Followers

Sunday, July 30, 2006

எகிப்தில் இன்றும் பாதுகாக்கப் பட்டு வரும் உடல்

எகிப்தில் இன்றும் பாதுகாக்கப் பட்டு வரும் உடல்

'உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்' என்று கூறினோம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.

குர்ஆன் 10 : 92

எகிப்து நாட்டில் பிர்அவுன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.தனது தேசத்தின் சிறுபான்மையினமான யாகூப் நபியின் வழித் தோன்றல்களான இஸ்ரவேலர்களை கொத்தடிமைகளை விடக் கேவலமாக நடத்தி வந்தான். அவர்களுக்குப் பிறக்கும் ஆண் வாரிசுகளையெல்லாம் தயவு தாட்சண்யம் இன்றி இனப் படுகொலை செய்து கொண்டிருந்த காலக் கட்டம் அது.

அந்தக் காலகட்டத்தில்தான் மோஸே(மூசா) பிறக்கிறார். இறைவனின் உத்தரவுப்படி பாதுகாப்பான ஒரு பெட்டியில் வைத்து நைல் நதியில் விடப் பட்ட அந்தக் குழந்தையை பிர்அவுனின் குடும்ப த்தைச் சேர்ந்த ஒருவர் கண்டெடுத்து நேராக பிர்அவுனிடம் கொண்டு செல்லவும் உடனடியாக அந்தக் குழந்தையைக் கொன்று போடுமாறு கர்ஜித்தான் பிர்அவுன்.

ஆனால் பிர்அவுனின் மனைவி ஆசியா அந்தக் குழந்தையின் மீது மிகவும் பரிவு காட்டினார். தன் கணவனிடம் 'என் கண்களுக்கும் உங்கள் கண்களுக்கும் குளிர்சிசியாக இருக்கக் கூடிய இக் குழந்தையைக் கொன்றுவிடாதீர்கள்.இதை நம்முடைய குழந்தையாகவே நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம், அல்லது ஏதாவது ஒரு வகையில் வருங்காலத்தில் இக் குழந்தை நமக்குப் பயன் படலாம்.' என்ற கோரிக்கையை வைத்தார்.

மனைவியின் ஆசையைத் தட்டிக் கழிக்க முடியாத பிர்அவுன் ஆசியாவைப் பார்த்து இப்படிக் கூறினான்.'இந்தக் குழந்தை உன் கண்ணுக்கு மட்டுமே குளிர்ச்சியாக இருக்கட்டும்.இந்தக் குழந்தையின் மூலம் கண்குளிர்ச்சி கிடைத்திடும் என்றால் அது எனக்கு வேண்டவே வேண்டாம்.'

இவ்வாறு ஆசியா அவர்கள் தன் சொந்த மகனைப் போல் மூசாவை வளர்க்க ஆரம்பித்தார்கள்.வருடங்கள் விரைந்து உருண்டோடின. காலத்தின் கோலங்களும் வேகமாக உருமாறிக் கொணடிருந்தன.இறைவன் மூசாவை தன்னுடைய தூதராக தெரிவு செய்து கொண்டான். மேலும் மூசாவின் வேண்டுகோளுக்கினங்க அவரின் அண்ணன் ஹாரூனையும் இறைவன் தூதராக்கினான்.

அண்ணனும் தம்பியுமான இவ்விரண்டு இறைத்தூதர்களும் பிர்அவுனிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர். ஒரே இறைவனை வணங்குமாறும் போதித்தனர். அதற்கு பிர்அவுன் 'நான்தான் எகிப்து வாழ் மக்களின் ரட்சகன்.நைல் நதி கூட என் கட்டளைப் படிதான் ஓடுகிறது. விரும்பினால் தண்ணீரை திறந்து விடுவேன். விரும்பாவிட்டால் தண்ணீரை மூடி விடுவேன்.அப்படியானால் நான்தானே இறைவன்' என்று உளறினான்.

அடுத்து சூன்யக்காரர்களோடு மூசாவை போட்டியிட சொன்னான். அந்த போட்டியில் மூசாவே வெற்றி பெறுகிறார். இவரிடம் உண்மை இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட சூன்யக் காரர்கள் மூசாவின் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகிறார்கள். 'என் அனுமதி இன்றி மூசாவின் மார்க்கத்தை நீங்கள் எப்படி ஏற்கலாம்?' என்ற பிர்அவுன் அவர்களை கழுவிலேற்றியும் மாறு கால் மாறு கை வாங்கியும் அந்த சூன்யக் காரர்களை இறை நேசர்களாக்கினான்.

இந்த சூன்யக் காரர்களின் நெஞ்சுறுதியை கண்டு வியந்து போன பிர்அவுனின் மனைவி ஆசியாவும் இஸ்லாத்தை ஏற்கிறார். 'உண்மை மூசாவிடம் இருக்கிறது. நீ சொல்வது அனைத்தும் பொய்' என்று பிர்அவுனிடமே ஆசியா அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்.தன் மனைவியே தனக்கு எதிரானதைக் கண்டு மிகவும் கோபமுற்ற பிர்அவுன் ஆசியாவை மிகவும் துன்பப் படுத்துகிறான்.'இறைவா! இந்த அக்கிரமக்கார பிர்அவுனிடமிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தித்தார். அவர் செய்த பிரார்த்தனையை இறைவன் குர்ஆனிலேயே சொல்லிக் காட்டுகிறான்.

'என் இறைவா! எனக்கொரு வீட்டை சொர்க்கத்தில் எழுப்புவாயாக!பிர்அவுனிடமிருந்தும் அவனது சித்ரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக!அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக' என்று பிர்அவுனின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

குர்ஆன் 66 : 11

மன்னரின் மனைவி என்ற அந்தஸ்து போகிறது. போவதுமில்லாமல் கொடுமை வேறு நடக்கிறது. சிறு குழந்தைகளையே கொன்றொழித்தவன் தன் மனைவியை எந்த அளவு கொடுமை படுத்தியிருப்பான் என்று விவரிக்கத் தேவையில்லை. அத்தனையும் இழந்து 'என் இறைவனே போதுமானவன்' என்று உறுதியுடன் இருக்கிறார். இந்த உறுதியை பார்த்த இறைவன் முஸ்லிம்களுக்கு உதாரணமாக அந்த பெண்மணியை தேர்வு செய்கிறான்.

அதோடு மூசா நபிக்கும் மிகவும் தொல்லைக் கொடுக்கிறான். இந்த கொடுமைகளைக் கண்டு பொறுக்காத மூசாவும் ஹாரூனும் 'பிர்அவுனின் கொடுமைகளுக்குத் தக்க தண்டனை கொடுப்பாயாக' என்று இறைவனிடம் பிரார்த்தித்தனர்.

'ஃபிர்அவுன் தங்களைத் துன்புறுத்துவான் என அவனுக்கும் அவனது சபையோருக்கும் பயந்ததால் அவரது சமுதாயத்தில் சிறு பகுதியினரைத் தவிர மற்றவர்கள் மூஸாவை நம்பவில்லை. ஏனெனில் ஃபிர்அவுன் அப்பூமியில் வலிமையுள்ளவன். வரம்பு மீறுபவன்.' - குர்ஆன் 10 :83

மேற்கண்ட வசனத்தின் மூலம் மோசே (மூஸா) யைப் பின்பற்றியவர்கள் சொற்பமானவர்கள் என்று அறிய முடிகிறது.

'எங்கள் இறைவா! ஃபிர்அவுனுக்கும் அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் செல்வங்களையும் அளித்திருக்கிறாய்.எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே இது பயன் படுகிறது. அவர்களின் செல்வங்களை அழித்து அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கைக் கொள்ள மாட்டார்கள்.' என்று மூஸா கூறினார். - குர்ஆன் 10 :88

இந்த இருவரின் பிரார்த்தனையையும் ஏற்றுக் கொண்ட இறைவன் மூஸாவையும் அவரை பின் பற்றியவர்களையும் கடலை நோக்கி செல்லுமாறு கட்டளை இடுகிறான். இறைவனின் சக்தியால் கடல் பிளக்கப் பட்டு வழி உண்டாகிறது. இதைத்தான் 'டென் கம்மேண்ட்ஸ்' என்ற ஆங்கில திரைப் படத்தில் பார்த்தோம்.கடலில் தென்பட்ட வழியில் மூஸாவும் அவரைப் பின் பற்றியவர்களும் தப்புகிறார்கள். முஸ்லிம்களைக் கொல்வதற்காக ஃபிர்அவுனும் அவனது பட்டாளமும் கடலில் தென் பட்ட வழியில் நுழைகிறார்கள்.

'இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம்.ஃபிர்அவுனும் அவனது படையினரும் அக்கிரமமாகவும் அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது 'இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாரும் இல்லை என நம்புகிறேன்: நான் முஸ்லிம்' என்று கூறினான்.' -குர்ஆன் 10 :91

மூஸாவைப் பின் தொடர்ந்த ஃபிர்அவுன் கடலில் மூழ்கடிக்கப் படுகிறான்.கடலில் மூழ்கும் நிலையில் 'நான் முஸ்லிமாகிறேன்' என்று ஓலமிட்டான். இறக்கும் தருவாயில் நம்பிக்கைக் கொண்டால் அதை இறைவன் ஏற்க மாட்டான் என்று பின் வரும் வசனம் விளக்குகிறது.

'இப்போது தானா நம்புவாய்? குழப்பம் செய்பவனாக இருந்தாய் : இதற்கு முன் பாவம் செய்தாய்:

-குர்ஆன் 10 :92

'உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் என்று கூறினோம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.' -குர்ஆன் 10 :92

அநியாயக்காரர்களின் முடிவு இவ்வாறுதான் இருக்கும் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காக ஃபிர்அவுனின் உடலை பாதுகாப்பேன் என்று இறைவன் கூறுகிறான். அப்படியானால் அந்த உடல் எங்கே?

வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நைல் ஆற்றங்கரையின் ஓரத்தில் லுக்ஸார் என்ற அழகிய சிற்றூர். இந்த லுக்ஸாரில் 'அரசர்களின் ஓடை' என்ற பெயரில் ஒரு பள்ளத் தாக்கு இருக்கிறது. அங்குள்ள தீபிஸ் என்ற பகுதியில் 1898 ஆம் ஆண்டு மம்மீஸ் (சடலங்கள்) பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த லோனேட் என்ற ஓர் அறிவியல் ஆய்வாளர் அங்கிருந்து ஒரு சடலத்தை கண்டெடுத்தார்.அது உடனடியாக கெய்ரோவிலுள்ள ராயல் மியூஸியத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப் பட்டது.

அந்த சடலம் கண்டெடுக்கப் பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. இப்போது அந்த சடலம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் எகிப்திய அரசப் பரம்பரையில் வந்த யாரோ ஒரு பாரோ மன்னனின் சடலம்தான் அது எனவும் இன்றைய அராய்ச்சியாளர்கள் அனைவருமே பெரும்பாலும் ஒத்துக் கொண்டு விட்டனர்.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலுள்ள உலகப் புகழ் பெற்ற ராயல் மியூஸியத்தில் பார்வையாளர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த பழம் பெரும் சடலம் குர்ஆன் கூறும் ஃபிர்அவுனின் உடலே! முகமது நபியின் காலத்திலேயே இந்த உடல் வெளிப் பட்டிருக்குமானால் யுக முடிவு நாள் வரை அந்த உடலை பாதுகாக்கும் வசதி அந்த மக்களிடத்தில் இல்லை, உடலும் அழுகிப் போய் விடும். எனவே தான் விஞ்ஞானம் வளர்ந்த இந்நாளில் இறைவன் அந்த உடலை வெளிப்படுத்துகிறான். எகிப்து சென்றவர்கள் அந்த உடலை நேரிலேயே பார்க்கலாம். 'குர்ஆன் கூறும் அத்தாட்சிகள்' என்ற சிடி யிலும் நாம் பார்த்திருக்கலாம்.

குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

Thursday, July 27, 2006

அறிவியல் அறிஞர்களின் வாக்குமூலங்கள்!

அறிவியல் அறிஞர்களின் வாக்குமூலங்கள்!

விஞ்ஞானிகளின் கருத்துக்களை கீழே தருகிறேன். இந்த கருத்துக்கள் யாவும்”This is the Truth” என்ற வீடியோ டேப்பிலிருந்து எடுக்கப்பட்டது. இனி அந்த விஞஞானிகளின் கருத்துக்களைப் பார்ப்போம்.

டாக்டர் T.V.N. பெர்சாத்!

இவர் உயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும்Professor of Pediatrics and Child Health, and Professor of Obstetrics, Gynecology and Reproductive Sciences at the University of Manitoba,Winnipeg,Manitoba,Canada. இவர் உயிரியல் துறையில் பணியாற்றியது 16 வருடங்கள். உயிரியல் துறையில் இவரை அறியாதவர் யாரும் இல்லை எனலாம். மேலும் இவர் அறிவியல் சம்பந்தமாக 22 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். கனடா நாட்டின் மிக உயரிய விருதான ஜே.சி.பி விருதையும் பெற்றுள்ளார். இனி இவர் குர்ஆனைப் பற்றி கூறுவதைக் கேட்போம்.

'என்னைக் கேட்டால் முகமது எல்லோரையும் போல சாதாரண மனிதராகத்தான் இருந்திருக்கிறார். அவருக்கு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது. எனவே மிகப் பெரும் இலக்கியங்களை அறிந்திருக்க வாய்ப்பும் இல்லை. மேலும் 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு சில படிக்காத பாமரன் சொல்லும் ஒரு சில கருத்துக்கள் ஆச்சரியமாக அறிவியலோடு ஒத்துப் போவது எல்லா நாட்டிலும் பார்க்கும் சாதாரண நடைமுறைதான். ஆனால் ஒருவர் சொன்ன அனைத்து கருத்துகளும், அறிவியலோடு எந்த விதத்திலும் மோதவில்லை என்பதை நினைத்து நான் ஆச்சரியப் பட்டு போகிறேன். அவருக்கு தெய்வீகத் தன்மை இருக்க வேண்டும். அல்லது அவர் குர்ஆன் என்று சொல்வது இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”

2) டாக்டர் ஜோ லீ சிம்ப்ஸன்!

“In every one of you, all components of your creation are collected together in your mothers womb by forty days …..”

-Saheeh Muslim 2643 , Bhuhary – 3208
-Saheeh Muslim 2645

இந்த இரண்டு நபி போதனையிலும் முதல் நாற்பது நாளில் கருவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறதோ அவை அனைத்தும் மிகத் துல்லியமாக விவரிக்கப் படுவதாக லீ சிம்ப்ஸன்அறிவிக்கிறார்.மருத்துவ கருத்தரங்கில் அவர் பேசும்போது :

'ஆகையால் இந்த ஹதீஸ்களும் அருமையான அறிவியலைப் பேசுகின்றன. மருத்துவம் படிக்காத, எழுதவும் படிக்கவும் தெரியாத ஒருவர் கருவின் வளர்ச்சியை வரிசையாக பட்டியலிடுவது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. எனக்கு முன்னால் இங்கு காலையில் பேசியவர்களின் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன். கருவின் வளர்ச்சிக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றாலும் அறிவியலை நடத்திச் செல்வதற்கு குர்ஆனும் ஒரு தூண்டுகோலாய் இருக்கிறது என்பதை மறுக்க முடியபது. இது போன்ற உண்மைகள் முகமது காலத்தில் சொல்லப்பட்டிருப்பதால் இவை அனைத்தும் இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு நானும் வருகிறேன்.'

டாக்டர் ஜோ லீ சிம்ப்ஸன் மகப்பேறு, அணுவியல் ஆகிய இரு துறைக்கும் தலைவராக பணியாற்றியவர்.மேலும் மகப்பேறு மருத்துவம், மனிதனின் ஜீன்கள் சம்பந்தமான படிப்பு, அணுவியல் போன்ற துறைகளில் பேராசிரியராக Baylor College Of Medicine, Hoston, Texas,USA யில் பணியாற்றுகிறார். Formerly, he was Professor of OB-Gyn and the chairman of the Department of OB- Gyn at the university of Tennessee, Memphis, USA. He was also the president of the American Fertility Society. He has received many awards, including the Association of Professors of Obstetrics and Gynecology Public Recognition Award in 1992.

3) டாக்டர் இ மார்ஸல் ஜான்ஸன்!

இவர் 200க்கும் அதிகமாக அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். 1981 ல் சவூதி அரேபியா தமாமில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தனது அறிக்கையை வாசிக்கும் போது :

'குர்ஆன் கருவியலின் வெளிப்புறத்தை மட்டும் சொல்லவில்லை. கருவின் உள்ளே நடக்கும் அனைத்து படித்தரங்களையும் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல், இன்றைய அறிவியல் உண்மைகளை அடித்துக் கூறுகிறது.ஒரு விஞ்ஞானி என்ற நிலையில் ஒன்றைப் பார்த்து உறுதி செய்து அதன் பிறகுதான் நம்பிக்கை வைப்பேன். மனிதனின் உடற்கூறுகளை நன்கு அறிந்தவன்.உயிரியல் துறையிலும் நன்கு தேர்ந்தவன். குர்ஆனின் மொழி பெயர்ப்பு எனக்கு அங்கிலத்தில் தரப் பட்டது. குர்ஆனிலிருந்து உதாரணங்களை நான் எடுப்பதற்கு முன் முகமதுவுடைய காலத்துக்கு நான் செல்கிறேன். என்னால் அவருடைய போதனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.குர்ஆன் முகமது நபியால் சொந்தமாக தன் கற்பனையில் சொல்லியிருக்க முடியாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.'

Dr e. Marshall Johnson is Professor Emeritus of Anatomy and Developmental Biology at Thomas Jefferson University, Philadelphia, Pennsylvania,USA. There for 22 years he was Professor of Anatomy, the chairman of the department of Anatomy, and the director of the Daniel Baugh Institute. He was also the president of the Teratology society.

4) டாக்டர் வில்லியம் ஹே!

டாக்டர் வில்லியம் ஹே கடல் அராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி.

'இந்த பழமை வாய்ந்த குர்ஆனின் உண்மைகளைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன். இது போன்ற உண்மைகள் முகமதுக்கு எப்படி கிடைத்தது என்பது எனக்கு மிகப் பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. குர்ஆனின் வரிகளை படிக்கும் போது வியப்பின் உச்சத்துக்கே சென்று விடுகிறேன்.இந்த குர்ஆன் ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்று தான் நான் நினைக்கிறேன்.'

Dr William W.Hay is a well known marine scientist. He is professor of Geological Sciences at the University of Colorado, Boulder, Colorado,USA. He was formerly the Dean of the Rosential School of Marine and Atmospheric Science at the university of Miami,Miami, Florida.

5)டாக்டர் ஜெரால்ட் சி. ஜோரிங்கர்

'நான் சில குர்ஆனின் வசனங்களைப் படிக்கும் போது மனிதனின் உருவாக்கம் எந்த அளவு துல்லியமாக விளக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப் படுகிறேன்.எந்த ஒரு வேறுபாடும் அறிவியலுக்கும் குர்ஆனுக்கும் என்னால் காண முடியவில்லை. அறிவியலையும் குர்ஆனையும் என்னால் பிரித்துப் பார்க்கவும் முடியவில்லை.அறிவியல் வார்த்தைகளைக் குர்ஆன் அழகாக கையாள்கிறது. பல வருடங்கள் சிரமப்பட்டு ஒரு அறிவியல் புத்தகத்தை ஒருவர்உண்டாக்கினால் எப்படி இருக்குமோ அது போன்ற ஒரு தோற்றத்தை குர்அன் எனக்குத் தருகிறது.

Dr. Gerald C. Goeringer is course Director and Associate Professor of Medical Embryology at the Department of cell Biology, school of Medicine, Georgetown University, Washington, DC, USA.

6) டாக்டர் யோசிஹிடே கோசாய்!

'வானவியலைப் பற்றி குர்ஆன் கூறும் உண்மைகளை கண்டு நான் பிரமிப்படைகிறேன். வானவியல் அறிஞர்களான எங்களைப் போன்றவர்கள் இந்த உலகத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் இதுவரை ஆராய்ந்திருக்கிறோம். இன்னும் கண்டு பிடிக்க வேண்டியவை எண்ணிலடங்கா! அப்படி கண்டு பிடிப்பதற்குக் கூட அரிய தொலை நோக்கு கருவிகள், அறிவியல் அறிவு போன்றவை அவசியம். இவை அனைத்தும் தனக்குத் தேவையில்லை என்பது போல் குர்ஆனின் உண்மைகள் அமைந்திருக்கின்றன. வருங்காலத்தில் மேலும் பல உண்மைகள் வானவியலைப் பற்றி அறிய குர்ஆன் உதவி புரியும் என்று நினைக்கிறேன்.'

Dr Yoshihide Kozai is Professor Emeritus at Tokyo University, Hongo, Tokyo,Japan, and was the Director of the National Astronomical Observatory, Mitaka, Tokyo, Japan.

7) பேராசிரியர் தேஜாதத் தேஜாசென்!

மூன்று வருடங்களுக்கு முன்பு தான் குர்ஆனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த கருத்தரங்கின் மூலம் பல உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். 1400 வருடங்களுக்கு முன்பே அனைத்து உண்மைகளும் குர்ஆனில் பதியப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன்.அறிவியலோடு எந்த வகையிலும் மோதாத ஒரு புனித நூலாக குர்ஆனைப் பார்க்கிறேன்.எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நபரால் இத்தகைய அறிவியல் உண்மைகளை கற்பனையில் கொண்டு வர முடியாது என்பதை ஒரு விஞ்ஞானி என்ற முறையில் ஒத்துக் கொள்கிறேன். இந்த குர்ஆனைக் கொடுத்தது நம்மையெல்லாம் படைத்த அந்த ஒரே இறைவன்தான் என்பதை உறுதி செய்கிறேன். நான் நினைக்கிறேன், நான் முஸ்லிமாக மாறுவதற்கு தருணம் இது தாள் என்று! 'லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்பதை உளமாற ஏற்று இஸ்லாமிய மார்க்கத்துக்குள் நுழைகிறேன். இந்த கருத்தரங்கினால் பல அறிவியல் விற்பன்னர்களைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இவை அனைத்திற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன்.'

Professor Tejatat Tejasen is the chairman of the Department of Anatomy at Chiang Mai University, Chiang Mai, Thailand. Previously he was the Dean of the Faculty Of Medicine at the same University.

Evidence from
“The Scientific Miracles in the Holy Quran”
“This is the Truth” Video Tape

Monday, July 24, 2006

ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குதல்!

ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குதல்!

நம்மூர் பத்திரிக்கைகளின் நம்பகத் தன்மை எந்த அளவு இருக்கிறது என்பதற்கு ஒரு செய்தியைப் பார்ப்போம்.

'நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பால் மாரியப்பனுக்கு எலக்ட்ரானிக் ஒயரகளுடன் கூடிய மர்மபார்சல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் விடிய விடிய சோதனை நடத்தினர்.

நெல்லை மாவட்டம் அம்பை நகர பா.ஜ.க தலைவராக இருப்பவர் பால் மாரியப்பன். வி.கே. புரம் மேலகாந்தி நகரில் வசிக்கிறார். சிவந்திபுரத்தில் டீக்கடை நடத்துகிறார்.

அப்பகுதியில் உள்ள கூரியர் ஆபீஸீக்கு சென்னையில் இருந்து நேற்று இரவு 7:30 க்குஒரு பார்சல் வந்தது. 15 கிலோ எடை இருந்தது. முழு முகவரி இல்லை. போன் நம்பர் மட்டும் இருந்தது.அது மார்யப்பன் வீட்டு நம்பர். போனில் தொடர்பு கொண்ட கூரியர் ஊழியர்கள் பார்சலை டீக்கடைக்கு அனுப்பி வைத்தனர். அனுப்புனர் முகவரியில் ரமேஷ், பல்லாவரம், சென்னை என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

பார்சலைப் பிரித்த மாரியப்பன், அதில் எலக்ட்ரானிக் கருவிகள் சில ஒயர்கள் இணைக்கப் பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். வி,கே.புரம் போலீஸ்ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றார்.

பார்சலை இன்ஸ்பெக்டர் செய்யது இப்றாகிம் பிரித்தார்.அதில் ஒரு எலக்ட்ரானிக் பொம்மை சிறிய கம்ப்யூட்டர் சாமான் இணைக்கப் பட்டிருந்தது. ஒர பையில் 'பாகிஸ்தான்' என்று உருத, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

அது வெடிக்கக் கூடிய பொருள் அல்ல என்று அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர். அதன் பிறகும் சந்தேகம் தீராத மாரியப்பன் நெல்லை எஸ்.பி ஆபீஸீக்கு போன் செய்தார். எஸ்.பி. அனந்த கமார் சோமானி உத்தரவின் பேரில் வெடி குண்டு நிபுணர்கள் ராஜன், சிவராஜன், தடவியல் நிபுணர் விஸ்வ முன்ன முகமது விரைந்தனர்.

இன்று அதிகாலை 1.15 -க்கு மெட்டல் டிடெக்டர் மூலம் பார்சலை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்தனர்.அந்த பார்சல் வேண்டாம் என்று மாரியப்பன் கூறியதால் அம்பலவாணபுரம் குயவன் பொத்தைக்கு எடுத்துச் சென்று தீ வைத்து கொளுத்தினர்.

இரண்டு வாரம் முன்பு மனித நேய பாசறை என்ற பெயரில் பா.ஜ.க. வை தாக்கி வி.கே.புரம் பகுதியில் பிட் நோட்டீஸ் விநியோகிக்கப் பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து பால் மாரியப்பன் தலைமையில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பால் மாரியப்பனை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்று தெரிய வந்தது. போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறார் மாரியப்பன்.

- 'தமிழ் முரசு' என்ற மாலைப் பத்ததிரிக்கையில் வந்த செய்தியைத்தான் நீங்கள் மேலே படித்தது.

பால் மாரியப்பனின் அண்ணன் துபாயில் இருக்கிறார். அவர் தன் தம்பி பால் மாரியப்பனுக்கு நவின கம்ப்யூட்டர் ஒன்றை அனுப்பி இருக்கின்றார். அந்தக் கம்ப்யூட்டர் பல்லாவரத்திலிருந்து அவர்களின் குடும்ப நண்பர் ரமேஷ் என்பவர் மூலம் பார்சலில் அனுப்பப் பட்டள்ளது.

பார்சலில் முகவரி தெளிவாகவே இருக்கின்றது. ஆனாலும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காவல் துறையையே ஒரு கலக்கு கலக்கி விட்டார்.இதனால் ஒரு வெளி நாட்டுக் கம்ப்யூட்டரையும் இழந்தார்.

இதைத்தான் நம் மாலைப் பத்திரிக்கையான தமிழ் முரசு பழியை இஸ்லாமிய அமைப்பின் மேல் போட நினைக்கிறது. சம்பந்தப் பட்ட அந்த அமைப்பு இப்பத்திரிக்கையின் மேல் தற்போது வழக்கு தொடர்ந்திருக்கிறது. இவர்களுக்கு எந்த வகையிலாவது இஸ்லாமியரின் பெயரை களங்கப் படுத்த வேண்டும். அது தான் குறிக்கோளும். ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குவது என்பது இதுதானோ!

Wednesday, July 19, 2006

கிஷோர் பட் - இப்படியும் ஒரு மனிதர்!

கிஷோர் பட் - இப்படியும் ஒரு மனிதர்!

பிசியான மும்பை நகரத்தில் தினமும் பரபரப்பாக ஓடியாடும் மக்களுக்கு யார் இருக்கிறார்கள் யார் செத்தார்கள் என்ற நின்று நினைத்துப் பார்க்கக் கூட நேரமோ அக்கறையோ இருப்பதில்லை. வழியில் பிணம் கிடந்தால் கூட அதைத் தாண்டி மின்சார ரயிலில் இடம் பிடிக்க ஓடுவார்கள். ஆனால் மும்பை பிசினஸ்மேனானகிஷோர் பட், வயது 51, என்பவருக்கு இதை எல்லாம் நினைக்க நேரமும் உதவ பணமும் இருக்கிறது.

இவர் நடத்தும் சப்னா ஆர்ட்ஸ் கேலரியில் நெடுங்காலத்திற்கு முன் இறந்தவர்களின் படங்கள் தொங்குகிறது.அவற்றின் நடுவே அமர்ந்திருக்கும் கிஷோரின் கண்கள் வீதியில்தான் இருக்கிறது. எந்த எமர்ஜென்ஸியையும் எதிர் கொள்ள கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது டெலிபோன்.

கிஷோர் காத்துக் கொண்டிருப்பது ஸ்டீல் பர்னிச்சர்கள் மற்றும் திரைச்சீலைகள் தரை விரிப்புகளைக் கேட்கும் இன்டீரியர் டெக்கரேட்டர்கள், கட்டடக் கலை நிபுணர்கள் போன்றோரின் அழைப்புகளுக்காக மட்டும் அல்ல. அனாதையாக கிடக்கும் பிணங்கள் பற்றி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மருத்துவ மனைகளிடமிருந்து தகவல் வந்தால் உதவவும் காத்துக் கொண்டிருக்கிறார். ஆப்ரிக்க நாட்டு போதை மருந்து அடிமைகளிலிருந்து எய்ட்ஸ் நோயாளிகள் விபத்துகளில் உயிரிழந்தோர் வரை பல பிரேதங்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தி இருக்கிறார்.எப்படி இவற்றை இவரால் செய்ய முடிகிறது?

'மனதும் உடலும் எனக்கு ஒத்துழைக்கிறது. இப்படி உதவுவதன் மூலம் என் மனதுக்கு ஆழ்ந்த அமைதி கிடைக்கிறது.' என்கிறார் பட்.

மும்பையில் மட்டும் கடந்த முப்பது ஆண்டுகளில் கிட்டத் தட்ட ஆயிரத்து இருநூறு உடல்களை எரித்திருக்கிறார்ஈ புதைத்திருக்கிறார் கிஷோர் பட். இதற்கு இவர் கணக்கு வைத்துக் கொண்டதில்லை. அதே போல உடல்களை புதைக்கவோ, எரியூட்டவோ ஆகும் செலவுக்கு பட் கணக்கும் பார்ப்பதில்லை. 'அதைப் பற்றி கவலைப் படாமல் என் கடமையை நான் செய்கிறேன்' என்கிறார் அவர். ஒரு பிணத்தை எரியூட்ட சுமார் ரூ ஆயிரம் செலவாகும். நகரில் இருக்கும் அரை டஜன் இடுகாட்டில் கடன் வசதியைக் கொடுத்திருக்கிறார்கள். தேவையான மத சடங்குகள் செய்த பிறகே அனாதைப் பிணங்களை எரியூட்டுகிறார். இந்துக்களின் பிரேதம் என்றால் மாலை போடுகிறார். கிறித்தவ முஸ்லிம் மதத்தவரின் சடலங்களுக்கு அவர்களது வழக்கப்படி புதைக்கிறார்.

கிஷோர் பட்டின் குடும்பத்தினரும் இவருக்கு அதரவாக இருக்கின்றனர்.பட்டின் அம்மாவுக்கு என்பது வயது. இருந்தும் நடு இரவில் போன் அழைப்புகள் வந்தால் அவரை அவசர அவசரமாக எழுப்புவார்.

பட்டுக்கு பிணத்துடனான சந்திப்பு 1968 -ல் முதன் முதலாக நடந்தது. அப்போது குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டு சூரத் படு சேதமடைந்திருந்தது. 17 வயதான பட் அப்போது மும்பை மகாலட்சுமி தியேட்டரில் செய்தித் தாள்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். ஒர பிசினஸ் மேன் குஜராத்துக்கு நிவாரண உதவிகளை மூன்று டிரக்குகளில் அனுப்பி அதை மேற் பார்வையிடும் பொறுப்பை பட்டிடம் ஒப்படைத்தார். உடனே பட் ரயிலேறினார். இறந்து கிடந்த கால்நடைகளுக்கு மத்தியில் மனிதப் பிணங்களும் கிடந்தது. இந்த சம்பவம் பட்டின் வாழ்க்கையையே மாற்றியது.

மும்பையில் 1993 மார்ச்சில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த போது சாலையோர வியாபாரி ஒருவர் மற்றும் அவரின் மகனின் சடலத்தைக் காணோம் என்று அந்த வியாபாரியின் உறவினர்கள் பட்டை அணுகினார்கள். அப்போது அவர் பல உடல்களைத் தாண்டி புரட்டிப் பார்க்க வேண்டியிருந்தது. முகத்திற்கு நேராக சாவைப் பார்த்ததும் அவரிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

'பிணத்திற்குப் போர்த்தும் துணியில் பணத்துக்கென பாக்கெட் இருக்காது. மரணம் லஞ்சம் கேட்பதில்லை.' என்கிறார் பட். இவ்வளவு நாட்கள் பிணங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால் சாவு பற்றிய பயம் இல்லை. பிணங்கள் மீது ஒரு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. 'அவை நன்றியுள்ளவை. அவை குறை சொல்லிக் கொண்டிருப்பதுமில்லை.' என்கிறார் பட். இறந்தோர் குடும்பத்தினருக்கும் உதவி செய்கிறார்.

பட்டின் சேவையைப் பாராட்டி பல விருதுகள் பாராட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. இருந்தாலும் ஒரு வெளிநாட்டு இந்திய முஸ்லிம் தனது உயிலில் பட்தான் தனது உடலைப் புதைக்க வேண்டும் என்றுஎழுதியிருந்ததைத்தான் தனது சேவைக்கான பெரிய அங்கீகாரம் என்று பட் கருதுகிறார். பிஸினஸில் வரும் லாபம் அவர் செய்யும் சேவைக்கே சரியாக இருக்கும் என்று நண்பர்கள் ஜோக் அடிப்பதுண்டு. அவரது தர்மத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோதனை வந்தது. மும்பை - புனே நெடுஞ்சாலையில் பயணிகளுக்கு ஹோட்டலும் விபத்துகளில் பாதிக்கப் பட்டவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் சர்வீஸீம் நடத்தலாம் என்று சிலர் யோசனை சொன்னார்கள். ஆனால் ஹோட்டலில் மதுவும் மாமிசமும் இல்லாததால் பிசினஸ் படுத்து விட்டது. பிறகு மீண்டும் சப்னா ஆர்ட்ஸ் காலரிக்கே திரும்பி விட்டார்.பிணத்துக்கு சேவை செய்யும் பெரிய மனசுக்காரரும் பிழைக்கணும் இல்லையா?

- நன்றி இந்தியா டுடே

பழைய செய்திதான்! படித்தவுடன் மனதை என்னவோ செய்தது. சொந்த பிள்ளைகளே வயதான தாய் தகப்பனை சரியாக கவனிக்காமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை ஆஸ்ரமத்திலும் விட்டு விடடு தங்கள் வேலைகளை பார்த்து வரும் போதுசெத்த பிணங்களின் மேல் பாசத்தைப் பொழியும் கிஷோர் பட்டைப் போன்றவர்கள் உண்மையில் மனிதருள் மாணிக்கங்களே!

என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்

Saturday, July 15, 2006

குண்டு வெடிப்பு ! போலீசாரின் எதிர்பார்த்த தீர்ப்பு!

குண்டு வெடிப்பு ! போலீசாரின் எதிர்பார்த்த தீர்ப்பு!

பம்பாய் குண்டு வெடிப்பை ஒட்டி நாம் என்ன அனைவரும் எதிர் பார்த்தோமோ அது போன்றதொரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் போலீசார்.வழக்கப்படி இருநூறு சிம் மாணவர்களை விசாரணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளது காவல்துறை. மும்பை காவல் துறையின் லடசணத்தைப் பற்றி நான் ஏற்கெனவே எழுதியும் இருக்கிறேன். என்கவுண்டருக்கு ஆட்கள் தேவைப் பட்டால் என்னிடம் பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று தயாநாயக் என்ற போலீஸ் அதிகாரி சர்வ சாதாரணமாக குஜராத் போலீசாரிடம் கேட்கும் நிலையில்தான் மும்பை காவல்துறையின் லட்சணம் இருக்கிறது.அங்கு நீக்கமற நிறைந்திருக்கும் இந்துத்வாவாதிகள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விசாரணைக் கைதியாக்கி உள்ளே தள்ளியிருக்கிறார்கள். இன்னும் இரண்டு மூன்று நாளில் நூறு பேருக்கு மேல் வழக்கம் போல் வெளியாகி விடுவார்கள். பாக்கி உள்ளவர்களில் பத்து பேரை அவர்களாகவே தேர்வு செய்து அடித்து உதைத்து சித்ரவதை செய்து அவர்களிடமிருந்து 'நான்தான் குண்டு வைத்தேன்' என்ற வாக்கு மூலத்தையும் வாங்கி விடுவார்கள். ஜெய் ஹிந்த்!

ஒனறை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது குண்டு வைத்து இந்தியாவை பிரச்னைக்குள்ளாக்க முஸ்லிம்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? அவர்களுக்கு பாதுகாப்பு என்று நினைக்கும் காங்கிரஸ் ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிறது. சமீபகாலமாக எந்த கலவரங்களும் நடைபெறவில்லை. முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு அவசியம் என்று அரசும் சிந்திக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் எந்த முஸ்லிமாவது இது போன்று அதுவும் அப்பாவிகளை இலக்காக்கி குண்டு வைப்பதற்கு அவர்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? இதை எல்லாம் விரும்பாத இந்துத்வவாதிகளின் காரியமாகக் கூட இருக்கலாமே என்ற ரீதியில் ஏன் போலீஸ் சிந்திக்க மறுக்கிறது?

ஒரு விஷயம் பாருங்கள். குண்டு வைத்த நபர்கள் ரெயில்வே ஸ்டேஷனில் நின்று மற்றவர்கள் கேட்கும் விதமாக 'பையை வைத்தாகி விட்டது' என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்களாம். அந்த நபர் தநதத தகவலின் அடிப்படையில் கம்ப்யூட்டர் உதவி கொண்டு போட்டோக்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். என்ன கூத்து சார்?குண்டு வைப்பவன் யாராவது பொது இடத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நின்று இப்படி பேசியிருப்பானா?இதைக் கூட சிந்திக்க வேண்டாமா நம் காவல் துறை.

பிறகு யார்தான் குண்டு வைத்திருப்பார்கள்? நான் சந்தேகப்படும் நான்கு குழுக்களை கீழே பட்டியலிடுகிறேன். இவர்களில் ஒருவர்தான் கண்டிப்பாக குண்டு வைத்திருக்க முடியும். ஒழுங்கான விசாரணை நடைபெற்றால் குற்றவாளிகள் பிடிபட சாத்தியம் உண்டு.

1) பாகிஸ்தான்

இது ஒரு நாடு மற்றொரு நாட்டை முன்னேற விடாமல் தடுக்க நினைக்கும் அரசியல் சதுரங்கம். நம் நாடு எல்லாத் துறையிலும் அதி வேக முன்னேற்றம் அடைவதைக் காண சகிக்காமல் பாகிஸ்தான் இந்த பாதக செயலை செய்திருக்கலாம். அப்படி நிரூபணம் ஆனால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியைக் நம் இந்திய ராணுவம் கொடுத்து அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

2) தீவிரவாதிகள்!

தனி நாடு கோரி போராடி வரும் காஷ்மீர் தீவிரவாதிகள், உல்பா, நக்ஸலைட்டுகள் என்று நாட்டில் இருக்கும் அனைத்து தீவிரவாத கும்பலின் மீதும் ஒரு கண் வைத்து, இவர்களில் யார் உண்மையிலேயே இந்த மாபாதக செயலை செய்தது என்று விசாரணையை முடுக்கி விட வேண்டும்.உண்மை குற்றவாளிகள் பிடிபடும் பட்சத்தில் அவர்களை தூக்கில் ஏற்றி இது போல் அப்பாவிகளை இலக்காக்குபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

3) சிவசேனா!

பால்தாக்கரேயின் மனைவி நாட்டுக்காக என்ன செய்து விட்டார்? அவருக்கு எதற்கு சிலை? அந்த சிலையில் யாரோ தார் பூசி விட்டார்களாம். அம்பேத்கார் இயக்கத்துக்கும் சிவசேனாவுக்கும் ஜென்ம பகை. அவர்களில் கூட யாராவது ஒருவர் செய்திருக்கலாம். அல்லது சிவசேனாவின் கோஷ்டிப் பூசல் நமக்கு தெரியும். அவர்களிலேயே கூட ஒருவர் இச் செயலை செய்திருக்கலாம். இதைக் காரணமாக வைத்து பம்பாயை ஸ்தம்பிக்கச் செய்தது சிவசேனா. இரண்டு பேர் உயிரையும் இழந்தனர். தற்போது ஆட்சியிலும் இல்லை. பழையபடி இந்துக்களின் ஓட்டையும் சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும். இதற்கெல்லாம் ஒரே வழி குண்டு வைத்து பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு பிறகு கலவரத்தை உண்டு பண்ணி முஸ்லிம்களின் சொத்தையும், உயிரையும் எடுப்பது. எனவே இந்த வகையிலும் போலீசார் சிந்திக்க வேண்டும்.

4) பி.ஜே.பி

தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் இந்த நாசகார கும்பல். இரண்டு எம. பி யாயிருந்தவர்கள் பிறகு எப்படி ஆட்சியைப் பிடித்தார்கள்? பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று அண்ட புளுகை அவிழ்த்து விட்டு நாடு முழுக்க ர(த்)த யாத்திரையை நடத்தி இந்துக்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு அதன் மூலம் ஆட்சியைப் பிடித்தவர்கள் தானே இந்த பி.ஜே.யினர்.பிறகு நாட்டுப்பற்றுக் கொண்ட ஒரே இயக்கம் நாங்கள் தான் என்று கொஞ்கம் கூட வெட்கமில்லாமல் பேசவும் செய்வார்கள்.

இதற்கு முன் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பானர்ஜியின் அறிக்கை கூறுவதென்ன? போலீசாரின் அறிக்கை பெட்ரோல் கேண்களில் கொண்டு வரப் பட்டு பெட்டியின் மீது முஸ்லிம்கள் எறிந்து தீ வைத்தனர் என்று. ஆனால் பானர்ஜி அறிக்கையோ 'கர சேவகர்கள் ரயிலின் உள்ளே ஸ்டவ் போன்ற சாதனங்களால் சமையல் செய்து வந்தனர்.அவற்றிலிருந்து பரவிய தீயே அந்த பெட்டி எறிய காரணமானது. வெளியிலிருந்து எந்த முயற்சியும் எடுக்கப் படவில்லை. இது ஒரு விபத்து'. என்று அறிக்கை அளித்திருக்கிறாரே! இதைக் காரணமாக வைத்து முஸ்லிம்களை கருவறுத்த நரேந்திர மோடி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அவர் நினைத்தபடியே ஹிந்துக்களின் ஓட்டைப் பெற்று மறுபடியும் ஆடசியைப் பிடித்து விட்டார்.

அதே போன்ற சூழ்நிலைதான் தற்போதும். காங்கிரஸ் மேலும் மேலும் நல்ல பெயர் எடுத்து வருகிறது.அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி பி.ஜே.பி யின் கையை விட்டுப் போய் விட்டது. முஸ்லிம்களுக்கு வேறு இட ஒதுக்கீடு பற்றி பேச்சு அடிபடுகிறது. இதை எல்லாம் முறியடிக்க ஒரே வழி குண்டு வைத்து பழியை முஸ்லிம்கள் மேல் போட்டால், பிறகென்ன இந்துக்கள் ஓட்டைப் பெறலாம். ஆட்சியிலும் அமரலாம். இந்த ரிதியிலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட வேண்டும்.

இந்த விசாரணை ஐந்து பேர் கொண்ட குழுவாக இருந்து இதில் அனைத்து மதத்தவரும் இடம் பெற்று பாரமட்சமற்ற அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும். சி.பி.ஐ யின் விசாரணைக்கும் உட்படுத்த வேண்டும். இதன்படி அறிக்கை வெளியாகுமானால் தற்போது கைதாகி இருக்கும் கல்லூரி மாணவர்கள் விடுதலை செய்யப் படுவர்.உண்மை குற்றவாளிகள் கூண்டிலேற்றப் படுவர். இப்படி செய்யாமல் காவல் துறையின் அறிக்கையை இந்த அரசு நம்புமானால் அப்பாவிகள் சிறைவாசம் அனுபவிக்கவும், குற்றவாளிகள் வெளியில் உலா வரவும் அரசே வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகி விடும்.

நல்லவேளை! நரேந்திர மோடி, சிவசேனா,பி.ஜே.பி போன்ற ஒரு பாசிச அரசு தற்போது மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இல்லை. இதனால் குண்டு வெடிப்புக்குப் பிறகு வழக்கமாக முஸ்லிம்களை கொல்வது தடுக்கப் பட்டுள்து. இந்துத்வா வாதிகளின் ஆசையிலும் மண் விழுந்து விட்டது. அந்த வகையில் பொறுமை காத்த மஹாராஷ்டிர மக்களை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

எது எப்படியோ! உண்மைக் குற்றவாளிகள் சமூகத்தின் முன் நிறுத்தப் பட்டு தூக்கில் இடப் பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் சாந்தியும் சமாதானமும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தித்தவனாக!

என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்

Wednesday, July 12, 2006

மற்றுமொரு குண்டு வெடிப்பு!

மற்றுமொரு குண்டு வெடிப்பு!

இந்தியர்களை மோத விட்டு குளிர்காய நினைக்கும் கருங்காலிகளின் மற்றுமொரு தாக்குதல் நேற்றைய மும்பாய் குண்டு வெடிப்பு! எத்தனை வயோதிகர்கள், குழந்தைகள், பெண்கள் ரத்தம் தோய்ந்த முகத்துடன் செல்வதைப் பார்க்கும் போது குண்டு வைத்தவர்கள் மனிதப் பிறவிகள் தானா என்று சந்தேகம் வருகிறது. தங்களின் குடும்பத்தில் இது போன்ற இழப்புகளை சந்தித்தால் வலி என்னவென்று அவர்களுக்குப் புரியும்.

எட்டு இடங்களில் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள். நம் உளவுத் துறை என்ன செய்கிறது? மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் போதிய பாதுகாப்பை ஏன் ஏற்படுத்தவில்லை? அரசியல் காழ்ப்புணர்ச்சியா? மத தீவிரவாதமா? வல்லராச நினைக்கும் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் மற்ற நாடுகளின் சூழ்ச்சியா? பாகிஸ்தானின் வேலையா? முஸ்லிம்களை சிக்க வைக்க சிவசேனா செய்த சூழ்ச்சியா? போன்ற கோணங்களில் விசாரணை முடுக்கி விடப் பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.அந்தக் கயவர்களை தூக்கிலும் ஏற்ற வேண்டும்.

சொந்தங்களை இழந்து சோகத்தில் இருக்கும் நம் இந்திய சகோதர சகோதரிகளுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Monday, July 10, 2006

எனக்கு பிடித்த ஆறு!

எனக்கு பிடித்த ஆறு!

எல்லோரும் 'எனக்கு பிடித்த ஆறு' என்ற தலைப்பில் கலக்கி விட்டீர்கள். திரு கோவி கண்ணனும், திரு கால்கரி சிவாவும் கூட என்னை அழைத்திருந்தார்கள். இருவரின் அழைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பற்றிய பதிவு போடும் அளவுக்கு வயதிலோ, அனுபவத்திலோ பெரியவன் அல்ல என்பதுதான் என் தயக்கத்துக்கு முதல் காரணம். கோவிக் கண்ணன் திரும்பவும் ஞாபகப் படுத்தியதால் இன்று பதிவு போட்டு விடுவது என்று முடிவு செய்து அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டேன். இனி எனக்குப் பிடித்த ஆறுக்குள் செல்வோமா!

எனக்கு பிடித்த ஆறு எழத்தாளர்கள்!

1) தமிழ்வாணன்
2) பி.ஜெய்னுல்லாபுதீன்
3) சுஜாதா
4) அப்துல் ரகுமான்
5) கல்கி
6) மதன்

பிடித்த ஆறு உணவு வகைகள்

1) தயிர் சாதம் - ஊறுகாய்
2) தேங்காய்ப் பால் சாதம் - மீன் குழம்பு
3) புலவ் - குருமா
4) கப்ஸா(அரேபிய உணவு)
5) புரோஸ்டட் சிக்கன்
6) தமீஸ் - பாயா

எனக்கு பிடித்த ஆறு பொழுது போக்குகள்

1) கேரம்
2) பால் பேட்மிண்டன்
3) புத்தகங்கள்
4) இணையம்
5) நண்பர்கள்
6) ஆன்மீகம்

எனக்குப் பிடித்த ஆறு இடங்கள்!

1) நான் பிறந்த மண்
2) மெக்காவில் இருக்கும் கஃபா
3) தொங்கு பாலம் (மலேசியா)
4) ஊட்டி, கொடைக்கானல்
5) பெங்களூர், மைசூர்
6) குற்றாலம்

எனக்கு பிடித்த ஆறு ஆசிரியர்கள்

1) சரோஜினி டீச்சர்
2) மீனாட்ஷி டீச்சர்
3) நஜீர் அகமது (கணக்கு)
4) ராமலிங்கம் (என்சி.சி)
5) சுலைமான் (உடற்பயிற்சி)
6) திருநாவுக்கரசு (தமிழ்)

எனக்குப் பிடித்த ஆறு தலைவர்கள்

1) காந்தி
2) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
3) பெரியார்
4) அம்பேத்கார்
5) யாசிர் அராபத்
6) முல்லா உமர்

முல்லா உமரை சேர்த்தது ஆச்சரியமாக இருக்கலாம். உசாமா பின் லாடனை தரச் சொல்லி புஷ் கேட்கிறார். இல்லை என்றால் கூட்டணி படைகளோடு சேர்ந்து ஆப்கானிஷ்தானின் ஆட்சியை அகற்றுவோம் என்றும் மிரட்டல் விடப் படுகிறது. அதற்கு முல்லா உமர் கொடுத்த பதில் 'இரட்டை கோபுரத்தை தகர்த்தது பின் லேடன் ஆட்கள்தான் என்பதற்குஆதாரத்தைக் கொடுங்கள். நாங்கள் பின் லேடனை ஒப்படைக்கிறோம்' என்பது. ஆனால் அமெரிக்காவோ மௌனம் சாதித்தது.இன்று வரை செப்டம்பர் 11 நிகழ்வுக்கு யார் காரணம் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையில் தான் அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்காவை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்ப நினைத்த இஸ்ரேலின் சதி என்ற வாதத்தையும் நாம் மறுக்க முடியாது. ஏனெனில் அன்றைய தினம் இரட்டை கோபுரத்தில் வேலை செய்து வந்து 5000 இஸ்ரேலியர் அன்று விடுப்பு எடுத்தது இந்த சந்தேகத்தை மேலும் அதிகமாக்குகிறது. தன்னுடைய ஆட்சி பறிபோகும் என்று தெரிந்திருந்தும் தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த ஒருவரை அநியாயமாக ஒப்படைப்பதற்கு முல்லா உமர் மசியவில்லை. எதிர்ப் பார்த்தது போல் ஆட்சியையும் இழந்தார். இன்று காடுகளில் வாழ்க்கையை ஓட்டுகிறார். எனவே தான் என் மதிப்பில் முல்லா உமர் உயர்ந்து நிற்கிறார். அதேசமயம் தாலிபான்கள் பெயரில் அப்பாவிகள் கொல்லப் படுவதை எதிர்ப்பதில் முதல் ஆள் நான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நான் அடிக்கடி பார்வையிடும் ஆறு வலைப் பதிவுகள்

1) காசி
2) தங்கமணி
3) முத்து தமிழினி
4) நல்லடியார்
5) ரோசா வசந்த்
6) மோகன்தாஸ்

இது அல்லாமல் இன்னும் எத்தனையோ வலைப்பதிவுகள் இருக்கின்றன. குறிப்பாக அப்துல் குத்தூஸ், கால்கரி சிவா, ம்யூஸ், வஹ்ஹாபி, விடாது கருப்பு, கோவி கண்ணன், மஹேஸ் சிறில் அலெக்ஸ்டோண்டு ராகவன் போன்ற வர்களைச் சொல்லலாம். அனைத்தையும் படிப்பேன். ஆனால் அதிகமாக பின்னூட்டம் இடுவதில்லை. காரணம் என் வேலை. அடுத்து வேலையினால் எழுந்த களைப்பு. திரு கோவிக் கண்ணன் தனது பதிவில் நாகூர் தர்காவைப் பற்றி கேட்டிருந்ததற்கு பதில் எழுதுவோம் என்று நினைத்து இன்று வரை அதற்கு நேரம் கிடைக்காமல் தள்ளிப் போடுகிறேன். எனவே அதிகம் பின்னூட்டம் இடாததை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

எனக்குப் பிடித்த ஆறு திரைப் படங்கள்
(தமிழனாக பிறந்து விட்டு இந்தத் துறையை தொடாமல் இருந்தால் எப்படி? அதான் ஹி...ஹி....ஹி)

1) கௌரவம்
2) சலங்கை ஒலி
3) சிந்து பைரவி
4) வேதம் புதிது
5) இந்தியன்
6) டைட்டானிக்

கௌரவம் படத்தில் ரஜினிகாந்தாகவும், கண்ணனாகவும் நடித்து இரு வேடங்களையும் செய்தது ஒருவர் தான் என்பதை நம்புவது சற்று கடினமாகவே இருக்கும். பிறவிக் கலைஞனான சிவாஜியை நம் நாடு சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

எனக்குப் பிடித்த ஆறு பாடல்கள்

1) ஏழு ஸ்வரங்களுக்குள் (வாணி ஜெயராம்)
2) ஏ... துன்யா... (ஹிந்தி முகமது ரஃபி)
3) சின்னப் பயலே.. சின்னப் பயலே! (டி.எம்.எஸ்)
4) நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு (டி.எம்.எஸ்)
5) என்ன சொல்லப் போகிறாய் (சங்கர் மகா தேவன்)
6) கொடியிலே மல்லிகைப பூ (ஜெயச் சந்திரன்)

படிக்கும் காலங்களில் பாட நேரம் போக மற்ற நேரங்களில் என்னைச் சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும். டெஸ்கின் மேல் நான் தாளம் அடித்து பாடுவதைக் கேட்கத்தான். ஏசுதாஸின் பாடல்களை தாளம் தப்பாமல் பாடி நண்பர்களிடம் பாராட்டுப் பெறுவது வழக்கம்.

எனக்குப் பிடித்த ஆறு இசைக் கலைஞர்கள்

1) ஏ.ஆர்.ரஹ்மான்
2) இளையராஜா
3) கே.ஜே. ஏசுதாஸ்
4) ஹரிஹரன்
5) நுஸ்ரத் பதே அலி கான்
6) பங்கஜ்தாஸ் (கஜல்)

இன்றும் ஆச்சரியத்தோடு பார்க்கும் ஆறு விஷயங்கள்!

1)சூரியனும்,பூமியும், மற்ற பிற கோள்களும் ஒன்றோடொன்று மோதாமல் அதனதன் பாதையில் சுழன்று வருவது.
2)கையடக்கம் உள்ள ஒரு பொருளில் கோடிக்கணக்கான செய்திகளை சேமித்து வைக்கும் கணிணியின் சூட்சுமம்.
3)மேலே பருந்து வட்டமடித்தவுடன் தன் குஞ்சுகளை தன் இறக்கைக்குள் ஒளித்து வைக்கும் கோழி போன்ற பறவையினங்களின் தாய்மைத்துவம்.
4)நம் கண் முன்னே பல கோடீஸ்வரர்கள் இறந்தவுடன் ஆறடி மண்ணுக்குள் புதைக்கப் பட்டும், மனிதன் பணம் சேர்ப்பதற்கு இலஞ்சம், கொலை, கொள்ளை போன்ற வழிகளை நாடுவது.
5)செல்வந்தனை புதைத்த மறுநாளே அவன் விட்டுச் சென்ற சொத்துக்களுக்காக அடிதடியில் இறங்கும் சொந்த பந்தங்கள்.
6) மனிதனின் உடல் உறுப்புக்களை அவன் தேவைக்கேற்ப அதனதன் இடத்தில் பொருத்திய அந்த இறைவனின் படைப்பாற்றலை. உதாரணத்திற்கு நாம் சாப்பிட உபயோகிக்கும் வாய்ப் பகுதி முதுகுக்குப் பின்னால் இருந்திருந்தால் அல்லது பரிணாமத் தத்துவத்தின்படி கைகளே இல்லாமல் பரிணாமம் அடைந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Saturday, July 08, 2006

குர்ஆன் பைபிளைத் தழுவியதா? - சிறு விளக்கம்

குர்ஆன் பைபிளைத் தழுவியதா? - சிறு விளக்கம்

மேலை நாட்டவர்களில் பல பேர் குர்ஆனும் பைபிளும் ஒரு சில விஷயங்களில் ஒத்துப் போவதை வைத்து, முகமது நபி பைபிளைக் கற்றுக கொண்டுதான் குர்ஆன் என்று கூறுகிறார் என்று சொல்கின்றனர். அதற்கு உதாரணமாக ஒரு சிலரையும் கூறுகின்றனர். அவர்கள் யார் என்பதையும், இந்த கூற்று எத்தகைய இட்டுக் கட்டல் என்பதையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. முகமது நபி அவரின் மனைவி ஹத்தீஜாவின் உறவினரான வரகா என்பவரிடமிருந்து குர்ஆனைக் கற்றுக் கொண்டார்.

முகமது நபியின் மாற்று மதத்தவர்களின் தொடர்பு என்று பார்த்தால் குர்ஆன் இறக்கப் படுவதற்கு முன்பு ஒரு சிலரே. மேலே சொன்ன வரகா என்பவரை ஒரு சில தினங்கள் தான் பார்த்து பேசி இருக்கிறார். ஒரு முறை குர்ஆன் அருளப் படுவதற்கு முன் ஒரு நாள் காபாவில் முகமது நபியை அழைத்து அவரின் நெற்றியில் முத்தமிட்டுள்ளார். அடுத்து குர்ஆன் அருளப்பட்ட அன்று முகமது நபி வரகாவை சென்று பார்த்து நடந்த விபரங்களைக் கூறியுள்ளார்.வரகாவுக்கு ஓரளவு பைபிளைப் பற்றிய ஞானம் இருந்திருக்கிறது. அதிலும் இவர் கண் தெரியாதவர்.குர்ஆன் அருளப்பட துவங்கிய மூன்று வருடங்களில் வரகா இறந்து விடுகிறார். அதன் பிறகும் ஒவ்வொரு அத்தியாயமாக 23 வருடங்கள் குர்ஆன் அருளப் பட்டது. எனவே இது விஷயத்தில் வரகாவை சம்பத்தப் படுத்துவது பிழையான செய்தியே.

2. முகமது குர்ஆனை கிறிஸ்தவரான ரோமாபுரியைச் சேர்ந்த கொல்லன் ஒருவரிடமிருந்து கற்றுக் கொண்டார்.

முகமது நபி இந்த கிறிஸ்தவ கொல்லரை ஒரு சில சமயங்களில் மாத்திரமே பார்த்து பேசி இருக்கிறார். இப்படி இட்டுக் கட்டுவதை மறுக்கும் முகமாகவே அதே குர்ஆனில் ஒரு வசனம் வருகிறது.

'ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்' என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி. -குர்ஆன் 16;103

எப்படி ஒரு மனிதரின் தாய் மொழி வேறாக இருக்க, அதிலும் சில வார்த்தைகளே அரபியில் பேசத் தெரிந்த ஒரு கொல்லரால் இலக்கண சுத்தமான, அழகிய உயர் தரமான இலக்கிய நடையில் பாமரர்க்கும் விளங்கும் விதமாக கொடுக்க முடியும்.

3. முகமது நபி யூத கிறிஸ்தவ மக்களிடம் அதிகம் நட்பு கொண்டு பைபிளை கற்றுக் கொண்டு குர்ஆனை உண்டு பண்ணினார்.

மதினாவில் தங்கியிருந்த யூத கிறிஸ்தவ மக்களை முகமது நபி அடிக்கடி சந்திதிதது உண்மைதான். எதற்காக? அவர்களுக்கு குர்ஆனின் வசனங்களை தெளிவு படுத்துவதற்காக! பல தெய்வ கோட்பாடு உடைய அவர்களை ஒரே தெய்வ வழிபாட்டுக்கு கொண்டு வருவதற்காக மார்க்க போதகர் என்ற ரீதியில் அடிக்கடி சந்திதிதுள்ளார்.

4. வெளியூர்களுக்கு சென்ற போது அங்குள்ள கிறிஸ்தவ யூதர்களை சந்தித்து விளக்கங்களைப் பெற்று குர்ஆனைத் தந்தார்.

இதுவும் தவறு. அனைத்து வரலாறுகளும் தற்போது பாதுகாக்கப் பட்டுள்ளது. முகமது நபி குர்ஆன் அருளப்படுவதற்கு முன்பு மூன்று முறை தான் வெளியூர்களுக்கு சென்றுள்ளார்.

அ.ஒன்பது வயதாக இருக்கும் போது அவருடைய தாய் ஆமினாவுடன் மதினா நகருக்கு சென்றுள்ளார்.

ஆ.ஒன்பதிலிருந்து பன்னிரண்டு வயதுக்குள் ஒரு முறைஉறவினர் அபூ தாலிபுடன் வியாபார நிமித்தமாக சிரியா சென்றுள்ளார்.

இ.இருபத்தைந்து வயதில் கதீஜா அம்மையாரின் வியாபார கூட்டத்தில் ஒரு முறை சிரியா சென்றுள்ளார்.

மூன்று முறையே வெளியூர் பயணத்தில் அதுவும் வியாபார நிமித்தமாக செல்லும் ஒருவர் எதைக் கற்றுக் கொள்ள முடியும்? முகமது நபியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். கிறிஸ்தவர்கள் சொல்வது போல் யாரையும் பார்த்து பேசி எதையும் கற்றுக் கொண்டிருந்தால் அது வரலாற்றில் பதியப் பட்டிருக்கும். அப்படி எந்த ஒரு குறிப்பும் காணப்பட வில்லை.

மேலும் குறைஷிகளில் மிகவும் திறமை வாய்ந்த அறிவாளிகளில் பல பேர்இஸ்லாத்தை உடன் ஏற்றுக் கொண்டனர்.அவர்களில் ஒருவருக்காவது இது போன்று யூத கிறிஸ்தவர்களிடம் இருந்து குர்ஆனைக் கற்றுக் கொண்டார் என்று தெரிந்திருந்தால் அதை உலகுக்கு தெரிவித்து இருப்பார்கள். இஸ்லாத்தை விட்டும் சென்றிருப்பார்கள். அப்படி எதுவும் நிகழவில்லை.

முகமது நபியின் எதிரிகள் அபூஜஹீல் போன்றவர்கள் முகமது நபியை கூர்ந்து கவனித்து வந்தனர்.எப்படியும் முகமது நபியை கவிழ்க்க பல திட்டங்களும் தீட்டினர். ஆனால் அனைத்தும் இவர் உண்மையாளர் என்பதால் தோல்வியில் முடிந்தது.

முகமது நபி வாழ்ந்த காலத்தில் பைபிள் அரபி மொழியில் மொழி மாற்றம் செய்யப் பட வில்லை. பழைய ஏற்பாடு முதன் முதலில் அரபியில் வந்தது முகமது நபி இறந்து 250 வருடங்களுக்குப் பிறகே! புதிய ஏற்பாடு அரபியில் எர்பினியஸால் 1616 ல் தான் வெளியிடப் பட்டது. அதாவது முகமது நபி இறந்து 1000 வருடத்துக்குப் பிறகு அரபுலகுக்கு கிடைத்தது.

5. குர்ஆனும் பைபிளும் ஒன்று போல் இருக்கிறதே!

முதலில் குர்ஆன் என்பது கடைசியாகவும் இறுதியாகவும் இறக்கப் படட வேதம் தானே ஒழிய இதற்கு முன்னும் பல நபிகள் பல வேதங்கள் வந்துள்ளதை குர்ஆன் மெய்ப்பிக்கிறது. மோசேவுக்கு அருளப் பட்டதையும், ஆப்ரஹாமுக்கு அருளப் பட்டதையும் , தாவீதுக்கு அருளப்பட்டதையும் மேலும் ஏசுவுக்கு அருளப் பட்டதையும் முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும். இவை அனைத்தையும் அனுப்பியது ஒரே இறைவன்தான். எனவே தான் பைபிளில் உள்ள பல வரலாறுகள் குர்ஆனிலும் வந்துள்ளது. பல வரலாறுகள் சில மாறுபாடுகளோடும் வந்துள்ளன. மாறுபாடு வருவதற்கு காரணம் ஏசு உபதேசித்த பைபிள் தற்போது உலகில் இல்லை. ஏசுவுக்கு பிறகு வந்தவர்களால் எழுதப் பட்ட வரலாறுகள் தான் தற்போது நம் கையில் இருக்கும் பைபிள்.ஏசுவின் மரணச் செய்தியும் பைபிளில் சேர்ந்தே வருவதை வைத்து இதை நாம் அறியலாம்.எனவே தான் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் குர்ஆனிலும் பைபிளிலும் காணப் படுகின்றன. எந்த எந்த இடங்களில் எல்லாம் மாற்றங்கள், ஒற்றுமைகள் இரண்டிலும் காணப்படுகின்றன என்பதை நேரம் கிடைக்கும் போது பார்ப்போம். இறைவன் நாடினால....

Sunday, July 02, 2006

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - ஆறு

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - ஆறு

இஸ்லாத்தின் அய்ந்து முக்கிய கடமைகளில் ஒன்று தொழுகை. இதைப் பற்றி குர்ஆன் பின் வருமாறு கூறுகிறது :

'முகம்மதே! வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக!தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். இறைவனை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை இறைவன் அறிவான்.' - குர.ஆன் 29 : 45

தொழுகை மனிதர்களை தவறான வழியிலிருந்து மீட்கும் என்று இறைவன் கூறுகிறான். மனிதனை படைத்ததன் நோக்கமே இறைவனை வணங்குவதற்காக என்று வேறொரு இடத்தில் இறைவன் கூறுகிறான். இந்த தொழுகை விஷயத்தில் இஸ்லாம்,இந்து என்ற இந்த இரண்டு மதங்களுக்கிடையேயான ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

முஸ்லிம்களின் தொழுகையில் 'ஸூஜூது' என்ற நிலை உள்ளது. அதாவது மண்டியிட்டுதலையை பூமியில் வைக்கும் நிலை தொழுகையில் உண்டு. இந்த நிலையில் தன்னையே மனிதன் இறைவனிடம் அர்ப்பணிப்பதால் அந்த நேரத்தில் கேட்கப் படும் பிரார்த்தனைகளை இறைவன் உடன் அங்கீகரிக்கிறான் என்று முகமது நபியின் போதனை நமக்கு விளக்குகிறது. இந்த நிலையில்தான் பணக்காரனின் தலை ஏழையின் கால்களில் உரசும். இஸ்லாத்துக்கு வந்த ஒரு பிராமணின் தலை அவருக்கு முன் நிற்கும் இஸ்லாமான தலித்தின் கால்களில் உரசும். அதேபோல் வெள்ளையனின் தலையும் ஆப்ரிக்காவிலிருந்து வந்த கருப்பரின் கால்களில் உரசும். ஹஜ்ஜூக்கு வரும் ஒவ்வொரு நபரும் இதை கண் கூடாக பார்க்கலாம். சவூதி தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு நாளும் ஒளி பரப்புவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல வாழ்நாள் முழுவதும் இந்த பயிற்ச்சியை ஒவ்வொரு நாளும் அய்ந்து வேளை முஸ்லிம்கள் எடுக்கின்றனர். எனவே தான் முஸ்லிம்களிடத்தில் தீண்டாமை அறவே ஒழிக்கப் பட்டிருக்கிறது.

இதே நிலை இந்து மதத்திலும் உண்டு. இறைவனுக்கு செய்யப்படும் வணக்கம் இந்து மதத்தில் பல நிலைகளில் அனுஷ்டிக்கப் படுகிறது. அதில் ஒன்று 'சாஷ்டாங்கம்'. இந்த வார்த்தையை பிரித்து பொருள் பார்ப்போம். சாஸ்த் - அங்க் என்று பிரித்துபொருள் பார்த்தால் சாஸ்த் - எட்டு அங்க் - உடல் என்ற பொருளில் வரும். அதாவது உடலில் உள்ள நெற்றி, மூக்கு, இரண்டு கைகள், இரண்டு முழங்கால்,இரண்டு பாதம் ஆகிய எட்டு அவயங்களை பூமியில் படுமாறு இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்குவதால் இதை சாஷடாங்கம் என்று கூறுகிறோம்.

இதே நிலையைத்தான் சற்று மாறுதலாக முஸ்லிம்கள் செய்யும் போதும் உடலின் எட்டு பாகங்கள் பூமியில் படும். வித்தியாசம் என்ன என்றால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை வணங்குகிறார்கள். இந்துக்கள் பல தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆனால் இந்து மதத்தில் பல தெய்வ வணக்கத்திற்கு உள்ள தடைகளையும் ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

'எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்.'

- பகவத் கீதை - அதிதியாயம் 7 - வசனம் 20

'நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது'

-ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 - 19
-யஜூர் வேதம் 32 - 3

'இயற்கையை வணங்குபவர் இருளில் நுழைந்து விட்டனர்'

-யஜீர் வேதம் 40 : 9

மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.

ஜகாத் (ஏழை வரி)

இஸ்லாத்தின் மற்றொரு முக்கிய கடமைகளில் ஒன்று ஜகாத் என்பது. 'ஜகாத்' என்ற அரபிச் சொல்லுக்கு தூய்மைப் படுத்துதல், வளருதல் என்ற பொருள் வரும். மனிதன் தான் சம்பாதித்த பொருள்களை இறைவன் சொன்னான் என்பதற்காக குறிப்பிட்ட சதவீதத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பது ஜகாத் எனப்படும்.இப்படி செல்வந்தன் கொடுப்பதால் அவனின் செல்வம் தூய்மையடைகிறது. இறைவன் அருளால் மேலும் மேலும் பெருகுகிறது. இந்த முறை மட்டும் இஸ்லாமியரிடத்தில் சரி வர செயல் பட்டால் ஏழைகளையே இல்லாத சமுதாயமாக முஸ்லிம் சமூகம் மாறி விடும். நானும் தர்மம் செய்கிறேன் பேர்வழி என்று 50 பைசா, ஒரு ரூபாய் சில்லரைகளை மாற்றி வைத்துக் கொண்டு தினமும் வீட்டுக்கு வரும் பிச்சைக் காரர்களுக்கு போடுவதல்ல இறைவன் சொல்லும் தர்மம்.இது பிச்சைக் காரர்களை மேலும் ஊக்கப் படுத்தும். சோம்பேறிகளை அதிகம் உருவாக்கும்.

ஊர் நாட்டாண்மை, அல்லது நேர்மையான ஊர் பெரியவர் ஒவ்வொரு செல்வந்தனிடமும் வருமானத்தைக் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும். பிறகு அவை குர்ஆனில் இறைவன் கூறும் எட்டு நபர்களுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும். தையல் மிஷின், கறவைமாடு, போன்றவை இலவசமாக வாங்கிக் கொடுத்தால் அடுத்த வருடம் அவன் தர்மம் கொடுக்க தயாராகி விடுவான். இது போன்ற அமைப்பு தமிழகத்தில் தற்போதுதான் தொடங்கப் பட்டிருக்கிறது. இது தொடர வேண்டும். இப்படி ஒரு அமைப்பு எதற்காக என்ற காரணத்தையும் குர்ஆன் சொல்கிறது.

'உங்களில் செல்வந்தர்களிடையே செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக இறைவன் இவ்வாறு பங்கிடுகிறான்.'

-குர்ஆன் 59 : 7

அனைவருக்கும் பொருளாதாரம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இறைவன் இத்தகைய ஏற்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறான்.

இதே கருத்தில் இந்து மத வேதங்களில் வரும் ஒரு சில வசனங்களைப் பார்ப்போம்.

'வறியவனைப் பார்த்து செல்வம் உள்ளவன் நிம்மதி அடைகிறான். இன்று பணம் உள்ளவன் நாளை ஏழையாகிறான். ஒரு வண்டியின் சக்கரம் சுழல்வது போல் இவர்களின் வாழ்க்கை சுழல்கிறது.'

-ரிக் வேதம் புத்தகம் 10 - துதிப் பாட்டு 117 - வசனம் 5

குர்ஆனின் கருத்தும் ரிக் வேதத்தின் கருத்தும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.

பகவத் கீதையிலும் பல இடங்களில் தர்மத்தைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. அவை

-பகவத் கீதை - அதிகாரம் 17 - வசனம் 20

-பகவத் கீதை - அதிகாரம் 16 - வசனம் 3

நோன்பு

இஸ்லாத்தின் அய்ந்து கடமைகளில் ஒன்றாக நோன்பும் வருகிறது. இதைப் பற்றி குர்ஆன் சொல்வதாவது :

'இந்த குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப் பட்டது. அது மனிதர்களுக்கு நேர் வழியைக் காட்டும். நேர் வழியைத் தெளிவாக கூறும்.பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்.உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இறைவன் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான்.' -குர்ஆன் 2 : 185

ஒரு மனிதன் தனது நாவின் ருசியை கட்டுப் படுத்த பழகிக் கொண்டால் மற்ற பல இச்சைகளை தனது கட்டுப் பாட்டில் கொண்டு வருவது மிக எளிதானது. எனவே தான் மனிதர்களுக்கு ஒரு ஆன்மீகப் பயிற்சியாகவும், ஏழைகளின் பசியை உணர்த்துவதற்காகவும் இறைவன் நோன்பை கடமையாக்கினான். சிகரெட், மது போன்ற பழக்கத்திற்கு அடிமையான ஒரு சில முஸ்லிம்கள் கூட இந்த மாதத்தில் அந்த தீய பழக்கங்களை விட்டு விடுவதை நாம் பார்க்கிறோம்.

இந்த நோன்பைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்து மத்தில் பல வழிகளில் விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது.

-மனு ஸ்ருமிதி - அத்தியாயம் 6 - வசனம் 24

-மனு ஸ்ருமிதி - அத்தியாயம் 11 - வசனம் 204

ஹஜ்

இஸ்லாத்தில் அய்ந்தாவது கட்டாய கடமைகளில் ஒன்று ஹஜ். வசதி உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் ஹஜ் புனிதப் பயணம் செய்ய வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. வருடா வருடம் அமெரிக்கா,பிரிட்டன்,சைனா,அய்ரோப்பா,மலேசியா,இந்தியா,ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து 2;5 மில்லியன் மக்கள் ஒரே இடத்தில் குழுமுகின்றனர். உடம்பின் மேலே ஒன்றும் கீழே ஒன்றும் இரண்டு துண்டுகள் மட்டுமே அதுவும் தைக்கப் படாததை உடுத்திக் கொள்ள வேண்டும். அது வெள்ளை நிறமாகவும் இருக்க வேண்டும். ஏழை, பணக்காரன்,வெள்ளையன்,கறுப்பன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் 'இறைவா! உன்னையே அடி பணிந்தோம்' என்று ஒரு மித்த குரலில் சொல்வது காண கண் கொள்ளாக் காட்சியாகும்.

இந்து மத்திலும் புண்ணியத் தலங்கள் என்று பலவும் சொல்லப் பட்டுள்ளன. அவற்றில் 'லாஸ்பாட்' என்று சொல்லப் படும் ஒரு புண்ணியத் தலத்தைப் பற்றி சிறிது பார்ப்போம்.

'லாஸ்பாட்' இந்த புண்ணிய தலம் நபா பிரிதிவியில் அமைந்திருக்கும்'

-ரிக் வேதம் -புத்தகம் 3 - துதிப்பாட்டு 29 - வசனம் 4

லாஸ்பாட் என்ற சமஸ்கிரத வார்த்தையை தமிழ்ப் படுத்தினால் இறைவனின் இடம் அல்லது இறைவனின் இல்லம் என்ற பொருள் வரும். பிரதிவி என்பதன் பொருள் பூமி. நபா என்பதன் பொருள் நடு மையம். இவை அனைத்தையும் ஒன்று சேருங்கள். 'பூமியின் மையத்தில் அமைந்த இறைவனின் இடம்' என்ற பொருள் வரும். பூமியின் மையத்தில் அமைந்துள்ளது கஅபா என்பது நமக்கு முன்பே தெரியும். எனவே மேலே உள்ள வரிகள் மக்காவில் உள்ள கஅபாவையே குறிக்கிறது.

'அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும் பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்கு அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா எனும் மக்காவில் உள்ளதாகும்.' - குர்ஆன் 3 : 96

'லாஸ்பாட்' என்ற வார்த்தை ரிக் வேதத்தில் மற்றோர் இடத்திலும் வருகிறது.

-ரிக் வேதம் - புத்தகம் 1 - துதிப்பாட்டு 128 - வசனம் 1

அடுத்து ரிக் வேதம் புத்தகம் 3 - துதிப்பாட்டு 29 - வசனம் 11 ல் நரசன்ஸா என்ற நபரைப் பற்றி சொல்லப்படுகிறது. நரசன்ஸா என்பது முகமது நபி என்று முன்பே பார்த்தோம்.இதற்கு முன்னால் அதே ரிக் வேதத்தில் லாஸ்பாட்டைப் பற்றியும் குறிப்பிடப் படுகிறது. எனவே லாஸ்பாட் என்பது மக்காவில் உள்ள கஅபா என்பது மேலும் உறுதியாகிறது.

மேலும் பல அரிய தகவல்களை அடுத்த பதிவுகளில் பார்ப்போம் இறைவன் நாடினால்.

இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

முஸ்லிம்கள் கல்வியில் பின்னடைவு - ஓர் ஆய்வு

முஸ்லிம்கள் கல்வியில் பின்னடைவு - ஓர் ஆய்வு

முஸ்லிம்கள் கல்வியறிவு, அரசாங்க உத்தியோகம் போன்றவற்றில் மற்ற சமூகத்தவரை விட மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள். சமூகத்தோடு ஒட்டாமல் எதிலும் தனித்து இயங்கி வருகிறார்கள். இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாமா? கணடிப்பாக இல்லை.

சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனை எதிர்ப்பதில் முஸ்லிம்கள் தங்களின் சதவீதத்துக்கு அதிகமாகவே தியாகங்கள் செய்தனர்.சுதந்திர தாகம் முற்றி ஒரு படி மேலே போய் 'வெள்ளைக்காரன் தரும் பதவியும் வேண்டாம். அவன் தரும் படிப்பும் வேண்டாம். ஆங்கிலம் படிப்பது ஹராம் (தடுக்கப் பட்டது)' என்று மார்க்க அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினர். மொழிகளின் மூலங்களை உருவாக்கியவன் இறைவன். அப்படி இருக்க ஒரு மொழியை படிப்பது தடுக்கப் பட்டது என்று எப்படி இந்த மௌலானாக்கள் சொல்லலாம்? அன்று அவர்கள் எடுத்த தவறான முடிவால் பாதிக்கப் பட்டது என்னவோ முழு முஸ்லிம் சமுதாயமும்.

அடுத்து தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க ஊருக்கு ஊர் தோன்றியிருக்கும் மத்ரஸாக்களும் ஒரு காரணம். இந்த மத்ரஸாக்களை உருவாக்கிய செல்வந்தர்களின் நோக்கம் முஸ்லிம்களுக்கு கல்வியறிவும் மார்க்க அறிவும் ஒருங்கே பெற்று சிறந்த சமுதாயமாக வாழ வேண்டும் என்ற நல் எண்ணமே! எங்கள் ஊரை எடுத்துக் கொண்டால் ஊரைச் சுற்றி அய்ந்து மத்ரஸாக்கள் உள்ளது. இங்கு ஏழு வருடம் படித்தால் அவருக்கு 'ஆலிம்'(மார்க்கஅறிஞர்) என்ற பட்டத்தை கொடுப்பார்கள். இந்த மத்ரஸாக்களில் மதுரை, தென்காசி,ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து நிறைய மாணவர்கள் எங்கள் ஊருக்கு படிக்க வருகிறார்கள். நல்ல வேளையாக உள்ளூர் மாணவர்கள் எவரும் இந்த மத்ரஸாக்களில் படிப்பதில்லை. உள்ளூர் மாணவர்களுக்கென்றே இருக்கவே இருக்கிறது ஆங்கில வழிக் கல்வி.

வெளியூர் மாணவர்கள் இந்த மத்ரஸாக்களில் படிப்பது எதனை? உலகக் கல்விக்கும் சம்பந்தம் இல்லாமல் மார்க்க கல்விக்கும் சம்பந்தம் இல்லாமல் ஒரு ரெண்டும் கெட்டான் நிலையைத்தான் மத்ரஸாக்கள் பாடத் திட்டங்களாக வைத்திருக்கின்றன. இது போன்ற பாடங்களைப் படித்து விட்டு வரும் மத்ரஸா மாணவன் வெளி உலகில் வந்து எந்த வேலையைப் பார்ப்பது? இன்றைய கணிணி யுகத்தில் மற்ற பள்ளிகளில் பாடத் திட்டங்கள் வருடா வருடம் மாற்றப் பட்டு மாணவர்களும் மாணவியரும் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள். மத்ரஸாக்களின் நிலை என்ன?

மொகலாயர்களின் ஆட்சியில் எழுதப்பபட்ட ஒரு சில புத்தகங்கள், மற்றும் ஒரு சில மார்க்க அறிஞர்களின் தனிப் பட்ட விளக்கங்கள் போன்றவையே பாடங்களாக போதிக்கப் படுகிறது. இவற்றைத்தான் இந்த மாணவர்கள் ஏழு வருடம் மத்ரஸாக்களில் ஓதி வருகிறார்கள். இது போன்ற பாடத் திட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸீக்கும் ஒத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. குர்ஆன் ஒரு சட்டத்தை சொன்னால் துர்ருல் முக்தார் என்ற பாடப் புத்தகம் வேறொரு சட்டத்தைச் சொல்லும். முகமது நபி ஒரு சட்டத்தை போதித்தால் ஹிதாயா என்ற பாடப் புத்தகம் அதற்கு மாறான சட்டத்தைச் சொல்லும். இப்படி மார்க்க சட்டங்களைச் சொல்லுவதிலேயே குளறுபடிகள். இதில் இஸ்லாம் சொல்லித் தராத ஹனபி, ஷாபி,ஹம்பலி,மாலிக்கி போன்றோருக்கு தனித்தனியான சட்டங்கள். இப்படி இஸ்லாத்துக்கு சம்பந்தம் இல்லாதவைகளையெல்லாம் படித்து விட்டு 'இஸ்லாமிய அறிஞன்' என்ற பெயரில் மத்ரஸாவிலிருந்து வெளியேறுகிறான் அந்த மாணவன்.

சரி! ஆலிம் ஆனதற்குப் பிறகு அந்த மாணவனின் வருமானத்துக்கு என்ன வழி? இருக்கவே இருக்கிறது இஸ்லாம் காட்டித் தராத பாத்திஹாக்கள்(பிரார்த்தனைகள்). இறந்து போனால் மூன்றாம் நாள், ஏழாம் நாள்,நாற்பதாம் நாள், என்று முறை வைத்து பாத்திஹாக்கள். இவை அனைத்தும் முகமது நபி காட்டித் தராத நூதன பழக்கங்கள். அதிலும் பிறப்பு, இறப்பு,வீடு புது மனைபுகுவிழா,கல்யாணம் என்று அனைத்திற்கும் இந்த மௌலானா வந்துதான் பாத்திஹா ஓத வேண்டும். அதன் பிறகு நூறோ, நூற்றைம்பதோ அவருக்கு காணிக்கைத் தர வேண்டும். மார்க்க சொற்பொழிவுக்கு என்று வந்தால் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று பேசிக் கொண்டு வருவார்கள். அல்லது பள்ளி வாசல்களில் தொழுகை நடத்துவதற்காக இமாமாக பணியாற்றுவார்கள். இது தான் இவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் வேலைகள். இந்த ஆலிம்கள் செய்வது போன்ற வேலைகளைத்தான் முகமது நபியும் அவரின் தோழர்களும் செய்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை. தற்போது உள்ள நடைமுறைக்கு எதிராகத்தான் முகமது நபியின் போதனையும் குர்ஆனிய வசனங்களும் அமைந்துள்ளது.

'இறைவனின் வசனங்களைஅற்ப விலைக்கு விற்க மாட்டார்கள்.அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு.இறைவன் விரைவாக கணக்கெடுப்பவன்.' - குர்ஆன் 3 : 199

''அவர்கள் இறைவனின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கின்றனர். அவனது பாதையை விட்டும் தடுக்கின்றனர்.அவர்கள் செய்து கொண்டிருப்பவை கெட்டவையாகும்' -குர்ஆன் 9 : 9

'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை.' - குர்ஆன் 2 : 174

மேலே கூறப்பட்ட வசனங்கள் மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்துவது எந்த அளவு தடுக்கப் பட்டுள்ளது என்று விளங்குகிறது. அப்படியானால் முகமது நபி தன் வருமானத்திற்கு என்ன செய்தார்? என்ற கேள்வி வரும். முகமது நபியிடம் 100 எண்ணிக்கை கொண்ட ஆட்டுப் பண்ணை இருந்தது. இந்த பண்ணையில் ஆடுகள் குட்டி ஈனும் போது அதை விற்று தன் குடும்பத்து தேவைகளை சரியாக்கிக் கொள்வார். நபியாவதற்கு முன்பே ஹத்தீஜா அம்மையாரோடு சேர்ந்து மிகப் பெரும் வாணிபத்திலும் ஈடுபட்டிருந்தார்.

அதே போல் பள்ளியில் இமாமாக இருந்ததற்கும் முகமது நபியோ அவரின் தோழர்களோ சம்பளம் வாங்கியது இல்லை. என் அலுவலகத்தில் தொழுகை நேரம் வந்து விட்டால் நான் இமாமாக நின்று தொழுகை நடத்துகிறேன். எனக்கு பின்னால் என் சவூதி முதலாளியும்,அவரின் மகன்,எகிபது, பாகிஸ்தான்,மொராக்கோ நாட்டு முஸ்லிம்களும் அணிவகுத்து தொழுகிறார்கள். நான் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டால் என் முதலாளி தொழுகை நடத்துவார். இது தான் இஸ்லாம் காட்டும் வழியும் கூட. இதையெல்லாம் நாம் ஆதாரத்தோடு எடுத்து சொன்னால் நம்மைப் பார்த்து ஏசுவது,மிரட்டுவது,ஊர்விலக்கம் செய்வது என்ற ரீதியில் பொது மக்களை தூண்டி விடுகின்றனர் இந்த ஆலிம்கள்.

ஒரு முறை எங்கள் ஊரில் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' இளைஞர்களாக சேர்ந்து நடத்த ஏற்பாடு செய்தோம்.பாதுகாப்புக்கு போலீசாரும் வந்திருந்தனர்.எங்கள் ஊர் ஆலிம் (பள்ளியில் தொழுகை நடத்துபவர்)பெரிய கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு நூறு பேரையும் திரட்டிக் கொண்டு ட்யூப் லைட்டுகளை உடைப்பது, மேடையை சேதப்படுத்துவது போன்ற ரௌடிகள் செய்யும் செயலை செய்ய ஆரம்பித்தார். இதற்கு அவர் வைத்த பெயர் 'ஜிஹாத்'. இதில் அந்த ஆலிமை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. மத்ரஸா கல்வி அவரை அப்படி மாற்றி இருக்கிறது. குர்ஆனையும், முகமது நபியின் வாழ்க்கையையும் மத்ரஸாவில் போதித்து ஒரு தொழில் கல்வியும் கற்றுக் கொடுத்திருந்தால் இது போன்ற அராஜகங்களை அவர் அரங்கேற்றியிருக்க மாட்டார். காவலுக்கு நின்ற இந்து போலீஸ்காரர் 'ஏன்ய்யா! நிங்களெல்லாம் இந்தக் கூட்டத்தை இவ்வளவு எதிர்க்கிறீர்களே! அப்படீன்னா நீங்களெல்லாம் வரதட்சணை வாங்கக் கூடியவர்களா?' என்று அப்பாவியாக கேட்டது இன்றும் என் மனதில் நிற்கிறது. இது போன்ற அமைப்புகளில் அதிக அங்கத்தினர்கள் சேர்ந்தால் மௌலானாக்களின் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்படும். இது தான் முக்கிய காரணம். இதை மாற்றுவதற்கு என்ன வழி?

மதராஸாக்களின் பாடத்திட்டத்தை முழுமையாக மாற்ற வேண்டும். வேலை நேரம் காலை 7 மணி முதல் 12 மணி வரை. பிறகு 4 மணி முதல் இரவு 7 மணி வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் தமிழ், ஆங்கிலம்,அரபி,கணிணி,குர்ஆன், ஹதீஸ்,போன்றவை கட்டாயப் பாடங்களாக்கப் பட வேண்டும். பாக்கி இரண்டு மணி நேரம் தொழிற் கல்வியில் எலக்ட்ரீஷியன், பிளம்பர், கார்பெண்டர், மெஷின் ஆபரேட்டர், போன்ற சிறு தொழில்கள் கட்டாயமாக கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மாதம் ஒரு முறை அரசுப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று அந்த மாணவர்களோடு கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்படுத்த வேண்டும்.

அடுத்து மத்ரஸா மாணவர்களுக்கென்றுபிரத்யேக அடையாளங்கள் இருக்கும். தலையை மொட்டை அடித்தல், நீண்ட ஜிப்பா, மொட்டையை மறைக்க தலையில் தொப்பி.

தலையை மறைக்க வேண்டும், தொப்பி அணிய வேண்டும் என்று குர்ஆனிலோ முகமது நபியின் போதனைகளிலோ நமக்கு காணக் கிடைக்கவில்லை. இங்கு சவூதியில் பள்ளியில் தொழுபவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு தலையில் தொப்பி இருக்காது.தொப்பி அணிவது என்பது துருக்கி நாட்டவரின் பழக்கம். அந்த பழக்கம் இந்திய முஸ்லிம்களிடத்திலும் தொற்றிக் கொண்டது. சவூதிகள் தங்கள் தலைகளை மறைப்பதன் காரணம் இங்குள்ள பாலைவனப் புழுதிக் காற்று. காற்று வேகமாக அடித்தால் தலையில் இருக்கும் துண்டைக் கொண்டு முகத்தையும் மூடிக் கொள்வார்கள். எனவே தலையை மறைத்து துண்டு அணிவது சவூதிகளுக்கு வசதி. நமக்கு எந்த வகையில் வசதியைத் தரும். ஆனால் கட்டாயப் படுத்தாமல் தாங்களாகவே விரும்பி யாரும் தொப்பி அணிந்து கொண்டால் அதை தடுக்கக் கூடாது. அதே போல் யாரும் தொப்பி அணியாமல் தொழுதால் அதை ஒரு பிரச்னையாகவும் ஆக்கக் கூடாது.


2) அடுத்து ஜிப்பா! இதுவும் இஸ்லாமியரின் ஆடை என்று பலரும் தவறாக விளங்கி வைத்திருக்கிறோம். இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று முகமது நபி எந்தக் கட்டளையும் இடவில்லை. ஒரு மாணவன் பேண்ட் சர்ட் அணிந்து கொண்டு மத்ரஸாவுக்கு வந்தால் அவனை வித்தியாசமாக பார்க்கும் மனப்பாங்கு நம்மவர்களிடமிருந்து மாற வேண்டும்.

அடுத்து மொட்டை அடிப்பது. முகமது நபி தன் வாழ்நாளில் ஹஜ்,உம்ரா போன்ற நேரங்களில் தான் தலையை முழுவதுமாக மழித்து இருக்கிறார்கள். முகமதுநபிக்கு அழகிய சுருள் முடி என்றும் நடு வகிடெடுத்து அழகாக அதனை சீவியும் இருப்பார்கள் என்று ஹதீதுகளில் நாம் பார்க்கிறோம். மத்ரஸாக்களிலோ சிறு வயது பையன்களுக்கெல்லாம் கட்டாயமாக மொட்டையடிக்கச் சொல்வார்கள். இது போன்ற கட்டுப்பாடுகளையெல்லாம் மத்ரஸாக்கள் தளர்த்தவேண்டும்.

முஸ்லிம் பெண்களுக்கும் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். எங்கள் ஊரில் செயல்படும் பெண்கள் மத்ரஸாவின் பணி ஓரளவு பாராட்டத் தக்கதாக இருக்கிறது. இங்கு அரசு கல்வியையும், மார்க்க கல்வியையும் இணைத்து கொண்டு செல்கிறார்கள். பெண்களுக்கு ஏற்ற தொழில்களான தையல் , கணிணி, கேடரிங் போன்ற பாடங்களையும் கூடுதலாக சேர்த்தால் பெண்களின் முன்னேற்றம் சிறப்படையும். இதனால் டிவி சீரியல்களின் முன்னால் உட்கார்ந்து மூக்கை சிந்திக் கொண்டிருக்கும் நம் பெண்களின் வாழ்க்கையும் ஒளி பெறும்.

போனமுறை விடுமுறையில் ஊருக்கு சென்றபோது எங்கள் ஊரில் மாலை நேரத் தொழுகைக்கு பள்ளிக்குச் சென்றேன். நான் சிறிது தாமதமாக சென்றதால் கூட்டுத் தொழுகை முடிந்து விட்டது. என்னைப் போல் தாமதமாக வந்த ஒருவர் தனியாக தொழுது கொண்டிருந்தார். அவருக்கு சைகை செய்து அவரைத்தலைவராக ஏற்று அவருக்கு பின்னால் தொழுகைக்கு நான் நின்றேன்.இதே போல் சவூதியில் ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் இரண்டு முன்று ஜமாத்துகள் (கூட்டுத் தொழுகை) சர்வ சாதாரணமாக நடக்கும். எனக்குப் பின்னால் தாமதமாக வந்த இன்னும் மூன்று பேர் எங்களோடு சேர்ந்து தொழுதனர். ஒரு வழியாக அந்த கூட்டுத் தொழுகையை முடித்தோம்.

தொழுகையை முடித்தவுடன் அந்த பள்ளியின் இமாமும், அங்கு செயல்படும் மத்ரஸாவின் முதல்வருமான மார்க்க அறிஞர் என்னைப் பார்த்து, 'தனியாக இரண்டாவது கூட்டுத் தொழுகை நடத்துவது ஹனபி சட்டத்தின் படி தடுக்கப் பட்டுள்ளது' என்று உரத்த குரலுடன் சப்தமிட்டார். தொழுக வந்தவர்கள் அனைவரும் எங்கள் இருவரையும் பார்க்க ஆரம்பித்தனர்.

'இப்படி கூட்டாக தொழக் கூடாது என்று குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளிலிருந்தோ எனக்கு நீங்கள் ஆதாரம் தர முடியுமா?' - சுவனப்பிரியன்

'லால்பேட்டை மத்ரஸாவின் 'பத்வா' (மார்க்க தீர்ப்பு) இரண்டாவது ஜமாத் தடுக்கப் பட்டது என்று கூறுகிறது' - மௌலானா

'முகமது நபி 'தனியாக தொழுவதை விட கூட்டாக தொழுவது 25 மடங்கு நன்மையைத் தரும்' என்று சொல்லியிருக்கிறார்களே! அதை நீங்கள் படிக்கவில்லையா மௌலானா?' - அமைதியுடன் சுவனப்பிரியன்.

'இதோ பார் தம்பி! விதண்டா வாதம் எல்லாம் பண்ணாதே! எனக்கு லால்பேட்டை 'பத்வா' தான் முக்கியம்' - மௌலானா

'முகமது நபிக்கு மாற்றமாக லால் பேட்டை 'பத்வா' இருந்தால் அதைத் தூக்கி குப்பையில் போடுங்கள்' -சற்று சூடாக சுவனப்பிரியன்.

பிரச்னை முற்றுவதைப் பார்த்த அனைவரும் 'பிறகு பேசிக் கொள்ளலாம்' என்று என்னை அழைத்து வந்து விட்டனர். 40 மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு மத்ரஸாவின் முதல்வர் இந்த அளவு மார்க்கம் அறியாமல் இருந்தால், இவரிடம் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் எந்த அளவில் இருக்கும். இப்படியே எல்லோரும் தொழுகை நடத்த ஆரம்பித்தால் அவரின் வேலைக்கு ஆபத்து வந்து விடும் என்ற பயம்தான் முதல் காரணம். புரோகித்தை விட்டால் தனக்கு உள்ள மதிப்பு போய் விடுமே என்ற பயம் மற்றொரு காரணம். இஸ்லாமிய இணைய தளங்களின் மூலம் நான் கற்றுக் கொண்ட அளவுக்குக் கூட இந்த முதல்வருக்கு ஞானம் இல்லை என்றால் இந்த மத்ரஸாக்களினால் என்ன பயன்? இது தான் இன்றைய மத்ரஸாக்களின், மார்க்க அறிஞர்களின் நிலை.மேலும் திண்ணமாக அறிஞர்கள் இறைத் தூதரின் வாரிசுகளாவர்.அவர்கள் அறிவைத் தான் விட்டுச் சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைய பாக்கியம் பெற்றவராவார். கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால் அவருக்குச் சுவர்க்கத்துக்குச் செல்லும் வழியை அல்லாஹ் இலகுவாக்குகிறான். அல்லாஹ் சொல்கிறான் : 'நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தாம்' - (35 :28 ) மேலும் அல்லாஹ் கூறுகிறான் 'அதனை அறிஞர்கள் தவிர வேறெவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.' -(29 : 43)மேலும் சொல்கிறான் 'அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?' -(39 : 9)

-புகாரி முதல் பாகம் பாடம் 10

மேற் கண்ட ஹதீஸின் மூலம் ஒரு முஸ்லிமுக்கு கல்வி கற்பது எந்த அளவு முக்கியம் என்று விளங்கும்.ஆனால் கல்வி விஷயத்தில் இன்னும் நாம் அதிக சிரத்தை எடுக்காமல் இருந்து வருகிறோம்.


என் மனத்தில் பல நாள் உழன்று கொண்டே இருந்த எண்ணங்களை அப்படியே எழுதி விட்டேன். நான் சொல்வது தான் சரி என்றும் சொல்லவில்லை. என் கருத்தில் உடன் படாதவர்கள் பின்னூட்டமிட்டால் அதையும் பிரசுரிக்கிறேன். இனியும் நாம் மத்ரஸாக்களின் பாடங்களை மாற்றுவதில் மெத்தனமாக இருந்தால் முஸ்லிம்களின் முன்னேற்றம் என்பது கானல் நீராகத்தான் இருக்கும்.

இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்

சுவனப்பிரியன்.