Followers

Thursday, June 30, 2016

சுவாதி கன்னத்தில் அறைந்தது கொலையாளியா?சுவாதி கொலை நடந்த சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், ரயிலுக்காகக் காத்திருந்த பயணி தமிழ்ச் செல்வன், கொலையாளியை நேரில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.இவர் சென்னை சூளைமேடு ஏரியாவை சேர்ந்தவர். தனியார் நிறுவன ஊழியர்.

அவர் மீடியாக்களிடம் கூறும்போது, ''வழக்கமாக நான் தினமும் காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் போய், அங்கிருந்து ரயிலைப் பிடித்து வேலைக்குச் செல்வேன். என்னைப் போலவே, இளம் வயதுப் பெண் ஒருவர் அதே நேரத்துக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார். பத்து நாட்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில்அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அப்போது ஒரு வாலிபர் அந்தப் பெண்ணுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஒருகட்டத்தில், அந்தப் பெண்ணின் கன்னத்தில் அவர் மாறி மாறி அறைந்தார். அதற்கு அந்தப்பெண் ஏனோ, எதிர்ப்புக் காட்டவில்லை. கொலை நடந்த நாளன்று அதே வாலிபர், நான் நின்று கொண்டிருந்த நடை மேடையில் வேகமாக ஒடியதை பார்த்தேன். அவரை சிலர் விரட்டிக் கொண்டு ஒடினர். அந்த வாலிபர்தான் அன்று அந்தப் பெண்ணிடம் தகராறு செய்து கன்னத்தில் அறைந்த வாலிபர் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. நானும் அந்த வாலிபரை விரட்ட முயற்சி செய்தேன். ஆனால், அதற்குள் அவன் ஓடிவிட்டான்.

பிளாட்பாரத்தில் கும்பல் கூடியிருந்த இடத்திற்கு ஒடிவந்து பார்த்தபோது, அங்கே அந்தப் பெண் கழுத்திலும், முகத்திலும் ரத்தம் வழிந்த நிலையில் கீழே விழுந்து கிடந்தார். அந்தப்பெண்தான், அந்த வாலிபரிடம் ஏற்கனவே கன்னத்தில் அறை வாங்கிய அதே பெண் என்பதைப் புரிந்துகொண்டேன். பிறகு, பத்திரிகை செய்திகளில் அந்த பெண்ணின் பெயர் சுவாதி என்று அறிந்தேன். நான் வசிக்கும் சூளைமேடு ஏரியாவில்தான் குடியிருந்தவர் என்பதைக் கேள்விப்பட்ட போது, அதிர்ச்சியாக இருந்தது'' என்றார்.

சுவாதி கொலை சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு சாட்சியாகக் கருதப்படும் எண்பது வயது முதியவர், அதே இடத்தில் நெஞ்சுவலியில் இறந்து போய் விட்ட நிலையில், கொலைச் சம்பவத்தை நேரில் பார்க்கா விட்டாலும், அந்த சமயத்தில் அங்கிருந்த முக்கிய ஆதாரமாக சூளைமேடு தமிழ்ச்செல்வன், சாட்சியாகப் பேசத் தொடங்கியிருப்பது இந்த வழக்குக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/crime/65700-did-nungambakkam-murder-verdict-beat-swathi.art

11 வயது பெண்ணை மணந்து கொண்ட பிஜேபி தொண்டர்!11 வயது பெண்ணை மணந்து கொண்ட பிஜேபி தொண்டர்!

ஜார்கண்ட் பிஜேபி தலைவராக உள்ளவர் தலா மரண்டி. இவரது மகன் முன்னா மரண்டி. சென்ற 27 ந் தேதியன்று 11 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்திய சட்டப்படி இது தவறு. மைனரான ஒரு பெண்ணை மணமுடித்ததால் இவரை கைது செய்திரக்க வேண்டும். ஆனால் பிஜேபியை செர்ந்தவராததால் கைது இருக்காது.

நரேந்திர மோடியும் பால்ய விவாகம் செய்தவர். தலைவன் எவ்வழி தொண்டனும் அவ்வழி.

போலோ பாரத் மாதாகீ ஜே!

http://newsd.in/jharkhand-bjp-chiefs-son-marries-11-year-old/

ருத்ரன் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்!

எஸ்வி சேகர் கட்டவிழ்த்து விடும் பொய்கள்!எஸ்வி சேகர் கட்டவிழ்த்து விடும் பொய்கள்!

News 7 செய்தியாளர் : சுவாதி கொலை சம்மந்தமாக காவல்துறைக்கு இன்றுவரை எந்தவித தகவலும் கிடைக்காத சூழ்நிலையில் ஒரு முஸ்லிம் பெயரை இணைத்து சமுக வலைத்தளங்களில் எழுதுவது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க ??

எஸ்.வி.சேகர் Sve Shekher Venkataraman : அதாவது மதச்சார்பு என்பது இன்று இந்துக்களுக்கு எதிராகவே இருக்கிறது. ஹஜ் மானியம் தரப்படுகிறது , காசிக்கு மானியம் கொடுப்பதில்லை. இந்துக்களைத் திட்டி இஸ்லாமியார்களை எதுக்கு சந்தோஷப் படுத்துறீங்க என்ற பதிலை கூறி இருக்கிறார்.

------------------------------------------

கேள்வி எதைப் பற்றி... இந்த பார்பனர் கொடுக்கும் பதில் என்ன? ஏதாவது கேள்விக்கு சம்பந்தம் உள்ள பதிலா? அந்த காலம் முதல் பொய்களையே பரப்பி வருவது இவர்களின் தொழில். அடுத்து ஹஜ் மானியம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதைனை ஆதாரத்தோடு இனி பார்போம்.

'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை!

பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு? வசதியுடைய முஸ்லிம்களுக்குத்தானே கடமை' என்ற வாதத்தை வைக்கின்றனர். நியாயமான கோரிக்கையும் கூட. இது பற்றி இந்த பதிவில் அலசுவோம்.

கேரள ஹஜ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.அப்துல் ரஹீம் அவர்கள் தேஜஸ், மாத்யமம் மலையாள நாளிதழ்களில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

ஹஜ் மான்யம் என்று கேட்டவுடன் புனித பயணிகளை அரசு இலவசமாக அழைத்துச் செல்வதாகவோ அல்லது புனித யாத்திரைக்கு பெருந் தொகையை ஒதுக்குவதாகவோ பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் இதில் துளி கூட உண்மையில்லை.

மத்திய அரசின் கீழ் ஹஜ் கமிட்டி வழியாக செல்லும் ஒவ்வொரு புனித பயணியும் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக சராசரியாக ஒன்றே கால் லட்ச ரூபாய் கட்டுகிறார். இதில் விமானக் கட்டணம் தற்பொழுது 16 ஆயிரம் ஆகும். இது நிரந்தர கட்டணமாகும். விமான பயணத்திற்கு இதனை விட அதிக கட்டணம் தேவைப்பட்டால் அதனை அரசு வழங்கும். இதுதான் ஹஜ் மான்யம். இந்த மான்யமும் அரசின் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். தனியார் விமானங்களுக்கு கிடையாது.

உதாரணமாக...கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் கோழ்க்கோட்டில் இருந்து ஹஜ்ஜூக்கு புறப்படுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கோழிக் கோட்டிலிருந்து ஜெத்தா செல்வதற்கு ஏர் இந்தியா வசூலிக்கும் தொகை 17300 ரூபாய் ஆகும். (தற்போது சில ஆயிரங்கள் வித்தியாசப்படலாம்). இந்த தொகைப்படி ஒரு ஹஜ் பயணிக்காக அரசு செலுத்த வேண்டிய மானியத் தொகை வெறும் 1300 ரூபாய் மட்டுமே! (ஜெட் ஏர்வேஸின் விமானக் கட்டணத்தோடு ஒப்பிட்டால் ஒவ்வோர் ஹஜ் பயணிக்கும் ரூ 2000 அரசு திரும்ப தர வேண்டியிருக்கும்.

ஒன்றேகால் லட்ச ரூபாயை புனித ஹஜ் பயணத்திற்காக கட்டும் பயணி மேலதிகமான 1300 ரூபாயை கட்டத் தயங்குவாரா? அதனையும் நாங்களே வழங்குகிறோம் என்று ஹஜ் பயணிகள் கூறினாலும் அரசு இதுவரை சம்மதிக்கவில்லை. நாங்களே வழங்குகிறோம் என பிடிவாதம் பிடித்து வருகிறது. இங்கேதான் ஹஜ் மானியத்தின் பெயரால் அரசு நடத்தும் ஏமாற்று வித்தை அம்பலப்படுகிறது. அதாவது ஆரிய மூளை இங்குதான் வேலை செய்கிறது.

அது எப்படி என்று பார்ப்போமா!

கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு கண்டு பிடித்த வழிதான் இந்த ஹஜ் மானியம் என்பது. ஹஜ் மானியத்தின் பெயரால் ஒரு பெருந்தொகையை அரசு ஏர் இந்தியாவுக்கு தானமாக வழங்குகிறது. முந்தய ஆண்டுகளை கவனித்தால் இது புரிய வரும். 2008 ஆம் ஆண்டு ஹஜ் மானியமாக 770 கோடி ரூபாய் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முந்தய வருடம் 2007 ஆம் ஆண்டு 595 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளின் புள்ளி விபரங்களை பெற முயற்சி மேற்கொண்டபோது அந்த துறையைச் சார்ந்த அதிகாரிகள் தகவலை தர மறுக்கின்றனர். ஹஜ் ஒதுக்கீடு, நல்லெண்ண பிரதிநிதித்துவக் குழு ஆகியன தொடர்பான வழக்கில் தகவல்கள் ஒருக்கால் வெளியாகலாம்.

2008 ஆம் ஆண்டு 1.10 லட்சம் புனித பயணிகள் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜூக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக அரசு ஏர் இந்தியாவுக்கு மானியம் என்ற பெயரால் அளித்த தொகை 770 கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு புனித பயணிக்கும் 70 ஆயிரம் ரூபாய் வீதம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

எவ்வளவு கடுமையான சீசனாக இருந்தாலும் ஒரு புனித பயணிக்கு கோழிக்கோட்டில் இருந்து ஜெத்தவிற்கோ மதினாவிற்கோ சென்று விட்டு திரும்பி வர விமானக் கட்டணமாக ரூ 70 ஆயிரம் செலுத்தத் தேவையில்லை. விமானக் கட்டணத்திற்காக புனிதப் பயணிகள் அளிக்கும் 16 ஆயிரம் ரூபாயோடு சேர்த்து ரூ 770 கோடியை ஏர் இந்தியாவுக்கு தாரை வார்க்கிறது மத்திய அரசு. பல பயணிகள் சவுதி விமானத்திலும் அனுப்பப்படுகின்றனர். அதற்கு மானியம் கிடையாது. இதன்படி ஒவ்வொரு நபருக்கும் எழுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மானியமாக முஸ்லிம்களின் பெயரால் ஏர் இந்தியாவுக்கு அளிக்கிறது நமது கையாலாக அரசு.

ஏர் இந்தியாவில் பணி புரியும் நபர்களுக்கு நமது ஹஜ் மானியத் தொகை எப்படி அனுப்பப்படுகிறது என்பதை பார்த்தோம். நம் ரத்தத்தை உறிஞ்சி ஏர் இந்தியா குடும்பங்கள் சகல வசதிகளையும் பெற்று வாழ்கின்றன.

இனி வரும் காலங்களில் ஹஜ் புனித பயணம் செல்வோர் 'எங்களுக்கு மானியத் தொகை வேண்டாம்! அப்படி கொடுக்கும் பணத்தில் நாங்கள் ஹஜ் செய்ய விரும்பவில்லை' என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்கள் இதற்கான போராட்டங்களை அறிவிக்க வேண்டும். வழக்கும் தொடர வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த ஹஜ் மானியத்தில் உண்டு கொழித்த அனைத்து கருப்பு ஆடுகளும் யார் என்பது வெளி உலகுக்குத் தெரிய வரும்.

முஸ்லிம்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் சற்றும் சளைத்ததல்ல. ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இத்தனை ஆண்டுகள் ஹஜ் மானியம் யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது? இந்த மானிய பணத்தை இது நாள் வரை அனுபவித்தவர்கள் யார்? யார்? என்ற விபரங்களைக் கேட்க வேண்டும். முக்கியமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்.

ஆக....இஸ்லாமியரின் ஹஜ் மானிய பணத்தில் தனது ஜீவனை நடத்திக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம் என்பது இதன் மூலம் விளங்குகிறது.. இஸ்லாமியருக்கு உதவினோம் என்ற பெயரும் வந்து விடும்: ஏர் இந்தியாவின் ஊழியர்கள் சுகமான வாழ்வுக்கும் அடித்தளம் இட்டது போல் ஆகி விடும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ! :-(

Wednesday, June 29, 2016

தீனதயாளன் தொழிலதிபராம்: பார்பனன் என்று போடு!

தீனதயாளன் தொழிலதிபராம்: பார்பனன் என்று போடு!

கொடிக்கணக்கான நம் நாட்டு கலை படைப்புகளை வெளிநாட்டுக்கு விற்று காசு பார்த்த கயவன் தொழிலதிபராம்! எதற்கு இந்த மரியாதை? இவன் பார்பன குலத்தை சேர்ந்தவன் என்பதாலா? உண்மையான கடவுள் பக்தி இருந்திருந்தால் இதனை செய்திருப்பானா?

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் என்ற சர்வதேச சிலை கடத்தல்காரன் பங்களாவில் இருந்து, 100க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிலை கடத்தல் விவகாரம் ஒவ்வொரு மணி நேரமும் புதுப் புது வடிவம் எடுத்துள்ளது. இதுவரை தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தில் இதுதான் பிரமாண்டமான சிலைக் கடத்தல் என்பதால் இந்தியா முழுவதும் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய நாகசாமி, இங்குள்ள சிலைகள் எல்லாம் 1000 ஆண்டுகள் வரை பழைமை வாய்ந்தது. இதில் பெரும்பாலானவை சோழர் காலத்தை சேர்ந்தவையாகும். இந்த சிலைகளை எல்லாம் விலைகளுக்குள் அடக்கி விட முடியாது. அந்தளவிற்கு ஒவ்வொரு சிலையும் விலை மதிப்பற்றது. இதில் சிவபெருமான், அம்மன், நர்த்தனம் ஆடும் தெய்வங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிலைகள் உள்ளன.

நாட்டுக்காக உயிரிழந்தவருக்கு கிடைத்த மரியாதை!

நாட்டுக்காக உயிரிழந்தவருக்கு கிடைத்த மரியாதை!

உபியில் உள்ளது ஃபெரோஜாபாத் மாவட்டம். இங்குள்ள நேக்ளா கேவல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீர் சிங். ராணுவத்தில் பணி புரிகிறார். சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் சுட்டதில் உயிரிழந்திருக்கிறார். அவரது குடும்பத்துக்கு பண உதவியும், அரசு மரியாதையும் செலுத்தப்பட்டது.

முடிவில் அவரது உடலை அடக்கம் செய்ய இந்துக்களின் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். பிணத்தை சுடுகாட்டுக்கு கொண்டு வர அந்த கிராம மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இறந்து போன ஜவான் நாட் என்ற கீழ் சாதியை சேர்ந்தவராம். உயர்ந்த வகுப்பார் ஈமக் கிரியைகள் செய்யும் இடத்தில் ஒரு கீழ் சாதிக்காரரா என்று அந்த மக்கள் பொங்கினர். ஆஹா ... நாட்டக்காக உயிரிழந்தவருக்கு அந்த மக்கள் கொடுத்த மரியாதை மெய் சிலிர்க்க வைக்கிறது.

அதன் பிறகு மேலதிகாரிகள் சமரசம் பேசி வெறொரு இடத்தில் அந்த ராணுவ வீரரின் ஈமக் கிரியைகளை செய்து முடித்தனர்.

இந்துத்வா சித்தாந்தம் வளர வளர அது இந்து மதத்துக்கே கேடாக முடியும். இந்து மதத்தை அழிக்க வெளியிலிருந்து ஆட்கள் தேவையில்லை. மோடியும் அவரது பரிவாரங்களுமே அந்த காரியத்தை கன கச்சிதமாக செய்து முடித்து விடுவார்கள்.

http://www.indiatimes.com/news/india/upper-cast-villagers-delay-pompore-martyrs-funeral-because-he-was-from-a-lower-cast-where-does-this-madness-end-257398.html

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்இது பனி படர்ந்த மலை என்றா நினைக்கிறீர்கள்? தவறு

இது அரஃபாவில் இறைவனிடம் கையேந்தும் முஸ்லிம்கள்!

'ஒரு தாய் மக்கள் நாம் என்போம்! ஒன்றே எங்கள் குலமென்போம்'

என்பதை ஏட்டில் மாத்திரம் எழுதி வைக்காமல் செயலிலும்

வருடந்தோறும் காட்டிக் கொண்டிருக்கும் உலக முஸ்லிம்கள்!

Tuesday, June 28, 2016

அமெரிக்கர் முஸ்லிமாக மாறினார்.50 வருடங்களாக சவுதி அரேபியாவில் பணி புரிந்து வந்த அமெரிக்கர் இவர். வயது 86 ஆகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக மாறினார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

மோடிக்கு மற்றுமொரு மகுடம் சூட்டப்படுகிறது!மோடிக்கு மற்றுமொரு மகுடம் சூட்டப்படுகிறது!

உலக பத்திரிக்கையாளர் புகைப்பட குழுமத்தின் 59 வது வருட புகைப்பட போட்டியில் இந்த புகைப்படமானது கலந்து கொண்டுள்ளது. மோடி பல ஆண்டுகள் முதல்வராக ஆட்சி செய்த குஜராத்தின் இன்றைய நிலையை இந்த ஒரு புகைப்படம் மிக அழகாக உலகுக்கு உணர்த்துகிறது. பள்ளிக்கு பாடம் பயில அனுப்ப வேண்டிய குழந்தைகளையும் பெண்களையும் தண்ணீருக்கு கால் கடுக்க நிற்க வைத்ததுதான் மோடியின் சாதனை! முதல் மந்திரியாகவும் பிரதம மந்திரியாகவும் தேர்ந்தெடுத்த அந்த மக்கள் இனியாவது உண்மையை உணர்வார்களா?

பிரபல அமெரிக்க பாப் பாடகி நிகோலா ரிஷி!பிரபல அமெரிக்க பாப் பாடகி நிகோலா ரிஷி இஸ்லாத்தை தழுவினார்!

உலகம் அறிந்த பிரபல பாப் இசைப் பாடகி நிகோலா ரிஷி மன்பு நிறைய மது அருந்தினார்: பல அண்களோடு தொடர்பில் இருந்தார்: பணமும் புகழும் கிடைத்தாலும் மன அமைதி மட்டும் கிடைக்கவில்லை. இறை வேதமான குர்ஆனை படிக்க ஆரம்பித்தார். அச்சரியமாக அவருள் இருந்த பல சிக்கல்கள் தீர்ந்தது. தாயாரின் பயங்கர எதிர்ப்பையும் மீறி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார். தற்போது மது அருந்துவதில்லை: ஆண்களோடு தகாத உறவுகள் இல்லை: குர்ஆனை ஓதுவதும் இறைவனை தொழுவதுமாக தனது வாழ்நாளை கடந்த இரண்டு வருடங்களாக கழித்து வருகிறார். சவுதி அரேபியா சென்று இஸ்லாமிய கல்வியை கற்க வேண்டும் என்ற தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Kristin Nicola Ritchie
Born : 5 May 1986
Profession : Associate producer at Game Circus, Translator
Country : United State.
Everybody Knows her as MC Router.
Now she was Abedah Ritchie

Ritchie converted to Islam and changed her given name from Kristin to Abedah, which means "Worshiper of God" in Arabic, sometime shortened to "Abby". She said in an interview with Muglatte that before Islam she was a Christian but never took religion seriously. She also said that she converted to Islam because she found logic in it

"I'm a Muslim, and not all Muslims are terrorists." She said that she thinks being a Muslim is much safer than her previous lifestyle, as rapper MC Router. "My shtick was that people would bring me beer," she recalls. "My sets would be an hour, and I could knock out 24 beers. I was close to being an alcoholic." Abby says she was also having promiscuous sex with fans and club owners, but when she converted to Islam, her life changed dramatically. "I spend my time reading the Quran and praying," she explains. Abby says her plan is to move to Saudi Arabia when she finishes school — and never look back.

இனம் மொழி நிறம் கடந்த மனித நேயம்!இனம் மொழி நிறம் கடந்த மனித நேயம்!

உணவை உண்பவர் இந்தியர்: உணவை ஊட்டுபவர் எகிப்தியர். இருவரின் மொழியும் வேறு: இனமும் வேறு: நாடும் வேறு: இந்த மனித நேயத்தை வேறெங்கும் பார்த்திருக்கிறீர்களா? இதுதான் இஸ்லாம்!

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் தெரிந்தவன்”

அல்-குர்ஆன் 49:13

‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’

ஆதாரம் : அஹ்மத்

‘ஒரு நம்பிக்கையாளன் தான் விரும்புவதை இன்னொரு நம்பிக்கையாளனுக்கும் விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’

(ஆதாரம் : முஸ்லிம்).

இவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.

Monday, June 27, 2016

பர்மாவில் பவுத்தர்களின் வன்முறை செயல்!

பர்மாவில் பவுத்தர்களின் வன்முறை செயல்!

புனித ரமலான் மாதத்தில் இறை வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமியர் மீது கடந்த சில நாட்களாக பவுத்தர்களும் பர்மிய ராணுவமும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

உலக மீடியாக்கள் எதுவும் கண்டு கொள்ளவில்லை. இந்த பவுத்தர்களை தீவிரவாதிகள் என்று எவரும் சொல்வதில்லை. 'முக்கிய செய்திகளாக' எந்த செய்தி ஸ்தாபனமும் இதனை பதிவு செய்யவில்லை.

உலகமே முஸ்லிம்களுக்கு எதிராக நின்றாலும் இறைவன் அவர்களை காப்பாற்றுவான்!

சவுதியில்கொடுமைக்குள்ளான தமிழர்கள் பத்திரமாக மீட்பு!அன்புடையீர்,

கடந்த சிலமாதங்களாக வாட்ஸ்-அப் மற்றும் முகநூல்களில் கலைவாணன் என்ற ஒரு தமிழர் அவருடன் சேர்ந்து 3 தமிழர்களை காப்பாற்றும்படி உதவிகேட்டு மன்றாடினார், அதனை பலரும் பார்த்திருப்பீர்கள்.

இது இந்தியத்தூதரகத்திற்கு பலராலும் அனுப்பிவைக்கப் பட்டமையால் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் திரு. அனில்நோட்டியால் அவர்கள் என்னையும், சமூகசேவகர் திரு. ஜமால் அவர்களையும் தொடர்பு கொண்டு எப்படியாவது இவர்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்குமாறும் அவர்களை மீட்பதற்குண்டான வாய்ப்புகளை கண்டறியுமாறும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

அவர் உதவிகோரியிருந்த வீடியோவில் அவர் இருக்குமிடம் தெரியவில்லை என்றவர் அவரின் தொலைபேசியைத் தரவில்லை, ஆனால் பாஸ்போர்ட் நம்பரைத் தெரிவித்திருந்தார் அதன்படி அவரின் பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியைத் தொடர்புகொண்டு கலைவாணனின் தொலைபேசியைப் பெற்று நேரடியாக அவரிடம் பேசியதில் குமார் என்ற ஒரு தமிழர் டிரைவர் விஷா என்று அழைத்துவந்து பாலைவனத்தில் ஆடுமேய்க்க அனுப்பிவிட்டார், அவரிடம் கேட்டதற்கு உங்களை ஆடுமேய்க்கத்தான் அழைத்துவந்தேன் என்றுகூறி அரபிகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.

கலைவாணன் காசிநாதன், ராமன் முனுசாமி, எபிநேஷ்வரன் லூக்காஸ் என்ற இந்த மூன்றுதமிழர்களையும் பாலைவனத்தில் ஆடுமேய்க்க அனுப்பப்பட்டு கடந்த ஆறு மாதமாக மிகவும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

மூவரில் ஒருவரிடமிருந்த தொலைபேசியில் வாட்ஸ்-அப் இருந்ததால் அவர்களுக்கு இங்கிருந்து தொலைபேசியில் ரீசார்ஜ் செய்துகொடுத்து கூகுல் லோக்கசேன் அனுப்பிவைத்து ரியாத்திலிருந்து திரு. ஜமால் அவர்களின் வழிகாட்டலில் நிசார் என்ற ஒரு தமிழரின் துணையுடனும், ஹப்ருல்பாத்தினில் உள்ள ஜலீல் என்ற கேரள சகோதரரின் துணையுடனும் மூன்றுநாட்கள் அந்த ஏரியாவில் தங்கியிருந்து அங்கிருந்த கிராமத்தினரின் கண்களில் புலப்படாமல் இரவு 2 மணிக்கு பாலைவனத்திலிருந்து மீட்டுவந்து இந்தியத்தூதரகத்தில் ஒப்படைத்துவிட்டோம்.

அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்த காரணத்தினால் இந்தியத்தூதரகத்தின் செலவில் அவர்களுக்குண்டான மருந்துவ உதவிகள் நடைபெற்று வருகின்றது. இவர்களை ஏமாற்றிக்கொண்டுவந்த குமார் என்பவரின் விபரங்களை விசாரித்து அவர்மேல் தக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றது.
இவர்களை மீட்பதற்குண்டான உதவிகள் செய்த அனைவருக்கும், இந்தியத்தூதரக அதிகாரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Ahmed Imthias

சவூதி தமிழ்ச்சங்கம்.

மனித நேயம் என்ன என்பதை நிரூபித்துக் காட்டிய இந்த நல் உள்ளங்களை நாமும் பாராட்டுவோம்!

கோயிலில் தமிழில்லை - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்கோயிலில் தமிழில்லை - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்

தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற்கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

பெரியார்:

சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்...

பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)

Sunday, June 26, 2016

ஜெருசலம் மஸ்ஜித் அல் அக்ஸாவில் நோன்பு திறப்பு!ஜெருசலம் மஸ்ஜித் அல் அக்ஸாவில் நோன்பு திறப்பு!

இது வரை மூன்று லட்சத்துக்கு மேல் இந்த தனியார் அமைப்பு நோன்பு திறக்க உணவு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவ்வமைப்புக்கு நம்மால் ஆன உதவிகளையும் செய்வோம்.

Feed the fasting from just £4 in the final 10 days of Ramadan: https://donate.humanappeal.org.uk/donate/feed-the-fasting

ஜப்பானியர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் இஸ்லாம்!ஜப்பானியர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் இஸ்லாம்!

சமீபத்தில் ஜப்பானுக்கு பயணமானார் ஜாகிர் நாயக். அங்குள்ள படித்த மக்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை எடுத்து வைத்தார். ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த அவையிலேயே பல ஜப்பானியர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். பணத்தை காட்டவில்லை: மிரட்டவில்லை: குர்ஆனை விளக்கினார்: உண்மையை உணர்ந்த அவர்கள் உடன் சத்தியத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஒரு பெண் உண்மையை உணர்ந்து உறுதி மொழி எடுக்கும் போது தன்னையறியாமல் அழுவதை பாருங்கள்.

இறைவனின் சத்திய வார்த்தைக்கு அத்தகைய மகத்துவம் இருக்கிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Saturday, June 25, 2016

மனிதருள் மாணிக்கம் அப்துல் சத்தார் எதி!மனிதருள் மாணிக்கம் அப்துல் சத்தார் எதி!

சிறு வயதிலிருந்தே பொது பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 1965 ஆம் வருடம் பல்கீஸ் என்ற செவிலியரை மனைவியாக பெற்றார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள்: இரண்டு ஆண்:: இரண்டு பெண்,

அனாதையாக சுற்றித் திரியும் ஏழை மக்களை காக்க வேண்டி பொதுமக்களிடம் நிதி வசூலித்தார். இவரது பொதுச் சேவைக்கு இவரது மனைவியும் உறுதணையாக நின்றார். ஒரு இல்லம் என்று தொடங்கி இன்று பாகிஸ்தான் முழுக்க 'எதி பவுண்டேஷன்' தனது கிளைகளை பரப்பிக் கொண்டே செல்கிறது. எல்லாமே பொது மக்களின் நிதியினால் சாத்தியப்படுகிறது. இன்று 500 ஆம்புலன்ஸ்கள் இந்த பவுண்டேஷனுக்கு சொந்தமாக உள்ளது.

இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் இந்த தம்பதி மிக எளிமையாக வாழ்கின்றனர். பாராட்டு விழாக்களுக்கு கூப்பிட்டாலும் அதிகம் வருவதில்லை. அந்த நேரத்தில் யாருக்காகவது ஏதாவது உதவி செய்யலாமே என்கிறார் அப்துல் சத்தார் எதி.

மனிதாபிமானம் என்பது இதுதான்: இஸ்லாம் போதிப்பதும் நபிகள் நாயகம் போதித்ததும் இதைத்தான்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 4:36

அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், விரைவில் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் நரக நெருப்பில் வீசியெறியப்படுவார்கள்.

அல்குர்ஆன் 4:10

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி...
குவைத் KNPC இல் பணி புரியும் சென்னையை சார்ந்த சகோதரர் பாலாஜி அவர்கள் இன்று குவைத் மண்டலம் சால்மியா கிளையில் நடைபெற்ற சஹர் நேர நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்...

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (3:104)


எல்லா புகழும் இறைவனுக்கே!

லண்டன் மற்றும் இஸ்தான்பூல் வீதிகளில் நோன்பு திறக்கும் இஸ்லாமிய மக்கள்!லண்டன் மற்றும் இஸ்தான்பூல் வீதிகளில் நோன்பு திறக்கும் இஸ்லாமிய மக்கள்!

மசூதிகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் லண்டன் மற்றும் இஸ்தான்பூல் தெருக்களில் இஸ்லாமியர் தங்களின் நோன்பு கடமையை நிறைவேற்றுகின்றனர். இன்னும் 20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பெரும்பான்மையோராக இஸ்லாமியர் மாறி விடுவர் என்று கருத்துக் கணிப்பு சொல்கிறது.

மற்றொரு அன்பர் இது லண்டன் அல்ல. துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் என்கிறார். லண்டனோ அல்லது இஸ்தான்பூலோ பள்ளிகளில் இடப் பற்றாக் குறையினால் மக்கள் வீதிகளில் நோன்பு திறக்கிறார்கள்.

உலகம் முழுவதும் தேவாலயங்களும் கோவில்களும் ஆட்கள் இல்லாமல் நாத்திகத்தை நோக்கி செல்கையில் உலகமெங்கும் பள்ளி வாசல்களில் தினம் தினம் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பியர்களின் இஸ்லாத்திற்கு எதிரான சதிகளையும் முறியடித்து இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது எதிரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

மண் பாண்டங்கள் கோடிக்கணக்கில் வளை குடாக்களுக்கு ஏற்றுமதியாகின்றன!திருநெல்வேலியில் இருந்து பாரம்பரியமான மண் பாண்டங்களை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி யாகின்றன. மைக்ரோ வேவன் அடுப்பு களிலும் இவற்றை பயன்படுத்தலாம்.

துபாயிலுள்ள நட்சத்திர ஹோட்ட லின் தலைமை செயல்அதிகாரி ஒருவர் மண் பாண்டங்களை விற்பனை செய்யும் நபர்கள் குறித்து இணைய தளத்தில் தேடும்போது, திருநெல் வேலி குறிச்சியை சேர்ந்த எஸ்.முருகன் என்பவர் அறிமுகமானார்.

தேவை அதிகரிப்பு

பழமையான மண்பாண்டங்களுக் கான மாதிரிகளை அனுப்பி வைக்குமாறு முருகனிடம் அவர் கேட்டுக்கொண்டார். முருகனும் அந்த ஹோட்டல் அதிகாரி கூறிய அம்சங்களுடன் மண் பாண்டங்களை தயாரித்து அனுப்பி வைத்தார். சிறப்பாக இருந்ததால் அவற்றை அந்த ஹோட்டல் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. மைக்ரோ வேவன் அடுப்புகளிலும் பயன்படுத்தும் வகையில் அந்த மண் பாண்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து இந்த மண்பாத்திரங் களை மற்ற ஹோட்டல்களிலும் பயன்படுத்த தொடங்கினர். இதனால் இவற்றின் தேவை அதிகரித்தது. தற்போது திருநெல்வேலி மண் பாண்டங்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்கு கப்பல்களில் வளைகுடா நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. துபாய், குவைத், ஜோர்தான், கத்தார் நாடுகளுக்கு அவை ஏற்றுமதியாகின்றன.

உணவு வகைகளில் சுவை

இந்த மண் பாண்டங்களில் உணவுப் பண்டங்களை சுடச்சுட வைத்து, வீடுகளுக்கு நேரடி விநியோகம் செய்து அங்குள்ளவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். மண் பாண்டங்களில் இருக்கும் உணவுப் பொருட்களின் மணமும், குணமும், சுவையும் குன்றாமல் இருப்பதுடன் சூடும் குறையாமல் இருப்பதால் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

உணவு வகைகளை உண்டபின் மண் பாத்திரத்தை குப்பைத் தொட்டியில் போட்டுவிடலாம். அவை இயற்கைக்கு கெடுதல் இல்லாத கழிவு பொருளாகிவிடுகிறது என்பதால், மண் பாத்திரங்களின் தேவை வளைகுடா நாடுகளில் அதிகரித்திருப்பதாக முருகன் தெரிவித்தார்.

8-ம் வகுப்பு வரையில் படித்திருக்கும் முருகன், தனது கைவண்ணத்தில் உருவாக்கிய உபகரணங்கள் மூலமே பல்வேறு வகையான மண் பாண்டங்களை உருவாக்கி வருகிறார்.

ரூ. 30 கோடி ஏற்றுமதி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்டுக்கு ரூ.30 கோடி மதிப்பிலான மண் பாண்டங்கள் பல்வேறு நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் கொண்டு செல்லப்படுவதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எளிதில் உடையும் தன்மையுள்ள இந்த மண்பாத்திரங்கள் பத்திரமாக பேக்கிங் செய்யப்பட்டு, மாதத்துக்கு 2 அல்லது 3 கன்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

Thanks to
tamilhindu daily
16-06-2016

முஸ்லிம்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று இந்துத்வாவின் சாமியாரிணி பிரக்யாஷி சொன்னதை பத்திரிக்கைகளில் படித்தோம். இந்த ஊளையிடுதலை இந்துக்களே பொருட்படுத்தவில்லை.

நலிவடைந்து நொடித்துப் போன பாரம்பரிய மண் பாண்ட தொழிலுக்கு இன்று வளைகுடாக்கள் கை கொடுக்கின்றன. இந்திய தேசமானது இஸ்லாமியரின் தொடர்பில்லாது இயங்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு!...

Thursday, June 23, 2016

இஸ்லாம் தீர்வை சொல்கிறது - வில்லியம் பூடர்!பிரபல பொருளாதார நிபுணர் (எகனாமிஸ்ட்) வில்லியம் பூடர் கடன் சம்பந்தமாக எழும் பல பிரச்னைகளுக்கு இஸ்லாம் தீர்வை கொடுப்பதாக சொல்கிறார்.

Few economists would look to religion for the solution to a growing household debt problem, but Willem Buiter says Islamic finance is an unlikely future source of much needed innovation.

"A classic Islamic mortgage is a dual equity mortgage where the bank owns the house to begin. I buy the house from the bank with two payment streams. One is a rental stream related to the [rental] market. As long as I keep up that payment I won't be affected," he says.

"But the second is discretionary: for example you buy 5 per cent from the bank each year.".

"Stanford University does this. It's too expensive for an assistant professor to buy a house [in Palo Alto, California] so they go 50-50 with the university. If you make tenure you buy out Stanford and if you don't they buy you out. So it turns into equity."

The Islamic mortgage is a rare example, Buiter says, of "good financial engineering" rather than attempting to avoid paying tax or skirting regulation.

http://www.afr.com/business/banking-and-finance/financial-services/citis-willem-buiter-says-islams-ancient-solution-could-solve-household-debt-20160614-gpiuga#ixzz4CEUNrkza

பிஜேபி தலைவர் பலாத்கார வழக்கில் கைது!

பிஜேபி தலைவர் பலாத்கார வழக்கில் கைது!

குஜராத்தின் வதேதராவில் உள்ளது பாருல் பல்கலைக் கழகம். இதன் தலைவராகவும் ட்ரஸ்டியாகவும் உள்ளவர் ஜேஸ் படேல். இவர் பிஜேபியின் முக்கிய தலைவராகவும் உள்ளார். இதே கல்லூரியில் செவிலியராக படிக்கும் ஒரு இளம் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

'இனி நல்ல காலம் பொறக்கப் போகிறது' என்று மோடி அடிக்கடி சொல்வது இதைத்தானோ!

இந்தியன் எக்ஸ்பிரஸ்
22-06-2016

Wednesday, June 22, 2016

கவர்னர் ரோஸய்யா செய்த யோகா!கவர்னர் ரோஸய்யா செய்த யோகா!

கவர்னரா இரு!

ஜனாதிபதியா இரு!

முதல் மந்திரியா இரு!

நீ யாராக இருந்தாலும் சூத்திரன்தான்! உனக்கு கீழே தான் இருக்கை. கோவிலில் மணி ஆட்டினாலும் நாங்கள் பிராமின்: நாங்கள் மேலே தான் அமர்வோம்!

மரத் துண்டுகளில் குர்ஆனை மனனம் செய்யும் ஆஃப்ரிக்கர்!மரத் துண்டுகளில் குர்ஆனை மனனம் செய்யும் ஆஃப்ரிக்கர்!

ஆப்ரிக்காவில் உள்ள இந்த குழந்தைகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால் மரத் துண்டுகளில் குர்ஆன் வசனங்களை எழுதி மனனம் செய்கின்றனர். அதற்கேற்ற சூழலை இந்த குழந்தைகளின் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். குர்ஆன் மனனம் செய்தே ஆக வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. அதனை சரி செய்ய முதலில் முயற்சிக்க வேண்டும்.

நபிகள் நாயகம் காலத்தில் அவரது தோழர்கள் முறை வைத்து இஸ்லாத்தை கற்றார்கள். ஒருவர் வேலைக்கு போவார். மறு நாள் அவர் இஸ்லாத்தை கற்பார். பாடம் பயின்றவர்கள் வேலைக்கு போனவருக்கு ட்யூஷன் எடுப்பார்கள். இதனால்தான் அவர்கள் கவுரமாக வாழ்ந்து மரணித்தார்கள். நபிகள் நாயகமும் தங்களுடைய வருமானத்துக்காக 100 ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை வைத்திருந்தார்கள். எவரிடமும் கையேந்தியதில்லை.

எனவே இதன் மூலம் அறிவது அந்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கையை பாராட்டுவோம். அதே நேரம் அந்த சிறுவர்கள் உலக கல்வியையும் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். மாறி வரும் அறிவியல் உலகுக்கு ஏற்ப இஸ்லாமியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது தமிழகத்தில் உள்ள மதரஸாக்களில் நவீன கல்வியையும் புகுத்த வேண்டும். ஏழு வருடம் படித்து வெளியேறும் மாணவன் உலக சவால்களுக்கு ஈடு கொடுக்கக் கூடியவனாக வெளியேற வேண்டும். தற்போதுள்ள மதரஸா கல்வி முறை புரோகிதர்களைத்தான் உருவாக்குகிறது. கணிணி அறிவும் இல்லை: ஆங்கில அறிவும் இல்லை: உலக அறிவும் இல்லை: இப்படித்தான் அனேக மாணவர்கள் பட்டம் கொடுத்து வெளியேற்றப்படுகிறார்கள். முடிவில் அவர்கள் இமாமாகவோ மோதினாகவோ ஃபாத்திஹா ஓதும் முல்லாவாகவோ மாறி விடுகின்றனர். நபிகள் நாயகம் காட்டித்தந்த இஸ்லாம் இதுவல்ல. இதனை நம் சமூகம் என்று உணருகிறதோ அன்று தான் இஸ்லாமியர் உண்மை முஸ்லிம்களாக வாழ முடியும்.

அழகிய செயலால் ஒன்பது சீனர்கள் இஸ்லாத்தை தழுவினர்!அழகிய செயலால் ஒன்பது சீனர்கள் இஸ்லாத்தை தழுவினர்!

சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் உள்ள ஒரு சிறிய பள்ளிவாசலின் இமாமாக பணி புரிகிறார் டாக்டர் வாலித் அஜாஜி. ஒரு வாரம் முன்பு பள்ளி வாசலுக்கு சற்று தொலைவில் பிளாட்பாரத்தில் 9 சீன தேசத்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பிய இமாம் அவர்களின் நிலைக்கான காரணத்தை கேட்டுள்ளார். அதற்கவர்கள் தாங்கள் கம்பெனியால் ஏமாற்றப்பட்டுள்ளோம். சம்பளம் பல மாதங்களாக தரவில்லை. சரியான இருப்பிடமும் இல்லை. எனவே இங்கு உறங்கினோம் என்ற காரணத்தைச் சொல்லியுள்ளனர்.

ஒரு சில முஸ்லிம்களின் உதவியோடு பள்ளிவாலின் இடத்தில் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொடுத்து அவர்களை தங்க வைத்துள்ளார் அந்த இமாம். அதன் பிறகு அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உபசரித்துள்ளார்.

அந்த சீன தொழிளாலர்கள் முஸ்லிம்கள் என்றால் கடினமானவர்கள் என்று பயந்து போய் இருந்தனர். ஆனால் அந்த இமாமின் செயல்கள் அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த இமாம் சீன தூதரகத்தைத் தொடர்பு கொண்டு அவர்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லவும் ஏற்பாடு செய்தார்.

இது பற்றி இமாம் டாக்டர் அஜாஜி கூறுகிறார் 'அந்த ஒன்பது பேருக்கும் சவுதி அரேபியாவைப் பற்றியும் இஸ்லாமியர்களைப் பற்றியும் தவறான எண்ணம் ஏற்பட்டிருந்தது. ஏனெனில் அந்த அளவு அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களின் அன்பான உபசரிப்பினால் அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. தினமும் இறைவனை வணங்க தொழுகைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். நாங்களும் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன? நபிகள் நாயகம் எதற்காக அனுப்பப்பட்டார்கள் என்ற விபரத்தை தினமும் கூறி வந்தோம். முடிவில் அந்த ஒன்பது பேரும் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்பதாக அறிவிப்பும் செய்தார்கள்' என்கிறார்.

இஸ்லாத்தை ஏற்ற அந்த சீனர்கள் கூறும் போது 'இந்த நாட்டை விட்டு இன்னும் சில நாட்களில் சென்று விடுவோம். ஆனால் ஒரு அழகிய வாழ்க்கை முறையையும் அழகிய அனுபவங்களையும் எங்களுடனே எடுத்துச் செல்கிறோம். எங்களை அழகிய முறையில் உபசரித்து, மிக அழகிய இஸ்லாமிய வாழ்க்கை முறையை எங்களுக்கு காண்பித்துத் தந்த அந்த மக்களுக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வார ஜூம்ஆ வெள்ளிக் கிழமை தொழுகையை முடித்து விட்டு தாயகம் திரும்புகிறோம்' என்கின்றனர்.

வியர்வை உலர்வதற்கு முன் தொழிலாளிக்கு அவனது சம்பளத்தை கொடுத்து விடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால் ஒரு சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறை படுத்தவில்லை. அதே நேரம் இஸ்லாத்தை சரி வர பேணும் டாக்டர் அஜாஜி போன்றவர்களால் அந்த ஒன்பது பேருக்கும் உண்மையான இஸ்லாம் அறிமுகமானது. இன்று அவர்கள் உலக முஸ்லிம்களில் ஒருவர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
அரப் நியூஸ்
21-06-2016

மேலே உள்ள படத்தில் அந்த ஒன்பது சீனர்களுக்கும் எவ்வாறு இறைவனை தொழுவது என்பதை பற்றிய பாடம் எடுக்கப்படுகிறது.

Tuesday, June 21, 2016

எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்;டுவதில்லை!கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள கங்கோலி நகரில் உள்ள 'காலித் பின் வலித்' பள்ளியில் நடக்கும் இரவுத் தொழுகை! இதற்கு தலைவனாக நின்று தொழ வைப்பவர் பெயர் முஹம்மது ரிஃபாஹ். குர்ஆனின் தாஹா அத்தியாயத்தை மிக அழகாக ஓதுகிறார் இந்த சிறுவன். இசையே இல்லாமல் இறைவனின் வார்த்தைகள் மனிதர்களை செவி தாழ்த்திக் கேட்கச் சொல்கிறது: அதன்படி நடக்கவும் சொல்கிறது. எத்தனை முறை கேட்டாலும் குர்ஆனின் வார்த்தைகள் நமக்கு சலிப்பு தட்டுவதில்லை.

இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன் பணிப்பெண்!இஸ்லாத்தை தழுவிய பிலிப்பைன் பணிப்பெண்!

சவுதியில் உள்ள அல்கஸீம் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் கத்ரீனா என்ற பிலிப்பைன் பெண் வீட்டு வேலைக்கு வந்தார். வந்த சில நாட்களிலேயே வேலை பிடிக்கவில்லை. பிலிப்பைன்ஸில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த இந்த கிருத்தவ பெண்ணை 20 அடி உயரமுள்ள மதில் சுவரைக் கொண்ட வீட்டிற்குள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும் என்றால் கொடுமைதானே! :-) மொழி புதிது: மதம் புதிது: சாப்பிடும் உணவுகளும் புதிது: ஆட்களும் புதிது: கலாசாரமும் புதிது: எனவே மன அழுத்தத்துக்கு ஆளான இந்த பெண் பலவாறு பிரச்னை பண்ணியுள்ளார். வீட்டு ஓனரான அல் ஜேஸ் எவ்வளவோ புத்திமதிகள் சொல்லியும் அந்த பெண் கேட்பதாக இல்லை. முடிவில் இந்த பெண் வீட்டிலுள்ள ஏசி துவாரத்தின் வழியாக தப்பித்து வெளியேறி விட்டார். பிறகு போலீஸில் சரணடைந்துள்ளார். அவரை பெண்கள் காப்பகத்தில் போலீஸார் அனுமதித்தனர்.

சில நாட்களுக்கு பிறகு அந்தப் பெண் தனது தவறை உணர்ந்தார். சிறந்த குடும்பத்தவரை பலவாறு சிரமப்படுத்தி விட்டோமே என்று மனம் வருந்தினார். அந்த சவுதி குடும்பத்தினரின் இஸ்லாமிய நடைமுறைகள் அவரை கவர்ந்தன. அந்த குடும்பத்துக்கு பலவாறு தொந்தரவு கொடுத்தும் அவர்கள் இந்த பெண் மீது காட்டிய அன்பும் கருணையும் இவரது மனதை மாற்றின. இத்தகைய அழகிய குடும்ப வாழ்வு இஸ்லாத்தில் இருப்பதை கண்டு மனம் நெகிழ்ந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதென்று முடிவெடுத்தார்.

அதன் பிறகு காவலர்கள் முன்னிலையில் அவருக்கு இஸ்லாமிய உறுதி மொழி எடுத்துக் கொள்ள பணிக்கப்பட்டது. 'இறைவன் ஒருவனே! முஹம்மது நபி அவரது இறைத் தூதராக இருக்கிறார். ஏசு நாதர் கடவுளோ அல்லது கடவுளின் குமாரரோ அல்ல: அவரும் ஒரு இறைத் தூதரே' என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டார் அந்தப் பெண். அவரது விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கு ஜவுரி என்ற அராபிய பெயர் சூட்டப்பட்டது. புனித ரமலானில் தற்போது அதே குடும்பத்தோடு இணைந்து நோன்பும் வைக்கிறார். அந்த குடும்பத்தில் சந்தோஷமாக வீட்டுப் பணியிலும் ஈடுபடுகிறார்.

“I was surprised to see such magnanimity and tolerance from this family even after I had done so many things against the family in order to harm its reputation,” she added.

தகவல் உதவி
சவுதி கெஜட்
21-06-2016

பொதுவாகவே வீட்டு வேலைக்கு கடல் கடந்து பெண்களை அனுப்புவதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்துக்கு ஆளாகும் பெண்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்றே அறியாமல் பல தவறுகளை செய்து விடுகின்றனர். சில வீடுகளில் கணவன் டிரைவராகவும் மனைவி பணிப் பெண்ணாகவும் இருப்பதை பார்த்துள்ளேன். இது போன்ற ஏற்பாட்டில் வருவதில் தவறில்லை. ஆனால் பெண்களை தனியாக அனுப்புவதை எக்காரணத்தைக் கொண்டும் ஊக்குவிக்க வேண்டாம். இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!


இறைவனது பண்புகளாக குர்ஆன் குறிப்பிடும் 99 பெயர்கள்!
நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைய 99 பெயர்கள் உள்ளன. யார் அதனை எண்ணுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் – அதனை மனனம் செய்தவர் – என்று வந்துள்ளது. (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ 2531, முஸ்லிம்)

அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6410 அபூஹூரைரா (ரலி).

99 Names of Allah with English meaning...

1 Allah (الله) The Greatest Name

2 Ar-Rahman (الرحمن) The All-Compassionate

3 Ar-Rahim (الرحيم) The All-Merciful

4 Al-Malik (الملك) The Absolute Ruler

5 Al-Quddus (القدوس) The Pure One

6 As-Salam (السلام) The Source of Peace

7 Al-Mu'min (المؤمن) The Inspirer of Faith

8 Al-Muhaymin (المهيمن) The Guardian

9 Al-Aziz (العزيز) The Victorious

10 Al-Jabbar (الجبار) The Compeller

11 Al-Mutakabbir (المتكبر) The Greatest

12 Al-Khaliq (الخالق) The Creator

13 Al-Bari' (البارئ) The Maker of Order

14 Al-Musawwir (المصور) The Shaper of Beauty

15 Al-Ghaffar (الغفار) The Forgiving

16 Al-Qahhar (القهار) The Subduer

17 Al-Wahhab (الوهاب) The Giver of All

18 *Ar-Razzaq (الرزاق) The Sustainer *

19 Al-Fattah (الفتاح) The Opener

20 Al-`Alim (العليم) The Knower of All

21 Al-Qabid (القابض) The Constrictor

22 Al-Basit (الباسط) The Reliever

23 Al-Khafid (الخافض) The Abaser

24 Ar-Rafi (الرافع) The Exalter

25 Al-Mu'izz (المعز) The Bestower of Honors

26 Al-Mudhill (المذل) The Humiliator

27 As-Sami (السميع) The Hearer of All

28 Al-Basir (البصير) The Seer of All

29 Al-Hakam (الحكم) The Judge

30 Al-`Adl (العدل) The Just

31 Al-Latif (اللطيف) The Subtle One

32 Al-Khabir (الخبير) The All-Aware

33 Al-Halim (الحليم) The Forbearing

34 Al-Azim (العظيم) The Magnificent

35 Al-Ghafur (الغفور) The Forgiver and Hider of Faults

36 Ash-Shakur (الشكور) The Rewarder of Thankfulness

37 Al-Ali (العلى) The Highest

38 Al-Kabir (الكبير) The Greatest

39 Al-Hafiz (الحفيظ) The Preserver

40 Al-Muqit (المقيت) The Nourisher

41 Al-Hasib (الحسيب) The Accounter

42 Al-Jalil (الجليل) The Mighty

43 Al-Karim (الكريم) The Generous

44 Ar-Raqib (الرقيب) The Watchful One

45 Al-Mujib (المجيب) The Responder to Prayer

46 Al-Wasi (الواسع) The All-Comprehending

47 Al-Hakim (الحكيم) The Perfectly Wise

48 Al-Wadud (الودود) The Loving One

49 Al-Majid (المجيد) The Majestic One

50 Al-Ba'ith (الباعث) The Resurrector
51 Ash-Shahid (الشهيد) The Witness
52 Al-Haqq (الحق) The Truth

53 Al-Wakil (الوكيل) The Trustee

54 Al-Qawiyy (القوى) The Possessor of All Strength

55 Al-Matin (المتين) The Forceful One

56 Al-Waliyy (الولى) The Governor

57 Al-Hamid (الحميد) The Praised One

58 Al-Muhsi (المحصى) The Appraiser
59 Al-Mubdi' (المبدئ) The Originator

60 Al-Mu'id (المعيد) The Restorer

61 Al-Muhyi (المحيى) The Giver of Life

62 Al-Mumit (المميت) The Taker of Life

63 Al-Hayy (الحي) The Ever Living One

64 Al-Qayyum (القيوم) The Self-Existing One

65 Al-Wajid (الواجد) The Finder

66 Al-Majid (الماجد) The Glorious

67 Al-Wahid (الواحد) The One, the All Inclusive, The Indivisible

68 As-Samad (الصمد) The Satisfier of All Needs

69 Al-Qadir (القادر) The All Powerful

70 Al-Muqtadir (المقتدر) The Creator of All Power

71 Al-Muqaddim (المقدم) The Expediter

72 Al-Mu'akhkhir (المؤخر) The Delayer

73 Al-Awwal (الأول) The First

74 Al-Akhir (الأخر) The Last

75 Az-Zahir (الظاهر) The Manifest One

76 Al-Batin (الباطن) The Hidden One

77 Al-Wali (الوالي) The Protecting Friend

78 Al-Muta'ali (المتعالي) The Supreme One

79 Al-Barr (البر) The Doer of Good

80 At-Tawwab (التواب) The Guide to Repentance

81 Al-Muntaqim (المنتقم) The Avenger

82 Al-'Afuww (العفو) The Forgiver

83 Ar-Ra'uf (الرؤوف) The Clement

84 Malik-al-Mulk (مالك الملك) The Owner of All

85 Dhu-al-Jalal wa-al-Ikram (ذو الجلال و الإكرام) The Lord of Majesty and Bounty

86 Al-Muqsit (المقسط) The Equitable One

87 Al-Jami' (الجامع) The Gatherer

88 Al-Ghani (الغنى) The Rich One

89 Al-Mughni (المغنى) The Enricher

90 Al-Mani'(المانع) The Preventer of Harm

91 Ad-Darr (الضار) The Creator of The Harmful

92 An-Nafi' (النافع) The Creator of Good

93 An-Nur (النور) The Light

94 Al-Hadi (الهادي) The Guide

95 Al-Badi (البديع) The Originator

96 Al-Baqi (الباقي) The Everlasting One

97 Al-Warith (الوارث) The Inheritor of All

98 Ar-Rashid (الرشيد) The Righteous Teacher

99 As-Sabur (الصبور) The Patient One


அளவற்றஅருளாளன்நிகரற்ற அன்புடையோன்உண்மையான அரசன்தூய்மையாளன்சாந்தி அளிப்பவன்அபயமளிப்பவன்இரட்சிப்பவன்மிகைத்தவன்அடக்கியாள்பவன்பெருமைக்குரியவன்படைப்பவன்ஒழுங்கு செய்பவன்உருவமைப்பவன்மிக மன்னிப்பவன்அடக்கி ஆள்பவன்

கொடைமிக்கவன்உணவளிப்பவன்வெற்றியளிப்பவன்நன்கறிந்தவன்கைப்பற்றுபவன்விரிவாக அளிப்பவன்தாழ்த்தக்கூடியவன்உயர்வளிப்பவன்கண்ணியப்படுத்துபவன்இழிவுபடுத்துபவன்செவியுறுபவன்பார்ப்பவன்அதிகாரம் புரிபவன்நீதியாளன்நுட்பமானவன்உள்ளூர அறிபவன்சாந்தமானவன்மகத்துவமிக்கவன்மன்னிப்பவன்நன்றி அறிபவன்மிக உயர்ந்தவன்மிகப்பெரியவன்பாதுகாப்பவன்கவனிப்பவன்விசாரணை செய்பவன்மகத்துவமிக்கவன்சங்கைமிக்கவன்காவல் புரிபவன்அங்கீகரிப்பவன்விசாலமானவன்ஞானமுள்ளவன்நேசிப்பவன்பெருந்தன்மையானவன்மறுமையில் எழுப்புபவன்சான்று பகர்பவன்உண்மையாளன்பொறுப்புள்ளவன்வலிமை மிக்கவன்ஆற்றலுடையவன்உதவி புரிபவன்புகழுடையவன்கணக்கிடுபவன்اَلْمُبْدِئُ
உற்பத்தி செய்பவன்اَلْمُعِيدُ
மீளவைப்பவன்உயிரளிப்பவன்மரிக்கச் செய்பவன்என்றும்உயிரோடிருப்பவன்என்றும்நிலையானவன்உள்ளமையுள்ளவன்பெருந்தகை மிக்கவன்தனித்தவன்அவன் ஒருவனேதேவையற்றவன்ஆற்றலுள்ளவன்திறமை பெற்றவன்முற்படுத்துபவன்பிற்படுத்துபவன்ஆதியானவன்அந்தமுமானவன்பகிரங்கமானவன்அந்தரங்கமானவன்அதிகாரமுள்ளவன்மிக உயர்வானவன்நன்மை புரிபவன்மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்பழி வாங்குபவன்மன்னிப்பளிப்பவன்இரக்கமுடையவன்அரசர்களுக்கு அரசன்_கண்ணியமுடையவன் சிறப்புடையவன்நீதமாக நடப்பவன்ஒன்று சேர்ப்பவன்சீமான்-தேவையற்றவன்சீமானாக்குபவன்தடை செய்பவன்தீங்களிப்பவன்பலன் அளிப்பவன்ஒளி மிக்கவன்நேர்வழி செலுத்துபவன்புதுமையாக படைப்பவன்நிரந்தரமானவன்உரிமையுடைவன்வழிகாட்டுபவன்மிகப்பொறுமையாளன்

Monday, June 20, 2016

ஈராக், சிரியா, ஏமன் மக்களுக்காக பிரார்த்திப்போம்!ஈராக், சிரியா, ஏமன் மக்களுக்காக பிரார்த்திப்போம்!

வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியாலும், ஷியாக்களின் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் இன்று ஏமன், சிரியா, ஈராக் மக்கள் சொல்லொணா துயரத்தில் உள்ளார்கள். எந்த மக்களையும் இறைவன் சோதித்தால் அதன் பிறகு அவர்களுக்கு நிம்மதியான வாழ்வைக் கொடுப்பது படைத்தவனின் பண்பு. நல்லவர்களைத்தான் இறைவன் அதிகம் சோதிப்பான். குடிக்க தண்ணீர் இன்றி அந்த சின்னஞ் சிறுசுகள் பைப்பில் இருந்து கசியும் தண்ணீரை குடிப்பதை பார்த்தவுடன் எனது கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. நமக்கு வாழ்வில் ஏற்படும் சிரமங்கள் எல்லாம் இந்த சிறுவர்கள் முன்னால் வெகு அற்பமாக தெரிகின்றன.

இறைவா! இந்த மக்களின் தேவைகளை பூர்த்தியாக்குவாயாக!

ஏமன், சிரியா, ஈராக் போன்ற தேசங்களில் அமைதியைக் கொண்டு வருவாயாக!

இஸ்லாத்தை சரிவர கடைபிடிக்கும் ஆட்சியாளர்களை அந்த மக்களுக்கு தந்தருள்வாயாக!

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு நம்பிக்கைக் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” என்று நாம் ஆறுதல் கூறினோம்

அல் குர்ஆன் : 2:214

பிஜே அவர்கள் நலமுடன் வீடு திரும்பியது கண்டு மகிழ்ச்சி!

தர்ஹா, சந்தனக் கூடு, தொப்பி, சாமிபிராணி போடுதல், முஹர்ரம் 10 அன்று நெஞ்சில் அடித்துக் கொள்ளுதல் இவை எல்லாம்தான் இஸ்லாம் என்று பெரும்பாலான இந்து சகோதரர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் உண்மையான இஸ்லாத்தை பிஜே அவர்கள் எடுத்துச் சென்றார்கள். அதன் தாக்கம் இன்று இந்து பெருங்குடி மக்கள் குர்ஆன் மொழி பெயர்ப்பை படிக்க ஆரம்பித்துள்ளார்கள். சத்தியத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள்.

நம் அனைவரின் பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொண்ட இறைவன் பிஜே அவர்களை நலமுடன் வீட்டுக்கு அனுப்பியுள்ளான். இவரின் தேவை தமிழகத்துக்கு இன்னும் இருக்கிறது. ஏகத்துவ பிரசாரத்தை மேலும் முடுக்கி விட இறைவன் பிஜே அவர்ககளுக்கு நீண்ட ஆயுளையும் சரீர சுகத்தையும் கொடுத்தருள்வானாக!

பிஜேபி வெற்றியின் ரகசியம் - யேல் பல்கலைக் கழகம் கண்டு பிடிப்பு!பிஜேபி வெற்றியின் ரகசியம் - யேல் பல்கலைக் கழகம் கண்டு பிடிப்பு!

Gareth Nellis, Michael Weaver, Steven Rosenzweig, இந்த மூன்று அரசியல் வல்லுனர்களுக்கும் யேல் பல்கலைக் கழகம் ஒரு வேலையைக் கொடுத்தது. 'மதக் கலவரம் இந்திய அரசியலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறதா?' என்ற ரீதியில் ஆய்வு மேற் கொள்ள இம் மூவரையும் பணித்தது யேல் பல்கலைக் கழகம். தேர்தல் நேரங்களில் இந்தியாவில் நடந்த ஒவ்வொரு கலவரத்திலும் பெரும்பான்மை மக்களின் மனதில் 'நமக்கு முஸ்லிம்களிடமிருந்து ஆபத்து' என்ற செய்தியை திட்டமிட்டு விதைத்துள்ளனர். இந்த செய்தி ஒரு வித அச்ச உணர்வை இந்துக்களுக்கு ஊட்டியது. இதன் மூலம் இந்துக்களின் ஓட்டை ஒருமுகப்படுத்தி பிஜேபி தனது வெற்றியை மிக இலகுவாக பெற்றுக் கொண்டது. எங்கெல்லாம் கலவரம் நடந்ததோ அங்கெல்லாம் எந்த சிரமமும் இன்றி பிஜேபி வெற்றி வாகை சூடியதையும் காங்கிரஸ் தோல்வி அடைந்ததையும் இந்த மூவரின் அறிக்கையும் தெளிவுபடுத்துகிறது. இதனை எகனாமிக் டைம்ஸ் செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.

economictimes.indiatimes.com
05-12-2014

இன்று இந்துத்வாவாதிகள் தங்களை தேசப்பற்றுள்ளவர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். தேசப் பற்று உள்ள நபர்கள் செய்யும் செயல்களா இவை. அற்ப அரசியல் ஆதாயத்திற்காக சொந்த நாட்டு மக்களை இரு கூறாக பிரித்து அதன் மூலம் இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள இந்துத்வா வாதியினரின் இந்த செயல் சரிதானா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

இவர்கள் ஆட்சியைப் பிடித்தவுடன் இந்து மதம் மறுமலர்ச்சி கண்டு விட்டதா? ராமர் கோவில் கட்டப்பட்டதா? காஷ்மீரின் தனி மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டதா? பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டதா? வேலை வாய்ப்பு பெருகியதா? மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதா? இது எதுவுமே நடை பெறவில்லை. இனியும் இவர்கள் ஆடசியில் நடைபெறாது.

மோடி ஆட்சியைப் பிடித்து விட்டால் உலகின் முக்கியத்துவம் உள்ள நாடாக இந்தியா மாறி விடும் என்று பொய் பிரசாரம் பண்ணப்பட்டது. சிறந்த நிர்வாகிகளான மன் மோகன் சிங், ப. சிதம்பரம், மணி சங்கர் ஐயர் போன்றவர்களின் வாதம் எடுபடாமல் மதவாதம் முன்னிறுத்தப்பட்டது. நாம் எவ்வளவு பெரிய தவறை செய்து இந்துத்வாக்களை ஆடசிக் கட்டிலில் அமர்த்தி விட்டோம் என்று சில வருடங்களிலேயே பெரும்பாலான இந்துக்கள் உணரத் தொடங்கி விடுவார்கள்.

Posted by சுவனப் பிரியன் at 5:41 AM
Labels: #அரசியல், #ஆர்எஸ்எஸ், #இந்தியா, #இந்துத்வா

Sunday, June 19, 2016

கருணாநிதியும் ஜெயலலிதாவும் மது அடிமைகளுக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்?கருணாநிதியும் ஜெயலலிதாவும் மது அடிமைகளுக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்?

நம்பிக்கைக் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி இறைவனின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபிகள் நாயகம் அவர்கள் சபித்துள்ளார்கள்.

(ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

மராட்டியன்டா இந்த சிவாஜி ராவ்!சிரிய அகதிகள் படும் பாடு!சந்தோஷமாக குடும்பத்தினரோடு வாழ்ந்து வந்த சிரிய நாட்டவர் இவர். வல்லரசுகளின் ஆதிக்க போட்டியினால் இன்று சிரியா நிலைகுலைந்துள்ளது. கிரேக்க தீவான லெஸ்பாஸூக்கும் துருக்கி நாட்டுக்கும் இடைப்பட்ட கடற்கரையை தனது குழந்தை களோடுகடக்கிறார். அந்த குழந்தைகளின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

உலகமெங்கும் இஸ்லாமியர்கள் வல்லரசுகளால் பந்தாடப்படுகிறார்கள்: பல வித கஷ்டங்களை சுமந்து வரும் அவர்களையே தீவிரவாதிகள் பட்டம் கொடுத்து கொடுமைபடுத்துகிறது மேற்குலகம்! இந்த சிரமங்களில் இருந்தெல்லாம் வெகு சீக்கிரம் இஸ்லாமிய உலகம் மீண்டெழ இந்த ரமலானில் நாமும் பிரார்த்திப்போமாக!

Saturday, June 18, 2016

முஸ்லிம்களை குருத்வாராவில் நோன்பு திறக்க வைக்கும் சீக்கியர்கள்!முஸ்லிம்களை குருத்வாராவில் நோன்பு திறக்க வைக்கும் சீக்கியர்கள்!

டெல்லியில் உள்ள ரகுவீர் நகரில் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள குருத்வாராவில் சீக்கியர்கள் தங்கள் சொந்த செலவில் உணவு தயாரித்து நோன்பிருக்கும் முஸ்லிம்களுக்கு இலவசமாக கொடுக்கிறார்கள். குருத்வாராவுக்கு உள்ளேயே அமர வைத்து உணவு பரிமாறுகிறார்கள். பல நுறு முஸ்லிம்கள் இதன் பலனை பெற்றுக் கொள்கிறார்கள். நோன்பிருக்கும் ஒருவருக்கு உணவளிப்பது என்பது அந்த நோன்பாளி பெற்ற நன்மையை உணவளிப்பவருக்கு பெற்றுத் தருவதாக நபிகள் நாயகம் கூறியிருக்கிறார். அந்த நன்மையை நாடி மனிதாபிமானத்தோடு செயல்படும் சீக்கியர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

மத நல்லிணக்கத்தை பேணும் இது போன்ற மக்கள் இருக்கும் காலமெல்லாம் மோடி அமீத்ஷாக்களின் திட்டம் நமது நாட்டில் நிறைவேறப் போவதில்லை!

Friday, June 17, 2016

மக்கா பள்ளி இமாம் நோன்பு திறப்பது யாருடன்?மக்கா பள்ளி இமாம் நோன்பு திறப்பது யாருடன்?

மக்காவில் உள்ள கஃபாவின் தலைமை மத குரு சுதைஷ் அங்கு பணி புரியும் துப்புறவு தொழிலாளர்களோடு நோன்பு திறக்கிறார். இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சாதாரண நிகழ்வு. இதற்கு நாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

ஏனெனில் நமது நாட்டில் துப்புறவு தொழிலாளர்களை தோட்டிகள் என்று தனி சாதியாக்கி அவர்களை சமூகத்தில் நாம் அண்ட விடுவதில்லை. கோவிலில் அவனுடைய சாமியை கும்பிடக் கூட அனுமதிப்பதில்லை. எந்த திருமண உறவுகளும் மற்ற சாதி இந்துக்கள் வைத்துக் கொள்வதில்லை.

இதெல்லாம் தவறு. பொய் சொல்லாமல், திருடாமல் உழைத்து சாப்பிடும் எந்த தொழிலும் இழிவானதல்ல என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதனை உலக மக்களுக்கு எடுத்துக் காட்டவே இது போன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.சமஸ்கிரதம் தெரியாததால் நான் வெட்கப்படுகிறேன் - பொன் ராதா

சமஸ்கிரதம் தெரியாததால் நான் வெட்கப்படுகிறேன் - பொன் ராதா

பிஜேபியில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பொன் ராதா கிருஷ்ணன் சமஸ்கிரதம் படிக்காமல் போனதற்காக வெட்கப்படுவதாக சொல்லியுள்ளார். இந்து மதத்தின் பெருமைகளை சமஸ்கிரதம் சொல்வதால் இந்த வெட்கம் அவருக்கு வந்திருக்கலாம்.

ஆனால் இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். 100 ஆண்டுகளுக்கு முன்னால் இவரின் சாதியான நாடார் இன மக்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை விளங்காதவரா பொன்னார்? பார்பனர்கள் இவரது குடும்ப பெண்களை மேலாடை அணிய தடை போட்டார்கள். இதனால் வெகுண்டு மதம் மாறிய ஒரு சிலரை திருவாங்கூர் சமஸ்தானம் கொடுமைபடுத்தியதை அறியாதவரா பொன்னார்.

நகை அணியவும், பால் கறக்கவும், மேலாடை அணியவும் ஒரு இனத்துக்கு தடை போட்டு அதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் பார்பனர்கள். திப்பு சுல்தான் முதன் முதலாக இதற்கு தடை விதித்தார்: பிறகு ஆங்கிலேயர்களும் இதற்கு தடை விதித்தனர். அதன் பிறகு பெரியார், போன்ற சமூக சீர்திருத்த வாதிகள் மேற் கொண்ட முயற்சியால் நாடார் சமூகம் மேலாடையை தைரியமாக அணிய முடிந்தது.

இன்று கிடைத்த இந்த அமைச்சர் பதவிக்காக இந்துத்வாவுக்கு வக்காலத்து வாங்கும் பொன்னார் தமது முன்னோர்களின் வரலாறுகளை புரட்டிப் பார்த்தால் கண்டிப்பாக தனது கருத்தை மாற்றிக் கொள்வார். முடை நாற்றமெடுக்கும் இந்துத்வாவின் மறு பக்கத்தையும் அறிந்து கொள்வார்.


அத்வானியை கொல்ல வந்தவன் பெயர் டேனியல் பிரகாஷ்!அத்வானியை கொல்ல வந்தவன் பெயர் டேனியல் பிரகாஷ்!

முன்பு அத்வானியை கொல்ல முயன்றது: மதுரையில் பைப் வெடி குண்டு கண்டெடுக்கப்பட்டது என்று பெரும் பரபரப்பாக இருந்தது தமிழகம். அதற்கு காரணம் இஸ்லாமியர்கள் என்று வழக்கம் பொல் இந்துத்வாவாதிகள் குற்றம் சுமத்தி வந்தனர்.

ஜீன் 17 ஆன இன்று தினகரன் 10 வது பக்கத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. மதுரை பைப் வெடிகுண்டு மற்றும் அத்வானியை கொல்ல முயற்சித்தது என்று அனைத்தையும் செய்தவன் பெயர் டேனியல் பிரகாஷ் என்று செய்தி வெளியிட்டது. இவன் கண்டிப்பாக பாஜகவின் கைக் கூலி. அத்வானிக்கும் விளம்பரம்: இஸ்லாமியரின் பெயரையும் கெடுத்தாகி விட்டது. இவனை பிடித்து மேலும் சரியாக விசாரித்தால் பின்னணியில் பாஜக இருப்பது தெரிய வரும்.

இந்த செய்திக்கு மற்ற ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்காததையும் கவனிக்கவும். தினகரன் கூட இதனை 10 ஆவது பக்கத்தில் ஒரு ஓரத்தில் போட்டுள்ளது. இந்திய ஊடகத் துறையின் லட்சணம் இதுதான்.இந்த நிறுவனத்திற்கு (Dala, KSA) யாரும் வேலைக்கு போக வேண்டாம்..!

இந்த நிறுவனத்திற்கு (Dala, KSA) யாரும் வேலைக்கு போக வேண்டாம்..!

மிகக்கடினமான வேலை என்றும், ஊதியம் மிகவும் குறைவு என்றும், அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுகிறது என்றும் கண்ணால் கண்ட சாட்சிகளிடமிருந்து தகவல்.

எனவே யாரும் அறியாது அநியாயமாக யாரும் சென்று மாட்டிக் கொள்ள வேண்டாம். பிறருக்கும் இதைப்பற்றி அறியப் படுத்துங்கள்.

கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. யாரேனும் உங்கள் பாஸ்போர்ட் சர்ட்டிபிகேட் போன்ற வற்றை ஒப்படைத்து இருந்தால் திரும்ப கேட்டு வாங்கிவிடுங்கள்.

ஒரு வேளை இந்த கண்ஸல்டண்சி உங்களிடம் தர மறுத்தால், எம்மை ( சுல்தான் சலாகுதீன் & Arul Kumar ) அணுகுங்கள் தகுந்த வழியில் அவர்களிடம் இருந்து அதை இன்ஷா அல்லாஹ் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

நாடு விட்டு நாடு சென்று பிழைப்பது என்பது இங்கு நாம் படும் சிரமம் அங்கு படாமல், இங்கு சம்பாதிப்பதை விட கூடுதலாக சமபாதித்து விட்டு, சில காலங்களில் நம் நாடு வந்து சேர்ந்து விடத்தான்.

அங்கு சென்று அடிமை போல அவதிப்பட போகக்கூடாது சகோதரர்களே. இறைவன் நம் அனைவரையும் அத்தகைய சிரமங்களை விட்டு காப்பாற்றட்டும்..!

Thanks to
சுல்தான் சலாகுதீன்

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்?எதற்காக நோன்பு நோற்க வேண்டும்?

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.

பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.

பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.

பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா?

நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.

சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது.

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.
யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903, 6057

பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.

நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1893, 1903

நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.

முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.

ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள்.

எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி
ஏகத்துவம் மாத இதழ்.

Thursday, June 16, 2016

தெலுங்கானா அரசும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்புகளை வழங்குகிறது!தெலுங்கானா அரசும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்புகளை வழங்குகிறது!

இரண்டு சேலைகள், இரண்டு குர்தாக்கள், ஒரு தொப்பி, வாசனை திரவியங்கள் மற்றும் சில பொருட்களோடு முஸ்லிம்களுக்கு அன்பளிப்புகளை வழங்குகிறது தெலுங்கானா அரசு.

மோடியும் அவரது இந்துத்வா கூட்டங்களும் பெங்காலையும், தெலுங்கானாவையும் பார்த்து வெட்கித் தலை குனியட்டும்!

முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு மம்தா பானர்ஜி போனஸ் அறிவிப்பு!முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு மம்தா பானர்ஜி போனஸ் அறிவிப்பு!

இந்த வருட ரமலானை சிறப்பாக கொண்டாட இஸ்லாமிய அரசு ஊழியர்களுக்கு போனஸாக 3200 ரூபாய் அளிக்க மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா இது பற்றி கூறும் போது 'முஸ்லிம்களின் பண்டிகை கால போனஸாக அரசு 400 கோடியை ஒதுக்கியுள்ளது. பெருநாளுக்கு முன்பாகவே இந்த தொகை அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விடும்' என்கிறார்.

சிறுபான்மையினரையும் பெரும்பான்மையினரையும் ஒரே கண் கொண்டு பார்க்கும் அரசுதான் மதசார்பற்'ற அரசாக இருக்க முடியும். இவரை பின் பற்றி மற்ற முதல்வர்களும் போனஸை அறிவிப்பார்களாக!

சுஷில் குமார் ஜெயின் இஸ்லாத்தை ஏற்றார்!சிவசேனா தலைவர் சுஷில் குமார் ஜெயின் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். பிப்ரவரி 15 ந்தேதி தனது மாற்றத்தை அரசு ஆவணங்களிலும் பதிவாக்கியுள்ளார். தனது பெயரை அப்துல் சமது என்றும் மாற்றிக் கொண்டுள்ளார். மஹாவீர் ஜெயந்தி அன்று நடந்த நிகழ்வில் தனது மன மாற்றத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
உவைசியை கேக்காக உருவகப்படுத்தி அவரை வெட்டிய சிவசேனா தனது தலைவரை இஸ்லாத்திற்கு தந்துள்ளது. இதுதான் இஸ்லாம்.

Muzaffarnagar: A Shiv Sena leader created news on Tuesday for embracing Islam. According to a report in Amar Ujala, Sushil Kumar Jain embraced Islam recently following disappointment with the Jain community, municipal corporation, and work culture of revenue department. He is now known as Mohammad Abdul Samad.

He said he converted his religion on February 15 by his own choice and not under any pressure.
The Shiv Sena leader, however, made the news public on the occasion of Mahavir Jayanti on Tuesday.
The news has created flutters in Khatauli town, Muzaffarnagar district.

http://zeenews.india.com/…/shiv-sena-leader-sushil-kumar-ja…

100 / 100 மதிப்பெண் போட்ட மாணவன்:குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவன், தனது விடைத்தாளை தானே திருத்தி, நூற்றுக்கு நூறு மதிப்பெண் களைப் போட்டுக் கொண்டு அதனை, தேர்வு கண்காணிப் பாளரிடம் கொடுத்துள்ளார்.

ஹர்ஷத் சர்வய்யா என்ற மாணவன் பிளஸ் 2 தேர்வில், பொரு ளியல் பாடத்துக்கான தேர்வை எழுதினார். தேர்வு எழுதும் அறை யிலேயே, தனது விடைத்தாளை சிவப்பு நிற மையால் திருத்தி, அதற்கு மதிப்பெண்களைப் போட்டுக் கொண்டார். பின்னர் அதனை, தேர்வு கண்காணிப் பாளரிடம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, குஜராத் மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம், காவல் துறையில் புகார் அளித்துள்ளது. இதற்கு முன் இதுபோன்று நிகழ்ந்ததில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறை செயலாளர் (தேர்வு) ஜி.டி. படேல் கூறியதாவது:

அந்த மாணவன் தனது புவியியல் மற்றும் பொருளியல் ஆகிய இரண்டு பாடங்களுக்கான தேர்வில் தனக்குத்தானே மதிப்பெண் போட்டுக் கொண் டுள்ளார். புவியியல் தேர்வுத் தாளை திருத்திய ஆசிரியைகள் முறைகேட்டைக் கண்டுபிடித்து விட்டனர். அதில் அவர் 34 மதிப் பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், பொருளியல் தாளை திருத்திய ஆசிரியர்கள் இந்த தவறைக் கண்டுபிடிக்கவில்லை. சந்தேகம் வராமல் இருக்க அந்த மாணவன் முதல் பக்கத்தில் ஒட்டுமொத்த மதிப்பெண் கூட்டலை எழுதவில்லை. ஆசிரியர்கள் மதிப்பெண்களைக் கூட்டி, நூற்றுக்கு நூறு என முதல்பக்கத்தில் எழுதி விட்டனர். தனித்தனியாக ஏழு ஆசிரியர்களும் ஒவ்வொரு விடையையும் மதிப்பீடு செய்து, கையொப்பமிட்டிருந்தால் அதனைக் கண்டறிந்திருக்க முடியும். இது தீவிரமான தவறு. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மாணவன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரு தேர்வுகளை எழுத முடியாமல் அவர் நீக்கப்படுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹர்ஷத்தின் தேர்வு முடிவுகள் தயார் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், கல்வி வாரியத்தின் கணினி மென்பொருளில் தேர்வு முடிவுகளைப் பார்த்தபோது மதிப்பெண்களில் அதிக ஏற்றத்தாழ்வு தெரியவந்தது. அப்போது அவர் மாட்டிக் கொண்டார்.

பொருளியலில் சதமடித்த அவர், குஜராத்தி (13), ஆங்கிலம் (12), சம்ஸ்கிருதம் (4), சமூகவியல் (20), உளவியல் (5), புவியியல் (35) என மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்!
16-06-2016

நரேந்திர மோடியிடம் பாடம் பெற்றிருப்பானோ இந்த மாணவன்!