Followers

Saturday, November 30, 2019

பிஜேபி ல் இணைந்தார் நடிகன் ராதாரவி. - செய்தி

பிஜேபி ல் இணைந்தார் நடிகன் ராதாரவி. - செய்தி
பெரியார் நினைவேந்தல் கூட்டம்,
சென்னைப் பல்கலைக் கழகம்..
M.R. ராதாவின் கவனிக்க வேண்டிய உரை:
"படிக்காத என்னை ஏன் அழைத்தீர்கள்" என்று உரையைத் தொடங்கியவர்,.....
"1920 களில் பெரியார் முதல் வலம் வருகிறார். அப்போது நாடகக்குழுவில் சிறுவனாக வேலை செய்து வந்தேன். காலையில் நாடகக் குழுவினருக்கு காபி தேநீர் வாங்கச் செல்வேன்.
அய்யர் கடையில் 20 அடி தூரத்திலிருந்து "அய்யா சாமி" என்று உரத்தக் குரலில் கத்துவேன். "டேய் வரேன்டா" என்று கூறிவிட்டுப் பாத்திரத்தில் காபியை அய்யர் எடுத்து வருவார். நான் எடுத்துவந்த பாத்திரத்தையும், பணத்தையும் மண் தரையில் வைக்கச் சொல்வார். நீண்ட கைப்பிடியுடன் உள்ள அவரது பாத்திரத்திலிருந்து காபியை ஊற்றுவார்.
1930களில் தமிழ்நாடெங்கும் பெரியார் மீண்டும் வலம் வருகிறார். காபி கடைக்கு மிக அருகில் செல்ல முடிகிறது. "சாமி காபி கொடுங்கள்" என்று கூறியவுடன் "இதோ வரேன்டா!" பாத்திரத்தையும் பணத்தையும் உணவகத்தின் மேஜை மீது வைக்க முடிந்தது. "டேய்" என்ற ஆணவச் சொல் காணாமல் போய்விட்டது.
1940களில் பெரியார் வலம் வருகிறார். உணவகத்தின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு "அய்யரே! காபி கொடு, காசு கொடுக்கிறன்" என்று மிடுக்கோடு பேச முடிந்தது. "இதோ தரேன்! வாங்கிக்கப்பா"
இப்படியாக, படிப்படியாக அனைவருக்கும் மரியாதையும், சம உரிமையும் கிடைக்கிறது.
இதை யார் வாங்கித்தந்தது?
அய்யா சாமி: டேய் வரேன்டா: ...
சாமி : வரேன்டா
அய்யரே : வாங்கிக்கப்பா
மாணவர்களே! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்...
ஒரு முறை இந்தச் சொற்களைச் சொல்லிப்பாருங்கள், இந்த ஒலி சத்தத்தின் வேறுபாடுகளில் தந்தை பெரியாரின் உழைப்பும், சீர்திருத்தமும்பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொண்டிருக்கும்"
என்று குறிப்பிட்டு, அவரின் குரலில், அவருக்கே உரித்தான பாணியில் நடித்துக் காட்டினார்.
மண்டபமே அதிரும்படியான கையொலி சத்தம்.

நடிகவேள் ராதாவின் பகுத்தறிவுப் பணி என்றும் போற்றப்படும்.


ஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு...

ஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு....
அப்துல் கஃப்பார் வயது 42. சீனாவின் உய்குர் மாகாணத்தை சேர்ந்தவர். நான்கு குழந்தைகளுக்கு தந்தை. 14.4 மில்லியன் டாலர்கள் இவரது சொத்து மதிப்பு. பல பள்ளி வாசல்களை கட்டியுள்ளார். பல தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பற்று உடையவர். கம்யுனிஷ அரசுக்கு இவரது முன்னேற்றம் பெரும் பிரச்னையாக இருந்தது. எனவே இவரை பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.
சென்ற வருடம் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார் அப்துல் கஃப்பார். அரசு அனுமதித்த குழுவில் செல்லாமல் இவர் தனியாக தனது ஹஜ் பயணத்தை முடித்துள்ளார். இதனை காரணமாக காட்டி கம்யூனிஷ அரசு இவரை கைது செய்துள்ளது. இவர் மட்டுமல்லாது இவரது மனைவி, இவரது பிள்ளைகள் மற்றும் இவரது நண்பர்கள் மொத்தம் 50 பேரையும் கைது செய்துள்ளது சீன அரசு. தற்போது இவருக்கு மரண தண்டனை என்று நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இவரது மனைவி விசாரணைக் காலத்தில் சிறைச் சாலையிலேயே மரணத்தை தழுவியுள்ளார்.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது மரண தண்டனைக்கு உரிய குற்றமா? இவரது சொத்துக்கள் அனைத்தையும் கம்யூனிஷ அரசு பிடுங்கிக் கொண்டது. இது ஒரு பகல் கொள்ளை. இதைப் பற்றி உலக மீடியாக்களோ நமது இந்திய மீடியாக்களோ வாயைத் திறக்கவில்லை.
தங்கள் உயிரையும் இழக்க முஸ்லிம்கள் துணிவார்களேயொழிய சீனா, ரஷ்யாவிலேயே துடைத்தெறியப்பட்ட கம்யூனிஷ சித்தாங்களை தங்கள் வாழ்வியலாக எடுக்க மாட்டார்கள் என்பதை மட்டும் சீன அரசுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
தகவல் உதவி
rfa.org/english/news/
ஆக்கம்: சுவனப்பிரியன்
ஒரு வருடம் முன்பு எழுதிய பதிவு


முகநூலில் 24 மணி நேரத்துக்கு மார்க்கால் தடை செய்யப்பட்டேன்! :-)

முகநூலில் 24 மணி நேரத்துக்கு மார்க்கால் தடை செய்யப்பட்டேன்! :-)

காரணம் என்னவாம்? நான் பார்பனர் சம்பந்தமாக பதிவுகள் இடுவதும், பிராமிண் என்று எழுதாமல் பார்பனர் என்று எழுதுவதும் காரணமாம்! இதனால் சமூகத்தில் பதட்டம் ஏற்படுவதாகவும் எனவே இனிமேல் அது போல் எழுதாமல் இருக்கவும் எனக்கு தண்டனையாக 24 மணி நேரம் தடை கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிமை முஸ்லிம் என்றுதான் கூற முடியும். ஒரு கிருத்துவரை கிருத்துவர் என்றுதான் கூற முடியும். பிரம்மனின் நெற்றியில் பிறந்தவன் பிராமன், நெஞ்சினில் பிறந்தவன் தொடையில் பிறந்தவன் காலில் பிறந்தவன் என்று வர்ணாசிரமம் மனிதர்களை வகைப்படுத்துகிறது. இவ்வாறு மனிதர்களில் பேதத்தை உருவாக்கும் சொல்லான 'பிராமின்' என்ற வார்த்தையை நான் எப்படி பிரயோகிப்பேன்.?

குர்ஆனில் நம்மை படைத்த இறைவன் கூறுகிறான் மனிதர்கள் அனைரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்று. எனவே மனிதர்களில் உயர்வு தாழ்வு கற்பிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறான். இவ்வாறு அழகிய வழிகாட்டலை பெற்ற நான் எப்படி 'பிராமின்' என்று ஒரு மனிதனை உயர்வாக அழைக்க முடியும்?

முகநூலில் முற்றாக என்னை தடை செய்தாலும் துளியும் கவலைப்பட போவதில்லை. ட்விட்டர், ப்ளாக்கர், வாட்ஸ்அப் என்று இணைய உலகு பரந்து கிடக்கிறது. பூனை கண்ணை கட்டிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக சங்கிகள் நினைக்கலாம். ஆனால் சுவனப்பிரியனுக்கு இந்த உலகு பரந்து விரிந்துள்ளது. அதில் சுதந்திரமாக சிறகடித்து இதை விட சுதந்திரமாக பறப்பேன் இன்ஷா அல்லாஹ்.

-------------------------------------------------

‘ஓ மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆண் பெண்ணிலிருந்து படைத்தோம். பிறகு உங்களைச் சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் நாம் ஆக்கியது, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டே! நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் அதிகக் கண்ணியமானவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தான்! திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கிறான் ” (49: 13)


அஜ்மீரில் வெடிகுண்டு வைத்த இந்திரேஷ்குமார்க்கு கவுரவ டாக்டர் பட்டம்

அஜ்மீரில் வெடிகுண்டு வைத்த காவித்தீவிரவாதி இந்திரேஷ்குமார்க்கு கவுரவ டாக்டர் பட்டம்

RSS’ Indresh Kumar, who got clean chit in Ajmer dargah blast case, now gets a Chishti PhD

RSS leader Indresh Kumar has been awarded an honorary doctorate by Lucknow-based Khwaja Moinuddin Chishti Urdu, Arabi~Farsi University.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் நடத்தும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் நடத்தும் அர் ரிளா பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்...

பட்டமளிப்பு நிகழ்ச்சி.

29-11-2019

கொல்லாமை வலியுறுத்திய குறளும் கீதை என்னும் கொலை நூலும்

Thursday, November 28, 2019

பெற்றோர்கள் படிப்பினை பெற வேண்டிய காணொளி!

பெற்றோர்கள் படிப்பினை பெற வேண்டிய காணொளி!

பிள்ளைகளை அன்பால் அரவணையுங்கள். பணம் காய்க்கும் மரமாக பிள்ளையை பார்க்காமல் ஒரு சாதனையாளனாக பாருங்கள். பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்.... இருவரும் வெற்றி பெறுவீர்கள்.


காஷ்மீர் சிங்கம் ஃபரூக் அப்துல்லாவின் கர்ஜனை!

காஷ்மீர் சிங்கம் ஃபரூக் அப்துல்லாவின் கர்ஜனை!
'சார்.. நீங்கள் இந்தியனா?'
'ஆம்.... நான் இந்தியன். இங்கு இத்தனை பேர் அமர்ந்திருக்க என்னைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்க நீ யார்? உம்மைப் போன்றவர்களுக்கு ஒரு நோய் பீடித்திருக்கிறது. நல்ல மன நல மருத்துவரை சென்று பார்'
கேள்வி கேட்க வந்த வந்தேறி வாயடைத்து போய் விட்டான். ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க ஆப்கன் வழியாக இந்த நாட்டுக்குள் நுழைந்த வந்தேறி கேட்கிறான் 'நீ இந்தியனா?' என்று
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் 98 சதவீதமானவர் இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்ற உண்மையை உரத்து உலகுக்கு சொல்வோம் உலகுக்கு. ஆரிய வந்தேறிகளின் வர்ணாசிர கொடுமை பிடிக்காமல் இஸ்லாத்தை தழுவியவர்களே இந்திய முஸ்லிம்கள் என்ற உண்மையை ஃபரூக் அப்துல்லாவைப் போல் கர்ஜித்து சொல்வோம் வந்தேறிகளுக்கு.


Wednesday, November 27, 2019

முஸ்லிம்களுக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது.

நிருபர்: எங்கிருந்து வருகின்றீர்கள்?
சங்கி கும்பல்: அலிகர் (UPல உள்ளது)
நிருபர்: எதுக்கு வந்துள்ளீர்கள்?
சங்கி கும்பல்: ராமர் கோவில் கட்ட
நிருபர்: எங்கு கோவில் கட்ட போகின்றீர்கள்?
பெண் சங்கி: ஸ்ரீ லங்கா 
நிருபர்: ராம மந்திர் எங்கு கட்ட வேண்டும்.
அடுத்த பெண் சங்கி : டெல்லியில் 
இது டெல்லி சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் அயோத்தி வழக்கின் தீர்ப்பை கேட்க குழுமியிருந்த சங்கி கும்பல்களின் நிலைமை.
பாபர் மசூதி எங்கு உள்ளது? அதனை நயவஞ்சமாக இடித்து அங்கு ராமர் சிலையை வைத்தது யார்? என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் காசு கொடுத்து இந்த கூட்டத்தை அழைத்து வந்துள்ளார்கள்.
உண்மையான ராம பக்தன் முஸ்லிம்களின் பள்ளியை இடித்து கட்டப்படும் ஒரு கோவில் தனக்கு தேவையில்லை என்றே சொல்வான். கூலிக்கு மாரடிக்கும் கும்பல்கள்தான் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று அடம் பிடிப்பார்கள். இந்த உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம் ராமர் கோவிலை இடித்து பாபர் பள்ளி கட்டப்படவில்லை என்ற உண்மையையும் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது.


இது உலகம் முழுக்க பரவட்டும்....

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது உலகம் முழுக்க பரவட்டும்....
இஸ்ரேலின் அராஜக ஆட்சிக்கு ஒரு முடிவு கிடைக்கட்டும்.


ஆபாச சிலைகள் கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன...

'எங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்லவே அச்சமாக உள்ளது. அந்த அளவு ஆபாச சிலைகள் கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன' - ஒரு பிராமணர்

'உனக்கு சப்போர்ட் பண்ண ராமதாஸ் ஏன் வரணும்? பிரச்னைகளில் மாட்டிக் கொண்டால் வன்முறை, கோர்ட், வழக்கு என்பதற்கு மட்டும் உனக்கு தமிழர்கள் தேவைப்படுகிறார்களா?'


இஸ்லாமாபாத்தில் இயற்கை அழகுடன் அமையப் பெற்ற 'ஃபைஸல் பள்ளிவாசல்'


வயிற்றெரிச்சல் கண்டிப்பாக ஒரு நாள் ஆட்சியாளர்களை நோக்கி திரும்பும்!


இன்னும் இதைவிட மோசமான அசிங்கங்கள் காத்திருக்கிறது


Tuesday, November 26, 2019

இஸ்லாமிய மார்க்கத்தை விடு: இல்லை என்றால் கொல்லப்படுவாய்!

இஸ்லாமிய மார்க்கத்தை விடு: இல்லை என்றால் கொல்லப்படுவாய்!
சீன கம்யூனிச அரசு உய்குர் முஸ்லிம்களை மிகக் கடுமையாக சித்தரவதை செய்து வருகிறது. உய்குர் முஸ்லிம்களின் சொந்த மண்ணை அநியாயமாக ஆக்கிரமித்துக் கொண்டு தங்களின் உளுத்துப் போன சித்தாந்தங்களை அந்த மக்கள் மேல் திணிக்கிறது. குழந்தைகளும் பெற்றோரும் தனித் தனியே பிரித்தெடுக்கப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு மூளை சலவை செய்யப்படுகின்றனர். பெண்கள் முக்காடு அணிய தடை விதிக்கின்றனர். குர்ஆன் ஓதுவதை தடை செய்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்கத்தை விட முடியாத உய்குர் முஸ்லிம்கள் அகதிகளாக துருக்கிக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். சொந்த மண்ணிலிருந்து சித்தாந்தத்தை காரணமாக்கி வெளியேற்றும் கல் நெஞ்சக்காரர்களான சீன அரசை எந்த நாடும் கண்டிப்பதில்லை. ஏனெனில் பாதிப்படைவது முஸ்லிம்கள் அல்லவா?
உலகமெங்கும் பாதிப்படைவது முஸ்லிம்கள்தான்: ஆனால் நிராயுதபாணிகளாக நிற்கும் இவர்களைத்தான் உலகம் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் அழைக்கிறது.
உலகெங்கும் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளை தடை செய்ய நினைக்கும் பாசிச அரசுகளை இறைவன் நிர்மூலமாக்குவானாக!
ஆக்கம்:
சுவனப்பிரியன்
------------------------------------------------
“நிச்சயமாக எவர்கள் மீது பாவிகள் என்று உமது இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்,
அவர்களிடம் எல்லா அத்தாட்சிகளும் வந்தாலும். நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரை!” (அல்குர்ஆன் 10:96,97)


யூத சிறுவனை காப்பாற்றிய இஸ்லாமிய பெண்!

யூத சிறுவனை காப்பாற்றிய இஸ்லாமிய பெண்!
சில தினங்கள் முன் லண்டன் ரயிலில் யூத சிறுவர்களுக்கு எதிராக ஒருவர் இன வெறியை தூண்டும் விதமாக பேசுகிறார். தனது தந்தையோடு அமர்ந்திருந்த அந்த சிறுவன் பயத்தில் அமர்ந்திருக்க அஸ்மா சேக் என்ற இஸ்லாமிய பெண்மணி இதனை தட்டிக் கேட்கிறார். இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த நபர் அங்கிருந்து சென்று விடுகிறார்.
அஸ்மா மட்டும் எதிர்ப்பு குரல் கொடுத்திருக்கா விட்டால் அந்த சிறுவனுக்கும் அவனது தந்தைக்கும் உடல் ரீதியான தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம். தங்களை காப்பாற்றிய அஸ்மாவை அந்த யூதர் பிறகு சந்தித்து நன்றி கூறினார். இது தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுக்க யூதர்கள் இஸ்லாத்துக்கு எதிராக சதி வேலைகளை பார்த்து வருகின்றனர். பாலஸ்தீனத்தில் இளஞ்சிறுவர் சிறுமிகளை யூதர்கள் அநியாயமாக கொல்கின்றனர். இருந்தும் அந்த யூத சிறுவனுக்காக வாதாடுகிறார் ஒரு இஸ்லாமிய பெண்மணி.
ஒரு முஸ்லிம் பொது வெளியில் அநீதியை கண்டு அமைதியாக இருக்கக் கூடாது என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லியுள்ளார் அஸ்மா.
பெரியார் என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள்?

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.
சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.
இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர,
சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.
இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.
அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார்.
அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்
அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இது வரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள். இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.
இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.
இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?


இவர்கள்தான் தேச பக்தர்களாம்.

மஹாராஸ்ட்ராவில் ஆட்சியை பிடிக்க அஜித் பவார் மேலிருந்த 70000 கோடி ரூபாய் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இருந்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதில் அஜித் பவாருக்கு வாழ்த்து சொல்லி மோடியின் வெட்கங்கெட்ட ட்விட் வேறு. இவர்கள்தான் ஊழலற்ற ஆட்சியை தரப் போகிறார்களாம். இவர்கள்தான் தேச பக்தர்களாம்.


உள்ளங்களை ஈர்க்கும் குர்ஆன்!

உள்ளங்களை ஈர்க்கும் குர்ஆன்!
பிரிட்டனைச் சேர்ந்த இந்த சகோதரி குர்ஆன் ஓதுவதைக் கேட்டு அதன் அர்த்தங்களை கேட்டு உணர்ச்சி மேலீட்டால் கண் கலங்குகிறார். அவர் கேட்கும் அந்த குர்ஆன் வசனங்களின் தமிழ் மொழி பெயர்ப்பை கீழே தருகிறேன். உள்ளங்களை ஈர்க்கும் குர்ஆன் வசனங்கள் என்பதற்கு இந்த காணொளியும் ஒரு உதாரணம்.
இந்த சகோதரியை இறைவன் நேர் வழியில் செலுத்துவானாக! இஸ்லாத்தையும் ஏற்கச் செய்வானாக!
-----------------------------------------
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. பலமாகக் கைப்பற்றுவோர் (வானவர்கள்) மீது ஆணையாக!
2. எளிதாகக் கைப்பற்றுவோர் மீது ஆணையாக!
3,4,5.நீந்திச் செல்வோர் மீதும், முந்திச் செல்வோர் மீதும், காரியங்களை நிர்வாகிப்போர் மீதும் ஆணையாக!
6. அந்தப் பெரு நடுக்கத்தை ஏற்படுத்துதல் (ஸூர் ஊதுதல்) நிகழும் நாள்!
7. அடுத்தது (இரண்டாம் ஸூர்), அதைத் தொடர்ந்து வரும்!
8. அந்நாளில் சில உள்ளங்கள் கலக்கம் கொண்டிருக்கும்.
9. அவற்றின் பார்வைகள் தாழ்ந்திருக்கும்.
10. குழியிலிருந்து நாம் எழுப்பப்படுவோமா?'' என்று கேட்கின்றனர்.
11. மக்கிப் போன எலும்புகளாக ஆகி விட்ட பிறகுமா?
12. அப்படியானால் அது நட்டத்தை ஏற்படுத்தும் மீளுதல் தான் என்றும் கூறுகின்றனர்.
13. அது ஒரே ஒரு சப்தம் தான்!
14. உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.
15. மூஸாவைப் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?
16. அவரை அவரது இறைவன் 'துவா' எனும் தூய பள்ளத்தாக்கில் அழைத்தான்.
17. "நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான்''
18, 19. "நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறைவனை நோக்கி வழிகாட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்! எனக் கூறுவீராக'' (என்று இறைவன் கூறினான்.)
20. அவனுக்கு (மூஸா) மிகப் பெரிய சான்றைக் காட்டினார்.
21. அவன் பொய்யெனக் கருதி பாவம் செய்தான்.
22. பின்னர் விரைவாகப் பின்வாங்கினான்.
23. (மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான்.
24. நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
25. அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.
26. (இறைவனை) அஞ்சுபவருக்கு இதில் படிப்பினை உண்டு.
27. படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா?507 அதை அவன் நிறுவினான்.
28. அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான்.
29. அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான்.
30. இதன் பின்னர் பூமியை விரித்தான்.
31. அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்.
32. மலைகளை முளைகளாக நாட்டினான்.
33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்க்கை வசதிக்காக (இவற்றை ஏற்படுத்தினான்).
34, 35. மாபெரும் அமளி ஏற்படும்போது மனிதன் தான் செய்ததைப் பற்றி அந்நாளில் எண்ணிப் பார்ப்பான்.
36. காண்போருக்கு (அருகில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
37, 38, 39.யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம்.
40, 41. யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.
42. (முஹம்மதே!) யுகமுடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர்.
43. அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது?
44. அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது.
45. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.
46.அதை அவர்கள் காணும்போது ஒரு மாலைப்பொழுதோ, அல்லது அதன் காலைப்பொழுதோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.
குர்ஆன் 79:1-46


Monday, November 25, 2019

நிறுத்தல் அளவைகளில் மறைந்திருக்கும் சூட்சுமம்!

நிறுத்தல் அளவைகளில் மறைந்திருக்கும் சூட்சுமம்!
இன்று நாம் உலகம் முழுக்க நிறுத்தல் அளவைகளை அளவிடுகிறோம். முன்பெல்லாம் பொருள்களை அளவிடுவதற்கு ராத்தல்(பவுண்டு) எனும் அளவை பரவலாக பயன்படுத்தினோம். 7680 கோதுமை மணிகளின் எடை ஒரு பவுண்டு என்று முன்பு கணக்கிடப்பட்டது. தற்போது நாம் கிலோ கிராம் என்ற அளவையை பரவலாக பயன்படுத்துகிறோம். இதை வைத்து ஒரு சோதனையை தற்போது செய்து பார்ப்போம்.
ஒரே அளவுடைய இரண்டு கண்ணாடி ஜாடிகளை எடுத்துக் கொள்வோம். ஒரு ஜாடியில் உப்பை நிரப்பிக் கொள்வோம். மற்றொரு ஜாடியில் சிறு சிறு இரும்பு துண்டுகளை போட்டு நிரப்புவோம். தற்போது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஒரு தராசை எடுத்து இரண்டு ஜாடிகளையும் ஒரு சேர எடை போடுவோம். என்ன நடக்கும்? இரும்பு உள்ள ஜாடி கீழேயும் உப்பு உள்ள ஜாடி மேலேயும் காட்டும். ஏனெனில் உப்பை விட இரும்பின் பொருண்மை அல்லது அடர்த்தி அதிகமானதால் இரும்பு வைத்த ஜாடி கீழே இறங்கியுள்ளது என்று சொல்வோம். ஒரு வகையில் இந்த பதில் சரியானாலும் மற்றொரு வகையில் தவறாகும். ஏனெனில் பொருண்மையும் எடையும் ஒன்று எனும் தவறான பொருள் இந்த பதிலில் அடங்கியுள்ளது. ஆனால் எடையும் பொருண்மையும் வேறு வேறு ஆகும்.
இதனை நாம் நன்கு விளங்கிக் கொள்ள மற்றொரு சோதனையை செய்து பார்ப்போம். நாம் முன்பு எடை போட்ட உப்பையும், இரும்பையும் அதே தராசோடு விண்வெளிக்கு எடுத்துச் செல்வதாகக் கொள்வோம்.. பூமியில் நாம் பார்த்தது போன்று இரண்டு ஜாடிகளையும் தராசில் வைத்து முன்பு பார்த்தது போல் எடை பார்க்க முயற்சிப்போம். தற்போது தராசில் எந்த சலனமும் இல்லாமல் இருப்பதை பார்க்கலாம். உப்பு உள்ள பகுதியின் தட்டில் நாம் கை வைத்து கீழே அழுத்துகிறோம். இப்போது கையை எடுத்தாலும் உப்பு உள்ள பகுதி மேலே வராது. என்ன ஆனது நமது தராசுக்கு? உப்பின் பொருண்மை இங்கு இரும்பை விட கூடி விட்டதா? அதுவும் இல்லை.
இங்கு எடை பார்க்கும் கருவியில் எந்த பிரச்னையும் இல்லை. பொருண்மையும் எடையும் ஒன்று என்று முன்பு நாம் நினைத்தது தவறு என்று இந்த சோதனை நிரூபிக்கிறது. எடை என்பது இடத்திற்கு இடம் மாறுவதைப் போன்று பொருண்மை மாறுவது இல்லை. பொருண்மைதான் ஒரு பொருளின் எடைக்கு முக்கிய காரணம் என்று சொன்னால் பூமியில் காட்டிய அதே எடையை விண்வெளியிலும் காட்ட வேண்டும். ஆனால் காட்டவில்லை. இதிலிருந்து ஒரு பொருளின் எடைக்கு அதன் பொருண்மை காரணமல்ல என்பதை விளங்கிக் கொண்டோம்.
அப்படி என்றால் எடை என்பதற்கான வரை விலக்கணம் என்ன என்று இனி பார்ப்போம். அறிவியல் எடைக்கு கூறும் இலக்கணமாவது 'ஈர்ப்பாற்றலின் இழு விசை' (weight is the pull of Gravitation) என்கிறது. அதாவது பூமியின் ஈர்ப்பு விசையின் அடிப்படையிலேயே எடை தீர்மானிக்கப்படுவதாக அறிவியல் கூறுகிறது.
மேற்கண்ட விளக்கத்திலிருந்து பூமியில் ஒரு பொருளை நாம் எடை போடும் போது அப்பொருளின் மீது செயல்படும் பூமியின் ஈர்ப்பு விசையையே நாம் எடை போடுகிறோம் என்பது தெளிவாகும். இந்த புவியீர்ப்பு விசை இல்லை என்றால் நாம் சாதாரணமாக ஒரு தராசில் ஒரு பொருளை எடை போட முடியாது என்று விளங்குகிறோம்.
இது பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை இனி பார்ப்போம்.
'அவன் வானத்தை உயர்த்தினான்: நீங்கள் நீதி தவறி விடக் கூடாது என்பதற்காக தராசை நிலை நாட்டினான். நிச்சயமாக எடையை நிலை நாட்டுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.'
-குர்ஆன் 55:7-9
இந்த வசனம் நமக்கு மிகத் தெளிவாக ஒரு செய்தியை சொல்லுகிறது. அதாவது மனித குலம் தங்களின் எடைகளை சரியாக நிறுப்பதற்காக இறைவனால் பூமியில் இந்த ஈர்ப்பு விசை ஏற்படுத்தப் பட்டுள்ளது. பூமியின் சுழற்சியில் இருந்து இந்த பூமி பாதுகாப்பாக இருப்பது வரை இந்த ஈர்ப்பு விசையானது மனித குலத்துக்கு மிகப் பெரும் பங்காற்றி வருகிறது.புவி ஈர்ப்பு விசையின் பயன்களில் இதுவும் ஒன்று. நம்மை படைத்த இறைவனின் பெருங் கருணைகளில் நமக்காக இந்த ஈர்ப்பு சக்தியை இந்த பூமிக்கு வழங்கியதும் ஒன்று. இறைவனை மறுக்கும் நாத்திகர்களுக்கு இந்த வசனமும் பூமியில் தராசு நிலை நிறுத்தப் பட்டிருப்பதும் சிறந்த பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.


இட ஒதுக்கீடு இந்த காலத்திலும் தேவையா?


இட ஒதுக்கீடு இந்த காலத்திலும் தேவையா?
கேள்வி: இட ஒதுக்கீடு இந்த காலத்திலும் தேவையா? சீனா, அமெரிக்கா போன்று நம்மால் மாற முடியாதா?
ராஜா: சீனாவிலும் அமெரிக்காவிலும் தொட்டால் தீட்டு, அக்ரஹாரத்துக்குள் நுழையாதே, இந்த சாதி படிக்காதே, மீறி படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று, என்று சொல்லப்பட்டுள்ளதா? முக்குலத்தோர் ஒரு காலத்தில் மதியம் ஆறு மணியானால் காவல் நிலையம் சென்று கை நாட்டு போட வேண்டுமே! இந்த நிலை அமெரிக்காவிலும் சீனாவிலும் இருந்ததா? உலகில் எந்த நாட்டிலாவது இப்படி ஒரு சட்டம் இருந்திருக்குமா? எனவே தான் இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் இந்த காலத்திலும் இட ஒதுக்கீடு அவசியமாகிறது.

இந்தியாவின் முதல் மகாத்மா - ஜோதிராவ் பூலே.

இந்தியாவின் முதல் மகாத்மா - ஜோதிராவ் பூலே.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கல்வி தந்தார் என்பதற்காக, உயர் வகுப்பினர் அவரை கொல்ல திட்டமிட்டனர். கத்தியோடும், அரிவாளோடும் அடியாட்கள் பூலேவின் வீட்டை சுற்றி வளைத்தனர்.
அவர்களிடம் பூலே மிக அமைதியான குரலில், "என்னைக் கொல்வதால் உங்களுக்குப் பணம் கிடைக்குமென்றால், நான் சாகத் தயார். இப்போதுகூட உங்களைப்போல் அடித்தட்டு மக்களைக் கொண்டே பார்ப்பன உயர்குடியினர் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பதை மறக்கவேண்டாம். எனது இனத்தைச் சேர்ந்த உங்கள் கையால் சாவது எனக்குப் பெருமையே, நீங்கள் என்னை கொல்லுங்கள்." என்றார்.
இந்த வார்த்தைகளை சற்றும் எதிர்பாராத அடியாள் கூட்டம், ஆயுதங்களை கீழே போட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
பிறகு அவர்கள் மகாத்மா பூலே நடத்திய இரவு பள்ளியில் சேர்ந்து படித்தனர். அடியாள்களில் ஒருவராக வந்த "கும்பார்" என்பவர் பின்னாளில் "வேதச்சாரி" என்ற புத்தகத்தை எழுதும் அளவு கல்வியில் உயர்ந்தார்.
இது பழைய வரலாறு.
ஆனால், நூற்றாண்டு கடந்தும் பார்ப்பனர்கள், தன் சாதி உயர்வை பாதுகாக்க; இன்றும் நம் மக்களை அடியாள் வேலைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்களே என்பது தான் வேதனை..!
பூலேவும், அம்பேத்கரும், பெரியாரும் நம்மை படி என்றார்கள். ஆனால் இன்றும் இந்த தந்திர நரிக் கூட்டம், எனக்கு அடியாளாக இருந்து நான் கை காட்டுபவனை அடி என்கிறதே...!

-மறைக்கப்பட்ட இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்.


பள்ளிவாசல் கட்ட நிலம் தந்த சீக்கியர்!

பள்ளிவாசல் கட்ட நிலம் தந்த சீக்கியர்!
உபியின் முஜாஃபர் நகரை ஒட்டிய புர்காஜி எனும் இடத்தில் கடை வைத்து தொழில் புரிபவர் சுக்பீர் சிங் என்ற சீக்கியர்.
புர்காஜி நகரின் சேர்மேன் ஜஹீர் ஃபரூக்கியிடம் சென்ற ஞாயிற்றுக் கிழமை 1000 ஸ்கொயர் இடத்தை சுக்பீர் சிங் தானமாக கொடுத்தார். எதற்காக இவர் நிலம் கொடுத்தார்?
'தற்போது அரசியல் மக்களை மதத்தின் பெயரால் பிரித்து வருகிறது. மக்களிடம் சமூக நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் இறை இல்லம் கட்டிக் கொள்ள 1000 ஸ்கொயர் ஃபிட் உள்ள எனது இடத்தை தானமாக தருகிறேன்.' என்கிறார்.
நாட்டின் நலனில் சாமான்யன் வைக்கும் அக்கறையில் ஒரு சதம் கூட நாட்டின் பிரதமரோ, நாட்டின் உள்துறை மந்திரியோ அக்கறைவைப்பதில்லை. ராமர் கோவில் விவகாரத்தில் நீதி நிலை நாட்டப்பட்டதாக மோடி மன்கி பாத்தில் நேற்று உரை நிகழ்த்துகிறார். மனசாட்சியை அடகு வைத்து விட்டு எப்படி இவர்களால் உரையாற்ற முடிகிறது? எப்படி துணிந்து பொய் பேச முடிகிறது?
ராமர் இங்குதான் பிறந்தார் என்று பொய் கூறி முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக தொழுகை நடத்தி வந்த ஒரு இடத்தை வம்படியாக பிடுங்கிக் கொண்ட இந்துத்வாக்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய தருணமிது.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
25-11-2019


திப்பு சுல்தான் பற்றி திருச்சி சிவா அவர்கள்.....


யார் அன்னியன் ? பார்ப்பானா ? திப்பு சுல்தானா ?

தமிழ்நாடு கேரளம் மட்டுமல்ல.... பிஜேபி ஆளும் ஜார்கண்டிலும் இதே நிலைதான்.


இந்துக்களுக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

இந்துத்வாக்கள் கட்டிய பள்ளியை இடிக்கிறார்கள். இந்து மக்களோ புதிதாக பள்ளி கட்ட நிதி தருகிறார்கள்.

இந்துக்களுக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.


Sunday, November 24, 2019

10 வருடம் ஆட்சி அதிகாரம் கிடைத்ததற்கே தலை கால் புரியாமல் ஆடுகிறார்கள்.

இன்றைய பாஜக இந்து முன்னணி போன்ற பாசிச அமைப்புகள் 10 வருடம் ஆட்சி அதிகாரம் கிடைத்ததற்கே தலை கால் புரியாமல் ஆடுகிறார்கள்.
ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவை ஆண்டது 800 வருடங்கள். அந்த மன்னர்கள் எவருமே கட்டாய மதமாற்றத்தை விரும்பவில்லை.
அவ்வாறு முயற்சித்திருந்தால் என்றோ மோடியின் பெற்றோரும் அமீத்ஷாவின் பெற்றோரும் முஸ்லிம்களாக மாறியிருப்பர். இந்த உண்மையை ஒரு இந்துவே சொல்கிறார்.


பிரார்த்தனை என்றுமே வீண் போவதில்லை.

பிரார்த்தனை என்றுமே வீண் போவதில்லை.
ஒரு ரஷ்ய பயணிகள் விமானம் பர்னோல் விமான நிலையத்திலிருந்து வெவ்வேறு தேசிய பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது, அவர்களில் ஒரு முஸ்லீம் பயணியைத் தவிர வேறு எந்த முஸ்லிமும் இல்லை. திடீரென்று விமான என்ஜின்கள் செயலற்று போயின,
விமானம் அதிவேகமாக தரையை நோக்கி விழத் தொடங்கியது, அனைத்து பயணிகளும் அலறத் தொடங்கினர், அவர்களில் சிலர் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் ஒரு பயங்கரமான விபத்தை எதிர்கொள்கிறார்கள் என்று மயக்கம் அடைந்தனர்.
விமானத்தில் இருந்த முஸ்லீம் மட்டும் இரு கைகளையும் உயர்த்தி, 'OH MY LORD அல்லாஹ், என்னையும் இங்குள்ள அனைவரையும் காப்பாற்ற உன் ஒருவனால் மட்டுமே இயலும் என நான் நம்புகிறேன்.எனவே உன்னருளைக் கொண்டு எங்களனைவரையும் நீ காப்பாற்றியருள்வாயாக' என உருக்கமாக நம்பிக்கையுடன் பிரார்த்தித்தார்.
திடீரென்று என்ஜின்கள் வேலை செய்யத் தொடங்கின, விமானியால் விமானத்தை கட்டுப்படுத்த முடிந்தது. அவர்கள் தரையிறங்கியபோது அவர்கள் விமானம் எவ்வாறு காப்பாற்றப்பட்டது? என்பதை அறிய விமானத்தின் கருப்பு பெட்டியை சோதித்தனர்.
எல்லோரும் பதற்றத்தில் இருக்கையில் முஸ்லீமான அந்த ஒரே நபர் மிகவும் அமைதியாக இருப்பதையும், பேரழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு அல்லாஹ்விடம் கெஞ்சுவதையும் அவர்கள் கண்டார்கள். அல்லாஹ் முஸ்லிமின் துஆவுக்கு பதிலளித்ததில் தான் உறுதியாக இருப்பதாக கேப்டன் கூறினார். அப்படித்தான் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் ..
பைலட் உடனடியாக ஷஹாதாவை எடுத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு திரும்பினார்.


இந்து முண்ணனி ராம கோபாலனின் திட்டம் தவிடு பொடியானது!

இந்து முண்ணனி ராம கோபாலனின் திட்டம் தவிடு பொடியானது!
நெகிழ வைத்த நிகழ்வு - மத மாற்றம்.... இது ஒரு மீள் பதிவு...
இந்து முண்ணனி தலைவர் ராம கோபாலன் தனது இயக்கத்தவருக்கு ஒரு அன்பு கட்டளையை சில ஆண்டுகளுக்கு முன்பு இட்டார். 'முஸ்லிம் பெண்களை காதலித்து கடைசியில் அவர்களை இந்துக்களாக மாற்றி விடுங்கள்' என்ற கட்டளையே அது. இந்து மதம் வளர இது ஒன்றே வழி என்று முடிவெடுத்துள்ளார் போல் தெரிகிறது. ஏனெனில் கொள்கையை சொல்லி அவரால் இந்து மதத்தை வளர்க்க முடியாது என்பது அவருக்கும் தெரியும். திராவிடர் கழக தலைவர் வீரமணி கேட்கும் பல கேள்விகளுக்கு இராம கோபாலனிடம் எந்த பதிலும் இன்று வரை இல்லை. எனவே ராம கோபாலன் இட்ட இந்த கட்டளையை நிறைவேற்ற பல இந்து முன்னணி இளைஞர்கள் இஸ்லாமிய பெண்களை படிக்கும் இடங்களில் சீண்டுவது ஆங்காங்கே அரசல் புரசலாக நடந்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் எனது கிராமத்துக்கு அருகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமத்தில் இது போன்று கல்லூரிக்குச் சென்ற ஒரு இஸ்லாமிய பெண்ணை ஒரு இந்து முன்னணி இளைஞன் ஒருவன் எப்படியோ ஆசை வார்த்தைகள் காட்டி மயக்கி விட்டான். ஒரு மத போதகரின் மகள். வறிய குடும்பம். அந்த பெண்ணும் காதலில் வீழ்ந்து விட்டாள். தனது தந்தைக்கோ அல்லது தனது ஊர் ஜமாத்துக்கோ தெரிந்து விட்டால் பெரும் பிரச்னையாகி விடும் என்று கல்லூரியிலிருந்து அந்த இளைஞனோடு ஓடி விட்டாள் அந்த பெண்.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அந்த ஊரே கொதித்தது. ஊரில் பல கட்டுப்பாடுகளையும் விதித்தனர். மத போதகரான அந்த பெண்ணின் தந்தையை பலரும் கேவலமாக பேச ஆரம்பித்தனர். அவரும் கூனிக் குறுகிப் போய் அவமானத்தில் தனது மகளை கை கழுவி விட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். அந்த பெண் ஓடிப் போன நேரம் ரமலான் மாதம். மிகவும் கட்டுப்பாடாக இஸ்லாமிய மார்க்க சூழலில் வளர்ந்த பெண் என்பதால் தொழுகையையும் நோன்பையும் அங்கு சென்றும் விடாமல் நிறைவேற்றி வந்துள்ளார். அந்த இந்து முன்னணி இளைஞனின் குடும்பம் இந்த பெண்ணின் நடவடிக்கைளை ஆச்சரியத்தோடு பார்க்க ஆரம்பித்தது. அந்த பையனின் தாயார் இரவில் எழுந்து நோன்பு வைக்க உணவுகள் சுடச் சுட தயார் செய்து கொடுத்துள்ளார். இஸ்லாமிய வீட்டு உணவுகள் எப்படி இருக்கும் என்று அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த தாய் அந்த பெண்ணுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார். புகுந்த வீட்டில் தான் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக தனது தாயாரிடம் அந்த பெண் கைபேசி மூலம் கூறியுள்ளார். இதனை எல்லாம் எனது ஒன்று விட்ட தங்கை என்னிடம் சொல்ல நானும் ஆச்சரியப் பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்..
தனது திட்டம் நிறைவேறினாலும் இந்த பெண்ணின் இஸ்லாமிய நடவடிக்கைகளை மட்டும் அந்த இளைஞனால் மட்டுப் படுத்த முடியவில்லை. அந்த பெண்ணை எதுவும் சொல்லக் கூடாது என்று மாமியாரின் கட்டளை வேறு. நாட்கள் இப்படியே ஓடியது. தான் தவறிழைத்து விட்டோமோ என்று அந்த இளைஞன் சற்று சஞ்சலப்பட ஆரம்பித்தான். திடீரென்று ஒரு நாள் அந்த பெண் ஓதிக் கொண்டிருந்த தமிழ் குர்ஆனை வாங்கி படிக்க ஆரம்பித்தான் அந்த இளைஞன். அவனுள் இனம் புரியாத மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. தினமும் இரண்டு பக்கம் மூன்று பக்கம் என்று படிக்க ஆரம்பித்தான். படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை அந்த பெண்ணிடமும், இஸ்லாமிய நண்பர்களிடமும் கேட்டு தெளிவடைந்து கொண்டான். காலப் போக்கில் தானும் இஸ்லாமியனாக மாறி விட வேண்டும் என்ற உந்துதல் அவனது மனதில் நிழலாடியது. இது அவனது இந்து முன்னணி இயக்கத்துக்கு தெரிந்தால் கொலையும் செய்து விடுவார்கள் என்பதால் இரவோடு இரவாக தனது சொந்த ஊரை காலி செய்து விட்டு பெண்ணுடைய இஸ்லாமிய கிராமத்துக்கு வந்து நடு இரவில் கதவை தட்டினான்.
பெண்ணின் தகப்பனார் கதவை திறந்தார். அவனை பார்த்தவுடன் கோபத்தில் 'ஏண்டா என் குடும்பத்தை இப்படி சீரழிச்சே...' என்று கேட்கத் தொடங்கினார்.
'மன்னித்துக் கொள்ளுங்கள். அதற்கு பிராயச்சித்தம் தேடவே வந்துள்ளேன். நான் முஸ்லிமாக மாற தீர்மானித்துள்ளேன். உங்கள் மகளையும் நாளை அழைத்து வருகிறேன்.'
பெண்ணின் தந்தை சந்தோஷத்தோடு 'அப்படியா! எல்லா புகழும் இறைவனுக்கே! நாளை என் மகளை அழைத்து வந்து விடு! பள்ளி வாசலில் வைத்து ஊர் மக்கள் முன்னிலையில் உன்னை முஸ்லிமாக்கி விடுகிறோம்' என்றார்.
'உள்ளே வாங்க' மாமியாரும் ஆசையோடு அழைத்தார். பாலும் சில பலகாரங்களும் வைத்தனர். சாப்பிட்டு விட்டு 'நாளை வருகிறேன்' என்று சொல்லி சென்று விட்டான்.
மறுநாள் தனது மனைவியோடு அந்த இஸ்லாமிய கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான் அந்த இந்து முண்ணனி இளைஞன். பள்ளியில் வைத்து இஸ்லாமியனாக உறுதி மொழி எடுக்க வைக்கப்பட்டது. 'இறைவன் ஒருவன்தான் என்பதை உறுதியாக நம்புகிறேன். அந்த இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன். முகமது நபி கடைசி இறைத் தூதர் என்றும் நம்புகிறேன்' என்று தமிழிலும் அரபியிலும் அந்த இளைஞன் சொல்ல வைக்கப்பட்டான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது தமிழர்களின் ஆதிகால கொள்கை அங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. பின்னர் திருமணம் எனும் நிக்காஹ்வும் நடத்தப்பட்டது.
அந்த பள்ளியிலேயே இனிப்பு பலகாரங்கள் வழங்கி மிக சிம்பிளாக திருமணம் முடிக்கப்பட்டது. மறுநாளிலிருந்து ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் ஒரு நாள் அந்த தம்பதிகளுக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது. இன்று அந்த தம்பதிகள் சந்தோஷமாக தங்கள் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ராமதாஸைப் போல அந்த மக்களை தூண்டி விட்டு அந்த கிராமத்தை அழிக்க இங்கிருந்து யாரும் படையை அனுப்பவில்லை. வசதியுள்ள இந்த இஸ்லாமிய கிராமத்துக்கு அதனை செய்வதற்கு அதிக நேரமும் ஆகாது. ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்தார்கள். அந்த பொறுமைக்கு பலன் கிடைத்தது. ராம கோபாலனின் திட்டமும் தவிடு பொடியானது.
‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’
(அல்-குர்ஆன் 3:54)
மாடுகளுக்கு இனி குளிர் பயம் தேவையில்லை :-)

மாடுகளுக்கு இனி குளிர் பயம் தேவையில்லை 
உபி அயோத்தியில் உள்ள பைசிங்பூரில் 200 பசுக்களுக்கும் 700 காளைகளுக்கும் குளிர் உடைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அயோத்தி மாநகராட்சி நிர்வாகம் நிதியை ஒதுக்கியுள்ளது.
கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350 வரை சந்தையில் விற்கப்படுகிறது.
குளிரில் பள்ளியில் குழந்தைகள் ஸ்வெட்டர் இல்லாமல் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு பணம் ஒதுக்காமல் மாடுகளுக்கு பணம் ஒதுக்கியதை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது.
இந்த கோமாளிகளின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் கூத்துக்களை காணப் போகிறோமோ!
தகவல் உதவி
News18
25-11-2019


கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை தெரியுமா உங்களுக்கு?

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை தெரியுமா உங்களுக்கு?
தெரியாதவர்களுக்கு நிகழ்காலத்தில்
ஒரு நிகழ்வைச் சொல்கிறேன், தெரிச்சுக்கோங்க..
நீங்கள் சில மாதங்களுக்கு முன்னால் இந்தச் செய்தியை கேள்விபட்டிருப்பீர்களென்று நினைக்கிறேன்.
அதாவது மத்திய அரசுக்கு ஆதரவாக
சிபிஜயை நடத்திய விவகாரத்தில் சிபிஜ இயக்குனர்களாக இருந்த ராகேஸ் அஸ்தானாவுக்கும், அலோக் வர்மாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதும், அதனை தீர்க்க நீதிமன்றம் தலையிட்டு சிபிஜ இயக்குனர்கள் இருவரிடமும் மத்திய கண்காணிப்பு ஆணையம் விசாரித்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டுமென்று சொல்லியிருந்தது.
இதுதான் மோடி அரசு வெட்டிய கிணறு. ஆனால் இங்கிருந்து மோடி எதிர்பார்க்காத பூதம் ஒன்று கிளம்பியது.
அதாவது மத்திய கண்காணிப்புதுறை நடத்திய விசாரணையின் அறிக்கையை சமீபத்தில் நீதிமன்றத்தில் சமர்பித்திருக்கிறது. அதில் இவர்கள் இருவருக்குள் பிரச்சனை எதிலிருந்து ஆரம்பித்தது என்று தெரிந்துகொள்ள கேட்கப்பட்ட கேள்விக்கு அலோக் வர்மா சொல்லியிருக்கிறார், 'மத்திய மோடி அரசின் அழுத்தத்தின் காரணமாக பிகாரின் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவை ஊழல் வழக்கில் கைது செய்வதிலிருந்தே எனக்கும் ராகேஸ் அஸ்தானவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதென்று'.
மேற்கொண்டு அவர், 'பிகாரில் எதிர்பாராதவிதமாக லல்லு பிரசாத் யாதவும், நிதிஷ்குமாரும் கூட்டணி வந்து வெற்றியும் பெற்றுவிட்டனர். இந்த கூட்டணியை உடைத்தால்தான் பிகாரில் பிஜேபி வளர முடியும் என்பதற்காக லல்லுபிரசாத் யாதவை ஊழல் வழக்கில் கைது செய்ய வேண்டுமென்று பிகார் மாநில பிஜேபி தலைவர் சுசில் மோடி மத்தியில் இருக்கும் நரேந்திர மோடியிடம் சொல்ல, அதற்கேற்றவாறு சிபிஜக்கு உத்தரவு வந்தது. அதனை நான் ஏற்கவில்லை. ஆனால் ராகேஸ் அஸ்தானா மத்திய அரசு சொன்னதை செய்ய ஆரம்பித்தார் லல்லுவை கைது செய்தனர். பிகாரில் கூட்டணியும் உடைந்தது. நிதிஷ்குமாரிடம் ஏற்கனவே பிஜேபி தரப்பிலிருந்து பேசியபடி பிஜேபி அவருக்கு ஆதரவு கொடுத்து கூட்டணியில் இணைந்தது' என்று சொல்லியிருக்கிறார்.
இதுதான் பூதம்கிளம்பிய கதை.
தனது நலனுக்காக மோடி தலைமையிலான பிஜேபி அரசு எவ்வளவு கீழ்த்தரமான வேலையை, அதுவும் தனித்து இயங்கக்கூடிய ஒரு நிறுவனத்தையே கபளீகரம் செய்து செய்திருக்கிறதென்பது இதன் மூலம் தெரியவந்திருக்கிறது. இதேபோலத்தான் நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கிறதென்று நான்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மக்கள் முன்னிலையில் சொன்னார்கள்.
ஆனாலும் இப்படி கிளம்பிய பல பூதங்களை தனது வில்லத்தனத்தால் பிஜேபி வெளியிலேயே தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்ளும் என்பதே கடந்தகால வரலாறு.
1.https://thewire.in/…/lalu-prasad-cbi-rakesh-asthana-a…/amp/…
2.https://thewire.in/…/bihar-lalu-prasad-yadav-tejashwi-corru…
4.https://thewire.in/…/sc-directs-cvc-to-give-probe-report-to…
5.https://thewire.in/govern…/cbi-cvc-alok-verma-rakesh-asthana
6.https://thewire.in/…/sushil-modi-sanjay-kumar-motihari-atta…
கொண்டல் சாமி பதிவின் காப்பி பேஸ்ட்


மூன்று தரப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள்

#இந்தியாவிற்கு_விடுதலை தர நினைத்த ஆங்கிலேயர்கள் மூன்று தரப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள்
1. காங்கிரஸ் தரப்பு,
2. இசுலாமியர்கள் தரப்பு,
3. 542 சமஸ்தானங்களின் தரப்பு.
1. #காங்கிரஸ் சார்பாக கலந்துகொண்டவர்
"அபுல் கலாம் ஆசாத்' அவர்கள்
2. #முஸ்லிம்_லீக் சார்பாக கலந்துகொண்டவர்
"முகமது அலி ஜின்னா"
3. #542_சமஸ்தாங்களின் சார்பாக கலந்து கொண்டவர் " பீகார் நவாப்"
ஆக #இந்திய_விடுதலை குறித்து கலந்துரையாடல் செய்த மூவருமே முஸ்லிம்கள்...அந்த முஸ்லிம்களை தான் இவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று கூறுகிறார்கள்..
#ஆ_ராசா அவர்கள்
ஆன்மீகத்தில் அறிவை இழக்கும் இந்து குடும்பங்கள்...

சரியான வழிகாட்டுதல் இல்லாததால் ஆன்மீகத்தில் அறிவை இழக்கும் இந்து குடும்பங்கள்...

அந்த மூன்று குழந்தைகளின் தந்தையின் பேட்டியை இன்று சன் டிவியில் கேட்டேன். பெற்ற மனம் படும் பாட்டை கண்டு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. பலரின் காலில் விழுந்து அழுது புரண்டது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. அவரின் தாயும் கதறுகிறார். பெற்றோர்களுக்கும் இந்த தவறில் பங்குண்டு. நடிகை ரஞ்சிதாவோடு ஆபாச வீடியோ வந்து உலகமே பார்த்தும் இன்னும் இவனை ஆன்மீக வாதி என்று நம்புகிறார்களே இந்த படித்த மக்கள்?

இனி நக்கீரனில் வந்த கட்டுரையை பார்போம்.

குஜராத்தில உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண் நிர்வாகிகளிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த நித்யானந்தாவின் செயலாளர்களில் ஒருவரான ஜனார்த்தனன் சர்மா புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் 21, 19, 15 வயது மகள்கள் மற்றும் 13 வயது மகன் ஆகியோரை பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் கல்வி பயிலுவதற்காக ஜனார்த்தனன் சர்மா சேர்த்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஜனார்த்தனின் மகள்களும், மகனும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் புறநகரில் ஹிராபூரில் உள்ள நித்தியானந்தாவுக்கு சொந்தமான யோகினி சவாஜ்னாபீடம் ஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் நித்யானந்தாவால் நிர்வகிக்கப்படும் இந்த ஆசிரமத்தில் 50 க்கும் அதிகமான குழந்தைகள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துவந்த நிலையில் ஜனார்த்தனன் சர்மாவின் குற்றச்சாட்டு அனைத்து தரப்பிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனை நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் சேர்த்தேன். அதனையடுத்து, அவர்களில் 2 பேர் மட்டும் அஹமதாபாத் ஆசிரமத்துக்கு இடமாற்றப்பட்டனர். இதில், எனது இரண்டு மகள்கள் மீட்கப்பட்டனர்,.ஆனால் இன்னும் ஒரு மகளை நித்யானந்தா தனது பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் அடைந்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், சர்மாவின் மற்றொரு மகள் நித்தியானந்தா ஆசிரமம் குறித்து சில தகவல்கள், பிரபல தனியார் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். அதில், தன் முகத்தை மறைத்தபடி பேசிய அவர், 'ஆண்டாள்' குறித்த கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவை திட்டச் சொல்லிக் கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கொடுத்ததே நித்யானந்தா தான் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகாரை அடுத்து ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், காணாமல்போனதாக சொல்லப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அப்பெண்ணின் புகாரை அடுத்து போலீஸார், நித்யானந்தா ஆசிரமத்தில், ப்ராணப் பிரியா, பிரியா தத்துவா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நக்கீரன் இதழில் வந்த கட்டுரையின் நகல்
22-11-2019