!விம்பிள்டன் டென்னிஸ் கோப்பையை வென்றார் சானியா!

விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் வென்றதன் மூலம், மகளிர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா மிர்சா படைத்துள்ளார்.

வாழும் நபர்களில் நமது இந்திய நாட்டுக்கு உலக அளவில் பெயர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நபர்களில் சானியா மிர்ஸாவும் தற்போது சேர்ந்து கொண்டுள்ளார். ராக்கெட் தொழில் நுட்பத்தில் கொடி கட்டி பறந்த அப்துல் கலாம் ஒரு பக்கம்: ஆஸ்கார் விருது வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான் ஒரு பக்கம். உலக மக்களை இன்றும் கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கும் தாஜ்மஹால், செங்கோட்டை ஒரு பக்கம். பாலிவுட் நட்சத்திரங்களாக வலம் வரும் ஷாருக் கான், சல்மான் கான், அமீர்கான் இது ஒரு பக்கம்..

மேலும் இன்னும் சில ஆண்டுகளில் இந்தோனேஷியாவை பின்னுக்கு தள்ளி விட்டு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இஸ்லாமியர்கள் வாழும் நாடாக இந்தியா மாறி விடும் என்று கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன. இது மட்டுமல்லமால் பிஸ்மில்லா கான், ஜாகிர் ஹூசைன் என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்!

இந்துத்வாவாதிகளின் ஆட்சியில் இப்படி இந்தியாவின் அடையாளங்களாக இஸ்லாமியர்கள் மாறி வருவது தற்காலங்களில் அதிகமாயுள்ளது. மோடியும், அமீத்ஷாவும் என்றைக்கு இவர்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு அனுப்பி விட்டு ராம ராஜ்யம் அமைக்கப் போகிறார்களோ! அந்த ராமனுக்கே வெளிச்சம்! :-)

வழுத்தூரில் ஏகத்துவத்தின் எழுச்சி!

நான் ப்ளஸ் டூ முடித்தது வழுத்தூரில்தான். இந்த ஊர் தர்ஹா வணக்கத்துக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுக்கும் ஊர். கொடி சீலை என்று ஒரு விழாவும் எடுப்பார்கள். இந்த விழாவில் கலந்து கொள்ள வெளி நாடுகளில் இருந்து எல்லாம் ஊர் காரர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு கலந்து கொள்வார்கள். வெகு விமரிசையாக இந்து கூத்துக்கள் அரங்கேறும்.

இந்த நிலையில்தான் தவ்ஹீத் பிரசாரம் வழுத்தூரையும் எட்டியது. விடுவார்களா கபுர் வணங்கிகள்? பல தொல்லைகளை தவ்ஹீத்வாதிகளுக்கு கொடுத்துப் பார்த்தார்கள். வழக்கம் பொல் கபுர் வணங்கிகளுக்கு தோல்வியை இறைவன் தந்தான். இளைஞர்கள் மத்தியில் ஏகத்துவ சிந்தனை எதிர்ப்பினால் மிகுதியானது. இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்று தவ்ஹீத் பள்ளியை வழுத்தூர் மக்கள் கடுமையான சிரமத்திற்கு மத்தியில் திறந்துள்ளார்கள்.

சென்ற மாதம் நடந்த 'மஸ்ஜித் தவ்ஹீத்' திறப்பு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். 'கியாமுல் லைல்' எனப்படும் இரவுத் தொழுகைக்கு வந்துள்ள இளைஞர் பட்டாளத்தைப் பாருங்கள். இந்த ஏகத்துவ எழுச்சி இன்னும் சில ஆண்டுகளில் முழு வழுத்தூரையும் ஆட்கொள்ளும் இன்ஷா அல்லாஹ்.

சினிமா கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்துக் கொண்டும், டாஸ்மாக் கடையே கதியாகவும் கிடந்த இளைஞர் சமூகத்தை இன்று குர்ஆனை கையில் எடுக்க வைத்துள்ளது இந்த ஏகத்தவ இயக்கம். இதற்கு காரணமான உலமாக்கள், இளைஞர்கள், வசதி படைத்தவர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் ஈருலகிலும் கண்ணியத்தை தந்தருள்வானாக!


(இரவுத் தொழுகை முடிந்தவுடன் உணவு பரிமாறப்படுகிறது. மற்றொரு படத்தில் நோன்பு திறக்க மஸ்ஜித் தவ்ஹீதில் காத்திருக்கும் ஏகத்துவவாதிகள்)

எல்லா புகழும் இறைவனுக்கே!

Sunday, July 12, 2015

அமெரிக்காவில் சர்ச் கட்ட நிதியுதவி செய்த முஸ்லிம்கள்!
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் வெள்ளையின மக்களுக்கும் கருப்பின மக்களுக்கும் இன மோதல் வெடித்ததை நாம் படித்திருக்கலாம். பல உயிர்கள் இதில் பலியாயின. அதோடு வெள்ளையின குண்டர்கள் எட்டுக்கும் மேற்பட்ட கருப்பினத்தவருக்கு சொந்தமான சர்ச்களை எரித்து விட்டனர். இன்று வரை அது சரி செய்யப்படாமல் இருந்தது.

இதனை கண்ணுற்ற மூன்று இஸ்லாமிய அமைப்பகள் சர்ச்களை கட்டித்தர முடிவு செய்தன. அந்த அமைப்பின் பெயர்கள் முறையே Ummah Wide, Muslim Anti-Racism Collaborative and Arab American Association of New York: இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து ஜூலை இரண்டிலிருந்து ஜூலை 18 வரை நன்கொடைகளை வசூலிக்கத் திட்டமிட்டன. இது வரை இந்த தன்னார்வ அமைப்புகள் 28953 யுஎஸ் டாலரை 600 நபர்களிடமிருந்து நன்கொடையாக வசூலித்துள்ளன. 30000 அமெரிக்க டாலரை இலக்காக வைத்துள்ளனர்.

இந்த அமைப்பினர் கூறும் போது 'ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் இறை வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். இந்த கருப்பின மக்கள் உடலாலும் உள்ளத்தாலும் சோர்வடைந்துள்ளனர். அந்த மக்களின் சோர்வை போக்க எங்களால் ஆன சிறிய முயற்சியே இது' என்று கூறுகின்றனர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
10-07-2015

இஸ்லாம் இதைத்தான் போதிக்கிறது. மாற்று மத நண்பர்களை சகோதரர்களாக பாவிக்கச் சொல்கிறது. அவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ளச் சொல்கிறது. கலீபா உமர் அவரது ஆட்சிக் காலத்தில் கிருத்தவ பயணக் கூட்டத்தை பள்ளி வாசலில் தங்க வைத்தார்கள். அவர்கள் பிரார்த்தனை செய்யவும் அனுமதி தந்தார்கள்.

ஆனால் நம் நாட்டில் பாரம்பரிய சின்னமான பாபரி மசூதியை கற்பனை பாத்திரமான ராமன் அங்குதான் அவதரித்தான் என்று பொய் கூறி இடித்து விட்டு அங்கு ராமர் கோவில் கட்டப் போகிறோம் என்று கிளம்பியுள்ளது ஒரு சிறு கூட்டம்.

எரிந்த சர்ச்களை கட்டித் தர பண வசூல் செய்யும் முஸ்லிம்கள் எங்கே? பாபரி மசூதியை இடித்து விட்டு அங்கு ராம ஜென்ம பூமி கட்டப் போகிறோம் என்று கூக்குரலிடும் இந்துத்வாவாதிகள் எங்கே?

துர்க்மெனிஸ்தானில் இஸ்லாமியர்களோடு நரேந்திர மோடிஒரு காலத்தில் அமீத்ஷாவோடு கை கோர்த்து கொண்டு 2000 முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட காரணமாயிருந்தவர் நரேந்திர மோடி. அதே நரேந்திர மோடி இன்று துர்க்மெனிஸ்தான் சென்று அங்கு நடைபெற்ற இஸ்லாமியர்கள் நடத்தும் பிரார்த்தனையில் கலந்து கொண்டு 'ஆமீன்' போடவும் வைத்து விட்டார்கள் அங்குள்ள ஆட்சியாளர்கள். :-)

வருங்காலத்திலாவது செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக முஸ்லிம்களை கல்வி வேலை வாய்ப்புகளில் இந்திய அளவில் முன்னுக்கு கொண்டு வர மோடி முயற்சிப்பாரா? பொறுத்திருந்து பார்போம்.

'சலீம்' திரைப்படம் மூலம் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரர்!

முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் எண்ணத்தை சலீம் திரைப்படம் மாற்றியது! இஸ்லாத்தை ஏற்ற இளைஞர் !

திருச்சியை சேர்ந்த நண்பர் வீடியோ சிராஜின் மகன் ஜாவித் தஃவாவில் ஆர்வமுள்ள சகோதரர்! அவர் நேற்று போன் செய்து எனது நண்பருக்கு தஃவா செய்து வருகிறேன் ! நீங்கள் கொஞ்சம் அவரோடு பேசினால் நன்றாக இருக்கும் என்றார் !

சரி இப்தாருக்கு அழைத்து வாருங்கள் என்றேன் ! வரமுடியவில்லை கொஞ்சம் லேட்டாகும் என்றார்! பரவாயில்லை இரவுத் தொழுகைக்கு முன் அழைத்து வாருங்கள் என்றேன் ! சுமார் 8.30 மணியளவில் வந்தார்கள்!

வந்தவரிடம் ஊர்.பெயர் . தொழில் எல்லாம் விசாரித்து விட்டு அவருக்கு ஏகத்துவம் , தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் ஐந்து கடமைகளில் கட்டமைக்கப் பட்டுள்ள இஸ்லாம் குறித்து விரிவாக எடுத்துரைத்து விட்டு, இணை வைப்பைக் குறித்து எச்சரித்து விட்டு இஸ்லாத்தை பின்பற்றினால் இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் பலன்கள் குறித்து விளக்கினேன் !

விரிவாக விளக்கி விட்டுஇதுதான் இறைவனால் அருளப்பட்ட சரியான வழி என்பதை ஒப்பக் கொள்கிறீர்களா ? என்று கேட்டதும் ஆம் இதுதான் உண்மை என்றார் ! இதை ஏற்றுக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையலாம் எந்த நஷ்டமும் எனும் போது என்ன தயக்கம் ?

மனிதன் மனிதனாக வாழ இதுதான் வழி எனில் இதுதான் நீங்கள் செல்லவிருக்கும் இலக்குக்கான இறுதி வாகனம்! இதைத் தவற விட்டால் உங்களின் இலக்கை அடைய முடியாது ! இந்த வாகனத்தில் என் தந்தை ஏறவில்லையே நான் எப்படி ஏறுவது ? என் தாத்தா இந்த வாகனத்தை பார்த்ததே இல்லையே ? இந்த வாகனத்தில் ஏறி பயணித்தால் என் ஊர் என்ன சொல்லும் ? என்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் என்ன சொல்லும் ? என்று பார்த்துக் கொண்டிருந்தால் வண்டி போய் விடுவது போல் வாழக்கை முடிந்து போய் விடும் ! நிச்சயமில்லாத இந்த உலகில் எதற்காக அதைத் தள்ளிப் போட வேண்டும்?

இல்லை ! நான் இப்போதே ஏற்றுக் கொள்கிறேன் என்று கலிமாவை மொழிந்து சுமார் பத்து மணியளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் ! அல்ஹம்து லில்லாஹ் !

பின்னர் இஸ்லாத்தின் பக்கம் முதல் ஈர்ப்பு எப்படி வந்தது ? என்று கேட்ட போது சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டிர்களே ? என்றார் !

இல்லை சொல்லுங்கள் என்றதும் சலீம் படம் பார்க்கும் வரைக்கும் பத்திரிகைகள், தொலைகாட்சிகள் சொல்வது போல் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றுதான் எண்ணி இருந்தேன் !

ஆனால் அந்தப் படத்தைப் பார்த்த பின் என் கருத்தை மாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் இஸ்லாத்தை அறிந்து கொள்ளவேண்டும் எனும் ஆவலும் ஏற்பட்டது ! அப்போது தான் நண்பர் ஜாவித் முலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டேன் ! இன்று தங்களால் இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்வியல் நெறி என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டேன் என்றார் ! அல்ஹம்து லில்லாஹ் !

இது அவனுடைய நேர்வழி அதை தான் நாடியோருக்கு வழங்குகிறான் ! இது இறைவனின் ஒளி ! அதை உங்கள் உள்ளத்தில் ஏற்றி விட்டான் ! இனி அது பிரகாசிக்கும் ! உங்களின் செயல்கள் இனி ஒளிமயமாகும் ! அந்த ஒளி உங்களை சுற்றி உள்ள மற்றவர்களையும் ஈர்க்கும் என்று கூறிய போது அவரது முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது! அல்ஹம்து லில்லாஹ் !

[குறிப்பு: சினிமா நம் மக்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து அதை தஃவாவுக்கு பயன்படுத்த வேண்டும் எனும் கருத்துக்கு இச்சம்பவம் வலுச்சேர்க்கிறது!]

-செங்கிஸ் கான்

Saturday, July 11, 2015

'ஃபர்சானா'வுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்த ரெட்டி தம்பதிகள் !'ஃபர்சானா'வுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்த ரெட்டி தம்பதிகள் !

ஆந்திராவை சேர்ந்த மாதவ ரெட்டி- லக்ஷ்மி ரெட்டி தம்பதிகள், தங்கள் ஒரே வளர்ப்பு மகளான 'ஃபர்சானா'வுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.

பர்சானா சிறு குழந்தையாக இருந்தபோது, அவரது பெற்றோர் இருவரும் இறந்துவிட்ட நிலையில், பார்சானாவை தத்தெடுத்து வளர்த்து வந்தனர் ரெட்டி தம்பதிகள்.

குழந்தை பாக்கியம் இல்லாத ரெட்டி தம்பதிகள், பர்சானா'வை தங்கள் குழந்தையாகவே செல்லமாக வளர்த்து வந்தாலும், அக்குழந்தைக்கு 'குர்ஆன்' உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை கொடுப்பதிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.

இறுதியாக, பர்சானாவுக்கு இஸ்லாமிய முறைப்படியே திருமணமும் செய்து வைத்துள்ளனர், இந்த ரெட்டி தம்பதிகள்.

குறிப்பு :

ஒரு முஸ்லிம் தம்பதியும், ஹிந்து வளர்ப்பு மகளுக்கு அவரது மதவழக்கப்படி மணம் முடித்து வைத்த ஒரு சம்பவமும் சமீபத்தில் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

— with Rajesh Muthupandi.


தொழுவதற்கு தனி அறையும், குர்ஆன் ஓத ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளனர் இந்த ரெட்டி தம்பதியினர். இறைவன் இவர்களின் நல்ல அமல்களை பொருந்திக் கொண்டு வருங்காலங்களிலும் நெரிய வழியில் பயணிக்க அருள் புரிவானாக!

சாதி பாகுபாடு கொண்ட ஒருவரையொரவர் வெட்டிக் கொண்ட சாவும் தலித், வன்னிய, நாடார், தேவர் இன மக்கள் இந்த தம்பதியிடமிருந்து பாடம் படித்துக் கொள்வார்களாக!

அஇஅதிமுக வின் சாதனைப் பட்டியல் - கார்ட்டூன்

இரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்! கண் கலங்கினேன்!

இரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்! கண் கலங்கினேன்!

25 வருடங்களுக்கு முன்பு ரியாத்தில் ரமலான் இருபதுக்கு பிறகு இரவு இரண்டு மணிக்கு 'கியாமுல் லைல்' என்ற இரவுத் தொழுகை நடைபெறும். இந்த தொழுகையை நபிகள் நாயகம் அவர்கள் விரும்பி தொழுது வந்துள்ளார்கள். தனது குடும்பத்து பெண்களையும் தொழச் சொல்லி ஏவுவார்கள். சஹாபாக்களும் இந்த தொழுகையை விரும்பி தொழுது வந்தனர். இந்த நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகளை இறைவன் செவி மடுத்து அதற்கு உடன் பதிலளிக்கிறான் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதால் ஆண்களும் பெண்களும் சாரை சாரையாக பள்ளிக்கு வருவர். இது எனக்கு புதுமையாக இருந்தது. இப்படி ஒரு நிகழ்வை நான் தமிழகத்தில் கண்டதில்லை. தமிழகத்துக்கு ஒரு இஸ்லாம்: சவுதிக்கு ஒரு இஸ்லாமா என்று ஆச்சரியப்பட்டேன்.

அந்த நேரத்தில்தான் தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் உருவானது. நபி மொழிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குர்ஆனின் மொழி பெயர்ப்பு வீடுகள் தோறும் மக்கள் வாங்கி படிக்க ஆரம்பித்தனர். நபிகள் நாயகம் வலியுறுத்திய அந்த இரவுத் தொழுகையை தவ்ஹீத் சகோதரர்கள் தங்கள் வீடுகளுக்கு தங்கள் குடும்பத்தாரோடு இரவு இரண்டு மணிக்கு தொழுது கொண்டிருந்தனர். ஊருக்கு வரும் சமயம் நானும் வீடுகளில்தான் தொழுது கொள்வேன். ஏனெனில் அப்போது தவ்ஹீத் பள்ளிகள் கட்டப்படாத சமயம். ஊரில் பயங்கர எதிர்ப்பு இருந்த சமயம். ரகசியமாகவும் இந்த இரவுத் தொழுகையை தொழுது வந்தோம்.

காலம் உருண்டோடியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த முறைதான் ரமலானில் ஊரில் உள்ளேன். 25 வருடங்களுக்குப் பிறகு இன்று எனது கிராமத்தில் மூன்று தவ்ஹீத் பள்ளிகள் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இரவு ஒன்றரை மணிக்கெல்லாம் ஆண்களும் பெண்களும் சாரை சாரையாக தவ்ஹீத் பள்ளிகளை நோக்கி நடந்தும், சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், ஆட்டோக்களிலும் அணி வகுத்து செல்கின்றனர். அங்கு பள்ளியில் அன்று நான் ரியாத்தில் பார்த்த காட்சிகளைப் பார்க்கிறேன். இரவு 9 மணிக்கு எவ்வளவு பேர் தொழுவார்களோ அந்த எண்ணிக்கை சற்றும் குறைவில்லாமல் மூன்று வரிசைகள், நான்கு வரிசைகளில் ஆண்களும் பெண்களும் நின்று நள்ளிரவு இரண்டு மணிக்கு தங்கள் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடும் காட்சியைப் பார்த்தேன். அழுது இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இரண்டு கிலோ மீட்டர் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருந்தெல்லாம் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் ஆட்டோக்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ள காட்சியானது கண் கொள்ளாக் காட்சியாகும். ஆனந்தக் கண்ணீர் என் கண்களில் ததும்பியது.

25 வருட சத்திய தவ்ஹீத் பிரச்சாரத்தில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியுமா? இறைவனின் ஆசியும் கிருபையும் இல்லா விட்டால் இது சாத்தியப்படுமா? எண்ணி ஆச்சரியப்படுகிறேன்.

இதற்காக உடலாலும் பொருளாதாரத்தாலும் உழைத்த தவ்ஹீத்வாதிகளுக்கு இறைவன் தனது கருணையை பொழிவானாக! அவர்களின் அந்தஸ்தை மேலும் உயர்த்தி சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக!

எல்லா புகழும் இறைவனுக்கே!

------------------------------------------------------------

இது ஒரு புறம் இருக்க....... ராஜகிரி கீழப்பள்ளியின் இமாம் சாஹூல் ஹமீது என்பவரின் பள்ளிவாசலில் நடைபெற்ற ஒரு பயானை கேட்டேன். அதில் அவர் 'எந்த படித்த அறிவுள்ள இளைஞனும் தவ்ஹீத் ஜமாத்தில் இருக்க மாட்டான்: நல்ல குடும்பத்தில் நல்ல குடும்ப பாரம்பரியத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் தவ்ஹீத் ஜமாத்தில் இருக்க மாட்டார்கள். உங்கள் குழந்தைகளை தவ்ஹீத் ஜமாத்தில் சேர விடாதீர்கள்' என்று அல்லாஹ்வுடைய பள்ளியில் நின்று கொண்டு சொல்கிறார். அதனை அந்த ஊர் பள்ளி நிர்வாகிகளும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

மார்க்கம் அனுமதிக்காத வகையில் ஊர் மக்களிடம் பொருளீட்டும் இந்த இமாம் நல்ல பாரம்பரியம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவராம். அதே நேரம் ஏகத்துவ பணிகளுக்காக சொந்த பணத்தை செலவு செய்து உடல் உழைப்பையும் கொடுத்து வரும் என்னைப் போன்றவர்கள் நல்ல இஸ்லாமிய குடும்ப பாரம்பரியம் இல்லாதவர்களாம். இந்த ஒன்றுக்காகவே மறுமையில் இறைவனின் முன்னால் இந்த இமாம் ஷாகுல் ஹமீதுக்கு எதிராக வழக்கு தொடுப்பேன்.

தட்டு, தாயத்து, முரீது வியாபாரங்கள் படுத்து விட்டது. இறந்து போன வீடுகளில் கத்தம் பாத்திஹா என்ற பெயரில் 3ம் நாள், 10 ஆம் நாள், 40 ஆம் நாள் என்று வரிசையாக ஃபாத்திஹா ஓதி காசு பார்த்த காலம் மலையேறி விட்டது. அங்கு சென்று பிரியாணி சாப்பிட்ட காலமும் மலையேறி விட்டது. ஊர் மக்கள் ஃபித்ரா பணத்தை முன்பு பள்ளி இமாமுக்கு மாத்திரமே கொடுத்து வந்தனர். ஆனால் தவ்ஹீத்வாதிகள் வீடு வீடாக வசூலித்து ஒரு லட்சம் இரண்டு லட்ச ரூபாய் வரை வசூல் செய்து ஊரில் உள்ள ஏழைகளுக்கு பிரியாணி அரிசி, மற்றும் சமையல் செய்ய பணம் என்று ஏழை வீடுகளாக தேடிச் சென்று கொடுத்து வருகின்றனர். இதனால் பெருநாள் அன்று எங்கள் ஊர் ஏழைகள் கவுரவமாக பிச்சையெடுக்காமல் அவர்கள் வீட்டில் அன்று சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இது நபிகள் நாயகம் அவர்கள் காட்டித் தந்த வழிமுறை. சுய மரியாதை மிளிரக் கூடிய தருணம் இது. வரதட்சணை வாங்காத திருமணங்கள் பல நடந்துள்ளன தவ்ஹீத் வாதிகளின் பிரசாரத்தால். முன்பு தவறுதலாக வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. தர்ஹா வணக்கம் கிட்டத்தட்ட ஒழியும் நிலைக்கு வந்துள்ளது. இதை எல்லாம் பார்த்து அரண்டு போன கீழப் பள்ளி இமாம் ஷாகுல் ஹமீது முன்பு தனக்கு கிடைத்த வருமானங்கள் பாழாகிறதே என்று எண்ணி தனது மனம் போன போக்கில் அல்லாஹ்வுடைய பள்ளியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

ஊரில் ஒரு சிலர் இவரது பேச்சை ஆமோதிக்கலாம். நிர்வாகிகளும் அனுமதியளிக்கலாம். ஆனால் நாளை மறுமையில் இறைவனின் முன்னால் கேவலப்பட்டு இந்த இமாம் நிற்கும் காலமும் வரும். தவ்ஹீத் ஜமாத்தை எதிர்த்தால் ஊரில் எல்லோராலும் பேசப்படும் ஒரு இமாமாக தான் வலம் வரலாம் என்ற அற்ப ஆசையைத்தான் பார்க்கிறோம். சென்ற வாரத்தில் கூட இந்த இமாமை காவல் நியைத்தில் வைத்து இறைவன் இழிவு படுத்தினான். விசாரணை செய்த காவல் துறை அதிகாரி 'நீங்கள் பேசியது தவறு' என்று அறிவுரை கூறக் கூடிய நிலையைத்தான் பார்தோம்.மாற்று மத காவல் துறை அதிகாரி முன்னால் கூனிக் குறுகி குற்ற உணர்ச்சியில் நின்றதைத்தான் பார்தோம். ஏனெனில் சத்தியம் எது என்று தெரிந்து கொண்டே அற்ப உலக ஆதாயங்களுக்காக மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கும் இவருக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் இழிவையே பரிசாகத் தருவான். இவரும் சத்தியத்தை உணர்ந்து நேர் வழியில் வர இந்த இரவுத் தொழுகைகளில் பிரார்த்திப்போமாக!

Friday, July 10, 2015

இவர்கள் சுன்னத் ஜமாத்தா? அல்லது தவ்ஹீத் ஜமாத்தா? :-)இவர்கள் சுன்னத் ஜமாத்தா? அல்லது தவ்ஹீத் ஜமாத்தா?

சில சுன்னத் ஜமாத் பள்ளிகளில் நான் கண்ட காட்சி.....

தராவீஹ் தொழுகைக்கு கலந்து கொள்ளும் பலர் 8 ரகஅத் முடிந்தவுடன் எழுந்து பள்ளியை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

அடுத்த ஒரு குரூப் 12 ரகஅத் முடிந்தவுடன் நேராக வந்து தராவீஹ் ஜமாத்தில் கலந்து கொள்கிறார்கள். இதே காட்சியை மக்கா மதினாவிலும் நாம் காணலாம்.

மக்கா ஹரமில் தொழ வைக்கும் இமாமும் 8 ரகஅத் முடிந்தவுடன் எழுந்து சென்று விடுவார். மற்றொரு இமாம் வந்து மீதி தொழுகையை பூர்த்தி செய்வார்.

ஆக.... நம் தமிழகத்தின் பெரும்பாலான சுன்னத் ஜமாத் பள்ளி வாசல்கள் மெக்கா ஹரமின் வழியை பின்பற்றுவதாகவே நினைக்கிறேன். எப்படியோ நபி அவர்களின் ஒரு சுன்னத் உயிர்ப்பிக்கப்படுகிறது.

சாதித் தீ பரவும் களம் ஆகிறதா கொங்கு மண்டலம்?ஓர் ஆதிக்க சமூகத்துக்கும் தலித் சமூகத்துக்கும் இடையே பிரச்சினை என்றால் அது தமிழகத்தின் தென் பகுதியிலேயேதான் நடந்திருக்க வேண்டும் என அறியப்பட்டு வந்த காலம் மலையேறிவிட்டது.

இதுநாள்வரை இருந்த அந்த கண்ணோட்டத்தை பொய்க்கச் செய்துள்ளது, அண்மையில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும், எழுத்தாள்ர் பெருமாள் முருகன் எழுத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சம்பவமும்.

மேற்கு மண்டலத்தில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும், தமிழகத்தின் அப்பிராந்தியம் சாதியம் சுடச்சுட பொங்கும் மையமாக உருவெடுத்து வருகிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

1990-களில் நடந்த சாதிச் சண்டைகளை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் எதிரொலியாக அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, அனைத்து பொது போக்குவரத்துக் கழகங்கள், அரசாங்க சாலைகள், அரசு கட்டிடங்களுக்கும் சாதித் தலைவர்கள் பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. சாதியின் பெயரில் பிளவு ஏற்படுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.

என்றாலும், இதுமட்டுமே சாதிய அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது அல்லவா? அப்படித்தான், கொங்கு மண்டலத்தில் அரங்கேறும் சாதிய அடக்குமுறைகள் இவ்விவகாரத்தில் தென் மாவட்டங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

பெருமாள் முருகனுக்கு என்ன நேர்ந்தது. அவரை சொந்த மண்ணில் இருந்து வெளியேற எது உந்தியது? சில சாதி அமைப்புகளால் பெருமாள் முருகனின் மாதொருபாகன் எதிர்க்கப்பட்டது எதற்காக? கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன? இதற்கான பதில்கள் கொங்கு மண்டலத்தில் சாதியத்தின் தாக்கத்தை விளக்கும்.

இவற்றுக்கெல்லாம் பலம் சேர்ப்பதுபோல், சாதி அமைப்புகள், சமூக வலைத்தளங்கள் தங்களது வகுப்புவாத தர்க்கங்களை பெரும் பிரிவினரிடம் எடுத்துச் செல்ல வெகு நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்கின்றன.

கொங்கு மண்டலத்தின் சாதியம் குறித்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை கூறும்போது, "கொங்கு மண்டலம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தோற்றப்பிழை. கொங்கு மண்டலத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிலநேரங்களில் சத்தமில்லாமலும், பல நேரங்களில் மிகுந்த வன்மத்துடன் இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன. பெருமாள் முருகனின் புறக்கணிப்பும், கோகுல்ராஜின் படுகொலையும் போதும் ஆதிக்க சாதியினரின் எண்ண ஓட்டத்தை எடுத்துரைக்க" எனத் தெரிவித்துள்ளார்.

அறியப்படாத அருந்ததியர்...

தலித் சமூகத்தின் இரு பெரும் பிரிவினரான பள்ளர், பறையர் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அதிகளவில் இருக்கின்றனர். கல்வியும், நிலமும் பள்ளர்களுக்கு ஒரு விதத்தில் சமூக அந்தஸ்தை அளித்திருக்கிறது என்றால், வடக்குப் பகுதியில் சில தலித் தலைவர்களால் பறையர் இனத்தவர் அரசியல் அடையாளம் பெற்றுள்ளனர்.

ஆனால், இவர்கள் இருவருக்கும் கிடைத்த இந்த அடையாளம்கூட அருந்ததியர் இனத்தவருக்கு கிடைக்கவில்லை. அருந்ததி இனத்தவர்கள் இன்னமும் இச்சமூகத்தினரால் அறியப்படவில்லை. அருந்ததி இனத்தவர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அருந்ததி இனத்தவரை இழிவுபடுத்தும் சொலவடைகள் கொங்கு மண்டலத்தில் பரவலாக, சர்வ சாதாரணமாக காணப்படுகின்றன.

அருந்ததி இனத்தவர் புறக்கணிப்பு குறித்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை கூறும்போது, "கோகுல்ராஜ் கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலையீடு அரசின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், கோகுல்ராஜூக்கு ஏற்பட்ட நிலை கொங்கு மண்டலத்தில் அருந்ததி இனத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஏற்பட்டிருந்ததால், விவகாரம் இதே அளவிளான வீச்சை பெற்றிருக்கும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்லமுடியாது" எனக் கூறியுள்ளார்.

அதேவேளையில் கொங்கு மண்டலத்தின் போக்கு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான கே.சுப்பராயன் கூறும்போது, "கொங்கு மண்டலத்தை தென் மண்டலத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாகாது. கொங்கு மண்டலத்தில், அண்மைகாலமாக உருவாகிவரும் சாதிய அடக்குமுறைகளுக்கு சில சாதிய சக்திகள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகளே காரணம்" என்றார்.

மேலும் அவர் கூறும்போது "ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்த பிராமண, தலித் தோழர்கள் கொங்கு மண்டல ஜவுளி தொழிற்சாலைகளில் பாகுபடின்றி பழகுவதையும், சமமாக அமர்ந்து உணவு உட்கொள்வதையும் நான் பார்த்திருக்கிறேன். உழைக்கும் வர்க்கத்தினரிடம் எந்த பாகுபாடும் இல்லை.

ஆனால், உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் சேர்க்காது என்பதால் அவர்களே உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் வகுப்புவாதத்தை தூண்டுகின்றனர். மாஞ்சோலை, வால்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுத்தது கம்யூனிஸ்டுகளே. ஆனால், காலப்போக்கில் அரசியல் அடையாளத்துக்கான வேட்கை தொழிலாளர்கள் சாதி சார்ந்த யூனியனில் இணைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளியிருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
09-07-2015

Thursday, July 09, 2015

தெலுங்கானா அரசின் 'ரமலான் அன்பளிப்பு'தீபாவளி பொங்கலுக்கு இலவசங்களை வாரி வழங்குகிறது நமது அரசு. தொழிலாளர்களுக்கு போனஸையும் தருகிறது. ஆனால் ரம்ஜானுக்கோ, பக்ரீத்துக்கோ, கிறிஸ்துமஸ்ஸூக்கோ வெறும் வாழ்த்தோடு நிறுத்திக் கொள்கிறது நமது அரசு. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதைத்தான் பார்த்து வருகிறோம்.

ஆனால் சந்திர சேகர ராவ் தலைமையில் அமைந்த அரசு தெலுங்கானாவில் அரசு சார்பில் இஸ்லாமியருக்கு ரமலான் அன்பளிப்பை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுபான்மை இன மக்களுக்கு தொடர்ந்து பல நல்ல திட்டங்களை சந்திர சேகர ராவ் அமுல்படுத்தி வருகிறார். மற்ற மாநில முதல்வர்களும் தெலுங்கானாவை பின் பற்றி அன்பளிப்புகளை வழங்க முன் வருவார்களா?

ஒரு சிறந்த அரசானது அனைத்து மத மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த மக்களுக்கும் அரசின் மீது ஒரு பிடிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். இந்த நல்ல முயற்சியை தொடங்கி வைத்திருக்கும் தெலுங்கானா அரசுக்கு இறைவன் மேலும் சிறந்த வழிகாட்டுதல்களை நல்குவானாக!

ஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது? - 7

இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்

அபூஉஸாமா

அல்லாஹ்வின் பண்புகளில் விளையாடுவது யூதர்களுக்குக் கைவந்த கலை! அந்த வேலையை அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் செய்கிறார்கள்.

இதே விளையாட்டை சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர் தாங்கிகளும் செய்கிறார்கள். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இவர்களது மவ்லிதுக் கிதாபுகள் திகழ்கின்றன. மவ்லிதுகளில் முஹ்யித்தீனுக்கு மறைவான ஞானத்தைக் கொடுத்து, அவரைக் கடவுளாக்கி அழகு பார்க்கின்றனர் என்பதை வரிசையாகப் பார்த்தோம்.

இது யூத, ஷியா, சு.ஜ. அணியினர் இறைக் கொள்கையில் விளையாடும் விளையாட்டுக்கள் ஆகும். இந்த அணியினர் இறைத் தூதர் குறித்த கொள்கை விஷயங்களில் காட்டுகின்ற விளையாட்டைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் வசனங்களை மறுப்பது, அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டுகின்ற இறைத்தூதர்களை இழிவுபடுத்துவது, அவர்களைக் கொலை செய்வது போன்றவையெல்லாம் யூதர்களுக்கு சகஜமான ஒன்று! இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

"மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப் படுத்துவான்'' என்று நீங்கள் கூறிய போது, "சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு'' என்று அவர் கூறினார். அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் 2:61

இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் யூதர்களின் இந்தச் செயல்பாட்டை, இவர்களது வாரிசுகளான ஷியாக்களும் செய்கின்றனர்.

யூசுப் தம்மார் வழியாக கலீனீ அறிவிப்பதாவது:

நாங்கள் அபூஅப்துல்லாஹ் உடன் ஓர் அறையில் ஷியா ஜமாஅத்தினர் சகிதமாக அமர்ந்திருந்தோம். அப்போது அவர், "ஓர் உளவாளி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார். உடனே நாங்கள் வலப் பக்கமும், இடப் பக்கமும் திரும்பிப் பார்த்து விட்டு, "உளவாளி யாரும் இல்லையே!'' என்று சொன்னோம். அதற்கு அவர், "கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கட்டமைப்பின் நாயன் மீது ஆணையாக! நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன். இவ்விருவருக்கும் தெரியாதவற்றை அவர்களிடம் தெரிவித்திருப்பேன். ஏனெனில் மூஸாவும், கிழ்ரும் நடந்து முடிந்தவை பற்றிய ஞானம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தனர். அடுத்து நடப்பவை, கியாமத் நாள் வரை நடக்கவிருப்பவை பற்றிய ஞானம் அவ்விருவருக்கும் வழங்கப் படவில்லை'' என்று பதிலளித்தார்.

கலீனீ மீண்டும் அறிவிப்பதாவது:

"வானங்கள், பூமியில் உள்ள வற்றை நான் நன்கு அறிகிறேன். சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் நான் நன்கு அறிகிறேன். நடந்ததையும், நடக்கவிருப்பதையும் நான் நன்கு அறிகிறேன்'' என்று அப்துல்லாஹ் கூறினார்.

நூல்: அல்காஃபி ஃபில் உசூல்

பாகம்: 1, பாடம்: நடந்தவற்றை அறிகின்ற இமாம்கள்

"நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித் திருப்பேன்'' என்று ஷியா இமாம் கூறுகின்றார். இதிலிருந்து ஷியாக்களின் திமிர்த்தனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இவரது இந்த வார்த்தைகளின் வக்கிரத்தைத் தெரிந்து கொள்ள திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் இடம் பெறும் மூஸா, கிழ்ர் ஆகியோர் தொடர்பான சம்பவத்தை முழுமையாக நாம் பார்ப்பது அவசியம்.

மூஸா, கிழ்ர் சம்பவம்

அவ்வூரார் அநீதி இழைத்த போது அவர்களை அழித்தோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு காலக்கெடுவையும் ஏற்படுத்தினோம்.

"இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும் வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது என் பயணத்தை நீண்ட காலம் தொடர்வேன்'' என்று மூஸா தமது ஊழியரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

இரண்டு கடல்கள் சங்கமம் ஆகும் இடத்தை அவ்விருவரும் அடைந்த போது தமது மீனை மறந்தனர். அது கடலைப் பிளந்து தனது பாதையை அமைத்துக் கொண்டது.

அவ்விருவரும் கடந்து சென்ற போது "காலை உணவைக் கொண்டு வாரும்! இந்தப் பயணத்தில் பெரும் சிரமத்தை அடைந்து விட்டோம்'' என்று தமது ஊழியரிடம் (மூஸா) கூறினார்.

"நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார்.

"அதுவே நாம் தேடிய இடம்'' என்று (மூஸா) கூறினார். இருவரும் பேசிக் கொண்டே வந்த வழியே திரும்பினார்கள்.

(அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம்.

"உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா?'' என்று அவரிடம் மூஸா கேட்டார்.

"என்னிடம் பொறுமையாக இருக்க உமக்கு இயலாது; உமக்குத் தெரியாத விஷயத்தில் உம்மால் எவ்வாறு பொறுமையாக இருக்க இயலும்?'' என்று (அந்த அடியார்) கூறினார்.

"அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்! உமது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்ய மாட்டேன்'' என்று (மூஸா) கூறினார்.

"நீர் என்னைப் பின்பற்றினால் நானாக உமக்கு இது பற்றிய விளக்கத்தைக் கூறும் முன் என்னிடம் கேட்கக் கூடாது'' என்று (அந்த அடியார்) கூறினார்.

இருவரும் நடந்தனர். இருவரும் ஒரு கப்பலில் ஏறியவுடன் (அந்த அடியார்) அதில் ஓட்டை போட்டார். "இதில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காக நீர் ஓட்டை போடுகிறீரா? மிகப் பெரிய காரியத்தைச் செய்து விட்டீரே'' என்று (மூஸா) கூறினார்.

"என்னுடன் உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என நான் உமக்குக் கூறவில்லையா?'' என்று (அந்த அடியார்) கேட்டார்.

"நான் மறந்ததற்காக என்னைப் பிடித்து விடாதீர்! என் விஷயத்தில் சிரமத்தை ஏற்படுத்தி விடாதீர்!'' என்று (மூஸா) கூறினார்.

இருவரும் நடந்தனர். ஓர் இளைஞனைக் கண்ட போது (அந்த அடியார்) அவனைக் கொன்றார். "எந்த உயிரையும் கொல்லாத ஒரு தூய உயிரைக் கொன்று விட்டீரே! தகாத காரியத்தைச் செய்து விட்டீரே'' என்று (மூஸா) கூறினார்.

"நீர் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என உம்மிடம் நான் கூறவில்லையா?'' என்று (அந்த அடியார்) கேட்டார்.

"இதன் பிறகு எதைப் பற்றியேனும் நான் உம்மிடம் கேட்டால் என்னுடன் நீர் உறவு வைக்க வேண்டாம். என்னிடமிருந்து (போதுமான) சமாதானத்தைப் பெற்று விட்டீர்'' என்று (மூஸா) கூறினார்.

அவ்விருவரும் நடந்தனர். முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அங்கே விழுவதற்குத் தயாரான நிலையில் ஒரு சுவரைக் கண்டனர். உடனே (அந்த அடியார்) அதை (தூக்கி) நிறுத்தினார். "நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்று இருக்கலாமே'' என்று (மூஸா) கூறினார்.

"இதுவே எனக்கும் உமக்கும் இடையே பிரிவாகும். உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன்.

அந்தக் கப்பல் கடல் தொழில் செய்யும் சில ஏழைகளுக்குரியது. அவர்களுக்குப் பின்னே ஓர் அரசன் இருக்கிறான். அவன் (பழுதில்லாத) ஒவ்வொரு கப்பலையும் அபகரித்து எடுத்துக் கொள்வான். எனவே அதைப் பழுதாக்க நினைத்தேன்.

அந்த இளைஞனின் பெற்றோர் நம்பிக்கை கொண்டிருந்தனர். "அவன் அவ்விருவரையும் (இறை) மறுப்பிலும் வழி கேட்டிலும் தள்ளி விடுவான்'' என்று அஞ்சினோம்.

"அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனை விடச் சிறந்த தூய்மையான நெருங்கி உறவாடக் கூடியவனைப் பகரமாகக் கொடுப்பான்'' என நினைத்தோம்.

அந்தச் சுவர் அந்நகரத்தில் உள்ள இரண்டு அனாதைச் சிறுவர்களுக்கு உரியது. அதன் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்லவராக இருந்தார். "எனவே அவ்விருவரும் பருவமடைந்து அவர்களுக்குரிய புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று உமது இறைவன் நாடினான். இது உனது இறைவனின் அருள். இதை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கம் இதுவே!'' (என்றார்)

அல்குர்ஆன் 18:59-82

இந்த வசனங்கள் மூஸா (அலை), கிழ்ர் தொடர்பான சம்பவத்தைப் பற்றிக் கூறுகின்றன. புகாரியில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் இந்த வசனங்களுக்கு விளக்கமாக அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள்:

(ஒரு முறை) நபி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே (உரையாற்றியபடி) நின்று கொண்டிருந்த போது அவர்களிடம், "மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?'' என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் "நானே மிகவும் அறிந்தவன்'' என்று பதிலளித்து விட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள் "(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு'' என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள்.

எனவே அல்லாஹ் "இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகமாக அறிந்தவர்'' என்று அறிவித்தான். மூசா (அலை) அவர்கள் "என் இறைவா! அவரை நான் சந்திக்க என்ன வழி?'' என்று கேட்டார்கள். அதற்கு, "கூடை ஒன்றில் ஒரு மீனை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்! நீங்கள் அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீர்களோ அங்கே தான் அவர் இருப்பார்'' என்று அவர்களிடம் கூறப்பட்டது.

அவ்வாறே மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளர் யூஷஉ பின் நூன் என்பாரையும் அழைத்துக் கொண்டு ஒரு கூடையில் மீனைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். இருவரும் ஒரு பாறைக்கருகில் வந்து சேர்ந்த போது அங்கு இருவரும் தலை வைத்து உறங்கினர். கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துவிட்(டுச் சென்று விட்)டது. மூசா (அலை) அவர்களுக்கும், அன்னாருடைய உதவியாளருக்கும் (அந்தப் பாதை) வியப்பாய் அமைந்தது. இந்நிலையில் அன்றைய மீதிப் பொழுதிலும், இரவிலும் அவர்கள் (தொடர்ந்து) நடந்தனர்.

மறுநாள் பொழுது விடிந்த போது மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம் "நமது காலைச் சிற்றுண்டியை கொண்டு வாரும்! நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்றார்கள். தமக்குக் கட்டளையிடப் பட்டிருந்த இடத்தைக் கடக்கும் வரை மூசா (அலை) அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை. அவர்களுடைய உதவியாளர் "நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தோமே! பார்த்தீர்களா? அங்கே தான் நான் அந்த மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதனை நான் (உங்களிடம்) கூறுவதை ஷைத்தான் தான் எனக்கு மறக்கடித்து விட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தனது பாதையை அமைத்துக் கொண்டது'' என்றார். மூசா (அலை) அவர்கள், "நாம் தேடி வந்த இடம் அது தான்'' என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் தமது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்த வழியே) திரும்பிச் சென்றனர். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறைக்கு வந்த போது அங்கே, முழுவதுமாக ஓர் துணியால், அல்லது தமது ஆடையால் தம்மைப் போர்த்தியபடி ஒரு மனிதர் (கிழ்ர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர், "உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்?)'' என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான் தான் மூசா'' என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா?'' என்று கேட்டார்.

மூசா (அலை) அவர்கள், "ஆம்' என்று பதிலளித்துவிட்டு, "உங்களுக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின் தொடர்ந்து வரட்டுமா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், "நிச்சயமாக உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன்'' என்று கூறினார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமை யாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்ய மாட்டேன்'' என்றார்கள்.

இருவரும் மரக்கலம் ஏதும் தங்களிடம் இல்லாததால் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு மரக்கலம் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள், தங்கள் இருவரையும் (மரக்கலத்தில்) ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (மரக்கல உரிமையாளர் களால்) கிழ்ர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டார்கள். எனவே, அவர்கள் இருவரையும் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக் கொண்டனர்.

அப்போது ஒரு சிட்டுக் குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, (தனது சின்னஞ் சிறு அலகால்) கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் கிழ்ர் (அலை) அவர்கள் "மூசாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில் தான் உள்ளது'' என்று கூறினார்கள்.

(சற்று நேரம் கழிந்ததும்) கிழ்ர் (அலை) அவர்கள் அந்த மரக்கலத்தின் (அடித்தளப்) பலகைகளில் ஒன்றை வேண்டுமென்றே கழற்றி (அந்த இடத்தில் முளைக் குச்சியை அறைந்து) விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் "நம்மைக் கட்டணம் ஏதுமில்லாமல் ஏற்றிக் கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே பின்னப்படுத்தி விட்டீர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள், "என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் (முன்பே) சொல்ல வில்லையா?'' என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான் மறந்து போனதற்காக என்னைத் தண்டித்து விடாதீர்கள்'' என்று கூறினார்கள்.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) முதல் தடவை மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்.

(பிறகு இருவரும் மரக்கலத்தில் இருந்து வெளியேறி கடலோரமாக) நடந்து போய்க் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞன் சில இளைஞர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிழ்ர் (அலை) அவர்கள் அவனது உச்சந் தலையைத் திருகி தலையைத் தனியே எடுத்து விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் "ஒரு பாவமும் செய்யாத உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே!'' என்று கேட்டார்கள். அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள், "நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) நான் உங்களிடம் சொல்லவில்லையா?'' என்று கேட்டார்கள். மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்தார்கள்.

இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அவ்வூர் மக்களிடம் உண்ண உணவு கேட்டார்கள். ஆனால், அவ்வூரார் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில் அவ்வூரில் சாய்ந்தபடி கீழே விழயிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைக் கண்ட) கிழ்ர் (அலை) அவர்கள் அச்சுவரைத் தமது கரத்தால் செப்பனிட்டார்கள். மூசா (அலை) அவர்கள், "நீங்கள் நினைத்தால் இதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே!'' என்றார்கள். கிழ்ர் (அலை) அவர்கள், "இது தான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய கட்டம்'' என்று கூறினார்கள்.

(இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்த பின்) நபி (ஸல்) அவர்கள், "மூசா பொறுமையாக இருந்திருப்பார் என்றால் அவ்விருவர் பற்றிய (நிறைய) விஷயங்களை (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே! என நாம் விரும்பினோம்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 122

இந்தச் சம்பவத்தில் "மூசாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில் தான் உள்ளது'' என்ற கிழ்ரின் உதாரணம் இங்கு மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

அல்லாஹ் தான் மிகவும் தெரிந்தவன்; அறிந்தவன் என்று கூறுவதற்குப் பதிலாக, "நானே மிக அறிந்தவன்' என்று மூஸா (அலை) கூறி விட்டார்கள். உண்மையில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் அன்றைய தினம் மூஸாவைத் தவிர்த்து அறிவில் சிறந்தவர் வேறு யாருமில்லை தான். அதனால் யதார்த்தமாக, தன்னை அறிந்தவர் என்று குறிப்பிட்டது சரியானது தான். என்றாலும் இதில் ஆணவம் தொனிக்கின்றது. இது அல்லாஹ்வுக்குப் பிடிக்கவில்லை.

அதனால் அவர்களை கிழ்ரைச் சந்திக்கச் செய்கின்றான். அவ்வாறு சந்திக்கச் செல்கின்ற போது வழியில் அவர்களுக்கு மறதி ஏற்படுகின்றது. இந்த மறதியை அல்லாஹ்வே அவர்களுக்குக் கொடுத்து, இவ்வாறு மறதி உடையவர் எவ்வாறு மிகவும் அறிந்தவராக முடியும்? என்பதை உணர்த்துகின்றான். இதற்குப் பின்னால், மூஸா (அலை) அவர்கள் தாம் குறிப்பிட்ட அந்த வார்த்தைக்காக மிகக் கடுமையான முறையில், திரும்பத் திரும்ப கிழ்ர் அவர்களால் கண்டிக்கப்படுகிறார்கள்.

தாங்கள் இருவரும் கற்ற கல்வி, இந்தச் சிட்டுக் குருவி தனது அலகினால் கடலில் அள்ளிய தண்ணீரின் அளவு தான் என்பதை மூஸாவிடம் கிழ்ர் அவர்கள் அடக்கத்துடன் தெரிவிக்கின்றார்கள்.

ஆணவத்தை, அகந்தையை அடித்து நொறுக்குகின்ற இந்தச் சம்பவத்திலிருந்து அடக்கத்தை, பணிவைப் பெறுவதற்குப் பதிலாக ஷியாக்கள் மேலும் ஆணவத்தைப் பெறுகிறார்கள். இதிலிருந்து தங்களின் மூலம் யூதயிஸம் தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றனர்.

கழுதைக்குத் தெரியாது கற்பூர வாசனை

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

அல்குர்ஆன் 62:5

இந்த வசனப்படி யூதர்கள் பொதி சுமக்கும் கழுதைகள்! தான் சுமக்கும் சுவடிகளிலிருந்து அவை எதையும் அறிவதில்லை. இது யூதர்களின் நிலை! ஷியாக்களும் அதே நிலையைத் தான் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கும் குர்ஆனின் இந்தப் போதனைகள் புரியவில்லை.

அதனால் தான் படிப்பினையும், பாடமும் பெற வேண்டிய இந்தச் சம்பவத்தின் மூலம் அதற்கு நேர் மாற்றமான ஒரு விஷக் கருத்தை அள்ளி வைக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் பண்புகளிலேயே விஷச் சிந்தனையைக் கலக்கும் இவர்கள், அவனது தூதரின் விஷயங்களில் விஷத்தைக் கலக்காமல் இருப்பார்களா?

இதைப் போன்ற கருத்து ஷாதுலிய்யா ராத்திபு கிதாபுகளிலும் உள்ளது. அதை இனி பார்ப்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ் ...........

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வில் மோடி பற்றிய கார்ட்டூன்!

மிருகங்களின் பாஷையை நபிகள் நாயகம் அறிவாரா?

//Nazeer Ahamed அண்ணாச்சி.....
விலங்கினத்துலயும் காபிர் அம்சம் அல்லது சாத்தான் அம்சம் கொண்ட விலங்கினம் இருக்குதா???
இல்லியா???//

மனிதர்களுக்குத்தான் நன்மை எது? தீமை எது? என்ற பிரித்தறியும் தன்மையை கொடுத்துள்ளான் இறைவன். ஒரு மாடு உங்கள் வீட்டு வைக்கோலையும் தின்னும். எனது வீட்டு வைக்கோலையும் தின்னும். நமது முதலாளியின் வீட்டு வைக்கோல் எது என்று பகுத்தறியும் அறிவு கொடுக்கப்படவில்லை. ஆனால் தனது எஜமானனின் வீடு எது என்பதை அது விளங்கிக் கொள்ளும். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் அறிவில் உள்ள வேறுபாட்டை புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

//முகம்மது தான் மனிதன்தான் அப்படின்னு அவரும் குரான்ல சொல்லியிலுக்காரு.. நீங்களும் அப்படித்தான் சொல்றீங்க.....
அதான் இப்போ பிரச்சனை.....
முகம்மதுவுக்கு மிருக பாஷை தெரியுமா???
தெரியாதா???//

நபிகள் நாயகம் உங்களையும் என்னையும் போன்ற ஒரு மனிதர்தான். அவருக்குள்ள தனிச் சிறப்பே அவருக்கு இறைவனிடம் இருந்து வரும் செய்திகள்தான்.

பல நேரம் சாதாரண மனிதராகத்தான் இருப்பார். இறை செய்தி வரக் கூடிய சில நேரங்களில் மனிதர்களுக்கு குர்ஆனை விளக்கும் சமயங்களில் இறைத் தூதராக விளக்கம் அளிப்பார்.

இறை செய்தியின் மூலம் மிருகங்களின் பாஷையையும் அறியும் ஆற்றல் பெற்றவர் நபிகள் நாயகம். ஆனால் எல்லா நேரமும் இந்த சக்தி அவருக்கு இருக்காது. இறைவன் சொல்லிக் கொடுத்தால் அதன் அடிப்படையில் மிருகங்களின் பாஷையையும் நபிகள் நாயகம் அறிவார்.

நபிகள் நாயகம் அவர்களிடம் ஒரு ஒட்டகம் இருந்தது. 'அள்பா' என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஒரு கிராம வாசி ஒரு ஒட்டகத்துடன் வந்தார். அவரது ஒட்டகத்துக்கும், நபிகள் நாயகத்தின் ஒட்டகத்துக்கும் வைக்கப்பட்ட போட்டியில் அக்கிராம வாசியின் ஒட்டகம் முந்திச் சென்றது. இது முஸ்லிம்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. இதனை அறிந்து கொண்ட நபிகள் நாயகம் அவர்கள் 'இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கையாகும்' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2872, 6501

'உயருகின்ற ஒவ்வொரு பொருளும் ஒரு நாள் இறங்கியே ஆக வேண்டும்' என்னே அற்புதமான வாசகம்!

தனது ஓட்டகம் தோற்றது தான் சரி. இப்படித் தோல்வி ஏற்படுவது தான் நல்லது என்று போட்டியில் பங்கெடுத்த எவரேனும் கூறுவதுண்டா?

இந்த ஒட்டகத்தை எந்த ஒட்டகத்தினாலும் முந்த முடியாது என்ற நிலையே கர்வத்தின் பால் கொண்டு செல்லும் என இம்மாமனிதர் நினைக்கிறார். கோழிச் சண்டையில் தனது கோழி வெற்றி பெற வேண்டும் என்று சாதாரண மனிதன் விரும்புவானே அந்த விருப்பம் கூட இவருக்கு இருக்கவில்லை. தன்னை ஒரு சாதாரண மனிதராகவே காட்டிக் கொண்டார் என்பது இந் நிகழ்விலிருந்து நமக்கு தெரிகிறது.

Wednesday, July 08, 2015

இஃப்தார் உணவு வழங்கலில் அமெரிக்க மாணவர்கள்!அமெரிக்காவில் கல்லூரியில் பாடங்கள் பயின்று வரும் சவுதி மாணவர்கள் தங்களின் ஓய்வு நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க ரமலானுக்கு கூட்டாக சவுதி வருகை புரிந்தனர். மாலை நேரங்களில் நோன்பு திறப்பவர்களுக்கு உணவுகளை இலவசமாக வழங்கும் பணியில் தாங்களாகவே முன் வந்து சேவையில் ஈடுபட்டனர். ஏழைகளுக்கு உணவு உடை போன்றவற்றையும் இலவசமாக வழங்கினர்.

நம் நாட்டு கல்லூரி மாணவர்களும் இதனை பின்பற்றலாமே!

தகவல் உதவி
சவுதி கெஜட்
07-07-2015

Tuesday, July 07, 2015

என் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பிய தருணங்கள்!எனது பழைய நண்பர். நான் கணிணி கற்றுக் கொள்ள ரியாத்தில் உள்ள எனது ரூமுக்கே வந்து இலவசமாக பாடம் எடுத்தவர். ஒரு நாள் சவுதியின் ரியாத் நகரில் ரமலான் மாதத்தில் ரோட்டை க்ராஸ் செய்த போது வாகனம் மோதி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . விஷயம் கேள்விப் பட்டவுடன் விடுமுறை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரியிலேயே இருந்தேன். உயிர் பிரிந்தது. மறு நாள் எனது நண்பனின் உடலை நஸீம் மைய வாடியில் அடக்கம் செய்து விட்டு வந்தோம்.

எனது நண்பனுக்கு இரண்டு குழந்தைகள். நண்பனின் மனைவிக்கு ஓரிரு வருடத்தில் வேறொரு நல்ல மணமகனைப் பார்த்து மறுமணம் செய்து கொடுத்து விட்டனர். தற்போது நண்பனின் மனைவியும் குழந்தைகளும் நலமாக உள்ளனர். ஆனால் நண்பனின் தாயாரும் அவரது தங்கையும் தனியாக வீட்டில் உள்ளனர். தந்தை இறந்து விட்டார். இதை எல்லாம் கேள்விப்பட்ட நண்பனின் ஓனர் (கபில்) வருடாவருடம் ரமலானில் தாயாருக்கு பணம் அனுப்புவார். வேலை செய்யும் நாட்களில் மிகவும் சிரத்தையாக வேலை செய்து கம்பெனியை முன்னுக்கு கொண்டு வந்ததால் எனது நண்பனின் மீது மிகுந்த பாசம். இறந்தவுடன் பல லட்சங்களை தாயார் பெயருக்கு அனுப்பி வைத்தார். அது அல்லாமல் வருடாவருடம் ரமலானில் பண உதவி செய்வார். என் மூலமாகத்தான் அந்த பணம் தாயாரை சென்றடையும். நான் சவுதியில் இருக்கும் போது எனது தாயாருக்கு அனுப்பி பணத்தை கொடுக்கச் சொல்வேன். அது போல் இந்த முறையும் ரமலானில் பணம் வந்தது. 17000 ஆயிரம் இந்திய ரூபாய் எனது பெயருக்கு வந்தது.

தற்போது ஊரில் இருப்பதால் சவுதி முதலாளி கொடுத்த பணத்தை நானே நேரில் சென்று அந்த தாயிடம் எனது கையால் கொடுத்தேன்.. மகனை நினைத்து அழுதார். எனக்கும் கண் கலங்கியது. 'உங்களை எல்லாம் பார்க்கும் போது இறந்து போன எனது மகனைப் பார்ப்பது போல் உள்ளது. அடிக்கடி வந்து போய்க் கொண்டிருங்கள்' என்று விடை கொடுத்தார். கனத்த மனத்தோடு எனது நண்பனின் வீட்டிலிருந்து வெளியேறினேன்.

எத்தனையோ பணம் படைத்தவர்கள் சம்பளம் தராது ஏமாற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் பல வருடங்களுக்கு முன்பு இறந்த ஒரு தொழிலாளிக்காக இன்றும் மறக்காமல் பண உதவி செய்து வரும் அந்த அரபியை நினைத்துப் பார்தேன். இறைவனிடம் இது போன்று பலருக்கும் தயாள குணத்தை தந்துதவும்படி பிரார்த்தித்தேன்.

"நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம் “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்”

(அல்-குர்ஆன் 63:9,10)

வியாபம் முறைகேடு தொடர்பாக அடுத்தடுத்து கொலைகள்!வியாபம் முறைகேடு தொடர்பாக கடும் விமர்சனங்களுக்குப் பிறகு, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, “சில துரதிர்ஷ்டமான மரணங்களுக்குப் பிறகு மக்கள் மனதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. கேள்விகளுக்கு நியாயமான விடை கிடைக்க வேண்டும். நான் இந்த விவகாரம் குறித்து இரவு முழுதும் சிந்தித்தேன், எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடைகள் தேவை. எனவே தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றார்.

சிபிஐ விசாரணையில் வியாபம் தொடர்பாக நிகழ்ந்த சில அகால மரணங்களும் அடங்குமா என்ற கேள்விக்கு, “அனைத்து விஷயங்களையும் சிபிஐ விசாரிக்கும்” என்றார்.

மத்தியப் பிரதேசம் தொழில் முறை தேர்வு வாரியம் (எம்பிபிஇபி), மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர் தேர்வு வாரியமாகச் செயல்படுகிறது. மருத்துவத் துறை நியமனங்களுக்கான தேர்வுகளையும் இது நடத்துகிறது. 'வியாபம்' எனவும் அறியப்படும் இந்த வாரியத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது.

வியாபம் முறைகேட்டில் தொடர்புடைய இளம்பெண் ஒருவர் ரயில்வே பாதை அருகே மர்மமான முறையில் கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்து கிடந்தார். அப்பெண்ணின் பெற்றோரிடம் 3 நாட்களுக்கு முன் பேட்டியெடுத்துக் கொண்டிருக்கும்போதே நிருபர் அக்ஷய் சிங் திடீரென வாயில் நுரைதள்ளி இறந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே மருத்துவக் கல்லூரி டீன் அருண் சர்மா இறந்தது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 'வியாபம்' ஊழல் தொடர்பாக இதுவரை 34 பேர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வியாபம் மர்ம மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்வதாக முதல்வர் சவுகான் தெரிவித்ததை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. இதுவும் உண்மையை மறைக்க செய்யும் முயற்சியே என்றும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை மட்டுமே நியாயம் வழங்கும் என்றும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

இதனிடையே, மத்தியப் பிரதேசத்தின் வியாபம் ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரும் திக்விஜய் சிங் உள்ளிட்டோரின் மனுக்களை ஏற்ற உச்ச நீதிமன்றம், இது தொடர்பான விசாரணை வரும் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-07-2015

தற்போது 40 க்கும் மேல் இந்த கொலை பட்டியல் நீண்டு செல்கிறது. இந்திய வரலாற்றிலேயே இது போன்ற மோசமான படு கொலைகள் அரசு தரப்பில் நடந்திருக்குமா என்பது சந்தேகமே? இந்த கொலைகளுக்கு பின்னணியில் ஆர் எஸ் எஸ் ஸின் பங்கும் உள்ளதாக காங்கிரஸின் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருப்பதையும் ஒதுக்கி விட முடியாது. தங்களுக்கு ஒத்து வரவில்லை என்றால் சக அமைச்சர்களையே போட்டு தள்ளி விடுவது இந்துத்வாவாதிகளுக்கு புதிய செய்தி அல்ல. குஜராத்தில் ஹரேண் பாண்டியா கொலையே ஒரு சிறந்த உதாரணம். சிபிசிஐடி முறையாக விசாரித்தால் பல ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு இந்த மோசடியிலும் கொலைகளிலும் தொடர்பு உள்ளது வெட்ட வெளிச்சமாகும். மோடியின் ஆட்சி வந்தால் இந்துக்களுக்குத்தான் அதிக ஆபத்து என்று முன்பு பலர் கூறியது தற்போது நிரூபணமாகி வருகிறது. இன்னும் என்ன என்ன பயங்கர வாத செயல்களை ஆர் எஸ் எஸ் நிகழ்த்தப் போகிறதோ பொறுத்திருந்து பார்போம்.

http://www.coastaldigest.com/index.php/news/77100-vyapam-scam-a-rss-strategy-to-induct-its-cadres-in-jobs-digvijaya-singh

Monday, July 06, 2015

4 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்த கொடூரம்:இளைஞர்கள் சிலர், நான்கு வயது சிறுவனுக்கு டம்ளரில் மதுவை ஊற்றி கொடுக்கும் காட்சி “வாட்ஸ்அப்”, “பேஸ் புக்”கில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

1 நிமிடம் 37 விநாடிகள் ஓடிய காட்சியில், சிறுவனை வலுக்கட்டாயமாக மது குடிக்க வலியுறுத்துவதும், குடித்து முடித்ததும் டம்ளரை வேகமாக சிறுவன் வீசி எறிவதும் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் மற்றும் இளைஞர்கள் மது குடிக்கும் இடம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு வாகனத்தில் “TN25 AJ 8209” என்ற பதிவு எண் இருந்தது. அந்த வாகனம், திருவண்ணாமலை மாவட்ட பதிவு எண் கொண்டது. இதனால், தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் இந்த வாட்ஸ்அப் காட்சிகள் நேற்று கிடைத்துள்ளது.

அந்த காட்சியை பார்த்த, திருவண்ணாமலை ஆட்சியர் அ.ஞானசேகரன் அதிர்ச்சி அடைந் துள்ளார். உடனடியாக, வாகன பதிவு எண் குறித்து விசாரணை நடத்தி, அந்த வாகனம், போளூர் வட்டம் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் செந்தில் என்பவருக்குச் சொந்தமானது என்பதை ஆட்சியர் உறுதி செய்தார். இதையடுத்து சிறுவன் மது குடிக்கும் காட்சி மற்றும் சேகரிக்கப்பட்ட தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னியிடம் தெரிவித்து உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், போளூர் டிஎஸ்பி கணேசன், கடலாடி காவல்நிலைய ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை முயற்சி வழக்கு மற்றும் குழந்தை கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செந்தில்(24), பிரேம்குமார்(22) ஆகிய 2 பேர் கைது செய்யப் பட்டனர்.

தனிப்படை போலீஸார் கூறும் போது, “4 வயது சிறுவனை மது குடிக்க வைத்ததாக மேல்சோழங் குப்பம் கிராமத்தில் வசிக்கும் செந்தில், பிரேம்குமாரை கைது செய்து விசாரித்ததில் முழு விவரம் தெரியவந்தது.

மது குடித்த சிறுவனின் தந்தை ஆனந்தன் மற்றும் தாய் ஈஸ்வரி ஆகியோர் கட்டுமானத் தொழிலாளி கள். சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஈஸ்வரியின் தந்தை சின்னபையன், தாயார் முனியம்மாள் ஆகியோரது பராமரிப்பில் சிறுவன் வளர்ந்து வருகிறான். அங்கன்வாடிக்கு சென்று படிக்கிறான்.

23-06-15 அன்று ஆடு மேய்க்கச் சென்ற பாட்டி முனியம்மாள், தனது பேரனையும் அழைத்துச் சென்றுள்ளார். மேல்சோழங்குப்பம் ஏரி அருகே உள்ள காலி இடத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவனை அவனது தாய்மாமன் முருகன் அழைத்துச் சென்றுள்ளார். மரத்தடியில் சிறுவனை உட்கார வைத்து, வாங்கி வைத்திருந்த பீர் நிரப்பப்பட்ட டம்ளரை கொடுத்து இளைஞர்கள் சிலர் குடிக்க செய்துள்ளனர். இந்த செயலில் ஏழுமலை மற்றும் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்சியை தனது செல்போன் மூலமாக பிரேம்குமார் படம் பிடித்துள்ளார். பின்னர் அவர், அதனை மணிகண்டன் என்ப வருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் மூலமாக சிறுவன் பீர் குடிக்கும் காட்சி வேகமாக பரவி உள்ளது. இந்த சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறோம். ஏழுமலையின் இருசக்கர வாகனம், பிரேம்குமாரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

வழக்கறிஞர் பாசறை பாபு கூறும்போது, “பள்ளி மாணவர்கள் மது குடிப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் 4 வயது சிறுவனுக்கு குடி பழக்கத்தை ஏற்படுத்தும் செயல் மன்னிக்க முடியாதது. மது பழக்கத்தை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. ஏற்கெனவே 2 தலைமுறைகளை ஆட்சியாளர்கள் அழித்துவிட்டனர். இப்போது உருவாகும் புதிய தலைமுறையும் அழிவின் பாதைக்கு சென்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது. பள்ளிக்கூடங்களில் நீதிக் கதைகள் கற்றுத் தருவது இல்லாமல் போய் விட்டது. அதை கற்றுக்கொடுத்து நல் ஒழுக்கம் உள்ள சமுதாயத்தை பாட சாலைகள் உருவாக்க வேண்டும்” என்றார்.

கண்டனம்

இந்த சம்பவத்துக்கு கண்ட னம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆகியோர் குற்றவாளிகள் மீது கடும் நட வடிக்கை வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-07-2915

Sunday, July 05, 2015

ராணுவ சேவையிலும் தொழுகையை விடாத எகிப்தியர்கள்!இறைவன் கடமையாக்கிய தொழுகைகளை நம்மில் பலர் அலட்சியப்படுத்துகிறோம். ஆனால் இங்கு எகிப்து நாட்டின் ராணுவ வீரர்கள் போர்க் களங்களிலும், ராணுவ ஒத்திகை நிகழ்ச்சிகளிலும் இறைவன் கொடுத்த கடமையான தொழுகைகளை தவற விடுவதில்லை.