Followers

Thursday, April 25, 2013

குமரி, கோவையில் மீண்டும் தலை தூக்கும் இந்துத்வா!

தமிழகம் என்றும் போல அமைதியாக மத கலவரம் இன்றி சமீபகாலம் வரை சென்று வந்துள்ளது. ஆனால் சமீபத்திய குமரி மாவட்ட கலவர சூழல் பலரையும் கவலைப்பட வைத்துள்ளது. தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பாஜக எப்படியாவது ஒரு எம்பி சீட்டாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது. இதற்காக இவர்கள் எதையும் செய்ய துணிவார்கள். எனவே இஸ்லாமிய இளைஞர்கள் இவர்களின் சூழ்ச்சியில் விழுந்து விடாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சில முஸ்லிம் அப்பாவிகளை மூளை சலவை செய்து அவர்கள் கையாலேயே எங்காவது வன்முறைகளை கட்டவிழ்த்து விட இந்துத்வாவினர் சதிகளை அரங்கேற்றுவர். இது போன்று யாராவது உங்களை அணுகினால் உடன் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள். அல்லது தவ்ஹீத் ஜமாத், தமுமுக போன்ற அமைப்புகளை உடன் தொடர்பு கொண்டு சதி வேலைகளை முறியடிக்க வேண்டும். காலா காலமாக அண்ணன் தம்பிகளாக பழகி வரும் நம்மை பிரிக்க இவர்களுக்கு இடம் தந்து விடக் கூடாது.

குமரி மாவடடத்தில் நடந்த நிகழ்வுகளை வினவு தளத்திலிருந்து இனி பார்ப்போம்....

எம்.ஆர்.காந்தி பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கும் பொன். இராதாகிருஷ்ணனால் ஓரங்கட்டப்பட்டவர். இது வரை நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் நாகர்கோவில் தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணனே போட்டியிட்டுள்ளார். ஒரு முறை தவிர்த்து மற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் பா.ஜ.கவின் மதவெறி அரசியல் தந்திரம் அங்கு பலிக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட போது எம் ஆர் காந்தி ஆதரவாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொன். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நாகர்கோவில் வீதியெங்கும் போஸ்டர்கள் முளைத்தன.

பாராளுமன்ற தேர்தலை மிக அணுக்கமாக அனைத்து கட்சிகளும் உணரும் நிலையில், எம்.ஆர். காந்தியை 2014ல் நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட வைக்க அவரது ஆதரவாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். காங்கிரஸ் — திமுக கூட்டணி உடைந்துள்ள நிலையில் தமது வெற்றி எளிதாக இருக்கும் என்று இந்து மதவெறி கூட்டத்தின் அனைத்து தரப்பும் நாக்கில் எச்சில் ஒழுகக் காத்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தான் எம்.ஆர். காந்தியை அங்ககீனப்படுத்தும் இந்த முயற்சி அரங்கேறி உள்ளது.

வழக்கம் போல முஸ்லிம்கள் மீதோ அல்லது குமரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் கிறிஸ்தவர்கள் மீதோ, இல்லை முசுலீம்கள் மீதோ பழியை போட்டு ஆர்.எஸ்.எஸ் கும்பல் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. உட்கட்சி மோதல் அரசியலில் தான் தி.மு.க.வின் தா. கிருட்டிணன் காலை நடை சென்ற போது கொல்லப்பட்டார். எம்.ஆர். காந்தி தாக்குதல் சம்பவமும் தா.கிருட்டிணன் கொலைச் சம்பவத்தையே பெரிதும் ஒத்திருக்கிறது.

எம் ஆர் காந்தி தாக்கப்பட்டதை வைத்து பாரதீய ஜனதா கட்சி 22-ம் தேதி திங்கள் கிழமை குமரி மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி ஞாயிறு மாலையும், திங்கள் காலையிலும் பஸ்கள் மீது பாஜ குண்டர்கள் கல்வீச்சு நடத்தினர். மாவட்டம் முழுவதும் 50 பஸ்கள் உடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் பஸ்கள், கல்லூரி பஸ்களும், வேன்களும் கல்வீச்சில் சேதம் அடைந்தன. குளச்சல் அருகே பஸ் மீது கல் வீசப்பட்டதில், டிரைவர் ராபர்ட் கிங்ஸ்லி என்பவர் படுகாயம் அடைந்தார்.

வழக்கம் போல எரியும் தீயில் குளிர் காய்வதற்கு தயாராகி விட்டனர் பாஜ கட்சியினர். தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் எம்.ஆர்.காந்தி மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார். பா.ஜ. தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இல.கணேசன் “நன்கு திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். மத பின்னணி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்’ என்கிறார்.

குமரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மத பயங்கரவாதத்தை உரம் போட்டு வளர்த்து வரும் இந்துத்துவா கும்பல் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதை வாக்குகளாக அறுவடை செய்யத் தயாராகிறது. சச்சரவுகளை ஊதிப் பெருக்கி, வன்முறை சம்பவங்களை உற்பத்தி செய்து, கலவரங்களை தூண்டி விட்டு இந்துக்களின் மனதிலும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் மனதிலும் அச்சத்தை உருவாக்கும் வேலையை செய்து வருகிறது.

இதே போல கோவை மாவட்டத்திலும் கோவையை ஒட்டிய குன்னூர் பகுதிகளிலும் வன்முறை சம்பவங்களையும் தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகின்றன இந்துத்துவ அமைப்புகள். கோவையில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் தகராறு செய்வது, முஸ்லீம்கள் மீது வெறுப்பை உமிழும் பிரசுரங்களை வெளியிட்டு வினியோகிப்பது, கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக பொய் பிரச்சாரம் செய்வது, விநாயகர் ஊர்வலம் மூலம் பதட்டத்தை உருவாக்குவது என்று பல ஆண்டுகளாக நாடு முழுவதும் செய்து தேர்ந்த உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.

http://www.vinavu.com/2013/04/23/mrgandhi-attacked-bjp-schemes/

காந்தி தாக்கப்பட்டால் தாக்கியவர்களை கைது செய்ய காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை விடுத்து அரசு பேரூந்துகளை உடைப்பதும் கடைகளை அடித்து நொறுக்குவதும் காந்தியை தாக்கியவர்களை என்ன செய்து விடும்? ஆக இவர்களின் நோக்கம் இந்துக்களை அச்சப்பட வைத்து ஓட்டு அறுவடை செய்வதே... தேசபக்திக்கு முழு உரிமை கொண்டாடும் பாஜகவின் லட்சணம் இதுதான். பெரும் பான்மை இந்து மக்களும் இவர்கள் விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இனி இந்த கொலைகார கும்பல் இதுவரை செய்து வரும் அநியாயங்களை சற்றே அசை போடுவோம்.

ஹேமந்த் கார்கரே என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியால், மிருகபலமான எதிர்ப்புகளைக் கடந்து, காவி தரித்த ஒரு சாமியாரிணி, ஒரு சாமியார், ஒரு ராணுவ அதிகாரி, உட்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்தள் சேவகர்கள் உண்மையான குற்றவாளிகளாகக நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார்கள். ஹேமந்த் கார்கரேயின் படுகொலை இன்னும் ஒரு புரியாத புதிராகத் தொடர்கிறது. இந்திய முஸ்லிம் சமூகத்தின்மேல் சுமத்தப்பட இருந்த மற்றுமொரு சதி!

மே 18, 2007 வியாழக்கிழமை. சரித்திரப்புகழ் வாய்ந்த சார்மினார் கோபுரத்திலிருந்து கூப்பிடு தூரமுள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலுக்குள் சக்திவாய்ந்த பைப் குண்டு வெடித்து பதினான்கு பேர் ஸ்தலத்திலேயே இறந்தார்கள். தொடர்ந்து, வழக்கம் போலவே அதுவரைக் கேள்விப்பட்டிராத இஸ்லாமியப் பெயர் தாங்கி இயக்கங்களின் பெயர்கள் ஊடகங்களில் அல்லோல கல்லோலப்படுகின்றன. முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டுச் சிறைகளிலடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுகிறார்கள். எண்ணெய்க்கு வேண்டி உலகத்தை முட்டாளாக்கிய ஜார்ஜ் புஷ்ஷின் 'பேரழிவு' ஆயுதங்கள் போல, வெடிமருந்துகளும் ஜிஹாதி பிரசுரங்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் ஊளையிட்டன. அத்தனையும் இட்டுக் கட்டப்பட்ட பொய்ப்பிரச்சாரங்கள் என்பது பின்னாட்களில் எவ்வித ஐயமும் இன்றி நிரூபணம் ஆனது

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞருள் ஒருவனின் பணிவிடையால் மனம் திருந்திய சுவாமி அசீமானந்தா என்பவர் மாஜிஸ்டிரெட்டின் முன்பாக, தான் உட்பட சங் பரிவாரக் கும்பலின் விசுவாசிகள் யார் யாரெல்லாம் எப்படித் திட்டமிட்டு எங்கெல்லாம் குண்டு வெடிக்கச் செய்தோம் என்று அம்பலப் படுத்தினார். தேவேந்திரகுப்தா, லோகேஷ் ஷர்மா, சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்ரா, சுனில் ஜோஷி, நாபகுமார் சர்க்கார், ப்ரத் பாய், ராஜேந்திர சவுதிரி, தேஜாரம் ஆகிய காவித் தீவிரவாதிகள் உண்மையான குற்றவாளிகளாக தேசியப் புலனாய்வு ஏஜென்சியால் அறிவிக்கப்பட்டார்கள்.

நடத்தியது காவி பயங்கரவாதிகள்!

பிப்ரவரி 18, 2007. சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் - இல் அதே பார்முலாவிலான குண்டு
வெடித்து 65 பேர் கொல்லப்பட்டனர். வழக்கம்போல புதியரக இஸ்லாமிய இயக்கங்களின் பெயர்களைச் சுட்டி விரல் நீட்டப்பட்டது. முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு, பின்னர் புலன் விசாரணை செய்ததில் மேற்சொன்ன சுவாமி அசீமானந்தாதான் இந்தக் குண்டுவெடிப்பின் மூளை என்பதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக தேசியப் புலனாய்வு ஏஜென்சி டிசம்பர் 30, 2010 அன்று தெரிவித்தது. இந்த வழக்கில் தேடப்பட்டுவரும் காவிக்கும்பலின் இரு குற்றவாளிகளின் இருப்பிடத்தைப் பற்றி துப்புகொடுப்பவருக்கு 10 இலட்சம் இந்திய ரூபாய் பரிசறிவித்தது.

நடத்தியது காவி பயங்கரவாதிகள்!

ஜனவரி 24, 2008. தமிழ்நாடு தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும், தென்காசி பஸ்நிலையத்திலும் பைப் வெடிகுண்டு வெடிக்கிறது. உடனேயே குண்டுவைத்த 'முஸ்லிம் தீவிரவாதிகளை'க் கைது செய்யவேண்டும் என்று சங்க் பரிவாரம் ஊர்வலம் நடத்தி குற்றவாளிகளை ஊகிக்க வைக்கிறது. மற்ற மாநிலம் போலல்லாமல், அன்றைய போலீஸ் அதிகாரி டி.ஐ.ஜி கண்ணப்பன், தன் சொந்த அலுவலகத்துக்குக் குண்டு வைத்து, அந்தப் பழியை பழைய கோட்சே தந்திரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள்மேல் போட முயன்ற காவிக் கும்பலைச் சேர்ந்த 3 பேரைக்குற்றவாளிகள் என்று கைது செய்கிறார்.

நடத்தியது காவி பயங்கரவாதிகள்!

பிப்ரவரி 21, 2013. ஹைதராபாத்தின் தில்சுக் நகரின் சந்தைத் தெருவில் இரண்டு குண்டுகள் வெடித்தன 17 பேர் கொல்லப்பட்டனர். குண்டுகள் வெடிக்கும்போது மட்டுமே பிரசவிக்கப்படும் இந்தியன் முஜாஹிதீனின் பெயர் மின்னாத தொலைக்காட்சி சேனலில்லை. வழக்கமான வழக்கப்படி, முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இப்போதும் வழக்கம்போல "அஜ்மல் கசாப், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வினை வரும் என்று எதிர்பார்த்தோம்” என 'புலனாய்வு' எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்று காவிக்கும்பல் பாதை காட்டியிருக்கிறது.

இப்படி இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம்களின் மீது திட்டமிட்டே பரப்பப்படும்
சதிவேலைகளுள் கண்ணுக்குத் தெரிந்தது கொஞ்சமே. இந்தக் கண்ணோட்டத்தில், "நாடாளுமன்றத் தாக்குதலின் உண்மைக் குற்றவாளிகள் யாரெனத் தெரியாமலேயே போய்விட்டது" என்கிறார் அருந்ததிராய். இந்தியன் முஜாஹிதீன் என்பது, சங்க் பரிவாரக் கும்பலான ஊடகத்துறையின் செல்லப்பிள்ளை என்கிறார் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்ட ஒரு சமுதாயத்தின்மீது திட்டமிட்டே நடத்தப்படும் சதியை அம்பலப் படுத்துவதும் முறியடிப்பதும் நம் சமுதாயத்தின் கடமையாகும்.

எங்கு எந்த அசம்பாவிதம் நடந்தாலும் சட்டத்தை நாமே கையில் எடுக்காமல் உடன் காவல்துறையை நாடுவோம். உண்மை குற்றவாளிகள் நமது சொந்தங்களெ ஆனாலும் சட்டத்தின் முன் ஒப்படைப்போம். தனி ஆட்களாக போராடாமல் தவ்ஹீத் ஜமாத், தமுமுக போன்ற அமைப்புகளின் உதவியோடு சட்டத்தை அணுகுவோம். நியாயத்தின் பக்கம் நிற்போம். உண்மையே முடிவில் வெல்லும்.

மனிதனின் படைப்பின் ரகசியம் - ஓர் ஆய்வு

மனிதனின் படைப்பின் ரகசியம் - ஓர் ஆய்வுநமது உடலை ஆய்வு செய்தால் வியப்பின் உச்சிக்கே சென்று விடுவோம். நாம் ஒன்றை நினைத்த மாத்திரத்தில் அடுத்த நொடியில் கைகளை அசைப்பதும், கால்களை அசைப்பதும், ஒவ்வொரு செயல்களும் அன்னிச்சையாக நடந்து வருவதை பார்த்து வருகிறோம். இவை அனைத்தும் மூளையிலிருந்து பெறப்பட்ட கட்டளைகளை நரம்புகள் மூலமாக நொடிப் பொழுதில் செய்திகள் பரிமாறப்பட்டு நமது செயல்கள் தினமும் நடந்து வருகின்றன. இந்த சக்திகளை எல்லாம் ஒருங்கே நமக்கு கொடுத்துதவிய அந்த இறைவனை போற்றி புகழ்வோம். எவ்வளவு கச்சிதமான கட்டமைப்பு: இவ்வளவு அழகிய படைப்பை படைத்த அந்த இறைவனுக்கு நன்றி கூறும் முகமாக நாள் பூராவும் நின்று வணங்கினாலும் அது ஈடாகி விடாது.

"நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம்."

குர்ஆன் 7:11


"வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் இறைவன் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய மரண தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் அவர்கள் சிந்திக்கவில்லையா? இதற்குப் பின்னர் எந்த விஷயத்தில்தான் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?"

குர்ஆன் : 7:185

-----------------------------------------------------

'களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

- குர்ஆன் 23 : 12 , 13 , 14
முதல் மனிதனை களிமண்ணால் படைத்தேன் என்று இறைவன் கூறுகிறான். இதன் மூலம் டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு என்று விளங்குகிறது. அறிவியல் ரீதியாகவும் டார்வின் கொள்கை நிரூபிக்கப் படவில்லை என்று முந்தைய பதிவுகளிலும் பார்த்துள்ளோம். இது சம்பந்தமாக சுவனத்தென்றலில் வந்த கட்டுரையை இனி பார்ப்போம்.

ஆணின் விதைப்பையிலிலுள்ள விதையிலிருந்து (Testis) உற்பத்தியாகும் பல கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் விதைப்பையிலிலுள்ள ‘Epididymis’ என்ற பாதுகாப்பான பகுதியில் பத்திரமாக சேகரித்து வைக்கப்படுகிறது. ஆண், பெண் சேர்க்கையின் போது இந்த உயிர் அணுக்கள் இங்கிருந்து புறப்படடு ‘Vas deferns’ என்ற குழாய் வழியாக ஆம்புல்லா (Ampulla) என்ற குழாய்க்கு வந்து பின்னர் ‘Seminal Vasicle’ மற்றும் புரோஸ்டேட் கிளான்ட (Prostate gland) என்ற பகுதியிலுள்ள திரவங்களுடன் கலந்து இந்திரியமாக மாறுகிறது. பிறகு இந்திரியம் ‘Ejaculatory tube’ வழியாக ஆணுறுப்பிலிலுள்ள முத்திரக்குழாயை அடைந்து பின்னர் அங்கிருந்து பெண்ணின் கர்ப்பப் பையில் செலுத்தப்படுகிறது.

கர்ப்பப் பையினுல் செலுத்தப்படும் இந்திரியத்திலுள்ள பல இலட்ச/கோடிக் கணக்கான உயிர் அணுக்களிலிருந்து சில நூறு உயிர் அணுக்களே ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) என்ற குழாயை அடைகிறது. சினைப் பையிலிருந்து மாதம் ஒரு முறை வெளிவரும் ஒரு சினை முட்டையும் மாதவிடாயிலிருந்து 14-ம் நாள் ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) க்கு வந்து சேர்கிறது. இங்கு தான் கருவுறுதல் நடைபெறுகிறது. ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) க்கு வந்து சேர்ந்த ஆணின் சில நூறு உயிர் அணுக்களிலிருந்து ஒரே ஒரு உயிர் அணு மட்டும் பெண்ணின் சினையுடன் சேர்ந்து கருவுகிறது. பின்னர் இந்தக் கரு செல் டிவிசன் (Cell Division) என்ற முறையில் ஒரு செல் இரண்டு செல்களாகி, இரண்டு நான்காகி, நான்கு எடடாகி இவ்வாறு பல்கி பெறுகிறது. பின்னர் இந்த கரு ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) லிருந்து சொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கருவுற்ற நாளிலிருந்து 8 ஆம் நாள் கர்ப்பப் பையை வந்து அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இவ்வாறு கரு கர்ப்பப்பையின் சுவற்றில் ஊடுறுவுவதை ‘Implantation’ (இம்பிலேன்டேசன்) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.இது வரை நாம் பார்த்த விளக்கங்கள் எவ்வாறு குர்ஆனோடு ஒத்துப் போகிறது என்று பார்ப்போம். விதைப் பையிலிலுள்ள எபிடிமிஸ் என்ற பகுதியில் பத்திரமாக சேகரித்து வைக்கப் பட்டுள்ள இந்திரியம் கர்ப்பப் பையினுள் செலுத்தப்பட்டு கருவுற்று கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்கும் (அலக்) நிலைக்கு வருகிறது. இதையே மேற்கண்ட வசனத்தின் முதல் மூன்று வரிகள் கூறுகிறது. இங்கே குர்ஆன் கூறும் சில அற்புதங்களைக் காண வேண்டும்.

இந்திரத்துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம் என அல்லாஹ் கூறுகிறான். அலக் என்பதற்கு இன்றைய குர்ஆன் விரிவுரையாளர்கள் மூன்று விதமான பொருளைத் தருகின்றார்கள்.

1. ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒரு பொருள்,
2. ஒரு அட்டையைப் போன்ற ஒரு பொருள்,
3. இரத்தக் கட்டி.

அல்ஹம்துலில்லாஹ். குர்ஆன் கூறும் அலக் என்ற வார்த்தையின் இந்த மூன்று அர்த்தங்களும் இங்கே பொருந்திப் போகின்றது. முதலில் கருவானது ஃபலோப்பியன் குழாயிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து வந்து கர்ப்பப் பையை அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இவ்வாறு ஒட்டிக் கொண்டு தொங்கும் இந்தக் கரு கர்ப்பப் பையின் சுவர்களில் ஆழமாக வேருன்றி அதிலிலுள்ள இரத்த நாளங்களிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களை (Nutrition) ஒரு அட்டையைப் போன்று உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு ஒரு அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு சத்துக்களை (Nutrition) உறிஞ்சும் இந்தக் கரு இப்போது பார்ப்பதற்கு இரத்தக் கட்டியைப் போன்று தோற்றமளிக்கின்றது.நாம் இனி அடுத்து என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்.

கரு வளர்ந்து வரும் பொழுது ஒரு கட்டத்தில் வாயில் போட்டு மென்று சவைக்கப்பட்ட மாமிசம் போல தோன்றுகிறது. மருத்துவர்கள் இதை ஆய்வு மூலம் கண்டறிந்திருக்கின்றார்கள். இதையே குர்ஆன் ‘முத்கா’ என்று குறிப்பிடுகிறது. இந்த மாமிச பிண்டத்திற்குள் தான் பின்னர் எலும்புகள் உருவாகின்றன. அடுத்து அந்த எலும்புகளைச் சுற்றி சதைப் பிடிப்பு ஏற்படுகிறது. இந்த சதை பிடிப்பை குர்ஆன் ‘லஹ்ம்’ என்கிறது. இந்தக் காலகட்டத்தில் மனிதனுக்கு தேவையான மற்ற உறுப்புகளும் வளர்ச்சியடைந்து மனிதபடைப்பாக மாறுகிறது. இவ்வளவு நுணுக்கமான முறையில் கருவின் வளாச்சி குறித்து குர்ஆன் விவரிக்கிறது. ஒரு தேர்ந்த மருத்துவரால் தான் இந்த உண்மைகளை நன்கு புரிந்து கொள்ள முடியும்; விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த நவீன கண்டுபிடிப்பை குர்ஆனில் 1400 ஆணடுகளுக்கு முன்னரே மிகத்துல்லியமாக வர்ணிக்கப்பட்டிருப்பது இது இறைவேதம் என்பதற்கு மற்றுமொரு சான்றாகும்.

-----------------------------------------------------------

மேலே உள்ள குர்ஆன் வசனத்துக்கு திரு பி.ஜெய்னுல்லாபுதீனும், புரபஸர் எமிரிடஸ் கெய்த் மூரும் விளக்கங்களை அளித்துள்ளார்கள். முதலில் நாம் பி.ஜெய்னுல்லாபுதீனின் விளக்கத்தை எடுத்துக் கொள்வோம்.

இவ்வசனங்களின் மூலத்தில் 'அலக்' எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இரத்தக்கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை,ஒன்றடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்றெல்லாம் பொருள் உண்டு.

இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில் இரத்தக்கட்டி என்று ஒரு நிலை இல்லை.தொங்கிக் கொண்டிருக்கும் நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது.ஏனெனில் மனிதனின் மூலத்தைக் கூறும்போதுஅது ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும்.தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.

மனிதன் உருவாவதற்கு ஆணிண் உயிரணு, பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவுற்ற சினை முட்டையாக வேண்டும்.இது தான் மனிதப் படைப்பின் முதல் நிலை. ஆணின் உயிரணு மட்டுமோ, பெண்ணின் சினை முட்டை மட்டுமோ மனிதனின் முதல் நிலை அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வதால் உருவாகும் பொருளிலிருந்து தான் மனிதன் படைக்கப் பட்டான். இதனால்தான் சுருக்கமாக கருவுற்ற சினை முட்டை என்ற தமிழ்ப் படுத்தியுள்ளோம்.இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இதன் நேரடிப் பொருள். இதன் கருத்து தான் கருவுற்ற சினை முட்டை.

அடுத்து புரபஸர் எமிரெடஸ் கெய்த் மூரின் கருத்துக்களை படிப்பதற்கு முன் இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

டாக்டர் கெய்த் மூர் உலக அளவில் புகழ் பெற்ற உயிரியல் துறை அறிஞர் ஆவார்.இவர் உயிரியலில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய புத்தகங்களில் "The Developing Human" என்ற புத்தகம் அமெரிக்க அரசால் சிறந்த புத்தகமாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் கெய்த் மூர் Anotomy and cell Biology துறைகளில் பேராசிரியராக டொராண்டோ பல்கலைக் கழகம் கனடாவில் பணியாற்றுகிறார். இக்கல்லூரியில் Anotomy துறையில் எட்டு வருடங்களாக தலைமைப் பதவியுலும் இருந்து வருகிறார். இனி அவர் தரும் விளக்கங்களை ஆங்கிலத்திலேயே பார்ப்போம்.

In the Holy Quran God speaks about the stages of Mans embryonic development:

“We created man from an extract of clay. Then we made him as a drop in a place of settlement, firmly fixed. Then we made the drop in to an alaqah (leech,suspended thing,and blood clot) then we made the alaqah in to a mudghah (chewed – like substance)…… “ - Quran 23 : 12,13 ,14

literally, the Arabic word alaqah has three meanings : 1) leech 2)suspended thing 3)blood clot.
1) In comparing a leech to an embryo in the alaqah stage, we find similarity between the two as we can see in figure 1. also the embryo at this stage obtains nourishment from the blood of the mother, similar to the leech ,which feeds on the blood of others.

Figure 1 : Drawing illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (leech drawing from Human development as Described in the Quran and sunnah. Moore and others page 37, modified from integrated principles of zoology, Hickman and others.Embbroyo drawing from The developing Human, Moore and persaud,page 73)

2)The second meaning of the word alaqah is “suspended thing.” This is what we can see in figures 2 and 3 the suspension of the embryo, during the alaqah stage, in the womb of the mother.

Figure 2 : We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. ( The developing Human, Moore and persaud, 5th edition page 66

3) The third meaning of the word alaqah is “blood clot.” We find that the external appearance of the embryo and its sacs during the alaqah stage is similar to that of a blood clot. This is due to presence of relatively large amounts of blood present in the embryo during the stage.(see figure 4). Also during the stage, the blood in the embryo does not circulate until the end of the third week. Thus the embryo at this stage is like a clot of blood.

Figure 3 : In this photomicrograph, we can see the suspension of an embryo (marked b) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother. The actual size of the embryo is about 0.6 mm. (The developing Human,Moore,3rd edition page 66,from Histology, Leeson and Leeson.)

Figure 4 : Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage. The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The developing Human, Moore 5th edition, page 65.)

ஆக 'அலக்' எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.

அடுத்த நிலையான 'முத்கா' என்ற நிலையை குர்ஆன் விளக்குகிறது. 'முத்கா' என்றால் நாம் ஒரு சூயிங்கம்மை வாயில் போட்டு நன்றாக மென்றவுடன் வரும் நிலை இருக்கிறதல்லவா அந்த நிலைதான் 'முத்கா' என்று அரபியில் சொல்லப்படும்.ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் “chewed like substance” என்று சொல்லலாம். இதைப்பற்றி திரு கெய்த் மூர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

The next stage mentioned in the verse is the Mudghah stage. The Arabic word mudghah means “chewed like substance.” If one were to take a piece of gum and chew it in his mouth and then compare it with an embryo at the mudghah stage, we would conclude that the embryo at the mudghah stage acquires the appearance of a chewed like substance. This is because of the somites at the back of the embryo that “somewhat resemble teethmarks in a chewed substance.” (see figures 5 and 6)

Figure 5 : photograph of an embryo at the mudghah stage (28 days old). The embryo at this stage acquires the appearance of a chewed-like substance, because the at the back of the embryo somewhat resemble teeth marks in a chewed substance. The actual size of the embryo is 4 mm. (The developing Human Moore and persaud, 5th edition, page 82, from professor hideo nishimura, Kyoto university, Kyoto,Japan)

Figure 6 : When comparing the appearance of an embryo at the mudghah stage with a piece of gum that has been chewed , we find similarity between the two.
a) Drawing of an embryo at the mudghah stage. We can see here the somites at the back of the embryo that look like teeth marks. (The developing Human, Moore and persaud,5th edition, page 79)
b) Photograph of a piece of gum that has been chewed


How could Mohammad have possibly known all this 1400 years ago, when scientists have only recently discovered this using advanced equipment and powerful microscopes which did not exist at that time? Hamm and Leeuwenhoek were the first scientists to observe human sperm cells (spermatozoa) using an improved microscope in 1677 (more than 1000 years after Mohammad. They mistakenly thought that the sperm cell contained a miniature preformed human being that grew when it was deposited in the female genital tract.

1981 ஆம் வருடம் புரபஸர் கெய்த் மூர் சவூதி அரேபியா தம்மாம் நகரில் நடந்த ஏழாவது மருத்துவ கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தார்.அப்பொழுது அவர் தமது அறிக்கையை பின் வருமாறு சமர்ப்பித்தார் : 'எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது குர்ஆனின் மேற் சொன்ன வரிகள். மனிதனின் கருவில் நிகழும் அடுத்தடுத்த நிலைகளை குர்ஆன் மிகவும் துல்லியமாக பட்டியலிடுகிறது.ஏழாவது நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி நன்கு ஆராய்ந்தார்.ஆனால் அதன் பிறகு தொடர்ந்து வரும் நிலைகளின் மாற்றங்களை அறியும் வாய்ப்பும் வசதியும் அரிஸ்டாட்டிலுக்கு அன்று கிடைக்கவில்லை. அவர் கோழி முட்டையின் கரு வளர்ச்சியின் அடிப்படையைத்தான் விளக்கி விட்டுப் போனார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை கருவியலைப் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு அறிவியல் வரவில்லை. தற்போதுதான் கருவியல் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான சாதனங்களும் வாய்ப்புகளும் தற்போதுதான் இலகுவாக கிடைக்கின்றன.

மருத்துவம் படிக்காத, எந்த நுண்ணோக்கி வசதியும் இல்லாத, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தில் தோன்றிய ஒரு தனி நபரான முகமது நபி இப்படி ஒரு உண்மையை சொல்லவே முடியாது. குர்ஆன் கண்டிப்பாக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.' என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

இக் கட்டுரையில் வரும் அறிவியல் செய்திகளைப் பற்றி மேலும் விபரங்கள் அறிய :

1) “The Developing Human” – Moor and Persaud, 5th edition, page8,65,9
2) “Human Development as described in the Quran and Sunnah” – Moor and others page no 36,37,38
3) The reference for this saying is “This is the Truth” (Video Tape) . For copy of this video tape please contact one of the organizations listed .
A) Islamic Foundation Of America
p.o. box – 3415, Merrifield,VA 22116,USA,
Tel : (703) 914-4982, Fax – (703) 914-4984
Mail – ifam@erols.com

B)Bader Islamic Association of Toronto
474 Roncesvalles Avenue, Toronto, Ontario M6R 2N5, Canada
Email : islam@badercenter.com

c) Al- Muntada Al-Islami Centre
7 Bridges Place, Parsons Green, London , SW6 4HW, UK
Mail : muntada@almuntada-alislami.org
mail@jimas.org

d)http://suvanathendral.com/portal/?p=265

Tuesday, April 23, 2013

ஈ.வெ.ராமசாமி பெரியார் ஒரு வஹாபியா?

ஈ.வெ.ராமசாமி பெரியார் ஒரு வஹாபியா?'எங்க ஆளுங்க மாரியம்மனுக்கு தேர் இழுத்தா, உங்க ஆளுங்க நாகூர் பாவாவுக்கு கூடு இழுக்கிறீங்க...அட வெங்காயங்களா...நீங்க எல்லாரும் எப்பய்யா திருந்தப் போறீங்க....'

----------------------------------------------------------------

என்னைப் போன்ற ஆட்கள் நாகூர் சந்தனக் கூடு இழுக்காதீங்கப்பா, தர்ஹாவுக்கு போகாதீங்கப்பா, பல தெய்வ வணக்கத்தை விடுங்கப்பா, தட்டு தாயத்து என்று மூடப் பழக்கங்களிலிருந்து விடுபடுங்கப்பா, சாதி ஏற்றத் தாழ்வு கிடையாதுப்பா, சாதிகளே கிடையாதுப்பா,மாரியம்மன் திருவிழா மாதிரி அல்லா சாமி பண்டிகை எல்லாம் கொண்டாடாதீங்கப்பா, பெண்ணிடம் வரதட்சணை வாங்காதீங்கப்பா, பெண் குழந்தையை வறுமைக்கு பயந்து ஸ்கேன் பண்ணி அழிக்காதீங்கப்பா, சகோதர மதத்தவர்களோடு அன்போடும் பாசத்தோடும் பழகுங்கப்பா என்று பதிவு எழுதினால் எங்களை வஹாபிகள் என்று பலரும் குறை கூறுகினறனர். இன்று நாங்கள் என்ன சொல்கிறோமோ அதைத்தான் 80 வருடங்களுக்கு முன்பு பெரியாரும் சொல்லியிருக்கிறார். சந்தனக் கூடு எடுப்பதை அன்றே மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறார். தேவையில்லாத விருந்துகளுக்கு செலவு பண்ணும் பணத்தை ஏழை மாணவ மாணவிகளின் கல்வி செலவுக்கு பயன்படுத்தச் சொல்லி முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகிறார். எல்லா பாவத்தையும தெரிந்தே செய்து விட்டு மக்காவுக்கு போனா எல்லாமே சரியாகி விடும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கும் பல முஸ்லிம்களை சாடுகிறார். வசதியில்லாத பலர் கடன் வாங்கிக் கொண்டு மக்காவுக்கு செல்வது தேவையில்லாதது என்று அறிவுறுத்துகிறார். அதுவும் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு மீலாது மேடையிலேயே கண்டிக்கிறார். பெரியாருக்கு தெரிந்த இஸ்லாம் கூட இன்று பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் பலருக்கு தெரிவதில்லை. என்ன அழகாக பெரியார் இஸ்லாத்தை அன்றே விளங்கியிருக்கிறார் என்பதை முழு உரையையும் கேட்டுத் தெளிவுறுங்கள்.

இனி பெரியாரின் பேச்சைக் கேட்போம்....

சகோதரர்களே! உங்கள் மத சம்பந்தமான ஒரு சிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன். என்னை அநேகர் மத துவேஷி என்றும் கடவுள் மறுப்புக்காரன் என்றும் சொல்லுவார்கள். இந்த ஊரிலும் பலர் சொல்லுவார்கள். அப்படியிருக்க நீங்கள் என்னை அழைத்து மிகவும் தைரியமென்றே சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எனது அபிப்பிராயத்தை வெளியிட பின்வாங்குவதே இல்லை. சென்ற வருஷத்திலும் இதேமாதிரி கொண்டாட்டத்தில் நான் பேசி இருக்கின்றேன். அதிலும் பல இந்து முஸ்லீம்களுக்கு அதிருப்தி இருந்திருக்கலாமானாலும் அநேகருக்கு திருப்தி ஏற்பட்டு முஸ்லீம்களால் அல்லாசாமிப் பண்டிகை நிறுத்தப்பட்டதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆனால் என்பேரில் கோபித்துக் கொண்ட இந்துக்கள் இவ்வூரில் தங்கள் மாரியம்மன் பண்டிகையைக்கூட நிறுத்திவிட சம்மதிக்காமல் மிகுதியும் காட்டுமிராண்டித்தனமான முறையிலேயே நடத்துகின்றார்கள். இப்படியேதான் எங்கும் நடைபெறுகிறது. இந்துக்களை விட இஸ்லாமானவர்கள் அறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்பதும் நியாயத்தை ஒத்துக்கொண்டு அதன்படி உடனே நடப்பவர்கள் என்பதும் இதிலிருந்து ஒருவாறு உதாரணமாய் விளங்குகிறது. ஆனால் இன்னும் அநேக விஷயங்களில் திருத்துப்பாடு ஆகவேண்டி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். முஸ்லீம் சீர்திருத்தத் தலைவர்கள் இதை வலியுறுத்திக்கொண்டே வருகின்றார்கள். கூண்டு திருவிழா முதலிய வற்றையும் நிறுத்தி விடுங்கள். இதனால் எல்லாம் இஸ்லாம் கொள்கைகள் கெட்டுப்போகாது. இவை இருந்தால் தான் பரிகாசத்திற்கிடமானதாகும்.

இந்த முக்கியமான நாள் என்பதில் வேலூர் மௌல்வி சாயபு அவர்கள் குர்ஆனின் மேன்மையையும் திரு. முகமது நபி அவர்களின் உபதேசத்தின் பெருமையையும் பற்றி சொன்னார்கள். என்னால் அந்தப்படி சொல்ல முடியாது. ஏனெனில் நான் அவற்றை படித்துப் பார்த்தவனல்ல. அந்த வேலைக்கு நான் போவதுமில்லை. நான் அதற்கு அருகனுமல்ல. அப்படி ஏதாவது நான் படித்து அதைப்பற்றி இங்கு பேசுவது என்பதும் அதிகப்பிரசங்கித்தனமேயாகும். ஏனெனில் பெரிய பெரிய மௌல்விகள் இருக்கும் போது அவர்கள் முன் நான் என்னதான் படித்தாலும் என்ன பேச முடியும்? அன்றியும் புஸ்தகத்தில் இருப்பதை விட பிரத்தியக்ஷத்தில் உள்ளதைப் பற்றிப் பேசுவதே பலனளிக்கக்கூடும். நான் இந்த சந்தர்ப்பத்தை எதற்கு உபயோகித்துக் கொள்ள கூடுமென்றால் மக்களிடம் பிரத்தியக்ஷத்தில் காணும் விஷயங்களைப் பற்றியும் இன்னமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற விஷயத்தைப்பற்றியும் பேசுவதும் பயன்படுவதாகும் என்று கருதுகின்றேன்.

திரு.நபி அவர்களின் இவ்வளவு அருமையான உபதேசம் என்பவற்றில் உலக மக்கள் எல்லாம் பயன்அடையும்படி செய்ய என்ன என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஆகவே நீங்களும் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளப்பார்க்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

செட்டி முடுக்கா? சரக்கு முடுக்கா?

இஸ்லாம் மார்க்கம் “மக்களுக்கு உபதேசிப்பதிலும் வேதவாக்கியங்களிலும் மேன்மையானதாய் இருக்கின்றது” என்கின்ற திருப்தியானது மனிதசமூகத்திற்கு எல்லாப் பயனையும் அளித்துவிடாது. ஆனால் அதன் தத்துவத்திற்கொப்ப காரியத்தில் அதன் பயனை உலகத்தில் மேன்மையுறச் செய்து மக்களுக்கு நல்ல வழிகாட்டியாகி உலகமக்களை ஒன்றுபடுத்தவும் அனைவரையும் சகோதரத்தன்மையுடனும் இருக்கவும் பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடன் வாழவும் செய்யவேண்டும். எந்தக் கொள்கைக்காரனும் புஸ்தகத்தில் இருப்பதைக்கொண்டு தங்கள் முன்னோர்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது.

உலகம் பகுத்தறிவுக்கு அடிமையாகி எதையும் பிரத்தியக்ஷ அனுபவத்தைக் கொண்டு பரீட்சித்து சரிபார்க்க வந்துவிட்டது. அதற்கு துணிந்தும் விட்டது. செட்டி முடுக்கு செல்லாது. சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனி செலாவணியாகும். ‘என் சரக்கை பரீக்ஷிக்கலாமா?’ என்கின்ற அடக்குமுறை இனிப்பலிக்காது. ‘அவர் ஒஸ்தியென்று சொன்னார்.’ ‘இவர் ஒஸ்தியென்று சொன்னார்’ ‘ஆண்டவன் சொன்னான்’ என்பதெல்லாம் அனுபவத்திற்கு நிற்காவிட்டால் காரியத்தில் நடந்து காட்டா விட்டால் இனி மதிப்புப்பெற முடியாது. ஆதலால் எந்தச்சரக்கின் யோக்கியதையும் கையில் வாங்கிப்பார்த்துதான் மதிக்க வேண்டியதாகும். அந்த முறையில் இஸ்லாம் கொள்கை என்பதும் முஸ்லீம் மக்களின் நடத்தையைக் கொண்டும் அவர்களது பிரத்தியட்சப்பயனைப் கொண்டும் தான் மதிக்கப் படமுடியும். உலகம் சிரிக்காதா?

இந்துக்கள் தேரிழுப்பதைப் பார்த்து முஸ்லீம்கள் பரிகாசம் செய்து விட்டு முஸ்லீம்கள் கூண்டுகட்டி சுமந்து கொண்டு கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, பாணம் வேடிக்கைசெய்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தால் உலகம் திருப்பிச் சிரிக்கமாட்டாதா? என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இந்துக்கள் காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போய் பணம் செலவழித்துவிட்டு “பாவம் துலைந்துவிட்டது” என்று திரும்பி வருவதைப் பார்த்து முஸ்லீம்கள் சிரித்துவிட்டு முஸ்லீம்கள் நாகூருக்கும், முத்துப் பேட்டைக்கும், மக்காவுக்கும் பணத்தை செலவு செய்து கொண்டு போய் விட்டு வந்து தங்கள் “பாவம் எல்லாம் துலைந்து விட்டது” என்று கருதிக் கொண்டு புதுக்கணக்குப்போட வந்தார்களானால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? என்று நினைக்க வேண்டும்.

மக்கள் மார்க்கத்தைக் காப் பாற்றுவதென்றால் கொள்கைகளை பகுத்தறிவுக்கு இணங்கி இருக்கும்படி ஜாக்கிரதையாய் பார்த்து பயன்படுத்தவேண்டும். “தீர்க்கதரிசிகள் பகுத்தறிவுக்கு விறோதமாய் சொல்லி இருக்கமாட்டார்கள்” என்று கருதி அவற்றை தன் இஷ்டப்படி அருத்தம் செய்து கொண்டு பிடிவாதமாய் இருப்பது மூட நம்பிக்கையைவிட மோசமானதாகும். அம்மாதிரி மூட நம்பிக்கையின் பயனாய் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சொன்னதின் கருத்தையும், உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமலும் போகும்.

பகுத்தறிவு

நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் எதிலும் பயன்படுத்த உறுதியும், துணிவும் இருந்தால்தான் உண்மையைக் கண்டு பிடிக்கவே முடியும். நாம் அறிவை உபயோகப்படுத்தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்து கொண்டு ‘இதுதான் நபிகள் சொன்னது’ என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்ததாகுமா? நமது சொந்தக்கண்ணை பரிசுத்தப்படுத்திப் பரீட்சித்துப்பார்க்க வேண்டும். சாளேசரம் இருந்தால் சரியாய்த் தெரியாது. பக்கப்பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது. இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தை சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும்.

மஞ்சள் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான் தெரியும். சிகப்பு சிகப்பாகவும், பச்சை பச்சையாகவுந்தான் தெரியும். நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்ணாடிகொண்டு பார்க்கவேண்டும். அது போலவே தைரியமான பகுத்தறிவுடன் சுத்தமான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் தங்களுக்கு தெரிந்த தப்பிதங்களை மூடி வைத்திருந்தால் கடைசியாக ரிபேர் செய்யமுடியாத அளவு மோசமானதாகி விடும்.

நீங்கள் பார்க்கின்ற கண்ணும், நீங்கள் செய் கின்ற அருத்தமும், நீங்கள் அறிந்த மாதிரியும் யுக்திக்கும், அனுபவத்திற்கும் பொறுத்திப் பாராமல் எல்லாம் சரியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களைப்போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார் கள்? நினைக்கிறார்கள் என்று பாருங்கள்.

மற்றவர்கள் மதிப்பது

நபி அவர்கள் உபதேசங்களை துருக்கியர் எப்படி மதிக்கின்றார்கள்? எப்படி அர்த்தம் செய்கின்றார்கள்? அவர்கள் என்ன பலன் அடைகின்றார்கள்? என்பவைபோல உலகத்தின் முஸ்லீம்களின் நடப்பு முழுவதையும், அமுலையும், பலனையும் நன்றாய் கவனித்துப் பார்க்க வேண்டும். உங்கள் ‘எதிரி’ மதத்தை (கொள்கைகளை) பரிசோதிப்பதுபோல் எதிரிஆதாரத்தை எந்தெந்த வழியில் பரிசோதித்து நியாயம் அநியாயம் சொல்லுவோமோ அந்த நோக்கத்துடன், அந்த வேகத்துடன் உங்கள் கொள்கைகள் என்று உங்களுக்குப் புரோகிதர்களால் போதிக்கப்பட்டு நீங்கள் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.

கண்ட உண்மையை வீரத்துடன் வெளியிட்டு குற்றமிருப்பின் திருத்தவேண்டும். மனிதன் முடிவுபெற்ற முற்போக்கானவன் என்று யாரும் கருதிவிடக்கூடாது. உலகமும் முழு முற்போக்கை அடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள். திருத்தம் அவசியமானால் திருத்தியாக வேண்டும். திருத்தம் சரியென்று பட்ட வழியில் மனம் திரும்ப பயமோ வெட்கமோ அடையக்கூடாது.

இந்தியாவும் அப்படித்தான்

நபி அவர்கள் தோன்றிய காலத்தில் அரேபியாதேசம் எப்படி இருந்ததென்று மௌல்வீ சாயபு அவர்கள் சொன்னார்களோ அப்படியேதான் இன்னமும் இந்தியா இந்து கொள்கைகள் இருந்து வருகின்றது. அரேபியர்களிடத்தில் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்பட்டு கொல்லுகின்ற வழக்கம் இருந்ததாக மௌல்வி சாயபு சொன்னார்கள். இந்துக்களிடத்திலும் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்படும் வழக்கம் இன்னும் இருக்கின்றது. சமீப காலம் வரை பெண்களை பெரிய பெரிய பெண்களை புருஷன் இறந்துபோனால் பக்கத்தில் உயிருடன் வைத்து நெருப்புக்கொளுத்தும் வழக்கம் இருந்து வந்தது. இன்றும் பெண்களை அதைவிடக் கேவலமாய் விதவை என்று சொல்லி சகுனத்தடையாகப் பாவித்து கொடுமைப்படுத்தும் முறை இருந்துதான் வருகின்றது.

அரேபியர் பல கடவுள்களை வணங்கினதாகச் சொன்னார்கள். அதுபோலவே இன்றும் இந்துக்கள் ஒவ்வொருவரும் பல கோடிக்கணக்கான கடவுள்களை உருவத்துடன் மாத்திரமல்லாமல் பெண்டு, பிள்ளை வைப்பாட்டி ஆடு மாடு குதிரை யானை எலி பெருச்சாளி மயில் கெருடன் பாம்புவாகிய உருவங்களுடன் வணங்குகின்றார்கள். இவையெல்லாம் கீழ் மக்கள் என்று சொல்லுகின்றவர்களிடம்தான் இருக்கின்றது என்று நினைத்து விடாதீர்கள். மேல்மக்கள் என்று மதத்தின்பேரால் முடிவு கட்டப்பட்ட மக்களிடமே இருக்கின்றது. ஆதலால் திரு.மகமதுநபி அவர்கள் தோன்றுவதற்கு முன் அரேபியா பாலைவனம் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் இருந்ததோ அதுபோலவேதான் இன்றைய வரையில் இந்தியாவின் இந்து சமூகம் இருந்து வருகின்றது.

இந்த லட்சணத்தில் இதை எடுத்துச் சொன்னால் இந்துக்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லை. இந்தமாதிரியான ஒரு மதசம்பந்தமான முக்கிய நாள் என்பதற்கு உங்களைப் போல் இந்துக்கள் என்னைக் கூப்பிட வும் மாட்டார்கள். நான் ஏதாவது சொன்னால் பொறுக்கவும் மாட்டார்கள். என்னை வைவதையே அவர்கள் மதப்பிரசாரமாய் கருதுவார்கள். ஆனால் இஸ்லாம் கொள்கை என்பது எவ்வளவு பெருமையாய் எவ்வளவு சகோதரத் தன்மையாய் யாரையும் எந்தவித அபிப்பிராயக்காரனையும் கூப்பிடவும் அவர்கள் சொல்லும் எதையும் பொருமையாய் கேட்கவும் இருக்கின்ற சுதந்திரத்தைப் பார்த்து இவ்விஷயத்தில் இந்துக்கள் வெட்கப்பட வேண்டுமென்றே சொல்லுவேன்.

துலுக்கர் துடுக்கரா?

மௌல்வி ஆஜீ அப்துல் கரீம் சாயபு அவர்கள் துலுக்கன் துடுக்கன் என்று இந்துக்களால் சொல்லப்படுவதாய்ச் சொன்னார். இது இந்துக்களுக்குள் பலமில்லாத காரணத்தாலும் தங்களுக்குள் வீரமும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தாலும் சொல்லப்படுவதேயாகும். முஸ்லீம்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும் வீரமும் இந்துக்களுக்கு துடுக்கர்களாய் காணப்படுவது அதிசயமில்லை. என்னை ஒரு சாயபு அடித்தால் ஒரு அய்யரோ ஒரு செட்டியாரோ ஒரு முதலியாரோ சிபாரிசுக்கு வரமாட்டார். ஏனெனில் ஜாதிப்பிரிவு காரணமாக இந்துக்களுக்குள் சகோதரத்தன்மை இல்லாமல் போய்விட்டது. ஒருவனுக்கு மற்றவர்களிடம் அன்பு இல்லாமல் போய் விட்டது. ஜாதிப்பிரிவு இல்லாத காரணத்தாலேயே முஸ்லீம் மக்களுக்கு சகோதரத்தன்மை இருந்து வருகின்றது.

சகோதரர்களை தாராளமாய் உடையவனைக் கண்டால் யாரும் அஞ்சுவது வழக்கம்தான். ஆதலால் இந்துக்கள் உங்களை குற்றம் சொல்லுகிறார்களே என்று கருதி உங்கள் சகோதரத்தன்மையையும் வீரத்தையும் நழுவவிட்டு விடாதீர்கள். எண்ணிக்கையில் கொஞ்சமாயிருந்தாலும் உலகத்தில் நீங்களும் தலைசிறந்து விளங்கக் காரணமே உங்கள் சகோதரத்தன்மையே யாகும். ஆகையால் அதைவிட்டு விடாதீர்கள். ஆனால் மற்ற கொள்கைக்காரரையும் உங்கள் சகோதரர்களாக ஆக்கிக்கொள்ள முயலுங்கள். அதற்குத் தடையாயிருக்கும் சாதாரண காரியங்களையும் வெரும் வேஷமாத்திரத்தால் இருக்கும் வித்தியாசங்களையும் லக்ஷியம்செய்யாமல் ராஜிக்குத் தயாராயிருங்கள். இந்த வகையில் தான் ஒவ்வொரு கொள்கையும் செல்வாக்குப் பெற்று தலை சிறக்கமுடியும். இஸ்லாம் கொள்கையைப்பற்றி யாராவது தப்பிதமாய் நினைத்திருந்தால் தைரியமாய் திருத்த முற்படுங்கள்.

சந்தேகத்தை திருத்துங்கள்

உதாரணமாக மக்கா யாத்திரையைப் பற்றி மலேயா நாட்டில் உள்ள கிடாசுங்கப்பட்டானியில் என்னிடம் ஒரு இந்து என்பவர் ஒரு கேள்வி கேட்டார். அதாவது ‘இந்துக்களது காசி ராமேஸ்வரம் மதுரை யாத்திரையை மூடநம்பிக்கை என்கின்றாயே, இஸ்லாமானவர்கள் மக்கா யாத்திரை செய்ய மலேயாவில் அநேக முஸ்லீம்கள் செல்வதால் கஷ்ட நஷ்டப்படுகின்றார்களே’ என்றார். நான் பதில் சொல்லமுடியாமல் அப்படியானால் முஸ்லீம்கள் அநுசரிக்கும் கொள்கைகள் முழுவதும் பகுத்தறிவுக்கொள்கை என்று நான் சொல்லவரவில்லை என்றும் அதில் அநேக நல்ல கொள்கை பிரத்தியட்சத்தில் பார்க்கிறேன் என்றும் சொன்னேன்.

பிறகு சென்ற வருஷம் இதே கொண்டாட்ட நாளில் ஈரோட்டிற்கு வந்த மௌல்வி அப்துல் அமீது சாயபு பாகவியவர்களைக் கேட்டேன். அவர் விளக்கமாக்கினார். முஸ்லீம்கள் மக்காவுக்குப் போவதில் செல்வத்திலும், சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர எல்லோரும் போய்த்தீர வேண்டுமென்று இல்லை யென்றும் அந்த இடம் முகம்மதுநபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்று அறிவு வளர்ச்சிக்கும் மற்ற மக்கள் நடை,

உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும் படியான ஒரு யாத்திரை என்றும் “கொலை களவு கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்து விடும் என்று சொல்லுவது தப்பு” என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் போவதில்லை என்றும் சொன்னார். யாராவது அந்தப்படி போனாலும் அது தெரியாத்தனமென்றே சொன்னார்கள். ஆகவே மக்களிலேயே பிறவியில் வித்தியாசமில்லை என்று சொல்லும் கொள்கையில் இடத்திற்கு இடம் வித்தியாசம் கற்பிக்கப்பட்டு இருக்காது என்பது பகுத்தறிவில் பட்டதேயாகும். ஆனால் இந்து கொள்கைகள் என்பவற்றில் ‘ஒரு மனிதன் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், கொலை செய்தாலும், திருடினாலும், நம்பிக்கை துரோகம் வஞ்சகம் முதலிய காரியம் செய்தாலும், ஒரு ஊரை நினைத்தால் ஒரு ஊருக்குப் போனால் ஒரு ஊரில் ஒரு குளத்திலுள்ள தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டால் பாபம் பரிகாரமாகிவிடும், மோட்சமடைந்து விடுவான்’ என்று எவ்வளவோ அடியோடு பொய் பெருமைகளை கற்பித்து மூடநம்பிக்கை உண்டாக்கி அங்குள்ள சோம்பேறிகள் பிழைக்க ஸ்தல யாத்திரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற தென்றும், அப்படிப்பட்ட ஸ்தல யாத்திரைப்புரட்டுகள் எல்லாம் பகுத்தறிவுக்கு விறோதமானது ,மூடநம்பிக்கையில் பட்டது என்றும் சொல்லும்போது மற்றவர்கள் யாராவது அது போல் செய்தாலும், அந்தந்த தலைப்பின் கீழ்தான் வருமல்லவா? என்பதை யோசித்து நடக்க வேண்டியது மக்கள் கடமையாகும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நாள்

ஆகவே இப்படிப்பட்ட அருமையான நாட்களை மனிதன் மேன்மைக்கும் முற்போக்கிற்கும் ஒற்றுமைக்கும் அறிவு விளக்கத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே இங்குள்ள இந்து முஸ்லீம்களை சகோதரர்களாகக் கருதியே என் மனதில் பட்டதைச் சொன்னேன். மௌல்வி சாயபு அவர்கள் இருவரும் சொன்ன விஷயங்களிலும் பெரிதும் அறிவுக்கு விரோதமானதோ கேள்விக்கு இடமானதோ இல்லை என்பதை முக்கியமாய் முஸ்லீம்களும் மற்ற இந்துக்களும் கவனித்துப் பார்த்து இதுபோலவே எல்லாக் கொள்கைகள் விஷயங்களிலும் பகுத்தறிவுடனிருக்க வேண்டுமென்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.

மற்றும் நான் சொன்ன விஷயங்களில் உங்கள் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளாததைத் தள்ளி விடுங்கள். மற்றும் இம் மாதிரி நாட்களை வெறும் விருந்துக்கு உபயோகித்துக் கொள்ளாதீர்கள். இன்று சுமார் 500 ரூ. வசூல் செய்து பெரிய விருந்து சாப்பாடு செய்து சாப்பிட்டதாகத் தெரிகின்றது. இது பிரயோஜனமில்லை. பணங்கள் வசூல் செய்து பகுத்தறிவு பிரசாரம் செய்யவும் ஏழை மக்களுக்கு கல்விக்கும் கொள்கைகளின் உண்மை தத்துவத்தை பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்த்து பயன்படுத்தும் தத்துவத்திற்கும் உபயோகிக்கச் செய்யவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

02.08.1931 அன்று ஈரோடு முஸ்லீம் வாலிப சங்கக் கட்டிடத்திற்கு முன் நடைபெற்ற நபிகள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய தலைமையுரை – “குடி அரசு” – சொற்பொழிவு – 09.08.1931

--------------------------------------------------------------

வஹாபிகளான நாங்கள் இன்று என்ன சொல்கிறோமோ அதைத்தானே அன்றே பெரியாரும் சொல்லியிருக்கிறார். அப்படீன்னா...பெரியாரும் வஹாபியா? :-)

//அந்த இடம் முகம்மது நபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை //

இது தவறான புரிதல். முகமது நபி பிறந்த நாடு என்பதனால் அந்த பூமி புண்ணியமாகி விடவில்லை. உலகில் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்பதாலேயே அந்த இடம் புனிதப்படுகிறது. இதை அங்குள்ள மௌலவியாவது பெரியாருக்கு விளக்கி சொல்லியிருக்கலாம்.

Monday, April 22, 2013

ஓரினச் சேர்க்கைகளை அங்கீகரிக்கும் நாடுகள்!(கார்டியனில் வ்ந்த புள்ளி விபரம்: படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிக் கொள்ளுங்கள்.)

பல ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக சட்டமே இயற்றியுள்ளனர். பிரான்சில் அரசு ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும் செயலைக் கண்டித்து பெரும் போராட்டமே நடந்துள்ளது. அங்குள்ள முஸ்லிம் அமைப்புகளும் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்க முன் வர வேண்டும். நியுசிலாந்து உருகுவே போன்ற நாடுகளில் சட்ட பூர்வ அந்தஸ்து தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஏன் இப்படி என்று நாம் கேட்டால் 'தனி மனித சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்' என்ற பதில் வரும்.


ஒரு மனிதன் பலரோடு சேர்ந்து சிரித்தும் பேசிக் கொண்டும் இருந்தால் அது இயற்கை! அதே மனிதன் தனிமையில் செல்லும் போது சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் சென்றால் அவனை எங்கு கொண்டு போய் விடுகிறோம்? அதே போல் இறைவன் (அல்லது உங்கள் பார்வையில் இயற்கை)மனிதனைப் படைத்து அவன் இன்பம் அடைவதற்கு ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் படைத்திருக்கிறான். இதனால் அந்த மனிதனுக்கு மன அமைதியும் சந்ததி பெருக்கமும் ஏற்படுகிறது. இது பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் கடை பிடித்து வரும் வழக்கம். இந்த வழக்கம் நிறுத்தப்பட்டு நம் முன்னோர்கள் ஓரினப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்தால் இன்று நானும் நீங்களும் கணிணியின் முன்னால் உட்கார்ந்திருக்க மாட்டோம். மனங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்களினாலும் இயற்கைக்கு மாற்றமாக உறவு வைத்துக் கொள்ளும் அந்த பரிதாபத்திற்குரிய மனிதர்களை திருத்துவது மருத்துவர்களின், சமூக ஆர்வலர்களின் கடமை அல்லவா?

தவறிழைக்கும் தன் குழந்தைகளை கண்டிக்கும் பெற்றோரைப் பார்த்து 'ஏன் அவர்களின் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கிறீர்கள்?' என்று நாம் கேட்பதில்லை. கண்டிப்பதன் காரணம் தன் மக்களை நேர்வழிப் படுத்த வேண்டும் என்ற விருப்பம் தான். அதே போல் தன் மக்கள் தவறிழைக்கும் போது கண்டிக்க வேண்டியதும் ஒரு அரசின் கடமையல்லவா?

இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனி மனித சுதந்திரம் என்று ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க நாடுகளிலும் இந்த ஓரினச் சேர்க்கையை அனுமதிக்கும் கொடுமையை நாம் பார்த்து வருகிறோம். மனிதனின் மனம் என்றுமே தவறை நோக்கியே இழுத்துச் செல்லும். அந்த வகையில்தான் மனிதனும் படைக்கப்பட்டுள்ளான். சூழ்நிலைகள் சிலரை ஓரினச் சேர்க்கையாளர்களாக மாற்றி விடுகின்றனது. அநத பரிதாபத்திற்குரிய அன்பர்களை கவுன்சிலிங் கொடுத்து, முற்றியவர்களை மன நல மருத்துவ மனையிலும் சேர்ப்பித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.

இஸ்லாமிய நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்கு மிகக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. சட்டம் தளர்த்தப்பட்டால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளைப் போன்றே அரபு நாடுகளும் மாறி விடும் ஆபத்து உண்டு.

எங்கள் கிராமத்தில் ஒரு வறிய குடும்பத்தில் ஒரு இளைஞனுக்கு இது போன்ற ஒரு பிரச்னை. அவர்கள் வீட்டில் ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காததால் பம்பாய் நகருக்கு ஓடி விட்டான். வயதுக்கு வந்த இரண்டு சகோதரிகள். கஷ்டப் பட்டு அந்த பெண்களை உறவினர்கள் நல்ல இடத்தில் திருமணம் செய்வித்தார்கள். பம்பாய் ஓடியவன் அங்கு அரவாணிகளோடு சேர்ந்து கொண்டான். விபரம் தெரிந்து யாரும் அழைக்க பம்பாய் சென்றால் நம்மவர்களைப் பார்த்து விட்டு ஓடி விடுவான். இப்படியே இருபதுவருடம் ஓடியது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனாகவே திரும்பி எங்கள் ஊருக்குவந்தான். பம்பாயிலிருந்து அவன் கூடவே கொண்டு வந்தது எய்ட்ஸையும் சேர்த்துதான். அவனது சகோதரிகள் ஒரு வாரம் மருத்துவ சிகிச்சைக் கொடுத்தார்கள். நோய்முற்றி விட்டதால் ஊருக்கு வந்த ஒரு வாரத்தில் நாற்பது வயதிலேயே மரணமடைந்து விட்டான். வாழ வேண்டிய வயதில் இன்றுஅவன் நம்மிடம் இல்லை.

ஓரினச் சேர்க்கையைப் பற்றி ஜூனியர் விகடனில் வந்த செய்தியை பார்ப்போம்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது பாவம், மாபெரும் தவறு என்ற மத ரீதியான பார்வைக்கு அழுத்தம் சேர்ப்பது போல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவ உலகமும் ஓரினச் சேர்க்கை தவறானது என்று சொன்னதுடன் இது ஒரு நோய் என்றும் சொல்லத் துவங்கியது. உதாரணமாக 'கிராஃப்ட் எபிங்' என்னும் செக்ஸூவாலஜிஸ்ட் 1886-ல் மருத்துவ பாட நூல் ஒன்றை எழுதினார். இதில் 'ஓரினச் சேர்க்கை என்பது பிறவிக் கோளாறு (ஜீன் குறைபாடு) என்றும் இத்தகைய புணர்ச்சியில் ஈடுபடுவது நரம்புத் தளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் எழுதியிருந்தார். அப்போது இவரது கருத்தை ஒட்டி மருத்துவ உலகம் ஓரினச் சேர்க்கையை ஒரு மன நோயாகவே கருதியது.

டாக்டர் நாராயண ரெட்டி
ஜீனியர் விகடன்
26-03-2006

------------------------------------------

இந்த ஓரினச் சேர்க்கையைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போம்.

'உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கின்றீர்களா? இல்லை. நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கின்றீர்கள்.' என்றும் கூறினார்.

'லூத்தே! நீர் விலகிக் கொள்ளா விட்டால் வெளியேற்றப் படுவோரில் நீரும் ஒருவர்!'என்று அவர்கள் கூறினார்கள்.

'உங்கள் செயலை நான் வெறுப்பவனே!' என்று அவர் கூறினார்.

'என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக என்றும் கூறினார்.

26 : 165,166,167,168,169 - குர்ஆன்.


தன் சமுதாயத்து மக்களிடம் ஓரினச் சேர்க்கையான இந்த பெரும் பாவத்தை விட்டுவிடும்படி பிரச்சாரம் செய்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. 'இந்த பிரச்சாரத்தை விட வில்லை என்றால் உம்மை ஊரை விட்டு வெளியாக்குவோம்' என்றும் அந்த மக்கள் கூறினர்.

'உங்கள் விஷயத்தில் எனக்கு சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?'என்று அவர் கூறினார்.

'லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்.அந்த மக்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக் கெடு வைகறைப் பொழுது.வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'என்றனர்.

11 : 80,81 - குர்ஆன்.


லோத்தின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அந்த ஊரை அழிப்பதற்காக இரண்டு வானவரை அனுப்பினான்.

'அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல மழை பொழிந்து அவ்வூரின் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் நீங்கள் சென்று வரும் நிலையான சாலையில்தான் உள்ளது. '15 : 74,75,76 - குர்ஆன்

இறைவனின் கோபத்திற்க்குள்ளான அந்த ஊர் இன்றும் ஜோர்டானில் சபிக்கப் பட்டதற்கான அடையாளங்களோடு செத்த கடல் என்று சொல்லப் படும் (Dead Sea) யை ஒட்டி அமைந்திருப்பதைக் காணலாம். இந்த கடல் பிரசேத்தை அரபியில் 'பஹ்ரல் மௌத்' என்று சொல்வார்கள்

முகமது நபியிடம் மன்னிப்பு கேட்ட படத் தயாரிப்பாளர்!முன்பு முகமது நபியை தவறாக சித்தரித்து படமெடுக்க உதவிய அர்னாடு வேன் மனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்று மதினாவில் முகமது நபியின் அடக்கத் தலத்துக்கு முன்னால் அமர்ந்து தான் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கோரினார். எல்லா புகழும் இறைவனுக்கே!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாத்தை எதிர்ப்பதையே தங்கள் வேலையாக வைத்திருக்கும் பலரும் உண்மையை விளங்கி ஒரு நாள் இது போல் இஸ்லாத்தின் முன் மண்டியிடுவார்கள். அது வரை தவறாக வழி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வழி தவறிய அந்த சகோதரர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்.

‘I am sorry, O Prophet…’'இஸ்லாத்தைப் பற்றி எதிர் மறையான கதைகளையே நிறைய கேட்டு வளர்ந்தவன் நான். ஆனால் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் மற்றவர்கள் சொல்வதை கண்மூடிக் கொண்டு நம்புபவன் நான் அல்ல. சிலர் பிறந்த மதத்துக்கு நான் துரோகம் செய்து விட்டதாக கூறுகின்றனர். பலர் நான் எடுத்த இந்த முடிவு மிகச் சரியானது என்கின்றனர். டிவிட்டரிலும் பலர் எனக்கு ஆதரவு தந்துள்ளனர்.'


MADINAH – Former Dutch Islamophobe and a former leading member of far-right Dutch politician Geert Wilders’ party Arnoud Van Doorn visited the Prophet’s Mosque in Madinah to pray and say sorry for becoming part of a blasphemous film.

Doorn was among the Freedom Party leaders who produced the blasphemous film, Fitna. Last month he reverted to Islam after an extensive study about the religion and the Prophet (peace be upon him).

He said that the worldwide outrage against the film made him study about the Prophet (pbuh) and that eventually led to his conversion.

He headed for Makkah to perform Umrah after meeting the two imams of the Prophet’s Mosque, Sheikh Ali Al-Hudaifi and Sheikh Salah Al-Badar, who enlightened him on how to lead the life of a good Muslim and confront challenges facing Islam in the West.

A member of the Dutch parliament and The Hague City Council, Doorn announced his decision to accept Islam on his Twitter profile. He also posted a tweet in Arabic declaring that “there is no god but Allah and Muhammad is his Prophet.”

At first, other users took the news as a joke. After all, an active supporter of a notorious Dutch hater of Islam, Wilders, he repeatedly approved Islamophobic statements and public actions, and personally participated in them.

But Doorn, who now serves as a regional adviser at the City Hall in The Hague, personally confirmed his decision to practice Islam in an official letter to the city mayor.

Most recently, the politician filed a formal application to the mayor of the city to allow him to perform prayers obligatory for Muslims during his working hours.

“I can understand people are skeptic, especially that it is unexpected for many of them,” Doorn told Al-Jazeera English satellite channel.

“This is a very big decision, which I have not taken lightly.”

“In my own close circle people have known that I have been actively researching the Qur’an, Hadith, Sunnah and other writings for almost a year now,” he said.

“In addition, I have had numerous conversations with Muslims about the religion.”

Driven by his party’s anti-Islam discourse, Doorn decided to dig in for the truth about the religion himself.

“I have heard so many negative stories about Islam, but I am not a person who follows opinions of others without doing my own research,” he said. “Therefore, I have actually started to deepen my knowledge of Islam out of curiosity.”

The 46-year-old has continued on The Hague Council as an independent candidate since splitting from Wilders’s party. Doorn’s decision to embrace Islam has won mixed reactions in the Netherlands.

“According to some people I am a traitor, but according to most others I have actually made a very good decision,” he told Al-Jazeera.

“The reactions are generally positive and I also received quite some support via twitter.

“It feels good that people who do not know me personally have understanding of my situation and support me in my choice.”

Asked if he now regretted joining the Freedom Party, he replied: “I have learned that every experience in life has a purpose. However, with the knowledge I have today, I would have undoubtedly made a different choice.”

For the Dutch politician, finding Islam was finally guiding him to the true path in his life. “I have made mistakes in life as many others. From these mistakes I have learned a lot,” Doorn said.

“And by my conversion to Islam I have the feeling that I finally found my path. I realize that this is a new start and that I still have much to learn as well.”

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130422162428

Sunday, April 21, 2013

மஹாத்மா காந்தி ஒரு சாதி வெறியரா?

காந்தியின் காலகட்டத்தில் அறிவுஜீவிகள் சாதியமைப்பை உதறிவிட்டு ஐரோப்பாவில் இருந்ததுபோல வர்க்க அமைப்பை கொண்டுவரலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள். நேருகூட சாதி அமைப்பு பழையது, வர்க்க அமைப்பே நவீனமானது தவிர்க்கமுடியாதது என்று எண்ணினார். ஆனால் காந்தி அதை ஏற்கவில்லை. வர்க்க அமைப்புக்குச் சாதியமைப்பு எவ்வளவோ மேல் என்றார்.காந்தியின் நோக்கில், வர்க்க அமைப்பு மக்களை தனியர்களாக்குகிறது. சாதியமைப்பு மனிதர்களுக்கு அளிக்கும் இயல்பான குழுத்தன்மையும் அதன் பாதுகாப்பும் இல்லாமல் ஆகிறது. பொருளாதார அளவீடு மட்டுமே மனிதர்களை மதிப்பிட பயன்படுவதனால் செல்வத்துக்கான கழுத்தறுக்கும் போட்டியே வாழ்க்கையாக ஆகிவிடும். அதன்மூலம் நெறிகள் இல்லாமலாகி மானுட உறவுகள் சீரழியும் என்றார் காந்தி. ஐரோப்பிய வர்க்கப்பிரிவினை சாதிப்பிரிவினையை விட சுரண்டல் மிக்கது என நேரில் கண்டவர் அவர்.

இன்றும் இந்த நிலை உள்ளதை நாம் காணலாம். நமது நகரங்களில் வர்க்க அடிப்படையில் பகுக்கப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள். கிராமங்களில் சாதியடிப்படையில் பகுக்கப்பட்ட மனிதர்கள். நமது நகர மனிதனுக்கு இல்லாத சமூகப்பாதுகாப்பும் நாம் என்ற தன்னம்பிக்கையும் கிராமத்து மனிதனுக்கு இருக்கிறது.

மேலும் காந்தி உருவகித்த கிராமராஜ்யத்தில் பெரும் தொழில்நகரங்கள் இல்லை. ஆகவே அங்கே வர்க்க அடிபப்டையில் பிரிக்கப்பட்ட மக்களுக்கு இடமில்லை. மக்களுக்கிடையேயான பிரிவினை சாதியாகவே இருக்க இயலும்.

தான் உருவகித்த கிராமசுயராஜ்யத்தில் காந்தி ஏற்றதாழ்வு இல்லாத சாதியமைப்பு இருக்கலாம் என்று எண்ணினார். சாதி அந்தக் கிராம அமைப்பில் மக்கள் இயல்பான குழுக்களாக இயங்க உதவும் என நினைத்தார். இந்தியாவின் புராதனமான வளர்ச்சிப்போக்கு சாதியால் ஆனது என்பதனாலேயே அவர் அந்த முடிவுக்கு வந்தார்.

காந்தியின் அந்த முதல் நூல் எழுதப்பட்டு நூறுவருடம் ஆகிறது. ஆனால் அவரை அவர் சொல்வதென்ன என்று நோக்கி ஆராயும் போக்கு நம் நாட்டில் உருவாகவில்லை. அவரை ஐரோப்பியர்களின் கண்ணால் நோக்கி சாதிவெறியன் என்றோ மதவெறியன் என்றோ முத்திரை குத்தவே நாம் முயந்றிருக்கிறோம். நமது சாதிப்பற்றை அப்போது சட்டைப்பைக்குள் உள்ளே தள்ளிக்கொள்கிறோம்

இன்று, அவர் சொன்னதென்ன என்று அவரது நூல்கள் வழியாக ஆராய்ந்து ஐரோப்பிய ஆய்வாளர்கள் எழுதும்போது அந்த நூல்களை வாசித்துவிட்டு நம்மில் சிலர் ‘ஆமாம், காந்தி பழமைவாதியல்ல பின் நவீனத்துவர், அவர் சொன்னது ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வின் ஒரு முடிவையே’ என்று அங்கீகரிக்கிறோம். நம் தாழ்வுணர்ச்சியில் இருந்து வெளிவர இன்னும் நம்மால் இன்னும் முடியவில்லை

*

காந்திய ஆய்வாளரான மார்க் லிண்ட்லே [Prof. Dr. Mark Lindley ] காந்தியைப்பற்றிய ஆய்வுகளைச் செய்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர். இசைஆய்வாளரும் இந்திய வரலாற்றாசிரியருமான மார்க் லிண்ட்லே அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சியில் 1937ல் பிறந்தார். ஹார்வார்ட் பல்கலையில் சமூகவியல் கற்றார். கொலம்பியா பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். பல்வேறு பல்கலைகளில் ஆய்வுப்பேராசிரியராக பணியாற்றினார்.

லிண்ட்லே காந்தியின் எழுத்துக்களை முழுமையாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். காந்தி, நாம் அறிந்த வகையிலேயே [ Gandhi as We Have Known Him] என்ற நூல் முக்கியமானது. ஜெ.சி.குமரப்பாவின் வாழ்க்கை வரலாற்றையும், கோராவின் வாழ்க்கை வரலாற்றையும் நூல்களாக எழுதியிருக்கிறார். ஒரு கட்டுரையில் லிண்ட்லே காந்தி சாதியைப்பற்றி கொண்டிருந்த கருத்துக்களை தொகுத்து முன்வைக்கிறார்.

1920ல் காந்தி எழுதினார் :”சாதியமைப்பு இந்துமதத்தை அழிவிலிருந்து காப்பாற்றியது என நான் நினைக்கிறேன். ஆனால் எல்லா நிறுவனங்களையும்போல அதுவும் சீரழிந்துவிட்டது. நால்வருணம் என்ற பிரிவினை அடிபப்டையானது இயல்பானது தேவையானது என்றே எண்ணுகிறேன். எண்ணிக்கையிலடங்காத துணைச்சாதிகள் சிலசமயம் வசதியானவை சிலசமயம் தடையாக ஆகின்றவை. அவை எந்த அளவு சீக்கிரம் இணையுமோ அந்த அளவுக்கு நல்லது.

ஒருமுறை என்னைப் பேட்டிகண்ட ஒருவர் கேட்டார் நாம் இந்திய சாதியமைப்பை உதறிவிட்டு ஐரோப்பாவின் வர்க்க அமைப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று “அதன்மூலம் சாதியமைப்பில் உள்ள பிறப்பு அடிப்படையை களையலாமென அவர் எண்ணுகிறார் என்று நான் ஊகிக்கிறேன் பிறப்பின் அடிபப்டையிலான அடையாளம் என்பது எப்போதைக்கும் உரியது என்றும் அதை மாற்ற நினைப்பதென்பது பெரும் குழப்பத்துக்கே இட்டுச்செல்லும் என்றும் எனக்குப் படுகிறது.”

1920ல் காந்தி மேலும் எழுதினார். ”சாதியமைப்பின் அழகு என்னவென்றால் அது செல்வத்தின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை என்பதே. வரலாறு காட்டுவதைப்போல பணம் என்பது மிகப்பெரிய ஓர் அழிவுச்சக்திதான். சாதி என்பது குடும்பம் என்ற விதியின் நீட்சிதான். பாரம்பரியம் ரத்தஉறவு ஆகியவற்றின் அடிப்படையில் அவை நிர்வகிக்கப்படுகின்றன. மேலைநாட்டு அறிவியலறிஞர்கள் பாரம்பரியம் என்பது ஒரு பிரமைதான் என்றும் சூழல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றும் காட்ட கடுமையாக முயன்றுவருகிறார்கள். ஆனால் பலநாடுகளில் உள்ள அனுபவம் என்பது அந்த முடிவுகளுக்கு நேர் எதிரானதாகவே செல்கிறது. ஆனால் சூழலே எல்லாம் என்ற அவர்களின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் கூட வர்க்க அமைப்பைவிட சாதியமைப்பில்தான் சூழலை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் எளிது என்று சொல்லலாம்.

சமூக வாழ்க்கையில் மாற்றம் என்பது மிகமிக மெல்லத்தான் வரமுடியும் என நாம் அறிவோம். ஆகவே இன்றைய சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சாதியானது புதிய குழுவமைப்புகளாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் மேகங்களின் வடிவம் மாறுவதுபோல எளிதாகவும் இயல்பாகவும் நடைபெறுகின்றன. இதைவிட மேலான மானுட பரிணாமத்தை கற்பனை செய்வது கடினம்

சாதியமைப்பு மேல் கீழ் என்ற பேதத்தைச் சுட்டுவதில்லை. அது வாழ்க்கைநோக்கில் உள்ள வேறுபாடுகளையும் அதற்குச் சமானமான வாழ்க்கை அமைப்புகளையும் அடையாளம் காட்டுகிறது அவ்வளவுதான். ஆனால் சாதியமைப்பில் ஒரு சமூக அடுக்குமுறை உருவாகி வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அது பிராமணர்களின் உருவாக்கம் என எவரும் சொல்லிவிட முடியாது. அனைவருக்கும் ஒரே வாழ்க்கை லட்சியம் உருவாகி வரும்போது ஒரு சமூகஅடுக்கு உருவாவது தடுக்கமுடியாத ஒன்று. காரணம் அந்த இலட்சியத்தை எல்லா சாதியும் ஒரே அளவில் உள்வாங்கிக்கொள்ள முடியாது”

இவ்வாறு காந்தி தன்னுடைய ஆரம்பகாலத்தில் சாதியை விளக்குகிறார். அதற்கு எதிரான கருத்துக்களுடன் வாதிடுகிறார். ஆனால் காந்தியின் குரல் மெல்ல மெல்ல மாறுபடுவதை மேற்கோள்கள் வழியாகவே மார்க் லிண்ட்லே காட்டுகிறார்.

1925ல் காந்தி எழுதினார் ” ஒருவர் பிற வருணத்தவர்களால் அவர்களின் பாரம்பரியமாக உருவாக்கப்பட்ட அறிவியல் கலை ஆகிய துறைகளின் அறிவை கற்றறிவதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் ஒருவன் அவனுடைய உயிர்வாழ்தலுக்கான தொழிலாக அவனது பெற்றோர் பாரம்பரியமாகச் செய்த அவனது வருணத்தின் அதே தொழிலையே செய்வதே நல்லது”

1925ல் காந்தி மேலும் எழுதினார் ”என்னைப்பொறுத்தவரை மேல் கீழ் என்ற பேச்சுக்கே இடமில்லை. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு பிற வருணத்தவரை குனிந்து நோக்கும் ஒரு பிராமணன் பிராமணனே அல்ல. அவன் முதலிடத்தில் இருக்கிறான் என்றால் ஆன்மீகமான சேவைக்கான உரிமை அவனுக்கு அதிகமாக இருக்கிறது என்பதனாலேயே”

இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன? காந்தி இந்தியாவுக்கு திரும்பிவந்தது இக்காலத்திலேயே. ரயிலில் இந்தியாவெங்கும் விரிவான ஒரு சுற்றுப்பயணம் செய்தார் அவர். இத்தருணத்தில் அவருக்கு ஒரு சமூகமாக இந்தியாவை தொகுக்கவேண்டியதன் அவசியம் புரிந்திருக்கக் கூடும். சாதி இந்தியாவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத தனி அறைகளாக பிரித்துவிடக்கூடும் என்று அவர் உணர்ந்தார் என தோன்றுகிறது. ஆகவே சாதி என்ற பிரிவினைக்கு மேலாக ஒரு பொதுவான சமத்துவத்தை உருவாக்கியாகவேண்டும் என்று அவருக்குப் பட்டிருக்கலாம்

மேலும் தன் இந்தியப் பயணங்களில் 1923ல் காந்தி நாராயணகுருவைச் சந்தித்தார். காந்தி நாராயணகுருவுடனான தன் சந்திப்பைப் பற்றி புகழ்ந்து சொல்லியிருக்கிறார். சாதி தேவைதான் என்ற தன் கருத்தை காந்தி நாராயணகுருவிடம் சொல்ல நாராயணகுரு அதை திட்டவட்டமாக மறுத்து பேசியிருக்கிறார். அதன்பின் அவர்கள் நடுவே சற்று அந்தரங்கமான உரையாடல் நடந்திருக்கிறது. நாராயணகுருவின் கருத்தை தான் பரிசீலனைசெய்வதாக காந்தி சொல்லியிருக்கிறார்.

மேலும், நாராயணகுருவிடம் காந்தி தீண்டாமையை நியாயப்படுத்தி இந்து ஞானமரபின் மூலநூல்களில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கின்றனவா என்று கேட்டபோது நீதி நூல்களான ஸ்மிருதிகள் காலம் தோறும் மாறக்கூடியவை, ஞானநூல்களான சுருதிகள் அழியாதவை. சுருதிகளில் அப்படி ஏதும் சொல்லப்படவில்லை என குரு பதில் சொல்லியிருக்கிறார். ஒரு தீண்டத்தகாத சாதியினனாகிய நாராயணகுருவின் அபாரமான சம்ஸ்கிருத பயிற்சியும் இந்து மெய்யியலில் உள்ள ஞானமும் காந்தியின் மனதை ஆழமாகப் பாதித்திருக்கலாம்.

1931ல் காந்தி அம்பேத்காரைச் சந்திக்கிறார். காந்தியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு ஆராய்ந்த டி.ஆர்.நாகராஜ் காந்தியும் அம்பேத்காரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு வாதிட்டு ஒருவரை ஒருவர் மாற்றியமைத்த இரு சக்திகளாக காண்கிறார். [The Flaming Feet: A Study of the Dalit Movement, D R Nagaraj ] இந்த சிந்தனை இன்றைய ஆய்வாளர் நடுவே மிகவும் வலுப்பெற்று வரக்கூடிய ஒன்றாகும். மார்க் லிண்ட்லேயும் அவ்வாறே எண்ணுகிறார்.

காந்திக்கும் அம்பேத்காருக்கும் நடுவே காந்தியின் இறப்பு வரை 17 வருடம் ஓய்வில்லாமல் விவாதம் நடந்திருக்கிறது. சில சமயம் அம்பேத்கார் சினம் கொண்டு அத்து மீறி பேசியிருக்கிறார். ஆனால் அவ்வாறு சினம் கொள்வதற்கான தார்மீகமான ஒரு உரிமை அம்பேத்காருக்கு இருப்பதாகவே மீண்டும் மீண்டும் காந்தி எண்ணினார். ஆகவே காந்தியின் குரல் பொறுமையுடன் மீள மீள அம்பேத்காருடன் உரையாடுவதாகவே இருக்கிறது.

இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். காந்தி பிடிவாதம் மிக்கவர் என்ற ஒரு நம்பிக்கை பலரிடம் உண்டு. அது உண்மை. சாதாரணமாக காந்தி தன் கருத்துக்களை மாற்றிக்கொள்பவரல்ல. ஏன் என்றால் மிக விரிவான ஆராய்ச்சிகள் மூலம் தனக்குத்தானே நிரூபித்துக்கொண்டவற்றை உறுதியாக நம்பக்கூடியவர் அவர். அவற்றை ஒரு ராஜதந்திரமாகவோ பிறர் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவோ மாற்றிக்கொள்ளக்கூடியவர் அல்ல. சொல்லப்போனால் பிறர் தன்னைப்பற்றி என்ன நினைக்கவேண்டும் என அவர் எப்போதுமே கவலைப்பட்டதில்லை.

ஆனால் காந்தி அவரது கருத்துக்களுடன் அவரளவுக்கே ஆற்றலுடன் மோதியவர்களை கூர்ந்து கவனித்தார். அவர்களுடன் நுட்பமாக விவாதித்தார். காந்தியைப் போன்ற ஒருவரிடம் விவாதிக்கும் மூளைத்திராணியும் ஆன்மபலமும் அம்பேத்காருக்கு இருந்தது. அது நேருவுக்கு இல்லை. ஆகவேதான் காந்தி நேருவால் கொஞ்சம்கூட மாற்றப்படவில்லை. அம்பேத்காரால் தலைகீழான மாற்றத்தை அடைந்தார்.குறிப்பாக சாதி விஷயத்தில்.

1931ல் காந்தி எழுதினார் ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் இந்த சமமின்மைக்கு நடுவேதான் அந்த சமத்துவம் உள்ளது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். எந்த ஒரு மனிதனும் சகமனிதனைவிட மேலானவனாக எண்ணிக்கொண்டானென்றால் அது கடவுளுக்கு எதிரான குற்றமாகும். ஆகவே சாதியமைப்பானது மனிதர்களிடையே தரவேற்றுமைகளை சுட்டும்வரை அது ஒரு மாபெரும் தீமையே ஆகும்.

நான் பாரம்பரியமாக தொழில்களைப் பங்கீடு செய்யும் வருண அமைப்பிலும் நம்பிக்கைகொள்ளவில்லை. நான்கு வருணங்கள் என்பவை நான்கு பொதுவான மானுடச்செயல்பாடுகளைச் சுட்டுகின்றன. அறிவை அடைதல், எளியோரைக் காத்தல், தொழிலையும் வணிகத்தையும் செய்தல், உடலால் பிறருக்குச் சேவைசெய்தல். இந்த பணிகள் எல்லா மானுடருக்கும் பொதுவானவை. ஆனால் இந்துஞானம் அவற்றை நம்முடைய இருப்பின் ஆதார விதிகளாக அடையாளம் கண்டுகொண்டு சமூக உறவுகளையும் நடத்தைகளையும் ஒழுங்குபடுத்த பயன்படுத்திக்கொண்டது…

…ஆனால் என்னுடைய வரையறையின்படி இப்போதைய இந்துமரபில் வருணப்பிரிவினை செயல்படவில்லை. பிராமணர்கள் எனபப்டுபவர்கள் அறிவை அடைதலை விட்டுவிட்டார்கள். பிறதொழில்களை அவர்கள் செய்கிறார்கள். எல்லா வர்ணத்துக்கும் கிட்டத்தட்ட இது பொருந்தும்”

1932ல் காந்தி எழுதினார் ”பண்டைய முறை எதுவாக இருந்தாலும் எந்த ஒரு மனிதனும் தன்னை உயர்குலத்தவன் என்று கூறிக்கொண்டு வாழ்ந்துவிடமுடியாது. சமூகம் அத்தகைய உரிமைபாராட்டல்களை இனிமேல் அங்கீகரிக்காது. உலகம் விழிப்புகொண்டுவிட்டது…”

காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையேயான உரையாடலே காந்தியை தொடர்ச்சியாக சாதியையும் வர்ணத்தையும் மறுபரிசீலனைசெய்ய வைத்தது. சாதி என்பது திட்டமிட்டு மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதை காந்தி ஏற்கவில்லை. சாதி அமைப்புக்கு அப்போதும் மக்களை சிறிய சமூக அமைப்பாக திரட்டி வலிமைப்படுத்தும் சக்தி உண்டு என்றே அவர் எண்ணினார். ஆனால் அந்த அமைப்பின் பிற தீமைகளை அவர் மேலதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க ஆரம்பித்தார்.

காந்தியின் இந்த மனமாற்றத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றுண்டு. காந்தி சாதியமைப்பின் சாதக அம்சங்களைக் கண்டபோது அவர் கிட்டத்தட்ட ஒரு சமூக அறிவியலாளனின் ஆய்வுப்பார்வையை மட்டுமே கொண்டிருந்தார். ஆனால் சாதியின் அடக்குமுறைக் குணத்தை அவர் அடையாளம் கண்டபோது கிட்டத்தட்ட காங்கிரஸ் அவரது கையில் இருந்தது. காங்கிரசுக்குள் இருந்த உயர்சாதிவெறியர்களை அவர் அன்றாடம் சந்தித்துவந்தார். காங்கிரசுக்குள் அவர்களே அவரது முக்கியமான எதிரிகளாக விளங்கினார்கள். சாதி என்பது எத்தனை சாதகமான பங்களிப்பு கொண்டதாக இருந்தாலும் அது ஓர் அடைக்குமுறைச் சாதனம் என்று காந்தி இக்காலத்தில்தான் தெளிவடைந்தார்.

சொல்லபோனால் காந்தி காங்கிரஸின் உயர்சாதிப்பின்புலத்துக்கு எதிராக அம்பேத்காரை நோக்கி நகர்ந்தார். அந்த நகர்வு அவரது முதுமையில் நிகழ்ந்ததை லிண்ட்லே ஆச்சரியத்துடன் குறிப்பிடுகிறார். பொதுவாக கருத்துக்கள் கெட்டிப்படும் காலம் அந்த வயது. ஆனால் காந்தி அவரது வாழ்நாள் முழுக்க அவர் கொண்டிருந்த கருத்துநிலையை தலைகீழாக மாற்றிக்கொண்டார்.

வருண – சாதி அமைப்பின் வரலாற்றுப்பணி என்னவாக இருந்தாலும், அது இப்போதும் முக்கியமான நிறுவனமாக இருந்தாலும் அது சென்ற காலகட்டத்தைச் சேர்ந்தது என்றும் நவீனகாலத்தில் அது சமத்துவத்துக்கு எதிரான உணர்ச்சிகளையே அதிகம் கொண்டிருகிறது என்றும் மக்களில் கணிசமானபேரை அது பிறருக்கு கீழே வைத்திருக்கிறது என்றும் காந்தி அறிந்தார். தான் உருவாக்க எண்ணிய கிராம சுயராஜ்யத்தில் அகிம்சை தழைக்க சமத்துவம் அவசியம் என்றும் அதற்கு சாதி அழியவேண்டும் என்றும் உணர்ந்தார்.

அவ்வாறு தன் தரப்பை மாற்றிக்கொள்வதென்பது காந்தியைப் பொறுத்தவரை தன் மொத்த வாழ்க்கையையும் அதற்கேற்ப மாற்றிக்கொள்வதே. மேடையில் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதர் அல்ல அவர். சற்றும் தயங்காமல் காந்தி தன் கருத்துக்களை எழுதினார். ஆனால் இக்காலத்தில்கூட அம்பேத்கார் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், உயர்தொழில்நுட்பம் போன்ற நவீனத்துவ கருத்துக்கள் கொண்டிருந்ததை காந்தி திட்டவட்டமாக மறுத்தார்.

1935ல் காந்தி எழுதினார் ”சாதி அழிய வேண்டும். நடைமுறையில் சாஸ்திரங்கள் சொல்லும் வருணாசிரம தர்மம் இப்போது எங்குமில்லை. இன்றைய சாதிமுறை என்பது சாஸ்திரங்கள் சொல்லும் இலட்சிய வருணாசிரமதர்மத்துக்கு நேர் எதிரான ஒன்று. எத்தனை வேகமாக பொதுமக்களின் பிரக்ஞையில் இருந்து அதை ஒழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அது நல்லது

சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”

சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். மார்க் லிண்ட்லே கோராவுக்கும் காந்திக்கும் இடையேயான உறவைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார்.அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். அவரை தன் வழித்தோன்றலாக எண்ணியது மட்டுமல்ல சாதி, வருண அமைப்பை முள்காடு என்று வருணித்த கோராவின் கருத்தை தானும் முழுமையாகவே ஏற்றுக்கொண்டார்

பின்னர் காந்தி அவரது பழைய கருத்தான கிராமசுயராஜ்யத்தின் சாதி அமைப்பை முழுக்க மாற்றிக்கொண்டார். இனிமேல் சாதி இல்லை. அது அடக்குமுறைக்கான கருவி. அது அழிய வேண்டும். வருணத்தைப்பொறுத்தவரை நவீன காலகட்டத்தில் ஒரே வருணம்தான் இருக்க வேண்டும், அது சூத்திர வருணம் மட்டுமே. ஒவ்வொருவரும் உடலால் உழைக்கும் சூத்திரனாக மாறியாக வேண்டும். எந்தவேலை செய்தாலும் ஒருவர் கண்டிப்பாக உடலுழைப்பில் ஈடுபட்டாகவேண்டும் என்றார் காந்தி. அவரது இலட்சிய கிராமசுயராஜ்யம் தங்களை உடலுழைப்பு மூலம் சூத்திரர்களாக ஆக்கிக்கொண்ட மக்களால் மட்டுமே ஆனதாக இருக்கும் என்றார்.

அத்தனைபேரும் உடலால் உழைத்தாகவேண்டும் என்ற காந்தியக் கோட்பாட்டை மேடை சோஷலிசம் பேசிய சொகுசுக்காரரான நேரு முதலியோர் எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று சொல்லவேண்டியதில்லை.

1946 ல் காந்தி ஒரு அமெரிக்க நிருபரிடம் வர்க்கமற்ற சாதியற்ற ஒரு இந்திய சமூகத்தை உருவாகக் முயல்வதாக்ச் சொன்னார். ஒரே சாதிமட்டும் இருக்கும் ஒரு நிலை வரவேண்டும் என்றும் பிராமணர்கள் தலித்துக்களை மணம்முடிக்கவேண்டும் என்றும் சொன்ன காந்தி சமத்துவமின்மை வன்முறையை உருவாக்கும், சமத்துவமே அகிம்சையை உருவாக்கும் என்றார். அந்தக் காலகட்டம் ஐம்பது வருடங்களுக்குள் வந்துவிடும் என்று தன் நம்பிக்கையை அவர் முன்வைத்தார்

ஆரம்பத்தில் கலப்புத்திருமணங்களை ஏற்க மறுத்த காந்தி பின்னர் கலப்புத்திருமணங்களை முழுக்க ஆதரித்தார். கடைசி காலத்தில் கலப்புத்திருமணங்களை மட்டுமே அவர் ஆதரித்தார். தன் ஆதரவாளர்கள் கலப்புத்திருமணம் செய்தாகவேண்டும் என்றும் அதன்மூலம் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக உயர்சாதியினர் தலித் சாதியினரை மணந்துகொள்வதை ஒரு முக்கியமான சமூகச்செயல்பாடாக காந்தி வலியுறுத்தினார்.

1945 ல் காந்தி எழுதினார். ”பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்”

1946ல் காந்தியிடம் பேட்டியாளர் கேட்டார். ”கல்விகற்ற ஹரிஜனப் பெண்கள் விரலால் எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கிறார்கள். அவர்கள் உயர்சாதி ஆண்களை திருமணம் செய்துகொண்டால் கண்டிப்பாக தங்கள் சாதியை விட்டு துண்டிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் சொந்த சாதிக்குச் சேவை செய்யமுடியாமல் ஆகும். அவ்வாறு திருமணம் செய்வதென்றால் அந்த ஜோடி தங்கள் வாழ்க்கையை ஹரிஜன மக்களுக்கான சேவைக்கே அர்ப்பணிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் செய்யலாம்”

அதற்கு காந்தி பதில் அளித்தார். ” ஹரிஜனப்பெண்கள் உயர்சாதி ஆண்களை திருமணம் செய்துகொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால் அது சிறப்பானது என்று சொல்ல கொஞ்சம் தயங்குகிறேன். அது ஆண்களை விட பெண்கள் குறைவானவர்கள் என்று காட்டுவது போல ஆகிவிடும். இப்போதெல்லாம் அந்தவகையான தாழ்வுச்சிக்கல் இருப்பதை நான் அறிவேன். ஆகவே ஹரிஜன பெண் உயர்சாதி ஆணை மணம்செய்வதைவிட உயர்சாதி பெண் ஹரிஜன ஆணை மணம்செய்வது சிறந்தது என்று நான் எண்ணுகிறேன். என்னால் முடிந்தால் என் பேச்சைக்கேட்கும் எல்லா உயர்சாதிப்பெண்களையும் ஹரிஜன ஆண்களை திருமணம் செய்துகொள்ளும்படிச் சொல்வேன்.”

தன் கொள்கையை திட்டவட்டமாக வெளியிட்டது மட்டுமல்ல அதை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் செய்தார் காந்தி. காந்தியால் உந்தபப்ட்ட ஹரிஜன- உயர்சாதி மணங்கள் அக்காலகட்டத்தில் ஏராளமாக நடைபெற்றன. தமிழகத்தின் புகழ்பெற்ற காந்தியவாதிகளான கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதியினர்கூட அவ்வகையான தம்பதியினர்தான்.

கலப்புத்திருமணத்தை காங்கிரஸ் தன் முதன்மை சமூகத்திட்டமாக கொண்டுவருமா என்று 1946ல் ஒரு நிருபரின் கேள்விக்கு தீண்டாமை ஒழிப்பு, சமபந்தி போஜனம், ஹரிஜனங்களுக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றில் காங்கிரஸ் ஒத்த கருத்து கொண்டிருக்கிறது என்றும் விரைவிலேயே கலப்புமணத்தை நோக்கியும் காங்கிரஸை கொண்டுவந்துவிடலாம் என்றும் காந்தி சொன்னார்.

அது காங்கிரஸை அவர் தவறாகப் புரிந்துகொண்டு சொன்னது. அப்போது இந்திய சுதந்திரம் நெருங்கிவிட்டிருந்தது. அதிகாரக் கனவுகள் ஆரம்பமாகிவிட்டிருந்தன. காந்தியின் சமூகத்திட்டங்கள் நேருவின் காங்கிரஸ¤க்கு உவப்பாக இருக்கவில்லை. காங்கிரஸ் அரசியல் கட்சியாகச் செயல்படக்கூடாது என்றும் கலப்புத்திருமணம் முதலிய சாதி ஒழிப்புச் செயல்பாடுகளில் அது ஈடுபடவேண்டும் என்றும் காந்தி வாதிட்டார். கிராம சுயராஜ்யம் அமைக்க வேண்டும் என்று கோரினார். நேரு காந்தியை சந்திப்பதையே தவிர்த்தார். காந்தி கொல்லப்படும் வரை.

ஒருவேளை மத ஒற்றுமைக்காக காந்தி உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றால் சாதி ஒழிப்புக்காக அவர் உயிர்தியாகம் செய்ய நேரிட்டிருக்கும். அவர் சென்றுகொண்டிருந்த திசை அது.

அன்புள்ள ஜெபமாணிக்கம், தயவுசெய்து யோசித்துப்பாருங்கள். இந்த வரலாற்றுப்பின்னணியில் நீங்கள் குறிப்பிட்ட ஆரம்பகாலகட்டத்து உதிரி மேற்கோள்கள் மூலம் காந்தியை ஒரு சாதி வெறியராக முத்திரை குத்துவதனால் யாருக்கு என்ன லாபம்? அந்தப்பொய்யை நாம் சுமந்துகொண்டு காழ்ப்பை வளர்த்துக் கொள்வதனால் நாம் அடைவது என்ன?

நம்மை இந்த குரூரமான , அநீதியான பொய்யை நம்பச்செய்யும் கும்பல்களுக்கு அதனால் பெரும் லாபம் உள்ளது என உணருங்கள். காந்தி இந்த தேசத்தின் நீதியுணர்வின் அடையாளமாக நம் மனதில் இருக்கிறார். அந்த பிம்பத்தை இவ்வாறு திட்டமிட்டு உடைப்பதன் வழியாக இந்த தேசத்தின் அடித்தளமாக இருக்கும் இலட்சியங்கள் மேல் ஆழமான ஐயம் உருவாக்கப்படுகிறது. அதன் விளைவாக இந்த தேசம் பலவீனப்படுகிறது. சமூக மோதல்கள் உருவாகின்றன. நாம் போரிட்டு அழிய வாய்ப்பிருக்கிறது. அந்த உதிரத்தைக் குடிக்க எப்போதும் எங்கோ பலர் காத்திருக்கிறார்கள்.

நன்றி: ஜெமோ

Saturday, April 20, 2013

ரியாத்தில் புதிய மருத்துவ மனை உதயம்!மன்னர் அப்துல்லா 500 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவ மனையை வரும் ஏப்ரல் 28 ந்தேதி திறந்து வைக்கிறார். இந்த மருத்துவ மனைக்கு முகமது பின் அப்துல் அஜீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இம் மருத்துவ மனையைக் கட்டி முடிக்க 455 மில்லியன் ரியால் செலவு பிடித்துள்ளது. 120000 ஸ்கொயர் மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை விஸ்தாரமாக உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ளது.

ஐந்து அடுக்கு மாடி வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவ மனையில் 15 ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன. ரேடியாலஜி யூனிட், மம்மோக்ராம் ஸ்கிரீன் செக்ஷன், தீப்புண்களுக்கான விசேஷ பிரிவு, இரத்த வங்கி, பிஸியோதெரபி பிரிவு, அவசர சிகிச்சைக்காக 102 படுக்கைகள் கொண்ட தனி பிரிவு, என்று அனைத்து வசதிகளையும் ஒரு சேராக கட்டிமுடித்துள்ளனர். அமெரிக்க மருத்துவ மனைகளின் மாதிரியைக் கொண்டு இந்த புதிய மருத்துவ மனை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மனையின் கீழ்ப் பகுதி அலுவலகங்கள், மருத்துவ குறிப்புகள் அடங்கிய அறை, நூலகம், ரேடியாலஜி பிரிவு, குழந்கைள் பிரிவு, உடலுறவு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பிரிவு, பல் மருத்துவம், நீரிழிவு, சிறுநீரக, தோல் நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் என்று தனித் தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்பட தயார் நிலையில் உள்ளது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு மருத்துவ மனையை திறக்க மன்னர் அப்துல்லா வருவதால் வழிகள் அடைக்கப்படாது. வழி நெடுக தோரணங்கள் இல்லை. 'வாழ்க ஒழிக' கோஷம் இல்லை. இதனை அறிவுறுத்த பல லட்சம் செலவில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படவில்லை. மன்னர் வருவதும தெரியாது: அவர் திறந்து வைத்து விட்டு போவதும் தெரியாது. அவர் காருக்கு முன்னால் மூன்று நான்கு கார்களும் பின்னால் மூன்று நான்கு கார்களும் ஒரே கருப்பு நிற கலரில் பாதுகாப்புக்காக செல்லும். இதைத்தவிர வேறு படாடோபங்கள் எதையும் என்னால் காண முடியவில்லை.

அதே நேரம் நம் தாய் தமிழ் மண்ணில் இத்தகைய ஒரு மருத்துவ மனை திறந்து வைக்கப்பட்டால் ஆளும் கட்சியினர் பண்ணும் கூத்துக்கள் எந்த அளவு சாமான்ய மனிதனை பாடாய்ப்படுத்தும் என்பதை இந்த செயதியை படிக்கும் போது நினைத்துக் கொண்டேன்.

உடனே அம்மா விசுவாசிகளான ரத்தத்தின் ரத்தங்கள் என்மேல் கோபப்பட வேண்டாம். நம்ம தாத்தா கலைஞர் திறந்து வைத்தாலும் உடன் பிறப்புகளும் இதே அடாவடியைத்தான் செய்யப் போகின்றனர்.. நாம் எல்லாவற்றிற்கும் பழகிக் கொண்டு விட்டோம். வேறு வழியில்லை..... :-)

தகவல் உதவி: அரப் நியூஸ்

---------------------------------------------------------


இந்தியாவில், தலித் மக்களுக்கு எதிரான சாதி அடக்குமுறையை கண்டிக்கும் தீர்மானம், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது. தலித் ஒடுக்குமுறைக்கு எதிராக, இந்திய அரசை கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டமை, ஐரோப்பிய பாராளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். தீர்மானத்தையொட்டி நடந்த விவாதத்தில், "மனித உரிமைகள் சம்பந்தமான சட்டங்களை பொருட்படுத்தாமைக்காக", இந்திய அரசு கடுமையாக கண்டிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநிலத்தில், தலித் மக்களின் கிராமங்கள் தாக்கப்பட்டு, 1500 பேர் வீடிழந்த சம்பவம், இந்த தீர்மானத்தில் முக்கியமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில், தலித் பெண்கள், உயர்சாதி காடையர்களினால் பாலியல் வல்லுறவுக்குள்ளான கொடுமைகளும் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும், இது போன்ற அக்கிரமங்களையும், அநீதியையும், இனியும் ஐரோப்பிய ஒன்றியம் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை என்பதை இந்திய அரசுக்கு எச்சரிக்கும் வண்ணம், அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில், இந்தியாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக இங்கே வாசிக்கலாம்:

European Parliament resolution of 13 December 2012 on caste discrimination in India
http://www.europarl.europa.eu/sides/getDoc.do?type=TA&language=EN&reference=P7-TA-2012-512

Thanks Kalaiy Arasan

Thursday, April 18, 2013

'புதிய ஜனநாயகம்' பத்திரிக்கையில் மோடி சம்பந்தமாக......

மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டதைக் குறித்து புதிய ஜனநாயகம் இதழில் 2005ம் ஆண்டு வெளி வந்த கட்டுரை.

“மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்” என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.

“மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது” என மறுத்துவிட்டது அமெரிக்க அரசு.

குஜராத்தில் கொத்துக் கொத்தாக முசுலீம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுது விசுவ இந்து பரிசத்தின் குஜராத் மாநிலத் தலைவர் கேசவ்ராம் காசிராம் சாஸ்திரி “ஆம். நாங்கள் திட்டமிட்டுத்தான் கலவரம் நடத்தினோம்” எனப் பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தார். இந்த இனப்படுகொலையின் தளபதி நரேந்திர மோடிதான் என்பதை கலவரத்துக்குப் பின் கோவாவில் நடந்த பா.ஜ.க.வின் உயர்மட்டக் கூட்டம் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நம் கண் முன் நடந்தவை.

இந்த சமீபத்திய வரலாற்று உண்மைகளை முசுலீம் பிணங்களோடு போட்டுப் புதைத்துவிட்டு “எந்த நிரூபணமும் இல்லாமல் அரசியல் கட்சிகளும் மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் பத்திரிகை உலகமும் நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரங்களைப் பின் நின்று நடத்தி அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர் என்ற முத்திரையைக் குத்தி விட்டன… அமெரிக்காவிற்கு இந்த முத்திரை பயன்பட்டது…. அமெரிக்க நடவடிக்கை கண்டிக்கத் தகுந்தது” எனப் பொய்யைக் கக்கி மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார் துக்ளக் “சோ”.

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலோ இன்னும் ஒருபடி மேலே போய் மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை “இந்திய அரசியல் சாசனத்திற்கும் இந்திய மக்களுக்கும் நேர்ந்துவிட்ட அவமானமாகவும்; இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்காகவும்” ஊதிப் பெருக்குகிறது.

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டசு அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் “சோதனை” என்ற பெயரில் துகில் உரியப்பட்டார். ஒரு கிறித்தவ இந்திய அமைச்சருக்கு நேர்ந்த அவமானத்தை இந்திய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்த அவமானமாக பா.ஜ.க. அரசு கருதவில்லை. மாறாக “அது அமெரிக்காவின் சட்டம்” என்று சொல்லி அவமானத்தைச் சகித்துக் கொண்டார்கள்.

உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பின் இந்தியா உள்ளிட்ட சில ஏழை ஆசிய கண்டத்து நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் அனைவரும் தங்களின் கைரேகைகளை அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இரவு நேரத்தில் சந்தேகத்தில் பிடித்துக் கொள்ளும் நபர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்து கொள்கிறார்களே அதற்கும் அமெரிக்காவின் சட்டத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது.

இந்திய நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தீவிரவாதியாகச் சந்தேகிக்கும் இந்தச் சட்டத்தை பா.ஜ.க. அவமானமாகப் பார்க்கவில்லை. ஆனால் இந்துமத பயங்கரவாதி மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை அரசியல் சாசனத்தின் அவமானமாக ஒப்பிடுகிறது. அப்படியென்றால் மோடி என்ற கேடியைக் காப்பாற்றுவதுதான் அரசியல் சாசனத்தின் வேலையா?

இந்தக் கேள்விக்கு பா.ஜ.க. மட்டுமல்ல மதச்சார்பற்ற காங்கிரசும் கூட “ஆம்” என்று தான் பதில் அளிக்கிறது. “மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரி; குஜராத் கலவரங்களுக்காக அவர் எந்தவொரு இந்திய நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை; எனவே அவருக்கு விசா மறுக்கப்பட்டதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என இந்திய அரசின் சார்பாகவே அமெரிக்காவிடம் வேண்டுகிறார்கள்.

2000 முசுலீம்களைக் கொன்ற மோடி சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஓட்டாண்டித்தனத்தைத் தான் காட்டுகிறது.

“இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. இதைத்தான் பா.ஜ.க. இந்துத்துவா என்கிறது.

ராமர் கோவில் கட்டுவதற்காகச் செதுக்கப்பட்ட தூண்களை பாபர் மசூதி வளாகத்தில் வைத்துப் பூசை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் செய்தபொழுது உச்சநீதி மன்றம் அப்பூசையைத் தடை செய்யவில்லை. மாறாக வளாகத்திற்கு வெளியே பூசை நடத்திக் கொள்ளுங்கள் என்ற சந்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி பலவிதங்களில் ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் நீதிமன்றங்கள் மோடியைத் தண்டிக்க வேண்டும் என்றால் சூரியன் மேற்கேதான் உதிக்க வேண்டும். மோடி தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் அவமானமேயொழிய அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டிருப்பது அவமானத்திற்குரியதல்ல! ···

“சவூதி அரேபியா ஈரானில் எல்லாம் மதசார்பு ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான் வங்காள தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். அந்நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு விசாவை மறுக்காத அமெரிக்கா மோடிக்கு மட்டும் மறுத்திருக்கிறது” என அமெரிக்காவின் இரட்டை வேடத்தை பா.ஜ.க. அம்பலப்படுத்துகிறது.

அமெரிக்காவின் இந்த இரட்டைவேடத்தினால் பா.ஜ.க.வும்தான் பலன் அடைந்திருக்கிறது. கொசோவாவில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டதைச் சாக்காக வைத்து யுகோஸ்லாவியா நாட்டின் மீது அமெரிக்கா போரே தொடுத்தது. அதே அமெரிக்கா குஜராத்தில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை. இதற்குக் காரணம் குஜராத் கலவரம் நடந்தபொழுது ஆட்சியில் இருந்த வாஜ்பாயி அரசுக்கும் ஜார்ஜ் புஷ்ஷூக்கும் இடையே இருந்த நெருக்கம்தான்.

அமெரிக்காவில் உண்டியலைக் குலுக்கி வசூலிக்கப்பட்ட டாலர்கள் குஜராத் கலவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல்வேறு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆனாலும் விசுவ இந்து பரிசத் அமெரிக்காவில் உண்டியல் குலுக்குவதை இன்று வரை புஷ் தடை செய்யவில்லை.

“சுதந்திரத்துக்கு” முன்னும் பின்னும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் நூற்றுக்கணக்கான மதவெறிக் கலவரங்களை நடத்தியிருக்கிறது. மதச் சுதந்திரத்துக்கே வேட்டு வைக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. இதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருக்குமே “விசா” மறுக்கப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவோ மோடிக்கு மட்டும் விசாவை மறுத்துவிட்டு எங்களுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக அறிக்கை விடுகிறது.

இந்தியாவின் அத்வானி இசுரேலின் ஏரியல் ஷரோன் போன்ற மதவெறி பிடித்த அரசியல் தலைவர்களுக்குக் கூட “விசா” வழங்கி வரும் அமெரிக்கா கம்யூனிஸ்டுகள் இடது சாரி முற்போக்கு சிந்தனை கொண்டவர்களுக்கு “விசா” வழங்க மறுப்பதை அரசியல் தந்திரமாகவே கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி பா.ஜ.க. என்றைக்காவது வாயைத் திறந்ததுண்டா?

அமெரிக்காவின் நலன்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மதச் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்கு விசா வழங்க எந்தத் தடையும் இல்லை என அமெரிக்க சட்டமே கூறுகிறது. அதனால்தான் அத்வானி வாஜ்பாயி வகையறாக்களின் விசா ரத்து செய்யப்படவில்லை. மோடியின் விசா ரத்து செய்யப்பட்டிருப்பது ஒரு விதி விலக்கு. நமது நாட்டு நீதிமன்றங்கள் மனித உரிமைகளை மீறிய போலீசு அதிகாரிகளை அதிசயமாகத் தண்டிப்பது போல! ···

ஈராக் ஆக்கிரமிப்பு அபு கிரைப் சிறைச்சாலை சித்திரவதைகள் இவற்றைக் காட்டி மனித உரிமை பற்றிப் பேச அமெரிக்காவுக்குத் தகுதியில்லை என வாதாடுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதைதான் இது.

இந்திய மக்களின் சட்டபூர்வ மனித உரிமைகள் அனைத்தையும் பறிப்பதற்காகவே “பொடா” என்ற கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் பா.ஜ. கட்சியினர். மனித உரிமைப் போராளிகள் இச்சட்டத்தை எதிர்த்த பொழுது அமெரிக்காவிலும் இது போன்ற சட்டம் பேட்ரியாட் சட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறி நியாயப்படுத்தினார்கள்.

இது மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்கத் திட்டம் போட்ட பொழுது தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தன்னை இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மன்றாடியது.

அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின் அமெரிக்காவின் தயவில் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு வியாபார ஒப்பந்தம் வாங்கித் தருவதற்காக “அமெரிக்காவுக்கு உதவ ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்புவதாக” புஷ்ஷிடம் வாக்குறுதி கொடுத்தார் அத்வானி. உள்நாட்டு எதிர்ப்பின் காரணமாக படைகளை அனுப்ப முடியாமல் போனதால் முன்னாள் இராணுவ வீரர்களைக் கூலிப் படைகளாக ஏற்றுமதி செய்ய பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அனுமதித்தது.

இப்படி அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு அடியாளாக வேலை செய்ய விருப்பம் கொண்ட இந்து மதவெறிக் கும்பல் “மனித உரிமைகளை மீறிய அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா விசாவை மறுத்தால் என்னவாகும்?” எனச் சவால் விடுகிறது.

ஒருவேளை அப்படி நடந்து விடுகிறது எனக் கற்பனை செய்து கொள்வோம். பிறகு அந்நிய நிதி மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு இந்தியா எந்த நாட்டிடம் கையேந்தி நிற்க முடியும்?

1994இல் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் பொழுது அமெரிக்க என்ரான் நிறுவனத்தை அரபிக் கடலில் தூக்கியெறிவோம் எனச் சவடால் அடித்தது பா.ஜ.க. ஆனால் அந்தத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தபின் என்ரானின் இரண்டாவது மின்திட்டத்திற்கும் சேர்த்தே அனுமதி கொடுத்தது.

வாஜ்பாயின் ஆட்சியில் அணுகுண்டு வெடித்த பொழுது அமெரிக்கா இந்தியா மீது அணு ஆராய்ச்சி சம்மந்தமான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்நியப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவில் உள்ள தடைகளை நீக்கி விடுகிறோம் என அமெரிக்காவோடு பேரம் நடத்திதான் பொருளாதாரத் தடையை நீக்கச் செய்தது வாஜ்பாயி அரசு. இதுதான் பா.ஜ.க.வின் கடந்தகால அமெரிக்க எதிர்ப்பு வீர வரலாறு!

மோடிக்கு விசா வழங்கப்பட்டதை எதிர்த்து அகமதாபாத் நகரில் நடந்த பேரணியில் “நமது நாட்டின் சட்டம் இப்படி இருக்க வேண்டும்; நமது நாட்டின் பாடநூல்கள் இப்படி இருக்க வேண்டும் என அமெரிக்கா கட்டளையிடுவதா?” என்று கொதிப்போடு பேசினாராம் மோடி. பா.ஜ.க. இந்தப் பேரணிக்கு “சுயமரியாதை பேரணி” எனப் பெயரிட்டிருந்தது.

அமெரிக்கா உத்திரவு போட்டு காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்ட பொழுது; அமெரிக்கா உத்திரவு போட்டு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டபொழுது பா.ஜ.க.வின் சுயமரியாதை எங்கே ஒளிந்து கொண்டிருந்தது?

“குஜராத்தில் நடந்த கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் தலையிட்டுத் தீர்ப்புச் சொல்ல அமெரிக்காவிற்கு அதிகாரம் கிடையாது” என பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டு காங்கிரசும் தர்க்க நியாயம் பேசுகிறது.

இந்திரா காந்தியின் அவசரநிலை காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலையிட்டதை ஆர்.எஸ்.எஸ். கும்பல் வரவேற்றிருக்கிறது. கார்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர கிளிண்டனோடு இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார் வாஜ்பாயி. இவையெல்லாம் சர்வதேசப் பிரச்சினைகளா?

இந்த உள்நாட்டு அளவுகோலை ஈராக் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பிரயோகித்தால் அமெரிக்கப் படைகளை அந்நாடுகளில் இருந்து வெளியேறச் சொல்ல வேண்டும். அந்த நாணயம் காங்கிரசு பா.ஜ.க. விடம் உண்டா?

அமெரிக்கா சதாமை சர்வாதிகாரி எனக் குற்றம் சாட்டியபொழுது “அதை ஈராக் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; அதில் அமெரிக்கா தலையிடக் கூடாது” என மோடியோ அத்வானியோ எதிர்த்துப் பேசியதுண்டா? மாறாக “சதாமை நீங்கள் தண்டிக்க விரும்பினால் ஐ.நா.வின் ஒப்புதலோடு தண்டியுங்கள்” என்றுதான் அமெரிக்காவிடம் மன்றாடினார்கள்.

இன்றுள்ள உலகச் சூழலில் சில பிரச்சினைகளை உள்நாட்டு பிரச்சினைகள் என ஒதுக்கி விட முடியாது. தென்னப்பிரிக்காவில் நடந்த வெள்ளை இனவெறி அரசு கருப்பின மக்களுக்கு எதிராக நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்த பொழுது அந்நாட்டை உலக நாடுகள் கண்டித்ததோடு அந்நாட்டோடு வர்த்தக அரசியல் உறவுகள் வைத்துக் கொள்ளாமல் புறக்கணித்தன. பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பூமியை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் நோக்கத்தோடு இசுரேல் கட்டிவரும் சுவரை இடித்துத் தள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. போஸ்னியாவிலும் கொசாவாவிலும் முசுலீம்களை இனப்படுகொலை செய்த யுகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் அந்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறார்.

குஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். இந்த இனப்படுகொலையின் தளபதியான மோடியை இந்தியச் சட்டங்கள் தண்டிக்க மறுக்கும் பொழுது அவனைத் தண்டிக்கக் கோரும் உரிமையை அமெரிக்க அரசிற்கு (அதனின் இரட்டை வேடம் காரணமாக) வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால் உலக மக்கள் அப்படிக் கோருவதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இன்று போர் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷைத் தண்டிக்கக் கோரி போராடும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நாளை மோடியையும் தண்டிக்கக் கோரி போராடினால் அதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.

- முத்து

Wednesday, April 17, 2013

ஆரம்பிச்சுட்டாங்கய்யா....பெங்களூரில் குண்டு வெடிப்பாம்!

சில நாட்களுக்கு முன்பு கோவையில் இந்து கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் வீட்டில் அதிகாலையில் வெடி குண்டு வீச்சு. தற்போது பெங்களூரில் பாஜக அலுவலகம் முன்பு குண்டு வெடிப்பு. ஆச்சரியமாக இந்த குண்டு வெடிப்பிலும் உயிரிழப்பு இல்லை என்பதை கவனிக்கவும். குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களுக்கு இந்த செய்தியை மீடியாக்கள் மூலம் பலரையும் சென்றடையச் செய்ய வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. ஒருக்கால் இதனை எந்த பெயர்தாங்கி முஸ்லிம் குழுக்களாவது செய்திருக்குமானால் சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனை எதுவோ அதனை விரைவாக தர வேண்டும். இனி செய்தியை பார்ப்போம்.பெங்களூரு : பெங்களூருவில் மல்லேஸ்வரத்தை தொடர்ந்து ஹிப்பல் என்ற இடத்தில் உள்ள மேம்பாலம் அருகிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மல்லேஸ்வரத்தில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த ‌குண்டு வெடித்தது. மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அருகே நடைபெற்ற தாக்குதலில் 8 போலீசார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். ஹிப்பல் மேம்பாலத்தில் நடைபெற்ற தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களுரூவையடுத்த, மல்லேஸ்வரம் பகுதியில் பா.ஜ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வெளியே இன்று காலை பயங்கர சத்தத்துடன் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தன. காரில் இருந்து வெடிகுண்டு நிகழ்ந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 8 பேரும், அந்த வழியாக வந்த மாணவி ஒருவரும் படுகாயமடைந்தனர்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ.க, தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் திடீரென வெடித்து சிதறி உள்ளது.

குண்டுவெடிப்பிற்கு அரசியல் ஆதாயமே காரணம் என காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது குற்றம்சாட்டி உள்ளார். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பா.ஜ.க, வே இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக பெங்களூரு குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் பேசி உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஷகீல் அஹமதின் வாதத்தை நாம் ஒதுக்க முடியாது. ஏனெனில் ஊழலாலும் உட்கட்சி தகராறுகளாலும் பிஜேபி இனி ஆட்சியை பிடிக்க முடியாது என்பது தெளிவாகவே அவர்களுக்கும் தெரிந்துள்ளது. இந்த நிலையை மாற்ற ஊழல்களை மறைத்து உட்கட்சி பூசல்களையும் மறைக்க இந்த குண்டு வெடிப்பு பிஜேபிக்கு நன்றாகவே கைக் கொடுக்கும். இதன் மூலம் இந்துக்களின் ஓட்டுக்களை சிதறாமல் அள்ளலாம் என்பது இவர்களின் திட்டம். இந்த வகையில் போலீஸார் விசாரித்தால் உண்மை குற்றவாளிகள பிடிபடுவார்கள். பிஜேபி ஆட்சியில் இது சாத்தியப் படுமா! யாராவது பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெயர்தாங்கி முஸ்லிமை பிடித்து 'பாகிஸ்தான் ஆதரவோடு வெடி குண்டு வைத்த தீவிரவாதி கைது' என்று பத்திரிக்கைகளில் நாளை செய்தி வரும். ஆனால் உண்மை நிலவரங்களை த்றபோது பெரும்பாலான இந்துக்களும் உணர்ந்தே வருகின்றனர்.

எனவே இந்த நாட்டை முன்னேற்றுவதறகு சிறந்த திட்டங்களை தீட்டி அதைச் சொல்லி பிஜேபி ஆட்சியைப் பிடிக்கட்டும். இனிமேலும் குண்டு வெடிப்புகளை நிகழ்ததி அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க கனவு காண வேண்டாம். இது தொடர்ந்தால் இந்துக்களாலேயே இவர்கள் ஓரம் கட்டப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

--------------------------------------------------------

AHMEDABAD: Gujarat's VHP leadership is up in arms against Gujarat government's decision to seek death penalty for former state minister Maya Kodnani and nine others in connection with the 2002 Naroda Patiya massacre case.

"VHP strongly condemns the reported decision of the Gujarat government to seek death penalty for Maya Kodnani, Babu Bajarngi and other Hindus sentenced in the Naroda case," Gujarat VHP general secretary Ranchhod Bharwad told reporters here on Wednesday.

http://timesofindia.indiatimes.com/india/VHP-up-in-arms-against-Modi-govt-opposes-move-to-seek-death-penalty-for-Kodnani/articleshow/19600825.cms

கலவரம் என்ற பெயரால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்ய உதவியவர் மோடி என்பது நமக்குத் தெரியும். தற்போது இந்த வழக்கிலிருந்து தாம் தப்பித்துக் கொள்ள முஸ்லிம்களை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 10 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்க மோடி அரசு பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி,பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 22 பேருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு திடீரென ஒரு முடிவை எடுத்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்த வழக்கில் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால சிறைத் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றக் கோரி ஆளும் நரேந்திர மோடி அரசு முறையீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.

இதற்காக மாநில அரசு, மூன்று நபர் சட்ட வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 10 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி குஜராத் அரசு சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பிரதமர் வேட்பாளராக தம்மை பாஜக முன்னிறுத்தினாலும் குஜராத் கலவரங்களை காரணம் காட்டி தம் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நரேந்திர மோடி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மாயா கோட்னானியைப் பொறுத்தவரையில் மோடியின் மிக நெருங்கிய ஆதரவாளர்தான்... ஆனாலும் தம் மீதான கறையைத் துடைத்தாக வேண்டிய நிலையில் மாயா கோட்னானியை பலி கொடுக்கும் முடிவை எடுத்திருக்கிறார் மோடி.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற தனது ஆட்களையே பலிகடா ஆக்கவும் இந்த இந்துத்வாவாதிகள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. என்னதான நல்லவர் வேஷம் தற்போது கட்டினாலும் குஜராத் கூட்டுக் கொலையில் மோடியின் பங்கை மறைக்க முடியாது. இன்றில்லா விட்டாலும் வருங்காலத்திலாவது அதற்கான தண்டனையை மோடி அனுபவிக்க வேண்டும். நடுநிலைவாதிகள் எதிர்பார்ப்பதும் அதைத்ததான்.

---------------------------------------------------------------
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த சில வாசகர் கடிதங்கள்...


criss (Sydney ) said.....
When the day comes and election results come Modi will be the biggest joke of the century as Advani was. I am a Hindu and I don't support Modi. I don't mind Advani or Sushma or Jaswant Singh but no to Modi, he is a arrogant politician

------------------------------------------
prasoon chudry said....
Hindus to not support these terrorist, VHP and RSS who wants to be the Taliban for Hindus. Neither Hindus are medieval narrow minded community stuck in time by any old dogma or book. Even though the Hindu rituals looks very ancient and stuck in stone age, the reality is he leaves the religion once he is out of the temple after 10 min of mindless ritual. You can guess how much Hindus appreciate these rituals from the fact that they would pay extra to the priest to finish the ritual by taking shortcut. This is the reason BJP never crossed more than 150 mark in parliament now even 100 looks a impossible task for them. One thing I like about India is the secular democracy even though we are a super corrupt nation we have been successful in preserving the secular democracy. India needs to handle these terrorist with heavy hand and give them maximum sentence. There is no place for such elements in Indian society it not like barbarian Bedouin tribes of middle east we are a progressive nation we have to move forward and remove these weeds.

------------------------------------------
mksh dubai said....
Now the nation understands why Modi was called 'maut ka saudagar'. 3000 deaths to win three Gujarat assembly elections in a row. Now a few more deaths of his own soldiers to stake the claim for the top job of the country. Modi is truly a good businessman. Jay Modi.

Tuesday, April 16, 2013

கடைந்த வெண்ணெய் மோர் புகா!

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா

உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;

விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;

இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே

-சிவ வாக்கியர்

நமது முன்னோர்கள் இறந்தவர்கள் உயிர் பெற்று வர முடியாது என்று மிகத் தெளிவாகவே சொல்லியிருந்தாலும் ஆன்மீகக் குருக்களை அவர்கள் இறந்த பின் சமாதியாக்கி அவர் உயிர் பெற்று வருவார். நமது தேவைகளை பூர்த்தி செய்வார் என்று பலரும் நம்பியிருக்கிறோம். இறந்தவர் மறுபடி உயிர்த்தெழுதல் என்பது யுக முடிவு நாளுக்கு பிறகுதான் என்பது இஸ்லாமிய நமபிக்கை.

இநத பூமியில் இறந்தவர் உயிர் பெற்று எழ முடியுமா?

சில வருடங்கள் முன்பு நாம் பத்திரிக்கைகளில் ஒரு செய்தியைப் படித்திருப்போம். திருச்சியைச் சேர்ந்த வாலிபர் செல்வகுமார் தற்கொலையைப் பற்றியது அந்த செய்தி. இவர் கோவையில் உள்ள தன் அண்ணன் சார்லஸ் வீட்டில் வசித்து வந்தார். வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக மின் விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

இறந்து போன செல்வகுமாரின் அண்ணன் சார்லஸ் ஒரு இன்ஜினீயர். இவர் தீவிர கிறித்தவ மத நம்பிக்கையுடையவர். இந்த மதப் பற்றினாலேயே தனது வேலையை ராஜினாமாச் செய்து விட்டு 'சுகம் அளிக்கும் அற்புதக் கூட்டம்' என்ற பெயரில் பிரார்த்தனைக் கூட்டங்களை ஆங்காங்கு நடத்தி வந்தார். மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் பாஸ்டர் பட்டம் பெற்றவர்.

இறந்து போன தனது தம்பியை அடக்கம் செய்யாமல் தனது வீட்டிலேயே ஒரு ரூமில் வைத்து 'தம்பியை உயிர்ப்பிக்க'ப் போவதாக கூறி ஜெபம் பண்ண ஆரம்பித்துள்ளார். அவரது மனைவியையும் அவரது நான்கு குழந்தைகளையும் தனது தம்பிக்காக ஜெபம் பண்ண வைத்துள்ளார். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. இரண்டு மாதங்கள் இதே போன்று இவரது குடும்பத்தினர் ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர். பிணம் அழுகி துர்நாற்றம் வீசியும் ஜெபத்தை விட வில்லை.

முடிவில் உயிர்த்தெழுந்தது என்னவோ காவல்துறைதான். தற்கொலை செய்து கொண்ட விபரத்தை காவல் துறைக்கு தெரிவிக்காமல் இருந்தது. இறந்த உடலை அடக்கம் செய்யாமல் வைத்துக் கொண்டது. சுகாதாரக் கேட்டை விளைவித்தது - ஆகிய பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

ஏசுநாதர் இறந்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார்: குருடனை பார்வையடைச் செய்திருக்கிறார்: குஷ்டரோகியைக் குணமாக்கியிருக்கிறார்: இதெல்லாம் நடந்தது உண்மை. ஏசுநாதருக்கு இந்த ஆற்றல் வந்தது கர்த்தரிடமிருந்து. எனவே அவரால் அற்புதங்கள் செய்ய முடிந்தது.

இதைப் பார்த்து சார்லஸ் தானும் தன் தம்பியை உயிர்ப்பிக்கப் போகிறேன் என்று கிளம்பியதால்தான் இவ்வளவு பிரச்னையும். இதே போன்ற பல கூட்டங்கள் பல இடங்களிலும் நடப்பதைப் பார்க்கிறோம். மனிதன் என்றுமே இறை சக்தியை அந்த இறைவனின் அனுமதி இல்லாமல் அடைய முடியாது என்பதை படித்தவர்களும் மறந்து விடுவதுதான் விந்தை.

'மேரியின் மகன் ஏசுவே! நான் உம் மீதும் உம் தாயார் மீதும் அருளிய என் அருட்கொடையை நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்தததையும் இன்னும் நான் உனக்கு வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் நினைத்துப் பாரும். இன்னும் நீர் களிமண்ணால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தை போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும் இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும் நினைத்துப் பாரும். இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து வெளிப்படுத்தியதையும் நினைத்துப் பாரும்.'

-குர்ஆன் -5:110

இதே போன்ற கூத்துக்கள் இஸ்லாத்திலும் அவ்வப்போது நடப்பதுண்டு. மறைவான விஷயம் எனக்கும் தெரியும் என்று புருடா விட்டு கடைசியில் மாட்டிக் கொண்ட மௌலானாக்கள் பலர் உண்டு. இந்து மத சாமியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அது பலரும் அறிந்த கதை.

ம்ம்... வீட்டுக்கு வீடு வாசப்படி.

Sunday, April 14, 2013

யாதும் ஊரே யாவரும் கேளீர்!

யாதும் ஊரே யாவரும் கேளீர்!

//Anonymous said...

"இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன்." பரவாயில்லையே//

இந்த அனானி சகோதரருக்கு ஒரு முஸ்லிம் தமிழகத்தை நேசிப்பதும், தமிழ் மொழியை நேசிப்பதும், பாரத நாட்டை நேசிப்பதும் ஆச்சரியமாக தெரிகிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அந்த அளவு ஊடகங்கள் நமது மக்களை மூளை சலவை செய்து வைத்துள்ளன.


என்னைப் பொருத்த வரை இனம் மொழி கடந்து அனைத்து மக்களையும் நேசிக்கக் கூடியவன். அவன் ஆரியனோ, திராவிடனோ, அராபியனோ, ஐரோப்பியனோ, ஆப்ரிக்கனோ யாராக இருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவன் ஆதமுடைய மகன். என்னுடைய சகோதரன். அதே போல் இந்த உலகம் அதிலும் இந்த பூமிப் பந்தை உண்டாக்கியது இறைவன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளவன். இதனால் உலக நாடுகள் அனைத்தையுமே நான் நேசிக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா என்று எந்த கண்டத்து நாடுகளையும் நான் விரோதமாக பார்க்கவில்லை. ஏனெனில் அத்தனை கண்டங்களையும் படைத்து பரிபாலிப்பது என்னைப் படைத்த இறைவனே!

அதே போல் உலக மொழிகள் அனைத்தையுமே நான் ஒரே தரத்திலேயே வைத்து பார்க்கிறேன். ஏனெனில் இந்த உலக மொழிகள் அனைத்தையும் மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்காக இறைவனே மனிதனுக்கு அருளினான் என்று குர்ஆன் கூறுவதால் உலக மொழிகள் அனைத்துமே எனது சகோதர மொழிகளே! தேவ மொழிகள் என்று தனித்து பிரிக்கச் சொல்லி இஸ்லாமும் எங்கும் சொல்லவில்லை. எனவே எனக்கு மொழி வெறியும் கிடையாது.

அதே நேரம் நான் பிறந்த மண்ணான இந்திய தேசத்தையும், எனது தாய் மொழியான தமிழையும் மற்ற நாட்டையும் மொழிகளையும் விட சற்றே அதிகமாக நேசிக்கிறேன். காரணம் பிறந்த மண்ணை நேசிப்பதும், தாய் மொழியை நேசிப்பதும் நமது ரத்தத்திலேயே காலகாலமாக ஊறி விட்டதனால் இந்த நேசிப்பு வருகிறது. நான பிறந்து வளர்ந்து ஆளாகி எனக்கென்று ஒரு அடையாளத்தை தருவதனால் நான் பிறந்த மண்ணை நேசிப்பது இயல்பாகவே வந்து விடக் கூடிய ஒன்று.

அதே நேரம் இந்த நேசம், பாசம் மற்ற நாடுகளையும், மொழிகளையும், இனங்களையும் வெறுக்கும் அளவுக்கு சென்று விடக் கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன். இந்த இடத்தில்தான் பலரும் தவறு செய்து விடுகின்றோம். ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் முஸ்லிம் அல்லாதவர்களை ஒதுக்கி வாழ வேண்டும்: அல்லது ஒரு இந்துவாக வாழ வேண்டுமானால் இந்து மதத்தின் மேல் உள்ள நம்பிக்கை இல்லாதவர்களோடு அந்நியனாக பழக வேண்டும் என்று ஒரு மாயை தவறாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளுக்கு எப்படியோ.....பல மத இனங்கள் இணைந்து வாழும் நமது பாரத தேசத்துக்கு இந்த கொள்கையானது மிக ஆபத்தானது.

இஸ்லாம் இந்தியாவுக்கு சொந்தமான மதமல்ல...இந்து மதமே இந்தியாவுக்கு சொந்தமானது என்ற கருத்து பரவலாக விதைக்கப்படுகிறது. சொல்லப் போனால் நமது இந்திய நாட்டுக்கென்று குறிப்பிட்டு சொல்லக் கூடிய எந்த மதமோ மார்க்கமோ இருந்திருக்க வில்லை. வரலாறு பதியப்பட்ட காலம் தொட்டு கடந்த 2000, 3000 வருடங்களாக நமது நாட்டின் வரலாறுகளை தோண்டிப் பார்த்தோமானால் எங்குமே அமைதி நிலவியதாக சரித்திரங்களை பார்க்க முடியவில்லை. யாருக்கெல்லாம் படை பலமும், ஆள் பலமும் இருந்ததோ அவர்கள் அனைவரும் அந்தந்த காலங்களில் நமது நாட்டை ஆண்டிருக்கின்றனர். எனவே ஒரு குழுவோ, ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது ஒரு மார்க்கமோ நமது பாரத நாட்டுக்கு உரிமை கொண்டாட முடியாது.

நமது நாட்டில் பல மார்க்கங்களாக இருந்த பல சாதிகளை ஒன்றாக்கி இன்று இந்து மதம் என்ற பொது மதத்தை காட்டுகின்றனர் சில இந்துத்வாவாதிகள். 'நாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இதை இந்து ராஷ்டிரமாக அறிவிப்போம்' என்று அறிக்கைகளும் விடுகின்றனர். இந்த இந்து மதத்துக்கு பூரண உரிமை கொண்டாடுபவர்கள்..நம் தேசத்திலே இரண்டு அல்லது மூன்று சதவீதமே இருக்கும் பார்ப்பணர்கள். இவர்களில் தீவிர எண்ணம் கொண்ட அத்வானி, மோடி, மோகன் பகவத், போன்ற பலர் இஸ்லாம் இந்த மண்ணுக்கு அந்நியமானது. எனவே இந்த மண்ணின் சொந்த தயாரிப்பான இந்து மதத்தையே நாம் பின்பற்ற வேண்டும் என்று தினமும் எங்காவது ஒரு இடத்தில் சொல்லி வருகின்றனர். இந்து மதம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எந்த அளவு ஒரு இட்டுக்கட்டப்பட்ட வாதம் என்பதும், அத்வானி போன்ற ஆரியர்களின் பூர்வீகம் எந்த நாடு அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதன் வரலாற்று ஆய்வுகளை கீழே தருகிறேன். படித்து தெளிவு பெறுவோம்.

-----------------------------------------------------------------


மாஸ்கோ: ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஜாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற்கத்திய நாகரீகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் அராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம். இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெத்தனி ஹூக்ஸ் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த நகரை கண்டுபிடித்துள்ளனர்.பிபிசி தொலைக்காட்சியில் 'Tracking The Aryans' என்ற தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரீகம் கிரேக்க நாகரீகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம், இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார். இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் குடியேற்றம் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியவந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பெத்தனியும் அவரது குழுவினரும் இங்கு ஆராய்ச்சிகளில் இறங்கினர். அப்போது கிடைத்த சில தடயங்களின்படி இங்கு ஆரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த பனிப் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியை அவரது குழு மேற்கொண்டு வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரில் கிடைத்த பொருட்களில் மேல் நோக்கு வளைவான அமைப்பு கூடிய 20 வீடுகள், மேக்-அப் சாதனங்கள், பாண்டங்கள், ஸ்வஸ்திக் புதைக்கப்பட்ட குதிரைகள், ரதத்தின் பாகங்கள், சின்னங்கள் (Swastika symbol) ஆகியவை அடங்கும்.

ஆரிய நாகரீகத்தின் அடையாளமான சுவஸ்திக்கை தான் 1930களில் ஹிட்லர் தனது நாஜி அமைப்பின் சின்னமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சிறந்த இனம் இது தான் என்று கூறிக் கொண்டு பிற இனத்தினரை அழிக்கும் வேலையை, யூதர்களை அழிப்பதில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பல ஐரோப்பிய மொழிகளின் மூலமாக ஆரிய மொழி் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நகர கண்டுபிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார். இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை 'விசிட்டிங்' பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://timesofindia.indiatimes.com/world/europe/4000-year-old-Aryan-city-discovered-in-Russia/articleshow/6683681.cms?intenttarget=no

http://www.thehindu.com/news/international/4000yearold-aryan-city-discovered-in-russia/article812961.ece

http://www.dailymail.co.uk/sciencetech/article-1317362/Europe-begins-Cities-built-swastika-painting-Aryans-remote-Russian-plains.html

http://tamil.oneindia.in/art-culture/essays/2010/4-000-year-old-aryan-city-discovere-russia.html