Followers

Thursday, July 31, 2008

கி.வீரமணி விவாதத்திற்க்கு ஒத்துக்கொள்வாரா?

கி.வீரமணி விவாதத்திற்க்கு ஒத்துக்கொள்வாரா?

போன வார உணர்வு இதழில் 'பகிரங்க விவாதத்திற்க்கு அழைப்பு' என்ற செய்தியைப் பார்த்தேன். அறிவியலுக்கும் குர்ஆனுக்கும் உள்ள ஒற்றுமையை சிலாகித்து உணர்வு வார இதழில் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். இதை விமர்சிக்கப் புகுந்த 'உண்மை' இதழ் 'மதத்தையும் அறிவியலையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்' என்றும் 'குர்ஆனுக்கும் அறிவியல் உண்மைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை தங்களால் பட்டியல் இட முடியும்' என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த சவாலை ஏற்றுக் கொண்ட பி.ஜெய்னுல்லாபுதீன் கி.வீரமணியை பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ளார். வீரமணியானாலும் ஜெய்னுல்லாபுதீன் ஆனாலும் இருவருமே வாதத் திறமை உள்ளவர்கள். இப்படி ஒரு பயனுள்ள விவாதம் நடைபெற்றால் தமிழுலகுக்கு பல உண்மைகள் தெரிய வரும். ஜெய்னுல்லாபுதீன் தரப்பு விவாதத்துக்கு தயார். வீரமணி தரப்பிலிருந்து என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Tuesday, July 29, 2008

இணைய நண்பர்களே நலமா!

உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பணி மாற்றத்தின் காரணமாக ஜோர்டான் நாட்டுக்கு அருகில் வந்துள்ளேன். கணிணி வசதியும் இணைய இணைப்பும் தற்போதுதான் கிடைத்துள்ளது. இனி நேரம் கிடைக்கும் போது தமிழ் மணத்தின் பக்கம் வந்து தாய் மொழியின் வாசனையை அவ்வப்போது நுகர்கிறேன்.

இணைய நண்பர்கள் டோண்டு ராகவன் நல்லடியார் கோவி கண்ணன் கால்கரி சிவா அரவிந்தன் நீலகண்டன் ம்யுஸ் (பெயர் மறந்த நண்பர்களும் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்வார்களாக) மேலும் தமிழ்மண நிர்வாகிகளுக்கும் என் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.