Followers

Wednesday, December 20, 2006

வேறு கிரகங்களில் மனிதன் வாழ முடியுமா?

'பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10

இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.-------------------------------------------------------------------------

'எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரோ?''கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரோ?''இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்'

அடடா! என்ன அருமையான சிந்தனை!(உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு கூட நீங்க எழுதுனது தானோ!)சரி. வைரமுத்து சார்!அதை இயற்கை என்று சொல்வது தவறுங்க.அது தான் நம்மை படைத்த இறைவன்.'இதை எண்ணி எண்ணி இறைவனை வியக்கிறேன்'என்று சிறிது மாற்றம் செய்து பாருங்கள். அழகாக பொருந்திப் போகும. ஏ.ஆர். ரஹ்மானும் மிகுந்த சந்தோஷமடைவார்.

posted by சுவனப்பிரியன் @ 3:38 AM

9 Comments:
At 6:07 AM, Thekkikattan said...
ப்ரியன், நீங்கள் விசயங்களை அறிவு சார்ந்து பகிர்ந்துகொள்வதில் ஆர்வமுடன் இருப்பதாக இருந்தால் இங்கு நிறைய விசயங்கள் பரிமாறிக்கொள்லாம். ஆனால், தீர்க்கமான ஒரு மனதுடன் வைக்கும் எவைக்கும் பதிலளிப்பது ஆழ்ந்து வடித்த மடலை எழுதி முடித்தவுடன் குப்பைக் கூடையில் கசக்கி போட்டுவிடுதற்க்கு சமம்தான் உங்களுக்கு அளிக்கும் பதில்களும் என தோன்றச் செய்கிறது.முதலில் பரிணாமம் ஒத்த கொள்கையில் மதத்தின் பால் சார்ந்த எண்ண ஒட்டதில் எண்ண குளர்பாடுகள் இருக்கிறது என்பதற்க்கு தீர்வு கண்டால். அயல் கிரகங்களில் ஜீவராசிகள் இருக்கின்றனவா...இந்த பிரபஞ்சத்தில் எத்தனை பால் வீதிகள் உள்ளன, அவற்றில் எத்தனை சூரியன்கள் இருக்கின்றன, அச் சூரியன்களை சுற்றி எத்தனை கிரகங்கள் உள்ளன, எந்த கோணத்தில், எவ்வளவு தட்ப வெப்ப சூழ்நிலையை கிரகித்துக் கொண்டு என்ற கேள்விகளுக்கு பதில்களை பெறுவதற்க்கு முன்பு.என்னை பொறுத்த வரையில், நம்மை போன்ற பூமிக் கிரகங்கள் அனேகம் இப்பிரபஞ்சத்தில் இருக்க வாய்ப்புண்டு என்பதே. நாம் மட்டும் ஒன்றும் அபூர்வம்மல்ல...இப்பிரபஞ்சத்தில் என்பதே...!

At 7:21 AM, சுவனப்பிரியன் said...
திரு தெக்கிட்டான்!மாற்றுக் கருத்துக்கள் எது இருந்தாலும் அது யார் சொன்னாலும் மதிப்பளிப்பவன் நான். அதை ஆராய்ந்து அதில் உள்ள உண்மைகளை எடுத்துக் கொள்பவன். முன்னோர்கள் சொன்னதை கண்ணை மூடிக் கொண்டு பின் பற்றாமல் நம் அறிவுக்கு எட்டியதைத் தான் நம்மால் எடத்துக் கொள்ள முடியும். அதைத் தான் நானும் செய்து வருகிறேன்.

At 3:42 AM, srinidhi said...
Anyway plans are afoot to establish human colonies in moon.sowhat we do then.Humans can live inmoon.Humans have lived in space stations which are not part of earth.Scientists and technologistsdo not go by Koran and that is whythe west is forging ahead in science while the arab world iskilling itself in sectarian violence.

At 7:50 AM, சுவனப்பிரியன் said...
நிலவுக்கு சென்று தங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், அது நிரந்தரமல்லவே! பூமியிலிருந்து கொண்டு போன ஆக்சிஜன்,தண்ணீர்,உணவு முதலியவை தீர்ந்த பின் பூமியிலிருந்து தான் அவைகள் திரும்பவும் அனுப்பப் பட வேண்டும். எனவே குர்ஆன் சொல்வது போல் நிரந்தர தங்குமிடம் பூமியே!அடுத்து மனிதனை சிந்திக்கச் சொல்கிறது குர்ஆன். அதன்படி அய்ரோப்பியர்கள் சிந்தித்தார்கள். கஷ்டப் பட்டார்கள். அதன் பலனை அனுபவிக்கிறார்கள். முஸ்லிம்களிடம் குர்ஆன் இருந்தும் அதன் அருமை தெரியாமல், சிந்திக்காததனால் பின் தங்கி இருக்கிறார்கள். மேலும் அய்ரோப்பியர்கள் எந்த அளவு உலகுக்கு நன்மை செய்திருக்கிறார்களோ, ஒழுங்கான வழிகாட்டுதல்இல்லாததனால் அதே அளவு தீமைகனையும் நமக்கு வாரி வழங்கியிருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

At 10:37 AM, Sivabalan said...
Mr.சுவனப்பிரியன்,I am an atheist.My opinion is, take whatever is good from " the Quran (குர்ஆன்), the Bible, the Bhagavat Gita" to lead a peaceful life. All things, which we see, are man made except the nature.

At 10:42 AM, vrtttp said...
It's possible to establish human colonies in moon and we don't need supply oxygen from earth because moon has ice so oxygen can be extracted. It is also possible to have earth like planets elsewhere in the universe. Also, if you assume that 1% of all the stars have planets and 1 % of those stars have earth-like planets and 1% of those planets have life forms or earth-like atmosphere. you would get thousands of solar systems (i read it in discover magazine). So i think it is possible to have find life or live in another planets. The biggest problem we face is that we dont have any unity. Every country on earth should come together to form a huge alliance. Otherwise it would be hard for us to go these different worlds

At 10:07 AM, சுவனப்பிரியன் said...
திரு விஆர்டிடிபி!விஞ்ஞானிகள் சிந்திக்கட்டும்! அதை இஸ்லாம் வரவேற்கிறது. எந்த ஒரு செலவும் இல்லாமல் தண்ணீரும் காற்றும் இன்ன பிற வசதிகளும் பூமியில் இருக்க, யார்தான் இத்தனை ஏற்பாடுகளை செய்து கொண்டு நிரந்தரமாக நிலவில் தங்கியிருக்க முடியும்? கோடீஸ்வரர்களுக்கு வேண்டுமானால் சாத்தியப் படலாம்.அதுவும் பரிசீலனையில் தான் இருக்கிறது.நடுத்தர வர்க்கமான நானும் நீங்களும் சென்று நிரந்தரமாக தங்க முடியுமா?

At 10:08 AM, சுவனப்பிரியன் said...
திரு சிவ பாலன்!உண்மைதான்! அவரவர் மதத்தில் உள்ள நல்லவைகளை எடுத்து மற்ற மத்தவர்களையும் அரவணைத்து சென்றால் ஒரு குழப்பமும் இல்லையே! இதை அரசியல் வாதிகளும், அனைத்து மத தீவிரவாதிகளும் உணர வேண்டும். உணர்வார்களா?

At 1:09 AM, நல்லடியார் said...
சுவனப்பிரியன் மீண்டும் ஒரு அருமையான பதிவு கொடுத்துள்ளீர்கள். மேலும் பின்னூட்டமிட்ட சிலர் உங்களின் வாதமாகிய //எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.// என்பதை புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். இதில்லுள்ள தர்க்க நியாயத்தை உணராமல் "பரிணாமம்" பற்றி திசை திருப்புவது ஏன் என்பது சம்பந்தப் பட்டவர்களுக்கே வெளிச்சம்.

//Scientists and technologists do not go by Koran// The commenter must agree that some scientist witnessed quran for their discoveries/inventions. Pls. Google for proof.

Monday, December 18, 2006

விதியை நம்பியதால் கிடைக்கும் பயன்களை

பி. செந்தில் குமார்
? நான் எனது இஸ்லாமிய நண்பரிடத்தில் இஸ்லாத்தைப்பற்றி விவாதிப்பது உண்டு. எனது இந்த கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. எனவே உங்களிடம் கேட்கின்றேன். எதுவும் கடவுள் விருப்பப்படி நடக்கிறது என்றால் மத மோதல்களும், மற்ற தவறுகளும் கடவுளின் விருப்பப்படி தானே நடக்கிறது. நான் கடவுளை மறுத்து வாழ்வதும் கடவுளின் விருப்பப்படி தானே. ஆக அவரின் விருப்பப்படி நடக்கும் தவறுகளுக்கு அவரே தண்டனை தருவது எவ்விதத்தில் நியாயம்? - 34

! எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று இஸ்லாம் கூறுவதை அடிப்படையாக வைத்து இவ்வாறு கேள்வி கேட்கப்படுகிறது. விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள் வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின்படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏது மில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், கடவுள் என்பவன் பல வீனனாக, கையாலாகாதவனாகக் கருதப் படும் நிலை இதனால் ஏற்படும். ''நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்'' என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது. நாளைய தினம் நீங்கள் சென்னை வர விருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது. நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும். நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத்தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது. அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது. அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது. இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன. இதனால் தான்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத் 6381)
இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டதிட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப்பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது. அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது. அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம். அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களின் நம்பிக்கை போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை. ''எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே'' என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லா விட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது. எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்பியதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது. அதே நேரத்தில் விதியை நம்பியதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப்பார்த்தால் அதற் காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும். ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கை கூட வில்லை என்று வைத்துக் கொள்வோம். விதியை நம்புகின்றவன் ''நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?'' எனக் கூறி மறுநாளே சகஜ நிலைக்கு வந்து விடுவான். அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம். இவ்வளவு பாடுபட்டும் கைகூட வில்லையே என்று புலம்பியே மன நோயாளியாவான். அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் அவன் சகஜ நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.

''உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காக வும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ் வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். '' (திருக்குர்ஆன் 57:23)
விதியை நம்பியதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். நமக்கு செல்வங்களையும், வசதி களையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும். விதியை நம்புவதன் மூலம் இந்த மன நோயிலிருந்து விடுபடலாம். ''இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத் துள்ளனவே தவிர நம்மால் அல்ல'' என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும். அது போல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தி யடைந்து விடுவோம். இந்த மன நோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும். ''நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான்'' என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் சகஜ நிலையை அடைவான். இவ்விரு நன்மைகளும் விதியை நம்பியதால் மனித குலத்துக்கு ஏற்படு வதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். சிலர் எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று காரணம் காட்டி வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். ''நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லவர்களாக ஆவோம்'' என்று நமது விதியில் இருந்தால் நமது முயற்சி இல்லாமலேயே ஈடுபட்டு விடுவோம். நாம் நல்லவர்களாக மாட்டோம் என்று நமது விதியில் எழுதப்பட்டிருந்தால் நாம் முயற்சி செய்வதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். விதியை நம்பச் சொல்கின்ற இறைவன் தான் முயற்சிகள் மேற் கொள்ளுமாறும் நமக்குக் கட்டளையிடுகிறான் என்பதை மறந்து விடுகின்றனர். மேலும் அவர் உண்மையிலேயே விதியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே வணக்க வழிபாடுகள் செய்யாமல் இருக்கிறார் என்றால் எல்லா விஷயத்திலும் அவர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதில் மட்டும் 'விதி' இருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. இவ்வுலகில் ஒருவனுக்கு ஏற்படும் செல்வம், வறுமை போன்றவையும் பட்டம் பதவிகள் போன்றவையும் விதியின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன என்று தான் இஸ்லாம் கூறுகின்றது. இறைவணக்கத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு விதியின் மீது பழியைப் போடுபவர் இந்த விஷயத்திலும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமல்லவா? தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக் காதது முரண்பாடாகவும் உள்ளது. எனவே, விதியைப் பற்றி சர்ச்சை களைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக் கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்பியதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.

Thanks Mr P.Jainullabudeen

Sunday, December 17, 2006

Monday, December 11, 2006

குறட்டை பிரச்னையும் அதை தவிர்க்க சில வழிமுறைகளும்

மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கின்றார் என்றால் 20 வருடங்கள் தூக்கத்தில் கழிகிறது. இந்த தூக்கத்திற்காகவே இரவினை உண்டாக்கியதாக அல்லாஹ் தன் திருமறையில் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான்:

இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும், பகலையும் உண்டாக்கினான்; (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்-குர்ஆன் 28: 73)

மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 78: 9)

மேற்கூறிய அல்-குர்ஆனிய வசனங்களில் தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கியிருக்கிறான் அல்லாஹ். ஆனால் அந்த தூக்கத்தில் மனிதர்கள் தன்னை அறியாமலேயே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான் குறட்டை. குறட்டை பிரச்சினையால் இரவு, பகல் என்று பாராமல் எந்த நேரத்தில் தூங்கினாலும் பக்கத்தில் படுத்திருப்பவர்(கள்) பாடு படுதிண்டாட்டம்தான். ஆக, குறட்டை பிரச்னைப்பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம்.

பொதுவாகக் குறட்டை வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. இது தவறு, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் குறட்டை வரும். அதாவது, சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தைத்தான் குறட்டை என்கிறோம்.குரல்வளை சுருங்கும் போது வெளியேறும் மூச்சுக் காற்றின் இயல்பான அளவு குறைந்த சத்தத்தை உண்டாக்குகிறது. தொண்டையின் சுவர்களில் இருக்கும் அண்ணங்களிலிருந்தும் சப்தம் உற்பத்தியாகும். குழந்தைகளிடமும் குறட்டைப் பிரச்னை உண்டு, இதற்கு முக்கியக் காரணம் அடிநாய்டுகள் தான். குழந்தைகளது தொண்டையின் மேல் பகுதியில் அடிநாய்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். இதனால் குறட்டை வரும். இரண்டு டான்சில்களும் சந்திக்கும் இடத்திலிருந்தும் குறட்டைச் சப்தம் வர வாய்ப்பு உண்டு.அதிக உடல் எடை குறட்டைக்கு முக்கியக் காரணம், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்துவிடும். முறையான உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் இந்த குறட்டைப் பிரச்னையால் பாதிக்கப்படுவதுண்டு.

குறட்டையில் மூன்று வகை உண்டு. முதலாவது மூளையின் மத்தியப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உண்டாவது, இரண்டாவது அப்ஸ்ட்ரக்டிவ் டைப், இது கொஞ்சம் கடுமையானது. இந்த வகையில் இயல்பான மூச்சிவிடுவதில் சிரமம் ஏற்படும், மூன்றாவது வகை மிகிஸ்ட் டைப், இது முதலிரண்டு வகையின் கூட்டணி Positive airway pressure காரணமாகவும் குறட்டை வரும்.பாலிஸோம்னோகிராபி என்ற டெஸ்ட்டுகள் மூலம் குறட்டை மூச்சுக் குழாயில் காற்று உட்புகும் தன்மை கால்களின் இயக்கம் அல்லது அசைவு உடலின் இயங்கு நிலை, நாடித்துடிப்பு, ஆக்ஸிஜன் சமச்சீரான நிலை உள்ளிட்டவற்றை கண்காணித்து தெரிந்துக் கொள்ள முடியும்.முன்பெல்லாம் குறட்டைக்குச் சிகிச்சை கிடையாது, ஆனால் இப்போது நிறைய யுருலோ டயாலிட்டோபேரிங்கோ பிளாஸ்டி இது ஏதோ பிளாஸ்டிக் சர்ஜரியோ என்று எண்ணி விடாதீர்கள். தொண்டையில் செய்யப்படும் ஆபரேஷன்தான் இது. தவிர ரேடியோ ஃப்ரிக்குவின்சி முறை (Radio Frequency Method) எனப்படும் நவீன சிகிச்சையும் வந்திருக்கிறது. இம்முறைகளின் மூலம் குறட்டையை பெருமளவு கட்டுப்படுத்திவிட முடியும். இவை இரண்டுமே ஆபரேஷன் செய்து குறட்டையை குறைக்கும் முயற்சிதான். நல்ல தேர்ந்த டாக்டரிடம் மட்டுமே இந்த ஆபரேஷனைச் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு பாதிப்புகள் உண்டாகும் ஆபத்து உண்டு.

மேலும் குறட்டையை தவிர்க்க உடல் பருமனாகாமல் தவிர்த்து விடுவது அவசியம். அதுபோல் நாள்பட்ட அலர்ஜி இருப்பவர்கள் உடனடியாகச் சிகிச்சை எடுப்பது நல்லது. கழுத்து தொண்டையின் மேல் பகுதியில் கொழுப்புச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறையான மூச்சுப் பயிற்சி எடுப்பதாலும் குறட்டையை தவிர்க்க முடியும். அது மட்டுமில்லாமல் மது அருந்தும் பழக்கம் இருக்கவே கூடாது, போதை மாத்திரைகள் மற்றும் மயக்கம் தரும் மருந்துக்கள் உட்கொள்ளவே கூடாது.

Thanks to Abu Salma B.E-M.B.A

Anbudan
Suvanappiriyan

Monday, December 04, 2006

குர்ஆன் இறை வேதம் என்பது உண்மையா?

குர்ஆன் இறை வேதம் என்பது உண்மையா?

குர்ஆன் வாதத்தையும் விவாதத்தையும் ஊக்கமூட்டுகிறது:

குர்ஆனைப் பற்றி எவரும் சந்தேகம் கொண்டு விளக்கங்கள் கேட்டாலோ அல்லது விவாதத்துக்கு அழைத்தாலோ அது போன்ற சூழ்நிலைகளை குர்ஆன் ஊக்கப்படுத்துகிறது.

பல முஸ்லிம்களின் நம்பிக்கையானது குர்ஆன் வாதத்தையோ விவாதத்தையோ ஊக்கமூட்டுவதில்லை என்பது. இதனால் இவர்கள் இஸ்லாத்தை அல்லது குர்ஆனைப் பற்றி உள்ள எல்லா விதப் பேச்சுக்களில் அல்லது உரையாடல்களிலிருந்து விலகுகிறார்கள். உண்மையிலேயே குர்ஆன் வாதத்தையும் விவாதத்தையும் ஊக்கமூட்டுகிறது.

'நபியே! உம் இறைவனின் பாதையில் மக்களை விவெகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன்வழியை விட்டுத் தவறியவர்களையும் அவன் வழியைச் சார்ந்து நேர்வழிப் பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'
16 : 125 - குர்ஆன்

பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை.(FALSIFICATION TEST)

விஞ்ஞான குழுவில் வித்தியாசமான ஒரு அணுகுமுறை உள்ளது. பொதுவாக ஒருவர் விஞஞானத்தாலோ அல்லது எந்த ஒரு கலையிலோ புதிதாக ஒரு கருத்து அல்லது தத்துவத்தை கண்டுபிடித்து அமைத்தால் அத் தத்துவம் உண்மை அல்ல என்று நிரூபிக்கும் முகமாக ஒரு சோதனை முறையும் அந்த நபர் அமைத்துக் காட்ட வேண்டும். இல்லையெனில் இன்றைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 'உன்னிடம் நேரத்தை வீணாக்க எங்களால் இயலாது' என்று அவர்கள் கூறி விடுவார்கள். இந்த சோதனை முயற்ச்சிக்கு ஆங்கிலத்தில் “FALSIFICATION TEST” அல்லது தமிழில் 'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனால் தான் இந்த இருபதாம் நூற்றாண்டு துவங்கும் காலத்தில் 'ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்' என்ற விஞ்ஞானி ஒரு புதிய தத்துவக் கோட்பாட்டைக் கண்டு பிடித்து அறிவித்தார். அதாவது 'இந்த பிரபஞ்சமானது தூசியால்தான் அமைக்கப்பட்டுள்ளது'. இந்த தத்துவத்தை உண்மையல்ல என நிரூபிக்க அவர் மூன்று வித சோதனை முறைகளை செய்து காட்டி தன் வாதத்தை நிரூபித்தார். விஞ்ஞானிகளும் அதன் பிறகு ஐன்ஸ்டீனின் தத்துவத்தை ஒத்துக் கொண்டனர்.

இதே போல் குர்ஆனும் பல்வேறு 'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' களை வழங்குகிறது. இதில் சில சோதனைகள் முந்திய காலத்திற்கு மடடும். மேலும் சில சோதனைகள் கால வரம்பில்லாமல் எல்லாக் காலத்திற்கும் தகுதியுடையதாக இருக்கின்றன. 'உண்மையிலேயே இந்த நூல் இறை வெளிப்பாடு அல்ல எனில் இதை பொய் என்று நிரூபிக்க நீங்கள் இது போல் உருவாக்குங்கள்' என குர்ஆன் சொல்கிறது.

நாம் இது போல் ஒரு ஈடு இணையற்ற 'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' யை எந்த மத வேதங்களிலும் கண்டதில்லை. இது போன்ற ஒரு சோதனை மற்ற மதத்தின் வேதங்களில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒருவர் தம் நம்பிக்கையை முன்னிலைப் படுத்தும் போதெல்லாம் தம நம்பிக்கையை தவறென்று நிரூபிக்க எதிர் நபருக்கு ஒரு வாய்ப்பும் அளிக்க வேண்டும். குர்ஆன் தவறென்று நிரூபிக்க இது போல் பலவேறு வாய்ப்புகளை குர்ஆனே அளிக்கின்றது.

1. அபூலஹபைப் பற்றிய குர்ஆனின் தீர்க்கதரிசனம்:

முகமது நபி அவர்களுக்கு அபூலஹப் என்ற பெயருடன் ஒரு சிறிய தந்தை இருந்தார். 'அபூலஹப்' என்ற பெயரின் அர்த்தமானது 'நெருப்பின் தந்தை'என்ற பொருளில் வரும். ஏனெனில் இவருக்கு நெருப்பைப் போல் சீரியெழுகின்ற கோபமுண்டாகும். இவர் இஸ்லாத்தின் மற்றும் முகமது நபியின் கடும் எதிரியாகவும் இருந்தார். எப்பொழுதாவது முகமது நபி அவர்கள் ஒரு புதியவருடன் பேசுவதை பார்த்து விட்டால் அவர்களைப் பின் தொடர்ந்து காத்து நின்று அவர்கள் விடை பெற்றபின் அந்தப் புதியவரிடம் சென்று 'முகமது நபி தங்களிடம் என்ன சொன்னார்?' என்று கேட்டபின் 'அவர் பகல் என்று சொன்னாரா? அப்படியானால் அது இரவுதான். அவர் கருப்பு என்று சொன்னாரா? அப்படியானால் அது வெள்ளைதான்' என்று முகமது நபியின் கருத்துக்கு நேர்மாறாகக் கூறுவார்.
எப்படி நமது இணையத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இஸ்லாத்தை தாக்குவதையே தங்கள் முழு நேர வேலையாக கொண்டுள்ளார்களோ அதைப் போல

'அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும் அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.'
111-1-5 குர்ஆன்


குர்ஆனில் சூரா அல்-லஹப் என்ற பெயருடன் ஒரு அத்தியாயம் இருக்கின்றது. இந்த அத்தியாயத்தில் இறைவன் 'அபூலஹபும் அவன் மனைவியும் நரக நெருப்பின் அழிவுக்கு ஆளாகுவார்களென்ற முன்னறிவிப்பைக் கூறியிருக்கின்றான். இந்த முன்னறிவிப்பு கூறுவதெல்லாம் அபூலஹபும் அவன் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால் இவர்கள் நரக நெருப்பில் நுழைவார்கள் என்று மறைமுகமாகக் கூறுகின்றது. அபூலஹப் இறப்பதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த வசனம் குர்ஆனில் இறைவனால் அருளப்பட்டது. அபூலஹபின் பல நண்பர்கள் இந்தப் பத்து வருட காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்கள் ஆனார்கள். அபூலஹபிறகு குர்ஆன் பொய்யான வேதம் என்று நிரூபிக்க பத்துஆண்டுகள் மிக எளிதான வாய்ப்பாக இருந்தது. இஸ்லாத்தின் எதிரியும் அறிவிலியுமான அபூலஹபிறகு குர்ஆன் ஒரு பொய் வேதம் அது ஒரு மனித தயாரிப்பென்று நிரூபிக்க மிக ஆர்வம் இருந்தது. அபூலஹப் 'நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்' என்று மட்டும் கூறியிருந்தாலே குர்ஆன் பொய் என்று நிரூபிக்கப் பட்டிருக்கும். இவன் வழக்கம் போல் ஒரு பொய் சொல்லியிருந்தாலே போதுமானது. இவன் உண்மையான முஸ்லிமைப் போல் நடந்து கொள்ள வேண்டியதுமில்லை. இவன் ஒப்புக்காகவே 'நான் ஒரு முஸ்லிம்' என்று கூறியிருந்தாலே முழு குர்ஆனும் பொய்யாக்கப் பட்டிருக்கும்.

இந்த நிகழ்ச்சியானது முகமது நபி அவர்கள் அபூலஹபைப் பார்த்து 'என் சிறிய தந்தையே!நீங்கள் என் மேல் வெறுப்பு கொள்கிறீர்களா? என் தூதுவத்தை அழிக்க விரும்புகிறீர்களா? அப்படி என்றால் நான் ஒரு முஸ்லிம் என்று கூறும்.என் தூதுத்துவம் அழிந்து விடும். வாரும். விரைவாக கூறும்' என்று சொல்லி சவால் விட்டது போல் இருக்கின்றது. சிந்தித்துப் பாருங்கள். அபூலஹபிற்கு இதைப் பற்றி சிந்திப்பதற்கு பத்து ஆண்டு காலமிருந்தும் அவனால் இதைச் சொல்ல முடியவில்லை. வாதமுறையோடு சிந்திக்கக் கூடிய எந்த ஒருமனிதரும் தன்னால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் இது போல் ஒரு கோரிக்கை அல்லது சவாலை குறிப்பிட்டிருக்க மாட்டார். இது இறை வேதம்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக இருக்கிறது.

2. முஸ்லிம்களுக்கு யூதர்களைவிட கிறித்தவர்களே நெருக்கமானவர்கள்:

'நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும் இணை கற்ப்பிப்போரையும் முகம்மதே நீர் காண்பீர். 'நாங்கள் கிறித்தவர்கள்' எனக் கூறியோர் நம்பிக்கைக் கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர். அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும் அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்'
5 : 82 - குர்ஆன்

இந்த வசனத்தின்படி நாம் உலகில் இன்றும் கூட இணை வைப்பவர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு பரம எதிரிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். நம் இந்தியாவில் குஜராத் மோடி, பால் தாக்கரே, தமிழ்நாட்டு ராம கோபாலன், மேலும் யூதர்களின் கைப்பாவையான அமெரிக்கா, யூதர்களைத் தன்னகத்தே கொண்ட இஸ்ரேல் என்று குர்ஆன் சொன்ன 'இஸ்லாமிய எதிரிகள்' என்ற முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். யூத சமுதாயமானது கிறித்தவர்களைவிட ஒரு போதும் முஸ்லிம்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டார்கள். குர்ஆன் தவறென்று நிரூபிக்க இன்று யூதர்களுக்கு மிக நல்ல வாய்ப்பிருக்கிறது. இவர்கள் ஒன்றாகக் கூடி உலகம் முழுவதும் கிறித்தவர்களை விட இவர்கள் முஸ்லிம்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள் என்ற முடிவை எடுத்துக் கொண்டு அதனை செயல்படுத்தி முஸ்லிம்களைப் பார்த்து 'உலகத்தில் மிக நெருங்கிய நண்பர்கள் யார்? யூதர்களா? கிறித்தவர்களா? என்று கேட்க வேண்டும். இன்று வரை யூதர்களால் இதனைச் செய்ய இயலவில்லை.

அல்லது நம் நாட்டில் ஆர்.எஸ்.எஸ், இந்து முண்ணனி போன்ற தீவிரவாத இந்து இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 'இனி மேல் நாங்கள் முஸ்லிம்களோடு சகோதரத்துவத்தோடு நடந்து கொள்வோம்' என்று தீர்மானம் போட்டு நடந்து காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். இதன் மூலமும் குர்ஆனைப் பொய் என்று நிரூபிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் உலக முடிவு நாள் வரையில் அவர்கள் முஸ்லிம்களோடு ஒத்து வரவே மாட்டார்கள். அதே சமயம் இணை வைத்தலை விட்டு விட்ட பகுத்தறிவாதிகள் பெரியார் முதல் இன்றைய கி.வீரமணி வரை முஸ்லிம்களோடு அன்போடு பழகுவதைப் பார்க்கிறோம். இங்கு தமிழ் மணத்தில் கூட பகுத்தறிவு கொள்கை உடைய வலைப்பதிவர்கள் கருத்து வேற்றுமை இருந்தாலும் முஸ்லிம்களோடு அன்போடு பழகுவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

சிலை வணக்கம் ஒன்றையே பிரதானமாகக் கொண்ட பிராமணர்களே முஸ்லிம்களை எதிர்ப்பதில் முன்னிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். பிராமணர்களைத் தவிர மற்ற இனமான திராவிட இனத்தவர், முஸ்லிம்களோடு சகோதர வாஞ்சையோடு பழகுவதையும் பார்க்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இந்து முஸ்லிம் கலவரத்தின் சூத்திரதாரி யார் என்று பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்ஸோ, இந்துமுண்ணனியோ, சிவசேனாவோத்தான் இருக்கும். இநத இயக்கங்களின் செயல் வீரர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சியாக இருக்கிறது.

3. இது போன்ற ஒரு அத்தியயாயத்தை உருவாக்குங்கள்:

உலகத்திலுள்ள அனைத்து அரபி மொழி இலக்கியங்களில் மிக உயர்ந்தது குர்ஆன்தான் என்று முஸ்லிம்களும் அன்னிய மதக் காரர்களும் பாராட்டுகிறார்கள். இதன் கருத்து செழிப்பானது. உயர்தரமானது, உயர் நோக்கமுள்ளது. இஸ்லாத்தின் எதிரிகள் முகமது நபி அவர்களின் மீது குர்ஆனைப் போலியாகத் தயாரித்தார் என்ற பழியைச் சுமத்தியவுடன் குர்ஆன் இவர்களை எதிர்த்துரையாடி இவர்களுக்கு'பொய்யென நிரூபிக்கும் நோக்குடன் செய்யும் சோதனை' (Falsification Test) ஒன்றை அளித்தது.

'இந்தக் குர்ஆனைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!' என்று நபியே கூறுவீராக.
17 : 88 - குர்ஆன்

'அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.'
52 :34 - குர்ஆன்

'இவர் இதை இட்டுக் கட்டி கூறுகிறார்' என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக் கட்டி பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்! இறைவனையன்றி உங்களுக்கு இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறுவீராக!
11 : 13 - குர்ஆன்

இந்த எளிதான சவாலைக் கூட இதுவரை உலகில் யாராலும் முறியடிக்க முடியவில்லை. முகமது நபி அவர்கள் குர்ஆனை போலியாகத் தயாரித்தார்கள் என்று சொல்ல எத்தகைய அடிப்படையும் அவர்களிடத்தில் இல்லை.

'உங்களால் இதனைச் செய்யவே முடியாது. நீங்கள் செய்யா விட்டால் நரக நெருப்புக்கு அஞ்சுங்கள். கெட்ட மனிதர்களும் கற்களுமே அதன் எரி பொருட்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.'
2 : 24 - குர்ஆன்

இது போன்ற சவாலை எதிர்த்து எவராலும் வெற்றி பெற இயலவில்லை. அரேபிய நாட்டிலுள்ள பெரும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் இந்த சவாலை வெற்றிக் கொள்ள மிகவும் கடினமாக முயற்ச்சித்தார்கள். ஆனால் அவர்கள் மிகவும் பரிதாபமான முறையில் தோல்வியடைந்தார்கள். குர்ஆனுக்குப் போட்டியாக தயாரிக்கப்பட்ட கவிதைகள் இன்றைக்கு வரலாற்றுப் புத்தகங்களில் பாதுகாக்கப் பட்டுள்ளன. இதை இப்பொழுது நாம் படித்துப் பார்த்தால் நம்மையறியாமலேயே சிரித்து விடுவோம். அந்த தகுதியில்தான் இன்று அவை இருக்கின்றன.

-மும்பைபிர்லா மதுஸ்ரீ ஆடிட்டோரியத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் “Is The Quran Gods Words?” எனும் தலைப்பில் ஆற்றிய உரையைத் தழவி எழுதப் பட்டது.

இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

வாதத்தில் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் முறையா?

வாதத்தில் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் முறையா?

//என்னை மட்டம் தட்ட ஒரு இறைவனடி சேர்ந்த முது பெரும் தமிழ் ஞானியை, மாபெரும் முருக பக்தரை தவறுதலாக மேற்கோள் காட்டியுள்ளீர்கள். மறைந்த அம்மாமனிதரை தூற்றுவதற்கு சமமாகும் செய்கை இது.//
-Neelagandan

கிருபானந்த வாரியாரை எந்த அளவு மதிக்கிறேன் என்பது என் உள்ளத்துக்குத் தெரியும். அவருடைய பல கதாகாலட்சேபங்களை படிக்கும் காலங்களில் நிறையவே கேட்டிருக்கிறேன். அவருடைய நகைச்சுவை மிகவும் பிரசித்திப் பெற்றது.

ஒருமுறை கிருபானந்த வாரியார் கதாகாலட்சேபத்தில் சைவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு பையனிடம் 'முருகனின் தந்தை யார?' என்று கேட்டார். பையன் திருவிளையாடல் என்ற சினிமா படத்தைப் பார்த்தவன். அதனால் சிவனாக வேடமிட்ட நம் நடிகர் திலகத்தை நினைவில் வைத்துக்கொண்டு 'சிவாஜி' என்று சொன்னான். கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
உடனே வாரியார் சுவாமிகள் சமயோஜிதமாக 'காந்தி என்று சொல்வதை விட மரியாதையாக காந்திஜி என்று வட நாட்டார் சொல்வர். அப்பழக்கத்தால்தான் இவன் 'சிவா' என்று சொன்னால் மரியாதையில்லாமல் போகும் என்று நினைத்து 'சிவாஜி' என்று சொன்னான்' என்று ஒரே போடாக போட்டார். இது போன்ற திறமைகள் எல்லாம் ஒரு சிலருக்குத்தான் வரும்.

//அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர். -கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.//
-Suvanappiriyan

"இந்த வாதில் தோற்றால் தோற்றவர் என்ன செய்வது?" என குலச்சிறையார் கேட்டார். கோபமும் பொறாமையும் கொண்ட சமணர்கள், "வாதில் நாங்கள் அழிவோமாயின் எம்மை இந்த மன்னவன் கழுவினில் ஏற்றட்டும்." என்று கூறினார்கள். ...நீதில் வழுவாத மன்னன் மந்திரியாரை நோக்கி "வாதில் தோற்ற சமணர்கள் முன்னம் ஞானசம்பந்தர் அடியார் குழாத்துடன் தங்கியிருந்த திருமடத்திற்கு தீ வைத்தார்கள். ஆதலின் இவர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவில் ஏற்றி அரசநீதியை நிலை நிறுத்துக" என்றான்."
-கிருபானந்த வாரியார்

இரண்டு பேரும் சொல்வது ஒரே கருத்தைத்தான். சமணர்கள் வாதத்தில் தோற்றால் கழுவிலேற்றவும் என்ற ஒப்பந்தத்தை தவிர்த்து முதல் செய்தி வருகிறது. இதில் கருத்துச் சிதைவு ஏதும் ஏற்படவில்லையே!

அடுத்து நான் இஸ்லாமியன் என்பதால் இஸ்லாத்தை உயர்த்திப் பேசுவேன். அரவிந்தன் பிராமணர் என்பதால் இந்து மதத்தை உயர்த்திப் பேசுவார். இது மனிதனின் இயற்கை. எனக்கு இஸ்லாத்தில் அதிக விபரம் இல்லாமல் வாதத்தில் நான் தோற்கலாம். இதே போன்ற நிலைமை அரவிந்தனுக்கும் ஏற்படலாம். இந்த ஒரு விவாதத்தை வைத்து இஸ்லாத்தையும் இந்து மதத்தையும் எப்படி எடை போட முடியும்? இதே அளவு கோலை சமணர்களுக்கும் சைவர்களுக்கும் வைத்துப்பாருங்கள்.

ஒரு வாதத்தில் சரியான விபரம் இல்லாமல் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் மனிதாபிமானமா? அவர்களே ஒத்துக் கொண்டிருந்தாலும் இதை செயல்படுத்திய மன்னன் நேர்மையாளன் என்று எப்படி சொல்ல முடியும்? அடுத்துஒரு இடத்தில் வாதம் செய்தால் குறைந்தபட்சம் ஐந்திலிருந்து பத்து பேர் வரை அமர்ந்து வாதம் செய்ய முடியும். வாதப்படி சமணர்கள் தோற்றால் தோற்ற சமணர்களை தண்டிப்பதை விடுத்து எட்டாயிரம் சமணர்களை ஒரே நேரத்தில் கழுவிலேற்றுவது எந்த வகை நியாயம்.

சில இடங்களில் யானைகளை விட்டு சமணர்களை மிதித்து கொன்ற வரலாறும் நாம் பார்க்கக் கிடைக்கிறது. அவர்களின் நிலங்களும்,வீடுகளும் அநியாயமாக பறிக்கப்பட்டு மாற்றார்க்கு கொடுக்கப் பட்டதும் நடந்துள்ளது. இவற்றை எல்லாம் எந்த வகையில் நியாயப்படுத்தப் போகிறீர்கள்.?

//சுவன பிரியன் ஒரு RSS கைகூலியாக இருக்கலாம். இஸ்லாமிய தோழர்கள் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.//
-சாமுவேல் ஞானதாசன்

//ஐயா, சுவனப்ரியனை நான் நன்கு அறிவேன். அவர் அக்மார்க் இஸ்லாமியர்.இஸ்லாமை முழு மூச்சுடன் நம்புபவர். அவர் மேல் இந்த மாதிரி அபாண்டங்கள் வேண்டாம்//
-கால்கரி சிவா

என் சார்பாக உண்மையை விளக்கியமைக்கு நன்றி கால்கரி சிவா!

பதிவைப் படிப்பவர்களுக்கு உண்மை நன்றாக தெரியும் என்பதால் வழக்கமான இந்த சாமுவேல் (இதுவே போலி பெயர்)பொய்களுக்கு பதில் சொல்ல எந்த அவசியமும் இல்லை.

//குமாரில பட்டர் எனும் இந்துமுனிவர் பவுத்தர்களிடம் தோற்று இதுபோன்று முன்பு நெருப்பில் அணுஅணுவாக தம்மை எரித்துக்கொண்ட சம்பவம் பற்றி ஆதிசங்கரர் வரலாறு கூறுகிறது. அக்காலத்தில் இது சர்வ சாதாரண நிகழ்வு. பாண்டிய மன்னனோ,சம்பந்தரோ இதை கட்டளை பிறப்பித்து செய்யவில்லை.//
-ஜோக் பார்ட்டி!

ஆக ஒரு மதத்தவரை மற்ற மதத்தவர் போட்டுத் தள்ளுவதும், கழுவிலேற்றுவதும் சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்.நன்றி!

இதற்கு 'இந்து ஜிஹாத்' என்று பெயர் வைத்துக் கொள்வோமா! :-)

//("எண்ணாயிரம்(என்ற ஊரை சேர்ந்த) சமணர்கள் கழுவேறினர்" என்பதை அரைகுரையாக புரிந்துகொண்டு "எட்டாயிரம் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டனர்" என பின்வந்த வரலாற்று ஆசிரியர்கள் (மார்க்சிஸ்ட் முட்டாள்கள்) வியாக்கியானம் செய்து வரலாற்றில் ஏற்றி அதை நாம் இன்று வரை நம்பி வந்திருக்கிறோம்.//
-ஜோக் பார்ட்டி!

இதற்கு கம்யூனிஸ்டுகள் தான்பதில் சொல்லவேண்டும். கிருபானந்த வாரியாருக்கும் கம்யூனிஸ்டுகள்தான் சொல்லிக் கொடுத்தார்களாமா?

உதயேந்திரப் பட்டயம்!

வைணவ சமயத்தைத் தழுவியிருந்த பல்லவ மன்னன் தம் முன்னோர் சமணருக்கு விட்டிருந்த நிலத்தைக் கவர்ந்து மறையவர்க்கு உரிமையாக்கினான்.
'இரண்டாம் நந்திவர்மன் தரும சாத்திர முறைப்படி நடவாத மக்களை அழித்து இந்த நிலத்தைக் கைப்பற்றி வரியிலியாக பிராமணர்க்கு அளித்தான்.'
-உதயேந்திரப் பட்டயம்.

'இந்தநிலத்திற்கு உரியவர் சமணர்: அவர்களை அழித்து இந்நிலத்தைப் பிறர்க்கு கொடுத்தது என்பது பல்லவ மன்னனின் வரலாற்றில் ஒரு களங்கத்தை உண்டு பண்ணி விட்டது. எனினும் இச்செயல் அக்கால நிலையை ஒட்டியதாகும்.' என்று உதயேந்திப்பட்டயம் குறித்து தாமஸ் போக்ஸ் எனும் அறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.
-Indian Antiquary, volume 8,Page 281
-மேற்கோள் மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு,சென்னை 1956, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'எனினும் இச்செயல் அக்கால நிலையை ஒட்டியதாகும்' என்ற வாசகத்திலிருந்து அதிகாரவர்க்கம் அனைத்தும் திட்டம் போட்டு ஒரு மிகப் பெரும் இனத்தையே அழித்திருக்கிறதுஎன்பது தெளிவாகிறது.. இது போன்ற செய்தி அந்தகால மக்களுக்கு சர்வ சாதாரணமாக தோன்றியிருக்கிறது. இன்று சமணர் என்று சொல்லிக் கொள்ள தமிழகத்தில் ஒருவரும் இல்லாதது சைவர்களின் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

//இம்மன்றில் ஏதோ சைவசமயப் பெரியோர் சூழ்ச்சி செய்து அப்பாவியான பண்டைச் சமண பௌத்தச் சமயவாதியரை அழித்தொழித்து விட்டதாகவும், 'அவர் கடவுள் தாழ்ந்தோன்; என்கடவுள் உயர்ந்தோன்' என்று மிஷனரிமார்பாணியில் தத்தம் கருத்தினைப் பரப்பிப் பின் பெருவாரியினர் விருப்பமின்றி அவரை மீண்டும் வலிய 'மதம்' மாற்றி விட்டதாகவும் போன்ற தொனியில் அவ்வப்போது சில மடல்களைக் காண்கிறேன்.//
-Jawa Kumar

மேலே உள்ள கொடுமைகளெல்லாம் நம் நாட்டில் நடக்கவில்லையாம். ஜாவா குமாரின் கூற்றுப்படி அனைத்து சமணரும், பௌத்தரும் தாங்களாகவே விரும்பி சைவர்களாக மாறினர் என்ற கூற்றை உண்மையாக்க முயல்கிறார். இந்தக் கூற்றுக்களைபிராமணர்களைத் தவிர வேறு யாரும் நம்பப் போவதில்லை என்பதை அவருக்கு யாராவது விளக்குங்களேன்.

//அன்று சைவர்களை சமணர்கள் விரட்டினார்கள் என்றாலும், சமணர்களை சைவர் கள் விரட்டினார்கள் என்றாலும் அது இந்துக்கள் பிரச்சனை.//
-ஜெஹோவா!

இதே கேள்விகளை முஸ்லிம்களும் உங்களைப் பார்த்து கேட்கலாங்கலாண்ணா!இஸ்லாத்துக்கு எதிராக ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் அதைப் பெரிதாக்கி மகிழ்வது உயர்ஜாதி இந்துக்கள்தானே! இதை மறுக்கமுடியுமா?இத்தனை அநியாயங்களை அரங்கேற்றிவிட்டு எதைக்கொண்டு இஸ்லாத்தை நீங்களெல்லாம் விமரிசிக்கிறீர்கள்?

Tuesday, November 28, 2006

வானங்களும் பூமியும் இணைந்திருந்தன! - அறிவியல் உண்மை.

வானங்களும் பூமியும் இணைந்திருந்தன! - அறிவியல் உண்மை.

'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன எனபதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா?'
21 : 30 -குர்ஆன்

இந்த பூமி எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை குர்ஆன் எவ்வளவு அழகாக கூறுகிறது பாருங்கள். இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பல விதமான கட்டுக் கதைகளைத்தான் இதற்கு முன் படித்திருக்கிறோம். திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை முகமது நபி காலத்திலேயே சொல்லி விட்டது. வானம் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை தானே பிரித்துப் பிளந்து எடுத்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகிறான்.

இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது.

இந்த பிரபஞ்சம் எப்படி உண்டானது? அல்லது எப்படி உருவானது?

பெரு வெடிப்புக் கொள்கை(Big Bang Theory)

'வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள்கள் வியாழனை ஒத்த ஆனால் மிக அடர்த்தியான ஒரு பொருளுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தாலும் அழுத்தத்தாலும் இரசாயன மாற்றத்தாலும் திடீரென வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுகள் வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சற்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.'

பெரு வெடிப்புக் கொள்கை என்றழைக்கப் படும் இந்தத் தத்துவமே இன்று பிரபலமானது. 1973 ஆம் ஆண்டு நன்றாக விவரிக்கப்பட்ட இந்த பெரு வெடிப்புக் கொள்கை பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டு உயர் அந்தஸ்தும் கொடுக்கப் பட்டது.

படிப்பறிவில்லாத முகமது நபிக்கு இந்த உண்மை எவ்வாறு தெரிந்தது? என்று வியக்கிறோம்.

அதே போல் உயிருள்ள பொருள்களின் மூலம் தண்ணீர் தான் என்ற உண்மையையும் குர்ஆன் கோடிட்டு காட்டுகிறது. இந்த உண்மையையும் தன் அனுபவத்தால் முகமது நபி கூறியிருக்க முடியாது என்ற முடிவுக்கும் வருகிறோம். அடுத்து வானத்தைப் பற்றிய மற்றொரு உண்மையையும் குர்ஆன் கூறும் அழகைப் பார்ப்போம்.

'வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில்உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.'
21 : 32 - குர்ஆன்

வானத்தை பாதுகாக்கப் பட்ட முகடு என்று குர்ஆன் கூறுகிறது.

வானத்தை முகடு என்று குர்ஆன் ஏன் கூற வேண்டும்?

விண்ணிலிருந்து வருகின்ற பற ஊதாக் கதிர்கள் வானத்தில் வடிகட்டப் படுகின்றன. அங்கிருந்து வருகின்ற எரி கற்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு எரிக்கப் பட்டு கேடு விளைவிக்காத அளவில் கீழே விழுகின்றன.

மேலே இருக்கின்ற முகடு சூரியனின் அளவு கடந்த வெப்பத்தை பூமிக்கு நேரிடையாக அனுப்பாமல் மட்டுப் படுத்தப்பட்டு மனிதன் தாங்கக் கூடிய அளவுக்கு வெப்பத்தை அனுப்புகிறது. இது போன்ற பாதுகாப்பை உயிரனங்களுக்காக செய்வதால் இறைவன் வானத்தை முகடு என்று வர்ணிக்கிறான்.

'அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான் வெளியில் நீந்துகின்றன.'
21 : 33 - குர்ஆன்


இங்கு நீந்துதல் என்ற வார்த்தையைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம். கோள்கள் அனைத்தும் அதனதன் பாதையில் சுற்றி வரும்போது அதற்கு பொருத்தமான வார்த்தையான 'நீந்துதல்' என்ற வார்த்தைப் பிரயோகத்தை படிப்பறிவில்லாத முகமது நபியால் சிந்திக்க முடியுமா? உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த அந்த காலத்தை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். இன்றும் கூட நம்மில் பலர் பூமி உருண்டை என்பதையும் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையையும் நம்பாதவர் இருக்கின்றனர்.

'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை படைக்க இறைவன் நாடினான். "
41 : 11 - குர்ஆன்.

இவ்வசனத்தில் வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. வானம் பூமி அனைத்தும் ஒன்றாக இருந்து பின்னர் பிரித்து எடுக்கப்பட்டதுதான் என்பதை முன்பே பார்த்தோம். இவ்வாறு பிரித்தெடுக்கப் பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன்பிறகுதான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின: என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுவதை குர்ஆன் அன்றே கூறியிருக்கிறது.

குர்ஆன் கூறும் இந்த உண்மைகளை யொட்டிய ஒரு அறிவியல் கட்டுரையை சமீபத்தில் படித்தேன். அதை அப்படியே கீழே தருகிறேன்:

உலகில் எந்த மூலகமும் மனிதனால் உற்பத்தி செய்யப் படுவதில்லை. ஹீலியம் என்ற மூலகத்தில் தொடங்கி கார்பன், ஆக்சிஜன், இரும்பு, செம்பு, வெள்ளி, நிக்கல், தங்கம் வரை பல மூலகங்களும் நட்சத்திரங்களில் அல்லது அவற்றின் மடிவின் போது தான் உற்பத்தியாகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் தங்கமோ, வெள்ளியோ எல்லாமே ஹைட்ரஜனிலிருந்து தான் தொடங்குகின்றன. அதாவது அனைத்துக்கும் மூலப் பொருள் ஹைட்ரஜன் வாயுதான். வேறு விதமாகச் சொல்வதானால் நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரு வகையில் மூலக உற்பத்தி 'தொழிற்சாலைகளே'.

சூரியன் போன்ற நட்சத்திரத்தில் முதல் கட்டமாக அணுச் சேர்க்கை மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாகிறது. ஹீலியம் பின்னர் கார்பன்ஆகிறது. சூரியனை விட பலப் பல மடங்கு பெரிய நடசத்திரங்களில் மேலும் கடும் வெப்பத்தில் கார்பன் அணுக்கள் இடையில்அணுச் சேர்க்கை ஏற்பட்டு ஆக்சிஜன்,நியான் என பல மூலகங்கள் உற்பத்தியாகின்றன.

சில வகை நட்சத்திரங்கள் குறிப்பிட்ட கட்டத்தில் வெடிக்கின்றன. அது பயங்கர வெடிப்பாகும். அந்த வெடிப்பின் போது அதிக எடை கொண்ட (அதிக எண்ணிக்கையிலான புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் கொண்ட) தங்கம் வெள்ளி பிளாட்டினம் முதலான மூலகங்களின் அணுக்கள் உற்பத்தியாகின்றன. இவ்விதம் விண்வெளியில் எண்ணற்ற நட்சத்திரங்கள் வெடிக்கும் போது இந்த கன ரக மூலகங்களின் அணுக்கள் விண்வெளியில் பரவி நிற்கின்றன.

இவை விண்வெளித் தூசுடனும் ஹைட்ரஜன் வாயுவுடனும் சேர்ந்து பிரம்மாண்டமான முகில்களாக உருவெடுக்கின்றன. ஒரு கட்டத்தில் இந்த வாயு முகில்கள் மொத்தையாகத் திரளுகின்றன. அப்போது ஈர்ப்பு சக்தி காரணமாக இவை வடிவில் ஒடுங்க ஆரம்பிக்கின்றன. மாபெரும் உருண்டையாக உருவெடுக்கும் போது உட்புறத்தில் கடும் அமுக்கம் காரணமாக பல மில்லியன் டிகிரி அளவுக்கு வெப்பம் தோன்றி அணுச் சேர்க்கை நடக்கத் தொடங்கி அந்த வாயு மொத்தையானது நட்சத்திரமாக உருவெடுக்கிறது. இறுதியில் ஒரு வேளை அந்த நட்சத்திரத்தின் வாழ்க்கை வெடிப்பில் போய் முடியலாம்.

இப்படியாக விண்வெளியில் அடுத்தடுத்து நட்சத்திரங்கள் மடிவதும் மீண்டும் வாயு முகில்கள் தோன்றுவதும் அவற்றின் மூலம் புது நட்சத்திரங்கள் தோன்றுவதும் நிகழ்கின்றன. இப்படியாக ஒரு வாயு முகில் மூலம் தோன்றியது தான் சூரியன் என்ற நமது நட்சத்திரம். சூரியனுடன் சேர்ந்து தான் பூமியும் இதர கிரகங்களும் தோன்றின.

அந்த வகையில் பார்க்கும் போது பூமியில் அடங்கிய கார்பன், ஆக்சிஜன், இரும்பு, அலுமினியம், தங்கம், வெள்ளி, முதலான எல்லா மூலகங்களும் என்றோ விண்வெளியில் நட்சத்திரங்களின் உட்புறத்தில் அல்லது அவற்றின் வெடிப்பின் போது தோன்றியவையே!

15-10-2006 - தினமணி

இனி இப்பேரண்டத்தைப் பற்றியும், அறிவியல் முடிவுகளைப் பற்றியும் ஒரு சில அறிஞர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.

'பிரெஞ்சுப் புரட்சிக்கு அடிப்படையாய் அமைந்த கொள்கைகளும் மார்க்ஸ் லெனின் ஆகியோரின் கருத்துக்களும் வெற்றுருத் தத்துவமாயுள்ள (வெறும் கருத்தாயுள்ள - உண்மையில் நடைமுறையில் இல்லாத) கற்பனை மனிதர்களுக்கு மட்டுமே பொருந்துவனவாகும். மனித உறவுகளுக்கான சட்டங்கள் இன்னும் அறியப்படாமலே இருக்கின்றன என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய சமூகவியலும் பொருளியலும் வெறும் அனுமானத்தின் - ஊகத்தின் அடிப்படையிலான இயல்களே ஆகும். அதாவது போலி அறிவியல்களாகும்.

- பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் அலெக்ஸிஸ் கேரல்(Dr. Alexis Carrel)
- Book : Man The Unknown


'இப்பேரண்டத்தைப் பற்றிய உண்மைகள் பலவற்றைக் கண்டறிய தற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இருப்பினும் அறிவியல் சிந்தனையின் வரலாற்றிலேயே மிகவும் மர்மமான ஒன்றாக பெரும் புதிராக இன்று வரையிலும் விளங்கிக் கொண்டிருப்பது இப்பேரண்டமேயாகும். இயற்கையைப் பற்றி தற்காலத்தில் நாம் பெற்றிருக்கின்ற அறிவு முந்தய யுகம் எதனையும் விட அதிகமானதே என்றாலும் இதுவும் கூட போதுமானதன்று. ஏனெனில் நாம் இப் பேரண்டத்தில் எங்கு திரும்பினாலும் புதிர்களும் முரண்பாடுகளுமாகவே காடசியளிக்கின்றன.'

அறிஞர் : J.W.N. SULLIVAN

வாழ்க்கை என்பது இன்னும் கூட விடுவிக்க முடியாத ஒரு புதிராக இருந்து வருகிறது. என்பதனை நவீன மனிதன் ஒத்துக் கொள்கிறான்.இருந்தும் நிச்சயம் ஒருநாள் இந்தப் புதிருக்கான விடையை நாம் கண்டு பிடித்தே தீருவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறான். மனித வாழ்வியல் துறைகளில் மூழ்கி ஆய்வு செய்த பலரும் இன்னும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியாமல் தமது சொந்தக் கற்பனைகளின் உலகில் திசை தெரியாமல் தடுமாறி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதில் அதிகமானோர் முடிவில் விரக்தியடைந்து நாத்திகத்தின் பக்கம் சென்றுவிடுகின்றனர். இதை நாம் கண் கூடாக நம் தமிழகத்திலேயே பரவலாகப் பார்க்கிறோம்.

நம் வலைப் பதிவர்களில் கூட ஒரு சில நண்பர்கள் இறைவனைப் பற்றிய சிந்தனையால் அவன் எப்படிப் பட்டவன், அவனை எவ்வாறு அடையலாம் என்ற சிந்தனைகள் சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.

//எப்போதும் நமது மனதில் இடையறாது இருக்கும் செக்ஸ் பற்றிய பிரக்ஞையை கடவுளின் பால் திருப்ப அதையே வணங்கும் பொருளாக ஆக்கியிருப்பர் பண்டைய பாகன்மார்கள் என்று தோன்றுகிறது. பிற்காலத்தில் அது இன்றைய சிவலிங்கமாக மாற்றம் பெற்றிருக்கலாம்.//
-Nesa Kumar

//தமிழகத்தின் தென்பகுதியில் இயங்கும் ஒரு ஆன்மீகக் குழுவைப் பற்றி ஒருநாள் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார், அக்குழுவின் சித்தாந்தத்தில் மற்றவர்கள் தலையிடுவது தவறு என்று.அக்குழுவில் இருப்பவர்கள் , தமது வளாகத்திற்குள் ஆடையெதுவும் அணிவதில்லை. திருமண பந்தமென்று எதுவும் அங்கில்லை. பிடித்திருந்தால், உறவு கொள்ளலாம். எவ்வித நிர்ப்பந்தமும் அங்கில்லை.//
-Nesa kumar

//ஆனால், விரும்பி ஒருவரை ஒருவர் புணர்ந்தால், திருமணம் கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தால் - அதில் ஒழுக்கக்காவலர்களுக்கென்ன பிரச்சினை. //
-Nesa kumar

//திராவிடத்திலும் தெய்வங்கள் இருக்கிறது. ஆனால் அவை சக மனிதன் போல் கள்ளும் சாராயமும் குடிப்பவை.எந்த வேதத் தன்மையோ புனிதத்தன்மையோ இல்லாதா "துடியான" தெய்வங்கள்.//
-Kalvettu

//ஆனால் அந்த வழிபாடு உருவான விதம் அப்படி அல்ல. வேத இலக்கியத்தில் பிரம்மாண்டம் முழுவதும் "ஸ்கம்பம்" என்ற தூணாக உருவகிக்கப் பட்டு, அதன் பிரதியாக ஒரு தடி யாகங்களில் வணங்கப் பட்டது, இதுவே பின்னர் சிவலிங்கமாயிற்று. தடியைத் தூக்கிச் சென்ற எருது நந்திதேவராயிற்று. சுவாமி விவேகானந்தரும் இதே கருத்தைத் தான் கூறுகிறார் - //
-Jadayu

//ஒஷோ எதற்கும் தடை இல்லையென்றார். அவரின் (நான் சென்றதில்லை) ஆசிரமத்தில் வன்முறைக்கு இடமே இல்லை. வன்புணர்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. பெரும்பாலோர் தியானத்திலே களிப்பர் வெகு சிலரின் காம தியானத்தை நம் அழுக்குப் பிடித்த பரபரபு மீடியாக்கள் எழுதி காசுப் பார்த்தன.//
-Kalkari Siva

//யூதர்கள் அத்தகய அட்டூளியங்கள் செய்யவில்லை.காரணம், யூதர்கள் மதம் மாற்றுவதில்லை, அவர்கள் தங்களுக்குள்ளேயே குளுக்களாக இருந்து spiritual enlightenment அடைந்து வந்துள்ளனர். நீங்கள் சுட்டிய esenes//
-Vajra
//பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளவன் பிண்டமாகிய உடலின் தலையில் உள்ளான்.////ஈசன் எங்குமிருக்கிறான். பிரபஞ்சத்தில் இருப்பவன் நம் உடலில் இல்லாமலா போய்விடுவான்?பிரபஞ்சம் - அண்டம்உடல் - பிண்டம்//-Njaanavettiyan

இறைவனை நானும் தேடுகிறேன் என்று தன் மனம் போன போக்கில் தேடினால் மேலே சுட்டிக் காட்டிய எண்ணங்களெல்லாம் அனைவரின் மனதிலும் எழ ஆரம்பிக்கும். இது மேலும் பல குழப்பங்களுக்குத்தான் வழி வகுக்குமேயன்றி ஒரு தீர்வைத் தராது.
நம்மைப் படைத்த இறைவனைப் பற்றியும், இந்த உலகம் உருவான விதம் பற்றியும், தெளிவாக எளிய நடையில் விளக்கியிருக்கும் குர்ஆனை ஏனோ பலரும் திறந்து பார்க்க விரும்புவதில்லை. 'குர்ஆன் என்பது முஸ்லிம்களின் வேதம். அதை நாம் ஏன் விளங்க வேண்டும்'என்ற எண்ணம் தான் பலரிடமும் இருக்கிறது. இறைவன் குர்ஆனில் பல இடங்களில் 'மனிதர்களே!' என்று உலகமக்களைப் பார்த்துதான் அதிகமாகப் பேசுகிறான்.

'முஹம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே தூதராக உம்மை அனுப்பியுள்ளோம்.எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'
34 : 28 - குர்ஆன்

'இக் குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். முஹம்மதே! அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் 'நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை' என்று இந்தக் குர்ஆனை மறுப்போர் கூறுவார்கள்.'
30 : 58 -குர்ஆன்

'இந்த முன்னுதாரணங்களை மக்களுக்காக கூறுகிறோம். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதை விளங்க மாட்டார்கள்.'
29 : 43 - குர்ஆன்.

'இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் இது அருளப் பட்டுள்ளது.'
14 : 52 - குர்ஆன்.

'மனிதர்களை அவர்களது இறைவனின் விருப்பப்படி இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கும், புகழுக்குரிய மிகைத்தவனின் பாதைக்கும் நீர் கொண்டு செல்வதற்காக உமக்கு இவ் வேதத்தை அருளினோம்.'
14 : 1 - குர்அன்.

'மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார்.நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்' என்று முஹம்மதே! கூறுவீராக.
10 : 104 - குர்ஆன்.இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

Wednesday, November 22, 2006

பூமி உருண்டை என்பதை எவ்வாறு நிரூபிப்பது?

பூமி உருண்டை என்பதை எவ்வாறு நிரூபிப்பது?

'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.'
31 : 29 - குர்ஆன்

இந்த பூமியின் அமைப்பானது சமதளம் என்றே முந்தைய கால மக்கள் நம்பியிருந்தனர். அவர்கள் பூமியில் அதிக தூரம் பயணிக்க பயந்ததுண்டு. பூமி சம தளமாக இருப்பதால் எல்லைக்குச் சென்றால் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் தான் காரணம்.

1597 அம் ஆண்டில் வாழ்ந்த ஃபிரான்ஸிஸ் டிரக் என்ற விஞ்ஞானிதான் பூமி உருண்டையானது என்று உறுதியாகக் கூறினார். இந்த உண்மையைத்தான் குர்ஆனும் சொல்கிறது.

பகலும் இரவும் ஒன்றுக்குள் ஒன்று புக வைக்கிறது என்ற இந்த நிகழ்வு பூமி உருண்டையாக இருந்தால்தான் நடைபெறும். சம தளமாக இருந்து பூமி சுற்றாமலும் இருந்தால் ஒன்றோடு ஒன்று புக வைக்கும் நிகழ்வு நடக்காது.

'சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.'
13 : 2 - குர்ஆன்

நாமெல்லாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் விஞ்ஞானப் பாடத்தில் சூரியனைப்பற்றி படித்திருப்போம். சூரியனானது நிலையானது. அசைவற்றது. மற்ற கோள்கள் தாம் அதைச் சுற்றி சுழல்கிறது. சூரியன் தன் இடத்தை விட்டு நகர்வதில்லை என்பதாகும்.

அனால் இன்று விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பானது சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுழல்கின்றன. சூரியன் ஒரு முறை தன்னைத் தானே சுற்றி வர சுமார் இருபத்தைந்து நாட்கள் ஆகிறது. அது மட்டும் அல்ல சூரியனில் கருப்புப் புள்ளிகளும் உள்ளன என்பதாகும்.

நேற்று வரை விஞ்ஞானிகள் சூரியன் அசைவற்றது. நிலையானது. என்று சொன்னவர்கள் இன்று தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டார்கள். 'மற்ற கோள்களோடு சேர்ந்து சூரியனும் ஓடுகின்றது' என்ற குர்ஆனின் கருத்தை இன்று உண்மை என்று அறிவியலாரும் ஒத்துக் கொண்டனர். இந்த இடத்திலும் அறிவியலாரை பின்னுக்குத் தள்ளி விட்டு குர்ஆன் நிமிர்ந்து நிற்கிறது.

சந்திரனின் பிரகாசம்:

'வானத்தில் நட்சந்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும் ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்'
25 : 61 - குர்ஆன்

சந்திரன் தன் சொந்த ஒளியினாலே பிரகாசிக்கிறது என்று முந்தைய மனிதர்கள் நம்பியிருந்தனர். ஆனால் இன்று சந்திரனின் ஒளியானது அதன் சொந்த ஒளியல்ல. சூரியனின் ஒளியைத்தான் அது பிரதிபலிக்கின்றது என்று விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர். அதாவது சந்திரன் சூரியனின் ஒளியை வாங்கி அதைத் திரும்ப வெளியிடுகிறது. ஆகையால் நாம் சந்திரனைக் காணும் போது அதில்காணும் ஒளியானது சந்திரனின் ஒளியல்ல. சூரியனின் ஒளியைத் தான் அது திரும்பக் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது என்று சில ஆண்டுகளுக்கு முன்தான் விஞ்ஞானம் கண்டறிந்து கூறியது.

குர்ஆன் சந்திரனின் ஒளிக்கு 'முனீர்' என்னும் பதத்தை உபயோகப் படுத்தியுள்ளது. இந்த அரபி பதத்துக்கு நேரடியான பொருள் பிரதிபலிக்கின்ற ஒளி. மிகவும் கவனமாக நேர்த்தியாக சந்திரனின் ஒளியை பிரதிபலித்தல் என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ளதால் குர்ஆன் இறை வாக்குதான் என்பது மேலும் உறுதியாகிறது.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

திருநாவுக்கரசர்!

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.
-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,
Chennai, Page 27-29
-Mysore Archaeological Report, 1909-10, Page 112

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,

இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.

பெரிய புராணம் தரும் செய்தி!

'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

இஸ்லாம்

இதே கால கட்டத்தில் தான் மக்காவில் இஸ்லாம் தோன்ற ஆரம்பித்தது. முகமது நபி தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியது இந்த கால கட்டத்தில்தான். இஸ்லாம் தொன்றுவதற்கு முன்பே உலகின் பல்வேறு பாகங்களில் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தவங்களை இன்னொரு மதத்தினர் அழித்ததையும் அல்லது அதனை தங்களது வழிபாட்டுத் தலமாக மாற்றியதையும் சரித்திரத்தில் நாம் காண முடிகிறது.
-வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப், செ. திவான்.

திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'
-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,
1937, Page 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'
பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'
மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.

திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.
-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.
இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.
-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.
-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'
-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.
-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.

'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'
'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'
-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52

செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.
-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.

திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.
'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'
-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.

படிக்க படிக்க ஒவ்வொரு உண்மையாக வெளிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றை தோண்டிப் பார்த்தோமானால் நமது முன்னோர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும், ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோவில் கட்டிக் கொள்வதுமாக அநியாயங்கள் தடையின்றி அரங்கேறியுள்ளது. இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருப்பதுதான் விந்தை.

நேரம் கிடைக்கும் போது மேலும்பல வரலாறுகளை பட்டியலிடுகிறேன்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Thursday, November 16, 2006

'குர்ஆன் இறைவேதம் இல்லையாம்' - சொல்கிறார்கள்.

'குர்ஆன் இறைவேதம் இல்லையாம்' - சொல்கிறார்கள்.

சமீபத்தில் ஒரிஜினல் திம்மியும், நல்லவனும் குர்ஆனில்மிகப் பெரிய தவறைக் கண்டு பிடித்து விட்டதாக சந்தோஷப் பட்டுக் கொண்டு பின்னூட்டம் இட்டிருந்தார்கள். அதை அப்படியே கீழே தருகிறேன்:

//நல்லவன் கூறியது...

////இறைவன் கூறுகையில்.மனிதர்களே! மறுமையின் மீது சந்தேகம் இருந்தால் அறிந்து கொள்ளுங்கள் நாம் உங்களை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்துள்ளோம். (அல் குரான்).//இது தவறான கருத்து. பழங்காலத்தில் பலரும் இப்படிப்பட்ட கருத்தினை கொண்டிருந்தார்கள். இந்திரியத்தின் மூலமாக மனிதனை படைக்க முடியாது. இந்திரியம் எவ்வளவு முக்கியமோ அதே போல பெண்ணின் கருப்பையில் இருக்கும் முட்டையும் முக்கியம். இரண்டும் பாதிப்பாதி கலந்துதான் ஒரு ஆணோ பெண்ணோ பிறக்கிறார்கள். வெறும் இந்திரியத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யவியலாது.அந்த காலத்தில் பெண்ணின் கருப்பையினுள் இருக்கும் முட்டையை அறிந்திராதவர்களாக இருந்தார்கள். கேலன் என்னும் ஒரு கிரேக்க அறிவியலறிஞர் மட்டுமே பெண்ணின் திரவமும் ஆணின் திரவமும் சேர்ந்துதான் கரு உருவாகிறது என்று கருதினார். அப்படி குரானில் இன்னொரு இடத்தில் கூறியிருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், இந்த இடத்தில் கூறியது தவறுதானே?சுவனப்பிரியன் உங்களது பதில் என்ன?//

ஒரிஜினல் திம்மி கூறியது...

//நாம் உங்களை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்துள்ளோம். (அல் குரான்).////இது தவறான கருத்து. பழங்காலத்தில் பலரும் இப்படிப்பட்ட கருத்தினை கொண்டிருந்தார்கள். இந்திரியத்தின் மூலமாக மனிதனை படைக்க முடியாது.//நன்றி சடையப்பாஇது இறைவேதம் இல்லை என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறீர்கள்//

இது இறை வேதம் இல்லை என்று சொல்லிக் கொள்வதில் என்ன சந்தோஷம் இவர்களுக்கு. ஆனால் இவர்கள் எதை எல்லாம் இறை வேதம் இல்லை என்பதற்கு சான்றாக்குகிறார்களோ அந்த வசனங்களே இது இறை வேதம் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

'குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாகக் கூட இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.'
76 : 2 - குர்ஆன்ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினை முட்டையுடன் இரண்டறக் கலந்து பிறகு தான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று குழந்தை உருவாகிறது. இந்த உண்மையைத்தான் அழகாக 'கலப்பு விந்துத் துளியிலிருந்து மனிதனை நாம் படைத்தோம்' என்று குர்ஆன் கூறுகிறது.

இந்த உண்மையை கிரேக்கத்திலிருந்து கேலன் என்ற அறிவியல் அறிஞர் வந்து சொல்லித்தான் நல்லவனுக்கும், ஒரிஜினல் திம்மிக்கும் தெரிய வருகிறது. இந்த அரிய உண்மையை சர்வ சாதாரணமாக ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வெகு அலட்சியமாக குர்ஆன் சொல்லிச் சென்றுள்ளதை அறிந்து வியக்கிறோம்.

மேலும் தங்களின் அன்னையின் கருவில் உருவாவதற்கு முன் நல்லவனும்,ஒரிஜினல் திம்மியும் எங்கு இருந்தார்கள்? இதைக் குர்ஆன் விளக்கும் போது

'குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக் கூட இல்லாத ஒரு காலம் நல்லவன், ஒரிஜினல் திம்மி போன்ற மனிதர்களுக்கு இருந்ததில்லையா? என்று கேட்கிறது. இதைப் பற்றி மனிதர்களாகிய நாம் என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? இனிமேலாவது நல்லவனும், ஒரிஜினல் திம்மியும்,எழிலும் சிந்திப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இதே தலைப்பில் முன்பு ஒரு முறை நான் கொடுத்த பதிவினை மேலதிக விளக்கத்திற்காக மீண்டும் ஒரு முறை தருகிறேன்.

'களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் துளியாக ஆக்கினோம். பின்னர் அந்தத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

- 23 : 12,13,14 - குர்ஆன்


புரபஸர் எமிரெடஸ் கெய்த் மூரின் கருத்துக்களை படிப்பதற்கு முன் இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

டாக்டர் கெய்த் மூர் உலக அளவில் புகழ் பெற்ற உயிரியல் துறை அறிஞர் ஆவார்.இவர் உயிரியலில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய புத்தகங்களில் "The Developing Human" என்ற புத்தகம் அமெரிக்க அரசால் சிறந்த புத்தகமாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் கெய்த் மூர் Anotomy and cell Biology துறைகளில் பேராசிரியராக டொராண்டோ பல்கலைக் கழகம் கனடாவில் பணியாற்றுகிறார். இக்கல்லூரியில் Anotomy துறையில் எட்டு வருடங்களாக தலைமைப் பதவியுலும் இருந்து வருகிறார். இனி அவர் தரும் விளக்கங்களை ஆங்கிலத்திலேயே பார்ப்போம்.

In the Holy Quran God speaks about the stages of Mans embryonic development:

“We created man from an extract of clay. Then we made him as a drop in a place of settlement, firmly fixed. Then we made the drop in to an alaqah (leech,suspended thing,and blood clot) then we made the alaqah in to a mudghah (chewed – like substance)…… “ - Quran 23 : 12,13 ,14

literally, the Arabic word alaqah has three meanings : 1) leech 2)suspended thing 3)blood clot.
1) In comparing a leech to an embryo in the alaqah stage, we find similarity between the two as we can see in figure 1. also the embryo at this stage obtains nourishment from the blood of the mother, similar to the leech ,which feeds on the blood of others.

Figure 1 : Drawing illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (leech drawing from Human development as Described in the Quran and sunnah. Moore and others page 37, modified from integrated principles of zoology, Hickman and others.Embbroyo drawing from The developing Human, Moore and persaud,page 73)

2)The second meaning of the word alaqah is “suspended thing.” This is what we can see in figures 2 and 3 the suspension of the embryo, during the alaqah stage, in the womb of the mother.

Figure 2 : We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. ( The developing Human, Moore and persaud, 5th edition page 66

3) The third meaning of the word alaqah is “blood clot.” We find that the external appearance of the embryo and its sacs during the alaqah stage is similar to that of a blood clot. This is due to presence of relatively large amounts of blood present in the embryo during the stage.(see figure 4). Also during the stage, the blood in the embryo does not circulate until the end of the third week. Thus the embryo at this stage is like a clot of blood.

Figure 3 : In this photomicrograph, we can see the suspension of an embryo (marked b) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother. The actual size of the embryo is about 0.6 mm. (The developing Human,Moore,3rd edition page 66,from Histology, Leeson and Leeson.)

Figure 4 : Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage. The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The developing Human, Moore 5th edition, page 65.)

ஆக 'அலக்' எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.

அடுத்த நிலையான 'முத்கா' என்ற நிலையை குர்ஆன் விளக்குகிறது. 'முத்கா' என்றால் நாம் ஒரு சூயிங்கம்மை வாயில் போட்டு நன்றாக மென்றவுடன் வரும் நிலை இருக்கிறதல்லவா அந்த நிலைதான் 'முத்கா' என்று அரபியில் சொல்லப்படும்.ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் “chewed like substance” என்று சொல்லலாம். இதைப்பற்றி திரு கெய்த் மூர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

The next stage mentioned in the verse is the Mudghah stage. The Arabic word mudghah means “chewed like substance.” If one were to take a piece of gum and chew it in his mouth and then compare it with an embryo at the mudghah stage, we would conclude that the embryo at the mudghah stage acquires the appearance of a chewed like substance. This is because of the somites at the back of the embryo that “somewhat resemble teethmarks in a chewed substance.” (see figures 5 and 6)

Figure 5 : photograph of an embryo at the mudghah stage (28 days old). The embryo at this stage acquires the appearance of a chewed-like substance, because the at the back of the embryo somewhat resemble teeth marks in a chewed substance. The actual size of the embryo is 4 mm. (The developing Human Moore and persaud, 5th edition, page 82, from professor hideo nishimura, Kyoto university, Kyoto,Japan)

Figure 6 : When comparing the appearance of an embryo at the mudghah stage with a piece of gum that has been chewed , we find similarity between the two.
a) Drawing of an embryo at the mudghah stage. We can see here the somites at the back of the embryo that look like teeth marks. (The developing Human, Moore and persaud,5th edition, page 79)
b) Photograph of a piece of gum that has been chewed


How could Mohammad have possibly known all this 1400 years ago, when scientists have only recently discovered this using advanced equipment and powerful microscopes which did not exist at that time? Hamm and Leeuwenhoek were the first scientists to observe human sperm cells (spermatozoa) using an improved microscope in 1677 (more than 1000 years after Mohammad. They mistakenly thought that the sperm cell contained a miniature preformed human being that grew when it was deposited in the female genital tract.

1981 ஆம் வருடம் புரபஸர் கெய்த் மூர் சவூதி அரேபியா தம்மாம் நகரில் நடந்த ஏழாவது மருத்துவ கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தார்.அப்பொழுது அவர் தமது அறிக்கையை பின் வருமாறு சமர்ப்பித்தார் : 'எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது குர்ஆனின் மேற் சொன்ன வரிகள். மனிதனின் கருவில் நிகழும் அடுத்தடுத்த நிலைகளை குர்ஆன் மிகவும் துல்லியமாக பட்டியலிடுகிறது.அரிஸ்டாட்டில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி நன்கு ஆராய்ந்தார்.ஆனால் அதன் பிறகு தொடர்ந்து வரும் நிலைகளின் மாற்றங்களை அறியும் வாய்ப்பும் வசதியும் அரிஸ்டாட்டிலுக்கு அன்று கிடைக்கவில்லை. அவர் கோழி முட்டையின் கரு வளர்ச்சியின் அடிப்படையைத்தான் விளக்கி விட்டுப் போனார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை கருவியலைப் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு அறிவியல் வரவில்லை. தற்போதுதான் கருவியல் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான சாதனங்களும் வாய்ப்புகளும் தற்போதுதான் இலகுவாக கிடைக்கின்றன.

மருத்துவம் படிக்காத, எந்த நுண்ணோக்கி வசதியும் இல்லாத, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தில் தோன்றிய ஒரு தனி நபரான முகமது நபி இப்படி ஒரு உண்மையை சொல்லவே முடியாது. குர்ஆன் கண்டிப்பாக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.' என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

இக் கட்டுரையில் வரும் அனைத்து விபரங்களுக்கும் உதவிய புத்தகங்கள் :

1) “The Developing Human” – Moor and Persaud, 5th edition, page8,65,9
2) “Human Development as described in the Quran and Sunnah” – Moor and others page no 36,37,38
3) The reference for this saying is “This is the Truth” (Video Tape) . For copy of this video tape please contact one of the organizations listed .
A) Islamic Foundation Of America
p.o. box – 3415, Merrifield,VA 22116,USA,
Tel : (703) 914-4982, Fax – (703) 914-4984
Mail – ifam@erols.com

B)Bader Islamic Association of Toronto
474 Roncesvalles Avenue, Toronto, Ontario M6R 2N5, Canada
Email : islam@badercenter.com

c) Al- Muntada Al-Islami Centre
7 Bridges Place, Parsons Green, London , SW6 4HW, UK
Mail : muntada@almuntada-alislami.org
mail@jimas.orgஇறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Sunday, November 12, 2006

ஜாகிர் நாயக்கைப் பற்றிய என்னுடைய கருத்து!

ஜாகிர் நாயக்கைப் பற்றிய என்னுடைய கருத்து!

ஜாகிர் நாயக்கைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. போன வருடம் மாற்று மதத்தவரோடான கலந்துரையாடல் நிகழ்ச்சி சவுதி அரேபியா ரியாத் நகரில் நடைபெற்றது. மிகப் பெரிய ஆடிட்டீடாரியத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். பதில் சொல்வதற்காக ஜாகிர் நாயக் வரவழைக்கப் பட்டிருந்தார். அப்பொழுது ஒரு இந்து நண்பர் ''புர்கா என்ற பெயரில் பெண்களை ஏன் முக்காடு இடச் சொல்கிறீர்கள்?' என்ற கேள்வியைக் கேட்டார்.

இதற்கு விளக்கமளித்த ஜாகிர் நாயக் 'முகம், மணிக்கட்டு இரண்டு பாகங்களைத் தவிர மற்ற பாகங்களை வெளியில் செல்லும் போது முந்தானைகளால்தங்களின் கவர்ச்சித் தரக் கூடிய பகுதிகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்று குர்ஆன் சொல்கிறது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இதனால் ஏற்படாது' என்று விளக்கினார். அந்த நேரம் மேடையில் ஜாகிர் நாயக்குக்கு அருகில் அமர்ந்திருந்த சவூதி அரசில் மிகப் பெரும் பொறுப்பில் இருந்த அந்த நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த சவூதி நாட்டு அறிஞர் ஜாகிர் நாயக்கின் பதிலுக்குப் பிறகு புர்கா சம்பந்தமாக அவரும் ஒரு தன்னிலைவிளக்கம் கொடுத்தார்.

அதாவது 'குர்ஆன் முகம, கையின் மணிக்கட்டு என்று சொன்னாலும் முகத்தையும் மூடிக் கொண்டால் அன்னியர்களின் கவனம் திசை திருப்பப் படுவதிலிருந்து பெண்கள் பாதுகாப்புப் பெறலாம்' என்று கூறினார். சவூதி பெண்மணிகள் முகத்தையும் மூடிக் கொள்வதை நியாயப் படுத்த வேண்டி இந்த கருத்தை அந்த சவூதி சொன்னார். மார்க்க அறிஞர்களிடையே இது பற்றி சவூதியில் இரண்டு கருத்துகள் உள்ளது.

இவ்வாறு அந்த சவூதி நாட்டவர்சொன்னதை ஜாகிர் நாயக் விரும்பவில்லை. ஜாகிர் நாயக் உடனே எழுந்து மைக் முன்னால் வந்து 'அவர்கள் கேள்வி கேட்டது என்னிடம். அதற்கான பதிலை நான் கொடுத்த பிறகு நீங்கள் ஒரு தனி விளக்கம் கொடுப்பது சரியல்ல. உங்களிடம் கேட்டால் நீங்கள் பதில் சொல்லிக் கொள்ளுங்கள்' என்று கூறி அடுத்த கேள்விக்கு சென்றார். இதை கருத்தரங்கில் கலந்து கொண்ட யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த சவூதி மார்க்க அறிஞரோ 'நான் சகோதரர் ஜாகிர் நாயக்குக்கு பதிலில் மேலதிக விபரமாகத்தான் என் குறிப்பை சொன்னேன். அவரின் கருத்தை மறுப்பதற்காக அல்ல' என்று தன்னுடைய விளக்கத்தில் கூறினார். என் நண்பர்கள் குழாமும் 'அந்த சவூதி அறிஞரின் குறையை ஜாகிர் நாயக் தனியாக சொல்லியிருக்கலாம். இத்தனை பேர் மத்தியில் அவரை குறை கண்டிருக்கக் கூடாது என்று சொன்னார்கள்.

பல திறமைகளை உடைய ஒரு நபருக்கு இது போன்ற கோபங்கள் சில நேரங்களில் வந்து விடுவதுண்டு. பதிலை இணையத்தில் கொடுப்பதாக இருந்தால் ஆற அமர யோசித்து பொறுமையாக கொடுக்கலாம். நேருக்கு நேர் கேள்வி பதில் நிகழ்ச்சியில் சில நேரங்களில் இது போன்ற தவறுகள் நடந்து விடுவதுண்டு.

இங்கு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். 'சவூதி ஆரேபியா இரும்புத் திரை கொண்ட நாடு. கருத்துக்களைச் சொல்ல அனுமதி இல்லை.' என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இதே சவூதியின் தலைநகரத்தில் பல இந்து நண்பர்கள் இஸ்லாம் சம்பந்தமாக காரசாரமான விமரிசனங்களை அதுவும் ஆங்கிலத்திலேயே வைத்தார்கள். அதற்கு பொறுமையாக ஜாகிர் நாயக்கும்,சவூதி அதிகாரியும் பதிலளித்ததையும் நாம் நேரிடையாக பார்த்தோம்.

பல நேரங்களில் ஜெயராமன், அரவிந்தன் நீலகண்டன், ம்யூஸ், கால்கரி சிவா, பாலா, எழில் போன்றோர் கேட்கும் கேள்விகள் கோபத்தை வரவழைக்கும். அந்த நேரங்களில் ஐஸ் வாட்டர் கொஞ்சம் குடித்து விட்டு அரை மணி நேரம் கழித்து தான் அவர்களின் கேள்விக்கு பதில்எழுத ஆரம்பிப்பேன். ஏனெனில் அந்த கோபத்தோடு பதில் எழுதினால் நம்மையறியாமல் தடித்த வார்த்தைகள் வந்து விழுந்து விட வாய்ப்புண்டு.மார்க்கத்தை முறைப்படி படிக்காத எனக்கே இணையத்தில் பதில் எழுதும் போது இந்த நிலை என்றால் பல மேடைகளை பல நாட்டு மக்களை நேருக்கு நேர் சந்தித்து வரும் ஜாகிர் நாயக்கும் சில நேரங்களில் மனிதன் என்ற முறையில் தவறிழைக்க வாய்ப்புண்டு.

எழில் தன் பதிவில் வைக்கும் வாதம்:

//வீடியோவில் ஒருவர் இவரிடம் கேள்வி கேட்கிறார்.

"இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்கள் தங்கள் மதத்தை பரப்பவும், தங்கள் மதத்தை தொடர்ந்து பின்பற்ற கோவில்களும் கட்ட அனுமதிக்கப் படுவார்களா? அப்படியென்றால், ஏன் சவூதி அரேபியாவில் சர்ச்சுகள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை? ஆனால் முஸ்லீம்கள் லண்டன் பாரீஸில் மசூதிகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்?"

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்

"ஒரு முஸ்லீமல்லாதவர் ஒருவர் ஒரு பள்ளிக்கூடத்தின் பிரின்ஸிபாலாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு கணித வாத்தியாரை நியமிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவர் 2+2=3 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா, அல்லது 2+2 = 6 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அலல்து 2+2 = 4 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அவர் 2+2 = 4 என்று சொல்லும் நபரைத்தான் வேலைக்கு எடுக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களுக்கு சரியான கணித அறிவு இல்லை. அதே போல மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை. ஒரு முஸ்லீமுக்கு மட்டுமே மதத்தை பற்றிய சரியான அறிவு இருக்கிறது. மற்றவர்களின் மதமும் , மதத்தை பற்றிய அறிவும் தவறாக இருக்கும்போது, அவர்களது தவறான கருத்தை பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் தங்கள் தவறான கோவிலை கட்ட எப்படி அனுமதிக்க முடியும்? "

கேள்வி கேட்டவர் தொடர்ந்து இதனை கேட்டார். "முஸ்லீமல்லாதவர்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். முஸ்லீம்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். இல்லையா?"

இதற்கு ஜாகிர் நாயக் பதில் கூறியது

"முஸ்லீம் அல்லாதவர்கள் தங்களுடைய குழந்தைகள் 2+2 = 3 என்று சொல்லித்தர எப்படி அனுமதிப்பார்கள்? ஏனெனில் அது தவறு என்று தெரியுமே? அதே போல எங்களுக்கும் இஸ்லாமே உண்மையான மதம் என்று தெரியும். ஆனால், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று உறுதி இல்லை. அதனால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள்"

இதனை கேட்டு ஆடிப்போய் விட்டேன்.
-
- இப்படி உளறும் ஜாகிர் நாயக் உண்மையிலேயே படித்த டாக்டர்தானா என்றுகூட சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.//


இதே போல்தான் எழில் கொடுத்திருக்கும் பதிவிலும் ஜாகிர் நாயக் சொன்னதாக வந்திருக்கும் ஒரு செய்தி. சவூதியைப் பொறுத்த வரை அது முழுக்கமுழுக்க இஸ்லாமிய சட்டதிட்டங்களை அமுல்படுத்தக் கூடிய ஒரு நாடு. இந்நாட்டின் குடிமக்கள்அனைவரும் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக கடைபிடித்து வருபவர்கள்.சவூதி மக்களே அங்கு வேற்று மத பிரச்சாரங்கள் நடைபெறுவதை விரும்புவதில்லை. எனவே இங்கு வேற்று மத பிரச்சாரங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் நமது பாரத நாடோ மதசார்பற்ற நாடு. எனவே இங்கு எந்த மதத்தவரும் தங்களின் பிரச்சாரத்தை செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே இரு நாட்டு சட்டங்களையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது என்ற ரீதியில் ஜாகிர் நாயக்கின் பதில் இருந்திருந்தால் சர்ச்சைக்கும் வழி இருந்திருக்காது.

இந்த ஒரு இடத்தில் அவர் சற்று தடுமாற்றத்தோடு பதில் அளித்திருப்பதால் இவரின் மற்ற விளக்கங்களும் இது போன்று இருக்கும் என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. மேலும் அவர் சொன்ன கருத்து அவரின் சொந்த கருத்தே ஆகும். அவரின் அந்த வாதத்துக்கு ஆதாரமாக குர்ஆனையோ, நபி வழியையோ காட்வில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண'டும்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

குண்டு வெடிப்புகளில் ஈடுபடும் இந்துத்வா!

குண்டு வெடிப்புகளில் ஈடுபடும் இந்துத்வா!

மும்பையிலிருந்து முந்நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மாலிகானில் 8 -9-2006 அன்று மூன்று தொடர் குண்டு வெடிப்புகள் நடை பெற்றன. முஸ்லிம்கள் தொழுகைக்காக குழுமும் வெள்ளிக் கிழமைகளில் இதற்கு முன்னும் பல இடங்களில் இதே போன்ற நடைமுறை பின்பற்றப்படுவதை நாம் பார்க்கிறோம். இந்தியாவில் அதுவும் மராட்டிய மாநிலத்தில் இது சர்வ சாதாரணம். இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் அனைத்து மக்களின்ஒட்டு மொத்த பார்வை முஸ்லிம்களை நோக்கியே திரும்புவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு காரணம் ஊடகத் துறையில் நீக்கமற நிறைந்திருக்கும் இந்துத்துவ வாதிகளே! மிக சாமர்த்தியமாக முஸ்லிம்களை சிக்க வைக்க கூட்டு சதியே இந்திய ஊடகத் துறையில் நடந்து வருகிறது.

பாபர் மசூதி இடிப்பின் போது 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதன் முக்கிய 'டூம்' என்ற வளைந்த கூரைகளைத் தகர்க்க குண்டுகள் பயன்படுத்தப் பட்டன.

25-4-20003 மராட்டிய மாநிலத்தில் நந்தித் எனுமிடத்திற்குப் பக்கத்தில் பிரபாணி என்ற முஸ்லிம்கள் அதிகமாக வாழம் இடத்தில் குண்டுகள் வெடித்தன. இதுவும் வெள்ளிக் கிழமை ஜீம்ஆத் தொழுகை அன்றே நடந்தது.

21-8-2004 புர்னா,ஜால்னா என்ற முஸ்லிம்கள் நிறைந்த இடங்களில் குண்டுகள் வெடித்து பதினெட்டு முஸ்லிம்கள்காயமடைந்தனர்.

2006 ஏப்ரல் மாதத்தில் பார்பானி என்ற முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 25 முஸ்லிம்கள் காயமடைந்தனர்.

இவை அனைத்தும் இந்து தீவிரவாதிகள் வைத்த குண்டுகள் என்பது இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஐ.ஜி.சூரிய பிரதாப் குப்தா தரும் வாக்கு மூலம்

6-10-2006, Front Line, Page 20

இவை எல்லாம் வெளியே வந்த செய்திகள். வெளிவராத அமுக்கப் பட்ட குண்டு வெடிப்புகள் இன்னும் ஏராளம். எனவே குண்டு வெடிப்புகளில் அதிக தொடர்புகளைக் கொண்டுள்ள இயக்கம் பஜ்ரங் தள் என்பது இப்பொதுதான் ஒவ்வொன்றாக நாட்டு மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது.

மாலிகான்:

மும்பையிலிருந்து முந்நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது இந்நகரம். இன்றுவரை புறக்கணிப்பிற்கும் இந்துத் தீவிரவாதிகளால் அவ்வப்போது அழிவுக்கும் அலைக்கழிப்பிற்கும் ஆளாகிநிற்கும் ஒரு நகரம்தான் மாலிகான். இங்கு வாழ்பவர்களில் எழுபத்தைந்து சதவீதம் முஸ்லிம்கள். நெசவுதான் இவர்களின் தொழில்.

இங்குள்ள முஸ்லிம்களுக்கு ஒரு சிறப்பான வரலாறு உண்டு. 1857-ல் அங்கிலேயருக்கு எதிராக மாபெரும் சிப்பாய்ப் புரட்சி ஒன்று நடந்தது. சிப்பாய்ப் புரட்சியில்கலந்து கொண்ட குடும்பங்களில் பல இந்நகரத்தில் உள்ளன. இந்த சிப்பாய் புரட்சிக்குப் பின் ஆங்கிலேயர்கள் ஆழமான விசாரணையை நடத்தினார்கள். முஸ்லிம்களை கொடுமையும் படுத்தினார்கள். ஆங்கிலேயர் கட்டவிழ்த்து விட்ட குரூரங்கள் தாங்காமல் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் தான் மாலிகானில் குடியேறினார்கள். இவர்களில் சிறு பகுதியினர் பிவண்டியிலும் குடியேறினார்கள். சிப்பாய்ப் புரட்சிக்கு காரணமானவர்கள் இவர்கள்என்பதால் ஆங்கிலேயர்கள் இவர்களுக்கு எந்த அடிப்படை வசதியையும் செய்து தரவில்லை. சுதந்திர இந்தியாவிலும் இவர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தினமும் பன்னிரண்டு மணியிலிருந்து பதினான்கு மணிவரை உழைத்திடும்இந்த பாட்டாளி மக்களுக்கு வார விடுமுறை கூட இல்லை. கிடைக்கும் கூலியும் மிகக் குறைவு. அடிக்கடி பாசிஸ்டுகளால் நடத்தப்படும் வகுப்புக் கலவரங்களில் தங்களுக்கென சேர்த்து வைத்தவைச் சூறையாடப் பட்டு விடுகின்றன. இப்போது நடந்த குண்டு வெடிப்புகளில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக செய்தி வருகிறது. காயம் அடைந்தோரோ இதிலும் அதிகம்.

இவ்வளவு இன்னல்களையும் தாங்கி வரும் இந்த மக்களை தற்போது போலீஸார் மிகவும் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறார்கள். அங்கு எஞ்சியிருக்கும் முஸ்லிம்கள் தான் குண்டு வைத்தார்கள் என்ற பார்வையில் முஸ்லிம் இளைஞர்களைக் காவல் துறையினர் திடுதிப்பென்று அழைத்துச் செல்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஃபிரண்ட் லைன் நிருபர் முஸ்லிம் எதிர்ப்பு எழுத்தாளர் பிரவின் சுவாமி என்பவர் கொடுக்கும் ஒரு தகவலைப் பார்ப்போம்:

மாலிகான் குண்டு வெடிப்பைப் புலன் விசாரணை செய்யும் காவல் துறையினர் மாலிகான் பகுதியில் வாழும் முஸ்லிம்களை அழைத்துச் சென்று 'நீங்கள் ஒப்புதல் வாக்கு மூலம் தாருங்கள் லட்சக் கணக்கில் பணம் தருகின்றோம் என ஆசை காட்டுகின்றனர்

இப்படி ஆசை காட்டப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் முஹம்மது இர்பான். இவர் குண்டு வைப்பதாக ஒத்துக் கொண்டால் ரூபாய் ஐந்து லட்சம் தருவதாக ஆசை காட்டியிருக்கிறார்கள். இந்த முஹம்மது இர்பான் ஒரு நூற்பாலையில் கூலி வேலை செய்பவர். இவர் மீது பல வழக்குகளை பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இந்தப் பெரும் பழியை எப்படி ஏற்பது என்று நடுங்கிப்போய் ஒத்துக் கொள்ள மறுத்து வந்து விட்டார். இதனால் அவரை சித்ரவதை செய்து அனுப்பியுள்ளனர் போலீசார்.

6-10-2006, Front Line

எதிர் காலம் இருள் மயமாகத் தோன்றும் ஒரு முஸ்லிம் கூலித் தொழிலாளிக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்பது மிகப் பெரியதொரு தொகையாகும். கிடைக்கும் அடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் நொடிப் பொழுதில் தனவந்தனாக மாறிடவும் முஹம்மது இர்பான் முடிவு செய்திருந்தால் இன்று முஸ்லிம்கள் குற்றவாளிக் கூண்டில் நின்றிருப்பார்கள். மொத்தப் பழியும் அவர்கள் மேல் சுமத்தப் பட்டிருக்கும்.

நந்தித் இப்போது இந்துத்துவத் தீவிரவாதிகளின் புகலிடம் என்பதுஎல்லோருக்கும் நன்றாகவே தெரியும். இந்த நந்தித் தீவிரவாதிகளால் பள்ளிவாசலில் குண்டு வைக்கப் பட்ட பார்பானி, புர்னா, ஜால்னா, மாலிகான் இவையெல்லாம் ஒரு பகுதியின் அடுத்தடுத்த ஊர்கள்தான். இந்தப் பகுதியை 'மராத்வாடா பகுதி' என்றழைக்கின்றனர்.

இந்த மராத்வாடா பகுதிதான் இந்துத் தீவிரவாதிகளின் தற்போதய இலக்கு என்பது இப்போது தெளிவாகி வருகின்றது. புர்னா,ஜால்னா,பார்பானி ஆகிய இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் குண்டு வைத்தவர்கள் இந்துத் தீவிரவாதிகள் என்பது பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்ட பின்பும் காவல் தறையினர் அந்தத் திசையில் தங்கள் விசாரணையைத் திருப்பி விடவே இல்லை. போலீசார் முஸ்லிம்களையே சுற்றி வருகிறார்கள்.

நந்தித் குண்டு வெடிப்புகளைப்பற்றிப் பேசிடும்போது கே.பி.இராகுவான்ஷி என்ற காவல்துறை அதிகாரி இப்படிக் கூறினார்.

'இதர பள்ளிவாசல்களில் (புர்னா,ஜால்னா,பார்பானி) குண்டு வைத்த அதே கும்பல் தான் இதனைச் செய்திருக்கின்றன. இவர்கள் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள். வெடிகுண்டுகளைத் தயாரிப்பது பூஜை செய்வதற்கல்ல. அவை தீவிரவாத செயல்களைச் செய்து அப்பாவிகளைக் கொலை செய்வதற்கும் சமுதாயத்தைப் பிளப்பதற்கும்தான். நாங்கள் இதில் மெத்தனமாக இருப்போம் என்ற கேள்விக்கே இடமில்லை.'

Communalism Combat, June 2006, Page 29,Interview K.P.Irakuwancy.

இப்படிப் பேட்டி தந்தவர் ஒரு சாதாரண காவல்துறை அதிகாரி அல்ல. அவர்தான் மராட்டிய மாநிலத்தின் ATS_Anti Terrorism Squad என்ற தீவிரவாதச் செயல்களைத் தடுக்கும் சிறப்புக் காவல் துறையின் தலைவர்.

இரசாயனப் பரிசோதனைகளும் முடிந்திருக்கின்றன. அவற்றிலும் பல தகவல்கள் அடங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் இறந்திருக்கின்றனர். அவர்களின் பெயர்கள் ஹிமான்ஷீ பான்சி, (வயது 27), நரேஷ் ராஜ் கொண்டுவார்(வயது 26)

இவர்களும் இன்னும் இவர்களோடு காயம் பட்டவர்களும் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடப்பட்டவர்களும் இந்துத்துவத் தீவிரவாதிகள்தான். ஆனால் பிணையில் அவர்கள் வெளியே வந்து ஊர் சுற்றிக் கொண்டும் இதர இடங்களில் குண்டு வைத்துக் கொண்டும் அலைகின்றார்கள். அவர்களின் பிணைகளை ரத்து செய்வதற்கோ விசாரணையை முன்னெடுத்து செல்வதற்கோ இந்தக் காவல் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாலிகானில் சம்பவம் நடந்த அன்று இறந்த உடல்களை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு அக்கில் அஹமது குரைஷி எனபவர் (இஸ்லாம்புரா என்ற ஊரில் வசித்துவரும் தையல் வேலை செய்பவர்) உதவி செய்திருக்கின்றார். அப்போது ஆம்புலன்ஸில் உடலை ஏற்றும் போது சடலத்தின் தாடி தனியாக கழன்று கீழே விழுந்திருக்கிறது. அவர் உடனே பயந்து போய் காவல் துறையினரிடம் விபரத்தை சொல்லியிருக்கிறார். காவல் துறையினர் உடன்வந்து தாடியைக் கைப்பற்றி சென்றிருக்கின்றனர்.

இந்த செய்தி பத்திரிக்கையாளர்களுக்கும் தெரிந்து போய் 'போலித் தாடியோடு சடலம் கிடைத்தது உண்மையா?' என போலீசாரிடம் கேட்கின்றனர். 'உண்மைதான். ஆனால் நாங்கள் தான் செய்தியைச் சொன்னோம்என்று பத்திரிக்கையில் எழுதி விடாதீர்கள்' என்றனர் போலீசார்.

போலித் தாடியுடன் இறந்து கிடந்த சடலத்தின் முகத்தை வெளியிட்டிருந்தால் இந்நேரம்அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்?என்ற உண்மைகள் தெரிய வந்திருக்கும். முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தங்கள் நாடி நரம்புகளிலெல்லாம் ஓட விட்டிருக்கும் மராட்டியக் காவல் துறை நிச்சயமாக அந்த போலி தாடிக்குரிய சடலத்தை ஆய்வு செய்திருக்கும். அவர்முஸ்லிம் அல்ல என்று தெரிந்திட வந்ததும் பல பேர் முன்னிலையில் கிடைத்த உடலை சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். பத்திரிக்கையில் முதல் நாள் ஒத்துக்கொண்ட காவல் துறையினர் மறுநாளே சாமர்த்தியமாக மறைத்து விட்டனர்.

கிடைத்த அழுத்தமான -உண்மையான தடயங்களை மறைத்து விட்டு முஸ்லிம் இளைஞர்களை அழைத்துச் சென்று பணம் தருகிறோம் குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள். இல்லையேல் அவ்வப்போது அழைத்து உதை தருவோம் பெற்றுக் கொள்ளுங்கள் எனப் பணி செய்கின்றார்கள் நீதியை நிலைநாட்டிட வேண்டியவர்கள்.

வெடித்த குண்டுகள் அனைத்தும் சைக்கிளில் கொண்டு வரப்பட்டவை. சைக்கிளோடு கட்டப் பட்டிருந்தவை. அந்தச் சைக்கிள்களுக்குப் பக்கத்தில்தான் போலி தாடி சடலம் கிடந்தது என்று அக்கீல் குரைஷி கூறுகிறார். இந்த சைக்கிளை விற்றது தினேஷ் அகர்வால் என்பவர். வாங்கியவரின் பெயரையும் இதே கடைக்காரர் போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் இது பற்றி எந்த தகவலையும் போலீசார்இதுவரை வெளியிடவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் அபூ ஆசிம் அஸ்மி அவர்கள் ZEE News. Com என்ற இணைய தளத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.:

குண்டு வெடிப்பு நடந்த அன்று முஸ்லிம் அல்லாத ஒருவர் இந்துக்களை மாலிகான் நகருக்குள் போக வேண்டாம் என்றும் அங்கு குண்டுகள் வெடிக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார். இப்படி எச்சரிப்பதைக் காதால் கேட்ட கடைக்காரர் ஒருவர் செய்தியை எல்லோரிடமும் சொல்லியிருக்கின்றார். இந்த கடைக்காரரை விசாரித்தால்மேலும்பல தகவல்கள் வெளிப் படலாம். ஆனால் காவல் துறையினர் இதைப்பற்றிக் கவலைப் படவில்லை.

குண்டு வெடித்த இடங்களுள் ஒன்றான முஷாவுரா சவுக் (இது ரஹ்மானி பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இருக்கிறது) பக்கத்தில் முஸ்லிம் அல்லாத தொழிவாளர்கள் கழிவு நீர்ப் பைப்புகளைப் புதைத்துக் கொண்டிருந்தார்கள்.இவர்களைச் சிலர் பதினோரு மணிக்குள் அவ்விடத்தை விட்டு வெளியேறி விடும்படி கூறியிருக்கின்றார்கள்.

இந்தக்கழிவு நீர்ப்பணியாளர்களை மிகவும்எளிதாகக் கண்டுபிடித்து விடமுடியும்.அவர்களை விசாரித்தால் இவர்களை எச்சரித்தவர்கள் மூலம் குற்றவாளிகளைக்கண்டுபிடிக்க முடியும்.

கிடைத்த தகவல்கள் அனைத்தையும் காற்றிலே பறக்க விட்டு விட்டு இந்த குண்டு வெடிப்புகளைப் பற்றிய தகவல்களை யாரேனும் தந்தால் அவர்களுக்கு ஐந்துலட்ச ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்துள்ளனர்.

இவை எல்லாம் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. புலன் விசாரணைகளை மேற் கொள்பவர்கள் கற்றகலைதான் இவை எல்லாம். ஆனால் மனம் இருந்தால்தானே வழி பிறக்கும்!

மராட்டிய மாநிலக் காவல் துறையும் கூச்சமில்லாமல் ஓர் உண்மையை ஒத்துக்கொள்கின்றனர். 'நாங்கள் முஸ்லிம்களைத் துரத்தவும் அவர்களின்அமைப்புகளைத் தோண்டி எடுக்கவும் தான் கற்றுக் கொண்டுள்ளோம். இந்துத்துவ அமைப்புகளைப் பற்றி எங்களிடம் போதிய தகவல்கள் இல்லை.' இப்படிச் சொல்வதற்கு இந்தக் காவல்துறை வெட்கப்பட வேண்டாமா?

Radiance, Frontline – 6-10-2006.

ஆர்.டி.எக்ஸ் என்ற வெடி பொருள் பற்றி:

'ஆர்.டி.எக்ஸை யார் பயன் படுத்துவார்கள் என்பது குறித்து ஒரு முடிவுக்கும் வந்திட இயலவில்லை. மாலிக்கானில் நாற்பது முஸ்லிம்களைக் கொன்ற குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பு காவல்துறையினர் அஹ்மத் நகரில் 195 கிலோ வெடி பொருட்களைக் கைப்பற்றினர். அதில் ஆர்.டி.எக்ஸ் என்ற சக்தி வாய்ந்த வெளிநாட்டு வெடி பொருள்களும் உண்டு. இந்த வெடி பொருள்களை வைத்திருந்தவரின் பெயர் சங்கர் ஷெல்கி.'

'புலனாய்வுத் துறையினர் இந்த வெடிப் பொருட்களைப் பற்றிக் குறிப்பிடும்போது 1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்புகளைப் போல் பன்மடங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நிகழ்த்தப் போதுமானவையாகும். இதை அவர் நமது ராணுவத்திடமிருந்து வாங்கி இருக்கிறார் என்று( from decommissioned Indian Army Ordiance) புலனாய்வுத் துறைக் கண்டுபிடித்துள்ளது.

'ஷங்கர் ஷெல்கி போலிப் பெயர் ஒன்றில் செல்போன் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தி இருக்கின்றார். அதிலிருந்து இருநூறு முறை ராணுவத்தில் சிலரோடு பேசியுள்ளார்.

இராணுவத்தின் கவனக் குறைவை இவர் பயன்படுத்தி இருக்கின்றார் என்றே எண்ணிடத் தோன்றும் அளவில் அவர் செயல்பட்டிருக்கின்றார். ராணுவத்தின் கவனக்குறைவு ஒரு பெரும் பிளாக் மார்க்கெட்டை ஆர்.டி.எக்ஸீக்கு பயன்படுத்தி இருக்கின்றது எனத் தெரிய வருகின்றது.

காவல்துறை ஷங்கர் ஷெல்கியை கைது செய்யும் முன் செப்டம்பர் பத்தாம் நாள் தற்கொலை செய்து கொண்டார். இதிலிருந்து நமக்கு தெரிய வருவது ஆர்.டி.எக்ஸ் என்பது எவருக்கும் இலகுவில் கிடைக்கும் என்பதே! ஆனால் பத்திரிக்கைகள் முழுவதும் ஆர்.டி.எக்ஸ் என்றால் முஸ்லிம்கள்தான் என்று எழுதுகின்றன.

Praveen Swamy in Front Line
6-10-2006, PP: 21/22

ஒரு நாட்டின் சிறுபான்மை மக்களை அதிகார வர்க்கம் இந்த அளவு தொல்லைப் படுத்தினால் இந்நாட்டின் மீது வெறுப்புற்று உண்மையிலேயே தீவிரவாதத்தை நாடினால் நாட்டில் எங்கிருந்து அமைதி வரும். அற்ப அரசியல் ஆதாயத்துக்காக இது போன்ற சதி செயல்களில் ஈடுபடும் பஜ்ரங்தள தீவிரவாதிகளை மக்கள் இனம் கண்டு சமூகத்திலிருந்து ஒதுக்கவேண்டும். தீவிரவாதிகள் எந்த மதத்திலிருந்து தோன்றினாலும் அது அந்த மதத்தை முன்னேற்றாமல் பின்னோக்கியே இழுத்துச் செல்லும் என்பதை காலம் காட்டிக் கொண்டு தான் இருக்கிறது.

இந்த நேரத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். எங்கோ ஒரு சில இஸ்லாமியர் செய்யும் தவறுகளால் இந்தியாவில் ஒட்டு மொத்த இஸ்லாமியரும் தவறாக பார்க்கப் படுகிறார்கள். இது போன்று அப்பாவிகளை இலக்காக்கும் ஒரு சில இஸ்லாமியர் இறைவனின் கோபத்தையே சம்பாதிக்கிறார்கள். மற்ற இஸ்லாமியருக்கும் பிரச்னையைக் கொடுக்கிறார்கள்.

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்கு கட்டுப் பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.'
5 : 8 - குர்ஆன்

'நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும் இறைவனுக்கு சாட்சி கூறுவோராகவும் ஆகிவிடுங்கள்.வாதியோ பிரதிவாதியோ செல்வந்தனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே இறைவனே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின் பற்றாதீர்கள். நீங்கள் சாட்சியத்தைப் புரட்டினாலோ புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவனாக இருக்கிறான்.'
4 : 135 - குர்ஆன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

Thursday, November 09, 2006

முகலாயர்களும் பாரத நாட்டு ரத்தங்களே!

முகலாயர்களும் பாரத நாட்டு ரத்தங்களே!

இன்று இந்தியாவில் முஸ்லிம்களின் மேல் வைக்கப் படும் குற்றச் சாட்டுகளில் ஒன்று 'முஸ்லிம்கள் அனைவரும் அன்னிய நாட்டவர்'. இதில் ஐந்து சதம் கூட உண்மையில்லை என்று சொன்னாலும் குறிப்பிட்ட சிலரும், சில பத்திரிக்கைகளும் இந்த பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர். இப்படி கூப்பாடு போடுபவர்களின் வரலாறை நாம் புரட்டினால் அந்த மக்களே வரலாற்று ரீதியாக இந்நாட்டுக்கு அன்னியராகிறார்கள். சரி தலைப்புக்கு வருவோம்.

அன்றைய முகலாயர்கள் இந்தியாவை சுமார் எண்ணூறு வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தியாவிலேயே தங்கி இந்நாட்டு மக்களை திருமணம் செய்து கொண்டு இந்நாட்டோடு இரண்டற கலந்து விட்டனர். இருந்தும் இஸ்லாமியர் அன்னிய தேசத்தவர் என்ற குரல் எப்போதாவது ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும்.

முகலாயர்களையும், கேரளக் கரையோரம் வந்த ஒரு சில அரபுகளையும் தவிர்த்து மற்ற முஸ்லிம்கள் அனைவரும் முன்னால் இந்துக்களே! இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப் பட்டும் தீண்டாமையிலிருந்து விடுபடவும் இஸ்லாத்தை தழுவிக் கொண்ட இந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இந்த முகலாயர்களில் கூட ஒரு சில அரசர்கள் இந்நாட்டு பெண்களை மணமுடித்து பாரத நாட்டு பிரஜைகளான வரலாறை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நான் படித்த அந்த ஒரு சில விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

**********************************

இந்து இளவரசியை மணந்த அக்பர்!

முகலாயப் பேரரசர் அக்பர் ஆஜ்மீருக்குச் சென்று திரும்புகையில் சாம்பர் (Sambhar) என்ற ஊரில் ஆம்பர் (Ambar)மன்னர் ராஜா பார்மலின் மகளை இந்து மரபுப்படி திருமணம் செய்தார். அக்பரின் முகலாய வழியும், இராஜபுத்திர வழியும் இத்திருமணத்தால் ஒன்று சேர்ந்தது.

க.வெங்கடேசன், அக்பர்,சென்னை.
1972 –Page 47,48

ஷா பாய் என்று ஜெய்ப்பூர் ஆவணங்களில் அழைக்கப்படும் இராஜபுத்திர இளவரசியை, அக்பரை திருமணம் செய்து கொண்டதற்கு பின் மரியம்-உஸ்-ஸமானி (Mariam-uz-zamani) என்று அழைக்கப்பட்டார்.

Ashirbadilal Srivastava, Akbar The Great, volume 2, Agra, 1973, Page 59.

******************************************

இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!

முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.

“Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.

********************************************

இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.

ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.

குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.

“Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”

Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.

************************************

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!

இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?

நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!

ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.

பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.

உதயபுரி மஹல் அல்லது பாய் உதயபுரி (Udai Puri Mahal) என்ற மனைவியும் ஒளரங்கஜேப்பிற்கு இருந்ததாகச் சொல்லப் படுகிறது. (Kam Baksh) காம்பக்ஸ்என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இவர்தான்.

டி.எப்.ஆர். மஆலிசாஹிப், முஸ்லிம் மன்னர்களின் இந்து ராணிகள், பத்ஹூல் இஸ்லாம்.
1957, November, Chennai.

ஐம்பது வயதைத் தாண்டிய நிலையில்.....

ஹிந்து இராஜபுத்திர ராணியார் ஷாபாய், ஜகத் கஸாயினி ஆகியோரின் வழியில் கி.பி.1618 ல் தோன்றியவர் ஒளரங்கஜேப். அவரது வாழ்வில் நவாப் பாய், உதயபுரி மஹல் என்ற இரு இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டவர் ஒளரங்கஜேப்.

ஹெச்.எல்.ஓ.காரட், சீதாராம் கோலீ, இந்து தேச சரித்திரம்,
1942, Page 170, Chennai.

இது போல் இந்துக்களோடு ரத்த உறவும், திருமண பந்தமும் உடைய ஒரு அரசர் இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று நம் வரலாற்றுப் பாட நூல்களில் தொடர்ந்து படித்து வருகிறோம். அதோடு இந்த மன்னர்கள் இந்த தேசத்தை எந்த அளவு நேசித்திருந்தால் திருமண உறவு முதற் கொண்டு நம் நாட்டிலேயே ஏற்படுத்திக்கொண்டு இங்கேயே இறக்கவும் விருப்பம் தெரிவித்திருப்பார்கள். இன்று இவர்களின் உறவுகள் இந்தியர்களை மணந்து இந்நாட்டு இரத்தம்ஆகி விட்ட பிறகு எப்படி இவர்களை நாம் அன்னிய தேசத்தவர் என்ற வார்த்தையை பிரயோகிக்க முடியும்?

பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!

'நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.'
இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.

பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.

'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339அரசியல் வேறு மதம் வேறு!

ஒளரங்கஜேப்பிடம் அவரது முஸ்லிம் நண்பர்கள் அவரது அரசாங்கத்திலுள்ள இரண்டு முஸ்லிம் அல்லாதவரை அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் காரணமாக பதவியில் வைத்துக்கொள்ளக் கூடாதென்று கூறியபோது அதனை ஏற்க மறுத்தவர் ஒளரங்கஜேப். 'அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. அரசியல் விவகாரங்களில் மதம் என்பது கிடையாது. அவரவர்கள் அவரவரது மத்தைப் பின்பற்றட்டும்.' என்று சொன்னவர் ஒளரங்கஜேப்.

டி.என.ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்
1950, Page 80

இது போன்று தன் நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட ஒளரங்கஜேப் இந்துக்களைக் கொடுமை படுத்தினார் என்று எழுதுவது நேர்மையான வாதம் தானா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.எனது தேசத்து ஏழைகளுக்கு......

ஒரு சமயம் புனித மக்கா நகரத்தின் ஷெரீப் பொருள் உதவி வேண்டி தனது தூதரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பியபோது அவரக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு 'எனது தேசமான இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்க்க் கூடாதா? என்று கேட்டு விட்டு 'இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்' என்றும் அந்தத் தூதரிடம் பதில் தந்தவர் ஒளரங்கஜேப்'

டி.என். ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்.
Page 80, 81.

நம்நாட்டை எந்த அளவு நேசித்திருந்தால் இத்தகைய வார்த்தை ஒளரங்கஜேப்பின் வாயிலிருந்து வந்திருக்கும்? இவரைப் பற்றிய மேலதிக விபரங்களை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதிக்கிறேன் இறைவன் நாட்டம் இருப்பின்.

********************************************

சுப்ரமணிய பாரதி!

'முகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களில்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு முகமமதியர்களுக்கும் சொந்தம். இந்தியாவிலே முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எந்த உபாயத்திலேனும் பகை மூட்டிவிட வேண்டுமென்று அன்னியர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். நம்மவர்கள் மூடத்தனத்தால் மேற்படி பிரயத்தனம் கைக் கூடும்படி விட்டு விடுவோமேயானால் அதுவே நமக்கு நாசகாலமாக முடியும்.'

6-10-1906 - 'இந்தியா' இதழில் 'முகமதியப் பிரதிநிதிக் கூட்டம்' எனும் தலையங்கத்தில் தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார் தெரிவித்திருக்கும் கருத்து.


என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.