Followers

Wednesday, December 31, 2014

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திரம்!யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

-திருமூலரின் திருமந்திரப் பாட்டு

"இறைவனின் திருவருளால் நான் அந்த இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினை நாம் பெற்றதன் பலனை அடைந்தவராவோம். அவ்வாறு அந்த இறை வேதமாகிய உண்மைகளை நாம் மேலும் மேலும் நேசிக்க அந்த இறைவனின் திருப் பொருத்தத்தை அளவில்லாமல் அடையலாம்." என்கிறார் திருமூலர்.

இதனை ஒரு அழகிய கதையின் மூலம் மேலும் அறிந்து கொள்வோம்.

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன.

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."...

அந்தப் பம்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது.

அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.

தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

இது போன்று தமிழ் மொழியில் எண்ணிலடங்கா ஏகத்துவ கொள்கையையும் நற்பண்புகளையும் போதிக்கும் பல நுல்கள் உள்ளன. ஆனால் ஆரிய படையெடுப்பால் பல நூல்கள் ஆற்றில் வீசியும் தீயிலிட்டு கொளுத்தியும் நாசமாக்கினர் மாபாவிகள். எஞ்சியது திருக்குறள், திருமந்திரம் போன்ற மிக சொற்ப நூல்களே. அதனையும் வஞ்சகத்தால் மறைத்து புராணங்களையும் இதிகாசங்களையும் பிரபலப்படுத்தி மக்களை இன்று வரை அடிமைகளாக வைத்திருப்பவர்களை நாம் அடையாளம் கண்டு தமிழனின் உண்மை வரலாற்றை உலகுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.


பிகே சினிமாவை எதிர்ப்பவர்கள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர்?

"உங்கள் பணக்கஷ்டம் தீர வேண்டுமென்றால் பலிகொடுப்பது அவசியம் என்று பெண் மந்திரவாதி கூறியதால் பெற்ற தாயையும், இரு சகோதரர்கள் கொன்றனர்."

அக்டோபர் 30-31 தேதிகளுக்கு இடையிலான நள்ளிரவில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஆனால், பலியிடப்பட்ட இரண்டு பேர்களின் உடல்கள் திரம்பகேஸ்வரில் உள்ள தேகிஹார்ஷ் என்ற கிராமத்தில் கிடைத்ததையடுத்து துப்பு துலக்கப்பட்டு இந்தச் செய்தி இரண்டு சகோதரர்களை கைது செய்த பிறகே வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட தாயாரின் பெயர் புதாபய் டோரி (65), இவரது உறவினர் காஷிபாய் வீர் (வயது 80).

இந்த பயங்கரக் கொலைகள் தொடர்பாக போலீஸார் தாயைக் கொலை செய்த 2 சகோதரர்கள் உட்பட 10 பேரை கைது செய்து, பல்வேறு கிரிமினல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி போலீஸ் தரப்பு கூறுவதாவது: காசிநாத், கோவிந்த் டோரி என்கிற 2 சகோதரர்கள் பொருளாதார அளவில் கஷ்டமான காலத்தில் இருந்துள்ளனர். இதனையடுத்து யார் யார் பேச்சையோ கேட்டு பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கே என்பவரைச் சென்று சந்தித்துள்ளனர். தங்களது குடும்ப உறுப்பினர்கள் விவரம் உட்பட அனைத்தையும் அந்த பெண் மந்திரவாதியிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த மந்திரவாதி உடனே, சகோதரர்களின் தாயார் புதாபாய் டோரி மற்றும் அவரது சகோதரி ஆகியோரிடையே தீயசக்திகள் உள்ளன. அத்தீய சக்திகளை ஒழித்தால் மட்டுமே உங்கள் கஷ்டம் நீங்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சகோதரர்கள் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.

“பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கேயின் அறிவுரையின் படி சகோதரர்கள் தன் தாயார் புதாபாய் டோரியையும் அவரது சகோதரி ராஹிபாய் பிங்ளி என்பவரையும் அழைத்து வந்தனர். 80 வயது உறவினர் காஷிபாய் வீர் என்பவரும் உடனிருந்துள்ளார். பூஜை செய்வதான பாவனையுடன் தொடங்கியது பரிகாரம்.

திடீரென அந்தப் பெண் மந்திரவாதி சகோதரர்களின் தாயார் புதாபாயையும், 80 வயது காஷிபாய் மற்றும் ராஹிபாய் பிங்ளி ஆகியோரை தாறுமாறாக அடித்து நொறுக்கத் தொடங்கினர். இதில் 65 வயது தாயார் புதாபாய் மற்றும் 80 வயது காஷிபாயும் கொலை செய்யப்பட, ரிஷிபாய் பிங்கிள் எப்படியோ அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்”என்று நாசிக் ஊரகக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் மோஹித் கூறினார்.

கொலை செய்ததோடு புதாபாயின் கண்களையும் எடுத்துள்ளார் பெண் மந்திரவாதி. நவம்பர் 1ஆம் தேதி தாயார் மற்றும் காஷிபாய் உடல்களை சகோதரர்கள் கிராமத்தில் இருந்த வயல் ஒன்றில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற ராஹிபாய் பிங்ளி பிற்பாடு மூடநம்பிக்கை ஒழிப்பு சமூக ஊழியர் பக்வான் மாதே என்பவரைச் சந்தித்து கடந்த வாரத்தில்தான் நடந்த பயங்கரத்தைத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடநம்பிக்கைத் தடுப்புச் சட்டத்தை இயற்றியது. ஆனால், சட்டத்தின் மூலம் மூடநம்பிக்கையை தடுத்து விட முடியுமா, மூடத்தன பயங்கரவாதத்திற்கு மகாராஷ்டிராவில் பலியாவோருக்கு அரசின் பதில் என்ன? போன்ற கேள்விகள் அங்கு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-12-2014

டாஸ்மாக்கில் யோகா கற்கும் தமிழன்!தமிழன் என்றோர் இனமுண்டு!

தனியே அதற்கோர் குணமுண்டு!

சரியாக சொன்னார் நம் முன்னோர்!

தெளிவாக விளங்கினர் நம் தமிழர்!

யோகா கற்பது நம் உடலுக்கு நல்லது!

அலை பாயும் நம் மனதுக்கும் நல்லது!

உண்மையை உணர்ந்த தமிழன் இன்று

யோகா கற்கிறான் டாஸ்மாக் படியிலே!

குழந்தை அழுகிறான் தாயின் மடியிலே!

மனைவி நிற்கிறாள் மார்வாடி கடையிலே!

அரசும் கேட்கிறது அதன் ஊழியரிடத்தில்

இந்த மாதம் எத்தனை கோடி லாபம் என்று!

நாளை புத்தாண்டாம்! பலரும் சொல்கிறார்கள்!

ஒரு மாத வருமானத்தை இந்த ஒருநாளில்

கொண்டு வந்து கொட்ட தயராகி விட்டான்...

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே

முன் தோன்றி மூத்த குடிக்கு சொந்தமான

மறத் தமிழன்! மனிதம் மரித்து போன தமிழன்!

வாழ்க டாஸ்மாக்.... வளர்க அரசின் வருமானம்

Tuesday, December 30, 2014

பெங்களூரு பாம் வைத்ததில் இந்து மாணவனுக்கு தொடர்பு!இந்து மதத்தைச் சார்ந்த பள்ளி மாணவன் 'அப்துல் கான்' என்ற பெயரில் ட்விட்டரில் அக்கவுண்ட் திறந்துள்ளான். அந்த அக்கவுண்ட் மூலமாக ஞாயிற்றுக் கிழமை பெங்களூர் சர்ச் தெருவில் நடந்த குண்டு வெடிப்பை தானே செய்ததாகவும் இது போல் மேலும் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்றும் ட்விட் செய்துள்ளான். முன்பு கைதான மெஹ்தி பிஸ்வாஸையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கொரிக்கை வைத்துள்ளான்.

"I am Abdul the one behind Bangalore blast yesterday. In 2 days 2 more blast. I challenge catch me if you can. Police my foot. ISIS (Sic.)"

இந்த ட்விட்டை பெங்களூரு சிட்டி போலீஸூக்கும் உள் துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கும் ஃபார்வேர்ட் பண்ணியுள்ளான் இந்த பள்ளி மாணவன். இது பற்றி க்ரைம் பிராஞ்ச் அபிஷேக் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது 'பையனின் பெற்றோர் எங்களை சந்தித்தனர். இவர்களது மகன் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளான் என்றும் ஒன்றும் அறியாத அப்பாவி என்றும் கூறுகின்றனர். பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இந்த மாணவன் இது போன்ற காரியத்தை செய்துள்ளான். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். பாதுகாப்பு காரணம் கருதி அவனது பெயரை மறைத்துள்ளோம்' என்றார்.

தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்
30-12-2014

கள்ள ஐடி திறந்து முஸ்லிம் சமூகத்தை மாட்டி விட வஞசகமாக வேலை செய்த இந்த பள்ளி மாணவன் மன நலம் பாதிக்கப்பட்டவனாம். எப்படி இருக்கிறது கதை. காந்தியை கொன்ற கோட்சே இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு வந்ததை நாம் மறந்து விட முடியாது. அந்த வழி முறை வாழையடி வாழையாக இந்த பள்ளி மாணவனையும் சென்றடைந்துள்ளது. இவனை முறையாக விசாரித்தால் இதற்கு பின்னால் மறைந்துள்ள இந்துத்வா அமைப்புகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும். மடங்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற அரசு முயற்சிக்கும் போதுதான் பிரச்னையை திசை திருப்ப குண்டை வைத்திருக்கின்றனர். அப்பாவி பெண் ஒருவரும் இறந்துள்ளார். இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ்ஸாகவும் இந்தியன் முஜாஹிதாகவும் செயல்படுவது யார் என்பது இப்போது தெரிந்திருக்கும்.

அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வரும் இந்து முஸ்லிம் கிருத்துவர்களை எப்படியாவது பிரித்து விட இந்துத்வா ஆட்கள் பல முனைகளிலும் வேலை செய்கின்றனர். நான் உளமாற நேசிக்கும் எனது தாய் நாட்டை இந்த காட்டு மிராண்டி கும்பலான இந்துத்வாக்களிடமிருந்து இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

http://www.hindustantimes.com/india-news/bangalore-blast-mentally-disturbed-hindu-boy-sent-out-terror-threats/article1-1301556.aspx

'ஐயோ.... டாக்டர்! என்னைக் காப்பாத்துங்க....'நர்ஸ் கொடுத்த மருந்தை மட்டும் சாப்பிடாம ஸ்பூனையும் சேர்த்து ஏன்யா முழுங்குனே! கொஞ்சம் இருய்யா! எடுத்துர்ரேன்'

'ஐயோ டாக்டர்'

Monday, December 29, 2014

"பிகே" திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங் தள் தாக்குதல்!பிகே' திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங் தள் தாக்குதல்!

அகமதாபாத்: இந்துக் கடவுள்களையும், இந்து மத நம்பிக்கையையும் இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் அமீர்கானின் 'பிகே' படத்தில் இருப்பதாகக் கூறி அந்த திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமீர்கான் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்து கடந்த 19 ஆம் தேதி வெளியான பிகே திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தில் உள்ள காட்சிகள் சில இந்து மதக் கடவுள்களையும், இந்துமத நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக பிகே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக பேசிய பஜ்ரங் தள் அமைப்பின் பிரதிநிதி தர்மேந்திரா அசோலியா கூறுகையில், அமீர்கா னுக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இடையிலான உரையாடல் மற்றும் பாடல் காட்சிகள் லவ் ஜிகாத் அமைப்பை முன் நிறுத்துவதாக உள்ளன என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள திரையரங்குகளில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிகே படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு கூடிய பஜ்ரங்தள் அமைப்பினர், பிகே படத்தில் இந்து மத நம்பிக்கை இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதோடு, தியேட்டர்கள் மீது தாக்குதலிலுன் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

எந்த காட்சிகளும் நீக்கப்படாது: சென்சார் போர்டு திட்டவட்டம்

இதனிடையே இந்து அமைப்புகளின் கோரிக்கையின்படி பிகே திரைப்படத்தின் எந்த ஒரு காட்சியும் நீக்கப்படாது என மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

"ஒவ்வொரு படமும் யாரோ சிலரின் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும். அதே சமயம் தேவை இல்லாமல் எந்த ஒரு காட்சியையும் எங்களால் நீக்க முடியாது. பிகே படத்திற்கு ஏற்கனவே நாங்கள் தணிக்கை சான்று வழங்கிவிட்டோம். பொதுமக்களும் பலர் அதனை கண்டு களித்துவிட்டனர்,எனவே அதில் எந்த ஒரு காட்சியையும் எங்களால் நீக்க முடியாது" என மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி
விகடன்
30-12-2014

விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது பொங்கி எழுந்த அதி மேதாவிகள் தற்போது வாய் மூடி மவுனமாக வேடிக்கை பார்க்கின்றனர். இது தான் இந்தியா! இது தான் தமிழகம். :-(

கற்பு ஒழுக்கம் நாகரிக மேம்பாடு பற்றி இஸ்லாம் சொல்வதென்ன?

நண்பர் ராம் நிவாஸ்!

//இஸ்லாம் இறைவழியில் கற்பு ஒழுக்கம், நாகரிக மேம்பாடு என அனைத்தும் சரியாகவே இருந்தது என அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்ய முடியுமா???//

கற்பு என்பது ஒரு தனி மனிதன் ஒழுக்கம் சார்ந்த விஷயம். இதனை அறிவியல் ரீதியாக எவ்வாறு சரி காண முடியும்? :-)

இஸ்லாமிய பெண்களை புர்கா போட்டு பாதுகாத்து வைப்பதாக குற்றச் சாட்டை பலர் சொல்கின்றனர். கற்பழிப்பு, அல்லது ஈவ் டீஸிங்கில் நமது தமிழகத்தில் எந்த இஸ்லாமிய பெண்ணாவது மாட்டியதாக நாம் செய்திகளில் பார்க்கிறோமா? இல்லையே! இதற்கு காரணம் இஸ்லாமிய பெண்கள் பெரும்பாலானவர்கள் கடை பிடிக்கும் புர்கா முறைதான். அது ஒரு கேடயமாக அந்த பெண்களை பாதுகாக்கிறது.

அதே போல் நாகரிக மேம்பாடு என்பது தனி மனிதன், அல்லது தனி குழுமம், அல்லது தனி நாடு சம்பந்தப்பட்ட விஷயம். காட்டு வாசிகள் உடையில்லாமல் திரிவது அவர்கள் நாகரிகம். உடை உடுத்தி வாழ்வது நாட்டுக்குள் வாழும் நம்மவர்களின் நாகரிகம். நாகரிகம் நாட்டுக்கு நாடு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். இதிலும் நீங்கள் அறிவியலை துணைக்கழைக்க முடியாது.

மனித மனம் அமைதி பெற இறை வழிபாடு சிறந்த வழி. இந்த இடத்தில் அறிவியல் வரலாம். மற்ற எந்த மருந்தைக் கொண்டும் குணப்படுத்த முடியாத மன சஞ்சலத்தை ஐந்து வேளை தொழுகையில் எனது மனதை ஸ்திரப்படுத்திக் கொள்கிறேன். ஐந்து வேளை தொழக் கூடிய மக்களிடம் தற்கொலைகள் குறைவாக இருப்பதைக் காணலாம்.

நமது நாட்டில் கேரளாவில்தான் அதிக தற்கொலைகள் நடக்கிறது. அங்கு எடுத்த கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் தற்கொலைகள் செய்து கொள்வது மிக மிக குறைவாக இருந்தது. இதற்கான காரணத்தை அந்த குழு ஆராய்ந்தது. முஸ்லிம்கள் எது நடந்தாலும் இறைவன் நாட்டம் என்று மனதை லேசாக்கிக் கொண்டு இறை தியானத்தில் ஈடுபட்டு விடுவதாலேயே தற்கொலை விகிதாச்சாரம் குறைவாக இருப்பதாக கண்டு பிடித்தனர்.

நமது தமிழகத்திலும் கடந்த ஒரு ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுங்கள். அதில் முஸ்லிம்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருக்கும். அல்லது முஸ்லிம்களே அந்த லிஸ்டில் இல்லாமல் இருக்கும். இதற்கு காரணம் எங்களின் மத நம்பிக்கை என்றால் மிகையாகாது.

இஸ்லாமிய சட்ட திட்டங்களை ஓரளவு கடை பிடித்து வாழக் கூடிய மக்களாக இஸ்லாமியர்கள் இருப்பதால்தான் கற்பு மற்றும் நாகரிகத்தில் மற்றவர்களை விட மேம்பட்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம் எங்களின் வேத நூலாகிய குர்ஆன் என்றால் மிகையாகாது. ஒருவன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்வது வரை இஸ்லாம் ஒரு முஸ்லிமின் வாழ்வில் குறுக்கிட்டு அவனை செம்மைப்படுத்துகிறது. இது போன்ற சட்டங்களை இந்து மதத்திலோ கிறித்தவ மதத்திலேர் புத்த மதத்திலோ உங்களால் காண முடியாது. ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்கு போவதும் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போவதோடு உங்களின் மத கடமைகளை முடித்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒரு இஸ்லாமியன் அவ்வாறு இருந்து விட முடியாது

மற்ற சமூகத்தவர்களும் கற்பு நாகரிகத்தில் சிறந்து விளங்கினாலும் அதற்கு தனி மனித ஒழுக்கம்தான் காரணமே யொழிய அதற்கு காரணமாக உங்களின் வேத புத்தகத்தைக் காட்ட முடியாது. ஏனெனில் அந்த வேத புத்தகங்களில் தனி மனிதன் வழி தவறி விடுவதற்கே பல சட்டங்களை இயற்றி வைத்துள்ளனர். இதற்கு ஆதாரங்களைக் கேட்டால் தரத் தயாராக இருக்கிறேன்.

Sunday, December 28, 2014

இஸ்லாத்தை தழுவ விரும்பிய சர் வின்ஸ்டன் சர்ச்சில்!(நடுவில் அமர்ந்திருப்பது சர் வின்ஸ்டன் சர்ச்சில், இடது பக்கம் அமர்ந்திருப்பவர் மகன் ரோன்டால்ஃப், வலது பக்கம் அமர்ந்துள்ளவர் சகொதரர் ஜான் சர்ச்சில், மேலே அமர்ந்திருப்பது மருமகன்)

பிரிட்டனை ஆண்ட பிரதமர்களில் வின்ஸ்டன் சர்ச்சில் மிக முக்கிய இடத்தைப் பெற்றவர். இவரது ஆட்சியில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. 1940 லிருந்து 1945 வரையும் பிறகு 1951 முதல் 1955 வரையும் பிரிட்டிஷ் பிரதமராக பதவி வகித்தவர்.

ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen's Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார்.

சிறந்த பேச்சாளர், ராணுவ அதிகாரியாகவும் பணியாற்றியவர். தனது எழுத்து திறமைக்காக நோபல் பரிசையும் பெற்றவர். இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு கடைசி காலங்களில் இஸ்லாத்தின் மீது ஈர்ப்பு வருகிறது. இஸ்லாத்தைப் பற்றி ஆழமாக படிக்க ஆரம்பிக்கிறார். ஷியா, சன்னி பிரிவுகள் எதனால் உண்டானது என்ற விபரங்களை பலரிடமும் ஆர்வமுடன் கேட்டறிந்து கொண்டார். சூடான் மற்றும் நமது இந்தியாவோடு நடைபெற்ற போர்களில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் சில காலம் தங்க நேரிட்டது. அப்போது அந்த மக்களின் பழக்க வழக்கங்களை கண்டு கவரப்பட்டு இஸ்லாத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார். தனது நண்பர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய தேடுதலை பகிர்ந்து கொள்கிறார்.

1940 ஆம் ஆண்டு அக்டோபரில் முஸ்லிம்களின் தொழுகைக்காக மிகப் பெரிய பள்ளி வாசலை லண்டனின் மத்திய பகுதியில் நிர்மாணிக்க அனுமதி அளித்தார். இதற்காக அரசு தரப்பிலிருந்து 100000 டாலர் நிதியையும் ஒதுக்கினார். இதற்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த எதிர்ப்புகளை சட்டை செய்யாமல் பள்ளி வாசல் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்.

1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொது மேடையில் பேசும் போது 'பல நாடுகளில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் லண்டனில் கட்டப்பட்ட பள்ளி வாசலைக் குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்' என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் வின்ஸ்டன் சர்ச்சில்.

இவரது இஸ்லாமிய மோகம் நாளுக்கு நாள் அதிகரிப்பதைக் கண்ட இவரது குடும்பத்தார் இவர் இஸ்லாம் மார்க்கத்தை தழுவி விடுவாரோ என்று அச்சப்பட்டனர். இது சம்பந்தமாக அவருக்கு கடிதங்களும் எழுதியுள்ளனர். அந்த கடிதம் தற்போதுதான் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. அதைத்தான் நீங்களும் பார்க்கிறீர்கள்.லண்டனின் டெலிகிராஃப் பத்திரிக்கை இந்த கடித்தத்தை சமீபத்தில் வெளியிட்டது. இது தற்போது லண்டனில் மிகப் பிரபலமாக பேசப்படுகிறது.

வின்ஸ்டன் சர்சிலின் சகோதரரின் மனைவியான வென்டலின் பெர்டி ஒரு கடிதத்தை சர்சிலுக்கு 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில் அவர் எழுதியதாவது ' "Please don’t become converted to Islam" 'தயவு செய்து இஸ்லாமிய மார்க்கத்தை தழுவி விடாதீர்கள். சில காலமாக உங்களின் நடவடிக்கைகளும் எண்ணங்களும் இஸ்லாத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். இதனால் நாம் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே மதம் மாறும் உங்கள் முயற்சியை கை விடுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கெனவே பல இடங்களிலும் இங்கிலாந்து மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் வேளையில் சர்சிலுக்கு எழுதிய இந்த கடிதம் பொது மக்கள் பார்வைக்கு வந்ததால் இங்கிலாந்து அரசானது தர்ம சங்கடத்தக்கு உள்ளாகியிருக்கிறது. வின்ஸ்டன் சர்சில் இஸ்லாத்தை ஏற்றாரா? அல்லது ஏற்காமலேயே இறந்தாரா என்பது இறைவனுக்கும் சர்ச்சிலுக்குமே தெரியும். வாழும் காலங்களில் ஒரு மிகப் பெரிய பள்ளி வாசலை திறந்து இஸ்லாத்தின் பால் பற்றும் கொண்டு வாழ்ந்த வின்ஸ்டன் சர்சிலை நாமும் வாழ்த்துவோம்.

http://www.telegraph.co.uk/news/religion/11314580/Sir-Winston-Churchill-s-family-feared-he-might-convert-to-Islam.html

Saturday, December 27, 2014

தந்தை பெரியார் ஏக இறைவனை மறுத்தாரா?திரு ஜெயபாரதன்!

//அப்படியானால் கடவுளை நம்பிய திருவள்ளுவர், இளங்கோ வடிகள், கம்பர், காளிதாசர், ஆண்டாள், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், பாரதியார், அருணகிரிநாதர், வள்ளலார், மீரா, காரைக்கால் அம்மையார், ஏசுநாதர், அன்னை தெரேசா, நபிநாயகம் ஆகியோரெல்லாம் முட்டாளா ?//

பெரியாரின் கருத்துக்களை தவறாக விளங்கிக் கொண்டதால் பலருக்கு இதில் தெளிவு கிடைக்கவில்லை. பெரியார் சொல்வதைக் கேளுங்கள்.

"கடவுளை மக்களிடையே பரப்பினவனை ஏன் அயோக்கியன் என்கின்றோம் என்றால், கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை, பற்றற்றவர், எங்கும் நிறைந்தவர், எல்லாமுமானவர் என்பது தெரிந்தும் அதற்கு மனிதனைப் போல உருவம் அமைத்து மனிதனுக்குள்ள ஆசாரபாசங்கள் யாவும் அதற்கு உண்டு என்று கதை எழுதி, அதற்கும் பொண்டாட்டி, பிள்ளைக்குட்டி, கோயில் என்பதெல்லாம் உற்பத்தி செய்து, அதற்குச் சோறு, பூசை என்றும், அவனைக் கொன்றது - இவனைக் கொன்றது என்றெல்லாம் எழுதி அதை மக்களிடையே பரப்பி, மக்களையும் அறிவற்ற முட்டாள்களாக - மூட நம்பிக்கைக்காரர்களாக ஆக்கியதால் கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்கின்றோம்."

- பெரியார்
('விடுதலை', 29.01.1969)

கற்பனை செய்ய முடியாத அந்த கடவுளுக்கு உருவத்தைக் கொடுத்து அதற்கு மனைவியையும் உண்டாக்கி அந்த கடவுளுக்கு குழந்தைகளையும் உருவாக்கி அதன் மூலம் காணிக்கை வசூலிக்கும் புரோகிதத்தனத்தை வெறுத்ததனால் எழுந்த வார்த்தைகளே இவை. கடவுள் இருக்கிறான் என்பதை பெரியாரும் உணர்ந்தே இருந்தார்.

நாவலுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் - தொடரும் வன்முறைகள்.....'மாதொருபாகன்’ நாவலுக்கு எதிரான போராட்டம் நேற்று திருச்செங்கோட்டில் நடைபெற்றது. அந்நாவல் இந்துப் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் திருச்செங்கோட்டின் பெருமைக்கு மாசு கற்பிப்பதாகவும் கூறிப் போராட்டம் நடத்தினர். இந்து அமைப்புக்களும் சாதிய அமைப்புக்களும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தியதாக இன்று பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

"நாவல் பிரதியை எரித்தும் காலால் மிதித்தும் என் புகைப்படத்தைச் செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். என்னைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் இட்டுள்ளனர். என் மீதும் காலச்சுவடு பதிப்பகத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் புகார் அளித்துள்ளனர்.

நாவலில் உள்ள பகுதிகள் குறித்துக் கருத்துரீதியாக விவாதிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் எதிர்தரப்பில் அதற்கான நிதானத்துடன் பேசுவோர் இல்லை. மதம், சாதி என்னும் கட்டுக்குள் நின்று மட்டுமே பார்ப்போருடன் எப்படிப் பேசுவது என்றும் தெரியவில்லை.

இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி நண்பர்களுடன் ஆலோசிக்கிறேன். நானும் யோசிக்கிறேன். என்ன செய்யலாம்?"

-பெருமாள் முருகன்

----------------------------------------------------

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நூலுக்குத் தடை கோரும் இந்துத்துவ அமைப்புகள் கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மறுமதமாற்றம் என்று நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்றுவதற்குக் குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு வெளிப்பாடாக, நாடறிந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பெருமாள் முருகன் பல நூல்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது நாவல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றவை. அவர் 2010ஆம் ஆண்டில் எழுதிய 'மாதொருபாகன்' என்ற நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அது கொங்கு மண்டலத்தில் மிகவும் அன்போடு இல்லற வாழ்வை நடத்தும் ஒரு குடும்பத்தைப் பற்றியது.

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. காவல்துறையிடம் பாதுகாப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

-----------------------------------------------------

On Friday, more than 50 cadres, led by Tiruchengode town RSS president Mahalingam, raised slogans and tried to take out a march from the foothills of the temple to the police station. But they were stopped by Deputy Superintendent of Police Ramasamy, who asked them to prefer a complaint with the local police station. While initially their attempt to burn copies of the book was thwarted by the police, they later succeeded in doing so in front of the local police station.

In their petition, the BJP, RSS and other Hindu outfits said that in many pages the author had denigrated Lord Shiva and the women devotees who visited the temple during the car festival. The cited the narratives in pages, 87, 116, 117, 118, 129 and 172 of the book were in bad taste. They demanded the arrest of both the author and the publisher.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/bjp-rss-seek-ban-on-tamil-novel-arrest-of-author/article6729393.ece


Friday, December 26, 2014

கங்கை அமரனுக்கு சில கேள்விகள்! பதில் சொல்வாரா?கங்கை அமரன் அவர்களே! சமீபத்தில் உங்களுக்கு ஆன்மீக பக்தி முற்றிப் போய் பிஜேபியில் சேர்ந்து விட்டதாக நான் படித்தேன். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டால் உங்கள் இனத்து குழந்தைகளை படிப்பில் முன்னேற்ற ஒரு குழு அமைத்து உழைத்திருக்கலாம். மதுரையில் இன்றும் சாதி வித்தியாசம் பார்த்து தீண்டாமை கொடுமை நடக்கும் சேரிகளில் பிரசாரம் செய்ய சென்றிருக்கலாம். கிருபானந்த வாரியார் போல இந்து மதத்தின் பெருமைகளை உங்கள் இசையால் உலகம் அறிய செய்திருக்கலாம். குன்றக்குடி அடிகளார் போல சமூக பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு இறை தொண்டாற்றி இருக்கலாம். அல்லது உங்கள் அண்ணன் பாஸ்கரைப் போல கம்யூனிஸத்தில் இணைந்து சம தர்ம சமுதாயம் உண்டாக உழைத்திருக்கலாம்.

ஆனால் இது அனைத்தையும் ஒதுக்கி விட்டு இன்று பார்பனர்களின் கூடாரமாகிய பிஜேபியில் இணைந்திருப்பது காலத்தின் கோலம் தான் என்பேன். இந்து மதத்தில் பார்பனர்களின் பிடி தளர்ந்து விடக் கூடாது என்பதற்காக அதனை சட்ட பூர்வமாக செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கட்சியே பிஜேபி. ஐந்து வருடம் காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத்தனத்தை பார்த்த மக்கள் வேறு வழியின்றி இன்று பிஜேபியை தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே மக்கள் ஆதரவினால் நான் பிஜேபியில் சேர்ந்தேன் என்றும் உங்களால் சொல்ல முடியாது. அடுத்த ஐந்து வருடத்தில் 100 இடத்தைக் கூட பிஜேபி பிடிக்காது. இதனை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

எனவே இன்று வரை பார்பனர்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்ட ஒரு கட்சி பிஜேபி. தலித்களை இந்து மதம் பெரும்பான்மை மதம் என்று காட்டி மற்ற மதங்களை பயமுறுத்த கறிவேப்பிலையாகத்தான் பார்பனீயம் இன்று வரை பயன்படுத்திக் கொண்டுள்ளது. தங்கள் வேலை முடிந்தவுடன் உங்களை கறி வேப்பிலையைப் போல தூர எறிந்து விடுவார்கள். இன்னும் 100 வருடம் ஆனாலும் எந்த மாற்றத்தையும் அந்த கட்சியில் உங்களால் செய்து விட முடியாது. பார்பனியத்தின் பிடி மேலிடம் வரைக்கும் எந்த அளவு இறுகியுள்ளது என்பதற்கு ஒரு நிகழ்வை நாம் பார்போம்.

2009 யில் தனது 75-வது பிறந்த நாள் விழாவில் காஞ்சி ஜெயேந்திரர் நால்வருக்கு விருது வழங்கினார். அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ண மூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் போன்ற மூவருக்கும் சேர்த்து இந்த விருதுகள் வழங்கப்பட்டது..

இதில் என்ன இருக்கிறது? விருது தானே! இது எல்லோருக்கும் வழங்குவதுதானே என்றால்! அது தப்பில்லை, அது பொதுவான விசயம். ஆனால் இதில் பேசப்படவேண்டிய விசயம் என்னவென்றால் காஞ்சி ஜெயேந்திரர் தீட்டு பட்டு விடும் என்பதற்காக தான் தொடாமலேயே தனது உதவியாளர் கையால் அந்த விருதை வழங்கி இருக்கிறார் என்பது தான் முக்கியமான விசயம்.

மற்ற மூவரும் மேல் சாதிக்காரர்கள். ஆனால் இளையராஜா தாழ்ந்த சாதியை சேர்ந்தவர். மூன்று பேருக்கு மட்டும் தொட்டு விருது வழங்கி விட்டு இளையராஜாவை ஒதுக்கினால் அது பெரும் பிரச்னையாகி விடும் என்று யோசித்தார் ஜெயேந்திரர். உடனே தனது உதவியாளரை அழைத்து அவர் கையாலேயே நால்வருக்கும் பொதுவாக விருதை வழங்க வைத்து விட்டார். விருதும் வழங்கியாகி விட்டது. ஆச்சாரமும் காப்பாற்றப்பட்டு விட்டது. வெளி உலகின் ஏசுதலுக்கும் முற்றுப் புள்ளியும் வைத்தாகி விட்டது.
இவ்வளவுக்கும் உங்கள் அண்ணன் இளையராஜா இந்து மதத்தில் பெரிய ஆன்மீக வாதியாக அறியப்படுபவர். தமிழகம் மற்றும் உலக அளவில் பிரபலமாக பார்க்கப்படுபவர். இந்த அளவு உயரத்திற்கு சென்றவர் இவ்வளவு தூரம் அசிங்கப்பட்டு இந்த விருதை வாங்கத்தான் வேண்டுமா? 'ஜனனி...ஜனனி' பாடலை கேட்டு உருகாத இந்துக்கள் எவரும் இல்லையே! இளையராஜாவின் சங்கீதம் ஜாதி பார்ப்பது இல்லையே! ஆனால் இந்த காஞ்சி மடாதிபதி இங்கிதமாக ஜாதி பார்க்கிறாரே!

சொல்லப் போனால் காஞ்சி சங்கராச்சாரியாரை விட தனது வாழ்வை மிகப் புனிதமாக மாற்றிக் கொண்டிருப்பவர் இளையராஜா. மது, மாது என்பதை சினிமாவில் இருந்தும் தூரமாக்க முடியும் என்பதை இன்று வரை நிரூபித்து வருபவர். ஆனால் நடமாடும் தெய்வம் என்று பார்பனர்களால் போற்றப்படும் ஜெயேந்திரரிடம் இந்த தூய்மையை நாம் எதிர்பார்க்க முடியாது. பெண் ஆசை, அதைக் கண்டித்த சங்கரராமனை போட்டுத் தள்ளியது, அதிலிருந்து தப்பிக்க நீதிபதியிடம் சமரசம் பேசியது என்று பெரும் பாவங்கள் எல்லாவற்றையும் செய்து விட்டு பார்பனர்களின் தயவால் இன்று வரை மடாதிபதியாக உள்ளார். இவர் எந்த விதத்தில் இளையராஜாவை விட உயர்ந்து விட்டார்? இதற்கு பதில் சொல்வீர்களா?

உங்கள் உடன் பிறந்த அண்ணன் இளையராஜாவுக்கு நிகழ்ந்த இந்த அவமானத்தை நீங்களும் கண்டு பொருமியிருப்பீர்கள். அது மட்டும் தான் உங்களால் முடிந்தது. அதற்கு மேல் உங்களால் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. இவ்வளவு தூரம் அவமானப்படுத்திய ஒரு நிகழ்வைக் கண்டும் உங்களால் தீண்டாமையை இன்றும் ஆதரிக்கும் பிஜேபியில் எவ்வாறு அங்கம் வகிக்க முடிகிறது? இது உங்கள் அண்ணனுக்கு செய்த துரோகம் அல்லவா? நன்றாக சிந்தித்து ஒரு முடிவை எடுங்கள்.

கொடூரமாக கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ – நீதி கேட்டு போராட்டம்

கொடூரமாக கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ – நீதி கேட்டு போராட்டம்
வியாசர் பாடி – (யானைக்கவுனி) வால்டாக்ஸ் ரோடு, உட்வார்பு பகுதியில் வசிக்கும் திருமதி சாந்தா என்பவரின் வளர்ப்பு மகள் ஜெயஸ்ரீ கடந்த 24.11.2014 முதல் காணாமல் போனார்.

ஜெயஸ்ரீ 21 வயதான கலகலப்பான பெண். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடிய பெண். யானை கவுனி அருகே ஒரு சிறு பட்டறையில் வேலை செய்திருக்கிறாள். ஆணுக்கு நிகராய் அத்தனை வேலைகளையும் செய்யக்கூடியவள்.

ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடிஅலைந்து விசாரித்த பின்னரும் அவர் பற்றி தகவல் தெரியாத நிலையில் 27.11.2014 அன்று ஏழுகிணறு காவல் நிலையத்தில், செல்வி ஜெயஸ்ரீ காணாமல் போனது பற்றி புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது பணியில் இருந்த ஏழுகிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ் மேற்படி புகாரை பெற்றுக்கொள்ளாமல், அவரை கண்டுபிடித்து தருவதாக சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார். மேலும், ஜெயஸ்ரீயை அப்பகுதியில் உள்ள பிரான்சிஸ், சங்கர் மற்றும் முரளி ஆகியோர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்த பிறகும் அது பற்றி பின்னர் விசாரிப்பதாக தெரிவித்துவிட்டார்.

காதல் என்ற வலையில் வீழ்த்தி அந்த பெண்ணை சென்னையை விட்டு வெளியூருக்கு அழைத்துபோயிருக்கிறான் ஒருவன். அங்கே பல வெறிபிடித்த மிருகங்கள் பல நாட்கள் அந்த இளம்பெண்ணை சிதைத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க.....


http://www.vinavu.com/2014/12/26/police-complicit-in-rape-and-murder-of-woman/

அமீர்கானின் "பிகே" பார்தேன்! அதன் விமர்சனம்!வேறு ஒரு கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் வந்து பூமியில் இறங்குகிறார் பிகே(அமீர்கான்)! அது இறங்கிய இடம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம். அந்த பறக்கும் தட்டின் சாவி அவர் கழுத்தில் ஜொலிக்கிறது. பூமியில் அனைவரும் தங்கள் உடம்பை மறைத்துக் கொண்டு கண்ணியமாக செல்வதை ஆச்சரியத்தோடு பார்க்கிறார். அந்த வழியே வந்த ஒரு வழிப்போக்கன் இவரது கழுத்தில் ஜொலிக்கும் அந்த சாவியை ஏதோ விலையுயர்ந்த ஆபரணம் என்று தவறாக கருதி பிகேயிடமிருந்து பிடிங்கிக் கொண்டு ஓடி விடுகிறார். அந்த சாவி இல்லாமல் அவரது கிரகத்துக்கு திரும்ப முடியாது. எனவே அந்த சாவி எவ்வாறு கிடைக்கப் பெற்று திரும்பவும் தனது கிரகத்துக்கு செல்கிறார் என்பதுதான் கதை.

டைரக்டர் மிக நகைச்சுவையாக இந்த கதையை நகர்த்திச் சென்றுள்ளார். பூமியில் மக்களிடம் பேசுவதற்காக போஜ்பூரி பாஷையை கற்றுக் கொள்கிறார் பிகே. அந்த மக்களிடம் தனது சாவி எங்கு கிடைக்கும் யாரைப் பார்க்கலாம் என்று கேட்க, கடவுளை பார்.. அவரிடம் கோரிக்கை வை என்கின்றனர் எல்லோரும்.

ஒரு கடைக்கு செல்கிறார். 'எனக்கு கடவுள் வேண்டும்'

'15 ரூபாய், 25 ரூபாய், 50 ரூபாய் எந்த கடவுள் வேண்டும்?' கடைக்காரர் சாமி சிலைகளை காட்டி கேட்கிறார்.

'எனது கோரிக்கை ஒன்றுதான். எல்லா கடவுளும் ஒன்றுதான் எனும் போது எனக்கு விலை குறைந்த கடவுளை தரவும்'

'அப்போ 15 ரூபாய் கடவுளை தருகிறேன்' கடைக்காரர் சிலையை தர வாங்கிக் கொள்கிறார் பிகே.

கடவுளை எந்த அளவு கீழ்த்தரமாக சித்தரிக்கின்றனர் என்பதை இந்த காட்சி அழகாக சொல்கிறது.

அடுத்து கதாநாயகி ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமை (அஃப்ராஸ்) பெல்ஜியத்தில் காதலிக்கிறாள். இந்த செய்தியை தனது பெற்றோருக்கு தெரிவிக்கிறார். 'இந்துவாக எங்கள் குடும்பத்தில் பிறந்த நீ ஒரு முஸ்லிமை காதலிப்பதா? கூடாது இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று எதிர்க்கின்றனர் பெற்றோர். கதாநாயகியின் தந்தை தனது குருவான ஒரு இந்துத்வா மத துறவியிடம் இந்த செய்தியை கொண்டு செல்கிறார். அவர் செய்தியை கேள்விப்பட்டு

'பாகிஸ்தானிகள் நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள். உனது வாழ்வு வீணாகி விடும்' என்று அந்த இந்துத்வா துறவி கதாநாயகியை மிரட்டுகிறார். இந்த பேச்சுக்கள் ஸ்கைபில் (மடிக்கணிணியில்) நடக்கிறது. 'இல்லை! எனது காதலன் எனக்கு நம்பிக்கை துரோகியாக மாட்டான். நான் அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கண்டிப்புடன் கூறி தொடர்பை துண்டிக்கிறாள் கதாநாயகி.

அந்த இந்துத்வா துறவி சொன்னது போல் நம்மை இந்த பாகிஸ்தானி ஏமாற்றி விடுவானா என்ற யோசனையில் ஆழ்ந்த போது காதலனும் அருகில் வருகிறான். 'நாம் நாளை திருமணம் முடிக்கிறோம்'

'ஏன் என்ன அவசரம்?' -பாகிஸ்தானி

'அதெல்லாம் ஒன்றுமில்லை. நாளை நமது திருமணம் ரிஜிஸ்டர் ஆபிஸில் நடக்கிறது. மறக்காமல் வந்து விடு'

மறுநாள் ரிஜிஸ்டர் ஆபிஸில் கதாநாயகி காத்திருக்கிறாள். ஆனால் ஒரு சிறுவன் ஒரு காகிதத்தை கொடுக்கிறான். அதில் 'மன்னிக்கவும். திருமணம் முடிக்கும் மன நிலையில் நான் இல்லை' என்று எழுதியிருந்தது. தனது பெற்றோரும் துறவியும் சொன்னது சரியாகி விட்டதே என்று எண்ணி அழுதவளாக இந்தியா திரும்புகிறாள். ஆனால் இந்த பெண்ணை குடும்பத்தில் பெற்றோர் சேர்க்கவில்லை. எனவே ஒரு செய்தி சேனலில் ரிப்போர்ட்டராக சேருகிறார்.

அங்குதான் நமது கதாநாயகன் பிகேயை சந்திக்கிறாள். அதன் பிறகு பாகிஸ்தானி அவளை ஏமாற்றவில்லை. அந்த துண்டு சீட்டு வேறொரு பெண்ணுக்கு வந்தது. தவறாக நமது கததாநாயகியிடம் கொடுக்கப்பட்டது என்பதை நமது பிகே விளக்கி எல்லா நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர் என்பதை உலகுக்கு விளக்குகிறார்.

இந்து, கிறித்தவம், இஸ்லாம் என்ற மூன்று மதத்தையும் இந்த படத்தில் ஒரு பிடி பிடிக்கிறார் டைரக்டர். மூன்று மதங்களிலும் புரோகிதம் எந்த அளவு வேரூன்றியுள்ளது என்பதை அழகாக விவரிக்கிறார். 'பெண்கள் கல்வி கற்கக் கூடாது' என்று இஸ்லாம் சொல்லவில்லை. பிறகு ஏன் பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்கள்? அந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்? என்ற கேள்வியையும் வைக்கிறார் டைரக்டர். இந்த கேள்வியானது தாலிபான்களைப் பார்த்து கேட்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

கடவுளுக்கு நாம் கோரிக்கை வைத்தால் இடையில் இந்த இடைத் தரகர்களான புரோகிதர்கள் எதற்கு என்று பல இடங்களில் கேள்வி கேட்கிறார். "ஒரு தாய் தனது குழந்தைக்கு பசியறிந்து சோறு ஊட்டுகிறாள். அதற்கு காணிக்கை எதுவும் வாங்குவதில்லை. தாயை விட மேலான இறைவனிடம் கோரிக்கை வைக்க உண்டியலில் பணத்தை போடச் சொல்கிறீரே! இப்படி உண்டியலில் பணம் போடச் சொல்லி கடவுள் உங்களுக்கு கட்டளையிட்டாரா?' என்று புரோகிதர்களைப் பார்த்து பிகே கேட்கிறார்.

மூன்று மதங்களையும் பொதுவாக சொன்னாலும் பல இடங்களில் இந்துத்வாவாதியினர் செய்யும் அட்டூழியங்களை இந்த படம் மிக அழகாக தோலுரித்துக் காட்டுகிறது. பல இடங்களில் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தங்கள் திட்டத்தை இப்படி அம்பலப்படுத்தி விட்டார்களே என்ற கோபத்தில் நாடெங்கும் இந்துத்வாவாதியினர் இந்த படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டமானது இந்த படத்துக்கு மேலும் விளம்பரத்தை கொடுத்து அமோக வசூலைக் கொண்டிக் கொண்டிருக்கிறது. :-)

நேரமிருப்பின் படத்தை பாருங்கள்....


Thursday, December 25, 2014

அஸ்ஸாம் பற்றி எரிகிறது.... கேட்பதற்கு நாதி இல்லை!அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போடோ தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறையில் இறந்தவர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தால் நேற்று ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தில் நேற்று பரவலான போராட்டங்களுக்கு மத்தியில் மத்தியப் படையினர் 5 ஆயிரம் பேர் அங்கு விரைந்துள்ளனர்.

அசாமில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி) என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. இதில் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாத ஒரு பிரிவினர் சாங்பிஜித் என்பவர் தலைமையில் என்.டி.எப்.பி(எஸ்) என்ற பெயரில் தனியாக செயல்படுகின்றனர்.

இம்மாநிலத்தில் அண்மைக் காலமாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாது காப்பு படையினர் தீவிரப்படுத்தி யுள்ளது என்.டி.எப்.பி(எஸ்) அமைப்பினரை ஆத்திரமடையச் செய்துள்ளது.

இந்நிலையில் அசாமின் சோனித் பூர், கோக்ரஜார், சிராங் ஆகிய மாவட்டங்களில் 5 கிராமங்களில் இந்த அமைப்பினர் ஆதிவாசி யினர் மீது கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் சோனித்பூர் மாவட்டம் மைட்டாலு பஸ்தி, ஜங்கி பஸ்தி ஆகிய கிராமத்தில் 39 பேரும், கோக்ரஜார் மாவட்டம் சாந்திபூர், பக்ரிகுரி ஆகிய கிராமத்தில் 25 பேரும் உயிரிழந்தனர். மேலும் சிராங் மாவட்டம் கல்மாந்திர் பகுதியில் 3 பேர் இறந்தனர். இது தவிர சம்பவ இடங்களில் மேலும் பலரும் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலில் இறந்தவர்களில் 21 பேர் பெண்கள், 18 பேர் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
25-12-2014

அண்டை நாடான பாகிஸ்தானில் 150 குழந்தைகளை சில காட்டுமிராண்டிகள் சுட்டுக் கொன்றதற்கு பாராளுமன்ற இரங்கலிலிருந்து இணையம் வரை ஒருவர் விடாமல் கண்டித்தனர். ஆனால் நமது நாட்டின் ஒரு மாநிலத்தில் 75 அப்பாவிகள் குழந்தைகளும் பெண்களுமாக கொன்றழித்துள்ளனர் போடோ தீவிரவாதிகள். ஆனால் இதைப் பற்றி எவரும் எந்த கண்டன அறிக்கையையும் விடவில்லை. அவரவர் வேலையை பார்த்துக் கொண்டுள்ளனர்.

ஒருக்கால் போடோ தீவிரவாதிகள் இந்து இல்லாமல் அவர்கள் இஸ்லாமிய பெயர் தாங்கிகளாக இருந்திருந்தால் பொங்கியிருப்பார்களோ என்னவோ...

அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற போடோ தீவிரவாதிகளை வன்மையாக கண்டிப்போம். மனித குல விரோதிகள் இவர்கள். சமூகத்திலிருந்து இவர்களை ஓரங்கட்டுவோம்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ஆர்எஸ்எஸ் கோட்சேவுக்கு சிலை வைக்க மும்முரமாக வேலை செய்து வருகிறதாம்.

இவர்கள் ஆட்சியில் நாடு இன்னும் எதை எல்லாம் காணப் போகிறதோ!

Wednesday, December 24, 2014

சிறைக் கைதிகளின் மறு வாழ்வுக்கு ஒரு அழகிய திட்டம்!தொழில் நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி என்ற அமைப்பானது (tvtc) சவுதி முழுக்க 25 தொழிற் கூடங்களை சிறைச்சாலைகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு 150 மில்லியன் சவுதி ரியால்களாகும். ராஷித் அல் ஜெஹ்ரானி இந்த தகவலை பத்திரிக்கைகளுக்கு அளித்தார்.

சிறைக் கைதிகளாக உள்ள அனைவரும் தங்களின் தண்டனை காலம் முடிந்தவுடன் திருந்தி சிறந்த மனிதர்களாக மாற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக 800 ரியால் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழ்களில் இவர்கள் கைதியாக காலம் கழித்தவைகள் மறைக்கப்படும். அவர்களின் எதிர்காலம் இதனால் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி விடக் கூடாது என்ற நல்லெண்ணமே இதற்கு காரணம்.

தற்போது 4422 கைதிகள் தங்களின் தொழிற் பயிற்சியை இந்த அமைப்பின் மூலம் பெற்று வருகின்றனர். எலக்ட்ரிகல், ஆடோ மெகானிக், ஆடோ பெயிண்டிங், ஏர்கண்டிஷனிங், ஃப்ரிட்ஜ் மெகானிஷம், கார்பெண்டரி, வெல்டிங், டெய்லரிங், கம்யூட்டர் டெக்னாலஜி என்று அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

தகவல் உதவி
சவுதி கெஜட்
23-12-2014

தண்டனைக் காலம் என்பது அந்த மனிதனை திருந்தியவனாக வெளியில் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபடும் சவுதி அரசாங்கத்தை நாம் பாராட்டுவோம்.

இலவச திட்டங்களை எல்லாம் ஒழித்து விட்டு நமது அரசாங்கங்களும் இது போன்ற சிறந்த திட்டங்களுக்கு பொருளாதாரத்தை செலவழிக்கலாம். ஆனால் நமது தமிழக அரசோ டாஸ் மார்க் கடைகளை நடத்தி அதிகாரிகளுக்கு 'வியாபாரத்தை மேலும் பெருக்குங்கள்' என்று அழுத்தமும் கொடுத்து வருபவர்களிடம் இதை எல்லாம் எதிர் பார்க்க முடியுமா? மக்கள் வெகுண்டெழுந்தாலொழிய நமது நாட்டில் மாற்றங்கள் எழ வாய்ப்பில்லை. ஒரு அரசாங்கமானது அதன் மக்களை நேர் வழியின் பால் கொண்டு வரக் கூடியதாக இருக்க வேண்டும். சாராயத்தை ஊற்றிக் கொடுத்து அவனை மிருகமாக மாற்றும் வேலையை ஒரு அரசே செய்வது தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரும் தலைக்குனிவு!
இயக்குனர் கே.பாலசந்தர் மறைந்தார்!திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி பாணியை கைக்கொண்டு அதனை வெற்றியாக்கியும் காட்டியவர் பாலசந்தர். நான் சிறுவனாக இருக்கும் போதே இவரது படங்களின் மேல் ஒரு அலாதி பிரியம் இருக்கும். ஒவ்வொரு படத்திலும் சமூகத்துக்கு ஏதாவது ஒரு செய்தியை சொல்லுவார். ஒரு டைரக்கடருக்காக படம் ஓடியது என்றால் அது இவருக்காகத்தான் இருக்கும்.

தண்ணீர் தண்ணீர், உன்னால் முடியும் தம்பி, வறுமையின் நிறம் சிகப்பு, அரங்கேற்றம், சிந்து பைலவி போன்ற படங்கள் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டவைகளில் ஒன்றிரண்டு. தான் பார்பன சமூகமாக இருந்தாலும் அந்த இனத்தில் எந்த பொருளாதார முன்னேற்பாடும் இல்லாமல் வரிசையாக குழந்தைகளை பெற்றுக் கொண்டு அதனால் அந்த குடும்பம் எந்த அளவு சீரழிகிறது என்பதை 'அரங்கேற்றம்' படத்தின் மூலம் சமூகத்துக்கு சொன்னவர். தான் டாக்டராக வேண்டும் என்பதற்காக தனது மானத்தையே இழந்த தனது அக்காவை வீட்டை விட்டு கமலஹாசன் வெளியே துறத்துவதாகட்டும், கெட்டுப் பொன அந்த பெண்ணுக்கு வாழ்வு தருவதாக ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த தங்க முத்து முன் வருவதாக காட்டியதாகட்டும் என்று பல இடங்களில் தனது முத்திரையை பதித்து விடுவார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய ஒரு குடும்பத் தலைவன் சந்நியாசம் பெற்று செல்வதும் அதனால் மூத்த மகள் வேலைக்கு செல்வதையும் அவள் ஒரு தொடர்கதையில் அழகாக காட்டியிருப்பார். அதே போல் சிந்து பைரவியில் தெலுங்கு கீர்த்தனைகள் பாடுவதை 'தலையை ஆட்டும் புரியாத கூட்டம்' என்று பார்பனர்களை சாடி தமிழ் மொழியில் பாடினால் என்ன தவறு? என்று கேட்டு அங்கும் தனது முத்திரையை பதிப்பார். மொழிப் பற்று இருக்கலாம் அதுவே மொழி வெறியாக மாறிவிடக் கூடாது என்பதை 'புன்னகை மன்னனில்' அழகாக சொல்லியிருப்பார். நெற்றியில் திரு நீறு பூசிக் கொண்டு அராஜக செயல்களை செய்யும் போலி ஆத்மீக வாதிகளையும் இந்த படத்தில் அவர் சாட மறந்ததில்லை.

தனது படங்கள் அனைத்திலும் நாகேஷ் என்ற ஒரு உன்னத கலைஞனை கடைசி வரை உபயோகப்படுத்தி நகைச்சுவைக்கு ஒரு புது அத்தியாயத்தையே உருவாக்கியவர். புரட்சி இயக்குனர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் பல புரட்சிகளை ஏற்படுத்தியவர் இன்று நம்மிடையே இல்லை.

கூத்தாடி குழுமத்தில் ஓரளவு அறிவு சார்ந்த படங்களை எடுத்த கேபியின் மறைவு உண்மையில் இழப்பே! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tuesday, December 23, 2014

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26

பூமிக்கு உள்ள ஈர்ப்பு விசையை இந்த குர்ஆனின் வசனம் மெய்ப்பிக்கிறது. இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். கடைத் தெருவில் ஒரு தாய் தன் குழந்தையை கைகளைப் பிடித்தவாறு நடந்து அழைத்துச் செல்கிறாள். அந்த குழந்தை ஒரு கடையைப் பார்த்து விட்டு அங்கு செல்ல எத்தனிக்கும். உடனே தாயானவள் அந்த குழந்தையை தன் பக்கம் தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்பொழுதுதான் அந்த குழந்தை தான் தனது தாயின் கட்டுப்பாட்டில் இருப்பதையே உணருகிறது.

அதே போல் தாயின் மார்போடு ஒரு குழந்தை அமர்ந்திருக்கும்போது தலையை அங்கும் இங்கும் அசைக்கும். அதை ஒரு பொருட்டாக அந்தத் தாய் எடுத்துக் கொள்வதில்லை. அதே சமயம் தாயின் அரவணைப்பிலிருந்து துள்ளிக் குதித்து இறங்க முயற்ச்சிக்கும் போது அந்த தாயின் பிடி மேலும் இறுகி தன் குழந்தையை அவளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாள். இது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண ஒரு நிகழ்வு.

இதையே நாம் பூமிக்கும் பூமிக்கு மேல் வசிக்கும் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் பொருத்திப் பார்ப்போம். நம்முடைய அன்றாட வாழ்வில் பூமி நம்மை அரவணைத்திருப்பதை நாம் உணருவதில்லை. எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பை உணருவதில்லையோ அதைப் போல. அதே குழந்தை சில வருடங்களில் பெரிதானவுடன், அதே தாய் அந்த குழந்தையை தனியே வெளியில் சென்று விளையாட அனுமதிக்கிறாள். இனி குழந்தைக்கு தனது பாதுகாப்பு தேவையில்லை என்று தாய் உணருவதால் குழந்தையை தனியே விட்டு விடுகிறாள்.

அதே போன்றுதான் ஓரளவு அறிவு வளர்ச்சி அடைந்த மனிதன் பூமியின் ஈர்ப்பாற்றலுக்கு மேலே அதாவது ராக்கெட்டில் சென்றால், இனி தனது ஈர்ப்பாற்றல் மனிதனுக்கு தேவையில்லை என்று கருதி ராக்கெட்டின் பிடிப்பை பூமி தளர்த்தி விடுவதையும் பார்க்கிறோம்.

இந்த இடத்தில் குர்ஆனின் 'அணைத்தல்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் இலக்கியத்துடனும், அறிவியல் சார்ந்தும் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளதை நினைத்து நாம் ஆச்சரியப்படுகிறோம். அடுத்து குர்ஆன் இந்த ஈர்ப்பு விசையை நேரிடையாக ஏன் சொல்லவில்லை என்ற கேள்வியும் வரலாம். 1400 வருடங்களுக்கு முன்பு பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்பதையே நம்புவதற்கு அன்று ஆள் இல்லை. அதோடு சேர்த்து அறிவியல் புதினங்களையும் சொல்ல ஆரம்பித்தால் விளங்கவில்லை என்று ஓட ஆரம்பித்து விடுவர். எனவேதான் பல இடங்களில் குர்ஆன் அறிவியலை மிக எளிமைபடுத்தி அதனை நம் வாழ்வோடு சம்பத்தப்படுத்தி பல அரிய கருத்துகளை வெகு சாதாரணமாக சொல்லிச் செல்கிறது.

மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் சிதறடிக்கப்படாமல் அவைகளை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும். மேலும் இந்த பூமி நாம் வாழ்வதற்க்கென்றே விஷேசமாக படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக்கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படுகிறது. இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாக தென்பட்டால் நம்மால் இதன்மீது ஒரு போதும் வாழ இயலாது.

பூமியும் அசுர வேகத்தில் சுற்றுகிறது. அது சுற்றுவதோடு அல்லாமல் சூரியனையும் சுற்றி வருகிறது. அதோடல்லாமல் மொத்த கேலக்ஸியுமே ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு காரியங்கள் நடந்தும் நம்மால் அதை உணர முடிகிறதா? ஒரு ரயிலில் சென்றாலோ அல்லது ஒரு பேரூந்தில் சென்றாலோ நம் உடம்பு எந்த அளவு குலுங்குகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். ஆனால் மொத்த கேலக்சியும் அசுர வேகத்தில் இடம் பெயர்ந்தாலும் ஒரு இம்மி அளவு கூட அதன் தாக்கத்தை நாம் உணராமல் தூக்கத்தையும் தொலைத்து ஃபேஸ் புக்கில் மூழ்கிக் கிடக்கிறோம். :-)

ஆஹா... இறைவன் நம் மீது பொழிந்த கருணைக்கு அளவு உண்டோ?

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?'

-குர்ஆன் 77:25,26

Monday, December 22, 2014

என் அருமை இஸ்லாமிய சகோதரனே .. .மன்னிப்பாயாக ,,,, !

என் அருமை இஸ்லாமிய சகோதரனே ...

பெரும்பான்மை இனத்தில் பிறந்த நான் உன் முன்னே வெட்கித் தலை குனிகிறேன் ...

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனபின்னரும் உன்னை வாக்கு வங்கியாக மட்டுமே உபயோகித்து வரும் அரசியலில் பெரும் பங்கு வகித்துள்ள இனத்தை சேர்ந்தவன் என்பதால் ....

வாடகைக்கு வீடு கேட்டு வரும் உன்னை தீவிரவாதியைப் போல நடத்தும் ஒவ்வொரு முறையும் என் மீதும் என் தேசத்தின் மீதும் காரி உமிழும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதனால்

உன் வழிபாட்டுத் தளத்தை அத்து மீறி இடித்ததுமில்லாமல் ... அதை ஒரு சாதனை என்று மார் தட்டிக் கொள்ளும் மிருகங்களின் மத்தியில் இயலாமையுடன் வாழ்ந்து வருகிறேன் என்பதனால் ...

என் இறைவனை காரணம் காண்பித்து உன் இறையான்மையையே கேள்விக்குரியாக்கிய கயவர்களை வளர விட்டதுமில்லாமல் , இன்று ஆளவும் விட்டுள்ளேன் என்பதனால் ....

என்னை நீ மன்னிப்பாயாக ,,,,

https://www.facebook.com/kishore.kswamy/posts/10203418662695632?fref=nf

Sunday, December 21, 2014

தனது வாரிசுகளாலேயே கொல்லப்படும் வயதான பெற்றோர்!கால்நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக்கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத் துவங்கியிருக்கின்றன.

தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக்கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சார பின்னணியை ஆராயும் பெட்டகத்தொடரின் முதல் பகுதி.

"100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?"

மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலைமை வெறும் மதுரைப் பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்களிலும் இத்தகைய பெற்றோர் கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றும் நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களின் சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள்.

இத்தகைய முதியோர் கொலைகள் நடப்பது சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது பகுதியில் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால் யாரும் அதுகுறித்து பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது சட்டப்படி தண்டிக்கப்படுவதும் இல்லை. போதுமான சட்டரீதியிலான சாட்சியங்கள் இல்லை என்று கூறி எல்லோரும் இந்த பிரச்சனையை ஒன்று புறந்தள்ளப்பார்க்கிறார்கள்; அல்லது வேகவேகமாக கடந்து செல்ல முயல்கிறார்கள்.

தற்கொலைத் தூண்டுதல் தவறினால் முதியோர் இல்லம்

மேலும் எல்லா வீட்டில் வேண்டப்படாத எல்லா முதியவர்களும் கொல்லப்படுவதும் இல்லை. பலர் தற்கொலையை நோக்கி படிப்படியாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் பெற்றோரை முதியோர் இல்லத்தில் பலவந்தமாக கொண்டுபோய் சேர்த்துவிடுகிறார்கள். சில சமயம் அந்த முதியவர்களுக்குத் தெரியாமலே கூட. இன்னும் பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் வன்முறைகளை பொறுக்க முடியாமல் முதியவர்களில் பலர் தாமாகவே முதியோர் இல்லம் தேடி ஓடும் சூழலும் நிலவுகிறது.

தகவல் உதவி
பிபிசி
12-12-2014

வயதான காலத்தில் தம்மைப் பெற்ற பெற்றோர்களை இவ்வாறு கொல்லும் கல் நெஞ்சக்காரர்கள் தனது மகனாலோ அல்லது தனது மகளாலோ பிற் காலத்தில் இதே முறையால் கொல்லப்படலாம் என்பதை நினைத்துதான் பார்த்தார்களா?

அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் உம்மிடத்திலிருந்து விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப்பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

(அல்-குர்ஆன் 17:23-24)

சாதீய அமைப்புக்கள் தமிழக இஸ்லாமியரிடத்தில் அறவே இல்லையா?

சகோ மாணிக்க வாசகம்!

//தமிழக இஸ்லாமியர்களிடையே சாதீய அமைப்புக்கள் இல்லை என்று சொல்கிறீர்களா?//

சாதிய அமைப்புகளை முதலில் சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்திலும் பிரிவுகள் உண்டு. குர்ஆன் அதனை எவ்வாறு விளக்குகிறது என்று பாருங்கள்.

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்"

- அல்குர்ஆன் 49:13

ஒரு தாய் தந்தையருக்கு பிறந்தவர்தான் உலக மக்கள் என்ற பிரகடனம் அனைத்து சாதி திமிரையும் அடக்கி விடுகிறது. சில பிரிவுகள் மனிதர்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.

நபிகள் நாயகமும் தன்னை குரைஷி குலத்தை சேர்ந்தவர் என்று தனது அறிவிப்புகளில் பலமுறை சொல்லியிருக்கிறார். ஹபஷி என்ற குலமும் இருந்துள்ளது. அதே போல் ஆப்ரிக்கன், ஐரோப்பியன், ஆசியன், அமெரிக்கன் என்ற பிரிவுகளும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் மனிதர்கள் ஒருவரையொருவர் அடையாளப்படுத்திக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டவைகள். அதே போல் மொழி வாரியாக தமிழன், கன்னடன், தெலுங்கன், மலையாளி என்ற பிரிவுகளும் சிலரை அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவே. இது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும். அவனது வேர் என்ன என்பதன் புரிதல் அவனுக்குள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் நம் நாட்டில் உள்ள சாதி முறையோ முற்றிலும் மாறுபட்டது. வேதங்களே மனிதர்களின் தொழில்களுக்கேற்றவாறு பிராமிண், பஞ்சமன், ஷத்ரியன், சூத்திரன் என்று பிரித்து அதனை பிறப்பிலேயே அவனோடு இரண்டற கலக்குமாறும் செய்து விட்டது. இன்ன சாதிகள் இந்த குணாதிசியத்தைப் பெற்றிருக்கும் என்று வேறு வகைப்படுத்தியுள்ளது. இறைவனை வழிபடும் இடங்களிலும் இந்த சாதி தகுதிக்கேற்ப பார்க்கப்படுகிறது. இதற்கு மேல் இறைவனை வழிபட கோவிலுக்குள் வரக் கூடாது என்ற சட்டத்தையும் இன்று வரை பாதுகாத்து வருகிறது. நடை முறைபடுத்தியும் வருகிறது.

இஸ்லாத்திலும் இதே போன்ற பிரிவுகள் சில உண்டு. இந்துவாக இருந்து இஸ்லாமியரனாதால் பழைய வழக்கத்தின்படி சில சாதி பெயர்களை முஸ்லிம்களும் வைத்துள்ளனர்.

லெப்பை பிரிவை சேர்ந்தவர்கள் பள்ளியில் இமாமாக(தலைவராக) பணியில் உள்ளவர்.
ராவுத்தர் பிரிவினரின் முன்னோர் குதிரை பராமரிப்பு, குதிரை வாணிபம் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள்.
மரைக்காயர் என்று அழைக்கப்படும் பிரிவினரின் முன்னோர் கடல் வாணிபம் செய்தவர்கள்.
ஷேக் , செய்யது போன்ற பிரிவினர் அரபு வம்சாவளிகளை சேர்ந்தவர்கள்.
மாப்பிள்ளா பிரிவினர் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்ட கேரளா வம்சாவளியினர்.
தக்னி என்ற பிரிவினர் உருது மொழி பேசக் கூடியவர்.

இவ்வாறு இஸ்லாத்திலும் பிரிவுகள் தமிழக முஸ்லிம்களிடம் இருந்தாலும் இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு காட்டப்படுவதில்லை. திருமண உறவுகளில் எந்த பிரச்னையும் இல்லை. எனது குடும்பத்தில் உருது முஸ்லிம், அரபு நாட்டு முஸ்லிம், என்று பல இனத்தவர் சம்பந்தம் வைத்து இன்று வரை சந்தோஷமாக குடும்ப வாழ்வு சென்று வருகிறது. வழிபடும் இடங்களில் இந்த பிரிவை வைத்து பேதம் கற்பிக்கப்படுவதில்லை...... என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். மேலே குறிப்பிட்ட பிரிவுகள் கூட தமிழகத்தை தாண்டினால் இது போன்ற சாதி பெயர்களை பார்க்க முடியாது.

எனவே இஸ்லாமியர்களிடத்தில் காணப்படும் பிரிவுகளுக்கும் இந்து மதத்தில் காணப்படும் வர்ணாசிர சாதி அடுக்கு முறைக்கும் உள்ள வித்தியாசமானது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமாகும்.

குர்ஆன் தமிழ் மொழி பெயர்பு வந்து வெகு நாட்களாகிறது. குர்ஆனின் சட்டங்கள் தான் ஒரு முஸ்லிமைக் கட்டுப்படுத்தும். அந்த குர்ஆன் முழுக்க நீங்கள் தேடினாலும் அதில் ஷியா, என்றோ, சன்னிகள் என்றோ, ராவுத்தர் என்றோ, பட்டாணி என்றோ ஒரு வார்த்தையையும் பார்க்க முடியாது. ஏனெனில் முகமது நபிக்கு அருளப்பட்ட இந்த வேதத்தில் அன்றைய சமூகத்தில் இது போன்ற எந்த பிரிவுகளும் இல்லை. அனைவரும் இஸ்லாமியர்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவர்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர் இஸ்லாமியர் என்றுதான் பார்க்கப்படுவார். மேலே உள்ள எந்த பிரிவிலும் வரமாட்டார். உங்களுக்கு பரிச்சயமான ஏ ஆர் ரஹ்மனோ, யுவன் சங்கர் ராஜாவோ, நடிகை மோனிகாவோ, பெரியார் தாசனோ முஸ்லிம்களாகத்தான் அறியப்படுகின்றனர். நீங்கள் குறிப்பிட்ட எந்த பிரிவுகளிலும் அவர்கள் இல்லை. ஏனெனில் குர்ஆன் பிரிவுகளை அங்கீகரிக்கவில்லை.

அடுத்து ஒரு இனமோ, குலமோ, சாதியோ எதுவாக இருந்தாலும் அது ஒரு மனிதனை எந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு அழகிய அறிவுரையை நபிகள் நாயகம் கூறுவதையும் கேளுங்கள்.

ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
ஆதாரநூல்: அஹ்மத்

Saturday, December 20, 2014

பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது - மோகன் பகவத்செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த மோகன் பகவத், " மதமாற்றத்தை நீங்கள் விரும்பவில்லை எனில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வாருங்கள். மற்ற மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாறுவதை எதிர்ப்பவர்கள், இந்து மதத்திலுள்ளவர்களை மற்ற மதங்களுக்கு மாற்றுவதையும் நிறுத்த வேண்டும். ஒருவர் இந்துவாக மாறுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்துக்களையும் மாற்றக்கூடாது.

அதே சமயம் கட்டாயப்படுத்தப்பட்டோ அல்லது ஆசை காட்டியோ மதமாற்றம் செய்யப்பட்டவர்களை நாங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வருவோம். இந்து சமாஜ் விழித்துக்கொண்டுவிட்டது. யாருக்காகவும் பயப்படாது. நாங்கள் ( இந்துக்கள் ) இந்தியாவுக்குள் எங்கிருந்தோ வரவில்லை. இது எங்களது இந்து தேசம்" எனக் கூறியுள்ளார்.

விகடன்
20-12-2014

ஆக்ரா கட்டாய மத மாற்றத்தை இவர்கள் நாடகமாக நடத்தியதே இது போன்ற கோரிக்கையை வைக்கத்தான். காலம் காலமாக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தோம். ஆனால் இன்று விடியலைத் தேடி இஸ்லாத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக ஓடுகின்றனர். இவ்வாறு ஓடினால் சூத்திரர்கள் என்று சொல்லி எவரை நாம் இழிவுபடுத்துவது? எனவே இதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். இன்னும் காட்டமான அறிக்கைகளையும் வருங்காலத்தில் இந்துத்வாவினரிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் இவர்களின் உளுத்துப் போன வாதங்களை கேட்கும் நிலையில் தலித், மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று இல்லை என்பதை யாராவது மோகன் பகவத்துக்கு சொல்லுங்களேன்.

இந்தியாவில் இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறிய எந்த இந்துவையாவது அழைத்து 'நீங்கள் எவ்வாறு, யாரால் மதம் மாறினீர்கள்? என்று கேளுங்கள். 'எங்களை வேறு மதத்துக்கு விரட்டியது ஆதிக்க சாதி இந்துக்கள்தான். நாங்களாகவே விரும்பித்தான் இஸ்லாத்தை ஏற்றோம்' என்ற பதிலைத்தான் தருவார்கள். எனவே மோகன் பகவத் போன்றவர்கள் தங்கள் மதத்தின் சட்ட நூல்களை திருத்தட்டும். ஆதிக்க சாதியினரிடம் உள்ள தீண்டாமையை களைய முனையட்டும். மத மாற்றம் தானாகவே நிற்கும். ஆனால் அதனை செய்ய மாட்டார்கள்.

'தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பதே' இவர்களின் வேலையாக போய் விட்டது.

திருமணத்துக்காக இஸ்லாமிய மதத்தை தழுவினால் செல்லாது!

அலகாபாத்: திருமணம் என்னும் தனிப்பட்ட நோக்கத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அது செல்லாது என உத்தரப் பிரதேச மாநில அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதியினர், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த 5 தம்பதியர்களில், கணவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். மனைவி ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவர். திருமணத்துக்காக கணவரின் மதமான இஸ்லாமுக்கு 5 பெண்களும் மதம் மாறியிருந்தனர்.

அந்த 5 தம்பதியினரும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்திடம் முறையிட்டிருந்தனர். இந்த மனுக்கள், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சூர்ய பிரகாஷ் கேசர்வானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.


அப்போது நீதிபதி கூறுகையில், "கடந்த 2000 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தின் மீது நம்பிக்கை என்ற அடிப்படையில்லாமல், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்துக்காக மட்டும், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இந்த மனுக்கள் மீதும் தீர்ப்பளிக்கிறேன்" என்றார்.

மேலும் நீதிபதி சூர்ய பிரகாஷ் கேசர்வானி கூறுகையில், இந்த திருமணங்கள் அனைத்தும், புனித குரானின் சூரா 2 அயாத் 221ஆவது பிரிவுக்கு எதிரானதாகும். அந்தப் பிரிவில், இஸ்லாம் மீது நம்பிக்கையில்லாத பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. அதேபோல் இஸ்லாமியர்கள் தங்களது மகள்களை, இஸ்லாத்தின் மீது நம்பிக்கை வைக்காதோருக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு தாக்கல் செய்துள்ள பெண்கள் அனைவரும், தங்களுக்கு இஸ்லாம் குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளனர். திருமணத்துக்காகவே, இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்களின் மதம் மாறுதலை அங்கீகரிக்க இயலாது என்றார் அவர்.

மேலும், 5 தம்பதியினர் தாக்கல் செய்திருந்த மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

-நன்றி விகடன்
19-12-2014

அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். குர்ஆன் என்ன சொல்கிறது. முகமது நபி என்ன கட்டளையிட்டுள்ளார் என்பதை எல்லாம் படிக்காமல் திருமணம் என்ற ஒரு நோக்கத்துக்காக இஸ்லாத்தை நோக்கி வருவது குர்ஆனால் தடை செய்யப்பட்ட ஒன்று.

'இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள். இணை கற்பிப்பவள் எவ்வளவுதான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கைக் கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள்'
- குர்ஆன் 2:221

பல இடங்களில் திட்டமிட்டு திருமணம் முடிப்பது போல் முடித்து பிறகு அதனை பிரச்னையாக்கி கோர்ட்டு வரை சென்று முற்றிலுமாக மத மாற்றத்திற்கே தடை சட்டம் கொண்டு வருவதுதான் இவர்களின் நோக்கமோ என்று சந்தேகிக் வைக்கிறது. ஆக்ராவிலும் முடிவில் 'மத மாற்ற தடை சட்டம்' நாங்கள் தயார் என்று பிஜேபி அறிவித்ததையும் நாம் மறந்து விடக் கூடாது.

எனவே முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாற்று மத பெண்களை திருமணம் முடிப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும். அது பிற்காலத்திழல் உங்களின் எதிர்காலத்தையே பல சிக்கல்களில் கொண்டு போய் விடலாம்.

இஸ்லாத்தை விளங்கி முஸ்லிமான சகோதரிகள்தானா இவர்கள் என்பதை நன்கு விசாரித்தறிந்து கொண்டு அதன் பிறகு முஸ்லிம்கள் திருமணம் முடிப்பதே நல்லது. பின்னால் வரக் கூடிய சட்ட சிக்கல்களை இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீர்த்து வைக்கும்..


மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்!மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்!

பெங்களூரை சேர்ந்த மனோகர் எனும் இந்த முதியவர் திருமறை குர்ஆனை படித்து அதன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர்! இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் மனைவி மக்களால் புறக்கணிக்க பட்டு, சொத்து,சுகம், சொந்த பந்தங்களை துறந்து தற்போது சென்னையை தனது வாழ்விடமாகவும் , தஃவாவை தனது முழுநேர பணியாகவும் ஆற்றி வருகிறார்!

தனக்கு நேர்வழி காட்டிய குர்ஆனை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கோடு, தனக்கு ஜகாத் ஆக வந்த தனது இறுதிக கால பாதுகாப்பு நிதியான ரூபாய் 2 லட்சத்தை செலவழித்து 2000 குர்ஆனை அச்சடித்து வழங்கி உள்ளார்! அதில் தஃவா குழுவுக்கு மட்டும் இதுவரை 1000 குர்ஆனை வழங்கி உள்ளார்! எல்லா புகழும் இறைவனுக்கே! அது மட்டுமன்றி அப்துல் ஹமீது அவர்களின் எழுத்தில் உருவான "நாத்திகமா பகுத்தறிவுவா" எனும் சிற்றேட்டை 10000 க்கும் அதிகமாக அச்சிட்டு வழங்கி உள்ளார்!
இறப்பதற்கு முன்னதாக 10000 குர்ஆனை கொண்டு சேர்க்க திட்டமிட்டு உள்ளதாக கூறுகிறார்! அவருக்காக நாம் பிரார்த்திபோம்.

பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கிறோம் என்று வெற்று பெருமை பேசுபவர்கள் மத்தியில் சகோதரர் மனோகர் என்ற முனவ்வரின் சேவை பாராட்டத்தக்கது. இறைவன் இவருடைய சிறந்த சேவையை பொருந்திக் கொள்வானாக!

தொடர்புக்கு

முனவ்வர்
9791772032

தலித் அதிகாரி முன் சீட்டில் உட்கார்ந்ததால் கொலை!

பிஹாரில் காரின் முன் இருக்கையில் அமர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் தலித் என்பதால் அவரை, சக துணை ஆய்வாளர் ஒருவரே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். ஓராண்டாக தலைமறைவாக உள்ள அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள அஜய் குமார் சிங் யாதவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு சரண் சரக காவல் துறை டிஐஜி மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 2015 ஜனவரி 31-ம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறும் காவல் துறைக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கொல்லப்பட்ட கிருஷ்ண பைதாவின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு சரண் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில உள் துறையை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டத் (கொடுமை தடுப்பு) திருத்தத்தின்படி பைதாவின் வாரிசுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரண் மாவட்டத்தில் உள்ள பனியாபூர் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் அஜய் குமார் சிங் யாதவ், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்தக் காரில் முன் இருக்கையில் அமர்ந்த அதே காவல் நிலைய துணை ஆய்வாளர் கிருஷ்ண பைதாவை தலித் என்ற காரணத்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இதுகுறித்து பைதாவின் மகன் சுரேந்திர குமார் ரஜக் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கால தாமதமாக வழக்கு பதிவு செய்தபோதும், யாதவ் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனினும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் தலைமறைவாக உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் ரஜக் புகார் செய்துள்ளார். இதையடுத்து, யாதவ் மீதான புகார் குறித்து விசாரித்து வருவதாக சரண் சரக டிஐஜி மனித உரிமை ஆணையத்தில் கூறியுள்ளார். முக்கியமான இந்த வழக்கில் உடனடியாக விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்து நாளிதழ்
20-12-2014

'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க?' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் இந்துத்வாவாதிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

சக அதிகாரி ஒருவருக்கு ஒரு தலித் அதிகாரி முன் சீட்டில் அமருவதையே பொறுக்க முடியவில்லையே... இவர்கள் கோவிலில் இதே தலித்களை இனி மேலும் அனுமதிப்பார்கள் என்று நம்ப முடியுமா? அதற்கு ஏற்ற சூழல்தான் உள்ளதா? இன்று தமிழகம் வரும் அமீத்ஷாவிடம் இந்துத்வாவாதிகள் இதற்கு பதிலை பெற முயற்சிப்பார்களா? :-)

இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள் தலித்களுக்கு உரிய பாதுகாப்பை அவர்களால் தர முடியுமா? இதற்கும் அமீத்ஷாவிடம் பதில் பெற முயற்சியுங்கள் இந்துத்வாவாதிகளே!

http://www.business-standard.com/article/pti-stories/bhrc-seeks-report-from-govt-in-sub-inspector-murder-case-114121801186_1.html

http://www.ibtimes.co.in/absconding-bihar-cop-who-killed-dalit-colleague-sitting-front-seat-jeep-faces-more-trouble-617756

http://timesofindia.indiatimes.com/articleshow/45567511.cms
Friday, December 19, 2014

இந்த பதிவு பிரவீன் தெகோடியாவுக்கு சமர்ப்பணம்!"இரண்டு நாளாக விடாமல் அழுதுக்கொண்டிருந்த என் குழந்தையை மசூதிக்கு தூக்கின்னு போயி ஊதின்னு வான்னு எங்க அம்மா சொன்னாங்க.

இதுக்கு முன்னாடி மசூதிக்குள்ள பலமுறை நான் போயிருந்தாலும் குழந்தைய தூக்கின்னு போறது இதுதான் முதல் முறை.

அங்கு எனக்கு முன்னாடியே சில பெற்றோர்ங்க அவங்களோட குழந்தைய வச்சினு வரிசையா நின்னுன்னு இருந்தாங்க.

அது வரைக்கு என் மனசுல எந்த வித்தியாசமும் தெரியில. கொஞ்சம் நேரம் கழிச்சி தொழுகைய முடிச்சிக்கின்னு வந்த இஸ்லாமிய சகோதரருங்க வரிசையில இருந்த ஒவ்வோரு குழந்தையின் நெத்தியிலையும் எதோ சொல்லிவிட்டு ஊதினாங்க.

இத பாக்கும்போது எனக்கு ஒரே ஆச்சரியம். காரணம் அவங்க யாரிடமும் நீங்கள் எந்த மதம், ஜாதி, குளம் , கோத்திரம்ன்னு எந்த விவரத்தையும் கேக்கல.

ஆனால் நம்மல நம்பி வந்தவங்களுக்கு நம்ம கடவுள் மூல்யமா நல்லது நடக்கனும்ன்ற மனசு மட்டுமே அவங்ககிட்ட இருந்தத நான் பாத்தேன்

இந்த நல்ல மனசு நம்ம வழிபடுற கோவிலுங்கள்ல இல்லனு நினைக்கும் போது எனக்கு அவமானமா இருந்துச்சி.

அவங்க நம்ம மேல அன்பு செலுத்த தயாராத்தான் இருக்காங்க. நமக்கு தான் அதை ஏத்துக்க மனசு வரல.

இந்த குருகிய வட்டத்த விட்டுட்டு நாம வெளிய வந்தோம்ன்னா நம்மள கட்டிதழுவ இந்த அன்பு நிறைஞ்ச உலகம் காத்துன்னு இருக்கு..."

https://www.facebook.com/photo.php?fbid=903876806289690&set=a.846702762007095.1073741826.100000021381369&type=1&fref=nf

மிக அழகிய வார்த்தைகளை பதிவாக்கியிருக்கிறீர்கள் தோழரே! உங்களின் நல்ல மனதுக்கு இறைவன் கிருபையால் எந்த சிரமமும் வரக் கூடாது என்று நானும் பிரார்த்திக்கிறேன்.

நானும் பலமுறை திருத்தணி பள்ளி வாசலில் வரிசையாக குழந்தைகளோடு நிற்கும் இந்து தாய்மார்களுக்கு 25 வருடங்களுக்கு முன்னால் ஓதி விட்டுள்ளேன். உங்களைப் போன்ற நல்லுள்ளம் கொண்ட இந்துக்கள் இருக்கும் வரை ராம கோபாலனின் எண்ணமோ பிரவீன் தெகோடியாவின் எண்ணமோ இந்த மண்ணில் நிறைவேறப் போவதில்லை. வாழ்த்துக்கள் சகோதரரே!

குழந்தைக்கு உடலுக்கு ஏதும் பிரச்னை என்றால் அந்த குழந்தையை மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். இறைவனிடமும் பிரார்த்தனை புரியுங்கள். நீங்கள் இஸ்லாத்தை அறிய வேண்டுமானால் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை வாங்கி படித்துப் பாருங்கள். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறைகளை படியுங்கள். அந்த முயற்சிகள் உங்களை இன்னும் நெருக்கமாக கடவுளிடம் கொண்டு சேர்க்கும்.

'பிசாசு'.... படம் பார்க்க நாளைக்கு போகலாமா? :-)
கணவன்: 'பிசாசு'.... படம் பார்க்க நாளைக்கு போகலாமா?

மனைவி: எந்த படத்துக்கு? படத்து பேரைச் சொல்லுங்கோ!

கணவன்: ? ... ?..... ?

Thursday, December 18, 2014

அட்லாண்டிக் நகரத்தில் மனித நேய சேவை - முஸ்லிம்கள்https://www.youtube.com/watch?v=6FT6TaagOCA

ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி ஏதாவது ஒரு குற்ற செயலை செய்து விட்டால் உடன் அவனை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி முகமது நபி வரை அங்கலாய்ப்பவர்களை தினமும் பார்த்து வருகிறோம். அதே முஸ்லிம்கள் உலகமெங்கும் பல இடங்களில் மனித நேய சேவைகளை செய்து வந்தாலும் அதனை மீடியாக்கள் திட்டமிட்டு மறைத்து விடுகின்றன.

அமெரிக்காவில் அட்லாண்டிக் நகரத்தில் 300 ஏழை குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருட்களை அளித்து இஸ்லாமியர்கள் 'வறியவர்க்கு உதவுதல்' என்ற தங்களின் மத கட்டளையை மகிழ்வோடு நிறைவேற்றினர். அமெரிக்கா முழுவதும் 49 மில்லியன் மக்கள் பசியால் வாடுவதாக கணக்கெடுப்பு சொல்கிறது. ஆனால் அமெரிக்க அரசோ தனது வருமானத்தில் பெரும் பகுதியை ஆயுத தொழிற் சாலைக்கு திருப்பி விட்டு சொந்த மக்களை பட்டினி போடுகிறது.

இந்நகரில் உள்ள 'மஸ்ஜித் முஹம்மது' என்ற பள்ளியின் நிர்வாகிகளும், அட்லாண்டிக் முனிசிபாலிடியும் இணைந்து இந்த அழகிய மனித நேய பணியைச் செய்துள்ளனர். 'ஜூபைதா ஃபவுண்டேஷன்' என்ற இஸ்லாமிய அமைப்பு இதற்கான நிதி உதவியை கொடுத்துள்ளது. இந்த நிகழ்வானது வருடா வருடம் இந்த பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது.

அருகிலேயே ஒரு மினி இஸ்லாமிய நூலகமும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் மனித நேய சேவையைப் பார்த்து வியந்த ஒரு பெண் அந்த இடத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக சொன்னார். 'நாங்கள் உங்களை வற்புறுத்தவில்லை. நீங்களாக விரும்பித்தான் உண்மையை உணர்ந்துதான் இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?' என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பல முறை கேட்கிறார்.

'ஆம்.... நான் எனது விருப்பத்தின் பேரில்தான் இஸ்லாத்தை ஏற்கிறேன்' என்று சொன்னவுடன் அவருக்கு கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டு இஸ்லாத்தில் இணைக்கப்பட்டார்.

மன மாற்றம் என்பது இந்த வகையில் ஏற்பட வேண்டும். ரேஷன் கார்டு தருகிறேன், ஆதார் அட்டை தருகிறேன் என்று ரோட்டோரம் குடிசைகளில் வாழும் ஏழைகளை ஆசை காட்டி நம் நாட்டில் இழுப்பது போல் இங்கு எதுவும் நடைபெறவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஒன்றாகவே படித்தோம்! ஒன்றாகவே இறந்தோம்! - கவிதைஒன்றாக பள்ளியில் குதூகலித்து படித்தோமே!

நன்றாக பள்ளியில் ஒன்றாக உணவு உண்டோமே!

கூட்டாக வாழ்வின் கனவுகளை அசை போட்டோமே!

எட்டாத வேலைகளையும் எட்டி விட முனைந்தோமே!

ஒன்றாக பள்ளி சீருடையில் உலா வந்தோமே! தோழா...

நன்றாக சென்ற நமது பள்ளி நாட்களை நொடிகளில்

மிருகமான சில மனிதர்களின் கோழைத் தனத்தால்

இழந்து விட்டோம். இனி இழக்க ஒன்றுமில்லை!

இறப்பிலும் இன்று ஒன்று சேர்ந்து விட்டோம்!

ஒன்றாகவே படித்தோம்! ஒன்றாகவே இறந்தோம்! இறைவா!

எதிரிகளுக்கு கூட எங்கள் நிலை வர வேண்டாம்!

-பெஷாவர் பள்ளியில் ஒன்றாக படித்த மாணவர்கள்!
Wednesday, December 17, 2014

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு நாடெங்கும் சிலைகளா?காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே விற்கு நாடெங்கும் சிலைவைக்க இந்துமகாசபை முடிவு செய்துள்ளது. இது குறித்து எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தியாவின் மகா புருஷர்களுக்கு இந்தியாவில் சிலைவைக்காமல் பாகிஸ்தானிலா சிலைவைக்க முடியும்? என்று எதிர்கேள்வி வைக்கின்றன.

காந்தியைக் கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ் அமைப் பைச் சேர்ந்த நாதுராம்கோட்சே என்பது நாடறிந்த செய்தியாகும். இந்த நாட்டின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்படும் காந்தியாரை அகண்ட பாரதத்தின் எதிரி மற்றும் இந்துக்களின் துரோகி என்று கூறி கோட்சே தலைமையிலான குழு திட்டமிட்டுக் கொலை செய்தது. இந்தக்கொலை நிரூபிக்கப்பட்டு கோட்சேவிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலகர்த் தாவாக இருந்த வி.டி.சவர்க்கார் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிவிட்டார்.

இந்த நிலையில், மத்தியில் புதிதாக ஆட்சி அமைத்த பாஜக அரசு இந்துத்துவச் சக்திகளின் அரசாக அமைந்ததால், நாளுக்கு நாள் இந்துத்துவக் கொள்கையை தூக்கிப்பிடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் என்ற சாமியார் நாதுராம் கோட்சேவை தேசபக்தன் என்று கூறி பிறகு மன்னிப்புக் கேட்டார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மிகவும் விவாதத்திற்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சகோதர அமைப்பான இந்து மகாசபை இந்தியா முழுவதும் நாதுராம் கோட்சேவின் சிலையை திறக்க முடிவு செய்துள்ளதாம்.


இது குறித்து இந்துமகா சபைத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில்

நாங்கள் ஜனவரி 30 ஆம் தேதி (காந்தி கொலை செய்யப்பட்ட நாள்) இந்தியா முழுவதும் கோட்சேவின் சிலையைத் திறக்க விருக்கிறோம். இதற்காக ராஜஸ்தானின் கிஷான் கட் என்ற ஊரில் நூற்றுக்கணக்கான பளிங்கு சிலைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. புதுடில்லியில் கோட்சே தங்கி இருந்த மத்திய டில்லியில் உள்ள கிருஷ்ணகஞ்சில் கோட்சே சிலையுடன் அவருக் கான காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. நாங்கள் மத்திய அரசிடம் உடனடியாக அய்ந்து நகரங்களில் வைக்க அனுமதி கேட்டு இருக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு அனுமதியளிக்காவிட்டாலும் கவலை யில்லை, நாங்கள் இந்த நாட்டின் மகாபுருஷர்களுக்கு சிலை வைக்க யாரும் தடைசெய்ய முடியாது. விரைவில் நாடெங்கும் கோட் சேவின் சிலைகள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கோட்சே இந்து மகாசபையின் தலைமையகத்தில் தான் வந்து தங்கினார். புதுடில்லியில் உள்ள தலைமையகத்தில் தான் அவர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி பெற்றார். அவருக்குப் புகலிடமும் திட்டமிட்டுக் கொடுத்ததும் இந்துமகாசபையின் உறுப்பினர்கள்தான். இந்த ஆண்டு ஜூலை மாதம் கோட்சேவின் சிலைகள் செய்ய உத்தரவிட்டதாகவும், இந்தச் சிலைகளில் 17 சிலைகள் டில்லியில் உள்ள இந்து மகாசபை தலைமையகத்திற்கு வந்துவிட்டனவாம். காந்தியைக் கொலைசெய்யும் முந்தைய நாள் முழுவதும் கோட்சே இந்துமகாசபை உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் விவாதம் நடத்தினான். அவனுக்குத் துப்பாக்கிச் சுட பயிற்சியளித்த இடத்தில் தற்போது அவனுக்கான சிலை அமைக்கும் மேடைகள் தயாராக உள்ளன.

இந்தத் தகவல்களை எக்னாமிக் டைம்ஸ் (15.12.2014) வெளியிட்டுள்ளது. மற்ற ஏடுகள் திட்டமிட்டு மூடி மறைத்துவிட்டன.

காந்தியாரின் பிறந்த நாள் மக்கள் மத்தியில் விழாவாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி, அந்த நாளை தூய்மை நாள் என்று அறிவித்து, நாட்டைத் தூய்மைப்படுத்தும் காட்சிகளை அரங்கேற்றினார். மோடியே குப்பைக் கூட்டுவதுபோல, ஊடகங்களிலும் இடம்பெறச் செய்து, அந்த நாளில் காந்தியாரைப்பற்றி எந்தவிதத் தகவலும் வெளி வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகவே பார்த்துக் கொண்டார்.


குஜராத் மாநிலத்தில்தான் காந்தியார் பிறந்தார் - ஆனால், அவருக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது; மாறாக அம்மாநிலத்தில் பிறந்த வல்லபாய் படேலுக்கு 597 அடி உயரத்தில் (பீடத்திற்கு மட்டும் ரூ.200 கோடி பூங்கா மற்றும் காட்சியகத்துக்கு ரூ.500 கோடி) சிலை எழுப்ப முயலுவதில், காந்தியாரை மட்டம் தட்டும் சூழ்ச்சியே!


காந்தியாரைக் கொலை செய்வதற்குத் தூண்டுகோலாக இருந்த காரணத்தால்தான் கீதையை இந்தியாவின் தேசிய புனித நூலாக அறிவிக்கப் பார்க்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

”விடுதலை” தலையங்கம் 17-12-2014

அம்பேத்காரை யாரும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கில்தான் இவர்கள் பாபர் பள்ளியை இடிக்க டிசம்பர் 6 ந்தேதியை தேர்ந்தெடுத்தனர். இது போல் தங்கள் செயல் திட்டங்களை நீண்ட கால திட்டமிடலால் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அதன் அடுத்த நகர்வுதான் கோட்சேயை தற்போது முன்னிறுத்துவது. இன்னும் சில நாட்களில் தேசத் தந்தையை சுட்டுக் கொன்ற கோட்சே என்ற பார்பனர் மஹாத்மா ஆக்கப்படலாம். மோடியின் ஆட்சியில் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

இந்த நாட்டுக்காக தனது உயிரையே இழந்த காந்தியின் கண்ணீர் இந்த அக்கிரமக்காரர்களை இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் பழி தீர்க்கும்.

“What’s wrong if someone called Godse a patriot. Before killing Gandhi, Godse worked as a freedom fighter and towards Akhand Bharat.

- See more at: http://indianexpress.com/article/cities/mumbai/now-godse-says-he-was-a-patriot/#sthash.99AI6VY7.dpuf

On the occasion of Nathuram Godse’s 61st death anniversary on November 15,the Hutatma Nathuram Godse Icchapatra Nyas — run by his family and ideological supporters — will release an audio book based on his statement in court in the Mahatma Gandhi assassination trial.

The audio book will be released by radical outfit Shriram Sene chief Pramod Mutalik,Godse’s niece Himani Savarkar told The Sunday Express. Savarkar,who is also the president of Abhinav Bharat,said Godse’s statement in court is published in books written by her father Gopal Godse,a co-accused in the Mahatma Gandhi assassination case.

- See more at: http://indianexpress.com/article/news-archive/web/godse-court-statement-now-in-audio-book/#sthash.fAza0IvY.dpuf


பெஷாவர் தாக்குதலுக்கு தாலிபான்கள் கண்டனம்!

பெஷாவர் தாக்குதலுக்கு தாலிபான்கள் கண்டனம்!பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியான சம்பவத்திற்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அப்பாவிக் குழந்தைகளைக் கொல்வது இஸ்லாமுக்கு விரோதமானது என்று அவர்கள் கண்டித்துள்ளனர்.

வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு பதிலடியாகவே ராணுவப் பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தாலிபான் அமைப்பு கூறியிருந்தது.

இதனையடுத்து ஆப்கான் தாலிபான்கள் தனது கண்டனத்தில் கூறும் போது, “ஆப்கான் இஸ்லாம் அமிரகம் அப்பாவி குழந்தைகள், மற்றும் மக்களைக் கொல்வதை எதிர்க்கிறது.

அப்பாவி மக்கள், குழந்தைகளை வேண்டுமென்றே கொல்வது இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரோதமானது. ஒவ்வொரு இஸ்லாமிய அரசும், இயக்கமும் அடிப்படை சாராம்சத்தின் படி நடக்க வேண்டும்.

ஆப்கான் இஸ்லாமிய அமிரகம், இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாவதற்கு பிரதானமான காரணம் தாலிபான்கள் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களே என்று ஐ.நா. ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதையடுத்து இன்று பெஷாவர் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்து நாளிதழ்
17-12-2014

தாலிபான்கள் இதனை கண்டித்திருந்தாலும் சில இடங்களில் இவர்களும் பொது மக்களை குறி வைத்து தாக்குகின்றனர். அப்பாவி பொது மக்களை யார் தாக்கினாலும் இன மதம் கடந்து அனைவரும் எதிர்க்க ஆரம்பித்தால் இவர்கள் கூடிய விரைவிலேயே சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்படுவார்கள்.

பெஷாவர் துப்பாக்கி சூட்டில் தப்பி பிழைத்த மாணவர்கள் சொல்கின்றனர்.

“தீவிரவாதிகள் சுடுவதற்கு முன் எங்களை குர்ஆனிலிருந்து ஓதும்படி ஆணையிட்டார்கள்”

அடிபட்டு மருத்துவமனையின் தீவிரப் பிரிவில் இருந்த ஷாருக் கான், “எங்களை பெஞ்சுகளுக்கு அடியில் படுத்து ஒளிந்து கொள்ளச் சொல்லி யாரோ கத்தினார்கள். ஆனால் எங்கள் முன் தீவிரவாதிகள் தோன்றி ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்தியபடி சுட ஆரம்பித்து விட்டனர்

இதிலிருந்து என்ன தெரிகிறது? இதன் மூலம் இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்று இந்த செய்தியை கேள்விபடுபவர்கள் உணர வேண்டும் என்ற ஆவல் இந்த காட்டுமிராண்டிகளிடம் மேலோங்கியிருப்பது தெரிகிறது.. எனவே இந்த கொடியவர்கள் இஸ்லாமிய எதிரிகளால் தயாரிக்கப்பட்டு மூளை சலவை செய்யப் பட்டவர்கள் என்பது நன்கு விளங்குகிறதல்லவா?

இது போன்ற மனித மிருகங்கள் இந்த உலகத்திலிருந்தே அழிந்து போகட்டும்.....

ஆங்கில செய்தியில் ஒரு வாசகர் எழுதிய கவிதை

mustafa faisal.....

Mom! prepare me for school, as today is my last day
Mom! love me and kiss me, as today is my last day

Mom! give me the love of all siblings, as today is my last day
Mom! love me and kiss me, as today is my last day

Mom! don't count me tomorrow, as today is my last day
Mom! love me and kiss me, as today is my last day

Mom! forgive me for all the misbehavior, as today is my last day
Mom! love me and kiss me, as today is my last day

Mom! God bless you and take care forever, as today is my last day
Mom! kiss me for the last time, as today is my last day


இதற்கு மேலுமா இஸ்லாத்தில் உள்ளீர்கள்?

இதற்கு மேலுமா இஸ்லாத்தில் உள்ளீர்கள்?

//தம் மதத்தை சீர்திருத்திக் கொள்ள அல்லது தூக்கியெறிய இதை விட இஸ்லாமியர்களுக்கு வேறு காரணம் வேண்டுமா!//

-ட்விட்டரில் ஒரு பகுத்தறிவு :-) இந்துத்வாவாதியின் புலம்பல்

அதாவது பாகிஸ்தானில் சில கிறுக்கர்கள் பள்ளிக் குழந்தைகளை கொன்றதைக் காரணமாக்கி இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாத்தை தூக்கி எறிய வேண்டுமாம். ஒரு இந்துத்வாவாதி ட்விட்டரில் தனது அபிலாஷைகளை கொட்டியுள்ளார். இது போன்ற தாக்குதல்கள் நடப்பதும் அதனை கேமராவில் பதிவு செய்து உலகமெங்கும் பரவ விடுவதன் நோக்கமே முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பிடியை விட வேண்டும் என்பதற்காகத்தான். இது உலகலாவிய அளவில் மிகவும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

ஆனால் ஆச்சரியமாக இவர்கள் நினைப்பதற்கு மாற்றமாக இஸ்லாம் இத்தனை கொடூரங்கள் நடந்தும் மேலும் முஸ்லிம்களை இறுக்கி அணைத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இரட்டைக் கொபுர தாக்குதல் அமெரிக்காவில் நடந்த பிறகுதான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிக வேகமாக இஸ்லாம் பரவியது. இன்று வரை அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் மேற்குலகம் தனது கையை பிசைந்து கொண்டிருக்கிறது.

நம் தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். சினிமா கூத்தாடிகள் அர்ஜூனிலிருந்து விஜயகாந்த், கமலஹாஸன், விஜய், டைரக்டர் முருகதாஸ் வரை திட்டமிட்டு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுக்கின்றனர். தினமலர், தினமணி, என்று அனைத்து பார்பன ஊடகங்களும் திட்டமிட்டு முஸ்லிம்களை வஞ்சிக்கின்றன. ஆனால் அதன் முடிவு என்னவாக இருக்கிறது. இத்தனையையும் மீறி இஸ்லாம் எந்த பிரசாரமும் இன்றி மிக வேகமாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.

பெரியார் தாசன், ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, மோனிகா, ஜெய் என்று இந்த கூத்தாடிகளின் கூடாரத்திலிருந்தே ஆட்கள் வரிசையாக இஸ்லாத்தை ஏற்ற வண்ணம் உள்ளனர். பெயரளவில் மாறாமல் தங்கள் வாழ்க்கையிலும் குர்ஆனின் கட்டளைகளை தொடர்ந்து கடைபிடிக்கும் சிறந்த முஸ்லிம்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தைப் போல் இந்த அளவு எதிர்ப்பை உலகில் எந்த மதமும் எதிர் கொள்ளவில்லை. அதே நேரம் இந்த மார்க்கத்தில் தாங்களாகவே தங்களை இணைத்துக் கொள்ளும் ஆச்சரியமும் இந்த மார்க்கத்தில் தான் நடக்கிறது.

இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டவுடன் அந்த மனிதனின் வாழ்வு முற்றிலுமாக மாறி விடுவதை பார்க்கிறோம். யுவன் சங்கர் ராஜா தனது வீட்டில் இருந்த விக்ரகங்களை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டாராம். இதனால் தனது தந்தையோடு சில வாக்கு வாதங்களும் நடந்ததாக கேள்விப்படுகிறோம். பெரியார் தனது வாழ்நாள் முழுக்க சாதிக்காததை 'லாயிலாஹா இல்லல்லாஹ்' ஒரு வார்த்தை யுவனின் வாழ்க்கையை மாற்றி விடுகிறது. ஏ ஆர் ரஹ்மானோ காலை (ஃபஜ்ர்) நேர தொழுகை தவறி விடாமல் இருக்க இரவு ஒன்பது மணியிலிருந்து நள்ளிரவு நான்கு மணி வரை தனது ஒலிப்பதிவை வைத்துக் கொள்கிறாராம். மோனிகா என்ற நடிகை சினிமாவை தூரமாக்கி இன்று ஏற்றுமதி இறக்குமதி தொழிலை நாடியுள்ளார். நாத்திகவாதியான பெரியார் தாசனோ ஊர் முழுக்க இஸ்லாத்தை பிரசாரம்பண்ணும் பணியை தனது கடைசி நாட்களில் செய்தார். புதிய முஸ்லிம்களுக்குகே இந்த அளவு பற்று இருந்தால் பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் எங்களுக்கு எந்த அளவு பற்று இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

எனவே உலகில் இஸ்லாத்தின் பேரால் நடக்கும் எல்லா குண்டு வெடிப்புகளும் இஸ்லாமியரால் நடத்தப்படுவதில்லை. 10 சதவீதம் இஸ்லாமியரால் நடத்தப்பட்டாலும் மற்ற 90 சதவீதம் இஸ்லாமிய பெயரில் ஒளிந்திருக்கும் இஸ்ரேலிய, அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளின் ஏஜண்டுகளே என்பது உலக மக்களுக்கும் தெரியும். எனவேதான் இஸ்லாம் அசுர வேகத்தில் உலகமெங்கும் தனது காலை மிக திட்டமிட்டு ஊன்றி வருகிறது.

எங்கும் போக வேண்டாம். உங்களோடு அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக தொப்புள் கொடி உறவுகளாக உங்களோடு பழகி வரும் சக தமிழ் முஸ்லிம்களை நோட்டமிடுங்கள். இந்த இள வயதிலேயே அழகிய தாடியை வைத்துக் கொண்டு இஸ்லாம் தடுத்த அனைத்து கெட்ட காரியங்களையும் தூரமாக்கி மிக உன்னதமான வாழ்வை வாழும் இவர்கள் இது போன்ற அரக்க செயல்களை செய்வார்களா? வட்டியை ஒதுக்குகிறோம், மதுவை ஒதுக்குகிறோம், விபசாரத்தை நாடுவதில்லை, திருடுவதில்லை, பொய் பேசுவதில்லை என்று கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு வாழும் ஒரு இஸ்லாமியன் அப்பாவி பொது மக்களை கொல்வானா? உலகமெங்கும் இது தான் நிலை. உலக ஊடகத் துறை மேற்குலக மீடியாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்களுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிடுவர். நமது இந்திய ஊடகங்களின் நிலையும் அதுதான்.

பாகிஸ்தானில் பல அரபி மதரஸாக்களில் ஷியாக்கள் ஊடுருவி இஸ்ரேலின் பண பலத்தால் பல இளைஞர்களை ஜிஹாதிகளாக மாற்றுவதாக எனது பாகிஸ்தானிய நண்பன் சொன்னான். அரசு சிலரை கைதும் செய்துள்ளது. எனவே நாம் பத்திரிக்கைகள் தரும் செய்தியின் அடிப்படையில்தான் முடிவெடுக்கிறோம். ஆனால் உண்மையோ வேறு விதமாக உள்ளது.

எனவே தாலிபான்களாகட்டும், ஐஎஸ்ஐ ஆகட்டும், போகோ ஹராமாகட்டும், இன்னும் எத்தனை பேர்களில் ஒளிந்து கொண்டு அராஜகங்களை ஏற்படுத்தினாலும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை இஸ்லாமியரிடமிருந்து எந்த காலத்திலும் பிரித்து விட முடியாது. ஏனெனில் இது இறை மார்க்கம். இதனை காப்பாற்றும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டுள்ளான்.

"அவர்கள் இறைவனின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு ஊதி அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும், இறைவன் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்."

குர்ஆன் 61:8

Tuesday, December 16, 2014

எங்கள் மகனுக்கு ஐஎஸ் தொடர்பில்லை மெஹ்தியின் பெற்றோர்!எங்கள் மகனுக்கு ஐஎஸ் தொடர்பில்லை மெஹ்தியின் பெற்றோர்!

எங்கள் மகனுக்கு ஐஎஸ் தொடர்பில்லை: கைதான மேக்தியின் பெற்றோர் பேட்டி; ட்விட்டர் கணக்கு திருடப்பட்டதாகப் புகார்


ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைதாகியுள்ள எங்கள் மகன் மேக்தி அப்பாவி. அந்த அமைப்புக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. மேக்தியின் இமெயில்,ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளன என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் சமூகவலைதளத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், ஆள் சேர்த்ததாகவும் பெங்களூருவை சேர்ந்த பொறியாளர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட 4 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேக்தியை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் மேற்கு வங்கத்தில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, உளவுத்துறை மற்றும் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மேக்தி மெஸ்ரூர் பிஸ்வாஸின் உண்மைநிலைக் குறித்து அறிவதற்காக அவரது தந்தை மேகெயில் பிஸ்வாஸ், தாய் மும்தாஜ் பேகம் ஆகி யோரை 'தி இந்து' சார்பாக சந்தித்தோம்.

அவர்கள் கூறியதாவது:

எங்கள் மகன் மேக்தி அப்பாவி. அவனுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் அவனை தீவிரவாதி போல சித்தரித்து போலீஸார் எங்களை மிரட்டி விசாரிக்கின்றனர். அவனுடைய ட்விட்டர், மின்னஞ்சல், பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரிக்குமாறு தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
தற்போது எனது மகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கவில்லை. ட்விட்டரில் ஆதரவாக மட்டுமே செயல்பட்டதாக தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேக்தியை தீவிரவாதி போல் நாட்டுக்கு எதிராக போர்த்தொடுத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிந்தது ஏன்?

தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பது சட்டப்படி குற்றமல்ல என நீதிமன்றங்கள் பல தீர்ப்பு களில் கூறியுள்ளன. மேக்தி மீது இத்தனை வழக்குகள் நியாயமா? இவ்வாறு, அவர்கள் தெரி வித்தனர்.

நன்றி:
தமிழ் இந்து நாளிதழ்
17-12-2014

“மேக்தியை தீவிரவாதி போல் நாட்டுக்கு எதிராக போர்த்தொடுத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிந்தது ஏன்?“ என்று அப்பாவியாக அந்த இளைஞனின் பெற்றோர் மீடியாக்களை பார்த்து கேட்கின்றனர். உங்கள் மகன் முஸ்லிமாக பிறந்த ஒரு காரணம்தான் அவனை தீவிரவாதியாகவும் நாட்டுக்கு துரோகம் இழைத்ததாகவும் வழக்கு தொடுக்க வைத்துள்ளது. வேறு காரணம் இல்லை. இதற்காக ஒரு பெரும் திட்டமிடலே மறைமுகமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் மெஹ்தியின் கைது படலம் என்பதை இனி வரும் காலங்களில் அவரது பெற்றோர் புரிந்து கொள்வார்கள்.

இந்திய இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த நாடு இஸ்லாமியரை குற்ற பரம்பரையாக சித்தரித்து அதன் மூலம் தங்களின் வர்ணாசிரம தர்மத்தை நிலை நாட்டிக் கொள்ள முயல்கிறது. எனவே அவர்களுக்கு பலிகடாவாக நாம் ஆகி விட வேண்டாம். எந்த செய்தியையும் பிரசுரிப்பதற்கு முன் பலமுறை யோசித்து அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்து கொண்டு பிரசுரிக்கவும். ஈராக்கிலோ, சிரியாவிலோ உள்ள எந்த தீவிரவாத அமைப்புபையும் நாம் இங்கிருந்து ஆதரிக்க முயல வேண்டாம். ஏனெனில் அந்த நாடுகளில் நாம் ஆதரிக்கும் குழுக்கள் என்ன மாதிரியான வேலைகளை செய்கிறார்கள் என்பது நம் ஒருவருக்கும் தெரியாது. ஒரு சில குழுக்களின் பின்னால் இஸ்ரேலும் அமெரிக்காவும் உள்ளது. அவர்கள் தான் அந்த குழுக்களை இயக்கி வருகின்றனர். எனவே தவறான ஒரு அமைப்புக்கு அதரவளித்த ஒரு குற்றத்தை நம்மையறியாமல் செய்தவர்களாகி விடுவோம். வருங் காலங்களில் மிக கவனமாக நமது செய்திகளை நமது நாட்டு அரசியலமைப்பு சட்டங்களுக்கு உட்பட்டு பிரசுரிப்போம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வோம்.


'தாலிபான்களை வன்மையாக கண்டிக்கிறோம்' - கார்ட்டூன்


பாகிஸ்தானில் அப்பாவி பள்ளி குழந்தைகள் கொலை!பாகிஸ்தானில் பெஷாவரில் ராணுவ பள்ளியை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 130 பள்ளி குழந்தைகள் இறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தாலிபான்கள் பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வருகிறது. இந்த கொடும் செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனித குல விரோதிகள்.

'ஒரு உயிரைக் கொல்வது ஒட்டு மொத்த மனித குலத்தையும் கொன்றதற்கு சமமாகும்' என்று குர்ஆன் கூறியிருக்க இவ்வாறு அப்பாவி பள்ளிக் குழந்தைகளை கொன்றவன் இஸ்லாமிய பெயர் வைத்திருந்தாலும் இறைவன் முன்னால் அவன் உண்மை முஸ்லிம் அல்ல. நாளை மறுமை நாளில் இறந்த அந்த குழந்தைகள் கொன்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்கிறது குர்ஆன். எனவே மனித குல விரோதிகளே உங்களின் தண்டனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

தமிழனை காப்பாற்றிடலாம்! கவலைப்படாதீங்க.....'கவலைப் படாதீங்கோ! தமிழனை காப்பாற்றி விடலாம்! மதுவுக்கு அடிமையானதால் உடல் இவ்வாறு பலஹீனமாயிருக்கு! கொஞ்ச நாள்ல குடிப் பழக்கத்தையும் நிறுத்த வெச்சுடறேன்'

'நாசமாப் போச்சு! அவன் உயிரை மட்டும் காப்பாத்துங்க டாக்டர்! குடியிலிருந்து மீண்டு சிந்திக்க ஆரம்பிச்சுட்டான்னா எங்க பாடு திண்டாட்டமால்ல போயிடும்! புரியறதா?'

----------------------------------------------------------

1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் NCAER என்ற தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சிக் கழகம் நடத்திய கருத்துக் கணிப்பு, இந்திய சமுதாயத்தின் பலவீனத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது எனலாம்.

கடந்த 2011- 12 ஆம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த சர்வே, பொது மக்களிடையே நேரடியாக எடுக்கப் பட்டுள்ளது.பொருளாதார அளவில் வேறுபாடுகள் கொண்ட பல்வேறு தரப்பினரைக் கருத்தில் கொண்ட இந்த ஆய்வானது, இரண்டு கேள்விகளை முன் வைத்துள்ளது.

அந்தக் கேள்விகள் உங்களது வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் பட்டியல் இனத்தவர் நுழையவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா? என்பதே.

பிராமணர்கள் 52 சதவீதம் பேரும் , முன்னேறிய சாதியினர் 24 சதவீதத்தினரும், இதர பிற்படுத்தப் பட்டோரில் 33 சதவீதத்தினரும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்து மதத்தினர் 35 சதவீதத்தினரும்,ஜைன மதத்தினர் 30 சதவீதத்தினரும் சீக்கியர்களில் 23 சதவீதத்தினரும்,முஸ்லீம்களில் 18 சதவீதத்தினரும் தீண்டாமை, தங்களின் இல்லங்களில் இருப்பதை மறுக்காமல் கூறி உள்ளனர்.

மாநிலவாரியாகப் பார்த்தால் ஹிந்தி பேசும் வடமாநிலங்களில், மத்தியப் பிரதேசம் 53 சதவீதம்,உத்தரப் பிரதேசத்தில் 43 சதவீதம்,இமாச்சலில் 50 சதவீதம், சத்தீஸ்கரில் 48 சதவீதம்,ராஜஸ்தான் பீகாரில் 47 சதவீதம்,உத்தரகாண்டில் 40 சதவீத மும் `தீண்டாமை` என்பது தங்களின் நிழல் போல ஒட்டிக் கொண்டுள்ளதை ஆய்வில் பதிலாக அளித்துள்ளனர்.

தென் மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசத்தில் 10 சதவீதம் மட்டுமே தீண்டாமை உள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்கு வங்காளம 1 சதவீதம்,கேரளாவில் 2 சதவீதம் என்று சர்வே கூறுகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாடு, கர்நாடகம் மாநிலங்களின் நிலைமை பின்னர் வரவிருக்கும் விரிவான அறிக்கையில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் அமித் தோரட், "சமூக அடிப்படையில் சாதிய உணர்வு, மக்களோடு ஒன்றி கலந்து உள்ளது. சமுதாயத்தில் இருந்து தீண்டாமையினை அகற்றுவது கடினமே" என்கிறார்.

தகவல் உதவி:
விகடன்.காம்
29-11-2014


Monday, December 15, 2014

'சாகுல் பாய்' என்று கூப்பிட்டால் நாங்கள் லூசு பயலுகளா?

சகோ சாகுல் கமீது!

//என் உறவுகளே ஒரு நிமிடம்!!!

நான் நேசிக்கிற உறவுகளில் ஒருவர் என்னிடம்....."" சகோ உங்களுக்கு தமிழின உணர்வை விட மத உணர்வு கொஞ்சம் மேலோங்கி இருப்பதை காண முடிகிறது உங்கள் பதிவுகள் மூலம் எனது மன ஓட்டம் தவறாக இருப்பின் மன்னிக்கவும் "" என் பதிவுகளை படித்த உறவுகளே.... இந்த குற்றச்சாட்டு பிழையென்றால் விருப்பம் மட்டுமே கொடுங்க. குற்றச்சாட்டு உண்மைதானென்றால் பின்னூட்டமிடுங்க. என் பதிவுகளில் உள்ள பிழையை சுட்டிக்காட்டுங்க. ஒருவேளை என்னுறவுகள் எவரேனும் என்னை மதவுணர்வு கொண்டவனென்றெண்ணினால்... நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அப்படியே சாகும்வரை இருப்பேன். யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்.//

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். அது உங்களின் விருப்பம். ஒரு தமிழனாகவும் ஒரு இஸ்லாமியனாகவும் இருக்க குர்ஆன் எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் சில தவறுகள் உங்களிடம் உள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

சகோதரரே! நீங்கள் இஸ்லாமிய தாய் தந்தையருக்கு பிறந்திருந்தாலும் தமிழ் மொழியின் மேல் கொண்ட பற்றால் உங்கள் பெயரை "ஷாஹூல் ஹமீத்" என்பதற்கு பதிலாக "சாகுல் கமீத்" என்று மாற்றி வைத்துக் கொண்டுள்ளீர்கள். ஷாஹூல் ஹமீத் என்ற பெயரே இஸ்லாமிய வட்டத்தில் தவறானது. 'அப்துல் ஹமீது' என்று தான் உங்களுக்கு உங்கள் பெற்றோர் பெயர் வைத்திருக்க வேண்டும். ஹமீது என்ற அரபி வார்த்தைக்கு 'புகழப்பட்டவன்' என்று அர்த்தம். இது இறைவனின் பல பண்புகளில் ஒன்றாக குறிக்கப்படுகிறது.

ஆனால் அந்த பெயரை திரித்து 'கமீது' என்று வைத்துள்ளதால் எந்த பொருளும் தரப்போவதில்லை. இப்பொழுது நீங்கள் செய்த மாற்றம் மொழிப்பற்றினால் அல்ல மொழி வெறியினால் எழுந்துள்ளது. தமிழிலும் அரபியிலும் அதற்கு எந்தப் பொருளும் இல்லை. மேலும் இறைவனின் பெயர்களை இவ்வாறு திரித்துக் கூறுபவர்களைப் பற்றி இறைவன் கூறுவதைக் கேளுங்கள்.

'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'

குர்ஆன் 7 : 180

ஒரு மொழியில் தேவையான சொற்கள் இல்லாத போது வேறு மொழியிலிருந்து கடன் வாங்கிக் கொள்வது அந்த மொழியை மேலும் மெருகூட்டவே செய்யும். ஆங்கில மொழி அவ்வாறுதான் வளர்ந்தது. இன்று அரபு மொழியும் அவ்வாறுதான் வளர்ந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு தமிழ்ப் பற்று அதிகமிருந்தால் அன்பழன், அறிவழகன் என்று அழகிய பெயர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதனை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் இறைவனின் பண்புகளின் ஒன்றான 'ஹமீத்' என்ற பெயரை 'கமீத்' என்று திரித்துக் கூறுவது இஸ்லாமிய பார்வையில் தவறானது என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

//இப்ப சில லூசுப்பயலுக 'சாகுல் பாய்' 'சாகுல் பாய்'னு பாய் தலவாணி விக்கிறானுக. அதுக்கும் சேத்துதான் பதிவால அடிச்சுகிட்டு இருக்கோம். //

அதாவது உங்களை யாராவது 'சாகுல் பாய்' என்று கூப்பிட்டால் அவர்கள் உங்கள் பார்வையில் லூசுகள். சரிதானே!

'பாய்' என்ற உருது வார்த்தை 'சகோதரன்' என்ற பொருளைக் கொடுக்கும். தமிழில் சகோதரன், அண்ணா, தம்பி என்ற வார்த்தைகள் இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான். கடந்த 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. அதனால் என்ன மாற்றத்தைக் கண்டீர்கள். ஜூனியர் விகடன் பத்திரிக்கை மீனாட்சி புர மத மாற்றத்திற்கு பிறகு அந்த மக்களை பேட்டி காண சென்றது. அங்கு நின்றிருந்த ஒரு இளைஞனிடம் 'மதம் மாறி விட்டீர்களே! உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏதும் வந்துள்ளதா?' என்று கேட்டனர்.

சரவணன் என்ற அந்த இளைஞர் கூறுகிறார் 'முன்பெல்லாம் என்னை விட சிறிய பசங்களெல்லாம் 'டேய் சரவணா' என்று தான் கூப்பிடுவார்கள். ஆனால் இன்று அதே ஆதிக்க சாதி இந்துக்கள் என்னை விட பெரிய வயதாக இருந்தாலும் 'ரஹீம் பாய்' என்று கூப்பிடுகின்றனர். இந்த ஒன்று போதும் எங்களுக்கு' என்று கூறினார்.

எந்த அளவு வர்ணாசிரமத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் இத்தகைய வார்த்தை வந்திருக்கும். உங்களின் தாய் தந்தையர் சில தலைமுறைக்கு முன்னால் இஸ்லாத்தை ஏற்றதால் இன்று 'சாகுல் கமீது' என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வருகிறீர்கள். ஒடுக்கப்பட்ட அந்த மக்களின் நிலையிலிருந்து சற்று சிந்தித்து பாருங்கள்.

உங்கள் தலைவர் சீமானாகட்டும், திருமாவளவனாகட்டும், கி. வீரமணியாகட்டும் எல்லோரும் மேடையில் பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் எதுவும் சாத்தியப்படாது. ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று வரை இவர்களை அனுமதிக்கவில்லை, சிதம்பரத்தில் ஆறுமுகசாமியை வெளியே இழுத்து பார்பனியம் போட்டபோது ஏதும் செய்வதறியாது திகைத்து நிற்கத்தான் முடிந்தது இவர்களால். ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை. இனி வருங்காலத்திலும் பார்பனியத்தை இவர்களால் இந்து மதத்தினுள் அசைத்துக் கூட பார்க்க முடியாது. இதை எல்லாம் பார்த்து வெறுத்து போய்தான் 'இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த மருந்து' என்று பெரியார் சொல்லி விட்டு சென்றார்.

பார்பனியத்தின் ஆணி வேரையே பிடித்து உலுக்கும் சக்தி இந்த இஸ்லாம் ஒன்றுக்குத்தான் உள்ளது. எனவே தான் இஸ்லாமியர்களை பார்த்தவுடன் மற்ற இந்துக்கள் 'பாய்' என்று ஒரு வித மரியாதையோடு ஆசையோடு அழைக்கின்றனர். எனது அலுவலகத்தில் இந்தியன், பாகிஸ்தானி முதற்கொண்டு எகிப்து, எமனி நாட்டவர் வரை என்னை 'நஜீர் பாய்' என்றுதான் அழைக்கின்றனர். ஒரு முறை எங்கள் ஊரில் சாலை மறியலில் முஸ்லிம்களை கைது செய்ய வேன் வந்தது. அப்போது காவலர் 'வண்டியில ஏறுங்க பாய்' என்று மரியாதையோடு சொன்னதைப் பார்த்தேன். அதே கான்ஸ்டபிள் தலித் குடிசைக்கு சென்றபோது 'ஏறுடா வண்டியில்....' என்று சொன்னதையும் பார்த்தேன். 'பாய்' என்ற இந்த வார்த்தைக்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறது.

இந்துத்வா தளத்தில் ஒருவர் 'பாய்' என்று நாம் முஸ்லிம்களுக்கு மரியாதை கொடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்தார். ஆனால் ஒரு முஸ்லிமான உங்களிடமிருந்து இந்த கோரிக்கை வந்ததுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

'பாய்' என்ற சொல்லை மாற்றி சகோதரன் என்று கூப்பிடலாம்! எப்போது?

தலித் மக்கள் இன்றும் செருப்பை ஆதிக்க சாதி கிராமங்களில் தூக்கிச் செல்கிறார்களே அந்த நிலை மாறும் போது

சிரட்டையில் இன்றும் தேனீர் குடிக்கிறார்களே அந்த நிலை மாறும் போது...

பார்பனர்களின் எச்சில் இலையில் தோஷம் நீங்க உருளுகிறார்களே அந்த நிலை மாறும் போது...

'சமஸ்கிரதம் தேவ மொழி தமிழ் மொழி நீச மொழி' என்ற நிலை மாறி தமிழுக்கு உரிய அந்தஸ்து கிடைக்கிறதே அப்படிப்பட்ட நிலை மாறும் போது....

'நான் பிராமணன்: நீ சூத்திரன்' என்ற நிலை மாறி எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற நிலை வருகிறதே அன்று....

உங்களோடு சேர்ந்து நானும் இந்த 'பாய்' என்ற சொல் பிரயோகத்தை விட்டு விடுகின்றேன். எனது பெயரையும் தூய தமிழல் மாற்றி வைத்துக் கொள்கிறேன்.

அது வரை அது வேற்று மொழி சொல்லாக இருந்தாலும் நிலைமை மாறும் வரை தற்போதுள்ள இந்த நிலை தொடரத்தான் செய்யும்.

ட்விட்டரில் மெஹ்தி மஸ்ரூரை பின் தொடர்ந்தவர்களில் 60 சதம் முஸ்லிம் அல்லாதவர்களாம்!

தனது ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்ந்தவர்களில் 60% பேர் முஸ்லீம் அல்லாதவர்கள் என போலீஸ் விசாரணையில் ஐ.எஸ். ஆதரவாளர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) ட்விட்டர் இணையதளம் மூலம் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மக்களவையில் இன்று தானாக முன்வந்து மேக்தி கைது தொடர்பாக பேசிய ராஜ்நாத் சிங், "ட்விட்டரில் ஐ.எஸ். ஆதரவாளர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸை பின் தொடர்ந்தவர்களில் 60% பேர் முஸ்லீம் அல்லதவர்கள். அவரைப் பின் தொடர்ந்த முஸ்லிம்களில் பெரும்பாலோனார் மேற்கத்திய நாடுகளை குறிப்பாக பிரிட்டனைச் சேர்ந்தவர்களே என போலீஸ் விசாரணையில் மேக்தி தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.எஸ். ஆதரவு பதிவுகளை பகிர்ந்தபோதும், ட்விட்டர் மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்கவில்லை என மேக்தி மறுத்துள்ளார்.

மேக்தி, அரபு மொழியில் இருக்கும் ஐ.எஸ். ஆதரவு இணையதளச் செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து @ShamiWitness என்ற ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார். 2009-ம் ஆண்டு முதல் அவர் ஐ.எஸ். அமைப்பை பின் தொடர்ந்து வருகிறார்.

கொல்கத்தாவில் வசிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மேக்தி 2012-ல் பொறியியல் படிப்பை முடித்து அதே ஆண்டு பெங்களூரு ஐ.டி.சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

மேக்தி கைதைத் தொடர்ந்து கர்நாடக போலீஸாரிடம் இருந்து அனைத்துத் தகவல்களையும் உள்துறை அமைச்சகம் பெற்றுள்ளது. " என தெரிவித்தார்.

தகவல் உதவி
தமிழ் இந்து
15-12-2014

உள் துறை மந்திரி ராஜ்நாத் சிங்கே சொல்லியுள்ளதால் பின் தொடர்ந்த முஸ்லிம் அல்லாத 60 சதமான பேரை கைது பண்ண இந்த அரசுக்கு துணிவு வருமா? கண்டிப்பாக வராது. ஏனெனில் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல. இவர்களின் முக்கிய குறிக்கோளே எந்த வகையிலாவது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் களங்கப்படுத்த வேண்டும். அதுதான் நடந்து வருகிறது.

அரபியில் வரும் ஒரு செய்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து போடுவது கைது செய்யும் அளவுக்கு குற்றமா? இந்துத்வா அரசு எந்த செய்திகளை வெளியிட விரும்புகிறதோ அதற்கு தோதாக நாமும் செய்தி வெளியிட்டால் ஒருக்கால் மெடல் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.