Followers

Tuesday, August 30, 2016

கரூரில் மாணவி சோனாளி தாக்கப்பட்டு இறந்துள்ளார்!

கரூரில் மாணவி சோனாளி தாக்கப்பட்டு இறந்துள்ளார்!

பரமக்குடியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மாணவி சோனாளியை ஒரு தலையாக காதலித்துள்ளார். மாணவி மறுக்கவே கோபப்பட்டு கல்லூரிக்குள் நுழைந்து கட்டையால் மண்டையில் தாக்கியுள்ளார். ஆபத்தான நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி இறந்துள்ளார். உடலை வாங்க பெற்றோர் மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இது சற்று முன் கிடைத்த செய்தி.

உத்தர பிரதேச கான்பூரில் நடந்த மற்றொரு அவலம்!

உத்தர பிரதேச கான்பூரில் நடந்த மற்றொரு அவலம்!

மகனுக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ மனைக்கு கொண்டு வந்தார் தந்தை. மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதை தெரியாமலேயே அங்கும் இங்கும் அலைந்துள்ளார். மருத்துவமனை நிர்வாகம் ஸ்ட்ரெச்சர் தரவும் மறுத்து விட்டது. கடைசியில் சிகிச்சை பலனின்றி மகனை பறி கொடுத்துள்ளார் தந்தை.

Monday, August 29, 2016

பசுக்களை பாதுகாக்க 10 ஆம்புலன்ஸ்கள்! மனிதனுக்கு....

பசுக்களை பாதுகாக்க 10 ஆம்புலன்ஸ்கள்! மனிதனுக்கு....

ஹாஜிகளுக்கு இந்த வருடம் மேலும் பல சவுகரியங்கள்!

ஹாஜிகளுக்கு இந்த வருடம் மேலும் பல சவுகரியங்கள்!

இந்த வருடம் ஹஜ் செய்பவர்களுக்கு சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் குடைகளை சவுதி அரசு வழங்க உள்ளது. இதன் மூலம் குடைக்குள்ளே

1.ஃபேன் வசதி

2. இரவில் வழி தெரிய டார்ச் லைட்.

3. செல் போன் சார்ஜ் செய்ய வசதி

4. யுஎஸ்பி வசதி

போன்ற அனைத்து வசதிகளோடு குடைகள் வழங்கப்பட உள்ளது. ஹாஜிகள் இதனை முறையாக பயன்படுத்திக் கொள்வார்களாக!

Sunday, August 28, 2016

நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா!பிஜேபி ஆளும் ஹரியானாவில் ரயிலில் அடிபட்டு ஒரு மூதாட்டி இறக்கிறார். போஸ்ட் மார்டம் செய்த அந்த ஊரில் வசதி இல்லை. அடுத்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லை. வேறு வண்டி வைக்க மகனிடம் பண வசதியும் இல்லை.

சடலத்தை ரயிலில் ஏற்றிச் செல்ல ரயில்வே நிர்வாகம் இரு பணியாளர்களை நியமிக்கிறது. சடலத்தை கட்டி தூக்க நீளம் இடைஞ்சலாக இருந்ததால் உடம்பு தொழிலாளர்களால் இரண்டாக உடைக்கப்படுகிறது. பின்னர் உடலை ஒரு பொட்டலமாகக் கட்டி தொழிலாளர்கள் எடுத்துச் சென்றனர்.

நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா!

உனக்கு நன்றாக தெரியும் பசியின் கொடுமை என்னவென்று!

உனக்கு நன்றாக தெரியும் பசியின் கொடுமை என்னவென்று!

துபாய் மன்னரின் எளிமையான நகர்வலம்!துபாய் மன்னரின் எளிமையான நகர்வலம்!

துபாய் மன்னர் தனது நாட்டில் மிக எளிமையாக மக்களோடு மக்களாக செல்வதை கண்டு ஆச்சரியமுறுகிறோம். இது எப்படி சாத்தியப்பட்டது? அந்த மன்னர் தனது முன் மாதிரியாக நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்டதால் இது சாத்தியமானது. நமது தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரின் அமைச்சர்கள் முதுகை வளைத்து மரியாதை செய்வதையும் காலில் விழுந்து வணங்குவதையும் தினமும் பார்க்கிறோம்.

மக்களாட்சியோ மன்னராட்சியோ மக்கள் சந்தோஷமாக உள்ள ஆட்சியே நமக்குத் தேவை!

இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பாலாஜி!குவைத்தில் சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்ற சகோதரர் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோது.......

பஹ்ரைன் மந்திரியின் இளகிய மனம் மோடிக்கு இல்லையே!பஹ்ரைன் மந்திரியின் இளகிய மனம் மோடிக்கு இல்லையே!

பஹ்ரைன் பிரதம மந்திரி இளவரசர் கலீபா பின் சல்மான் அமரர்ஊர்தி மறுக்கப்பட்ட டானா மஜ்ஹி என்பவருக்கு
நன்கொடை வழங்கினார்!!

இந்திய பிரதமமந்திரி நரேந்திரமோடி, இலட்சக்கணக்கான மெறுமதிமிக்க ஆடைகளை அணிந்துகொண்டு உலகை வலம்வந்துகொண்டிருக்கும் வேளையில், , அமரர்ஊர்தி மறுக்கப்பட்டதால் மனைவியின் உடலை தோள்களில் சுமந்துசென்ற நிகழ்வை பஹ்ரைனில் வெளிவரும் அல் பார் அல் ஹலீஜ் என்ற பத்திரிகைவாயிலாக தெரிந்துகொண்ட பஹ்ரைனின் இளவரசர் கலீபா பின் சல்மான், மிகவும் மனமுருகி பாதிக்கப்பட்ட இந்நபருக்காக ஏதாவது செய்யவேண்டுமென்று எண்ணினார்.

பஹ்ரைனிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்ட இளவரசர், பாதிக்கப்பட்ட மனிதருக்கு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கினார்.

நாளை அரபிகளில் ஒருவர் இந்த கிராமத்திற்கு அம்புலன்ஸ் வாங்கிகொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!!!!!!!!!!

12 வயது மகளை அழைத்துக்கொண்டு 12 கிலோமீட்டர். நடந்த பின்னர் , சிலநல்ல உள்ளங்களின் முயற்சியால் இவருக்கு, 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவருடைய கிராமத்திற்கு செல்வதற்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

அரபிகளின் தன்மை இத்தகையதுதான்.

இச்சம்பவம் குறித்து மோடி வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தபணம் பாதிக்கப்பட்ட மனிதரை சென்றடையுமா??அல்லது அரசியல்வாதிகள் ஆட்டயை போடுவார்களா???

தகவல் உதவி

#இன்று ஒரு தகவல் - பக்கம்

Saturday, August 27, 2016

ஹரியானா சட்டமன்றத்தில் அம்மண சாமியார்!ஹரியானா சட்டமன்றத்தில் அம்மண சாமியார்!

அம்மணமாக உலகில் அலைவது கேவலம். அறிவுடைய மக்கள் யாரும் மர்ம ஸ்தானங்களை மறைத்தே வாழ்வர். ஆனால் ஹரியானா சட்டமன்றத்தில் ஒரு அம்மண சாமியாரை அழைத்து பேச வைத்துள்ளார்கள். இந்துத்வாக்களை ஆட்சியில் அமர வைத்தால் என்னவெல்லாம் கேவலங்களை இந்த நாடு சந்திக்க வேண்டி வரும் என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு எடுத்துக்காட்டு.

Thursday, August 25, 2016

மாட்டுக்கு மரியாதை கொடுக்கும் ஒரு நாட்டில்.....

இறந்து போன தனது மனைவியின் உடலை தூக்க அமரர் ஊர்தி வராததால் தனது தோளிலேயே தனது மனைவியை சுமந்து வரும் ஒரு இந்தியக் குடிமகன். ஒடிசா மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

இந்த சோகக் காட்சியை படம் பிடிக்கத் தெரிந்தவர்களுக்கு ஒரு வாடகை காரை அமர்த்தத் தெரியவில்லை.

மாட்டுக்கு மரியாதை கொடுக்கும் ஒரு நாட்டில் மனிதனுக்கு மரியாதை ஏது?

சுதந்திர இந்தியாவின் அவலம் பாரீர்!


குஜராத்தின் உனாவில் ஏற்பட்ட தலித் எழுச்சி!குஜராத்தின் உனாவில் ஏற்பட்ட தலித் எழுச்சி!

கடந்த ஆகஸ்ட் 15 ந்தேதியன்று குஜராத்தின் உனாவில் நடந்த பிரமாண்ட பேரணியின் முடிவில் நடந்த பொதக் கூட்டத்தையே நீங்கள் காண்கிறீர்கள். இறந்த பசுக்களை இனி தூக்க மாட்டோம் என்ற முடிவில் உறுதியாக உள்ளனர் தலித் மக்கள். கார்பரேஷன் லாரிகள் வந்து இறந்த பசுக்களை அள்ளிச் செல்கின்றனர். பசுவை நேசிக்கும் பசு புத்திரர்களுக்கு தங்களது தாய் கிரேன் மூலம் தூக்கிச் செல்லப்படுவதை கண்டு ஏனோ மனம் வருந்துவதில்லை. எல்லாம் பகல் வேஷம் என்பது நிரூபணமாகியுள்ளது.

புலி வாலை பிடித்த கதையாக போய் விட்டது இந்துத்வாவாதிகளுக்கு!

சுதந்திரத்தின் பலனை அனுபவிக்கிறோம்!

Wednesday, August 24, 2016

அருமையான காணொளி! முன்னால் பிஜேபி ஆதரவாளர்அருமையான காணொளி! முன்னால் பிஜேபி ஆதரவாளர்.

இந்த நாட்டை துண்டாடுவது, இந்த நாட்டில் தேச விரோத செயல்களில் ஈடுபடுவது, மதக் கலவரத்தை தூண்டுவது என்று அனைத்தும் செய்வது இந்துத்வாவாதியினரே என்று இந்த இளைஞர் விளாசித் தள்ளுகிறார். இவரது கேள்விகளுக்கு மோடி பதில் அளிப்பாரா?

Tuesday, August 23, 2016

இங்கிலாந்தும் ஃப்ரான்சும் 20 ஆண்டுகளில் இஸ்லாமிய நாடுகளாகும்!

ஒட்டிய வயிறும் உப்பிய வயிறும்......ஒட்டிய வயிறும் உப்பிய வயிறும்......

வெயில் மழை என்று பாராமல் உழைத்த விவசாயி எங்கே ?

கோவிலில் மணியாட்டி வயிறு வளர்த்த பூசாரி எங்கே?

இதில் யார் உயர்ந்த சாதி! யார் தாழ்ந்த சாதி!

இஸ்லாத்தின் வளர்ச்சி கண்டு மிரள்கிறது மேற்குலகம்!

இந்துத்வாக்களிடம் மன்னிப்பு கேட்க ரம்யா மறுப்பு!

100 கோடிக்கு ஆட்டையை போட்ட பிஜேபி!

Monday, August 22, 2016

மோடியின் ஆட்சியில் இந்துத்வாவாதிகளின் அராஜகம்!மோடியின் ஆட்சியில் இந்துத்வாவாதிகளின் அராஜகம்!

'ஸ்ரீராம் கணேஷ் மண்டல்' என்ற அமைப்பைச் சேர்ந்த சில இந்துத்வ குண்டர்கள் கணபதி வழிபாட்டுக்கு நன்கொடை வசூலித்துள்ளார்கள். பேக்கரியில் கூலி வேலை செய்து வரும் 11 முஸ்லிம்களிடம் தலைக்கு 100 ரூபாய் கேட்டுள்ளார்கள். ஆனால் ஏழை முஸ்லிம்கள் 50 ரூபாய் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த இந்துத்வாவாதிகள் அந்த 11 இஸ்லாமிய இளைஞர்களையும் பொது இடத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். சென்ற ஆகஸ்ட் 15 அன்று புனேயில் இந்த சம்பவம் நடந்து பரபரப்பாகியுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதனை செய்தியாகவும் வெளியிட்டுள்ளது. இதுவரை இந்துத்வாவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

http://www.siasat.com/news/pune-muslim-workers-humiliated-forced-sit-ups-public-not-paying-ganpati-donation-1005276/

ஆர்எஸ்எஸ் தீவிரவாதி வீட்டில் கிடைத்த பொருட்கள்!

ஆர்எஸ்எஸ் தீவிரவாதி வீட்டில் கிடைத்த பொருட்கள்!

நேற்று கேரளா கண்ணூரில் வெடி மருந்து தயாரிக்கும் போது தீஷித் என்ற ஆர்எஸ்எஸ் இந்து தீவிரவாதி தவறுதலாக வெடித்து இறந்தான் அல்லவா? அவனது வீட்டை போலீஸார் சோதனையிட்ட போது கிடைத்த ஆயுதங்களே இவை. ஆர்எஸ்எஸ் என்பது எத்தகைய பயங்கர தீவிரவாத அமைப்பு என்பது இதிலிருந்து நமக்கு விளங்கியிருக்கும்.

ராமாயணம் கற்றுக் கொடுப்பது முட்டாள்தனம் - சாருஹாஸன்

Sunday, August 21, 2016

நாட்டை உலுக்கும் ராணா அய்யூப்ராணா அய்யூப். தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் பெயர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து இவர் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’, இன்று டெல்லியின் அதிகார வர்க்கத்தைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அந்தப் புத்தகம் தமிழில் ‘குஜராத் கோப்புகள்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

முன்கதை

பூர்வீகம் உத்தரப் பிரதேசம். அப்பா அய்யூப் வகீஃப் உருது கவிஞர். ‘பிளிட்ஸ்’ பத்திரிகையில் பத்திரிகையாளர். முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்திலும் இருந்தவர். அவரைப் பின்தொடர்ந்து, ராணாவும் பத்திரிகைத் துறையில் காலடி எடுத்துவைத்தார்.

இதழியல் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு 2006-ம் ஆண்டு ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சியில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு ஆரம்பித்த அவரது பயணம் ‘தெஹல்கா’வில் உச்சத்தைத் தொட்டது. குஜராத் கலவரங்கள், போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பாக அங்கு அவர் எழுதிய கட்டுரைகளால் பாரதிய ஜனதா கட்சியின் இந்நாள் தலைவர் அமித் ஷா அன்று கைது செய்யப்பட்டார்.

தெஹல்காவில் சுமார் ஏழு வருடங்கள் ‘பொலிட்டிக்கல் மற்றும் இன்வெஸ்டிகேட்டிவ் கரஸ்பாண்டன்ட்’ ஆகப் பணியாற்றினார். அப்போதைய தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு எதிராகப் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு எழுந்தபோது, ‘அந்தப் பிரச்சினை நியாயமான முறையில் கையாளப்படவில்லை’ என்று சொல்லி, ராஜினாமா செய்த முதல் பத்திரிகையாளர் இவர்.

ஏன் இந்தக் கோபம்?

‘குஜராத் கலவரம் மாதிரி சென்ஸிட்டிவான விஷயத்தைத் தொட்டிருக்கீங்க. எப்படி இந்தத் துணிச்சல் வந்தது?’ என்று கேட்டதற்கு, சற்று யோசித்துவிட்டுப் பதில் சொல்கிறார்.

“நீதி! அது மட்டும்தான் என்னை உந்தித் தள்ளியது. அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும், அதற்கு நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என்று என் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால்தான் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தேன்” என்றார்.

நாட்டின் பல்வேறு மூலைகளில் நடக்கும் விஷயங்களை, அங்கு நேரில் செல்லாமல் தலைநகர் டெல்லியில் இருந்துகொண்டே கட்டுரைகள் எழுதும் போக்கை, இன்றைய ஊடக உலகில் ‘லுட்டியன்ஸ் ஜர்னலிசம்’ என்று சொல்வதுண்டு. இவர் அப்படிப்பட்ட பத்திரிகையாளர் இல்லை.

குஜராத் கலவரம் மற்றும் போலி என்கவுன்ட்டர்களால் பாதிக்கப்பட்டவர்களை, அதில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளைப் பற்றி குஜராத்திலேயே எட்டு மாதங்கள் தங்கியிருந்து, பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளார். இதற்காக இவர் ‘வெளிநாட்டிலிருந்து குஜராத் மாநிலத்தைப் பற்றி ஆவணப் படமெடுக்க வந்திருக்கும் பெண் இயக்குநர்’ என்ற வேடமிட வேண்டியிருந்தது. அந்தக் கற்பனைப் பாத்திரத்துக்கு அவர் சூட்டிய பெயர் மைதிலி தியாகி.

உண்மைகளின் பதிவு

‘‘அந்த மைதிலி தியாகி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்’’ என்றதும், சிரித்துக்கொண்டே தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ராணா அய்யூப் ஆக என்னால் அந்த மாநிலத்துக்குள் நுழைய முடியாது. ஏனென்றால், என் பெயர் அங்கு மிகவும் பிரபலம். பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். எனவே, ‘மைதிலி தியாகி’ ஆக மாறினேன். என் சிகை, உடை அலங்காரம் போன்றவற்றை மாற்றிக்கொண்டேன். வெளிநாட்டவர்களைப் போல ஆங்கில உச்சரிப்பை திருத்திக் கொண்டேன். இந்தியா, ஃபிரான்ஸ் நாட்டு மாணவர்கள் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்தியா வந்திருந்த ஃபிரெஞ்சு மாணவர் ‘மைக்’ (இது அவரின் உண்மைப் பெயர் அல்ல) என்பவரை கேமராமேனாக நடிக்கச் சொல்லித் துணைக்கு அழைத்துக்கொண்டேன்.

ஒரு விடுதியில் மாத வாடகைக்குத் தங்கியிருந்து பல காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தோம். போகிற இடங்களிலெல்லாம், என் குர்தாவுக்குள் சிறிய கேமராவை மறைத்து வைத்துக்கொண்டு செல்வேன். எப்போதெல்லாம் ஒரு அதிகாரி சில உண்மைத் தகவல்களைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம், வேண்டுமென்றே என் பேனாவைக் கீழே நழுவவிட்டுக் குனிந்து எடுப்பேன். அப்படிக் குனியும்போது என் கேமராவை ‘ஆன்’ செய்துவிடுவேன்.

சில்லிடச் செய்த அனுபவம்

இப்படி ஒரு முறை ஒரு பெண் காவல்துறை அதிகாரியைச் சந்திக்கச் சென்றிருந்தேன். முதல் நாள் நாங்கள் அறிமுகமானோம். இரண்டாம் நாள் இரவில் அவர் என்னைத் தனியே ஒரு இடத்துக்கு வரச் சொன்னார். ‘ஏதேனும் முக்கியமான தகவலை அவர் நமக்குத் தரப் போகிறாரோ?’ என்ற எண்ணத்துடன் ஒரு ஆட்டோவைப் பிடித்து அவர் சொன்ன இடத்துக்குப் போனேன். அது ஒரு நெடுஞ்சாலை. சாலையின் இருபுறமும் காடு. ஆள் அரவம் எதுவுமில்லை. ஒரே ஒரு போலீஸ் ஜீப் மட்டும் நின்றிருந்தது. நான்கைந்து ஆண் கான்ஸ்டபிள்கள் இருந்தனர்.

எனக்கு வியர்த்துக் கொட்டியது. முதுகு சில்லிட்டது. அப்போது அதிலிருந்து அந்த அதிகாரி இறங்கி வந்தார். ‘நான் உன்னை ஒரு ரெஸ்டாரன்ட்டுக்குக் கூட்டிப் போகிறேன். நாம் சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’ என்றார். ஜீப்பில் ஏறினோம். ‘இவர் நம்மை எங்கே கூட்டிப்போகிறார்?’ என்ற கேள்விதான் மனதில் அலையடித்துக்கொண்டே இருந்தது. வழி நெடுக அவர் பேசிக்கொண்டே வந்தார். என்னால் அவர் பேச்சைக் கவனிக்க முடியவில்லை. அப்போது என் அப்பா அம்மாவிடம் பேச வேண்டும் போலிருந்தது. இது என் கடைசி இரவாகக்கூட இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில், நான் கடைசியாக இருந்த இடத்தையாவது அவர்களுக்குத் தெரிவித்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தேன்.

நல்லவேளை, நான் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. உண்மையிலேயே ரெஸ்டாரன்ட்டுக்குத்தான் போனோம். அப்போதுதான் கொஞ்சம் நிம்மதி வந்தது. உடனே நான் கழிவறைக்கு ஓடினேன். குழாயைத் திறந்துவிட்டு, அழத் தொடங்கினேன். அன்று நான் அழுத அழுகை... இன்றுவரை அழுததில்லை. இது ஒரு சம்பவம்தான். நான் தங்கியிருந்த எட்டு மாதங்களில் ஒவ்வொரு நிமிடமும் என்னை ஆபத்து சுற்றிக்கொண்டிருந்தது. நான் எந்த நிமிடம் வேண்டுமானாலும் என்கவுன்ட்டர் செய்யப்படுவதற்கான சாத்தியம் இருந்தது!” என்று சொல்லிவிட்டுத் தேநீரைப் பருகினார்.

‘ஒரு பெண்ணாக, அதுவும் ஒரு இஸ்லாமியராக இருந்து நீங்கள் இவ்வளவு பெரிய வேலையைச் செய்தது நிச்சயம் சாதனைதான்!’ என்று சொன்னதற்கு, “தயவு செய்து நான் ஒரு பெண் என்றோ, இஸ்லாமியர் என்றோ பார்க்காதீர்கள். நான் ஒரு ஆணாகவோ அல்லது இந்துவாகவோ இருந்திருந்தால்கூட, நான் செய்திருக்கும் பணிகளுக்கு வேறு சில கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. எனவே, என்னை ஒரு பத்திரிகையாளராக மட்டும் பாருங்கள்!” என்கிறார் கம்பீரமாக!

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
21-08-2016

தேவாரத்தில் திருஞான சம்பந்தரின் சமண வெறுப்பு!

தேவாரத்தில் திருஞான சம்பந்தரின் சமண வெறுப்பு!

மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கௌசிகம் என்னும் தலைப்பில் 3 ஆவது பாட்டு.

'மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்திரு வாலவா யாய்அருள்
பெண்ணக கத்தெழில் சாக்கியப் பேய்அமண்
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே'

மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின் மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் சம்பந்தர்.
"அன்பே சிவம்" என்று சைவம் கூறிக் கொண்டு இருக்க அக்கூற்றுக்கு மாறாக ஞானசம்பந்தர் பாடி இருப்பது எவ்வாறு சைவத்தினை வளர்த்திருக்கும்.

தமிழக்த்தில் சீர்காழி எனும் தளத்தில் ஆண்டு தோறும் நிகழும் திருமுலைபால் உற்சவம் எனும் நிகழ்வில் சம்பந்தர் பல்லகின் முன்னால் தலை மொட்டையடிக்கபட்டு இடையில் காவி உடை அணிந்து கையில் மயிற்பீலியுடன்(சமணரை உருவகபடுத்தி) நிற்க வைக்கபடுவார்களாம் அப்போது ஓதுவார்கள் பெருங்குரலெடுத்து சம்பந்தர் சமணபெண்களை என்ன செய்ய சொன்னார் என்று கேட்பார்களாம் மற்ற ஓதுவார்களும் சிவாச்சாரியார்கள் கற்பழிக்க சொன்னார் என்று உரக்க பாடுவார்களாம்..அது மட்டுமல்லாமல் சமணபெண்களை பற்றி இழிவாக விமர்சிப்பார்களாம்...


அந்த காலத்தில் சமண மதத்தையும் பவுத்த மதத்தையும் எவ்வாறு இந்து மதம் அழித்தது என்பதற்கு இந்த பாடலும் ஒரு சான்று!

இஸ்லாத்தை ஏற்ற ஆர்எஸ்எஸ் ஊழியர்.....

இஸ்லாத்தை ஏற்ற ஆர்எஸ்எஸ் ஊழியர்.....
-------------------------------------------------
இந்துத்வா வளர வளர அதே வேகத்தில் இஸ்லாமும் வளரும்.Saturday, August 20, 2016

தன் வினை தன்னைச் சுடும் - தீக்ஷித் மரணம்!

தன் வினை தன்னைச் சுடும் - தீக்ஷித் மரணம்!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது கூத்துப் பிரம்பா என்ற கிராமம். இக்கிராமத்தில் பிஜேபியைச் சேர்ந்த தீக்ஷித்(27) என்ற இந்து தீவிரவாதி தனது வீட்டில் சட்ட விரோதமாக அனுமதியின்றி வெடி குண்டு தயாரிக்கும் போது தவறுதலாக வெடித்து அந்த வெடி குண்டில் அவனே பலியாகி உள்ளான்.

தன் வினை தன்னைச் சுடும்!

தகவல் உதவி
இந்தியா டுடே
20-08-2016

http://english.manoramaonline.com/news/just-in/bjp-worker-killed-in-bomb-blast-in-kannur.html

ரத்தத்திலும் சாதி பார்க்கும் ஈனப்பிறவிகள்!

ரத்தத்திலும் சாதி பார்க்கும் ஈனப்பிறவிகள்!

வேலை வாய்ப்பு செய்திகள்....Thursday, August 18, 2016

நாட்டு மக்களை காக்க வேண்டிய ராணுவம் ?

நாட்டு மக்களை காக்க வேண்டிய ராணுவம் பேட்டை ரவுடிகளைப் போல் வீட்டின் கண்ணாடிகளை உடைத்து அதில் ஆனந்தம் அடைகின்றனர். மோடியின் ஆட்சியில் ராணுவம் முழுக்க இந்துத்வ மயமாக்கப்பட்டுள்ளது. இதே நிலையில் ராணுவம் நடந்து கொண்டால் காஷ்மீர் நம் கையை விட்டுப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

காஷ்மீர் நம்மோடு இணைந்திருக்க ராணுவத்தை துணைக்கழைப்பது முட்டாள்தனம் என்பதை மோடி அரசு என்று உணருமோ தெரியவில்லை. பாகிஸ்தான் எல்லைகளை முற்றிலுமாக மூடி விட்டு காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அந்த மக்களின் நம்பிக்கையை நமது இந்திய அரசு பெற வேண்டும். இவை எல்லாம் மோடியின் ஆட்சியில் நடைபெறுமா என்பது சந்தேகமே!

சாதிகள் இருக்குதடி பாப்பா! - நவீன பாரதியார்

மீடியாக்களால் தப்புவிக்கப்படும் முக்கிய குற்றவாளிகள்!

ஒரு முகத்த்தை பல முறை திரும்ப திரும்ப மீடியாவில் காட்டி இவன்தான் குற்றவாளி என்று மக்கள் மனதில் பதிய வைக்கப் பட்டு தப்பிக்க வைக்கப் படும் முக்கிய/உண்மை குற்றவாளிகள்

சுவாதி கொலையில் குற்றம் சாட்டப்ப பட்ட ராம்குமார் சொன்னதாகவும், அவன் மீது இட்டுக்கட்டி தினமும் மலம் தின்னும் சில ஊடக நாய்கள் எழுதி வந்த பொய்கள் கீழே.

1. மூன்று மாதமாக துரத்தி துரத்தி காதல் செய்தேன்.
2. பேஸ்புக் வழியாக நண்பர்கள் ஆனார்கள். (அவன் புரோப்பைல் பார்த்தால் ஓபன் பண்ணிட்டு யூஸ் பண்ண தெரியாமல் போனமாதிரி இருக்கு)
3. (தந்தி செய்தியில்) மூன்று / (தினமலரில்) ஐந்து முறை காதலை சொல்லியும் ஏற்காததால் கொலை செய்தென்.
4. தேவாங்குனு சொன்னதால் வாயில் வெட்டினேன்.
5. தெரியாமல் கொலை செஞ்சுட்டேன்.. கண்ணீர் விட்டு கதறும் ராம்குமார்.
6. போலீசை கண்டதும் கழுத்தை அறுத்துக் கொண்டான்.
7. தனிமையிலேயே இருந்தான் என்று ஒரு செய்தி தாளில், எந்த பதட்டமுமில்லாமல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான் என்று மற்றோரு செய்தியில்.
8. சுவாதி கொலை: என்கவுன்டர்ல கொன்னுடுவாங்களா? அச்சத்தில் ராம்குமார்.

இவை அனைத்துமே மீடியாவில் இருக்கும் சில மூடர்களால் வேண்டுமென்றே பரப்பி விடப்பட்ட பொய்கள்.

அப்சல் குரு தீர்ப்பை இங்கே சுட்டி காட்டும் தேவை என் ஏற்பட்டது.

இன்றளவும் அவன்தான் பாராளுமன்ற தாக்குதல் முக்கிய குற்றவாளி என்று மக்கள் நம்புகின்றனர். அல்ல அல்ல, நம்ப வைக்கப் பட்டுள்ளனர்.

உண்மையில் அப்சல் குரு யார்? முன்னாள் பிரிவினைவாத ஆதரவாளன், அதிலிருந்து திருந்தி சரணடைந்து உளவுத்துறை ஏஜெண்டாக ஆன ஒரு ஆள்.

பாராளுமன்ற தாக்குதலில் உண்மை குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறியவர்கள் உளவுத்துறை நண்பரான அப்சல் குருவை கைது செய்து நடனமாடினார். அப்சல் குருவும் ஆரம்பத்தில் அப்படித்தான் நம்பி இருந்தார் இவர்கள் நாடகம் முடிந்த பிறகு விட்டுவிடுவார்கள் என்று.

ஆனால் என்ன நடந்தது? மீண்டும் மீண்டும் அப்சல் குரு மட்டும் மீடியாவில் முக்கிய குற்றவாளியாக காட்டப் பட்டான்.

இறுதியில் தீர்ப்பு வருகிறது மரண தண்டனை என்று, குற்றம் நிரூபிக்கப் பட்டு அல்ல (நிரூபிக்கவும் முடியாது, ஏனென்றால் உண்மை குற்றவாளி அவன் கிடையாதே), மக்களின் கூட்டு மனசாடியின் அடிப்படையில், அதாவது இவன்தான் குற்றவாளி இவனை தூக்கிலிடவேண்டும் என்ற அனைத்து மக்களின் விருப்பத்தின் கேற்ப.

இந்த கூட்டு மனசாட்சியை ஏற்படுத்தியது யார்? பொறுப்பற்ற மீடியா வேசிகள்தான்.

விளைவு- பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட ஐந்திற்கும் மேற்பட்ட நேரடி குற்றவாளிகள் தப்பிவிட்டனர் அல்லது தப்பவைக்கப் பட்டனர்.

அவர்களை தேடவுமில்லை, இன்றளவும் கைது செய்யவில்லை, கைது செய்யப் போவதுமில்லை.

-பொருள்வை மைந்தன்

Wednesday, August 17, 2016

சுவாதி கொலை வழக்கில் தமிழச்சிக்கு ஆதரவு கொடுப்போம்!

சுவாதி கொலை வழக்கில் தமிழச்சிக்கு ஆதரவு கொடுப்போம்!

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு கேட்கும் அதிர்ச்சிகள் நிறைந்த ஆடியோ அது. அதன் அரசியல் அதிர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதிலிருந்து ஒரு சில வரிகள்.

".... என்னை எப்படியாவது கொன்னுடனும்னு காவல்துறையைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் முயற்சி பண்ணாங்க. அதுவும் 'ரம்ஜான் பண்டிகை' அன்னைக்கு சாகடிக்கனும்னு திட்டம் போட்டாங்க. அவங்க அனுப்பிய கூலிப்படை கிட்ட இருந்து இரண்டு முறை தப்பிச்சிட்டேன்...."

அப்படி சொல்கிற பெண் முஸ்லிம் கிடையாது. அவர் இந்து. அவரை கொலை செய்ய அனுப்பிய கூலிப்படையினர் காவல்துறையைச் சேர்ந்த சிலரால் அனுப்பப்பட்டவர்கள் என்று கூறுகிறார் அந்த பெண்.

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட பெரியாரியவாதியான நான் எனக்கான மத அடையாளத்தை புறக்கணித்தாலும் நான் பிறப்பால் இந்து. எங்கள் இருவரிடமும் உண்மையை உங்களுக்கு எடுத்துச் சொல்லவே முனைந்துள்ளோம்.

சுவாதியின் படுகொலை தொடர்பாக தமிழ்நாட்டு காவல்துறையினரால் தகவல் விசாரணை அடிப்படையில்தான் இப்பெண் விசாரிக்கப்பட்டார். அவரும் சுவாதி குறித்து அவருக்கு தெரிந்த ததகவல்களை கூறியபின் அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்யாமல் அப்பெண்ணையும் கொலை செய்துவிட காவல்துறையினரில் சிலர் முயன்றிருக்கின்றனர்.

அதற்கு பிறகு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற அப்பெண் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிராக மதக் கலவரங்களை தூண்டுவதற்கான அரசியல் நகர்வுகளை அவற்றில் பார்க்க முடிகிறது.

தமிழக அரசு இதில் தலையிட்டு நடக்கும் உண்மைகளை கண்டறிய விசாரணை நடத்த முற்படுமானால், சுவாதி படுகொலை விசாரணை வேறு மாநிலத்தில் நடத்த உத்தரவாதம் கொடுத்தால் விசாரணைக்கு உரிய அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க தயார்.

இன்னொரு மிகப் பெரிய ஆபத்து ஒன்றுள்ளது. காவல்துறையினர் கொலை முயற்சியில் இருந்து தப்பியோடிய அப்பெண் தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தன் குடும்பத்தினருக்கு அசம்பாவிதம் ஏதேனும் நடந்து விடுமோ என்ற மிகுந்த பதட்டத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்து கொண்டிருக்கிறார். அதேப்போல் அவர் எந்த நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பதை அறிந்து அங்கே அப்பெண்ணை கொல்வதற்கான நடவடிக்கைகளை சமூக விரோதிகள் மேற் கொள்ளவும் வாய்ப்புள்ளது.

ஒரு அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது என்பதில் அப்பெண் துணிந்து நிற்கிறார். சாதிக்காக, மதத்திற்காக ஆணவப்படுகொலைகள் நடக்கவிடக் கூடாது இந்திய இறையாண்மைக்கு எதிராக இயங்கும் சமூக விரோதிகளை தொடர்ந்து இயங்கவிடக் கூடாது என்பதற்காகவும், பெண்களை கொலை செய்வதன் மூலம் நடத்த முற்படும் மதகலவரங்களையும் அதற்காகவே இயங்கும் கூலிப்படைகளையும் ஒழித்துக் கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதற்காக நான் உங்கள் முன் நிற்கிறேன்.

என்னிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களையும் ப்ரெஞ்ச் மனித உரிமை மீறல் அமைப்பினர், ப்ரெஞ்ச் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ப்ரெஞ்ச் பெண்கள் அமைப்பினரிடம் சமர்ப்பித்துள்ளேன்.

என் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது நானும் படுகொலை செய்யப்பட்டாலோ மேற்குறிப்பிட்ட மூன்று அமைப்பினரும் மேற்கொண்டு நீதிமன்றத்தின் மூலம் உண்மைகளை அம்பலப்படுத்துவார்கள்.

தமிழக மக்களே!

வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திற்குள் நுழைந்துவிட்டோம். பெண்களாகிய நாங்கள் அரசிடம் மண்டியிடவில்லை. உங்கள் முன் நிற்கிறோம். மக்கள் சக்தியாகிய நீங்கள் மற்றும் சமூக அமைப்புகள் நீதிக்கான போராட்டத்தில் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம்.

நன்றி
தோழமையுடன் தமிழச்சி
17/08/2016
https://clyp.it/ccpoqehj

https://www.facebook.com/permalink.php?story_fbid=1209849525732840&id=1135654236485703

மாடு கடத்'திய வழக்கில் பிஜேபி எம்எல்ஏ கைது!மாடு கடத்திய வழக்கில் பிஜேபி எம்எல்ஏ கைது!

சில இந்துக்களால் தெய்வமாக வணங்கப்படும் கோமாதாவை கடத்தி கடைசியில் போலீஸிடம் மாட்டிக் கொண்ட பிஜேபி எம்எல்ஏ. அவமானம் தாங்காமல் போலீஸார் முன் கதறி அழுகிறார். இந்துத்வாவாதிகளை பொறுத்த வரை பசு பக்தி என்பது பகல் வேஷம் என்பதை இந்நிகழ்வு உண்மை என நிரூபிக்கிறது.

உபியின் பலியா தொகுதியின் பிஜேபி எம்எல்ஏ உபேந்திரா. சட்ட விரோதமாக மாடுகளை கடத்திச் சென்ற ஒரு கும்பலை காவல் துறை அரெஸ்ட் செய்துள்ளது. அந்த கும்பல் பிஜேபி எம்எல்ஏ உபேந்திராவின் ஆட்கள். எனவே அவர்களை விடுவிக்க உபேந்திரா காவல் நிலையம் சென்றுள்ளார். போலீஸார் அவர்களை விடுவிக்கவில்லை. இதனால் கோபமுற்ற உபேந்திரா காவல் நிலையத்தையும் அரசு வாகனங்களையும் குண்டர்களோடு தாக்கத் தொடங்கியுள்ளார். இதனால் அங்கு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் இறந்துள்ளார்.

அரசு சொத்துக்கள் சேதமடைந்ததாலும் ஒருவர் இறக்க காரணமாக இருந்ததாலும் பிஜேபி எம்எல்ஏவை போலீஸார் கைது செய்துள்ளனர். அவமானம் தாங்காமல் போலீஸ் கஸ்டடியில் கதறி அழுவதையே இங்கு நாம் பார்க்கிறோம்.

http://www.patrika.com/news/ballia/one-dead-and-many-other-injured-during-firing-and-lathicharge-in-bjp-mla-upendra-tiwari-protest-1374347/

Tuesday, August 16, 2016

சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?

சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?

தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம்.

குறிஞ்சி நிலத்தவர் உணவு:

சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும்,கிழங்கையும் உண்டார்கள்.பிற நிலத்தாருக்கும் விற்று மீன்,நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள்.-(பொருநாநூற்றுப்படை.213-214.)

திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர்.(மலைபடுகடாம்-168-169)

குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும்,பன்றி இறைச்சியையும் உண்டனர். ( மலைபடுகடாம்-171-183)

மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.மலை மீது நடந்து சென்ற கூத்தர் தினைப்புனத்து காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர்.(243-249 ).

பாலை நிலத்தார் உணவு:

ஓய்மானாட்டுப் பாலை நில மக்களான வேட்டுவர்கள்,இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் ஆமாவின் சூற்றிறைச்சியையும் உண்டனர். (சிறு நாநூற்றுப் படை-175-177).தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசியை சேர்த்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். (பெ.ஆ.படை.95-100).மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். (பெ.ஆ.படை.130-133).

முல்லை நிலத்தார் உணவு;

பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். (440-445).

மருத நிலத்தார் உணவு;

மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர்.(பெ.ஆ.படை. ( 216-217).ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்க்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். (சி.ஆ.படை.193-195).தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர்.(பெ.ஆ.படை.254-256).

நெய்தல் நிலத்தார் உணவு;

நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச் சியையும் உட்கொண்டனர்.(சி.ஆ.படை.(156-163).தொண்டைநாட்டுப் பட்டினத்தில்(மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர்.காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா,வயல ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (பட்டினப்பாலை.63-64).கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).

இவ்வுணவுகள் தாம் அசல் தமிழர்கள் உண்ட அசைவ உணவு.இன்று சைவம் பேசும் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்.?

ஐரோப்பியர்களுக்கு விவசாயத்தை அறிமுகப்படுத்தியது அரபு மக்களே!

ஐரோப்பியர்களுக்கு விவசாயத்தை அறிமுகப்படுத்தியது அரபு மக்களே!

சுமார் 8 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாவில் வாழ்ந்த பூர்வகுடி ஐரோப்பியர்கள், காட்டு மிருகங்களை வேட்டையாடி உண்ணும் நாடோடிகளாக (Hunter &Gatherer) வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியப் பயிர், விவசாய விளைபொருள் உற்பத்தி முறை தெரிந்திருக்கவில்லை. மிருகங்களை வேட்டையாடி மிருகங்கள் போல் வாழ்ந்து வந்தனர். ஆனால் 7500 வருடங்களில் அதாவது 500 வருடங்களில் வேளாண் உற்பத்தி முறை அறிந்து பயிர்த்தொழில் சாகுபடி செய்து விவசாயிகளாக மாறிய நிகழ்ச்சி, மானிட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

விலங்கோடு விலங்காக வாழ்ந்த ஐரோப்பியர்கள் எப்படி விவசாயத்தை அறிந்தனர். ஒரு 500 வருடங்களுக்கு முன்பு பசுமைப்புரட்சி ஏற்பட காரணம் என்ன? விவசாயத்தை கற்றுக்கொடுத்தவர்கள் யார்? என்ற கேள்வி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் நீடித்து வந்தது. இன்றைய நவீன (GENETIC) மரபியல் சோதனை முடிவுகள் இக்கேள்விகளுக்கு உரிய பதிலை சமீபத்தில் வெளிப்படுத்தின.

ஆஸ்திரேலியா அடிலெய்டு பல்கலைக்கழகமும் மற்றும் (Australian Centre for Ancient DNA-ACAD) ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் எஸ்தோனியா நாட்டு ஆய்வாளர்கள் குழு ஒன்றிணைந்து ஜெர்மனி, ஹங்கேரி, இங்கிலாந்து நாட்டிலுள்ள பழம்பெரும் புதைகுழிகளை கல்லறைகளை ஆராய்தனர். அங்கு அடக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகளை சோதித்து அதன் DNA மூலக்கூறுகளை பிரித்தெடுத்தனர்.

பொதுவாக ஸ்டிரோசியம் ( Sr) என்ற தனிமம் Element நமது எலும்பில் உள்ளடங்கி உள்ளது. நீரில் உள்ள Sr ‘Sr’ ஆனது நாம் நீர் உட்கொள்ளும்போது உடம்பில் உள்ள எலும்பில் படிந்து விடும். இதுபோல் நீரருந்தும் விலங்குகள் தாவரங்களிலும் இந்த ஸ்டிரோசியம் படிவதுண்டு.

தாவரங்களை உண்ணும ஆடு, மாடு போன்ற கால்நடைகளிலும் ஸ்டிரோசியம் படியும். ஆனால் கால்நடைகளின் கழிவில் பெரும்பாலான ஸ்டிரோசியம் வெளியேறிவிடும். எனவே இந்த விலங்குகளை வேட்டையாடி உண்ணும பழக்கமுள்ள ஐரோப்பிய பூர்வகுடி மனிதர்களின் எலும்புகளில் இந்த ஸ்டிரோசியத்தின் அளவு மிகக்குறைவாகவே இருந்துள்ளது.

ஆனால் அதே சமயம் ஐரோப்பா முழுவதும் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புராதன புதைகுழி எலும்புகளில் இந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரம் மிக அதிக அளவில் இருந்தது. காரணம் இம்மக்களது உணவுப்பழக்கம் தானியங்களாக இருந்ததுதான். ஆகவே இவர்கள் தான் ஐரோப்பாவிற்கு முதன் முதலில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியவர்கள் என்று அறிஞர்கள் உறுதிப்படுத்தினர்.

இறுதியில் ஐரோப்பாவில் விவசாயம் செய்த முதல் விவசாயியின் DNA மாதிரிகளின் தொடர்ச்சி பிரான்ஸ், ஹங்கேரி, துருக்கி, சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் முடிந்தது. ஐரோப்பாவிற்கு விவசாயத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் மத்திய கிழக்கு அரபு மக்களே என்று அறிவியல் உலகம் ஒப்புகொண்டது.

கட்டுரை ஆக்கம்
ஷாலி

அப்போ 500 டாலரா அல்லது 1000 டாலரா? :-)


Monday, August 15, 2016

மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கர் தியாகியாம்!மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கர் தியாகியாம்!

சுதந்திரப் போராட்ட வீரர் என்று அந்தமான் சிறையில் அடைக்கப் பட்ட ஒருவர் நவம்பர் 1913ல் பிரிட்டிஷ் அரசுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் ; அல்லது கருணை மனு போடுகிறார்; அல்லது காலில் விழுகிறார். அந்தக் கருணை மனுவின் சாராம்சங்கள் இவையாகும்.

"பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்.

பிரிட்டிஷ் அரசமைப்பை ஏற்றுக் கொண்ட எனது மாற்றம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஏராளமான இளைஞர்களை சரியான திசைவழிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்.

மேன்மைக்குரிய பிரிட்டிஷ் அரசு விரும்புகிற எந்த வழியிலும் நான் பணிபுரிவேன்."
இப்படி இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வாசகங்கள் கொண்ட கடிதத்தை அந்நியருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு அந்தமான் சிறையில் இருந்து வெளிவந்தவர்தான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான வரும் இந்து மகா சபையின் தலைவரும் ஆன வி .டி. சவர்க்கார்.

(ஆங்கிலேய அதிகாரிகளுக்கு சவார்க்கர் எழுதிய கடிதத்திலிருந்து பிரண்ட்லைன் ஏப்ரல் 07,1995 இதழ்).

இந்து மகா சபைதான் இன்றைய பாரதீய ஜனதாக் கட்சியின் தாத்தா. இதன் தத்துவங்கள்தான் இன்றைய பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றவே முடியாதவை என்று குறிப்பிடப்படும் ஐந்து அம்சங்கள்.

இதை இங்கு வேதனையுடன் குறிப்பிடக் காரணம் , இப்படித் தன்னுடைய விடுதலைக்காக தேசத்தின் விடுதலையை துச்சமாக மதித்து நாட்டை மாற்றாருக்குக் காட்டிக் கொடுத்த வரலாற்றுக் களங்கத்தை சுமந்து கொண்டிருக்கும் இவரின் உருவப் படத்தைத்தான் 2003ம் வருடம் பிப்ரவரி 23ம் தேதி பாராளுமன்றத்தில் மைய மண்டபத்தில் மகாத்மா காந்தியின் படத்துக்கு நேர் எதிராக அன்றைய வாஜ்பாய் அரசு திறந்து வைத்து சந்தோஷப்பட்டது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய மூளைகளில் ஒரு மூளை என்று அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு அதிலும் மன்னிப்புக் கேட்ட வி. டி. சவர்க்காரின் உருவப்படம் , அவர்களால் சுட்டுக் கொல்லப் பட்ட மகாத்மா காந்தியின் படத்துக்கு எதிரே பாராளுமன்றத்தில் வைக்கப் பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல . அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேரின் விமான நிலையத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. இது மட்டுமின்றி, போர்ட் பிளேரில் உள்ள தியாகிகளின் சதுக்கத்தில் உள்ள தியாகிகளின் சிலைகளுடன் இந்தக் காட்டிக்கொடுத்த மன்னிப்பு வாங்கிக்கும் 2003ம் ஆண்டு சிலையும் நிறுவப்பட்டது என்றால் இவைகள் இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழைகள் என்பதை சிந்திக்க வேண்டும்.

இப்படித்தான் இந்தி ய விடுதலைப் போராட் டத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பதிந்தும் பொதிந்தும் கிடக்கும் எண்ணற்ற முஸ்லிம்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டு, கொச்சைப் படுத்தப்பட்டு, ஆங்கிலேயருக்கு அடிவருடிய சங்பரிவார் துரோகிகள் வீரத்தியாகிகளாக காட்டப்பட்டு வருகிறார்கள். சவார்க்கர் ஒரு கோழை அவரை விடுதலைப் போராட்ட வீரர் என்று சித்தரிப்பது ஆபத்தான அபத்தம்.

இனியாவது போலிகளை புறந்தள்ளுவோம். நம் நாட்டு சுதந்திரத்துக்காக உண்மையாக போராடிய ஒப்பற்ற ஜீவன்களை மட்டும் புகழ்வோம்.

ஜெய் ஹிந்த்!

கோட்ஸே என்ற பார்பனன் காந்தியை கொன்றது தேசபக்தியாலா?

மிருக வதை செய்வது யார்?

மிக அழகிய முறையில் குர்ஆனை ஓதும் சிறுவன்!மிக அழகிய முறையில் குர்ஆனை ஓதும் இந்த சிறுவனைப் போல நமது வாரிசுகளையும் இறைவன் ஆக்கி அருள்வானாக!

மார்க்க கட்டளைகளில் நிர்பந்தம் சம்பந்தமாக!

'நான் உங்களுக்கு ஒரு கட்டளையிட்டால் அதை இயன்ற வரை செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7288

-----------------------

எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மேலே நாம் சிரமப்படுத்த மாட்டோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.....

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.

திருக்குர்ஆன் 6:152

எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை.

திருக்குர்ஆன் 7:42

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.

திருக்குர்ஆன் 23:62

சுதந்திர தினத்தனறு குஜராத்தில் தலித்களின் எழுச்சி!
சுதந்திர தினத்தனறு குஜராத்தில் தலித்களின் எழுச்சி!

'இனி இறந்த பசுக்களை தூக்க மாட்டோம்: இழி தொழில்கள் செய்ய மாட்டோம்' என்று சூளுறைத்தனர். இனி பசுவை தெய்வமாக வணங்கும் நபர்கள் இறந்த பசுக்களை சுமப்பார்கள். பார்பனர்களும் அவர்களுக்கு கொடி பிடிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இறந்த பசுக்களை இனி சுமப்பார்களாக!

Sunday, August 14, 2016

இந்தியா - பிராமணர்களின் துரோக வரலாறு.

பிராமணர்களின் துரோக வரலாறு.
__________________________________

இந்தியாவின் பிரிவினைக்குக் மூல காரணமாக இருந்தது எது?

யார்? எப்படி?

அவர்கள் வெள்ளையர்களுக்கு ஆற்றிய பணி என்ன?

பன்கிம் சந்திர சாட்டோப்பத்தியாய்

இவர் ஒரு பிராமணர்

இவர் எழுதிய பாடல் தான் "வந்தே மாதரம்" என்கிற பாடல் ஆகும். அதாவது இந்தியத் தாயை வணங்குகிறோம் என்பது இதன் பொருள். இந்தப் பாடலில் இவர் இந்திய தாயாக கல்கத்தா காளியை உருவகப்படுத்தினார்.

இங்கு தான் முதன் முதலாக இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்குமான மன முறிவு ஏற்பட்டது.

இதை ஆங்கிலேயர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை விட, ஆங்கிலேயர்கள் சொல்லித் தான் இந்தப் பாடலை சாட்டோபத்யாய் பிராமனர் எழுதினார் என்பதை உறுதியாகக் கூற முடியும்.

ஏனெனில், பிரிட்டீஷார் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் பட்டங்கள், பதவிகள் மற்றும் பணம் என அளித்து வந்தது அனைவரும் அறிந்ததே.

ஆங்கிலேயருக்கு, இந்து- முஸ்லீம் கலவரத்தைத் தூண்டும் வண்ணமாக, ஒற்றுமையைக் குலைக்கும் வண்ணமாக பாட்டெழுதி, அதைப் பாடுபவர்கள் தான் தேச பக்தர்கள் என்கிற பகைமையை வளர்த்த இந்த பன்கிம் சந்திர சட்டோபத்தியாய்.

ஆங்கில அரசு

துணை மாஜிஸ்றேட் பட்டம் கொடுத்தது. பின்னர் துனைக் கலெக்ட் ராகவும் இவர் பிரிட்டிஷாருக்குப் பணியாற்றினார். 1858 லிருந்து 1891 வரை, தான் ஓய்வு பெறும் வரை பிரிட்டிஷாரிடம் பணியாற்றியவர் தான் இந்த சு! தந்திரப் போராட்ட போலி வீரர்.

இந்தப் பதவிக்காக இந்தியாவே இன்றைக்குப் பல நாடுகளாக துண்டாடப்பட்டு கிடக்கிறது.

- முனீப் அபூ இக்ராம்

இரத்ததான_முகாம் - நியு_செனையா_கிளைஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

இன்ஷா அல்லாஹ் வறுகிற 19-08-2016 வெள்ளி கிழமை

‪#‎TNTJ_நியு_செனையா_கிளையும்_KFMC‬ ‪#‎மருத்துவமனையும்_இணைந்து_நடத்தும்‬ இவ்வருடம் ஹஜ் பயணிகளில் தேவைப்படுவோருக்காக மற்றும் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு

‪#‎51வது_இரத்ததான_முகாம்‬ நடக்க இருப்பதால் TNTJ நியு செனையா கிளை நண்பர்கள் அன்புடன் அழைக்கிறார்கள்!

‪#‎ஒரு_மனிதரை_வாழ_வைத்தவர்_எல்லா‬ ‪#‎மனிதர்களையும்_வாழ_வைத்தைவர்_போலாவார்‬ (அல் குர்ஆன் 5:32)

‪#‎உதிரம்_கொடுப்போம்_உயிர்_காப்போம்‬

‪#‎மனித_நேயத்தை_வெறும்_வார்த்தைகளால்‬ ‪#‎அல்ல_நமது_இரத்ததானத்தால்‬ ‪#‎வெளிபடுத்வோம்‬!

நாள்: 19-08-2016 வெள்ளி கிழமை காலை 11:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை.

இடம்:நீயு செனையா துபாய் மார்கட் எதிரில்.

இரத்ததானம் தொடர்புக்கு;

0508417348: 0551445321: 0500498772: 0508431033

(குறிப்பு: வாகனம் வசதி ஏற்பாடு செய்யபட்டுள்ளது வாகனம் தொடர்புக்கு. 0508431033)

திரு மூலர் கூறும் ஓரிறைக் கொள்கை!

திரு மூலர் கூறும் ஓரிறைக் கொள்கை!

1. கடவுள் வாழ்த்து. ( 1 - 50 )

0001: சிவன் ஒருவனே சத்தியோடு இரண்டாய், பிரம்ம, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாகி ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து, நான்கு வேதங்களாகி உண்மை விளங்கச் செய்து, ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய், ஆறு ஆதாரங்களிலும் விரிந்து, அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் பொருந்தி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து அட்டமூர்த்தமாய் விளங்குகின்றான்.

0002: இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூய்மையானவனும் நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனும், தெற்குத் திசைக்குரிய இயமனைஉதைத்தவனுமாகிய இறைவனைப் புகழ்ந்து பாடி நான் உரைக்கின்றேன்.

0003: உயிர்களோடு உடனாய் நின்றவனும், அழிவில்லாத தேவர்கள் “ஆடையில்லாதவன்" என்று பகரும் தலைவனும், பக்கத்திலுள்ள தேவர்களாலும் கூட அறியமுடியாத மேலோனும் ஆகிய இறைவனை நான் அணுகி இருந்து அநுதினமும் வழிபாடு செய்வேன்.

0004: அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருளானவனும் ஆகாய மண்டலத்துக்கு வித்துப் போன்றவனும், அடைக்கலமான இடத்தில் என்னைச் செல்ல விட்டவனும் ஆகிய இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி மாறுபாடுடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.

0005: சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை. அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பிலும் எவரும் இல்லை. அவன் அண்டத்தைக் கடந்து நின்ற போது பொன் போன்று பிரகாசிப்பான். சிவன் செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத் தாமரையில் விளங்குபவனாவான்.

0006: சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை. சிவனல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.

0007: பொன் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவனும், பழமையாகவே சமமாக வைத்து எண்ணப்படும் பிரமனாதி மூவருக்கும் பழமையானவனும், தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைமகனும் ஆகிய இறைவனை யாரேனும் "அப்பனே" என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான்.

0008: தாழ்ந்த சடையுடைய சிவன் தீயைக் காட்டிலும் வெம்மையானவன்; நீரைக் காட்டிலும் குளிர்ச்சியானவன்; குழந்தையினும் நல்லவன்; பக்கத்தில் இருப்பவன்; அவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான். இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.

0009: பொன்னால் செய்யப்பெற்ற அழகான சடை என்று கூறுமாறு அவன் பின்புறம் விளங்க இருப்பவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். உயிர்கட்கெல்லாம் தலைவனாகிய அந்த சிவன் என்னால் வணங்கத்தக்கவன். அப்பெருமானால் வணங்கத் தக்கவர் வேறு எவரும் இல்லை.

0010: சிவனாகிய தானே இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டு ஆகாய வடிவினனாகவும் உள்ளான். சிவனே சுடுகின்ற அக்கினியாகவும் உள்ளான். சிவனே அருள் பொழியும் சத்தியுமாய் இருக்கிறான். சிவனே விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் உள்ளான். சிவனே எல்லாப் பொருளிலும் வியாபகமாய் உள்ளான்.

0011: தூரத்திலும் பக்கத்திலும் எமக்கு முன்னோனாகிய இறைவனது பெருமையை எண்ணினால் "ஒத்ததாகச் சொல்லக் கூடிய பெரிய தெய்வம் பிறிதொன்றில்லை." முயற்சியும் முயற்சியின் பயனும் மழையும் மழை பொழிகின்ற மேகமும் அந்த இறைவனே ஆகும். அவன் பெயர் நந்தி.

0012: ஒப்பற்ற அன்போடு அழியாதிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய "சிவனே அழியாதிருக்கும் அருள் புரிபவன்" என்பதை விண்ணவரும் மண்ணவரும் அறியாதிருக்கின்றனரே! என்ன அறியாமை!.

0013: கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்ற சிவனை பிரமன், விஷ்ணு முதலான தேவர்களும் எண்ணத்தில் அகப்படுத்தி நினைப்பதில்லை. மண்ணுலகோரோ சிவனைக் கடந்து சென்று அறிய முடியவில்லை.

0014: சிவன் சுவாதிட்டான மலரிலுள்ள பிரமனையும், மணிப்பூரகத்திலுள்ள விஷ்ணுவையும், அநாகதச் சக்கரத்திலுள்ள ருத்திரனையும் கடந்து சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் நின்று எங்கும் கண்காணித்துக் கொண்டுள்ளான்.

0015: சிவன் உலகினைப் படைப்பவனாயும், உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும் அழிப்பவனாயும், குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும், திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான்.

0016: அமரர்களும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தியுள்ளமையால் அழகு நிறைந்த ஒளியோடு கூடிய நெற்றியையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனாகிய சிவனது குணத்தைப் பாராட்டி நாடமாட்டார்கள்.

0017: தூல உடம்பும் சூக்கும உடம்பும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில் தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் அல்லது நாத வழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை.

0025: பிறவாதவனும் அழிவில்லாதவனும் யாவற்றையும் ஒடுக்குபவனும் பேரருளுடையவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை நல்குபவனும் ஆகிய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு அடையலாம்.

0026: ஆன்மாக்களை என்றும் தொடர்ந்து நிற்கும் சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் எங்கும் வியாபித்துள்ளவனும் விசாலமான உலகம் முழுவதும் கடந்து நின்றவனும் சகஸ்ரதள கமலத்தின் மேல் உடனாய் இருந்தவனும் ஆகிய சிவனது திருவடிப்பேறு கிட்டும்.


மேலே உள்ள திருமந்திர விளக்கத்தில் சிவபெருமானைத் ஒப்பாக உலகில் ஒருகடவுளும் இல்லை என்று திருமூலர் நெத்தியடி அடிக்கிறார். இந்துமத மற்ற கடவுள்களான பிரம்மன்,விஷ்ணு,உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை என்கிறார். இதுதான் திரு மூலர் காட்டும் ஓர் இறை சைவ சமயம்....

41 வயதில் இன்று மரணத்தை தழுவினாய்!41 வயதில் இன்று மரணத்தை தழுவினாய்!

ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்று

தமிழக மக்களை தாலாட்டிய கவிஞனே!

இன்று மது என்னும் அரக்கனுக்கு

உனது உயிரை விலையாகக் கொடுத்துள்ளாய்!

சாராயத்துக்கு கல்லீரலை விற்ற அப்பாவிகளில்

கடைசி அப்பாவாக நீ இருந்து விட்டுப் போ!ஜவாஹிருல்லா அவர்களின் சமீபத்திய தடுமாற்றம்.

ஜவாஹிருல்லா அவர்களின் சமீபத்திய தடுமாற்றம்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் ஏதேதோ பேசுகிறார். ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒரு குறிப்பிட்ட இயக்கம் செய்தது. அதற்கு மக்கள் ஆதரவு இல்லை என்கிறார். செய்தியாளர் மிக அதிக அளவில் கூட்டம் வந்ததே என்று கேட்டதற்கு 'கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. இதை விட அதிக கூட்டங்களை கூட்டியுள்ளோம்' என்று நெஞ்சறிந்து பொய்யுரைக்கிறார்.

மேலும் தவ்ஹீத் ஜமாத்துக்கு முற்றிலும் எதிர்மறையான கொள்கை கொண்ட அமைப்பு தமுமுக என்கிறார். சிம்மில் ஒரு அங்கத்தினராக இருந்தவரை தமிழகம்' முழுக்க அறிமுகப்படுத்தியது பிஜேயும் தவ்ஹீத் சகோதரர்களும் என்ற உண்மையை ஏனோ மறந்து விட்டார். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக சென்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட தமுமுக வெல்லாததும் தமீமுன் அன்சாரி வெற்றி பெற்றதும் இவரை இந்த அளவு நிலை தடுமாற வைத்துள்ளது.

சுதந்திரதினத்தை இவ்வாறாக பயனுள்ள வகையில் கொண்டாடுவோம்.


Thursday, August 11, 2016

புர்ஹா ஒரு பெண்ணுக்கு எந்த அளவு கண்ணியத்தை தருகிறதுபுர்ஹா ஒரு பெண்ணுக்கு எந்த அளவு கண்ணியத்தை தருகிறது என்பதை அனுபவபூர்வமாக விளக்குகிறார் Nhனிகா என்ற ரஹிமா!

வீடியோ பழசு என்றாலும் கருத்து இன்றைக்கும் பொருந்தும் என்பதால் மீண்டும் பதிவேற்றுகிறேன்.

பார்பனர்கள் தலித்களை கொடுமைபடுத்திய அந்த காலம்!பார்பனர்கள் தலித்களை கொடுமைபடுத்திய அந்த காலம்!

1934 ல் பிராமணர்கள் தலித்களை எவ்வாறெல்லாம் கொடுமைபடுத்தினர் என்பதை விவரிக்கும் கருத்துப் படம். கோவில், குளம், அக்ரஹாரம் என்று எங்குமே நுழைய தலித்கள் மறுக்கப்பட்டனர். மீறி நுழைந்தவர்கள் பார்பனர்களால் தாக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பெரியார் தனது பிரசாரத்தால் பார்பனர்களின் ஆளுமையை ஓரளவு கட்டுக்குள் வைத்திருந்தார். அது இன்று வரை தொடர்கிறது. பெரியார் புகாத வட மாநிலங்களில் தலித்கள் இன்றும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். தற்காலத்தில் வட மாநிலங்களுக்கு பல பெரியார்கள் தேவைப்படுகின்றனர்.

Wednesday, August 10, 2016

கப்பல் வடிவில் அமைந்துள்ள அழகிய பள்ளிவாசல்!


மோடி புகழ் பாடும் இந்தி நடிகை ராக்கி சாவன்மோடிக்கு மிக உயரிய அந்தஸ்தை கொடுத்து மோடி புகழ் பாடும் இந்தி நடிகை ராக்கி சாவன். அரை டவுசர்கள் மகிழ்ச்சி அடைவார்களாக!

குஜராத்தில் இன்றும் தொடரும் தலித்களின் போராட்டம்!குஜராத்தில் இன்றும் தொடரும் தலித்களின் போராட்டம்!

மோடியின் காட்டு தர்பார் ஆட்சிக்கு எதிராகவும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் செயல்படும் சமூக விரோதிகளுக்கு எதிராகவும் குஜராத்தில் தலித்கள் நடத்தி வரும் பேரணி இன்றும் தொடர்கிறது. இவர்களோடு முஸ்லிம்களும், கிருத்தவர்களும், சீக்கியர்களும், பிற்படுத்தப்பட்ட மற்ற சாதி இந்துக்களும் கை கோர்க்க வேண்டும். இவ்வாறு அனைவரும் ஒற்றுமையானால் 3 சதவீதமே இருக்கும் மேல் சாதியினரின் திமிர் ஓரளவாவது அடக்கப்படும்.

மருத நாயகம் பற்றி மேலும் பல தகவல்கள்!

Tuesday, August 09, 2016

ரியாத்தில் நடந்த பகல் கொள்ளை!சவுதி அரேபியாவில் ரியாத்தில் நடந்த பகல் கொள்ளை. வங்கியில் பணத்தை எடுத்து வாகனத்தில் வைத்து விட்டு சில சாமான்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட திருடன் காரின் கண்ணாடியை கைகளாலேயே உடைத்து பணத்தை கொள்ளையடித்து செல்கிறான். அருகில் காரில் அமர்ந்திருந்த ஒரு சவுதி பெண் இதனை மொபைலில் படம் பிடித்துள்ளார். திருடனுடைய காரையும் அதன் நம்பர் பிளேட்டையும் படம் பிடித்துள்ளார். திருடன் இரண்டொரு நாளில் அகப்பட்டு விடுவான்.

Monday, August 08, 2016

'இறந்த பசு மாடுகளை இனி நாங்கள் தூக்க வர மாட்டோம்''இறந்த பசு மாடுகளை இனி நாங்கள் தூக்க வர மாட்டோம்'

குஜராத்தில் தலித் மக்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழி.

இனி மோடியும், அமீத்ஷாவும், ஆனந்தி பென்னும், மோகன் பகவத்தும் இறந்த மாடகளை அப்புறப்படுத்துவார்களாக!

மோடியின் குஜராத் இன்று அழிவின் விளிம்பில்!மிகவும் கொந்தளிப்பான ஒரு சூழலில் குஜராத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பாஜக தலைவர் அமித் ஷாவின் ஆசியுடன் விஜய் ருபானி புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பிரத்தியேகத் தேர்வான ஆனந்திபென் படேலின் ‘திடீர்’ ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளது. 75 வயதுக்கு மேல் முக்கியப் பதவியில் நீடிக்கக் கூடாது என்னும் பாஜகவின் எழுதப்படாத விதியைச் சுட்டிக்காட்டியே ஆனந்திபென் ராஜினாமா செய்திருக்கிறார் என்றாலும், விலகலுக்கான நிஜ காரணங்கள் அவருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே தெரிந்தவைதாம்.

அவற்றில் மூன்று முக்கியமானவை. முதலாவது, உனா சம்பவமும் அதன் எதிரொலியாகத் திரண்டெழுந்த தலித் மக்களின் எழுச்சியும். இரண்டாவது, இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் மேற்கொண்டுவரும் தொடர் ஆர்ப்பாட்டங்கள். மூன்றாவது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல். முதலிரண்டு நிகழ்வுகளைச் சரியாகக் கையாளாமல் தோல்வியடைந்துவிட்டதாலேயே ஆனந்திபென் தேர்தலுக்கு முன்பாகப் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால், பாஜக விரும்புவதைப் போல் இதை ஆனந்திபென்னின் தோல்வியாக மட்டுமே பார்க்க இயலாது. 12 ஆண்டுகாலம் குஜராத்தை ஆட்சிசெய்த நரேந்திர மோடியின் தோல்வியும்தான் இது. ஏன் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் சில அடிப்படைகள்.

உனா சம்பவமும் தலித் எழுச்சியும்

குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தைச் சேர்ந்த மோடா சமத்தியாலா என்னும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு தலித்துகள்மீது ஜூலை 11-ம் தேதி கொலைவெறித் தாக்குதல் மெற்கொண்டது ஒரு கும்பல். ‘இறந்த மாடுகளின் தோலையே அப்புறப்படுத்துகிறோம்; காலம் காலமாக எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தொழிலே இதுதான்’ என்று தலித்துகள் விளக்கமளித்த பிறகும், ‘பசு மாட்டுப் படையினர்’ கொலைவெறியுடன் அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த பல தலித்துகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள். 23 வயது தலித் இளைஞர் ஒருவர் நஞ்சு உண்டு இறந்துபோனார்.

ஆறு பேரின் அடையாளக் கைதோடு, உனா சம்பவத்தை முடித்துக்கொள்ள விரும்பிய ஆனந்திபென் படேலின் நோக்கம் நிறைவேறவில்லை. வெறுப்பும் கோபமும் பொங்க தலித்துகள் கிளர்ந்தெழுந்தார்கள். ‘பசு உன் அம்மா என்றால் அவரை நீயே பார்த்துக்கொள்’என்று மாடுகளின் சடலங்களை அள்ளிக்கொண்டு வந்து வீதிகளில் கொட்டினார்கள். இத்துடன் கடந்துவிடாமல், அணிதிரண்டு ‘தலித் அஸ்மிதா யாத்ரா’எனும் பெயரில் ஒரு நீண்ட பயணத்தையும் தொடங்கினார்கள். ஆனந்திபென் மட்டுமல்ல, ஒருவருமே எதிர்பாராத பெரும் திருப்பத்தை இது ஏற்படுத்தியது.

நீதி வேண்டும் என்னும் கோரிக்கையுடன், கடந்த 5-ம் தேதி அகமதாபாதில் தொடங்கிய இந்த நடைப்பயணத்தில், ஆயிரக்கணக்கான தலித் மக்கள், சிவில் உரிமைப் போராளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்க ளுடைய இலக்கு, பிரச்சினைக்குரிய உனாவைச் சென்ற டைவது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அங்கே சென்றடை யுமாறு அவர்கள் தங்கள் நடைப்பயணத்தை வடிவமைத் திருக்கிறார்கள். தனது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடும் தருணத்தில், தங்களுடைய சுதந்திரம் தடுக்கப் படுவதை நினைவூட்டுவதே அவர்களுடைய நோக்கம்.

இந்த நடைப்பயணத்தை ‘ஆசாதி கூன்’ (சுதந்திரத் துக்கான நடைப்பயணம்) என்றும் அவர்கள் அழைக்கிறார்கள். ஒடுக்குமுறையிலிருந்து, சாதியப் பாகுபாட்டில் இருந்து, மேல்சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, மெய்யான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்னும் எளிமையான கனவு இதில் புதைந்திருக்கிறது. இந்தியா எங்களை ஒதுக்கினாலும் நாங்கள் இந்தியாவை ஒதுக்கவில்லை என்பதை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி உனாவில் மூவண்ணக் கொடியை ஏற்றவும் இந்தக் கூட்டத்தினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தவிரவும், வழியெங்கும் மக்களுடன் மனம் திறந்த ஓர் உரையாடலைத் தொடங்கிவைத்து, உரிமை மீட்புப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுவருகிறார்கள். இந்த நடைப்பயணத்தை நிர்வகிப்பவர்களில் ஒருவரான ஜிக்னேஷ் மெவானி ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார். ‘பழைமையான நடைமுறைகளைவிட்டு வெளியேறிவரும்படி இந்தியா முழுவதிலும் உள்ள தலித் மக்களை நாங்கள் கேட்கப்போகிறோம். குறிப்பாக, இறந்த விலங்குகளை அப்புறப்படுத்தும் பணியில் இருந்து தலித்துகள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்’.

முப்பெரும் உத்திகள்

அம்பேத்கர் சொன்னதும் இதையேதான். தலித்துகள் முதலில் போராடி வென்றெடுக்க வேண்டியது தங்களுடைய சுயமரியாதையை என்றார் அவர். கற்பி, கலகம் செய், ஒன்றுசேர் என்னும் முப்பெரும் முழக்கங்களையும் அதற்காக அவர் முன்வைத்தார். அந்த வகையில், உனா நடைப்பயணம் உள்ளடக்கத்தில் அம்பேத்கரின் நோக்கத்தையும் நடைமுறையையும் பின்பற்றுவதைக் காண முடிகிறது. உனா சம்பவத்தை முன்வைத்து, தலித்துகளை ஒன்றுதிரட்டுவது; பிற்போக்குத்தனத்திலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தைக் கற்பிப்பது; மேல்சாதியினருக்கும் அவர்களுக்குச் சாதகமான அரசையும் எதிர்த்துக் கலகம் செய்வது ஆகியவையே இந்தப் பேரணியின் முப்பெரும் உத்திகளாக இருப்பதைக் காணலாம். அதனாலேயே உனா நடைப்பயணத்தை ஒரு கலாசார மறுமலர்ச்சி இயக்கமாகவும் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.

நடைப்பயணத்தின் நோக்கம், பசு மாட்டைப் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில், சாதிய வன்முறையில் ஈடுபடும் மேல்சாதி வன்முறையாளர்களை எதிர்ப்பது மட்டுமல்ல; இந்த லும்பன் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறும் அரசாங்கத்தை சேர்த்தே எதிர்ப்பதும்தான்.

உனா, தனியொரு சம்பவம் அல்ல. தலித்துகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறை யிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நீண்டதொரு ஒடுக்கு முறைப் போரின் ஓர் அத்தியாயமே அது. ஆனால், தலித்துகள் வழக்கம்போல் இதனை அமை தியாகக் கடந்துசென்றுவிடாமல் தீர்க்கமாக எதிர்வினை யாற்றியபோது, இந்தியாவின் கவனம் மட்டுமல்ல, உலகின் கவனமும் அவர்கள்மீது படர்ந்தது. நியூயார்க் டைம்ஸ் வெளியட்ட தலையங்கம் அதற்கொரு சாட்சி. சமீப காலமாக அதிகரித்துவரும் தலித் விரோதப் போக்கைச் சுட்டிக்காட்டி கவனப்படுத்தியுள்ளதோடு, இது குறித்து வாயே திறக்காத பிரதமர் நரேந்திர மோடியின் ‘அவமானகரமான அமைதியையும்’விமர்சித்திருக்கிறது மேற்படி தலையங்கம்.

குஜராத்தின் மொத்த மக்கள்தொகையில் படேல்களின் எண்ணிக்கை 12 முதல் 15% மட்டுமே என்றபோதும், சமூகத் தில் செல்வாக்குமிக்க பிரிவினராக அவர்கள் திகழ்கி றார்கள். கல்வி, தொழில், அரசியல் உள்ளிட்ட துறைக ளிலும் படேல்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹர்திக் படேல் என்னும் 22 வயது இளைஞர், படேல்களையும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (ஓபிசி) சேர்க்க வேண்டும் என்னும் கோரிக்கையுடன் போராடத் தொடங்கினார்.

இந்தக் கோரிக்கைக்கு மற்ற பட்டிதார் மக்களிடமிருந்து ஆதரவு பெருகியதைக் கண்ட ஆனந்திபென் படேல், பிரிவினைக் குற்றச்சாட்டு சுமத்தி ஹர்திக் படேலைச் சிறையில் தள்ளினார்.சிறையில் இருந்து வெளிவந்த பிறகும் கோரிக்கையும் போராட்டமும் தொடர்ந்ததுடன் ராணுவத்தை வரவழைத்து கட்டுப்படுத்த வேண்டிய அளவுக்குக் கலகமும் வன்முறையும் பெருகியது. இறுதியில் ஆனந்திபென் அரசு இறங்கிவந்தது. பொருளாதாரரீதியில் பின்தங்கிய மேல் சாதியினருக்கும் 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்தது. இதுவும் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. அரசாங்கத்தின் அறிவிப்பு போதாது, அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பட்டிதார் மக்கள் கோரிக்கை எழுப்பியிருக்கிறார்கள். அவர்கள் அஞ்சியதைப் போலவே, குஜராத் உயர் நீதிமன்றம் இந்த 10% அறிவிப்பை ரத்து செய்திருக்கிறது.

கனவுகள் கலையும் தருணம்

தலித்துகளின் எழுச்சியும் படேல்களின் எழுச்சியும் அடிப்படையில் வெவ்வேறானவை. இருவேறு முரண்பட்ட தர்க்கங்களில் இருந்து எழுந்தவை என்றாலும் சில உண்மைகளை இவை வெளிப்படுத்துகின்றன. ஒடுக்கப்பட்ட, நலிந்த தலித் மக்கள் மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் வசதியான, மேல் சாதி படேல்களும் குஜராத் அரசுமீது சமஅளவு வெறுப்பும் கோபமும் கொண்டுள்ளனர். இந்த வெறுப்புக்கும் கோபத்துக்குமான காரணங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவியில் அமர்ந்த ஆனந்திபென் படேலிடம் தேடுவது பிழையானது. 12 ஆண்டுகாலம் குஜராத்தை ஆண்ட நரேந்திர மோடியிடமிருந்து நம் ஆய்வைத் தொடங்குவதே சரியானதாக இருக்கும்.

காரணம், குஜராத் மாதிரியை மிகுந்த ஆரவாரத்துடன் சந்தைப்படுத்தியவர் அவர்தான். குஜராத் ஒரு வெற்றி கரமான பரிசோதனைச் சாலை என்று படாடோபமாகப் பிரச்சாரம் மேற்கொண்டுதான் மோடி 2014-ல் ஆட்சியைக் கைப்பற்றினார். குஜராத்தை ஒரு கனவுப் பிரதேசமாக, இந்தியா முழுமைக்குமான ஒரு வலுவான உதாரணமாக முன்னிறுத்தியவர் அவர்தான். இப்போது நம் கண்முன்னால் அந்தப் பெருங்கனவு சரிந்துகொண்டிருக்கிறது.

-கட்டுரையாசிரியர், எழுத்தாளர்,

மருதனின் சமீபத்திய நூல்களில் ஒன்று, ‘குஜராத் இந்துத்துவம் மோடி’.

தொடர்புக்கு : marudhan@gmail.com

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
08-08-2016

இந்தியா சீக்கிரமே வல்லரசாகிடும் :-)


'மாடு பால் தரும் : ஓட்டைத் தராது"
'மாடு பால் தரும் : ஓட்டைத் தராது என்பதை மோடி தற்போது புரிந்து கொண்டார்'

-லல்லு பிரசாத் யாதவ்

Sunday, August 07, 2016

பிஜேபி ஆட்சியில் 500 பசுக்கள் பசியால் இறந்துள்ளன!பிஜேபி ஆட்சியில் 500 பசுக்கள் பசியால் இறந்துள்ளன!

ஜெய்ப்பூர் அருகே கோசாலை ஒன்றில் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டதால், தீவனம் கிடைக்காமல் கடந்த 2 வாரங்களில் 500-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்தன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே, அரசு சார்பில் ஹிங்கோனியா பசுக்கள் காப்பகம் (கோசாலை) இயங்கி வரு கிறது. அதில், ஒப்பந்தப் பணியா ளர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க வில்லை எனக் கூறி கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 8,000 பசுக்கள் உள்ள இந்த கோசாலையில் பணியாளர்கள் பணிக்கு வராததால், தீவனம் வழங்குவது, சாணம் அள்ளுவது மற்றும் பராமரிப்பு வேலைகள் நடக்கவில்லை. இதன் விளைவாக வாரக் கணக்கில் தீவனம் உட்கொள் ளாமலும், சேறு சகதியில் சிக்கியும் ஏராளமான பசுக்கள் இறந்ததாக தகவல் பரவியது.

தன்னார்வலர் குழுவினர் கோசாலையின் உள்ளே நுழைந்து பார்த்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும், 90 மாடுகளின் உடல்களை அப்புறப்படுத்தினர். இறந்த மாடு களின் எண்ணிக்கை குறித்து அதி காரப்பூர்வமாக தகவல் தெரிவிக் கப்படவில்லை என்றாலும், 500-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்திருப்பதாக தன்னார் வலர்கள் தெரிவித்தனர்.

‘பசுக்கள் யாவும் நோய்வாய்ப் பட்டு இறக்கவில்லை. பட்டினியால் மட்டுமே இறந்தன’ என்று அரசு கால்நடை மருத்துவர் தேவேந்திர குமார் யாதவ் குறிப்பிட்டார்.

‘அரசியல் செய்வதற்கு மட்டும் பசுக்களை பாஜக பயன்படுத்து கிறது. நிஜத்தில் அக்கட்சி ஆளும் மாநிலத்திலேயே பசுக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது’ என சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ்வர் தூடி கூறினார்.

‘பசு பாதுகாப்பகமாக இருக்க வேண்டிய இடம், பசுக்களின் பலிக் கூடமாக மாறியதற்கு மாநில அரசின் பொறுப்பற்ற தனமே காரணம்’ என விஸ்வ இந்து பரிஷத் மூத்த நிர்வாகி நர்பாத் சிங் ஷெகாவத் கூறினார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
08-08-2016

பீஹாரில் நடத்தப்பட்டுள்ள திட்டமிட்ட வன்முறை!

பீஹாரில் நடத்தப்பட்டுள்ள திட்டமிட்ட வன்முறை!

பீஹார் மாநிலத்தின் சப்ரா மாவட்டத்தில் இஸ்லாமியரிகளின் வணிக வளாகங்கள் பஜ்ரங் தள் குண்டர்களால் சூறையாடப்பட்டுள்ளது. ஒரு இஸ்லாமிய இளைஞன் முக நூலில் இந்து மதம் சம்பந்தமாக சில கருத்துக்களை சொன்னதை காரணமாக வைத்து கூட்டத்தை கூட்டி இஸ்லாமியரின் பொருளாதாரத்தை சூறையாடியுள்ளனர்.

பள்ளி வாசலின் வாயிற் கதவை இடித்துள்ளனர். பல கடைகளை உடைத்து அதில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்துள்ளனர். இந்து மதத்தின் பெயரை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் இந்த கொள்ளையர்களை சட்டம் ஒன்றும் செய்யாது. ஒரு இஸ்லாமியருக்கு 45000 ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை இழந்துள்ளார்.

இந்து மதத்தை காக்கும் லட்சணம் இதுதூனா? இப்படி சாமான்யர்களின் பொருட்களை கொள்ளையடித்து சென்றால் இந்து மதம் வளர்ந்து விடுமா? மோடியின் ஆட்சியில் இந்து மதம் மிகப் பெரும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இஸ்லாமிய மக்கள் இழந்த பொருட்களை இரண்டொரு மாதத்தில் உழைத்து சம்பாதித்து விடுவார்கள். ஏனெனில் அவர்கள் உழைக்கப் பிறந்தவர்கள்.

கொள்ளையடித்து சேர்த்த இந்த பொருட்களை வைத்து எத்தனை நாள் இந்துத்வா குண்டர்களால் நிம்மதியாக இருந்து விட முடியும்?

பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளுங்கள் இந்துத்வாவாதிகளே!

தகவல் உதவி
மில்லி கெஜட்
07-08-2016

http://twocircles.net/2016aug06/1470507356.html#.V6d9pkZ94pv

Saturday, August 06, 2016

குஜராத் நாறுகிறது - முதல்வர் பதவி விலகல்குஜராத் நாறுகிறது - முதல்வர் பதவி விலகல்

மோடி மற்றும் அமீத்ஷாக்களின் அரசியல் தந்திரம் இந்த முறை அவர்களை நோக்கியே திரும்பியுள்ளது. 'பசு உங்களுக்கு தெய்வம் என்றால் அதனை நீங்களே சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று தலித்கள் ஒதுங்கிக் கொண்டனர். இதன் காரணமாக குஜராத் எங்கும் இறந்த பசுக்களின் உடல்கள் அழுகிக் கிடக்கின்றன. எடுப்பதற்கு ஆளில்லை. நிலைமையை சமாளிக்க முடியாமல் முதல்வர் ஆனந்தி பதவி விலகுகிறார்.

இது ஆரம்பம்தான். மோடி எடுத்த வன்முறை அரசியல் இன்று அவரையே பதம் பார்க்க ஆரம்பித்துள்ளது. இனி வருங்காலம் மோடிக்கு சிறப்பானதாக இருக்காது.

இறைவனுக்கு நாம் நன்றி சொல்வோம்!இறைவனுக்கு நாம் நன்றி சொல்வோம்!

எங்கெல்லாம் பிஜேபி அதிக செல்வாக்கோடும் ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்துள்ளதோ அந்த மாநிலங்கள் எல்லாம் 'பசு பாதுகாப்பு' என்ற போர்வையில் கலவர பூமியாக மாறிப் போயுள்ளது.

தென் மாநிலங்களில் இந்த புருடாக்கள் கை கொடுப்பதில்லை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பசுவை வைத்து வயிறு வளர்க்கும் இந்து தீவிரவாதிகளை காண முடியவில்லை.

இதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

ஹிரோஷிமாவில் குண்டு போட்டது எந்த தீவிரவாதி!

கன்னட ராமசாமிக்குத் தமிழ் அபிமானம் ஏன்?

ஒரு சிலர் கன்னட ராமசாமிக்குத் தமிழ் அபிமானம் ஏன் என்கின்றனர். அவர்கள் தமது தாய்மொழியை - கலையை விற்று, பிறருக்கு அடிமையாகி, தன்னையும் விற்றுப் பேசுகின்றனர்.

கன்னடன், தெலுங்கன், மலையாளி என்போர் யார்? எல்லோரும் தமிழர்களே - திராவிடர்களே. தமிழிலிருந்துதான் இவைகள் வந்தன. அம்மொழிகளில் கலந்துள்ள வடசொற்களை நீக்கிவிட்டால் எஞ்சுவது தனித் தமிழே. அப்பொழுது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற பெயர் மறைந்துவிடும். எனவே, எங்கள் மொழியிலுள்ள சீரிய கலைகளை ஒழிக்க முயல்வதாலேயே பலத்த கிளர்ச்சி செய் கிறோம். இது ஒரு அற்ப விஷயமல்ல. தமிழ்க்கலை ஒழியாதிருக்க நாம் வகை தேட வேண்டுவது உண்மைத் தமிழன் கடமையாகும். எல்லாப் பள்ளிகளிலும் இந்தி வைத்து விட்டால், இந்தி வேண்டாத மாணவர்கள் எங்கு சென்று படிப்பது என்று சிலர் கேட்கின்றனர். 3ஆம் பாரம் வரை தனிப் பள்ளிக்கூடங்களை ஆங் காங்கு ஏற்படுத்தி அதில் மாணவர்களைத் தயார் செய்து 4ஆம் பாரத்தில் கொண்டு சேர்த்துவிடலாம். இது ஒரு பெரிய காரியமல்ல. இதற்குச் சர்க்கார் உத்தரவு தேவையில்லை. இத்தகைய பள்ளிகளை விரைவில் சென்னையில் தொடங்கச் சிலர் முயல்கின்றனர். அதற்கு நீங்கள் ஆக்கம் அளியுங்கள்...


18.06.1939 அன்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு- "குடிஅரசு" - சொற்பொழிவு - 25.06.1939

Thursday, August 04, 2016

ரனா அய்யூபின் கலந்துரையாடல் இன்று அல்ஜஜீராவில்!Is dissent being stifled in Narendra Modi's India?

Rana Ayyub, author of the controversial book, Gujarat Files, debates Sadanand Dhume.

Full debate available Friday at 1930GMT.

பல இந்திய உயிர்களைக் காத்த துபாய் தீயனைப்பு வீரர்!பல இந்திய உயிர்களைக் காத்த துபாய் தீயனைப்பு வீரர்!

துபாயில் தரையிரங்கும்போது விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர் காயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

“விமானம் விபத்துகுள்ளாகும் போது பயணிகளை காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்ட இளம் தீயணைப்பு வீரர் தனது உயிரை இழந்துள்ளார். அவரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம்” என துபாய் பிரதமர் முகமது பின் ரஷித் அல் மக்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புதன்கிழமை பகல் 10.19 மணிக்கு, போயிங் 777 விமானம் (இகே521) துபாய் நோக்கி புறப்பட்டது. இதில் 282 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 226 பேர் இந்தியர்கள்.

பகல் 12.45 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி, ஓடுதளத்தை மோதியது.

இதைத்தொடர்ந்து, விமானத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து, அதில் இருந்து கரும்புகை வெளி யானபடி இருந்தது. உடனடியாக விமானத்தில் இருந்து அவசரகால வழியின் மூலம் பயணிகள் வேக மாக வெளியேறினர். அனைத்து பயணிகளும், பணியாளர்களும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தை எமிரேட்ஸ் நிறுவனம் உனடியாக அறிவிக்கவில்லை. முதலில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என, எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article8942605.ece?homepage=true&relartwiz=true

விவசாயத்தில் பல புதுமைகளை புகுத்துவோம்!உலகில் பல புதுமைகளை நவீனங்களை புகுத்தி விவசாயத்தை லாபகரமாக்கி காசு பார்க்கின்றனர். ஆனால் நமது நாட்டில் மத்திய அரசு மத மோதல்களையும் சாதி மோதல்களையும் தூண்டி விட்டு ஓட்டு அறுவடை செய்வதிலேயே குறியாக உள்ளது.

நமக்கு வாய்த்த பிரதமரும் அப்படி.. என்ன செய்ய?

Wednesday, August 03, 2016

அதிசய கடல் பிராணி - பெயர் தெரியவில்லை.ஆஸ்திரேலிய கடற்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 36 வயதான வாட்கின்ஸ் என்ற மீனவர் ஒரு விசித்திரமான பிராணியை கடலில் கண்டார். அதனை படமும் பிடித்துள்ளார். இதன் பெயர் அவருக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா?

சென்னை என்று அழைக்கப்படுவது ஏன்?

சென்னை

சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ்

முஸ்லிம்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை மதரஸாக்களை நிறுவி கல்விப் பணி ஆற்றி வந்ததால் , மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

உலகறிய மதராஸ் என்றும் தமிழர்களை மதராஸிகள் என்றும் இன்றும் அழைத்து வருகின்றனர். இவ்வளவு பிரபலமான பெயரை மாற்றி விட்டு இந்த நாட்டை அந்நியனுக்கு பணத்துக்கு விற்ற ஒருவரின் பெயரை கலைஞர் வலிந்து வைத்தது ஏனோ? ஒரு கால் இவரும் தெலுங்கர்: அவரும் தெலுங்கர். இனப் பற்று காரணமாக இருக்குமோ?

இப்பலாம் தமிழ்நாட்டுல யாரு சார் சாதி பாக்குறாங்க?!

என் மகன் என்னை ஒருநாள் கொல்லக் கூடும்!‘ஆட்டிஸம்’ குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோருக்குச் சமூகம் உதவ வேண்டும்

என்னுடைய 14 வயது மகன் ஒரு நாள் என்னைக் கொன்றுவிடுவான் என்று அஞ்சுகிறேன். இதை நம்புவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம்.

14 வயதான என் மகன் ராபி, ‘ஆட்டிஸம்’ என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறான். 6 அடி உயரமும் அதற்கேற்ற பருமனும் வலுவும் உள்ளவன். பூஞ்சையான என்னை அடித்து நொறுக்கிவிடுவான். அவன் அளவுக்கு உயரமும் வலுவும் உள்ள என் கணவர் டேவிட் அருகில் இல்லாவிட்டால் என்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.

எங்கள் பரிதாப நிலைமை

ராபி என்னை முதலில் அடித்தபோது அவனுக்கு வயது 11. வேண்டும் என்றே அடித்தான் என்று நான் நம்பத் தயாரில்லை. ஒரு வாரமாக வானிலை சரியாக இல்லாததால் வீட்டில் அடைந்து கிடந்தோம். ஒரு ஞாயிற்றுக்கிழமை அருகிலிருந்த அருங்காட்சியகத்துக்குச் செல்ல முடிவுசெய்தோம். ராபி திடீரென்று கத்துவான், வினோதமாக நடந்துகொள்வான். அதை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் முகம் சுளிப்பார்கள் அல்லது ஏன் வெளியில் கூட்டி வருகிறீர்கள் என்று கோபமாகக் கேட்பார்கள். அவனையே எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள். இதனாலேயே ராபியின் தம்பி ஜோ அவமானம் அடைவான். அண்ணனைக் கூட்டிக்கொண்டு வெளியில் போக வேண்டாம் என்பான். காலையில் புறப்பட்டுவிட்டால் கூட்டம் வருவதற்கு முன் சுற்றிப்பார்த்துவிட்டு அவனைக் கூட்டிக்கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்தோம். அப்படிச் செல்வது எங்களைவிட அவனுக்காகத்தான் என்பது பலருக்கும் புரியவில்லை.

முதல் அரை மணி நேரம் அமைதியாகக் கழிந்தது. நம்பிக்கை ஏற்பட்டது. காபி கடைக்குப் போய் சாப்பிடுவதைவிட இங்கேயே வாங்கி வந்துவிடுகிறேன் என்று டேவிட் சென்றார். இரண்டு நிமிஷங்களுக்கெல்லாம் ஒரு பெரிய குடும்பம் சளசளவென்று பேச்சுகளோடு ஆரவாரமாக உள்ளே நுழைந்தது. அதைப் பார்த்ததும் ராபி தன்வசம் இழந்து கிரீச்சென்று ஓலமிட்டுத் தரையில் விழுந்து புரள ஆரம்பித்தான். ஜோ அவமானத்தாலும் கோபத்தாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். நான் ராபியைச் சமாதானப்படுத்த முயன்றேன். அந்தக் குடும்பம் முழுக்க அருகே வந்து வேடிக்கை பார்த்தது. தரையில் கையையும் காலையும் ஓங்கி ஓங்கி அடித்தான் ராபி. நான் அவனைச் சமாதானப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் இரு கைகளையும் சேர்த்து அணைத்துத் தூக்க முயன்றேன். மின்னல் வேகத்தில் என் மூக்கின் மீது ஒரு குத்துவிட்டான். குருத்தெலும்பு உடைந்துவிட்டதை உணர்ந்தேன். தரையில் மட்டமல்லாக்கச் சரிந்தேன். இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை. மூக்கிலிருந்து குபுகுபுவென்று ரத்தம் பொங்கியது. என் வலியைவிட ராபியின் நிலையை நினைத்து எனக்குக் கண்ணீர் பொங்கியது.

ஜோவுக்குப் பிடிக்காத ராபின்

அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர், “டேய் பையா! அம்மாவை அடிக்காதே நிறுத்து” என்று இரைந்தார். ராபி அதைக் காதில் வாங்காமல் மீண்டும் மீண்டும் என் தலைமீது அடித்துக்கொண்டே இருந்தான். எங்களைச் சுற்றி நின்றவர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. காபி கப்புகளுடன் அங்கு நுழைந்த டேவிட் என்னை ராபி அடிப்பதைப் பார்த்ததும் கோப்பைகளை அப்படியே தரையில் வீசிவிட்டு ராபியைப் பாய்ந்து பிடிக்கத் தொடங்கினார். கூட்டத்திலிருந்த ஒருவர் டேவிட்டைப் பார்த்து, “அந்தப் பையனை நன்றாக உதையுங்கள்” என்று கத்தினார். “முட்டாளே, அவன் ஆட்டிசக் குழந்தை” என்று டேவிட் பதிலுக்குக் கத்தினார். ஒரு கைதியை போலீஸ் அடக்கி கூட்டிச் செல்வதைப் போல காருக்கு அவனைத் தள்ளிக்கொண்டு வந்தார் டேவிட்.

அந்தச் சம்பவத்திலிருந்து மீள எங்களுக்கு ஒரு வாரம் ஆனது. என்னுடைய கண்களைச் சுற்றி கருப்பாக ரத்தம் கட்டியிருந்தது. மூக்கும் கன்னங்களும் கன்னிப்போயிருந்தன. ராபிக்காக நான் வேலையை விட்டுவிட்டேன். ராபி முற்பகலில் ஒரு பள்ளிக்கூடத்துக்குச் செல்வான். பிற்பகலில் அவனுடன் நான் தனியாக இருக்க வேண்டுமே என்று டேவிட் கவலைப்பட்டார். ராபி சின்னக் குழந்தையாக இருந்தபோது சுட்டியாக இருந்தான். அழகான, தெளிவான முகமும் குரும்புச் சிரிப்பும் சுருட்டை முடியுமாக பார்ப்பவர்களைக் கவர்ந்தான். ஜோ பிறந்தவுடன் வீட்டு வேலையில் என் சகோதரி உதவினாள். புதிய குழந்தைக்காகத் தன்னைக் கவனிப்பதில் உள்ள மாற்றத்தை ராபி விரும்பவில்லை. கோபத்தை வெளிப்படையாகக் காட்டினான். அப்போதுதான் அவனுக்கு ஆட்டிஸம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மருத்துவர்கள் இப்படிக் கூறியவுடனேயே அரசோ, சுகாதாரத் துறையோ தானாகவே எங்களுக்கு உதவிகளை முன்வந்து செய்யும் என்று நினைத்தேன்.

சுகாதாரத் துறையினர் ராபியை நாங்கள் யாரும் அடித்துவிடக் கூடாது, துன்புறுத்தக் கூடாது என்பதில்தான் அக்கறை காட்டினார்களே தவிர, அவன் எங்களைத் தாக்கக்கூடும் என்பது குறித்து அக்கறை காட்டவில்லை. ராபி போன்றவர்களை நீண்ட காலத்துக்குத் தங்கள் பொறுப்பில் எடுத்துச் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் எதும் அரசிடம் இல்லை. இதை ஒரு பிரச்சினை யாக யாரும் கருதுவதில்லை. இதனால், பாதிக்கப்படும் குடும்பங்கள் அரசுக்கு முக்கியமே இல்லை.

கண்களில் வழியும் நீர்

ராபிக்கு ஆட்டிஸம் என்று மருத்துவர்கள் சொன்னபோது, இடி விழுந்ததைப் போல ஆயிற்று. அவனை நன்றாக ஆராய்ந்து பார்த்துச் சொல்லுங்கள், எவ்வளவு செலவானாலும் அவனைக் குணப்படுத்த முயற்சிக்கிறேன் என்றார் டேவிட். எப்படி நடந்து கொண்டால் ராபி சாதாரணமாக இருப்பான் என்று யாராவது சொன்னால் போதும், அதன்படி நடக்கலாம் என்று அப்பாவித்தனமாக நினைத்தேன்.

ஆட்டிஸம் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியாவிட்டால் அதைப் புரிந்து கொள்வதே கடினம். இப்போது எங்களுடைய வீட்டின் செயல்பாடு எல்லாமே ராபியின் உடல், மன நிலையை ஒட்டித்தான் இருக்கிறது. இது ஜோவை மிகவும் பாதிக்கிறது. எங்கள் வீடே இரும்புக் கோட்டைபோல மாறிவிட்டது. எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் எப்போதும் சாத்தி வைக்கிறோம். உடலைக் குத்திக் கிழிக்கக்கூடியது, ஓங்கி மண்டையில் அடிக்க உதவுவது என்று எல்லா சாமான்களையும் அகற்றிவருகிறோம். சுவர்களில் படங்கள்கூட தொங்கவிடப்படுவதில்லை. ராபி தானாகவே படுத்துத் தூங்க மாட்டான். வார இறுதி நாட்களில் டேவிட் அவனோடு படுப்பார். அவன் பக்கத்தில் அச்சத்துடன்தான் படுப்பேன். லேசாக நகர்ந்தால்கூட அவனுக்குத் தூக்கம் கலைந்து உடைந்து நொறுங்கிவிடுவான்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் அவனுக்கு 14 வயதானது. அப்போதிருந்து மீண்டும் அடிக்க ஆரம்பித்து விட்டான். பள்ளிக்கூடத்தில் அவனால் பிரச்சினை. பலமுறை அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டேன். இப்படிப்பட்ட குழந்தைகளைக் கையாள பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அதைச் செய்யாமல், ஒவ்வொரு முறையும் என்னை அழைத்து அறிவுரை கூறுவதும் கண்டிப்பதும் வருத்தமாக இருக்கிறது. அவன் நடத்தையை வைத்து நான் நல்ல தாயா, பொறுப்பற்றவளா என்று எடை போடுவது மன வேதனையைக் கூட்டுகிறது. இப்படியான குழந்தைகளைப் பராமரிப்பதில் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பங்கிருக்கிறது. ஆனால், சமூகம் யாரோ அது இருவர் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று விலகிக்கொள்கிறது. ஜோ இப்போது கத்துகிறான்…

‘‘எனக்குப் பயமாக இருக்கிறது!’’

தமிழில்: சாரி,

© ‘தி கார்டியன்’

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8936113.ece?homepage=true&ref=tnwn

Tuesday, August 02, 2016

மன்னர் திப்பு சுல்தான் உருவாக்கிய அழகிய கிணறு.மன்னர் திப்பு சுல்தான் உருவாக்கிய அழகிய கிணறு. எந்த அளவு நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்றோ குளங்கள் கிணறுகளை மூடி வருகிறோம்.