Followers

Friday, August 31, 2018

அதிராம்பட்டினத்தில் மண் சட்டி கலரி.

அதிராம்பட்டினத்தில் மண் சட்டி கலரி.
31/08/18 வெள்ளி கிழமை மதியம் நடுத்தெரு அல் ஹயாத் ரெஸ்டாரண்ட் உரிமையளர் ஜாக்கிர் இல்லத் திருமண விருந்தில் சஹன் சாப்பாட்டில் மண் பாண்டத்தில் உணவுகள் பறிமாறப்பட்டது.
கடந்த கால நிகழ்வுகளை ஞாபகப் படுத்தியதோடு அனைவரையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
இது போன்று மீண்டும் வருங்கால் விருந்துகளில் மண் பாண்டங்கள் உபயோகிக்கப்பட்டால் வருங்கால சந்ததிகளின் ஆரோக்கியம் வலு பெரும்.
சமூகம் சிந்திக்கட்டும்.
வருங்கால சந்ததிகள் நீடூழி வாழட்டும்பள்ளி வாயில் தவ்ஹீத் ஜமாஅத்தினரால் சுத்தம் செய்யப்பட்டது..

கேரளா மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி ஐந்து நாட்களாக தொழுகையும், மதரஸாவும் நடக்காத பள்ளி வாயில் தவ்ஹீத் ஜமாஅத்தினரால் சுத்தம் செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்!
കേരളത്തിലെ പ്രളയബാധയാൽ ഉപയോഗിക്കാൻ പറ്റാത്ത അവസ്ഥയിൽ അഞ്ച് ദിവസമായി നമസ്കാരവും, മദ്രസയും മുടങ്ങിക്കിടന്ന പള്ളിയെ 🕌 തൗഹീദ് ജമാഅത്ത് പ്രവർത്തകർ ശുചീകരിച്ച് നമസ്കാരയോഗ്യമാക്കി.
അൽഹംദുലില്ലാ...
----------------------------------------------------
இந்த பள்ளியானது சுன்னத் ஜமாத்திற்கு சொந்தமானது. ஒரு காலத்தில் சுன்னத் ஜமாத் பள்ளிக்கு தொழ வரக் கூடாது என்று ஏகத்துவவாதிகளுக்கு போர்டு வைத்தனர் தமிழக பள்ளி நிர்வாகிகள். அதே பள்ளிகளில் மீண்டும் தொழுகை நடைபெற தங்கள் உழைப்பை தருகின்றனர் ஏகத்துவவாதிகள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!


Thursday, August 30, 2018

180 இந்து, தலித் குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவியது ஏன்?


தவறாமல் படியுங்கள்.... - 37 வருடங்களின் பின்னர் துடைக்கப்பட்ட களங்கம்.
-மீனாட்சிபுரம் 180 இந்து, தலித் குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவியது ஏன்?
-தொல். திருமாவலவனின் அயராத முயற்ச்சியை வாழ்த்துவதுடன், மீனாட்ச்சிபுர மக்களுக்கு கிடைத்த நேர்வழி திருமாவுக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
================
✿ மீனாட்ச்சிபுரம் இந்துக்கள் முஸ்லிம்களினால் அச்சுறுத்தப்பட்டு இஸ்லாத்தை ஏற்றார்களா?
✿ அப்போதைய முதல்வர் MGR சொன்னதைப் போல் அரபு நாட்டுப் பணத்திற்க்கு மதம் மாறினார்களா?
✿ தலித்துகளின் தலைவர் அம்பேத்கர் தேர்ந்தெடுத்த பௌத்த மதத்தை மீனாட்சிபுரம் மக்கள் ஏன் புறக்கணித்தார்கள்?
✿ பௌத்த மதம், கிருத்தவ மதத்தை விடுத்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தது காரணங்கள் என்ன?
✿ கிருத்தவ மதத்திற்கு சென்றவர்கள் கூட மீண்டும் இஸ்லாத்திற்க்கு வந்தது ஏன்?
✿ அப்போதைய பா.ஜ.க தலைவர் வாஜ்பாய் நேரில் வந்து அழைத்தும் மீண்டும் இந்து மதத்திற்கு வராதது ஏன்?
தலித் பிரிவை சார்ந்தவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் அவர்களின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வின் தெளிவான முடிவுகள். இஸ்லாம் பற்றியும், மதமாற்றம் பற்றியும் பரப்பப்படும் அடிப்படையற்ற பல்வேறு விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் ஆய்வு.
1981ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர். இது அகில இந்தியாவையும் உலுக்கியது. அதனை மையமாக வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் "Mass Religious Conversion of Meenakshipuram - A Victimological Perspective" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார். இந்த ஆய்வில் அவர் கண்டறிந்த முடிவுகள் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து:
கே. இந்த ஆய்வை எப்போது துவங்கினீர்கள்?
-------------
பதில்:
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வைச் செய்வதற்காக 2002ல் பதிவுசெய்தேன். பல்வேறு பணிச்சுமைகளால் எனது ஆய்வை விரைந்து முடிக்க இயலவில்லை.
அவ்வப்போது இந்தப் பதிவை புதுப்பித்துவந்தேன். அண்மையில் கடைசி வாய்ப்பாக 2017 பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டுமென பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் விரைந்து இந்த பணியை முடித்து, அறிக்கை சமர்ப்பித்தேன். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி பொது வாய் மொழித் தேர்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
கே. மீனாட்சிபுரம் மதமாற்ற சம்பவத்தை உங்கள் ஆய்வுக் களமாகத் தேர்வுசெய்தது ஏன்?
-------------
பதில்:
மதமாற்றம் தொடர்பான விவாதங்கள் தொடர்ச்சியாக இந்திய அளவில் நடந்து வருகின்றன. அம்பேத்கர் அவர்கள் லட்சக் கணக்கானவர்களோடு பௌத்தத்தைத் தழுவினார்.
சாதி ஒழிப்புக்கான போரட்டங்களில் மதமாற்றத்தையும் ஒன்றாக முன்வைத்தார். இந்த நிலையில், மீனாட்சிபுரத்தில் அம்பேத்கரை பின்பற்றக்கூடிய மக்கள், கலாசார ரீதியாக அவரோடு மாறுபட்ட நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் போக்குகளைப் பார்த்தேன். அரசியல் ரீதியாக அவரைத் தலைவராக ஏற்றாலும் கலாசார ரீதியாக சிலர் கிறிஸ்தவத்தை ஏற்பதையும் இஸ்லாத்தை ஏற்பதையும் பார்க்க முடிகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை தாலுகாவில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் அம்பேத்கரை அரசியல்ரீதியாக ஏற்றவர்கள்தான். ஆனால், அவர்கள் ஏன் அம்பேத்கரைப் பின்பற்றி பௌத்தத்தை ஏற்கவில்லை; இஸ்லாத்தை ஏற்றார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இரண்டாவதாக, இஸ்லாமியர்கள் திட்டமிட்டு, தலித்துகளை ஏமாற்றி வற்புறுத்தி, அச்சுறுத்தி மதமாற்றம் செய்ய வைத்தார்கள் என்றும் அதில் அரபு நாட்டுப் பணம் பின்னணியில் உள்ளது என்கிற குற்றச்சாட்டுகளும் இன்னும் இருக்கவே செய்கின்றன. ஆகவே சாதிக் கொடுமைகளால் இவர்கள் மதம் மாறினார்களா அல்லது வேறு காரணங்களால் மதம் மாறினார்களா என்று அறியும் வேட்கையும் எனக்குள் உருவானது.
இஸ்லாத்தை ஏற்றதால் அவர்களின் சமூக மதிப்பு உயர்ந்திருக்கிறதா, அவர்கள் சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபட்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கும் விடைதேட வேண்டிய தேவை எழுந்தது. ஆகவேதான் இந்த மதமாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யும் முடிவுக்கு வந்தேன். அதற்கு எனக்கு வழிகாட்டியவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கு. சொக்கலிங்கம் அவர்கள். ஏற்கனவே, நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் முதுகலை படிக்கும்போது அவர் பேராசிரியராக இருந்தவர்.
கே. இந்த ஆய்வில் உங்களுக்கு என்ன முடிவு கிடைத்தது?
-------------
பதில்:
அச்சுறுத்தலால் தலித்துகளை மதம் மாற்றினார்கள் என்பது உண்மையல்ல என இந்த ஆய்வில் உறுதியாகியிருக்கிறது. காவல்துறையின் வன்முறையும் அரசு அதிகாரிகளின் தலித் விரோத நடவடிக்கைகளும்தான் மதம் மாறக் காரணிகளாக இருந்துள்ளன என்பதை இந்த ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளேன்.
கே. தமிழ்நாடு முழுவதுமே ஜாதிக்கொடுமைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், மீனாட்சிபுரத்தில் மட்டும் தலித்துகள் மொத்தமாக மதம் மாற எந்தச் சம்பவம் தூண்டுதலாக அமைந்தது?
-------------
பதில்:
சாதிக் கொடுமைகள் இந்தியா முழுவதும் இருக்கவே செய்கின்றன. இது அடிப்படையான காரணி. மீனாட்சிபுரத்தில் சாதிக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறும் எண்ணத்தோடு இருந்த மக்களுக்கு மதம் மாற வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்ட உடனடிக் காரணியாக ஒரு சம்பவம் நடந்தது. 1980 டிசம்பரில் மீனாட்சிபுரம் அருகே மேக்கரை என்னும் மலையடிவாரப் பகுதியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஒரு பண்ணையில் மறவர் சமுதாயத்தைச் சார்ந்த இருவர் கொல்லப்பட்டனர். அந்த இரட்டைக் கொலையில் மீனாட்சிபுரத்தைச் சார்ந்த தலித்துகள் குறிப்பாக தங்கராஜ் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று காவல்துறையினர் மீனாட்சிபுரம் குடியிருப்புக்குள் நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் கைதுசெய்து, விசாரணை என்ற பெயரில் மிக மோசமான வன்முறைகளை, கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள். மாதக் கணக்கில் இது நடந்திருக்கிறது.
அத்துடன் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் கொல்லப்பட்டவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மேல் உள்ள மாநில அளவிலான உயர் காவல்துறை அதிகாரிகள் சிலரும் அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதனால்தான் இந்த ஒடுக்கு முறை கூடுதலாக உள்ளது என தலித் மக்கள் கருதினார்கள். இதனால் அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கையை அவர்கள் இழக்க நேர்ந்தது. இந்த நிலையில்தான் சாதிக் கொடுமைகளுக்கும் அரசு ஒடுக்குமுறைகளுக்கும் ஒரு முடிவுகட்ட மத மாற்றத்தை வழிமுறையாக அவர்கள் தேர்வுசெய்தார்கள். ஆகவே, காவல்துறை மற்றும் அதிகாரிகளின் ஒடுக்குமுறை சாதியின் பெயரால் நிகழ்ந்தது என்பது இந்தப் பகுதிக்கான தனிக் காரணியாக உள்ளது.
கே. மதம் மாறுவதன் மூலம் காவல்துறையின் அத்துமீறல்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என அவர்கள் நம்பக் காரணம் என்ன?
-------------
பதில்:
காவல்துறையிடமிருந்து மட்டுமல்ல; சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட பல கொடுமைகளிலிருந்து தப்ப முடியும் என நினைத்தார்கள். இந்து மதத்தில் பள்ளர் என்ற ஜாதியில் இருப்பதால்தானே இப்படி நடக்கிறது; நாம் மதம் மாறிவிட்டால் பிற்காலத்திலாவது நமது வாரிசுகள் நிம்மதியாக இருப்பார்கள் என எதிர்கால நலனை மனதில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள்.
கே. மதம் மாறும்போது பௌத்தத்திற்கு மாறும்படி அம்பேதகர் கூறியிருந்த நிலையில், மீனாட்சிபுரம் மக்கள் இஸ்லாத்தைத் தேர்வுசெய்தது ஏன்?
-------------
பதில்:
இஸ்லாத்தில் மட்டும்தான் சமூக பாதுகாப்பு கிடைக்கிறது. மறுபடியும் ஜாதி தொடர்வதில்லையென நினைக்கிறார்கள். ராமைய்யா என்பவர் இந்தச் சம்பவம் நடப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவத்திற்கு மாறினார். தனக்கு ராசைய்யா எனப் பெயர் சூட்டிக்கொண்டார். அங்கேயும் சாதியின் பெயரால் இழிவும் கொடுமையும் தொடர்ந்ததால் அவர் கிறிஸ்தவத்தைவிட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தற்போது இப்ராஹிம் எனப் பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறார். ராமைய்யா ராசைய்யாவானார். ராசைய்யா இப்ராஹிமானார். அவர்தான் அங்கு கட்டப்பட்ட மசூதிக்கு முதல் முத்தவல்லி. அதற்குப் பிறகு அவரை முஸ்லிமாகத்தான் சமூகம் பார்க்கிறது. காவல்துறை அவரைச் சீண்டவில்லை.
கே. பௌத்தத்தை ஏன் அவர்கள் ஏற்கவில்லை. இங்குள்ள பௌத்ததில் ஜாதிப் பாகுபாடு உள்ளதா?
-------------
பதில்:
மகாராஷ்டிரத்தில் பௌத்தம் நிறுவப்பட்ட ஒன்றாக உள்ளது. இங்கே அப்படி இல்லை. அம்பேத்கர் அங்கே 10 லட்சம் பேரை மாற்றியதுபோல இங்கே நடக்கவில்லை. தவிர, மீனாட்சிபுரத்தைச் சுற்றிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கைதான் அதிகம். பக்கத்துக் கிராமங்களில் ஒருவேளை பௌவுத்தர்கள் அதிகம் இருந்திருந்தால் அம்மாதிரி சிந்தனை ஏற்பட்டிருக்கும். ஆனால், மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள கடையநல்லூர், தென்காசி போன்ற பகுதிகளில் வேறு மதத்தினர் என்று பார்க்கும்போது முஸ்லிம்களே அதிகம் இருந்தனர். அவர்களும் முன்பு தலித்துகளாக இருந்து மதம் மாறியவர்கள்தான். அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையை இவர்கள் கவனித்தார்கள். இது அவர்களுக்கு ஒரு உந்துதலைத் தந்திருக்கலாம்.
இரண்டாவதாக, அம்பேத்கர் மதம் மாறும்போது பௌத்தம் இடஒதுக்கீடு கிடைக்கக்கூடிய சமூகமாக அங்கீகரிக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் அடுக்கில்தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பௌத்தத்திற்கு மாறியவர்கள் 'புதிய பௌத்தர்கள்' என்று அழைக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் கிடைக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்கு மாறினால் அப்படி ஒரு நிலை இல்லை. எனவேதான் இடஒதுக்கீடு உரிமையை இழந்தும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
கே. மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகத்தானே கருதப்படுவார்கள்?
-------------
பதில்:
ஆமாம். அவர்கள் கல்வி, அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு, அதற்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் பற்றி கவலைப்படவில்லை. மனிதன், மனிதனாக வாழ வேண்டும். சமூக மதிப்புதான் முக்கியம் என நினைத்தார்கள்.
கே. இந்த மதமாற்றம் நடந்தபோது அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் எப்படி நடந்துகொண்டன?
-------------
பதில்:
அரசு எப்போதுமே மதமாற்றத்திற்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். "இது அரபு நாட்டுப் பணம் செய்த வேலை" என்று சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது பேசிய நாவலர் நெடுஞ்செழியன், "அவர்கள் சமூகக் கொடுமைகளால்தான் மாறினார்கள்" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மதம்மாறியவர்களை அதிகாரிகள் மிரட்டினார்கள். சம்பவம் நடந்தவுடனேயே பா.ஜ.க. தலைவரான வாஜ்பேயி அங்கு சென்றார்.
அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் யோகேந்திர மக்வானா அங்கு சென்றார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அப்போதைய தலைவரான இளைய பெருமாள் சென்றார். பிற கட்சிகள் ஏதும் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், இந்து அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., விஸ்வஹிந்து பரிஷத், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மிகப் பெரிய யாகம் நடத்தி, அங்குள்ள மக்களுக்கு பள்ளிக்கூடங்களைக் கட்டித்தருகிறோம், கழிப்பறைகளைக் கட்டித்தருகிறோம் என்றெல்லாம் ஆசைகாட்டினார்கள். அப்போது அவர்கள் கட்டிக்கொடுத்த பள்ளிக் கட்டடம் இப்போதும் இயங்கிவருகிறது.
அம்பேத்கர் லட்சக்கணக்கானவர்களோடு மதம் மாறியபோது இந்திய அளவில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால், இந்து மதத் தலைவர்கள் யாரும் அங்கே போகவில்லை. இங்கே பெரிய, பெரிய தலைவர்கள் வந்து இறங்கினார்கள். பேரணி நடத்தினார்கள். பன்பொலியிலிருந்து மீனாட்சிபுரம் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாஜ்பேயி நடந்தே சென்றார். மறு மதமாற்றத்திற்கும் முயற்சித்தார்கள். எல்லா வசதிகளையும் செய்து தருவதாகச் சொன்னார்கள். ஆனால், மதம் மாறிய 180 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்து மதத்திற்கு மீண்டும் திரும்பவில்லை. மீண்டும் மதம் மாறிய சம்பவத்தை வைத்து கருப்பாயி என்று புத்தகம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் யாரும் திரும்பவும் இந்து மதத்திற்கு மாறவில்லை.
கே. பிறகு எப்படி மதம் மாறியவர்களில் சிலர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பியதாக பேச்சுகள் அடிபடுகின்றன?
-------------
பதில்:
என்ன நடந்ததென்றால் முதலில் 200 குடும்பங்கள் மதம் மாற முடிவுசெய்தனர். ஆனால், மதமாற்றம் நிகழ்ந்த தினத்தன்று 180 குடும்பத்தினர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்று மதம் மாறினர். 20 குடும்பங்கள் பின்வாங்கிவிட்டனர். இந்த 180 குடும்பங்களில் இருந்து யாரும் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பவில்லை. ஆனால், திருமண உறவு என்று வரும்போது மதம் பார்க்காமல் சிலர் சம்பந்தம் செய்கிறார்கள். அப்போது தம்பதிகளில் ஒருவர் இந்துவாகவும் ஒருவர் முஸ்லிமாகவும் இருப்பார்கள். மதம் மாறியவரின் உறவினர்கள் இந்துவாக இருப்பார்கள். அவர்கள், மதம் மாறியவரை பழைய இந்துப் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். அவ்வளவுதான்.
தவிர, மதம் மாறியவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பிறவி முஸ்லிம்களாகிவிட்டார்கள். அவர்களுக்கு பழைய வரலாறு தெரியாது. அது குறித்த நினைவும் கிடையாது.
கே. புதிதாக மதம் மாறியவர்களோடு ஏற்கனவே இஸ்லாமியர்களாக உள்ளவர்கள் திருமண உறவுகளை மேற்கொள்கிறார்களா?
-------------
பதில்:
செய்கிறார்கள். ஆனால், அது பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து நடக்கிறது. மிக வசதியான முஸ்லிம்கள் இவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். நடுத்தர வசதியுள்ள முஸ்லிம்கள் செய்துகொள்கிறார்கள்.
கே. மதம் மாறிய குடும்பங்களின் பொருளாதாரம், சமூக நிலை மேம்பட்டிருக்கிறதா?
-------------
பதில்:
கூரை வீடு போட்டிருந்தவர்கள், ஓட்டுவீட்டில் இருக்கிறார்கள். ஓட்டுவீட்டில் இருந்தவர்கள் காரை வீட்டில் வசிக்கிறார்கள். 50 சதவீதம் பேருக்கு மேல் அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போயிருக்கிறார்கள். உமர் ஷரீஃப் என்பவர் பிரதான சாலையில் பெரிய வணிக வளாகத்தைக் கட்டியிருக்கிறார். இன்றும் அவர் பள்ளராக இருந்திருந்தால் இந்த நிலைக்கு அவரால் வந்திருக்க முடியாது.
என்னுடைய அறிக்கையில் இவர்களது பொருளாதார மேம்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, "There is no significant change in their economic conditions" என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதாவது பெரிய அளவில் பொருளாதார மாற்றமில்லை எனச் சொல்லியிருக்கிறேன். யாரும் பெரிய தொழிலதிபராக வரவில்லை. கணிசமான எண்ணிக்கையில் விவசாயத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். வீடு மாறியிருக்கிறது. உணவு மாறியிருக்கிறது. வெளிநாடுகளுக்கு போகிறார்கள். அவ்வளவுதான்.
அதேவேளையில் அவர்களை அழுத்திக்கொண்டிருந்த சமூக அடக்குமுறையிலிருந்து தற்போது விடுபட்டிருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.
கே. அந்தத் தருணத்தில் தமிழகத்தில் இருந்த தலித் அமைப்புகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
-------------
பதில்:
இப்போது இருப்பதைப் போன்ற சூழல் 35 ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. தலித் இளைஞர்கள், அம்பேத்கர் இயக்கங்களில் செயல்பட்டவர்கள்தான் மத மாற்றத்திற்கான பணிகளை மேற்கொண்டவர்கள். திருநெல்வேலியில் இதற்கென ஒரு சபை இருக்கிறது. அது இஷா அத்துல் சபை. முன்பு நான் குறிப்பிட்ட தங்கராஜ் என்பவர் மறவர் இனப் பெண் ஒருவரை கேரளாவுக்கு அழைத்துச் சென்று, மதம் மாறி திருமணம் செய்து திரும்பிவந்தார். அவர்தான் முதன் முதலாக தனிநபராக மதம் மாறியவர். மதம் மாறிய பிறகு யூஃசுப் எனப் பெயர் சூட்டிக்கொண்டார்.
இதையெல்லாம் பார்த்த தலித் இளைஞர்கள் தாங்களும் எப்படி மதம் மாறுவது என யோசித்தபோது இஷா அத்துல் சபையை அணுகினார்கள். அவர்கள் முதலில் மறுத்துவிட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்களைச் சந்தித்து, மதம் மாற விரும்பும் குடும்பங்களின் பெயர்ப் பட்டியலைத் தந்து சம்மதிக்கச் செய்தார்கள். பிறகு அவர்களும் மீனாட்சிபுரத்திற்கே வந்து, மதம் மாறிவிரும்பும் குடும்பங்களிடம் பேசி, அவர்கள் உறுதியாக இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொண்டார்கள்.
இதெல்லாம் நடந்தபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர் இளையபெருமாள் அவர்களைத் தவிர வேறு யாரும் தலித் தலைவர்கள் அங்கு சென்றதாகத் தெரியவில்லை.
கே. இந்த மத மாற்றம் அரசியல் ரீதியாக அவர்களை உயர்த்தியதா?
-------------
பதில்:
அப்படிச் சொல்ல முடியாது. எந்தக் கட்சியிலும் மாவட்டத் தலைவராகவோ மாநிலப் பொறுப்பாளராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ யாரும் ஆகவில்லை. ஆனால், ஒரு பெரிய சமூகத்தோடு இணைந்ததால் அச்சுறுத்தல் இல்லை.
கே. அவர்கள் வாக்களிக்கும்போது தங்களை என்னவாகக் கருதி வாக்களிக்கிறார்கள்?
-------------
பதில்:
அவர்கள் தங்களை இஸ்லாமியராகக் கருதித்தான் வாக்களிக்கிறார்கள். அவர்களுடைய உறவினர்கள் என்று வரும்போது ஒருவேளை தங்கள் பழைய சமூககூறுகளோடு அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.
கே. இந்த மத மாற்ற சம்பவத்திற்குப் பிறகு அங்குள்ள தலித் மக்களைப் பற்றிய அரசாங்கத்தின் பார்வை மாறியிருக்கிறதா?
-------------
பதில்:
முன்பைப்போல அரசின், அரசு அதிகாரிகளின் அத்துமீறல்கள் அங்கு நடப்பதில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகும் இதற்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகும் நியமிக்கப்பட்ட நீதியரசர் வேணுகோபால் கமிஷன், கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் சட்டத்தை பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில்தான் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். இது மீனாட்சிபுர சம்பவத்தின் எதிரொலிதான்.
கே. இந்த சம்பவத்திற்குப் பிறகு அரசு அங்கு வசதிகள் எதையும் மேம்படுத்திக்கொடுத்ததா?
-------------
பதில்:
அந்த நேரத்தில் பல வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கின்றன. மீண்டும் இந்துவாக மாறும்படி கோரியிருக்கிறார்கள். சாலை போட்டுத்தருகிறோம், வீடு கட்டித்தருகிறோம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எதையும் செய்யவில்லை. ஒரு சில இந்து அமைப்புகள் சில வீடுகளைக் கட்டித்தந்துள்ளன. அவ்வளவுதான்.
நன்றி: பி.பி.சி


Wednesday, August 29, 2018

பாகிஸ்தானில் இந்துக்கள் சுதந்திரமாக உள்ளனர்!

பாகிஸ்தானில் இந்துக்கள் சுதந்திரமாக உள்ளனர்!

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய குடியரசு. 90 சதவீதம் இஸ்லாமியர்களை கொண்ட நாடு. மிகச் சிறுபான்மையினராக இந்துக்கள் உள்ளனர். அங்கு அவர்களின் கோவில்களுக்கோ அவர்களின் வழிபாடுகளுக்கோ எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை. அதனை இஸ்லாமும் விரும்புவதில்லை.


கராச்சி முதற் கொண்டு பாகிஸ்தானின் பல நகரங்களில் 'ஜகன்னாத் யாத்ரா' சிறப்பாக நடைபெற்றது. பாகிஸ்தான் கொடிகளோடு வலம் வரும் இந்துக்கள் அந்த நாட்டின் மேல் பிரயத்துடனும் பாசத்துடனுமே உள்ளனர். இஸ்லாமும் அதைத்தான் கட்டளையிடுகிறது. 'இந்த மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என்பது குர்ஆனின் கட்டளை. விரும்பி வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்போம்.


கேரளா வெள்ள நிவாரண களப்பணிகளின் காட்சி தொகுப்பு பாகம் -3


Tuesday, August 28, 2018

கர்நாடகாவில் எழுந்துள்ள எழுச்சி......

கர்நாடகாவில் எழுந்துள்ள எழுச்சி......

சாதி அடக்கு முறை அதிகமாவதால் கர்நாடகாவில் லிங்காயத்துகள் தனி மதமாக தங்களை அறிவித்துக் கொண்டனர். இந்து மதத்துக்குள் தங்களை வலுக்கட்டாயமாக சேர்த்துள்ளனர் என்பது இவர்களின் வாதம். தற்போது கர்நாடகாவில் இவர்கள் 'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்ற கலிமாவை உரத்து சொல்வதைப் பார்த்தால் இஸ்லாத்திற்குள் வந்து விடுவார்களோ என்று எண்ண வைக்கிறது. இவ்வாறு நடந்து கொள்ளுங்கள் என்று யாரும் இவர்களை போய் கேட்டக் கொள்ளவில்லை. இது அவர்களாகவே எடுத்த முடிவு. இவர்கள் முழுவதுமாக தூய இஸ்லாத்துக்குள் பிரவேசிக்க நாமும் பிரார்த்திப்போம்.

அமீத்ஷா வகையறாக்கள் இந்து மதத்தை பரப்ப ஏதேதோ செய்து வருகின்றனர். ஆனால் இந்துத்வாக்களின் தயவால் இந்து மதத்தில் உள்ளவர்களே வெளியேறும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான முழு காரணமும் இந்துது;வாக்களின் முகம் சுளிக்க வைக்கும் நடவடிக்கைகளே...

----------------------------------------

இனி பிபிசி சொல்வதை கேட்போம்.

லிங்காயத்து வழிபாடு முறை எவ்வாறு இந்து மதத்தில் இணைக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்த துறையின் தலைவர் சரவணனை சந்தித்தோம்.

''லிங்காயத்து மக்கள் அணியும் லிங்கத்தை சைவ மதத்தோடு இணைத்துப் பார்ப்பதால் வரும் குழப்பம் தான் இது. வரலாற்று ரீதியாக பார்த்தால், இந்து என்ற ஒரு மதம் கிடையாது. ஆறுவகையான மதங்களை தொகுத்து தற்போது பழக்கத்தில் இருப்பது இந்துமதம். சிவன், திருமால், முருகன், கணபதி, சக்தி, சூரியன் என ஒவ்வொரு கடவுளும் தனித்தனி மதங்களாக வழிபடப்பட்ட தெய்வங்கள். அரசியல் காரணங்களுக்காகவும், திருக்கோயில்களை நிர்வாகம் செய்யவும், பூர்வ ஆச்சாரியர்கள் இந்த மதங்களை இணைத்தனர்,'' என்றார்.

அவர் தொடர்ந்து, ''வேதம், தொல்காப்பியம், சங்கநூல்கள் போன்ற எதிலும் இந்து என்ற வார்த்தையே கிடையாது என்பது வெளிப்படை. ஆறு மதங்கள் இணைக்கப்பட்டு இந்துமதம் என்று கருதப்பட்டது போல, முன்னர் ஒரு பிரிவாக கருதப்பட்ட லிங்காயத்து வழிபாடு, அரசியல் காரணங்களுக்காக தனி மதம் என்ற வாதம் தற்போது வலுத்து நிற்கிறது,'' என்று கூறினார்.

லிங்காயத்து தத்துவம் குறித்து விளக்கிய அவர்,''லிங்கத்தை அங்கத்தில் அணிந்து, அதை வழிபட்டு ஐக்கியம் அடைபவர்கள் லிங்காயத்து மக்கள். இறைவனுக்கும், பக்தனுக்கும் இடையில் யாரும் தேவையில்லை என்றும் குரு என்பவர் வழிகாட்டவே தவிர, யாரும் யாருக்கும் கீழ் நிலையில் இல்லை என்பது லிங்காயத்து வழிபாட்டில் அடிப்படையான கருத்து. சாதி படிநிலையை வலியுறுத்தும் வருணாசிரம தர்மத்தை விலக்கி வைப்பதோடு இல்லாமல் ஆண், பெண் பேதம் இன்றி இருவரும் கழுத்தில் லிங்கத்தை அணியவும், இறைவனை பூசை செய்ய அனுமதிக்கும் வழிபாடு கொண்டது லிங்காயத்து வழிபாடு,'' என்றார் சரவணன்.

தகவல் உதவி
பிபிசி தமிழ் பிரிவு


மதியம் சற்றே உணவருந்த இளைப்பாறும் இளைஞர்கள்!

கேரள களப் பணியில் மதியம் சற்றே உணவருந்த இளைப்பாறும் இளைஞர்கள்!

இதே வயதுடைய இளைஞர்கள் பலர் ரஜினிக்கும், அஜீத்துக்கும் அவர்களின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டும், டாஸ்மாக் கடையில் க்யூவில் நின்று கொண்டும் உள்ளனர். ஆனால் ஏகத்துவத்தை நெஞ்சில் சுமந்த இந்த இளைஞர்கள் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனின் பொருத்தத்தை எதிர் பார்த்து இரவு பகலாக வேலை செய்கின்றனர். இதில் மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டது இன்னும் சிறப்பானது.

இந்த மக்களின் உழைப்பை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
கேரளா வண்டிப்பெரியாரில் தவ்ஹீத் ஜமாஅத்

கேரளா வண்டிப்பெரியாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடைகள் வினியேகம் செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நன்றி கூறிய கேரள போர்ட் மினிஸ்டர்.......

நேரில் சந்தித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நன்றி கூறிய கேரள போர்ட் மினிஸ்டர்.......
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள நிவாரண பணிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வீரியமான பணி நடைபெறுவதை அரசு வட்டாரங்கள் உற்று கவனித்து வருகின்றது.
ஏற்கனவே பாதாளம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் களப்பணிகளை பார்த்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வந்து சந்தித்து மனம் நெகிழ்ந்து பாராட்டி நன்றி சொல்லி சென்றனர்.
தொடர்ந்து ஓய்வுமில்லாமல், தோய்வும் இல்லாமல் நிவாரண பணிகள் நடந்து வருவதை அரசு வட்டாரங்கள் அதிசயத்தோடு பார்த்து வருகின்றனர்.
பரவூர் பகுதியில் வெள்ள நிவாரண பொருட்கள் விநியோகம் செய்யும் போது போர்ட் மினிஸ்டர் கடந்தபள்ளி இராம சந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததுடன் நன்றி கூறினார்.
களப் பணியில் மாநில நிர்வாகிகளும் உள்ளதை கவனிக்கவும்....
எல்லா புகழும் இறைவனுக்கே!
பிரேசில் நாட்டு பெண்களின் ஈடுபாடு!

பிரேசில் நாட்டு பெண்களின் ஈடுபாடு!
சவுதி அரேபியாவுக்கும் பிரேசிலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? இங்கு இரு இளம் யுவதிகள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொள்கின்றனர். ஏற்றுக் கொண்டவுடன் அவர்களிடம் இனம் புரியாத சந்தோஷம். அந்த சந்தோஷத்தின் மிகுதியால் அவர்களால் ஆனந்த கண்ணீரை கட்டுப் படுத்த முடியாமல் அழுகின்றனர். இஸ்லாம் மார்க்கமானது உலகளாவிய மார்க்கம். இது அரேபியருக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல என்பதை இது போன்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
----------------------------------
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போதுஉண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர்காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 5:83)
அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது.
(அல்குர்ஆன் 17:109)
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்றுசொன்னார்கள். நான், "உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கேநான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஏனெனில் நான்பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே நான்அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். "(முஹம்மதே!) ஒவ்வொருசமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச்சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” எனும்(4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் "நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 4582


ஆர்எஸ்எஸ் மாநாட்டில் பங்கேற்க ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ் மாநாட்டில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

அழைப்பை ஏற்பாரா? அல்லது மறுப்பாரா? பொருத்திருந்து பார்போம்.


Monday, August 27, 2018

கண்ணீருடன் சீன முஸ்லிம்களின் விடை பெறுதல்!

கண்ணீருடன் சீன முஸ்லிம்களின் விடை பெறுதல்!

மெக்காவுக்கு சென்றவர்கள் இந்த உணர்வைப் பெறலாம். உலகில் எத்தனையோ இடங்களுக்கு சென்றாலும் மெக்காவில் கிடைக்கும் ஒரு நிம்மதி, அமைதி, அன்பு வேறு இடங்களில் கிடைப்பதில்லை என்பதை பலரும் உணர்ந்திருப்பர். அந்த வகையில் சீனாவிலிருந்து இந்த வருடம் ஹஜ் பயணத்திற்காக வந்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப சென்ற போது கண்ணீர் மல்க கஃபாவுக்கு விடை சொல்லும் காட்சி. நபி ஆதம் முதல் கடைசி நபி நபிகள் நாயகம் வரை இறை வழிபாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம். உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த கஃபாவை இலக்காக வைத்தே தங்கள் இறைக் கடமைகளை செய்கின்றனர். இனம், மொழி, நாடு கடந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உண்மையை பறை சாற்றும் இடமாக கஃபா திகழ்வதால் இத்தகைய உணர்வு அனைவருக்கும் ஏற்படுவது இயல்பே....


இறைவனை தொழுவதில் அலட்சியமாக இருப்போர் கவனத்திற்கு!

இறைவனை தொழுவதில் அலட்சியமாக இருப்போர் கவனத்திற்கு!
கால் கைகள் நலமாக இருந்தும், வசதி வாய்ப்புகள் அனைத்தும் இருந்தும் பள்ளியின் பாங்கோசை நம் காதில் விழுந்தும் அது வேறு யாருக்கோ சொல்லப்பட்டதாக கடந்து செல்கிறோமே! இந்த இளைஞனை பாருங்கள். கால் கைகள் ஊனமாக இருந்தும் தவழ்ந்தாவது தொழுகைக்கு பள்ளிக்கு வந்து விடுகிறார். இந்த இளைஞனின் முயற்சியில் ஐம்பது சதமாவது நம்மிடம் இருக்கிறதா?
--------------------------------------------
ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதைவிட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி (647)


Sunday, August 26, 2018

நடிப்பில் நம் சிவாஜியையும் மிஞ்சி விட்டாள் இந்த குழந்தை!


அந்த மக்களை இன்று ஒன்றாக்கியுள்ளது இஸ்லாம்.

A brother from Russia 🇷🇺
A brother from Ireland 🇮🇪
A brother from uk 🇬🇧
A brother from Africa
And a brother from portugal 🇵🇹 
Embraced Islam
Islam is the solution for humanity
நாடுகளை கடந்து மொழிகளை கடந்து இனங்களை கடந்து ஏக இறைவனை ஏற்றுக் கொண்டு புதிதாக இஸ்லாத்தில் நுழைந்த சொந்தங்கள்.
ரஷ்யா, ஐயர்லாந்த், யுகே, ஆஃப்ரிக்கா, போர்ச்சுக்கல் இந்த ஐந்து நாடுகளும் பல வகைகளில் வேறுபட்டாலும் அந்த மக்களை இன்று ஒன்றாக்கியுள்ளது இஸ்லாம்.


காவல் துறையினர் அனைவருமே இவ்வாறு மாறி விட்டால்....

காவல் துறையினர் அனைவருமே இவ்வாறு மாறி விட்டால்....

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த வருட ஹஜ் பெருநாள் தொழுகைக்கு வந்த ஒரு எமன் நாட்டு சிறுவனின் கால் ஷூக்களை சரி செய்து விடுகிறார் காவல் துறையை சார்ந்த அன்பர். காவல் துறையில் பணி புரிபவர்கள் அனைவரும் இவ்வாறு அன்புள்ளத்தோடு நடந்து கொண்டால் 'காவல் துறை உங்கள் நண்பன்' என்ற வார்த்தை மெய்ப்படுமல்லவா!


தரையில் படுத்து இளைப்பாறும் இவர் யாரென்று தெரிகிறதா?

தரையில் படுத்து இளைப்பாறும் இவர் யாரென்று தெரிகிறதா?

ஐவரி கோஸ்ட் அதிபர் அலாசான்னே குவாட்டா இந்த வருட ஹஜ்ஜில் களைப்பு தீற தரையில் இளைப்பாறுகிறார். இவ்வாறு அதிபரையும் சாதாரண மனிதராக இங்கு சர்வ சாதாரணமாக காணலாம். இங்கு எடுக்கும் பயிற்சியானது அதிபர்களையும் சாமான்யனாக மாற்றி விடுகிறது. 'நான் அதிபர்' என்ற செருக்கையும் தூரமாக்குகிறது.
Saturday, August 25, 2018

கம்யூனிஷ சீனாவில் முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை!

கம்யூனிஷ சீனாவில் முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை!

எத்தனை அடக்கு முறை! எவ்வளவு கைதுகள்! அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு இதோ தொழுகைக்கு வந்து விட்டனர். சீன முஸ்லிம்கள் தங்களின் மார்க்க கடமைகளை எந்நத இடத்திலும் விட்டுக் கொடுப்பதில்லை. கம்யூனிஷ  சீன அரசாங்கமும் இந்த மக்களிடம் சற்று அடக்கியே வாசிக்கிறது. இஸ்லாமியருக்கு எதிராக அரசு செயல்பட்டால் ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளையும் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இதனால் சீனாவின் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்படும்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் காலையிலேயே தொழுகைக்கு முன்பு பாரம்பரிய இனிப்புகளை உண்டு விட்டு சாரை சாரையாக பெருநாள் தொழுகைக்கு வந்து விட்டனர் சீன முஸ்லிம்கள். இவர்களுக்கு மேலும் தைரியத்தை கொடுத்து மார்க்க கடமைகளில் தொடர வல்ல இறைவன் அருள் புரிவானாக!


எம் டிவியை சுற்றியவர் இன்று கஃபாவை சுற்றுகிறார்

எம் டிவியை சுற்றியவர் இன்று கஃபாவை சுற்றுகிறார்

'எனது பெயர் கிறிஸ்டினா டபாகா. ஐரோப்பாவின் எம்டிவியில் ராக் ஸ்டார் பாடல்களையும் ம்யூசிக் ஷோக்களையும் நடத்தி வந்தேன். இஸ்லாமும் அதன் வாழ்வு முறையும் என்னைக் கவர்ந்தது. இன்று ஒரு இஸ்லாமிய பெண்ணாக கஃபாவை சுற்றி வருகிறேன். இங்குள்ள இளைஞர்கள் இயலாத வெளி நாட்டவருக்கு உதவுவது பார்க்க சந்தோஷமாக உள்ளது. 'எம்டிவி டு மெக்கா' என்ற எனது புத்தகத்தில் அனைத்து விபரங்களும் இடம் பெறும்;. எத்தனை நாடு, எத்தனை மக்கள், எத்தனை மொழி, எத்தனை நிறம் அனைத்தையும் கடந்து இங்கு அனைவரும் சகோதர சகோதரிகளாக செயல்படுவது மெய் சிலிர்க்க வைக்கிறது.'


Sunday, August 19, 2018

நம் பாரத நாடு எங்கு செல்கிறது?

நம் பாரத நாடு எங்கு செல்கிறது?
20 அதி பயங்கர வெடி குண்டுகள், 22 டெடனேடர்கள், 2 லிட்டர் விஷம் , இரண்டு ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப் பட்டன எங்கு? ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான சனாதன் ஹிந்து ஆர்கனைசேஷனிடமிருந்து. இந்த அமைப்பின் தலைவரையும் காவல் துறை கைது செய்தது?
இந்த நாட்டை சுதந்திர தினத்தன்று வெடி குண்டுகளால் துளைக்க நினைத்த ஒரு அதி பயங்கர இந்துத்வாவாதியை விடுவியுங்கள் என்று ஆர்எஸ்எஸ் அபிமானிகளால் போராட்டம் நடத்தப்படுகிறது? இது இந்த நாட்டை எங்கு கொண்டு விடும்? இவர்கள்தான் தேச பக்தர்களா? 'வந்தே மாதரம்' என்று கோஷமிட்'டுச் செல்கின்றனர். நாட்டை அழிப்பவன்தான் இது போன்ற கோஷத்தை அடிக்கடி முழங்குகிறான்.
கேரள வெள்ளத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தமிழகத்திலிருந்து இஸ்லாமிய இளைஞர்கள் சாரை சாரையாக செல்கின்றனர்.
ஆனால் இந்துத்வாவாதிகளோ இந்த நாட்டை வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து அதில் இன்பம் காண்கிறார்கள். இங்கு யார் தேச பக்தர்கள் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.


உயிர்களிடம் அன்பு வைப்போம்.

உயிர்களிடம் அன்பு வைப்போம்.
சில நாட்களுக்கு முன்பு நான் தங்கியுள்ள அறையில் வெளிக் காற்று வரட்டும் என்று ஜன்னலை திறந்தேன். என்ன அச்சர்யம்? ஒரு புறா தனது முட்டையை இட்டு ஜன்னலின் இடுக்கில் ஒரு குஞ்சை பொறித்துள்ளது. என்னை பார்த்தவுடன் அந்த குஞ்சு முதலில் மிரண்டது. தாய் புறாவானது ஜன்னலை திறந்தவுடன் பறந்து போய் விட்டது. குஞ்சானது இவன் நம்மை ஒன்றும் செய்ய மாட்டான் என்று சர்வ சாதாரணமாக ஒரு அலட்சிய பார்வை என்னை நோக்கி பார்த்தது. ஜன்னலின் சிறிய இடுக்கின் மூலமாக வரும் ஏசி காற்றின் சுகத்தில் மூழ்கிப் போயிருந்தது அந்த குஞ்சு.
உடன் ஒரு சிறிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை வெட்டி அது குடிக்க தண்ணீர் வைத்தேன். வேறொரு பிளாஸ்டிக் டப்பாவில் வயர்களை கொண்டு கம்பியில் கட்டி அதனுள் சில நுணுக்கிய கோதுமை துகள்களை போட்டு வைத்தேன். தற்போது வெளியில் உணவு கிடைக்காத போது தாயும் குஞ்சும் நான் வைத்த கோதுமையையும் தண்ணீரையும் குடித்துக் கொள்வார்கள்.
பாலைவன தேசமான சவுதியில் எங்கு பார்த்தாலும் மரங்களை வளர்த்ததால் குருவிகள் தற்போது நிறைய தென்படுகின்றன. சிட்டுக் குருவிகளும் ஆங்காங்கே பார்க்கிறேன். ஆனால் நமது தமிழகத்தில் தற்போது சிட்டுக் குருவிகளின் வாசத்தையே பார்க்க முடிவதில்லை.
இங்கு பாலைவனம் சோலை வனமாகிறது: நாமோ சோலைவனத்தை பாலைவனமாக்கி வருகிறோம்.
-----------------------------------------
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். (71)
விளக்கம்:
அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியுமா? அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணீரே அவர்களது அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும்.
Saturday, August 18, 2018

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்

'துபாயின் முன்னேற்றத்தில் கேரள மக்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஹஜ் பெருநாள் வேறு நெருங்குகிறது. இந்த நேரத்தில் கேரள மக்கள் அளவிலா துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. துபாய் மக்கள் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை தந்துதவுங்கள். துபாய் அரசும் பொருளாதார உதவிகளை அனுப்பி வைக்கும்.'
இவ்வாறு துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் கேரள முதல்வர் பினராய் விஜயன் 'காலத்தினால் செய்த இந்த அளவிட முடியாத உதவியை வாழ்நாளில் நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம். இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிலளித்துள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
19-08-2018
கேரள பத்திரிக்கை மாத்யமமில் வந்த செய்தி
The UAE Prime Minister and ruler of the Emirate of Dubai Mohammed bin Rashid Al Maktoum has made a request to the people through social media. The Indian state of Kerala is witnessing huge flood, the most devastating of a century. Ahead of Eid Al Adha, do not forget to extend a helping hand to our brothers, he tweeted.
To help the flood victims, UAE and Indian national will work unitedly. To provide immediate help, a committee has been formed. He has requested everyone to contribute generously to the initiative.
People of Kerala have been with UAE for its progress always and UAE is liable to help and support the flood-affected people, said the PM in his post.
The request has been made in Arabic, English and Malayalam through Facebook and Twitter. Thousands of people have thanked the leaders' generosity in the social media platform


கத்தார் 35 கோடி...

கத்தார் 35 கோடி...
கேரள அரசின் வெள்ள நிவாரண நிதிக்காக கத்தார் அரசு சார்பில் 50 லட்சம் டாலர் (ரூபாய் 34.89 கோடி) அனுப்புவதாக கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானி அறிவிப்பு.. மேலும் கத்தார் சாரிட்டி மூலம் 40 லட்சம் ரியால் (7.6 கோடி) மதிப்புள்ள நிவாரணப் பொருட்களும் வழங்கவும் கத்தர் அரசு சார்பில் அனுப்பவும் அறிவுறுத்தல் செய்துள்ளார்..


ஜஹாங்கிர் பாபா

நம்மில் எத்தனை பேருக்கு இந்தியாவின் விஞ்ஞானிகளின் முன்னோடியான ஜஹாங்கிர் பாபாவைப் பற்றித் தெரியும்?
இந்திய அணுவிஞ்ஞானத் துறைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்கள் மற்றும் தலைவர்களைப் போன்றே மறைக்கப் படுகிறாரென்பதும் மறக்கடிக்கப் படுகிறாரென்பதும் வேதனைக்குரியது.
========================
அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா
========================
அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாக கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர், இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. அணுசக்தித் துறையை இந்தியாவில் நிர்மாணித்த அந்தப் பெரும் சிற்பி 30.10.1909-ல் பிறந்தவர்.
குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தூங்கவேண்டிய நேரத்திற்கும் மிகமிகக் குறைவாக ஹோமி தூங்கியதால் தந்தை ஜஹாங்கீர் தாய் மெஹ்ரூன் கவலை கொண்டு மருத்துவரிடம் காட்டியபோது குழந்தையிடம் அபார மூளைச் சக்தி இருப்பது தெரியவந்தது.
----------------------------
எந்த அளவுக்கு இருந்த தென்றால் 15 வயதில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு குறித்த 'தியரி'யைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இருந்தது.
----------------------------
1930ல் கேம்ப்ரிட்ஜில் மெக்கானிக்கல் இன் ஜினீயரிங் முடித்தவருக்கு 1934ல் ஐசக் நியூட்டன் ஃபெல்லோஷிப் விருது கிடைத்தது. 1937ல் அவர் எழுதியCascade Theory of Electron Showersஎன்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது.
----------------------------
Cosmic Radiation உள்ளிட்ட அவரது ஆய்வுகள் இயற்பியல் துறையில் புதிய சாதனைகளைப் படைத்தன.
------------------------------
பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அழைத்தும் அவற்றை மறுத்து 1939ல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா 'விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்' என்று பிரகடனப்படுத்தி அதற்காகக் கடுமையாக உழைத்தார்.
------------------------------
31 வயதில் 'மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி' விருதும் (1941) அதற்கடுத்த ஆண்டு ஆடம்ஸ் விருதும் (1942) பெற்றார். 1945ல் Tata Institute of Fundamental Research நிறுவனம் தொடங்க இவரே காரணமாகும்.
------------------------------
Atomic Explosion, Production of Isotopes, Purification of Uraniumமுதலியன குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்து இந்தியாவில் அறிவார்ந்த சூழலை ஏற்படுத்திய இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறைத் தந்தைஇவர்.
------------------------------
நாடு சுதந்திரமடைந்ததும்Atomic Research Centreஒன்றை அரசு தொடங்குவதற்கு வகை செய்த ஹோமி பிரதமர் நேருவுக்கு நெருங்கிய தோழராக விளங்கினார்.
------------------------------
மத்திய அரசில் அணுசக்தித் துறை என்று தனியாகவே ஒரு துறை பிரதமர் நேருவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தொடங்கப்பட வைத்தார்.
இவரது முயற்சியால் 20.01.1957ல் ஆக்கப்பணிகளுக்காக அணுசக்தி உற்பத்திக்கு வித்திடப்பட்டது.
1955ல் அணுசக்தி சம்பந்தமாக ஜெனீவாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொள்ளப் பாபாவே முன் நின்று அனைத்தையும் செய்து முடித்தார்.
------------------------------
ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் கடுமையான முயற்சியின் விளைவாகவே தாராப்பூர் (மகாராஷ்டிரம்), ராணா பிரதாப் சாகர் (ராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ்நாடு) ஆகிய மூன்றிடங்களிலும் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மையங்கள் உருவாயின.
------------------------------
இந்தியாவிலேயே தோரியம், புளூட்டோனியம் முதலியவற்றைச் சரியான முறையில் உற்பத்தி செய்யவும், விவசாயம், தொழில், மருத்துவம், உயிரியல் துறைகளுக்குப் பயன்படும் ரேடியோ ஐசோடோப்பைத் தயாரிக்கவும் ஹோமி பாபா ஆற்றிய பங்கு அளவிடற்கரியது.
------------------------------
பெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் கெளரி பிட்னூர் எனுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் பாதாள அணு வெடிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி மையம் ஒன்று அமையவும்,கல்கத்தா, அஹமதாபாத், கேரளா, காஷ்மீர் முதலிய இடங்களில் பல்வேறு விஞ்ஞான மையங்கள் அமையவும், அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாகவும் கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
------------------------------
18.05.1974ல் பொக்ரான் (ராஜஸ்தான்) முதல் அணுசக்திச் சோதனையின் வெற்றி மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் ஆறாவது நாடாக இடம்பெற்று இந்தியா உயர்ந்ததென்றால் அதன் அடிப்படை நாதமாக விளங்கியது பாபா ஆரம்பித்து வளர்த்து வந்த கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முயற்சிகளும்தான்.
------------------------------
அனைத்துலக மாநாட்டிற்காக 24.01.1966 அன்று ஏர் இந்தியா போயிங் 707 விமானத்தில் பயணித்தபோது பனிப்புயல் தாக்க ஏற்பட்ட விபத்தில் வபாத்தானவர் ஹோமி பாபா.
------------------------------
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் பல்கலைக் கழகங்களிடமிருந்தும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் ஹோமி பாபா.
இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம் 12.01.1967 முதல் 'பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்' (Bhabha Atomic Research Centre )எனப் பெயரிடப்பட்டது.
------------------------------
மத்திய அரசு அக்டோபர் 2008 அக்டோபர் 2009 ஹோமி ஜஹாங்கீர் பாபா நூற்றாண்டு என்று அறிவித்தது. என்றாலும் திருமணம் கூட செய்துகொள்ளாமல் இந்திய அணுவிஞ்ஞானத் துறைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்கள் மற்றும் தலைவர்களைப் போன்றே மறைக்கப்படுகிறாரென்பதும் மறக்கடிக்கப்படுகிறாரென்பதும் வேதனைக்குரியதே!
நன்றி :இனிய திசைகள் மாத இதழ் ஜனவரி 2009


Tuesday, August 14, 2018

சூடு தாங்காமல் தவிக்கும் ஹாஜிக்கு தனது காலணியை அளிக்கும் காவலர்!

சூடு தாங்காமல் தவிக்கும் ஹாஜிக்கு தனது காலணியை அளிக்கும் காவலர்!

போலீஸ்காரர்கள் என்றாலே முரட்டு சுபாவமும் முரட்டு மீசையும்தான் அதிகார தோரணையும்தான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் மெக்காவில் உள்ள காவலர்கள் மிகுந்த பொறுமையோடும் அன்புள்ளத்தோடும் பழகுவதை பார்க்க முடியும். மொழி தெரியாமல் தவிக்கும் அனைத்து உலக மக்களையும் பொறுமையோடு கையாளும் இவர்களின் அன்புள்ளத்தை நேரிலேயே கண்டு வியந்துள்ளேன்.

இங்கு ஒரு பெண்மணி காலணி அறுந்ததால் வெயிலின் சூடு தாங்காமல் தவிக்கிறார். இதைப் பார்த்த காவலர் தனது காலணியை கழட்டிக் கொடுக்கிறார். இது போன்ற நெகிழ்ச்சியான பல சம்பவங்களை ஹஜ்ஜில் நாம் காண முடியும்.


2018 ஹஜ் பயணத்துக்காக நைஜீரியாவில் மேற் கொள்ளப்பட்ட நிகழ்வுகள்!

2018 ஹஜ் பயணத்துக்காக நைஜீரியாவில் மேற் கொள்ளப்பட்ட நிகழ்வுகள்!

நம்மை படைத்த இறைவன் என்பவன் ஒரு நாட்டுக்கோ ஒரு இனத்துக்கோ ஒரு மொழிக்கோ சொந்தக்காரனாக இருக்க முடியாது. வெள்ளையன் கருப்பன் அமெரிக்கன் ஐரோப்பியன் ஆசியன் என்ற அனைத்து மக்களுக்கும் பொதுவானவனாக இருக்க வேண்டும். அந்த வகையில் கருப்பின மக்களான நைஜீரியர்கள் இந்த வருட ஹஜ்ஜூக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ சில வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. தற்போது ஹாஜிகள் மெக்காவில் குழுமத் தொடங்கி விட்டனர். இறைவனின் பொருத்தத்தை அன்பை பெற வேண்டி வந்திருக்கும் ஹாஜிகளின் எண்ணங்களை இறைவன் பூர்த்தியாக்கி வைப்பானாக!


Monday, August 13, 2018

இஸ்லாமிய மார்க்கத்தையும் விட்டுக் கொடுக்காமல்.....

பேச்சு போட்டியில் மிக அற்புதமாக பேசி முதல் பரிசான ரூபாய் 10,000.த்தை வென்ற கோவை. இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி. யு. ஃபஷீஹா.......
எவ்வளவு படித்தாலும் உலகின் எந்த உயரிய பதவியை பிடித்தாலும் இஸ்லாமிய மாணவிகள் இஸ்லாம் வகுத்திருக்கும் கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இஸ்லாமிய பெண்களை வீட்டுக்குள் அடைந்து கிடக்க இஸ்லாம் சொல்லவில்லை. அன்றைய அரேபியாவில் போர்க் களத்துக்கும் சென்று வீரர்களுக்கு தண்ணீர் புகட்டுவது, உணவு சமைப்பது, காயம் பட்ட வீரர்களுக்கு மருத்துவம் பார்ப்பது, இஸ்லாமிய மார்க்க போதனை நடத்துவது என்று அவர்களின் உலகம் பரந்து விரிந்தது. இன்றோ சீரியல்களில் மூழ்கி தங்களின் பொன்னான நேரத்தை வீணாக்குகின்றனர்.
இந்த மாணவியைப் போல் இஸ்லாமிய மார்க்கத்தையும் விட்டுக் கொடுக்காமல் உலக அறிவையும் பெற்றுக் கொள்ளும் சமூகமாக மாறுவோமாக!
இந்த மாணவிக்கு வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்...


Sunday, August 12, 2018

சாராயத்தால் வீழ்ந்த மு க முத்து!

சாராயத்தால் வீழ்ந்த மு க முத்து!
ஒரு மனிதன் மதுவால் எந்த அளவு பாதிக்கப்படுவான் என்பதற்கு மு க முத்துவின் வாழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. மு க ஸ்டாலின் இடத்தில் இருக்க வேண்டியவர் மதுவால் சீரழிந்து இன்று உருக்குலைந்து போயுள்ளார். பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு படங்களில் பார்த்த அந்த அழகு மகன் இன்று உருக்குலைந்து போயுள்ளார்.
கலைஞர் அவர்கள் மதுக் கடைகளை திறக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட போது நேரில் சென்று 'வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. இந்த மக்கள் குடித்து பாழாய் போவார்கள்' என்று ராஜாஜி கோரிக்கை வைத்தார். தனக்கு வருமானம்தான் முக்கியம் என்று கருதிய கலைஞர் மதுக் கடைகளை பலரது எதிர்ப்பையும் மீறி திறந்தார். அதில் அவரது குடும்பத்தின் மூத்த குடிமகனே வீழ்ந்ததுதான் ஒரு கரும் புள்ளி.
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
போதைப் பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்து போவார்கள்.
---------------------------------------------
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:219


ஆட்டோ டிரைவர் மகன் ஐஏஎஸ் ஆன வரலாறு!


4-வதோடு படிப்புக்கு மூட்டைக் கட்டும் நிலை ஏற்பட்டும் தொடர் முயற்சியால் ஐஏஎஸ் ஆன ஆட்டோ ஓட்டுனர் மகன்!

ஏழைக் குடும்பத்தில் பிறந்த அன்சார் கடந்துவந்த பாதை முழுவதுமே தங்கு தடைகள் நிறைந்தவை. ஆனால், அனைத்தையும் கடந்து இன்று யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிக் கண்டு இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரிஆகியுள்ளார்.

ஃபேஸ்புக்கை அடிக்கடி லாகின் செய்து டைம்லைனை நோட்டமிடுபவர்கள் போல், டிஎன்பிஎஸ்சி வெப்சைட் அடிக்கடி எட்டி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் எகிறிக் கொண்டிருக்கிறது. ஆம், முன் காலங்களைவிட அரசு தேர்வுகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் அதிகரித்துவிட்டர் என்றாலும், பலரும் பத்தோடு பதினொன்றாகவே படிக்கின்றனர் மற்றும் படிக்க வற்புறுத்தப்படுகின்றனர். அப்படி எக்சாம் போபியாவால் திணறுபவர்களுக்கு அன்சார் ஷாயிக் சொல்லிக் கொள்வது இதை தான்,
போட்டித் தேர்வில் உங்களுடன் லட்சம்பேர் போட்டியிடுவார்கள் என்று பயந்தீர்களாயின் அது தவறு. உங்களுடைய ஒரே போட்டியாளர் நீங்கள் தான். எனவே, உங்கள் நம்பிக்கையற்ற எண்ணங்கள் அனைத்தையும் தூரவீசிவிட்டு பயணியுங்கள், வெற்றி உங்கள் பாதையைத் தேடி வரும்,” என்கிறார். 

அது சரி, ஆனால் யாரிந்த அன்சார் ஷாயிக்...?

நம்பிக்கையின் நாயகன், விடாமுயற்சியின் காதலன். ஆம், அதுவே அவருக்கான சரியான அடையாளமாய் இருக்கும். இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் ஒருவர் அவரது பாதையில் எத்தனை கற்களையும், மேடுகளையும் தாண்டிவிட முடியும்? அன்சார் கடந்துவந்த பாதை முழுவதுமே தங்கு தடைகள் தான். ஆனால், அனைத்தையும் கடந்து இன்று ஐஏஎஸ் அதிகாரி என்ற அடையாளத்துடன்இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரிஎன்ற அடைமொழியுடன் நிமிர்ந்து நிற்கிறார்.

2016ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்ட முதல் முயற்சிலேயே வெற்றிக்கண்டு 21 வயதிலே கலெக்டராகி மேற்கு வங்க மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் அன்சார்.

அன்சார் கடந்துவந்த கரடுமுரடான பாதை

மகாராஷ்டிராவின் பர்பானி சிட்டியின் ஷெல்கான் கிராமத்தில் பிறந்தவர் அன்சார் ஷாயிக். அப்பா ஆட்டோ ஓட்டுநர். அவருக்கு மூன்று மனைவி. இரண்டாவது மனைவியான அன்சாரின் அம்மா, விவசாய வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளி. ஏற்கனவே, குடும்ப பொருளாதார நிலை மோசம். இதில், அன்சாரின் அப்பாவுக்கு குடிப்பழக்கமும் தொற்றிக்கொள்ள குடிக்கு அடிமையாகி, தினம்தினம் சண்டை, சச்சரவு என நிம்மதியற்ற வாழ்வு. 

நாட்கள் இப்படியாக கழிந்தாலும், அன்சார் படிப்பில் படுச்சுட்டி. ஆனால், குடும்பத்தின் நிலையின் காரணமாக அக்கம்பக்கத்தாரும், சுற்றதாரும் அன்சாரின் அப்பாவிடம், அன்சாரின் படிப்பை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அவரும், அதற்கு சம்மதம் தெரிவித்து அன்சாரின் ஆசிரியரிடம் பள்ளியை பாதியில் நிறுத்த கேட்டிருக்கிறார்.

எனக்கு நல்லா நினைவில் இருக்கிறது. அப்போ நான் நாலாவது படிச்சிட்டு இருந்தேன். சொந்தகாரங்க எல்லாம் அப்பாட்ட என்னை ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லிக் கொண்டு இருந்தனர். அப்பாவும் டீச்சருக்கு போன் பண்ணி, நான் இனிமேல் ஸ்கூலுக்கு வரமாட்டன் சொன்னார். ஆனால், டீச்சர் தான் அவன் நல்லா படிக்கிற பையன். அவனை மட்டும் படிக்க வைத்தீங்கனா, உங்க குடும்பத்தின் நிலையே மாறிபோகும்என்று சொல்லியிருக்காங்க...

என்று நினைவுகூறும் அன்சார், அவரது வாழ்க்கையின் திருப்புமுனை சம்பவம் அதுவே என்கிறார். ஆசிரியரால் அன்சாருக்கு மற்றொரு வாய்ப்பை கொடுத்துள்ளனர் அவருடைய பெற்றோர். அந்தவாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திகொள்ள தீர்மானித்த சிறுவன் வைராக்கியதுடன் படித்து, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91% மதிப்பெண்ணை பெற்றிருக்கிறார்.

அவருடைய வாழ்வின் கஷ்டக்காலமான பள்ளிப் பருவத்தை பற்றி சிரித்து கொண்டே அன்சார் பகிர்ந்து கொண்டாலும், மூன்றுவேளை உணவுக்கு வழியற்ற நிலையில், ஒருநாள் மதியஉணவில் புழு கிடந்தும் பொருட்படுத்தாமல் உண்டு உள்ளார்.

எனக்கு சிக்கன் என்றால் ரொம்ப பிடிக்கும். மூன்று வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற நிலையின் நான்-வெஜ்ஜுக்கு எங்கு போவது. ஒருநாள், லன்ச்சில் புழுகிடந்தது. அதையும் சாப்பிட்டோம். சோ, வெஜ் மீல்ஸ், நான் வெஜ்ஜாகிவிட்டது,”

என்று சிரிக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு புனேவில் உள்ள கல்லூரியில் இளங்கலை பொலிடிக்கல் சயன்சில் சேர்ந்திருக்கிறார். மராத்தி மீடியம் பள்ளியில் படித்த அவருக்கு, ஆங்கிலவழி கல்வியை எதிர்கொள்வது சிரமமாக இருந்துள்ளது. ஆனால், எதற்கும் சோர்வு அடையாதவரே அன்சார், ஆங்கிலத்தையும் ஒரு கைப்பார்த்தார்.

அன்சாரின் கல்லூரி செலவுக்காக அவருடைய அப்பாவும், தம்பியின் முழு சம்பளமான 7 ஆயிரத்தையும் செலவிட்டிருக்கின்றனர். ஒரு ஜோடி செருப்பு, இரண்டு ஜோடி ஆடையுடன் கல்லூரிக்கு சென்று வந்திருக்கிறார்

தகவல் உதவி : thebetterindia.com மற்றும் kenfolios.com, Rahmathullah Tlpm