Followers

Sunday, August 25, 2019

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி செய்யக்கூடாது :


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி செய்யக்கூடாது :
இந்து மகாசபை உத்தரவு..!
கேரளாவில் மாட்டுக்கறி சாப்ப்பிடக்கூடியவர்கள் இருப்பதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவக்கூடாது என இந்து மகா சபைத் தலைவர் வெளிப்படையாகவே மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கின்றார்.
அவ்வாறு அவர்களுக்கு உதவுவது பாவம் என்றும் ஊளையிடுகின்றார்.
மனிதநேயம் என்றால் கிலோ எவ்வளவு என கேட்கும்
இந்த மிருகங்கள்தான் அகண்ட பாரதம் அமைக்கப் போகின்றார்களாம்.
இந்து ராஷ்டிரியத்தை உருவாக்கப் போகின்றார்களாம்.
இந்து வேதங்களில் பசுவின் கறி சமைத்து இறைவனுக்கு படைக்கப்பட்டதாகவும் அதனை வேத பார்பனர்கள் சுவைத்து உண்டதாகவும் சொல்லப்பட்டுள்ளதே...இதற்கு என்ன பதிலை இவர்கள் வைத்துள்ளார்கள். புத்த மத தாக்கத்தினால் இன்று சைவத்துக்கு மாறியுள்ளனர் பார்பனர்கள்.

50ஆயிரம் #சிறு_தொழிற்சாலைகள் #மூடப்படவுள்ளது.

இதே #பொருளாதார மந்தநிலை நீடித்தால் #கோவையில்மட்டும் ஒரு வாரத்திற்குள் #இரண்டு_லட்சம்_பேர்_வேலையிழக்க நேரிடும்.


#ஏன்_கோட்டைமேட்டில்_சோதனை ??

வரப்போகிற விநாயகர் சதுர்த்தியை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளதாம் !!
அதனால் கோவையில் உள்ள உக்கடம்,கோட்டைமேடு,கரும்புக்கடை போன்ற இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சோதனை நடத்துகின்றன்றாம் !!
எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது ??
நீ விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால் இஸ்லாமியர்களுக்கு என்ன வந்தது ??
கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் உக்கடம்,கோட்டைமேடு,கரும்புக்கடை பகுதிகளை கடந்து தான் செல்கிறோம்,,,இத்தனை ஆண்டுகளில் ஒரு இந்து பக்தர்களை கூட இஸ்லாமியர்கள் சீண்டியதாக கூட வரலாறு இல்லை,,,
மாறாக "எத்தனை நாள் நடப்பீங்க?? எப்ப பழனி போய் சேறுவீங்க??" என விசாரித்த இஸ்லாமியர்கள் தான் உண்டு,,,
அதே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் தான் கோனியம்மன் கோவிலும் உள்ளது,,,அங்கே நூற்றுக்கணக்கான இந்து பக்தர்கள் இன்றும் சென்று வழிபட்டு தான் வருகின்றனர்,,, அப்படி செல்லும் எந்த இந்து பக்தரும் இது நாள் வரை ஒரு இடஞ்சலையும் சந்தித்ததில்லை,,,
ஆனால் இது ஒரு புறமிருக்க,,இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க ஆர்எஸ்எஸ் கும்பல்கள் தான் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து,அந்த பழியை இஸ்லாமியர்கள் மீது போட பல கீழ்த்தர வேலைகளை செய்துள்ளது,,,
மாலேகான் குண்டுவெடிப்பு,நந்தோத் குண்டுவெடிப்பு,அஜ்மீர் குண்டுவெடிப்பு போன்றவை சமீபத்திய உதாரணங்கள்,,,
இதே போல ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகள் நிகழ்த்த குண்டுகள் தயாரிக்கும் போது,அது வெடித்து மாட்டிக்கொண்ட வரலாறுகளும் ஏராளம் !!
அப்படி இருக்க இந்த உளவுத்துறைக்கும்,காவல்துறைக்கும் உண்மையில் அசம்பாவீதம் நடந்துவிடக் கூடாதென்றால்,,,பழைய நிகழ்வுகளில் அடிப்படையில் சோதனை நடத்த வேண்டியது ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் அலுவலகங்களிலும்,வீடுகளிலும் தான்,,,
அதை விடுத்து இந்து மக்களை எந்தவிதத்திலும் எதிராக இல்லாத இஸ்லாமிய மக்களை குற்றவாளிகளாக முயல்வது பச்சை அயோக்கியத்தனம் !!
இந்த விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால்,,,அப்பாவி இந்து மக்களையும்,வியாபாரிகளையும் மிரட்டி பணம் பறிப்பது,,,பறித்த பணத்தில் பங்கு பிரிக்கும் சிக்கல்களினால் அவர்களுக்குள்ளயே வெட்டிக்கொண்டு சாவது,,,விநாயகர் ஊர்வலத்தை வலுக்கட்டாயமாக மசூதிகள்,தேவாலயங்கள் இருக்கும் பகுதியில் எடுத்துச் சென்று கலவரங்கள் செய்வது என அனைத்து மக்கள் விரோத செயலிலும் ஈடுபடும் காவி பயங்கரவாதிகளை நோக்கி எல்லாம் இவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நீளுவதே இல்லை பாவம் !!
Manoj Kumarநாதுராம் கோட்சே கொஞ்சம் தாமதமாக காந்தியை ....

''நாதுராம் கோட்சே கொஞ்சம் தாமதமாக காந்தியை சுட்டுக் கொன்றார். ''நாதுராம் கோட்சே கொஞ்சம் தாமதமாக காந்தியை சுட்டுக் கொன்றார். அந்த கொலையை முன்பே செய்திருக்க வேண்டும்'' - என்று தைரியமாக தெனாவட்டாக சொல்லும் இந்த கிழவியை காவல்துறை கைது செய்யாது. பார்பன இனத்தை சர்ந்தவர்கள் எது பேசினாலும் அது தேச விரோதமாகாது என்பது மனு நீதி. '' - என்று தைரியமாக தெனாவட்டாக சொல்லும் இந்த கிழவியை காவல்துறை கைது செய்யாது. பார்பன இனத்தை சர்ந்தவர்கள் எது பேசினாலும் அது தேச விரோதமாகாது என்பது மனு நீதி. 


பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்துத்வாக்கள் மீண்டும் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்துத்வாக்கள் மீண்டும் கைது!
மத்திய பிரதேசம் சத்னா என்ற இடத்தில் வைத்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து வந்த பஜ்ரங்தள் அமைப்பினர் ஐந்து பேரை அரசு கைது செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை சேர்ப்பிப்பதற்காக 8 சதவீதம் கமிசன் பெற்று வந்துள்ளது இந்த தேச விரோத கும்பல்.
2017, பிப்ரவரி மாதம் இதே போல் பஜ்ரங்தள் தலைவர் பலராம் சிங் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். ஆனால் அன்றைய பிஜேபி அரசு அவனை பெயிலில் விட்டது. அன்றே இவர்களை கடுமையாக தண்டித்திருந்தால் தற்போது அதே தவறை மீண்டும் செய்திருக்க மாட்டார்கள்.
''தேச துரோகிகள் எவரும் தப்ப முடியாது. கடுமையாக தண்டிக்கப்படுவர்'' என்று கூறியுள்ளார் முதல்வர் கமல்நாத்.
தேச துரோகிகள் யார் என்பது இப்போது தெளிவாக தெரிகிறதல்லவா?
தகவல் உதவி
சப்ரங் இந்தியா
இந்தியா டுடே
25-08-2019
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
Saturday, August 24, 2019

மதம் மாறியதால் காப்பகத்தில் அடைக்கப்பட்ட பல் மருத்துவர்.

மதம் மாறியதால் காப்பகத்தில் அடைக்கப்பட்ட பல் மருத்துவர்.

புதுக் கோட்டையைச் சேர்ந்த பல மருத்துவர் குந்தவை நாச்சியார். இஸ்லாம் மார்க்கத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என மாற்றிக் கொண்டுள்ளார். ஆனால் இவரது பெற்றோர் சம்மதிக்காததால் காவல் துறை இவரை காப்பகத்தில் சேர்ப்பித்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த குந்தவை நாச்சியாரை விடுதலை செய்யக் கோரி மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது விடுதலையாகியுள்ளார் ஜன்னதுல் ஃபிர்தவ்ஸ்.

வாழ்த்துக்கள் சகோதரி!


மூலதனங்கள் இந்தியா நோக்கி வராததன் முக்கிய காரணம்!

மூலதனங்கள் இந்தியா நோக்கி வராததன் முக்கிய காரணம்!
நான் ஒரு முதலாளி. ஒரு நாட்டில் முதலீடு செய்ய உத்தேசிப்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் அந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதா என்று யோசிப்பேன். அதன் பிறகுதான் எனது மூலதனத்தை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கொண்டு செல்வேன்.
இங்கு சவுதியில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வெளி நாட்டவரின் மூலதனத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது. மலையாளிகளில் பலர் கோடிக்கணக்கான ரூபாய்களை சவுதியில் வந்து கொட்டுகிறார்கள். பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகள் அவர்கள் கைகளில்தான். திமுக, அதிமுக, விநாயக சதுர்த்தி, கிருட்டிண ஜெயந்தி என்று இங்கு யாரும் உண்டியல் தூக்கிக் கொண்டு வசூலுக்கு வர மாட்டார்கள். கொடுக்கவில்லை என்று மிரட்ட மாட்டார்கள்.அனைத்து பொருட்களுக்கும் மொத்தமாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி. இது ஒன்றைத் தவிர வேறு வரிகள் கிடையாது. கொள்ளை சம்பவங்கள் வெகு அரிதாகத்தான் நடைபெறும். கடை அடைப்பு கிடையாது. இதனால் துணிந்து தனது பொருளாதாரத்தை இங்கு வந்து கொட்டுகிறான் மலையாளி.
நமது நாட்டை எடுத்துக் கொள்வோம். என்று பாபரி மசூதி கயவர்களால் தரை மட்டமாக்கப்பட்டதோ அன்று வீழ்ந்தது இந்தியா. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில தேசவிரோதிகள் இந்து மதத்தை பயன்படுத்திக் கொண்டு மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி 10க்கு மேற்பட்டவர்களை அடித்தே கொன்றார்கள். மோடியோ அமீத்சாவோ இதற்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா? மாறாக அந்த கட்சிகளால் கவுரவிக்கப்பட்டார்கள். மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட சாத்வி பிரயாக்சிங் பாஜக சார்பில் எம்பியாக்கப்படுகிறார். சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் குண்டு வெடிப்பு சூத்ரதாரி அசீமானந்தா விடுதலை செய்யப்படுகிறார். குஜராத்தில் 3 நாட்கள் நேரம் தருகிறேன் அதற்குள் உங்களின் வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள் என்று வன்முறையை கட்டவிழ்த்து விடப்பட்டவர் இன்று நமது பிரதமர். பல கொலைகளை செய்து குற்றச்சாட்டால் சிறை சென்றவர் நமது உள்துறை மந்திரி. இவ்வாறு நாட்டில் குண்டர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு நிச்சயமற்ற சூழல் தொடரும்போது எந்த முதலீட்டாளர் நமது நாட்டில் முதலீடு செய்ய முனைவார்.
இது பற்றி எந்த ஊடகங்களும் விவாதம் நடத்துவதில்லை. தெரிந்தே இந்த உண்மைகளை மறைத்து விட்டு வேறு விசயங்களை பிரதானமாக பேசுகின்றனர். எது மூல காரணங்களோ அதனை சரி செய்யாமல் இன மோதல்களை தடுக்காமல் பொருளாதாரம் மீளும் என்பது வெறும் கானல் நீராகத்தான் இருக்கும். தினமும் வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. வேலையிழந்தவர்கள் போராட்டத்தில் குதித்தால் அதனால் வரும் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் உலக நாடுகளை சுற்ற மோடி கிளம்பி விட்டார். அழகிய எனது நாட்டை பாசிச வாதிகளிடம் இருந்து இறைவன் காப்பாற்றுவானாக!


சத்தியம் டிவியில் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன். 23-08-2019''பாபரி மசூதி இடிக்கப்பட்டபோது உபியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர். அதை காரணமாக வைத்து ஒரு முஸ்லிமும் எங்கும் குண்டு வைக்கவில்லை. மாறாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆனால் சம்பந்தமே இல்லாமல் மும்பையில் நட்சத்திர ஹோட்டல்களில் குண்டு வெடிக்கிறது. தாவூத் இப்றாஹிம் என்ற நிழல் உலக தாதா வின் ஏற்பாட்டில் வைக்கப்படுகிறது. இவனைப் போன்ற தாதாக்களெல்லாம் உளவுத் துறையோடும் காவல் துறையோடும் நெருங்கிய தொடர்பில் இருப்பர். கடல் வழியாக எவ்வாறு உள்ளே வந்தனர்: அவர்களை வழி நடத்தியது யார்? ஹேமந்த கர்கரே கொல்லப்பட்டது! என்பது போன்ற பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன.''
''கோவை மக்கள் மிக அன்பாக பழகக் கூடியவர்கள். ஒரு கான்ஸ்டபிளின் கொலைக்காக சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் ஒட்டு மொத்த இஸ்லாமியர் மீதும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.(இதனால் விளைந்த மாற்றம்.... முஸ்லிம்களிடம் இருந்த பெரும்பாலான வணிகங்கள் மார்வாடிகள் வசம் சென்றது. முஸ்லிம்களின் பொருளாதாரம் தமிழகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும். மார்வாடிகளின் பொருளாதாரம் வட மாநிலங்களுக்கு செல்லும். அவர்களே வேலை வாய்ப்பும் பெறுவர்)
ராஜீவ் காந்தியையும், இந்திரா காந்தியையும் கொன்ற போது இவ்வாறு ஒட்டுமொத்த சமூகமும் தாக்கப்படவில்லை. இதிலுள்ள மறைமுக அரசியலை புரிந்து கொள்ளுங்கள்.''
சத்தியம் டிவியில் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன். 23-08-2019


₹2000 கள்ளநோட்டு மாற்ற முயன்ற பாஜகவினர்

₹2000 கள்ளநோட்டு மாற்ற முயன்றவர்கள், தங்களை பாஜகவினர் என்று சொல்லியும் பயப்படாமல் பிடித்து, போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர் கிராம மக்கள்.
இவர்கள்தான் தேச பக்தர்களாம். முழு நேர தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பெருமபாலும் பாஜகவினரே!Friday, August 23, 2019

இந்திய வானத்தில் பறந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டரை..இந்திய வானத்தில் பறந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டரை... பாகிஸ்தான் ஹெலிகாப்டர் என்று தவறாக எண்ணி(?!) அதை இந்திய ராணுவமே ஏவுகணை மூலம் சுட்டு அந்த ஹெலிகாப்டரை வானிலேயே வெடிக்கவைத்து... அதிலிருந்த இந்திய ராணுவத்தினர் 6 பேரையும் கொன்று... 'பாரத் மாதா கீ ஜே' என்று சொன்னால் எல்லாம் சரியாகி விடும்.
'மோடி' மோடி' என்று போகும் இடமெல்லாம் கூக்குரலிட ஆட்களை தயார் செய்து வைத்தால் எதையும் சமாளிக்கலாம்.


நேற்று சத்தியம் டிவி கலந்துரையாடலில்...

நேற்று சத்தியம் டிவி கலந்துரையாடலில் சிபிஐயிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி சொல்லும் போது "நாடு சிக்கலை எதிர்கொள்ளும்போது இது போன்று தீவிரவாத அச்சுறுத்தலை நாங்களாகவே கற்பனையாக அவிழ்த்து விட்டு பிரச்னைகளை உருவாக்குவோம். அடுத்து நேற்று ஸ்டாலின் காஷ்மீர் 370 பிரிவை நீக்கிய முறை சரியில்லை என்று போராட்டம் நடத்துகிறார். இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற செய்தி உளவுத் துறையால் வெளியிடப்படுகிறது. இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்கிறார். உளவுத் துறை அதிகாரியின் இந்த கூற்றை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
மேலும் தீவிரவாதி இந்துக்களை போன்று வேடமிட்டு வருவானாம். இந்த தகவல் யாரிடமிருந்து பெறப்பட்டது? அவர்களை ஏன் கைது செய்யவில்லை? புகைப்படங்களை தந்தவர்கள் யார்? இதை எல்லாம் கேள்வி கேட்டால் நீங்கள் தேச துரோகி.... 
இந்தியாவின் வட மாநிலங்களை காவி சிந்தனையில் தள்ளி அவர்களை படுகுழியில் தள்ளியாகி விட்டது. மீதமிருப்பது தென் மாநிலங்கள். அதிலும் தமிழ்நாடு காவிகளை எதிர்ப்பதில் மும்முரமாக உள்ளது. இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாக இங்கு பழகி வருகின்றனர். முதலில் இருவரையும் பிரித்து விட்டால் இந்துக்களின் ஓட்டுக்களை கொத்தாக அள்ளலாம் என்பது அமீத்ஷாவின் கணக்கு. தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை இம்முறையும் நமது ஒற்றுமையால் நிரூபிப்போம். சந்தேகப்படும்படி யாரும் நமது ஊர்களில் சுற்றித் தரிந்தால் உடன் காவல் துறை வசம் ஒப்படைப்போம். அந்நபர் கலவரம் ஏற்படுத்த உளவுத் துறை அனுப்பிய நபராகவும் இருக்கலாம்.பாகிஸ்தானுக்கு உதவிய இந்துத்துவ தீவிரவாதிகள்

பாகிஸ்தானுக்கு உதவிய இந்துத்துவ தீவிரவாதிகளை போபல் நீதி மன்றம் தீவிரவாத எதிர்ப்பு படையிடம் ஒப்படைப்பு!
சுனில் சிங், சுபம் திவாரி, பல்ராம் சிங் படேல், பகவேந்திர சிங் மற்றும் இன்னொரு நபர் ஆகிய ஐந்து பேரும் மத்திய பிரதேசத்தில் 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானோடு தொடர்பில் இருந்து இந்திய இரகசியங்களையும் பாகிஸ்தானுடைய பல தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பணம் கொடுக்க உதவிக் கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் 13 பாகிஸ்தான் (செல்போன்)சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை.

தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை. பாபரி மசூதி வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாதுகாப்பு கோருகிறார். நாடு எங்கு சென்று கொண்டுள்ளது.


Thursday, August 22, 2019

தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன்.

இந்து ,பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன். முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே நிலவி வரும் அநீதியான, சரிசமமற்ற வேறுபாடுகளுக்கு, சுரண்டல்களுக்கு (தனது சொந்த இனத்திற்கும்) எதிராக வெகுண்டெழுந்தவர் . 

பாலைவனப் பிரதேசத்தில் பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் தொடர்ந்த சச்சரவுகள், வன்முறைகள், தாக்குதல்கள் நிலவி வந்த சூழலில் ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதை ஏற்றுக் கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும், தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையில், கலவர பூமியான அரேபியப் பாலைவனத்தில் அமைதியை ஏற்படுத்தியவர்.

கிறித்தவர்கள் இந்த கூட்டமைப்பில் சேர்ந்த பொழுது, மதம் மாறாமலேயே அவர்களுக்கும் அந்தப் பாதுகாப்பை அளித்தவர். அவர்களை இஸ்லாம் 'People of the book' (Bible ) என்று அவர்களது சொந்த அடையாளங்களுடனே அங்கீகரிக்கிறது.

ஒரே ஒரு தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தைத் தவிர வன்முறையை முன்னிருத்தாதவர். மெதினாவிலிருந்து மெக்காவுக்கு தனது மக்களோடு உயிருக்கு ஆபத்தான சூழலில் நிராயுதபாணியாகச் சென்று போரில் வெல்லமுடியாத மெக்கா மக்களை வென்றெடுத்தவர்.

வன்முறையை அல்ல, அமைதியை, பேரன்பை, கருணையை, சமதர்மத்தை முன்னிருத்தியவர். ஜிகாத்-புனிதப்போருக்கு இஸ்லாத்தில் எந்த இடமும் இல்லை .

பெண்களுக்கான சுதந்திரத்தை, கல்வியை, சொத்துரிமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியவர். எளிய வாழ்வையும், சமத்துவத்தையுமே இஸ்லாம் முன்னிருத்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை ஏற்க மறுக்கிறது. பிற்போக்கான மதம் என்கிற கட்டமைக்கப்பட்ட பொதுபுத்திக்கு மாறாக நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக (Strikingly Progressive ) இருக்கிறது.

இன்று மத அடிப்படை வாதிகள் முன்னிருத்துகிற இஸ்லாத்துக்கும், உண்மையான இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தாலிபான்களும், ஐஎஸ்ஐஎஸ் போன்ற கொடூரமான அமைப்புகளும் இஸ்லாத்தின் பெயரால் செய்கிற அட்டூழியங்களும், அவற்றையே உண்மையான இஸ்லாத்தின் பிரதிநிதிகள் என்று விமர்சிப்பதுபோல் சித்தரிக்கும் போக்கும் ஆபத்தானது .

உண்மையான முஸ்லிம்களுக்கு அதை எதிர்த்து நிற்கவேண்டிய சவால் காத்திருக்கிறது. அதை எதிர்கொள்வது எளிதானதல்ல. மேற்குலக நாடுகளின் எண்ணெய் அரசியல் வேறு இஸ்லாமை ஒரு மோசமான ஆயுதமாக பறைசாற்றி மத அடிப்படைவாதிகளை ஊட்டி வளர்க்கிறது. இந்தச் சூழலில் உண்மையான இஸ்லாமை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் முன் உள்ளது. இன்றைய சூழலில் அந்தக் கடினமான பணியில் அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய மாபெரும் தார்மீகப் பொறுப்பு மற்றவர்களிடம் உள்ளது. மதத்தை (எந்தமதமானாலும்) அரசியல், பொருளாதார சுயநலனில் இருந்து விடுவிப்பதிலே தான் இந்த உலகின் அமைதி அடங்கியிருக்கிறது.

-செல்வி. ஜோதிமணி.ஒரு பெண்ணுக்கு நேற்று ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளது.

சவுதி அரேபியா அல் ஹஸா மாகாணத்தில் சவுதி பிரஜையான ஒரு பெண்ணுக்கு நேற்று ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளது. 3 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. குழந்தைகளின் எடை 1000 லிருந்து 1195 கிராம்களாக உள்ளது.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
சவுதி கெஜட்
22-08-2019


Wednesday, August 21, 2019

'இது நம்ம ஆளு'

'இது நம்ம ஆளு' என்ற பாக்யராஜ் படத்தின் சில காட்சிகளை நேற்று பார்க்க நேர்ந்தது. அதில் வரும் சில வசனங்கள்....
'சாமி.. சாமி.. என்று கூப்பிட்டு விட்டு அதே வாயால் சம்மந்தி என்று கூப்பிட முடியுமா?'
'சாணியும் சந்தனமும் ஒன்றாகுமா?'
'அய்யருக்கு துரோகம் பண்ணினால் அவங்க குடும்பம் விளங்காது'
இது போன்று பல வசனங்கள் படம் முழுக்க வருகிறது.
சோமயாஜூலுவை பார்க்கும் போது மனோரமாவும் அவரது கணவரும் நடுங்கிக் கொண்டு கூழை கும்பிடு போட்டுக் கொண்டு இருப்பதை பார்க்கிறோம். படம் முழுக்க இது போன்று சாதி மேன்மையை காட்டும் காட்சிகள் ஏராளம். சமூகத்தின் யதார்த்தத்தை அழகாக காண்பிக்கிறார் பாக்யராஜ். 3000 ஆண்டுகளாக பார்பனர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் மற்ற சாதி இந்துக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதன் வெளிப்பாடே இது போன்ற காட்சிகள். இந்து மதம் மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகமாக உள்ளதாகவே எனக்குப் படுகிறது.

இங்கு அடிக்கடி பின்னூட்டமிடும் அன்பு ராஜ் என்ற பிற்படுத்தப்பட்ட இந்து எந்த அளவு இந்து மதத்தை தூக்கி பிடிக்கிறார் என்பதை பார்த்து வருகிறோம். ஒரு பார்பனர் இந்து மதத்தை தூக்கி பிடித்தால் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் பார்பனர்களின் சுக வாழ்வக்காக ஏற்படுத்தப்பட்ட மதம் இந்து மதம். ஆனால் அன்பு ராஜ் போன்ற பிறபடுத்தப்பட்ட மக்கள் பார்பன அடிமைகளாக காலம் தள்ளுவது ஆச்சரியத்தை தரலாம். சிறு வயது முதலே நீ சூத்திரன்: அவன் பார்பனன். இருவரும் ஒன்றாக முடியாது. என்று சிறு வயது முதலே பயிற்றுவிக்கப்படுவதால் முழு நேர பார்பன அடிமையாகவே அன்பு ராஜ் மாறிக் கிடக்கும் பரிதாபத்தைப் பார்க்கிறோம். :-) இங்கு கோபத்தை விட அன்பு ராஜை நினைத்து பரிதாபமே ஏற்படுகிறது.  

இது போன்ற சிக்கல்களிலிருந்தெல்லாம் எங்களை விடுவித்து இஸ்லாமிய மார்க்கத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுத்த எனது முன்னோர்களை இந்நேரம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.


'நீ என்ன சாதி?'

'நீ என்ன சாதி?'
உரை : சகோ.கோவை R.ரஹ்மத்துல்லாஹ் (பேச்சாளர் TNTJ)
---------------------------------------------
“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான்! இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)
-----------------------------------------------
பெரியார் சொல்கிறார்.
"எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் சாதி ஒழிப்புக்காக சாதி இல்லாத மதமாகிய இஸ்லாம் மதத்துடன் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றக் கொண்டு வரப்பட்டது. இது செல்வாக்குக்குட்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத்தில் சேர்வது என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி ஐயப்பன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு போய்ச் சேருவது என்பதைத் திருத்தி போட வேண்டும் என்று சொல்லி ஏக மனதாக நிறைவேற்ற செய்தார். இஸ்லாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே ஐம்பது பேர்கள் முஸ்லிம்களாகிவிட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள், இது ஒரு பெரிய கலக்கு கலக்கிவிட்டது.”(விடுதலை 9.1.1959)
-5:43