Followers

Sunday, September 30, 2018

தனக்கு மன அமைதி கிடைப்பதாக சொல்கிறார்

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலைக்கு முக்காடு அணிந்து இஸ்லாமிய பெண்களோடு உரையாடுகிறார். இறைவனை தொழும் பள்ளி வாசலில் தனக்கு மன அமைதி கிடைப்பதாகவும் சொல்கிறார். ஹிஜாப் போட்டவுடனேயே அந்த பெண்ணின் மீது ஒரு தனி மரியாதை வந்து விடுவதை பார்க்கிறோம்.

எல்லா புகழும் இறைவனுக்கே.....


ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் தூய்மை செய்யும் பணி...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை அக்குரனை பகுதியை ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் தூய்மை செய்யும் பணி அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடை பெறுகிறது.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்களின் பணிகள்

அக்குரனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகோதரர்களில் ஒரு மாற்று மத சகோதரர் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்களின் பணிகள் குறித்து மனம் திறந்து பேசுகிறார்.

அல்ஹம்துலில்லாஹ்


களத்தில் நின்ற பெரியார் இயக்கங்களுக்கு வாழ்த்துக்கள் !!!

திருப்பூரில் தந்தை பெரியார் சிலையை சுற்றிலும், ராஜா பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டிய காவிகளையே கிழிக்க வைத்தது கருப்புச்சட்டைகள்,,,,

களத்தில் நின்ற பெரியார் இயக்கங்களுக்கு வாழ்த்துக்கள் !!!


இலங்கையை சேர்ந்த ப்ரியா என்கிற தமிழ் ஈழ சகோதரி

குவைத்தில் பணிபுரிந்து வந்த இலங்கையை சேர்ந்த ப்ரியா என்கிற தமிழ் ஈழ சகோதரி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார்.
பொருளாதாரத்தில் பெரிதும் பின் தங்கிய அந்த சகோதரிக்கு அவர் பணிபுரிந்து வந்த நிறுவனமும் எந்த உதவியும் செய்யாமல் கைவிட்ட நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக அந்த சகோதரிக்கு தாயகம் செல்ல விமான டிக்கெட் கொடுத்து தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.
இலங்கையில் அவருக்கு தேவையான மருத்துவத்திற்கான பொருளாதார உதவிகளையும் நமது sltj தலைமை மூலமாக செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நோய் குறித்த விழிப்புணர்வும் அதற்கான மருத்துவ முறை குறித்தும் விளக்கி அந்த சகோதரிக்கு ஆறுதல் கூறப்பட்டது.
நன்றி:
Mohamed Ali JinnaSaturday, September 29, 2018

இறைவனின் வழிகாட்டுதல் என்றால் ஒரே ஒரு இறைவனா?

//3. இறைவனின் வழிகாட்டுதல் என்றால் ஒரே ஒரு இறைவனா? பல மதங்கள் பல இறைவனைக்காட்டும்போது ஒரே ஒரு இறைவனாக அல்லாவை மட்டுமே என்பது எப்படி பல மத நாட்டில் சாத்தியாகும்? அங்கு எங்கே போயிற்ற் தோலை எரிக்கும் தணடனை? சாத்தியமா?

ஆக சுவனப்பிரியன், உலகமுழுவதும் இசுலாம் மட்டுமே இருப்பின் மட்டும் இந்த வசனம் சரி//


இந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :

'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'

-ரிக் வேதம் 1:164:46

'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'

உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.

அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.

-ரிக் வேதம் 2 : 1

இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன. 

இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'

குர்ஆன் 17 :110

ஆக உலகம் முழுவதையும் படைத்து பரிபாலிப்பவன் ஒருவனே! அனைத்து மதங்களும் இதைத்தான் போதிக்கின்றன. ஆனால் மனிதன்தான் தனது சுய லாபத்துக்காக வேதங்களை திருத்தி தனக்கு தோதானதாக மாற்றிக் கொள்கிறான். பல வேதங்கள் மனிதக் கரங்களால் மாற்றப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. 

'வாசுதேவக குடும்பம்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'நட்ட கல்லும் பேசுமோ' என்ற நமது முன்னோர்களின் அறிவுரைகளை ஆராய்ந்து பாருங்கள்..... சுவனப்பிரியனின் வழியில் வந்து நிற்பீர்கள்.

எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து ....

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! 
இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74

இது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம அவர்கள் செய்த துஆ... பயபக்தியாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியான அவர் செய்த துஆவை நாமும் கேட்போம்.

சமுதாயத்தில் எத்தனை பேர் மனைவியிடம் அல்லது கணவனிடம் கண்குளிர்ச்சி இல்லாமல் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்....
மார்க்கம் இல்லாத அல்லது அரைகுறை மார்க்கம் தெரிந்த வாழ்க்கை துணை உள்ளவர்கள் வீட்டிற்கு உள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகளோடும்தான் வாழ்கிறார்கள்.

இவர்களிடம் வளரும் பிள்ளைகளும் அவர்கள் வழியேதானே வரும். வாழ்க்கைத்துணையிடம் பணமோ,அழகோ இருந்தால் மட்டும் போதாது.....
தக்வா உடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சந்ததிகளிடம் கண்குளிர்ச்சியை பார்க்க முடியும். மார்க்கம் உள்ள தாய், தந்தையால் மட்டுமே சிறந்த குழந்தைகளை உருவாக்கமுடியும்.

--------------------------------------------

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி), 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்' என்று கூறினார்கள்.

புகாரி-5997


பேராசிரியரை காலில் விழச் செய்த இந்துத்வ பயங்கரவாதிகள்!

மத்திய பிரதேச கல்லூரி பேராசிரியரை காலில் விழச் செய்த இந்துத்வ பயங்கரவாதிகள்!
'பாரத் மாதா கீ ஜே' என்று தேவையில்லாமல் கல்லூரி வளாகத்தில் கூச்சல் போட்டு குழப்பம் விளைவித்த இந்துத்வா ஏ.பி.வி.பி பயங்கரவாதிகளை கண்டித்த கல்லூரி பேராசிரியரை தேச துரோகி என்று பழி போட்டு கூச்சலிட்டுள்ளது இந்த பயங்கரவாத அமைப்பு. ஆட்சி அதிகாரம் இவர்கள் கையில் இருப்பதால் வேறு வழியின்றி மாணவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார் அந்த ஆசிரியர்.இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Wednesday, September 26, 2018

செங்கோட்டை கலவரத்தில் சாமி மீது கல் எறிந்தவர்கள் கைது:

செங்கோட்டை கலவரத்தில் சாமி மீது கல் எறிந்தவர்கள் கைது:
கடந்த 16 ஆம் தேதி ஜெய மூர்த்தி என்பவர் தலைமையில் புதுச்சேரியில் இருந்து சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி குமிடுவதற்காக சுமார் 80 நபர்கள் இரண்டு பேருந்துகளில் செங்கோட்டை கோட்டான் குளம் வழியாக செல்ழும் போது சுமார் 5 மணி அளவில் TN 76AE 0042 என்ற இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பேருந்துகள் மீது கல்லெறிந்தார்கள். பேருந்தில் உள்ளவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி வந்து கல் எறிந்த இருவரையும் மடக்கி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
அந்த இருவரையும் காவல் துறை விசாரித்ததில் தங்களுடைய பெயர்களை இஸ்மாயில் என்றும் அப்துல் காதர் என்றும் கூறினர்.பின்பு காவல் துறையினர் நன்கு விசாரித்த போது அவர்கள் இருவரும் அருண் மற்றும் முருகேஷன் என்பதும் அவர்கள் இருவரும் இந்து முன்னணியின் உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் விசாரித்ததில் 14 ஆம் தேதி நடந்த செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பிள்ளையார் மீது கல்லெறிந்தது இவர்கள் தான் என்பது தெரியவந்தது.
பார்வை: வழக்கு எண் 415/2018 செங்கோட்டை காவல் நிலையம்

மது ஒழிப்பு அமைதி பேரணி 26.09.18 அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக மது ஒழிப்பு அமைதி பேரணி 26.09.18 அன்று நடைபெற்றது.


'என்னைக் கவர்ந்த இஸ்லாம'

'என்னைக் கவர்ந்த இஸ்லாம'

தினேஷ் கௌஷிக் முஹம்மது சித்திக்காக மாறியுள்ளார்.

பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அந்த குழந்தைகளை பல வேறு சமய நம்பிக்கைக்கு கொண்டு செல்வது அவர்களின் பெற்றோர்களே என்ற நபி மொழியை இது போன்ற மன மாற்றங்கள் தெளிவு படுத்துகின்றன.


சில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல்....

சில பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விளங்காமல் 786 எண்ணை விமரிசித்துள்ளனர். இந்த 786 என்ற எண்ணைப் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன?
அப்ஜத் எனும் இக்கணக்கின் அடிப்படையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குரிய எண்களைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 786 ஆகும். 786 என்பதைப் பயன்படுத்தினால் அது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் பயன்படுத்தியதற்கு ஒப்பாகும் என்ற அடிப்படையில் தான் இவ்வழக்கம் சில முஸ்லிம்களிடம் புகுந்தது.
இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்பதை விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் குறியீடாகப் பயன்படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தரவில்லை. அவர்கள் இவ்வாறு பயன்படுத்தியதுமில்லை. அவர்கள் முன்னிலையில் மற்றவர்கள் பயன்படுத்தவும் இல்லை. எனவே இதற்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.
உண்மையில் அப்ஜத் எனப்படும் இக்கணக்கு யூதர்களின் ஹிப்ரு மொழியை அடிப்படையாகக் கொண்டு யூதர்கள் உருவாக்கி வைத்திருந்ததாகும். அதை அப்படியே காப்பியடித்துத் தான் அறிவீனர்க்ள் இதை அரபு மொழியிலும் நுழைத்து விட்டனர்,
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
ஒருவ‌ர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவ‌ர் குர்ஆனை ஓதியவ‌ர் என்று கருதப்பட மாட்டார். அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவ‌ர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார்.
786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்னா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.
அப்துல் கபூர் என்ற பெயருடையவரை அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவ‌ர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.
அவனது திருப்பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதி அது முஸ்லிமல்லாதவ‌ர்களின் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.
ஏனெனில் காஃபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு ஸுலைமான் (அலை) அவ‌ர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியுள்ளார்கள்.
எனவே பெரியாரிஸ்டுகள் இஸ்லாத்தை விமரிசிப்பதற்கு முன் குர்ஆனை ஒரு முறை படியுங்கள். பெரியார் இஸ்லாம் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதையும் விளங்கி பிறகு இஸ்லாத்தை விமரிசிக்க வாருங்கள்.


பனாரஸில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடிக்கு நிகழ்ந்த அவமானம்!

பனாரஸில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடிக்கு நிகழ்ந்த அவமானம்!

உபியின் பனாரஸில் நடந்த கூட்டத்தில் பாதியிலேயே மோடியின் பொய் தகவல்களை கண்டு பொருக்காத மக்கள் கலைந்து செல்ல துவங்கினர். மோடி பரிதாபமாக 'அமருங்கள்... அமருங்கள்' என்று கூறியும் மக்கள் கேட்பதாக இல்லை. ஆட்சியில் இருக்கும் போதே கேவலத்தை சுமந்த பிரதமரை இப்போதுதான் பார்க்கிறோம். இது தொடக்கமே... இனி இன்னும் இருக்கிறது.....


Tuesday, September 25, 2018

அரேபிய பெயரை பிடிவாதமாக வைத்துக்கொள்வது....

//முஸ்லீம்கள் அரேபிய பெயரை பிடிவாதமாக வைத்துக்கொள்வதும் ஒரு ஆதிக்க மனப்பான்மைதான்.தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள அது சுலபமாக உதவுகின்றது.அதுபோல் இந்துக்கள் பெயருக்கு அடுத்து சாதி பெயரைப்போட்டுக் கொள்கின்றாா்கள். // டாக்டர் அன்பு ராஜ்


தவறான வாதம். இஸ்லாத்தில் அரேபிய பெயரை வைக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. அன்பு, மலர்கொடி, அன்பழகன், அறிவழகன் என்ற அழகிய தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொண்டு அவர் இஸ்லாமியராக தொடரலாம். ஆனால் தமிழகத்தில் இஸ்லாத்தை ஏற்றவுடன் அரேபிய மாற்றிக் கொள்வதற்கு காரணம் உண்டு. தமிழகத்தில் சாதி வெறியானது புரையோடிப் போயுள்ளது. மணிகண்டன் என்ற ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாக வைப்போம். அந்த பெயரிலேயே அவர் தொடர்ந்தால் அவரது சாதி என்ன என்று தேட ஆரம்பித்து விடுவீர்கள். அதே மணி கண்டன் அப்துல் ரஹ்மானாக மாறி விட்டால் அந்த நிமிடமே அவரது சாதி அவரை விட்டு போய் விடுகிறது. நீங்களும் அவர் எந்த சாதி என்று தேட மாட்டீர்கள்.

எங்களின் முன்னோர்களும் நாயக்கராகவோ, தேவராகவோ, வன்னியராகவோ, தலித்தாகவோ, பார்பனராகவோ இருந்திருப்பர். ஆனால் இன்று எனது சாதி என்ன என்று எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. எனவே தமிழகத்தில் சாதி வெறி என்று ஒழிகிறதோ அதுவரை முஸ்லிம்கள் அரேபிய பெயரையே வைப்பர். சாதி ஒழிந்து விட்டால் தமிழ்ப் பெயர்களை தாங்களாகவே முன் வந்து முஸ்லிம்கள் வைத்தக் கொள்வர்.

ஆனால் இந்து மத சாதி என்பது பிறப்பினாலேயே வருவது. எத்தனை சாதி மறுப்பு கல்யாணம் செய்தாலும் இறப்பு வரை இந்த சாதி உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும். எனவே இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

ஸமா ஃபர்வீன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்!

ஸமா ஃபர்வீன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்!

ஜாமியா மில்லியா இஸ்லாம் என்ற அமைப்பின் நீண்ட கால உறுப்பினரும் ஜாமியா ஹம்தர்த் பல்கலைக் கழகத்தின் தாளாளர் காலம் சென்ற அப்துல் ஹமீது அவர்களின் மனைவியுமான ஸமா ஃபர்வீன் 'சைதா பேகம் அறிவியல் அறிஞர்' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேர்வாகியுள்ளார்.

டெங்கு, சிக்கன் குன்யா நோய்களின் வைரஸ்களை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டு பல ஆய்வறிக்கையை சமர்ப்பித்ததால் இவ்விருது அளிக்கப்படவுள்ளது. வரும் அக்டோபர் 23ந் தேதி துணை ஜனாதிபதியால் டாக்கடர் ஸமா ஃபர்வீனுக்கு விருது அளிக்கப்படவுள்ளது. இஸ்லாமிய சகோதரிகள் இவரை முன் உதாரணமாக கொண்டு பல ஆய்வுகளில் ஈடுபட்டு நாட்டுக்கும் சமூகத்துக்கும் சிறந்த சேவையாற்ற முன் வருவார்களாக!

தகவல் உதவி
மில் கெஜட்
21-09-2018


AITJ கேரளா வெள்ள நிவாரணப் பணி

*தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் TNTJ & ஆல் இந்தியா தவ்ஹீது ஜமாஅத் AITJ கேரளா வெள்ள நிவாரணப் பணிகளின் இறுதி கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது*
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளாகினார்கள், இவர்களின் நிவாரணத்திற்காக இந்த மாதம் 18,19,20 & 23 தேதிகளில் இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழ, எரணாகுளம், பாலக்காடு மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பொருளாதார உதவித் தொகை வழங்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கின் துவக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் நேரிடையாக சென்று கொடுக்கப்பட்டதுடன் மீட்டுப்பணிகளிலும் உதவிகள் செய்தனர் TNTJ & AITJ உறுப்பினர்கள்.
இரண்டாவது கட்டமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், மற்றும் சாலைகள் சுத்தப்படுத்தும் வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் தான் ஹஜ்ஜுப் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை வந்தது. அப்போதும் கூட தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த அதிகமாேனாரும் பெருநாள் கொண்டாடுவதற்காக சொந்த ஊருகளுக்குக் கூட செல்லாமல், *பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம்* என்ற நபிகளாரின் பொன்மொழியை மனதில் ஏற்றுக் கொண்டு பாதிக்கப்ட்ட மக்களின் துயர் துடைக்க களப்பணியாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இறுதியாக, மேலே குறிப்பிட்ட தேதிகளில் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் வரிசையில் செப்டம்பர்23 அன்று வயநாடு மாவட்டத்தில் பனமரம், மானந்தவாடி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு, அதில் இருந்து மிகவும் தகுதியான 250 குடும்பங்களை கண்டறிந்து செப்டம்பர் 24 அன்று மானந்தவாடி கிரீன்ஸ் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வைத்து பொருளாதார உதவியாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ௹பாய் 4000 (நான்காயிரம்) வீதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் TNTJ மாநில செயளாளர்களான ஐ.அன்சாரி, திருச்சிசையது, தரமணி யாசிர், கோவை அப்பாஸ், பொருளாளர் காஞ்சி சித்தீக், மற்றும் கேரளா வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மற்றும் கிளை நிர்வாகிகள் தலைமையில், மானந்தவாடி முனிசிப்பல் சேர்மன் உதவித் தொகை வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எடவகை பஞ்சாயத்து தலைவி, மானந்தவாடி வியாபாரப் பெருமக்கள், மற்றும் தவ்ஹீது ஜமாஅத்தின் சேவை மற்றும், கொள்கையில் ஈர்க்கப்பட்ட மக்களும் பெரும்திரளாகக் கலந்து கொண்டார்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
ஹைதுரூஸ்ஆதில்,
கிளைத் தலைவர்
AITJ கோழிக்கோடு.

குவைத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவி ....

குவைத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவி என்கிற சகோதரி தாயகம் செல்ல முடியாமல் பிரச்சனையில் சிக்கி தவித்து கொண்டிருந்தார்.
சகோதரர் Yousuf Riaz அவர்களின் மூலமாக அந்த பெண்ணின் உறவினர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் உதவியை நாடி இருந்தனர்.
அதை தொடர்ந்து அந்த பெண் பணிபுரிந்து வந்த அரபி முதலாளியை தொடர்பு கொண்டு மண்டல நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து மீட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.
இன்று காலை அந்த சகோதரி நல்லவிதமாக தாயகம் சென்றடைந்தார்.
அல்ஹம்துலில்லாஹ்....
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்.
-நபி மொழி-Monday, September 24, 2018

சாதிவெறி எங்கிருந்து உற்பத்தியாகிறது..?


இந்து முண்ணனியினரை வெளுத்து வாங்கிய சகோதரி!

இந்து முண்ணனியினரை வெளுத்து வாங்கிய சகோதரி!

'தேச விரோதிகள் நீங்கள்...'

'இந்து மதத்தை சாதியால் பிரிக்கும் அபாயகரமானவர்கள்'

'நீதி மன்றத்தை மிரட்டுகிறீர்கள்'

'இந்து முண்ணனியினர் அனைவரையும் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்'

'இந்து மதத்துக்காக பாடுபடுகிறோம் என்று சொல்லும் முட்டாள்தனமாக வாதத்தை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள்.'

'மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டிய எந்த தேவையும் எனக்கில்லை. நான் ஒரு வழக்கறிஞர். நன்கு படித்தவள்'

'நீங்கள் யார் என்னைத் தடுக்க. நான் எப்படி பேச வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்?'

சகோதரியின் வாதங்களை கேட்டு அதில் உள்ள உண்மைகளை அறிந்து விக்கித்து போனார் இந்து முண்ணனி பிரமுகர். வாழ்த்துக்கள் சகோதரி.


நண்பர் ஹைதர் அலியின் விழிப்புணர்வு பதிவு....

நண்பர் ஹைதர் அலியின் விழிப்புணர்வு பதிவு....
எனது முகநூல் அன்பர்களே.... எனக்கு ஏற்பட்ட துன்பங்கள் இனி யாருக்கும் வரக்கூடாது, இதோ உங்களுடன் ஒரு விழிப்புணர்வு பதிவு....
எனக்கு முதுகுதண்டில் உள்ள L5 disk சவ்வு வெளியே வந்துவிட்டது. ஒருக்கட்டத்தில் என் இடது கால் நடக்க முடியாமல் போய்விட்டது. இரண்டறை மாதத்திற்க்கு பிறகு ஏதோ இறைவன் அருளால் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்துள்ளேன்... இந்த பிரச்சினை எனக்கு மட்டுமல்ல. நிறைய பேருக்கு இருக்கு என்பது எனக்கு வந்ததுக்கு பிறகுதான் தெரியவந்தது..
இதற்கான காரணங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன், இதன் பிறகாவது ஏதோ என்னால் முடிந்த நாலுப் பேருக்கு எத்தி வைக்கனுங்குறதுதான் என் ஆசை...
இரவு நேரங்களில் அதிக கண்விழிப்பது, விளையாடும் போதோ ஓடும்போதோ இடுப்புப்பகுதியில் அடிப்பட்டது, இரவில் சோறு சாப்பிடுவது, பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது, அதிக கனமான பொருட்களை தூக்குவது, மனஅழுத்தம், அதிக கவலை இதனால்தான் இந்த பிரச்சினை வருகிறது.
யாருக்காவது முதுகுதண்டில் வலி ஏற்பட்டால் MRI SCAN எடுத்து பார்த்து ஆயுற்வேதிக் சித்தா மற்றும் வர்மா இதுப் போன்ற வைத்தியம் பார்க்கவும். ஆங்கில மருந்து வேண்டாம், அறுவைசிகிட்சை என்பது.... காலத்திற்கும் கஷ்டப்பட வேண்டிவரும்.... கேரள வைத்தியம் என்பது எடுக்கும்போது மட்டும் கஷ்டம் இருக்கும். பிறகு காலத்திற்கும் நன்மை தரும்.
இதை அறிந்தாவது அனைவரும் பயனடைந்துக் கொள்ளுங்கள்.
நன்றி:-
ஹைதர் அலி.

கொலை வெறித்தாக்குதல் - சாதி வெறி

கடந்த 19-09-2018 அன்று பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் மிக்க ஒரு கடைத்தெருவில் புதுமண ஜோடியின் மீது மற்றுமொரு கொலை வெறித்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இங்கு ஒரு சிறிய வித்தியாசம் என்னவெனில் இங்கு கூலிப்படை அமர்த்தப்படாமல் பெண்ணின் தந்தையே கையில் அரிவாள் எடுத்து தனது மகளின் கணவனை வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற தனது மகளையும் வெட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் பொற்கொல்லர் தொழில் செய்யும் சாதிய பின்னணியைச் சேர்ந்தவர் மாதவி. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாதவியும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சந்தீப்பும் காதலித்துள்ளனர். மாதவியின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் காதலர்கள் இருவரும் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி போலீசில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இருவீட்டாரையும் அழைத்துப் பேசியது போலீசு. பேச்சுவார்த்தையின் போதே மாதவியின் தாயார், சந்தீப்பின் குடும்பத்தினரை கடுமையாக சாதி ரீதியாக திட்டியுள்ளார்.
மாதவியின் தந்தை மனோகராச்சாரியால், இத்திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருமணத்தில் மாதவியின் குடும்பத்தார் பங்கேற்கவில்லை. சந்தீப், மாதவி திருமணம் முடிந்த பின்னர், இருவரும் சந்தீப்பின் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் மனோகராச்சாரி, சந்தீப் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் இணக்கமாகப் பேசியுள்ளார். தனது மகளிடமும் பேசிய மனோகராச்சாரி, இருவருக்கும் தாம் துணி எடுத்துத்தர விரும்புவதாகவும், அதனால் இருவரையும் நகரின் முக்கிய கடைத்தெரு பகுதிக்கு வருமாறும் கூறியிருக்கிறார்.
இதனை நம்பி இருவரும் அங்கு சென்றுள்ளனர். அதன்பிறகு அங்கு நடந்தவை அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.
சந்தீப்பும், மாதவியும் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் சூழலில் அங்கு வந்து வண்டியை நிறுத்திய மனோகராச்சாரி, தனது பையிலிருந்து அரிவாளை எடுத்துக் கொண்டே அவர்களது வாகனத்திற்கு அருகே சென்று சந்தீப்பை வெட்டத் தொடங்குகிறார். உடனடியாக பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாதவி தனது தந்தையை கீழே தள்ளி விடுகிறார்.
தனது கோபத்தை தனது மகளின் மீது திருப்புகிறார் மனோகராச்சாரி. மாதவியை சரமாரியாக வெட்டித் தள்ளுகிறார். உடனேயே ஒருவர் இதனைத் தடுக்க ஓடி வருகிறார். அவரை அரிவாளைக் காட்டி மிரட்டி விரட்டுகிறார் மனோகர். பின்னர் மற்றொரு இளைஞர் ஓடி வந்து மனோகரின் முதுகில் ஓங்கி உதைக்கிறார். எனினும் மீண்டும் வெட்டுகிறார் மனோகர். அந்த சி.சி.டி.வி. காணொளிக் காட்சி இவ்வாறு முடிவடைகிறது.
வெட்டுப்பட்ட இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் கூடியிருந்த பொதுமக்கள். சந்தீப்புக்கும் மாதவிக்கும் விழுந்த அரிவாள் வெட்டில், அதிகமாக பாதிக்கப்பட்டது மாதவிதான். அவருக்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் உதவி
வினவுஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை நீக்காம‌லேயே......

"ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை நீக்காம‌லேயே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமே" ‌ ஒரு த‌மிழ் ச‌கோத‌ர‌ரின் கேள்வி.
அன்ப‌ரே......
இறைவ‌ன் உங்க‌ளை ப‌டைத்த‌ போது நிர்வாண‌மாக‌த்தானே ப‌டைத்தான். அப்ப‌டியென்றால் ஏன் உட‌லை ம‌றைத்து ஆடை அணிகிறீர்க‌ள்? உங்க‌ளுக்கு அந்த‌ அறிவை கொடுத்த‌து யார்.
அது போன்றே த‌லை, அக்குள் மீசை, ம‌ர்ம‌ முடி என்ப‌து வ‌ள‌ரும் த‌ன்மை கொண்ட‌து. அத‌னை ஏன் வெட்டுகிறீர்க‌ள். அதை வ‌ள‌ராம‌ல் இறைவ‌ன் விட்டு விட‌லாமே என‌ நீங்க‌ள் ஏன் கேட்ப‌தில்லை.
இறைவ‌ன் ஆணுறுப்பிலும் பெண்ணுறுப்பிலும் மேல‌திக‌ தோலொன்றை வைத்து ப‌டைத்த‌மைக்குரிய‌ கார‌ண‌ காரிய‌த்தை ம‌னித‌ அறிவால் அறிந்து கொள்ள‌ முடியாது. இறைவ‌ன் ம‌கா ப‌டைப்பாள‌ன்.
ம‌னித‌ன‌து இத‌ய‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக்கு பைபாஸ் செய்வ‌த‌ற்குரிய‌ மேல‌திக‌ ந‌ர‌ம்பை ந‌ம‌து காலில் இருந்தே வைத்திய‌ர்க‌ள் பெறுகிறார்க‌ள். ப‌ல‌ கால‌த்தின் முன்பு இவ்வெலும்பு அனாவ‌சிய‌மான‌தாக‌வே ம‌னித‌னுக்கு தெரிந்த‌து.
ஆக‌வே இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை. ஆனாலும் அவ‌ற்றிலும் சில‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ன்மையை வைத்துள்ளான்.
ஆண் உறுப்பின் மேல‌திக‌ தோலை வைத்து இறைவ‌ன் ப‌டைத்த‌மைக்கு நாம் சில‌ கார‌ண‌ங்க‌ளை கூற‌ முடியும்.
ம‌னித‌ உட‌லில் வெளியே உள்ள‌ மிக‌வும் மெல்லிய‌ ப‌குதி அதுவாகும். குழ‌ந்தையாக‌ இருக்கும் போது அக்குழ‌ந்தை தாயின் க‌ருவ‌றையில் பாதுகாப்பாக‌ இருப்ப‌த‌ற்காக‌ அத‌ன் உறுப்புக்க‌ளை மூடி வைத்துள்ளான்.
க‌ண்ணுக்கு இமை கொடுத்து க‌ண்க‌ளை மூட‌வைத்தான். குழ‌ந்தை பிற‌ந்த‌ பின்தான் க‌ண் திற‌க்கிற‌து. க‌ண்ணை திற‌ந்து கொண்டே பிற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்? அழுக்குக‌ள் க‌ண்க‌ளுக்குள் செல்லும் என்ப‌தால் குழ‌ந்தையின் க‌ண்ணை மூடிய‌ப‌டி பிற‌க்க‌ வைத்த‌ இறைவ‌ன் மிக‌ப்பெரும் அறிவுடைய‌வ‌ன்.
வாய்க்குள் எதுவும் செல்ல‌ முடியாம‌ல் வாயையும் மூடிய‌வாறு ப‌டைத்தான். அடுத்த‌தாக‌ ம‌னித‌ உட‌லுக்குள் ஏதும் செல்லும் வ‌ழி ஆணுறுப்பாகும். அத‌னை தோலைக்கொண்டு மூட‌ வைத்தான்.
அந்த‌ தோல் இன்றி ப‌டைக்க‌ப்ப‌ட்டிருந்தால் இன்றைய‌ அவ‌ச‌ர‌ யுக‌த்தில் வைத்திய‌ர் தாயின் வ‌யிற்றை கீறி குழ‌ந்தையை எடுக்கும் போது வைத்திய‌ரின் அல்ல‌து ந‌ர்சின் ந‌க‌ம் அதில் கீறினால் அக்குழ‌ந்தையின் ஆணுறுப்பின் நிலை என்ன‌? இத‌னால்த்தான் அத‌னை மூடி வைத்து பிற‌க்க‌ வைத்தான்.
அத்துட‌ன் வைத்திய‌ர் ஒருவ‌ரின் க‌ருத்துப்ப‌டி
கருப்பை உள்ளே குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும் Amniotic fluid என்ற திரவம் காரமானது. அது சிசுவின் மிகவும் மென்மையான ஆண்குறியின் முற்பாகத்தைக் காயப்படுத்தி விடும். ஆகவே தான் அந்தப் பகுதி தோலினால் மூடப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அந்த முன்தோல் தேவைப்படுவதில்லை. ஆகவே அது அகற்றப்படுகின்றது.
குழ‌ந்தை பிற‌ந்த‌தும் அத‌ற்குரிய‌ ஆப‌த்துக்க‌ள் நீங்கி அக்குழ‌ந்தை இல‌குவாக‌ சிறு நீர் க‌ழித்து சுத்த‌மாக‌ இருக்கும் வ‌கையில் ஆணுறுப்பின் மெல்லிய‌ மூடு தோலை நீக்கும்ப‌டி இறைவ‌ன் வ‌ழி காட்டியுள்ளான்.
இறைவ‌னும் அவ‌ன் தூத‌ரும் சொன்ன‌த‌ற்காக‌ ஏன் எத‌ற்கு என்ற‌ கேள்வி கேட்காம‌ல் நாம் அத‌னை செய்கின்றோம். கார‌ண‌ம் இறைவ‌ன் சொன்ன‌தில் 100 வீத‌ம் உண்மை இருக்கும் என்ப‌தை ந‌ம்புப‌வ‌ன்தான் முஸ்லிம்.
மேற்ப‌டி தோலை நீக்குவ‌த‌ன் மூல‌ம் சிறு நீர் பிர‌ச்சினை வ‌ராம‌ல் இருப்ப‌தாக‌ வைத்திய‌ர்க‌ள் சொல்கின்ற‌ன‌ர்.
ஒருவ‌னின் ஆணுறுப்பின் மேல் தோல் நீக்க‌ப்ப‌ட்டால் அவ‌ன் சிறுநீர் க‌ழிக்கும் போது மிக‌ இல‌குவாக‌ க‌ழித்து விடுவான். அத்துட‌ன் சிறு நீர் அங்கு தேங்கி நிற்காது.
ஆனால் தோல் நீக்காத‌ ஆணுறுப்பினால் சிறு நீர் க‌ழிப்ப‌தாயின் அத‌னை இழுத்து மேலே சுருட்டி சிறு நீர் க‌ழிக்க‌ வேண்டும். சிறு நீர் க‌ழித்து முடிந்த‌தும் அது தானாக‌ மூடிக்கொள்ளும். உள்ளே மிஞ்சிய‌ அசுத்த‌ சிறு நீர் உள்ளே இருந்து கொண்டிருக்கும். வ‌ய‌து வ‌ந்த‌ ஒருவ‌ரால் அத‌னை மேலே உருவி ஓர‌ள‌வு சுத்த‌ம் செய்ய‌ முடியும். ஆனால் குழ‌ந்தையால் சிறுவ‌ர்க‌ளால் முடியாது. இத‌னால்த்தான் குழ‌ந்தை ப‌ருவ‌த்திலேயே அத‌னை எடுத்து விடுகிறோம்.
இத்த‌கைய‌ ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளையும் அசுத்த‌த்தையும் க‌ருத்திற்கொண்டு இறைவ‌ன் சுன்ன‌த்து செய்து கொள்ளும்ப‌டி சொல்லியுள்ளான்.
சுன்ன‌த்து செய்யாத‌ பெரிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் சிறுநீர் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ வைத்திய‌சாலைக்கு சென்றால் முத‌லில் அந்த‌ மேல‌திக‌ தோலை வெட்டும்ப‌டியே வைத்திய‌ர்க‌ள் சொல்கிறார்க‌ள். ப‌ல‌ருக்கு இது ந‌ட‌ந்துள்ள‌து.
இன்னும் சில‌ருக்கு சிறு நீர் வெளியேற‌ பைப் போடுவ‌தாயின் தோலை நீக்காம‌ல் அத‌னை போடுவ‌து க‌ஷ்ட‌ம். வைத்திய‌சாலைக‌ளுக்கு சென்று பார்த்தால் இந்த‌ உண்மை புரியும்.
ஆக‌வே ப‌ல‌ ந‌ன்மைக‌ள் உள்ள‌ சுன்ன‌த்து செய்துகொள்வ‌தை ம‌னித‌னுக்கு வ‌ழி காட்டிய‌ ஒரேயொரு ம‌த‌ம் இஸ்லாமாகும்.
( நண்பர் அனுப்பிய வாட்ஸ் அப் பதிவு காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது.)

Sunday, September 23, 2018

பஞ்சாப் - காங்கிரஸ் கட்சி 331 இடங்களிலும் வெற்றி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 22 ஜில்லா பரிஷத்களில் மொத்தமுள்ள 353 மண்டலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 331 இடங்களிலும், சிரோன்மனி அகாலிதளம் 18 இடங்களிலும், பாஜக மற்றும் பிற கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதேபோல், 150 பஞ்சாயத்து சமிதிகளில் மொத்தமுள்ள 2899 மண்டலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கு 2351 இடங்களில் காங்கிரசும், சிரோன்மனி அகாலி தளம் 353 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தகவல்களை மாவட்ட தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மோடி அமீத்ஷா திருட்டு கும்பலுக்கு பஞ்சாபிலிருந்து இறங்கு முக சிக்னல் கிடைத்துள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சி 10 சதம் கூட வாக்குகளை பெறாதது வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம். இந்த மாற்றம் இந்தியா முழுக்க பரவ வேண்டும். பாஜக என்ற இந்த தேச விரோத கும்பல் இந்த நாட்டை விட்டே துரத்தப்பட வேண்டும்.


ரபேல் போர் விமான ஊழல்..

ரபேல் போர் விமான ஊழல்.. இந்திய பாதுகாப்பு துறையை கூறு போட்ட அம்பானி & அதானி.. (Must Read)சம்மரி ரிப்போர்ட்:

A. ஒரிஜினல் டீல் (2012): டஸ்ஸால் ஏவியேசன் (Dassault Aviation) + HAL (ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல், இந்திய அரசு நிறுவனம் ) + தொழில் நுட்ப பரிமாற்றம் - 126 ரபேல் விமானம் - ஒரு விமானத்தின் விலை ரூபாய் 714 கோடி.

ஒரிஜினல் டீலை கேன்சல் பண்ணிட்டு புது டீல். 

B. புது டீல் (2015): பிரான்ஸ் டஸ்ஸால் ஏவியேசன் (Dassault Aviation) + அம்பானி Defence லிமிடெட் + அதானி Defence லிமிடெட் + இஸ்ரேல் எல்பிட் (Elbit)- 36 ரபேல் விமானம் - ஒரு விமானத்தின் விலை ரூபாய் 1666 கோடி. அதானி Defence லிமிடெட் & எல்பிட் மறைமுக பார்ட்னர்.

சிறப்பு அம்சம்:

1. HALல தூக்கிட்டு "அம்பானி Defence லிமிடெட் + அதானி Defence லிமிடெட்" உள்ளே கொண்டு வந்தது. அம்பானி & அதானி defence கம்பெனி பதிவு செய்யப்பட்டது மார்ச் 2015ல் தான். (Check link 1/2 & pic 1)..

2. ஒரு போர் விமானம் 714 கோடிக்கு பதிலா 1666 கோடி.

3. அம்பானியை பிரான்ஸ்க்கு தன்னுடன் கூட்டிட்டு போயி மோடி அக்ரீமெண்ட் போடுகிறார். நட்புக்கு இலக்கணம்..

4. எந்த ஒரு விதிமுறைகளும் பின்பற்ற படவில்லை. இவங்க என்னைக்கு தான் பண்ணி இருக்காங்க!!

Detailed ரிப்போர்ட்:

Step 1: 20-ஆகஸ்ட்-2007 - டெண்டர்

Step 2: பிப்ரவரி, 2012 -  8 கம்பெனியில் இருந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த "டஸ்ஸால் ஏவியேசன்" (Dassault Aviation) செலக்ட் செய்யப்படுகிறது. 126 போர் விமானம்.. அதில் 18 உடனடியாகவும்.. மற்றவை இந்தியாவின் அரசாங்க நிறுவனம் HAL சேர்ந்து செய்யவேண்டும். ஒரு விமானத்தின் விலை ரூபாய் 714 கோடி.

Step 3: 13-மார்ச்-2014 - HAL &  டஸ்ஸால் ஏவியேசன் work sharing அக்ரீமெண்ட்.

Step 4: மார்ச், ஏப்ரல், 2015 - மோடி பழைய டீல் கேன்சல் செய்வது பற்றி வெளியே பேசுகிறார்.

Step 5: 25-மார்ச்-2015 - Adani Defence Systems & Technologies Limited (அதானி டிபென்ஸ்) கம்பெனி பதிவு செய்யப்படுகிறது. (Pic 1 & Link 1)

Step 6: 28-மார்ச்-2015 - Reliance Defence Limited (அம்பானி டிபென்ஸ்) கம்பெனி பதிவு செய்யப்படுகிறது.  (Pic 1 & Link 2)

Step 7: ஏப்ரல் - 2015 - அதானி டிபென்ஸ் + இஸ்ரேல் கம்பெனி எல்பிட் (Elbit) உடன்படிக்கை... சேர்ந்து டிபென்ஸ் projects மற்றும் அதற்க்கு தேவையான உதிரி பாகம் தயாரிப்பில்.

Step 8: ஏப்ரல் - 2015 - அம்பானி டிபென்ஸ் + டஸ்ஸால் ஏவியேசன் பேச்சுவார்த்தை .

Step 9: 30-ஜூலை-2015 - பழைய உடன்படிக்கை சட்டப்படி கேன்சல் செய்யப்படுகிறது.

Step 10: 26-செப்டம்பர்-2015 - புது உடன்படிக்கை "டஸ்ஸால் ஏவியேசன்" நிறுவனத்துடன். மொத்த தொகை 62,000 கோடியில் (டஸ்ஸால், அம்பானி டிபென்ஸ் [30,000], எல்பிட், அதானி டிபென்ஸ்). அதானி மறைமுக ஒப்பந்தம் எல்பிட் மூலமாக.. (Link 3 & Pic 2)

Step 11: 3-October-2015 - அம்பானி டிபென்ஸ் + டஸ்ஸால் ஏவியேசன் உடன்படிக்கை. (Link 5 & Pic 2)

Step 12: இந்தியாவின் Defence அம்பானிக்கும், அதானிக்கும் வித்தாச்சு... மார்ச், 2015ல ஆரம்பிக்கப்பட்ட கம்பெனிக்கு HALக்கு கொடுக்க வேண்டிய ப்ராஜெக்ட் கொடுத்தாச்சு..

Step 4ல இருந்து பாத்த உங்களுக்கு தெரியும்.. இது எவ்வளவு திட்டம் தீட்டி செய்யப்பட்ட வேலைன்னு (well planned கிரிமினல் activity since 2014)..

56இன்ச் இதுக்கு பதில் சொல்ல முடியாம தான் ஓடி ஒளிஞ்சுட்டு இருக்கார்..

மறுபடியும் சொல்றேன்.. மோடியின் ஒவ்வொரு அசைவுக்கும் பின்னாடி கார்பொரேட் or RSS or பொலிடிகல் அஜெண்டா இருக்கும்.. அதை "மக்கள் நலன்", "தேசபக்தி" என்ற போர்வைக்குள் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்..

https://www.zaubacorp.com/company/ADANI-DEFENCE-SYSTEMS-AND-TECHNOLOGIES-LIMITED/U74900GJ2015PLC082700

https://www.zaubacorp.com/company/RELIANCE-DEFENCE-LIMITED/U74999MH2015PLC263178

https://economictimes.indiatimes.com/news/defence/reliance-defence-eyes-rs-300-billion-offset-from-dassault-deal/articleshow/57386431.cms

https://thewire.in/70450/reliance-defence-wins-big-aftermath-rafale-deal/

https://thelogicalindian.com/news/rafale-jet-purchase-deal-all-you-need-know/-- சுவாதி, திருநெல்வேலி


கருணாசை கைது செய்ய ஓடிய காவல் துறை குதம்பாய்...

கருணாசை கைது செய்ய ஓடிய காவல் துறை குதம்பாய்...

எச் ராஜாவை கைது செய்ய மறுப்பதேனடி குதம்பாய்.....

கருணாசை கைது செய்ய ஓடிய காவல் துறை குதம்பாய்.....

எஸ்.வி. சேகரை ஊர் மேய விட்டிருப்பதேனடி குதம்பாய்......

பூணூலுக்கென்று இந்நாட்டில் ஒரு சட்டம் உள்ளது குதம்பாய்.....

இதை தமிழர்கள் உணர்ந்து திருந்துவது எந்நாளடி குதம்பாய்.

-சுவனப்பிரியன்

Saturday, September 22, 2018

ஜப்பானிய பெண்கள் அனுபவித்த கொடுமை....

(75 வருடங்களுக்கு முன்பு ஜப்பானிய பெண்கள் அனுபவித்த கொடுமை.... அதே நேரம் 1400 வருடங்களுக்கு முன்பே நபிகள் நாயகம் மெக்காவிலும் மதினாவிலும் ஏற்படுத்திய பெண்ணிய புரட்சியையும் இங்கு எண்ணிப் பார்க்கிறோம்.)
நாங்கள் மாதவிடாய் ஆனாலும் சாம்பலை அள்ளி வைத்துக் கொண்டு அவா்கள் வன்புணர வரும் பொழுது ஒத்துழைக்க வேண்டும் .
எங்களுக்கு என்று ஒரு பொிய அறையில் ஒரு கட்டிலில் ஒரு துணிமறைப்பும் மட்டும் இருக்கும் .ஒவ்வொரு கட்டிலுக்கும் வெளியில் ஒருவர் இருப்பா் .போா் இல்லாத காலங்களில் ஒருவருக்கு 30 நிமிடங்கள் வரை வன்புணர அனுமதி அளிக்கப்படும் .30 நிமிடங்களுக்கு மேல் ஒரு நிமிடம் இருந்தாலும் வெளியில் மானிட்டா் செய்பவா் அவரைத் தூக்கி வெளியில் எறிந்து விடுவாா் .அப்போது நாங்கள் ஒரு நாளைக்கு 20 பேருடனாவது இருக்க வேண்டும்.
அதுவே போா்க்காலங்களில் ஒருவருக்கு 5 நிமிடம் மட்டுமே வன்புணர அனுமதி அளிக்கப்படும்.அப்போது 50 போ் வரை கூட அனுமதிப்பாா்கள் .மாதவிடாய் ஆனாலும் சாம்பலை அள்ளிப்பூசி கொண்டு படுத்து இருப்போம் .
அப்போது முறையான பாதுக்காப்போடு கூட எங்களுக்கு இருக்காது .பால் வெறித்தனத்தோடு நடந்துக் கொள்வாா்கள் .கடித்து வைத்து பல காயங்களை உடலில் ஏற்படுத்துவாா்கள் .பலா் இந்த கொடுமைத் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டாா்கள் .
ஆணூறைகளும் குறைந்த அளவே சப்ளை செய்வாா்கள் .எங்கள் அந்த பாலியல் இச்சை பணியை முடித்த உடன் இந்த ஆணூறைகளை சுத்தம் செய்து உலர வைத்து கொடுக்க வேண்டும்.இதனால் பல தொற்று நோய்களால் கஷ்டப்படுவோம் .
எங்களுக்கு என்று குழந்தை உருவாகிவிட்டால் உடனே கலைக்க வேண்டும்.இப்படி பல முறை கலைத்து உடல் நலிவுற்று பலா் இறந்து போனாா்கள் .குழந்தை கலைக்க முடியாத சூழலில் ,மகப்பேறு முடிந்து குழந்தையை தூக்கி சென்று விடுவாா்கள்.
அது ஆணா ?பெண்ணா ? எங்கு சென்றது கூட நமக்கு கடைசி வரைத் தொியாது .
நீங்கள் எப்படி இங்கு வந்தீா்கள் ??அப்போது இராணுவ ஆட்சியில் ஒரு உத்தரவு இருந்தது .எந்த பெண்ணை எடுத்துக்கொண்டு போனாலும் யாரும் கேட்க கூடாது என்று .எனக்கு நன்றாக நினைவிருக்கிறது .எனக்கு அப்போது 13 வயது .வீட்டின் முன் ஒரு ஜீப் வந்தது.நான்கு ஐந்து பேர் துப்பாக்கியுடன் வந்து என்னை இழுத்துக் கொண்டு போனாா்கள் .என் பெற்றோா்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறினாா்கள் .என் பெற்றோரை நான் அன்றே பாா்த்தது கடைசி .எங்கள் நாட்டுப் பெண்கள் மட்டுமல்ல பல நாடுகளில் இருந்து சிறு சிறுப்பெண்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டாா்கள் .
அப்புறம் அரசு தன் தவறை உணர்ந்து எங்களை எல்லாம் விடுவித்தது. இன்று 96 வயதில் இருக்கிறேன் .அரசின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுக்கும் சலுகைகள் இல்லாமல் குடும்பம் கூடஇல்லாமல் வாழ்ந்து வருகிறேன் .
அந்த நரகத்தை நினைவுகள் கொண்டால் என்னால் பல இராத்திாிகள் தூங்க கூட முடியாது .ஆனால் இன்னமும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தீ்ா்ந்தப்பாடில்லை என்பது வேதனையான விஷயம்.
~chaarvi
இது ஜப்பானிய பெண் ஒருவரின் வாக்குமூலம் . (சகோதரி சார்வியின் பகிர்வில் இருந்து )

Friday, September 21, 2018

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கஃபாவில் வலம் வந்தபோது....

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கஃபாவில் வலம் வந்தபோது....
ஆளுபவனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே விதமான உடை. ஒரே விதமான வலம் வருதல். இறைவனின் சந்நிதியில் ஆள்பவனும் ஆளப்படுபவனும் ஒன்றே என்பதை பறை சாற்றும் இடம்.
30 வருடங்களுக்கு முன்னால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியோடு இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி எதிர் கொண்டது. அப்போது இந்திய அணியை வெற்றி கொண்டவுடன் சேப்பாக்கம் மைதானத்தின் தரையை இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக முத்தமிட்டார். எதிரி நாட்டு மண் என்று அவர் நினைக்கவில்லை. உலக நாடுகள் அனைத்தையும் படைத்தவன் ஒரு இறைவன்தான் என்ற எண்ணம் வந்தால்தான் இவ்வாறு அனைத்து நாடுகளையும் நேசிக்கத் தோன்றும்.
---------------------------------------------------
இது ஒரு புறம் இருக்க இரண்டு நாட்களுக்கு முன்பு இம்ரான் கான் இந்தியாவோடு நேசக்கரம் நீட்டி 'கசப்புகளை மறந்து ஒன்றிணைவோம்' என்று அழைப்பு விடுத்திருந்தார். நாமும் சந்தோஷப்பட்டோம். இரு நாடுகளும் வர்த்தகத்தில் இணைந்தால் இரு நாடுகளுமே வல்லரசுகளாக மாற வாய்ப்புண்டு.
ஆனால் அவர் சொன்ன மறு நாளே காஷ்மீரில் மூன்று காவலர்கள் தீவிரவாத நாய்களால் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாகி விடக் கூடாது என்பதில் அமெரிக்கா கண்ணும் கருத்துமாக உள்ளது. அப்போதுதான் அமெரிக்காவின் வியாபாரம் படு ஜோராக நடக்கும். கொலையாளிகள் உண்மையான காஷ்மீரின் விடுதலை வேண்டுபவர்களா? அல்லது அமெரிக்க உளவாளிகளா? என்பதை எல்லாம் தீர விசாரிக்காமல் பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டுள்ளது நமது அரசு. இந்துத்வாவாதிகளும் பாகிஸ்தானின் நெருக்கத்தை விரும்பவில்லை. பாகிஸ்தானின் வெறுப்பைக் காட்டித்தான் சங்கிகளின் வாழ்க்கையே ஓடுகிறது. ஒற்றுமையாகி விட்டால் 'பாரத் மாதா கீ ஜே' என்று கோஷமிட்டு தேச பக்தியை ஊட்டுவது எவ்வாறு?
600 கோடியிலும் 1000 கோடியிலும் பட்டேலுக்கும், சிவாஜிக்கும் சிலை வைக்கிறார்கள். 1000 கோடி செலவில் அம்பானி மஹாபாரதத்தை சினிமாவாக எடுக்கிறாராம். வீணாக்கப்படும் இந்த பொருளாதாரத்தை எல்லை பாதுகாப்பில் செலவிட முடியாதா? பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூன்று காவலர்களை இழுத்துச் சென்று கொல்கிறார்கள் என்றால் எந்த லட்சணத்தில் இவர்கள் எல்லையை பாதுகாக்கின்றனர் என்பது தெளிவாகிறதல்லவா? அமெரிக்காவிலோ, சீனாவிலோ இவ்வாறு ஒருவன் அனுமதியில்லாமல் நுழைந்து விட முடியுமா?
இப்படி பல கேள்விகள் இருக்கிறது. இதற்கான பதில்களை தெரிந்தவர்கள் மோடியும் அமீத்ஷாவுமே.... இன்னும் எத்தனை காலம் இந்த நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள் என்று பார்போம்.


Thursday, September 20, 2018

ஊர்கூடி மரம் வளர்ப்போம்!!

Mr. Ravi Ramanathan, The Senior Advocate, Thiruchirapalli.

நேற்று காலை உத்திரமேரூர் அருகே குன்னவாக்கத்தில் உள்ள வன விரிவாக்க மரக்கன்றுகள் பண்ணைக்கு சென்றிருந்தேன்..

ஏற்கனவே 1000 மரக்கன்றுகளை பற்றி பதிவு செய்து இருந்தேன்.. அதை எடுப்பதற்கு..

Forest Officer திரு கிருஷ்ணன் உடன் இருந்தார்.. மிகவும் sincere ஆக மரக்கன்றுகள் வளர்த்து இருக்கிறார்கள்..2 - 3 அடி வளர்ந்த கன்றுகளும் உள்ளன..

அவர் மழை ஆரம்பிக்கும் முன்னரே கொடுத்து விட ஆசைப்படுகிறார்.. Close to ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் அங்கே இருக்கிறது. இதுவரை ஐம்பதாயிரம் கூட போகவில்லை..

"எங்க team கஷ்டப்பட்டு இவ்வளவும் தயார் பண்ணி இருக்கிறோம் சார்.. நீங்கள் கம்ப்யூட்டரில் போட்டு நாலு பேருக்கு சொல்லுங்கள்.. தாராளமாக என்னுடைய போன் நம்பர் கொடுத்து கூப்பிட சொல்லுங்கள்..எவ்வளவு வேண்டுமானாலும் மரக்கன்றுகள் தருகிறேன்..!"என்று கூறியுள்ளார்..

இது முற்றிலும் இலவசம்..

திரு. கிருஷ்ணன், Forester, செல் நம்பர்.. +919524506991

நேற்று அவர்களிடம் இருந்த மரக்கன்றுகள் தேக்கு, மகாகனி, பூவரசு, செஞ்சந்தனம், ஈட்டி, குமிழ் தேக்கு, வேங்கை, நெல்லி, பலா ஆகியன.

உடனே கூப்பிட்டு பயன் பெறவும்..?மரம் வளர்ப்போம்!!🌳*
நம் தலைமுறை காப்போம்!!🌳

ஆயிரங்காலத்து பயிர் என கூறப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு

🌱மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும்.🌱

*******
ரூ 15/- மட்டுமே
*******
உங்கள் இல்லம் தேடி வந்து கொடுக்கப்படும்

☘டிம்பர் மரங்கள்
-----------------------------
1.தேக்கு,
2.குமிழ்,
3.மஹோகனி,
4.ரோஸ்வுட் (ஈட்டி),
5.வேங்கை,
6.பூவரசு,
7.நீர்மருது,
8.மலைவேம்பு,

☘பூ மரங்கள்
--------------------
1.மகிழம்,
2.செண்பகம்,

☘ஸ்தல விருட்சங்கள்
-------------------------------------
1.வில்வம்,
2.அரசு,
3.வேம்பு,
4.நாகலிங்கம்.

☘பழ மரங்கள்
-----------------------
1.பலா,
2.நெல்லி
3.நாவல்.

☘நிழல் மரங்கள்
----------------------------
1.சொர்க்கம்,
2.புங்கன்,
3.இலுப்பை.

----------------------------------

மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும்.

உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும் தழைக்க செய்யட்டும் தமிழகத்தை.....

இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

ரூ. 7/- மட்டும்

டிம்பர் மரங்கள்
-----------------------------
தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பூவரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு.

பூ மரங்கள்
--------------------
மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம்.

ஸ்தல விருட்சங்கள்
-------------------------------------
வில்வம், அரசு, வேம்பு, நாகலிங்கம்.

பழ மரங்கள்
-----------------------
பலா, நெல்லி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல்.

நிழல் மரங்கள்
----------------------------
சொர்க்கம், புங்கன், இயல்வாகை, வாதாணி, இலுப்பை.

Address:
ஈஷா நர்சரி
மேலக்கால் மெயின் ரோடு,
ஜெயபாரத் ஹோம்ஸ் உள்ளே,
கோச்சடை,
மதுரை.
Contact no: 94425 90015

மற்ற கிளைகள்
----------------------------------------
சென்னை 94440 47049

அம்பத்தூர் 98416 75987

செங்கல்பட்டு 94425 90076

சோளிங்கர் 93608 03551

வேலூர் 94890 45022

திருவண்ணாமலை 94425 90080

விழுப்புரம் 94890 45023

புதுச்சேரி 94890 45025

நெய்வேலி 94425 90029

நாகப்பட்டினம் 94425 90049

திருவாரூர் 94425 90050

கும்பகோணம் 99443 41220

பட்டுக்கோட்டை 94425 90034

பேராவூரணி 94878 95073

மன்னார்குடி 94878 95073

தஞ்சாவூர் 94425 90069

திருச்சி 94425 90033

பெரம்பலூர் 94425 90075

புதுக்கோட்டை 94425 90073

கரூர் 94425 90070

கோவை 94425 90074

ஊர்கூடி மரம் வளர்ப்போம்!!
உலகை பசுமை ஆக்குவோம்!!
இலவச மரக்கன்றுகள் வழங்கும் இளந்தளிர் நாற்றுப்பண்ணை...!

விநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே

BY வே மதிமாறன்

விநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே

மகாவீரரின் சமணமும், அதன் பிறகு புத்தரின் எழுச்சியும் பார்ப்பன வேதங்களை, வேத மதத்தை அதன் ஜாதிய கண்ணோட்டத்தை பொத்தல் ஆக்கியது. ‘பிறப்பால் எவனும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை‘ என்று இந்து மத அல்லது வேத மத எதிர்ப்பாக வீறு கொண்டு நின்றது பவுத்தம். புத்தருக்கு பிறகும் அவரின் சீடர்களால் இந்தியா முழுக்க இந்த அலை ஓயாது பார்ப்பனியத்திற்கு எதிராக அடித்துக் கொண்டே இருந்தது.

அதன் தாக்கத்தால்தான் தமிழகத்து திருவள்ளுவரும்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

என்று வேத மதத்தின் மீது காறி உமிழ்ந்தார்.

பவுத்ததின் இந்த அலை, பார்ப்பனியத்தை நிலை குலைய வைத்தது. பார்ப்பனியத்தை காப்பதற்காகத்தான் பெருமாள் பத்து அவதாரங்களை எடுக்கிறார். சிவன் மனித உருவம் (பார்ப்பன) கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஆனாலும் பெருமாலும், சிவனும் வீதியில் இறங்கி பக்தர்களோடு நெருக்கமாக இருக்க ஆகம விதிகள் இடம் தரவில்லை. அப்படி இடம் தருவதாக மாற்றிக் கொண்டால், பிறகு அவர்களின் மீதுள்ள ஒரு பயம் கலந்த பக்தி அற்றுப் போகும்.

அல்லது பார்ப்பனர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக கடவுளை வழிபட வேண்டிய முறை உண்டாகும் என்பதால், பவுத்தத்தை எதிர் கொள்ள அதுவரை இல்லாத முறையில் ஒரு புதிய ஜனரஞ்கமான கடவுள் தேவைப்படுகிறார்.

அதன் பொருட்டு பவுத்ததிடம் இருந்து இந்து மதத்தை மீட்க, தோழமையான, யார் வேண்டுமானாலும் தொட்டு உருவாக்க, வழிபட, எங்கு வேண்டுமானாலும் வைத்து புழங்க, நிறுவ ஒரு கடவுளாக உண்டாக்கப்பட்டவர்தான் விநாயகர்.

அதனால்தான் விநாயகர் அரசமரத்தடியிலும் அமர்ந்திருக்கிறார். அரசமரம் என்பது புத்தருக்கு உரியது. அரசமரத்தின் இன்னொரு பெயர்தான் போதி மரம்.

விநாயகர் என்ன காரணத்திற்காக உண்டாக்கப்பட்டாரோ அதை அவர் சிறப்பாக நடத்தி முடித்தார்.

(சைவர்களிடமும் வைணவர்களிடமும் பேதமிருந்தாலும் அவர்களிடம் விநாயகனை வழிபடுவதில் மட்டும் ஒரு ஒற்றுமையை பார்க்க முடியும்.)

அதன் பிறகு எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள், பின் தங்கிய மக்கள் ஜாதிய ஒடுக்குமுறையை கண்டித்து இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு குறிப்பாக இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்களோ அப்பொதெல்லாம் விநாயகர் அவர்களை போய் தடுத்தாட் கொள்வார்.

அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க அவர்களுக்கு அதிக முன்னுரிமை தருகிறார்கள். அதை இஸ்லாமியர்கள் வீதிகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கலவரம் செய்வதற்கு அவர்களையே பயன்படுத்துகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட இந்துக்களின் குடியிருப்புகளின் வழியாக செல்ல மறுக்கிற இந்துக் கடவுள்களின் ஊர்வலம், இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் வழிபாட்டுத் தளங்களின் வழியாக விநாயகனின் ஊர்வலம் கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்று இந்துவெறியர்கள் அடம்பிடிப்பதின் உள்நோக்கம் கலவரத்தை மனதில் கொண்டே.

விநாயகன் தீண்டாமையையும், பார்ப்பனியத்தையும் பாதுகாப்பதற்காக ‘தோழமையோடு‘ எந்த கலவரத்தையும் செய்யத் தயாரானவன்.

விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன்.

https://mathimaran.wordpress.com/2009/08/25/article-232/

ஜப்பானில் சகோதரர் ஜாகிர் நாயக்!

ஜப்பானில் சகோதரர் ஜாகிர் நாயக்!

தடை போட்ட மோடியும் சங் பரிவார கும்பலும் எங்கே? இந்த நவீன யுகத்தில் இணையத்தின் மூலம் வீட்டு வரவேற்பரைக்கே வந்து விடுகிறோம். இவருக்கு தடை போட்ட பிறகுதான் இவருடைய வீடியோக்கள் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. தடுக்க தடுக்கத்தான் இஸ்லாம் வேகமாக பரவும். இந்த உலகம் மிகப் பெரிது. எங்கு கண்ணியம் கிடைக்கிறதோ அங்கு சென்று தனது அழைப்புப் பணியை தொடர்கிறார் சகோதரர் ஜாகிர் நாயக்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/1049031421944465/


மு. கருணாநிதி என்பரால் துவக்கி வைக்கப்பட்ட .....

20 ஆண்டுகளுக்கும் மேலாக......
மு. கருணாநிதி என்பரால் துவக்கி வைக்கப்பட்ட பாசிச வன்ம வரலாற்றிற்கு முடிவு கட்டப்பட்டது..
இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொலை.
ஒரு இந்து போலீஸ்காரரை கொலை செய்தததற்கு பழி வாங்கவே இந்து முன்னணி வெறியாட்டத்தில் ஈடுபட்டது. போலீஸ் அவர்களுக்கு உடந்தையாக இருந்தது என்பதுதான் இதுவரை நாம் அறிந்த செய்தி.
கொல்லப்பட்ட போக்குவரத்து காவலர் செல்வராஜ் இந்து அல்ல, அவரது முழுப் பெயர் அந்தோணி செல்வராஜ். ஆக ஒரு இந்துவின் கொலைக்காக இந்து முன்னணி களமிறங்கவில்லை.
ஏற்கனவே இஸ்லாமியர்கள் மீதுள்ள பகைக்கு கணக்கு தீர்க்கவே இக்கொலையை காரணமாக்கியது.
கலவரம் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு அப்போது கோவை போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகித்த மாசாண முத்து காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்துகிறார். முஸ்லீம் காவலர்களை வெளியே போகச் சொல்லி விட்டு நடந்த கூட்டத்தில் காவல்துறை அல்லாத ஒரு மனிதர் கலந்து கொண்டு போலீஸை வெறியூற்றுகிறார். அந்த மனிதர் யார் தெரியுமா? வீரத்துறவியார் என்று அழைக்கப்படுகிற ராம.கோபாலன். காவல்துறை கூட்டத்தில் அவருக்கு என்ன வேலை?
முதல் நாள் இரவு கூட்டம் நடக்கிறது. மறுநாள் முந்நூறு போலீசார் மாசாணமுத்து தலைமையில் ஊர்வலம் போகிறார்கள். அவர்களுக்கு பின்னே இந்து முன்னணியினர். அதன் பின்பே கலவரம் தொடங்குகிறது..... அழிவு வேலை ஆரம்பிக்கிறது.
மிகப் பெரிய துணிக்கடையான ஷோபா டெக்ஸ்டைல்ஸ் ஷட்டரை போலீசே உடைத்து பொருட்களை சூறையாடவும் தீயிட்டு கொளுத்தவும் ஏற்பாடு செய்கிறது.
கலவரத்திற்கு எதிர்வினையாக குண்டு வைக்க அல் உமா திட்டமிடுகிறது. இப்படி ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் கோவை போலீஸ் கமிஷனரிடமும் தமிழக டி.ஜி.பி யிடமும் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதை தடுப்பதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குண்டு வெடிப்பு நடக்கட்டும் என்று காத்திருந்தது போலவே தெரிகிறது என்று குற்றம் சுமத்துகிறார் அப்துல் நாசர்.
ஒரு சமுதாயத்தையே குற்றப்பரம்பரையாக சித்தரிக்க காவல் துறையும் காவிக் கூட்டமும் கை கோர்த்து சதி செய்தது என்ற அவரது குற்றச்சாட்டு வலிமையானது.
ஆனால் அவர்கள் எல்லாம் இன்று சமுதாயத்தில் கௌரவமிக்கவர்களாக வாழ்கிற போது குற்றத்திற்கு தொடர்பில்லாத பல அப்பாவிகள் இன்னும் சிறையில் வாடுவது ஒரு மிகப் பெரிய அநீதி.
அன்று...
#கோவை_கலவரம் பற்றி,
எனது சாட்சியம் நூலில் புவனகிரி
சட்ட மன்ற உறுப்பினராக இருந்த
திரு ஏ,வி,அப்துல் நாசர் சொன்னது..... இன்று_CP இராதா கிருஷ்ணன் (முன்னால் தமிழக பாஜக தலைவர்) வாயிலிருந்து வந்த வார்த்தைகள் மூலம் அப்பட்டமான உண்மையாகிப்போனது.
by Saravana Kumar


செல்வ கிருஷ்ணனாக இருந்து முஹம்மது ரோஷனாக மாறியுள்ளார்!

செல்வ கிருஷ்ணனாக இருந்து முஹம்மது ரோஷனாக மாறியுள்ளார்!
*இஸ்லாம் இயற்கையான மதம்..
*முஹம்மது(ஸல்) பற்றி பவிஷ்ய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது..
*கீதையில் அவியத்தம்ன்னு சொல்லுகிறது அப்படி என்றால்?.... "நான் எதுவுமில்லை அல்லாஹ் கல்லுமில்லை மண்ணும்மில்லை"
*பைபிளில் ஏசு எங்கேயாவது தன்னை கடவுள் சொல்லியுள்ளாரா?
இவ்வாறாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் முஹம்மது ரோஷன்!