Followers

Monday, January 30, 2012

இரும்பின் அருமையை நாம் உணர்ந்தோமா?

இந்த பதிவை படிக்கும் முன் ஒரு விளக்கம். குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல. அது மனிதன் எவ்வாறு தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை அடங்கிய வேதம். இது இறைவனிடம் இருந்துதான் வந்ததா? அல்லது முகமது நபி தனது கற்பனையில் குர்ஆனைக் கொடுத்தாரா என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. முஸ்லிம்களை பொறுத்த வரையில் ஒரு பிரச்னையும் இல்லை. குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் அவர்களிடத்தில் கிடையாது. மற்ற மதத்தவர் இந்த குர்ஆன் இறைவன் வாக்காக இருக்க முடியாது என்ற வாதத்தை வைக்கின்றனர். எனவே அந்த வாதத்தை எதிர் கொள்ள முஸ்லிம்களும் இது இறைவேதம்தான் என்பதை நிரூபிக்க சில அறிவியல் ஆதாரங்களை தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. அந்த வகையில் முன்பு கடலுக்கடியில் உள்ள இருள்களைப் பார்த்தோம். இந்த பதிவில் இரும்பைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது. அதற்கு அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும் மக்களுக்குப் பயன்களும் உள்ளன.
-குர்ஆன் 57:25


மேற்கண்ட இந்த வசனம் மிகச்சிறந்த ஒரு அறிவியல் உண்மையை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழைநீர் பொழிவதாக நாம் பார்த்திருப்போம். இரும்பு வானத்திலிருந்து பொழிவதை நாம் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயத்திலிருந்து இரும்பு மழை பொழிவதைக் கூறிக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது விண்கற்கள் வந்து விழுவதை நாம் அடிக்கடி பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம்.
இந்த விண்கற்களின் பெரும் பகுதி இரும்பும் சிலிக்கனும் ஆகும்.
சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ முகமது நபி காலத்தில் தெரிந்திராத போதிலும் அந்த மக்கள் இரும்பின் தேவையைப் பற்றி நிறைய அறிந்தே வைத்திருந்தார்கள். இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய ஒரு தாதுப் பொருள் என்பது நமக்கு தெரியும். தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே! எனவே பூமி படைக்கப்பட்டபோது இரும்பும் அதோடு சேர்ந்து இறைவனால் படைக்கப்பட்டாகி விட்டது.அப்படி பூமி படைக்கப்படும் போது இரும்பு எவ்வாறு பூமியின் கட்டுமானத்தில் வந்திருக்க முடியும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.
விண்ணிலிருந்து வரும் விண்கற்களில் உள்ள இரும்புக்கும் நாம் பயன்படுத்தும் இரும்புக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.

நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்களை விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த மக்களின் உலோகங்களில் கசடுகளான கோபால்டு, சிலிக்கன் போன்றவை இருப்பது கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் நாம் பயன்படுத்தும் சாதாரண இரும்புகளில் இந்த கசடுகள் சேர வாய்ப்பில்லை. விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.

http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637

என்சைக்ளோபீடியாவின் இந்த பக்கத்துக்கு சென்று வானிலிருந்து விழுந்த இரும்பு துண்டுகளை நாடு வாரியாக படங்களோடு பாருங்கள். சில காணொளிகளும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
'இரும்பில் மக்களுக்கு பயன்கள் உண்டு' என்ற இந்த வார்த்தையை ஒட்டி நாம் சிறிது ஆராய்வோம். நமது மருத்துவ உலகம் மனிதனுக்கு இரும்புச் சத்து எந்த வகையில் உபயோகமாக உள்ளது என்பதை பட்டியலிடுகிறது. அதை இனி பார்ப்போம்:

இயற்கையில் அபரிமிதமாக கிடைக்கும் இரும்புச் சத்து உடலின் நலத்திற்கு மிக அவசியமாகும். பெரும்பான்மையான புரதங்கள், என்சைம்கள் போன்றவற்றிற்கு இரும்புச் சத்து ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்ஸிஜன் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்ல இரும்புச் சத்து அவசியம். செல்கள் மேலும் பெருக, வளார்ச்சி அடைய இரும்பு முக்கியமான மூலப்பொருள். இரும்புச் சத்து குறைவால் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஏற்படும். அதே சமயத்தில் இரும்புச் சத்து அதிகமானால் விஷமாகி இறக்கவும் நேரிடலாம்.

உடலில் 3ல் 2 பகுதி இரும்புச் சத்து ஹீமோக்லோபின் ஆக இரத்த சிவப்பணுக்களில் இருக்கிறது.இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மையோ க்ளொபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்றும். இவற்றிலும் இரும்பு சத்து உண்டு.

இரும்பை உறிஞ்ச தேவையான புரதத்திலும் இரும்புச் சத்து உள்ளது. அதேபோல அதிக இரும்பை சேகரித்து வைக்க உதவும் என்சைம்களில் இரும்பு இருக்கிறது. ஹீம், ஹீம் அல்லாத வகை என இரண்டு வகைகளில் இரும்பு உடலில் இருக்கிறது. இது பெரும்பாலும் புலால் உணவில் கிடைக்கும். பருப்பு வகைகளில் இருக்கும் இரும்பு ஹீம் அல்லாத வகையில் இருக்கிறது. குழந்தைகளுக்காக கிடைக்கும் பாலில் சேர்க்க படும் இரும்புச் சத்து இந்த வகையை சேர்ந்ததே.

உலக சுகாதார மையம் இரும்புச் சத்தின் குறைவால் வரும் நோய்கள்தான் உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று கூறுகிறார்கள். உலகின் 80% மக்கள் இரும்பு குறைவாக கொண்டவர்கள் அதில் 30% மக்கள் இரும்பு குறைவதால் வரும் இரத்த சோகை கொண்டவர்கள் எனக் கூறுகிறார்கள்.

………Iron is an essential element for most life on Earth, including human beings. Most of the human body's iron is contained in red blood cells……
- http://en.wikipedia.org/wiki/Human_iron_metabolism

Without the iron atom, there would be no carbon-based life in the cosmos; no supernovae, no heating of the primitive earth, no atmosphere or hydrosphere. There would be no protective magnetic field, no Van Allen radiation belts, no ozone layer, no metal to make hemoglobin [in human blood], no metal to tame the reactivity of oxygen, and no oxidative metabolism.
-Nature’s Destiny, the well-known microbiologist Michael Denton emphasizes the importance of iron.

அமெரிக்க நாசா நிறுவனத்தில் புரபசராக வேலை செய்யும் விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங் சிறந்த அறிவியல் அறிஞர். the National Aeronautics and Space Administration என்ற நிறுவனத்தில் மிகப் பிரபல்யமானவர். 'வானியலைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?' என்று பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். உலகில் உள்ள அனைத்து திட பொருட்களும் எவ்வாறு உருவாகியிருக்க முடியும் என்ற முடிவுகளையும் அறிந்து வைத்துள்ளார். மேலும் இரும்பை உருவாக்கும் முறையை விஞ்ஞானிகள் சமீப காலங்களில்தான் கண்டு பிடித்தனர். இரும்பின் அடிப்படை உருவாக்கத்தை பெற போதிய சக்தியற்று இருந்தோம். அதாவது இரும்பை உருவாக்கும் ஒரு அணுவை உற்பத்தி செய்ய போதிய சக்தியை இந்த பிரபஞ்சம் பெற்றிருக்கவில்லை என்கிறது அறிவியல் முடிவுகள். எனவே இந்த இரும்பானது வேறு ஒரு கிரகத்திலிருந்து நமது பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் நமது விஞ்ஞானிகள்..

அதிலும் நமது பிரபஞ்சத்திலிருந்து இரும்பு வந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் ஏறத்தாழ கைகழுவி விட்டனர். நமது சூரியனை விட மிகப் பெரும் ஒரு நட்சத்திரத்திலிருந்து இந்த இரும்பானது வந்திருக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது. சில நூறு மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவில் உள்ள வெப்பத்துடன் கூடிய ஒரு நட்சத்திமாக அது இருக்கலாம் என்பது இவர்களின் கணிப்பு. இரும்பின் அடர்த்தி குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகரிக்கும் போது வெடித்து சிதறி வால் நட்சத்திரங்களாக பூமியை நோக்கி வந்திருக்கலாம். அது வானுலக விசையாக இருக்கலாம் என்ற முடிவுக்கும் வருகின்றனர் விஞ்ஞானிகள்.“இரும்பையும் இறக்கினோம்”

அதிலும் கூட தனிமங்களாக இல்லாமல் முழு இரும்பாகவே இந்த பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் விஞ்ஞானிகள். இனி குர்ஆனுடைய வசனத்தைப் பார்ப்போம். 'இரும்பையும் இறக்கினோம்: அதில் பல உபயோகங்கள் மனித குலத்துக்கு உள்ளது' என்ற வசனத்தை நாம் சிந்தித்தோமானோல் தற்கால அறிவியல் முடிவோடு குர்ஆன் ஒத்து செல்வதை எண்ணி பிரமிக்கிறோம். வேறு எத்தனையோ பொருள்கள் அனைத்தும் பூமியிலேயே நமக்கு கிடைத்துக் கொண்டிருக்க அதை எல்லாம் குர்ஆன் சொல்லாமல் இரும்பை மட்டும் தனித்து சொல்வதால் அதுவும் தற்கால அறிவியலோடு முற்றிலும் ஒத்து போவதால் இது இறை வேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது.


பண்டைய எகிப்தியர்களும் இரும்பை 'சொர்க்கத்தின் உலோகம்' என்று குறிப்புகள் எழுதியுள்ளது கிடைக்கப் பெறுகிறது. குர்ஆனுக்கு முந்தய இறை வேதங்களிலும் இந்த செய்தி சொல்லப் பட்டிருக்க வேண்டும். எனவேதான் பண்டைய எகிப்தியர்களுக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது. பண்டைய எகிப்துக்கு மோசே என்ற இறைத் தூதர் வந்ததும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேதம் தோரா என்பதும் நமக்கு முன்பே தெரியும்.

'இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை. சிறிது காலத்திற்கு பிறகு இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்.'

-குர்ஆன் 38:87,88

ஆம். இந்த குர்ஆன் மனிதன் தனது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் வெற்றி பெறுவான் என்பதை விளக்கும் ஒரு வேதம். வெறுமனே மரியாதை செய்கிறோம் என்று கண்களில் ஒத்திக் கொள்வதை விட அதன் மொழிபெயர்ப்பை வாசித்து இறைவன் நம்மோடு என்ன பேசுகிறான் என்பதை ஒவ்வொரு மனிதனும் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை அருளியதாக இறைவன் கூறகிறான். இந்த குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகள முகமது நபி காலத்திய மக்களுக்கு விளங்கா விட்டாலும் பின்னால் வரக் கூடிய அறிவார்ந்த சமூகம் விளங்கிக் கொள்ள பல அத்தாட்சிகள் இதில் இருக்கிறது என்பதையும் இறைவன் குறிப்பிடுகிறான்.

References
1.↑ Kathryn A. Bard - Encyclopedia of the archaeology of ancient Egypt (P. 526) - Routledge; Ill edition, May 14, 1999, ISBN 978-0415185899
2.↑ Kate Melville - Sun's Iron Core May Be Cause Of Solar Flares - Science a Go Go, November 3, 2003
3.Harun yahya.com
4.wikipedia
5. http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637

Sunday, January 29, 2012

தலசீமியா நோய் ஒரு அறிமுகம்.
இப்படி ஒரு நோயை நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த நோய் அதிகம் நமக்கு அருகிலுள்ள மாலத் தீவுகளில் பரவலாக பரவியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்தும் முகமாக மாலத்தீவின் சுகாதார அமைச்சர் ஆமினா ஜமீல் சவுதி அரேபியாவின் 'அல்வலீத் பவுண்டேஸனிடம' உதவி கோரி கோரிக்கை வைத்தார். இது நடந்தது 2010ல். இளவரசர் வலீத் பின் தலால் அமைச்சரின் கொரிக்கையை ஏற்று தற்போது மாலத் தீவுக்கு அன்பளிப்பாக 55360 டாலர்களை அளிக்க உள்ளார். இந்த உதவி அனைத்தும் தலசீமியா நோயைக் கட்டுப்படுத்தவும் அந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்காகவும் பயன்படுத்தப்படும். மேலும் அமைச்சர் ஆமினா ஜமீல் கூறும்போது 'எனது பயணத்தின் நோக்கம் சவுதி அரேபியாவின் மருத்துவ மற்றும் சுகாதார வழிமுறைகளை எங்கள் நாட்டுக்கும் கொண்டு செல்வதற்காகவே!” என்கிறார்.

----------------------------------------------


தலசீமியா ஒரு அறிமுகம்:

தலசீமியா (பிரிட்டிஷ் ஒலிபெயர்ப்பு, "தலசேமியா ")என்பது பின்னடையும் தன்மையுள்ள மரபு சார்ந்த இரத்த நோய் ஆகும். தலசீமியாவில், மரபு குறைகள் ஹீமோகுளோபினைச் சேர்ந்த குளோபின் சங்கிலியின் குறைந்த சேர்க்கை வீதத்தால் ஏற்படுகிறது. ஒரு வகையான குளோபின் சங்கிலியின் குறைந்த சேர்கையால் இயற்கைக்கு மாறான மூலக்கூறுகள் ஏற்படுவதுக்கு வாய்ப்பு உண்டு. அதன் காரணமாக அனீமியா என்கிற தலசீமியாவின் தனித்தன்மை அறிகுறி உருவாகும்.

தலசீமியா என்பது சிறு வகை குளோபின்களின் சேர்கையின் அளவு குறித்த பிரச்சனை ஆகும். தலசீமியா பொதுவாக இயற்கையான குளோபின் புரதத்தின் குறைந்த உற்பத்தியை உருவாக்கும். அதுமட்டும் இல்லாமல் அது ஒழுங்கு முறை சீர்படுத்தும் மரபணுக்களால் ஏற்படலாம். ஹீமோகுளோபிநோபதீஸ் என்பது குளோபின் புரத சக்தியின் அசாதாரணமான அமைப்பைக் குறிக்கிறது. இரண்டு நிலையும் ஒன்று மற்றதன் மீது படிதல் ஆகும். இருப்பினும், சில நிலைகள் அசாதாரணமான குளோபின் புரத்தை உருவாக்கி அதன் உற்பத்தியையும் பாதிக்கும் . ஆகவே, சில தலசீமியாக்கள் ஹீமோகுளோபிநோபதீஸ் ஆகும், பல ஆகாது. இரண்டில் ஏதேனுமொன்று அல்லது இரண்டு நிலைகளும் அனீமியாவை ஏற்படுத்தும்.

இந்நோய் குறிப்பாக மத்திய தரைக்கடலில் வசிக்கும் மக்களின் இடையே காணப்படும். அத்துடன் இதுவே தலசீமியா என்ற பெயரை வைக்க ஒரு காரணம் ஆகும். கிரிக் மொழியில் தலசா(θάλασσα) என்பது கடல் என்றும் மற்றும் ஹீமா(αἷμα) என்பது இரத்தம் என்றும் பொருள் ஆகும். ஐரோப்பாவில், அதிகளவில் இந்நோய் கிரீஸ் மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில் குறிப்பாக தெற்கு இத்தாலி மற்றும் போ என்ற பள்ளத்தாக்கில் காணப்படும். பெரும்பான்மையான மத்தியத் தரைக்கடல் தீவுகளில் (பலீரிக்ஸ் தவிர) சிசிலி, சர்டினியா, மாலதா, கோர்சிகா, சிப்ரஸ், மற்றும் கிரேட்பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது. மத்திய தரைக்கடலின் மற்ற பகுதியை சேர்ந்த மக்கள், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்களில் தலசீமியா அதிகளவில் காணப்படுகிறது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த மக்களிலும் இந்நோய் காணப்படுகிறது. மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து அதிக தொலைவிலுள்ள தெற்கு ஆசியமக்களை இந்நோய் அதிகளவில் தாக்கி, உலகிலேயே மாலத்தீவுகள் என்ற பகுதியே இந்நோயால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதி என்ற பெயரை வாங்கியது.

அப்பகுதி மக்களிடையே மலேரியா அதிகளவில் காணப்படும். எனினும் தலசீமியாவால் மலேரியா வின் தாக்கம் அப்பகுதி மக்களில் குறைவாகவே காணப்பட்டது. இதுவே தேர்ந்தேடுகின்ற நிலைத்து இருத்தலுக்கு சாதகமாகிவிட்டது. இத்துடன் பல தலசீமியா மக்களில் ஹீமோகுளோபினை தாக்கக் கூடிய பரம்பரை நோய்கள் மற்றும் சில செல் நோய்களும் காணப்பட்டது.

பொதுவாக, தலசீமியா ஈரபதம் தட்ப வெட்பநிலைக் கொண்ட இடங்களில் தென்படும். இந்நோய் எல்லாவித மக்களையும் பாதிக்கும்.

தலசீமியா குறிப்பாக அரபு நாடு, ஆசிய நாடு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் வசிக்கும் மக்களைச் சார்ந்த நோய் ஆகும். மாலத்தீவுகள் தான் உலகிலேயே அதிகளவில் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிக பட்சமாக 18% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கணக்கிட்ட நிகழ்வுகள் 16% சிப்ரசிலும், 1% தாய்லாந்திலும், 3-8% பங்களாதேஷிலும்,சீனாவிலும், இந்தியாவிலும், மலேசியாவிலும் மற்றும் பாகிஸ்தானிலும் காணப்படுகிறது. இது போக லத்தின் அமெரிக்கமற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ( கிரீஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், மற்றும் பல) இந்நோயின் நிகழ்வுகள் உண்டு. மிகக் குறைந்த ஆய்வரிக்கை வடக்கு ஐரோப்பாவிலும்(0.1%) அப்ரீகாவிலும் (0.9%) மற்றும் மிக அதிகளவில் ஆய்வரிக்கை வட அப்ரிக்காவிலும் தென்பட்டது.

பழங்கால எகிப்தியர்களும் தளசீமியவால் அவதிப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக 40% மம்மீக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நாட்களில், குறிப்பாக தெற்கு எகிப்து அதாவது பீஜா, ஹடெண்டோவா, சைதி வாழும் மக்களிடையேயும், நாயில் டெல்டா, சிகப்பு கடல் மலை பகுதி மற்றும் சீவான் பகுதி மக்களிலும் இந்நோய் காணப்படுகிறது.

உலகில் ஏறத்தாள 6-8 கோடி மக்கள் பீட்டா தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிக சரியான மதிப்பீடு அல்ல. பெரும்பாலான பகுதிகளில் இந்நோயின் விழிப்புணர்வு இல்லை. மத்திய கிழக்கு மற்றும் ஆசியா போன்ற நாடுகளில் இந்நோய்களின் பரிசோதனைக்கு தேவையான வசதிகள் இல்லாததால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் குறைந்த அளவில் மரபு பரிசோதனை மற்றும் ஆலோசனை செய்வதால் இந்நாடுகளில் அதிகளவில் தலசீமியா காணப்படுகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் தலசீமியா ஒரு கவலைகரமாக கூறப்படும் விஷயம் ஆகும். உலகின் இரத்த வங்கி மற்றும் உடல் நலனை பாதிக்கும் பிரச்சனை ஆகிவிடும். மதிப்பிடுகையில் ஐக்கிய நாடுகளில் ஏறத்தாள 1,000 மக்கள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கணக்கிலில்லாமல் ஏராலமானோர் இருக்கின்றனர். தலசீமியா நோயைப் பற்றி குறைந்த விழிப்புணர்வு இருப்பதால் இந்நாடுகளில் சிகிச்சை குறைபாடுகளுக்கும் குணங்குறி மூலம் நோயைக் கண்டறிவதும் கடினமாகும்.
மற்ற மரபணு நோயை ஒப்பிடும் போது, மரபணு ஆலோசனையே சிபாரிசு செய்யப்படுகின்றது.

சிகிச்சைமுறைகள்

தலசீமியா மைனர் கொண்ட நோயாளிகளுக்கு பொதுவாக தனிமுறை சிகிச்சைகள் தேவைப்படாது. ஆனால் தலசீமியா மேஜர் கொண்ட நோயாளிகளுக்கு நிடீத்த காலமான இரத்த ஏற்றுதல் பிணி நீக்கல், இரும்பு இடுக்கு இணைப்பு ,மண்ணீரல் அகற்றம் மற்றும் அல்லோஜெனிக் ஹீமொடோஃபாய்டிக் மாற்று போன்ற சிகிச்சைகள் தேவைப்படும்.


-நன்றி விக்கிபீடியா

-----------------------------------------------

இரத்த அழிவுச் சோகைக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

மேஜர் இரத்த அழிவுச் சோகையுள்ள பிள்ளைகள் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்தில் பின்வரும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைக் காட்டலாம். இரத்த சோகையுள்ள பிள்ளைகளுக்கும் இதே அறிகுறிகள் இருக்கும்:
• வெளிறிய தோல்
• சோர்வு
• பலவீனம்
• விரைவான சுவாசம்

வேறு அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தக்கூடும்:

• எரிச்சலடைதல்
• தோல் மஞ்சள் நிறமாக நிறமாற்றமடைதல் (மஞ்சட்காமாலை)
• மந்தமான வளர்ச்சி
• அடிவயிறு வெளித்தள்ளிக்கொண்டிருத்தல்
• முக எலும்பு உருக்குலைதல்
• அடர்நிற சிறுநீர்

காரணங்கள்

இரத்த ஒழுங்கின்மை என்பது ஹிமோகுளோபின் உற்பத்தி செய்வதைக் கட்டுப்படுத்தும் மரபணுவிலுள்ள குறைபாட்டினால் ஏற்படுகிறது. குறைபாடுள்ள மரபணு வழக்கமான ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதில் இயலாமையை ஏற்படுத்துகிறது. பிள்ளைகள் இந்த மரபணுவை பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரிடமுமிருந்து சுதந்தரித்துக்கொள்கின்றனர். ஒரு பிள்ளை தவறான மரபணுவை பெற்றோர் இருவரிடமுமிருந்தும் சுதந்தரித்துக்கொண்டால், அந்தப் பிள்ளைக்கு மேஜர் இரத்த அழிவுச் சோகை ஏற்படும். தவறான மரபணு ஒரு பெற்றோர் மூலம் மாத்திரம் கடத்தப்பட்டால் பிள்ளைக்கு மைனர் இரத்த அழிவுச் சோகை ஏற்படும். பின்பு, அந்தப் பிள்ளை குறைபாடுள்ள மரபணுவைக் காவிச் செல்பவனாக இருப்பான்.

இரத்த அழிவுச் சோகையுள்ள உங்கள் பிள்ளைக்கு ஒரு மருத்துவர் செய்யக்கூடியவை
நீங்கள் அவதானித்த அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை உங்கள் பிள்ளையின் மருத்துவர் பரிசீலனை செய்வார். இரத்தப் பரிசோதனைகள் மூலம் தான் நோயைக் கண்டறிந்து உறுதிசெய்யமுடியும். மைனர் இரத்த அழிவுச் சோகைக்கு சிகிச்சை தேவையில்லை. மேஜர் இரத்த அழிவுச் சோகைக்கு மாதாந்தர இரத்தமேற்றுதல் மூலமாகச் சிகிச்சை செய்யப்படும். திரும்பத் திரும்ப இரத்தமேற்றும்போது உங்கள் பிள்ளையின் உடலில் இரும்புச் சத்து, அளவுக்கதிகமாகிவிடும். இது இதயம் அல்லது ஈரலில் சேதத்தை ஏற்படுத்தும். மேலதிகமான இரும்புச் சத்தை மருந்துகளின் மூலமாக அகற்றுவதன் மூலம் இந்த வகையான சேதத்தைத் தடுக்கலாம்.

தடுத்தல்

எந்த வகை இரத்த அழிவுச் சோகையையுடையவர்களும் மரபியல் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். பிரசவத்துக்கு முன்னான பரிசோதனைகளும் செய்யப்படும்.

சிக்கல்கள்
இந்த வகையான இரத்த ஒழுங்கின்மையுடைய ஒரு பிள்ளைக்குப் பித்தப்பைக் கற்கள் இருக்கலாம். வேறு பிள்ளைகளுக்கு மந்தமான வளர்ச்சி இருக்கலாம். இந்த ஒழுங்கின்மைக்குச் சிகிச்சையளிக்கப்படாது விடப்படும்போது, பிள்ளைகளுக்கு இதயச் செயலிழப்பு மற்றும் தொற்றுநோய்களால் மரணம் ஏற்படலாம். சிகிச்சையளிக்கப்படும்போது, மிகப்பெரிய சிக்கல்கள் அளவுக்கதிகமான இரும்புச்சத்துடன் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன.

எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்

உங்கள் பிள்ளை இரத்த சோகைக்கான அறிகுறிகளைக் காண்பித்தால், முடிந்தளவு விரைவாக உங்கள் பிள்ளையின் மருத்துவரைச் சந்திக்கவும். உங்களுக்கு இரத்த அழிவுச் சோகைக்கான ஒரு குடும்ப வரலாறு இருந்தால், நீங்கள் ஒரு நோய்க் காவியா என்பதை அறிவதற்காக பரிசோதிக்கப்படவேண்டும்.

முக்கிய குறிப்புகள்

• இரத்த அழிவுச் சோகை என்பது ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதைக் கட்டுப்படுத்தும் மரபணுவிலுள்ள ஒரு குறைபாட்டினால் ஏற்படும் ஒரு இரத்த ஒழுங்கின்மை.
• இது மத்தியதரை, ஆபிரிக்கா, மற்றும் ஆசியா நாட்டின் வம்சாவளியைச் சேர்ந்த பிள்ளைகளை மிகவும் பொதுவாகப் பாதிக்கும், மரபுவழியாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட இரத்தச் சோகையின் ஒரு வகை ஆகும்.
• மேஜர் இரத்த அழிவுச் சோகையுள்ள பிள்ளைகள் வெளிறியவர்களாகவும் விரைவான சுவாசமுடையவர்களாகவும் காணப்படுவார்கள்.
• மாதாந்தர இரத்தமேற்றுதல்கள் மூலம் இரத்த அழிவுச் சோகைக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.

-http://www.aboutkidshealth.ca/En/HealthAZ/Multilingual/TA/Pages/Thalassemia.aspx

உண்மைதானா கலைஞரே! கூறுங்கள்

உண்மைதானா கலைஞரே! கூறுங்கள்

இது உண்மைதானா!

படிக்கும் காலங்களில் உதயசூரியனை வரைந்ததும்

இந்தக் கைகள்தான்!

சம்பாதிக்கும் காலங்களில் ஸ்கேன் செய்து

போஸ்ட் செய்வதும் இந்தக் கைகள்தான்!

உண்மைதானா கலைஞரே! கூறுங்கள்

இது உண்மைதானா!

எனக்கு வந்த மெயில் மெய்யாகிப் போனால்

உன் மேல் வைத்த கடைசி நம்பிக்கையும்

உடைந்து சுக்கு நூறாகுமே!

எனவேதான் கேட்கிறேன்...

உண்மைதானா கலைஞரே! சொலலுங்கள்!

எனக்கு வந்த மெயில் உண்மைதானா!

அந்த குழந்தைகளை பார்த்த பின்னுமா

லஞ்சம் வாங்க மனது வரும்!

மனிதனுக்கு ஆறு அடி போதுமே!

ஐம்பதாயிரம் அடி எதற்கு கலைஞரே!.


டிஸ்கி:பல நண்பர்கள் இது போலி என்று சொல்வதால் கலைஞரின் பதிலாகவே நினைத்து அந்த ஆவணத்தை எடுத்து விடுகிறேன். தகவலுக்கு நன்றி.

Saturday, January 28, 2012

தமிழ் மொழிக்காக குரல் கொடுக்கும் குஷ்பு!இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழியும், தமிழ் மொழி பற்றியும் தெரியவில்லை என்று நடிகை குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது, இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம்தான். ஆனால் தமிழ் மொழியை மறக்கக் கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும். நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். தமிழ் மொழியை பேசுகிறேன். தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ் உணர்வு- நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது. இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றிருந்தது.

--பத்திரிக்கை செய்தி
28-01-2012

மொழிப் போர் தியாகிகள் மாநாட்டில் கலந்து கொண்டு வீர உரை ஆற்றிய தியாகி குஷ்புவை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவரது பாராட்டு மழையால் இன்று தியாகிகள் தங்களின் தியாகத்துக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று புளங்காகிதம் அடைந்திருப்பார்கள். இது போல் இனி சுதந்திர போராட்ட தியாகிகள் மாநாட்டிலும் குஷ்பு பெயரால் ஒரு பதக்கமோ பட்டமோ கொடுக்க அரசு முயற்ச்சிக்க வேண்டும்.

முன்பு திருச்சிக்கு பக்கத்தில் குஷ்புவுக்கு கோவிலையே கட்டி சில மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டதாக முன்பு குமுதத்தில் படித்திருக்கிறேன். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நபரை இனி சகல விழாக்களுக்கும் அழைத்து தமிழர்களையும் தமிழ் மொழியையும் காக்க முயற்ச்சிக்க வேண்டும்.

http://govikannan.blogspot.com/2012/01/blog-post_28.html

பதிவுகள் சம்பந்தமாக கோவிக் கண்ணன் இட்டிருக்கும் பதிவு

கோவிக் கண்ணன் போன்ற சிறந்த பதிவர்கள் குஷ்பு போன்ற தியாகிகளை பேட்டியெடுத்து தனது பதிவின் மூலம் தமிழ்த் தொண்டாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து மத சம்பந்தமாக நிறைய பதிவுகள் வருவதாகவும் தான் இதைக் கண்டு பயப்படுவதாகவும் கூறியிருக்கிறார். எனவே இனி நானும் நடிகரகளின் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும், பல ருசிகரமான செய்திகளை பகிரலாம் என்று எண்ணம் வருகிறது.

இல்லை என்றால் ஈழத்தமிழர்கள் சிறந்தவர்களா, தமிழ்நாட்டு தமிழர்கள் சிறந்தவர்களா? என்ற ரீதியில் பல பதிவுகளையும் எழுதலாம் என்றிருக்கிறேன். அதை விட தமிழர்களின் சாதியில் தற்போது எந்த சாதி சிறப்பாக வர்ணாசிரமத்தைக் கடைபிடிக்கிறது என்பதை பற்றியும் பல பதிவுகள் எழுதலாம்.

இதை எல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் இனி என்னைப் போன்றவர்கள் என்னென்ன தலைப்புகளில் எழுத வேண்டும் என்று கோவிக் கண்ணன் ஒரு லிஸ்டை கொடுத்து விட்டால் இன்னும் சுலபமாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிஸ்கி: தனிப்பட்ட நபர்களின் தாக்குதல் இல்லாமல் ஆபாசம் இல்லாமல் உலக நடப்புகள் அனைத்தையும் ஒருவன் தெரிந்து கொள்ள முயற்ச்சிப்பது தவறா? இந்து மதத்தின் பெருமையை பல பதிவர்கள் இன்று வரை வெளியிட்டு வருகிறார்கள். கிறித்தவ மதமும் பகுத்தறிவு பிரசாரமும் இவ்வாறே! யாரும் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லையே! இஸ்லாத்தை பற்றி பல இடங்களில் விமர்சனம் வைக்கப்பட்டதாலேயே அதற்கு விளக்கம் கொடுக்க அவசியம் உண்டாகிறது. இது போன்று பிறந்ததுதான் அனேக பதிவுகள். பதிவுகளில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட வேண்டும். அல்லது அதை விளக்கி அவரும் பதிவுகள் எழுதலாம். அதை விடுத்து அழுகினி ஆட்டம் என்று அழுது மூக்கை சிந்துவது அழகுடைய செயலா?

Friday, January 27, 2012

வந்தது பணத்துக்காக! கிடைத்ததோ சிறந்த வாழ்க்கை!

அமெரிக்க தொழிலதிபராகவும் பைலட்டாகவும் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த ரிச்சர்ட் பெட்டர்ஸன் ஒரு காண்டராக்ட் விஷயமாக சமீபத்தில் ரியாத் வருகை புரிந்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகமாக இவரது கம்பெனி ஒப்பந்தம் எற்படுத்த இருந்தது. இதனால் இங்கு மூன்று மாதங்கள் தங்க வேண்டிய நிர்பநதம் ஏற்பட்டது. கோடீஸ்வரரான இவரது கம்பெனியின் மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும். இரண்டு விமானங்களுக்கும் இரண்டு ஹெலிகாப்டர்களுக்கும் சொந்தக்காரர்.சவுதியில் தங்கியிருந்த ஒரு நாள் இரவு இவரை அழைப்பு வழிகாட்டுதல் மையத்திற்கு பார்வையாளராக அழைததிருந்தனர். அங்கு வந்தவுடன் கூடாரத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் யாவும் அவரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் முன்பு இஸ்லாம் பற்றி படித்திருந்ததற்க்கும் தற்போது அவர் காணும் காட்சிகளுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளதை உணர்ந்து கொண்டார். அங்குள்ள விழா ஏற்பாட்டாளர்கள் அவரிடம் அன்போடு நடந்து கொண்ட முறை அவரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிறகு என்ன... வழக்கமான மாற்றம். ஆம்... இவரது மனதையும் இஸ்லாம் ஆட்கொள்ளத் தொடங்கியது. மேலும் பல சந்தேகங்களை அறிஞர்களிடம் கேட்டறிந்து கொண்டார். சில நாட்களிலேயே மன மாற்றம் வந்தது. ரிச்சர்ட் பெட்டர்ஸன் தனது மார்க்கத்தை மாற்றிக் கொண்டு தனது பெயரையும் அப்துல் அஜீஸாக மாற்றிக் கொண்டார்.

எலலாப் புகழும் இறைவனுக்கே!

“I came to the Kingdom for a commercial deal. I was so thrilled to make the best deal of my life with God Almighty by converting to Islam,” said Abdulaziz, during the conversion ceremony, commending the Saudi attire and describing it as comfortable and beautiful.

'பணம் சம்பாதிக்குகும் நோக்கில் நான் சவுதி அரேபியா வந்தேன். ஆனால் சிறந்த வாழ்க்கையை தற்போது சம்பாதித்துக் கொண்டு செல்கிறேன். இந்த நாட்டு மக்கள் மிகவும் அன்பாக என்னிடம் பழகினர். மார்க்கத்தை அனைவரும் தொடர்ந்து கடை பிடிக்கின்றனர். தங்களின் சகோதரனாக என்னை நினைத்து மிகுந்த அன்பு பாராட்டினர்.நீங்கள இஸ்லாத்தை வெறுமனே படிப்பதால் எதனையும் அறிந்து கொள்ள முடியாது. என்னைப் போல் முஸ்லிம்களோடு ஒன்றாக கலந்து பழகுங்கள. பிறகு இஸ்லாத்தின் சுவையை நீங்களும் பருகலாம். அடுத்த முறை எனது நண்பர்களையும சவுதி அழைத்து வருவேன். நான் பெற்ற இன்பத்தை அவர்களுக்கும் பகிர்ந்தளிப்பேன்' என்கிறார் சகோ அப்துல் அஜீஸ்.

25-01-2012
-அரப் நியூஸ்


இஸ்லாத்துக்கு எதிராக அமெரிக்கா காய் நகர்த்துவதை இது போன்ற கோடீஸ்வரர்கள் இஸ்லாத்தை ஏற்பதின் மூலம் ஓரளவு மட்டுப்படுத்த முடியும் என்பது என் எண்ணம்.

இந்த செய்தியை படித்த ஒரு கிறித்தவர் கோபத்தில் அரப் நியூஸில் இட்ட பின்னூட்டம்:

WILLIAM JACKSON
Jan 28, 2012 00:08
“A Kuwaiti prince embraced Christianity “- :-)


டிஸ்கி: கண்டிப்பாக இவர் பணத்தாசையால் இஸ்லாத்தை தழுவியிருக்க மாட்டார். ஏனெனில் இவர் கோடீஸ்வரர். அடுத்து இவர் இனி தனது சொத்துக்களை கணக்கிட்டு அதில் 2.5 சதவீதத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

'நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள். தீமையைத் தடுக்கிறீர்கள்.'
-குர்ஆன் 3:110

Wednesday, January 25, 2012

ஆழ் கடல் வழிகளில் உள்ள இருள் வெளிகள்: ஓர் அற்புதம்!

ஆழ் கடல் வழிகளில் உள்ள இருள் வெளிகள்: ஓர் அற்புதம்!

'அல்லது ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை. அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள். அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது. இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.'

-குர்ஆன்24:40

விமானத்தில் பயணிக்கும் ஒருவர் மேகத்துக்கு மேல் பறந்தால் சூரியனின் பிரகாசத்தை நன்றாக உணருவார். அதே விமானம் மேகத்துக்கு கீழே பறக்கும் போது முன்பு இருந்த சூரியனின் பிரகாசம் மட்டுப் படுவதை உணருவார். சூரியனின் கதிர்கள் மேகத்தை ஊடுருவ முடியாமல் தடுக்கப்படுவதால்தான் இத்தகைய மாற்றத்தை நம்மால் உணர முடிகிறது.
மேகங்கள் தடுப்பதால் இன்றைய நவீன அளவைகளின் தொழில் நுட்ப உதவி கொண்டு சூரியனின் ஒளிக் கதிர்கள் 30 சதவீதம் வரை கடலின் மேற்பரப்பில் பிரதிபலிப்பதாக அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். ஒளி நிற மாலைகளின் ஏழு வண்ணங்களையும் கடலின் மேற்பரப்பு கிரகித்துக் கொள்கிறது. நீல நிறத்தைத் தவிர மற்ற வண்ணங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக 200 மீட்டர் ஆழத்துக்குள் உறிஞ்சப்படுகிறது. ஆனால் அதற்கு கீழே நீங்கள் செல்ல செல்ல நீல நிறமும் மறைந்து போய் இருள்வெளிகள் சூழ ஆரம்பித்து விடுகிறது. 1000 அடி ஆழம் வரை நீங்கள் சென்றால் எந்த ஒரு ஒளியையும் உங்களால் காண முடியாது. உங்கள் கைகளை நீங்கள் பார்க்க நினைத்தாலும் உணரத்தான் முடியுமே யொழிய கண்களால் பார்க்க முடியாது.கடலின் ஆழத்தில் இருள் வெளிகள் எவ்வாறு உருவாகின்றது என்பதை விளக்கும் படம்.இன்று நாம் கடலின் ஆழத்தையும் அதன் தன்மையையும் வெகு சுலபமாக கண்டு பிடித்து விட முடிகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கட்டிக் கொண்டு பல நாள் கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்கிறோம். நீர் மூழ்கி கப்பல்களின் உதவி கொண்டு கடலின் ஆழத்தை ஓரளவு நம்மால் நெருங்க முடிகிறது. ஆளில்லா நீர் மூழ்கி சாதனங்களில் கேமராக்களைப் பொறுத்தி கடலின் தன்மைகளை அடர்த்தியை இப்பொழுது அறிந்து கொள்கிறோம். இது போன்ற சிறந்த உபகரணங்கள் இல்லாமல் மனிதனால் 70 மீட்டருக்கு மேல் கடலின் ஆழத்துக்கு செல்ல முடியாது. அந்த காலத்தில் முத்து குளிப்பவர்கள் இருந்துள்ளார்களே என்ற கேள்வியும் வரும. அவர்கள் எல்லாம் கடல் ஆழம் குறைந்த பகுதிகளிலேயே தங்கள் தொழிலை செய்து வந்தனர. நாமோ ஆயிரம் மீட்டர் ஆழத்தையும் அதற்கும் கீழான ஆழத்தையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இருள் வெளிகள் ஆரம்பமாகும் 200 மீட்டர் ஆழம் வரை கூட மனிதனால் எந்த உபகரணமும் இல்லாமல் பயணிக்க முடியாது. இத்தனை வசதி வாய்ப்புகளும் விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பிறகுதான் கடலின் ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களை தற்காலங்களில் கண்டறிய முடிந்தது.

மேல் அடுக்கில் உள்ள சிகப்பு நிறம் 10 மீட்டருக்குள் கிரகிக்கப்படுகிறது. பின்னர் 50 மீட்டர் ஆழத்தில் மஞ்சள் கதிர்கள் கிரகிக்கப்படுகிறது. 100 மீட்டர் ஆழத்தில் பச்சைக் கதிர்கள் உறிஞ்சப்படுகிறது. 200 மீட்டர் ஆழம் சென்றவுடன் நீல நிறக் கதிர்களும் மறைய ஆரம்பிக்கின்றன. கடைசியில் உறிஞ்சப்படும் நிறம் ஊதாவாகையால் நமது கண்களுக்கு கடலின் மேற்பரப்பு நீலமாகத் தெரிகிறது.

அடுத்து கடலின் அடியில் ஒன்றின் மேல் ஒன்றாக அலைகள் ஏற்படுவதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். இங்கு ஏற்படும் அலைகளின் கீழ் மட்ட நீரின் அடர்த்தியும் மேல் மட்ட நீரின் அடர்த்தியும் வேறுபடுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இங்கு ஏற்படும் இந்த அலைகளையும் அதன் அடர்த்தியையும் நாம் நமது சாதாரண கண்களைக் கொண்டும் காண இயலாது. மேலும அதற்க்கான கடல்சார்ந்த படிப்பும், கடலின் உப்புத் தன்மையைப் பற்றிய அறிவும், கடல் நீரின் அடர்த்தியை விளங்கும் ஆற்றலும் இருந்தால்தான் உங்களால் சாத்தியப்படும்.கடலின் கீழ் பரப்பும் மேல்பரப்பும் அடர்த்தியில் வெறுபடுவதை சுட்டிக்காட்டும் படம்.

படத்தில் கடல் நீரின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் உள்ள அலைகளை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. கீழ் அடுக்கு மேல் அடுக்கை விட அடர்த்தி அதிகமாக உள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். இவை எல்லாம் சமீப காலங்களில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒளியின் வேகம் வினாடிக்கு 300000 கிலோ மீட்டராகவும் நீருக்கு அடியில் அதே ஒளியின் வேகம் 225000 கிலோ மீட்டராகவும் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரை கூட சூரிய ஒளியால் ஊடுருவிச் செல்ல முடியவில்லை. 200 மீட்டர் ஆழம் வரை சன்னம் சன்னமாக குறைந்துமுடிவில் ஒளியே இல்லாமல் போக காரணம் தண்ணீரின் மேல் மட்ட கீழ்மட்ட அடர்த்தியும் அதற்கு மேல் அங்கு அலைகள் தடுப்புகளாக தடுப்பதுவுமே முக்கிய காரணம். சராசரி கடலின் ஆழமாக விஞ்ஞானிகள் குறிப்பிடுவது 3795 மீட்டராகும். கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் ஆழத்தை அன்றைய மனிதனால் கற்பனையாவது செய்து பார்த்திருக்க முடியுமா? என்பதை இங்கு நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

'அல்லது ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை. அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள். அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது. இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.'

-குர்ஆன்24:40

இந்த வசனத்தை இன்னும் சற்று ஆராய்வோம்:

1.நாம் கடலின் ஆழத்துக்கு சென்றோமானால் பல அடுக்குகளை கொண்ட இருள்களை காண முடியும் என்று இந்த வசனத்தில் விளங்குகிறோம்.

ظلمات 2. என்ற அரபி வார்த்தைக்கு இருள் என்று பொருள் வரும். இங்கு இந்த வார்த்தையை இறைவன் இருள்கள் என்று பன்மையில் குறிக்கிறான். இதுவும் கூட தேர்ந்தெடுத்து போடப்பட்ட வார்த்தை. ஏனெனில் கடல் நீர் பல அடுக்குகளால் பல வேறு அடர்த்தியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த சூழ்நிலையை இருள்கள் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

3.அடுத்து 'அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது' என்று சொல்லப்படுகிறது. மேலே நாம் பார்த்த அனைத்து உபகரணங்களும், அறிவியல் அறிவும் இருந்தால் தான் இப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடியும்.

ஆனால் முகமது நபியோ கடலை பார்த்திராதவர். எழுதப் படிக்கவும் தெரியாதவர். அங்கு வாழ்ந்த சமூகத்தினரும் கூட மெத்த படித்தவர்கள் கிடையாது. இந்த நிலையில் மேற்கண்ட வசனங்களை நாம் சிந்தித்து பார்ப்போம். எப்படி இந்த மனிதரால் இது போன்ற ஒரு வார்த்தை பிரயோகத்தை உபயோகப்படுத்த முடிந்தது?

அடுத்து இது போன்ற ஒரு வார்த்தையை அவர்கள் மத்தியில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் கடலின் ஆழத்தின் இருள்களைப் பற்றி அன்றைய மக்கள் முகமது நபியிடம் கேட்கவும் இல்லை. கடலையே பார்த்திராத அந்த மக்களுக்கு இது பற்றிய அறிவும் இருந்திருக்க வாய்ப்பும் இல்லை.'இது முன்னோர்களின் கட்டுக் கதை அதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும் மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது.' எனவும் கூறுகின்றனர்.

'வானங்களிலும் பூமியிலும் உள்ள இரகசியத்தை அறிந்தவனே அதை அருளினான்' என முஹம்மதே கூறுவீராக! அவன் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.


-குர்ஆன் 25:5,6

Professor Rao says: "It is difficult to imagine that this type of knowledge was existing at the time around 1400 years back. Maybe some of the things they have simple ideas about such, but to describe those things in great detail is very difficult. So, this is definitely not a simple human knowledge. A normal human being cannot explain this phenomenon in that much detail. So I thought the information must have come from a supernatural source."
Yes, the source of such knowledge must be from a level beyond that of man. It cannot be from nature, as Professor Rao said, but this is far beyond nature, and far beyond human capability. What Professor Rao was trying to say is that this is something which cannot be attributed to a natural being, for it is truly the speech of the one who knows nature, the universe and its secrets, as the Qur'an tells us:
Say: The (Qur'an) was sent down by Him who knows the secrets (that is) in the heavens and the earth... (Qur'an 25:6).


Prof. Ramakrishna Rao, in "Muhammad the Prophet of Islam":

"The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. What a dramatic succession of picturesque scenes! There is Muhammad, the Prophet. There is Muhammad, the Warrior; Muhammad, the Businessman; Muhammad, the Statesman; Muhammad, the Orator; Muhammad, the Reformer; Muhammad, the Refuge of Orphans; Muhammad, the Protector of Slaves; Muhammad, the Emancipator of Women; Muhammad, the Judge; Muhammad, the Saint. All in all these magnificent roles, in all these departments of human activities, he is alike a hero." ... Muhammad is the "Perfect model for human life."1000 மீட்டருக்கும் 5000 மீட்டருக்கும் இடைப்பட்ட கடலின் ஆழத்தில் மிக சக்தி வாய்ந்த கேமராககளின் துணை கொண்டு எடுக்கப்பட்ட காணொளி. எங்கும இருட்டு. எதிலும் இருட்டு. ஆனாலும் அங்கும் உயிரினங்களை இறைவன் பரவ விட்டிருக்கிறான். அங்கு வாழும் உயிரினங்களுக்கு பிரத்தியேகமாக உடலிலேயே ஒளி உமிழும் தன்மையை ஏற்படுத்தியுள்ளான். படைத்தவனின் கருணையை என்னவென்பது. இது வரை நான் பார்த்திராத உயிரினங்கள்.

'அவனே இறைவன்! படைப்பவன்: உருவாக்குபவன்: வடிவமைப்பவன்'-குர்ஆன் 59:23

ஆம்! வடிவமைப்பவனிலெல்லாம் சிறந்த வடிவமைப்பவன். என்ன ஒரு நேர்த்தி: என்ன ஒரு அழகு: புகழ வார்த்தைகள் இல்லை. இந்த காணொளியைப் பார்த்தவுடன் என் வாயிலிருந்து வந்த வார்த்தைகளே இவை....

الله اكبر....الله اكبر.....الله اكبر

அல்லாஹூ அக்பர்....அல்லாஹூ அக்பர்......அல்லாஹூ அக்பர்.........

குருதிக் கொடை ரியாத் மாநகரில்!

இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சவூதி அரேபியா ரியாத் மாநகரில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் பல்வேறு கிளைகள் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள், இரத்த தான முகாம்கள், பாதிக்கப்பட்டோருக்கு அவசர கால நிவாரண உதவிகள், கல்வி விழிப்புணர்வு முகாம்கள், மார்க்க சிறப்பு நிகழ்ச்சிகள், ஜகாத் உதவிகள், உடற்பயிற்சி முகாம், கல்வி உதவிகள் போன்றவற்றை செய்து வருகின்றது. இந்திய குடியரசின் அரசியலமைப்பு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு 62 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, ரியாத் மாநகரில், கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் மாபெரும் இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இது ரியாத் மண்டலம் நடத்தும் 16 ஆவது மெகா இரத்த தான முகாம் ஆகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது என்பதை அறிந்ததும் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். எகிப்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டது இம்முகாமுக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டது, TNTJ வின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பறை சாற்றுவதாக அமைந்தது. அவர்களுள் பலருக்கு பி.ஜெ. அவர்களின் தர்ஜுமா குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.முகாம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள் குறிப்பிடும் போது, "இந்திய சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் வெறுமனே கொடியேற்றிவிட்டு கலைவதும், ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதையுமே பெரும்பாலோர் செய்து வருகின்றனர். தொலைக்காட்சிகளோ சினிமா நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்புவதில்தான் தத்தமது கவனத்தை செலுத்துகின்றன. இந்த நாட்களில் அனைவரும் பயன்பெறும் வகையில் TNTJ பயனுள்ள நல்ல பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றது. அதில் ஒரு பாகம் தான் இன்றைய இரத்த தான முகாம். இந்த இரத்த தான முகாம் குறித்த செய்திக்குப் பிறகாவது, நமது குடியரசு தின கொண்டாட்டங்களை மக்கள் பயனுறும் முறையில் அமைத்துக் கொள்ள அனைவரும் உறுதி பூண வேண்டும்" என தெரிவித்தார்.

நாம் அளித்த இந்த குருதிக்கொடை இந்திய விடுதலைக்கு வித்திட்ட முஸ்லிம்களையும் அவர்களது தியாகங்களையும் நினைவுபடுத்தும் விதமாக அமையட்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். காலை 9 மணிக்கு துவங்கிய இம்முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேரமின்மை மற்றும் இதர காரணங்களால் 270 நபர்கள் பதிவு செய்ததில், 248 நபர்களால் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது.

ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன், சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் மற்றும் அப்துர்ரஹ்மான் நவ்லக் ஆகியோரின் ஏற்பாட்டிலும், மண்டல தலைமை நிர்வாகிகளின் மேற்பார்வையிலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணியாற்றினர். மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் மேற்பார்வையில், மண்டல - கிளை நிர்வாகிகளும் தமது வாகனங்கள் மூலம் கொடையாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கொடையாளிகளை அழைத்து வருவது, அவர்களை ஒழுங்குபடுத்துவது, அவர்களுக்கு இரத்ததானத்திற்கான அடிப்படை தகவல்களை தெரிவிப்பது என அனைத்து பணிகளும் செவ்வனே செய்யப்படிருந்தன.

மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் வடிவமைத்திருந்த இரத்த தான முகாம்களுக்கான மென்பொருள் (Software) கொடையாளிகளுக்கிடையே வரவேற்பினைப் பெற்றது. கொடையாளிகள் அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவூதி நாட்டைச் சேர்ந்த இரத்த வங்கி மேற்பார்வையாளர் சகோ. அப்துல் மஜீத் TNTJ வுக்கு நன்றி கூறினார்.

2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் ரியாத் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

இச்செய்தி பிரபல நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இடம்பெற்றுள்ளது.

நன்றி: http://riyadhtntj.blogspot.com/2012/01/riyadthtntj-republic-blood-donation.html

Monday, January 23, 2012

விருத்த சேதனம் செய்து கொள்வது காலத்தின் கட்டாயம்!

விருத்த சேதனம் எனும் ஆண்களுக்கு அவர்களின் உறுப்பில் ஒரு சிறிய தோல் பகுதியை வெட்டி எடுக்கும் இந்த பழக்கத்தை ஏனோ முஸ்லிம்களை தவிர மற்றவர்கள் செய்வதில்லை. இதில் இருக்கும் ஆரோக்கியத்தை தெரிந்து கொண்டால் பலரும் இந்த பழக்கத்தை தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஏற்படுத்திக் கொள்வார்கள். எச்ஐவி என்ற கொடிய ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதில் விருத்த சேதனம் பெரும் பங்காற்றுவதாக அறிவியல் அறிஞர்கள் ஆராய்சிசகளை வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த பழக்கம் முகமது நபியால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால் நபி ஆப்ரஹாம் காலம் தொட்டே இந்த பழக்கம் வழி வழியாக வருகிறது. ஆனால் கிறித்தவர்களிடம் இந்த பழக்கம் முற்றாக ஒழிந்து விட்டது. ஏசு நாதருக்கு விருத்த சேதனம் செய்விக்கும் நிகழ்ச்சியை படமாகவே முந்தய காலத்தில் வரைந்து வைத்துள்ளனர். விக்கியில் இந்த படம் தற்போதும் உள்ளது.

ஏசுவின் போதனைகளை முற்றாக புறம் தள்ளி புது மார்க்கம் கண்ட பவுல் அவரின் விருத்த சேதன பழக்கத்தையும் அன்று கை விட்டார். பவுல் கை விட்ட அந்த பழக்கத்தை கிறித்தவர்கள் இன்றும் தொடர்கின்றனர்.

முஸ்லிம் குடும்பங்களில் பையனுக்கு 7 வயது அல்லது எட்டு வயது ஆகும் போதே கத்னா எனும் விருத்த சேதனத்தை பெற்றோர்கள் செய்து விடுவர். வயது ஏற ஏற பின்னால் விருத்த சேதனம் செய்வது சம்பந்தப்பட்டவர்களுக்கு சற்று சிரமத்தைக் கொடுக்கும். தற்போதெல்லாம் குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே விருத்த சேதனம் செய்து விடுகின்றனர். சிறு வயதில் புண் ஆறும் வரை படத்தில் உள்ளது போல் சிறுவர்கள் லுங்கியை பிடித்துக் கொண்டு சில நாட்கள் சிரமப்படுவர். அந்த இடததில் கூச்சம் தெளிந்தவுடன் வழமைபோல் சகஜ நிலைக்கு திரும்பி விடுவர்.இந்த நாட்களில் பள்ளியில் விடுப்பு எடுப்பதாகட்டும் அல்லது சக நண்பர்கள் கேட்பதாகட்டும் பையன்கள் சற்று வெட்கப்பட்டுக் கொண்டே சொல்வது பார்க்க தமாஷாக இருக்கும். எப்படி தாடி வைப்பது முகமது நபி வலியுறுததிய பழக்கமோ அது போல் விருத்த சேதனமும் வலியுறுத்திய பழக்கம்.

ஒரு முறை எங்கள் ஊருக்கு பக்கத்தில் ஒரு 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் தான் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று ஆசையாக வந்தார். ஆனால் அந்த ஊர் பெரிய மனிதர் ஒருவர் அவரிடம் 'இஸ்லாத்துக்கு வந்தால் நீங்கள் விருத்த சேதனம் செய்ய வெண்டி வருமே' என்று சொல்லவும் அவர் பயந்து போய் ஆறு மாதமாக இஸ்லாத்தை ஏற்காமலே இருந்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ஒரு இஸ்லாமிய இளைஞர் அந்த பெரியவரிடம் 'அய்யா.... சுன்னத் என்பது வலியுறுத்தப்பட்ட ஒரு பழக்கம். தாடி வைப்பதைப் போல். இந்த வயதில் நீங்கள் விருத்த சேதனம் செய்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை' என்று விளக்கி விருத்த சேதனம் செய்யாமலேயே அவரை இஸ்லாத்தில் சேர்த்துள்ளார். முஸ்லிம்களிலும் இன்னும் சட்டங்களை சரியாக விளங்காதவர்கள் நிறைய உள்ளனர் எனபது இதிலிருந்து தெரிய வருகிறது.

”இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை” என்று முகமதுநபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5891


பிபிசியில் சமீபத்தில் விருத்த சேதனம் சம்பந்தமாக வநத செய்தியை இனி பார்ப்போம்.


உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.
இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது.

http://www.bbc.co.uk/tamil/meta/dps/2011/08/nb/110818_circumcisionaids_au_nb.asx

பிபிசியில் சமீபத்தில் விருத்த சேதனம் சம்பந்தமாக வநத ஆடியோ செய்தியையும் இங்கு கேட்டு விடுவோம்.


விருத்த சேதனம் செய்யும் இந்த பழக்கம் கிறித்தவத்தில் எப்படி மறைந்து போனது என்பதை விக்கி பீடியா விளக்குகிறது. அதையும் இனி பார்ப்போம்:


கிருத்துவம்

கிருத்துவத்தை பொருத்தவரை தொடக்கத்தில் அது தன்னை யூத மதத்தின் ஒரு சீர்திருத்தப் பிரிவாகவே கருதியது. எனவே விருத்த சேதனம் செய்து கொள்ளும் பழக்கம் ஆதி கிருத்துவர்களிடம் இருந்தது. இயேசு கிறித்துவுக்கும் யூத மரபு படி பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் செய்யப்பட்டது. இருப்பினும் இயேசுவின் மரணத்திற்குப் பின் கிருத்துவம் தன்னிடம் உள்ள யூதத்தின் அடையாளங்களை விலக்குவதின் ஒரு பகுதியாக விருத்த சேதனத்தை கைவிட்டது. ஏறக்குறைய கிபி 50ல் எருசலேம் நகரில் கூடிய முதலாவது கிருத்துவ திருச்சங்கம் (The first Christian Church Council in Jerusalem) இதனை உறுதி செய்தது[23]. பிற்பாடு அதிக அளவில் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்ட ரோமர்களிடம் இருந்த விருத்த சேதனத்தின் மீதான வெறுப்பும், முதலாம் பாப்பரசர் பேதுருவின் எதிர் அறிக்கையும் விருத்த சேதனத்தை கிருத்துவர்களிடம் இருந்து இல்லாமல் செய்தது.

இருப்பினும் இன்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சில கிழக்கு மரபு வழி காப்திக், எத்தியோப்பியன் மற்றும் எறித்தீன் ஆகிய பிரிவுகளில் விருத்த சேதனம் வழமையான ஒன்றாகவே உள்ளது[27]. குறிப்பாக கென்யாவில் உள்ள நோமியா பிரிவு போன்றவை, தனது உறுப்பாண்மைக்கு விருத்த சேதனத்தை கட்டாயமாக்கி உள்ளது.-நன்றி: விக்கிபீடியா

உலக சுகாதார அமைப்பு உலகில் பெரும்பான்மையான நாடுகளில் ஆண்கள் 80 சதவீதமான பேர் விருத்த சேதனம் செய்து கொள்வதாக அறிக்கை சமர்ப்பிக்கிறது. ஆனால் நமது இந்தியாவைப் பொருத்த வரை 20 சதவீதத்துக்கு கீழே வந்து விடுகிறது. இந்தியா இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு என்பதும் ஒரு காரணம்.அமெரிக்காவில் மத வித்தியாசம் பார்க்காமல் அதிகமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விருத்த சேதனம் செய்து வருகின்றனர்.அறிவியல் பூர்வமாக விருத்த சேதனம் செய்வது உடலுக்கு எவ்வளவு நல்லது என்பதையும் அது தற்காலங்களில் மிக இலகுவாக எந்த சிரமமுமின்றி செய்யப்படுவதையும் இந்த காணொளி விளக்குகிறது.


டிஸ்கி:

வளமான விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்படாமல் விவசாயத்தால் பூத்துக் குலுங்கும் தமிழத்தையும் நமது நாட்டையும் காணும் நாள் எந்நாள்?

தியேட்டர் இல்லாத தமிழகத்தையும் நமது நாட்டையும் பார்ப்பது எந்நாள்?

அதுபோல் நோயற்ற வாழ்வை தரும் விருத்த சேதனம் நிரம்பிய ஆண்மக்களை கொண்ட தமிழகத்தையும் நமது நாட்டையும் பார்க்கும் நாள் எந்நாள்?

.இப்படி ஆவலும் ஆசைகளும் கூடிக் கொண்டே செல்கிறது. எனது ஆசைகள் நிறைவேறுமா! அல்லது ஏட்டளவிலேயே நின்று விடுமா?

Saturday, January 21, 2012

சவுதியில் கூத்தாடி மாதவனுக்கு வந்த வாழ்வு!சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ஜாய் ஆலுகாஸின் புதிய ஷோ ரூமை திறக்க நம்ம ஊர் கூத்தாடி மாதவனை அழைத்திருந்தனர். மாதவனுக்கோ ஏக வரவேற்பு. இதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

முன்பெல்லாம் பாலிவுட் நடிகர்களைப் பற்றி இங்குள்ள சவுதி இளைஞர்களுககு அதிகம் தெரியாது. நம் ஊர் ஜீ டிவி 24 மணி நேர சேவையாக ஹிந்தி படங்களை 'ஜீஃபிலிம்' என்ற பெயரில் சில ஆண்டுகளாக ஒளிபரப்பி வருகிறது. சில படங்களை அரபி மொழியில் மொழி மாற்றம் செய்தும் வெளியிடுகின்றனர். அரப் சாட்டில் எந்த தடங்கலும் இல்லாமல் 'ஜீஃபிலிம்' ஒளிபரப்பப் படுவதால் நமது ஹிந்தி நடிகர்கள் அனைவரின் பெயரையும் ஒன்று விடாமல் சவுதி இளைஞர்கள் சொல்வதை சில காலமாக பார்க்கிறேன்.

எனது ஓனரின் மகன் (18 வயது நிரம்பியவன்) என்னிடம் வந்து 'சல்மான்கான், ஷாருக்கான் புதிய படங்கள் இருந்தால் கொடேன்' என்று என்னிடம் கேட்டான். 'நான் இது போன்ற படங்களில் நேரத்தை வீணடிப்பதில்லை. என்னிடம் படங்களும் இல்லை' என்றேன். 'ஓ.....அன்த ஹிந்தி......அன்த மாபி ஹூப்பு ஃபிலிம்? 'انت هندى انت مافى هب فلم؟' அதாவது 'நீ இந்தியன்...இந்தியனாக இருந்து கொண்டு சினிமாவை விரும்புவதில்லையா?' என்று ஆச்சரியத்தோடு கேட்டான். அந்த அளவு நமது இந்தியர்களின் ரசனையை தெரிந்து வைத்துள்ளான்.

சவுதியை பொறுத்த வரை இங்கு எங்குமே தியேட்டர் கிடையாது. அவரவர் வீடுகளில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். சில வீடுகளில் மினி தியேட்டர் வைக்கப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன். பெரிய தியேட்டர்களும் ஒன்றிரண்டு உண்டு. ஆனால் அவை அனைத்தும்; இஸ்லாமிய காணொளிகள், கருத்தரங்குகள், நடத்துவதற்கு மட்டுமே உபயோகப்படுத்துகின்றனர். ஒரு முறை ஜாகிர் நாயக்கின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்த போது ரியாத்தில் உள்ள தியேட்டரையும் பார்க்க நேர்ந்தது. ஜாகிர் நாயக்கோடு பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

'புகழ் வாய்ந்த இந்நாட்டுக்கு வந்ததில் பெருமையடைகிறேன். இன்னும் சில நாள் இங்கு தங்கலாம் என்ற விருப்பம் இருந்தாலும் சில ஷூட்டிங்கள் கால்ஷீட் பிரச்னையால் இன்றே கிளம்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இங்கு என்னோடு கை குலுக்க பலரும் முயற்ச்சிப்பதை பார்த்து சந்தோஷம். எல்லோரையும் சந்திக்க காவலர்களும் அனுமதிக்கவில்லை. எனவே இந்த சிரமத்திற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.' என்றார் கூத்தாடி மாதவன்.

கூடடத்தைக் கட்டுப்படுத்த ஜாய் ஆலுகாஸூம் லூலூ சூப்பர் மார்க்கெட்டின் பணியாளர்களும் ரொம்பவுமே சிரமப்பட வேண்டியதாகி விட்டது. செம்மறியாட்டுக் கூட்டங்கள். அட ஒரு அறிவியல் அறிஞன் வந்திருந்தால் இந்த கூட்டம் கூடியிருக்குமா? ஏன்தான் சினிமா மோகம் கடல் கடந்தும் நம் மக்களை இந்த பாடு படுத்துகிறதோ தெரியவில்லை.

ஒரு உழைப்பாளியை வைத்து கடையை திறக்க வை. ஒரு அறிஞனை வைத்து கடையை திறக்க வை. எந்த நேரமும் மது மாதுவோடு நேரத்தை ஓட்டிக்கொண்டு கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்த கூத்தாடிகளை வைத்து கடையை திறந்தால் விளங்குமா? ரஜினி, கமல், முதற்கொண்டு அனைத்து கூத்தாடிகளிடமும் இருக்கும் கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்தாலே நம் நாட்டின் ஒரு வருட பட்ஜெட்டைப் போட்டு விடலாம். அந்த அளவு பணம் இவர்களிடம் புரள்கிறது.

ஆனால் உத்தம புத்திரர்கள் போல் பேட்டி கொடுப்பதில் மட்டும் குறைவில்லை. முன்பு ஜெயலலிதா ஒருமுறை 'ஊழலை ஒழிக்க பிரசாரம் செய்வேன் என்று ரஜினி சொல்கிறாரே! அவர் படத்துக்கு வாங்கும் பணம் அனைத்தும் வெள்ளை தானா? அதில் கருப்பு பணமே கிடையாதா?' என்று ஒரு கிடுக்கிப் பிடி போட்டவுடன் மனிதர் வாயை திறக்கவே இல்லை. பாம்பின் கால் பாம்பு அறியும் அல்லவா?

நம நாட்டில் சினிமா மோகம் என்று ஒழியுமோ அன்று தான் நாட்டுக்கு விமோசனம். தியேட்டர்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாறி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இன்னும் இணையம் பரவலாக பலரையும் அடையும் போது இருக்கும் ஒன்றிரண்டு தியேட்டர்களும் மூடப்படலாம். அவையும் வணிக வளாகங்களாக மாற வேண்டும். அப்படி மாறுவதற்கு சினிமா பித்தர்கள் காசு கொடுத்து சிடிக்களை வாங்காமல் ஓசியில் சினிமாவை பார்க்கவும். இன்னும் 10 ஆண்டுகளில் சவுதியைப் போல் தியேட்டரே இல்லாத தமிழகத்தைப் பார்க்க ஆசை.

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமஜான், அரசு விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு சென்று உணவகங்கள், பார்க்குகள், விளையாட்டுகள் என்று பொழுதைக் கழிப்போம். நமமால் இந்த கூத்தாடிகள் பலன் அடைவதை கூடியவரை தவிர்ப்போம்.

Friday, January 20, 2012

பிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்!இஸ்லாத்தின் சட்டங்களைப் பற்றிய பயம் மேலிட்டதால் சில பிரிட்டனைச் சேர்ந்த குடிமக்கள் ஷரியாசட்டங்களுக்கு பிரிட்டிஷில் இடமில்லை என்ற கோஷத்தை எழுப்பினர். 1982ல் இருந்து இயங்கி வரும் ஷரிய கோர்ட்டுகள் முஸ்லிம்கள் தங்களுக்குள் எற்படும் சிவில பிரச்னைகளை தாங்களாகவே மார்க்க அறிஞர்களின் துணைகொண்டு தீர்த்துக் கொள்ள ஏற்படுத்தப் பட்டது. இதைக் கண்டு பொறுக்காத ஒரு சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்திய வார்த்தைகள்.

“Hey..hey..ho..ho..sharia must go”
“We want womans rights”
“One equal rights for all”
“Long live equality”

இதிலிருந்து என்ன தெரிகிறது? போராட்டத்துக்கு வந்தவர்களுக்கு இஸ்லாத்தை பற்றிய அடிப்படை அறிவு கொஞ்சம் கூட இல்லை என்பது தெளிவாகிறது. இஸ்லாம் பெண்களை கொடுமைபடுத்தவதாகவும் இவர்கள் கோஷமிட தயங்கவில்லை. ஆனால் இதற்கு மாற்றமாக ஆண்களை விட பெண்களே இஸ்லாமிய சட்டத்தை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். படித்த பெண்களிலிருந்து பாமர பெண்கள் வரை குர்ஆனை தங்களது வாழ்வியலாக வைத்துக் கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர்.


சில ஆண்டுகளிலேயே ஷரியா கோர்ட்டுகளை நாடுவோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனது. மேலும் விசேஷமாக முஸ்லிம் அல்லாதவர்களும் ஷரியா கோர்ட்டை தற்போது நாடுகிறார்களாம்.

இது பற்றிய பிபிசி யின் தமிழ்ப் பிரிவு அளித்த செய்தியை இனி பார்ப்போம்.

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகராறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள்.

பிரச்சனைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்த்துக்கொள்ள முடிவதால் முஸ்லிம்களுடனான வழக்குகளின் போது முஸ்லிம்கள் அல்லாதவர்களும் ஷரியா அமைப்புகளை பெருமளவில் நாடுவதாக கூறப்படுகின்றது.

1982ம் ஆண்டில் இருந்து ஷரியா கவுன்சில் முறை இயங்கிவரும் பிரிட்டனில் கிட்டத்தட்ட 85 ஷரியா நீதிமன்றங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது.

ஷரியா இஸ்லாமிய சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் அறிஞர்கள் வழக்குகளுக்கு இங்கு தீர்ப்பு வழங்குகின்றனர்.

இதேவேளை, பிரிட்டனில் ஷரியா நடைமுறைகள் பெண்ணுரிமைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறும் சில பெண்ணுரிமை அமைப்புகள் அந்த நடைமுறைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/01/120118_shariahlawuk.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

பிபிசியில் இத சம்பந்தமாக வந்த ஆடியோ பைலை பார்க்க இங்கு செல்லவும்.


-நன்றி: பிபிசி

நிலைமை இவ்வாறு இருக்க நம்மூர் இந்துத்வாவாதிகள் முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் தனி சட்டம்? அனைவருக்கும் பொது சட்டம் தேவை என்று விடாது குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் 50 தடவைகளுக்கு மேல் திருத்தங்கள் செய்து விட்டோம். 1400 ஆண்டுகளுக்கு முன் பாலைவன தேசத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒரு மனிதர் கொடுத்த சட்டங்கள் இன்று நாகரிகத்தின் உச்சியில் இருக்கும் பிரிட்டிஷ் பிரஜைகளின் வாழ்வுக்கு வழி காட்டுகிறது. முகமது நபி மூலம் இறைவன் இந்த உலகுக்கு அளித்த சட்டங்களின் மகிமையே இந்த மாற்றத்துக்கு காரணம்.

இதன் மூலம் அனைத்துலக மனிதருக்கும் ஏற்ற மார்க்கம் இஸ்லாம் என்பது நிரூபணமாகிறது அல்லவா!

“தெளிவான வசனங்களை முஹம்மதே! உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர யாரும் அதனை மறுக்க மாடடார்கள்.”

-குர்ஆன் 2:99

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது!

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.'

-குர்ஆன் 30;110

டிஸ்கி: கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சென்னையில் தற்போது நடந்து வரும் விவாதம் நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆங்கிலத்திலும அந்த நிமிடமே மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இணைய வசதியுள்ளவர்கள் பார்த்து பயன் பெறவும்.

Onlinepj.com

இந்த இணைய முகவரியில் சென்று பார்த்து அறிவமுதம் பெறுங்கள்.Wednesday, January 18, 2012

கிறித்தவர்களுடனான விவாதம் நேரடி ஒளிபரப்பு!

இறைவன் நாடினால் வரும் ஜனவரி மாதம் 21 , 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் கிறித்தவர்களுடனான விவாதம் www.onlinepj.com இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கும் விவாதமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

• இந்த விவாதம் உடனுக்குடன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நடத்தப்படுவதால் மற்ற மொழி பேசும் மக்களையும் பார்க்கச் செய்யுங்கள்
• 21, 22 தேதிகளில் பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்
• 28, 29 தேதிகளில் குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்கிறித்தவர்களோடு முன்பு போட்ட ஒப்பந்தத்தின் காணொளி இது. முதலில் விவாதத்துக்கு வர மாட்டேன் என்று பின் வாங்கியவர்கள் தற்போது விவாதத்துக்கு ஒத்துக் கொண்டுள்ளார்கள்.கிறித்தவர்கள் சகோதரர் இம்ரானோடு ஹைதராபாத்தில் நடத்திய கலந்துரையாடலை இந்த காணொளியில் பாருங்கள்.

இது போன்ற விவாதங்களினால் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது என்று நினைக்கலாம். நம்முடைய சந்தேகங்களை நிவர்த்திக் கொள்ளவாவது இது போன்ற விவாத அரங்குகள் நமக்கு உதவும்.

இணையத்தில் இஸ்லாத்தின் மேல் பல கேள்விகளை வைத்துக் கொண்டிருக்கும் செங்கொடி, தருமி, சார்வாகன், கோவிகண்ணன்,அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, தங்கமணி போன்ற பதிவர்கள் தங்களின் சந்தேகங்களை விவாதத்தில் கலந்து கொள்ளும் கிறித்தவர்களுக்கு அனுப்பி விவாதத்தில் கலந்து கொள்ளலாம். அல்லது சென்னை சென்று நேரிடையாக அரங்கத்திலும் கேட்கலாம்.

விவாதம் சிறந்த முறையில் நடக்க வாழ்த்துக்கள்.

உலகின் மிகப் பெரிய குர்ஆன் பிரதி!ஆப்கன் தலைநகர் காபூலில் உலகின் மிகப் பெரிய குர்ஆன் பிரதி தயாரிக்கப்பட்டுள்ளது. 30 வருட கால போரில் அந்நாட்டின் கை வினைஞர்களின் திறமை சற்று மடடுப் படுத்தப் பட்டாலும் முற்றிலும் சிதைந்து விட வில்லை என்பதையே இந்த குர்ஆன் பிரதி காட்டுகிறது..

இந்த குர்ஆன் பிரதி 2.28 மீட்டர்(90 இன்ச்) நீளமும் 1.55 மீட்டர்(61 இன்ச்) அகலமும் கொண்டது. இந்த பிரதி உலகில் உள்ள குர்ஆன் பிரதிகளிலேயே பெரிய அளவைக் கொண்டது என்று ஆப்கனின் ஹஜ் அமைச்சகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதற்கு முன்னால் ரஷ்யாவின் தாரஸ்தான் பகுதியில் உள்ள குர்அனின் பிரதி 2 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. அந்த சாதனையை ஆப்கானியர் தற்போது வென்று முதல் இடத்துக்கு வந்துள்ளனர்.

இதன் மொதத எடை 500 கிலோ கிராம். 218 பக்கங்கள் கொண்ட இந்த பிரதி துணியாலும் சிறந்த காகிதங்களைக் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. குர்ஆன் பிரதியின் முகப்பு ஆட்டுத் தோலினால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதியை உருவாக்க மொத்தம் 5லட்சம் டாலர் செலவழிக்கப்பட்டுள்ளது.

முகமது சாபிர் காதிரி என்ற ஆப்கானியர் தனது 9 மாணவர்களின் துணை கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். குர்ஆனின் உள்ளே எழுத்துக்களிலும் பல உயர்தர வேலைப்பாடுகளை சளைக்காது செய்திருக்கிறார் முகமது சாபிர். 'நான் மேலும் பல வண்ணங்களை சேர்த்து இந்து புனித நூலை மேலும் அழகாக்குவேன்' என்று அந்த பிரதிக்கு பின்னால் நின்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் முகமது சாபிர்.

இந்த பணியை 2009 லேயே தொடங்கியுள்ளார். ஆனால் வெளியில் யாரிடமும் சொல்லாமல் 2012 ஆரம்பத்தில் திடீரென இதனை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளார் காதிரி. இந்த குர்ஆனின் பிரதி ஆப்கனின் கலாசார மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1980ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மையத்தில் முன்பு 50000 புத்தகங்கள் இருந்ததாம். சோவியத் ரஷ்யாவோடு நடந்த உள் நாட்டு போரில் அவை அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டது.

தற்போது இந்த கலாசார மையத்தில் சிறிய நூலகம் இயங்குகிறது. அரசும் பல உதவிகளை செய்து வருகிறது. இந்த கலாசார மையத்தை மேலும் சிறக்கச் செய்வோம் என்கின்றனர் இந்தகுழுவினர்.

சிறந்த சேவையை செய்த இந்த குழுவினரின் முயற்ச்சியை முதலில் பாராட்டுவோம். அதோடு 5 லட்சம் டாலர் செலவு செய்து ஒரு குர்ஆன் பிரதியை உருவாக்கியது ஏற்புடைய செயல்தானா? என்பதையும் சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம். 30 வருடங்களாக உள் நாட்டுப் போரில் சின்னா பின்னப் பட்டுக் கிடக்கும் அந்த மக்களின் வறுமையை போக்க இந்த பணத்தை செலவழித்திருக்கக் கூடாதா? கல்வி அறிவில் மிகவும் பின் தங்கியிருக்கும் இந்த மக்களுக்காக அந்த பணத்தை செலவழித்திருந்தால் இறைவன் மேலும் சந்தோஷப்பட்டிருப்பானே! 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுவதாக' பல நபி மொழிகள் நமக்கு இருக்க அந்த ஏழைகளின் வறுமையை போக்கவல்லவா அந்த செல்வந்தர் முயன்றிருக்க வேண்டும்? மற்ற நாடுகளை விட ஆப்கானிஸ்தானத்துக்குத்தான் இன்றைய நிலையில் பொருளாதார உதவி அவசியம் தேவை.

'இச்சொல்லை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது அவர்களின் முந்தய முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துள்ளதா?'
-குர்ஆன் 23:68

இது போல் பல இடங்களில் இறைவன் இந்த குர்ஆனை மனிதர்கள் சிந்திப்பதற்காக அருளியிருக்கிறோம் என்று கூறுகிறான். செலவு செய்த ஐந்து லட்சம் டாலரில் சிறிய அளவிலேயே குர்ஆனின் மொழி பெயர்ப்புகளை பல மொழிகளிலும் வெளியிட்டிருந்தால் ஐந்து லட்சம் மக்களை சென்று அது அடைந்திருக்குமே! வசதியுள்ளவர்கள் இதை எல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

-----------------------------------------------------------------

அதே போல் நமது நாட்டை ஆண்ட மொகலாய மன்னன் சாஜஹான் தனது மனைவிக்காக தாஜ்மஹால் என்ற ஒரு சமாதியை பளிங்குக் கற்களால் கட்டினான். அதற்கான இன்றைய மதிப்பை கணக்கிட்டால் நமக்கு மயக்கமே வந்து விடும். இவ்வளவு செலவுகள் செய்து அதுவும் மக்களின் வரிப் பணத்தில் இப்படி ஒரு சமாதி கட்டுவது தேவையா? அந்த பணத்தில் கங்கையையும் காவிரியையும் இணைத்திருந்தால் என்றோ நம் நாடு வல்லரசாகியிருக்குமே! சாஜஹான் மட்டும் அல்ல. சேர சோழ பாண்டிய பல்லவ மௌரியப் பேரரசுக்ள் என்று எந்த அரசுமே சாமான்யர்களை கணக்கில் எடுக்கவே இல்லை.

ஒவ்வொரு மனிதனும் மறு உலகில் இறைவனிடம் இரண்டு கேள்விகளுக்கு அவசியம் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒன்று அந்த மனிதன் பொருளை எப்படி சம்பாதித்தான்? என்றும் அடுத்து சம்பாதித்த பொருளை எவ்வாறு செலவு செய்தான் என்றும் இறைவன் கேட்பான் என்பது நபி மொழி. எனவே செல்வந்தர்கள் செலவு செய்வதிலும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறிகிறோம்.

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே! அதைப் பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.
-குர்ஆன் 2:271

Monday, January 16, 2012

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்........1........................

2.ஆதி திராவிடர்களின் பழக்கங்கள்.

3.கிருத்தவம்.

4.சமணம்

5.பவுத்தம்

6.முஸ்லிம்களிடம் உள்ள தர்ஹா வணக்கம்.

7.திராவிடர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கை.

8.சீக்கியம்

9.ஏக இறைவனை மட்டுமே வணங்கும் இஸ்லாமியர்

ஒரு குறிப்பிட்ட கலாசாரம் எவ்வாறு நமது இந்திய கலாசாரத்தை சுருட்டி தனது கலாச்சாரத்தை முன்னிறுத்தி விட்டது என்பதை விளக்குவதே இந்த கார்ட்டூன். சுருட்டப்பட்ட கலாசாரங்கள் இன்னும் கூட உள்ளது. தெரிந்தவர்கள் அவைகளையும் பட்டியலிடவும்.

ஒன்பது வரை பூர்த்தி செய்த எனக்கு முதல் இலக்கத்தைப் பூர்த்தி செய்ய பொருத்தமான பெயர் கிடைக்கவில்லை. எனவே படிப்பவர்களின் யூகத்துக்கே முதல் நம்பரை விட்டு விட்டேன். முதல் இலக்கத்துக்கு பொருத்தமான பெயரை நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நமது முன்னோர்களின் கலாசாரத்தைப் பற்றிய இந்த காணொளியையும் பார்த்து விடுவோம்:
டிஸ்கி:…………….நம்மை நாம் திராவிடர்கள் என்றுணர்ந்தால் இவ்விழிவுகள் நம்மை விட்டு ஓடிவிடுகின்றன. விட்டுக்கொடுக்கும் தன்மை முஸ்லீமிடம் கிடையாது. இந்துவைப் போல, கிருஸ்தவப் பாதிரியார் கூட, கிருஸ்தவப் பறையன், கிருஸ்தவப் பார்ப்பனன், கிருஸ்தவ முதலியார் என்பதில் கவலையற்றிருப்பார். ஆனால் முஸ்லீமில் முஸ்லிம் பார்ப்பான், முஸ்லிம் பறையன் என்றிருக்க மாட்டான். அதுபோல நாமும் ஒரே திராவிடராக மட்டும் இருக்க வேண்டும்.

…………பெரியார் வாழ்க என்ற கித்தாப் எனக்கு வழங்கினால் நான் நிம்மதியடைய முடியாது. நமது இழிவு பூர்ணமாக நீங்க வேண்டும். அன்றுதான் நான் நிம்மதி அடைவேன். நமது ஈனம் ஒழிய உயிர் கொடுத்தேனும் புரட்சி செய்ய வேண்டும். ஆகவே, தோழர்களே நீங்கள் கீழான நிலையில் இருப்பதற்கு எது காரணம் என்பதைத் தெரிந்து அதற்குப் பரிகாரம் தேடுங்கள். இம்மக்களைப் பின்பற்றி மணமாகாதவர்கள் நடந்து கொள்ளுங்கள். நான் கூறியவைகளைப் பகுத்திறவைக் கொண்டு ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வாருங்கள்," என்று கூறி, மணமக்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் சுமார் 2 மணிநேரம் பேசினார்.

---------------- 21.07.1947 மாதவரம் திருமணத்தில் பெரியார் சொற்பொழிவு -"விடுதலை" 23.07.1947

Friday, January 13, 2012

சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்!
‘யோகா உங்கள் உடலை எவ்வாறு நாசமாக்குகிறது?’ என்ற தலைப்பில் வில்லியம் பிராட் எழுதிய புத்தகத்தின் பகுதிகளை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. யோகாசனம் செய்தவர்கள் கழுத்து, இடுப்பெலும்பு, முதுகெலும்பு நொறுங்குவது, மூளை நரம்பு வெடிப்பது, ரத்த நாளங்கள் தெறிப்பது, பார்வை இழப்பது போன்ற பயங்கர பாதிப்புகளுக்கு ஆளானதாக வில்லியம் பிராட் விவரிக்கிறார். தலைகீழாக நிற்பது, மொத்த உடலையும் கைகளில் தாங்கி நிற்பது போன்ற கடினமான ஆசனங்களை செய்தபோது பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரிகிறது.

இந்த யோகாசனத்தில் வரக் கூடிய ஒரு நிலையான சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தை செய்ய மத்திய பிரதேச பா.ஜ.க அரசு சுமார் 50 லட்சம் குழந்தைகளைக் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்திக் காட்டியுள்ளது. மாநில முதல்வரும் கலந்து கொண்டுள்ளார். மற்ற மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் இந்த வழிபாடு நடத்தப் பட்டுள்ளது.கின்னஸ் புத்தகத்தில் இதை சாதனையாக்க முயற்ச்சிக்கப் போகிறார்களாம். முயற்ச்சிக்கட்டும்.

ஆனால் இதற்கு முஸ்லிம் சமய தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸூம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சூரியனை கடவுளாக வணங்குபவர்கள் சூரிய நமஸ்காரம் பண்ணிக் கொள்ளட்டும். அதை யாரும் தடை சொல்லவில்லை. இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்காத முஸ்லிம்களை இங்கு கல்வி அமைச்சகம் சூரிய நமஸ்காரத்தில் ஈடுபடுத்துவதுதான் பிரச்னையே!

(எனது தாத்தா காலையில் எழுந்து பள்ளிக்கு சென்று தொழுவதும் அல்லாமல் தினமும் வீட்டிலேயே யோகா பயிற்சியை எடுப்பார். என் பாட்டி என்னிடம் “உன் தாத்தாவுக்கு இந்த வயசுல தலைகீழாக நின்று கொண்டு ஆசனம் செய்வது தேவையா?' என்று நான் சிறுவனாக இருக்கும் போது கேட்டுள்ளார்கள். ஆரோக்கியமாக இருந்தவர் திடீரென்று ஒருநாள் தண்ணீரில் வழுக்கி விழுந்தவர் பிறகு எழும்பவே இல்லை. இரண்டு நாளில் மரணமடைந்து விட்டார். நன்றாக இருந்தவர் ஒரு சிறிய விபத்தில் இறந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒருக்கால் அவர் தினமும் செய்த யோகா அவரது மரணத்தை சிக்கிரமே கொண்டு வந்திருக்கலாம் என்று இப்பொழுது நினைக்கிறேன்.) :-(

_______________________________________________________________

http://www.bmj.com/highwire/filestream/223144/field_highwire_article_pdf/0/685.2.full.pdf

யோகாவினால் உடலுக்கு எற்படும் தீமைகளை பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடியைச் சேர்ந்த அறிஞர் ரிட்சி ருஷல் விவரிக்கிறார்.


_______________________________________________________________

http://books.simonandschuster.com/Science-of-Yoga/William-J-Broad/9781451641424

மற்றுமொரு சுட்டியையும் பார்த்து விடுங்கள்

வாஷிங்டன் போஸ்டில் வந்த யோகாவைப் பற்றிய புரிதலும் , யோகா எவ்வாறு உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதை கட்டுரையாளர் அழகாக விளக்குகிறார்.
______________________________________________________________

http://www.skincancer.org/skin-cancer-information/videos/skin-cancer-video

காலையில் சூரிய நமஸ்காரம் பண்ணினால் தோல் வியாதிகள், கண் கெடுதல் பொன்றவை எவ்வாறு ஏற்படுகிறது என்பதை இந்த காணொளி விளக்குகிறது.

---------------------------------------------------

கண்களை சூரிய ஒளி எந்த அளவு பாதிக்கிறது தோல் புற்று நோயை எவ்வாறு உண்டாக்குகிறது என்பதை இந்த காணொளிகள் விளக்குகின்றன. ஆனால் நம் நாட்டில் சூரிய நமஸ்காரத்தை வழக்கமாக கொண்டுள்ள பலரும் அறியாமல் நோயை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். நம் நாட்டில் கண்பார்வை மங்கியவர்களின் விகிதாச்சாரமும் தோல் வியாதியின் விகிதாச்சாரமும் அதிகமாக இருப்பதற்கு இந்த சூரிய நமஸ்காரமும் காரணமாக இருக்கலாம்.

இது பற்றிய விழிப்பணர்வை அரசு உடனடியாக துவக்க வேண்டும். நம் நாட்டு இளைஞர்களின் கண்பார்வையும் உடல் நலனையும் கருத்தில் கொண்டு மிக துரிதமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை இது. அரசு கவனிக்குமா?பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.

- குர்ஆன் 6:78


டிஸ்கி:பாபா ராம்தேவ் மீது சாயம் வீச்சு:

//டில்லியில் நிருபர்கள் சந்திப்பின் போது வந்த ஒருவர் கையில் தயாராக வைத்திருந்த கறுப்பு மையை அவரது முகம் மற்றும் மார்பு பகுதியில் தெளித்தார். இந்த நபரை உடனடியாக அங்கு சூழ்ந்திருந்த அவரது ஆதரவாளர்கள் அடித்து துவைத்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் யார் என்ன காரணத்திற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.//
பத்திரிக்கை செய்தி
14-01-2011

கருப்பு மையை பாபாராம்தேவ் மீது ஊற்றியவர் ஒருகால் யோக கலையின் முலம் பாதிப்படைந்தவராகக் கூட இருக்கலாம். :-)

Tuesday, January 10, 2012

தானே புயலின் பாதிப்புக்கான நிதியுதவிகள்!
கடலூர் மற்றும் புதுவையில் தானே புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல அமைப்புகளும் உதவி செய்து வருகின்றன. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தனது பங்காக முதல் தவணையாக 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாதி மத பேதமினறி உதவி அளித்துள்ளது. அமைப்பின் இளைஞர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடல் உழைப்பாலும் உதவி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் உதவிகள் கிடைத்திட நம்மால் ஆன சிறு உதவியையாவது அனுப்பி வைப்போம்.

தானே புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் சாதாரணமானது அல்ல! அது 50 வருடத்திய மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்துச் சென்றுவிட்டது. கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை விவசாயமும், கடல்சார் தொழில்களும் தான் அந்தப் பகுதி மக்களின் பிழைப்பாதாரம். பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருக்கும் வாழைத்தோப்புகள், முந்திரித்தோப்புகள், தென்னந்தோப்புகள் ஆகியவை முழுமையாகச் சேதமடைந்தன.
பலா மற்றும் வாழை மரங்கள் ஆகியவை வேறோடு சாய்ந்ததால் கடலூர் மாவட்ட மக்கள் தங்களின் பிழைப்பை இழந்து நிற்கின்றார்கள். விவசாயிகளாக இருந்த மக்களின் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கடலை, கரும்பு போன்றவை புயலின் சீற்றத்தால் உருக்குலைந்து போனது. கடல் பகுதிகளும் வாழும் மக்களின் படகுகளும்,வலை உபகரணங்களும், வீடுகளும் சேதமடைந்தன.

தானே புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் குடிநீர் கிடைக்காமல் கடலூர் மற்றும் புதுச்சேரி மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். குடிநீர் மட்டுமின்றி உணவுக்கும் வழியில்லாமல் கடலூர், பாண்டி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.
புயலின் வேகத்தால் சாய்ந்து போன மரங்களைப் போல மின்கம்பங்களும், டிரான்ஸ்பார்மர்களும் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து, கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் வழங்கமுடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் இருக்கின்றது. புயல் தாக்கிய அன்று முதல் இன்றைய தினம் வரைக்கும் கடலூர் மற்றும் பாண்டிச்சேரியின் பலபகுதிகள் மின்சாரம் கிடைக்காமல் அந்தப் பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

நிலைமை சீரடைந்து மீண்டும் பழைய நிலைக்கு கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்கள் திரும்புவதற்கு இன்னமும் ஆறு மாத காலங்கள் ஆகும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.நிவாரணப் பணிகளில் கடுமையான மெத்தனப்போக்கு காட்டப்படுவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சித்தலைவர்களும் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளை ஆராய்ந்து அதன்பின்னர் நிவாரண உதவிகளை அறிவித்தனர். இன்னும் சிலர் அவர்களின் கட்சிக்காரர்கள் பரிந்துரை செய்த சொற்ப சிலருக்கு நிதி உதவிகள் வழங்கிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியதாக பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

ஆனால் இந்தப் புயலால் உண்மையிலே பாதிக்கப்பட்ட மக்கள் யாருக்கும் உரிய நிவாரணம் சென்றடையவில்லை என்பது தான் கண்கூடு. அரசியல் கட்சிகள், நாங்களும் வந்து சென்றோம் என்று காட்டிக் கொள்வதற்காகவே மட்டுமே இதுபோன்ற பார்வையிடுதல் வேலைகளை செய்து கொண்டிருந்த போது இதிலிருந்து வேறுபட்டு மக்களின் துயர்துடைக்க நேரடியாகக் களமிறங்கி அந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

கடலூர்,பாண்டி ஆகிய மாவட்டங்களில் புயலால் சேதாரங்கள் ஏற்பட்ட மறுநாள் அந்தப் பகுதிகளில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையைச் சேர்ந்த சகோதரர்கள் உடனடியாகக் களமிறங்கி அந்த மக்களிளை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களின் அத்யாவசியத் தேவையான தண்ணீர்,பால், உணவு ஆகியவற்றை உடனடியாக அவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்தனர்.

இன்னும் சில கிளைகளில், பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் தானே புயலால் வீடுகளை இழந்தவர்களும், கூரைகள் இடிந்தவர்களும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

புயல் தாக்கியது முதல் மாநிலத் தலைமையில் இருந்து மாவட்ட மற்றும் கிளைகளின் பணிகள் கேட்டறியப்பட்ட வண்ணம் இருந்தன. பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டியது அவசியம் என்ற தகவலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகிகள், மாநிலத் தலைமைக்கு கொண்டு வந்தனர்.

உணவு,உடை,உறைவிடம் என அத்யாவசியத் தேவைகள் எதுவுமில்லாமல் நிற்கும் இந்த மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதைக் கருத்தில் கொண்டு, மேற்படி மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களின் விவரங்களைத் திரட்டுமாறு அந்தந்தக் கிளைகளுக்கு தகவல் தரப்பட்டது. கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாதிப்புகளை நேரடியாகப் பார்வையிட்டு உண்மையாகவே பாதிப்புக்குள்ளாகியிருந்தவர்களின் பட்டியலைச் சேகரித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து கடந்த 04/01/2011 புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமையில் மாநிலச் செயலாளர்கள் எழும்பூர் சாதிக், அம்பத்தூர் யூசுப், மவலவி ஜமால், சமூக ஆர்வலர் தஸ்தகீர் துறைமுகம் கிளைத் தலைவர் ஷரீப் ஆகியோர் அடங்கிய நிவாரணக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கியது. தானே புயலால் கடும் சேதத்தைச் சந்தித்த கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளையும் பார்வையிட்டனர்

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிளைக்கும் தகவல் கொடுத்து அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலைத் தயாரித்து ஒவ்வொருவருக்கும் டோக்கன் கொடுக்குமாறும் டோக்கனுடனும் ரேஷன் கார்டுடனும் குறிப்பிட்ட இட்த்தில் திரட்டி வைக்குமாறும் முன்னரே தலைமை மூலம் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. ஒவொரு ஊருக்கும் நிர்வாகிகள் வரும் நேரமும் தெரிவிக்கப்பட்ட்து.

திட்டமிட்ட படி சென்ற இந்த நிவாரணக் குழுவினர், முதலில் பண்ருட்டிக்குச் சென்றனர்.
பண்ருட்டி பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து எவ்வித ஆதரவும் இன்றி நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தலா ரூ 2,000 த்தை முதல் கட்டமாக நிவாரண உதவியாக வழங்கினார்கள்.

பண்ருட்டியில் வழங்கப்பட்ட நிவாரணத்தைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் களம் கண்ட இடம் மேல்பட்டாம்பாக்கம். இந்தப் பகுதியும் புயலின் சீற்றத்தால் பாதிப்படைந்த பகுதிதான். இங்கிருந்த மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நின்றவர்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபாய்கள் ரொக்கமாக வழங்கப்பட்டன.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு:
TAMILNADU THOWHEED JAMATH,
INDIAN BANK,
A/C NO: 788274827,
MANNADY BRANCH

டிடி அல்லது செக் அனுப்ப விரும்புவோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பின் வரும் முகவரிக்கு அனுப்பவும்:

TNTJ மாநிலத் தலைமையகம்
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி,
சென்னை-1

Monday, January 09, 2012

பாலைவனம் சோலை வனமாக சாத்தியமா?

பாலைவனம் சோலை வனமாக சாத்தியமா?

நான் சவுதிக்கு கடந்த 20 வருடத்துக்கு முன் வந்த போது பெரும்பாலான இடங்கள் பாலைவனமாகவே காட்சி தந்தது. ஆனால் அந்த இடங்களை எல்லாம் இன்று பார்க்கும் போது என்னால் நம்ப முடியவில்லை. எவ்வளவு அசுர வளர்ச்சி. அதிலும் கூட ஒரு நிதானம். குவைத்தையும் துபாயையும் போல தான்தோன்றித் தனமாக ஆடம்பர செலவுகளை செய்து விட்டு பிறகு கையை பிசைந்து கொண்டிருக்காமல் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்கிறது சவுதி அரசு.

கோதுமை உற்பத்தியை எடுத்துக் கொண்டால் 1984 ஆம் ஆண்டு சவுதி அரேபியா உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. 1980 ஆம் ஆண்டு 67000 ஹெக்டேரானது படிப்படியாக 907000 ஹெக்டேராக விரிவடைந்தது.

1993 ஆம் அண்டு 4.5 மில்லியன் டன்னாக உற்பத்தி வேகமாக உயர்ந்தது. இதே கால கட்டத்தில் 2 மில்லியன் டன் கோதுமையை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திறனையும் பெற்று விட்டது. தங்களின் சுய தேவையை பூர்த்தி செய்வதற்காக உற்பத்தியை தொடங்கிய இவர்கள் இன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வல்லமையை பெற்றுள்ளனர். சில பொருட்களின் உற்பத்தி விகிதததை சற்று பார்ப்போம்.

1.பார்லி: 1980 ல் 6011 டன்னாக இருந்த உற்பத்தி 1990ல் 11940 டன்னாக உயர்ந்தது.

2.தினை உற்பத்தி: 1980ல் 7505 ஆக இருந்த உற்பத்தி 1990ல் 11940 ஆக உயர்ந்தது.3.தக்காளி: 1990ல் 232042 டன்னாக இருந்த உற்பத்தி 1990ல் 462964 டன்னாக உயர்வு பெற்றது.

4.தர்பூசணி பழ உற்பத்தி: 1980ல் 193352 ஆக இருந்த உற்பத்தி 1990ல் 460725 ஆக உயர்ந்தது.

5.உருளைக்கிழங்கு: 1980ல் 6700 டன்னாக இருந்த உற்பத்தி 1990ல் 47700 டன்னாக பரிணமித்தது.

6.பேரித்தம் பழ உற்பத்தி: 1980ல் 371038 டன் ஆக இருந்த உற்பத்தி 1990ல் 519765 டன்னாக உயர்ந்தது.

7.திராட்சை உற்பத்தி: 1980ல் 60537 ஆக இருந்த உற்பத்தி 1990ல் 99799 ஆக பரிணமித்தது.

இன்னும் பட்டியல் இருக்கிறது. பதிவு விரிவாகி விடும் என்பதால் விடுகிறேன்.இந்த முன்னேற்றத்தை தினமும் பார்க்கும் என் கண்கள் நமது நாட்டு தற்போதய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மனம் கனத்து விடுகிறது. எனது தாத்தா இரண்டு வேலி சொந்த நிலத்தை பயிரிடும் போது 10, 15 பார வண்டிகளில் நெல் மூட்டைகள் அடுக்கி கொண்டு வரப்படும். கரும்பு பஞ்சு என்று எந்த நேரமும் வீடு ஆள் நடமாட்டத்தோடு இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் ஆள் வசதி இல்லாததால் விற்று விட்டோம். அந்த நிலங்களை எல்லாம் தற்போது சென்று பார்த்தேன். சில இடங்கள் கல்லூரிகளாகவும், மற்றும் சில இடங்கள் விவசாயம் அல்லாத துறைகளுக்கு பயன்படுவதைப் பார்த்தேன்.

இன்னும் சில இடங்களில் அருமையான விளை நிலங்கள் எலலாம் மனைகளாக போடப்பட்டு புதர் மண்டிக் கிடக்கும் காட்சியைப் பார்த்தேன். 'சோழ நாடு சோறுடைத்து' என்பது போய் 'சோழ நாடு மனையுடைத்து' என்றாகி விட்டது. சில இடங்களில் எல்லா விளை நிலங்களும் கல்லூரிகளாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு கல்லூரி இருப்பதால் சட்டமும் தனது கண்ணை கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறது. ஒரு இடத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விளை நிலங்கள் அனைத்தும் மனைகளாக்கப்பட்டிருந்தன. உரிமையாளர் யார் என்று விசாரித்தேன். நமம சின்ன மேடம் சசிகலாவினுடைய பினாமி என்று விவரித்தனர். இன்னும் இந்த அம்மா எவ்வளவு சொத்து சேர்க்குமோ தெரியவில்லை. சொத்து சேர்த்து யாருக்கு கடைசியில் கொடுத்து விட்டு போகப் போகிறது? நானும் பல இடங்களில் பார்க்கிறேன். வாரிசு இல்லாதவர்கள்தான் சொத்து சேர்ப்பதில் ரொம்பவும் குறியாக இருக்கிறார்கள். இது எனது உறவினர்களிடததிலும் பார்த்துள்ளேன். அதே போல் காடுகளும் அழிக்கப்படுகின்றன. மழை பொய்த்ததினால் தண்ணீர் வேண்டி விலங்குகள் நகரத்தை நோக்கி படையெடுக்கும் அவல நிலையை கொண்டு வந்துள்ளோம்.

சரி இனி சவுதிக்கு வருவோம். இவர்கள் கொண்டு வந்திருக்கும் இந்த பசுமை புரட்சியானது மேலும் மேலும் விரிவடைந்து செல்கிறது. மூலப் பொருளான களி மண்ணை நம் நாட்டிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் வேறு பல நாடுகளிலிருந்தும் கடல் மார்ககமாக கொண்டு வந்து பாலைவனத்தை சோலைவனமாக்குகிறார்கள்.

சூடானில் பல நிலங்களை குத்தகை முறையில் எடுத்து அதிக நீர் தேவைப்படும் பயிர்களை அங்கு விளைவிக்க சவுதிகள் முதலீடு செய்கின்றனர்.

சாலை வசதிகளை எடுத்துக் கொண்டால் ஒரு முறை சரியான முறையில் சாலைகளை அமைத்து ஓரங்களில் மரங்களையும் நட்டு அழகிய முறையில் பராமரிக்கின்றனர். இங்குள்ள தார் ரோடுகள் எந்த மழையிலும் சேதமாகாமல் உறுதியோடு நிற்கிறது. ஆனால் நம் நாட்டிலோ ஒவ்வொரு மழையிலும் சாலை வீணாவதும் பிறகு காண்டராக்டர் வந்து சில ஜல்லிகளை மேலே தூவி விட்டு காசு பார்ப்பதும் தொடர்கதையாக நடக்கும் செயல். குண்டும் குழியுமாக உள்ள நம் சாலைகள் எத்தனை உயிர்களை பழி வாங்கியிருக்கிறது. வீணாகப் பொகும் பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி சாலை போட்டால் தார் ரோட்டை விட சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.

அதே போல் மனிதர்கள பயன்படுத்திய தண்ணீரை பல இடங்களில் சுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்டு அந்த தண்ணீரையே விவசாயத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். மனிதக் கழிவுகளைக் கூட சுத்திகரிக்கப்பட்டு அதனை உரங்களாக டின்களில் அடைத்து பல மாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர். அந்த இடங்களை எல்லாம் சென்று பார்த்தேன். இத்தனை வருட காலத்தில் ஒரு முறை கூட தண்ணீர் தட்டுப்பாடு என்று இங்கு நான் கேள்விப்படவில்லை. அந்த அளவு நீரின் உபயோகத்தை உணர்ந்து சிறந்த முறையில் சேமிக்கின்றனர். கடல்நீரை குடி நீராக மாற்றி இன்று சவுதி முழுவதும் பகிர்ந்தளிக்கின்றனர். நம் நாட்டிலும் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு இதோ வருகிறது அதோ வருகிறது என்று கடல் நீரை குடிநீராக மாற்றுகிறோம் என்கிறார். தண்ணீர் வந்த பாடில்லை. கோடிகள் போனதுதான் மிச்சம். ஆட்சியும் மாறி விட்டது. இனி சுத்தம்.

ஆனால் நம் ஊரில் குளங்களைக் கூட மனைகளாக்கி காசு பார்த்து விடுகின்றனர். ஒரு சில குளங்கள் குப்பைக் கொட்டும் இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. கிராம அலுவலரிடம் 1000 அல்லது 2000 அமுக்கி அவர் வாயையும் அடைத்து விடுகின்றோம. இதனால் நிலத்தடி நீர் தேங்காமல் எங்கும் தண்ணீர் பிரச்னை. பெய்யும் மழை நீரோ எவருக்கும் உபயோகப் படாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால் நாடு வளமாயிருந்தும் மக்கள் அறிவு சார்ந்தவர்களாக இருந்தால் மட்டும் போதாது: அந்த நாடு தன்னலமற்ற சிறந்த ஆட்சியாளர்களையும் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முன்னேற்றம் சாத்தியப்படும் என்பதற்கு சவுதி அரேபியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.சவுதி அரேபியாவைப் போல் சிறந்த ஆட்சியாகவும் வளமான நாடாகவும் நம் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.

-------------------------------------------------

'முஹம்மதே! 'நாங்கள் உம்முடன் சேர்ந்து உன் மார்க்கமாகிய இஸ்லாத்தைப் பின்பற்றினால் எங்களின் வசிப்பிடத்திலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். அபயமளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கி கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'
-குர்ஆன் 28 : 57

முகமது நபிக் காலத்தில் அந்த மக்கள் இஸ்லாத்தைப் பற்றி கொண்டிருந்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமாக மேற்சொன்ன வசனங்கள் அருளப்பட்டன.

அபயமளிக்கும் புனிதத் தலம்!

உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் மக்காவிலுள்ள கஃபா. இந்த ஆலயம் மக்களின் அபயத் தலமாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

கஅபா அபயத்தலம் என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயத் தலமாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்த தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது.

சதாம் முன்பு சவுதியை தாக்க ஏவுகணைகளை வீசிய பொழுது என் முதலாளியும் அவரது உறவினர்களும் சவுதியின் பாதுகாப்பான இடமாக தேர்ந்தெடுத்தது குர்ஆன் கூறும் அபயத் தலமான மக்காவைத்தான்.

இந்த அபயத் தலம் என்ற வார்த்தை இதுவரை காக்கப் படுவதால் குர்ஆன் இறைவேதம்தான் என்பது நிரூபிக்கப்படுகிறது.

பாலைவனத்தில் கிடைக்கும் கனிகள்!

இன்றைய மக்கா நகரம் முகமது நபி காலத்திலும் அதற்கு முன்னரும் எவ்விதக் கனி வர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது.

இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் கனி வர்க்கம் கொண்டு வரப்படும் எனத் திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்கிறது.

இந்தியாவில் இந்த வசனம் இறங்கியிருந்தால் இது ஒரு ஆச்சரியமான செய்தியாக இருந்திருக்காது. நம் நாடு நில வளத்திலும், நீர் வளத்திலும் அன்று முதல் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆனால் பாலைவனப் பிரதேசமான மக்காவை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மண் வளமும் கிடையாது. தண்ணீர் வசதிக்கும் வாய்ப்பில்லை. இருந்தும் 'ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக மக்காவை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது' என்ற வாசகத்தைக் கவனிக்க வேண்டும்.

பாலைவனம் சோலைவனம் ஆக வேண்டுமாயின் அரபு நாடுகளுக்கு செல்வம் குவிய வேண்டும். கறுப்புத் தங்கமான பெட்ரோலை கணக்கில்லாமல் அந்நாடுகளுக்கு இறைவன் கொடுத்து இன்று அரபு நாடுகள் சோலைவனமான காட்சியைப் பார்க்கிறோம்.

-------------------------------------------------


அரேபியாவில் ஓடுமா ஆறுகள்......?

Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.

"அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?" .

எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது-
"ஆம்'! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது".

.அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:
"எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.......?"

ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
"ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!"

ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது:

"எப்படி சொல்கிறீர்கள்......?"

"புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை"

"இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி(ஸல்) அறிவித்து விட்டதை அறிவீர்களா...?ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும் - ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது.(Sahih Muslim) இப்போது சொல்லுங்கள்: 'நபி முஹம்மதுவுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?

பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: "ரோமானியர்களாக இருக்கலாம்"

"நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படி கூற முடிந்தது.?"

உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:

"அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.."மேலும் அவர் சொன்னவை:"ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.'Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்தபார்வையினால் கிடைத்த நிஜம் இது.

"நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?" (அல் குர்-ஆன்: 41:53)

Sunday, January 08, 2012

மாட்டுக் கறிக்காக இத்தனை சண்டைகளா!

இந்து மதத்தில் பசு மிகவும் மேன்மையாகப் பாவிக்கப்படுகிறதென்றும், முக்கியமான தெய்வமென்றும், அதை வதை செய்வதால் இந்து மதத்திற்கு பெரும் பங்கமேற்படுகிற தென்றும், இந்துக்கள் பெரும் தடை செய்கின்றார்கள். பூர்வீக காலத்திலிருந்த இந்து மதத்திலேயே பசுவதை செய்வதை ஹலாலாக்கி வைத்திருந்தது மட்டுமல்லாமல் முஸ்லீம்கள் அவ்விறைச்சியை எவ்வாறு புசிப்பது அவர்கள் மார்க்கத்தில் கூடுமானதாயிருக்கின்றதோ அதே போல் இந்துக்களும் அம்மாமிசத்தை புசித்து வந்தனர் என்ற விஷயம் இந்து மத ஆராய்ச்சி நிபுணர்களின் ஆராய்ச்சியில் மறைந்திருப்பதன்று. இவ்வாறு இந்து மதத்தில் பசு வதை செய்வது சரியென்றும், பலி செய்யப் பட்ட பசுவின் மாமிசத்தை புசிக்கலாம் என்றும், இந்து வல்லாத மத ஆராய்ச்சி நிபுணர்கள் எத்தனையோ வியாசங்களைப் பிரசுரித்திருக்கின்றார்களே யாயினும் இன்றைக்கு வங்காள பிரபல பூர்வீக மத ஆராய்ச்சியில் இந்து நிபுணரான ராஜா ராஜேந்திரலால் மத்ரா எல்.எல்.டி., சி.ஐ.இ., அவர்களால் எழுதப்பட்ட ஓர் புத்தகத்தில் "இந்து ஆரியன்" என்ற மகுடம் சூட்டப்பட்ட 6வது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயத்தை நாம் கீழே குறிப்பிடுகின்றோம்:
அப்புத்தகத்தில் இந்துமதக் கோட்பாடுகள் எவ்வாறு போதிக்கப் பட்டு வந்திருக்கிறதென்பதை இதைப் படிக்கும் நண்பர்களுக்கு நன்கு புலனாகிவிடும். ஆனால் அவர் புத்தமதத்தைச் சார்ந்தவரோவென நீங்கள் நினைக்கக்கூடும். ராஜாசாகிப் அவர்கள் வங்காள வைஷ்ணவர். அவர் தம்முடைய மேலே கூறப்பட்ட புத்தகத்தில் பூர்வீக இந்துக்களின் மதக் கோட்பாடுகளை மிகவும் ஆராய்ச்சியுடன் வரைந்துள்ளார்.

அவர் கூறுவதாவது:

"இப்பிரச்சினையின் மகுடமே என் தேச நண்பர்களில் பெரும் பான்மையோர்களின் மனதில் பெரும் வெறுப்பை யுண்டு பண்ணும். இமாலய பர்வதத்தைக் கடந்து வரும் ஆரியர்களின் மதக் கோட்பாடுகளை ஆராய்ச்சி செய்வதில் நமக்குக் கிடைக்கும் அத்தாட்சிகளே இவ்விஷயத்தில் விவாதிப்பதற்கு போதிய அத்தாட்சியாகும்.

பசு மாமிசத்தை உணவாக புசிக்கலாம் என்று நினைத்த வுடனேயே இந்துக்களின் மனம் புண்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் தானென்ன? லட்சக்கணக்கான இந்துமதப் பற்றுடைய இந்துமத நிபுணர்களும் கூட பசு மாமிசம் என்ற பெயரையுங் கூட வாயால் சொல்ல அருவறுக் கிறார்கள். நம் நாட்டில் பசு வதை செய்யும் விஷயத்தில் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் உயிர்ப் பிராணிகளை அறுப்பதால் சில ஆத்மாக்கள் அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வாறு அறுக்கப்படுவது விருந்தினர்களுக்கெனக் கருதப்பட்டும் வந்தது. மேலும், இறந்து போன இந்துவுடன் ஓர் பசுவையும் சேர்த்து மயானக் கரையில் வைத்து எரிக்கப்பட்டு வந்தது. இவ்வந்தரங்கமான விஷயத்தை வெளியிடுவதன் நிமித்தம் இந்துக்களின் தற்போதைய கிளர்ச்சிகளை யுணர்ந்த இந்தியர்களுள் பெரும் ஆச்சரியத்தையும் கிளர்ச்சியையும் உண்டுபண்ணும். இவ்விஷயங்களை நான் எந்த கிதாப் (புத்தகம்) பிலிருந்து எடுத்திருக்கின்றேனோ அக்கிரந்தங்களில் எத்தகைய சந்தேகமும் அதிருப்தியும் கொள்ள முடியாது.

புரொபசர் வில்சனின் ஆராய்ச்சி

என் தேச நண்பர்களில் யார் தக்க கல்வி கற்றிருக்கிறார்களோ அவர்கள் வேதங்களில் "கோமேதம்" "அஸ்வமேதம்" என்று பசுவையும் குதிரையையும் பலி கொடுக்கும் யாகங்கள் இருப்பதை நன்கு அறிவார்கள். அவ்யாகத்தின் தாத்பரியம் கால்நடை மிருகங்களை பலி செய்வதே. அவ்வாறு தக்க கல்வி கற்றவர்கள், பலி செய்ய வேண்டுமென்றிருப்பதை உதாரணமாக வரையப் பட்டிருக்கிறதெனக் கருதுகின்றார்கள். அவர்கள் அவ்வாறு மேற்பார்வையாகப் பார்த்து உதாரணமாகக் கூறப்பட்டிருக் கிறதெனக் கருதி விடுவதால் அதன் அந்தரங்கங்கள் மறைவாக இருந்து விடுகிறது. ஆதலின் அத்தகைய பலி அமுலில் கொண்டுவரப்பட்டதன்று என ஜனங்கள் கருதிக்கொள்ளுகிறார்கள். அதே போல் புரொபசர் வில்சன் அவர்கள் இவ்விஷயங்களை ஆராய்ச்சி செய்வதற்காக நாடி முதன் முதலாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பஞ் செய்தபோது அவருக்கும் இதன் அந்தரங்கங்கள் சரிவர விளங்காமல் அவரின் யோசனைக்கும் எட்ட வில்லையாயினும் அத்தகைய கல்வி நிபுணர்கள் போன்றவர்களின் பார்வைக்கும் அந்தரங்கங்கள் மறைந்திருப்பது முடியாத காரியமாகையால் அவர் மேகாவத் மொழி பெயர்ப்பின் ஓரிடத்தில் குறிப்பிடுவதாவது:
கோமேதம், அஸ்வமேதம் எனப்படும் யாகங்களில் பசு குதிரை இவைகளை பூர்வீக காலத்தில் இந்துக்கள் பொதுவாக பலி செய்து வந்தனர். இந்தப் பலியானது உண்மையான பலியல்லவென்றும், பலியின் பாவனையாகச் செய்யப்பட்டதென்றும் கூறப்படுகிறது.

அதாவது:

பலியாக குறிப்பிடப்பட்ட ஒரு பசுவின் மீது ஏதாவது ஓர் அடையாளத்தைப் போட்டு அதை உயிரோடு விடப்பட்டு வந்தது. ஆனால் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாசகங்களும் இந்துக்கள் செய்யும் வேலைக்கு உதவியாகத் தெரியவில்லை. ஏனெனில், பசுவின் இரத்தம் கடலைப் போல ஆகவேண்டுமென்று கூறப்பட்டிருப்பதன் உண்மையான வியாக்கியானம் பசுவின் இரத்தத்தையே வெள்ளமாக ஓட்ட வேண்டு மென்பதேயன்றி பசு பலி யென்று வாயால் சொல்லி ஒரு குறியைப்போட்டு அப்பிராணிகளை வெளியில் ஓட்டி விடுவது பலியாகமாட்டாது. பசு பலி செய்ய வேண்டுமென எந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறதோ அப்புத்தகத்திலிருக்கும் வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு வருமாறு:

மாம்ச ஆகாரமும் பார்ப்பனர்களும்

"பசு சந்ததிகளின் இரத்தம் ஆறாகக் கிளம்பி ஓடிற்று."

புரொபசர் அவர்கள் எவ்விஷயத்தில் அத்தாட்சிகள் காட்டுகின்றாரோ அவ்விஷயத்தில் ஜனங்கள் முன்னமே விவாதம் செய்திருக்கின்றார்களாயினும் பலி செய்ய வேண்டுமென வேதத்தில் கண்ட வாக்கியத்திற்கு இரத்தத்தை ஓட்டவேண்டுமென்றே பதில் கூறி இருக்கின்றார்கள். சிலர் அவ்வாக்கியத்திற்கு நேரான வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரிஷிகள் விருந்தில் பசு மாமிசம்

வஸிஷ்ட ரிஷியானவர் விஸ்வாமித்திரர், ஜனகர், சத்தியானந்தர், ஜமதக்கினி முதலிய ரிஷிகள், சிநேகிதர் ஆகியவர்களுக்கு விருந்தளித்தார். அவ்விருந்திற்காக ஓர் கொழுத்த பெண் பசுக்கன்றை அறுத்தார். ஜமதக்கினிக்கு விருந்துக்குச் சொல்ல போயிருந்த வசிஷ்ட ரிஷி சாப்பாட்டின் இன்பத்தையும் அதன் திவ்ய வாசனைகளையும் கூறுகையில் அவர் கூறியதாவது:

பசுக்கன்று அறுப்பேன், நெய் சாதம் சமைக்கப்படுகிறது. நீங்கள் ஓர் படித்த கல்விமான்; நானும் ஓர் படித்தவன்; ஆதலின் நீங்கள் என் விருந்துக்கு வந்து நாங்கள் சமைத்து வைத்திருக்கும் பசு மாமிசம், நெய் சாதம் இவைகளைச் சாப்பிட்டு எங்களுக்கு ஆசி கூறும்படியாக வேண்டுகிறேன்.

இவ்விஷயங்கள் பூராவும் ஓர் சரிதையிலிருந்து எடுக்கப்பட்டதில் எத்தகைய சந்தேகமும் கிடையாதாயினும், இத்தகைய விஷயங்களை ஓர் நிமிஷத்திற்காவது இட்டுக்கட்ட முடியாது என்பதும் திண்ணம். ஏனெனில் இவ்விஷயத்தைக் குறிப்பிட்டுள்ள சரிதையின் ஆசிரியருக்கு இதை படிக்கும் பொது ஜனங்களின் மனம் கொதிப்படையு மென்பது தெரிந் திருப்பதுடன், இல்லாததை இட்டுக்கட்டி இத்தகைய விஷயங்களை எழுதத் துணிய மாட்டார்.
விருந்தாளிக்கு மரியாதை

கோல்புரூக் என்ற ஒருவர் ஹிந்து மதக் கோட்பாடுகளை மட்டும் ஓர் புத்தகமாக எழுதியிருக்கிறார். அவர் அப்புத்தகத்தில் கூறுவதாவது:

பூர்வீக காலத்திலிருந்த ஹிந்துக்கள் தங்கள் வீட்டிற்கு யாராவதொரு விருந்தாளி வந்தால் அவருக்காக ஓர் பசுவை அறுப்பது பொதுவான வழக்கமாக இருந்தது. ஆதலின் அவருக்குப் பசுவை அறுப்பவர் என்று கூறப்படுகிறது.

இந்துக்களின் விவாக காலத்தில் பசுவை அறுப்பதற்காகச் சொல்லப் படும் மந்திர சம்பந்தமான விஷயங்களை கூறுகையில் அவர் கூறுவதாவது:

நான் இவ்விஷயங்களை எந்தப் புத்தகத்திலிருந்து ஆராய்ச்சி செய்தேனோ அப்புத்தகத்தில் கூறுவதாவது, வரவேற்கத்தக்க விருந்தினர்களான கூர்த், புரோஹ்க், சன்யாசி, ராஜா, மாப்பிள்ளை, சினேகிதர், மற்றும் கௌரவிக்கத் தக்க விருந்தினர்கள் இவர்களுக்காக வேண்டி ஒரு பசுவைக் குறிபார்க்கப்பட்டு அறுப்பதற்காக வேண்டி கட்டிவிடுகின்றார்கள். ஆதலின் இவர்களுக்கு பசுவைக் கொல்லுகிறவர்களென்று கூறுகின்றார்கள்.

மனுஸ்மிருதியில் பசு மாமிசம்

எக்காலத்திலுமே பசு மாமிசம் சாப்பிடலாமென மனுஸ்மிருதி அனுமதிக்கிறது. ஆனால் அதைச் சாப்பிடுவதற்கு முன் ஒரு துண்டைத் தேவதைகளுக் கென்றாவது, பெரியோர்களின் ஆத்மாக்களுக்கென்றாவது, விருந்தாளிக்கென்றாவது மனதில் ஞாபகம் செய்து கூப்பிட வேண்டும். மேலும் மனுஸ்மிருதியில் வரையப்பட்டிருப்பதாவது: யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது. (மனு 235)
ஆனால் மனுஸ்மிருதி பசு மாமிசத்தை ஓர் உணவாகக் கூறவில்லை யாயினும், மனிதன் சாப்பிடக்கூடிய உயிர்ப் பிராணிகளின் நாமங்களைக் கூறப்பட்டிருக்கும் அத்தியாயத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

முள்ளெலி, பெருச்சாளி, ஆமை, முயல் ஆகியவைகளை இந்து மத நிபுணர்கள் உண்ணலாமென வைத்திருக்கின்றார்கள். நான்கு கால் மிருகங்களில் ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எதானாலும் சாப்பிடலாம். (மனு 185)

மேலே கூறப்பட்ட நிபந்தனைப்படி பசுவும் அதில் சேர்ந்ததென்பதில் ஐயமில்லை. ஏனெனில் பசுவுக்கு ஒரே பக்கத்தில்தான் பற்களுண்டு என்பது மனு ஸ்மிருதியில் மறைவானதன்று, மனு பசுவைச் சாப்பிடக் கூடாதென்று விலக்கியிருந்தால் ஒட்டகத்தோடு சேர்த்துப் பசுவையும் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாதென விலக்கியிருப்பார்கள். ஆனால் முன்பின் வாசகங்களைக் கவனிப்பது கொண்டு பசுவைச் சாப்பிடக் கூடாதென விலக்கவில்லை யென்று நாம் அர்த்தம் செய்து கொள்வது சரியான அத்தாட்சியாகமாட்டாது. ஆதலின் பிரமச்சாரியானவர் தம் வீட்டிற்கு திரும்பி வருவதற்காக குருவுக்கு சில காணிக்கைகள் கொடுக்கின்றார்கள். இவ் விஷயம் மனு ஸமிருதியில் தக்க ஆதாரமாக இருக்கிறது. அதில் எழுதியிருப்பதாவது:
பிரமச்சாரிகள் விவாகத்திற்கு முன் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் காணிக்கைகளைச் சேகரித்து புஷ்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் உட்கார்ந்து மார்க்கக் கோட்பாட்டின் படி குருவுக்கு ஒரு பசுவை வெகுமதியாக கொடுக்கவேண்டும். (மனு 6 3) அதன் பின்வரும் ஒரு வாசகத்தில் காணப்படுவது: இராஜாக்கள் பிரபல விருந்தினர்களுக்காக இன்பமான சாதமும் பசு மாமிசமும் செய்யப்பட்டு வந்திருக்கின்றது.

அஸ்வ மஹாபாரதம், ராமாயணம்

அஸ்வத் தமது அரச கட்டளையில் துவர்க்கமாகக் கூறுவதாவது:
ஆதி காலத்தில் அவனுடைய பொங்குமடத்தில் லக்ஷக்கணக்கான உயிர்ப் பிராணிகள் உணவுக்காக அறுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவைகள் இன்னின்ன பிராணிகளென விவரமாகக் கூறப்படவில்லை. அவைகளின் விவரங்கள் தெரியாவிடினும் அவ்வாறு மாமிசம் சாப்பிடும் காலத்தில் அவர் ஆடுகளை மட்டும் போதுமென வைத்திருக்க மாட்டாரென நாம் ஊகித்துக் கொள்ள முடியும்.

மஹாபாரதம், ராமாயணம் இவைகளிலும் கோமேத யாகத்தைப்பற்றி கூறப்பட்டிருக்கிறது. கோமேத யாகமென்பது உயிர்ப் பிராணிகளை (குர்பானி) கொலை செய்வது. ஆனால் அதில் விஷயங்கள் விரிவாகக் கூறப்படவில்லை. பசுவின் மாமிசத்தை உணவைப் போல் சாப்பிட்டு வந்ததா இல்லையாவென்ற விவரமும் கூறப்படவில்லை.

வைதீகத்தில் பசு மாமிசம்

ஈஸவி 500, 600 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சர்க் சந்தவென்ற வைதீகப் புத்தகத்தின் ஒர் அத்தியாயத்தில் இவ்விஷயத்தை விரிவுரையாக கூறப்பட்டிருக்கிறது. அதில் ஓர் அத்தியாயத்தில் உணவு விஷயமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஓர் இடத்தில் காணப்படுவதாவது: பசு, எருமை, பன்றி இவைகளின் மாமிசங்களை பிரதி தினந்தோறும் புசிக்கக் கூடாதென வரையப் பட்டிருக்கிறது.

மேலே கூறப்பட்ட விஷயங்களை நன்கு கவனிப்பது கொண்டு தெரிய வருவதாவது:
அக்காலத்தில் ஹிந்துக்கள் பசு மாமிசம் சாப்பிட்டு வந்தார்களென்பதில் சந்தேகமில்லை. ஆனால் பசு மாமிசம் தக்க பலமுடைய வஸ்துவானதால் பிரதி நாட்கள் தோறும் சாப்பிடலாமென அனுமதிக்கப்படவில்லை. மற்றுமோர் இடத்தில் அக்கிரந்த கர்த்தாவானவர் கூறுவதாவது: கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்குப் பசு மாமிசம் கொடுக்கவேண்டுமென்றும், அது பிரசவ காலத்திற்கு வேண்டிய பலத்தைக் கொடுக்கிறதென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றும் சில வைதீகப் புத்தகங்களில் பல முறைகள் கூறப்பட்டிருக் கிறதாயினும் பசு மாமிசம் அறவே சாப்பிடக் கூடாதென எந்த வைதீகப் புத்தகத்திலும் காணப்படவில்லை. அஸ்மனா விஷபாவுடைய சில வைதீகப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஒர் மனிதன் போதையாக இருந்து தெளிவு பெற்றபின் அவன் பசு இறைச்சி சாப்பிடுவதால் பெரும் அனுகூலங் களிருப்பதாக வரையப்பட்டிருக்கிறது.

பசு மாமிச உப்புக்கண்டம்

குர்ஹீயா சூத்திரத்தில் பசு குர்பானியின் முறை ஓர் விதமாகக் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு சுடப்பட்ட பசு மாமிசம் உப்புக் கண்டம் எனக் கூறப்படுகிறது. அதற்காக வேண்டி பசுக்களில் நல்ல பசுவாகவும், கொழுத்த தாகவும் இருப்பதுடன் பாதரம் நிறமாகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு இந்தப் பசுவுக்கு பல நிபந்தனைகளுண்டு. அவ்வாறு குர்பானி செய்யப்படும் பசுவிற்கு எத்தனை நிபந்தனைகளிட்டிருக்கின்றார்களோ அத்தனை நிபந்தனைகளும் பொருந்திய ஓர் பசுங்கன்று கிடைத்தால் வெந்நீர் கொண்டு குளிப்பாட்டி அதை ரூரா (சுவாமி)வுக்கு வேண்டுதலைசெய்து கட்டிவைத்து வளர்த்து வருகின்றார்கள். அந்தக் கன்றுக்குப் பற்கள் பூராவும் முளைத்து குறிப்பிட்ட தவணை வந்தவுடன் குர்பானியின் மந்திரம் கிரிவுக்கள் தெரிந்த புர்ஹத் பிராமணனை அழைத்து அவர் படிக்க வேண்டிய மந்திரங்களைப் படித்து நெருப்பில் போட வேண்டிய வஸ்துக்களைப் போட்டு செய்ய வேண்டிய கிரியைகள் பூராவையும் செய்து முடித்துவிட்டு புது நூதனமாக தயார் செய்யப்பட்ட ஓர் இடத்திற்கு அந்தப் பசுவைக் கொண்டுபோய் பொதுவான சட்டப்படி அறுத்து அதன் ஈரலை எடுத்து ஓர் தட்டில் வைத்து 12 தேவதைகளின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே அந்தத் தட்டை நெருப்பில் வைத்து விடுகிறார்! அதன் பிறகு வைக்கோல் புற்களை விரித்து கொஞ்சம் அரிசிப் பொத்தலையும் பசு மாமிசத்தையும் வைத்து ரூரோவுக்கு பூஜை செய்கின்றார்கள். பூர்வீக காலத்தில் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசுவின் எலும்பு, ஜவ்வு, தோல் இவைகளை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு வந்த சம்பீதா ரிஷியானவர் அவ்வாறு நெருப்பில் போடப்படும் வஸ்துக்களில் பொது ஜனங்களுக்குப் பிரயோஜனம் தரக்கூடியதான தோலை நெருப்பில் போடுவதற்கு பதிலாக செருப்பாக தைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாமென பொதுவாக உத்தரவு செய்து விட்டார். அவ்வாறு ரூராவுக்கு பூஜை செய்ததன் பிறகு பிராமண பூசாரியானவர் இடது பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நேராக எழுந்து நின்று ஏதோ சில மந்திரங்களைப் படித்துக்கொண்டே அறுக்கப்பட்ட பசுவின் இரத்தத்தை அவ்விடங்களிலிருக்கும் சாப்பங்களுக்கு சேர்க்கை செய்து விடுகிறார். இவ்வெல்லாக் கிரியைகளும் செய்து முடித்த பிறகு கடைசியாக (சுவிஸ்த்தாக்கிர்த்) என்ற ஒரு பூஜையும் செய்யப்படுகிறது. பிறகு அப்பசுவுடைய நெஞ்சு மாமிசத்தினின்றும் சுடுவதற்காகக் கொஞ்சம் மாமிசத்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதன் பிறகு மீதியாயிருக்கும் அப்பசுவின் மாமிசத்தைப் பொதுவாக எல்லோரும் சாப்பிடலாமென்று சில சூத்திரங்கள் கூறுகின்றன. சில சூத்திரங்கள் அப்பசுவை குர்பானி செய்தவர்கள் மட்டும் சாப்பிடலாமெனக் கூறுகின்றன.

இவ்வாறு ஒரு மனிதன் குர்பானி செய்து விட்டால் அவனுக்கு வயது அதிகமாகிறதென்றும், செல்வந்தனாவானென்றும், நல்ல நிலைமையிலே இருப்பானென்றும், தன் மதத்தில் கௌரவமுடையவனாக இருப்பானென்றும், சந்ததிகள் அதிகமாகுமென்றும், கால் நடை மிருகங்கள் அவனுக்கு அதிகமாகு மென்றும், அவ் வேதத்தில் ஆசை காண்பிக்கப்பட்டிருக்கிறது. சகல தனவந்தர் களும் அவர்கள் வயதில் ஓர் விடுத்தமாவது இவ்வாறு குர்பானி செய்ய வேண்டியது முக்கியமென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசு மாமிசம் எவ்வாறு சமைக்கப்பட்டதென்ற விஷயம் விரிவாகக் கூறப்படாதது மிகவும் வருந்தத்தக்கதே. சமைக்கப்படும் முறை விவரமாக கூறப்படாவிடினும் அறுக்கப்பட்ட பசுவின் நெஞ்சு மாமிசத்திலிருந்து சுடுவதற்காக மாமிசம் எடுப்பதே அவர்கள் சமைக்கும் முறையை நன்கு விளக்கிக் காட்டுகிறது.
பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை மார்ச்சு 1936
-குடியரசு

இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட செய்தியால் பல குழப்பங்கள். இந்து மதத்தில் ஆரம்பம் முதலே பசுவின் மாமிசம் உணவாக உட்கொள்ளப்பட்டுள்ளது. இதை சாப்பிடுவது ஏதோ பாவமான காரியம் போல் மீடியாக்களால் சித்தரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்தையும் தடுக்கும் வேலையே இது போன்ற ஆர்ப்பாட்டங்கள்.

நமது சுப்ரமணியம் சுவாமி சில நாட்களுக்கு முன்பு பிபிசிக்கு அளித்த பேட்டியைப் பார்ப்போம்.

நாட்டில் எவ்வளவோ தீர்க்க வேண்டிய பிரச்னைகள் மலைபோல் குவிந்து கிடக்க எவருக்கும் பிரயோசனம் இல்லாத மாட்டுக் கறி சாப்பிடும் விஷயத்தை இவ்வளவு தூரம் பிரபலப் படுத்துவதும. அதை எதிர்த்து ஒரு மாநில முதல்வரின் ஆசியோடு பத்திரிக்கை அலுவலகம் நொறுக்கப்படுவதும் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்குகிறது.

இது சம்பந்தமாக நக்கீரன் கோபால் பிபிசிக்கு அளிதத பேட்டி